திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் அப்பருக்குத் திருவடி சூட்டியதும் அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 20ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருநல்லூர் உள்ளது. பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம். எனவே லிங்கத்தின் மீது சில துளைகள் உள்ளன திருவெண்டுறை(திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்) தலவரலாற்றிலும் இவ்வரலாறு கூறப்படுகிறது. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து, பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து ஒரு கோபுரம் உள்ளது. வெளிச்சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி, விநாயகர், நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் 63 நாயன்மார்கள், கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பானலிங்கம், ஜுரஹரேஸ்வரர், ஜுரஹரேஸ்வரியைக் காணலாம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, கைலாய கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்று மண்டத்தில் உமாமகேசுவரர், சங்கர நாராயணர், லிங்கோத்பவர், சுஹாசனர், நடராஜர், ரிஷபாரூடர் உள்ளிட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலவர் கல்யாணசுந்தரரேஸ்வரர் கட்டுமலை மீது, கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும், நந்தியும் உள்ளன. அருகே கணபதி உள்ளார். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். மூலவர் சன்னதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்மன் சன்னதி, தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் பள்ளியறை உள்ளது. திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். அமர்நீதி நாயனார் தமது தலமாகிய பழையாறையிலிருந்து இங்கு குடிபுகுந்து திருமடம் உருவாக்கி, அடியார்களுக்கு அமுதூட்டியும், திருவிழாச் சேவித்தும் வாழ்ந்தனர். அவரது திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின் தென்மேலைக்கரையில் சிதிலமடைந்த நிலையில் இப்போதும் உள்ளது. இதனைச் செப்பனிட்டுக் காத்துப் போற்றல் சைவர்களின் முக்கியக் கடமையாகும். இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் "கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி" "நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை " "முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு " "பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே." "பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்" "பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்" "திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்" "மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.". திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்" "புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ " "சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த " "நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே." "நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்" "சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்" "இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி" "நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.". ஆவூர் பசுபதீசுவரர் கோயில் ஆவூர் பசுபதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வசிட்டரின் சாபம் பெற்ற காமதேனு பிரமனின் அறிவுரைப்படி வழிபட்டு சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 21ஆவது சிவத்தலமாகும். பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு "கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான "பட்டி' என்ற பசு உணர்ந்தது. மேருமலையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது வாயுபகவானால் வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடகிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது. பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது பல ரிஷிகளும் தவமிருந்த தலம். காமதேனு, பிரம்மன், சப்த்ரிஷிகள், இந்திரன், சூரியன், மகாவிஷ்ணு, நவகிரகங்கள், தசரதர் போன்றோர் வழிபட்ட தலம். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஐந்தடி உயரம் கொண்டது. ஏழடி உயரத்தில் வில்லும், அம்பும் ஏந்திய நிலையில் முருகபெருமான் காணப்படுகிறார். திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று ஆவூர் பசுபதீசுவரர் கோயில் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி, மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியவையாகும். இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் "புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்" "கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்" "விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும் " "பண்ணியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே" "தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்" "ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்" "பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்" "பாவியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.". திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும். சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை ஈசனை நினைத்து தவம் இருந்தாள். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதிசொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். ஒற்றை காலை கீழும் மற்றொரு காலை ஈசன்மீதும் வைத்து இரு கரங்கலால் ஈசனை தழுவி நிற்கும் தோற்றம் மூலவராக அமைந்தது. இந்த கோயிலில் வந்து வணங்கிச் சென்றால், திருமணம் கைகூடும். பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டுள்ள இக்கோயிலின் கருவறையைச் சுற்றிலும் அருகிலுள்ள கோஷ்டத்திலும் விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலெட்சுமி, மூன்று லிங்க பானங்கள், மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. கருவறையின் வெளியே இடப்புறத்தில் லிங்கத்திருமேனியை தழுவிய அம்மன் காணப்படுகிறார். முன்மண்டபத்தில் அப்பர், ஞானசம்பந்தர், பைரவர், சந்திரன், சூரியன், நாகர்கள் உள்ளனர். பெரியநாயகி அம்மன் சன்னதி கோயிலின் இடப்புறம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்" "பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்" "மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் " "தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே." "நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன" "றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்" "வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்" "செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.". "திருச்சத்தி முற்றத்தில் சென்றெய்தித்" "திருமலையாள்" "அருச்சித்த சேவடிகள் ஆர்வமுறப்" "பணிந்தேத்தி.". "மருவாரும் குழல்மலையாள் வழிபாடு" "செய்யஅருள்" "தருவார்தம் திருச்சத்திமுற்றம்". என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பர். சக்தி சிவனை வழிபட்ட இடம் (முற்றம்) என்னும் பொருளில் இக்கோயிலின் பெயர் அமைந்ததெனலாம். பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலமாகும். பட்டீஸ்வரர் கோயிலில் கிழக்கு வாயில், தெற்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய மூன்று வாயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கிழக்கு வாயிலின் உள்ள ராஜகோபுரத்தின் வழியே வந்தால் நந்தியைக் கடந்து உள்ளே பட்டீஸ்வரர் கோயிலுக்கு நேரடியாக வரலாம். உள்ளே செல்லும்போது இடது புறம் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. தெற்கு வாயிலின் வழியே வந்தால் முதலில் கோயில் குளத்தைக் காணமுடியும். வடக்கு வாயிலின் வழியே ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால் துர்க்கையம்மன் சன்னதியைக் காணமுடியும். பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை. திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் "பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்" "கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்" "மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார் " "வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே." "மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்" "பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்" "பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்" "இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே". இக்கோயில் மற்றும் இக்கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள் 29 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது. கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில் பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை - வடதளி - பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் சுவாமி, விமலநாயகி உடனுறை தருமபுரீசுவரராகவும், பழையாறையில் சுவாமி, சோமகமலாம்பிகை உடனுறை சோமேசராகவும் காட்சி அளிக்கின்றனர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த கும்பகோணம் - ஆவூர் சாலையில் உள்ள "முழையூர்" கிராமம் வழியாக "பழையாறை - வடதளி" இத்தலத்தை அடையலாம். இக்கோயில், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது பழையாறை, வடதளி என இரு திருவூர்களாக இருக்கின்றன. மங்கையர்க்கரசியார் நாயனார் பிறந்த ஊராதலின், அவரது திருவுருவச் சிலை, இக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.) இத்தலத்தின் இறைவன் தருமபுரீசுவரர், இறைவி விமலநாயகி. திருக்கோயிலில் இவ்விரண்டு கற்சிலைகளே உள்ளன. திருக்கோயில் மேட்டின் மேல் உள்ளது. இதன் அருகில் துறையூர் சிவப்பிரகாச அடிகளின் சமாதி உள்ளது. திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் " "நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே " "அலையி னார்பொழி லாறை வடதளி " "நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே." "ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் " "வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை " "பாத னைப்பழை யாறை வடதளி " "நாத னைத்தொழ நம்வினை நாசமே வேது என்பது - வெப்பம்.". 2016இல் குடமுழுக்கு கண்ட இக்கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது. அக்கோபுரத்தினை அடுத்து வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. இந்தக் கோயிலின் சோமகமலாம்பிகை சன்னதிக்குச் செல்லும் படிக்கட்டில் தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு புறத்தில் சிற்றுவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நிற்க, அவனது தலையின் மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்கு மேல் கொண்டுவந்து வலது காதைத் தொடும் நிலையில் உள்ள காட்சி ஊர்த்துவ தாண்டவமாக வடிக்கப்பட்டுள்ளது. சிவனின் முகம் தற்பொழுது சிதைந்த நிலையில் உள்ளது . அந்த வீரன் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன. 29 ஜனவரி 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). முன் மண்டபம் அழகான வேலைப்பாடுகளைக்கொண்ட தூண்களோடு அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் வலப்புறம் வழியாக அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். கருவறையில் லிங்கத்திருமேனியாக கபர்தீஸ்வரர் உள்ளார். கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. அருகே இடப்புறம் சோமாஸ்கந்தர், நடராஜர் சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் செப்புத்திருமேனிகள் உள்ளன. ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறையின் வெளியே கோஷ்டத்தில் பிட்சாடனர், நடராஜர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர் காணப்படுகின்றனர். கருவறைக்குச் செல்லும் மண்டபத்தில் லட்சுமி சரஸ்வதி உள்ளனர். முன்மண்டபம் தொடங்கி கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பாலமுருகன், 32 வகையான லிங்க பானங்கள், நான்கு விநாயகர்கள், சந்தான ஆசாரியார், மகாவிஷ்ணு, துர்க்கை, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி, விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகக்கடவுள், கஜலட்சுமி, 22 வகையான லிங்கங்கள், தபஸ் நாச்சியார் உள்ளனர். தொடர்ந்து பள்ளியறை உள்ளது. கபர்தீஸ்வரர் சன்னதியின் வலப்புறத்தில் வெளிப்பிரகாரத்தில் பெரியநாயகி சன்னதி உள்ளது. உள்ளே இச்சன்னதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் அஷ்டபுஜமாகாளி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதி உள்ளது. கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்து வரும்போது முதலில் வெள்ளை விநாயகர் சன்னதியாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு வெள்ளை பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரில் உள்ளது. சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது. இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக இருந்ததற்குச் சான்றாக இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை ஒன்றினை திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் தற்போது வழிபாட்டில் உள்ளதைக் காணமுடியும். திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "ஓத மார்கட லின்விட முண்டவன் " "பூத நாயகன் பொற்கயி லைக்கிறை " "மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் " "பாத மேத்தப் பறையுநம் பாவமே." "இளைய காலமெம் மானை யடைகிலாத் " "துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல் " "வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக் " "களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.". திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் "விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி " "வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்" "தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர் " "பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே." "கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்" "வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்" "சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்" "விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.". சிக்குன்குனியா சிக்குன்குனியா ("Chikungunya") என்பது ஒரு தீ நுண்மத்தால் (வைரசால்) பரவும் நோய் ஆகும். இந்த நோய்க்குக் காரணமான தீ நுண்மமானது ஆல்பாத் தீ நுண்மம் வகையைச் சார்ந்தது ஆகும். இந்தத் தீ நுண்மம் "ஈடிசு இகிப்தி" ("Aedes egypti") வகை கொசுக்கள் (இலங்கைத் தமிழ்: நுளம்பு) மூலம் பரவுகின்றன. இது ஒரு உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆனால் 2005-2006 ஆண்டுகளில் ஏறத்தாழ 200 பேர் வரை ரீயூனியன் தீவில் சிக்குன்குனியா தொடர்பான சூழலில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. 2006ஆம் ஆண்டில் பல இந்திய மாநிலங்களில் இந்நோய் தொற்றியது. செப்டம்பர் 2006 நிலவரப்படி ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 12, 2006 வரை கேரளத்தில் மட்டும் 125 பேர் இந்நோய் தொடர்பாக இறந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையோர் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கேரள அரசு இதை தொற்று நோயாகவும் தமிழக அரசு இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாகவும் அறிவித்துள்ளன. 2006ஆம் ஆண்டில் இலங்கையில் 100, 000 இற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர் . இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் வாழும் வடக்குக் கிழக்கிலேயே இந்நோய்த்தாக்கம் கூடுதலாக அறியப்பட்டது பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பயணிகளினால் பரவியது யாழ்ப்பாணத்தில் 20% மானவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது இந்த தீ நுண்மம் "ஈடிஸ் அல்போபிக்டஸ் "("Aedes Albopictus") அல்லது புலிக் கொசு என்ற வகை கொசு மூலமூம் பரவும் என்று பாரிசில் உள்ள பாஸ்டர் கழகத்தில் கண்டறிந்துள்ளார்கள். இந்நோயின் பெயரான "சிக்குன் குனியா" மகொன்டெ (Makonde) மொழியில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் வளைந்து இருத்தலைக் குறிக்கின்றது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியினால் கை கால்கள் மடங்கி குனிந்த நிலையில் இருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்கானிக்கா (தன்சானியாவின் பிரதான நிலப்பகுதி) நாட்டுக்கும் மற்றும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையில் உள்ள மகொன்டெ மேட்டுநிலத்தில் 1952ஆம் ஆண்டு இந்த நோய் பரவியதைத் தொடர்ந்து மரியன் ராபின்சன் மற்றும் W.H.R.லூம்ஸ்டன் ஆகியோர் 1955ஆம் ஆண்டு இந்நோய் குறித்து முதன்முதலில் ஆராய்ந்து விளக்கினார்கள். 1955ஆம் ஆண்டு அறிக்கையின்படி சிக்குன் குனியா என்னும் சொல் மகொன்டெ மொழியின் வேர் வினைச்சொல்லான முறுக்கப்படுதல் என்னும் பொருள் தரும் "குன்குனியாலா" (kungunyala) என்பதில் இருந்து தோன்றியது, ஆராய்வின் தொடர்ச்சியில் ராபின்சன் கூனி வளைந்து இருக்கும் நிலையைக் குறிக்கின்றது எனப் பயன்படுத்தினார். இச்சொல் சுவாகிலி மொழியில் இருந்து பிறந்தது எனத் தவறான எண்ணம் நிலவுகின்றது. மிகைக் காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 39 °C, (102.2 °F) அளவு வரைக்கும் காய்ச்சல் இருக்கக்கூடும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும், ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும். சிக்குன்குனியா நோய்க்கு என்று தனிப்பட்ட முறையில் இதுவரை மருந்துகள் ஏதும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இது குறித்த தடுப்பூசிச் சோதனைகள் செய்யப்பட்டாலும், ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டதால், தற்பொழுது தடுப்பூசிகள் ஏதும் இல்லை. இந்நோயை உறுதி செய்வதற்கான இரத்தப் பரிசோதனை முறையை குலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்நோய்க்கான மருந்தாக குளோரோகுவின் (Chloroquine) அமையக்கூடும் என்று உலகெங்கும் நடக்கும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நோய் தாக்கியவர்கள் மேலும் கொசுக்கடிக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் நோய் மற்றவர்களுக்குப் பரவுவத்தைக் குறைக்கலாம். இயன்ற வரை வீட்டுக்குள்ளே கொசுவலையின் பாதுகாப்புடன் இருத்தல் நலம் மின்விசிறிகளையும் (fan) கொசுவின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாவிக்கலாம். மூட்டு வலியின் போது பிறரின் கவனிப்புடன் கூடிய ஓய்வு மிகவும் அவசியமாகும். மிதமான உடற்பயிற்சிகளும் நகர்வும் மூட்டு முடக்கத்துக்கு இதமாக இருந்தாலும் கடினமான பயிற்சிகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக் கூடும். ஹோமியோபதி மருத்துவ முறையில் சிக்குன்குனியாவுக்கு மருந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இத்தகவல் இன்னும் அறிவியல் முறைப்படி உறுதி செய்யப்படவில்லை. பச்சிலைகளை கொண்டு பண்டுவம் செய்யும் யுனானி மருத்துவ முறை மருந்துகள் மூட்டு வலியைக் குறைப்பதாக கூறப்படுகிறது என்றாலும் இது சிக்குன்குனியாவுக்கு எதிர்ப்பான மருந்தா என்று உறுதி செய்யப்படவில்லை. சிக்குன்குனியாவிற்கு பயனளிக்கும் மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளதாக தமிழக அரசின் உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆதார இணைமம் அறிவிக்கிறது . கீழ்க்கண்ட சித்த மருத்துவப் பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன: சிக்குன்குனியா தீ நுண்மங்களை கொண்டு திரியும் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களிடம் இருந்து விலகி இருப்பது இந்நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். வீட்டுக்கு அருகில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் தேங்கிக் கிடக்கும் நீரில் DEET போன்ற கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதும் நோய் பரப்பும் கொசுக்களுக்கு இடம் தராமல் தடுக்கும். கை கால்களை மறைக்கும் நீளமான உடுப்புகளை அணிவதும் கதவு, சாளரங்களை திரையிட்டு மறைப்பதும் கொசுக் கடியைக் குறைக்கும். ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்களுமே பொதுவாக திறந்தவெளிப் புறங்களில் தான் கடிக்கின்றன; இருப்பினும் ஈஜிப்டை வகைக் கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன; பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக விடியல் , மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. இவை இரவில் கடிப்பதில்லை; அதிலும் பெண் கொசுக்கள் தான் கடிக்கின்றன. தட்டான் என்றழைக்கப்படும் தும்பிகளின் இளம்புழுக்கள் (dragon-fly nymphs) இவற்றின் திறனான இயற்கை எதிரிகள்; அம்மானியம் அம்மானியம் அல்லது அம்மோன் மொழி என்பது அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இவர்களின் காராணமாகவே யோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் அதன் பெயரை பெற்றது. இம்மொழியின் படைப்புகள் வெகு சிலவே இப்போது காணப்படுகிறது. கிமு 9வது நூற்றாண்டைச் சேர்ந்த அம்மான் தேவாலய எழுத்துப் பதிப்புகளும் கிமு7-6 ஆவது நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட வெண்கள சாடியும் முக்கியமானதாகும். இவற்றை கொண்டு மொழியியளாலர்கள் இம்மொழி விவிலிய எபிரேய மொழிக்கு மிகநெருக்கமான மொழியெனவும் அரமேய மொழியின் தாக்கம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர். Sources: F. Israel in D. Cohen (ed.), "Les Langues Chamito-semitiques", Paris:CNRS 1988. பெலிஸ்த்திய மொழி பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவிது சிறுவனாக இருக்கும் போது போரில் வெற்றிக் கொண்ட கோலியாத் ஒரு பெலிஸ்தியனாவான். பெலிஸ்த்திய மொழியை வேறு மொழிகளுடன் ஒப்பிட போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை. இம்மொழி கிரேக்க மொழியுடன் தொடர்புடையதாக பெலிஸ்தரின் வரலாற்றை ஆராயுபவர்களின் கருத்தாகும். நியூ சவுத் வேல்ஸ் நியூ சவுத் வேல்ஸ் ("New South Wales", சுருக்கமாக "NSW") அவுஸ்திரேலியாவின் மக்கள் அடர்த்தி கூடிய மாநிலமாகும். நாட்டின் தென்-கிழக்கே, விக்டோறியா மாநிலத்துக்கு வடக்கே, குயீன்ஸ்லாந்து மாநிலத்திற்கு தெற்கேயும் இது அமைந்துள்ளது. இம்மாநிலம் 1788இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது அவுஸ்திரேலியாவின் அநேகமான பகுதிகளைக் கொண்டிருந்தாலும், பின்னர் தஸ்மேனியா 1825 இலும் தெற்கு அவுஸ்திரேலியா 1836 இலும், விக்டோறியா 1855 இலும் குயீன்ஸ்லாந்து 1859 இலும் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் பின்னர் 1901இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013 அக்டோபரில் பருவகாலத்துக்கு முன்னரே காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்து. ஆகத்து 17 கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் பரப்பளவுடையது. மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது. பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன. இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர். இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இத்தலத்தைப் பற்றி திருக்குடந்தைப்புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார். இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின் ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார் சாரங்க பாணி தலம் . (45) இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் - திருக்குடந்தை ஆதி கும்பேசர் செந்தாமரைக்குளம் கங்கை மகம் காவிரிக்கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் காரோணமங்கை நாயகியார் சாரங்கபாணி தலம் . (காரோணம் = மந்திர மேடை, மந்திர பீடம்,) இந்திரன் முதலான திக்கு பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்தைப் பூசித்து பேறு பெற்றுள்ளனர். இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளி இரு நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 1988க்குப் பிறகு இந்த ஐந்து தேர்களும் சேதமடைந்து ஓடாமல் இருந்தன. கடந்த 2002 முதல் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நான்கு மகாமகங்களுக்குப் பிறகு கும்பேஸ்வரர் கோயிலில் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்திய (விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட) கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்: கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில், திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததை அறியமுடிகிறது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது. கும்பகோணம் கும்பேசர் கோயிலின் புதிய சன்னதிகள், ராஜகோபுரம், கோவிந்த தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும். இக்கோயிலில் விரோதி வருடம் வைகாசி மாதம் 22ஆம் நாள், சூன் 5, 2009 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா தற்போது நடைபெறுகிறது. இதற்கான வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும். தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் ஆகியன பிற நாகர் கோயில்களாகும். அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு நாகராசன் பூசித்தால் இறைவன் நாகேசப்பெருமானாகத் திகழ்கின்றார். திருநாவுக்கரசர் இத்தலப் பெருமானைப் பாடும்போது குடந்தைக் கீழ்க்கோட்டம் என்கிறார். கும்பகோணம் பாஸ்கரசேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலமே சான்றாகும். இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை. இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்தக் கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜ சபையும் உள்ளன. நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. இங்கு சிவகாமியம்மை நடனத்திற்குத் தாளம் போடும் பாவத்திலும், மகாவிஷ்ணு குழலூதும் பாவத்திலும் உள்ளனர். இந்த கோவிலின் முன்பு சுமார் 35 அடி உயரத்தில் கொடிமரம் உள்ளது. கோவில் திருவிழாக்களின் போது இந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்குவது வழக்கமாகும். இந்நிலையில் கொடிமரத்தின் மேல்பகுதியில் சுமார் 5 அடி உயரத்திற்கு சேதமடைந்தது. கும்பகோணத்தில் இளைய மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் சேதமடைந்துள்ள கொடி மரத்தை சீரமைக்கும் பணி 6.2.2015 அன்று தொடங்கியது. கொடி மரத்தை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் சாரம் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணித் தொடங்கியுள்ளது. பணி நடைபெறுவதை அறிந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. கும்பகோணத்தில் இருந்த பாடகச்சேரி சுவாமிகள் எனப்படும் பாடகச்சேரி ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து, இக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். 1923க்குப் பின்னர் 14 செப்டம்பர் 1959இலும், தொடர்ந்து 1 பிப்ரவரி 1988இலும் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றன. 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கு 29 நவம்பர் 2015இல் நடைபெற்றது. கும்பகோணம் சோமேசர் கோயில் கும்பகோணம் சோமேசர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள். 2009இல் இக்கோயிலின் குட்முழுக்கு நடைபெற்றது. மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இக்கோயிலில் நவம்பர் 2, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன. திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் " பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாழிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும். காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும். திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம். மூகாம்பிகை அம்மனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு சந்நிதியுள்ளது. கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் மூகாம்பிகை கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ளன இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. . இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016இல் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் என்ற நூலில் மருதவன வரலாறு, கோயில் செய்திகள், ஆண்டவிநாயகர், அகத்தியர் தரிசனம், தவக்கோலம், மகாலிங்கப்பெருமான், பிரணவப்பிரகாரம், ஆயர்பாடி கிருஷ்ணன், நட்சத்திரலிங்க வழிபாடு, பட்டினத்தார், பத்ரகிரியார், பிரம்மஹத்தி தோஷ பரிகாரம், கங்கையும் காருண்யாமிர்தமும், சக்ர மகாமேரு வழிபாடு, அசுவமேதப் பிரகாரம் உள்ளிட்ட பல தலைப்புகளில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. தர்மராஜ இரதம், மாமல்லபுரம் தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் "ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம்" என அறியப்படுகின்றது. இதன் மூலம் இது அந்யந்தகாமன் என்னும் விருதுப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது தெளிவு. எனினும் இவ் விருதுப்பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்லவ மன்னர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இராஜசிம்மன் எனப்படுகின்ற இரண்டாம் நரசிம்மனே இங்குள்ள கற்றளிகளைக் கட்டுவித்தவன் எனச் சிலரும், இவை முதலாம் நரசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது என வேறு சிலரும் நிறுவ முயன்றுள்ளனர். மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலில் மூன்று தளங்கள் உண்டு. மூன்று தளங்களிலுமே உண்ணாழிகள் உள்ளன. மேற்பகுதிகள் நிறைவு பெற்ற நிலையில் இருந்தாலும், கீழ்த்தள வேலைகள் அரை குறை நிலையிலேயே காணப்படுகிறது. உண்ணாழியைச் சுற்றிய சுவர்களில் பல்வேறு கடவுட் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சுவரில் நரசிம்ம பல்லவனின் சிற்பமும் உள்ளது. மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாகும். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது. இதன் முகப்பு நான்கு தனித் தூண்களையும் அவற்றின் இரு புறமும் பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் அதிட்டானம் காணப்படவில்லை. ஆனால் உயரமாக அமைந்துள்ள மண்டபத்துக்குள் செல்வதற்காக இரண்டு பக்கமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று கருவறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குடைவரையின் நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் பெரும்பாலான பல்லவர் கோயில்களில் காணப்படுவதுபோலச் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் லிங்கம் பொருத்துவதற்கான குழி காணப்படுகின்றது. இக்கருவறைக்கு இருபுறமும் காணப்படும் கருவறைகளில், தெற்குப் பக்கத்தில் உள்ளது சிவபிரானுக்கு என அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மூன்றாவது கருவறையில் முற்றுப் பெற்ற சிற்பங்கள் எதுவும் காணப் படாவிட்டாலும், சிற்பங்கள் செதுக்கப்பட இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன. இக்கருவறை திருமாலுக்கு உரியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நடுவிலுள்ள கருவறைக்கு முன்னால், குடைவரையின் உள்ளேயே, இரண்டு சிம்மத்தூண்களுடன் கூடிய சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பக்கச் சுவரொன்றில் செதுக்கப்பட்டுள்ள மகிடாசுரமர்த்தினி அசுரனுடன் போரிடும் காட்சியைக் காட்டும் புடைப்புச் சிற்பம் இக் குடைவரைக்குரிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம், மாமல்லபுரத்திலுள்ள பரவலாக அறியப்பட்ட சிற்பங்களுள் ஒன்று. இதற்கு எதிரேயுள்ள பக்கச் சுவரில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாகாத் மோவாப் பாகாத் மோவாப் (எபிரேய மொழிஎபிரேய: மோவாபின் ஆளுனர்) என்பவர் பபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்கு வந்த ஒரு சந்ததியின் முதல் நபராவார்.(எஸ்றா 10:30,எஸ்றா 2:6) பாகாத் மோவாப் உண்மையிலேயே, இஸ்ரவேலரின் மோவாபின் ஆளுனராக இருந்தாரா, அல்லது இது வெறும் பெயர் மட்டுந்த்தானா என்பது பற்றிய தகவல்கள் கிடையாது. ஆகத்து 18 சங்கிலித்தோப்பு சங்கிலித் தோப்பு அல்லது பூதத்தம்பி வளைவு என்பது இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும். சங்கிலித் தோப்பு, யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன் கோயிலும் காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், இவ்விடத்துக்கு அருகிலேயே உள்ளது. போத்துக்கீசர் 1620 ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தபின்னர், அதன் தலைநகரத்தை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றினர். நல்லூரிலிருந்த யாழ்ப்பாணத்து அரசர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைக்கு மாறியபின்னர், சங்கிலித்தோப்புப் பகுதியில், அவர்களுடைய சமயக் கல்விக்கான நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இங்கே காணப்படும் வாயில் வளைவு, இத்தகைய கட்டிடங்களுள் ஒன்றின் பகுதியாகவே இருக்கக்கூடும். யாழ்ப்பாணத்து அரசர்களின் பரம்பரையைச் சேர்ந்த சில குடும்பங்களும் பிற்காலத்தில் இங்கே வாழ்ந்ததாகத் தெரிகிறது. தியாகராஜ பாகவதர் எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார். தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு. தியாகராஜன் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணசாமி - மாணிக்கம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல நடித்த கிருஷ்ணசாமி தன் குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்று அங்கு உய்யக்கொண்டான்திருமலை என்னும் இடத்தில் நகைவேலை செய்தார். தியாகராஜனுக்கு கோவிந்தராஜன் என்னும் தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். எப். ஜி. நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார். இவா் இசையிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கியதால் இவருக்கு புதுக்கோட்டை திவான் பகதூா் ராஜா தட்சிணாமூா்த்தி பிள்ளை அவா்கள் ""பாகவதா்"" என்ற பட்டத்தை வழங்கினாா் அதனால் தியாகராஜன் என்ற பெயருடன் இணைத்து தியாகராஜ பாகவதா் என்று மாற்றி கொண்டாா் தியாகராஜர், பிடில் வித்வான் பொன்னுவய்யங்கார், திருவையாறு ராமசாமி பத்தர் ஆகியோரிடம் இசைபயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது. 1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர். 1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது. அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன. இலட்சுமிகாந்தன் என்பவர் "சினிமா தூது" என்ற ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர் சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது. அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் எழுதி வந்தார் லட்சுமிகாந்தன். 1944 நவம்பர் 9ம் நாள் சென்னையில் இலட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். 1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன. எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில, போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 4 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர். அவரின் கர்நாடக இசைக்கு சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது. அரிதாஸ் படத்தில் வரும் பாடலான "மன்மதலீலை" என்ற பாடல் "சாருகேசி" எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் "சாருகேசி" (26 வது மூலராகம்-(மேளகர்த்தா)) இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் "சுப்புடு" "சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார். அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர். அனைவருக்கும் புரியும்படி பாடினார். அன்றைய நாட்கள் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது. அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர். தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. "திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி", முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட "அரிதாஸ்" 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி. சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார். சிந்தாமணியில் பாடிய இறுதியில் நவம்பர் 1, 1959, சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் "Vereenigde Oostindische Compagnie" அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, முறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து "ஹீரென் XVII" (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன. இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது. மேசாவின் கல்வெட்டு மேசாவின் கல்வெட்டு அல்லது மோவாப் கல்வெட்டானது கரும் பாசோல்ட் கல்லில் மோவாப் மன்னர் மோசேவினால் கிமு 9வது நூற்றாண்டில் எழுப்பபட்ட கல்வெட்டாகும். இது 1868 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 34 வரிகள் காணப்படுகின்றது இதுவே பாலஸ்தீனத்தில் கண்டுப்பிடிக்கபட்டுள்ள கல்வெட்டுகளில் செறிவானதாகும். இது எபிரேய-பொனீசிய எழுத்துக்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது மேசாவினால் அவரது இஸ்ரவேல் மீதான படையெடுப்பு வெற்றிய குறிக்கும் வகையில் எழுப்ப பட்டதாகும். கல்லானது 124 ச.மீ. உயரமும் 71 ச.மீ. அகலமும் உச்சுயில் வலைவாகவும் அமைந்துள்ளது. இது யோர்தானின் தீபன் நகரில் 1868 ஆம் ஆண்டு யேர்மனிய மறைப்பரப்பாளர் வண.பிதா எப்.ஏ.கிலென் அவர்களால் கண்டுபிடிக்கப் பட்டது. அனால் அயல் அரபியர்கள் இதனை உடைத்து விட்டார்கள் ஆனால் அதற்கு முன்னர் சார்லஸ் அதன் அச்சுப் பிரதியொன்றை எடுத்திருந்தார். பெரும்பான்மையான பகுதிகளை சேர்த்து மீண்டும் அக்கல் மீளமைக்கப் பட்டது. கல்வெட்டும் அதன் அச்சுப் பிரதியும் இப்போது பிரான்சில் உள்ள இலூவா தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது. கல்வெட்டின் உள்ளடக்கம் மோவாபிய மொழியிலிருந்து எபிரேய மொழி எழுத்துகளுக்கு எழுத்துப் பெயர்க்கப் பட்டது: பொனீசிய மொழி பொனிசீய மொழி என்பது பண்டைய எகிப்தின் கரையோர பிரதேசமான "பட்" பிரதேசத்திலும், கானான் நாட்டின் பொனிசியாவிலும் பேசப்பட்ட மொழியாகும். பொனிசீய மொழி அழிவுற்ற செமிடிக் கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். எபிரேய மொழி மற்றும் அறமைக் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். இம்மொழி இன்றைய லெபனான் கரையோர சிரியா மற்றும் வடக்கு இசுரேல் பகுதிகளில் பேசப்பட்டது. திருவைகல் வைகல்நாதர் கோயில் வைகல் மாடக்கோயில் - வைகல்நாதர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூரை அடைந்து மேலும் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தலத்து இறைவன் வைகல்நாதர், இறைவி வைகலாம்பிகை. பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).லட்சுமி தேவியார் வழிபட்ட தலம். இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன. கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் திருநல்லம் - கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. கண்டராதித்த சோழனின் மனைவியாரான செம்பியன் மாதேவியார் இக்கோவிலைக் கற்றளியாக்கினார். இக்கோயிலில் உள்ள இறைவன் உமாமகேஸ்வரர், இறைவி தேகசௌந்தரி. இறைவ, இறைவியர் செப்புச் சிலைகள் 9 அடி உயரமுடையவையென்பது குறிப்பிடத்தக்கதாகும். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் ஷண்முகர் சன்னதியும், இடப்புறம் கணபதி சன்னதியும் உள்ளன. முன் மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இம்மண்டப மேற்கூரையில் வலப்புறத்திலும், இடப்புறத்திலும், நடுவிலும் புகழ்பெற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகள், கோயிலில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அந்த ஓவியங்களில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன.ராஜகோபுரத்தின் வலப்புறம் மூத்த விநாயகர் உள்ளார். கோயிலின் அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மண்டபத்தில் வலப்புறம் பிரம்மலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். இடப்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. அருகே நவக்கிரகம் பூசித்த லிங்கம் உள்ளது. மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. அடுத்து பைரவர், துர்க்கை, சூரியன் உள்ளனர். அடுத்து காணப்படும் மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் இடப்புறத்தில் விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மூன்று லிங்கங்கள், பைரவர், அக்னீஸ்வரர், சனத்குமாரலிங்கம், சம்பகாரண்யேஸ்வரர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில், கருவறைக்கு வெளிப்புறம் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆனையுரித்தேவர், லிங்கத்திற்கு பூசை செய்தல், இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறைக்கு மேலுள்ள விமானம் சற்றே பெரிய அளவில் அமைந்துள்ளது. முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள். பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரசமரம் இருந்தது. புள்ளினங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்மதீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வ்ணங்கவேண்டிய தலம் இதுவென உணர்ந்த்தாள் பூமாதேவி. தேவசிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில், குருவாரத்தில் ரோகிணியும், பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி, நாள்தோறும் தொழுது வரலானாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்கலையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணிக்க அதன்படி உருவானதே இங்குள்ள பூமிதீர்த்தம். உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடைகள் நீங்க இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத் துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர் அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின் குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி சந்நிதி கொண்டு காணப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று. ஆறடி உயரத்தில் கம்பீரமாக காணப்படும் இந்த மூர்த்தம் அந்தக்கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது. பூமாதேவி பூஜித்து பேறு பெற்ற தலம் திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில் திருக்கோழம்பம் - திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம். (ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்) இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல மூர்த்தி பசுவின் கால் குளம்பு இடறியபோது வெளிப்பட்டார் என்பது வரலாறு. சந்தன் என்பான் இந்திர சாபத்தினால் குயில் உரு அடைந்து எங்கும் பறந்து திரிய, இவ்விடம் வந்து பூசித்த போது சுய உருவம் அடைந்தான் இக்கோயிலில் உள்ள இறைவன் கோழம்பநாதர், இறைவி சௌந்தரநாயகி. நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கோயிலின் இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். எதிரே நந்தி, பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் பைரவர், சூரியன் உள்ளனர்.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் கோஷ்ட விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சுப்ரமணியர், சோழலிங்கம், வீரலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர். இது அம்பிகை சிவபெருமானை வழிபட்ட தலம். அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் தாவரவியல் தாவரவியல் ("Botany") என்பது தாவர அறிவியல் அல்லது தாவர உயிரியல் என்று அழைக்கப்படுகிறது. இது தாவரங்களின் வாழ்க்கையை பற்றி படிக்கக் கூடிய அறிவியலாகும்.இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் தாவரவியலாளர் அல்லது தாவர அறிவியலார் என்று அழைக்கப்படுகின்றனர்.பூஞ்சைகளைப் பற்றி படிக்கக்கூடிய பூசணவியல் மற்றும் பாசிகளை பற்றி படிக்கும் துறையான பாசியியல் ஆகிய இரண்டு துறைகளும் பாரம்பரியமாக தாவரவியலில் உள்ளடங்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி தோராயமாக 410,000 நிலவாழ் தாவரங்களையும் 391,000 (369,000 பூக்கும் தாவரங்கள் உள்ளடக்கிய) கடத்தும் இழையங்கள் கொண்ட தாவரங்களையும், 20,000 பாசியினத் தாவரங்களையும் தாவரவியலாளர்கள் கண்டாய்ந்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனித இனம் தாவர இனங்களை மூலிகைகளாக பயன்படுத்தி வந்திருக்கிறது. பின்னர் சமையலுக்காக, மருத்துவத்திற்காக பயன்படுத்தும் தாவரங்களையும், நச்சுத் தாவரங்களையும் வகைப்படுத்தி அறிந்திருந்தனர். இது தாவரவியலை அறிவியலின் பழமையான துறையாக விளங்கச்செய்கிறது. தாவரங்களின் மருத்துவ இயல்பு மற்றும் பயன்களைப் பற்றி அறியும் துறையான மூலிகையியலில் இருந்து தாவரவியல் தோன்றியதாக அறியப்படுகிறது . ஹோலோசீன் காலத்தின் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆரம்பகாலத் தாவரவியல் பற்றிய அறிவு இருந்ததாக பல ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 18 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் அறியப்படாத தாவரங்களை வகைப்படுத்தப்பட்ட தாவரங்களுடன் இருகுழுக்களாக்கி அறிதல் (dichotomous key) மூலம் இனங்கண்டறிந்து அவற்றின் பண்புகள் ஒப்பிடப்பட்டு (எ.கா. குடும்பம், பேரினம், மற்றும் இனங்கள்) வரிசைப்படுத்தப்பட்டது .18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனி ஆதிக்க நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவிற்கு புதிய தாவரங்கள் ஆய்வுக்காக கொண்டவரப்பட்டன.1753 ல் ஸ்வீடன் தாலரவியலார் கரோலஸ் லின்னேயஸ் சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலினை வெளியிட்டார். அதில் தாவரங்களை இருசொற்களாக பெயரிட்டு அழைக்கும் முறை அல்லது இருசொல் பெயரிடுமுறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் அழைக்கப்படும் இருசொல்லில் முதற்சொல் தாவரத்தின் பேரினப் பெயரையும் இரண்டாவது சொல் சிற்றினப் பெயரையும் குறிக்கிறது லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன: திணைகள் (இராச்சியங்கள்), "பிளாண்டே" (plantae - தாவரங்கள்), "அனிமேலியா" (animalia - விலங்குகள்) என "இரண்டாகப்" பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன. கிரிகர் மெண்டலின் (1822-1884) மரபு வழி பாரம்பரியம் குறித்த மரபியல்-நிறமூர்த்த கோட்பாட்டிலிருந்து (gene-chromosome theory) வெயிஸ்மேன் (1834-1914) என்பார் பாலணுக்கள் (gemates) மூலமே பாரம்பரியம் கடத்தப்படுவதை உறுதி செய்தார். மற்ற உடல் அணுக்கள் பாரம்பரியத்தைக் கடத்துவதில்லை என்பதையும் கண்டிறிந்தார் . கேத்தரைன் இசாவ் (1898-1997)என்பாரின் தாவர உள்ளமைப்பியல் குறித்த ஆய்வுகள் நவீன தாவரவிலுக்கு அடித்தளமிட்டன. இவருடைய தாவர உள்ளமைப்பியல் மற்றும் விதைத்தாவரங்களின் உள்ளமைப்பியல் பற்றிய புத்தகங்கள் அரை நூற்றாண்கடுளாக உயிரி கட்டமைப்பியலில் துறையில் முக்கியப் பங்காற்றுகின்றன. விலங்குகள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான வாழ்வியல் தேவையான குறிப்பிடத்தக்க அளவு உயிர்வளி மற்றும் உணவு ஆகியவை தாவரங்களின் மூலமே கிடைப்பதால் தாவரங்களைப் பற்றி அறிவது அவசியமாகிறது. தாவரங்கள், பாசிகள், நீலப்பசும் நுண்ணுயிரி (சயனோ பாக்டீரியா) ஆகியன ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய ஒளி ஆற்றலின் உதவியால் நீர் மற்றும் கரியமில வாயுவைகை் கொண்டு சர்க்கரையை (ஸ்டார்ச் அல்லது மாச்சத்து தரசம்) உற்பத்தி செய்கின்றன.. கிட்டத்தட்ட மனிதன் உண்ணும் அனைத்து பிரதான உணவுகள் நேரடியாக முதன்மை உற்பத்தியாளர்களான தாவரங்கள் மூலம் அல்லது மறைமுகமாக அவற்றை சாப்பிடும் விலங்குகளிலிருந்து வரும்.பெரும்பாலும் தாவரங்கள் மற்றும் ஒளிச்சேர்க்கை செய்யும் நுண்ணுயிரிகளே உணவுச் சங்கிலிகளின் அடிப்படையாக அமைகின்றன.ஏனெனில் இவைகளே சூரிய ஒளி, மண் மற்றும் வளிமண்டலத்தில் இருக்கும் நுண்சத்துக்களை விலங்குகள் உண்ணக்கூடிய வகையில் மாற்றித்தருகின்றன. இததனால் சுற்றுச்சூழலியலாளார்கள் இதனை முதலாவது உணவு மட்டம் என அழைகின்றனர் . சோளம், அரிசி, கோதுமை மற்றும் மற்றப் புல்லினத் தாவரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தானியங்கள், வாழை வகைகள் பருத்தி முதலான நூலிழை போன்றவை காட்டு மரபுவழித் தாவரங்களாக இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ரீதியாக தேர்வு செய்யப்பட்டு மிகவும் விரும்பத்தக்க பண்புகள் கொண்ட தாவரங்களைக் கொண்ட தற்போதைய நவீன வேளாண்மைப் பயிர்களாகத் திகழ்கின்றன. தாவர உயிர் வேதியியல் என்பது தாவரங்களின் வேதியியல் செயல்முறைகளைப் பற்றிய ஆய்வு ஆகும். முதன்மை வளர்சிதை மாற்றங்களான, ஒளிச்சேர்க்கை கால்வின் சுழற்சி மற்றும் கிரேசுலேசன் அமில வளர்சிதைமாற்றம் ஆகியவை இந்த செயல்முறைகளில் அடங்கியுள்ளது.செல்லுலோஸ் மற்றும் லிக்னைன் போன்ற சிறப்புப் பொருட்கள் தாவர உடல்களை கட்டமைக்கின்றன. ரெசின்கள் (குங்கிலியம்) மற்றும் வாசனை கலவைகள் போன்ற இரண்டாம் நிலை பொருட்கள் தாவர கட்டமைப்பில் காணப்படுகிறது. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகும் வேதிப்பொருட்களைப் பற்றி பயிலும் தாவர வேதியியல் என்பது தாவர உயிர்வேதியிலின் ஒரு பிரிவாகும். இவற்றின் கூட்டுப்பொருட்கள் சில நச்சுத்தன்மை வாய்ந்தது. எமுலொக்கு என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் காரப்போலி (அல்கலாய்டு) கொனீன் போன்றவையும் இதில் அடங்கும்.அது போல அத்தியாவசிய எண்ணெய்கள் புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் போன்றவை நறுமணப் பொருட்களாகவும், சில சுவைமணம் (flavouring) மற்றும் மசாலாவாகவும் (spices) பயன்படுத்தப்படுகின்றன. தாவரச் சூழலியல் என்பது தாவரங்களின் வாழ்விடங்களுக்கும் அவற்றின் சூழ்நிலையியல் வாழ்க்கைச் சுழற்சிக்கும் இடையே உள்ள செயல்பாட்டு உறவுகளின் அறிவியல் ஆகும். தாவர சூழலியலாளர்கள் உள்ளூர் மற்றும் பிராந்திய தாவரங்களின் பல்லுயிர்ம பரவல், மரபியல் வேறுபாடு மற்றும் சூழலுக்கேற்ப தாவரங்களின் தகவமைப்பு மற்றும் பிற இனங்களுடனான தாவரங்களின் போட்டி அல்லது பரஸ்பர உறவுகளைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.சில சூழலியல் வல்லுநர்கள், மக்கள் தாவரத் தொடர்பியலாளர்கள் மூலம் உள்நாட்டு அனுபவமிக்க மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நம்பியிருக்கிறார்கள். தாவரங்களின் பசுங்கனிகத்திற்கும் சயனோபாக்டீரியாவிற்கும் இடையில் உயிர்வேதியியல், கட்டமைப்பு மற்றும் மரபணு ஒற்றுமைகள் உள்ளன.ஒரு அடிப்படை முழுக்கரு தாவர உயிரணு மற்றும் சயனோபாக்டீரியா இடையே ஒரு பண்டைய இணைவாழ்வு உறவு இருந்ததாக கருதப்படுகிறது. தாவரங்கள் செயலற்றவை அல்ல. அவை ஒளி, தொடுதல் மற்றும் காயம் போன்ற வெளிப்புற சமிக்ஞைகளுக்கு தூண்டு காரணிகளை நோக்கிச் செல்லல், வளர்தல் அல்லது காரணியை விட்டு விலகிச் செல்லல் மூலம் பதிலளிக்கின்றன. தொடு உணர்திறன் பற்றிய உறுதியான ஆதாரம் தொட்டாற் சிணுங்கி (Mimosa pudica) மற்றும் வீனஸ் பொறிச் செடி(பூச்சி உண்ணும் செடி) தாவரத்திலிருந்து கிடைக்கின்றன . 19 ம் நூற்றாண்டின் இறுதியில் டார்வின் தாவரத் தளிர்களின் (shoot) ஒளிச் சார்பு இயக்கம் மற்றும் வேர்களின் ஏற்படும் புவியீர்ப்பு சார்பு இயக்கங்களின் மூலம் தாவர வளர்ச்சியானது தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது தாவர வளரூக்கிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்த வளரூக்கிகள் முளைவேரின் நுனியில் கீழ்நிலை விலங்குகளின் மூளையைப் போல் செயல்பட்டு பல்வேறு இயக்கங்களை மேற்கொள்கின்றன . அதே காலகட்டத்தில் டச்சு தாவரவியலார் ஃப்ரிட்ஸ் வண்ட் தாவர வளர்ச்சியில் ஆக்ஸின்களின் பங்களிப்பைக் கோடிட்டு காட்டினார். விலங்குகளில் இருப்பதுபோல் வளரூக்கிகளைச் சுரக்கும் சுரப்பிகள் தாவரங்களில் இருப்பதில்லை. தாவர வளரூக்கிகள், தாவர வளர்ச்சியை நெறிப்படுத்துகின்றன. தாவர உடற்கூற்றியல் தாவர உயிரணுக்கள் மற்றும் இழையங்களின் கட்டமைப்பை ஆய்வு செய்கிறது, அதேசமயத்தில் தாவரப் புற அமைப்பியல் அவற்றின் வெளிப்புற வடிவத்தை ஆய்வு செய்கிறது. அனைத்து தாவரங்களும் டி.என்.ஏ பொதிந்துள்ள உட் கருக்கள் கொண்ட பலகல உயிரினங்களாகும் . தாவர உயிரணுக்களின் புறஅடுக்கானது பல்கூட்டுச்சர்க்கரை (Polysaccharide) செலுலோசு பெக்டின் போன்ற பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது விலங்கு உயிரணுக்கள் மற்றும் பூஞ்சை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.மேலும் விலங்கு உயிரணுக்களில் இல்லாத பெரிய காற்றறைகளும் ஒளிச்சேர்க்கைக்குக் காரணமான பச்சைய நிறமி கொண்ட உயிரணுக்களும் தாவரங்களில் காணப்படுகிறது. அமைப்பு தாவரவியல் என்பது உயிரியலின் ஒரு பகுதியாகும், இது தாவரங்களின் பரவல் மற்றும் பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் உறவுகள் குறிப்பாக அவற்றின் பரிணாம வரலாறு பற்றியது.உயிரியல் வகைப்பாடு, அறிவியல் வகைபிரித்தல் மற்றும் கணப்பிறப்பு (phylogenetic) ஆகியவை அமைப்பு தாவரவியலில் அடங்குகிறது அல்லது தொடர்புடையதாக இருக்கிறது . உயிரியல் வகைப்பாடு என்பது அறிவியல் வகைப்பாட்டின் ஒரு வடிவமாகும். நவீன வகைபிரித்தல் உடல் இயல்புகளின் அடிப்படையில் சிற்றினங்களை வகைப்படுத்திய கார்ல் லின்னேயஸின் ஆய்வுகளில் வேரூன்றியுள்ளது. ரைட்லி ரைட்லி ("Writely") இணையமூடான சோதனையிலிருக்கும் ஆவணங்களை உருவாக்கி பகிர்வதற்கான ஓர் கூகிளின் இணையம் சார்ந்த மென்பொருளாகும் (2006 இதை உருவாக்கிய் நிறுவனத்தை கூகிள் உள்வாங்கிக் கொண்டது). இதில் பலரும் சேர்ந்து ஆவணங்களை அணுகுவதற்கான உரித்துடன் சேர்ந்து எழுத வியலும். இது பார்பதே கிடைக்கும் பயனர் இடைமுகத்தை உலாவியூடாக வழங்கி வருகின்றது. தட்டச்சுப் பலகைக் குறுக்கு வழிகள், மெனியூ, டயலொக் பாக்ஸ் போன்ற வரைகலை இடைமுகங்களை மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் ஓப்பிண் ஆபிஸ் போன்ற பதிப்புக்களைப் போன்று வழங்கி வருகின்றது. மொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும். இது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது. இது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும். ரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது. மொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லாவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும். இது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது. இது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும். ரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது. மார்ச் 9 கூகிள் நிறுவனம் "ரைட்லியை உள்வாங்கியது. அச்சமயம் அதில் ஆக 4 பேர் மாத்திரமேயிருந்தனர். ரைட்லி ஆகஸ்டு 18, 2006 முதல் மீண்டும் அங்கத்துவர்களை அநுமதிக்கின்றது. ரைட்லி"' கணக்கொன்றை வைத்திருப்பவர் ஆவனம் ஒன்றைக் கூட்டு -முயற்சி மூலம் ஆக்க முடியும். ரைட்லி தற்சமயம் மைக்ரோசாப்ட்.நெட் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இது லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் கூகிள் ஒத்தியங்காது எனக் கருதப் படுகின்றது. இது மொனோ திட்டத்துடன் கூகிளின் ஆதரவுடன் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அமர்னா நிருபங்கள் அமர்னா நிருபங்கள், என்பது எகிப்தின் ஆடிசியாளர்களுக்கும் கானான் மற்றும் அனுர்ருவில் இருந்த பிரதிந்திகளுக்குமிடையான தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இவை அமர்னா என்ற எகிப்து நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இது பண்டைய எகிப்து இராச்சியத்தில், கிமு.1369-1353 காலப்பகுதியில், புதிய இராச்சியம் என அழைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகருக்கு இன்று வழங்கும் பெயராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது அக்காத் மொழியில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கடிதங்கள் cuneiform எழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். எமில் சேசியண்ட் என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. 202 அல்லது 203 பேர்லினிலும்,4950 எகிப்திலும் 7 பிரான்சிலும்,3 மொஸ்கோவிலும் 1 அமெரிக்காவிலும் இருக்கின்றன. 300 கடிதங்கள் அரசியர் தொடர்பாடல் கடிதங்களாகும் ஏனையவை கல்வி சார் கடிதங்களும் பிறவுமாகும். இவை எகிப்து அக்காலத்தில் பபிலோனியா,அசிரியா, மித்தானி, அட்டி, சிறியா, பாலஸ்தீனம், சைப்பிரசு போன்ற நாடுகளுடனும் கானானில் இருந்த பிரதிநிதிகளோடு கொண்டிருந்த தொடர்புகளை நன்கு விளக்குகிறது. அக்காலப் பகுதியின் நிகழ்வுகளைக் காலவோட்டத்தின் படி ஒழுங்குப் படுத்த இவை முக்கியமாகும். வில்லியம் எல்.மொரான் அமர்னா கடிதங்களின் உள்ளடக்கத்தை கொண்டு ஊகித்தறிந்த காலவோட்டத்தின் நிகழ்வுகள்: நீண்ட ஆய்வுகளின் பிறகு இன்னமும் அமர்னா கடிதங்களில் உள்ள நிகழ்வுகளின் காலவோட்டம் பல சிக்கல்களை கொண்டுள்ளது. சில நிகழ்வுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆதாரங்களின் படி முதாலாவது களிமண் பலகை மன்னன் ஆட்சி பீடமேறிய 30 வருடத்தவையாகும். கடைசி பலகை எழுதப்பட்டது துட்டன்காமுன் மன்னன் ஆட்சி பீடமேறிய முதலாவது வருடமாகும் என்பது பொதுவான கணிப்பாகும். ஆகத்து 19 குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில் திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37ஆவது சிவத்தலமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்கு குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். இடப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னதி, சபாநாயகர் சன்னதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதி காணப்படுகிறது. தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று. திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம் இத்திருத்தலத்தின் மகா கும்பாபிஷேகம் 14.07.2008 திங்கட்கிழமையன்று நடைபெற்றது. தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 38ஆவது சிவத்தலமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை வழிபடும் போது அதையறியாத மன்னன் வானவெளியில் செலுத்திய தேர் அழுந்திய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இக்கோயிலில் உள்ள இறைவன் வேதபுரீஸ்வரர்,இறைவி சௌந்தரநாயகி. தேரழுந்தூர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். தமிழ்ச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் வாழ்ந்த தலம். நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். கோயிலின் வலப்புறம் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் திருச்சுற்றில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன், நவக்கிரகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் துர்க்கா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர், கைலாசநாதர், பாபஹரேஸ்வரர் காணப்படுகின்றனர். மூலவர் சன்னதியின் வெளியில் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும அருகில் வலஞ்சுழி விநாயகர் சன்னதியும் உள்ளன.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. பனம் பழம் பனம் பழம் என்பது "பனை" மரத்தின் பழம் ஆகும். 15 சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும். ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது. இது "பனங்களி" எனப்படுகின்றது. ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள். இக்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக் களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெயிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம். இக் களியை அரிசி மாவுடன் கலந்து, சீனியும் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது. இந்த பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள். நுங்கைச் சுற்றி இருக்கும் பாடை என்னும் மேல் தோலானது வயிற்றுக்கடுப்புக்கு நல்லது. ஆகவே அந்தப் பாடையுடன் சிலர் நுங்கை சேர்த்துச் சாப்பிடுவர். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, இது ஒரு அருமருந்து எனப்படுகிறது. கண்ணீல் தூசி விழுந்தாலோ சூட்டால் கண் எரிச்சலடைந்தாலோ நுங்கின் நீரை நேரடியாகக் கண்களில் உடைத்து ஊற்றுவது வழக்கம். தமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்பது சிறப்பிடம் பெற்றுள்ள ஒரு பெயர். இவர் பாடியதாகக் கூறும் பல பாடல்களும், இவர் தொடர்பான பல கதைகளும் உள்ளன. இதுவும் அவ்வாறான ஒரு கதை: புகழ் பெற்ற வாள்ளலான பாரி பறம்பு மலையின் வேந்தன். மூவேந்தர்களான சேர, சோழ பாண்டியர்கள் பாரியுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று அவன் நாட்டையும் கவர்ந்து கொண்டனர். பாரியின் பெண் மக்கள் இருவரும் அனாதைகளாகித் துயருற்றனர். அவர்களுக்கு மணம் முடித்து வைக்க ஔவையார் முன்வந்து திருக்கோவலூர் மலையமானுக்கு அவர்களைத் திருமணம் செய்ய ஒழுங்கு செய்தார். திருமணத்துக்காக மூவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டார்கள். அது பனம்பழக் காலமல்ல. கேட்டதைக் கொடுக்காவிட்டால் பிரச்சினை வரக்கூடுமென உணர்ந்த ஔவையார். வெளியே கிடந்த பனை மரத் துண்டம் ஒன்றைப் பார்த்து, என்ற பாடலைப் பாடவே பனந்துண்டம் முளைத்து வளர்ந்து பழம் ஈந்ததாம். யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலத்திலே மேல்நாட்டு மோகம் அதிகரித்து உள்ளூர் உற்பத்திகள் நலிவடைந்து, மரபுவழிப் பழக்க வழக்கங்களும் மதிப்புக் குறைவானவையாகக் கருதப்பட்டன. அக்காலத்தில் பனையின் உற்பத்திகளைப் பிரபலப் படுத்துவதற்காக அவர் பாடிய பின்வரும் பாடலிலே மேற்காட்டிய ஔவையாரின் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார். பனங்கிழங்கு பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது. பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர். நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார். வலம்புரி ஒலித்தது! என்ற 225 ஆவது புறநானூற்றுப் பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் சோழ மன்னன் நலங்கிள்ளியின் படையின் சிறப்பை பாராட்டுகிறார். அதில் என்று குறிப்பிடுகிறார். முன்னே செல்லும் படையினர் வழியில் பனைமரங்களைக் கடக்கும்பொழுது பனை நுங்கின் இனிமை கொண்ட நீரை உண்ணுவர்; இடைப்பகுதியில் உள்ளோர் மரங்களைக் கடக்கும்பொழுது பனம்பழத்தின் இனிய கனிப்பகுதியை உண்ணுவர். படையின் இறுதியில் செல்பவர் "பிசிரொடு சுடுகிழங்கு" (தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கை) உண்ணுவர். இளநுங்கு, அது பழுத்து பனம்பழம், பழத்தின் கொட்டையில் இருந்து விளைவித்த பனங்கிழங்கு யாவையும் வெவ்வேறு காலங்களில் விளைபவை. அவ்வாறு காலங்கள் கடந்து கடக்கும் பெரும்படையை உடையவன் சோழன் நலங்கிள்ளி எனப் பாடுகிறார் புலவர். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ("East India Company") ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் ஜான் நிறுவனம் ("John Company") எனவும் அறியப்பட்டது. துவக்கத்தில் இதன் சாற்றுரையில் "கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, வெடியுப்பு, தேயிலை, அபினி ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது. இது1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு விரிவடைய அடித்தளம் வகுத்தது. ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், 1858 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்நிறுவனம், பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல் வங்காளத்தில் சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றை நிறுவனம் முகலாயப் பேரரசிடமிருந்து பெற்றுக்கொண்டது. இது இந்திய வணிகத்தில் நிறுவனத்துக்கு தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல் பிளாசி போரில் சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்திய நிறுவத்தை ஒரு வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில் பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் துரத்தப்பட்டனர். பெரிய பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும் நிறுவனம் ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே தென்னாபிரிக்காவின் டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர் சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. இந்நிறுவனம் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது. இந்நிறுவனம் "கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், லண்டன் நிறுவனங்களின் நிறுவனம்" என்னும் பொருளில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்களுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இந்நிறுவனமத்தில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானிய நிறுவனத்தால் அசைக்க இயலாத நிலை இருந்தது. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், நிறுவனக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நிறுவனம் பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும் நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால் இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர்சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன. இந்துப் பெருங்கடல் பகுதியில் நிறுவனம் வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், நிறுவனம் போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், நிறுவனத்துக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த இந்நிறுவனம், பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசை நிறுவனம் கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ ("Sir Thomas Roe") என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாக நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார். இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ் கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில் நிறுவனம் கம்பெனி ஆட்சியை இந்தியாவில் நிறுவி "ஆலைகள்" (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும். நிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் ("indigo"), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல் வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக்காவல்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது. 1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நாணங்களை வெளியிடவும், கோட்டைகள், படைகள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும் பிற வல்லரசுகளாலும் பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச் சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு இந்தியாவில் கம்பெனி ஆட்சி 1857 முதல் நிலைப்படுத்தப்பட்டது. ஆர்க்வியூ ஆர்க்வியூ (ஆங்கிலம்: "ArcView") சூழலை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் ஓர் புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாகும். இதன் முழுப் பெயரானது ஆர்க்வியூ ஜிஐஎஸ் ("ArcView GIS"). பெரும்பாலானவர்களால் ஆர்க்ஜிஐஎஸ் ("ArcGIS") மென்பொருளால் மாற்றீடு செய்ததாகக் கருதினாலும் இன்றளவும் இம்மென்பொருள் இதை ஆக்கிய நிறுவனத்தால் தொழில் நுட்ப வசதிகள் அளிக்கப் பட்டே வருகின்றது. சூழலை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் ஏனைய மென்பொருடகளினால் உருவாக்கப் பட்டதைப் பார்ப்பதற்கோ இம்மென்பொருளானது ஆரம்பத்தில் உருவாக்கப் பட்டது. காலப் போக்கில் பல்வேறு வசதிகள் உட்புகுத்தப் பட்டு ஓர் முழுமையான ஓர் புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாக உருவெடுத்தது. இதன் எளிமையான இடைமுகமத்தால் பலம் வாய்ந்த இன்றைய ஆர்க் இன்போ வைவிட பலராலும் விரும்பப்படுகின்றது. ஆர்க்வியூ 3.3 இன்றும் கிடைக்கின்றது. பல பயனர்கள் இன்றும் பழைய ஆர்க் ஜிஐஎஸ் மென்பொருளைப் பாவித்து வருகின்றனர். இதன் 3.3 பதிப்பானது மே, 2002 வெளிவந்தது. இது விண்டோஸ் மற்றும் யுனிக்ஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றது., ஆர்க்வியூ 3.3 விண்டோஸ் XP இயங்குதளத்தை ஆதரித்தாலும் அது சரியாக இயங்குவதற்கு சிறு மென்பொருட் திருத்தம் ஒன்றைப் பிரயோகிக்க வேண்டும் இதிலுள்ள ஆர்க்வியூவானது ஆர்க்ஜிஐஎஸ் இன் ஓர் அங்கமாகும். இவ்வங்கத்துள் ஆர்க்வியூவே மிகக் குறைந்த மென்பொருள் அனுமதி தேவைப்படுகின்றது புவியியல் தகவற் தொழில் நுட்பத்தில் இடைநிலையில் ஆர்க் எடிற்ரர் மற்றும் இதன் உயர்நிலையில் ஆர்க் இன்போ மென்பொருளானது உள்ளது. ஆகத்து 20 தனா ஏரி தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும். நாட்டு குறிக்கோள்களின் பட்டியல் இது நாடுகளது அவற்றின் மாகாணங்களதும் குறிக்கோள்களின் பட்டியலாகும். 1980 ஆண்டு 1980 (MCMLXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பானது மைக்ரோசாப்ட்டினால் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அலுவலக மென்பொருளாகும். மிக அண்மைக்காலப் பதிப்புகள் சேவர் மென்பொருளையும் கொண்டுள்ளன இதன் தற்போதைய பதிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 ஆனது 22 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 90 களில் அறிமுகமானது. ஒவ்வோர் மென்பொருளும் தனித்தனியே விற்பனையாகி வந்த காலத்தில் மென்பொருடகளை இணைத்து மொத்த விலையிலும் இலாபகரமாக விற்றதே மைக்ரோசாப்டின் வெற்றிக்கு வழிவகுத்தது. மைக்ரோசாட் ஆபிஸ்ஸின் முதற் பதிப்பானது வேட், எக்ஸ்ஸெல், பவர்பாயிண்ட் உள்ளடக்கியிருந்தது இதன் Pro பதிப்பானது ஆக்ஸ்ஸஸ் மற்றும் ஸெடியூல் பிளஸ் ஐ உள்ளடக்கியிருந்தது. காலவோட்டத்தில் தொழில் நுடபரீதியாக இதிலுள்ள மென்பொருட்கள் கூடுதலாக ஒத்தியங்க ஆரம்பித்தன. எடுத்துக் காட்டாக இதிலுள்ள பிழைதிருத்தி எல்லா மென்பொருட்களிற்கும் பொதுவானது. இதைவிட பிரயோகங்களிற்கான விஷ்வல் பேஸிக் போன்றவை பொதுவானவை. 2006 ஆம் ஆண்டின் படி உரையாவணங்களை உருவாக்குதல், விரிதாட்கள் மற்றும் அலுவலக presentation கோப்புகளின் நியம மென்பொருளாக இது காணப்படுகின்றது. இது வர்தக ரீதியாக லோட்டஸ் ஸ்மாட் ஸுயிட் மற்றும் கோரல் ஆபீஸ் என்பவற்றுடன் இலவசமான சண் மைக்ரோ சிஸ்டத்தின் ஓப்பிண் ஆபிஸ் மென்பொருளுடனும் போட்டியிடுகின்றது. இனி வருங்காலத்தில் கூகிளின் ரைட்லி, கூகிள் விரிதாட்கள் போன்ற மென்பொருட்களுடன் கடுமையான போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. கிழ்வரும் மென்பொருட்களானது ஆபிஸ் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பேஸிக் பதிப்பில் வேட், எக்ஸல், அவுட்லுக் மாத்திரமே யுள்ளன. மைக்ரோசாப்ட் வேட் ஓர் உரையாவண மென்பொருளாகும். இது வர்தக ரீதியாக மிக அதிகமான பங்குள்ளதுடன் ஓர் நியம மென்பொருளாகவும் விளங்குகின்றது. வேட் 2003 ஆனது XML முறையிலமைந்த கோப்புக்களையும் ஆதரிக்கின்றது. கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்தில் லோட்ட்ஸ் 1-2-3 மென்பொருளுடன் போட்டியாளராகவே அறிமுகமாகிப் பின்னர் வெற்றி கொண்டு விரிதாட்களுக்கான நியம மென்பொருளாகியது. கூகிள் விரிதாட்கள் இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கபடுகின்றது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மின்னஞ்சல் மென்பொருளாகும். மொஸிலா தண்டபேட் மற்றும் ஜிமெயில் போன்றவை இதனுடன் போட்டியிடுகின்றன. மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் சிலைடுகளை உருவாக்கிக் காண்பிக்கப் பயன்படுகின்றது. இது உரைகள், படங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும் வசதியுள்ளது. விண்டோஸ் 2000 பதிப்பானது தமிழ் ஒருங்குறியை ஆதரித்தாலும் ஆபிஸ் 2000 பதிப்பானது விண்டோஸ் 2000 பதிப்பிற்கு முன்னரே வெளிவிடப்பட்டதால் தமிழ் ஒருங்குறிக்கான ஆதரவு ஆபிஸ் XP உடனேயே அறிமுகமானது. இது ஓப்பிண் ஆபிஸ் மென்பொருளைப் போன்றல்லாது தமிழ் போன்ற மொழிகளின் ஆதரவை கீழுழ்ழ உரையாவணக் கட்டமைப்பின் மூலமே வழங்கி வருகின்றது. எ-கலப்பை கட்டுரையில் தமிழை உட்புகுத்துவது பற்றிக் காண்க. தமிழ் எழுத்துப் பிழைதிருத்தமானது ஆபிஸ் 2003 உடன் அறிமுகம் செய்யப் படுகின்றது. இது மைக்ரோசாப்ட் சரிபார்க்கும் கருவிகள் (Microsoft Proofing Tools) என்னும் இறுவட்டுடன் வெளிவருகின்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட வேறு பல இந்திய மொழிகளுடன் 50 மொழிகளுக்கான இறுவட்டாக வெளிவந்துள்ளது. இந்திய மொழிகளில் ஹிந்தி தவிர்ந்த (ஏனெனில் ஹிந்தி ஆபிஸ் 2003 என்ற தனியான பதிப்பு வெளிவந்ததால்) தமிழ், கன்னடம், மராத்தி, குஜராத்தி உட்படப் பல மொழிகளில் ஆபிஸ் மொழி இடைமுகமானது வெளிவந்துள்ளது. இது ஏறத்தாழ 80% இடைமுகத்தை வட்டார மொழிகளில் வழங்குகின்றது. ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைதத நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2000 இல் நிர்வாக நிறுவல்களை ஆரம்பிக்கலாம் எனினும் சேவைப் பொதிகளை ஒருங்கிணைக்க இயலாது. ஆபிஸ் XP இல் சேவைப் பொதியை ஒருங்கிணைக்கும்போது குறிப்பாக ஆபிஸ் XP SP3 (சேவைப்பொதி 3) அம்மென்பொருளை activate பண்ணுமாறு கோரும் அவ்வாறு செய்யாவிடின் மென்பொருளானது 50 தடவைகள் மாத்திரமே ஆரம்பிக்கவியலும். மாலைத்தீவுகள் மாலைத்தீவுகள் ("Maldives") அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார். கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன. மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வுபற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது. 1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"(திவெயி: ހަވިއްތަ) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயே மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கிப் பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள்மீது எழுப்பப்பட்டன எனக் கருதுகின்றார். மாலைத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியாயிற்று. அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தானெனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைத்தீவை ஆண்டார்கள். இவர்கள் தங்களைத் தமிழரின் வழித்தோன்றல்களெனக் கூறுகின்றனர். இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாகக் காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1988 இல் இலங்கை தமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள் தாக்கின. மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது. சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தைக் கொண்டது. மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும்.. மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளில் முக்கியமாகத் தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது. 1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய "டோனி" என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களைத் தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி பாடசாலை கல்வியில் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைத்தீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிலாளர் படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைக் கொடுக்கிறது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாகப் பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20% வழங்கும் சுற்றுலாத்துறை, நாட்டுக்குக் கூடிய வெளிநாட்டு வருவாயைப் பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதலங்களுக்கு 2000 ஆம் ஆண்டு சுமார் 467,154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ச்சியை மறைமுகமாக அதிகரித்தது. பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல் போன்ற கைத்தொழில்கள் முக்கிய வளர்ச்சியைக் கண்டன. மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும். மாலைத்தீவுகளின் பாராளுமன்றம் (மசிலிசு) 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார். மாலைத்தீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. மாலைதீவுகளின் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாகப் பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும். ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்கப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாகப் பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்குப் பதில் கூறவேண்டியவர்களாவர். மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 மீற்றர் மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 சதம மீட்டர் உயர்ந்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக மாலைத்தீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கிப் பலர் வீடுகளை இழந்தனர். இப்போது மாலைத்தீவுகளின் நிலப்பட வரைஞர்கள் மாலைத்தீவுகளின் வரைபடத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் என்றோ ஒரு நாள் மாலைத்தீவுகள் முற்றாக உலக வரைபடத்திலிருந்து இல்லாது போய்விடுமென அஞ்சச் செய்கிறது. மாலைத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். கிபி 12வது நூற்றாண்டில் மலாய தீவுகள், கிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர். மாலைத்தீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது. இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாகப் பின்பற்றப்படுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் செல்வம், இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறு பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை. மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது. ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள்பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களைப் பின்பற்றுகின்றார்கள். மாலைத்தீவுகளில் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைத்தீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பைத் தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் மலேசிய, இந்திய, கிழக்காபிரிக்க அரபு தாக்கத்தை முதன்மையாகக் காணலாம். மிகப் பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைத்தீவுகளில் 11ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒரு நடன இசையாகும். தலைமைப் பாடகர் ஒருவரோடு, கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாகப் பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்துப் பின்னர் வேக இசைக்கு மாறும் அதேவேளை நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும். சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு. பாரசீக வளைகுடாவில் இருந்து வந்த அரேபியர்களால் கிபி 17வது நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் "தாரா" இசை மாலைத்தீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும். இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இசைப்பார்கள். ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும். போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேக இசையாக மாறும். "கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுதீன் (1620-1648), என்ற சுல்தானின் காலத்தில் மாலே கோட்டைச் சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப்பட்டதாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுதீன் என்ற சுல்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும். "பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குப் பரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். 