முதற் பக்கம் கட்டிடக்கலை கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டிடகலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டிடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும். இவரது கூற்றுப்படி, நல்ல கட்டிடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டிடக்கலை என்று சொல்லலாம். ஒரு மேலான வரைவிலக்கணம், கட்டிடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம். கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டிடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டிடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டிடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம், பட்டறிவியம், கட்டமைப்பியம், பின்கட்டமைப்பியம் மற்றும் தோற்றப்பாட்டியல் என்பன போன்ற போக்குகள், கட்டிடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில எடுதுதுக்காட்டுகளாகும். லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்புக் கொண்ட மனிதனின் உடலின் அளவுவிகிதங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளே சிறப்பான அளவுவிகிதங்களுக்கான விதிகளாகும். அழகைப் பொருளின் தன்மைக்குப் புறம்பாக வெளியிலிருந்து கொண்டுவந்து ஒட்டவைக்க முடியாது, பொருள்களோடு அவற்றின் அழகு இயல்பாக அமைந்திருக்கிறது என்னும் கருத்தே இங்கு முக்கியமான அம்சம். கட்டிடக்கலையிலும், பிற அழகியல் கலைகளிலும் பாணி என்னும் ஒரு அம்சம் இடைக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், பாணி என்னும் கருத்துரு 16 ஆம் நூற்றாண்டில் வாசரி என்பவர் எழுதிய நூல்களினூடாகவே அறிமுகமானது. இந் நூல்கள் 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் 1849 வெளியிட்ட "கட்டிடக்கலையின் ஏழு விளக்குகள்" என்னும் நூலில், "கட்டிடக்கலை என்பது அதனைக் காண்போருக்கு உள நலத்தையும், ஆற்றலையும், இன்பத்தையும் தரக்கூடிய வகையில், அமைத்து, அலங்கரித்து உருவாக்கப்பட்ட கட்டிடங்களாகும்" என்றார். ரஸ்கினுக்கு, கட்டிடக்கலையைப் பொறுத்தவரை அழகியலே யாவற்றிலும் முக்கியமான அம்சமாக இருந்தது. மேலும், ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கப்படாத கட்டிடங்கள் கட்டிடக்கலை ஆகாமாட்டா என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். ஒரு கட்டிடக்கலை சார்ந்த கட்டிடத்துக்கும், சாதாரண கட்டிடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே, "நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற்றைக் கொண்டு ஒரு வீட்டையோ மாளிகையையோ அமைக்கலாம். அது கட்டுமானம். ஆனால் ஆக்கத்திறன் சிறப்பாக அமையும்போது, அது எனது நெஞ்சைத் தொடுகிறது. நீங்கள் எனக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். மிகவும் அழகாக இருக்கிறது என்கிறேன் நான். அதுவே கட்டிடக்கலை." எனக் குறிப்பிடுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றாசிரியரான "நிக்கொலஸ் பெவ்ஸ்னர்" என்பாருடைய கூற்றுப்படி, ஒரு துவிச்சக்கரவண்டிக் கொட்டகை ஒரு சாதாரண கட்டிடமும், லிங்கன் பேராலயம் ஒரு கட்டிடக்கலை சார்ந்த கட்டிடமுமாகும். தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கு அமைய இத்தகைய பிரிவு அவ்வளவு தெளிவானதாக இல்லை. "பெர்னாட் ருடோவ்ஸ்கி" என்பாரது "கட்டிடக்கலைஞன் இல்லாத கட்டிடக்கலை" (Architecture without architects) என்னும் பிரபலமான நூல், சாதாரண மக்களால் கட்டப்பட்ட பல்வேறு தரத்திலான கட்டிடங்களையும், கட்டிடக்கலையின் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும்போது, கட்டிடக்கலைசார் கட்டிடங்கள் எவை, அவ்வாறில்லதவை எவை என்பதிலே கருத்தொற்றுமை காணப்பட்டது. விருவியசைப் போல், நல்ல கட்டிடங்களே கட்டிடக்கலைசார்ந்த கட்டிடங்கள் என வரைவிலக்கணப்படுத்தினால், கூடாத கட்டிடக்கலைசார்ந்த கட்டிடங்கள் இல்லையா என்ற கேள்வி எழும். இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு, கட்டிடக்கலைசார் கட்டிடங்கள் என்பதற்கு, கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் என்றும் வரைவிலக்கணம் கூறலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். இது கட்டிடக்கலைஞர் என்பதன் வரைவிலக்கணம் பற்றிய இன்னொரு சர்ச்சையை உருவாக்குவதைத் தவிர்க்க முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்பாட்டு நோக்கின் அடைப்படையிலேயே அமைப்பும் அழகியலும் நோக்கப்படவேண்டும் என்னும் இக் கருத்து பரவலான ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது. செயற்பாடு என்னும் இப் புதிய கருத்துரு கட்டிடங்களின் உளவியல், அழகியல், பண்பாட்டுப் பயன்கள் உட்பட எல்லா வகையான பயன்களும் குறித்த எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்கியிருந்தது. பல கட்டிடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டிடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செயல்முறை என்பது, கொடுக்கப்பட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தும் முறைகளைக் கைக்கொள்ளும்போது, அடிக்கடி நிகழும், தொடர்ச்சியான, சமநிலைப்படுத்தும் செயலை, அல்லது வெறுமனே உடற் செயல்பாட்டின்மூலம், ஒரு பொருளைச் சிறந்த பயன்படத்தக்க ஒன்றாக மாற்றுவதைக் குறிக்கும். கோட்பாடு என்பது, ஒரு பொருள், பிரேரிக்கப்பட்ட முடிவை அடையும்வகையில், மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதும், விளக்குவதுமான காரணத் தொடர்பாக்கத்தின் விளைவாகும். வெறுமனே செய்முறையிலூறிய கட்டிடக்கலைஞன், தான் எடுத்துக்கொண்ட வடிவுருக்களுக்கான (forms) காரணங்களை எடுத்துக்காட்ட முடிவதில்லை; கோட்பாட்டுக் கட்டிடக்கலைஞனும், பொருளை விட்டு நிழலைப் பிடிப்பதன் மூலம் தோல்வியடைகிறான். எவனொருவன் கோட்பாடு செயல்முறை இரண்டிலும் வல்லவனாக இருக்கிறானோ அவன் இரட்டைப் பலமுள்ளவன்; தன்னுடைய வடிவமைப்பின் தகுதியை நிரூபிக்கக்கூடியவனாக இருக்கின்றது மட்டுமன்றி, அதைத் திறமையாகச் செயற்படுத்தக்கூடியவனயும் இருப்பான்." கட்டிடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டிடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டிடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டிடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இங்கே முதலில் முயன்று தெரிதல் (Trial and Error) முறையின் பயன்பாடு, பின்னர் அவற்றில் தேவைக்கேற்ற மாற்றங்கள் அல்லது வெற்றிகரமான முயற்சிகளைப் பிரதிபண்ணல் எனப் பரிணாம வளர்ச்சி நடைபெற்றது. கட்டிடக்கலைஞர் மட்டுமே இங்கு முக்கியமானவர் அல்ல. இவர்கள் பங்கு சதவீத அடிப்படையில் மிகக் குறைவே; விசேடமாக வளரும் நாடுகளில் இது 5% அளவுக்கும் குறைவே என்றும் கூறப்படுகின்றது. அவர் தொடர்ந்துவரும் கட்டிடக்கலை மரபுகளில் ஒரு பகுதியேயாவர். "நாட்டார் மரபு" "(Vernacular Tradition)" என்று அழைக்கப்படும் மரபுசார் கட்டிடமுறை இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலான கட்டிடங்கள் இம்முறையிலேயே கட்டிடக்கலைஞர் அல்லாதவர்களால் உருவாக்கப்படுகின்றன. முற்கால மனிதர் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாகும். உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகர்சார் சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டிடங்கள் அதிக சிக்கலானவையாக ஆனதுடன், அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற குடிசார் கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டிடங்கள் எனப் புதிய கட்டிடவகைகளும் பெருகத்தொடங்கின. எனினும் சமயம் சார்ந்த கட்டிடக்கலை அதன் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பல்வேறு கட்டிடப்பாணிகளும், வளர்ச்சியடையத் தொடங்கியதுடன், கட்டிடக்கலை பற்றிய எழுத்தாக்கங்களும் உருவாகின. இவற்றிற் சில, கட்டிடங்கள் வடிவமைத்தல், கட்டுதல் தொடர்பில் பின்பற்றவேண்டிய விதிகளாக உருப்பெற்றன. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், சீனாவிலெழுந்த பெங் சுயி போன்ற கீழைத் தேச நூல்களும், மேலை நாட்டிலெழுந்த விட்ருவியசின் நூலும் இதற்கு உதாரணங்களாகும். "கிளாசிக்கல்" மற்றும் மத்திய காலங்களில், ஐரோப்பாவில், கட்டிடக்கலைத் துறையில் தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. கட்டிடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டிடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். ஐரோப்பாவின் தொடக்ககால நாகரிகங்களான கிரேக்க, ரோமர்காலக் கட்டிடக்கலைகளுக்கான பல அடிப்படைகளை எகிப்தியக் கட்டிடக்கலையில் அடையாளம் காண முடியும். தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டிடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும், மேற்கு ஈரானியப் பீடபூமியிலும் கட்டப்பட்ட சிகுரட் எனப்படும் கூம்பக வடிவ கோயில் கோபுரங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. இவை பல படிகளாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறான 32 சிகுரட்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் 28 ஈராக்கிலும், 4 ஈரானிலும் உள்ளன. பண்டைக் கிரேக்க நாகரிகம் கிமு 1900 தொடக்கம் கிமு 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டிடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுள் முதன்மையானவை கோயில்கள் ஆகும். கிரேக்கக் கோயில்கள் எகிப்தியக் கோயில்களைவிடச் சிறியவை. இவை, ஆள்பவர்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காகவோ, பெருமளவிலான மக்கள் குழுமி வழிபடுவதற்காகவோ கட்டப்படவில்லை. இவை முக்கியமாகப் புற அழகுக்காகவும், சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்குமாகவே வடிவமைக்கப்பட்டன. கிரேக்கக் கட்டிடக்கலையில் ஒழுங்குகள் எனப்படும் மூன்று விதமான பாணிகள் பயன்படுத்தப்பட்டன. இவை டொரிக், அயனிக், கொறிந்தியன் என அழைக்கப்பட்டன. ஒழுங்குகள் என்பன தூண்களின் அமைப்பு, அவற்றின் அளவுவிகிதங்கள், அலங்காரங்கள், அவற்றால் தாங்கப்படும் வளைகளின் அமைப்பு அலங்காரம் முதலியவை தொடர்பானது. ரோமர் காலம் கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டிடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டிடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டிடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற்றை வெட்டிக் கட்டிடக் கற்களை உருவாக்கும் முறைக்குப் பதிலாகச் சுண்ணாம்பு, மணல், சிறு கற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து ஒருவகைக் காங்கிறீட்டுச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமர்களே. கட்டிடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை கூட்டு ஒழுங்கு, டஸ்கன் ஒழுங்கு என்பவையாகும். "ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டிடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டிடக்கலை தொடர்பில், தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, புரூணலெஸ்ச்சி போன்றவர்களை உதாரணமாகக் காட்டலாம். அக்காலத்தில், சிற்பி, கட்டிடக் கலைஞன், பொறியியலாளன் எனத் தொழிற்பிரிவுகள் இருக்கவில்லை. ஒரு சிற்பியே (சிற்பம் செய்பவன்) பாலமொன்றை வடிவமைத்துக் கட்டக்கூடிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான கணித அறிவும்கூடப் பொதுமை அறிவின் பாற்பட்டதாகவேயிருந்தது. இந்தியாவிலும், சிற்பக் கலைஞர்களே கட்டிடங்களையும் வடிவமைத்துக் கட்டினார்கள். கட்டிடக்கலை, பொறியியல் அனைத்தும் இச் சிற்பக் கலைக்கு உள்ளேயே அடங்கியிருந்தன. கட்டிடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டிடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டிடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் கட்டிடக்கலை அழகியல் அம்சங்களையும், இடவெளி(space)வடிவமைப்புத் தொடர்பான பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வளர்ச்சியடைந்தது. "சீமான் கட்டிடக்கலைஞர்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் உருவாகினர். பொதுவாகப் பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்த இவர்கள், தோற்றம் சார்ந்த அம்சங்களிலேயே கூடிய கவனம் செலுத்தினர். அதுவும் பெரும்பாலும், வரலாற்றுக் கட்டிட மாதிரிகளையே பின்பற்றிவந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்த இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts) என்னும் நிறுவனம், சூழ்நிலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடாது, அழகிய வரைபடங்களை உள்ளடக்கிய விரைவான திட்டங்களை உருவாக்குவதற்கே பயிற்சி கொடுத்துவந்தது. இதற்கிடையில், தொழிற்புரட்சி தொகையான நுகர்வுக்கான பாதையைத் திறந்துவிட்டதுடன், ஒருகாலத்தில் விலையுயர்ந்த கைவினைத்திறனோடு சம்பந்தப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், இயந்திர உற்பத்தியின் கீழ் மலிந்ததன் காரணமாக, அழகியல் மத்தியதர மக்கள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியது. எனினும், உற்பத்தி வழிமுறைகளின் வெளிப்பாடுகளோடு இயைந்த நேர்மையும், அழகும் இவ்வுற்பத்திப் பொருட்களிற் குறைவாகவே காணப்பட்டன. இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டிடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டிடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட டொய்ச் வேர்க்பண்ட் (Deutshe Werkbund) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். கைத்தொழில் வடிவமைப்புத் துறை இங்கேதான் ஆரம்பமானதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 1919 ல், ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட பௌஹவுஸ் (Bauhaus) பாடசாலை வரலாற்றை நிராகரித்துவிட்டு, கட்டிடக்கலை என்பது கலை, கைவினை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு தொகுப்பு என்ற கருத்தைக் கொண்டிருந்தது. முதன்முதலில் நவீன கட்டிடக்கலை பயிலப்படத் தொடங்கியபோது, அது, தார்மீக, தத்துவ, அழகியல் அடிப்படைகளிலமைந்த, ஒரு முன்னோடி இயக்கமாக இருந்தது. வரலாற்றை நிராகரித்து, வடிவத்தை உருவாக்கும் காரணியாகச் செயற்பாட்டை (function), கருதியதுமூலம் உண்மையைத் தேட முயற்சிக்கப்பட்டது. கட்டிடக்கலைஞர்கள் பிரபலமனார்கள். பின்னர், நவீன கட்டிடக்கலை, பொருளாதார நோக்கத்தையும், எளிமையையும் கருத்தில் கொண்டு, பெரும்படி உற்பத்திமுறையை நோக்கிச் சென்றது. நவீனத்துவக் கட்டிடக்கலைஞர்கள், கட்டிடங்களை அவற்றின் அடிப்படையான வடிவங்களுக்கு எளிமையாக்க முயன்றனர். இவர்கள் கட்டிடங்களில் அலங்காரங்களை நீக்கிவிட்டனர். உருக்குத் தூண்கள், வளைகள், காங்கிறீற்று மேற்பரப்புக்கள் போன்ற தங்கள் உண்மையான அமைப்புக்களை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் அலங்காரங்கள் இன்றித் தம்மளவிலேயே அழகானவையாகக் கருதப்பட்டன. மீஸ் வான் டெர் ரோ போன்ற கட்டிடக்கலைஞர்கள், கட்டிடப்பொருட்கள், கட்டுமான நுட்பங்கள் என்பவற்றின் உள்ளார்ந்த அழகியல் இயல்புகளைப் பயன்படுத்திக் கட்டிடங்களை அழகாக்க முயன்றனர். இவர்கள் மரபுவழியான வரலாற்று வடிவங்களுக்குப் பதிலாக எளிமையான வடிவவியல் வடிவங்களை உருவாக்கினர். எனினும், நவீன கட்டிடக்கலையில் ஒரு தரக்குறைவு ஏற்பட்டிருப்பதை, 1960களிலிருந்து, பொதுமக்கள் உணர ஆரம்பித்தனர். கருத்தின்மை, வரட்சித்தனம், அழகின்மை, ஒருசீர்த்தன்மை மற்றும் உளவியற் தாக்கங்கள் என்பன இந்நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்ட சில விடயங்களாகும். கட்டிடக்கலையில் இருக்கவேண்டிய ஆழத்தைத் தியாகம் செய்துவிட்டு, வெளித்தோற்ற அளவில் பொதுமக்களைக் கவரக்கூடிய கட்டிடங்களைக் கொடுக்கும் பாதையொன்றைக் கைக்கொள்வதுமூலம், மேற்கூறிய நிலைமைக்குப் பதிலளிக்கக் கட்டிடக்கலைத் துறை முயன்றது. இது பின்நவீனத்துவம் (Postmodernism) என அழைக்கப்பட்டது. உள்ளே செயல்பாடுகளுக்கு உகந்தபடியான வடிவமைப்பையும், வெளியில் அலங்கரிக்கப்பட்டதுமான கொட்டகை; உள்ளும், புறமும் ஒரே நேரத்தில் சிந்தித்து வடிவமைக்கமுயன்று, கவர்ச்சியற்ற கட்டிடத்தைக் கட்டுவதிலும் சிறந்தது என்ற தொனிகொண்ட, ராபர்ட் வெஞ்சூரி என்னும் கட்டிடக்கலைஞரது கருத்து, இந்த அணுகுமுறையின் நோக்கத்தை விளக்குகிறது. கட்டிடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டிடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டிடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் தங்கள் விருப்பங்கள், தத்துவங்கள் அல்லது அழகியல் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றல்லவென்றும், மாறாக மக்களுடைய நாளாந்தத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி , வாழ்வுக்குகந்த சூழலை வழங்குவதாக இருக்கவேண்டுமென அவர்கள் கருதினர். சிறந்த உற்பத்திகளை உருவாக்குவதற்கு வழிசமைக்கக் கூடிய, புதிய வடிவமைப்பு வழிமுறையைக் கண்டுபிடிக்கும் நோக்கில், கிறிஸ் ஜோன்ஸ், கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டர் போன்றவர்களைக் கொண்ட வடிவமைப்பு வழிமுறைகள் இயக்கம் (Design Methodology Movement) ஆரம்பிக்கப்பட்டது. நடத்தை, சூழல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த விடயங்களில் விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, வடிவமைப்பு வழிமுறைகளுக்கு உதவக்கூடிய தகவல்கள் பெறப்பட்டன. மேலும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்படத் தொடங்கியபோது, கட்டிடச் சேவைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில், கட்டிடங்களின் சிக்கல்தன்மை அதிகரித்து, கட்டிடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. இதனால், கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களின் உருவாக்கத்துக்கு, பல உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இக்குழுவுக்குக் கட்டிடக் கலைஞரே தலைவராக விளங்கினார். தற்காலத்தில் இத் தலைமைப் பொறுப்புக்கும், பல சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்ட காரணத்தினால், திட்ட முகாமைத்துவம் போன்ற புதிய துறைகள் தோன்றிக் கட்டிடக்கலைத் துறையின் தலைமை நிலையையும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. எனினும், கட்டிடங்களின் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கட்டிடக்கலைத்துறை இன்னும் பலமாகவேயிருந்து வருகின்றது. விசேடமாக, பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படக்கூடிய கட்டிடவகைகளில், கட்டிடக்கலைப் பாணி சார்ந்த பரிசோதனைகள் இன்னும் நிகழக்கூடிய நிலையுள்ளதுடன் அவை மேற்படி பரிசோதனைகளின் காட்சியகங்களாகவும் விளங்குகின்றன. மனித இனத்தின் உற்பத்திகளிலே, எக்காலத்திலும், மிகக் கூடிய அளவு பார்வைக்குத் தெரிகின்றவை கட்டிடங்களேயாகும். இருந்தும், அவற்றுட் பெரும்பாலானவை, சாதாரண மக்களினாலேயோ அல்லது வளரும் நாடுகளிலுள்ளதுபோல், கொத்தனார்களாலேயோ கட்டப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிலே தரப்படுத்தப்பட்ட (standardised) உற்பத்திமுறைகள் மூலம் பெருமளவு கட்டிடங்கள் உருவாகின்றன. கட்டிட உற்பத்தியின் மிகக் குறைவான வீதமே கட்டிடக்கலைஞரின் ஈடுபாட்டைக் கொண்டுள்ளன. சிக்கலான கட்டிட வகைகளிலும், பண்பாட்டு, மற்றும் அரசியற் சின்னங்களாக விளங்கக்கூடிய கட்டிடங்களில் மட்டுமே கட்டிடக்கலைஞரின் திறமை பெரும்பாலும் வேண்டப்படுகின்றது. இவற்றைத்தான் பொதுமக்களும், கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களாகக் கருதுகிறார்கள். சமூகத்துக்கும், கட்டிடக்கலைஞருக்குமிடையே எப்பொழுதும் ஒரு கருத்துப்பரிமாற்றம் நடந்துகொண்டுதான் வருகிறது. இப் பரிமாற்றத்தின் விளைவுகள்தான் கட்டிடக்கலையும், அதன் உற்பத்திப்பொருட்களுமாகும் என்று சொல்லலாம். கட்டிடங்களின் பட்டியல் பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: கட்டடக் கலைஞர் ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி ("Architect") என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு ("Pritzker Prize") ஆகும். முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் "கட்டிடக்கலைஞர்" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம். இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் புவியியல் புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் ("physical geography") என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்முறைகள், அம்சங்கள், மனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றின் இடம் சார்ந்தனவும், உலகியல் சார்ந்தனவுமான பரம்பல்கள் குறித்து ஆராய்கிறார்கள். வெளியும், இடமும்; பொருளியல், உடல்நலம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் மீது தாக்கங்களைக் கொண்டிருப்பதால், புவியியல் ஒரு ப்லதுறைத் தொடர்பு கொண்ட துறையாக உள்ளது. புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வகைகள், நில அமைப்பு என்பன எவ்வாறு உருவாகின்றன, எத்தகைய தொடர்புகளை அவற்றுள் கொண்டுள்ளன என்பவற்றை உள்ளடக்கிய இயற்கைச் சூழல் குறித்து ஆய்வு செய்கிறது. இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் ("layout"), கற்கோளம் ("lithosphere"), நீர்க்கோளம் ("hydrosphere"), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் ("patterns"), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக ("physical landscape") இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது. மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை ("disaster management"), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் ("sustainability"), அரசியல் சூழலியல் ("political ecology") என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும். புவித்தகவற்கணியவியல் ("Geomatics") என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை ("Global positioning systems") போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மண்டலப் புவியியல் ("Regional geography"), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் ("regionalization") குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது. புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் ("planetology") எனப்படும். மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், கிரகணங்களை எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன. புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் ("Parmenides") அல்லது ஆக்கிமிடீசாக இருக்கலாம் என்கின்றனர். அனக்சாகோரஸ் என்பவர் கிரகணங்களைச் சான்றாகக் கொண்டு புவி வட்டமான விளிம்புத் தோற்றம் கொண்டது என விளக்கினார். எனினும் அவர், அவர் காலத்தின் பல அறிஞர்களைப் போலவே புவி ஒரு வட்டமான தட்டுப் போன்றது என நம்பினார். புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர். மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் ("environmental determinism"), பிரதேசப் புவியியல் ("regional geography"), கணியப் புரட்சி ("quantitative revolution"), மற்றும் "critical geography" என்பனவாகும். இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் ("maps") இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் ("geographic information systems" (GIS)) இணைந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடியும். உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள். கிறித்தோபர் கொலம்பசு கிறித்தோபர் கொலம்பசு ("Christopher Columbus") (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் "புதிய உலகம்" என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின. புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் "சான் சால்வதோர்" எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார். கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை "இன்டியோசு" ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும். கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி. 1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453 இல் கைப்பற்றியிருந்தனர்). 1476-இல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார். 1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர். கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார். கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான். கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. நியூ யார்க் நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பஸின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, "கொலம்பஸ் வட்டம்" மற்றும் மையப் பூங்கா போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன. சில பாசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாசுக்கைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன கோர்சிகா தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் காத்தலோனியா அல்லது கிரீஸ் அல்லது போர்த்துக்கல்-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். 1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப்போதைய ஐரோப்பியர், புவி தட்டையானது என்று நம்பினர்). ஆனால் அக்காலத்தைய கடற்பயணிகள், வழிகாட்டிகள் புவி உருண்டையானது என்று அறிந்திருந்தனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கொலம்பசு இண்டீசிற்கு எவ்வளவு தூரம் என்பதை அறுதியிடாததுதான். பல ஐரோப்பியர் தாலமி-யின் கருத்தான பெரு நிலப்பரப்பு(உரேசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து) 180 பாகை புவி அளவையும், மீதம் 180 பாகை நீர் அளவையும் கொண்டதாக நம்பினர். (உண்மையில் இது 120 பாகை நிலப்பகுதி, மீதம் அறியப்படாத பகுதி). கொலம்பசு டி'ஐல்லியின் அளவீடுகளை, அதாவது 225 பாகை நிலம், 135 பாகை நீர் என்பது, ஏற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக கொலம்பசு 1 பாகை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவைவிட சற்று குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். கடைசியாக கொலம்பசின் வரைபடம் உரோமன் மைல் அளவில் (5000 அடிகளைக்கொண்டதாக), கடல் மைல் (6,082.66 அடி புவிநடுக்கோட்டுப் பகுதியில்) அளவைவிட இருந்தது. கொலம்பசு கேனரித் தீவுகளிலிருந்து சப்பான் 2,700 மைல்கள் இருப்பதாகத் தீர்மானித்தார். உண்மையில் இத்தொலைவு 13,000 மைல்கள், பெரும்பாலான ஐரோப்பிய கடற்பயணிகளும் வழிகாட்டிகளும் இண்டீசு என்பது தொலைதூரத்தில் இருப்பதாகத் தயங்கி வந்தனர். 1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே இவை மேற்கத்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். சான்றுகள் எதிராக இருந்தபோதிலும் கொலம்பசு எப்போதும் தாம் கண்டறிந்த நிலப்பகுதிகள் மார்க்கோ போலோவாலும் பிற ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளாலும் விவரிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்தவை என்றே உறுதியாக இருந்தார். இந்த மறுப்புதான் புதிய கண்டங்களுக்கு இவர் பெயரை வைக்காது பிளாரென்சின் தேடலாய்வாளர் அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை ஒட்டி "அமெரிக்கா" என பெயரிட அமைந்த காரணங்களில் ஒன்றாயிற்று. கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது. அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித் தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார். அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார். கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார். சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார். அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது. அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார். இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். முதலில் டொமினிக்கா-வையும், பின்னர் வடக்காகக் கிளம்பி, குவாடெலோப், மோன்ட்செர்ராட், ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார். அத்தீவுகளில் இறங்கி அவற்றை ஸ்பெயினின் பகுதிகளாக கன்னித் தீவுகள் மற்றும் பியுர்டோ ரிகோ போல தானே கூறிக்கொண்டார். பின்னர் அவர் லா எசுப்பானியோலா-விற்குச்சென்று, அங்கே அவர் விட்டுச் சென்றவர்கள் அங்குள்ள ஆதிவாசிகளுடன் சண்டையில் ஈடுபட்டு கொல்லப்பட்டதை அறிந்தார். லா எசுப்பானியோலா தீவுகளில் வடகடற்கரையில் உள்ள இசபெல்லா தீவுகளில்(இங்கே முதன்முதலில் தங்கத்தைக்கண்டார்), இவர் குடியேற்றங்களை அமைத்தார். ஆனால் இங்கே இவர் நினைத்தது போல தங்கம் அவ்வளவாகக்கிட்டவில்லை. பின்னர் இவர் இசபெல்லாத்தீவின் உட்பகுதியில் தங்கத்தைத்தேடி சிறிது கிடைப்பதை அறிந்தார். அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டினார். கியூபா-வின் தென் கடற்கரையில் பயணித்து, பின்னர் அது ஒரு தீபகற்பம், தீவு அல்ல என்பதை அறிந்தார். பின்னர் ஜமைக்காவைக் கண்டுபிடித்தார். தன்னுடைய இரண்டாம் பயணத்தின் போது பெர்டினான்ட் மற்றும் இஸபெல்லாவினால் அங்குள்ள குடிகளிடம் நட்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில் அரசருக்கு ஒரு கடிதம் அனுப்பி அங்குள்ள குடிகளை அடிமைப்படுத்த உரிமை வழங்குமாறு கேட்டார். ஏனென்றால் கரிப்-இலிருந்த குடிகள் முரடர்களாக இருப்பதாக அவர் உணர்ந்திருந்தார். அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்ட போதிலும் கொலம்பஸ் பிப்ரவரி, 1495 -இல் கொலம்பசு ஆராவக்-ஐச்சேர்ந்த 1600 பேரை பிணையாளிகளாக்கினார். 550 பேர் எசுபானியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் 200 பேர் கப்பலிலேயே இறந்தனர் (நோயால் இருக்கக்கூடும்). எசுப்பானியாவை அடைந்த பாதிப் பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஆனால் எசுப்பானியா வந்தவர்கள் மறுபடியும் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறாக அமெரிக்கக் குடிகளை வளைத்து அடிமைகளாக்குவது எசுப்பானியர்களுக்கும், அங்குள்ள குடிகளுக்குமான சண்டைகளுக்கு வழிவகுத்தது. கொலம்பசின் பயணத்தின் மிக முக்கியக் குறிக்கோள் தங்கமே. அதற்காக எயிட்டி-இலுள்ள சிகாவோ தீவுகளில் இருந்த குடிகளை ஒரு திட்டத்திற்கு ஆட்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்று அவர்களை மிரட்டினார். அவ்வாறு கொண்டு வராதவர்களின் கைகள் வெட்டப்படும் என்றும் மிரட்டினார்.அப்படியிருந்தும் அவரால் அவ்வளவாக தங்கத்தைப் பெற முடியவில்லை. அவர் தன்னுடைய எசுப்பானிய அரசருக்கான கடிதங்களில் கொத்தடிமைப்படுத்துவதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்தினார். ஆனால் அவையாவும் அரசரால் மறுக்கப்பட்டன. அரச குடும்பத்தினர் அமெரிக்கக்குடிகள் கத்தோலிக்கத்திருச்சபையின் எதிர்கால உறுப்பினர்களாக அவர்கள் விரும்பினர். குறிப்பாக, கொலம்பஸ் என்கோமியென்டா எனப்படும் எசுப்பானியர்களின் 'அமெரிக்க குடிகளை கிறித்துவர்களாக மாற்றினால் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்' திட்டத்தைத் தன்னலக் கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினார். இந்தத் திட்டம் அமெரிக்கக்குடிகள் கொத்தடிமைகளாக மாற வழிவகுத்தது. சில சமயங்களில் இந்தியக்குடிகள் சாகும்வரை வேலை செய்தனர். சில சமயங்களில் அவர்கள் ஐரோப்பியர்களால் அவர்களுக்குப் பரப்பப்பட்ட நோயினாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் இறந்தனர். கொலம்பசிற்கு முன்னதான மக்கள் தொகை பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. 1496-இல் பார்த்தலோமே டி லாஸ் காஸாஸ் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார். 3,000,000 டையனோக்கள் இருந்ததாக அது தெரிவிக்கிறது. 1514-இல் எடுக்கப்பட்ட ஒரு எசுப்பானியக் கணக்கெடுப்பு 22,000 டையனோக்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றது. 1542-இல் 200 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கொலம்பசு தன்னுடைய உடன்பிறந்தவர்களை இந்தக்குடியிருப்புகளுக்கு அதிகாரிகளாக நியமித்து விட்டு ஹிஸ்பானியோலாவை விட்டு ஐரோப்பாவிற்கு மார்ச் 10, 1496 -இல் புறப்பட்டார். அவருடைய உடன்பிறந்தவர்களும் மற்ற எசுப்பானியர்களும் என்கோமியென்டா என்னும் கொலம்பசின் திட்டத்தை அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தினர். கொலம்பசு அவர் கண்டுபிடித்த தீவுகளின் ஆளுநராக அமர்த்தப்பட்டார். அத்தோடு அட்லாண்டிக் கடலில் பல்வேறு பயணங்களை அவர் மேற்கொண்டார். அவர் மிகப்பெரும் கடல் பயணியாக இருந்தபோதிலும் அவர் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார். அதனால் அவர் 1500-ல் ஆளுநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். 1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு, இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பஸின் குறிப்புக்களை தந்தவர்) உடன் , கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார். அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார். அங்கே அவர் ஒரினோகோ ஆற்றையும் கண்டார். முதலில் இந்த நிலப்பரப்புக்கள் புதிய கண்டம் என்று கூறியவர், பின்னர் அவை ஆசியாவின் பகுதிகள் என்று மாற்றிச் சொன்னார். ஸ்பானிய குடியேற்றவாசிகள், கொலம்பஸின் புதிய உலகைப்பற்றிய மிகைப்படுத்திய கூற்றுக்களால் ஏமாந்து போனார்கள்.கொலம்பஸ் குடியேற்றவாசிகளுக்கும், அமெரிக்கக்குடிகளுக்கும் இடையிலான சண்டைகளைத்தீர்க்க வேண்டியவரானார்.தன்னுடைய பேச்சைக் கேளாத ஸ்பெயின் நாட்டவர்களைத் தூக்கிலிடவும் செய்தார். இதனால் ஸ்பெயினுக்குத் திரும்பிய பலர் கொலம்பஸைப் பற்றி அவதூறாகக் குற்றம் சாட்டினர். அரசரும் அரசியும், பிரான்சிஸ்கோ டி போபடில்லா என்ற ஒரு அரச நிர்வாகியை 1500-இல் அனுப்பினர். இவர் வந்து கொலம்பஸ் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து ஸ்பெயினுக்கு அனுப்பினர். கொலம்பஸ் தன்னுடைய கைவிலங்கை ஸ்பெயின் திரும்பும்வரை கழற்ற மறுத்தார்.அப்போது அவர் ஸ்பெயின் அரசருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அவர் ஸ்பெயினில் விடுவிக்கப்பட்டாலும், அவருடைய ஆளுநர் பட்டம் திரும்பத் தரப்படவில்லை. அத்தோடு வேதனையான விடயமாக, போர்த்துகீசியர்கள் இன்டீசுக்கான போட்டியில் வெற்றியும் பெற்றனர்: வாஸ்கோ ட காமா செப்டெம்பர் 1499-இல் இந்தியாவிற்குப்பயணம் மேற்கொண்டு திரும்பினார்(ஆப்பிரிக்கா வழியாக கிழக்கில் பயணித்து). கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9, 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது நடு அமெரிக்கா-வின் பெலிஸ்-இலிருந்து பனாமா வரை பயணித்தார். 