அன்ரன் பாலசிங்கம் அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம் மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன. ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துக்கொண்டார். 1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்புக் கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிப் பெயர்ந்தனர். 1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார். ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார். 2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.. தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார். மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்தார். அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை , வெளிஉலக பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியத் தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர் . இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும். இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றி வந்ததோடு 2002 இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கியத் தலைவராவார் அலங்காரத் தாவரம் அலங்காரத் தாவரம் என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு தாவரத்தைக் குறிக்கும். அலங்காரத் தாவரங்கள் நிலத்தோற்றக் கலைஞர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பூங்காக்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன. அலங்காரத் தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் (flowering plants), இலைத் தாவரங்களாக (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு. மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன. விரும்புகிறேன் விரும்புகிறேன் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். ஷாக் (திரைப்படம்) ஷாக் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த்,மீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பேய்ப்படம் ஜோடி (திரைப்படம்) ஜோடி 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) பம்மல் கே. சம்பந்தம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,சிம்ரன்,அப்பாஸ்,சினேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் இரு வேறு குணங்கள் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் திருமணத்தை வெறுக்கும் ஒரு புள்ளியில் மட்டும் ஒரே எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்குள் மலரும் காதலை நகைச்சுவையுடன் கொண்டு செல்லும் கதை. பஞ்சதந்திரம் (திரைப்படம்) பஞ்சதந்திரம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் பார்த்தாலே பரவசம் பார்த்தாலே பரவசம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சிம்ரன்,ஸ்னேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் சைலண்ட் ஹில் (திரைப்படம்) சைலண்ட் ஹில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கிறிஸ்தோப் கான்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதா மிஷ்செல்,சான் பென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பேய்ப்படம் / மர்மப்படம் தனது மகள் ஷாரன் தூக்கத்தில் நடப்பதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் ரோஸ், ஷாரன் தூக்கத்தில் குறிப்பிடும் 'சைலண்ட் ஹில்' எனும் இடத்திற்கு அவளை அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறாள். சைலண்ட் ஹில் செல்லும் பாதை மூடப்பட்டு இருப்பினும் தடையை மீறிச் செல்ல முற்படும் போது, இவர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் துரத்த நேரிடுகிறது. அதிலிருந்து தப்பிக்கும் முயற்சி ஒரு விபத்தில் முடிகிறது. ரோஸ் கண்விழித்து பார்க்கும் போது, சைலண்ட் ஹில் ஊர் வாசலில் அவள் இருப்பதையும் ஷாரனைக் காணவில்லை என்பதையும் உணர்கிறாள். ஷாரனைத் தேடும் முயற்சியில் அவ்வூரின் மர்மத்தையும் அறிகிறாள். சுயம்வரம் (1999 திரைப்படம்) சுயம்வரம், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பல திரைப்பட இயக்குநர்கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து. கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது. இ. இரத்தினசபாபதி இ. இரத்தினசபாபதி (1938 - டிசம்பர் 12, 2006), 1988 ஆம் ஆண்டு வரையில் ஈழத்தில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் அமைப்பை நிறுவியவர். 1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தில் பிறந்த இளையதம்பி இரத்தினசபாபதி பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனில் நிறுவிய இவர், பாலஸ்தீன விடுதலை இயக்கம் - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற விடுதலை அமைப்புகளுடனான உறவுகளை பேணி வந்தார். 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலின்போது ஈழவர் ஐனநாயக முன்னணி சார்பில் தெரிவானார். ஆனால் இவர் சார்ந்த ஈழவர் ஐனநாயக முன்னணி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறிது காலம் பங்கேற்றபின் விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரட்னா என்றழைக்கப்படும் .இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 12, 2006 காலையில் காலமானார். இலங்கைப் பாராளுமன்றத்தில், ஈழவர் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் பிரவேசத்தின் பின் 21.07.89 அன்று சபையில் ஈரோஸ் நிலைப்பாடு பற்றி இரத்தினசபாபதி ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவரின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்த உரையை பின்வரும் சுட்டியில் காணலாம். அன்ரன் பாலசிங்கம் இறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார். இவர் அண்மைக் காலத்தில் புற்று நோய்க்கும், 90களிலிருந்து நீரழிவு நோய்க்கும் உட்பட்டிருந்தார். 2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.. அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார். அன்ரன் பாலசிங்கம் த.வி.பு மிதவாதத் தலைவராக பொதுவாக கருதப்பட்டவர். இந்த கூற்றை அவரின் அரசியல் எதிரியான கதிர்காமரும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது . இவரே த.வி.பு வெளிப்படையாக விமர்சிக்க பலம் பொருந்திய த.வி.பு தலைவராகவும் இருந்தார். தாய்லாந்து பேச்சு வார்த்தைகளின் போது புலிகள் 'ஆடம்பர பொருட்களை' கொள்ளனவு செய்ததை நகைச்சுவையாக மறைமுகமாக சுட்டிக் காட்டியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். மார்ஸ் அட்டாக் (திரைப்படம்) மார்ஸ் அட்டாக் (Mars Attack) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.டிம் பேர்ட்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக் நிகோல்சன்,பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்த செவ்வாய்க் கிரகவாசிகள் பூமியைத் தாக்க வருகிறார்கள். மனிதர்கள் அவர்களின் தாக்குதலை சமாளித்துத் தப்பிப்பதே மார்ஸ் அட்டாக் திரைப்படத்தின் கதைச்சுருக்கம். ஆறிலிருந்து அறுபது வரை ஆறிலிருந்து அறுபது வரை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், சங்கீதா, எல் ஐ சி நரசிம்மன், ஜெயா, சக்ரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தேங்காய் சீனிவாசன் தீடீரென்று மரணமடைவதால் அவரின் மூத்த மகன் ரஜினிகாந்த் மிகச் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்கிறார். அவருக்கு 2 தம்பிகள் ஒரு தங்கை. அவருக்கு தேங்காய் சீனிவாசன் வேலை செய்த நிறுவன முதலாளி வேலை தருகிறார். தம்பி தங்கைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார். அவர்கள் படிப்புக்காக நிறைய வருமானத்திற்கு மேல் செலவு செய்ய நேருகிறது. அவருக்கு பணநெருக்கடி ஏற்படும் சமயங்களில் அவரின் நண்பர் சோ ராமசாமியும் அவரின் நிறுவன (அச்சக) முதலாளியும் உதவுகிறார்கள். இவரின் நிறுவனத்தில் உள்ள சங்கீதாவுடன் காதல் வசப்படுகிறார். அவரும் காதலிக்கிறார் தம்பி தங்கைகளுக்காக இவர் பணம் செலவிடவேண்டியுள்ளதாலும் இவருடன் திருமணம் நடந்தால் பணநெருக்கடிக்கிடையே வாழ வேண்டும் என்பதாலும் இவரின் காதலை மறந்து விட்டு வேறொருவருடன் திருமணம் செய்து கொள்கிறார். தங்கை(ஜெயா) யின் திருமணத்திற்கு சிறிது நகை போடுவதாக சொல்கிறார். சுருளி ராஜன் தான் சொல்லும் பெண்ணை (படாபட் மகாலட்சுமி) திருமணம் செய்து கொண்டால் ரூ 5000 உடனே கிடைக்கும் என்று கூறுகிறார். தங்கையின் திருமணத்திற்கு பணநெருக்கடியில் இருப்பதால் இத்திருமணத்திற்கு ரஜினி உடனே ஒப்புக்கொள்கிறார். படாபட் மகாலட்சுமி குடும்பத்தார் ரூ 5000 தருவதாக சொல்லவில்லை இது சுருளி சொன்னது. கடும் சிரமம்பப்பட்டு தங்கையின் திருமணத்தை நடத்துகிறார். பெரிய தம்பி எல். ஐ. சி நரசிம்மன் முதல் வகுப்பில் கல்லூரியில் தேர்ச்சிபெறுகிறார். அவர் தன் நண்பனின் உதவியால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர்கிறார். ஆனால் அவர் குடும்பத்திற்காக பணம் கொடுக்காமல் தனக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொள்கிறார். அண்ணனுடன் மனவருத்தம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இளைய தம்பியும் (சக்ரவர்த்தி) வீட்டை விட்டு வெளியேறுகிறார். இவர் வேலை செய்த நிறுவனத்தில் முதலாளி மகன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இதுவரை வாங்கிய பணத்தை கட்டினால் தான் வேலைக்கு வரலாம் அதுவரை வர தடைவிதிக்கிறார். முதலாளி பக்கவாதம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாகி விடுகிறார். தம்பி தங்கைகள் இவரை மதிப்பதில்லை மேலும் இவர் அவர்களை பார்கச் செல்லுவதையும் வெறுக்கிறார்கள். பெரிய தம்பி தன் திருமணத்திற்கு நேரில் வந்து அழைக்காமல் அழைப்பிதழை அஞ்சல் வழி அனுப்புகிறார். வறுமையின் காரணமாக இவர்கள் சேரிப்பகுதியில் குடிபுகுகின்றனர். நண்பன் சோ உதவியால் அச்சகத்தில் மெய்ப்புத் திருத்தல் வேலை கிடைக்கிறது. அங்கு தான் எழுதிய கதை ஒன்றை வெளியிடமுடியுமா என்று கேட்கிறார். அக்கதை வெளியாவதற்குள் தீ விபத்தில் இவர்களின் இரு குழந்தைகளை காப்பாற்றிவிட்டு படாபட் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததால் அவரின் காப்பீட்டுத்தொகை ரஜினிக்கு கிடைக்கிறது. இவரின் கதைக்கு நல்ல வரவேற்பு நிறைய கதைகள் எழுதுகிறார் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசதியான நிலைக்கு உயர்கிறார். தம்பி தங்கைகள் இவரை தங்கள் அண்ணன் என்று எங்கும் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். நாடகப்படம் அவர்கள் (திரைப்படம்) அவர்கள் 1977 பிப்ரவரி 25 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனு (சுஜாதா) சூழ்நிலைகளால் தன் காதலன் பரணியை (ரவிகுமார்) பிரிந்து, ராமநாதனை (ரஜினிகாந்த்) கைப்பிடிக்கிறாள். அனுவின் காதலை அறிந்திருக்கும் அனுவை மணக்கும் ராமநாதன், அவளைக் கொடுமைபடுத்துகிறான். கொடுமையை தாங்காமல் ஒரு கட்டத்தில், அவள் விவாகரத்து பெறுகிறாள். மீண்டும் சூழ்நிலைகளால், பரணியைச் சந்திக்கிறாள் அனு. அனுவின் நினைவாகவே காலத்தைக் கடத்தும் பரணி, இப்போதும் அனுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் குறுக்கிடுகிறான் ராமநாதன். இந்நிலையில், அனு பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஜானி (எ) ஜனார்த்தனன் (கமல்) ஒரு தலையாக அனுவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஜானியின் மனைவி தீ விபத்தில் இறந்துவிட்டவள். ஒரு புறம் மாஜி கணவன், இன்னொரு புறம் மாஜி காதலன், மூன்றாவதாக, அவளைத் தன் மனைவிபோலக் கருதும் நண்பன். கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்பதை, கதையின் முடிவு தெனாலி (தமிழ்த் திரைப்படம்) தெனாலி 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஜோதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் உதிரிப்பூக்கள் உதிரிப்பூக்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜெ. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, அஷ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். பசும்பொன் (திரைப்படம்) பசும்பொன் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில், சீமான் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். கிராமப்படம் டிக் டிக் டிக் டிக் டிக் டிக், 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் இப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளிவந்தது. இந்தியில் இப்படம் கரிசுமா என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. மனோகரா (திரைப்படம்) மனோகரா 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத. எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு கட்டுரையில்,'பராசக்தி'(1952) படத்திற்கு முன்பாகவே 'மனோகரா' படத்தின் தயாாிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளாா் அந்த நாள் அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. முதல் தேதி முதல் தேதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் படம். படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது. மரகதம் (திரைப்படம்) மரகதம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடுவின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பத்மினி,மனோரமா,சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா. பாலு, கு. மா. பாலசுப்ரமணியன், மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாசமலர் பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது. நாடகப்படம் பாலும் பழமும் பாலும் பழமும் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.அ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மங்கையர் திலகம் மங்கையர் திலகம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். கள்வனின் காதலி (1955 திரைப்படம்) கள்வனின் காதலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் பானுமதியும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இவர்களைத் தவிர டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி, டி. எஸ். துரைராஜ், குசலகுமாரி, எஸ். ஆர். ஜானகி, டி. பாலசுப்ரமணியம், கே. ஆர். செல்லம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழில் புகழ் பெற்ற நாவலாசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தி, 1937 ஆம் ஆண்டு முதல் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக எழுதிய கள்வனின் காதலி என்னும் சமூகப் புதினமே அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. கணக்கப்பிள்ளை முத்தையா (சிவாஜி கணேசன்) ஒரு அப்பாவி. தன் தங்கையின் நல் வாழ்வுக்காக தன்னையே வருத்திக் கொள்கிறான். ஆனால் கொடியவர்களால் அவனது தங்கை பாழ்படும் போது சகிக்க முடியாமல் முரடனாகிறான். நடுவில் அவனுக்கு இருக்கும் ஒரே உதவி அவனது காதலி கல்யாணி (பானுமதி). தொடர்ந்து வரும் சோதனைகளால் பொலிசாரால் தேடப்படும் அளவில் முத்தையன் கள்வனாகிறான். கடைசியில் அவன் பொலிசாரால் சுடப்பட்டு இறக்கிறான். இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் கண்டசாலாவும் பானுமதியும் பாடிய 'வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு' என்னும் பாடல் பாரசீக மொழியில் உமர் கய்யாம் எழுதிய பாடலொன்றத் தழுவி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் எழுதிய பாடலாகும். தெனாலி ராமன் (1956 திரைப்படம்) தெனாலி ராமன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஏப்ரல் 2 பாஷாஇந்தியா பாஷாஇந்தியா இந்திய மொழிகளை இணையமூடாக தாய் மொழியூடாக ஒருங்குறியில் சரளமாகப் பாவிப்பதற்காக உதவியாக மைக்ரோசாப்டினால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் ஓர் இணையத்தளமாகும். இவ்விணையத்தளம் சாதாரண பாவனையாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு என்று இருபகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்விணையத்தளம் விவாதமேடைகளையும் கொண்டுள்ளது இது மொழிரீதியாகவும் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பொதுவான விவாதங்களையும் கொண்டுள்ளது. பாஷாஇந்தியாவின் முயற்சியிலேயே வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் தமிழ் மொழி இடைமுகப் பொதியாகியவை வெளிவந்தன. இத்தளத்தில் கணினி உள்ளீடுக் கருவிகளுடன் ஆபிஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கான இடைமுகப் பொதிக்கான இணைப்புக்களையும் கொண்டுள்ளது. முட்டம் கடற்கரை முட்டம் கடற்கரை தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இவ்வூரின் கடற்கரை இயற்கை எழில் மிகுந்தது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் அலையின் வேகம் இங்கு அதிகம். பாறைகள் நிறைந்து காணப்படும் இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. இது அழகிய நில அமைப்பைக்கொண்டது. பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகழிகளுமாக இதன் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது. கன்னியாகுமரிக்கு மிக அருகில் அமைந்துள்ள சின்ன முட்டம் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏராளமான மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பது இந்தத் துறைமுகத்தின் சிறப்பு. விக்கிசெய்தி விக்கிசெய்தி, விக்கிமீடியா நிறுவனத்திரால் நடத்தப்படும் கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும். ஆங்கில, இடாய்ச்சு மொழிப்பதிப்புகள் டிசம்பர் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. , டிசம்பர் 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்கிச்செய்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மொழிப் பதிப்பு தமிழ் மொழியிலேயே உள்ளது. பிற பதிப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அண்மையில் சிந்தி மொழி விக்கிச்செய்தியும் துவங்கப்பட்டுள்ளது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரி 1934 ஆம் ஆண்டு சைவப் பெரியார்களால் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கி வைப்பதற்காக வவுனியா நகரப்பகுதியில் உருவாக்கப் பட்ட ஓர் பாடசாலையாகும். ஆரம்பத்தில் ஒரு சில ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்ட்ட இந்தப் பாடசாலையானது 2006 ஆம் ஆண்டளவில் 1901 மாணவர்கள் 102 ஆசிரியர்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்தது. சைவப் பிரகாச வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை 1962 இல் அரச பாடசாலையாக மாற்றமடைந்தது. 1979 பெண்களுக்கான சாரணீயம் (Guides) ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையானது 1991 இல் மகாவித்தியாலமாகத் தரமுயத்தப்பட்டது. ஏப்ரல் 3 அன்னா அன்ட் த கிங் அன்னா அண்ட் த கிங் (Anna and the King) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஆன்டி டெனண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோடி ஃபோஸ்டெர்,சௌ ஜன் ஃபாட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாவல்படம் பேஸிக்லினக்ஸ் பேஸிக்லினக்ஸ் சிறியதோர் லினக்ஸ் வழங்கல். இது டாஸ் இயங்குதள (16 பிட் கோப்பு முறையா - FAT 16) வன்வட்டில் இருந்தோ இரண்டு நெகிழ்வட்டில் இருந்தோ (12 பிட் கோப்பு முறை - FAT 12) இல் இருந்தோ மிகப்பழைய வன்பொருட்களில் இருந்து (4 மெகாபைட் அல்லது இரண்டு காலி நெகிழ்வட்டில் இருந்தோ இயங்கக்கூடியது. பேஸிக்லினக்ஸ் அல்லது பிஎல் லினக்ஸ் 3 பெரிய பதிப்புக்களில் கிடைக்கின்றது. பேஸிக்லினக்ஸ் பழையகணினிகளுக்கென்றே உருவாக்கப்பட்டது. இது சிறியதோர் கேணலையும் குறைவான நினைவகத்தையும் (RAM) பாவிக்கின்றது. இதில் இணையத்தில் உலாவுதல் மின்னஞ்சல் செய்தல் மற்றும் எக்ஸ்ரேமினாலாகவும் செயற்படுத்தலாம். இதன் தற்போதைய பதிப்பானது பிரதானமாகப் பழைய மடிக்கணினிகளுக்கே பொருத்தமானது. இதில் PCMCIA வசதிகளுடன் மாஜிக்பாயிண்ட் (மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் போன்றதோர்) கருவியையும் உள்ளடக்கியுள்ளது. இதன் தற்போதைய பதிப்பான 3.40 இரண்டு பதிப்புக்களாக வெளிவருகின்றது. ஒன்று டாஸ் வகிர்வுகளில் (FAT 16 கோப்பு முறையிலமைந்த ஹாட்டிஸ்கில்) இருந்தும் நெகிழ்வட்டில் இருந்தும் ஆரம்பிக்ககூடியதோடு லினக்ஸ் கோப்புமுறையிலமைந்த ஹாட்டிஸ்கில் இருந்தும் இவை ஆரம்பிக்கலாம். டாம் ஸ்மோல் லினக்ஸ் டாம் ஸ்மேல் லினக்ஸ் (டிஎஸ்ஸெல் என்றும் அறியப்பட்ட) லினக்ஸ் வழங்கல் பழைய கணினிகளை வீணாக்காமல் லினக்ஸை நிறுவிப் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். டிசம்பர் 16 2006 இன் படி இது லினக்ஸ்வழங்கலை அவதானிக்கும் டிஸ்ரோவோச் (டிஸ்ரோவாச்) இணையத்தளத்தில் 8 ஆவதாகவுள்ளது (இது பக்கங்களைப் பார்வையிடுவதைக் கணிப்பிடுதல் மூலம் நிரலிடுகின்றது). இது பழையகணினிகளில் லினக்ஸைப் பாவிப்பதற்கான ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது. இதன் முழுமையான பதிப்பிலுள்ள சிறிய அளவினால் ஏனைய இயங்குதளங்களைப் போலல்லாமல் மிகச் சிறிய இடவசதியிலேயே இயங்கக் கூடியது. இது சிறிய இறுகுவட்டு மற்றும் 64 மெகாபைட் அளவான யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மற்றும் ஜிப்டிரைவ், மற்றும் கொம்பக்ட் (கம்பக்ட்) ஊடாக இயங்கக் கூடிய்து. டாம் ஸ்மோல் லினக்ஸ் ஜான் அன்ரூஸ்ஸினால் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் பல்லாயிரக்கணக்கான தனார்வலர்களல் இந்தத்திட்டம் மேலும் மேம்படுத்தப் பட்டது. டாம் ஸ்மோல் லினக்ஸ் நொப்பிக்ஸ் லினக்ஸைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. டிஎஸெலின் தற்போதைய பதிப்பு 3.1 ஆகும். இது நவம்பர் 28, 2006 இல் வெளிவந்தது. இதிலுள்ள வசதிகள் இவற்றுடன் ஒப்பிண் ஆபிஸ் போன்றவை இணையத்தளமூடாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடியவை. இதை ஆரம்பிக்கும் போது எத்துக் குறியீடுகளை இட்டு இதை ஆரம்பிக்கலாம் அவ்வாறில்லாம் விசைப்பலகையில் எதையும் தட்டசுச் செய்யாமால் விட்டுக் கணினியை ஆரம்பித்தால் வழமையான கணினியின் பாகங்களைக் கண்டுபிடித்து கணினியை ஆரம்பிக்கும். சிலவேளைகளில் கணினியின் வன்பொருட் பாகங்களை கண்டுபிடிகாது என்பதையும் கவனத்திற் கொள்ளவும். டிஎஸேல் கணினியின் வன்வட்டு இல்லாமல் ஆரம்பிக்கக் கூடிய லினக்ஸ் வழங்கல்களில் ஒன்றாகும். இது ராம்டிஸ்கைப் பாவித்துக் கணினிகளின் ராமில் நிறுவி இயங்கக் கூடியது. இது எக்ஸ்விண்டோவை இயக்கக்கூடியது. ஓரளவு முழுமையான டெஸ்க்டாப்புடன் விளிப்பூட்டும் கட்டளைகளையும் கொண்டுள்ளது. டிஎஸெல் x86 கணினிகளில் இயங்கக் கூடியது. இது 386, 486, பென்ரியம் வகைக் கணினிகள் மற்றும் வயா சீ3 கணினிகள் ஏஎம்டி புரோச்சர்களிலும் இயங்கக் கூடியது. டீப் இம்பாக்ட் (திரைப்படம்) டீப் இம்பாக்ட் (Deep Impact) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மிமி லெடெர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராபேர்ட் டுவால், டீ லியோனி, மார்கன் ஃபிரீமன், எலைஜா வுட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். விஞ்ஞானப்படம் பனாராஸ் ஏக் துன் பனாராஸ் கீ (Ek Dhun Banaras Kee) 2006 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தி மொழித் திரைப்படமாகும்.பங்கஜ் பரஷர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஊர்மிலா மதோந்த்கர், அஷ்மித் பட்டேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் / ஆன்மிகப்படம் டிராகன் ஹார்ட் டிராகன் ஹார்ட் (ஆங்கிலம்: Dragonheart) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோப் கோஹென் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெனிஸ் குவேட்,டேவிட் தியூவ்லிஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். த ஃபிரைட்னெர்ஸ் (திரைப்படம்) த ஃபிரைட்னெர்ஸ் (The Frighteners) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மைக்கெல் ஜெ. ஃபாக்ஸ், ட்ரினி அல்வரடோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். பேய்ப்படம் / நகைச்சுவைப்படம் [[en:The Frighteners] [[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]] [[பகுப்பு:பேய்த் திரைப்படங்கள்]] [[பகுப்பு:நகைச்சுவைத் திரைப்படங்கள்]] [[பகுப்பு:1996 திரைப்படங்கள்]] [[பகுப்பு:யுனிவர்சல் பிக்சர்ஸ் திரைப்படங்கள்]] [[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]] த எக்சோர்சிஸ்ட் (திரைப்படம்) த எக்சோர்சிஸ்ட் (The Exorcist) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.வில்லியம் ஃபிரிட்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜேசன் மில்லர்,எல்லென் பேர்ஸ்டின் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பேய்ப்படம் தமிழர் மட்பாண்டக்கலை தமிழர் மட்பாண்டக்கலை அல்லது தமிழர் வனைதற்றெழில் என்பது தமிழர்கள் மரபுரீதியாக மட்பாண்டங்களை உருவாக்கும் கலையைக் குறிக்கும். தமிழ்நாட்டில் இன்றும் இக்கலை நிலைபெற்றிருக்கின்றது. இத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்கள் குயவர் எனப்படுவர். மண்பாண்டங்களை உருவாக்குவது, குறிப்பாக குயவர் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் ஒரு மைல்கல்லாகும். குயவர் சக்கரம் எகிப்து அல்லது மெசொபொத்தேமியா அல்லது சீனாவிலோ கண்டுபிக்கப்பட்டு வட இந்தியா வந்து சில காலம் சென்று தென்னிந்தியா வந்தது. வளோர் இன மக்கள் அடுப்பு. மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர். வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் மண்பாண்டக்கலையில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்துக்காகவும், மண்பாண்டக்கலையை வளர்ப்பதையும் நோக்கமாகவும் கொண்டு செயற்படும் ஒர் அமைப்பு ஆகும். இது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது யாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கம் யாழ்ப்பாணத்தில் மண்பாண்டத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்களுக்கான கூட்டுறவு ஆகும். இதில் 25 குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, 15 வரையான குடும்பங்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் தலைவராக பழனிமுருகையா ராஜேந்திரம் செயற்படுகிறார். த கிரீன் மைல் (திரைப்படம்) த கிரீன் மைல் ("The Green Mile") 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஃபிராங் டாராபொண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொம் ஹாங்ஸ்,மைக்கேல் கிளார்க் டங்கன்,டேவிட் மோர்ஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மர்மப்படம் டாம் ஹாங் ஒரு சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் பகுதியில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிகின்றார். இவ்வேளையில் இங்கு ஒரு பெரிய உருவமுடைய கறுப்பின இளைஞர் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கொண்டுவரப்படுகின்றார். இந்த இளைஞன் மீது இரு வெள்ளையினச் சிறுமிகளைக் கற்பழத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. தண்டனை நிறைவேற்ற சில நாட்களுக்கு முன்பாகவே இந்த இளைஞனிடம் சில தெய்வ சக்திகள் இருப்பதை டாம் ஹாங்கும் அவரின் நண்பர்களும் கண்டுகொள்கின்றனர். இவர் மூலம் பலரும் பல்வேறு வழியில் பயனடைகின்றனர். இறுதியில் உண்மையான குற்றவாளி அதே சிறைக் கூடத்தில் உள்ள வேறொருவன் என்பதை இந்த இளைஞன் மூலம் டாம் ஹாங் அறிந்து கொள்கின்றார். ஆயினும் கடமையிலிருந்து மீற முடியாமலும், இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மரண தண்டனை மின்சாரக் கதிரையில் நிறைவேற்றப்படுகின்றது. இளைஞன் மூலம் டாம் ஹாங்கின் வாழ்க்கைக் காலம் அநாயாசமாக அதிகரித்து விடுகின்றது. அவர் மரணத்தை விரும்பிய போதும் அதை அடைய முடியாமல் அவதிப்படுவதைக் காட்டுவதுடன் இந்தத் திரைப்படம் நிறைவேறுகின்றது. IMDB டாப் 250-ல் 136-வது இடத்தையும், 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் –க்கும்(சிறந்த நடிகர்,சிறந்த படம்,சிறந்த சவுன்ட்,சிறந்த திரைக்கதை ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Stephen King எழுதிய “ The Green Mile-1996” இக்கிரு இக்கிரு (Ikiru) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.அகிரா குரோசாவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டகாஷி ஷிமுரா,ஷினிச்சி ஹிமோரி மற்றும் பலரும் நடித்துள்னர். நாடகப்படம் / கலைப்படம் ரட்சகன் ரட்சகன் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா,சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் / மசாலாப்படம் மென் இன் பிளாக் மென் இன் பிளாக் (Men in Black) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பாரி சோனென்ஃபீல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொமி லீ ஜோன்ஸ்,வில் ஸ்மித் மற்றும் பலரும் நடித்துள்ளனர். விஞ்ஞானப்படம் கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் 'தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமன்று, அதன் தொடர்ச்சியிலும் உண்டு என்பது அறிஞர் கருத்து. இந்தத் தொடர்ச்சி தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்குச் சந்தேகம். தமிழ் வரலாற்றில் பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்தக் காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும். பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாகத் தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின் ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள். தொல்பழங்காலம்/சங்ககாலம் 0 | 1 - 100 | 100 | 200 | 300 | 400 | 500 | 600 | 700 | 800 | 900 | 1000 1100 | 1200 | 1300 | 1400 | 1500 | 1600 | 1700 | 1800 | 1900 | 2000 சென்னைப் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம். இந்தியாவில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் கண்டறியப்பட்டன. இம்மூன்று நகரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகியவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 11-11-1839 தேதியிட்ட 70000 பேர் சேர்ந்து எழுதி லார்ட் ஜான் எல்பின்ஸ்டன் (Lord John Elphinston) அவர்களிடம் அளித்த பொதுமனுக்குழு சென்னை பல்கலைக்கழகம் அமைக்கக் காரணமாக அமைந்தது. கல்வி பற்றிய விவாதங்களும் எழுந்தன. ஜனவரி 1840ல் ஜார்ஜ் நார்டன் தலைமையில் பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பிரெசிடென்சி கல்லூரி உருவாக காரணமாக அமைந்து அது முதலில் உருவானது. 1857இல் மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி அளிக்க அங்கிகாரம் பெற்றது. அதன் பிறகு 14 வருடம் கழித்து 1854இல் சார்லஸ் உட் எழுதிய கல்விக்குறிப்பின் பயனாக ஒரு சீரான கல்விக் கொள்கை ஒன்றை அமைத்து 1857ல் சட்டம் இயற்றி சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1923-ல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் என பரந்து விரிந்திருந்தது. சென்னைப் பல்கலைக்கழகம் மும்பை மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2000 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு NAAC மூலம் முதல் முறையாக அங்கீகாரம் மற்றும் "5 நட்சத்திர அந்தஸ்து" வழங்கப்பட்டது. தனது 150ஆவது வருடத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 2008ஆம் ஆண்டு கொண்டாடியது. 1. மைசூர் பல்கலை(1916), 2. உசுமானியா பல்கலை(1918), 3. ஆந்திர பல்கலை(1926), 4. அண்ணாமலை பல்கலை(1929), 5. திருவாங்கூர் பல்கலை(1937), 6. உத்கல் பல்கலை(1943), 7. திருவேங்கடவன் பல்கலை(1954), 8. மதுரை காமராஜர் பல்கலை(1966), 9. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை(1971), 10. அண்ணா பல்கலை(1978), 11. பாரதிதாசன் பல்கலை(1982), 12. பாரதியார் பல்கலை(1982), 13. பெரியார் பல்கலை(1997), 14. சட்டப் பல்கலை(1997), 15. திருவள்ளுவர் பல்கலை(2002) என்பனவாகும். 2011இல் பல்கலைக்கழக மானிய குழு சிறந்த திறன் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தது. அதன் விளைவாக 25 கோடி ரூபாயை மானியமாக பெற்றது. பலகலைக்கழகத்தின் வேந்தராக தமிழக கவர்னர் அல்லது ஆளுநர் இருப்பார். சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர், கே. கே. பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ரா. தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி. ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்கள். 1857ல் உருவாக்கப்பட்ட இந்த இலச்சினை இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் கன்னிமாரா நூலகத்தில் 1907ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்போதுள்ள நூலகம் 1936ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி துவங்கப்பட்டது. இது இந்திய-பிரிட்ஷ் வகையில் அமைக்கப்பட்டது. சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தாகும். துணைவேந்தர்களாக முதலில் ஆங்கிலேயர்களும் பின்னர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். துணைவேந்தர் புகைப்படங்களின் தொகுப்பு. [[படிமம்:University of Madras New.JPG|300px]] [[படிமம்:Madras_university.JPG|300px]] [[படிமம்:1 Madras University.JPG|300px]] [[படிமம்:3_Madras_University.JPG|300px]] [[படிமம்:MadrasUniversityPrizeWinners1865.jpg|300px]] [[படிமம்:MadrasUniversityProfessor1860s.jpg|300px]] [[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]] [[பகுப்பு:சென்னையின் வரலாறு]] அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார், அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928-ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. 1929ம் ஆண்டு சட்டத்தின்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு அரசு பல்கலைக்கழகம் என்றாலும் அதில் இடம்பெற்ற ஒரு சில பிரிவுகள் இப்பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் செயல்படும் வாய்ப்பினை அளித்திருந்தது. அதனுடைய நிறுவனராக இருந்த அண்ணாமலைச் செட்டியார் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. பல்கலைக் கழகத்தை தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பதால் ஆங்கிலேய ஆட்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நிறுவனர் பல்கலைக்கழக இணைவேந்தராகவும் செயல்பட்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை வேந்தர் (ஆளுநர்) அவர்களிடம் இணைவேந்தர் அளிப்பார். இப்பட்டியலை தயார் செய்வது இவரது தனிப்பட்ட உரிமையாகும். முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை வேந்தர், துணைவேந்தராக தேர்வு செய்து நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட துணை வேந்தர் பல்கலைக்கழக அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான நிர்வாகியாக இருப்பார்.பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகம், ஆசிரியர், ஊழியர் பணியமர்த்தல், கல்வி மற்றும் வகுப்புகள், அன்றாட நிர்வாகம் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன, தமிழகப் பலகலைக் கழகங்களில் இங்கு தான் முதன் முதல் (30 சனவரி 2010) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் இதன் இருந்ததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு 1928-ல் கொண்டுவரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990 இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத் தனிப்பெருஞ்சின்னம் (emblem) பற்றிய விளக்கம் பின்வருமாறு அமையும்
பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன. பலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம். இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன. பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் "தமிழ்நாடு" என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும். அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும். 'த' வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், 'நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. 'மி' வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. 'டு' வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது. 'டு' வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. தற்போது 'மி' வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக "புதியதோர் உலகம் செய்வோம்" என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலையின் மைய வளாகம் முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது. இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகம் சார்ந்தப் பகுதிகளான துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம், பெரும்பான்மையான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் பல்கலையின் மைய வளாகமான பல்கலைப்பேரூரிலேயே அமையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும், மேலும் மைய நூலகம், விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் எனப் பல அமையப்பெற்றுள்ளன. இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல்,சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெரும்பூரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக் கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இப்பலகலையின் துறைகள்/பள்ளிகளில் 177 திட்டங்களுக்குட்பட்ட 40 முதுநிலைத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியற் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக்கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது. அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியனவே இதன் அடிப்படை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1990 செப்டம்பர் 7 ஆம் நாள் திருநெல்வேலி நகரில் கொக்கிரகுளம் பகுதியில் இருந்த மாவட்ட ஆட்சியக வளாகத்தில் தொடங்கப்பட்டது. கஜேந்திர காட்கர் கமிஷன் பரிந்துரைக்கமைய மதுரை காமராசர் பல்கலைக்கழக தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவானது. இப்பல்கலைகழகத்திற்கு தமிழ் பேராசிரியரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்ன் முக்கிய வளாகம் மற்றும் பல்கலைக்கழக துறைகள் செயல்பட 520 ஏக்கர் அபிஷேகபட்டியில், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. மற்றொரு 120 ஏக்கர் ஆழ்வார்குறிச்சியிலும், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பரமகல்யாணி கல்லூரியிலும் (0.49 கிமீ) மற்றும் ராஜக்கமங்கலதில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 70 ஏக்கர் (280,000 மீ) உள்ளது. பல்கலைக்கழக அதிகாரத்தின் கீழ் பட்டியலில் 65,000 மாணவர்கள், 61 இணைப்பு கல்லூரிகள், 5 மனோ கல்லூரிகள் மற்றும் 1 சட்டக்கல்லூரி உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU) , அதாவது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தெற்கு மாவட்டங்களில் உள்ள மக்களின் நீண்ட கால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்ய 7 செப்டம்பர் , 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட்து. பல்கலைக்கழக பட்டியலில் 65,000 மாணவர்கள், இதன் கீழ் 61 இணைப்பு கல்லூரிகள், 5 மனோ கல்லூரிகள் மற்றும் 1 சட்டகல்லூரி உள்ளது. இவற்றுள் மூன்று கல்லூரிகள் (செயின்ட் ஜான்ஸ் கல்லூரி], இந்து கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி) 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. பல்கலைக்கழகத்தில் 24 கல்வி துறைகள் உள்ளன ராஜக்கமங்கலதில் உள்ள கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆழ்வார்குறிச்சி பல்கலைகழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக துறைகளில் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் UNO பல்வேறு நிதி நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சி திட்டங்கள் பெறுகின்றனர். முதுநிலை படிப்பு, எம்.பில் மற்றும் பிஎச்.டி திட்டங்கள் (பகுதி நேரம் மற்றும் முழு நேரம்) உள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புது தில்லி, மத்திய அரசின் தலைமை உயர் கல்வி அமைப்பு, மார்ச் 29, 1994 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி பெற அனுமதி வழங்கியுள்ளது. இணை கல்லூரிகளில், தொழில் முனைவோருக்கான ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள், மேலும் திறன் வளர்ச்சி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். சென்னையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது பெரியார் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. பெரியார் பல்கலைகழகம் தமிழக அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் தொடங்கப்பட்டன. முதல் துணை வேந்தராக திரு. டி ஜெயக்குமார், முதல் பதிவாளராக திரு.வேலுசாமி நல்லியன் ஆகியோர் பங்காற்றியுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தர மதிபீட்டுக் குழு ஆய்வின் அடிப்படையில் தற்பொழுது A அங்கிகாரம் பெற்றுள்ளது மக்கள் தொடர்பு அலுவலகம், பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் - 636 011, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் proofficepu@gmail.com, தொலைபேசி: 0427-2345766, 2345520 பெரியார் பல்கலைக்கழகத்தில்106 கல்லூரிகள் இணைவுப்பெற்றுள்ளன; ஒரு முதுகலை விரிவாக்க நடுவம் அரசு கலைக்கல்லூரி தருமபுரியில் செயல்படுகின்றது. இப்பல்கலைக்கழகம் பின்வரும் உறுப்புக்கல்லூரிகளை நிருவகித்து வருகின்றது. வல்லிக்கண்ணன் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ""வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது. உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள் உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள் உத்தரிப்புகள் பல உருவங்களில் பல மக்களை பீடிக்கிறது. இவை முக்கியமாக இன உத்தரிப்பு, நிற உத்தரிப்பு, பால் உத்தரிப்பு, மத உத்தரிப்பு, ஜாதி உத்தரிப்பு, மொழி உத்தரிப்பு, வயது உத்தரிப்பு ஆகும். இப்படிப்பட்ட உத்தரிப்புகள் மனித உரிமைகளை மீறுபவையாகி , சமுதாயத்தில் மனக் கசப்பையும், காழ்ப்பையும் ஏற்படுத்தி, சமுதாய சமரசத்தை குறைத்து, தொழில், வேலை இடங்களில் மனிதர்களின் ஊக்குசக்தியை பாதிக்கிறது. அத்னால் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உத்தரிப்பு மறுப்பு மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்களை அமல் செய்ய அரசாங்களும், தொழில், வேலை நிருவனங்களும் உத்தரிப்பு நீக்கல் நிர்வாகசபைகளை ஆக்கி உதாரிப்பினால் பீடித்தவர்கள் குறை சொல்ல சந்தர்பம் கொடுத்து, அதனை நீக்க முயற்கிக்கிறன. உ.ம.நீ. பல நாடுகளில் சமவாய்ப்பு நீதிமுறைகளோடு இணையப்பட்டு, பேசப் படுகிறன. முக்கிய வித்தியாசம் என்னவென்றால் சமவாய்ப்பு நீதிகள் தொழில், வேலை இடங்களில் சுலபமாக அமல் படுத்த முடியும். உ.ம.நீ. சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் செல்லுபடியாகும். உ.ம.நீ மனித உரிமை கொள்கையோடு ஒத்துப் போகிறது. 1.நேர்முக உத்தரிப்பு - நபர்களை மத, இன, பால், மற்ற காரணங்களினால் பழித்தல், வாய்ப்பு மறுத்தல் 2.சுற்றுவழி உத்தரிப்பு - சில இன, மத ஆட்களை உத்தரிப்புதைப்போல் கட்டளைகளையும், முறைகளையும் நிறைவேற்றுதல் 3. மற்ற நபர்களின் கண்ணியத்தையும், தன் மானத்தையும் குலைக்கும் வகையில் திட்டுதல், பயமுறுத்துதல், உதாசீனப் படுத்துதல், குறைபடுத்துதல், கடுஞ்சொற்கள், உறண்டையாடுதல் முதலியவை. 4.பலியேற்றுதல்- நபர்களை தண்டித்தல் - உதாரணமாக அவர் உத்தரிப்பு எதிர்த்து குறை சொன்னது காரணமாக, அவரை மற்றி வழிகளில் தண்டித்தல் பல நாடுகள் கீழ்க் கண்ட உத்தரிப்புகளை அடையாளம் கண்டு, அதற்க்கு தக்கவாறு நவவடிக்கை எடுக்கிறன. இனம், நிரம் மற்றும் உருவம், மதம், பால், பால் விருப்பம், மொழி, தேசீயம், உறுப்புசேதம், வயது, தாய்மொழி, ஜாதி ஐக்கிய நாடுகள் 1965ல், "எல்லாவித இன உதாரிப்புகளை அகற்றும் மகாநாடு" கூட்டி, அதற்கேற்ப்ப தீர்மானங்களை ஏற்றியது. அத்தீர்மானங்களை இதுவரை 179 நாடுகள் அங்கீகரித்து உள்ளன. சட்ட சாசனத்தின் பகுதி 3 , குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்து, உத்தரிப்பை தெளிவாக மறுக்கிறது. "இன, மத, ஜாதி, பிறக்குமிடம் காரணகளால் ஏற்படக்கூடிய உத்தரிப்பின் தடை. அ. நாடு எந்த பிரஜை மேலும் மத, இன, ஜாதி, பால் ரீதியில் உத்தரிப்பு கட்டாது. ஆ.எந்த பிரஜையும் மத, இன, ஜாதி, பால், பிறப்பிடம் காரணமாக ஒருகாலும் முடக்கவோ, இழக்கவோ ஆளாகமாட்டார். உதாரணமாக சமீபத்தில் வயது உத்தரிப்பை தடை செய்யும் சட்டங்கள் அமலாகி உள்ளன. வயதின் சாக்காக நிறைய ஆற்றல் வாய்ந்த 40, 50 மேலானவர்களை தொழில் நிருவனங்கள் உதாரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அதனால் தனி நபர்களுக்கும், தொழிலுக்கும், சமுதாயத்திற்க்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதால், பிரித்தானிய அரசாங்கம் 1ம் அக்டோபர் 2006ல், அதைத் தடுக்கும் சட்டத்தை அமலாக்கியது. பிரித்தனில் உறுப்புசேதமடைந்தவர்களை வேலை, கல்வி, போக்குவரத்து, வீடு சம்பந்தமான விஷயங்களில் உத்தரிப்பை தடை செய்ய 2005ல் "உருப்புகேடு உத்தரிப்பு சட்டம் 2005" என இயற்றியது. ஒருபால்சார்வோர் வேலையிலும் வீட்டு வசதிகளில் அடையும் உத்தரிப்பை மறுக்க அமெரிக்கவில் 17 மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. 1967லேயே வயது காரணமாக உத்தரிப்பை தடை செய்து சட்டமாகியுள்ளது மந்திரி குமாரி மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது குண்டலகேசியைத் தழுவி மு. கருணாநிதி எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார். எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். தளபதி வீரமோகனாக எம்.ஜி.இராமச்சந்திரன், ராஜகுருவாக நம்பியாா், கொள்ளையன் பாா்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன், இளவரசி ஜீவரேகாவாக ஜி.சகுந்தலா ஆகியோா் நடித்திருந்தனா். மந்திாிகுமாாி அமுதவல்லியாக மாதுாிதேவி நடித்திருந்தாா். இப்படத்தின் முக்கிய வசனங்கள் சில: பாா்த்திபன்: என் கலைக்காக தியாகம் செய்தவனாவேன். அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திாியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல முல்லை நாட்டின் அரசர் ராஜ குருவின் (எம்.என்.நம்பியார்) சொல்படி நடப்பவர். குருவின் மகன் பார்த்திபன் (எஸ்.ஏ. நடராஜன்) முல்லை நாட்டின் தளபதி ஆக வேண்டும் என்று குரு ஆசைப்பட்டார். மாறாக, வீர மோஹனை தளபதியாக (எம். ஜி. ஆர்) நியமனம் செய்தார் அரசர். அதில் கோபமுற்ற பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை (ஜி. சகுந்தலா) பார்த்திபன் மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோஹனை விரும்பினாள். பார்த்திபன் தன்னை சந்திக்க ஜீவரேகாவிற்கு ரகசிய தூது அனுப்பினான். அந்த தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை (மாதுரி தேவி) சென்றடைந்தது. அவளும் பார்த்திபனை பார்க்கச்செல்ல, இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன் அமுதவல்லியை இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தினான். இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முல்லை நாட்டு அரசர் வீர மோஹனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். கோபமடைந்த ராஜ குரு தன் மகனை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார். பெண்தெய்வத்தின் முன் வாதிடுகிறார் ராஜகுரு. அப்போது, அச்சிலையின் பின்னால் ஒளிந்திருந்த அமுதவல்லி, பார்த்திபன் நிரபராதி என்று கூறுகிறாள். அது தெய்வத்தின் குரல் என்று நம்பிய அமுதவல்லியின் தந்தை மந்திரி, பார்த்திபன் நிரபராதி என்று அவரும் கூறிவிடுகிறார். ராஜ குருவுடனும், மந்திரியுடனும் அரசர் கலந்து ஆலோசித்து, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோஹனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான். வீர மோஹனுடன் ஜீவரேகாவும் சென்றுவிடுகிறாள். பார்த்திபனை திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபடுகிறான் பார்த்திபன். வீரமோஹனை தாக்கி, ஜீவரேகாவை கடத்திவிடுகிறான் பார்த்திபன். அமுதவல்லி தன் கணவரை மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்று, ஜீவரேகாவை காப்பாற்றுகிறாள். அதனால், அமுதவல்லியை கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான் பார்த்திபன். மாறாக, அமுதவல்லி பார்த்திபனை தள்ளி கொன்று, ஒரு புத்தமத துறவியாகிறாள். ஜீவரேகாவை மாறுவேடத்தில் வீர மோகன் சந்திக்க வருகிறான். அப்போது ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது பார்த்துவிடுகிறான். ஆனால், அரசர் வீர மோகன் தான் தன்னை கொல்ல வந்ததாக தவறாக நினைக்கிறார். பின்னர் அந்த சூழ்நிலையிலிருந்து வீர மோகன் எவ்வாறு தப்பித்தான் என்பதே மீதிக் கதையாகும். கா. மு. ஷெரிப் மற்றும் ஏ. மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி பாடிய பாடல் "வாராய் நீ வாராய்" மிகவும் பிரபலமான பாடலாகும். இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது. இந்த படத்தில் நடிக்க எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது. அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறான் மரவெட்டி அலிபாபா (எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள். ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறான். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறான் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறான் அலிபாபா. ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர். அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம் (எம். ஜி. சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறான் அலிபாபா. பின்னர், பேராசை கொண்ட காசிம், அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து உள்ளவே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம். மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறான். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறான் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான். அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத்துவங்கினர். செருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வொயாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சாதி திட்டத்தை அபிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்த்தனர் என்பதே மீதிக் கதையாகும். மதுரகாசி எழுதிய பாடல்களுக்கு, சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார். மலைக்கள்ளன் மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். மதுரை வீரன் (1956 திரைப்படம்) மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் மூன்று ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலச் சமர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும். ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்களக்குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். யாழ்ப்பாணத்தை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை 'ஓயாத அலைகள் ஒன்று' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டிவீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகள் வசமிருந்தன. யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் 'ஜெயசிக்குறு' என்ற பெயரில் மே 13. 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஆனையிறவு வரையான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். அந்நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர் புரிந்ததால் வன்னிப்பரப்பில் பல கடுமையான சமர்கள் நடைபெற்றன. அந்நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பாதையை சிறிலங்கா அரசதரப்பினர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் டிசம்பர் 5 1998 அன்று சிறிலங்கா அரசபடையினர் 'றிவிபல' என்ற பெயரில் நடவடிக்கையொன்றைச் செய்து மாங்குளத்துக்கும் ஏ-9 நெடுஞ்சாலைக்கும் கிழக்குப் பக்கமாகவுள்ள ஒட்டுசுட்டான் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றைய தினமே 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக சிறிலங்கா அரசபடைத்தரப்பு அறிவித்தது. ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை அமைக்கும் முயற்சியை சிறிலங்கா அரசபடைகள் கைவிட்டதற்கு, விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலும் அதனால் சிறிலங்கா அரசபடைக்கு ஏற்பட்ட இழப்புக்களுமே காரணம் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பின்னர், மன்னாரிலிருந்து பூநகரி வரையான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு நிலப்பகுதியைக் கைப்பற்றி மேற்குக் கடற்கரையோரமாக யாழ்ப்பாணத்துக்கு வினியோகப் பாதையை ஏற்படுத்துவதென சிறிலங்கா அரசபடை திட்டமிட்டது. அதன்படி 'ரணகோச' என்ற பெயரில் தொடரிலக்கங்களுடன் பெரியதொரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. ஒன்று, இரண்டு எனத் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட ரணகோச இராணுவ நடவடிக்கையில் சிறிலங்கா அரசபடைத்தரப்பு 'பள்ளமடு' என்ற இடம்வரை முன்னேறியது. பள்ளமடுவில் பல சண்டைகள் நடந்தாலும் அக்கிராமத்துக்கு அப்பால் சிறிலங்கா அரசபடை முன்னேறவில்லை. இந்நிலையில் 1999 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் புறமாக 'அம்பகாமம்' என்ற இடத்தில் 'வோட்டர் செட் -1, 2' என்ற பேரில் இரண்டு இராணுவ முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நவம்பர் 1, 1999 அன்று நள்ளிரவு 'ஓயாத அலைகள் மூன்று' இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது. 'றிவிபல' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடைகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்த ஒட்டுசுட்டான் கூட்டுப்படைத்தளம் மீது முதலாவது தாக்குதல் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுங்கேணி, அம்பகாமம், கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், விளக்குவைத்த குளம் போன்ற 'ஜெயசிக்குறு' நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளும், 1985 ஆம் ஆண்டு தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுச் சிங்களக் குடியேற்றமாகவும் இராணுவத் தளமாகவும் மாற்றப்பட்டிருந்த சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற நிலப்பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் தொடங்கி ஐந்தாம்நாள் (நவம்பர் 5. 1999) ஏ-9 பாதையில் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முதற்கட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டுநாட்கள் கழிந்த நிலையில் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. "ரணகோச" என்ற பெயரில் தொடரிலக்கமாக நான்கு நடவடிக்கைகளைச் செய்து சிறிலங்கா அரசபடைகள் மன்னார் மாவட்டத்தில் கைப்பற்றியிருந்த நிலப்பகுதிகளை மீளக் கைப்பற்றும் நோக்கத்தோடு பள்ளமடுவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. பள்ளமடு, பெரியமடு, தட்சணாமருதமடு, மடுத்தேவாலயப்பகுதி உட்பட 'ரணகோச' மூலம் சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் விடுதலைப்புலிகள் மீளக்கைப்பற்றினர். இத்தாக்குதல் நடவடிக்கையின் போதுதான் மடுத்தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகி அங்குத் தஞ்சமடைந்திருந்த 42 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் பலர் படுகாயமடைந்திருந்தனர். இத்தாக்குதல் யாரால் நடத்தப்பட்டதென்ற குழப்பம் சிலரிடையே நிலவினாலும், கோயிலில் தங்கியிருந்த மக்கள், காயமடைந்தவர்கள் அனைவரினதும் சாட்சியங்கள் அரசபடையினரையே சுட்டின. ஏறத்தாழ மூன்றுநாட்களில் இரண்டாம் கட்டம் நிறைவுக்கு வந்தது. ஜெயசிக்குறு ஜெயசிக்குறு (சிங்களம்:"ஜயசிகுறுய்" வெற்றி நிச்சயம்) என்பது இலங்கை அரசபடையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நீண்டகால இராணுவ நடவடிக்கையாகும். யாழ்ப்பாணத்தை இலங்கை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை ஓயாத அலைகள் ஒன்று என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டி வீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப் புலிகள் வசமிருந்தன. யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் இராணுவ நடவடிக்கையொன்று திட்டமிடப்பட்டது. அதற்கு முன்பாக, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் முதன்மைப் பாதையைத் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர 'எடிபல' என்ற பெயரில் ஓர் இராணுவ நடவடிக்கை இலங்கை அரசபடைகளாற் செய்யப்பட்டது. அந்நடவடிக்கை எந்தவித எதிர்ப்பைச் சந்திக்காத பொழுதும் வவுனியாவில் இருந்து பறையன் ஆலங்குளம் வரையிலான ஏ-30 வீதியில் இருமருங்கும் அமைந்திருந்த அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் வவுனியா நகரப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியமரவில்லை. பின் யாழ்ப்பாணத்துக்கான வினியோகப் பாதையைத் திறக்கும் நோக்குடன் 'ஜெயசிக்குறு' என்ற பெயரில் 13 மே 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான 120 கிலோமீற்றர் நீளமான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். இந்நடவடிக்கை 5 டிசம்பர் 1998 அன்று இலக்கை அடையாமலேயே இடையில் இலங்கை அரசபடைகளால் கைவிடப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்களின் நேரடி மேற்பார்வையில் இருபதாயிரம் படைவீரர்களைக் கொண்டு இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஏற்கனவே இலங்கை அரசபடையினரின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே முதன்மைத்திட்டம். எனினும் இந்நடவடிக்கை இரு முனைகளில் ஒரேநாளில் தொடங்கப்பட்டது. ஏ-9 நெடுஞ்சாலையை மையமாக வைத்து தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கிய ஒரு முனையும், கிழக்குப் புறமாக மணலாற்று இராணுவ முகாம்களிலிருந்து நெடுங்கேணி நோக்கிய ஒரு முனையும் திறக்கப்பட்டன. பின் ஓமந்தையிலிருந்து ஏ-9 வழியாக தொடர்ந்து முன்னேறுவதும், நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரை இன்னொரு முனையால் முன்னேறி புளியங்குளத்தில் இரு முனைப் படைகளும் ஒன்றிணைந்து தொடர்ந்தும் கிளிநொச்சி நோக்கி முன்னேறுவது என்ற மூலோபாயத் திட்டத்துடன் அரசபடைகள் செயற்பட்டன. இந்நடவடிக்கையில் மிக உச்ச அளவில் வான்படை மற்றும் கவசப்படைகளை இலங்கை அரசு ஈடுபடுத்தியது. நீண்டகாலம் வன்னியின் தென்முனையில் மட்டும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட இராணுவத்தினர் பின்னர் புதிய முனையொன்றினூடு முன்னேற்ற முயற்சிளைத் தொடங்கினர். வவுனியாவிலிருந்து போய்ச்சேர வேண்டிய இலக்கான கிளிநொச்சியிலிருந்து புதிய சமர் முனையைத் திறந்து வவுனியோ நோக்கி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதன்மூலம் ஒரேநேரத்தில் ஏ-9 நெடுஞ்சாலையின் இரு முனைகளிலிலிருந்தும் அச்சாலையைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின் தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர். முன்னேறிய இலங்கைப்படையினரை வழிமறித்துத் தாக்கிய சண்டைகளில் புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு போன்ற இடங்களில் நடைபெற்ற சண்டைகள் மிகக் கடுமையானவை. இலங்கை அரசபடையினரை எதிர்கொள்வதற்கென்று புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்புப்படையணியான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி இவ்வெதிர்ப்புச்சமரில் புகழ்பெற்றது. விடுதலைப்புலிகளின் எதிர்ப்பை மீறி ஏ-9 நெடுஞ்சாலையில் மாங்குளம் வரை இலங்கை அரசபடைகள் முன்னேறின. 30 செப்டம்பர் 1998 அன்று மாங்குளம் பகுதி இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இறுதி நிலப்பகுதி இதுதான். ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் முன்னேறிய இலங்கை அரசபடையினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் அவ்வப்போது பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக அந்நடவடிக்கைப் படையினர் மீது புலிகளால் நடத்தப்பட்ட பெரிய வலிந்த தாக்குதல் இதுவாகும். 10.06.1997 அன்று தாண்டிக்குளம் இராணுவக் கூட்டுப்படைத்தளம் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓர் இரவும் ஒரு பகலும் நடைபெற்ற தாக்குதலில் முகாம் வெற்றிகொள்ளப்பட்டு மறு இரவு புலியணிகள் பின்வாங்கின. இத்தாக்குதலின்போது குறைந்தபட்சம் ஒரு MI-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி சேதமாக்கப்பட்டது. இத்தாக்குதலில் புலிகளின் கரும்புலி அணியினரும் பங்கு கொண்டிருந்தனர். தாண்டிக்குளம் தாக்குதல் நடைபெற்று சில நாட்களும் ஜூன் மாதம் 24 ஆம் நாள் மீண்டுமொரு வலிந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு மூலம் இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த பன்றிக்கெய்த குளம், பனிக்கநீராவி, பெரியமடுப் பகுதிகளில் அமைந்திருந்த படைத்தொகுதி மீது நடத்தினர். இதில் புலிகளால் 120 mm பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. பின்னர் புலியணிகள் குறிப்பிட்ட இடத்தைவிட்டுப் பின்வாங்கின. இத்தாக்குதலை களத்தில் தலைமையேற்று வழிநடத்திககொண்டிருந்த புலிகளின் தளபதி லெப்.கேணல் தனம் களத்திலேயே கொல்லப்பட்டார். பெரியமடு தாக்குதலின்பின் சரியாக ஒருமாதத்தில் பெருமெடுப்பினாலான அடுத்த வலிந்த தாக்குதலொன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஓமந்தை என்ற இடத்தில் அமைந்திருந்த ஆட்லறிகள் உள்ளடங்கிய இராணுவக் கூட்டுத்தளம் மீது 01.08.1997 அன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனைய வலிந்த தாக்குதல்களோடு ஒப்பிடுகையில் புலிகளுக்கு எதிர்பார்த்த பலனைத்தராமல் தோல்வியில் முடிந்தது இத்தாக்குதல். இத்தாக்குதலில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருது செயற்பட்ட, சிறந்த பாடகர் என அடையாளப்படுத்தப்பட்ட பாடகர் மேஜர் சிட்டு உட்பட 130 போராளிகள் கொல்லப்பட்டனர். 1997 ஒக்டோபர் மாதத்தில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பக்கமாக மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தை இலங்கை அரசபடையினர் கைப்பற்றினர். அம்முனையில் முன்னேறிய படையினருக்கு வினியோகத் தளமாகச் செயற்பட்ட கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற கிராமங்களில் அமைந்திருந்த கூட்டுப்படைத்தளம் மீது ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்தனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் இலங்கை அரசபடையினரின் முக்கியமான ஆயுத, வெடிபொருட் களஞ்சியமென்பதால் பல மோட்டார் பீரங்கிகளுட்பட நிறைய ஆயுத தளபாடங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இத்தாக்குதலில் இரு T-55 இரக டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலை களத்தில் நேரடியாக வழிநடத்திய புலிகளின் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தன் களத்திலேயே கொல்லப்பட்டார். கிழக்கு மாகாணத்திலிருந்து ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளும் சமருக்காக வன்னிக்கு வருகைதந்திருந்த அணியிலிருந்த சந்திரகாந்தன் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்' என்று புலிகளால் கெளரவிக்கப்பட்டார். வவுனியாவிலிருந்து படையினர் போய்சேர வேண்டிய இடமான கிளிநொச்சி நகரம் புலிகளால் தாக்குதலுக்குள்ளானது. மற்ற வலிந்த தாக்குதல்கள் போலன்றி இம்முறை நகரை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்குடன் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். 1996 ஒக்டோபரில் புலிகளின் வசமிருந்த கிளிநொச்சி நகரை சத்ஜெய-1,2,3 நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசபடை கைப்பற்றியிருந்தது. அந்நகரத்தை மீளக் கைப்பற்றவதற்காக 2.2.1998 அன்று புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். எதிர்பார்த்தது போல் தாக்குதல் வெற்றியளிக்கவல்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே கைப்பற்றித் தக்கவைத்துக்கொண்டனர் புலிகள். சில மாதங்கள் கழித்து செம்ரெம்பர் 1998 இல் ஓயாத அலைகள் இரண்டு என்ற பெயரிட்டு தாக்குதலொன்று நிகழ்த்தி கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றிக் கொண்டனர். 05.12.1998 அன்று இலங்கை அரசபடையினரால் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 13.05.1997 அன்று தொடங்கப்பட்ட இந்நடவடிக்கை கிட்டத்தட்ட பத்தொன்பது மாதங்களின் பின் கைவிடப்பட்டது. அதுவரையான காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கில் அண்ணளவாக அரைவாசிப்பகுதியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நடவடிக்கைக் காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கான கிளிநொச்சி நகரை புலிகள் கைப்பற்றியதன் மூலம் இராணுவம் போய்சேர வேண்டிய தூரம் இன்னும் அதிகரித்தது. இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு பப்பி லினக்சு பப்பி லினக்ஸ் இறுவட்டில் (CD) இல் இருந்தே இயங்கும் ஓர் லினக்ஸ் வழங்கல் ஆகும். இது பாரி காலரினால் ஆரம்பிக்கப்பட்டது. பப்பி மிகச்சிறிய நம்பகரமான இலகுவாகப் பாவிக்கக்கூடிய முழுமையான வசதியுடைய ஓர் லினக்ஸ் வழங்கலாகும். முழுமையான இய்ங்குதளமும் நினைவகத்தில் (ராம்) இல் இருந்தே இருந்தே இயங்கக் கூடியது. இயங்குதளம் ஆரம்பித்த்தும் நொப்பிக்ஸ் லினக்ஸ் பொன்றல்லாமல் இறுவட்டை அகற்றி விடலாம். இதில் மொஸிலா அப்பிள்கேசன் ஸ்சூட், அபிவேட், சொடிபோடி, ஜெனீயுமறிக், எக்ஸ்சைன் போன்ற பிரயோகங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வழங்கலானது ஆரம்பத்தில் இருந்தே தனியாக விருத்தி செய்யப்பட்டது. இது கீழ்வருவனவற்றில் இருந்து ஆரம்பிகக் கூடியது. பப்பி லினக்ஸ் நிறுவல்கள் ஹாட்டிஸ்கில் அல்லது யுஎஸ்பி டிஸ்க், ஜிப் டிஸ்க் இல் நிறுவுவதை லைவ் சீடியில் இருந்தோ வேறு ஓர் நிறுவலில் இருந்தோ செய்துகொள்ளலாம். பப்பி அண்மையில் விண்டோ மனேஜரில் இருந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது. பப்பி லினக்ஸ் ஆரம்பிக்கும் போது ராமின் ஓர் பகுதியை ராம் டிஸ்காகப் பாவித்து அதில் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளும். இதற்கு ஆகக் குறைந்ததது 128 மெகாபைட் நினைவகமாவது தேவைப்படும் (நினைவகமானது வீடியோவுக்கும் பகிரப்பட்டு இருந்தால் பகிரப்பட்ட அளவானது 8 மெகாபைட் அளவு அல்லது அதனிலும் குறைவாக இருக்கவேண்டும். எவ்வாறெனினும் 48 மெகாபைட் ராம் உள்ள கணினிகளில் கூட இந்த லினக்ஸ் பாவிக்கப் படக்கூடியதே. இந்தமாதிரியான சந்தர்ங்களில் லினக்ஸ் இயங்குதளத்தில் பகுதிகளை வன்வட்டிலோ அல்லது இறுவட்டிலோ வைத்திருக்கலாம். பப்பி ஓரளவு முழுமையான லினக்ஸ் வழங்கல் இது லினக்ஸ் இயங்குதளத்தை ராம்டிஸ்க்கூடாக இயங்க வைக்கக் கூடியது. பப்பியின் வரைகலை இடைமுகம் வேகமாக வேலைசெய்யக் கூடியது. இந்த வழங்கலின் நோக்கமானது இலகுவாகவும் வேகமாக இயங்கும் லின்கஸ் வழங்கலொன்றை உருவாக்குவதே. பொதுவான வேலைகளை மேதாவித்தனமூடாக (விசாட் - Wizard) ஊடாகச் செய்யலாம் கிழிப்பர் ஜேக் கிழிப்பர் ஜேக் (ஜாக் த ரிப்பர், ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது. பலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், 'கை எழுத்து' போல் ஆகிவிட்டது. அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் கொலைகாரர் அடையாளம் அடையாமல் உள்ளன. அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர். இந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் காவல்துறைத் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என காவற்துறைக்கு ஆலோசனைகள். கிழிப்பர் கேசை புலனாய்வு செய்த காவல்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம். இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிறையில் காலம் கடத்தினவர்கள். இதைத் தவிர இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரசு குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், முதல் சொன்ன ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். சமகாலத்திலேயோ, பிற்போதோ, சந்தேகங்களை தாண்டி, ஒன்றும் நிரூபிக்க படவில்லை. பின்னோக்கம்: கொலைகள் நடந்து சுமார் 120 வருடம் ஆகியும் பொதுசன இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் மக்கள் கிழிப்பர் ஜேக் பற்றி சுவாரசியம் காட்டுகிறனர். கிழிப்பர் ஜேக் 2006ல் நடந்த பி.பி.சி.யின். 'எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்' என்ற வாக்கெடுப்பில் முதலாக வந்தார் வன்னி (இலங்கை) மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ. ஈழப்போரில் இப்பிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் உட்கட்டுமானங்கள் வெகுவாகப் பாதிப்படைந்தன. வன்னி வன்னி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: குவைத் குவைத் ("Kuwait", ), அதிகாரபூர்வமாக குவைத் நாடு ("State of Kuwait") என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும். 18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது. பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது. 1919-20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது. 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது. 1899முதல்1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பல வாரங்கள் நடந்த வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991ஆம் ஆண்டு பிப்ரவரி23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது. 1990 -91போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் $5பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது. அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. சமீபத்திய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர். 2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்ட்தால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது. சன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர். 2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை இரத்து செய்த்து) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும். குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுபகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகளின் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தமிழர் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழர் அமைப்புகள் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ். எம். சிரீராமுலு நாயுடுவும் அடக்கம். வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள். இதுவரை இக்குற்றத்தை இழைத்தவர்கள் யாரென்ற மர்மம் தீர்க்கப்படவில்லை. இந்த வழக்கினால் பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது செல்வத்தையும் இழந்தார். 1959இல் வறுமையில் இறந்தார். கிருஷ்ணன் தமது மரணம் வரை சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார். சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை துவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர். அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் ஏற்கனெவே விற்பனையாகிவந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் அனைத்துக் கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார். 8-11-1944 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் ரிக்சாவில் போகும்போது, சிலர் லட்சுமிகாந்தனை கத்தியால் குத்தினர். அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். 9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலுவும் அடங்குவர். அந்த 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுவின் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப்பட்டது. நீதிபதி எல்லோருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதிமன்றத்திறத்தில் முறையிட்டனர்; ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து அவர்களது தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் திரை அரங்குகளில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது. ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல், விடுதலை செய்தது. முப்பது மாதம் சிறை வாசத்திற்க்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப்பட்ட பாகவதர் நேரே வடபழனி முருகன் கோவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் சேர்ந்து 1950களில் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்டவில்லை. நித்தி கனகரத்தினம் நித்தி கனகரத்தினம் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப்பிசைப் பாடகர். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமைவாய்ந்தவர். "பொப்பிசைப் பிதா" என அழைக்கப்படுபவர்.70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். தந்தை பெயர் கனகரத்தினம், தாயார் ஆச்சிமுத்து. ஆரம்பக் கல்வியை யாழ் வேம்படி ஆரம்பப் பாடசாலையிலும் பின்னர் யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் இந்தியாவில் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார். நித்தி 1986 வரை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தின் தலைவராக இருந்தவர். பின்னர் புலம் பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். 1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்ட நித்தி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக "சின்ன மாமியே.." என்ற பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே", "சோளஞ் சோறு பொங்கட்டுமா" முதலான பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார். பல இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர். பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும். நாநாவதி கொலை வழக்கு "கே.எம்.நாநாவதி எதிர் மகாராட்டிர அரசாங்கம்" என்பது 1959ல் பாம்பே உயர்நீதிமன்றத்தில் காவஸ் மானக்சா நாநாவதி தன் மனைவி சில்வியாவின் காதலின் என கருதப் பட்ட ப்ரேம் அஹூஜாவை சுட்டுக் கொன்றார் என்ற காரணம் காட்டி பதவி செய்யப் பட்ட வழக்காகும். அது இந்திய பத்திரிக்கைகள், மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை எற்றி உலுக்கியது. பல புத்தகங்களுக்கும் சினிமாக்களுக்கும் ஏதுவாகியது. இவ்வழக்கு இந்தியாவிலேயே நடுவர் குழு முறையில் (jury system) கடைசி முறையில் எடுக்க வழக்காகும். இந்த வழக்குதான் இந்திய நீதி மன்றங்களில் நடுவர் குழு ஒழிப்பிற்க்கும் காரணமாயிற்று. காவஸ் மானக்ஷா நாநாவதி (1935-2003) என்ற ஒரு பாரசி, இந்திய கடற்படையில் தளபதி (commander) ஆகவிருந்து , மும்பையில் மனைவி சில்வியா (1931- ) மற்றும் 2 பிள்ளைகள், ஒரு பெண்ணுடம் வசித்து வந்தார். நாநாவதி கப்பலில் நெடு நாட்கள் இருந்ததால், தனிமையாக இருந்த சில்வியா நாநாவதியின் நண்பர் ப்ரேம் அஹூஜாவிடன் மனம் பறி கொண்டதாக தெரிகிறது ஏப்ரல் 27, 1959 அன்று, நாநாவதி கடலிலிருந்து வந்த நாநாவதி சில்வியா மனக்கிலேசத்தில் இருந்ததை பார்த்து, அவளை கேள்வி கேட்டு துளைப்ப, அவள் அஹூஜாவின் மேல் தன் காதலை ஒத்துக் கொண்டாள். நாநாவதி தன் குடும்பத்தை மெட்ரோ சினிமா தியேடர் பக்கம் இரைக்கி வைத்து, தான் சினிமாவை பார்க்காமல் நேரே அஹூஜாவை பார்க்க சென்றார். அஹூஜா விட்டில், அஹூஜா சில்வியாவை மணம் செய்து கொண்டு தன் மாக்களை வளர்த்து வரும் எண்ணம் உள்ளதா என கேட்டார். அதை அஹூஜா மறுத்தவுடன், 3 கைதுப்பாக்கி ரவைகள் வெடித்தன, அஹூஜா செத்து கீழே விழுந்தார். நாநாவதி நேரே தன் கடற்படை உயர் அதிகாரியிடம் சென்று நடந்ததை கூறினார். அவ்வதிகாரிகாயின் ஆலோசனையில், போலீஸ் டெபுடி கமிஷனரிடம் சரணடைந்தார். நாநாவதி போலீஸ் இலாகா இந்திய தண்டனை விதி பகுதி 1, 301, 302 களின் படி கொலை செய்தவர் என கருதப் படுபவர் என வழக்கு போட்டது. வழக்கின் சூட்சுமம் என்னவென்றால் துப்பாக்கி எதேச்சையாக சுட்டதா அல்லது அதை குறியாக வைத்து துப்பாக்கி சுட்டாரா என்பது. முதல் விபாடையில் இந்திய தண்டனை விதிகளின் படி விசாரணை செய்து கொலை வரம்பில் வராத மரணம் விளைத்த குற்றம் என கருதி அதிக பட்சத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இரண்டாவது விபாடையின் படி கொலையாக கருதப் பட்டு மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.. நாநாவதி குற்றத்தை ஏற்க்கவில்லை என்றார். நடுவர்குழு விசாரணையில் 8-1 கணக்கில், அவர் குற்றம் செய்யவில்லை என தீர்மானம் ஆகியது. ஆனால் செஷன்ஸ் நீதிபதி, இந்த தீர்மானத்தை கடுமையாக தண்டித்தார். அவர் வழக்கு தலைமை தாங்கிய நீதிபதி நடுவர்குழுவிற்க்கு சரியான திசை கொடுக்கவில்லை; அதாவது துப்பாக்கி எதேச்சையாகத்தான் சுட்டது, மன சித்ததினால் ஏற்படவில்லை என நிரூபிப்பது நாநாவதியின் பொறுப்பாகும், இவ்வாறு நீதிபதி நடுவர்களுக்கு தெளிவாகாவில்லை. மேலும், நடுவர்களுக்கு நாநாவதியின் பிரதிவாதம் நிரூபிக்கவேண்டும் என ஜட்ஜ் ஆணையிடவில்லை. செஷன்ஸ் நீதிபதியின் வாதத்தை பாம்பே உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, நாநாவதி வழக்கு மறுபடியும் தொடங்கியது. மேலும், நடுவர்குழு மக்கள் ஊடங்களினால் எளிதாக சாய்கிறது என கருதப் பட்டு, அதும் ஒழிக்கப் பட்டது. பம்பாய் உயர்நீதி மன்றம் போலீஸ் வாதமாகிய திட்டமிட்டு செய்யப் பட்ட கொலை என்பதை ஒப்புக் கொண்டு, நாநாவதிக்கு ஆயுள்தண்டனை அளித்தது. 1961 இந்திய உச்ச நீதி மன்றம் உயர்நீதி மன்ரத்தின் தீர்வை மறுமொழித்தது. 