இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்: தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பிகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார். 1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்). சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும். திரிபுரா திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும். சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர். திரிபுரா மாநிலம் 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது. திரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர்.. இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன. இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது. திரிபுரா மாநிலம் எட்டு வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்; உனகோடி மாவட்டம்‎, கோமதி மாவட்டம்‎, கோவாய் மாவட்டம்‎, சிபாகிஜாலா மாவட்டம்‎, தலாய் மாவட்டம்‎, தெற்கு திரிப்புரா மாவட்டம்‎ , மேற்கு திரிப்புரா மாவட்டம்‎ மற்றும் வடக்கு திரிப்புரா மாவட்டம்‎ ஆகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 3,673,917 உள்ளது. நகர்புறங்களில் 26.17% மக்களும், கிராமப்புறங்களில் 75.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.84% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,874,376 ஆண்களும் மற்றும் 1,799,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 960 வீதம் உள்ளனர். 10,486 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.22 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.73 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 458,014 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,063,903 (83.40 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 316,042 (8.60 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 159,882 (4.35 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,070 (0.03 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 860 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 125,385 (3.41 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 1,514 (0.04 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,261 (0.14 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான வங்காளத்துடன் இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. அகர்தலாவிலுருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கர்பில் எனுமிடத்தில் உள்ள விமான நிலையம், நாட்டின் கொல்கத்தா, புதுதில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் வானூர்திகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள அகர்தலா தொடருந்து நிலையம், அசாம் மாநிலத்தின் லாம்டிங் நகரத்தின் லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்லும் இருப்புப்பாதை அசாமின் சில்சர் நகரம் வழியாக புதுதில்லியுடன் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கௌஹாத்தி, சில்லாங் மற்றும் "சில்சர்" நகரங்களுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அகர்தலாவிலிருந்து வங்காள தேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு செல்வதற்கு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் கொல்கத்தா வரை இயக்க இந்திய - வங்காள தேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலட்சத்தீவுகள் லட்சத்தீவுகள் ("Lakshadweep") இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன. தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது. 1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தீவுகள் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துணன் இணைக்கப்பட்டன. 1956 நவம்பர் 1 அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது. மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது. இலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர். இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது. அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது. இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து டிசம்பர் 1, 1961 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது. பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும். நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலக்கட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், கி.பி. 1228 ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாக மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன. 'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறுசிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள்கூறுகின்றனர். naka மற்றும் naga இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது. நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது. தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின்மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது. நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரிட்த்தானியர் 1832 இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879 இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கொகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தைவழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த கிருத்துவ மறைபணியாளர்களால் பிரித்தானிய இந்தியாவின், நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் மற்றும் அண்டை மாநில மக்களை அவர்களின் ஆன்ம வாத சமயத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாற்றினர். 1944 ஆம் ஆண்டில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் சப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோஹிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரித்தானிய இந்திய வீரர்களால் கோஹிமாவின் பகுதி 1944 சூன் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். 1929 ஆம் ஆண்டில், சைமன் கமிசனிடம் "நாகா கிளப்ப்" (பின்னர் இது நாகா தேசிய கவுன்சிலாக ஆனது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர். 1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் 'சுய-ஆட்சி' ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர். 1946 ஆகத்து 1 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946 க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர். 1947 சூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய கவுன்சில் பிரதிநிதிகள் தில்ல்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்தைற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947 ஆகத்து 14 இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்ககடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16 இல் பொது வாக்ககடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாலாந்து அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்பு சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957 ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பழங்குடியினர் இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள்களை அதிகரித்தனர். 1958 இல் நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர்கொல்லப்பட்டனர். 1960 சூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின் படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது. அதன்படி, 1961 ஆம் ஆண்டின் நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ், அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகாலாந்து மாநிலமானது 1962 ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது. 1963 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963 திசம்பர் 1 அன்று கோஹிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 சனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன, ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் இந்திரா காந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1975 நவம்பரில், மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள், ஆனாலும் ஒரு சிறிய குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதினோறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி மீ நீளத்தில் உள்ளது. நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது. தலைநகர் தில்லியில் இருந்து பத்து-பதினைந்து மணி நேரப்பிரயாணத் தொலைவில் நாகாலாந்து உள்ளது. இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஐ.ஐ.டி போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், ஐ.டி. அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேகாலயா மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்த ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும். மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. மேகாலயா பகுதியை 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் காலத்திற்கு முன்பு வரை காஸி, காரோ, ஜெயின்டியா ஆகிய பழங்குடியினர் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டு இருந்தன. பின்னர், பிரித்தானியர் 1835 இல் மேகாலயாவை அசாமுடன் இணைத்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மேகாலயப் பகுதி அரை சுயாட்சி உரிமையைக் கொண்டதாக இருந்தது. கர்சன் பிரபு காலத்தில் 16 அக்டோபர் 1905 இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினையின்போது, மேகாலயாவானது புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், வங்கப்பிரிவினை திரும்பப்பெறப்பட்ட 1912 இன் போது, மேகாலயா அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. 1960 இல் தனி மலை மாநில இயக்கம் தொடங்கப்பட்டது. அசாம் மறு சீரமைப்புச் (மேகாலயா) சட்டம் 1969 இன்படி மேகாலயா பகுதி சுயாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஆனது. இச்சட்டம் 1970 ஏப்ரல் 2 இல் அமலுக்கு வந்து, இதன்பிறகு அசாமிலிருந்து மேகாலயா என்னும் தன்னாட்சி மாநிலம் பிறந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்கு ஏற்ப மேகாலயா தன்னாட்சிப் பகுதியில் 37 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. 1971-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் 1971 நிறைவேற்றப்பட்டது, இதன்பிறகு மேகாலயா சுயாட்சிப் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு, 1972 சனவரி 21 அன்று மாநிலமாக ஆனது. மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை. மேகாலயாவில் 11 மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவை 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,966,889 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.93% மக்களும், நகரப்புறங்களில் 20.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,491,832 ஆண்களும் மற்றும் 1,475,057 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். 22,429 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 132 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.43 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.95 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.89 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 568,536 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 342,078 (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 130,399 (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,213,027 (74.59 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,045 (0.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 627 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 9,864 (0.33 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 258,271 (8.71 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 9,578 (0.32 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர். இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான "காசி மொழி" மற்றும் "கரோ மொழி" கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது. மேகாலயா மாநிலத்தில் 7,633 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளது. மேகலயாவின் தலைநகரம் ஐஸ்வால், அசாம் மாநிலத்தின் சில்சார் நகரையும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரத்தையும் சாலைகள் இணைக்கிறது. ஷில்லாங் நகரத்தின் மெண்டிபதர் தொடருந்து நிலையம், 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. ஷில்லாங் விமான நிலையம் மூலம் வானூர்திகள் அசாமின் கௌஹாத்தி நகரத்துடன் வான் வழியாக இணைக்கிறது. மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. இங்கு பழத்தோட்டங்கள், மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. பிரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது. வர்க்கம் (கணிதம்) கணிதத்தில் வர்க்க எண் அல்லது சதுர எண் ("square number") என்பது ஒரு முழு எண்ணின் வர்க்கமாகும். ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் கிடைக்கும் எண்ணாகும். ஒரு முழு எண்ணின் வர்க்கமும் ஓர் முழு எண்ணாகவே அமையும். ஒரு வர்க்க எண்ணானது, "செவ்விய வர்க்கம்" (perfect square) எனவும் அழைக்கப்படுகிறது. வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும். எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு. வர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக "n" என்ற எண்ணின் வர்க்கம் "n" என எழுதப்படுகிறது. இதனை ""n" ஸ்கொயர்ட்" என வாசிக்க வேண்டும். "n" அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு "n" × "n" . அதாவது "n". எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன. வர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும். எடுத்துக்காட்டு: 4/9 = (2/3)). 60 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் : இங்கு "n" -ஆம் வர்க்க எண் "n". இது முதல் "n" ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம். எடுத்துக்காட்டு: 5 = 25 = 1 + 3 + 5 + 7 + 9. அல்லது: மற்றொரு வாய்ப்பாடு: எடுத்துக்காட்டு: 0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... . "AA" = 25+7 =32 மற்றும் 7=49, இரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும். ஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள். இதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம். இரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் "i" -ஐ  −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர். புள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது விழுப்புரம் விழுப்புரம்(()), தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். 1993-ஆம் ஆண்டில் முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து "விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்" என உருவாக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது. விழுப்புரத்தின் முக்கிய வருமான மூலம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை சுமார் 1,45,874 ஆகும். 2011ஆம் ஆண்டைய மக்கள்தொகை ஆய்வின்படி எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும். மாவட்ட தலைநகர் எனும் தகுதி ஆட்சியார் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது. இந்தப் பெருமைகள் ஒருபுறமிருத்தாலும் விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கிறது, சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட விழுப்புரம், சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் வந்த விஜயாலய சோழன் இப்பகுதியை மீட்டு மீண்டும் சோழப்பேரரசுடன் இணைத்தான். பிந்நாளில் ஆண்ட சோழர்களிடமிருந்து வென்று கிழக்கத்திய சாளுக்கியர்கள் ஆண்டனர். அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி முகலாயர்களின் படையெடுப்பால் கி.பி.1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜய நகரப்பேரரசும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர். கி.பி.1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு தென்னாற்க்காடு மாவட்டமாக மதராசு மாகாணாத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது. தென்னாற்க்காடு மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த விழுப்புரம் 30 செப்டம்பர் 1993ஆம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. புவியியலில் 11° 56' N 79° 29' E. தக்காணா இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையை பகிர்ந்து கொள்கிறது. சென்னை சுமார் 160 கி.மீ தொலைவிலும், திருச்சி 160 கி.மீ தொலைவிலும், சேலம் 144 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. 1961ஆம் ஆண்டு சுமார் 43,496 பேர் ஆக இருந்த விழுப்புரம் இன்று சுமார் 1.5 லட்சத்தையும் தாண்டி பெருகிக்கொண்டுள்ளது. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் தமிழ்ப் பாடலாசிரியர்கள் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. செண்ட்டி மீட்டர் ஒரு சென்ட்டி மீட்டர் ("Centimeter") அல்லது சதம மீற்றர் (இலங்கை வழக்கு) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது. திருமால் திருமால் அல்லது பெருமாள் என்பவர் வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது. தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். திருக்கேதீச்சரம் திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது. இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம். இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும். கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது. இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு. பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது. வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள். அஜ்மான் அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது. நற்றிணை நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை "நற்றிணை நானூறு" என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல், பதிப்பித்து வெளியிட்டார் இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்." திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்(அகம்:22)பாடல்வழி அறியமுடிகிறது.இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும்.இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர்,ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார்.பொருநன்,சிறுபாணான்,பெரும்பாணான்,கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க,திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன. இந் நூலை முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார்.ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை " டாக்டர் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது." இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர். உரை விவரம்: 1)நச்சினார்க்கினியர் உரை 2)பரிமேலழகர் உரை 3)உரையாசிரியர் உரை 4)கவிப்பெருமாள் உரை 5)பரிதிக் குறிப்புரை 6)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை திருமுருகாற்றுப்படை - நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்) திருமுருகாற்றுப்படை 1. ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது. 2. அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் 3. தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்' திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. 'அளியன் தானே முதுவாய் இரவலன்' (முருகு 384) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது. நெடுநல்வாடை 1. குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது. 2. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. 'வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்'ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதறகான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும், யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான். வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது. 3. தொல்காப்பிய மரபு | 'வாகை தானே பாலையது புறனே' - தொல்காப்பியம் 1019 'கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு' மேல் வாகைத்திணைப் பாடல் வரும் - தொல்காப்பியம் 1022 இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் பொருநராற்றுப்படை பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும். உரை எழுதியோர்: சிறப்புகள்: தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து- காலில் ஏழடிப் பின்சென்று(பொரு.166)என்னும் பாடல் வரியால் அறியமுடிகிறது. பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47) அவையாவன: கூந்தல்,திருநுதல்,புருவங்கள்,கண்கள்,வாய்,பற்கள்,காதுகள்,கழுத்து,தோள்கள்,முன்கைகள்,மெல்விரல்,நகங்கள்,மார்பகங்கள்,கொப்பூழ்,நுண்ணிடை,அல்குல்,தொடைகள்,கணைக்கால்,பாதங்கள் என்பன. ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் பெரும்பாணாற்றுப்படை 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் பரிபாடல் பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்: திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம். பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.) சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்." முல்லைப்பாட்டு சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்: ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் நெடுநல்வாடை பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று. ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் பண்பாட்டு மானிடவியல் சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல் ("Cultural anthropology"), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே. நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "இன ஒப்பாய்விய"லிலிருந்து தோற்றம் பெற்றதே. இன ஒப்பாய்வியல் (Ethnology} மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஈ. பி. டெய்லர், ஜே. ஜி. பிரேசர் போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். கிராப்டன் எலியட் சிமித் (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது பண்பாட்டுக் கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான லூயிஸ் ஹென்றி மோர்கன் போன்ற சிலர் இன்னும் மேலே சென்று பண்பாட்டுப் படிமலர்ச்சியில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர். 20 ஆம் நூற்றாண்டு மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஜூலியன் ஸ்டெவார்ட் (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ் (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்(structuralismபார்க்கவும்). 20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிடவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் பங்குபற்றி அவதானித்தனர். இந்த முறை துரோபிரியண்ட் தீவுகளில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, பாபின் தீவுகளில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த பிரான்ஸ் போவாஸ் (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மானிடவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மானிடவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மானிடவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: சமயம், பொருளாதாரம் மற்றும் அரசியல்) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். அமெரிக்க "பண்பாட்டு மானிடவியலாளர்", மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உலகத்தைப் பற்றியுமான அவர்களுடைய பார்வையை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுபற்றி, விசேடமாக குறியீட்டு முறையில் (உ.ம்: கலை மற்றும் பழங்கதைகள்) எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிக் கவனம் செலுத்தினர். இவ்விரு அணுகுமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் குவிவடைந்தன (உ.ம்: உறவுமுறை ஒரு குறியீட்டு முறைமையும், சமூக நிறுவனமும் ஆகும்.) என்பதுடன் பொதுவாக ஒன்றுக்கொன்று --- ஆக அமைந்தன. இன்று பெரும்பாலும் எல்லா சமூக-பண்பாட்டு மானிடதவியலாளரும் இருபகுதி முன்னோடிகளின் ஆய்வுகளையுமே ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும், என்ன சொல்கிறார்கள் என்பதிலும் சம அளவு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேசச் சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are அர்ஜுன் அப்பாதுரை, ஜேம்ஸ் கிளிபர்ட், ஜேன் கொமாரோப், ஜோன் கொமாரோப், ஜேம்ஸ் பர்குசன், அகில் குப்தா, ஜோர்ஜ், சிட்னி மிண்ட்ஸ், மைக்கேல் தௌசிக், ஜேன் விண்செண்ட், மற்றும் எரிக் வூல்ப். முழுதளாவியம் முழுதளாவியம் (Holism) மற்றும் முழுதளாவிய ஆகிய சொற்கள் 1920களின் ஆரம்பத்தில் ஜான் ஸ்முட்ஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டன. ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் கண்டுள்ளபடி ஸ்முட்ஸின் முழுதளாவியத்துக்கான வரைவிலக்கணம் பின்வருமாறு உள்ளது: "படைப்புசார் படிமலர்ச்சி (creative evolution) ஊடாக, பகுதிகளின் கூட்டுத்தொகையிலும் பெரிதான முழுமையை உருவாக்க முயலும் இயற்கையிலுள்ள போக்கு" "குறிப்பு": ஒன்றுலும் "பெரிதான" என்னும் சொல் பொருள் கொண்டதாக அமைய வேண்டின் ஒரு அளவீடு தேவைப்படும் என்பது வெளிப்படை. எனவே மேற்கண்டது வரைவிலக்கணம் என்பதிலும் பார்க்க ஒரு கருத்து (suggestion) என்றே கொள்ளவேண்டும். இப் பொருளற்ற பகுதியை நீக்கிவிட்டால், முழுதளாவியம் என்பது, "படைப்புசார் படிமலர்ச்சியூடாக முழுமையை உருவாக்கமுயலும் இயற்கையிலுள்ள போக்கு" எனப் பெறப்படுகின்றது. முழுதளாவியம் என்பது படைப்புவாதம் (creationism), படிமலர்ச்சிவாதம் (evolutionism) என்பவற்றின் ஒருங்கிணைப்பு என்று அவதானிக்கலாம். தற்போது விளங்கிக் கொண்டுள்ளபடி, முழுதளாவியம் என்பது ஒரு முறைமையின் இயல்புகளை அவற்றின் கூறுகளின் இயல்புகளின் கூட்டுத்தொகை மூலம் மட்டும் தீர்மானிக்கவோ விளங்கிக் கொள்ளவோ முடியாது என்ற கருத்தாகும். அறிவியல் reductionism ஐ முன்னெடுத்துச் செல்பவர்கள் இது பேராசை reductionism கொள்கைக்கே எதிரானது என்று கூறுகின்றனர். இது பெரும்பாலும் reductionism என்பதற்கு எதிரானதாகக் கொள்ளப்படுகின்றது. இந்தியக் கட்டிடக்கலை இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்தது போலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக்காலத்தில் மரம், மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். வேத காலம் என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே படியெடுத்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது. கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் கங்கைக் கரையோரமாக மக்கள் குடியேற்றங்களும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் பிராமணீயத்துக்கு மாற்றாகப் பௌத்தம், சமணம் என்னும் மதங்கள் தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் பௌத்தக் கட்டிடக்கலை என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம். இந்து சமயம், பௌத்தம் தோன்றுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் கூறுகள் பலவும் பௌத்த கட்டிடக்கலையில் காணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குப்தப் பேரரசின் கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் தக்காணத்தில் சாளுக்கிய அரசின் கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டது எனலாம். தொடக்க கால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு வடஇந்தியக் கட்டிடக்கலைப் பாணி அல்லது நாகர கட்டிடக்கலைப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை விடத் தக்காணத்தில் வளர்ந்த ஒரு கலப்புப் பாணி வேசர கட்டிடக்கலைப் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இந்துக் கட்டிடக்கலையின் முக்கியமான முதலிரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன. வடஇந்தியக் கட்டிடக்கலை வட்டார அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தது. இவை முக்கியமாக ஒரிசா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச குலங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முத்தரையர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன. சோழர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாய் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் இஸ்லாமியரின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து உருவான இஸ்லாமிய அரசுகளும், வளர்ந்து வந்த அவற்றின் வலிமையும் இஸ்லாமியப் பண்பாட்டை இந்தியாவுக்குள் கொண்டுவந்தன. இந்தியக் குடைவரைக் கோயில்கள் பெரிய மலைகளை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல்வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 2 – 3-ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள். தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும் மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர். துருக்கிய மொழி துருக்கிய மொழி () துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். துருக்கிய மொழிகள் அல்தாயிக் மொழித் தொகுப்பைச் சேர்ந்தவை. துருக்கிய மொழி பேசுபவர்களில் சுமார் 40% பேர்கள் உள்ளூர் துருக்கிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். துருக்கிய மொழி ஒஹுஸ் (Oghuz) மொழிக் குழுவில் ஓர் உறுப்பாகும், துருக்கிக் மொழிக் குழுவில், ஒஹுஸ் (Oghuz) மொழித் தொகுப்பாகும், துருக்கிய மற்றும் அசர்பைஜானி, டர்க்மென் (Turkmen), கஷ்காய் (Qashqai), ககாசு (Gagauz) மற்றும் பால்கன் ககாஸ் துருக்கி (Balkan Gagauz Turkish) உள்ளிட்ட பிற ஓகூஸ் துர்க்கி மொழிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒற்றுமை உள்ளது. முன் மத்திய காலங்களில் (6 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை), துருக்கிய மொழி விரிவாக்கம் அடைந்தது. துருக்கிய மொழிகளில் பேசும் மக்கள், சைபீரியா, ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகள், மத்திய ஆசியா எனப் புவியியல் பகுதி முழுவதும் பரவியிருந்தனர். துருக்கியின் செல்ஜக் (Seljuqs) இனத்தினர், தங்கள் ஒஹுஸ் மொழியைப் பரப்பினர். ஒஹுஸ் மொழி, இன்றைய துருக்கிய மொழியின் மூல மொழி ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் அனத்தோலியா மொழியின் பகுதி ஆகும். ஒட்டோமான் பேரரசரின் காலத்தில் (1299-1922) பயன்பாட்டிலிருந்த, கலை, இலக்கியம் ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி ஒட்டோமான் துருக்கிஷ் எனப்படுகிறது. இது துருக்கியம், பாரசீகம், மற்றும் அரபி ஆகிய மொழிகளின் கலவை. எனினும் தினசரி பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. அன்றாட பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி, "சுமாரான துருக்கியம்" என்று பொருள்படும் கபா டூர்க்ஸ் (kaba Türkçe) அல்லது அழைக்கப்பட்டது. இது குறைவான கல்வி பெற்ற மற்றும் கிராமப்புற சமூகத்தினர்களால் பேசப்படுகிறது. இது நவீன துருக்கிய மொழிக்கு அடிப்படையாக விளங்கியது. நவீன துருக்கிய மொழி சொற் குவியலுக்கு இதிலிருந்து அதிக சதவீத வார்த்தைகள் பெறப்பட்டன. நவீன துருக்கி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1932 ல், முஸ்தஃபா கமால் அடாடர்க் (Mustafa Kemal Atatürk) காப்புமையில், துருக்கிய மொழி சீர்திருத்தம் மேற்கொள்ள துருக்கிய மொழி சங்கம் (TDK) நிறுவப்பட்டது. துருக்கிய மொழியில் ஆராய்ச்சி நடத்துவது இதன் நோக்கம் ஆகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளை பிறப்பிடமாகக் கொண்ட வார்த்தைகளையும், பிற மொழிக் கடன் வார்த்தைகளையும், சமமான துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பதிலீடு செய்வதும், மொழி சீர்திருத்தம் செய்வதும் இச்சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும். பத்திரிகைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதன் மூலம், துருக்கிய மொழியிலிருந்து பல நூறு வெளிநாட்டு சொற்களை நீக்கி இச்சங்கம் வெற்றி கண்டது. டி.டி.கே மூலம் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் புதிதாக துர்கிக் மொழி ஆதாரங்களை பெற்றிருந்தன, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாத பழைய துருக்கிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு புதுப்பிப்பட்டன. 1927 ல் அட்டாடர்க், தன் புதிய பாராளுமன்றத்திற்கான நீண்ட உரையில், ஒட்டோமான் பாணியைப் பயன்படுத்தினார். அந்த உரை கேட்பவர் அனைவருக்கும் மிகவும் அன்னியமாக இருந்தது. அவ்வுரை, 1963, 1986, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள் மூன்று முறை நவீன துருக்கியில் மொழிபெயர்க்கப்பட்டது. பழைய துருக்கியிலிருந்து புதுப்பிப்பட்ட சில வார்த்தைகள் சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக "புத்தகம்" எனும் பொருளுடைய பெடிக் (betik) எனும் சொல் தற்பொழுது கணினி அறிவியலில் "எழுத்து" என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது. நவீன துருக்கிய சொற்கள் மற்றும் பழைய கடன் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை சில உதாரணங்களுடன் காட்டும் அட்டவணை: ஜேர்மனியில், துருக்கிய மொழி பேசும் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தங்க இடம் அளிக்கும் நாடுகளில் துருக்கியைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களும், அனைத்து இன துருக்கிய புலம்பெயர்ந்தோர்களும், கலாச்சார ஒருங்கமைவு மற்றும் பிற மொழி தாக்கத்தின் காரணமாக, சொந்த மொழியான துருக்கிய மொழியைச் சரளமாகப் பேசுவதில்லை. 2005 ஆம் ஆண்டு, துருக்கியில் 93% மக்கள் துருக்கிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எஞ்சியிருந்த 67 மில்லியன் மக்கள் குர்திஸ் மொழிகளைப் பயன்படுத்தினர். துருக்கிய மொழியியல் சங்கம், மொழி புனிதத்துவத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டது. அதன் முக்கிய பணிகளில் சில, கடன் சொற்களை நீக்குதல், அவற்றுக்குச் சமமான துருக்கிய மொழிச் சொற்களைக் கொண்டு கடன் சொற்களை மாற்றுதல், மற்றும் துருக்கிய மொழி தோற்றத்திற்கு சமமான வெளிநாட்டு இலக்கண கட்டுமானங்களை உருவாக்கல். 1951 இல் துருக்கிய மொழியியல் சங்கம், ஒரு சுதந்திரமான அமைப்பாக மாறியது. அது கல்வி அமைச்சரால் தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலை ஆகஸ்ட் 1983 வரை தொடர்ந்தது. 1980 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் துருக்கிய மொழியியல் சங்கம், மீண்டும் ஒரு அரசியலமைப்பாக மாற்றப்பட்டது.. நவீன தரநிலை துருக்கிய மொழியானது இஸ்தான்புல்லின் வட்டாரப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டது. 1930 களில் இருந்து ஊடகங்கள் மற்றும் துருக்கிய கல்வி முறைகள் மூலம் மொழித் தரநிலைகளின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வட்டாரப் பேச்சுமொழிகளில் மாறுபாடு தொடர்கிறது. பல்கலைக்கழகங்களாலும், துருக்கிய மொழி சங்கத்தின் அர்ப்பணிப்பு பணிக் குழுக்களாலும், துருக்கிய பேச்சுவழக்குகளை கண்டறியச் செய்யும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துருக்கிய மொழி ஆராய்ச்சியின் ஒரு விரிவான தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்கான அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்கிறது. இதனுடன் வட்டாரப் பேச்சுமொழிகளில் உலக வரைபட நூல் தயாரிப்புப் பணியும் தற்போது நடைபெருகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; "Encyclopædia Britannica") உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது. இது முதலில் எடின்பரோவில் அடம் மற்றும் சார்லஸ் பிளாக் என்பவர்களினால் 18ம் நூற்றாண்டு தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு "Encyclopédie" போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870 களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு ஸ்கொட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு "த டைம்ஸ்" என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, இங்கிலாந்திலேயே, கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்ஸ் ரோபக் (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோ, இலினொய்ஸ், ஐக்கிய அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்லலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது. 2004 நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவர்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), குறுவட்டு மற்றும் இறுவட்டிலும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன. பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான மில்ட்டன் ஃப்ரீட்மன், கார்ல் சேகன் மற்றும் மைக்கேல் டிபேக்கே (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர். 35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன. பாக. = பாகங்கள், இணை. = இணைப்பு, பதி. = பதிப்பு (1)  9வது பதிப்பு, அக்காலத்தில் பிரபலமான ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல் என்பவரால் எழுதப்பட்ட மின்னியல் மற்றும் காந்தவியல் தொடர்பான கட்டுரைகளையும், வில்லியம் தொம்சன் என்பவரால் எழுதப்பட்ட வெப்பவியல் தொடர்பான கட்டுரைகளையும் கொண்டிருந்தது. (2) 10வது பதிப்பில் ஒரு தேசப்படப் பாகமும், சொல்லகராதி (index) கொண்ட பாகமும் சேர்க்கப்பட்டிருந்தன. முதலாவது இறுவட்டுப் பதிப்பு 1994ல் வெளியிடப்பட்டது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் 'பிரிட்டானிக்கா கன்சைஸ் என்சைக்ளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனம் சென்னையில் வெளியிட்டுள்ளது. ஒலியியல் (மொழியியல்) மொழியியலில் ஒலியியல் "(Phonetics)" என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன. பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது: பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர். மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காஸ் மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாஸ் மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராஹா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாஸ் மொழியில் 11 ஒலியன்களும், ஹவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)). ஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு). ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. சொற்பொருளியல் பொதுவாக சொற்பொருளியல் என்பது பொருள் (meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிர்மறையானது, ஏனெனில், சொற்பொருளியல் ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை சொற்றொடரியல், ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன் (உ.ம் எழுத்து அல்லது பேச்சு) முறையான அமைப்பு / வடிவம் சம்பந்தப்பட்டது. இச் சொல்லுக்கான மேலும் பல பொருள்கள் உண்டு: சொற்பொருளியல், சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும் மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். சொற்பொருளியல், கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. சொற்பொருள்களைப் பிரித்து ஆராயும் முறைப்படி, சொற்பொருளின் அடிப்படைக் கூறுகளை வரையறுப்பதன் மூலம் அச் சொற்பொருள்களைப் பகுத்தாய்வு செய்யமுடியும். இதன் ஒரு ஆய்வுப் பரப்பு கூட்டுச் சொற்களின் (compound) பொருள் பற்றியது; இன்னொன்று ஒலி வேற்றுமையின்றிப் பொருள் வேறுபடுதல் (homonymy), ஒலி வேற்றுமை இருப்பினும் ஒரே பொருள் தருதல் (synonymy), எதிர்ப் பொருள் தருதல் (antonymy), ஒரு சொல் பல பொருள் தருதல் (polysemy), பொது வகைப் பொருள் தருதல் (hypernymy), துணை வகைப் பொருள் தருதல் (hyponymy), முழுமைப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான பகுதிப் பொருட் சொல் (meronymy), பகுதிப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான முழுமைப் பொருட் சொல் (holonymy), கூட்டுச் சொல் கூறுகளுக்கு இல்லாத இலக்கணப் பண்புகளை உடையதாதல் (exocentric), கூட்டுச் சொல் கூறுகளில் ஒன்றின் இலக்கணப் பண்புகளையாவது உடையதாதல் (endocentric) போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். சூழ்பொருளியல் பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. பேர்சி பிறவுன் பேர்சி பிறவுன் இந்தியக் கட்டிடக்கலை தொடர்பில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவராகும். இவர் கல்கத்தாவில் அரசாங்க கலைக் கல்லூரியில் அதிபராகப் பணிபுரிந்தவர். கல்கத்தா அரசாங்க ஓவியக் காட்சியகத்தின் பொறுப்பாளராகவும், விக்டோரியா நினைவு மண்டபத்தின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியக் கலைகளை, விசேடமாகக் கட்டிடக்கலை பற்றி ஆராய்வதில் செலவிட்டார். இந்த ஆய்வுகளின் பயனாக அவர் எழுதிய நூல்கள் இத்துறைகளில் அவர் எய்திய பாண்டித்தியத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். "இந்திய ஓவியங்கள்" (Indian Paintings), "மொகலாயர்களின் கீழ் இந்திய ஓவியங்கள்" (Indian Paintings Under Moghuls) என்னும் இரு நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இந்தியக் கட்டிடக்கலை பற்றி அவர் எழுதிய இந்தியக் கட்டிடக்கலை என்னும் நூல் புகழ் பெற்றது. இந் நூல், இந்தியக் கட்டிடக்கலை (பௌத்த மற்றும் இந்துக் காலகட்டம்), இந்தியக் கட்டிடக்கலை (இஸ்லாமியக் காலகட்டம்) என இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. சிந்துவெளிக் கட்டிடக்கலை சிந்துவெளிப் பண்பாடு என்பது சுமார் கி.மு 3500 அளவில் தொடங்கி கி.மு 1500 வரை இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த பண்பாட்டைக் குறிக்கும். இது உலகின் பண்டைக்கால நகரப் பண்பாடுகளுள் ஒன்று. இதன் செல்வாக்குப் பிரதேசங்களில் மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலையே சிந்துவெளிக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா என்பன இப் பண்பாட்டின் முக்கிய நகரங்களாகும். இந்த அழிந்துபோன நகரப் பகுதிகளிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் இப் பண்பாட்டின் நகர அமைப்பு முறைகள் மற்றும் கட்டிடக்கலை சம்பந்தமான தகவல்களைத் தருகின்றன. பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது. நைல் பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கிசாவின் பெரிய பிரமிட் மற்றும் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும். பண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, ஆனால் மணற்பாறை மற்றும் கருங்கல்) ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர். பழைய இராஜ்ஜியம் முதலாகவே, கல் பொதுவாக, கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தினர், செங்கற்கள் அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில், மாவட்ட மற்றும் நகரங்களின் சுவர்கள், மற்றும் கோவில்வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தினர். அசிரியக் கட்டிடக்கலை அசிரியப் பண்பாடு என்பது இன்றைய ஈராக் நாட்டிலுள்ள யூபிரட்டீஸ், தைகிரிஸ் ஆகிய நதிக்கரையில் வளர்ந்து செழித்திருந்த பண்பாட்டைக் குறிக்கும். இப் பண்பாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலையே அசிரியக் கட்டிடக்கலை ஆகும். தாளங்களின் பட்டியல் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும். தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: ஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால் ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன. தாளம் (இசை) தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் "ஏழு" என்று பொருள்படும். "பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்." தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு: தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை, அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும். திருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு. நாகரிகம் நாகரிகம் ("civilization") என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகங்களைக் குறிக்கும். இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான "civis" என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரிக சமூகத்தின் ஒரு வடிவமாகும். நாகரிக வளர்ச்சியின் அளவை, வேளாண்மை முன்னேற்றம், தொலைதூர வணிகம், தொழிற் சிறப்பாக்கம், சிறப்பு ஆளும் வகுப்பினர், நகரியம் என்பவற்றின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடப்படுகின்றது. இந்த அடிப்படையான கூறுகள் தவிர, நாகரிக வளர்ச்சியைப் பல்வேறு துணைக் கூறுகளின் சேர்மானங்களும் குறிக்கின்றன. இவற்றுள் வளர்ச்சியுற்ற போக்குவரத்து முறைமை, எழுத்து, நியம்படுத்திய அளவை முறை, நாணய முறை, சட்ட முறைமை, சிறப்பியல்பான கலை, கட்டிடக்கலை, கணிதம், மேம்பட்ட அறிவியல் விளக்கம், உலோகவியல், அரசியல் கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட சமயம் போன்றவை அடங்கும். நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது வரலாற்று அறிஞர்களின் வாதமாகும்.வெறும் தத்துவார்த்த விளக்கங்கள் மட்டும் போதாது என்றுகூறி அத்தகையோர் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர். மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கியபிறகே,மனிதன் கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான்.இவற்றின் துணையோடு விவசாய வாழ்க்கையை மேற்கொண்டான்.அதன் உபரி உற்பத்தி காரணமாக, மனிதன் பிறரோடு இணைந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு முன்னேற்றம் கண்டான்.இதனால், ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை மனித நாகரிகத்தில் தோன்றின. இதன் ஆதரவாளர்கள்,வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போகும் இந்த அணுகுமுறை சரியன்று என்று நம்பினர்.இது கற்காலத்துக்கே கூட்டிகொண்டுபோய்விடும் என்றனர்.மனித குலம் தோற்றுவித்த கூட்டு சமுதாய வாழ்க்கையே நாகரிகத்தின் தோற்றுவாயிலாகும்.அச் சமுதாய வாழ்க்கையில்,மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் வழி நடக்க முற்பட்டனர்.இதனால்,தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் தொழிலில் கவனத்தைச் செலுத்தினர். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வணிகம் எனப் பல துறைகளில் மனிதகுலம் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டது. நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்பது இவர்கள் வாதமாகும்.லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது. சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து முறை தோன்றியது.அதன்பின், கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன.மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான்.எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது... இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்: 1)நகரக் குடியிருப்புகள் 2)தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல் 3)தேவைக்கு அதிகமான உற்பத்தி 4)வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள் 5)அரசாங்க அமைப்பு 6)பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள் 7)தொலைதூர வாணிபம் 8)கலைப் பொருட்கள் 9)எழுத்துக்கள், இலக்கியம் 10)கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி. உலகில் கூடுதலான நாகரிகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன.ஏனென்றால்,விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண்ணும்,தேவையான அளவு நீர் கிடைத்ததாலும்,காலநிலை சரியாக இருந்தததாலும் மற்றும் போக்குவரத்திற்கு இலகுவாக இருந்தததாலும் அவர்கள் நதிக்கரையோரங்களில் குடியேறினர். இது கி.மு. 3500 தொடக்கம் கி.மு. 1500 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும்.இது மொசப்பதேமிய நாகரிகம் என்றும் சுமேரிய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாகரிகம் ஈராக் நாட்டிற்குச் சொந்தமானது. இது கி.மு.3100 தொடக்கம் 1070 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும் .இது மிஸிர் நாகரிகம் என்றும் எகிப்திய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாகரிகம் எகிப்து நாட்டிற்குச் சொந்தமானது. பொதுவாக நாகரிகங்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன: இந்த வரைவிலக்கணத்தின்படி, சீனா போன்ற சில சமூகங்கள் நாகரிக சமூகங்கள் என்பது தெளிவு, அதுபோல புஷ்மென் போன்ற வேறு சமுதாயங்கள் அவ்வாறில்லை என்பதும் வெளிப்படையாகும். எனினும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பசிபிக் வடமேற்கில் பெருவளவு மீன்கள் கிடைப்பது, விவசாயம் இன்றியே மேலதிக உணவு வழங்கலை உறுதிசெய்தது. இங்கு வாழும் மக்கள் நிலையான குடியிருப்புக்களையும், சமூகப் படிமுறையையும், பொருட் செல்வத்தையும், உயர் நிலையிலான கலைகளையும் (அதிக புகழுடையதாக குலக்குறிக் கம்பங்கள்) தீவிர விவசாய வளர்ச்சி இல்லாமலேயே உருவாக்கினார்கள். அதே சமயம் தென்மேற்கு வட அமெரிக்காவின் புவேப்லோ (Pueblo) பண்பாட்டினர் உயர்நிலை விவசாயம், நீப்பாசனம், மற்றும் தாவோஸ் போன்ற நிலையான சமுதாயக் குடியிருப்புகளை உருவாக்கியிருந்தும், நாகரிகத்தோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிறுவனங்கள் எதையும் உருவாக்கவில்லை. இன்று பல இனக்குழுச் சமூகங்கள் அரசுகளுக்குக் கீழ் அவ்வரசுகளின் சட்டங்களின் அடிப்படையில் வாழுகிறார்கள். நாகரிகத்தின் அரசியல் அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறையின் மேல் திணிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களும் நாகரிக மற்றும் இனக்குழுச் சமூக அமைப்புகளுக்கு மத்தியிலான இடைநிலையினராகத்தான் இருக்கிறார்கள். எனவே மேலும் அச்சொட்டான, வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் தேவையாகலாம். நாகரிகத்தின் விளைவுகளை நாகரிகம் என்ற கருத்துருவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாகரிகம் என்பது, சட்டம் மற்றும் சொத்துரிமைகளின் அடிப்படையிலமைந்த மக்களிடையேயான அமைதிவழி ஊடாடல் (interaction) ஆகும். முதலில் உருவான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். இவர்கள் கி.மு 3500 அளவில் நகரச் சமூகமாக உருவானார்கள். தென்மேற்கு ஆசியாவின் லேவண்ட் பகுதியில் கி.மு.12000 உருவானதாக கருதப்படுகிறது.கி.மு. 8,000 முதல் 5,000 வரையிலான காலகட்டதில் நடந்த விவசாய புரட்சி காரணமாக தென்மேற்கு,தெற்கு ஆசியா, வடக்கு,மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் நாகரிகங்கள் வளர்சியடைந்தது. வெண்கல காலத்தில் பின்வரும் பகுதிகளில் நாகரிகங்கள் உருவாகின.