1502-இல் இப்போது ஹோன்டுராஸ் எனப்படும் தீவின் கரையில் ஒரு சரக்குக் கப்பலை எதிர்கொண்டார். இது ஸ்பானியர்களின் மீசோ அமெரிக்கா நாகரிகத்தின் அமெரிக்கக்குடிகள் உடனான முதல் சந்திப்பாகும். பிறகு கொலம்பஸ் ஜமைக்காவில் ஒரு வருடம் தவிக்கவேண்டியதாயிற்று. பிறகு அவர் இரண்டு பேரை கேனோவில் ஹிஸ்பேனியோலாவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கக்குடிகளிடம் மிகக் சரியாக சந்திரகிரகணத்தைக் கணித்துச்சொல்லி அவர்களது நன்மதிப்பைப்பெற்றார். கடைசியாக அவருக்கு உதவி கிடைத்ததூ. அதன்பின் ஸ்பெயினுக்கு 1504-இல் திரும்பச்சென்றார். கொலம்பஸ் கிறிஸ்துவரல்லாதவர்களைக் கிறிஸ்துவர்களாக்குவதற்காகவே இவ்வாறு கடற்பயணம் செய்வதாகச் சொல்லி வந்தார். தனது முதிர்ந்த வயதில் மிகவும் ஆன்மீகவாதியாக மாறினார்.அவர் தனக்கு தெய்வக்குரல் கேட்பதாகக் கூடச்சொல்லி வந்தார். ஜெருசலேம் நகரை மீட்கும் சிலுவைப்போரில் ஈடுபடப்போவதாகக் கூறி, பிரான்சிஸ்கன் அணிந்து வந்தார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை சொர்க்கம் என்றும் அவை கடவுளின் திட்டமென்றும் கூறிவந்தார். தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார். மே 20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லாடோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது. 1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர். மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த "புக் ஆவ் பிரிவிலேசசு" (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட "புக் ஆவ் பிரொபெசீசு" (1505). புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் "கொலம்பிய சட்டவழக்குகள்" ("pleitos colombinos") எனப்படுகின்றன. தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார்; 41 அகவைகள் நிறைந்த கொலம்பசிற்கு அச்சமயம் கீல்வாதம் பற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின. கொலம்பசின் வாழ்முறையையும் நோய் உணர்குறிகளையும் கொண்டு தற்கால மருத்துவர்கள் அவருக்கு நேர்ந்தது கீல்வாதமல்ல என்றும் "ரீய்ட்டரின் கூட்டறிகுறி" என்றும் கருதுகின்றனர். ரீய்ட்டரின் கூட்டறிகுறி குடல் தொற்றுக்களால் ஏற்படும் ஓர் மூட்டு நோயாகும்; இது கிளமிடியா அல்லது கொணோறியா போன்ற பாலுறவு பரவு நோய்களிலிருந்தும் வந்திருக்கலாம். அவருடைய கடற்பயணங்களில் எங்காவது உணவு நச்சுமை தொற்றி இந்நோய் வந்திருக்கலாம் என டெக்சாசு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் வாதவியலாளருமான மரு. பிராங்க் சி. ஆர்னெட் கருதுகிறார். மே 20, 1506இல் தமது 54வது அகவையில் கொலம்பசு எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இறந்தார். கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. 1542இல் காலனித்துவ சான்டோ டோமிங்கோவிற்கு (தற்கால டொமினிக்கன் குடியரசு) மாற்றப்பட்டது. 1795இல், லா எசுப்பானியோலாவை பிரான்சு கையகப்படுத்தியபோது மீண்டும் கூபாவின் அவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து கூபா விடுதலை பெற்றபோது மூண்டும் எசுப்பானியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு செவீயா பெருங்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டது. 1877இல் சான்டோ டொமிங்கோவில் "டான் கிறித்தோபர் கொலம்பசு" என்று குறியிடப்பட்ட ஈயப்பெட்டி கிடைத்தது; இதனுள்ளே எலும்பு துண்டுகளும் துப்பாக்கி இரவையும் இருந்தன. இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் செவீயாவிலிருந்த உடலின் டி. என். ஏ. கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது; டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது. இச்சான்றும், பிற மானிடவியல், வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர். சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை. சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" ("Faro a Colón") உள்ளது. கொலம்பஸின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி, அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள், ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன. புதிய நிலப்பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் வருகையும், அதன் பின்னர் பரவலான கிறிஸ்தவ மற்றும் ரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகளைப் பற்றிய ஒருவரின் கருத்தைக் பொறுத்து,கொலம்பஸ் நல்ல விதமாகவும் மோசமாகவும் சித்தரிக்கப்படுகிறார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன 1892 வாக்கில், கொலம்பஸை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அவருடைய உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. தன் சம காலத்தவர்களைப் போலன்றி,கொலம்பஸ் மட்டுமே உலகம் உருண்டையானது என்று கருதினார் என்ற வாதம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த வாதம், கொலம்பஸ் மிகவும் முற்போக்கானவர் என்றும் சிறந்த அறிவாளர் என்றும் எடுத்துரைக்கப் பயன்பட்டது. கொலம்பஸ், மரபை மீறி, கிழக்குப் பகுதியைச் சென்றடைய மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டது, அமெரிக்கப் பாணிப் படைப்பூக்கத்திற்குச் சான்றாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க, இத்தாலிய-அமெரிக்க, இஸ்பானிக்க சமூகத்தினர் கொலம்பஸின் புகழைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க ஆதிக்கக் கலாச்சாரத்தால் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தினர், நடுநிலக்கடற் பகுதிக் கத்தோலிக்கர்களாலும் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சிறந்த பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கொலம்பஸின் சாதனைகளை சுட்டிக்காட்டினர். கொலம்பஸ் ஒரு முரண்பட்ட மனிதர். சிலர், குறிப்பாக அமெரிக்கப் பழங்குடிகள், அவரை அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் சுரண்டல் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் கொத்தடிமை இவற்றிற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணமாகக் கருதுகின்றனர். பார்த்தலோம் டி லாஸ் காசாஸ் எனும் சமயத் தலைவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பற்றி எழுதியிருந்தார் என்றாலும், 1960களுக்குப் பிறகே, அவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களின் - கொத்தடிமைப்படுத்தல், இனப்படுகொலை, பண்பாட்டுச் சிதைப்புகள் - சின்னமாகக் கருதும் போக்கு பரவலானது.ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அனைத்து தவறுகளுக்கும் கொலம்பஸை குற்றம் சாட்ட இயலாது என்றாலும், 1493-1500ல் ஸ்பெயின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வைஸ்ராய் (அரச சார்பாளர்) ஆகவும் ஆளுநராகவும் அவர் செய்த கொடுஞ்செயல்கள், அவரை இனப்படுகொலைகளுக்காகக் குற்றஞ்சாட்ட போதுமான காரணம் என்று சிலர் கருதுகின்றனர். சமீப காலங்களில்,கொலம்பஸின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் கொலம்பஸ் தினக் கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 1992ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2002ல், வெனிசுலா அதிபர் குகொ சவெஸ் கொலம்பஸ் தினத்தை "உள்நாட்டு எதிர்ப்பு நாள்" என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். 1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது "பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட்" எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை "டியா டெ லா ராசா" எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது கொலம்பசு நாள் எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது. 1893இல் சிக்காகோவில் நடந்த உலக கொலம்பியக் கண்காட்சியில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர். ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய நினைவு தபால்தலைத் தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும். 1992இல், 500வது நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டமாக இரண்டாம் முறை இத்தகையத் தபால்தலைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவை முதல்முறை தபால்தலைகளின் நகலாக இருப்பின்ம் வலது மூலையில் தேதி மட்டும் மாற்றப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் இத்தாலி, போர்த்துகல் மற்றும் எசுப்பானியாவும் இத்தபால்தலைகளை அந்நாட்டு செலாவணியில் வெளியிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த உள்ளூர் குடிகளாகும். கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; வைக்கிங்குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள். ஆனால் கொலம்பசு தான் அமெரிக்காவை ஐரோப்பாவில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய கவனத்திற்கு புதிய நிலப்பகுதியைக் கொண்டு வந்ததன் மூலம் புவியின் இரு முதன்மையான நிலப்பகுதிகளுக்கிடையேயும் அங்கு வாழ்பவர்களிடையேயும் நிலைத்த தொடர்பை துவங்கி வைத்தார். வரலாற்றாளர் "மார்ட்டின் துகார்டு" "கொலம்பசின் பெருமை அமெரிக்காவை முதலில் சென்றடைந்தவர் என்பதல்ல, அங்கு முதலில் தங்கியவர் என்பதாகும்" எனக் கூறியுள்ளார். கொலம்பசு தாம் கண்டறிந்த நிலப்பகுதி ஆசியாவின் அங்கமென்றே இறுதி வரை எண்ணியிருந்ததாக வரலாற்றாளர்கள் பொதுவாக கருதியபோதும் கிர்க்பாட்றிக் சேல் கொலம்பசின் "புக் ஆவ் பிரிவிலேஜசில்" புதிய கண்டத்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகிறார். தவிரவும், மூன்றாம் கடற்பயணத்தின் பதிவேடுகளில் "பரியா நிலம்" , "இதுவரை காணாத" கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் கொலம்பசின் மற்ற ஆவணங்களில் சியாவை சென்றடைந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்; 1502இல் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டருக்கு எழுதியக் கடிதத்தில் கூபா ஆசியாவின் கிழக்குக் கடலோரம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய கண்டமான தென்னமெரிக்கா "ஓரியன்ட்டின் இறுதியிலிருக்கும் பூலோக சொர்க்கம்" என்றார். எனவே, அவருடைய உண்மையான கருத்துக்கள் என்னவென்று அறுதியாகத் தெரியவில்லை. கொலம்பசின் முதல் கடற்பயணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்குப் பயணித்த அமெரிகோ வெஸ்புச்சி தான் முதலில் இந்த நிலப்பகுதி ஆசியா அல்லவென்றும் யூரேசியர்களுக்கு இதுவரைத் தெரியாத புதிய கண்டம் என்றும் கூறியவர். செருமன் நிலப்பட வரைவாளர் மார்ட்டின் வால்ட்சிமுல்லருக்கு இந்த முடிவை எட்ட 1502-04இல் வெளியான அமெரிகோ வெஸ்புச்சியின் பயணப்பதிவேடுகளே மூலமாக அமைந்தன. கொலம்பசு இறந்த அடுத்த ஆண்டு, 1507இல் வெளியிட்ட தமது உலக நிலப்படத்தில் வால்ட்சிமுல்லர் "அமெரிக்கா" என்று புதிய கண்டத்தை அழைத்திருந்தார்; இது வெஸ்புச்சியின் இலத்தீனப் பெயரான "அமெரிகசு" என்பதலிருந்து வந்தது. பலகாலமாக, பிரித்தானியர்கள் கொலம்பசை அல்லாது வெனிசிய ஜான் கபோட்டை முதல் தேடலாளராக கொண்டாடினர். ஆனால் புதிய நாடாக வளர்ந்து வந்த ஐக்கிய அமெரிக்காவில் கபோட் தேசிய அங்கீகாரம் பெறவில்லை. குடிமைபடுத்திய காலங்களிலிருந்தே அமெரிக்காவில் கொலம்பசிற்கான வழிபாடு வளர்ந்தது. அமெரிக்காவிற்கு "கொலம்பியா" என்ற பெயர் 1738இல் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதங்களில் இடம் பெற்றது. அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் புதிய உலகைக் கண்டறிந்தவர் கொலம்பசு என்றக் கருத்தாக்கம் அமெரிக்கா முழுமையிலும் பரவியது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுத் தலைநகருக்கும் (கொலம்பியா மாவட்டம்), இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் (ஒகையோ, தென் கரொலைனா), கொலம்பியா ஆற்றுக்கும் கொலம்பசின் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே 1819இல் தற்கால கொலொம்பியாவின் முன்னோடிக்கு "கிரான் கொலொம்பியா" எனப் பெயரிடப்பட்டது. பல நகரங்கள், ஊர்கள், கவுன்ட்டிகள், சாலைகள், அங்காடி வளாகங்கள் இவரதுப் பெயரைத் தாங்கி உள்ளன. 1866இல் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கருதப்பட நியமிக்கப்பட்டார். இத்தகைய வழிபாட்டின் உச்சமாக 1892இல் அமெரிக்காவை அடைந்த 400வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிக்காகோவில் கொலம்பியக் கண்காட்சியும் நியூயார்க் நகரத்தில் கொலம்பசு வட்டமும் நிறுவப்பட்டன. இலங்கையின் புவியியல் இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும். தொடர்ச்சியான பகுதியாக (contiguous zone) 24 கடல் மைல் தொலைவையும், கண்டமேடையாக 200 கடல் மைல் தூரத்தையும் கொண்டுள்ளது. கடல்சார் உரிமைகள்: "தொடர்ச்சியான பகுதி:" 24 கடல் மைல் (nm) "கண்ட மேடை:" 200 கடல் மைல் (nm) "பிரத்தியேக பொருளாதார வலயம்:" 200 nm "பிரதேச கடல்:" 12 nm காலநிலை: tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை) நிலத்தோற்றம்: பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில். நிலைப்பட அந்தலைகள்: "மிகத் தாழ்ந்த புள்ளி:" இந்து சமுத்திரம் 0 m "அதியுயர் புள்ளி:" பிதுருதலாகலை 2,524 m இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம் நிலப் பயன்பாடு: "பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்:" 14% "நிலையான பயிர்:" 15% "நிலையான புல்வெளிகள்:" 7% "காடுகளும் மரச்செறிவுகளும்:" 32% "ஏனையவை:" 32% (1993 கணக்கீடு) நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்: 5,500 சது. கிமீ(1993 கணக்கீடு) இயற்கை அழிவுகள்: அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும். சூழல் - தற்காலச் சிக்கல்கள்: காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல். சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்: "party to:" உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள். "கையெழுத்திடப்பட்டது, ஆனால் ஏற்கப்படவில்லை:" கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு இந்தியத் துணைக்கண்டம் இந்தியத் துணைக் கண்டம் ("Indian subcontinent") என்பது ஆசியாவின் தெற்குப் பகுதியாகும். இதைப் பொதுவாக துணைக்கண்டம் என்று அழைப்பார்கள். இத்துணைக் கண்டத்தின் பெரும்பகுதி இந்திய தட்டில் அமைந்துள்ளது. இமயமலையில் இருந்து தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடலில் துருத்தி பரவியுள்ளது. இந்திய துணைக் கண்டம் கோண்ட்டுவானாவில் இருந்து சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிக்கப்பட்டு யூரேசிய தட்டுடன் இணைந்த நிலப்பகுதியாக இருக்கலாம் என்று நிலவியலில் கருதப்படுகிறது . புவியியல் ரீதியாக தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று இந்தியத் துணைக்கண்டம் புவியியல்ரீதியாக விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குசு மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன. அரசியல் ரீதியாக இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் ஒரு புவியியல் பகுதியாக கருதப்படுகிறது . சில நேரங்களில் தெற்காசியா என்ற சொல் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது . தெற்காசியா, இந்தியா என்ற பாகுபாட்டின் கீழ் ஒவ்வொன்றிலும் எந்த நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை . தனித்துவமான புவியியல், அரசியல் அல்லது கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு கண்டத்தின் துணைப்பிரிவு என்றும் ஒரு கண்டத்தைக் காட்டிலும் சற்றே சிறிய நிலப்பகுதி என்றும் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் துணைக் கண்டம் என்ற சொல்லுக்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தனித்தனி கண்டங்களாக கருதப்படுவதற்கு முன்னர் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவைக் குறிப்பதற்காக 1845 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியத் துணைக்கண்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாதாக அறிய முடிகிறது. பிரித்தானிய இந்தியா மற்றும் பிரித்தானிய வணிகவியல் மேலதிகாரத்தின் கீழ் உள்ள மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) இரண்டையும் உள்ளடக்கிய பகுதியை குறிப்பிடுவதற்கு இந்தியத் துணைக்கண்டம் என்ற பெயர் மிகவும் வசதியாக இருந்தது. இந்திய துணைக் கண்டம் என்ற சொல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. பல்வேறு கண்டங்களைப் போலவே, 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் பெருநிலப்பகுதியான கோண்டுவானாவின் ஒரு பகுதியாக இந்திய துணைக் கண்டமும் இருந்ததாகக் கருதப்படுகிறது. புவி ஓடுகளின் தொடர்ச்சியான பிளவுகள் காரணமாக பல்வேறு வடிநிலங்கள் உருவாகி அவை ஒவ்வொன்றும் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்திய துணைக் கண்ட வடிநிலமாகப் பிளந்த பகுதியுடன் ஒரு காலத்தில் மடகாசுகர், சீசெல்சு, அண்டார்டிக்கா, ஆசுத்திரலேசியா ஆகியபகுதிகளும் சேர்ந்து மகா இந்தியா என்று அழைக்கப்பட்டது. தொல்லூழி காலத்தின் முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வடிநிலம் யூரோசியாவுடன் மோதியதால் உடைந்த பகுதியே இந்தியத் துணைக்கண்டம் என்று புவியியல் ரீதியான வரையறையும் இத்துணைக் கண்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது . இந்திய துணைக் கண்டம் என்ற சொல் குறிப்பாக பிரித்தானிய பேரரசிற்கும் அதனைத் தொடர்ந்து வந்தவர்களுக்கும் பொதுவானதாக இருந்தது . மரபு ரீதியாகவும் முன் நவீன ரீதியாகவும் இப்பகுதி இந்தியா, மகா இந்தியா அல்லது தெற்காசியா என்ற பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று மிதல் மற்றும் தர்சுபை முதலானோர் தெரிவிக்கின்றனர் . பிபிசி மற்றும் சில கல்வி மூலங்கள் இப் பிராந்தியத்தை ஆசிய துணை கண்டம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றன .சில கல்வியாளர்கள் தெற்காசிய துணை கண்டம் என்று இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிப்பிடுகின்றனர் . இந்திய துணைக்கண்டம், தெற்காசியா என்ற பெயர்கள் ஒரே பொருளில் மாற்றி மாற்றி பயன்படுகின்றன . எந்தெந்த நாடுகளை தெற்காசியா அல்லது இந்தியத் துணைக்கண்டத்துடன் இணைத்துக் கொள்வது என்பது தொடர்பான உலகாய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை . அகராதிகளில் உள்ளிட்டபடி துணைக் கண்டம் என்பது ஒரு கண்டத்தின் ஒரு பெரிய, தனித்துவமான துணைப்பிரிவை குறிக்கிறது . 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய சுராசிக் காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து விலகிச் சென்ற கோண்டுவானா என்ற பெருநிலப்பரப்பான மகா இந்தியாவின் ஒரு பகுதியாக முதலில் இந்தியத் துணைக்கண்டம் இருந்தது என்று நிலவியல் ரீதியாக வரையறை செய்யப்படுகிறது . இப்பகுதி பெரும் எரிமலை வெடிப்புகள் மற்றும் பல புவித்தட்டுப் பிரிவுகளுக்கு உட்பட்டு மடகாசுகர், சீசெல்சு, அண்டார்ட்டிக்கா, ஆசுத்திரலேசியா மற்றும் இந்தியத் துணைக்கண்ட வடிநிலப்பகுதிகளை உருவாக்கியது. தொல்யுக முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சென்று யுரேசிய தட்டுடன் மோதிக்கொண்டது. இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் புவியியல் நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. யுரேசியத் தட்டும் இந்தியத் துணைக்கண்டத் தட்டும் சந்திக்கும் மண்டலத்தில் நிகழும் தொடர்ச்சியான புவிநடவடிக்கைகளால் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் குறிக்கப்படும் துணைக்கண்டம் என்ற சொல் தொடர்ச்சியாக இந்தியத் துணைக்கண்டத்தையே குறித்து வருகிறது. பொருள்களின் இயற்கை அமைப்புப் புவியியலின் படி இந்தியத் துணைக்கண்டம் தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குசு மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் தெற்கு நோக்கி வடமேற்காக அரபிக் கடலுடனும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவுடனும் இந்தியத் துணைக்கண்டம் பரவி நீண்டுள்ளது . இந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்தியத் தட்டிலேயே அமைந்திருக்கின்றன, ஆசியாவின் பிற பகுதிகளை இப்பகுதியிலிருந்து பெரிய மலைப் பாறைகள் தனிமைப்படுத்தப்படுகின்றன . இந்தியா, பாக்கித்தான்,வங்காள தேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளிட்ட பகுதியே இந்திய துணைக் கண்டம் என்று விரிவான வரையறையின்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியத் துனைக்கண்டம் 4.4 மில்லியன் சதுர கிமீ² (1.7 மில்லியன் மைல்) பரப்பளவில் விரிவடைந்துள்ளது. ஆசியக் கண்டத்தின் பரப்பில் இது 10% ஆகும். அல்லது உலகின் நிலப்பரப்பு பகுதியில் 3.3%. ஆகும் . மொத்தத்தில், ஆசியாவின் மக்கள்தொகையில் சுமார் 45% அல்லது உலக மக்கள்தொகையில் 25% மக்கள் இத்துணைக் கண்டத்தில் வாழ்கின்றனர். பல்வேறு வகை இனங்களைச் சேர்ந்த மக்களும் இதில் அடங்கியுள்ளனர் . இந்திய துணைக் கண்டம் அல்லது தெற்காசியா என்று எப்படி அழைக்கப்பட்டாலும் இப்பிராந்தியத்தின் புவியியல் அளவின் வரையறை மாறுபடுகிறது. இப்பகுதி மகா இந்தியா என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பையும் உள்ளடக்கியது என்கிறது பூகோள அரசியல் . பொதுவாக இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காள தேசம் முதலிய நாடுகள் இப்பகுதியில் அடங்குகின்றன . 1947 க்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக இருந்தது. இது பொதுவாக நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவு தீவு ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும் . இந்திய துணைக் கண்டம் தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று மானுடவியலாளர் யான் ஆர். லூக்காசு கருத்து தெரிவிக்கிறார். அரசியல் விஞ்ஞான பேராசிரியர் டாட் வான்கானன் கூறுகையில், "தெற்காசியாவின் ஏழு நாடுகளும் இந்திய துணைக் கண்டத்தைச் சுற்றி புவியியல்ரீதியாக ஒரு கச்சிதமாக ஒரு சிறிய பகுதியாக உள்ளது என்கிறார் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியப் பெருங்கடலின் பிற சிறிய தீவுகள் ஆகியவை இந்திய துணைக்கண்டத்தின் புவிசார் அரசியல் எல்லைகள் ஆகுமென தாவேந்திர குமார் தெரிவிக்கிறார். இந்திய தீபகற்பத்திற்கு தென் மேற்கில் அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டமான மாலத்தீவுகளும் இந்தியத் துணைக்கண்டத்துடன் சேர்க்கப்படவேண்டிய பகுதியாகும். ஆப்கானித்தானின் பகுதிகள் சிலவும் இந்திய உபகண்டத்தில் சேர்க்கப்படுகின்றன என்று ஐரா எம். லாபிடசு என்ற வரலாற்ருப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இந்திய துணைக் கண்டத்திற்கும் எல்லையாக இது அமைந்துள்ளது. ஆப்கானித்தானின் சமூக-மத வரலாறு துருக்கியின் செல்வாக்கு பெற்ற மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. தற்போது இப்பகுதி பாக்கித்தான் எனப்படுகிறது . ஆப்கன் மத்திய ஆசியாவின் ஒரு பகுதி யாகும். அதை இந்திய துணைக்கண்டத்தில் சேர்க்கக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் . வரலாற்று அறிஞர்களான கேத்தரின் ஆசர் மற்றும் சிந்தியா டால்போட்டு ஆகியோர், இந்திய துணைக் கண்டம் என்பது யூரேசியாவின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தெற்கு ஆசியாவின் ஓர் இயற்கையான நிலப்பகுதி என்கின்றனர் . இமயமலையின் வழியாக செல்லும் கடினமான பாதை காரணமாக இந்திய துணைக் கண்டத்தின் சமூகவியல், மத மற்றும் அரசியல் தொடர்பு, வடமேற்கில் உள்ள ஆப்கானித்தான் பள்ளத்தாக்குகள் வழியாக பரவியது . கிழக்கில் மணிப்பூர் வழியாகவும் கடல்கடந்தும் பரவியது . மிகவும் கடினமான ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு திபெத்திய முன்னோடிகளால் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களும் இடைவினைகளும் இந்து மதம் மற்றும் புத்த மதத்தின் இணைப்புக்கான பரவலை வழிநடத்தியிருக்கின்றன. உதாரணமாக, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த ஆசியாவின் பிற பகுதிகளில், ஆப்கானித்தானிலிருந்தும் கடல் வழியாகவும் இசுலாமியர்கள் குடிபெயர்ந்தனர். இந்தியத் துணைக் கண்டம், தெற்காசியத் துணை கண்டம் மற்றும் தெற்காசியம் போன்ற புவிசார் அரசியல் வரையறை மற்றும் பயன்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே உள்ளன . கிமு 6-ஆம் நூற்றாண்டு கிமு 6ம் நூற்றாண்டு ("6th century BC") என்பது கிமு 600 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கிமு 501 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும். இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது. பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது. இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது. அனுராதபுரம் அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் "அனுராதகிராமம்" என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே. "மூலம்:" www.statistics.gov.lk - கணக்கெடுப்பு ஆண்டு 2001 இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது. இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன. கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன. இந்தியா இந்தியா ("India"), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு ("Republic of India") தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது. கி.மு.300 இல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 ஆண்டுகளுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, நடு இந்தியாவிலுள்ள பீம்பேட்கா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது. கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இந்நாட்டில் மிக தலைமைத்துத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை குடிபெயர்ப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்தப் பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும். சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்தக் கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் மெய்ப்பிக்கப் படவில்லை. இதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன. அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய வணிகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர். முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது. இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும். "இவற்றையும் பார்க்க": இந்திய வரலாற்று காலக் கோடு இந்தியா 29 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார். இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-நாட்டு சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்திய மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் நடுவணரசு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம். குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளிலிருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் ஆற்றல் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உயர் நீதிமன்றம் மாநிலங்களுக்கும் நடுவணரசிற்கும் இடையான சிக்கல்கள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள்மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்குப் பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, நாட்டுக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய நாட்டுக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய காங்கிரசு கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரசு அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது. 1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவணரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரசு அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது. 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றது. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்றார். 1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன.குறிப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம். அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவைகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் இயங்குகிறது. இவற்றுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய சேமக் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, கரையோரக் காவல்படை என்பன இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட "சிரிக்கும் புத்தர் நடவடிக்கை" ("Operation Smiling Buddha") எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 29 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு இசைவின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-இன் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தற்காலிகமாகச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பெரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாபி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது. இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும். இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய ("endemic") இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன. இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட நடு இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரம்|கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சமவெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் அறிவு பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை. பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சோலை மந்தி ("Trachypithecus johnii"), புபோ பெதோமீ ("Bufo beddomii") என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும். அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், நாட்டு பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர். இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் ("Energy Information Administration") கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350–400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40% மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது. அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. படிப்பறிவு வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது (ஆண்கள் 82.14%; பெண்கள் 65.46%). 