3 வருடம் சிறை வாசம் பின், நாநாவதி விடுவிக்கப் பட்டார். விடுதலைக்கு பின், தன் மனைவி சில்வியா, குழந்தைகளோடு கனடாவிற்க்கு புலம் பெயர்ந்தார்; 2003 உயிரிழுந்தார். பொது மக்களிடயே இது பெரும் மர்மத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தியது. வழக்கு நடக்கும் போது, பிளிட்ஸ் போன்ற ஊடகங்கள் நாநாவதியை ஆதரித்து, அவரை விடுதலை செய்யும் படி கோரின. வழக்கின் போது, 25 பைசாவிற்க்கு விற்க்கும் பிளீட்ஸ் 2 ரூபாய்க்கு விற்றது. தெருக் கடைகளில் சிறுவர்களுக்கு 'நாநாவதி கைத்துப்பாக்கியும்', பெரியர்வர்களுக்கு 'அஹூஜா டவல்'களும் உற்பத்தியாய் விற்றன. காதலன் கொலைக்குப் பின், கணவனை முனு மனதுடன் ஆதரவு தந்த சில்வியாவின் போக்கினால், பொதுஜனம் கிளுகிளுப்பு ஏறியது. கடந்த 40 வருடங்களில் பல புத்தகங்களும், சினிமாக்கலும் எடுக்கப்பட்டன. 1963ல். தயாரிப்பாளர் நய்யாரின் 'யே ராஸ்தே ஹை ப்யார் கே' (காதலின் வழி இதுதான்), 1973ல் குல்சரின் 'அசானக்', நாநாவதி கொலை வழக்கை நாடகமாகின. சித்திரகுப்தர் சித்திரகுப்தர் (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) இந்து சமயத்தில் உள்ள கடவுளாவார். பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். தமிழ்நாட்டின் கருணீகர் மற்றும் வட இந்தியாவின் காயஸ்தர் இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்தர் விளங்குகின்றார். சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவன் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்று அழைக்கப்படுகிறார். மரணக் கடவுளான இயமன் தான் கொல்ல நினைப்பவர்களின் விபரங்களினைப் பற்றிய தெளிவான கருத்துக்களெதுவும் இல்லாத காரணத்தினால் பிரம்மாவிடம் தனது கஷ்டகாலத்தினை விளக்குகின்றார், அச்சமயம் அங்கு தோன்றும் சிவன் சித்திரகுப்த மகாராஜாவினை இப்பணிக்கு அமர்த்துகின்றார். சித்திரகுப்தனாரும் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர். சித்திரகுப்தரின் பிறப்பு பற்றி பலவகையிலும் கூற்றுக்கள் உண்டு; அவற்றுள் ஒரு கூற்றின்படி பிரம்மா மனிதர்களுள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன எழுதுகோலினை மறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே "கயஷ்தா" என்ற ஜந்தாவது ஜாதியும் தோற்றம் பெற்றது. இன்னொரு கூற்றின்படி பார்வதி வரைந்த ஓவியத்தின் மீது சிவன் ஊதிய காரணத்தினால் இவர் தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஒரு கூற்று. தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்வேர்ல்ட்:மன்ச்'ஸ் ஓடிசீ ஓட்வேர்ல்ட்:மன்ச்'ஸ் ஓடிசீ (Oddworld: Munch's Oddysee) ஓட்வேர்ல்ட் இன்ஹாபிடண்ட்ஸ் நிறுவத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த மூன்றாவது நிகழ்பட ஆட்டமும் அதே வேளை எக்ஸ் பாக்ஸிற்காக இதற்கு முந்தைய ஆட்டங்களிலும் சிறப்பான தந்திரக்காட்சிகள் அமையப்பெற்று வெளியிடப்பட்டது. தமிழ்க் கணிதம் தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்துக்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருகின்றார்கள். ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம். சென்னை ஆசிய இயல் மையம் வெளியிட்ட "கணித நூல்" ("Treatise on Mathematics Part I") ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிதத்தின் ஒரு தொகுப்பாகும். வி. நவரத்தினம் வி. நவரத்தினம் (அக்டோபர் 18, 1910 - டிசம்பர் 22, 2006) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, இலத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர். யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்குப் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாகப் பணியாற்றினார். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து 1947 டிசம்பர் 17 இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். 1952 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பங்காற்றினார். ஊர்காவற்றுறை தொகுதியில் 1965 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த மசோதா (டட்லி அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது. தமிழரசுக்கட்சியிலிருந்து வெறியேறிய நவரத்தினம் தமிழ் ஈழக் கோரிக்கையின் கருவூலமான "தமிழர் சுயாட்சிக் கழகத்தை" 1969 ஆகஸ்ட் 27 இல் ஆரம்பித்தார். அவருடன் செனட்டர் மாணிக்கம், சிவானந்தசுந்தரம், சட்டத்தரணிகள் கோடீஸ்வரன், என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1970, 1977 தேர்தல்களில் ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களுக்கெதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் டிசம்பர் 22, 2006 வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் தமது 97வது வயதில் காலமானார். வி. நவரத்தினத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளனர். சிவகவி சிவகவி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சிவபக்தியை, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளின் மூலம் சொல்லும் இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், டி. பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராஜகுமாரி, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பக்ஷிராஜா பிலிம்ஸாரால் தயாரிக்கப்பட்டது. ராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார். தொண்டை நாட்டிலே வயிரபுரம் என்னும் ஊரில் அம்பலத்தரசன் ("எஸ். ராஜம்") என்னும் சிறுவனும், அவ்வூர் அதிபதி காளிங்கராயனின் மகள் அமிர்தவல்லியும் ("எஸ். ஜெயலக்ஷ்மி") இன்னும் பல மாணவ மாணவியரும் ஒரு உபாத்தியாயரிடம் ("வி. சுந்தரமய்யர்") கல்வி கற்று வருகின்றனர். கல்வி பயின்ற காலம் போக மற்ற வேளையில் உபாத்தியாயரின் சோளக்கொல்லையை மாணவர் காவல் புரிகின்றனர். ஒரு முறை அமிர்தவல்லி, அம்பலத்தரசனின் முறை. அம்பலத்தரசன் கண்ணயர்ந்த சமயம் காளிங்கராயனுக்குச் ("நாட்டு அண்ணாஜிராவ்") சொந்தமான குதிரைகள் பயிரை மேய்ந்து அழித்து விடுகின்றன. கண் விழித்த அம்பலத்தரசன் குதிரையை விரட்ட, குதிர அவனைத் துரத்துகிறது. ஒரு காளி கோயிலினுள் ஓடி, தேவியிடம் முறையிடுகிறான். தேவி தோன்றி, அம்பலத்தரசனை "உன் வாக்கு பொய்க்காது, உலகம் உன்னைப் பொய்யாமொழி சிவகவி என்று போற்றும்" என அனுக்கிரகித்து மறைகிறாள். தேவி அருள் பெற்ற பொய்யாமொழி ("தியாகராஜ பாகவதர்") குதிரையை வசைபாட அது இறக்கிறது. அமிர்தவல்லி குதிரையை உயிர்ப்பிக்க வேண்டுகிறாள். "ஏழையை அலட்சியம் செய்யாதே, தெய்வத்தை இகழாதே" என்கிற வாக்குறுதியை அமிர்தவல்லியிடம் பெற்று மற்றொரு பாட்டுப் பாடிக் குதிரையை உயிர்ப்பிக்கிறான். ஒரு முறை மாரியாயி வேடத்தில் வந்த காளி தேவியை அமிர்தம் பரிகசிக்க, அவள் முகத்தில் வைசூரி தோன்றுகிறது. சிவகவி அவளின் வைசூரியைப் போக்கி பிறகு அவளையே மணக்கிறான். ஜீவனத்திற்கு வழியில்லாததால் வீடு, நகைகளை விற்கிறான் சிவகவி. தனது சினேகிதி யோகாம்பாளின் ("டி. ஏ. மதுரம்") போதனையால், கவிபாடி திரவியம் சிவகவியைத் தேடும்படி தூண்டப்படுகிறாள் அமிர்தம். இதே சமயம் சம்பந்தம்பிள்ளை ("வாசுதேவ பிள்ளை") என்பவர் முருகக் கடவுள் மேல் உலா பாடித் தரும்படியும் அதற்குப் பதினாயிரம் வராகன்கள் தருவதாகவும் சொல்ல சிவகவி "வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ" என்று பாடுகிறான். இதனால் தம்பதியினருக்குள் சச்சரவு ஏற்பட்டு சிவகவி வீட்டை விட்டு வெளியேறுகிறான். மதுரை சென்ற சிவகவி பாண்டிய மன்னனின் சோதனைகளில் வெற்றி பெற்று, அவனுடைய உதவியால் தமிழ்ச் சங்கத்தைத் தாபித்து அதற்குத் தலைவனும் ஆகின்றான். அங்கிருந்து சோழ தேசத்தின் வழியாக வரும்போது சோழ மந்திரி சீநக்கனும் ("செருக்களத்தூர் சாமா") சிவகவியும் நண்பர்களாகின்றனர். ஒரு நாள் இரவில் மந்திரியும் சிவகவியும் கட்டிலில் படுத்து பேசிக்கொண்டே இருக்கும் போது சிவகவி உறங்கிவிடுகிறார். மந்திரி எழுந்து நிலா ஒளியை ரசிக்க சென்றுவிடுகிறார்.இதை அறியாத மந்திரி மனைவி சிவகவியோடு கட்டிலில் படுத்து உறங்குகிறார். இதைக் கண்ட மந்திரி முன்பு ஒரு முறை சிவகவி சொன்னதுபோல் பெண்களை நம்புவது இல்லை என கூறியதை நினைவில் கொண்டு அவர்களை சந்தேகம் கொள்ளாமல் உடன் படுத்து இரங்குகிறார்.உடனே விழித்த சிவகவி, இது என்ன உமது கட்டிலில் உமது மனைவியுடன் நான், நான் எந்த தவறும் செய்யவில்லை என சொல்ல மந்திரி நாம் பேசிக்கொண்டிருக்கும் பொது நீ களைப்பினால் தூங்கினது நான் அறிவேன்.என் மனைவியும் நீ என்று அறியாமல் உன் அருகில் உறங்கியத்தையும் நான் இங்கிருந்து கண்டுகொண்டே இருந்தேன் . நான் உங்களை சந்தேகம் கொள்ளமாட்டேன். என கூறி அவர்களோடு உறங்குகிறார்.ராஜசபைப் புலவர்கள் சிவகவியிடம் பொறாமை கொள்ளுகின்றனர். இவர்களுக்குள் விரோதம் ஏற்ப்படுத்தும் பொருட்டு, வஞ்சி ("டி. ஆர். ராஜகுமாரி") என்பவள் சிவகவியை ஊரைவிட்டுத் துரத்த முயற்சி செய்து, சிவகவிக்கும், சீநக்கனின் மனைவி வல்லிக்கும் ("எம். எஸ். திரிபுராம்பாள்") அந்தரங்க நட்புண்டென்று வதந்தியைப் பரவச் செய்து, பிறகு விதியாகிய பாம்பினால் கடியுண்டு மடிகிறாள். சிவகவி நகரை விட்டுப் புறப்படுகிறான். சிவகவியை தேடும் படி யோகம் தன் கணவனை (N S கிருஷ்ணன் ) அனுப்புகிறாள். அவன் சிவகவி இருக்கும் ஊரில் அவன் சிவகவியைப்பற்றி கேட்ட கதையை அவன் மனைவியிடம் கூறுகிறான்.சிவகவிக்கு ஏற்பட்டிருக்கும் அபவாதத்தைப் பற்றி சிவகவியின் மனைவி அமிர்தத்திடம் யோகாம்பாள் கோள் சொல்கிறாள். பொன்னில்லாமல் வீடுவந்து சேர்கிறான் சிவகவி. கணவனை அமிர்தம் கடிந்துபேசி, வீட்டை விட்டுப் போகும்படி சொல்கிறாள். உடனே சிவகவி பொன் பொன் என்று கூற வீட்டின் கூரையில் இருந்து பொன் கொட்டுகிறது. பின் சிவகவி அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.உடனே அங்கு வந்த யோகம் அமிர்தத்திடம் நலம் விசாரிக்க இப்படி நலம் விசாரிக்க வந்து தானே எனக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லிகொடுத்து என் வாழ்கையே கெடுத்துவிட்டாய் என கூற இருவருக்கும் வாய் தகறாரு வர யோகம் வெளியேறுகிறாள்.பின் அமித்தம் பொற்காசுகளை கையிலெடுத்து பொன் பொன் என்று கூற பொன்னை விரும்பிய அமிர்தம் பொன்னைப் பெற்றுப் பைத்தியம் பிடித்து ஆற்றில் இறங்கி மூழ்கி இறக்கிறாள். நண்பனைப் பிரிந்த துயரால் சீநக்கன் உயிர் விடுகிறான். வல்லி உடன்கட்டை ஏறுகிறாள். ஓடோடியும் வந்த சிவகவி, தானும் அந்த தீயில் புகுந்த சமயம் முருகன் ("மாஸ்டர் சேதுராமன்") தோன்றி எல்லோரையும் ஆசீர்வதிக்கிறான்.மூவரும் உயிர் பெற்று எழுகின்றனர் கதை இனிதே முடிகிறது . இப்படத்தில் மொத்தம் 29 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் அனைத்துப் பாடல்களையும் இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன: மா சே துங் மா சே துங் (, "Mao Zedong", டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார். மாவோ 1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய். மாவோவின் தந்தை இரண்டு வருடங்களே பள்ளிக்குப் போனவர். ஆரம்பத்தில் ஏழை விவசாயியாக இருந்தார். ஏராளமான கடன்கள் ஆகி விட்டபடியால் ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார். பல வருடங்கள் இராணுவ சேவை செய்த பின் தன் கிராமத்துக்கு திரும்பி வந்தார். சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிறு வியாபாரங்கள் செய்தார். அதன் மூலம், இழந்த நிலத்தைத் திரும்பப் பெற்றார். அவருடைய குடும்பமும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்ற நிலையை அடைந்தது. வெகு விரைவிலேயே மேலும் அதிக நிலங்களை வாங்கி பணக்கார விவசாயி என்ற நிலையை எட்டினார். அதிக நிலத்தில் விவசாயம் செய்வதால் கிடைத்த உபரி தானியத்தை பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தார். விவசாய வேலையைக் கவனிக்க ஒரு முழு நேரப் பண்ணையாளையும் நியமித்தார். அத்துடன் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதியன்று அவருடைய கூலியாட்களுக்கு அரிசியும் முட்டைகளும் கொடுப்பார். ஆனால் இறைச்சி ஒரு போதும் அளித்ததில்லை. மாவோவின் தந்தைக்கு ஆரம்பத்தில் தெய்வ பக்தி கிடையாது. அவருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது. மாவோவின் தந்தையிடம் பணம் சேரச் சேர அவர் கிராமத்திலிருந்து மற்ற நிலங்களை ஒத்திக்கு வாங்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் அவருடைய கையிருப்பு மூவாயிரம் டாலர் வரை இருந்தது. ஒரு முறை காட்டு வழியில் போய்க் கொண்டிருந்த போது புலியால் தாக்கப்படாமல் தப்பித்த நிகழ்ச்சிக்குப் பிறகு புத்தரைத் தொழ ஆரம்பித்தார். மாவோவின் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பெருந்தன்மையும் ஈவிரக்கமும் கொண்ட அன்பான பெண்மணி. பஞ்ச காலங்களில் தங்களை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் அரிசியைத் தானமாகக் கொடுப்பதுண்டு. அவர் புத்தரை தினமும் தொழுவார். பிள்ளைகளையும் தெய்வ பக்தி உடையவராக்கினார். 1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆறு வயதான போது அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் விவசாய வேலைகளுக்கு அனுப்பப்பட்டார். எட்டு வயதானபோது கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதிகாலையிலும் இரவிலும் நிலத்தில் வேலை செய்ய வேண்டும். பகலில் படிக்க வேண்டும். பள்ளி ஆசிரியரின் கண்டிப்பின் காரணமாக மாவோ தனது பத்து வயதில் கிராமத்தை விட்டு ஓடி விட்டார். அவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர். அடி கிடைக்கும் என்று பயந்து கொண்டிருந்த மாவோவிடம் அவருடைய தந்தையார் இதமாக நடந்து கொண்டார். ஆசிரியரும் சற்று நிதானமாக நடந்து கொண்டார். மாவோவிற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் வீட்டுக் கணக்கு வழக்குகளையும் அவர் பார்க்க வேண்டியிருந்தது. கணக்கெழுதும் வேலையை இரவில் செய்ய வேண்டியிருந்தது. வயது அதிகரிக்கத் தந்தையுடன் வாக்குவாதங்கள் அதிகரித்தன. ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்பு தந்தையுடன் வாக்குவாதம் வலுத்து, மாவோ வீட்டை விட்டு ஓடினார். குளத்தில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை சமாதானப்படுத்தி தந்தை சில சலுகைகள் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். மாவோ 13ம் வயதிலேயே தனது பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு நாள் முழுவதும் வயல் வேலைகளில் ஈடுபட்டார். இரவில் கணக்கு வழக்குகளை பார்த்தார். மாவோவிற்கு 14 வயது ஆன பொழுது அவருடைய தந்தையார் 20 வயதுடைய ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். அந்தப் பெண்ணுடன் மாவோ ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை. எச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார். இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1954 ஆம் ஆண்டில் அப்போது சியாங் கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது. 'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவோ, நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக, அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூகக் கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர். மாவோ தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது. சீன அரசியலில் பெரும் செல்வாக்கினை மா-சே-துங் செலுத்தத் தொடங்கினார். 1976 ஆம் ஆண்டின் மா-சே-துங் இறுதி வரையில், அவர் செயற்படுத்திய கொள்கைகளால் சீனா முழுவதுமாக மாறியிருந்தது.நாடு முழுவதும் நவீன மயப்படுத்தப்பட்டது. குறிப்பாக, சீன நாட்டின் தொழில் மயமாக்கும் போக்குகள் வேகமாக நடைபெற்றதன.பொதுக் கல்வி முறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.பொதுச் சுகாதாரம் அனைவருக்கும் கிடைத்திட உறுதி செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் உலகம் முழுவதிலும் நிகழ்ந்தன. ஆதலால், மா-சே-துங்கினை அடையாளப்படுத்திட வேறுபல காரணங்களும் இருந்தன. சீன முதலாளித்துவ பொருளாதார முறை, பொதுவுடைமை ஆக்கப்பட்டது. அதேபோல்,அரசியல் ஆட்சி முறை பொது ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக்கொண்டு நிறுவப் பெற்றது. தொன்றுதொட்டு சீன மக்கள் ஆழ்ந்த குடும்பப் பற்று மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். மா-சே-துங் இதனைத் தீவிர நாட்டுப் பற்று உணர்வாக மாற்றிக் காட்டினார். மேலும், கன்ஃபூசிய கொள்கைகளுக்கு எதிராகச் மாவோ உருவாக்கிய சீன அரசு தீவிரமான பரப்புரையினை முடுக்கிவிட்டதற்கு பலன் இல்லாமலில்லை. சீனப் பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மா-சே-துங் தன்னிச்சையாகச் செயல்படுத்த முனைந்ததில்லை. சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் நிர்வகித்தது போல், ஒரு தனி மனித ஆதிக்கத்தை மா-சே-துங் நிறுவிட எண்ணியதில்லை. இருந்தபோதிலும்,1949 முதல் 1976 முடிய ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள், அதாவது மா-சே-துங் இறப்பு வரையிலும், சீன அரசின் முக்கியத் தலைவராகவே இருந்துவந்தார். சீனாவில் 1950-களில் தொடங்கப் பெற்ற, "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" என்ற இயக்கத்திற்கு மூல முதற்காரணமாகக் கருதப்படுவர் மா-சே-துங் ஆவார். பின்னாட்களில் இந்த இயக்கம் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. அதுபோல, 1960-களில் மா-சே-துங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் "மாபெரும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி" என்பதாகும்.இதனை ஏனைய தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தத் திட்டத்தால் இருதரப்பினரிடையே உள்நாட்டுப் போர் மூளக் காரணமாயிற்று.சீனப் பொதுவுடைமைக் குடியாட்சி அரசில் மா-சே-துங்கின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். "பிளவுபடுத்துவது புரட்சிகரமானது" (To Split is Revolutionary) "பிளவு தூய்மை படுத்துகின்றது" (Split Purifies). "ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும்" (One always becomes Two). "இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது" (Two never becomes One) என்பவை மா சே துங் இனால் 1960 இல் கூறப்பட்ட வார்த்தைகளாகும் மக்கள் புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்பது மார்க்சிய கருத்தாகும். அதை மா சே துங் நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச் சர்வாதிகாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பூர்சுவாக்களின் பங்களிப்புகள் அவசியம் என மாவோ வலியுறுத்தினார். இதனால் புரட்சிக்குப் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சியத்தைப் புறந்தள்ளினார். மேலும், அவர்கள் தொடர்ந்து ஒரு வர்க்கமாக இயங்கிட அனுமதித்தார். இதுதவிர, திருத்தியமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலமாகப் பூர்சுவாக்களிடையே நிலவிவரும் பழைய மனப்பான்மைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றார். மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் புரட்சிக்கான சக்திகள் மாவோவின் அரசு பற்றிய மக்கள் கம்யூனிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கிளர்ந்தெழுகின்றனர். இந்த கம்யூனிசங்களில் மக்களை ஒழுங்கமைப்பதன் வாயிலாக தமது நலன்களைப் பேணும் தீர்மானங்களை தாமே மேற்கொள்வதற்கும் அவை உதவும் என்றும் அதன் மூலம் அரசின் முக்கியத்துவத்தினை படிப்படியாக குறைக்க முடியும் என்றும் நம்பினார். சீனக் குடிமைச் சமத்துவ சமூகம் பொதுவுடைமைக் கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கு மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார். தமிழர் மரவேலைக்கலை தமிழர் மரபுத் தொழில்கலைகளில் மரவேலைக்கலையும் ஒன்று. மரத்தினால் தளபாடங்கள், சிற்பங்கள், கருவிகள் (எ.கா. ஏர்), வீடு, தேர், கப்பல் ஆகியவற்றை செய்வதில் தொன்ம காலம் முதல் தமிழர்கள் சிறப்பாக ஈடுபட்டு தனித்துவான கலையை வளர்தெடுத்துள்ளார்கள். இதுவே தமிழர் மரவேலைக்கலை எனப்படுகின்றது. இதை தமிழ்ர் தச்சுக்கலை என்றும் அழைக்கலாம். மரவேலைகலையில் ஈடுபடுவோர் தச்சர்கள் என அழைக்கப்படுகின்றனர். அண்மைக்காலம் வரை மரவேலைக்கலை பற்றிய துறைசார் சுவடிகளோ அல்லது நூல்களோ தமிழில் வெளிவரவில்லை. பொதுவான இலக்கியங்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டே பண்டை, இடைக்கால மரவேலைக்கலை பற்றி அறியமுடிகிறது. சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையில் இடம்பெறும் பின்வரும் பாடல் சிறுவர்கள் நடக்கப் பயன்படுத்திய முக்கால் சிறுதேர் பற்றிக் குறிப்பிடுகிறது. அக்காலச் தச்சர்கள் தனது குழந்தைகளுக்கு சிறுநடைவண்டிகளை செய்து தந்தனர் என்று பின்வரும் பெரும்பாணாற்றுப்படை பாடல் குறிப்பிடுகிறது. டர்போ சி++ டர்போ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இந்தத் தொடர் 1991 இல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஓர் அடிப்படை விருத்திச் சூழலாக டர்போ சி++ 2006 5 செப்டம்பர் 2006 மீள் அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் எக்ஸ்புளோளர் என்கின்ற இலவமாகப் பதிவிறக்கிப் பாவிக்கக்கூடிய பதிப்பினையின் வணிகரீதியிலான புரொபெஷனல் பதிப்பு என்று இருவேறான பதிப்புக்களாக வெளிவந்தது. புரொபெஷனல் பதிப்பு இப்பொழுது விற்பனையில் இல்லை. இதன் முதலாவது மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளம் கணினி உலகை ஆட்டிப் படைத்த காலத்தில் வெளிவந்தது. முதலாவது பதிப்பு ஓஎஸ்/2 இயங்குதளத்திற்காக 1.0 எனவெளிவந்தது. 1.01 பதிப்பானது 28 பெப்ரவரி 1991 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தை ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது. டாஸ் இயங்குதளத்தில் இயங்கும் டர்போ சி++ மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe மற்றும் *.com கோப்புக்களை உருவாக்கும். இது இண்டெல் x86 புரோசர்களுக்கான டர்போ அசம்பிளருடன் இணைத்து விநியோகிக்கப்பட்டது. இந்தக் கம்பைலர் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் C++ இல் இரண்டாவது பதிப்பினை ஆதரிக்கின்றது. டர்போ சி++ 3.0 20 நவம்பர் 1991 இல் விண்டோஸ் பணிச்சூழலுக்கான வெளிவந்தது. இதில் டெம்லேட்டுக்களை ஆதரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் 8086 286 செயலிகளுக்கான ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. டர்போ சி++ 3.0 வெளிவந்ததும் மைக்ரோசாப்ட் பணிச்சூழலுக்கான சி++ உருவாக்குவதில் போர்லாண்ட் முயன்றது. விண்டோஸ் பணிச்சூழலுக்கான டர்போ சி++ 3.0 ஐத் தொடர்ந்து டர்போ சி++ 3.1 அதைத் தொடர்ந்து டர்போ சி++ 4.5 உம் வெளிவந்தது. இந்தப் பதிப்பின் 1 இல் இருந்து 3 இற்குப் பாய்ந்ததானது விண்டோஸ் பதிப்புக்களுடன் ஒப்பிடுவதாக அமைந்தாலும் 1989 இல் வெளிவந்த டர்போ சி 1990 இல் வெளிவந்த டர்போ சி++ இவை இரண்டும் ஒருங்கிணைந்த டர்போ சி++ 3 என்றவாறும் கருதலாம். 3 ஆம் பதிப்பில் இருந்து போர்லாண்ட் இரண்டு பதிப்புக்களாக சி++ ஐ வெளிவிட்டது ஒன்று டர்போ சி++ மற்றையது போர்லாண்ட் சி++. டர்போ சி++ ஆரம்ப நிலை நிரலாக்கருக்கும் பொழுதுபோக்காக நிரலாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் என உருவாக்கப்பட்டது. போர்லாண்ட் சி++ நிரலாகத்தைத் தொழிலாகக் கொண்டு மென்பொருட்களை விருத்தி செய்பவர்களை இலக்கு வைத்து வெளிவந்தது. போர்லாண்ட் சி++ டர்போ சி++ இற்கு மேலதிகாமாக கம்பைலர் ஊடாக நிரலாக்கம் வினைத்திறனாகியது மற்றும் வர்தகரீதியான விருத்தியாளர்களை இலக்கு வைத்து ஆவணப்படுத்தும் வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது. டர்போ சி++ பதிப்பை டர்போ அசம்பிளர், டர்போ விஷன் 1.0 போன்ற் பொருத்துக்கள் மூலம் மேம்படுத்த இயலும் இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் டர்போ பாஸ்கல், டர்போ பேசிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். டர்போ சி++ டர்போ சியின் வழிவந்ததாகும். டர்போ பாஸ்கலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும். பங்குனி உத்தரம் பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். சிவனுக்கும் பார்வதிக்கும் "சோமசுந்தரர்" என்றும் "மீனாட்சி" என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர். இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார். அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா. மாசி மகம் மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் "கடலாடும் விழா" என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார். முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார். இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார். ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது. மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம், இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். திருவெம்பாவை நோன்பு திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம். திருவெம்பாவை பூசைக்குரிய அபிபாகமாக பிட்டு படைக்கப்படுகின்றது. இதனால் இப்பூசை பிட்டுப்பூசை எனவும் அழைக்கப்படும். தலவாக்கலை தலவாக்கலை ("Talawakelle") இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கொட்டகலைக்கும் நானு ஓயாவுக்குமிடையே அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கொட்டகலை, வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயா இந்கரை ஒட்டி பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணைந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேயிலைத் துறையில் முக்கிய நகரங்களில் ஒன்றான தலவாக்கலையில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இயற்கை அழகு மிக்க இப்பிரதேசத்தில் டெவோன், புனித கிளயார் , புனித அன்றுவ் போன்ற இலங்கையின் பிரசித்தமான நீர்வீழ்ச்சிகள் பல் அமைந்துள்ளன. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் நகரை வேறு பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. லிந்துலை லிந்துலை இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயாவின் கரையில் அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்க்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக தலவாக்கலை நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் அதற்கு மிக அருகில் அமைந்துள்ள லிந்துலை நகரம் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. வீரசிங்கம் துருவசங்கரி வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5, 1950 - டிசம்பர் 2, 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு, பனிக்கட்டி, பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட துருவசங்கரி புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் ச. வீரசிங்கம் - அன்னப்பாக்கியம் தம்பதியருக்கு 12வது மகவாகப் பிறந்தார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியின் சகோதரர் ஆவார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் வேளாண்மைத் துறையில் முதுமாணி (MSc) பட்டத்தை 1977 இல் மொஸ்கோ லுமும்பா பல்கலைக்கழகத்தில் பெற்றார். பட்டப்படிப்பை முடித்து இலங்கை திரும்பிய துருவசங்கரி இலங்கையில் மகாவலித் திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் அங்கு பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அத்துடன் பல அறிவியல் இதழ்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சாண்டில்யன் சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் "நவசக்தியில்" பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை "சாந்தசீலன்" ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, "கண்ணம்மாவின் காதலி", "அதிர்ஷ்டம்" என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. "சுதேசமித்திரன்" வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் "ஹிந்துஸ்தான் டைம்சில்" உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. "சுவர்க்க சீமா" (1945), "என் வீடு" (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை "சினிமா வளர்ந்த கதை" (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். "பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர்" என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார். ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். "பலாத்காரம்" என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். "பாலைவனத்துப் புஷ்பம்", "சாந்நதீபம்" இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக "கமலம்" என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார். 2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சுந்தர ராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர். கொட்டகலை கொட்டகலை ("Kotagala") இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 35.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது.இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அட்டன், தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய வழங்கல் நிலையமொன்று இங்கே அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் கொட்டகலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கினிகத்தனை கினிகத்தனை இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் நாவலப்பிட்டி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டுக்கு நுழையும் தென்மேற்கு கணவாய் இந்நகரமாகும். இலங்கையின் இரண்டு முக்கிய ஆறுகளான மகாவலி கங்கை , களனி கங்கை என்பவற்றின் நீரேந்துப்பகுதி பிரிப்புக் கோட்டில் இது அமைந்துள்ளது. இங்குள் காவல் நிலையத்தில் மழை நீரானது இரண்டு ஆறுகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இந்த நகரில் இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கமாகும். இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு என்பது செனிவாவைத் தலைமை அலுவலகமாக் கொண்டியங்கும் சுவிசு நாட்டு அரசு அல்லாத ஓர் அமைப்பாகும். இது "பவுண்டேசன் சுவிசே டீமைனேச்" எனும் பிரான்சிய மொழிப் பெயரினாலேயே சுருக்கமாக எப் எசு டி (FSD) என்றவாறு அழைக்கப் படுகின்றது. மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றி மக்களை மீண்டும் மீள் குடியேற்றத்திற்கு உதவுவதே இந்த அமைப்பின் பணியாகும். இதன் முதன்மையான பணிகளாவன: கண்டிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பானது 2005 ஆம் ஆண்டுப் படி செனிவாத் தலைமை அலுவலத்தில் 10 பணியாளர்களையும் பணிபுரியும் இடங்களில் 60 பன்னாட்டு மற்றும் 600 உள்நாட்டுப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. ஆண்டுக்கான தோராயச் செலவீனம் ஏறத்தாழ 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது பொது மற்றும் தனியார் துறைகளூடாகவும் உலக உணவுத் திட்டம், திட்டச் சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் கண்ணிவெடித் திட்ட சேவை, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐரோப்பாவின் கூட்டுறவிற்கும் பாதுகாப்பிற்குமான அமைப்பு, அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றினூடகவும் உதவிகளைப் பெறுகின்றது. 2009 ஆம் ஆண்டின் படி இலங்கை, தச்செக்கித்தான், லாவோசு, சூடான், புரூண்டி ஆகிய நாடுகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இதற்கு முன்னர் பாசினியா, குரோவேசியா, அல்பேனியா, ஆப்கானித்தான், ஈராக் மற்றும் பாக்கிசுத்தான் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. கித்துள்கலை கித்துள்கலை ("Kitulgala")இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இது உள்ளாசபிரயாணிகளுக்குப் பிரசித்தமான இடமாகும். பனை வகையை சேர்ந்த கித்துள் மரங்களில் இருந்து கருப்பட்டி செய்யும் தொழில் இங்கு பிரசித்தமானதன் காரணமாகவே இப்பெயர் இப்பிரதேசத்துக்கு வழங்கிற்று. கூகுள் நிலப்படங்கள் கூகுள் நிலப்படங்கள் அல்லது கூகுள் மேப்சு "(Google Maps)" ஒரு புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருள். இது முன்னர் கூகுள் லோக்கல் எனப்பட்டது. அநேகமான நாடுகளில் வீதிகள், பயணங்களைத் திட்டமிடல் போன்றவற்றிற்கு உதவுகின்றது. கூகுளின் இதுபோன்ற இன்னுமோர் பதிப்பு கூகுள் ஏர்த்தாகும் இது லினக்சு, மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் ஆப்பிள் இயங்குதளக் கணினிகளில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது. கூகுள் மேப்ஸை சுட்டியைப் பாவித்து மேலும் கீழும் மற்றும் பக்கமாகவும் பார்க்கமுடியும் மேலும் சுட்டி சக்கரத்தை "(Mouse Wheel)" பாவித்துப் படத்தை உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ காட்டமுடியும். மேலும் விசைப்பலகையில் உள்ள + மற்றும் - ஐப் பாவித்தும் உருப்பெருக்கியும் உருச்சிறுத்தும் படங்களைப் பார்வையிடலாம். இது இதன் போட்டியாளர்களைப் போன்றே எவ்வாறு வாகனத்தை இலக்கிற்குச் செலுத்துவதென்றும் எதிர்பார்க்கப்படும் நேரம் மற்றும் தூரம் ஆகிய விபரங்களைத் தரும். கூகுள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, செய்மதியூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய் இதில் உள்ள பக்கத்திற்கான உரலி "link to this page" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் நாசா வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாம். கூகுள் நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக அவுசுதிரேலியா. எகிப்து, பிரான்சு, ஈரான், ஐசுலாந்து, இத்தாலி, ஈராக், சப்பான், பேர்மூடா, குவைத், மெக்சிக்கோ, நெதர்லாந்து. ஐக்கிய இராச்சியம் போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக மாசுகோ, இசுதான்புல், மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான ஐதராபாத், பெங்களூர், சென்னை, சேலம், மும்பாய், புதுதில்லி ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது. கூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை. பிறக்டிக்கல் அக்சன் பிறக்டிக்கல் அக்சன் ("Practical Action") ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது உலகின் இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய நான்கு பகுதிகளில் தனது சேவையை வழங்குகின்றது. பெரூ, கென்யா, சூடான், சிம்பாப்வே, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தனது சேவையை ஆற்றுகின்றது. 2005 ஆம் ஆண்டுவரை இது இடைத்தர தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுவெனப் பெயர்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் ("Intermediate technology Development Group") என்றவாறு அழைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட நாடுகளில் "பிறக்டிக்கல் அக்சன்" வறுமையானவர்களுடன் சேர்ந்தியங்கி உணவு தயாரிப்பு, வேளாண்மை (விவசாயம்), போக்குவரத்து, சிறு கைத்தொழில்கள், ஆபத்துதவி, குடிநீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். பிறக்டிக்கல் அக்சனில் கீழ்மட்டத்தில் இருந்து கிடைத்த அனுபவங்கள் ஆலோசனை வழங்குதல், பிரசுரித்தல், கல்வி சார் நடவடிக்கைகள், சர்வதேச தொழில்நுட்ப உதவி போன்றவற்றை வழங்குகின்றது. 1965 இல் விரைவான சீர்திருத்தவாதியும் தத்துவாசிரியருமான E.H.Schumacher ஆப்ஸேவர் (Observer) பத்திரிகையில் உதவிகளின் கட்டுப்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பாரிய தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இன்மையால் ஓர் இடைநிலை தொழில்நுட்பமே இந்நாடுகளுக்குன் பொருத்தமானது என எடுத்துரைத்தார். இதுபற்றிய கருத்துக்களிற்குக் கிடைத்த ஆதரவை அடுத்து Schumacherமற்றும் அதனுடன் கூட்டுச் சேர்தவர்களும் சேர்ந்து வினைத்திறனான வேலைச் செறிவான எண்ணக்கருவுடன் 1996 ஆம் ஆண்டுமுதல் இடைநிலை தொழில்நுட்ப விருத்திக் குழுவெனத் தமிழில் பொருள்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் ("Intermediate technology Development Group") ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு 1966 இல் உருவாக்கப் பட்டது. வேளாண்மையில் ஏற்பட்ட ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து கட்டிடப் பொருட்களைத் தயாரித்தல், கிராப்புறச் சுகாதாரம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு ஒரு சர்வதேச அமைப்பாக வளர்ந்து கொண்டது. இந்த அமைப்பானது 7 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளதோடு 70 இற்கு மேற்பட்ட திட்டங்களில் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழோவியன் தமிழோவியன் (இ. டிசம்பர் 25, 2006) இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். நல்ல இலக்கிய நடைகொண்டு எழுதுபவர். ஐம்பதுகளில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். "இரா. ஆறுமுகம்" என்ற இயற்பெயர் கொண்ட தமிழோவியன் ஊவா மாகாணத்தில் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கியதில் முன் நின்றவராவார். ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்தே நடத்தி வந்தவர்களில் தமிழோவியன் முக்கிய பங்களித்தவர். கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றவர்களை பதுளைக்கு அழைத்து இலக்கிய விழாக்களை நடத்தியவர். அறிஞர் அண்ணா, பாரதிதாசன் இருவருடைய பிறந்த நாள் ஞாபகார்த்த கட்டுரைகளை தவறாமல் வருடா வருடம் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊவா மாகாணத்தில் சில சாகித்திய விழாக்களை பொறுப்பேற்று பல இலக்கிய மலர் வெளியீடுகள் வெளிவருவதற்கும் முக்கிய பங்களிப்பினை தமிழோவியன் வழங்கி வந்துள்ளார். தமிழோவியனின் கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றது. நான்கு பிள்ளைகளின் தந்தையான தமிழோவியன் இறக்கும் போது வயது 68 ஆகும். சகுந்தலை (திரைப்படம்) சகுந்தலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எல்லிஸ் டங்கனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணுவ முனிவரின் ("செருக்களத்தூர் சாமா") ஆசிரமத்துக்கு அடுத்த வனத்தில் துஷ்யந்தன் ("ஜி. என். பாலசுப்பிரமணியம்") ஒரு மானைத் துரத்தி வருகிறான். அந்நேரம் சகுந்தலை ("எம். எஸ். சுப்புலட்சுமி") தோழிகள் பிரியம்வதை (டி. ஏ. மதுரம்), அனுசூயை ("சகுந்தலா பாய்") ஆகியோருடன் மலர்ச்செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறாள். அப்போது அங்கு வரும் துஷ்யந்தனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டவர்கள் காந்தர்வ முறைப்படி திருமணம் புரிகின்றனர். துஷ்யந்தன் தனது மோதிரத்தை சகுந்தலையின் கையிலிட்டு விட்டு அத்தினாபுரம் செல்கிறான். மன்னன் திரும்ப வரவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த சகுந்தலை ஆசிரமத்துக்கு விருந்தினராக வந்த துருவாச முனிவரைக் ("டி. பி. எஸ். மணி") கவனிக்கவில்லை. முனிவர் கோபம் கொண்டு "நீ யாருடைய தியானத்தில் என்னை அலட்சியம் செய்தாயோ அவன் உன்னை அடியோடு மறக்கட்டும்" என்று சபிக்கிறார். கவலையில் ஆழ்ந்த சகுந்தலையின் தோழிகள் முனிவரை சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த முனிவரும் கொடுத்த சாபத்திற்கு ஒரு பரிகாரமும் சொல்லிப் போகிறார். சகுந்தலை கர்ப்பிணி ஆகிறாள். சகுந்தலையை கண்ணுவர் அத்தினாபுரம் அனுப்புகிறார். அவளுடன் அவரது சீடர்கள் சாரங்கரவனும் ("ரமணி"), சாரத்வதனும் ("கல்யாணம்") அன்னை கௌதமியும் ("கோல்டன் சாரதாம்பாள்") செல்கின்றனர். அத்தினாபுரத்தில் துஷ்யந்தனைக் காண்கின்றனர். ஆனால் அவன் சகுந்தலையை அடையாளம் காணவில்லை. அவன் கொடுத்த மோதிரமும் ஆறு குளிக்கும்போது தொலைந்து விடுகின்றது. சகுந்தலையுடன் வந்தவர்கள் அவளை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். சகுந்தலை மயங்கி விழ ஒரு மின்னல் தோன்றி மேனகை (தவமணி தேவி) வந்து சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள். ஆண்டுகள் ஐந்து செல்கின்றன. ஒரு நாள் நகரக் காவலாளி இரு செம்படவர்களை ("என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்") பிடித்துக் கொண்டு அரசனிடம் வருகிறான். அவர்கள் கடலில் கண்டெடுத்த மோதிரத்தைக் காட்டுகிறார்கள். பழைய நினைவுகள் திரும்பப் பெற்ற துஷ்யந்தன் சகுந்தலையைத் தேடிச் செல்கிறான். கண்ணுவ முனிவரின் ஆசிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்திக்கொண்டு ஐந்து வயது பாலகன் சர்வதமனன் ("ராதா") ஓடி வருகிறான். அவனுடன் அளவளாவுகிறான் துஷ்யந்தன். அப்போது அங்கு வந்த சகுந்தலையைக் கண்டு இருவரும் இணைகின்றனர். கண்ணுவர், இருவரையும் ஆசீர்வதித்து சர்வதமனனுக்கு பரதன் என்ற பெயரையும் இடுகிறார். "அவன் பெயர்ப்பட அந்நாடும் அன்று முதல் "பாரத பூமி" என வழங்கும்" என்று கூறி வாழ்த்துகிறார். இப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. கரவனல்லை கரவனல்லை இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து இலங்கையின் ஏ-1 கொழும்பு கண்டி பெருந்தெருவையும் ஏ-7 பெருந்தெருவையும் இணைக்கும் கேகாலை- புலத்கொவுபிடியா- கரவனல்லை ஏஏ021 பெருந்தெரு ஆரம்பிக்கிறது. எட்டியாந்தோட்டை எட்டியாந்தோட்டை ("Yatiyanthota", இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அவிசாவளை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கரவனல்லைக்கும் கித்துள்கலைக்கும் இடையே அமைந்துள்ளது. இது, களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. எட்டியாந்தோட்டை நகரில் 2012 கணக்கெடுப்பின் படி 2,948 பேர் வசிக்கின்றனர், இவர்களில் 1548 பேர் பெண்களும், 1400 பேர் ஆண்களும் ஆவர். சைவத் திருமுறைகள் சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை "பன்னிரு திருமுறைகள்" எனும் அழைக்கப்பட்டன. திருமந்திரம் திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. இதன் காலம் அறிய முடியாததாய் உள்ளது ."இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி "என்ற அவரது பாடல் வரிகள் ..உலகின் முதல் மனிதர் அவராயும் , முதல் சித்தராயும் ,தமிழுக்கு ஆசானாகவும்...இருந்திருக்கின்றார்  . மேலும் "அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் " என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து.மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம் முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர். திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது; முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது; ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச் சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது. அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே! உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே ஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை) இலங்கையின் ஏ-7 பெருந்தெரு அவிசாவளையில் தொடங்கி நுவரெலியா நகரில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும். இது 118.7 கிலோமீட்டர் நீளமானது. இது இலங்கையின் தேயிலை துறையின் முக்கிய நகரங்களை இலங்கையின் வர்த்தக மையங்கள் காணப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்துடன் இணைப்பதால் பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான பெருந்தெருவாகும். ஏ-7 பெருந்தெரு மலையக மக்கள் கொழும்பை அடைவதற்காக பயன்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். அவிசாவளை நகரில் ஏ-4 பெருந்தெருவுடனான சந்தியில் ஆரம்பிக்கும் இப்பெருந்தெருவின் நீள கணக்கீடும் இச்சந்தியில் இருந்தே ஆரம்பிக்கிறது. பின்னர் முறையே கரவனல்லை, எட்டியாந்தொட்டை, கித்துள்கலை, கினிகத்தனை, வட்டவளை, அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, லிந்துலை, நானு ஓயா போன்ற சிறிய, பெரிய நகரங்கள் ஊடாக நுவரெலியாவை அடைகிறது. அவிசாவளை தொடக்கம் கரவனல்லை வரையான பகுதி 3.5 மீற்றர் அகலமான இரண்டு பாதைகள் (லேன்) கொண்டதாகவும் கரவனல்லை முதல் அட்டன் வரையான பகுதி ஒருபாதையை கொண்டதாகவும் "இரட்டை மேற்பரப்பு பிட்டுமன் பராமரப்பு" முறையை (காபட்) கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அட்டன் முதல் நுவரெலியா வரையான பகுதி ஒருபாதையை கொண்டுள்ளதோடு ஒற்றை பிட்டுமன் பராமரிப்பு முறையைக் கொண்டுள்ளது. அவிசாவளை முதல் எட்டியாந்தொட்டை வரை மட்டமான வீதியாக காணப்படும் ஏ-7 பெருந்தெரு அதன் பிறகு தொடர்ச்சியான மேல் நோக்கிய ஏற்றத்தைக் கொண்டுள்ளது. இது கினிகத்தனை கணவாயூடாக மத்திய மலைநாட்டில் நுழைகிறது. அவிசாவளையில் கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் சற்றே குறைவான (300 அடி) உயரத்தைக் கொண்டுள்ள ஏ-7 பெருந்தெரு நுவரெலியாவை அடையும் போது 2000 மீட்டர் (6000 அடியை) அடைகிறது. சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர்கள் சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற எட்டு குருமார்கள் சைவ சமயத்தின் குரு பாரம்பரியத்தினைத் தொடங்கியவர்கள் ஆவார்கள். சைவ சமயத்தில் குரு பாரம்பரியம் என்று சொல்லப்படுவது சிவபெருமானிடம் உபதேசம் பெற்று குருவானவர்களின் பரம்பரையாகும். குருவிடமிருந்து கற்ற சீடர்களும், அவர்கள் கற்பித்தவர்களும் கொண்ட பாரம்பரியமாகும். இந்த குரு பாரம்பரியம் சிவபெருமானிடமிருந்து தொடங்குகிறது. சிவபெருமானிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் எட்டு குருநாதர்களாவார்கள். இவர்களைப் பற்றி திருமூலரின் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடு எண் மரும் ஆகும்". இதில் என்னோடு என்பது திருமூலரைக் குறிப்பதுவாகும். நந்திகள் நால்வர் நாயன்மார் பட்டியல் நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை "அறுபத்து மூவர்" என்றும் அழைப்பர். சைவ சித்தாந்த சாத்திரங்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். தமிழர்களின் தொன்மை மிகுந்த தத்துவம் எனப் போற்றப்படுகின்ற இந்த சாத்திரங்கள் பற்றி ஜி.யூ.போப் அவர்கள் பாராட்டியுள்ளார். இவைகள் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டும், 13-ஆம் நூற்றாண்டில் நான்கும், 14-ஆம் நூற்றாண்டில் எட்டுமாகத் தோன்றின.பதினான்கு சாத்திரங்கள் எவை எவை என்பதை- எனவரும் வென்பா குறிக்கும். பதினான்கு சாத்திரங்களும் அவற்றினை இயற்றியோர்களும் கீழே. கற்ப மூலிகைகள் திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் - இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர். இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள். சித்தர்கள் எவ்வாறு இதனை அறிந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வியாசருடன் அம்பிகை போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அம்பிகை கண்ணை மூடிக்கொண்டதால் குருட்டுக்குழந்தை பிறக்கும் என்றும்,அதே வியாசருடன் அம்பாலிகை போகத்தில் ஈடுபட்ட காலத்து அம்பாலிகை வியர்த்து,அருவருத்து இருந்ததால் வெண்மை நிறமுடைய குழந்தை பிறக்கும் என்றும் அதே வியாசருடன் பணிப்பெண் ஒருத்தி போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அப்பணிப்பெண் மன நிறைவுடன் போகத்தில் ஈடுபட்டதால்,அறிவுடைய குழந்தை பிறக்கும் என்று வியாசர் கூறியதற்கேற்றாற் போலவே,முறையே குருடனாக திருதாட்டிரனும்,வெண்மை நிறமுடைய பாண்டுவும்,அறிவும்,ஆற்றலுமிக்க விதுரரும் பிறந்தனர் என்று மகாபாரதம் கூறுகின்றது. சித்தர்களின் வைத்திய முறைக்கு ஒத்து வரும் இச்சம்பவத்தின்படி வியாசரும் சித்தரென்ற காரணத்தினால் இதனை அறிந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அட்டமா சித்திகள் அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது. திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல் அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின் திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா, பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை அட்டாங்க யோகம் சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமூலர் எழுதிய திருமந்திரம் ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகின்றது. இதில் மூன்றாம் தந்திரம் வீராகமத்தின் சாரமாகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது அட்டாங்க யோகம் எனப்படும். அட்டம் என்பது எட்டு என்ற எண்ணைக் குறிக்கும். அங்கம் என்பதற்கு உறுப்பு எனப் பொருள். யோகம் என்பது இறைவனுடன் அருளால் ஒன்றுதலைக் குறிக்கும். உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபடக் கடைப்பிடிக்க வேண்டிய எட்டுப் படிநிலைகளை எடுத்துரைப்பதே அட்டாங்க யோகம் எனப்படுகிறது. முத்தி பெறுவதற்குரிய வழிகள் நான்கு என்பது சைவநெறி. அவற்றுள் யோகம் என்பது ஒன்று. யாகம் என்பது தவம். திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பரகாயப் பிரவேசம் பரகாயப் பிரவேசம் என்பது கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். ஓர் உயிரற்ற உடலில் எம்முயிரை சென்றடையச் செய்வதும்,அவ்வுயிரற்ற உடலினிற்கு உயிர் பெறச் செய்து நம் உடலினை உயிர் அற்ற நிலையினை ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகின்றது.இக்கலையினை செய்து காட்டியவர்கள் சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உயிர் வேறு,உடல் வேறு என்ற தத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது இக்கூடு விட்டுக் கூடு பாய்தல் தந்திரக் கலை.மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல் கலையினை ஆதிசங்கரர்,அருணகிரியார் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறுபத்து நான்கு ஆய கலைகளில் ஒன்றாகவும் இக்கலை உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கலையானது சமீபத்தில் வெளிவந்த போகன் என்கிற திரைப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது ஹொஸ்ட் கோப்பு கணினிகளில் ஹொஸ்ட் கோப்புக்கள் பெயருக்குரிய IP முகவரிகளாக மாற்ற உதவுகின்றது. கணினி முதலில் இதைப் பார்த்துவிட்டுப் பின்னரே டொமைனைப் பெயரிடும் சேவரூடாகப் பெயரை IP முகவரிகளாக மாற்ற முயலும். இது கணினியிலேயே சேமிக்கப்பட்டுள்ளதால் வேகமாகப் பெயருக்குரிய IP முகவரிகளாக மாற்ற முயலும் இதில் வெளியில் உள்ள சேவைகளைப் பொதுவாக மெதுவான சேவைகளைப் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆர்பா நெட் இருந்த இணையத்தின் ஆரம்ப காலத்தில் ஓர் முகவரிக்குரிய IP முகவரியாக மாற்றுவதற்கு கோப்புக்களே பயன்பட்டதெனினும் பின்னர் இணையம் வெகுவாக வளர்ச்சியடையத்தொடங்கியதால் இவ்வாறு கோப்புகளாக வைத்திருப்பதன் சாத்தியங்கள் குறையத் தொடங்கின. 90 களில் விண்டோஸ் கணினிகளில் பாதுகாப்புக் குறைவான கணினிகளில் பிரயோசனம் இல்லாத இணையத்தளங்களை அணுக விடாமல் பாதுகாப்பதற்கும் இன்றளவில் பயனபடுகின்றது. இதன் முழுமையான கோப்பு இடம் ரெஜிட்ரியிலேயே தீர்மானிக்கப்படும் \HKLM\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters\DataBasePath . விண்டோஸ் நிறுவும்பொழுதே ஹொஸ்ட் கோப்பினை விரும்பியபடி மாற்றவிரும்பினால் நிறுவல் இறுவட்டில் (சீடி) $OEM$\$$\system32\drivers32\etc என்று ஒரு கோப்புறையை (போல்டர்) உருவாக்கிஇல் அதில் ஹொஸ்ட் கோப்பினைச் சேமித்தல் வேண்டும். இது மிகவும் இலகுவான ஓர் முறையாகும் இதில் ஹொஸ்ட் பெயருக்குரிய IP முகவரிகளை வழங்குவதே இதன் பணியாகும். இதுவும் வேலை செய்யும்... குறிப்பு: #இது அபிப்பிராயம் (காமண்ட் - Comment) ஆகும் IP முகவரிகள் 127.0.0.1 அல்லது 127.x.x.x. எல்லாமே அதே கணினிக்குரிய முகவரிகளே இது localhost (லோக்கல்ஹொஸ்ட்) என்றவாறும் அழைக்கபடும். எனவே தேவையில்லாத இணையத்தளத்தில் முகவரியை 127.0.0.1 என்றவாறு ஹொஸ்ட் கோப்பில் மாற்றிவிட்டால் தேவையில்லாத பக்கங்கள் கணினியில் தோன்றாது தமிழ் வணிகர் தமிழ் வணிகர் எனப்படுவோர் வணிகத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்களைக் குறிக்கும். பெரும்பாலானவர்கள் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வாங்கி விற்கும் சிறுவணிகங்களிலேயே ஈடுபட்டுள்ளனர். பொருள் உற்பத்தி செய்பவருக்கும் பொருள் கொள்வனவு செய்வோருக்குமான பாலமாக செயற்பட்டு சந்தைப் பொருளாதாரத்தை ஏதுவாக்குவதில் வணிகர்களின் பங்கு முக்கியமானது. இந்த செயற்பாட்டில் ஒரு சிறுபான்மை வணிகர் பெரும் இலாபம் ஈட்டி செல்வந்தர் ஆகியுள்ளார்கள். தொழில்முனைவோரையும் வணிகர் எனலாம். அதாவது ஒரு புதிய தொழில், சேவை அல்லது உற்பத்தியை ஆரம்பித்து இலாபம் ஈட்ட முனைவோர் "தொழில்முனைவோர்" ஆவார். சங்ககாலம் முதற்கொண்டு வணிகத்தில் தமிழர் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது ஒரு முதுமொழி. இருப்பினும் வணிக சமூகம் பல சமயங்களில் நியாமற்ற முறையில் சுரண்டல் மூலம் செல்வம் ஈட்டி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் அல்லது சமனற்ற போக்கை பெருகச் செய்யும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் "வர்க்க போராட்டத்தில்" ஈடுபட்டு வணிகரை எதிர்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக "உழவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பர் தலைமையில் தமிழ் நாட்டில் பொதுமக்கள் செல்வம் நிறைந்த வணிகருக்குகெதிராக திரண்டெழுந்ததை" குறிப்பிடலாம். பழங்கால இலக்கியங்களில் வணிகர்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். வாணிகத்தைப் பரம்பரையாகச் செய்துவரும் வணிக மரபினர் வைசியர் எனப்படுவர். இவர்களைவிட இப்பர், கவிப்பர், பெருங்குடி வணிகர் போன்ற வகையினர் தாம் கொண்ட பொருளால் பெயர் பெற்றனர். தாம் செய்யும் வியாபாரத்தாற் பிரிக்கப்பட்டவர்கள் கூல வணிகர் (கூலம் - நவதானியம்), பொன் வணிகர், அறுவை வணிகர் (துணி), மணி வணிகர் போன்றோர். இவர்களைவிட சேனை வணிகர் என்ற உத்தியோகப் பிரிவினரும் உண்டு. தொல்காப்பியத்தில் வணிகருக்குரிய ஐந்து தொழில்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன: வணிகர்கள் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டனர். வணிகரைப் பாதுகாத்தல் ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை இலக்கியங்கள் கூறியிருக்கின்றன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை வாழ்த்தி "குமட்டூர்க் கண்ணனார்" என்ற புலவர் 'பலவகை உணவுப்பண்டங்களை விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்' என்று பொருள்பட ""கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ"" என்று பாடியிருக்கிறார். முப்பத்தாறு தத்துவங்கள் "தத்துவங்கள் 36" என்பவை, உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் இந்து மெய்ஞ்ஞானத்தின் எண்ணக்கருக்களில் ஒன்று ஆகும். பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் தத்துவங்கள் எனப்படுகின்றன. இருபத்துநான்கு என்றும் முப்பத்தாறு என்றும் தொண்ணூற்றாறு என்றும் இந்த தத்துவங்களைப் பல வகைகளில் கூறுவதுண்டு. குறிப்பாக சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்களும் சைவநெறியில் 36 தத்துவங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சைவ சித்தாந்தத்தின் படி, மும்மலங்களில் ஒன்றான மாயை, பதியால் இயக்கப்படும் போது, இந்த 36 தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன. இந்த மாயாமலமானது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாகப் பிரிந்து, அவை ஒவ்வொன்றிலுமிருந்து, முறையே ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என, மொத்தம் முப்ப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுகின்றன. சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்தையும், "சிவதத்துவம்" என்றும், அசுத்தமாயையிலிருந்து தோன்றும் ஏழையும் "வித்தியாதத்துவம்" என்றும், பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் இருபத்து நான்கையும் "ஆன்ம தத்துவம்" என்றும் வகைப்படுத்துவர். உயிர்கள் மீது கருணைகொண்டு, செயலற்று இருக்கும் "இறை" எனும் கருதுமம், மெல்ல மெல்லக் கீழிறங்கி வருவதை இப்படிநிலை காட்டுகின்றது. ஈசுவர தத்துவமானது, ஈடேறாத ஆன்மாக்களை சுத்த வித்தையில் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்று கொண்டிருக்கச் செய்யும். பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மேலே சாதாக்கிய தத்துவத்தை அடைந்து மலங்களிலிருந்து விடுதலை பெறும். பின், விந்து தத்துவம் ஆன்மாவை திருவருட்சக்தியில் நனைத்து, முக்திக்கு அழைத்துச் செல்லும். இறுதிப் பரிபூரண நிலையான சிவதத்துவமாம் நாதத்தில், ஆன்மா மோட்சம் பெறும். இவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுபவை. செயலற்றுறங்கும் ஆன்மாக்களின் செயற்பாட்டுக்கான கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. எனும் கஞ்சுகங்கள் ஆறுடன், ஒன்றும் சேர்ந்து, வித்தியா தத்துவங்கள் ஏழு ஆகின்றன. இந்த வித்தியா தத்துவங்கள் தொழிற்படுவதற்கு, சிவ தத்துவங்கள் அவசியமாகும். காலம், நியதி, கலை எனும் மூன்றும் விந்தினாலும், வித்தை, சுத்த வித்தையாலும், இராகம் ஈசுரனாலும், மாயம் நாதத்தினாலும், புருடன் சதாசிவத்தினாலும் இவ்வாறு இயக்கப்படுகின்றன. இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுமே, உலகத்தினதும் உயிர்களினதும் அடிப்படை ஆகும். சிவதத்துவத்தால், வித்தியா தத்துவம் தூண்டப்பட்டு, ஆன்மா இயங்குவதற்கான கருவிகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அவ்வாறு இயக்கப்படுவற்கான பௌதிக உடலையும் அதுசார்ந்த பொறிகளும் ஆன்மாக்கு அவசியமாகின்றன. பஞ்சபூதங்களும், ஐம்பொறிகளும் இன்னும் ஒன்பது கருவிகளும், வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆன்ம தத்துவத்தில் அடக்கப்பட்டிருக்கின்றன. ஆகிய ஐம்பருக்களும் ஆகும். மனித உடல் ஐம்பருக்களால் ஆனது என்பது சைவர்தம் நம்பிக்கை. என்னும் ஐந்தின் வகைகளும் தன்மாத்திரை ஐந்து ஆகும். எனும் ஐந்தும் ஆகும். கன்மம் என்றால் செயல். மனித உடல் செய்யும் ஐந்து செயல்களையும் கன்மேந்திரியமாக வகைப்படுத்தப்படுகின்றன. பற்றும் செயலைக் கையும், (கால்) பதித்தலை பாதங்களும், ஆக்கத்திறனுடன் படைத்தலை மூளையும், பலுக்கும் (பேசும்) செயலை நாக்கும், கழிக்கும் தொழிலை கழித்தல் அங்கங்களும் செய்கின்றன. இவை ஐந்தும் ஆன்மா, உடலில் இயங்க அவசியமாகும். எனும் ஐம்பொறிகளும் ஞானேந்திரியம் ஆகும். இவ்வைந்தும் ஒன்றோடொன்று இணைந்து செயல்புரிவதாலேயே, உயிர்கள் அறிவைப் பகுத்தறிந்து மெல்ல மெல்ல மேனிலையை அடைகின்றன. எனும் நான்கும். சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இந்த இருபத்து ஆன்ம தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன. இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) இணையும் போதே, ஏனைய தத்துவங்களுடன் இணைந்து, இப்பௌதிக உலகில் செயலாற்ற ஆரம்பிக்கின்றது என்பது சைவ சித்தாந்தத்தின் முடிபாகும். சைவ சித்தாந்தம் சிவக்கலப்பு அடையும் நிலை நமது உடலானது நிலம்,நீர்,தீ,காற்று,வாயு என்னும் ஜம்பூதங்களால் ஆனது.ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் ஆகிய ஜம்புலன்களும் மேற்கூறிய ஜம்பூதங்களின் தன்மாத்திரைகளாகும்.இத்தன்மாத்திரைகள் ஜம்புலன்களின் வழி சென்றலைந்து மனத்தில் கர்ம வாசனைகளைக் கொண்டு குவிக்காமல்,அஃது அததன் வழியில் நிற்க வேண்டும்;தன்மாத்திரைகளை அடக்கி வென்றால்,பூத சித்தி எய்தும் பிறகு சேதனம் அறிவுப்பொருளான ஆன்மாவுடன் சேரும்;அப்போது ஒரு சோதி தோன்றும்.பின்னர் சாதனத்தால் அச்சோதியும் சுத்த சிதாகாச வெளியில் விளங்கும்.அருட்சோதியுடன் சேரும்.எவ்வாறெனில் கடல் நீரில் கலந்துள்ள உப்பானது கடல் நீரைப் பாத்தியில் பாய்ச்சியபின் அந்நீர் சூரியனின் வெம்மையால் வற்றி உப்புக்கட்டியாகின்றது.இவ்வாறான உப்பினைக் கொண்டு மனித உருவினையோ,விலங்கின் உருவினையோ கடலில் இட்டால் கடலுடன் கலந்து ஒன்றாவது போல சிவனருட்கதிரால் எழுந்த ஆன்மா வினை தீர்ந்தபின் மீண்டும் சிவனுள் அடங்கி விடும்.சீவனனானது சிவனுள் அடங்கி விடும். தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம் தமிழிசையுடன் ஒன்றிணைந்த ஒர் அம்சம் தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம் ஆகும். தமிழர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், அவற்றை உருவாக்கிய / உற்பத்தி செய்த முறைகள், இசைக்கருவிகளை இசைத்த முறைகள் ஆகியவற்றை தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம் எனலாம். துரை இராஜாராம் துரை இராஜாராம் (பிறப்பு: அக்டோபர் 31, 1933) பி. ஏ. துரைசாமிப்பிள்ளையின் மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல வைணவ மாநாடுகளில் கலந்துகொண்ட இவர் 1994 ஆம் ஆண்டு பண்ருட்டி வைணவ மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய வ. உ. சிதம்பரனார், விண்ணுலகில் பாரதியார் என்னும் நாடகங்களை சென்னை வானொலி ஒலிபரப்பியுள்ளது. கம்பராமாயணம், பதினெண் கீழ்க்கணக்கு, ஸ்ரீவசன பூஷணம், கம்பனின் சிற்றிலக்கியங்கள், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூவருலா, மஸ்தான் சாகிபு பாடல்கள் மற்றும் பல நூல்களுக்கு தெளிவுரை எழுதியுள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள உலகக் கலை பண்பாட்டு இயக்கம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கணியன் பூங்குன்றனார் கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமேவந்தவள் என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. புறநானூற்றிலும் (புறம்: 192) நற்றிணை( நற்றிணை:226)யிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது. எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல் நாந்தம் உண்மையின் உளமே அதனால் தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச் சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் இன்ன நிலைமைத்து என்ப என்னோரும் அறிப இவ் உலகத்தானே. பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள். அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம். (அவர் பிரிந்தால் நுதல் பசந்துவிடும் அல்லவா) அதனால் தாம் செய்யும் பொருளின் பயனை அவரே உணரவில்லை. வேர்வை கசிய வெயில் கொளுத்தும் நீண்ட பாதையில் அவர் செல்ல, நான் இங்கே இருந்துகொண்டு எம் காதலர் சென்றார் என்று சொல்லிக்கொண்டு இருப்பது முறையா? உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள். பூங்குன்றனார் கணிப்பு அவரது இரண்டு பாடல்களிலும் உள்ளன. இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திறம்பட வாழ்ந்த பெருமக்கள் காட்டிய வாழ்க்கை நெறியில் தாம் கண்டு தெளிந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார். இந்தத் தெளிவின் பயன் யாது? மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது. பாலை நிலத்து மக்களின் வாழ்க்கையையும் இவர் புதுமையாகப் பார்க்கிறார்.
வேத சாரம் வேத சாரம் எனப்படுவது இந்து சமயத்தின் அறிவு நூலான வேதம் கூறும் சாரமாகும். அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது. வேதத்தின் சாரங்களாவன: மைக்ரோசாப்ட் எக்செல் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல். இதன் தொடர்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட்டு ஆபிஸ் மென்பொருளோடு எக்செல் மென்பொருளைச் சேர்த்துச் சந்தைப் படுத்தி வெற்றிகொண்டனர். ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை "லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும்" செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2013. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. 1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது. மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும். எக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும். எக்செல் சூத்திரங்கள் பின்வரும் வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுத் தீர்க்கப்படும் எக்செல் 2010 இலிருந்து 64 சூத்திரங்களை ஒரே சமயத்தில் பின்னிப் பிணைந்து (nested) பாவிக்க இயலும். பழைய எக்செல் பதிப்புக்களில் 7 சூத்திரங்களையே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து பாவிக்க இயலும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணயக்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும். குறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில் செய்யவியலாது. CHAR() சூத்திரம் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை ஐ மாத்திரமே ஆதரிக்கும் ஒருங்குறியை அல்ல. இதுபோன்றே CHAR() சூத்திரமும் ஆயினும் ஒருங்குறி பாவிக்கப்பட்டால் பிழைச்செய்திவராமல் 63 என்ற விடையையே தரும். எக்செல் இன் (Left, right, mid, len போன்ற) சூத்திரங்கள் தமிழில் சரிவர இயங்காது. ஏனெனில் தமிழில் அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்து தமிழ் எழுத்துருவைத் தோற்றுவிப்பதால் ஆகும். எக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும். எக்செல் பயனர்கள் உருவாக்கும் வார்புருக்கள் (templates) %AppData%\Microsoft\Templates இல் வழமையாக சேமிக்கப்படும். இதன் வழமையான சேமிப்பு இடத்தை மாற்றுவதானால் மைக்ரோசாப்ட் வேட் ஊடாகவே செய்யலாம். . 64பிட் இயங்குதளக் கணினிகளில் 32 பிட் ஆபிஸ் நிறுவப்பட்டிருந்தால் வார்ப்புருக்கள் C:\Program Files (x86)\Microsoft Office\Templates\1033 சேமிக்கப்பட்டிருக்கும். இந்திய சீர் நேரம் இந்திய சீர் நேரம் (IST, இ.சீ.நே.) என்ற நேர வேற்றுமையுடன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் இந்திய பாகிஸ்தான் போரின் போதும் 1962 இந்திய சீனப் போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் E* = Echo*என அழைக்கப்படுகிறது. ஒ.ச.நே + 05:30 ஒ.ச.நே + 05:30 "( UTC + 5:30)" அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30 (Coordinated Universal Time + 5.30) என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கை சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் ஒ.ச.நே + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது. இளவேட்டனார் இளவேட்டனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகிய தொகை நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவர் மதுரையில் வாழ்ந்தவர். "அறுவை வணிகம்" செய்தவர். துணி ஆடை பாவும் ஊடையுமாக இருப்பதை அறுத்து, மடித்து அழகாக அடுக்கி வணிகம் செய்தவர். இதனால் அவரை "மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்" என அழைப்பர். திருக்குறளுக்கு "வாயுறை வாழ்த்து" என்னும் பெயர் இவராலேயே ஏற்பட்டது. இளவேட்டனாரின் பாடல்களாவன: (பாடல் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன) நியூ செர்சி நியூ செர்சி (நியூ ஜெர்சி, "New Jersey"), ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இட்ரென்டன், மிகப்பெரிய நகரம் நியூவர்க். ஐக்கிய அமெரிக்கா உருவாகிய நாட்களில் இது 3 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது. நியூ செர்சி மாநிலம் அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பிரதேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாநிலத்திற்கு கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கில் பென்சில்வேனியா, தெற்கில் டெலவேர், வடக்கில் நியூ யார்க் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன. தற்பொழுது "நியூ செர்சி" என அழைக்கப் படும் இடத்தில் அமெரிக்கப் பழங்குடி மக்கள் - குறிப்பாக டெலவேர் இன மக்கள் 2800 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் ஆதிக்கம் ஆலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டினர் கைகளுக்கு மாறியது. ஆனால் வெகு விரைவிலேயே ஜேம்ஸ் டவுன் மற்றும் வர்சீனியாவில் வெற்றி வாகை சூடிய ஆங்கிலேயர் இந்த இடத்தையும் டச்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர்; ஆங்கிலக் கால்வாய்த் தீவுகளில் பெரிய தீவின் நினைவாக "நியூ செர்சி பிராந்தியம்" என்று பெயரும் இட்டனர். சர் ஜார்ஜ் கார்டரெட் மற்றும் ஜான் பெர்க்லி (அச்சமயத்தில் அவர் ஸ்ட்ராட்டனின் முதல் சீமான் பெர்க்லி என அழைக்கப்பட்டார்). இருவருக்கும் இணைந்த குடியேற்ற நாடாகப் பரிசாக வழங்கப்பட்டது. அப்பொழுது மட்டும் இல்லாமல், அமெரிக்க சுதந்திரப் போரிலும், பல யுத்தங்களுக்குக் களமாக நியூ செர்சி திகழ்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறொரு விதமான புரட்சி நியூ செர்சியில் பரவியது; ட்ரென்டன், எலிசபெத்து, பாட்டர்சன் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகள் அமைந்ததும், தொழிற்புரட்சி விரைவாக பரவியதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த நியூ செர்சியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டி வளர்த்தன. ஓம்காரா (திரைப்படம்) ஓம்காரா, (ஹிந்தி: ओमकारा), ஒரு ஹிந்தி மொழித் திரைப்படம். ஒத்தெல்லோ என்ற செம்மையான நாடகத்தின் இன்றைய திரையாக்கம். விஷால் பரத்வாஜ் இயக்கி சயீஃப் அலி கான், கொங்கனா சென் ஷர்மா, அஜய் தேவ்கன், கரீனா கபூர், விவேக் ஒபராய், பிபாஷா பாசு, நசீருதீன் ஷா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். விஷால் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். குல்ஸார் பாடல்களை இயற்றியுள்ளார். வில்லியம் ஷேக்ஸ்பியர் இயற்றிய ஒத்தெல்லோ என்ற நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார் விஷால் பரத்வாஜ். ஓமி என்று அழைக்கப்படும் ஓம்காரா, ஒரு அரசியல் கட்சியின் முதன்மைத் தலைவனாக அல்லது தளபதியாக உள்ளான். ஓமிக்கு, 'லங்க்டா' தியாகி மற்றும் கேசு என்று இரு உப-தளபதிகள் (பேச்சு வழக்கில்: அல்லக்கைகள்) நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக உள்ளனர். ஓமி, தனக்கு அடுத்த தளபதியாக கேசுவினை நியமிக்கின்றான். லங்க்டாவின் அரசியல் கனவுக்கு இது மிகப்பெரிய இடியாக விழ, ஓமியின் மனைவியான டாலி மிஷ்ரா மீது, தவறான பழி சுமத்தும் சதியில் ஈடுபடுகின்றான். டாலிக்கும் கேசுவிற்கும் தொடர்பு உள்ளதாக, தவறாக பிம்பித்தினை, ஓமியின் மனதில் மெள்ள மெள்ள, ஆனால் உறுதியாக நிறுவ முயற்சிகள் மேற்கொள்கின்றான். இதை உணராத ஓமி, அவனுடைய அழகான அகஉலகத்தினை பாழ்படுத்திக்கொள்கின்றான். உண்மையினை இறுதியில் உணரும் போது, தன்னுடைய செயல்களினால், சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளாகின்றான். "ஓம்காரா", நான்கு மாத காலங்களில் எடுக்கப்பட்ட திரைப்படம். லோனாவ்லா, லக்னோ பல்கலைகழகம், அலஹாபாத், போத் கயா, மஹாபலேஷ்வர், வய் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் திரையாக்கப்பட்டது. மஹாராஷ்ட்ராவில் திரையாக்கப்பட்டாலும், உத்தர பிரதேச புலத்தினையும் சூழலையும் மறு உருவாக்கம் செய்வதில் மிக கவனம் கொண்டு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் உள்ள எட்டு பாடல்களுக்கும், இசையமைத்தவர் விஷால் பரத்வாஜ்: Ishwar "Langda" Tyagi: Bewakoof aur chutiya mein dhaage barabar farak hota hai. Dhage ke henge bewakoof aur hunge, chutiya. Dhaga khench lo to kaun hai chutiya kaun hai bewakoof, carore rupiye ka prashan hai bhaiya. Zara dhenkhe to sahie dulhe raja ko. Ainkhen! Tu to bewakoof hain na...? ஈஷ்வர் "லங்க்டா" தியாகி: மடையனுக்கும் முட்டாப்பயலுக்கும் இருக்கிற வித்தியாசம் ஒரு சின்ன ""கேப்(gap)" தான். அந்த கேப்ப அழிச்சுட்டோம்னா, யாரு மடையன் யாரு முட்டாப்பயங்குறது கொஞ்ச கஷ்டமான கேள்வி, மச்சான். அது சரி மாப்ள, கொஞ்சம் உன் மூஞ்சிய காட்டு. ஆஹ்ஹா. நீ முட்டாப்பயதானே.. என்ன நாஞ்சொல்றது... நித்தியானந்தா சுவாமி நித்தியானந்தர் என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா எனவும் அறியப்படுபவர் ஒரு ஆன்மீக குரு ஆவார். இவர் பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த பீடத்திற்கு கனடா முதலான 50 நாடுகளில் கிளைகள் உள்ளன. உலக அலவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இவர் தன்னுடைய சீடர்களுக்காக சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்டி பின்னர் மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டவரும் ஆவார். நித்தியானந்தர் 1978ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாவார். நித்தியானந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளாக பின்வருவன அவரது அமைப்பு சார்ந்த தரவுகளால் முன்வைக்கப்படுகின்றன: தனது பன்னிரண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் புத்த பூர்ணிமா அன்று மே 31,1990 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவிராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற நித்தியானந்தர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி (எனும் பேரானந்த நிலையினை சனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை சனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் செயல்படுகிறது. மதுரையிலிருக்கும் மதுரை ஆதீனம் மடத்தில் மதுரை 292 ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தரை தனது வாரிசாகவும் 293 வது மதுரை ஆதீனமாகவும் அறிவித்தார். இதன்படி கடந்த ஏப்ரல் 29 2012 அன்று மதுரை ஆதீனம் மடத்தில் ஆதீன வழக்கப்படி 292 வது ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தருக்கு 293 வது மதுரை ஆதீனமாக நியமித்ததற்கு அடையாளமாக அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை, தலைக்கவசம் போன்றவைகளை அணிவித்தார். மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நித்தியானந்தர் 292 வது மதுரை ஆதீனத்துடன் இணைந்து செயல்படுவதுடன் இனி அவர் “மதுரை ஆதீனம் 293- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என அழைக்கப்படுவார்..இந்நியமனத்தை காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் எதிர்த்தன. ஆனாலும், நித்தியானந்தரை நீக்கம் செய்ய முடியாது என மதுரை ஆதீனம் அறிவித்தார். இந்நியமனத்திற்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து, 19, அக்டோபர், 2012 (19-10-2012) முதல் நித்தியானந்தரை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். தமிழ் நடிகை ரஞ்சிதாவும் சுவாமி நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த காணொளியை 2010, மார்ச் 2 இல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் தொடர்ச்சியாய் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் சுவாமி நித்தியானந்தரை கர்நாடக காவல்துறையினர் ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதன் பீடாதிபதி நித்யானந்தர் மீது 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தன்னுடைய பிடதி ஆசிரமத்தில் சூன் 7, 2012 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் செய்தியாளரைத் தாக்கியதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. அதனைத் தொடர்ந்து ஆசிரமம் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் முதல்வர், சதானந்த கவுடா ஆசிரமத்தை மூடுவதற்கு உத்திரவிட்டார். நித்தியானநதாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது, அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், புதன்கிழமை ஜூன் 13 அவர் ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார். ராமநகரம் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தருக்கு வியாழக்கிழமை (ஜூன் 14) ஜாமீன் வழங்கியது. அவர் ஜாமீனில் விடுதலையான சிறிது நேரத்தில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்த உள்மாநில பாதுகாப்பு போலீசார், நித்யானந்தரை மீண்டும் கைது செய்தனர். நித்யானந்தரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, மைசூர் சிறையில் நித்யானந்தர் அடைக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை (ஜூன் 15) இரவு 9 மணியளவில் நித்யானந்தர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பிடதி ஆசிரமத்தில் உள்ள ஆலமரத்தையும் மற்ற பிற ஆலயங்களையும் பின் வரும் சுட்டியில் நேரலையில் காணலாம்: வட்டவளை வட்டவளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அட்டன் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. வட்டவளை என்பது சூழப்பட்ட தாழ்வன பகுதி எனச் சிங்கள மொழியில் பொருள்படும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கல்படை, றொசல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. வட்டவளையில் வட்டவளை, மேல் வட்டவளை என இரண்டு தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் கண்டி திசையிலிருந்து பயணிக்கும் போது முதலாவதாக அமைந்துள்ள வட்டவளை தொடருந்து நிலையம் பெரியதாகும். அடுத்ததாக அமைந்துள்ள மேல் வட்டவளை நிலையம் வட்டவளை நகருக்கு அண்மையாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. நானு ஓயா நானு ஓயா ("Nanu Oya") இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இந்நகரின் அருகே மகாவலி கங்கையின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மரக்கறி வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நானு ஓயா தொடருந்து நிலையம் இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கிரேட் வெசுடன், அம்பேவளை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. ஆங்காங் ஒங்கொங் அல்லது ஆங்காங் அல்லது ஹாங்காங் ("Hong Kong Special Administrative Region", HKSAR, சீன மொழியில்: 香港) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் பிரித்தானிய சட்டத் திட்டங்களுக்கு அமைவாக ஒங்கொங் தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடிய பொருளாதார நிர்வாகச் சட்டங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், பாதை விரிவாக்க அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும். மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் கூடிய இடங்களில் ஒங்கொங்கும் ஒன்றாகும். ஒங்கொங் உலகின் அதி வளர்ச்சியடைந்த பொருளாதார மையங்களில் ஒன்றாகும். இன்று பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேகப் பாதைகள், திகைக்கவைக்கும் மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இது "ஆசியாவின் நகரம்" ("Asia's City") என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக முத்து ஆற்றின் முகத்துவாரத்தை கிழக்காகவும், தென்சீனாவின் குவாங்தொங் பெருநிலப்பரப்பை வடக்காகவும், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தென் சீனக்கடலையும், 61 கிலோ மீட்டர் தொலைவில் மக்காவையும் அமைவிடமாக கொண்டுள்ளது. ஒங்கொங் மூன்று பிரதானப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒங்கொங் தீவு பகுதியாகும். இதன் நிலப்பரப்பளவு 81 சதுர கிலோ மீட்டர்களாகும். இரண்டாவது கவ்லூண் கற்ப நிலப்பரப்பாகும். இதன் பரப்பளவு 47 சதுர கிலோ மீட்டர்களாகும். மூன்றாவது புதிய கட்டுப்பாட்டு பகுதி (New Territory) உடன் 262 குட்டித் தீவுகளையும் உள்ளடக்கியப் நிலப்பரப்பாகும். இதன் பரப்பளவு 976 சதுர கிலோ மீட்டர்களாகும். இம்மூன்று நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய ஒங்கொங்கின் மொத்த நிலப்பரப்பளவு 1104 சதுரக் கிலோ மீட்டர்களாகும். இது சீனப் பெருநாட்டின் 10000/1 நில அளவை விட குறைவானதாகும். இருப்பினும் செயற்கையாய் கடலை நிரப்பி மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், தீவுகள் சமதரையாக்கப்பட்டு பெருநிலத்தோடு இணைத்து மேற்கொள்ளும் திட்டங்கள் போன்றவற்றால் ஒங்கொங்கின் நிலப்பரப்பளவு காலத்திற்கு காலம் கூடி வருகின்றது. "ஒங்கொங்" எனும் பெயர் கண்டோனீஸ் அல்லது ஹக்கா (Cantonese or Hakka) எனும் சீன மொழிகளில் இருந்தே தோன்றியதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் "ஒங்கொங்" எனும் ஒலிப்புக்கான கண்டனீஸ் மொழியின் அர்த்தம் "நறுமணம் வீசும் துறைமுகம்" (Fragrant Harbour) எனப்பதாகும். இப்பெயர் எவ்வாறு தோன்றியது என்றால், 1841 ஆம் ஆண்டுக்கு முன்பு தற்போது எபர்டீன் (Aberdeen) என்றழைக்கப்படும் இடத்திற்கும், அப் லெய் சாவ் தீவுக்கும் (Ap Lei Chau) இடையில் இருந்த சிறிய குடா பகுதியையே "ஒங்கொங்" என்று அப்பகுதிகளில் வசித்து வந்த மீனவர்களால் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டதாம். சீனாவின் முத்து ஆற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியிலேயே இத்தீவுகள் அமைந்துள்ளன. எனவே அக்கடல் பரப்பின் நீர் சுவையானதாகவும் நறுமணமுடையதாகவும் இருப்பதால் அங்குவாழ் மீனவர்கள் அக்கடல் குடாப் பகுதியை "நறுமணம் வீசும் துறைமுகம்" எனும் பொருள்பட ஒங்கொங் என்று அழைத்தனராம். இக்குடா கடல் பரப்பு மீனவர்களின் ஓடத்துறைமுகமாகவும் இருந்துள்ளது. இந்த சிறிய குடா பகுதியே பிரித்தானிய கப்பற் படையினருக்கும் இத்தீவின் பூர்வக் குடிகளான மீனவர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. அதன் பின் பிரித்தானியரின் ஆட்சியின் பொழுதே "ஒங்கொங்" எனும் பெயர் முழு தீவுப்பகுதியையும் குறிக்கும் பெயராக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது. வரலாற்று ரீதியாக ஒங்கொங் ஒரு மீனவக் கிராமமாகும். இன்று ஒங்கொங் என்றழைக்கப்படும் ஒங்கொங் தீவும் கவ்லூன் தீபகற்ப நிலப்பரப்பும், இவற்றைச் சூழ அமைந்துள்ள சிறுத் தீவுகளும் அன்று மலைத்தொடர்களாகவும், மலைக் குன்றுகளாகவுமே காட்சியளித்துள்ளன. இம்மலைத் தொடர்களின் அடிவாரத்தில் ஆங்காங்கே சில மீனவக்குடில்கள் இருந்துள்ளன. சில உப்பு உற்பத்தி வயல்களும் காணப்பட்டுள்ளன. இருப்பினும், இப்பகுதிகளின் கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மீனவக் கிராமங்கள் முதலாம் அபின் போரைத் தொடர்ந்து 1841 சனவரி 1 ஆம் நாள் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட நாஞ்சிங் உடன்படிக்கை இன் பின்னரே ஒங்கொங் எனும் பெயர் இத்தீவுக்கான பெயராக வரலாற்றில் பதியப்பட்டது. அதனை தொடர்ந்து 1842 ஆகஸ்ட் 29 ஆம் நாள் ஒங்கொங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிமுகப்படுத்திக்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. அதாவது தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தூடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலை ஏற்றுமதியை செய்து வந்தது. அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருற்களை பிரித்தானியா சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருற்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தி்யாவில் வங்காளப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த ஒரு வகைப் போதைப் பொருளான அபினை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் ஊடான போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. இதனால் சீனப் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. அப்பொழுது சீனாவில் குவிங் வம்ச பேரரசு ஆட்சியில் இருந்தது. இத்தகைய சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான பிரித்தானியாவின் கல்லக்கடத்தல் போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைச்செய்தது. இருப்பினும் குவிங் பேரரசின் தலமையகம் பெய்ஜிங்கில் இருந்தது. பெய்ஜிங்கில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தென்சீன நிலப்பரப்பான குவாங்தோவ் மகாணத்தில் நடைப்பெற்று வந்த இச்சட்டவிரோதப் போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்பொழுது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின் குவங்தோவ் மகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (special commissioner to Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைப்பெற்றுவரும் போதைப்பொருள் வணிககத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் போதைப்பொருளான அபின் புகைத்தலை தடைச் செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனை சீனாவிற்குள் சட்டவிரோதமாக விணியோகித்து அப்பாவி பொதுமக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு லின் சீசு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோறியா மகாராணிக்கு லின் சீசு எழுத்து மூலமாக அறிவித்தார். குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகலை பிரப்பித்துக்கொண்டே இருந்தது. ஆனால், இவை எவற்றையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக்கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து போதைப்பொருள் இறக்குமதியை தொடர்ந்த வண்ணமே இருந்தது. அதேவேளை குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனைச் செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் வன்மையான தாக்கத்தினையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் மக்களுக்கு அறிவித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியா போதைப்பொருள் கல்லக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டேப் போனது. இதனால் லின் சீசு வின் நடவடிக்கைகளும் கடுமையானது. குவாங்தொவ் மகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடி தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுப்பட்டோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார். இதற்கு எதிராகவும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காகவும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும். 