1968இல் குடியரசான பிறகு சுல்தான் ஒருவர் இல்லாத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை. மாலைத்தீவுகளில் இசுலாமிய நாட்காட்டி புழக்கத்தில் உள்ளது. விடுமுறை நாட்கள் அந்நாட்காட்டியின்படி கணிக்கப்படுவதால் கிரெகொரியின் நாட்காட்டி யில் விடுமுறை நாட்கள் வருடாவருடம் வேறுபடுவதோடு ஒரு கிரெகொரியின் ஆண்டில் ஒரே விடுமுறை இரண்டு முறை வருவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இதன் தலைநகர் மாலியில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த சுமை வண்டியில் ராணுவ ஆயுதங்கள் ஏறாளமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக துணை அதிபர் ஒரு மாதத்திற்க்கு அவசர நிலை அறிவித்தார். 1818 1818 (MDCCCXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. 1883 1883 (MDCCCLXXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). மலம் மலம் என்பது உடலினால் உள்ளெடுக்கப்படும் உணவானது, சமிபாட்டுத் தொகுதியால் சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குடல் பகுதியினால் உறிஞ்சப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் செரிக்கப்படாத (சமிபாடடையாத) உணவு மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருள் ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, பெருங்குடலில் சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற திண்ம-நீர்ம நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளில் வெளியேற்றப்படும் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர். மலத்தின் துர்நாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் இண்டோல் (indole), இசுக்கட்டோல் (skatole), கந்தகம் கொண்டுள்ள தியோல் (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய ஐதரசன்-டை-சல்பைடு (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே. காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். பறவைகளின் மலத்தை "எச்சம்" குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள விதை முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல் தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், புழு, வண்டு, பூச்சிகள், நுண்ணுயிரிகள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும். சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. யானைக் கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் குடலுக்குத் தேவையான நுண்ணுயிரிகளைப் பெறுகின்றன. 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 18, 2006 முதல் ஆகஸ்ட் 28, 2006 வரை நடைபெற்றது. 20 விளையாட்டுப் பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்தியா 234 பதக்கங்களுடன் முதலிடத்திலும் பாக்கிஸ்தான் 158 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. மூன்றாம் இடத்தை இலங்கை பெற்றுக்கொண்டது. சீனத் தமிழியல் சீனத் தமிழியல் ("Chinese Tamil Studies") என்பது சீன மொழி, சீனா, சீன மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தமிழக அரசு திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்க குழுவொன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரியத் தமிழியல் கொரியத் தமிழியல் ("Korean Tamil Studies") என்பது கொரியன் மொழி, தென் கொரியா, வட கொரியா, கொரியா மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புகள் இருப்பதாக திராவிட-கொரியன் மொழிக்குடும்பம் என்ற கருதுகோள் கூறுகிறது. ஆனாக் இக் கருதுகோள் தற்போது பெரும்பாலான மொழியிலாளர்களால் மறுக்கப்பட்டுள்ளது. ஆகத்து 21 மாலைதீவுகளின் கொடி மாலைத்தீவுகள் குடியரசின் கொடி, வெள்ளை நிலைக்குத்தான பிறையைக் கொண்டதும் பெரிய பச்சை நிறச் செவ்வகத்தை மத்தியில் கொண்டதுமான சிவப்பு நிற செவ்வகக் கொடியாகும். இதில் பிறையின் மூடிய பக்கத்தில் கொடிக் கம்பம் வரவேண்டும். இது யூலை 25 1965 இல் ஏற்றுகொள்ளப்பட்டது. பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ம் நூற்றாண்டு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது. 1947 இல் வெண்பிறையும் பச்சை நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. 1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைப் பிறையின் நடுவேயிட்டு அதனை தனது கொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாகப் பயன்படுகிறது. சிவப்பு நிறச் செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை தென்னை மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிறப் பிறை ஒன்றுப்பட்ட இஸ்லாமிய விசுவாத்தை குறிக்கிறது. மாலைதீவுகளின் சின்னம் மாலைதீவுகளின் பொறியானது ஒரு தென்னை மரத்தை மத்தியில் கொண்டு அதன் இரு புறங்களிலும் சாய்வாக இரு தேசிய கொடிகளை ஏந்திய கம்பங்களையும் இக்கம்பங்களுக்கு மத்தியில் பிறையையும் நடசத்திரத்தையும் கொண்டது. நாட்டின் உத்தியோகபூர்வ சுதேச பெயர் எழுதப்பட்ட பெயர் பட்டியும் காணப்படுகிறது. தென்னை மரம் மக்களின் வாழ்வாதாரத்தை குறிக்கிறது. மாலைத்தீவு மக்கள் தென்னை மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுகின்றனர். அது மருத்துவம் தொடக்கம் கப்பல் கட்டுதல் வரை பயன் தருகின்றது என்பது அவர்களின் கருத்தாகும். பிறையும் நட்சத்திரமும் இஸ்லாமிய விசுவாசத்தை குறிக்கிறது. நாட்டின் சுதேச பெயரான அத்-தாஃவ்லத் அயி-மகால்தீபியா (அரபு: الدولة المحلديبية) என்ற பெயர் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இது 1000 தீவுகளின் நாடு என பொருள்படும். இது மாலைத்தீவுகள் அரசின் அடையாளச் சின்னமாகும். இது அரசின் அதிகாரபூர்வ கடித தலைப்புகளின் உச்சியில் பயன்படுத்தப்படுகிறது. முகலாயப் பேரரசு முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய  -பாரசீக / துருக்கிய -மங்கோலிய தெமூரித் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். "முகல்" என்பது "மங்கோலியர்" என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள். பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது. * ஆப்கானிய ஆட்சி (சேர் சா சூரியும், வழி வந்தோரும்) முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சாமர்கண்ட் பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையைத் தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றரச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதியைத் திருப்பிக் கொடுக்கும்படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். ராஜபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார். இவர் தன் இறுதிக்காலங்களில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப் பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் முகலாயப் பேரரசை சேர் சா சூரியிடம் இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்பர் ஆட்சியில் முகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572), வங்காளம் (1574), காபூல் (1581), காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்றப் பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார். ஒளரங்கசீப் (ஆட்சி காலம்:1658-1707) முகலாயப் பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் எனப் பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும், ஒளரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள். ராஜபுத்திரர்கள் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. ஒளரங்கசீப் மேவார் நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இஸ்லாத்தை  தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் ராஜபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேக் பகதூர், ஒளரங்கசீப்பை எதிர்த்ததால் அவருக்கு ஒளரங்கசீப் மரணதண்டனை கொடுத்துக் கொன்றார். இவரது சமகாலத்தில் பேரரசர் சிவாஜி தக்காணத்தில் பலமிக்க மராட்டியப் பேரரசை நிறுவியிருந்தார். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததால் மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு, சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுஜிவைக் கவனித்து வந்த ராஜசாராமோடு போரிட்டு, மராட்டியத்தில் சில கோட்டைகளை ஒளரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு, ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக ஒளரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியப் பேரரசின் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி, முடியாத ஒளரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது. மும்பை பங்குச் சந்தை மும்பை பங்குச் சந்தை ("Bombay Stock Exchange") ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன. 1979 1979 (MCMLXXIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 1978 1978 (MCMLXXVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 1977 1977 (MCMLXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 1976 1976 (MCMLXXVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். கேகாலை கேகாலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்டத்தின் தலை நகரமாகும். கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. கேகாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. முகலாய ஓவியம் முகலாய ஓவியம் (Mughal painting) என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன. இரண்டாவது முகலாயப் பேரரசனான ஹுமாயூன், தப்ரீசில் இருந்தபோது, அவருக்குப் பாரசீக ஓவியங்கள் அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தார். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப் பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது. திவெயி மொழி திவெயி மொழி (அல்லது திவேகி மொழி) (Divehi) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ-ஆரிய மொழியாகும். இது மாலைதீவுகளில் சுமார் 331,000 மக்களால் பேசப்படுகிறது, மேலும் இது ஆட்சி மொழியுமாகும். திவ்வெயி மொழியானது எலு அல்லது பழைய சிங்கள மொழியின் வழித்தோன்றலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். பல மொழிகளின் தாக்கத்தை திவெயி மொழியில் காணலாம். இவற்றில் அரபு மொழி முக்கியமானதாகும். தமிழ், சிங்களம், மலையாளம், இந்தி பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகள் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தான எழுத்துமுறையால் எழுதப்படுகிறது. ஆகத்து 22 மாலே மாலே (திவெயி: މާލެ), மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது. மாலே நகரமானது போர்த்துக்கேய வணிகர்களால் 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. மாலே, பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட தீவாகும். மேலும், இது உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி கூடிய நகரமாகும். இந்நகரம் நான்கு பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. டிசம்பர் 26, 2004 இல் இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004 காரணமாக மாலே நகரின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது. மாலே என்பது "மாகா ஆலை" என்ற சமஸ்கிருத மொழி சொல்லில் இருந்து வந்ததாகும். மாகா என்றால் பெரிய ஆலை ஆகும். மகா ஆலை என்பது அரண்மனை அல்லது தலைநகரை குறித்ததாகும். 1965 1965 (MCMLXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் இது உலகில் உள்ள நாடுகள், ஆட்சிப் பகுதிகள், சார்ந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் போன்றவற்றின் தலைநகரங்களின் பட்டியல் ஆகும். அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல் இது நாடுகளில் நிலவும் அரசுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். இந்நாடுகளில் அதிபர் நாடாளும் தலைவராக காணப்படுவதோடு அவர் சட்டவாக்க சபையிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவார். இதில் சனனாயக மற்றும் சனனாயகமல்லாத நாடுகளும் காணப்படுகிறது. நாட்டிற்கும் அரசிற்கும் தலைவராக அதிபர் மட்டுமே இருப்பார். பிரதமர் என்று எவரும் இருப்பதில்லை அதிபரும் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்யும் முறையே அரை அதிபர் முறையாகும். இம்முறையில் அதிபர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருப்பார். ஆட்சியின் சில குறிப்பிட்ட பகுதிகளை பிரதமர் நிறைவேற்றுவார். பிரதமரே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்களுக்கும் தலைவராக இருப்பார். ஜனாதிபதி அல்லது அதிபர் சில திட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் அதிகாரம் மிக்கவராக இருப்பார். கீழ்க்கண்ட அட்டவணையில் குடியரசு மற்றும் குடியரசு இல்லாத நாடுகளும் அடங்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே அரசிற்கும் நாட்டிற்கும் செயல்தலைவராக காணப்படுவார். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அந்நாட்டின் அதிபர் அல்லது மன்னர் தனது ஆதரவை அளித்து பெயரளவில் தலைவராக இருப்பார். அரசியல்சட்ட முடியாட்சி, in which Queen Elizabeth II serves as head of state over an independent government. In each Realm, she acts as the monarch of that state, and is titled accordingly – for example, Queen of Australia. The Queen appoints a Governor-General to each country other than the United Kingdom to act as her representative. The பிரதமர் is the active head of the செயலாட்சியர் of government and also leader of the சட்டவாக்க அவை. The பிரதமர் (or equivalent) is the nation's active executive, but the monarch still has considerable political powers that can be used at his/her own independent discretion. இம்முறையில் நாடு மற்றும் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மன்னர் அல்லது அதிபரிடமே இருக்கும். Non-democratic states based on a state religion where the நாட்டுத் தலைவர் is selected by some form of religious hierarchy. Non-democratic states in which political power is concentrated within a single அரசியல் கட்சி whose operations are largely fused with the government hiearchy. The nation's armed forces control the organs of government and all high-ranking political executives are also members of the military hiearchy. States which have a system of government which is in transition or turmoil and cannot be accurately classified. States in which the கூட்டாட்சி shares power with semi-independent regional governments. States in which the central government has delegated some of its powers to self-governing subsidiary governments, creating a "de facto" federation. States in which the central government has delegated some of its powers to regional governments. சால் வீ டான்ஸ் (திரைப்படம்) சால் வீ டான்ஸ் எனும் திரைப்படம் 2004 வெளிவந்த ஒரு ஹாலிவுட் திரைப்படமாகும். இதில் ஜெனிபர் லோபெஸ், ரிச்சாட் ஜெரி போன்றவர்கள் நடித்து இருந்தனர். இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். இத்திரைப்படம் இதே பெயருடன் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹாலிவூட்டில் வெளியிடப்பட்டது. பின்பு 2004 ல் ஆங்கிலத் திரைப்படம் இந்த திரைப்படத்தை மையமாகக்கொண்டு மறுபடி ஹாலிவூட் இரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எடுக்கப்பட்டது. பரபரப்பான சிகாகோ நகரத்தைக் காட்டுவதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இங்கு கதையின் முக்கிய பாத்திரமான யோன் கிளாக் ஒரு கணக்கியலாளர். அளவுக்கதிகமாக வேலை செய்து வேலை செய்து கிட்டத்தட்ட விரக்தி அடைந்து விட்ட ஒரு கணக்கியலாளர். ஒவ்வொரு நாளும் இவர் வேலை முடிந்து மின்சார இரயிலிலே வீடு திரும்பும் வழியில் ஒரு நடனப் பள்ளியைக் காண்கிறார். அதன் ஜன்னல் ஓரத்தில் நிற்கும் ஒர அழகுப் பதுமையையும் (ஜெனிபர் லோபெஸ்) காண்கிறார். இந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிளார்க் அந்த நடனப் பள்ளியில் போல் ரூம் நடனம் கற்றுக்கொள்ளச் சேர்கின்றார். அந்த பள்ளியில் பிரதான ஆசிரியையான மிற்சி என்பவரின் கீழ் நடனம் பயில ஆரம்பிக்கும் இவர் தன் கண்களைக் கவர்ந்த அந்த அழகுப் பெண்ணின் பெயர் போலீனா எனவும் அவர் அந்த நடனப் பள்ளியில் உதவி ஆசிரியர் எனவும் அறிந்து கொள்கிறார். வெறுமனே சேர்ந்த நடனத்தில் கிளார்க் காலப்போக்கில் ஒன்றி விடுகின்றார். இதற்கிடையில் இவரின் அலுவலக நண்பர் ஒருவரும் அங்கே நடத்துறையில் இருப்பதை அறிந்து கொள்கின்றார். ஆயினும் அந்த நண்பர் தன்னை வெளி உலகிற்கு ஒரு விளையாட்டு இரசிகனாக மட்டுமே காட்ட விழைகின்றார். இவரும் கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாகின்றார். ஆரம்பத்தில் கிளார்க்கை நிராகரித் போலீனா பின்பு மெல்ல மெல்ல அவரை நெருங்கத் தொடங்குகின்றார். காலப் போக்கில் கிளார்க்கிற்கு சிகாகோ கிரிஸ்டல் போல் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது. இதே வேளையில் கிளார்கின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் அவரின் மனைவி ஒரு தனியார் துப்பறிவு நிபுனர் மூலம் கணவரின் இரகசியமான நடன வகுப்புகள் பற்றி அறிந்து கொள்கின்றார். போட்டியிற்கு கிளார்க் அவரது ஆசிரியை மிட்சி மற்றும் போலீனாவால் பயிற்று விக்கப்படுகின்றனர். கடைசியாக ஒரு தடவை போலீனாவால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்போது உருவாக்கப்பட்ட நடனக்காட்சிகள் பார்ப்பவரை ஆட்கொள்ளுமாறு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனப் பயிற்சியின் போது நடனம் பற்றி போலீனா சொல்லும் சில கருத்துக்களும் அழகானவை. உதாணத்திற்கு அவள் படம்ஆவாள் நீ அதைத் தாங்கும் சட்டமாவாய் நீ செய்வதை அவள் அப்படியே பிரதிபலிப்பாள். இது நடனத்தைப் பற்றி போலீனா கூறுவது. இறுதியாக கிளார்க் இரகசியமாக வந்த சிகாகோ போல்ஸ் டான்ஸ் போட்டியில் அவரின் மனைவியும் மகளும் அவரிற்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இவர் நடனமாடிக்கொண்டு இருக்கும் போதே தனது துணைவியாரையும் மகளையும் காண்கின்றார். இதன் பின்பு கணவன் மனைவிக்கிடையில் கடும் சண்டை வெடிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தின் பின்னர் நடன வகுப்புக்கு செல்லாத கிளார்க்கிற்கு அவரது நண்பர் மூலம் போலீனா ஒரு கடிதம் அனுப்புகின்றார். அதில் தான் போல் ரவுண் நடனத்தை மேலும் கற்ற இங்கிலாந்து செல்வதாகவும் கடைசியாக ஒரு தடவை அவருடன் நடனமாட விரும்புவதாகவும் கூறுகின்றார். கிளார்க் இந்த கடிதத்தை அவரது மனைவிக்கு காட்டுவதுடன் தான் அங்கு செல்லப்போவதில்லை என்று கூறுகின்றார். மறுநாள் வேலைத் தளத்தில் இருந்து வீடு திரும்பிய போது அவரிற்காக அவரது மனைவி ஒரு பரிசுப்பொதியை விட்டுச் சென்றிருப்பதைக் காண்கிறார். இதில் போலீனாவுடன் நடனம் ஆடச் செல்லுமாறு கூறி அதற்கான நடன உடைகளையும் வாங்கி வைத்து விடுகின்றார். கிளார்க் சந்தோஷத்துடன் அந்த உடைகளை அணிந்தவாறு வெளியேறி மனைவியிடம் நேரடியாகச் செல்கின்றார். அங்கே அவர் தான் நடனமாட ஒரு துணைவர் தேவையென்றும் நீயே எனது துணைவி என்றும் கூறுகின்றார். அடுத்த காட்சியில் அவர் அவரது மனைவியால் போலீனா வின் பிரியாவிடை உபசாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு கடைசித் தடவையாக போலீனாவுடன் எந்தவித மனக் குழப்பமும் இல்லாமல் நடனமாடுகின்றார். மக்கள்தொகை அடர்த்தி மக்கள் தொகை அடர்த்தி அல்லது மக்களடர்த்தி எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள மக்கள் தொகையாகும். அதாவது இன்ன பரப்பளவில் இன்ன மக்கள் தொகை என்பதாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் உள்ளனர் என்பது பரவலாகப் பயன்படும் ஓர் அடர்த்தி அளவீடு. மக்கள் தொகை அடர்த்தியின் கணிப்பீட்டின்போது விளைச்சல் நிலங்களின் பரப்பளவு சில நேரங்களில் அகற்றப்பட்ட பின்பே அடர்த்தி கணிக்கப்படும். அடர்த்தியானது நாடு, நகரம், ஊர், மற்றும் இன்னோரன்ன நிலப் பகுதிகள் எனப் பல மட்டங்களிலும், உலகம் முழுவதற்குமேகூடக் கணிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள். மக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும். குறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும். நகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு. மக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. எண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²) உடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம் வேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம் வாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு சூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி. 1975 1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது. மார்ச் 9 மார்ச் 8 மார்ச் 1 மார்ச் 2 மார்ச் 3 செயற்பாட்டுக் கணக்காய்வு அரசாங்க அல்லது இலாபநோக்கற்ற நிறுவனமொன்றின் முகாமை தனது பொறுப்பிலுள்ள வளங்களின் உபயோகத்தில் "சிக்கனம்" (economy), "வினைத்திறன்" (efficiency), "வினையாற்றல்" (effectiveness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் உள்ள ஆற்றல் பற்றி ஆய்வு செய்யும் கணக்காய்வு செயற்பாட்டுக் கணக்காய்வு (Performance audit) என வரைவிலக்கணப்படுத்தப்படும். இவ் கணக்காய்வின் மூலம் நிறுவனமானது சிக்கனம், வினைத்திறன், வினையாற்றல் என்பவற்றை கடைப்பிடித்துள்ளாதா மற்றும் நிறுவனத்தின் இலக்கு,நோக்கம் அடையப்பட்டுள்ளாதா என அறிந்துகொள்ளமுடியும். இவ்வகையான கணக்காய்வு பணத்திற்கான பெறுமதிக்கணக்காய்வு(Value for Money audit) அல்லது நடவடிக்கைக் கணக்காய்வு(Operational audit),அல்லது முகாமைத்துவக் க்ணக்காய்வு(Management audit) என்றும் வேறுபெயர் கொண்டும் அழைக்கப்படும். குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும். இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன. தலைவன் தலைவி தன்னிச்சையாக உடலுறவு கொள்ளத் தோழி ஒப்புதல் தந்துள்ளாள். ஆரிய அரசன் பிரகத்தன் என்பாருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.அவ் அரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள,குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது. ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் தீது என்றான். இது கற்புநெறியில் முடியும்; மிகவும் நல்லது; என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த எழுதப்பட்டது. காதல் நோயால் தலைவியின் உடலில் மாறுபாடு. செயலில் தடுமாற்றம். இதனை அவளது தாயர் முருகன் அணங்கியதாக எண்ணி முருகாற்றுப்படுத்த முனைகின்றனர். உண்மையைச் சொல்லிவிடு என்று தலைவி தோழியைத் தூண்ட, தோழி நிகழ்ந்ததைக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. தாயர் தினைப்புனம் காத்துவருமாறு அனுப்பினர். தலைவி தன் தோழிமாருடன் சென்றாள். புனத்தில் அமைக்கப்பட்டிருந்த இதணம் என்னும் பந்தல்மேல் ஏறி, குளிர் தட்டை முதலான இசைக் கருவிகளைப் புடைத்துக் கிளிகளை ஓட்டினர். பறவைகள் வரமுடியாத அளவுக்கு வானம் பெருமழை பொழிந்தது. தலைவி தோழிமாருடன் சென்று அருவியிலும், சுனையிலும் நீராடினர். பின்னர் பல வகையான பூக்களைப் பறித்துவந்து பாறைமீது குவித்தனர். அவற்றால் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டனர். அப்போது அங்கு காளை ஒருவன் தோன்றினான். நீராடும்போது பூசிய தகரம் அவன் தலையில் கமழ்ந்தது. அவன் தன் முடிக்கு அகில் புகை ஊட்டியிருந்தான். மலையிலும், நிலத்திலும், மரக்கிளையிலும், சுனையிலும் பூத்த நால்வகை மலர்களால் தொடுத்த கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். பிண்டி என்னும் அசோகின் பூந்தளிரை ஒரு காதில் செருகியிருந்தான். மார்பில் சந்தனம், இடையில் வாள், கையில் வில்லம்பு, காலில் ஈகையை உணர்த்தும் கழல் ஆகியவற்றுடன் தோன்றினான். இளைஞர் சூழ வந்தான். அவனது வேட்டை நாய் குரைத்துக்கொண்டு அவனைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்தது. இவற்றைக் கண்டு தலைவியும் தோழிமாரும் அஞ்சி ஒதுங்கினர். அவன் பசுவைப் பார்க்கும் காளைபோல் பண்போடு பார்த்தான் அவர்கள் ஐந்து வகையாக முடித்திருந்த ‘ஐம்பால்’ கூந்தல் அழகைப் பாராட்டினான். அவர்களின் நடுக்கத்தைக் கண்டு ‘பெருந்தீங்கு செய்துவிட்டேன் போலும்’ என்றான். அவர்கள் ஏதும் பேசவில்லை. அவன் கலக்கத்துடன் ‘எம்முடன் சொல்லலும் பழியோ’ என யாழில் எழும் சைவளப் பண் போலத் தழுதழுத்தான் அப்போது ஆண்யானை ஒன்று அங்கு வந்த்து. அதனைக் கண்டு நடுங்கிய தலைவி தன் நாணத்தை மறந்து அவனைத் தழுவிக்கொண்டாள். யானைமீது தலைவன் அம்பு எய்தான். யானை போய்விட்டது. அவள் விலகினாள். “உன் அழகை நுகர அசையாமல் நில்” என்றான். அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். தலைவி நின்றாள். தலைவன் தோழியைப் பார்த்தான். தோழி நாணி விலகினாள். பாறையில் பட்டுத் தெறித்த மிளகு ஊறிக்கொண்டிருக்கும் சுனையில் மாம்பழம் விழுந்தது. சுனையில் பலாச்சுளையும் தேனும் இனித்தன விழா எடுத்து ஊருக்கு விருந்து படைத்து திருமணம் செய்துகொள்வேன் என அவன் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு கடவுள்மேல் சத்தியம் செய்தான். மாலை வந்தது. இல்லம் திரும்பினர். அன்று முதல் அவன் இரவில் அவளிடம் வந்து போனான். இரவில் காவலர் வருதல், நாய் குரைத்தல், முதலான இடையூறு நேரும்போது கலங்குவாள். அவன் வரும் வழியில் உழுவை, ஆளி, உளியம் போன்ற விலங்குகளும், பாம்பும் உண்டு. அவன் கடக்கும் ஆற்றில் முதலை, இடங்கர், கராம் முதலான இரைதேர் விலங்குகளும் உண்டு. இவற்றையும் எண்ணி இவள் கலங்குகிறாள். இவையே இவள் மாறுபாட்டுக்குக் காரணம். என்று தோழி தாயரிடம் கூறி முடிக்கிறாள். இந்தப் பாடலின் முடிவில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை கபிலரால் இயற்றப்பட்டவை அன்று. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் எழுதிச் சேர்த்த பாட்டுகள். ஆகத்து 23 சூனி சூனி ("zuni") எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிவப்பிந்தியப் பழங்குடியினர். அரிசோனா மாநிலத்தின் எல்லையில் உள்ள வடமேற்கு நியூ மெக்சிகோவில் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12,000 ஆகும். அனசாசி ("Anasasi") பழங்குடியினரின் வம்சாவழியினரான இவர்கள் சூனி மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள். அத்துடன் சூனி சமயத்தையும் பேணுகின்றனர். இவர்கள் சுமார் 1300 வருடங்களாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. கயானா கயானா ("Guyana", அதிகாரபூர்வமாக கயானா கூட்டுறவுக் குடியரசு ("Co-operative Republic of Guyana"), என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன. கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது. பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர். 215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும். கயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர். வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் "பிரித்தானிய கயானா" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. 1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது. கயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய வம்சாவழியினரான செட்டி ஜகன் ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்பக் காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கயானாவின் பெரும்பாலான மக்கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கிமீ (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும். கயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். இந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார். இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தோ-கயானியர்களில் பெரும்பான்மையானோர் போச்புரி-மொழி பேசும் பீகாரியரும், உத்தரப் பிரதேசக் குடியேறிகளும் ஆவார். ஏனையோர் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழரும், தெலுங்கரும் ஆவர். கயானாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர் கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது. அக்கவாயோ, வாய்-வாய், மக்கூசி ஆகிய கரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காக இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன. 2002 கணக்கெடுப்பின் படி, கயானாவில் 57% கிறித்தவர்கள், 28% இந்துக்கள், 7% முசுலிம்கள் வாழ்கின்றனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். கிறித்தவர்களில் சீர்திருத்த, மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவினரும் உள்ளனர். கயானாத் தமிழர் தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் (Tamil Guyanese) எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். "மதராசி" என்றோ அல்லது "இந்தோ-கயனீஸ்" என்றோ அடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள் ஆவார்கள். அனேகருக்குத் தமிழ்மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன. மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2017 ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன. 2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு: (தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை). 1990 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2012 மற்றும் 2017 ஆண்டுகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டு வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் அறிக்கை வெளியிடப்பட்டது. சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:[தாய்வான்]], லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா. மார்ச் 4 மார்ச் 5 [[பகுப்பு:மார்ச்]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] மார்ச் 6 மார்ச் 7 மார்ச் 11 கொசு கொசு (ஈழத்தமிழ்: நுளம்பு)," க்யூலிசிடே"("culicidae") குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும என்றாலும் பெண் கொசுக்களுக்குக்கூட இரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப இரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது. வீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும் தன்மை கொண்டவை. அதற்காக அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும் தன்மையானவை. ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழுக்கூடியன. ஆண்கொசுக்கள் முட்டையிலிருந்து வாழ்க்கைசுழற்சியின் மூலம் மூதுயிரியாக வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கிறன. கலவி முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது. கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். இதனால் இதன் நுண்ணிய குழலுக்குள் குருதி செல்ல ஏதுவாக குருதியின் அடர்த்தி குறைவதோடு, குருதி உறைகலும் தடுக்கப்படுகிறது. கொசு இனங்களில் "அனோஃபிலசு" (Anopheles) எனப்படும் கொசு இனத்தின் பெண் கொசுக்களே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றன. கொசு இனங்கள் மிகப்பழமையானதொரு உயிரினமாகும். இதன் நவீன இனங்கள் பண்டைய யுகத்திலிருந்து (சுமார் 79 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டெடுக்கப்பட்ட மரப்பிசின் படிமங்களிலுள்ள (நிமிளையிலுள்ள) கொசுக்களின் உடற்கூறமைப்பை ஒத்துள்ளன. மேலும் பர்மாவில் கண்டறியப்பட்ட படிம நிமிளையில் 90 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ் கொசுச் சிற்றினம் மாறுபட்ட சில சிறப்புக்கூறுகளைப் பெற்றிருந்தன. சுமார் 46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இருவேறு கொசுக்களின் படிமங்கள் தற்காலத்திலிருந்து சற்றே மாறுபட்ட புற உடலமைப்பைப் பெற்றிருந்தன. மேலும் இவற்றின் வயிற்றுப்பகுதியில் மிகப்பழமையான இரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள், கிரெடேசியஸ் யுகத்திற்கு முந்தைய கண்டுபிடிப்புகள் இல்லாத போதிலும், சுமார் 226 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொசுவினங்கள் "அனாஃபிலினே, க்யூலிசினே" போன்ற துணைக்குடும்பங்களுக்கு வழிவகுக்கும் மரபுவழிகளாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றன. சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பழைய மற்றும் புதிய "அனாஃபிலஸ்" இனங்கள் பரிணாம மாற்றம் அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. "அனாஃபிலஸ் காம்பியா" சிற்றினம் மேலும் M(opti) மற்றும் S(avanah) என மூலக்கூறு நுண்வகைப்பாட்டில் வகைப்படுத்தப்படுகிறது. ஏனெனில், M(opti) வகை இனத்தில் வேலை செய்யும் சில பூச்சிக்கொல்லிகள் S(avanah) வகை இனத்தில் வேலை செய்வதில்லை. சுமார் 3,500 க்கும் மேற்பட்ட இனங்கள் க்யூலிசிடேவில் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுவாக இரண்டு துணைக்குடும்பங்ளாகப் பிரிக்கப்பட்டு, மேலும் 43 பேரினங்களாக வகைப் படுத்தப்படுகின்றன. இந்த வகைகள் மேலும் டி.என்.ஏ (மரபணு) ஆய்வுகளினால் இதன் வரிசை நிலைகளில் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகின்றன. "அனாஃபிலினே", "க்யூலிசினே" ஆகிய இரண்டு பிரதான துணைக்குடும்பங்களும் மேலும் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. அது மட்டுமல்லாது நோயைப்பரப்பும் நோய்க்காரணிகளைக் கொண்டும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. சான்றாக, மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் "க்யூலிசினே" வகைகளால் பரவுகின்றன. மலேரியா, யானைக்கால் நோயான ஃபைலேரியா, போன்றவற்றை அனாஃபிலின் கொசுக்கள் பரப்புகின்றன. உலகெங்கிலும் சுமார் 3500 சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில நோய்க்காரணிகளை கடத்துபவையாகவும், சில மனித இனத்தைத் துன்புருத்தாது விலங்குகளில் நோய் பரப்புவனவாகவும் இருக்கின்றன. பெரும்பாலான சிற்றினங்களில் இரத்தமுறிஞ்சும் கொசுக்கள் பெண் கொசுக்களாகும். சில சிற்றினங்கள் நோயைப் பரப்பும் நோய்பரப்பிகளாக இருக்கின்றன. சில வீட்டில் உள்ளோரிடம் நோயைப்பரப்புவனவாகவும், சில காட்டில் நடமாடுபவர்களிடம் நோயைப்பரப்புவனவாகவும் இருகூறுகளாக உள்ளன. கொசுக்கள் பாலினப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. இவை ஆண், பெண் என இரு பால் பிரிவுகளைக் கொண்டவை. ஆண் கொசுவினால் உற்பத்தி செய்யப்படும் 20-ஹைட்ராக்ஸிக்ஸிஸோன் (20-E) எனும் ஸ்டீராய்டு இயக்குநீர், புணர்தலின் போது பெண்கொசுவினுள் புணர்புழை வழியாக உட்செலுத்தப்படுகிறது. இந்த இயக்கு நீர் பெண் கொசுவிற்கு, இரத்தமுட்கொண்ட பிறகான முட்டை உற்பத்தி, முட்டையிடும் திறன், கருவுறுதிறன், மறுமுறை இனப்பெருக்கத்திற்கான உயர்வெப்பம் தாங்கும் தன்மை போன்ற வியத்தகு விளைவுகளை வழங்குகிறது. கொசுக்களின் வாழ்க்கைச்சுழற்சியில் நான்கு முக்கியப் பருவங்களைக் கொண்டுள்ளன. அவை முட்டை, குடம்பி (லார்வா புழு) (அ) இளவுயிரி, கூட்டுப்புழு, மூதுயிரி ஆகும். இவற்றின் உருமாற்ற நிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலின் வெப்பநிலை, சிற்றினத்தைப் பொருத்து வேறுபடும். 4-30 நாட்கள் வரையிலாக இதன் பருவ உருமாற்றம் நிகழ்கிறது. இதன் தேவையான வெப்பநிலை 60°F முதல் 80°F ஆகும். பெண்கொசுக்கள் மனிதரிடம் இரத்ததை உறிஞ்சியவுடன் முட்டையிடத் தேவையான புரதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பின்னர் இவை தேங்கியுள்ள நீர் நிலைகளில் முட்டையிடுகின்றன. "அனாஃபிலிஸ், ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ்" முட்டைகள் ஒவ்வொன்றாக இடப்படுகின்றன. இவை ஒன்றிணைவதில்லை. ஆனால் "க்யூலிசிடே," "க்யூலெக்ஸ்" போன்ற கொசுக்களின் முட்டைகள் சுமார் 100-200 எண்ணிக்கையில் இருக்கும். இவை இணைந்து தெப்பம் போல நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றன. "ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ்" போன்ற இனங்கள் ஈரமான இடங்களில் முட்டையிடுகின்றன. சாதகமான சூழலில் இவை நீரில் சென்று பொறிக்கப் படுகின்றன. பெரும்பாலான கொசு முட்டைகள் 48 மணி நேரத்திற்குள் பொறிக்கப்பட்டு குடம்பியாகின்றன. முட்டையிலிருந்து பொறிக்கப்படும் குடம்பி (அ) லார்வா புழுக்கள் பருத்த தலையுடனும், உணவுண்ணப் பயன்படும் வாய்த்தூரிகைகளுடனும், பரந்த மார்புப்பகுதியையும் பெற்றுள்ளன. இவை கால்களற்று, உடற்கண்டங்களைக் கொண்ட வயிற்றுப்பகுதியையும் பெற்றுள்ளன. இவை ஸ்பைராக்கல் எனப்படும் வயிற்றின் எட்டாவது உடற்கண்டத்திலுள்ள சுவாசத்துவாரங்கள் வழி சுவாசிக்கின்றன. அடிக்கடி நீரின் புறப்பரப்பிற்கு நகர்ந்து சுவாசத்தை மேற்கொள்கின்றன. மேலும் புறப்பரப்பிலுள்ள பாக்டீரியா, பாசிகள், மற்றும் பிற நுண்ணுயிரிகளை ஊட்டமாகக் உட்கொள்கின்றன. சைஃபோன் குழாய்களை நீரின் புறப்பரப்பில் மிதக்க வைத்து தலைகீழாக நீரில் மிதந்து அதன் மூலம் சுவாசிக்கின்றன. ஆனால் அனாஃபிலஸ் இனத்தில் சைஃபோன் குழாய்கள் இல்லாததால் நீரின் புறப்பரப்பில் மிதந்து சுவாசிக்கின்றன. நான்கு முறை தோலுரித்தல் மாற்றம் நிகழ்கின்றது. ஒவ்வொரு முறையும் உருவ அளவில் பெரிதாகின்றன. நான்காவதுமுறை தோலுரித்தலின் பிறகு கூட்டுப்புழுவாக மாற்றமடைகின்றன. கூட்டுப்புழு பருவத்தில் அவை ஊட்டமில்லாமல் ஓய்வு நிலையில் இருக்கின்றன. இவை ஒளிநிலைகளால் வாலினைக் கொண்டு இடம்பெயர்கின்றன. இக்கூட்டுபுழுக்கள் வண்ணத்துப்பூச்சிகளில் உள்ள பருவநிலையைப் போன்று மூதுயிரியாக மாற்றாமடைகின்றன. கூட்டுபுழுவிலிருந்து வெளிவரும் மூதுயிரி நீரின் புறப்பரப்பினின்று, ஈரத்தை உலர்த்துகிறது. பின்னர் பறப்பதற்கு ஏதுவாக அதன் இறக்கைகள் நன்கு உலர்விக்கப்படுகின்றன. இவைகள் மூதுயிரியாக மாற்றம் பெற்ற இரு நாட்களுக்கு உணவு உட்கொள்ளுதலும், இனப்பெருக்கமும் பெரும்பாலும் மேற்கொள்வதில்லை. தாவரச் சாற்றைப் பெரும்பாலும் உட்கொள்கின்றன. பெண் கொசுக்கள் முட்டையிடும் திறனின் புரதத்தேவைக்காக இரத்ததை மனித, விலங்குகளின் தோற்பகுதியிலிருந்து உறிஞ்சுகின்றன. கொசுக்கடித்தவுடன் மனித உடலின் நோயெதிர்ப்பாறலானது கொசுவின் உமிழ் நீரிலிருந்து வெளிவரும் IgG, IgE உடன் இணைந்து நோயெதிர்ப்புத்தன்மையைத் தூண்டுகின்றன. இதனால் அரிப்பு, வீக்கம், மற்றும் தோல் சிவக்கிறது. சில கொசுக்கடிகள் உடனேயும், சில மணித்துளிகளிலும், சில் நாட்பட்ட எதிர்வினைகளைக் காட்டுகின்றன. அரிப்பு ஒவ்வாமையைத்தடுக்க அதன் தன்மைக்கேற்ப பென்ஹைட்ராமைன், பரப்புகளில் தடவ ஆன்திஸ்டாமைன், தீவிர சிகிச்சையில் கார்டிகோஸ்டீராய்டுகளான ஹிட்ரோகார்டிசோன், ட்ரைஅமிக்னாலோன் முதலிய பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாபர் பாபர் ("Babur") எனப்படும் சாகிருதீன் பாபர், அல்லது சாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார். தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார். இவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார். பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும். பானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது. தில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற்கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது. இவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை. இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது. பிசுமில்லா கான் உஸ்தாத் பிஸ்மில்லா கான் (மார்ச் 21, 1916 - ஆகஸ்ட் 21, 2006) உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது ஆசான் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார். இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார். எக்குவடோர் எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தற்போது ஈக்குவடோர் என அழைக்கப்படும் நாடு முன்னர் அம்ரிஇந்தியன் குழுக்களின் தாயகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக இன்கா பேரரசுடன் 15ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டது.16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி எசுப்பானியர்கள் கட்டுக்குள் வந்தது, 1820ஆம் ஆண்டு பெரிய கொலம்பியாவின் பாகமாக விடுத லை பெற்றது. அதிலிருந்து 1830இல் இறையாண்மையுள்ள தனி நாடாக விடுதலையடைந்தது. இரு பேரரசுகளின் மரபு எச்சத்தை இந்தாட்டின் பரந்துபட்ட இன மக்கள் தொகையில் காணலாம். 