2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது. மேற்படி அட்டவனையின் படி, 1951ல் 84.1% ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது. மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும், 24% மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பமும் ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மற்றும் திபெத்தோ-பர்ம மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை. அதிகபட்ச பேச்சாளர்களைக் கொண்ட இந்தி மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழியாகும். ஆங்கிலம், உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.' இந்தியாவில் கல்வி பெறுவதில், அதிலும் உயர்கல்வி (Department of Higher Education (India)) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமசுகிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இதுதவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமை யாக்கல், தேவதாசி முறை எனப் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாகப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன எனக் கூடச் சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள்போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களைச் சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாகப் பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாகக் கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன. சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய ("complex"), பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவைதவிர நாட்டார் இசை, தமிழிசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவைத் தவிர நாட்டுப்புறக் கலைகளான நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு. இசையின் வெளிப்படுத்தும் இசைக் கருவிகளில் வீணை, யாழ், புல்லாங்குழல், தம்புரா, மிருதங்கம், நாதசுவரம், மத்தளம், தவில், ஆகுளி, உறுமி, முரசு, தமுக்கு, பம்பை, கஞ்சிரா, ஐம்முக முழவம், கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி, கொம்பு, தாரை, சங்கு, முகவீணை, எக்காளம் மற்றும் தாளம் முதன்மையானவைகள் ஆகும். உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமசுகிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் எனப் பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது. கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு. பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரபு எண்கள் ஆகும். இந்தியாவிலேயே 0 என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர். சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும். இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளைக் காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டைக் குறிப்பிடத்தக்க அளவுமேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும். சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகப் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. மேலும் இத்துறையானது 2018 இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4% சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "இன்க்ரெடிபிள் இண்டியா" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது. இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் மற்றும் இந்தியன் இரயில்வே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பேலஸ் ஆன் வீல்ஸ் , மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், "டெக்கான் ஒடிசி", ராயல், "ராசத்தான் ஆன் வீல்ஸ்" மற்றும் "கோல்டன் சாரியட்" (தங்க இரதம்), "டெக்கான் ஒடிசி", "புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ்" போன்ற பெயர்களில் நவீன சொகுசு தொடருந்துகள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களை குறைந்த கட்டணத்தில் காணத் தக்கவாறு "பாரத் தர்சன்" என்ற பெயரில் சிறப்பு தொடருந்துகளை இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்தியா முழுவதும் இயக்குகிறது. இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, 1975 வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று உலக அளவில் அதிக வெற்றி பெற்ற ஹாக்கி அணியாகத் திகழ்கிறது. இருப்பினும், மட்டைப்பந்து தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். இந்தியத் துடுப்பாட்ட அணி, 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2007 ஐசிசி உலக இருபது ஓவர் கோப்பையை வென்று, அதோடு 2002 ஐசிசி சாம்பியன் கோப்பையை இலங்கையுடன் பங்கு கொண்டது. இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையையும் அது நிர்வகித்து வருகிறது. இவற்றோடு பிசிசிஐ, இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது ஓவர் மட்டைப்பந்து போட்டியையும் விமரிசையாக நடத்தி வருகிறது. இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெகெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான களரிப்பயிற்று, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக்கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது இரண்டும் இந்தியாவில் விளையாட்டிற்காகக் கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச விருதுகளாகும். அதுபோல் துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் கொடுக்கப் படும் உயர்ந்த பட்ச விருதாகும். இந்தியாவிலிருந்து ஆரம்பமானதாகக் கருதப்படும், சதுரங்கம், இந்திய பெருந்தலைவர்கள் எனப்படும் வெற்றி வீரர்களின் அதிக எண்ணிக்கை அதிகமாகி வருவதால், மீண்டும் பரவலான விளையாட்டாகத் தலைதூக்குகிறது. இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பல்வேறு டென்னிஸ் ஆட்டக்காரர்களின் வெற்றிகளாலும், டென்னிஸ் விளையாட்டும் புகழ்பெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடுதல் போட்டி, மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்று, இந்தியா திடமான முன்னிலை வகிக்கிறது. இவற்றோடு இந்திய விளையாட்டாளர்கள் சர்வதேச அளவில் பூப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் மற்போர் விளையாட்டுக்களில் பல பதக்கங்களையும் பரிகளையும் வென்றுள்ளனர். காற்பந்தாட்டம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், கோவா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும். இந்தியாவில் நான்கு நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை: இவைதவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு. யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்) யாழ்ப்பாணம் ("Jaffna") என்ற சொல் குறிக்கும் பொருள்கள் பற்றிய தனித்தனியான விபரங்களை அறிய கீழே பொருத்தமானவற்றைத் தெரியுங்கள். வரலாறு வரலாறு "(History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு")" என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர். வரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது . வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர். வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வரலாறு என்ற பொருள் கொண்ட ἱστορία, historia என்ற சொல் வரப்பெற்றுள்ளது. அரிசுடாட்டிலும் இதே பொருளில் விலங்குகள் குறித்த தேடல் என்ற பொருள் கொண்ட Περὶ Τὰ Ζῷα Ἱστορίαι என்ற படைப்பில் பயன்படுத்தியுள்ளார் . முன்னுரை சொல்லான ἵστωρ என்ற சொல் எராக்ளிப்டசின் பண்டைய சில வழிபாட்டுப் பாடல்களில், சில கல்வெட்டுகளில் இடம் பெற்று சான்றாக உள்ளது. கிரேக்கச் சொல்லானது பாரம்பரிய இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான தேடல், விசாரணை, ஆய்வு, கணக்கு, விளக்கம், நிகழ்வுகளை எழுதுதல், கடந்தகால நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட அறிவு என பல்வேறு பொருளையும் இச்சொல் தாங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. History என்ற சொல் பண்டைய அயர்லாந்து அல்லது வேல்சு மொழியிலிருந்து ஆங்கிலந்திற்குள் வந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது . இதற்கிடையில் இலத்தீன் மொழியில் பண்டைய பிரெஞ்சு (ஆங்கிலோ-நார்மன்) மொழியில் வரலாற்றின் தன்மையானது ஒரு தனி நபரின் வாழ்க்கை நிகழ்வுகள் (12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்), ஒரு குழு அல்லது மக்களின் புதிய முன்னேற்றங்கள், வரலாற்று நிகழ்வுகளின் வியத்தகு விளக்கம் அல்லது சித்தரிப்பு, மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய அறிவியல் அறிவு, உண்மையான அல்லது கற்பனை நிகழ்வுகளின் கதை போன்ற மேலும் பல பொருள்களைக் கொண்ட சொல்லாகவும் உருவானது , ஆங்கிலோ நார்மன் மொழியில் இருந்து வந்த history என்ற இச்சொல் மத்திய ஆங்கிலத்திற்கும் கடனாகப் பெறப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காணப்படும் இச்சொல் பிற்கால 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பொதுச் சொல்லாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. மத்திய காலஆங்கிலத்தில் வரலாற்றின் பொருள் பொதுவாக கதை என்று கருதப்பட்டது. கடந்த நிகழ்வுகள் பற்றி அறியும் அறிவின் கிளை, கடந்தகால நிகழ்வுகள் மற்றும் கடந்த மனித நிகழ்வுகளை ஆய்வு செய்தல் போன்ற அர்த்தம் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சிசு பேகன் "இயற்கை வரலாறு" என்று எழுதியபோது இந்த சொல்லின் பயன்பாடு கிரேக்க மொழிச் சொல்லின் அர்த்தத்தை எட்டியது. இச்சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது விண்வெளி மற்றும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட பொருள்களின் அறிவு என்று கருதப்பட்டது . மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீனசொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. 1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது . வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது. சில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்படுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது It can also be seen as a bridge between those two broad areas, incorporating methodologies from both. Some individual historians strongly support one or the other classification.. இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். பாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் . வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது. புதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செய்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், "வரலாற்று தொல்லியல்" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார். காலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது . பொறியியல் பொறியியல் ("Engineering") என்பது அறிவியல் கோட்பாடுகளைத் "திறமுடன்" பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கரு பிளவு போன்றவை. பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல், இயந்திரவியல், எந்திரவியல் போன்ற வடமொழி மூலங்களைக் கொண்ட சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது, இயந்திரம் என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் "engineour" என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது பொறியியல் துறையின் அடிப்படைக்கூறுகள் பல்வேறு நாகரிகங்களில் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. சக்கரம் (ஆழி), நெம்புகோல், புல்லி (pulley, கப்பி), போன்ற கருவிகளை அக்காலத்து மக்கள் உருவாக்கியதிலிருந்தும், பயன்படுத்தியதிலிருந்தும் இதை அறியலாம். இத்தகைய கண்டு பிடிப்புக்கள் ஒவ்வொன்றும், அடிப்படையான பொறிமுறைக் கொள்கைகளை பயனுள்ள கருவிகளையும், பொருட்களையும் உருவாக்குவதில் பயன்படுத்துதல் என்னும் தற்கால வரைவிலக்கணங்களோடு ஒத்துப்போகின்றன. போர்க்கருவிகளை உருவாக்குவதிலும், கட்டிடக் கலைத்துறையிலும் பொறியியல் கூறுகள் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தற்கால பொறியில்துறை ஐரோப்பாவில் இயந்திரமயமாக்கல் தொடங்கிய காலத்திலிருந்து (18-19 ஆவது நூற்றாண்டுகளில்) முக்கியத்துவம் அடைந்தது. கிரீசில் உள்ள அக்ரோபோலிஸ், பந்தியன்; ரோமர்களின் நீர்காவிகள், கொலோசியம்; பபிலோனின் தொங்கு தோட்டம்; எகிப்தின் பிரமிட்டுக்கள்; மாயன் பிரமிட்டுக்கள்; சீனப் பெருஞ்சுவர் போன்ற அமைப்புக்கள் அக்காலத்து குடிசார் மற்றும் படைசார் பொறியாளர்களின் திறமைகளுக்குச் சான்றாக அமைகின்றன. பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற மிகப் பழைய காலத்துப் பொறியாளர் இம்ஹோட்டெப் (Imhotep) என்பவராகும். பாரோ ஜோசர் (Djosèr) என்பவரின் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோ ஜோசரின் பிரமிட்டான படிப் பிரமிட்டை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும். அல்-ஜசாரி என்னும் ஈராக்கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் துருக்கிய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால இயந்திரங்களைப் போன்ற இயந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) ஆடுதண்டுப் பம்பிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே இணைகோலையும் (connecting rod), மாற்றித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் இயந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் ஜசாரியின் கூட்டுப்பூட்டு (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் பற்கொம்பு – நெம்புகோல் (cam-lever) பொறிமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-ஜசாரி, துண்டுப் பல்லிணைகள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், தப்பிப் (escapement) பொறிமுறைகள், மணிக்கூடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளுக்கான நடபடிகள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார். உலகின் முதலாவது மின் பொறியியலாளராகக் கருதப்படுபவர் வில்லியம் கில்பர்ட் என்பவராவார். 1600 ஆம் ஆண்டில் "காந்தம்" "(De Magnete)" என்னும் நூலை எழுதியுள்ள இவரே முதன் முதலில் "electricity" (மின்சாரம்) என்னும் சொல்லைப் பயன்படுத்தியவராவார். முதல் நீராவி இயந்திரம், இயந்திரப் பொறியாளரான தாமஸ் சவேரி (Thomas Savery) என்பவரால் 1698 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கம் பிற்காலத்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இது பேரளவாக்கத்தின் (mass production) தொடக்கமாகவும் அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் பொறியியல் ஒரு தொழிற்றுறையாக வளர்ச்சியடைந்ததுடன், பொறியியல் என்னும் சொல், கணிதம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன், படைத்துறைப் பொறியியல், குடிசார் பொறியியல் என்பவற்றுக்குப் புறம்பாக பொறிமுறைக் கலைகள் எனப்பட்ட துறைகளும் பொறியியலுள் சேர்க்கப்பட்டன. 1800களில், அலெசாண்ட்ரோ வோல்ட்டா செய்த சோதனைகளும், மைக்கேல் பாரடே, ஜார்ஜ் ஓம் ஆகியோரின் சோதனைகளும், 1872 இல் மின் மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டதும் மின் பொறியியல் துறையைத் தொடக்கி வைத்தன எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜேம்ஸ் மக்ஸ்வெல், ஹென்றிக் ஹேர்ட்ஸ் ஆகியோருடைய ஆய்வுகள், மின்னணுவியல் தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் வெற்றிடக் குளாய், படிகப் பெருக்கி (transistor) போன்றவற்றின் கண்டுபிடிப்பு, மின் பொறியாளர்களினதும், மின்னணுப் பொறியாளர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. தாமஸ் சவேரியினதும், ஸ்காட்டியப் பொறியாளரான ஜேம்ஸ் வாட்டினதும் கண்டுபிடிப்புக்கள் தற்கால இயந்திரப் பொறியியல் துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன. இயந்திரப் பொறியியலின் தற்கால வடிவம் பிரித்தானியாவில் தோன்றியதாகக் கொள்ளப்பட்டாலும், இது, மிகப் பழங்காலத்தில் படைத்துறை மற்றும் குடிசார் தேவைகளுக்குப் பொறிகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். வரலாற்றில் மிகப்பழைய பொறிமுறைக் கணினி எனக் கருதப்படும் ஆன்டிக்கிதீரா பொறிமுறை (Antikythera mechanism), ஆக்கிமிடீசின் கண்டுபிடிப்புக்கள் போன்றவை பழங்கால இயந்திரப் பொறியியலுக்கான எடுத்துக் காட்டுகளாகும். சில் ஆக்கிமிடீசின் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆன்டிக்கிதீரா பொறிமுறைக்கும், இயந்திரப் பொறியியலின் இரண்டு முக்கிய கொள்கைகளான வேறுபாட்டுப் பல்லிணைகள் (differential gearing) அல்லது வெளிவட்டகப் பல்லிணைகள் (epicyclic gearing) தொடர்பிலான சிக்கலான அறிவு அவசியமாகும். வேதிப் பொறியியல் துறையும், 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. பெரும் அளவிலான உற்பத்திகளுக்கு புதிய பொருட்களும், வழிமுறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் பெருமளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில் துறை தொடங்கியது. வேதிப் பொறியாளரின் பணி இவ்வாறான இயந்திரத் தொகுதிகளையும், வழிமுறைகளையும் வடிவமைப்பது ஆகும். வானூர்திப் பொறியியல், வானூர்திகளை வடிவமைப்பது, பேணுவது தொடர்பான துறை. அதேவேளை விண்வெளிப் பொறியியல், வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் விண்கலங்களின் வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் ஜார்ஜ் கேலே என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, அனுபவ வாயிலானது என்பதுடன், சில கருத்துருக்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். 1920களில் ரைட் சகோதரர்களின் வெற்றிகரமான வானூர்திப் பறப்பு நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே, முதலாம் உலகப் போருக்கான படைத்துறை வானூர்திகள் தொடர்பில் இத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளை, கோட்பாட்டு இயற்பியலுடன் சோதனைகளையும் பயன்படுத்தி இத்துறைகளுக்கு அடிப்படையான அறிவியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன. பொறியியலாளர்கள் இயற்பியல் மற்றும் கணித அறிவியல்களை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை காண்பதற்கு அல்லது நிலையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்கிறார்கள். முன்னெப்போதையும் விட அதிகமாக, தற்போது பொறியியலாளர்கள் அவர்களுடைய வடிவமைப்பு திட்டங்களுக்கு தேவையான அறிவியல் அறிவை பெறவேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும். பல தெரிவுகள் இருக்கும் போது பொறியியலாளர்கள் பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளில் அவற்றின் தரத்தை ஆழ்ந்து எண்ணிப்பார்த்து தேவைக்கு மிகப் பொருத்தமான தீர்வை தெரிவு செய்வார்கள். வெற்றிகரமான விளைவை பெறுவதற்கு வடிவமைப்பிலுள்ள தடைகளை அடையளம் கண்டு, புரிந்து கொண்டு விளக்குவது பொறியியலாளரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட பணியாகும். ஏனெனில், பொதுவாக ஒரு தயாரிப்பு தொழிநுட்பரீதியாக வெற்றிகரமானதாக இருப்பதோடு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம். பொறியியலாளர்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறான பொருட்களின் உற்பத்தி பொருத்தமானது மற்றும் எவ்வாறான இயக்க அமைப்பு பொருத்தமானது என்பது தொடர்பான வரம்புகளை நிர்ணயிக்கிறார்கள். ஒரு பொறியாளர் எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பிலான வரையறைகளை அடையாளங்கண்டு அவற்றைப் புரிந்து கொண்டு வடிவமைப்புச் செய்யவேண்டும். இங்கே வரையறைகள் என்பது, கிடைக்கக்கூடிய வளங்கள்; பௌதீக அல்லது தொழில்நுட்பம்சார் வரையறைகள்; எதிர்கால மாற்றங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் ஏற்றதாயிருத்தல்; செலவு; உற்பத்தி செய்யக்கூடிய தன்மை; பேணக்கூடிய தன்மை; சந்தைப்படுத்தல்; அழகியல், சமூகம் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது. Engineering is therefore a contingent enterprise influenced by many considerations. அமெரிக்க National Academy of Engineering படி பின்வருவம் இருபது 20 நூற்றாண்டின் முக்கிய பொறியியல் படைப்புகள் ஆகும். அனேகமானவையை கண்டுபிடிக்க அமெரிக்காவே முக்கிய பங்காற்றியுள்ளது. மேலே குறிப்பிடவற்றுள் கட்டிட தொழில்நுட்பம், துப்புரவு கட்டுமானம் (Sanitation System), இராணுவ தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'பொறியியல் வாழ்க்கையில் தப்பிபிழைத்து வாழுவதற்கான உந்தலை மீறியது. புதிய சாத்தியக்கூறுகளை அது சிந்திக்கிறது. கலைகளைப் போல பொறியியலில் அழகு உண்டு, அளவுகளின் மதிப்பீடு உண்டு. பொறியிலாளர் இயற்கையைப் போட்டிக்கு அழைக்கின்றார்கள். சூறாவளியை எதிர்க்கின்றனர், நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு என இயற்கையின் மூர்க்கமான ஆற்றல்களோடு பொறியலாளர் போட்டிபோடுகின்றார்கள். அதேவேளை, இயற்கையுடன் இயைந்து செயற்படுகிறார்கள். மண்ணை, கனிமத்தை, வெவேறு தனிமங்களை அவர்கள் விளங்கிகொள்கிறார்கள். அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். மனித நல்வாழ்க்கைக்கு பொறியிலாளரின் பங்களிப்பு அளப்பரியது.'Samuel C. Florman. (1987). "The Civilized Engineer". New York: St. Martin's Press. தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே பொறியியல் துறைகளில் கோலேச்சியே வந்துள்ளனர், கட்டுமானப் பொறியியல் துறைகளில் சான்றாக கல்லணை, தஞ்சைப் பெரியகோவில். எமிரேட்ஸ் கோபுரங்கள் எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது. 56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன. இக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது. இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. கோலம் கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள். தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது. கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும். கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும். புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே: என்று கூறுவர். இப் புள்ளிக் கோலங்களும், புள்ளிகள் தொடர்பில் கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம். அநேகமாக எல்லாக் கேத்திரகணித வடிவ அமைப்புகளைப் பற்றி வரையப்படும் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம். வானியல் வானியல் ("Astronomy") என்பது விண்பொருட்கள் ("அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்") பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: "மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை") அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும். வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் நாட்காட்டி தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது வானியற்பியலையே குறிக்கின்றது. 20-ஆம் நூற்றாண்டில், வானியல் அவதானிப்பு வானியல் மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது "அவதானிப்பு வானியல்" ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது "கருத்தியல் வானியல்" ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கக் கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. விழைஞர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று ஆகும். விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல. முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், அவற்றின் இயக்கங்களை முன்கூட்டியே கூறுவதையும் உள்ளடக்கியிருந்தது. சில இடங்களில் பண்டைய பண்பாட்டினர், பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. "ஸ்டோன்ஹெஞ்ச்" இத்தகைய அமைப்புக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய அமைப்புக்களின் சடங்கு ரீதியான பயன்பாடுகளுக்குப் புறம்பாகப் பருவ காலங்களை அறிந்து கொள்ளவும், கால அளவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. தொலைநோக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் வானியல் ஆய்வுகளை மேற்கொள்வோர், உயர்ந்த கட்டிடங்களில் அல்லது வேறு உயர்ந்த இடங்களில் நின்று வெறும் கண்களாலேயே உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிப்பர். நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும், வானியல் அவதானிப்பகங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன், அண்டத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. பெரும்பாலும் பழைய வானியல், கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலைகளைப் படங்களில் குறிப்பதையே உள்ளடக்கியிருந்தது; இது தற்காலத்தில் வானளவையியல் (astrometry) என்றழைக்கப்படுகிறது. இவ்வாறான அவதானிப்புகள் மூலம் கோள்களின் இயக்கங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாக்கப்பட்டன; மேலும், அண்டத்திலுள்ள சூரியன், சந்திரன், புவி மற்றும் பிற கோள்கள் ஆகியவற்றின் இயல்புகள் பற்றி மெய்யியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. புவியானது மையத்தில் இருக்க, சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் என்பன புவியைச் சுற்றிவருவதாக அக்காலத்தில் நம்பப்பட்டது. இது அண்டத்தின் புவிமைய மாதிரி எனப்படும்; தொலெமியின் கருத்துகளை மையமாகக் கொண்ட "தொலெமியின் மாதிரி" என்றும் கூறப்படும். தொடக்க காலகட்டங்களில் நிகழ்ந்த மிகமுக்கியமான முன்னேற்றம், கணித மற்றும் அறிவியல் முறைகளில் வானியலை அணுகுவதன் தோற்றமாகும். இத்தகைய செயல்பாடு முதன்முதலில் பாபிலோனியர்களால் முன்னெடுக்கப்பட்டது; அதைப் பின்பற்றி மற்ற பல நாகரிகங்களிலும் வானியல் ஆய்வுகள் செய்யப்பட்டன. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் நிகழ்வதைப் பாபிலோனியர்கள் கண்டறிந்தனர்; இது சாரோசு சுழற்சி எனப்படும். சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாகச் சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது. சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார். மத்திய காலத்தில், ஐரோப்பாவில், நோக்கு வானியல் பெரும்பாலும் தேக்கநிலையை அடைந்திருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டு வரையாவது நீடித்தது. எனினும் இது இஸ்லாமிய உலகிலும் உலகின் பிற பகுதிகளிலும் செழித்திருந்தது. இவ்வறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இரு அராபிய வானியலாளர்கள் அல்-பத்தானியும், தெபிட் என்பவருமாவர். மறுமலர்ச்சிக் காலத்தில் நிக்கலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழிந்தார். கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர். கலிலியோ கலிலிதனது ஆய்வுகளுக்குத் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். சூரியனை மையத்தில் கொண்ட கோள்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் முறையொன்றை முதலில் உருவாக்கியவர் கெப்ளரேயாவார். எனினும், தானெழுதிய இயக்க விதிகளின் பின்னாலுள்ள கோட்பாடுகளை உருவாக்குவதில் அவர் வெற்றியடையவில்லை. இறுதியில் ஐசாக் நியூட்டன், விண்சார் இயக்கவியலையும், ஈர்ப்பு விதியையும் உருவாக்கிக் கோள்களின் இயக்கங்களையும் விளக்கினார். தெறிப்புத் தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் இவரே ஆவார். தொலைநோக்கியின் அளவும், தரமும் கூடிக்கொண்டு வர அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களும் நிகழ்த்தப்பட்டன. லாக்கைல் என்பவர் விண்மீன்கள் பற்றிய விரிவான விபரக்கொத்து ஒன்றை உருவாக்கினார். வானியலாளரான வில்லியம் ஹேர்ச்செல், புகையுருக்கள், கொத்தணிகள் என்பன பற்றிய விபரக்கொத்தை உருவாக்கியதுடன், 1781 இல், யுரேனஸ் கோளையும் கண்டுபிடித்தார். இதுவே புதிய கோளொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும். வானியல் பல கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மையான வேறுபாடு, "கோட்பாட்டு" வானியலுக்கும், "அவதானிப்பு" வானியலுக்கும் இடையிலானது. "அவதானிப்பவர்கள்" வெவ்வேறு தோற்றப்பாடுகளைப்பற்றி விபரங்கள் திரட்டுவதற்குப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்விபரங்கள், அவதானங்களை விளக்கும் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் உருவாக்குவதற்கும், புதியனவற்றை எதிர்வு கூறுவதற்கும், "கோட்பாட்டாளர்"களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கீழ்வரும் கற்கைத்துறைகள் வேறு இரு வழிகளிலும் வகைப்படுத்தப் படுகின்றன: விடயங்கள் வாரியாக, வழக்கமாக, விண்வெளிப் பிரதேசங்கள் தொடர்பில் (உம்: கலக்ட்டிக் வானியல்) பகுக்கப்படுகின்றன, அல்லது நட்சத்திர உருவாக்கம், அண்டவியல் போல, "கையாளப்படும் பிரச்சினைகள்" தொடர்பில் வகைப்படுத்தப்படுகின்றன. வானியலின் உபதுறைகள்: கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் ("Planetary science") எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும். சூரிய வானியல் என்பது சூரியனைப்பற்றி கற்பதாகும். இது நாம் வாழும் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். சூரிய வானியலைக் கற்பதன் மூலம் சூரியனைப் போன்ற மற்றைய விண்மீன்களின் தொழிற்பாடு உருவாக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். அத்தோடு மக்கள் சூரிய வானியலைக் கற்பதால் அணுக்கரு இணைவு எவ்வாறு செயற்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். வானியலில் தகவல்களைப் பெறும் முக்கிய வழி, மின்காந்தக் கதிர்வீச்சு, போட்டன்களைக் கண்டுபிடித்து ஆராய்தல் மூலமாகும், ஆனால் தகவல்கள், அண்டக் கதிர்கள், நியூட்ரினோக்கள், மூலமாகவும் கிடைக்கின்றன. மிக விரைவில் ஈர்ப்பு அலைகளும் இதற்குப் பயன்படும். (LIGO மற்றும் LISA வைப் பார்க்கவும். ஒரு மரபுரீதியான வானியல் பகுப்பு, அவதானிக்கப்பட்ட மின்காந்த அலைமாலை (electromagnetic spectrum)அடிப்படையில் கொடுக்கப்படுகிறது: ஒளிசார் வானியல் கண்ணுக்குப் புலப்படுகின்றவையும் (அண்ணளவாக 400 - 800 nm)அவற்றுக்குச் சற்று வெளியே உள்ளவையுமான அலைநீளங்களுடன் கூடிய ஒளியைக் கண்டறியவும், பகுப்பாய்வு செய்யவும் பயன்படும் நுட்பங்களோடு தொடர்பானது. இது மிகவும் பழமை வாய்ந்த வானியல் முறைமை ஆகும். மின்னணுப் படமாக்கிகள், நிறமாலை வரைவிகள் போன்றவற்றுடன் கூடிய தொலைநோக்கியே இதற்குப் பயன்படும் பொதுவான கருவிகள் ஆகும். மிகப் பழைய வானியல் முறை இதுவே. முற்காலத்தில், கண்ணால் பார்ப்பவற்றைக் கையால் வரைந்து பதிவு செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலம் முழுவதும் விம்பங்களைப் பதிவு செய்வதற்கு ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தினர். புறஊதா வானியல் அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320 nm) அலைநீளம் கொண்ட கதிர்களைக் கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது . இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்கங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். புறஊதா வானியல், வெப்பக் கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்வதற்கும், இந்த அலைநீளத்தில் பிரகாசமாகத் தெரியும் சூடான நீல விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்களை ஆராய்வதற்கும் மிகவும் உகந்தது. இது, பல புறஊதாக் கதிர் ஆய்வுகளுக்கு உட்படுகின்ற பிற விண்மீன் பேரடைகளில் இருக்கும் நீல விண் மீன்களையும் உள்ளடக்கும். அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது. கண்ணுக்குப் புலனாகக் கூடிய அலைநீளங்களுக்கு அண்மையாக உள்ள அலைநீளங்களோடு கூடிய கதிர்களைத் தவிர, பெரும்பான்மையான அகச் சிவப்புக் கதிர்கள் வளிமண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன. வளிமண்டலமும் குறிப்பிடத்தக்க அளவில் அகச்சிவப்புக் கதிர்வீச்சை வெளிவிடுகின்றது. இதனால், அகச்சிவப்புக் நோக்கிகள் உயரமானதும் உலர்வானதுமான இடத்தில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே விண்வெளியில் இருத்தல் வேண்டும். அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகும் ஒளியை வெளிவிட முடியாத அளவுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஆராய்வதற்கு உதவுகின்றன. அகச்சிவப்புக் கதிர்களின் கூடிய அலைநீளம், அவை காணக்கூடிய ஒளியைத் தடுத்துவிடக் கூடிய முகில்களையும், தூசிப் படலங்களையும் ஊடுருவக் கூடியன ஆதலால், மூலக்கூற்று முகில்களுக்குள் இருக்கும் இளம் விண்மீன்கள் அல்லது கலக்சிகளின் மையப்பகுதிகளில் இருக்கும் விண்மீன்களை ஆய்வு செய்ய உதவுகிறது. அகச் சிவப்புக் கதிர்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதாக்கப்பட்ட தொலைநோக்கிகளே இதற்குப் பயன்படும் முக்கிய கருவிகளாகும். வளிமண்டலத்தில் ஏற்படும் மின்காந்த இடையீடுகளைத் தவிர்ப்பதற்காக விண்வெளித் தொலை நோக்கிகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ரேடியோ வானியலில் கதிர் வீச்சுக்களைக் கண்டறிவதற்கு முற்றிலும் வேறான கருவிகள் பயன்படுகின்றன . இவை ஒலிபரப்பில் பயன்படும் வானொலி ஏற்பிகளைப் போன்றவை. ஒளியியல் வானியலுக்கும், வானொலி வானியலுக்கும் தொடர்பான கதிர்வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடு வருவதில் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், புவியில் அமைந்துள்ள நோக்ககங்களைப் (observatory) பயன்படுத்தமுடியும். அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள நீராவி உறிஞ்சிவிடுவதால் இதற்கான நோக்ககங்கள் வரட்சியானதும் உயரமானதுமான இடங்களில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே வெண்வெளியில் அமைந்திருக்க வேண்டும். எக்ஸ் கதிர் வானியல், காம்மாக் கதிர் வானியல், புறஉதாக் கதிர் வானியல் ஆகியவற்றில் பயன்படும் அலைநீளங்களைக் கொண்ட கதிர் வீச்சுக்கள் வளிமண்டலத்தினூடாகப் புவியை அடைய முடியாது. இதனால் இவை தொடர்பான நோக்ககங்கள் உயரே பலூன்களில் அல்லது விண்வெளியிலேயே அமைய வேண்டும். இசுப்புட்னிக் 1 இசுப்புட்னிக் 1 ("Sputnik 1") பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது. திரைப்படம் திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது. திரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும். திரைப்படங்கள் பெரும்பாலும் பின்னனி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும். ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காட்டிக் கட்டணம் பெறப்பட்டது. இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், இசை ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் மைஸ் அன் சீன் (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை. ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில்,திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள்.இவறின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும். திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும். திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும். திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும். ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியேர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர். நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும்.ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும்.முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு.நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும். வால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிகவேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.செய்திப்படம் தயாரிப்பதென்பது எளிய காரியமல்ல. விளக்கப்படம் என்பது ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதுகுறித்து முழு விளக்கத்தையும் தருவதாகும். கற்போர் எளிதில் கல்வி கற்க எடுக்கப்படும் படங்கள் கல்விப்படங்களாகும். 1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர். 1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர். லூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்ஸால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது.இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது.நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின. 1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக், மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார். பின், ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர். ஆர். நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசக வதம் 1916 இல் வெளியிடப்பட்டது.தமிழ் சினிமாவின் வரலாற்றின் தொடக்கமாக இது கருதப்பட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம் போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது. ஹெச். எம். ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றன. எல்லிஸ் ஆர்.டங்கன்(1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாடோகிராபியில் பட்டம் பெற்று,1935ல் இந்தியா வந்து சேர்ந்தார்.அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார்.கொல்கத்தாவில் நந்தனார்படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக சதிலீலாவதிபடத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார்.டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம்.கந்தசாமி முதலியார் இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வந்த எஸ்.எஸ்.வாசனின் புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக சமூகப் பிரச்சினையைப் பேசிய காரணத்தால் ஆடல்பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது. எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி இந்திய திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினார்.சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936),இரு சகோதரர்கள்(1936),அம்பிகாபதி(1937), சூர்யபுத்திரி(1940),சகுந்தலா(1940), காளமேகம்(1940),தாசிப் பெண்(1943), வால்மீகி(1945),மீரா(1945),பொன்முடி(1950), மந்திரிகுமாரி(1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் தி ஜங்கிள்(1952),தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்(1958),வீல்ஸ் டு ப்ராகிரஸ்(1959),டார்ஜான் கோஸ் டு இன்டியா(இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962),ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் ஆன்டிஸ் கேங்(1955-1960)எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார். இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பாக மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன.அவற்றில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு,மௌண்ட்பேட்டன் பிரபு,கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர். அடிப்படையில் நிழற்படக் கருவியும்(கேமரா),ஆடியும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது.எனினும்,அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக,சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா,மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்,டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது. அடிப்படையில் திரைப்பட படிப்பிடிப்பு என்பது கேமரா வைப்புமுறை,ஒளியமைப்பு,சூரிய ஒளித்தன்மை பற்றிய தெளிவு,ஒலியமைப்பு,லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள்(Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும்.இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும். தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். "சிவாஜி" கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும். இவர் நடித்த "மனோகரா", "வீரபாண்டிய கட்டபொம்மன்" போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். "பாசமலர்", "வசந்த மாளிகை" போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை. தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார். 1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர். ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் ("United Arab Emirates", ஐக்கிய அரபு எமிரேட்ஸ், "UAE" '), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார். 1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது),அல் ஐன், அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும். அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும். அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார். அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது. ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர். 16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார் 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை. பிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின்றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது. 1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்களினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை. பிரித்தானியர் வளர்ச்சி அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தனர். இதன் மூலம் அமீரகங்களில் சில சிறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவினர். அமீரகங்களின் சேக்குகள் அப்போது தமக்கிடையிலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக அவை ஒன்றை அமைக்க முடிவு செய்ததுடன் வளர்ச்சி அலுவலகத்தையும் பொறுப்பேற்றனர். அவர்கள் சமாதான ஒப்பந்த அவை ஒன்றை உருவாக்கி அக்காலத்தில் துபாயின் ஆட்சியாளரான சேக் ராசித் பின் சயீத் அல் மக்தூமின் சட்ட ஆலோசகராக இருந்த அதி பித்தார் என்பவரை செயலாளராகத் தெரிவு செய்தனர். இந்த அவை 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அமையும் வரை இயங்கியது. 1968 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தனது முடிவை அறிவித்ததுடன், 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அம்முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய ஒன்பது சேக்ககங்களும் கூட்டமைப்பை உருவாக்க முயன்றனவாயினும், 1971 நடுப்பகுதி வரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகத்தில் பகுரைன் விடுதலை பெற்றது. செப்டெம்பர் மாதத்தில் கத்தாரும் விடுதலை பெற்றது. அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் தமது இரு அமீரகங்களிடையே கூட்டமைப்பை உருவாக்க இணங்கி, அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், பின்னர் ஏனைய அமீரகத்தினரையும் அழைத்து அவர்களும் கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பை வழங்குவது எனவும் முடிவு செய்தனர். அதி பித்தார் 1971 டிசம்பர் 2 ஆம் திகதியளவில் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்ன்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல்-கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன. உயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது: ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகை இயற்கைக்கு மாறான ஆண்-பெண் பரம்பலைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகையில் ஆண்களின் தொகை பெண்களின் தொகையிலும் இரண்டு மடங்கு ஆகும். 15-65 வயது எல்லைக்குட்பட்டோரின் ஆண்/பெண் பால் விகிதம் 2.743 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தப் பால் சமநிலையின்மை உலகிலேயே மிகவும் அதிகமானது ஆகும். இதனைத் தொடர்ந்து கட்டார், குவைத், பஹ்ரேன், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வருகின்றன. இவையனைத்தும், வளைகுடாக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் மிக அதிகமான பல்வகைமைத் தன்மை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்நாட்டின் மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. பிற அராபியரும், ஈரானியரும் 23% உள்ளனர். இங்கு வாழ்பவர்களில் சுமார் 73.9% மக்கள் பிற நாட்டவர்கள். உலகில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று. 1980களுக்குப் பின்னர் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளனர். வாழ்க்கைத் தரமும், பொருளாதார வாய்ப்புக்களும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், தெற்காசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்காளதேசத்தவர், இலங்கையர் போன்றோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் மொத்தத் தொகை 2.15 மில்லியனாக இருந்தது. அரசியல் அகதிகளாகவும், புலம் பெயர்ந்தோராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கின்றனர். 2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள். இஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன. சமயம் கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தஞ்சைப் பெருவுடையார் கோயில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரில் காவேரி ஆற்றின் துணை ஆறான புதுஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தb கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன. தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன. காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும். திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக் கடவுளான "இலிங்கம்" 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் "பிரகாரம்" 240 மீ. x 125 மீ. அளவிலானது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன. முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது. தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது. சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி, சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன. இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க..." தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது. • குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010 • தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 பொழுதுபோக்கு பொழுதுபோக்கு என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும். பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது. "ஹாபி குதிரை" என்பது உண்மையான குதிரையைப் போன்றே மரத்தாலான அல்லது மிலாறுகள் கொண்டு முடையப்பெற்ற பொம்மையாகும் (இது சில நேரங்களில் "ஹாபி" என்றும் அழைக்கப்பட்டது). இதில் இருந்து "விருப்பமான ஓய்வுநேரத்தில் தொடர்வதற்கு" என்ற அர்த்தத்தில் "ஹாபி-குதிரையை சவாரி செய்வது" என்ற வெளிப்பாடு வந்தது. மேலும் "ஹாபி" என்பது ஒரு புதிதாய் உருவாக்குவதின் ஒரு நவீன உணர்வாகும். வருவாய் சார்ந்த உழைப்பூதியத்தைக் காட்டிலும் ஆர்வம் மற்றும் இன்பம் நுகர்தலுக்காக பொழுதுபோக்குகள் பழக்கப்படுத்தப்பட்டது. சேகரித்தல் படைக்கும் திறனுள்ள மற்றும் கலைநயமுடைய பணிகள், படைப்பு, பழுது நீக்கல், விளையாட்டுகள் மற்றும் வயது வந்தோர் கல்வி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பொழுதுபோக்கைப் பின்பற்றுவது அனுபவப்பூர்வமான திறன், அறிவு மற்றும் அனுபவம் போன்றவை ஏற்படுவதற்கு வழியாக அமைகிறது. எனினும் தனிப்பட்ட திருப்தியடைதல் என்பது நோக்கமாகும். சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும் விசயங்கள் பிறருக்கு தொழிலாக இருக்கும்: ஒரு சமையல்காரர் கணினி விளையாட்டுகளை பொழுதுபோக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைவார். ஆனால் ஒரு தொழில்முறை விளையாட்டு விசாரணையாளர் சமைப்பதில் மகிழ்ச்சியடைலாம். பொதுவாகப் பேசினால் ஒரு நபர் சில விசயங்களை ஆதாயத்திற்காக செய்யாமல் வேடிக்கைக்காக செய்தால் தொழில் முறையில் இருந்து வரையறுக்கப்பட்ட அந்த செய்கையைச் செய்பவர் கலைப்பிரியர் (அல்லது பொழுதுபோக்குவர்) எனப்படுகிறார். தொழிலில் இருந்து வகைப்படுத்தப்பட்டதாக பொழுதுபோக்கானது (குறைவான ஆதாயம் இல்லாமல் செயல்படுவதற்கு அப்பால்) முக்கியமான ஒன்றாக தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலும் நடவடிக்கையில் இதை கொண்டு வருவது எவ்வளவு எளிது என்பதாக இது உள்ளது. பெரும்பாலும் யாருமே சிகரெட் அட்டை அல்லது அஞ்சல் தலை சேகரித்தலை பழக்கமாகக் கொண்டிருப்பதில்லை. ஆனால் பல நபர்கள் இதை மகிழ்ச்சி தரும் விசயமாக உணர்கின்றனர்; அதனால் பொதுவாக இது பொழுதுபோக்கு என அறியப்படுகிறது. கலைப்பிரியரான வானூலார்கள் பெரும்பாலும் தொழில்முறை சார்ந்தவர்களுக்கு பயனுள்ள வகையில் பங்களிப்பைத் தருகின்றனர். கோள் அல்லது சம்பவத்தை கண்டுபிடிப்பது முதலில் பொழுதுபோக்காளருக்கு முழுமையான வழக்கமற்ற ஒன்றாக இருக்கும். UK இல் இழிவுபடுத்தும் பெயர்சொல்லாக "அனோராக்" உள்ளது (ஜப்பானியர்களின் "ஒட்டாக்கு" போன்று இதுவும் உள்ளது. ஆர்வலர் அல்லது பற்றார்வலர் என்பது இதற்கு பொருளாகும்) ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களிடம் இது பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. இல்லையெனில் இரயில் கண்டுபிடித்தல் அல்லது அஞ்சல் தலை சேகரிப்பு போன்று இதுவும் ஆர்வமற்றதாகக் கருதப்படும். சில பொழுதுபோக்குகளானது பயனற்றதாகவும் ஆர்வமில்லாததாகவும் பல மக்களால் உணரப்படும் போது பொழுது போக்காளர்கள் அவர்களுக்கு பேரார்வமூட்டுவதாகவும் பொழுதுபோக்கு உடையதாகவும் சிலவற்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் விளைவாக மிகவும் பழைய அறிவியல் ஆராய்ச்சியில் பொழுதுபோக்கை மிகவும் வளமானதாகக் கூறப்பட்டது; மிகவும் அண்மையில் லினக்ஸ் மாணவர்களின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. பொழுதுபோக்கானது பயனற்றதாக இருக்கக்கூடாது. அதே சமயம் மிகவும் குறைவான நபர்கள் அதைப் பின்பற்றுவதாகவும் இருக்கக்கூடாது. ஆகையால் ஒரு பிரிட்டிஷ் சூழ்நிலைப் பாதுகாவலர் நினைவு கூர்கையில் 1930 ஆம் ஆண்டுகளில் லண்டன் நிலையத்தில் ஒருவர் துறைக் கண்ணாடிகளை அணிந்துள்ளதைப் பார்த்து அவர் (குதிரைப்) பந்தயங்களுக்கு செல்கிறாரோ என்று வினவியதை நினைவு கூர்ந்தார். அச்சமயத்தில் இயற்கையான ஆர்வமாக நம்பகமான பொழுதுபோக்கு ஏதும் இல்லை என வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்தப் பொழுதுபோக்கை வழக்கமாகச் செயலாற்றுபவர்கள் பாதுக்காப்புச் செயல் இயக்கத்தின் வித்தாக அமைந்தனர் 1965 ஆம் ஆண்டில் இருந்து அந்த இயக்கமானது பிரிட்டனில் தலைத்தோங்கியது. மேலும் அந்தத் தலைமுறைக்கு உள்ளாகவே உலகளாவிய அரசியல் இயக்கமாக மாறியது. எதிரிடையாக வானூர்தி கண்டுபிடித்தல் பொழுதுபோக்கானது இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கில வான் எல்லைக்குள் நுழையும் எதிரிகள் விமானத்தின் அலைவரிசைகளைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். அமைதியான நேரங்களில் வழக்கமாக இதைப் போன்ற செயல்முறை சார்ந்த அல்லது சமுதாய நோக்கங்கள் ஏதும் இருக்காது. ஒரு குறிப்பிட்ட பொருளைக் கையகப்படுத்தி சேகரிக்கும் பொழுதுபோக்கானது குறிப்பாக சேகரிப்பவரின் ஆர்வத்தைப் பொருத்தே அமைகிறது. இந்தப் பொருள்கள் சேகரிப்பானது பெரும்பாலும் உயர்ந்த வகையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. கவனமாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஈர்க்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட சேகரிப்பவரின் ஆர்வத்தை சார்ந்தே சேகரித்தல் அமைவதில் இருந்து பெரும்பாலும் எந்தப் பொருளுடனும் இது பகுத்தளிக்கப்படுகிறது. சேகரித்தலின் பரந்த நோக்கும் ஆழமும் கூட மாறுபடுகிறது. சில சேகரிப்பவர்கள் அவர்களது பொதுவான ஆர்வமுடைய பகுட்திகளின் குறிப்பிட்ட உபபொருள்களை மையப்படுத்தியே தேர்வுசெய்கின்றனர். சில தனிப்பட்டவர்கள் அவர்களது பொழுதுபோக்காகா நாணயங்களை சேகரிப்பதலும் ஈடுபடுகின்றனர்; இந்த இரண்டு விசயங்களிலும் மக்கள் தங்களது அடையாளங்களை வைத்திருக்க முயற்சிக்கின்றனர். சேகரிப்பவர்களில் சிலர் அதை நிறைவாகச் செய்யும் திறமையைப் பெற்றிருக்கின்றனர். குறைந்தது அவர்கள் சேகரிக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியை சொந்தமாகக் கொண்டிருக்கும் விரிவாக்கத்தைக் கொண்டுள்ளனர். முழுமையான சேகரிப்புகளை ஒன்று கூட்டி அமைக்க முயற்சிக்கும் சேகரிப்பவர்கள் சில சமயங்களில் "முழுமை செய்தவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்". குறிப்பிட்ட முழுமையடைந்த பின் அவர்கள் சேகரிப்பதை நிறுத்தக்கூடும் அல்லது அதைச் சார்ந்த பொருள்கள் அல்லது முழுவதும் புதிய சேகரிப்புகளை உள்ளிட்ட சேகரிப்புகளைத் தொடங்கக்கூடும். சேகரிப்புகளில் மிகவும் பிரபலமான துறைகளானது திறன்மிக்க வணிகரீதியான விற்பனையாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் வாணிகத்துக்கு தேவையான அல்லது அதைச் சார்ந்த துணைக்கருவிகளை சேகரிக்கின்றனர். வாணிகம் செய்பவர்களில் பலர் தாங்களாகவே சேகரிப்பவர்களாக இருந்து பின்னர் அவர்களது பொழுதுபோக்கை தொழில்சார்ந்து செய்யத்தொடங்குகின்றனர். எடுத்துக்காட்டாக பொருளாதார ரீதியாக அஞ்சல்தலைகளை சேகரிக்கும் திறனுள்ளவர்களால் விளையாட்டுக் கார்களை சேகரிக்க முடியாது. இயற்பியல்சார் பொருள்களை சேகரிப்பதில் ஒரு மாற்று வழியாக குறிப்பட்ட அந்தப் பொருளைப் பற்றிய அனுபவங்களை சேகரிக்கலாம். உற்றுநோக்குதல் வழியாக சேகரித்தல் அல்லது நிழற்படக்கலை (குறிப்பாக போக்குவரத்து சாதனங்களில் பிரபலமாக உள்ளன. எ.கா. இரயில் கண்டுபிடித்தல், வானூர்தி கண்டுபிடித்தல், மெட்ரோபில்கள், பஸ் கண்டுபிடித்தல் போன்றவையாகும்; மேலும் காண்க ஐ-ஸ்பை), பறவை-கண்காணித்தல் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வருகை கண்டங்கள், நாடுகள் (அவர்களது பாஸ்போர்டுகளின் அஞ்சல்தலைகளை சேகரித்தல்), மாநிலங்கள், தேசியப் பூங்காக்கள், கவுண்டிகள் மற்றும் பலவும் உள்ளன. விளையாட்டு என்பது அமைப்புமுறையான அல்லது பகுதி-அமைப்புமுறையான மீண்டும் உருவாக்கப்படக்கூடிய நடவடிக்கை ஆகும். வழக்கமாக மகிழ்ச்சியாக இருப்பதற்காக செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது (எனினும் சிலசமயங்களில் இயற்பியல்சார் அல்லது தொழில்சார் பயிற்சிக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது). விளையாட்டில் எவ்வகை வீரர்களால் சாவல் மற்றும் அமைப்புமுறையை நிகழ்த்தமுடியும் என்பதை அல்லது முடியாது என்பதை உருவாக்கும் விதிமுறைகளை அமைப்பதற்கும் அடைவதற்கும் வீரர்கள் முயற்சிப்பதே இதன் நோக்கமாக உள்ளது. ஆகையால் அவை அதன் வரைமுறைக்கு மையமாக செயல்படுகிறது. வரலாற்று காலத்துக்கு முந்தைய காலங்களாக விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளன. பொதுவாக விளையாட்டுகளானது பணியில் இருந்து மாறுபட்டு உள்ளது. இவை வழக்கமாக ஆதாயமாகப் பார்க்கப்படுகின்றன. ஏனெனில் இன்பம் தரும் பல மாறுபட்ட வகை நடவடிக்கைகளும் பல வகை விளையாட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்பம் அளிக்கும் விளையாட்டுகளானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. வயது, (விளையாட்டைப்) புரிந்துகொள்ளல், அறிவு நுட்பத்தின் அளவு, மற்றும் ஒருவரின் நிலை போன்றவை, ஒருவர் இரசிக்கும் விளையாட்டை வரையறுக்கின்றன. இந்தக் காரணிகளைச் சார்ந்து விளையாட்டின் கடினத்தன்மை, விதிமுறைகள், சவால்கள் மற்றும் மக்களின் இன்பத்தை அதிகப்படுத்துவதற்கான பங்கேற்பாளர்கள் போன்றோர் எண்ணிக்கையில் மாறுபடுகின்றனர். விளையாட்டுகள் பொதுவாக மனம்சார்ந்த மற்றும்/அல்லது உடல்சார்ந்த உருவகப்படுத்துதல்களை ஏற்படுத்துகிறது. பல விளையாட்டுகளானது செயல்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவியாகவும், உடல்பயிற்சியாகவும் உள்ளன அல்லது கல்விசார்ந்தும், உருவகப்படுத்துதல் சார்ந்தும், உளநூல் சார்ந்த பங்களிப்பிலும் உள்ளன. வெளிப்புறப் பொழுதுபோக்குகளானது விளையாட்டுகளின் குழு மற்றும் நடவடிக்கைகளின் தளர்ச்சியானதாகக் கருதப்படுகின்றன. இவை மலையில் நடைபுரிதல், நீண்ட நடைப்பயணம், பின்புற கட்டுமானம், சிறிய படகு, கயாக்கிங், மலை ஏறுதல், எதிர்ப்பை விலக்குதல் போன்ற விசயங்களை உள்ளடக்கிய சிறந்த வெளிப்புற விசயங்களை சார்ந்திருக்கின்றன. மேலும் நீர் விளையாட்டுகள் மற்றும் பனி விளையாட்டுகள் போன்ற வாதத்திற்குரிய பாராபட்சமற்ற குழுக்களையும் கொண்டுள்ளன. வெளிப்புற விளையாட்டும் பெரும்பாலும் "விளையாட்டில்" இயற்கையாகவே சேர்க்கப்பட்டுள்ளன. சிறிது வேடிக்கையாக அட்ரெனலின் வேகமாக அல்லது இயற்கையில் இருந்து தப்பிப்பதற்காக பலரால் இன்பமாகக் கருதப்படுகின்றன. கல்வி மற்றும் அணி உருவாக்குதலில் மிகவும் பயனுள்ள இடைமுகமாக பெரும்பாலும் வெளிப்புற விளையாடுகள் செயல்படுகின்றன. இவை தன்னியல்பாக இருந்து டக் ஆஃப் எடின்பர்க்'ஸ் விருது மற்றும் PGL போன்றவற்றை இளைய சமுதாயத்தினுடன் வளர்ப்பதற்காக இணைந்துள்ளது. மேலும் பெரும் எண்ணிக்கையிலான வெளிப்புற கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நிலைப்படுத்தப்பட்ட மற்றும் பரவலான கல்வியைத் தொடர்ந்து வளர்ப்பதற்கு முக்கியப்பங்காக இவை செயல்படுகின்றன. நபர்களைப் பொருத்து அட்ரெனலினின் விருப்பநிலை தெரிகிறது. வெளிப்புறங்களானது பொழுதுபோக்கின் வகையாகக் கருதப்படுகின்றது. ஆர்வம் அதிகரிப்பதால் வணிகரீதியான வெளிப்புறப் பொழுதுபோக்குகள் அதிகரித்துள்ளன. பெரும் எண்ணிக்கையில் வெளிப்புற தொகுதியகங்கள் வெற்றிகரமாய் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிப்புறப் பொழுதுபோக்குகளாக பத்திரிக்கைத் தொழில் மற்றும் பத்திரிகைகள் இரண்டுமே தாள்களிலும் ஆன்லைனிலும் வருகின்றன. வெளிப்புற பொழுதுபோக்குகளுடைய வாய்ப்புகளின் அதிகரிக்கப்பட்ட அணுகுமுறையானது சில எதிர்மறையான விளம்பரத்திற்கு மூலமாகவும் அமைகிறது, ஆண்டுகள் கடந்தால் கூட நிலப்பகுதிகளை அழிக்கும் புகார்கள் இருந்து வருகின்றன. பெரும் எண்ணிக்கையுடைய பார்வையாளர்கள் மூலமாக படிப்படியாய் அழிவுறும் மலைப் பகுதிகள் நடை பாதைகளாக மாறி வருவது பரவலாகக் காணப்படும் எடுத்துக்காட்டாகும். பாடுவது, நடிப்பது, ஏமாற்று வித்தை, மந்திரம், நடனமாடுதல் மற்றும் பிற கலைகளை செயல்படுத்துதல் போன்ற பல பொழுதுபோக்குகளானது பொழுதுபோக்காளர்கள் மூலமாக நிகழ்த்தப்படுகின்றன. உற்பத்திப்பொருள் நிறைவு பெறும் தருவாயில் சில பொழுதுபோக்குகள் வெளிப்படுகின்றன. மரவேலைப்பாடு, புகைப்படக்கலை, திரைப்படம் தயாரித்தல், நகை தயாரித்தல், இசைக்கருவிகளை வாசித்தல், மென்பொருள் செயல்திட்டங்கள், கலைநயமுடைய செயல்திட்டங்கள் (வரைதல், ஓவியக்கலை மற்றும் பல.), பேப்பர்கிராஃப்ட் என்றழைக்கப்படும் அட்டை அல்லது காகிதத்தைக் கொண்டு உருமாதிரிகளை உருவாக்குதல் முதல் சுரண்டுதலில் இருந்து ஜுவெட் அல்லது கணினியைக் கட்டமைப்பது போன்ற கட்டடம் அல்லது காரை திருத்தியமைத்தல் போன்ற விலையுயர்ந்த செயல்திட்டங்கள் வரை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பொழுதுபோக்காளர்களுக்கு இவை ஒரு இன்பம் தரும் விசயங்களாக இருக்கையிலும் அவர்கள் சில சமயங்களில் அவற்றை ஆற்றல் மிக்க சிறிய தொழிலாகவும் நடத்துகின்றனர். சிறிய அளவிலான உண்மை நிகழ்வுகளின் சரியான பிரதிகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களுக்குப் பின்னால் அனைத்து வழியிலும் செல்கின்றன, சிறிய களிமண் "விளையாட்டு பொம்மைகள்" மற்றும் பிற குழந்தைகளின் பொம்மைகள் ஆகியன அருகில் உள்ள மக்கள் இருந்த பகுதிகளில் கிடைத்துள்ளன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பெர்சியர்கள் ஆகியோர் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது சிறந்த ஆழமான வடிவத்தை எடுத்துக்கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் எதிரிகளுக்கான அரண் அமைத்தல், கோட்டை பாதுகாப்பு வரிகள் மற்றும் பிற புவியில் பொருத்தப்பட்ட பொருள்களை பயன்படுத்தினர். 1920 ஆம் ஆண்டுகள் முழுவதும் தொழிற்துறைக் காலங்கள் திரும்பிக் கொண்டிருக்கையில் மின்சார இரயில்கள் இறுதிக்கட்ட பொம்மைகள் (எடுத்துக்காட்டாக படகுகள் அல்லது கார்கள்) மற்றும் அதிகமான மதிப்புடைய தகர பொம்மை போர்வீரர்கள் போன்ற மிகவும் பெரிய சக்தி பெற்ற பொம்மைகளை குடும்பங்களில் பயன்படுத்தினர். உருமாதிரி பொறியியலில் உள்நிலை எரிதல் மோட்டார்கள் மற்றும் நேரடி நீராவி உருமாதிரிகள் அல்லது இடம் விட்டு இடம் செல்லக்கூடியவைகள் போன்ற உலோக கட்டட செயல்பாடுடைய இயந்திரங்கள் குறிப்பிடப்பட்டன. இது தேவையாய் இருக்கிற பொழுதுபோக்காகும். இதற்கு பெரிய மற்றும் விலையுயர்ந்த கருவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன எ.கா. கடைசல் இயந்திரங்கள் மற்றும் மாவரைக்கும் இயந்திரங்கள். 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் UK இல் இந்தப் பொழுதுபோக்கு தோன்றியது, பின்னர் 1900 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பரவி தழைத்தோங்கியது. விலையுயர்ந்ததாகவும் அதிகமான இடம் தேவைப்பட்டதாலும், இது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஒப்பளவு மாதிரியமைத்தலானது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு விரைவில் இன்று நாம் அறியும் படி அமைந்தது. 1946 ஆம் ஆண்டுக்கும் முன்பு குழந்தைகளும் பெரியவர்களும் கட்டை மர பொருள்களின் இருந்து மரத்தாலான பிரதிகளை செதுக்கவும் ஒழுங்குபடுத்தவும் செய்தனர். பகை நோக்குடன் நுழைபவர்களை அடையாளம் காணும் பொருட்டு பெரும்பாலும் எதிரி வானூர்திகளை சித்தரித்து இவற்றை செய்திருந்தனர். நவீன பிளாஸ்டிக்குகளின் வருகையுடன் கொடுக்கப்பட்ட எந்த பொருளின் அடிப்படை உருவைத் துல்லியமாகக் கொண்டு வருவதற்கு தேவைப்பட்ட அதிகப்படியான திறமைகள் குறைவாக இருந்தன. அனைத்து வயது மக்களுக்கும் இதை எளிதாக்குவதற்கு பல்வேறு ஒப்பளவுகளில் சரியான பிரதிகளை செய்யத் தொடங்கினர். சூப்பர்ஹீரோக்கள், விமானங்கள், படகுகள், கார்கள், பீரங்கிகள், பீரங்கித் தொகுதிகள் மற்றும் போர் வீரர்களின் உருவங்கள் கூட கட்டமைப்பதற்கு வர்ணம் பூசுவதற்கு காட்சிக்கு வைப்பதற்கு பிரபல ஒன்றாக இருந்தன. எனினும் பெரும்பாலான எந்தப் பொருளும் பெரும்பாலும் எல்லா ஒப்பளவுகளிலும் கிடைத்தன. நுண்ணிய ஓவியங்களைக் கொண்ட சில பொதுவான ஒப்பளவுகள் இன்றும் மாறாது இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் மிகவும் பிரபலமான ஒப்பளவுகள் பின்வருமாறு (மக்களின் ஆதரவு காரணமாக): ஒப்பளவின் காரணமாக வடிவங்களின் அனைத்து பொருள்களும் அநேகமாய் மிகவும் மாறுபாட்டுடன் இருக்கும், மேலும் அவைப் பெரும்பாலும் தசாம்ச அளவு முறைக்கு சமநிலையுடன் குறிப்பிடப்படுகின்றன... எடுத்துக்காட்டாக 1:32 ஒப்பளவு வடிவ போர் வீரர் மிகவும் பொதுவாக "54மிமீ" இல் வரையறுக்கப்படுகிறார். அதே போன்ற பிற பிரபலமான அளவுகளாக 90மிமீ, 120மிமீ மற்றும் பெரும்பாலும் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஆதாயம் இருக்கும். விளையாட்டுப் பயிலரங்கில் இருந்து வார்ஹாமர் 40,000 டியோராமா பொழுதுபோக்கின் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பிளாஸ்டிக் கருவிகளுக்கு கூடுதலாக "சிறிது கால" உற்பத்திகளுக்கு பிரபலமான மூலப்பொருளாக பிசின் மாறியது. இந்த நிலையின் நுணுக்கமானது பெரும்பாலும் மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் குறிப்பிட்டத்தக்க பிளாஸ்டிக் போர் வீரரைக் காட்டிலும் விலையுயர்ந்ததாகும் பணிபுரிவதற்கு மிகவும் எளிய ஒன்றாகும். மேலும் வெள்ளை உலோகம் அல்லது காரீய உருவங்களைக் காட்டிலும் திருத்தியமைப்பதற்கு மிகவும் எளிதானதாகும். ஒப்பளவு மாதிரியமைத்தலானது 60கள் மற்றும் 70களின் போது அதிகமாக வளர்ந்து வரும் தொழில்துறையில் நீண்டு இருக்கவில்லை. ஆனால் புதிய மற்றும் நிறுவப்பட்ட பொழுதுபோக்காளர்களுக்கு ஆதரவளிக்கும் தொகுதிகள், வழங்குதல்கள், வர்ணங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான விற்பனையகங்கள் இன்றும் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பல நிறுவனங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் பல்வேறு பொருள்களின் அதிக மாறுபாடுடைய தொகுதிகளை உற்பத்தி செய்கின்றன. மேலும் நுணுக்கத்தின் நிலையானது நவீன வரைவுகள் மற்றும் மூடப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஒரு அங்குளத்தை 1000க்கு துல்லியமாக இயக்குவதற்கு டிஜிட்டல் முறையான CAD மென்பொருள் ஆகியவற்றின் வருகையுடன் நம்பத்தகாத வகையில் துல்லியமாக இருக்கின்றன. சிறந்த தொகுதிகளின் அதிகரிக்கப்பட்ட விலைகள் மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் மேலும் மனமகிழ்ச்சியடையும் போட்டியாக வீடுகளில் கணிகள் மற்றும் வீடியோ விளையாட்டுகளை நோக்கி இளைஞர்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கின்றனர். சராசரி வயதுடைய பேராசை கொண்ட பொழுதுபோக்காளர்கள் முன்பைக் காட்டிலும் தற்போது மிகவும் பழமையடைந்து விட்டனர் - அதிக அளவு ஆர்வம் நிறைந்தவர்களாக வயது வந்தவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அநேகமாய் பெரும்பாலான மக்கள் எப்போதையும் காட்டிலும் அதிகமாகக் கட்டமைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு கற்பனை செய்யத்தக்க காலத்தில் இருந்தும் அதிப்படியான விருப்பிடம் மற்றும் ஆர்வத்தைக் கொண்டு வருவதற்கு பைல் ஸ்கேல் மாடுலர், மிலிட்டரி மினியேச்சர்ஸ் இன் ரிவியூ (MMiR) மற்றும் தமியா பத்திரிக்கை போன்ற ஆரவளிக்கும் பத்திரிகைகளின் அதிகப்படியானத் தேர்வுகளும் உள்ளன. மேலும் பெரும்பாலான நகரங்களில் பல்வேறு மாதிரியமைத்தல் கிளப்புகளும் உள்ளன, மேலும் மிகப்பெரிய மற்றும் சிறப்பாக அறியப்பட்ட இண்டர்நேசனல் பிளாஸ்டிக் மாடலெர்'ஸ் சொசைட்டி (IPMS ) உலகம் முழுவதும் அத்தியாயங்கள் மற்றும் போட்டிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. சமையல் என்பது சாப்பிடுவதற்காக உணவைத் தயார்படுத்தும் ஒரு செயல்பாடாகும். சுவைமணம் அல்லது உணவில் செரிமானமூட்டும் பொருளை அதிகப்படுத்துவதற்காக பெரிய அளவிலான முறைகள், கருவிகள் மற்றும் பகுதிப்பொருள்களின் கலவை ஆகியவற்றை இது உட்கொண்டிருக்கிறது. விருப்பத்திற்கு ஏற்றவாறு சமயலைச் செய்வதற்கு பொதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையில் தேர்ந்தெடுத்தல், அளவீடு மற்றும் பகுதிப்பொருள்களைக் கலத்தல் ஆகியவை தேவைப்படுகிறது. பலவகைப்பட்ட கலவைகள், சூழப்பட்டுள்ள சூழ்நிலைகள், கருவிகள் மற்றும் தனிப்பட்ட நபரின் சமையல் திறமை ஆகியவற்றை இதன் வெற்றி உள்ளடக்கியுள்ளது. உலகளவில் சமையலின் மாறுபாடு என்பது எண்ணற்ற உணவு ஊட்டச்சத்துக்குரிய வெளிப்பாடு, சுவைநலம், விவசாயம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கருத்துகள் ஆகியவை இதன் வலுவான பிணைப்பாக உள்ளது. பொதுவாக சமையலுக்கு உணவில் வெப்பத்தை செலுத்துவது அவசியமாகிறது. ஆனால் எப்போதும் அல்ல வேதியியல் ரீதியாக இது மாறுபடுகிறது, ஆகையால் இதன் சுவைமணம், அமைப்புமுறை, தோற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்குரிய குண நலன்கள் ஆகியவை மாறுபடுகிறது. அதிக சூடான நிலைக்கு எதிராக சரியாக சமையல் செய்வதற்கு தேவையான அளவு சூடான நீர் தேவைப்படுகிறது. தோராயமாக மட்பாண்டங்கள் அறிமுகமான பத்தாயிரம் ஆண்டு BC இல் இருந்து வழக்கமாக சமையல் செய்யப்பட்டு வருகிறது. விலங்குகள் மற்றும் காய்கறிகள் போற இரண்டு விதமான உணவுப்பொருள்களையுமே சூடுபடுத்தியதற்கு தொல்பொருள் ஆய்வுசார்ந்த ஆதாரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் ("ஹோமோ எரக்டஸ்" ) சில 800,000 ஆண்டுகளுக்கு முன்பு தீயைப் பயன்படுத்தி தங்கியிருந்ததாக தொன்மையிலே அறியப்பட்டுள்ளது. குடியிருப்புக்குத் தொடர்புள்ள தோட்ட வேலை என்பது பெரும்பாலும் வீட்டிற்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ அமைக்கப்படுவதாகும். இந்த இடம் தோட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தோட்டமானது குடியிருப்பிற்கு அருகில் உள்ள நிலத்தில் கூட அமைந்திருக்கலாம். வீட்டின் கூரையில், அறையில், மாடி முகப்பில், ஜன்னல் கட்டத்தில், அல்லது உள்முற்றத்தில் அல்லது விலங்குகளின் செயற்கை வளர்ப்பகத்தில் கூட தோட்டம் அமைந்திருக்கலாம். உட்புற தோட்டவேலை என்பது கிடங்கு அல்லது பசுமைக் குடியிருப்பில் உள்ள குடியிருப்பு அல்லது கட்டடத்தினுள் வீட்டுத் தாவரங்களை வளர்ப்பதாகும். உட்புறத் தோட்டங்கள் சில சமயங்களில் காற்று சீரமைத்தல் அல்லது வெப்பமாக்கும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து வருகின்றன. நீர் தோட்டவேலை என்பது குளம் மற்றும் சிறு குளங்களுக்கு ஏதுவாக தாவரங்களை வளர்ப்பதாகும். சதுப்பு நிலத் தோட்டங்களானது நீர் தோட்டத்தின் வகையாகவே கருதப்படுகிறது. ஒரு சாதாரணமான நீர் தோட்டம் என்பது ஒரு தனிப்பட்ட தொட்டியில் வாட்டருடன் தாவரங்(களை)க் கொண்டிருக்கும். இந்த பொழுதுபோக்கானது மூன்று குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளினுள் பொதுவாகப் பிரிகின்றன. சுத்தமான நீர், சிறிது உப்பான நீர் மற்றும் கடல் சார்ந்த நீர் (உப்பு நீர் எனவும் அழைக்கப்படுகிறது) சார்ந்து மீன் வளர்க்கப்படுகிறது. சுத்தமான நீர் மீன் வளர்த்தல் என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக உள்ளது. இதில் சிறிய வீட்டு விலங்குகள் விற்பனையகங்கள் கூட தங்க மீன், கப்பிகள் மற்றும் ஏஞ்சல் மீன் போன்ற பல்வகை சுத்தமான நீர் மீன்களை விற்பனை செய்கின்றன. பெரும்பாலான சுத்தமான நீர் தொட்டிகளானது பல்வேறு அமைதியான இனங்களைக் கொண்ட சமூக தொட்டிகளாக அமைக்கப்படுகையில் பல மீன் வளர்ப்பாளர்கள் இனப்பெருக்கத்திற்காக தனிப்பட்ட இனமுடைய மீன் தொட்டியைக் கொண்டிருக்கின்றனர். பல்வகை இனங்களில் மொல்லீஸ் போன்ற லைவ்பியரிங் மீன்கள் மற்றும் கப்புகள் மிகவும் எளிதாகப் பெருகி விடுகின்றன. ஆனால் மீன் வளர்ப்பவர்கள் தொடர்ந்து சிச்லிட், பூனை மீன், கேரகின் மற்றும் கில்லிபிஷ் உள்ளிட்ட பலவகைகளைக் கொண்ட ஏராளமான பிற இனங்களையும் பெருக்கம் செய்யவேண்டும். கடல் சார்ந்த தொட்டிகள் பொதுவாகப் பராமரிப்பதற்கு மிகவும் கடினமாகும். மேலும் லைவ்ஸ்டாக்கானது மிகவும் விலையுயர்ந்ததாகும். மிகவும் அனுபவமுள்ள மீன் வைத்திருப்பவர்களை இந்தப் பொழுதுபோக்கு வகை மிகவும் ஈர்க்கிறது. எனினும் கடல்சார்ந்த தொட்டிகள் அளவுக்குமீறிய அழகுடன் உள்ளன. கோரல்கள் மற்றும் பவழப்பாறை மீனை அவற்றினுள் வளர்ப்பதால் அதன் ஈர்க்கக்கூடிய வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் இதற்கு காரணமாக உள்ளன. வெப்பசூழ்நிலை சார்ந்த கடல் மீன்கள் பொதுவாக வீட்டுத் தொட்டிகளில் பராமரிக்கப்படுவதில்லை. ஏனெனில் முக்கியமாக அவை அறை வெப்பத்தில் நீடித்திருப்பதில்லை. ஒரு மீன் வளர்ப்பகம் வழக்கமாக இந்த குளுமை நீர் இனங்களையே கொண்டிருக்கின்றன. வழக்கமாக இவை குளுமையான அறையில் அமைக்கப்படுகின்றன (வெப்பமடையாத அடித்தளம் போன்றவை) அல்லது 'குளிர்விப்பான்' என அறியப்படும் குளிர்பதனப்பெட்டியைப் பயன்படுத்தியும் குளுமையாக்கப்படுகிறது. சிறிது உப்பான தொட்டிகளானது கடல்சார்ந்த மற்றும் சுத்தமான நீரில் மீன் வளர்த்தலின் இரண்டு ஆக்கக்கூறுகளையும் ஒன்றிணைத்திருக்கின்றன. சுத்தமான நீர் மற்றும் கடல்நீருக்கு இடையில் உள்ள உப்புத்தன்மையுடன் உள்ள இந்த தொட்டி நீரின் உண்மையை இது எதிரொலிக்கிறது. மான்குரோவ்கள் மற்றும் எஸ்டுராஸ் மற்றும் சுத்தமான நீர்த் தொட்டியில் நிரந்திரமாக நீடித்திருக்காத பல்வகை உப்புத்தன்மையுடைய மீன்கள் இந்த சிறிது உப்பான நீர் தொட்டியில் பராமரிக்கப்படுகின்றன. எனினும் சிறிது உப்பான நீர்த்தொட்டியானது, இந்தப் பொழுதுபோக்கிற்கு புதிதாக வருபவர்களுக்கு சிரமமாக இருக்கும், சில மோல்லிஸ், பல கோபீஸ், சில புஃபெர் பிஷ், மோனோஸ், ஸ்கேட்ஸ் மற்றும் மெய்நிகராக அனைத்து சுத்தமான நீர் மீன்கள் உள்ளிட்ட வியக்கத்தக்க அளவில் பல இன மீன்கள் சிறிது உப்பான நீர் சூழலுக்கு தயார்படுத்தப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் பலர் மீன் வளர்க்கும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதில் இருந்து மீன் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் "அக்கியூரிஸ்ட்ஸ்" எனப்படுகின்றனர். பல மீன் வளர்ப்பவர்கள் சுத்தமான நீர் மீன் தாவரங்களை உருவாக்குகின்றனர். இதில் அவர்கள் மீன்களைக் காட்டிலும் நீர்த் தாவரங்களிலேயே அதிக கவனத்தை செலுத்துகின்றனர். "டச் மீன் வளர்ப்பகம்" உள்ளிட்ட இந்த மீன் வளர்ப்பகங்களானது ஐரோப்பிய மீன் வளர்ப்பாளர்களின் ஆர்வத்தின் கொண்டு வரப்பட்ட பணிக்கு தொடர்பாக இந்தத் தொட்டிகளின் வகைகளை வடிவமைக்கின்றனர். அண்மைக் காலங்களில் ஜப்பானிய மீன் வளர்ப்பாளரான டக்காஷி அமானோ அதிகமாய் மீன் வளர்ப்பகங்களைக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக உள்ளார். கடல் சார்ந்த மீன் வளர்ப்பாளர்கள் பெரும்பாலும் பெரும் எண்ணிக்கையிலான லிவ்விங் ராக், போராஸ் கால்செரஸ் ராக்ஸ் மேலேடு படிந்திருக்கும் கொராலின் அலேக், ஸ்போங்குகள், வோர்ம்கள் மற்றும் பிற சிறிய கடல்சார்ந்த உயிர்பொருள்களைப் பயன்படுத்தி பவழப்பாறையை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். மீன் வளர்ப்பகம் வளர்ச்சியடைந்த பின்னும் பல்வகை சிறிய மீன்களைக் கொண்ட பிறகும் மிகப்பெரிய பவழங்கள் மற்றும் இறால் மீன்கள், நண்டுகள், எக்கினோடெம்கள் மற்றும் மொல்லஸ்குகள் பின்னர் இதில் சேர்க்கப்படும். அதைப் போன்ற தொட்டிகள் சில சமயங்களில் கடல் நீரடிப் பாறைத் தொட்டிகள் எனப்படும். தோட்ட சிறுகுளங்கள் சில வழிகளின் சுத்தமான நீர் தொட்டியைப் போன்றதாகும். ஆனால் வழக்கமாக இது மிகப்பெரியதாகவும் அனைத்து பக்கமுள்ள சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். இந்த வெப்பநிலைப் பகுதிகளில் வெப்பஞ்சார்ந்த மீன்கள் தோட்ட சிறுகுளங்களில் வளர்க்கப்படும். ஆனால் பதிலாக குளுமையான பிரதேசங்களில் வெப்பநிலை பகுதி இனங்களான தங்க மீன், கோய் மற்றும் ஆர்ஃபே போன்ற மீன்கள் வளர்க்கப்படும். புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்கள் அல்லது செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிப்பது வாசித்தல் எனப்படுகிறது. இது ஒரு வழக்கமான பொழுதுபோக்காகும். மேலும் இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும். வாழ்க்கையில் இலக்கியத்தின் காதலானது பின்னர் ஒரு குழந்தையாக குழுந்தைகளின் இலக்கியத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. எப்போது நமக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் நேரங்களில் வாசிப்பது என்பது வாசிக்கும் இந்தப் பொழுதுபோக்கின் சிறந்த ஆதாயங்களில் ஒன்றாக இருக்கிறது. தாள்களால் மேலட்டையிடப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் போது விடுமுறை நாளில் இந்த வாசிக்கும் பொருளை எடுத்துச் செல்வது எளிதாகிறது அல்லது மிகவும் சிறிய தொந்தரவுடன் பொதுவான போக்குவரத்துக்கு வழிவகுக்கிறது. அந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் உலகத்தின் சொந்தப் பார்வையை மனித மனது சிந்திப்பது இதன் ஒரு மிகப்பெரிய ஆதாயமாக உள்ளது. தொலைக்காட்சி அல்லது திரைப்படத்தில் புத்தகம் இயக்கப்படும் போது ஏதாவது ஒன்று ஏமாற்றமளிக்கலாம். ஸ்டீபின்ஸ், ராபர்ட் ஏ. (2007) "சீரியஸ் லெசர்: எ பெர்ஸ்பெக்டிவ் ஃபார் அவர் டைம்" . நியூ புருன்ஸ்விக், NJ: டிரான்சக்சன். நூற்றாண்டுகளின் பட்டியல் இந்தப் பக்கங்கள், ஆயிரவாண்டுகளினதும், நூற்றாண்டுகளினதும் போக்குகளைக் கொண்டுள்ளன. தனித்தனி நூற்றாண்டுப் பக்கங்கள், தசாப்தங்களையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகளின் வெவ்வேறு ஒழுங்கமைப்புகளுக்கு வரலாறு பக்கத்தைப் பார்க்கவும். முந்திய காலப்பகுதிகளுக்கு cosmological timeline, புவிச்சரிதவியல் நேர அலகு, பரிணாம நேரவரிசை, pleistocene, மற்றும் பழைய கற்காலம் என்பவற்றைப் பார்க்கவும்.. பொழுதுபோக்குகளின் பட்டியல் பொழுதுபோக்குகள் பின்வருவனவற்றையும் உள்ளடக்கும்: கிமு 10ஆம் ஆயிரமாண்டு கிமு 10-ஆம் ஆயிரமாண்டு ("10th millennium BC") என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு ("Epipaleolithic") காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம். இக்காலகட்டத்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை. உலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது, இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது. கிமு 9ஆம் ஆயிரமாண்டு கிமு 9-ஆம் ஆயிரமாண்டு ("9th millennium BC") என்பது கிமு 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது புதிய கற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. எரிக்கோ போன்ற பெரும் குடியேற்றங்கள் உப்பு, தீக்கல் வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் பனியாறுகள் குறைவடைந்ததை அடுத்து ஐரோவாசியா மீள்குடியேற்றம் இடம்பெற்றது. உலக மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது. கிமு 8ஆம் ஆயிரமாண்டு கிமு 7ஆம் ஆயிரமாண்டு நிகழ்வுகள்: கிமு 6ஆம் ஆயிரமாண்டு பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள். கிமு 5ஆம் ஆயிரமாண்டு குறிப்பிடத் தக்கவர்கள்: புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள் அஞ்சல்தலை சேகரிப்பு அஞ்சல்தலை சேகரிப்பு என்பது அஞ்சல்தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தல் என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான பொழுது போக்குகளில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும். பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது அஞ்சல்தலை, 1840ல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. பயன்படுத்தப் படாத 'பென்னி பிளாக்' அஞ்சல்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம். 