1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 யூலை 1 ஆம் நாள் ஒங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. ஆனால் 1997 ஆம் ஆண்டு ஒங்கொங் சீனாவிடம் மீள்கையளிக்கப்பட்டாலும் பிரித்தானியா மற்றும் சீனா இரண்டு நாடுகளும் கைசாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி 1997 ஆம் ஆண்டில் இருந்து 2047ஆம் வரை பிரித்தானிய ஆட்சி அமைப்புக்கு அமைவான முதலாளித்துவ கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஒங்கொங் நிலப்பரப்பை மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18 மாவட்டங்கள் உள்ளன. புதிய கட்டுப்பாட்டுப் பகுதி (New Territories) கவ்லூண் மற்றும் புதிய கவ்லூண் பகுதி ஒங்கொங் தீவுப் பகுதி ஒங்கொங்கின் மக்கள் தொகை 2007 ம் ஆண்டின் கணிப்பின் படி 6.94 மில்லியன்களாகும். இதில் 95% வீதமானோர் சீனர்களாவர். 5% வீதமானோரே ஏனையோர். பெரும்பான்மையானோரால் பேசப்படும் மொழி கண்டனீஸ் (சீனம்). தவிர ஆங்கிலமும் ஓரளவு பேசப்படுகின்றது. தற்போது மண்டரின் (சீனம்) மொழியும் பேசப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தவிர அமெரிக்கர், கனடியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர், யப்பானியர், இந்தியர், பாக்கிஸ்தானியர், நேபாள, பிலிப்பின், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என பல்லினத்தவரும் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்களும் குடியுரிமைப் பெற்றவர்களாக உள்ளனர். தவிர ஒங்கொங்கிற்கு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் ஒங்கொங் தொழிலாளர்களாக இங்கே வந்து சேவை செய்பவர்கள் கிட்டத்தட்ட 275,000 உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 140.000 (53.11% வீதம்) பிலிப்பின்களாகும். 120,000 (43.15% வீதம்) இந்தோனிசியா பெண்களாகும். தாய்லாந்து 4,000 பேர் வரையில் இருக்கலாம். கிட்டத்தட்ட 3,500 இலங்கையர்கள், கிட்டத்தட்ட 3,500 இந்தியர்கள். ஏனைய நாட்டுப் பணிபெண்கள் 4,000 வரையிருக்கும். கன்பியூனிசம் மற்றும் பௌத்தம் ஆகியன பிரதான மதங்களாக இருக்கின்றது. அடுத்து கிறித்தவம் இருக்கின்றது. இஸ்லாம் மதத்தினரும் ஓரளவு இருக்கின்றனர். இந்து மத வழிப்பாட்டுத் தலங்கள் இரண்டு உள்ளது. சீன-பிரித்தானிய கூட்டறிக்கையின்படியும், ஒரு நாடு இரண்டு முறைகள் எனும் கொள்கையின் அடிப்படையிலும் ஒங்கொங்கிற்கு சிறப்பு நிர்வாகப் பிரதேசம் என்னும் அதிகூடிய தன்னாட்சி அதிகாரம் மக்கள் சீனக் குடியரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்படு ஒங்கொங் (ஐக்கிய இராச்சிய ஆட்சி முறைபடி அமைந்த)தனித்துவமான அரசியல், ஆட்சி அதிகாரங்கள், சட்டத்திட்டங்கள், காவல் துறை, நாணயம், சுங்கக்கொள்கை, குடிவரவு குடியகல்வு சட்டங்கள், வெளிநாட்டு பிரதிநிதித்துவம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் இதன் வெளிவிவகார கொள்கைகள், எல்லை பாதுகாப்பு போன்றன மத்திய சீன அரசிடமே உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்றனவும் சீனாவினூடாகவே கிடைக்கின்றது. கூட்டறிக்கைப்படி, ஒங்கொங், குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது, முதலாளித்துவப் பொருளாதார முறையையும், மக்களுடைய உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றையும் உறுதிப்படுத்துவதற்கு ஒத்துக்கொள்ளப் பட்டுள்ளது. நிறைவேற்று தலைமை அதிகாரியாக டொனால்ட் செங் அவர்களே கடந்த வருடங்களாக இருக்கின்றார். (சீனம்) கண்டனிஸ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக உள்ளன. ஒங்கொங் தரையமைவு இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும். சமதரைப் பிரதேசங்கள் இங்கு இருக்கவில்லை. ஆனால் மலைகளை செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கியுமே ஒங்கொங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது. தற்போதும் சென்ரல் பிரதேசத்தில் வர்த்தகக் கட்டிடம் முன்பாக கடலின் ஒரு பெரு நிலப்பரப்பை செயற்கையாக நிரப்பி அபிவிருத்திகள் நடைப்பெற்றுக்கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம். கவ்லூண் பிரதேசத்தில் சிம் சா சுயி இல் அமைந்திருந்த சிறிய மலைக்குன்றும் சமதரையாக்கப் பட்டு அங்கே புதிய கட்டிடம் ஒன்று எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த மலைகளின் நிலவமைப்பைப் பார்ப்போமானால் ஒரு சில அடிகள் மட்டுமே மண் இருப்பதை அவதானிக்கலாம். அதன் கீழ் ஒரு வித வெண்கற் பாறைகளாகவே உள்ளன. இவ்வாறு பாறைகளான தரை அமைப்பே கட்டிடங்களின் அத்திவாரத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றது எனலாம். கடலுக்கடி பகுதிகளும் கற்பாறைகளாகவே இருப்பதை சில வரைப்படங்களூடாக அறியக்கூடியதாக இருக்கின்றது. பல வானலாவிகளின் அத்திவாரங்கள் இருக்கத்தக்க 50 – 80 அடி நிலத்திற்கடியில் நீண்ட தொடரூந்து பாதைகள் அமைப்பதற்கும் இதனாலேயே ஏற்புடையதாக இருப்பதாகக் கொள்ளலாம். ஒங்கொங்கில் 7,558 வானளாவிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் உலகில் அதிக வானளாவிகளைக் கொண்டுள்ள நகரமாக இது விளங்குகிறது. ஒங்கொங் தீவில் துறைமுகக் கரைப் பகுதிகளிலிருந்து உட்பகுதியில் அமைந்துள்ள மலைச்சரிவுகள் வரையுள்ள சராசரித் தூரம் 1.3 கிலோமீட்டர்கள் மட்டுமே. இவ்வாறான இடவசதிக் குறைவினால் நகரம் விரிவடைவதற்கான நிலப்பற்றாக்குறை காரணமாக ஒங்கொங்கில் அடர்த்தி கூடிய உயரமான அலுவலகக் கட்டிடங்களும், குடியிருப்புக்கான கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. இதன் காரணமாக உலகின் 100 மிக அதிக உயரம் கொண்ட குடியிருப்புக்கான கட்டிடங்களில் 38 கட்டிடங்கள் ஒங்கொங்கில் உள்ளன. அத்துடன், 14 மாடிகள் உயரத்துக்கு மேல் வாழுகின்ற அல்லது வேலை செய்பவர்களின் எண்ணிக்கை உலகில் வேறிடங்களில் உள்ளதைக் காட்டிலும் ஒங்கொங்கில் அதிகமாக உள்ளது. நிலத்தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, பழைய கட்டிடங்கள் ஒங்கொங்கில் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், இந்நகரம் தற்காலக் கட்டிடக்கலையின் மையமாக விளங்குகிறது. ஒங்கொங்கின் மிக உயரமான கட்டிடம், 2 அனைத்துலக நிதி மையம் ஆகும். இதன் உயரம் 415 மீட்டர் (1,360 அடி). எச்.எஸ்.பி.சி தலைமையகக் கட்டிடம், முக்கோண வடிவிலான சென்ட்ரல் பிளாசா, இரவு நேரப் பல நிற ஒளிக் காட்சிகளுடன் கூடியத சென்டர், புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான ஐ. எம். பேய் என்பவர் வடிவமைத்த சீன வங்கிக் கோபுரம் என்பன இங்குள்ள பிற குறிப்பிடத்தக்க கட்டிடங்கள். மீந்திருக்கும் வரலாற்று மதிப்புக் கொண்ட கட்டிடங்களில், சிம் சா சுயி மணிக்கூட்டுக் கோபுரம் (Tsim Sha Tsui Clock Tower), மத்திய காவல் நிலையம், மதிலால் சூழப்பட்டிருந்த கோலூன் நகரின் எஞ்சிய பகுதிகள் என்பன குறிப்பிடத்தக்கவை. பல புதிய கட்டுமானத் திட்டங்கள் உள்ளன. இவற்றுள், புதிய அரசாங்கக் கட்டிடங்கள், கடற்கரை மீள்மேம்பாட்டுத் திட்டம், மேற்குக் கோலூனில் கட்டப்படவுள்ள பல கட்டிடங்கள் என்பன இவற்றுள் அடங்கும். மேலும் பல உயரமான கட்டிடங்கள் கோலூனில், விக்டோரியா துறைமுகத்திம் மறுபக்கத்தில் கட்டப்படவுள்ளன. காய் டாக் வானூர்தி நிலையம் 1998 ல் மூடப்பட்டதன் பின், கட்டிடங்களுக்கான உயரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. ஒங்கொங், தனியார் மற்றும் பொதுப் போக்கு வரத்து வசதிகளை உள்ளடக்கிய மிகவும் வளர்ச்சியடைந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. 90%க்கு மேற்பட்ட அன்றாடப் பயணங்கள் (11 மில்லியன்) பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இது உலகிலேயே மிக அதிகமான அளவு ஆகும். "அக்டோப்பஸ் அட்டை" எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாத் தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும், வண்டித் தரிப்பிடங்களிலும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தமுடியும். நகரின் விரைவுப் போக்குவரத்துச் சேவையான எம்.டி.ஆர் 150 நிலையங்களைக் கொண்டு அன்றாடம் 3.4 மில்லியன் மக்களுக்குச் சேவை புரிகிறது. 1904 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் ஒரு டிராம் வண்டிச் சேவை, ஒங்கொங்கின் வடக்குப் பகுதிகளில் பயன்படுகின்றது. இரண்டு தட்டு டிராம்களுடன் இயங்கும் டிராம் சேவை உலகில் இது ஒன்றே. ஒங்கொங் பிரதான போக்குவரத்து சேவைகளில் உலகின் அதி நவீன சிறந்தப் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான நிலத்தடி சுரங்கப்பாதை தொடரூந்துச் சேவை செயல்படுகின்றது. மற்றும் பேருந்து, சிற்றூந்து, ட்ரேம் வண்டி, மகிழூந்துச் சேவை, ஸ்டார் பெரி (வள்ளம்) படகு சேவை, தீவுகளுக்கான அதிவேக படகு சேவை, சொகுசு படகு சேவை, போன்றன சேவையில் உள்ளன. ஒங்கொங்கில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்கள் நிரந்தர வதிவுரிமைப் பெற்று வசிப்பவர்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது. சரியான ஒரு கணக்கீடு இல்லை. ஒங்கொங் தமிழர்கள் என்போர் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வந்தவர்களாவர். இவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வருகின்றது. இதனைத் தவிர இளம் இந்திய நண்பர்கள் குழு, தமிழ் மொழி வகுப்புகள் போன்றனவும் உள்ளன. இவற்றைத் தவிர தொழில் வாய்ப்புக்காக ஒங்கொங் வந்துள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் 100 முதல் 150 பேர்வரை இருக்கின்றனர். ஒங்கொங் யுஎன்எச்சிஆரில் அரசியல் புகலிடம் கோரிக்கைகளை முன்வைத்து ஒங்கொங் வந்த இலங்கைத் தமிழர்கள் யுன் லோங் பகுதிகளில் செறிந்து வாழ்கின்றனர். உமறுப் புலவர் உமறுப் புலவர் (காலம்: 1642-1703) முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர். உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படியே உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபும் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார். உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார். திரு. வி. கலியாணசுந்தரனார் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் "தமிழ்த்தென்றல்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார். தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது. வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார். 1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார். பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார். கணக்கியல் தலைப்புக்களின் பட்டியல் கீழ்வருவன கணக்கியல் தலைப்புகளின் பட்டியல் ஆகும்: மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை. ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலது புறம் குளம் உள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்து காணப்படும் மண்டபத்தில் வலப்புறம் கணபதி சன்னதி உள்ளது. அச்சன்னதியின் முன்பாக மூஞ்சுறு, பலிபீடம் உள்ளன. இடப்புறம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன. அடுத்துள்ள நுழைவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது. திருச்சுற்றில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவராக மயூரநாதர் உள்ளார். கருவறையின் இடப்புறம் திருமுறைக்கோயில் உள்ளது, தொடர்ந்து நடராஜர் சன்னதி காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் இடப்புறம் நாதசர்மா சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து அனவியதாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் வாகனங்கள்,விநாயகர், லிங்கோத்பவர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வரசித்தி விநாயகர், ஆடிப்பூர அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு எதிர் புறமாக ஆதிமயூரநாதர் சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலப்புறம் கணபதியும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. . துலா ஸ்நானம், துலாகட்டம் படித்துறையில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் நாள் ஆரம்பித்து, கடை முழுக்கு ஐப்பசியின் கடைசி நாளன்று நிறைவடைகிறது. . திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் கடக்க உதவினார் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலில் உள்ள இறைவன் உசிரவனேசுவரர்,இறைவி வேயுறுதோளியம்மை. இத்திருக்கோயில் ஞாழற் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி காணப்படுகின்றன. இடப்புறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது இடப்புறம் நடராஜர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதியில் துறை காட்டும் வள்ளலார் உள்ளார். அவரது சன்னதிக்கு இடப்புறம் வேயுறுதோளியம்மை சன்னதி உள்ளது. மூலவருக்கு முன் பலிபீடம், நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுட்ன் கூடிய சுப்பிரமணியர், நால்வர், அருணாசலேஸ்வரர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். 1929 சூன் 1929 மற்றும் 2 பிப்ரவரி 1959 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன. தற்போது (நவம்பர் 2016) கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. கீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டேஸ்வரர், இறைவி இளங்கொம்பனையாள். கோயிலைச் சுற்றி பசுமையான வயல்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம் விநாயரும், இடப்புறம் சுப்பிரமணியரும் சுதை வடிவில் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் கோயில் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. மூலவராக வீரட்டானேஸ்வ்ரர் உள்ளார். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கோஷ்ட கணபதி உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறைச்சுவற்றில் தட்சன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் மகாகணபதி, செந்தில் ஆண்டவர், மகாலெட்சுமி உள்ளனர். இடப்புறம் கற்பக விநாயகர், சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். வெளி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதியின் வலப்புறம் பாலாம்பிகை எனப்படும் இளங்கொம்பனையாள் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து கஜசம்ஹாரமூர்த்தி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் காசி விசுவநாதர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக வலப்புறம் கால பைரவரும், இடப்புறம் நர்த்தன கணபதியும் உள்ளனர். திருச்சுற்றில் தொடர்ந்து சேத்திரபாலர், சிவசூரியன் உள்ளனர். நவக்கிரகங்கள் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகும். இத்தலத்தில் வீரபத்திரரை ஏவித் தக்கன் கொல்லப்பட்டான் என்பது தொன்நம்பிக்கை. இது அட்டவீரத் தலங்களுள் ஒன்றாகும் செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் சுவர்ணபுரீசுவரர்,இறைவி மருவார்குழலி. கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள மாடக்கோயில். பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னதி உள்ளது. மாடக்கோயில் அமைப்புள்ள இக்கோயிலில் பலிபீடம், நந்தி உள்ளன. மண்டபத்தில் சூரியமகா கணபதி, சூரியலிங்கம், சந்திரலிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர். கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சேத்ரகால பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து பிராமி, மககேஸ்வரி, கௌமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, விநாயகர், சாஸ்தா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பின்புறம் பிரகாச விள்ளையார், நால்வர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். தாட்சாயணிக்கு அருள் கிடைத்ததும் வீரபத்திரர் தோன்றியதும் இத்தலத்தில் எனப்படுகிறது. இத்தலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்றான் என்பதும் தொன்நம்பிக்கை. மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் எனப்பெயர் பெற்றது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர். சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் வலம்புரநாதர்,இறைவி வடுவகிர்க்கண்ணி. மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறத்தில் வடுவகிர்க்கண்ணி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கருவறையில் மூலவர் வலம்புர நாதர் உள்ளார். மூலவர் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஏரண்டமுனிவர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, விநாயகர், சேதுபரமேஸ்வரர், அப்பர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், தட்சிணமகாராஜா, ராணி, தாருகாவனத்தில் ராமர் பூசை செய்த ராமநாதர், தாருகாவனத்தில் லட்சுமணர் பூசை செய்த விசுவநாதர்,வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இத்தலத்தின் மரம் பனை மரம் ஆகும். இத்தலத்தில் திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இலவச இணைய இட வசதி இணைய தளங்களை தனிப்பட்ட முறையின் அமைத்துக் கொள்ளாமல் பிற இணையதளங்களின் துணைத் தளங்களாக இலவசமாக அமைத்துக் கொள்ள இடவசதிகளை சில இணைய தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த இணையதளங்கள் இடவசதி அளிக்கப்பட்ட துணைத்தளங்களின் கீழ் பக்கத்தில் ஒரு விளம்பரம் இடம் பெறச் செய்து அதன் முலம் வருமானங்களை ஈட்டிக் கொள்கின்றன. சில இணைய தளங்கள் தங்கள் தளத்தின் விளம்பரம் எதுவும் செய்யாமல் இணையதளத்தின் பக்க அதிகரிப்பு மற்றும் அதன் போக்குவரத்து நடவடிக்கை அதிகரிப்புகளின் மூலம் லாபமடைகின்றன. சில தளங்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றியும் இட வசதிகளை அளிக்கின்றன. கூகிள் பேஜ் கிறியேட்டர் போன்றவை 100 மெகாபைட்டு (MB) அளவுடைய ஆகக் கூடிய 5 தளங்களை வழங்குகின்றது. மோர்சிங் மோர்சிங் ("யூத யாழ்") இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 4ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. 1947 1947 (MCMXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். சதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு) சதுரங்கம் பண்டைய இந்தியாவில் விளையாடப்பட்ட ஒரு பலகை விளையாட்டு. இதுவே தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டுவரும் "செஸ்" விளையாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இது இந்தியாவிலிருந்து பாரசீகம் வழியாக மேலை நாடுகளுக்குச் சென்றதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விளையாட்டு குப்தர்களின் காலகட்டத்தில் பொதுவருடம் 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் சரியான விதிமுறைகள் தெரியவில்லை. பின்னர் இவ்விளையாட்டு பாரசீகம் வழியாக மத்திய ஐரோப்பாவை அடைந்து தற்காலத்திய சதுரங்க விளையாட்டாக உருப்பெற்றது. சி. சிவஞானசுந்தரம் சி. சிவஞானசுந்தரம் ("சுந்தர்", மார்ச் 3, 1924 - மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது. முதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார். சிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக "சிரித்திரன் சித்திரக் கொத்து" என்னும் நூலாக வெளிவந்திருக்கின்றன. "கார்ட்டூன் உலகில் நான்" என்று சுந்தரின் தன்வரலாற்று நூலாக வெளிவந்திருக்கிறது. மகுடி பதில்கள் நூலாக வெளிவந்தது. காலம், சுவைத்திரள் போன்ற சஞ்சிகைகள் "சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்"களை வெளியிட்டன. 1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளானார். வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார். மிகக் குறுகிய காலத்தில் அவரது மனைவியும் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாமனிதர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டார். தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் அதிகாரநந்தி உள்ளது. வாயிலைக் கடந்ததும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மூலவர் சங்காரண்யேசுவரர் சன்னதிக்கு முன்பாக ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், கோச்செங்கணான், துவாரகணபதி உள்ளனர். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, ஜுரஹரர், ராமர், சீதை, வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். அருகே தனியாக துர்க்கை உள்ளார். பலிபீடம், நந்திக்கு இணையாக கோயிலின் இடப்புறம் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் சங்கவனேசுவரர், இறைவி சௌந்தரநாயகி. சிறப்புலி நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. கபிலதேவ நாயனார் இத்தலம் பற்றிப் பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் இடம்பெறுகிறது. இத்தலத்தில் திருமால் வழிபட்டுப் பாஞ்ச சன்னியச் சங்கைப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் அருகே திருமங்கையாழ்வார் பாடிய நாண்மதியப் பெருமாள் எனும் வைணவத் திருத்தலம் அமைந்துள்ளது. ஜனவரி 2007 டிசம்பர் 2006 செய்தித் தொகுப்பு 2007 2007 (MMVII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல. தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 13 வரை விய ஆண்டும். ஏப்ரல் 14 இலிருந்து சர்வசித்து ஆண்டும் ஆகும். திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2037. ஜனவரி 16 இலிருந்து 2038. மேலும் ஜனவரி 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் ஏப்ரல் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் ஜூன் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் ஜூலை 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் ஆகஸ்ட் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு.. மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு.. திக்குவல்லை கமால் திக்குவல்லை கமால். (பிறப்பு: மார்ச் 3, 1950) என்ற "முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்", ஈழத்து தமிழ்க் கலை இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இலங்கையின் தெற்கு மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் ஊரில் பிறந்த கமால், அக்கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை கொண்ட படைப்புக்களை ஈழத்து படைப்பிலகிற்கு வழங்கியவர்களில் முன்னோடிகளில் ஒருவராவார். தர்கா நகர் சாகிரா மகா வித்தியாலயம் வெளியிட்ட தட்டெழுத்து கவிதை ஏடான "சுவை" மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார் கமால். பல சிறுகதைகள், புதினங்கள், புதுக்கவிதைகள், வானொலி நாடகங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தனது இலக்கிய பங்களிப்பை ஆற்றி இருக்கிறார். சிரித்திரன், இன்ஸான், வீரகேசரி, தினபதி, ராதா, தினகரன், மல்லிகை, ஞானம் போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளி வந்திருக்கும் இவரது படைப்புக்கள், சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ""எலிக்கூடு"" எனும் புதுக்கவிதைத் தொகுப்பு ஈழத்தில் வெளிவந்த புதுக்கவிதைத் தொகுப்புகளில் ஆரம்ப தொகுப்புகளில் ஓன்றாக திகழ்கிறது. திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகைப்பந்தல் போன்ற கலை இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட கமால், ஓரு பயிற்றுவிக்கப்பட்ட அறிவியல் துறை ஆசிரியராவார். தமிழர் சமயம் தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள். எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்தவர்கள் அல்லர். தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும். தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அரசியல்வாதிகள் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை பின்பற்றியதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன. பெளத்தம், ஜைனம், இந்து (சைவம், வைணவம், சாக்தம்), இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். முருகன், ஐயனார், கண்ணகி, பன்றி வீரன் போன்ற "சிறுதெய்வ" வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருக்கின்றது. நாயன்மார்கள் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளை பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றிச் சிறப்புற்றவையே. இன்று திருக்குறளை பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள். பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் தமிழர்களின் சமயக் கொள்கைகளை தீர்மானித்த காரணிகளில் முக்கிய பங்கு வகித்தன; வகிக்கின்றன. பெரியாரின் சயம நோக்கை சோ. ந. கந்தசாமி "இந்தியத் தத்துவக் களஞ்சியம்" என்று ஆய்வு நூலில் பின்வருமாறு விளக்குகின்றார். புரூசு லீ லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார். புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார். இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது. இவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார். இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார். புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார். புரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர். புரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்.கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர். புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூச் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார். மே 1 கன இராகங்கள் கன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை: தானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் "கனபஞ்சக இராகங்கள்" எனப்படும். அவையாவன : இவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். கனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் "திவிதிய கனபஞ்சக இராகங்கள்" எனப்படும். அவையாவன : கணினியில் தமிழ் கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் ("personal desktop computers") விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் ("Operating system") கொண்டிருந்தன. பின்னர் "மக் ஓ.ஸ்." ("MacOS"), "மைக்ரோசாப்ட்" ("Microsoft DOS"), "ஓ.எஸ்.2" ("OS2") வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர். கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் ("operation commands") மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கிலமூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன. இவற்றின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுனர்கள். இம் முயற்சிகளின் பலனாக முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் "ஆதமி" ("Adami") என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய "IBM DOS 2.x" இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் "MS Windows" இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந் நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன. 80 களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை. 1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு ("Tamil Fonts") அறிமுகப் படுத்தப் பட்டது. ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு "LaTex" எழுதியில் பாவிக்க "wntamil" என்னும் எழுத்துரு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. "ஐ-ட்ரான்ஸ்" (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது. இந்த எழுத்துருக்களை கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு ("transliteration") முறையே பாவிக்கப் பட்டது. அதாவது "அம்மா" என்பதை "ammaa" என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும். எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுத முடிந்தது. இக்கால கட்டத்தில் பல எழுத்துருக்களை பல வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன. இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்கு கருநாடக இசை இராகங்களின் பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கி கல்வி என்னும் பயன்மென்பொருட்களுக்கு பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய "மைலை" ("Mylai")யும், "பாமினி" ("Bamini") போன்றவையும் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி ("Word, Excel") ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரு பெரிய சிக்கல் எழுத்துக்களை அடிக்கத் தேவையான விசைப்பலகை ("keyboard") தான். கணினியில் இருக்கும் விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்கு மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பரவலாக அறியப்பட்டன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் நத்தை வேகத்தில் தான் இதைப் பயன்படுத்த முடிந்தது. இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் ("standards") கடைப்பிடிக்கவிலை. தரங்கள் ஏதும் வகுக்கப் படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு (வீதம்) சரியாக ஒத்தியங்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களிலிலும் சங்கடங்கள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன. தொழில் நுட்பம் வளரும் போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள் வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப் பட்ட கணினிகளும் அவற்றின் பிரயோகங்களும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடல் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்சு ("UNIX") இயக்கு தள ("operating system") கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரேயே இருந்தும் கூட, தனிக் கணினிகளில் ("Personal Computers") மின்னஞ்சற் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லா சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின. தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற் கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட ("cut and paste") வேண்டும். அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டு மொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது. இப்படியான சிக்கல்களில் சிக்குப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான் "மதுரை" ("Madurai") என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை தமிழ் ஒலிப்பை இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி ("எழுத்துப் பெயர்ப்பில்") எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு "மதுரை" கட்டளையை ("command") அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது. அத்துடன் ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், "மதுரை"யிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை "அசுக்கி" (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள். இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும். "படபடா" என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும். இதிலிருந்த பெரிய குறை: எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது. “தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது. இந்தச் செயலியில் முக்கியமான அம்சம் விசைப் பலகை. இந்த மென்பொருளை ஆரம்பித்து விட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப் பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பாவித்துத் தமிழில் எழுத் முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம். முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே, "யூடோரா" (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. "முரசு அஞ்சல்" (Murasu Anjal), "இணைமதி" (Inaimathi), "மைலை" (Mylai), "ஆவரங்கால்" (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது நியமத்தையும் கடைப்பிடித்திருக்கவில்லை. இந்நேரத்தில், "யுனிக்ஸில் அகரம்" (akaram) என்ற செயலியும், "மக்கிண்டாசில்" "சில்க்கி" (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன மின்னஞ்சல் தொடர்பாடல் தமிழில் சாத்தியமாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். ("Internet era") இணையத்தில், வைய விரி வலை (world wide web) 1990 நடுப் பகுதியில் "கோபர்" (Gopher), "மொசையிக்"(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து மீயுரைக் (HTML) குறியுடன் “நெற்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது. சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆனந்த விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் இணையத்தில் கால் பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணையத் தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும். முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு அக்டோ பர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey": Words, Home and Nation - Anthology of Singapore Poetry" (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது." 90 இறுதியளவில், பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை "பிட்ஸ்‌ரீம்" (bitstream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத் தளங்களைப் பார்வையிட முடிந்தது. இந்த இயங்கு எழுத்துருவைப் பாவித்துப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், "மைக்ரோசாப்ட்" நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப் போக்கில் இது நடைமுறையிழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன. இணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லா விடயங்களுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுனர்கள், தமிழ் வல்லுனர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியமத் தரத்தைச் ("standard") சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரயாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்களுக்குக் கணினித் தொழில் நுட்பத்தில் நிரந்தர இடத்தை நிர்ணயப் படுத்தினார்கள். ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுக்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை. இந்தத் தகுதரம் உலக தமிழ் அரச அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தது. தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் உருவாக்கத்திலும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி ("unicode") என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தையும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து சீர்தரங்களை (நியமங்களை) அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி சீர்தரம் (நியமம்) செய்யப்பட்டு உருப் பெற்றது. ஆனால் இது முன்னர் தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் சீர்தரத்தை (நியமத்தை) ஒத்திருக்கவில்லை. எனினும், ஒருங்குறி அமைப்பானது உலகில் உள்ள மிகப்பல மொழிகளுக்கும் இடம் வகுத்து இயங்கியமையாலும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் பலவும் ஆர்வமுடன் எடுத்தாளுவதாலும் மிகுந்த செல்வாக்கு பெற்று முன்னணியில் இருக்கின்றது. ஒருங்குறியும், தகுதரமும் சீர்தரங்களாக உருவெடுத்த வேளையில், தமிழ்நாடு அரசு கணினியில் தமிழின் சீர்தரம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரசு ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு சீர்தர் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. "தமிழ்நெட்99" (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. "தகுதரம்" இங்கே சமர்ப்பிக்கப்பட்டும் ஏற்கப் படவில்லை. தமிழ்நெட்99 இன் முடிவை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் ஏற்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி சீர்தரமே எல்லோராலும் ஏற்கப் பட்டு இயல்பாக பாவனைக்கும் வந்து விட்டது. அத்துடன் தமிழ்நெட்99 இன் தொடர்ச்சியாக தமிழ்நெட் என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. "உத்தமம்" என்ற ஒரு அமைப்பும் இப்பணிகளுக்கு உதவுகின்றது. முரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, "கீமான்" (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது (விநியோகிக்கப்பட்டது). இந்தக் கீமான் மூலம் தமிழில் தட்டி எழுதுவது இலகுவாகியது. இதைப் பாவித்து ஈ-கலப்பை (e-kalappai)என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், ஒருவர் தட்டி வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் உண்டு. ஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாள்தோறும் வளர்ந்து வருகின்றது. ஒருங்குறிச் சீர்தரமே இன்று (2007 வரை) தமிழுக்கு அனைத்துலக மட்டத்தில் ஏற்புப் பெற்று நிலைத்து வருகின்றது. K. Kalyanasundaram. (). "An Overview of different tools for word-processing of Tamil and proposal towards standardisation."; தமிழ் எழுத்துரு சீர்தரம் பற்றிய கட்டுரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது.. இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஜனவரி 21 2009 அன்று தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10ன் கீழ் (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத் தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவனத்தின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த ஐம்பெருங்குழு, எண் பேராயம் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருப்பவர்களே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கின்றனர். தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புக்களைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. -இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொன்மைக்காலம் முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும், மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல். 41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் மேற்கொள்ளப் பெறும். தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும். பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப் பெறும். வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும். தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல். அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. 41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்கலைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும். தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்மொழி நூலகத்தில் 40, 000 அரிய நூல்களும், பழந்தமிழ் ஆய்வுக்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளும், இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 12 ஆயிரத்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் வழங்குகிறது. முனைவர் பட்டம் பெற்ற பின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ரூ 18 ஆயிரத்தை வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ரூ 30 ஆயிரம் வழங்குகிறது. பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது. இந்த மையத்தின் வழியாக செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “தொல்காப்பியர் விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “குறள்பீடம் விருது”கள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும். தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30 - 40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் 1 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கிய “இளம் அறிஞருக்கான விருது”கள் ஒவ்வோராண்டும் ஐந்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை நிறுவனத்தில் நிறுவியுள்ளார். அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது. கந்த சஷ்டி கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். கந்த சஷ்டி அபிஷேகம் → https://www.youtube.com/watch?v=sQzRW7HjEf4 சுப்ரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானை அபிஷேகம் → https://www.youtube.com/watch?v=Wrg1cESbM2I வரலட்சுமி நோன்பு வரலட்சுமி நோன்பு ("வரலட்சுமி விரதம்" அல்லது "மகாலட்சுமி விரதம்") என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர். அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார்,சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வர். சாவேரி சாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். பழைமையான இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும். மலஹரி மலஹரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ-ஷாடவ இராகம் ஆகும். இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும். காஷ்மீர் காசுமீர் (கசுமீரி: कॅशीर, کٔشِیر ; இந்தி: कश्मीर ; உருது: کشمیر) இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே காசுமீர் எனப்பட்டது. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர், சம்மு, காசுமீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. அக்சாய் சின் என்றழைக்கப்படும் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது. பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காசுமீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் காசுமீர சைவம் மற்றும் இஸ்லாமியத்திற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காஷ்மீர் சமவெளியை மௌரியர்கள் கி மு 322 முதல் கி மு 185 முடியவும்; குசானர்கள் கி மு 30 முதல் கி பி 375 முடியவும்; காபூல் இந்து சாகிகள் கி பி 500 முதல் 1010 முடியவும்; லெகரா இந்து அரச குலத்தினர் 1003 முதல் 1320 முடியவும் ஆண்டனர். பின்னர் தில்லி சுல்தான்கள், முகலாயர்களும், இறுதியாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பதற்கு முன் வரை தோக்ரி மொழி பேசும் இராசபுத்திர இந்து மன்னர்கள், பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற் பகுதியாக ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை 6 மார்ச் 1846 முதல் 17 நவம்பர் 1952 முடிய ஆண்டனர். இந்தியப் பிரிவினையின் போது, காஷ்மீரின் மேற்கு பகுதிகளை, பாகிஸ்தான் இராணுவ ஆதரவுடன் வடமேற்கு எல்லைப்புற மாகாண மக்கள் தாக்கி கைப்பற்றி ஆசாத் காஷ்மீர் என்ற பகுதியை நிறுவினர். இந்தியப் பிரிவினை முதல், தற்போது வரை காஷ்மீர் பிரச்சினை ஆறாத புண்ணாகவே உள்ளது. காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே, 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று போர்கள் நடந்துள்ளது. இராவணன் இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார். மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும் , சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. சிவத் தலங்களில் சிவனது வீதியுலாவின் பொழுது பத்து தலைகொண்ட இராவணனது உருவம் சுவாமி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. இராவணன் - இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் - இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது. பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். இராவணன் - மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர் இராவணனின் மகன்கள் ஆவார். குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். குபேரனுக்காக விசுவகர்மா இலங்கையில் அமைத்த அழகிய நகரத்தையும், புஷ்பக விமானத்தையும் இராவணன் கைப்பற்றி ஆண்டார். வேள்வி தடைப்பட்டதால் விசுவாமித்திர முனிவர் அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை மற்றும் சுபாகு இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். மாரீசன் தப்பியோடினான். வனவாசத்தின் போது பஞ்சவடியில் இராமனைக் கண்ட சூர்ப்பனகை, அவரிடம் தன் காமத்தீயை அணைக்க வற்புறுத்தினார். சூர்ப்பநகையின் விருப்பத்திற்கு இணங்காத இராமர், அவளை இலக்குவனிடம் அனுப்பினார். பின் சீதையை சீண்ட முயன்ற சூர்ப்பனகையின் மூக்கை இலக்குமணன் தனது வாளால் அறுத்து அனுப்பினார். சூர்ப்பனகையின் தூண்டுதலின் பேரில் இராம-இலக்குமணர்களைக் கொல்லப் படைகளுடன் வந்த இராவணனின் படைத்தலைவர்களான கரன் மற்றும் தூஷணன் எனும் சகோதர்களை, இராமர் அழித்துக் கொன்றார். இலங்கைக்கு சென்ற சூர்ப்பனகை, தன் அண்ணன் இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து, சீதையைக் கவர்ந்து அடையத் தூண்டினாள். அதன் பேரில் இராவணன் பஞ்சவடிக்கு சென்று, மாரீசனை தங்க மாயா மான் வடிவத்தில் அனுப்பி, இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். சீதை இலக்குமணன் கோட்டினை தாண்டி, துறவி வேடத்தில் வந்த இராவணனுக்கு உணவு தர வந்த போது, இராவணன் சீதையை வானத்தில் கடத்திச் சென்றான். இதைக் கண்ட ஜடாயு, சீதையை மீட்க இராவணனுடன் போராடினார். இறுதியில் இராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினார். தன் விருப்பத்திற்கு இணங்காத சீதையை, இராவனன் இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைத்தார். இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு விபீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதையை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். விபீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் விபீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார். இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகர்ணன் போரில் மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணனை அவருடைய மகன் இந்திரஜித் தேற்றினார். அதன் பின் மேகநாதன் என்ற இந்திரஜித்தும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார். இராமனால் இராவணின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார். விபீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார். இராமனுக்கு நேர் எதிராகவும், இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்குக் கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் வடயிந்திய அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்று, இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய நினைத்தான். இவன் தன் மனைவியாக மண்டோதரியை அடைந்தான். மண்டோதரி கற்பில் சிறந்த பெண்ணாக விளங்கினதால் கற்புக்கரசி என்று போற்றினர். இவனது அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தார்கள். வேதவதி, ரம்பா ஆகியோர் இவர்களில் சிலர். இலங்கையரைப் பொறுத்தமட்டில் இராவணன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் கருத்தே மேலோங்கியுள்ளது. இலங்கைவாழ் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவரிடையேயும் அதே கருத்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இராவணன் சீதையை கடத்தி, இராமனுக்கு எதிரானவனாக இராமாயணம் இருந்ததால், இராவணனை ஒரு தீயப்பாத்திரமாக பலர் வரையறை செய்கின்றனர். இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. இராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை இராவணனுக்கு தந்தார். இதை இலங்கையில் வைக்கும் வரை தரையில் எங்கும் வைக்கவேண்டாமென அறிவுரையும் கூறினார். ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் இராவணனால் அந்த ஆத்ம லிங்கத்தினை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது . மத்தியப் பிரதேசம், குசராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமாக பிஸ்ராக் என்ற ஊரைக் கருதுகின்றனர். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்தவர் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. இராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவராகக் கூறும் கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். இது இராவணனின் பிறந்த ஊராக அறியபடுகின்றது .மேலும் ராவணன் இறந்த தினமான தசரா அன்று ராவணனுக்கு துக்கம் கடைபிடிப்ப படுகின்றது . இந்த கிராமத்திலுள்ள ஆயிரகணக்கான கன்னியா குப்ஜா பிராமண பிரிவை சார்ந்தவர்களால் இங்குள்ள இராவணன் கோவிலில் பூசைகளும் ,நெயவேத்தியங்களும் தினமும் அனுசரிக்கபடுகின்றன சில நுற்றாண்டுகளுக்கு முன் சிவஷங்கர் என்னும் மன்னனால் இது கட்டப்பட்டது .இது வருடத்திற்கு ஒருமுறை தசரா தினமன்று திறக்க படுகின்றது .அன்று இராவணனின் நலனுக்காக சிறப்பு இங்கு பூஜைகளும் சடங்குகளும் செய்யபடுகின்றன. தேவ் பிராமண இனத்தவர்களால் இந்த கோயிலில் பூஜை மேற்கொள்ளபடுகின்றன ,இவர்கள் தாங்கள் இராவணனின் வழிதோன்றல்கள் என கூறுகின்றனர் ,மேலும் இராவணன் இறந்த தினமான தசரா அன்று இராவணனுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு , அன்றைய தினம் பிண்டம் வைத்து தென்புலத்தார் கடனையும் தவறாமல் செய்து நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன. பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் கலம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. அறிவியல் தமிழ் மன்றம் அறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். "தமிழக அரசு தமிழை அறிவியல் தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் துறையாக அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பையே தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக உருவாக்கியுள்ளது. மைய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்துள்ளதன் விளைவாக மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கித் தமிழ் வளர்ச்சியில், குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது." இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார். பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகத்தின் 1984-85 வளர் தமிழ் மன்றத்தின் ஊடாக தோன்றி தன்னாட்சி பெற்ற மையமாக வளர்ந்த அமைப்பே பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் ஆகும். தமிழில் அறிவியல், தொழில்நுட்ப ஆக்கங்களை ஆக்குவது, ஊக்குவிப்பது, பரப்புவதுமே இதன் முதன்மைக் குறிக்கோள் ஆகும். இம் மையத்தின் இயக்குனர் சி. சே. சுப்பராமன் ஆவார். அதி உயர் அதிர்வெண் அதியுயர் அதிர்வெண் (அல்லது அதியுயர் மீடிறன், "Very high frequency") என்பது 30 தொடக்கம் 300 மெகா ஹேட்ஸ் அலைவரிசை அதிர்வெண்களைக் குறிக்கும். இதற்குக் கீழே உள்ள அலைவரிசைகள் உயர் அதிர்வெண்ணாகும். மேலேயுள்ள அலைவரிசைகள் மிகை அதியுயர் அதிர்வெண்ணாகும். பொதுவாக பண்பலை வரிசை அல்லது FM என்றவாறழைக்கப்படும் வானொலி (ரேடியோ) 88-108 மெகா ஹேட்ஸ் அலைவரிசையிலேயே ஒலிபரப்பப்படுகின்றது. தவிர தொலைக்காட்சி (TV) பண்பலைவரிசையுடன் மிகை அதிஉயர் அதிர்வெண் ஊடாக பல்லூடக (ஒலி/ஒளி) பரப்புச் செய்யப்படுகின்றது. அதியுயர் அதிர்வெண்ணானது கடற் போக்குவரத்து, விமானத் தொலைத் தொடர்பாடல் மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு மனிதநேய அமைப்புக்களின் தொலைத் தொடர்பாடலிற்கும் பயன்படுகின்றது. அதியுயர் அதிர்வெண்ணானது குறைந்த தூரப் பகுதிகளுக்கே பொருத்தமானது. இதன் வீச்சானது பார்க்கக் கூடிய தூரத்திலும் (Line of sight) சற்றே கூடுதானது. உயர் அதிர்வெண்ணைப் போன்று வளிமண்டலத்தில் உள்ள அயன மண்டலம் இதைத் தெறித்து மீண்டும் பூமிக்கு அனுப்பாது. எனவே இதன் வீச்சானது உள்ளூர்ப் பிரதேசத்திலேயே இருப்பதோடு பல்லாயிரக்கணக்கான தூரத்தில் உள்ள பிறிதோர் இடத்தில் இடையூறேதையும் ஏற்படுத்தாது. அதியுயர் மீடிறனானது வளிமண்டல இரைச்சல்கள் போன்றவற்றினால் பெரிதாகப் பாதிப்படையாது, அதியுர் அதிர்வெண்ணின் வீச்சானது (அதாவது அடையக் கூடிய தூரம்) தொலைத் தொடர்பாடல் உபகரணத்தின் சக்தி, வாங்கும் உபகரணத்தின் சக்தி போன்றவற்றுடன் பார்வையில் இருக்கும் தூரத்தில் தங்கியுள்ளது. அண்ணளவான தூரமானது சித்திரா பௌர்ணமி சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும். இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர். வைகாசி விசாகம் வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார். தைப்பூசம் தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் . பழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு. கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும். தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர். மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு. இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு அநு. வை. நாகராஜன் அநு. வை. நாகராஜன் (மே 25, 1933 - ஆகத்து 02,2012) வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம், சிறுவர் இலக்கியம் என ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் பல பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டவர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்தவர். பெற்றோர் வைரமுத்து, இராசம்மாள். அநுராதபுரத்திலும், பின்னர் இறுதிக் காலத்தில் வெள்ளவத்தையிலும் வாழ்ந்தவர். தொடக்கக் கல்வியை, அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார். மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும், சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிய பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமா" கற்கைக்காக தமிழ்நாடு சென்றார். பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில் 1956 ஆம் ஆண்டில் தொண்டராசிரியராகப் பணியாற்றினார். லண்டன் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலைமாணி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதனிலைமாணி, தமிழ்நாடு, சென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் "சைவப் புலவர்" பட்டம் போன்றவற்றையும் பெற்றார். உதவி ஆசிரியராக இருந்தவர், பின்னர் அதிபராக (தரம் 1) இருந்து பல பாடசாலைகளை முன்னேற்றி, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (2 ஆம் வகுப்பு) இருந்து கல்வி அதிகாரியாக பணியாற்றினார். வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம் என இவர் கைபடாத துறையே இல்லை. தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர். வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, ஒப்சேவர் போன்ற பல பத்திரிகைகளின் செய்தி நிருபராகவும், புகைப்பட நிருபராகவும் செயற்பட்டவர். பின்னர் சுதந்திரன், அறிவுக்களஞ்சியம், விளக்கு, மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதினார். ஆரம்பகாலத்தில் அநுராதபுரத்தில் "அன்னை" என்ற முத்திங்கள் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு பெற்ற ஆரம்ப அனுபவமே இவருக்கு நல்லதோர் அத்திவாரம் ஆகியது. இவரது பல வெளியீடுகள் சிறுவர் இலக்கியமாகவும் சமய இலக்கியமாகவும் வெளிவந்தன. யாழ். இலக்கிய வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம் போன்ற இலக்கிய அமைப்புகளிலும், தெல்லிப்பழை விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், வலிகாமம் பிரஜைகள் குழு ஒன்றியம். வலி. வடக்கு புனர்வாழ்வுக் கழகம் போன்ற பொது அமைப்புகள் ஊடாக சமூகசேவை அங்கத்தவராக மக்கள் மத்தியில் மதிப்பும் பெற்றவர். அடாணா அடாணா அல்லது அடானா ("Adana") என்பது கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 29ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இராகம். ஹம்சத்வனி ஹம்சத்வனி 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும். பூபாளம் பூபாளம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8வது மேளகர்த்தா இராகமாகும். "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- ஔடவ இராகம் ஆகும். மிகப் பழமையான, மங்களகரமான இராகம். நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2,569 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,616,450 ஆகும். அதில் ஆண்கள் 798,127 ஆகவும்; பெண்கள் 818,323 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.57% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 629 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 83.59% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 165,245 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 1,435,072 (88.78%), கிறித்தவர்கள் 47,579 (2.94 %), இசுலாமியர் 128,617 (7.96%) ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை என இரண்டு வருவாய் கோட்டங்களும், எட்டு வருவாய் வட்டங்களும் உள்ளது. நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், எட்டு பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களையும், 434 ஊராட்சிகளையும் கொண்டது. இம்மாவட்டத்தின் பகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது. நாகப்பட்டிணம், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும், ஆழிப்பேரலையையும் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்றாகும். கார்த்திகை விளக்கீடு கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது. இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர். கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது. கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது. அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும். ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம். ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம். மீரா (திரைப்படம்) மீரா 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி மீராவாக நடித்திருந்தார். எல்லிஸ் ஆர். டங்கனினால் சென்னை நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. வழுவூர் இராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார். படத்திற்கான கதை மற்றும் உராயாடலையும், ஐந்து பாடல்களையும் கல்கி எழுதினார். பால மீரா ("குழந்தை ராதா") வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புண்ணிய தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி ("செருக்களத்தூர் சாமா") வருகிறார். அவர் கொண்டுவந்த கிருஷ்ணர் சிலை குழந்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. பால மீரா நந்தபாலனையே தனது மணாளனாக நினைத்து மாலையிடுகிறாள். மீரா ("எம். எஸ். சுப்புலக்ஷ்மி") யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டனாரின் விருப்பத்திற்கு இணங்கி மேவார் ராணாவை ("சித்தூர் வி. நாகையா") மணந்து சித்தூர் செல்கிறாள். சித்தூர் அரண்மனையின் அழகிய உத்தியான வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம் குழலூதிய நீலநிறத்துப் பாலகனை எண்ணி எண்ணி உருகுகிறது. ஆரம்பத்தில் மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும் அவள் பாடிய கீதங்களையும் குறித்துப் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக, அவனுக்குச் சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் ("கே. ஆர். செல்லம்") சகோதரன் விக்ரமனும் ("டி. எஸ். பாலையா") மீராவைக் குறித்து அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். விஜயதசமியன்று நடந்த தர்பாருக்கு மீரா வருவதாக வாக்களிக்கிறாள். ஆனால் தர்பாருக்குப் புறப்படும் போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கச் சபா மண்டபத்திற்குப் போவதற்குப் பதிலாகக் கோயிலுக்குப் போகிறாள். ராணா கோபங்கொண்டு மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்குச் செல்கிறான். விக்கிரமனுடைய தூண்டுதலின் பேரில் உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டுப் பிறகு வருந்துகிறாள். பாம்பின் தலைமீது நடனமாடிய இறைவனின் அருளால் மீராவுக்குத் தீங்கு நிகழாததைக் காண்கிறாள். உதாவின் மனம் மாறுகிறது. டில்லி பாதுஷாவின் சபையில் இருந்த தான்சேன், மான்சிங் என்ற இருவர் மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு மாறு வேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய்மறந்து இருந்தபிறகு அவர்கள் பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் தந்துவிட்டுக் கிளம்புகிறார்கள். காட்டிலிருந்து ராணா திரும்பி வந்ததும் விக்கிரமனும் தளபதி ஜயமல்லும் ("எம். ஜி. ராமச்சந்திரன்") முத்துமாலையைக் காட்டி ராணாவுக்குத் தூபம் போடுகிறார்கள். "அது இனிமேல் கோயில் அல்ல. பீரங்கி வைத்து இடித்துத் தள்ளுங்கள்", என்று ராணா உத்தரவு இடுகிறான். ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணா தான் என்று தெரிந்ததும் மீரா, அரண்மனை வாழ்வும் அரசபோகமும் தனக்கு உகந்தவை அல்ல என்று தீர்மானித்து தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டுப் பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து ரூபகோஸ்வாமியுடன் துவாரகாபுரிக்குப் போகிறாள். வெகுகாலமாக மூடிக்கிடந்த துவாரகா நாதனின் சந்நிதிக் கதவைத் திறந்து தரிசனம் அருள வேண்டுமென்று கதறுகிறாள். ஆலயக்கதவு திறக்கிறது. அடியாள் மீரா பரந்தாமனுடன் ஐக்கியமாகின்றாள். இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி (காற்றினிலே வரும் கீதம்) ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2002 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2000 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1998 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1997 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1996 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1995 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. பவளப் படிப்பாறை பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன. இப் பகுதிகள், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும். தலைக்காவிரி தலைக்காவிரி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்காவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம். இத்திருத்தலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது. துலசங்கரமன திருநாளன்று (அக்டோபர் 17) பக்தர்கள் இந்த புனித ஆற்றின் பிறப்பிடத்திற்கு வந்து நீரடி செல்வது வழக்கம். அத்திருநாளில், ஊற்றின் வேகமும் உயரமும் அதிகரித்து காணப்படுவது வியப்பு. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. வங்காளத் தமிழியல் வங்காள தமிழியல் (Bengala Tamil Studies) என்பது வங்காள மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பையும் , மேற்கு வங்கத்திலும் வங்க தேசத்திலும் வசிக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். வங்க மொழிக்கும் தமிழுக்கும் தமிழுக்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உண்டு. கி.பி. 1023 ராஜேந்திர சோழன் வங்காளத்தின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்தான். கீர்த்திவாசகர் கம்பராமாயணத்தை தழுவியே ராமயணத்தை இயற்றினார். திருக்குறள் லன்யால் என்பரவரால் வங்க மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடைய படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாண்டிச்சேரியில் வசித்த அரவிந்தர் ஒரு வங்காளி ஆவார். தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1931 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1932 1932 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1933 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1934 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. பெ. சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் "பெருமாள்" என்பவருக்கும் "மாடத்தி அம்மாளுக்கும்" 1855ம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி. ஏ தேர்வில் வெற்றிப் பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார். திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன. ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது. கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu) பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார். தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1935 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1936 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1937 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1938 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1939 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1940 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1941 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1942 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1943 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1944 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. மடிக்கேரி மடிக்கேரி (கன்னடம்: "ಮಡಿಕೇರಿ") கர்நாடக மாநிலம் (தென்னிந்தியா) குடகு மாவட்டத்தில் உள்ள நகரம். இந்நகரத்தின் மக்கள்தொகை 30,000. கடல் மட்டத்திலிருந்து 1,170 மீ மேல் உள்ள இந்நகரம் கிழக்கே மைசூர் நகரையும், மேற்கே மங்களூர் நகரையும் கொண்டுள்ளது. 19ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட மடிக்கேரி கோட்டை இந்நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஒரு கோயில், திருச்சபை, சிறைச்சாலை மற்றும் சிறிய அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது. இந்தக் கோட்டையின் அரச பீடத்தில் இருந்து நகரத்தின் பல பகுதிகளையும் கிராமப்புறப் பகுதிகளையும் காணலாம். சதுரங்கப்பட்டினம் சதுரங்கப்பட்டினம் தமிழ் நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சென்னைக்குத் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் இப்பெயரை ஆங்கிலப்படுத்தி "சத்ராஸ்" என அழைப்பர். தற்போதுள்ள இந்தக் கடலோர நகரத்தை, 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டினர் நிறுவினர். அவர்கள் வணிக நோக்கத்துக்காகப் பெரிய கோட்டை ஒன்றை இங்கே கட்டினர். மிகப் பெரிய தானியக் கிடங்குகள், குதிரை லாயங்கள், யானைகளைக் கட்டுவதற்கான அமைப்புக்கள் போன்றவை இக்கோட்டைக்குள் இருந்தன. ஆனால் இவற்றுள் ஒன்று மட்டுமே இன்று காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றினர். தற்போது, இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.சதுரங்கப் பட்டினக் கோட்டையில் 1620க்கும் 1769க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளுடன் கூடிய இடுகாடு ஒன்றும் உள்ளது. 2003ம் ஆண்டுக்குப் பின்னர் இக்கோட்டையில் பெரிய அளவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேலைகள் பல தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் வழி சமைத்தன. விசயநகரப் பேரரசுக் காலத்தில் இங்கே துறைமுகம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளும் ஆய்வுகளின் ஊடாகக் கிடைத்துள்ளன. சதுரங்கப்பட்டினப் போர் அமெரிக்க விடுதலைப் போரின் போது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அட்மிரல் சர் எட்வர்ட் ஹியூஸ் என்பவரின் கீழான பிரித்தானியக் கப்பற்படைக்கும் பெய்லி டி சப்ரன் என்பவரின் கீழான பிரஞ்சு கடற்படைக்கும் இடையே நடந்தது. பெரும்பாலும் இப்போர் வெற்றி தோல்வியின்றியே முடிந்தபோதும், 17 பிப்ரவரி 1782 அன்று நடைபெற்ற இப்போரில் பிரித்தானியக் கப்பற்படை மிகவும் சேதம் அடைந்தது. சதுரங்கப்பட்டினக் கோட்டையில், பல ஓவியங்களும், அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளும், ஸ்தூபங்களும் உள்ளன. கூத்து இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து () என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் கூத்தர் எனப்பட்டனர். கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது. சங்ககாலத்தில் மூன்று வகையான கூத்துகள் நிகழ்ந்துள்ளளன. குரவை, தழூஉ, பிணை என்பன அவை. தெய்வ ஆடல்கள் பதினொன்றும் கூத்தின் வகைகளே. கூத்தினை உணர்த்தும் சொற்கள் பல. கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன. "ஈழத்துக் கூத்தின் வரலாற்றை எடுத்து நோக்கும்போது, கூத்தின் புத்தாக்கத்தில் இரண்டு சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று மீள் கண்டுபிடிப்பு, இன்னொன்று மீளுருவாக்கம். 60 களில் இம்மீள் கண்டுபிடிப்பு நடைபெற்றதாகவும், பின்னர் இது மீளுருவாக்கம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது." "மீளுருவாக்கம் என்ற சொற்றொடரை இன்று கையாள்வார் அதன் ஒற்றை அர்த்தத்தில் கையாளுகின்றனர். கூத்தை அப்படியே பேண வேண்டும் என்பர் சிலர். கூத்தை சமூகப் பின்னணியில் இருந்து பிரிக்காமல் உருவாக்க வேண்டுமென்பர் சிலர். அதன் அழகியலை மீள் கண்டுபிடிப்புச் செய்து புத்துருவாக்கவேண்டும் என்பர் சிலர்." நந்தனார் சரித்திரம் நந்தனார் சரித்திரம் என்பது ஒரு தமிழிசைக் காவியமாகும். இது திருநாளைப் போவார் என்ற பெயரால் 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் நந்தனார் வாழ்க்கையில் இறைவனோடு நிகழ்ந்தாக சொல்லப்படும் சில அதிசய சம்பவங்களை இசைப் பாடல்கள் கொண்டு விளக்கும் தொகுப்பாக கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றினார். நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு: 1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை 2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ 3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே 4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ 5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி 6. எப்போ தொலையும் இந்த துன்பம் 7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர 8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா 9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன் 10. கட்டை கடைதேறவேணுமே 11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும் 12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே 13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம் 14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு 15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை 16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ 17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும் 18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம் 19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு 20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம் 21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம் 22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி 23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு 24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும் 25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம் 26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம் 27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது 28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா 29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி 30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள் 31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள் 32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி 33. மற்றதெல்லாம் பொறுப்பேன் 34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான் 35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1945 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1946 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1947 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1948 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. ஹம்சானந்தி ஹம்சானந்தி 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும். கௌளை கௌளை இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும். தன்யாசி தன்யாசி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். சக்திவேல் (திரைப்படம்) சக்திவேல் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வா,கனகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ (Aararo Aaariraro) 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ்,பானுப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது "தூகுவே கிருஷ்ணானா" என்கிற பெயரில் கன்னட மொழியில் 1994இல் மறுஆக்கம் செய்யப்பட்டது. கன்னட மொழி படத்தில் அனந்த் நாக் நடித்துள்ளார். பாபு ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறான். பாபு நோயாளிகளிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களைப் போலவே உடைகளை அணிந்து கொள்பவன். அதனால் பாபுவை தலைமை மருத்துவருக்கு மிகவும் பிடிக்கும். அங்கு வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு பாபுவை பிடிப்பதில்லை. அந்த மருத்துவமனையின் நன்கொடையாளர்களில் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து, மனநிலை சரியில்லாதவள் என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறினார். மேலும் அப் பெண்ணைக் கவனித்துக்கொள்ள ஒருவரும் இல்லை எனவும் அவளைப் பற்றின தகவல் எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார். அதனால் போதகரான, தலைமை மருத்துவர் அவளை மருத்துவமனையில் அனுமதித்தார். பாபு அனைவரிடமும் பழகுவது போலவே அந்தப் பெண்ணிடம் பழகுகிறான். இதைக் கண்ட ஊழியர்கள் பாபுவைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர். பாபு அப்பெண்ணிற்கு மீனாட்சி எனப் பெயரிட்டு, மீனா என்று அழைக்கலானான். இரண்டு ஊழியர்களில் ஒருவன், மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தான். இதை பார்த்த மீனாட்சி பலமாக சத்தம் செய்து அவளை காப்பாற்றினாள். இதனால் அவர்கள் மேலும் மீனாட்சிக்கு தொல்லை கொடுத்தனர். பாபு அவர்களிடமிருந்து மீனாவைக் காப்பாற்றுகிறான். முன்பை விட அவள் மேல் கூடுதல் கவனம் செலுத்துகிறான். மீனா யார் என்கிற கேள்விக்கு விடையாக இந்தக் கதை முடிவிற்கு வருகிறது. இப் படத்திற்கு இசை அமைத்தவர் பாக்யராஜ். பாடல்களை வாலி மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர். தசாவதாரம் (இந்து சமயம்) தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரகக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன. உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன: "முதன்மைக் கட்டுரை: கூர்ம அவதாரம்" கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). "முதன்மைக் கட்டுரை: வராக அவதாரம்" வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம். "முதன்மைக் கட்டுரை: நரசிம்ம அவதாரம்" நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது. பல வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். "முதன்மைக் கட்டுரை: வாமண அவதாரம்" காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு அவரை வதை செய்வது வாமன அவதாரம். "முதன்மைக் கட்டுரை: பரசுராம அவதாரம்" ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க சபதமேற்ற பரசுராம அவதாரம் இது. " முதன்மைக் கட்டுரை: பலராமர் "முதன்மைக் கட்டுரை: ராம அவதாரம்" "முதன்மைக் கட்டுரை: கிருஷ்ண அவதாரம்" "முதன்மைக் கட்டுரை: கல்கி அவதாரம்" கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது. தாசாவதார திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது. கோவை பிரதர்ஸ் கோவை பிரதர்ஸ் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரேன், பாவனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முகுந்தராஜ் சுப்பிரமணியன் முகுந்தராஜ் சுப்பிரமணியன் தமிழ் கணினி உலகில் பெரிதும் பயன்படும் எ-கலப்பை மென்பொருளை உருவாக்கியவர். இவர் ஆர்வம் கொண்டு உருவாக்கிய "தமிழா" குழு மூலம் ஓப்பன் ஆப்பிசு, பயர்பாக்ஸ் முதலிய பல்வேறு திறமூல மென்பொருள் தன்னார்வலர்களின் துணை கொண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒருங்கிணைத்து வருகின்றார். மலேசியாவில் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர் பெங்களூரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஆத்திரேலியாவில் பிறிஸ்பேன் நகரில் பணியாற்றி வருகிறார். அயகம அயகம இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.