நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் யாழ்ப்பாண அரசுக் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தி என்பவனால் தலைநகரமான நல்லூரின் மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக 1790களில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. அம்மன்னன் நல்லூர் நகரைக் கட்டியபோது அதன் நான்கு திசைகளிலும் கோயில்களை அமைத்ததாகவும், மேற்குத் திசையில் அமைக்கப்பட்டதே வீரமாகாளி அம்மன் கோயில் எனவும் அந்நூல் கூறும். இக்கூற்றை உறுதிப்படுத்துவதற்கான வேறு சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையாயின் இக்கோயில் கிபி 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது எனக் கொள்ள முடியும். குவைறோஸ் என்னும் போத்துக்கீசப் பாதிரியார் எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே காணப்பட்ட பகுதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது. கிபி 1620 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் போத்துக்கீசரின் நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய இந்துக் கோயில்களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி 1700 களின் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர் ஆட்சியின் போதும், அதன் பின்னர் பிரித்தானியர் ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. கொழும்புச் செட்டி கொழும்புச் செட்டி ("Colombo Chetty") எனப்படுவோர் இலங்கையில் வாழும் சிறு தொகையினரான ஒரு சமுதாயத்தினரைக் குறிக்கும். இவர்கள் தற்போது பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றி வருகிறார்கள். இலங்கையில் பல்வேறு துறைகளிலும் இவர்களைக் காண முடியும். ஆரம்ப காலத்தில் இவர்களின் மூதாதையர்கள் கொழும்பு நகரில் மாத்திரம் குடியேறியதால் இப்பெயர் வந்திருக்கலாம். இவர்கள் பல்வேறு இனங்களையும் சேர்ந்த தென்னிந்திய வணிகர்களின் வழித் தோன்றல்கள் ஆவர். இவர்களுடைய மூதாதையர் பெரும்பாலும் தமிழர்கள். குறைந்த அளவில் மலையாள, தெலுங்கு இனத்தவர்களின் வழி வந்தவர்களும் உள்ளனர். தென்னிந்திய வணிகர்கள் ஏறத்தாழ இலங்கையின் வரலாற்றுக் காலம் முழுவதுமே இந்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். எனினும், கொழும்புச் செட்டிகளின் மூதாதையர்கள், கி.பி 1505 ஆம் ஆண்டுக்குப் பின், இலங்கையில் போத்துக்கீசர் ஆட்சி நிலவிய காலத்தில் இங்கே வந்தவர்களாவர். இவர்கள் போத்துக்கீசரின் சமயமான கத்தோலிக்க சமயத்துக்கு மாறி இலங்கையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்கள் தங்கள் சமுதாயத்துக்குள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர், சிங்களவர், போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஐரோப்பிய ஆசியக் கலப்பினத்தவர் போன்ற பலருடனும் மணத்தொடர்புகளைக் கொண்டிருந்தனர். முதலாவதாக இலங்கையில் குடியேறியவர்களுள் பிற்காலத்தில் பிரசித்திபெற்று விளங்கிய சைமன் காசிச்செட்டியின் மூதாதையரான கஸ்பர் காசி செட்டியைக் குறிப்பிடலாம். இவர் 1620 இல் இலங்கையைத் தனது நிரந்தர வதிவிடமாகக் கொண்டார். கொழும்புச் செட்டிகள் வைசியர்கள் (வணிகர்கள்) ஆவர். தமிழ் இந்துக்களாக இருந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களே கொழும்புச் செட்டிகள். இதனால் இவர்களின் கலாசாரத்தில் இந்துக் கலாசாரத்தின் தாக்கம் காணப்படுகின்றது. திருமணத்தின்போது [தாலி]] அணிவதை விசேடமாகக் குறிப்பிடலாம். 1984 ஆம் ஆண்டு வரை, கொழும்புச் செட்டிகளில் பலர் தமிழைப் பயின்று வந்ததுடன், அவர்கள் தமிழ்ச் சாதிகளுள் ஒன்றைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டு வந்தனர். [எனினும், ஆங்கிலக் கல்வியும், தமிழர் தவிர்ந்த சிங்களவர் உட்பட்ட ஏனைய இனமக்களுடனும் இனக் கலப்புற்றதனாலும், இவர்கள் படிப்படியாகத் தமிழைக் கைவிட்டுவிட்டனர். இவர்கள் பொரும்பாலும் ஆங்கிலத்தையே வீட்டு மொழியாகக் கொண்டுள்ளதுடன், சிங்களத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளை இலங்கைத் தமிழர்களுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இந்த நடைமுறையை அவர்கள் விரும்பவில்லை. தங்களைத் தனியான இனமாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று இலங்கை செட்டி சங்கத்தின் ("Sri lankan Chetti Association") பொதுச் செயலாளர் ஷர்லி புள்ளே திசேரா வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். இதன் விளைவாக, கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று 1984 ஜனவரி 14 ஆம் நாள் அரசாங்கம் அறிவித்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாகக் குறிப்பிட வேண்டும் என்று அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தன 1989 ஒக்ரோபர் 30 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார். இவர்கள் இன்று தமிழராகவோ சிங்களவராகவோ கணிக்கப்படாமல் ஒரு தனி இனமாகவே கொள்ளப்படுகின்றார்கள். இவர்கள் பல இனத்தவரிடையேயும் கலந்து மணம் புரிந்ததன் காரணமாகச் சில சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும், பறங்கிச் சமூகத்தவருக்கும் இடையே துல்லியமான வேறுபாடுகளைக் காண முடியாத நிலையும் உள்ளது. எடுத்துக்காட்டாகப் பறங்கியராகக் கருதப்படும் இலங்கையின் பிரபல ஆங்கில எழுத்தாளரான மைக்கேல் ஒண்டாச்சி என்பவர் கொழும்புச் செட்டிகளுடன் தாராளமான மண உறவுகளைக் கொண்டிருந்த இந்துத் தென்னிந்திய வைத்தியர் ஒருவரின் வழி வந்தவர் என அறியப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் குடியேற்றவாத ஆட்சிகளின் கீழ் சிவில் சேவைகளில் அமர்ந்த தமிழர்களில் பலர் கொழும்புச் செட்டிகளாக இருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், அரச சேவையில் உயர் பதவிகளை வகித்ததுடன், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கி, தமிழ்ப் புலவர்கள் பற்றியும், இலங்கையில் தமிழர்களின் வரலாறு தொடர்பிலும் பல நூல்களை எழுதி வெளியிட்ட சைமன் காசிச்செட்டி என்பவர் கொழும்புச் செட்டி சமூகத்தைச் சேர்ந்தவராவார். குழந்தைத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர் ("child labour") என்பது தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது. கஹதோதக் குழந்தைத் தொழிலாளர் பணியமர்த்தப்படுவது வரலாற்றுக் காலத்தில் கூறப்பட்டாலும், உலகளாவிய கல்வி முறை, தொழில்துறையில் ஏற்பட்ட வேலை மாற்றம், வேலையாளர்களுக்கும், குழந்தைகளின் உரிமைகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துக்களால் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகள் பணியமர்த்தக்கூடாதென வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன. குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாது. இந்த குழந்தைத் தொழிலாளர் வயது வித்தியாசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குழந்தை தொழிலாளர் நலன்களுகாகாக விதிகளை உருவாக்க கூறி வழக்கறிஞர் ஏனாதி மா.அய்யனார் என்பவர் வழக்கு தாக்கல் செய்து சிறப்பாக வாதாடி வருகிறார் குழந்தைத் தொழிலாளர் முறை உலகின் பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களிலும் உள்ளது. பாலியல் தொழில், குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழிலில் உதவுதல் மற்றும் சிறிய வணிகத்தில் (உணவுப் பொருள் விற்பனை) குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். சில குழந்தைகள் சுற்றுலா வழிகாட்டியாகவும், ஓட்டல் மற்றும் கடைகளில் வெயிட்டர்களாகவும் வேலை செய்கின்றனர். சில குழந்தைகள் அட்டை தயாரித்தல், ஷூக்களை பாலீஷ் செய்தல், குடவுனில் பொருட்களை அடுக்குதல், சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிற்சாலை மற்றும் இனிப்புகடைகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படாமல், மறைமுகமாக பணிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெருக்களில் பொருட்களை விற்பனை செய்தல், விவசாயப் பணி செய்தல் போன்ற மறைமுகப் பணிகளில், தொழிலாளர் ஆய்வாளர்களின் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும், பத்திரிக்கைகளின் கண்களுக்கு எட்டாத வகையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்த தட்பவெப்பநிலையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் குறைந்த சம்பளத்தில் குடும்பச் சூழ்நிலைக்காக பணிபுரிகின்றனர். யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகள் குழந்தைத் தொழிலாளரின் உழைப்புச் சுரண்டலை கவனத்தில் கொண்டுள்ளது. ஐ.நா., குழந்தைகள் உரிமை பாதுகாப்பின் உடன்படிக்கை 32வது விதியில் கூறப்பட்டுள்ளதாவது, "..." அபாயகரமான தொழல்கள் அல்லது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம், பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூகமேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதை "மாநிலக் கட்சிகள் " கண்டறிய வேண்டும். ஏற்கனவே உலகம் முழுவதிலும் 250 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் சோமாலியா மற்றும் ஐக்கிய நாடுகளைத் தவிர உலகில் உள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. சோமாலியாவை வழிநடத்தும் அரசாங்கம் இல்லாததால், தாமதமாக 2002 ஆம் ஆண்டு சோமாலியா அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உறுதியான சர்வதேச மொழிகளில் சட்ட விரோதமான குழந்தைத் தொழிலாளர் முறையை ஒத்த விதியை சி.ஆர்.சி வழங்கியது. எப்படி இருந்தாலும் அந்த உடன்படிக்கை குழந்தைத் தொழிலாளர் விதி மீறலை உருவாக்கவில்லை. . ஏழைக்குடும்பங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வருமானத்தைச் சார்ந்துள்ளனர். சிலநேரங்களில் குடும்பத்திற்கான வருமானமே குழந்தையிடமிருந்து தான் என்ற நிலையில் உள்ளனர். தொழில்துறையில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் மறைக்கப்பட்டு விடுகிறது. குழந்தைத் தொழிலாளர் விவசாயம் தொடர்பான பிற பணிகளிலும், நகர்ப்பகுதிகளில் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையானது குழந்தைகளுக்கான குறுகிய கால வருமானம் மற்றும் நீண்ட கால பயன்கள் என்ற இரண்டு சவால்களை வலியுறுத்த வேண்டியுள்ளது. குறிப்பிட்ட வயது வரை வேலை பார்க்கக்கூடாது என்பதை சில இளையோர் உரிமை குழுக்கள் எதிர்க்கின்றன. அவர்களின் விருப்பங்கள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறலாகவும், பணத்திற்காக வேலை செய்யவும் இளையோர்கள் விரும்புகின்றனர். 1999 ஆம் ஆண்டு உலகளவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான ஓர் இயக்கம் உருவெடுத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1998 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த இயக்கம் உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, அதிகளவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் பங்கேற்க வைத்தது. ஜெனிவாவில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் இந்த இயக்கம் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் குழந்தைத் தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கையை ஆதரித்தும், குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான அணுகுமுறையும் எதிர்த்தும் பேசினர். தொடர்ந்த ஆண்டில் இந்த உடன்படிக்கையானது ஜெனிவாவில் நடந்த குழந்தைத் தொழிலாளர் அமைப்பு கருத்தரங்கில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் அமைப்பு வரலாற்றில், இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப்பெரிய காரணமாகும். குழந்தைத் தொழிலாளர் பொருளாதாரம் என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு "அமெரிக்க " பொருளாதார மறுபார்வையில் கவுசிக் பாசு மற்றும் பாம் ஹோவாங் வான் ஆகியோர், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முக்கியக் காரணம் குடும்ப வறுமையே என்ற வாதத்தை முன்வைத்தனர். மேலும் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டத்துக்கு எதிராக, முதலாளிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை தடைசெய்யும் போது பெரியோர்களுக்கு அதே வேலைக்கு அதிக சம்பளம் தரவேண்டியுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. சிஏசிஎல் (CACL) மதிப்பீட்டின் படி இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்தப்படுவதை தடைசெய்யும் சட்டம் இருந்தாலும், அவ்வப்போது சட்டம் புறக்கணிப்புக்குள்ளாகிறது ஹேன்ஸ், வால் மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் இனிப்பகங்களில் 11 வயது குழந்தைகள் கூட ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆசியாவில் 61 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 32 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் ஏழு சதவீதமும், அமெரிக்காவில் ஒரு சதவீதமும், கனடா, ஐரோப்பா மற்றும் செழிப்பான நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலையில் 22 சதவீத வேலையானது, குழந்தைத் தொழிலாளர்களாலும், லத்தீன் அமெரிக்காவில் 17 சதவீத வேலை, குழந்தைத் தொழிலாளர்களாலும் செய்யப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் நாட்டுக்கு நாடும், நாடுகளுக்குள்ளேயும் நிறைய அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க வேண்டுமானால் காவல்துறையினர், தொழிற்சாலைகளுக்கு அடிக்கடிச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பி.பி.சி., சமீபத்தில் ஒரு அறிக்கையை) வெளியிட்டது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் துணிகள் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்துவதை பிரைமார்க் குறும்படமாக வெளியிட்டுள்ளது. பி.பி.சி.யின் பனோரமா தொலைக்காட்சித் தொடரில் நான்கு டாலர் மதிப்புள்ள எம்பிராய்டரி சட்டையை மையமாக வைத்து குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர்கள் கேள்வி கேட்கின்றனர். கையினால் செய்யப்பட்ட எம்பிராய்டரி சட்டைக்கு நான் ஏன் நான்கு டாலர் பணம் தரவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது கையால் தயாரிக்கப்பட்டது என்பது பதில். இவ்வளவு குறைந்த விலைக்கு இதை தயாரித்தது யார் என்பது அடுத்த கேள்வி... எனத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வன்முறையும், அதிகளவில் நடைபெறுவதையும் விளக்கியது. நிகழ்ச்சியின் முடிவில் தொடர்புடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு சப்ளை செய்யும் கம்பெனிக்கான விதிகள் மறுஆய்வு செய்யப்பட்டன. லிபேரியாவில் பயர்ஸ்டோன் டயர் அன்ட் ரப்பர் கம்பெனியின் ரப்பர் தோட்டத்துக்கு எதிராக உலகளவில் பிரச்சாரம் வெடித்தது. ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், அதிகளவு உற்பத்தி செய்வதற்கு வற்புறுத்தப்பட்டனர். ஆனால் சம்பளம் மிகவும் பாதியாகப் பெற்றனர். இதனால் பல தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பணிக்கு அழைத்து வந்தனர். சர்வதேச குழந்தைகள் உரிமை நிதியானது பயர்ஸ்டோன் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. நவம்பர் 2005 ஆம் ஆண்டு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, நீதிபதி தனது தீர்ப்பில் பயர்ஸ்டோன் நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் குழந்தைத் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்கு பதிய அனுமதித்தார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனப் பிரதிநிதி ஜூன்னத் கான் என்பவர் காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் செயல்பட்டார். அதனால் டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சோதனையிடப்பட்டன. டில்லி, சீலாம்பூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த சேரிப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட நூறு எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் இருந்து 480 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த சில வாரங்களில் அரசு, பத்திரிக்கைத் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தனர். 5 முதல் 6 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்களை அடிமை முறையிலிருந்து விடுவித்தனர். இந்த மிகப்பெரிய சோதனையானது மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இருப்பதை, உலகத்தின் கண்களைத் திறக்கச் செய்தது. எம்பிராய்டரி தொழிற்சாலையில் நடந்த மிகப்பெரிய சோதனையானது (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி) சண்டே அப்சர்வர் பத்திரிக்கையில் வெளியிடப்படவில்லை. பி.பி.ஏ., இயக்கத்தினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். காப் கிட்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக காப் நிறுவனம் தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டது. குழந்தைத் தொழிலாளர் குறித்த இத்தனை பதிவுகள் இருந்தாலும், எல்லா கட்சிகளும் அக்கறை காட்டினாலும், எஸ்.டி.எம்., மட்டும், குழந்தைத் தொழிலாளர் அடிமைகளாக, பிணையமாக இருப்பதை கண்டுகொள்ளவில்லை. இந்த மோதல்களால் பிபிஏ நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்புத் தலைவர் டில்லி உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு இரவு 11 மணிக்கு தங்களது கடிதம் மூலம் முறையிட்டனர். http://www.globalmarch.org/gap/appeal_letter_KS.php குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு மேம்போக்காக செயல்பட்டது. மேலும் குழந்தை உரிமை அமைப்புகளின் மீது அரசு பழிவாங்கும் போக்கை கடைபிடித்தது.http://www.globalmarch.org/gap/High_Court_order.php குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான குளோபல் மார்ச் அமைப்பும் பி.பி.ஏ., அமைப்பும் காப் இன்க் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களிடம் ஒப்பந்தம் செய்தன. இனிப்பகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடுத்து நிறுத்தவும், புதிய வழிமுறைகளை ஏற்படுத்தவும் செயல்பாட்டை உருவாக்கின. இதன்படி காப் இன்க் நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவர் டான்ஹென்கே தனது அறிக்கையில், நாங்கள் தெளிவாக அறிக்கையை உருவாக்கி வருகிறோம். இந்த குழந்தைகள் தற்போது உள்ளூர் அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கு பள்ளியில் வேலைக்கான பயிற்சி அளித்து, அதற்கான சம்பளம் வழங்கப்படும். மேலும் அக்குழந்தைகள் முறையாக பணிபுரிவதற்கான வயதை அடையும் வரை இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் உள்ளூர் அரசாங்கத்துடனும், குளோபல் மார்ச்சுடனும் இணைந்து செயல்பட்டு, எங்களது விற்பனையாளரின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றார். http://www.globalmarch.org/gap/letter_to_VP_GAP.php http://www.globalmarch.org/gap/gap_statement.php அக்டோபர் 28 ஆம் தேதி, வடஅமெரிக்காவில் உள்ள காப் நிறுவனத்தின் தலைவர் மார்க்கா ஹான்சேன் கூறுகையில், நாங்கள் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்கிறோம். இது எங்களுக்கு பேரம் பேசும் விஷயமல்ல. நாங்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்துகிறோம். இக்குற்றத்திற்காக வருந்துகிறோம். நாங்கள் தவறிழைத்தவர்களாக நிரூபிக்கப்பட்டுள்ளோம். காப் நிறுவனம், தனது வரலாற்றில் இம்மாதிரியான சலால்களை சந்தித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எங்களது அணுகுமுறையும் தவிர்க்க முடியாதது. 2006 ஆம் ஆண்டில் காப் நிறுவனம் 23 தொழிற்சாலைகளுடன் மூடப்பட்டது. எங்களது விற்பனையாளர்கள் 90 பேர் உற்பத்தியில் குறைபாடு இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் எச்சரிக்கையுடன், வேலைக்கான ஆர்டரை நிறுத்தி விட்டு, குறைபாடுடைய பொருட்கள் விற்பனைக்குச் செல்வதற்கு முன்பாக நிறுத்திவிட்டோம். நாங்கள் எங்களது சப்ளையர்களுடன் உடனடி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து எங்களது கொள்கைகளை வலுவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார். ஆகஸ்டு 2008 ஆம் ஆண்டு அயோவா தொழிலாளர் ஆணையர் டேவிட் நெய்ல் ஒரு அறிவிப்பு செய்தார். எங்களது துறையானது விவசாயம் தொடர்பான துறையிலும், இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்திலும் இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் துறையினர் சோதனையிட்ட போது, 57 சிறுவர்கள் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறைச்சி பேக்கிங் செய்யும் நிறுவனத்தில் விதிமுறைக்கு எதிராக 14 வயது சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. நெய்ல் தனது அறிவிப்பில் இந்த வழக்கை மாநில அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பினார். தனது துறை விசாரணையில், நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத, அதிர்ச்சியான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளன என்றார். குற்றச்சாட்டை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட நஷ்டம் தான் இது என்று விவசாயம் செய்பவர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் வாதிட்டு தங்கள் உரிமைகளை கோரினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநெசவுத் தொழிற்சாலையில் அதிகளவில் 40,000 குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என கண்டறியப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களை தறி உரிமையாளர்கள் அடிமைகளாக நடத்தினர். கிராமப்புற கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ரைட் நிறுவனத்துடன் இணைந்து குழந்தைத் தொழிலாளர்களுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைத்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் சாக்லேட் செய்யப் பயன்படும் கோகோ பவுடர் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோகோ பொருளாதாரத்தைக் காண்க மக்களின் மனப்பாங்கு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர் குறித்த அக்கறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த பொருட்களை வாங்குவதை புறக்கணித்தால் அது இன்னும் கூடுதல் விளைவை ஏற்படுத்தி விடும். ஏனென்றால் தற்போது பார்த்து வரும் சாதாரண வேலையை விட்டு, உடல், மன ரீதியாக வேதனை தரும் பாலியல் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு, வங்கதேசத்தில் உள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த 50 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு அந்த குழந்தைகள் கல் வெட்டுதல், கடினமான பணி மற்றும் பாலியல் தொழிலுக்குச் சென்றனர். இந்த தொழில்கள் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையை விட மிக மிக அபாயகரமானது. இதை யுனிசெப்ஆய்வு செய்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் புறக்கணிப்பது என்பது அவர்களின் நீண்ட கால வாழ்வியல் முறைகளை சிதைக்கிறது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது. மில்டன் பிரைட்மான் கூற்றின் படி, தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக எல்லாக் குழந்தைகளுமே விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்புரட்சியின் போது பண்ணைத் தொழிலில் இருந்து தொழிற்சாலைக்கு இடம்பெயர்ந்தனர். கூடுதல் நேரத்துக்கான சம்பளம், மற்றும் சம்பள உயர்வால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதற்கு பதிலாக பள்ளிக்கு அனுப்பினர். சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவும், பின்பாகவும், குழந்தைத் தொழிலாளர் முறை மெல்ல குறைந்தது. ஆஸ்திரேலியன் பள்ளி பொருளாதார நிபுணர் முர்ரே ரோத்பார்டு தனது அறிக்கையில், பிரிட்டீஸ் மற்றும் அமெரிக்க குழந்தைகள் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னும், பின்னும் வேலை கிடைக்காத போது எண்ணற்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் விருப்பப்பட்டு, மகிழ்ச்சியுடன் தொழிற்சாலை பணிகளுக்குச் சென்றனர். எப்படியிருந்தாலும் பிரிட்டீஸ் வரலாற்று சமூக ஆர்வலர் இ.பி. தாம்சன், வீட்டு வேலை செய்யும் சிறுவர்களுக்கும், தொழிலாளர் சந்தையில் பங்கேற்கும் சிறுவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். தொழிற்புரட்சி அனுபவத்தால் ஏற்பட்ட பயனால் தற்போதைய நடைமுறைகள் -குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேற்கத்திய சமூகத்தில் குழந்தைகளின் நிலை பற்றி எழுதிய பொருளாதார வரலாற்று ஆய்வாளர் ஹியூஜ் கன்னிங்ஹாம் கூறுகையில், தொழிலாளர் ஒருங்கிணைப்பாளரும், மேற்கத்திய குழந்தைகள் அமைப்பின் தலைவரும், தொழிற்சாலை தொழிலாளர் அமைப்பின் நிறுவன உறுப்பினருமான பிக் பில் ஹேவுட் கூறுகையில், குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை, உழைப்பாக சுரண்டுபவர்கள் தான் மிக மோசமான திருடர்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஹூஸ்டன் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் தாமஸ் டி கிரிகாரி, கேட்டோ நிறுவனத்தில் வெளியிட்ட கட்டுரையில், தொழில்நுட்பமும், பொருளாதார மாற்றமும் குழந்தைகளை தொழில்துறையிலிருந்து விலக்கி, பள்ளிகளுக்கு மாற்றும் சிறந்த ஆக்கப் பொருளாகும். ஹூஸ்டன் பல்கலைக்கழகம் இதனால் அக்குழந்தைகள் பெரியவர்களாக நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ஆனால் வங்கதேசம் போன்ற ஏழைநாடுகளில், 19 ஆம் நு£ற்றாண்டின் கடைசி வரையில், குடும்பப் பொருளாதாரத் தேவைக்காக குழந்தைகள் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தேவைக்கான போராட்டம் நிறைவுபெறும் போது, அவை வெவ்வேறு அரசியல் காரணங்களால் மீண்டும் குழந்தைத் தொழிலாளர் முறை தலைதூக்குகின்றன. ரிச்சர்ட் டி சொய்சா ரிச்சர்ட் டி சொய்சா ("Richard Manik de Zoysa", , 18 மார்ச் 1958 - 18 பெப்ரவரி 1990) இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியாலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நடிகராவார். இவர் இனம் தெரியாத நபர்களால் இவரது வீட்டில் இருக்கும் போது கடத்தப்பட்டு 1990 பெப்ரவரி 17 அல்லது 18 இல் கொலை செய்யப்பட்டார். இலங்கையின் தேசிய தொலைக்காட்சிச் சேவையான ரூபவாஹினியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் செயலாற்றிய ரிச்சர்ட் கொலை செய்யப்பட்ட போது உலக ஊடகவியலாளர் சேவையின் கொழும்பு கிளையின் பொறுப்பாளாராக செயற்பட்டுவந்தார். ரிச்சர்ட் இலங்கையின் பெரும்பான்மை சிங்களத் தந்தைக்கும் சிறுபான்மை தமிழ்த் தாய்க்கும் பிறந்தவராவார். இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தார். ரிச்சர்ட் பிரபல ஊடகவியலாளரும் மலேசியாவில் வசித்தவருமான மாணிக்கசோதி சரவணமுத்துவின் மகளும், பிரபல மருத்துவருமான மனோராணி சரவணமுத்துவின் மகன் ஆவார். மகனது மரணத்தின் பின்னர் இவர் "மகன்களை இழந்த தாயார்" என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். ரிச்சர்ட் தனது தாயாருடன் வெலிகடவத்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்து வந்தார். 1990 பெப்ரவரி 17/18இரவில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். தாயார் உடனடியாக வெலிக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டார். அடுத்த நாள் பெப்ரவரி 19 1990, ரிச்சர்ட்டின் உடல் கொழும்பில் இருந்து தெற்கே 12மைல் தூரத்தில் மொரட்டுவை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டிருந்தார் அவரது வாயெலும்பில் முறிவு காணப்பட்டது. ரிச்சர்ட்டின் உடலை அவரது நண்பரான, 2006 இல் கடத்தி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அடையாளம் காட்டினார். வைத்தியர் சரவணமுத்து அடுத்த நாள் தனது மகனை கடத்தியவர்களை அடையாளம் காட்டமுடியும் என கூறியிருந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, தொலைக்காட்சியில் வந்த நபர் ஒருவரை அவர் அடையாளம் கண்டார். அவர் ஒரு காவல்துறை அதிகாரியாவார். இது வழக்கில் தெரிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக சரவணமுத்துவும் அவரது சட்டதரணி பட்டி வீரகோணும் கொலை அச்சுறுத்தல்களை பெற்றனர். 2004 இல் வைத்தியர் சரவணமுத்து தனது மகனது கொலையாளர்களை காணாமலேயே காலமானார். ஐ.நா.வினால் சுதந்திர ஊடகவியலாளருக்கான விருது ஒன்று ரிச்சர்ட் டி சொய்சாவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. தேவிஸ் குருகே தேவிஸ் குருகே ( – ஜூலை 23 1989) இலங்கையில் இருந்த முன்னணி வானொலி அறிவிப்பாளர் ஆவார். இவரே இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளாராவார். இவரது காலத்தில் இவர் மிக பிரபலமானதோடு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தார். 1980 இல் இவர் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருக்கும் போது 1989 இல் இவர் கொலை செய்யப்பட்டார். நண்டு நண்டு ("crab") உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில மில்லிமீற்றர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீற்றர் (m) வரை வளரும் யப்பானியச் ("Japanese") சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை. பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன. நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் ("Ton") அதிகமான நண்டுகள் உணவாகின்றன. ரத்னஜீவன் ஹூல் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இலங்கையில் நன்கு அறியப்பட்ட மின் பொறியியல் பேராசிரியராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றினார். இந்நியமனத்துக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக விடுமுறையில் வெளிநாட்டில் வசிக்கிறார். விடுதலை புலிகளோ அல்லது அவர்களுக்க்கு சார்பான ஆயுதக் குழுக்களோ இக்கொலை மிரட்டலை விடுத்திருப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பான "அமெனிஸ்டி" தெரிவித்துள்ளது. ரத்னஜீவன் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜன் ஹூலின் சகோதரர் ஆவார். ராஜன் ஹூல் ராஜன் ஹூல் ("Rajan Hoole") இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கணித விரிவுரையாளருமாவார். இவர் 1988 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவுடன் இணைந்து மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினார். தற்போது இவர் தென்னிலங்கையிலிருந்து மனித உரிமை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றார். ராஜன் கூல் யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவ பாதிரியாருடைய மகனாவார். பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இவரது சகோதரர் ஆவார். ராஜன் கூல் தன்னுடைய மாணவப் பருவத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராகவும் தந்தை செல்வநாயகத்தில் நம்பிக்கை உடையவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறை நிகழ்வுகளை அடுத்து அரசியல் அமைப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் லண்டனுக்கு உயர்கல்வி கற்கச் சென்ற கூல் 1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதவியல் விரிவுரையாளராக இணைந்த கூல் "சண்டே ரிவிவ்" (Saturday Review) என்ற ஆங்கில பத்திரிகையில் பகுதி-நேர ஆசிரியராகவும் பணியாற்றினார். 1986 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவும் "சிறிதரனும்" தங்களின் உயர் கல்வியை முடித்துக் கொண்டு லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இதையடுத்து இவர்களோடு ஒன்று சேர்ந்த கூல், 1989 ஆம் ஆண்டு முறிந்த பனை என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். அதே ஆண்டில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் ஆரம்பித்தார். 1989 செப்டம்பர் 21 இல் ராஜினி பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தென்னிலங்கைக்கு தப்பிச் சென்றார்கள். கூலின் பல்கலைக்கழக வேலையும் பறிபோனதால் அவரும் தென் இலங்கைக்கு குடிப்பெயர்ந்தார். பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பு உட்பட 11 முக்கிய பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன இவர் புருண்டியைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்ரான கிளேவர் ம்போனிம்ப்பா, கோபாலசிங்கம் சிறிதரன் என்பர்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். 1. முறிந்த பனை - The Broken Palmyrah (1989, Co author, Harvey Mudd College California) 2. Sri Lanka: The Arrogance of power; Myth, Decadence and murder (2000, UTHR, Colombo) நாயக் நாயக் (The Hero) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உத்தம் குமார், ஷர்மிலா தாகூர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிக்கிம் (விபரணப்படம்) சிக்கிம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழி ஆவணத் திரைப்படமாகும். ராஜினி திராணகம ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்க்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார். 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், "தயா சோமசுந்தரம்" என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை ("The Broken Palmyra") என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தானந்த பாரதியார் சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது. முத்தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். . பல்லாண்டுகளுக்கு முன்னர் "புறத்திரட்டு" ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது. முத்தொள்ளாயிரப் பாடல்களை முதன் முதலில் இரா. இராகவையங்கார் 1905 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிட்டார்.. பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடங்கிய புறத்திரட்டை 1938 ஆம் ஆண்டில் பல்கலைக்ககழகப் பதிப்பாக வெளியிட்டார். முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய நடையில் உரையெழுதியவர் தமிழறிஞர் டி. கே. சிதம்பரநாதர். இவர் தமது பதிப்பில் ஒன்பது பாடல்களைப் பொருள் நன்கு புலப்படாதவை எனக் குறிப்பிட்டு உரை எழுதாமல் பின்னிணைப்பாக வெளியிட்டார். டைனோசர் (திரைப்படம்) டைனோசர் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். சிறுவர்படம் / இயக்கமூட்டியபடம் இசுமால் சோல்ட்சர்சு இசுமால் சோல்ட்சர்சு (1998) ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். சிறுவர்படம் டெத் ஒஃப் எ பிரசிடண்ட் டெத் ஒஃப் எ பிரசிடண்ட் (Death of a President) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த விபரணத் திரைப்படமாகும். கேப்ரியல் ரேஞ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹண்ட் அயோப், பிரயன் பொலாண்ட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். விபரணப்படம் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவில் மக்கள் அதிபர் ஜோர்ஜ் புஷ் பல நாடுகளில் போர்ச்சூழலை உருவாக்கிய காரணத்தினால் சீற்றம் அடையும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போராட்டத்தில் பல்கழைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர் ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்கின்றார்.ஜோர்ஜ் புஷும் சுட்டு வீழ்த்தப்பட்டு இறக்கின்றார். பின்னர் அம்மாணவராலேயே ஜோர்ஜ் புஷ் அடுக்குமாடிக்கட்டிடத்திலிருந்து சுட்டுவீழ்த்தப்படுகின்றார் என நினைத்து அவரைக் கைது செய்கின்றனர் காவல்துறையினர். ஆனால் சீரியா நாட்டில் விடுமுறைக்காகச் சென்ற சிக்ரி என்ற அமெரிக்காவைப் பிறப்பிடமகக் கொண்ட இஸ்லாமியரே அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புகொண்டு இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டுமென்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தீர்ப்பளிக்கின்றனர் அமெரிக்க நீதிபதிகள். இதற்கிடையில் அமெரிக்காவிற்காக போர் செய்த முன்னாள் படையினர் அக்கொலைச் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. த பிக் பாஸ் த பிக் பாஸ் (The Big Boss) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும். லோ வே இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் புரூஸ் லீ, மரிய ஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தற்காப்புக்கலைப்படம் / அதிரடித் திரைப்படம் இணைய இணைப்புகள் தொகையில் நாடுகளின் பட்டியல் இப்பட்டியல் இணையம் உபயோகிப்பவர்களில் முதல் 20 வரிசையில் உள்ள நாடுகளின் பட்டியலாகும். செப்டம்பர், 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பும் ஆகும். முத்தரசநல்லூர் திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கைக் குறிப்புகள் உள்ள பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முன்னர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறப்படும் "முத்தரசன்" என்ற குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிகப் பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடருந்து நிலையம், திருச்சி – கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து ஆகியன முக்கிய பயிர்களாகும். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து 7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின் மணலில் 2500 பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு போன்றவை இவ்விழாவின் சிறப்பு. வ. வே. சுப்பிரமணியம் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2, 1881 — சூன் 4, 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் "தமிழ் சிறுகதை தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார். வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர். வ வே சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார். பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த "அபிநவபாரத்" சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார். அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார். இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார். 1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார். டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர். பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை. பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வ ந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார். மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார். இங்கு "தர்மாலயம்" என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார். முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது. புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார். இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார். ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார். மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு. பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார். வ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கருப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; நடப்பதற்கும் நடை என்று பெயர், ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு. 1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார். தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன. 1925 இல் வ. வே. சு வின் குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுகின்றது என்ற செய்தி சர்ச்சையை உண்டாக்கியது. பெரியார் ஈ. வே. ராமசாமி பிராமணரல்லாதோர் இந்திய தேசிய காங்கிரசில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி கட்சியிலிருந்து வெளியேறி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது. மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். தம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வவேசு ஐயர் அங்கேயே உயிரிழந்தார். தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவரது நினவாக சேரன்மகாதேவியில் வ,வே,சு ஐயர் மாணவர் விடுதி உள்ளது. தமிழில் கனடிய அரச சேவை அமைப்புகளின் தகவல்கள் பல கனடிய அரச அமைப்புகள் மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு இலகுவில் புரியும் மொழியில் தந்து அந்த தகவல்கள் மக்களை சென்றடைவதை தமது கடமையாக கருதுகின்றன. இந்த அடிப்படையில் பல தகவல்கள் தமிழ் மொழியில் இணையத்தில் கிடைக்கின்றன. பொதுவாக இவை மொழிப் பெயர்ப்பாக இருந்தாலும், தமிழ் புலத்தில், இணையத்தில் இவை ஒரு குறிப்பிடத்தக்க தகவல் ஊற்றுக்களாக அமைகின்றன. தீயபழக்கங்களுக்கு அடிமையாதலுக்கும் உளநலத்திற்குமான நிலையம் தரும் தகவல்கள்: அறிவுமதி அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார். இவர் விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள சு.கீணணூரில் கேசவன்- சின்னப்பிள்ளை (சான்று இரெ.சுப்பிரமணியனின் 'அறிவுமதி கவிதைகள்- ஓர் ஆய்வு' என்னும் நூல்) இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாடல் எழுதிய படங்களின் வரிசை அறிவுமதியின் மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இந்த நூல் ஆண் ‍ பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. சுழற்றல் இணைப்பு சுழற்றல் இணைப்பு அல்லது டயல்-அப் ("Dial-up") இணைப்பு எனபது தொலைபேசியூடாக இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும். இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் இணையத்தில் இணைய Cross Over Cable பயன்படுத்தப்படும் இக் கேபிளானது கணினிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள படத்தைப் போன்று வயர்களை இணைப்பதன் மூலமும் ஆக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் கணினிகள் டயலப் இணைப்பில் இணைய முடியும் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பும் அதற்கு மேற்பட்ட கணினிகளும் ஒரே இணைய இணைப்பைப் இணைய இணைப்பைப் பகிர்தல் மூலம் பகிரமுடியும். மேலாண்மை முகாமைத்துவம் அல்லது மேலாண்மை என்பது ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும் இயலாகும். அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (அ) மேலாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம், நிதி வளம், பொருண்மை வளம், புலமைசார் வளம், கட்புலனாகா வளம் ஆகிய வகைகளைக்குறிக்கும். பல அறிஞர்கள் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர். என்றி ஃபயோல் (1841–1925) என்பவர் மேலாண்மை என்பது ஆறு வித செயல்களை உள்ளடக்கியதாக குறிப்பிட்டார். மேரி பார்க்கர் ஃபாலட் (1868–1933), என்பவர் முகாமைத்துவத்திற்கான வரைவிலக்கணத்தை "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாடு" என முன்வைத்தார். எனினும் பலர் இந்த வரைவிலக்கணம் மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டதாக கருதினர். "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" எனும் சொற்றொடர் மேலாண்மையின் விரிந்த செயல்பாடுகளையும், காலத்துக்கு காலம் மாறி வரும் கருத்தினையும் குறிக்கிறது. இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும். பொதுவாக நடைமுறையினில் நிர்வாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது, ஆயினும் நிர்வாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும். மேலாளர்கள் (Managers) ஒரு வேலையை அல்லது பணியை தாமே செய்வதில்லை மாறாக அவர்கள் அந்த பணியை யார் சிறப்பாக செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவ்வாறு ஒப்படைப்பு பெற்ற நபரே அந்த பணியை செய்து முடிக்கிறார். மேலாளரை பொறுத்தவரை அந்த வேலை உரிய முறையில் செய்து முடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் திருக்குறளில் "தெரிந்துவினையாடல்" என்ற அதிகாரத்தில் மேலாண்மை பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலாண்மையை விளக்கும் அந்த குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த குறளின் பொருளாக மு. வரதராசனார் குறிப்பிடுகிறார். இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக என்பது பரிமேலழகர் உரையாகும். நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். என்றி ஃபயோல் கருத்துப்படி: என்பன முகாமைத்துவ கருமங்களாகும். திட்டமிட்டப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்துகையில் பாதையில் இருந்து யாரேனும் அல்லது ஒரு சில பணிகளோ வழுவுவதாகத் தோன்றினால் அவற்றை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செலுத்துவது கட்டுப் படுத்துதல் எனப்படும். இவை தவிர ஊக்கப்படுத்தல், நெறிப்படுத்தல், ஊழியரிடல் போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் எடுத்துக்கொள்ளளாம். இலங்கை அரச வர்த்தமானி இலங்கை வர்த்தமானி ("The Sri Lanka Gazzette") அல்லது அரச வர்த்தமானி என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன் இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது . இது சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் ("Ceylon Daily News") இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும். பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை 1796 ஆம் ஆண்டில் கைப்பற்றினர். தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரித்தானிய அரசின் செய்திகளைக் கொண்டு செல்வதற்காக 1802 ஆம் ஆண்டில் "இலங்கை அரச வர்த்தமானி" ("The Ceylon Government Gazette") என்ற பத்திரிகையை முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்டனர். தமது குடியேற்ற நாடுகளில் இவ்வாறான பத்திரிகைகள் பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்டு வந்துள்ளன. 1784 இல் கல்கத்தா வர்த்தமானி ("Calcutta Gazette"), 1780 இல் சென் லூசியா வர்த்தமானி ("St. Lucia Gazette"), 1800 இல் கேப்டவுன் வர்த்தமானி ("Cape Town Gazette"), ஆப்பிரிக்க வர்த்தமானி ("African Advertiser") போன்றவை இவற்றில் சிலவாகும். இலங்கை வர்த்தமானியின் முதல் இதழ் 1802 மார்ச்சு 15 இல் வெளிவந்தது. இது டச்சு இலங்கைக் காலத்தில் 1737 இல் நிறுவப்பட்ட பதிப்பகத்தில் பிரான்சு டி புருயின் என்பவரால் அச்சிடப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு 1806 இலும் சிங்களப் பதிப்பு 1814 இலும் ஆரம்பிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசு இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அறிவித்ததோடு இலங்கை மேலாட்சியை இல்லாதொழித்தார். இதனையடுத்து அரச வர்த்தமானி 15,011 வது இதழுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த செயவர்தனா அரசு 1978 இல் புதிய அரசியலமைப்பை நிறுவியதை அடுத்து வர்த்தமானி மீண்டும் வெளியிடப்பட்டது. சரக்குக் கப்பல் சரக்குக் கப்பல் என்பது ஒரு துறைமுகத்தில் இருந்து இன்னொரு துறைமுகத்துக்குச் சரக்கு, மற்றும் பல்வேறு பொருட்களைக் காவிச் செல்லும் கப்பலாகும். பெருமளவிலான அனைத்துலக வணிகம் கப்பலூடாகவே நடைபெறுவதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான சரக்குக் கப்பல்கள் உலகின் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் பயணம் செய்கின்றன. சரக்குக் கப்பல்கள் பொதுவாக அவற்றின் தேவைக்கேற்ப விசேடமாக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. பொருட்களை ஏற்றி இறக்கும் வசதிக்காக அவற்றில் பாரந் தூக்கிகளும் பொருத்தப்படுவதுண்டு. சரக்குக் கப்பல்கள் பல்வேறு அளவுகளிலும் காணப்படுகின்றன. சரக்குக் கப்பல்களில் பல சிறப்பு வகைகள் உள்ளன. கொள்கலன் கப்பல்கள், தொகை காவிகள் (bulk carriers), தாங்கிக் கப்பல்கள் (tankers) என்பன இவற்றுள் அடங்குவன. கி.