அவை இக்காலத்தில் பொதுவாக இரும்பு அதிகமாக பயன்படுபட்டன இக்காலத்தில் வேறுபட்ட விவசாய நடைமுறைகள், மத நம்பிக்கைகள் மற்றும் கலை பாணிகளை உட்பட பல சமுதாய மாற்றங்கள் உருவானது. ஜெர்மன் வரலாற்று தத்துவவாதியான கார்ல் ஜாஸ்பெர்ஸ் பண்டைய நாகரிகங்கள் கி.மு. 800 முதல் கி.மு.200 வரை சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்த மத குருமார்கள், தீர்க்கதரிசிகள், மத சீர்திருத்தவாதிகள் மூலம் திசை மாறியது என குறிப்பிடார்.இவை பரவிய பகுதிகளாவன குலக்குழு குலக்குழு (band society) என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்குழுவின் முதிர்ந்த உறுப்பினர்களின் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் எதிபாக்கப்படுகின்றன ஆனால் சிக்கலான சமூகங்களில் காணப்படும் சட்டங்களோ பணியாதவர்களைப் பணியவைப்பதற்கான முறைகளோ கிடையாது. குலக்குழுக்களின் வழமைகள் எப்பொழுதும் வாய்வழியாகவே கையளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைவான நிறுவனங்கள் எதுவும் எரா அல்லது மிகக் குறைவாக இருக்கக்கூடும். சமயம் பொதுவாகக் குடும்ப மரபு, தனிப்பட்ட அனுபவம், அல்லது shaman இடமிருந்தான ஆலோசனையை அடியொற்றி இருக்கும். குலக்குழுச் சமூகங்கள் வழக்கமாக உணவுக்காக வேட்டை மற்றும் சேகரித்தலை மேற்கொள்வர். குலக்குழுக்கள் அளவின் அடிப்படையில் பழங்குடிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். பழங்குடிகள் பொதுவாகப் பல குடும்பங்களைக் கொண்ட பெரிய கூட்டத்தினராவர். பழங்குடிகள் குடித்தலைவன் (chieftain) அல்லது முதியோர்கள் போன்ற கூடுதலான சமூக நிறுவனங்களைக் கொண்டவர்கள். பழங்குடிகள் குலக் குழுக்களிலும் நிலையானவை; ஒரு சிறிய குழுவினர் விலகிவிடுவதன் மூலம் ஒரு குலக்குழு இல்லாது போய்விடலாம். உண்மையில் பல பழங்குடிகள், குலக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். நவீன தேசிய அரசுகள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக இன்று உண்மையான குலக்குழுக்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. வட அமெரிக்காவின் வடபகுதியில் வாழும் இனுயிட்கள், Great Basinஇன் சோஷோன்கள், தெற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த புஷ்மென்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்பவர்கள் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும். குலம் (மக்கள்) குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" (stipulated) பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும். In certain societies this ancestor is not even human; he or she is an animallian totem. சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள். வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள். இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை. ஸ்கொட்லாந்திலுள்ள குலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது. வெவ்வேறு பண்பாடுகளிலும், சந்தர்ப்பங்களிலும், ஒரு குலம் என்பது உறவுமுறையை அடிப்படையாகக் கொண்ட குழுக்களான குலக்குழுக்கள், பழங்குடிகள் தரும் அதே பொருளையே தரக்கூடும். எனினும் வழக்கமாக, குலம் என்பதை வேறுபடுத்தும் காரணி, அது பழங்குடி, chiefdom, அல்லது அரசு போன்ற பெரிய குழுக்களின் ஒரு பகுதியாகச் சிறிதாக இருப்பதேயாகும். ஸ்கொட்டிஷ், சீன மற்றும் ஜப்பானியக் குலங்கள், முறையே ஸ்கொட்டிஷ், சீன, ஜப்பானிய சமூகங்களில் உறவுமுறைக் குழுக்களாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். பழங்குடிகள் குலக்குழுக்கள் என்பனகூட பெரிய சமூகங்களின் பகுதிகளாக இருக்கக்கூடும்; அராபியப் பழங்குடிகள் அராபிய சமூகத்தினுள் ஒரு பகுதியாகவும், ஒஜிப்வா குலக்குழுக்கள் ஒஜிப்வா பழங்குடியின் ஒரு பகுதியாகவும் உள்ளன. பெரும்பாலான குலங்கள் புறமண முறைமையைக் கொண்டவை, அதாவது, இக் குலங்களின் உறுப்பினர் தங்களுக்குள் மணம் செய்ய முடியாது. சில குலங்கள் chieftain, தாய்த் தலைமை அல்லது தந்தைத் தலைமை போன்ற ஒரு தலைமைத்துவத்தையும் கொண்டிருக்கக்கூடும். குலக்குறிக் கம்பம் குலக்குறிக் கம்பங்கள் (Totem poles), வட அமெரிக்க பசிபிக் கரையை அண்டி, பெரும்பாலும் மேற்கத்திய செஞ்செடார் (Western Redcedar) போன்ற, பெரிய மரங்களிலிருந்து செதுக்கப்படுபவையாகும். கொழும்பு கொழும்பு (, ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர். கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன. கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் கிறித்தோபர் கொலம்பசு நினைவாகக் கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது . இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்த போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவின் கிழக்குகரையில் உள்ள கோழிக்கோடு நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில் போர்த்துகிசீயரான லொரன்சோ டி அல்மெய்டா காலி துறைமுகத்தை 1505ல் அடைந்தார் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு துறைமுகம் அல்லது கோட்டை என்று பொருள் கூறுகிறது. அதனால் கொழம்ப என்பதே கொழும்புவுக்கான மூலமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது . கொழும்பு இயற்கையான ஓர் துறைமுகத்தைப் பெற்றிருப்பதால், 2000 வருடங்களுக்கு மேலாக இது கிரேக்கர், பாரசீகர், அராபியர் மற்றும் சீன வணிகர்களால் அறியப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு பணயம் செய்த இப்னு பதூதா இதனை "கலன்பு" எனக்குறிப்பிட்டார். வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர். லொரன்சோ டி அல்மெய்டா தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது. 1638இல் ஒல்லாந்து கண்டியில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்க மன்னனுடன் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, போர்த்துக்கேயருக்கு எதிரான போரில் அரசனுக்கு உதவியும், இலங்கைத் தீவில் பாரிய வர்த்தக பொருட்களின் ஏகபோக உரிமையும் பரிமாறப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தரையும், கண்டியினரையும் எதிர்த்தபோதும், அவர்களின் பலமிக்க இடங்கள் மெதுவாக 1639 ஆரம்பத்தில் தேற்கடிக்கப்பட்டன. 1796இல் பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய படைகளின் புறக்காவலாகக் கண்டி இராட்சியம் கைப்பற்றும் 1815 இல் வரை காணப்பட்டது. ஆங்கிலேயர் கொழும்பை தங்கள் புதிதாக உருவாக்கிய பிரித்தானிய இலங்கையின் முடிக்குரிய மண்டல தலைநகராக்கினர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கொழும்பை முக்கிய படை அரணாகப் பாவித்ததுபோல் அல்லாமல், ஆங்கிலேயர் வீடுகளையும் மக்கள் கட்டுமானங்களையும் கோட்டையினைச் சுற்றிக் கட்டி, தற்போதைய கொழும்பு நகரை உருவாக்கினர். கொழும்பின் புவியியல் நிலமும் நீரும் கலந்த ஒன்றாகும். நகரத்தில் பல கால்வாய்கள் காணப்படுகின்றன. நகரத்தின் இதயப்பகுதியில் 160 ஏக்கர் பரப்பில் உள்ள பெய்ரா ஏரி காணப்படுகின்றது. இவ்வேரி கொழும்பு நகரை பாதுகாக்க குடியேற்றவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. நகரின் வடக்கு வடகிழக்கு எல்லையானது களனி ஆற்றினால் வரையறுக்கபடுகிnறது. கொழும்பு கோப்பென் வகைப்பாட்டு முறையில் வெப்பமண்டலத்துக்குரிய காலநிலையை பெற்றுள்ளது. ஆண்டு முழுதும் அதிக வெப்பமில்லா சீரான காலநிலையை பெற்றுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இதன் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசு அளவுக்கு இருக்கும் . பருவக்காலமான மே-ஆகசுட்டு வரையும் அக்டோபர்-சனவரி வரையும் அதிக மழைப்பொழிவை பெறும். ஆண்டு சராசரி மழையளவு 2,400 மிமீ ஆகும் கொழும்பு பல்லின, பல கலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை சிங்களவர், தமிழர், இலங்கைச் சோனகர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலாயர், இந்திய வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் எனப் பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய 642,163 மக்கள் வாழும் நகரமாகும். 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர். 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. கொழும்பு தனக்கெனத் தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஆட்சியிலிருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் இக்கட்சியின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு இக்கட்சியின் சார்பு பெற்ற சுயேட்சைக் குழுவினர் தேர்தல்களில் வென்றனர். உவைசு மொகமது இமிதியசு கொழும்புவின் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி கழிவுநீரகற்றல், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்குத் தொடர்புடைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியக் குடியேற்றப்பகுதிகளாக இருந்த கடலோரப் பகுதிகளின் தலைநகரமாக 1700 களிலிருந்து இருந்து வந்துள்ளது. 1815இல் பிரித்தானியர்கள் கண்டி உடன்பாட்டின்படி முழுமையானத் தீவிற்கும் தலைநகரமாக விளங்கியது. 1980 களில் நிருவாகத் தலைநகரை ஸ்ரீ ஜெயவர்தனபுரம் கோட்டைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றமும் பல அமைச்சகங்களும் துறை அலுவலகங்களும் இப்பகுதியில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் இன்றளவிலும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பிலேயே உள்ளன. கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: பெரிய கூட்டுத்தாபனங்களின் தலைமையகங்கள் கொழும்பில் காணப்படுகின்றன. சில வேதியியல், ஆடைகள், கண்ணாடி, சீமெந்து, தோல் பொருட்கள், தளபாடம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் தொழிற்கூடங்கள் இங்கு காணப்படுகின்றன. தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான உலக வர்த்தக மையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம் நகரத்தின் நரம்பு போன்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. கொழும்பு ஒரு நவீன நகரத்தின் பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கொழும்பின் உட்கட்டமைப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து என்பன ஓரளவு நல்ல தரத்தில் உள்ளது. இலங்கையின் முக்கிய வணிக வளாகங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ளன. பல ஆடம்பரமான விடுதிகள், கூடலகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைந்துள்ளன. சமீப காலங்களில் நிலத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததன் காரணமாக அடுக்குமாடி வீடுகள் பல்கிப் பெருகி விட்டது. இலங்கையின் பெரிய துறைமுகம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. குடியேற்ற காலத்தில் கொழும்பு துறைமுக நகரமாகவே அமைக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் கடற்படைத்தளம் இத்துறைமுகத்தில் உள்ளது. 2008ல் இத்துறைமுகம் 3.75 மில்லியன் எண்ணிக்கையுள்ள 20 அடி நீளமுள்ள கொள்கலன்களை கையாண்டது. இது 2007ல் கையாண்ட அளவை விட 10.6% அதிகமாகும். 3.75 மில்லியன் கொள்கலன்களில் 817,000 இலங்கையுடையதாகும், மற்றவை இங்கு வைத்துக் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டதாகும். கொள்கலன்களை கையாளும் திறனைத் துறைமுகம் முழுஅளவில் நெருங்கிவிட்டாதல் இடப்பற்றாக்குறையை சமாளிக்க துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. . கொழும்பில் பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது. பேருந்துகளை அரசும் தனியாரும் நடத்துகின்றனர். மூன்று முதன்மையான பேருந்து முனையங்கள் பேட்டை பகுதியில் உள்ளன. பாசுடின் மாவத்த தொலைதூர பேருந்துகளுக்கானது. மத்திய, குணசிங்கபுரா முனையங்கள் உள்ளூர் பேருந்துக்களுக்கானது. மத்திய பேருந்து நிறுத்தம் பேருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. கொழும்பு தொடருந்து மூலம் நாட்டின் பல இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையம் தொடருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. 1970 வரை நகரில் டிராம் போக்குவரத்து இருந்தது. வாடகை மகிழுந்து, தானியங்கி மூவுருளி உந்து (மூன்று சக்கர வண்டி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) போன்றவையும் நகர போக்குவரத்துக்கு உதவுகின்றன. தானியங்கி மூவுருளி உந்து தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன, வாடகை மகிழுந்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இரத்மலானை விமான நிலையம் அனைத்து உள்ளூர் விமான சேவைகளையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நகரிற்கு வழங்குகிறது. கொழும்பு கல்வி நிறுவனங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. கொழும்பில் பல பொதுப் பாடசாலைகளில் சில அரசாங்கத்திற்கும் சில தனியாருக்கும் சொந்தமானவை. இவற்றில் பல பிரித்தானிய ஆட்சிக்காலமான 1800களைச் சேர்ந்தவை. கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியான "கோட்டை" பகுதியில் பலதரப்பட்ட கட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம். கொழும்பின் மிக முக்கிய பிரதான கொண்டாட்டம் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பு ஆகிய எல்லாம் ஒரேநாளில் நிகழும் சம்பவ தினமாகும். சிங்களத்தில் இது வெசாக் என அழைக்கப்படுகிறது. கொழும்பு நகரில் உள்ள கிறித்தவ சபைகளுள் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்குதான் இலங்கையின் ஒரே உயர்மறைமாவட்டமான கொழும்பு உயர்மறைமாவட்டம் அமைந்துள்ளது. அதன் கீழ் தனித்தனி ஆயர்களின் கண்காணிப்பில் உள்ள பிற மறைமாவட்டங்கள் பின்வருமாறு: முதலில் இலங்கை முழுவதும் இந்தியாவின் கொச்சி மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1834, திசம்பர் 3ஆம் நாளில் இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு தனி மறைமாவட்டத்தைத் திருத்தந்தை 16ஆம் கிரகோரி நிறுவினார். அம்மறைமாவட்டம் "சிலோன் மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், 1845, பெப்ருவரி 17ஆம் நாள் சிலோன் மறைமாவட்டம் "கொழும்பு மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது. 1886, செப்டம்பர் முதல் நாள் கொழும்பு மறைமாவட்டம் "உயர்மறைமாவட்டம்" ("Archdiocese") என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு, பிரதேச முதன்மை மறைமாவட்டம் ஆயிற்று. அது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. பின்னர், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கொழும்பு உயர்மறைமாவட்டம் என்னும் பெயரை 1944, திசம்பர் 6ஆம் நாள் "சிலோனின் கொழும்பு உயர்மறைமாவட்டம்" ("Archdiocese of Colombo in Ceylon") என்று மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஆறாம் பவுல் மீண்டும் பெயரை "கொழும்பு உயர்மறைமாவட்டம்" என்று மாற்றினார். அப்பெயரே இன்றுவரை நிலைத்துள்ளது. கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) ஆவார். இவர் 2009இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2010, நவம்பர் 20ஆம் நாள் மால்கம் ரஞ்சித் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பரப்பளவு 3836 ச.கி.மீ (1482 ச.மைல்) ஆகும். அந்நிலப்பரப்பில் வாழ்கின்ற 5,760,148 மக்களுள் 652,200 பேர் கத்தோலிக்கர் (11.3%) என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ஆண்டேடு ("Annuario Pontificio") (2009) கூறுகிறது. கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவில் புனித லூசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனுள் "இலங்கை அன்னை மரியா" ("Basilica of Our Lady of Lanka") தேவத்தா பகுதியிலும் புனித அந்தோனியார் தேசிய திருத்தலம் கொச்சிக்கடையிலும் உள்ளன. பின்வரும் ஆங்கில நூல்கள் கொழும்பு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளன. தீவு தீவு அல்லது கடலிடைக் குறை என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். சிங்கப்பூர், புங்குடுதீவு போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன. தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன. ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும். கடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும். ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு. கிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர். இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம். யாழ்நகரப் பாடசாலைகள் பின்வருவன யாழ்ப்பாண நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளாகும். யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் இப் பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இது இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில், விபுலானந்த அடிகள் போன்றவர்களின் மேலாண்மையின் கீழ் இயங்கிய பெருமை இப் பாடசாலைக்கு உண்டு. பிரித்தானியர் ஆட்சியின் கீழ், பாடசாலைகளைத் துவங்கி நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன்கள், தங்கள் மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த ஒரு காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தவரின் சொந்தப் பண்பாடுகளைத் தழுவிய கல்வித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இது ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி புகட்டுகின்ற ஒரு கலவன் பாடசாலை ஆகும். இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் இலங்கை கல்வித் திணைக்களத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணைப் பகுதியில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சிவன் கோயில் வடக்கு வீதியில் இது அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய சாலையான காங்கேசந்துறை வீதிக்கு மிகவும் அண்மையில் உள்ளதால் இவ்விடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. இதனால், அயலிலுள்ளவர்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். இப் பாடசாலை பெருமளவில் இந்துக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்த போதும், சோனக தெரு என அழைக்கப்படுகின்ற, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிக்கும் அண்மையில் இருப்பதால். இராமகிருஷ்ண மடத்தின் மேலாண்மையின் கீழ் இருந்த காலத்திலேயே இப் பாடசாலையில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மாணவர்களும் கல்வி பயின்றனர். ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட நாவலர் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பனவும் இப் பாடசாலைக்கு அண்மையிலேயே அமைந்திருக்கின்றன. இராமகிருஷ்ண மடத்தின் கீழ் இயங்கிய காலத்தில் இப்பாடசாலையின் கல்லூரிப் பாடல் இயற்றப்பட்டது. இதனால் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுக்கும் இதன் நோக்கம் இப் பாடலில் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். அத்துடன் இப் பாடசாலையைத் தொடக்கிய நாகமுத்து, இதன் வளர்ச்சிக் கட்டங்களில் முக்கிய பணியாற்றிய சுவாமி சர்வானந்தர், சுவாமி விபுலானந்தர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அண்மையில் உள்ள சிவன் கோயிலின் இறைவனான வைத்தீஸ்வரப் பெருமானின் அருள் வேண்டி இப்பாடல் நிறைவெய்துகிறது. வைத்திலிங்கம் செட்டியார் வைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மகனாவார். ஒரு பொழுது கொச்சிக் கணேசையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கோபாலச் செட்டியார் அவர்கள் அவரை விட்டு விலகிச் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவ் வியாபாரம் மூலம் செட்டியாருக்கு ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு கிடைத்தது. செட்டியாரின் நற்பண்புகள் காரணமாகத் தேசாதிபதியின் மனைவியும் செட்டியாரிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தாராம். ஒருமுறை தேசாதிபதியின் மனைவி சிறுவனாயிருந்த வைத்திலிங்கனைக் கோபாலச் செட்டியாரின் கடையிற் காண நேர்ந்த போது அவனைத் தன்னுடன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாராம். அன்றிலிருந்து வைத்திலிங்கனின் பெரும்பகுதி நேரம் மாளிகையிலேயே கழிந்தது. அங்கே அவர் ஒல்லாந்த மொழியையும் கற்றுக்கொண்டார். இளைஞனாக வளர்ந்த வைத்திலிங்கனுக்கு முத்துச் சலாபம் குத்தகை எடுக்க எண்ணம் ஏற்பட்டது. தேசாதிபதியின் மனைவியுடைய உதவியின் பேரில் முத்துச் சலாபக் குத்தகை வைத்திலிங்கனுக்குக் கிடைத்தது, அதன் மூலம் பெருமளவு வருமானமும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து மூன்று தடவை குத்தகை எடுத்துப் பெரும் இலாபமீட்டிய இவர் சிறந்த சிவ பக்தியுடையவராக விளங்கினார். உரிய வயதில் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கந்தி என்னும் ஊரிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், கோபாலச் செட்டியாருக்கு நண்பரும், வைத்திலிங்கம் செட்டியாருக்குக் குருவுமான கூழங்கைத் தம்பிரான் என்பவருடைய ஆலோசனையின் பேரில், வண்ணார்பண்ணையில் ஒரு நிலத்தை வாங்கி வைத்தீஸ்வரப் பெருமானுக்குக் கோயில் எழுப்புவதற்காக 1787ஆம் ஆண்டில் அத்திவாரம் இட்டார். இக்கோயில் எவ்வித தடையுமின்றி 1790ல் நிறைவு பெற்றது. இதன் பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை கோயிலை அவரே பரிபாலனம் செய்து வந்தார். பின்னர் தனது இறுதிக் காலத்தில் சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பிக் கோயில் பரிபாலனத்தைத் தனது இரு மகன்களிடமும் கையளித்துவிட்டுப் புறப்பட்டார். பல தலங்களையும் தரிசித்தபின் இறுதிக்காலத்தைக் காசியில் கழிக்க விரும்பி அங்கேயே தங்கியிருந்து சிறிது காலத்தில் காலமானார். தலைநகரம் ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன. ஏர்னோ ரூபிக் ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார். இலண்டன் இலண்டன் ("London"), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட conurbation ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான "லண்டனியம்" ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது. இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை, இலண்டன் கோபுரம்; பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள்; ராயல் தாவரவியல் பூங்கா; வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும். இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். "லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த இணைந்திருந்த தனிநகர்களை (conurbation) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள செயாரிங் சந்தி (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும். "தலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு" இலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை. இது மிகவும் பழைய பெயர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கிபி 121 ஆம் ஆண்டில் இது "இலண்டனியம்" என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது. மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது "இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி" "(Historia Regum Britanniae)" என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார். இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை "லுட்" என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார் 1899 ஆம் ஆண்டிலிருந்து "லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம்" என்னும் பொருள் கொண்ட செல்ட்டிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் ரிச்சார்டு கோட்சு (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான "லோவொண்டியா" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். "லோவொண்டியா" என்னும் சொல் "கடக்க முடியாதபடி அகலமான ஆறு" என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் தேம்சு ஆற்றின் பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான "லோவொனிடன்யன்" என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் "கோட்சு" விளக்கினார். மிகப் பழைய காலத்திலேயே இப்பகுதியில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், முதல் குறிப்பிடத்தக்க குடியேற்றம் உரோமர்களால் கிபி 43 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இது 17 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. கிபி 61ல், போடிக்கா என்னும் அரசியின் தலைமையிலான "ஐசெனி" என்னும் பழங்குடியினர் இக் குடியேற்றத்தைத் தாக்கி எரித்து அழித்துவிட்டனர். பின்னர், கிபி 100 ஆம் ஆண்டளவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குடியேற்றம் இப்பகுதியில் நிறுவப்பட்டதுடன், அதுவரை உரோமப் பேரரசின் பிரித்தானிக்கா மாகாணத்தின் தலைநகரமாக இருந்த கால்செசுட்டருக்குப் பதிலாக இது தலைநகரமும் ஆனது. இரண்டாம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையில் இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 60,000 வரை இருந்திருக்கக் கூடும் என மதிப்பிட்டுள்ளனர். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, "லுண்டென்விக்" என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இப் பகுதியில் பிளீட் ஆற்றின் கழிமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும், வணிகத்துக்குமான ஒரு சிறு துறைமுகம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. நகரத்தை வைக்கிங்குகள் கைப்பற்றும்வரை இவ் வணிக நடவடிக்கைகள் வளர்ந்து வந்தன. ஆனால் வைக்கிங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந் நடவடிக்கைகள் மீண்டும் முன்னர் "லண்டனியம்" இருந்த இடத்துக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று. வைக்கிங்குகளின் தாக்குதல்கள் கிபி 886 ஆம் ஆண்டுவரை தொடர்ந்ததாயினும், அவ்வாண்டில் பேரரசர் அல்பிரட் இலண்டனைக் கைப்பற்றியதுடன் டேனியத் தலைவர் குத்ரம் என்பவருடன் அமைதி ஒழுங்கும் செய்துகொண்டார். தொடக்ககால "லுண்டன்விக்" நகரத்தின் பெயர் "பழைய நகரம்" என்னும் பொருள்படும் "ஈல்விக்" ஆனது. இதுவே தற்கால நகரமான வெஸ்ட்மின்ஸ்ட்டரில் உள்ள "அல்ட்விக்" (Aldwych) ஆகும். 