ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ("Albert Einstein", மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் (electrochemical) சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம். இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். 1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாமூலம், ஒரு மகள் 1902ல் பிறந்தார். படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை. 1905 இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விவரித்தது. அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இந்த பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிவர எந்திரவியலையும் (statistical mechanics) இது தெளிவுபடுத்தியது. இக்கட்டுரை வெளிவரும் முன் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டு கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக இயற்பியலாளர்களுக்கும் வேதியியலாளர்களுக்கும் இடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபரம் ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குக்காட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்கு வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையை வில்கெல்ம் ஒஸ்ட்வால்ட் என்பவர் கொண்டிருந்தார், இவர் ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாகத்தான், தான் அணு தொடர்பாக நம்புதலைப் பெற்றிருந்தார் எனப் பின்னாளில் அர்னால்ட் சொமர்பெல்ட் என்பவரிடம் கூறியிருந்தார். ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம்" ("On a Heuristic Viewpoint Concerning the Production and Transformation of Light") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் (Photon) என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விவரித்தது. இச்சக்தி சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மாக்ஸ் பிளாங்க்கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்வீச்சு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் ஏற்றுக்கொண்டனர் (எண்ணத்தலைப்பட்டனர்). சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத் தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துகள் இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துகள் தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது. ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்" ("On the Electrodynamics of Moving Bodies") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்கு பெற்றிருந்தாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மேக்ஸ்வெலின்மின்காந்தவியலுடன் பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது. ஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது, ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், காற்று போன்ற ஓர் ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கல்சன்-மோர்லி பரிசோதனையினால் (Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை சிறப்பு சார்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின் (Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது. இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோர்லி முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட் (George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கீசிய இயற்பியலாளரான ஹென்ட்றிக் லோரன்ட்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. ஆனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார். ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான E=mc சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் கால-வெளி வரைபடத்தை வரைய ஏதுவாகிறது. இது காலப் பயணம் போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது. புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் ஐசாக் நியூட்டன் ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727), ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார். 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, "Philosophiae Naturalis Principia Mathematica" என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் ("classical mechanics") என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் "பிரின்சிப்பியா"விலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது. நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார். 1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார். பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து. 1667 ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த "முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி" ("De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas") என்ற நூலினையும் பின்னர் "தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி" ("De methodis serierum et fluxionum" ) என்ற நூலினையும் வெளியிட்டார். நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். நியூட்டனுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். 1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார். நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். 1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார்.ஐசாக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். "மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம்" (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! கலீலியோ கலிலி கலீலியோ கலிலி ("Galileo Galilei"; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", "நவீன இயற்பியலின் தந்தை", "நவீன அறிவியலின் தந்தை" என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். கலீலியோவின் சூரியமையக் கொள்கை அவரது வாழ்நாளில் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். அக்காலத்தில், பெரும்பாலான வானியலாளர்கள் புவிமையக் கொள்கையையோ, தைக்கோனிக் அமைப்பையோ ஏற்றுக் கொண்டிருந்தனர். கலீலியோ பின்னர் தனது ""இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள்" " என்ற புத்தகத்தில் அவருடைய சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். ஆனால் அது திருத்தந்தை எட்டாம் அர்பனைத் தாக்குவது போல் தோன்றியதால், புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார். கலீலியோ இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான "இரண்டு புதிய அறிவியல்கள்" என்ற நூலை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய, தற்போது இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்தார். கலிலீ, இத்தாலியில் (அப்போது பிளொரன்சு குறுமன்னராட்சியில் இருந்த) பிசா நகரில் 1564இல் பிறந்தார்; புகழ்பெற்றிருந்த "குழல்" இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். "குழல்" இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள், நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். கலிலீயுடன் பிறந்த ஐவரில் மூவரே இளவயதைத் தாண்டினர். மிகவும் இளையவரான மைக்கேலேஞ்சலோ குழல் வாசிப்பதில் திறமை பெற்றிருந்தார்; இவரே கலிலியின் இளமைக்காலத்து நிதிச் சுமைப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருந்தார். தனது தந்தை உறுதியளித்திருந்த வரதட்சணையை மைக்கேலேஞ்சலோ தனது மனைவி குடும்பத்தாருக்குக் கொடுக்க இயலாது சட்ட வழக்குகளைச் சந்தித்தார். தவிரவும் தனது இசை முயற்சிகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் கலிலீயிடம் கடன் கேட்டவண்ணம் இருந்தார். இந்த நிதித் தேவையே கலிலீயை புத்தாக்கங்களை உருவாக்கி கூடுதல் வருவாய் ஈட்ட உந்துதலாக இருந்திருக்க வேண்டும். கலீலியோ கலிலீ எட்டாண்டுகள் இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்குக் குடிபெயர்ந்த போது, யகோபோ போர்கினியிடம் இரண்டாண்டுகள் விட்டுச் செல்லப்பட்டார். பின்னர் புளோரன்சிலிருந்து தென்கிழக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசாவில் கமல்டோலெசு துறவியர்மடத்தில் கல்வி கற்றார். கலிலீ என்ற குடும்பப் பெயர் கி.பி 1370 முதல் 1450 வரை பிளாரன்சில் மருத்துவராக வாழ்ந்த கலீலியோ போனலுத்தி என்ற முன்னோரின் பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். போனலுத்தி பல்கலைக்கழக ஆசிரியராகவும், அரசியலாளராகவும் திகழ்ந்தவர்; இவரின் வழிதோன்றிகள் குடும்பப் பெயரைப் போனலுத்தி என்பதிலிருந்து கலிலீ என 14 ஆம் நூற்றாண்டில் இருந்து அவருக்கு மதிப்புத் தர மாற்றிக்கொண்டனர். கலீலியோ போனலுத்தி, 200 ஆண்டுகட்குப் பின்னர் அவரது பெயர்பெற்ற பிறங்கடையான (வாரிசான) கலீலியோ கலீலி புதைக்கப்பட்ட அதே தேவாலயக் கல்லறையான பிளாரன்சு நகரத்தின் சாந்தா குரோசு பாசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளார். பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தசுக்கான் குடும்பங்களில் மூத்தமகனுக்குத் தந்தையாரின் பெயரைக் குடும்பப் பெயராக வைத்தல் பொதுவான வழக்கில் இருந்தது - எனவே இவரது பெயர் கட்டாயமாக கலீலியோ போனலுத்தி என்ற முன்னோர் பெயரில் இருந்துதான் பெறப்பட்டிருக்கவேண்டும் என்பதில்லை. இத்தாலிய ஆண்பெயராக கலீலியோ வைக்கப்பட்டிருக்கலாம். (மேலும் குடும்பப் பெயராக அன்று விவிலியம் வழி பெயர்பெற்றிருந்த வடக்கு இசுரவேலின் நகரான கலிலீ, இலத்தீனில் கலீலியசு என்றால் கலிலீ சார்ந்த என்று பொருள், என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்).. இவரது பெயர், குடும்பப் பெயர் ஆகியவற்றின் விவிலிய வேர்கள் 1614 இல் பின்வரும் கலீலியோ சார்ந்த நிகழ்வில் இரட்டுற மொழிதலுக்கு வழிவகுத்தன. கலீலியோவின் எதிர்ப்பாளர்களில் ஒருவரான டொமினிக்கான் பாதிரியாரான தொம்மாசோ காச்சினி, கலீலியோவுக்கு எதிராக மிகவும் தாக்கம் விளைவித்த ஓர் உரையை ஆற்றினார் sermon. இதில் விவிலியத்தில் இருந்து , "கலீலி நகரத்தவர்களே, ஏன் வானகத்தில் வந்து மலங்க மலங்க விழிக்கின்றீர்கள்?" எனும் மேற்கோளை எடுத்துரைத்தார். உண்மையிலேயே உரோமனியக் கத்தோலிக்க இறையன்பு சான்றவராக இருந்தபோதிலும், கலீலியோ, மரீனா காம்பா என்பவரோடு மணம்புரியாமல் வாழ்ந்து மூன்று குழந்தைகட்குத் தந்தையானார். இவர்கட்கு வர்ஜீனியா (பிறப்பு 1600), இலிவியா (பிறப்பு 1601) என இருமகள்களும் வின்செஞ்சோ காம்பா (பிறப்பு 1606) என்று ஒரு மகனும் பிறந்தனர் . சட்ட நடைமுறைக்கு மாறாக பிறந்ததால் இவர் தன் பெண்மக்கள் இருவரும் திருமணம் புரியத் தகுதியற்றவராகக் கருதினார். இல்லாவிட்டாலும் தன் உடன்பிறந்தவர்கட்கு நடந்ததைப் போலவே பேரளவு சீர்தரவேண்டிய நிதிநிலைச் சுமையை ஏற்கவேண்டும் . இதற்கு மாற்றான பெண்மக்களின் வாழ்க்கை சமய வாழ்க்கையாகவே இருந்தது. இருபெண்களுமே ஆர்செட்ரியில் இருந்த சான் மாத்தியோ துறவுமடத்தால் கன்னித் துறுவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அங்கேயே தம் முழுவாழ்நாளையும் கழித்தனர். மடத்துள் வர்ஜீனியா மரியா செலெசுட்டே எனும் பெயரை ஏற்றார். இலிவியா அர்சஞ்சேலா எனும் பெயரை ஏற்றார்.. மரிய்ய 2 ஏப்பிரல் 1634 இல் இறந்தார். பிளாரன்சில் சாந்தா குரோசில் இருந்த பாசிலிக்கா எனும் கலீலியோவின் கல்லறையிலேயே அவருடன் புதைக்கப்பட்டார். இலிவியாவோ தன் வாழ்நாள் முழுவதும் உடல்நலமின்றியே வாழ்ந்துள்ளார். வின்செஞ்சோ பின்னர் கலீலியோவின் சட்டப்படியான மகனாக ஏற்பு பெற்று சேசுடில்லா போச்சினேரியை திருமணம் செய்துக் கொண்டார். கலிலியோ முதலில் பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்ந்தார். 1581 இல், அவர் மருத்துவம் படிக்கும்போது, ஒரு நாள், வளியோட்டங்கள் பெரிய, சிறிய அலைவுகளில் சரவிளக்கை தனி ஊசல் போல ஆடவைப்பதை கவனித்தார். தன்னுடைய இதயத்துடிப்பை வைத்துப்பார்க்கும்போது அந்த சரவிளக்கு பெரிய அலைவிலும் சிறிய அலைவிலும் ஓரலைவை ஒரே நேரம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தார். தனது வீட்டிற்கு திரும்பியதும் இரண்டு ஒரே நீளம் கொண்ட தனி ஊசல்களை வெவ்வேறு அளவில் அலையவிட்டுப் பார்க்கும்போது அவை இரண்டும் ஒரே நேர அளவில் அலைவதைக் கவனித்தார். இதன் பிறகுதான் கிறித்தியன் ஐகன்சு இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். இதுவரைக்கும் தன் வாழ்வில் தான் கணித படிப்பிலிருந்து தள்ளி இருந்துள்ளார். ஏனெனில் அக்காலத்தில் ஓர் இயற்பியலாளரை விட ஒரு கணிதவியலாளர் குறைந்த பணத்தையே ஈட்ட முடிந்துள்ளது. ஆனால் வடிவவியல் பற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டபிறகு தன் தந்தையைத் தன்னைக் கணிதம் படிக்க இசையவைத்தார். பிறகு அவர் வெப்பநிலைமானியின் முன்வடிவமைப்பை) உருவாக்கினார். 1586 இல் தான் கண்டுபிடித்த நீரியல் துலாவைப் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதுதான் அவரை முதன்முதலாக அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 1589 இல், இவர் பைசா நகரப் பல்கலைக்கழகத்தின் "கணிதக் கட்டிலுக்குப்" பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1591 இல் கலிலியோவின் தந்தை இறந்தார். எனவே தம்பி மைக்கேலேஞ்சலோவைப் பார்த்துகொள்ளும் பொறுப்பையும் ஏற்றார். 1592 இல், கலிலியோ படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1610 வரை அங்கு வடிவியல், இயக்கவியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பயிற்றுவித்தார். இந்த காலங்களில் கலிலியோ தூய அடிப்படை அறிவியல் (எடுத்துக்காட்டாக, இயக்கவியல், வானியல்) செயல்முறை அறிவியலில் (எடுத்துகாட்டாக, பொருட்களின் வலிமை, தொலைநோக்கியின் முன்னேற்றம் ஆகியவை இரண்டிலும்) நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். பேராயர் பெல்லார்மைன் கோப்பர்நிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டமைப்பு எற்கப்பட வேண்டுமென்றால், முதலில் புறநிலையாக சூரியன் புவியைச் சுற்றவில்லை எனவும் புவிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும் நிறுவிடவேண்டும் என்று 1615 இல் கூறினார்". கலீலியோ புவி இயங்குவதை நிறுவிடும் புறநிலையான சான்றாகத் தன் ஓதக் கோட்பாட்டைக் கருதினார். இந்தக் கோட்பாட்டின் அருமையைக் கருதியே "இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய உரையாடல்" என்ற தன் நூலின் பெயரையே "கடலோத உயரோதமும் பாய்வும் பற்றிய உரையாடல்" என மாற்றினார். கலீலியோவின் வீட்டுச்சிறையாணைக்குப் பிறகு நூலின் தலைப்பில் இருந்து கடலோத மேற்கோள் நீக்கப்பட்டுவிட்டது. புவி தன் சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றிவரும்போது அதன் சுழற்சியில் அமையும் வேக ஏற்றமும் குறைவும் தான், கலீலியோவின் கருத்துப்படி, கடல்நீரில் ஏற்ற வற்றத்தை உருவாக்கி கடலோதங்களை உருவாக்குகின்றன.இவர் முதன்முதலில் தன் ஓதக் கோட்பாட்டை 1616 இல் பேராயர் ஆர்சினிக்கு அனுப்பிவைத்தார்.இவர் கோட்பாடு தான் முதலில் ஓதங்களின் உருவளவின் மீதும் தோன்றும் நேரத்தின் மீதும் கடல்வடிவம் தரும் விளைவை நன்கு விளக்கியது; இவர் அட்ரியாட்டிக் கடல் நடுவில் ஓதமின்மையையும் முனைகளில் ஓதம் உருவாதலையும் சரியாகக் கூறினார். என்றாலும் ஓதங்களுக்கான பொதுக்கோட்பாடாகத் தோல்வியே கண்டது. இந்தக் கோட்பாடு சரியென்றால் ஒருநாளில் ஓர் உயரோதம் தன் ஏற்படவேண்டும். கலீலியோவும் மற்றவரும் இப்போதாமையை அறிந்தே இருந்தனர். வெனிசில் ஒருநாளில் இரு ஓதங்கள் 12 மணி நேர இடைவெளியில் ஏற்படுவதை அறிந்திருந்தனர். கலீலியோ இந்தப் பிறழ்வைப் புறக்கணித்ததோடு இந்நிலை கடல்வடிவம், கடலாழம் போன்ற பிற காரணிகளால் ஏற்படுவதாக்க் கூறினார்.கலீலியோவின் இந்த வாதங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்திய அய்ன்சுட்டீன், கலீலியோ இந்த நயப்பான வாதங்களை உருவாக்கி சான்றின்றி ஏற்றது புவியின் சுழற்சியைப் புறநிலையாக நிறுவிடவே எனும் கருத்தையும் வெளியிட்டார். நிலா ஈர்ப்பு விசை தான் கடலோதங்களை ஏற்படுத்துகிறது என்ற அவரது சமகாலத்தவரான யோகான்னசு கெப்ளரின் கருத்தைக் கலீலியோ புறக்கணித்தார். (மேலும் கெப்ளரின் கோள்களின் நீள்வட்ட வட்டணைகளில் கலீலியோ ஆர்வம் காட்டவில்லை.) கலீலியோ 1619 இல் இயேசுசார் உரோமனோ கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகவிருந்த ஒராசியோ கிராசியுடன் முரண்பட நேர்ந்துள்ளது.முதலில் இது வால்வெள்ளிகளின் தன்மை குறித்த விவாதமாகத் தொடங்கி, கலீலியோ தன் மதிப்பீடு நூலை 1623 இல் வெளியிட்டதும், கடைசியில் இவ்விவாதம் விரிவடைந்து, அறிவியலின் தன்மை குறித்த முரண்பாடாக முற்றியுள்ளது. நூலின் முதல் பக்கம் இவரை தசுக்கனி பேரரசின் முதன்மைக் கணிதவியலாளராகவும் மெய்யியலாளராகவும் குறிப்பிடுகிறது. "மதிப்பிடு" நூலின் அறிவியல் நடைமுறை பற்றிய கலீலியோவின் வளமான எண்ணக் கருக்கள் செறிந்திருந்ததால், இது அவரது அறிவியல் கொள்கை அறிக்கையாகவே கருதப்படுகிறது. பாதிரி கிராசி 1619 இன் தொடக்கத்தில், "1618 ஆம் ஆண்டின் மூன்று வால்வெள்ளிகள் குறித்த வானியல் விவாதம்" எனும் சிறுநூலைப் பெயரின்றி வெளியிட்டார். இது முந்தைய ஆண்டு நவம்பரில் தோன்றிய வால்வெள்ளியின் தன்மையைக் குறித்து அலசியது. அதில் கிராசி வால்வெள்ளி புவியில் இருந்து நிலையான தொலைவுள்ள பெருவட்டத்தில் இயங்கும் நெருப்பு வான்பொருளாகும் எனும் முடிவை வெளியிட்டிருந்தார். மேலும் இது நிலாவை விட மெதுவாக இயங்குவதால் இது நிலாவை விட நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும் எனவும் அறிவித்திருந்தார். சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு 1642 ஜனவரி 8 இல் தன் 77 ஆம் அகவையில் இறந்தார். தசுக்கனியி பேரரசரான இரண்டாம் பெர்டினாண்டோ, இவரது தந்தையும் முன்னோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் முதன்மைப் பகுதியில் அடக்கம் செய்து ஒரு சலவைக்கல் நினைவுச் சின்னமும் எழுப்பிட விரும்பினார். கத்தோலிக்கத் தேவாலயத்தால் இவரது கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கலீலியோ கண்டிக்கப்பட்டவர் என்பதால், எட்டாம் உர்பன் போப்பும் பேராயர் பிரான்செசுகோ பார்பெரினியும் எதிர்க்கவே இத்திட்டம் கைவிடப்பட்டது. மாற்றாக இவர் பாசிலிக்காவின் தென்வளாகத்துக்கு அருகில் அமைந்த நோவிசெசு கல்லறைத் தோட்டத்திற்கு அண்மையில் ஒரு சிறிய அறையில் புதைக்கப்பட்டார் from the southern transept of the basilica to the sacristy. இவருக்கு மதிப்பு தர பாசிலிக்கா கல்லறையில் நினைவுச் சின்னம் எழுபப்பட்டதும் இவரின் முழு உடலும் அங்கே 1737 இல் மீள அடக்கம் செய்யப்பட்டது; இந்நிலையில் இவர் உடலில் இருந்து மூன்று விரல்களும் ஒரு பல்லும் நீக்கப்பட்டன. இம்மூன்றில் ஒன்றான வலது கை நடுவிரல் பிளாரன்சில் உள்ள கலீலியொ அருங்காட்சியகத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. கலீலியோ செய்முறைகளாலும் கணிதவியலின் துனைகொண்டும் இப்புதுமை வாய்ந்த சேர்க்கை வாயிலாக இயக்கம் பற்றிய அறிவியலுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அக்கால அறிவியலின் வகைமை, காந்தமும் மின்சாரமும் குறித்த வில்லியம் கில்பர்ட்டின் பண்பியலான ஆய்வுகளாலேயே வறையறுக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞரும் இசைக்கோட்பாட்டாளருமான கலீலியோவின் தந்தையார் வின்செஞ்சோ கலிலீ செய்முறைகள் வாயிலாக முதன்முதலில் இயற்பியலின் நேரியல்பற்ற உறவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்: ஒருநீட்டிய சரத்தின் (கம்பியின்) உரப்பு இழுப்பின் சதுர (குழிப்பு அல்லது இருபடி) வேராக அமைதலைச் செய்முறையால் அவர் நிறுவினார். கலீலியோ தான் இயற்பியல் விதிகளை மிகத் தெளிவாக கணிதவியலாக விளக்கிய முதல் அறிவியலாளர் ஆவார். கலிலியோ 1609 இல் 3x உருப்பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் 30x உருபெருக்கல் வரை கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கினர். ஒரு கலிலியன் தொலைநோக்கி மூலம் பார்வையாளர் பெரிதான நிமிர்ந்த படங்களை பார்க்க முடியும். கலிலியோ இதை வானத்தை ஆராய பயன்படுத்தினார். அந்த காலத்தில் இந்த தேவைக்கான நல்ல தொலைநோக்கிகளை உருவாக்கக்கூடிய வெகு சிலரில் அவர் ஒருவர். 25 ஆகஸ்ட் 1609 இல், அவர் வெனிஸ் நகர சட்டமியற்றுபவர்களிடம் சுமார் 8 அல்லது 9 உருப்பெருக்கல் கொண்ட தன் தொலைநோக்கியை விவரித்தார். அவரது தொலைநோக்கிகளை கலிலியோ கடல்வணிகர்களுக்கு அளித்து பணம் ஈட்டினார். அவ்வணிகர்கள் அத்தொலைநோக்கிகளை கடலில் நன்கு பயன்படுவதாக பார்த்தனர். அவர் சைட்ரஸ் நுன்சியஸ் (விண்மீன்கள் தூதன்) என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆய்வு கட்டுரையில் மார்ச் 1610 இல் தனது ஆரம்ப தொலைநோக்கி வானியல் ஆய்வுகளை வெளியிட்டார். 7 ஜனவரி 1610 இல் கலிலியோ வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த "நட்சத்திரங்கள்" வியாழனுக்கு ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார்.ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார். 10 ஜனவரியில் அவற்றில் ஒன்று மறைந்துவிட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் கண்டார். அவர் ஜனவரி 13 ஆம் தேதி நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார். பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமெட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன. வியாழன் கோளைப் பற்றிய தனது இந்த கவனிப்புகள் வானவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அதுவரை அனைத்து வானியல் பொருட்களும் பூமியையே சுற்றுகின்றன என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தே உலகில் மேலோங்கியிருந்தது. மேலும் முதலில் நிறைய வானவியலாளர்கள் இதை நம்ப மறுத்தனர். தனது ஆய்வுகள் கிறிஸ்டோபர் க்ளவியசின் ஆய்வுமையத்தால் சரி என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 1611 இல் ரோமுக்கு சென்ற போது அவர் ஒரு நாயகனின் வரவேற்பு பெற்றார். கலிலியோ அடுத்த பதினெட்டு மாதங்களில் செயற்கைக்கோள்களை கண்காணித்து தொடர்ந்து, 1611 இன் மத்தியில் அவர் அவை குறித்த குறிப்பிடத்தக்க துல்லியமான மதிப்பீடுகளை பெற்றார். கெப்லெர் இத்தகைய காரியம் சாத்தியமே இல்லை என்று எண்ணினார். கலிலியோ சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர்களில் ஒருவர் ஆவார். கெப்லர் அறியாமல் 1607 இல் இதை கண்டார். ஆனால் அப்போது அவர் அதை மெர்குரி என எண்ணினார். அவர் முன்னர் மெர்குரி என்று சார்லிமேக்னி காலத்தில் தவறாக கருதப்பட்ட ஒரு அவதானிப்பை அது உண்மையில் சூரியனின் கரும்புள்ளி என கூறினார். சூரியனின் கரும்புள்ளிகளின் இடமாற்றம் சூரியன் சுழல்கிறது என்ற கெப்லரின் கூற்றை ஆதரித்தது. மேலும் பிரான்செஸ்கோ சிச்சியின் கரும்புள்ளி மீதான கவனிப்புகள் ப்டோலேமியின் வானியல் கூற்றுகளை தகர்த்தது. தனது தொலைநோக்கி மூலம் தாமஸ் ஹாரியட் (ஒரு ஆங்கிலேய கணிதவியலாளர் மற்றும் ஆய்வாளர்) ஏற்கனவே நிலாவில் வெளிச்சம், அது ஒரு கச்சிதமான உருண்டையாக இருந்திருந்தால் எப்படி பரவ வேண்டுமோ அப்படி பரவவில்லை என்பதை கண்டார். ஆனால் தனது அறியாமையால் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டார். கலிலியோவோ அவ்வெளிச்சத்தின் பரவலில் இருக்கும் மாறுதல்களை சரியாக நிலாவில் மலைகளும் குழிகளும் உள்ளன என்று புரிந்துகொண்டார். தனது ஆய்வில் அவர் நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை வரைந்தார். மேலும் நிலாவின் மலைகளின் உயரத்தை கணிக்கவும் செய்தார். நிலவு நீண்ட காலமாக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருமையான உருண்டை அல்ல என்பது அப்போது தெரியவந்தது. செப்டம்பர் 1610 முதல், கலிலியோ வெள்ளி நிலவை ஒத்த பரிமாணங்களை காட்டின என்பதை கவனித்தார். நிக்கோலஸ் கோப்பர்நிக்கசால் உருவாக்கப்பட்ட சூரியமைய மாதிரி சூரியனை சுற்றி வீனஸ் சுற்றுவதனால் அதன் அனைத்து நிலா போன்ற பரிமாணங்களையும் பார்க்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் ப்டாலமியின் பூமிமைய மாதிரி மூலம் இதை விவரிக்க முடியாது. ஆதலால் இதன் மூலம் பூமிமைய கொள்கை தகர்க்கப்பட்டது. ஆனாலும் முழு சூரியமைய கொள்கை தேவையில்லாமல் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கை கொண்டும் இதை விளக்கமுடியும். ஆதலால் நிறைய வானவியலாளர்கள் முதலில் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கைக்கு மாறி பின்னர் வேறு பிற வாதங்களின் விளைவாக முழு சூரியமைய கொள்கைக்கு மாறினார். கலிலியோ சனி கிரகத்தை கவனித்தார், மேலும் முதலில், அதன் வளையங்களை தவறாக கிரகங்கள் என எண்ணினார். கலிலியோ 1612 இல் நெப்டியூன் கிரகத்தை பார்த்தார். அது மங்கலான நட்சத்திரங்களில் ஒன்றாக அவரது கையேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அது ஒரு கிரகம் என்று தெரியவில்லை, ஆனால் அவர் அதை கண்காணிப்பதை இழப்பதற்கு முன் நட்சத்திரங்களுக்கு ஒப்பிடும் போது அது நகர்கிறது என்ற கவனிப்பை ஏற்படுத்தியிருந்தார். 1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். இராணுவ வீரர்களுக்கு இது பீரங்கிகளை சரியாக உயர்த்துவது மட்டுமல்லாமல் எவ்வளவு வெடி மருந்து தேவை என்பதை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. 1593இல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். ஒரு விளக்கில் உள்ள காற்றின் விரிவடைதல் மற்றும் சுருங்குதலை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்ட குழாயில் நீரில் இயக்கத்தை உருவாக்கி இச்செயலை அவர் சாத்தியமாக்கினார். கலிலியோவின் மாணவர் வின்சென்சோ விவியாணி கலிலியோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை அவர் பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து விழச்செய்து அவை இரண்டும் கீழே வர ஒரே நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதை காட்டினார். இது அரிஸ்டாட்டிலின் பொருட்கள் விழ எடுத்துக்கொள்ளும் நேரம் அவைகளின் எடையை பொருத்து அமையும் என்ற கூற்றை பொய்ப்பித்தது. கலிலியோ ஒரு பொருள் விழும் போது அது வெற்றிடத்தில் விழுந்தால் அது சீரான வேகமாற்றத்துடன் விழும் என்று அனுமானித்திருந்தார். மேலும் ஓய்வில் இருந்து ஆரம்பித்து சீரான வேகவளர்ச்சியில் செல்லும் ஒரு பொருளுக்கான இயக்கவியல் விதியை (d ∝ t 2) கலிலியோ சரியாக கணித்திருந்தார். மேலும் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய தூய துறைகளில் நிறைய பங்களிப்புகள் வழங்கியிருக்கிறார். துணிக்கை ஆரம்பநிலைத் துணிக்கைகள் அவற்றின் சுழற்சியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன. தனிம அட்டவணை தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன. வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு காட்டுகின்றது. திமீத்ரி மென்டெலெயேவ் என்பவர் 1869 ல் தனிம அட்டவணை ஒன்றை வெளியிட்டது இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே, ஜான் நியூலாண்ட் போன்ற சில வேதியியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. == தனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் "கூட்டங்கள்" எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி இலத்திரன் (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை. அதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதி ஓட்டிலுள்ள இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதி ஓட்டில் 4 இலத்திரன்களைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது. ஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும். அணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும். நியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கிய பொழுது, ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணர்ந்தார். இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை. வூல்ஸ்தோர்ப் மனோர் இங்கிலாந்து, லிங்கன்ஷயர் என்னுமிடத்திலுள்ள வூல்ஸ்தோர்ப் மனோர் (Woolsthorpe Manor), சர். ஐசாக் நியூட்டன் பிறந்தவீடாகும். இவர் 1642, டிசம்பர் 25ல் (பழைய காலக்கணிப்பு) இங்கே பிறந்தார். அக்காலத்தில் இது செம்மறி ஆடுகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக இருந்தது. இதன் காரணமாகவே "வூல்" (கம்பளி) என்ற சொல் இப் பெயரில் உள்ளது. "தோர்ப்" என்பது டேனிஷ் மொழியில் பண்ணையைக் குறிக்கும். கொள்ளை நோய் (plague) காரணமாக கேம்பிரிச் பல்கலைக்கழகம் மூடப்பட்டபோது, நியூட்டன் இங்கே வந்தார். ஒளி மற்றும் ஒளியியல் சம்பந்தமான சோதனைகள் உட்படப் பல புகழ் பெற்ற இவரது சோதனைகளுக்குக் களமாக அமைந்தது இவ்விடமே. 