மு முதலாவது ஆயிரவாண்டுத் தொடக்கத்திலேயே, வணிகத்துக்காகப் பொருட்களை இடத்துக்கிடம் நீர் வழிகள் மூலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் பரவலாக நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. கடல் மூலமாகப் பொருட்களை நீண்ட தூரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆர்வமும், ஆண்டின் எல்லாக் காலங்களிலும் கடற்பயணம் நடத்த வேண்டியதன் தேவையும், மத்திய காலத்தில் கப்பல் வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்தின. கடற் கொள்ளைகள் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னரேயே பெரும்பாலான சரக்குக் கப்பல்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. "மணிலா கலியன்" (Manila galleons), "ஈஸ்ட் இண்டியாமென்" (East Indiamen) போன்ற கப்பல்கள் பெருமளவு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுக் காணப்பட்டன. கொள்கலக் கப்பல் காவிச் செல்லுகின்ற எல்லாப் பொருட்களையுமே, கொள்கலனாக்கம் (containerization) என்னும் முறை மூலம், பெரிய உலோகக் கொள்கலன்களில் அடைத்துக் காவிச்செல்லுகின்ற சரக்குக் கப்பல் கொள்கலக் கப்பல் எனப்படுகின்றது. இன்றைய வணிக ரீதியிலான பெருங்கடல் போக்குவரத்தில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. உலகின் முதல் கொள்கலன் கப்பல்கள், இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேலதிகமாக இருந்த தாங்கிக் கப்பல்களில் மாற்றம் செய்து உருவாக்கப்பட்டன. முதலாவது கொள்கலன் கப்பல் T-2 தாங்கிக் கப்பலிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட "ஐடியல்-எக்ஸ்" (Ideal-X) என்னும் கப்பலாகும். இது மல்கொம் மக்லீன் (Malcom McLean) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது. ஏப்ரல் 1956 ஆம் ஆண்டில், இதன் முதல் பயணத்தில், நியூ ஜெர்சியிலுள்ள நெர்வாக்குக்கும், டெக்சாசிலுள்ள ஹூஸ்டனுக்கும் இடையே 58 கொள்கலன்களைக் காவிச் சென்றது. இன்றைய கொள்கலன் கப்பல்கள் தேவைக்காக வடிவமைத்துக் கட்டப்பட்டவையாகும். இன்றைய பெருங்கடல்களில் பயணம் செய்யும் கப்பல்களில், எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அடுத்தபடியாக அளவில் பெரியவையாக இருப்பவை இவையே. இடம் வீணாகாது இருக்கும் வகையில் கொள்கலன் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றின் கொள்ளளவு "டீஇயூ" (TEU) க்களில் அளக்கப்படுகின்றது. இது இருபது-அடி சம அளவு அலகுகள் (Twenty-foot equivalent units) என்பதன் சுருக்கமாகும். இது குறிப்பிட்ட கப்பல் 20 அடி நீளம் கொண்ட எத்தனை கொள்கலன்களைக் கொள்ளக் கூடியது என்பதைக் குறிக்கும். இன்றைய கொள்கலன்களில் பெரும்பாலானவை 40 அடி நீளம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட கொள்கலன் கப்பல்களில் பாரந் தூக்கிகள் பொருத்தப்படுவதில்லை. இவற்றிலிருந்தான ஏற்றி இறக்கும் வேலைகளுக்குத் துறைமுகங்களில் பாரந்தூக்கி வசதிகள் தேவைப்படுகின்றன. 2900 "டீஇயு"க்களுக்குக் குறைந்த அளவுள்ள கப்பல்களில் பொதுவாகப் பாரந்தூக்கிகள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். பாரந்தூக்கிக் கப்பல் பாரந்தூக்கிக் கப்பல் என்பது, கடலில் பாரங்களைத் தூக்குவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஆகும். இன்றைய மிகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல்கள் பெரும்பாலும், கடற் பகுதியில் நடைபெறும் அமைப்பு வேலைகளில் பயன்படுகின்றன. இவற்றுள் பெரிய கப்பல்கள் பொதுவாகப் பகுதி-மூழ்கிகள் ("semi-submersibles"). பெப்ரவரி 11 பெப்ரவரி 12 பெப்ரவரி 13 ஆரியர் ஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆரியர் என்ற சொல் சமஸ்கிருத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் "அய்ரிய" என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் இனவாதத்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து ஐரோப்பாவில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், தெற்காசியாவில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது. தமிழ்நாட்டில் ஆரியர் பெப்ரவரி 14 கிரயக் கணக்கீடு அடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள்,சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல்,பதிவு செய்தல்,அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும்.இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும். கிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது. பெப்ரவரி 15 பெப்ரவரி 16 பெப்ரவரி 17 பெப்ரவரி 18 பெப்ரவரி 19 பெப்ரவரி 20 பெப்ரவரி 21 பெப்ரவரி 22 பெப்ரவரி 23 பெப்ரவரி 24 பெப்ரவரி 25 [[பகுப்பு:பெப்ரவரி]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] பெப்ரவரி 26 [[பகுப்பு:பெப்ரவரி]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] பெப்ரவரி 27 பெப்ரவரி 28 மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் விடுதலைப்புலிகளால் நவம்பர் 21, 1990 இல் ஆரம்பிக்கப்பட்டு, நவம்பர் 23, 1990 அன்று முழுமையாக அம்முகாம் கைப்பற்றப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிறீ லங்கா படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - ஏ-9 நெடுஞ்சாலை என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிறீ லங்கா படைகள் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்குளம் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள். சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான். வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவது. அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே இத்தாக்குதலும் நடந்தது. இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராஜ்ஜின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது. அப்போது பிரபலமாக இருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் 2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் தாக்குதலைச் செய்தன புலிப்படையணிகள். முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாம் புலிகள் வசமானது. இலங்கை இனப்பிரச்சினை காலக் கோடு பெல்கிறேட் பெல்கிறேட் (அல்லது பெல்கிரேடு) (Belgrade) சேர்பியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். 1403ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது. இந்த பெயருக்கு வெள்ளை நகரம் என்று பொருள். இது கடல் மட்டத்தில் இருந்து 116.75 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. தனுபே, சாவா ஆறுகள் இணையும் இடத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. காலப்போக்கில், இந்த நகர் விரிவாக்கப்பட்டது. பெல்கிரேடு தனியாட்சிப் பிரதேசம் ஆகும். நகரமன்றத்தில் 110 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் நான்காண்டு காலம் வரையில் பதவியில் இருக்கலாம். இவர்களில் 13 பேர் கொண்ட குழுவும், நகர மேயரும், துணை மேயரும் இணைந்து நகரத்தை நிர்வகிக்கின்றனர். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பதினான்கு துறைகளில் நிர்வாகம் செயல்படுத்தப்படுகிறது. செர்பியாவின் தேசிய அமைச்சரவைக் கூட்டமும் இந்த நகரில் நடத்தப்படும். இது 17 பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, 11,66,000 மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெல்கிறேடின் நகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் செர்பிய நாட்டவர். ரோமாக்களும், மொண்டிநீகிரோக்களும், யுகோசிலேவியர்களும், குரோட்டியர்களும், முஸ்லீம்களும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். யுகோசிலேவிய போரின் காரணமாக, குரோட்டியா, பொசுனியா, கொசொவோ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இங்கு வந்து சேர்ந்தனர். பிறர் பொருளாதார அளவில் முன்னேற இங்கு வந்து குடியேறினர். கிறித்தவ ஆர்தோடாக்சு சமயத்தை பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர். குறைந்தளவினர் இசுலாம், ரோம கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இது செர்பியாவின் நிதி நிர்வாக மையமாகத் திகழ்கிறது. செர்பியாவின் மத்திய வங்கியின் தலைமையகமும் இங்குள்ளது. இங்குள்ளவர்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் நிறுவனங்களிலும், 22,000 அதிகமானோர் சிறு நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். தகவல் தொழில்நுட்பத்திலும் முன்னணி நகரமாக விளங்குகிறது. மைக்ரோசாப்ட், ஏசுஸ், இண்டெல், டெல், ஹுவாவெய் உள்ளிட்ட நிறுவனங்களின் கிளை மையம் இங்குள்ளது. திரைப்பட விழா, கோடைகால விழா, புத்தக விழா உள்ளிட்ட பல விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. இங்கு வாழ்ந்த இவோ அன்றிக் என்ற எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றார். செர்பியாவின் திரைப்படத் துறை இங்குள்ளது. செர்பியாவின் கலை அறிவியல் கழகம், செர்பியாவின் தேசிய நூலகம் ஆகியன இங்கு அமைந்துள்ளன. இங்கு வெளிநாட்டு கலாச்சார மையங்களும் உள்ளன. இவற்றுள் ஸ்பெயின் கலாச்சார மையம், பிரான்சு கலாச்சார மையம், ஜெர்மன் கலாச்சார மையம், கனேடிய கலாச்சார மையம், சீன கன்பூசியஸ் கழகம், ஈரானிய கலாச்சாரக் கழகம், கலை அறிவியலுக்கான ரசிய மைஅய்ம், பிரித்தானிய மன்றம் ஆகியன குறிப்பிடத்தக்கன. பழங்கால கட்டிடங்கள் இங்குள்ளன. தேசிய அருங்காட்சியகம், நிக்கோலா பாசிக் சதுக்கம்., மாணவர் சதுக்கம், பாராளுமன்றம், பழைய அரண்மனை, புனித சாவா தேவாலயம் ஆகியன குறிப்பிடத்தக்கன. பெலி துவோர் எனப்படும் வெள்ளை மாளிகையில் அரிய வேலைப்பாடுகள் பல உள்ளன. அடா சிகன்லியா என்ற தீவு நகரினுள் உள்ளது. சவா ஆற்றினைக் கடந்து இந்த பகுதிக்குச் செல்லலாம். இங்கு விளையாட்டுப் போட்டிகளும், மனமகிழ் மன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இது தவிர மேலும் 16 தீவுகள் இங்குள்ளன. சுற்றுலாத் துறையினால் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது. உலகின் முன்னணி விளையாட்டுகள் விளையாடுவதற்கான வசதிகள் இங்குள்ளன. ஐரோப்பிய நீர் போலோ வாகைப் போட்டி, ஐரோபாஸ்கட், ஐரோப்பிய கைப்பந்து போட்டி உள்ளிட்ட பெரிய நிகழ்வுகள் இங்கு ஏற்படுத்தப்பட்டன். ரெட் ஸ்டார் பெல்கிரேடு, பர்டிசான் பெல்கிரேடு உள்ளிட்ட இரு கால்பந்தாட்ட குழுக்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவை. செர்பியாவின் தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் பெல்கிரேடில் உள்ளது. பல மனமகிழ் நிகழ்ச்சிகளை இயக்கும் ஆர்டிவி பிங்க் எனும் தொலைக்காட்சி பிரபலமானது. பொலிட்டிக்கா, பிலிக், வெசிர்ன்யே நோவொஸ்தி, தனஸ் உள்ளிட்ட நாளேடுகள் பிரபலமானவை. உலகளவில் வெளியாகும் பிளேபாய், காஸ்மோபோலிட்டன், எல்லே, நேசனல் ஜியோகிராபிக், மென்ஸ் ஹெல்த், உள்ளிட்ட இதழ்களுக்கு பெல்கிறேடு பதிப்பு உண்டு. பெல்கிரேடு இரண்டு பெரிய கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. பெல்கிரேடு பல்கலைக்கழகம் செர்பியாவின் பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று. இது ஐரோப்பாவிலேயே பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு எறத்தாழ 200 இளநிலை பள்ளிகளும், 85 உயர்நிலைப் பள்ளிகளும் இயங்குகின்றன. பெல்கிரேடில் போக்குவரத்து வசதி உள்ளது. பேருந்துகளும், ரயில் போன்ற வடிவில் உள்ள டிராம் வாகனங்களும் உள்ளன. இரயில் தடங்களும் உள்ளன. பெல்கிரேடு துறைமுகம் தனுபே நகரில் உள்ளது. பெல்கிரேடு நிக்கோலா டெஸ்லா விமான நிலையம் வான்வழிப் போக்குவரத்திற்கு உதவுகிறது. காத்தபுருசன் காத்தபுருசன் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மினி, அரன்முல்ல பொன்னம்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர் 1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா) 1997 மும்பை சர்வதேச திரைப்பட விழா (மும்பை,இந்தியா) மதிலுகள் மதிலுகள் "(Walls)" (1989) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி, முரளி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தக் கதை முழுக்க முழுக்க சிறைச்சாலை வளாகத்தில் நடப்பதாக உள்ளது. இக்கதையின் நாயகன் ஒரு சிறைக்கைதி நாயகியும் ஒரு கைதிதான் ஆண் கைதிகளையும், பெண்கைதிகள் இருக்கும் சிறையை ஒரு மதில் சுவர் பிரித்திருக்கும். அதிகாலை தூக்கிலிடப்படப் போகும் கைதிக்குத் தேநீர் வேண்டுமென்று ஒரு சிறைக் காவலர் இவரின் சிறைக் கம்பிகளைத் தட்டிக் கேட்கிறார். உடனே எழுந்து தேநீர் போட்டுக் கொடுப்பதோடு அவர் மனநெருக்கடியைக் குறைக்க தன்னிடமிருந்து ஒரு பீடியையும் எடுத்துக்கொடுப்பார். தினந்தோறும் இவரின் உரையாடல்களைக் கேட்டுச் சிரிக்கும் ஆயுள்தண்டனை பெற்ற பெண்ணொருத்தியின் குரலும், ஆண்கள் சிறையின் மதிலுக்கு அப்பால் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஒலிக்கும். இவர் `யாரது?’ என்று கேட்க, இப்படியாக அவர்கள் உரையாடல் தொடர நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குரல்களின் வழியே இருவருக்கும் இடையிலான நட்பு தழைக்கும். அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்துக்கொள்ள இருந்த நேரத்தில், நாயகனான மம்முட்டிக்கு விடுதலை கிடைக்கப் போகும் செய்தியைச் சொல்வார் ஒரு சிறைக் காவலர். அவரிடம், `யாருக்கு வேண்டும் விடுதலை?’ என்பார் மம்முட்டி. மதிலுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண்ணை இயக்குநர் கடைசி வரை நமக்குக் காட்டவே மாட்டார். ஆனால் நாயகன் விடுதலையானது தெரியாமல் மதிலுக்கு அப்பால் வழக்கம்போல அந்தப் பெண் அங்கு வருவதை குறிப்பாக இயக்குநர் காட்டுவார். இத்துடன் திரைப்படம் நிறைவடையும். 1990 வெனிஸ் திரைப்பட விழா (இத்தாலி) 1990 தேசிய திரைப்பட விருது (இந்தியா) 1990 அமியென்ஸ் சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் (பிரான்ஸ்) 2002 ஔபெர்விலேர்ஸ் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா (பிரான்ஸ்) எலிப்பத்தயம் எலிப்பத்தயம் ("The Rat Trap") (1981) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜலஜா, கரமன்ன ஜனார்த்தனன் நாயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1982 பிரித்தானியா திரைப்பட சமூகம் (ஐக்கிய இராச்சியம்) 1982 லண்டன் திரைப்பட விழா (ஐக்கிய இராச்சியம்) 1982 தேசிய திரைப்பட விருது (இந்தியா) அகந்துக் அகந்துக் (or The Stranger) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உட்பால் டத், விக்ரம்ஜித் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1992 தேசிய திரைப்பட விருது: அடிலெயிட் பல்கலைக்கழகம் அடிலெய்ட் பல்கலைக்கழகம் (University of Adelaide) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிக பழையதும் தெற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரியதுமான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (Australian Catholic University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இதன் வளாகங்கள் சிட்னி, பிறிஸ்பேன், கன்பரா, பல்லாரற், மெல்பேண் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் ("Australian National University") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசால் தொடங்கப்பட்டது. பல்லாரற் பல்கலைக்கழகம் பல்லாரற் பல்கலைக்கழகம் (University of Ballarat) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் பல்லாரற் நகரத்தில் அமைந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொண்ட் பல்கலைக்கழகம் பொண்ட் பல்கலைக்கழகம் (Bond University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் றொபினா நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம். கன்பரா பல்கலைக்கழகம் கன்பரா பல்கலைக்கழகம் (University of Canberra) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு வளாகம் பிறிஸ்பேன் நகரிலும் உள்ளது. மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (Central Queensland University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரொக்ஹாம்ப்ரன் நகரத்தில் அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம் சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம் (அல்லது சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம்) ("Charles Darwin University") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று. வட ஆஸ்திரேலியா மாநிலத்திலுள்ள டார்வின் நகரில் உள்ளது. இது சனவரி 1, 2004 இல் வட ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் (NTU), அலிஸ் ஸ்பிறிங்ஸ் மத்திய கல்லூரியை ஒன்றிணைத்து இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கினர். ஆங்கிலேய அறிவியல் அறிஞரான சார்ல்ஸ் டார்வினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் (Charles Sturt University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் வளாகங்கள் பல நகரங்களில் அமைந்துள்ளன. கேர்ட்டின் பல்கலைக்கழகம் கேர்ட்டின் பல்கலைக்கழகம் (Curtin University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான ஜோன் கேர்ட்டினின் பெயர் சூட்டப்பட்ட இது மேற்கு ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். வெளிநாடுகளிற் கற்கும் 9,000 மாணவர்கள் உட்பட சுமார் 39,000 க்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கற்கிறார்கள். டீக்கின் பல்கலைக்கழகம் டேகின் பல்கலைக்கழகம் (Deakin University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகங்கள் மெல்பேர்ண் உட்பட சில நகரங்களில் உள்ளன. 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பிரதமரான ஆல்பிரட் டீக்கினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு கிட்டத்தாட்ட 35,000 மாணவர்கள் உயர் கல்வி பயிலுகின்றனர். எடித் கோவன் பல்கலைக்கழகம் எடித் கோவன் பல்கலைக்கழகம் (Edith Cowan University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதற் பெண் பாராளுமன்ற உறுப்பினரான எடித் கோவனின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது. பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிரிப்பித் பல்கலைக்கழகம் கிரிப்பித் பல்கலைக்கழகம் (Griffith University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேன் நகரத்தில் அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் (James Cook University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் டவுன்ஸ்வில் நகரத்தில் அமைந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. லா ட்ரோப் பல்கலைக்கழகம் லா ட்ரோப் பல்கலைக்கழகம் (La Trobe University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்குவாரி பல்கலைக்கழகம் மக்குவாரி பல்கலைக்கழகம் (Macquarie University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு வெளியான மக்குவாரி பல்கலைக்கழகச் சட்டம் வெளியானதைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது. வளாகத்திற்கு பேருந்து, தொடருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகமும் உள்ளது. மெல்பேர்ண் பல்கலைக்கழகம் மெல்பேர்ண் பல்கலைக்கழகம் ("University of Melbourne") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய பல்கலைக்கழகமாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொனாஷ் பல்கலைக்கழகம் மொனாஷ் பல்கலைக்கழகம் (Monash University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் கிளேய்ரன் நகரத்தில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேர்டொக் பல்கலைக்கழகம் மேர்டொக் பல்கலைக்கழகம் (Murdoch University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பரப்பளவில் பெரியது இதுவாகும். தஞ்சாவூர் ஓவியப் பாணி தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களில் வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களின் ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களின் மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரின் மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது. சோழர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், விஜயநகரப் பேரரசின் நாயக்கர்கள், திருச்சி, மற்றும் மதுரை நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன. பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சாவூர், மதுரை நகரங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள் ("moochys") எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார். இந்தப் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாகப் படைக்கப்பட்டன. இவர்களை அக்காலத்து அரசர்கள் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி கலைகளில் பெரும் பற்றுக் கொண்டவர். ஓவியர்களுக்குப் போதிய அளவு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார்.மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது. இவர் காலத்தில் தஞ்சாவூர் நிர்வாகம் முற்றாகவே ஆங்கிலேயர் வசம் சென்றிருந்தது. எனினும், சரபோஜி பெயரளவில் மன்னராக இருந்தார். இவரது அரண்மனையிலிருந்த ஓவியங்கள் மூலமாக அக்காலத்திய தஞ்சாவூர்ப் பாணிபற்றி அறிந்த ஆங்கிலேயர் பலர் அவற்றை வரைந்தவர்களை அணுகி ஓவியங்களை வரைந்து பெற்றுக்கொண்டனர். இக்காலத்திலேயே ஆங்கிலேயரின் விருப்பத்திற்கு ஏற்ப, மேற்கத்திய நுட்பங்களையும் கலந்து ஓவியங்கள் வரையப்பட்டன. நுட்பங்களில் மட்டுமன்றி, உள்ளடக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் கடவுளரையும், அரசர்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையும் பழக்கம் மாறி, சாதாரண மக்களின் வாழ்க்கையும் ஓவியங்களிலே இடம் பெறத்தொடங்கின. இன்று, இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அந்த ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன. இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் ஓவியங்களில் கருப்பொருள் என்பது இந்து மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. கடவுளரின் உருவங்கள் மற்றும் புராணக்கதை மாந்தர்களின் உருவங்கள் அதில் வரையப்பட்டன. வடிவங்கள் உறைந்த தன்மையிலேயே இருந்தன. இதை, முகம் ஓவியமாக்கப்படும் (Portrait) மேலை நாட்டு ஓவியப் பாணியுடன் ஒப்பிடலாம். அசைவுகள், நிகழ்வுகள் போன்றவை தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன்’, ‘ஆலிலைமேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ என்பதான ஓவியங்கள் திரும்பத் திரும்பப் படைக்கப்பட்டன. மக்களால் அவை விரும்பி வாங்கப்பட்டன. பொதுவாகப் பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன் கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல் கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும். இப்பாணி ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர் சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும். திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தை அமைக்கும்.இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளியை வீசும். தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த வண்ணங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாகக் கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பின்னணி வண்ணத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண் கடவுள்களுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு வண்ணம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது. தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கைச்சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு வண்ணங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றப்படுகிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர். பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் சரிகை திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன. தஞ்சாவூர் ஓவியங்களின் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம். தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகைகளை ஒருங்கிணைத்து, புளியங்கொட்டையை அரைத்துக் கிடைக்கும் பசைகொண்டு பலகையின் மேல் தடிமனான அட்டையைப் பிசிரு இன்றியும், காற்றுக்குமிழ் இல்லாதவாறும் ஒட்டுவார்கள். நன்கு காய்ந்த பலகையின் மீது இரண்டு அடுக்குகளாகத் துணியை ஒட்டிக் காயவைப்பதுடன் முதல்நிலை முடியும். பொடி செய்யப்பட்ட கல்லுடன் கிளிஞ்சலைப் பொடி செய்து கிடைக்கும் சுண்ணாம்பை நன்கு கலந்து, அதில் கோந்து சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து, பலகையின் மேல் இரண்டு மூன்று முறை பூசுவார்கள். வழுவழுப்பான கல்கொண்டு பலகையின் பரப்பை நன்கு தேய்த்து தடையற்ற வழுவழுப்பான தளமாக ஆக்குவார்கள். தற்போது நவீன கலைஞர்கள் ஒட்டுப்பலகையை (பிளைவுட்) பயன்படுத்துகின்றனர். முன்பே துணி அல்லது தாளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களைக் கித்தான் பரப்பில் பொருத்தி, அதன்மேல் விளம்பில் பதிவெடுப்பார்கள். அதில் அனைத்து வடிவங்களின் கோடுகளும் இடம்பெறும். பின்பு தூரிகைகொண்டு வடிவங்களை வண்ணத்தால் வரைந்துகொள்வார்கள்.தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்துவதுண்டு. கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியைப் பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசிச் சிறிதுபோலப் புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையைத் திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்குப் பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள். தற்காலத்தில் இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. தஞ்சாவூர் பாணி வரையும் ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன. பழைய தஞ்சை ஓவியத் தொகுப்புகள் கடவுள் உருவங்களை வரைவதோடு நின்றுவிட்டன. ஆனால் இன்றைய காலத்தில் நவீன கலைஞர்கள் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுகிறார்கள். அவர்களும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஆட்சி செய்யும் கடவுள்களை வரைந்து காட்டத் தொடங்கியுள்ளனர். மாமனிதர் விருது மாமனிதர் விருது என்பது தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக, உரிமைக்காக, விடுதலைக்காக, விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தமிழருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட அதி உயர் விருதாகும்.. விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சிபாரிசு செய்யும். பிரபாகரன் தலைமையில் கூடும் அம்முக்கியக் குழு, தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் (University of New England, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆர்மிடேல் நகரத்தில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தலைநகரல்லாத நகரொன்றில் தொடங்கப்பட்ட முதற் பல்கலைக்கழகம் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் வெளிவாரிக் கல்வியை மிக நீண்டகாலம் வழங்கிவரும் பல்கலைக்கழகமும் இதுவாகும். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (University of New South Wales) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1878 இலிருந்து சிட்னி தொழில்நுட்பக் கல்லூரியாகச் செயற்பட்டுவந்ததாகும். நியூகாசில் பல்கலைக்கழகம் (ஆத்திரேலியா) நியூகாசில் பல்கலைக்கழகம் ("University of Newcastle, Australia") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரத்தில் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நொற்றே டேம் பல்கலைக்கழகம் நொற்ரே டேம் பல்கலைக்கழகம் (University of Notre Dame Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ஃபிறீமான்டில் நகரத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு தனியார் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (University of Queensland) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேன் நகரத்தில் அமைந்துள்ளது. 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Queensland University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள மிகப்பெரிய பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேன் நகரத்தில் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் ("RMIT University") அல்லது அதிகாரபூர்வமாக ராயல் மெல்பேர்ண் தொழில்நுட்பக் கழகம் ("Royal Melbourne Institute of Technology") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது விக்ரோறியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1887 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் (University of South Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட், வையல்லா நகரங்களில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் (Southern Cross University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பிரதான வளாகம் லிஸ்மோரில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (University of Southern Queensland) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரூவூம்பா நகரத்தில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம் சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம் (University of the Sunshine Coast) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சன்சைன் கோஸ்ற் நகரத்தில் அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேண் நகரத்தில் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிட்னி பல்கலைக்கழகம் சிட்னிப் பல்கலைக்கழகம் ("University of Sydney") ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலியாவின் எட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம். தாஸ்மானியா பல்கலைக்கழகம் தாஸ்மானியா பல்கலைக்கழகம் (University of Tasmania) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தாஸ்மானியா மாநிலத்தில் கோபார்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (University of Technology, Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். விக்டோரியா பல்கலைக்கழகம் விக்ரோறியா பல்கலைக்கழகம் (Victoria University, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேண் நகரத்தில் அமைந்துள்ளது. 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் (University of Western Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Western Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வல்லன்கொங் பல்கலைக்கழகம் வல்லன்கொங் பல்கலைக்கழகம் (University of Wollongong) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓர் இரவு ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக ஒரிரவு என்னும் நாடகத்தை அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் வெற்றியடைந்த அளவுக்கு திரைப்படம் வெற்றியடையவில்லை. ஆதாமின் பாலம் இராமர் பாலம் ("Rama's Bridge") அல்லது ஆதாமின் பாலம் ("Adam's Bridge") என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது இராம சேது ("Ram Setu") என்றும் அழைக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் "இராமகர்மபூமி இயக்கம்" ஈடுபட்டுள்ளது. புராணமான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகை கல் மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் ("geological survey of India") நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அராபிய புராணத்தின்படி 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால், ஆதாம் மலையுச்சியை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாக உள்ள குறிப்பைக் குறிப்பிட்டு அதன்படி "ஆதாம் பாலம்" எனப் பெயரிடப்பட்டது. சத்துருக்கொண்டான் படுகொலை சத்துருக்கொண்டான் படுகொலை ("Sathurukondan massacre") 1990 செப்டம்பர் 9 அன்று இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர். சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்டம்பர் 9 மாலை 5:30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கருதப்படும் ஒரேயொருவர் கந்தசாமி கிருஷ்ணகுமார் (அகவை 21). இவர் பின்னர் கொடுத்த சாட்சியத்தில்: காயமடைந்த கிருஷ்ணகுமார் இருட்டில் மறைந்து ஒருவாறு தப்பி வெளியேறினார். மொத்தம் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிட்ணர் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சனாதிபதியை வேண்டிக்கொண்டார். இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. இலங்கைக் கடற்படை இலங்கையின் முப்படைகளுள் ஒன்றான இலங்கைக் கடற்படை 1937 இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து 1972 இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது. சுனாமி இலங்கையைத் தாக்கியபோது திருகோணமலைக் கடற்படைத்தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளானது இதை உடனடியாக காலியில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதும் எடுக்காத்தாலேயே சுனாமியில் இலங்கையின் தென்பகுதியிலும் பல பொதுமக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர். இலங்கையின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சவும் தனது இரண்டாவது மகனைக் கடற்படையில் இணைத்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டபோதும் பின்னர் இலங்கை அரச செலவில் மேற்படிப்பிற்காக இலண்டனிற்கு அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகளின் அமைப்பான கடற்புலிகளுடன் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன. மட்டக்களப்பு ஈழநாதம் மட்டக்களப்பு ஈழநாதம் மட்டகளப்பில் கொக்கட்டிச்சோலையில் இருந்து வெளியாகும் பத்திரிகையாகும். இது முன்னர் தமிழ் அலை என அறியப்பட்ட பத்திரிகையாமெனினும் இதை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா குழுவினர்) வெளியிடத் தொடங்கியதால் இது மட்டக்களப்பு ஈழநாதம் என வெளிவரத்தொடங்கியது. இது வார இதழ் மற்றும் வார இறுதியில் சிறப்புப் பதிப்புக்களாக வெளிவருவதோடு இணையத்திலும் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை ("St. Michael's College National School") மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கத்தோலிக்க கிறித்தவப் பாதிரிமார்களினால் தனியார் பாடசாலையாக நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு அரச பாடசாலையாக, "1AB" தர தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது. இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இது தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவினையும் தரம் 6 தொடக்கம் 13 வரையான இடைநிலை, மேல் நிலை பிரிவுகளையும் தனித்தனி வளாகங்களில் கொண்ட தேசிய பாடசாலையாகும். 1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆயரினால் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் 500.00 ரூபாயுடன் மட்டக்களப்பில் ஆண்கள் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பட்டார். புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை, புனித மரியாள் வட்டார மொழிப் பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் ஆங்கிலப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை புனித மிக்கேல் கல்லூரியாக மாற்றம் பெற்றது. தற்போது உள்ள புளியந்தீவு புனித மரியாள் பேராலய வளவில், பஸ்கால் முதலியாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் 1873 இல் கட்டட வேலைகள் ஆரம்பமாகியது. ஜோசப் ஆபிரகாம் என்பவரை முதலாவது பாடசாலை அதிபராகக் கொண்டு மூன்று ஆசிரியர்களுடனும் 57 மாணவர்களுடனும் பாடசாலை ஆரம்பமாகியது. 1895 இல் பிரான்சிய இயேசு சபைத் துறவிகளினால் பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. வண பிதா பேர்டினன்ட் பொனெல் பாடசாலையின் புதிய கட்டட அமைப்பிலும் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றினார். இதற்கான பிரான்சிலிருந்து நிதி உதவியும், மூன்று மரிஸ்ட் சகோதரர்களும் பாடசாலை தேவைக்காக வரவழைக்கப்பட்டனர். அப்போது எஸ். சவேரிராஜா என்பவரின் தலைமையில் சாரணர் அமைப்பு தொடங்கப்பட்டது. வண பிதா பேர்டினண்டினால் மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டது. இது மட்டக்களப்புக்கு மின்சாரத்தை அறிமுகம் செய்வதில் முன்னோடி முயற்சியாக அமைந்தது. 1909 இல் பழைய மாணவர் சங்கம் அருட்திரு. டி. அராசினால் ஆரம்பிக்கப்பட, முதலாவது தலைவராக அருட்திரு. எஸ். இலாசரஸ் இருந்தார். 1912 இல் இளையோர் கேம்பிரிச் பரீட்சையில் முதலாவது தொகுதி மாணவர்கள் 100% என்ற பெறுபேற்றில் தேரினர். 1915 இல் மக்கலம் மணடபம் திறந்து வைக்கப்பட்டு, இலங்கைத்தீவில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடமாக அங்கிகரிக்கப்பட்டது. இவ் ஆய்வுகூடத்திற்கான பொருட்கள் பல வண பிதா பொனெல் மூலம் கிடைக்கப்பெற்றது. ஐரோப்பாவிலும், பிரான்சிலும் ஏற்பட்ட போரினைத் தொடர்ந்து பிரான்சிய இயேசு சபையினர் பலர் இறக்கவும், சிறையில் அடைபடவும் நேரிட்டது. இதனால், உரோமில் இருந்த இயேசு சபைத் தலைவர் ஐக்கிய அமெரிக்க நியூ ஒலீன்சிலிருந்த இயேசு சபையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். முதலாவது ஐக்கிய அமெரிக்க இயேசு சபை அருட்தந்தை ஜோன் டி. லின்கான் 1933 இல் அனுப்பப்பட்டார். அப்போது அதிபராக இருந்த உள்ளூர் இயேசு சபை அருட்தந்தை எஸ். மரியான் அவரை வரவேற்றார். அடுத்த வருடம் மேலும் இரு அமெரிக்க இயேசு சபையினரான அருட்தந்தையர்கள் ஜே. ஜே. ஓ கொன்னர், ஜே. டபிள்யு. லாங் ஆகியோர் வந்தடைந்தனர். 1935 இல் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தனர். அவர்களில் பின்னர் மறைமாவட்டத்தின் ஆயரான அருட்திரு. இக்னேசியஸ் கிளென்னியும் அடங்குவார். அருட்திரு. இம்மானுவேல் கிரவுதர் 1937 இல் முதல்வராக நியமிக்கப்பட அருட்திரு. பொனெல் வெறொரு பங்கிற்கு மாற்றலாகினார். அக்காலத்தில் அருட்திரு. பெங்லரும் ஹமில்டனும் கூடைப்பந்தாட்டதை அங்கு பரீட்சித்துப் பார்த்தனர். 1946 இல் ஆயர் ரொபிசேஸ் மரணமடைய மறைமாவட்டமும் பாடசாலையும் அமெரிக்க இயேசு சபையினரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இயேசு சபையினர் இலங்கைக்கு வரத்தொடங்கினர். அவர்களில் அருட்தந்தையர்கள் வெபர், மக்நயர், கெனே ஆகியோரும் உள்ளடங்குவர். 1948 இல் அருட்தந்தை சோமர்ஸ் முதல்வராக இருக்க, அருட்தந்தை கிரவுதர் அதிபராக இருந்தார். அடுத்த வருடத்தில் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தடைந்தனர். அவர்களில் பின்பு முதல்வர்களான அருட்தந்தை ஜி. எச். ரேவூட், பி. எச். மில்லர் ஆகியோரும் அடங்குவர். இக்காலகட்டத்தில் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்குத் தடை விதித்தது. 1955 இல் அரசாங்கம் புதிய கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது. மிகவும் சொற்பமானோருக்கே நுழைவிசைவு வழங்கப்பட்டது. 17 வருட அதிபர் சேவையில் இருந்து அருட்தந்தை ஓய்வுபெற, கடினத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின் அருட்தந்தை ரேவூட் அதிபராக்கப்பட்டார். அரசாங்கம் தகுதிவாய்ந்த இலங்கை ஆசிரியர்கள் தேசிய மொழிகளைப் கற்பிக்க முடியும் என தீர்மானம் கொண்டு வந்தது. உதவி பெற்ற பாடசாலைகளை பெற்றுக் கொள்ள 1959 இல் அரசாங்கம் முடிவெடுத்தது. இதனால், 1961 இல் பாடசாலை கட்டணம் செலுத்தப்படாத தனியார் பாடசாலையாக செயற்படுத்தப்பட்டது. இதற்கான நிதி உதவியினை பயனாளிகளும், பெற்றோரும், விரும்பிகளும், அதற்கு மேலாக நியூ ஓலீன்சில் இருந்தும் கிடைத்தது. அப்போது அருட்தந்தை மில்லர் முதல்வரானார். 1970 நடுப்பகுதி வரை இது நீடித்தாலும் மூன்றில் ஒரு பகுதி நிதித் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது. இதனால் மாற்று வழி இல்லாமல் போகவே அரசாங்கத்திடம் பாடசாலை கையளிக்கப்பட்டது. புனித மிக்கேல் கல்லூரியின் கடைசி முதல்வராக பெப்ருவரி 2, 1970 இல் நியமிக்கப்பட்ட அருட்தந்தை பிரட்ரிக் லியோன் காணப்படுகிறார். புனித மிக்கேல் கல்லூரி தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்ற பாடசாலையாகும். இங்கு பணியாற்றிய அமெரிக்க இயேசு சபைத் துறவிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடைப்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி "வெல்லப்பட முடியாத அணி" எனும் அளவிற்கு இத்துறையில் சிறந்து விளங்கியது. பல துறவிகள் கூடைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்க உதவினர். அவர்களில் இயேசு சபைத் துறவிகளான அருட்தந்தை ஹெரல்ட் வெபர், அருட்தந்தை இயூயின் ஜோன் ஹேர்பட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அருட்தந்தை ஹெரல்ட் வெபர் மட்டக்களப்பு ஆற்றிய சேவை கெளரவிக்கும் விதத்தில் அரங்கு விளையாட்டு அரங்கு "வெபர் அரங்கு" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பாடசாலையானது மட்டக்களப்பில் பல துறைசார் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறிப்பிடத்தக்க சிலர் பின்வருமாறு: பிளேபோய் பிளேபோய் வயது வந்தோருக்கான அமெரிக்க இதழாகும். இந்த இதழ் பெண்களை கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் காட்சிப்படுத்துகின்றது. 1953 இல் ஹூக் ஹெஃப்னர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இது பிளே போய் தொழிலகம் என்னும் நிறுவனமாக தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதிப்புக்கள் வெளிவருகின்றன. பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன. 2016லிருந்து அட்டையில் கவர்ச்சிப் படங்கள் இடம் பெறாது என பிளேபாய் நிறுவனம் அறிவித்துள்ளது. பிஜி 13 என்ற பதின்மூன்று வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் இதழ்கள் வெளிவந்தன. இணைய வளர்ச்சியின் காரணமாக பிளேபோயின் விற்பனை குறைந்ததுள்ளது. தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு சிறேதொகோ தீபகற்பம் சிறேதொகோ தீபகற்பம் (知床半島 ஷிறேடொகோ அண்தோ) யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒகோட்ஸ் கடலை நோக்கி ஊடுருவி காணப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இப்பகுதியை 2005 ஜூலை 15 அன்று உலக உரிமை பிரதேசமாக பிரகடணப்படுத்தியது. சிறேதொகோ என்ற பெயர் இப்பிரதேசத்தின் ஆதி குடிகளின் மொழியான ஐனு மொழியில் உலக முடிவு என்ற அர்த்தம் தரும் பதத்தில் இருந்து யப்பானிய மொழிக்கு மறுவியதாகும். தீபகற்பத்தின் அந்ததில் காணப்படும் சிறேதொகோ முனை தொடக்கம் தீபகற்கபத்துக்கூடாக சங்கிலித்தொடரான எரிமலைகள் காணப்படுகின்றன. இவ்வெரிமலைத் தொடரில் மிக உயரமான கொடு முடியான உதபெட்சுதகே, மற்றும் சிறேதொகோய்யோசான் என்ற கொடுமுடிகள் பிரசித்தமானவை. இங்குள்ள எரிமலைகளில் இருந்து பல வெண்நீர் ஊற்றுகள் தோற்றம் பெறுகின்றன இவ்வூற்றுகளுக்கு அருகில் ஒன்சென்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் ஒன்சென்சன்கள் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இங்கு கூம்பு வடிவ ஊசியிலை தாவரங்களும் அகன்ற இலை தாவரங்களும் கலப்பாக காணப்படுகின்றன. நரிகள், பிரவுன் கரடிகள் யப்பானிய மான்கள் போன்றவை இங்கு பரவலாக காணப்படுகின்றதோடு கடல்ச் சிங்கங்கள் அடிக்கடி கடற்கரைக்கு வந்து போவது வழக்கமாகும். இப்பிரதேசத்தின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையிலும் வனவிலங்களின் பாதுக்காப்புக்காகவும் 1964 இல் இப்பிரதேசம் பாதுக்காக்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, சிறேதொகோ தேசிய வனம் நிறுவப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கன சிறிய பிரதேசம் தவிர ஏனைய பகுதிகளுக்கு மக்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஜோன் கட்பெரி ஜோன் கட்பெரி (John Cadbury, 1802 – 12 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1826 இல் திருமணம் செய்த முதல் மனைவி இரண்டாண்டுகளில் இறந்ததைத் தொடர்ந்து கட்பெரி 1932 இல் மீண்டும் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள. கட்பெரி 1861 இல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளே வியாபாரத்தை நடத்தினர். சிறேதொகோ தேசிய வனம் சிறேதொகோ தேசிய வனம் (கன் எழுத்து:知床国立公園 சிறேதொகோ கொகுரிட்சு கோயென்) சிறேதொகோ தீபகற்பத்தின் பெரும் பகுதியை அடைத்து அமைந்துள்ளது. யப்பானின் ஒக்கைடோ தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பிரதேசம் யப்பானில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும். இங்கு பெரும்பாலான பகுதிகளைக் கால் நடையால் மட்டுமே அணுக முடியும். இவ்வனம் பிரவுன் கரடிகளுக்கு பிரசித்தமானதாகும். மேலும் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யப்பான் உரிமை கோரும் குனசிறி தீவு இப்பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 2005 யுனெஸ்கோ இவ்வனத்தை உலக உரிமையாக அடையாளப்படுத்தியது. மேலும் குனசிறி தீவையும் சேர்த்து எல்லை கடந்த உலக உரிமை சமாதான பூங்காவாக அபிவிருத்தி செய்ய அறிவுறுத்தியது. ஆர்தர் கொனன் டொயில் சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859 – ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர். ஒன்சென் ஒன்சென் (温泉) யப்பானின் இயற்கை வெந்நீர் கொண்ட பொதுக் குளியல் அறைகளாகும். ஓன்சென் யப்பானிய கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு நாளைக்க்கு 12 மணித்தியாளங்கள் வேலைச் செய்வதை நோக்காகக் கொண்ட யப்பானியர்களுக்கு ஓய்வைக் கொடுக்கும் முக்கிய இடமாகும். மேலும் இங்கு ஆடையின்றியே குளியல் மேற்கொள்ளபட வேண்டும் என்பது ஒரு கட்டாய விதியாகும். ஆண் பெண்களுக்கு தனியான பிரிவுகள் காணப்படுவதோடு இருபாலருக்கும் பொதுவான ஒன்சென்களும் காணபபடுகின்றன. ஒன்சென் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாவது வழக்கமாகும். ஒன்சென்கள் கொரியாவிலும் பிரபலமாக காணப்படுகிறது. மாவீரர் நாள் (தமிழீழம்) தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு. விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார். போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன. புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது. மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற "ஏறுது பார் கொடி ஏறுது பார்..." என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும். உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள். "மொழியாகி, எங்கள் மூச்சாகி - நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!" தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும். மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது. இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது: மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர். அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள். மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது. தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். சுசி சுசி அல்லது சுஷி ("Sushi"; கன் எழுத்து:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும். சுசியின் வகை அது தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தயாரிக்கபடும் முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்; பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகளைக் கொண்டு சுசி வகைப்படுத்தப்படும் போது அது சோறுடன் பயன்படுத்தப்படும் மற்றை மூலப்பொருளின் பெயரை கொள்ளும். இதன் படி பல சுசி வகைகள் காணப்படுகின்றது. ஆல்பிரட் நோபல் ஆல்ஃபிரட் நோபெல் ((பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872), கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் (1805-1889), நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். அஜ்ஜோடி 1827 ல் திருமணம் செய்துகொண்டது .மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் (1630-1702) சந்ததியில் இருந்து வந்தவராகிறார். ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பத்தின்மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும். பல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். மேலும் "டார்பிடோ" சம்பத்தப்பட்ட பணியை தொடங்கினார்.. 1842 ஆம் ஆண்டில், அவர் குடும்பம் அவரை சேர்ந்தது. வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார். 1841-1842 காலத்தில், 18 மாதங்கள், நோபல் அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியான, ஸ்டாக்ஹோம் ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு சென்றார். இளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார். ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857 இல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய , தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார். குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக (1853-1856) ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம் (1831-1888), தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847 இல் கண்டுபிடிக்கப்பட்டது) பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார்; மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார். 3ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை1867 இல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார். நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884 ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார். நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார் மேலும் 350 காப்புரிமை களை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார். 1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட்டின் இரங்கலை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி குறிப்பிட்டதாவது "Le Marchand De La mort est Mort" ("மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்")என்பதாகும். 1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். மார்பு அவதியுற்று, நோபல் 1896 ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக , வீட்டில் இறந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார். தமிங்கிலம் தமிழ் மொழியின் பேச்சிலோ எழுத்திலோ ஆங்கில சொற்களின் பயன்பாடும் ஆங்கில இலக்கணக் கட்டமைப்பும் அதிகம் காணப்படும் பொழுது அந்த பேச்சையோ எழுத்தையோ தமிங்கிலம் எனலாம். தமிங்கிலிஷ், தங்லிஷ் என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம் ஆங்கிலத்தின் வட்டார மொழி வழக்கு அல்ல. இது தமிழ் மொழியின் திரிபே ஆகும். தமிங்கிலத்தை தமிழில் அதிக சமசுகிருதச் சொற்களின் பயன்பாட்டால் தோன்றிய மணிப்பிரவாள நடையோடு ஒப்பிடுவது தகும். சில தமிழர்கள் தமிழரோடு ஆங்கிலத்தில் உரையாடும்பொழுது தமிழ்ச் சொற்களை இடையிடையே பயன்படுத்துவதும் உண்டு. ஆங்கில காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் கல்வி, நிர்வாக, சட்ட, அரச மொழியாக இருந்தது. அது ஆங்கில மொழி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பரவ வழி வகுத்தது. தமிழ் மொழி பேச்சு வழக்கில் ஆங்கில மொழியின் பல சொற்களை உள்வாங்கியது. தமிங்கிலம் பேசுவதால், அதாவது அதிக ஆங்கில சொற்கள் பயன்படுத்திப் பேசினால், தம்மை படித்தவராக, அல்லது உயர் வர்க்கத்தவராக அடையாளப்படுத்தலாம் என்று தவறாக எண்ணிப் பலர் பயன்படுத்துகிறார்கள். இது இவர்களின் அறியாமையே. ஆங்கிலம் ஒரு பொருளீட்டு மொழி மட்டுமே என்பதை உணராததே ஆகும். இது காலனித்துவ காலத்தில் உயர் கல்வியை அல்லது உயர் பதவிகளை ஆங்கிலம் படித்தோர் மட்டும் பெற்றதன் தொடர்ச்சியான மனப்பாங்கு ஆகும். இன்று ஊடகங்களில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் தெரியாத அல்லது சரியான தமிழ் உச்சரிப்புத் தெரியாத தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைப் பின்பற்றி பலரும் தமிங்கிலம் பேசுகிறார்கள். இந்த இழிநிலையை நீக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளில் இத்தகைய இழிநிலை இல்லை. தமிழ் மொழியில் இலகுவாக உயர் கல்வி பெறும் வசதி இல்லை.. குறிப்பாக கணிதம், பொறியியல், வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியில் ஆக்கங்கள் அரிது. இதனால் அன்றாடம் பயன்படும் மொழியாக ஆங்கிலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ளது. இப்படி துறைசார் உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம் பேசுப்படுவது, அறிவியல் தமிழ் போதிய வளர்ச்சி பெறாமை காரணம் ஆகும். தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில் தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம் எனக் கருதுவோர் உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு. நாசரேத்து நாசரேத்து வடக்கு இசுரேலின் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். விவிலியத்தின் ஏற்பாட்டில் இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல கிறிஸ்தவ யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் "நெஸ்தர்"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 – 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் "நசரா" உண்மை என்ற பததில் இருந்து வந்ததாத வாதிடுவோரும் உள்ளனர். இது "நஸ்-ரீன்"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. வீரவில பன்னாட்டு வானூர்தி நிலையம் வீரவில பன்னாட்டு வானூர்தி நிலையம் ("Weerawila International Airport") என்பது இலங்கையில் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இலங்கை அரசுத்தலைவராக மகிந்த ராசபக்ச பதவியேற்றதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளான நவம்பர் 19, 2006 அன்று தெற்கிலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரவில என்ற இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வானூர்தி நிலையமானது 4 கிலோமீட்டர்கள் நீளமான ஓடுபாதை மற்றும் ஒரே நேரத்தில் 14 வானூர்திகளைத் தரிக்கும் வசதி போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதற்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு செலவிடவிருந்தது. இத்திட்டமானது 2009இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்திட்டம் பல சுற்றுச்சூழல் இடர்களைத் தோற்றுவித்ததை அடுத்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக அம்பாந்தோட்டையில் மத்தலை என்னுமிடத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்விமான நிலையம் தற்போது இலங்கை வான்படைத் தளமாக இயங்குகிறது. அசோக் குமார் (திரைப்படம்) அசோக் குமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது. போர்க்களம் சென்று வெற்றி வீரனாக வந்த தனது மகன் குணாளனை ("தியாகராஜ பாகவதர்"), தன் இளையாளான திசியரட்சதைக்கு ("கண்ணாம்பா") அறிமுகப்படுத்தினார் அசோகர் ("வி. நாகையா"). அப்பால் அவனுக்கு விரைவாகவே யுவராஜ பட்டாபிசேகம் செய்யவும் நினைத்தார். இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் ("டி. வி. குமுதினி") தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு பட்டாபிசேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்காது நிற்கவில்லை. அந்த பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது. மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திசியரட்சதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண் பழி சுமத்தினாள் திசியரட்சதை. குணாளன் நாடுகடத்தப்பட்டான். கர்ப்பவதியான காஞ்சனமாலாவையும் வெளியில் துரத்தினாள். குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் செய்து வெளியில் துரத்தினாள். கண்ணற்ற குணாளனும், திக்கற்ற காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்தித்து அங்கு கொஞ்ச நாள் தங்க, காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அங்கிருந்து குழந்தையுடன் ஊரூராக பிச்சை யெடுத்துப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று குழந்தை இறந்து விடுகின்றது. இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து சுகவீனமடைந்து, அரச மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிந்தார். திசியரட்சதை நஞ்சருந்தி மாண்டாள். புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றியிருந்தார். "உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ", "சத்வகுண போதன்", "பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்" ஆகிய பாடல்கள் மிகப் பிரபலான பாடல்களாகும். சசிமி சசிமி அல்லது சஷிமி (கன் எழுத்து: 刺身) சமைக்கப்படாத புதிய கடலுணவுகளைக் கொண்டு தாயாரிக்கப்படும், யப்பானிய உணவாகும். இதில் கடலுணவுகள் 2.5 சதம மீட்டர் அகலமும் 4 சதம மீட்டர் நீளமும் 0.5 சதம மீட்டர் தடிப்பும் கொண்ட பகுதிகளாக வெட்டப்பட்டு இத்துண்டுகளை தோய்த்து உண்பதற்கான சோஸ் (வசாபி கலக்கப்பட்ட சோயா சோஸ்) ஒன்றோடு பரிமாறப்படும். மீன் துண்டுகளுடன் சிலவேளைகளில் மெல்லியதாக வெட்டப்பட்ட இஞ்சியும் வழங்கப்படும். இது யப்பானில் மிகவும் பிரசித்தமான உணவாகும். சசிமி யப்பானிய பாரம்பரிய உணவில் பெரும்பாலும் முதலாவதாக உட்கொள்ளப்படும் சிற்றுணவாகும். ஆனால் இதுவே பிரதான உணவாகப் பரிமாறப்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகும். சசிமி ஏனைய உணவுகளின் சுவை நாவை பாதிக்கும் முன்னர் உட்கொள்ளப்பட வேண்டும். சசிமியின் சுவை அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கடலுணவுக்கேற்ப வேறுபடக் கூடியதாகும். கடலுணவுடன் முள்ளங்கிக் கிழங்கு சிறு கீற்றுகளாக சீவப்பட்டு பரிமாறப்படும். சசிமியுடன் பரிமாறப்படும் சோஸ் பொதுவாக சோயா சோஸ், வசாபி, தேசிக்காய்ச் சாறு போன்றவற்றின் கலப்பாகும். யப்பானியர்கள் வசாபியை தாங்களே சோயா சோஸில் கலக்க விரும்புவதால், இவை தனித்தனியாக பரிமாறப்பட்டு உணவுக்கு முன்னர் அவரவரே கலந்துக் கொள்வர். வசாபி சுவையூட்டியாக பயன்பட்டாலும் அது சமைக்கப்படாத கடலுணவில் இருக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. பொதுவான மூலப் பொருட்கள்: ஆக்டோபஸ் சிலவேலைகளில் சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டாலும் செமண் டூனா போன்றவை சமைக்கப்படாமலேயே பரிமாறப்படும். மேமன்கவி மேமன்கவி ("Memon Kavi", அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர். வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார். இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் "தமிழே என் மூச்சு" எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது "நாளைய நோக்கிய இன்றில்" கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார். பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், உருசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை ஓன்று தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அல்லாஹ் 'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும். பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. "பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5) குர்ஆன் அல்லாஹ்வை பற்றி பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது. "بسم الله الرحمن الرحيم" (112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன். (112:2) اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக முடியாது. அல்லாஹ்வை பற்றி குர்ஆன் மட்டும் பேசவில்லை மாறாக உலகின் பிற மத வேதங்களும் எடுத்தியம்புகின்றன என்பதற்கு சான்றுதான் அதில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள். பைபிள்(புனித விவிலியம்): உலகம் முழுவதிலும் உள்ள கிறித்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிளில் அல்லாஹ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது "பொருள் : தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" மேற்காணும் வசனங்களின் மூல மொழியான ஹிப்ரூ மொழியோடு வைத்து ஆராய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்தால் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட மூல பைபிளில் "Elohim" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல கிறித்துவ அறிஞர்களின் விளக்கங்களின் படி 'EL' அல்லது 'Elah' என்பது இறைவனைக்குறிக்கும் எனவே ஆங்கிலத்தில் இதை 'Alah' என்றுதான் உச்சரிக்க வேண்டும் இது இசுலாமியர்களால் அழைக்கப்படும் இறைவனின் பெயரான 'Allah' க்குறிக்கும் என்கின்றனர். لا إله إلا الله محمد رسول الله "தமிழில்:" லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். "பொருள்": (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள். "வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர்" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும் "விளக்கம்:" '(لا)லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(محمد)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள். ஆக "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்" என்று பொருள். அல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் திருநாமங்கள் (أسماء الله الحسنى) 'அஸ்மாஹுல் ஹுஸ்னா' எனப்படும் அவை "99" ஆகும். அவையாவன. இஸ்லாம்கல்வி.காம் இஸ்லாம்கல்வி.காம் என்பது அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையங்களின் தமிழ் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் பிற இஸ்லாமிய இணையத் தளங்களில் (வலைப்பதிவுகளைத் தவிர) வெளிவராத பயனுள்ள ஆக்கங்கள், இணைய தொழில்நுட்பக் குறிப்புகள் ஆகியவற்றை தொகுப்பதற்காக ஆர்வமுள்ள தனிநபர்களால் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா மாநகரில் 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இணையத்தளமாகும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வலைப்பதிவுகளோடு தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவு செய்திகளையும் தானியங்கி முறையில் அரங்கம் திரட்டுகிறது. டிசம்பர் 1 ஜெயம் ரவி ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். மரியாள் (இயேசுவின் தாய்) மரியா அல்லது மரியாள் (அரமேயம்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்), என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார். உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்" என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது. நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய கபிரியேல் தேவதூதர், மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின் வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் "παρθένος, parthénos") இருந்தார் என்றே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் குறிப்பிடுகின்றன. கன்னி மரியா பெத்லகேமில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. மரியாவும் யோசேப்பும் குழந்தைக்கு எட்டாம் நாளில் இயேசு என்று பெயரிட்டதாகவும், நாற்பதாம் நாளில் இயேசுவை கோவில் அர்ப்பணித்ததாகவும் நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, மரியா அவரை தம் கையில் வைத்திருந்ததாக மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகிறார். பின்னர் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் அவரை எகிப்துக்கு தூக்கிச் சென்றதாகவும் காண்கிறோம். பன்னிரு வயது சிறுவனான இயேசுவை அழைத்துக்கொண்டு, மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு பாஸ்கா விழா கொண்டாடச் சென்றதையும், கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்ததையும் நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கிறார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் என்று வாசிக்கிறோம். இயேசு தம் முப்பதாம் வயதில் யோவானிடம் திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது கலிலேயாவின் கானாவில் நடைபெற்ற திருமணத்தில், தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் அற்புதம் செய்ய அன்னை மரியா தூண்டுதலாக இருந்தார் என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர் என்று யோவான் நற்செய்தி கூறுவது, இயேசுவின் பணி வாழ்வின்போதும் அவரோடு மரியா உடன் பயணித்தார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள் என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுவதும் இதற்கு சான்றாக உள்ளது. இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணித்த அன்னை மரியா, சிலுவைச் சாவு வரையிலும் அவரை பின்தொடர்ந்தார் என்று காண்கிறோம். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார் என்று யோவான் குறிப்பிடுகிறார். இவ்வாறு தம் அன்பு சீடருக்கு ஒரு தாயையும், மரியாவுக்கு ஒரு மகனையும் இயேசு ஏற்படுத்துகிறார். பரந்த பொருளில், இயேசு தம் சீடர் அனைவருக்கும் மரியாவைத் தாயாக கொடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர். முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்' என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. இந்த பின்னணியில், கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இயன் தோப் இயன் ஜேம்ஸ் தோப் (Ian James Thorpe, பி. அக்டோபர் 13, 1982) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரர். நீச்சல் வரலாற்றில் freestyle வகை நீச்சலில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். தனது 24 ஆவது வயதில் நவம்பர் 21, 2006 அன்று நீச்சலுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பரத் பரத் (பிறப்பு - 21 ஜூலை, 1984,சென்னை), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார். ஜெனிலியா ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். அசின் (நடிகை) அசின் தொட்டும்கல் (, ), (பிறப்பு அக்டோபர் 26, 1985)பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் "நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான "அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி" ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. "கஜினி" (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். கஜினி (2005), வரலாறு" (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான "கஜினி" யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான "நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா" (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், "அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி" என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்.. அவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டில், "சிவமணி", என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார். அதனையடுத்து இவர் நடித்த, "லட்சுமி நரசிம்மா" மற்றும் "கர்சனா" ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது. தமிழ் மொழியில் அசினின் முதல் படம் "எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி", இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது "அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி" படத்தின் தழுவல் திரைப்படமாகும். கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார். தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார். சனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். பாவனா பாவனா (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. ஆர்யா ஆர்யா (பிறப்பு: டிசம்பர் 11, 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது. இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு பாலக்காடு , கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிறு பிரச்சனை காரணமாக 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வருவதற்கு முன்பு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் விருது புதுமுக நடிகருக்கான விருதை வென்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பட்டியல் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் பரத் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பத்மப்பிரியா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. நல்ல வசூலும் செய்தது. 2007ஆம் ஆண்டு ஓரம் போ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா நடித்துள்ளார். சேரன் இயக்கி நடித்த மாயக் கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு சர்வம் மற்றும் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ருத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக அஜித் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் காசி மற்றும் தமிழ்நாட்டில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்துள்ளார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைபப்டத்தில் இவருடன் சேர்ந்து பூஜாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல பிரிவுகளின் கில் தமிழக அரசு திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. சர்வம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு வருடு, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு போன்ற திரைப்படங்களிலும் வருடு என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த திரைபப்டத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஏமி ஜாக்ஸன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி திரைபப்டத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிக்கு புக்கு என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிரேயா சரன் நடித்துள்ளார். இவர் காதல் சொல்ல வந்தேன் மற்றும் வ என்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு உருமி, அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு வேட்டை, சேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆரம்பம் திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து அஜித் குமார், நயன்தாரா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்பொழுது இவர் மீகாமன், புறம்போக்கு, யட்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். இந்த திரைப்படங்கள் 2014ஆம் ஆண்டு அல்லது 2015ஆம் ஆண்டு வெளியாகும். நவம்பர் 2006 விஷால் விஷால் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு - ஆகஸ்ட் 29, சென்னை) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது தற்போது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார். சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். ஜீவா (திரைப்பட நடிகர்) ஜீவா (பிறப்பு - ஜனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார். டிசம்பர் 2 நிலத்தோற்றக் கலை நிலத்தோற்றக் கலை (landscape architecture) என்பது, நிலத்தை வெளி (space) மற்றும் அதிலுள்ள பொருட்களோடு சேர்த்து, பாதுகாப்பான, செயற்திறன் கொண்ட, சுகாதாரமான, மனதுக்கு மகிழ்வு தரக்கூடிய முறையில் ஒழுங்கு படுத்துவது தொடர்பானதாகும் என்று கூறப்படுகின்றது. இது, கட்டிடங்கள், நில அமைப்பு, நீர், தாவரவகைகள் போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வடிவமைக்கும் கலையாகும். நிலத்தோற்றக் கலைஞர்களின் அமெரிக்க சமூகம் (American Society of Landscape Architects), நிலத்தோற்றக் கலை தொடர்பாகப் பின்வருமாறு விவரம் தரும்போது, இத் துறையானது, அயற்சூழல், நகரங்கள், பெருநகரங்கள், ஆகியவற்றின் சூழலை வடிவமைப்பதுடன், இதன் நோக்கம், காடு, வயல், ஆறு மற்றும் கடற்கரைகள் அடங்கிய இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, அவற்றை மேலாண்மை செய்வது ஆகியவற்றையும் உள்ளடக்குவதாகக் கூறுகிறது. கட்டிடங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளைத் தாவரங்கள், நடைபாதைகள், நீர் அமைப்புக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்பதுடன், பொதுச் சதுக்கங்கள், ஊடுபாதைகள், பூங்காக்கள், நெடுஞ்சாலையை அண்டிய சூழல்கள், ஆகியவற்றைக் கவர்ச்சிகரமாக ஆக்குவதிலும் நிலத்தோற்றக் கலை பெரும்பங்கு வகிக்கின்றது. திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006 திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் என்பது அக்டோபர் 16,2006ல் தம்புள்ள மற்றும் ஹபரண நகரிற்கு அண்மித்த திகம்பத்தான எனும் இடத்தில் இலங்கை இராணுவ வாகனத் தொடரணியின் மீது வாகனத்தில் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஒருவரினால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலாகும்.தொடரணியில் உள்ள 15 வாகனங்களில் விடுமுறையில் வீடு திரும்பும் இராணுவத்தினரும்,விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பும் இராணுவத்தினருமாக 200 ற்கு மேற்பட்டவர்க (சில தகவலின்படி 340) சம்பவ இடத்தினில் காணப்பட்டனர்.குண்டுதாக்குதலின் விளைவாக 8 சிவிலியன் ஊழியர்கள் உட்பட 92ற்கும் 103 இடையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 150 ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.இவர்களில் மிக அதிகமானவர்கள் திருகோணமலை கடற்படைத்தளதில் பணிபுரியும் கடற்படையினராவார்கள்.இவர்கள் தவிர பாதசாரிகளும்,வியாபாரிகளும் காயமடைந்தனர்.133 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட காரணமான யாழ் முகமாலை முறியடிப்புச் சமர் அடுத்து ஒரிரு தினங்களில் இடம்பெற்ற இத்தாக்குதல் இலங்கை இராணுவ படையினருக்கு மேலும் ஒர் பேரிழப்பினை தந்தது.இத்தாக்குதலுக்கு பதிலடியாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இலங்கை விமான படையினரால் விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நிகழ்தப்பட்டது.புலிகளின் தகவலின் படி 2 பொது மக்கள் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கருத்துத் தெரிவிக்கையில்"போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை" எனக் கூறினார். டிசம்பர் 3 தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை (Zapatista Army of National Liberation (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்பது மெக்சிகோவின் பின்தங்கிய பிரதேசங்களுள் ஒன்றான சியாபஸ் பகுதியில் இயங்கும் ஆயுதம் தாங்கிய புரட்சி இயக்கமாகும். மெக்சிகோவின் பழங்குடி இன மக்களையே தமது சமூக தளமாக கொண்டியங்கும் இவ்வியக்கம் நகரப்பகுதிகளிலும் உலகளாவிய ரீதியிலும் தமக்கான ஆதரவு தளத்தையும் வலையமைப்பையும் கொண்டிருக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவராக தளபதி எஸ்தர் (Comandanta Esther) கருதப்படுகிறார். ஆயினும் இவ்வியக்கத்தின் புகழ்பெற்ற பிரதிநிதியாக அதன் பேசாளரும் துணைத்தளபதியுமான சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் (Subcomandante Marcos) விளங்குகிறார். மெக்சிகோ புரட்சியாளர் சபடா (Zapata) வின் பெயரையே இவ்வியக்கம் தாங்கியுள்ளது. தம்மை சபடாவின் இலட்சிய வழிவருநர்களாக அடையாளங்காணும் இவ்வியக்கத்தினர், பேரரசுவாதத்திற்கு எதிரான பழங்குடி மக்களின் எதிர்ப்பியக்கத்தின் வழிவருநர்களாகவும் அடையாளங்காண்கின்றனர். ஆயுதம் தாங்கிய ஆனால் இன்னமும் வன்முறைகள் எதிலும் ( 1990களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓர் எழுச்சி நிகழ்வை தவிர்த்து) ஈடுபடாத, வெளிநாட்டு, உள்நாட்டு ஆதரவுத்தளத்தை அமைக்கவும் பேணவும் செய்மதி தொலைபேசி, இணையம் உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துகின்ற சபடிஸ்டாவினை உலகின் முதல் பின்னை நவீன புரட்சிகர இயக்கமாக சிலர் இனங்காண்கின்றனர். 1994 ஜனவரி முதல் திகதி NAFTA உடன்பாடு நடைமுறைக்கு வந்த அன்றுதான் சபடிஸ்டாக்கள் பற்றி உலகளாவிய அறிதல் நிகழ்ந்தது. மெக்சிகோவின் தற்போதைய அரசாங்கத்தை தூக்கியெறிவது சபடிஸ்டாக்களின் அடிப்படை நோக்கம் அல்ல. மாறாக, சியாபஸ் பகுதிமீதான மெக்சிகோ அரசின் பாரபட்சமான போக்கினை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதும், சியாபஸ் பகுதியின் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடவெளியை மேலும் அதிகப்படுத்தும் என அவர்கள் கருதுகிற NAFT உடன்பாட்டை எதிர்ப்பதுமே அவர்களது போராட்டத்தின் அடிப்படையாகும். தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை, மெக்சிகோவிலிருந்து பிரிந்துசென்று தனியரசமைக்கும் கோரிக்கையை வலுவாக முன்வைக்கவில்லை. அதற்கு மாற்றாக, சியாபஸ் பகுதிக்கான கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தினையே கோரி போராடுகின்றனர். இத்தன்னாட்சியானது, மற்றைய கோரிக்கைகளுக்கு மேலதிகமாக சியாபசிலிருந்து பெறப்படும் இயற்கை வளங்கள் மேலும் நேரடியாக அப்பகுதி மக்களின் வளமான வாழ்வுக்கு பங்களிக்கக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையானது என அவர்கள் கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மெக்சிகோவின் வழங்கலுக்கு தேவையான நீர் வளம் சியாபசிலிருந்தே பெற்றுக்கொள்ளபடும் நிலையில், சியாபச் பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் சிரமப்படும் நிலை காணப்படுவதை கூறலாம். 1994 ஜனவரி 12ம் நாள் சபடிஸ்டாக்களால் செய்யப்பட்ட ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்துடன் சியாபஸ் பகுதியில் சிறு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தன. அன்று முதல் முழுஅளவான மோதல்கள் எதுவும் நிகழவில்லை. ஆனால் மெக்சிகோ அரசாங்கம் துணைப்படை குழுக்களை பயன்படுத்தி மென்தீவிர யுத்தத்தினை இக்கிளர்ச்சியாளர்களுக்கெதிராக புரிந்துவருகிறது. அதேவேளை இவ்வியக்கத்தினர் தம்பக்கத்திலிருந்து எந்தவிதமான படை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பாரியளவான ஊடக பரப்புரை போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்கின்றனர். இணையத்தை அடிப்படையாகக்கொண்ட பாரிய பரப்புரை வலையமைப்பயும் இவர்கள் கொண்டிருக்கின்றனர். இப்பரப்புரை போராட்டத்தின் விளைவாக உலகெங்குமுள்ள இடதுசாரிக்குழுக்களினுடைய ஆதரவினை இவ்வியக்கத்தினர் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். ஒக்கைடோ பல்கலைக்கழகம் ஒக்கைடோ பல்கலைக்கழகம் (யப்பானிய மொழி:北海道大学) யாப்பானிலுள்ள முன்னணித் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது சப்போரோ நகரின் மத்தியில் அமைந்துள்ளது. ஒக்கைடோ பல்கலைக்கழகம் 1876 இல் சப்போரோ விவசாயக் கல்லூரியாக அமெரிக்கரான வில்லியம் கிளார்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 24 மாணவர்களையும் 6 விரிவுரையாளர்களையும் கொண்டிருந்தது. இது 1918 ஏப்ரல் முதலாம் நாள், யப்பானின் 9 அரச பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. 1919 இல் மருத்துவ பீடம் நிறுவப்பட்டதோடு விவசாயக் கல்லூரி விவசாய பீடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் பல பீடங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடக்கப்பட்டு, 2006இல் மொத்தமாக 12 பீடங்களைக் கொண்டுள்ளது. 2004 முதல் யப்பானின் தேசிய பல்கலைக்கழகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் நிதி தொடர்பாக தன்னாட்சியை கொண்டிருந்தாலும் யப்பான் கல்வி, கலாச்சார, விளையாட்டு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு முக்கிய அதிகாரத்தை செலுத்தி வருகின்றது. ப. ஆப்டீன் ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த "தமிழின்பம்" எனும் சிற்றிதழில் வந்த "உரிமையா? உனக்கா?" எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. டிசம்பர் 4 தபுண்டு உபுண்டு க்னூ/லினக்ஸ் இல் சராசரி தமிழ் பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் மென்பொருள் கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே தபுண்டு ஆகும். தபுண்டு என்ற பெயர் தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமாகும். இப்பொதி மு. மயூரனால் உருவாக்கப்பட்டு 29-11-2006 அன்று வெளியிடப்பட்டது. உபுண்டு இயங்குதளம் பயன்பாட்டு எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும் தமிழ் பாவனைக்கான பல்வேறு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. இவ்வியங்குதளத்தை பரந்தளவான தமிழ்ப் பயனர் மட்டத்தில் கொண்டு செல்ல, மேலதிக தமிழ் வசதிகளை அவ்வியங்குதளத்தில் நிறுவிக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு சிக்கலான படிமுறைகள் எளிமைப்படுத்தப்படுவது அவசியம். இந்த அடிப்படையிலேயே இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ்ப் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது. கணினியில் தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் தற்போதுள்ள தெரிவுகளில் மிக எளிமையான ஒன்று உபுண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதாகும். இந்த அடிப்படையில் இப்பொதி கணித்தமிழ் பயன்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணைய வசதியை கொண்டிருக்காத கணினி ஒன்றில் உபுண்டுவை பயன்படுத்தும் ஒருவர் தமிழ் வசதிகளை நிறுவிக்கொள்ள எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை முற்றாக தீர்த்து வைப்பதையும் இப்பொதி நோக்கமாக கொண்டிருக்கிறது தபுண்டு நிறுவித்தரும் தமிழ் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி மறுதொகுப்பு செய்யப்பட்ட உபுண்டு இயங்குதள இறுவட்டினை உருவாக்க முடியும் என்றாலும், அது விநியோக வாய்ப்புக்களை மிகக்குறைந்த அளவே கொண்டிருக்கும். இலங்கையின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரம் (Economy of Sri Lanka) பெருந்தோட்டப் பயிர்செய்கைகளான தேயிலை, இரப்பர், கொக்கோ, கிராம்பு போன்றவையே பிரதான வருவாயாக விளங்கியது. அண்மைக் காலங்களில் பெருந்தோட்டங்கள் சிங்கள மக்களுக்கு குடியேற்ற கிராமங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டதனால், அவ்வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், தற்போது இலங்கையின் பிரதான வருமானமாக வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாகவே கிட்டப்படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்காசிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரிவோரின் ஊடாகவே பெறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தவிர சுற்றுலா, தேயிலை, புடவை போன்றவற்றில் இருந்து கணிசமான வருவாய் கிட்டுகின்றன. தற்போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது குடும்பத்தாருக்கு உதவி வரும் நிதி போன்றனவும் இலங்கைக்கான ஒரு வருவாய் மார்க்கமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் செழிப்பான நிலையில் இருப்பதனால், மீண்டும் இலங்கைத் திரும்பி தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பழங்காலம் முதலே ஒன்பது இரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் விடுதலை பெற்ற பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தைப் சிறிது காலமே பின்பற்றிய போதிலும் அது ஆசியாவிலே மிக முன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது மிகை இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் உற்பத்தி, ஆடை உற்பத்தி, உணவும் குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி, வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே ஆகக் கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும். தற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது. உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது. 2009ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைப்பெற்று வந்த வடக்கிழக்கு பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களாக அதிகம் இருந்தனர். தற்போது வட கிழக்கு மக்களும் இலங்கையின் வருவாயை ஈட்ட போதுமான தொழில் வாய்ப்பு இல்லாமையாலும், இலங்கையில் செலவீனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமையினாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசாங்கமும் வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரிவதன் ஊடாக கிட்டும் வருவாயை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பையே ஊக்குவித்து பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைப் பாடலின் பகுதிகள் எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய சுரப்பகுதி "தாது" எனப் படும். உ-ம் : மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் ""கா கா பா பா"" என்ற பகுதியே தாதுவாக அமைகின்றது. சுரப்பகுதிக்குரிய சொற்பகுதி "சாகித்தியம்" அல்லது "மாது" என்று அழைக்கப்படுகிறது. உ-ம் : மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் ""வரவீணாம்"" என்ற பகுதியே மாதுவாக அமைகின்றது. ஸ்ரொபோன் டியோன் ஸ்ரொபோன் டியோன் (Stéphane Dion) ஒரு முக்கிய கனடிய அரசியல்வாதியும் படிப்பாளரும் ஆவார். இவர் கனடிய அமைச்சராக பணியாற்றியவர். இவர் கனடிய நடுலைமைக் கட்சியின் தலைவராக டிசம்பர் 2, 2006 நடைபெற்ற கட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரொபோன் டியோன் கியூபெக் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட பிரேஞ்சு கனடியர். இவரது ஆங்கிலப் பேச்சு திறமை மட்டுப்படுத்ப்பட்டதே. இவர் ஒரு கூட்டாட்சி ஆதரவாளர். மிசெல் பாச்செலெட் வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா ("Verónica Michelle Bachelet Jeria" /βeˈɾonika miˈʃɛl baʃˈle ˈçeɾja/, பிறப்பு: செப்டம்பர் 29, 1951) இருமுறை குடியரசுத் தலைவராகவிருந்த சிலி நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் முதன்முதலாக 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். படைத்துறை கோட்பாட்டு முறைகளிலும் தேர்ந்தவர். பெரும்பாலும் கத்தோலிக மதத்தைப் பின் பற்றும் சிலி நாட்டில் தன்னை கடவுள் உண்டா-இல்லையா என அறியா நிலைக்கொள்கை உடையவராக அறிவித்துள்ளவர். 2007 ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகள் வரிசையில் 27 ஆவதாக ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ் இவரை சுட்டுகின்றது. முதல்முறைப் பதவிக்காலம் முடிந்த பிறகு, அரசியல் சட்டப்படி, மீண்டும் தேர்தலில் நிற்கவியலாதபோது புதியதாக உருவாக்கப்பட்ட ஐ.நா. பாலினச் சமநிலை மற்றும் மகளிர் அதிகார மையத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். திசம்பர் 2013இல் தம் நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டு 62% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரே என்ற பெருமை பெற்றார். ஆகத்து 2018இல் இவரை அடுத்துவரும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையராக ஐக்கிய நாடுகள் அவை நியமித்துள்ளது. இவர் ஒரு மிதவாத சோசலிஸ்ட் ஆவார். இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை வரவேற்றும், அதேசமயம் வலுவான சமூகநலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வென்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடது சாரி சாய்வுக்கு ஒத்தானதாகவும் வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது. சிலியின் அடுத்த அதிபராக மிச்சேல் பாச்லெட் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக அதிபராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பதவி யேற்கிறார். நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாச்லெட் 62.59 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்தேய் 37.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. ராஃபாயெல் கொறேயா ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர். இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது. டிசம்பர் 5 டிசம்பர் 6 டி. பி. எஸ். ஜெயராஜ் டேவிட் ஜெயராஜ் (David Jeyaraj, பிறப்பு: மே 21,1954) கனடாவில் வசிக்கின்ற அரசியல் சார்பில்லாத ஒர் ஆங்கில ஊடகவியலாளர் ஆவார். ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றியவர். இவருடைய கட்டுரைகள் D.B.S Jeyaraj எனும் பெயரில் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழரான இவருடைய கட்டுரைகள் சண்டே லீடர், இந்து, புரொண்ட்லைன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தற்போது Transcurrents எனும் ஒரு வலைப்பதிவையும் பேணிவருகின்றார். பிபிசி மற்றும் கனேடிய வானொலி என்பவற்றில் இலங்கை தொடர்பான அரசியல் அலசல்களில் பங்குபற்றி வருகின்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் புலமை பெற்ற மிகச் சொற்பமான இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர். புலிட்சர் பரிசு புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது இத்துறைகளுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகின்றது. இது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இத்துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இருபது பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. ஊடகவியல் துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு செய்தி இதழ்களுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் பரிந்துரைக்கப்படலாம். இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் ("School of Journalism") தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது. ஜோசேப் புலிட்சர் ஜோசேப் புலிட்சர் ஒரு ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப்பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். இவர் தனது இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு உருவாக வழி வகுத்ததன் மூலம் புகழ் பெற்றார். முதன் முதலாக மஞ்சள் பத்திரிகையை அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். புலிட்சர் ஹங்கேரியில் உள்ள மாக்கோ என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இராணுவத்தில் சேர விரும்பினாராயினும், இவரது பலவீனமான உடல்நிலையாலும், கண்பார்வைக் குறைவினாலும், இவர் ஆஸ்திரிய இராணுவத்தில் சேரமுடியாமல் போனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் கலந்து கொள்வதற்காக 1864 ஆம் ஆண்டில் இவர் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். போருக்குப் பின்னர், மிசூரியில் உள்ள சென் லூயிஸ் என்னுமிடத்தில் தங்கினார். அங்கே, வெஸ்ட்லிச் போஸ்ட் (Westliche Post) என்னும் ஜேர்மன் மொழிப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார். அவர் குடியரசுக் கட்சியில் சேர்ந்து, 1869 இல் மிசூரி மாநில சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1872 இல், வெஸ்ட்லிச் போஸ்ட் பத்திரிகையை 3000 டாலருக்கு வாங்கினார். 1878 இல் சென் லூயிஸ் டிஸ்பச் (St. Louis Dispatch) என்னும் பத்திரிகையையும் 2700 டாலருக்கு வாங்கினார். இரண்டு பத்திரிகைகளையும் இணைத்து, சென் லூயிஸ் போஸ்ட் டிஸ்பச் (St. Louis Post-Dispatch) என்னும் பெயரில் தினப் பத்திரிகையாக நடத்தி வந்தார். டிசம்பர் 7 டிசம்பர் 8 பிஜி பிஜி ("Fiji", ஃபிஜி, (பிஜிய மொழி: "Viti", விட்டி; பிஜி இந்தி: फ़िजी), அதிகாரபூர்வமாக பிஜி குடியரசு ("Republic of Fiji" என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும் புட்டூனாவும், வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன. பெரும்பான்மையான பிஜித் தீவுகள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களினால் உருவானவையாகும். இப்போது, வனுவா லேவு, தவெயுனி போன்ற தீவுகளில் சில புவிவெப்பச் சீற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கிமு இரண்டாம் மிலேனியம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. பிஜி தீவுக்கூட்டத்தில் மொத்தம் 332 தீவுகளும், ஐநூறுக்கும் அதிகமான தீவுத்திடல்களும் உள்ளன. 332 தீவுகளில் 110 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மொத்தத் தரைப்பரப்பளவு கிட்டத்தட்ட 18,300 சதுரகிமீ ஆகும். விட்டி லெவு, வனுவா லெவு ஆகியன இங்குள்ள இரண்டு முக்கிய தீவுகள் ஆகும். நாட்டின் மொத்த மக்கள்தொகையான 850,000 இல் 87 விழுக்காட்டினர் இவ்விரு தீவுகளிலும் வசிக்கின்றனர். பிஜியின் தலைநகரும், நாட்டின் மிகப் பெரிய நகருமான சுவா விட்டி லெவு தீவில் அமைந்துள்ளது. பிஜிய மக்களின் பெரும்பான்மையானோர் விட்டி லெவு தீவின் கரையோரப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17ம் 18ம் நூற்றாண்டுகளில் டச்சு, மற்றும் பிரித்தானிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத் தொடங்கினர். 1970 வரை பிஜி சுமார் ஒரு நூற்றாண்டு காலம் வரை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரித்தானியரால் பல பிஜிய நாட்டவர்கள் நியூசிலாந்து, மற்றும் ஆத்திரேலியப் படையினருடன் இணைந்து போரில் பங்கு பற்ற வைக்கப்பட்டனர். பிஜி படைத்துறை தரை, மற்றும் கடற்படைகளைக் கொண்டுள்ளது. பிஜி பெருமளவு காட்டுவளம், கனிமவளம், மற்றும் மீன் வளங்களைக் கொண்டிருப்பதால், இது பசிபிக் தீவுப் பகுதியில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது, சுற்றுலாத்துறை, சர்க்கரை ஏற்றுமதி ஆகியன இந்நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தைத் தரும் முக்கிய துறைகளாகும். பிஜி டாலர் இந்நாட்டின் நாணயம் ஆகும். 2006 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து பதவியைக் கைப்பற்றிய இராணுவத் தலைமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எப்பெலி நைலட்டிக்காவு என்பவர் பிஜியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். பிஜிய நகரங்களில் காணப்படும் மட்பாண்ட ஓவியங்களில் இருந்து பிஜியில் கிமு 3500–1000 ஆண்டுகள் வாக்கில் குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பொலினேசியர்களின் மூதாதையர் இங்கு முதன் முதலில் குடியேறியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், மெலனேசியர்களின் வருகைக்குப் பின்னர் இவர்கள் தொங்கா, சமோவா, மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சென்றிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டச்சு நாடுகாண்பயணி ஏபெல் டாஸ்மான் 1643 ஆம் ஆண்டில் தெற்குக் கண்டத்தைக் காணச் செல்கையில் பிஜிக்கு சென்றிருந்தார். ஐரோப்பியர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு நிரந்தரமாகக் குடியேற ஆரம்பித்தார்கள். பிஜியின் முதலாவது ஐரோப்பியக் குடியேறிகள் முத்துக் குளிப்பவர்களும், மதப் பரப்புனர்களும், வணிகர்களும் ஆவர். பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த சேரு எபெனிசா சாக்கோபாவு என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை ஒன்றிணைத்து அவர்களைத் தனௌ கட்டுப் பாட்டில் கொண்டு வந்தான். இவன் பின்னர் பிஜியின் அரசனாகத் தன்னை அறிவித்தான். பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். 1874 ஆம் ஆண்டில் பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரை தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அன்றைய பிஜியின் முதலாவது பிரித்தானிய ஆளுனராக இருந்த ஆர்தர் சார்ல்சு அமில்ட்டன்-கோர்டன் என்பவர் உள்ளூர் மக்களை வேலைக்கமர்த்தத் தடை செய்தார். அத்துடன் அவர்களது பண்பாடு மற்றும் அவர்களது வாழ்க்கையில் ஏனையோர் தலையிடக் கூடாது எனவும் தடை விதித்தார். 1875–76 காலப்பகுதியில் தட்டம்மை நோய் பரவியதில் அங்கு 40,000 பிஜியர்கள் இறந்தனர், இவ்வேண்ணிக்கை பிஜியின் மக்கள் தொகையில் மூன்றின் ஒரு பகுதியாகும். 1942 இல் புஜியின் மக்கள்தொகை 210,000 ஆக இருந்தது. இவர்களில் 94,000 இந்தியர்கள், 102,000 பேர் பிஜியர்கள், 2,000 பேர் சீனர்கள், 5,000 பேர் ஐரோப்பியர்கள் ஆவர். 1970 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை பெற்றது. பிஜி அரசாங்கத்தில் பிஜி இந்தியர்கள் பெரும்பான்மையாக இருந்ததனால், மக்களாட்சி அமைப்பு 1987 ஆம் ஆண்டில் இரு தடவைகள் இராணுவப் புரட்சியால் தடைப்பட்டது. 1987 இல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவப் புரட்சியை அடுத்து பிஜிய அரசர், மற்றும் ஆளுனர் ஆகியோர் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். பதிலாக நிறைவேற்றதிகாரமற்ற சனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பெயரும் "டொமினியன் பிஜி" இலிருந்து "பிஜி குடியரசு" (பின்னர் 1997 இல் "பிஜித் தீவுகளின் குடியரசு") என மாற்றப்பட்டது. இந்தப் புரட்சியை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையால் பிஜி இந்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர்; மக்கள்தொகை குறைந்ததனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, ஆனாலும் மெலனீசியர்கள் பெரும்பான்மையினமாக மாறினர். 1990 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு பிஜிய இனத்தவரை நாட்டின் அரசியலுக்குள் கொண்டு வர உதவியது. இந்த அரசியலமைப்பு தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டதென்றும், பழைய 1970 அரசியலமைப்பை அமுல் படுத்தக் கோரியும் பிஜியில் இனவேறுபாட்டுக்கு எதிரான "கார்ப்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1987 இராணுவப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திய அன்றைய இராணுவப் படை அதிகாரி சித்திவேனி ரபூக்கா 1992 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார். மூன்றாண்டுகளின் பின்னர், ரபூக்கா அரசியலமைப்பை மீளாய்வு செய்யக் குழு நியமித்தார். அக்குழுவின் பரிந்துரைகளின் படி 1997 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரசியலமைப்பை பிஜியர்களும், பிஜி இந்தியர்களும் ஆதரித்தனர். பிஜி பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மீளச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பிஜி இந்தியரான மகேந்திரா சவுத்திரி பிரதமரானார். 2000 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் ஸ்பைட் தலைமையில் மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மகேந்திரா சவுத்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சர் காமிசே மாரா சனாதிபதிப் பதவியில் இருந்து கட்டாயமாக விலக, அதற்குப் பதிலாக இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாகப் பதவியேற்றார். அதே ஆண்டில் சுவா நகரில் அமைந்துள்ள எலிசபெத் மகாராணி இராணுவத் தளத்தின் இராணுவத்தினர் இரு தடவைகள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தை மீள அமுல் படுத்துமாறு உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. மக்களாட்சியை ஏற்படுத்த அங்கு 2001 செப்டம்பரில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் இடைக்காலப் பிரதமராக இருந்த லைசேனியா கராசேயின் கட்சி வெற்றி பெற்றது. 2006 நவம்பர் இறுதியிலும், 2006 டிசம்பர் ஆரம்பத்திலும் இடம்பெற்ற இராணுவப் புரட்சிக்கு இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா தலைமையேற்றார். பிரதமர் கராசே பதவி விலகினார். 2006 புரட்சி சட்டவிரோதமானது என 2009 ஏப்ரலில் பிஜியின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. சனாதிபதி இலொய்லோ நாட்டின் அரசியலமைப்பை செல்லாததாக அறிவித்தார். அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற அனைத்து நீதிபதிகள், மத்திய வங்கி ஆளுனர் மற்றும் உயர் அரச அதிகாரிகள் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். இராணுவத் தலைவர் பைனிமராமாவை அவர் பிரதமராக அறிவித்து நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்தார். ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது. பிஜி நாடு பொதுவாக நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சிக் குடியரசு முறையில் ஆளப்படுகிறது. பல-கட்சி முறையில் பிரதமர் அரசுத் தலைவராகவும், சனாதிபதி நாட்டின் நிறைவேற்றதிகாரமற்ற தலைவராகவும் உள்ளனர். நிறைவேற்றதிகாரம் அரசாங்கத்திடம் அமைந்துள்ளது. அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டும் சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்துகின்றன. நீதித்துறை இங்கு அரசாங்கத்தினாலோ அல்லது சட்டவாக்க அவையாலோ கட்டுப்படுத்தப்படவில்லை. விடுதலை பெற்றதில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவத் தலையீட்டுடனான ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றுள்ளன. 1987 ஆம் ஆண்டில் இரு தடவையும், 2000, 2006 ஆகிய ஆண்டுகளிலும் இராணுவப் புரட்ட்சிகள் இடம்பெற்றன. 1987 ஆம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது அரசாங்கத்தில் செல்வாக்கையோ செலுத்தி வருகிறது. பிஜியின் மக்கள் தொகை பெரும்பாலும் உள்ளூர் பிஜியர்கள் ஆவர். இவர்கள் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையின் 54.3% ஆகும். இவர்களில் சிலர் பொலினீசிய மரபுவழியினரும் அடங்குவர். 19ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் இங்கு தருவிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் வம்சத்தைச் சேர்ந்த பிஜி இந்தியர்கள் 38.1% ஆவர். பிஜி இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களாகக் நாட்டில் குறைந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி இந்தியப் பிஜியர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டது. சொலமன் தீவுகளிலும் இருந்து இங்கு பலர் தொழில் நிமித்தம் குடியேறியுள்ளனர். ஏறத்தாழ 1.2% மக்கள் உரொத்துமன் மக்கள். இவர்கள் பிஜியின் உரொத்துமா தீவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கலாச்சாரம் பொதுவாக தொங்கா அல்லது சமோவா நாட்டினரை ஒத்ததாக உள்ளது. இவர்களை விட சிறிய அளவில் ஐரோப்பியர்கள், சீனர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் போன்றவர்கள் இங்கு வசிக்கின்றனர். பிஜியின் பூர்வகுடிகளில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள் (1996 கணக்கெடுப்பின் படி 40%), பிஜி இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்துக்களும், முசுலிம்களும் ஆவர். நாட்டில் மத வாரியாக கிறித்தவர்கள் 64.5% (மெதடித்தர்கள் 34.6%, உரோமன் கத்தோலிக்கர் 9.1%), இந்துக்கள் 27.9%, முசுலிம்கள் 6.3%, சீக்கியர் 0.3% உள்ளனர். இங்குள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் (74.3%) நான்கு குமாரர்கள் என்ற குழுவைப் பின்பற்றுபவர்கள். 3.7% இந்துக்கள் ஆரிய சமாசத்தைச் சேர்ந்தவர்கள். முசுலிம்களில் சுன்னி (59.7%), சியா (36.7%), அகம்மதிய சமூகத்தினர் (3.6%) ஆகியோர் உள்ளனர். பிஜி இந்தியர்களில் சீக்கிய மதத்தினர் 0.9% உள்ளனர். இவர்களின் மூதாதையர் அண்மைக்காலங்களில் இந்தியாவின் பஞ்சாபில் இலிருந்து இங்கு குடியேறியவர்கள். மகாய் சமயத்தவர் இங்கு பெருமளவு உள்ளனர். முதலாவது பகாய் இனத்தவர் நியூசிலாந்தில் இருந்து 1924 ஆம் ஆண்டில் இங்கு வந்து குடியேறினார். இவர்களை விட சிறிய அளவில் யூத இனத்தவரும் உள்ளனர். பிசித் தீவில் ஆங்கிலமும், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகளும், இந்தியக் குடியேறிகளின் மொழிகளும் பேசப்படுகின்றன. பிசித் தீவின் 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிசித் தீவுகள் மூன்று ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளன. ஆங்கிலம், விசிய மொழி (பூர்வகுடியினர் மொழி), பிசி இந்துசுத்தானி(இந்தி-உருது) ஆகியனவே இவை. பிசிய மொழியை தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இந்தியக் குடியினர் 37 விழுக்காட்டினராவர். இவர்கள் வட இந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர். புனிதர் புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புனிதர்கள் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும். புனித தோமையார், புனித சவேரியார், புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை இயேசுவின் திரேசம்மாள், புனித அருளானந்தர், புனித செபஸ்தியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலராவர். டெத் இன் காசா டெத் இன் காசா ("Death in gaza") 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணத் திரைப்படமாகும். காசாப்பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மையமாக வைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லரால் நேரடியாக படம்பிடிக்கப்பட்ட இவ்விபரணப்படத்தின் படப்பிடிப்பின் போது இஸ்ரேலிய இராணுவத்தினால் ஜேம்ஸ் மில்லர் படுகொலை செய்வது குறிப்பிடத்தக்கது. உண்மைப்படம் / விபரணப்படம் ஆசை ஆசையாய் ஆசை ஆசையாய் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காதல்படம் / மசாலாப்படம் பிருந்தா ஷர்மி எவரையேனும் காதலிக்கின்றாரா என பிருந்தாவின் உறவினரால் கண்காணிப்பிற்காக வினோத் ஜீவா பணியமர்த்தப்படுகின்றார்.பின்னர் பிருந்தாவின் குணாதிசயங்களைப்பார்த்து வினோத் பிருந்தா மீது காதல் கொள்கின்றார்.பிருந்தாவிடம் தன் காதலைச் சொல்வதற்காக தபால்காரராகப் பணியினை ஏற்றுக்கொண்டு வெற்றுக் காகிதத்தினை வைத்து பிருந்தாவிடம் ஒவ்வொருமுறையும் தருகின்றார் வினோத் மேலும் யாரோ பிருந்தாவைக் காதலிக்கின்றான் எனவும் அவனே இவ்வாறு வெற்றுக்கடிதங்களினை அனுப்புகின்றான் எனவும் பொய் கூறுகின்றார்.ஆனாலும் வினோத் தன்னைக் காதலிப்பதைப் புரிந்து கொள்கின்றார் பிருந்தா.பின்னர் தனது சகோதரியின் காதலித்தவருடன் ஓடிச்சென்ற காரணத்தினால் சகோதரியினை தலைமுழுகிய தந்தையின் நாசர் முன்கோபத்தின் காரணமாக பிருந்தாவும் வினோத்தும் கல்வியில் கவன்ம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறும்வரை பிரிந்தே வாழ சத்தியம் பண்ணுகின்றனர்.அதன்படியே இருவரும் வாழ்க்கையில் முன்னிலையில் வருகின்றனர் அதே சமயம் பிருந்தாவிற்கு மணம் முடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்தேறியது.அச்சமயம் பிருந்தாவைக் கண்காணிக்கச் சொன்ன அவர் உறவினரால் பிருந்தா வினோத்தைக் காதலிப்பதென்ற உண்மை தெரியவருகின்றது மேலும் இவர்கள் எடுத்துக்கொண்ட இலட்சியப்பயணத்தினை அறிந்து வியக்கும் பிருந்தாவின் தந்தையும் வினோத்தினை தனது மருமகனாக ஏற்றுக்கொள்கின்றார். தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். பாட்டு, சண்டை, காதல், பாசம், சோகம் ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவைக் காட்சிகளும் தமிழ்ப்படங்களின் இருக்கும் ஒரு வழமையான அம்சம். தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் பொதுவாக மையக் கதையோட்டத்துடன் இறுகப் பிணையாமல் தனியான இழையாகவே இருப்பது இயல்பு. முழுநீள நகைச்சுவைப் படங்களும் தமிழில் உண்டு. இங்கு ஒரு திரைப்படத்தின் மையக் கதையோட்டம் நகைச்சுவையைத் தூண்டுவதையே குறியாக வைத்து நகர்த்தப்படும். பாண்டிட் குயின் பாண்டிட் குயின் (Bandit queen) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். சேகர் கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கின்றது. இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. உண்மைப்படம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன. 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 2014 வரை நடைபெற்றன.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர். டிசம்பர் 9 டிசம்பர் 10 [[பகுப்பு:டிசம்பர்]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] டிசம்பர் 11 டிசம்பர் 12 மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) என்பவரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு முகாமைத்துவக் கற்கைகளில் மனித ஊக்கப்படுத்தல் (Motivation) சார் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. மாஸ்லோவின் இக் கோட்பாட்டில் மனிதன் என்பவன் முடிவில்லாத பலவித தேவைகளைக் கொண்டிருக்கும் வர்க்கமாவான். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியினை நாடி நிற்பான் எனவும், இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக காணப்படும் என்றும் கூறினார். இத்தகைய தேவைகளை 5 வகையாக பிரித்து தேவைகளையும் மக்களின் எண்ணிக்கையையும் தொடர்புபடுத்தி அவர் ஒரு பிரமிட் வடிவ விளக்கப்படத்தினை இக் கோட்பாட்டில் முன்வைத்தார். இவ் வரைபடத்தில் கீழ் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள் தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகள் பூர்த்தியானதும் அம் மனிதன் அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் உந்தப்படுவான் என மாஸ்லோ இக் கோட்பாட்டில் வரையறுத்துள்ளார். உடலியற் தேவைகள் (Physiological needs) என்பது மனித வாழ்விற்கு அவசியமான மிக முக்கிய முதன்மைத தேவைகளாகும்.உணவு,உடை,உறையுள் போன்றன இப் படிவரிசையில் அடங்கும்.இத்தேவை எல்லா மக்களுக்கும் பொது என்பதால் பிரமிட் வடிவ வரைபடத்தில் அடிப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.இத் தேவையின் பூர்த்திக்கு பணம் ஒர் மிகமுக்கிய ஊடகமாகும். இத்தேவை அடிப்படை தேவை என்பதால் இதனை ஊக்கப்படுத்தல் தேவையாகக் கருத இயலாது என சில விமர்சமும் உண்டு பாதுகாப்புத் தேவை (Safety needs) இது உடலியற் தேவை பூர்த்தியானது தோன்றும் தேவையாகும்.இதில் தொழிலிற்கு பாதுகாப்பு,உயிருக்கு பாதுகாப்பு,உடமைக்கு பாதுகாப்பு,வன்முறை அற்றஇடம் போன்றன உள்ளடங்கும். படிக்கட்டமைப்பில் 2 வது கட்டம் பூர்தியாக்கப்பட்டதும் தோன்றுவது சமூகத் தேவை ( Love/Belonging needs) ஆகும்.இத் தேவைகள் உணர்வுபூர்வமான உறவுமுறைகளான நண்பர்கள்,துணை,குடும்ப ஆதரவு என்பவற்றின் தேவையினை வேண்டிநிற்கும் சமூகத்தேவைகள் நிறைவுற்றதும் தோன்றும் அடுத்த தேவையாகும்.கௌரவத் தேவை (Esteem needs) உளவியல் சார்பனது.பிறரால் மதிக்கப்படுதல்,உயர்பதவியினை விரும்புதல்,சொத்துக்கள்,வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றனவாகும். மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவை தன்னலத் தேவை (Self-actualization) ஆகும்.இதன் பின் அவனுக்கு தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார். முகாமைத்துவ கற்கைகளில் முக்கிய கோட்பாடாக கற்றப்படுகின்றபோதும் மாஸ்லோவின் இக் கோட்பாட்டின் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவையாவன: இனவரைவியல் இனவரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அணுகுவதன்மூலம் அம்முறைமையை அச்சொட்டாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணக்கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முழுதளாவிய ஆய்வு முறையின் விளைவுகளை இனவரைவியல் முன்வைக்கிறது. இனக்குழுபற்றிய முழுமையான ஆய்வு என்பதனால் இதனை இனக்குழுவியல் என்றும் குறிப்பிடலாம். இது, பயண எழுத்தாக்கம், குடியேற்றவாத அலுவலகங்களின் அறிக்கைகள் ஆகியவற்றுடன் முறைசார்ந்ததும், வரலாற்றுரீதியானதுமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில், பயணிகளும், புத்தாய்வாளரும், சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த குருமாரும், குடியேற்றவாத அலுவலருமே இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தனர். இவர்கள் குறிப்பிட்ட துறையில் பயிற்சியற்றவர்கள் ஆதலால் இவர்களுடைய தொகுப்புக்கள் முழுமையானவையாகவோ அல்லது போதுமானவையாகவோ அமையவில்லை. பிற்காலத்தில் முறைப்படி பயிற்சிபெற்ற மானிடவியலாளர்கள் இதற்கெனவே மக்களிடம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும் பெரும்பாலும் இனவரைவியல் ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவையே. இத்துறைகள் சார்ந்த நூல்களும் பெரும்பாலும் இனவரைவியல் நூல்களே. புரொனிஸ்லோ மலினோவ்ஸ்கி எழுதிய "மேற்குப் பசிபிக்கின் ஆர்கோனெட்டுகள்" என்னும் நூல், ஈ, ஈ. இவான்ஸ் பிரிச்சாட் (E. E. Evans-Pritchard) என்பவரின் "நியுவர்" (The Nuer), மார்கிரட் மீட் (Margaret Mead) என்பவரின் "சமோவாவின் முதிர்ச்சி" என்னும் நூல், கிரெகரி பட்டெசன் (Gregory Bateson) என்பவரின் "நாவென்" என்பன இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பண்பாட்டு மானிடவியலில், பல இனவரைவியல் துணைத் துறைகள் உள்ளன. இன ஒப்பாய்வியல் இன ஒப்பாய்வியல் (Ethnology) என்பது மானிடவியல் ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் நாட்டார் வழக்காறுகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது, இனம் நாட்டினம் ஆகியவை சார்ந்த மனிதப் பிரிவுகளின் தோற்றம், பரவல், தொழில்நுட்பம், மதம், மொழி, சமுதாய அமைப்புப் போன்றவற்றை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்கின்றது. குறித்த ஒரு பண்பாட்டுக் குழுவுடன் நேரடியான தொடர்புகொண்டு அந்த ஒரு குழுவைப்பற்றி ஆய்வு செய்வது இனவரைவியல் எனப்படுகிறது. இன ஒப்பாய்வியலின் நோக்கம், இவ்வாறு இனவரைவியலாளர்கள் பல்வேறு இனக்குழுக்களைப் பற்றித் தொகுத்த தகவல்களை ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்ப்பது ஆகும். மனித வரலாற்றை மீட்டுருவாக்கல், இன ஒப்பாய்வியலின், பண்பாடுகளின் பொது அம்சங்களைக் கண்டறிதல், "மனித இயற்கை" தொடர்பில் பொதுமையாக்கங்களை உருவாக்குதல், என்பவற்றையும் இன ஒப்பாய்வியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சில நாடுகளில் இன ஒப்பாய்வியல், வெவ்வேறான ஆய்வு முறைகளையும் கற்பித்தல் முறைகளையும் கொண்டு வளர்ச்சியுற்றது. ஐக்கிய அமெரிக்காவில் பண்பாட்டு மானிடவியலும், ஐக்கிய இராச்சியத்தில் சமூக மானிடவியலும் முதன்மைநிலைகளைப் பெற்றன. காலப்போக்கில் இம் மூன்று சொற்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவற்றவை ஆகிவிட்டன. சிறப்பாக ஐரோப்பாவில், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இன ஒப்பாய்வியல் ஒரு தனியான கல்வித்துறையாகக் கருதப்பட்டு வருகிறது. தமிழ் விசை தமிழ் விசை (TamilKey) கணினியில் தமிழில் எழுத உதவும் ஒரு ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியாகும். இதனைத் 'தமிழா' அமைப்பைச் சேர்ந்த முகுந்தராஜின் முதலில் முயன்று வெளியிட்டார். பிறகு, Voice on Wings மேம்படுத்தித் தந்தார். தற்போது, கட்டற்ற தமிழ்க் கணிமைவைச் சேர்ந்த தகடூர் கோபியால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நீட்சி, அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, புதிய, பழைய தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை தளக்கோலங்களை ஆதரிக்கிறது. இதனை பயன்படுத்த ஏதேனும் ஒரு ஒருங்குறி எழுத்துருவைக் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். இதனை ஃபயர்பாக்ஸ் தளத்தில் பதிவிறக்கலாம். தண்டர்பேர்ட் என்னும் மின்னஞ்சல் செயலிக்கான நீட்சியையும் இத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிசம்பர் 13 டிசம்பர் 14 [[பகுப்பு:டிசம்பர்]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] ஆனந்தரங்கம் பிள்ளை ஆனந்தரங்கம் பிள்ளை (1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் "இந்தியாவின் பெப்பீசு" எனவும் "நாட்குறிப்பு வேந்தர்" எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை. ஆனந்தரங்கம் பிள்ளை சென்னையில் உள்ள பெரம்பூரில் பிறந்தார்.இவர் மூன்று வயதில் தாயை இழந்தார். தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். ஆனந்தரங்கம் தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். கல்வி கற்ற பின் பாக்குக் கிடங்கினை நடத்தி வந்த ஆனந்தரங்கம் அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது மனைவி செங்கல்பட்டு சேசாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயி என்பவராவார். இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். ‘ஆனந்தப் புரவி’ என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணி ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார். அதிகாரமும், பொருள் வளமும் ஒரு சேரப் பெற்றிருந்த ஆனந்தரங்கம், அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தாம் கேட்ட செய்திகளை மட்டுமல்லாது அலுவல் நிமித்தமாக அவர் படித்த கடிதங்களையும் கூட தம் நாட்குறிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார். துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747- ல் அப்பணிக்குத் அமர்த்தப்பட்டார். ஆனந்தரங்கம் தமிழில் எழுதிய நாட்குறிப்புகளால் புகழ் பெற்றார். அக்காலத்தில் நாட்குறிப்பினை வைத்து வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் வழக்கம் இல்லை. அவ்வகையில் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பை புதிய தமிழிலக்கிய வகையாகக் கருதலாம். நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் தொடங்கினார் எனச் சொல்லமுடியாது; ஆனால், முதன்முறையாக இவருடைய நாட்குறிப்புகளே கிடைத்துள்ளன. ஆனந்தரங்கம்பிள்ளைக்கு முன் அவருடைய மாமா குருவப்பப் பிள்ளை தமிழில் நாட்குறிப்பு எழுதியதாக நம்பப்படுகிறது; ஆனால் அது மறைந்து விட்டது. ஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் நடந்தவற்றை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். தம் நாட்குறிப்புகளுக்குத் "தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்" (சொஸ்த- தெளிந்த அல்லது உரிமையுடைய, லிகிதம்- கடிதம் அல்லது ஆவணம்) என்றே பெயரிட்டார். இடையில் சில நாட்கள் எழுதப்படாமலும் சில நாட்கள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டு கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்து சென்ற நிகழ்வுகள் போன்ற முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன. எனவே ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள் முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை, முகலாய மன்னர் நடத்தை, நவாபின் அத்தாணி மண்டபம், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, வெளிநாட்டார் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், துய்ப்ளேக்ஸ், இலபூர்தோனே, பராதி, இலல்லதொலாந்தால் முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், சோதிடக் குறிப்புக்கள், புலமையளவு முதலிய பலவற்றையும் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. எளிமையான தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புக்களின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன. துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். கப்பல் வந்த போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதையும் இவர் தமது நாட்குறிப்பில் குறித்துள்ளார். புதுச்சேரிக்குக் கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனராம். இதனை என்று தாம் வியந்ததை நாட்குறிப்பில் எழுதியுள்ளார். நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் படையிலிருந்து ஓடிப்போன வீரன் ஒருவனைப் பிடித்து அவனைப் பதினைந்து நாள் கிடங்கில் (சிறையில்) வைத்து பின்பு மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்க விட்டனர். ஏனைய இருவருக்கு காதுகளையும் அறுத்து ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன. இவ்வாறு கடுந்தண்டணைகளை வழங்கியதால் குற்றங்கள் குறைந்தன என்பதை ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனந்தரங்கம் தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கஞ் செய்தல், கோவில் திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்பதைப் பதித்துள்ளார். சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆளுநர் அத்திருமணத்துக்கு வந்திருந்ததையும் இவரின் நாட்குறிப்பு மூலமாக அறிய முடிகிறது. திருமணத்திற்கு வரும் மதிப்பு மிக்கவர்களுக்குத் தரும் வெகுமானம், மரியாதை முதலியன அன்றைய நடைமுறையாக இருந்தது தெரிய வருகிறது. 1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் பின்வருமாறு ஆனந்தரங்கம் பதிவு செய்துள்ளார். இவ்வாறு சுவையான சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கின்றது. பிற மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலானவற்றையும் அவரது நாட்குறிப்புக்கள் வாயிலாக அறியலாம். ஆனந்தரங்கம் இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். அவ்வகையில் ஆனந்தரங்கம் வணிகராக, மொழிபெயர்ப்பாளராக இருந்த போதிலும் மன்னர் போல் மதிக்கப் பெற்றார். ஆளுநர் துய்ப்ளே ஆட்சியில் ஆனந்த ரங்கத்துக்கு தனிப்பட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது. ஆளுநர் துய்ப்ளேக்சு தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்களையும் இவரிடம் மனம் விட்டுப் பேசினார். இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10 ஆம் நாள் மறைந்தார். 1846 ஆம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய 'அர்மோன்கலுவா மொபார்' என்ற பிரெஞ்சுக்காரரால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்கள் ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. 1836 இல் நாட்குறிப்பின் மூலப் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். 'எதுவார் ஆரியேல்' என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 - 50 களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார். இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. 1892 இல் தொடங்கிய இப்பணி 1896 இல் முடிந்தது. மூல நகலிலிருந்து எடுத்த மூன்றாவது நகலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894 இல் தொடங்கி 1928 வரையிலான கால கட்டத்தில் இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. இவற்றிற்கெல்லாம் பின்னரே 1736 செப்டெம்பர் 6 தொடங்கி 1753 செப்டெம்பர் எட்டு வரையிலான காலத்திய நாட்குறிப்புக்கள் எட்டுத் தொகுதிகளாக (ஒன்பது நூல்கள்) பின்வரும் காலகட்டங்களில் தமிழில் வெளியாகின. முதல்தொகுதி (1948), இரண்டாம் தொகுதி (1949), மூன்றாம் தொகுதி (1950), நான்காம் தொகுதி (1951), ஐந்தாம் தொகுதி (1954), ஆறாம் தொகுதி (1956), ஏழு, எட்டாம் தொகுதிகள் (1963). 1755 செப்டம்பர் எட்டாம் நாளுக்குப் பின் தொடங்கி 1764 சனவரி 12 ஆம் நாள் வரை அவர் எழுதிய நாட்குறிப்புக்களில் எஞ்சிய பகுதிகள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு ஒன்றின் முழுவடிவம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கிடைக்க, தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே இன்று வரை வெளியிடப்பட்டுள்ளது. புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மேற்கூறிய எட்டுத் தொகுதிகளையும் எவ்வித மாற்றமுமின்றி நகல் பதிப்பாக மலிவு விலையில் 1998 இல் வெளியிட்டது. இதுவரை அச்சில் வராத எஞ்சிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஆய்வுப் பதிப்பை வெளியிடுவதாக இப்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இன்று வரை அவை வெளியாகவில்லை. ஏப்ரல் 1 துரை விஸ்வநாதன் துரை விஸ்வநாதன், ("துரைவி", பெப்ரவரி 28, 1931 - டிசம்பர் 21, 1998) ஈழத்தில் ஒரு தொழில் அதிபராக தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர். நல்லதொரு கலை இலக்கிய ரசிகராக மட்டுமின்றி, தனது உழைப்பால் "துரைவி" எனும் பதிப்பகம் அமைத்து பல தமிழ் நூற்களை வெளியிட்டதோடு, பல வழிகளிலும் ஈழத்து கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்தவராவார். பெப்ரவரி 28, 1931 தமிழ் நாட்டு துறையூர் சிக்கத்தம்பூர் எனும் ஊரில் பிறந்த துரை விஸவநாதன், 1945 ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் இலங்கையில் குடியேறி, வியாபாரத் துறையில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். 1963 ஆம் ஆண்டு கண்டி நகரில் திருமணம் செய்துக் கொண்டார். 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாத்தளையில் "ராணி கிரைண்டிங் மில்ஸ்" எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதே ஊரில் 1967 ஆம் ஆண்டு "விஜயாஸ்" எனும் வியாபார நிறுவனத்தை தொடங்கினார்.1976ஆம் ஆண்டு கொழும்பு நகரில் "விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ்" எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நாள் தொடக்கம் கலை இலக்கியப் படைப்புக்களைத் தேடிப் படிப்பதிலும், கலை இலக்கிய கூட்டங்களில் செல்வதிலும் தணியாத ஆர்வம் கொண்ட அவர், தான் ரசித்த படைப்புக்களை தன் நாட்குறிப்பேட்டில் குறித்து வைக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அந்த ரசனையின் பயனாக மல்லிகை,ஆசிரியர் டொமினிக் ஜீவா , தெளிவத்தை ஜோசப் , பிரேம்ஜி ,ஆகியோரின் உறவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், போன்ற இயக்கத்தின் தொடர்பும்,அவரது கொழும்பு வியாபார நிறுவனத்தின் மேல் மாடியை கலை இலக்கிய கூட்டங்கள் நடக்கின்ற ஒரு மண்டபமாக உருவாக்க வைத்ததோடு, துரைவி பதிப்பகத்தை உருவாக்கும் சிந்தனையை அவருக்குள் வித்திட்ட வைத்து, அவர் வாழும் காலத்தில். ஒன்பது நூற்களை குறிப்பாக, மலையக தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு செய்யும் வகையிலான நூற்களை துரைவி பதிப்பகத்தின் மூலம் அவரை வெளியிட்ட வைத்தது. அத்தோடு, ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகின் சாதனையாக ராஜ ஸ்ரீகாந்தன் தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய காலகட்டத்தில், தினகரனின் அனுசரணையுடன் ரூபா 101,000.00 பரிசுத் தொகையாக அவரால் வழங்கப்படும் வகையிலான தேசிய ரீதியான சிறுகதைப் போட்டியை அறிவிக்க வைத்தார். ஆனால் அப்போட்டியின் முடிவுகள் வெளிவரும் முன்னதாகவே 1998 டிசம்பர் 21 அன்று துரை விஸ்வநாதன் காலமானார். அவரது மறைவுக்குப் பின்- அதே ஆண்டு அவரது புதல்வர் ராஜ் பிரசாத்தின் முயற்சியினால், அப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகள் துரைவி பதிப்பக வெளியிடாக "பரிசு பெற்ற சிறுகதைகள்" எனும் தலைப்பில் நூலாக தினகரன் நிறுவனத்தின் மண்டபத்தில் நடந்த முதல் நூல் வெளியீட்டு விழா எனும் பெருமையை பெற்று வெளியிடப்பட்டது. வேலூர் சிப்பாய் எழுச்சி வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும். 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்துத் தூண்டி விட்டதாகச் சொல்லப் படுகிறது. 10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது. துணுக்காய் துணுக்காய் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். இங்கு இரவு நேரத்தில் மின்சார வசதிகளை விடுதலைப் புலிகளின் மின்வழங்கல் சேவையே வழங்கி வருகின்றது. தொலைத் தொடர்புகளில் ஒரு சில மோட்டரோலாத் தொலைபேசிகள் உள்ள தொலைத் தொடர்புகளில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும் உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006 உலகில் இணைய இணைப்பு உள்ள மொத்த மக்கள் தொகை பற்றிய தரவை பின்வரும் அட்டவணை தருகின்றது. இக் கணக்கெடுப்பு நவம்பர் 20, 2006 ஆம் திகதிக்குரியது. இந்தக் கணக்கெடுப்பின் படி உலக மக்கள் தொகையில் 16.6 % மக்கள் இணைய இணைப்பினை உடையவர்கள். இவர்களில் பலர் மேலைநாடுகளில் வசிப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னை தெரேசா அன்னை தெரேசா ("Mother Teresa", ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ" ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் "பிறர் அன்பின் பணியாளர் சபை"யினை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் "சிறந்த சமூக சேவகர்" எனவும், "ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர்" என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் "சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட்" என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் "பிறர் அன்பின் பணியாளர் சபை" அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன. இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார். ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ("கோன்ஜா" என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்) 1910 ஆகஸ்டு 26 அன்று ஓட்டோமான் பேரரசின் அஸ்கப் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார். அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர். அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை நல்லதொரு உரோமன் கத்தோலிக்கராக வளர்த்தார். ஜோன் கிராப் க்ளூகாசின் வாழ்க்கை வரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் துறவறம் புக முடிவு செய்து கொண்டார். தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை. இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ். 1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அவ்வமயம் மறைப்பணியாளரின் பாதுகாவலரான லிசியே நகரின் தெரேசாவின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937, மே 14 ஆம் தேதி அளித்தார். பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943-ன் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. செப்டம்பர் 10, 1946 இல் ஆண்டு தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு நேர்ந்த உள் உணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்றார் அவர். 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன. தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப்படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது. 1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (Kalighat Home for the Dying) என்று பெயரிட்டார். பின்னர் அதனைத் தூய இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார் (Kalighat, the Home of the Pure Heart (Nirmal Hriday)). இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும், அவர்களின் சொந்த சமயச்சடங்குகளுடனான இறப்பும் அடக்கமும் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கை நீரும், கத்தோலிக்கர்களுக்கு நோயில்பூசுதலும் கிடைத்தன. "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும். அன்னை தெரேசா விரைவில் தொழு நோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத் (அமைதியின் நகரம்) துவக்கினார். பிறர் அன்பின் பணியாளர் சபை கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் வழங்கி வந்தது. பிறர் அன்பின் பணியாளர் தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக்குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணர்ந்தார். 1955 ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார். இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கியது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புகளின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுவேலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணற்ற நாடுகளில் இல்லங்களையும், கருணை இல்லங்களையும் நிறுவியது. அவரது தத்துவமும், செயல்படுத்தும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்று கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டாரெனக் கூறுகிறார். வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனை மக்களை இயேசுவுக்கு அகருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், "தி லேன்சட்" ,"தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்" போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை ஊசிகளை மறு உபயோகிப்பதாகவும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் இவ்வமைப்பு கொண்டிருப்பதாகக் குறைகூறின. 1963 ஆம் ஆண்டில் பிறர் அன்பின் பணியாளர் சபை சகோதரர்கள் என்ற அமைப்பு ஆண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. பொதுநிலை கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், பொதுநிலை பிறர் அன்பின் பணியாளர் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். கத்தோலிக்க குருக்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 ஆம் ஆண்டில், குருக்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும், 1984 ஆம் ஆண்டில், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து பிறர் அன்பின் பணியாளர் சபை குருக்கள் என்ற துறவற சபையினையும் தொடங்கினார். இதன் நோக்கம் பிறர் அன்பின் பணியாளர் சபையின் பணிகளைக் குருத்துவ பணிகளோடு இணைப்பது ஆகும். 2007 ஆம் ஆண்டுக்குள் பிறர் அன்பின் பணியாளர் சபை ஏறத்தாழ 450 அருட்சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது. 1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார். செஞ்சிலுவை சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை வெளியேற்றினார். 1980களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் பிறர் அன்பின் பணியாளர் சபை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்துத் தனது முயற்சிகளை விரிவாக்கினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரைப் பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும்" என்றார் அவர். அன்னை தெரேசா எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்காளானவர்களுக்கும், ஆர்மீனியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார். 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார். 1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார். நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் பிறர் அன்பின் பணியாளர் சபை தெற்கு பிராங்க்ஸிலும், நியு யார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984க்குள் இவ்வமைப்பு அந்த நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது. அவர் நன்கொடை பணத்தை செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறித்தபர் ஃகிச்சின்சு மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள் வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைட்டியின் சர்வாதிகார, ஊழலில் சிக்கிய டியுவேலியேர் குடும்பத்திலிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ் ஏஞ்சல்ஸின் மாவட்ட துணை நீதியரசர் கீட்டிங்கால் திருடப்பட்டவர்களுக்கு அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். டர்லிக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. கோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் பிறர் அன்பின் பணியாளர் சபை உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை அவரது புத்தகமான "ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த் அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் " என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை தெரேசா தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் தத்துவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார். மதபோதனைகளை விடச் செயல்கள்மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை அன்னை தெரேசா அவரது சீடர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந்நிறுவனத்தின் சில நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளைப் போக்குவதற்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது, மற்றும் நண்பர்களை விட்டுத் தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை வலியுறுத்துவதன் மூலமும், பிறர் அன்பின் பணியாளர் சபை அதன் அருட்சகோதரிகளை குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர். 1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர். ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருத்துவ மனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது. மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5, 1997இல் மரணமடைந்தார். கல்கத்தாவின் பேராயர் ஹென்றி செபாஸ்டியன் டி சோசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் அன்னை தெரேசா எண்ணிய காரணத்தால் அன்னை தெரேசாவின் அனுமதியோடு அவருக்குப் பேயோட்டும்படி ஒரு குருவைப் பணித்ததாகக் கூறியுள்ளார். அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட்சகோதரிகளையும், 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் , 10,000கும் மேலான பொதுநிலையினரையும் கொண்டிருந்தது. இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது. 1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார். அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992இல் வெளியிடப்பட்டது. அன்னை தெரசாவைப் பற்றிய எல்லா இந்தியாரும் உயர்வாகப் பார்க்கவில்லை. கல்கத்தாவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் அவர் குறை கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பதிளாளை அனுப்பியது. ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கினை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் நிர்வாகி கிரிராஜ் கிஷோர், "அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது" என்றுக் கூறினார். பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய திருமுழுக்கை மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஃப்ரண்ட் லைன் பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய கல்கத்தாவாசிகளின் எண்ணத்தில், எந்தத் தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும் கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார். அண்மையில், இந்திய நாளேடான "தி டெலிக்ராப்", அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும் இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து விசாரிக்கும்படி உரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தீர்வுக்குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1970களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலகாலும் அறியப்பட்டார். 1969இன் ஆவணப்படமான மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், "சம்திங்க் பியுடிபுல் பார் காட்" -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார். அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழலில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இல்லையென அவர் முதலில் நினைத்தாலும், இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக்காட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார். அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால் ஏற்பட்ட விளைவு என்றெண்ணினர். முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராகச் சமயம் மாறினார். இவ்வேளையில் கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் வெளிப்படையாய் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் திருத்தந்தை ஆறாம் பவுல், அமைதிக்கான முதல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார். அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப் பெற்றார். தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா புனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறித் தற்பொழுது முக்தி பேறினை எட்டியிருக்கிறார். அன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார். :இங்கிலாந்தும், அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கின. 1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனியா நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்துக் கௌரவப்படுத்தியதோடல்லாமல் 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது. இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருதையும் அவர் ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும், சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட் மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின் நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார். மேற்க்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்குக் கௌரவப் பட்டங்களை அளித்தன. மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினையும் (1978), ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் (1975) அனைத்துலக விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 1979 ல், அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும் என்பதே. அன்னை தெரேசா பரிசைப் பெற்ற பொழுது அவரிடம் ,"உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர்.அதற்கு அவர்,"வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்"என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தித் தனது நோபல் நன்றியுரையில். "உலகம் முழுவதும், ஏழை நாடுகளில் மட்டுமல்ல மேற்க்கத்திய நாடுகளிலும் கூட, ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்." என்றார். மேலும் அவர் கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணியெனக் கூறி வந்தார். அவரது இறுதி நாட்களில் மேலை நாடுகளின் ஊடகங்களிடையே சில எதிர்மறை விளைவுகளை ஈர்க்க நேர்ந்தது. பத்திரிகையாளர் கிறித்தபர் ஃகிச்சின்சு அன்னை தெரேசாவின் கடும் விமர்சகராவார். பிரிட்டிஷ் சேனல் 4க்காக, அன்னை தெரேசாவைப் பற்றிய விளக்கப்படமான "ஹெல்'ஸ் ஏஞ்சல்ஸ்"இன் சக எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இது அரூப் சேட்டர்ஜீயின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்த போதிலும், படத்தின் உணர்வுபூர்வமான அணுகுமுறை அவருக்கு மனநிறைவை தரவில்லை. அவரது விமர்சனங்களை ஹிச்சன்ஸ் 1995 ஆம் ஆண்டுப் புத்தகமான தி மிஷினரி பொசிஷன் என்ற நூலில் விவரித்துள்ளார். உயிரோடிருக்கும்பொழுது அன்னை தெரேசாவும் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றெழுத்தாளர்களும், தனது விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்ததாகவும், அவர் மேலை நாட்டு பத்திரிகையாளர்களின் விமர்சன கருத்துகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் சேட்டர்ஜி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அவர் பிரிட்டனின் "தி கார்டியனில் " வெளிவந்த, "அன்னை தெரேசாவின் அநாதை இல்லங்களில் காணப்படும் ஒட்டுமொத்த உதாசீனத்தையும், உடல் மற்றும் உணர்ச்சிகளின் தவறான பிரயோகத்தையும்", கடுமையாகத் தாக்கி எழுதப்பட்ட விரிவான செய்தியையும், மற்றொரு விளக்கப்படமான "மதர் தெரேசா: டைம் ஃபார் சேஞ்ச்?" என்னும் படமும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. சேட்டர்ஜி, ஹிச்சன்ஸ் இருவருமே தங்களது கருத்துக்களுக்காக விமர்சனத்துக்குள்ளாயினர். "ஸ்டேர்ன்" எனும் ஜெர்மானிய இதழ் அன்னை தெரேசாவின் முதல் நினைவுநாளில் நன்கொடைகள் செலவு செய்யப்பட்ட விதத்தைக்குறித்து ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. மருத்துவப் பத்திரிகைகளும் வெவ்வேறானக் கண்ணோட்டங்களிலிருந்து, நோயாளியின் தேவைகளில் முதன்மையானவற்றைக் கருதுவதினால் எழும் விமர்சனங்களை அவரை மையமாக வைத்து வெளியிட்டன. "நியு லெஃப்ட் ரெவியு" பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரான தாரிக் அலி மற்றும் அயர்லாந்தில் பிறந்த புலன் விசாரணைப் பத்திரிகையாளரான டோனல் மேக்கின்டைர் போன்றோர் இவரின் ஏனைய விமர்சகர்களாவர். மதசார்பற்ற சமூகங்களிலும் மதவாத சமூகங்களிலும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிட்ட இரங்கல் செய்தியில் உயரிய குறிகோள்களுடன் அதிக நாள் வாழ்ந்த ஒரு அரிய, தனித்தன்மை பெற்ற நபர் அன்னை தெரேசா எனவும் ஏழை எளியோர், நோயாளிகள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக அவரது வாழ்க்கை முழுவதுமான உழைப்பும் மனிதகுல மேம்பாட்டிற்கான சேவைகளின் மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்." எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் ஐ நா சபையின் பொதுச் செயலாளர் ஜேவியேர் பெரேஸ் டி கியுல்லர்,"அவரே ஐ நா சபையாவார், அவர் உலகத்தின் சமாதானமாக இருந்தார்" என்று கூறினார். அவரது வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னும் அன்னைத் தெரேசாவை அமெரிக்காவில் பரவலாகப் புகழப்பட்ட தனிப்பெரும் நபரெனக் கேல்லப் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு காலங்காலமாகக் கணித்து வந்திருக்கிறது. 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணியெனக் கணிக்கப்பட்டுள்ளார். இதில் "மிகக் குறைந்த வயதில் புகழ் பெற்றவர்" என்னும் அணியைத் தவிர பிற அணிகள் அனைத்திலும் இவர் முதலிடம் பிடித்தார். அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார் தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது. அவ்வமயம், "அவர் தனது மனதினுள்ளோ, நற்கருணையினுல்லோ எவ்வித தெய்வீகப் பிரசன்னத்தையும் உணர்ந்ததில்லை." என்கிறார், அவரது புனிதத்துவத்துக்காகப் நடவடிக்கைகளைக் கண்கானிக்கும் அருட் தந்தை பிரையன் கொலோடிச்சக். அன்னை தெரேசா இறைபிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசத்தைக்குறித்தும் ஆழமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.[103] இக்கூற்றினை முன்னிட்டு அருட் தந்தை.பிரையன் கொலோடிச்சக் அவரது வாழ்க்கையின் அர்த்தத்தைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமிருப்பதாகவும், ஆனாலும் ஆண்டவர் அவர் மூலமாகச் செயலாற்றுகிறார் என்ற அவரது விசுவாசம் எள்ளளவேனும் குறையவில்லை எனவும் ஆண்டவரின் அருகாமையிலிருக்கிறோம் என்ற உணர்ச்சி குறைபாட்டால் அவர் புலம்பினாலும் அவரது பிரசன்னத்தைக் குறித்து அவர் கேள்வியெழுப்பியதில்லையெனத் தெரிவித்துள்ளார். வேறு சில புனிதர்களுக்கும் இத்தகைய இருண்ட காலங்கள் இருந்ததுண்டு. இவற்றைச் சோதனைகளாகக் கத்தோலிக்கர்கள் கருதுகின்றனர். அவிலா தெரேசா மற்றும் லிசியே நகரின் தெரேசாவுக்கு ஏற்பட்ட ஒன்றுமில்லாத இரவுகள் (நைட் ஆப் நத்திங்க்னஸ்) இதைப் போன்றதாகும். அவர் வெளிக்காட்டிய சந்தேகங்கள் அவரது புனிதத்துவத்துக்கு இடையூறாக இல்லாமல் அவரின் புனிதத்துவத்துக்கு சான்றாக அமைகின்றன. பத்துவருடம் இவ்வாறு அவதியுற்றப்பின் அன்னை தெரேசா ஒரு குறைந்த கால விசுவாச மீட்சியை பெற்றார். 1958இன் இலையுதிர்காலத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பையஸ் மரணத்தின் பொழுது, அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக நடத்தப்பெற்ற திருப்பலியில் அவர், தான் நீண்ட இருளிலிருந்தும், இனம்புரியாத பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பெற்று விட்டதாகக் கூறினார். எனினும் ஐந்து வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டதாகவும் விவரித்தார். அன்னை தெரேசா தனது ஆன்ம குருவுக்கும் மேலாளர்களுக்கும், 66 ஆண்டுகளாகப் பல கடிதங்கள் எழுதியுள்ளார். தனது கடிதங்களைப் பற்றி மக்கள் அறியவரும் போது, "இறை இயேசுவைக் காட்டிலும் என்னைப் பற்றிய எண்ணத்தின் ஆக்கிரமிப்பிலாழ்ந்து விடுவர்", என்ற கவலையுடையவராய் அவற்றை அழித்து விடக் கேட்டுக் கொண்டார். எனினும் இக்கோரிக்கைகளுக்கு பிறகும் இத்தகைய கடிதத் தொடர்புகள் தொகுக்கப்பட்டு "மதர் தெரேசா: கம் பி மை லைட்" என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அவரின் நண்பர் ஒருவரான அருட்திரு.மைக்கேல் வேன் டெர் பீட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர், "இறை இயேசு உம்மீது தனிப்பட்ட அன்பை உடையவராயிருக்கிறார். ஆனால் எனக்கோ, என்னைச் சூழ்ந்துள்ள அளப்பறிய நிசப்தமும் வெறுமையும் என்னைப் பார்த்தும் பார்க்காதவளைப் போலவும், கேட்டும் கேட்காதவளைப் போலவும், ஜெபத்தில் நாவை அசைத்தும் பேச்சற்றவளாகவும் இருக்கச் செய்கின்றன. ஆண்டவரது செயலே என்னுள் ஓங்கும்படிச் செய்ய எனக்காக உம்மை இறைவேண்டல் புறிய வேண்டுகிறேன். பல புதிய கருத்துக்கள் அன்னை தெரேசாவின் எழுத்துக்களை விசுவாசத்தின் இக்கட்டின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் போன்ற அன்னை தெரேசாவின் விமர்சகர்கள், அன்னை தெரேசாவின் எழுத்துக்களை, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் மாறாக விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வெளித்தோற்றத்திற்கான ஆதாரங்களெனக் கருதுகின்றனர். ஹிச்சன்ஸ், "எது நிதர்சனமானது: தங்கள் நயகிகளுள் ஒருவர் தனது விசுவாசத்தின் சுவடுகளை இழந்துவிட்டார் எனும் உண்மையை விசுவாசிகள் தைரியமாக எதிர்கொள்வதா அல்லது விசுவசிப்பதை நிறுத்திவிட்ட ஒரு குழம்பிய மூதாட்டியை விளம்பர முத்திரையாகக் கொண்டு தொடர்ந்து சபை நிடத்துவதா?" எனக்கேள்வி எழுப்பினார் ஆனால் "கம் பி மை லைட்" -ன் பதிப்பாசிரியர் பிரையன் கொலோடிச்சக் போன்றவர்கள், 16 ஆம் நூற்றாண்டு ஆன்மீகவாதியான புனித சிலுவை அருளப்பர் "ஆன்மாவின் இருண்ட காலத்தை" சில ஆன்மீகவாதிகளின் வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு நிலையாகக் கருதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறானர். இக்கடிதங்கள் அவர் புனிதத்துவத்தை எட்டுவதற்குத் தடையாக இருக்கப்போவதில்லையென வத்திக்கான் தெரிவித்துள்ளது. "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற தனது முதலாம் சுற்றுமடலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கல்கத்தாவின் அன்னை தெரேசாவைப் பற்றி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சுற்றுமடலில் முக்கிய கருத்து ஒன்றை தெளிவுபடுத்த அவரது வாழ்க்கையை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். "கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசாவின் சான்றில், ஆண்டவருக்கு ஒதுக்கப்படும் ஜெப நேரம் நம்மைச் சுற்றியிருப்போருக்காற்றும் உபயோகமுள்ள அன்புப் பணியிலிருந்து விலகிவிடாமல் நம்மைக் காப்பதோடல்லாமல் அப்பணியின் குறைவற்ற ஊற்றாகும்." என்றார். அன்னை தெரேசா போலத் தியானத்திலும், விவிலிய வாசிப்பாலும் மட்டுமே பிரார்த்தனையெனும் வெகுமதியை நாம் பயிரிட முடியும் என்கிறார். அன்னை தெரேசாவின் சபைக்கும் பிரான்சிஸ்கன் சபைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும் புனித அசிசியின் பிரான்சிசுவின் தீவிர பக்தையாய் இருந்த காரணத்தால், அவரது வாழ்க்கையும் செயல்களும் பிரான்சிஸ்கன் சபையின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரிகள் அமைதிக்கான அசிசி பிரான்சிசுவின் செபத்தினை நற்கருணைக்குப் பின் சொல்லும் நன்றியறிதலின் போழுது பயன்படுதும் படி அன்னை தெரேசா கூறியுள்ளார். மேலும் பல பிரமாணங்களும், பரிந்துரைகளும் இவ்விரு சபைகளுக்கும் பொதுவானவையே. புனித பிரான்சிஸ் அசிஸியாரைப்போல இவரும் ஏழ்மையையும், புனிதத்தையும், கீழ்படிதலையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தலையும் வலியுறுத்தினார். 1997 இல், அன்னை தெரேசாவின் மரணத்துக்குப் பின் புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான முக்திப்பேறு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செயல் அன்னைதெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த அற்புதத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை உள்ளடக்கியது. 2002 இல், மோனிகா பேஸ்ரா என்ற இந்திய பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி அன்னை தெரேசா உருவம் பதிக்கப்பட்ட பதக்கத்தை அணிந்ததும் குணமாகிவிட்டதை அற்புதமாகக் கத்தோலிக்க திருச்சபை அங்கிகரித்தது. அன்னையின் உருவத்திலிருந்து புறப்பட்ட ஒளிவெள்ளம் புற்றுநோய்க்கட்டியைக் குணப்படுத்தியதாக மோனிகா பேஸ்ரா கூறினார். மோனிகா பேஸ்ராவின் மருத்துவ ஊழியர்கள் சிலரும், தொடக்கத்தில் அவரது கணவரும் கூடப் பேஸ்ராவுக்க அளிக்கப்பட மருத்துவ சிகிச்சையே கட்டியைக் குணப்படுத்தியதாகக் கூறினர். மோனிகாவின் மருத்துவ அறிக்கைகள், மேல்நிலையொலியறிக்கைகளையும், மருந்துச் சீட்டுகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கொண்டிருப்பதால் அதை வைத்து அவர் குணமானது அற்புதமா இல்லையா என்பதை நிரூபித்து விடலாம் என்பதே எதிரணியினரின் கருத்தாகும். இவை அனைத்தும் மோனிகா, பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரி பெட்டா என்பவரிடம் கொடுத்துள்ளதாகக் கூறினார். இதற்கு அருட்சகோதரி பெட்டாவிடமிருந்து, "விளக்கம் எதுவுமில்லை" என்ற பதில் மட்டுமே அளிக்கப்பட்டது. மோனிகா சிகிச்சை பெற்று வந்த பாலர்காட் மருத்துவமனை அதிகாரிகள் அவருக்குக் கிடைத்த சுகத்தை அற்புதமாக அறிவிக்கக் கோரி தங்களுக்கு பிறர் அன்பின் பணியாளர் சபையிடமிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் குறை கூறியுள்ளனர். பாரம்பரியமான நடைமுறையான புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்ப்பவர் பாத்திரத்தை வத்திகான் பல காலமாக நீக்கி விட்டதால், கிறித்தபர் ஃகிச்சின்சு மட்டுமே வாடிகனால் அன்னை தெரேசாவின் முக்திபேற்றிற்கும் புனிதர் பட்டமளிப்புக்கும் எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அழைக்கப்பட்டவர். ஹிச்சென்ஸ், "அவரது நோக்கம் மக்களுக்கு உதவி செய்வதல்ல" என்று வாதாடினார். மேலும் அவர் அன்னை தெரேசா கொடையாளர்களிடம் அவர்களது நன்கொடைகளின் உபயோகத்தைப் பற்றிப் பொய் கூறினார் என்று குற்றம் சாட்டினார். அவருடன் உரையாடியபொழுதுதான் அவரது உறுதியான நிலையை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. அவர் ஏழ்மையைப் போக்க முயற்சிக்கவில்லை. அவர் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாயிருந்தார். அவர் மேலும், "நான் சமூக சேவகி அல்ல", என்றும், "நான் சமூகசேவைக்காக இவற்றைச் செய்யவில்லை, கிறிஸ்துவுக்காவே இதைச் செய்கிறேன்" என்றும் அன்னை தெரேசா குறியதாகவும் கூறினார். முக்திப்பேற்றை அடையச் செய்வதற்கும், புனிதராக்குவதற்கும், கர்தினால்களின் குழு அவரது வாழ்க்கையைக் குறித்தும் பணிகளைக் குறித்தும் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத எல்லா விமர்சனங்களுக்கான ஆவணங்களைப் பரிசீலித்தது. ஹிச்சன்ஸின் குற்றச்சாட்டுகள் புனிதர் பட்ட நடவடிக்கைகளுக்கான உரோமைச் செயலகத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் அன்னை தெரேசாவின் முக்திப்பேற்றிற்கு எவ்வித தடையும் இல்லையெனும் முடிவுக்கு அவர்கள் வந்ததாகவும் வத்திக்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்மீதான தாக்குதல்களினிமித்தம் சில கத்தோலிக்க எழுத்தாளர்கள் அவரை "முரண்பாடுகளின் அடையாளம்" என அழைத்திருக்கின்றனர். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. அவர் புனிதர் பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ வேண்டும். பிரேசில் நாட்டில்மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனமுருக பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அதன்பின் அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த இரண்டாவது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அருளாளர் அன்னை தெராவிற்கு புனிதர் பட்டத்தை அன்னையின் பிறந்த நாளானா 5 செப்டம்பர் 2016-க்கு முந்தைய நாளான 4 செப்டம்பர் 2016-இல் வழங்க ஒப்புதல் அளித்தார். திசம்பர் 17, 2015இல் இவரால் இரண்டாவது அற்புதம் நிகழ்ந்ததை திருத்தந்தை பிரான்சிசு ஏறுக்கொண்டதாக வாத்திகன் அறிவித்தது; பிரேசிலியர் ஒருவரது பல மூளைக் கட்டிகள் இவரால் குணமடைந்ததாக ஏற்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 4, 2016இல் வாத்திகன் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த விழாவொன்றில் திருத்தந்தை பிரான்சிசு அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டமளித்தார். இந்தக் கூட்டத்தில் 15 அடங்கிய அரசு அலுவல்முறை சார்பாளர் குழு, இத்தாலியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வீடற்ற 1500 மக்கள் உட்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். இப்புனித விழா வாத்திகன் அலைவரிசையில் நிகழ்நேரக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டதோடன்றி இணையவழியாகவும் உடனடியாக பரப்பப்பட்டது. அன்னை தெரசாவின் சொந்த ஊரான இசுகாப்யேவில் ஒரு வாரத்திற்கு கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கொல்கத்தாவிலுள்ள அவரது சேவை இல்லத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. டிசம்பர் 15 குரோவ் குரோவ் (Kurów) தென் கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். 2,811 (2005 ஆம் ஆண்டில்) மக்கள் இங்கு வாழ்கின்றனர். 1431 க்கும் 1442 க்கும் இடையில் இக்கிராமத்துக்கு நகரத்துக்கான உரிமை வழங்கப்பட்டது. அயல் நகரங்களில் இருந்து உணவு வணிகம் நடைபெறும் முக்கிய நகராக இருந்து வந்தது. பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்திருந்தன. 16ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மத போதனைகளில் ஒன்றான கல்வினிசம் (Calvinism) இங்கு பரவியிருந்தது. 1660களில் இக்கிராமத்தின் பலரும் "ஆரியனிசத்தைப்" () பின்பற்றினர். 1795 இல் இந்நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1815இல் போலந்துடன் இணைக்கப்பட்டது. 1831 பெப்ரவரியில் இங்கு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, "ஜோசப் துவெர்னிக்கி" தலைமையிலான போலந்துப் படையினர் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர். 1870 இந்நகரம் தனது நகர அந்தஸ்தை இழந்தது. இன்றும் அந்த அந்தஸ்தை மீளப் பெற முடியவில்லை. செப்டம்பர் 9, 1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் இந்நகரம் ஜெர்மனியரின் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. மருத்துவமனை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சில் பலர் கொல்லப்பட்டனர். போலந்தின் முன்னாள் கம்யூனிசத் தலைவரும் அதிபருமான "ஜாருசெல்ஸ்கி" இக்கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு 1956 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருக்கோணமலை நகரில் நடத்தப்பட்ட சமஷ்டிக்கட்சி (தமிழரசுக் கட்சி) யின் முக்கியத்துவம் மிக்க மாநாடொன்றே திருமலை மாநாடு என்ற பெயரால் குறிப்பிட்டழைக்கப்படுகிறது. 1956ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையின் அரசாங்கத்தால் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து இம்மாநாடு திருக்கோணமலையில் நடத்தப்பட்டது. திருமலை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: "தீங்கிழைப்பதாக அமைந்துள்ள இன்றைய ஒற்றையாட்சி முறை அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் ஒன்று அல்லது மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டதும் - நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதும் - வெளியார் தலையீட்டிலிருந்து இலங்கையை பாதுகாப்பதை உறுதி செய்வதும் - சுயநிர்ணய உரிமையும் தன்னாதிக்கமும் உள்ளதும் பகுத்தறிவுக்கேற்றதுமான - இணையாட்சி முறையில் ஜனநாயக யாப்புமுறைக்குட்பட்டஒன்று அல்லது மேற்பட்ட மொழிவழி அரசுகளை உருவாக்கவேண்டும்" சமஷ்டிக்கட்சி தனது அரசியல் நோக்கங்களிலிருந்து கீழிறங்கி நிற்கும் தளம்பல் நிலையை இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக திருமலை மாநாட்டின் தீர்மானம் மீதான எதிர் நிலை விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. ச்மஷ்டிக்கட்சியின் ஆரம்பிப்பு உரையின்போது இலங்கையில் ஒரு சிங்கள மாகாணமும் தமிழ் மாகாணமும் அமைந்து மத்திய அரசு ஒன்று ஏற்பட வேண்டும் என்ற கருத்து , கோரிக்கையாக வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் திருமலை தீர்மானத்திலோ, அக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கி ஒன்று அல்லது மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டதும் என்ற வார்த்தையை பிரயோகித்திருப்பது குறித்தே இவ்விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது பிராமி எழுத்துமுறை பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். இது பிராமி குடும்பத்தை சார்ந்த எழுத்துமுறைகளிலேயே பழையதும் மூலமுமான எழுத்துமுறையாகும். இது பழங்காலத்தில் தெற்காசியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது. அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன. இது வரையிலும் பிராமி எழுத்துக்களின் மிகப்பழைய கல்வெட்டுக்கள் இவையே என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு 6ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பிராமி எழுத்து முறை இன்னும் பழமையானவையாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ-அரேபிய எண் முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது. நடுகல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைச் சங்கப்பாடல் ஒன்று குயிலெழுத்து (குயில் எழுத்து) என்று குறிப்பிடுகிறது. மதுரை மருதன் இளங்கீரனார் இதனைக் குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்கள் இளைஞன் ஒருவனின் இளந்தாடி போல் இருந்தது என்றும் அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்கள்) படிப்பதில்லையாம். நடுகல்லில் போற்றப்படுபவன் பெயரும், அவனது செயலும் பொறிக்கப்பட்டிருக்குமாம். குயிலுதல் என்ற சொல்லுக்குத் தோண்டி எடுத்தல், தோண்டிச் செதுக்குதல் என்பது பொருள் "திரு மணி குயிகாற்றுநர்" "இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து, உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி" என்னும் தொடர்களால் இதனை உணரலாம். மரத்தில் குடைந்தெடுக்கப்பட்ட இசைக் கருவிகளைச் சிலப்பதிகாரம் குயிலுவக் கருவிகள் என்றும், இக் கருவிகளை இசைப்போரைக் குயிலுவ மாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. இச்சொல்லாட்சியும் குயிலுதல் என்பது என்ன என்பதை உணர்த்துகிறது. பிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான அரமேயத்திலிருந்து (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய கரோஷ்டி எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் பிராகிருத மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய மெய்யெழுத்துக்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது. ரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்துமுறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றார். கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்துமுறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். ஹன்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள், பிராமி எழுத்துமுறை முற்றிலும் இந்தியாவிலிருந்தே தோன்றியது எனவும், அது சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் சிலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர். மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். பிராமி இடப்பக்கத்தில் இருந்து வடப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்துமுறையாகும். மெய்யெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிரெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர்மெய்யெழுத்துக்களை எழுத, மெய்யெழுத்துக்களுக்கு சில உயிர்க்குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துக்களை எழுதும் போது, ஒரு எழுத்துக்கு கீழே இன்னொரு எழுத்து இடப்படும் பிராமியும், கரோஷ்டியும் தான் இந்தியாவின் பழம்பெரும் எழுத்துமுறைகள் ஆகும். கரோஷ்டி ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிராமியோ இந்திய துணைக்கண்டம் முழுதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பிராமி பல எழுத்துமுறைகளோ திரிந்து விட்டது. எனினும் கரோஷ்டிடோ சுவடு ஏதும் இல்லாமல் மறைந்து போனது. பிராமி, ஆதிகால பிராகிருத மொழிகளை எழுதபயன்படுத்தப்பட்து. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதம் சில நூற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்ட துவங்கியதால், சமஸ்கிருதத்தில் உள்ள பல ஒலிகளுக்கு(ரு,லு முதலியன்) பிராமியில் எழுத்துவடிவங்கள் கிடையாது பிராமி எழுத்துமுறையில் இருந்து பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றியுள்ளன. தென்னிந்தியாவில் வட்டவடிவமாக முறையிலும்(வட்டெழுத்து, கிரந்தம் ஆகியன) வடபுலத்தில் கோணமான வடிவில் மாறியது. இப்போது, பிராமியில் இருந்து தோன்றிய எழுத்துமுறைகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ். பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன. சர்சைக்குரியதாக, கொரிய ஹங்குல் எழுத்துமுறையில் பிராமிய எழுத்துமுறையாக கருதப்படுகிறது பிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது. த சிக்ஸ்த் சென்ஸ் த சிக்ஸ்த் சென்ஸ் (The sixth sense, ஆறாம் அறிவு) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். எம். நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஸ் வில்லிஸ், ஹாலே ஜோல் ஓஸ்மெண்ட் மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. மர்மப்படம் / பேய்ப்படம் மனோதத்துவ மருத்துவரான மால்கொம் குரோவ் (புரூஷ் வில்லிஸ்) மனநிலை பாதிக்கப்பட்டவெரனக் கருதப்படும் கோலிற்கு (ஹாலே ஜோல் ஓஸ்மெண்ட்) மருத்துவம் பார்ப்பதற்காகச் செல்கின்றார். அங்கு கோலும் தனக்கு இறந்த மனிதர்களுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களைத் தன்னால் அவதானிக்க முடிகின்றதெனவும் கூறுகின்றான். இவற்றைக் கேட்கும் குரோவும் அதிசயப்படுகின்றார். அதே சமயம் குரோவ் தன்னை நோக்கி ஆயுதம் ஏந்தி சுட வந்த நிர்வாண மனிதனைப் பற்றியும் நினைத்துக் கொள்கின்றார். கோளிற்கு ஆவியாகக் கருதப்படும் பெண்ணொருவருடன் தொடர்பு ஏற்படுகின்றது, அது தான் எவ்வாறு தனது தாயாரினால் விசம் வைத்துக்கொலை செய்யப்படுகின்றேன் என்பதனை விளக்கிக் கூறுகின்றது. இச்சம்பவத்தினை கோல் தனது தாயாருக்கு விளக்கும் சமயம் தாயார் ஆவிகள் வெறும் கட்டுக்கதை என நம்பமறுக்கின்றார். இருப்பினும் கோல் தனது தாயாரின் தாய் ஒருமுறை தாயாரின் நடனத்தினை மேடையில் கண்டுகளிக்க வந்துள்ளார் எனக்கூறவும் கோலின் தாயாரும் தனது மகனிடம் அரிய சக்தி இருப்பதனை உணர்கின்றார். கோலிற்கு வைத்தியம் பார்க்க வந்த குரோவும் தனது மனைவியடம் சென்று பேசச்சொல்லும் கோலின் சொற்கேட்டு அங்குசெல்லும் செல்கின்றார். அங்கு அவர் மனைவி நிகழ்படபிரதியினைப் பார்க்கும் சமயம் அப்பிரதியில் குரோவ் சுட்டு வீழ்த்தப்பட்டது புரிகின்றது. பின்னர் அவரும் ஒரு ஆவி என்பதே திரைக்கதையின் முடிவாகும். அன்பிரேக்கபில் அன்பிரேக்கபில் (Unbreakable) 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.எம், நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஷ் வில்லிஸ், சாமுவேல் எல். ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மர்மப்படம் டைட்டானிக் (திரைப்படம்) டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான "டைட்டானிக்", அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும். 1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் "அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ்" (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய "பராமவுண்ட் பிக்சர்ஸ்" மற்றும் "20த் செஞ்சுரி ஃபோக்ஸ்" ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன. தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது. காதல்படம் டைட்டானிக் (1943 திரைப்படம்) த பியானிஸ்ட் (திரைப்படம்) த பியானிஸ்ட் (The pianist) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாடகப்படம் / போர்ப்படம் வோட்டர்வேர்ல்ட் (திரைப்படம்) வோட்டர்வேர்ல்ட் (Waterworld) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கெவின் ரினோல்ட்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கெவின் கோஸ்ட்னர்,ஜான் ட்ரிப்பில்ஹொம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். விஞ்ஞானப்படம் அக்குரெ:த ராத் ஒஃவ் கோட் அக்குரெ:த ராத் ஒஃவ் கோட் (Aquirre:The wrath of God) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேர்மனிய மொழித் திரைப்படமாகும். ஃபயர் (திரைப்படம்) ஃபயர் ("Fire") 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்திதா தாஸ்,ஷபனா ஆஸ்மி மற்றும் ப்ரும் நடித்துள்ளனர். சுதந்திரப்படம் / ஓரினச்சேர்க்கைப்படம் ஜன ஆரான்ய ஜன ஆரான்ய "(The Middleman)" (1976) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதீப் முகெர்ஜீ,சத்ய பானெர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1976 தேசிய திரைப்பட விருது (இந்தியா) ஜொய் பாபா ஃபெலுநாத் ஜொய் பாபா ஃபெலுநாத் (The Elephant God) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,சந்தோஷ் டத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாத்கதி சாத்கதி (The Deliverance) 1981 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட திரைப்படமகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்தொலைக்காட்சித் திரைப்படத்தில் ஓம் பூரி,ஸ்மிதா பட்டில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காரே பைரே காரே பைரே ("The Home and the World") 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,விக்டர் பானெர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். சுகுமார் ராய் சுகுமார் ராய் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணத் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,சந்தோஷ் டத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஞானசத்ரு ஞானசத்ரு 1989 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ, ரும குஹா தகுர்டா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஃபிஸா ஃபிஸா 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.காலிட் முகமெட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன்,கரிஷ்மா கபூர்,ஜெயா பாதுரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அசோகா (திரைப்படம்) அசோகா 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாருக்கான், ஜூஹி சௌவ்லா, அஜித் குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். வரலாற்றுப்படம் / நாடகப்படம் சிந்தா சிந்தா (இந்தி: ज़ंदा) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். சஞ்சேய் குப்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், ஜோன் ஆப்ரஹாம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தால் (திரைப்படம்) தால் (Hindi: ताल, Urdu: تال) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். சுபாஷ்காய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், அணில் கபூர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். காதல்படம் இசுபேசு யாம் இசுபேசு யாம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜோ பிட்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மைக்கேல் ஜோர்டன்,வேன் நைட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம் அஷானி சங்கத் அஷானி சங்கத் (வங்காள மொழி: অশনি সংকেত, ஆங்கிலம் title: Distant Thunder) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,போபிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சோனார் கெல்லா சோனார் கெல்லா (வங்காள மொழி: সোনার কেল্লা), (The Golden Fortress) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,சந்தோஷ் டத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சீமபத்தா சீமபத்தா (, ) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, ஷர்மிளா தாகூர்,மற்றும் பலர் நடித்துள்ளனர். பராசக்தி (திரைப்படம்) பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத. கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. நாடகப்படம் பிராகிருதம் பிராகிருதம் அல்லது பாகதம் (பாளி: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. சங்கதத்தையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை வடமொழிக்கு புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தன. பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின. பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி, பகதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது ஆகும். பிரகிருதி, பகதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மாறாக சமஸ்கிருதம், சாங்கதம் (संस्कृतं) என்றால் 'நன்றாக செய்யப்பட்டது' எனப் பொருள். பல பிராகிருத மொழிகள் உள்ளன. அவற்றுள் பலதரப்பட்ட இலக்கிய மரபுடையன மூன்று. அவை சௌரசேனி, மகதி, மஹாராட்டிரி. சமண பிராகிருதத்தையும் இத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். பைஸாகி, காந்தாரி என்ற பிராகிருத மொழிகளும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. அர்த்தமகதி என்ற மொழி சமண நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியாகும். புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பெரும்பான்மையான தேரவாத புத்த மத நூல்களும் சூத்திரங்களும் பாளி மொழிலேயே உள்ளன. அசோகரின் கல்வெட்டுகளும் இம்மொழிலேயே உள்ளது. எனினும் பல்வேறு இனபேத காரணங்களுக்காக வடமொழி நூலாசிரியர்கள் பாளியை ஒரு பிராகிருத மொழியாக கருதவில்லை. தற்காலத்தில் அது பிராகிருத மொழியாகவே கருதப்படுகிறது . பெரும்பான்மையான தற்கால வட-இந்திய மொழிகள் பிராகிருத்தில் இருந்து தோன்றிய "அபப்ரம்சா" என்ற இடைக்கால மொழியிலிருந்தே தோன்றின. டிசம்பர் 16 டிசம்பர் 17 வட்டெழுத்து வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர் வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம். ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை. கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. சங்ககாலக் "குயிலெழுத்து" நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது. ஆண்பாவம் ஆண்பாவம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியராஜன்,பாண்டியன், ரேவதி, சீதா பார்த்திபன், வி. கே. ராமசாமி, ஜனகராஜ், தவக்களை மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற "காதல் கசக்குதய்யா" என்னும் பாடல் "சண்முகப்பிரியா ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. . "குயிலே குயிலே" பாடல் மத்தியமாவதி இராகத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நான் கோயில் கட்டினேன் நீங்க யாரும் சாமி கும்பிட வரல, பள்ளிக்கூடம் கட்டினேன் நீங்க யாரும் படிக்க வரல, கொளத்த வெட்டினேன் நீங்க யாரும் குளிக்கவே வரல, ஆனா சினிமா கொட்டாய் கட்டினேன் கொட்டு மேளத்தோட வரவேற்கறீங்க... வானபிரஸ்தம் வானபிரஸ்தம் "(The Last Dance)" (1999) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும்.ஷஜ்ஜி என்.கருன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால்,சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கலைப்படம் கேரளாவில் 1950 ஆம் ஆண்டுகளில் வாழும் குன்ஹிக்குட்டன் (மோகன்லால்) கதகளி நடனத்தின் மீதுள்ள அவாவினால் அந்தணர்கள் குடும்பத்திடம் கற்கச் செல்கின்றார். அங்கு தாழ்ந்த ஜாதியனன் என ஒதுக்கப்படும் பொழுது அங்கிருந்த நல்லவர் ஒருவரால் அரவணைக்கப்பட்டு கதகளிக் கலையினைப் பயில்கின்றார் உயர்ந்த ஜாதியனனாகத் திகழ்ந்த குன்ஹிக்குட்டனின் தந்தையார் தாழ்ந்த ஜாதிப் பெண்ணான குன்ஹிக்குட்டன் தாயாரை இரண்டாம் தாரமாக ஏற்றுக் கொண்டவராவார். தனது புதல்வனான குன்ஹிக்குட்டனை வாழ்நாள் முழுதும் ஒதுக்கி வைத்தவரும் ஆவார். ஒரு சமயம் குன்ஹிக்குட்டன் மகாபாரதக் கதையில் வரும் அர்ஜுனன் கதாபாத்திரத்தினை ஏற்று நடிக்கும் சமயம் அர்ஜுனன் மனைவியான சுபத்ரா கதாபாத்திரத்தில் உள்ளது போன்று தன்னை நினைத்துக் கொண்டு அர்ஜூனனாக நடித்த குன்ஹிக்குட்டனைக் காதலிக்கின்றார் அவ்வூர் இளவரசியான சுபத்ரா (சுகாசினி). சுபத்ரா விமான ஓட்டி ஒருவரை மணம் புரிந்தவரென்பதும் குன்ஹிக்குட்டனின் சினேகம் கிடைத்த சில நாட்களில் அவர் இறந்து விடுவதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இருவரும் காதல் கொண்டு காம லீலைகளில் ஈடுபட்டுக் குழந்தையொன்றினையும் பெற்றெடுக்கின்றனர்.குன்ஹிக்குட்டன் ஏற்கனவே ஒரு மனைவியை உடையவரென்பதும் மகள் ஒருத்தியை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் பிரியும் சுபத்ரா தான் அர்ஜூனன் என்ற கதாபாத்திரத்தையே காதல் கொண்டதாகவும் குன்ஹிக்குட்டனை அல்ல என்பதனையும் விளக்கிக் கூறுகின்றார்.இருவரும் பிரிந்தே வாழுகின்றனர்.கதகளி நடனத்தினை அரங்கேற்றும் பொழுது குன்ஹிக்குட்டன் கீழே விழுந்து இறக்கின்றார் இச்செய்தியை அறிந்து கொள்ளும் சுபத்ரா குன்ஹிக்குட்டன் தனக்கு இறுதியாக எழுதிய மடலில் தனது மகனைப் பற்றி விசாரித்து எழுதுகின்றார் அதன் பின்னர் சுபத்ரா மனம் நொந்து போய் மயங்கி விழுந்து மரணிக்கின்றார். 1999 AFI Fest (அமெரிக்கா) 2000 இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா (துருக்கி) 2000 பம்பாய் சர்வதேச திரைப்படவிழா (இந்தியா) 2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா) பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு. இவ்வியக்கத்தில்; நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல்; மனித உயிர்களையும், உடல் நலத்தையும் பாதுகாத்தல்; மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்துதல்; மனிதர்களின் துன்பங்களைத் தடுத்தலும் அவற்றை நீக்குதலும் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 97 மில்லியன் தன்னார்வலர்கள் உலகம் முழுதும் பணிபுரிகின்றனர். இவ்வியக்கம், பல தனித்தனியான அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். இவ்வமைப்புக்கள், பொது அடிப்படைக் கொள்கை, நோக்கம், சின்னம், சட்டவிதிகள், ஆட்சி உறுப்புக்கள் என்பவற்றால் ஒன்றிணைந்துள்ளன. இயக்கத்தின் பகுதிகளாவன: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை நோக்கத்தைக் கொண்டு வருவதற்காக இளம் செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கப்படுகிறது. பள்ளித் தலைமையாசிரியர் மேற்பார்வையில் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபாடுடைய பள்ளியாசிரியர் ஒருவரைக் கொண்டு இக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்களில் ஈடுபாடு கொண்ட பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சமர்க் களங்களில் காயமுற்ற படைவீரர்களை முறைப்படி மருத்துவ பராமரிப்புச் செய்ய நிறுவன மயப்பட்ட அமைப்பு காணப்படவில்லை. சூன்1859, சுவுச்சர்லாந்து வர்த்தகரான ஹென்றி டியூனாண்ட் இத்தாலிக்குப் பயணம் செய்திருந்த வேளையிலே அங்கு சோல்பரினோ சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய, பிரான்சிய, இத்தாலியப் படைகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் படை வீரர்கள் தொடர்ந்து 16 மணித்தியாலங்களாகப் போரிட்டிருந்தனர். இதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்த்தனர். இவ்வாறு பாத்திக்கப்பட்டவர்களை யாரும் கவனமெடுக்கவில்லை. இச்சந்தர்ப்பம் ஹென்றி டியூனாண்ட்டை வெகுவாகப் பாதித்தது. ஊரவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு பேதமுமின்றிச் சிகிச்சை அளித்தார். ஜெனிவா திரும்பிய டியூனாண்ட் சோல்பரினோ நினைவுகள் எனும் நூலை எழுதினார். இந்நூல் அவரது சொந்த செலவில் 1862 இல் பிரசுரமானது. இந்நூலின் பிரதிகளை ஐரோப்பாவில் காணப்பட்ட முன்னணி அரசியல் மற்றும் இராணுவப் பிரதிநிதிகளுக்கெல்லாம் அனுப்பினார். இதற்கெல்லாம் மேலாக 1959 தனது சோல்பரினோ அனுபவங்களை முக்கியமானவர்களுடன் பகர்ந்து கொண்டதுடன் இத்தகைய பாதிக்கப்படும் இராணுவத்தினருக்கு உதவக்கூடிய தொண்டர் அமைப்பின் ஆக்கம் குறித்தும் கலந்துரையாடினார். சமர்க்களைங்களில் இராணுவ மருத்துவம்னிகள் மிக்கப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்கூறினார். 1863இல் டியூனாண்டின் நூல் பிரதி ஒன்று ஜெனிவா சட்டத்தரணியும் ஜெனிவா பொதுநலன்புரி அமைப்பின் தலைவரும் ஆன கஸ்டாவா மொய்னியர் அவர்களுக்குக் கிடைத்தது. இவர் இதனை ஜெனிவா பொதுநலன்புரி அமைப்பின் கூட்டத்தில் ஆரம்ப கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் டியூனாண்டின் ஆலோசனைகளுக்கு அமிய அமைப்பொன்றைத் தாபிப்பதற்கான் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. இதன் விளைவாக இதன் நடைமுறைப் படுத்தல் பற்றி நாடளவிலான மாநாட்டில் எடுத்தாடப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் எனும் தனியார் மனிதபிமான நிறுவனம் 1863 இல் ஜெனிவாவில் அமைக்கப்பட்டது. முதல் உலகப் போர், ஏற்படுத்திய தாக்கங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தை தேசிய அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி சவால்களுடனான முன்னெடுப்புகளில் உட்படுத்தியது. அமெரிக்க, சப்பான் உள்ளிட்ட பல் நாடுகளில் இருந்தும் தாதியர்கள் சண்டையில் ஈடுபட்ட ஐரொப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்ட படையினருக்குப் பணியாற்ற அனுப்பியது. அக்டோபர் 15, 1914, சண்டை ஆரம்பித்து சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கம் அதன் பன்னாட்டு போர்க் கைதிகள் முகவரகத்தினைத் தாபித்தது. இது 1914 முடிவில்1,200 தொண்டர்களைக் கொண்டிருந்தது. உலகப் போரின் முடிவில் முகவரகம் 20 மில்லியன் கடிதங்களையும் செய்திகளையும் , 1.9 மில்லியன் பொதிகளையும் மற்றும் 18 மில்லியன் சுவிசு பிராங்க் பெறுமதியான பண நன்கொடைகளைகளையும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்த போர்க் கைதிகளுக்குப் பரிமாறியது. மேலும் இம்முகவரகத்தின் தலையீடுகள் காரணமாக ஏறக்குறைய 200,000 கைதிகள் யுத்தக் குழுக்களுக்கிடையில் பரிமாறப்பட்டதுடன் தமது தாய்நாடுகளுக்கு விடுதலை செய்யப்பட்டார்கள். ஜெனீவா உடன்படிக்கையின் 1929ஆம் ஆண்டின் திருத்ததின் படி பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கத்தின் இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியிலான பணிகள் சட்ட அடிப்படைகளைப் பெற்றன. இயக்கத்தின் பணிகள் முதல் உலகப் போர் காலப் பணிகளை ஒத்ததாகக் காணப்பட்டது. அதாவது: போர்க் கைதிகளின் முகாங்களைத் தரிசித்தலும் மதிப்பிடலும், பொதுமக்களுக்கு உதவிகளையும் நிவாரணங்களையும் ஒழுங்குபடுத்துதல், காணாமல் போனோர் மற்றும் கைதிகள் தொடர்பான தகவல்களை பரிமாற்றலும் முறைமைப்படுத்தலும் முதலானவை. போரின் முடிவில் 179 பணிக்குழுக்கள் 41 நாடுகளைச் சேர்ந்த போர்க் கைதிகளின் முகாம்களுக்கு 12,750 தரிசிப்புகளிளை மேற்கொண்டிருந்தனர். ஆயினும் செருமனியில் நாசிசம் செருமானிய செஞ்சிலுவைச்ச்சங்கத்தின் செயற்பாடுகளை ஜெனீவா உடன்படிக்கைய மீறும் வகையில் தடைப்படுத்தினர்.யூதர்களின் நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்களில் பெரும் இன அழிப்பு கள் நடைபெற்றன. யுத்தம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை செய்வது தொடர்பான எந்தவொரு உடன்படிக்கைகளையும் நாசிகளுடன் செய்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சுவிட்சர்லாந்து தரைப்படை அலுவலகர் மோறிசு ரொசோல் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியாக பெர்லின் நகருக்கு அனுப்பட்டார். அதன் பிரகாரம் அவர் 1943 ஓச்சுவிச்சுவுக்கும் (Auschwitz) 1943 இல் திரெசிஎன்டாட்சுவுக்கும் (Theresienstadt) அனுப்பட்டார். குளொட் லான்சுமான் த்னது அனுபவங்களைப் பதிவுசெய்து 1979இல் "Visitor from the living" எனும் பெயரில் வெளியிட்டார்.. ஆப்கானிஸ்தான் மோதல்களில் ICRC செயலில் உள்ளது மற்றும் நிலக்கண்ணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆறு மறுவாழ்வு மையங்களை அமைத்துள்ளது. அவர்களின் ஆதரவு தேசிய மற்றும் சர்வதேச ஆயுதப்படை, பொதுமக்கள் மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து ஆப்கானிய அரசாங்க மற்றும் சர்வதேச ஆயுதப் படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்கின்றனர், ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் தலிபான்னால் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்கு அவ்வப்போது அணுக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் பாதுகாப்புப் படைகளும் தலிபான் உறுப்பினர்களும் இருவருக்கும் அடிப்படை முதலுதவி பயிற்சி மற்றும் உதவி கருவிகள் வழங்கப்படுகின்றன. ஏன்னென்றால் ICRC விதிகளின் படி அரசியலமைப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் தரப்பினரும் முடிந்த அளவிற்கு நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்கிறது. 1919 ல், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தேசிய செஞ்சிலுவைச் சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் "செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு" என்பதைக் தொடங்கினர். அமெரிக்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஹென்றி டேவிசன் இந்த நடவடிக்கை, அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் கடுமையான பணிக்கு அப்பால் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு விடையளித்த நிவாரண உதவி (மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரழிவுகள் போன்றவை) ). ARC ஏற்கனவே அதன் அடித்தளத்திற்கு மீண்டும் விரிவடைந்து பெரும் பேரழிவு நிவாரண பணி அனுபவம் பெற்றதாக உறுமாறியது. ICRC உடன் இணைந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கம் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.ICRC இரு தரப்பினருக்கும் இடையில் சாத்தியமான போட்டியைப் பற்றி சரியான அளவு அக்கறை கொண்டுள்ளது. கூட்டமைப்பின் அஸ்திவாரம் இயக்கத்தின் கீழ் ICRC தலைமையின் கீழ்ப்பகுதியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகவும் அதன் பணிகளை மற்றும் திறமைகளை பல பன்முக நிறுவனங்களுக்கு மாற்றவும் முயற்ச்சிக்கிறது. மே 1919 ல் இருந்து செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய ஐந்து நாடுகளுக்கு சிற்ப்பு சட்ட உரிமை பெற்றது. இதனால் ஹென்றி டேவிசன் முயற்சியால் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய ஐந்து நாடுகளின் தேசிய செஞ்சிலுவை சங்கங்களை நடுவன் சக்தியில் நிறந்தரமாக ஒதுக்கிவைக்கும் முடிவும் மற்றும் ரஷ்யாவின் செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றும் முடிவும் ஏடுத்தார். ஆனால் இந்த சிற்ப்பு சட்ட உரிமை செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பின் அடிப்படை சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது. நவம்பர் 2009 இல், IFRC இன் தலைவர் தாடாடெரு கொனோ (ஜப்பானிய செஞ்சிலுவை). உப தலைவர்களாக அஸ்மாரி ஹூபர்-ஹாட்ஸ் (ஸ்விட்சர்லாந்து), ஆஸ்வால்டோ மானுவல் ஃபெர்ரெரோ (அர்ஜெண்டினா), அப்பாஸ் குல்லட் (கென்யா), பிரான்செஸ்கோ ரோக்கா (இத்தாலி) மற்றும் பைஜே ஜாவோ (சீனா) உள்ளனர். பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் இதுவரை 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. 1917 இல் இதன் திறமையான போர்க்கால நடவடிக்கைகளுக்காக இந் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது 1914 முதல் 1918 வரை நடைபெற்ற நோபல் பரிசளிப்பு அது ஒன்றுதான். 1944 நோபல் முதலாம் உலகப் போரின் , முதன்மைக் காலகட்டமான,1939 முதல் 1945 வரையான சேவைக்காக வழங்கப்பட்டது. 1936 இயக்கம் அதன் நூற்றாண்டுக் காலக் கொண்டாட்டங்களின் போது அதன் மூன்றாவது நோபல் பரிசினை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கையில் மேலும் இரு திருத்தங்கள் ஆகஸ்டு 12, 1949 கொண்டுவரப்பட்டன. கடலிலே காயத்துக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட படையினரின் சுகப்படுத்தல் சம்பந்தமாக மேலதிகமான உடன்படிக்கை ஒன்று ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது ஹக் உடன்படிக்கையின் தொடர்ச்சியாக கொள்ளப்படும் இது இரண்டாவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களில்ன் அடிப்படையில், புதிய உடன்படிக்கையான நாலாவது ஜெனீவா உடன்படிக்கையான போரின் போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை 1949இல் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜூன் 8, 1977 இல் சேர்த்த்துக் கொள்ளப்பட்ட புதிய சரத்துக்கள் உள்நாட்டுப் போர்களில் பொதுமக்களை பாதுகாக்கும் ஏற்பாடுகளை வலியுறுத்துகின்றது. தற்போதுள்ள நாலாவது உடன்படிக்கைகளில் 600க்கு மேற்பட்ட பிரிவுகள் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் 1864 உடன்படிக்கையில் தனியே 10 பிரிவுகளே இத்தகையனவாக இருந்தன. அக்டோபர் 16, 1990, இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் உப குழுக் கூட்டங்களுக்கு அவதானிப்பாளர்களாக அனுமதித்தது. வெளி அமைப்பொன்றை இவ்வாறு அனுமதித்தது இதுவே முதல் முறையாகும். பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் மற்றும் அதன் தேசிய இயக்கங்கள் என்பவற்றில் மொத்தமாக 97 மில்லியன் பேர் பணியாற்றுகின்றார்கள். 1965 வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு அடிப்படைக்கொட்பாடுகளின் செயற்பட்டு வருகின்றது. இக்கோட்பாடுகள் அமைப்பின் உத்தியோக பூர்வ கோட்பாடுகளாக 1986இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை. யூனானி மருத்துவம் யூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும். இவ்வைத்திய முறைமை மனித உடலில் காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான கோழை Phlegm (Balgham), குருதி (Dam), மஞ்சள் பித்தம் Yellow bile (Safra), கரும் பித்தம் Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது. யூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் "கிரேக்கத்தைச் சேர்ந்தது" எனப் பொருள் படும். இது சின்னாசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான "அயோனியா" என்பதில் இருந்து மருவியதாகும். "யூனான்" என்பதன் பொருள் கிரேக்கம் என்பதாகும். இலங்கையில் சிங்கள மொழியில் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் "யோனக" என்ற சொல், முற்காலத்தில் கிரேக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சிங்களத்தில் "யோனக" என்பதும் தமிழில் "யவனர்" அல்லது "சோனகர்" என்பதும் அதே கிரேக்கர்களைக் குறித்ததாயினும் பின்னர் அது அரபியருக்கு வழங்கலாயிற்று. இச்சொற்கள் அனைத்தும் யூனான் என்ற சொல்லிலிருந்து பிறந்தனவே. அப்பாசியக் கலீபா மஃமூனின் ஆட்சிக் காலத்தில் ஏனைய மொழிகளிலிருந்த அறிவியல் நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்படுவது இசுலாமியப் பேரரசினால் ஊக்குவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி, பைத்துல் ஹிக்மா (அறிவு இல்லம்) என்ற ஒர் அமைப்பு பக்தாதிற் தோற்றுவிக்கப்பட்டு அறிவியல் தொடர்பான செய்திகள் குறித்துக் கலந்துரையாடவும் கருத்தாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அக்காலத்தில் வளமான இலக்கியங்களையும் அறிவு நூல்களையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்பட்டன. அவ்வாறு கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட கிரேக்க மருத்துவத்தையே அக்கால அரபு முஸ்லிம்கள் பெரிதும் வளர்த்தெடுத்தனர். அதனாற்றான் கிரேக்க மருத்துவமான யூனானி, அரபு மருத்துவம் என்று கருதப்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்வாக்குச் செலுத்தியது. யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவராற் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யூனானி மருத்துவர்கள் இந்தியாவில் சட்டப்படி மருத்துவப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு முதல் யூனானி தொடர்பான வைத்திய பட்ட கற்கைநெறியொன்றை நடத்தி வருகின்றது. கிறித்துமசு தாத்தா கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா ("Santa Claus", சாண்டா குலோஸ், அல்லது புனித நிக்கலசு) என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் கிறித்துமசு நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24 இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சண்ட குலோஸ் என்ற சொல் டச்சு மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும். நவீன சாண்டா குலோஸ் மரபுகளிலிருந்து வெளிவந்து வரலாற்றில் நான்காம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வசித்த  ஆயர், புனித நிக்கலசு என்பவரைச் சுற்றியே வருகிறது. இவரே ஆங்கிலேய நாட்டுப்புறக் கலைப் பின்னணி கொண்ட கிறித்துமசு தாத்தாவாகவும், டச்சு நாட்டின் நாட்டுப்புறக் கலை உருவமான சின்டர்கிளாசாகவும் (இவரும் புனித நிக்கலசை அடிப்படையாகக் கொண்டவரே) சித்தரிக்கப்படுகிறார். புனித நிக்கலசு இரகசியமாக குழந்தைகளுக்குப் பரிசு தரும் இயல்புடையவராக இருந்துள்ளார். சிலர் சாண்டா குலோஸ் செருமானியக் கடவுள் ஓடினின் சாயலைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். ஓடின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் வேட்டையாடும் கெட்ட ஆன்மாக்களை வான் வழியாக ஊர்வலமாக அழைத்து வரும் செருமானிய விழாவின் நாயகனாவார். ஆனால், சாண்டா குலோஸ் பொதுவாக, மகிழ்ச்சிகரமான, வெண்தாடி உடையவராக, சிவப்பு நிற மேலங்கி மற்றும் வெண்மை நிற விலங்கின் உரோமத்தினாலான கழுத்துப்பட்டி மற்றும் மணி கோர்ப்பதற்கான இடம், சில நேரம் கண்ணாடி அணிந்தும், சில நேரம் கண்ணாடி அணியாமல், சிவப்பு நிறத்தொப்பி மற்றும் கருப்பு நிற இடையணி மற்றும் காலணிகளுடன் பை நிறைய குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களுடன் வருபவராக சித்தரிக்கப்படுகிறார். மேலே வர்ணிக்கப்பட்ட தோற்றமானது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் 1823 ஆம் ஆண்டில், அரசியல் நையாண்டியுடன் கேலிச்சித்திரம் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவரால் எழுதப்பட்ட புனித நிக்கோலசின் வருகை என்ற  பாடலின் குறிப்பிடத்தக்க தாக்கத்தால் பிரபலமடைந்தது. இந்தத் தோற்றமானது வானொலி, தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக நிலைநிறுத்தவும், வலுவூட்டவும் பட்டது. சாண்டா குலோஸ் உலகம் முழுவதும் உளள குழந்தைகளின் பட்டியலைக் கொண்டுள்ளதாகவும், அவர்களை, அவர்களின் நடத்தையின் அடிப்படையில் இனிமையான குழந்தை அல்லது குறும்புக்காரக் குழந்தை என்று வகைப்படுத்தி வைத்திருப்பதாகவும், கிறித்துமசு நாளுக்கு முந்தைய நாள் இரவில், நல்ல நடத்தையுடைய குழந்தைகளுக்கு பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பரிசுகளையும், தீய நடத்தையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நிலக்கரியையும் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது. அவர் தன்னுடன் வசிக்கும் அதிசய சக்தி கொண்ட உதவியாளர்களுடன், தனது பட்டறையில் உருவாக்கிய பொம்மைகளுடன் தனது ரெயின்டீர் பனிச்சறுக்கு வண்டியில் வட துருவத்திலிருந்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும், கிறித்துமசு தாத்தா வட துருவப் பகுதியில் வசிப்பவராகும், அடிக்கடி "ஹோ, ஹோ, ஹோ" என்று சத்தமாக ஒலி எழுப்பி சிரிப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மிராவின் புனித நிக்கலசு என்பவர் 4ஆம் நூற்றாண்டில்,  கிரேக்கத்தில், பைசாந்தியப் பேரரசின் ஒரு மாகாணத்தின்(தற்போது இப்பகுதி துருக்கியில் உள்ளது)  வாழ்ந்த கிறித்துவப் பேராயர் ஆவார். நிக்கலசு பெருந்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் ஏழைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் விதத்தால் புகழ் பெற்றவர் ஆவார். இவர் ஏழ்மையில் வாழ்ந்த, இறை விசுவாசமுள்ள கிறித்தவர் ஒருவரின் மூன்று மகள்கள் வரதட்சணை நெருக்கடி காரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பரிசுகள் மூலமாக அதைத் தடுத்துள்ள செயலால் புகழப்பட்ட புனிதர் ஆவார். கிழக்கு மரபுவழி திருச்சபை கிழக்கு மரபுவழித் திருச்சபை அல்லது மரபு வழுவா கீழைத் திருச்சபை ("Eastern Orthodox Church") உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைப்பெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்) இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல். தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க. யூலியன் நாட்காட்டி யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி ("Julian calendar") என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர். சகா புரொசகா ஷகா புரொஷகா 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் பானெர்ஜீ,ஹரதன் பானெர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (ஆங்கிலம்: A Fistful of Dollars, இத்தாலிய மொழி : Per un pugno di dollari ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். சேர்ஜியோ லியோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிலிண்ட் ஈஸ்ட்வுட், மரியான் கோச் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான முதல் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது. ஸ்பகெட்டி மேற்கத்தியப் பாணி திரைப்படங்களின் முன்னோடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மெக்சிக்க-அமெரிக்க எல்லைப்புற சிறு நகரொன்றில் இரு கும்பல்களுக்கிடையே நடைபெறும் தொடர் மோதல்களைப் பயன்படுத்தி இரு தரப்பிலும் ஆதாயம் தேட முயலும் துப்பாக்கி வீரனின் சாகசங்கள் திரைப்படத்தின் கதைக்களமாக அமைந்தது. அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்தது. இதனால் குரோசாவா இத்திரைப்படம் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் டாலர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு $100,000 அபராதம் வழங்கப்பட்டது. திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் குரோசாவாவுக்கு வழங்கப்பட்டது. மெடிடேரனியோ மெடிடேரனியோ 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும்.காப்ரியல் சால்வெடோர்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டியோகோ அபடந்த்யோனோ,கிளௌடியோ பிகாக்லி,ஜெசெப்பே செர்டெனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் பிக்கூர் டைரி பிக்கூர் டைரி (Pikoo's Day) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழிக் குறுந்திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இக்குறுந்திரைப்படத்தில் அர்ஜீன் குகா தகுர்டா,அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஹைரக் ராஜர் தேஷெ ஹைரக் ராஜர் தேஷெ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டாபென் சாட்டெர்ஜீ,ரபி கோஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல் மன்னன் (திரைப்படம்) காதல் மன்னன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது. ருத்ரா (கிரிஷ் கர்னாட்), தனது இரண்டு மகள்களையும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். அவரது மூத்த மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஒடிவிடவே, அவரது இரண்டாவது மகளான திலோத்தமா (மானு) மீது கண்டிப்பு இரட்டிப்பாகிறது. இந்நிலையில் ருத்ரா தனது நண்பனின் மகனான (கரண்) திலோத்தமாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். நிச்சயம் செய்த பின்னர் சிவா (அஜித் குமார்) மீது திலோத்தமாவுக்கு காதல் வருகிறது. காதல் என்ற வார்த்தையையே பிடிக்காத தன் தந்தையிடம் தனது காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறார். காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் அதை மற்றவரிடம் சொல்லாமல் தவிக்கிறார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலை சொன்னார்களா, திலோத்தமாவின் தந்தை தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா, என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும். "ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக வேறு ஒரு நபரின் மீது காதல் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் சரண். தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ம. சு. விசுவநாதன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். அவருடன் அசாம் நடிகை மானு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜும் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார்கள். படம் வெளியாவதற்கு முன்பாகவே இதன் பாடல்கள் அனைவராலும் விரும்பி கேட்கக்கூடிய பாடல்களாக அமைந்தன. இத்திரைப்படத்தில் நடிக்க ம. சு. விசுவநாதன் முதலில் மறுத்து விட்டார். ஆனால் நடிகர் விவேக் மறுபடியும் வற்புறுத்தி அவரை இத்திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார். பரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படமான இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் கவிஞர் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர் பிரியமுடன் பிரியமுடன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்ணெதிரே தோன்றினாள் கண்ணெதிரே தோன்றினாள் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிம்மராசி (திரைப்படம்) சிம்மராசி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈரோடு சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பு, மனோரமா, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மசாலாப்படம் / நாடகப்படம் மாணிக்கவாசகம் (சரத்குமார்) புகையிரதத்தில் பயணம் செய்துகொண்டு வரும் வழியில் ஜாதிச்சண்டை போடும் ஊர் மக்களுக்குப் புத்தி கூறுகின்றார். பின்னர் படிப்படியாக அவ்வூர் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற குடும்பமாக அவர் குடும்பமும் விளங்குகின்றது. அதேசமயம் அவ்வூரில் ஜாதி இல்லையேல் தான் இல்லை என்ற மூட நம்பிக்கைக் கொள்கையில் மூழ்கிப் போனவராக வாழ்கின்றவர் வேளாளர் சாதியைச் சார்ந்த மருதநாயகம் (ஆனந்தராஜ்). ஒருசமயம் அவர் வீட்டுக் குழந்தையை நெருப்பில் இருந்து காத்த வாய்பேச முடியாத ஒருவரை தன் வீட்டினுள் நுழைந்து தன் ஜாதிக் குழந்தையினைத் தீண்டிய காரணத்தினால் தீயில் இட்டு கொளுத்த முயற்சியும் செய்கின்றார். இவ்வாறு செய்யத்துணியும் சமயம் காப்பாற்றுகின்றார் மாணிக்கவாசகம். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து மாணிக்கவாசகத்தின்மீது வெறுப்பினைக் கொண்டிருக்கும் மருதநாயகம் அவரைப் பழிவாங்குவதற்கு சமயம் வருவரை காத்திருக்கின்றார். அதேவேளை மாணிக்கவாசகத்தின் மகனும் வெளியூரிலிருந்து அவ்வூருக்கு வருகின்றான். அவனும் தனது நண்பர்களின் திட்டத்தைப்போல அவ்வூரில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான திட்டத்தைத் தன் தந்தைக்கும் கூறுகின்றான். அதனைக்கேட்டு தனது முழுச் சம்மதத்தையும் தெரிவிக்கின்றார் மாணிக்கவாசகம். ஆனால் மாணிக்கவாசகத்தின் நண்பர் அவரது மகனின் நண்பர்கள் வயலுக்குள் பாதணியுடன் உள்நுழைவதனைப் பார்த்து கோபம் கொண்டு தடுக்கின்றார். இதனைப் பார்த்து மாணிக்கவாசகத்தின் மகன் அவரைத் தாக்கவே அங்கு வரும் மாணிக்கவாசகம் தனது மகனின் கன்னத்தில் அறைகின்றார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து தனது தந்தைமீது வெறுப்புடன் இருக்கும் அவர் மகன் மருதநாயகத்தின் வஞ்சகமான சொற்களால் அவருடன் கூட்டுவைத்து பின்னர் மருதநாயகம் கேட்டபடி அவருக்கே மகனாக தத்தெடுக்கப்படுகின்றார்.காவல்துறையில் அதிகாரியாக பதவியேற்றபின்னர் தனது தந்தையைக் கைது செய்யச் செல்லும் பொழுது தனது தந்தையெனக் கருதிவந்தவர் அனாதையாகவிருந்த தன்னைக் காப்பாற்றி வளர்த்து வருபவர் என்ற கதையினை தான் தாயாகக் கருதியவர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றார். இதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகத்துடன் அவர் சேருகின்றாரா இல்லை மருநாயகத்துடன் சேருகின்றாரா என்பது திரைக்கதை முடிவு. எட்வர்ட் மண்ச் எட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும். அருணாச்சலம் (திரைப்படம்) அருணாச்சலம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்பா,மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். லவ் டுடே (திரைப்படம்) லவ் டுடே திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் அவர்களால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது. காதல்படம் / நாடகப்படம் மருத்துவரான ரகுவரனின் ஒரெ செல்ல மகன் விஜய்,படித்துமுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்கலோடு ஊர் சுற்றும் வாலிபன். 4 வருடமாக சுவலட்சுமியை காதலித்து வருகிறார்.சந்தேகபுத்தியுடைய தந்தையால் விஜயின் காதலை ஏற்க மறுக்கும் சுவலட்சுமி.விஜய் எவ்வளவோ முயற்ச்சித்தும் சுவலட்சுமி காதலிக்க மறுக்கிறார்.காதலுக்காக எதையும் இழக்க தயாரான விஜய் ஒரு கட்டத்தில் தந்தையை இழக்கிறார். காதலால் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி காரியம்கூட செய்யமுடியாமல் போகிறது.இந்த சமயத்தில் சுவலட்சுமி விஜயின் காதலை புரிந்துகொண்டு காதலிக்கிறார். ஆனால் விஜய் காதலால் தான் தந்தையை இழந்தேன், இனி இழக்க எதுவுமில்லை என்று கூறி சுவலட்சுமியின் காதலை ஏற்க மறுக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் சிவா. பாடல்வரிகளை வைரமுத்து, வாசன், வைகரை செல்வம், பட்டுக்கோட்டை சண்முக சுந்திரம் ஆகியோர் எழுதியிருந்தனர். ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல்படம் தன் அக்காவின் சாவுக்கு விஜய் தான் காரணம் என்று நினைக்கும் கவிதா (சிம்ரன்) பழிவாங்கும் நோக்கில் அவருடன் நெருங்கிப் பழகுகின்றார். உண்மையில் விஜயை ஒருதலையாக காதலித்த காரணத்தாலே அவள் இறந்தாள் என்பது கவிதாவும் அவள் அம்மாவும் அறியாதது. இடையில், சாந்தாவுக்கும் (சரோஜாதேவி) செல்வத்துக்கும் (சிவாஜி கணேசன்) இருக்கும் மனக்கசப்பையும், கருத்துவேறுபாட்டையும் தீர்க்கவும் விஜய் பாடுபடுகிறார். இறுதியில் அவரை கொல்லும் நோக்கில் வந்த கவிதா, விஜயுடன் இணைகிறார். வி.ஐ.பி (திரைப்படம்) வி.ஜ.பி 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் பாரொட் இசை அமைத்து, சபாபதி இயக்கத்தில் வெளி வந்தது. இத்திரைப்படத்தில் பிரபுதேவா,அப்பாஸ்,சிம்ரன்,ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமன் அப்துல்லா ராமன் அப்துல்லா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ்,ஈஷ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நேருக்கு நேர் நேருக்கு நேர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். பொற்காலம் (திரைப்படம்) பொற்காலம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சேரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி,மீனா,வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாடகப்படம் காதலுக்கு மரியாதை (திரைப்படம்) காதலுக்கு மரியாதை 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். காதல்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ பேபி" எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார். அந்திமந்தாரை (திரைப்படம்) அந்திமந்தாரை () 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் இந்தியன் (1996 திரைப்படம்) இந்தியன் () 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மசாலாப்படம் / நாடகப்படம் இது கமல்ஹாஸன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்துள்ளார். திரைப்படத்தின் ஆரம்பம் முதலே வர்மக்கலை மூலம் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதை ஆராய்ந்த காவற்துறையினர் வர்மக் கலையினை அறிந்த ஒருவரே இதை நிகழ்த்தியிருப்பதாக அறிந்து தகவற் தளத்தில் தேடியபோது திருமுல்லைவாயிலில் இவ்வாறான கலையைக் கற்ற ஓர் சுதந்திரப் போராட்ட தியாகி இருப்பதை அறிந்து அவ்விடத்தில் காவற்துறையினர் செல்கின்றனர் இந்தியன் அங்கிருந்து டிராக்டர் வண்டி மூலம் தப்பிச் செல்கின்றார். இந்தியனின் மகள் ஒருமுறை உடற் சுகவீனமற்றுப் போனபோது மருத்துவமனையில் பணமின்றி அனுமதிக்கமுடியாமல் போதிய பராமரிப்பு ஏதும் இன்றி இறந்து போகின்றார். பிணத்தை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு செல்வதற்கு கூட இலஞ்சம் இன்றி பலவேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றார். இதனால் மனம் வருந்தி சந்துரு பட்டணத்திற்குப் பிழைப்புத் தேடிவருகின்றார். பட்டணத்தில் ஏனையவர்கள் போலவே இலஞ்சம் வேண்டி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றார். ஒரு பேருந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக சந்துருவிற்கு கொடுத்து அனுமதியைப் பெறுகின்றது. இவ்வண்டி பின்னர் பாடசாலைச் சிறார்களுடன் சென்றபோது வாகன பிரேக் இன்றிச் சென்று விபத்துக் குள்ளாகின்றது. இதனுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருதொகைப் பணத்தைக் கையூட்டாகப் (இலஞ்சம்) கொடுத்து வழக்கில் இருந்து தப்பிக்கின்றார். இச்செயல்களால் ஆத்திரம் அடைந்த இந்தியன் இறுதியில் தனது மகன் சந்துருவைக் கொலை செய்வதுடன் திரைப்படம் முடிவுறுகின்றது. இத்திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களுக்கும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இப்படத்தின் பாடல்கள் வெளியான ஒரு சில தினங்களில் 6,00,000 பதிவுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. காதல் கோட்டை காதல் கோட்டை 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். கல்லூரி வாசல் கல்லூரி வாசல் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காதல் தேசம் காதல் தேசம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத், தபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் மிஸ்டர் ரோமியோ மிஸ்டர் ரோமியோ 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவாவும், சில்பா செட்டியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர். கண்ணுக்குள் நிலவு கண்ணுக்குள் நிலவு 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ஷாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் விஜய் இதில் மனநோயாளியான நடித்துள்ளார். இதனால் இவர் சென்னை வருகிறார். அங்கே ஷாலினி மற்றும் அவருடைய நண்பர்களை சந்திக்கிறார். தன் காயத்திரியை கண்டிபிடித்து தருமாறு உதவி கேட்கிறார். விஜய்யின் நடவடிக்கையால் இவர் மனநோயாளி என்று ஷாலினி மற்றும் நண்பர்களுக்கு தெரிகிறது. ஷாலினி ரகுவரனிடம் விஜய்யின் நோயை குணமாக்க அழைத்து செல்கிறார் இதில் விஜய்க்கு தான் மனநோயாளி என்று தெரியாது. தன் காயத்திரியை தலைவாசல் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தன் கொண்டார்கள் என்று சந்தேகம் கொள்கிறார் . இதனால் இவர்களை கொல்ல நினைக்கிறார். படத்தின் முடிவில் காயத்திரி உயிருடன் இருக்கிறார் என்று விஜய்க்கு புரிகிறது மற்றும் விஜய்க்கு நோய் குணம் ஆகுறார். ஷாலினி மற்றும் விஜய் இணைகிறார்கள். மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் அப்பாவி என்று விஜய்க்கு புரிகிறது. மற்றும் தன் தவறை உணர்கிறார். சச்சின் (திரைப்படம்) சச்சின் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2009 இல் வெளியான "கமாண்டி" இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும். காதல்படம் / மசாலாப்படம் திருப்பாச்சி (திரைப்படம்) திருப்பாச்சி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. திருப்பாச்சிக்கு அண்மையில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான ஊரில் அரிவாள் செய்யும் கொல்லனாக வாழ்ந்துவருகிறார் சிவகிரி (விஜய்). தங்கை கற்பகத்தின் (மல்லிகா) மீது பெரிதும் பாசம் பாராட்டும் சிவகிரி, அவள் இப்படி ஒரு சிற்றூரில் அன்றாடம் சிரமப்படுதலைக் கண்டு, ஒரு நகரத்திலேயே அவளை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என உறுதி பூணுகின்றார். இவ்வேளையில், சாளிக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கற்பகத்தை பெண்கேட்டுவந்த போது நல்ல வரன் என்று மணமுடித்தும் கொடுக்கின்றார். தங்கைவீட்டுக்கு வந்தவர், சுபா (திரிஷா கிருஷ்ணன்) உடன் காதலும் கொள்கின்றார். பின்னர் தான் நகர வாழ்க்கையுடன் ஒன்றிய துன்பங்களையும் அறிந்து கொள்கிறார். சென்னையை வட, நடு, தென் என்று பிரித்து ஆட்டிப்படைக்கும் பாண்பராக் ரவி, பட்டாசு பாலு, சனியன் சகடை ஆகியோரை பற்றியும் அறிகிறார். நண்பன் கண்ணப்பன் கொல்லப்படவும், ஆடைத்தொழிற்சாலையில் வேலைகிடைத்ததாக பொய் கூறிவிட்டு, சென்னைக்கு இவர்களை அழிக்கும் நோக்குடன் செல்கிறார். தன் தங்கையின் பிள்ளை பிறக்கும் போது இந்நகரத்தில் ரவுடிகள் ஒருவரும் இருக்கக்கூடாது எனும் கொள்கையுடன் விரைந்து செயலாற்றி, அதில் எப்படி அவர் வெற்றியும் பெறுகின்றார் என்பதே கதையாகும். வசீகரா வசீகரா 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. செல்வபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ஸ்னேகா மற்றும் பலரும் நடித்துள்ள்னர். காதல்படம் ஆதி (திரைப்படம்) ஆதி, () ரமணா இயக்கத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நட்க்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்பட தெழுங்கு வெற்றிப் படமான "அதனொகடே" (Athanokkade) திரைப்படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்டதாகும். கில்லி (திரைப்படம்) கில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மசாலாப்படம் / காதல்படம் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. மருதநாயகம் (திரைப்படம்) மருதநாயகம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படமாகும். நடிகர் கமல்ஹாசனின் இலட்சியத் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படம் பணச்சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து உருவாக்கப்படாத நிலையில் உள்ளது. 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'. நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார். இப்படத்தின் இசையை இசைஞானி இளையராசா அமைக்கிறார். மார்ச்சு 4, 2016 அன்று இரவு இணையத்தில் இப்படத்திற்காக இளையராசா உருவாக்கிய பாடல் வெளியாகியுள்ளது. விளா விளா இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து பழங்களைத் தரும் ஒரு மரம். இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது "பெரோனியா எலிபன்டம்" குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது விளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன. இந்திய மொழி மாற்றி (மென்பொருள்) இந்திய மொழி மாற்றி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கணினியில் உள்ளீடு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். விஜய் லக்ஷ்மிநாரயணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இதற்கான இணையத்தளத்திலிருந்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய மொழி மாற்றி 3.0 தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வடமொழி, ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா மற்றும் பஞ்சாபி மொழிகளை ஆதரிக்கின்றது. சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து ("Switzerland") அல்லது சுவிசுக் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. இதன் வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. 41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 7.7 மில்லியன் மக்கள் தொகை (2009) கொண்ட நாடு. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. சுவிட்சர்லாந்து மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இதன் இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன. பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சுவிட்சர்லாந்து, ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் GDP இன் மதிப்பு $67,384 ஆகும். உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சுவிட்சர்லாந்து நீண்ட நடுநிலைத்தன்மையுடைய வரலாற்றினைக் கொண்டது. 1815 இலிருந்து இது சர்வதேச அளவில் எந்த போரிலும் பங்குபெறவில்லை. மேலும் உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐநாவின் இரண்டு ஐரோப்பிய அலுவலகங்களில் ஒன்று உட்படப் பல பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. ஐநா காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் நார்ஷனல் லீக்கின் (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக 1990இல் ஸ்விட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் அதில் இணையும் அந்தஸ்து இல்லாத நாடாகவும் உள்ளது. ஆனால் ஸ்சேன்ஜென் ஒப்பந்தத்தில் இது அங்கம் வகிக்கிறது. உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பலமொழிகள் பேசப்படும் நாடு. செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு முதலிய நான்கு தேசிய மொழிகள் கொண்டது. சுவிட்சர்லாந்தின் மரபுசார்ந்த பெயர் ஜெர்மனில் "Schweizerische", பிரெஞ்சில் "Confédération suisse", இத்தாலியத்தில் "Confederazione Svizzera" மற்றும் உரோமாஞ்சில் "Confederaziun svizra" என்பதாகும். மரபு ரீதியாக 1291 ஆகத்து 1 இல் சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது; சுவிஸ் தேசிய தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்படுகிறது. இந் நாடு 1291 ஆகத்து 1 இல் விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிட்சர்லாந்து ஆகத்து 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499 செப்டம்பர் 22 இல் அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 இல் அங்கீகரிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து 1848 செப்டெம்பர் 12 இல் இருந்து இன்றைய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1291இல் விடுதலை அடைந்த போதிலும் இன்றைய மத்திய ஸ்விட்சர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு காலம் காலமாக நடாத்தப்பட்டு 1848இல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன ஸ்விட்சர்லாந்து தோன்றியது. ஆங்கிலப் பெயரான "Switzerland" Swiss என்பதன் வழக்கொழிந்த வடிவமான "Switzer" என்ற சொற்கூறைக் கொண்டுள்ள சேர்க்கையாகும், இது 16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. ஆங்கில பெயரடையான "Swiss" என்ற பகுதி, பிரெஞ்சிலிருந்து பெறப்பட்டது "(Suisse)", இதுவும் 16-ம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் உள்ளது. "Switzer" என்ற பெயர் அலீம்னிக் ஜெர்மனிலிருந்து பெறப்பட்டது "(Schwiizer)", அது சுவிஸ் மற்றும் அதனுடன் இணைந்த பிரதேசங்களில் தோன்றியது, மேலும் இது இவை பழைய சுவிஸ் கூட்டமைப்பின் மையக்கருவை உருவாக்கிய வால்ட்ஸ்டாட்டென் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் பெயர் 972 இல் பழைய உயர் ஜெர்மனில் "Suittes" என முதலில் அதிகாரப் பூர்வமாக்கப்பட்டது, இது "suedan" "எரிதல்" என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது, அது காட்டின் ஒரு பகுதி கட்டுமானங்களுக்காக எரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது. இந்தப் பெயர் அந்தக் குறிப்பிட்ட மண்டலத்தின் ஆதிக்கத்திலான பகுதிக்கென நீட்டிக்கப்பட்டது, பின் 1499 இன் ஸ்வாபியன் போருக்கு பின்னர் படிப்படியாக முழு கூட்டமைப்புக்கும் "அடையாளப் பெயராக" இப்பெயரே பயன்படுத்தப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஜெர்மன் பெயரான, "Schwiiz" மண்டலத்துக்கும் கூட்டமைக்கும் ஒத்த ஒலிப்பைக் கொண்டுள்ளது, இது வரையறு சுட்டுச் சொல்லினால் வேறுபடுத்தப்படுகிறது ("d'Schwiiz" என்று கூறுவது கூட்டமைப்பையும் சாதாரணமாக "Schwiiz" என்பது மண்டலம் மற்றும் நகரத்தையும் குறிக்கிறது). நியோ இலத்தின் பெயரான "காண்ஃபெடரோஸியோ ஹெல்வெடிகா" என்பது, 1848 இல் மாநில கூட்டமைப்பின் அமைப்பின் உருவாக்கத்தின் போது நெப்போலியனின் ஹெல்வெடிக் குடியரசின் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரோமானிய காலத்திற்கு முன்பு சுவிஸ் பீடபூமியில் வாழ்ந்த கெல்டிக் பழங்குடி இனமான "ஹெல்வெட்டி" என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. பழமை வாய்ந்த கலன்களில் "ஹெல்வெட்டி" என்ற பெயர் எட்ருஸ்கேன் வடிவத்தில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. அவை தோராயமாக கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் போசிடோனியஸில் இலக்கியங்களில் அவை முதலில் பயன்படுத்தப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் கூட்டமைப்பின் தேசிய உருவகமாக "ஹெல்வெடியா" திகழ்ந்தது, 1672 இல் ஜோஹன் காஸ்பர் வெய்சன்பக்கின் நாடகத்திலும் இது இடம் பெற்றது. சுவிட்சர்லாந்து 1848 இல் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது தற்போதைய வடிவத்தில் ஒரு மாகாணமாக விளங்குகிறது. நவீன சுவிட்சர்லாந்தின் முன்னோடிகள் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பாதுகாப்பான கூட்டணியை உருவாக்கியிருந்தனர், அதன் அமைப்பில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கின்ற பல மாகாணங்களின் ஒருங்கிணைப்பாக அது உருவாக்கப்பட்டது. 150,000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன. கி.மு. 5300 ஆம் ஆண்டு வாக்கில் சுவிட்சர்லாந்தின் காச்லிங்கனில் மிகப்பழமையான விவசாயக் குடியிருப்புகள் காணப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியின் முற்கால கலாசாரப் பழங்குடியினர், ஹால்ஸ்டாட் மற்றும் லா தேனே கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாவர், நியூசாடெல் ஏரியின் வடக்கு பகுதியில் இருந்த, லா தேனேவின் தொல்பொருள் தளத்தின் காரணமாக இப்பெயர் உண்டானது. இரும்புக்காலம் என்றழைக்கப்பட்ட கி.மு. 450 இன் போது கிரேக்க மற்றும் ஈட்ரூஸ்கேன் நாகரிகத்தின் பாதிப்பில் லா தேனே கலாச்சாரம் வளர்ந்து மேலும் செழுமையுற்றது. சுவிஸ் பிரதேசத்தில் மிகவும் முக்கிய பழங்குடியின குழுக்களில் ஒன்றாக ஹெல்வெட்டி இருந்தது. கி.மு. 58 இல், பிப்ராக்ட் யுத்தத்தில், ஜூலியஸ் சீசரின் படைகள் ஹெல்வெட்டியை வென்றன. கி.மு. 15 இல், இரண்டாம் ரோமானியப் பேரரசரான முதலாம் டைபெரியஸ் மற்றும் அவரது சகோதரர் ட்ருசஸ் இருவரும் ஆல்ப்ஸை வென்று ரோமானியப் பேரரசுடன் இணைத்தார்கள். ஹெல்வெட்டி இனத்தவரால் கைப்பற்றப்பட்டதும் பிந்தைய "காண்ஃபெடரோஸியோ ஹெல்வெடிகாவின்" பெயரைக் கொண்டுள்ளதுமான பகுதி, முதலில் ரோமின் காலியா பெல்ஜிகா மாகாணத்தின் பகுதியாகவும் மற்றும் பின்னர் அதன் ஜெர்மானியா சுப்பீரியர் மாகாணத்தின் பகுதியாகவும் விளங்கியது, அதே நேரம் நவீன சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதிகள் ரோமன் மாகாணத்தின் ரேட்டியாவுடன் இணைக்கப்பட்டடிருந்தன. இடைக்காலத்தின் முற்பகுதியில், 4 ஆம் நூற்றாண்டிலிருந்து, இன்றைய சுவிட்சர்லாந்தின் மேற்கத்திய பகுதியானது பர்கண்டிய மன்னர்களின் நிலப்பகுதியாக இருந்தது. அலேமன்னிகள் 5 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் பீடபூமியிலும் 8 ஆம் நூற்றாண்டில் ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கிலும் குடியேறி அலேமன்னியாவை உருவாக்கினார்கள். ஆகவே இன்றைய சுவிட்சர்லாந்து முன்னர் அலேமன்னியா பேரரசுகள் மற்றும் பர்கண்டியர்களிடையே பிரிக்கப்பட்டிருந்தது. கி.பி. 504 இல் டோல்பியாக்கில் முதலாம் க்ளோவிஸ் அலேமன்னியர்களை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து, 6 ஆம் நூற்றாண்டில் இந்த முழுப் பிராந்தியமும் ஃப்ரான்கிஷ் பேரரசின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகியது, பின்னர் பர்கண்டியர்களின் பிராங்கிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 6 ஆம், 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகள் முழுவதும் ப்ரேன்கிஷ் ஒன்றியத்தின் கீழ் சுவிஸ் பிரதேசங்கள் தொடர்ந்து ஆளப்பட்டது (மேரோவின்ஜியன் மற்றும் கரோலிஞ்சியன் வம்சங்களால்). ஆனால் பின்னர் 843 இல் மகா சார்லஸ் அதை விரிவாக்கிய போது ப்ரான்கிஷ் பேரரசு வெர்டன் உடன்படிக்கையால் பிரிக்கப்பட்டது. இன்றைய சுவிட்சர்லாந்தின் நிலப்பகுதிகள் கி.பி. 1000 இல் புனித ரோமானியப் பேரரசினால் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் வரை மத்திய பிரான்சியா மற்றும் கிழக்கு பிரான்சியா என பிரிக்கப்பட்டிருந்தது. 1200 இல், சுவிஸ் பீடபூமி சேவாய் தேசம், ஜஹ்ரிங்ஜெர், ஹப்ஸ்பர்க் மற்றும் கைபர்க் போன்ற ஆட்சியின்கீழான பகுதிகளாக இருந்தது. (யூரி, ஸ்விஸ், பின்னர் "வால்ஸ்டாடன்" எனப்பட்ட அண்டர்வால்டன் போன்ற) சில பகுதிகள் அரசு நடவடிக்கைகளின் காரணமாக பேரரசுக்கு கணவாய்களின் நேரடிக் கட்டுப்பாட்டை வழங்க அனுமதித்தன. கி.பி. 1264 இல் கைபர்க் வம்சத்தின் வீழ்ச்சியின் போது, முதலாம் ருடால்ப் மன்னரின் (1273 இல் புனித ரோமானியப் பேரரசர்) தலைமையிலான ஹப்ஸ்பர்க்ஸ் வம்சம் தனது ஆட்சிப்பகுதியை கிழக்கு சுவிஸ் பீடபூமி வரை விரிவுபடுத்தியது. பழைய சுவிஸ் கூட்டமைப்பு என்பது மத்திய ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கு சமூகங்களின் கூட்டமைப்பாகும். பொது விவகாரங்களின் மேலாண்மை (தடையில்லா வர்த்தகம்) மற்றும் முக்கிய மலை வர்த்தகப் பாதைகளில் அமைதியைப் பராமரித்தல் போன்றவற்றுக்கு இக்கூட்டமைப்பு மிகவும் உதவிகரமாக இருந்தது. யூரி ஸ்விஸ், மற்றும் நிட்வால்டென் ஆகிய பகுதிகளின் நகர சுய ஆட்சிப்பகுதிகளுக்கு இடையிலான 1291 இன் கூட்டாட்சி அதிகாரப்பத்திரமே, கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதற்கான ஆவணமாகக் கருதப்படுகிறது; இருப்பினும் இதுபோன்ற உடன்பாடுகள் முந்தைய தசாப்தங்களிலேயே இருந்தன. 1353 இல் மூன்று அசல் மண்டலங்கள் க்ளாரஸ் மற்றும் ஜூக் மற்றும் லூசெர்ன் ஜூரிச் மற்றும் பெர்ன் ஆகிய மண்டலங்களுடன் இணைந்து எட்டு மாநிலங்களின் "பழைய கூட்டமைப்பை" உருவாக்கின, இவை 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தன. இந்த விரிவாக்கம் கூட்டமைப்பின் ஆற்றல் மற்றும் செல்வ வளர்ச்சிக்கு வழிகோலியது. 1460 இல், ஆல்ப்ஸின் தெற்கு மற்றும் மேற்கிலுள்ள ரைன் நதிப்பகுதியின் பெரும்பாலான பகுதி மற்றும் ஜுரா மலைகள் ஆகிய பெரும்பாலான பகுதிகள் இந்த கூட்டமைப்பினர் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக 1470களின் போது பர்கண்டியின் மாவீரன் சார்லஸின் தலைமையில் ஹப்ஸ்பர்க்ஸ்க்கு (செம்பாக் யுத்தம், நேஃபெல்ஸ் யுத்தம்) எதிரான வெற்றிக்குப் பின்னரும் சுவிஸ் கூலிப்படைகளின் வெற்றிக்குப் பின்னரும் இது முக்கியமாக நிகழ்ந்தது. 1499 இல் பேரரசர் முதலாம் மேக்ஸிமில்லருடைய ஸ்வாபியன் கூட்டமைப்புக்கு எதிரான ஸ்வாபியன் போரில் சுவிஸின் வெற்றி புனித ரோமானியப் பேரரசிலிருந்து "உண்மையான" விடுதலையாக கருதப்படுகிறது. இந்த முந்தைய போர்களின் போது பழைய சுவிஸ் கூட்டமைப்பு தோற்கடிக்க முடியாத நாடு என்ற நற்பெயரைப் பெற்றிருந்தது, ஆனால் 1515 இல் மாரிக்னனோ யுத்தத்தில் சுவிஸ் தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட பின்னடைவில் கூட்டமைப்பின் விரிவாக்கம் பாதிக்கப்பட்டது. இதனால் "வீரமிகு" என்றழைக்கப்பட்ட சுவிஸ் வரலாற்று காலகட்டம் முடிவுக்கு வந்தது. சில மண்டலங்களில் ஸ்விங்க்லியின் சீர்திருத்ததின் வெற்றி, 1529 மற்றும் 1531 இல் மண்டலங்களிடையேயான போர்களுக்கு வழி வகுத்தது ("கேப்பெல்லெர் கிரீக்" ). இந்த உள்நாட்டுப் போர்கள் நடைபெற்ற நூறாண்டுகளுக்குள், அதாவது 1648 இல், வெஸ்ட்பாலியா உடன்படிக்கையின் கீழ், புனித ரோமனியப் பேரரசின் கீழிருந்து சுவிட்சர்லாந்தின் விடுதலையை மற்றும் அதன் நடுநிலைத்தன்மை ஆகியவற்றை ஐரொப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டன (). முந்தைய நவீன கால சுவிஸ் வரலாற்றின் போது, பாட்ரிசியேட் குடும்பங்களின் சர்வாதிகாரவாதத்தின் வளர்ச்சி மற்றும் முப்பதாண்டுப் போரினால் எழுந்த நிதி நெருக்கடி போன்றவை இணைந்து 1653 இன் சுவிஸ் உழவர் போருக்கு வழிவகுத்தது. இந்த போராட்டத்தின் பின்புலத்தில், கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்டுகள் மண்டலங்களிடையே போராட்டங்களும் நடைபெற்றன, இது 1656 மற்றும் 1712 இல் வில்மெர்கன் யுத்தங்களில் மேலும் வன்முறையாக வெடித்தது. 1798 இல் பிரெஞ்சுப் புரட்சியின் படைகள் சுவிட்சர்லாந்தைக் கைப்பற்றி, புதிய கூட்டாட்சி அரசியலமைப்பைத் திணித்தன. இதனால் நாட்டில் அரசாங்கம் கூட்டாட்சிது மேலும் மண்டலங்கள் நடைமுறை ஒழிக்கப்பட்டது மேலும் முல்ஹாசென் மற்றும் வெல்டெல்லினா பள்ளத்தாக்குகள் சுவிட்சர்லாந்திலிருந்து பிரிக்கப்பட்டன. ஹெல்வெட்டிக் குடியரசு என அழைக்கப்பட்ட புதிய ஆட்சிமுறை அதிகம் பிரபலமாக இருந்திருக்கவில்லை. இது அந்நியப்படைகளின் படையெடுப்பின் மூலம் உருவாக்கப்பட்டது, மேலும் நூற்றாண்டுகளாக இருந்த பாரம்பரியம் அழிவதற்கு காரணமானது, பின்னர் சுவிட்சர்லாந்து வெறும் செயற்கையான பிரெஞ்சு நாடாக ஆக்கப்பட்டது. 1798 செப்டம்பரில் எழுந்த நிட்வால்டன் கிளர்ச்சியை பிரெஞ்சு படை கடுமையாக அடக்கியது, ஃப்ரெஞ்சுப் படையின் அடக்குமுறை ஆட்சிக்கும் அந்தப் மக்களிடையே படையெடுப்புக்கு இருந்த எதிர்ப்புக்கும் எடுத்துக்காட்டாகும். ஃப்ரான்ஸ் மற்றும் அதன் எதிரிகளிடையே போர் வெடித்த போது, ரஷ்ய மற்றும் ஆஸ்திரிய படைகள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தன. சுவிஸ் மக்கள், ஹெல்வெட்டிக் குடியரசின் கீழ், பிரெஞ்சிற்காக போரிடுவதற்கு மறுத்துவிட்டனர். 1803 இல் பாரிஸில் நெப்போலியன் இரு தரப்பிலும் முன்னனி சுவிஸ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். அதன் விளைவாக சமரச நடவடிக்கை ஏற்பட்டது இதனால் சுவிஸ் சுய ஆட்சியுரிமை பெரிதும் புணரமைக்கப்பட்டது மேலும் 19 மண்டலங்கள் ஒருங்கமைந்த கூட்டமைப்பு உருவானது. அதிலிருந்து, சுவிஸ் அரசியல் பெரும்பாலும் மத்திய அரசின் உதவியுடன் மண்டலங்களின் மரபு சார் தனியாட்சி என்ற சமநிலைக்கே முக்கியத்துவம் வழங்கியது. 1815 இல் நடைபெற்ற வியன்னா மாநாடு, சுவிஸ் சார்பின்மையை முழுமையாக மீண்டும் நிறுவியது, மேலும் ஐரோப்பிய சக்திகள் சுவிஸ் நடுநிலைத் தன்மையை நிரந்தரமாக அங்கீகரிக்க ஒப்புக்கொண்டன. சுவிஸ் போர்ப்படைகள் அயல்நாட்டு அரசாங்கங்களுக்கு 1860 இல்சையிஜ் ஆஃப் கெய்டா வில் அவர்கள் போரிட்ட அந்தக் காலம் வரை சேவை வழங்க அனுமதிக்கப்பட்டன. வாலெய்ஸ், நியூசாடெல் மற்றும் ஜெனீவா போன்ற மண்டலங்களின் ஒப்புதலுடன் சுவிட்சர்லாந்தின் நிலப்பகுதியை அதிகரிக்கவும் ஒப்பந்தம் அனுமதித்தது. அதிலிருந்து, சுவிட்சர்லாந்தின் எல்லைகள் இதுவரை மாற்றப்படவில்லை. பெர்ன் மண்டலம், சட்டசபையை (முன்னால் சட்டத்துறை மற்றும் செயற்குழு நிர்வாகம்) நிர்வகித்த மூன்று மண்டலங்களில் ஒன்றாக விளங்கியது, இதனுடன் லூசெர்ன் மற்றும் ஜூரிச் மண்டலங்களும் இணைந்து செயல்பட்டன. இதன் மண்டலத் தலைநகரம் 1848 இல் கூட்டாட்சியின் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, பிரெஞ்சு பேசும் பகுதிக்கு மிக அருகில் அது இருந்ததே இதற்குக் காரணமாகும். பாட்ரிசியேட் சக்தியின் மீட்டமைப்பு தற்காலிகமாகவே இருந்தது. பினனர் 1839 இன் ஜூரிபுட்ஸ்க் போன்ற தொடர்ச்சியான வன்முறைகள் நடைபெற்ற காலங்களுக்குப் பின்னர், 1847 இல் சில கத்தோலிக்க மண்டலங்கள் தனி கூட்டணியை உருவாக்க முயற்சித்ததால் உள்நாட்டுப் போர் வெடித்தது ("சோண்டர்பண்ட்ஸ்க்ரியேக்" ). இந்த உள்நாட்டுப் போர் ஒரு மாதமே நீடித்தது, இதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர், அவர்களில் பெரும்பாலும் உட்தாக்குதலில் இறந்தவர்களே. எனினும் 19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஐரோப்பிய கலவரங்கள் மற்றும் போர்களுடன் ஒப்பிடும் போது சோண்டர்பண்ட்ஸ்க்ரியேக் மிகச்சிறியது, இருப்பினும் இது சுவிட்சர்லாந்து மற்றும் சுவிஸ் மக்களின் சமூக உளவியல் இரண்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போரினால் சுவிஸில் அனைவரும் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் வலிமையின் தேவையைப் புரிந்துகொண்டார்கள். கத்தோலிக்க, புரோடெஸ்டெண்டுகள், அல்லது தாராளவாதிகள் அல்லது பழமைவாதிகள் போன்ற சமூகத்தின் அனைத்து பிரிவு சுவிஸ் மக்களும், தங்கள் பொருளாதார மற்றும் மதம் சார்ந்த ஈடுபாடுகள் இணைந்தால் மண்டலங்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்தார்கள். இவ்வாறு, மற்ற ஐரோப்பிய நாடுகள் புரட்சிகரமான எழுச்சியில் தாக்கப்பட்டன, சுவிஸ் மக்கள் அமெரிக்க எடுத்துக்காட்டுகளால் ஊக்கம் பெற்று உண்மையான அரசியலமைப்புக்கு கூட்டாட்சி வடிவமைப்பை உருவாக்கினர். இந்த அரசியலமைப்பு மண்டலங்களுக்கு, அவற்றின் உள் விவகாரங்களுக்கான சுய ஆட்சி அதிராரத்தையும், ஒட்டுமொத்தத்திற்குமான மைய அதிராரத்தையும் வழங்கியது. மண்டலங்களின் ஆற்றலை உணர்த்திய மண்டலங்களை கௌரவிக்கும் வகையில் (சோண்டர்பண்ட் கேண்டன்) தேசிய சட்டசபை மேல் சபை (சுவிஸ் மாகாண ஆட்சிக்குழு, மண்டலத்துக்கு 2 பிரதிநிதி) மற்றும் கீழ் சபை (சுவிட்சர்லாந்தின் தேசிய ஆட்சிக்குழு, நாடு முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பில் செய்யப்படும் திருத்தங்களுக்கு பொது வாக்கெடுப்பு அவசியமாக்கப்பட்டது. பாரபட்சமற்ற மற்றும் திட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் 1850 இல் சுவிஸ் ஃப்ரேங்க் சுவிஸின் ஒரே நாணயம் ஆனது. அரசியலமைப்பின் 11 ஆம் கட்டுரை, போர்ப்படைகளை பிற நாடுகளுக்கு அனுப்புவதை தடை செய்தது, எனினும் சுவிஸ் இரு சிசிலிக்களின் பிரான்ஸிஸ் II க்கு சேவை வழங்க உடன்பட்டது, இதன் படி 1860 இல் சையிஜ் ஆஃப் கேயிடாவில் சுவிஸ் பாதுகாவலர் படைகளை அனுப்பியது, இதுவே கடைசி வெளிநாட்டு சேவையாகும். அரசியலமைப்பின் முக்கிய கூற்று என்னவெனில், நிச்சயமாகத் தேவைப்படும் தருணத்தில் இதனை முழுவதும் புதிதாக திரும்ப எழுதலாம் என்பதாகும், இதனால் காலத்திற்கேற்ப தீர்மாணங்களை மாற்றி வெளியிடுவதற்கு பதிலாக, முழுவதுமாக மாற்றி எழுதப்படுவது முடிகிறது. விரைவில் மக்கள் தொகை உயர்ந்த போது மற்றும் தொழிற்புரட்சி ஏற்பட்டபோது அதன் விளைவாக அரசியலமைப்பில் மாற்றங்களுக்கான அவசியங்கள் ஏற்பட்ட போது இதன் தேவை நிரூபிக்கப்பட்டது. 1872 இல் மக்களால் முந்தைய வரைவு நிராகரிக்கப்பட்டது ஆனால் 1874 இல் ஏற்பட்ட திருத்தங்கள் இதனை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. இது கூட்டாட்சி மட்டத்தில் சட்ட அமலாக்கத்திற்கு பொது வாக்கெடுப்பு வசதியை அறிமுகப்படுத்தியது. மேலும் இது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான கூட்டாட்சிப் பொறுப்பை வழங்கியது. 1891 இல், புதிய வலிமையான நேரடி மக்களாட்சி போன்ற அம்சங்களுடன், அரசியலமைப்பு மாற்றியமைக்கபட்டது, இதுவே இன்றளவும் தனித்துவத்துடன் உள்ளது. இரண்டு உலகப் போர்களின் போதும் சுவிட்சர்லாந்தின் மீது படையெடுக்கப்படவில்லை. முதலாம் உலகப் போரின் போது, சுவிட்சர்லாந்து விளாடிமிர் இலியிச் சலினாவுக்கு (லெனின்) புகலிடமாக விளங்கியது, அவர் 1917 வரையில் அங்கிருந்தார். 1917 இல் கிரிம் ஹோஃப்மேன் நிகழ்வால் சுவிஸின் நடுநிலைத்தன்மை மிகவும் கேள்விக்குள்ளானது, ஆனால் இது நெடுங்காலம் நீடிக்கவில்லை. 1920 இல், சுவிட்சர்லாந்து ஜெனீவாவை அடிப்படையாகக்கொண்ட நாடுகளின் கூட்டமைப்புடன் இராணுவத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இணைந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியால் விரிவான படையெடுப்புக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் சுவிட்சர்லாந்து ஒருபோதும் தாக்கப்படவில்லை. இராணுவ அச்சுறுத்தல்கள், ஜெர்மனிக்கான சலுகைகள், மற்றும் அதிருஷ்டவசமாக உலகப் போரின் போது நிகழ்ந்த பெறும் நிகழ்வுகளால் படையெடுப்பு தள்ளிச் சென்றது போன்ரவற்றால் சுவிட்சர்லாந்து சார்பின்றி இருக்க முடிந்தது. ஜெர்மனியால் தூண்டப்பட்ட, சுவிட்சர்லாந்தின் சிறிய நாசிப்படையின் ஆக்கிரமிப்பு முயற்சி மோசமான தோல்வியை அடைந்தது. சுவிஸ் பத்திரிகை, மூன்றாம் ரேயிக்கை கடுமையாக விமர்சித்தது, சில நேரங்களில் ஆட்சியில் திருப்தியின்மை என்ற கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலும் விமர்சித்தது. ஜெனரல் ஹென்றி ஹிய்சனின் தலைமையில் பெரும் இராணுவப்படை தயார் நிலையில் இருந்தது. நாட்டின் பொருளாதார மையத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, எல்லைகளில் ஒரு நிலையான பாதுகாப்பை வழங்குவது என்ற உத்தியிலிருந்து, நீண்ட கால உரசல் மிக்க பகுதிகளில் படைகளைக் குவித்தல் மற்றும் வலிமையான பகுதிகளிலிருந்து படைகளை மீட்டுகொள்ளுதல், மற்றும் உயர்ந்த ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் ரிடல்ட் எனப்படும் தயார் நிலை போன்ற உத்திகளுக்கு மாற்றப்பட்டது. எதிர்க்கும் இரு தரப்பு படைகளையும் உளவறியும் திறனில் சிறந்து விளங்கிய சுவிட்சர்லாந்து, ஏக்ஸிஸ் மற்றும் கூட்டணி சக்திகளுக்கிடையே முக்கிய உளவாளியாக இருந்தது. ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வேத செஞ்சிலுவைச் சங்கம் இந்தப் போர் மற்றும் பிற சண்டைகளின் போது முக்கியப் பங்கு வகித்தது. சுவிட்சர்லாந்தின் வர்த்தகம் கூட்டணி மற்றும் ஏக்சிஸ் இரு தரப்பு நாடுகளாலும் தடை செய்யப்பட்டது. மற்ற வர்த்தக நாடுகளுடன் வர்த்தகத்திற்கு தொடர்புகொள்ளுதல் மற்றும் படையெடுப்புக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பொறுத்து மூன்றாம் ரேயிக்குக்கான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கடனில் வழங்கப்படும் விரிவாக்கம் ஆகியவை வேறுபட்டது. 1942 இல் விக்கி.பி.ான்ஸ் வழியிலான முக்கியமான ரயில் பாதை துண்டிக்கப்பட்டதிலிருந்து, சுவிட்சர்லாந்து முழுமையாக ஏக்சிஸால் சூழப்பட்ட பின்னர் சலுகைகள் உச்சத்திற்கு வந்தன. போரின் இறுதியில், சுவிட்சர்லாந்து 300,000க்கும் மேற்ப்பட்ட அகதிகளைக் கொண்டிருந்தது, அதில் 104,000 பேர் ஹாக்யூ மாநாடுகளில் வரையறுக்கப்பட்ட "நடுநிலை சக்திகளின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு" இணங்க, சுவிட்சர்லாந்து கொண்டிருந்தவர்களான வெளிநாட்டு போர்ப்படைகளச் சேர்ந்தவர்கள். 60,000 அகதிகள் நாசிக்களின் மனிதநேயமற்ற செயலி காரணமாக தப்பி வந்திருந்தவர்கள். அவர்களில், 26,000 முதல் 27,000 பேர் வரை யூதர்கள். எனினும், கண்டிப்பான குடியேற்றம் மற்றும் காப்பகக் கொள்கைகள் மற்றும் நாசி ஜெர்மனியுடனான நிதிநிலைத் தொடர்புகள் போன்றவை முரண்பாடுகளை அதிகரித்தன. போரின் போது, சுவிஸின் விமானப்படை போர்விமானங்கள் இருதரப்பிலும் பயன்படுத்தப்பட்டன, 1940 மே மற்றும் ஜூனில் அத்துமீறி நுழைந்த 11 லுஃப்ட்வாஃபே விமானங்களைத் தாக்கின, பின்னர் ஜெர்மனியின் மிரட்டலைத்தொடர்ந்து, கொள்கையை மாற்றிக்கொண்டதால் பிற அத்து மிறுபவர்களை வற்புறுத்திப் பின்வாங்கச் செய்தது. போரின் போது 100க்கும் மேற்பட்ட கூட்டு நாடுகளின் குண்டுவீச்சு வீரர்களும் போர் வாகன வீரர்களும் நுழைந்தனர். 1944–45 களில், கூட்டு நாடுகளின் வீரர்கள் தவறுதலாக சுவிஸின் ஸ்காஃப்ஹூசென் (40 பேர் கொல்லப்பட்டனர்), ஸ்டெயின் ஆம் ரேயின், வால்ஸ், ராஃப்ஸ் (18 பேர் கொல்லப்பட்டனர்) ஆகிய நகரங்களைத் தாக்கிவிட்டனர். மேலும் 1945 மார்ச் 4 இல் பேசல் மற்றும் ஜூரிச் இரண்டின் மீதும் குண்டு வீசியது அனைவருமறிந்தது. 1959 இல் முதல் சுவிஸ் மண்டலங்களில், 1971 இல் கூட்டாட்சி நிலையிலும் எதிர்ப்புகளுக்கு பிறகு, 1990 இல் இறுதி அப்பேன்சல் இன்னர்ஹோடேன் மண்டலத்திலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி மட்டத்தில், பெண்கள் வாக்குரிமை பெற்ற பின்னர் பெண்கள் வேகமாக அரசியல் முக்கியத்துவம் பெற்றனர், ஏழு உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சி ஆட்சிக்குழுவில் முதல் பெண் உறுப்பினராக 1984–1989 வரை எலிசபெத் கோப் பணியாற்றினார். 1998 இல் முதல் பெண் அதிபராக ரூத் ட்ரேயிஃபுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு 1999 இன் போது அதிபராக பதவி வகித்தார். (சுவிஸ் அதிபர் ஏழு உறுப்பினர்களின் உயர் ஆட்சிக்குழுவில் இருந்து ஆண்டிற்கொருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார் மேலும் அவர் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்க முடியாது). 2007 இல் சுவிஸ் ஆட்சிக்குழுவிற்குத் தலைமை வகித்த மிச்செலைன் கால்மி ரே இரண்டாவது பெண் அதிபராவார் ஆவார். இவர் பிரெஞ்சு பேசும் பகுதியான 0}ஜெனீவே மண்டலத்தின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர் (ஜெர்மானில் Genf, இத்தாலினில் Ginevra). இவர் இப்போது ஆர்காயூ மண்டலத்தைச் சேர்ந்த டோரிஸ் லூதர்டு மற்றும் க்ரௌபண்டென் மண்டலத்தைச் சேர்ந்த ஈவ்லைன் விட்மர் ஸ்கலும்ஃப் ஆகிய இரண்டு பெண்மணிகளுடன் தற்போது ஏழு உறுப்பினர் சபை/உயர் ஆட்சிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். 1963 இல் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. 1979 இல் பெர்ன் மண்டலப்பகுதிகள் பெர்னீசிடமிருந்து விடுதலை பெற்று ஜுரா மண்டலம் உருவானது. 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாளில், சுவிஸ் மக்கள் மற்றும் மண்டலங்கள் முழுமையாக மாற்றியமைக்கப் பட்ட கூட்டாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2002 இல் சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகளில் முழு உறுப்பினரானது, இதனால் வத்திக்கான் பரவலாக முழு UN உறுப்பினரல்லாத மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுவிட்சர்லாந்து EFTAவை உருவாக்கி அதன் உறுப்பினராக இருக்கிறது, ஆனால் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளில் இது உறுப்பினராக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கான மனு மே 1992 இல் அனுப்பப்பட்டது, ஆனால் 1992 டிசம்பரில் EEA தள்ளுபடி செய்யப்பட்டதிலிருந்து முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை, அப்போது EEA குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திய ஒரே நாடு சுவிட்சர்லாந்து மட்டுமே. முதலில் EUவின் பல பிரச்சினைகளுக்காக அங்கு பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது; மக்களிடமிருந்து கலவையான எதிர்விளைவுகள் வெளிப்பட்டதால் உறுப்பினர் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், சுவிஸ் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சில இருமுக உடன்பாடுகளில் கையெழுத்திட்டதற்கிணங்க சுவிஸ் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக EUவுடன் இணக்கமாக இருக்கும் வகையில் மாற்றங்கண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து, லீக்டன்ஸ்டைனுடன் இணைந்து, 1995 இல் ஆஸ்திரியா EU இன் உறுப்பினரானதிலிருந்து அதனால் சூழப்பட்டுள்ளது. 2005 ஜுன் 5 இல், 55% பெரும்பான்மையுடைய சுவிஸ் வாக்காளர்கள் ஸ்ஹேன்ஜென் உடன்படிக்கையில் இணைவதை ஏற்றுக் கொண்டார்கள், இதனை EU ஆய்வாளர்கள், இதுவரை தனிப்பட்ட நாடாக அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாக தன்னைக் கருதிவந்த சுவிட்சர்லாந்து இப்போது சுவிட்சர்லாந்து ஆதரவளிப்பதாகக் கருதுகின்றனர். 1848 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசியலமைப்பே, உலகின் இரண்டாவது பழமை வாய்ந்த கூட்டாட்சி மாகாணமான, தற்காலத்தின் கூட்டாட்சி மாகாணத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படையாகும். 1999 இல் ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் கூட்டாட்சி கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் எதையும் இது அறிமுகப்படுத்தவில்லை. அது தனிப்பட்ட நபர்களின் அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் பொது விவகாரங்களிலான குடிமக்களின் பங்கேற்பு போன்றவற்றை மேலேழுந்தவாரியாக வரையறுக்கிறது, கூட்டமைப்புகளுக்கும் மண்டலங்களுக்குமிடையே அதிகாரத்தை வகுக்கிறது, கூட்டாட்சி சட்ட எல்லையையும் அதிகாரத்தையும் வரையறுக்கிறது. கூட்டாட்சி மட்டத்தில் மூன்று பிரதான ஆட்சி ஆணையங்கள் உள்ளன: இரு அவை நாடாளுமன்றம் (சட்டப்பேரவை), கூட்டமைப்பு ஆட்சிக்குழு (செயலகம்) கூட்டமைப்பு நீதிமன்றம் (நீதியியல்). சுவிஸ் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு மண்டலங்களாலும் நிர்ணயிக்கப்பட்ட முறையின்படி தேர்ந்தெடுக்கப்படும் 46 பிரதிநிதிகளைக் (ஒவ்வொரு அரை மண்டலத்திற்கும் ஒருவர் என்ற கணக்கில் மண்டலம் ஒன்றுக்கு இருவர்) கொண்டுள்ள மாகாண ஆட்சிக்குழு மற்றும் ஒவ்வொரு மண்டலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்த எண்ணிக்கைவாரியான பிரதிநிதித்துவ முறையின்படி தேர்ந்தெடுக்கப்படும் 200 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய ஆட்சிக்குழு ஆகியவை ஆகும். இரு அவையின் உறுப்பினர்களும் 4 ஆண்டுகள் பதவியிலிருப்பர். இரு அவைகளும் இணை-அமர்வில் இருக்கும் போது அவற்றை மொத்தமாக கூட்டமைப்பு சட்டமன்றம் என்பர். குடிமக்கள் பொது வாக்கெடுப்புகளின் மூலம் நாடாளுமன்றம் இயற்றும் புதிய சட்டங்களை எதிர்க்கலாம், தொடக்க முயற்சிகளின் மூலம், கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யலாம், இந்த அம்சமே சுவிட்சர்லாந்து ஒரு நேரடி மக்களாட்சி நாடாக விளங்குவதற்கு காரணமாகத் திகழ்கிறது. கூட்டமைப்பு ஆட்சிக்குழுவே கூட்டமைப்பு அரசாங்கத்தை அமைக்கிறது, கூட்டமைப்பு நிர்வாகத்தை நடத்துகிறது, மேலும் ஒட்டுமொத்த மாகாணத் தலைமையாகச் செயல்புரிகிறது. அது ஏழு ஒத்த சக உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும், அது நான்காண்டு அதிகார அங்கீகரிப்புக்காக கூட்டமைப்பு சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது, மேலும் அது ஆட்சிக்குழுவின் மேற்பார்வைக்கான அதிகாரமும் கொண்டுள்ளது. சட்டமன்றத்தினால் ஏழு உறுப்பினர்களிலிருந்து, வழக்கமாக சுழற்சி முறையில் ஓராண்டு காலத்திற்கென கூட்டமைப்பின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; இந்தத் தலைவரே அரசாங்கத்திற்கு தலைமை வகிப்பார் மற்றும் பிரதிநிதுத்துவ செயல்பாடுகளுக்குப் பொறுப்பு வகிப்பார். இருப்பினும், தலைவரே கூடுதல் அதிகாரங்களேதுமற்ற "உயர் தலைவராவார்" , மேலும் நிர்வாகத்தின் துறைக்குத் தலைவராக இருப்பார். சுவிஸ் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டிலிருந்து நான்கு முக்கியக் கட்சிகளின் கூட்டணியாக இருந்தது, இதில் ஒவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, வாக்களிக்கும் திறன் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்திருந்ததையே இது உணர்த்துகிறது. 2 CVP/PDC, 2 SPS/PSS, 2 FDP/PRD மற்றும் 1959 இலிருந்து 2003 வரை நிலைத்திருந்ததால் 1 SVP/UDC ஆகிய கட்சிகளின் சிறப்பான பங்கீட்டு முறையையே "மாயச் சூத்திரம்" என்றழைக்கின்றனர். 2007 கூட்டமைப்பு ஆட்சிக்குழு தேர்தலில் பெடரல் ஆட்சிக்குழுவின் ஏழு இடங்கள் பின்வருமாறு பகிரப்பட்டன: மண்டல அல்லது கூட்டமைப்பு நீதிமன்றங்களுக்கு எதிரான முறையீடுகளைக் கையாள்வதே கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தின் பணியாகும். இதில் நீதிபதிகள், கூட்டமைப்பு சட்டமன்றத்தால் ஆறாண்டு பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுவிஸ் குடிமக்களுக்கு மூன்று சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன: தன்னாட்சிப்பகுதி, மண்டலம் மற்றும் கூட்டமைப்பு நிலைகளில் இவை உள்ளன. 1848 ஆம் ஆண்டின் கூட்டமைப்பு அரசியலமைப்பு ஒரு நேரடி மக்களாட்சி முறையை (சில நேரங்களில் "பகுதி-நேரடி" அல்லது நாடாளுமன்ற மக்களாட்சி முறையின் பொது அமைப்புகளால் சேர்க்கப்படுவதால் பிரதிநிதித்துவ நேரடி மக்களாட்சி என அழைக்கப்படுகிறது) வரையறுக்கிறது. சுவிஸ் நேரடி மக்களாட்சியில் கூட்டமைப்பு மட்டத்தில் குடியியல் உரிமைகள் எனப்படும் உரிமைகள் ("Volksrechte" , "droits civiques" ) உள்ளன. அவற்றில், ஒரு "அரசியலமைப்பு தொடக்கத் திட்டத்தைச்" சமர்ப்பித்தல் மற்றும் ஒரு "பொது வாக்கெடுப்பு" ஆகிய நாடாளுமன்ற முடிவுகளைத் தோற்கடிக்கக்கூடிய உரிமைகள் ஆகியவை அடங்கும். ஒரு "பொது வாக்கெடுப்புக்கு" அழைப்பு விடுப்பதன் மூலம் குடிமக்களின் ஒரு குழுவினர், நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை எதிர்க்கலாம், அதற்கு அவர்கள் அச்சட்டத்திற்கு எதிராக 100 நாட்களுக்குள் 50,000 கையொப்பங்களைப் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால், ஒரு தேசிய வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும், அதில் வாக்களிப்பவர்கள், பெரும்பான்மையின் மூலம் சட்டத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என முடிவு செய்வார்கள். எட்டு மண்டலங்கள் ஒன்றிணைந்தும் ஒரு கூட்டமைப்பு சட்டத்தின் மீதான பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க முடியும். அதே போல், கூட்டமைப்பு "அரசியலமைப்புத் தொடக்கத் திட்டமும்" ஒரு தேசிய வாக்குக்கு ஓர் அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்ய அனுமதிக்கிறது, அதற்கு அவர்கள் 18 மாதங்களுக்குள் முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 100,000 வாக்காளர்களின் கையொப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு எதிரான ஓர் திருத்தமும் முன்மொழியப்படும் நிலையில், முதலில் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் நாடாளுமன்றம் போதிய கூடுதல் திருத்தங்களைச் சேர்க்கலாம், இதற்கென வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டில், இரண்டு முன்மொழிதல்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எதைத் தேர்ந்தெடுப்பது என தங்கள் முன்னுரிமையைக் குறிப்பிட வேண்டும். முறையீடுகளாலோ அல்லது நாடாளுமன்றத்திலோ அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை, தேசிய முன்னுரிமை வாக்கு மற்றும் மண்டல முன்னுரிமை வாக்குகள் ஆகிய இரண்டின் இரட்டைப் பெரும்பான்மையானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுவிஸ் கூட்டமைப்பில் 26 மண்டலங்கள் உள்ளன: * இவற்றின் மக்கள் தொகை, 15,000 க்கும் (அப்பேன்சல் இன்னர்ஹோடேன்) 1,253,500 க்கும் (ஜூரிச்) இடையே வேறுபடுகிறது, இவற்றின் பரப்பளவு 37 ச.கி.மீ க்கும் (பேசெல்-ஸ்டேடிட்) 7,105 ச.கி.மீ க்கும் (க்ரௌபண்டென்) இடையே வேறுபடுகிறது. இந்த மண்டலங்களில் மொத்தம் 2,889 நகராட்சிகள் உள்ளன. சுவிட்சர்லாந்தில் இரண்டு பிறநாடுசூழ் பிரதேசங்கள் உள்ளன: ஜெர்மனியைச் சேர்ந்த பஸிங்கென், இத்தாலியைச் சேர்ந்த காம்பியொன் டி இத்தாலியா ஆகியவையாகும். 1919, மே 11 அன்று ஆஸ்திரிய மாநிலமான வோரேர்ல்பெர்க்கில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 80% மேற்பட்டோர் அந்த மாநிலம் சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என ஆதரித்துள்ளனர். இருப்பினும், ஆஸ்திரிய அரசாங்கம், நேச நாடுகள், சுவிஸ் சுதந்திரக் கட்சியினர், சுவிஸ்-இத்தாலியர்கள் (தேசியப்படி இத்தாலிய சுவிட்சர்லாந்தில் வாழும் சுவிஸ் மக்கள் , வரைபடத்தைக் காண்க) மற்றும் ரோமாண்டியினர் (சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதிகளில் வாழும் சுவிஸ் மக்கள், வரைபடத்தைக் காண்க) ஆகியோரால் இது தடுக்கப்பட்டது. இராணுவ, அரசியல் அல்லது நேரடி பொருளாதார செயல்பாடுகளுக்கான கூட்டணிகளை பழங்காலத்திலிருந்தே சுவிட்சர்லாந்து தவிர்த்து வருகிறது, மேலும் அதன் 1515 இல் நிகழ்ந்த விரிவாக்கத்தின் முடிவுக்குப் பின்னரிருந்து நடுநிலையான நாடாகவே இருந்து வருகிறது. 2002 இல் மட்டுமே சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகளின் முழுமையான உறுப்பினராகியது ஆனால் பொது வாக்கெடுப்பு முறையில் முறையில் ஐக்கிய நாடுகள் சங்கத்தில் இணைந்த முதல் நாடு அதுவே ஆகும். சுவிட்சர்லாந்து, பெரும்பாலும் அனைத்து நாடுகளுடனும் அரசியல் செயலாட்சி நயத்துடன் செயல்பட்டு வருகிறது, வரலாற்றில் அது பிற நாடுகளுக்கிடையே ஓர் இடையீட்டாளராக செயல்பட்டு வந்துள்ளது. சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்ல; சுவிஸ் மக்கள் 1990களின் தொடக்கத்திலிருந்து அதில் உறுப்பினராவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல எண்ணிக்கையிலான சர்வதேச நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளன, அதன் நடுநிலைத் தன்மையே இதற்கு ஒரு காரணமாகும். செஞ்சிலுவைச் சங்கம் சுவிட்சர்லாந்தில் 1863 இல் நிறுவப்பட்டது, அது இன்றும் அதன் நிறுவன மையத்தை அதே நாட்டில் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒலிபரப்புதல் ஒன்றியத்தின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது. வெகு சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சங்கத்தில் சேர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து ஒன்றாக இருந்த போதிலும், நியூயார்க் நகரத்திற்கு அடுத்தபடியாக ஐக்கிய நாடுகளின் மிகப் பெரிய மையமாக விளங்குவது ஜெனீவாவே ஆகும், மேலும் சுவிட்சர்லாந்தே நாடுகளின் கூட்டமைப்பின் நிறுவிய உறுப்பினராகும். ஐக்கிய நாடுகள் சங்கத்தின் தலைமையகம் மட்டுமன்றி, உலக சுகாதார அமைப்பு (உலக சுகாதார அமைப்பு), சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்) போன்ற பல UN அமைப்புகள் ஜெனீவாவில் உள்ளன, மேலும் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் உள்ளன. மேலும், சர்வதேச பனி ஹாக்கி ஒன்றியம் போன்ற பல சர்வதேச விளையாட்டு ஒன்றியங்களும் அமைப்புகளும் நாடெங்கிலும் அமைந்துள்ளன. இவற்றில், லாசன்னேவில் உள்ள பன்னாட்டு ஒலிம்பிக் குழு, ஜூரிச்சில் உள்ள பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஒன்றியம்) மற்றும் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒன்றியம்) ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. உலகப் பொருளாதார மன்றத்தின் உருவாக்கம் ஜெனீவாவில் தொடங்கியதாகும். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உட்பட உலகை எதிர்நோக்கியுள்ள முக்கிய விவகாரங்களைப் பற்றி விவாதிக்க, உலகின் உயர்ந்த சர்வதேச தொழில் மற்றும் அரசியல் தலைவர்கள் டேவோஸில் கூடிப் பங்குபெறும் வருடாந்திரக் கூட்டத்திற்கு ஜெனீவா பிரசித்தி பெற்றது. தரைப்படை மற்றும் விமானப் படை உள்ளிட்ட சுவிஸ் ஆயுதப்படைகள், கட்டாய இராணுவச் சேர்க்கையால் உருவாக்கப்பட்டவை: மொத்த வீரர்களில் தொழில் முறையான வீரர்கள் 5 சதவீதமே உள்ளனர், மேலும் பிற அனைவரும் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட, 20 முதல் 34 (சில சிறப்பான தேவைகளுக்கு 50 வரை) வயதுள்ள குடிமக்களாவர். சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருப்பதால் இங்கு கப்பல் படை இல்லை. இருப்பினும், அண்டை நாடுகளின் எல்லையிலுள்ள ஏரிகளில் ஆயுதம் தாங்கிய இராணுவ ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவிஸ் குடிமக்கள் அயல்நாடுகளின் இராணுவத்தில் சேவை புரியத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, வாடிகனின் சுவிஸ் காவலர்கள் சேவை இதற்கு விதிவிலக்காகும். சுவிஸ் இராணுவத்தின் அமைப்பின்படி, ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட ஆயுதங்கள் உட்பட தனது சொந்த ஆயுதங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். சில அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்த நடைமுறை முரண்பாடானது எனவும் ஆபத்தானது எனவும் கூறுகின்றனர். கட்டாய இராணுவச் சேவை என்பதைப் பொறுத்த வரை அனைத்து ஆண் குடிமக்களும் சேவை புரிய வேண்டும்; பெண்கள் விரும்பினால் சேவை புரியலாம். அவர்கள் வழக்கமாக கட்டாய இராணுவச் சேர்க்கைக்கான பயிற்சி ஆணையை தங்கள் 19 வயதில் பெறுவார்கள். சுவிஸ் இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் இராணுவச் சேவைக்குப் பொருத்தமானவர்களாக உள்ளனர்; பொருந்தாதவர்களுக்கு மாற்று சேவைகள் உள்ளன. வருடந்தோறும் பயிற்சி முகாமில், ஏறக்குறைய 20,000 நபர்கள் 18 முதல் 21 வாரங்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றனர். 2003 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட "ஆர்மி XXI" சீர்திருத்தம் அதற்கு முன்பு நடைமுறையிலிருந்த "ஆர்மி 95" முறையை இடமாற்றியது, செயல்திறனுக்கானவர்களின் எண்ணிக்கையை 400,000 இலிருந்து சுமார் 200,000 எனக் குறைத்துள்ளது. இதில் 120,000 செயல்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் 80,000 ரிசர்வ் படையினர். சுவிட்சர்லாந்தின் ஒருமைத்தன்மை மற்றும் நடுநிலைத் தன்மையைக் காப்பதற்காக மொத்தம் மூன்று படைத்திரட்சிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதலாவது 1870–71 இல் நடைபெற்ற ப்ராங்கோ-ப்ரச்சியன் போரின் போது ஏற்பட்டது. இரண்டாம் படைத்திரட்சி 1914 ஆகஸ்டில் முதல் உலகபோர் தொடங்கிய போது நிகழ்ந்தது. மூன்றாம் இராணுவப் படைத்திரட்சி செப்டம்பர் 1939 இல் போலந்தின் மீது ஜெர்மனி நடத்திய தாக்குதலுக்கு மறுவினையாக செய்யப்பட்டது; ஹென்றி ஹிய்சன் ஜெனரல் இன் சீஃபாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுநிலைத் தன்மையின் காரணமாக சுவிஸ் இராணுவம் பிற நாடுகளின் ஆயுதப் போர்களில் பங்குபெற முடியாது, ஆனால் உலகளாவிய அளவில் சில அமைதி முயற்சிகளில் பங்குபெறுகிறது. 2000 இலிருந்து, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைக் கண்காணிக்க, ஆயுதப்படைகள் துறை ஓனிக்ஸ் புலனாய்வு முறைமையைப் பயன்படுத்தி வருகிறது. பனிபோரின் முடிவைத் தொடர்ந்து, மொத்த ஆயுதப் படைகளை நீர்க்கச் செய்ய அல்லது முழுதுமாகக் கைவிடவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (காண்க: இராணுவமற்ற சுவிட்சர்லாந்துக்கான குழு). இதற்கான பிரசித்தி பெற்ற பொது வாக்கெடுப்பு 1989 நவம்பர் 26 இல் நடைபெற்றது, அது தோல்வியுற்றபோதும் பெரும்பாலான மக்கள் அது போன்ற நடவடிக்கையை ஆதரிப்பது தெரிந்தது. அதற்கு முன்பும் அதே போன்ற பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது, ஆனால் 9/11 தாக்குதல்களுக்குப் பின்னரான குறுகிய கால இடைவெளியில் அது நிகழ்த்தப்பட்டது, மேலும் அது 77% வாக்காளர்களால் தோல்வியடைந்தது. ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி முதல் தென்பகுதி வரை பரவியுள்ள சுவிட்சர்லாந்து, குறைவான பரப்பளவான 41,285 சதுர கிலோமீட்டர்களில் (15,940 சதுர மைல்) மாறுபட்ட நிலப்பகுதிகள் மற்றும் காலநிலைகளைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகையானது சுமார் 7.6 மில்லியன் ஆகும், இதன் படி சராசரி மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 240 பேர் (622/சதுர மைல்) என உள்ளது. இருப்பினும், இதன் மலைசார்ந்த தெற்குப் பகுதியின் பெரும்பகுதி, சராசரியை விடக் குறைவான மக்கள் அடத்தியையே கொண்டுள்ளது, மாறாக வடக்குப் பகுதியிலும் இறுதித் தென்பகுதியிலும் ஓரளவு அதிக மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது, அவை அதிகமான மலைசார்ந்த நிலைப்பகுதியையும், பகுதியளவு காடுகளையும் நிலப்பரப்புகளையும், அதேபோன்று சில பெரிய ஏரிகளையும் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். சுவிட்சர்லாந்து, பின்வரும் மூன்று அடிப்படை பரப்பியல் பகுதிகளாக அமைந்துள்ளது: தெற்கில் சுவிஸ் ஆல்ப்ஸ், சுவிஸ் பீடபூமி அல்லது "மையநிலம்" மற்றும் வடக்கில் ஜூரா மலைகள். ஆல்ப்ஸ் மலைகள் நாட்டில் மத்திய மற்றும் தெற்கில் காணப்படும் உயர்ந்த மலைப்பகுதியாக உள்ளன, அவை நாட்டின் 60% பகுதியைக் கொண்டிருக்கின்றன. சுவிஸ் ஆல்ப்ஸின் உயரமான சிகரங்களில், 4,634 மீட்டர்கள் (15,203 அடி) என்ற அதிக உயரத்தை உடைய டுஃபோர்ஸ்பைட்ஸ் சிகரம் உள்ளது, இப்பகுதிகளில் அருவிகளையும் பனிப்பாளங்களையும் கொண்ட எண்ணிலடங்கா பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. இந்த அருவிகள், ரைன், ரோன், இன், ஆரே மற்றும் டிசினோ போன்ற ஐரோப்பாவின் சில முக்கிய நதிகளின் தலையூற்றுக்களாக இருந்து முடிவில் ஜெனீவா ஏரி (லாக் லேமன்), ஜூரிச் ஏரி, நியூசாடெல் ஏரி மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி போன்ற சுவிஸ்ஸின் மிகப்பெரிய ஏரிகளைச் சென்றடைகின்றன. வாலெய்ஸ் பகுதியிலுள்ள மேட்டர்ஹார்ன் (4,478 மீ) மற்றும் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ள பென்னின் ஆல்ப்ஸ் ஆகியவை மிகப் பிரபலமான மலைத்தொடர்களாகும். டுஃபோர்ஸ்பைட்ஸ் (4,634 மீ), டாம் (4,545 மீ) மற்றும் வெயிஸ்ஹார்ன் (4,506 மீ) ஆகியவை இந்தப் பகுதியில் உள்ள இன்னும் உயரமான மலைத்தொடர்களாகும். ஆழமான பனிப்பாளங்களுடைய லௌடெர்ப்ரூனென் பள்ளத்தாக்கிற்கு மேலுள்ள பெர்னீஸ் ஆல்ப்ஸ் பகுதி, 72 அருவிகளைக் கொண்டுள்ளது, இது ஜங்க்ப்ராவ் (4,158 மீ) மற்றும் ஐகெர் போன்ற மேலும் புகைப்படங்களுக்கேற்ற ரம்மியமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. தென்கிழக்கின் நீண்ட இங்கடின் பள்ளத்தாக்கானது, க்ரௌபண்டென் மாகாணத்தின் செயிண்ட். மோரிட்ஸ் பகுதியைச் சூழ்ந்துள்ள பிரபலமான இடமாகும்; அருகிலுள்ள பெர்னியா ஆல்ப்ஸ் மலையின் மிக உயரமான சிகரம் பிஸ் பெர்னியா (4,049 மீ) ஆகும். அதிக மக்கள் அடத்தியைக் கொண்டு, நாட்டின் மொத்தப் பரப்பளவில் 30% பரப்பைக் கொண்டிருக்கும் வடக்குப் பகுதியானது மையநிலம் என்று அழைக்கப்படுகின்றது. இது பெரிய அளவிலான திறந்த மற்றும் மலைசார்ந்த நிலத்தோற்றங்களைக் கொண்டிருக்கிறது, இது பகுதியளவு காடுகளையும், பகுதியளவு திறந்தவெளி மேய்ச்சல் நிலங்களையும், மேய்ச்சல் மந்தைகளையும் அல்லது காய்கறிகள் மற்றும் பழங்களின் விளைச்சல் நிலங்களாகவும் காணப்படுகின்றது, ஆனால் இது மலைப்பிரதேசமாகவே உள்ளது. இங்கு மிகப்பெரிய ஏரிகள் காணப்படுகின்றன, மேலும் மிகப்பெரிய சுவிஸ் நகரங்கள் நாட்டின் இந்தப் பகுதியிலேயே அமைந்துள்ளன. மிகப்பெரிய ஏரியான ஜெனீவா ஏரி (பிரெஞ்சில் இது Lac Léman என்று அழைக்கப்படுகிறது) சுவிட்சர்லாந்தின் மேற்கில் உள்ளது. ரோன் நதி என்பது ஜெனீவா ஏரியின் முக்கிய கிளைநதியாகும். சுவிஸ் காலநிலை என்பது பொதுவாக மிதமான காலநிலையாகும், ஆனாலும் இது இடங்களைப் பொறுத்து மாறுபடலாம் , மலையுச்சிகளில் உறைந்த மிகுந்த குளிருள்ள உறைந்த காலநிலை முதல், சுவிட்சர்லாந்தின் தென் முனையில் இதமான மத்தியத்தரைக்கடல் காலநிலை வரையிலும் கொண்டிருக்கின்றது. கோடைகாலம், அவ்வப்போது பெய்யும் மழைப்பொழிவால் இதமாகவும் ஈரப்பதமாகவும் காணப்படுகிறது, ஆகவே அவை மேய்ச்சல் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்றதாக உள்ளது. மலைப்பிரதேசங்களில் குளிர்காலம், சூரியன் மற்றும் பனிப்பொழிவு ஆகியற்றை மாறி மாறிக் கொண்டுள்ளது, குளிர்காலத்தில் தாழ்வான நிலப்பகுதிகள் அதிக மேகமூட்டமாகவும் பனிமூட்டமாகவும் உள்ளன. ஃபோன் எனப்படும் காலநிலை மாறுபாடு குளிர்காலம் உட்பட வருடத்தில் எல்லா நேரங்களிலும் நிகழும், மேலும் மிதமான மத்தியதரைக்கடல் காற்றானது இத்தாலியிலிருந்து ஆல்ப்ஸ் மலையைக் கடந்து வருவதால் நிகழ்கிறது. வாலெய்ஸ் பகுதியின் தெற்குப் பள்ளத்தாக்குகளில் வறண்ட காலநிலை காணப்படுகின்றது , அங்கு விலைமதிப்புமிக்க குங்குமப்பூ பயிர் செய்யப்படுகிறது, மேலும் பல ஒயின் திராட்சைகளும் அங்கு வளர்க்கப்படுகின்றன, க்ரௌபண்டென்னிலும் காலநிலையானது வறட்சியாகவும் சற்று குளிராகவும் இருக்கின்றது, குளிர்காலத்தில் மிகுந்த உறைபனி காணப்படுகின்றது. டிசினோ மண்டலத்திலுள்ள ஆல்ப்ஸின் உயர்ந்த பகுதிகளில் ஈரப்பதமான காலநிலை நிலவுகின்றது, அது அதிக வெயிலைக் கொண்டிருந்தும் அவ்வப்போது பெய்யும் பலத்த மழையால் இத்தகைய காலநிலையைக் கொண்டிருக்கின்றது. சுவிட்சர்லாந்தின் மேற்குப்பகுதியைவிட கிழக்கில் சற்று குளிர் அதிகமாக உள்ளது, மலைப்பிரதேசங்களின் உயரமான பகுதிகள் எங்கும் ஆண்டின் எல்லா நேரத்திலும் குளிரை உணரலாம். அமைவிடத்தைப் பொறுத்து பருவநிலைகளுக்கு ஏற்ற குறைந்த வேறுபாட்டுடன் வீழ்படிவுகள், ஆண்டு முழுவதும் மிதமாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலத்தில் வறண்ட பருவநிலையே காணப்படுகின்றது, சுவிட்சர்லாந்தின் காலநிலை அமைப்பு ஆண்டுதோறும் அதிக மாறுபாடுவதாகும், அதை முன்கணிப்பது கடினமாகவும் இருக்கும். சுவிட்சர்லாந்தின் சூழ்நிலை மண்டலமானது குறிப்பாக பாதிப்புக்குட்பட்டதாகவே இருக்கும், ஏனெனில் பல சிக்கலான பள்ளதாக்குகள் உயரமான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளதால், அவப்போது அவை தனிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கின்றன. மலைசார்ந்த பகுதிகளும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கின்றன, பிற உயரங்களில் மிகவும் செழிப்பான தாவரங்கள் காணப்படுவதில்லை, மேலும் சுற்றாலப் பயணிகள் மற்றும் மேய்ச்சல் புரிபவர்களாலும் அவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுவிட்சர்லாந்தின் மலைசார்ந்த பகுதிகளில் மரங்களின் வளர்ச்சியின் வரம்பு என்ற அளவில் கடந்த ஆண்டுகளில் குறைந்துள்ளது, ஏனெனில் மேய்ச்சல் மற்றும் மேய்ச்சல் நிலங்களினாலான அழுத்தங்களும் குறைந்துள்ளதே இதற்குக் காரணம். சுவிட்சர்லாந்து உலகில் நிலையான, நவீன மற்றும் அதிக மூலதனப் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இது பொது சேவைகள் மூலம் மிகப்பெரிய காப்புறுதிப் பாதுகாப்பையும் வழங்கிய போதிலும், பொருளாதார சுதந்திரப் பட்டியல் 2008 இல் அயர்லாந்துக்குப் பிறகு ஐரோப்பாவின் 2 வது உயர்ந்த மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றது. ஒரு நபருக்கான GDP அளவில் மிகப்பெரிய மேற்கு ஐரோப்பிய பொருளாதாரங்கள் மற்றும் ஜப்பானை விடவும் உயர்ந்ததாக உள்ளது, மேலும் இதில் லக்ஸம்பர்க், நார்வே, ஈக்வடார், ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவற்றுக்கு அடுத்து 6வது இடத்தில் உள்ளது. வாங்கும் திறனின் சமநிலைக்கு ஏற்றபடி அது சரி செய்யப்படுகிறது, சுவிட்சர்லாந்து ஒரு நபருக்கான GDP மதிப்பீட்டில் உலகில் 15வது இடத்தைப் பெறுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டி அறிக்கையானது சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் தற்போது உலகின் இரண்டவது பெரிய போட்டியாளராக இருப்பாதாக கூறுகின்றது. 20 ஆம் நூற்றாண்டில், சுவிட்சர்லாந்து ஐரோப்பாவில் மிகவும் ஏற்கக்கூடிய வரம்புடன் வளமான நாடாக இருந்தது. சுவிட்சர்லாந்தில் 2005 இல் சராசரி குடும்ப வருமானம் 95,000 CHF ஆக மதிப்பிடப்பட்டது, வாங்கும் திறனின் சமநிலையில் சுமார் 81,000 USD க்கு (நவம்பர் 2008 இல்) சமமாக இருந்தது, இது கலிபோர்னியா போன்ற வளமிக்க அமெரிக்க மாகாணங்களுக்கு இணையாக இருக்கின்றது. சுவிட்சர்லாந்து பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய சுவிஸ் கம்பெனிகள், க்ளென்கோர், நெஸ்லே, நோவர்டிஸ், ஹோப்மேன் லா ரோச்சே, ABB மற்றும் அடெக்கோ ஆகியவை ஆகும். மேலும் யூபிஎஸ் ஏஜி, ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ், கிரெடிட் சூசி, சுவிஸ் ரே மற்றும் தி ஸ்வாட்ச் குரூப் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை ஆகும். சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் உலகின் அதிக வலிமையான பொருளாதாரங்களில் ஒன்று என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ரசாயனம், உடல்நலம் மற்றும் மருந்துகள் துறை, அளவிடல் கருவிகள், இசைக் கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்துறைகள் ஆகும். அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளாவன, இரசாயனங்கள் (ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளில் 34%), இயந்திரங்கள்/மின்னணு பொருட்கள் (20.9%) மற்றும் நுட்ப அளவீட்டுக் கருவிகள்/கடிகாரங்கள் (16.9%) ஆகியவை. ஏற்றுமதி செய்யப்படும் சேவைகளின் அளவு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுகளின் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. சுமார் 3.8 மில்லியன் மக்கள் சுவிட்சர்லாந்தில் பணிபுரிகின்றனர். சுவிட்சர்லாந்து, அண்டை நாடுகளைவிட அதிக நெகிழ்தன்மையுடைய வேலைவாய்ப்புச் சந்தையையும், குறைவான வேலையின்மை வீதத்தையும் கொண்டுள்ளது. ஜூன் 2000 இல் 1.7% என்ற குறைவான வேலையின்மை வீதமானது செப்டம்பர் 2004 இல் 3.9% என்ற அதிகபட்ச வீதத்திற்கு அதிகரித்தது. 2003 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கிய பொருளாதார முன்னேற்ற அணுகுமுறையும் காரணமாக, வீதம் ஏப்ரல் 2009 நிலவரப்படி தற்போது வேலையின்மை 3.4% ஆக உள்ளது. குடியேறியோரின் நிகர மக்கள்தொகை மிக அதிகம், அது 2004 இன் மக்கள்தொகையில் 0.52% ஆகும். வெளிநாட்டினர் மக்கள்தொகை 2004 இன் படி 21.8% ஆகும், இம்மதிப்பு ஆஸ்திரேலியாவின் மதிப்புக்கு இணையாக உள்ளது. பணிபுரியும் ஒரு மணி நேரத்திற்கான GDP மதிப்பில் உலகின் 17வது இடத்தில் உள்ளது, 2006 இல் இதன் மதிப்பு 27.44 சர்வேதச டாலர்களாக இருந்தது. சுவிட்சர்லாந்து, பெருகிவரும் தனியார் துறை பொருளாதாரத்தையும் மேற்கத்திய தரநிலையால் குறைந்த வரி வீதத்தையும் கொண்டிருக்கின்றது; வளர்ந்த நாடுகளின் வரிவிதிப்புகளில் மிகச்சிறிய அளவுகளில் ஒன்றே இதன் ஒட்டுமொத்த வரிவிதிப்பாகும். சுவிட்சர்லாந்து எளிதாக வணிகம் செய்ய ஏற்ற இடமாகும் ; வணிக எளிமைப் பட்டியலில் உள்ள 178 நாடுகளில் சுவிட்சர்லாந்து 16வது இடத்தைப் பெறுகின்றது. 1990களிளும் 2000களின் தொடக்கத்திலும் சுவிட்சர்லாந்து கொண்டிருந்த மெதுவான வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணக்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தது. கிரெடிட் சூசி நிறுவனத்தின் கணக்கின்படி, 37% குடும்பங்கள் மட்டுமே சொந்த வீடுகளைக் கொண்டிருக்கின்றனர், இது ஐரோப்பாவில் சொந்த வீடு கொண்டிருபோர் வீதங்களில் மிகக்குறைந்த ஒன்றாகும். 2007 இல் EU-25 குறியீட்டின் படி வீடு மற்றும் உணவுப் பொருட்கள் விலை அளவுகள் 171% மற்றும் 145% ஆக இருந்தன, ஜெர்மனியில் இந்த அளவு 113% மற்றும் 104% ஆக இருந்தன. விவசாய பாதுகாப்புக் கொள்கை—சுவிட்சர்லாந்தின் தடையற்ற வர்த்தகக் கொள்கைகளுக்கு அரிதான விதிவிலக்காக இருந்தது—இதுவே உணவுப் பொருட்களின் அதிக விலைக்கு காரணமாக இருக்கிறது. சந்தை தாராளமயமாக்கலில் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஐப் பொறுத்த வரை, சுவிட்சர்லாந்து பல EU நாடுகளை விடப் பின்தங்கியுள்ளது. எனினும், உள்நாட்டு வாங்கும் திறன் உலகத்தில் சிறந்த மதிப்புகளில் ஒன்றாக உள்ளது. விவசாயம் தவிர, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக தடைகள் குறைவாகவே உள்ளன, மேலும் சுவிட்சர்லாந்து உலகளாவிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்து ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (EFTA) உடைய உறுப்பினராக இருக்கின்றது. சுவிட்சர்லாந்தில் கல்வி என்பது மிகவும் வேறுபட்டுள்ளது, ஏனெனில் சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பு பள்ளிக்கல்வி அமைப்புக்கான அதிகாரத்தை மண்டலங்களுக்கு வழங்கியுள்ளது. அங்கு பொது மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டும் உள்ளன, இவற்றில் பல தனியார் சர்வதேசப் பள்ளிகளும் அடங்கும். அனைத்து மண்டலங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கான குறைந்தபட்ச வயது ஆறு ஆண்டுகள் ஆகும். ஆரம்பக் கல்வியானது பள்ளியைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு வரை தொடர்கிறது. வழக்கமாக, பள்ளியில் முதல் அன்னிய மொழியானது எப்போதும் பிறநாடுகளின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருப்பினும் சமீபத்தில் (2000) சில மண்டலங்களில் ஆங்கிலம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பப் பள்ளியின் முடிவில் (அல்லது உயர்நிலைப் பள்ளியின் ஆரம்பத்தில்), மாணவர்களின் திறன்களைப் பொறுத்து சில (பெரும்பாலும் மூன்று) பிரிவுகளில் பிரிக்கப்படுகின்றனர். வேகமாக கற்கும் மாணவர்களுக்கு, மேற்படிப்புகள் மற்றும் மதுரா ஆகியவற்றுக்குத் தயாராவதற்கு மேம்பட்ட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன, இருப்பினும் கல்வியை சற்று மெதுவாகப் பெற்று உட்கிரகித்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, அவர்களின் திறனுக்கு ஏற்ப கவனமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன, அவற்றில் பத்து, மண்டலங்கள் அளவில் நிர்வக்கிக்கப்படுகின்றன, பெரும்பாலும் தொழில்நுட்பம் அல்லாத பாடங்களையே அவை வழங்குகின்றன. சுவிட்சர்லாந்தில் முதல் பல்கலைக்கழகம் 1460 இல் பாசெல் நகரில் (ஒரு மருத்துவப் பேராசிரித் துறையுடன்)தொடங்கப்பட்டது, அதில் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய ரசாயனம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியைக் கொண்டிருந்தது. ஜூரிச் பல்கலைக்கழகம் சுமார் 25,000 மாணவர்களைக் கொண்டு சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. ஜூரிச்சில் உள்ள ETHZ (1855 இல் தொடங்கப்பட்டது) மற்றும் லாசென்னேவில் உள்ள EPFL (1969 இல் தொடங்கப்பட்டது, முன்னதாக லாசென்னே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவனம்) ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு அரசாங்காத்தால் நிதியளிக்கப்படுகின்றன, இவை இரண்டும் சிறந்த சர்வதேச மதிப்பைப் பெற்றுள்ளன. 2008 இல் ஷாங்காயின் உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை படி ஜூரிச்சின் ETH கல்வி நிறுவனம் "இயற்கை அறிவியல் மற்றும் கணிதம்" துறையில் 15வது தரவரிசையைப் பெற்றிருந்தது மற்றும் அதே தரவரிசையின் படி லாச்சென்னேயில் உள்ள EPFL கல்வி நிறுவனம் "பொறியியல்/தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல்கள்" துறையில் 18வது இடத்தைப் பெற்றிருந்தது. மேலும் பயன்பாட்டு அறிவியல் துறைகளுக்கான பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. சுவிட்சர்லாந்து, மூன்றாம் நிலைக் கல்வியில் ஆஸ்திரேலியாவிற்கு பிறகு அதிக வெளிநாட்டு மாணவர்கள் வீதத்தில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. சுவிஸ் விஞ்ஞானிகளுக்கு பல நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டாக இயற்பியல் துறையில் பெர்ன் நகரில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சார்புக்கொள்கையை உருவாக்கிய உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மிகச்சமீபத்தில் விளாடிமிர் ப்ரேலாக், ஹென்ரிச் ரோஹ்ரெர், ரிச்சர்டு எர்ன்ஸ்ட், எட்மண்ட் பிஷெர், ரோல்ஃப் ஜிங்கெர்னஜெல் மற்றும் குர்த் உத்ரிச் ஆகியோர் அறிவியல் துறைகளில் நோபல் பரிசுகளைப் பெற்றனர். மொத்ததில் நோபல் பரிசு பெற்றவர்கள் 113 பேர் சுவிட்சர்லாந்திற்குத் தொடர்புடையவர்கள் மேலும் அமைதிக்கான நோபல் பரிசு 9 முறை சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. துகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கான உலகின் மிகப்பெரிய ஆய்வகமான ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வகம், ஜெனீவாவில் உள்ளது. பால் ஷெர்ரெர் கல்வி நிறுவனம் என்பது மற்றொரு முக்கிய ஆராய்ச்சி மையமாகும். லைசெரிக் அமிலம் டைத்திலமைடு (LSD), ஊடுருவி சோதிக்கும் நுண்ணோக்கி (நோபல் பரிசு பெற்றது) அல்லது மிகப் பிரபலமான வெல்க்ரோ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகள் ஆகும். அகஸ்டே பிக்கார்டின் அழுத்தமேற்றப்பட்ட பலூன் மற்றும் ஜேக்கஸ் பிக்கார்ட் உலகின் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு செல்ல உதவிய நீர்முனைக் கருவி போன்ற பல தொழில்நுட்பங்களின் புதிய பகுதிகளுக்கான புத்தாய்வுப் பயணங்களை உருவாக்கின. சுவிட்சர்லாந்து விண்வெளி ஏஜென்சியான சுவிஸ் விண்வெளி அலுவலகம் பல்வேறு விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 1975 இல் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி முகாமின் 10 நிறுவனர்களில் இதுவும் ஒன்று, மேலும் இது ESA பட்ஜெட்டின் ஏழாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. தனியார் துறையில், ஸ்பேஸ்கிராஃப்ட்டின் வடிவமைப்புகளை உருவாக்கி வழங்கும் ஓயர்லிகோன் ஸ்பேஸ் அல்லது மேக்ஸான் மோட்டார்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வின்வெளித் துறையில் ஈடுபட்டு வருகின்றன. டிசம்பர் 1992 இல் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் உறுப்பினராவதற்கு எதிராக வாக்களித்தது, அதிலிருந்து சுவிட்சர்லாந்து இருமுக வாணிப ஒப்பந்தங்கள் மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான நட்புறவை நிலைநிறுத்தியும் வளர்த்தும் வருகின்றது. மார்ச் 2001 இல், பிரபல வாக்கெடுப்பில் சுவிஸ் மக்கள் EU உடன் உரிமை பெறல் பேரங்களைத் தொடங்குவதற்கு மறுத்தனர். சமீபத்திய ஆண்டுகளில், சுவிஸ் EU உடன் பல வழிகளில் அவர்களின் சர்வேதேச வர்த்தக போட்டித்திறனை அதிகரித்ததன் விளைவாக, அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்கும் விதத்தில் மாறியிருக்கின்றது. மிகச் சமீபத்தில் பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் 3% என்ற வீதத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. முழு EU உறுப்பினராவது என்பது சுவிஸ் அரசாங்கத்தின் சிலருக்கு நீண்டகால நோக்கமாக இருந்தாலும், அங்கு ஜனநாயக SVP கட்சியால் ஆதரிக்கப்படும், இதற்கு எதிரான பிரபலமான உணர்சசிமயமான கருத்து நிலவுகின்றது. மேற்கத்திய பிரெஞ்சு பேசும் மக்கள் உள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் நகர்ப் பகுதிகளில் பெரும்பாலும் EU ஆதரவுப் போக்கு உள்ளது, இருப்பினும் இந்த ஆதரவு மக்கள்தொகையில் குறிப்பிடும்படியான அளவில் இல்லை. அரசாங்கம் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலகத்தை வெளியுறவுத் தொடர்புகள் துறை மற்றும் பொருளாதாரத் தொடர்புகள் துறை ஆகியவற்றின் கீழ் உருவாக்கியுள்ளது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்தின் தனிப்படுத்தப்பட்ட நிலையின் எதிர்மறைப் பின்விளைவுகளைக் குறைக்க, பெர்ன் மற்றும் ஃப்ருஸ்ஸெல்ஷ் ஆகிய பகுதிகள் மேலும் தாராளமய வர்த்தக ஒருங்கிணைப்புக்கு என ஏழு இருமுக வாணிப ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 1999 இல் கையெழுத்தாகி 2001 இல் நடைமுறைக்கு வந்தன. இந்த முதல் இருமுக வாணிப ஒப்பந்தங்களின் தொடர்களில் மக்களின் தடையற்ற இயக்கம் பற்றிய அம்சங்களும் இருந்தன. இரண்டாம் தொடர், ஒன்பது சரத்துக்களை உள்ளடக்கி 2004 இல் கையெழுத்தாகி அப்போதே உறுதிசெய்யப்பட்டது. இரண்டாம் தொடரில் ஸ்ஹேன்ஜென் உடன்படிக்கை மற்றும் டப்ளின் மாநாடு ஆகியவை அடங்கும். அவை ஒத்துழைப்புக்கான கூடுதல் பகுதிகளைப் பற்றி விவாதிக்கின்றன. 2006 இல் EU இன் முழுமைக்குமான ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான ஒருங்கிணைப்பில், சுவிட்சர்லாந்து வறுமை மிகுந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பில்லியன் ப்ராங்க் அளவிலான ஆதரவு முதலீட்டுக்கு அனுமதியளித்தது. சமீபத்திய ஒப்புதலை ஏற்கவும், ரோமானியா மற்றும் பல்கேரியா ஆகியவற்றுக்கு ஆதரவாக 300 மில்ல்லியன் ப்ராங்க்ஸ் முதலீட்டை அனுமதிக்கவும் மேலும் பொது வாக்கெடுப்பு தேவைப்படும். சுவிஸ், வங்கியியல் அந்தரங்கத்தைக் குறைக்கவும் EU க்கு இணையாக இருக்கும்படி வரி வீதங்களை அதிகரிக்கவும் வேண்டும் என்பது போன்ற, EU மற்றும் சர்வதேச அழுத்தங்ககளுக்கு உள்ளாகியிருக்கிறது. நான்கு புதிய பகுதிகளில் ஆயத்த விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன: மின்சாரா சந்தையைத் திறத்தல், ஐரோப்பிய GNSS திட்டமான கலிலியோவில் பங்குபெறுதல், நோய் தடுப்பிற்கான ஐரோப்பிய மையத்துடன் ஒத்துழைத்தல் மற்றும் உணவுத் தயாரிப்பு மூலங்களுக்கான சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல். 27 நவம்பர் 2008 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர்கள் ஃப்ருஸ்ஸெல்ஷ் நகரத்தில் 12 டிசம்பர் 2008 இலிருந்து ஸ்சேன்ஜென் கடவுச்சீட்டில்லா பகுதிக்கான சுவிட்சர்லாந்தின் உரிமையை அறிவித்தனர். நில எல்லை சோதனைமையங்கள் சரக்குப் போக்குவரத்துக்கு மட்டுமே இருக்கும், ஆனால் அவை மக்களைக் கட்டுபடுத்தாது, இருப்பினும் நாட்டிற்குள் நுழையும் மக்களிடம், அவர்கள் ஸ்சேன்ஜென் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தால் 29 மார்ச் 2009 வரை கடவுச்சீட்டுகள் உள்ளதா என சோதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நீர் மின்சாரம் மூலம் 56% மற்றும் அணுசக்தி இலிருந்து 39% மின்சாரம், உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் 5% மின்சாரம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மின்சக்தி ஆதாரங்களால் கிடைக்கிறது, அவை ஏறத்தாழ CO அற்ற-மின்சாரம்-உருவாக்கும் நெட்வொர்க்காக உள்ளன. 18 மே 2003 இல், அணுசக்திக்கு எதிராக எடுக்கப்பட்டு மறுக்கப்பட்ட இரண்டு முன்முயற்சிகள்: "மாரட்டோரியம் பிளஸ்" , புதிய அணுசக்தி உலைகள் கட்டப்படுவதைத் தடுத்தலை நோக்கமாகக் கொண்டது (ஆதரவு 41.6%, எதிர்ப்பு 58.4%), அணுசக்தி இன்றி மின்சாரம் (ஆதரவு 33.7% மற்றும் எதிர்ப்பு 66.3%). 1990 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 54.5% சரி என்றும் 45.5% இல்லை என்றும் பெற்று, வென்ற குடிமக்களின் முனைப்பின் விளைவாக, முந்தைய புதிய அணுசக்தி உலைகள் கட்டப்படுவது பத்தாண்டுகள் தள்ளிவைக்கப்பட்டன. பெர்ன் மண்டலத்தில் புதிய அணுசக்தி உலை தற்சமயம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றலுக்கான சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகமே (SFOE), சுற்றுச்சூழல், போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் கூட்டமைப்புத் துறையின் (DETEC) ஆற்றல் வழங்கல் மற்றும் ஆற்றல் பயன்பாடு ஆகியவை தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்குமான அலுவலகமாகும். இது 2050 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேலான தேசத்தின் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க 2000-வாட் சங்கம் தொடக்க முயற்சியை ஆதரிக்கிறது. சுவிஸ் தனியார் மற்றும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சாலை அமைப்பு, சாலை சுங்கவரிகள் மற்றும் வாகன வரிகளால் நிதி பெறுகிறது. சுவிஸ் ஆட்டோபான்/ஆட்டோரூட் அமைப்பு வரிவடிவம் (டோல் ஸ்டிக்கர்) வாங்க வற்புறுத்துகிறது-அதன் விலை 40 சுவிஸ் பிராங்க்குகள்-ஒரு ஆண்டுக்கு அதன் சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் கார்கள் மற்றும் டிரக்குகளுக்கு அது பயன்படுத்தப்படுகின்றது. சுவிஸ் ஆட்டோபான்/ஆட்டோரூட் அமைப்பு மொத்தம் 1,638 கி.மீ (2000 இல்) நீளமுள்ளது, மேலும் 41,290 கி.மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது, மேலும் இது உலகின் உயர்ந்த வாகனச் சாலை அடர்த்தியுள்ள சாலை அமைப்புகளில் ஒன்றாகும். சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய சர்வேதச விமான நுழைவாயில் ஜூரிச் விமான நிலையம் ஆகும், இது 2007 இல் 20.7 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கியது. இரண்டாவது பெரிய ஜெனீவா கோயிண்ட்ரின் சர்வதேச விமான நிலையம் 10.8 மில்லியன் பயணிகளையும் மூன்றாவது பெரிய யூரோ விமான நிலையம் பேசல்-மல்ஹவுஸ்-ஃப்ரைபர்க் 4.3 மில்லியன் பயணிகளையும் கையாளுகின்றன, இரண்டு விமான நிலையங்களும் பிரான்சுடன் பகிரப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் 5,063 கி.மீ கொண்ட ரயில்வே அமைப்பு வருடந்தோறும் 350 மில்லியன்களுக்கும் மேலான பயணிகளைக் கொண்டு சேர்க்கிறது. 2007 இல் ஒவ்வொரு சுவிஸ் குடிமகனும் சராசரியாக ரயில் மூலம் 2,103 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளனர், இது அவர்களை சிறந்த ரயில் பயணிகளாக்குகின்றது. க்ரௌபண்டென் தவிர, இந்த அமைப்பு முழுவதும் கூட்டமைப்பு ரயில்வேஸ் மூலமே முக்கியமாக நிர்வகிக்கப்படுகின்றது, அங்குள்ள 366 கி.மீ குறுகிய ரயில்பாதை ராடியன் ரயில்வேஸ் மூலம் இயக்கப்படுகின்றது மேலும் சில உலக பாரம்பரிய பாதைகளும் இவற்றில் அடங்குகின்றன. ஆல்பஸ் மலை வழியாக கட்டப்படுகின்ற புதிய ரயில்வே அடித்தள சுரங்கங்கள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் வழியாகும். சுவிட்சர்லாந்து, மறுசுழற்சி மற்றும் குப்பைகூள எதிர்ப்பு விதிமுறைகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது, அது உலகின் மறுசுழற்சி செய்யும் சிறந்த நாடுகளில் ஒன்றாகும், அங்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் 66% முதல் 96% வரையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் பல இடங்களில், வீட்டுபயோகக் குப்பை அகற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குப்பை (ஆபத்தான பொருட்கள், பேட்டரிகள் போன்றவை தவிர) பைகளில் இருந்தால் அது பணம்செலுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ அல்லது அலுவலகப் பைகளிலோ இருந்தால் மட்டுமே சேகரிக்கப்படுகிறது, அது வாங்கும்போதே கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான பைகளில் கொடுக்கப்பட்டால் மட்டுமே வாங்கப்டுகின்றது. மறுசுழற்சி இலவசமானது என்பதால், இது முடிந்தவரை மறுசுழற்சிக்கு ஊக்க நிதி அளிக்கின்றது. சுவிஸ் சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அகற்றுதலக்கான கட்டணம் செலுத்தப்படாத குப்பைகூளங்களை, அவை சார்ந்த குடும்பம்/நபரைக் கண்டறிய உதவும் பழைய ரசீது போன்ற ஆதாரங்கள் பையில் உள்ளதா எனப் பார்க்க அவ்வப்போது அவற்றைத் திறக்கின்றனர். அகற்றுதலுக்கான கட்டணம் செலுத்தாமைக்கு, 200 முதல் 500 CHF வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்து, பல முக்கிய ஐரோப்பிய கலாச்சாரங்களில் கலவையைப் பெற்றுள்ளது, அவை சுவிட்சர்லாந்தின் மொழிகள் மற்றும் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை வழங்கியுள்ளன. சுவிட்சர்லாந்தின் நான்கு ஆட்சி மொழிகள்: நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மையத்தில் ஜெர்மன் (மொத்த மக்கள்தொகையில் 65.3% பேசும் மொழி, அவர்களில் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களும் அடங்குவர்; 2011 இல் சுவிஸ் குடியுரிமை கொண்டிருந்த குடிமக்கள் 73.2%); மேற்கில் பிரெஞ்சு (22.4%; 23.1%); தெற்கில் இத்தாலியன் (8.4%; 6.1%). ரோமன்ஷ், க்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் (0.5%; 0.6%) பேசப்படும் ரோமானிய மொழி, இது ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் மொழிகளுடன் தேசிய மொழியாகவும் (அரசியலமைப்பின் பிரிவு 4 இன் படி), அதிகாரிகள் ரோமன்ஸ் பேசும் மக்களிடம் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் ஆட்சி மொழியாகவும் (பிரிவு 70) கூட்டாட்சி அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் கூட்டமைப்பு சட்டங்களும் மற்ற அதிகாரப்பூர்வ சட்டங்களும் இந்த மொழியில் தீர்ப்பாணை வழங்க வேண்டியதில்லை. கூட்டமைப்பு அரசாங்கம் இந்த ஆட்சி மொழிகளில் தொடர்புகொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது, மேலும் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் ஆகியவற்றில் நிகழ்நேர மொழிபெயர்ப்பும் வழங்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் பேசப்படும் ஜெர்மன் மொழியானது பெரும்பாலும் சுவிஸ் ஜெர்மன் என்றழைக்கப்பட்ட அலீம்னிக் கிளை மொழிகள் குழு ஆகும், ஆனால் எழுத்து மொழியானது பொதுவாக சுவிஸ் தரநிலை ஜெர்மனைப் பயன்படுத்துகின்றது, இருப்பினும் பெரும்பான்மையான ரெடியோ மற்றும் TV ஒலிபரப்பு (தற்போது) சுவிஸ் ஜெர்மனிலும் உள்ளது. அதேபோன்று, பிரெஞ்சு பேசும் பகுதிகளில் உள்ள கிராமப்புறச் சமூகங்களில், "சூசி ரோமனேட்" என்று அறியப்பட்ட வௌடோயிஸ், குருயேரியன், ஜூரசியன், எம்ப்ரோ, ப்ரைபோர்ஜியோயிஸ், நியூசாடேலோயிஸ் என்று அழைக்கப்படுகின்ற ஃப்ரேங்கோ-ப்ரொவென்கல் மொழியின் சில கிளைமொழிகளும், இத்தாலியன் பேசும் இடங்களில் டைனீஸ் மொழியும் (லம்பார்ட் மொழியின் கிளைமொழி) உள்ளன. மேலும் ஆட்சி மொழிகள் (ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன்) சுவிட்சர்லாந்துக்கு வெளியில் புரிந்துகொள்ள முடியாத சொற்களைக் கடன் வாங்குகின்றன, அதாவது பிற மொழிகளிலிருந்து சொற்களையும் (பிரெஞ்சிலிருந்து பெறப்பட்ட ஜெர்மன் சொல்:"பில்லெட்டே" ), பிற மொழியில் உள்ள ஒத்த சொற்களையும் பெறுகின்றன (இத்தாலியனில் "azione" என்ற சொல் "act" ஆகப் பயன்படுத்தப்படுவதில்லை ஆனால் ஜெர்மனின் "Aktion" என்பது "discount" ஆகப் பயன்படுகின்றது). அனைத்து சுவிஸ் மக்களும் மற்ற தேசிய மொழிகளில் ஒன்றை பள்ளிகளில் கற்பது கடமையாக்கப்பட்டுள்ளது, எனவே பெரும்பாலான சுவிஸ் மக்கள் குறைந்தபட்சம் இரட்டைமொழி அறிந்தவர்களாக உள்ளனர். மக்கள்தொகையின் 22% குடியேறிய வெளிநாட்டினரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (60%) ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது EFTA நாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த வெளிநாட்டு மக்கள்தொகையில் 17.3% உள்ள மிகப்பெரிய தனிப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவாக இத்தாலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து ஜெர்மானியர்கள் (13,2%), செர்பியா மற்றும் மாண்டெனீக்ரோ (11,5%) மற்றும் போர்ச்சுகல் (11,3%) ஆகியவற்றிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் உள்ளனர். இலங்கையில் இருந்து குடியேறியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் முன்பு வந்த தமிழ் அகதிகள், இவர்கள் ஆசியாவைச் சார்ந்தவர்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். 2000களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பிரச்சாரங்களில் அந்நியர்கள் குறித்த பயம் அதிகரித்து வருவது பற்றி தெரிவித்துள்ளன. இருப்பினும், நாட்டில் வெளிநாட்டு குடிமக்களின் அதிக விகிதாசாரமும், அதேபோன்று வெளிநாட்டினர் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படுவதும் சுவிட்சர்லாந்தின் திறந்த மனமுள்ள தன்மையைக் காட்டுகின்றன. 2006 சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் இருந்தது. இது உலகில் அதிகமான ஆயுட்காலங்களீல் ஒன்றாக இருக்கின்றது. சுவிஸ் குடிமக்கள் கட்டாயமான உலகளாவிய உடல்நல-காப்பீட்டுத் திட்டத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர், அக்காப்பீடு நவீன மருத்துவ சேவைகளின் பரவலான அணுகலுக்கு உதவுகிறது. இந்த உடல்நல அமைப்பானது, மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது மிக சிறப்பாக உள்ளது, இதன் மூலம் நோயாளிகளும் அதிகமான திருப்தியடைகின்றனர். இருப்பினும், உடல்நலத்திற்காக செலவிடுதல் GDP (2003) இன் 11.5% என்ற வீதத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகமாக உள்ளது, சேவைக்கட்டணங்கள் அதிகமாக இருப்பதன் விளைவாக 1990 இலிருந்து நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுவருவது காணப்படுகிறது, மக்கள் தொகை அதிகரிப்பாலும் புதிய உடலநலம் சார்ந்த தொழில்நுட்பங்களாலும் உடல்நலச் செலவினம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உள்ளது. மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு முதல் நான்கில் மூன்று பங்கு வரை நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். கிராமப்புறம் மிகுந்த மிகப்பெரிய நாடாக இருந்த சுவிட்சர்லாந்து வெறும் 70 ஆண்டுகளில் நகர்புற நாடாக மாறியிருக்கின்றது. 1935 முதல் நகரமயமாக்கல் திட்டங்கள், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரும்பாலான சுவிஸ் நிலப்பகுதிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த தொடர் நகரமயமாக்கல், பீடபூமிப் பகுதியை மட்டுமில்லாமல் ஜூரா மற்றும் ஆல்பைன் மலையடிவாரங்களையும் பாதிக்கின்றன, மேலும் அங்கு நிலப்பயன்பாட்டைப் பற்றிய கருத்துகள் வளரத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நகர்ப்பகுதிகளின் மக்கள்தொகை வளர்ச்சியானது கிராமப்புறங்களில் உள்ளதைவிட அதிகமாக இருக்கின்றது. சுவிட்சர்லாந்து பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நகரங்கள் என்ற வாரியான நகரங்களின் அடர்ந்த அமைப்பைக் கொண்டிருக்கின்றது. பீடபூமியானது ஒரு கி.மீ க்கு 450 மக்கள் என்ற அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, மேலும் இந்நிலப்பகுதி தொடர்ச்சியான மனிதத் தலைகளுடன் காட்சியளிக்கின்றது. ஜூரிச், ஜெனீவா-லாசென்னே, பாசெல் மற்றும் பெர்ன் ஆகிய மிகப்பெரிய மாநகரங்களின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சர்வதேச ஒப்பீட்டில் இந்த நகர்ப் பகுதிகளின் முக்கியத்துமானது அவற்றில் வசிப்பவர்களின் பரிந்துரைகளை விடவும் வலிமையாக உள்ளது. மேலும் ஜூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய இரண்டு முக்கிய இடங்களும், அவர்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் கொண்டுள்ளவையாக அறியப்படுகின்றன. சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ தேசிய மதம் எதையும் கொண்டிருக்கவில்லை, இருப்பினும் பெரும்பாலான மாகாணங்கள் (ஜெனீவா மற்றும் நியூசாடெல் தவிர) அனைத்து வகையிலும் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் சுவிஸ் மாற்றியமைக்கப்பட்ட திருச்சபை உட்பட அதிகாரப்பூர்வ தேவாலயங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தேவாலயங்களுக்கும் மற்றும் சில மாகாணங்களிலுள்ள பழைய கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் யூத பிராத்தனைக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கும் சமய நிலையங்களின் அதிகாரப்பூர்வ வரிவருமானங்கள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகின்றன. கிறிஸ்தவம் சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மை மிக்க மதமாக உள்ளது, இது கத்தோலிக்கத் திருச்சபை (மக்கள்தொகையின் 41.8%) மற்றும் பல்வேறுபட்ட புரொட்டஸ்டன்ட் மதப் பிரிவுகளாகப் (35.3%) பிரிக்கப்பட்டுள்ளது. குடியேற்றத்தால், இஸ்லாமியம் (4.3%, பெரும்பான்மையாக கோசவர்ஸ் மற்றும் துர்க்குகள்) மற்றும் அதிகமான சிறுபான்மையான மதங்களான கிழக்கு மரபுவழி திருச்சபை (1.8%) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2005 யூரோபரோமீட்டர் வாக்கெடுப்பானது 48% மக்கள் இறை நம்பிக்கை உடையோராகவும், 39% "மெய்ப் பொருள் அல்லது வாழ்வின் சக்தி" கொள்கையில் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்களாகவும், 9% இறைமறுப்பாளர்களாகவும் மற்றும் 4% அறியவொணாமை வாதிகளாகவும் இருப்பதாக கண்டறிதுள்ளது. வரலாற்று அடிப்படையில், பெரும்பான்மை பற்றிய சீரற்ற கருத்துக்களுடன் கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் இடையே சமநிலையிலேயே நாடு உள்ளது. அப்பேன்சல் மண்டலம் அதிகாரப்பூர்வமாக 1957 இல் கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் (பெர்ன், ஜூரிச் மற்றும் பாசெல்) புரொட்டஸ்டன்ட் பெரும்பான்மையான மதப் பிரிவாக உள்ளது. மத்திய சுவிட்சர்லாந்தான டிசினோவில் கத்தோலிக்கம் பாரம்பரியமாக உள்ளது. 1848 இன் சுவிஸ் அரசியலமைப்பு, சோண்டர்பண்ட்ஸ்க்ரியேக்கில் உச்சம் அடைந்த கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் மண்டலங்களுக்கு எதிரான கருத்து வேறுபாடுகளின் சமீபத்திய பதிவின் அடிப்படையில், பல சமயங்களுள்ள நாடு என்ற விழிப்புணர்வை வரையறுக்கின்றது, இது கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் ஆகியவற்றுக்கிடையே அமைதியான ஒருங்கிணைந்து வாழ்வதை அனுமதிக்கின்றது. 1980 இன் முழுமையான அரசு சமயம் பிரிவினை கோரிக்கையை முன்வைத்த முன்முயற்சி 21.1% வாக்குகள் மட்டுமே ஆதரவாகப் பெற்றதால் மறுபேச்சின்றி நிராகரிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் கலாசாரம் அண்டைநாடுகளின் பாதிப்பைக் கொண்டிருக்கிறது, ஆனால் காலம் செல்லச் செல்ல தனித்தன்மையான எதனையும் சாராத சில வட்டார வேறுபாடுகளைக் கொண்டுள்ள தனித்துவமான கலாசாரம் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக, பிரெஞ்சு பேசும் பகுதியினர் பெரும்பாலும் ஓரளவு பிரெஞ்சு கலாசாரத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவாளர்களாக உள்ளனர். பொதுவாக, சுவிட்சர்லாந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பிறப்பிடமாக உள்ளதால் அம்மக்கள் நெடுங்காலமாகவே மனிதநேயமிக்கவர்களாக அறியப்படுகிறார்கள், மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையமும் அங்கு உள்ளது. சுவிஸ் ஜெர்மன் மொழி பேசும் பகுதியினர் பெரும்பாலும் ஜெர்மானியக் கலாசாரத்தின் அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றனர், இருப்பினும் ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் மக்கள் தனிப்பட்டமுறையில் சுவிஸ் மக்களாகவே அடையாளங்காணப்படுகிறார்கள், காரணம் உயர்ந்த ஜெர்மன் மற்றும் சுவிஸ் ஜெர்மன் கிளைமொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடே ஆகும். இத்தாலிய மொழி பேசும் பகுதியினர் பெரும்பாலும் இத்தாலிய கலாசாரத்தின் அடிப்படைகளைக் கொண்டுள்ளனர். ஒரு வட்டாரம், அதனுடன் மொழியைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாட்டுடன் திடமான கலாச்சார உறவைக் கொண்டிருக்கும். மொழியின் அடிப்படையில் தனிப்படுத்தப்பட்ட, கிழக்கத்திய மலைப்பகுதிகளைச் சேர்ந்த ரோமன்ஷ் கலாசாரமும் தமது அரிதான பாரம்பரிய மொழியியல் கலாச்சாரத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து சிரத்தையெடுத்து வருகிறது. பெரும்பாலான மலைப்பகுதிகள் குளிர்காலத்தில் உற்சாகமான பனிச்சறுக்கு கலாச்சாரத்தையும் கோடைக்காலத்தில் நடை (உலாவுதல்) கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன. சில பகுதிகள் ஆண்டுதோறும் கேளிக்கைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன, அந்த கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உகந்ததாகவுள்ளது, மேலும் வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலம் ஆகிய காலங்கள் சுற்றுலாப் பயணிகளின்றி அதிகபட்சம் சுவிஸ் மக்கள் மட்டுமே இருக்கின்ற பருவங்களாகும். பாரம்பரிய உழவு மற்றும் மேய்ச்சல் கலாச்சாரமும் பல பகுதிகளில் மேலோங்கியுள்ளன, நகரங்களுக்கு வெளிப்பகுதியில் சிறு பண்ணைகள் நிறைந்துள்ளன. திரைப்படத் துறையைப் பொறுத்த வரை அமெரிக்கத் தயாரிப்புகளே அதிகப் பங்களிக்கின்றன, இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் சில சுவிஸ் திரைப்படங்களும் வணிக ரீதியாக வெற்றிபெற்றன. சுவிஸ் முழுவதும் நாட்டுப்புறக்கலைகள் சில அமைப்புகளால் உயிர்ப்புடன் காக்கப்பட்டு வருகின்றன. அவை சுவிட்சர்லாந்தின் இசை, நடனம், கவிதை மற்றும் மரச்சிற்பக் கலை மற்றும் சித்திரத் தையல் கலை ஆகியவற்றில் பெரிதும் இடம்பெறுகின்றன. யாடலிங் எனப்படும் பாடும் முறைக்கு அடுத்ததாக முக்கியமாக விளங்குவது அல்ஃபோர்ன் எனப்படும் ட்ரம்பட் போன்ற மரத்தாலான இசைக்கருவியாகும், சுவிஸ் இசையின் முக்கிய அம்சமாக அக்கார்டினும் விளங்குகிறது. சுவிஸ் கூட்டமைப்பானது அது உருவாக்கப்பட்ட 1291 இலிருந்து, பெரும்பாலும் ஜெர்மன் பேசும் பகுதிகளால் உருவானதாக இருந்ததால், முந்தைய இலக்கிய வடிவங்கள் அனைத்தும் ஜெர்மன் மொழியிலேயே உருவாகி இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில், பெர்ன் மற்றும் பல இடங்களில் பிரெஞ்சு நாகரிகமான மொழியாக விளங்கியது, அப்போது பிரெஞ்சு பேசும் கூட்டணிகளும் கருப்பொருள்களும் முன்பை விட அதிகமாகக் கவனிக்கப்பட்டன. சுவிஸ் ஜெர்மன் இலக்கியங்களின் செவ்விலக்கியவாதிகளில் ஜெராமியஸ் கோத்தெல்ஃப் (1797–1854) மற்றும் காட்ஃப்ரைடு கெல்லர் (1819–1890) ஆகியோர் அடங்குவர். 20 ஆம் நூற்றாண்டின் சுவிஸ் இலக்கியத்தின் பெரும் சிறப்பானவர்கள் மேக்ஸ் ஃப்ரிஸ்ச் (1911–91) மற்றும் ஃப்ரெடெரிச் டுரென்மாட் (1921–90) ஆகியோர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது, Die Physiker (த ஃபிசிகிஸ்ட்) மற்றும் Das Versprechen () ஆகியவை அவர்களின் களஞ்சியங்களில் அடங்கும். அவை 2001 இல் ஹாலிவுட் திரைப்படமாக வெளியிடப்பட்டன. ஜீன் ஜாக்குஸ் ரோஸ்ஸியொ (1712–1778) மற்றும் ஜெர்மெய்ன் டி ஸ்டேல் (1766–1817) ஆகியோர் பிரெஞ்சு பேசும் எழுத்தாளர்களில் முக்கியமானோர். கடுமையான சூழலில் விடப்பட்ட குடியானவர்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை விளக்கும் புதினங்களை எழுதிய சார்லஸ் ஃபெர்டினண்ட் ராமுஷ் (1878–1947) மற்றும் ப்ளெயிஷ் செண்ட்ரர்ஸ் (இயற்பெயர் ப்ரெடரிக் சாசர், 1887–1961) ஆகியோர் மிகச் சமீபத்திய எழுத்தாளர்களாவர். இத்தாலிய மற்றும் ரோமன்ஷ் மொழி ஆசிரியர்களும் இலக்கியங்களில் பங்களித்துள்ளனர், எனினும் அவர்களின் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆல்ப்ஸ் பகுதியில் தனது தாத்தாவுடன் வசிக்கும் ஓர் அநாதைச் சிறுமியின் கதையான "ஹெய்டி" எனும் கதையே சுவிஸ் இலக்கியப்படைப்புகளில் பிரபலமானதாகக் கருதப்படுகிறது, மேலும் அதுவே சிறுவர்கள் எப்போதும் விரும்பிவரும் புத்தகமாகவும் சுவிட்சர்லாந்தின் ஒரு சின்னமாகவும் திகழ்கிறது. அதன் ஆசிரியர் ஜோஹன்னா ஸ்பைரி (1827–1901), அதே போன்ற கருப்பொருள்களில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பில் பத்திரிகை சுதந்திரமும் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் உரிமையும் உறுதியளிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் செய்தி முகமை (SNA), அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய செய்திகளை மூன்று தேசிய மொழிகளில் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பிக்கொண்டே உள்ளது. SNA முகமையானது பெரும்பாலும் அனைத்து சுவிஸ் ஊடகங்களுக்கும், அதுமட்டுமின்றி பல அயல்நாட்டு ஊடகச் சேவைகளுக்கும் செய்தி வழங்குகிறது. வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான செய்தித்தாள்களை அச்சிடும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்கியுள்ளது, அதன் மக்கள் தொகைக்கும் அளவுக்குமுள்ள விகிதமே இதற்குக் காரணமாகும். ஜெர்மன் மொழியில் டாஜெஸ்-அன்சிகெர் மற்றும் நியீ ஜுர்செர் ஜுடங்க் NZZ ஆகியவையும் பிரெஞ்சு மொழியில் லெ டெம்ப்ஷ் செய்தித்தாளும் மிகப் பிரபலமானவை, ஆனால் ஒவ்வொரு நகரத்திலும் ஓர் உள்ளூர் செய்தித்தாள் வெளிவந்தது. செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, கலாச்சார வேறுபாடே காரணமாகும். அச்சு ஊடகத்திற்கு மாறாக, ஒலிபரப்பு ஊடகங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாட்டிலேயே இருந்து வதுள்ளது. சமீபத்தில் SRG SSR ஐடீ சூசி எனப் பெயர் மாற்றப்பட்ட சுவிஸ் ஒலிபரப்பு கார்ப்பரேஷன், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கும் ஒலிபரப்புவதற்கும் கட்டணம் செலுத்துகிறது. SRG SSR ஸ்டுடியோக்கள் பல்வேறு மொழிப் பகுதிகளிலும் பரந்துவிரிந்துள்ளன. வானொலி நிகழ்ச்சிகள் ஆறு மைய ஸ்டுடியோக்களிலும் நான்கு வட்டார ஸ்டுடியோக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஜெனீவா, ஜூரிச் மற்றும் லுகானோ ஆகிய இடங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. விரிவான கேபிள் நெட்வொர்க்கின் சேவையால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் அண்டை நாடுகளின் நிகழ்ச்சிகளையும் காண முடிகிறது. பனிச்சறுக்கு மற்றும் மலையேறுதல் ஆகிய இரண்டு விளையாட்டுகளை சுவிஸ் மக்களும் அயல்நாட்டினரும் பெரிதும் பயிற்சி செய்கிறார்கள் உயர்ந்த மலைப்பகுதிகளின் உச்சிகள் மலையேறுபவர்களையும் உலகெங்கிலுமுள்ள பிற மக்களையும் கவர்ந்திழுக்கின்றன. ஹாட் ரூட் அல்லது பேட்ரோய்லி டெஸ் க்ளாசியர்ஸ் பந்தயங்கள் உலகப்புகழ் பெற்றவை. பிற பெரும்பாலான ஐரோப்பியர்களைப் போலவே, பெரும்பாலான சுவிஸ் மக்களும் கால்பந்து ரசிகர்களாவார்கள், தேசிய அணி அல்லது 'நாட்டி' பரவலாக ஆதரிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து ஆஸ்திரியாவுடன் இணைந்தே யூரோ 2008 கால்பந்து போட்டித் தொடரை நடத்தியது, இருப்பினும் சுவிஸ் அணி கால் இறுதிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது. மற்றோருபுறம், யூரோ பீச் சாக்கர் கோப்பை போட்டித் தொடரில், சுவிஸ் பீச் சாக்கர் அணி, 2008 ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பெற்றது, மேலும் 2005 இல் தொடரை வென்றது. பெரும்பாலான சுவிஸ் மக்கள் ஐஸ் ஹாக்கி விளையாட்டையும் விரும்புகின்றனர், மேலும் லீக் A இல் உள்ள 12 கிளப்களில் ஒன்றை ஆதரிக்கின்றனர். ஏப்ரல் 2009 இல், சுவிட்சர்லாந்து 10வது முறையாக 2009 IIHF உலக சேம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தியது. ஐஸ் ஹாக்கியில் சுவிஸ் அணியின் சமீபத்திய சாதனை 1953 இல் வெண்கலப் பதக்கத்தை வென்றதாகும். சுவிட்சர்லாந்தின் பாய்மரப்படகோட்ட அணியான அலிங்கி, 2003 இல் அமெரிக்கன் கோப்பையை வென்றது, மேலும் 2007 இல் மீண்டும் வென்றது. கர்லிங் விளையாட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான குளிர்கால விளையாட்டாகத் திகழ்கிறது. சுவிஸ் அணிகள் இந்த விளையாட்டின் 3 உலக ஆடவர் கர்லிங் சேம்பியன்ஷிப் மற்றும் 2 மகளிர் பட்டங்களையும் வென்றுள்ளன. டோமினிக் ஆண்ட்ரெஷ் தலமையிலான சுவிஸ் ஆடவர் அணி 1998 இன் நகானோ குளிர்கால ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றது. கோல்ப் விளையாட்டும் பிரபலமடைந்து வருகிறது, இப்போதே 35 கோல்ப் மைதானங்கள் உள்ளன, மேலும் பல மைதானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுக்ளாக ரொஜர் ஃபெடரர் மற்றும் மார்டினா ஹிங்கிஸ் போன்ற டென்னிஸ் வீரர்கள், பல கிரான் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் சேம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். தற்போதைய உலகின் சிறந்த ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களில் சுவிட்சர்லாந்தின் ஸ்டெபேன் லம்பையில் ஒருவர். ஆண்ட்ரெ போஸ்ஸர்ட் சுவிட்சர்லாந்தின் பிரபல வெற்றிகரமான கோல்ப் வீரராவார். சுவிட்சர்லாந்தின் வெற்றிகரமான பிற விளையாட்டுகளில், ஃபென்சிங் (மார்செல் ஃபிஸ்ஷர்), மிதிவண்டிப் போட்டி (ஃபேபியன் கேன்செல்லரா), ஒயிட் வாட்டர் நீர்ச்சறுக்கு (ரோன்னி டர்ரென்மாட்—கேனோ, மாத்தியாஸ் ராத்தன்மண்ட்—கயாக்), ஐஸ் ஹாக்கி (சுவிஸ் தேசிய லீக்), பீச் கைப்பந்து (சாஸ்சா ஹெயர், மார்க்கஸ் எஃக்கர், பால் மற்றும் மார்ட்டின் லாசிகா) மற்றும் பனிச்சறுக்கு, (பெர்னாட் ரஸ்ஸி, பிர்மின் ஜுர்பிரிங்கென், டிடியர் கூச்) ஆகியவை அடங்கும். சுவிட்சர்லாந்தில் மோட்டார் விளையாட்டுக் களங்களும் நிகழ்ச்சிகளும் 1955 1955 லீ மேன்ஸ் பேரழிவைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்டன, இதில் மலையேறுதல் போன்றவற்றுக்கு விலக்களிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தடை 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விலக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில், க்லே ராகஸோனி, ஜோ சிஃப்ஃபெர்ட் மற்றும் வெற்றிகரமான வர்ல்ட் டூரிங் கார் சேம்பியன்ஷிப் வீரர் அலெய்ன் மெனு போன்ற பல திறமையான வெற்றிகரமான பந்தய வீரர்கள் உருவானார்கள். நீல் ஜானி என்ற வீரரின் திறமையால் சுவிட்சர்லாந்து, 2007-08 இல் A1GP மோட்டார் பந்தய உலகக் கோப்பையை வென்றது. சுவிஸ் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் தாமஸ் லூதி, 2005 இல் 125cc பிரிவில், மோட்டோGP உலக சேம்பியன்ஷிப்பை வென்றார். ஃபார்முலா ஒன் மற்றும் உலகம் திரண்ட சேம்பியன்ஷிப் போன்றவற்றின், மைக்கேல் ஷூமேக்கர், நிக் ஹெய்ட்ஃபெல்ட், கிமி ரெய்க்கனென், ஃபெர்ணாண்டோ அலோன்சோ, லெவிஷ் ஹேமில்ட்டன் மற்றும் செபாஸ்டியட் லோயெப் போன்ற சிறந்த வீரர்கள் அனைவரும் சுவிட்சர்லாந்தைந் சேர்ந்தவர்கள் இதற்கு வரி தொடர்பான நோக்கங்களும் காரணம். "சுவிங்ஃகென்" எனப்படும் சுவிஸ் மல்யுத்தம் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய விளையாட்டாகும். இது கிராமப்புற மத்திய மண்டலங்களிலிருந்து வந்த பழமையான மரபாகும், இதை சிலர் தேசிய விளையாட்டாகக் கருதுகின்றனர். ஹார்னூஸ்ஸென் என்பது சுவிட்சர்லாந்தில் தோன்றிய மற்றோரு விளையாட்டாகும், அது பேஸ்பால் கோல்ப் ஆகியவற்றின் கலப்பாகும். ஸ்டெயின்ஸ்டோஸ்ஸென் என்பது கல்லெறிதல் விளையாட்டின் சுவிட்சர்லாந்து முறையிலான ஒரு வடிவமாகும், இது பெரிய கல்லை எறியும் போட்டியாகும். இவ்விளையாட்டை வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆல்ப்ஸ் பகுதி மக்களே விளையாடி வந்துள்ளனர், பாசெல் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டில் இவ்விளையாட்டுகள் நடைபெற்றதற்கான ஆவணப் பதிவுகள் உள்ளன. இது அன்ஸ்பனன்ஃபெஸ்ட் விழாவையொட்டி, முதன் முதலில் 1805 இல் நடைபெற்றதுமாகும், அதைக் குறிக்கும் விதமாக 83.5 கி.கி. எடையுள்ள கல்லுக்கு "அன்ஸ்பனன்ஸ்டெயின்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் உணவுப்பழக்கம் பல்முகத்தன்மை கொண்டது. ஃபாண்ட்யு போன்ற உணவு வகைகள், ரேக்லெட் அல்லது ரோஸ்ட்டி போன்ற உணவுகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன, ஒவ்வொரு பகுதியும் தனது வானிலை மற்றும் மொழி வேறுபாட்டைப் பொறுத்து தனக்கேயுரிய சமயல் கலையைக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள், பிற ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துபவற்றைப் போன்றனவே, அவற்றில் க்ரையர்ஸ் மற்றும் எம்மன்டல் பள்ளத்தாக்குகளில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் க்ரையர் அல்லது எம்மன்டல் போன்ற பாலாடைக்கட்டிகள் ஆகிய பொருட்கள் முக்கியமானவை. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து சுவிட்சர்லாந்தில் சாக்லேட் தயாரிப்பு நடைபெற்றுவந்தாலும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலே அது புகழ்பெற்றது, உயர் தரம் கொண்ட சாக்லேட்டுகளைத் தயாரிக்க உதவிய அரைத்தல் மற்றும் கட்டுப்படுத்திய வெப்பநிலை மாற்றம் போன்ற நவீன தொழில்நுட்பங்களே அதற்குக் காரணமாகும். 1875 இல் டேனியல் பீட்டர் பால் சாக்லேட்டைக் கண்டுபிடித்ததும் இதில் முக்கிய நிகழ்வாகும். வாலெய்ஸ், வாயூத் (லாவாக்ஸ்), ஜெனீவா மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளிலே முக்கியமாக சுவிஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது, வெள்ளை ஒயினும் தயாரிக்கப்படுகிறது. ஒயிண்திராட்சைப் பண்ணைகள் ரோமானியர்கள் காலத்திலிருந்தே சுவிட்சர்லாந்தில் உள்ளன, இருப்பினும் இன்னும் பழமையான தொடக்கத்திற்கான சான்றுகள் சில உள்ளன. மிகப் பரவலான பிரபலமான இரு வகைகள் சாஸெல்லாஸ் (வாலெய்ஸ் பகுதியில் ஃபெண்டண்ட் என அழைக்கப்படுவது) மற்றும் பைனட் நாய்ர் ஆகியவையாகும். மெர்லோட் என்பது டிசினோவில் தயாரிக்கப்படும் பிரதான வகை ஒயினாகும். வனஜா (திரைப்படம்) வனஜா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். ரஜ்னேஷ் தோமல்பள்ளி இயக்கிய இத்திரைப்படத்தில் மமதா புக்யா, ஊர்மிலா தம்மண்ணாகரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். வித்லோகா வித்லோகா (Vidloka) தமிழ் நூல்களை விற்கும் இணையத்தளமாகும். 'New Horizon Media Private Limited' என்னும் வணிக நிறுவனத்தின் அங்கமான இத்தளம் தமிழ் பதிப்பகங்கள் பலவற்றின் வெளியீடுகளை இணையத்தில் விற்கிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த கிழக்கு பதிப்பகம் வெளியிடும் நால்களும் இத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஐயா (திரைப்படம்) ஐயா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், நயன்தாரா மறும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அகரம் (திரைப்படம்) அகரம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தா, அர்ச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். விவாஹ் விவாஹ் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சூரஜ் ஆர். பார்ஜத்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாஹித் கபூர், அம்ரிதா ராவோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். காதல்படம் / குடும்பப்படம் சிரியா சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுகிறார். வரலாற்றில் சிரியா இன்றைய லெபனான், இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனையப் பகுதிகளையும் கொண்டதாகக் கருதப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்ச்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது. சிரியா ஐ.நா சபை மற்றும் அணிசேரா நாடுகள் அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. தற்போதைய சிரியாவின் அரபுலீக் அமைப்பின் அங்கத்துவம் மற்றும் இசுலாமிய கூட்டுறவு அமையத்தின் அங்கத்துவம் என்பன தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2011இல் சிரியாவின் அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலைதுாக்கியது. இது சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலியது.உலகில் அமைதியற்ற நாடுகளில் ஒன்றாகச் சிரியா மாறிவருகின்றது. ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது.அங்கே,உலகின் முதல் கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.நியோலிதிக் காலப்பகுதியில், முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. முகம்மது நபியவர்களுக்கும், சிரியாவின் மக்கள் மற்றும் கோத்திரங்களுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ஜுலை, 626இல் துாமதுல் ஜன்தல் படையெடுப்புடன் ஆரம்பித்தது.சிரயாவின் சில கோத்திரத்தினர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதுடன், மதீனா நகரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர் என்ற செய்தி ஒற்றர்களின் மூலம் கிடைக்கப்பெற்றதும் சிரியாவின் துமா பகுதியின் மீது படையெடுப்பை மேற்கொள்ளுமாறு முகம்மது நபியவர்கள் பணித்தார்கள். கி.பி.640இல் அரபு ராசிதுான் இராணுவத்தின் தளபதி காலித் இப்னு வலீத்தினால் சிரியா கைப்பற்றப்பட்டது.கி.பி. 7ஆம் நுாற்றண்டின் மத்திய பகுதியில் உமையா வம்சத்தினால் சிரியா பேரரசு ஆட்சி செய்யப்பட்டது.பேரரசின் தலைநகராக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் மாற்றப்பட்டது.பின்வந்த உமையா ஆட்சியாளர்களிர் காலத்தில் நாடு வீழ்ச்சியடைந்தது.முக்கியமாக தாத்தாரியர்களின் தாக்குதல்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்ததுடன்,ஊழல் அதிகரித்ததுடன் நாட்டில் பல இடங்களில் புரட்சிகள் வெடித்தன.750இல் உமைய வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், அப்பாசிய வம்சத்தினர் ஆட்சியை பொறுப்பெடுத்ததுடன் தலைநகர் பக்தாத்துக்கு மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டு இந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97 சதவீதம் அழிந்து போய்விட்டன. தற்கால நெருக்கடி கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் தொகுப்பு கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் () என்பது கிறிஸ்து பிறப்பு விழாவை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும். இவ்வகைப்பாடல்கள் பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கம். இவ்வகை இசை கிபி 13வது நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அன்மைய காலமாகவே கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெறவும் கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. பாரம்பரிய கெரொல் இசைகள் மத்தியக் கால ஐரோப்பிய இசை வடிவத்தைக் கொண்டிருப்பதால் மற்ற இசை வகைகளில் இருந்து வேறுபடுத்துவது இலகுவாகும். இது சாதாரணமாக ஒரு தலைமை பாடகருக்கு கீழான குழுப்பாடகர்களால் இசைக்கப்படும். கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னர் கெரொல் இசையின் புகழ் குன்றினாலும் 19 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது. பண்ணாமத்துக் கவிராயர் பண்ணாமத்துக் கவிராயர் எனப்படும் எஸ். எம். பாரூக் (சய்யத் முகமத் ஃபாரூக், பிறப்பு: சனவரி 1, 1940) இலங்கையின் ஒரு முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இலங்கையின் மலையகத்தில் மாத்தளையில் பிறந்த இவர் 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர். மறைந்த இலங்கையின் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் நடாத்திய "இன்ஸான்" பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், பைஸ் அகமத் பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும், பாலத்தீனக் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த "தாஜ்மஹால்" (நவம்பர் 5, 1975) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த "மெயில் பஸ் தம்பதி" எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள். கிறித்துமசு மரம் கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முந்தய நாட்களில் இம்மரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறித்தவர்களின் வீடுகளில் வைத்திருப்பதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம். கிறிஸ்தவத்துக்கு முந்திய ஐரோப்பிய நாகரிங்களில் தொடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிறிஸ்துமஸ் மரம், குளிர்காலங்களில் பல நாகரிங்களின் பொதுவான காட்சியாக காணப்பட்டது. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும், கனடாவிலும் கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மரம் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். பல வகையான கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கிறித்துமசு மரம் தற்போதைய நவீன யுகத்தில், மின்விளக்குகளின் வர்ண சாலத்தோடும், விலையுயர்ந்த அலங்காரப் பொருட்களோடும் காட்சியளிக்கிறது. அர்த்தத்தோடு கொண்டாடப்பட்டு வந்த பசுமை விழா, பின் ஒரு அடையாளத்துக்காக என உருமாறி, தற்போது அந்தசுத்தின் சின்னங்களாகிவிட்டன.