15.2 மில்லியன் மக்களில் பெரும்பான்மையோர் மெசிசிடோசுக்கள் (ஐரோப்பிய அமெரிஇந்திய கலப்பினம்). அவர்களுக்கு அடுத்து ஐரோப்பியர்கள், அமெரிஇந்தியர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் உள்ளனர். எசுப்பானியம் அதிகாரபூர்மான மொழியாகும் இதுவே பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. இருந்தாலும் 13 அமெரிஇந்திய மொழிகளும் அரசால் தகுதிபெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. , .கித்தோ நாட்டின் தலைநகரமாகும். குவாயாகில் நாட்டின் பெரிய நகரமாகும். கித்தோவின் வரலாற்று சிறப்புமிக்க நடுப்பகுதி யுனெசுகோவின் ( ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ) உலகப் பாரம்பரியக் களம் என்று 1978இல் அறிவிக்கபட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய நகரான கியுன்கா உலகப் பாரம்பரியக் களம் என்று அதன் நகர திட்டமிடல், எசுப்பானிய பாணி கட்டடங்கள் போன்றவற்றுக்காக 1999இல் அறிவிக்கப்பட்டது. ஈக்குவடோர் வளரும் நாடாகும் இதன் பொருளாதாரம் பாறைநெய் விவசாய பொருட்களை சார்ந்து உள்ளது. நாடு நடுத்தர வருவாய் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகத்து 24 சுருதி சுருதி (சமற்கிருதம்: श्रुति) எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது "கேள்வி" என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது. நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர். சுருதி இரு வகைப்படும். அவையாவன: சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம். சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது. பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள் இவரை "வெயிகீத" (1000 கீத்ங்களை செய்த) பைடால குருமூர்த்தி சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. "பைடால" என்பது இவரின் வீட்டுப் பெயர் ஆகும். முரிகி நாட்டுத் தெலுங்கு பிராமணர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கயத்தார் எனும் கிராமம் இவரது பிறந்த ஊராகும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் விசேட பாண்டியத்தை அடைந்தவர். சதுசாஸ்திரபண்டிதர் 18ம் நூற்றாண்டில் விளங்கிய சிறந்த லக்ஷ்ண லக்ஷய வித்துவான்களில் ஒருவர். அதிபால்யத்திலேயே சென்னைப் பட்டணத்திற்கு வந்து மனவி சின்னையா முதலியாரவர்களால் விசேடமாக கெளரவிக்கப்பட்டு வந்தார். சென்னைப் பட்டணத்திலேயே அதிக காலம் வாழ்ந்தார். இவர் அனேக லக்ஷண கீதங்களையும், சஞ்சாரி கீதங்களையும், பிரபந்தங்களையும், கீர்த்தனைகளையும் சமஸ்கிருத பாஷையில் த்ன்னுடைய பெயரையே முத்திரையாக வைத்துச் செய்தார். இவர் தினம் ஒரு கீதமாவது செய்வார். இவருடைய லக்ஷண கீதங்களும், சஞ்சாரி கீதங்களும் மிகப் பிரசித்தமானவை. எங்கும் பாடப்பட்டு வருகின்றன. கீத்ங்களைச் செய்த வாக்கேயகாரர்களில் இவரைப் புரந்தரதாசருக்கு அடுத்ததாகச் சொல்வோம். "கானவித்யா துரந்தரவேங்கட சுப்பையர்டுரோ" என்று சாஸ்திரிகள் செய்த ஒரு கீதத்தினின்றும் இவர் தஞ்சை துளசிமகாராஜாவின் சமஸ்தானத்தை அலங்கரித்த சொண்டி வெங்கட சுப்பையரவர்களின் சிஷ்யரென தெரிய வருகிறது. கீதங்களின் சாகித்யம் பகவான் ஸ்தோத்திரமாகவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் குருபரமாகக் கூட சாகித்யம் செய்யலாம் என்பதற்கு இந்த சப்த தாள கீதமே அத்தாட்சியாக விளங்குகிறது. பல கீர்த்தனகளைச் செய்து காஞ்சிபுரத்தில் சிறந்த வித்துவானாக விளங்கிய கூலசேக்ஷய்யரும் அழகான கீதங்களையும், ஸ்வரஜதிகளையும், வர்ணங்களையும் செய்த சோபனாத்ரி என்ற வாக்கேயகாரரும் குருமூர்த்தி அவர்களின் பிரதான சிஷ்யர்களாவர். மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி உலக நாடுகளின் பட்டியலாகும். இங்கு மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்ட முன்று அட்டவணைகள் தரப்பட்டுள்ளது. நடு ஆசியா நடு ஆசியா, ஆசியா கண்டத்தின் நடுவில் உள்ள, நிலப்பகுதியால் சூழப்பட்ட, பரந்த ஒரு பகுதியாகும். நடு ஆசியா என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன எனினும், எதுவுமே பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் எல்லைகளை வரையறுப்பதில் தெளிவின்மை நிலவினாலும்கூட, இந்தப் பகுதிக்கெனப் பொதுவான இயல்புகள் சில உள்ளன. முதலாவதாக, நடு ஆசியாவானது, வரலாற்று நோக்கில், நாடோடி மக்களோடும், பட்டுப் பாதையோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா, கிழக்காசியா ஆகிய பகுதிகளிடையே, மக்கள், பொருட்கள், எண்ணக்கருக்கள் என்பவற்றின் பரிமாற்றத்துக்கான இணைப்புப் பாலமாக விளங்கியது. நடு ஆசியா ஒரு தனித்துவமான பகுதி என்ற எண்ணக்கரு, 1843 ஆம் ஆண்டில், புவியியலாளரான, அலெக்சாண்டர் வொன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இப்பகுதியின் எல்லைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஸ்டாலினுக்கு முன்பிருந்த முறைமையைத் தழுவி, பல பாடநூல்கள் இன்னும் இப்பகுதியை துருக்கிஸ்தான் என்றே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். நடு ஆசியாவுக்கான மிகக் குறுகிய பரப்பளவைக் குறிக்கும் வரைவிலக்கணம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ வரைவிலக்கணமாகும். இதன்படி நடு ஆசியா, உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தாஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளையே உள்ளடக்கியிருந்தது. கசாக்ஸ்தான் இதில் உள்ளடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில், அதற்கு வெளியேயும் இவ்வரைவிலக்கணம் புழக்கத்தில் இருந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், தாஷ்கண்ட் நகரில் கூடிய முன்னாள் சோவியத் ஒன்றிய நடு ஆசியக் குடியரசுகளின் தலைவர்கள், நடு ஆசியக் குடியரசின் வரைவிலக்கணத்தினுள் கசாக்ஸ்தானையும் சேர்த்துக்கொள்வதென முடிவு செய்தனர். இதன் பின்னர் இது ஒரு பொதுவான வரைவிலக்கணமாகக் கருதப்பட்டு வருகின்றது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுறுவதற்குச் சில காலத்துக்கு முன் எழுதப்பட்ட "நடு ஆசியாவின் யுனெஸ்கோ பொது வரலாறு" என்னும் நூல் காலநிலை அடிப்படையில் நடு ஆசியாவை மிகப் பரந்த ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டது. இதன்படி நடு ஆசியாவில் மங்கோலியா, மேற்கு சீனா, வடகிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மேற்குப் பகுதி, தைக்காவுக்குக் கிழக்கேயுள்ள ரஷ்யாவின் மைய-கிழக்குப் பகுதி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஐந்து மத்திய ஆசியக் குடியரசுகள் என்பவற்றுடன், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலுள்ள பஞ்சாப் பகுதியும் அடங்கியிருந்தது. இன அடிப்படையில் நடு ஆசியாவை வரையறுக்கும் இன்னொரு முறையும் புழக்கத்தில் உண்டு. கிழக்குத் துருக்கிய, கிழக்கு ஈரானிய, மங்கோலிய இன மக்கள் வாழுகின்ற பகுதிகள் நடு ஆசியாவாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி, சின்சியாங் (Xinjiang), தெற்கு சைபீரியாவின் துருக்கிய/முஸ்லிம்கள் வாழும் பகுதி, ஐந்து முன்னாள் சோவியத் குடியரசுகள், ஆப்கான் துருக்கிஸ்தான், என்பனவும் நடு ஆசியாவினுள் அடங்குகிறது. திபேத்தியர்களும் இதனுள் அடங்குகின்றனர். முன் குறிப்பிட்ட இன மக்களே பரந்த இப் பகுதிகளின் ஆதிக் குடிகளாவர். சீனர், ஈரானியர், ரஷ்யர் ஆகியோரின் குடியேற்றங்கள் பின்னர் ஏற்பட்டவையாகும். ஆசியாவின் புவியியல் மையம் தற்போது ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள துவா குடியரசில் உள்ளது. நடு ஆசியா, பல்வேறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்ட மிகப் பரந்த பகுதியாகும். இங்கே, உயர் நிலங்களும் மலைகளும், பரந்த பாலைவனங்கள், மரங்களற்ற, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்ற, யுரேசியப் புல்வெளிகள் அடங்கியுள்ளன. நடு ஆசியாவின் பெரும்பகுதி, வறண்டது. வேளாண்மைக்குப் பொருத்தமற்றது. கோபி பாலைவனம், 77° கிழக்கிலுள்ள பாமிர் மலைகள் அடிவாரத்திலிருந்து, 116°-118° கிழக்கிலுள்ள கிங்கன் மலை வரை பரந்துள்ளது. ஆமூ தாரியா ஆறு இப்பகுதியில் பாய்கிறது. 1153 1153 ((MCLIII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல. மலாயத் தமிழியல் மலாய்த் தமிழியல் ("Malay Tamil Studies") என்பது மலாய் மொழி, மலேசியா, மலாய்க்கார மக்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆய்வு செய்யும் ஒரு துறை அல்லது ஓர் இயல் ஆகும். பட்டுப் பாதை பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது., இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம். பட்டுப் பாதை என்ற சொல்லுக்கு நிகரான "Seidenstraße" என்னும் ஜெர்மானியச் சொல்லை, 1877 இல், இப் பாதைக்கும் பெயராக வைத்தவர் பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்னும் ஜெர்மானியப் புவியியலாளர் ஆவார். வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, புல்கர்-கிப்சாக் (Bulgar–Kypchak) பகுதியூடாக கிழக்கு ஐரோப்பாவுக்கும், கிரீமியன் தீவக்குறை க்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, கருங்கடல், மர்மாராக் கடல் என்பவற்றைக் கடந்து பால்கன் பகுதியூடாக வெனிசை அடைகின்றது. தெற்குப் பாதை, துருக்கிஸ்தான்-கோராசான் ஊடாக மெசொப்பொத்தேமியா, அனதோலியா சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள அண்டியோச் ஊடாக மத்தியதரைக் கடலுக்கோ அல்லது, லேவண்ட் ஊடாக எகிப்துக்கும், வட ஆபிரிக்காவுக்குமோ செல்கிறது. பண்டை காலத்தில் முக்கிய வர்த்தகர்கள் இந்தியர்கள் மற்றும் பாக்ட்ரியன் மக்கள். பின்னர் 5ஆம் நூற்றாண்டில் இருந்து 8 ஆம் நூற்றாண்டு வரை சொக்டியன் வர்த்தகர்களும், பின்னர் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களும் பட்டுப்பாதையை பயன்படுத்தினர். இந்த விரிவான கண்டம் முழுவதும் இணைக்கும் வகையிலான வர்த்தக பாதைகளில் ஒரு இலாபகரமான சீன பட்டு வணிகம் நடைபெற்று வந்த காரணத்தினால், இப்பாதைக்கு பட்டுப்பாதை என்று பெயர் வந்தது. விலங்குகளை கொல்லைப்படுத்தல் மற்றும் கப்பல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கலாச்சார பரிவர்த்தனை மற்றும் வணிகம் வேகமாக வளர்ந்தது. மேலும், அங்கிருந்த புல்வெளி வளமான மேய்ச்சல், நீர் தேவைகளை பூர்த்தி செய்ததோடு வணிகர்கள் எளிதாக புழங்குவதற்கும் வழிவகுக்கிறது. ஆசியாவின் பரந்த புல்வெளி விவசாய நிலங்களுக்குள் புகாமல், பசிபிக் கடற்கரையில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை மகத்தான தொலைவு பயணம் செய்ய வியாபாரிகளுக்கு உதவியது. கி.மு. 1070 ஐ சேர்ந்த சீன பட்டின் சில பகுதிகள் பண்டைய எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் போதியளவு நம்பகமாக தெரிகிறது என்றாலும், துரதிருஷ்டவசமாக அது ஒரு வகை சீனாவில் பயிரிடப்பட்ட பட்டா அல்லது மத்திய தரைக்கடல் பகுதியில் அல்லது மத்திய கிழக்கில் இருந்து வந்த பட்டா என துல்லியமாக சரிபார்க்க முடியாது. கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாயுவான், பார்த்திய மற்றும் பக்திரிய நாடுகளுடனான அரசாங்க உறவு பேணும் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கத்திய உலகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சாலை உருவானது. இந்த பட்டுப்பாதை மக்கள் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை பரிமாறி கொள்ள வாய்ப்பு கொடுத்து. சுமார் 1207 ல் இருந்து 1360 வரை ஆசிய கண்டம் முழுவதும் மங்கோலிய விரிவாக்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவந்ததோடு மீண்டும் பட்டு பாதையை (காரகொரம் வழியாக) நிறுவ உதவின. இது உலக வணிகத்தின் மீது இஸ்லாமிய கலிபாவின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மங்கோலியர்கள் வாணிக வழித்தடங்களில் ஆதிக்கம் செலுத்தியதால், அப்பகுதியில் மேலும் வர்த்தகம் வளர்ந்தது. மங்கோலியர்களுக்கு மதிப்பற்றதாக இருந்த ஒரு பொருள் மேற்கில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்பட்டது. இதன் விளைவாக, மங்கோலியர்கள் மேற்கிலிருந்து பல ஆடம்பரமான பொருட்களை பெற்றனர். ஐரோப்பாவில் ஆரம்ப நவீனத்தின் காரணமாக பிராந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்தன. ஆனால் பட்டுப்பாதையில் இது ஒரு எதிர் தாக்கத்தை ஏற்படுத்தியது. மங்கோலிய பேரரசின் ஒருங்கிணைப்பை தக்க வைக்க முடியாமல் வர்த்தகம் குறைந்தது. கொன்ஸ்டான்டிநோபிளில் ஒட்டோமன் மேலாதிக்கத்தை தொடர்ந்து 1453 யில் பட்டுப்பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அந்நாளைய ஒட்டோமான் ஆட்சியாளர்கள் மேற்கத்திய எதிர்ப்பாளார்களாக இருந்தனர். யுரேசிய நில பாலம் சில நேரங்களில் "புதிய சில்க் சாலை" என குறிப்பிடப்படுகிறது. பட்டுப்பாதை வழியாக உள்ள ரயில் பாதையின் கடைசி இணைப்பபாக, 1990 ல் சீனா மற்றும் கஜகஸ்தான் ரயில் அமைப்புகள் அலாட்டா கணவாயில் இணைக்கப்பட்டுள்ளது. 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு அமைதி மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக ஒரு சர்வதேச திட்டத்தை ஆரம்பித்தது. பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் ("Ferdinand Freiherr von Richthofen" 1833 - 1905), ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும், பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார். இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே (Karlsruhe) என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின் நகரில் கல்வி கற்றார். 1860ஆம் ஆண்டில், "யூலென்பர்க் பயணம்" (Eulenburg Expedition) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும் இடையில், இலங்கை, ஜப்பான், தாய்வான், செலெபெஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், சீயாம், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும் இடையில், ஐக்கிய அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை சீனா, ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார் (செலவாகச் சென்றுள்ளார்). இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இவர், 1875 இல் பொன் (பான்) பல்கலைக்கழகத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1883 இலும், 1886 இலும் முறையே லீப்சிக் பல்கலைக்கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் பெர்லினில் 1905ம் ஆண்டு இறந்தார். மார்ச் 14 மார்ச் 12 மார்ச் 13 அரபுத் தமிழியல் அரபுத் தமிழியல் ("Arabic Tamil Studies") என்பது அரபு மொழி, அரேபியா மற்றும் பிற முஸ்லீம் நாடுகள், முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். பொசுபோரசு பொசுபோரசு (பொஸ்போரஸ், "Bosporus") என்பது கருங்கடலையும் மர்மாராக் கடலையும் இணைக்கும் ஒரு நீரிணையாகும். இது துருக்கி நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலகக் கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த அகலம் கொண்டது இதுவே. இது அண்ணளவாக 30 கிமீ நீளமானது. இதன் வடக்கு நுழைவாயிலில் ஆகக் கூடிய அளவாக 3700 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700மீட்டர் ஆகும். இதன் ஆழம் 36 தொடக்கம் 124 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது. இதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும். ஆகத்து 25 நரம்பணுவியல் நரம்பணுவியல் ("Neuroscience") நரம்பு மண்டலத்தின் அமைப்பையும், அது எவ்வாறு மனித இயக்கத்தை ஏதுவாக்கின்றது என்பதையும் விரிவாக ஆயும் அறிவியலாகும் . குறிப்பாக மூளையின் அமைப்பையும் இயக்கத்தையும் நோக்கிய ஒருங்கிணைந்த புரிதலை தர நரம்பணுவியல் முயல்கின்றது. நரம்பு மண்டலத்தை இரண்டாகப் பிரிப்பர். அவை புறநரம்பு மண்டலம் மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். அவை 12-ஆம் நூற்றாண்டு கிபி 12ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1101 தொடக்கம் கி.பி. 1200 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. 11-ஆம் நூற்றாண்டு 11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் "உயர் மத்திய காலப்பகுதி" என் அழைக்கப்படுகிறது. ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல் இது மொத்த தேசிய உற்பத்தி ஆள்வீத வருமானத்தின் அடிப்படையில் நிலைபடுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். இங்கு 2005 ஆம் ஆண்டுக்கான ஆள்வீத வருமான அமெரிக்க டொலரில் தரப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நிதி நிறுவனம் (International Monetary Fund) இல் அங்கத்துவம் பெற்றுள்ள 180 நாடுகளுக்குத் தரப்பட்டுள்ளது. குடியேற்றவாதம் குடியேற்றவாதம் (Colonialism) என்பது, ஒரு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின்மீது, குடியேற்றம் செய்வதன்மூலமோ, நிர்வாக முறையில் அடிப்படுத்துவது மூலமோ, அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதைக் குறிக்கும். இச் செயற்பாடின்போது உள்ளூர் மக்கள் நேரடியாக ஆளப்படுகிறார்கள் அல்லது இடம் பெயரச் செய்யப்படுகின்றார்கள். குடியேற்றம் செய்பவர்கள், பொதுவாகக் குடியேறிய பகுதிகளின் வளங்கள், உழைப்பு, சந்தைகள் என்பவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சில சமயங்களில், சமூக-பண்பாட்டு, சமய மற்றும் மொழிக் கட்டமைப்புகளை உள்ளூர் மக்கள் மீது திணிப்பதும் உண்டு. குடியேற்றவாதம் என்பது மேற்படி செயற்பாடுகளை நியாயப் படுத்துவதற்கும், வளர்த்தெடுப்பதற்குமான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது உண்டு. குடியேற்றவாதம் பொதுவாக, குடியேறுபவர்களுடைய பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், உள்ளூர் மக்களுடையவற்றைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழக்கம். குடியேற்றவாதத்தின் தோற்றப்பாடு, பல்வேறு கால கட்டங்களிலும் உலகம் தழுவிய நிலையில் காணப்பட்டாலும், இது பொதுவாக ஐரோப்பியப் பேரரசுகள் தொடர்பிலேயே சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் காலனித்துவத்தின் இரண்டு பரந்த வடிவங்களுக்கு இடையில் வேறுபடுகிறார்கள்: காலனித்துவவாதம் என்று அழைக்கப்படும் செயல்பாடு, காலனிய ஆபிரிக்க பேரரசுகளுடன் தொடங்கி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது எகிப்தியர்களுக்கு, ஃபீனீசியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் மற்ற நாடுகளைக் காலனித்துவப்படுத்த வழிவகுத்தது. "காலனி" என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான கொலோனியாவில் இருந்து வருகிறது, அது "வேளாண்மைக்கு ஒரு இடம்" என்பதாகும். 11 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், வியட்னாமியர்கள் தங்கள் பிராந்திய எல்லைக்கு தெற்கே இராணுவக் குடியேற்றங்களை அமைத்தனர்.கண்டுபிடிப்புகளின் காலத்தில் (Age of discovery) நவீன காலனித்துவம் தொடங்கியது 17 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனித்துவ பேரரசு, டச்சு பேரரசு மற்றும் பின்னர் பிரிட்டிஷ் பேரரசு ஆகியவை உருவாகியது. பின்னர் டேனிஷ் காலனித்துவ பேரரசு மற்றும் சில ஸ்வீடிஷ் வெளிநாட்டு காலனிகள் நிறுவப்பட்டது.காலனித்துவ பேரரசுகளின் பரவலானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க புரட்சிப் போர் மற்றும் லத்தீன் அமெரிக்க சுதந்திரப் போர்கள் ஆகியவற்றால் குறைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் பல புதிய காலனிகள் நிறுவப்பட்டன, ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் பெல்ஜிய காலனித்துவ பேரரசு உட்பட. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தன. ரஷ்ய சாம்ராஜ்ஜியம், ஒட்டோமான் பேரரசு மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்ஜியம் ஆகியவை மேலேயுள்ள பேரரசுகளின் அதே காலப்பகுதியில் இருந்தன, ஆனால் கடல் கடந்து சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கவில்லை. மாறாக, இந்த பேரரசுகள் அண்டை பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான பாரம்பரிய வழிகளைப் பயன்படுத்தி சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய வைத்தது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் பெர்ரிங் ஜலசந்தியைத் தாண்டி சில ரஷ்ய குடியேற்றங்கள் இருந்தன. ஸ்பானிய-அமெரிக்க போர் முடிந்த பிறகு அமெரிக்கா அதனை சுற்றியுள்ள வெளிநாட்டுப் பகுதிகளை பெற்றது. அந்நாடுகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தது. இதற்குகாக "அமெரிக்க சாம்ராஜ்ஜியம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின், வெற்றிபெற்ற நேச நாடுகள் ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்கு காலனித்துவ அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.பிரிட்டிஷ், பிரஞ்சு, டச்சு மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி ஒரு காலனித்துவ பேரரசை உருவாக்க ஜப்பானின் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பசிஃபிக் பெருங்கடலில் பெரும் யுத்தம் நடைப்பெற்றது. ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் போரினை உருவாக்கி அதை வைத்து பிரிட்டிஷ், ஃபிரெஞ்சு மற்றும் ரஷ்யப் பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி காலனித்துவ பேரரசுகளை உருவாக்கும் எண்ணத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் முயற்சித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனித்துவ மாற்றம் அல்லது காலனித்துவத்தில் இருந்து விடுபட பல நாடுகள் விரைவாக முயற்சியெடுத்தன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்பட்டது.அவை: சுதந்திரமாக இயங்கும் டஜன் கணக்கான சுதந்திர போராட்ட இயக்கங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் ஒற்றுமைப் புரட்சிகர திட்டங்கள், முன்னாள் காலனிகளை வீழ்த்துவதில் கருவியாக இருந்தன.இவற்றில் இந்தோனேசியா, வியட்நாம், அல்ஜீரியா, கென்யா ஆகிய நாடுகளில் சுதந்திர போராட்ட போர்கள் இடம்பெற்றன.இறுதியில், ஐரோப்பிய சக்திகள், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் காலனித்துவ சக்திகள் தாங்களாகவே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு விடுதலையளித்தன. * ஆப்கானித்தான் இலட்டு இலட்டு, ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது. 1974 1974 (MCMLXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (16 அக்டோபர் 1700 - 1765) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞராவார். திருவாரூர் மாவட்டத்தில் தக்ஷண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த க்ஷேத்திரம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும்.இந்த ஊர் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரின் தந்தையார் ராமச்சந்திர வாதுளர். இவரது தாயார் கமலநாராயணி. அவதார காலம் ஆவணி மாத மக நட்சத்திரம். இவரது காலம் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்பன் காலம். இவரது சன்மார்க்க குரு கிருஷ்ண பரமாத்மா. வெங்கட சுப்பையருக்கு இளமையிலேயே இசையில் ஆர்வம் காணப்பட்டது. நீடா மங்கலத்தில் வாழ்ந்து வந்த நடேச ரத்தின பாகவதரிடம் இவர் இசை பயின்றார். மிக விரைவிலேயே பயிற்சி முடிவுற்றது. எனக்குத் தெரிந்தவையெல்லாம் சொல்லித் தந்துவிட்டேன், வேறு ஆசிரியரிடம் மேலும் கற்றுக் கொள் என குரு சொல்லி விட்டதும் வேறு ஆசிரியரைத் தேடினார். வேறு குரு கிடைக்காத நிலையில் தாயின் சொற்படி சிறீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு கலையைப் பயின்றார். நாளுக்கு நாள் தெய்வத் தன்மை தோய்ந்து தெய்வத்தன்மையான பாடல்களைப் புனைந்தார். கண்ணனின் திருவிளையாடல்களைப் புனைந்து எண்ணற்ற பாடல்களை இயற்றத் தொடங்கினார். சில காலத்தின் பின்னர் தாயார் இறந்ததும் உலக வாழ்வில் பற்றற்று இறுதி வரை துறவியாகவே வாழ்ந்தவர். பல காலத்தின் பின் தற்போது பெரிய இசைக்கலைஞர்கள் முதல் இளங்கலைஞர்கள் வரை அனைவரும் இவரது பாடல்களைப் பயின்று மேடைகளிலும் பாடி வருகின்றனர். 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது 266வது ஜயந்தி கொண்டாடப்பட்டது. இவரது ஒரே மாணவர் ருத்திர பசுபதி நாயனக்காரர். மற்ற மாணவர்கள் குடும்பத்திலுள்ள சகோதரர், புத்திரிகள். இவரது சகோதரர் காட்டுக் கிருஷ்ணய்யருடைய பெண் வழியே 6வது தலைமுறையில் வந்த நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பாடியும், தொகுத்தும், வெளியிட்டும் பணியாற்றி வருகிறார். காட்டுக் கிருஷ்ணய்யர் பெண் வழியே இன்னொரு கிளையிலே தோன்றிய கல்யாணசுந்தரம், இராஜகோபாலன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் கூடி ஊத்துக்காடு சோதரர் என்ற பெயரில் வெங்கட சுப்பையரின் பாடல்களைப் பிரபல்யப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறனர். இவரது பாடல்களில் ஓங்காரசித்கைய காலிங்க நர்த்தனா என்று தொடங்கும் பாடல் ஊத்துக்காட்டில் உள்ள இறைவனைக் குறிக்கும். பக்கம் எண்:577 & 578, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.) ஜிப்ரால்ட்டர் நீரிணை ஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய நீரோட்டம் தொடர்ச்சியாக உள்ளது. நீரிணையில் காணப்படும் கற்படுகைகள், அட்லாண்டிக்கின் குளிர்ந்த, உவர்ப்புக் குறைந்த நீரும், மத்தியதரைக் கடலின் சூடான, கூடிய உவர்ப்புத்தன்மை கொண்ட நீரும் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன. மத்தியதரைக் கடல் நீரின் உவர்த்தன்மை காரணமாக, இந்த நீர் எப்பொழுதும் உள்ளே வந்துகொண்டிருக்கும் அட்லாண்டிக் நீரின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. இது நீரிணையின் அடியில் மிகவும் உவர்த்தன்மை கொண்ட நீர்ப்படையாக உருவாகி உள்ளது. இந்த இருவேறு அடர்த்தி கொண்ட நீர்ப்படைகள் சந்திக்கும் தளம் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. இது அட்லாண்டிக் கடலடியிலுள்ள கண்டச் சரிவின் வழியாகச் சென்று, உவர்த்தன்மை குறைந்து, சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் அட்லாண்டிக் நீருடன் கலக்கின்றது. இது மத்தியதரைக்கடல் வெளிநீரோட்டம் (Mediterranean Outflow) எனப்படுகின்றது. இந்த வெளிநீரோட்ட நீரை, அட்லாண்டிக் கடலினுள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு அடையாளம் காணமுடியும். மாதுரி மாதுரி மத்திர நாட்டின் அரசின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். வீடுமர் பீஷ்மர் மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர். சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும், வேதங்களை வசிஷ்ட முனிவரிடமிருந்தும், வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார். எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டுமெனவும் அந்த எட்டுப் பேரின் தலைவனான பிரபாசன், தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடியதால் அதிககாலம் பூமியில் வாழ்வான் என்று வசிட்டர் சாபமிட்டார். என்வரும் தங்கள் தவறுக்காக மன்னிப்பு வேண்டினர். வசிட்டரும் அவர்களை மன்னித்து எட்டு வசுக்களில் ஏழு பேர் பிறந்த உடன் இறந்துவிடுவார் என்றும் பிரபாசன் மட்டும் அதிக காலம் வாழ்ந்து தர்மத்தினை காப்பான் என்றும் மேலும் அவன் பூமியில் வாழும் வரை அவனை வெல்பவர் எவரும் இருக்கமாட்டார் எனவும் தனது சாபத்தினை மாற்றினார். அந்த பிரபாசனே சந்திர வம்சத்தில் சந்தனு மற்றும் கங்கை தம்பதியருக்கு எட்டாவது மகனான தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட பீஷ்மர் ஆவார். பீஷ்மரை வெல்ல அகிலத்தில் எவரும் இல்லாத பொழுதும், தன் தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியின்படி அஸ்தினாபுரத்தினை காக்க கௌரவர் பக்கம் நின்று யுத்தம்புரிந்தார், மேலும் தர்மம் பாண்டவர் பக்கம் இருந்ததால் தன் உயிரையும் விட்டுக்கொடுத்து, தர்மத்தை காத்தார். தம்பி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் மூன்று அரசகுமாரிகளை, சுயம்வரத்தின் போது கவர்ந்து வந்தார். அப்போது அம்பை மட்டும் சால்வன் என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து, அவளை சால்வனிடம் அனுப்பிவைத்தார். சால்வன் அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் அம்பை, பீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்கவேண்டினாள். பீஷ்மரோ தான் செய்துள்ள சபதத்தைக் கூறி ஏற்க மறுத்தார். "நான் எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், சால்வனோ, விசித்ரவீர்யனோ உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றித் தேடினாள், எல்லா சத்திரியர்களும் பீஷ்மருக்காக பயந்தார்கள். அவள் இறுதியில் பரசுராமனின் உதவியை நாடினாள், அவர் பீஷ்மரின் குரு. அம்பாவின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன பரசுராமர் தனது சீடருடன் சண்டையிட்டார், சண்டை பல நாட்கள், மாதங்கள் என நீடித்தது. இறுதியில் பரசுராமர் பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது, அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் கொல்லவும் முடியாது சண்டையைத் தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று பரசுராமன் சண்டையை நிறுத்தினார். குழம்பிய அம்பை, பீஷ்மரை கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண், உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவம் இருந்தாள். சிவன் அவள் முன் போன்றி "நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்" என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய அம்பா தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ஊர்வசி, கங்கை, சத்தியவதி போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் அம்பை வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர். குருசேத்திரப் போரின் பத்தாம் நாள் போர்த் தொடங்கியவுடன்,அருச்சுனன் பீஷ்மரை நோக்கி பல அம்புகளை எய்தான்,எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை கோபம் கொண்ட கிருட்டிணன் தேரிலிருந்து கீழே குதித்து தனியே கீழே கிடந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை தாக்க ஓடினார்."குருசேத்திரப் போரில் ஆயுதமே எடுக்க மாட்டேன்" என போருக்கு முன் சபதம் செய்துவிட்டு,இப்போது ஆயுதம் எடுத்துவட்டதை உணர்ந்து கிருட்டிணனை நோக்கி ஓடி "நான் பீஷ்மரைக் கொல்வேன்" என்று உறுதி எடுத்தான்."தனது மரண நேரத்தை தானே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவராயிற்றே,அவரை கொல்ல முடியாது னாலும் அவரை செயல் இழக்கச் செய்தால், அவர் உடலை அசைக்க முடியாதபடி படுக்கவைத்துவிட்டாலே போதும்" "ஆனால் அவர் கையில் வில் இருக்கும் வரை அது முடியாது"."அப்படியானால் அவரை வில்லைப் பிடிக்காதபடி செய்" என்றார் கிருட்டிணன். "போர்க்களத்தில் வில்லை கீழே வைக்கமாட்டார்" என்றான் அருச்சுனன்."ஒரு பெண் நின்றால் கூட வில்லை வைக்க மாட்டாரோ?" என்று கிண்டலாக கேட்டார் கிருட்டிணன்."ஆனால் பெண்கள் போர்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லை"முடிவைத் தேடாமல் பிரச்சனையை மட்டுமே மனதில் கொண்டு பதில் சொன்னான் -அருச்சுனன்."திரௌபதியின் மூத்த சகோதரன் சிகண்டி ஆணா? பெண்ணா? அருச்சுனா சிகண்டி ஓர் ஆண் என்று நீ நம்பினால் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு போ,சிகண்டி ஒரு பெண் என்று பீஷ்மர் எண்ணினால் பீஷ்மர் வில்லை கீழே வைத்துவிட்டு நீ போர் விதிகளை மீறிவிட்டாய் என்று கூறுவார்,அவரை வெற்றி கொள்ள அதுதான் உனக்கு வாய்ப்பு"."இது அநியாயம்"-அருச்சுனன், அது ஒவ்வொருவர் கருத்தைப் பொறுத்தது-கிருட்டிணன். சிகண்டி அருச்சுனன் தேரில் ஏறிக்கொண்டு பீஷமரை நோக்கி சவால்விட்டான்,சிகண்டியைக் கண்டதும் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகாது என்று வில்லை தாழ்த்தினார் பீஷ்மர்.இது தான் சமயம் என்றார் கிருட்டிணன்,சிகண்டியின் பின்னால் நின்ற அருச்சுனன் சரமாரியாக அம்புகளை பீஷ்மரை நோக்கி எய்தான்.மாபெரும் வீரரின் உடலை அம்புகள் துளைப்பதைக் கண்டு துரியோதனன் பிரமித்துப்போய் நின்றான், கௌரவர்களின் படைத்தலைவர் தன் தேரிலிருந்து கீழே விழுந்தார்.அவரது உடல் தரையில் விழாதபடி அம்புகள் தாங்கிக்கொண்டு இருந்தன.ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல்,இருந்தார்.பீஷ்மர் கடவுளின் ஆயிரம் நாமங்களை (சஹஸ்வர நாமம்) சபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள்.போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் பீஷ்மர் உயிர் துறந்தார். குருச்சேத்திரப் போர் சந்தனு சந்தனு மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் பீஷ்மர் எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் சித்ராங்கதன் எனும் மகனும், கௌரவர், பாண்டவர்களின் மூதாதையரான விசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். மகாபிஷக் மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சமமாக அமர்ந்து அப்ஸரக் கன்னிகைகளின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் தரவல்ல காமதேனு பசுவிடம், கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே, அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் மகாபிஷக் வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள். இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷனை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதிக்கு வரலாம் என்று கூறிவிட்டார். புரு வம்சத்தின் அரசர்களில் சிறந்த அரசன் பிரதிபன், தனது மகன்கள் இராச்சியத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, துறவு மேற்கொள்ளத் தீர்மானித்தான். மூத்த மகன் தேவபிக்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு சரும வியாதி இருந்ததால் (பார்க்கும்படி உள்ள குறை) சட்டப்படி பதவி மறுக்கப்படும் (பின்னாளில் திருதராஷ்டிரனுக்கு மறுக்கப்பட்டது) குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் சந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. தேவபி சந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான். இளையவனுக்கு அரசபதவி வழங்கப்படுவதற்கு இதுவே முதலும், முன்னுதாரணமும் ஆனது. துறவு மேற்கொண்ட பிரதிபன் ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது கங்கை வந்து அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். பெண்ணே நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமானவளாகிறாய், இடது தொடையில் அமர்ந்திருந்தால் மனைவியாவாய். (திருமணத்தின் போது மணப்பெண்ணை இடது பக்கம் அமரச்செய்து மங்கல நாண் அணிவிக்கிற நடைமுறை இன்றும் இந்தியா நிலவுகிறது.) ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன? நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன் என்றாள் கங்கை. அப்படியே நடக்கும் என்று ஆசி வழங்கினார் பிரதிபன் சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காணவந்த சந்தனுவிடம் கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நிறைவேற்று அது தான் என் விருப்பமும் என்றார் பிரதிபன். விரைவிலேயே கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் உடனே போய்விடுவேன். கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி சொல்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை - சந்தனு திருமணம் நடந்து முடிந்தது. கங்கை - சந்தனு இணையரின் முதல் குழந்தை பிறந்தது முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கிடையே கங்கை முதல் குழந்தையை கங்கை நீரில் மூழ்கடித்தாள். அழகான மனைவியை இழக்க விரும்பாத சந்தனு அமைதி காத்தான். அடுத்த வருடமும் இப்படியே நடந்தது, இப்படியே கங்கை ஏழு குழந்தைகளை ஆற்றிலே மூழ்கடித்தாள். ஒவ்வொரு முறையும் சந்தனு அமைதியாகவே இருந்தான். எட்டாவது குழந்தையை கங்கையில் விடும்போது சந்தனு அழுது கூச்சலிட்டான். "ஏ! இரக்கமில்லாதவளே நிறுத்து அவன் ஒருவனாவது வாழட்டும்" என்றான். கங்கை அவனை பார்த்து சிரித்தாள், "உங்கள் வார்த்தையை மீறிவிட்டீர்கள், புரூரவரை ஊர்வசி விட்டுச் சென்ற மாதிரி, நானும் உங்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் நதியில் விட்டது எட்டு வசுக்களில் ஏழுபேர், வசிட்டரின் பசுக்களை திருடிய குற்றத்திற்காக குழந்தைகளாக பிறக்க சாபம் பெற்றவர்கள். எட்டு பேரின் வேண்டுதலுக்காக நான் தாயானேன். அவர்கள் பூமியில் மிக மிகக் குறைந்த காலத்திற்கு வாழட்டும் என தீர்மானித்தேன், ஆனால் கடைசியாகப் பிறந்தவனை காப்பாற்ற முடியவில்லை, இவன் மிகவும் சிரமப்படுவான். திருமணம் செய்து கொள்ளமாட்டான். உமக்குப் பிறகு ஆட்சிக்கும் வரமாட்டான். உமக்கு அடுத்தபடியாக குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பான், ஆணாக இருக்கும் ஒரு பெண்ணின் கையால் மிக கேவலமாக மரணமடைவான்". குறுக்கிட்டான் "சந்தனு அப்படி நடக்காது, நடக்க விடமாட்டேன்" என்றான் ஆவேசத்துடன்."சரி விடுங்கள் உங்கள் மகனை வளர்த்து சிறந்த போர் வீரனாக்குவேன். போர் கலையில் தேர்ந்த பரசுராமனிடம் சீடனாகச் சேர்ப்பேன். மணவயதை அடைந்ததும் உங்களிடம் அழைத்து வருகிறேன் அப்போது சந்திப்போம்" என்று கூறி மகன் (வீடுமர்), தேவவிரதனுடன் மறைந்து விட்டாள், சந்தனு தனித்து விடப்பட்டான். கங்கை- சந்தனு இணையரின் மகனான தேவவிரதன் (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக, அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான். ஆனால் தேவவிரதன் (பீஷ்மர்) அரசாள மறுத்துவிட்டான். மீண்டும் சந்தனு காதல்வயப்பட்டான். கங்கையில் படகு ஓட்டிவந்த சத்தியவதியைக் கண்டான், அவளது உடலிலிருந்து வந்த இனிய நாற்றம் சந்தனுவை காதல் கொள்ள வைத்தது. சந்தனுவின் காதலை ஏற்க கங்கையைப் போன்றே அவளும் நிபந்தனை விதித்தாள். சந்தனுவின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள். தேவவிரதன் (பீஷ்மர்) ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும். குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான் தேவவிரதன். சத்தியவதி மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது தேவவிரதன் புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன், எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது. வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்) தேவவிரதனுக்கு தன் மரணத்தை, மரண நேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று வரமளித்தனர். (பீஷ்மர்) தேவவிரதன் பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான். சந்தனுவின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் என இருவர் பிறந்தனர். சிறிது காலத்திலேயே சந்தனு மரணமடைந்தான். அத்தினாபுரம் அத்தினாபுரம் (, Sanskrit: "Hastināpuram") (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது. தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது. இ. அம்பிகைபாகர் இ. அம்பிகைபாகர் (கவிஞர் அம்பி, பிறப்பு: பெப்ரவரி 17, 1929) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். 1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். தற்போது இடம்பெயர்ந்து சிட்னியில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதி வருபவர். இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழியில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். தினகரன் இதழில் வெளிவந்த "இலட்சியக் கோடி" என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானவர். தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர். கொழும்பில் பாடவிதான அபிவிருத்தி சபையில் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். அவுஸ்திரேலியாவில் தமிழ் மாணவர்களுக்கென பாட நூல்கள் உருவாக்கப்பட்டபோது இவரது ஆலோசனைகளும் பெறப்பட்டன. தலைமுறை இடைவெளி தொடர்பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்துள்ளார். இவர் தமிழுக்குச் செய்த அரும்பணிகளில் ஒன்று மருத்துவத் தமிழ் முன்னோடி மருத்துவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீனை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கிறீனுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள் முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன. அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன. அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. நாதசுவரம் நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது. தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம். இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வருமாறு: உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி. நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது "ஒத்து" என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது. நாதசுவரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதசுவர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல்படுவது வழக்கம். நாதசுவரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் "பெரியமேளம்" என அழைப்பர். நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழைமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர். நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்ததினாலான் கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும். நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து காயப்போட்டு ஒரு வருடம் ஆனதும் நெல் வேகவைக்கும் போது கூட வேக வைத்து, நீராகாரத்தில் ஊறவைத்து மிருதுவாக்கி சுதிக்கு ஏற்ப அதை வெட்டி சீவாளி தயாரிக்கிப்படுகிறது. இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும். நாதஸ்வரம் நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு:" திமிரி", "பாரி". திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும். மாநகர் சகோதரர்கள் நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது. கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும். நாதசுவரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும். ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும். கிளாரினெட் கிளாரினெட் ("clarinet") துளைக்கருவி ("aero phones") வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கருநாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. உலகின் முதல் நாகரிகமான எகிப்திய நாகரிக காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ஊதினார்கள். பின்னர் அது 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சலூமூ (Chalumeau) எனும் வாத்தியக் கருவியாக வடிவெடுத்தது. 17ஆம் நூற்றாண்டில் அது மேலும் புது வடிவெடுத்தது. பின்னர் அதில் ஒரு பிரிவாக, கிளாரினெட் என்னும் வாத்தியக் கருவி, 18ஆம் நூற்றாண்டில் 13 ஆகஸ்ட் 1655 இல் ஜெர்மனியில் லைப்சிக் என்னுமிடத்தில் பிறந்த யொஹான் கிரிஸ்டோப் டென்னர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிளாரினெட், கிட்டத்தட்ட 66 முதல் 71 செமீ வரை நீளமும், 12,5 மிமீ தொடக்கம் 13 மிமீ வரை அகலமும் கொண்டது. இன்று இக்கருவியின் பயன் விரிவடைந்து தற்போது ஜாஸ் இசையிலும் பயன்படுத்தப்படுகிறது. கிளாரினெட் ஏறக்குறைய நாதசுவரம் இசைக் கருவியின் வடிவத்தை ஒத்தது. ரீட் (Reed) என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும். 19ஆம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் சின்னமேளம் என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார். ஏ. கே. சி. நடராஜன் ஆகத்து 26 ஐ.எசு.ஓ 4217 ஐ.எசு.ஓ 4217 (ISO 4217) என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் நாணய மாற்று வீத பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம். குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது. மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஐஎஸ்ஓ 3166 இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக அமெரிக்க டொலர் USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஐஎஸ்ஓ 3166 இன் குறியீடாகும். இந்த சீர்தரம் முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயண்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரூபாய் நாணய அடுக்கு 2 ஐயும் யப்பானிய யென் நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது. ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி பொன், வெள்ளி, பிளேடியம் மற்றும் பிளாட்டினம் என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக தனிமக் குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்கத்தின் குறியீடு XAG ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம். பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு XCD ஆகும். யூரோ வின் குறியீடு EUR ஆகும் ஏனெனில் ஐஎஸ்ஓ 3166-1 சீர்தரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த ஐரோப்பிய நாணய அலகு XEU என குறிக்க்ப்பட்டது. பின்வரும் 14 நாணயங்கள் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை கொண்டிருந்த போது 2002 இல் யுரோவினால் பிரதியீடு செய்யப்பட்டது. கிராமிய இசை கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு "நாடோடி இசை", "நாட்டுப்பாடல்கள்" என்ற பெயர்களும் உண்டு. தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப்பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்: "மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." சத்தியவதி சத்தியவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சாந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய். மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா உபரிசரன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைத்துக்கொள்ள உஞ னே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிடவே அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கக் கேட்டுக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்து விட, அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின் சாபத்தால் மனித குழந்தைகளைப் பெறும் வரை மீனாக இருந்த அப்ஸர கன்னிகையாகும். சில நாட்களுக்குப் பின் செம்படவ மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்ஸ்யகந்தா எனப் பெயரிட்டு கிண்டலாக கொஞ்சுவான். மத்ஸ்யகந்தா கங்கையின் இக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை இக்கரைக்கும் ஏற்றிச் செல்வாள். ஒரு நாள் படகில் முனிவர் பராசரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியின் மீது மோகம் கொண்டு படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாகிப் பின்னர் கன்னியும் ஆகி விடுவாய் என்றும் அவளிடமுள்ள மீன் வாடையும் போகுமென்றும் உறுதியளித்தார். சத்தியவதி உடன்படவே அவரது தந்திரவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் மத்ஸயகந்தா தாயாகியும், பின் கன்னியும் ஆனாள். படகு பயணத்தின் போது மத்ஸ்யகந்தாவுக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவரே "கிருஷ்ண த்வைபாயனன்" என்ற வியாசர் ஆவார். இவரை சத்தியவதி யமுனை ஆற்றின் ஒரு தீவில் பெற்றெடுத்தார். பின்னாளில் இவரே மகாபாரதத்தை எழுதினார். இச்சம்பவத்திற்குப் பின் மத்ஸ்யகந்தாவின் புதிய வாசனை மிகுந்த உடல் அத்தினாபுரத்தின் அரசரான சாந்தனுவை ஈர்த்தது. சத்தியவதியை மணந்துகொள்ள விரும்பினார். மணம் செய்துகொண்டால் தனது பிள்ளைகள் நாடாள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சத்தியவதி சந்தனுவை மணம் செய்துகொண்டார். சித்திராங்தனும், விசித்திரவீரியனும் இவர்களுடைய மகன்கள் ஆவர். சித்திராங்கதன் திருமணம் செய்துகொள்ளாமலேயே சித்திராங்கதன் என்ற ஒரு கந்தர்வனுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான். தொடர்ந்து விசித்திரவீரியன் ஆட்சிக்கு வந்தான். மிகவும் பலவீனமானவன் தனக்கென ஒரு மனைவியைக் கூட தேடிக் கொள்ள முடியாதவன் என்றும், எந்த பெண்ணுக்கும் கணவனாகும் தகுதியற்றவன் என்றும், தனது சகோதரியை மணம் முடிக்க மறுத்து பீஷ்மர் பிரம்மசர்யம் அனுசரித்ததால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாய் சுயம்வர ஓலையை காசி மன்னன் அனுப்பவில்லை. தனக்கு அழைப்பு அனுப்பாதது தனது குலத்தையே அவமானப்படுத்துவதாகக் கருதிய பீஷ்மர் அம்பை, அம்பிகா, அம்பலிகா ஆகிய மூவரையும் கவர்ந்து வந்துவிட்டார். அம்பா மட்டும் சால்வநாட்டு அரசனை விரும்பியதால் மற்ற இருவரையும் விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார். சிறிது காலத்திலேயே குழந்தைகள் பிறக்கும் முன்பே விசித்திரவீரியன் மரணமடைந்த நிலையில், ஒரு பெரிய குரு வம்சத்தின் இராஜமாதாவாகும் கனவு சிதைந்து ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் கங்கையின் மைந்தன் பீஷ்மரிடம் போய் தனது விதவை மருமகள்களை கருத்தரிக்கச் செய்ய வேண்டி என் மகன் செய்ய முடியாததை நீங்கள் செய்யுங்கள் என்று கெஞ்சுகிறாள். பீஷ்மர் தான்செய்து கொண்டுள்ள சபதத்தையும், ஏற்றுக்கொண்டுள்ள பிரம்மச்சரியத்தையும் காரணம் காட்டி மறுத்துவிட தனது மூத்த மகன் கிருஷ்ண த்வைபாயனனை வியாசர் அழைத்து தனது மருமகள்களை கருத்தரிக்கச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுகிறாள். தாய் சத்தியவதியின் கட்டளைப்படி வியாசர் முதலில் அம்பிகையிடம் சென்றார். 14 ஆண்டுகள் காட்டில் சந்நியாசியாக இருந்த அவரது சிகை சடையாகவும், சருமம் வறண்டும் பார்ப்பதற்கு கர்ண கொடூரமாக காட்சியளித்தார். அம்பிகை அவரைக் கண்டதும் வெறுப்படைந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள், அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாக பிறந்தது. அக்குழந்தைக்கு திருதராட்டிரன் எனப் பெயரிட்டனர். அடுத்ததாக வியாசர் அம்பாலிகையிடம் சென்றார் அவரது தோற்றத்தைக் கண்ட அவள் வெளிறி வெலவெலத்துப் போனாள், அவளுக்கு பிறந்த குழந்தை பலவீனமாக பிறந்தது, அக்குழந்தைக்கு பாண்டு என பெயரிட்டனர். தனக்குக் குறையுள்ள பேரன்கள் பிறந்ததால் ஏமாற்றமடைந்த சத்தியவதி மீண்டும் அம்பிகையிடம் " செல் இந்த முறை அவள் கண்களை மூடிக்கொள்ள மாட்டாள்" என்று வியாசரிடம் கூறினாள். வியாசர் மறுக்காமல் செய்தார். இம்முறை படுக்கையில் அவளது பணிப்பெண் எந்த அச்சமுமின்றி அவருடன் முயங்கினாள். அவளுக்கு ஆரோக்கியமாகவும் புத்திசாலியாகவும் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு விதுரன் எனப் பெயரிட்டனர். திருதராஷ்டிரனின் 100 குழந்தைகளை கௌரவர்கள் என்றும், பாண்டுவின் ஐந்து குழந்தைகளை பாண்டவர்கள் என்றும் அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர். மகாபாரதம் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் பதிவு செய்த, அக்காலத்தின் சமூக அமைப்பை, சமூக சட்டங்களை, சமூக எண்ண ஓட்டங்களை அறிந்த, சமூக வக்கிரங்களை "நியதிகளாக" மாற்ற அடுத்து, அடுத்து கதை மாந்தர்களை படைத்த, பல ஆயிரமாண்டுகளாக கால ஓட்டத்தை வென்று நிற்கிற ஓர் கதை சொல்லி (படைப்பாளி). அதாவது ஓடும் நதி நீரிலிருந்து ஆள், ஆளுக்கு அள்ளி பருகிய பின்னர், மேலும் பாய்ந்து கண்மாய், குளம், ஏரி, கடல் எனக் கலந்து விட்டாலும் மூல நதி மட்டும் மாறாமல் இருப்பது போல, அனைவரும் தன் மனம் போன போக்குக்கு இழுத்தாலும் சிதைந்து போகாமல் உயர்ந்து நிற்கிற இந்தியப் பண்பாட்டை உலகுக்குச் சொன்ன ஓர் அற்புத படைப்பாளி. சித்திராங்கதன் சித்திராங்கதன் சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் பிறந்த முதல் மகன் ஆவார். இவருடைய அண்ணன் (சந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர்) வீடுமர் (பீஷ்மர்) அரசாள மாட்டேன் என்று சபதம் செய்திருந்ததால் இவர் அத்தினாபுரத்தின் அரியணை ஏறினார். இவர் தனது ஆட்சிக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். இது அதே பெயரைக் கொண்ட காந்தர்வ மன்னனின் கோபத்தைத் தூண்டியது. அவர்கள் மூன்றாண்டுகள் போர் புரிந்தனர். சித்திராங்கதனுக்கு வாரிசு இல்லாததால் அவருடைய தம்பி விசித்திரவீரியன் இவருக்கு அடுத்து அரசன் ஆனார். நவம்பர் 26 பாதிரி (மூலிகை) பாதிரி ("Stereospermum suaveolens" அல்லது "Bignonia suaveolens") மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர். மார்ச் 15 ஆகத்து 27 பேண்தகுநிலை தொடர்ந்து பேணத் தகுந்த முறையில் பொருளாதார, சமூக, சூழல், அமைப்பு சார் நடவடிக்கைகள், நடைமுறைகள் அமைவதை பேண்தகுநிலை ("sustainability") எனலாம். தமிழில் இதனை "தாங்குதிறன்" அல்லது "நிலைத்திருநிலை" என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. அண்மைக் காலத்தில் பேண்தகு நிலை என்பது, உயிரியல் தொகுதிகள் தொடர்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூழலியல் நோக்கில் பேண்தகுநிலை என்பதை, சூழலியல் வழிமுறைகள், செயற்பாடுகள், உயிரியல் பல்வகைமை, உற்பத்தித் திறன் ஆகியவற்றை எதிர்காலத்துக்கும் பேணும் வகையில் சூழல்மண்டலத்துக்கு இருக்கக்கூடிய வல்லமை என வரையறுக்க முடியும். இன்று, பேண்தகுநிலை என்பது புவியில் உள்ள உயிர் வாழ்வின் ஏறத்தாழ எல்லா அம்சங்களுக்கும் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சிக்கலான சொல்லாக உள்ளது. உயிரியல் சார் ஒழுங்கமைப்புக்களான ஈரநிலங்கள், காடுகள் தொடர்பிலும், மனித ஒழுங்கமைப்புக்களான பேண்தகுநிலை நகரங்கள் போன்றவை தொடர்பிலும், மனித நடவடிக்கைகள் துறைகள் சார்ந்த பேண்தகுநிலை வேளாண்மை, பேண்தகுநிலைக் கட்டிடக்கலை, மீள்விக்கத்தக்க ஆற்றல் போன்றவை தொடர்பிலும் இச்சொல் முக்கியத்துவம் பெறுகிறது. மனித இனம் பேண்தகுநிலையுடன் வாழ்வதற்கு, புவியின் வளங்களின் பயன்பாடு, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவு வேகத்திலேயே இருக்கவேண்டும். ஆனால், தற்கால அறிவியல் சான்றுகளின்படி மனிதர் அவ்வாறு வாழவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புவியின் வளங்களின் பயன்பாட்டு வேகத்தை, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவுக்குக் குறைப்பதற்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன. 1980களில் இருந்து, மனிதர் சார் பேண்தகுநிலை என்னும் எண்ணக்கருவானது, பொருளியல், சமூகவியல், சூழலியல் அம்சங்களின் ஒருங்கிணைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டில் சூழலுக்கும் வளர்ச்சிக்குமான உலக ஆணையம் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், "பேண்தகுநிலை" என்பதற்கான வரைவிலக்கணத்தை உருவாக்கியது. இதன்படி, பேண்தகுநிலை என்பது, "எதிர்காலத் தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பாதிக்காமல் இன்றைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகும்".” மேற்குறிப்பிட்ட ஆணையத்தின் வரைவிலக்கணம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும்,அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளாததுடன், பலவாறான விளக்கங்களும் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பேண்தகுநிலையை ஒரு "பயணம்" ஆகவோ "பயணத்தின் முடிவு" ஆகவோ எடுத்துக்கொண்டு, அதன் வரைவிலக்கணத்தை, இருக்கும் நிலை பற்றிய கூற்றாகவோ, தேவையாகவோ, பெறுமானமாகவோ வெளிப்படுத்த முடியும்." அம்புலிமாமா அம்புலிமாமா பரவலாக வாசிக்கப்படும் சிறுவர் இதழ் ஆகும். இது ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்துப் பலநிறப் படங்களோடு சொல்வது அம்புலிமாமாவின் சிறப்பு. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் வெளிவருகின்றது. கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு 1998 வரை வந்தது. அம்புலிமாமா ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிறுவர்களுக்கு நல் ஒழுக்கத்தையும் பண்புகளையும் ஊட்டுவதே அம்புலிமாமாவின் குறிக்கோள் தெலுங்கு பதிப்பே தமிழ் உட்பட பிற மொழிகளுக்கான மூலப் படைப்பு. இது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், வரைபடங்களில் தெளிவாக வெளிப்படுகின்றது. தமிழ்ப் பதிப்பில் சிறப்புப் படைப்புக்களாக "தமிழகத்து நாட்டுப்புறக்கதை" என்ற ஒரு கதைப்பகுதி அவ்வப்பொழுது வெளியிடப்படுவதுண்டு. இந்திய தொன்மவியல் கதைகளில் காணப்படும் சாதிய சமூக அதிகாரப் படிநிலைகளை அதன் கதைகளின் ஊடாகப் பிரதிபலித்து முன்னிறுத்தி நிலைநிறுத்த உதவுகின்றது என்ற குற்றச்சாட்டும் அம்புலிமாமா மீது உண்டு. அம்புலிமாமாவின் பதிப்பகத்தின் ஒரு பகுதியை அமெரிக்க கும்பனியான டிஸ்னி ("Disney") கொள்முதல் செய்யவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. அறிதுயில் (சஞ்சிகை) அறிதுயில் கனடா, ரொறன்ரோவில் இருந்து நவீன தமிழ் இலக்கிய, விமர்சன முனைவுடன் வெளிவந்த ஓர் இதழ் (சஞ்சிகை) ஆகும். மொழிபெயர்ப்புக்கள், "இலக்கிய உள்வட்ட" சலசல்கள், கவிதைகள், நவீன சமூகவியல் தத்துவ அறிமுகங்களோடு இவ் இதழ் வெளிவந்தது. எனினும் இது தொடர்ந்து வெளிவருகின்றதா என தெரியவில்லை. மண்வாசம் (சஞ்சிகை) மண்வாசம், கனடாவில் இருந்து வெளிவரும் பல்சுவை இலக்கிய மாத இதழ் ஆகும். இவ்விதழ் சிறுகதை, சமூகத்தொடர், கவிதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளை தாங்கி வெளிவருகின்றது. பல ஆக்கங்கள் கனடா தொடர்பாக அமைந்திருப்பது இதன் சிறப்பு எனலாம். நான் (இதழ்) நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு உளவியல் சஞ்சிகை. இது பொது வாசகர்களை நோக்கினாலும் இதன் உள்ளடக்கம் எளிய தமிழில் பல கல்விசார் கட்டுரைகளை கொண்டு இருக்கின்றன. "நமது மனமென்னும் ஆணிவேர் ஆடத்தொடங்கும் பொழுது, நமது வாழ்வென்னும் மரத்திலுள்ள நற்பண்புகள் எனும் இலைகள் உதிரத்தொடங்குகின்றன. உதிரும் இலைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மானிடம், மீண்டும் துளிர்விட்டுபெருவிருட்சமாக ஆடாது நிமிர்ந்திடவேண்டும். இதுவே எமது ஆசையும் நோக்கமாகும்." என நான் சஞ்சிகையின் முப்பதாவது அகவை சிறப்பு இதழிலில் ஆசிரியர் செபஸ்ரியன் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண கொடிய போர் சூழலில் நான் மக்களுக்கு தேவையான உளவியல் கருத்துக்களை பகிர்ந்து ஒரு அரிய சேவையை செய்கின்றது எனலாம். மனோசக்தி (இதழ்) மனோசக்தி ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். "மனத்தின் வலிமையால் மலையைக்கூட அசைக்கலாம்" என்பது இவ் இதழின் அறைகூவல் வாசகம். தன்னம்பிக்கைக் கட்டுரைகள், ஆலோசனைகள், தகவல் மற்றும் செய்தி குறிப்புகள் என பல தரப்பட்ட ஆக்கங்கள் மனோசக்தியில் வெளிவருகின்றன. தமிழ் பீசி ரைம்ஸ் (இதழ்) தமிழ் PCTimes அல்லது "தமிழ் பீசிரைம்ஸ்"(தமிழ் பீசி டைம்ஸ்) கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சஞ்சிகை. இது ஆரம்பகட்ட கணினி பயனர்களுக்கு ஏற்ற பல கட்டுரைகளை கொண்டிருக்கின்றது. சில கட்டுரைகள் எளிய தமிழிலும் சில கட்டுரைகள் இந்திய ஆங்கிலம் கலந்த தமிழ் இதழ் நடையிலும் எழுதப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் கணினிக்க் கட்டுரைகளின் தரத்தினை அண்மித்ததான கட்டுரைகள் வெளிவருவது குறைவு என்றே கொள்ளலாம். ஆய்வு சார்ந்த கட்டுரைகள் இடம்பெறுவதில்லை. ஆரம்பநிலை வாசகர்களுக்கு பெரிதும் உதவும் அதேவேளை உயர்நிலை வாசகர்களை திருப்திசெய்யும் கட்டுரைகள் வெளிவருவது குறைவு. தொடர்ச்சியாக வெளிவரும் எம்.எஸ்.ஆபிஸ் போன்ற கட்டுரைகள் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விடயங்களே மீள மீள எழுதப்படுவது குறைபாடாக தெரிகிறது. பக்கவடிவமைப்பு ஆங்கில கணினி பத்திரிகைகளுக்கு நிகராக உள்ளது. இலங்கையிலிருந்து பாராட்டத்தக்க முறையில் வெளிவந்த இந்தப் பத்திரிகை 2007 நவம்பருடன் துரதிஷ்டவசமாக இடைநிறுத்தப்பட்டுவிட்டது. சாமுவேல் பிஸ்க் கிறீன் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் ("Dr Samuel Fisk Green", அக்டோபர் 10, 1822 – மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார். அறிவியல் தமிழிற்கு இவரின் முன்னோடிச் செயற்பாடுகளுக்கா அறிவியல் தமிழின் தந்தையாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் ("Worcester") நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் இணையினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்து, தந்தையாலும் தமக்கையாலும் வளர்க்கப்பட்டார். இவரது உடன் பிறந்தவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ ஹாஸ்வெல் கிறீன் (1820–1903) நியூயோர்க் நகர வடிவமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். 18 வயதில் கிறித்துவின் சேவையில் தம்மை இணைத்துக் கொண்டார். 1841 இல் நியூயோர்க் மருத்துவக் கல்லூரியில் ("The College of Physicians and Surgeons of New York") இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார். யாழ்ப்பாணத்திலே தமது மிசனரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிசன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் மருத்துவர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ சமய போதனைக்குமென வந்த மிசனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள். நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவமனை இன்று "மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை" என அழைக்கப்படுகின்றது. தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார். மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பிப்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார். ""எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்"". இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" ("Medical Evangelist to the Tamils") என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் மருத்துவர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது. மருத்துவர் கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில: விசித்திரவீரியன் விசித்திரவீரியன் மகாபாரதக் கதையில் வரும் சாந்தனு என்ற மன்னனுக்கும் அவரது மனைவி சத்யவதிக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஆவார். இவரது அண்ணனான சித்ராங்கதன் இவரது தந்தை சாந்தனுவைத் தொடர்ந்து அஸ்தினாபுரத்தின் மன்னர் ஆனார். சித்ராங்கதன் வாரிசு இல்லாமல் இறந்து விட்டதால் அவரைத் தொடர்ந்து விசித்திரவீரியன் மன்னர் ஆனார். விசித்திரவீரியன் அரசுப்பொறுப்பேற்ற போது அவர் சிறுவனாகையால், அவரது சார்பாக பீஷ்மர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய திருமணத்திற்காக காசி மன்னனின் புதல்விகளின் சுயம்வரத்தின் போது பீஷ்மர் அங்கு சென்று சுயம்வரத்தினை வென்று அம்மூன்று இளவரசிகளையும் கொண்டுவந்தார். அம்பா வேறு ஒருவருடன் காதல்வயப் பட்டமையால் அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் மணமான சிறிது காலத்திலேயே அவர் இறந்து விட்டார்,அவரது உடலையும்,அவரின் விந்தணுவையும் பதபடுத்தி வைத்தனர். அத்தினாபுரத்துக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டதால், விசித்திரவீரியனின் மனைவிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோர் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொடுக்க பீஷ்மரைச் சத்தியவதி ஆலோசனை கேட்டாள். சத்தியவதியின் மற்றொரு மகனான மருத்துவத்தில் புலமையும் தவ வலிமையும் பெற்ற வியாசரின் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பீஷ்மர் ஆலோசனை கூறினார். இதன்படி, வியாசரும் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரிடம் விசித்திரவீரியனின் அணுவை அவர்கள் கர்பபையில் செலுத்தி திருதராட்டிரனும், பாண்டுவும், விதுரரும் பிறக்க செய்தார். பரசுராமர் பரசுராமர் அல்லது "பரசுராம பார்கவர்" என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். "பரசு" என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை. இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர். இவரது கதை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை. மார்ச் 16 அன்பே சிவம் அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் (கமலஹாசன்) அந்நிய நாட்டினரின் விளம்பரங்களை விற்பனை செய்பவராக தொழில் புரியும் அன்பரசு (மாதவன்) இருவரும் புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருக்கும் போது எதிர்பாராத வண்ணமாகச் சந்தித்துக்கொள்கின்றனர்.அங்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியவில்லை எனவே இருவரும் புகையிரதம், பேருந்து ஆகிய பல ஊர்திகளின் மூலம் பயணம் செய்கின்றனர்.இதற்கிடையில் பல சோதனைகள், பல விபத்துகள் ,புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாக காயப்பட்ட ஒரு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவன் இறந்துவிடவே, இதன் மூலம் "என்ன கடவுளையா இது" எனக் கேட்கும் அன்பரசு வாழ்க்கையினைக் கண்டு சலித்துப் போகின்றார்.பின்னர் நல்லசிவம் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம், தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடியாத படையாச்சி (நாசர்) போன்றவர்களைப்பற்றியும் கூறுகின்றார்.அன்பரசும் தனக்கு நல்ல சிவமே அண்ணனாக வரவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அவரை தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.அங்கு அவர் அதிர்ச்சி அடைகின்றார் காரணம் அவர் காதலித்திருந்த பெண்ணே அன்பரசிற்கு மணப்பெண்ணாக இருப்பதனையும் உணர்கின்றார்.இவ்வாறு இருந்தும் தனது காதலைத் தியாகம் செய்யும் நல்ல சிவம் தொழிலாளர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வுக்கான பத்திரத்தில் கையொப்பம் வாங்கியும் செல்கின்றார். ஹே ராம் ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடகப்படம் சாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார்,மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள்.1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர்.அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.கொல்கத்தா கலவரத்தில் தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுவதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்னும் தனது நண்பரின் கூற்றுப்படி மகாத்மா காந்தியை கொல்வதற்காக தன் மதத்தையும் வெறுத்து பின்னர் தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார்.அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கின்றார்.பின்னர் தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளும் சாக்கேத் ராம் அங்கிருந்து மகாத்மா காந்தி உரையாற்றும் பட்சத்தில் சுடுவதற்கென ஏற்பாடுகளும் செய்கின்றார்.ஆனால் அவர் சுடுவதற்காகச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது.பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. 2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா) சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) சில்லுனு ஒரு காதல் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சூர்யா, ஜோதிகாவை அவர்களுக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதாக கதை; எதிரும், புதிருமாக இருக்கும் சூர்யா - ஜோதிகா ஜோடியின் வாழ்க்க€யில் அடுத்தடுத்து வரும் மாற்றங்கள், மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருக்கும் குந்தவி (ஜோதிகா) மற்றும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கௌதமை மணக்கிறாள். வாழ்க்கையே முடிந்துவிட்டது என எண்ணும் நேரத்தில் சந்தோஷமான சூழ்நிலை அவளை இன்பத்தில் ஆழ்த்துகிறது. கொளதம் (சூர்யா) இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை பிறக்கிறது. கம்பெனி விஷயமாக கௌதம் வெளியூர் செல்ல நேர்கிறது. ஒரு நாள் கௌதமின் பழைய டைரியை குந்தவி பார்க்கிறாள். அதில் அவரின் பழைய காதல் கதையை கௌதம் எழுதியிருப்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான திவ்யாவை (பூமிகா சாவ்லா) கௌதம் காதலிக்கிறார். திவ்யாவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். இருவருக்கும் காதல் மலர்கிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு நடக்கிறது. கௌதம், திவ்யாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு திவ்யாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கௌதம், குந்தவியை மணக்கிறார். இந்தக் கதை தெரிந்ததும் குந்தவியால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும் ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும் என்று கௌதம் எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற குந்தவி, திவ்யாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கு கணவனும் பழைய காதலியும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு குந்தவி, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். கௌதம் மனைவியுடன் இணைந்தாரா.. அல்லது காதலியுடன் இணைந்தாரா? என்பது தான் கதை. மசாலாப்படம் அமிர்குஸ்ரு அமிர்குசுரு (இறப்பு 1325) இந்துஸ்தானி இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்த முன்னோடியாவார். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய இசைக்கருவிகளையும் அறிமுகப் படுத்தியவர். அமிர்குஸ்ருவின் இயற்பெயர், அபூ-அல்-ஹசன்-யானுமித்-தின்-குஸ்ரு என்பதே ஆகும். இவரின் தந்தையார் துருக்கி நாட்டவர். இவர்கள் பின்னர் துருக்கியினின்று வெளியேறி இந்தியாவின் "பட்டியாலி" என்ற இடத்தில் குடியேறினார்கள். இவர் தன் ஏழு வயதில் தன் தந்தையாரை இழந்தார். சிறு வயதிலேயே உருது, பாரசீக மொழிகளில் பாடல் இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்தார். குறுகிய காலத்திற்குள் பெருமளவு பாடல்கள் இயற்றினார். இவர் ஹிந்தி மொழிகளில் இயற்றிய பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. இவர் டில்லி சமஸ்தான சுல்தானின் அவைப் புலவராக (ஆஸ்தான வித்துவானாக) விளங்கினார். ஜலால் உத்தின் கில்ஜி என்பவர் டெல்லி சுல்தானாக இருந்த போது அமிர்கிஸ்ரு "அமிர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் அரேபிய, இந்திய, பாரசீக இசை வகைகளை ஒப்பு நோக்கினார். அவர் காலத்தில் பிரபலமாக இருந்த பல கஷ்டமான பாடல்களை மாணவர்கள் பாட என இலகுவாக்கி வழிவகை அமைத்தார். யமன்கல்யாண், பூர்வி, பீலு, பஹார் போன்ற பல புதிய இராகங்களை உருவாக்கினார். புதிய உருப்படி வகைகளான குல்பானா, தரானா, குவாலி-கயால் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரே சித்தார், தபலா, டோலக் ஆகிய இசைக்கருவிகளை உருவாக்கினார். மேலும் ஜால்-திரிதால், பாஷ்டோ போன்ற புதிய தாளங்களையும் அறிமுகப்படுத்தினார். இவர் சிறந்த பாடகராக விளங்கினார். ஒரு முறை கோபால் நாயக் அரசவையில் பாடும் பொழுது மறைந்திருந்து கேட்டு விட்டு அனைவரும் பிரமிக்கும் படி மறுபடி அதை பாடிக்காட்டினார். இவர் 1325 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். நேபாளத்தின் கொடி நேபாளத்தின் கொடி, நேபாளத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான ரனா அரசவம்சத்தின் வெவ்வேறு கிளைகளின் கொடிகள் இரண்டின் இணைப்பாகும். நேபாளத்தின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வகமற்ற கொடியாகும். இக்கொடி டிசம்பர் 16 1962 இல் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி முக்கோண கொடிகள் கிபி 17வது நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. எனினும் கிபி 19வது நூற்றாண்டு முதல் இரட்டை முக்கோண கொடி பாவிக்கப்பட்டது. கொடியின் ஓரம் வழியே காணப்படும் நீல நிறம் சமாதானத்தைக் குறிக்கிறது. மேலும் செந்நிறம் நேபாளத்தின் தேசிய நிறமாகும். முன்னர் அரசரின் குறியீடுகளாக இருந்த சூரியனும் பிரைச் சந்திரனும் இப்போது நேபாளத்தின் நீண்ட இருப்புக்காண அதன் மக்களது நம்பிக்கையாக கொள்ளப்படுகிறது. நேபாளத்தின் சின்னம் நேபாளத்தின் சின்னம் தமக்கென பொருளைக் கொண்ட பல உருவங்களின் தொகுப்பாகும். சின்னத்தின் உச்சியில் அரச முடி காணப்படுகிறது. அதன் கீழ் இரண்டு நேபாள தேசியக் கொடிகள் சாய்வாக காணப்படுகிறது. கொடிகளோடு இரண்டு குர்கீகளும் (குர்க்கா கத்தி) காணப்படுகிறது இவைகளால் அடைக்கப்பட்ட முக்கோண பிரதேசத்தில் கொரக்சாநாத் என்ற குர்காக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இந்து கடவுளது பாத சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு கீழாக இமய மலையும் rhododendron பூக்களும் வெண் பசுவும் பச்சை pheasant பறவையும் காணப்படுகின்றது. மேலும் சின்னத்தின் இருபுறத்திலும் இரண்டு குர்கா வீரர்கள் காணப்படுகிறார்கள். ஒருவர் குர்கீ மற்றும் வில்லம்புகளோடு காணப்படுவதோடு மற்றையவர் துப்பாக்கியோடு காணப்படுகிறார். சின்னத்தின் அடியில் செந்நிற பெயர் பட்டியில் சமஸ்கிருதத்தில் जननी जन्मभूिमश्च स्वर्गादिप गरीयसी (தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட மேலானவை) என எழுதப்பட்டுள்ளது. ஆகத்து 28 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (ஒ. ச. நே) (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக நெடு நொடிகள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் பன்னாட்டு நேரத்துடன் ஒருமுகப்படுத்தப்படுகிறது.. . உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது. க. பசுபதி க. பசுபதி (சூலை 14, 1925 - சூலை 5, 1965) ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர். "யாழ்ப்பாணக் கவிராயர்" என்ற புனை பெயரில் தனது கவிதைகளை எழுதினார். 1925 ஆம் ஆண்டு பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் கந்தையா - அன்னம் தம்பதியருக்குப் பிள்ளையாகப் பிறந்தார். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்ற பசுபதி தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார். இளமைக் காலத்திலிருந்தே கவிதைகளைப் படைத்துவந்த இவர், இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். பல நூறு கவிதைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பசுபதி, தனது ஆரம்ப கல்வியைக் கற்கத் தொடங்கிய காலம் தொடக்கம், பாடசாலைகளில் சாதிக்கொடுமையால் பாதிப்புகள் பலவற்றைச் சந்திக்க நேர்ந்தது. இதனால், இளமைக் காலத்தில் இருந்து சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்ட உணர்வும் சமூக சேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில் யாழ்ப்பாணத்திலும் பருத்தித்துறையிலும் செயற்பட்ட சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளுடன் இணைந்து சேவை செய்தார். இவரது தமிழாசிரியர் கந்தமுருகேசனார் பகுத்தறிவு வாதியாக இருந்தமையால் பசுபதியும் பகுத்தறிவுக் கொள்கையில் ஊறி தன்னையும் பகுத்தறிவு வாதியாக மாற்றிக்கொண்டு ஒரு இறைமறுப்பாளராகவே வாழ்ந்தார். 1956 தொடக்கம் 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். இக் காலகட்டத்தில் மகா சபையின் முயற்சியால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதியிலும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இந்த முயற்சியின் பின்னணியில் கவிஞர் பசுபதியும் செயற்பட்டார். மேலும், மகாசபையின் தலைமையில் நடத்தப்பட்ட தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைள் என்பவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட "மகாசபை மலர்" என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்து பசுபதி பணியாற்றினார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுள்ள செவிடர் குருடர் பாடசாலையில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். முற்போக்குக் கவிஞராக இருந்த பசுபதி தனது கவிதைகளில் சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இவருடைய முற்போக்குக் கவிதைகள் தமிழக, ஈழ்த்துப் பத்திரிகைகளில் வெளிவந்தன. கொழும்புப் பத்திரிகைகளில் பாலர் பகுதியில் சிறுவர்களுக்கான பாக்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது மறைவிற்குப் பின்னால் 1965 செப்டம்பரில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் புது உலகம் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. பசுபதி தனது 40வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார். தான்சேன் தான்சேன் (1506 - 1589), இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர். தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார். அம்பிகா (மகாபாரதம்) மகாபாரதக் கதையில் அம்பிகா(அம்பிகை) காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார். இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பாலிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார். விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) வியாசரிடம் அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள். இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார். அம்பாலிகா மகாபாரதக் கதையில் அம்பாலிகா காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார். இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார். விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது மற்றொரு மகனான வியாசரிடம் அம்பலிகாவை அனுப்பி வைத்தார். ஏற்கனவே அம்பிகாவின் மகன் குருடனாகப் பிறந்துவிட்டதால் சத்யவதி அம்பலிகாவிடம் கண்களைத் திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். எனினும் அம்பலிகா பயத்தினால் உடல் வெளிறிவிட்டார். எனவே இவர்களுக்குப் பிறந்த பாண்டு மிகவும் வெளிறிய நிறத்தில் பிறந்தார். பாண்டுவின் புதல்வர்களே பாண்டவர் எனப்படுகின்றனர். தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் 1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும். 1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது. பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும். 1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர். 1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது. 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம். 1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும். 2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது. வேட்டையாடு விளையாடு (திரைப்படம்) வேட்டையாடு விளையாடு 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மர்மப்படம் ராகவன் (கமலஹாசன்), தமிழக காவல்துறை இணை ஆணையர் ஆவார். இவருடைய நண்பரும் சக அதிகாரியுமான ஆரோக்கியராஜின் (பிரகாஷ்ராஜ்) மகள் ராணி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் அவர், அப்பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளை இழந்த சோகத்தை கரைக்க நியூயார்க் செல்லும் ஆரோக்கியராஜும் அவரது மனைவியும் தொடர்ந்து திட்டமிட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க அமெரிக்கா விரையும் ராகவன், அமெரிக்காவில் நிகழ்ந்த சில கொலைகளுக்கும் ராணியின் கொலைக்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டறிகிறார். இதற்கிடையே கணவரைப் பிரிந்து இருக்கும் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான ஆராதனாவைச் (ஜோதிகா) சந்தித்துப் பழகுகிறார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்க வந்திருக்கும் இளமாறன், அமுதன் ஆகியோரே கொலைகாரர்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் வீடு வரை செல்லும் ராகவனை காயப்படுத்திவிட்டு, கொலைகாரர்கள் இந்தியாவுக்கு தப்புகின்றனர். கொலைகாரர்களை பிடிக்க இந்தியா திரும்பும் ராகவனுடன் ஆராதனாவும் திரும்புகிறார். தன் மனைவி கயல்விழியை (கமாலினி முகர்ஜி) தன் பணியின் காரணமாக எழுந்த பகைக்கு பலி கொடுத்த துயரில் இருக்கும் ராகவன், ஆராதனாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். சிறிய தயக்கத்திற்குப் பின் ஆராதனாவும் இதை ஏற்றுக் கொள்கிறார். கொலைகாரர்களை சிக்க வைக்க ராகவன் எடுக்கும் கெடுபிடிகளால் கடுப்படையும் அவர்கள், ராகவனை தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் வகையில் ஆராதனாவை கடத்திச் செல்கின்றனர். இறுதியில் இளமாறன், அமுதன் ஆகியோரை கொன்று ஆராதனாவை ராகவன் மீட்கிறார். கதை நாயகன் கமலஹாசனையும் திரைப்படத்தையும் ஒயிலாக படம் பிடித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களுக்கு புதிய வரவான நாயகி கமலினி முகர்ஜியின் நடிப்புத் திறனும் மெச்சப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக சிலரும் முந்தைய திரைப்படங்களின் இசையமைப்பு அளவுக்கு இல்லையென்று சிலரும் கருதுகின்றனர். கதை நகர்த்தும் விதம், கதை மாந்தர் படைப்பு, பெயர்கள் ஆகியவை இயக்குனரின் முந்தைய திரைப்படமான "காக்க காக்க"-வை ஒத்திருப்பதாக குறைகாணப்படுகிறது. கொலை வழக்கை துப்பறியும் கதைக்கு இன்னும் ஆர்வமூட்டும் திரைக்கதையமைப்பும் மர்ம முடிச்சும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. அமெரிக்க மற்றும் தமிழ்நாட்டு காவல்துறையினரை திறன் குறைந்தவர்களாக காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாயகன் - வில்லன், அவர்களுக்கு இடையில் தனிப்பட்ட பகை, நாயகன் - நாயகி, அவர்களுக்கு இடையில் என்ற வழக்கமான கதையும் தேவையற்ற இடங்களில் வணிகக் கட்டாயங்களுக்காக பாடல்கள் புகுத்தப்பட்டிருப்பதும் சலிப்பூட்டுவனவாக உள்ளன. அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்) அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.S.J. சூர்யா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக படத்தின் இயக்குனரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காதலியான மதுவுடன் வாழும் சிவா காதலியிடம் பலமுறை சண்டைகள் செய்து கொள்கின்றார்.பின் அவருடன் அன்புடன் இருகின்றார்.திடீரென மது தனக்கு நெடுநாட்களாக இருந்த ஆசையான புதிதாக ஒரு உணவு விடுதியைக் கட்டி எழுப்புவதே என அவர் காதலனிடம் கூறுகின்றார்.ஆனால் இவரின் புதிய சிநேகிதனாக சேர்ந்திருப்பவரின் யோசனைகள் மூலமே இவர் அவ்வாறு கூறுகின்றார் என சந்தேகத்திற்கு உள்ளாகும் சிவா மதுவிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்.இருவரும் பின்னைய காலங்களில் அவர்களுடைய நல்ல மனம் கொண்ட இருவரின் ஆவிகளாலும் சேர்க்கப்படுகின்றனர். காதல் (திரைப்படம்) காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. உண்மைப்படம் / காதல்படம் மோட்டார் வண்டிகள் திருத்தும் கடையினை வைத்திருப்பவர் முருகன் (பரத்). எப்பொழுதும் தன் வேலையினைக் கவனிப்பது அவரது குறிக்கோள். ஆனால் திடீரென அவர் சந்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா (சந்தியா) முருகன் மீது காதல் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் முருகன் சிறிது காலத்தில் ஐஸ்வர்யா மீது காதல் கொள்கின்றார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர். கவலையில் இருக்கும் காதலர்களான முருகனும் ஐஸ்வர்யாயும் அவ்வூரை விட்டே தலைமறைவாக முடிவு செய்கின்றனர். இவர்கள் தங்குவதற்காக முருகனின் நண்பனான ஸ்டீபன் (சுகுமார்) அனைத்து வசதிகளையும் செய்கின்றான். திடீரென ஐஸ்வர்யாவைத் தேடிவரும் அவர் பெற்றோர் இவர்கள் காதல் கொண்டிருப்பதை அறிகின்றனர். ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் முருகனை அடித்து சித்திரவதை செய்கின்றனர். சிறிது காலங்கள் கழித்து முருகன் பைத்தியமாக தெருக்களில் அலைந்து திரிவதனைக் கண்டு கொள்ளும் ஐஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவரும் அவர் மணம் செய்த கணவர் இருவரும் முருகனைத் தம் இல்லத்திற்கே அழைத்துச் செல்கின்றனர். யோசுவா ஸ்ரீதர் இசையமைத்த இப்படத்தில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களை கவிஞர் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவி, த்ரிஷா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் வெளிவந்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா திரைப்படத்தின் மறு தயாரிப்பே இத்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரமசிவன் (திரைப்படம்) பரமசிவன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2006 சனவரி 14 பொங்கல் அன்று வெளியானது. இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது - இங்கே முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த தமிழகத்தில் தங்களது தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த சிலரே அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான வழியில் தீவிரவாதிகளை அடக்க முற்பட்டால் தன் துறையைச் சேர்ந்தவர்களே அதற்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதும் பிரகாஷ்ராஜ் இதற்காக தூக்கு தண்டனை கைதியான அஜித்தை தேர்ந்தெடுக்கிறார். அஜித்திற்கு ஏன் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் - நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தன் தந்தை ராஜேஷையும் தன் தங்கையையும் தீவிரவாதிகளுக்கு உதவும் சில காவல்துறை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து கொள்ளும் அஜித் அந்த அதிகாரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்.. அதனால்தான் அவருக்க் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் அஜித்தை சாமர்தியமாக தன்னுடைய உயர் அதிகாரியின் துணையுடன் தப்பிக்க வைக்கிறார். தான் போட்ட திட்டம் நல்லபடியாக முடிந்தவுடன் அஜித்தை தானே கொன்று விடுவதாக தன் உயர் அதிகாரியிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ஊட்டியில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் அஜித் பிரகாஷ்ராஜ் கூறும் அனைத்து வேலைகளையும் முடிக்கிறார். இதற்கிடையே ராசியில்லாத பெண் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்ட லைலாவுடன் காதல். ஒருவழியாக பிரகாஷ்ராஜ் சொன்னபடி தீவிரவாதிகள் அனைவரையும் வெற்றிகரமாக அஜித் தீர்த்து கட்டிவிட்டு லைலாவுடன் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிற வேளையில் அவர் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். அதிர்ந்து போகிறார்கள் லைலாவும் அஜித்தும். அஜித்தின் நிலை என்ன என்பதுதான் படத்தின் முடிவு. பட்டியல் (திரைப்படம்) பட்டியல் என்பது தமிழில் வெளிவந்த அதிரடித்திரைப்படம் ஆகும். இதில் ரௌடிகளாக ஆர்யா மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். சிறுவயதிலேயே அனாதைகளாகி விடும் கோஷி (ஆர்யா) மற்றும் செல்வா (பரத்) இருவரும் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான பணத்திற்காக சிறுவயதிலிருந்து கொலை கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். வாய் பேச இயலாத செல்வா தனது ஊரில் கடை நடத்திவரும் ஒரு பெண்ணை காதலிக்கின்றான். இதனைத்தெரிந்து கொண்டு அப்பெண்ணும் இவனைக் காதலித்தாள். பின்னர் ஒரு மாபெரும் கொலையப் பற்றிய திட்டத்தினை கோஷிக்கும் செல்வாவுக்கும் விளக்குகின்றார் அவர்களுக்குப் பணம் கொடுத்து வந்த முதலாளி. அவனின் பேச்சைக்கேட்டே செல்லும் அவர்களில் கோஷிமட்டும் சில காரணத்தால் அங்கு செல்லவில்லை. செல்வாவை அக்கொலையைச் செய்ய அனுப்பினான். பின்பு அக்கொலையினை முடித்தபின் கொலை செய்தவர்களையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டதை செல்வாவும் கோஷியும் அறியவில்லை. பின்னர் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக கோஷி கொல்லப்பட்டான். கொலையைச் செய்து முடித்து ஊர் திரும்பிய செல்வா பின்னர் அவனது முதலாளியின் கூட்டாளியினால் கொலை செய்யப்படுகின்றான். கஜினி (திரைப்படம்) கஜினி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதே பெயரில் 2017ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியானது. இதனையும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். மசாலாப்படம் சஞ்சேய் இராமசாமி (சூர்யா) இலட்சாதிபதி இவரது நண்பி கல்பனா (அசின்) ஓர் விளம்பர மாடல். கல்பனா அவரது தயாரிப்பாளரிடம் சென்று தான் சஞ்சேய் இராமசாமியின் காதலி சந்திக்க முன்னரே கூறுவதோடு ஓர் முக்கியமான சஞ்சிகையில் பேட்டியும் கொடுக்கின்றார். இது பற்றி அறிந்த சஞ்சேய் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவுசெய்து சந்திமுயன்றவேளை ஓர் பெண்ணொருவர் கையாலாகாத குழந்தைக்கு உதவுவதைக் காண்கின்றார். இதைக் கண்ட சஞ்சேய்க்குக் காதல் அரும்புகின்றது பின்னர கல்பனாவைச் சந்திக்கின்றார். எனினும் தான்தான் சஞ்சேய் இராமசாமி என்பதைத் தெரிவிப்பதில்லை. பின்னர் கல்பனாவிற்கும் காதல் அரும்புகின்றது. மும்பாய் ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களில் இருந்து இளம் பிள்ளைகளைக் காப்பாற்றுகின்றார் கல்பனா. இதனால் ஆத்திரமைடைந்த ஆட்கடத்தற் குழு கல்பனாவைக் கொலைசெய்யவருகின்றது. பின்னர் சஞ்சேய் அவ்விடத்திற்கு வந்து சண்டையிலீடுபடுகின்றார். இச்சண்டையில் கல்பனா கொலை செய்யபடுவதோடு சஞ்சேய் இரும்புக் குண்டாந்தடியால் தாக்கப் படுவதால் 15 நிமிடங்களில் ஞாபக சக்தியை இழக்கும் பிரச்சினையைப் பெறுகின்றார். இக் குறுகிய நேர ஞாப இழப்பிலும் தனது காதலியைக் கொலைசெய்தவர்களை நயன்தாராவின் உதவியுடன் பல்வேறு முயற்சிக்குப் பின்னர் பழிவாங்குவதுடன் கதை நிறைவு பெறுகின்றது. சந்திரமுகி (திரைப்படம்) சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். தோட்டாதரணி இதன் கலைஇயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தில் வரும் சந்திரமுகியின் அழகான ஓவியம் ராஜா என்ற இளைஞனால் வரையப் பெற்றது. இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. பேய்ப்படம் / மசாலாப்படம் இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் மற்றும் ராஜ் பகாதர் ஆகியோர் இப்படத்தின் "தேவுடா" பாடலில் சிறப்புக் காட்சியில் தோன்றியிருந்தனர். அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணராகப் படிப்பை முடித்து விட்டு இந்தியாவிற்கு வருகின்றார் சரவணன் (ரஜினிகாந்த்) அங்கு தன் நண்பரான செந்தில் நாதனையும் (பிரபு) அவரின் மனைவி கங்காவைவும் (ஜோதிகா) சந்திக்கின்றார்.செந்தில் நாதனுடைய சொந்த ஊருக்குச் செல்கின்றனர் அனைவரும்.அங்கு செல்லும் செந்தில் நாதன் பல முறை உறவினர்கள் வேண்டாம் என்று எடுத்துக் கூறியிருந்தும் வேட்டையபுரம் அரண்மனையினை விலைக்கு வாங்கி பின்னர் அங்கு குடியிருக்க ஏற்பாடுகளையும் செய்கின்றார்.பின்னர் அங்கு அனைவரும் சென்று தங்குகின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவ்வீட்டினுள் அமைந்திருக்கும் ஒரு அறையினுள் செல்ல யாரும் அனுமதிக்கப் படவில்லை இதனையும் பொருட்படுத்தாது வேலைக்காரரின் பேர்த்தியான துர்காவின் (நயன்தாரா) உதவியுடன் அங்கு செல்லும் கங்கா தன்னை அறியாது பலமுறைகளில் கோபம் கொள்கின்றார் மேலும் அங்கிருக்கும் துர்கா மீதும் வீண் பழிகளைச் சுமத்துகின்றார்.இவரின் நடைமுறைகளில் பல மாற்றங்கள் தோன்றுவதைக் கண்ட சரவணனும் இவரின் நடவடிக்கை பலவனவற்றை நோட்டம் விடுகின்றார். பின்னர் அனைவருக்கும் கங்காவிடம் ஆவி புகுந்திருப்பதனையும் விளக்குகின்றார்.அதாவது சுமார் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு சந்திரமுகி என்னும் பெண் வேட்டையபுரம் அரண்மனையில் ராஜாக்கள் முன்னிலையில் நடனமாட வேட்டையன் எனும் ராஜாவால் அழைக்கப்பட்டு வந்தான் என்றும் அவளை அடைவதற்காக அவ்வரண்மனையின் அருகில் இருக்கும் அவளின் காதலனின் தலையை அவள் முன்னேயே துண்டித்தான் அம்மன்னன். மேலும் சந்திரமுகியை உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டதாகவும் எனவே அவளின் ஆவி இன்றுவரை அவ்வரண்மனையில் உலவுவதாகவும் சரவணன் அனைவருக்கும் விளக்கினார். மேலும் சந்திரமுகியின் ஆவி கங்காவின் உடம்பினுள் புகுந்து கொண்டிருக்கின்றது அதே வேளை அவளின் ஆவியை ஓட்டுவதற்கு சந்திரமுகி கொல்லப்பட்ட நாளான துர்காஸ்தமியில் அவள் ஆவி மந்திரவாதியின் உதவியுடன் ஓட்டப்பட வேண்டும் எனவும் விளக்கினார்.இவ்வாறு அவர்கள் செய்தனர். இறுதியில் சந்திரமுகியின் ஆவியும் கங்காவின் உடலை விட்டு நீங்கிச் செல்கின்றது. பிரியசகி பிரியசகி 2005 ஆம் ஆண்டு வெள்வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். கே. எஸ். அதியமான் இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் மாதவன், சதா ஆகியோர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். தசாவதாரம் (2008 திரைப்படம்) தசாவதாரம், 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் 2004 சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்களும் ஒழுங்கின்மை கோட்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டாம்பூச்சி விளைவு ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மையக் கதை ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த உயிரிப் பேரழிவுக் கிருமி தீய சக்திகளுக்குக் கைமாறும் தருவாயில் அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற அதை அறிவியலாளர் எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அறிவியலாளரைப் பிடித்து அந்த உயிரியல் அழிவியை எடுக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் தீவரவாதிகளால் அனுப்பப்படுகிறார். அதற்கிடையில் அறிவியலாளர் எவ்வாறு அந்த அழிவியை நழுவவிடுகிறார், பின் தொடர்கிறார், யார் யாரை சந்திக்கிறார், இறுதியில் 2004 சுனாமிக்கும் அந்த அழிவிக்கும் என்ன தொடர்பு எனபதுவே கதையின் சாரம். 12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. மார்ச் 17 மார்ச் 18 இணைய குறிகளின் பட்டியல் இது உயர் நிலை இணைய குறியீடுகளின் பட்டியலாகும். ஆகத்து 29 மார்ச் 19 1973 1973 (MCMLXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 1972 1972 (MCMLXXII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். சித்திராங்கதை சித்திராங்கதை (அல்லது சித்திராங்கதா) மகாபாரதக் கதையில் வரும் அர்ஜுனனின் மனைவிகளுள் ஒருவர் ஆவார். அர்ஜுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார். அப்போது அவர் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தார். அருச்சுனன் அவரை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினார். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அருச்சுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்கு பாப்புருவாகனன் என்ற மகன் பிறந்தான். அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆவான். யுயுத்சு யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும் அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் பிறந்தவர். பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார். சிங்களத் தமிழியல் சிங்களத் தமிழியல் ("Sinhala Tamil Studies") என்பது சிங்கள மொழி, சிங்கள தேசம், சிங்கள மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். ஆகத்து 30 மார்ச் 20 மார்ச் 21 நாட்டார் பாடல் நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும். நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன. நாட்டார் பாடல் என்பது "அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுவகையில்தான் உள்ளது" என்பது சில ஆய்வர்களின் கருத்து. அதாவது, ஒரு எழுத்தறிவுபெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப்பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம். நாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையும் பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி (சுர நிலை) எல்லையும், மெட்டும், சாதாரண நடையிலும், கதை செப்பும் நடையிலும் அமைந்தமையே இவற்றின் சிறப்புக்குக் காரணமாகும். உரத்த குரலில் பாடப்படுவது இவற்றின் மற்றொரு இயல்பு. இப்பாடலைப் பாடுவோர் தமது அன்றாடப் பணியுடன் கலந்த பாடல் இசையாக அமைத்துவிடுகின்றனர். பெரும்பாலும் எழுதப்படாமல் இருப்பதும், இயல்பாக வழக்கில் பரவி, மேம்படுவதாலும், மூத்தோர் பாடிய பாடல்களாக இருப்பதாலும் முதலில் தொடங்கியவர் பெயர் தெரிவதில்லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல்புப்படுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகிறது. நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, "பாமர ஜனகானம்", "பொதுஜனகானம்", "கிராமியபாடல்", எனப் பலவாறு அழைப்பர். பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம். மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும். ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன. சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: நாட்டாறியல் பற்றி ஆய்வு செய்த ந வானமாமலை அவர்கள் நாட்டாறியல் பாடல்களை அதன் பொருளைக் கொண்டு எட்டு வகையாக பிரித்துள்ளார், அவையாவன, இவ்வகைப்பாடு முறையானது நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது. ந. வானமாமலையின் வகைப்பாட்டில் இருக்கும் சில குறைபாடுகளை சமுதாயச் சூழல் அல்லது வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறு. இராமநாதன் அவர்களால் புதிய வகைப்பாடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகைப்பாடு முறை எட்டுபிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன. "முதன்மைக் கட்டுரை: தமிழ் நாட்டார் பாடல்கள்" தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது. நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார். (எ-டு) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம். நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்: யப்பானிய நாட்டர் பாடல்களில் குனியோ யங்கிதா (யூலை 31, 1875 - ஆகஸ்ட் 8, 1962), சினோபு ஒரிகுச்சி (பிப்ரவரி 11, 1887 - செப்டெம்பர் 3, 1953) என்பவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். இவர்கள் மெய்ஜி காலப்பகுதியில் (அக்டோபர் 23 1868- யூலை 30 1912) ஏற்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நாட்டார் கலைகளை ஆராய்ந்து அவற்றை சீர்படுத்தினார்கள். யப்பானின் மியசக்கி மாகாணத்தின் விவசாய திணைக்களத்தில் யங்கிதா பணியாற்றும் போது தமது பணி நிமித்தமாக சிபா என்ற விவசாய கிராமத்திற்கு அடிக்கடி செல்லவேண்டியிருந்தது. அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் கிராமத்தில் மக்கள் வேட்டைக்கு செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக புனையப்பட்ட நாட்டார் கதைகளையும், பாடல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டார். இதுவே யப்பானிய நாட்டார் பாடல்கள் தொடர்பான முதலாவது வெளியீடாகும். மெய்ஜி காலப்பகுதியில் நாட்டார் பாடல் பற்றிய கல்வி முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது. அதனைக் கற்போரின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் சினோபு ஒரிகுச்சி நாட்டார் பாடல்களில் முக்கிய பங்கு செலுத்தினார். அவர் யப்பானின் இடோ காலப்பகுதியை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளன. மின்னணுக் கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது . 2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளது . இதில் கணினிக் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது. மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், காட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உரிமம் பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு ஹெகலின் உரிமம் பற்றிய தத்துவத்தின் திறனாய்வு ("Critique of Hegel's Philosophy of Right, 1843") என்பது ஜெர்மானியத் தத்துவவியலாளர் கார்ல் மார்க்சினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். எனினும், இது அவர் வாழ்ந்த காலத்தில் அச்சிடப்படவில்லை. ஹெகலின் "Elements of the Philosophy of Right " எனும் நூலுக்கான திறனாய்வாக இந்நூலை மார்க்ஸ் எழுதினார். "சமயம் ஒரு ஓப்பியம் போன்றது" ("opium of the people") எனும் மார்க்சின் கருத்து இந்நூலில் காணப்படும் புகழ்பெற்ற வாசகமாகும். கைம்முரசு இணை கைம்முரசு இணை (தபேலா அல்லது தப்லா அல்லது இருமுக முழவு) இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். கடந்த 200 ஆண்டுகளிலேயே கைம்முரசு இரண பிரபல்யம் அடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் கைம்முரசு இணை ஜதிகளை (டேக்காக்களை) அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க வேண்டும். கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும். இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும். உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1 அங்குலம் அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது. இந்திரப்பிரஸ்தம் புது டெல்லியில் ராஷ்டிர பவனத்தில் இருந்து கிழக்கே இரண்டரை மைல் தூரத்தில் இதிகாச காலங்கலில் பொலிவுற்று விளங்கிய இந்திரப்பிரஸ்தம் உள்ளது. தற்போது இது புராணகிலா என்றழக்கப்படுகிறது. இந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் அனுப்பியதன் பேரில் மயன், இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது. இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது. குருச்சேத்திரப் போர் குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர். குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். சிலர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்றும், சிலர் கிறிஸ்து பிறந்தற்குப் பின் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எவராலும் குருசேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு அறுதியாக கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், துவாரகை கி.மு 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். குருச்சேத்திரப் போர் கி. மு., 1500-இல் நடைபெற்றதாக கூறப்படினும் ,ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட மட்கலப் பண்பாடு கி.மு 1100 கு முற்ப்பட்டதல்ல என்று பி.கே.தாபர், பி.பி.லால், ஆர்.எஸ் கௌர்,ஐ.பி ஜோக்ஷி போன்ற தொல்லியலாளர்களால் கண்டுபிடித்து கூறப்பட்டன. மேலும் மகாபாரத்தில் கூறப்படும் நாடுகளில் மன்னராட்சி முறையும் முறைப்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே வருவதாக கொண்டாலும் , அந்நாடுகளின் உருவாக்கங்கள் கி.மு 9-8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தெரியவருகிறது.ஆனால் துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்பட்டதாக எஸ்.ஆர்.ராவ் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து கூறியுள்ளார்.. அத்தினாபுரத்தின் சூதாட்டமண்டபத்தில் துரியோதனனுக்கும், தருமருக்கும் இடையே நடந்த சூதாட்டத்தில், தருமர், தனது இந்திரப்பிரஸ்தம் நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தங்கள் மனைவி திரெளபதியையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் மற்றும் அத்தினாபுர மன்னன் திருதராட்டிரன் ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்கள் கண்டு கொள்ளப்பட்டால் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது. ஒப்பந்தப்படி, 12-ஆண்டு காடுறை வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வு முடிந்தவுடன், பாண்டவர்கள் தாங்கள் சூதில் இழந்த நாட்டை கேட்டு ஸ்ரீகிருஷ்ணரை, அத்தினாபுர மன்னன் திருதராட்டினரிடம் தூது அனுப்பினர். கிருஷ்ணரின் கோரிக்கையை துரியோதனன் ஏற்கவில்லை. காரணம் பாண்டவர்கள் ஒராண்டு தலைமறைவு வாழ்வின் போது தான் அருச்சுனனை கண்டு கொண்டதால், பாண்டவர்கள் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான். ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருதராட்டிரரிடம், பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகளாவது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு கூட இடம் அளிக்க முடியாது என ஆணவமாக பேசி, தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பு விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள். பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி. கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன், துச்சாதனன், விகர்ணன், துச்சலையின் கணவனாக சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, காந்தார சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ், பாக்லீகர்கள், பிராக்ஜோதிசத்தின் பகதத்தன், நிசாதர்கள், திரிகர்த்தர்களின் சுசர்மன், சம்சப்தகர்கள், காம்போச அரசன் சுதக்சினன், அவந்தி நாட்டு விந்தன் மற்றும் அனுவிந்தன், கேகய நாட்டு ஐந்து இளவரசர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், யவனர்கள், சகர்கள் காம்போஜர்கள், மகிஷ்மதி, கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படையும் மற்றும் 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப் பாஞ்சால அரசன் துருபதன், அவர் மகன்கள் திருட்டத்துயும்னன் மற்றும் சிகண்டி, அபிமன்யு, கடோற்கஜன், அரவான், உபபாண்டவர்கள், மத்சய நாட்டு விராடன் மற்றும் அவர் மகன்களான உத்தரன், சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் சாத்தியகி, காசி நாட்டு மன்னன், கேகயர்கள், சேதி நாட்டு சிசுபாலன் மகன் திருஷ்டகேது, மகத நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனன், நீலனின் மகிஷ்மதி நாட்டுப் படைகள், பாண்டியர்கள் மற்றும் போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்களை கூற கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் பார்த்தனுக்கு சாரதியாக செயல்பட்டார். ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.. பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை. வியாசரின் மகாபாரத இதிகாசத்தின்படி, தர்மச்சேத்திரமான குருச்சேத்திரத்தில் பாண்டவர் அணிப் படைகளுக்கும், கௌரவர் அணிப் படைகளுக்கும் நடந்த போரில், அணிகளின் தலைமைப் படைத்தலைவர்கள், தங்கள் படைகளை, தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு சிறப்பு வடிவத்தில் தங்கள் படைகளை (வியூகம்) அமைத்துக் கொண்டு போரிட்டனர். படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்: கண் பார்வையற்ற திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகளை அத்தினாபுர அரண்மனையில் இருந்தாவாறே பார்க்கும் பொருட்டு வியாசர் ஞானக்கண் வழங்க முன் வந்தார். ஆனால் கோரமான போர்க்களக் காட்சிகளை பார்க்க விரும்பாத காரணத்தினால், தனது தேரோட்டியான சஞ்சயனுக்கு அந்த ஞானக்கண் வழங்குமாறு வேண்டினார். வியாசரும் சஞ்சயனுக்கு ஞானக்கண் வழங்கி அவர் மூலம் திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகள் விளக்கப்பட்டது. போர் துவங்குவதற்கு முன்பு, போர்க்களத்தில் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாட்டனார் பீஷ்மர் மற்றும் குரு துரோணரை போன்றோர் இருப்பதால் போரிட மறுத்து துயர மேலீட்டால், தன் கை வில்லை தூக்கி எறிந்து, கவலையுடன் தேர்த்தட்டில் அமர்ந்தான். இதைக் கண்ட தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகளைப் பார்க்கக்கூடாது என்று விளக்கினார். அருச்சுனனுக்கு தர்மயுத்தம் செய்ய வேண்டியது ஒரு சத்திரியனின் கடமை என்று என்று எடுத்துக்கூறி, பகவத் கீதையை அருச்சுனனுக்கு அருளி, அருச்சுனனை போருக்கு ஆயத்தப்படுத்தினார் கண்ணன். பதினெட்டு நாள் நடந்த குருசேத்திரப் போர் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய பருவம் மற்றும் சௌப்திக பருவம் எனும் ஐந்து பர்வங்களில் விளக்கப்படுகிறது. படைத்தலைவர்களை, அவரவர்களின் போர்த்திறனுக்கு ஏற்றபடி "மகாரதர்கள்" , "அதிரதர்கள்" மற்றும் "அர்த்தரதர்கள்" என வகைப்படுத்தி அவர்களின் கீழ் படையணிகளை நிறுத்தி இருந்தனர். போரில் வெற்றி பெற அரவானைப் பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான். முதலில் பீஷ்மர் தனது சங்கை ஊத, பின் மற்றவர்கள் தத்தமது சங்குகளை ஊதிப் போருக்கு ஆயத்தமாயினர். குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது. பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை. இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனு- கங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது. பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான். ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார். பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு "இச்சை மரணம்" ("Ichcha Mrityu" (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர். துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர். குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார். தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான். கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான். துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன், கர்ணன், துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான். அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான். 14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய "சக்தி" ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான். துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு "அசுவத்தாமன்" என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர். 15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள். துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான். அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன். கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான். ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான். போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான். பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான். இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது. தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த "சமந்தபஞ்சகம்" எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார். பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன், சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகி, யுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே. கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும், இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான். துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது. அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர். திருதராட்டிரன், காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர். தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்-சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு- உத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர். பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார். கர்ணன் (மகாபாரதம்) கர்ணன் () மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார். அவர் சூரியன் (சூரியக் கடவுள்) மற்றும் குந்தி தேவி ஆகியோரின் மகனாவார். அவர் குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணம் நடைபெறும் முன்னரே, குந்திதேவிக்கு மகனாக பிறந்தார். துரியோதனனின் மிக நெருங்கிய நண்பரான கர்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களை (தனது சகோதரர்களை) எதிர்த்து போரிட்டார். குருச்சேத்திரப் போரில் இரண்டு நாள் கௌரவர் அணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் புரிந்து கடோற்கஜனை இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கொன்றார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மேலும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் தனது வாக்கைக் காப்பாற்றினார். அவரது வீரம் மற்றும் கொடைக் குணத்துக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது. கர்ணன் அவரது தாய் குந்திதேவிக்கு அவரது தந்தை சூரியக் கடவுள் சூரியன் மூலமாகப் பிறந்தார். இளவரசர் பாண்டுவை அவரது தாய் திருமணம் செய்வதற்கு முன்னரே கர்ணன் பிறந்தார். குந்தி இளமையாக இருந்தபோது, துர்வாச முனிவர் அவரது தந்தையிடம் வந்திரிந்தா. குந்திதேவி முனிவருக்கு மிகுந்த கனிவோடு ஒரு ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தார். அவரது சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத் திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி கணித்து, அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை முன்கூட்டியே அளித்தார். இந்த வரத்தினால் அவர் தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும். குந்தி மணமாகாமல் இருந்த போது, அவர் அந்த வரத்தின் சக்தியைச் சோதிக்க முடிவுசெய்தார். அவர் மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானை அழைத்தார். மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு, சூரியன் குந்தியின் முன்னாள் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். இந்தக் குழந்தை சூரியனைப் போன்றே பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. இந்த குழந்தையானது பிறக்கும்போதே போர்க்கவசம் ('கவசம்') மற்றும் காதுவளையங்களைக் ('குண்டங்கள்') உடலுடன் கொண்டு பிறந்தது. இருப்பினும் குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. அவர் மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள விருப்பமின்றி, அவரது தோழியான தத்ரியின் துணையுடன், அவர் அந்தக் குழந்தை கர்ணனை கூடையில் வைத்து, புனித நதியான கங்கையில் அக்குழந்தையை வேறொரு குடும்பத்தினர் எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டார். குழந்தை கர்ணனை அதிரதன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டார்- இவர் அரசர் திரிதராஷ்டிராவின் தேரோட்டி ஆவார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும் கர்ணனை தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். மேலும் அவருக்கு வாசுசேனா என்று பெயரிட்டு அழைத்தனர். கர்ணனை ராதேயன் என்றும் அழைத்தனர் - ராதாவின் மகன் (அவரது வளர்ப்புத் தாய்), அவ்வேளையில் அவரது உண்மையான பெயர் கர்ணன் என்பது 'காது' என்ற பொருள்படும், ஏனெனில் புராணத்தின் படி, குழந்தை கர்ணன் அவரது தாய் குந்தியின் காது வழியாக வந்தவர். கர்ணன் மற்றும் அவரது வளர்ப்பு பெற்றோர்கள் இடையேயான உறவானது தூய அன்பு, மரியாதை மற்றும் பாசம் ஆகியவற்றால் நிறைந்தது. கர்ணன் அவர்களின் மகனாக தனது கடமைகளை விருப்பத்துடன் செய்துவந்தார். இருப்பினும் அவர் அங்க தேசத்தின் அரசனானது மற்றும் முடிவில் அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது வெறுப்பை உண்டாக்கியது. ஆயினும் கர்ணன் தனது இறப்பு வரையில் அவரது வளர்ப்பு பெற்றோருக்கு உண்மையானவராகவும் விசுவாசமுள்ளவராகவும் இருந்தார். அவரது மனைவியின் பெயர் விருஷாலி, பொன்னுருவி. அவரது மகன்கள் பற்றிக் குறிப்பிடுவதாயின், கர்ணனுக்கு பல மகன்கள் இருந்தனர் அவர்களின் ஒன்பது மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விருசசேனன் சுதமா; ஷத்ருஞ்ஜயா; திவிபடா; சுஷேனா; சத்தியசேனா; சித்ரசேனா; சுஷர்மா (பனசேனா); மற்றும் விருச்சகேது. குருச்சேத்திரப் போரில் இறக்காத ஒரு மகன். போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான். திரௌபதியின் சுயம்வரத்தைத் தொடர்ந்த கைகலப்பில் சுதமா இறந்தான். ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருக்ஷேத்ரா போரில் துரோணர் கௌரவர்களின் படைக்கு தலைமை தாங்கியபோது அர்ஜூனன் கைகளில் மடிந்தனர். சுஷேனா போரில் பீமனால் கொல்லப்பட்டார். சத்யசேனா, சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர். கர்ணனின் மூத்த மகன் விருசசேனன் போரின் 17வது நாள் போரில், கர்ணன் போர்படைகளுக்கு தலைமை ஏற்றிருந்தபோது அருச்சுனனிடம் போரிட்டு இறந்தார். வீரஷசேனனின் சாவானது அதன் பயங்கரமான விவரங்களை விவரிக்கின்றது: நகுலனால் தனது சகோதரர்கள் துஹ்ஷசேனா மற்றும் சித்ரசேனா ஆகியோர் கொல்லப்பட்டதால் கடும் கோபமுற்ற வீரஷசேனா பழிவாங்கும் பொருட்டு தனது தந்தையின் எதிரிகளுடன் போரிட விரும்பினார். நகுலன் மற்றும் வீரஷசேன்னுக்கும் இடையே பயங்கர யுத்தம் நடந்தது. வீரஷசேனா நகுலனின் குதிரைகளைக் கொன்று, நகுலனை பல அம்புகளால் தாக்கினான். இதனால் நகுலன் தனது தேரிலிருந்து இறங்கி, தனது உடைவாள் மற்றும் கேடயத்தை எடுத்துக்கொண்டு, வீரஷசேனாவை நோக்கிச் ஞெல்ல உள்ள தடைகளை அகற்றினார். அவர் பாதையில் இருந்த இரண்டாயிரம் குதிரைவீரர்களின் தலையை வெட்டிச் சாய்த்தார். வீரஷசேனா, நகுலன் தன்னை நோக்கி வருவதைக் காண்டு, தன் உடைவாளை தடகளம் போன்று சுழல்கின்றான். அவர் உடைவாளை உடைத்தெறிந்து நான்கு பிறைச் சந்திர வடிவிலான முனைகளைக் கொண்ட அம்புகளைக் கொண்டு தடுக்கின்றார். நகுலன் பின்னர் பீமனின் தேரில் ஏறிவிடுகின்றார். அர்ஜூனரின் அருகில் வந்தபோது, நகுலன் அவரிடம், "தயவுசெய்து அந்த பாவப்பட்ட வீரஷசேன்னைக் கொன்றுவிடு" என்று கோருகின்றார். அர்ஜூன்ன் கிருஷ்ணரை நோக்கி, "கர்ணனின் மகனை நோக்கிச் செல்லுங்கள். நான் அவனை அவனது தந்தையின் கண்முன்னே கொல்லவேண்டும்" என்று கட்டளையிடுகின்றார். யாருடைய உதவியுமின்றி, வீரஷசேனா அர்ஜூனனுக்கு சவாலாக பல வேறு வகையான அம்புகளை எய்து போரிட்டார். அவர் அர்ஜூனரின் தோளில் பத்து அம்புகளைப் பாய்ச்சி குத்தினார், கிருஷ்ணரை நோக்கியும் பத்து அம்புகள் பாய்ந்தன. அர்ஜூனன் கடும் கோபத்துடன் வந்து கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடத்தில் உரக்க கத்தி, "கர்ணா, மோசமான முறையில் என் மகன் அபிமன்யூவைக் கொன்றதால் நான் உன் மகனை இன்று கொல்லுவேன்! அனைத்து போர்வீரர்களும் முடிந்தால் அவனைக் காப்பாற்றுங்கள். நான் அவனைக் கொல்லுவேன், அதன் பின்னர், முட்டாள்! நான் உன்னையும் கொல்லுவேன்; மேலும் இந்தப் போர் ஏற்படக் காரணமான தீய கொள்கைகளைக் கொண்ட ஈனன் துரியோதனனை பீமன் கொல்லுவார்" என்றார். கர்ணனால் அருகில் நெருங்க இயலாமல்போனது, அர்ஜூன்ன் பத்து அம்புகளால் வீரஷசேனாவைத் தாக்கினார் அது அவனை பலவீனப்படுத்தியது. நான்கு கூரான முனையுடைய அம்புகளைக் கொண்டு அர்ஜூனன் அவனின் வில், அவனது இரண்டு கைகள் மற்றும் அவரது தலை ஆகியவற்றை வெட்டினார். வீரஷசேனா கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த கர்ணன் கடும் துன்பத்தில் கண்ணீர் சிந்தினான். மேலும் அவனது கண்கள் கடும் கோபத்தில் சிவந்தன. பின்னர் அவன் அர்ஜூனனை நோக்கி தன்னிடம் சண்டையிட வருமாறு சவால் விடுக்கின்றான். விருச்சகேது மட்டுமே பேரச்சமூட்டுகின்ற குருக்ஷேத்திரா போரில் பிழைத்த கர்ணனின் மகன்களில் ஒருவன். போருக்குப் பின்னர் அவன் பாண்டவர்களின் அரவனைப்பில் இருந்தான். அஸ்வமேதா யாகம் நடைபெற்றபோது நடந்த போட்டியின் போது, வீரிஷகேது அர்ஜூனுடன் இணைந்து சண்டையில் பங்குபெற்று சுதவா மற்றும் பாப்ருவஹனா ஆகியோருடன் போரிட்டான். போர் நடைபெற்ற வீரஷகேது யவனதா அரசரின் (மேற்குப் பகுதிகளின் அரசராக இருக்கலாம்) மகளைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வானது அர்ஜூன்ன் தனது அண்ணன் மகன் வீரஷகேது மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைக் கூறுகின்றது. கர்ணன் வளர்ந்த பின்னர், அவரது தந்தை அதிரதன் போன்று தேரோட்டியாய் இருப்பதை விடவும் போர்க் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டான். கர்ணன் துரோணாச்சாரியரைச் சந்திக்கிறான். அவர் போர்க்கலைகளை கற்பிக்கும் ஆசான் ஆவார். துரோணாச்சாரியார் இளவரசர்களுக்கு போர்க்கலைகளைக் கற்பிக்கும் ஆசானாக இருந்தார், கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதால் துரோணர் க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே பயிற்சியளிப்பேன் என்று, கர்ணனை அவரது மாணவராக ஏற்றுக்கொள்ள மறுத்தார். துரோணரால் மறுக்கப்பட்ட பின்னர், கர்ணர் தனது சகோதரர் ஷோனாவின் உதவியுடன் சுயமாகக் கற்றுக்கொள்ள முடிவுசெய்தார். ஆனால் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில், நீங்கள் ஒரு கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு குரு (ஆசிரியர்) இருக்க வேண்டும், எனவே கர்ணன் சூரியனை (கடவுள்) தனது குருவாக்க முடிவுசெய்தார். கர்ணன் அனைத்துக் கலைகளையும் ஆசானின்றிக் கற்றறிந்தார். பகலில், அவர் பல்வேறு ஆயுதங்களைப் (போர்க்கருவிகள்) பற்றிய தகவலை சேகரித்து, பின்னர் சூரியன் மறைந்த பின்னர் அவற்றைப் பயிற்சி செய்தார். ஒரு நாள் கர்ணன் ஒரு மாத விடுமுறை கழித்து அத்தினாபுரம் (கௌரவர்களின் தலைநகரம்) சென்ற போது, அவர் தனது நண்பன் அசுவத்தாமன் (துரோணரின் மகன்) இடமிருந்து, அந்த கடைசி வாரம் குரு துரோணாச்சாரியார் தனது மாணவர்களின் வில்வித்தைத் திறனில் சோதனை செய்ய முடிவெடுத்ததை அறிந்து கொண்டார். அவர் மரத்தின் கிளையில் ஒரு மரத்தில் செய்யப்பட்ட பறவையைத் தொங்கவிட்ட பின்னர் தனது மாணவர்களை அழைத்தார். அவர் முதலாமவரிடம் பறவையின் கண்ணுக்குக் குறிவைக்கக் கூறினார், ஆனால் சரியாக எய்த முடியவில்லை. பின்னர் அவர் அந்த மாணவரிடம் அவர் பார்க்க முடிந்தது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர் தன்னால் தோட்டம், மரம், பூக்கள், மற்றும் பலவற்றைக் காண முடிகின்றது என்று பதிலளித்தார். துரோணர் அவரை சற்று விலகிக்கொள்ளுமாறும் சுட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் அதே போன்ற செயலை பிற மாணவர்களிடமும் மீண்டும் செய்தார். அர்ஜூனனின் முறை வந்தபோது, அர்ஜூனன் தனது குருவிடம் தன்னால் அந்தப் பறவையின் கண் மட்டுமே தெரிவதாகக் கூறினார். இது குருவிற்கு திருப்தியளித்ததால் அவர் அர்ஜூனரை பறவையின் மீது அம்பு எய்த அனுமதித்தார். அருச்சுனன் கிளியின் கண்ணின் மீது வெற்றிகரமான அம்பு எய்தினார். பின்னர் அவர் தனது சகோதரனின் நிகழ்வுகளைக் கவனித்த பின்னர், கர்ணன் தனது சகோதரனிடம் அர்ஜூனனால் கிளியின் ஒரு கண்ணை மட்டும்தான் அடிக்க முடிந்தது, தன்னால் ஒரே எய்தலில் கிளியின் இரு கண்களையும் அடிக்க முடியும் என்று கூறினார். அவர்கள் இரவில் பயிற்சி எடுத்துகொள்வதால், கர்ணன் கிளியின் இரண்டு கண்களையும் அதே இரவு பாலிதாவின் (வீடுகளுக்கு ஒளியேற்றப் பயன்படும் கருவி) உதவியுடன் எய்த முடிவுசெய்தார்.கர்ணனின் அறிவுரைப்படி ஷோனா மரக்கிளியை மரத்தில் பாலிதாவின் உதவியுடன் கீழே தொங்க விட்டார். கர்ணன் இரண்டு அம்புகளை வில்லுடன் நாணால் பூட்டினார் (அம்புகள் தனது நிலையில் சற்று மாற்றத்துடன் ஒன்று பின்னர் மற்றொன்று என்றவாறு இருந்தன). விரைவில் சோனாவிடமிருந்து சமிக்ஞை வந்தவுடன் கர்ணன் வெற்றிகரமாக பறவையின் இரண்டு கண்களை ஒரே எய்தலில் அடித்தார். இது குறைந்த கால பயிற்சியில் பெறப்பட்டது, இது கர்ணனை எல்லாக் காலத்திலும் உலகில் வில்வித்தையில் தலைசிறந்தவர் என்பதைக் காட்டுகின்றது. மிகக் குறுகிய காலத்தில் கர்ணனால் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், கர்ணன் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வில்வித்தையின் மேம்பட்ட திறன்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார். துரோணர் மறுத்த பின்னர், கர்ணன் துரோணரின் குருவான பரசுராமர் இடமிருந்து கற்றுக்கொள்ள முடிவுசெய்தார். ஆகவே, கர்ணன் இறுதியாக பரசுராமரை அணுகினார். ஆனால் அவர் பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கத் தெரிந்தவராக இருந்தார். அவர் பரசுராமரின் முன்னர் பிராமணராகத் தோன்றி தன்னை மாணவனாக எடுத்துக்கொள்ள வேண்டினார். பரசுராமர் அவரை மாணவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஒரு எல்லை வரையில் கற்றுக் கொடுத்தார். அவர் கர்ணனை போர்க்கலை மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனக்கு நிகரானவராக அறிவித்தார். எனவே, கர்ணன் பரசுராமரின் கடுமையான முயற்சியுள்ள மாணவரானார். இமயமலையில் கர்ணன் தவமியற்றிய இடம் கர்ண பிரயாகை. ருத்ர பிரயாகையிலிருந்து 32கி.மீ தொலைவில் பதரி ஆசிரமம் செல்லும் வழியில் உள்ளது. அலகநந்தா நதியும் பிண்டரி கங்கை நதியும் சங்கமிக்கும் இடமே கர்ண பிரயாகை. இங்குள்ள நீராடும் படித்துறையில் தான் கர்ணன் தனது தந்தை சூரிய பகவானை நோக்கி வழிபட்டார். கர்ணர் தனது குரு பகவான் பரசுராமர், ஒரு பிராமணர் மற்றும் பூமா தேவி ஆகியோர்களால் சாபமிடப்பட்டார், அவை கீழே விவரிக்கப்படுகின்றன: கர்ணரின் பயிற்சி நிறைவடைந்ததால், பரசுராமா கர்ணனின் பிறப்பைப் பற்றிய உண்மையை அறிந்தார். ஒரு மதியம் பரசுராமர் கர்ணரிடம் மரத்தின் நிழலில் தூங்க தனக்காக ஒரு தலையணையைக் கொண்டுவரக் கோரினார். கர்ணர் அதற்குப் பதிலாக தனது மடியில் தலைவைக்குமாறு வேண்டினார். பரசுராமர் தூங்கிய வேளையில், ஒரு ராட்சதத் தேனீ கர்ணரின் தொடையைத் தாக்கியது. அதீத வலியிலும், தனது குருவின் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக கர்ணன் நகரவில்லை. தேனீயானது கர்ணரின் தொடையை ஆழமாகக் குடைந்ததால், இரத்தம் வடியத் தொடங்கியது. கர்ணரின் தொடையில் இருந்து இரத்தம் வடிந்ததால் பரசுராமர் எழுந்துவிட்டார். அவர் கர்ணன் க்ஷத்ரியராக இருக்க வேண்டும் பிராமணர் அல்ல என்பதை அனுமானித்தார். ஏனெனில் க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே அது போன்ற துணிவு இருக்கும். ஆகவே, பரசுராமர் அனைத்து க்ஷத்ரியர்களுக்கு எதிராகவும் பழிவாங்குவதாக உறுதியளித்திருந்தார். கர்ணன் தன்னிடமிருந்து கற்றுக்கொள்ளும் பொருட்டு பிராமணராக இருப்பதாகப் பொய்யுரைத்ததாக முடிவுசெய்தார். எனவே, அவர் கர்ணனுக்கு அதிகம் தேவைப்பட்ட பிரம்மாஸ்திரப் பயன்பாடு உள்ளிட்ட போர்த்திறன்கள் அவரைவிட்டு நீங்குவதாக சாபமிட்டார். இது இந்த சம்பவம் நிகழ்ந்த வரையில் பரசுராமரிடமிருந்து கற்ற அனைத்தும் கர்ணனுக்கு மறந்துவிடும் என்பதைக் குறித்தது. கர்ணன், தனது அரச பாரம்பரித்தைப் பற்றிய அறியாதவர், அவர் தனது குருவிடம் எந்த மாணவனும் தனது இடத்தில் இருந்தால் அவ்வாறே நடந்திருப்பர் என்று மன்னிப்புக் கோரினார். கோபத்தில் கர்ணனுக்கு அளித்த சாபத்தை நினைத்து அவர் வருந்துகையில், பரசுராமரின் சாபத்தைத் திரும்பப் பெற இயலாது. அவர் கர்ணனுக்கு பார்கவாஸ்திரம் என்ற தெய்வீக ஆயுதத்தை விஜயா என்றழைக்கப்பட்ட பரசுராமரின் தனிப்பட்ட வில்லுடன் பரிசளித்து முடிவில் அவர், கர்ணனை எக்காலத்திற்கும் அழியாத பெருமை மற்றும் இறவாத புகழைப் பெறவேண்டும் என்று தான் விரும்புவதாக ஆசிர்வதித்தார். பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து புறப்பட்டதும், கர்ணன் சில காலம் வழியறியாமல் குழப்பமடைந்திருந்தார். அவர் வழியில், ஷப்தவேதி வித்யா (சத்தத்தை கவனிப்பதன் மூலம் இலக்கைத் தாக்கும் திறன்) பயிற்சியின் போது, அவர் தவறுதலாக காட்டு விலங்கு என்று எண்ணி ஒரு பசுவை அம்பால் எய்து அதனைக் கொன்று விட்டார். இந்த நிகழ்வு அந்தப் பசுவை வளர்த்த பிராமணருக்கு கோபத்தை ஏற்படுத்தி அவருக்கு சாபமிட்டார். அவர் ஒரு உதவியற்ற விலங்கைக் கொன்றதால், கர்ணனும் அதே போன்ற வழியில் கொல்லப்பட இருப்பதாக அது குறிப்பிடுகின்றது. அப்பொழுது சிக்கலான சூழலில் அவரது கவனம் அவரது பகைவரிடம் இருந்து சிதறடிக்கப்பட்டு உதவியற்றவராக இருப்பார். ஆந்திராவின் நாடோடிக் கதை மேலும் விவரிப்பது, ஒருமுறை கர்ணன் அவரது தேரில் தனது அங்க தேசத்தில் சுற்றுகையில், ஒரு குழந்தை தனது பானையிலிருந்து நெய் வடிவதைப் பார்த்து அழுவதைக் கண்டார். அவர் அந்தச் சிறுமி அழுவதற்கான காரணம் கேட்கையில், அவள் தனது கவனமின்மையின் மீது தனது சித்தி கோபமுறுவாள் என்பதால் பயந்து அழுவதாக கூறினாள். கர்ணனும் போதிய பெருந்தன்மையுடன் அவளிடம் தான் புதிய நெய்யை அளிப்பதாகக் கூறினார். ஆனால், அந்தக் குழந்தை மண்ணில் கலந்த அதே நெய்தான் வேண்டும் என்றும் புதிய நெய்யை அளிப்பதை மறுப்பதாகவும் கூறியது. கர்ணன் அந்த சிறுமியின் மீது பரிவுற்று, மண்ணுடன் கலந்த நெய்யை தனது உள்ளங்கையில் எடுத்து பிழிந்து நெய்யைப் பிரித்து பானையில் திருப்பி ஊற்றினார். இந்தச் செயலின் போது, கர்ணன் வலியால் துடிக்கும் பெண்ணின் குரலைக் கேட்டார். அவர் தனது உள்ளங்கையைத் திறந்த போது, அந்தக் குரல் பூமிதேவியின் குரல் என்பதை உணர்ந்தார். கோபம் மிகுந்த பூமாதேவி, கர்ணனை ஒரு சிறிய குழந்தைக்காக பூமித் தாய்க்கு மிகப்பெரிய வலியை அளித்ததற்காக தண்டித்தாள். எனவே, பூமாதேவி அவருக்கு, அவரது வாழ்வில் மிகவும் முக்கியமான் போரில், அதே வழியில் அவர் தனது தேரின் சக்கரத்தில் சிக்கி மண்ணின் உள்ளங்கையில் வைத்து அவரது எதிரிகளுக்கு அவரை பலவீனமானவராக மாற்றுவேன் என்று சாபமிட்டார். ஆகவே, கர்ணன் மூன்று வேறுபட்ட மற்றும் தனித்தனி சூழ்நிலைகளில் சாபத்தைப் பெற்றுள்ளார். எதிர்பாராத விதமாக, இந்த சாபங்கள் அனைத்தும் குருச்சேத்திரப் போரில் முக்கியமான கட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்தது, பின்னர் அவை அவரை ஆயுதமற்றவராக, தேரற்றவராக மற்றும் உதவியற்றவராகவும் மாற்றியது. அஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக வில்லாளி என்ற பரிசை அருச்சுனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து சேர்ந்து வெல்லத்தக்க அர்ஜூனின் வித்தைகள் முடிந்த பின்னர், அவரிடம் போட்டிக்காக சவால்விடுத்தார். க்ரிபாச்சார்யா கர்ணனின் போட்டியை மறுத்து, அவரிடம் முதலில் அவரது குலம் மற்றும் அரசைப் பற்றி கேட்கின்றார் - போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசம் மட்டுமே சவால் விட முடியும். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், பாண்டவர்கள் போர்க்கலையில் அவரையும் அவரது சகோதரர்களையும் விட சிறந்தவர்கள் என்பதை அறிவார். கர்ணனை பாண்டவர்களுக்கு எதிராக வலிமையானவராகப் பார்த்தார். உடனே அவரை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சியானது மகாபாரதத்தில் முக்கியமான உறவை ஏற்படுத்தியது. அதுவே துரியோதனன் மற்றும் கர்ணன் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. இது கர்ணன் மற்றும் அர்ஜூனன் இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தியது. மேலும் பொதுவாக பாண்டவர்கள் அனைவரும் மற்றும் கர்ணன் இடையே பகைமை உண்டானது. கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசமுள்ள மற்றும் உண்மையான நண்பனாகப் பேசப்படுகின்றார். பிரபலமற்ற சூதாட்ட விளையாட்டிற்கு துரியோதனன் மனமகிழ்கையில், அவர் அதைத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கர்ணன் ஷகுனியை விரும்பவில்லை, மேலும் தொடர்ந்து துரியோதனனுக்கு அவரது எதிரிகளை வீழ்த்த வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதில் போர்வீரம் மற்றும் திறனைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்லும் முயற்சியில் தோல்வி ஏற்பட்ட போது, கர்ணன் துரியோதனை அவரது மனத்தளர்விற்காகக் கடிந்துகொள்கின்றார். கோழைத்தனத்தின் வழிகள் தோல்வியில்தான் முடியும் என்று கூறி, வீரத்தின் மூலம் வேண்டியதைப் பெறலாம் எனவே போராளியாக மாற அவரை வற்புறுத்துகின்றார். கர்ணன் இளவரசி சித்ரகாந்தாவை மணப்பதில் துரியோதனனுக்கு உதவினார். அவரது சுயம்வரத்தில், இளவரசி துரியோதனனை மறுக்கின்றார் ஆனால் துரியோதனன் தனது படையின் மூலம் அவரைத் தொடர்ந்து கொண்டுவந்தார். சுயம்வரத்திற்கு வந்த பிற அரசர்கள் துரியோதனனை பின்தொடர்ந்தனர். இருப்பினும் கர்ணன் அவர்களை ஒற்றைக் கையில் தோற்கடித்தார். ஜராசந்தன், சிசுபாலன், தந்தவக்கிரன், சல்லியன் மற்றும் உருக்மி உள்ளிட்டோர் தோற்கடிக்கப்பட்டவர்கள். அவரது பாராட்டின் சான்றாக, ஜரசந்தன் மகதாவின் ஒரு பகுதியை கர்ணனுக்குப் பரிசளித்தார். பீமன் ஜரசந்தாவை கிருஷ்ணரின் உதவியைக் கொண்டு தோற்கடித்தார். ஆனால் இதை முன்னதாக கர்ணன் ஜரசந்தனை ஒற்றையாளாக தோற்கடித்தார். கர்ணன் ஜரசந்தாவை இரண்டாகப் பிரிப்பது பற்றி, அவரது பலவீனத்தை வெளிப்படுத்திய முதல் நபர் ஆவார். அவர் அங்க தேச அரியணையில் பதவியேற்றதைத் தொடர்ந்து, கர்ணன், தான் சூரிய பகவானை வணங்குகின்ற மதிய வேளையில் அவரை கோரிக்கையுடன் அணுகிய யாரும், அவரது கோரிக்கை நிறைவேறாமல் செல்லக்கூடாது என்ற ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். அவர் எவரையும் வெறும் கையுடன் விட்டதில்லை. இந்த நடைமுறையானது கர்ணனின் புகழுக்குப் பங்களித்தது போன்றே அவரது வீழ்ச்சிக்கும் துணைபோனது. இந்திரா மற்றும் குந்தி ஆகியோர் இதை சாதகமாக்கிக் கொண்டனர். மேலும், கர்ணன் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்ற மண்ணில் விழுந்த நெய்யை எடுக்க முயன்றபோது பூமாதேவியின் மூலமாக சாபமளிக்கப்பட்டார். திரௌபதியின் சுயம்வரத்தில் கர்ணன் விவாகம் கோருபவராக இருந்தார். பெரும்பாலான பிற போட்டியாளர்களைப் போன்று அல்லாமல், அவர் வில்லின் நாணை எளிதாகப் பயன்படுத்தும் வல்லமை படைத்தவர். ஆனால் அவர் இலக்கை அமைக்கத் தயாராக இருந்தபோது, கிருஷ்ணாவின் கருத்துப்படி திரௌபதி அவரை அம்பெய்வதிலிருந்து கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை சூத புத்திரன் (தேரோட்டியின் மகன்) என்றழைத்தார். பாண்டவர்கள் அந்த சுயம்வரத்தில் பிராமணர்களாக மாறுவேடமிட்டு கலந்து கொண்டனர். மற்ற இளவரசர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து , அர்ஜூனன் வளையத்திற்கு வந்து வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி, திரௌபதியின் கைகளைப் பற்றினார். அர்ஜூனரின் அடையாளம் பின்னர் வெளிப்பட்ட போது, கர்ணனின் பகையுணர்வு மேலும் அதிமானது. சகுனி பகடை விளையாட்டில் சூழ்ச்சியின் மூலம் வென்ற பின்னர், பாண்டவர்களின் ராணி திரௌபதியை துச்சாதனன் மூலமாக அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். துரியோதனன் மற்றும் அவரது சகோதரர்கள், அவரை துகிலுரிய முயற்சித்தனர். கர்ணன், நான்கு பேர்களுக்கும் மேலான கணவர்களைக் கொண்ட ஒரு பெண் வேறொன்றுமில்லை வேசிதான் மற்றும் பாண்டவர்கள் பருப்பு நீக்கப்பட்ட எள்ளு விதைகள் போன்றவர்கள் மேலும் அவள் இப்போது வேறு கணவர்களைத் தேடுகின்றாள் என்று கூறி திரௌபதியை இகழ்ந்தார். அந்த இடத்தில், பீமன், துரியோதனன் மற்றும் அவரது சகோதரர்களை போரில் தனிப்பட்ட முறையில் கொல்லுவேன் என்று சூளுரைத்தார். தொடர்ந்து அருச்சுனன் கர்ணனை கொல்லுவேன் என்றும் சபதம் விட்டார். பாண்டவர்களின் நாடுகடத்தலின் போது, கர்ணன் துரியோதனனை உலகின் பேரரசனாக நிலைநிறுத்தும் பணியை தானே எடுத்துக்கொண்டார். நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் பல்வேறு அரசர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கர்ணன் படைப்பிரிவுக்கு தலைமையேற்று, அவர்களை அத்தினாபுரம் அரசர் துரியோதனுக்கு கூட்டணியாக சத்தியம் செய்யுங்கள் அல்லது சண்டையில் செத்து மடியுங்கள் என்று பணித்தார். கர்ணன் அனைத்து சண்டைகளிலும் வென்றார். இந்த படைப்பிரிவின் துணிவில், கர்ணன் போர்தொடுத்தல் தொடரும் மற்றும் பின்வரும் பேரரசுகளின் சமர்ப்பிப்புகள் குறைந்தன, அவை கம்போஜர்கள், ஷாகாக்கள், கேகயர்கள், அவந்தி நாட்டவர்கள், காந்தாரர்கள், மடரகாக்கள், திரிகர்த்தர்கள், தன்கனாக்கள், விதேகர்கள், சுஹ்மாக்கள், அங்க நாட்டவர்கள், வங்க நாட்டவர்கள், நிஷாதர்கள், கலிங்கர்கள், வாட்ஷாக்கள், ஆஷ்மகாக்கள், ரிஷிகாக்கள் மற்றும் மெல்க்காஸ் மற்றும் காட்டு பழங்குடியினர்கள் உள்ளிட்ட பல அரசுகள் என்பதைக் குறிப்பிட்டார். (MBH 8.8.18-20). துரியோதனன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, கிருஷ்ணர் துரியோதனின் சிறந்த போர்ப்படைத் தளபதியான கர்ணனை அணுகினார். கிருஷ்ணர் கர்ணனிடம் பாண்டவர்களின் மூத்தவரான அவரது அடையாளத்தை வெளியிட்டு அவரை பாண்டவர்களின் பக்கம் சேர்ந்துகொள்ளக் கேட்கின்றார். அவர் பாண்டவர்களின் மூத்தவராக இருப்பதால், தருமர் கர்ணனை பெரிய அரசனாக்க கண்டிப்பாக இந்திரப்பிரஸ்த நாட்டின் முடிசூட்டுவார் என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியளிக்கிறார். கர்ணன் அந்த சிறந்த வாய்ப்பை மறுக்கின்றார், ஏனெனில் அவர் கடந்தகாலத்தில் துரியோதனன் மீதான வைத்திருந்த விசுவாசம் மேலும், அதே போன்று மரபு வழியில் பாண்டவர்களுடன் பிணைப்பு இருந்தாலும் அவர் துரியோதனின் பக்கம் இருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தார். அவர் யூதிஸ்திரா ஒரு நேர்மையான மனிதர், மேலும் அவருக்கு தன்னை விட கர்ணன் வயதானவர் என்று தெரியும், யூதிஸ்திரா உடனடியாக தனது மகுடத்தை அவருக்கு அளிப்பார் என்று கண்ணன் கூறினார். இருப்பினும், துரியோதனனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்த, கர்ணன் இந்திரப்பிரஸ்தாவின் மகுடத்தை துரியோதனனுக்கு அளிக்கலாம். இந்த கர்ணனின் எண்ணம் தர்மத்துக்கு எதிராக இருந்தது. அவர் மேலும் கிருஷ்ணரிடம், நீண்ட காலமாக பாண்டவர்களுடன் உண்மையின் பக்கம் இருக்கிறீர்கள், தோல்வி என்பது அவருக்கு நிச்சயம் என்பதை நினைவூட்டினார். கிருஷ்ணர் வருத்தமடைந்தார், ஆனால் கர்ணனின் விசுவாசத்தைப் பாராட்டினார், அவரது முடிவை ஏற்றுக்கொண்டார். கர்ணனிடம் அவரது மரபுவழி பற்றிய உண்மை ரகசியமாகவே இருக்கும் என்பதை உறுதியளித்தார். கிருஷ்ணர் மீண்டும் கர்ணனை அவரது நேர்மைக்காகப் பாராட்டி, மண்டியிட்டு வணங்கினார்- தெய்வம் மனிதனிடம் மண்டியிடுவது ஒரு உதாரணம் ஆகும். கடவுளர்களின் (தேவர்கள்) அரசனும் அர்ஜூனன் தந்தையுமான இந்திரன், கர்ணன் வெல்ல முடியாதவன் மற்றும் அவன் தங்க போர்க்கவசம் மற்றும் காதணிகளுடன் பிறந்தவன். அவை அவனுடன் இருக்கும் வரையில் அவனுக்கு போரில் இறப்பு என்பது கிடையாது என்பதை உணர்ந்திருந்தார். பாண்டவர்களின் நாடுகடத்தலின் போது, போர் நிகழும் சூழலில் இருந்த சமயம், இந்திரன் கர்ணனை பலவீனமாக்க அதைத் தன்னுடன் எடுத்துக்கொண்டான். அவன் கர்ணனை ஏழை பிராமணராக மதியவேளை வணங்குதலின் போது அணுக முடிவுசெய்தான். சூர்ய பகவான் இந்திரனின் நோக்கத்தைக் கூறி எச்சரித்து, அவரது கவசம் மற்றும் குண்டலங்களை அவரிடம் கொடுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறினார். கர்ணன் சூரியனுக்கு நன்றி சொல்லி அவர் தனது வார்த்தையால் கட்டுண்டுள்ளதை விவரித்தார் மேலும் அவர் தன்னை சந்திக்க வந்தவர்களை வெறும்கையுடன் தான் செத்தாலும் அனுப்ப முடியாது என்றும் கூறினார். சூரியன் கணித்தது போன்றே, இந்திரன் மாறுவேடமிட்டு கர்ணனை அணுகி அவரது கவசம் (உடல் கவசம்) மற்றும் குண்டலம் (காதணிகள்) தானமாகக் கேட்டார். கர்ணன் அவற்றைத் தரத் தயாராக இருந்தார். தனது உடலில் இருந்து போர்க்கவசத்தை வெட்டியும் காதணிகளைக் கழற்றிக்கொண்டும் இருந்தார். இந்திரன் கர்ணனின் செய்கையால் அவரது பெருந்தன்மையால் வெட்கித் தலைகுனிந்தார். பரஸ்பரம் காக்க கர்ணனிற்கு இந்திரனின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம், வாசவி சக்தியைப் பயன்படுத்திக்கொள்ளும் வரத்தை அளித்தார். ஆனால் அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். இந்த இடத்தில், அவர் தனது உடலில் இருந்து கவசத்தை எந்தவித பின்வாங்கலின்றி வெட்டியதால், அவர் வைகர்த்தனா என்ற பெயரைப் பெற்றார். போர் தொடங்கியதால், குந்தி கர்ணனை அவனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தித்தார். அவர் கர்ணனிடம் தான் அவரது தாய் என்றும் அவர் தனது மகன் என்றும் கூறினார். பின்னர், இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். அவர் கர்ணனை 'ராதேயா' என்பதற்குப் பதிலாக 'கௌந்தேயா' (குந்தியின் மகன்) என்று அழைத்தார். ஆனால் கர்ணன் தன்னை உலகம் முழுவது ராதேயன் என்றுதான் அங்கீகரித்துள்ளனர் கௌந்தேயன் என்று இல்லை என்று பதிலளித்தார். குந்தி கர்ணனை பாண்டவர்களுடன் சேர்ந்து அரசனாகும் படி கூறினார். கர்ணன் அதை மறுத்து குந்தியிடம், அவர் தன்னை பல வருடங்களுக்கு முன்னர் கௌந்தேயன் என்று அழைக்கத் தயாராக இருந்தாரா என்று கேட்டார். மேலும் அவர் களத்தில் தோன்றியவுடன் காட்சியும் கோலமும் மாறியிருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் இப்போது அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது காலதாமதமானது ஆகும். மேலும் அவர் துரியோதனின் நண்பனாகவே இருக்க விரும்புவதாகவும், அவர் அவரது நட்புக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதையும் கூறினார். இருப்பினும், அவர் குந்தியிடம் அர்ஜூனனைத் தவிர பாண்டவர்கள் யாரும் தன்னால் கொல்லப்பட மாட்டார்கள் என்று சத்தியம் செய்தார். கர்ணன் மற்றும் அர்ஜூனன் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல உறுதியளித்துள்ளனர். எனவே அவர்களில் ஒருவர் சாவது உறுதி. எனவே, அவர் குந்தியிடம் அவர் ஐந்து மகன்களை மட்டுமே காக்க முடியும் - ஐந்தாவது தான் அல்லது அருச்சுனன் இருவரில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று கூறினார். கர்ணன் அவரது தாயிடம் தங்களுக்கு இடையேயான உறவு மற்றும் தனது அரச பிறப்பு ஆகியவற்றை தான் சாகும் வரையில் ரகசியமாகவே வைக்கும்படி கோரினார். குந்தி கர்ணனிடமிருந்து அம்பு / தெய்வீக ஆயுதத்தை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை என்ற மற்றொரு சத்தியத்தையும் எதிர்பார்த்தார். கர்ணன் அவருக்கு அதையும் உறுதியளித்தார். அதன் முடிவாக, பின்னர் குருக்ஷேத்ரா போரில் கர்ணன் நாகாஸ்திரா ஆயுதத்தை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த முடியவில்லை. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், கௌரவர்களின் தலைத் தளபதியான பீஷ்மர், கர்ணன் தோரோட்டியின் மகனாக இருப்பதால் அவரது தலைமையில் மாபெரும் போரில் பங்கேற்பதை மறுத்தார். இருப்பினும் துரியோதனன் பீஷ்மரிடம் கர்ணனை அவரது தலைமையில் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். ஆனால், பீஷ்மர் அவரது தலைமையில் போரில் கர்ணனின் பங்கேற்பை தொடர்ந்து மறுத்தார். அதன் விளைவாக, கர்ணன் பீஷ்மர் வீழ்ந்த பின்னர் (பத்தாவது நாளில்) போர்க்களத்தில் பதினோராவது நாள்தான் களம்புகுந்தார். போரின் பதின்மூன்றாம் நாளில், துரோணர் பாண்டவர்களுடன் போரிட சக்கரவியூஹா/பத்மவியூக்ஹா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறப்பு அமைப்பை ஏற்பாடு செய்தார். பாண்டவர்களின் அணியில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் ஆகியோருக்கும் மட்டுமே அந்தத் திட்டத்தை எவ்வாறு முறியடிப்பது என்பது தெரியும். இருப்பினும், இருவரும் உள்நோக்கத்தோடு போர்க்களத்திலிருந்து வெகுதூரத்திற்கு துரியோதனன் அணியிலுள்ள டிரைகர்த்தாவை ஆள்கின்ற இரண்டு அரசர்களால் (சகோதரர்கள்) இழுத்து வரப்பட்டனர். அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியுகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூஹா அமைப்பு பற்றி பகுதியளவு தெரியும். சுபத்திரை முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. எனவே, நான்கு பாண்டவ சகோதரர்களும் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணர் இல்லாததால் அபிமன்யூவைத் தலைமையாகக் கொண்டு சக்ரவியூகத்தில் நுழைய முடிவுசெய்தனர். ஆனால், வெகுவிரைவில் அபிமன்யு சக்ரவியூகத்தில் நுழைந்தார், ஜயத்திரதன்-- என்ற கௌரவர்களின் படைப்பிரிவிலிருந்த சிந்து அரசன் அதைத் தடுத்தான். அதனால் பிற பாண்டவர்கள் அந்த அமைப்பில் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டனர். ஆகவே, எதிரிகளின் அமைப்பின் மத்தியில் அனைவரும் அபிமன்யூவை தனித்து விட்டனர். உள்ளே நுழைந்ததும், அவன் துணிவுடன் போரிட்டு, அவன் தனியாளாக கர்ணன், துரோணர், துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்களின் முக்கியத் தளபதிகள் அனைவரையும் தோற்கடித்தான். துரியோதனனுன் கர்ணனும் துரோணரின் அறிவுறுத்தலின் படி அபிமன்யூவை அழிப்பதில் உதவிக்கொள்ள தேர்வுசெய்தனர். கர்ணன் எய்த அம்புகள் அபிமன்யூவின் வில்லை உடைத்து அவனது தேரை தடுத்து நிறுத்திய வேளையில் கௌரவர்கள் அவனை அழித்தனர். போரானது அபிமன்யூவின் இறப்புடன் முடிந்தது. அர்ஜூனன் கௌரவர்களின் கைகளில் அபிமன்யூவின் இறந்ததைப் பற்றி அறிகின்றார். அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் ஜயத்ரத்தாவை கொல்ல சபதமேற்கின்றார். பிணக்குவியலில் அவர் பலியிடுதலைத் தானாகவே கைவிடுகின்றார். பதினான்காம் நாளில், சண்டையானது எந்தவித சிறப்புமின்றி இரவு வரை நீடித்தது மற்றும் பீமாவின் பாதி-அசுர மகன் கடோற்கஜன் கௌரவப் படைகளை பத்து பேருக்கு ஒருவனைக் கொலை செய்கின்றான். பொதுவாக, அசுரர்கள் இரவில் அதீத வலிமை பெறுகின்றனர். துரியோதனன் மற்றும் கர்ணன் வீரத்துடன் அவனை எதிர்த்து போரிட்டனர். இறுதியாக கடோட்கச்சா அனைத்து கௌரவப் படைகளையும் அந்த இரவில் அழித்து வருகையில், துரியோதனன் கர்ணனிடம் இந்த சூழ்நிலையிலிருந்து காக்குமாறு கேட்டுக்கொண்டான். கர்ணன் சக்தி ஆயுதத்தை கடோட்கச்சா மீது பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டார். இந்த ஆயுதம் அவரின் ஒப்பற்ற பெருந்தன்மையை (அவ்வேளையில் அவர் தனது கவசம் மற்றும் குண்டலத்தை இந்திரனுக்கு தானமாக அளிக்க முன்வந்தார்) மதிக்கும் அடையாளமாக இந்திரனால் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த சக்தி ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும், பின்னர் அது இந்திரனிடம் திரும்பி வந்துவிடும். எனவே, கடோட்கச்சாவின் மீது சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்தினால், பின்னர் கர்ணன் அதையே அர்ஜூனனின் மீது பயன்படுத்த முடியாது. கர்ணன் சக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவைக் கொல்லப் பயன்படுத்திய போது, இப்போது கர்ணன் அர்ஜூனனிடம் போரிடுவதற்குப் பயன்படுத்த வேறு எந்தத் தெய்வீக ஆயுதங்களும் இல்லாததால் அவர்கள் பெற்ற வெற்றி குறிப்பிட்ட காலத்திற்குத்தான் என்பது கிருஷ்ணருக்குத் தெரிந்ததே. நாள் 16 மற்றும் நாள் 17 ஆகியவற்றில் நடைபெற்ற மகாபாரதப் போர் கர்ணா பர்வம் என்று ஆவணப்படுத்தப்படுகின்றது, இங்கு கர்ணன் கௌரவப் படைகளின் தலைவனாக இருந்தார். இங்கு கர்ணன் மற்றும் அருச்சுனன் இடையே போர் நடக்கும் முன்னர் வரையில் அர்ஜூனனிடம் கிருஷ்ணர் கூறியது - "இங்கு சுருக்கமாக, ஓ பாண்டு மைந்தா! நான் மாவீரன் கர்ணனை உனக்கு சமமாகக் கருதலாம், அல்லது உன்னைவிட சிறந்தவனாகவும் கருதலாம்! மாபெரும் சண்டையில் சிறந்த கவனம் மற்றும் தெளிவு ஆகியவற்றைக் கொண்டே அவனைக் கொல்ல வேண்டும். ஆற்றலில் அவன் நெருப்புக்கு சமமானவன். வேகத்தில், அவன் மூர்க்கத்தனமான காற்றுக்குச் சமமானவன். சீற்றத்தில், அவன் தன்னையே அழித்துக்கொள்ளக் கூடியவன். வலிமையான பண்பில், அவனது உடல் அமைப்பில் சிங்கத்திற்கு ஒப்பானவன். அவன் உயர அளவில் எட்டு ரேட்னிக்களைக் கொண்டவன். அவரது கரங்கள் பெரியவை. மார்பு அகன்றது. அவன் வெல்லமுடியாதவன். அவன் உணர்ச்சிமிக்கவன். அவன் ஒரு நாயகன். அவன் மீண்டும் நாயகர்களின் முதலாமானவன். அவன் மிகவும் நேர்த்தியானவன். போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாட்டின் மீதும் வெறிபிடித்தவன், அவன் நண்பர்களின் பயங்களைச் சிதறடிப்பவன். திருதராட்டிரன் மகனின் நன்மையில் ஈடுபாடுள்ளவன், எப்போதும் பாண்டுவின் மகன்களை வெறுப்பவன். நான் நினைப்பது, வாசவைக் கொண்ட கடவுளர்கள் அவர்களின் தலையை வைத்து ராதாவின் மகனை கொல்லலாம், அதை நீ காப்பாற்று, வேறு யாராலும் முடியாது. எனவே, கொல் இன்றே சுதாவின் மகனே. யாரும் சதை மற்றும் இரத்ததின் வெறிபிடித்தவர் இல்லை, கடவுளர்கள் கூட கவனத்துடன் போரிடவில்லை, அனைத்து வீரர்களும் (மூன்று உலகத்தின்) ஒன்றிணைந்து சண்டை செய்தால் அந்த மாவீரனை வெற்றியடையலாம்". கர்ணன் மற்றும் அர்ஜூனன் இடையேயான போரின் போது, அர்ஜூனனின் தேர் கர்ணனின் அம்புகளால் தாக்கப்பட்டு அம்புகள் விழுந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அந்நேரத்தில் அர்ஜூனனின் தோரோட்டியாக இருந்த பகவான் கிருஷ்ணன், கர்ணனை அவரது தாக்குதலுக்காகப் பாராட்டினார். கர்ணைனை கிருஷ்ணர் பாராடியதற்காக அதிர்ச்சியடைந்து அவருக்குப் பதிலளிக்கும் விதமாக அர்ஜூனனின் அம்புகள் கர்ணனின் தேரை பல நூறு மீட்டர்கள் நகர்த்தியது. கிருஷணர், "அர்ஜூனா, அண்டத்தின் மொத்த எடையையும் என்னுள் வைத்திருக்கும் நான் உன் தேரில் அமர்ந்துள்ளேன் மற்றும் உனது தேர் பகவான் அனுமானின் ஆசிர்வாதத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த இரு காரணங்களும் இல்லையென்றால், கர்ணன் அம்புகள் உனது ரதத்தை பூமிக்கு அப்பால் வீசியிருக்கும்" என்று கூறினார். கர்ணன் அவரது தேரின் சக்கரத்தைத் தூக்குகின்ற போது அருச்சுனனால் கொல்லப்பட்டார், ஏனெனில் அவர் அந்த முறையில் சாகவேண்டும் என்று பரசுராமரால் சபிக்கப்பட்டிருந்தார். பதினாறாவது நாளில் கர்ணன் கௌரவர் படையின் தலைமைத் தளபதியாகப் போரிட்டார். போரின் பதினாறாவது நாளில் கர்ணன் ஒற்றை ஆளாக அனைத்து பாண்டவர்களையும் வீழ்த்தினார். முதலில், கர்ணன் பீமாவை வீழ்த்தினார், ஆனால் தான் (கர்ணன்) அவரை (பீமா) விட பெரியவன், அதனால் தான் அவரைக் கொல்ல முடியாது என்று கூறி அவரை உயிருடன் விட்டுவிட்டார். பின்னர் தருமரை வீழ்த்தினார், ஆனால் "நீ உனது குரு கற்றுக்கொடுத்த அனைத்தையும் மறந்துவிட்டது போன்று தெரிகின்றது, எனவே முதலில் சென்று பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் சண்டையிட வா" என்று கூறி அவரை உயிருடன் விட்டார். அதன் பிறகு கர்ணன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரைத் தோற்கடித்து, அர்ஜூனனைத் தவிர பாண்டவர்கள் அனைவரையும் உயிருடன் விடுவதாக தனது தாய் குந்திக்கு அளித்த சத்தியத்தினால் அவர்களை கொல்லாமல் விட்டுவிட்டார். தனது சகோதரர்கள் அனைவரையும் வீழ்த்திய பின்னர், கர்ணன் தனது தோரோட்டி சல்லியனை அர்ஜூனனின் முன் தனது தேரை எடுத்துச்செல்லக் கூறினார். தனக்கு முன்னர் அர்ஜூனன் இருப்பதைக் காண்கின்றார், கர்ணன் தனது சக்திவாய்ந்த ஆயுதம் நாகாஸ்திரத்தை எடுத்து அர்ஜூனன் மீது எய்தினார். கிருஷ்ணர் அர்ஜூனனை நாகாஸ்திரத்தினால் ஏற்பட இருந்த உறுதியான இறப்பை, தனது தெய்வீக சக்திமூலம் அர்ஜூனின் ரதத்தை பூமியில் தனது பாதத்தின் அழுத்தத்தால் சற்று தாழ்த்திய மூலமாகக் காப்பாற்றினார். போரின் பதினேழாம் நாளில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் அர்ஜூனன் இடையேயான போட்டி நடைபெற்றது. சண்டையின் போது, அர்ஜூனனின் அம்புகள் கர்ணனின் தேரைத் தாக்கியபோது, அது சில அடிகள் பின்னால் நகர்ந்தது. இருப்பினும், கர்ணனின் அம்புகள் அர்ஜூனனின் தேரைத் தாக்கியபோது, அது சில அங்குலங்கள் மட்டுமே பின்னால் நகர்ந்தது. இதற்காக கிருஷ்ணர் கர்ணனைப் பாராட்டினார். ஆனால், அர்ஜூனன் அதிர்ச்சியடைந்து இந்தப் பாராட்டுக்கான காரணத்தை அவரிடம் கேட்டார். கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பதிலாகக் கூறுகையில், கர்ணனின் தேர் கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரின் எடையை மட்டுமே தாங்குகின்றது. மாறாக, கிருஷ்ணர் மற்றும் ஹனுமான் ஆகியோர் கிருஷ்ணனின் தேரில் அமர்ந்துள்ளதால் முழு பிரபஞ்சத்தின் எடையையும் தாங்குகின்றது. இருந்தாலும், கர்ணனால் அதை நகர்த்த முடிந்தது என்றார். கர்ணன் அர்ஜூனனின் வில்லின் நாணை பலமுறை அறுத்தார். ஆனால், அவர் ஒவ்வொரு நிகழ்விலும் அர்ஜூனன் வில் நாணை கண் சிமிட்டுதலில் (மிகவும் குறுகிய நேரத்தில்) திரும்பக் கட்டுவதைக் கண்டறிந்தார். இதற்காக கர்ணன் அர்ஜூனனைப் பாராட்டினார், மேலும் ஷால்யாவிடம் உலகில் சிறந்த வில்லாளன் என்று அர்ஜூனனை ஏன் அழைக்கின்றார்கள் என்று தான் தற்போது bvbvbகுறிப்பிட்டார். இருப்பினும் போரானது தொடக்கத்தில் சமமான நிலையில் இருந்தது. கர்ணனின் தேர் சக்கரம் தரையில் சேற்றில் மூழ்கியபோது (பூமாதேவியின் சாபம் செயல்படத் தொடங்கியதன் விளைவு) அவர் தடுமாற்றமடைந்தார். அவரது குரு பரசுராமர் முன்னறிந்து கூறியது போலவே, அவரால் தெய்வீக ஆயுதங்களுக்கான மந்திரங்களை அவரால் நினைவுபடுத்திக் கண்டறியவும் முடியவில்லை. அவர் தேரிலிருந்து இறங்கி சக்கரத்தை அகற்றினார், அவர் அர்ஜூனனிடம் போர் விதிமுறைகளின் படி, தான் சரிசெய்துவிட்டு வரும்வரையில் கார்த்திருக்கக் கோரினார். கிருஷ்ணர் அர்ஜூனனிடன் அபிமன்யூவைக் கொல்லும்போது அதையே அவன் மீறிய பின்னர், இந்த நேரத்தில் விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட கர்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கர்ணன் உதவியின்றி உள்ளபோதே கொல்லும்படி (பிராமணரின் சாபம் நடைமுறைக்கு வந்தது) அர்ஜூனனை கிருஷ்ணர் நிர்ப்பந்தித்தார். பகவான் கிருஷ்ணர் அர்ஜூனனிடம், போரின் இந்த சிக்கலான தறுவாயில் கர்ணனைக் கொல்லாவிட்டால், அவர் வேறு எப்போதும் அவரைக் கொல்லவும் முடியாது மற்றும் பாண்டவர்கள் போரில் வெல்லவும் முடியாது என்று கூறினார். எனவே, அர்ஜூனன் ஊழ்வினையின் படி தெய்வீக அம்பைப் பயன்படுத்தி கர்ணனைக் காயப்படுத்தினார்.அர்ஜுனா அர்ஜுலிகா ஆயுதத்தை கர்னாவை கொல்ல பயன்படுத்தினார். போரினைத் தொடர்ந்து, வீழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஈமச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டது. குந்திதேவி கர்ணனுக்கும் அதே போன்று சடங்குகளைச் செய்யுமாறு தனது மகன்களிடம் வேண்டினார். அவர்கள் மறுத்தபோது, அவர் தொடர்ந்து அவன் சூதபுத்திரன் என்று கூறுகின்றார், மேலும் அவரது பிறப்பைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தினார். சகோதரர்கள், தாங்கள் உடன்பிறப்பைக் கொலைசெய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தருமர் குறிப்பாக தனது தாயின் மீது கடுங்கோபம் கொள்கின்றார், மேலும் எந்தப் பெண்ணாலும் இந்த இடத்தில் ரகசியம் கொள்ள இயலாது என்று தூற்றுகின்றார். பகவான் கிருஷ்ணர் காந்தாரியிடம் சென்று கர்ணன் இறந்ததைக் கூறுகின்றார். கர்ணன் குந்தியின் மூத்த மகன், அவர் யார் என்று அவருக்குத் தெரிந்தும், அவர் துரியோதனனுக்காக தொடர்ந்து போரிட்டார் என்றும் கூறினார். காந்தாரி பகவான் கிருஷ்ணரிடம், "உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்தும், உங்களால் போரைத் தடுக்கமுடியவில்லை" என்று கூறினாள். காந்தாரி பகவான் கிருஷ்ணரை நோக்கி: "எனது குடும்பம் மொத்தமும் அழிந்தது போன்று, உங்கள் குடும்பமும் அதே போன்று அழியும்" சபித்தாள். 18 நாட்கள் கழித்து குருக்ஷேத்ராவில் மகாபாரதப் போர் நிறைவடைந்தது, பகவான் கிருஷ்ணர் அர்ஜூனனை தனது தேரிலிருந்து இறங்கி வருமாறு கூறினார். அர்ஜூனன் அதைச் செய்தபோது, கிருஷ்ணர் அர்ஜூனனை தேரிலிருந்து சிறுதூரம் அழைத்துச் சென்றார். பின்னர் அவர் பகவான் ஹனுமானுக்கு தேரிலிருந்து வெளியேறும்படி குறிப்பு தருகிறார். அந்த நேரத்தில் அனுமன் தேரிலிருந்து குதித்தார், அர்ஜூனனின் குதிரைகள் உயிருடன் எரிந்தன மேலும் அவரது தேர் வெடித்து சிதறியது. இதைப் பார்த்தபோது அர்ஜூனன் அதிர்ச்சியடைந்தார். கிருஷ்ணர் அர்ஜூனனிடம் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அசுவத்தாமன் ஆகியோரின் இறப்பை ஏற்படுத்தும் அஸ்திரங்கள் அவரின் குதிரைகள் மற்றும் தேருக்கு அழிவை ஏற்படுத்தி விட்டது. ஹனுமானின் தெய்வீக சக்தி அவர்களின் ஆயுதங்களின் விளைவுகளை காலம்தாழ்த்தியதன் வாயிலாக தேர் சரியான நிலையில் பாராமரிக்கப்பட்டு வந்தது என்று கூறினார். தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அத்தினாபுரம் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், தருமர் அல்லது துரியோதனன் அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை. கர்ணன் அவரது தெய்வீக சேவைகளை தீயவன் துரியோதனனுக்குச் செய்திருந்தாலும், பலகோடி இந்துக்களும் மற்றும் இந்தியர்களும் அவரை போற்றுதலுக்குரிய நபராகவே கருதுகின்றனர். கர்ணன் எப்போதும் வல்லமை பொருந்திய போர்வீரராகவே கருதப்படுகின்றார். எல்லா காலத்திலும் மாவீரராகவும் இருக்கலாம். போற்றும்படியான துணிச்சல் மிக்க ஆற்றல் அவரது வாழ்வில் மிகையானது, மேலும் அவர் தனக்கென தனிப்பட்ட துணிச்சல், வீரம் மற்றும் புகழ் ஆகியவற்றுடன் இறந்துள்ளார். கர்ணன் குறிப்பாக தனது பெருந்தன்மைக்காக போற்றப்படுகின்றார். எவ்வாறு தவறான தீர்ப்புக்கள் தனிநபரின் நல்ல தகுதிகள் அனைத்தையும் பயனற்றதாகக் காண்பிக்கின்றது என்பதற்கு அவர் உதாரணமாகக் கருதப்படுகின்றார். பெரும்பாலான இந்துக்கள் கர்ணனை தனது துரதிஷ்டங்களுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் தங்கு தடையின்றி போராடிய மனிதனாகக் கருதப்படுகின்றார். அவர் தனக்கு வரவேண்டியதை ஒருபோதும் பெற்றதில்லை. ஆனால் அவரது முயற்சிகளுக்கு ஒருபோதும் கைவிட்டதில்லை. பீஷ்மர் மற்றும் பகவான் கிருஷ்ணர் உள்ளிட்ட பெரும்பாலான அவரது சமகாலத்தவர்கள், கர்ணன் மனித இனத்தில் அரிதாகத் தோன்றிய உயர்ந்த ஆன்மா என்பதை ஏற்றனர். கர்ணன் தைரியத்தை இழக்காமல் தடைகளைக் கடக்கும் மனிதர்களுக்கான உத்வேகமாக கருதப்படுகின்றார். கர்ணன் என்பது இந்து ஆண் பெயர்களில் பிரபலமானது. கர்ணனின் வல்லமை மற்றும் நற்குணத்தைக் குறிக்கின்ற பல நிகழ்ச்சிகளும் மேற்கோள்களும் உள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று அர்ஜூனனுடன் கர்ணனின் போரின் போது நடைபெற்றது. கர்ணனின் அம்புகளில் ஒன்று தாக்கியதால் அர்ஜூனனின் தேர் சில அங்குலம் பின் சென்றபோது, அர்ஜூனனின் சாரதியான (தேரோட்டி) கிருஷ்ணன் கர்ணனைப் பாராட்டினார். அவரது கருத்தில் அர்ஜூனன் வியப்படைந்து "நான் கர்ணனின் தேரை பல மைல்கள் பின்னுக்கு நகர்த்தியுள்ள போது, இதற்காக கர்ணனை பாராட்டுவதில் எந்த காரணமும் இல்லை" என்றார். பின்னர் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் விவரித்தது, "உனது தேரில் பகவான் விஷ்ணுவாக நான் இருக்கின்றேன். நான் முழு பிரபஞ்சத்தினை கொண்டுள்ளேன் மற்றும் உனது தேரில் கூடுதலாக அக்னி (நெருப்புக்கான தெய்வம்) இருக்கின்றார், மேலும் ஹனுமானின் ஆசீர்வாதங்கள் கொடி வடிவத்தில் உள்ளன. இந்த காரணிகளை உனது தேரிலிருந்து நீக்கப்பட்டால் அது பறந்திருக்கும், புவியின் மையத்தில் இருந்திருக்கும்" என்று கூறினார். அதே போன்று போரில் கர்ணனின் நன்னெறிகளை விவரிக்கின்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று அர்ஜூனன் உடன் நிகழ்ந்த போரின் போது, கர்ணனின் அம்பின் பலத்த அடியால் அர்ஜூனன் மயங்கினார். அந்த நேரத்தில் கர்ணனால் பாதுகாக்கப்பட்ட நாக அரசன் ஆஷ்வசேன், மறைந்து ஊர்ந்து சென்று கர்ணனிடம் தனது விஷத்தை அர்ஜூனனுக்கு எதிராகப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. ஏனெனில் அர்ஜூனன் நிலத்திற்காக அவனது வீட்டை (காடு) எரித்திருந்தார். கர்ணன் எந்த மனிதன் மீதும் பாம்பைப் பயன்படுத்துவதை மறுத்தார், இது மனித இனத்திற்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்று கூறினார். இன்னும்பல; கர்ணன் இறந்த அன்று இரவில் குருக்ஷேத்ரா போர்க்களத்தில் கர்ணன் சாய்ந்து இறக்கின்ற பொழுது பாண்டவர்களின் கூடாரத்தில் கிருஷ்ணர் சோகத்துடன் சாய்ந்திருந்தார். அவர் ஏன் சோகத்துடன் இருக்கிறார் என்று அர்ஜூனன் கேள்வி எழுப்பிய போது, கிருஷ்ணர் கர்ணனைப் போன்ற பெரிய மனிதன் இறந்ததற்காக துக்கம் அனுசரிப்பதாகப் பதிலளித்தார். கர்ணன் மீது கிருஷ்ணர் கொண்ட அன்பால் கோபப்பட்ட அர்ஜூனன் ஏன் என்று அறிய நிர்ப்பந்தித்தார். பின்னர் கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடம் இரண்டு பிராமணர்களாக மாறுவேடமிட்டு அழைத்து சென்றார்; ஒருவர் இளைஞர் மற்றொருவர் வயதானவர். வயதான பிராமணராக வேடமிட்ட கிருஷ்ணர் கர்ணனிடம் கூறியது, "ஓ கர்ணா, நீ அதீத பெருந்தன்மைக்கு பெயர் பெற்றவராக இருக்கின்றீர்கள், எனவே நான் இங்கு எனது மகனின் திருமணத்திற்காக எதையாவது பெற இங்கு வந்துள்ளேன், உங்களால் எனக்கு என்ன கொடுக்க முடியும்?" கர்ணன் பதிலளித்து கூறுகையில் "நான் இங்கு சாகும் தருவாயில் படுத்துள்ளதால் உங்களுக்கு அளிக்க என்னிடம் எதுவுமில்லை, என்னிடம் எனது தங்கப்பல் மட்டுமே எஞ்சியுள்ளது" என்றார். மேலும் கர்ணன் அருகில் இருந்த கல்லை எடுத்து தன் பல்லை தட்டி வெளியே எடுத்தார். கர்ணனை சோதிக்கும் பொருட்டும் அர்ஜூனனுக்கு கர்ணனின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டவும், கிருஷ்ணர் கர்ணனை பிராமணர் தொடுவதற்குப் பொருந்தாத எதையோ இரத்தத்தில் நனைத்து அளித்ததற்காக திட்டினார். இதைக் கேட்டவுடன் கர்ணன் அழத்தொடங்கினார், மேலும் தனது கண்ணீர் அந்தப் பல்லைக் கழுவி கிருஷ்ணரிடம் அளித்தார். அதன் பின்னர் கிருஷ்ணர் சென்றுவிடுகிறார், அர்ஜூனன் அவரைப் பின்தொடர்ந்தார். பின்னர் கிருஷ்ணர் அர்ஜூனனிடம் இந்த உலகை விட்டு கர்ணன் செல்வது ஈகைப் பண்பு மற்றும் அது போன்ற கர்ணன் கொண்டிருந்த பிற தகுதிகள் செல்வதைக் குறிக்கும்; ஆகவே தான் கர்ணனின் சாவுக்காக துக்கம் அனுசரிப்பதாகக் கூறினார். அவரது மிகுந்த தியாகத்துடன் அகமகிழ்ந்து, கிருஷ்ணர் கர்ணனுக்கு தனது கருட வாகனத்தில் தனது மனைவியர் ராதா மற்றும் ருக்மணி ஆகியோருடன் இணைந்து காட்சியளித்தார். பகவான் கிருஷ்ணர் அவர் விரும்பிய வரத்தை தருவதாக கர்ணனுக்கு உறுதியளித்தார். கர்ணன், தான் கிருஷ்ணனிடம் துரியோதனனுக்கு வெற்றியை அளிக்கும் படியும் அவரது படைகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கவும் கேட்கமுடியும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. பின்னர் அவர் இரண்டு விஷயங்களைக் கோரினார்: முதலாவதாக, தான் வெகுவிரைவில் இறக்க வேண்டும், அவரது தாய் குந்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் வேகமாக போர்க்களத்திற்கு வரவேண்டும் மற்றும் அவர் கர்ணன் தனது மகன் என்றும் அவன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் அல்ல என்றும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரண்டாவதாக, கிருஷ்ணனின் பாதத்தை அடையும் விதமாக (அதாவது, அவரது ஆன்மாவை பல்வேறு பிறப்புகளின் சுழற்சியில் இருந்து விடுதலை செய்ய) கர்ணன் பிறருக்கு உணவளித்தலின் நற்செயலை (அன்னதானம்) நிறைவேற்ற வேண்டுகின்றார். இது வெறும் தானம் மட்டுமே அவர் இதிலிருந்து இந்த வாழ்க்கையில் எதையும் எடுத்து