1960களிலும், 1970களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். 1800களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் உற்பத்தி, அஞ்சல்தலையில் அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள். அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன. 1920களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் 1930களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் 1930களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. அஞ்சல்தலைகள் சேகரிப்பாளர்களது சேகரிப்புப் பொருட்களில் பின்வருவன அடங்கும்: இன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு: இப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். அஞ்சல்தலையியல் முதலீடு உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்துவருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். ஓவியங்கள், சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன. எனினும், இப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. அஞ்சல்தலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதும் ஒரு தனித்துறையாக இருந்து வருகிறது. இதனை 'அஞ்சல்தலையியல்' (Philately) என்பார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதும் வழக்கமாக இருப்பதால், அஞ்சல்தலையியலும் அஞ்சல்தலை சேகரிப்பும் ஒன்றே என்று பிழையாக எண்ணப்படுகிறது. அஞ்சல்தலையியல் என்பது அஞ்சல்தலைகளையும், தொடர்புடைய பொருட்களையும் ஆய்வு செய்யும் ஒரு விரிவான துறையைக் குறிக்கும் ஒரு பதமாகும். பலவகையான அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன. அஞ்சல் தலை அஞ்சற்றலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும். அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்பதை மட்டுமன்றி வேறு பொருள்களையும் கொடுக்கக் கூடுமெனினும், சாதாரணமாக முத்திரை என்பது, தபால் தலையையே குறிக்கும். நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு. ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, "தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்" என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் அரச தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது. மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, அனைத்துலக தபால்சேவைச் சங்கம் (U.P.U.) விலக்கு அளித்துள்ளது. யூ.பி.யூ வில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந் நாட்டு நாணயத்தில் கொண்டிருக்கவேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது "First Class" என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. யூ.பி.யூ வின் விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.(ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "பன்னாட்டு கடித விகிதம்" என்ற தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்). தொடக்க காலத்திலிருந்தே, எப்படித் தபால் தலைகள் வழங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பது தொடர்பில், பல்வேறு புதிய முறைகள் கையாளப்பட்டு வந்தன. அண்மையில் ஒருவர் தனது கணனியிலேயே தபால்தலைகளை அச்சிட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. 2002ல் ஐக்கிய அமெரிக்கத் தபால் சேவை வலைத் தபால்தலைகளை வெளியிடுவதற்கு ஸ்டாம்ப்ஸ்.காம் முக்கு (Stamps.com) அனுமதி வழங்கியது. "முதன்மைக் கட்டுரை: அஞ்சல்தலை சேகரிப்பு" சில நாடுகள் தபால் சார்ந்த தேவைகளுக்காகவன்றி, சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை வெளியிடுகின்றார்கள். இது அவ்வாறான நாடுகளின் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவுக்குக் காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு சேகரிப்பாளர்களைக் குறி வைத்துத் தபால் தலைகளை வெளியிடும் கொள்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சேகரிப்பாளர்களால் ஆதரிக்கப்படுவது இல்லை. இக்கொள்கையை மிதமான அளவுக்குப் பயன்படுத்தும்போது சேகரிப்பாளர்களிடம் வரவேற்புப் பெறும் அதே வேளை, அளவுக்கு மீறித் தபால்தலைகளை வெளியிடும் நாடுகள் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன், சில தனியார் நிறுவனங்கள், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்நாடுகளுக்கான தபால்தலைகளை இலவசமாக அச்சிட்டுக் கொடுத்தன. ஆனால், இதற்கு மாற்று உதவியாக, எஞ்சியிருக்கும் தபால்தலைகளை சேகரிப்பாளர்களுக்கு விற்கும் உரிமையைத் தாங்கள் பெற்றுக்கொண்டன. பென்னி பிளாக் பென்னி பிளாக் ("Penny Black") உலகின் முதலாவது உத்தியோகபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலையாகும். இது பெரிய பிரித்தானியாவால் 1840 மே 1 அன்று மே 6ம் திகதியிலிருந்து உபயோகிப்பதற்காக வெளியிடப்பட்டது. தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் எண்ணம், ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய முன்வைப்பின் ஒரு பகுதியாகும். 1839ல், பிரித்தானியத் திறைசேரி, புதிய தபால்தலை வடிவமைப்புக்காகப் போட்டியொன்றை அறிவித்ததாயினும், சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அதனால், முன்னர் ஒரு பதக்கத்துக்காக வில்லியம் வயன் என்பவரால் உருவாக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவப்படமொன்றைப் பயன்படுத்தத் திறைசேரி முடிவுசெய்தது. மேல்பகுதியில் "POSTAGE" என்ற சொல்லும், அடியில் "ONE PENNY" என்ற பெறுமானமும் அச்சிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அடிப்பக்கத்து இரண்டு மூலைகளிலும், பெரிய தாளில், குறிப்பிட்ட தபால்தலையின் இடத்தைக் குறிக்கும், "A A", "A B", போன்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் பெயர் குறிப்பதுபோல், தபால்தலை முழுவதும் கறுப்பு நிறத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் ("Perkins Bacon") நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. மே 6 உத்தியோகபூர்வமான முதல் நாளாக இருப்பினும், மே 2ல் தபால்குறியிடப்பட்ட மூன்று உறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இது தபாலதிபர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தபால்தலைகளை விற்றதன் காரணமாக இருக்கலாம். பென்னி பிளாக், ஒரு வருடத்துக்கும் சற்றுக் கூடியகாலமே உபயோகத்தில் இருந்தது. கறுப்பு நிறத்தின் மேல் சிவப்பு நிற மையினால் அடித்தல் செய்தால்கூடத் தெளிவாகத் தெரிவதில்லை என்ற அனுபவத்தின் காரணமாக, பென்னி ரெட் என்னும் சிவப்பு நிறத் தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டு, கறுப்பு மையினால் அடித்தல் செய்யப்பட்டது. பென்னி பிளாக் தாராளமாகக் கிடைக்கக்கூடியதெனினும், அதனுடைய முக்கியத்துவம் காரணமாக அதற்கு சேகரிப்பாளரிடையே அதிக மதிப்பு உள்ளதால், மலிவாகக் கிடைப்பதில்லை. 2000ல் நல்ல நிலையிலுள்ள ஒரு பயன்படுத்திய தபால்தலை US$200க்கும், பயன்படுத்தாதது US$3,000 க்கும் விலைபோனது. மாறாக பயன்படுத்திய பென்னி ரெட் $ 3 மட்டுமே பெற்றது. தமிழர் தமிழர் (, "Tamils", "Tamilians") என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000-ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500-ஆம்ஆண்டைச் சேர்ந்தவையாகும். இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர். தமிழர் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் ஒரு சில இடங்களில் தமிழர் செறிந்து வாழ்கின்றனர். அத்தகைய இடங்களாகப் பின்வருவன உள்ளன. பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் தென்கர்நாடகத்திலுள்ள மாண்டியா, எப்பார் பகுதிகளிலும் கேரளத்திலுள்ள பாலக்காட்டிலும் மகாராட்டிரத்திலுள்ள புனே, மும்பை (தாராவி) பகுதிகளிலும் தமிழர்கள் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முசுலீம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் ஆவர். 1800-களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளைச் சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது. தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் கூலிகளாகக் குடியமர்த்தப்பட்டனர். மலேசியா (கடாரம்), சிங்கப்பூர், பர்மா (அருமணதேயம்), தாய்லாந்து, இந்தோனேசியா (ஜாவா (சாவகம்), சுமத்ரா), கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்துக்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10%க்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர். இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள், ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400,000–500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய ஓசானிய நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிஜித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள். வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் 250,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர். தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமற்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாகச் செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ், அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது. தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி. மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை. கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே சிலப்பதிகாரமும், பெளத்த தமிழ்க் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சைன தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது. கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. கி.பி 850-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1250-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் கி.பி 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே. 18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக்கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே. தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்குக் கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர். சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது. இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்". தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. வரைகதை, வரைகலை, இயங்குபடங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும். இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம். ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. சிலம்பம், வர்மக்கலை, குத்துவரிசை, அடிதடி, மல்லாடல் ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும். இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது "யோகாசனம்" ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது. சுவாமி சிவானந்தா, யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் சீடரான சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி சச்சிதானந்தா, வேதாத்திரி மகரிசி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள். தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. சிவாஜி, எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், கமல்காசன், கே. பி. சுந்தராம்பாள், மனோரமா ஆகிய நடிகர்களும் கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இளையராசா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன" போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. என். எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ் ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். வடிவழகன், திண்டுக்கல் ஐ. லியோனி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள். அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அண்ணாத்துரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் ஆறுமுகநாவலர் போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாகப் பலவகையில் வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள் மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து இலங்கை ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள். தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 – தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன. தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவைச் சித்தர்கள் வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள். தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். தமிழர்கள் ஐந்து நிலங்களுக்கும் உரிய தெய்வங்களாக மாயோன், சேயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியோரை வணங்கி வந்துள்ளனர். பெளத்தம், ஜைனம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். சங்க காலத்தில் ஆசிவகம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்கள் இருந்தன. பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட ஐயனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான். இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை ("Agnosticism"), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள். தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர். தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது. தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாகத் தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம். தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், வேட்டி, சேலை, தாவணி, பாவாடை போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீஸ், சுரிதார், முழுக்காற்சட்டை, ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது. பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும். தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுநர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற "கடலோடி" நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம். தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது. அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன. தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. சங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்), கோயில், இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும். பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. உலகமயமாதல் பல்வேறு பண்பாடுகளை உள்வாங்கி ஒரு உலகப் பண்பாட்டை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த உலகப் பண்பாடு இன்றைய ஆங்கில, மேற்கத்தைய ஆதிக்க ஈடுபாடுகளையே பெரிதும் எதிரொளிக்கும். இத்தகைய நிலையில் தமிழ் மொழி, பண்பாடு, சூழல், அறிவு சிதைந்து போக வாய்ப்புள்ளது. அதே வேளை தமது அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஏற்று மேம்பட முடியும். அதாவது இருப்பதை அழிக்காமல் மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்துதலாகவும் உலகமயமாதலைப் பார்க்கலாம். திராவிட மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் ("dravidian language family") என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர். கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து. திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: என்பனவாகும். இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர். சான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை. ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன. நாடுகள்வாரியாக நகரங்களின் பட்டியல் இது நாடு வாரியாக நகரங்களின் பட்டியலைத் தரும் பட்டியலாகும் இந்தியாவிலுள்ள நகரங்களின் பட்டியல் இலங்கை மாநகரங்களின் பட்டியல் இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒவ்வொரு அமீரகத்திலும் ஒன்றிரண்டு நகரங்களே உள்ளன. அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இந் நகரங்கள் மாநகரசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது. துபாய் நகரம், வர்த்தக ரீதியில் முதன்மை பெற்ற நகரமாக விளங்குகிறது. கீழேயுள்ள பட்டியலில் அல் எயின் தவிர்ந்த எல்லா நகரங்களும் கடற்கரை நகரங்களாகும். அல் எயின் நகரம் அபுதாபி அமீரகத்தின் ஒரு பகுதியாகும். கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும். சார்ஜா அமீரகம் சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது. விண்வெளி அறிவியல் விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது. இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன. அப்பல்லோ திட்டம் அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. மேர்க்குரித் திட்டம், ஜெமினி திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, டுவைட் டி. ஐசனாவர் நிர்வாகத்தில், மேர்க்குரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது. சந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள். மூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு ஏற்றுதல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா தூக்கி வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி 5 (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். உண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் உருவாக்குனர், ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண்கலம் கூறுகளாக உருவாக்கப் படும், இவற்றுள் ஒரு 'கட்டளை/சேவை கூறு' (CSM) மற்றும் ஒரு 'நிலா கூறு' (LM; சந்திரப் பயண கூறு என்ற அதன் ஆரம்ப ஆங்கிலப் பெயரையிட்டு, 'லெம்' என உச்சரிக்கப்படும்) என்பன அடங்கியிருக்கும். கட்டளை/சேவை கூறு மூன்று பேரடங்கிய குழுவுக்கு, 5 நாள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்துக்குத் தேவையான, உயிர் காப்பு முறைமைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் பூமியின் காற்றுமண்டலத்துள் நுழையும்போது தேவைப்படும், வெப்பத் தடுப்புகளையும் கொண்டிருக்கும். நிலா கூறு, சந்திரச் சுற்றுப்பாதையில், கட்டளை/சேவை கூறிலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளிவீரர்களை நிலா மேற்பரப்பில் இறக்குவதற்காகக் கொண்டுசெல்லும். நிலா கூறு தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் கட்டளை/சேவை கூறு உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், நிலா கூறு கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை சாடர்ன் V ஏவூர்தியால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது. அப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், வெர்னர் வான் பிரவுன் மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் சாடர்ன் தொடர் மற்றும் நோவா தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து நாசாவிற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் சனி தொடர் ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது. மெர்க்குரித் திட்டத்தைப் போலவே, அப்பல்லோ திட்டத்திலும் ஏவுதலில் தோல்வியேதும் ஏறபடுமாயின் வீரர்கள் தப்பிப்பதற்கு "ஏவுநிலை விடுபடு அமைப்பு" (Launch Escape System) தேவையானதாகவிருந்தது; அதற்கு சிறிய அளவிலான ஏவூர்தி பறத்தல் சோதனைகளுக்குத் தேவையாக இருந்தது. மெர்க்குரித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டில் ஜோ-வினை விட சற்றே திறன்மிகுந்த ஏவூர்தி அத்தேவையைப் பூர்த்தி செய்யும் எனக் கணக்கிடப்பட்டது. இதன்பிறகு, லிட்டில் ஜோ II ஏவூர்தியானது "ஜெனரல் டைனமிக்ஸ்" / "கான்வெய்ர்" நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு 1963-இல் நிகழ்த்தப்பட்ட தேர்வுநிலை சோதனைப் பறத்தலின் பிறகு, மே 1964-க்கும் சனவரி 1966-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நான்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு சோதனை பறத்தல்கள் நிகழ்த்தி சோதிக்கப்பட்டது. அப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சாடர்ன் V-ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7 உம் அப்பல்லோ 9 உம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8 உம் அப்பல்லோ 10 உம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.) சுருக்கமாக, அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது. அப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும். தொடக்கத்தில், அப்பல்லோ 18 தொடக்கம் அப்பல்லோ 20 வரை மூன்று மேலதிக பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணங்கள், விண்வெளி விமான உருவாக்கத்தின் நிதித் தேவைகளுக்காகவும், அப்பல்லோ விண்கலத்தையும், சாடர்ன் V ஏவு வாகனங்களையும், ஸ்கைலேப் திட்டத்துக்குக் கொடுக்கும் பொருட்டும், கைவிடப்பட்டது. ஒரு சற்றேர்ண் V மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டது; ஏனையவை நூதனசாலைக் காட்சிப்பொருள்களாயின. அப்பல்லோ திட்டமானது, சோவியத் யூனியனுடனான கெடுபிடிப் போர்ச் சூழலில், விண்வெளித்தொழில் நுட்பத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியனிலும் தாழ்ந்த நிலையிலிருந்ததற்குப் பதிலளிக்குமுகமாகவே, ஓரளவுக்கு ஒரு உளவியல்சார்-அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டது. இதில் அது மிகத் திறமையான முறையில் வெற்றிபெற்றது. உண்மையில் ஆளேற்றிய விண்பறப்புக்களில் அமெரிக்காவின் மேலாண்மை, முதலாவது அப்பல்லோ பறப்புக்கு முன்னரே, ஜெமினி திட்டம் மூலம் பெறப்பட்டது. தங்களுடைய N-1 ராக்கெட்டுகளை முழுமை நிலைக்குக் கொண்டுவர இயலாமை காரணமாக சோவியத் சந்திரனுக்குச் செல்வது தடைப்பட்டதுடன், 1990 கள் வரை அவர்கள் ஒரு நிலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதையும் தடுத்துவந்தது. அப்பல்லோத் திட்டம் தொழில்நுட்பத்தின் பல துறைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தது. லூனாரிலும், கட்டளை கூறிலும் பயன்படுத்தப்பட்ட, ஒரேமாதிரியான, பறப்புக் கணனியே ஒருங்கணைந்த சர்க்கியூட்டுகளையும், காந்த முதன்மை நினைவகம் ஐயும் பயன் படுத்திய முதற் சந்தர்ப்பமாகும். இக் கணினிகள் அப்பல்லோ வழிகாட்டுக் கணினிகள் அப்பல்லோ திட்டத்துக்கான செலவு: $25.4 பில்லியன் சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்திரப் பொருட்களின் அளவு: 381.7 கிகி அப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும். அப்பல்லோ பறப்புகளில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம், சற்றேர்ண் ராக்கெட்டுகளை வடிவமைத்த மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், பறப்புகளை, சற்றேர்ண் - அப்பல்லோ (SA) என்று குறிப்பிட, கெனடி விண்வெளி மையம் அப்பல்லோ - சற்றேர்ண் (AS) என்று குறிப்பிடுகிறது. அப்பல்லோ 11 அப்பல்லோ 11 ("Apollo 11") என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார். இத்திட்டத்தின் கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை. விண்வெளி நிலையம் விண்வெளி நிலையம் ("Space station") என்பது விண்ணில் மனிதர் வாழ்வதற்கென வடிவமைக்கப்பட்டு, மனிதனால் செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். விண்வெளி நிலையம், பெரிய அளவில் உந்தல் அல்லது இறங்கல் வசதிகளைக் கொண்டிராமையை வைத்து, ஏனைய ஆளேற்றிய விண்கலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது - பதிலாக, விண்வெளி நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கு ஏனைய வாகனங்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலையங்கள், சுற்றுப்பாதையில், சில மாதங்களைக்கொண்ட இடைத்தரக் கால அளவு வாழ்க்கைக்காக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. கடந்தகால, நிகழ்கால விண்வெளி நிலையங்கள்: சில விண்வெளி நிலைய வடிவமைப்புகள், கூடிய அளவு மக்களுக்காக, நீண்ட கால விண்வெளி வாழிட நோக்கங்களைக் கருத்திற்கொண்டு முன்மொழியப் பட்டுள்ளன. முக்கியமாக இவை, மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடிய "விண்வெளி நகரங்களாகும்". இம் முன்மொழிவுகள், செயல்படுத்தும் நோக்கத்துக்காகத் தீவிர கவனத்துக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகள் அவை தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தாங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது. 1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன. ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது: 1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன. அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது. பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபெற்றனர். பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும். நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது. ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது. பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம். ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கு அண்டோனியோ கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதய செயலாளரான பாங் கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் இவர் 2021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார். "உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது. பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையில் 193 "தலைமைக் கட்டுரை: சீனாவும், ஐக்கிய நாடுகளும்" சீனக் குடியரசு, 1945 ல், ஐநாவை ஆரம்பித்து வைத்த 5 நாடுகளுள் ஒன்றாகும். எனினும், 1971 ஆம் ஆண்டு அக்டோபரில், பிரகடனம் 2758 பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டு, சீனக் குடியரசு, ஐநாவின் சகல உறுப்பு நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டதுடன், பாதுகாப்புச் சபையில் சீனாவுக்குரிய இடம் மக்கள் சீனக் குடியரசினால் நிரப்பப்பட்டது. இது, மக்கள் சீனக் குடியரசு மட்டுமே, "ஐக்கிய நாடுகளுக்கு, சீனாவின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி" என்றும் பிரகடனப்படுத்தியது மூலம், சீனக்குடியரசு ஒரு renegade என்று முத்திரை குத்தியது. ஐநாவில் மீண்டும் இணைவதற்கான சீனக் குடியரசின் முயற்சிகளெதுவும், குழு நிலையைத் தாண்டவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும். தேசிய இனவாரியாக மக்கள் பட்டியல் இந்தப் பக்கம், இனவாரியாக, பிரஜா உரிமைவாரியாக, மொழிவாரியாக, அமைவிடவாரியாக ஆட்களின் பட்டியல்கள் போன்ற தொடர்பான பட்டியல்களையும் உள்ளடக்குகிறது. See also: இடப் பெயர்களின் பெயரெச்ச வடிவங்கள், நாடுகளின் பட்டியல், உசாத்துணை அட்டவணைகள் பட்டியல் ஈபெல் கோபுரம் ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: "Tour Eiffel, /tuʀ ɛfɛl/") பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது. 1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில், இதுவே உலகின் அதிக உயரமான அமைப்பாக இருந்தது. இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது. இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது. ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அனுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது. ஈபெல் கோபுரத்தின் அடித்தளம் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு காலும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டிப் பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது.அவை அழுத்தப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை(லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது.இந்த லடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோக்கப்பட்டது. ஒவ்வொரு லாடமும் கற்களைக் கொண்டும், 10 செ.மீ (4 அங்குலம்) விட்டமும் 7.5 மீ நீளமும் (25 அடி) உடைய ஒரு சோடி பூட்டாணிகள் (Bolt) கொண்டு நிலைநிறுத்தப்பட்டது. அடிப்படைக் கட்டுமானம் ஜூன் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. பின்னர் இரும்புகளை தூக்கி நிறுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டன. நாம் காணக் கூடிய எழிலான இரும்புக் கோபுரத்திற்கு பின்னால் ஏகப்பபட்ட முன் தயாரிப்பு வேலைகளும் கடின உழைப்பும் அடங்கியுள்ளன.வரைபட அலுவலகமானது 1,700 பொது வரைபடங்களையும்,கோபுரத்திற்குத் தேவைப்படும் 18,038 பொருட்களின் 3,629 விரிவான வரைபடங்களையும் தயாரித்தது. வரைதல் மற்றும் வடிவமைப்பில் சிக்கலான கோணங்கள் மற்றும் துல்லியமான அளவுக் கூறுகளுடன் வரைவது மிகவும் சிக்கலானதாக இருந்தது.பொருத்தி முடிக்கப்பட்ட சில பகுதிகள் பாரிசின் புறநகர்ப்பகுதியான லெவல்லோஸ்-பெரெட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து குதிரை வண்டிகளில் கொண்டுவரப்பட்டன. துளையிடுதல் அல்லது வடிவமைத்தல் போன்ற எந்தவொரு வேலையும் கட்டுமான தளத்தில் செய்யவில்லை மாறாக ஏதாவதொரு பகுதியும் பொருந்தவில்லை என்றால், அதை மாற்றுவதற்கு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. மொத்தத்தில், இது 18,038 இரும்புத் துண்டுகள் 2.5 மில்லியன் அறையாணிகள் (rivrerts) பயன்படுத்தி சேர்ந்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள மாபெரும் கோபுரக் கட்டுமாணமாகும். அரசின் ஆணைக்குழு மேற்பார்வையில் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் பயணிகள் மின்தூக்கிகள் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கோபுரத்தின் இரு நிலைகளுக்கும் செல்வதற்குரிய மின் தூக்கிகள் உள்ளன.