1016 ஆம் ஆண்டில் "கனூட்" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை மீண்டும் கட்டியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையும் கட்டினார். இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக வின்செசுட்டர் இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. நோர்மண்டியின் டியூக் ஆக இருந்த வில்லியம் என்பவர் ஆஸ்டிங்ஸ் போரில் வெற்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார். அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார். 1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், [[வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபம்|வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக்]] கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது [[இலண்டன் கார்ப்பரேசன்]] எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது. இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது, முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார். "[[கறுப்புச் சாவு]]" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள். 1381 ஆம் ஆண்டில் "[[குடியானவர்களின் புரட்சி]]"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை. [[படிமம்:Great Fire London.jpg|thumb|250px|1666 ஆம் ஆண்டின் இலண்டனின் பெரும் தீ விபத்து நகரின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது|alt=]] [[டியூடர் காலம்|டியூடர் காலத்தில்]] சீர்திருத்த இயக்கத்தினால் நகர மக்கள் படிப்படியாகப் புரொட்டஸ்தாந்தத்தின் பக்கம் சென்றனர். இலண்டன் நகரம் திருச்சபையிலிருந்து [[தனியார் சொத்துடைமை]] முறைக்கு மாறியது. வணிகவியம் வளர்ச்சியடைந்ததுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற தனியுரிமைக் கம்பனிகள் உருவானதுடன், வணிகம் [[புது உலகம்|புது உலகப்]] பக்கமும் விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிகள் இலண்டனுக்கு வந்தனர். இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது. 1530 ஆம் ஆண்டில் 50,000 ஆக இருந்த மக்கள்தொகை 1605 ஆம் ஆண்டில் 225,000 ஆக வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அரங்கக் கலைக்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் [[வில்லியம் சேக்சுப்பியர்|வில்லியம் சேக்சுப்பியரும்]], அவர் போன்ற பிறரும் இலண்டனில் வாழ்ந்தனர். 1603 ஆம் ஆண்டில் டியூடர் கால முடிவில், இலண்டன் நகரம் இறுக்கமாகச் சிறிய அளவாகவே இருந்தது. 1605 ஆம் ஆண்டி நவம்பர் 5 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில், முதலாம் சேம்சைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் நகரம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. 1665–1666 காலப்பகுதியில் இது தீவிரமாகியது. இதனால் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது மொத்த மக்கள் தொகையின் ஐந்தில் ஒரு பகுதியாகும். 1666 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் தேதி இடம்பெற்ற [[இலண்டனின் பெரும் தீ விபத்து|இலண்டனின் பெரும் தீ விபத்தில்]] ஏராளமான மரக் கட்டிடங்கள் எரிந்து சாம்பராயின. இதனைத் தொடர்ந்த மீள் கட்டுமானப் பணிகள் முடிவதற்குப் 10 ஆண்டுகள் பிடித்தன. இப் பணிகள் [[ராபர்ட் ஊக்]] (Robert Hooke) என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. இலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு [[ஒய்ஸ்டர் அட்டை]] எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் [[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே]] உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இலண்டனின் பேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேருந்துகளையும் 700க்கும் மேற்ப்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். [[படிமம்:Trafalgar square night small.jpg|thumb|250px|[[ட்ரஃபல்கர் சதுக்கம்]][[:படிமம்:trafalgar square night panorama.jpg|முழு அகன்றப்பரப்பு நிழற்படம்]]]] [[படிமம்:Thames Barrier 04.jpg|கழிவுநீர் சுத்திகரிப்பு|thumb|right|250px]] [[படிமம்:Uk-london-bigben-tower.jpg|thumb|150px| பிக்பென் உள்ளிட்ட வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையின் மணிக்கூண்டு]] [[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]] [[பகுப்பு:இங்கிலாந்தின் நகரங்கள்]] ஜானகி இராமச்சந்திரன் ஜானகி இராமச்சந்திரன் (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) ("Janaki Ramachandran") அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார். வைக்கம் நாராயணி ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனுக்கு தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில் திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு: அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலெட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாkகவும் நடித்தனர். ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது. ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம்திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. 1987 திசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 சனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார். ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் ஜானகி, ஜெயலலிதா தலைமையிலான அணிகள் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டி இட்டன. இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி. ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார் . ஜானகி அரசியலில் இருந்து விலகி ம. கோ. இரா.வின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். 1996 மே 19 ஆம் நாள் காலமானார். நீராவி நீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். அறை வெப்பநிலை மற்றும் சூழல் வெப்பநிலையில் வளிமண்டலம் நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும். தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது. நிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது. வால்மீகி வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர். வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். ஒருமுறை நாரதரைக் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு, ’இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை’ என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார். எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த தியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் ’ஓ முனிவனே எழுந்திரு!’ என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, ’நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன” என்று திகைத்து பதில் கூற, ’இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்’ என்று அக்குரல் கூறியது. சென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். இளங்கோவடிகள் இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும், சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் பந்துங் கழங்குந் தந்தனர் பரசி வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் இத்தகைய இரத்தபலி பூசை ஏற்க்கும் கொற்றவை எங்கனம் சைவ சமய தெய்வமாகும் திருநாவுக்கரசு நாயனார் அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால். அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை என பல பெயர்கள் இவருக்கு உள்ளது. திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான். தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் "அப்பர்" எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார். அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் "என் கடன் பணி செய்துகிடப்பதே" என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும். திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்களை தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு, "ஈசனுடைய அடிகளில் சரணடைந் தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது. வீசுகின்ற தென்றல் போன்றது. இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக் கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார் அப்பர்!" திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன. திருநாவுக்கரசரின் குருபூசையானது சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார். பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101. சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தமம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார். அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்...’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்). இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார். ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அல்ல) 'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர். பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான். 'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார். 'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார். 'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார். இவரின் படைப்புக்கள் - திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன. சுந்தரருக்கு பிற்பட்ட காலத்தவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். முதலாம் இராஜராஜ சோழன் கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே. இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் க்ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும். முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன. இராஜகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான். உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லையென்று சொல்வதற்கில்லை, உத்தமச் சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதித்தான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசப்பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசப்பதவியை மறுத்துவிட்டான். இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன. பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே. இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன. சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது. கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று. "ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்." இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது. மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன. இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது. இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 – 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம். இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார். உதகை கோட்டை எனப்படுவது இப்போது தென்குமரி நாட்டில் உள்ள உதயகிரி கோட்டை. இங்கே சோழர் தளபதியாக இருந்த ராஜேந்திரசோழன் இரணியசிங்கநல்லூர் தலைமையாக்கி வேணாட்டை ஆண்ட பாஸ்கர ரவிவர்மனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். இதனால் கோபம்கொண்ட ராஜராஜசோழன் பெரும்படையுடன் வந்து வேணாட்டை வென்றான். உதயகிரியை அழித்தான். சேரநாட்டு அதர்வ வேதபாடசாலைகளை அழித்தான். இதையே காந்தளூர்சாலை கலமறுத்தல் என்று தன் மெய்கீர்த்திகளிலில் குறிப்பிடுகிறான். இத்தகவல்களை கே கே பிள்ளை அவர்கள் அவரது தென்னிந்திய வரலாறு நூலில் சொல்கிறார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை காந்தளூர்ச்சாலை பற்றி எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் இதைப்பற்றி பேசுகிறது இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராஜேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களுக்குக் கீழ் வந்தது.பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான். இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது. கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது. மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான்.(சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி கி.பி 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.) 922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது. தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது. சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும். இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்ற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும். வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர். மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாய் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன. முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான். கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 – 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம். கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான். இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர். பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது. ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பி ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பி அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான். வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 – 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர். இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்றும் முடிவாக ஜடாசோடன் என்னும் பேரும் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது. 1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது. வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது. இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவு. இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது. நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராஜேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான். ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜன் இந்தியாவின் பெரும் இராஜதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்டன் பட்டயங்கள் கூறுகின்றன. இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. மேற்கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராஜராஜ சோழன் அழைக்கப்பட்டுள்ளார். இராஜராஜன் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அவருடைய பட்டத்து அரசியாக ஓலோகமகாதேவியார் என்பவர் இருந்துள்ளார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் திருவாயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இராஜராஜனின் பட்டத்து அரசியான ஒலோகமகாதேவியாரும், சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகிய மனைவிமார்களும் கோயிலுக்கு கொடைகள் அளித்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார். இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்... என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றன. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும். இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து, ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான். இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாதித்தனை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது. ராஜராஜனின் படையில் பல்வேறு படைப்பிரிவுகள் இருந்துள்ளன என்பது தஞ்சை கோயில் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. அந்தப் படைப்பிரிவுகளின் பெயர்கள்; இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான். மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான். வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான். முதலாம் இராஜ இராஜ சோழனின் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவவம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராஜேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. உத்தம சோழன் உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான். கொங்கு நாட்டில் இவனுக்குப் படைத்தலைவனாக விளங்கிய ஒருவனுக்கு இந்த வேந்தன் தன் பெயரை விருதுப் பெயராக அணிந்துகொள்ள ஒப்புதல் வழங்கினான். மேலும் பட்டவர்த்தனன் என்னும் பட்டப்பெயரையும் வழங்கினான். இதனால் இப் படைத்தலைவன் பெயர் பட்டவர்த்தனன் உத்தமச்சோழன் என வழங்கப்படலாயிற்று. திருவாசகம் திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் . முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. திருவாசகத்திற்குத், தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா. Thiruvasagam (Tamil) by Manikkavasaga Swamigal (Author) ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, "United National Party", ) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது. மகாவம்சம் மகாவம்சம் (Mahawamsa or Mahawansa) (பாளி மொழி: மஹாவம்ச அல்லது மஹாவங்ச) சுருக்கமாக. Mhv. அல்லது Mhvs. என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை இந்து மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் கி.பி 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் ஆகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; "பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது. மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு 247-207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன. மகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது. விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் (அரவர்கள்~தமிழர்கள்) வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே கி.பி 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது.இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார்.இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது. மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் கி.பி 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது. மகாவம்சம் ஆங்கிலம்,ஜேர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏர் ஏர் அல்லது கலப்பை () "(plough)" அல்லது plow இரண்டுமே ) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது பண்ணைச் செயற்கருவியாகும். இது பண்ணைத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும். ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன. ஏர்கொண்டு உழுதலின் நோக்கமே மேல்மண்ணை புரட்டி வளமான சத்துமிக்க அடிமண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதேயாகும். அதேநேரத்தில் உழுதல் களையையும் முன்பயிரிட்ட எச்சங்களை அடியில் புதைத்து அவற்றைச் சிதையச் செய்கிறது. ஏரால் உழும்போது ஏற்படும் உழவு சால்களில் வளமண் பொதிந்தமையும். உழுத வயல் உலரவிடப்படும். பின்னர் நடவுக்கு முன் பரம்படிக்கப்படும். உழுது பண்படுத்தல் மண்ணை ஒருசீராக்கி மேலே அமைந்த 12 முதல் 25 செ.மீ ஆழ உழுத அடுக்கு மண்ணை நடவுக்கு முன் உருவாக்கும். பலவகை மண்களில் பயிரின் வேர்கள் உழுத அடுக்கு மேல்மண்னிலேயே அமையும். முதலில் மாந்தரே ஏரை இழுத்து உழுதாலும் பின்னர் விலகுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்டதும் ஏருழவு திறம்பட நடந்த்து. முதலில் எருதுகளைப் பூட்டி எரால் உழவு செய்துள்ளனர். பின்னர் குதிரைகள், கோவேறு கழுதைகளைப் பூட்டியும் உழவு நடந்துள்ளது. பிறகு இதற்கு பலவகை விலங்குகளை இடத்திற்கு ஏற்ப பூட்டி உழவு செய்யப்பட்டுள்ளது. தொழில்மயமாகிய நாடுகளில், முதல் எந்திரவகை ஏர் நீராவிப் பொறிகளைப் பூட்டிய இழுபொறிகளால் உழப்பட்டுள்ளது. ஆனால் இவை மெல்ல மெல்ல உள்ளெரி பொறிகள் பூட்டிய இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டன. அயர்லாந்தில் உழவுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரப்படுகின்றன. மண்சரிவும் அரிப்பும் ஏற்படும் பகுதிகளிலும் மேல்மண் உழவு நுட்பங்கள் பயன்படும் பகுதிகளிலும் வர வர ஏர் உழவு குறைந்துகொண்டே வருகிறது. மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும். கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி). தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பழைய ஆங்கிலத்திலும், பிற ஜெர்மானிய மொழிகளிலும் மரபாக ஏருக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எடுத்துகாட்டாக, பழைய ஆங்கிலத்தில் சுல்கு ( "sulh") எனவும் பழைய உயர்ஜெமானியத்தில் மெடெலா ( "medela") கீசா ( "geiza") குவோகிலின் ( "huohilī(n)") ஆகிய பெயர்களாலும் பழைய நோர்சு மொழியில் ஆர்திர் ( "arðr") எனவும் சுவீடிய மொழியில் ஆர்தெர் ( "årder") எனவும் கோதிக மொழியில் கோகா ( "hōha"0 எனவும் ஏர் (ard )(plough) வழங்கப்படுகிறது. இன்று வழக்கில் உள்ள plough அல்லது plow எனும் சொற்கள் 1700 வரை ஏர் எனும் சொல்லுக்கு வழங்கவில்லை. ஏருக்கான "plough" எனும் ஆங்கிலச் சொல் பழைய நோர்சு சொல்லாகிய "plógr" என்பதில் இருந்து வந்ததாகும். எனவே இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும். இது மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும். கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் "plaumorati" , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது (பிளினிPliny "இயற்கை வரலாறு" 18, 172). இது இலத்தீன மொழியில் "plaustrum" "farm cart", "plōstrum, plōstellum" "cart", and "plōxenum, plōximum" "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் . ஓரெல் (2003) என்பார் "plough" எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *"blōkó-" என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் "peɫem" "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் "bwlch" "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாக வாய்ப்பு மிகவும் குறைவே. விளக்கப்படம் ("வலது") ஏரின் அடிப்படை உறுப்புகளைக் காட்டுகிறது: குறிப்பிடப்படாத ஏரின் உறுப்புகளாக சட்டம் பின்வாரி, மண்வாரி, shin, களைப்பலகை, கைப்பிடிகள் ஆகியனவும் உள்ளடங்கும். அண்மை ஏர்களிலும் சில பழைய ஏர்களிலும் கொழுவும் பின்வாரியும் வார்பலகையில் இருந்து பிரித்து வைக்கப்படுகின்றன. எனவே முன்னவற்ரை வார்பலகையை மாற்றாமலே பதிலீடு செய்து மாற்றலாம். சிராய்ப்பு நாட்பட நாட்பட மண்ணோடு தொடர்புள்ள அனைத்து ஏரின் உறுப்புகளும் சிதைகின்றன. வேளாண்மை முதலில் உருவாகும்போது தோண்டுகழிகளும் கொழுக்களும் (கொளுறுகளும்) பயன்படுத்தி உயர் வள மேல்மண்ணைத் தோண்டிக் கிளறினர். நைல்நதி ஒவ்வோராண்டும் வெள்ளம் வடியும்போதும் மண்னை வளமாக்கியது. இது சால் உழவு வேளாண்மையை வளர்த்தது. இவை ஓரிட்த்தில் மட்டும் தோன்றவில்லை. வேளாண்மை நடந்த அனைத்துப் பகுதிகளிலும் இவை ஒருங்கே உருவாக்கப்பட்டு வழக்கில் இருந்துள்ளன. கொழுவால் உழுத வேளாண்மை வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மரபாக நடைபெற்றுள்ளது. இங்கு கற்பரல் மண்ணிலும் (மணலிலும்) செஞ்சரிவு சாரல்களிலும் கிழங்குப் பயிர்களும் பருமணி கூலங்களும் சற்ரு இடைவெளி விட்டு நட்டுப் பயிரிடப்பட்டன. இப்பகுதிகளுக்கே (குறிஞ்சிப் பகுதிக்கே) மிகப்பொருத்தமானது என்றாலும் இது அனைத்துப் பகுதிகளும் கூட பரவலாகப் பின்பற்றப்பட்டது. கொழுவுக்கௌ மாற்ரக பன்றிகளை விட்டு மேல்மண்ணைக் கிளறிப்போட்டும் சில பண்பாடுகளில் தொடக்கநிலை வேளாண்மை நடந்தேறியது. தமிழகத்தில் இந்த இருவகை வேளாண்மைக்கான செவ்வியல் காலப் பாடல் சான்றுகள் உள்ளன. மிகப்பழைய வில்வகைக் கீறியில் ஓர் "இழுகழி" (அல்லது "விட்டம்/நுகம்") pierced by a thinner vertical pointed stick called the "தலை" (அல்லது "உடல்") எனும் மெல்லிய குத்துநிலைக் கழி குத்திட்டு அமைய இதன் ஒருமுனையில் "பிடி" (கைப்பிடி)யும் மறுமுனையில் ஒரு "கொழு" (அல்லது வெட்டலகு)ம் அமைந்திருக்கும். இந்த வெட்டலகு தினைகளுக்கு ஏற்ற மேல்சாலோட்ட மேல்மண்னில் இழுத்துச் செல்லப்படும். கீறிவகை ஏர் புதுமண்னை நன்கு உழ ஏற்றதல்ல. எனவே கொழு அல்லது துளறு புற்பூண்டுகளை அகற்றும்ப்டி, கொழுவுக்கு முன் ஆழ்சாலோட்ட கையால் கொத்தும் துளறு பயன்படுத்தப்படும்.கீறி சால்களுக்கிடையே கிளறாத மண்னை விட்டுச் செல்வதால், இவ்வகை வயல்கள் நெடுக்குவாட்டிலும் குறுக்கவாட்டிலும் குறுக்கு மறுக்காக உழப்படும். இது கெல்டிக் வகை அல்லது சதுரவகை உழவு எனப்படும். கீறல்வகை உழவு வெள்ளத்தால் ஒவ்வோராண்டும் வெள்லத்தால் வளமாக்கப்படும் மணற்பாங்கான அல்லது களிமட்பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். இவ்வகை உழவு நைல்நதிப் படுகையிலும் செம்பிறை வளமண்ணிலும் ஓரளவு தினைகள் பயிரிட ஏற்ற மெல்லிய மேல்மண் பகுதிகளிலும் கீரல்வகை ஏர் உழவு நடைமுறையில் உள்ளது. பிந்தைய இரும்புக் காலத்தில் கீறல் ஏரோடு துளறுகள் பொருத்தப்பட்டன. நில அளவையில்"ஏர்" என்ற சொல் பயன்படுகிறது. பதின்ம முறையில் நிலப் பரப்பளவின் அலகு ஏர் (are) ஆகும். தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், எக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. கன அளவு கன அளவு () அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு ("volume") என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும். திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை. கொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும். கன அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வழமையான அலகுகள்: கனவளவுக்கான இம்பீரியல் அலகுகள்: சமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்: ஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒரு அலகு கொள்ளளவில் உள்ள திணிவு, ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும். சுஜாதா (எழுத்தாளர்) சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு "சிவாஜி" என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய, ""இடது ஓரத்தில்"" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு "குமுதம்" இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. "குமுதம்" ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன., வெண்பா வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை. உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம். "நேரசை" மற்றும் "நிரையசை" என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக "நேர்", "என்", "நீ", "தேன்" முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். "நிரை", "படம்", "புறா" முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது. அசைகளின் தொடர் "சீர்" எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் "தளைகள்" உண்டாகும். யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன: வெண்பா செப்பலோசை பெற்று வரும். வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு: தளைகளுக்கான இலக்கண நெறிகள்: codice_1 ஒரு திருக்குறள் ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
திருவள்ளுவர் திருவள்ளுவர் ("thiruvalluvar"), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது . மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு. மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வள ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். திருவள்ளுவரை என்று பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்பர். பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம். இவரை, என பாரதியாரும், என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர். இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்: "அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே யவனிதனில் ஞானவெட்டியருள யானும் நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே" இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் இயற்றியது என தெரிய வருகிறது. அந்த நூல்களில் முக்கியமானவை: இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில் பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும் அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்கள் உள்ளன. திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்) திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார். அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. சான்றுடன் திருவள்ளுவரின் காலம்: அறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர். மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது.ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 கு மேற்ப்பட்ட தமிழ் சொற்களையும்,50கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவானர், பாரதிதாசன் போன்றோர் மேற்க்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர். சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது. சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. சான்றுடன் மணிமேகலை காலம் : 1. நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது. ஆனால் ஹீனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர். 2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் மணிமேகலை காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார். 3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் கி. மு நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணிமேகலை காலம் கி. பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்காலத்தில். இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர். சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம் , நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். இது 10 காதைகளைக் கொண்டது.அவை, புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர். திருமணத்தால் ஒன்றுப்பட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும், அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனிக் குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக் காதை கூறுகிறது. மாதவி என்னும் ஆடல்மகள் சோழன் முன்னர்த் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த காவல் மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி, 'நாடக கணிகையர்க்குத் தலைவரிசை' என நூல்கள் விதித்த முறைமையின்படி, ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றனள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே, கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள்.கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவையே தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை, அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலைத் தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை. மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும். புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன. விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரைச் சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது. கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே, கோவலனின் மனம் மாறுகின்றது அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோத்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனும் ஆயினான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே, தனியாகவே, தன்மனைச் சென்று புகுந்தாள். கானல் விழாவின் முடிவில் மன்னனை வாழ்த்தும் மரபும் பேணப்பட்டது. ஊழ்வினை வந்து உருத்தது என்பதனைக் காட்டும் உருக்கமான பகுதி இது. இளவேனிற் பருவமும் வந்தது. கோவலனின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே! தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இளவேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே, கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. கண்ணகி , தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம். சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின; அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத் தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி "சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். இப்பகுதியில் கண்ணகியின் கனவு விளக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். திருவரங்கத்தைக் கடந்து, அம்மூவரும் சோணாட்டு உறையூர் வரையும் சென்றது பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். இத்துடன் புகார்க் காண்டம் முடிவுற்றது. இது 13 காதைகளைக் கொண்டது. அவை, என்பவை ஆகும். கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்னும் மூவரும், தென்திசை நோக்கி நடையைத் தொடர்ந்தனர். இடைவழியிலே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து, வழியின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலேத் தோன்றிக் கோவலனின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. 'வசந்தமாலையின் வடிவிலே தோன்றினால், மாதவியின் பேரிலுள்ள காதலினால் இவன் நமக்கு இசைவான்' என்று கருதிய அத்தெய்வம் கோவலனின் பாதங்களின் முன் வீழ்ந்து கண்ணீரும் உகுத்தது. வசந்தமாலை, ஏதோ பிழைபட்ட சொற்களைக் கோவலனிடம் சொன்னதால்தான் கோவலன், தன்னைக் காண வராமல் கொடுமை செய்து விட்டான் என்று மாதவி கூறி மயங்கியும் வீழ்ந்தாள் என்றும் மாதவி, கணிகையர் வாழ்வு, என்றும் கடைப்பட்ட வாழ்வே போலும்! என்று சொல்லி வருந்திக் கண்ணீர் உகுத்ததாகவும் வசந்தமாலையின் வடிவில் தோன்றிய கானல் தெய்வம் கூறியது. மயக்கும் தெய்வம் இக்காட்டிலே உண்டு என்று வியக்கத்தக்க மறையவன் முன்னரே கோவலனிடம் சொல்லியிருந்தனன். கோவலன் கூறிய மந்திரத்தால் வசந்தமாலை வடிவில் தோன்றியக் கானுறை தெய்வம் "யான் வனசாரிணி; நினக்குமயக்கம் விளைவித்தேன்; புனத்து மயிலின் சாயலினையுடைய நின்மனைவிக்கு, புண்ணிய முதல்வியான கவுந்தியடிகளுக்கும் என் செயலைக் கூறாது போய் வருக' என்று சொல்லி, அத்தெய்வம், அவ்விடத்து நின்றும் மறைந்து போய்விட்டது. அதன்பின்னர் மூவரும் ஐயையின் திருக்கோயிலைச் சென்றடைகின்றனர். ஐயைக் கோட்டத்திலே ஒரு பக்கமாகச் சென்றிருந்து கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் இளைப்பாறுகின்றனர். அங்கே 'சாலினி' தெய்வமேற்று, கண்ணகி வாழ்வின் பின்நிகழ்வுகளைக் கூறுகின்றாள். பின், வேட்டுவர் வரிப்பாட்டுப் பாடி கூத்து ஆடுகின்றனர். பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர். புறஞ்சிறை மூதூரிலே, கவுந்தியும் கண்ணகியையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது. புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். 'தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி' என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, 'மாடலன்' அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள். கோவலன் கண்ணகியருக்கு ஒரு புது மனையிலே இடந்தந்து, பல்வகைப் பொருளும் தருகின்றாள் மாதரி. தன் மகளையும் கண்ணகிக்குத் துணையாக அமைக்கின்றாள். கண்ணகி சோறாக்கித் தன் கணவனை உண்பிக்க, அவனும் அவளைப் பாராட்டி, தன் நிலைக்கு வருந்துகின்றான். கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றைக் கையிலே எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குப் போய் விலை மாறி வருவதாகக் கூறிச் சென்றான். கடைவீதி வழியே செல்லும்போது பொற்கொல்லன் ஒருவன் தன் பின்னே நூற்றுக்கணக்கான பொற்கொல்லர் தொடர்ந்துவர முன்னால் நடந்து வந்தான். அவனை அரண்மனைப் பொற்கொல்லன் என்று கருதி கோவலன் தான் கொண்டுவந்த காற்சிலம்பை அவனிடம் கொடுத்து விற்றுத் தருமாறு வேண்டுகின்றான். தன் குடிலில் கோவலனை இருத்திவிட்டு அக்காற்சிலம்பை மன்னருக்கு அறிவித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொல்லப்பட்டு இறந்தான். ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். குரவையின் முடிவிலே, மாதரி வைகையிலே நீராடிவிட்டுவரப் போயினாள். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுக் கண்ணகி புலம்பினாள். இப்பகுதியில் கண்ணகியின் அவல மிகுதியைக் காண்கின்றோம். அவள் காய்கதிர்ச் செல்வனை விளித்துக் கேட்டாள். "நின் கணவன் கள்வனல்லன்; இவ்வூரினைப் பெருந்தீ உண்ணப்போகின்றது" என்ற குரல் ஒன்று எழுந்தது. எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம். கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்" என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் "கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது"என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். பாண்டியன் உயிர்விட்ட அக்காட்சி கண்ணகியைத் திகைப்படையச் செய்தது. கோப்பெருந்தேவியது கற்பின் செவ்வி அவளைப் பெரிதும் வியப்படையவும் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும், பத்தினியே என்றும், அரசோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் அழிப்பேனென்றும் வஞ்சினம் கூறிச் சென்று, தீக்கடவுளையும் மதுரை மீது ஏவுகின்றாள். தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான 'மதுரபதி' என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள். மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னால் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள். இத்துடன் மதுரைக் காண்டம் முற்றுப்பெற்றது. ஆகிய ஏழு காதைகளைக் கொண்டது. திருச்செங்குன்றினைச் சேர்ந்த கண்ணகியாள், மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே சென்று நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, கோவலன் இறந்ததன்பின் பதினான்கு நாட்கள் கழிந்திருந்தன. வானுலகத்திலிருந்து தேவருடன் அவர் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவனைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழி பட்டுப் பணிந்து போற்றலாயினர். சேர வேந்தனான செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றான். கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்றதும், தாம் கண்ட அதிசயமும் குன்றக் குறவர் அவனுக்குக் கூறினர். அப்போது அங்கே அவ்விடத்தே இருந்த சாத்தனார், கண்ணகி வழக்கு உரைத்ததும், மதுரை தீயுண்டதும் பற்றி அவர்கட்குக் கூறினார். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் நட்டு வழிபட எண்ணினான். வடநாட்டு வேந்தர் சிலரின் வீராப்பான பேச்சு இமயத்திற்கே செல்ல அவனைத் தூண்டியது பற்றிய அரசாணையும் எழுந்தது என்பது இது. செங்குட்டுவன் படைப்பெருக்கோடு வடநாடு நோக்கிச் சென்றான். எதிர்த்த ஆரிய மன்னர்கள் பலரையும் வென்றான். இமயத்திலே பத்தினிக்குக் கல்லும் தோண்டிக் கொண்டான். கண்ணகிப் படிவத்திற்கான கல்லினைத் தோண்டிக் கொணர்ந்து, நீர்ப்படை செய்தது முதல், மீண்டும் செங்குட்டுவன் வஞ்சிமா நகரம் திரும்பியது வரை கூறுவது. பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக நாற்றிக் கொண்டாடிய செய்திகளைக் கூறுவது இப்பகுதி. கண்ணகிப் படிமத்தின் கடவுள் மங்கலம் நடைபெற்றது. செங்குட்டுவன் வந்திருந்தான். பல சிற்றரசர்களும் வந்து திறை செலுத்தினர். தேவந்தி முதலியோர் கண்ணகி கோயிலுக்கு வந்து அரற்றினர். கண்ணகி தேவ வடிவிலே தோன்றுகின்றாள்; செங்குட்டுவனையும் வாழ்த்துகின்றாள். மணிமேகலை துறவைப்பற்றி தேவந்தி சொன்னாள். அவள் மேல் சாத்தன் ஆவேசித்துப் பேசுகிறான். கண்ணகியின் தாய், கோவலனின் தாய், மாதரி என்பவர், தம் அடுத்த பிறப்பிற் சிறுகுழந்தைகளாக அங்கு வந்து, தாம் மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றிக் கூறுகின்றனர். பத்தினிக்குப் பூசை செய்யத் தேவந்தி அனுமதி பெறுகிறாள். பல நாட்டு மன்னரும் வணங்கி விடைபெறுகின்றனர். வேள்விச் சாலைக்குச் செங்குட்டுவன் செல்லுகின்றான். நூலாசிரியருக்குக் கண்ணகி அவர்தம் முன்வரலாறு உரைக்கின்றாள். முடிவில் உலகோர்க்கான அறிவுரைகளுடன் சிலப்பதிகாரம் முடிவடைகிறது. கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள். கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன். மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். சிலப்பதிகாரத்தின் புகழை முதல் பரப்பிய பெருமை ம. பொ. சியைச் சாரும்.இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்.ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி எழுதிய நூல்கள் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்" என்றும் பெரியார் சிலப்பதிகாரத்தை விமர்சித்தார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ("ஆங்கிலம்" : ), அல்லது "Trichinopoly"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று. திருச்சிராப்பள்ளி என்ற பெயர் "திரிஷிராபுரம்" ("திரிஷிரா"-மூன்று தலை; "புரம்"-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சி.பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் "சிறுத்த-பள்ளி" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, "திரு-சிலா-பள்ளி" (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது. முதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராகக் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான் . பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார். மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது. முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது .. மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றது. இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 8,46,915 ஆகும். . இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.32% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.66% , பெண்களின் கல்வியறிவு 88.08% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி இந்தியளவில் 47வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,46,915 ஆகவும். கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,021,717 ஆகவும் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முசுலிம்களும் வாழ்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும் சமணர்களும் இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும் கணிசமான மக்கள் தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் கன்னட மொழி பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர். திருச்சிராப்பள்ளி என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது. நகரத்தின் சராசரி உயரம் ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது. வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது. திருச்சியின் மேற்கே தொலைவில் காவிரியின் கழிமுகம் துவங்குகிறது. இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது. காவேரி ஆற்றையொட்டியப் பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணை கொண்டு சேர்த்துள்ளன. தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன. வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் "ராகி"யும் "சோளமும்" பயிரிடப்படுகின்றன. வட-கிழக்கில் "திருச்சிராப்பள்ளி வகை" என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன. தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன. நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன. நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன. கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச் சட்டம் 1974க்கிணங்க ஏப்ரல் 5, 1974இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. நகரத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது. மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது. ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது. பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும், அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை. தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார் திருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது. உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின. பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று. திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் "மகாத்மா காந்தி சந்தை" எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன. சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட "பொன்னி அரிசி" தயாராகிறது. இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும் நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது. 1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக "நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு" (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் "கோல்டன் ராக்"கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து 58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1961இல் "திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள்" (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது. மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் "திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது" (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது. இங்கு தெளிந்த சாராவி, அசிடால்டெஹைடு, அசிட்டிக் காடி, அசிடிக் அன்ஹைடிரைடு மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் 26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது. திசம்பர் 9, 2010இல் 60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் "எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா" திறக்கப்பட்டது. தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது..திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி. திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தேநெ45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்-திருச்சி மண்டலம் என தமிழ்நாட்டில் திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,திருவாரூர்,நாகப்பட்டினம், அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை,கரூர்,சிவகங்கை, காரைக்குடி,ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,சிதம்பரம் மற்றும் காரைக்கால் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன. இங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது. பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன. திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்புகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன. தினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் . மைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது. திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன. திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. குமுளுர் திருச்சி . ஒராதேயா ஒராதேயா (அங்கேரியம் Nagyvárad, இடாய்ச்சு Großwardein) என்பது உருமேனியா நாட்டில் திரான்சில்வேனியாவிலுள்ள பிஹோர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நகரமாகும். 2002 ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தில் 206,527 பேர் உள்ளனர். இது மாநகரசபைக்கு வெளியேயுள்ள பகுதிகளை உள்ளடக்கவில்லை. இப் பகுதிகளையும் சேர்த்தால் மொத்த நகர் சார்ந்த மக்கள் தொகை அண்ணளவாக 220,000 ஆகும். ஒரேடெயா ருமேனியாவின் மிகவும் வளம் பொருந்திய நகரங்களில் ஒன்றாகும். இந்த் நகரம் ஹங்கேரிய எல்லையை அண்டி கிரிசுல் ரெபேடே(Crişul Repede) நதிக்கரையில் அமைந்துள்ளது. வராடியம் என்னும் லத்தீன் மொழிப் பெயரில், 1113 இல் முதல் முதலாக ஒராடெயா குறிப்பிடப்படுகின்றது. இன்றும் அழிந்த நிலையில் காணப்படும் ஒராடெயா Citadel 1241ல் முதல் தடவையாகக் குறிப்பிடப்படுகின்றது, எனினும் 16 ஆம் நூற்றாண்டின் பின்னரே இப்பகுதி ஒரு நகராக வளரத்தொடங்கியது. 1700 ல் வியன்னாவைச் சேர்ந்த பொறியியலாளரான பிரான்ஸ் அன்டன் ஹில்லெபிராண்ட் (Franz Anton Hillebrandt) பரோக் பாணியில் நகரத்தை வடிவமைத்தார். 1752லிருந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயம், பேராயர் மாளிகை, கிரிஸ்(Criş) மண்ணின் அரும்பொருட் காட்சியகம் (Muzeul Ţării Crişurilor) போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஹங்கேரிய எல்லையில் மேற்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலில் அமைந்திருந்ததால் ஒராடெயா நீண்ட காலமாகவே ருமேனியாவின் வளமிக்க ஒரு நகரமாக விளங்கி வந்தது. 1989 இன் பின்னர் ஒராடெயா, தொழில் வளர்ச்சி அடிப்படையிலன்றிச் சேவைத்துறை வளர்ச்சிமூலம் ஓரளவு பொருளாதாரப் புத்துயிர் பெற்றது. ஒராடெயாவின் வேலையின்மை விகிதமான 6%, ருமேனியாவின் சராசரியைவிடக் குறைவாக இருப்பினும், பிஹோர் கவுண்டியின் 2% வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். பிஹோர் கவுண்டியின் 34.5% குடித்தொகையைக் கொண்ட ஒராடெயா, அக் கவுண்டியின் 63% தொழில்துறை உற்பத்திக்குக் காரணமாக உள்ளது. இதன் முக்கியமான உற்பத்திகள், தளபாடங்கள், புடவை, ஆடை உற்பத்தி, காலணிகள் மற்றும் உணவு வகைகளாகும். 2003 ல் நகரின் முதலாவது பெரிய கொள்வனவு மையமான லோட்டஸ் சந்தை வர்த்தக மையம் ஒராடெயாவில் திறந்து வைக்கப்பட்டது. 2002 ஆன் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட் தொகையின் இனவாரியான விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது: இந்த நகரம் "குவாட்டர்ஸ்" என அழைக்கப்படும் பின்வரும் வட்டாரங்களாகப் (districts) பிரிக்கப்பட்டுள்ளது: தமிழில் இடைக்கால இலக்கியம் தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களும் ஆகும். இக்கால கட்டத்தில் பல மருத்துவ, தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன. எனினும் அவற்றை இலக்கியம் எனக் கொள்தல் தகாது. இடைக்கால இலக்கியங்களுள் சில: பின்னம் பின்னம் ("fraction") என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும். பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் "பகுதி" எனவும், மேலுள்ள எண் "தொகுதி" எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டு: ஒரு முழுப்பொருளானது நான்கு சம பங்குகளாகப் பிரிக்கப்பட்டால், அதிலுள்ள மூன்று சம பங்குகள் 3/4 எனக் குறிக்கப்படும். இப்பின்னத்தின் தொகுதி - 3, பகுதி - 4. பின்னமானது "பிள்வம் அல்லது பிள்ளம்" என்றும் அழைக்கப்படும். தமிழில் இதற்குக் "கீழ்வாய் எண்கள்" என்பது பெயர். பின்ன எண்களைத் தொகுதி-பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவீதங்களாக, எதிர்ம அடுக்கேற்ற எண்களாகவும் எழுதலாம். எடுத்துக்காட்டு, எந்தவொரு முழுஎண்ணையும், பகுதி 1 ஆகக் கொண்ட பின்னமாகக் கொள்ளலாம்: 7 = 7/1. விகிதங்களையும், வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது. 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும். a, b முழு எண்கள் எனில், a/b என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எண்களின் கணம் விகிதமுறு எண்களின் கணம் எனப்படும். விகிதமுறு எண்கள் கணத்தின் குறியீடு Q. ஒரு எண்ணைப் பின்ன வடிவில் எழுத முடியுமா இல்லையா என்பதைக் கொண்டு அவ்வெண் விகிதமுறு எண்ணா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். விகிதமுறு எண்களைத் தவிர வேறுசில கணிதக் கோவைகளுக்கும் பின்னங்கள் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: பின்னங்களைத் தகு பின்னம், தகாபின்னம், கலப்பு பின்னம் என மூன்று வகையாகக் கூறலாம். தகு பின்னம் : தகாபின்னம் : தொகுதி பகுதியை விட பெரியதாக இருந்தால் தகாபின்னம். இது 1 ஐ விட பெரியது. கலப்பு பின்னம் : இயல் எண்ணும் தகு பின்னமும் சேர்ந்து வருவது கலப்பு பின்னம். இதனை தகாபின்னமாக மாற்றி திட்ட வடிவில் எழுதலாம். "a"/"b" அல்லது formula_2, ("a" , "b" இரண்டும் முழு எண்கள்) என்ற வடிவில் எழுதப்படும் விகிதமுறு எண்களெல்லாம் எளிய பின்னங்கள் எனப்படுகின்றன. ஏனைய பின்னங்களைப் போன்றே இவற்றிலும் பகுதியின் ("b") மதிப்பு பூச்சியமாக இருக்க முடியாது எடுத்துக்காட்டுகள்: formula_3, formula_4, formula_5, formula_6, 3/17. எளிய பின்னங்கள் நேர்மமாகவோ, எதிர்மமாகவோ, தகு அல்லது தகா பின்னங்களாகவோ அமையலாம். கூட்டு பின்னங்கள், கலப்பு எண்கள், தசமங்கள் ஆகியவற்றை எளிய பின்னமாக மாற்ற முடியுமென்றாலும் அவை எளிய பின்னங்கள் ஆகா. எளிய பின்னங்களை தகு அல்லது தகா பின்னங்களாக வகைப்படுத்தலாம். பகுதியும் தொகுதியும் நேர்ம எண்களாகக் கொண்ட ஒரு பின்னத்தின் தொகுதியானது, அதன் பகுதியை விடச் சிறியதாயின் அப்பின்னம் "தகு பின்னம்" எனப்படும். மாறாக, அதன் தொகுதியானது, பகுதியை விடப் பெரியதாயின் அப்பின்னம் "தகா பின்னம்" எனப்படும். பொதுவாக, ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 ஐ விடச் சிறியதாக இருந்தால் (-1 ஐ விடப் பெரியது, 1 ஐ விட சிறியது) அது ஒரு தகு பின்னமாகும். ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 க்குச் சமமாகவோ அல்லது பெரியதாக இருந்தால் அது ஒரு தகா பின்னமாகும் எடுத்துக்காட்டுகள்: "கலப்பு பின்னம்" அல்லது "கலப்பு எண்" என்பது, ஒரு பூச்சியமற்ற முழுஎண் மற்றும் தகுபின்னம் இரண்டின் கூடுதலாக அமையும். முழுஎண்ணுக்கும் தகுபின்னத்துக்கும் இடையே "+" குறியீடு எழுதப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: இயற்கணிதத்தில் இரு கோவைகளின் பெருக்கலை எழுதும்போது அவற்றுக்கிடையே பெருக்கல் குறியானது இல்லாமலே எழுதுவது வழக்கில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தில் formula_8 என்பது ஒரு கலப்பு பின்னம் அல்ல, அது a, b/c ஆகிய இரு கோவைகளின் பெருக்கலாகும்: formula_9. இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, பெருக்கல் குறி வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது: கலப்பு பின்னத்தைத் தகா பின்னமாகவும் தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் மாற்றலாம்: இதேபோல ஒரு தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம்: இந்த ஈவு தேவையன கலப்பு பின்னத்தின் முழுஎண் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. மீதியைத் தொகுதியாகவும், எடுத்துக்கொள்ளப்பட்ட தகாபின்னத்தின் பகுதியைப் பகுதியாகவும் கொண்ட தகுபின்னமானது பின்னப்பகுதியாகவும் கொண்டு கலப்பு பின்னம் காணப்படுகிறது. கலப்பு பின்னங்கள் எதிர்ம எண்களாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு: ஒரு விகிதம் என்பது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்களுக்கு இடையேயுள்ள தொடர்பைக் குறிக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையின் வாயிலாக, அவை எண்ணளவில் ஒப்பீடு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 தானுந்துகளில் அவற்றின் நிற வகைப்பாடு பின்வருமாறு உள்ளது: குறிப்பிட்ட பாகத்திற்கும் முழுவதற்குமான விகிதங்களைப் பின்ன வடிவில் எழுதலாம். அதாவது மொத்த தானுந்துகளில் இரண்டில் ஒரு பங்கு சிவப்பு தானுந்துகள் உள்ளன. எனவே அந்தத் தானுந்து நிறுத்தத்திலிருந்து, ஒருவர் சமவாய்ப்பு முறையில் ஒரு தானுந்தைத் தேர்ந்தெடுக்கும்போது அது வெள்ளையாக இருப்பதற்கான வாய்ப்பு (நிகழ்தகவு) 1/6; சிவப்பாக இருப்பதற்கான வாய்ப்பு 1/2; மஞ்சளாக இருப்பதற்கான வாய்ப்பு 1/3. ஒரு பின்னத்தின் தலைகீழி மற்றொரு பின்னமாகும். மூலப் பின்னத்தின் தொகுதி, பகுதிகளைப் பரிமாற்றி அதன் தலைகீழியைப் பெறலாம். ஒரு பின்னத்தையும் அதன் தலைகீழியையும் பெருக்கக் கிடைக்கும் விடை 1 ஆகும். எனவே ஒரு பின்னத்தின் தலைகீழியானது அப்பின்னத்தின் பெருக்கல் நேர்மாறு ஆகும். ஒரு தகு பின்னத்தின் தலைகீழி தகாபின்னமாக இருக்கும்: எண் 1 க்குச் சமமில்லாத தகாபின்னத்தின் (பகுதியும் தொகுதியும் சமமாக இல்லாதவை) தலைகீழி தகுபின்னமாக இருக்கும். எந்தவொரு முழு எண்ணையும் எண் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாக எழுதலாம். எடுத்துக்காட்டாக, 5 ஐ formula_26 என எழுதலாம். இங்கு எண் 1 ஆனது "கண்ணுக்குத்தெரியாத பகுதி" ("invisible denominator") எனப்படும். எனவே பூச்சியம் தவிர்த்த அனைத்து முழுஎண்களுக்கும் தலைகீழி உண்டு. 5 இன் தலைகீழி formula_27. ஒரு சிக்கல் பின்னத்தின் (complex fraction) தொகுதி, பகுதி இரண்டுமே ஒரு பின்னமாக அல்லது கலப்பு பின்னமாக இருக்கும். அதாவது, ஒரு சிக்கல் பின்னமானது, இரு பின்னங்களின் வகுத்தலாக அமையும். எடுத்துக்காட்டுகள்: formula_28, formula_29 இரண்டும் சிக்கல் பின்னங்களாகும். ஒரு சிக்கல் பின்னத்தைச் சுருக்குவதற்கு, அதன் தொகுதிக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட அதிநீள பின்னக் கோட்டை வகுத்தல் குறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிக்கல் பின்னத்தில் எந்த பின்னக்கோடு முதன்மையானது எனத் தெளிவாகத் தரப்பட்டிருக்காவிட்டால், அப்பின்னம் சரியான முறையில் அமைக்கப்படாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 5/10/20/40 என்பது சரியான முறையில் அமைக்கப்படாத கணிதக்கோவையாகும். மேலும் இதன் மதிப்பும் பலவிதங்களில் கணிக்கிடக்கூடியதாக அமையும். ஒரு கூட்டு பின்னம் ("compound fraction") என்பது ஒரு பின்னத்தின் பின்னமாக இருக்கும். பெருக்கலின் மூலம், ஒரு கூட்டு பின்னத்தை எளிய பின்னமாகச் சுருக்கலாம். எடுத்துகாட்டு: formula_34 இன் formula_35 பங்கு என்பது கூட்டு பின்னம் formula_36 ஆகும். இதனைச் சுருக்கி, formula_37 என எழுதலாம். சிக்கல் பின்னமும் கூட்டு பின்னமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. ஒரு தசம பின்னத்தில் ("decimal fraction") அதன் பகுதியானது பத்தின் முழுஎண் அடுக்குகளாக இருக்கும். எனினும் தசம பின்னத்தின் பகுதி வெளிப்படையாக எழுதப்படுவதில்லை. தசம பின்னங்கள் தசமக் குறியீட்டில் எழுதப்படுகின்றன. அக்குறியீட்டில் தசம புள்ளிக்கு வலப்புறமுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையே வெளிப்படையாக அமையாத பகுதியின் பத்தின் முழுஎண் அடுக்கைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, 0.75 இல் தசமப் புள்ளிக்கு வலப்புறம் இரண்டு இலக்கங்கள் உள்ளதால் அதன் பகுதி 10 இன் அடுக்கு இரண்டாக, அதாவது 100 ஆக இருக்கும். 1 விடப் பெரிய தசம பின்னங்களை தகா பின்னங்களாக அல்லது கலப்பு பின்னங்களாக எழுதலாம். அறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி தசமபின்னங்களை எதிர்ம அடுக்குகளைக் கொண்டு எழுதலாம். 0.0000006023 = . ஆனது பகுதி ஐத் தருகிறது. ஆல் வகுக்கும்போது தசமபுள்ளியானது இடப்புறமாக ஏழு இடங்கள் நகர்கிறது. தசமபுள்ளிக்கு வலப்புறம் முடிவிலா எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்ட தசமபின்னமானது ஒரு தொடரைக் குறிக்கும். எடுத்துக்காட்டு: பகுதிகளை வெளிப்படையாகக் கொண்டிராத மற்றொரு வகைப் பின்னங்கள் விழுக்காடுகள் ஆகும். இவற்றின் பகுதிகள் எப்போதும் 100 ஆகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 100 ஐ விட அதிகமான அல்லது பூச்சியத்தை விடக் குறைவான விழுக்காடுகளும் உண்டு. அவையும் பகுதிகளை 100 ஆகவே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக சாதாரண பின்ன அல்லது தசமபின்ன வடிவங்கள் இரண்டில் எதனைப் பயன்படுத்தலாம் என்பது சூழலின் தேவையைப் பொறுத்தும் கணக்கிடும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. பின்னத்தின் பகுதி சிறிய எண்ணாக இருக்கும்போது சாதாரண பின்ன வடிவம் தேர்ந்தெடுக்கப்படலாம். மனதிலேயே கணக்கிட அது உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக: பணமதிப்புகள் பொதுவாக தசமபின்ன வடிவில், இரண்டு தசமத்தானங்கள் கொண்டவையாக எழுதப்படுகின்றன. இந்தியாவில் ரூ 85.50 எனவும் அமெரிக்காவில் $3.75 எனவும் எழுதப்படுகின்றன. தசமபின்னங்கள் பழக்கத்திற்கு வருமுன்னர் பிரித்தானியப் பணம் 3 ஷில்லிங் மற்றும் 6 பென்சு என்பது, 3/6 ("மூன்று மட்டும் ஆறு" என வாசிக்கவும்) என எழுதப்பட்டது. இதற்கும் சாதாரண பின்னம் 3/6 க்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. . முழுஎண்களைப் போல பின்னங்களும் பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புப் பண்பு, பங்கீட்டு விதிகள், பூச்சியத்தால் வகுத்தல் விதி ஆகியவற்றை நிறைவு செய்கின்றன. formula_40 ஒரு பூச்சியமற்ற எண் எனில், formula_41 ஆகும். எனவே formula_42 ஆல் பெருக்குவது என்பது 1 ஆல் பெருக்குவதற்குச் சமம். 1 ஆல் பெருக்கப்படுவதால் எந்தவொரு எண்ணும் அதன் மதிப்பில் மாறுவதில்லை. எனவே formula_42 ஆல் பெருக்குவதாலும் எந்த எண் அல்லது பின்னத்தின் மதிப்பு மாறாது. அதாவது, ஒரு பின்னத்தின் தொகுதியையும் பகுதியையும் ஒரே எண்ணால் பெருக்குவதால் அப்பின்னத்தின் மதிப்பு மாறாது. அவ்வாறு ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை ஒரே எண்ணால் பெருக்கக் கிடைக்கும் பின்னமானது மூல பின்னத்தின் சமான பின்னம் ("equivalent fraction") என அழைக்கப்படும். ஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதிகளை பூச்சியமற்ற ஒரே எண்ணால் பெருக்கி அதன் சமான பின்னத்தைக் காணலாம். எடுத்துக்காட்டு: formula_3 பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 2 ஆல் பெருக்கக் கிடைக்கும் பின்னம் formula_45. ஒரு பொருளை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பங்கு எடுப்பதும், அதே பொருளை நான்காகப் பிரித்து அதில் இரண்டு பங்குகளை எடுப்பதும் ஒரே அளவாக இருக்கும். எனவே இவ்விரு பின்னங்களும் ஒரே மதிப்பைக் குறிக்கும் (முழுப்பொருளில் பாதி). ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை பூச்சியமற்ற ஒரே எண்ணால் வகுத்தும் அப்பின்னத்தின் சமான பின்னத்தைப் பெறலாம். இது பின்னச் சுருக்கம் எனப்படும். தொகுதி, பகுதி இரண்டும் சார்பகா முழுஎண்களாகக் கொண்ட எளிய பின்னமானது, சுருக்கவியலாப் பின்னம் எனப்படும். எடுத்துக்காட்டாக, formula_48 சுருக்கவியலாப் பின்னம் அல்ல. 3, 9 இரண்டின் பொது வகுஎண் 3. மாறாக, formula_49 சுருக்கவியலாப் பின்னம் ஆகும். 3, இரண்டுக்கும் 1 மட்டுமே பொது வகுஎண். இவ்விவரங்களின் மூலம் பின்வரும் சமான பின்னங்களைப் பெறலாம்: ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதிகளின் மீப்பெரு பொது வகுத்தியால் அவற்றை வகுத்து, அப்பின்னத்தைச் சுருக்கவியலாப் பின்னமாக்கலாம். எடுத்துக்காட்டு: formula_54 -இப்பின்னத்தின் தொகுதி 63; பகுதி 462. இவற்றின் மீபொவ 21. 21 ஆல் அவற்றை வகுக்க: இரு பின்னங்களை ஒப்பிடுவதற்கு, அவற்றின் பகுதிகளைச் சமமானவைகளாக மாற்றுவது ஒரு வழிமுறையாகும். இரண்டின் பகுதிகளும் ஒன்றாக உள்ளன. எனவே தொகுதிகளான "ad" , "bc" இரண்டையும் ஒப்பிடுவதன் மூலம் இவ்விரு பின்னங்களில் எது பெரியது, எது சிறியது எனத் தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டு: சம பகுதிகளைக் கொண்டச் சமான பின்னங்களைக் காண: இரண்டு பின்னங்களையும் ஒன்றின் தொகுதி, பகுதிகளை மற்றதன் பகுதியால் பெருக்கி, இரு பின்னங்களின் பகுதிகளை ஒரே எண்ணாகக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றலாம்: எதிர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு எதிர்ம எண்ணும் பூச்சியத்தை விடச் சிறியவை; நேர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு நேர்ம எண்ணும் பூச்சியத்தை விடப் பெரியவை. எனவே ஒவ்வொரு எதிர்ம பின்னமும் ஒரு எந்தவொரு நேர்ம பின்னத்தை விடவும் சிறியதாகும். இரு பின்னங்களைக் கூட்டுவதற்கு முக்கிய தேவையாக அவற்றின் பகுதிகள் சமமானவையாக இருக்க வேண்டும். கூட்ட வேண்டிய பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், முதலில் அவற்றை ஒரே பகுதிகளைக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றிக் கொண்டு, பின் கூட்ட வேண்டும். எடுத்துக்காட்டுகள்: பின்னங்களின் கூட்டலின் இயற்கணித விளக்கம்: மூன்று பின்னங்களின் கூட்டல்: கூட்ட வேண்டிய பின்னங்களை ஒரே பகுதி கொண்டவையாக மாற்றுவதற்கு மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் தரப்பட்டுள்ளது போல ஒன்றின் பகுதியால் மற்றொன்றின் தொகுதி, பகுதிகளைப் பெருக்குவதற்குப் பதிலாக, இரு பின்னங்களின் பகுதிகளை அவற்றின் மீச்சிறு பொது மடங்காக மாற்றுவதற்குத் தேவையான எண்களைக் கொண்டு முறையே அந்த இரு பின்னங்களின் தொகுதி, பகுதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: கூட்டலைப் போன்றதே பின்னங்களின் கழித்தலும். இரு பின்னங்களைக் கழிப்பதற்கு அவற்றின் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கழிக்க வேண்டிய இரு பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், அவற்றை ஒரே பகுதி கொண்ட பின்னங்களாக மாற்றிக் கொண்ட பின் கழிக்கலாம். எடுத்துக்காட்டு: இரு பின்னங்களைப் பெருக்குவதற்கு அவற்றின் தொகுதியைத் தொகுதியாலும், பகுதியைப் பகுதியாலும் பெருக்க வேண்டும்: விளக்கம்: முழுமையான ஒரு பொருளின் காற்பங்கை (நான்கில் ஒரு பங்கு-1/4) எடுத்துக்கொண்டு அதனை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க, அந்த மூன்று சிறு சம பங்குகளில் ஒரு துண்டைப் போன்ற 12 பங்குகள் சேர்ந்து முழுப்பொருளுக்குச் சமமாக அமையும். அதாவது காற்பங்கின் மூன்றில் ஒரு பங்கு என்பது பனிரெண்டில் ஒரு பங்காகும் (1/12) (1/4 இன் 1/3 பங்கு = 1/12). காற்பங்கில் மூன்றிலொரு பங்கு என்பது பனிரெண்டிலொரு பங்கு (1/12) என்பதால், காற்பங்கில் மூன்றிலிரு பங்கு என்பது பனிரெண்டிலிரு பங்கு (2/12). 3/4 என்பது காற்பங்கின் மூன்று மடங்கு என்பதால் 3/4 இன் மூன்றிலிரு பங்கின் மதிப்பு 2/12 இன் மூன்று மடங்காக (6/12) இருக்கும். அதாவது 2/3 x 3/4 = 6/12. எந்தவொரு முழுஎண்ணையும் பகுதி 1 கொண்ட பின்னமாகக் கருதலாம் என்பதால் இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போன்றதே முழுஎண்ணால் பின்னத்தைப் பெருக்குவதும். எடுத்துக்காட்டு: கலப்பு பின்னம் (பின்னங்களை) தகா பின்னங்களாக மாற்றிக்கொண்டு இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போல இவற்றையும் பெருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: ஒரு பின்னத்தை ஒரு முழு எண்ணால் வகுப்பதற்கு, பின்னத்தின் தொகுதியை அந்த முழுஎண்ணால் வகுக்கலாம் அல்லது பகுதியை அந்த முழுஎண்ணால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: formula_90. ஒரு முழுஎண்ணை (அல்லது பின்னம்) ஒரு பின்னத்தால் வகுப்பதற்கு அந்த எண்ணை பின்னத்தின் தலைகீழியால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: ஒரு பின்னத்தை தசமபின்னமாக மாற்றுவதற்கு, அப்பின்னத்தின் தொகுதியை பகுதியால் வகுக்க வேண்டும். சரியாக வகுபடாவிட்டால் தேவையான இலக்கங்களுக்குத் தோராயப்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: 0.25 ஒரு தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்க, தசமபுள்ளிக்கு வலப்புறம் எத்தனை இலக்கங்கள் உள்ளனவோ அத்தனை பத்தின் நேர்ம அடுக்கால் அத்தசமபின்னத்தைப் பெருக்கி வகுக்க வேண்டும். எடுத்துக்காட்டு: கணக்கிடுதலுக்கு சாதாரண பின்னங்களைவிட மீளும் தசமங்கள் எளிதானவை என்றாலும், சில சூழல்களில் சாதாரண பின்னங்கள் போன்று இவை துல்லியமான விடைகளைத் தருவதில்லை. அவ்வாறான நிலைகளில் மீளும் தசமங்களை சாதாரண பின்னங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியதாகிறது. பொதுவாக மீளும் தசமங்கள், அவற்றின் சுழலும் தசமங்களின் மேல் ஒரு கோடிடப்பட்டு குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0. = 0.789789789… தசமபுள்ளிக்கு அடுத்தபடியாகவே மீள்கை தொடங்கும் மீள் தசமங்களில், அவற்றின் சாதாரண பின்னவடிவின் தொகுதி அந்த மீள் இலக்கங்களாகவும், பகுதியானது எத்தனை இலக்கங்கள் மீள்கின்றனவோ அதனை 9 -கள் கொண்ட எண்ணாகவும் அமையும். தசமபுள்ளிக்கும் மீள்தசம இலக்கங்களின் தொடக்கநிலைக்கும் இடையே பூச்சியங்கள் இருக்குமானால் அப்பூச்சியங்களின் எண்ணிக்கைக்குச் சமமான பூச்சியங்கள், மேற்காணும் முறையில் பகுதியில் எழுதப்படும் 9 களுக்கு அடுத்து எழுதப்படும் மீள் தசமபின்னங்களின் தசமப்பகுதியில் மீளாத இலக்கங்களும் இருக்குமானால் பின்வரும் முறையில் அவற்றின் சாதாபின்னவடிவம் அமையும். இயற்கணிதமுறை நடைமுறை வாழ்க்கையில் பின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோடு, கணிதவியலாளர்களாலும் சீர்பார்க்கப்பட்டு மேல்தரப்பட்ட விதிகள் சரியானவையே என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கணிதவியலாளர்கள் பின்னத்தை கீழுள்ளவாறு இரு முழுவெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு இரட்டையாக வரையறுக்கின்றனர். பின்னத்தைன் இவ்வகை வரையறைக்கான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்களின் வரையறைகள்: கணிதச் செயல்களின் இந்த வரையறைகள் கட்டுடையின் மேற்பகுதியில் தரப்பட்ட வரையறைகளோடு எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றன; குறியீட்டளவில் மட்டுமே வேறுபடுகிறது. கழித்தலையும் வகுத்தலையும் செயலிகளாக வரையறுப்பதற்குப் பதிலாக கூட்டல் மற்றும் பெருக்கலின் நேர்மாறு பின்னங்களாக கீழ்வருமாறு வரையறுக்கலாம்: மேலும், இரு இயற்கணிதக் கோவைகளின் வகுத்தலாக அமைவது ஒரு இயற்கணித பின்னமாகும். எடுத்துக்காட்டுகள்: இயற்கணித பின்னங்களும் சாதரண எண்கணித பின்னங்களின் விதிமுறைகளுக்குட்பட்டவையாகும். தொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாகக் கொண்ட இயற்கணிதப் பின்னமானது விகிதமுறு கோவை அல்லது விகிதமுறு பின்னம் எனப்படும். எகா: formula_106 தொகுதி அல்லது பகுதியிலுள்ள இயற்கணிதக் கோவையானது பின்ன அடுக்குகொண்ட மாறியில் அமைந்திருந்தால் அந்த இயற்கணித பின்னமானது விகிதமுறா பின்னம் எனப்படும்.. எகா: formula_105 சாதாரண பின்னங்களைப் போன்றே இயற்கணித பின்னத்தின் தொகுதி, பகுதி கோவைகளுக்கு பொதுக் காரணிகள் இல்லாத இயற்கணிதப் பின்னங்கள் எளிய வடிவில் அமைந்துள்ளதாகக் கருதப்படும். தொகுதி அல்லது பகுதியில் அல்லது இரண்டிலும் பின்னக் கோவைகளைக் கொண்டவை சிக்கல் பின்னம் எனப்படும். எகா: formula_108 ஒரு இயற்கணித பின்னத்தை விகிதமுறு கோவைகளின் கூட்டலாக எழுதும் போது அந்த விகிதமுறு கோவைகள் பகுதி பின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. தரப்பட்டு இயற்கணித பின்னத்தின் பகுதியாகவுள்ள கோவையின் படியை விடக் குறைந்த படியுள்ள கோவையைப் பகுதியாகக் கொண்ட விகிதமுறு கோவைகளின் கூடுதலாக மூல பின்னம் எழுதப்படுகிறது. எடுத்துக்காட்டு: தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் "(Information technology)" என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன." இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும். கி.மு 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே தகவல் தேக்குதலும் மீட்டலும் கையாளலும் பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. என்றாலும், "தகவல் தொழில்நுட்பம்" எனும் சொல் புத்தியல் காலப் பொருளில் 1958 இல் ஆர்வார்டு வணிக மீள்பார்வை எனும் கட்டுரையில் முதலில் தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின் ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல். விசிலர் எனும் இருவரும் "இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஒரே பெயர் இன்னும் உருவாகவில்லை. நாம் இதைத் தகவல் தொழில்நுட்பம் என அழைப்போம். " என்று கருத்துரைத்துள்ளனர். இவர்களின் வரையறையில் மூன்று பகுதிகள் அமைகின்றன. அவை செயலாக்க நுட்பங்கள், முடிவு எடுப்பதில் கணித, புள்ளியியல் முறைகளின் பயன்பாடு, கணினி நிரல் வழியாகௌயர்சிந்தனையை ஒப்புருவாக்கம் செய்தல் என்பனவாகும். நாம் தகவல் தேக்குதல் சார்ந்தும் தகவல் செயலாக்க நுட்பங்கள் சார்ந்தும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றினைப் பின்வருமாறு பிரிக்கலாம்: இக்கட்டுரை 1940 இல் தோன்றிய மின்னணுவியல் கட்டத்தை மட்டுமே கருதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன. கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும். இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை உணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது நாசி செருமானியத் தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட கொலோசசு கணினி () முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் நிரலாக்கம் செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது. முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது. பிந்தைய 1940 களில் பெல் ஆய்வகங்கள் திரிதடையங்களை உருவாக்கியதும் மின்திறன் நுகர்வு குறைந்த புதிய தலைமுறைக் கணினிகள் வடிவமைக்கப்பட்டன. முதல் வணிகவியலான நிரல்தேக்கக் கணினியாகிய பெராண்டி மார்க் 4050 கவாடங்களை 25 கி.வா மின் நுகர்வுடன் பயன்படுத்தியது. தன் இறுதி வடிவமைப்பில் திரிதடையங்களைப் பயன்படுத்தி மான்செசுட்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி 1953 நவம்பரில் இயங்கத் தொடங்கிய கணினியில் 150 வா மின் நுகர்வே தேவைப்பட்டது. கொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது. மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது.முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும். தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது. ஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன: இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையிலும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது. பேரளவு தரவுகளை விரைந்து துல்லியமாகத் தேக்கவும் மீட்கவும் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் 1960 களில் தோன்றின இத்தகைய மிகத் தொடக்க கால அமைப்பு ஐ பி எம் உருவாக்கிய தகவல் மேலாண்மை அமைப்பு ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் இது பரவலாகப் பயனில் இருந்தது. இது தரவுகளைப் படிநிலை அமைப்பில் தேக்குகிறது. ஆனால் 1970 களில் டெடு கோடு என்பார் மாற்று முறையான உறவுசார் தேக்கப் படிமத்தைக் கணக்கோட்பாடு, பயனிலை அளவைமுறை (தருக்க முறை) ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிந்தார். இதில் பழக்கமான அட்டவணைகளும் நிரல்களும் நிரைகளும் பயன்கொள்ளப்பட்டன. ஒராக்கிள் குழுமம் முதல் வணிகவியலான உறவுசார் தரவுத்தள மேலாண்மை அமைப்பை 1980 இல் உருவாக்கியது. அனைத்து தரவுத்தள மேலாண்மை அமைப்புகளிலும் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தேக்கிய தரவுகளைப் பல பயனர்களால் அணுகிப் பெறும்வகையிலும் அதேவேளையில் அதன் ஒருமைக் குலையாதபடியும் தரவுகளைஅனைவருக்கும் தருகின்றன. அனைத்துத் தரவுத்தளங்களின் பான்மை, அவற்றில் உள்ளத் தரவுகளின் கட்டமைப்பைத் தனியாக வரையறுத்து, தரவுகள் தேக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பிரித்து, வேறு பகுதியில் தேக்கி வைத்தலாகும் இவை தரவுத்தள வரிசைகள் எனப்படுகின்றன. உறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது. தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும். உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன. ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.தனித்தனியாக உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க 1980 களில் தகவல் கிடங்குகள் தோன்றின. இவற்றில் பல வாயில்களில் இருந்து திரட்டிய தரவுகள் தேக்கப்பட்டுள்ளன. இவ்வாயிகளில் வெளி வாயில்களும் இணையமும் கூட உள்ளன. இவற்ரில் உள்ள தகவல்கள் முடிவு எடுக்கும் அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளன. தகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும். இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன. பகாய் பிரார்த்தனைகள் சில பஹாய் பிரார்த்தனைகள் உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையைவிட இனிமையான ஒன்று வேறெதுவும் இல்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நிஐலதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்னை என்பது இறைவனுடன் உரையாடல் செய்வதாகும். மிக உயர்ந்த நிஐலயை அடையவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவதுதான். அது ஆன்மீகத்தை தோற்றுவிக்கிறது. தெய்வீக உணர்வுகளையும் விழிப்புணர்ச்சியையும் தோன்றுவிக்கிறது. மேலுலக இராஜ்யத்தின் புதிய கவர்ச்சியை பெற்றுத்தருகிறது. சிறந்த மதிநுட்பத்தை நமக்கு மிகவும் எளிதில் ஏற்படுத்துகிறது. கடவுளின் நாமம் மொழியப்பட்டு அவரது புகழ் பாடப்படும் ஸ்தலமும், இல்லமும் இடமும், நகரமும், நகரமும், இதயமும், மலையும் புகலிடமும், குகையும், பள்ளத்தாக்கும், தேசமும், கடலும், தீவும், புள்வெளியும் ஆசிபெற்றதாகும். என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர். இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்; சொல்: இறைவனே போற்றி, அவரே தெய்வம், யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற்பணிபவர். தேவரே, நாங்கள் இரக்கத்துரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக்கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக; நாங்கள் தாழ்ந்தவர்கள், தங்களின் மேன்மை அளிப்பீராக; வானத்தில் உலவும் பறவைகளும், பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் தங்களிடமிருந்து அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் தங்களின் பாதுகாப்பிலும், அன்புக் கருனையிலும் பங்கு பெறுகின்றன. இந்தப் பலவீனமானவன் தங்களின் திவ்விய அருளைப் பெறாமல் தடுத்துவிடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இந்த ஆத்மாவுக்கு அருள் புரிவீராக. என்றென்றும் எங்களுக்கு உணவளித்து, எங்களின் வாழ்க்கைத் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் தங்களைத் தவிர வேறெவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம்; தங்களிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம்; தங்களின் வழியில் நடந்து தங்களின் மறைபொருளை எடுத்தியம்புவோம். எல்லாம் வல்லவரும், மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே ஆவீர். உந்தம் நாமமே என்னைக் குணப்படுத்தும். உம்மை நினைத்தலே எனக்குச் சிகிச்சை; உமதருகாமையே எனது நம்பிக்கை, நின்றன்பால் அன்பே எனது தோழன். என்மீதுள்ள உமது இரக்கமே இம்மையிலும், மறுமையிலும் எனக்குச் சிகிச்சையும், உதவியுமாகும். மெய்யாகவே எல்லாம் அறிந்தவரும் சர்வஞானியும், கொடைவள்ளலும் நீரே ஆவீர். அன்பான தேவரே! இவ்வழகிய குழந்தைகள் தங்களது வலிமையெனும் விரல்களின் கைவண்ணமும், தங்களது மகத்துவத்தின் அற்புத அடையாளங்களுமாகும். கடவுளே! இக்குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் கல்வியளிக்கப்பட கிருபையுடன் உதவி, மானிட உலகிற்கு அவர்கள் சேவை செய்திட அருள்வீராக! கடவுளே! இக்குழந்தைகள் யாவும் முத்துக்கள். அவர்கள் தங்களது அன்புப் பரிவு எனும் கூட்டினுள் பேணி வளர்க்கப்படச் செய்வீராக. தாங்களே கொடைவள்ளலும், அதிபெரும் அன்பு செலுத்துபவரும் ஆவீர். இறைவா, என் ஆன்மாவைப் புத்துணர்வு பெறச் செய்து எனக்குக் களிப்பூட்டுவீராக. என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவீராக. என் சக்திகளை ஒளிபெறச் செய்வீராக. எல்லாக் காரியங்களையும் அடியேன் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன். நீரே எனது வழிகாட்டியும் அடைக்கலமுமாய் இருக்ககன்றீர். இனிமேலும் நான் துக்கமும் துயரமும் கொண்டிடேன். நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் கொண்ட பிறவியாக இருப்பேன். இறைவா, இனிமேல் ஒருபோதும் நான் கலக்கம் மிகுந்த பிறவியாக இருந்திடேன். துன்பங்கள் என்னை கவலைக்குள்ளாக்கவும் அனுமதித்திடேன். வாழ்க்கையின் வெறுக்கத் தக்க காரியங்களில் எண்ணத்தை இலயிக்க விடேன். இறைவா, நான் என்னிடம் காட்டிடும் நட்பைவிட, நீர் என்னிடம் காட்டிடும் நட்பே அதிகம். என் பிரபுவே, உமக்கு என்னையே அர்ப்பணிக்கின்றேன். தஞ்சாவூர் தஞ்சாவூர் (Thanjavur) மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இதை "தஞ்சை" என்றும் அழைக்கப்படுகிறது. பிற்கால சோழர்களின் தலைநகரான விளங்கியது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் "நெற்களஞ்சியமாக" தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் "தஞ்சை பெரிய கோவில்" விளங்குகிறது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,22,619 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,09,291 ஆண்கள், 1,13,328 பெண்கள் ஆவார்கள்.தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.48% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.97%, பெண்களின் கல்வியறிவு 88.14% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள் . தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும். மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும். கி.பி. 655-ஆம் ஆண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798–1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, 362+18 பக்கங்கள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது ("UNESCO"), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் "அடிப்படை சுதந்திரம்" ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும். கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது. எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும். சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல். ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் – ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும். உலக நாடுகளின் சங்கம் 21.9 1921 அன்று அனைத்துலக அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது. அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4.1.1922 அன்றுஅறிவுசார் ஒத்துழைப்புக்காக அனைத்துலக குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானஅனைத்துலக நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 அனைத்துலக கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, அனைத்துலக முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது. இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது. அட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லன்டனில் ஆரம்பித்தது அது 5.12.1945வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் அனைத்துலக அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சைன,ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய அரசாங்கம், ஸோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும், அனைத்துலக அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் – ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி, ப்ண்பாட்டு அமைப்பு (இசிஓ) அமைக்க 1-16 நவம்பர்1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன. இசிஓ மாநாட்டில்,37 நாடுகள் கையெழுத்திட்டு,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான ஆயத்த ஆணைக் குழுவும் நிறுவப்பட்டது. 16-11-1945 முதல் 04-11-1946 வரை ஆயத்த ஆணைக்குழு பணியாற்றியது.04-11-1946 அன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்பு,உறுப்பு நாட்டின் இருபதாவது ஓப்புதலோடும் நிதியோடும் நடமுறைக்கு வந்தது. 19 நவம்பர் – 10 டிசம்பர் 1946 வரை நடந்த முதல் பொது மாநாட்டில் டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி ("Dr. Julian Huxley") பொது இயக்குனராகத் தேர்ந்து எடுக்கப்பட்டர்நிர்வாகக் குழுவில் தனி நபர் தகுதியில் எவரும் உறுப்பினராக முடியாது என்றும்,உறுப்பு நாடுகளின் அரசியல் பிரநிதிகள் தாம் கலந்து கொள்ள முடியுமென,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. பனிப் போர்,குடியேற்ற நாடுகளின் விடுதலை,மற்றும் சோவியத் ஒன்றியம் கலக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து ,யுனெஸ்கோவின் ஆணை அறிக்கையை நிறைவேற்றப் பாடுபட்டனர்1950 முதல் 19788 வரை இன வெறிக்கு எதிராக யுனெஸ்கோ பாடுபட்டது.1956ல்தென் ஆப்ரிக்க குடியரசு,தங்களது நாட்டின் இனப் பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுகிறது என்று கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது. 1994ல். நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்ரிக்கா மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது.2015க்குள் அனைத்து உறுப்பு நாடுகளும் அடிப்படைக் கல்வியை தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும் என்று டகார் (செனகல்) ல் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாமன்றம் கேட்டுக் கொண்டது. 1968ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால்"மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் உருவானது. 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செய்தி மற்றும் தகவல் திட்டத் தேவை உணரப்பட்டு அதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் ஐந்து திட்டப் பரப்பாகிய கல்வி,இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் மூலம் நடைமுறைப்படுத்துகிறது. கல்வி: யுனெஸ்கோ அனைத்து கல்வி வாய்ப்புகளை கற்றல் சங்கங்கள் உருவாக்குவதில் அனைத்துலக தலைமை வழங்குகிறது; இந்த அமைப்பு தேசிய கல்வி தலைமை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க நாடுகளின் திறனை வலுப்படுத்த ஒப்பீட்டு கல்வியில் ஆராய்ச்சியை ஆதரித்தல், நிபுணத்துவம் வழங்குதல் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துதல்ஆகியவற்றை செய்கிறது. இது கீழ்கண்டவற்றை உள்ளடக்குகிறது. யுனெஸ்கோ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது இல்லை. யுனெஸ்கோ 322 அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களுடன் உத்தியோகபூர்வ உறவுகளை அனுபவிக்கிறது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி, செய்தித் தொடர்பு மூலமாக அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை யுனெஸ்கோவின் ஏனைய முன்னுரிமைகளாகும் அனைத்துலக சங்கம் (UIA) கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு முக்கியமான ஆதரவளித்து, யுனெஸ்கோவின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக இயங்கும் துறைகளே, யுனெஸ்கோ அமைப்பின் நிறுவனங்கள் ஆகும். யுனெஸ்கோ தற்போது கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் அமைதிக்காக 22 பரிசுகள் வழங்குகிறது 193 உறுப்பு நாடுகளையும் 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வாகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்த பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது ஏழு இணை உறுப்பினர்களையும், இரண்டு பார்வையாளர்களையும் கொண்டது. சில உறுப்பு நாடுகள் சுவாதீனமற்றவை. தங்களைச் சார்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் தேசிய அமைப்பு குழுக்களைக் கொண்ட உறுப்பினர்களும் உள்ளனர். யுனெஸ்கோ அஞ்சல் தலைகளைப் பல நாடுகள் வெளியிட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பின் முத்திரையும், இதன் தலைமை அலுவல அமைப்பும் ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது யுனெஸ்கோ தனியாக அஞ்சல் தலைகள் எதுவும் அஞ்சலக பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை. தனது செயல்பாட்டிற்காக 1955–1966 வரை தொடர்ச்சியான 41 பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பணம் திரட்டியது. இவை பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள யுஎன்பிஎ முகப்பு மேஜையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் வசம் இவை இருப்பு இல்லை எனினும், சிறப்பு அஞ்சல் தலை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. யுனெஸ்கோ உலகின் பல பகுதிகளிலும் தன் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.இதன் தலைமையகம் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸில் உள்ளது. தேசிய அதிகாரிகள், மற்றும் பிற கூட்டாளிகள் ஆலோசனையுடன் யுனெஸ்கோ தன் களப்பணி அலுவலகங்கள் மூலமாக பல உத்திகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள், செயல்பாடு, மற்றும் புவியியல் பரப்பு, அடிப்படையில் நான்கு முதன்மை அலுவலக பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளன. அவை கூட்டு அலுவலகங்கள், தேசிய அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் ஆகும். யுனெஸ்கோவின் களப்பணியில் மைய அங்கமாக, பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டு அலுவலகங்கள் திகழ்கின்றன. இதை சுற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அலுவலகங்களும், பிராந்திய அலுவலகங்களும் இயங்குகின்றன. யுனெஸ்கோ செயலகத்தை வழி நடத்தும் முக்கிய பிரதிநிதியாக 148 நாடுகளை உள்ளடக்கிய, 27 கூட்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. இவை தவிர, ஒரு உறுப்பு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு தேசிய அலுவலகம் என்ற ரீதியில் 21 தேசிய அலுவலகங்கள் உள்ளன. 9 அதிக மக்கள் தொகை நாடுகளில் சச்சரவுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் அல்லது மாறுதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு கூட்டு அலுவலகத்திலிருந்து விதிவிலக்கு உண்டு கீழ்க்கண்ட புவியமைப்பு அடிப்படையில் உறுப்பு நாடுகள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்காக இயங்கும் யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்களின் பட்டியல்- 7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குனர் பதவியைப் புதுப்பிக்க பாரிசில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது. 1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை சனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன கடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைப்பாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது. உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர். இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர். யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன. 1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன. இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன. இணை மேலாண்மை அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன. 1998–2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது. உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன. பல பதவிகளை அதற்குக் கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது. பயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு, மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது. வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை (ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை (ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் மூன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது. 1949ல் யுனெஸ்கோவில் இசுரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை, யுனெஸ்கோ விலக்கியது. யுனெஸ்கொ தனது 1974 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம், தான் இசுரேலை விலக்கியது சரியே என்றது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால், 1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுப்பிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர் 2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இசுரேல் முடிவெடுத்தது. இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது. "பண்பாட்டுப் பன்முகத்தன்மை" என்ற கருத்தை பல நடுநிலை அமைப்புகளாலும், யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும், ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை. = அடிக்குறிப்புகள் = பல்லவர் பல்லவர் ("Pallavas") என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர். போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர். தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இந்திய வரலாறு நூலாசிரியரான 'வின்ஸென்ட் ஸ்மித்' என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார். ஆயினும் , ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஹலவர் மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார். இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப்படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார். யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கிள்ளி வளவன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். வின்செண்ட் ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். பஹலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டை மண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர். பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடென இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது. வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது. பல்லவர்களில் என்ற மூன்று பிரிவினர் உண்டு. முற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன. இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின. இடைக்காலப் பல்லவர்களின் காலம் கி.பி. 340 முதல் கி.பி. 615 வரை நீண்டது. எனப் பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன. பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் இடைவிடாத தாக்குதல்களை பல்லவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது. பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாணமை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண, பௌத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது. பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இர்ண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர். பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர். பல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர். காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர். பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், நரசிம்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி(சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே. ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர். சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும். தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன. மருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். ஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் "மன்றுபாடு" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர். பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன. கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள் பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன. காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர். இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும். பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில. பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன் காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது. பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும். பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது. மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது. காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமய உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர்.இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன. பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன. கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும். பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே. பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர். சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான். இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான். மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது. மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும். இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது. ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்னக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சேர்ந்தன. ஈழம் தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின. ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம் இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம். கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். தமிழ்நாடு பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் இலங்கை தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. நீரிழிவு என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது தமிழர் வழங்கிய தமிழ்சொல். ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை. ஈழம் என்ற சொல்லுக்குப் பாலி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர். இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில், " ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி". என்ற பாடலில் ஈழத்து உணவு என்ற சொல்லாடல் மூலம் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழநாடு (பத்திரிகை) ஈழநாடு இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு செய்தி நாளிதழ் ஆகும். 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை பல இடையீடுகளுக்கும், பாதிப்புகளுக்கும் நடுவே தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்து 1990களின் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டது. அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான கொழும்பிலிருந்தே வெளியிடப்பட்டன. இலங்கைத் தமிழரின் பண்பாட்டு மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1958 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் "கலாநிலையம்" என்ற பதிப்பகத்தை கே. சி. தங்கராஜா (20.6.1907- 20.7.1987), கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்கள் ஆரம்பித்தனர். 1959 பெப்ரவரியில் “ஈழநாடு” என்ற பெயரில் செய்திப் பத்திரிகையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் வாரம் இரு முறையாக வெளிவந்தது. 1961 முதல் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் நாளிதழ் இதுவே. ஈழநாட்டின் பிரதம ஆசிரியர்களாக எஸ். எம். கோபாலரத்தினம், கே. பி. ஹரன் ஆகியோர் பணியாற்றினார்கள். ஈழநாடு ஞாயிறு வாரமலர் பதிப்பிற்கு ஆசிரியர்களாக சு. சபாரத்தினம், ம. பார்வதிநாதசிவம் ஆகியோர் இருந்தனர். 1981 சூன் மாதத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது ஈழநாடு அலுவலகமும் அதே கும்பலால் எரிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினரால் தாக்கப்பட்டு பயன்படுத்த முடியாத அளவு சேமடைந்தது. 1988 பெப்ரவரியில் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. ஒவ்வொரு தடவையும் சிறு இடைவெளியின் பின் மீண்டும் வெளிவந்தது. தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் 90களின் ஆரம்பத்தில் பத்திரிகை வெளிவருவது நிறுத்தப்பட்டது. ஈழநாட்டின் 25வது ஆண்டு நிறைவுமலர் 1984 பெப்ரவரி 11 இல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. குறுந்தொகை குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என் றித்திறத்த எட்டுத் தொகை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத் தொடும் பத்து இத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும். இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை. குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும். என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது."வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்." குறுந்தொகை பாடிய புலவர் வரிசை இன்னும் உண்டு கலை வரலாறு கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் "தாராண்மக் கலை" (liberal arts), "இயந்திரம்சார் கலை" (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் "நுண் கலைகள்", "பயன்படு கலைகள்" என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது. கற்காலத்தில் ( 15,000-8000 கி.மு. ± ) கலை தொடங்கப்பட்டதாற்கான ஆதாரங்கள் கிடைததால் அதுவே கலையின் தொடக்ககாலமாக விளங்குகிறது. 25,000 கி.மு.வே கலையின் முதல் வெளிப்பாடாக இருந்தது . மனிதனால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான முதல் தடயங்கள் தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கு மத்திய தரைக்கடல் , மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ( அட்ரியாடி கடல் ) , சைபீரியா ( பைக்கால் ஏரி ) , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் தடயங்கள் பொதுவாக கல் (பிளின்ட், obsidian ) , மரம் அல்லது எலும்பு கருவிகளில் செய்யப்பட்ட வேலைகளாகும்.ஓவியங்களில் சிவப்பு வண்ணம் பெற இரும்பு ஆக்சைடும், கருப்பு நிறங்களைப் பெற மாங்கனீசு ஆக்சைடும் களிமண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் இருந்து கலை வாழ்ந்துகொண்டிருக்கிறது.மனிதர்கள் தனிமையான இடங்களில் உயிர்வாழ கல் அல்லது எலும்பு மற்றும் குகை ஆகியவற்றில் ஓவியம் மற்றும் சிற்பங்கள் செய்துவந்துள்ளனர். பிரான்ஸ் பகுதியில் இருந்து சிறிய சிற்பங்கள் கண்டுபிடித்துள்ளனர் . பழையகற்காலத்தில் வறையப்பட்ட லாஸ்காக்ஸ் குகைகள் படங்கள் தமது இயற்கை உணர்வுகளை வெளிப்படும்படியாக வரைந்ந்துள்ளனர். குறிப்பாக அங்கு மந்திர மத தன்மை கொண்ட படங்கள் மற்றும் விலங்குகள் சித்தரிக்கபட்டுள்ளன. வீனஸ் கடவுளின் சிலகளும் , பெண்களின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.வீனஸ் கடவுளின் சிலை வளத்தைக்குறிப்பதற்காக வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . கி.மு 8000 வாக்கில் மனிதர்கள் ஆடுமாடுகள் பழக்கப்படுத்துதலிலும், விவசாயம் மேற்கொள்வதிலும்,மதங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் சிறு சிறு மனித உருவங்கள் வறையப்பட்டுள்ளன.இவ்வோவியம் ஜிம்பாவே, ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களுடன் ஒத்ததாக உள்ளதாக அறிஞர்கள் கண்டுபிடித்தனர். பின்டுராஸ் நதி படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களும் இதுபோல் வரலாற்று சிறப்புகளைக் கூறுவதேயாகும். கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம். கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது. மறுமலர்ச்சி (ஐரோப்பா) நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி ("Renaissance") என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலக்கட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது பண்டைய இலக்கியங்களும் கலைகளும் அங்கு புறக்கணிக்கப்பட்ட அதே நேரத்தில் கான்ஸ்டாண்டினொபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசில் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. 1453 ம் ஆண்டு ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டினொபிளைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த பைசாண்டிய கிரேக்க அறிஞர்கள் ரோமாபுரிக்குத் தப்பியோடினர். அவர்கள் தங்களுடன் கிரேக்க-ரோமானியப் பாரம்பரியச் சிறப்புகளையும் கொண்டு சென்றனர். மீண்டும் பண்டைய இலக்கியங்கள் இத்தாலியில் புத்துயிர் பெற்றமையால் கேள்வி கேட்டு விடை பெறும் மனப்பாங்கு மக்களிடம் பெருகியது. இவ்வுணர்வின் விளைவால் அறிவியல் , புவியியல், சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் ஒரு எழுச்சி உண்டானது. "ரெனைசான்ஸ்" (Renaissance) என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதனை பிரெஞ்சு வரலாற்றாளரான ஜூல்ஸ் மிச்செலெட் (Jules Michelet) என்பவர் முதலின் பயன்படுத்தினார். இது 19 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் வரலாற்றாளரான ஜக்கோப் புர்க்கார்ட் (Jacob Burckhardt) என்பவரால் விரிவாக்கம் பெற்றது. இதன் நேரடிப் பொருள் "மறுபிறப்பு" என்பதாகும். "மறுபிறப்பு" என்பது இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று பழைய classical நூல்களினதும், படிப்பினைகளினதும், மீள் கண்டுபிடிப்பும், கலை அறிவியல் முதலிய துறைகளில் அவற்றின் பயன்பாடும் என்ற பொருளைத் தருகிறது. மற்றது இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகளின் விளைவுகள், ஐரோப்பியப் பண்பாடு தொடர்பில் ஒரு பொதுவான புத்தூக்கத்தை ஏற்படுத்தியது எனப் பொருள் படுகின்றது. எனவே மறுமலர்ச்சி என்பதை இரண்டு வித்தியாசமான ஆனால் பொருள் பொதிந்த வழிகளில் பேசமுடியும்: பண்டைய நூல்களின் மீள் கண்டுபிடிப்பினூடாக செந்நெறிக்காலப் (classic) படிப்பினைகளினதும், அறிவினதும் மறுபிறவி என்பதும், ஐரோப்பியப் பண்பாட்டின் பொதுவான மறுபிறவி என்பதுமாகும். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பல அறிஞர்கள், மறுமலர்ச்சி என்பது, பல அவ்வகையான இயக்கங்களில் ஒரு வகை மட்டுமே என்ற நோக்கைக் கொண்டிருந்தனர். இது பெருமளவுக்கு, "12 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைத்த சார்ள்ஸ் ஹெச் ஹஸ்கின்ஸ் (Charles H. Haskins) என்பவரின் ஆய்வுகளாலும், "கரோலிங்கியன் மறுமலர்ச்சி" (Carolingian renaissance) தொடர்பான வாதங்களை முன்வைத்த வரலாற்றாளர்களினாலும் ஏற்பட்டது. இவ்விரு கருத்துக்களுமே தற்போதைய அறிஞர் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக, மறுமலர்ச்சி எனப்படுவதை குறிப்பான சொற்களின் மூலம், உதாரணமாக இத்தாலிய மறுமலர்ச்சி, ஆங்கில மறுமலர்ச்சி முதலியன மூலம், குறிப்பிடுவது தற்கால வரலாற்றாளரிடையே ஒரு போக்காக இருந்து வருகிறது. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால் இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான். அறிவியல் வளர வளர மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம், அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே ஆகும். மருத்துவம் (ணிலீனீiணீinலீ) என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (திrs ணிலீனீiணீina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ‘குணப்படுத்தும் கலை’ என்பதாகும். கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போ கிரடீஸ் என்பவரின் மருத்துவக் குறிப்புகளே சிறந்ததாகவும் ஓரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக் கிடைக்கின்றன. எனவே இவரே ‘மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். ‘அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே. நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர் இவர். நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுபடுத்தியவரும் இவரேயாவார். மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே. இவருடைய புகழ்வாய்ந்த ‘ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி’ மருத்துவ உலகின் தொன்மையான செம்மையான ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவப் படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக்கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் ஆவார். ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர். மருத்துவத்தைப் பற்றிய கருத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப் படைத்தன. கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டன. இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தது. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது. கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்த மருத்துவக் கருத்துகள் புறந் தள்ளப்பட்டன. இபேன் அல் நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழைமை வாதத்தில் இருந்த மருத்துவவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ‘திரவக் கோட்பாடு’ மறுக்கப்பட்டது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார். முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் செய்தார். விலங்குகளின் மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலில் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிரூபித்தார். 1880 இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிரூபித்தார். அவை ‘காக்ஸ் கோட்பாடுகள்’ என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது. ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம். 15ஆம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி இத்தாலியின் பிளோரசன்சில் இருந்து ஐரோப்பாவின் மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. அச்சடிக்கும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புதிய புதிய யோசனைகள் வேகமாக பரவ வழிவகுத்தது. 20 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் மறுமலர்ச்சியை தேசிய மற்றும் மத இயக்கங்களாக பிரித்தனர்.  வடக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி வடக்கு மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி யோசனைகள் வடக்கு நோக்கி நகர்ந்த பொழுது இசையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஓவியங்களை பொறுத்தவரை இத்தாலிய ஓவியங்கள் மதச்சார்பற்று உருவாக்கப்பட்டன ஆனால் வடக்கு ஐரோப்பாவில் முதலில் மதம் சார்ந்த ஓவியங்களே வரையப்பட்டன. பின்னாட்களில் பீட்டர் பிருகள் போன்றவர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாக தீட்டினர். வடக்கு மறுமலர்ச்சியின் பொழுதே பல ஆண்டுகள் நீடித்திருக்கும் எண்ணை ஓவியங்கள் முழுமைபெற்றன.  16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மறுமலர்ச்சி தொடங்கிற்று. ஷேக்ஸ்பியர், சர் தாமஸ் மோர், பிரான்சிஸ் பேகன் போன்ற எழுத்தாளர்கள், இண்டிகோ ஜோன்ஸ் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் தாமஸ் டாலிஸ் போன்ற இசை மேதைகள் ஆங்கில மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். மறுமலர்ச்சியை குறிப்பிடும் வார்த்தையான "Renaissance" ஒரு பிரெஞ்சு சொல்லாகும். இதன் பொருள் மறுபிறப்பு என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட இந்த சொல் பின்னாளில் பிரான்ஸின் வரலாறு என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தது.  15ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மறுமலர்ச்சி ஜெர்மனிக்கு பரவத்துடங்கியது. இவற்றில் அச்சகங்களின் பங்கு அலாதியானது.  15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியின் மறுமலர்ச்சி நெதர்லாந்தையும் சென்றடைந்தது. இதற்கு பெல்ஜியதில் இருந்த டச்சு மொழி பேசும் பிளாண்டர்கள் ப்ருகஸ் நகர் வழியாக மேற்கொண்ட வணிகம் பெரிய அளவில் உதவியது. பிளாண்டர்கள் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட பெரிய கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்துவந்தனர். அறிவியலில் உடற்கூற்றியல் துறை நிபுணர் ஆண்ட்ரீயஸ் போன்றவர்கள் மறுமலர்ச்சியை முன்னெடுத்து சென்றனர்.  இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் போர்ச்சுகளை குறைவாக தாக்கியதாகவே கருதப்படுகிறது. போர்ச்சுக்கல் மறுமலர்ச்சி செல்வந்த இத்தாலி மற்றும் பிளண்டர்களின் முதலீடுகளால் சாத்தியப்பட்டது. போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பன் 15 ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கியது. காரணம் கண்டுபிடிப்புக்காலம் என்று போற்றப்படும்  பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய பல கடல் பயணங்கள் போர்ச்சுக்கல் மூலமே செயல்படுத்தப்பட்டது.  இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அடுத்து பரவிய இரண்டாம் நாடு ஹங்கேரி எனலாம். இதற்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி இடையே ஏற்கனவே நிலவிய பல கட்டங்களிலான ஒத்துழைப்பும் ஒரு காரணம்.  இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் ரஸ்சியாவிலும் எதிரொலித்தது ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய அதே வேகத்தில் அல்ல. காரணம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான தூரம் அதிகம். ஈவான் III என்ற இளவரசர் இத்தாலியின் இராசேந்திர சோழன் இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான். இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன், இராஜராஜ சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான். இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர். தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான். இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி தான் ஆட்சி செய்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் கி.பி. 1012 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது. ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம். இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்தச் சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட இல்லை. இராஜேந்திரன் கி.பி. 1021 இல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்குக் கி.பி. 1015இல் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான். இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை (VII) ஆதரித்துக் குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதிச் சண்டையில் இராஜேந்திரன், இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான். இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022இல் மணம்முடித்துச் சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி. 1031இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் கி.பி.1035இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான். மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019இல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்துப் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளைச் சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம். இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது. "அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன், பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்தது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடையோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும், அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்" கி.பி. 1025இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும், இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன்தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும், சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தைச் சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாகச் சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் நியமிக்கப்பட்டான் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இலாமுரி தேசம் என்பது, சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல், தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான். எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிக் காலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன. பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இக்காலத்திய பாண்டியர் கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும். 'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று பாண்டியர்களுடன் இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த('தாதை முன்வந்த')விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும். பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள், விஜயாலய சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழநாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர். சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளைக் கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜாதிராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்கக் குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர். ராஜேந்திர சோழனின் சமாதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தெலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பழங்கால கோவிலில் அமைந்துள்ளது. இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பிச் சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது. திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான்,வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளிப்பாக அளித்தாள். இம்மன்னனின் மற்றொரு மகள், புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ஆம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044இல் காலமாயிருக்க வேண்டும். இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். முழு மெய்க்கீர்த்தி மாமன்னன் இராஜராஜசோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவவம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. சிங்கைநகர் சிங்கைநகர் என்பது ஒருகாலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்தது எனக் கருதப்படும் ஒரு நகரைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் அரசனின் பெயர் "சிங்கையாரியன்" எனவும் அவனைத் தொடர்ந்து கிபி 1478 வரை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியன் ஈறாக எல்லா அரசர்களும் சிங்கையாரியன் என்னும் பட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த இரண்டு அரசர்கள் இப்பட்டத்தைச் சுருக்கிச் சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேகரன் என்னும் பெயர்களுடன் ஆட்சி புரிந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இப்பட்டப் பெயரே சிங்கைநகர் என்னும் ஒரு நகர் இருந்தது என்ற கருத்து உருவானதற்கான அடிப்படை ஆகும். மேலும் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்ஒபகுதியை ஒட்டி அமைந்துள்ள கொங்கு நாட்டின் இருபத்தி நான்கு நாடுகளில் ஒன்று காங்கேயம். இதன் பழைய பெயரும் "சிங்கைநகர்" என்பதே. இந்நாட்டின் முதன்மை ஆட்சியாளர்களாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்து "பெருங்குடி குலத்தார்" இருந்தனர். பிற்காலத்தில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் சோழ தேசத்து வளநாடுகளில் ஒன்றான இராஜகம்பீரவளநாட்டை ஆண்ட அரசகுடியினரான செங்கண்ணக் குலத்தார் இவ்வூரில் மணவினைப்பூண்டு சிங்கையை சீதனமாக கொண்டு இப்பகுதியிலேயே குடியேறி காங்கேய நாட்டு சபையில் முன்னுரிமையும் பெற்ற இவர்கள் "பல்லவராயன்" பட்டம் தாங்கியவர்கள். பின்னர் இப்பகுதியில் பதினெண் வேளிரில் இருவரான தூரம்பாடி தூரன் மற்றும் திருஆவிநன்குடி பதுமன் குலத்தாரும், வணிகர் பெருந்தகையோரும் வெள்ளோடு காணியாளருமான உலகுடைய சாத்தந்தை குலத்தாரும், பதரி, வேந்தன், வாணி ஆகிய குலத்தாரும் இவ்வூரில் குடியமர்த்தப்பெற்றனர். சிங்கைநகர் என்னும் நகரம் எது என்பது குறித்து யாழ்ப்பாண வரலாறு தொடர்பாக ஆராய்ந்த அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை. இருக்கக்கூடிய மிகக் குறைவான வரலாற்று மூலங்களைச் சான்றாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு. சிங்கைநகர் என்பது நல்லூரே என்பது இன்னொரு சாரார் கருத்து. கலாநிதி கா. இந்திரபாலா போன்றோர் இக்கருத்தை வலியுறுத்தி வந்தனர். யாழ்ப்பாண வைபவமாலை போன்ற யாழ்ப்பாண வரலாற்று நூல்களும் நல்லூர் தவிர்ந்த இன்னொரு நகரம் தலைநகரமாயிருந்தது பற்றிப் பேசவில்லை. சிங்கைநகர் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள இடமான வல்லிபுரம் என்ற இடமே என்பது சில வரலாற்றாளர்களின் கருத்து. செ. இராசநாயகம் போன்றோர் இக்கருத்துடையவர்கள். இவ்விடத்தில் பழங்காலத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளை வைத்தும், தென்னிலங்கையிலுள்ள கோட்டகம என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில், "... பொங்கொலி நீர்ச் சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்...", என்று வரும் தொடரில் "பொங்கொலி நீர்ச் சிங்கைநகர்" எனச் சிங்கைநகருக்கு அடைமொழி தரப்பட்டிருப்பதால், இந்நகரம், பொங்கி ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய கடற்கரையில் அமைந்திருந்திருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இக் கருத்து முன்வைக்கப் படுகின்றது. மிக அண்மைக்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் சிங்கை நகரத்தைக் குடாநாட்டுக்கு வெளியே அடையாளம் காணவும் முயன்றுவருகின்றனர். சிங்கைநகரானது கொங்கு நாட்டு காங்கேயம் என "கொங்கு நாட்டு காணி பாடல்கள்" மூலம் அறியலாம். மேலும் பெருங்குடி போன்ற குலத்தார்களின் காணி பாடல்கள் யாவும் காங்கேயத்தை சிங்கைநகர் என்றே குறிக்கின்றன. அல்வார் ஆல்ட்டோ அல்வார் ஆல்ட்டோ, எனப் பரவலாக அறியப்பட்ட, "ஹியூகோ அல்வார் ஹென்றிக் ஆல்ட்டோ" (பெப்ரவரி 3, 1898 - மே 11, 1976) இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். இவர்பின்லாந்து நாட்டிலுள்ள குவொர்தானே (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு நில அளவையாளர். இவர் 1921 ல், ஹெல்சிங்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் இவர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். 1924 ஆம் ஆண்டு, தன்னிலும் நான்கு வயது மூத்த கட்டிடக்கலைஞரான ஐனோ மார்சியோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1949ல் ஐனோ இறந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு தன்னிலும் 25 வயது இளையவரான இன்னொரு கட்டிடக்கலைஞர் எல்சா கைசா மக்கினியேமி என்பவரை மணந்தார். 1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் ஹெல்சிங்கி நகரில் தனது 78 ஆவது வயதில் காலமானார். அல்வார் ஆல்ட்டோவின் கட்டிடங்களின் வடிவமைப்பு, ஒரு பொருளின் வடிவம் (form) அப் பொருளின் செயற்பாட்டின் (Function) அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றது என்ற கொள்கையை அடியொற்றி அமைந்தது. மனிதன், இயற்கை, கட்டிடம் ஆகிய மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு அவற்றுக்கிடையிலான தொடர்புகளை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கட்டிடங்கள் அமைந்திருந்தன. நவரத்தினங்கள் நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. விருதுநகர் விருதுநகர் ("Virudhunagar"), தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.76%, பெண்களின் கல்வியறிவு 89.38% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. விருதுநகர் மக்கள் தொகையில் 6,454 (8.93%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். விருதுநகரில் 19,841 வீடுகள் உள்ளன. மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர்.இந்த விழாவானது 21 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதத் தொடக்கத்தில் பொங்கல் சாட்டப் படும் பிறகு ஊரில் உள்ள அனைவரும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் அதிகாலை பெண்கள் கோவில் கொடி மரத்திற்குக் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவர். பாரதிராஜா பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். பாலு மகேந்திரா பாலு மகேந்திரா ("Balu Mahendra", 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். 1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார். தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது. அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார்.இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும். பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது.". சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார். பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது. சந்தோஷ் சிவன், ரவி கே.சந்திரன் ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்களாகும். பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். மணிரத்னம் மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய "மௌன ராகம்" (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான "ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே" (1998) பெரிதும் பேசப்பட்டன. ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மணிரத்னம் 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம் வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன் இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன் என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் வளர்ந்த  சிறுவனாக திரைப்படம் பார்க்க துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும் நாகேஷும் இவருக்கு பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் பார்த்து அவர் ரசிகரானார். பள்ளிப் படிப்பு முடிந்து ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். திரைப்பட நடிகை சுஹாசினியை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார். இவரது வெற்றித் திரைப்படங்களில் சில: ஆதவன் (எழுத்தாளர்) கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (1942 - சூலை 19, 1987) தமிழக எழுத்தாளர். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது. தி. ஜானகிராமன் தி. ஜானகிராமன் ("T.Janakiraman", பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 . திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். "சக்தி வைத்தியம்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான "மோகமுள்", "மரப்பசு", "அம்மா வந்தாள்" போன்றவற்றை எழுதியவர். தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றவர். இவர்1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றயவர். இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார். பொருளியல் பொருளியல் ("economics") என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் "வெல்த் ஆஃப் நேஷன்ஸ்" ("The Wealth of Nations", நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் "அரசியல் பொருளியலின் தந்தை" என அறியப்படுகிறார். பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன என்பனவாகும். இவைதவிர எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை. துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. "செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல்" என்று வரையறுக்கப்பட்டது. 1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் "நலப் பொருளாதாரம்" எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது. பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் "பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்" (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்".
இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் "கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம்" எனப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது. சில பொதுவான எடுகோள்கள்: மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும். மதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது. சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது. ஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் "தேவை" விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது. தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது "சமநிலை விலை" எனப்படுகிறது. எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை ("Scarcity") எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. "அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார்.