17 ஆம் நூற்றாண்டில் சில வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பாக (hamlet) இருந்த வூல்ஸ்தோர்ப், இன்று பல நூறு வீடுகளைக் கொண்ட ஒரு சிறு ஊராக வளர்ந்துள்ளது. வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்திருந்த நிலத்தின் பெரும்பகுதி, அண்மையிலிருந்த ஒரு குடும்பத்தினருக்கு விற்கப்பட்டது. இதற்கு அருகிலிருந்த வெற்று நிலங்கள் பலவற்றிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. ஆயினும், வூல்ஸ்தோர்ப் மனோர் இன்றும் ஊரின் எல்லையை அண்டி, வயல்கள் சூழ அமைந்துள்ளதைக் காணலாம். தேசிய நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பிலுள்ள இக் கட்டிடம், வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்படுகின்றது. வூல்ஸ்தோர்ப் மனோர், இலண்டனிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் தொலைவிலுள்ளது. இங்கிருந்து வடக்காகப் பத்து மைல் தொலைவிலுள்ள, கிரந்தாம் (Grantham) புகைவண்டி நிலையத்திலிருந்து, மோட்டார் வண்டியில் இவ்விடத்திற்குச் செல்லமுடியும். வூல்ஸ்தோர்ப் என்னும் பெயரில் லிங்கன்ஷயரில் இன்னொரு ஊரும் உள்ளது. இது "பீவர் அருகிலுள்ள வூல்ஸ்தோப்" எனவும், வூல்ஸ்தோர்ப் மனோர் அமைந்துள்ள இடம், "கோல்ஸ்வர்த் அருகிலான வூல்ஸ்தோர்ப்" எனவும் குறிப்பிடப் படுகின்றன. கோட்பிரீட் லைப்னிட்ஸ் கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார். சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன. திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் இங்கிலாந்தின், கேம்பிரிட்ஜிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியே திரித்துவக் கல்லூரி ஆகும். கேம்பிரிட்ஜிலுள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது இதுவே. அத்துடன் ஒக்ஸ்பிரிட்ஜ் கல்லூரிகளில் அதிக நிதி வளம் கொண்டதும் இதுவேயாகும். £700 மில்லியன்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இதன் கட்டிடங்களுக்குப் புறம்பாக, இதற்குரிய அறக்கொடைகளும் £700 மில்லியன்கள் வரை உள்ளதாகக் கூறப்படுகின்றது. கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்துள்ள இக் கல்லூரி, மாணவர்வீத அடிப்படையில், உலகிலேயே மிக அதிக அளவில் அறக்கொடை பெறும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. திரித்துவக் கல்லூரி, மிகச் சிறப்பான கல்விமரபைக் கொண்டது. இக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் முப்பத்தொரு நோபல் பரிசுகளை வென்றுள்ளார்கள். இது பெரும்பாலான நாடுகள் பெற்ற நோபல் பரிசுகளின் எண்ணிக்கையிலும் அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இதைவிடக் கூடிய எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்டுள்ளன. இக் கல்லூரியைச் சார்ந்தவர்கள் பலர் மிகவும்புகழ் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுள் ஐசாக் நியூட்டன் சிறப்பாகக் குறிபிடத்தக்கவர். ஏற்கெனவேயிருந்த, "மைக்கேல்ஹவுஸ்" மற்றும் "கிங்ஸ்ஹோல்" ஆகிய இரண்டு கல்லூரிகளை இணைத்தது மூலம் 1546 ஆம் ஆண்டில் எட்டாம் ஹென்றியால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. இவற்றுள் "மைக்கேல்ஹவுஸ்" 1324 இல் ஹார்வே டி ஸ்டண்டன் என்பவரால் நிறுவப்பட்டது. "கிங்ஸ்ஹோல்" 1317 இல் இரண்டாம் எட்வேர்டால் நிறுவப்பட்டு, 1337 இல் மூன்றாம் எட்வேர்டால் மீண்டும் மீளமைப்புச் செய்யப்பட்டது. அக்காலத்தில், ஹென்றி அரசன் தேவாலயங்களுக்கும், கிறிஸ்தவ மடாலயங்களுக்கும் உரிய நிலங்களைக் கையகப்படுத்தி வந்தான். கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் ஆகிய பல்கலைக் கழகங்கள் சமய நிறுவனங்களாயும், பெரும் நிதி வளம் உள்ளவையாகவும் இருந்த காரணத்தால், இவையும் அரசால் கையகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசனும், எந்தக் கல்லூரியின் நிலங்களையும் கையகப்படுத்த வழிசெய்யும் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் உருவாக்கினான். கையகப்படுத்தப்படுவதில் இருந்து தப்ப வேண்டிய நிலைக்குள்ளான பல்கலைக் கழகங்கள் இரண்டும் அரசனின் ஆறாவது மனைவியான கத்தரீன் பார் (Catherine Parr) இதைத் தடுக்க வழிசெய்யுமாறு வேண்டிக்கொண்டன. கத்தரீனின் தலையீட்டின் பேரில், பல்கலைக் கழகங்களைக் கையகப் படுத்தாது விட்டதுமன்றிப் புதிய கல்லூரியொன்றை உருவாக்கவும் அரசன் உடன்பட்டான். எனினும் அரசின் நிதியிலிருந்து இதற்குச் செலவு செய்ய விரும்பாத அரசன், முன்னர் குறிப்பிட்ட இரண்டு கல்லூரிகளையும், ஆறு தங்கும் விடுதிகளையும் இணத்துத் திரித்துவக் கல்லூரியை உருவாக்கினான். இவற்றுடன் தேவாலயங்களிடம் இருந்து நிலங்களையும் சேர்த்துக் கொண்டதனால் இது மிகப்பெரிய அளவுகொண்டதாயும், பணக்காரக் கல்லூரியாகவும் ஆனது. கோள் கோள் "(planet)" விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும். இது கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்த்தும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த வரையறை எங்கு, எவற்றை வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய பல வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால வரையறைப்படி, 1950 க்கு முன்பு கண்டுபிடித்த எட்டு கோள்கள் மட்டுமே கோள்களாக்க் கருதப்படுகின்றன; இந்த வரையறையின்கீழ் சீரெசு, பல்லாசு, யூனோ, வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள வான்பொருள்கள்), புளூட்டோ (முதல் நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்) ஆகியவை முன்பு கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வறு கருதப்படவியலாது. கோள்கள் புவியைச் சுற்றி வேறுபட்ட புறவட்டிப்பு இயக்கங்களில் உள்ளதாகத் தாலமி கருதியுள்ளார். பலமுறை சூரிய மையக் கருதுகோள் பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தாலும், நோக்கீட்டு வானியல்வழியாகத் தொலைநோக்கி கொண்டு கலீலியோவால் நிறுவப்பட்ட 17 ஆம் நூற்றாண்டுவரை அது ஏற்கப்படவில்லை. அப்போது டைக்கோ பிராகேவும் யோகான்னசு கெப்ளரும் தொலைநோக்கிக்கு முந்தைய நோக்கீட்டுத் தரவுகளை திரட்டிப் பகுத்தாய்ந்து கோள்கள் வட்டமான வட்டணையில் இயங்காமல், நீள்வட்டமான வட்டணையில் இயங்குகின்றன எனக் கண்டறிந்தனர். நோக்கீட்டுக் கருவிகள் மேம்பட்ட்தும், வானியலாளர்கள் புவியைப் போலவே பிறகோள்களிலும் பனிக்கவிப்பும் பருவகால மாற்றங்களும் அமைதலையும் அச்சுகள் சாய்வாக உள்ளதையும் கண்டனர். விண்வெளி ஊழி வளர்ந்ததும், விண்கல நோக்கீடுகள் அனைத்துக் கோள்களிலும் எரிமலை உமிழ்வு, கடுஞ்சூறாவளிகள், கண்டத்தட்டு நகர்வு நீரியல் பான்மைகள், ஆகியவற்றைக் கண்ணுற்றனர். கோள்கள் பொதுவாக இருமுதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தாழ் அடர்த்திப் பெருங்கோள்கள் அல்லது வியாழன்நிகர் கோள்கள், சிறிய பாறையாலான புவிநிகர் கோள்கள் ஆகும். பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின்படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு. சூரியனில் இருந்து தொலைவு கூடகூட முதலில் புவிநிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை அமைகின்றன. அடுது பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை. ஆறுகோள்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிலாக்கள் உண்டு. நம் பால்வழியில் உள்ள விண்மீன்களைப் பல்லாயிரம் கோள்கள் அல்லது புறக்கோள்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புறக்கோள்களைப் பொறுத்தவரை, நிலாவைவிடச் சற்றே பெரிய அளவுடைய கெப்ளர்-37b முதல் வியாழனைப் போல இருமடங்கு பெரிய வாசுப்-17b போன்ற வளிமக் கோள்கள் வரையிலானவை தனிக் கோளமைப்புகளிலும் பன்மைக் கோளமைப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நூறு புறக்கோள்கள் புவியின் அளவு கொண்டவை; இவற்றில் ஒன்பது தன் விண்மீனில் இருந்து, சூரியனில் இருந்து புவி அமையும் தொலைவில், உள்ளவை. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக் குழு 2011 திசம்பர் 20 இல் புவிநிகர் புறக்கோள்களாக, கெப்ளர்-20e, கெப்ளர்-20f ஆகிய இருகோள்கள் சூரியநிகர் விண்மீனாகிய கெப்ளர்-20 ஐ வட்டணையில் சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது..2012 ஆம் ஆய்வு, ஈர்ப்பு நுண்வில்லைத் தரவைப் பகுத்தாய்ந்து, நம் பால்வழியில் உள்ள ஒவ்வொரு விண்மீனுக்கும் 1.6 கட்டுண்ட கோள்கள் அமைந்துள்ளதாக மதிப்பிடுகிறது. ஐந்துச் சூரியநிகர் விண்மீன்கள் ஒன்றில் புவியின் உருவளவுள்ள planet in its habitableவட்டாரம் அமைவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு விண்மீனை சுற்றிவரும் அனைத்து கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப்பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆகத்து 18, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது. இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் வியாழன் தான் மிகப்பெரிய கோளாகும். இது 318 மடங்கு புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது.இவற்றில் புதன் எனும் அறிவன் கோள் தான் மிகவும் சிறிய கோளாகும். இது புவியைப் போல 0.055 பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது. சூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்ப கீழ்வருமாறு பிரிக்கலாம்: புதன் (கோள்) புதன் கோள் ("Mercury") சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயிரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3தான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் ஆகவும் இரவுநேரத்தில் ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது. புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கிமீ. புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ. ஐ விட சிறிது குறைவாகும். சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை ஆகும். புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி. ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன. புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது. இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக் காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது. எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது. அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் பலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது. புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளி படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளி படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும். மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க) இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும். புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில்ல் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது. இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன. வெள்ளி (கோள்) வெள்ளி ("Venus") சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது "காலை நட்சத்திரம்" , "விடிவெள்ளி" மற்றும் "மாலை நட்சத்திரம்" என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும். வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது. இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும். வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்; ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம். ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது. இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குக் கண்டம் அப்ரோடிட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. 1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள காந்தப் புலம் புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்; பொதுவாக கோள்களின் கருவத்தில் காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய தூண்டப்பட்ட காந்த மண்டலம் அண்டக் கதிர்களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: கடத்துகின்ற நீர்மம், தற்சுழற்சி, மற்றும் மேற்காவுகை. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது. புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம். மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது. இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை. வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக் காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான தியூட்டிரியத்திற்குமான விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது. புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனை தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது. வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும். வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது வெள்ளிக் கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம். புவி புவி (), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை "உலகம்", "நீலக்கோள்" , எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அதுமுதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனலாம். புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம். புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து, 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு வெப்ப ஆண்டுக்குத் (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைக்கோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனைச் சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்சியையும் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் ("Late Heavy Bombardment") நடந்த வேளையில் பெரு விண்கற்களின் ("asteroid") தாக்கம் புவியின் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது. புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லது அண்டத்தின் மையத்தில் புவி உள்ளது போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது. கடந்த 4.54 பில்லியன் வருடங்களுக்குள் (1% ஐயப்பாட்டுடன்) பரிதி உருவாகி, எஞ்சிய வாயு மற்றும் தூசுப்பொருட்களால் ஆகிய தட்டு வடிவத்தில் இருந்த சூரிய நெபுலாவிலிருந்து புவி மற்றும் மற்ற கோள்கள் தோன்றின. இவ்வாறு இயற்கையான சேர்மானத்தால் 10–20 மில்லியன் வருடங்களுக்குள் புவியின் பெரும்பான்மையான பகுதி உருவாகியது. வளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்து சந்திரனாகவும் மாறியிருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது. எரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் நீராவியினாலும், சமுத்திரங்கள் உருவாகின. கண்டங்களின் படிப்படியான வளர்ச்சியை விவரிக்க இரு மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன: இன்றுவரை நிலையான மாற்றத்தினால் அவை உண்டானது என்பதும் மற்றொன்று புவியின் ஆரம்பகாலத்திலேயே துரித மாற்றத்தினால் அவை ஏற்பட்டன என்பதுவாகும். தற்போதைய ஆய்வின்படி இரண்டாவது கூற்றே, அதாவது புவியின் ஆரம்பத்திலேயே துரித வளர்ச்சியுடன் கண்டங்களின் ஓடு உருவாகிவிட்டதென்றும், பிறகு அவை நிரந்தர கண்ட பரப்பாக உருவாகியதே ஏற்கக்கூடியதாக உள்ளது. பல நூறு மில்லியன் வருட கால அளவில் நோக்கும் போது, புவியின் மேற்பரப்பு கண்டங்கள் தொடர்ச்சியாக உருவாவதாலும் அழிவதாலும் மாறிக்கொண்டு வந்துள்ளது. இதனால் கண்டங்கள் புவியின் மேற்பரப்பில் நகர்ந்து எப்போதாவது ஒன்றோடு ஒன்று இணைந்து மகா கண்டங்கள் உருவாகின. தோராயமாக 750 மில்லியன் வருடங்களுக்கு முன் (மிமு), அப்போதறிந்த மகாகண்டம் ரோடினியா (Rodinia), உடைய ஆரம்பித்தது. அது பின்னர் இணைந்து பென்னோஷயா ("Pannotia") என்ற கண்டமாக உருமாறி பின், 600–540 மிமுவின், பின் இறுதியில் பாஜ்சியா (Pangaea) என்ற கண்டமாக உருவடைந்து, பின் 180 மிமுவில் மீண்டும் உடைந்து பிரிந்தது. இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லா உயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது. தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின; இந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிசன் மூலக்கூறின் ஒருவடிவம் [O]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால் நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின. இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம் வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன. 1960 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்கள், நியோபுரோட்டிசோயிக் காலத்தில் அதாவது 750 மற்றும் 580 மிமுவில் புவியின் பெரும்பகுதி பனியால் மூடியிருந்ததென்றும் மற்றும் மிகப்பல பனிக்கட்டியாறுகள் ஓடியதென்றும் அறிவிக்கின்றனர். அந்தக் காலத்திய புவியை "பனிப்பந்து புவி" என அழைக்கின்றனர். அந்த காலகட்டம் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது ஏனெனில் இது பல செல் உயிரினங்கள் தோன்றி பரவிய கேம்ப்ரியன் விரிவாக்க காலத்திற்கு முன்னால் வந்தது. கேம்ப்ரியன் காலத்து விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற ஷ்ரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன, சில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது. இப்போதுள்ள பனிக்கால சுழற்சி 40 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்டதென்றும் மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன் பிளாய்டோசீன் காலத்தில் தீவிரமடைந்தது என்றும் கூறப்படுகிறது. அது முதல் துருவப் பகுதிகளில் உள்ள பனி 40–100,000 ஆண்டுகளுக்கொரு முறை உருகியும், உறைந்தும் ஏற்படுகின்றது. கடைசி பனிக்காலம் 10,000 வருடங்களுக்கு முந்தி முடிவடைந்தது. புவியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஹீலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1 கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிப்பதால் அசேதன CO2 சுழற்சியை துரிதப்படுத்தி, அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும். சூரியன் அழிவில்லாத மற்றும் நிலையான ஒன்றாக இருந்தாலும், குறைந்த எரிமலையாக்கத்தின் காரணமாக புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திருக்ககூடும். அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும். மேலும் புவியின் சராசரி வெப்பநிலை 70 °C யை வந்தடையும். அந்தக் காலக் கட்டத்திலிருந்து அடுத்த 500 மில்லியன் வருடங்களுக்கு புவி வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரோஜன் நீக்கப்படுமானால் இது மேலும் 2.3 பில்லியன் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். சூரியன் அதன் பரிணாம வளர்ச்சியில் மற்றும் 5 பில்லியன் வருடங்களில் ஒரு மாபெரும் சிகப்பு நட்சத்திரமாக மாறும். சூரியன் தற்போதைய அரைவிட்டத்தை போல தோராயமாக 250 மடங்கு விரிவடையும் என்று உருமாதிரிகள் கணிக்கின்றன. புவியின் தலைவிதி தெளிவாகத் தெரியவில்லை. மாபெரும் சிகப்பு நட்சத்திரமாகிய சூரியன், தன்னுடைய அதிகபட்ச ஆரத்தை எட்டும் போது, சூரியன் தன் எடையில் 30% த்தை இழக்கும் அப்போது அலைகளினால் ஏற்படும் தாக்கம் இன்றியே, புவி சூரியனிலிருந்து அளவு கொண்ட சுற்றுப்பாதைக்குத் தள்ளப்படலாம். அவ்வாறு தள்ளிப்போவதால், சூரியனின் வெளி மண்டலத்தின் தாக்கத்திலிருந்து புவி தன்னைக் காத்துக் கொள்ளும், ஆனால் சூரியனின் அதிகமாகும் ஒளிர்வுக் கதிர்களால், எல்லா உயிரினங்களும் அழிந்து போகும். எனினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி அலைகளால் ஏற்படும் தாக்கத்தால், புவி அதன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, மாபெரும் சிகப்பு நட்சத்திரமான சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்த முழுவதுமாக கரைந்து போகலாம். புவி ஒரு திடமான கிரகம், அதாவது முழுவதும் காற்றாலே ஆன மாபெரும் வாயுக்கிரகமான வியாழன் போலல்லாது கடினமான உடலால் ஆனது. இது சூரியக் குடும்பத்திலுள்ள நான்கு திட கிரகங்களுள் உருவத்திலும் திண்மத்திலும் மிகப் பெரியது. இந்த நான்கு கிரகங்களில், புவி அதிக அடர்த்தியானதும், மிகுந்த மேற்பரப்பு புவியீர்ப்பு விசையைக் கொண்டதும், வலிமையான காந்தப் புலனைக் கொண்டதும் மற்றும் வேகமான சுழற்ச்சியைக் கொண்டதுமாகும். திடக் கிரகங்களிலேயே புவியில் மட்டுமே டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல் காணப்படுகிறது. புவியின் உருவம் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக் கோட்டிற்கு அருகில் விரிவடைந்தும் உள்ள நீள்வட்ட கோளத்தைப் போல் காணப்படுகின்றது. புவியின் சுழற்சியால் இந்த இடை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் விட்டங்களை ஒப்பிடுகையில் நிலநடுக்கோடு துருவங்களை விட 43 கிமீ அதிகமாயுள்ளது. இக் கோளத்தின் சராசரி விட்டம் 12,742 கிமீ (7,918 மைல்) அதாவது 40,000 கிமீ/π, ஏனென்றால் மீட்டரை முதலில் வரையறுக்கும் போது அது பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்திற்கு பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகர வழியாக கணக்கிடும் தூரத்தில் 1/10,000,000 ஈடாக கொள்ளப்பட்டது. புவி அதன் இடவமைப்பான (topography) சிறு மேடு பள்ளங்களை வைத்து காணும் போது கோள வடிவிலிருந்து புவி மாறுபடும் ஆனால் மொத்தத்தில் இந்த வேறுபாடு மிகவும் சிறியது: உண்மையான கோளத்தோடு ஒப்பிடுகையில் புவி 584 அல்லது 0.17% விலகியுள்ளது, இது பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பில்லியர்ட் பந்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய 0.22% மாற்றத்தை விட சிறியதே. புவியின் மேற்பரப்பில் மிக அதிகமாக கோள வடிவிலிருந்து விலகியுள்ள இரு இடங்கள் எவரஸ்ட் சிகரம் (கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம்) மற்றும் மரியானா ட்ரென்ச் (கடல் மட்டத்திலிருந்து 10,911 மீ கீழுள்ளது). புவி, நிலநடுக்கோட்டருகே விரிந்திருப்பதால் பூமியின் நடுவிலிருந்து மிகவும் தள்ளி உள்ள இடம் நில நடுக்கோட்டருகே உள்ள ஈக்வெடார் நாட்டின் ("Ecuador") சிம்போராசோ சிகரமாகும். பூமியின் நிறை ஏறக்குறைய 5.98 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும் அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது. புவியியலாளர் எப். டபிள்யூ. கிளார்க் 47 விழுக்காட்டுக்கு சிறிது கூடதலான பிராணவாயு இருப்பதாக கணக்கிட்டுள்ளார். பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் கற்கள் பெரும்பாலும் ஆக்சைடுகளாலேயே ஆனது. மற்ற குளோரின், சல்பர், ப்ளூரின் இவை 1% க்குள் அடங்கும். இவற்றில் முதன்மையான ஆக்சைடுகள் சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்சைடு, சுண்ணாம்பு, மெக்னீசியா, பொட்டாஷ் மற்றும் சோடா ஆகும். சிலிகா அமிலத்தைப் போல் செயல்பட்டு சிலிக்கேட்டுகளை உருவாக்குகின்றது. பெரும்பாலும் தீப்பாறையில் காணப்படும் எல்லா கனிமங்களும் இதைப் போலவே செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,672 வகையான பாறைகளை ஆராய்ந்து பார்த்ததில் புவியியலாளர் கிளார்க் 11 வகையான ஆக்சைடுகள் (வலது பக்கம் உள்ள அட்டவணையைப் பார்க்க) 99.22% இருப்பதாக கண்டறிந்துள்ளார். இதர எல்லா தனிமங்களும் வெகு சிறிதளவே இவற்றில் அடங்கியுள்ளது. புவியின் உட்பகுதி மற்ற திட கோள்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் (பாய்வு) பண்புகளின் திடப்போருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது. புவியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கி.மீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கி.மீ. வரையிலும் உள்ளது. புவியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; நிலவியல் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வளையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது. உட்கருவானது மற்ற புவியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது. பூமியின் உட்புற வெப்பம் கிரகச் சேர்க்கையினால் உண்டாகும் மீத வெப்பத்தாலும் (சுமார் 20%) மற்றும் அணுச் சிதைவுகளாலும் (80%) உருவானது. பூமியில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள் பொட்டாசியம்-40, யுரேனியம்-238, யுரேனியம்-235 மற்றும் தோரியம்-232 ஆகும். பூமியின் மத்தியில் வெப்பம் 7,000 கெல்வினையும் மற்றும் அழுத்தம் 360 கிகாபா (GPa)-வையும் அடையலாம். பூமியின் வெப்பம் பெரும்பாலும் அணுச்சிதைவிலிருந்து உருவாவதால், அறிவியலாளர்கள் பூமியின் ஆரம்பகால கட்டத்தில், குறைந்த அரை வாழ்வு கொண்ட ஐசோடோப்புகள் மறையுமுன், புவியின் வெப்பம் அதிகமாயிருந்திருக்கும் என்றும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய வெப்பத்தை விட இருமடங்கு வெப்பம் உற்பத்தி ஆகிய போது, பூமியின் வெப்பம்சார் தன்மைகள் மாறியிருக்கும், அதிகமான மூடக பரப்பலும், டெக்டோனிக் பலகை நகர்தலும், மேலும் கோமடைட்ஸ் ("komatiites") என்ற தீப்பாறைகள் உருவானதும் (இவை இன்று உருவாவதில்லை) ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றனர். பூமியிலிருந்து ஏற்படும் மொத்த வெப்ப இழப்பு 163 உட்கருவின் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதி மூடக ஆழ் கிணறுகளின் ("mantle plumes") மூலமாக மூடகத்திற்கு கடத்தப்படுகிறது; இது ஒருவகை அதி வெப்பப் பாறை எனலாம். இந்த வெப்ப ஆழ் கிணறுகள் வெப்ப மையங்களையும் வெப்ப பாறை வெள்ளத்தையும் ஏற்படுத்தவல்லது. பூமியின் மிகையான வெப்ப இழப்பு டெக்டோனிக் பலகை நகர்வதாலும் நடுக்கடல் மேடுகளுடன் சேர்ந்து மூடகங்கள் மேல்நோக்கி நகர்வதாலும் ஏற்படுகின்றது. இறுதியாக மிக அதிக வெப்ப இழப்பு, லித்தோ அடுக்கின் வெப்ப கடத்தலால் ஏற்படும், அதாவது பெரும்பாலும் அவை கடல் வழியே ஏற்படும் ஏனெனில் தரையை விட கடலினடியில் உள்ள லித்தோ அடுக்கின் பருமன் குறைவு. மிகவும் இறுக்கமான புவியின் மேல் பரப்பு, லித்தோ அடுக்கு எனப்படும் இது, நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. இந்தத் தட்டுகள் இறுக்கமான அமைப்புகளைக் கொண்டது மேலும் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையே குறுகும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள், பலகைகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாம். இந்த செயல்களால் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள் உருவாகுகின்றன. நிலப்பலகைத் தட்டுகள் அசுதனோ அடுக்கின் மேல் நகர்ந்துச் செல்கின்றது, அதாவது இவ்வடுக்கின் பாகு நிலையிலுள்ள ஆனால் திடமான மேல் மூடகத்தின் பகுதிகள் நிலப்பலகைத் தட்டுகளுடன் நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாய் உள்ளது, மேலும் இவற்றின் இயக்கம் புவியின் மூடகத்தின் உள்ளே ஏற்படும் இயக்க மாதிரிகளை சார்ந்தே அமைகின்றது. நிலப்பலகை தட்டுகள் கோளின் மேற்பரப்பில் நகர்வதால், குறுகும் எல்லைகளில் உள்ள பெருங்கடல் தரைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகின்றது. அதே சமயம், தட்டுகளில் விலகு எல்லைகளால் மூடகப் பொருட்கள் வெளியேறி நடுப் பெருங்கடல் அகழிகள் உருவாகின்றன. இந்த இரு செயல்களாலும் பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு தொடர்ச்சியாக மூடகத்தோடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது. இந்த மீள் சுழற்சியால், பெரும்பாலான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. உலகிலேயே பழமையான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு சராசரியாக 200 மில்லியன் ஆண்டுடையது. இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில் பழமையான கண்டங்களின் மேலோடு 4030 மில்லியன் வருடம் பழமையானது. மற்ற முக்கிய தட்டுகள், இந்தியத் தட்டு, அரேபியத் தட்டு, கரீபியத் தட்டு, தென் அமெரிக்காவின் வடகரையில் இருக்கும் நாசுகாத் தட்டு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுகோசியத் தட்டு என்பனவாம். ஆஸ்திரேலியத் தட்டு இந்தியத் தட்டுடன் 50 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இணைந்தது. பெருங்கடல் தட்டுகளிளே மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவை, இதில் கோகோசுத் தட்டு வருடத்தில் 75 மீட்டரும் மற்றும் பசிபிக் பெருங்கடல் தட்டு ஆண்டிற்கு 52–69 மி.மீ. வரையிலும் நகர்கின்றன. மறுபுறத்தில் மிகவும் மெதுவாக நகரும் தட்டுகளில் யுரேசியன் தட்டு ஆகும், இது வருடத்திற்கு 21 மீட்டர் தூரம் நகர்கின்றது. பூமியின் நிலம் இடத்திற்கு இடம் மிக வேறுபட்டுள்ளது. பூமியின் மேற்பகுதி 70.8% நீரினால் சூழப்பட்டுள்ளது மேலும் கண்டங்களின் அடுக்குப் பகுதிகள் கடலுக்கடியே உள்ளன. நீரால் மூழ்கப்பட்ட இடங்களில் மலை போன்ற அமைப்புகள், பூமி முழுவதும் பரவியுள்ள நடுப்பெருங்கடல் மலைத்தொடர், எரிமலைகள், பெருங்கடல் அகழிகள், ஆழ்கடல் படுபள்ளங்கள், பெருங்கடல் பீடபூமிகள் மற்றும் ஆழமான கணக்கிலடங்கா சமவெளிகள் இவையாவும் அடங்கும். இதைத் தவிர்த்து பூமியின் மீது தண்ணீருக்கு வெளியே உள்ள 29.2% இடத்தில் மலைகள், பாலைவனங்கள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நிலப்பரிமாண அமைப்புகளும் அடங்கும். பூமியின் மேற்பரப்பு டெக்டோனிக் செயல்கள் மற்றும் அரித்தலால் காலப்போக்கில் உருமாறிக் கொண்டே இருக்கிறது மேற்பரப்பில் டெக்டோனிக் பலகை நகர்தலால் ஏற்படும் குவிந்த மற்றும் தகர்ந்த அமைப்புகள் மேலும் மழைகளால் ("precipitation") சிதைவதும் வெப்ப சுழற்சி மற்றும் ரசாயனங்களாலும் தாக்கப்படுகின்றன. பனியாறு உருவாதல், கடற்கரை அரிப்பு, பவளப்பாறைகள் ஏற்படுதல் மற்றும் பெரும் விண்கற்களின் தாக்கம் ஆகியவற்றாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றியமைக்கப்படுகின்றது. கண்டங்களின் மேலோடு குறைந்த திண்மத்தையுடைய தீப்பாறைகள், கிரானைட் மற்றும் அன்டிசைட்களால் ("andesite") ஆனது. பசால்ட் எனப்படும் அதிக திண்மத்தைக் கொண்ட தீப்பாறைகள் அரிதாக காணப்படுகின்றன. மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். படிவுப்பாறைகள் வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது. பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் உருமாறிப்பாறைகள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் ("pyroxene") மற்றும் ஒலிவைன் ("olivine") ஆகும். பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் கால்சைட்டு (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட்டு மற்றும் டோலோமைட்டு ஆகும். புவியில் எல்லாவாற்றிற்கும் மேலே உள்ள பரப்பு பீடோ அடுக்கு ("pedosphere"). இது மண்ணால் ஆனது மற்றும் இது மண் உருவாகும் செயலுக்கும் உட்பட்டது. இது லித்தோ அடுக்கு, வளிமண்டலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளத்திற்கு இடையே உள்ளது. தற்போதைய நிலையில் பூமியின் மேற்பரப்பில் 13.31% மட்டுமே காற்றோட்டமான நிலமாகும் மற்றும் இதில் 4.71% இல் மட்டுமே நிரந்தர விவசாயம் செய்ய ஏற்றதாக இருக்கிறது. பூமியின் நிலப்பரப்பில் 40% இடம் விவசாயத்திற்கும், மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்படுகின்றது, அதாவது, தோராயமாக விவசாயத்திற்கு 1.3 கிமீ² நிலமும், மேய்ச்சலுக்கு 3.4 கிமீ² நிலமும் பயன்படுத்தப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பிலிருந்து நிலத்தோற்றத்தைக் காணும் போது மிகவும் தாழ்வான இடம் −418 மீ ஆழத்தில் உள்ள சாக்கடல் (Dead Sea), மற்றும் 2005 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிகவும் உயரமான இடம் 8,848 மீட்டர் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆகும். நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 840 மீட்டர் ஆகும். பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் அதன் தனித் தன்மையாகும் மற்றும் இதுவே நம் "நீலக்கிரகத்தை" சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பூமியின் நீர்க்கோளம் முதன்மையாக பெருங்கடல்களால் ஆனது. ஆனால் முழுதாக கணக்கிலெடுத்தால் உள்நாட்டுக் கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் 2,000 மீட்டர் வரையுள்ள நிலத்தடி நீரும் இதிலடங்கும். அதிக ஆழமான நீருக்கடியில் இருக்கும் இடம் -10,911.4 மீட்டரில் பசிபிக் பெருங்கடலிலுள்ள மரியானா அகழியில் அமைந்திருக்கும் சாலஞ்சர் ஆழமாகும். பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3,800 மீட்டர் ஆகும், இது கண்டங்களின் சராசரி உயரத்தைவிட நான்கு மடங்கு அதிகம். பெருங்கடல்களின் சராசரி நிறை 1.35 மெட்ரிக் டன்கள், அல்லது பூமியின் மொத்த நிறையில் 1/4400, மற்றும் 1.386கிமீ கனஅளவு இடத்தைப் பிடித்துள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமமாக பரவியிருக்குமானால் நீரின் மட்டம் நிலத்தின் மீது 2.7 கி.மீ. உயர்ந்து இருக்கும். மொத்த நீரில் 97.5% உப்பு நீராகும் மற்ற 2.5% தூய நீராகும். இதில் பெரும்பான்மையான தூயநீர், அதாவது 68.7% தற்போது பனிக்கட்டிகளாக உள்ளது. பெருங்கடல்களின் மொத்த நிறையில் 3.5% உப்பாலானது. இந்த உப்பானது எரிமலை நிகழ்வுகளாலும் மற்றும் குளிர்ந்த தீப்பாறைகளிலிருந்தும் வெளிப்பட்டதாகும். வளிமண்டலத்திலுள்ள பல வாயுக்கள் பெருங்கடலில் கரைந்து அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாய் உள்ளது. கடல் நீர் உலகின் பெரிய வெப்ப தேக்கமாக செயல்படுவதால் புவியின் வானிலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பெருங்கடல்களில் வெப்பப் பங்கீட்டில் மாற்றம் நேரும் போது குறிப்பிடும் வகையில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் எல் நினோ தெற்கு திசை ஊசலாட்டம் ("ElNiño" – "Southern Oscillation") போன்றவை ஏற்படும். இந்த புவியின் மேற்பரப்பில் உள்ள வளி மண்டல அழுத்தம் சராசரியாக 8.5 கி.மீ. அளவு உயரம் வரை 101.325 கிலோபா (KPa) ஆக இருக்கிறது. இது 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன் மற்றும் சிறிய அளவில் நீராவி, கரிமிலவாயு போன்ற மற்ற வாயு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. அடிவளிமண்டல ("Troposphere") உயரமானது பூமியின் கிடைமட்ட பரப்பை பொறுத்து மாறும். தட்பவெப்ப மற்றும் காலநிலை மாறுபாட்டின் காரணமாக இது துருவங்களில் 8 கி.மீ. முதல் பூமத்தியரேகையில் 17 கி.மீ. வரை இருக்கும். புவியின் உயிர்கோளம் வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிராணவாயு ஒளிச்சேர்க்கை முதன்முதலில் தற்போதுள்ள நைட்ரஜன் - ஆக்சிஜன் வளி மண்டலத்தை உருவாக்கியது. இந்த மாற்றமானது வளி சார்ந்த உயிரினங்கள் வளர்ச்சி மற்றும் ஓசோன் படலத்தையும் உருவாக்கியதோடு, புவியின் காந்தபுலம் புற ஊதாக் கதிர்கள் சூரியனின் கதிர்வீச்சு ஆகியவற்றை தடுத்து, புவியில் உயிரினங்கள் வாழ வழிசெய்கிறது. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நீராவி பரிமாற்றம், வாயுக்கள், சிறிய விண்கற்களை புவியை தாக்கும்முன் எரியசெய்தல் மற்றும் மிதமான வெப்பநிலை போன்றவற்றை அளிப்பதில் வளி மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறுதியாக குறிப்பிட்ட வளிமண்டல வெப்பநிலை மாற்றத்தை கிரீன் ஹவுஸ் மாற்றம் என குறிப்பிடுவர் ("Greenhouse Effect"): இது நிலத்தில் இருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்தில் உள்ள சிறிதளவிலான மூலக்கூறுகள் சிறைப்படுத்தி அதன் மூலம் வளி மண்டலத்தின் சராசரி வெப்பத்தை உயர்த்துவதை குறிக்கும். கார்பன் டை ஆக்சைடு, நீராவி, மீத்தேன் மற்றும் ஓசோன் போன்றவை புவியின் வளி மண்டலத்தில் உள்ள பிரதான கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இந்த வெப்பம் தக்கவைத்தல் நடக்காவிடில் புவியின் மேற்புற வெப்பம் −18° செ ஆக இருந்திருக்கும் மற்றும் உயிரினங்கள் வாழ ஏதுவாய் இருந்திருக்காது. புவியின் வளிமண்டலத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது, அது உயரே செல்ல செல்ல மெலிந்து அண்ட வெளியில் மறைந்து போகின்றது. வளி மண்டலத்தின் மொத்த நிறையில் மூன்றில் ஒரு பகுதி பூமியின் மேற் பரப்பிலிருந்து முதல் 11 கி.மீ.ரிலேயே அடங்கி விடுகின்றது. இந்த அடியில் உள்ள அடுக்கே அடிவளிமண்டலம் ஆகும். சூரியனிலிருந்து வரும் வெப்ப சக்தி இந்த அடுக்கை மற்றும் இதனடியில் உள்ள பூமியின் மேற்பரப்பையும் சூடு படுத்தி பிறகு இதனுடன் தொடர்புள்ள காற்றை விரிவாக்குகின்றது. இந்த குறைந்த அடர்த்தியுடைய காற்று மேலெழுகிறது, அவ்விடத்தை அதிக அடர்த்தியுள்ள குளிர்ந்த காற்று நிரப்புகின்றது. இவ்வாறு ஏற்படும் செயல் வளிமண்டலத்தில் சுழற்சியை ஏற்படுத்துகின்றது அதனால் வெப்ப சக்தி நகர்ந்து வானிலை மற்றும் பருவநிலை ஏற்பட காரணமாகின்றது. முதன்மை வளிமண்டல சுழற்சியின் தடத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 30° பாகைகள் உருவாகும் வியாபாரக் காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் இவை மத்திய-நில நேர்ககோட்டில் 30° மற்றும் 60° பாகைக்குள் உருவாகின்றன. பெருங்கடல்களின் ஓட்டமும் வானிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன, முக்கியமாக வெப்ப ஹேலைன் சுழற்சி பூமத்திய கடல்களில் இருந்து துருவக்கடல்களுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகிறது. பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நீராவி, சுழற்சியான முறையில் வளிமண்டலத்தை சென்றடைகிறது. வளிமண்டலத்தின் நிலை அனுமதிக்கும் போது சூடான ஈரப்பதம் மிக்க காற்று மேலெழும்பி, பிறகு குளிர்ந்து, மழையாகி, பூமியை அடைகின்றது. இது பெரும்பாலும் ஆற்றின் மூலமாக பெருங்கடல் அல்லது ஏரிகளை சென்றடைகிறது இந்நீரின் சுழற்சி பூமியில் உயிரினங்கள் வாழ மிக முக்கியமானது மற்றும் வெகு காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புவியின் மேற்புற அமைப்புகளின் அரிப்புகளுக்கும் காரணமாகின்றது. மழை பொழிவது இடத்திற்கு இடம் வெகுவாக வேறுபடுகின்றது, அது பல மீட்டரில் இருந்து சில மில்லி மீட்டர் வரை மாறுபடுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் வளிமண்டல சுழற்சி, மேற்புற அமைப்பு மற்றும் வெப்ப மாற்றத்தை பொறுத்தே அவ்விடத்து மழை அமையும். பூமியின் பகுதிகளை அதன் நில நேர்க்கோட்டின் படி சராசரியான ஒரே தட்பவெப்ப நிலைகள் உள்ளவைகளாக பிரிக்கலாம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்கள் வரையிலான தட்பவெப்பத்தை வெப்ப வளையம் (அல்லது ஈக்வடோரியல்), மிதவெப்ப வளையம், மிதமான வளையம் மற்றும் துருவ வளைய தட்பவெப்பம் என பிரிக்கலாம். தட்பவெப்பத்தை வெப்பம் மற்றும் பெய்யும் மழையைக்கொண்டும் வகைப்படுத்தலாம், அதாவது அவ்வவ்விடத்தின் சீரான காற்றின் அடர்த்தியைக் கொண்டும் பிரிக்கலாம். பொதுவாக உபயோகத்தில் உள்ள கோப்பெனின் தட்பவெப்ப முறையின் படி (விளாடிமிர் கோப்பெனின் மாணாக்கர் ருடால்ப் கைகர் மாற்றியமைத்தது) தட்பவெப்பங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக (ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதி, வறண்ட பகுதிகள், ஈரப்பதம் மிக்க மத்திய நில நேர்க்கோட்டு பகுதிகள், மிதமான குளிர் பகுதிகள் மற்றும் மிகக்குளிர் துருவ பகுதிகள்) பிரித்துள்ளார், மேலும் இவை குறிப்பிட்ட உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வளிமண்டலத்தில், அடி வளிமண்டலத்தின் மேற்பகுதி, வழக்கமாக ஸ்ட்ரடோ அடுக்கு ("stratosphere"), மீசோ அடுக்கு ("mesosphere"), வெப்பஅடுக்கு என பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும், அதன் உயரத்திற்கு ஏற்ப, தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்கு ஏற்றாற்போல் வெவ்வேறு இழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும். இவற்றை தாண்டி, எக்சோ அடுக்கு எனப்படும் வெளி அடுக்கு மெலிந்து காந்த அடுக்கில் கலந்துவிடுகிறது. இந்த அடுக்கில்தான், பூமியின் காந்த புலம் சூரியக் கதிர் காற்றுடன் ஊடாடுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ஒரு பகுதி வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு ஆகும், இது ஸ்ட்ரடோ அடுக்கில் இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கார்மன் கோடு வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையை நிர்ணயிக்கிறது. வெப்ப ஆற்றலால், வளிமண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள சில மூலக்கூறுகளின் வேகம் அதிகரித்து ஒரு சமயம் அவை புவியின் ஈர்ப்பு சக்தியிலிருந்த விடுபடுகின்றது. இதன் விளைவாக நிதானமாக அதே சமயம் நிலையாக வளிமண்டலம் விண்வெளியில் நுழைகிறது. ஏனெனில், நிலையற்ற ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை குறைவாக இருப்பதால், அது மிக விரைவிலேயே விடுபடும் வேகத்தை அடைகிறது. மேலும் மற்ற வாயுக்களை விட மிக வேகமாக விண்வெளிக்குள் நுழைகிறது. இதுவே பூமி ஆரம்ப ஒடுக்க நிலையிலிருந்து தற்போதைய ஆக்சிஜனேற்ற நிலையை அடைவதற்கு காரணமாகும். ஒளிச்சேர்க்கை ஆக்சிஜன் மிகுதியாக கிடைக்க வழி செய்கிறது. அதே சமயத்தில், ஒடுக்கும் காரணியான ஹைட்ரஜன் குறைவதற்கும் காரணமாகிறது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. எனவே, பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறக்கூடிய ஹைட்ரஜனின் தன்மை, பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தற்போதைய ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலத்தில், ஹைட்ரஜன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும் முன்னரே, நீராக மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மீத்தேனின் அழிவே, ஹைட்ரஜன் இழப்பிற்கு காரணமாகிறது. புவியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின்படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இந்த புலமானது காந்த அடுக்கை ("magnetosphere") ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 மடங்கைக் கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (அரோரா) ஆக மாறுகிறது. பூமியின் சுழலும் காலம் சூரியனை ஒப்பிடுகையில்-அதன் சராசரி சூரிய நாள்-அதாவது சராசரி சூரிய நேரத்தில் 86,400 விநாடிகளாகும். இந்த ஒவ்வொரு வினாடியும் எஸ்.ஐ (SI) முறை வினாடியை விட சிறிது கூடுதல். ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடும் போது தற்போதைய பூமியின் சூரிய நாள் அலை முடுக்கத்தால் சிறிதே நீண்டிருக்கிறது. புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை, அதன் "ஸ்டெல்லர் நாள்" என சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு ("IERS") கூறுகிறது, இது சராசரி சூரிய நேரத்தில் (UT1) அல்லது பூமியின் சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை, "ஒரு விண்மீன் நாள்" என தவறாக பெயரிடப்பட்டது, இது சராசரி சூரிய நேரம் (UT1) ஆகும். எனவே ஒரு விண்மீன் நாள் ஸ்டெல்லர் நாளை விட 8.4 ms. சிறியது. SI நிமிடங்களில் 1623–2005 மற்றும் 1962–2005 காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS -லிருந்து கிடைக்கப் பெறும். வளிமண்டலத்துள் விண் கற்கள் ("meteor") தாழ் சுழற்சி விண்கலங்கள் மற்றும் அனைத்து விண்ணுலக பொருட்களையும் பூமியின் மீதிருந்து பார்க்கும் போது மேற்கு நோக்கி மணிக்கு 15° = நிமிடத்திற்கு 15' என்ற அளவில் போவது போல் தோன்றும். இந்நகர்தல் இரு நிமிடத்தில் சூரியன் அல்லது சந்திரன் அடையும் விட்டமாகும்; நம் கண்களுக்கு சூரியனும் சந்திரனும் ஒரே அளவினவாகத் தோன்றும். பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. இதனால் சூரியன், நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் கிழக்கு நோக்கி நாளொன்றுக்கு 1° நகர்வதாக அல்லது சூரியன் அல்லது சந்திரன் விட்டத்தை 12 மணி நேரத்தில் கடப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செயலால் சராசரியாக ஒரு சூரிய நாள் அல்லது 24 மணி நேரத்தில் பூமி தன் அச்சிலேயே ஒருமுறை சுழன்று சூரியன் அதன் ஆரம்ப நிலை மெரிடியனை வந்தடைகின்றது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும். சந்திரன் பூமியுடன் சேர்ந்து பொதுவான ஒரு பேரி மையத்தை ("barycenter"), அதன் பின் காணப்படும் விண்மீன்களை ஒப்பிடுகையில் 27.32 நாட்களில் சுழன்று வருகிறது. சூரியனைச் சுற்றி, பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பொதுவான சுழற்சியைச் சேர்த்தால், சைனோடிக் மாத காலமாகும், பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி வரை 29.53 நாட்களாகும். விண்வழி வட துருவத்திலிருந்து காணும் போது பூமி, சந்திரன் மற்றும் அவற்றின் அச்சு சுழற்சி, எதிர்மறை சுழற்சியாக தோன்றும். பூமி மற்றும் சூரியன் ஆகியவற்றின் வட துருவத்திலிருந்து காணும் போது பூமி சூரியனை எதிர்மறையாக சுழன்று வருவது தெரியும். பூமியின் கோளப்பாதையும் அச்சுத் தட்டும் ஒன்றி அமையவில்லை: பூமி சூரிய தட்டின், செங்குத்தான கோட்டிலிருந்து 23.5 கோணங்கள் பூமியின் அச்சு சாய்ந்து காணப்படுகிறது மற்றும் பூமி சந்திரன் தட்டு பூமி சூரிய தட்டிலிருந்து ஐந்து கோணங்கள் பெயர்ந்து உள்ளது. இந்தச் சாய்வான அமைப்பு இல்லையென்றால் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இருவாரங்களுக்கு ஒருமுறை ஏற்படும் அமைப்பு இருக்கும். ஹில் அடுக்கு ("Hill sphere") அல்லது புவியீர்ப்பு அடுக்கு பூமியிலிருந்து 1.5 கிகா மீட்டர் (அல்லது 1,500,000 கிலோமீட்டர்கள்) ஆரமுடையதாகும். பூமியின் புவியீர்ப்பு விசை மற்ற விண் பொருட்களாகிய சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக இருக்கும் மற்றும் அதிகபட்ச தொலைவில் இருக்கும் இடமுமாகும். பூமியின் கட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் இந்த தொலைவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் மீறினால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையினால் பூமியை விட்டு வெளியேறி விடும். பூமி சூரிய மண்டலத்தோடு பால்வெளி ("Milky Way") கேலக்ஸியில் ("galaxy") அதன் மையத்தை 28,000 ஒளி ஆண்டுகளில் சுழலும் பாதையில் அமைந்துள்ளது. இது தற்போது இந்த மண்டலத்தின் நில நடுதட்டிலிருந்து (equatorial plane) 20 ஒளி ஆண்டுகள் மேலேயும் ஓரியன் மண்டலத்தின் சுழல் கையிலும் (Orion spiral arm) அமைந்துள்ளது. பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது. கோடை காலத்தின் நாட்கள் நீண்டும் சூரியன் வானில் உயரேயும் காணப்படுகின்றது. குளிர் காலத்தில், தட்பவெப்ப நிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் மற்றும் நாட்கள் குறுகியும் காணப்படும். ஆர்க்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது. வானியல் மரபுப்படி, நான்கு பருவ காலங்களும், புவி தனது கோளப் பாதையில் சூரியனை நோக்கி அல்லது சூரியனிலிருந்து விலகும் அதிகபட்ச அச்சு சாய்வுப் புள்ளியான சால்ஸ்டிஸ் (solstice) என்பதையும், இஃவினாக்ஸ் ("equinox") சாயும் திசை சூரியனை நோக்கிச் செங்குத்தாக இருக்குமானால், இவை இரண்டையும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. குளிர் கால சால்ஸ்டிஸ் டிசம்பர் 21 அன்று ஏற்படும், கோடை கால சால்ஸ்டிஸ் ஜூன் 21 தேதி வாக்கில் ஏற்படும், வசந்தகால இஃவினாக்ஸ் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் ஏற்படும், இலையுதிர்கால இஃவினாக்ஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி வாக்கில் ஏற்படும். புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது. இருப்பினும் இந்தச்சாய்வும் சிறிதளவு ஒழுங்கற்ற இயக்கம் (nutation) கொண்டிருக்கிறது, அதாவது மிகச்சிறிய ஒழுங்கற்ற இயக்கம் 18.6 ஆண்டுகளில் ஏற்படுகின்றது. புவி அச்சின் நிலையும் (கோணமல்லாது) காலவாக்கில் மாறுகின்றது, 25,800 ஆண்டு காலம் ஒரு முழு வட்டப்பாதையில், சிறிய ஆனால் தொடர்ச்சியான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றத்துடன் (precessing) சுழன்று வருகிறது; இந்த மாற்றமே விண்மீன் ஆண்டு மற்றும் வெப்ப ஆண்டிற்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கான காரணமுமாகும். இந்த இரண்டு நகர்தலும் புவியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் வேறுபட்ட கவர்ச்சியினால் ஏற்படுகிறது. புவியிலிருந்து காணும் போது, துருவங்கள் கூட சில மீட்டர் தூரம் மேற்பரப்பில் நகர்கிறது. இந்த துருவ நகர்தல் பல சுழற்சி பகுதிகள் அடங்கியதாகும், இந்த பல பகுதிகள் மொத்தமாக பகுதி கால நகர்தல் என்றழைக்கப்படுகின்றது. இந்த நகர்தலுக்கு ஒரு வருட சுற்றோடு 14 மாத சுற்றும் உள்ளது, அதை சாண்ட்லேர் தள்ளாட்டம் என குறிப்பிடுகின்றனர். பூமியின் சுழல் வேகமும் தின நேர மாற்றம் என்ற செயலால் பாதிக்கப்படுகின்றது. இந் நாட்களில் புவியின் சூரிய சிறும வீச்சு ஜனவரி மூன்றாம் தேதியும் சூரிய பெரும வீச்சு ஜூலை நான்காம் தேதியும் ஏற்படுகின்றது. இந்த நாட்கள் நிலையானதல்ல, இவை காலப்போக்கில் புவியின் சுழற்சியாலும் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றங்களாலும் மாறிக்கொண்டே இருக்கின்றது மேலும் இது மிலன்கோவிட்ச் சுற்று எனும் சுழல் அமைப்பை பின்பற்றுகின்றது. சூரியன் மற்றும் பூமிக்கிடையே ஆன தூரம் அதிகமாகிக்கொண்டிருப்பதால் சூரிய சிறும வீச்சுக்கும் பெரும வீச்சுக்கும் இடையே பூமியை அடையும் கதிர் வீச்சில் 6.9% வேறுபாடு உள்ளது. பூமி சூரியனின் மிக அருகே செல்லும் போது அதன் தென் துருவம் சூரியனை நோக்கி இருப்பதால் அதற்கு சூரிய சக்தி வட துருவத்தை ஒப்பிடுகையில் ஒரு வருடத்தில் அதிகமாகக் கிடைக்கின்றது. ஆனால் தென் துருவம் இந்த வகையில் அடையும் சக்தி அது புவி அச்சின் சாய்வு மற்றும் அதிக ஆற்றலை உறிஞ்சும் தென் துருவ நீரினால் கிடைக்கும் மொத்த சக்தியை விட மிக குறைவே ஆகும். சந்திரன் பூமியை விட பெரிய, நிலம் சம்பந்தப்பட்ட, செயற்கைக்கோள் போன்ற ஒரு கோளாகும், இதன் விட்டமானது பூமியின் விட்டத்தைப் போன்று கால் மடங்கு பெரியதாகும். அதன் கோளோடு ஒப்பிடுகையில் சந்திரன்தான் சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரியதாகும். (சாரன் (Charon) என்பது சிறிய கோளான ப்ளூடோவை விட பெரியதாகும்) மற்ற கோள்களைச் சுற்றி வரும் இயற்கையான செயற்கைக்கோள்கள் பூமியினுடையதைப் போலவே "சந்திரன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன. மேலும், இது சந்திரனின் முகங்களைக் காட்டுகிறது; சந்திரனின் இருள் பகுதிகள் ஒளிர்கின்ற பகுதியிலிருந்து சூரியனின் ஒளிக்கற்றைகளால் பிரிக்கப்படுகிறது. இந்தப் பேரலைகள் ஊடாடுவதன் காரணமாக, சந்திரன் பூமியை விட்டு வருடத்திற்கு 38 மி.மீ. விலகிச் செல்கிறது. பல மில்லியன் வருடங்களுக்கு மேலாக, இந்த சிறு மாற்றங்களும்-ஒரு வருடத்திற்கு 23 µs வீதம் பூமியின் ஒரு நாள் நீள்வதும், பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, தேவோனியன் காலத்தின் பொழுது, (தோராயமாக 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) ஒரு வருடத்திற்கு 400 நாட்களும், ஒரு நாளுக்கு 21.8 மணிநேரமுமாக இருந்தது. பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றுவதன் மூலம் சந்திரன் பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. தொல்லுயிர் ஆராய்ச்சியின் முடிவுகளும் மற்றும் கணினியின் மாதிரிகளும் பேரலைகளுக்கு சந்திரனுடன் உள்ள கவர்ச்சியினால்தான் பூமியினுடைய அச்சின் சாய்வு நிலையாக உள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. சூரியனும் இதர கோள்களும் பூமியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்திற்கு கொடுக்கும் உந்து அழுத்தத்திற்கு எதிராக இந்த நிலைப்புத்தன்மை இல்லையெனில் பூமியின் சுழலும் அச்சு ஒரு நிலையிலன்றி குழப்பமானதாக இருந்திருக்கும், மேலும் செவ்வாய் கோளில் நடப்பதைப் போல மில்லியன் வருடங்களுக்கு மேல் நிலைமாறான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என சில கொள்கையாளர்கள் நம்புகிறார்கள். பூமியின் சுழலும் அச்சு நீள்வட்டப்பாதையை அடைய நேர்ந்தால் உயர்ந்தபட்ச காலநிலை மாறுபாடுகளினால் உயர்ந்தபட்ச மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு துருவம் "கோடைக்காலத்தில்" சூரியனை நோக்கியும் "குளிர்காலத்தில்" சூரியனுக்கு எதிர் திசையிலும் அமைந்திருக்கும். இதனை ஆராய்ந்த வான் கோள் அறிவியலாளர்கள் இது எல்லா பெரிய விலங்குகளையும் மற்றும் உயர்ந்த தாவரங்களையும் அழிக்கக்கூடும் என கருதுகின்றனர். எனினும் இது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாகும், மேலும் பூமியைப் போலவே சுழற்சியையும் சுழலும் காலத்தையும் உடைய ஆனால் பெரிய சந்திரனும் திரவ உட்கருவும் இல்லாத செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சி இதற்கு ஒரு தீர்வைக் கொடுக்கலாம். பூமியிலிருந்து பார்க்கும்பொழுது, சந்திரன் வெகு தொலைவில் இருப்பது போலவும் சூரியனைப் போன்றே சிறிய கோள வடிவத்திலும் காட்சியளிக்கிறது. இந்த இரண்டின் கோண அளவும் (அல்லது திட கோணம்) ஒத்திருக்கிறது ஏனெனில், சூரியனுடைய விட்டம் சந்திரனுடையதைப் போல 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், அது சந்திரனை விட 400 மடங்கு அதிக தொலைவிலும் இருக்கிறது. இது பூமியில் முழு மற்றும் வருடாந்திர கிரகணம் ஏற்பட காரணமாகவும் இருக்கின்றது. சந்திரனின் தோற்றம் பற்றிய உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact), செவ்வாயின் அளவை ஒத்த தேயியா (Theia) எனப்படும் மாதிரி கோளும் ஆதிகால பூமியும் மோதிக்கொண்டதனால் ஏற்ப்பட்டது. இந்தக் கூற்றின்படி (மற்றவைகளுடன்) சந்திரனில், பூமியை ஒப்பிடுகையில் குறைந்த அளவு இரும்பு மற்றும் ஆவியாகக்கூடிய தனிமங்கள் இருப்பதும் மற்றும் அதனுடைய கட்டமைப்பு ஏறக்குறைய பூமியின் மேலோட்டை ஒத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. பூமிக்கு குறைந்தது இரண்டு துணை-சுற்று பெரு விண்கற்கள், 3753 க்ருதினே மற்றும் 2002 AA என இருக்கிறது. ஒரு கோள், உயிர்களை தக்க வைத்துக் கொள்ளுமானால் உயிர்கள் அங்கே தோன்றாவிடினும் அது உயிர்கள் புழங்கத்தக்கதாக கருதப்படுகிறது. பூமி (தற்போதைய கூற்றுகளின் படி) உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய திரவ நீர், சுற்றுச் சூழலில் கடினமான உயிர் வேதியல் மூலக்கூறுகள் உருவாகும் தன்மை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், அதன் சுழற்சியில் காணப்படும் முரண், சுழலும் வேகம், அச்சுச் சாய்வு, புவியின் வரலாறு, வளிமண்டல தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாக்கும் காந்தப்புலன் இவையாவும் இந்த கிரகத்தில் உயிர்கள் உருவாக மற்றும் தக்க வைத்துக் கொள்ள காரணிகளாகச் செயல்பட்டுள்ளன. புவியின் உயிர்கள் சேர்ந்து அதன் "உயிர்க்கோள"த்தை அமைக்கின்றது. இந்த உயிர்க்கோளம் பூமியில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகி பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது. அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக தற்போது நாமறிவோம். சில அறிவியலாளர்கள் பூமியைப் போன்ற உயிர்க்கோளம் அரிதானது என நம்புகின்றனர். இந்த உயிர்க் கோளம் பல உயிர்க்கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒத்த தாவர மற்றும் விலங்கு வகைகளை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் நிலநீர்க்கோடு மற்றும் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள உயரம் இரண்டும் உயிர்க்கட்டுகளைப் பிரிக்கிறது. ஆர்க்டிக், அண்டார்க்டிக் வளையங்களுக்குள் அல்லது அதிக உயரமான இடங்களிலும் காணப்படும் நில உயிர்க்கட்டுகளில் மிக அரிதாகவே தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன, ஆனால் பூமத்திய ரேகை அருகே காணப்படும் உயிர்க்கட்டில் நீண்ட பலவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. பூமி, பயனுள்ள பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் பல வளங்களை மனிதனுக்கு அளிக்கிறது. இவற்றில் சில புதுப்பிக்க இயலாத வளங்கள் (non-renewable), அதாவது தாது எரிபொருள் போன்றவை குறுகிய காலத்தில் உருவாவதில்லை. அதிக அளவிலான தொல்லுயிர் படிம எரிபொருட்கள் பூமியின் மேலோட்டிலிருந்து கிடைக்கின்றது, அவை நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு மற்றும் மீத்தேன் கிளாத்ரேட்டுகளாம். இந்த எரிபொருட்களை ஆற்றல் உருவாக்குதலுக்கும், வேதி பொருட்கள் உருவாக்க முன்னோடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் மேலோட்டில் கனிம தாதுக்கள் படிமங்களாக தாது உருவாக்கல் மூலம் மற்றும் அரித்தல், பலகை டெக்டோனிக் மூலம் உருவாகி படிந்துள்ளன. இவை உலோகம் மற்றும் உபயோகமுள்ள தனிமங்கள் உருவாக்குவதற்கு ஒருநிலைப்பட்ட மூலமாக பயன்படுத்தப்படுகிறது. புவியின் உயிர்க்கோளம் மனிதனுக்குத் தேவையான பல உயிர் பொருட்களை உருவாக்குகின்றது, இவை உணவு, மரம், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர்க்கழிவுகளின் மறுசுழற்சி ஆகியவையாகும். நில ஆதாரமான சூழலமைப்பு மேல்மண் மற்றும் தூயநீரை சார்ந்தும் மற்றும் கடல் சூழலமைப்பு நிலத்திலிருந்து கரைந்து கடலை அடையும் ஊட்ட பொருட்களைச் சார்ந்தும் உள்ளது. மனிதர்களும் நிலத்தில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். 1993 கணக்கெடுப்பின் படி, மனிதர்கள் உபயோகப்படுத்தும் நிலம் தோராயமாக: 1993 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி விவசாயம் செய்யப்படும் நிலம் 2,481,250 சதுர கி.மீ. பூமி மீதுள்ள பல இடங்கள் அதீதமான வானிலையால் அதாவது புயல், சூறாவளி, சுழல்காற்று ஆகியவற்றால் பாதிப்படைகின்றன. மேலும் பல இடங்களில் நில நடுக்கம், நில சறுக்கம், ஆழிப் பேரலைகள், எரிமலைகள், சுழற்காற்று, புதைகுழிகள், பனிப்புயல், வெள்ளம், வறட்சி மற்றும் விபத்துகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. பல இடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுப்புற மாசு, காற்று மற்றும் நீரை பாதித்ததோடல்லாமல், அமில மழை, நச்சுப்பொருட்கள், பயிரழித்தல் (மிகையான மேய்ச்சல், காட்டை அழித்தல், பாலைவனமாக்கல்), வன உயிர்கள் அழித்தல், உயிரினங்களின் மறைவு, மண் அழிப்பு, மண் மறைவு, மண் அரிப்பு மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறிமுகப்படுத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவினால் கோள வெதும்பல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதனால் பனிக்கட்டியாறு மற்றும் பனிக்கட்டி மலை (ice sheet) உருகுதல், அதீதமான வெப்பநிலை மாற்றங்கள், வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட அளவு உயருதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் எனக் கண்டறிந்துள்ளனர். பூமியின் மேல் வளிமண்டலத்தில் மனிதனால் அனுப்பப்பட்ட செயற்க்கைக்கோள்களில் 3,000 தான் தற்சமயம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை 8,000 செயற்க்கைகோள்களை உலக நாடுகள் அனுபிவைத்துள்ளன. இவை அனைத்தும் பூமிக்கு மேலே 250 கிலோ மீட்டர் முதல் 850 கிலோ மீட்டர்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. வரைபடவியல், வரைபடங்களைப் பற்றி அறிந்து, அவற்றை உருவாக்கும் முறை மற்றும் புவியியல் இவை இரண்டும் புவியை வரையறுக்க உதவியாய் இருந்தன. ஆய்வின் மூலம் இடங்கள் மற்றும் தூரங்களை தீர்மானிப்பதும் மற்றும் சிறு அளவில் பயண திசை தீர்மானம் செய்தல், மேலும் ஒன்றின் நிலையையும் அதன் திசையும் கண்டறிதல் யாவும் வரைபடவியல் மற்றும் புவியியலோடு சேர்ந்து வளர்ந்து தேவையான மற்றும் பொருந்தக்கூடிய விளக்கங்களை அளித்திருக்கின்றது. நவம்பர் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புவியில் 6,740,000,000 மனிதர்கள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியனை எட்டும் எனவும் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.2 பில்லியனை எட்டும் எனவும் நம்பப்படுகிறது. இந்த வளர்ச்சி வளர்ந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நெருக்கம் உலகில் வெவ்வேறு விதமாக உள்ளது, ஆனால் பெரும்பான்மையினர் ஆசியாவில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள் தொகையில் 60% மக்கள் கிராமபுரங்களில் அல்லாமல் நகரங்களில் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனிதன் வாழ உகந்ததாக கணக்கெடுப்பு காட்டுகின்றது மேலும் மூன்றில் ஒரு பங்கு நீராலும் மற்றும் நிலத்தில் பாதி பாலைவனமாகவோ,(14%) உயர்ந்த மலைகளாகவோ (27%), அல்லது குறைந்த தகுதி உடைய இடங்களாகவோ உள்ளன. புவியின் வடகோடியில் இருக்கும் நிரந்தர குடியிருப்பு கனடா நாட்டிலுள்ள நுனாவட் ("Nunavut") மாகாணத்திலுள்ள, எல்லெஸ்மியர் தீவிலுள்ள ("Ellesmere") அலர்ட் ("Alert") நகரமாகும்.(82°28′N) அதே போன்று தென் கோடியில் இருக்கும் குடியிருப்பு, அண்டார்க்டிகாவில் தென் துருவத்திலிருக்கும், அமண்ட்சன் - ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும். (90°S) சுதந்திர ஏகாதிபத்ய நாடுகள் அன்டார்ட்டிகாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, பூமியின் மொத்த நிலப்பரப்பையும் ஆக்ரமித்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் படி பூமியில் 201 ஏகாதிபத்திய நாடுகள் உள்ளன இதில் 192 ஐக்கிய நாடுகளின் அங்கத்தினராக இருக்கும் நாடுகளும் அடங்கும். இதைத்தவிர 59 சார்ந்த இடங்களும், பல தனித்தியங்கும் இடங்களும் மற்றும் சர்ச்சைக்குரிய இடங்களும் இவற்றில் அடங்கும். புவியின் வரலாற்றில் அதன் மொத்த பரப்பும் ஓர் ஏகாதிபத்திய அரசின் கீழ் இருந்ததில்லை, ஆனால் பலமுறை பல நாடுகள் மொத்த உலக அதிகாரத்தையும் பெற முயற்சித்து தோல்வியுற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு, இது நாடுகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை போர்கள் மூலமல்லாது சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள நிறுவப்பட்டது. இருந்தாலும் இது ஓர் உலக அரசாங்கமன்று. ஐ.நா சபை சர்வதேச சட்டத்தை அளித்து, பொதுவான விதிகளைக் கடைபிடிக்கின்றது, மேலும் அங்கத்தினர்களால் ஒரு சேர தீர்மானிக்கும் போது ஆயுதமேற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர், ஐநா சபை பெரும்பாலும் சர்வதேச அரசாங்க விவகாரங்களைத் தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. பூமியை சுற்றிய முதல் மனிதர் யூரி காகரின் ஆவார், இவர் ஏப்ரல் 12, 1961 அன்று இதைச் செய்தார். 2004ஆம் ஆண்டு வரை மொத்தம் 400 மனிதர்கள் வெளி அண்டத்திற்குச் சென்று மீண்டும் பூமியை அடைந்துள்ளனர், மேலும் இதில் அப்போலோ திட்டத்தின் கீழ் பனிரெண்டு பேர் சந்திரனில் நடந்துள்ளனர். பொதுவாக விண்வெளியில் வாழக்கூடிய மனிதர்களாக இருப்பவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் வசிப்பவர்கள் தான். இந்த மையத்தில் இருக்கும் மூன்று நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர். இதுவரையில் பூமியிலிருந்து அதிகமான தூரத்தை மனிதர்கள் 1970 ஆம் ஆண்டில் அப்போல்லோ 13 விண்கலத்தில் பூமியிலிருந்து 400,171 கி.மீ. தூரத்தில் கடந்துள்ளனர். புவிக்கு ஆங்கிலத்தில் "எர்த்" (Earth) என்ற பெயர் இதற்கு நிலம் அல்லது மண் என்ற பொருள்படும் ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையான "எர்டா" (erda) என்பதிலிருந்து உருவானது. பழங்கால ஆங்கிலத்தில் இது "இயோர்த்" (eorthe) என்றும் இடைக்கால ஆங்கிலத்தில் "எர்தெ" (erthe) என்றும் ஆனது. புவியின் வானியல் சின்னம் ஒரு வட்டத்தைச் சார்ந்த கூட்டல் குறியை உள்ளடக்கி இருந்தது. தமிழில், ஆர்(பெரியது) --> தர் --> தரை(terra) என்றாகும். மற்றும், ஓலா--> உலா --> நெலா --> நிலா -> நிலம் என்றும் ஆகும். புவியை ஒரு தெய்வமாக, குறிப்பாக ஒரு பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடுகின்றனர். பல கலாச்சாரத்தில் பெண் தெய்வத்தை, தாய் மண் என்று அழைப்பதோடு, மனித வள தெய்வமாக உருவகப்படுத்துகின்றனர். பல மதங்களின் படைப்பு இதிகாசங்களில் புவி உருவான வரலாறு பற்றி கூறும் போது புவி அதிக சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் அல்லது தெய்வங்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. பல்வேறு சமயப் பிரிவுகள், அடிப்படைவாத பிராட்டஸ்டண்ட் பிரிவினர் அல்லது இஸ்லாம் சமயத்தவர், புனித உரைகளில் படைப்பு இதிகாசத்தை பற்றிய தமது விளக்கங்கள் உண்மையானவை அவை உலகம் உருவான விதம் மற்றும் உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய அறிவியல் விளக்கங்களுடன் அல்லது அவற்றிற்கு பதிலாக அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களை அறிவியல் சமூகம் மற்றும் மற்ற சமய குழுக்கள் எதிர்க்கின்றன. இதற்கு பிரபலமான எடுத்துக்காட்டு படைப்பு பரிணாம விவாதம். பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியுள்ளது ஆனால் இதுவே மனிதன் உலகை சுற்றி வந்து பார்த்த பிறகு உலகம் உருண்டையானது தான் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. விண்வெளி கலங்களில் வெளியே பறந்து அண்டத்திலிருந்து பூமியை பார்க்கும் போது அதன் பரிமாணம் வேறுபட்டதாய் தெரிந்தது, அதாவது தற்போது புவியின் உயிர்க்கோளம் என்பது உலகளாவிய நோக்கிலேயே கருதப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பு வளரும் சுற்றுசூழ் பாதுகாப்பு அமைப்புகள் மனிதரால் புவிக்கு ஏற்படும் மாறுதல்கள் மற்றும் கேடுகளைப் பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளன. செவ்வாய் (கோள்) செவ்வாய் ("Mars") சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் "செவ்வாய்" என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம். செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது. செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது. எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன. பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது. செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது. தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும். செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.. வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ். ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும். பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும். பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும். திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது. செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover). இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழன் (கோள்) வியாழன் ("Jupiter") என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்; மற்ற இரு பெருங்கோள்களான யுரேனசு மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டும் பனிப் பெருங்கோள்கள் ஆகும். பழங்காலத்திலேயே வியாழன் கோளைப் பற்றி வானியலாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். கதிரவ ஒளியை எதிரொளிக்கும் திறமை காரணமாக நிலவு மற்றும் வெள்ளியை அடுத்து வியாழனே இரவு வானில் புலப்படும் மூன்றாவது வெளிச்சமான பொருளாக உள்ளது. இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது. புறக்கோள்களில் ஒன்றான வியாழன் ஒரு வாயுக்கள் திரண்ட கோளம் ஆகும். இது கனமான உலோகங்கள் நிறைந்த பாறை உட்கருவைக் கொண்டிருந்தாலும், மற்ற பெருங்கோள்களைப் போல் இதன் மேற்பரப்பும் திடமின்றி உள்ளது. வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும். புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. கதிரவ சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கதிரவனைச் சுற்றி வருகிறது.புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் கதிரவனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. இந்த வளிமம் பெருங்கோளின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது. வியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட "நியூ ஹரைசன்ஸ்" விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும். வியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப் பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் ஆக உள்ளது. 1.326 கி/செமீ அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும். வியாழனின் வளிமண்டலம் உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும். வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும். வியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும் அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண "மண்டலங்களாகவும்" கருவண்ண "பட்டைகளாகவும்" வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கிமீ/ம) ஆக உள்ளன. இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது. மேகப்படலம் ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது. வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை. உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம். வியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புற ஊதாக் கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன. வியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது. வியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம். இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை. முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன. இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும். அமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது. சனி (கோள்) சனி ("Saturn") சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும். புவியின் அடர்த்தியில் எட்டில் ஒருபங்கே இருந்தபோதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது. சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது. சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் ("Titan"), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் "குரோநோசு" (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான "சாட்டர்னஸ்" நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம்(♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது. சனியின் புறப்பரப்பு பெரும்பாலும் வளிமங்களால் ஆனதால் அது வளி அரக்கக்கோள் எனப்படுகின்றது. இருப்பினும் சனிக்கு திண்மையான உள்ளகம் இருக்கலாம். சனி தன்னைத்தானே சுற்றுவதால் அதற்கு பருநடு நீளுருண்டை வடிவம் அமைந்துள்ளது; அதாவது, முனையங்களில் தட்டையாகவும் நடுப்பகுதியில் பருத்தும் காணப்படுகின்றது. நடுக்கோட்டு ஆரத்திற்கும் முனைய ஆரத்திற்கும் 10% வரையிலான வேறுபாடுள்ளது: முறையே 60,268 கிமீ எதிர் 54,364 கிமீ. சூரியக் குடும்பத்தின் மற்ற வளி அரக்கக்கோள்களான வியாழன், யுரேனசு, நெப்டியூனும் இதே போன்று பருத்தநடுவத்தைக் கொண்டுள்ள போதிலும் அவற்றில் இந்தளவிற்கு வேறுபாடில்லை. சூரியக் குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ளக் கோள் சனி மட்டுமே ஆகும்—ஏறத்தாழ 30% குறைவு. சனியின் கருவம் நீரை விட அடர்த்திக் கூடுதலாக இருப்பினும் வளிநிறைந்த புறப்பரப்பால் சராசரி சாரடர்த்தி 0.69 கி/செமீ ஆக உள்ளது. வியாழனின் நிறை புவியினுடையதை விட 318 மடங்காகும், ஆனால் சனியினுடையது 95 மடங்கே ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் நிறையில் 92% வியாழன்,சனிக் கோள்களினதாகும். சனவரி 8, 2015இல் சனிக்கோளின் மையத்தையும் அதன் நிலவுகளின் மையங்களையும் துல்லியமாக கண்டறிந்துள்ளதாக அறிவித்தது. கிரக வளையங்களைக் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் , மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன . சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்கள் என்பது ஒரு கோட்பாடு . சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு. அக்டோபர் 6, 2009 அன்று சனியின் பூமத்திய தட்டிலிருந்து 27 கோணலாக , போஎபெயின் வட்டப்பாதையில் ஒரு வெளி வட்டு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனியின் வளிமண்டலத்தின் வெளி பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன் கொண்டது. மற்றும் அசிடிலின்,ஈதேன் மற்றும் பாஸ்பீன் மிக சிறிய அளவில் உள்ளன. சனியின் மேகங்கள் வியாழன் காணப்படும் மேகப்பட்டைகள் போன்ற, ஒரு பட்டை முறையில் பூமத்தியரேகையில் பரந்துள்ளன. சனி குறைந்த மேக அடுக்கு நீர் பனி சேர்ந்து 10 கிமீ (6 மைல்) தடித்தது. இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது.மேல் அடுக்கு, 77 கிமீ (48 மைல்) தடித்த, அம்மோனியம் ஹைட்ரோ சல்பைடு பனியால் உருவாக்கப்பட்டது.அதற்கு மேலே உயர்ந்த அடுக்கு ஹைட்ரஜனால் உருவாக்கப்பட்டது சனியைச் சுற்றி அறுபத்தி ஒன்று நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன. 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார். அதைபார்த்து கலிலியோ வளையங்களை ஒன்றை மற்றொரு தொட்ட மூன்று தனித்தனி கிரகங்கள் என்று நினைத்தார்.1655 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் சனியை சுற்றிய வளையங்களை கண்டறிந்த முதல் அதிகாரபூர்வ நபராவார். கலிலி காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், அவர் சனி "எங்கும் தொட்டு, ஒரு மெல்லிய, தட்டையான,வளையத்தால் சூழப்பட்டுள்ளது என கண்டறிந்தார். சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில ஜெர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சனி முதன்முதலில் செப்டம்பர் 1979 ல் பயனீர் 11 விண்கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.கிரகத்தின் மேகத்தின் மேலே 20,000 கி.மீ. ( 12,427 மைல்) உயரத்தில் பறந்தது.இது கிரகத்தின் மற்றும் அதன் சந்திரன்களை ஒரு சில புகைப்படங்கள் எடுத்தது ஆனால் தரம் குறைவாக இருந்தன.இதன்மூலம் F வளையம் என்று ஒரு புதிய , மெல்லிய வளையம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சன் நோக்கி பார்த்தபோது இருட்டில் மோதிரத்தை இடைவெளிகளை விட பிரகாசமான தோன்றும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இது இடைவெளிகள் காலியாக இல்லை காட்டுகிறது. நவம்பர் 1980 இல் , வாயேஜர் 1 சனியை அடைந்தது.இந்த புகைப்படங்கள் நிலவுகள் மேற்பரப்பில் அம்சங்கள் காட்ட முடிந்தது.வாயேஜர் 1 டைட்டன் அடைந்தது.மற்றும் அதன் வளிமண்டலம் பற்றி நிறைய தகவல் கிடைத்தது. ஜூலை 1 , 2004 அன்று , காசினி ஹூவாஜன்ஸ் சனி சுற்றுப்பாதையில் நுழைந்தது. டிசம்பர் 25 , 2004 அன்று , ஹிகென்ஸ் டைட்டன் மேற்பரப்பில் நுழைந்து ஜனவரி 14 , 2005 அன்று அங்கு தரையிறங்கியது. இது ஒரு உலர் மேற்பரப்பில் இறங்கியது.மேலும் டைட்டனின் வடக்கு துருவத்தில் அருகே ஹைட்ரோகார்பன் ஏரிகள் அமைந்துள்ளது என்று ஜூலை 2006 ல் நிரூபிக்கப்பட்டது. காசினி 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சனியில் நிகழும் மின்னல் பதிவுசெய்யப்பட்டது.இந்த மின்னகளின் சக்தி பூமியில் சக்தி வாய்ந்த மின்னலை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. யுரேனசு யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை. யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும். இக்கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கிரகம் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் யுரேனசுக்கும் இருந்தது. இதனுடைய வளி மண்டலம் 83 சதவீதம் ஹைடரசனையும், 15 சதவீதம் ஹீலியமும் மீதி அளவில் மீத்தேனையும் ஹைட்ரோ கார்பன்களையும் கொண்டுள்ளது. அதனால் இது வாயுக்கிரகங்களிலும் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வாயுக்கிரகங்கள் வியாழனும், சனியும் ஆகும். சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன. இந்த வளையங்கள் யுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை யுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு யுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள் யுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்ட பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன. 1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை. சூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். நெப்டியூன் நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும்.இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது.இதனை சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது. நெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது. இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை. நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும். நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும். இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர். புளூட்டோ புளூட்டோ ("Pluto", வழமையான குறியீடு: 134340 புளூட்டோ), என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன. கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள் புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது. கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும். இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும். ஸ்டீவன் ஹாக்கிங் ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் ("Stephen William Hawking", ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார். ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது "காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன. 21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார். அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆக்கிங்கு 1942 சனவரி 8 இல் இங்கிலாந்து, ஆக்சுபோர்டு நகரில் பிராங்கு (1905–1986), இசபெல் ஆக்கிங்கு (1915–2013) ஆகியோருக்கு, கலீலியோ கலிலியின் 300வது நினைவு நாளில் பிறந்தார். ஆக்கிங்கின் தாயார் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைவழிப் பேரனார் ஒரு வேளாண்மை நிலத்தை வாங்கிப் பின்னர், பிரித்தானியாவில் ஏற்பட்ட வேளாண்மை தளர்வு காரணமாக, கடன் நொடிப்பு நிலைக்கு ஆளானார். ஆனால் தந்தை வழிப் பாட்டியார், வீட்டிலேயே ஒரு பாடசாலையை ஆரம்பித்து, பொருளாதார நிலையை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து குடும்பத்தைக் காப்பாற்றினார். குடும்ப நிதி நெருக்கடியிலும், ஆக்கிங்கின் பெற்றோர் இருவரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். தந்தை மருத்துவத்துறையிலும், தாயார் மெய்யியல், விமான]] மற்றும் [[படகு]] ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, [[கிறிஸ்தவம்]] மற்றும் [[புலன் புறத்தெரிவு]] போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். 1958 இல், அவர்களது [[கணிதம்|கணித]] ஆசிரியரின் உதவியுடன், [[கடிகாரம்|கடிகாரத்தின்]] பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் [[மீளுருவாக்கம்|மீளுருவாக்க]]ப் பாகங்களைக் கொண்டு ஒரு [[கணினி]]யை உருவாக்கினார்கள். பாடசாலையில் அவர் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைன்]] என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை. ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, [[அறிவியல்]] பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித [[ஆசிரியர்|ஆசிரியரால்]] உந்தப்பட்டு, [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தைத் தெரிவு செய்தார். அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் [[மருத்துவம்|மருத்துவத்]] துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் [[இயற்பியல்|இயற்பியலையும்]], [[வேதியியல்|வேதியியலையும்]] தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார். முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது. அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, [[அறிவியல் புனைவு]] போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார். அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது. அவர் ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படித்த 3 ஆண்டுகளில், தான் 1000 மணித்தியாலங்கள் படித்திருப்பதாகக் கணித்ததுடன், இதனால் தனக்கு இறுதிப் பரீட்சை, சவாலானதாக அமையும் என்றும் கணித்து, தான் நிகழ்வுசார் அறிவைவிட, [[கோட்பாட்டு இயற்பியல்]] பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரும்பியவாறு, [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில்]], [[அண்டவியல்]] துறையில் பட்டப் படிப்பைத் தொடர வேண்டுமெனின், அதற்கு முதலாம் பிரிவில் நன்மதிப்பு பெற்றிருக்க வேண்டும். அந்தக் கவலையினால், அவரால் முதல்நாள் இரவு சரியாகத் தூங்க முடியாமல், அவரது இறுதிப் பரீட்சை முடிவு முதலாம், இரண்டாம் நிலைகளுக்கு இடையில் வந்திருந்ததனால், அவர் ஒரு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில், அவரது திட்டத்தைக் கூறும்படி கேட்கப்பட்டபோது, 'முதலாம் பிரிவு கிடைத்தால் தான் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் போக எண்ணியிருப்பதாகவும், இரண்டாவது நிலையானால், ஆக்சுபோர்ட்டிலேயே தொடர்ந்து படிப்பதாகவும், அதனால் நீங்கள் முதலாவது பிரிவை அளிப்பீர்கள் என நினைக்கிறேன்' என்றும் பதிலளித்தார். நேர்முகப் பரீட்சையில் இருந்தவர்களுக்கு ஆக்கிங் மிகுந்த அறிவாளி என்பதனை உணர முடிந்ததனால், அவருக்கு முதலாம் பிரிவு நன்மதிப்பை அளித்தார்கள். இயற்கை அறிவியலில் தனது முதல்நிலை பட்டப்படிப்பை முடித்த அவர், தனது ஒரு நண்பருடன் [[ஈரான்|ஈரானுக்குப்]] போய்விட்டு வந்து, ஒக்டோபர் 1962 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவருக்கு முதலாவது ஆண்டு சிறிது கடுமையாக அமைந்தது. அவருக்கான மேற்பார்வையாளராக, பரவலாக அனைவராலும் அறியப்பட்ட [[வானியல் வல்லுநர்]] [[பிரெட் ஆயில்]] என்பவர் அல்லாமல், நவீன அண்டவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Dennis William Sciama என்பவர் கிடைத்ததில், ஆக்கிங் ஏமாற்றமடைந்தார். அத்துடன், [[பொதுச் சார்புக் கோட்பாடு]] மற்றும் [[அண்டவியல்]] தொடர்பான வேலைகளுக்குத் தனக்கு அங்கு கிடைக்கும் [[கணிதவியல்]] பயிற்சி போதாது என்று நினைத்தார். அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் தொடர்ந்து படிக்கலாம் என்று கூறினால், இனிப் படிப்பதில் என்ன பயன் என்றெண்ணி [[மனத் தளர்ச்சி|மனத் தளர்ச்சிக்கு]] உள்ளானார். மருத்துவர்கள் எதிர்வு கூறியதைவிட மிக மெதுவாகவே அவரது நோய் கூடிக்கொண்டு சென்றது. அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம், மற்றும் சரியாகப் பேசுவதில் சிரமம் என்பன இருந்தாலும், அவர் இன்னும் இரு ஆண்டுகளுக்கே உயிர் வாழ்வார் என்ற கூற்று சரியானதாக இருக்கவில்லை. 1964 ஜூனில் ஒரு விரிவுரையின்போது, பிரெட் ஆயில் மற்றும் அவரது ஒரு மாணவர் இருவரினதும் வேலை தொடர்பில் ஆக்கிங் பகிரங்கமாக சவால் விட்டபோது, அவரது அறிவு தொடர்பான நன்மதிப்பு கூடிக்கொண்டு போனது. ஆக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த [[பெரு வெடிப்புக் கோட்பாடு]], [[:en:Steady State]] போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன. [[உரோசர் பென்ரோசு]] என்பவரின் கருந்துளையின் மையத்திலுள்ள, [[[[வெளிநேரம்|வெளிநேர]] சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965 இல் எழுதினார். அந்தக் கட்டுரை 1966 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார். பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார். [[File:Stephen Hawking 050506.jpg|thumb|left|alt=Stephen Hawking sitting in his wheelchair inside|upright|Hawking at the to inaugurate the Laboratory of Astronomy and Particles in Paris, and the French release of his work "[[God Created the Integers]]", 5 May 2006]] ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில் [[:en:The Universe in a Nutshell]], பரவலாக அதிகமானோருக்குக் கிடைப்பதற்காக முதலே வெளியிடப்பட்டிருந்த [[காலம் (நூல்)|காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்]] என்ற நூலின் மேம்படுத்திய பதிப்பு, [[:en:God Created the Integers]] என்னும் நூல்களை முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில்]] இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், [[துல்லிய ஒத்தியைவு பேரண்டம்]] ([[:en:Fine-tuned Universe]]) என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது. [[File:Weston Library Opening by John Cairns 20.3.15-139.jpg|thumb|right|Hawking with University of Oxford librarian [[Richard Ovenden]] (left) and naturalist [[David Attenborough]] (right) at the opening of the [[Weston Library]], Oxford, in March 2015. Ovenden awarded the [[Bodley Medal]] to Hawking and Attenborough at the ceremony.]] ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார். 2003 ஆம் ஆண்டளவில், [[கருந்துளை]]த் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல [[இயற்பியலாளர்|இயற்பியலாளர்களிடையே]] அதிகரித்து வந்தது. 2004 இல் [[டப்லின்]] செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட [[இடவியல்|இடவியலைக்]] கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார். [[File:Stephen Hawking in Stockholm, 2015.jpg|thumb|left|Hawking holding a public lecture at the [[Stockholm Waterfront]] congress centre, 24 August 2015]] இன்னுமொரு நீண்ட காலமாக நடந்து வந்த அறிவியல் சர்ச்சையின் பகுதியாக, ஆக்கிங் [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஒரு துகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்று அழுத்தமாக விவாதித்தும், பந்தயம் செய்தும் வந்துள்ளார். 1964 இல், [[பீட்டர் ஹிக்ஸ்]] என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையின்படி, இவ்வாறான ஒரு துகள் இருக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் 2002 இலும், மீண்டும் 2008 இலும் இது தொடர்பாக ஆக்கிங், ஹிக்ஸ் ஆகிய இருவருக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நிகழ்ந்தது. அப்போது பெரும்புகழ் கொண்டவராக ஆக்கிங் இருப்பதனால், ஏனையோருக்குக் கிடைக்காத நம்பகத்தன்மை, அவரது கருத்துக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 2012 இல், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் [[பெரிய ஆட்ரான் மோதுவி]] அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் துகள் கண்டறியப்பட்டது. தான் தனது பந்தயத்தில் தோற்றுவிட்டதாக ஆக்கிங் விரைவாகவே ஒத்துக்கொண்டதுடன் ஹிக்ஸ்சிற்கு இயற்பியலாளருக்கான [[நோபல் பரிசு]] கிடைக்க வேண்டும் எனக் கூறினார். 2013 இல் ஜிக்ஸ்சிற்கு இந்த நோபல் பரிசு கிடைத்தது. 2007 இல் ஆக்கிங்கும், அவரது மகள் லூசியும் இணைந்து [[:en:George's Secret Key to the Universe]] என்ற சிறுவர் நூலை வெளியிட்டார்கள். அதில் ஆக்கிங் குடும்பத்தினரை ஒத்த கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றங்களை அமைத்து, அணுகக்கூடிய வகையில் இயற்பியல் கொள்கைகளை விளக்கி, அந்த நூலை வடிவமைத்தார்கள். 2009, 2011, 2014, 2016 ஆண்டுகளில் இதன் தொடர் நூல்கள் வெளியிடப்பட்டன. 2002 இல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] மட்டத்தில் நிகழ்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்கிங், 100 சிறந்த பிரித்தானியர்கள் பட்டியலில் இடம்பெற்றார். 2006 இல் [[அரச கழகம்|அரச கழகத்திடமிருந்து]] கொப்லே பதக்கத்தையும் ([[:en:Copley Medal]]), 2009 இல் அமெரிக்காவின் மிகவும் மதிப்புள்ள விருதான [[:en:Presidential Medal of Freedom]] என்ற விருதையும் , 2013 இல் [[உருசியா]]வின் [[:en:Special Fundamental Physics Prize]] என்ற விருதையும் பெற்றார். [[சான் சல்வடோர்|சான் சல்வடோரில்]] உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் அறிவியல் அருங்காட்சியகம், [[கேம்பிரிட்ச்]]சில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் கட்டடம், [[கனடா]]விலுள்ள [[:en:Perimeter Institute for Theoretical Physics]] இலுள்ள ஸ்டீவன் ஹாக்கிங் நிலையம், ஆகிய கட்டடங்கள் உட்பட ஆக்கிங்கின் பெயரில் பல கட்டடங்கள் அமைந்துள்ளன. நேரம் தொடர்பில் ஆக்கிங் கொண்டுள்ள கருத்துக்கள் காரணமாக, கேம்பிரிட்ச்சிலுள்ள [[:en:Corpus Christi College, Cambridge|Corpus Christi College]]இன் [[:en:Corpus Clock]] ஐ 2008 செப்டம்பரில் திறந்து வைத்தார். [[File:Physicist Stephen Hawking in Zero Gravity NASA.jpg|alt=Hawking, without his wheelchair, floating weightless in the air inside a plane|thumb|upright=1.15|Hawking taking a zero-gravity flight in a [[reduced-gravity aircraft]], 2007]] 2006 இல், பி.பி.சி க்கு அளித்த பேட்டியொன்றில், விண்வெளிக்குச் செல்வது தனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்று கூறினார். இதைக் கேட்ட [[றிச்சர்ட் பிரான்சன்|ரிச்சர்டு பிரான்சன்]], இலவசமாக விண்வெளிப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்ய முடியும் என்று கூறியபோது ஆக்கிங் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆசையுடன், விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், உடற்குறை உள்ளவர்களுடைய ஆற்றலை எடுத்துக்காட்டவும் விரும்பினார். 26 ஏப்ரல் 2007-இல், இவருக்கென்று வடிவமைக்கப்பட்ட Boeing 727–200 தாரை வானூர்தியில், [[புளோரிடா]]வின் கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். [[ஜனவரி 8]], 2007-இல் இவருடைய 65-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் செய்யப் போவதாக அறிவித்தார். [[பில்லியனர்|பெருஞ்செல்வர்]] ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிப் போக்குவரத்துச் சேவையின் துணையால், 2009-ஆம் ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில்(அதாவது, [[ஈர்ப்பு விசை|புவி ஈர்ப்பு]] இல்லாத இடத்தில்) நிலவுருண்டையைச் சுற்றி வர இருப்பதாகக் கூறினார். இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார். ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார். அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்தது. அவரது குடும்பத்தினர் அவர் அமைதியாக உயிர் துறந்ததாக அறிவித்துள்ளனர். அறிவியல் நூல்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இவர் எழுதியுள்ளார். இவரது இந்த நூல்களுக்குத் துணை ஆசிரியராக இவரது மகள் லூசி ([[:en:Lucy Hawking|Lucy]]) இருந்தார். [[பகுப்பு:அறிவியல் எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:1942 பிறப்புகள்]] [[பகுப்பு:2018 இறப்புகள்]] [[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள்]] [[பகுப்பு:மாற்றுத்திறனாளிகள்]] [[பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள்]] [[பகுப்பு:அண்டவியலாளர்கள்]] [[பகுப்பு:ஆங்கிலேய வானியலாளர்கள்]] [[பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்]] [[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்]] சாக்கிரட்டீசு சாக்கிரட்டீசு "(Socrates)" (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார்.மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் அல்லது சாக்ரடீசு வினா எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்... இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன. சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது . சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார். சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார். இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் . இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர். “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின. சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு ("elenchos") முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார். பிளேட்டோ பிளேட்டோ (Plato, (/ˈpleɪtoʊ/; Greek: Πλάτων "Plátōn", [plá.tɔːn] கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாதமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்கிரட்டீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்: பிளேட்டோவின் இளமைக் காலம் குறித்து விாிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவாின் இளமைக் காலம் குறித்த தகவல்கள் சிறிய அளவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பிளேட்டோ மிகவும் செல்வ செழிப்புமிக்க அரசியல் பாரம்பாியமுள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறாா். மேலும், கல்வியில் மிகச் சிறந்து விளங்கியுள்ளாா். பிளேட்டோ கல்வி கற்பதற்கு அவாின் தந்தை மிகவும் உதவியிருக்கிறாா். பிளேட்டோவிற்கு அவாின் தந்தை பல புகழ்ப் பெற்ற கல்வியாளா்களைக் கொண்டு இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்திருக்கிறாா். பிளேட்டோவின் பிறந்த சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பண்டையக் கால ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அவர் ஏதென்ஸில் அல்லது ஏஜினாவில் கி மு 429 மற்றும் 423 க்கு இடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பிளாட்டோவின் தாய் பெக்கிக்சே ஆவார், இவர் சார்மிசின் சகோதரி ஆவார். தன் வாழ்நாளில் பிளேட்டோ இத்தாலி, சிசிலி, எகிப்து, சைாின் போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கககூடும் எனக் கருதப்படுகிறது. தனது நாற்பதாவது வயதில் ஏதென்ஸ் நகருக்கு வந்த போது கெக்காடமஸ் என்ற பெயாில் மேற்கத்திய பள்ளி ஒன்றை நிறுவினாா். இது மேற்கத்திய நாடுகளில் தோற்றுவிக்ககப்பட்ட முதல் பள்ளியாகக் கருதப்படுகிறது. பிளேட்டோ சாக்கிரட்டீசின் மாணவர். இவருடைய அரசியல் கருத்துகள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இவை பல்வேறு துறைகளில் வல்லுநராக இருந்தார். கி.மு 387 ஆம் ஆண்டில் அத்தீனியன் என்ற பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் சிறந்த தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என விரும்பினார். இவருடைய அரசியல் கருத்துகள் செரக்யூஸை ஆண்டு வந்த டைனீஸஸ் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவருடைய அரசியல் கருத்துக்களைக் குடியரசு (நூல்) மற்றும் சட்டங்கள் (Laws) என்ற நூலில் எழுதியுள்ளார். பிளேட்டோவின் அரசியல் பாகுபாட்டின் விளக்கங்கள் மிகவும் கற்பனை நிறைந்தது. இவருடைய கற்பனையான விளக்கத்தைத் தன்னுடைய நூலான குடியரசுவில் தெளிவாகக் கூறியுள்ளார். இவருடைய அரசியல் பாகுபாட்டினை அரிஸ்டாட்டில் மற்றும் கால்வின் போன்றவர்கலுடன் ஒப்பிடலாம். பிளேட்டோவின் கருத்தின்படி ஒரு நாட்டின் தலைவன் என்பவன் மெய்யியல் தெரிந்த மன்னனேயாகும். ("Republic" 475c) இவருடைய கோட்பாடுகளின் படி மன்னன் சட்டத்திற்கும் , தன்னலத்திற்கும் அப்பாற்பட்டவன். அவ்வாறு இருப்பவனே ஒரு தலை சிறந்த தலைவனாக இருக்க முடியும் எனக் கருதினார். இவருடைய கருத்தின்படி மன்னன் என்பவன் முழு அதிகாரம் பெற்றவனாகவும், அவனை எதிர்த்து எவரும் வினா எழுப்ப இயலாது எனவும் கூறுகிறார். ஒரு நாட்டின் அமைதிக்கும் , நல்லாட்சிக்கும் நீதியே முக்கியமானதாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார். இவரது கற்பனையின் படி மன்னன் வரம்பிற்கு மீறிய அதிகாரங்களுடன் இருந்தாலும் இயற்கைக்கு எதிராகச் செயல்பட இயலாது. பிளேட்டோ சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஏழை - பணக்காரர் என்ற பிரிவு, நாட்டின் அளவு, நீதியின் தன்மை, கல்வி இவற்றையெல்லாம் விளக்கி உள்ளார். இவரது குடியரசு எனும் நூலில் பலவகையான அரசாங்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அவை மாற்றங்களுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். இவர் ஐந்து வகையான அரசாங்கங்கள் உள்ளன எனக் கூறியுள்ளார். அவையாவன, இவற்றில் முதலாவதாக இருப்பதும் மற்றும் கடைசியாக இருப்பதும் ஒருவரிடம் இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருசிலரிடம் இருக்கும் ஆட்சியையும் , நான்காவதாக இருப்பது பலபேரிடம் இருக்கும் ஆட்சியையும் குறிக்கிறது. இவற்றில் முதலாவதாக இருப்பது நல்ல ஒரு மனிதரிடம் இருப்பது . அவரே பிளோட்டோவின் தத்துவ மன்னர் ஆவார். இந்த அரசன் நீதியின் அடிப்படையிலேயே ஆட்சி செய்வான். ஆனால் காலப்போக்கில் அவன் தன்னுடைய பெருமைக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஆட்சி செய்வான். அவன் நீதியின் வழியில் செல்வதையும் மறந்து விடுவான். இவாறு ஆட்சி செலுத்தும் தனி மனிதனைப் பதவியில் இருந்து நீக்கி சொத்து (தத்துவம்) உள்ளவர்கள் மட்டும் அரசாங்கம் நடத்துவது செல்வர் ஆட்சி (Timocracy) என்று பிளேட்டோ கூறுகிறார். பிளேட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளேட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளேட்டோ எழுதியவற்றுக்குப் பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது. பிளேட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளைக் கற்பிக்கப் பயன்பட்டது. அரிசுட்டாட்டில் அரிசுட்டாட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ("Aristotle") (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்தியத் தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்தியத் தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிசுட்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்சியே ஆகும். அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அரிஸ்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் ஸ்டகிரா,ஷல்சிடிஸில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெஸாலோனிகி யிலிருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியாவின் மன்னர் அமயின்டாஸின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாஸிடோனியன் மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பதினெட்டு வயது நிரம்பிய அரிஸ்டாடில் பிளேட்டோவின் அகாடமியில் அவரது கல்வியை தொடர ஏதென்ஸ் சென்றார். அரிஸ்டாட்டில் கி.மு. 348/47 ஏதென்ஸ் விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அகாடமியில் கல்வி கற்றார்.பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிஸ்டாடில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் அசியா மைனருக்கு பயனத்தை மேற்கொண்டார். பயணத்தின் போது லெஸ்போஸ் என்னும் தீவின் விலங்கியல் மற்றும் தாவரவியல் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.அரிஸ்டாட்டில் ஹெர்மியாஸ் இன் வளர்ப்பு மகள் பிதியாஸைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிஸ்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிடோனியா மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க அவரது மகன் அலெக்சாண்டர்க்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிஸ்டாட்டில் மாசிடோனியா ராயல் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார்.அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயா வில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாடில். அலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி ஆகும். ஆனால்,அலெக்சாந்தருடன் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்களும் அவரை நம்பவில்லை.அதன் பின் அவர்கள் பிரிந்தனர். அலெக்சாந்தர் இறந்த பின்பு மாஸிடோனியனில் அரசியல் நிலைமை மாறியது. மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்க்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார். நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும் அரிஸ்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீஸ் ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர்கள் போன்றவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. நெப்போலியன் நெப்போலியன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: லியொனார்டோ டா வின்சி லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரி EAHCDWQNய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார். இலியனார்தோ தா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது. இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார். இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை. இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், "விட்டே" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார். இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது. 1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, "கிறிஸ்துவின் ஞானஸ்நானம்" என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது. 1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது. நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் "The Adoration of the Magi" என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது. 1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார். புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார். 1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை. 1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். 1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர். லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை. லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட "கடைசி விருந்து", மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது. லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது. மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது. புளோரன்சில், "அங்கியாரிப் போர்" என்ற தலைப்பில் பொது "மியூரல்" ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை. இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார். அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார். ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார். ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார். இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து. மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன. இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார். இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர். [[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய "[[Lives of the Most Excellent Painters, Sculptors, and Architects|கலைஞர்களின் வாழ்க்கைகள்]]", 1568 எனும் நூலில், இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்: [[File:Francois I recoit les derniers soupirs de Leonard de Vinci by Ingres.jpg|thumb|"பிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது", இங்கிரசு வரைந்த ஓவியம், 1818]] தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது. [[File:Leonardo da Vinci, Salvator Mundi, c.1500, oil on walnut, 45.4 × 65.6 cm.jpg|thumb|இலியனார்தோ தா வின்சி, அண்.1500, "[[Salvator Mundi (Leonardo)|சaல்வதார் முண்டி]]", வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ]] சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது. முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் "இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger)" எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் "இடைமாற்றம்" எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும். [[File:Leonardo-72-vacuum.jpg|thumb|இலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம்.]] [[பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்]] [[பகுப்பு:1452 பிறப்புகள்]] [[பகுப்பு:1519 இறப்புகள்]] [[பகுப்பு:எறிபடையியல் வல்லுனர்கள்]] [[பகுப்பு:இத்தாலிய உடற்கூற்றியலாளர்கள்]] [[பகுப்பு:இத்தாலியக் கட்டிடப் பொறியாளர்கள்]] [[பகுப்பு:இத்தாலியப் புதுமைப் புனைவாளர்கள்]] [[பகுப்பு:இத்தாலியப் படையியல் பொறியாளர்கள்]] [[பகுப்பு:இத்தாலிய உடலியக்கவியலாளர்கள்]] [[பகுப்பு:இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்கள்]] [[பகுப்பு: இத்தாலிய மறுமலர்ச்சி சிற்பிகள்]] [[பகுப்பு:கணிதவியல் கலைஞர்கள்]] [[பகுப்பு:மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள்]] [[பகுப்பு:மறுமலர்ச்சி ஓவியர்கள்]] [[பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்]] [[பகுப்பு:பாய்ம இயங்கியலாளர்கள்]] ஞாயிறு (விண்மீன்) ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் ("Sun") என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட ஒரு கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செயல்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. கதிரவன், புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாக விளங்கி வருகிறது. புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ள இதன் விட்டம் சுமார் 1.39 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இதன் நிறை புவியை விட 330,000 மடங்கு அதிகமானதாகும். இது கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் தோராயமாக 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. கதிரவனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஐட்ரசனும் (~73%) மீதமுள்ள பங்கில் பெரும்பாலும் ஈலியமும் (~25%) அவற்றுடன் சிறிய அளவிலான ஆக்சிஜன், கரிமம், இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட கனமான தனிமங்களும் உள்ளன. நிறமாலை வகைப்பாட்டின் அடிப்படையில் ஞாயிறு என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் (G2V) ஆகும். எனவே இது மஞ்சள் குறுமீன் என்று முறையற்ற வகையில் அழைக்கப்படுகிறது. எனினும் அதன் ஒளி மஞ்சளை விட வெள்ளை நிறத்திற்கே நெருக்கமானதாகும். இது சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மூலக்கூறு மேகத்தின் ஒரு பகுதியின் உள்ளே இருந்த பருப்பொருளின் ஈர்ப்புவிசைச் சுருக்கத்தில் இருந்து உருவானதாகும். அந்தப் பருப்பொருளின் பெரும்பகுதி, மையப் பகுதியில் ஒன்றுசேர்ந்து கதிரவனாக உருவெடுத்தது. மீதமிருந்தவை சுற்றுப்பாதை வட்டுக்களாகத் தட்டையடைந்து கதிரவ அமைப்பாக உருவானது. அதன் மையப் பகுதி மிகுந்த வெப்பமும் அடர்த்தியும் கொண்டதாக மாறி, கதிரவ உள்ளகத்தில் அணுக்கரு இணைவைத் தொடக்கியது. பெரும்பாலும் அனைத்து விண்மீன்களும் இந்த நிகழ்வின் மூலமே உருவானதாகக் கருதப்படுகிறது. கதிரவன் கிட்டத்தட்ட நடுத்தர வயதில் இருக்கிறது; இது நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த பிறகும் வியத்தகு முறையில் மாற்றமடையாது இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். இது தற்போது வினாடிக்கு சுமார் 600 மில்லியன் டன்கள் ஐட்ரசனை இணைத்து ஈலியமாக மாற்றி வருவதன் மூவம் வினாடிக்கு 4 மில்லியன் டன்கள் கொண்ட பருப்பொருளை ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கிறது. கதிரவனின் ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றிற்கு மூலமாக உள்ள இந்த ஆற்றல், கதிரவ உள்ளகத்தில் இருந்து விடுபட 10,000 முதல் 170,000 ஆண்டுகள் வரை எடுக்கும். தோராயமாக 5 பில்லியன் ஆண்டுகளுக்குள் கதிரவ உள்ளகத்தில் நிகழும் ஐட்ரசன் இணைவு குறைந்து, நீர்நிலைச் சமநிலையற்ற நிலைக்கு கதிரவன் வந்துவிடும். இதனால் கதிரவ மையத்தின் அளவும் வெப்பமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதேநேரம் அதன் வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து இறுதியில் ஒரு செம்பெருமீனாக மாற்றமடையும். அதன் அளவு தற்போது உள்ள புதன் மற்றும் வெள்ளியின் சுற்றுப்பாதையை விழுங்கிவிடுகின்ற அளவிற்கு பெரியதாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே அப்போது புவி வாழத்தகுந்த இடமாக மாறிவிடும். அதன்பிறகு கதிரவன் தன் வெளி அடுக்குகளை இழந்து வெண் குறுமீன் எனப்படும் அடர்த்தியான குளிரும் விண்மீனாக மாற்றமடையும். இனி கதிரவனால் இணைப்பின் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது. எனினும் அது ஒளிர்வுடனும் அதன் முந்தைய இணைப்புகளில் இருந்து கிடைத்த வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டும் இருக்கும். "கதிரவன்" என்றால் "ஒளிக்கதிர்களை உடையவன்" என்று பொருள். "ஞாயிறு" என்பது "நாயிறு" என்ற சொல்லின் மரூஉ ஆகும். இதற்கு "கோள்களின் தலைவன்" என்று பொருள். இதுதவிர பகலவன், அனலி, வெய்யோன் போன்ற பல தமிழ்ப்பெயர்கள் கதிரவனுக்கு உண்டு. சூரியன் என்பது கதிரவனின் வடமொழிப் பெயராகும். கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது கதிரவ அமைப்பின் நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது . +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவன் உருவாக அதன் அருகில் இருந்த மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியியல் தனிமங்கள் மிகுந்த கதிரவன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக வைக்கிறது. புவியின் வானத்தில் தெரியும் வானியல் பொருட்களில் கதிரவனே ஒளிமிக்கதாகும். வானில் இதற்கடுத்த ஒளிர்வுமிக்க விண்மீனான சீரியசை விட இது 13 பில்லியன் மடங்கு ஒளிர்வுமிக்கதாகும். புவியின் மையத்தில் இருந்து கதிரவ மையத்தின் சராசரி தூரம் 1 வானியல் அலகு ஆகும். எனினும் இந்தத் தொலைவு, சனவரி மாதத்தில் கதிரவ அண்மைநிலையிலும் சூலை மாதத்தில் கதிரவச் சேய்மைநிலையிலும் புவி இருக்கும்போது வேறுபடும். இந்த சராசரி தொலைவில் கதிரவ கிடைமட்டத்தில் இருந்து புவியின் கிடைமட்டத்திற்கு ஒளி 8 நிமிடங்கள் 19 நொடிகளில் வந்தடைகிறது. அதேநேரம் கதிரவன் மற்றும் புவியின் அண்மைப்பகுதியில் இருந்து ஒளி சென்றடைய இரு நொடிகளுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறது. இந்தக் கதிரவ ஒளியின் ஆற்றல் பெரும்பாலும் புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மைத் தேவையான ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. மேலும் இது புவியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவற்றையும் இயக்குகிறது. கதிரவன் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருக்கவில்லை. எனினும் ஒளிக்கோளத்தின் மேல் உள்ள உயரம் அதிகரிப்பதால் அதன் அடர்த்தி மிக வேகமாகக் குறைந்து வருகிறது. கதிரவன் அதன் முனைகளை விட நடுக்கோட்டில் வேகமாகச் சுழல்கிறது. இந்த வேறுபட்ட சுழற்சிக்கு வெப்பப் பரிமாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சலன இயக்கம் மற்றும் கதிரவ சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விளைவு ஆகிய இரண்டும் காரணம் ஆகும். கதிரவனைச் சுற்றிவரும் புவியில் இருந்து காணும்போது நடுக்கோட்டில் கதிரவனின் முழு சுழற்சி காலம் 28 நாட்களாகும். விண்மீன் வகைப்பாட்டில் கதிரவன் "G2V" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. "G2" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். புவிக்கு வந்தடையும் கதிரவ ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாக சர் சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. கதிரவன் புவியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் கதிரவனை செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காட்டுகிறது "G2V" என்ற குறியிட்டில் "V" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று கதிரவனும் தனது ஆற்றலை அணுக்கரு இணைவின் மூலம் பெறுவதை குறிக்கிறது. கதிரவனில் ஐட்ரசன் கருவும் ஈலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்" G2" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் கதிரவனும் ஒன்று. கதிரவன் பால் வழியில் (நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. இது தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. கதிரவனின் சுழற்சி வேகம் (orbital speed) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவீன கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் கதிரவன் சுற்றி வரும் நமது பால்வழியும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும். கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கதிரவ ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. கதிரவ மின்கலனில், கதிரவ ஒளியாற்றல்/வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் கதிரவ ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே ஆகும். கதிரவனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற்கட்டி போன்ற தீய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதாகௌ கதிர்கள் புவியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது. கதிரவனின் உள்கட்டமைப்பு பின்வரும் அடுக்குகளைக் கொண்டது. கதிரவ உள்ளகம், என்பது மையத்திலிருந்து 20-25% கதிரவ ஆரம் வரை பரவியுள்ளது. இது சுமார் 150g/cm3 வரையிலான அடர்த்தியும் (நீரின் அடர்த்தியில் சுமார் 150 மடங்கு) 15.7 மில்லியன் கெல்வின் அளவிலான வெப்பமும் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, கதிரவனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,800 கெல்வின் அளவில் இருக்கிறது. SOHO திட்ட தரவுகளின் அண்மைய பகுப்பாய்வுகள் மூலம் கதிரவனின் மேல் உள்ள கதிர்வீச்சுப் பகுதியை விட அதன் மையத்தில் சுழற்சி வீதம் வேகமாக இருப்பது தெரியவந்தது. கதிரவனின் வாழ்க்கையில் பெரும்பகுதி மூலம், புரோட்டான்-புரோட்டான் சங்கிலி என்றழைக்கப்படும் தொடர்ச்சியான வழிமுறைகளால் மையப் பகுதியில் அணுக்கரு இணைப்பின் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது; இந்த செயல்முறை ஐட்ரசன் அணுக்களை ஈலியமாக மாற்றுகிறது. கதிரவனில் உருவாக்கப்பட்ட ஆற்றலில் 0.8% மட்டுமே CNO சுழற்சியில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த விகிதம் கதிரவனின் வயதைப் பொறுத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிரவனில் உள்ளகப் பகுதி மட்டுமே அணுக்கரு இணைவு மூலம் கணிசமான வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாகப் பரவுகிறது. ஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான்கள் (ஐட்ரசன் அணுக்கரு) ஈலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT அளவுள்ள வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும். உயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்)கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் கதிரவ உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் கதிரவ பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் கதிரவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலனப் பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளியாக கதிரவ அமைப்பில் பயணிக்கிறது. கதிரவ உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களைப் போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை கதிரவனை உடனடியாக வெளியேறுகின்றன. உள்ளகத்தில் இருந்து சுமார் 0.7 கதிரவ ஆரங்கள் வரை, ஆற்றல் பரிமாற்றத்தின் முதன்மையான வழிமுறையாக வெப்பக் கதிர்வீச்சு இருக்கிறது. மையத் தொலைவு அதிகரிக்கும் போது சுமார் 7 மில்லியன் முதல் 2 மில்லியன் கெல்வின் வரை வெப்பநிலை குறைகிறது. இந்த வெப்பநிலைச் சரிவு மாறாவெப்பக் குறைவு விகிதத்தை விட குறைவாக இருப்பதால் வெப்பசலனத்தை இயக்க முடியாது. எனவே இப்பகுதி வழியாக நடைபெறும் வெப்பப் பறிமாற்றம் வெப்பசலனம் மூலம் இல்லாமல் கதிர்வீச்சு மூலம் நடைபெறுகிறது. கதிர்வீச்சு பகுதியும் வெப்பச்சலனப் பகுதியும் வேகச்சரிவு என்ற நிலைமாற்ற அடுக்கு ஒன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது கதிரவீச்சுப் பகுதியின் நிலையான சுழற்சி மற்றும் வெப்பசலனப் பகுதியின் மாறுபட்ட சுழற்சி ஆகிய இரண்டிற்கும் இடையே திடீர் மாற்றம் ஏற்படும் பகுதி ஆகும். இதன் விளைவாக சறுக்குப் பெயர்ச்சி எனப்படும் தொடர்ச்சியான கிடைமட்ட அடுக்குகள் ஒன்றையொன்று கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போது இந்த அடுக்கினுள் உள்ள காந்த இயக்கயவியல் கதிரவனின் காந்தப்புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது. கதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% கதிரவ ஆரம்), கதிரவ பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது. வெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை கதிரவ பரலாக்கம் என்பர். கதிரவனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும். ஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) . பெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் கதிரவனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் கதிரவனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க கதிரவக் கடவுளான ஈலியோசு நினைவாக ஈலியம் என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஈலியம் புவியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது. முழுமையான கதிரவ மறைப்பின் போது நிலவு கதிரவனை முழுமையாக மறைக்கிறது. அப்போது கதிரவனைச் சுற்றியுள்ள வளிக்கோளத்தின் பகுதிகளைக் காண இயலும். இது நிறக்கோளம், நிலைமாற்றப் பகுதி, கொரோனா மற்றும் கதிரவக்கோளம் என்று நான்கு தனித்தனி பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியை மின்காந்த அலைமாலையைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர்கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். கதிரவனின் குறைந்த வெப்பப் பகுதி ஒளிக்கோளத்தில் இருந்து சுமார் 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதியில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோனாக்சைடு, நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன. குறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறக்கோளம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிறமாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. கதிரவன், அதன் மேற்பரப்பு முழுவதும் மாறுபடும் ஒரு காந்த புலத்தை கொண்டுள்ளது. ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் கதிரவனுக்கு உண்டு. கதிரவனின் காந்தப்புலம், ஒருங்கே கதிரவ செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் கதிரவ மேற்பரப்பில் இருக்கும் கதிரவ புள்ளிகள், கதிரவ தீக்கொழுந்து, கதிரவ அமைப்பின் வழியாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் கதிரவ காற்று ஆகியவை அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன கதிரவ செயல்பாடுகள் புவியில் ஏற்படும் தாக்கங்கள் ஆகும். கதிரவ அமைப்பின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் கதிரவ செயல்பாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. இது புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது. உயர்ந்த வெப்பநிலையினால் கதிரவனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், கதிரவனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது. கதிரவ காந்தப்புலம் கதிரவனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட கதிரவக் காற்றுப் பிளாசுமா கதிரவக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் கதிரவனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது. தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தன் வாழ்வின் மிக நிலையான பகுதியின் பாதியளவைக் கடந்துவிட்டது; இது நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வியத்தகு முறையில் மாற்றம் அடையாமல் இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். இருப்பினும், அதன் மையத்தில் நடைபெறும் ஐட்ரசன் இணைவு நின்றுவிடும் போது, கதிரவனின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த கதிரவன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஐட்ரசன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் கதிரவனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. கதிரவ உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் கதிரவனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் கதிரவனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் கதிரவனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் கதிரவ அமைப்பின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் கதிரவனின் வயதை கண்டறிவதாகும். இம்முறையில் கதிரவனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் கதிரவன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் கதிரவனில் உள்ள ஐட்ரசன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் கதிரவ ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். கதிரவன் தோன்றியதில் இருந்து இதுவரை சுமார் 100 புவியின் எடையுள்ள பருப்பொருள் ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளது. அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம். கதிரவனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், கதிரவன் ஒரு செம்பெருமீனாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஐட்ரசன் எரிபொருள் அணுக்கரு இணைவு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் இணைவு விளைவு தொடக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். . இந்நிலையில் புவியின் உள்ளகத்தின் நிலை ஐயத்துக்குரியது. ஏனெனில், செம்பெருமீனாக கதிரவனின் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் புவியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக கதிரவனுக்குள் இழுத்து விடும். ஆனால் கதிரவனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி கதிரவன் புவியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. சில இயற்பியல் விதிமுறைகளின் படி புவி கதிரவனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் புவியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்றுப்பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் கதிரவனின் வெப்பம் 10% அதிகமாகிறது. செம்பெருமீன் நிலையினைத் தொடர்ந்து கதிரவனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள் விண்மீன் படலத்தை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து வெண் குறுமீனாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. நமது விண்மீன் பேரடையான பால்வீதியின் உள்வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் சுருள்கையில் கதிரவன் அமைந்துள்ளது. கதிரவன் அமைந்துள்ள இடத்தில் இருந்து பால்வெளி மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. கதிரவன் அமைந்துள்ள ஓரியன் சுருள்கைக்கும், அருகில் உள்ள பெர்சியசு சுருள்கைக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும். கதிரவ உச்சி(solar apex) என்ற பதம் கதிரவன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது கதிரவன், வேகா என்ற விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் எர்குலசு விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் சுழற்சி நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கதிரவ அமைப்பு ஒருமுறை பால் வீதியைச் சுற்றி வர சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம், கதிரவன் தன் தோன்றியதில் இருந்து தோராயமாக 20–25 முறை பால்வீதியைச் சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். பால்வெளி மையத்தில் இருந்து நோக்கினால் கதிரவனின் சுழற்சி வேகம் தோராயமாக 251 km/s ஆகும். இந்த வேகத்தில் கதிரவ அமைப்பு 1 ஒளியாண்டு தொலைவு வரை பயணிக்க 1,190 ஆண்டுகள் ஆகும். 1959 முதல் 1968 வரையிலான காலக்கட்டத்தில் ஏவப்பட்ட நாசாவின் பயனியர் 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகியவை கதிரவனைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்கள்கள் ஆகும். இந்த ஆய்வுக்கலங்கள் புவியைப் போல கதிரவனை ஒரு குறிப்பிட தொலைவில் சுற்றி வந்து முதன்முறையாகக் கதிரவக் காற்று மற்றும் கதிரவ காந்தப் புலம் ஆகியவற்றை விரிவாக அளவீடுகள் செய்தன. இதுவரையிலான கதிரவ திட்டங்களில் கதிரவ மற்றும் கதிரவக்கோள ஆய்வுக்கலம் (SOHO) மிக முக்கியமான திட்டமாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா ஆகியவை இணைந்து உருவாக்கிய இந்த விண்கலம் 2 டிசம்பர் 1995 அன்று ஏவப்பட்டது. இது புவி மற்றும் கதிரவன் இடையேயான லெக்ராஞ்சிய புள்ளியில் இருந்துகொண்டு கதிரவனின் நிலையான காட்சியை பல அலைநீளங்களில் வழங்கியுள்ளது. இதுதவிர, பெரிய அளவிலான வால்வெள்ளிகளையும் கண்டறிய உதவியது. அவற்றில் பெரும்பாலும் கதிரவனுக்கு அருகில் செல்வதால் எரியும் வகையைச் சேர்ந்த சிறிய வால்வெள்ளிகள் ஆகும். கதிரவ காற்றின் ஒரு மாதிரியை எடுத்து வர நாசாவால் அனுப்பப்பட்ட "ஜெனிசீஸ்" என்ற விண்கலம், கதிரவ மூலப்பொருட்களின் கலவையை நேரடியாக அளவீடு செய்ய வானியலாளர்களுக்கு உதவியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம், 100 கிலோ எடை கொண்ட ஆதித்யா என்ற விண்கலத்தை 2021ஆம் ஆண்டளவில் அனுப்பவிருக்கிறது. இது கதிரவ கொரோனாவின் இயக்கவியல் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. புவியில் படும் கதிரவ ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும். கதிரவன் எட்டு அறியப்பட்ட கோள்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு புவியொத்த கோள்கள் (புதன், வெள்ளி, புவி, மற்றும் செவ்வாய்), இரண்டு வாயு அரக்கர்கள் (வியாழன் மற்றும் சனி) மற்றும் இரண்டு பனி அரக்கர்கள் (யுரேனசு மற்றும் நெப்டியூன்) ஆகியவை அடங்கும். மேலும் கதிரவ அமைப்பில் குறைந்தது ஐந்து குறுங்கோள்கள், ஒரு சிறுகோள் பட்டை, எண்ணற்ற வால்வெள்ளிகள், மற்றும் நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் இருக்கும் பெரிய அளவிலான பனிப் பொருட்கள் ஆகியவை உள்ளன. விண்வீழ்கல் விண்வீழ்கல் ("meteorite") என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது "எரி நட்சத்திரம்" ("எரி வெள்ளி") என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. வால்வெள்ளி வால்வெள்ளி "(comet)" பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது கருப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் வால் எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாகக் கலந்திருக்கும். வால்வெள்ளியின் கருப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்ளியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் வட்டணை அல்லது சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மீத்தேனும் நீரும் தூசியும் கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை. வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ்ந்த நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பால் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டிலில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாகக் கருதப்படுகின்றன. இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகள் அருகாமையில் உள்ள கடந்தகால, எதிர்கால, அல்லது கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாகக் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது. சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர்ம, வளிம நிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு எடுத்துகாட்டு ஆல்லே வால்வெள்ளி ஆகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நோக்கலாம்/அவதானிக்கலாம். விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீத்தேன், சயனோஜன், கரியமில வளிமம், அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடுகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும்போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால்வெள்ளிகளின் மேற்பரப்பு படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விழும்..குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன. முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன. 2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நமக்குப் புலப்படுவதில்லை. இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்று ஆய்ந்துவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்டா திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தான் முதன்முதலில் மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது. நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் தெம்பெல் 1 வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது. "comet" எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய "cometa" என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான "comēta" அல்லது "comētēs" என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். "ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி" (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும். வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு ☄ ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும். வால்வெள்ளியின் திண்ம அகடு உட்கரு எனப்படுகிறது. உட்கருவில் பாறையும் தூசும் பனிக்கட்டியும் கரிம ஈருயிரகி, கரிம ஓருயிரகி, மீத்தேன், அம்மோனியா போன்ற உறைவளிமங்களும் அமைகின்றன. இவை பிரெடு விப்புள்] படிமம் உருவாகிய பிறகு தூசிப் பனிப்பந்துகள் எனப்படுகின்றன. உயர்தூசு உள்ளடங்கியவை "பனித் தூசுப் பந்துகள்" எனப்படுகின்றன. 2014 இல் நடத்திய ஆய்வுகள் வழியாக வறுத்த பனிக்கட்டிபோல வால்வெள்ளிகள் அமைதல் அறியப்பட்டது. அதாவது இவற்றின் மேற்பரப்பு கரிமச் சேர்மங்களோடு அடர்பனிப் படிகங்களாலும் உள்பனிப்பகுதி மிகவும் குளிர்ச்சியாகவும் குறைந்த அடர்த்தியுடனும் அமைகின்றன என கூறுகின்றன. உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாறையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். இவை ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களையும் கொண்டுள்ளன. இவற்றில் மெத்தனால், நீரகச் சயனைடு, பார்மால்டிகைடு, எத்தனால், ஈத்தேன் போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரகக் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும். 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.புவியில் கண்டறிந்த விண்கற்களைப் பற்றிய நாசாவின் ஆய்வுகளில் இருந்து 2011 ஆகத்து மாதம் வெளியாகிய அறிக்கையில், மரபன் (டி. என். ஏ) முன்மரபன் (ஆர். என். ஏ) ஆகிவற்றின் உட்கூறுகளான அடினைனும் குவானைனும் சார்ந்த பிற கரிமச் சேர்மங்களும் குறுங்கோள்களிலும் விண்கற்களிலும் உருவாகியுள்ளன என முன்மொழியப்பட்டுள்ளது. வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும் ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன; நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான கரிமச் சேர்மங்களைக் கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது. 30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும். 322பி/சோகோ வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது. 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Known comets have been estimated to have an average density of . வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன. புவியண்மைச் சிறுகோள்களில் 6% சிறுகோள்கள் வளிம உமிழ்வு நின்றுவிட்ட காலாவதியான வால்வெள்ளிகளே எனக் கருதப்படுகின்றன, இவற்றில் 14827 கிப்னோசு, 3552 தான் குவிக்சோட் ஆகிய சிறுகோள்களும் அடங்கும். உரோசெட்டா, பிளையே விண்கலங்களின் ஆய்வு முடிவுகள், [[67பி/சூர்யமோவ்- கெராசிமென்கோ] வால்வெள்ளியில் காந்தப்புலம் ஏதும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த வான்பொருள்களின் தொடக்கநிலை உருவாக்கத்தில் காந்தவிசைகள் பங்கேதும் ஆற்றவில்லை என்பது தெளிவாகிறது. [[File:Hubble's Last Look at Comet ISON Before Perihelion.jpg|thumb|அபுள் விண்வெளி தொலைநோக்கி சூரிய அண்மைநிலைக்கு முன் எடுத்த ஐசோன் வால்வெள்ளியின் படிமம்.]] [[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]] சிறுகோள் சிறுகோள் அல்லது ("Asteroid" ) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆகும். இவற்றில் பெரியனவும் கோளினும் சிறியனவும் ஆக அமையும் வான்பொருள்கள் கோள் போன்றவை எனப்பொருள்படும் கோள்போலிகள் (போலிக்கோள்கள்) (Planetoid) எனப்படுகின்றன. மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வட்ட வட்டணையிலேயே உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால்வெள்ளிகளைப் போல ஆவியாகும் தன்மையோடு அமைந்திருந்த்தால், இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்துணரப்படுகின்றன. இந்தக் கட்டுரை சூரியக் குடும்ப உட்புறச் சிறுகோள்களையும் வியாழனைச் சுற்றிவரும் சிறுகோள்களை மட்டுமே கருதுகிறது. சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு(semi-major axes) அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், செண்டார்கள் ("Centaur"), அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை (1 கிமீ இலும் மிகச் சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக பாறைஅளவு அல்லது அதனினும் சிறியவை. 1801 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவிலுள்ள வட்டணைகளில் சூரியனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. இந்தப் பொருள்கள் புள்ளியாகளாகத் தெரிகின்றன. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால் அவற்றுக்கு விண்மீண்களைப் போல வடிவமுள்ளவை என்று பொருள்படும் அஸ்டிராய்டு (asteroid) என்ற பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள் கோள்களை ஒத்தவை என்ற பொருள்படுகிற பிளானடாய்டு (planetoid) என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இவை சில வேளைகளில் புவியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து விடும். அவற்றை விண்கொள்ளிகள் (meteors) என்கிறார்கள். சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து விழுவதுண்டு. அவற்றை விண்தாது (meteorite) என்பார்கள். அது புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் (meteroid) எனக் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழனைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: C வகை, M வகை, S வகை. சி வகை கரிமம் செறிந்ததாகும். எம் வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். எஸ் வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு. இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆனவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை.சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீட்டரினும் சிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும். கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம். 4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அரிதாக புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு. 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற, வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருள்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நாள் உருசியக் குடியர்சில் உள்ள சைபீரியாவைத் துங்குசுக்கா சிறுகோள் 1908 ஜூன் 30 இல் மோதிய நாளை வைத்து ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது. "கியூசெப்பே பியாசி" எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் சீரெசு ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது. இது முதலில் கோளாகவே கருதப்பட்டது. ஆனால், இப்போது இது கோள்குறளியாகக் (குறுங்கோளாகக்)(dwarf planet) கருதப்படுகிறது. வால்வெள்ளிகள், செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப் பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டன இதைவைத்து வானியலாளர் வில்லியம் எர்செல் விண்மீன்போலி அல்லது விண்மீன்போன்ற எனும் பொருள்வாய்ந்த "asteroid" எனும் ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தினார். இது கிரேக்கச் சொல்லான ἀστεροειδής, அல்லது ஆங்கிலத்தில் "asteroeidēs" என ஒலிக்கப்படும் 'விண்மீன்போன்ற, விண்மீன்வடிவ' எனும்பொருள் அமைந்த சொல் கொணரப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் "astēr" என்றால் 'விண்மீன், கோள்' எனப் பொருள்படும். இவற்றுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைத் தொடக்க காலத்தில், சிறு எனும் முன்னடையில்லாமலே "asteroid" "planet" எனும் இருசொற்களுமே மாற்றிமாற்றி அறிவியல் நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. கடந்த இருநூற்றாண்டுகளில் சிறுகோள் கண்டுபிடிப்பு முறைகள் பேரளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சர் வில்லியம் எர்செல் 1781 இல் வருணனைத் (யுரேனசைத்) திசியசு போடின் விதியால் கண்டுபிடித்ததால், பதினெட்டாம் நூற்றண்டின் கடைசி ஆண்டுகளில் பாரன் பிரான்சு சேவர் வான் சாக் என்பார் 24 வானியலாளர்களை அழைத்துச் சூரியனில் இருந்து 2.8 வானியல் அலகு தொலைவுக்குள் அமைய வாய்ப்புள்ள, கண்டுபிடிக்கத் தவறிய, கோள்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னார். இதற்கு அந்தக் குறிப்பிட்ட ஓரைப் பட்டைக்குள் அமைந்த அனைத்து விண்மீன்களையுமே ஏற்கப்பட்ட மிக அருகிய மங்கலான பொலிவு வரை அட்டவணைப்படுத்திய வான்வரைபடம் தேவையாகும். இதை வரைந்த்தும், பிறகு, பின்வரும் இரவுகளில் இப்பட்டைக்குள் அமையும் இயங்கும் பொருள்களைத் தேடல் வேண்டும். கண்டுபிடிக்கத் தவறிய கோளின் இயக்கம் ஒரு மணி நேரத்தில் 30 நொடி வட்டவில்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை நோக்கீட்டாளர்கள் எளிதாக கண்டறியலாம். முதல் வான்பொருள், சீரெசு, இந்தக் குழு உறுப்பினர் எவராலும் கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்செயலாக, சிசிலியில் உள்ள பலெர்மோ வான்காணக இயக்குநராகிய கியூசெப்பே பியாசியால் 1801 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தாரசு விண்மீன்குழுவில் விண்மீன்போன்ற புதிய வான்பொருளைக் கண்டார். பின் அதன் இடப்பெயர்ச்சியைப் பல இரவுகளாகக் கண்காணித்தார். அதே ஆண்டில் பிறகு, கார்ல் பிரீடுரிக் காசு இந்த நோக்கிடுகளைப் பயன்படுத்தி, இந்த அறியப்படாத பொருளின் வட்டணையைக் கணக்கிட்டார். இது செவ்வாயின் வட்டணைக்கும் வியாழனின் வட்டணைக்கும் இடையில் அமைவதைக் கண்டுபிடித்தார். கியூசெப்பே பியாசி இதற்கு உரோம வேளாண்கடவுளான சீரெசுவின் பெயரை இட்டார். பிற மூன்று குறுங்கோள்களான (2 பல்லசுவும் 3 யூனோவும் 4 வெசுட்டாவும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர். என்றாலும், கார்ல் உலூத்விக் என்கே 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, 5 அசுட்டிரேயியாவைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் 6 கெபேவைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.. இக்காலக் குறுங்கோள் வேட்டையாளர்களாக ஜான் இரசல் இந்த், அன்னிபேல் தெ கசுபாரிசு, கார்ல் தியோடோர் இராபர்ட் உலூதர், எர்மன் மேயர் சாலமன் கோல்டுசுமித், ழீன் சாகோர்னாக், ஜேம்சு பெர்கூசன், நார்மன் இராபர்ட் போகுசன், எர்னெசுட்டு வில்கெல்ம் இலெபெரச்ட் டெம்பெல், ஜேம்சு கிரைகு வாட்சன், கிறித்தியான் என்றிச் பிரீடுரிக் பீட்டர்சு, அல்போன்சு உலூயிசு நிகோலசு போரெலி, யோகான் பாலிசா, பவுல் என்றி, பிராசுபர் என்றி எனும் என்றி உடன்பிறப்புகள், ஆகத்தே சார்லோயிசு ஆகியோரைக் குறிப்பிடலாம். மேக்சு வுல்ஃப் என்பார் 1891இல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலுக் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை. இச்சொற்றொடரைக் கூறியவர் எடுவார்டு சூயசு ஆவார் எனக் கருதப்படுகிறது. and Edmund Weiss.மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன. குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்றியப்பட்டன: முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன. பல நாட்கள் தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்த வொரு வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில் அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும். மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள் இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும். முதல் மூன்று படிநிலைகள் மட்டுமே குறுங்கோள் கண்டுபிடிப்பை முழுமையாக்கி உறுதிபடுத்தாது: நோக்கீட்டாளர் ஒப்ர் ஒதுக்கீட்டைட்த்தை மட்டுமே கண்டுள்ளார். இதற்கு தற்காலிகமாக, கண்டுபிடித்த ஆண்டையும் அரைமாத கண்டுபிப்பு கடிதத்தையும் இறுதியாக கண்டுபிடிப்பின் வரிசைமுறை எண்ணையும் வைத்து ஒரு பெயரீடு தரப்படும் (எ. கா.: 1998 FJ|74). கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும் சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தiyய ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண் தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும். விண்மீன் விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். எனினும் சூரியன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் ஒளி, வெப்பம், புற ஊதாக் கதிர்கள், எக்சு ரே - கதிர்கள் மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன. உடுக்களில் அதிகமாக ஐதரசனும், ஹீலியமுமே காணப்படுகின்றது. அங்கு ஐதரசன் அணுக்கரு இணைவு மூலம் ஹீலியமாக மாறும் செயற்பாடு இடம்பெறும். அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன. சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும். விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஹீலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்லது சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும். விண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை, விண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு "கோண உந்த அழிவின்மை" (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைகப்படுகின்றது. நெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஹீலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். ஒரு முகிழ்மீன் ஒன்று ஹன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகிலகளின் மிகுதிகளை வைத்து தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஹீலியமாக மாற்றும் செயற்பாட்டை மெற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீன் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருந்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை, எனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஹீலியம் அதிகரித்துச்செல்லும். இறுதியில் ஹீலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது வின்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது "செவ்வசுரன்" என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்த்ச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச்சுதறிய செவ்வசுரனின் வெளிப்பகுத் கோள் நெபுலா (planetry nebulea) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறியவிண்மீனாக தோற்றம் பெறுகின்றன. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான சக்தியையும் வெளிவிடாது இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது "கருங்குள்ளன்" என அழைக்கப்படும். இவ்வறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சுரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன. கருங்குழியாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும். கி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான ஹிப்பார்க்கஸ் உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு "மேக்னியூட் அளவு முறை" என்று பெயர். விளையாட்டுப் பொருட்கள் பட்டியல் லெகோ லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது. லெகொ நிறுவனத்தின் பிரபல விளையாட்டுப்பொருளான பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளைக் குறிப்பதற்கும் பலர் "லெகோ" அல்லது "லெகோக்கள்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி, வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இது போன்ற குற்றிகளையும் இச் சொற்களாலேயே குறித்து வருகிறார்கள். ஆனால் லெகோ நிறுவனம், தங்களுடைய வணிகப் பெயர் பொதுப்பெயாராகி வருவதை விரும்பவில்லை. 1970 மற்றும் 1980 களில், இந்நிறுவனத்தின் உற்பத்திப் பட்டியல்களில், தங்கள் உற்பத்தியை "லெகோ குற்றிகள்" அல்லது "லெகொ விளையாட்டுப் பொருட்கள்" என அழைக்கும்படியும், "லெகோக்கள்" என அழைக்கவேண்டாமெனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். "லெகோ" இன்றிருப்பதைப்போல், எக்காலத்திலும் உயர்தரமான பொருத்தும் குற்றிகளாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. டென்மார்க்கிலுள்ள, பில்லண்ட் என்னுமிடத்தில், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் என்னும் ஏழைத் தச்சன் ஒருவரின் பட்டடையில் மிக எளிமையாக இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புதுமையான குடும்பத் தொழில் இன்று வளர்ந்து, உலகின் மிகவும் மதிக்கப்படுகின்ற விளையாட்டுப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் 1934ல் கிறிஸ்டியன்சென்னால் உருவாக்கப்பட்டது. "நன்றாக விளையாடு" என்னும் பொருளையுடைய, டேனிஷ் மொழித் தொடரான "leg godt" என்பதிலிருந்து பெறப்பட்டதே "LEGO" என்னும் வணிகப் பெயர். டெடி கரடிக்குட்டி டெடி கரடிக்குட்டி ("Teddy bear") என்பது குழந்தைகளுக்கான பஞ்சாலான ஒரு விளையாட்டுப் பொருளாகும். இது குழந்தைகளை மகிழ்விக்கப் பயன்படுகிறது. உலகின் முதல் டெடி கரடி அருங்காட்சியகமானது இங்கிலாந்தில் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டெடி என்ற பெயர் அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவரது செல்லப்பெயர் "டெடி" என்பதாகும். ரூபிக்கின் கனசதுரம் ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும். தொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டிலு ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும். ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார். 2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார். 1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன. "Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார். மொழிகளும், மொழிக் குடும்பங்களும் பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிடம் எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பியன் எனவும் குறிப்பிட ப் படுகின. இங்கே "புல்லட்" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது. http://www.ethnologue.com/web.asp இந்திய-ஐரோப்பிய மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிகள் ("Indo-European languages") சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன. மேற்படி தொடர்பு பற்றிய எடுகோள், வில்லியம் ஜோன்ஸ் என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். பிரான்ஸ் பொப் என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக சமஸ்கிருதத்துக்கும், லித்துவேனிய மொழிகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம். இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற புவியியல் அமைவிடம் ("Urheimat" என அழைக்கப்படுகின்றது), தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆர்மீனியாவை உள்ளடக்கிய கருங்கடலின் வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைக் குழுக்களுள் பின்வருவன அடங்கும். இந்திய-ஈரானிய மொழிகள் இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது. முக்கிய இந்தோ-ஆரிய மொழிகள்: முக்கிய தார்டிக் மொழிகள்: முக்கிய நூரிஸ்தானி மொழிகள்: முக்கிய ஈரானிய மொழிகள்: பாளி பாளி ("Pali") எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது. பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபை (Pali Text Society)யைச் சேர்ந்த டி.டபிள்யூ.ஆர்.டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது. சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர். பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது. சிங்களம் சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது. சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும். சிங்களம், ஏனைய இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், அவுஸ்திரோனீசியன் போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான இலக்கிய ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு பௌத்த சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன. சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது. அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது. சிங்களத்தில் பொதுவாக இரண்டு வகையான பேச்சு வழக்கு உள்ளது. தென் பகுதியில் உள்ள சிங்களவர் ஒருமாதிரியும், ஏனைய பகுதியில் உள்ள சிங்களவர் வேறுமாதிரியும் பேசுகின்றனர். இலங்கையில் உள்ள வேடர் இனமும் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். இந்த மொழியில் சிங்களத்தின் ஆதிக்கம் இருந்தாலும், வேறெந்த மொழியிலும் இல்லாத பல சொற்கள் இவர்கள் மொழியில் உள்ளது. தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம். நிகழ்காலம் நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. ஆண்பால் பெண்பால் வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக கடனவா என்பதன் அடி கட ஆகும். கணவா இன் அடி க ஆகும். மம என்று வந்தால் மியும் *அப்பி வந்தால் மு உம் *நும்ப/ஒப வந்தால் ஹி யும் *நும்பலா/ஒபலா வந்தால் ஹூ உம் சேர்க்கவேண்டும். ஒபலா/நும்பலா ஒருமையில் வந்தால் யி உம் பன்மையில் வந்தால் தி உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும். பெண்பால் ஒருமையில் வந்தால் ய சேர்க்க வேண்டும். குறுத்துமி ஆவாய இறந்தகாலம் ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு படர்க்கை ஒருமையைக் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு ஒருமைக்கு ஏய என்ற சத்தத்தையும் பன்மைக்கு ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும். இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும். சிங்கள மொழியில் எது பயனில்லைக்கு அண்மையில் உள்ளதோ அதுதான் எழுவாய் ஆகக் கணிக்கப்படும். உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை. தன்மையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் முன்னிலையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் படர்க்கையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆகவும் செயற்படுபொருளாகவும் மாற்றம் இன்றி வரும். உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆக வரும்போது செயப்படுபொருள் ஒருமையில் முடித்தல் வேண்டும். உயிருடைய ஒருமைச் சொல் எழுவாய் ஆக வரும்போது பயனிலை ஒருமையிலும், எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது. று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும் வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும் ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும். ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும் பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும். இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும். இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும். இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும். இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும். இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம். உருது உருது ("Urdu") 13ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து "இந்துஸ்தானி" என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20 ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால்தான் 'உருது' எனறு பெயர் பெற்றது. துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்றே அழைப்பர். பண்பாடு பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் "culture" (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும். பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய "பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை" (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள். 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அமுக்கிவிடுவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர், பல் வேறுபட்ட சமூகங்களுக்கும் பயன்படுத்தத்தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் போன்ற மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும். எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது. பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை), மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொதுவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் "சட்டங்கள்" எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான "பொருள்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்", நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது. பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப் பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் தேசியவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் பண்பாடு என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்கள் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் "நாகரிகமடைந்தோர்", "நாகரிகமற்றோர்" அல்லது "பழங்குடியினர்" போன்ற வேறுபாடுகளுக்கு இடமளித்தது. பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப் பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம். வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான மாறிகளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும் உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின் தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய தொடர்புகள், குடியேற்றம், வணிகம், புலப்பெயர்வு, மக்கள் ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக் கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம். பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்களும், போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஒரு அம்சமாக விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும் வலுவாக ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல. யூதாயிசம் அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச் சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருகின்றன. ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 தொடக்கம் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை. இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500 ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது. விளையாட்டுகளின் பட்டியல் பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு பிரிவில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. "முதன்மைக் கட்டுரை: தமிழர் விளையாட்டுக்கள்" துவிச்சக்கர வண்டிகளை அல்லது ஒரு சில் வண்டிகளைப் பயன்படுத்தும் விளையாட்டுகள். மேற்படி எதிலும் இல்லாதவை Sports not based on a specific field. உடல் வலுவை சார்ந்த விளையாட்டுகள். பந்து அல்லது வேறு பொருட்களை அடித்து விளையாடுதல். Sports in which skates are used. Sports in which skis or snowboards are used. Sports that use sleighs. Sports where the main objective is to hit a certain target. வட மாகாணம், இலங்கை வட மாகாணம் ("Northern Province") இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும். இலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன. ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வட மாகாணம் இலங்கையின் வடக்கே இந்தியாவில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த ஆதாம் பாலம் (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கிமீ ஆகும். இம்மாகாணம் மேற்கே மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றாலும், வடமேற்கே பாக்கு நீரிணையாலும், வடக்கு மறூம் கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகானங்களினாலும் சூழப்பட்டுள்ளது. வட மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னி ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் கிணறுகளின் உதவியுடன் நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், குளங்கள், மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு ஆகியனவாகும். இம்மாகாணத்தில் கடற் காயல்கள் பல உள்ளன. இவற்றில் கச்சாய் கடல் நீரேரி, நந்திக் கடல் போன்றவை முக்கியமானவை ஆகும். இலங்கையின் பெரும்பாலான தீவுகள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியனவாகும். வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன. வட மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 55% ஆனோர் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது. வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள் உண்டு. கிழக்கு மாகாணம், இலங்கை இலங்கையின் கிழக்கு மாகாணம் ("Eastern province") திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது. கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது. தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, பரப்பி, ஓர் ஊடகம் (கம்பி), ஓர் அலைவரிசை, ஒரு வாங்கி என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, சைகை எனப்படும் பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சைகைகளில் மாற்றத்தையோ தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய கண்ணாகவோ காதாகவோ இருக்கக்கூடும். வேறு சில சந்தர்ப்பங்களில் கண், காது தவிர்ந்த ஏனைய புலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன. இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் மூளையிலேயே நடைபெறுகின்றது. தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும் ஒலிபரப்பாகக் கூட இருக்கக்கூடும். தொலைத்தொடர்புப் பொறியாளர் ஒருவருடைய திறமை, பரப்பும் ஊடகத்தினுடைய பௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளிவிபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை வடிவமைப்பதிலேயே தங்கியுள்ளது. மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அனுபவங்களில் கூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள். எளிமையான உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மூளையில் உருவாகும், நீங்கள் உங்கள் நண்பருக்குச் சொல்லவிரும்பும் வசனமே, தகவலாகும். மூலையிலுள்ள மொழி தொடர்பான பகுதிகள், motor cortex, குரல் நாண்கள், larynx மற்றும் பேச்சு எனப்படும் ஒலிகளை எழுப்பும் உங்கள் வாய் என்பனவே பரப்பி (transmitter) ஆகும். பேச்சு எனப்படும் ஒலியலைகளே சமிக்ஞைகள். இவ்வாறான ஒலியலைகளையும், எதிரொலி, பகைப்புலச் சத்தங்கள் (ambient noise), தெறிப்பலைகள் (reverberation) என்பவற்றைக் காவிச்செல்லும் காற்றே சனல் ஆகும். உங்களுக்கும், வாங்கியாகிய உங்கள் நண்பருக்குமிடையில், சமிக்ஞைகளில் திரிபுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்தாத வேறு தொழில்நுட்பக் கருவிகளும் (உம்: தொலைபேசி, அமெச்சூர் வானொலி முதலியன) இருக்கக்கூடும். உங்கள் நண்பருடைய காது, கேள்வி நரம்பு, உங்கள் குரலுக்கும் அருகேசெல்லும் வாகனத்தின் சத்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு உங்கள் பேச்சை நீங்கள் சொல்லவிரும்பிய அதே வசனமாக மாற்றக்கூடிய அவருடைய மூளையின் மொழிப்பகுதிகள் என்பனவே இறுதியான வாங்கியாகச் செயல்படுகின்றன. அருகே செல்லும் வாகனத்தின் சத்தம், சனலின் முக்கிய இயல்புகளிலொன்றான "noise" என்பதற்கு உதாரணமாகும். சனலின் இன்னொரு முக்கியமான அம்சம் bandwidth என்பதாகும். பெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி குளோட் ஈ ஷனோன் என்பவர், 1948ல், "தொடர்பின் கணிதவியற் கோட்பாடு" (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, தகவற் கோட்பாடு என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது. 1792 ஆம் ஆண்டு பிரான்சியப் பொறியியலாளரான கிளவுடே சப்பே என்பவர் முதலாவது நிலைத்த காட்சியுடன் கூடிய தந்தி முறையை லீலிற்கும் பாரிசிற்கும் இடையில் வடிவமைத்தார். திறமை மிக்க இயக்குபவர்கள் தேவைப்பட்டதாலும் 10-30 கிலோமீற்றர்கள் (6–20 மைல்கள்) இடைவெளியில் விலை உயர்ந்த கோபுரங்களை அமைக்க வேண்டியிருந்ததாலும் இந்த அமைப்பு முறை பாதிக்கப்பட்டது. மின்சாரத் தந்தியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட போட்டியின் விளைவாக சுவீடனிலிருந்த ஐரோப்பாவின் இறுதி வர்த்த்க சேமாஃபோர் வரிசை 1880 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. மின்சாரத்துடன் கூடிய தொலைத்தொடர்பு முறை மீதான பரிசோதனைகள் 1726 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தோல்வியடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டன. அறிவியலாளர்களான பியர் சிமோன் இலப்லாசு, அம்பியர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் ஆகியோர் இப்பரிசோதனைகளில் ஈடுபட்டனர். காட்னர் மற்றும் ஆர்ஸ் டெக்னிகாவால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் நுகர்வோரின் முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களின் விற்பனை மில்லியன் அலகுகளில்; குறிப்பு: கி/இ என்பது கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிக்கின்றது. அனலாக் தொலைபேசி வலையமைப்பில் அழைப்பவர் அழைப்பினை மேற்கொள்ள வேண்டிய நபரை தொலைபேசி பரிமாற்றங்களின் ஊடாக அடைகின்றார். இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இக்கருவி ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றிப் பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுவதன் மூலம் இயங்குகின்றது. இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வகையில் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல் சனல் coding முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்: தொலைத்தொடர்பு முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்: சதுரங்கம் அரசர்களின் விளையாட்டு என வருணிக்கப்படும் சதுரங்கம் ("Chess"), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளத்தில், கணனியிலும் போட்டித்தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகிறது. சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, சப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை. ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை. சதுரங்கம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும். சதுரங்கம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும். இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும். படத்தில் காட்டப்பட்டவாறு ஆரம்ப அடுக்கல் அமையவேண்டும். முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்கவேண்டும். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும். இதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்க வேண்டும். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும். e4 கட்டத்தில் உள்ள வெள்ளை ராஜா ஒரே ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து e3,e5.d3,d4,d5,f3,f4,f5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் ஒரு சிறப்பு வகை நகர்த்தலில் மட்டும் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நகர்விற்கு கோட்டை கட்டுதல் (castling) என்று பெயர். இப்படி ராஜா இரு கட்டங்கள் நகரும்பொழுது, கோட்டை அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் அரசரும் யானையும் ஒரே நேரத்தில் நகருவதை கோட்டை கட்டுதல் என்பர். இவ்வாறு கோட்டை கட்டுவதற்கு முன்பாக ராஜா, கோட்டை என்ற இரண்டு காய்களில் ஒன்றைக் கூட நகர்த்தி இருக்கக்கூடாது. அப்படி நகர்த்தி இருந்தால் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. மேலும் ராஜாவுக்கு ஆபத்து (check) இருக்கும் போதும், கோட்டை கட்டலின் விளைவாக ராஜா நிற்கும் இடத்தில் ஆபத்து (check) இருந்தாலும் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. ராணி இருக்கும் பக்கமாக கோட்டை கட்டிக்கொள்வதை நீண்ட கோட்டை கட்டுதல் என்பர். ராஜா தன் பக்கத்தில் கோட்டை அமைத்துக் கொள்வதை குறுகிய கோட்டை கட்டுதல் என்பர். அரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும். "மந்திரி" அல்லது "தேர்' 'நகர்வு முறை: மந்திரி அல்லது "தேர்" மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் மந்திரியை நாம் தேவைக்கேற்ப f5,g6,h7,d5,c6,b7,a8,f3,g2,h1,d3,c2,b1 ஆகிய 13 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும் "குதிரை": தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் குதிரையை நாம் தேவைக்கேற்ப f6,d6,g5,g3,f3,d3,c3,c5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.குதிரை கருப்புக் கட்டத்தில் இருக்குமேயானால் வெள்ளைக் கட்டத்திற்கும் வெள்ளைக் கட்டத்தில் நிற்குமேயானால் கருப்புக் கட்டத்திற்கும் நகர்ந்து செல்லும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். "கோட்டை": தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் கோட்டையை நாம் தேவைக்கேற்ப e5,e6,e7,e8,e3,e2,e1,f4,g4,h4,d4,c4,b4,a4 ஆகிய 14 கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும். "படைவீரர்": தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது. வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம். படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் படைவீரன் e5 கட்டத்திற்கு மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். ஆனால் இவ்வீரனால் f5, d5 கட்டங்களில் உள்ள எதிரியின் காயைத் தாக்கி வெட்ட முடியும. ஒரு வேளை எதிரியினால் வெட்டுப்படாமல் படிப்படியாக முன்னேறி e8 கட்டத்தை இவ்வீரன் அடைந்தால் அவன் பதவி உயர்வு அடைவான்.. வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஆட்டத்தில் ஒருவித இலாபம் இருக்கும் என்று கருதுகிறார்கள். கருப்புப் படையணியைக் கொண்டிருப்பவன் இந்த ஆரம்ப முன்னிலையை சமன் செய்ய கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். . சதுரங்கத்தின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் சதுரங்கம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் சதுரங்கம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன. "ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849 இல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் சதுரங்கம் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது. ஒரு காலத்தில் சதுரங்க விளையாட்டுக்கள் விபரிப்பு சதுரங்கம் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித சதுரங்கக் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation – PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும். மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி சதுரங்கம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன. அக்காலத்தில் சதுரங்க விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட சதுரங்க ஆட்டத்தை ஐபிஎம் சதுரங்கக் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997 இல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி நிரல் உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி நிரல் உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார். இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது "தொடக்க ஆட்டம்", வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது "நடு ஆட்டம்" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக "முடிவு ஆட்டம்", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும். சதுரங்க விளையாட்டின் தொடக்க ஆட்டம், ஆரம்ப நடவடிக்கைகளான சில திறப்பு நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பமாகிறது. இத்திறப்பு நகர்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சிறு சிறு தொகுப்புகளாக பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூயி லோப்பஸ் திறப்பு, சிசிலியன் தடுப்பாட்டம் என்பன சில உதாரணங்களாகும். இவ்வாறு பெயரிடப்பட்ட பல்வேறு திறப்பு நகர்வுகள் குறிப்புதவி நூலான திறப்பு நகர்வுகளின் கலைக் களஞ்சியம் திரட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் அமைதியான முற்றுகை உத்தி முதல் தீவிர தாக்குதல் உத்தி வரையிலான ஏராளமான திறப்பு நகர்வு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிசைகள் இரு தரப்பினருக்குமான முப்பது நகர்வுகள் வரை நீண்டுள்ளவையாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் முறை சதுரங்க வீரர்கள் இத்திறப்பு கோட்பாடுகளை படித்து ஆராய பல ஆண்டுகள் வரை செலவழித்து தெளிவடைய முயல்கிறார்கள். பெரும்பாலான திறப்பு நகர்வுகளின் அடிப்படை நோக்கம் ஒரேமாதிரியாகவே காணப்படுகிறது. திறப்பு நகர்வுகளின் வரிசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தை தொடங்கிய பிறகு சதுரங்க விளையாட்டின் முக்கியப் பகுதியாக திகழ்வது நடு ஆட்டமாகும். சதுரங்கப் பலகையில் உள்ள பெரும்பாலான காய்கள் தடையின்றி முன்னேற வழிகள் கிடைத்தவுடன் நடு ஆட்டம் துவங்குவதாக கருதப்படுகிறது. தொடக்கம் மற்றும் நடு ஆட்டங்களுக்கு இடையே தெளிவான வரிசைத் தொகுப்புகள் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில், திறப்புக் கோட்பாடுகளை முடித்துக் கொள்ளும் வீரர்கள், தங்கள் காய்களின் அமைவிடம், பலம், பலவீனம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சுயசிந்தனையில் தனித்துவமான திட்டங்களை அமைக்க முற்படுவர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் எதிரியைத் தாக்குதல், கைப்பற்றுதல், முன்னேறுதல், பலிகொடுத்தல் முதலான தந்திரங்களை கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்வர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சேர்க்கை நகர்வுகள் படலம் நடு ஆட்டங்களில்தான் தோற்றம் பெறுகின்றன. சேர்க்கை நகர்வுகள் என்பன ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட சில தந்திர நகர்வுகளின் தொடர் ஆகும். திட்டமிடப்பட்ட இத்தொடர் நகர்வுகள் எதிரி ராசாவின் மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியோடு இணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொதுவான நகர்த்தல் முறைகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, போடென் மேட் அல்லது லஸ்கர்-பார் சேர்க்கைகள். சதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், "காய்களின் நிலை", "காய்களுக்கு இடையிலான தொடர்புகள்", "நிலையின் வகை" போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு. சதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் "படைவீரர் அமைப்பு". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம். உத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும். எளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர். டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 ஒரு உலகப் பிரசித்தி பெற்றசெஸ் விளையாட்டாகும். செஸ் விளையாடும் கணினியொன்று வழக்கமான சுற்றுப்போட்டி விதிகளின்கீழ் (விசேடமாக நேரக் கட்டுப்பாடு) அக்காலத்திய உலக சம்பியன் ஒருவரை வென்ற முதலாவது விளையாட்டு இதுவாகும். டீப் புளூ காரி காஸ்பரோவை வெல்வதற்காக ஐபிஎம்-இனால் உருவாக்கப்பட்டதாகும். "டீப் புளூ" இந்த விளையாட்டை வென்றது. எனினும் மிகுந்த ஐந்து விளையாட்டுக்களில் 3 வெற்றிகளையும், 2 சமநிலைகளையும் பெற்றதுமூலம் 1996ல் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997ல் மீண்டும் விளையாடியபோது இரண்டு விளையாட்டுக்களை மேலதிகமாக வென்றதுடன், முழு "மாட்ச்"சையும் வென்றது. எனினும் காஸ்பரோவ் உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரராகவே கருதப்படுகிறார். இவ் விளையாட்டு பெப்ரவரி 2, 1996 ல் பிலடெல்பியா, பென்சில்வேனியாவில் விலையாடப்பட்டது. கணினி வெள்ளைக் காய்களைப் பெற்றது. கீழே இயற்கணிதக் குறியீட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எட்டுக்கோடு எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம். இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்) கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும். இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்த மட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள். இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது. எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம். சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது. ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும். இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும். இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும். சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும். சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது. மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது. இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார். கேரளக் கட்டிடக்கலை கேரளக் கட்டிடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், ஓடு என்பவற்றின் தாராள உபயோகமும், கூரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், நேபாள, சீன மற்றும் பல்வேறு தென்கிழக்காசியக் கட்டிடக்கலைப் பாணிகளுக்கு நெருங்கியவையாகத் தெரிகின்றன. பண்டைய தமிழ் அரசுகளிலொன்றான சேர நாடான இன்றைய கேரளம், மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டிடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததால், கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் கட்டிடக்கலையில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே. கேரளக் கட்டிக் கலையின் முக்கியமான பகுதி அதன் கோயில் கட்டிடக் கலை ஆகும். அது தென்னிந்தியக் கோயில் கட்டிடக் கலையில் இருந்து வேறுபட்டு உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் போன்ற சில மட்டும் தென்னிந்தியக் கட்டிக் கலையைச் சார்ந்ததாக உள்ளன. கேரளத்தின் மற்ற கோயில்கள் அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பவை. தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையில் கோயில்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. என்றாலும் தமிழ்நாட்டு வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஆனால் கேரளத்தின் வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவை. கேரள வீட்டுக் கட்டிடக் கலையில் பிரபலமானது நாலுகெட்டு வீடு ஆகும். பெங் சுயி பெங் சுயி (சீனம்: 风水 "ஃபங் ஷுவெய்" அல்லது "ஃபங் ஷுயி", என்னும் "காற்று நீர்") என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது. பெங் சுயி என்பதன் நேரடியான பொருள், "காற்றும், நீரும்" என்பதாகும். மனிதனதும் ஏனைய உயிரினங்களதும் வாழ்க்கைக்குக் காற்றும் நீரும் இன்றியமையாதன. பூமியிலுள்ள காற்றுடனும், நீருடனும் இசைந்து வாழ்வது மனிதனுக்கு அதிட்டத்தையும், வளத்தையும் கொண்டுவரும் என்று பண்டைய சீனர்கள் நம்பினார்கள். அதனால்தான் அதிட்டத்தையும், வளத்தையும் கருதிக் கையாளப்பட்டுவரும் இந்த அறிவுத்துறைக்கு பெங் சுயி என்ற பெயர் வந்தது. மைக்கலாஞ்சலோ மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி ("Michelangelo di Lodovico Buonarroti Simoni", மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் "மைக்கலாஞ்சலோ" எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம். மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார். இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது. மைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது. சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 ல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது. மைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின.மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை. மைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ம் ஆண்டு ஜூன் 25 ல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார். நவம்பர் 1497 ல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது. பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும். இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இப் பளிங்குச் சிலை, கனடா நாட்டிலுள்ள கியூபெக் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு செயின்ட் ஆன் -டி- போப்ரே பசிலிகா (St. Anne-de-Beupre Basilica) என்னும் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கியூபெக் நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் செயின்ட் ஆன் -டி- போப்ரே என்னும் ஊர் காணப்படுகிறது. இந்த இடமானது கனடிய மற்றும் வட அமெரிக்க கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. மைக்கேலேஞ்சலோ 1499-1501 ல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 ல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். மைக்கேலேஞ்சலோ 1504 ல் டேவிட் சிலையை முடித்தார். 1505 ல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார். இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள்(1508-1512) பிடித்தன. மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது. கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது. சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது. அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் . ராபர்ட் வெஞ்சூரி இராபர்ட் வெஞ்சூரி ("Robert Venturi", சூன் 25, 1925 – செப்டம்பர் 18, 2018) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான மீஸ் வான் டெர் ரோவினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் "குறைவு சுவாரசியமற்றது" (Less is Bore) என்று கூறினர். இவர் ஈரோ சாரினென் மற்றும் லூயிஸ் கான் ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் ஜோன் ராவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி டெனிசே ஸ்கொட் பிரவுனும் ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். 1991 ஆம் ஆண்டுக்கான பிறிட்ஸ்கர் பரிசை வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பின்நவீனத்துவம் எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது. இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்: நாற்சார் வீடு நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி "முற்றம்" என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழ் நாடு, இலங்கை ஆகிய தமிழர் வாழுமிடங்களிலே கட்டப்படும் இத்தகைய வீடுகளையே தமிழர் நாற்சார் வீடுகள் என அழைக்கிறார்கள். கேரள மாநிலத்தில் இவற்றை "நாலுகெட்டு" என வழங்குவர். தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் வாழும் பகுதிகளில் காணப்படும் நாற்சார் வீடுகள் பெயர் பெற்றவையாகும். தற்காலத்தில் இப் பாணியிலமைந்த வீடுகள் கட்டப்படுவது குறைவு. மேற்கத்தியப் பாணி வீடுகளுக்கு இடம் கொடுத்து இந்தப் பாரம்பரிய வீடுகள் மறைந்து வருகின்றன. நாட்டுக்கோட்டை நகரத்தார் நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் வணிகச் சமுதாயத்தினர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வியாபார நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சென்ற இவர்களின் வம்சத்தினரை இன்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் காணலாம். நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது இந்து சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. சமையலில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்தவர்கள் இவர்கள். சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. மன்னர் அளித்த 96 ஊர்களின் வட்டாரத்தில் மொத்தம் 9 சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது. செட்டிநாடு என்று சொல்வழக்கில் இந்த 96 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக்கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர். ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது. பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் 1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும். நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது. இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகள் உண்டு. அவை, சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது (2007 கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது. நகரத்தார் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்கள் அவர்களால் வட்டகை எனும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன. மேலவட்டகை, கீழப்பதூர் வட்டகை, கீழ வட்டகை, மேலபதூர் வட்டகை, பதினாறு வட்டகை, உறுதிக்கோட்டை வட்டகை போன்றவை. இந்த உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் சுமார் 203 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரிவினையில், மொத்தம் உள்ள 9 நகரத்தார் கோவில் பிரிவைச் சார்ந்தவர்களில் 4 கோவிலைச் சார்ந்த சில புள்ளிகள் பிரிந்து வந்து உறுதிக்கோட்டை வட்டகையை உருவாக்கினார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது. மேல் மாகாணம், இலங்கை மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் ("Western Province", ) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. மத்திய மாகாணம், இலங்கை இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடமத்திய மாகாணம், இலங்கை வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தென் மாகாணம், இலங்கை தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம். வடமேல் மாகாணம், இலங்கை இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது. சப்ரகமுவா மாகாணம் சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஊவா மாகாணம் ஊவா ("Uva", ) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும். இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது. பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிறிட்ஸ்கர் பரிசு பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு. ஜோர்ன் உட்சன் ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர். இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் ஒரு கப்பல் வடிவமைப்பாளருக்கு மகனாகப் பிறந்தார். டென்மார்க்கின் தொழில் நகரமான அல்போர்கில் வளர்ந்து டேனிய முடியரசின் நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். பின் ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளில் பணியாற்றி இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் கோப்பன்ஹேகனுக்கு வந்தார். 1957ல் சீனா, யப்பான், இந்திய நாடுகளில் பயணமேற்கொண்டு வடிவமைப்பில் இணக்கம், அகம் புறங்களுக்கிடையேயான தொடர்பு முதலியனவற்றைக் கற்றார். 1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார். இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், ஊட்சனுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது. 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும் ஓபெரா மண்டபம், 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளச் சின்னமான இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும். இவருடைய மற்ற கட்டிடப்படைப்புகளில் சில ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கௌதம புத்தர் கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் "" என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது. சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார். சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை; இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம். கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர். வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும். பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார். எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைக் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார். தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார். இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர். கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார். புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். "ஆசையே துன்பத்தின் அடிப்படை" என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, "அநாத்மா" என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார். கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன. துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள் கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர். புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர், மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர். சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை. மேலும்,இவரது காலக் கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார். சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் "தத" "ஆகத" என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது. இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது. இலங்கையின் அரசியல் கட்சிகள் இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி ("Illankai Tamil Arasu Kachchi", ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, "Federal Party") இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது. இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது. மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே "இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும்". ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது. 1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது. 1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கைமீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது. 1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின. இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி (சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். 70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி (மொழிபெயர்ப்பு: "இந்திய மக்கள் கட்சி"; சுருக்கமாக பா.ஜ.க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள். பாரதிய ஜனதா கட்சி, தீனதயாள் உபாத்யாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுய சார்புக் கொள்கையும், தேசியவாத கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. சியாமா பிரசாத் முகர்ஜியால் "இந்து தேசியவாத" கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது. ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர். இக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி, பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது. இக்கட்சி, 1967 க்குப் பிறகு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்திரப் பிரதேசம், தில்லி போன்ற சில மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தியால் 1975 முதல் 1977 வரை அமல் படுத்தப்பட்ட அவசர காலத்தின் போது நடந்த அரசியல் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததினால், இக்கட்சியின் பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியும் வேறு சில கட்சிகளும் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1977 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராக களமிறங்கின. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது. பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார். பா.ஜ.க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இந்து தேசியவாத கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட "ராம் ஜென்மபூமி மந்திர்" இயக்கத்திற்கு உறுதுணையாக பா,ஜ.க விளங்கியதோடு, அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் எனவும், வெகு காலத்திற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்தது எனவும் ஏராளமான மக்கள் நம்புகின்றனர். எனவே இந்துக்களின் புனித இடமான அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. லால் கிருஷ்ண அத்வானி கட்சியின் தலைவராக இருந்த போது, பல்வேறு ரத யாத்திரைகள் மேற்கொண்டு, இந்துக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது. தில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும். தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. ஆனால், அ.இ.அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா.ஜ.க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்காவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி. வி. நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று, டாக்டர். மன்மோகன் சிங்கைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும். வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான இந்துத்துவத்தை பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா.ஜ.க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா.ஜ.க வின் வாதம். காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா.ஜ.க கூறுகிறது. அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மோகன்தாஸ் காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான "சர்வ தர்ம சம்பவ" என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா.ஜ.க வின் கருத்து. வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்: பா.ஜ.க வின் கொள்கைகளுள் "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார். பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை "இந்து நாடாக" அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது. ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலை, இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா.ஜ.க பாராட்டியுள்ளது. டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், நரேந்திர மோடி போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் மீது எழுந்த, 'இசுலாமியர்களுக்கு எதிரானது','பாசிசக் கொளகையுடையது', 'மதக் கலவரத்தைத் தூண்டுகிறது' போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், இந்தியப் பிரிவினைக்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா.ஜ.க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது. பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், மார்க்சிசத்தையும், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் சமூகவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன. சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. பா.ஜ.க தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க கட்டற்ற வர்த்தகத்தையும் அறிமுகப்படுத்தியது. பா.ஜ.க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது. பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான அணு ஆயுதத் தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் ஜம்மூ கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது. வாஜ்பாய் அரசின் ஆட்சிக்காலத்தில், பொக்ரான்-II என்ற பெயரில் மே 1998 இல் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டது மட்டுமின்றி பல முக்கிய ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டது. வாஜ்பாய் அரசு, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை ஆக்கிரமத்த பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற அனைத்து வழிகளையும் கையாள இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதுவே தற்போது கார்கில் போர் என்று அறியப்படுகிறது. பாகிஸ்தானின் ஊடுருவலை காலதாமதமாகக் கண்டறிந்தமைக்காக அரசின் உளவுப் பிரிவு விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் அதில் ராணுவம் கண்ட வெற்றியும் வாஜ்பாய் அரசுக்குப் புகழ் சேர்த்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 இல் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் அரசு, ராணுவத்தை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் குவித்தது. திசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பா.ஜ.க அரசு தீவிரவதத் தடை சட்டம் (POTA) என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் உளவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதோடு, காவல் துறைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. இச்சட்டம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது. இதனால் இந்த மசோதாவை சட்டமாக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இச்சட்டம் நீக்கப்பட்டது. காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது. இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனின் இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் அல் காயிதா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது. இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது. வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. சில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய பர்வேஸ் முஷரஃபை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார். பாரதிய ஜனதா கட்சி, சாதாரண உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக விளங்குவதாகக் கருதப்படுகிறது. இது கட்சிக்குள் பல பிரிவுகள் உண்டாவதற்குக் காரணாமாகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் ஒருமுறை மட்டுமே மூன்றாண்டுகள் செயல்பட முடியும். ஆனால் 2012 ஆம் ஆண்டு இந்த விதி தளர்த்தப்பட்டு, ஒருவரே இரண்டு முறை தொடர்ந்து தலைவராக செயல்படும் வகையில் மாற்றப்பட்டது. அண்மையில் வெங்கையா நாயுடு மற்றும் அத்வானி ஆகியோர் இப்பதவியில் இருந்து சில சர்ச்சைகள் காரணமாக விலகினர். ராஜ்நாத் சிங் இப்பதவியில் 2006 முதல் 2009 வரை நீடித்தார். தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்பான தேசிய செயற்குழு, நாடு முழுவதும் உள்ள பல தலைவர்களை உள்ளடக்கியது. மாநில அளவிலும் இதைப் போன்றே அமைப்புகளை பா.ஜ.க கொண்டுள்ளது. பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்தவர்கள். விஷ்வ இந்து பரிஷத், சுவதேசி ஜகரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது. "பா.ஜ.க மகிலா மோர்ச்சா" என்ற பெண்கள் அமைப்பையும், "பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா" என்ற இளைஞர் அமைப்பையும், "பா.ஜ.க மைனாரிட்டி மோர்ச்சா" என்ற சிறுபான்மையினர் அமைப்பையும் பா.ஜ.க உள்ளடக்கியுள்ளது. பா.ஜ.க, டிசம்பர் 2018 நிலவரப்படி 13 மாநிலங்களில் (குஜராத், மகாராட்டிரம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், கோவா, ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக 100000 கையூட்டு வாங்கியதாக, 2001 இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் கல்வித் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியின் மீதும் அத்வானியின் மீதும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம் சட்டப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானியின் காவலுக்குப் பொறுப்பேற்றிருந்த காவல் துறை அதிகாரியான அஞ்சு குப்தா அவ்வழக்கில் சாட்சி கூறினார். மூத்த பா.ஜ.க தலைவரான கோபிநாத் முண்டே, 2009 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக 8 கோடி செலவிடப்பட்டதாகக் கூறினார். இது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவான 40 லட்சத்தைவிட பல மடங்கு அதிகமாகும். தனது இந்த அறிக்கைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வெளிப்படையாக சவால் விட்டார். பின்னர், தனது அறிக்கை தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டவே தான் அவ்வாறு கூறியதாகக் கூறினார். பா.ஜ.க ஆட்சியில் முறைப்படுத்தி புதிதாக ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தெகிதி புது தில்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஊர்வலத்தில் விவசாயி மரத்தில் தூக்கிலிட்டு இறந்தார். இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு கால பகுதிகளாக பிரிக்கலாம். 1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. இதன் இரண்டாம் கூட்டம் 1886 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது. முன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது. இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார். காந்தி 1915ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமை புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார். பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர். திசம்பர் 2018இன் படி, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி புரிந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., "Dravida Munnetra Kazhagam") தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. 1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது. 1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். 1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. 1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும். 1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது. 1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது. 1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார். திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: 1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. ஐக்கிய முன்னணியின் அங்கமான திமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் விபரம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது. இதன் மூலம் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத சூழ்நிலை உருவானது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 89 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர் கட்சியாக உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது. நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது. எம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது. மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். [[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா]] தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் [[ஓ. பன்னீர்செல்வம்]] தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக [[வி. கே. சசிகலா]]வை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். 5 பிப்ரவரி 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார். 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த "பொறுப்பு முதல்வர்" பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார். பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன. 15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. [[திருவள்ளூர்]] (தனி), [[தென் சென்னை]], [[விழுப்புரம்]] (தனி), [[சேலம்]], [[திருப்பூர்]], [[பொள்ளாச்சி]], [[கரூர்]], [[திருச்சி]], [[மயிலாடுதுறை]] ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. 16 ஆவது மக்களவைக்கு அதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. [[தருமபுரி]]யில் பாமகவின் [[அன்புமணி ராமதாஸ்|அன்புமணியும்]], [[கன்னியாகுமரி]]யில் பாசகவின் [[பொன். இராதாகிருஷ்ணன்|பொன். இராதா கிருட்டிணனும்]] வென்றனர். அதிமுகவில் உள்ள [[வி. கே. சசிகலா|சசிகலா]], [[ஓ. பன்னீர்செல்வம்]] ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருட்டிணன் நகர் ]] இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது. பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] மற்றும் [[ஓ. பன்னீர்செல்வம்|பன்னீர் செல்வம்]] அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது. [[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]] [[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]] [[பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள்]] [[பகுப்பு:1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] [[பகுப்பு:எம். ஜி. ஆர்]] [[பகுப்பு:ஜெயலலிதா]] [[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார். கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.