கோபுரத்தின் முதல் நிலைக்குச் செல்வதற்குறிய மின்தூக்கிகளை கட்டமைக்க ரொக்ஸ், கம்பலுசீயர் மற்றும் லெபாபே (Roux, Combaluzier & Lepape) என்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.அவை கோபுரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கால்களில் இரண்டு நேரான மின்தூக்கிகளை அமைத்தன .ரொக்ஸ், கம்பலுசீயர் & லெபாபே நிறுவனம் இரு சோடி வளையாத இணைக்கப்பட்ட முடிவிலா சங்கிலிகளை பயணிகள் அமரும் பெட்டியுடன் பொருத்தினர். சங்கிலியின் மேல் அல்லது திரும்பிய பகுதிகளின் சில இணைப்புகள் அமரும் பெட்டியின் பெரும்பகுதி எடையை லாவகமாக எதிரீடு (counterbalanced) செய்கிறது. பெட்டியானது கீழிருந்து தள்ளப்படாமல் மேலிருந்து இழுக்கப்பட்டது.சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று திருகிக்கொள்வதைத் தடுக்க முறுக்காற்றிகள் அல்லது கடத்தலி (conduit) பயன்படுத்தப்பட்டன. கீழ் பகுதியில் சங்கிலிகள் 3.9 மீ விட்டமுடைய பற்ச்சக்கரத்தில் பொருந்திச் சுழலுமாறு செய்யப்பட்டுள்ளது. மேற்பகுதியில் சிறிய பற்ச்சக்கரத்தைக் கொண்டு இது வழிநடத்தப்படகிறது. 1889 மார்ச் இறுதியில் ஈபெல் கோபுரத்தின் முக்கிய கட்டுமாண வேலைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மார்ச் 31 ல் அரசாங்க அலுவலர் குழுக்கள் பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கோபுரத்தின் உச்சியில் விழா கொண்டாடப்பட்டது. மின்தூக்கிகள் அமைக்கப்படாத நிலையில் அனைவரும் படிக்கட்டுகள் வழியாக அழைத்தச்செல்லப்பட்டு கோபுரத்தின் பல்வேறு வடிவமைப்புகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. படிக்கட்டுகளில் நடந்து மேலே செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது.இதனால் பலர் முதல் தளத்திலேயே தங்கி விட அமைப்பு பொறியாளர் எமிலி நவ்குயிர், கட்டுமாண தலைவர் ஜீன் காம்பேகன் . பாரிசு நகரத் தலைவர் மற்றும் லீ பிகாரோ , லீ மான்டி இலுஸ்டர் பத்திரிக்கைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மட்டும் மேல் கட்டுமாணம் வரை சென்றனர். பிற்பகல் 2.35 மணியளவில் 25 குண்டுகள் முழங்க பிரான்சின் மூவண்ணக்கொடி முதல் கட்டுமாணத் தளத்தில் ஏற்றப்பட்டது. ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது. 1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியு யார்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது. அடால்ஃப் ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார். ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. 1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபெள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது. ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில: தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு ("History of science and technology", HST) என்பது,அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றிய மனித இனத்தின் விளக்கம், காலங்களூடாக எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என்றும், இவ்விளக்கம், எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உதவியது என்பதுபற்றியும் ஆராயும் ஒரு வரலாற்றுத் துறையாகும். பண்பாட்டு, பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் அறிவியற் புத்தாக்கங்களின் தாக்கங்கள் பற்றியும் இத் துறை ஆராய்கிறது. நவீன அறிவியல் ஒரு "கிரேக்கப் புத்தாக்கம்" என நம்புவது தவறாக இருக்கக்கூடும் எனினும், நவீன கணிதம் சார்ந்த அறிவியலின் தோற்றம் ஹெலனிய பைதகோரியர்களுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கணித, அறிவியல் பரிசோதனைகளில் கிரேக்கர்களின் செல்வாக்கு, ஏனைய பழங்கால நாகரீகங்களைச் சார்ந்த மக்களுடைய பங்களிப்புகளிலும் சிறந்த முறையிற் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது என்பது கூடிய பொருத்தமாயிருக்கும். கட்டிட வரைபடங்கள் கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதித்த கட்டிடமொன்று எப்படி இருக்கப்போகிறது என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக வரையப்படும் படங்களே கட்டிட வரைபடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்யத் தொடங்கியதிலிருந்து அது கட்டிமுடியும்வரை பல்வேறு நோக்கங்களூக்காக வரைபடங்கள் வரையப்படுகின்றன. பின்வரும் சந்தர்ப்பங்களில் வரைபடங்கள் தேவைப்படுகின்றன. தேசியக் கொடிகளின் பட்டியல் See also: கொடிகள் காட்சியகம், கொடிகளின் பட்டியல், தேசியக் கொடி தேசியக் கொடி தேசியக் கொடி என்பது நாடொன்றிற்குக் குறியீடாக அமையும் ஒரு கொடியாகும். இது அந்நாட்டுக் குடிமக்களால் பறக்கவிடப்படக்கூடியது. வழக்கமாக இதே கொடியே அந்த நாடுகளை வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பயன்படுகிறது. பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்வேறு அரசுக் கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களில், தேசியக் கொடிகளை அவற்றின் மிகவுயர்ந்த இடங்களிலோ அல்லது அவற்றின் முன்றலில் அமைக்கப்படுகின்ற பிரத்தியேகமான கொடித் தம்பங்களிலோ பறக்கவிடுவது வழக்கம். முக்கியமான தனியார் கட்டிடங்களிற்கூட இவ்வழக்கம் பின்பற்றப்படுவதுண்டு. கப்பல்களும் தேசியக் கொடிகளை அவற்றின் அதியுயர் புள்ளிகளிலிருந்து பறக்க விடுகின்றன. சிறிய கலங்களும், படகுகளும் கூட, விசேடமாக, அதிகாரப்பூர்வ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இக் கொடியைப் பறக்கவிடுகின்றன. இராஜதந்திர வாகனங்களும் சிறிய அளவிலான தேசியக் கொடியொன்றை அவற்றின் முன்பகுதியில் இணைக்கப்படுகின்ற தண்டொன்றில் பறக்கவிடப்படுவது வழக்கம். இராஜதந்திரப் பாதுகாப்பையும், அவற்றுக்குரிய சிறப்பு சட்ட நிலையையும் காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட நாடுகள் இயக்கும் விமான சேவைகளைச் சேர்ந்த விமானங்களிலும் தேசியக் கொடியின் படம் அவற்றின் முன் பகுதியில் பொறிக்கப்படுவதுண்டு. (விண்வெளி ஓடம் இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும்.) ஆயுதப்படைப் பிரிவுகள் வழமையாகத் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக, பிரிவுகளின் கொடிகளையோ அல்லது அவ்வாயுதப் படைச் சேவைக்குத் தனித்துவமான வேறு சிறப்பான கொடிகளையோ பயன்படுத்துவார்கள். எனினும், இக் கொடிகள் வழக்கமாகச் சம்பந்தப்பட்ட தேசியக் கொடிகளை அடியொற்றியே வடிவமைக்கப்படுகின்றன. படைத் தளங்களில்பொதுவாகத் தேசியக் கொடிகளே பறக்கவிடப்படுகின்றன. தேசியக் கொடிகளின் முறையான காட்சிப்படுத்தலில் பல வைபவரீதியான அம்சங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் கொடியைப் போல, சில தேசியக் கொடிகள், உதவிக்கான அழைப்பு மற்றும் அடையாளம் காணப்படக்கூடிய அபாயச் சைகைகளாகவன்றி, தலைகீழாக ஒருபோதும் பறக்கவிடக்கூடாது. தேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாகப் பல விதிகள் உள்ளன. பின்வருவது தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாயினும், இது பல நாடுகளும் பின்பற்றும் மாதிரியை ஒத்ததேயாகும். தேசியக் கொடிகளை தேசியக் கொடிகளின் பட்டியலுக்கு தேசியக் கொடிகளின் பட்டியலைப் பார்க்கவும். நல்லூர் நல்லூர் என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: நல்லூர் (யாழ்ப்பாணம்) நல்லூர் ("Nallur") தற்போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் அடங்குகிறது. யாழ்நகர நடுப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. யாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் 'சிங்கை நகர்' என்று அறிய பட்டது. அதன் அரசன் 'சிங்கை ஆரியன்' என்றும் அழைக்கப்பட்டான். காலம் போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது. கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) 'சிங்கை ஆரியன்' எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம். அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் 'நல்லூர்' என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது. யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து. 1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது. போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது. நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது. பண்டை நல்லூர் எவ்வாறு அமைந்திருந்தது என்று அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூழும் இதில் உதவியன. மேலும் தற்ப்போதைய நகர் அமைப்பிலும் பண்டை கால நகரின் அமைப்பை எம்மால் கவனிக்க முடிகின்றது. அன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது ( தற்ப்போது St James' Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்க்கு வீதி மற்றும் கழக்கு-மேற்க்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த தகவல்கள் தமிழர் எழுதிய நூல்களில் மட்டும் இல்லாமல் போர்த்துகேயர்களாலும் குறிப்பிடபட்டுள்ளது. கைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான். இளவரசனின் பட்டாபிசேகம் இடம் பெறவுள்ளது. நல்லூர் நகர் எவ்வாறு அமைந்திருந்தது என்று சில குறிப்புக்கள் பின்வரும்வாறு தரப்பட்டுள்ளது: « "தாவும் மதித்த வளங்கொள் வயல் செறி நல்லூரிற் கதித்த மனை செய்ய கருதி, விதித்த ஒரு (செய்யுள் 90) நல்ல முகூர்தம் இட்டு, நாலு மதிலும் திருத்திச் சொல்லும் சுவரியற்றித் தூண் நிரைத்து, நல்ல (91) பருமத தரம் பரப்பிப் பல்கணியும் நாட்டி திரு மச்சு மேல்வீடு சேர்த்து, கருமச் (92)" "சிகரம் திருத்தி திருவாயில் ஆற்றி, மிகுசித்ரம் எல்லாம் விளக்கி, நிகரற்ற (93) சுற்று நவரத்ன வகை சுற்றியழுத்தி திருத்தி பத்திசெறி சிங்கா சனம் பதித்து ஒத்த பந்தற் (94) கோல விதானம் இட்டு கொத்து முத்தின் குச்சணித்து, நாலு திக்கும் சித்ரமடம் நாட்டுவித்து, சாலும் (95)" "அணிவீதி தோறும் வளர் கமுகு வாழை அணியணியாய் அங்கே அமைத்து துணிவுபெறுந் (96) தோரணங்கள் இட்டு சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்த வைத்து காரணமாய் (97)" "எல்லா எழிலும் இயற்றி நிறைத்த பின்பு..."» இங்கு வர்ணிக்கப்படும் நல்லூர் மேல்மாடி கட்டிடங்களும் மாளிகைகளும் உடைய ஓர் அழகிய நகரமாகும். யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் ("Jaffna", ) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1981இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லை. 1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த "மணற்றி" (அல்லது "மணற்றிடல்") எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது. அவர்களின் இடமாற்றம் பசையூர் மற்றும் குருநகர் என அறியப்படும் நகரத்தின் பகுதியாகும் என்று நம்பப்படுகிறது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள கொழும்புத்துறை வணிகக் களஞ்சியமும் குருநகர் பகுதியிலுள்ள முன்னர் அமைந்துள்ள ""அலுப்பாந்தி "" என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகிறது. வேறு சிலர், நல்ல ஊர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாகக் கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்' எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது. 1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது. உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய சிறிய மீன்பிடிக்குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது ஏறத்தாழ 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன. இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன. இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று. பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது. தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாகின. 1935இல் உருவான யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கியது. 1981இல் இந்நூல் நிலையம் சிங்கள வன்முறைக் கும்பல் ஒன்றினால் 97,000 அரிய நூல்களுடன் முழுவதும் எரியூட்டி அழிக்கப்பட்டது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், பல வரலாற்று நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் அழிந்து போயின. யாழ்ப்பாண மாநகரசபை யாழ் நகரை ஆட்சி செய்கின்றது. இது 1865 மாநகர சபைகளின் அவசரச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் அதிகாரத்தைப் பகிர விரும்பாததால் யாழ் நகர் பல வருடங்களாக யாழ் நகர் மாநகர சபை தேர்வு செய்யப்படாமல் இருந்தது. முதலாவது தெரிவு செய்யப்பட்ட மாநகர முதல்வர் கதிரவேலு பொன்னம்பலம் ஆவார். இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 11 வருடங்களின் பின் 2009 இல் இடம்பெற்றது. மாநகர சபை 29 உறுப்பினர்களைக் கொண்டது. யாழ் ஏரியினால் நகரம் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. யாழ் தீபகற்பம் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு காணப்படுகின்றது. முழு நிலமும் தட்டையாகவும் கடலிலிருந்து உயர்ந்தும் காணப்படுகின்றது. பனை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. தளை அலரி போன்ற மரங்களும் அதிகம் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் வெப்பமண்டல மழைகாட்டு காலநிலையைக் கொண்டு மிக வறட்சியான காலநிலையுடைய மாதம் அற்றுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் இலங்கையில் அதிகளவு சராசரி வெப்ப நிலையான 83 °F (28 °C)க் கொண்டுள்ளது. வெப்பம் ஏப்ரல், மே, ஆகஸ்து, செப்டெம்பர் மாதங்களில் உயர்ந்து காணப்படும். திசம்பர், சனவரி மாதங்களில் குளிர்ச்சியாகக் காணப்படும். வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் வருடாந்த கிடைக்கின்றது. இடத்துக்கிடம் வருடத்திற்கு வருடம் இது வேறுபடும். யாழ் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி சராசரி மழை வீழ்ச்சி 5 அங்குலம் ஆகும். வரலாற்று அடிப்படையில் யாழ் நகரில் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர் வாழ்ந்து வந்தனர்.1880 முதல் 2010 வரையான சனத்தொகை யாழ்ப்பாண புறநகர்ப்பகுதிகள் பின்வருமாறு: இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது. இவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது: கனடாவிலுள்ள மொன்றியல், கியூபெக்கிலும் ஒரு இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் உள்ளது. இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ் 1648 ஆம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பாரிஸ் நகரில் சில இளம் கலைஞர்கள் ஒன்றுகூடி Academie Royale de peinture et de sculpture என்னும் பெயரில் ஒரு கவின்கலை நிறுவனமொன்றை உருவாக்கினர். இதுவே இக்கோல் நஷனல் சுப்பீரியர் டெஸ் பியூக்-ஆர்ட்ஸ் இன் முன்னோடி நிறுவனமாகும். இதில் முக்கிய பங்கு வகித்தவர் சார்ள்ஸ் லே புரூண் என்பவராவார். திறமையுள்ள மாணவர்களுக்கு, அவர்களுடைய பின்னணியைப் பாராது, இலவசமாகக் கலைத்துறைகளிற் பயிற்சியளிப்பது இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பண்டைய கிரேக்க, ரோமானியக் கலைப் பாணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே, இந் நிறுவனத்தின் பயிற்சிகள் அமைந்திருந்தன. ஒவியம், சிற்பம் போன்ற துறைகளிற் பயிற்சி கொடுப்பதற்காக, 'சிற்ப, ஓவிய அக்கடமி' என்ற பிரிவும், கட்டிடக்கலைப் பயிற்சிக்காகக் 'கட்டிடக்கலை அக்கடமி' என்ற பிரிவுமாக இரண்டு பிரிவுகளாக இது இருந்தது. அக்காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தினால் ரோம் நகரில் அமைக்கப்பட்டிருந்த Academie de France a Rome என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் படிப்பதற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காகக் கடுமையான போட்டிகளை மாணவரிடையே, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் நடத்திவந்தது. இந் நிறுவனம், 1816ல் பாரிஸிலுள்ள புதிய இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. இந்த இடத்திலேயே இது இன்றுவரை இருந்து வருகிறது. 1863ல் இது தற்போதிய பெயருக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரான்சின் கலை வரலாற்றில் இந் நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் நிறுவப்பட்டதன்பின், 19 ஆம் நூற்றாண்டுவரை, இருந்த பல புகழ் பெற்ற கலைஞர்கள் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணக் குடாநாடு யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி மூலம் தெற்கேயுள்ள தாய் நிலமான வன்னிப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குக் கரையோரத்திலும் ஓர் ஒடுக்கமான நில இணைப்பு உண்டு. யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டைமானாறு கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ஆரியச் சக்கரவர்த்திகள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் ஆரியச் சக்கரவர்த்தி வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும் மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய கூழங்கைச் சக்கரவர்த்தி தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது பாண்டியர் ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து. யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன. எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், குஜராத், கிழக்கிந்தியாவிலிருந்த கலிங்க தேசம், தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், சோழநாடு போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது. இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, கலிங்க மாகன் என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயன்றுள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து. இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்பான அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், போர்த்துக்கீசர் காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள். சிங்கை ஆரியர்களின் தோற்றத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் தோற்றத்தை எவ்வாறு விளக்கினார்கள் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் 1519-1619 கால பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 'கைலாய மாலை' எனும் நூல் ஒரு சில விளக்கத்தை எமக்கு தருகின்றது: « "பாண்டி மழவன் பரிந்து சென்று வேண்டி பெருகு புகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய வருகுதி நீ என்று வணங்க, திருவரசு மாறற்க்கு செம்பொன் மகுடம் அணிந்தோனின் வழி காரணிவனான பெரும் காரணத்தால், பேறு தரச் சாற்றும் இவன் மொழியை தன் மனத்தோர்ந்து எண்ணி, மறு மாற்றமுரை யாது நல்ல வாய்மை சொல்லி... துன்று புகழ் தென் மதுரை விட்டு திரு நகர் யாழ்ப்பாணத்து மன்னரசு செய்ய மனமகிழ்ந்து"" (செய்யுள்கள் 79-82 மற்றும் 86) ஆகையால், கடைசி காலத்து யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் வம்சத்தை உருவாக்கியது மதுரையை சேர்ந்த ஓர் பாண்டிய இளவரசன் என நம்பினார்கள் என்று கவனிக்க முடிகிறது. 1215 தொடக்கம் 1619 வரை இந்த வம்சத்தை சேர்ந்த 19 மன்னர்கள் யாழ்ப்பாண சிம்மாசனத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் பல்வேறு பெயர்களுடனும் வேவ்வேறு விதமாய் அரசு புரிந்தார்கள். ஆரம்ப காலத்தில் சிங்கை ஆரியர்கள் பாண்டிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மதுரையை நாசம் செய்து பாண்டியர்களை வீழ்திய பின்பு தான் (1335 ஆம் ஆண்டில்) இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் முக்கியத்துவம் பெற தொடங்கினர். அக்காலத்து மன்னன் மார்தாண்ட சிங்கை ஆரியனாவான். இவன் காலத்தில் மொரோக்கோ நாட்டில் இருந்து இலங்கை வந்த இப்னு பதூதா என்பவனின் மூலம் அக்காலத்தில் சிங்கை ஆரியர்கள் தான் இலங்கை தீவிலே முக்கியத்துவம் வாய்ந்த மன்னர்கள் என்று தெரிகிறது. மார்தாண்டன் புத்தள பகுதியை கைப்பற்றி முத்து வியாபாரத்தால் யாழ்ப்பாண ராஜ்யம் செழிப்படன் காணப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. இவன் காலத்தில் சிங்கள மன்னர்களுடன் போர்களும் நடை பெற்றன. கனகசூரிய சிங்கை ஆரியனின் காலம் (1440 தொடக்கம் 1478 வரை) இன்னொரு முக்கித்துவம் வாய்ந்த ஒன்று: 1450 தொடக்கம் 1467 வரை செம்பக பெருமான் எனும் கோட்டை அரசனின் வளர்ப்பு மகன் யாழ்ப்பாண அரசை கைப்பற்றி அரசு புரிந்தான். இக்காலத்தில் கனகசூரிய மன்னன் மதுரையில் தஞ்சம் தேடினான். இருப்பினும் 1467 இல் ஒரு சிறிய படை எழுப்பிய கனகசூரிய அரசன் யாழ்ப்பாணத்தை மீழப் பெற்றான். அதன் பிறகு இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்களிடம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கூற ஒரு ஆவல் காணப்பட்டது. அக்காரணத்தால் கனகசூரியனின் மகன் பரராஜசேகரனின் காலத்தில் தமிழ் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இம்மன்னன் காலத்தில் பல்வேறு நூழ்கள் எழுதப்பட்டன (கணிதம், மருத்துவம், தோதிடம் மற்றும் வரலாறு நூழ்கள்) அவனுக்கு பிறகு வரும் மன்னர்கள் 'சிங்கை ஆரியர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்வதை நிருத்தினார்கள். அவ்வம்சம் மெல்ல மெல்ல அதன் அதிகாரத்தை இழக்க தொடங்கியது. முதலாம் சங்கிலியம் மற்றும் இரண்டாம் சங்கிலியன் போன்ற மன்னர்கள் யாழ்ப்பாண அரசின் புகழை மீழ பெருவதற்க்கு முயர்சித்தனர் ஆனால் 1619 ஆம் ஆண்டில் போர்த்துகேயர் சங்கிலிக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் வம்ச அழிவுக்கும் காரணமாகினார். வையாபாடல் வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலை" என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது. இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும். இந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, "யாழ்ப்பாண வைபவமாலையையே" முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட "யாழ்ப்பாண வைபவ விமர்சனம்", மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய "பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna)" என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது. 1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான் 1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது 1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர் 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண வைபவமாலை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரென நம்பப்படும் மேக்கறூன் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக, இந்நூலிலுள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றினால் அறியப்படுகிறது. கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இந் நூல் ஆரம்பத்தில் இராமாயணத்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் மகாவம்சத்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. இலங்கையின் மேற்குக்கரையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது. யாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து, கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் இராஜதானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மேலும் தமிழர்களின் குடியேற்றம், என்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கீசர் ஆட்சிபற்றியும், பின்னர் அவர்களின் வீழ்ச்சிபற்றியும் கூறும் இந்நூல், ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவுகூறி நிறைவுபெறுகிறது. ஒல்லாந்தர் ஆட்சியின்போது அவ்வரசின் அதிகாரியொருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந் நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சிபற்றிய சில கடுமையான விமர்சனங்களும், பிரித்தானியர் ஆட்சிபற்றி வருகின்ற பகுதிகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். கூழங்கைச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். இவன் தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் பாண்டியர் கீழ் ஆட்சி புரிந்த பாண்டிய அமைச்சன் என்று கூறுவோரும் உண்டு. வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. "மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை. கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும். இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ பொதுவாக விட்ருவியஸ் என்று அழைக்கப்படும் மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ (Marcus Vitruvius Pollio), ஒரு ரோமானிய எழுத்தாளரும், கட்டிடக்கலைஞரும், பொறியியலாளருமாவார். இவர் கி.மு முதலாவது நூற்றாண்டளவில் வாழ்ந்தவர். ஆரம்பத்தில் ரோமானியச் சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசருக்குக் கீழும், பின்னர் முதலாம் அகஸ்டசுக்குக் கீழும் பொறியியலாளராகப் பணியாற்றினார். பணியிலிருந்து இளைப்பாறிய பின் 10 தொகுதிகளைக் கொண்ட கட்டிடக்கலை பற்றிய தனது நூலை எழுதினார். இதுவே இன்று கிடைக்கக் கூடிய காலத்தால் முற்பட்ட கட்டிடக்கலை நூலாகக் கருதப்படுகிறது. அன்றைய ஆர்க்கிடெக்சர் (கட்டிடக்கலை என்பது இன்றைய பொருள்) என்ற துறையினுள், கட்டிடக்கலை, நகர அமைப்பு, நிலத்தோற்ற அமைப்பு (Landscape), துறைமுகங்கள், கடிகாரம், நீர்காவி அமைப்புகள் (Aquaducts), பம்பிகள், இயந்திரங்கள் எனப் பலவகையான விடயங்களும் அடங்கியிருந்ததனாற் போலும், இவர் எழுதிய புத்தகம் மேற்படி எல்லா விடயங்களையும் எடுத்தாள்கிறது.இவற்றைவிட இசை, மருத்துவம் போன்ற விடயங்கள் பற்றியும் இப்புத்தகத்தில் குறிப்புகள் உள்ளன. இவர் ஒரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞராகவும், அவர்காலத்தின் அறிவுத்துறைகளிலும், தொழில்நுட்பத்திலும், பரந்த புலமையுள்ளவராகவும் போற்றப்படுகின்ற அதேவேளை, இவர் தன் காலத்துக்கு முந்தியகாலத்து விடயங்கள் பற்றியே சிலாகித்து எழுதியுள்ளாரென்றும், பழமைவாதியாக விளங்கினாரென்றும் இவரைக் குற்றம் சாட்டுபவர்களும் உள்ளனர். மனித சமுதாயத்துக்குப் புதிதாக எதையும் இவர் வழங்கவில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். விளையாட்டு விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் "வேலை", என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது. "ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று. நாம் விளையாட்டுக்களை போட்டியாக விளையாடுகின்றனர்.இதனால் மனிதர்கள் வெற்றி தோல்வியை சாதரணமாகக்கொண்டுள்ளனர். இடங்களுக்கு உள்ளே விளையாடும் விளையாட்டுகளை உள்ளக விளையாட்டு என்று அழைப்பார்கள். எ.கா.:- இடங்களுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகளை வெளியக விளையாட்டு என்று அழைப்பார்கள். எ.கா.:- விளையாட்டை கோட்டுக்குள்ளே விளையாடினால் அது கோட்டு விளையாட்டு. எ.கா.:- விளையாட்டை கோட்டுக்கு வெளியே விளையாடினால் அது கோடில்லா விளையாட்டு. எ.கா.:- விளையாடும் விளையாட்டை குழுவாக விளையாடினால் அது குழு விளையாட்டு. எ.கா.:- விளையாடும் விளையாட்டை தனியாக விளையாடினால் அது தனி விளையாட்டு. எ.கா.:- விளையாட்டுகள் உடற்றிறன் விளையாட்டுகள், பலகை விளையாட்டுகள், நிகழ்பட விளையாட்டுகள் எனப் பல வகைகளாக உள்ளன. மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளும் பரிசோதித்துக்கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. அனேக விளையாட்டுகள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன. உடலை முதன்மையாக ஈடுபடுத்தினாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது. விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மன நலத்தையும், சமூக நலத்தையும் பெறலாம். விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவத்தன்மை வளர்கிறது. இவை பண்டைய மக்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடப்பட்டன. இவ்விளையாட்டுகளை விளையாடுவதால் மக்கள் தமது கவலைகளை மறந்து இன்பத்தில் மூழ்குகின்றனர்.அவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் சில... கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுகளை பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு தினவிழா கொண்டாடப்படுகின்றது. விழாவிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர், மாணவர்களை அணிகள் வீதமாக பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுக்களில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு, விளையாட்டு தினவிழா அன்று பரிசுகளும் கேடையங்களும் வழங்கப்படும். மேலும், அதிக புள்ளிகள் அல்லது வெற்றிகளைப் பெற்ற அணிக்கு கேடையமும், பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்வுகளால், சிறப்பாக விளையாடும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பும் நல்ல பயிற்சி களமும் அமையும். மேலும் அவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்குபெறும் வாய்ப்பாகவும் அமையும். "முதன்மைக் கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்" விளையாட்டு (Sports) தினமலர் போக்குவரத்து போக்குவரத்து "(Transport or transportation)" என்ற சொல் மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்வதைக் குறிக்கின்றது. காற்று, ரயில், சாலை, தண்ணீர், கம்பி, குழாய் மற்றும் விண்வெளி உள்ளிட்டவை போக்குவரத்து முறைகளாகும். பொதுவாக இத்துறை உள்ளகக் கட்டமைப்பு, வாகனங்கள், இயக்கம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையில் வர்த்தகம் நடைபெறவும், நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாகும். சாலைகள் இருப்புப் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், கால்வாய், குழாய் அமைப்புகள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், படகுத் துறைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், உள்ளிட்டவை உள்ளகக் கட்டமைப்புப் பிரிவில் உள்ளடங்குகின்றன. மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள், பேருந்துகள், தொடர் வண்டிகள், லாரிகள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், விண்வெளி ஊர்திகள் உள்ளிட்டவை போக்குவரத்து வலையமைப்பில் இயங்குகின்ற வாகனங்கள் என்ற பிரிவில் அடங்குகின்றன. மேலும், போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, பொதுவாகக் குடிசார் பொறியியலாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்களுடைய பணியாகும். வாகனங்களின் உருவாக்கம், இயந்திரப் பொறியியலினுள் அடங்கும். வாகனங்களை இயக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிதியளித்தல், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உட்பட்டவை இயக்கம் என்ற பிரிவுக்குள் வருகின்றன. போக்குவரவு என்ற நோக்கத்திற்காக அமைக்கப்படும் நடைமுறைகள். போக்குவரத்து துறையில், உள்கட்டமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் உரிமைகள் நாடு மற்றும் முறைமைகளைப் பொறுத்து, பொதுத் துறை அல்லது தனியார் துறை என்ற அமைப்புகள் தோன்றுகின்றன. இயக்க பொறுப்புகள் செயற்பாட்டு ஆய்வாளர்களையும், முறைமைப் பொறியாளர்களையும் சார்ந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பொதுத் துறையாகக் கருதப்படுகிறது. திட்டமிட்ட சேவைகள், அல்லது தனியர்களால் இவை இயக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்து கொள்கலன்களில் கவனம் செலுத்துகிறது, எனினும் பெரும் அளவிலான மொத்த போக்குவரத்திற்கு தனிப்போக்குவரத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் உலகமயமாதலுக்கும் போக்குவரத்து என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான போக்குவரத்து வகைகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அதிக அளவு நிலத்தைப் பயன்படுத்துகின்றன. அரசாங்கங்கள் பெரிதும் மானியங்களை வழங்கி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நகர்ப்புற விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சீரிய போக்குவரத்து திட்டமிடல் அவசியமாகிறது. வாகனம், உள்கட்டமைப்பு மற்றும் இயக்கத்தின் குறிப்பிட்ட வகையைப் பயன்படுத்துவதற்கான ஒரு தீர்வாக போக்குவரத்து முறை உள்ளது. ஒரு நபர் அல்லது சரக்கு போக்குவரத்தின் திட்டத்தில் ஒரு முறை அல்லது பல முறைகள் இருக்கலாம், ஒரே வகையான போக்குவரத்து முறைமையுடன் அல்லது பல்வகை முறைமையுடன் கூடிய திட்டமாக அது இருக்கலாம். ஒவ்வொரு முறைமைக்கும் அதற்கான சொந்த அனுகூலங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளன, மேலும், செலவு, திறமை மற்றும் பாதை ஆகியவற்றின் அடிப்படையில் இம்முறைமகள் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மனித சக்தி மூலமான போக்குவரத்து நிலையான போக்குவரத்து வகையாகும். மனிதனது தசையின் சக்தி மூலம் மனிதர்களையோ அல்லது உற்பத்திப் பொருட்களையோ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறையாகும். நடத்தல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற செயல்களின் ஒரு வடிவமாகவே இது கருதப்படுகிறது. புதிய தொழினுட்பமானது அறிமுகப்படுத்திய இயந்திரங்கள் பெருகிய பின்னரும் மனித சக்தி வழிமுறைப் போக்குவரத்து முறை மேலும் அதிகரித்து, மனித சக்திப் போக்குவரத்து பிரபலமானதாகவே நிலைத்திருக்கிறது. ஏனெனில் இவ்வழி முறையால் பணச்சேமிப்பும் அல்லது சிக்கனமும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்துடன் பொழுதுபோக்காகவும், சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தாததுமான, உடலுக்கு நல்ல உடற்பயிற்சியைக் கொடுப்பதாகவும் காணப்படுகின்றது. வளர்ச்சி குறைந்த பிரதேசங்களிலும் மற்றும் அணுக முடியாத பிரதேசங்களிலும் மனித சக்திப் போக்குவரத்து முறையே பெரும் பயன் விளைவிக்கின்றது. இருப்பினும் ,மனித வலுவைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த உட்கட்டமைப்பும் போக்குவரத்து விதிகளும் அவசியமாக உள்ளன. விலங்கினங்களின் உடல்சக்தியை உந்தும் வலுவாகப் பயன்படுத்தி போக்குவரத்து வண்டிகளைச் செலுத்துதல் விலங்கு-வலுப் போக்குவரத்து ஆகும். விலங்கு வலுப்போக்குவரத்தில் பல்வேறு விலங்குகள் பண்டைதொட்டுப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன. ஒரு நிலை இறக்கை விமானம், பொதுவாக வானூர்தி என்று அழைக்கப்படும் விமானத்தை விடக் கனமான ஒரு விமானம் ஆகும், இங்கு இறக்கைகளுடன் தொடர்புடைய காற்று விமானத்தை உயர்த்தப் பயன்படுகிறது. சுழல் இறக்கை விமானத்திலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது, சுழல் இறக்கை விமானத்தில் காற்றுடன் தொடர்புடைய மேற்பரப்பு விமானத்தை உயர்த்துவதற்காக இயங்குகிறது. சிலவகை சுழல் விமானங்களில் நிலை இறக்கை மற்றும் சுழல் இறக்கை என்ற இரண்டு விதமான இறக்கைகளும் பயன்படுகின்றன. நிலை இறக்கை விமானங்கள் சிறிய பயிற்சி விமானங்கள் முதலாக பெரிய இரணுவ சுமையேற்றி விமானங்கள் வரையில் பயனாகின்றன. இறக்கைகளுக்கு மேலாக காற்று இயக்கமும், இறங்கும் பகுதியும் விமானப் போக்குவரத்திற்கு தேவையான இரண்டு காரணிகள் ஆகும். பராமரிப்பு, மீளமைத்தல், எரிபொருள் நிரப்புதல், சரக்கு மற்றும் பயணிளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்காக பெரும்பாலான விமானங்களுக்கு உள்கட்டமைப்புடன் கூடிய ஒரு விமான நிலையமும் தேவைப்படுகிறது. விமானங்கள் பறப்பதற்கும், கீழிறங்குவதற்கும் ஏராளமான நிலம் மற்றும் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. சிலவகை விமானங்கள் பனிக்கட்டி மற்றும் அமைதியான நீரில் இருந்து உயரவும் இறங்கவும் திறன் கொண்டவையாக உள்ளன. இராக்கெட்டுகளுக்கு அடுத்ததாக விமானங்களே மிக வேகமான போக்குவரத்து முறை ஆகும். வர்த்தக விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு 955 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. ஒற்றை இறக்கை விமானங்கள் 555 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. பொதுவாக விமானங்கள், மக்களையும் சரக்குகளையும் நீண்ட தூரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்கின்றன. ஆனால் அதிக செலவும் ஆற்றலும் பயன்படுத்தப்படுகிறது. குறுகிய தூரம் அல்லது அணுக முடியாத இடங்களில் சுழலிறக்கை விமானங்கள் பயன்படுகின்றன. ஏப்ரல் 28, 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தி கார்டியன் கட்டுரை, 500,000 பேர் எந்த நேரத்திலும் விமானங்களில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது". இரயில் பாதை என்று அழைக்கப்படும் இரண்டு இணை எஃகு தண்டவாளங்களின் தொகுப்பு மீது ஒரு இரயில் நகர்ந்து செல்வதனால் இரயில் போக்குவரத்து இயங்குகிறது. நிலையான இடைவெளிக்காக தண்டவாளங்கள், மரங்கள், கற்கூழ் அல்லது எஃகு ஆகியவற்றின் மீது செங்குத்தாக இணைக்கப்படுகின்றன. தண்டவாளங்கள் மற்றும் செங்குத்துத் தூண்கள் ஆகியவையும் கற்கூழால் ஆன ஒர் அடித்தளத்தின் மீது பொருத்தி வைக்கப்படுகின்றன. மாற்று முறைகள் மோனோ இரயில் மற்றும் மக்லெவ் போன்றவை மாற்று வழிமுறைகளாகும். ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகள் சேர்ந்து இரயில் வாகனம் உருவாகிறது. பயணிகள் அல்லது சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தொடர்ச்சியான பெட்டிகள், மின்னாற்றல் மூலம் இயங்கும் ஒரு வாகனத்தால் அனைத்து பெட்டிகளும் இழுக்கப்படுகின்றன. நீராவி, டீசல் அல்லது தண்டவாளத்தின் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளால் மின்சாரம் வழங்கப்பட்டு தொடர் வண்டி இயக்கப்படுகிறது. மாற்றாக, சில அல்லது அனைத்து பெட்டிகளும் மின்னிணைப்பால் இணைக்கப்பட்டு பல அலகுகளாகவும் இயக்கப்படுகின்றன. மேலும், குதிரைகள், கேபிள்கள், புவி ஈர்ப்பு சக்தி, வாயுக்கள் மற்றும் வாயு விசையாழிகளாலும் கூட இரயில்கள் இயக்கப்படுவதுண்டு. சாலையில் செல்லும் இரப்பர் சக்கர வாகனங்களைக் காட்டிலும் இரயில்கள் குறைவான உராய்வைக் கொண்டு நகர்கின்றன. நகரங்களை இணைக்கும் தொலைதூர இரயில் சேவை அமைப்புகள் நகரங்களை இணைக்கின்றன. அதிநவீன இரயில்கள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள பாதைகளில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் பயணிக்கின்றன. பிராந்திய மற்றும் பயணிகள் ரயில்கள் புறநகர்பகுதியையும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் நகரங்களுடன் இணைக்கின்றன. அதே நேரத்தில் நகர்ப்புற போக்குவரத்துக்காக அதிக திறன் கொண்ட டிராம் மற்றும் விரைவு வண்டிகள் பெரும்பாலும் நகரின் பொது போக்குவரத்துக்கான முதுகெலும்பாக உள்ளன. சரக்கு ரயில்கள் பாரம்பரியமாக பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன, இவற்றுக்காக கைகளால் ஏற்றுதல் மற்றும் சரக்குகளை இறக்குதல் ஆகிய செயல்கள் தேவைப்படுகின்றன. 1960 களில் இருந்து கொள்கலன் ரயில்கள் சரக்குகளை ஏற்றிச் செல்வதில் ஆதிக்கம் செலுத்துகின்றான. அதே நேரத்தில் பெரிய அளவிலான சரக்குகளை இடம்பெயர்த்துச் செல்ல இதற்காகவே இரயில்கள் அர்ப்பணிப்பு செய்யப்பட்டு அதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சாலை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு இடையில் அமைந்து ஒரு அடையாளத்தைக் காட்டக்கூடிய வழியாகும் . பாதை அல்லது சாலை என்பவை பொதுவாக மென்மையானவையாக பண்படுத்தப்பட்டு எளிதாக அல்லது சுலபமான பயணத்தை ஒருவருக்கு அனுமதிக்கத் தயாராக உள்ளன ; தேவைப்படாவிட்டாலும், வரலாற்று ரீதியாக பல சாலைகள் எந்தவொரு முறையான கட்டுமான அல்லது பராமரிப்புமின்றி எளிதில் அடையாளம் காணக்கூடிய பாதைகளாக இருந்தன .நகர்ப்புறங்களில், சாலைகள் நகரம் அல்லது கிராமம் வழியாக செல்கின்றன. அவை நகர்ப்புறத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் பாதை போன்ற இரட்டை செயல்பாடுகளை வழங்குகின்றன . சக்கரங்களால் இயங்கும் உந்தூர்திகள் மிகவும் பொதுவான சாலை வாகனங்களாக பயணிகளை சுமப்பவையாக உள்ளன. பேருந்துகள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றவை இவ்வகை வாகனங்களாகும். 2010 ஆம் ஆண்டு வரை, உலகமெங்கும் 1.015 பில்லியன் வாகனங்கள் இருந்தன என்று கணக்கிடப்பட்டது. பயணிகளுக்கு சாலை போக்குவரத்து மிகவும் சுதந்திரமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கும், ஒரு வரிசையிலிருந்து மறு வரிசைக்கும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை சாலைப்போக்குவரத்து அளிக்கிறது. இருப்பிடம், திசை, வேகம் மற்றும் பயண நேரங்களின் மாற்றம் முதலான நெகிழ்வுகளை மற்ற போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து வாயிலாக மட்டுமே வீட்டுக்கு வீடு நிறுத்திச் செல்லும் சேவையை அளிக்க இயலும். மோட்டார் வாகனங்கள் குறைந்த அளவிலான திறன் கொண்ட வாகனங்களாக இருந்தாலும், அதிக ஆற்றலும் பரப்பளவும் இவற்றுக்கும் தேவையாகும். நகரங்களில் இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு இவையே முக்கிய ஆதாரங்களாகும். குறைந்த செலவில் அதிக நிகிழ்வுத்தன்மை கொண்ட சொகுசான பயணத்தை பேருந்துகள் அனுமதிக்கின்றன . சரக்குகளை கொண்டு செல்வதில் ஆரம்பம் மற்றும் இறுதி நிலைகள் பெரும்பாலும் சரக்குந்துகளிலேய நிறைவடைகின்றன. கடல், ஏரி, கால்வாய் அல்லது நதி போன்ற நீர்வழிகளில் நீரூர்திகள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதே நீர்வழிப் போக்குவரத்து எனப்படும். பரிசல், படகு, கப்பல், பாய்மரப்படகு போன்றவை நீரூர்திகளாகும். இவைகள் இயக்கப்படுவதற்கு மிதப்பாற்றல் அவசியமாகிறது. கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தோற்றம் முதலானவை நீர்வழிப் போக்குவரத்தில் மேலோங்கி நிற்கும் அம்சங்களாகும். 19 ஆம் நூற்றாண்டில், முதலாவது நீராவி கப்பல்கள் வளர்ச்சியடைந்தன. கப்பலை நகர்த்துவதற்கு உதவும் துடுப்பு சக்கரத்தை அல்லது உந்தியை ஓட்டுவதற்கு ஒரு நீராவி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு இவை உருவாக்கப்பட்டன. நீராவி ஒரு கொதிகலனில் மரம் அல்லது நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இந்நீராவி வெளியெரி இயந்திரத்தின் மூலம் அளிக்கப்பட்டது. இப்போது பெரும்பாலான கப்பல்களில் உள்ளெரி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பங்கர் பெட்ரோலியம் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சில கப்பல்கள் நீராவியைத் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துகின்றன. பொழுதுபோக்கு அல்லது கல்விச் செயல்திறன் படகுகள் இன்னும் காற்று சக்தியை பயன்படுத்துகிறது, சில சிறிய கைவினைப் படகுகளில் உள்ளெரி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பயணம் மெதுவாக இருப்பினும், நவீன கடல் போக்குவரத்து என்பது பெரிய அளவிலான பொருட்களைச் சுமந்து செல்வதற்கான மிகவும் திறமையான ஒரு போக்குவரத்து முறையாகும். வர்த்தக கப்பல்கள், கிட்டத்தட்ட 35,000 எண்ணிக்கையில், 2007 ஆம் ஆண்டில் மட்டும் 7.4 பில்லியன் டன் சரக்குகளை சுமந்துள்ளன. கடற்போக்குவரத்திற்கான செலவு விமான போக்குவரத்தை விட சிக்கனமாக உள்ளது. குறுகிய கடல் போக்குவரத்தும் பாய்மரப் பயணமும் கடலோரப்பகுதிகளில் பயன்பாட்டிலுள்ளன short sea shipping and ferries remain viable in coastal areas.. குழாய்வழிப் போக்குவரத்து ஒரு குழாயினூடாக பொருட்களை அனுப்புகிறது. பொதுவாக திரவம் மற்றும் வாயுக்கள் இம்முறையில் அனுப்பப்படுகின்றன, ஆனால் வாயு குழாய்களில் அமுக்கப்பட்ட காற்றைப் பயன்படுத்தும் காற்றியக்கக் குழாய்கள் மூலம் திடப்பொருட்களும் அனுப்பப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிக்க திரவங்கள், வாயுக்கள் எதுவாக இருப்பினும் இம்முறையில் அனுப்பப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குழம்பு, நீர் மற்றும் பியர் ஆகியவை குறுகிய தூரங்கள் போக்குவரத்திற்கான அமைப்புகளால் செலுத்தப்படுகின்றன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை நீண்ட அமைப்புகள் மூலம் செலுத்தப்படுகின்றன. கம்பிவழிப் போக்குவரத்து என்பது பரந்த முறையில் பயன்பாட்டில் உள்ளது, இங்கு உள்ளக மின்சக்திக்கு பதிலாக கம்பிகளால் வாகனங்கள் இழுக்கப்படுகின்றன. பொதுவாக செங்குத்தான சாய்வுத் தொலைவுகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக வான்வழி வாகனங்கள், மின்தூக்கிகள், வான்தூக்கிகள், நகரும் படிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றுள் சில ஓடும் பட்டைகளைப் பயன்படுத்துபவை எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. விண்வெளிப் பறத்தல் மூலம் புவியின் வளிமண்டலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல விண்வெளி ஊர்திகள் பயன்படுகின்றன. இதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கும் அறிவியல் சோதனைகளை நடத்துவதற்கும் என அரிதாகவே விண்வெளிப் பறத்தல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மனிதன் சந்திரனில் இறங்கியுள்ளான் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களுக்கும் ஆய்வுக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. துணை சுற்றுப்பாதை விண்வெளிப்பறத்தல் முறையில் பூமிக்குள் ஒரு இடத்திலிருந்து பூமிக்குள்ளேயே உள்ள ஒரு தொலைதூர இடத்திற்கு செல்வது மிக வேகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. புவியின் தாழ் சுற்றுப்பாதைப் பகுதியில் விரைவான போக்குவரத்தை அடைய முடியும் என்கிறார்கள். பல்வேறு இடங்களின் உற்பத்தியையும், உற்பத்தி நுகர்வையும் ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து என்பது ஒரு முக்கிய தேவையாக உள்ளது. வரலாறு முழுவதும் போக்குவரத்து விரிவடைந்து வந்துள்ளது. சிறந்த போக்குவரத்து அதிக வர்த்தகத்தையும் மக்கள் பரவலையும் அனுமதிக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது எப்போதும் போக்குவரத்து வளர்ச்சி அதிகரிப்பதைச் சார்ந்துள்ளது. மேலும் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் ஆற்றல் இழப்பும் பெரிய சிக்கலை உருவாக்குகிறது. நவீன நகரங்களும் சமூகங்களும் திட்டமிடப்பட்டு செயல்படுவதால், வீடு மற்றும் வேலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு வழக்கமாக உருவாக்கப்படுகிறது, பணியிடங்களை நோக்கி, படிக்கும் இடங்களை நோக்கி, ஓய்விடங்களை நோக்கி அல்லது தற்காலிகமாக மற்ற தினசரி நடவடிக்கைகளை நோக்கி மக்கள் இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சுற்றுலா பயணம், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. புதிய உள்கட்டமைப்பு தொடர்பான அதிக பயன்பாடுகளையும் குறைந்த தாக்கங்களையும் போக்குவரத்துத் திட்டமிடல் அனுமதிக்கிறது. திட்டமிடுபவர்கள் போக்குவரத்து முன்கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி, எதிர்காலப் போக்குவரத்து முறைகள் கணிக்க முடியும். விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாகக் கருதி போக்குவரத்தைத் திட்டமிட போக்குவரத்து உரிமையாளர்களை செயற்பாட்டு நிலையில் ஏற்பாட்டியல் அனுமதிக்கிறது. ஒழுங்குமுறைக் கொள்கையை உருவாக்குவதில் ஓர் அங்கமாக விளங்கும் போக்குவரத்துப் பொருளாதாரம் மூலமாகவும் போக்குவரத்துத் துறை ஆராயப்பட்டது. பயணத்தலைமுறை, பயண விநியோகம், பயணத் தேர்வு, பயணப்பாதை நியமபிப்பு போன்ற அம்சங்களை குடிமுறைப் பொறியியலின் துணைப்பிரிவான போக்குவரத்துப் பொறியியல் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து பொறியியல் மூலமே செயற்பாட்டு நிலையும் கையாளப்பட வேண்டும். போக்குவரத்து முறைமை தேர்வும், அதிகரிக்கும் திறனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதால், போக்குவரத்து பெரும்பாலும் சர்ச்சைக்குரியாக பொருளாகவே பார்க்கப்படுகிறது. வாகன போக்குவரத்து பொதுமக்களை துயருக்கு ஆளாக்குவதையும் காணலாம், தனி நபருக்காக நெகிழும் வசதிவாய்ப்புகள், அனைவருக்குமான இயற்கை மற்றும் நகர்ப்புற சூழலை மோசமடையச் செய்கின்றன. வளர்ச்சி அடர்த்தி, பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சிறந்த இடவசதி பயன்பாட்டை அனுமதிக்கின்ற போக்குவரத்து முறையைப் பொறுத்தே வளர்ச்சியின் அடர்த்தி அமைகிறது. அதிகமான உள்கட்டமைப்பும், மிக அதிகமான வாகன உற்பத்தியை அதிகப்படுத்துவதும் பல நகரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலையும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன. பாரம்பரிய நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் இந்நிலை சமீபத்து ஆண்டுகளில் மட்டுமே பல இடங்களில் உள்ளது. போக்குவரத்திற்காகவே ஆற்றல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகின் பெட்ரோலிய வளத்தில் பெரும்பகுதி இதற்காகவே எரிக்கப்படுகிறது. இதனால் நைட்ரசு ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் உமிழப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது . மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவாக உள்ள போக்குவரத்துத் துறையின் பங்கு இதில் அதிகமாகும் . இதிலும் குறிப்பாக துணை அலகான சாலைப் போக்குவரத்து மிகமிக அதிகமான மாசை உருவாக்குகிறது . வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைச் சட்டங்கள் மூலம் தனிப்பட்ட வாகனங்களின் வாயு உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளன . இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் அதிகரித்தபடியுள்ளது. சாலைப் போக்குவரத்தில் வெளிப்படும் கார்பன் அளவைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன . எரிசக்தியின் பயன்பாடும், உமிழ்வுகளும் பெரும்பாலும் போக்குவரத்து முறைகளிடையே வேறுபடுகின்றன. எனவே, மின்மயமாக்கல் மற்றும் ஆற்றல் செயல்திறன் மேம்பாடு போன்ற மாற்றங்களை சுற்றுச்சூழல்வாதிகள் பரிந்துரைக்கின்றனர். போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற விரிவாக்கம் போன்ற இதர தாக்கங்கள் போக்குவரத்து வளர்ச்சியால் விளைகின்றன. இயற்கை வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்கள் குறைகின்றன. பூமியின் காற்றுத் தரம், அமில மழை, புகை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கணிசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவில் போக்குவரத்து உமிழ்வுகளை குறைத்தால் மட்டுமே நேர்மறையான விலைவுகளை எதிர்ப்பார்க்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . [பகுப்பு:போக்குவரத்து]] வாஸ்து சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை. வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே. அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது. இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான் (படிமம் 3). குகென்ஹெயிம் அருங்காட்சியகம் குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும். பிராங்க் கெரி ("Frank Gehry") என்னும் கட்டிடக்கலைஞருடைய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம், 1997ல் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுமே, உலகின் கவர்ச்சிகரமான, நவீன கட்டிடங்களிலொன்றாகப் பிரபலமானது. இந்த நூதனசாலையின் வடிவமைப்பும், கட்டுமானமும், பிராங்க் கெரியின் பாணியினதும், வழிமுறைகளினதும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கெரியின் மற்ற கட்டிடங்களைப் போலவே, இக் கட்டிடமும், தீவிர சிற்பத்தன்மையுடையதாகவும், இயல்பான வளைவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முழுக்கட்டிடத்தில் எங்கேயுமே தட்டையான மேற்பரப்பு இல்லையென்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைப் பாலமொன்று கட்டிடத்தின் ஒரு பகுதிக்குக் குறுக்கே செல்கிறது, கட்டிடத்தின் பெரும் பகுதி, கடதாசித் தடிப்புள்ள டைட்டேனியம் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கட்டிடம், துறைமுக நகரமொன்றில் அமைக்கப்பட்டதால், ஒரு கப்பலைப்போலத் தோன்றவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மினுக்கமான தகடுகள் மீன் செதில்களை ஒத்துள்ளன. இவை, கெரியின் வடிவமைப்புகளில் அடிக்கடி காணப்படும் organic வடிவங்களைக் குறிப்பாக மீன்போன்ற அமைப்புக்களைப் பிரதிபலிப்பதுடன், அது அமைந்திருக்கும் நேர்வியன் ஆற்றையும் நினைவூட்டுகிறது. அத்துடன் கெரியின் வழமையான தன்மைக்கு ஒப்பக் கட்டிடம் தனித்துவமான, காலத்தோடிசைந்த தொழில்நுட்பத்தின் உற்பத்தியாகவும் உள்ளது. கட்டிடத்தின் வடிவமைப்பில் பெருமளவுக்குக் கணினி உதவி வடிவமைப்பு ("Computer aided design") முதலியன பயன்படுத்தப்பட்டன. கட்டிட அமைப்பின் கணனி simulations, முந்திய சகாப்தத்தின் கட்டிடக்கலைஞர்களால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத பல விடயங்களை முடியக்கூடியனவாக்கிற்று. கட்டுமானத்தின்போது, கற்பலகைகள் "லேசர்" எனப்படும் சீரொளிக் கதிர் கொண்டு வெட்டப்பட்டன. இந்த நூதனசாலை, பில்போ நகரத்துக்கும், பாஸ்க் நாட்டிற்குமான புத்தூக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகத் திறந்துவைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட உடனேயே, குகென்ஹெயிம் பில்போ, உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளைக் கொண்டுவரும், ஒரு பிரபல சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடமாகியது. பில்போவை உலகப்படத்தில் இடம்பெறச் செய்த பெருமையில் பெரும் பங்கு இக்கட்டிடத்துக்கும் உரியதென்று பரவலாகக் கருதப்படுகிறது. இங்குள்ள காட்சிப்பொருள்கள் அடிக்கடி மாறுகின்றன. பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டுக் கலைப் பொருட்களாகும். பாரம்பரிய ஓவியங்களும், சிற்பங்களும் சிறுபான்மையே. பெட்ரோனாஸ் கோபுரங்கள் பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் என்பது (, ) மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும். 2003 அக்டோபர் 17இல் தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது. சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998யில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துரு பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது. 1990களில், மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. சியர்ஸ் கோபுரங்கள் போன்ற உலகின் மற்ற உயரமானக் கட்டிடங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களைப் போல ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பெட்ரோனாஸ் ஏற்பாடுகளைச் செய்தது. பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் 1992 ஜனவரி 1இல் வரையப்பட்டன. பலமான காற்று வீசும் போது ஏற்படும் விளைவுகள், கட்டமைப்புக் கூறுகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. 1993 மார்ச் 1இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டிடங்கள் கட்டப்படும் பகுதிகளில் 30 மீட்டர் (98 அடிகள்) ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டது. தோண்டிய மண்ணை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வோர் இரவும் 500 சுமையுந்துகள் பயன்படுத்தப்பட்டன. பகலில் மற்ற வேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டிடத்தின் அடித்தளத்தில், 13,200 கனமீட்டர் (470,000 கன அடி) கல்காரை பைஞ்சுதை () 54 மணி நேரத்திற்கு தடைபடாமல் ஊற்றப்பட்டது. ஆக மொத்தம் 104 பைஞ்சுதை பாளங்கள் உருவாக்கம் பெற்றன. தொடர்ந்து 21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் சுற்றளவு 1,000 மீட்டர்கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர். 1994 ஏப்ரல் 1இல் தலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1996 ஜனவரி 1இல் உட்புற வடிவமைப்புகள், தளவாடப் பொருட்களைப் பொருத்தும் வேலைகள் முடிவடைந்தன. 1996 மார்ச் 1இல் உச்சிக் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. 1997 ஜனவரி 1இல் பெட்ரோனாஸ் ஊழியர்களில் முதல் தொகுதியினர் பணிபுரியத் தொடங்கினர். 1999 ஆகஸ்ட் 1இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். முன்பு கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் இருந்த இடத்தில்தான் இப்போதைய பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன. இருந்தாலும் தொடக்கக் கட்டத்தில் நில ஆய்வுகள் செய்யும் போது அசல் கட்டுமான நிலப்பகுதி ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் அமரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலப்பகுதியின் பாதி அளவில் அழுகிய சுண்ணப்பாறைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கட்டுமானப் பகுதி 61 மீட்டர்கள் (200 அடி) தூரத்திற்கு அப்பால் நகர்த்தி வைக்கப்பட்டது. ஒட்டு மொத்தக் கட்டுமானப் பகுதியும் திடமான ஒரு கற்பாறையில் அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக ஆழமான அடித்தளங்களை அமைப்பதற்காக மிக ஆழமான குழிகள் தோண்ட வேண்டி வந்தது. 60 லிருந்து 114 மீட்டர் உயரமுள்ள கற்காரைக் குத்தூண்கள் ஊன்றப்பட்டன. ஏறக்குறைய 104 கற்காரைக் குத்தூண்கள் கட்டுமானப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடித்தளங்களில் பல ஆயிரம் டன்கள் பைஞ்சுதை கல்காரை ஊற்றப்பட்டுள்ளது. இந்த அடித்தளங்களுக்கான வேலைகள் 12 மாதங்களில் முடிவுற்றது. இந்த ஒரு வேலையை மட்டும் பாச்சி சோலேதாஞ்சே () எனும் பிரித்தானிய நிறுவனம் செய்து முடித்தது. இதற்கு டோமோ ஒபியாசே எனும் ஹைத்திய பொறியியலாளர் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார். ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை ஜப்பானிய கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் ("Hazama Corporation") ஏற்றுக் கொண்டது. கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான சாம்சுங் இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் ("Samsung Engineering & Construction and Kukdong Engineering & Construction") ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் உறுதிக்கலவை வலிமைச் சோதனையில் ("routine strength test") ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதுவரையில், கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த எல்லாப் பகுதிகளிலும் சோதனைகள் செய்யப்பட்டன. ஒரே ஒரு மாடியில், ஒரே ஒரு பகுதி மட்டும் பலகீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பகுதி தகர்க்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு 700,000 அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது. அதனால், உறுதிக்கலவைகளைத் தயாரிக்க, அங்கேயே மூன்று தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதில் ஏதாவது ஒரு தொழிற்சாலை தவறான உறுதிக்கலவையைத் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தயார்நிலையில் இருக்கும் மற்ற இரு தொழிற்சாலைகளில் ஒன்று உடனடியாக மாற்றுத் தயாரிப்பில் இறங்கும். இது செலவுகளைக் குறைக்கும் அவசரத் திட்டங்களில் ஒன்றாகும். வான்பாலத்தைக் ("sky bridge") கட்டுவதற்கான பொறுப்பை குக்டோங் இஞ்ஜினியரிங் நிறுவனம் ("Kukdong Engineering & Construction") ஏற்றுக் கொண்டது. கிழக்கு கோபுரம்தான் முதன்முதலில் வானளாவிச் சென்றது. அப்போதைக்கு அதுதான் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்; மிக உயரமான கோபுரமும்கூட. சியேர்ஸ் கோபுரம் சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற இடத்தைப் பிடித்தது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேஷியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள்ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது. இக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது. காற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும். இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை. தாய்ப்பே 101 தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது. அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது. உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்: மேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது. அலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி கூரைவரை - 448 மீ = 1470 அடி அதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி இன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தோஷிபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம், புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது. 2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. ஆறு மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான நிலநடுக்கத்துக்கு தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிக்டர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிக்டர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் நியூயார்க் நகரிலுள்ள 102 மாடிகளைக் கொண்ட ஆர்ட் டெக்கோ கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தினால் 1930ல் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இது 102 ஆவது தளத்திலுள்ள அவதான நிலையம் வரை, 390 மீ உயரம் கொண்டது. 2001 இல் தாக்குதலுக்குள்ளாகி அழிந்துபோன உலக வர்த்தக மையக் கட்டிடம் கட்டப்படுவதற்குமுன், இந்த நகரத்தில் அதி உயர்ந்த கட்டிடமாக இருந்தது. உலகின் அதியுயர் கட்டிடமாகவும் பல ஆண்டுகள் இருந்தது. கிறிஸ்லர் கட்டிடத்திடமிருந்து, உலகின் அதியுயர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக, இதன் கட்டுமானப் பணிகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இக்கட்டிடம், 1931, மே 1ல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 1940கள் வரை இதன் பெருமளவு அலுவலகத்தளங்கள் வாடகைக்கு எடுக்கப்படாமலேயிருந்தன. இதன் உச்சியிலுள்ள, பொது அவதான நிலையத்திலிருந்து, நகரின் கவர்ச்சியான காட்சியைக் காணமுடியும். இது பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். கட்டிடத்தின் மேற்பகுதி, ஒளிபாச்சும் மின் விளக்குகளினால், இரவில், பல்வேறு நிற ஒளிகளில், ஒளியூட்டப்படுகின்றது. இந் நிறங்கள் காலங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருத்தமாகத் தெரிவு செய்யப்படுகின்றது. உலக வர்த்தக மையத்தின் அழிவைத்தொடர்ந்து பல மாதங்கள், இது சிவப்பு, வெள்ளை மற்றும் நீலத்தில் ஒளியேற்றப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் குண்டுவீச்சு விமானம் 79 ஆம் மாடியின் வடக்குப் பக்கத்தில் , தேசிய கத்தோலிக்க நல்வாழ்வுக் கவுன்சில் அமைந்திருந்த பகுதியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் இறந்தனர். அதனால் ஏற்பட்ட தீ 40 நிமிடத்தில் அணைக்கப்பட்டது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம், அமெரிக்கக் குடிசார் பொறியியல் சொசைட்டி (American Society of Civil Engineers) யினால் நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது 350 5 ஆவது அவெனியூ, 33ஆவது மற்றும் 34ஆவது வீதிகளுக்கு இடையே, மான்ஹற்றன் மத்திய நகரில் அமைந்துள்ளது. நியூயார்க் மாநிலத்தின், "எம்பயர் ஸ்டேட்" என்ற செல்லப் பெயர் தொடர்பிலேயே இக் கட்டிடத்துக்குப் பெயரிடப்பட்டது. இக் கட்டிடம் சம்பந்தப்பட்ட, மிகவும் பிரபலமான, மக்கள் கலாச்சார வெளிப்பாடாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயம், 1933ல், வெளியிடப்பட்ட, கிங் கொங் ஆங்கிலத் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரமான கிங் கொங் என்னும் இராட்சத மனிதக் குரங்கு, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தப்புவதற்காக, இந்தக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி இறுதியில், அங்கிருந்து விழுந்து இறந்து விடுகிறது. 1983ல் இப் படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒரு காற்றூதப்பட்ட, கிங் கொங் உருவம் உண்மையான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. எனினும் இது ஒருபோதும் முழுமையாகக் காற்றூதப்பட்டு இருக்கவில்லை. "Love Affair" மற்றும் "Sleepless In Seattle" போன்ற ஆங்கிலத் திரப்படங்களில் இக் கட்டிடத்தின் அவதானிப்பு நிலையம், படத்தில் வரும் காதலர்கள் சந்திக்கும் இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரக வாசிகளின் படையெடுப்பு தொடர்பான, "ஐ லவ் லூசி படத்திலும் இவ்விடம் இடம் பெறுகின்றது. "பப்பற்" என்னும் அறிவியற் கற்பனைத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அங்கமான "தண்டர்பேர்ட்ஸ்" இக் கட்டிடத்தைத் தண்டவாளங்களிலேற்றி வேறிடத்துக்கு நகர்த்தும் முயற்சியைக் காட்டுகிறது. 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் என்ற விமானத்தை வில்லியம் பிராங்க்ளின் ஸ்மித் என்பவர் ஓட்டி வந்தார். கடும் பனிப் பொழிவின் காரணமாக, விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலையில் தவறுதலாக கட்டிடத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 79 மற்றும் 80ம் தளங்களின் மத்தியில் மோதியது. மோதிய அதிர்ச்சியின் காரணமாக விமானத்தின் எந்திரப்பகுதி, அதற்கு அடுத்த தளத்தின்மீது மோதியது. விமானத்தின் மற்றொரு பாகம், கட்டிடத்தின் உயர்த்தியை தாக்கியது.கட்டிடத்தின் தாக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட தீ, 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இருப்பினும், 14 பேர் இறந்தனர். அதற்குப் பின்னர் வந்த திங்கட்கிழமை, கட்டிடம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சம்பவம் நடந்த ஒராண்டு கழித்து, மற்றொரு விமானம் இதேபோல மோத நேரிட்டது. ஆனால், விமான ஓட்டியின் சாதுர்யத்தால் விமானத்தை திசை திருப்பிவிட்டார். 2006ம் ஆண்டின் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர், கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கட்டிடத்தின் முதல் தற்கொலையானது, கட்டிடம் முடிப்பதற்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. 1947ம் ஆண்டில் தொடர்ச்சியான மூன்று வாரங்களில், அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர். மே மாதம் 1ம் நாள் 1947ம் ஆண்டு, எவிலின் மெக்ஹல் (22) என்பவர், 86வது தளத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். திசம்பர் மாதம் 1943ம் ஆண்டு, வில்லியம் லாயடு ராம்போ என்பவரும் அதே தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நவம்பர் மாதம் 3ம் நாள் 1932ம் ஆண்டு, பெட்ரிக் எக்கர்ட் என்பவர் மட்டுமே, கட்டிடத்தின் உயர் மேல்தளமான 102ம் தளத்திலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். திசம்பர் மாதம் 2ம் நாள் 1979 ஆண்டு, எல்வித்தா ஆதம் என்பவர் 86வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால், இடுப்பெழும்பு முறிவுகளுடன் காப்பாற்றப்பட்டார். ஏப்ரல் மாதம் 25ம் நாள் 2013ம் ஆண்டு, 85வது தளத்திலிருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலும் அதன் முன்பக்கத்திலும் இரண்டு முக்கிய துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன.1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத் 23ம் தேதி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 86 வது தளத்தின் காட்சி மாடத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவனால் 7 பேர் சுடப்பட்டனர். 69 வயதுடைய பாரஸ்தீன ஆசிரியரான அபுல் கமால் எனும் பெயருடைய அந்நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ற அறுவர் காயமும் அடைந்தனர்.இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்த சச்சரவு சம்பவங்களுக்காக இது நடத்தப்பட்டதாக கூறப்பட்டது . இக்கட்டிடத்தின் ஐந்தாவது வாயிலின் ஓர நடைபாதையில் ஆகஸ்ட் 24, 2012 அன்று 9.00 மணியளவில் ஜெஃப்ரி டி. ஜான்சன் (வயது 58) என்பவர் 2011 ல் தான் பணிநீக்கப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தால் தன் முன்னாள் சக பணியாளரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கி ஏந்திய அந்நபரை எதிர்கொண்டு 16 முறை அந்நபரை நோக்கிச் சுட்டனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தால் அருகிலிருந்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.அதில் மூவர் நேரடியாக குண்டுகளால் தாக்கப்பட்டனர். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 102 வது தளம் வரை 1,250 அடி (381 மீட்டர்) உயரமும் 2013 அடி (61.9 மீட்டர்) உயரம் கொண்ட உச்சி கோபுரமும் சேர்த்து 1,453 அடி 8 9⁄16 அங்குலம் (443.092 மீட்டர்) உயரம் கொண்டது.இக்கட்டிடத்தின் 2,158,000 சதுர அடிகள் பரக்களவு (200,500 மீ) கொண்ட 85 அடுக்குகள் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கு வாடைகைக்கு விடப்பட்டள்ளது. 86 வது தளத்திர் ஒரு உள் மற்றும் வெளிப்புற பார்வையாளர் மேடை உள்ளது. மீதமுள்ள 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரமாக உள்ளது. 102 வது தளம் கண்காணிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 203 அடிகள் கொண்ட உச்சி கோபுரம் ஒளிபரப்பு வானலை வாங்கி அலைக்கம்பங்களும் (Broadcasting Antenna) முகட்டு உச்சியில் இடி தாங்கியும் நிறுவப்பட்டுள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 100 தளங்கள் கொண்ட உலகின் முதல் கட்டிடமாகும்.