செல்ல முடியாது. ஏனெனில் யாரும் தாழ்ந்த சாதியினரின் வீட்டில் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அவர் கிருஷ்ணரிடம், தனக்கு அடுத்த பிறப்புகளை அளித்தால் சுதந்திரமாவும் அன்னதானத்தை அளிக்கும் வாய்ப்புடன் அளிக்கவும் கூறுகின்றார். கிருஷ்ணர் கர்ணனிற்கு இவற்றை சாதகமாக வழங்கி, மேலும் அவரிடம் அடுத்த பிறப்பில் மீண்டும் சிறுத்தொண்டர் நாயனாராக பிறக்க இருப்பதாக கூறினார். (இது நாட்டுப்புற மரபுவழிச் செய்தி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்ல) இவர் தனது மகனை பகவான் சிவபெருமானுக்கு உணவாக வழங்கியதற்கு பிரபலமானவர், அதன் பின்னர் அவர் மோட்சத்தை அடைந்தார். அர்ஜூனன் மற்றும் கர்ணன் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் சிறந்த வில்லாளர்கள், திரௌபதியை மணக்க போட்டியிட்டவர்கள் மேலும் இருவரும் தங்களின் சொந்த சகோதரர்களுடன் போரில் சண்டையிட்டனர். ஆழமான இணைப்பு அமைந்துள்ளது, உண்மையில் இருவரும் கௌரவர்களிடத்தில் நட்பு ரீதியாகவும் மற்றும் இரத்த பந்தம் மூலமாகவும் வலிமையான முடிச்சைக் கொண்டிருந்தனர். அவர்களாக மற்றும் அவர்களின் குடும்பங்களின் முக்கியத்துவத்துடன் இணைந்த அவர்களின் முடிவுகள் பகவத் கீதையில் கிருஷ்ணரால் விவரிக்கப்பட்டபடி ஒருவரின் கடமையைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தப் பயன்படுகின்றன. கர்ணன் பரிசளித்தல், ஈகை, நேர்மை மற்றும் வீரம் ஆகியவற்றின் சிறந்த உதாரணமாக வாழ்ந்தார். இன்னமும் ஊழ்வினையால் உந்தப்பட்டவர் ஏனெனில் அவர் துரியோதனனுக்கு தனது விசுவாசத்தைக் கொண்டிருந்தார். கர்ணன் திரௌபதி கணவனாக ஐந்து நேர்த்தியான தகுதிகளை வைத்திருந்தார், ஆனால் அவர் துரியோதனனிடம் இருந்ததால் அவையனைத்தும் செல்லுபடியாகாதவையாகின. துரியோதனன் மீதான நட்பு கர்ணனை வழிநடத்தியது, இருந்த போதிலும் விருப்பமின்றி அவரது நண்பருக்கு துணைபுரிவதில் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் பாண்டவர்களுக்கு எதிராக இருந்தது. கர்ணன் பாண்டவர்களுக்கு எதிரான துரியோதனின் தீங்கிழைக்கும் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்தார். நன்மைக்கு எதிராக தீமைக்கு உதவுவதில் தனது உடனடியான வீழ்ச்சியைப் பற்றியும் அவர் அறிந்திருந்தார். திரிட்ராஷ்திராவின் நீதிமன்றத்தில் திரௌபதியின் அவரை எடுத்துக்கொண்ட விதத்தால் அவரது குற்றமற்ற நற்பெயரை மீண்டும் சிலர் நிலைநாட்டிய வேளையில், சிலர் அவர் இந்த சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர், ஆகவே திரௌபதி தனது சுயம்வரத்தில் அவர் கலந்து கொண்டு போட்டியிடும் வாய்ப்பை மறுக்க அவரை சூத் புத்ரா என்ற அடைமொழியில் (இது அவரை தாழ்ந்த சாதியிலிருந்து வந்தவர் என்பதைக் குறிக்கின்றது) அசிங்கப்படுத்தியதன் மூலமாக முதலில் மரியாதையின்றி தாழ்வுபடுத்தினார்; இருப்பினும் நிராயுதபாணியான மற்றும் எண்ணிக்கையில் விஞ்சிய அபிமன்யூவை கொன்றதில் அவரது பங்கு, அவர் விதிமுறையின் படி கௌரவமிக்க போர்வீரராக அவரை நேரடியாக வேறு வழியில் பாதிப்படையச் செய்திருக்கலாம் மற்றும் ஊழ்வினையின் காரணமாக அதே விதியில் தண்டித்திருக்கலாம். மகாபாரதத்தின் சில மொழிபெயர்ப்புகளின் படி, இது போரின் தவறான பக்கத்தில் போர்வீரனாக கர்ணனின் நிலையை இறுக்கத்தைக் காட்டியது மேலும் அதே வழியில் கர்ணன் அர்ஜூனனால் கொல்லப்பட்டது அவரது விதியை நிராயுதபாணியாக, தேரற்றவனாக முடித்தது மற்றும் அவரது பின்புறம் அர்ஜூனனிடம் திரும்பியது. கர்ணன் அவரது தந்தை சூரியனை வணங்கப் பயன்படுத்திய ஆர்க்கியா தெய்வத்தன்மையை அளித்திருக்கின்றது. இந்த மரபு பீஹார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜா என்ற வடிவத்தில் இன்னமும் கொண்டு செல்லப்படுகின்றன. ஆகத்து 31 திரௌபதி திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர். திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாஞ்சால அரசன் துருபதன் விதித்த விதிகளை அருச்சுனன் மட்டுமே நிறைவேற்றி திரெளபதியை சுயம்வரத்தில் வென்றான். ஆனால் குந்தி,மகன் வென்று கொண்டு வந்த பொருள் என்ன என்று கவனிக்காமல், திரெளபதியை பாண்டவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். அதன்படி திரெளபதியை பாண்டவர்கள் மணந்து தகுந்த விதிகளை நிர்ணயித்து இல்லற வாழ்க்கையை நடத்தினர். பாண்டவர், கிருஷ்ணர் மற்றும் மயன் துணையால் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை புதிதாக நிர்மாணித்து ஆண்டனர். பாண்டவர் ராஜசூயம் எனும் வேள்வி செய்தனர். அதற்காக புது நவீன அரண்மனை கட்டினர். ராஜசூய வேள்விக்கு வந்திருந்தவர்களில் துரியோதனனும் ஒருவன். துரியோதனன் நவீன அரணமனையை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தரை போன்ற நீர்நிலையில் விழுந்து விட்டான். அதைக் கண்ட திரெளபதி, குருடனின் (திருதராஷ்டிரன்) மகன் குருடனே என்று, துரியோதனனைப் பார்த்து எள்ளிநகையாடினாள். அதனால் தீராத அவமானமுற்ற துரியோதனன், திரெளபதியை பழி வாங்க திட்டமிட்டான். அத்தினாபுரம் திரும்பிச் சென்ற துரியோதனன், தானும் ஒரு சபா மண்டபத்தைக் கட்டினான். அச்சபாமண்டபத்தை பாணடவர்கள் கண்டு களிக்கவும் சூதாடவும், இந்திரப்பிரஸ்தத்திற்கு, தனது தந்தை திருதராட்டிரன் மூலம் விதுரனை தூது அனுப்பினான் துரியோதனன். கௌரவர்களுடன் சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக பாண்டவர் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் அடிமையானாள். இதன் போது துரியோதனனின் ஆணைப்படி, துச்சாதனன் திரெளபதியை பெரியவர்கள் கூடிய நிறைந்த அவையிலே இழுத்து வந்து, திரெளபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்த நினைத்தபோது அது ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் கைகூடாமல் போனது. கௌரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் தருமன், சகுனியின் கபடத்தால் தனது நாடு, படை, பணியாட்கள், செல்வங்கள், சகோதரர்கள் மற்றும் திரெளபதியையும் இழந்தான். அடிமையான திரெளபதியை தன் தொடையில் அமர்த்த, துரியோதனன் தன் தம்பியான துச்சாதனனுக்கு ஆணையிட்டான். துச்சாதனன், திரெளபதியின் நீண்ட கூந்தலை கைகளால் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அத்தினாபுர அரசவைக்கு இழுத்து வந்தான். அத்துடன் திரெளபதியின் துகிலை உரித்தான். துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் கூறி அழுத பாஞ்சாலியின் குரலைக் கேட்டவுடன், ஸ்ரீகிருஷ்ணர், திரௌபதியில் துகிலை தொடர்ந்து வளரச் செய்து, திரௌபதியின் மானம் காத்தவர் கண்ணன். இந்த அவமானத்திற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார். தன்னை தொடை மீது அமரச் சொன்ன துரியோதனனின் தொடைகளை வீமன் கதாயுதத்தால் அடித்து உடைக்கும் வரை தான் மனஅமைதி அடையமாட்டேன் என்று சபதமிட்டார் திரெளபதி. பாஞ்சாலியின் சபதத்தைக் கேட்டு துரியோதனன், துச்சாதனன் மற்றும் அத்தினாபுர அவையினர் அதிர்ந்தனர். அத்தினாபுரத்தின் அரசவையில் சூதில் தோற்ற தருமனால் திரெளபதிக்கு நேர்ந்த அவமானத்துடன், பாண்டவர்கள் 12வருட வனவாசத்தின் போது, திரெளபதி பானையில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்புகையில் துச்சலையின் கணவனும் சிந்து நாட்டு அரசனுமான ஜயத்திரதன், திரெளபதியை மானபங்கப் படுத்த முனைகையில், வீமனும் அருச்சுனனும் திரெளபதியை ஜயத்திரனிடமிருந்து காத்தனர். பின்னர் பாண்டவர் உத்தர நாட்டில் ஒரு வருட தலைமறைவு வாழ்க்கை நடத்தும் போது, விராடனின் மைத்துனனும், அந்நாட்டுத் படைத்தலைவருமான கீசகன் திரெளபதி மீது மையல் கொண்டு, திரெளபதியை மானபங்கபடுத்த முயல்கையில் வீமன் கீசகனைக் கொன்று திரெளபதியை காத்தான். திரெளபதிக்கு பாண்டவர் ஐவர் மூலமாக உபபாண்டவர்கள் எனும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். குருச்சேத்திரப் போரின் முடிவு நாளான 18வது நாள் போரின் நடு இரவில் உறங்கிக்கொண்டிருந்த உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என தவறாக எண்ணி அசுவத்தாமன் கொன்றார். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் திரௌபதி அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. இவ்வம்மனுக்கான கோவில்களின் எண்ணிக்கை மிகக்குறைவெனினும் இவள் கோவில் கொண்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இவ்வன்னையை மிகவும் போற்றுவர். இலங்கையிலே இவ்வம்மன் மழை பொழிவிக்கும் தெய்வமாகவும் குழந்தை வரம் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார். வட இந்தியாவில் கேதார்நாத் கோவில் மண்டபத்தில் பாண்டவர்களுடன் திரௌபதி அம்மன் சிலையும் உள்ளது. மார்ச் 22 மார்ச் 23 அஸ்டெக் நாகரிகம் அசுடெக் நாகரிகம் "(Aztec culture:/ˈæztɛk/ )" 1300 முதல் 1521 வரையிலான காலகட்டத்தில் மத்திய மெக்சிகோவில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. மெக்சிகா கலாச்சாரம் என்றும் அறியப்படும் இக்கலாச்சாரம் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியிலிருந்து தழைத்தோங்கியது ஆகும். இக்காலக்கட்டத்தில் மெக்சிகோ மூன்று நகர அரசுகள் சேர்ந்து உருவான மும்மடிக் கூட்டணியால் ஆளப்பட்டு வந்தது. டெக்சுகோகா மற்றும் டெபானிகா பழங்குடியினர்கள் சேர்ந்து அசுடெக் பேரரசை நிறுவினர். மத்திய மெக்சிகோவின் சில இனக்குழுக்கள், குறிப்பாக நகோதா மொழி பேசக்கூடிய மக்கள் அசுடெக் மக்கள் என அழைக்கப்பட்டனர். 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை இடையமெரிக்கப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் இவ்ர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இவர்கள் தங்களை மெக்சிகா அல்லது மெகிக்கா என்று அழைத்துக்கொண்டனர் . அசுடெக்குகள் என்று அழைக்கப்பட்ட மக்களின் கலாச்சாரம் அசுடெக் கலாச்சாரம் எனப்பட்டது. ஆனால் மத்திய மெக்சிகோவின் பெரும்பாலான இன குழுக்கள் அடிப்படை கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொண்டதால் அசுடெக் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் பண்புகளை அசுடெக்குகளுக்கு மட்டுமே உரியவை எனப் பிரத்யேகமாகக் கூற முடியாது. இதே காரணத்திற்காக அசுடெக் நாகரிகம் என்ற கருத்துத் தோற்றத்தை, ஒரு பொது இடையமெரிக்க நாகரிகத்தின் சமகால நாகரிமாக அறிய முடிகிறது . மத்திய மெக்சிகோவில் வாழ்ந்த மக்கள் நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். பிபில்டின் எனப்படும் உயர்குடிப் பிரபுக்கள் மற்றும் மாசெகுவால்டின் எனப்படும் சாதாரன மக்களும் கலந்ததாக அசுடெக் சமுதாயம் காணப்பட்டது. டெசுகாட்லிபோகா, டிலாலோகா, கிட்சால்குவாடலி போன்ற தெய்வங்களின் வழிபாடு இச்சமூகத்தின் ஓர் அங்கமாக விளங்கியது. டொனால்போகுவலி எனப்படும் 260 நாட்கள் உள்ளடங்கிய சியுபோகுவலி என அழைக்கப்பட்ட 365 நாட்கள் நாட்காட்டி முறையை இவர்கள் பயன்படுத்தினார்கள். டெனோகிட்லாங்கின் நகரத்திலிருந்த அசுடெக்குகள் குறிப்பாக மெக்சிகோவின் காக்கும் கடவுள் ஊட்சிலோபோச்சோட்லி, இரட்டை பிரமிடுகள், மற்றும் அசுடெக் I முதல் III என அறியப்பட்ட பீங்கான் ஆடை ஆகியவற்றை வணங்கினர். 13 ஆம் நூற்றாண்டு முதல் மெக்சிகோ பள்ளத்தாக்கு அசுடெக் நாகரிகத்தின் இதயமாக இருந்தது. அசுடெக்கு மும்மடி கூட்டணியின் தலைநகரமான டெனோகிட்லான் நகரம் இப்பள்ளத்தாக்கில்தான் இருந்தது. டெக்சுகோகோ ஏரியில் சிறுதீவாக உயர்ந்த நிலப்பகுதியில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. மும்மடிக் கூட்டணி அசுடெக் பேரரசை உருவாக்கியது. கப்பம் கட்டிக்கொண்டு ஒரு சிற்றரசாக இருந்த அசுடெக் நாகரிகம் நாளடைவில் மெக்சிகோ பள்ளத்தாக்குக்கு அப்பாலும் அதன் அரசியல் மேலாதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. இடையமெரிக்க நகரங்கள் சிலவற்றை பிந்தைய காலக்கட்டத்தில் வென்று தன்னுடன் இணைத்துக் கொண்டது. டெனோகிட்லான், டெக்சுகோகோ மற்றும் இட்லாகோபான் நகர அரசுகள் ஒன்றிணைந்து 1427 ஆம் ஆண்டில் மும்மடிக் கூட்டணியை உருவாக்கின. முன்னதாக மெக்சிகோ வளைகுடாவை ஆட்சி செய்துகொண்டிருந்த அசுகாபோட்சால்கோவின் டெபானெக் அரசை இக்கூட்டணி தோற்கடித்தது. விரைவிலேயே இக்கூட்டணியிலிருந்த டெக்சுகோகோவும் இட்லாகோபானும் பலமிழந்து டெனோகிட்லான் நகர அரசின் தலைவர்கள் உண்மையில் கூட்டணியை ஆட்சிசெய்தனர். பேரரசு தன் சக்தியை வர்த்தக மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அதிகரித்துக் கொண்டது. ஆக்ரமித்த அல்லது கைப்பற்றிய மாகாணங்களில் வெறும் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மட்டும் ஆட்சி செய்வது உண்மையான பேரரசு அல்ல. மாறாக அதன் கட்டுபாட்டிலுள்ள சிற்றரசுகளை நட்பு ஆட்சியாளர்களை நிறுவியும், ஆளும் வம்சங்களுக்கிடையில் திருமண உறவுகளை உருவாக்குவதன் மூலமூம், அவர்களுக்கு வழங்கப்படும் உயர் அதிகாரங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் மட்டுமே உண்மையான பேரராசாக இருக்க முடியும் . சிற்றரசுகள் அசுடெக் பேரரசர் இயூ டிலாட்டோவானிக்கு கப்பம் கட்டினர். இது அவர்களை பொருளாதார ரீதியாக வெளியுறவுக் கொள்கைகளையும், தொலைவில் உள்ள பகுதிகளுடன் தொடர்பாடல் மற்றும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தியது. ஆடம்பர பொருட்களை கையகப்படுத்துவதற்கு உயரதிகார மையத்தை சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று . பேரரசின் அரசியல் செல்வாக்கு மேலும் தெற்கில் பரவியது. பல போர்களை நடத்தி இடையமெரிக்க நகரங்களைக் கைப்பற்றி தனது ஆட்சிப்பகுதிகளை விரிவாக்கியது. மெக்சிகோவின் சியாபாசு பகுதியையும், மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலாவையும் தனது பேரரசுடன் சேர்த்துக் கொண்டது. பசிபிக் பெருங்கடல் முதல் அட்லாண்டிக் பெருங்கடல் வரை பக்கத்துக்குப் பக்கம் தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. எர்னான் கோர்டெசு தலைமையிலான எசுபானிய வெற்றியாளர்கள் வருவதற்கு சற்று முன்பாக 1519 இல் பேரரசு அதன் அதிகபட்ச அளவை அடைந்தது, அசுடெக் பேரரசின் பாரம்பரிய எதிரிகளான நகூவல் மொழி பேசும் டிலாக்சுகால்டெகாவுடன் இணைந்ததன் மூலம் அவரல் அசுடெக் பேரரசை கவிழ்க்க முடிந்தது. இதன் விளைவாக மெக்சிக்கோ நகரத்தின் புதிய குடியேற்றத்தை அசுடெக் தலைநகரில் எசுபானிய புதிய குடியேற்றம் நிறுவப்பட்டது. மேலும் இவர்கள் மத்திய அமெரிக்காவை காலனித்துவப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டனர். அசுடெக் கலாச்சாரம் மற்றும் அதன் வரலாறு போன்றவற்றை மெக்சிகோ நகரத்திலுள்ள புகழ்பெற்ற டெம்போலோ மேயர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தொல்பொருள் சான்றுகளால் முதன்மையாக அறியப்பட்டது. கொலம்பியர்களின் வருகைக்கு முன்னரே எழுதப்பட்ட புத்தகங்களில் இருந்தும் அறியப்பட்டது. அசுடெக் நாகரிகத்தைக் குறித்து கோர்டெசு மற்றும் பெர்னல் டிலாசு டெல் காசுடில்லோ போன்ற எசுபானிய வீரர்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர். குறிப்பாக அசுடெக் கலாச்சாரம் மற்றும் வரலாறு என்ற தலைப்பில் எழுதப்பட்ட எசுபானிய துறவியின் வரலாற்று நூலும், பிரான்சிசுகன் சபையைச் சேர்ந்த பெர்னார்டினோ டி சகாகுயின் எழுதிய புளோரெண்டைன் கோடெக்சு போன்றவர்கள் நாவாட்டில் மொழியில் எழுதிய இலக்கியங்களும் அசுடெக் நாகரிகத்திற்கான சான்றுகளாகும். அசுடெக் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது வளமான மற்றும் சிக்கலான புராண மற்றும் சமயமரபுகளை கொண்டிருந்தது, அத்துடன் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை மற்றும் கலைச் சாதனைகளையும் அடைந்திருந்தது. அசுடெக் நாகரிகம் கட்டாய கல்வி முறையைக் கொண்டிருந்த ஒரு முன்னேற்றகரமான நாகரிகமாகும். அசுடெக் நாகரிகம் கட்டட கலையிலும், கலை திறன்களிலும் சிறந்து விளங்கியது. கலாசாரத்திலும், அறிவியல் முன்னேற்றதிலும் உன்னத நிலையில் விளங்கிய அசுடெக் நாகரிக மக்கள், நரபலியிடுதல் போன்ற கொடுர பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகுவாட்டல் மொழியில் அசுடெக்கல் என்ற ஒருமைச் சொல்லும் அசுடெக்கா எனப்படும் பன்மைச் சொல்லும் நாகுவாட்டல் மொழியைப் பேசுகின்ற அசுட்லான் என்ற தொன்மைப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்ற பொருளைக் குறிக்கின்றன. பின்னாளில் இப்பகுதி மக்கள் மெக்சிகா மக்கள் எனப்பட்டனர். டெக்சுகோகோ ஏரியில் உள்ள் ஒரு தீவில் பொதுவாக அசுடெக் என்ற சொல் டெனோகிட்லாங் பகுதியிலிருந்து வ்ந்த மெக்சிகா மக்களைக் குறிக்கும். இவர்கள் டெக்சுகோகோ ஏரியில் உள்ள் ஒரு தீவிலிருந்து வந்து தங்களை மெக்சிகா டெனொட்கா என்று அழைத்துக் கொண்டார்கள். சில சமயங்களில் டெனோகிட்லான் நகருடன் சேர்ந்த இரண்டு பிரதான நகர-மாநிலங்களான டெக்சுகோகோவின் அகோல்குவா மற்றும் டிலாகோபானின் டெபானெக்ச்சையும் அசுடெக் என்ற சொல் உள்ளடக்குகிறது. இவையிரண்டுந்தான் மெக்சிகாவுடன் சேர்ந்து மும்மடிக் கூட்டணியாக உருவாயின.இக்கூட்டணியே அசெடெக் பேரரசைக் கட்டுப்படுத்தியது. மற்ற சில சூழல்களில் அசுடெக் நாகரிகம் என்பது பல்வேறு நகர்ப்புற மாநிலங்கள் அதாவது, மெக்சிகா, அகோல்குவா இனத்துடன் பகிர்ந்து கொள்ளும் மக்களையும், அவர்கள் இன வரலாறு மற்றும், கலாச்சார அம்சங்களையும் இணைத்துக் கொள்கிறது. மேலும் நாகுவாட்டல் மொழி பேசும் மக்களும் அசுடெக் தன்னோடு இணைத்துக் கொண்டது. இந்த பொருளுடன் அசுடெக் நாகரிகத்தை நோக்கினால், அசுடெக் நாகரிகத்திற்கு சொந்தமான அனைத்து கலாச்சார வடிவங்களும் கொண்டு வாழ்கின்ற மத்திய மெக்சிகோவில் வாழும் மக்கள் அனைவரையும் இக்கலாச்சாரத்தின் வகையில் சேர்த்து பேச முடியும். இனக் குழுக்களை விவரிக்க அசுடெக் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது அது தொன்மை காலத்தின் பிற்பகுதியில் மத்திய மெக்சிகோவின் காலப்பகுதியில் நாகுவாட்டல் மொழியைப் பேசும் மக்களைக் குறிப்பதாக கொள்ளப்படுகிறது. தெனோகிட்லான் பேரரசை நிறுவுதலில் மெக்சிகா இனக்குழுக்கள் முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அசுடெக் பேரரசுடன் தொடர்புடைய அகோல்குவா, டெபனெக் மற்றும் பிற குழுக்களையும் அசுடெக் என்ற சொல் குறிக்கிறது. பழைய பயன்பாடுகளில் இந்த வார்த்தை நாகுவாட்டல் மொழி பேசும் இனக்குழுக்களைக் குறிக்கவே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் நாகுவாட்டல் மொழிதான் அசுடெக் நாகரிகத்தின் மொழியாக முன்னர் கருதப்பட்டது. சமீபத்திய பயன்பாட்டில், இந்த இனக்குழுக்கள் நாகுவா மக்கள் என அழைக்கப்படுகிறார்கள் . மொழியியல் ரீதியாக, "அசுடெக்கான்" என்ற சொல்லானது யூட்டோ-அசுடெக்கான் மொழிகளின் கிளை அல்லது சில நேரங்களில் யூட்டோ-நாநாகுவன் மொழிகள் அழைக்கப்படுகிறது இதில் நாகுவாட்டல் மொழியும் அதன் நெருங்கிய மொழிகளான போச்சூடெக், மற்றும் பிப்பில் மொழிகளும் அடங்கும் . அசுடெக்குகள் 14, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் மத்திய மெக்சிகோவில் கொலம்பியர்களுக்கு முந்தைய இடையமெரிக்க மக்களாக இருந்தனர். அவர்கள் தங்களை மெக்சிகா என்று அழைத்துக் கொண்டனர். அசுடெக் பேரரசின் தலைநகரம் டெனோகிட்லான் ஆகும். இப்பேரரசின் காலத்தில் டெக்சுகோகோ ஏரியில் இருந்த ஒரு திவில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. நவீன மெக்சிகோ நகரம் டெனோகிட்லான் நகரின் lan இடிபாடுகள் மீது கட்டப்பட்டது. அமெரிக்காவின் எசுபானியக் குடியேற்றமானது, இரண்டாம் இயூய் டிலாட்டானி மொக்டெசூமா ஆட்சியின் போது நிகழ்ந்தது. 1521 இல் எர்னான் கோர்டெசு, மற்ற பூர்வீக அமெரிக்கர்களுடன் சேர்ந்து, அசுடெக்குகளை உயிர்நஞ்சுப் போர், முற்றுகைப் போர், உளவியல் போர் மற்றும் நேரடி போர் மூலம் வெற்றி கொண்டனர். 1376 ஆம் ஆண்டு முதல் 1427 ஆம் ஆண்டு வரை, மெக்சிகாவானது அசுகாபோசால்கோவின் சிற்றரசாக இருந்தது. ஆஜ்டெக் ஆட்சியாளர்கள் அகாமாபிசிட்லி,அல்ட்சுயிலிகூட்டல் மற்றும் சிமல்போபோகா ஆகியோர் சிற்றரசை ஆட்சி செய்தனர். டெபானிக்கை ஆட்சி செய்த டெசோசோமோக் 1425 இல் இறந்த பின்னர் அவரது மகன் மேக்சுட்லா அசுகாபோட்சால்கோவின் அரியணை ஏறி அரசரானார். மெக்சிகோ சமவெளிக்கு அருகிலுள்ள மாகாணங்களில் தனது ஆட்சியை பரப்ப முயற்சிகள் மேற்கொண்டார். இந்த செயல்முறையின் போது, சிமல்போபோகா, டிலாட்டுவானி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில் டெக்சுகோகொவின் நெசாகுவால்கோயோடல் நாடுகடத்தப்பட்டார் . அசுடெக் நாகரிகத்தின் வீழ்ச்சி கொடூரமான குடியேற்றவாதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கேர்னன் கோர்டெஸ் தலைமையிலான எசுபானியப் படைகள் 1519 இல் மெக்சிக்கோவுக்குச் சென்றது. அஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட இவர்கள் அசுடெக் பேரரசனான மொன்டெசூமாவைக் கொலை செய்தனர். ஆனால் அஸ்டெக்குகளின் தாக்குதலில் தப்பியோடினர். பின்னர் டெனோச்டிட்லனில் பரவிய பெரியம்மை காரணமாக பெருமளவு அஸ்டெக்குகள் இறந்த நிலையில் மீண்டும் தாக்கிய ஸ்பானியர்கள் டெனோச்டிட்லனினை அழித்து அதனைக் கைப்பற்றினர். அசுடெக் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அசுடெக்குகள் கல்வி கற்பது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது. துரியோதனன் துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பானுமதி இவரது மனைவியாவர். வேத வியாசரின் அருளால் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறந்தனர். முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான். துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. தனது சகோதரர்களால், குறிப்பாக துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர், மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமரிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். கர்ணன், துரியோதனனின் உற்ற நண்பன். துரியோதனன் கலிங்க நாட்டின் இளவரசியான [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]யை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். [[கிருட்டிணன்]] மகன் [[சாம்பன்]] இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறான். [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் துரியோதனன் [[குருச்சேத்திரப் போர்| குருசேத்திரப் போரில்]] 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது. [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]] 18வது நாள் இறுதிப் போரில், துரியோதனன், கதாயுதப் போர் புரிந்து [[வீமன்|வீமனால்]] கொல்லப்படுகிறார். [[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] டயானா, வேல்ஸ் இளவரசி வேல்ஸ் இளவரசி டயானா ("Diana, Princess of Wales", இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் தானுந்து ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராத்சிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. டயானா 1 ஜூலை 1961, 7:45, பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார். அவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். அவர் பிறக்கும் ஒரு வருடத்திற்க்கு முன் ஜான் எனும் சகோதரன் இறந்து போனான். வாரிசுக்கான மோதல் டயானாவின் பெற்றோர்களுக்கு இடையில் வெறுப்பை தந்தது. டயானவிற்க்கு எட்டு வயதிருக்கும் போது அவ்விருவரும் பிரிந்து சென்றனர். விவாகரத்துக்கு பின்னர் டயானா தன் தாயுடன் இருந்தார், கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு டயானா லண்டனுக்கு வரும் போது லார்டு அல்தார்ப் தன் முன்னால் மனைவி வருவதை அனுமதிப்பதில்லை. சிறிது காலம் கழித்து தன் மாமியார் லேடி ஃபெர்மாயின் ஆதரவுடன் லார்டு அல்தார்ப் தன் மகளை திரும்ப பெற்றார். டயானா முதலில் நோர்ஃபோக்கில் உள்ள "ரிட்டில்ஸ்வர்த் ஹாலில்" படித்தார், பின்னர் செவனோக்ஸ், கென்டில், உள்ள "தி நியூ ஹை ஸ்கூல்"லில் படித்தார். 1973ல் லார்டு அல்தார்ப், டார்த்மவுத்தின் கோமாட்டி ரைய்னெவுடன் உறவு கொண்டார். 9 ஜூன் 1975ல் தன் தந்தை டயானாவை "எர்ல் ஸ்பென்சர்"ராக நியமித்து; டயானா, லேடி டயானா என்றழைக்கப்பட்டார். டயானா மிகுந்த அமைதியானவர், இசையிலும், நடனத்திலும் விருப்பம் உள்ளவர். 1968ல் டயானா ரிட்டில்ஸ்வர்த் ஹால் பெண்கள் பள்ளியில் படித்தார். பின்னர் வெஸ்ட் ஹீத் பள்ளிக்கு மாற்றப்பட்டார், அவர் கல்வியில் பெரிதாக பிரகாசிக்க வில்லை அதிக பாடங்களில் தோல்வியுற்றிருந்தார். ஆனால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது சிறந்த பியானோ கலைஞராக ஆனார். 1977ல் ரூக்மாண்ட், ஸ்விட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டிடுட் அல்பின் விடெமானட் எனும் பள்ளியில் பயின்றார் அச்சமயம் அவர் தன் வருங்கால கணவரை சந்தித்தார், டயானா நீச்சல், நீர் மூழ்குதல், பெல்லரினா எனும் கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண்ணாகவும் பிரகாசித்தார். அவர் பாலேட் நடனத்தை சிறிது காலம் பயின்றாலும் பின்னர் தன் உய்ரம் காரணமாக வெளியேறினார். டயானா முதன் முதலாக செவிலித்தாயாக அலெக்ஸான்றா எனும் பெண்ணிற்க்கு 17 வயதிருக்கும் போது வேலை செய்து வந்தார். அதன் பின்னர் டயானா லண்டனுக்கு 1978ல் வந்து தன் தாய் அதிகமாக ஸ்காட்லாந்தில் இருந்ததால் அவரின் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் தன் 18வது பிறந்த நாளுக்கு 100,000 பவுண்டு மதிப்புள்ள குடியிருப்பு வாங்கப்பட்டது. அங்கே அவர் 1981 வரை மூன்று குடியிருப்பு வாசிகளுடன் வசித்து வந்தார். தன் தாயின் ஆலோசனையின் படி சமையல் வகுப்புகளுக்கு சென்றார், சிறந்த சமையல்க்காரர் ஆகா விடினும் நல்ல நடன பயிற்றுனராக ஆனார். அதுவும் ஒரு சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்தால் நின்று போனது. அதன் பின்னர் அவர் சிறிது காலம், ஆரம்ப பள்ளியில் உத்வியாளராக இருந்தார், தன் சகோதரி சாராவுக்கு உதவி செய்து வந்தார், விருந்தினர் கூட்டம், உபசரிக்கும் பெண்ணாக இருந்தார். சிறிது காலம் லண்டனில் வசிக்கும் ஒரு குடும்பதுக்கு செவிலித்தாயாகவும் வேலை செய்து வந்தார். வேல்ஸ் இளவரசர் சார்லஸ், டையானாவின் மூத்த சகோதரி சாராவுடன் முன்னரே தொடர்பு வைத்திருந்தார், அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பிப்ரவரி ஆறாம் தேதி 1981ல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, டயானா 30,000 பவுண்டு மதிப்புள்ள மோதிரத்தை தேர்வு செய்தார். அதே மோதிரம் பின்னர் கேத் மிடில்டன்னுக்கு 2010ல் நிச்சயதார்த்த மோதிரம் ஆனது. தன் நிச்சயதார்த்தை தொடர்ந்து டயானா தன் வேலைகளை விடுத்து, க்லேரன்ஸ் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்தார். அதன் பின்னர் தன் திருமணம் வரை பக்கிங்க்ஹாம் இல்லத்தில் வசித்து வந்தார். 1981, ஜூலை, இருபத்தி ஒன்பதாம் தேதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித பால் தேவலயத்தில் திருமணம் நடந்தது. இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியின் ஊடாகவும், அறுபது லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டனர். டயானா இருபத்தி ஐந்து அடி நீளமுள்ள ஒன்பதாயிரம் பவுண்டு மதிப்புள்ள உடையை அணிந்து வந்தார். ஹாட்லிக் கல்லூரி ஹாட்லி கல்லூரி ("Hartley College") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும். 1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாகும். இது வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது. 1814 சூன் 29 இல் மெதடிஸ்த மதப்பரப்புனர்கள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தனர். 1834 ஆம் ஆண்டில் வண. பீட்டர் பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாண நகரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் 1838 இல் பருத்தித்துறை உவெசுலியன் மிசன் மத்தியப் பாடசாலையை ("Wesleyan Mission Central School") 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார். 1860 ம் ஆண்டளவில் இப்பாடசாலை மூடப்பட்டு 1861ம் ஆண்டு டி.பி. நைல்ஸ் என்பவரால் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து இயங்கி வந்தது. நைல்சு 1861-1868ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்குப் பின்னர் சாமுவேல் என்சுமன் என்பவர் தலைமை ஆசிரியரானார். 1874 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்தில் இருந்து இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பெறத் தொடங்கியது. இதன் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தாமோதிரம்பிள்ளை செரட் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் இப்பாடசாலை "Christ Church School" எனப் பெயர் மாற்றப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் வண. மார்சல் ஹார்ட்லி என்பவர் இக்கல்லூரியில் வேதியியல் ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். இதனால் இக்கல்லூரி “ஹார்ட்லிக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாமோதிரம்பிள்ளை 28 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1943 இல் கே. பூரணம்பிள்ளை தலைமையாசிரியரானார். 1960களில் அனேகமான தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டதை அடுத்து ஹார்ட்லி கல்லூரியும் 1960 டிசம்பர் 1 இல் அரசு உதவி பெறும் பாடசாலையானது. ஈழப்போர்க் காலத்தில் 1985 முதல் 1990 வரை புத்தளையில் இருந்து இயங்கியது. 1989 இல் இக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது. 1996 முதல் 2002 வரை இப்பாடசாலையின் பெரும்பாலான பக்திகளை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். பாடசாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டது. இங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மே 25 உலோக நாணயம் நாணயம் என்பது அரசுகளால் வழங்கப்படும் ஒரு பண வடிவமாகும். வழக்கமாக உலோகங்களால் உருவாக்கப்படும் நாணயங்கள், தட்டை வடிவில் இருக்கும். நாணயங்களும் வங்கித்தாள்களும் சேர்ந்தே நவீன பண முறைமைகளை உருவாக்குகின்றன. பொதுவாக நாணயங்கள் குறைந்த பண மதிப்புடையவையாக இருக்கும். பெரும்பாலான பண முறைமைகளில், ஆகக் கூடிய மதிப்புடைய நாணயத்தின் மதிப்பு, ஆகக் குறைந்த மதிப்புடைய வங்கித் தாளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கும். நாணயவியல் (Numismatics) என்பது நாணயத்தின வரலாறு, சிறப்புகள்போன்ற வற்றை ஆராயும் அறிவுத்துறை ஆகும். இந்தத்துறை மேனாட்டில் பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது அன்று முதல் அறிஞர்களும், அரசாங்கமும் புராதன நாணயங்களைச் சேகரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனலாம். இது நாணயங்கள் பற்றிய ஆராய்சிக்கு துணை புரிந்தன. இக்கால கட்டத்தில் உலகெங்கும் நடைபெறுகின்ற பொருட் காட்சிசாலைகளில் நாணயவியலுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரிலுள்ள பண்டைய நாணயத் தொகுதியே உலகில் அதிகமானதும் சிறந்ததுமாகும். இந்தியாவிலுள்ள பொருட் காட்சிசாலைகளிலும் பண்டைய நாணயத் தொகுதிகள் உள்ளன. நாணயவியல் தொடர்பான பல சிறந்த நூல்களும் இதழ்களும் பிரசுரிக்கப்பட்டன. பல நாடுகளில் நாணயவியல் கழகங்களும் இயங்கி வருகின்ன. நாணயங்கள் மேனாட்டிலும் கீழ் நாட்டிலும் இ.மு. எட்டாம் நூற்றாண்டில் தோன்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளன. நாணயங்களை விரும்புவதும், பாதுகாப்பதும் பண்டைக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே தென்படுகின்ற இயல்பு நிலையாகும். புராதன காலத்தில் பணத்தைச் சேமித்து வைக்க வங்கிகள் இருக்கவில்லை.அதனால் அக்காலத்து மக்கள் நாணயங்களை கலங்களில் அல்லது பைகளில் ஒன்று சேர்த்து பூமியில் புதைத்து வைத்தனர். தொல்பொருளியலாளர் பல்வேறு இடங்களில் தோண்டும் போது பண்டைய நாணயத் தொகுதிகளைக் கண்டெடுத்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சிக்கு புராதன நாணயங்கள் கைகொடுத்து உதவுகின்றன. புராதன சின்னங்களுள் நாணயங்கள் உன்னத இடத்தை வகிக்கின்றன. தென் இந்தியாவில் ரோமானிய நாணயங்கள் காணப்படுவதினால் அந்நாட்டுடன் ரோமானியர் வணிகம் செய்தனர் என்பது உறுதியாகின்றது. அரேபியர் ஸ்காண்டி நேவியாவுடன் வணிகம் மேற்கொண்டனர் என்பது அந்நாட்டில் ஏராளமாகக் காணப்படும் அரேபிய நாணயங்களைக் கொண்டு அறிய முடிகின்றது. நாணயங்களில் தென்படுகின்ற அரசர்களுடைய உருவங்கள் ஆட்சியையும், மதத்தைப் பற்றியும் அறிய உதவுகின்றன. ஒரு நாட்டின் நாணயங்களில் பொறித்துள்ள தேவதைகளின் உருவங்கள் அந்நாட்டு மக்களின் புராண இதி காசச் செய்திகளைக் கூட அறிவிக்கின்றன. ஒரு நாட்டின் சிற்பக்கலை, ஓவியக் கலைகளின் வளர்ச்சியையும் அவற்றின் பல்வேறு காலங்களையும் அந்நாட்டின் நாணயங்கள் வாயிலாக அறிய வாய்ப்பு உண்டு. பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தொடக்கத்தில் நாணயங்களைக் கொண்டு வணிகம் மேற்கொள்ளவில்லை.அக்கால வாணிகத்தின் அடைப்படை பண்டமாற்று ஆகும். ஆனால் இம்முறையில் குறைபாடுகள் காணப்பட்டன. ஆதலால் மக்கள் பண்ட மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதற்கு மாறாக வேறு வழிமுறையை நாட்டினர். அந்தப் பொருள் கெட்டுப்போகாததாகவும் எங்கும் கொண்டு போகக் கூடியதாகவும் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்புடையதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் எனக் கருதினர். இத்தகைய பொருள்தான் நாணயம் ஆகும். பண்டைய நாணயங்கள் ஆரம்பத்தில் செம்பு போன்ற சாதாரண உலோகங்களில் தயாரிக்கப்பட்டன. அவை மலிவாக எளிதில் பெறக்கூடியனவாதலினால் தங்கம், வெள்ளி போன்ற அரிய உலோகங்களிலும் வடிவமைத்தனர். நாயணங்கள் தொடக்கத்தில் சில குறிப்பிட்ட உருவங்களைக் கொண்டிருந்தன. உலோகத்துண்டுகளை எடைபோடுவதற்குத் தராசு (BALANCE) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாணயங்களும் குறிப்பிட்ட நிறைவுடையனவாக மாறின. இந்தியாவில் முதன் முதல் உருவான நாணயங்களில் மன்னர்களின் தோற்றம் பொறிக்கப்படவில்லை. சில குறிகளைக் காண முடிகின்றது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூர் பகுதியை குறுகிய காலமே ஆண்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் பல தரப்பட்டனவாகவும் கலை வேலைப்பாடுள்ளவனாகவும் திகழ்ந்தன. திப்பு சுல்தான் முதலில் வராகன்களையும் பணங்களையும் வெளியிட்டார். பின்னர் தங்கத்தில் அரை மொகராக்களும், வெள்ளியில் ஒன்று, அரை, கால், அரைக்கால், காலரைக்கால் பெறுமதியுள்ள நாணங்களையும் செம்பில் நாற்பது, இருபது, பத்து, ஐந்து, இண்டரைக் காசுகளும் வெளியிட்டார். திப்பு தம் செப்பு நாணயங்களில்யானைச் சின்னம் பொறித்தார். இவருடைய நாணயங்களில் இருதசாப்தங்கள் காணப்பட்டன. இந்தோ ஐரோப்பிய நாணயங்கள் பற்றி சிறிது ஆராய்வோம். அயல் நாட்டினர் இந்தியாவுடன் குறிப்பாக தென்னிந்தியாவுடன் வாணிகத் தொடர்பு பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வந்தது என்றும் கண்டறியப்பட்டது. இரண்டாயிரம் ஆண்களுக்கு முன்பே ரோமானியர் தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக தமிழ் இலக்கியம் கூறுகின்றது. ரோமானியர்களுடைய பொன் வெள்ளி நாணயங்கள் அதிக அளவில் தென்னிந்திய மாவட்டங்களில் கிடைத்த போதிலும் ரோமானியர் நாணயச் சாலைகளை எங்கு அமைந்தனர் என்பது புதிராகவே உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை சென்றடையும் வழியைக் கண்டுபிடிக்க ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு முயற்சித்தன. இறுதியில் போர்த்துக்கல் நாட்டினரான வாஸ்கோடாகாமா இம்முயற்சியில் வெற்றி கண்டார்.இதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக பாரதத்திற்கு வரத் தொங்கினர். முதன் முதலில் ஐரோப்பியர் பாரதத்தைத்தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் வந்ததாகத் தெரியவில்லை. கீழை நாடுகளுடன் முக்கியமாக இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வதே அவர்களது பிரதான நோக்கமாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் நிறுவப்பெற்றன.இவை இந்தியாவில் பல தொழிற்சாலைகளை நிறுவி நாளடைவில் அவற்றை நிர்வகிக்கவும் தொடங்கின. இந்திய முறையைப் பின்பற்றியே நாணயங்கள் வெளியிட வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஐரோப்பியர்கள் இவ்விதம் வெளியிட்ட பொன் அல்லது வெள்ளி பகோடாக்கள் பல கடவுள்களின் உருவங்களையும் பிறமதத்தவர்களின் சின்னங்களையும் கொண்டிருந்தன. ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு போர்ச்சு கேசியர் தென்னிந்தியாவில் முதன் முதலில் கள்ளிக்கோட்டையில் தொழிற்சாலையொன்றை நிறுவினர். அவ்வேளையில் அவர்களுக்கு நாணயங்கள் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நாணயங்களின் மேல் மகுடத்தைத் தாங்கிய போர்ச்சுகேசிய பட்டயத்தையும் நாணயசாலையின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன. பொன், வெள்ளி, செப்பு நாணயங்களின் மேல் சின்னத்தை ஒருபுறமும் சிலுவையை மறுபுறத்திலும் காணக்கூடியதாகவுமிருந்தது. பிற்காலத்தில் வெள்ளி நாணயத்தின் மேல் ஒருபக்கத்தில் மன்னனின் தலைகள் பொறித்துள்ளனர். வெள்ளி, செம்பு தவிர துத்தநாகம் போன்ற உலோகங்களிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. எனவே போர்ச்சுக்கேசிய நாணயங்களின் மேல் பாரத தேசத்தின் மொழியையோ, சின்னத்தையோ காண்பது அரிது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பொன் வராகங்களின் மேல் மன்னனின் பெயரையும் மறுபுறம் கடவுளின் உருவத்தையும் காணலாம். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வந்து சேர்ந்த டச்சுக்காரர் நாகப் பட்டினம், பழவேற்காடு முதலிய இடங்களிலிருந்து பொன், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவற்றால் செய்த நாணயங்களை வெளியிட்டனர். பொன் வராகன்களின் மேல் இரைவன் உருவத்தையும் பொறித்தனர். பாரதத்திற்கு இறுதியில் வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் பாரிய தொழில் கிறுவகத்தையும் நாணய சாலையையும் நிர்மாணித்த பின் நாணயங்களை புழக்கத்திற்கு விட்டனர். சிலவற்றில் பிறைச்சந்திரன் வடிவத்தைக் கொண்ட பகோடாக்களையும் உலாவிட்டனர். வெள்ளி நாணயங்கள் பலவற்றின் மேல் ஒரு பூவிதழ் காணப்படுகின்றது. பாண்டிச்சேரிக்கு விருது வழங்கப்பட்ட ஆண்டு ஒருபுறத்திலும் காணலாம். செப்புக் காசுகளின் மேல் ஒருபுறம் புதுச்சேரி என்ற தமிழ் விருதையும் மறுபுறம் பிரெஞ்சு பூவிதழ் உருவத்தையும் அல்லது சேவல் சின்னத்தையும் காணலாம். பிரித்தானியரின் செப்புக்காசுகள் மிக எளிதில் கிடைத்தன. பதினேழாம் நூற்றாண்டில் நாணயங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் தான் அதிகமாக வெளிவந்தன என்றும் தெரிய வருகின்றது. தென்னிந்திய நாணயங்கள் சிறப்பன மரபுகளைக் கொண்டவை. அரச பரம்பரையினரின் சின்னங்களை வைத்து இவர்களைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வராகனைப் பகோடா என்று மேற்கு நாட்டவர் கூறுவர். இது போர்ச்சுத்கேசிய பதத்திலிருந்து மருவியதாகவும் தெரிய வருகின்றது. பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட கால், அரை, ஒன்று, ஐந்து, பத்து மதிப்பான நாணயங்கள் மதிப்பிழந்துள்ளன. இந்நாணயங்களைப் பார்வையிட விரும்பியவர்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உடையவர் களிடம் அல்லது அருங்காட்சியகத் தில் பார்வையிடலாம். கென்யா கென்யா ("Kenya"), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு ("Republic of Kenya") என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் (சனவரி 2017) ஆகும். டச்சு ஹுல்டென் ஹுல்டென், (ஆங்கிலம் - guilder, குறி - ƒ அல்லது fl.), 15ஆம் நூற்றாண்டு முதல் 2002 வரை இருந்த நெதர்லாந்து நாட்டு நாணயமாகும். 2002க்கு பின்னர் ஐரோ பயன்படுத்தப்படுகிறது. நெதர்லாந்து ஆட்சி சார் நிலப்பகுதியான நெதர்லாந்து ஆண்டில்சில், நெதர்லாந்து ஆண்டில் ஹுல்டென் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்நாணயம் டச்சு ஹுல்டெனிலிருந்து வேறுபட்டதாகும். 2004ல் சூரிநாம் ஹுல்டென், சூரிநாம் டாலராக மாற்றப்பட்டது. 2.20371 டச்சு ஹுல்டென் (NLG), 1 ஐரோவுக்கு (EUR) சமம் என்ற துல்லியமான நாணய மாற்று விகிதம், பழைய ஒப்பந்தங்கள் மற்றும் மைய வங்கி வழங்கும் நாணய மாற்றுக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுபத்திரை சுபத்திரை (Subhadra), வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார். இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார். பலராமரால் துரியோதனனுக்கு திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, அருச்சுனன் காதலித்து, பலராமருக்கு பயந்து சுபத்திரையை கடத்திச் சென்று கிருஷ்ணரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு அபிமன்யு பிறந்தார்.