அயகம என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயரும் இப்பகுதியின் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. அயகம சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 283 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பகுதியில் அமைந்துள்ளப்படியால் இரத்தினக்கல் அகழ்வும் அதன் வியாபாரமும் முக்கிய கைத்தொழிலாகும். ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் ஏசியன் எஜுகேசனல் சேர்விசஸ் ("Asian Educational Services", AES ஆசிய கல்விச் சேவைகள்) என்பது, பெரும்பாலும் வரலாற்றுப் பெறுமானம் கொண்ட பழைய நூல்களை, மறுபதிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பதிப்பகம் ஆகும். 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந் நிறுவனத்தின் தலைமை நிலையம் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் அமைந்துள்ளது. சென்னையிலும் இதன் கிளை நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது. இந் நிறுவனத்தால் வெளியிடப்படும் நூல்கள் பெரும்பாலும், 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை அச்சிடப்பட்ட மிகப் பழைய நூல்கள் ஆதலால், பதிப்புரிமை காலாவதியானவை ஆகும். இதன் பெயருக்கு ஏற்ப ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் தொடர்பான நூல்கள் இந் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், மியன்மார், அரேபியா, ஈரான், மத்திய ஆசியா, மங்கோலியா, ஆப்கனிஸ்தான், கம்போடியா, சைபீரியா, நேபாளம், பூட்டான் போன்றவை அடங்கும். இந்தியா, இலங்கை போன்றவற்றின் வரலாறுகள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இப் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் நூல்கள் பல துறைகளையும் சார்ந்தவையாக உள்ளன. குறிப்பாக, வரலாறு, கலை, கட்டிடக்கலை, சமயம், மானிடவியல், நாட்டாரியல், பழங்கதையியல், நாணயவியல், விளையாட்டு போன்ற துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சமயத்துறையில், இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், ஜைனம், பார்சி சமயம் போன்ற சமயங்கள் தொடர்பான நூல்கள் மறுபதிப்புக் கண்டுள்ளன. இந் நிறுவனத்தின் மூலம் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூல்களிற் பல கீழைத்தேச ஆய்வுகளில் புகழ் பெற்ற நூலாசிரியர்களால் எழுதப்பட்டவை. இவர்களுள் மாக்ஸ் முல்லர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஆர். சி. சில்டேர்ஸ், மோனியர்-வில்லியம்ஸ், ஈ. டப்ளியூ. லேன், டப்ளியூ. கீகர், வின்சென்ட் சிமித், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற பலர் அடங்குகின்றனர். மாக்ஸ் முல்லர் மாக்ஸ் முல்லர் (டிசம்பர் 6, 1823 - அக்டோபர் 28, 1900), என்று பரவலாக அறியப்பட்ட பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் ("Friedrich Max Müller") ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். இந்தியவியலைத் தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, "கிழக்கத்தியப் புனித நூல்கள்" ("Sacred Books of the East") என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது. சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி, "தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது." என்று கூறியுள்ளார் ரிக்வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்திய கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது. அதன் கையெழுத்து பிரதியை தயாரிக்கவே அவருக்கு இருபத்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. அச்சிடுவதற்கு மேலும் இருபது வருடங்கள் பிடித்தன. இவர் சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதார புருஷர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைக் குறித்த கட்டுரைகளும், புத்தகமும் எழுதியவர். இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Râmakrishna: His Life and Sayings (1898)) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள் முன்னோடியான ஒன்று. இவர் இந்தியாவின் பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர். ஹெர்மன் ஓல்டென்பர்க் ஹெர்மன் ஓல்டென்பர்க் ("Hermann Oldenberg") (1854 - 1920) ஒரு ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் ஆவார். 1881 இல், பாளி மொழி நூல்களை ஆதாரமாக வைத்து புத்தர் பற்றி இவர் எழுதிய ஆய்வு நூல் பௌத்த சமயத்தை ஐரோப்பிய அறிஞர்கள் இடையே பிரபலப்படுத்தியது. இந்நூல் முதல் வெளியீட்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பதிப்பில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. டி. டபுள்யூ. ரைஸ் டேவிட்ஸ் ("T. W. Rhys Davids") என்பவருடன் சேர்ந்து, பௌத்த சமயம் சார்ந்த ஒழுக்க நூலான "வினய" என்பதை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இவர் மொழிபெயர்த்த கிருகசூத்திரம் என்னும் நூல் இரண்டு தொகுதிகளாகவும், வேத சுலோகங்கள் இரு தொகுதிகளாகவும், மாக்ஸ் முல்லரால் தொகுக்கப்பட்ட கீழைப் புனித நூல்கள் ("Sacred Books of the East") என்னும் பெரிய நூற் தொகுதியில் இடம்பெற்றன. 1888இல் இவர் எழுதிய புரோலெகோமெனாவின் ("Prolegomena") மூலம், ரிக் வேதத்தின் மொழியியல் ஆய்வுக்கான அடிப்படைகளை உருவாக்கினார். தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் (Thomas William Rhys Davids) (மே 12, 1843 - டிசம்பர் 27, 1922) பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி மொழி அறிஞராவார். பாளி நூற் சபை (Pali Text Society) தொடக்கி வைத்தவரும் இவரே. இவர் பாடசாலையில் இலத்தீன் மொழியைச் சிறப்பாகக் கற்றவர். நிர்வாக சேவையில் சேரவிரும்பிய இவர் ஜெர்மனியிலுள்ள பிரெஸ்லோவில் (Breslau) சமஸ்கிருதம் படித்தார். அங்கே தனது செலவுக்காக ஆங்கிலம் கற்பித்து வந்தார். 1863 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய இவர் நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றி அதில் வெற்றிபெற்றார். இவருக்கு இலங்கையில் நீதிவானாகப் (Magistrate) பணி புரிய வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையின் காலி நகரத்தில் இவர்முன் விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் முன்வைக்கப்பட்ட ஆவணம் ஒன்றின்மூலம், பாளி மொழி பற்றி அறிய நேர்ந்தது. 1871 ஆம் ஆண்டில், இலங்கையின் அனுராதபுரம் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த "நுவரகலாவய" என்னும் இடத்திற்கு உதவி அரசாங்க அதிபராகப் பணி மாற்றப்பட்டார். அக் காலத்தில் ஆளுனராக (Governor) இருந்த சர் ஹெர்குலிஸ் ரொபின்சன் (Hercules Robinson) என்பார் 1868 இல் தொல்லியல் கமிஷனை உருவாக்கியிருந்தார். இதன் மூலம் இலங்கையின் பண்டைய தலைநகரமான அநுராதபுரத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரைஸ் டேவிட்ஸ் ஆர்வம் காட்டிவந்தார். கல்வெட்டுக்களையும், கையெழுத்துப்பிரதிகளையும் சேகரித்து வந்த இவர் 1870-1872 காலப் பகுதியிலிருந்து அரச ஆசியக் கழகத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையின் இதழ்களில் அவை பற்றிக் கட்டுரைகளும் எழுதினார். இக் காலத்தில் உள்ளூர் மொழியான சிங்களத்தையும் கற்றுக்கொண்ட இவர் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இவரது மேலதிகாரியாக இருந்த சி. டப்ளியூ. டுவைனம் (C. W. Twynham) என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, இவர் மீது விசாரணைகள் நடத்தப்படுக் குற்றவாளியாகக் காணப்பட்டதன் பேரில் இவரது நிர்வாக சேவைத் தொழிலும், இலங்கை வாழ்க்கையும் சடுதியாக முடிவுக்கு வந்தன. பின்னர் இவர் சட்டம் படித்துச் சிறிது காலம் சட்டத்தொழில் புரிந்தார். இக் காலத்திலும் இலங்கையின் கல்வெட்டுக்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புக்களையும் தொடர்ந்து எழுதிவந்தார். இவற்றுள் மாக்ஸ் முல்லரால் தொகுக்கப்பட்ட பல தொகுதிகளைக் கொண்ட பாரிய நூலான கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East) தொகுப்புக்கு அவர் எழுதியவை குறிப்பிடத்தக்கவை. ரைஸ் டேவிட்ஸ், 1882 ஆண்டிலிருந்து 1904 ஆண்டுவரை இலண்டன் பல்கலைக் கழகத்தில் பாளி மொழிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இப் பதவிக்கு, விரிவுரைகளுக்கான கொடுப்பனவு தவிர நிரந்தரமான சம்பளம் எதுவும் கிடையாது. 1905 இல், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒப்பியல் சமயத் துறையின் (Comparative Religion) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டேவிட்ஸ், இங்கிலாந்தில், தேரவாத பௌத்தம் மற்றும் பாளி தொடர்பான துறையை வளர்த்து எடுப்பதில் பல வழிமுறைகளைக் கையாண்டார். பெரிய பிரித்தானியாவின் ஆசியக் கழகத்தின் (Asiatic Society of Great Britain) துணையுடன், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் கல்விக்குப் பிரித்தானிய அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டுவந்தார். இந்தியாவில் பிரித்தானியாவின் பிடியை வலுவாக வைத்திருப்பதற்கு இது எவ்வாறு உதவும் என்பதற்கான பல்வேறு காரணங்களை எழுத்து மூலமாகவும், விரிவுரைகளூடாகவும் தீவிரமாக முன்வைத்தார். சாதாரண மக்களுடைய கவனத்தை இதன்பால் திருப்புவதற்கான இவரது முயற்சியின் ஒரு பகுதியாக, இனவாத அடிப்படையில் அமைந்த ஆரிய இனக் கொள்கையை முன்னிறுத்திப் பல விரிவுரைகளை ஒழுங்கு செய்தார். இதன்மூலம், பிரித்தானியர், சிங்களவர் மற்றும் புத்தரின் இனத்தவர் எல்லோரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என வாதிட்டுவந்தார். இவருடைய நோக்கு, மாக்ஸ் முல்லரின் இனவாதக் கோட்பாடுகளுடன் ஓரளவு ஒத்திருந்ததாயினும், இருவரும் இதனைப் பயன்படுத்திய முறையில் வேறுபாடுகள் காணப்பட்டன. டேவிட்ஸ், பிரித்தானியர்களுக்குப் புத்தரின் கோட்பாடுகளுடன் இயல்பான தொடர்பு உண்டு என நிறுவுவதற்கு இக் ஆரிய இனக் கோட்பாடுகளைப் பயன்படுத்த முயன்றார். இதன் காரணமாக இவர் பலரின் கண்டனத்துக்கு உள்ளானார். முத்து நெடுமாறன் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். 2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராகத் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், நகர்பேசிகளில் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர். புன்னாகவராளி புன்னாகவராளி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தின் எல்லை மந்திர காகலி நிஷாதத்திலிருந்து மத்திய கைசிகி நிஷாதம் வரை ஆகும். "துவி அன்னிய சுர பாஷாங்க இராகம்." இலக்கியம் இலக்கியம் () என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: 'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்". அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம். "முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கியம்" தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி அறிவியல் தமிழை வளக்க தமிழ்நாடு அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம். முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல்வாயிலாக அறியமுடிகிறது. "காமநூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்" அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம்பாடலான பேரகத்தியத் திரட்டு,மேற்.1 இல், "இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்இன்று ஆகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்."என்பதில் தான் இலக்கியம் எனும் சொல்லாட்சி எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் ஆகிய பொருளில் குறிப்பிடப் பெறாமல்,கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு எனச் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பாடல் யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான், மேற்கு நாட்டுக் கல்வியைப் பயின்று சிறந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களும் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களும் ஆங்கிலத்தில் வழங்கிவரும் 'லிட்டிரேச்சர்'(Literature)என்னும் சொல்லிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாக இதனை வழக்கிற்குக் கொண்டு வந்துள்ளனர். மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை,பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும் உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்.ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்;அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ்,ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை. இந்நிலையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இலக்கியம் என்னும் சொல்லிற்குப் பின்வரும் வகையில் தரும் விளக்கம் புதுமையும் முன்மைத் திறனும்(Originality) உடையதாகக் காணப்படுகின்றது. "இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி;குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம்.சிறந்த மொழிக் குறிக்கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம். இலக்கணத்திற்கு அணங்கம் என்றும் இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு. இலக்கு-லஷ்(வ) இலக்கியம்-லஷ்ய(வ) இலக்கணம்-இலஷணம்(வ) இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் போல் லஷண லஷய என்னும் வடசொற்கள் மொழியமைதியையும்(Grammar), நூற்றொகுதியையும்(Literature) குறிப்பதில்லை என்பது பாவாணரின் துணிவாகும்.இத்தகைய எண்ணப் போக்கே பரவலாகத் தமிழ் அறிஞர்கள் இடையே நிலவி வருகிறது. Literature என்னும் ஆங்கிலச் சொல் இலக்கியம் எனும் பொருளில் கிபி ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில்(1812)தான் வழக்கிற்கு வந்ததென்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்துரைக்கின்றது. இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது.மனிதனின் சிந்தனைக்கும்,உணர்வுக்கும்,கற்பனைக்கும் விருந்தாக அமைவது;மனிதனின் மொழியோடு தொடர்புடையது;சொற்கோலமாக விளங்குவது;குறிப்பிட்ட ஒரு வடிவினை;செய்யுளாலோ,உரைநடையாலோ உடையது;கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும் இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது;இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார். தெய்வீக அகத்தூண்டுதலால் இலக்கியம் உருவாக்கப்படுவதாக எடுத்துரைப்படுகின்றது.தெய்வீக அகத் தூண்டுதல் பொதுவாகக் கலைப் படைப்பிற்கும் சிறப்பாக இலக்கியப் படைப்பிற்கும் உந்துதல் சக்தியாக அமைகிறது என்பது பிளேட்டோவின் கருத்தாகும். உள்ளப் பகுப்பாய்வின்(Psycho analysis)கோட்பாட்டை உருவாக்கிய ஃபிராய்ட் எனும் உளவியல் அறிஞர்,"அகத் தூண்டுதல் மனிதனுடைய அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனித உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது"என்கிறார். அறிஞர் ந.சஞ்சீவி, இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறுவது, 1.புதுமை 2.பெருமை 3.பொதுமை 4.பொருண்மை ஆகியனவாகும். இவற்றுள் புதுமை இருவகைப்படும். அவையாவன: 1.பாடுபொருளாகிய பொருண்மையில் புதுமை. 2.புத்தாக்கங்கள் இடம்பெறும் மற்றும் உணர்த்தும் முறையில் புதுமை. பொருண்மையில் உயர்நததாகவும் பொதுமலப் பண்பில் சிறந்ததாகவும் புதுமைக் கவர்ச்சி வாய்ந்ததாகவும் விளங்கும் இலக்கியமே பெருமையுடையதாக கருதப்படும்.இலக்கியத்தின் இந் நால்வகைப் பண்புகளும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இயங்குகின்றன. இதுதவிர,அக இயல்புகளாக, 1)கலையழகு 2)குறிப்பாற்றல் 3)நிலைபேறுடைமை 4)ஆசிரியரின் ஆளுமை 5)இன்புறுத்தல் 6)கற்பனை 7)குறிக்கோள் ஆகிய ஏழினையும், புற இயல்புகளாக,பின்வரும் வடிவப் பண்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.அவையாவன: 1)சீர் 2)தளை 3)தொடை 4)எதுகை 5)மோனை 6)ஒலிநயம் 7)உவமை 8)உருவகம் 9)படிமம் 10)குறியீடு முதலான அணிநயங்களாகும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, இலக்கியத்தை வடிவ அமைதி,பொருள், வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைக் கொண்டு பல வகையாகப் பாகுபடுத்தப்படும்.இலக்கியம் உணர்வை சார்ந்து அமைவது ஆகும். இலக்கியத்தைத் தூய இலக்கியம், சார்பு இலக்கியம் என வகைப்படுத்துவர்.இவற்றுள் தூய இலக்கியம் எனப்படுவது,இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக இடம் பெற்றுள்ள படைப்பிலக்கியமாகும்.கற்பனைக்கோ, கலையழகிற்கோ இடம் தராமல் கருத்துகளை அறிவுறுத்தும் இலக்கியம் சார்பு இலக்கியமாகும். ஒர் இலக்கிய படைப்பானது,படைப்பாளனின் அனுபவத் தன்மை,செறிவு வகை,மனித உறவு,முயற்சித்திறன் ஆகியவற்றிற்கேற்ப படைக்கப்படுகிறது.இந்த அனுபவ நிலையையும் பொருளின் இயல்பையும் கருத்தில்கொண்டு இலக்கியத்தை ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்தப்படும். (1)தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் படைக்கப்படும் இலக்கியம். இவற்றுள் முதன்மை இடம் பெறுவது தன்னுணர்ச்சிப் பாடல்களாகும்.அடுத்து இசைப்பாடல்களும் பக்திப் பாடல்களும் அனுபூதிப் பாடல்களும்,இரங்கற்பாக்களும்,தன் வரலாறுகளும்,பயண நூல்களும்,வாழ்க்கை விளக்கமும்,கலை இலக்கிய திறனாய்வுகளும் அடங்கும். (2)மனித இனத்திற்குப் பொதுவாக அமைந்த வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம். அறநூல்கள், காப்பியங்கள், வரலாற்று நூல்கள், அம்மானைப் பாடல்கள், கதைப்பாடல்கள்,கதைகள்,புதினங்கள், நாடகங்கள் முதலானவை உதாரணங்களாகும். (3)பல்வகையாக விரிந்து கிடக்கும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் இலக்கியம்.இதனுள் வருணனை, விளக்கம், கிளத்தல் நிறைந்த இலக்கிய வகைகள் அடங்கும். கம்பனின் இராமகாதை போன்ற காப்பியங்களும்,மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்ற வருணனை செய்யுள்கள் எடுத்துக்காட்டுகளாவன. (4)இயற்கை பற்றி எழுந்த இலக்கியம். எடுத்துக்காட்டு:அழகின் சிரிப்பு,ஆற்றுப்படை நூல்கள், ஐந்திணைப் பாடல்கள்,குறவஞ்சி இலக்கியங்கள், காப்பியங்களில் இடம் பெறும் நாட்டு,நகர,ஆற்றுப் படலங்கள் முதலியன. (5)இலக்கியம் பற்றியும் கலைநயம் பற்றியும் எடுத்துரைக்கும் இலக்கியம்.இவற்றுள் ஐந்து இலக்கண நூல்கள்,தண்டியலங்காரம்,உவமான சங்கிரகம் போன்ற அணியிலக்கண நூல்கள், பஞ்ச மரபு ,கூத்து நூல் போன்ற கலைவிளக்க நூல்கள் அடங்கும். துறை,தாழிசை,விருத்தம் உள்ளிட்ட செய்யுள்கள், யாப்பிலக்கியங்கள்,உரைநடை இலக்கியங்கள் இதன் பாற்படும். புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம். முதலாவதாக இது உண்மைக்கும் கலைப் படைப்பிற்கும் உள்ள உறவையும், அடுத்து கலை பிரதிபலிப்பினை அதன் தொடர்புகளோடு ஆராய்வதாகும். உருவத்தின் இரு தன்மைகள் வருணனையும் உணர்ச்சி வெளியீடும் ஆகும். இதன் கூறுகளாவன: 1)கலை இயைபு 2)கலைப் பின்னல் 3)கலையின் உள்ளடக்கம்,உருவம் இவற்றின் ஒருமை. 4)உள்ளடக்கத்தின் சாரம் உருவத்தில் பொதிந்திருத்தல். 5)அனுபவத்தின் பொதுமை,உருவத்தில் வெளிப்படுதல். 6)உருவ,உள்ளடக்க விகாரங்கள். ஒரு கலைப்படைப்பில்,அதன் பகுதிகளுக்கும் அதன் முழுமைக்கும் இடையேயான இணைப்பே கலை இயைபு ஆகும். ஒரு கருத்தைக் கலைப்படைப்பாக மாற்றுவதற்கு கலைப்பின்னல் ஊடகமாக இருக்கிறது. இயைபும் கலைப்பின்னலும் உருவத்தின் இன்றியமையாதப் பகுதிகளாகும். தோம்பு தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசர் ஆண்டபோதும் பின்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலும், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நில உடைமைப் பட்டியலைக் குறிக்கும். அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூலிப்பதிலும், குடிமக்களால் அரசாங்கத்துக்காகச் செய்யப்படவேண்டிய ஊழியத்தை செய்விப்பதையும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே தோம்புகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்தனியாகத் தோம்புகள் எழுதப்பட்டன. அவ்வூர்களிலுள்ள நிலங்கள் தொடர்பில், நிலத்தின் பெயர், அதன் பரப்பளவு, உரிமையாளர் பெயர், அவர் சாதி, நிலத்தில் அடங்கியுள்ள பயன்தரு மரங்கள், வீடு முதலிய உடைமைகள், அவர்கள் அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் செய்யவேண்டிய கடமைகளும், செலுத்தவேண்டிய வரிகளும், அவர்கள் செய்யவேண்டிய ஊழியம் பற்றிய விபரங்கள் என்பன போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியிருந்தன. இலங்கையின் கோட்டே இராச்சியம் போத்துக்கீசர் வசம் சென்றபின், வரி வசூலிப்பை ஒழுங்குபடுத்துமுகமாக, தோம்பு எழுதும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்காக 1608 ஆம் ஆண்டில் அதிகாரி ஒருவர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டார். கோட்டே இராச்சியத்துள் அடங்கியிருந்த 21, 873 ஊர்களுக்கான தோம்பு தயாரிக்கும் வேலை பல ஆண்டுகளாக நடைபெற்றது. நான்கு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்ட கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகளில் இரண்டு தொகுதிகள் 1614 ஆம் ஆண்டிலும், எஞ்சிய இரண்டு தொகுதிகள் 1618 இலும் நிறைவுற்றன. 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கீச அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அதே ஆண்டிலேயே தோம்பு தயாரிக்கும் வேலைகளுக்கான ஆணை, கோவாவிலிருந்து பிறப்பிக்கப்பட்டது. இதற்காகக் கொழும்பிலிருந்து அதிகாரி ஒருவர் 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். எனினும், யாழ்ப்பாணம் தொடர்ந்தும் குழம்பிய நிலையிலேயே காணப்பட்டதால், இவ்வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இறுதியாக 1623 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தோம்பு வேலைகள் தொடங்கப்பட்டதாயினும் பல காரணங்களால், 1645 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு முழுமையான தோம்பு தயாரித்து முடிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத் தோம்பு பல தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப் பகுதிகளை உள்ளடக்கி 7 தொகுதிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இவை மொத்தமாக 2900 கோப்புகளை (folios) உள்ளடக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோப்புகள் அனைத்தும் டச்சு அரசின் காலத்தில் கடைசித்தடவையாக 1754 இல் மறு சீரமைக்கப்பட்டன. இவற்றின் மூலப்பிரதிகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் சிறப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பிரிவுகளுக்குட்பட்ட (parish) கோப்புகளின் பிரதிகள் அப்பிரிவுகளின் உடையார்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டன. நில உரிமையாளர்கள் தமது காணிகளை விற்கும்போதோ அல்லது குத்தகைக்குக் கொடுக்கும் போதோ அக்காணிகளின் பத்திரத்தின் பிரதியை உடையாரிடம் பெற்றுக் கொள்ளமுடியும். யாழ்ப்பாண இராச்சியத்துள் அடங்கியிருந்த மன்னார், மாதோட்டம், வன்னி ஆகிய பகுதிகளுக்கும் தனியான தோம்புகள் எழுதப்பட்டிருந்தன. 1864 ஆம் ஆண்டில் நிலங்களைப் பதியும் சட்டம் (Land Registration) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தோம்புகளின் பயன் அற்றுப் போய்விட்டன. போத்துக்கீசர் தயாரித்த தோம்புகள் எதுவும் இன்று பார்வைக்குக் கிடைக்கவில்லை. கொழும்பு, கோவா, போத்துக்கல் ஆகிய இடங்கள் உட்பட உலகிலுள்ள ஆவணக் காப்பகங்கள் எதிலும் இவற்றின் பிரதிகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சீன மொழி சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும். பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள். "முதன்மைக் கட்டுரை: சீன எழுத்து மொழி" சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது. சீனப் பேச்சு மொழி இடத்துக்கிடம் வேறுபடும். ஒரு நிலப்பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு மொழி வேற்று நிலப்பகுதி மக்களின் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அப்படி இருக்கையில் அதை வேறு மொழியாகவும் வகைப்படுத்தும் முறையும் இருக்கின்றது. பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) உரோமன எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். உரோம எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதல்ல. பின்யின் முறையானது உரோம எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள "பின்" என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், "யின்" என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை "ஹான்யூ பின்யின்" ("Hanyu Pinyin" () என அழைக்கின்றனர். அனைத்து வகையான சீன மொழிகளிலும் குரலோசை பயன்படுத்தப்படுகின்றது. வடசீனாவில் காணப்படும் சில கிளை மொழிகளில் குறைந்த அளவாக மூன்று குரலோசைகள் காணப்படுகின்றன. தரமான மாண்டரீன் குரலோசைகளுடன் தரமான கண்டனிய குரலோசைகளை ஒப்ப்டுகையில் ஒன்பது வேறுபாடு மிக்க குரலோசைகள் காணப்படுகின்றன. உலகில் பேசப்பட்டுவரும் ஒரு மொழிக்கு, செம்மொழி என்னும் தகுதியானது அம்மொழியில் காணப்படும் இலக்கிய வளம் மற்றும் தரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம் ஆகும். சீன மொழியில் ஏராளமான செவ்வியல் இலக்கியங்கள் செம்மொழித் தகுதியுடன் விளங்குவதால் ஏனைய மொழிகள் போல் சீனமும் செம்மொழி எனப் போற்றப்படுகிறது. உலகில் 6000 த்திற்கும் மேற்பட்ட மொழிகள் காணப்படுகின்றன.இவற்றுள் மூவாயிரம் மொழிகள் மட்டுமே இலக்கண,இலக்கிய வளமுடையதாக உள்ளன.இவற்றுள்ளும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றுத் தொன்மையுடைய சிலவாகும்.அவற்றுள் சீன மொழியும் ஒன்று.ஒரு மொழியானது செம்மொழித் தன்மையுடையது என்பதற்கான அடிப்படைக் கூறுகளில் அம்மொழியின் போன்றவை தொகுப்பாக அமைந்திடுதல் இன்றியமையாததாகும். தவிர, ஒரு மொழியின் செம்மொழித் தகுதிப்பாட்டிற்கு அம்மொழியில் இடம்பெற்றுள்ள கருத்துப்பொருட்கள் (Incorporeal objects) மற்றும் காட்சிப்பொருட்கள் (Corporeal objects) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் கருத்துப் பொருள்களில் இலக்கியப் படைப்புகளும் காட்சிப் பொருள்களில் கலைப் படைப்புகளும் அடங்கும். சீன மொழி இலக்கியம் 5000 ஆண்டுத் தொன்மை மிக்கது. சீன இலக்கிய வரலாற்றில் கி.மு.3000 முதல் கி.மு.600 வரை உள்ள காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படும். கி.மு.600 முதல் கி.பி.200 வரையிலான காலத்தைத் தொன்மைக்காலம் என்கின்றனர். அதுபோல், சீன இலக்கிய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக, கி.மு.600 காலக் கட்டத்தில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவோட்சு (Laotse) ஆகியோர் உள்ளனர். கி.மு. 3000 முதல் கி.மு.600 வரையிலான சீன மொழி இலக்கியங்கள் கன்ஃபூசியஸால் நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. தமது படைப்பான தென்றலும் வாடையும் என்ற நூலை ஐந்தாவது தொகுதியாக எழுதி வெளியிட்டார். கன்பூசியஸ் தொகுத்த நான்கு தொகுதிகளில் சீன மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றியப் பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது பழம்பாடல் தொகுதியாகும். கன்ஃபூசியசுக்கு சற்று மூத்தவரும், சமகாலத்தவருமான லாவோட்சு என்ற அறிஞர் தாவ் என்ற நெறியைக் கண்டவர் ஆவார். சீன மொழியிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை 80, 000 ஆகும். ஆனால், அவற்றில் அண்மைக் காலத்தில் உபயோகப்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாகும். இந்த 3,000 சீன மொழிக்குரிய எழுத்துகளை மனனம் செய்து படிப்பதென்பது கடினமான ஒன்று. சீன மொழிக்கான சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உள்ளன. அவையாவன: சீன மொழியின் எழுத்து வரிவடிவத்தில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் பு-தொங்-வா எனப்படும் பொது வரி வடிவமும், தைவான் நாட்டில் தொன்மையான எழுத்து முறையான பாரம்பரிய மாண்டரின் எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றினிடையே பெருத்த வேறுபாடுகள் நிறைய உண்டு. பொது எழுத்து வடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகளே உள்ளன. பாரம்பரிய எழுத்து வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வடிவுரு ஆகியவை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆயினும், எழுபத்தைந்து விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானதாகவே இருக்கின்றன. பொதுவடிவத்தைப் படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த முப்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே கற்க இயலும். சீன மொழி மற்றும் அதன் பண்பாடு குறித்து ஆழ்ந்து படிக்கவும் கற்கவும் பாரம்பரிய எழுத்துகளை அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். சீன எழுத்துமுறை சீன எழுத்துக்கள் பட எழுத்து வகையைச் சார்ந்தவை. சீன மொழி, சப்பானிய மொழி, கொரிய மொழி ஆகியவற்றுடன் பிற ஆசிய மொழிகளையும் இவர்கள் எழுதுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.  சீன தரப்படி இவை ஹன்ஸி (hànzì) எனப்படுகின்றன.  (எளிமையாக்கப்பட்ட எழுத்து முறைsimplified Chinesetraditional Chineseமரபுவழி எழுத்து முறை). சீனர்கள் பல்வேறு மொழிகளையும் எழுதப் பழகியுள்ளனர். கஞ்சி (kanji (漢字)) எனும் வகையினர் சப்பானிய மொழியையும், ஹஞ்சா [hanja (漢字)] எனும் வகையினர், கொரிய மொழியையும், சு னோம் [chữ Nôm] எனும் அமைப்பினர் வியட்நாமிய மொழியையும் புழக்கத்தில் கொண்டுள்ளனர். இவை மொத்தமாக சி. ஜே. கே. (CJK) எழுத்துக்கள் எனப்படுகின்றன. சில சமயங்களில், இவை ஆங்கிலத்தில் ஹான்(Han) எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  சீன எழுத்துக்கள் உலகின் பழமையான தொடர்ச்சியான பயன்பாட்டு முறையை அடிப்படையாகக் கொன்டுள்ளன. பரவலான தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையிலு பயனர்களின் எண்ணிக்கையாலும் கிழக்கு ஆசியாவிலும் மற்றும் சினோஸ்பியர் முழுவதும் சீன எழுத்துக்கள் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்து முறைமைகளாகும். சீன எழுத்துகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வரலாற்று நூல்களில் மட்டுமே சிறிய பட அமைப்பில் காணப்படுகின்றன.  சீனாவில் செயல்முறை எழுத்தறிவு சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சீன எழுத்துக்களை எழுத மூன்றாயிரம் முதல் நான்காயிரம் எழுத்துக்களைஅறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. யப்பானில் 2,136 உயர்நிலை பள்ளி (ஜோயோ கான்ஜி Jōyō kanji) மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் அன்றாட பயன்பாட்டில் உள்ளன. ஜப்பானில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் சீனாவில் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள், வடிவங்கள், உச்சரிப்புகள் ஆகியவற்றின் பட்டியல்கள் உள்ளன. சில எழுத்துக்களின் எளிமையான வடிவங்கள் சீனா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; தைவான், ஆங்காங், மக்காவு, மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அளவிற்கு தொடர்புடைய பாரம்பரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில், பொதுவான எழுத்துக்கள் ஜப்பானிய மரபு சார்ந்த வடிவங்களாகும். இவை (ஷின்ஜிட்டாய் shinjitai) பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்டவையாகும். இவை சீன எளிமயாக்கப்பட்ட எஹுத்துக்களை விட பாரம்பரிய வடிவங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளன.  அதே சமயம் ஜப்பானிய பாரம்பரிய எழுத்துக்கள் (க்யூஜிட்டாய் kyūjitai) சீன பாரம்பரிய எழுத்துக்களை ஒத்துள்ளன. தென் கொரியாவில், பயன்படுத்தப்படும் சீன எழுத்துக்கள் மரபுவழி மாறுபாடு உடையவையாகும்.   தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை ஆகும். தென் கொரியாவில் சீன எழுத்துகளின் போதனை 7 வது வகுப்பில் தொடங்கி 12 வது வகுப்பு வரை தொடர்கிறது;  மொத்தமாக 1,800 எழுத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன.  இந்த எழுத்துக்கள் சில நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் இவற்றின் பயன்பாடுகள் மெதுவாகக் குறைந்து வருகின்றன. (அறிதாகப் பயன்படும் இடங்கள்: அறிகுறிகள், கல்வித் தாள்கள், வரலாற்று எழுத்துக்கள், முதலியன) பழைய சீன மொழியில் (பாரம்பரிய சீன மொழி), பெரும்பாலான சொற்கள் ஓரசைச் சொற்களாகும். எழுத்துக்கள் மற்றும் சொற்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. மாண்டரின் மொழி எனும் நவீன சீன மொழியில் எழுத்துக்கள் சொற்களோடு பெரும்பாலும் பொருந்துவதில்லை;  சீன மொழியில் பெரும்பான்மையான சொற்களில் ஒலிகள் இணைத்தல் மற்றும் இழப்பு காரணமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் இடம்பெருகின்றன.  மாறாக, எழுத்துக்கள் எப்போதும் பொருள் உணர்த்தும் யாவற்றினும் மிகச்சிறிய அடிப்படைக் கூறை ஒத்திருக்கின்றன இருப்பினும், இந்த பொது தகவல் தொடர்பிற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.  அவை ஈரசை மொழியணுக்கள் (இரு எழுத்துக்கள் மூலம் எழுதப்பட்டவை), இருமுனை மொழியணுக்கள் (இரு எழுத்துகளுடன் எழுதப்பட்டவை) மற்றும் ஒரு ஒற்றை எழுத்துக்கள் பல்லசைச் சொற்கள் அல்லது சொற்றொடர்கள். நவீன சீன மொழியில் பல ஒப்பொலிச் சொற்கள் உள்ளன. பேசப்படும் கருத்தின் பொருளைப் பொறுத்து, பல எழுத்துக்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. ஒரே எழுத்து பல பொருட்களைக் கொண்டிருக்கலாம் அல்லது சிறப்புப் பொருள் பெற்றிருக்க்லாம். அவை அவ்வப்போது வெவ்வேறு உச்சரிப்புகளைப் பெற்றிருக்கும். பல வகையான சீன மொழிகளில் இணைச்சொற்கள் பொதுவாக அதே எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன.  இவை பொதுவாக ஒரே பொருளைக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் வேறுபட்ட உச்சரிப்புகளைப் பெற்றுள்ளன. சப்பானிய மொழி, கொரிய மொழி, போன்ற பிற மொழிகளில் சீன கடன்சொற்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, சீன மொழிச் சொற்கள் சீன உச்சரிப்பிலேயே பேசப்படுகின்றன. மேலும்  அவை சீன மொழியின் வரலாற்று ரீதியான பல்வேறு வகையான உச்சரிப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வெளிநாட்டினரால் தழுவப்பட்ட சீன உச்சரிப்புக்கள் சீன-ஜெனிக் (Sino-Xenic) உச்சரிப்புகள் எனப்படுகின்றன. இது மத்திய சீனப் புனரமைப்புக்கு பெரிதும் உதவுகின்றது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுத்துக்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டபோது, பழைய சீன சொற்கள் பொதுவாக ஓரசை மற்றும் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொறு சொல்லைக் குறிப்பதாகவும் இடுந்தன.  மேற்கத்திய ஸோவு (Western Zhou) காலத்திலிருந்து இன்று வரை பல்லசைச் சொற்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன. போரிடும் நாடுகள் கால மாநிலங்களில் இருந்து வந்த சொற்களஞ்சியப்படி சுமார் 25-30% சொற்கள் பல்லசை கொண்டவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஓரசைச் சொற்களைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இவை நூல்களில் 80-90% பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஒலியியல் மாற்றங்களால் ஒப்பொலி சொற்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தரப்படுத்தப்பட்ட தற்கால சீன மொழியில் இள்ள 3,000 பொது வார்த்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு பல்லசையினதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவை ஈரசைச் சொற்களாகும். சொற்களின் கலப்பின சொற்களை உருவாக்குவதும், மூல சொற்களுக்கான எழுத்துக்களை எழுதுவதும் தற்போதைய பணியாகும். மற்ற மொழிகளிலிருந்து இணைத்தல், மறுகட்டுதல் மற்றும் கடன்சொல் ஆகியவற்றின் மூலம் சொற்கள் உருவாக்கப்பட்டன. பல்லசைச் சொற்களில் ஓரசைக்கு ஓர் எழுத்து வீதம் எழுதப்பட்டது.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எழுத்துகள் ஒரு பழைய சீன வார்த்தையிலிருந்து உருவான ஒரு மரபியத்தை குறிக்கின்றன. பல எழுத்துகள் பலவிதமான வாசிப்புகளைக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் வெவ்வேறு சொல்லணுக்களைக்  குறிப்பிடுகின்றன. சில நேரங்களில் வெவ்வேறு உச்சரிப்புகளைக் கொடுக்கின்றன.  நவீன சீன மொழியில் உள்ள மிகப் பொதுவான 2,400 எழுத்துக்களில் ஐந்தில் ஒரு பகுதி பல உச்சரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. 500 மிகப் பொதுவான எழுத்துக்களுக்கு இவ்விகிதம் 30% உயர்ந்துள்ளது.  பெரும்பாலும் இந்த அளவீடுகள் ஒலித்தலிலும் பொருள் பயன்பாட்டிலும் ஒற்றுமையாக இருக்கின்றன. பழைய சீன காலத்தில், ஒரு புதிய வார்த்தையை உருவாக்க ஒரு வார்த்தைக்கு ஒட்டுகள் சேர்க்கப்படும். ஒட்டுகள் பெரும்பாலும் அதே எழுத்துடன் சேர்த்து எழுதப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் உச்சரிப்புகள் தொடர்ந்து ஒலி மாற்றம் காரணமாக மாறுபட்டன உதாரணமாக, பல கூடுதல் வாசிப்புகளுக்கு மத்திய சீனா புறக்கணிப்பு தொனி கொண்டுள்ளது. தற்கால சீனாவில் 4 வது தொனி முக்கிய இடத்தில் உள்ளது. இத்தொனி ஒரு பழைய சீன * -இன் பின்னொலியின் பிரதிபலிப்பாகும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.  மற்றொரு பொதுவான மாற்றம் - குரல்வளையில் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்படாத குரல்களுக்கிடையில் உள்ள மாறுபாடு (தற்காலத்தில் குரலில் வேறுபாடு காணாமல் போயுள்ளது) இது பழங்கால முன்னுரையை பிரதிபலிக்கும் என நம்பப்படுகின்றது, ஆனால் குரல் அல்லது குரல் மிக்க வடிவங்களின் மூலத்தை அறிஞர்கள் அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, சீன எழுத்துக்களும், வார்த்தைகளும்,  சில படிநிலைகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெருகின்றன. மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் சில எழுத்துக்கள், ஆரம்பத்தில் பட  எழுத்துக்களாக இருந்தன, அவை பொருளை வெளிப்படையாக உணரும்படி சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சொற்கள் எழுத்தறிவுக் கொள்கையைப் பயன்படுத்தி எழுதப்பட்டவை. இதில் ஒத்த சொற்களுக்கான ஒரு எழுத்துகள் கடன் சொல்லாகவோ அல்லது  ஒலிக்குறிப்பு சொற்பொருள் கலவையாகவோ இருக்குமாறு  விரிவுபடுத்தப்பட்டது. சு ஷென் (Xu Shen) என்பவர் கி.மு.100ல் தனது ஷுவோவன் ஜீசி (Shuowen Jiezi) எனும் அகராதியில் பாரம்பரிய சீன மொழியின் ஆறடுக்கு வகைப்பாட்டினை (இலுஷு 六 书 / 六 書 "ஆறு எழுத்துக்கள்")  விவரித்துள்ளார்.  இந்த பகுப்பாய்வு சில நேரங்களில் சிக்கலானதாக இருந்தாலும், சீன எழுத்து முறையின் முழுமைத் தன்மையை பிரதிபலிக்காவிட்டாலும், அதன் நீண்ட வரலாறு மற்றும் பரவலான பயன்பாட்டால் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. சீன எழுத்துக்களில் பொருட்களின் படங்களை உடைய  ஒரு சிறிய பகுதியை மட்டுமே சித்திர விளக்கப் படங்கள் உருவாக்குகின்றன. காலப்போக்கில், எழுதுவதற்கு எளிதாகவும், எளிமையாகவும், அழகாகவும், மாற்றம் அடைந்துள்ளன. உதாரணம்: ' என்றால் "சூரியன்", ' என்றால் "சந்திரன்", ' என்றால் "மரம்" அல்லது "காடு", and ' என்றால் "சணல்". இயற்கையில் பட எழுத்துகளுக்கும், நவீன எழுத்துகளுக்கும் இடையேயுள்ள உறுதியான விகித எண் இல்லை; எனினும், இந்த பிரிவில் ஷு ஷேன் (Xu Shen) கிட்டத்தட்ட 4% எழுத்துகளை சேர்த்தார். எளிய கருத்தெழுத்துகள், பொதுவாக  எளிய குறிகளாகவும், நேரடி சின்னங்களாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள்:   (ஷாங்)' "மேலே" மற்றும் (ஸியா) ' "கீழே", அதாவது ஒரு கோட்டின் மேலேயும் கீழேயும் ஒரு புள்ளி. தருக்க தொகுதிகள் அல்லது கூட்டு கருத்துகளாகவும் மொழிபெயர்க்கப்பட்டு, இந்த எழுத்துக்கள் மூன்றாவது அர்த்தத்தை வழங்குவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சித்திரக் கதை அல்லது கருத்தெழுத்துகள் இணைத்துள்ளன. பொதுவன மேற்கோள் எடுத்துக்காட்டுகள்:  சூ ஷேன் இந்த பிரிவில் சுமார் 13% எழுத்துகளை வைத்தார். இருப்பினும், இந்தக் எழுத்துகளில் பல, ஒலிக்குறி-சொற்பொருள் சேர்மங்களாக உள்ளன. தொடர் மாற்றங்களால் அவற்றின் தோற்றம், வடிவம் மற்றும்  மூலம் அழிந்துவிட்டது. பண்டைய கால எழுத்துசார் அறிஞர்கள் புதுதாக வடிவமைக்கப்பட்ட கலப்பு எழுத்துகளயும் அவற்றின் பயன்பாட்டையும்  நிராகரிக்கின்றனர், இப்போது-இழந்த "இரண்டாம்நிலை வாசிப்புக்கள்" ஒலிப்புக் குறியீடுகள் அழிவதற்கான காரணமாக கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஜப்பானில் உருவான எழுத்துக்களில் அடையாளம் காணும் கலவைகள் பொதுவானவை. மேலும், 鉑 பிளாட்டினம், "வெள்ளை உலோகம்" (கிழக்கு ஆசிய மொழிகளில் உள்ள இரசாயன தனிமங்களைக் காண்க) போன்ற தற்கால சீன எழுத்துக்கள் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். சீன இயல் தலைப்புகள் பட்டியல் ஆவணக் காப்பகம் ஆவணக் காப்பகம் அல்லது ஆவணகம் என்பது, ஒரு நாடு, சமூகம் அல்லது ஒரு நிறுவனத்தின் வரலாற்று ஆவணங்களைப் பல்வேறு தேவைகளுக்காகப் பாதுகாத்து வைக்கும் ஒரு இடமாகும். பல ஆவணக் காப்பகங்கள், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றன. இதனால் இவை அந் நாடுகளினதும், சமுதாயங்களினதும் நினைவுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன என்று கூற முடியும். "மக்களுடைய நடவடிக்கைகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றுக்கான சான்றுகளைச் சேகரித்து வைத்திருப்பதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், நிர்வாகத்துக்கு உதவி செய்வதுடன், தனிப்பட்டவர்களினதும், நிறுவனங்களினதும், நாடுகளினதும் உரிமைகளுக்கு அடிப்படியாக அமைந்துள்ளன" என்றும், "நாட்டு மக்கள், அதிகாரபூர்வத் தகவல்களையும், தமது வரலாறு தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், குடியாட்சி, பொறுப்புத் தன்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கு அடித்தளமாக அமைவதாகவும், ஆவணக் காப்பகங்களின் அனைத்துலக சபையின் இணையத் தளம் சுட்டிக் காட்டுகின்றது. பொதுவாக, ஆவணக் காப்பகங்களில் உள்ள பதிவுகள் நிரந்தரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அல்லது நீண்டகால கலாச்சார, வரலாற்று, அல்லது தெளிவான மதிப்பீட்டின் அடிப்படை. காப்பகப் பதிவுகள் பொதுவாக வெளியிடப்படாதவையகவும், தனித்துவமயகவும் இருக்கும், புத்தகங்கள் அல்லது இதழ்கள் போன்ற பல ஒத்த பிரதிகள் காப்பகங்களுக்கு இருக்காது. இதன் பொருள், காப்பகங்கள் தங்கள் பணிகளை மற்றும் அமைப்பிற்கான நூலகங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன, இருப்பினும் காப்பக சேகரிப்புகள் பெரும்பாலும் நூலக கட்டிடங்களில் காணப்படுகின்றன. காப்பகங்களில் பணியாற்றும் ஒரு நபர் ஒரு காப்பாளர் என்று அழைக்கப்படுகிறார். காப்பகங்களின் தகவல்களை ஒருங்கிணைத்தல், பராமரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் காப்பக விஞ்ஞானம் என அழைக்கப்படுகின்றன. சேமிப்பிர்க்கன இடமாக காப்பகத்தயும், களஞ்சியத்தயும் குறிப்பிடுவர். வரலாற்றுப் பதிவுகள் அல்லது அதை வைத்திருக்கும் இடங்களைக் குறிப்பிடும் போது, பன்மடங்கு வடிவம் காப்பகங்கள் என்று பயன்படுத்துவர். ஆரம்பத்தில் கிரேக்கம் மொழியில் 'ஆர்கியொன்(archeion)' என்று உருவாக்கப்பட்டுள்ளது இந்த சொல், அதாவது தலைவரின் வீடு அல்லது இருப்பிடத்தை குறிக்கும், இதில் முக்கியமான உத்தியோகபூர்வ மாநில ஆவணங்களை பதிவு செய்யப்பட்டு, ஆர்கோன்(தலைவன்) அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. காப்பகத்திலிருந்து உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல் காப்பகம் ஆகும். உத்தியோகபூர்வ ஆவணங்களை சேமித்து வைத்திருப்பது பழமையானது. மூன்றாம் மற்றும் இரண்டாவது நூற்றாண்டுகளுக்கும் கி.மு. முன்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் எப்லாவிலிருந்து, மாரி, Amarna, Hattusas, உகரிட், மற்றும் Pylons போன்ற தளங்களில் நூற்றுக்கணக்கான (சில நேரங்களில் ஆயிரக்கணக்கான) களிமண் மாத்திரை காப்பகங்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் மூலம் பண்டைய எழுத்துக்கள், மொழிகள், இலக்கியம், மற்றும் அரசியலை அறிய அடிப்படையாக அமைந்ததுள்ளது. காப்பகங்களை பண்டைய சீனர்கள், பண்டைய கிரேக்கர்கள், மற்றும் பழங்கால ரோமர்கள் (தபுலூரியா என்று அழைத்தவர்கள்) நன்கு வளர்த்துவந்தர்கள். இருப்பினும், அவை அழிக்கப்பட்டுவிட்டன, ஏனெனில் பாப்பிரஸ் மற்றும் காகித போன்ற பொருட்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் கல் மாத்திரையைப் போலல்லாமல் வேகமாக மோசமாகிவிட்டன. மத்திய காலங்களிலிருந்து தேவாலயங்கலள், ராஜ்யங்கள் மற்றும் நகரங்களின் ஆவணக் காப்பகங்கள் உயிர் வாழ்கின்றன, மேலும் அவற்றின் அதிகாரப்பூர்வ நிலை இன்றும் தடையின்றி வைக்கப்படுகின்றன. அதுவே இன்ந்காலாகட்டத்தின் வரலாற்று ஆராய்ச்சிக்கான அடிப்படை கருவியாகும். நவீன காப்பக சிந்தனை பிரெஞ்சு புரட்சியின் காலத்திலிருன்து பல வேர்களைக் கொண்டுள்ளது. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம், உலகின் மிகப் பெரிய காப்பகத் தொகுப்பைக் கொண்டிருக்கிறது, 625 ஏ.டி. வரை பதிவுசெய்யப்பட்ட பதிவுகள், 1790 ல் பிரெஞ்சு புரட்சியின் போது பல்வேறு அரசாங்கங்கள், சமய மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. ஆவணக் காப்பகங்களும் நூலகங்களும் எந்த வகையான சேகரிப்புக்களைக் கொண்டிருக்கின்றன, எந்த வகையான அணுக்கத்தை வழங்குகின்றன என்பதில் கணிசமான வேறுபடுகின்றன. காப்பகங்கள் மூல ஆவணங்களையும், வெளியிடப்பட்டாத சேகரிப்புக்களையும் கொண்டிக்கும். நூலகம் வெளியிடப்பட்ட ஆக்கங்களைப் பெரிதும் கொண்டு இருக்கும். நூலகத்தின் நோக்கம் தனது சேகரிப்பில் உள்ள ஆக்கங்களுக்கு விரிவான அணுக்கத்தை வழங்குதல் ஆகும். காப்பகம் தனது சேகரிப்பைப் பாதுகாத்து கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தை வழங்கும். எண்ணிம ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் இந்த வேறுபாட்டைக் குறைத்துள்ளன. வரலாற்றாசிரியர்கள், மரபுவழியலாளர்கள், வக்கீல்கள், மக்கள் கணிப்பலர்கலள், திரைப்பட இயக்குனர்கள், மற்றும் பலர் காப்பகங்களில் ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு காப்பகத்திலும் ஆராய்ச்சி செயல்முறை தனித்துவமானது, காப்பகத்தை உள்ளடக்கிய நிறுவனத்தை சார்ந்துள்ளது. பல வகையான காப்பகங்கள் இருந்தாலும், ஐக்கிய மாகாணங்களில் மிக சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் ஐந்து பிரதான வகைகள்: கல்வி, வியாபாரம் (இலாபத்திற்காக), அரசு, இலாபமற்றவை மற்றும் பிற காப்பகங்களுடன் தொடர்புடைய நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன: பொருள் தொழில்நுட்பங்கள், அமைப்புக் கோட்பாடுகள், புவியியல் இடங்கள், மனிதர்கள் மற்றும் மனிதரல்லாத சிக்கலான உருவங்கள். இந்தத் தளங்கள் மேலும் எந்த வகை காப்பகத்தை உருவாக்குகின்றன என்பதை மேலும் வகைப்படுத்த உதவும். கல்லூரிகளில், பல்கலைக்கழகங்கள், மற்றும் பிற கல்வி வசதிகளில் உள்ள ஆவணங்களை ஒரு நூலகத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் கடமைகளை காப்பாளர் கண்கானிப்பார், மேலும் ஒரு காப்பகத்தினால் கல்விக் நிறுவன வரலாற்றைப் பாதுகாப்பதோடு, கல்விசார் சமூகத்திற்கு சேவை செய்வும் உதவுகின்ரன. கல்விசார் காப்பகம் நிறுவனத்தின் நிர்வாக பதிவுகள், முன்னாள் பேராசிரியர்களின் மற்றும் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த ஆவணங்கள், பள்ளி நிறுவனங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும், மேலும் அரிய புத்தகங்கள் அல்லது ஆய்வு நகல் போன்றவை ஒரு மூடிய உருவம் உள்ள பெடிக்குள் அமைக்கபட்டிற்க்கும். கல்விக் காப்பகத்தின் பயனர்கள் பட்டதாரிகள், பட்டதாரி மாணவர்கள், ஆசிரியர்களும் பணியாளர்களும், அறிஞர் ஆராய்ச்சியாளர்களும் பொது மக்களும் போன்றவர்களே இருக்க முடியும். அரசு ஆவணங்களில் உள்ளூர், மாநில அரசுகள் மற்றும் தேசிய (அல்லது கூட்டாட்சி) அரசின் காப்பகங்கள் அடங்கும். யார் வேன்டுமானலும் அரசாங்க காப்பகத்தை பயன்படுத்தலாம் இதை அதிகம் பயன்படுத்துவோர் நிருபர்கள், மரபுசார் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஒருவரின் வீடு அல்லது பிராந்தியத்தின் வரலாற்றைப் பற்றிய தகவல்களைத் தேடும் நபர்கள். பல அரசாங்க ஆவணங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் மற்றும் சந்திப்புமுன்பதிவு தேவைப்படாது. இந்தியாவில், தேசிய ஆவணக் காப்பகம் (NAI) புது டெல்லியில் அமைந்துள்ளது. இலாப நோக்கமற்ற காப்பகங்களில் வரலாற்று சமூகங்கள், மருத்துவமனைகள், அடித்தளங்களில் உள்ள களஞ்சியங்கள் உள்ளங்கும். இலாப நோக்கமற்ற காப்பகங்கள் வழக்கமாக நன்கொடையாளர்களிடமிருந்து தனிப்பட்ட நிதிகளுடன் குறிப்பிட்ட நபர்களின் அல்லது இடங்களின் ஆவணங்களையும் வரலாறையும் பாதுகாக்கின்றன. பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் நிதிகளிலிருந்து மானிய நிதியளிப்பை ஆதரிக்கின்றன. கிடைக்கும் நிதிகளைப் பொறுத்து, இலாப நோக்கற்ற காப்பகங்கள் கிராமப்புற நகரத்தில் வரலாற்றுச் சமுதாயமாக ஒரு அரசாங்க வரலாற்று சமுதாயத்தை எதிர்க்கும் ஒரு மாநில வரலாற்று சமுதாயமாக பெரியதாக இருக்கலாம். காப்பகத்தின் இந்த வகை பயனர்கள் அவற்றை வைத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கலாம். இலாப நோக்கமற்ற காப்பகங்களில் ஊழியர்கள் தொழில்முறை ஆர்வலர்களாகவோ, பேராசிரியர்களாகவோ அல்லது தன்னார்வலர்களாகவோ இருக்கக்கூடும், ஏனெனில் இலாப நோக்கமற்ற காப்பகத்தில் ஒரு நிலைக்குத் தேவையான கல்வி, சேகரிப்பு பயனர் தளத்தின் கோரிக்கைகளுடன் வேறுபடும். ஆவணக் காப்பகங்களின் அனைத்துலக சபை தேசிய ஆவணக் காப்பகங்களின் பட்டியல் தேசிய ஆவணக் காப்பகங்களின் பட்டியல் எருவில் மூர்த்தி எருவில் மூர்த்தி ("நாகப்பன் ஏரம்பமூர்த்தி", இறப்பு: ஜனவரி 11, 2007), பிரபல ஈழத்துக் கவிஞர் ஆவார். மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் 500 இற்கும் மேற்பட்ட வானொலி மெல்லிசைப் பாடல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு எருவில் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே கற்றவர், பின்பு திருகோணமலை இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். தனது இளமைக்காலம் தொடக்கம் இறுதிவரை இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகளை வெளிக் கொண்டுவந்தார். இவரது முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவர் இலங்கை வானொலி, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பல பிரபல ஈழத்துப் பாடகர்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம். எஸ். செல்வராஜா, ஆர். முத்துசாமி, எம். கே. ரொக்சாமி, யாழ் கண்ணன் - நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர். 1956 ஜூன் 8 இல் மட்டக்களப்பில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இரு கண்களையும் இழந்த போதிலும் இறுதிவரை தமிழ் இலக்கியப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்துப்பொருள் விபர அட்டவணை ஒரு குறிப்பிட்ட அளவு உணவு பொருளில் உள்ள சத்துப்பொருள் விபரங்களை சத்துப்பொருள் விபர அட்டவணை விபரிக்கும். கனடாவிலும் அமெரிக்காவிலும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுகளுக்கு இந்த விபரங்களை தருவது உற்பத்தியாளர்களின் கடமையாகும். Australia and New Zealand use a nutritional information panel of the following format: ஆஸ்பிரின் ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid) (அசட்டோசல்) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இது பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும் (heart attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுவது உண்டு. இதனைக் குறைவான அளவில் நீண்டகாலம் பயன்படுத்தும்போது, சிறுதட்டைகளில் (platelets) துரோம்பொக்சேன் (thromboxane) A2 உருவாவது தடுக்கப்பட்டுச் சிறுதட்டுத் திரள்வைப் பாதிக்கிறது. இந்த இரத்தம் இளக்கும் (blood-thinning) இயல்பு இதயவலிக்கான சந்தர்ப்பங்களைக் குறைப்பதில் உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பிரின், 75 அல்லது 81 மில்லிகிராம் (mg) கரையக் கூடிய வில்லைகளாக உள்ளன. இவை சில சமயங்களில் "ஜூனியர் ஆஸ்பிரின்" என்றோ "பேபி ஆஸ்பிரின்" என்றோ குறிப்பிடப்படுவது உண்டு. அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, குடற்புண் (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் காதிரைச்சல் (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். இராய் கூட்டறிகுறிக்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் இன்புளுவென்சா போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. பாராசித்தமோல் பாராசித்தமோல் (Paracetamol) அல்லது அசட்டாமினோபென் (acetaminophen) பொதுவான, வலிநீக்கி மற்றும் காய்ச்சலடக்கி மருந்து ஆகும். இது காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தீவிரமான வலிகளை அடக்குவதிலும், வேறு மருந்துகளுடன் பாராரசித்தமோல் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகளைக் கொடுக்கக்கூடிய மற்ற மருந்துகளின் அளவைக் குறைத்துப் பயன்படுத்த முடிகிறது. பல்வேறு தடிமன், இன்புளுவென்சா மருந்துகளில் முக்கியமான கூறாக இது இருப்பதுடன், மருத்துவர்களின், ஆலோசனை தேவைப்படும் பல்வேறு வலிநீக்கி மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகின்றது. பொதுவாக, அளவாகப் பயன்படுத்தும்போது இது மனிதர்களுக்குப் பாதுகாப்பானது எனினும், தாராளமாகக் கிடைப்பதன் காரணமாக, வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ இதனை அளவுமீறி உட்கொள்ளும் சம்பவங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. பாராசித்தமோல், பல வணிகப் பெயர்களில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது சந்தைப்படுத்தப்படுகின்றது. பிரேசில், கனடா, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பவற்றில் இது, தைலெனோல் (Tylenol) என்ற பெயரிலும், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் பாராலென் (Paralen) என்ற பெயரிலும், தாய்வான், ஆஸ்திரேலியா, கிரீஸ், மத்திய அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மலேசியா, ஹொங்கொங், ஐக்கிய இராச்சியம், இலங்கை, ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், கெனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் "பனடோல்" (Panadol) என்ற பெயரிலும், இந்தியாவில் குரோசீன் என்ற பெயரிலும் விற்பனைக்கு உள்ளன. பாராசித்தமோல் நஞ்சுக்கு முறிவாக N- அசிடைல் சிஸ்டைன் பயன்படுகிறது. 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும். கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும். உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைப்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன. முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு: காற்பந்து (சங்கக் காற்பந்து) காற்பந்து, உதைபந்து அல்லது சங்கக் காற்பந்து என்பது காற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து ஆகும். இந்தப் பந்தின் கோள வடிவம், அளவு, எடை, மற்றும் தயாரிக்கப்படும் பொருள் ஆகியவற்றை பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் பராமரிக்கும் காற்பந்தாட்டச் சட்டங்களின் "சட்டம் 2" வரையறுக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் அதன் கீழுள்ள கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை நடத்தும் போட்டிகளுக்குக் கூடுதலான, மேலும் கடுமையான, சீர்தரங்களை வரையறுக்கின்றன. துவக்க காலத்தில் விலங்குகளின் சவ்வுப்பையையும் இரைப்பையையும் காற்பந்துகளாகப் பயன்படுத்தினர். இவை நிறைய உதைபடும்போது கிழிபட்டன. மெதுவாக தற்காலத்தில் உள்ளவை போன்று காற்பந்துகள் மேம்படத் தொடங்கின. சார்லசு குட்யியர் மற்றும் டொமெனிக்கோ நோபிலி போன்றவர்கள் இயற்கை மீள்மம் மற்றும் வன்கந்தக கடினமாக்கல் முறைகளால் காற்பந்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் இன்று மேம்பட்ட திறனுடைய காற்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன; இவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்ப ஆய்வுகளும் தொடர்கின்றன. உலகின் பல நிறுவனங்கள் காற்பந்தைத் தயாரிக்கின்றன. இவற்றில் 40% காற்பந்துகள் பாக்கித்தானின் சியால்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன. துவக்ககாலப் போட்டிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1962 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் விளையாடப்பட்ட பந்துகள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அடிடாசு "சான்டியாகோ" எனப் பெயரிடப்பட்ட பந்தைத் தயாரித்தது. – இதனால் 1970 முதல் அனைத்து அலுவல்முறை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆட்டங்களுக்கும் அடிடாசு பந்து தயாரித்து வழங்குகிறது. மேலும் 2008 ஒலிம்பிக் காற்பந்தாட்டங்களுக்கும் பந்து தயாரித்து வழங்கியுள்ளது. யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளுக்கு "அடிடாசு பினாலே" எனப்படும் பந்தைத் தயாரிக்கின்றனர். உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் கீழ்கண்ட காற்பந்துகள் பயன்படுத்தப்பட்டன: ஒருங்குறி 5.2 ⚽ (U+26BD சாக்கர் பந்து) எஎன்ற அச்சை அறிமுகப்படுத்தியுள்ளது; இதனை மீயுரையில் அல்லது எனக் குறிப்பிடலாம். 2008இல் கார்ல் பென்ட்சுலின் முன்மொழிதலின் மூலம் இச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் "சூப்பர் 8" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும். மைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. இவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின. யமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது . இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது. தேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும். பகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது. அனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 பந்துப் பரிமாற்றங்கள் வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். பிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி திடலில் உள்ள நடுவர்கள் பிடி சரியாக எடுக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம். குழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்: ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டுச் செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்: வெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும். இறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும். துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது., மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2007 உலகக்கிண்ணத்தில் "மெலோ" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன் லியொன்ஸ் என்பவர்கள் பாடிய "த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி என்ற ஆங்கில மொழிப் பாடலாகும். முக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன. உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்: "குறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன." உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை. போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைப்பெற்றன. உலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன. குழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைப்பெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைப்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று "சூப்பர் 8"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை அல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும். சூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டுச் செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைப்பெறும். சூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர். தொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் "கூடுதல் நாளாக" ஒதுக்கப்பட்டிருக்கும். அனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும். புதன் மார்ச் 14 2007 வெள்ளி மார்ச் 16 2007 ஞாயிறு மார்ச் 18 2007 செவ்வாய் மார்ச் 20 2007 வியாழன் மார்ச் 22 2007 ஞாயிறு மார்ச் 24 2007 எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும். வியாழன் மார்ச் 15 2007 சனி மார்ச் 17 2007 திங்கள் மார்ச் 19 2007 புதன் மார்ச் 21 2007 "*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது." வெள்ளி மார்ச் 23 2007 ஞாயிறு மார்ச் 25 2007 "* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது." எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும். புதன் மார்ச் 14 2007 வெள்ளி மார்ச் 16 2007 ஞாயிறு மார்ச் 18 2007 செவ்வாய் மார்ச் 20 2007 வியாழன் மார்ச் 22 2007 சனி மார்ச் 24 2007 எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும். செவ்வாய் மார்ச் 13 2007 வியாழன் மார்ச் 15 2007 சனி மார்ச் 17 2007 திங்கள் மார்ச் 19 2007 புதன் மார்ச் 21 2007 "*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது." வெள்ளி மார்ச் 23 2007 "*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது." எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும். சுருக்கங்கள்: இந்த இரண்டு அணிகளும் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். அவுஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது ஆகும். அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடரின் சிறந்த வீரர்: கிளென் மெக்ரா உலகக் கிண்ணப் போட்டிகளின் போது நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்: பிப்ரவரி 2006இல் மேற்கிந்தியத்தீவுகள் உலகக்கிண்ணத்தை நடத்த தகுதி வாய்ந்ததா என சர் ரொனால்ட் சாண்டர்ஸ் கேள்வி எழுப்பினார். இவர் இப்பகுதி நாடுகள் புதிய திடல்கள் அமைப்பதற்கான கடன்களை உலகக்கிண்ண வருமானத்தையும் 2007க்குப் பிறகான சுற்றுலா கைத்தொழில் வளர்ச்சியையும் நம்பியே வங்கிகளிடமிருந்து பெறுவதாக எடுத்துக் காட்டினார். இதற்கு, இந்நிலப்பகுதியில் காணப்படும் துடுப்பாட்டம் மீதான அளவுக்குக் கூடிய பற்று இத்தொடரை வெற்றியடைய செய்யும் என மேற்கிந்திய வீரர்கள் பதிலளித்தனர் . உலகக்கிண்ணத்துக்கான தயார் நிலையில் பல பிரச்சினைகள் தோன்றின. சில விளையாடுத் திடல்கள் மார்ச் 11 2007, உலகக்கிண்ண தொடக்க நிகழ்வின்போது 100% நிறைவடையவில்லை. சபினா திடலில் பார்வையாளர்களது பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் இருக்கைகள் அகற்றப்பட்டன. டிரால்னீ திடல் யமேக்காவில் தயார்நிலை போட்டிகளின் போது திடல் ஊழியர்கள் உள்செல்ல முடியாமல் போனது . மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சித் திடல்கள் பற்றிய தமது கவலையை தெரிவித்திருந்தன. வலிநீக்கி வலிநீக்கி (analgesic) என்பது, உணர்விழப்பை ஏற்படுத்தாமல் வலி உணர்வைப் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறுவகையான மருந்து வகைகளுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். வலிநீக்கி மருந்துகள், புறநரம்பு மண்டலம் மற்றும் மையநரம்பு மண்டலம் ஆகியவற்றில், பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன. இவற்றுள், பாராசித்தமோல், சலிசைலேட்டுகள் போன்ற இயக்க ஊக்கிகள் அல்லாத ஆழற்பகை மருந்துகள் (nonsteroidal anti-inflammatory drugs), மார்பைன் (morphine) போன்ற போதையூட்டி மருந்துகள், ட்ராமடோல் (tramadol) போன்ற போதையூட்டி இயல்புகள் கொண்ட செயற்கை மருந்துகள் என்பன அடங்கும். பொதுவாக வலிநீக்கிகளாகக் கருதப்படாத மூவளைய ஏக்கப்பகை மருந்துகள் (tricyclic antidepressants), மற்றும் வலிப்பு அடக்கிகள் (anticonvulsants) போன்ற மருந்துகளும், நரம்புநோய் நோய்குறித் தொகுப்பு (neuropathic pain syndromes) தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. நாடி சோதிடம் நாடி சோதிடம் என்பது ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும். இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆண்களாயின் வலது கட்டைவிரல்(பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது. வட்டெழுத்துக்கள் இதன் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவையாகும். இந்த சுவடிகளின் ஆசிரியர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.இச்சுவடிகள் 2000 வருட பழமை வாய்ந்தவை. இச்சுவடிகளை ஏழு முனிவர்களான (சப்தரிஷிகளான) அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்டர், மற்றும் வால்மீகி இச்சுவடிகளை எழுதியவர்களாக கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஒலைகள் கிடைக்கின்றன, வாசிப்புகளும் அவர் பெயரிலேயே வாசிக்கப்படுகின்றன. இந்த போதனைக்குறிய சோதிடர்கள் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க வைத்தீசுவரன் கோயிலைசுற்றி வாழ்ந்து வருகின்றார்கள். பிரித்தானியர்கள் பங்கு இந்த நாடி இலைகள் ஆரம்ப காலகட்டத்தில்(சுவடிகள்) தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பிரித்தானியர்கள் பிரித்தானிய ஆட்சியின்பொழுது நாடி இலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகளில் அதீத அக்கறை காட்டியதால் இங்கிருந்து சுவடிகள் சிலவற்றை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் பல இலைகள் இங்கேயே பல செல்வந்தர்களின் வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர். சில் இலைகள் அழிந்து விட்டன, மீதமுள்ளவைகள் ஏலம் விடப்பட்டன. இவையெல்லாம் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன. இந்த ஒலைச் சுவடிகளையே சோதிட குடும்பத்தினர் வைத்தீசுவரன் கோயிலில் பத்திரப்படுத்திவைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆன்மா குறித்த தகவல்கள் நாடி சோதிடர்கள் 40% மட்டுமே ஆன்மாவின் எதிர்காலம் குறித்த தகவல்களை அச்சுவடியில் இருந்து தகவல்கள் பெற்று கூறுகின்றனர். அத்தகவல்கள் அவர்களுடைய நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத் தகவல்களோடு மிகவும் பொருந்தி இருப்பது ஆச்சிரியத்துக்குரிய விடயமாகும். மேலும் எதிர்காலத் தகவல்களையும் தருகின்றனர். ரேகைகள் வழக்கமாக, சோதிடர் அல்லது வாசிப்பாளர் (வாசிப்பாளர் என்பதே பொருத்தமாகும்) சோதிடம் பார்க்கவருபவர்களின் கை கட்டை விரலின் கைரேகையை பெற்கின்றனர். ஆண்களாயிருந்தால் வலது கை கட்டைவிரல், பெண்களாயிருந்தால் இடதுகை கட்டை விரல் ரேகையினை பெறுகின்றனர். பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை அவர்கள் குறைந்த பட்சமாக சேமித்து வைத்துள்ள களஞ்சியத்திலிருந்து தேடுகின்றனர். அக்கட்டுகளிலிருந்து அவருடையை (சோதிடம் பார்க்கும் நம்பிக்கையாளரின்) தனி பனை ஒலையை பிரித்தெடுக்கின்றனர். இதற்காக அவர்கள் கேட்கும் சில கேள்விகளைத் தொடுக்கின்றனர் அதற்கு ஆம் இல்லை என்ற பதிலை மட்டுமே தந்தால் போதும். சிலருடைய ஒலை இரண்டு கேள்விகளிலேயே கிடைத்துவிடும். ஆம் இல்லை பதில் உதாரணத்திற்கு ஒருவருடைய பெயரின் (பாலசுந்தரம்) முதலெழுத்து "பா" "ந்" "ம்" அல்லது கடை, இடை எழுத்துக்கள் உயிர் மெய், இடை மெய் இன எழுத்துக்களில் வருகின்றதா என்று வினவி அவ்வெழுத்துகளையும் அவ்வோலையிலிருந்து படிப்பர் அவற்றுக்கு ஆம் அல்லது இல்லை என்று கூறினால் போதும். இவையனைத்தும் வெளிப்படையாகவே சந்தேகத்திற்கு இடமின்றியே கேடகப்படும். இந்த இரண்டு பதிலைத் தவிர வேறு எந்த பதிலையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. முழுத் தகவல்கள் இப்படி ஒவ்வொரு வோலையாக புரட்டி நம்முன் படிப்பர். சில பல வினாடிகளில் அல்லது நிமிடங்களில் நம்பிக்கையாளரின் முழுத் தகல்வல்கள் அனைத்தையும் ஒரு ஒலையில் இருந்து படிப்பர் நம்பிக்கையாளரின் பெயர், வயது, பிறந்த தேதி, மாதம், வருடம், இராசி, தாய், தந்தையர் பெயர், மனைவியின் பெயர், மனைவியின் தாய் தந்தையர் பெயர், தமையனார், தமக்கைகள், மகன்கள், மகள்கள் இவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடைய வயது என்று அனைத்தையும் மிகச்சரியாக படிப்பர் நம்பிக்கையாளர் அனைத்திற்கும் ஆம் ஆம் என்றும் கூறுகிறுகின்ற நிலைக்கு ஆளாகின்ற வகையில் அவையனைத்தும் மிகச்சரியாக இருக்கும். இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்கள் அதற்கு பின் அவர்கள் விரும்புகின்ற காண்டங்களை (காண்டங்களை பார்க்கவும்) நம்பிக்கையாளரின் தேவைக்கேற்ப பிரித்து அவர் முன் வாசிக்கப்படுகின்றது. இவையனைத்தும ஒலி நாடாவில் பதியவைத்தும் தரப்படுகின்றது. காண்டங்களின் படி முற்பிறவித் தகவலையும் தருகின்றனர். இவையனைத்தும் அகத்திய முனிவர் மற்றும் அவர்களது சீடர்களின் பெயர்களாலேயே வாசிக்கப்படுகின்றன. சில நேரங்களில் நம்பிக்கையாளரின் சரியான தனி ஒலைக் கிடைக்காவிடின் அவரின் ஒலையை மீண்டும் வைத்தீசுவரன் கோயில் (அவர்கள் கூறும் தகவல்) சென்று தேடி எடுத்துவந்து பின் வாசிப்பர். இந்த ஏடுகளை அகத்தியர் என்று அறியப்படும் ஒருவர் அல்லது பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஒருவர் குறித்து இவ்வாறு எழுதிவைக்கப்படும் ஏடுகள் பல காண்டங்களாக அமைகின்றன. இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம். ஒரு திறந்த அறிவாக, கல்விக்கூடங்களில் பரவலாக கற்பிக்கப்படும் ஒன்றாக இத்துறை காணப்படாததாலும் பொதுத்தளத்தில் இதுபற்றிய உரையாடல்கள் மிகக்குறைவாகவே இடம்பெறுவதாலும் நாடி சோதிடம் குறித்த தகவல்கள் வாய்ச்சொல் மூலமாகவும் ஊகங்கள் மூலமாகவுமே பெறப்படத்தக்கனவாக உள்ளன. இவ்வாறாக பரவலாக இத்துறைகுறித்து காணப்படும் நம்பிக்கைகள் வருமாறு கைரேகைகளைக் கொண்டு குறித்த நபர்களுக்குரிய ஏடுகளை கண்டுபிடித்து அவற்றை படித்து விளக்கங்கூறும் பணியினை செய்வதற்கென பல இடங்களிலும் பலர் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் தம்மை விளம்பரப்படுத்தி தொழில் செய்கின்றனர். இத்தகைய நாடி சோதிட பார்ப்பவர்கள், அவர்களிடம் சென்று கைரேகை கொடுத்து ஏடு பெற்றவர்களுக்கு அவ்வேடுகளை படித்து விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறான விளக்கங்களில் இருக்கும் பொதுத்தன்மைகள் கீழே பட்டியலிடப்படுகின்றன. நாடி சோதிடம் ஒரு மூட நம்பிக்கையாகவே ஒரு பிரிவினரால் நோக்கப்படுகின்றது. நாடி சோதிடத்தினை விஞ்ஞான முறையாக, தர்க்க றிவியல் கோட்பாட்டு ரீதியில் விளக்க முடியாமையினை இப்பிரிவினர் தமது கருத்துக்களுக்கு அடிப்படையாக கொள்கின்றனர். மாய வித்தைக் கலைகள் போன்று ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது psuedo ஈடுபாடகவே இதைக் கருதலாம் என்ற கருத்தும் உண்டு. இயற்கைப்பொருட்கள் தொடக்கம் பிரபஞ்ச இயக்கம் வரைக்கும் ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும், ஒட்டுமொத்தமாகவும் ஒரு கோலம் இருக்கிறது என்ற அடிப்படையில், மனித வாழ்க்கை குறித்த ஒரு கோலத்தினடிப்படியைல் நிகழ்வதாகக்கொண்டு, அதனை முன்கூட்டியே உய்த்தறியலாம் என்ற வாதம் இக்கலைக்கு சார்பாக முன்வைக்கப்படுகிறது. தர்க்க முறை அறிவியலின் போதாமைகள் குறித்து விமர்சிக்கும் சில கருத்துமுதல்வாதிகளும், அறிவியலாளர்களும் தர்க்கம் தாண்டிய விஞ்ஞானமுறைகளூடாக இதனை நிரூபிக்கலாம் எனக் கருதுகிறார்கள். தி. த. கனகசுந்தரம்பிள்ளை தி.த.க என்று பரவலாக அறியப்படும் தி.த.கனகசுந்தரம்பிள்ளை ("திருக்கோணமலை தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை", ஆகத்து 24, 1863 - 1922) ஈழத்தில் திருக்கோணமலையில் பிறந்து தமிழ் இலக்கிய, பதிப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்கினை ஆற்றிய ஆளுமையாவார். தமிழறிஞர். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை 1863 ஆவணி 24 ஆம் நாள் பிறந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை என்பவரின் மகன். தி. த. சரவணமுத்துப்பிள்ளையுடன் உடன் பிறந்தவர். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். 1880 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சென்று அங்கு செங்கல்வராயன் பள்ளியில் பயின்று, பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ சோதனையில் தேறி, இராசதானுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, தமிழ், தத்துவம் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், கிறித்தவக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வாளாராய் இருந்தார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூல்களுக்குப் பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆகியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார். கனகசுந்தரம் பிள்ளை தெல்லிப்பழை சிதம்பரநாத முதலியாரின் மகள் சுந்தரம்பாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை, ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் கனகசுந்தரத்தால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிப்பிக்கப்படுகிறது". தொல்காப்பியம் - சொல்லதிகாரம் கனகசுந்தரத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. கனகசுந்தரம்பிள்ளை சுன்னாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடியமட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகினர். மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். ”தமிழ் நாவலர் சரிதை” எனும் நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை. எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து கனகசுந்தரம்பிள்ளை தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பவர் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். காய்ச்சலடக்கி காய்ச்சலடக்கி (Antipyretic) என்பது உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம், காய்ச்சலைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்குப் பயன்படும் மருந்து ஆகும். காய்ச்சல் இல்லாதபோது சாதாரண உடல் வெப்பநிலையில் எவ்வித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை. காய்ச்சலடக்கிகள், interleukin களால் தூண்டப்பட்ட வெப்பநிலை உயர்வை ஹைப்போதலமஸ் மூலம் தடுக்கின்றன. இதன்மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் காய்ச்சல் குறைவடைகின்றது. காய்ச்சலடக்கிகள் வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின், அசெட்டமினோபென் ஆகிய மருந்துகள் முக்கியமாக வலிநீக்கிகளாகவே பயன்படுகின்றன. கனடா துடுப்பாட்ட அணி கனடிய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கனடாவுக்காக விளையாடுகின்றது. கனடிய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. கனடாவில் துடுப்பாட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அனேகருக்கு ஈடுபாடு இல்லை. கனடாவுக்குத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை இல்லை. துடுப்பாட்ட வரலாற்றின் முதல் சர்வதேசப் போட்டி 1844 இல் கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியைக் கனடா 23 ஓட்டங்களால் வென்றது. இலங்கைத் துடுப்பாட்ட அணி இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆதி சங்கரர் ஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார். இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார். கி.பி நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன. பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது. உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம். தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார். அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது. உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக "சங்கர விஜயம்" முதலிய நூல்கள் கூறுகின்றன.அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார். கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும். கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி "சரஸவாணி" முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார். ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார். !முதல் பீடாதிபதி !திசை !பீடம்| ! !கிழக்கு !தெற்கு தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1949 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1950 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1951 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1952 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1953 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. கன்பூசியஸ் நிலையம் கன்பூசியஸ் நிலையம் உலக நாடுகளில் சீன மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற நிலையம் ஆகும். இதன் கிளைகள் உலக நாடுகள் பலவற்றில் சீன மொழியைப் படிப்பிக்கின்றன. இது சீன மக்கள் குடியரசின் ஆதரவைப் பெற்ற ஓர் அமைப்பு ஆகும்.