இது 6,500 சன்னல்களையும், 73 மின் தூக்கிகளையும் தரையிலிருந்து 102 வது மாடி வரை 1,860 படிகளையும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 2,768,591 சதுர அடி (257,211 மீ). இக்கட்டிடத்தின் அடித்தளம் இரண்டு ஏக்கர் (8,094 மீ).10118 என்ற சொந்த சிப் (ZIP) குறியீடு (அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 5 அல்லது 9 எண்கள் கொண்ட அஞ்சல் இலக்கம்) கொண்ட இந்த கட்டிடத்தில் 1,000 தொழில் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கான தலைமை அலுவலகங்கள் உள்ளன.2007 ஆண்டு நிலவரப்படி இக்கட்டிடத்தில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 21,000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலக வளாகமாக இக்கட்டிடம் திகழ்கிறது இக்கட்டிடம் 40,948,900 அமெரிக்க டாலர் (2016 நிலவரப்படி இதன் மதிப்பு $644,878,000 ) செலவில் கட்டப்பட்டள்ளது.கட்டிடத்தின் வாழ்நாளை கருத்திற்கொண்டு முன்கணிப்பு வடிவமைப்பு முறையில் பல கட்டங்களாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் இதுவாகும், கட்டிடத்தின் எதிர்கால நோக்கம் மற்றும் பயன்கள் முந்தைய தலைமுறைகளின் தேவைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. மின்சார அமைப்பின் மேலதிக வடிவமைப்பு கட்டிடத்தின் நயத்திற்குச் சான்று பகிர்வதாக உள்ளது. கலையம்சம் கொண்ட 16 தளங்கள் நியூயார்க்கில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடக்கலை வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.33 வது மற்றும் 34 வது தெருக்களில் இக்கட்டிடத்திற்கு வருவதற்காக உள்ள நுழைவாயிலில் நவீனத்திறன் வாய்ந்த எஃகு விதானங்கள் உள்ளன. இரண்டு அடுக்கு உயர் தாழ்வாரங்கள் மின்தூக்கி மையகத்திற்கு எஃகு மற்றும் கண்ணாடி பாலங்கள் வழியாகக் கடந்துசெல்கின்றன.இத்தளத்தில் மின் உயர்த்தி மையம் 67 மின் உயர்த்திகளைக் கொண்டுள்ளது. முகவாயில் அறையானது (lobby) மூன்று தளங்கள் உயரமுடையது.அலுமினியத்தாலான உச்சி கோபுரமானது 1952 வரை ஒளிபாப்பு கோபுரம் நிறுவப்படாமல் இருந்தது.1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கண்காட்சிக்காக ராய் ஸ்பார்க்கியா மற்றும் ரெனீ நெமாரோவ் ஆகியோரால் 1963 ல் இக்கட்டிடத்தின் வடக்குத் தாழ்வாரத்தில் எட்டு ஒளியேற்றப்பட்ட சட்டங்கள் நிறுவப்பட்டது.பாரம்பரியமான ஏழு அதியங்களுக்கு அடுத்ததாக இது உலகின் எட்டாவது அதிசயமாக சித்தரிக்கப்பட்டது. பீசாவின் சாய்ந்த கோபுரம் பீசாவின் சாய்ந்த கோபுரம் ("Leaning Tower of Pisa") இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,453 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது. 1990, ஜனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது. அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, ஜூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. கிரைஸ்லர் கட்டிடம் கிறிஸ்லெர் கட்டிடம் நியூயோர்க் நகருக்குத் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும். 1930ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1046 அடிகள் (319 மீட்டர்) உயரமானதாகும். மான்ஹற்றனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் "கிறிஸ்லெர் கார்ப்பரேஷன்" நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட இது, இப்பொழுது டி.எம்.டப்ளியூ ("TMW") ரியல் எஸ்டேட் நிறுவனத்தாலும் (75%), திஷ்மான் ஸ்பேயர் ப்ரொப்பர்ட்டீஸ் நிறுவனத்தாலும் (25%) கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. கிறிஸ்லெர் கட்டிடம், "வில்லியம் ஹெச் ரெனோல்ட்ஸ்" என்னும் ஒப்பந்தக்காரருக்காக, வில்லியம் வான் அலன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவ் வடிவமைப்புப் பின்னர் வால்டெர் கிறிஸ்லெர் என்பவரால் அவரது நிறுவனத்தின் தலைமையகத்துக்காக வாங்கப்பட்டது. இக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில், உலகின் உயர்ந்த வானளாவியெக் கட்டுவது தொடர்பாக, கட்டிடம் கட்டுபவர்களிடையே கடும் போட்டியிருந்தது. கிறிஸ்லெர் கட்டிடம் வாரத்துக்கு 4 தளங்கள் வீதம் கட்டப்பட்டது. இக் கட்டுமானத்தின் போது ஒரு வேலையாள் கூட பணிக்காலத்தில் இறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டிமுடிப்பதற்குச் சற்றுமுன், ஹெச். கிரெய்க் செவெரன்ஸின், 40 வால் தெருவிலுள்ள கட்டிடத்துடன் சம அளவில் இருந்தது. செவெரன்ஸ் அவர்கள் பின்னர் தன்னுடைய கட்டிடத்துக்கு மேலும் இரண்டடி சேர்த்து உயரமாக்கித் தனது கட்டிடமே உலகின் உயரமான கட்டிடம் என்று கூறிக்கொண்டார்.(இது ஈபெல் கோபுரம் போன்ற "அமைப்பு"க்களை உள்ளடக்கவில்லை.) வான் அலன், 125 அடி (38.1 மீட்டர்) உயரமான spire ஒன்றைக் கட்டுவதற்காக இரகசியமாக அனுமதி பெற்று வைத்திருந்தார். இது கட்டிடத்தினுள்ளேயே கட்டப்பட்டுவந்தது. துருப்பிடியாத உருக்கினால் செய்யப்பட்ட இந்த அமைப்பு, நவம்பர் 1929 இல் ஒருநாள் பின்னேரத்தில் கட்டிடத்துக்கு மேல் உயர்த்தப்பட்டதன் மூலம் கிரிஸ்லெர் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் மட்டுமன்றி, உயரமான அமைப்புமாக ஆக்கப்பட்டது. வான் அலனும், கிறிஸ்லெரும் இந்தப் பெருமையை, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திடம் இழக்கும்வரை, ஒரு வருடத்துக்கும் குறைவாகவே அனுபவிக்க முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக வான் அலனுடைய திருப்தி, கிரிஸ்லெர் அவருடைய கட்டணத்தைச் செலுத்த மறுத்ததனால் இல்லாமல் போனது. கிரிஸ்லெர் கட்டிடம், ஆர்ட் டெக்கோ கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க உதாரணமாகும். கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட தனித்துவமான அலங்காரங்கள், கிரிஸ்லெர் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்திய ஹப்கப்களின் ("hubcaps") அடிப்படையில் அமைந்திருந்தது. வாயில் மண்டபமும், அதேபோல அழகானது. கட்டிடம் முதலில் திறந்துவைக்கப்பட்டபோது, உச்சியில் ஒரு பொது காட்சிக்கூடம் அமைந்திருந்தது. சில காலங்களின்பின் அது ஒரு உணவகமாக மாற்றப்பட்டது. இவ்விரண்டு முயற்சிகளுமே அக்காலத்தின் பாரிய பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதியடிப்படையில் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள முடியாமற்போனதால், முந்தைய அவதானிப்புத் தளம் ஒரு தனியார் விடுதியாக ("private club") மாற்றப்பட்டது. கட்டிடத்தின் உச்சிக்குக் அருகில் உள்ள தளங்கள், ஒடுக்கமானவையாகவும், உயரம் குறைந்த, சரிவான சீலிங்குகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இவை வெளித் தோற்றத்துக்காகவே வடிவமைக்கப்பட்டவை. உள்ளே இயந்திரங்களும், மின் உபகரணங்களும், வானொலிக்கருவிகளும் வைப்பதற்கே பயன்படக்கூடியவையாக இருந்தன. கிறிஸ்லெர் கட்டிடம், பயன்பாடுசார்ந்த நவீனத்துவத்திலிருந்து விலகியிருந்த, அதன் அற்பத்தனமான அலங்காரங்களுக்காக, அக்காலத்திய விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. எனினும், பொது மக்கள், விரைவில் அதனைப் பாராட்டுக்குரிய கவர்ச்சியான கட்டிடமாக ஏற்றுக்கொண்டனர். காலப் போக்கில், இக் கட்டிடம், 1920களின் கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பக்கிங்காம் அரண்மனை பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது. முதலில் பக்கிங்ஹாம் இல்லம் என அறியப்படும் இவ்விடம் 1703 ல் பக்கிங்ஹாம் பிரபு ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1761ல் மூன்றாம் ஜார்ஜால் அரசி ஷார்லட்டுகான தனிப்பட்ட இல்லமாக பெறப்பட்டு "அரசியின் இல்லம்" என அழைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கட்டிட கலைஞர்கள் ஜான் நாஷ் மற்றும் எட்வார்ட் ப்லோரால் இவ்விடம் விரிவாக்கப்பட்டது. 1837ல் அரசி விக்டோரியா பொறுப்பேற்ற பின் இவ்விடம் அரச குடும்பத்தின் இருப்பிடமானது. கடைசி முக்கிய கட்டமைப்புகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டபட்டன. ஆனால், இவ்வரண்மனை தேவாலயம், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் வெடிகுண்டுகளால் அழிந்து போனது; அங்கே அரசியின் இராஜரீகமான ஓவிய சேகரிப்புகளுக்கான கலைக்காட்சி கூடம் நிறுவப்பட்டு 1962ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. விக்டோரியா அரசியாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை மால் என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன. சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், அரண்மனையின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும். முற்காலத்தில் இவ்விடம் மேனர் ஆஃப் எபரி எனும் தனிப்பட்ட பண்ணை நிலமாக இருந்தது. இந்நிலம் டைபர்ன் ஆற்றால் நீர் பாய்ச்ச பெற்றது, இப்போதும் இந்த அறு அரண்மனையின் முற்றதிற்க்கு அடியில் தெற்க்கு சாரியாக பாய்கிறது. இந்நிலம் பல உரிமையாளர்களின் கை மாறியது. பின்னர், 1531ல் எட்டாம் ஹென்ரி, புனித ஜேம்ஸ் மருத்துவமனையை ஈட்டன் கல்லூரியிடம் இருந்து பெற்ற போது, 1536ல் மேனர் ஆஃப் எபரியையும் வெஸ்ட்மினிஸ்டர் அபெவிடம் இருந்து பெற்றார். 500 வருடங்களுக்கு பிறகு இந்நிலம் திரும்ப அரச கைகளுக்கே திரும்ப வந்தது. முதலில் இவ்விடம் அரசி ஷார்லட்டின் தனிப்பட்ட இல்லமாக இருந்தது. அதுவரை புனித ஜேம்ஸ் அரண்மனையே அதிகாரப்பூர்வ அரச குடியிருப்பாக இருந்து வந்தது. 1762ல் கட்டிடத்தின் மறுவடிவமைப்பு தொடங்கப்பட்டது. 1820ல் நான்காம் ஜார்ஜ் அரியணை ஏறியவுடன் அவ்வில்லத்தினை சிறிய அரண்மனையாக மாற்ற கட்டிட வடிவமைப்பாளர் ஜான் நாஷின் உதவியுடன் சில மாற்றங்களை செய்தார். கார்ல்டனின் இல்லத்தில் இருந்து அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டது, மீதம் ஃப்ரென்ச் புரட்சி சமயம் ஃப்ரான்சில் வாங்கப்பட்டது. வெளி முகப்பின் தோற்றம் நான்காம் ஜார்ஜின் விருப்பத்திற்க்கு ஏற்ப ஃப்ரென்ச் மரபு சார்ந்து கட்டப்பட்டது. மறுசீரமைப்பின் செலவு அதிகமானதுடன் 1829ல் ஜான் நாஷின் ஊதாரித்தனமான வடிவமைப்பு அவரை பக்கிங்காம் அரண்மனை வடிவமைப்பாளரில் இருந்து நீக்கியது. 1830ல் நான்காம் ஜார்ஜின் மறைவுக்கு பின்னர், அவரின் சகோதரர் நான்காம் வில்லியம் எட்வர்ட் ப்லோரை கொண்டு வேலையை முடித்தார். ஒரு கட்டத்தில் அரண்மனையை பாரளுமன்ற விடுதியாக மாற்றவும் யோசித்து இருந்தார். பக்கிங்காம் அரண்மனை இறுதியாக 1837ல் விக்டோரிய அரசியின் பதவியேற்ப்பிற்க்கு பின் அரச இருப்பிடமாக மாறியது. நான்காம் வில்லியம் கட்டிட பணி முடியும் முன்னரே மறைந்து போனதால் அரசி விக்டோரியாவே பக்கிங்காம் அரண்மனையில் தங்கிய முதல் ராணி. அறைகளில் வண்ணங்களும், தங்க மூலாம் பூசல்களும் அமர்களமாகவே இருந்தாலும், ஆடம்பரம் மிக குறைவாகவே இருந்தது. 1840ல் அரசியின் திருமணத்தை தொடர்ந்து, இளவரசர் ஆல்பர்ட் அரண்மனையின் பராமரிப்பு பகுதிகள், வேலையாட்கள் மற்றும் இன்ன பிற குறைகளை சரி செய்தார். 1847ல் கணவனும், மனைவியும் பெருகும் தம் குடும்பத்திற்க்கு அவ்விடம் சிறிதாக தோன்றியதால் எட்வர்ட் ப்லோரைக் கொண்டு மேலும் ஒரு ஒரு பகுதி தாம்ஸ் கியுபிட்டால் கட்டப்பட்டது. அவ்விடமே பின்னர் அரச குடும்பம் முக்கியமான சந்தர்ப்பங்கள், ட்ரூப்பிங்க் தி கலர் எனும் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட்டத்தை சந்திக்க எற்படுத்தப் பட்ட உப்பரிகையாகும். நடனமாடும் அறையும்,பிற அறைகளும் இந்த கால கட்டதில் கட்டபட்டவையே ஆகும். இளவரசர் ஆல்பர்டின் மரணத்துக்கு முன்னர் இவ்விடம் எப்போதும் இசை நிகழ்ச்சி நடக்கும் இடமாகவும், பகட்டான விழாக்களும் நடைபெறும் இடமாகவும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வருத்தம் சூழ்ந்து கொண்ட நிலையில் அரசி விண்ட்சர் கோட்டையிலேயே தன் பொழுதை கழித்ததுடன் அரண்மனை வாயிலும் பெரும்பாலும் மூடியே இருந்தது. 1901ல் ஏழாம் எட்வார்ட் மன்னர் அரியணை ஏறினார். பக்கிங்காம் அரண்மனையின் நடன அறை, பிரம்மாண்ட நுழைவாயில், மார்பில் அறை, பிரம்மாண்ட படிகள், கூடங்கள், வரவேற்பறை என அனைத்தயும் "பெல்லெ எபொஃ" எனும் பாலாடை வெள்ளை நிறமும், தங்கமுலாமும் பூசப்பட்டது, இந்நிறம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. 1999ல் ராயல் கலக்ஷென் டீபார்ட்மென்ட் வெளியிட்ட புத்தகத்தில் அவ்வரண்மனை 19 பெரிய அறைகளும், 52 முக்கிய படுக்கை அறைகளும், 188 பணியாளர் படுக்கை அறைகளும், 92 அலுவலகங்களும், 78 கழிப்பறைகளையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இது புனித பீட்டர்ஸ்பெர்க் மற்றும் சார்ஸ்கொ செலொவில் இருக்கும் ரஷிய இம்பீரியல் அரண்மனை, உரோம்மில் உள்ள பாபல் அரண்மனை, தி ராயல் பாலஸ் ஆஃப் மாட்ரிட், தி ஸ்டாக்ஹோம் அரண்மனை, வைட் ஹால் அரண்மனை ஆகியவற்றை காட்டிலும் சிறிது. ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 விருந்தினர்கள் கேளிக்கை விருந்திற்க்கும், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும், இன்ன பிற நிகழ்ச்சிகளுக்கும் வரவேற்க்க படுகின்றனர். கார்டன் பார்ட்டி எனப்படும் விருந்து வருடத்திற்க்கு மூன்று முறை, கோடையிலும், ஜூலை மாதங்களிலும் நடைபெறும். பக்கிங்காம் அரண்மனையின் முன் வருடம்தோறும் நிகழும் தி சேஞ்சிங்க் ஆஃப் கார்ட்ஸ் எனும் நிகழ்ச்சி அனைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்ச்சி கோடையில் தினம்தோறும், பனிகாலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் நடைபெறும். விண்ட்ஸர் கோட்டை எனும் அரண்மனை, பிற மன்னர் அரசின் உடைமைகளான சான்றின்காம் இல்லம், பல்மோரல் கோட்டை போல அல்லாது ப்ரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது. பக்கிங்காம் அரண்மனை, விண்ட்ஸர் கோட்டை, கென்சிங்க்டன் அரண்மனை, புனித ஜேம்ஸ் அரண்மனை ஆகிய அரண்மனைகளில் உள்ள பொருட்கள் இராஜரீக நினைவுச் சின்னமாக பாதுகாக்க பட்டு வரப்படுகிறது. அவை மக்கள் பார்வைக்கு அரசியின் கலைக்கூடத்தில் வைக்கப்படுகிறது. அரண்மனையின் அறைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 1993ல் இருந்து மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும். மே 2009ல் இராஜ குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரிட்டிஷ் அரசு, அரண்மனை மேலும் 60 நாட்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல், அதில் வரும் வருமானம் கொண்டு அவ்வரண்மனையின் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனுமதியளித்தது. சீன வங்கிக் கோபுரம் சீன வங்கிக் கோபுரம் (சுருக்கம்: BOC கோபுரம்) இது ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். இதன் அமைவிடம் ஹொங்கொங் தீவின் , சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இலக்கம்-1 கார்டன் வீதி, சென்ட்ரல் நகரில் உள்ளது. உலகில் அதிக வானளாவிகளைக் கொண்ட நாடாக ஹொங்கொங்காக விளங்கியப்போதும், ஹொங்கொங் கட்டிக்கலையின் தனித்துவமானச் சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஹொங்கொங்கின் அடையாளச் சின்னம் (Hong Kong's icon) என்றும் குறிப்பிடுவர். இந்த கட்டடத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞரின் பெயர் யெஹ் மிங் பெய் "(Ieoh Ming Pei)" எனும் அமெரிக்கச் சீனராகும். தனது கட்டட வடிவமைப்புத் துறையில் பல விருதுகளையும் இவர் பெற்றவராவர். இவரை சுருக்கமாக இவரின் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு ஐ. எம். பெய்) என அழைக்கப்படுகிறார். இக்கட்டடத்தின் உயரம் (1,033.5 அடிகள்) 315 மீட்டராகும். கட்டடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கூர்முனைகளின் உயரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதன் முழு உயரம் (1,205.4 அடிகள்) 367.4 மீட்டராகும். இக்கட்டடம் 72 மாடிகளை கொண்டுள்ளது. இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1989 - 1992) ஹொங்கொங்கின் அதிக உயரமான கட்டடமாக இது விளங்கியது. அக்காலக்கட்டத்தில் ஆசியாவிலேயே அதிக உயரமான கட்டமாகவும் இதுவே விளங்கியுள்ளது. தற்போது இதனை விடவும் உயரமான கட்டடங்கள் பல ஹொங்கொங்கில் எழுந்துள்ளன. இருப்பினும் இக்கட்டடத்தின் வடிவமைப்பு இதன் தனித்துவத்தை க் காட்டி நிமிர்ந்து நிற்கிறது. கட்டடத்தைச் சுழ பசுமையான மரங்களும், குறும் நீர்வீழ்ச்சிகளும், பூங்காவுமாக காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சீன வங்கி கோபுரம் குறித்து, சீனப் பாரம்பரியக் கட்டடக்கலை பெங் சுயி நிபுணர்கள் இதன் கூரிய விளிம்புகள் குறித்து விமர்சித்துள்ளனர். இந்த விளிம்புகள் இரவு நேரத்தில் வெள்ளை மின் கோடுகளாக மிளிரும். இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பு, பிரித்தானியரினால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்றான முறே இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடமாகும். இந்த முறே இல்லத்தின் ஒவ்வொரு கற்களாகப் பெயர்த்தெடுத்து, அவற்றை அப்படியே கடல் வழியூடாக கப்பலில் ஏற்றிச்சென்று ஹொங்கொங் தீவின் கிழக்கில், ஸ்டேன்லி எனும் இடத்தில் அதன் வடிவமைப்போ, கட்டிடச் சிதைவோ இல்லாமல் அப்படியே மீளெழுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த முறே இல்லம் அமைந்திருந்த நிலப்பரப்பில் 1985 ஆம் ஆண்டு சீன வங்கிக் கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம் ஆகின. கட்டிட நிர்மானப் பணிகள் நிறைவடைந்து, 1990 ஆம் ஆண்டு, மே மாதம் 7 ஆம் திகதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 72 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அடிப்பகுதியில் உள்ள 19 மாடிகள் வரையிலான பகுதியும், கட்டிடத்தின் முனைப்பகுதியில் 4 மாடிகளையும் சீன வங்கியின் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாடிகள் அனைத்தும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. கட்டிட வகைகள் கட்டிடவகைகள் சிலவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது சகல வகைகளையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் அல்ல. முழுமையான பட்டியலொன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகும். குறிப்பிட்ட தனிக் கட்டிடங்களுக்கு, கட்டிடங்களின் பட்டியல் பார்க்கவும். வீடு (கட்டிடம்) பொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். எளிமையான மிகச் சிறிய குடிசைகள் முதல் சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட பெரிய மாளிகைகள் வரையான கட்டிடங்களை வீடு என்னும் பொதுப் பெயரால் குறிக்கலாம். பல்வேறு அடிப்படைகளில் வீடுகளைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். பயன்படும் கட்டிடப் பொருட்களின் அடிப்படையில் வீடுகளைத் தற்காலிகமானவை அல்லது நிரந்தரமானவை என்றும்; கட்டுமானத் தன்மையின் அடிப்படையில் நிரந்தரமாக ஓரிடத்தில் அமையும் வீடுகள் அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய வீடுகள் என்றும்; அளவின் அடிப்படையில் குடிசைகள், மாளிகைகள் என்றும்; இவை போன்ற வேறு அடிப்படைகளிலும் வீடுகளை வகைப்படுத்த முடியும். மரபு வழியாக, நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தினரே ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இக் குடும்பம் தாய், தந்தை பிள்ளைகளை மட்டும் உள்ளடக்கிய தனிக் குடும்பமாகவோ, பல தலைமுறைகளையும், பல தனிக் குடும்பங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். சில வேளைகளில் இக் குடும்பங்களின் பணியாட்களும் அவர்களுடன் வாழ்வதுண்டு. தற்காலத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் உறவினரல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது பல தனியாட்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதும் உண்டு. "வீடு" என்பதற்கு இணையாகத் தமிழில் பல சொற்கள் உள்ளன. "இல்", "இல்லம்", "மனை", "உறையுள்", "அகம்" போன்றவை இவற்றுட் சில. பழந் தமிழ் இலக்கியங்களில் "இல்", "இல்லம்", "மனை" ஆகிய சொற்களே பெரும்பாலும் வழக்கில் இருந்தன. தற்போது எடுத்துக்கொண்ட பொருளில் "வீடு" என்னும் சொற் பயன்பாடு காலத்தால் பிற்பட்டது. வீட்டின் பல்வேறு வகைகளைக் குறிக்கப் பலவகையான சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குடில், குடிசை, குரம்பை, குறும்பு போன்ற சொற்கள் சிறிய உறையுள்களைக் குறித்தன. "மனை", "மாடம்", "நெடுநகர்" போன்றவை நிலையான பெரிய வீடுகளைக் குறித்தன. மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்றும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்றும் பொதுவான கருத்து உண்டு. எனினும், வீடுகளின் வரலாறு பற்றி எழுதிய நோபர்ட் இசுக்கோனர் (Norbert Schoenauer) என்பவர் இதை மறுத்து உலகின் பல பகுதிகளில் குடிசைகளே மக்களின் முதல் வாழிடங்களாக இருந்தன என்கிறார். வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவர வகை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன. வளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எஸ்கிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்ற வகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன. மனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன. முற்காலத்திலும், தற்காலத்தில், நகராக்கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன. தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன. நகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல் மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும். மிகவும் எளிமையான வீடுகள் அல்லது குடிசைகள் ஒரு அறையை மட்டும் கொண்டனவாக இருக்கலாம். இந்த ஒரு அறையிலேயே அவ்வீட்டில் வாழ்பவர்களின் பல வகையான செயற்பாடுகள் இடம்பெறும். பெறுமதியான பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைத்தல், பெண்கள் உறங்குதல், உடை மாற்றுதல் என்பன இத்தகைய செயற்பாடுகளிற் சில. இத்தகைய வீடுகளில் வாழ்பவர்கள் சில செயற்பாடுகளை வீட்டுக்கு அருகில் திறந்த வெளியிலேயே வைத்துக்கொள்வர். விருந்தினரை வரவேற்றல், சமையலுக்கான ஆயத்தங்கள் செய்தல், ஆண்கள் இளைப்பாறுதல் போன்றவை வீடுக்கு வெளியில் இடம்பெறக் கூடியவை. ஒரு அறையை மட்டும் கொண்ட வீடுகள் சிலவற்றில் வாயிலுக்கு முன் திண்ணை அல்லது விறாந்தை போன்ற அமைப்புக்கள் இருப்பது உண்டு. இது கூரையால் மேலே மூடப்பட்டிருந்தாலும், பக்கங்கள் பெரும்பாலும் திறந்திருக்கும். சூடான காலநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இவ்வாறான அமைப்புக்கள் பெரிதும் விருப்பத்துக்கு உரியனவாக உள்ளன. இவ்வாறான சில வீடுகளில் அவற்றில் ஒரு பக்கத்தில் தாழ்வாரத்தைச் சற்று நீட்டி அதன் கீழ் சமைப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. சற்றுக் கூடிய வசதி உள்ளவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியான சமையல் அறையைக் கட்டிக்கொள்வர். இவ்வாறு வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி வீட்டுக்கு அருகில் தனித்தனியான அமைப்புக்களைக் கட்டுவது உண்டு. இம்மாதிரியாக வெவ்வேறு செயற்பாடுகளுக்கான தனித்தனி அமைப்புக்களைக் கொண்ட வீடுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளுள் பெரும்பாலானவை மரம், மண், புல், ஓலை போன்ற நீடித்துழைக்காத பொருட்களால் ஆனவையாக இருக்கின்றன. கூடிய பணவசதி உள்ளவர்கள் தமது தேவைக்கு ஏற்றபடி பல அறைகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவர். பல்வேறு செயற்பாடுகளுக்கும் தனித்தனியான அறைகளும், கூடங்களும் இவ்வீடுகளில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள் இருப்பதும் உண்டு. இவ்வாறான பெரிய வீடுகள் பெரும்பாலும், செங்கல், காங்கிறீட்டு, கூரை ஓடுகள், உலோகம் போன்ற நீடித்துழைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களால் கட்டப்படுகின்றன. பெரிய வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டவையாக அமைக்கப்படுவது உண்டு. வீடுகள் உருவாகும் சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து, அவை, உள்நோக்கிய வகையினவாக அல்லது வெளி நோக்கிய வகையினவாக இருக்கலாம். பழமை பேணும் கீழைநாட்டுச் சமுதாயங்கள் பலவற்றில் மரபுவழி வீடுகள் உள்நோக்கிய தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இவ்வீடுகளில் வெளிப்புறம் திறப்பதற்கான பெரிய சாளரங்கள் காணப்படுவதில்லை. மாறாக வீட்டுக்கு நடுவே முற்றம் அமைக்கப்பட்டு அறைகளும் கூடங்களும் இம்முற்றத்துக்குத் திறந்திருக்கும்படி அமைக்கப்படுகின்றன. வெளிநோக்கிய தன்மை கொண்ட வீடுகள் பெரிய சாளரங்களைக் கொண்டவையாகவும், சுற்றிலும் மரங்கள், செடிகளுடன் கூடிய நிலத்தோற்ற அமைப்புக்களுடன் கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது சில அறைகளை அருகிலுள்ள திறந்த வெளிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்படியான வடிவமைப்புக்களும் இருப்பதுண்டு. இன்றும் உலகில் கட்டப்படும் மிகப் பெரும்பாலான வீடுகளைக் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைப்பதில்லை. அத்தகைய வீடுகளில் பலவற்றை மரபுவழியான வடிவமைப்புக்களின் அடிப்படையிலேயே கட்டிக்கொள்கின்றனர். எனினும், பல தலைமுறைகளின் அனுபவத்தின் அடிப்படையிலான வடிவமைப்பில் அமைவதால், அதில் வாழ்பவர்களின் செயற்பாடுகளுக்கும், உடல் நலத்துக்கும், பண்பாட்டுத் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இவ்வீடுகள் அமைகின்றன. எப்படியானாலும், ஒரு வீட்டின் பல்வேறு பகுதிகளின் அமைவிடங்களும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் வீட்டு வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன. சமூக பண்பாட்டுக் காரணிகளைப் பொறுத்து வெவ்வேறு சமூக பண்பாட்டுச் சூழல்களில் இத்தகைய தொடர்புகளுக்கான தேவைகள் வேறுபட்டு அமைவது உண்டு. முக்கியமாகப் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளினால் இத்தொடர்புகள் தீர்மானிக்கப்பட்டாலும், சில சமுதாயங்களில், பல்வேறு வகையான நம்பிக்கைகளும்கூட வீட்டு வடிவமைப்பில் பங்கு வகிப்பதைக் காணலாம். சோதிடம், வாஸ்து, பெங் சுயி போன்றவற்றின் மீதான நம்பிக்கை இதற்கு எடுத்துக்காட்டுக்கள். தற்காலத்தில் வீடுகளின் வடிவமைப்பில் மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கங்கள் பெருமளவில் காணப்படுவதால் செயற்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலான வடிவமைப்புக்களில் பெருமளவு பொதுமை காணப்படுகின்றது. மூன்று படுக்கை அறைகள், வரவேற்பறை, சாப்பாட்டறை என்பவற்றுடன் தொடர்புடைய பிற பகுதிகளையும் கொண்ட வீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை அருகில் உள்ள வரைபடம் காட்டுகிறது. விருந்தினர் அறை, வரவேற்பு அறை போன்ற வெளியார் வரக்கூடிய பகுதிகள் நுழைவாயிலுக்கு அண்மையில் அமைந்திருக்கும். வரவேற்பு அறைக்கு வரும் விருந்தினர்கள் சில வேளைகளில் சாப்பாட்டு அறைக்கும் செல்லவேண்டி இருக்கும் என்பதால் வரவேற்பு அறையில் இருந்து சாப்பாட்டு அறைக்கு நேரடித் தொடர்பு இருப்பது வழக்கம். சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலேயே சமையல் அறையும் இருக்கும். படுக்கை அறைகள் பொதுவாக வெளியார் வரக்கூடிய பகுதிகளில் இருந்து விலகி உட்புறமாக இருப்பது விரும்பப்படுகிறது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட வீடுகளில், வரவேற்பறை, சாப்பாட்டறை, விருந்தினர் அறை, சமையல் அறை போன்றவை நிலத் தளத்திலும் அமைத்துப் படுக்கை அறைகளைப் பெரும்பாலும் மேற்தளங்களில் அமைக்கின்றனர். தற்காலத்தில் ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனியான குளியல் அறையும் இருப்பது வழக்கம். விருந்தினர் பயன்படுத்துவதற்காக, வரவேற்பறை, சாப்பாட்டறை ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கழுவறை ஒன்றும் இருப்பது உண்டு. பலவகை வீடுகளின் பட்டியல் உலகம் முழுவதிலும், மனிதர்கள் வாழ்வதற்காகக் கட்டப்பட்ட, சிறிதும் பெரிதுமான பல நூறு வகையான வீடுகள் காணப்படுகின்றன. இவற்றைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அமைந்துள்ள இடம், வீட்டின் அளவு என்பன எப்படியிருந்தாலும், இவை அனைத்துமே, மனித இனத்தின் வரலாறு, பண்பாடு போன்ற கூறுகள் தொடர்பில் ஏராளமான தகவல்களைத் தம்முள் அடக்கிவைத்துள்ளன. இவற்றில் பொதிந்துள்ள தத்துவங்களும், குறியீட்டு அர்த்தங்களும் ஆர்வத்தை தூண்டுபவை. உலகிலுள்ள பல்வேறு இனங்களும், இனக்குழுக்களும், தங்கள் வாழிடங்களில் அமைத்துக்கொண்டுள்ள வீடுகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பனிக் கட்டிக் குடில் பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ ("Igloo") என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவ்வீடுகள் பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது. என்றாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் மிக அழுத்தத்தில் அந்த பனிகட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக் கட்டிக் குடில் பெரும்பாலும், கனடாவின் கனடாவின் வட எல்லையில் வாழும் பழங்குடிகளான இனூயிட் மக்களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கே மழைக் காலத்தில் வேட்டையாடுபவர்களால் இந்தப் பனிக்கட்டி வீடுகள் தற்காலிக வாழும் இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே பனிக் கட்டிக் குடில் கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாகப் பனிக் கட்டிக் குடில் உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்கிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும். மத்திய எஸ்கிமோவர், சிறப்பாக, டேவிஸ் நீரிணையைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது. கட்டிடக்கலைரீதியில் பனிக் கட்டிக் குடில் தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளை தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன்மூலம் இதன் அரைக்கோளவடிவ "கவிமாடம்" ஐக் கட்டியெழுப்ப முடியும். "இக்லூ", என்பது இனுக்டிடுட் மொழியில் "வீடு" என்ற பொருள்படும். பொதுவாக மூன்று வகை பனிவீடுகள் உண்டு. அவற்றின் பரப்பளவும், நோக்கமும் வெவ்வேறானவை. மிகச் சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிகத் தங்குதலுக்கு அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்க இவை பயன்படுகின்றன. நடுத்தர அளவு இக்ளூக்கள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்றவை. இவை ஒரே ஒரு அறை கொண்டவை. இதில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் தங்க முடியும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படிக் கட்டப்படும். குடியிருப்பு அல்லது கிராமமாக இவை விளங்கும். அடுத்து மிகப் பெரிய பனிக்கிடில் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாகத் தங்குவதற்கும். மற்றொன்று நிரந்தரமாகத் தங்குவதற்கும். இவற்றில் ஐந்து அறைகள்கூட இருக்கும். அதிகபட்சம் இருபதுபேர்கூடத் தங்கலாம். சிலசமயம் சின்னச் சின்ன பனிக்குடில்களைச் சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்துப் பல குடும்பங்கள் அங்கே தங்கப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. மு. வரதராசனின் "தமிழ் இலக்கியம்" என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. "முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்" சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன. பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான். == பக்தி இலக்கிய காலம் == 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன: அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது. 1 கனடா சதுக்கம் 1 கனடா சதுக்கம் (1 Canada Square) என்பது இலண்டன் மாநகரில் உள்ள கேனரி வார்ஃப் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். 1990 முதல் 2010 வரை ஐக்கிய இராச்சியத்தில் இதுவே மிகவுயர்ந்த கட்டிடமாக மதிக்கப்பட்டது. 50 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் தரை மட்டத்தில் இருந்து 720 அடி உயரம் (235 மீட்டர்) அளவுக்கு வானில் உயர்ந்து நின்றது. 2012 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட சார்டு கட்டிடம் 1 கனடா சதுக்கத்தின் இருபது ஆண்டுகால சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தது. இக்கட்டிடத்தின் உயரம் 1016 அடிகள் ( 309.6 மீட்டர்) ஆகும்.ஹட்டேர்ஸ்பீல்ட் (Huddersfield) என்னுமிடத்திலுள்ள, 330 மீட்டர் உயரமான எம்லே மூர் தொலைக்காட்சிக் கம்பமே நாட்டின் அதி உயரமான "அமைப்பு" ஆகும். ரீச்மன் குடும்பத்துக்குச் சொந்தமான, ஒலிம்பியாவும், யோர்க்கும் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் கட்டப்பட்டமையாலேயே, இக்கட்டிடத்துக்குக் கனடா சதுக்கம் என்ற பெயர் வந்தது. "கனரி வார்வ்" (Canary Wharf ) பகுதியைக் கட்டும் முயற்சியில் இந் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்தது.இக்கட்டிடம் "கனரி வார்வ்"இன் (Canary wharf) ஒரு பகுதியாக இருப்பதால், இது கனரி வார்வ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. சீசர் பெல்லி என்ற முதன்மை கட்டிடக்கலை வல்லுநர் 1 கனடா சதுக்கத்தை வடிவமைத்தார். முக்கியமாக உலக நிதிநிறுவனம் மற்றும் எலிசபெத் கோபுரம் ஆகிய கட்டிடங்களை அடிப்படையாக நினைத்தே இவர் இச்சதுக்கத்தை வடிவமைத்தார். துருப்பிடிக்காத எஃகு இந்த அழகிய கட்டிடத்தின் மேற்புறத்தை அலங்கரிக்கிறது. இச்சதுக்கத்தின் உச்சியில் உள்ள ஒளிரும் பிரமீடு விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்காக இருருப்பதுதான் இச்சதுக்கத்தின் மிகமுக்கியமான தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாகத் தெரியும் இந்த பிரமீடு உச்சிமுடி கடல்மட்டத்தில் இருந்து 800 அடி (240 மீட்டர்) உயரத்தில் உள்ளது. கீழ் தரைத் தளத்தில் சில சில்லறை வணிகக் கடைகள் இடம்பெற்றிருந்த போதிலும் இச்சதுக்கத்தில் முதன்மையாக அலுவலகங்கள் இடம்பெற்றன. 1 கனடா சதுக்கத்தில் அலுவலகங்கள் அமைந்திருப்பது பெரிய ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. சனவரி 2013 நிலவரப்படி மதிப்புமிக்க இச்சதுக்கத்தின் அனைத்து பகுதிகளும் அலுவலகங்களாய் நிரம்பியிருந்தன இச்சதுக்கம் இலண்டனின் மைல்கல் என அங்கீகரிக்கப்பட்டது. இதனால் திரைப்படங்கள்,தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் இதன் புகழ்பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் என்று பட்டியலிடப்பட்டதனால் இச்சதுக்கம் மேலும் பலருடைய கவனத்தை ஈர்ப்பது தொடர்கிறது . 1996 ல், இங்கு, ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRA) என்ற தீவிரவாத இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது.