கால்பந்தாட்டம் கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது. ஆகவே ஆங்கில மொழி வார்த்தையான "ஃபுட்பால்", "கிரிட்அயர்ன் கால்பந்து" (இந்தப் பெயர் வட அமெரிக்க விளையாட்டுக்களுடன், குறிப்பாக அமெரிக்க கால்பந்து மற்றும் கனடிய கால்பந்து ஆகியவற்றுடன் தொடர்புடையது), ஆஸ்திரேலிய கால்பந்து, கேலிக் கால்பந்து, ரக்பி லீக், ரக்பி யூனியன் மற்றும் தொடர்புடைய விளையாட்டுகளுக்குப் பொருந்துகின்றது. இந்த விளையாட்டுக்கள் உள்ளடக்கியது: பெரும்பாலான நெறிமுறைகளில், வீரர்களின் "ஆப்சைடு" நகர்வை கட்டுப்படுத்துகின்ற விதிகள் உள்ளன, மேலும் வீரர்கள் கண்டிப்பாக கோல்கம்பங்களுக்கிடையே உள்ள "கிராஸ்பாரின்" கீழே அல்லது அதன் ஊடே பந்தைச் செலுத்தி கோலைப் பெறவேண்டும். பல கால்பந்து நெறிமுறைகளுக்குப் பொதுவான பிற அம்சங்களில் உள்ளடங்கியவை: புள்ளிகள் பெரும்பாலும் வீரர்கள் பந்தை கோல் எல்லைக்கோட்டிற்கு கொண்டுசெல்வதன் மூலம் பெறப்படுகின்றது; மேலும் வீரர்கள் "மார்க் எடுத்த பின்னர் அல்லது பேர் கேட்ச் செய்த பின்னர்" அவர்கள் "ப்ரீ கிக்" கைப் பெறுகின்றனர். பண்டைய காலம் தொட்டு, உலகம் முழுவதும் மக்கள் பந்தை உதைத்தல் அல்லது கொண்டு செல்லுதல் போன்ற செயல்பாடுகளைக் கொண்டு விளையாடி இருக்கின்றனர். இருந்தாலும் கால்பந்தின் பெரும்பாலான நவீன நெறிமுறைகள் அவற்றின் பிறப்பிடமான இங்கிலாந்தில் தோன்றியவை. "football" (அல்லது "foot ball") என்ற வார்த்தையானது காலால் பந்தை உதைக்கும் செயலால் பிறந்தது என்று பெரும்பாலும் நம்பப்படுகையில், அந்த கால்பந்து (football) என்ற வார்த்தையானது உண்மையில் இடைக்கால ஐரோப்பாவில் "கால்களைக் கொண்டு" விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுக்களைக் குறித்தது என்ற எதிர் விளக்கமும் உள்ளது. இந்த விளையாட்டுக்கள், உயர்குடி மக்களால் பெரும்பாலும் விளையாடப்படும் குதிரை சவாரி விளையாட்டுக்களை எதிர்ப்பதற்காக வழக்கமாக உழவர்களால் விளையாடப்பட்டன. இருப்பினும் இந்த விளக்கத்திற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை, கால்பந்து என்ற வார்த்தையானது எப்போது காலில் விளையாடும் பல்வேறு விளையாட்டுக்களைக் குறிக்கின்றதேயன்றி, அது பந்தை உதைக்கும் தன்மையை உள்ளடக்கியனவற்றை மட்டுமே அவ்வாறு குறிப்பிடுவதில்லை. பல வகைளில், கால்பந்து (football) என்ற வார்த்தை குறிப்பாக பந்தை உதைத்துத் தள்ளுவதைத் தடைச் செய்த விளையாட்டுக்களுக்கும் பொருந்துகின்றது. "இந்த நெறிமுறைகள் பொதுவான ஆப்சைடு விதிமுறையைக் கொண்டிருக்கவில்லை, மேலும்,தேவையென்னவெனில் ஓடிக்கொண்டிருக்கும் போது பந்தை பவுன்ஸ் அல்லது சோலோ (டோய்-கிக்) மூலமாக , பந்தை தூக்கியெறிதலுக்குப் பதிலாக பந்தைக் குத்தியோ அல்லது தட்டியோ கைமாற்றுதல் செய்வது மற்றும் பிற மரபுகளைக் கொண்டிருக்கின்றன." இங்கிலாந்து பொது (தன்னாட்சி) பள்ளிகளில் இன்னமும் விளையாடப்படும் விளையாட்டுக்கள்: கால்பந்து சர்வதேச ரக்பி கால்பந்துச் சங்கம் (IRFB) 1886 இல் நிறுவப்பட்டது, ஆனால் பிளவுகள் நெறிமுறையினால் வெளிப்படத் தொடங்கிவிட்டன. தொழில் முறையானது கால்பந்தின் பல்வேறு நெறிமுறைகளின் பக்கம் மெதுவாகச்சாயத் தொடங்கின. 1890களில் இங்கிலாந்தில் நீண்டகாலம் நிலைத்த ரக்பி கால்பந்து யூனியன்,"தொழில்முறை" வீரர்கள் மீது தடைவிதித்ததானது பகுதி ரீதியிலான பதற்றத்தை ரக்பி கால்பந்தில் ஏற்படுத்தியது. வடக்கு இங்கிலாந்தில் பெரும்பாலான வீரர்கள் தொழிலாளர் வர்க்கமாக இருந்தனர் மேலும் அவர்கள் ரயில், பயணம் விளையாட்டு மற்றும் காயத்திலிருந்து விடுபடுவதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.பத்து ஆண்டுகள் முன்னதாக வடக்கு இங்கிலாந்தில் சாக்கர் விளையாட்டில் நிகழ்ந்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, ஆனால் RFU இல் அதிகாரிகள் மிகுவும் வேறுபட்டு நடந்து கொண்டனர், வடக்கு இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்க ஆதரவைத் தனிமைப்படுத்த முயற்சிக்கப்பட்டது. 1895 இல், ரக்பி விளையாட்டினால் ஏற்படும் சம்பளம் இழப்பை ஈடுகட்ட, வீரர்களுக்கு அவர்கள் வேலையைவிட்டு வந்ததற்காக வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான சர்ச்சையினைத் தொடர்ந்து, வடக்கத்திய கிளப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு ரக்பி கால்பந்து யூனியன் (NRFU) என்ற அமைப்பை உருவாக்க ஹடர்ஸ்பீல்டில் கூடினர். புதிய அமைப்பு தொடக்கத்தில் பல்வேறு வகையான வீரர்கள் சம்பள மாற்றுக்களை மட்டுமே அனுமதித்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளில் NRFU வீரர்கள் சம்பளம் பெறமுடியும், ஆனால் அவர்கள் விளையாட்டு அல்லாமல் வேறு இடத்தில் பணிபுரிய வேண்டும். தொழில்முறை லீக்கின் தேவைகள் தூண்டியதால் ரக்பி சிறந்த "பார்வையாளர்" விளையாட்டாக மாறியது. சில ஆண்டுகளில் NRFU விதிகள் RFU இலிருந்து வேறுபடத் தொடங்கின, அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது "லைன்-அவுட்" ரத்துச் செய்யப்பட்டதாகும். இது "ரக்" ஆனது "பிளே-த-பால் ரக்" கொண்டு ஈடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இருந்தது, இது மார்க்கரில் டேக்ளர் மற்றும் எதிர்த்து விளையாடும் வீரர் ஆகியோரிடையே இரண்டு வீரர் ரக் போட்டியை அனுமதித்தது. ஒருமுறை பந்தைக் கொண்டு வருபவரை வைத்து "மௌல்கள்" நிறுத்தப்பட்டன, அவற்றுக்குப் பதிலாக பிளே-த பால்-ரக் பதிலீடு செய்யப்பட்டிருக்கின்றன. NRFU இன் வேறுபட்ட லன்காஷையர் மற்றும் யார்க்‌ஷையர் போட்டிகள் 1901 இல் இணைக்கப்பட்டு "வடக்கு ரக்பி லீக்" உருவானது, இங்கிலாந்தில் ரக்பி லீக் என்ற பெயர் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் RFU வடிவ ரக்பியானது, IRFB உடன் இணைந்த தேசிய கூட்டமைப்பின் மீதமிருந்த கிளப்களினால் விளையாடப்பட்டது, பின்னர் அது ரக்பி யூனியன் என்று மாறியது. உலகளாவிய சங்கக் கால்பந்துக்கான ஒற்றை அமைப்புத் தேவையானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சர்வதேச பந்தைய ஆட்ட ஏற்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் வெளிப்படையானது. இங்கிலீஷ் கால்பந்து சங்கக் சர்வதேச அமைப்பை உருவாக்குதல் தொடர்பான பல விவாதங்களை முன்னெடுத்தது, ஆனால் அவை எந்த முன்னேற்றத்தையும் உருவாக்காமல் முடிந்தது. இது சர்வதேச சங்கத்தை அமைக்க பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள சங்கங்களின் மீது அப்பொறுப்பு வீழ்ந்தது. "Fédération Internationale de Football Association" (FIFA) என்ற அமைப்பு பாரிஸில் மே 21, 1904 அன்று நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக ராபர்ட் கியூரின் இருந்தார். பிரெஞ்சு பெயரான இதுவும் அதன் சுருக்கப் பெயரும் பிரெஞ்சு பேசாத நாடுகளிலும் அப்படியே உள்ளது. ரக்பி மற்றும் அமெரிக்க கால்பந்து இரண்டின் வடிவங்களும், அந்நேரத்தில் ஆபத்தான காயங்களுக்காகவும் அதேபோன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களின் சாவுக்காகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. U.S.A. இல் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இது தேசிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் பல கல்லூரிகளில் அமெரிக்க கால்பந்து தடைசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1905–06 இல் 19 கல்லூரிகளால் முக்கியமான கூட்டம் நடத்தப்பட்டது. இது அதிபர் தியோடர் ரூஸ்வெல்டின் விருப்பத்தின் பேரில் பொதுவாக நடைபெற்றது. அவர் விளையாட்டின் ஆர்வலராக இருந்தார், ஆனால் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஊனங்களைக் குறைக்க விதிகளை மாற்றி அமைக்கும் வரை அதைத் தடை செய்வதாக அச்சுறுத்தினார். இந்தச் சந்திப்புகள் இப்பொழுது தேசிய கல்லூரிகள் தடகளக் கூட்டமைப்பின் மூலமாகக் கருதப்படுகின்றன. விளையாட்டுக் களத்தினை அகலப்படுத்துதல் ஒரு மாற்றமாக முன்மொழியப்பட்டது. இருப்பினும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு கான்கிரீட் ஸ்டேடியத்தை கட்டியது, எனவே "பார்வேடு பாஸ்" சட்டமாக்கலை முன்மொழிவதற்குப் பதிலாக அகலமாக்கத்தை எதிர்த்தது. அந்தக் கூட்டத்தின் அறிக்கையானது கையாளுதலில் பல கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி ரக்பியிலிருந்து விலகிச் செல்லும்படியான மேலும் இரண்டு வேறுபாடுகள்: பார்வேடு பாஸ் மற்றும் "நெருக்கிக் கொண்டு விளையாடுவது" தடை. இந்த மாற்றங்கள் உடனடியாக விருப்பப்பட்ட பலன் தரவில்லை, மேலும் 1908 இல் மட்டும் 33 அமெரிக்க கால்பந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் சாவு எண்ணிக்கையும் காயங்களும் மெதுவாகக் குறைந்தன. 1906 இல் ரக்பி யூனியனிலிருந்து ரக்பி லீக் விதிகள் குறிப்பிடத்தக்க முறையில் விலகி, அணியின் வீரர்கள் என்ணிக்கை 15 இலிருந்து 13 ஆக குறைந்தது. 1907 இல், நியூசிலாந்து தொழில்முறை ரக்பி அணி ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்து, மிகுந்த வரவேற்பைப் பெற்றது, மேலும் அடுத்த ஆண்டில் தொழில்முறை ரக்பி லீக்குகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டன. இருப்பினும், தொழில்முறை விளையாட்டுகளின் விதிமுறைகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கு வேறுபடுகின்றது, மேலும் ஒவ்வொரு சர்வதேச போட்டிக்குமான சரியான விதிகளை நிர்ணயிக்க பல்வேறு தேசிய அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை தேவைப்பட்டது. இந்த சூழ்நிலை 1948 வரை தொடர்ந்த போது, பிரெஞ்சு லீக்கின் தூண்டுதலினால் போர்டியாக்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் ரக்பி லீக் இண்டர்நேஷனல் பெடரேஷன் (RLIF) அமைக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் போது விதிமுறைகள் மேலும் மாற்றப்பட்டன. 1966 இல், ரக்பி லீக் அதிகாரிகள் அமெரிக்க கால்பந்தின் "டவுன்ஸ் " கருத்தை எடுத்துக்கொண்டனர்: ஒரு அணி பந்தை நான்கு தடுப்பாட்டங்களுக்கு மேல் மறுபடியும் வைத்திருக்க முடியாது. அதிகபட்ச தடுப்பாட்டங்களின் எண்ணிக்கை பின்னர் ஆறாக (1971 இல்) அதிகரிக்கப்பட்டது, மேலும் ரக்பி லீக்கில் இது "சிக்ஸ் தடுப்பாட்ட விதி" என்று அறியப்பட்டது. 1990களின் தொடக்கத்தில் முழுநேர தொழில்முறை வீரர்கள் மற்றும் விளையாட்டின் தொடர்ச்சியான வேகம் ஆகியவற்றால், இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து மீட்டர் ஆப்-சைடு தூரம் 10 மீட்டர்களாக மாறியது, பிற மாற்றங்களுடன், மாற்றப்பட்ட விதியானது பல்வேறு இடை மாற்ற விதிகளால் அதன் இடத்தில் நிரப்பப்பட்டது. ரக்பி யூனியனின் விதிகளும் 20 ஆம் நூற்றாண்டின் போது குறிப்பிடும்படியாக மாற்றப்பட்டன. குறிப்பாக, "மார்க்" லிருந்து கோல்கள் போடுவது நீக்கப்பட்டது, "22 மீட்டர்" எல்லைக்கு வெளியே இருந்து நேரடியாக "தொடும்படியான" கிக்குகள் தண்டிக்கப்பட்டன, ஒரு முடிவுறாத "ரக்" அல்லது "மௌல்" லை யார் வைத்திருந்தனர் என்பதைக் கண்டறிய புதிய விதிகள் இடப்பட்டன மேலும் "லைன் அவுட்களிலிருந்து" வீரர்கள் பந்தை எறிவது சட்டமாக்கப்பட்டது. 1995 இல் ரக்பி யூனியன், தொழில்முறை வீரர்களை அனுமதிக்கும் "திறந்த" விளையாட்டானது. இருப்பினும் இரண்டு நெறிமுறைகளுக்கும் இடையேயான துவக்கக்கால சர்ச்சை மறைந்துவிட்டது — ரக்பி கால்பந்தின் இரண்டு வடிவங்களின் அதிகாரிகள் மறு இணைப்பின் சாத்தியக்கூறுகளை சில நேரங்களில் குறிப்பிட்டனர் — இரண்டு நெறிமுறைகளின் விதிகள் மற்றும் அவற்றின் கலாச்சாரம் முன் அறியக்கூடிய எதிர்காலம் வரை அப்படியொரு நிகழ்வு ஏற்படாத அளவில் விலகியிருந்தன. ""கால்பந்து" " என்ற வார்த்தையானது மேலே விவரிக்கப்பட்ட ஏதேனும் ஒன்றைக் குறிப்பதானது ஒரு குறிப்பிட்ட விளையாட்டைக் குறிப்பிடுவதில் பயன்படுகின்றது. இதனால், "கால்பந்து" என்ற வார்த்தையின் மீது மிகவும் நட்பு ரீதியிலான சர்சைகள் நிகழுகின்றன, முக்கியமாக அது ஆங்கிலம் பேசும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும், "கால்பந்து" என்ற வார்த்தையானது அந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படுகின்ற கால்பந்து நெறிமுறையைக் குறிக்கப் பயன்படுகின்றது. எனவே மிகச்சரியாகக் கூறினால் "கால்பந்து" என்ற வார்த்தையானது வழக்கமாக ஒருவர் கூறும் இடத்தைச் சார்ந்து பொருள்படுகின்றது. "சாக்கர்" என்பது அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சங்கக் கால்பந்திற்கான பொதுவான வரையரையாக இருக்கின்றது, அங்கு பிற கால்பந்தின் நெறிமுறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் "சாக்கர்" (அல்லது "சாக்கர் கால்பந்து") என்ற பெயர் உண்மையில் "அசோசியேஷன்" என்ற வார்த்தையின் சுருக்கப்பெயரின் வழக்காகும் மேலும் FIFA உடன் இணைந்துள்ள 45 நாடுகளில் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ அல்லது முதன்மை மொழியாக இருந்தாலும், மூன்று நாடுகளில் (கனடா, சமோவா மற்றும் அமெரிக்கா) மட்டுமே அவற்றின் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பெயர்களில் "சாக்கர்" என்பதைப் பயன்படுத்துகின்றன. எஞ்சியிருப்பவை கால்பந்து என்பதைப் பயன்படுத்துகின்றன (இருப்பினும் சமோவான் பெடரேஷன் இயல்பாக இரண்டையும் பயன்படுத்துகின்றது மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சாக்கர் அமைப்புகளால் "கால்பந்து" என்ற வார்த்தைப் பயன்பாடு சமீபத்திய மாற்றமாகும்). பொதுவாக இன்று உலகம் முழுவதிலும் "கால்பந்து" என்ற வார்த்தை மற்றும் (ஸ்பானிஷில் "fútbol" மற்றும் ஜெர்மனில் "Fußball/Fussball" போன்று) அதன் நேரடி மொழியாக்கம் ஆகியவை சங்கக் கால்பந்துக்கான பெயராகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிராங்கோபோன் க்யூபெக்கில்,கனடிய கால்பந்து மிகவும் பிரபலமானது, சங்கக்கால்பந்து விளையாட்டு "லீ சாக்கர்" என்றும் கனடிய நெறிமுறையானது "லீ கால்பந்து" எனவும் அறியப்படுகின்றன. டென்னிசு டென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். இப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும். மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகளப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும் எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு "கேம்" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு "கேம்களை" வெற்றிபெற்றவர் ஒரு "செட்" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார். ஒரு கேம் என்பது பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே "(love)லவ்", "பதினைந்து", "முப்பது" மற்றும் "நாற்பது" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் "நாற்பது நாற்பது" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக "டியுஸ் (deuce)" என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு "சாதகமானது (advantage)" ஆகும். ஒரு டென்னிஸ் விளையாட்டின் புள்ளிகள் கணக்கை முதன்முதலில் பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரரின் புள்ளிகள் மூலம் வாசிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடுகையில், ஒவ்வொரு புள்ளிகளுக்கும் இடையில், நாற்காலி நடுவர் புள்ளியை (எ.கா., "பதினைந்து-லவ்") என்று அழைக்கிறார். ஒரு விளையாட்டின் முடிவில், நாற்காலி நடுவர் ஆட்டதின் ஒட்டுமொத்த புள்ளிகளையும் மற்றும் வெற்றிபெற்ற வீரரை பற்றியும் அறிவிக்கிறார். ஒரு செட்(Set) அல்லது தொகுப்பு என்பது பல கேம்களின் தொடர் வரிசையாகும்.இந்த தொடர் கேம்களில், சேவை (பந்தை அடித்து) ஆரம்பிக்கும் வாய்ப்பு இரு வீரர்களுக்கும் கேம்களுக்கு இடையே மாறி வரும். கேம்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை (புள்ளியை) எட்டும்போது முடிவடையும். ஒரு போட்டிப்புள்ளி (Match score) என்பது பல செட்டுகளின் தொகுப்பாகும். போட்டியின் முடிவானது சிறந்த மூன்று அல்லது ஐந்து "செட்களின்" அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. பொழுதுபோக்கிற்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரம் அல்லது அவர்களின் சக்தியை பொறுத்து, எத்தனை செட் விளையாடவது என்பதை ஒப்புக்கொள்ளவார்கள். தொழில்முறை விளையாட்டில், ஆண்கள் சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், டேவிஸ் கோப்பை, மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகள் இறுதிச் சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் மற்றும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்டதாக மற்ற போட்டிகளில் விளையாடுவார்கள்,பெண்கள் அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளை விளையாடுகின்றனர். ஒரு சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளில் இரண்டு செட் வென்ற முதலாவது வீரர், அல்லது சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டிகளில் ஐந்து-ல் மூன்று செட் வென்ற முதலாவது வீரர், போட்டியில் வெற்றி பெறுவார். ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், ஒலிம்பிக் விளையாட்டுகள், டேவிஸ் கோப்பை (2015 வரை) மற்றும் பெட் கோப்பை ஆகியவைகளில் டை-பிரேக்கற்கள் விளையாடப்படவில்லை. இந்த நிகழ்வில், ஒரு வீரர் இரு கேம்கள் முன்னணிக்கு வரும் வரை, செட் காலவரையின்றி விளையாடப்படும். கேம் புள்ளி என்பது ஆட்டத்தில் முன்னணியில் உள்ள வீரர் விளையாட்டை வெல்ல ஒரே ஒரு புள்ளியை தேவைபடும்போது டென்னிஸ் விளையாட்டில் இதை ஒரு கேம் புள்ளி என்று அழைக்கின்றனர். இந்த சொற்களானது செட் (செட் புள்ளி), போட்டிகள் (போட்டிப் புள்ளி) மற்றும் சாம்பியன்ஷிப் (சாம்பியன்ஷிப் புள்ளி) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது. ஆடும் தளம் 23.8 மீ (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் புல்வெளி, களிமண், செம்மண், கற்காறை (கான்கிரீட்), மரம்த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும். டென்னிசுப் பந்து உள்புறம் காலியாக (உள்ளீடு அற்றதாக) உள்ள ரப்பர் பந்து. இதன் மேல் மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும். பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் வரை இருக்கலாம். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளை கோடு போட்ட பந்துகள் பொதுவாக பயன்படுத்தப் படும். சல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இஸ்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும். முந்தய காலகட்டங்களில் மட்டைகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பலவகை உலோகங்கள்,"கார்பன் கிராபைட்",டைட்டானியம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது. போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை. மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது. இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார். மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும், விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும். காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் காற்பந்து உலகக் கோப்பைக்கான வெற்றிக் கிண்ணமானது பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பினரிடையே நடைபெறும் உலகளவிலான காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் ஒரு தங்கத்தினாலான வெற்றிக் கிண்ணமாகும். 1930 இல் உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் ஆரம்பித்த காலம்தொட்டு 1970 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்டு வந்த வெற்றிக் கிண்ணம் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை (Jules Rimet Trophy) என அழைக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. 1983-ஆம் ஆண்டில் திருடுபோன இக்கோப்பை மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்சானிகா' வடிவமைத்த பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின், காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் (FIFA World Cup Trophy) தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும். இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும். தற்போது இக்கோப்பையை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்ற செருமானிய அணியினர் ஆவர். இந்த உலகக் கோப்பையானது 1929இல் வடிவமைக்கப்பட்டது. கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும் வெற்றி தேவதையான நைக், சிறகுகளை விரித்தபடி, தன் இரு கைகளைத் தூக்கியிருப்பதுபோல, வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சிலையே இக்கோப்பையாகும். இதனைத் தாங்கும் பீடமானது விலை மதிப்புமிக்க நிலப் படிகக் கற் பாறையால் செதுக்கப்பட்டிருந்தது. 1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு "ஜூல்ஸ் ரிமெட் கோப்பை" வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக "உலகக்கோப்பை" (அ) "கோபா டு முன்டே" என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டு திரும்பக் கிடைக்காமல் போனது. 1974 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை முன்னிட்டு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடை கொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான "மாலக்சைட்" அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும். ஜூல்ஸ் ரிமெட் கோப்பை உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் மாரத்தான் மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீட்டர் ஆகும்.இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மாரத்தான் போட்டிகளும் உடன் நடைபெறும். கி.மு. 490ல் நடந்த மாரத்தான் போரில் (Battle of Marathon) பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு, இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிச் செத்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. Herodotus என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் ஆவார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி. பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" "On the Glory of Athens" என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்புப்படி மாரத்தான் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும். மாரத்தான் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில், மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு தீர்மானிக்கப்படவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே தடத்தில் ஓடுகிறார்கள் என்பது தான் முக்கியமாக கருதப்பட்டது. தொடக்க கால ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு, போட்டி நடக்கும் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தது. தற்போது உறுதியாக கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டு International Amateur Athletic Federation (IAAF) என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. தடை தாண்டும் ஓட்டம் தடை தாண்டும் ஓட்டம் என்பது தடைகளைத் தாண்டி ஓடும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும். எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை. தடைதாண்டி ஓடுதலில் குறுந்தூர ஓட்டம், நெடுந்தூர ஓட்டம் என இருவகையுண்டு. குறுந்தூரத் தடைதாண்டலில், நெடுந்தூரத் தடை தாண்டலில் இரு பாலாருக்குமான தூரம் 400 மீட்டர் ஆகும். தொடர் ஓட்டம் தொடர் ஓட்டம் (அஞ்சல் ஓட்டம்) என்பது ஓர் அணியினர் பொதுவாக ஒரு பேட்டனைக் (Baton) கைமாற்றி ஓடும் ஒரு போட்டியாகும். இதனை ஒத்த நீச்சல் போட்டிகளும் (தொடர் நீச்சல்) உள்ளன. தொடர் ஓட்டத்தில் பல வகைகள் உள்ளன. 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பேட்டனை கை மாற்றிக் கொள்வதற்கான தூரம் 20 மீட்டர் (22 யார்). நடைப்போட்டி நடைப்போட்டி அல்லது நடையோட்டம் ஒரு தட கள விளையாட்டுப் போட்டி. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடந்து அதி வேகமாக யார் சென்று முடிப்பதுதான் நடைப்போட்டி. நடக்கும் பொழுது எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடிக்கும் கால் கணநேரம் நேராக நிற்க வேண்டும். நடைப்போட்டி பொதுவாக 10கி.மீ. முதல் 50 கி.மீ தூரம் வரை நடைபெறும். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். ஸ்டீபிள்சேஸ் ஸ்டீப்பிள்சேஸ் ("Steeplechase") என்பது குதிரை ஓட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். குதிரைகளைச் சரியாக வழிச்செலுத்தி பலவகைத் தடைகளைத் தாண்டச்செய்யும் இந்த விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் தூரப்போட்டி 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான தடைகள் இருக்கும். நீர்நிலையைத் தாண்டிக் குதிக்கும் தடை ஓடுகளத்திற்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருக்கும். தடகள விளையாட்டரங்கு தடகள விளையாட்டரங்கு (Athlectic Stadium) : 100 மீட்டர் முதல் 10,000 மீட்டர் முதலான ஓட்டப் பந்தயங்கள், ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவ தடத்தில் (Track) நடைபெறும். இந்த தடத்தின் நடுவில் களப்போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவை நடைபெறும். தடத்தை சுற்றிலும் சாலையில் ஓடும் மாரத்தான் மற்றும் நடை போட்டிகள் விளையாட்டரங்கில் துவங்கி, சாலையில் தொடர்ந்து மீண்டும் விளையாட்டரங்கிலேயே முடிகிறது. தற்போது பன்னாட்டு போட்டிகள் எந்த பருவநிலையிலும் உபயோகப்படுத்தக்கூடிய செயற்கைத்தரை (synthetic) ஓடுகளங்களில் நடைபெறுகின்றன. ஓடுகளம் எட்டு வரிசைகள் கொண்ட ஒரு சுற்றுக்கு 400 மீட்டர் தூரம் உடைய நீள்வட்டப் பாதை. 100 மீட்டர், 110 மீட்டர் பந்தயங்கள் நேர்கோட்டிலேயே நடைபெற ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். எல்லா பந்தயங்களுக்கும் முடிவுறும் வெற்றிக் கோடு (Finishing line) ஓரே இடத்தில் வருமாறு போட்டிகள் நடத்தப்படும். பணம் பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும். பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக "பரிமாற்றத்திற்கான ஊடகம்", "கணக்கிற்கான அலகு" மற்றும் "சேமிப்பு மதிப்பு" என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது. ஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன. பண்டமாற்று முறையில் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெறுமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் சம்பளமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.) பண்டமாற்று போன்ற செயற்பாடுகள் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளபோதிலும், எந்தவொரு சமூகமோ பொருளியல் அமைப்போ பண்டமாற்றை மட்டும் பயன்படுத்தியதற்கு சான்று எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மாற்றாக, நாணயங்கள் ஏற்படாத சமூகங்களில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கொடையாகவோ அல்லது கடனாகவோ தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். பண்டமாற்று முறைகள் பெரும்பாலும் முழுவதும் தெரியாதவர்களிடமோ எதிரிகளிடமோதான் மேற்கொள்ளப்பட்டன. பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாறப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. பல பண்பாடுகளிலும் பண்டமாற்றிற்கு மாற்றாக பண்டமதிப்பு பணம் செயற்பாட்டிற்கு வந்தது. வாற்கோதுமையை எடையிட பயன்படுத்தப்பட்ட செகல் என்ற அலகு பணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த அலகு முதன்முதலாக கிமு 3000 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காக்கள்,ஆசியா,ஆபிரிக்கா மற்றும் ஆத்திரேலிய சமூகங்கள் சோழிகளைப் பணமாகப் பயன்படுத்தினர். தற்கால அறிஞர்கள் முதல் உலோக நாணயம் கிமு 650–600களில் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் கண்டறியப்படவில்லை. சங்க காலம் தொடங்கி கிடைத்துள்ள நாணயங்களில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவலன் பொட்டல் எனுமிடத்தில் சங்க காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்க நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெறுமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெறுமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது. தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யப்படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு தங்க மாற்று என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது. இதனால் பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பாலான பணம் வெளியிட படுவது பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை (Money As Debt.) ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான். உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன் ஆகும். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன்கள் ஆகும். நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கப்படும் முதலீட்டு வங்கிகள் (investment bank),(Shadow banking System) ஹெட்ஜ் முத்லீடு, வங்கி சாரா பொருளாதார அமைப்புகள் (Non banking financial institutions) மூலமும் பணத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் பணத்திற்க்கும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்திற்க்காகவும் வைப்பு தொகை எதுவும் வைக்க தேவையில்லை. கடன் கொடுத்தபின்னர் இவர்கள் சந்திக்கும் அபாயம் அதிகம் ஆகும். ஆனால் வங்கியானது கடன் கொடுக்கும்போது இந்த நிழல் வங்கி அமைப்புகளிடமே பணம் வசூலித்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கி கடன்பெறுபவரின் தரம் பற்றி கவலைப்படாமல் கடன் கொடுக்கும். தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க -முயற்சி செய்வது போல் உள்ளது. MV=PQ Money M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது. P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது. பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான். உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது. மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும். Money இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது. இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது. மேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது. பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது இழப்பு உண்டாகிறது. விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் பின்னர் நட்டம் அடைவது இயற்கை. ரக்சா பந்தன் ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும். வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம். மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது. ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப் பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா. கிமு 326 ல் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து இந்தியாவின் ஏறக்குறைய வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப் பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார். இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப் படுவதற்கு கதை கதையாக சொல்லிக்கொண்டு போகலாம். தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும். மரியா மாண்ட்டிசோரி மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார். இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child" கின்டர்கார்ட்டின் கின்டர்கார்ட்டின் ("Kindergarten") என்பது இடாய்ச்சு மொழிச் சொல், இதற்கு "குழந்தைகளின் தோட்டம்" என்று பொருள். பிரெட்ரிக் புரோபல் என்ற செருமானிய கல்வியாளருக்கு குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவர் மற்ற ஆசிரியர்களைத் தங்கள் குழந்தைப் பருவம் குறித்தும் அது அமைந்திருக்க வேண்டிய விதம் குறித்தும் சிந்திக்குமாறு தூண்டினார். அவர் 1837ம் ஆண்டு 'ப்ளாக்கென்பர்க்' நகரில் கிண்டர்கார்டென்னைத் துவக்கினார். பாடத்திட்டத்தில் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள், பரிசுகள், செயல்பாடுகள் ஆகியவை இருந்தன. பாடல்களும், கதைகளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றலை ஊக்குவித்து, கலாசார மதிப்புகள், பழங்கால வீரர்களையும் அறிமுகப்படுத்தும். விளையாட்டுக்கள் குழந்தைகளின் சமுதாய மற்றும் உடல் திறமைகளையும், மற்றவரோடு இனைந்து செயல்படும் திறமையையும் வளர்க்கும். ப்ரோபெல்லின் பரிசுகள் உருண்டை, கனசதுரம், உருளை போன்ற வடிவங்களை அறிமுகப்படுத்தும். களிமண், மணல், அட்டை, குச்சிகள் ஆகியவற்றை வைத்து கோட்டைகள், நகரங்கள், மலைகள் உருவாக்குவார்கள். ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்களுடன் கிண்டர்கார்டெனையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் மூலம் அமெரிக்கக் கல்வி முறையில் இது ஒரு பகுதியாகி விட்டது. அங்கிருந்து மற்ற நாடுகளிலும் ஆங்கில பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. சிட்னி சிட்னி ("Sydney") அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார். குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடிகள் சிட்னி பகுதியில் வாழ்ந்து வருவதாக வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1788 இல் முதலாவது கப்பல் இங்கு வந்துறங்கிய போது 4000 முதல் 8000 வரையான பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர்கள் இவர்களை ஈயோரா என அழைத்தனர். இங்கு முக்கியமாக மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். அவை தாருக், தரவால் மற்றும் குரிங்காய் என்பனவாகும். இவர்கள் தனித்தனியே தமக்கென தனியான பிரதேசங்களைக் கொண்டிருந்தனர். 1770இல் பிரித்தானிய கடற்படைத் தளபதி ஜேம்ஸ் குக் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினான். இங்குதான் அவன் குவேகல் என்ற பழங்குடியினருடன் முதன்முதலாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். பிரித்தானிய அரசின் ஆணைக்கமைய ஆர்தர் பிலிப் இங்கு பிரித்தானியக் குற்றவாளிகளைக் குடியேற்றினார். இவர்கள் 11 கப்பல்களில் 1788, ஜனவரி 20 இல் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினர். இவர்கள் வந்திறங்கிய இடம் தரக்குறைவான மண்ணையும், குறைந்தளவு குடிநீரையும் கொண்டிருந்ததால் குடியேறுவதற்குத் தகுதியானதாக இருக்கவில்லை. இதனால் பிலிப் மேலும் மேற்கே சென்று ஜாக்சன் துறையின் சிட்னி கோவ் என்ற இடத்தில் ஜனவரி 26 இல் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார். சிட்னியின் நகரப்பிரதேசம், கிழக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே நீல மலைகள், வடக்கே ஹோக்ஸ்பரி ஆறு மற்றும் தெற்கே ரோயல் தேசிய பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சிட்னி பெருநகரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பொண்டாய் கடற்கரை உட்பட சுமார் 70 துறைமுகங்கள் அல்லது கடற்கரைப்பிர்தேசங்கள் உள்ளன. 2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டத்தட்ட புதிதாய் அமைக்கப்பட்டன. ஏராளமான புதிய உணவு விடுதிகள், குடியிருப்பு மனைகள், நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், நான்கு கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு. ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுகப் பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் சிட்னி ஓப்பரா மாளிகை ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும். நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் நகர மண்டபம் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய அரும்பொருட் காட்சியகம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது. ஒப்பரா மாளிகை அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம். நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்ப் பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. 1870 ஆம் ஆண்டில் பொதுப் பாடசாலைகள் நிறுவப்பட்டத்திலிருந்த காலத்திலிருந்தே சிட்னியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நகரில் வசிக்கும் அதிகமானோர் கல்வி கற்றோராவர். 90% ஆனோர் பாடசாலைக் கல்வி கற்றுள்ளதுடன், 57% ஆனோர் உயர்தரக் கல்வியையும் கற்றுள்ளனர். சிட்னியில் ஆஸ்திரேலியாவின் சில முதன்மைக் கல்வி மையங்கள் அமைந்துளன. 1850இல் நிறுவப்பட்ட சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படுகின்றது. சிட்னியில் அமைந்துள்ள மற்ற அரசு பல்கலைக்கழகங்கள் - சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், மக்குவாரி பல்கலைக்கழகம், மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். சிட்னியில் சிறிய வளாகங்கள் வைத்திருக்கும் மற்ற பல்கலைக்கழகங்கள் நொற்ரே டேம் பல்கலைக்கழகம், வல்லன்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகும். சிட்னியில் அரசாங்க, கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. 1788 ஆம் ஆண்டில் சிட்னியின் சனத்தொகை 1000த்தை விடவும் குறைவானதாகும். குற்றவாளிகள் இங்கு நாடுகடத்தப்பட்டதனால் பத்து வருடங்களில், மக்கள் தொகை மூன்று மடங்காக அதாவது 2,953 என அதிகரித்தது. ஒவ்வொரு தசாப்தங்களுக்குமாக 1961 வரை 250,000 ஆக சனத்தொகை அதிகரித்துவந்தது. 2011 ஆம் ஆண்டில், சிட்னியின் மக்கள் தொகை 4,391,674 ஆகும். இச்சனத்தொகை 2061 இல் 8 அல்லது 8.5 மில்லியனாக திகரிக்கும் என்று கணிகப்பட்டது.ref> எனினும் 2053 இல் அதிக மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலிய நகரமான இதனை மெல்பேர்ன் முந்தும் என ஆஸ்திரேலிய புள்ளிவிபரச் சபை அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் அதிக அடர்த்தியான் நான்கு புறநகர்களும் சிட்னியிலேயே அமைந்துள்ளன. இவற்றில் ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கும் 13,000 உறைவிடங்கள் அமைந்துள்ளன. சிட்னி வாசி ஒருவரின் சராசரி வயது 36 ஆகும். 12.9% ஆனோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஆவர். 49.7% ஆனோர் மணமுடித்தோராயும், 34.7% ஆனோர் மணம் முடிக்காதோராயும் உள்ளனர். 48.9% தம்பதியினருக்கு குழந்தைகள் உள்ளதுடன் 33.5% ஆனோருக்கு குழந்தைகள் கிடையாது. 32.5% ஆன மக்கள் ஆங்கிலம் அல்லாத அரபு மொழி, மன்டரின், கண்டோனீயம், வியட்நாமிஸ், கிரேக்கம் ஆகிய பிற மொழிகளையும் பேசி வருகின்றனர். பழங்குடி மரபைச் சேர்ந்த 54,746 பேர் 2011இல் சிட்னியில் வசித்து வந்துள்ளனர். 1840 தொடக்கம் 1930 வரையான காலப்பகுதியில் சிட்னிக்கு வந்தோர் பெரும்பாலும் பிரித்தானியரும் ஐரிஷினரும், சீனரும் ஆவர். இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல இனக்குழுவினர் சிட்னியில் குடியேறினர். இடாய்ச்சு மக்கள், இலங்கையர், இந்தியர், அஸ்ரியர், துருக்கியர், தாய் நாட்டவர், உருசியர், வியட்நாமியர், பிலிப்பினோ, கொரியர்], கிரேக்கர், லெபனாசியர், இத்தாயர், யூதர், செக் மக்கள், போலந்து நாட்டினர், செருமானியர், சேர்பியர் ஆகியோரே இவ்வாறான இனக்குழுவினராவர். காடு மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் "வனம்", "கானகம்", "அடவி", "புறவு", "பொதும்பு" போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. காடுகளை, மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச் சூழல்மண்டலம், பல்வேறு வகையான விலங்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகளின் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. காடு என்று பொதுவாக குறிப்பிட்டாலும், அதற்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட துல்லியமான வரையறைகள் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் காடுகளுக்கு 800 க்கும் அதிகமான வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மரங்கள் இருக்கும் பகுதியை காடு என்று பொதுவாக வரையறுக்கப்பட்டாலும், பல வரையறைகளில் மரங்கள் இல்லாத ஒரு பகுதியாக இருந்தாலும், கடந்த காலத்தில் மரங்கள் இருந்த காரணத்தால், எதிர்காலத்தில் மரங்கள் வளர வாய்ப்பு உள்ள பகுதியாக உள்ளதால், இன்னும் காடாக கருதப்படுகிறது, அல்லது தாவர வகைகளைப் பொருட்படுத்தாமல் சட்டரீதியாக காடு என வகைப்படுத்தப்படுகிறது. பரவலாக காடுக்கான மூன்று வரையறைகள் பயன்பாட்டில் உள்ளன அவை: நிர்வாகம், நில உபயோகம், நிலப்பரப்பு. நிலப்பகுதியின் சட்டபூர்வமான பெயர்கள் நிர்வாக வரையறைகளை அடிப்படையாகக் கொண்டது, பொதுவாக நிலத்தில் வளரும் தாவரங்களுக்கு இதில் சிறிதளவு உறவைக் கொண்டுள்ளன: எந்த விதமான மரங்களும் வளரவில்லை என்றாலும், காடுகளுக்காக சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட நிலம் காடு என வரையறுக்கப்படுகிறது. நிலப் பயன்பாட்டு வரையறைகளே நிலப்பகுதிக்கு முதன்மையான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக, மரங்களை உற்பத்தி செய்வதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் எந்த நிலத்தையும் காடு என வரையறுக்கப்படலாம். அத்தகைய நிலப் பயன்பாட்டு வரையறையின் கீழ், வனப்பகுதிக்கு பயன்படுத்தப்படும் ஒரு பகுதி, அல்லது மரங்களை வெட்டுதல், நோய் அல்லது நெருப்பு ஆகியவற்றால் மரங்கள் அழிக்கப்பட்ட பிராந்தியத்தில் உள்ள பகுதிகள் தற்போதைக்கு மரங்கள் இல்லாதபோதும் காடுகள் எனவும் கருதப்படுகின்றன. நிலப்பரப்பு வரையறைகள், நிலத்தில் வளர்ந்து வரும் தாவரங்களின் வகை மற்றும் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு காடுகள் வரையறுக்கப்படுகின்றன. இந்த வரம்புகள் பொதுவாக ஏராளமாக உள்ள மரங்களின் எண்ணிக்கை (அடர்த்தி), மரத்தின் கீழ், மரத்தின் அடித்தண்டுகள் (அடித்தள பகுதி) குறுக்குவெட்டு நிலத்தில் இருக்கும் நிலப் பகுதியும். அத்தகைய நிலப்பரப்பின் வரையறைகள் மற்றும் நிலத்தின் பரப்பளவில் மரங்கள் வளர்ந்து இருந்தால் மட்டுமே காடு என வரையறுக்கப்படும்.   நிலப் பயன்பாட்டு கையேட்டு வரையறைகளில், காடு மரக்காடு, புன்னிலம் (சவனா) ஆகியவற்றுக்கு இடையில் கணிசமான மாறுபாடுகள் உள்ளன. சில வரையறைகளில், காடுகளின் பரப்பளவில் அதிகப்படியான நெருக்கத்தில் மரங்களை, 60% முதல் 100% வரை உடையதாக இருக்கவேண்டும் எனப்படுகிறது, ஆனால் மரக்காடு, புன்னிலம் போன்றவற்றில் குறைந்த நெருக்கத்தில் மரங்கள் பரவி இருக்கலாம் எனப்படுகிறது. மற்ற வரையறைகளில் புன்னிலத்தை ஒரு தனி வகைக் காடு என கருதுகின்றனர், இந்த நிலப்பரப்பில் 10% க்கும் மேலாக மரங்கள் கொண்ட புல்வெளிகளுடன் கூடிய அனைத்து பகுதிகளும் அடங்கும். மரங்கள் சூழ்ந்து உள்ள சில நிலப்பகுதிகள் சட்டப்பூர்வமாக விவசாய நிலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது, எ. கா. ஆஸ்திரியா வனச் சட்டத்தில், கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு கீழே மரங்கள் வளரும் போது நோர்வே தளிர் தோட்டங்கள் என்று வறையரைக்கப்படுகின்றன. புவியின் முதல் அறியப்பட்ட காடுகள் லேட் டேவோனியன் (ஏறக்குறைய 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஆர்க்கியாபோடெரிஸின் பரிணாம வளர்ச்சியில் தோன்றின. ஆர்க்கியாபோட்டரிஸ் என்பது ஒரு தாவரமாகும், இது மரம் போன்றது மற்றும் பெரணி போன்றது, இதன்  உயரம் 10 மீட்டர் (33 அடி) ஆகும். ஆர்சாயோப்ட்டரிஸ் நிலநடுக்கோட்டிலிருந்து விரைவில் உலகெங்கும் பரவியது. ஆர்கோபொப்டிரிஸ் முதன்மையான காடுகளை உருவாக்கியது, மற்றும் அதன் வேர்கள் மண்ணில் இறங்கி வளர்ந்து அதன் மூலம் மண்ணில் முதல் நிழலை உருவாக்கியது. ஆர்சாயோப்ட்டரிசின் சிதைந்த பாகங்கள், அதன் வனப்பகுதிக்குள் விழுந்தன. வீழ்ச்சியுற்ற பாகங்கள், அங்கிருந்த நிழல், மண்ணில் ஏற்பட்ட கரிமச் சிதைவு போன்றவற்றால் முதல் காடு உருவானது. சிதைந்த கரிம பொருள் நன்னீர் சூழலை மாற்றியது, அதனால் குறைத்து மீன்களுக்கான உணவை அளித்தன. இதனால் நன்னீர் மீன் வளர்ச்சி மேம்பட்டத். பூமியின் உயிர்க்கோளத்தின் மொத்த முதன்மை உற்பத்தித்திறனில் 75% காடுகள் கொண்டிருக்கின்றன, மற்றும் பூமியின் மொத்த உயிரினத்தொகுதியில் 80% ஐ கொண்டிருக்கின்றன. மரங்கள் வளர்ப்பதற்கு தேவையான அனைத்து பகுதிகளிலும் வன சூழலமைப்புகள் காணப்படுகின்றன, காடுகளில் உள்ள மரங்களின் வளர்ச்சியானது காட்டுத்தீ போன்ற இயற்கைக் காரணங்களைத் தவிர, மனிதத் தலையீடுகளாளேயே அதன் சூழலியல் பெரும்பாலும் மாற்றப்படுகிறது. நிலநடுக்கோட்டின் 10 ° வடக்கு மற்றும் தெற்கு நிலப்பரப்புகளில் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளாக உள்ளன, 53 ° N மற்றும் 67 ° N க்கு இடையே உள்ள நிலப்பரப்புகள் தைகா காடுகளைக் கொண்டுள்ளன. ஒரு பொது விதியாக, காடுகளில் பூக்குந் தாவரங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன மேலும் வித்துமூடியிலிகளே மிகுதியாகவும் உள்ளன, இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் சில நேரங்களில் ஒரு சிறிய பரப்பளவில் பல மர இனங்களைக் கொண்டதாக உள்ளன (வெப்பமண்டல மழை மற்றும் மிதமான இலையுதிர் காடுகள் போன்றவை), அல்லது சில இடங்களில் பெரிய பரப்பளவில் சிலவகை மர இனங்களைக் கொண்டதாக (எ.கா., தைகா மற்றும் மான்ட்டேன் காடுகள்) உள்ளன. வனப்பகுதியில் பெரும்பாலும் பல்வேறு விலங்கு மற்றும் தாவர இனங்கள் என உயிரினத்தொகுதி நிறைந்தவையாக பிற நிலப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது உள்ளன. காடுகள் பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல் பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும் அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரை இருக்கும். மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்கு அடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும். ஐந்தாவதான நிலத்தளம் புல், பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே "செடித்தளம்", "பூண்டுத்தளம்" எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்ட ஒரு தளமும் இருப்பதுண்டு. வளம் மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத் தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும் மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும். வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள் இருப்பதைக் காணலாம். மரங்கள் வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால் மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில் பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர் எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள் உள்ளன. 10° வடக்கில் உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும், 53° வடக்கு 67° வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாகப் பூக்கும் தாவர வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில், வித்துமூடியிலித் தாவர வகைகளைக் கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக் காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன. காடுகளைப் பல்வேறு வழிகளில் வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக் காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது. இன்னொரு முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா, ஊசியிலைத் தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது. பலரும் பல்வேறு வகைப்பாட்டு முறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், உலகக் காப்புக் கண்காணிப்பு மையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை: என்பன. ராய்ப்பூர், சத்தீஸ்கர் ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087. இராமகிருஷ்ணர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். கதாதர், க்ஷூதிராம் (பிறப்பு கி.பி.1775) - சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார். கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர். ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின. மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது. ராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான். கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது. அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார். ராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார். தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார். ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் "The Gospel of Sri Ramakrishna" என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் "ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்" என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார். ராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது. அத்வைதம் அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) (IAST ""; சமஸ்கிருதம்: ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது. கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த ஆதிசங்கரர் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை. இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். சங்கரரின் குருவின் பரமகுருவாகிய கௌடபாதர் எழுதிய மாண்டூக்ய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும். 1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல. 2. "பிரும்மம்" என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும். 3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே. 4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்) [உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும். இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்... எனக் கூறலாம். சமணம், பௌத்தம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் ஆகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது. துவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் இந்து சமய தத்துவங்களாக இன்று அடையாளங் காணப்படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும். சிலம்பம் சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது. பயிற்சியாளர் அல்லது சிலம்பம் மற்றும் காய் சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி, சுற்றோட்டத் தொகுதி பொறுமை, தசை வலிமை. மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன. சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது. சிலம்பம் என்ற பெயர் "சிலம்பு" என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லப்படுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது. சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம். மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம். மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம். குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும். மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது. சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும். ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும். எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம். சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன. சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும். ஆகியனவாகும். சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும். என இரு முறைகளும் இதில் உண்டு. சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். கராத்தே என்ற வீர விளையாட்டின் "காட்டா" ("kata") என்ற பயிற்சி, சிலம்பத்தின் கதம்பவரிசை ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும். தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது. சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இது தற்காப்புக் கலை. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது. ஜனவரி 21, 2019 "ஐக்கிய நாடுகள் சபை" உலகின் பார்வையில் சிலம்பம் பெயர் வரலாற்றில் முதல் முறையாக விவாதிக்கப்பட்டது மற்றும் ஆசிய கண்டத்தின் நிலைக்கான சிலம்பம் ஆசியா நியமிக்கப்பட்டது. சீனா மற்றும் இந்தியா வரலாற்று பதிவுகளின் எல்லை பிரச்சினைகள் உள்ளது. எல்லை பிரச்சினைகள் தீர்ப்பதற்கு சீனா அரசாங்க பிரதிநிதி சிலம்பம் ஆசியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) தலைமையகத்தில் நடைபெற்றது. ஜனவரி 30, 2019 ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிலைக்கு சிலம்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வர்மக்கலை வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே "வர்மம்" னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை. அதாவது "உயிர்நிலைகளின் ஓட்டம்" எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது. இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக இது குருக்காளால் கற்பிக்கப் படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது. மேட்டூர் அணை மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது. 1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார். அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இக்காலபகுதியில் கர்நாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பின்னர் கர்நாடக - தமிழ்நாடு தண்ணீர் பிரச்சினைக்கும் ஒரு காரணியாக அமைந்தது. தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை. மேலும், ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியும் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். பல்லாயிரக்கணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும். ஆட்டோ ரிக்சா auto na ola auto dhaan ஆட்டோ (Auto) என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சா (auto rickshaw) வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான ரிக்சா வண்டியின் மோட்டார் பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் டுக்-டுக்கும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் பஜாஜும் ஆட்டோவை ஒத்தவை. இது "டெம்போ", "மோட்டார்டக்சி", "மூவுருளி" என அவை வளர்ந்து வரும் நாடுகளில் அழைக்கப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் தானி என்று தூய தமிழில் வழங்குகிறார்கள். நிலக்கரி நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும். நிலக்கரி ஒரு அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கைவாயு, கனியஎண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும். நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன. மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது. நிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது இங்கு "இருப்புக் காலம்" என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும். 20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர். இந்திய இரயில்வே இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது. தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட பொழுது உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன. பியூஸ் கோயல் என்பவர் தற்போதைய இரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார். இந்திய இரயில்வேயின் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது. [[படிமம்:India-rail-1870.png|thumb|[[1870]]ல் [[Great Indian Peninsular Railway]]யின் வலையமைப்பு.]] [[படிமம்:Indianrailways-stamp.jpg|thumb|1953ல் இந்திய இரயில்வேயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு [[இந்திய அஞ்சல் துறை]]யால் வெளியிடப்பட்ட நினைவு [[அஞ்சல் தலை]]]] [[படிமம்:Indianrailwayzones-numbered.png|thumb|210px|right|இந்திய ரயில்வே மண்டலங்கள். சிவப்புப்புள்ளிகள் மண்டலத் தலைமையிடங்களாகும்.]] இந்திய இரயில்வே கீழ்க்காணும் 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் பல கோட்டங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கோட்டமும் அதற்கென ஒரு தலைமையிடத்தினை கொண்டிருக்கிறது. இந்திய இரயில்வேயில் மொத்தம் 67 கோட்டங்கள் உள்ளன. கீழ்க்காணும் பட்டியல் இந்திய இரயில்வே வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளாகும்: [[படிமம்:Irchnkanngc.jpg|thumb|240px|[[சென்னை]]-[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] நீண்ட தூர விரைவு இரயில். [[நாகர்கோவில்]] அருகே]] [[படிமம்:Indian Railways network.png|240px|thumb|இந்திய இரயில்வே வலையமைப்பு]] இந்திய இரயில்வே மொத்தம் 8,702 இரயில்களை இயக்குகிறது. [[ஆண்டு]]க்கு மொத்தம் 500 கோடி மக்களை இடம்பெயர்க்கிறது. இது 27 மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் இணைக்கிறது. [[சிக்கிம்]] மட்டுமே இந்திய இரயில் வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை. நாட்டில் நீண்டதூரப் பயணத்திற்கு இரயில் சேவையே மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் [[தென்னிந்தியா]] மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் [[பேருந்து|பேருந்தே]] பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு பயணிகள் இரயில் பொதுவாக 18 பெட்டிகளைக் கொண்டிருக்கும். சில முக்கியமான புகழ்பெற்ற இரயில்கள் 24 பெட்டிகள் வரை கொண்டுள்ளன. இரயில் பெட்டிகள் 18லிருந்து 72 பயணிகள் வரை செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப் படுகின்றன. ஆனால், பண்டிகைக் காலங்களிலும் சில முக்கியமான வழித்தடங்களிலும் கொள்ளளவை விட அதிகமான பயணிகள் பயணிப்பது வாடிக்கை. இரயில் பெட்டிகள் பல்வேறு வகுப்புகளைக் கொண்டிருக்கும். அவற்றில் மிக முக்கியமானது படுக்கை வசதி கொண்ட வகுப்பாகும். இத்தகைய பெட்டிகள் மொத்தம் ஒன்பது இணைக்கப்படுகின்றன. மூன்றிலிருந்து ஐந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் வழக்கமாக இணைக்கப்படுகின்றன. தற்போது இந்திய இரயில்வே எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை கூட்ட நெரிசலாகும். விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிக அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பயணச் சீட்டு இன்றி பயணம் செய்தலும் இந்திய இரயில்வேயிற்கு நட்டம் ஏற்படுத்தும் மற்றொரு பிரச்சினையாகும். [[படிமம்:Teestarailbridge.jpg|thumb|240pxதீஸ்தா இரயில் பாலம்]] இந்திய இரயில்வேயில் தாதுப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், [[பால் (பானம்)|பால்]], [[பெட்ரோலியம்]], மற்றும் [[வாகனங்கள்]] முதலியவை இடம் பெயர்க்கப்படுகின்றன. [[துறைமுகம்|துறைமுகங்களும்]] [[மாநகரம்|மாநகரங்களும்]] தங்களுக்கென தனி இரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. இந்திய இரயில்வேயின் 70% வருமானம் மற்றும் அதன் லாபத்தின் பெரும்பகுதி சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைக்கிறது. நட்டமேற்படுத்தும் பயணியர் சேவைக்கு மானியம் இதன் மூலமே கிடைக்கிறது. மேலும் குறைவான வாடகைக்கு கிடைக்கும் [[லாரி]]களினால் சரக்கு போக்குவரத்து சற்றே குறைந்துள்ளது. 1990- லிருந்து இரயில்வே சிறிய அளவினாலான சரக்குகளைக் கையாளாமல் பெரும் அளவினாலான சரக்குகளைக் கையாள்வதினால் அதனுடைய சேவையானது சற்று துரிதப்பட்டிருக்கிறது. சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் பெருமளவு வருமானம் [[நிலக்கரி]], [[உணவு தானியங்கள்]], [[சிமெண்ட்]] மற்றும் [[இரும்புத்தாது]] போன்றவற்றின் மூலமே கிடைக்கிறது. இந்திய இரயில்வேயில் [[வாகனம்|வாகனங்களும்]] நீண்ட தூரம் இடம்பெயர்க்கப் படுகின்றன. மேலும் பெரிய சரக்கு லாரிகளை இரயிலின் மீது அமர்த்தி கொண்டு செல்வதன் மூலம் இந்த சரக்கு நிறுவனங்களின் [[எரிபொருள்]] செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டிகளும் பல பகுதிகளில் கிடைக்கின்றன. "பச்சைப் பெட்டி" என்றழைக்கப் படும் சிறப்புப் பெட்டி [[காய்கறி]]களைக் கொண்டு செல்லப் பயன்படுகிறது. சமீபத்தில் இரயில்வே "கான்ராஜ்" எனப்படும் சரக்கு இராஜதானி இரயில் சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் சரக்கு இரயிலுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து விரைவாக இடம்பெயர்க்கப் படுகிறது. இச்சேவையின் மூலம் அதிக பட்சம் 100 கி. மீ. வேகத்தில் 4700 டன் சரக்கை இடம்பெயர்க்கப்பட முடியும். [[படிமம்:DelhiMetro.jpg|thumb|240px|புது தில்லி மெட்ரோ இரயில்வே.]] [[படிமம்:Mumbai suburban railway emu 5.JPG|thumb|240px|மும்பை புறநகர் ரெயில்]] பல நகரங்கள் தங்களுக்கென தனியான புறநகர் ரயில் வலையமைப்புகளைக் கொண்டுள்ளன. புறநகர் இரயில் சேவை, தற்போது இந்தியாவில் [[தில்லி]], [[மும்பை]],[[சென்னை]], [[கொல்கத்தா]], [[புனே]], மற்றும் [[ஐதராபாத் (இந்தியா)|ஹைதராபாத்]] ஆகிய நகரங்களில் இயக்கப்படுகிறது. புனேவும் ஹைதராபாத்தும் தங்களுக்கென தனி இரயில்பாதைகளைக் கொண்டிருக்காமல் நீண்டதூர இரயில்களின் இரயில்பாதைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. [[புது தில்லி]]யில் [[புது டில்லி மெட்ரோ இரயில்|புது தில்லி மெட்ரோ இரயிலும்]] [[கொல்கத்தா]]வில் [[கொல்கத்தா மெட்ரோ இரயில்|கொல்கத்தா மெட்ரோ இரயிலும்]] இயங்கி வருகின்றன. [[புறநகர் இரயில்]]கள் பொதுவாக 15 பெட்டிகளையும் மின்சார என்ஜின்களை இருபுறமும் கொண்டிருக்கும். [[மும்பை]] இரயில்கள் நேர் மின்சாரத்திலும் மற்றவை மறு மின்சாரத்திலும் இயங்குகின்றன. சாதாரணமாக ஒரு பெட்டியில் 96 பயணிகள் பயணிக்கலாம் எனினும் முக்கிய சமயங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கிறது. மும்பையின் இரயில் போக்குவரத்து மேற்கு மற்றும் மத்திய இரயில்வேயினால் சேர்ந்து நிர்வகிக்கப் படுகிறது. இது மொத்தம் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று மேற்கு இரயில்வேயினாலும் மற்றவை மத்திய இரயில்வேயினாலும் நிர்வகிக்கப் படுகின்றன. கொல்கத்தா இரயில்வேயானது நிர்வாக ரீதியாக மண்டல இரயில்வேயின் தகுதியில் இருப்பினும் இது எந்த இரயில்வே மண்டலத்தின் கீழும் வருவதில்லை. தில்லி புறநகர் இரயிலின் முதற்கட்டப்பணிகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது தற்போது விரிவாக்கப்பட்டு வருகிறது. [[பெங்களூர்]] நகரத்தில் இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது. [[படிமம்:Darjeeling Himalayan Railway.jpg|thumb|டார்ஜிலிங் இமாலய இரயில்]] [[டார்ஜிலிங் இமாலய இரயில்]] [[யுனெஸ்கோ]]வினால் உலகப்பிரசித்தி பெற்ற தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரயில்பாதை [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] சமவெளியான [[சிலிகுரி]]யில் தொடங்கி [[தேயிலை]] தோட்டங்களின் வழியாக [[டார்ஜிலிங்]] சென்றடைகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. [[நீலகிரி மலை இரயில் பாதை|நீலகிரி]] மலை இரயிலும் அத்தகைய சிறப்புப்பெற்ற மற்றொரு இரயிலாகும். இது [[இந்தியா]]விலுள்ள பற்சக்கர அமைப்புக்கொண்ட ஒரே இரயில் பாதை ஆகும். [[மும்பை]]யில் உள்ள [[சத்ரபதி சிவாஜி]] இரயில் முனையமும் இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் இத்தகைய சிறப்பு பெற்ற இடமாகும். [[படிமம்:ரயில் எஞ்சின்.JPG|thumb|பொன்மலை பணிமனையைச் சேர்ந்த WDM2 வகை டீசல் ரயில் எஞ்சின்]] [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] ஓடும் "அரண்மனை இரயில்" சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இரயிலாகும். [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] அரசும் இதைப் போல "டெக்கான் ஒடிஸி" என்னும் இரயிலை இயக்கியது. எனினும் இதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இது பின்னர் நிறுத்தப் பட்டது. [[இந்தியா]] மற்றும் [[பாகிஸ்தான்]] ஆகியவற்றுக்கிடையே இயக்கப்பட்ட இரயிலின் பெயர் "சம்ஜௌதா விரைவு வண்டி" ஆகும். இது 2001-ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மற்றொரு புகழ்பெற்ற இரயில் சேவை "மருத்துவமனை இரயில்" ஆகும். இது ஒரு நடமாடும் மருத்துவமனை. இது நாட்டின் கிராமப்பகுதிகளுக்கு சேவை புரிய தொடங்கப்பட்டது. இது நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு இரண்டு [[மாதம்|மாதங்கள்]] தங்கி சேவை புரிகிறது. இதில் ஒரு பெட்டி செயல் அறையாகவும் மற்றொன்று பொருட்கள் வைக்கவும் மற்ற இரண்டு நோயாளிகளுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன. உலகிலேயே மிகப்பழமையான ஓடும் நிலையில் இருக்கும் [[நீராவி எஞ்சின்]] இந்திய இரயில்வேயின் "ஃபெயரி குவீன்" என்பதாகும். [[கரக்பூர்]] இரயில் நிலையமே உலகின் மிக நீளமான நடைபாதையைக் கொண்டுள்ள இரயில் நிலையமாகும். இதன் நீளம் 833 [[மீட்டர்]]களாகும். "டாய்" இரயில் பாதையிலுள்ள "கும்" இரயில் நிலையமே நீராவி எஞ்சின் செல்லும் மிக உயர்ந்த இரயில் நிலையமாகும். இந்திய இரயில்வேயில் மொத்தம் 7,566 இரயில் எஞ்சின்களும் 37,840 பயணியர் பெட்டிகளும் 222,147 சரக்குப் பெட்டிகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 6,853 இரயில் நிலையங்களும் 300 "யார்டுகளும்" 2,300 "கூட்சு ஷெட்களும்" 700 பழுதுபார்ப்பு மையங்களும் உள்ளன. இதில் மொத்தம் பணிபுரிபவர்கள் 1.54 [[மில்லியன்]] பேர்களாவர். மிகச் சிறிய பெயர் கொண்ட இரயில் நிலையம் "இப்"; மிகப்பெரிய பெயர் கொண்ட இரயில் நிலையம் "ஸ்ரீ வெங்கடநரசிம்மராஜூவாரிபீடா". இந்திய இரயில்வேயிலேயே மிக நீண்ட தூரம், மற்றும் மிக நீண்ட நேரம் பயணிக்கும் இரயில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[ஜம்முதாவி]] ஆகியவற்றுக்கிடையே ஓடும் "ஹிம்சாகர்" விரைவுவண்டியாகும். இந்த இரயில் 3,745 [[கி.மீ.]] தூரத்தினை மொத்தம் 74 [[மணி]]55 [[நிமிடம்|நிமிடங்களில்]] ஓடிக் கடக்கிறது. [[வதோதரா]] மற்றும் [[கோட்டா]]விற்கிடையே உள்ள 528 கி. மீ தொலைவினை "திருவனந்த புரம் ராஜதானி" இரயில் 6.5 மணிகளில் இடையில் எங்கும் நிற்காமல் கடக்கிறது. இதுவே இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் நீண்ட இடைநில்லா சேவையாகும். [[ஃபரிதாபாத்]] திலிருந்து [[ஆக்ரா]] விற்கு ஓடும்பொழுது "போபால் சதாப்தி விரைவு வண்டி" மணிக்கு 140 கி. மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்தியாவில் இரயிலின் அதிகபட்ச வேகமான 184 கி. மீ/ மணியானது 2000-ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின் போது அடையப்பட்டது. [[டிரெய்ன் 18]] இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அதிவேக விரைவு வண்டி. சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்தது. இது 2019 பிப்பிரவரியில் இருந்து வந்தே பாரத் என்னும் பெயரில் காசிக்கும் தில்லிக்கும் இடையே இயக்கப்படுகின்றது. [[படிமம்:Bholu.png|thumb|"போலு யானை" இந்திய இரயில்வேயின் சின்னம்]] இந்திய இரயில்வே, இந்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போதைய நிலையில் இத்துறைக்கான முக்கிய அமைச்சர் ஒருவரும், அவருடன் இணை அமைச்சர்கள் இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு கீழ் ஆறு உறுப்பினர்களும் ஒரு தலைவரையும் கொண்ட இரயில்வே வாரியம் செயல்படுகிறது. மொத்தமுள்ள 16 மண்டலங்களும் தத்தம் பொது மேலாளர்கள் மூலம் இரயில்வே வாரியத்திற்கு நேரடியாக எடுத்துரைக்கின்றன. இந்த மண்டலங்கள் மேலும் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை கோட்ட மேலாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர். மேலும் பொறியியல், இயந்திரவியல் போன்ற துறைகளின் அதிகாரிகள் கோட்ட மேலாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். மேலும் இவர்களே தொடர்புடைய துறையின் சொத்துக்களை நிர்வகிக்கின்றனர். இவர்களுக்கு கீழ் நிலைய அதிகாரிகள் இயங்குகின்றனர். நிலைய நிர்வாகமும் அந்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரயில் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துவதும் இவர்களின் பணியாகும். இரயில்வே மண்டலங்கள் மட்டுமின்றி இன்னும் பல பொதுத்துறை நிறுவனங்களும் இரயில்வே அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவையாவன: [[படிமம்:IR sample ticket.jpg|thumb|மாதிரி பயணச்சீட்டு]] இரயில்வே நிதிநிலை அறிக்கையில் புதிய இரயில்களை அறிமுகப்படுத்தல், பழைய வழித்தடங்களை மாற்றியமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் போன்றவை அறிவிக்கப்படுகின்றன. இரயில்வேயின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] விவாதிக்கப் படுகின்றன. இரயில்வே அறிக்கையானது [[மக்களவை]]யில் பெரும்பான்மையோரால் ஆதரிக்கப் படவேண்டும். மாநிலங்களவை ஆலோசனைகள் வழங்குமெனினும் அவை திட்டங்களைக் கட்டுப்படுத்தாது. அரசின் மற்ற வரவு செலவுகளைப் போலவே இரயில்வேயின் வருமானத்திற்கும் தணிக்கைக் கட்டுப்பாடு உள்ளது. இந்திய இரயில்வேயின் லாப, நட்டங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது. 1924-ல் ஏற்படுத்தப்பட்ட புதிய மரபின் படி இரயில்வே நிதி அறிக்கையானது பொது நிதியறிக்கக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே மத்திய இரயில்வே அமைச்சரால் ஃபிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் சமர்பிக்கப் படுகிறது. இவ்வறிக்கை பாராளுமன்றத்தில் தனியாக வழஙப் பட்டாலும் இதன் வரவு செலவுகளும் பொது நிதியறிக்கையில் சேர்க்கப் படுகின்றன. இது அரசின் ஒரு பகுதியாக இருப்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. மேலும் இது இரயில்வேயின் எதிர்காலத் திட்டங்களையும் உரைக்கிறது. இரயில்வேயின் கொள்கை உருவாக்கம் மற்றும் கட்டுப்பாடு போன்றன இரயில்வே வாரியத்தால் செயல்படுத்தப் படுகின்றன. இவ்வாரியமானது Chairman, நிதி ஆணையர், பொறியியல், இயந்திரவியல், மற்றும் பல துறைகளில் செயல் உறுப்பினர்களால் இயக்கப்படுகிறது. 2005 நிதிநிலை அறிக்கையின் படி, இந்திய இரயில்வே 46,635 [[கோடி]] [[ரூபாய்]]களை வருவாயாகப் பெற்றுள்ளது. இது கணிக்கப்பட்ட தொகையை விட 1,838 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்த வருமானம் 28,745 கோடி ரூபாயிலிருந்து 30,450 கோடி ரூபய்களாக அதிகரித்துள்ளது. இயக்கச் செலவினங்கள் 400 கோடி உயர்ந்தன. நிதி இருப்பு 6,963 கோடி ரூபாயாக இருந்தது. சரக்குப் போக்குவரத்து 7.67% உயர்ந்து 580 [[மில்லியன்]]டன்னிலிருந்து 600 மில்லியன் டன்னாக உயர்ந்தது. பயணிகள் வருவாயில் மொத்தம் 20% உயர்வகுப்புகளான குளிரூட்டப்பட்ட வகுப்புகளிலிருந்தே கிடைக்கின்றன. கடந்த ஆந்டு மொத்த பயணிகள் வருகை 7.5% அதிகரித்தது. 2005-2006 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி 10 சதவீதமும் வருவாய் வளர்ச்சி 12 சதவீதமும் வளர்ந்தது. அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட மலிவுக் கட்டண விமானங்கள் இரயில்வேயிற்கு புதிய போட்டியாக உள்ளது. செலவினங்களைக் குறைக்கும் முயற்சியாக இரயில்வேயானது தேவையற்ற சலுகைகளையும் வருவாய் குறைந்த வழித்தடங்களையும் நிறுத்திவிட ஆலோசித்து வருகிறது. [[படிமம்:IndiaRailwaycrossingSiliguri.jpg|thumb|240px|இதுபோன்ற கடவைகளில் பல விபத்துகள் ஏற்படுகின்றன.]] [[விபத்து]]கள் இந்திய இரயில்வேயின் மிக முக்கியமான பிரச்சினையாகும். சராசரியாக ஆண்டுக்கு 300 விபத்துகள் ஏற்படுகின்றன. தடம் புரள்தல் அடிக்கடி ஏற்படுகிறது. சமீப காலங்களில் தடம்புரள்தல், ரயில்கள் மோதல் போன்ற விபத்துக்கள் குறைவாக இருப்பினும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் மனிதர்கள் அடிபட்டு இறக்கின்றனர். இந்திய இரயில்வேயின் அளவினைக் கருத்தில் கொள்ளும் போது விபத்துக்களை முற்றிலும் ஒழிப்பது கடினம் எனினும் முடிந்த அளவு குறைக்க இரயில்வே முயன்று வருகிறது. பெரும்பாலான விபத்துக்களுக்கு (83%) மனிதத்தவறுகளே காரணமாகும். கொங்கண் இரயில்வே பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் விபத்துக்களுக்கு காரணமாகின்றன. இரயில்வே எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளாவன நவீனமயமாக்கப்படாத தகவல் தொடர்பு முறைகள், சமிக்ஞைக்கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவை. இந்திய விடுதலைக்கு முன்பு கட்டப்பட்ட [[பாலம்|பாலங்களையும்]] நூற்றாண்டுப் பழமையான [[தண்டவாளம்|தண்டவாளங்களையும்]] அடிக்கடி பழுதுபார்க்க வேண்டியிருக்கிறது. மக்கள் கூட்ட நெரிசல் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியானது எப்போதும் குறிப்பிடப்பட்ட அளவை மீறி பயணிகளை ஏற்றிச் செல்கிறது. திருவிழாக் காலங்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க இருக்கைகள் இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய சமயங்களில் முன்பதிவு இருக்கைகளில் மற்றவர்கள் அத்துமீறி நுழைவதும் நடக்கிறது. அரசியல் காரணங்களுக்காகவும் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாகவும் பயணிகள் பயணச்சீட்டின் விலை உயர்த்தப்படுவதில்லை. அவை இரயில்வேயின் மற்ற வருவாய்களின் மூலம் சமன் செய்யப்படுகின்றன. இந்நிலை இரயில்வேயின் நவீன மயமாக்கலுக்குத் தடையாக உள்ளது. [[படிமம்:Project Unigauge (India) ta.svg|thumb|center|400px|இரயில்பாதை]] பல இடங்களில் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நடை பயணிகளும், வாகனங்கள், [[மிதிவண்டி]] ஓட்டிகளும் இரயில் வரும் நேரத்தில் இரயில் பாதையை கடப்பதால் விபத்துகள் ஏற்பட ஏதுவாகிறது. போதுமான பாலங்கள் இல்லாததும் மக்களுக்கு வசதியான இடத்தில் அவை இல்லாமலிருப்பதும் விபத்துக்கள் காரணங்களாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான இரயில் தடங்கள் [[வேலி (எல்லை)|வேலி]] இடப்படாததால் அத்துமீறி நுழைதல் சாதாரணமாக நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் கால்நடைகளும் மற்ற விலங்குகளும் தண்டவாளங்களில் கடந்து செல்வதால் வேகமாக வரும் வண்டிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. [[படிமம்:Cups, disposable, railway,India352.jpeg|thumb|காகிதக் குவளைகள்]] [[சுகாதாரம்]] மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். இரயில்வே வலையமைப்பு மிகப்பரந்து இருப்பதும் இரயில்கள் குறைந்த வேகத்தில் நகர்வதும் பயணத்தினை மிக நீண்ட நேரம் தாமதப்படுத்துகிறது. இந்திய இரயில்களில் இருக்கும் கழிப்பறைகள் கீழே திறந்த வெளியாக இருக்கும் வகையினைச் சேர்ந்தவை. எனவே கழிவுகள் அதற்கென பெட்டிகள் ஏற்படுத்தப் பட்டு சேகரிக்கப் படாமல் தரையில் வீழ்கின்றன. இதனால் இரயில்கள் நிற்கும் இரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அதிகமானோர் பயன்படுத்துவதால் கழிப்பறைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. தற்போது இரயில்வே சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கழிப்பறைகளை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. இது நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த உதவும் காரணிகளில் ஒன்றாக விளங்கும். [[2014 - 2019 இந்திய நடுவண் அரசின் தொடர்வண்டிப் போக்குவரத்துக் கொள்கை]] [[பகுப்பு:இரும்புவழிப் போக்குவரத்து]] [[பகுப்பு:இந்திய இரயில்வே]] [[பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை]] கூவம் கூவம் , சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்று, அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவை மற்ற இரு ஆறுகள். ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 75 கி.மீ ஓடுகிறது. புறநகரில் 40 கிலோமீட்டரும், நகருக்குள் 18 கிலோமீட்டரும் ஓடுகிறது. 2004 டிசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாகச் செயல்பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியின் அசுத்தம் நீங்கியது.தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எப்போதும் கறுப்பாக தெரியும் தண்ணீர் கண்ணாடி போல் மின்னியது . ஆனால் சுனாமி முடிந்த சில வாரங்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பியது. கூவம் ஆறு சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர். மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர். ஆற்றுப் படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை. ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு நொடிக்கு 22,000 கன அடி ஆகும். 2005 ஆண்டில் ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 21,500 கன அடி.  அடையாறு (ஆறு) அடையாறு சென்னை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்று ஆகும். இந்த ஆறு மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் துவங்கி சென்னை பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. சென்னையில் ஓடும் கூவம் அளவிற்கு இல்லாவிடினும், இந்த ஆறு மாசு மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் முன்பு நடைபெற்ற மீன்பிடித் தொழில் இப்பொழுது சாத்தியமற்றதாகி விட்டது. ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 1,142 சதுர கிலோமீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர், புறநகரில் 24 கிலோமாட்டரும், நகருக்குள் 15 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப் படுக்கையின் அகலம் 10.50 முதல் 200 மீட்டர் வரை. ஆற்றின் அதிபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60,000 கன அடி, சராசரி கொள்ளளவு 30,000 கன அடி, 2005 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 55,000 கன அடி.  காஞ்சிபுரம் காஞ்சிபுரம் (ஆங்கிலம்:Kancheepuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும். காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. "நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார். புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன. பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான். காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி யால் 1969இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு 1981ம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா,கருநாடகம் மற்றும் கேரளாவிலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் படிப்பு வழங்கப்படுகிறது.சனவரி 20,2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ.10கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,64,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 81,990 ஆண்கள், 82,275 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.14%, பெண்களின் கல்வியறிவு 83.59% ஆகும்.மக்கள் தொகையில் 14,464 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப்பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள். ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். அருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடலில்கள் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். காஞ்சி காஞ்சி என்னும் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: ஆங்கிலம் ஆங்கிலம் என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன்மத்திய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். இம்மொழி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில கரீபியன் நாடுகளில் பெரும்பாலான மக்களால் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மண்டாரின் சீனம் மற்றும் எசுப்பானிய மொழிக்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய சுதேச மொழியாகவும் இது காணப்படுகிறது. மேலும் இது உலகம் முழுவதும் இரண்டாவது மொழியாகவும் பயிலப்படுகிறது. இம் மொழி ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு உலக அமைப்புக்களின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது. ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் ஜெர்மானிக் குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். "ஆங்கிலம்" எனும் சொல்லின் மூலம் "ஏங்கில்ஸ்" எனும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இது அவ்வினத்தாரின் மூதாதையரின் தேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலச் சொற்களில் குறிப்பிடத்தக்களவு லத்தீன் மொழியிலிருந்தே உருவாயின. ஏனெனில் லத்தீன் மொழியே கிறித்தவ தேவாலயத்தினதும் ஐரோப்பிய அறிஞர் சமுதாயத்தினதும் பொது மொழியாகக் காணப்பட்டது. மேலும், 9ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற வைக்கிங்குகளின் படையெடுப்பினால் ஆங்கிலத்தில் பண்டைய நோர்சு மொழியின் தாக்கமும் ஏற்பட்டது. 11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மீது மேற்கொள்ளப்பட்ட நோர்மன் படையெடுப்பினால் நோர்மன் பிரெஞ்சு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. மேலும், இதன் உச்சரிப்பும் சொல்வளமும் ரோமானிய மொழிகளுடன் நெருங்கிய உறவுடையன போன்ற தோற்றத்தை அளித்துள்ளன. இத்தாக்கங்களுக்கு உட்பட்ட ஆங்கிலம் மத்தியகால ஆங்கிலம் எனப்பட்டது. 15ம் நூற்றாண்டில் தெற்கு இங்கிலாந்தில் உருவான பாரிய உயிரெழுத்துத் திரிபு காரணமாக மத்திய ஆங்கிலத்திலிருந்து நவீன ஆங்கிலம் உருவானது. வரலாறு முழுவதும் ஏனைய பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கிக்கொண்டமையினால் நவீன ஆங்கிலம் பரந்த சொல்வளமும் சிக்கலான குழப்பமான உச்சரிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. நவீன ஆங்கிலம் ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் இருந்து சொற்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 250,000க்கும் அதிகமான வித்தியாசமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் பல தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் கொச்சைச் சொற்கள் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. The figures are people who can speak English with sufficient fluency to hold an everyday conversation. The figure shown in the first language English speakers column is actually the number of New Zealand residents who reported to speak English only, while the additional language column shows the number of New Zealand residents who reported to speak English as one of two or more languages. ஆங்கிலம் முதன் மொழியாக உள்ள நாடுகள் வருமாறு: அங்கியுலா, அன்டிகுவா பர்புடா, ஆஸ்திரேலியா, பகாமாசு, பார்படோசு, பெலீசு மொழிகள், பெர்மியுடா, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம், பிரித்தானிய கன்னித் தீவுகள், கனடா, கேமன் தீவுகள், டொமினிக்கா, போக்லாந்து தீவுகள், கிப்ரால்ட்டர், கிரெனடா, குவாம், குயெர்ன்சி, கயானா, அயர்லாந்து, மாண் தீவு, யமேக்கா, யேர்சி, மொன்செராட், நவூரு, நியூசிலாந்து, பிட்கன் தீவுகள், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சிங்கப்பூர், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள், திரினிடாட் டொபாகோ, துர்கசு கைகோசு தீவுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு. சில நாடுகளில் ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. அத்தகைய நாடுகள் பின்வருமாறு: போட்சுவானா, கமரூன், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, காம்பியா, கானா, இந்தியா, கென்யா, கிரிபட்டி, லெசோத்தோ, லைபீரியா, மடகாசுகர், மால்ட்டா, மார்சல் தீவுகள், மொரிசியசு, நமீபியா, நைஜீரியா, பாக்கித்தான், பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, ருவாண்டா, செயிண்ட் லூசியா, சமோவா, சீசெல்சு, சியேரா லியோனி, சொலமன் தீவுகள், இலங்கை, சூடான், சுவாசிலாந்து, தான்சானியா, உகாண்டா, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே. சோழர் காலக் கட்டிடக்கலை சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் கால?க் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக, சோழர் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டான் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர், கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது. இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில். இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராசேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும்,பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சோழர்கள் கி.பி. 1279 வரை தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்தபோதும், கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பின்னர் முன் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டிடங்களுடனும் ஒப்பிடக்கூடிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலும், தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும், கம்பகரேஸ்வரர் கோயிலும் பிற்காலச் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும். குனூ தளையறு ஆவண உரிமம் குனூ தளையறு ஆவண உரிமம் ("GNU Free Documentation License", "GNU FDL" அல்லது "GFDL") என்பது கட்டற்ற ஆக்கங்களை உறுதி செய்வதற்கான அளிப்புரிமை தரும் உரிமம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSF) குனூ திட்டத்திற்காக உருவாக்கியதாகும். தொடக்கத்தில் மென்பொருள் ஆவணப்படுத்தலில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற படைப்புகளுக்கும் பயனாகிறது. படைப்பாக்கத்தின் பயனைத் தடுக்காது மேலும் மேலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் இது பொதுவாக "அளிப்புரிமம்" என வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு படைப்பாளி உரிமம் வழங்குகிறார் என்றால் குனூ தளையறு ஆவண உரிமம் வரையறைகளின் கீழ் எவரும் தனது ஆக்கத்தை மீண்டும் வெளியிடவோ, பகிரவோ, மாற்றவோ அவருக்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்த வரையறைகளில் முதன்மையானது எந்த ஓர் ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழ் உள்ள ஆக்கத்திலிருந்து பெறப்பட்டால் அந்த ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழேயே அமையும். தளையறு ஆவண உரிம ஆக்கங்களை மாற்றியமைத்து மாறுபட்ட பதிப்புரிமை உள்ள ஆக்கங்களை வெளியிட இயலாது. எனவே இந்த உரிமம் அந்தப் படைப்பின் உடனேயே தங்கியிருப்பதால் சிலநேரங்களில் இது "நுண்ணுயிரி உரிமம்" எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் ஓர் படைப்பைப் பகிரவோ மாற்றவோ செய்கையில் பயனர் முந்தைய படைப்பாளிகளுக்கு ஆக்குநர்சுட்டு அளிப்பதுடன் மாற்றங்களைப் பட்டியலிடவும் வேண்டும் என குனூ தளையறு ஆவண உரிமம் வலியுறுத்துகிறது. இறுதியாக, இந்த உரிமத்தின் கீழ் வெளியாகும் எந்தப் படைப்பும் ஏதாவது ஓரிடத்தில் இந்த உரிமத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து நேரங்களிலும் இயலாது என விமரிசனங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலின் இறுதியில் முழு உள்ளடக்கத்தையும் வெளியிட முடியும்; ஆனால், ஓர் ஒளிப்படத்தில் அல்லது இசைத்துண்டில் வெளியிட இயலாது. நியூசிலாந்து நியூசிலாந்து ("New Zealand") பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும். "நீளமான வெண்ணிற முகில் நிலம்" என்பது இதன் பொருள். குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு என்பனவும் நியூசிலாந்தின் ஆட்சிக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தாஸ்மான் கடலுக்குக் குறுக்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோமீட்டர்களுக்கு (900 மைல்கள்) அப்பாலும், வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிஜி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகளுக்குத் தெற்கே ஏறத்தாழ 1000 கிமீ தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது. மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுட் பல மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன. நியூசிலாந்தின் மாறுபட்ட இட அமைப்பியல் மற்றும் கூர்மையான மலை உச்சிகள் காரணமாக நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு, மற்றும் எரிமலைக் குமுறல்கள் இங்கு அடிக்கடி இடம்பெறுகின்றன. நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும். ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழும் நகரமாகும். கிபி 1250-1300 களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 1642 ஆம் ஆண்டில் ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார். 1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி சியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். இன்றுள்ள 4.5 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சாவழியினர் ஆவர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் ஆரம்பக் கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் ஆரம்பமாகியாதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தே நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார். இவரது சார்பில் ஆளுனர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது. இதன் தலைவரான பிரதம அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று. நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் டோக்கெலாவ் (சார்பு மண்டலம்); குக் தீவுகள் மற்றும் நியுவே (சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள்) ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொஸ் சார்பு மண்டலமும் உள்ளன. நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது. டச்சு நாடுகாண்பயணி ஏபெல் டாஸ்மான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டு அதற்கு "Staten Landt" எனப் பெயரிட்டார். தென்னமெரிக்காவின் தென்முனையில் இதே பெயரைக்கொண்ட நிலப்பகுதி இதனை இணைப்பதாக அவர் கருதினார். 1645 இல் டச்சு நிலப்படவரைவாளர்கள் டச்சு மாகாணமான சீலாந்து (Zeeland) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்நிலத்துக்கு நோவா சீலாந்தியா ("Nova Zeelandia") எனப் பெயரிட்டனர். பிரித்தானியக் கப்டன் ஜேம்ஸ் குக் இதே பெயரை ஆங்கிலப்படுத்தி நியூ சீலாண்ட் ("New Zealand") என அழைத்தார். "ஆவோதேயாரோவா" ("Aotearoa", "நீண்ட வெணிற முகிலின் நிலம்" எனப் பொருள்) என்பது நியூசிலாந்தின் தற்போதைய மாவோரி மொழிப் பெயராகும். ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர் முழு நாட்டுக்கும் இதே மாவோரி பெயர் இருந்ததா என்பது அறியப்படவில்லை, ஆனாலும் ஆரம்பத்தில் வடக்குத் தீவு மட்டுமே ஆவோதேயாரோவா என அழைக்கப்பட்டு வந்தது. இரு முக்கிய தீவுகளும் மவோரி மொழியில் பாரம்பரியமாகப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வடக்குத் தீவு "தே இகா-ஆ-மாவுய்" (மாவுயின் மீன்), என்றும் தெற்குத் தீவு "தே வைப்பவுனாமு" (பச்சைக்கல்லின் நீர்நிலைகள்) எனவும் மவோரி மொழியில் அழைக்கப்படுகின்றன. ஆரம்பகால ஐரோப்பிய நிலவரைகள் இத்தீவுகளை வடக்கு (வடக்குத் தீவு), நடு (தெற்குத் தீவு), மற்றும் தெற்கு (ஸ்டூவர்ட் தீவு) எனக் குறிப்பிட்டன. 1830 இல், வடக்கு, தெற்கை மிகப்பெரிய இரண்டு தீவுகளாக வேறுபடுத்தி நிலவரைகள் வரையப்பட்டன. 1907 வாக்கில் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இவ்விரண்டு தீவுகளுக்கு வடக்குத் தீவு (தே இகா-ஆ-மாவுய்), தெற்குத் தீவு (தே வைப்பவுனாமு) என முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு பெயர்களில் ஏதாவது ஒன்றையோ, அல்லது இரண்டையுமோ அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம். நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த மிகப்பெரிய நிலப்பகுதிகளுள் ஒன்று. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, காடழிப்புக்கான ஆதாரங்கள் மற்றும் மாவோரி மக்களிடையே காணப்படும் இழைமணிகளின் டிஎன்ஏ மாறுபாடுகள் போன்றவை கிழக்குப் பொலினீசியர்கள் 1250 - 1300 ஆம் ஆண்டுகளில் தெற்குப் பசிபிக் தீவுகளில் இருந்து தொடர்ச்சியான பல புலப்பெயர்வுகளின் இறுதியில் நியூசிலாந்தில் முதன்முதலில் குடியேறியவர்கள் என்பதைக் காட்டுகின்றன. இதற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட மாவோரி என்னும் இனத்தவராக வளர்ச்சியடைந்தனர். "ஐவி" ("iwi") என்ற இனக்குழுவாகவும், "ஹாப்பூ" ("hapū") என்ற துணை இனக்குழுவாகவும் பிரிந்துள்ளனர். இவர்கள் சில சமயங்களில் கூட்டுறவுடனும், சிலவேளைகளில் போட்டியிட்டும், சண்டை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர். ஒரு காலகட்டத்தில் மாவோரி இனத்தின் ஒரு பிரிவினர் நியூசிலாந்தில் இருந்து 680 கிமீ தென்கிழக்கேயுள்ள சதாம் தீவுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அத்தீவுகளுக்கு அவர்கள் ரெக்கோகு ("Rēkohu") என்ற பெயரையும் சூட்டினர். அங்கே இவர்கள் தனித்துவமான மொரியோரி பண்பாடு ஒன்றை உருவாக்கினர். 1830களில் தரனாக்கி மாவோரி ஆக்கிரமிப்பு மற்றும் அடிமைப்படுத்தலாலும், ஐரோப்பிய நோய்களின் தாக்கங்களினாலும் 1835 - 1862 காலப்பகுதியில் மோரியோரி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. 1862 இல் 101 மோரியோரிகளே எஞ்சியிருந்தனர். கடைசி மொரியோரி இனத்தவர் 1933 ஆம் ஆண்டில் இறந்தார். நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர் 1642 இல் தரையிறங்கிய டச்சு மாலுமி ஏபல் தாசுமன் மற்றும் அவரது குழுவினரும் ஆவர். மாவோரிகளுடன் இடம்பெற்ற சண்டையில் தாசுமனின் மாலுமிகள் நால்வர் கொல்லப்பட்டனர். குறைந்தது ஒரு மாவோரி இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் 1769 இல் பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் கரையோரப் பகுதி முழுவதையும் சுற்றி வந்த போதே ஐரோப்பியர்கள் இரண்டாவது தடவையாக இங்கு வந்தனர். குக்கைத் தொடர்ந்து ஐரோப்பிய, வட அமெரிக்க திமிங்கில வேட்டையாளர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் இங்கு வந்து போயின. அவர்கள் உணவு, உலோகக் கருவிகள், ஆயுதங்கள் போன்றவற்றை மரம், கைவண்ணப் பொருட்கள், நீர் போன்றவற்றுக்காகப் பண்டமாற்றம் செய்தனர். உருளைக்கிழங்கு, மற்றும் துப்பாக்கிகளின் அறிமுகம் மாவோரிகளின் வேளாண்மை, மற்றும் போர்முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1801 முதல் 1840 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உள்ளூர் மாவோரிகளிடையே 600 இற்கும் அதிகமான போர்கள் இடம்பெற்றன. 30,000 முதல் 40,000 வரையான மாவோரிகள் கொல்லப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் நியூசிலாந்தில் குடியேற ஆரம்பித்தனர். இறுதியில் மாவோரி இனத்தவரின் பெரும்பாலானோர் மதம் மாறினர். 19ம் நூற்றாண்டில் மாவோரி இனத்தவரின் மகக்ள்தொகை 40% ஆகக் குறைந்தது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய்களே இவர்களில் பெரும்பான்மையோரை அழித்தது. 1788 இல் ஆர்தர் பிலிப் நியூ சவுத் வேல்ஸ் (இன்றைய ஆத்திரேலியாவின் ஒரு மாநிலம்) ஆளுனராகப் பதவியேற்ற போது நியூசிலாந்தை நியூ சவுத் வேன்சின் ஒரு பகுதியாக அறிவித்தார். 1832 இல் ஜேம்ஸ் பஸ்பி என்பவர் நியூசிலாந்தின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1835 இல், சார்ல்சு டி தியேரி என்பவர் பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அச்சுறுத்திய போது, நியூசிலாந்தின் ஐக்கியப் பழங்குடியினர் என்ற அமைப்பு நியூசிலாந்தின் விடுதலையை அறிவித்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னரைக் கேட்டுக் கொண்டது. இதனால் எழுந்த குழப்பநிலையை அடுத்து பிரித்தானிய அரசு நாட்டை தமது வசப்படுத்துவதற்காகவும் மாவோரி மக்களுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தவும் வில்லியம் ஹோப்சன் என்ற கேப்டனை நியூசிலாந்துக்கு அனுப்பியது. 1840 பெப்ரவரி 6 இல் வைத்தாங்கி ஒப்பந்தம் பே ஒஃப் ஐலன்ட்சு (Bay of Islands) என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது. நியூசிலாந்து கம்பனி என்ற நிறுவனம் வெலிங்டனில் சுயாதீனமான ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைக்கவிருப்பதாக அறிவித்ததை அடுத்தும், பிரெஞ்சுக் குடியேறிகள் அக்கரோவா என்ற பகுதியில் நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததைத் தடுக்கவும், வில்லியம் ஹொப்சன் 1840 மே 21 இல் நியூசிலாந்து முழுவதையும் பிரித்தானியாவுக்கு சொந்தம் என அறிவித்தார். வைத்தாங்கி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, குடியேற்றங்கள் மிக விரைவாக அதிகரித்தன. நியூசிலாந்து ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்சின் ஒரு குடியேற்றப் பகுதியாக இருந்து, பின்னர் 1841 சூலை 1 இல் தனியான பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 1852 இல் இங்கு பிரதிநிதித்துவ அரசு பதவியேற்று 1854 ஆம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.. 1856 இல் உள்நாட்டு விவகாரங்களுக்கான சுயாட்சி உரிமை நியூசிலாந்துக்குக் கிடைத்தது. தெற்குத் தீவு சுயாட்சி உரிமை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்பட்டமையால், நியூசிலாந்தின் அன்றைய பிரதமர் ஆல்பிரட் டோமெட் ஆக்லாந்தில் அமைந்திருந்த தலைநகரை தெற்குத் தீவுக்கு மாற்ற முடிவு செய்தார். வெலிங்டன் நகரம் துறைமுகம், மற்றும் தெற்கு, வடக்குத் தீவுகளின் நடுவில் அமைந்திருந்ததால் இந்நகரம் தலைநகராகத் தெரிவு செய்யப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் வெலிங்டனில் முதன் முறையாக நாடாளுமன்றம் கூடியது. குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நிலம் தொடர்பான சர்ச்சைகளினால் 1860கள், 70களில் அங்கு போர் இடம்பெற்றது. மாவோரிகளின் பெரும் எணிக்கையானல் இதனால் பறி போனது. 1893 இல் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது. 1907 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் படி, ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரித்தானியப் பேரரசின் கீழ் மேலாட்சி அரசு முறையை அறிவித்தார். 1947 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் இயற்றுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, நியூசிலாந்து மக்களின் ஒப்புதல் இன்றி பிரித்தானிய நாடாளுமன்றம் அந்நாடு தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரித்தானியப் பேரரசுடன் இணைந்து முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் போரிட்டு, பெரும் பொருளியல் வீழ்ச்சியில் வீழ்ந்து துன்புற்றது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் தொழிற் கட்சி அரசு பதவிக்கு வந்து பாதுகாப்புவாத பொருளாதாரத்திட்டத்தை முன்னெடுத்தது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் நியூசிலாந்தின் வளம் பெரிதும் உயர்ந்தது. மாவோரி மக்கள் வேலை தேடி தமது பாரம்பரிய கிராமப் பகுதிகளை விட்டு நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர். மாவோரி எதிர்ப்பியக்கம் உருவாகி, ஐரோப்பிய மையவாதத்தை விமரிசித்தது, மாவோரி கலாச்சாரத்துக்கு அதிக அங்கீகாரம், வைத்தாங்கி ஒப்பந்தத்தை சரிவர நடைமுறைப் படுத்தல் போன்றவற்றுக்க்காகக் குரல் கொடுத்தது. 1975 ஆம் ஆண்டில், ஒப்பந்தம் மீறப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு பெரும்பான்மையான மாவோரிகளுக்கு வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு கண்டது. ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது. குறைந்த அளவு அகலமாக 22 கிலோமீட்டரைக் கொண்ட குக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது. நியூசிலாந்து பரப்பளவு அடிப்படையில் சப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைவிடச் சற்றுச் சிறியதாகவும், ஐக்கிய இராச்சியத்தை விடச் சற்றுப் பெரிதாகவும் உள்ளது. இதன் வடக்கு-வடகிழக்கு அச்சில் இந்நாடு 1,600 கிமீ (1,000 மைல்கள்) நீளம் கொண்டது. இதன் கரைப் பகுதிகளின் மொத்த நீளம் 15,134 கிமீ (9,404 மைல்) ஆகும். வடக்குத், தெற்குத் தீவுகளை விட, மனிதர் வாழும் சிறிய தீவுகளில் முக்கியமானவை: ஸ்டுவர்ட் தீவு, சதாம் தீவுகள், அவுராக்கி குடாவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் தீவு, டி'ஊர்வில் தீவு மற்றும் ஆக்லாந்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள வைகீக்கி தீவு ஆகியவை ஆகும். நியூசிலாந்து பெருமளவு கடல் வளங்களைக் கொண்டது. தனது நிலப்பரப்பிலும் 15 மடங்கு பெரிதான நான்கு மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.5 மில்லியன் சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் ஏழாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் இந் நாட்டில் உள்ளது. நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி தெற்குத் தீவு ஆகும். இது இதன் நீள வாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் எனப்படும் மலைத் தொடரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மலைத் தொடரின் மிகவுயர்ந்த சிகரம் ஆவேராக்கி/குக் மலை 3,754 மீட்டர்கள் (12,320 அடிகள்) உயரமானது. தெற்குத் தீவில் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமான 18 மலைச் சிகரங்கள் உள்ளன. வடக்குத் தீவு தெற்குத்தீவிலும் குறைவான மலைகளைக் கொண்டது ஆயினும் எரிமலைச் செயற்பாடுகளைக் கொண்டது. வடக்குத் தீவில் மிக உயர்ந்த மலையான ருவாப்பேகூ மலை (2,797 மீ / 9,177 அடி) ஒரு இயக்கமுள்ள எரிமலையாகும். நியூசிலாந்தின் வேறுபட்ட நில அமைப்புக்கும், இது கடல் மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டதுக்கும் காரணம் பசிபிக் புவியோட்டுக்கும், இந்திய-ஆஸ்திரேலியப் புவியோட்டுக்கும் இடையே உள்ள இயங்கியல் எல்லை (dynamic boundary) ஆகும். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் அரைப்பங்கு பரப்பளவு கொண்டதும், பெரும்பகுதி நீரில் முழுமையாக அமிழ்ந்துள்ளதுமான நியூசிலாந்தியா என்னும் கண்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும். சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்தியா இரண்டு பகுதிகளாக இழுக்கப்பட்டது. இதனை ஆல்ப்ஸ், தாவுப்போ எரிமலை வலயம் ஆகிய பகுதிகளிலுள்ள பிளவுகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பண்பாட்டு அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், நியூசிலாந்து பொலினீசியாவின் ஒரு பகுதியாகும். இது பொலினீசிய முக்கோணப் பகுதியின் தென்மேற்கு மூலையாக உள்ளது. நியூசிலாந்தின் அகலக்கோடு 47°தெ 34 ஆக அமைந்துள்ளது. இது வட அரைக் கோளத்தில் இத்தாலியின் அமைவிடத்துடன் பொருந்தி வருகிறது. எனினும் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களாலும், கடல் நீரோட்டங்களாலும், இதன் காலநிலை மிதமானதாகவே உள்ளது. நாடு முழுதும் மித வெப்பக் காலநிலை நிலவுவதுடன் கடல் சார்ந்ததாகவும் உள்ளது. வெப்பநிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0°ச (32°ப) க்குக் கீழ் செல்வதோ அல்லது 30 °C (86 °F) மேல் செல்வதோ கிடையாது. முக்கியமான நகரங்களில் கிறைஸ்ட்சேர்ச்சே மிகவும் வரண்ட நகரமாகும். இது ஆண்டுக்கு 640 மிமீ (25 அங்) மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆக்லாந்து கூடிய ஈரலிப்பான நகரம். இது ஏறத்தாழ இரண்டு மடங்கு மழையைப் பெறுகிறது. கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன், ஆக்லாந்து ஆகிய நகரங்கள் ஆண்டுக்குரிய சராசரியாக 2000 மணிநேரங்களுக்கும் மேலான சூரிய ஒளியைப் பெறுகின்றன. தெற்குத் தீவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் குளிர்ந்ததும், மேக மூட்டம் கொண்டதுமான காலநிலையைக் கொண்டுள்ளன. இப் பகுதிகள் ஆண்டுக்கு 1400 - 1600 மணிநேர சூரிய ஒளி பெறுகின்றன. தெற்குத் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளே நாட்டில் அதிக சூரிய ஒளியைப் பெறும் பகுதிகளாகும். இவை ஆண்டுக்கு 2400 - 2500 மணிநேர சூரிய ஒளியைப் பெறுகின்றன. நியூசிலாந்தின் அரசியலமைப்பு சட்டமாக்கபடவிடினும், அது நாடாளுமன்ற முறையுடன் கூடிய அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். இரண்டாம் எலிசபெத் நாட்டின் ராணியும், நாட்டுத் தலைவருமாவார். பிரதமரின் ஆலோசனைக்கமைய ராணியால் நியமிக்கப்படும் தலைமை ஆளுநரே ராணியின் பிரதிநிதியாவார். தலைமை ஆளுநர் அரசியின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரமுடையவராக உள்ளார். அநீதி வழக்குகளை மீளாய்தல், அமைச்சர்கள், தூதர்கள், மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை நியமித்தல் போன்ற வழமையான செயற்பாடுகளையும் சில அரிதான நேரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல், சட்ட முன்வரைவை சட்டமாக்க அனுமதி வழங்க மறுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வல்லவர். அரசியாரின் அதிகாரமும் தலைமை ஆளுநரின் அதிகாரமும் அரசியலமைப்பினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாது இந்த அதிகாரங்களை வழக்கமாகச் செயல்படுத்த இயலாது. நியூசிலாந்தின் பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நாட்டின் இறைமையையும் கொண்டுள்ளது. இது அரசியையும் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மேலவையும் அங்கமாக இருந்தது; இது 1950இல் கலைக்கப்பட்டது. அரசி மற்றும் பிற அரசு அமைப்புகளின் மீதான நாடாளுமன்றத்தின் மீயுயர்வு இங்கிலாந்தில் 1689ஆம் ஆண்டு சட்டத்தினால் நிறுவப்பட்டு நியூசிலாந்துச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கின்றது. பெரும்பான்மை இல்லையெனில் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமையக்கூடும். தலைமை ஆளுநர் பிரதமரின் பரிந்துரைப்படி அமைச்சர்களை நியமிக்கின்றார். பிரதமரின் தலைமையில் கூடும் அமைச்சர்கள் கூடும் ஆய அமைச்சரவை அரசின் மிக உயர்ந்த முடிவெடுத்துச் செயற்படும் அமைப்பாகும். ஆய அமைச்சரவையின் முடிவுகளுக்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்பாவர். நீதிபதிகளும் நீதிமன்ற அலுவலர்களும் அரசியல் சார்பற்று கட்டமைக்கப்பட்ட விதிகளின்படி நியமிக்கப்படுகின்றனர்; இவர்கள் அரசியல் அமைப்பின்படி அரசிடமிருந்து முழுமையான விடுதலை பெற்று சுயாதீனமுடையவர்கள். இதனால் நீதிமன்றங்கள் சட்டத்தை மற்றவர்களின் தாக்கமின்றி தெளிவாக்க இயல்கின்றது. இலண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் மீயுயர் முறையீடு நீதிமன்றமாக இருந்தது; 2004ஆம் ஆண்டிலிருந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் இப்பணியை மேற்கொண்டுள்ளது. 1853 முதல் 1993 வரை நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களுமே முதலில் கூடுதலாக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெல்வதாக அமைந்திருந்தன. 1930 முதல் இந்த தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகள், நியூசிலாந்து தேசியக் கட்சி, நியூசிலாந்து தொழிலாளர் கட்சி முதன்மை வகித்தன. 1996ஆம் ஆண்டு முதல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் அமைந்த "கலவை உறுப்பினர் விகிதாச்சாரம்" (MMP) பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் தரப்படுகின்றன; ஒன்று தொகுதிக்கானது (சில மாவோரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன), மற்றது கட்சிக்கானது. 2005 முதல், 70 தேர்தல் தொகுதிகள் உள்ளன; மீதம் 50 இடங்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு ஏற்ப பிரித்தளிக்கப்படுகின்றன. இந்த இடங்களைப் பெற ஒரு கட்சி ஒரு தேர்தல் தொகுதியிலாவது வென்றிருக்க வேண்டும், அல்லது கட்சிகளுக்கான மொத்த வாக்குகளில் 5% ஆவாது பெற்றிருக்க வேண்டும். மார்ச் 2005க்கும் ஆகத்து 2006க்கும் இடையிலான காலத்தில் நாட்டின் மிக உயரிய பதவிகள் (நாட்டுத் தலைவர், தலைமை ஆளுநர், பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், தலைமை நீதிபதி) அனைத்திலும் பெண்கள் பதவியிலிருந்த உலகின் ஒரே நாடாக நியூசிலாந்து இருந்தது. நியூசிலாந்து உலகின் மிகவும் நிலைத்தத்தன்மை உடைய மற்றும் நன்கு அரசாளப்படும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. 2011இல் நாட்டின் மக்களாட்சி அமைப்புக்களின் வலிமை கொண்டு தரபடுத்திய பட்டியலில் நியூசிலாந்து ஐந்தாவதாக உள்ளது. அரசின் தெளிவுத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சிக்கு முதலாவதாக உள்ளது. அண்மைய தேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பு 79% ஆக உள்ளது. நியூசிலாந்து நவீன, வளமையான, வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. தனிநபர் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறதாழ US$28,250 ஆக உள்ளது. நியூசிலாந்தின் நாணயம் "கிவி டாலர்" என அறியப்படும் நியூசிலாந்து டாலர் ஆகும்; இது குக் தீவுகள், நியுவே, டோக்கெலாவ், மற்றும் பிட்கன் தீவுகளிலும் செல்லுபடியாகின்றது. 2013 மனித வளர்ச்சிச் சுட்டெண்படி ஆறாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. காலந்தொட்டு, பிழிந்தெடுக்கின்ற தொழில்கள் நியூசிலாந்தின் பொருளியலில் முதன்மையாக இருந்துள்ளன; அடைத்தல், திமிங்கல வேட்டை, பார்மியம், தங்கம், கவுரி பிசின் மற்றும் உள்நாட்டு வெட்டுமரம் தொழில்களும் பல்வேறு காலங்களில் முதன்மை பெற்றுள்ளன. 1880களில் குளிரூட்டப்பட்ட கப்பல்கள் உருவாக்கத் தொடங்கிய பிறகு, இறைச்சியும் பால்பொருட்களும் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியாயிற்று; இது நியூசிலாந்தின் பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வேளாண்மைப் பொருட்களுக்கு தேவை மிகுந்தநிலையில் நியூசிலாந்தின் பொருளியலும் வாழ்க்கைத்தரமும் உயரத் தொடங்கியது. 1950களிலும் 1960களிலும் நியூசிலாந்தின் வாழ்க்கைத்தரம் ஆத்திரேலியா, மேற்கு ஐரோப்பியர்களுடையதை விட உயர்ந்ததாக இருந்தது. 1973இல் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிச் சந்தை குறையத் தொடங்கியது. 1973 எண்ணெய் மற்றும் 1979 ஆற்றல் நெருக்கடிகளால் பெரும் பொருளியல் தாழ்வு ஏற்பட்டது. 1982இல் நியூசிலாந்தின் தனிநபர் வருமானம் உலக வங்கியால் மதிப்பிடப்பட்ட அனைத்து வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைந்ததாக இருந்தது. 1984 முதல் அடுத்தடுத்த அரசுகள் முதன்மை பருப்பொருளியல் சீரமைப்பை மேற்கொண்டு, நியூசிலாந்தை மிகவுயர்ந்த பாதுகாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து தாராளமயமாக்கப்பட்ட கட்டற்ற பொருளியலுக்கு மாற்றி முன்னேற்றம் கண்டுள்ளன. நியூசிலாந்து பன்னாட்டு வணிகத்தை மிகவும் நம்பியுள்ளது; குறிப்பாக அதன் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. தேசிய உற்பத்தியில் 24% ஏற்றுமதியால் கிட்டுகின்றது; இதனால் பன்னாட்டு பொருட்சந்தை மற்றும் விலை மாற்றங்களும் உலகளாவிய பொருளியல் பின்னடைவுகளும் நியூசிலாந்தை பெரிதும் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் ஏற்றுமதிப் பொருட்களில் வேளாண்மை, தோட்டப்பயிர், மீன்பிடித் தொழில், வனத்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவை பாதிக்கும் மேலாக பங்கேற்கின்றன. ஏற்றுமதியில் ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், சீனா முதன்மைப் பங்கேற்கின்றன. பொருளியலில் சேவைத்துறை முதன்மை வகிக்கின்றது; தயாரிப்பு, கட்டமைப்பு, வேளாண்ண்மை, கனிமத்துறை அடுத்தநிலைகளில் உள்ளன.$15.0 பில்லியன் பெறுமதியுள்ள சுற்றுலாத்துறை 2010இல் நியூசிலாந்தின் மொத்த பணிவாய்ப்புகளில் 9.6 விழுக்காடாக உள்ளது. 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பளி நாட்டில் ஏற்றுமதியாகும் முதன்மை வேளாண் பொருளாக இருந்தது. 1960கள் வரைகூட அனைத்து ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. ஆனால் தொடர்ந்து உலகச்சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது; இதனால் தற்காலத்தில் இது இலாபகரமானத் தொழிலாக இல்லை. மாறாக பால்பொருட்களின் ஏற்றுமதி கூடியுள்ளது. 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி பாற்பொருட்களின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 21 விழுக்காடாக ($9.1 பில்லியன்) இருந்தது. திராட்சைத்தோட்டங்களும் மது உற்பத்தியும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. 2008இல், நியூசிலாந்தின் ஆற்றல் தேவையில் 69% எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி மூலமாகப் பெறப்பட்டது. மீதம் நீர் மின் ஆற்றல் புவிவெப்ப மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு பெறப்பட்டது. நியூசிலாந்தின் போக்குவரத்துப் பிணையம் நீளமுள்ள விரைவுச்சாலைகள் உட்பட நீளமுள்ள சாலைகளாலும் நீளமுள்ள தொடர்வண்டித் தடங்களாலும் ஆனது. முதன்மை நகரங்களும் ஊர்களும் பேருந்துச் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன; இருப்பினும் தனிநபர் தானுந்து முதன்மை போக்குவரத்தாக விளங்குகின்றது. தொடர்வண்டித் தடங்கள் 1993இல் தனியார்மயமாக்கப்பட்டன; ஆனால் 2004க்கும் 2008க்கும் இடையே படிப்படியாக இவை மீண்டும் அரசுடமையாக்கப்பட்டன. இத்தடங்களில் பெரும்பாலும் பயணியர் போக்குவரத்தை விட சரக்கு போக்குவரத்தே முதன்மையாக உள்ளது. நியூசிலாந்தில் ஆறு பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. 1989 வரை நியூசிலாந்தின் அஞ்சல் அலுவலகம் தொலைத்தொடர்பு தன்னுரிமையாக இயக்கி வந்தது; 1990இல் தனியார் மயமாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நியூசிலாந்தை தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் 12வது இடத்தில் தரப்படுத்தியுள்ளது. வெண்கலச் சிலை வார்ப்பு வெண்கலத்தை உபயோகித்து சிலைகள் செய்வது பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன. வெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர். செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு வெண்கலத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது. குங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக வடிக்கிறார்கள். சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் வடிக்கப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகு பொம்மை தான் அசல், வெண்கலச் சிலைகள் நகல்கள் தான். சிலையின் சிறிய பகுதிகளுக்கு பலத்திற்காகவும், பின்னர் மோல்டு தயார் செய்த பின் வெண்கலக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது. மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டுக் கலவையை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான மோல்டு தயாராகிறது. மோல்டு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது. மோல்டு நன்றாகக் காய்ந்த பிறகு, நெருப்பில் பக்குவமாக சூடாக்கி, உள்ளிருக்கும் மெழுகு முழுவதும் உருகி வெளியேறிய பின், மோல்டை மேலும் சிறிது சூடாக்கி, தயாராக இருக்கும் உருக்கிய வெண்கலக் கலவையை மெலிதாகவும் ஒரே சீராகவும் மோல்டினுள் ஊற்றப்படுகிறது. மோல்டு முழுவதும் நிரம்பிய பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படுகிறது. முழுவதும் குளிர்ந்த பின்னர் மோல்டை உடைத்து, சிலையைச் சுத்தம் செய்து, பிசிறுகளை நீக்கிய பின்னர், வெண்கலக் கலவை மோல்டினுள் எளிதாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட இணைப்புகளை நீக்கி, நகாசு வேலைகள் முடிந்த பின் சிலை முழுவதுமாக தயாராகிறது. பஞ்சலோக சிலைகள் சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன. ஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே. பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள் முதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இந்த வகை விலைமதிப்பில்லா புராதனச் சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இத்தகைய ஆயிரம் ஆண்டு பழைமையான உமாபரமேஸ்வரி சிலை 6,50,000 டாலருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் (Asian Civilization Museum) வைக்கப்பட்டது. இது பற்றிய விசாரணையில்,இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் மட்டுமே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அமெரிக்க அரசும், சிங்கப்பூர் அரசும் இவ்வகைத் திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அளவில் பெரிய மதிப்பில் உயர்ந்த இத்தகைய விக்கிரகங்கள் நாடு விட்டு நாடு கடத்தப்பட இந்திய காவல்துறை, சுங்கத்துறை, விமானநிலைய அதிகாரிகள் முதலானோர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பதும் இதில் உள்ள அரசியல் மற்றும் ஊழல் முதலானவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஆசிய நாடுகளின் பட்டியல் இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய உறுப்பு நாடுகள் 48 உள்ளன. மியான்மர் மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) ( , or (also with the stress on first syllable); ), என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர். வங்காளதேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த நாட்டின் 2014ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நாட்டின் மக்கள் தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக 51 மில்லியன் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. Myanmar is 676,578 square kilometres (261,227 sq mi) in size. முன்னைய தலைநகராக ரங்கூன் இருந்தது. பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் யங்கோன் ஆகும். மியன்மாரின் மேல் பர்மாவின் பியு நகர மாநிலங்களிலும், கீழ் பர்மாவில் மொன் இராச்சியத்திலும் திபெத்திய-பர்மிய மொழியை பேசிய முற்கால குடியேற்றவாதிகள் காணப்பட்டனர். 9ம் நூற்றாண்டில், பாமர் மக்கள் மேல் ஐராவதி பள்ளதாக்கிற்குள் நுழைந்ததன் பின் 1050களில் பகன் இராச்சியம் உருவாக்கப்பட்டது. பின்னர் பருமிய மொழி, கலாச்சாரம் மற்றும் தேரவாத பௌத்தம் போன்றன மெல்ல மெல்லமாக நாட்டின் உரித்தானவையாக மாறின. மொங்கோலிய படையெடுப்பின் காரணமாகவும், பல போரிடக்கூடிய மாநிலங்கள் எழுந்ததன் காரணமாகவும் பகன் இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. 16ம் நூற்றாண்டில், துங்கு வம்சத்தினால் மியன்மார் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதன் பின், இந்த நாடு தெற்காசியாவின் வரலாற்றில் குறுகிய காலத்திற்கு மிகப்பெரிய பேரரசாக எழுச்சியடைந்தது. 19ம் நூற்றாண்டின் முற்காலத்தில் கொன்புங் வம்சம் நவீன மியன்மாரினை உள்ளடக்கிய ஒரு பகுதியையும், மணிப்பூர் மற்றும் அசாம் ஆகியவற்றையும் குறுகிய காலத்திற்கு ஆட்சி செய்தது. மியன்மாரை பிரித்தானியர் மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்களின் பின் 19ம் நூற்றாண்டில் கைப்பற்றினர். அதன் பின் மியன்மார் பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரித்தானிய குடியேற்ற நாடாக மாறியது. 1948 இல் மியன்மார் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகியது. முதலில் சனநாயக நாடாக இருந்து பின்னர் 1962ல் இராணுவ சர்வாதிகாரமாகிய கோப் டேடட்டாக மாறியது . ஜெனரல் நீ வின் ராணுவம் 1962 இல் ஆட்சியை கைப்பற்றி உடன் இந்தியர்களை வெளியேற்றும் வேலை ஆரம்பம் ஆனது . தனியார் வசம் இருந்த வியாபார நிறுவங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டு நஷ்டஈடு தராமல் தேசியமயம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டன, மூன்று லட்சம் இந்தியர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்து வெறும் 175 கியாட் பணத்துடன் உயிருக்கு அஞ்சி வெளியேறினர். இதன் அதிகமான சுதந்திர ஆண்டுகளில், மியன்மார் பெருத்த இனக் கலவரத்திற்காளாகியிருந்தது. மியன்மாரின் எண்ணற்ற இனக் குழுக்கள் நீண்ட நடக்கும் உள்நாட்டு போர்களுள் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு பல அமைப்புக்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக நிலையாகவும், ஒரு முறையாகவும் அறிக்கை வெளியிட்டன. 2011இல், இராணுவ ஆட்சிக் குழு அதிகாரப்பூர்வமாக 2010 பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, பெயரளவில் சிவிலிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தலைவர்கள் நாட்டில் இன்னும் மகத்தான சக்தியை பிரயோகிக்க என்னும் பொது, பர்மிய இராணுவம் அரசாங்க ஆதிக்கத்தை அகற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக ஆங் சான் சூச்சி மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டின் மனித உரிமைகள் அறிக்கையும், வெளிநாட்டு உறவும் மேம்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார தடைகளும் தளர்த்தப்பட்டன. ஆயினும், அரசாங்கத்தின் முசுலிம் ரோகிஞ்சா சிறுபான்மை சிறுபான்மை சிகிச்சை பற்றியும், மத மோதல்கள்களைக் கருத்தில் கொள்வது குறைவு பற்றியும் தொடர்ந்தும் விமர்சனம் வெளியாகின்றன. 2015 தேர்தலில், ஆங் சான் சூச்சியின் கட்சி இரு இல்லங்களிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது. மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன. மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ல், மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம். பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது விகாரைகளின் பூமி ('Land of Pagodas') என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "[[சுவேதகோன் விகாரை]" மிகவும் புகழ் பெற்றது. [[மண்டலை]]யில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது. பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். [[விவசாயம்]], சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம். தொழிலாளிகளில் 67.4% பேர் [[வேளாண்மை|விவசாயத்தில்]]. [[ஐராவதி ஆறு]] படுகையில் உலகின் வளமான [[நெல்]] விளை நிலங்கள் உள்ளன.[[மணி]] வளங்கள் நிறைந்த நாடு. [[தமிழர்கள்]] முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர். தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான [[ரோஹிங்கிய]] என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது. 1989ல், இராணுவ அரசாங்கம் [[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி|பர்மாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும்]], அதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்ட பல பெயர்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக மாற்றியது. தனது நாட்டின் பெயரான "பர்மாவை" "மியன்மார்" என மாற்றியதும் இதற்குள் அடங்குகிறது. மிகுதி பெயர்மாற்றங்கள் போட்டியிட்ட சிக்கல்களாகவே விளங்குகின்றன. பல அரசியல் மற்றும் இன எதிர்புக் குழுக்களும், நாடுகளும் "பர்மா" என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. ஏனென்றால், அவை ஆட்சி செய்கின்ற இராணுவ அரசாங்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்காமையினாலேயே ஆகும். அல்லது அதன் பெயர்மாற்றல் அதிகாரத்தினாலேயோ இருக்கலாம். மியன்மார் நாட்டின் அதிகாரபூர்வமான முழுப்பெயர் "மியன்மார் ஒன்றியக் குடியரசு" ([[ஆங்கிலம்]] : "Republic of the Union of Myanmar", , "", ) ஆகும். மியன்மார் என்ற பெயரை பயன்படுத்த விரும்பாமல் பழைய காலத்து பெயரையே பயன்படுத்த விரும்பும் நாடுகள் "பர்மா குடியரசு" ([[ஆங்கிலம்]] : "Union of Burma" )என அழைக்கின்றன. ஆங்கிலத்தில், இந்த நாடு பிரசித்தியாக "பர்மா" ("Burma") என்றோ அல்லது "மியன்மார்" ("Myanmar") அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களும் பர்மியர்களின் பெரும்பான்மை இனக்குழுவான [[பாமர் மக்கள்|பாமர்களிடமிருந்தே]] பெறப்பட்டன. "மியன்மார்" என்ற பெயர் இந்த பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். "பர்மா" என்ற பெயர் "பாமர்" என்பதில் இருந்து வந்ததாகும். இப்பெயர் பாமர் இனக்குழுவின் பேச்சு வழக்கு பெயராகும். பதிவின் படி பார்க்கையில், இவற்றின் உச்சரிப்பு ' () அல்லது ' () என்று வருகின்றன. 18ஆம் நூற்றாண்டிலிருந்து "பர்மா" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. [[இந்தியா]]வின் முன்னைய [[இந்து]], [[சமசுகிருதம்]] போன்றவற்றின் [[வேதம்|வேதங்கள்]] பர்மாவில் ब्रह्मावर्त / ब्रह्मदेश (பிரம்மவார்ட்/ பிரமதேசு, Brahmavart/Brahmadesh). இது 'இந்துக் கடவுள் [[பிரம்மா]]வின் பூமி' ('Land of Hindu god Bramha') எனக் குறிப்பிடுகிறது. [[ஆத்திரேலியா]], [[கனடா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற பல நாடுகளின் அரசாங்கம் ஆங்கிலத்தில் "பர்மா" என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. அதிகாரபூர்வ ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொள்கை பர்மா என்ற பெயரையே இந்நாட்டிற்கு வைத்துள்ளது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் வலைத்தளம் இந்நாட்டின் பெயரை "பர்மா (மியன்மார்)" என்றே பட்டியலிட்டுள்ளது. [[பராக் ஒபாமா]] மியன்மார் நாட்டிற்கு இரண்டு பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றார். [[செக் குடியரசு]] அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது, இருப்பினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது வலைத்தளத்தில் மியன்மார், பர்மா ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளது. [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு]], [[உருசியா]], [[ஜெர்மனி]], [[சீனா]], [[இந்தியா]], [[நோர்வே]], மற்றும் [[ஜப்பான்]] ஆகிய நாடுகளைப் போன்று [[ஐக்கிய நாடுகள் அவை]]யும் "மியன்மார்" என்ற பெயரையே பயன்படுத்துகின்றது. [[பிபிசி]], [[சிஎன்என்]], [[அல் ஜசீரா]], [[ராய்ட்டர்ஸ்]], மற்றும் ஆர்டி (ரசியா டுடே) உள்ளிட்ட அதிகமான ஆங்கில மொழி மூலமான செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக "மியன்மார்" என்ற பெயரையே பயன்படுத்துகின்றன. [[இசுப்பானியம்]], இத்தாலியன், உரோமானியன் போன்ற மொழிகளில் மியன்மார் "பிர்மானியா" ("Birmania") என்று அழைக்கப்படுகின்றது. "பிர்மானியா" என்பது "பர்மா" என்பதின் இசுப்பானிய மொழிபெயர்ப்பாகும். மியன்மார் போர்த்துக்கேய மொழியில் "பிர்மனியா" ("Birmânia") என்றும், பிரான்சிய மொழியில் "பிர்மனி" ("Birmanie") என்றும் அழைக்கப்படுகின்றது. [[பிரேசில்]], போர்த்துக்கல் போன்ற போர்த்துகேய மொழி பேசும் நாடுகளும், பிரான்சு போன்ற பிரெஞ்ச் மொழி பேசும் நாடுகளும் தற்போது பிரதானமாக "மியன்மார்" என்ற பெயரையே பயன்படுத்துகின்றன. [[File:Pyu Realm.png|thumb|எட்டாம் நூற்றாண்டில் பியூ சிட்டி-இசுடேட்சு; பகான் ஒப்பிடுகைக்கு மட்டுமே, இது சமகாலம் அல்ல.]] மியான்மர் என அழைக்கப்படும் இப் பிரதேசத்தில் 400,000 ஆண்டுகளுக்கு முன் "ஓமோ எரெக்டசு" (') என்ற அழிந்த இனம் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. மியான்மரில் "ஒமோ சபியென்சு" (') இனம் வாழ்ந்ததற்கு முதல் ஆதாரமாக கி.மு. 11,000 ஆண்டளவில் "அன்யதியன்" எனும் [[கற்காலம்|கற்கால]] காலாசாரமும், கற்கால ஆயுதங்களும் மத்திய மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். மியான்மரில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்திற்கு]] ஆதாரமாக கி.மு. 10,000ற்கும் கி.மு. 6,000ற்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மரங்கள் மற்றும் விலங்குகளை வீட்டில் வளர்த்தலும், கூராக்கப்பட்ட கல் ஆயுதங்களும் கொண்ட [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]] படா-லின் குகைகளில் கண்பிடிக்கப்பட்டமை ஆகும். [[பகுப்பு:மியான்மார்| ]] [[பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள்]] [[பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்]] [[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]] [[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]] [[en:Homo sapiens]] பாக்கித்தான் பாக்கித்தான் ("Pakistan", "பாகிஸ்தான்" ( அல்லது ; )), அதிகாரபூர்வமாக பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு (), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம். 180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095 கிமீ () பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய "வாகான் இடைப்பகுதி"யால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது. நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் "ஹேப்பி பிளானட் குறியீட்டில்" 16வதாக வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள். 1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது. பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது. பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மாகாணங்கள்: பிரதேசங்கள்: பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்: அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார். பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு. அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, ("United States of America" / "USA" / "US") பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது. இதன் தலைநகர் வாசிங்டன், டி. சி.. மிகுந்த மக்கள்தொகை கொண்டது நியூயார்க் நகரம். 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் வட அமெரிக்கா பெருநிலத்தில் கனடாவிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. அலாஸ்கா மாநிலம் வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் பெரிங் நீரிணையைக் கடந்து உருசியாவிடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. அவாய் மாநிலம் நடு-அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓர் தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப்பெருங்கடலிலும் கரிபியக் கடலிலும் சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாகவுள்ளது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%). அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும். தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.. 19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், எசுப்பானியா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்க்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது. 1507 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு, இத்தாலிய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரில் அமெரிக்கா எனப் பெயரிட்டார். முன்னர் பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. சூலை 4, 1776 அன்று "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்" கைக்கொண்ட "பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக" இது அமைந்தது. தற்போதைய பெயரை நவம்பர் 15, 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, "இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்"."யுனைடெட் ஸ்டேட்ஸ்" என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். "யு.எஸ்.", "யு.எஸ்.ஏ", "அமெரிக்கா" ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். "அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ்", "தி ஸ்டேட்ஸ்" ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த "கொலம்பியா" என்பது "கிறிஸ்டோபர் கொலம்பசிடம்" இருந்து வரப்பெற்றதாகும். இது "டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா" என்னும் பெயரில் தோன்றுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக "" என்று அழைக்கலாம். "ஐக்கிய மாநிலங்கள்" என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, "அமெரிக்கா" மற்றும் "யு.எஸ்." ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன. ஆரம்பத்தில் "யுனைடெட் ஸ்டேட்ஸ்" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் "இந்த ஐக்கிய மாநிலங்கள்" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காக் கண்டத்தில் பலநாடுகள் இருந்தபோதும் "அமெரிக்கர்" என்ற சொல், பெரும்பாலான சமயங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் தொடர்புள்ளத் தலைப்புக்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1.9 பில்லியன் ஏக்கர்களாகும். தொடர்ச்சியான மாநிலங்களிலிருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும், இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள். வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டமாகவுள்ள ஹவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பைக் கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் கனடாவிற்கு பிறகு, மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகின்றன: "சி.ஐ.ஏ. வேர்ல்டு ஃபேக்ட்புக்" குறிப்பிடுவது, ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது அதே போல் "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா" குறிப்பிடுவது . நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால், அமெரிக்கா ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது. அட்லாண்டிக் கடலோர சமவெளி உள்ளமைந்த பகுதிகளில் இலையுதிர் காடுகள் மற்றும் பீட்மோன்ட்டின் தொடர்ச்சி குன்றுகளுக்கும் வழிவிடுகிறது. அமெரிக்கப் பேரேரிகள் மற்றும் நடுமேற்கு புல்வெளிப் பகுதிகளை கிழக்கு கடல்படுகையிலிருந்து அபலாசியன் குன்றுகள் பிரிக்கின்றன. உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிபி-மிசௌரி ஆறுகள், முக்கியமாக வடக்கிலிருந்து-தெற்காக நாட்டின் மையப் பகுதி வழியே பாய்கிறது. பெரும் சமவெளிகளின் தட்டையான, பசும் புல்வெளி மேற்குப் பகுதி வரை நீள்கிறது, தென்கிழக்கில் உயர்ந்த மேட்டுப் பகுதி இதனை குறுக்கிடுகிறது. பெரும் சமவெளிகளின் மேற்கு விளிம்பில், ராக்கி மலைகள் வடக்கில் இருந்து தெற்காக நாடெங்கிலும் நீள்கிறது, கொலராடோவில் 14,000 அடிக்கும் (4,300 மீ) அதிகமான உயரங்களை இது எட்டுகிறது. இன்னும் மேற்கில் ராக்கி கிரேட் பேசின், மோகாவே ஆகியவை உள்ளன. சியரா நெவெடாவும் கேஸ்கேடு சிகரங்களும் பசிபிக் கடலோர பகுதியை ஒட்டி செல்கின்றன. 20,320 அடி (6,194 மீ) உயரத்தில், அலாஸ்காவின் மெக்கென்லி சிகரம் இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். கொதிக்கும் எரிமலைகள் அலாஸ்காவின் அலெக்சாண்டரிலும் அலெசியன் தீவுகள் முழுமையிலும் இருக்கின்றன, ஹவாயிலும் எரிமலை தீவுகள் உள்ளன. ராக்கி மலைப்பகுதியில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் கீழ் அமைந்திருக்கும் இராட்சத எரிமலைகள் இந்த கண்டத்தின் மிகப்பெரும் எரிமலையாகும். தனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக, அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே, காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை-வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது. புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும், ஹவாயும் இது போலவே. 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது. மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள். கிரேட் பேசினில் காலநிலை வறண்டும், தென்மேற்கில் பாலைவனமாகவும், கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும், கடலோர ஓரிகான், வாஷிங்டன், தெற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது. அலாஸ்காவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது. அதீத காலநிலை அரிதானதல்ல - மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு ஆட்படும், உலகின் சுழல்காற்றுகளில் பல இந்நாட்டிற்குள், குறிப்பாக மிட்வெஸ்ட்டின் "டொர்னாடோ நீர்ப்பாதை" பகுதியில் நிகழ்கிறது. அமெரிக்க உயிரினச் சூழல் பிரம்மாண்ட பன்முகத்தன்மை கொண்டதாகும்: குழல்வகை தாவரங்களின் சுமார் 17,000 இனங்கள் தொடர்ச்சியான அமெரிக்க நாடுகளிலும் அலாஸ்காவிலும் காணப்படுகிறது, 1,800 க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் ஹவாயில் காணப்படுகிறது, இவற்றில் சில நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 400 பாலூட்டி வகைகள், 750 பறவை இன வகைகள், 500 வகை ஊர்வன, நீர்நில வாழ்வன வகைகளுக்கு தாயகமாக அமெரிக்கா விளங்குகிறது. சுமார் 91,000 பூச்சி இன வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அழியும் அச்சுறுத்தலுக்கும் அபாயத்திற்கும் ஆளாகியுள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் 1973 ஆம் ஆண்டின் அபாயமுற்றுள்ள உயிரினச் சட்டம் பாதுகாக்கிறது, இதனை "அமெரிக்க மீன் மற்றும் காட்டு உயிரின சேவை அமைப்பு" கண்காணிக்கிறது. மொத்தம் ஐம்பத்தி எட்டு தேசிய பூங்காக்களும், நூற்றுக்கணக்கான பிற கூட்டரசு நிர்வாக பூங்காக்களும், காடுகளும், காட்டின பகுதிகளும் உள்ளன. மொத்தத்தில் நாட்டின் நிலப் பகுதியில் அரசின் வசம் 28.8 சதவீதம் உள்ளது. இவற்றில், சில பகுதிகள் எண்ணெய் தோண்டுவதற்கும், இயற்கை வாயு துளையிடுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் அல்லது கால்நடை பண்ணைகளுக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது; 2.4% ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுகிறது என்றாலும் அநேக பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை ஆகும். அலாஸ்கா பூர்வீக குடிகள் உள்ளிட, பிரதான அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் குறைந்தது 12,000 பேர் 40,000 ஆண்டுகள் முன்னதாக வந்து குடியேறினர். கொலம்பியருக்கு முந்தைய மிசிசிபி கலாச்சாரத்தினர் போன்ற சிலர் முன்னேறிய விவசாயம், பிரம்மாண்ட கட்டிடக் கலை மற்றும் மாநில அளவிலான சங்கங்களை உருவாக்கினர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறத் துவங்கிய பின், பல பூர்வீக அமெரிக்கர்கள் சின்னம்மை போன்ற இறக்குமதியான நோய்த் தொற்றுகளுக்கு பலியானார்கள். 1492 ஆம் ஆண்டில், ஜெனோவாவின் ஆய்வுப் பயணியான கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் மன்னரின் ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு கரீபியன் தீவுகளை எட்டினார், அங்கிருந்த பூர்வீக குடிகளுடன் முதல் தொடர்பு கொண்டார். ஏப்ரல் 2, 1513 அன்று ஸ்பெயினின் வெற்றியாளரான ஜூவான் போன்ஸ் டி லியோன் அவர் "லா புளோரிடா" என்றழைத்த ஒரு பகுதியில் காலடி வைத்தார் - இவை யாவும் தற்போதைய அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன் முதலில் காலடி வைத்த பின் நடந்த நிகழ்வுகளின் முதன்மை ஆவணங்கள் ஆகும். பிராந்தியத்தில் ஸ்பெயின் குடியேற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நாளின் தென்மேற்கு அமெரிக்க பகுதியினர், இவர்கள் மெக்சிகோ வழியே ஆயிரக்கணக்கில் வந்தனர். பிரான்சின் விலங்குரோம வர்த்தகர்கள் புதிய பிரான்சு சாவடிகளை பேரேரிகளைச் சுற்றி நிறுவினர்; இறுதியில் வட அமெரிக்காவின் உள்பகுதியில் பெரும் பகுதியை மெக்சிகோ வளைகுடா வரைக்கும் பிரான்சு உரிமை கொண்டாடியது. முதல் வெற்றிகரமான ஆங்கிலக் குடியேற்றங்கள் 1607 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்டவுனில் "வர்ஜினியா குடியேற்ற நாடு" மற்றும் 1620 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட "யாத்ரீகர் பிளைமவுத் குடியேற்ற நாடு" ஆகியவையாகும். மசாசூட்ஸ் விரிகுடா குடியேற்ற நாட்டின் 1628 ஆம் ஆண்டு சட்ட வரைவு தொடர்ச்சியான குடியேற்ற அலையில் விளைந்தது; 1634 ஆம் ஆண்டு வாக்கில் நியூ இங்கிலாந்து பகுதியில் சுமார் 10,000 ப்யூரிடன்கள் குடியேறினர். 1610 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில், சுமார் 50,000 குற்றவாளிகள் பிரித்தானியாவின் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பினர். 1614 ஆம் ஆண்டு தொடங்கி, டச்சு நாட்டினர் மன்ஹாட்டன் தீவிலுள்ள நியூ ஆம்ஸ்டர்டாம் உள்பட அட்சன் ஆற்றின் கீழ்முகத்துவாரப் பகுதிகளில் குடியேறினர். 1674 ஆம் ஆண்டில், டச்சு நாட்டினர் தங்களது அமெரிக்கப் பகுதிகளை இங்கிலாந்தின் வசம் இழந்தனர்; நியூ நெதர்லாந்து மாகாணம் நியூ யார்க் என பெயர் மாற்றம் கண்டது. பல புதிய குடியேற்றவகையினர், குறிப்பாக தெற்கு பகுதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைக் கூலிகளாக இருந்தனர்- 1630 மற்றும் 1680 ஆண்டுகளுக்கு இடையே வர்ஜீனியாவில் குடியேறியவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த வகையினரே. அந்த நூற்றாண்டு நிறைவுறும் காலத்திற்குள்ளாக, ஆப்பிரிக்க அடிமைகள் முதல் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். இவ்வாறாக 1729 ஆம் ஆண்டுகளில் கரோலினாக்கள் பிரிவு மற்றும் 1732 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜியா குடியேற்ற நாடு அமைப்பு, இவற்றுடன், அமெரிக்கா என்று பின்னாளில் ஒன்றிணையவிருந்த பதின்மூன்று பிரித்தானிய குடியேற்ற நாடுகளும் நிறுவப்பெற்றன. இந்த குடியேற்ற நாடுகள் அனைத்தும் அனைத்து சுதந்திர மனிதர்களுக்கும் அணுக்கமுள்ள தேர்தல்களை கொண்டிருந்தன; பழைய ஆங்கிலேயர் உரிமைகளுக்கு பணிவும் குடியரசுவாத, சுயாட்சி ஆதரவு உணர்வுகளும் வளர்ந்தன. அனைத்துமே ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி வைத்திருந்தன. உயர்ந்த பிறப்பு விகிதங்கள், குறைவான இறப்பு விகிதங்கள் மற்றும் தொடர்ந்த குடியேற்றம் இவற்றின் காரணமாக குடியேற்ற நாடுகளின் மக்கள்தொகை வெகு துரிதமாய் வளர்ந்தது. 1730 முதல் 1740 ஆம் ஆண்டுகளில் பெரும் விழிப்பு என்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மதம் மற்றும் மத சுதந்திரத்தில் ஆர்வத்திற்கு உரமூட்டியது. "பிரான்சு மற்றும் இந்திய போரில்", பிரித்தானிய படைகள் கனடாவை பிரான்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர். ஆனால் பிரெஞ்சு பேசும் மக்கள் அரசியல்ரீதியாக தெற்கத்திய குடியேற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தனர். அமெரிக்கத் தொல்குடியினர் (இவர்கள் "அமெரிக்க இந்தியர்கள்" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்) இடம் பெயர்ந்த சூழ் நிலையிலும், இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் 1770 ஆம் ஆண்டிலேயே மொத்தம் 2.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தன, இது பிரித்தானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் கறுப்பு அடிமைகளாவர். பிரித்தானிய வரிவிதிப்புக்கு ஆட்பட்டிருந்த போதிலும் கூட, அமெரிக்க குடியேற்ற நாட்டினருக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதிருந்தது. 1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டத்திலும் 1770 ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது. இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில் கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்ட அந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற வாசகத்துடன், இந்த மாநாடு அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை நிறைவேற்றியது, இந்த சாற்றுரை வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1777 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு விதிகளின்படி உருவான ஐக்கிய அரசாங்கம் பலவீனமானதாக 1789 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பிரான்சின் உதவியோடு அமெரிக்க படைகளால் பிரித்தானிய படைகள் தோல்வியுற்ற பிறகு, பெரிய பிரித்தானியா அமெரிக்க சுதந்திரத்தையும், மிசிசிபி ஆற்றுக்கு மேற்கிலுள்ள அமெரிக்க நிலப்பகுதிகளின் மீதான அமெரிக்க அரசாங்கங்களின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. வரி அதிகாரங்களுடன் ஒரு வலிமையான தேசிய அரசாங்கத்தை நிறுவ விரும்பி ஒரு அரசியல்சட்ட சங்கத்தை 1787 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தனர். அமெரிக்க அரசியல்சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது, புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் முதல் ஜனாதிபதி ஜார்ஜ்-வாஷிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான கூட்டரசு கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது. அடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட ஷரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது. வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன, இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே "விந்தையான ஸ்தாபனத்தின்" பாதுகாவலர்களாக தொடர்ந்தன. சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு, தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது. மேற்குநோக்கு விரிவடைவதற்கான அமெரிக்கர்களின் ஆர்வம் நெடுந்தொடர்ச்சியான இந்திய போர்கள் மற்றும் இந்தியர் நீக்குக் கொள்கையை தூண்டியது. இது தொல்குடி மக்களிடம் இருந்து அவர்கள் நிலத்தை பறிப்பதாக அமைந்தது. 1803 ஆம் ஆண்டுகளில் பிரான்சு உரிமை கொண்டாடிய பிரதேசத்தில் இருந்து வந்த ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் கீழ் மேற்கொள்ளப்பட்ட "லூசியானா கொள்முதல்" நாட்டின் அளவை ஏறக்குறைய இருமடங்காக்கியது. பல்வேறு காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிராக அறிவித்த 1812 ஆம் ஆண்டு போரானது வெற்றி தோல்வியின்றி முடிந்தது, இது அமெரிக்க தேசியவாதத்தை வலிமைப்படுத்தியது. புளோரிடாவுக்குள் தொடர்ந்து அமெரிக்க ராணுவ ஊடுருவல்கள் நிகழ்ந்ததை அடுத்து அதனையும், பிற வளைகுடா பிராந்தியங்களையும் 1819 ஆம் ஆண்டுகளில் எசுப்பானியா அப்பகுதிகளை கைவிட வேண்டியதானது. டெக்சாஸ் குடியரசை 1845 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் "வெளியாகும் தலைவிதி" என்கிற கருத்தாக்கம் பிரபலமானது. 1846 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடனான ஓரிகான் ஒப்பந்தம், இன்றைய அமெரிக்க வடமேற்கு பகுதியை அமெரிக்க கட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மெக்சிகோ-அமெரிக்க போரில் வென்று 1848 ஆம் ஆண்டுகளில் "மெக்சிக்கோவின் நில அளிப்பு" மூலம் கலிபோர்னியா மற்றும் இன்றைய அனைத்து தென்மேற்கு பகுதிகளையும் இணைத்துக் கொண்டது. 1848–1849 ஆம் ஆண்டுகளின் கலிபோர்னியா தங்க வேட்டை மேற்கத்திய புலம்பெயர்வை மேலும் தூண்டியது. புதிய ரயில்பாதைகள் குடியேறியவர்களின் இடப்பெயர்வை சுலபமாக்கி பூர்வீக அமெரிக்கர்களுடனான மோதலை அதிகப்படுத்தியது. ஒரு அரை நூற்றாண்டு காலத்தில், ரயில்பாதைகளின் பரவலை எளிதாக்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்க எருமைகள் அல்லது காளைகள், தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொல்லப்பட்டன. சமவெளி இந்தியர்களின் பிரதான ஆதாரமான எருமைகளின் இழப்பு, பல பூர்விக கலாச்சாரங்களுக்கு வாழ்வாதாரத்தின் மீதான அடியாக விழுந்தது. அடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையிலான பதற்றங்கள் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மீதான விவாதங்களையும், புதிய மாநிலங்களில் அடிமைமுறை பரவுவதை ஒட்டிய கடுமையான வன்முறை மோதல்களையும் அதிகப்படுத்தியது. அடிமைஎதிர்ப்புக்கு ஆதரவு அதிகளவில் இருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே, ஏழு அடிமை மாநிலங்கள் தங்கள் பிரிவினையை அறிவித்திருந்தன; இதனை சட்டவிரோதமாக கூட்டரசு அறிவித்தது. இதனால் பிரிவினை அறிவித்த மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு உருவானது. சம்டர் துறைமுகத்தின் மீது இந்த கூட்டமைப்பு நடத்திய தாக்குதலில், அமெரிக்க உள்நாட்டு போர் துவங்கியது, மேலும் நான்கு அடிமை மாநிலங்கள் கூட்டமைப்பில் இணைந்தன. லிங்கனின் விடுதலை பிரகடனம் அடிமைமுறைக்கு முடிவு கட்டுவதற்கான வாக்குறுதியை ஒன்றியத்திற்கு அளித்தது. ஒன்றியம் 1865 ஆம் ஆண்டில் வென்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல்சட்டம் மேற்கொண்ட மூன்று சட்டதிருத்தங்கள் அடிமைகளாக இருந்த சுமார் நான்கு மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்ததோடு, அவர்களை குடிமக்களாக ஆக்கி , அவர்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. போரும் அதன் தீர்மானமும் கூட்டாட்சி அதிகாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. போருக்கு பின், லிங்கன் படுகொலை சம்பவம் புதிதாக விடுதலை பெற்ற அடிமைகளின் உரிமைகளை உறுதி செய்து தெற்கு மாநிலங்களை மறுஒருங்கமைவு செய்து மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலான குடியரசுக் கட்சியின் மறுகட்டுமான கொள்கைகளை தீவிரமயமாக்கியது. பிரச்சினைக்குள்ளான 1876 ஜனாதிபதி தேர்தலுக்கு 1877 ஆம் ஆண்டு சமரசம் மூலம் தீர்வு கண்டது. மறுகட்டுமானத்தை முடித்து வைத்தது; ஜிம் குரோ சட்டங்கள் விரைவில் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை இல்லாது செய்தது. வடக்கில், நகரமயமாக்கமும் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரலாறுகாணாத குடியேற்ற புலம்பெயர்வும் நாட்டின் தொழில்மயமாக்கத்தை துரிதப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டு வரை நீடித்த குடியேற்ற அலை தொழிலாளர் கூட்டத்தை உருவாக்கியதோடு அமெரிக்க கலாச்சாரத்தை மாற்றியமைத்தது. உயர்ந்த விலை பாதுகாப்புகள், தேசிய உள்கட்டுமான எழுச்சி, புதிய வங்கி கட்டுப்பாடுகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தின. 1867 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்தான அலாஸ்கா கொள்முதல் நாட்டின் பிரதான நில விரிவாக்கம் நிறைவுற்றது. 1890 ஆம் ஆண்டில் காயமுற்ற முழங்கால் படுகொலை இந்தியப் போர்களின் கடைசி பெரிய ஆயுத மோதலாகும். 1893 ஆம் ஆண்டில் "ஹவாய் பசிபிக்" இராச்சியத்தின் தனித்துவமான முடியாட்சியை அமெரிக்கவாசிகளின் தலைமையிலான ஒரு ராணுவப் புரட்சி தூக்கி எறிந்தது; அமெரிக்கா இந்த தீவுத் தொகுப்புகளை 1898 இல் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் ஸ்பெயின்-அமெரிக்க போரில் வெற்றி பெற்று அமெரிக்கா தன்னை உலக சக்தியாக பறைசாற்றியது. பூர்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸையும் இணைத்துக் கொள்ள வழிவகுத்தது. அரை நூற்றாண்டு காலம் தள்ளி பிலிப்பீன்சு விடுதலை பெற்றது, பூர்டோ ரிகோ மற்றும் குவாம் அமெரிக்க பிராந்தியங்களாகவே தொடர்கின்றன. 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அமெரிக்கா நடுநிலை வகித்தது. பல அமெரிக்கர்கள் தலையீட்டை எதிர்த்தார்கள் என்றாலும், அநேக அமெரிக்கர்கள் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அனுதாபம் காட்டினார்கள். 1917 ஆம் ஆண்டில், அமெரிக்கா நேச நாடுகள் பக்கம் இணைந்தது, மைய சக்திகளுக்கு எதிராக அலையைத் திருப்பியது. உலகப் போருக்கு பின், உலக நாடுகள் சங்கத்தை நிறுவிய வெர்சாய் ஒப்பந்தத்தை செனட் நிறைவேற்றவில்லை. தன்னிச்சைவாதத்தை நாடு தொடர்ந்தது, தனிமைப்படலின் விளிம்புக்கு அதனைத் தள்ளியது. 1920 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை அளிக்கும் ஒரு அரசியல்சட்ட திருத்தத் தொகுப்பை பெண்கள் உரிமை இயக்கம் வென்றது. உறுமும் இருபதுகளின் வளமையானது 1929 ஆம் ஆண்டின் வால் வீதி வீழ்ச்சி, பெருமந்த நிலைக்கு தூண்டியது. 1932 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் "புதிய ஒப்பந்தம்" என்னும் பொருளாதாரத்தில் அரசாங்க தலையீட்டை அதிகரிக்கும் பல்வேறு வகை கொள்கைகளை செயல்படுத்தினார். 1930 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த "டஸ்ட் பவுல்" என்னும் தொடர் சூறாவளி பல விவசாய சமூகங்களை ஏழ்மைப்படுத்தி ஒரு புதிய மேற்கத்திய குடியேற்ற அலையை ஊக்குவித்தது. செப்டம்பர் 1939 இல் நாஜி ஜெர்மனி போலந்து படையெடுப்பு இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஏறக்குறைய நடுநிலை வகித்த அமெரிக்கா, மார்ச் 1941 ஆம் ஆண்டில் லென்ட்-லீஸ் திட்டம் மூலமாக நேச நாடுகளுக்கு பொருட்கள் வழங்கத் துவங்கியது. டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில், ஜப்பான் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் நடத்தியதின் பின் அச்சு நாடுகளுக்கு எதிராக நேச நாடுகளுடன் கைகோர்த்தது. இந்த போரில் பங்கேற்றது அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தியது, மூலதன முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் அதிகரித்தது. யுத்தத்தில் பங்கேற்ற முக்கிய நாடுகளில், அமெரிக்கா மட்டும் உண்மையில் பணக்கார நாடாகியது, போரினால் ஏழ்மையுறுவதற்குப் பதில் செழுமையுற்றது. பிரெட்டன் வுட்ஸ் மற்றும் யால்டாவில் நடந்த நேசநாடுகள் மாநாட்டில் புதிய சர்வதேச அமைப்புகளின் ஒரு அமைப்பை வரையறுத்தது, இது அமெரிக்கா]] மற்றும் சோவியத் ஒன்றியத்தை உலக விவகாரங்களின் மையத்தில் நிறுத்தியது. ஐரோப்பாவில் வெற்றி கிட்டியதால், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 1945 சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் ஆவணத்தை உருவாக்கியது, இது போருக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது. முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய அமெரிக்கா ஆகத்து மாதத்தில் ஜப்பான் நகரங்களான ஹிரோசிமா மற்றும் நாகாசாகி மீது அவற்றை பிரயோகித்தது. ஜப்பான் செப்டம்பர் 2 அன்று சரணடைந்ததும், போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் அதிகாரத்துக்காக போட்டியிட்டன, ஐரோப்பாவின் ராணுவ விவகாரங்களில் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் மூலம் இவை ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்கா தாராளவாத ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் ஊக்குவித்தது, சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தை மையமாகக் கொண்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் ஊக்குவித்தது. இரு தரப்பினரும் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்ததோடு மறைமுகப் போர்களிலும் ஈடுபட்டன. 1950–53 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க துருப்புகள் கொரிய யுத்தத்தில் கம்யூனிச சீன படைகளை எதிர்த்து போரிட்டன. இடதுரீதியான கவிழ்ப்பு நடவடிக்கை சந்தேகங்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை அமெரிக்க வகையல்லாத நடவடிக்கை ஆய்வு அவை கமிட்டி நடத்தியது, செனட்டர் யோசேப்பு மெக்கார்த்தி கம்யூனிச எதிர்ப்பு மனோநிலையின் முக்கிய பிரமுகராக இருந்தார். 1961 ஆம் ஆண்டில், முதல் ஆளுடனான விண்கலத்தை சோவியத் அனுப்பியது, ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியை "நிலவில் மனிதர் கால் பதிப்பதில்" முதலாவதாக அழைப்பு விடுக்க தூண்டியது, இது 1969 ஆம் ஆண்டில் நிறைவேறியது. கியூபாவில் சோவியத் சக்திகளுடான ஒரு பதற்றமான அணுசக்தி மோதல் அபாயத்தையும் கென்னடி எதிர்கொண்டார். இதனிடையே, அமெரிக்கா தொடர்ந்த பொருளாதார விரிவாக்கத்தை கண்டது. ரோசா பார்க்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர். போன்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தலைமையில் மனித உரிமைகள் இயக்கம் வளர்ச்சியுற்று, நிறப்பாகுபாடு பேதங்களை எதிர்த்து போராடினார்கள். 1963 ஆம் ஆண்டில் கென்னடி படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகு, 1964 மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1965 வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் ஆகியவை ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் தலைமையின் கீழ் நிறைவேறியது. ஜான்சன் மற்றும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் நிக்சன், ஒரு பினாமி யுத்தத்தை தென்கிழக்கு ஆசியாவில் ஊக்குவித்து தோல்வியில் முடிந்த வியட்நாம் போராக விரிவுபடுத்தினர். போர் எதிர்ப்பு, கறுப்பு தேசியவாதம், பாலியல் புரட்சி ஆகியவற்றால் ஊக்கமடைந்து பரந்த மாற்றுகலாச்சார இயக்கம் வளர்ச்சியுற்றது. பெண்களுக்கு அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் நாடும் மகளிர் இயக்கதின் ஒரு புதிய அலைக்கு பெட்டி ஃபீரிடன், குளோரியா ஸ்டெனிம், மற்றும் பலர் தலைமையேற்றனர். 1974 ஆம் ஆண்டில் வாட்டர்கேட் ஊழலின் விளைவாக, நீதிநடைமுறைகளுக்கு இடையூறு விளைத்தல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்திற்கு ஆளான நிலையில், பதவியை ராஜினாமா செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக நிக்சன் ஆனார். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெரால்டு போர்டு ஜனாதிபதி ஆனார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் பொருளாதார தேக்கநிலையுடன் ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை நிகழ்ந்தன. 1980 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் ஜனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசியல் வலது நோக்கி நகர்ந்ததன் தலைமை அடையாளமாக அமைந்தது, இது வரிவிதிப்புகள் மற்றும் செலவின முன்னுரிமைகளில் பிரதான மாற்றங்களாகப் பிரதிபலித்தது. இரண்டாவது முறையாக அவர் பதவியில் அமர்ந்தது ஈரான்-கான்ட்ரா ஊழல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான ராஜதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியவை நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்த சோவியத் உடைவு குளிர் யுத்தத்தை முடித்து வைத்தது. ஐநா-ஒப்புதலளித்த வளைகுடாப் போர் சமயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ் தலைமையில் ஆற்றிய பங்களிப்பும், ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையின் கீழ் நிகழ்ந்த யுகோசுலாவியா போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின. மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட்-காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன. ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும், அவர் பதவியில் தொடர்ந்தார். அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து- ஜார்ஜ் டபிள்யூ. புஷ் - இவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மகனாவார், ஜனாதிபதியானார். செப்டம்பர் 11, 2001 அன்று அல்-கெய்தா பயங்கரவாதிகள் நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மற்றும் வாசிங்டன், டி. சி. அருகிலுள்ள பென்டகன் அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். பதிலடியாக, புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" துவக்கியது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி, தலிபான் அரசாங்கத்தையும் அல்-கெய்தா பயிற்சி முகாம்களையும் அகற்றின. தலிபான் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய அடிப்படையில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் அழுத்தமளித்தது. நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான சதாம் உசேனை அகற்றினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஈராக் போரில் அமெரிக்கா மனித உரிமைகள் மீறியதாக பன்னாட்டு பொதுமன்னிப்பு மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் காத்ரினா சூறாவளி வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி, நியூ ஆர்லியன்சை முற்றிலுமாய் சிதைத்தது. நவம்பர் 4, 2008 அன்று, உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அமெரிக்கா உலகின் பழமையான கூட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை ஆட்சியானது சிறுபான்மையினர் உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதன் மூலம் வலிமையூட்டிய அரசியல்சட்டக் குடியரசாகும். பிராந்தியங்களில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் ஐக்கிய அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் இருந்து விலக்கப்பட்டாலும், அடிப்படையாக ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இது கட்டமைந்துள்ளது. நாட்டின் உச்சபட்ச நீதி ஆவணமாக செயல்படும் அமெரிக்க அரசியல்சட்டத்தால் வரையறுக்கப்படும் சோதனைகள் மற்றும் சமநிலைகள் கொண்ட ஒரு அமைப்பினால் அரசாங்கம் கட்டுப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய அமைப்பில், குடிமக்கள் பொதுவாக ஐக்கிய, மாநில மற்றும் பிராந்திய என மூன்று அரசாங்க நிலைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகும்; பிராந்திய அரசாங்கத்தின் கடமைகளாவன நாட்டு மற்றும் முனிசிபல் அரசாங்கங்களுக்கு இடையே பொதுவாக பிரிந்து செயல்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வகைகளிலும், நிர்வாக மற்றும் சட்ட அதிகாரிகள் மாவட்டவாரியாக குடிமக்களின் பன்முக வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எண்ணிக்கைவாரி பிரதிநிதித்துவம் ஐக்கிய நிலையில் இல்லை, இது கீழ் நிலைகளிலும் வெகு அபூர்வமாக இருக்கிறது. ஐக்கிய மற்றும் மாநில நீதி மற்றும் கேபினட் அதிகாரிகள் பொதுவாக நிர்வாக பிரிவினர் பரிந்துரை செய்து சட்டமன்றம் மூலமாக ஒப்புதலளிக்கிறார்கள், சில மாநில நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் வாக்கெடுப்பு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐக்கிய அரசாங்கம் மூன்று கிளைகளாக உருவானது: பிரதிநிதிகள் அவை 435 உறுப்பினர்களைக் கொண்டது, ஒவ்வொருவரும் நாடாளுமன்ற மாவட்டங்களை இருவருட காலத்திற்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்தாவது வருடத்திலும் அவை உறுப்பினர் எண்ணிக்கைகள் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஏழு மாநிலங்கள் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியையும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியா ஐம்பத்தி மூன்று பிரதிநிதிகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்கள் கொண்டு செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர், பொதுவாக இவர்கள் ஆறு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், செனட்டின் மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கான தேர்தல் ஒரு வருடம் விட்டு நடக்கிறது. ஜனாதிபதி நான்கு வருட காலம் பதவியில் இருக்கிறார், அவர் ஜனாதிபதி பதவிக்கு இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி நேரடி வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக தீர்மானிக்கும் வாக்குகள் மாநிலங்களுக்கு ஏற்ற பங்களிப்பை கொண்டிருக்கும் வகையிலான மறைமுக தேர்தல் அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமெரிக்க தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்கும் சுப்ரீம் கோர்ட் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இவர்கள் ஆயுள் காலம் வரை பதவி வகிக்க முடியும். மாநில அரசாங்கங்கள் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன; நெப்ராஸ்கா மட்டும் பிரத்யேகமாக ஒற்றை அவை நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரும் (தலைமை நிர்வாகி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநில மற்றும் ஐக்கிய அரசாங்கங்கள் என இரண்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகளும் மறுஆய்வுக்கு உட்பட்டவை; அரசியல்சட்டத்திற்கு மீறிய வகையில் நீதித்துறையால் உரைக்கப்படும் எந்த சட்டமும் செல்லாததாகும். அரசியல்சட்டத்தின் மூல உரை ஐக்கிய அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் பொறுப்புகளையும் மற்றும் தனித்தனி அரசாங்கங்களுடனான அதன் உறவினையும் நிலை நிறுத்துகிறது. முதலாவது சட்டப்பிரிவு ஆட்கொணர்வுக்கான "மகத்தான ஆணை" உரிமையைப் பாதுகாக்கிறது, சட்டப்பிரிவு மூன்று அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் நீதிபதிகள் குழுவின் விசாரணை உரிமையை உறுதி செய்கிறது. அரசியல்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். அரசியல்சட்டம் இருபத்தி ஏழு முறைகள் திருத்தப்பட்டிருக்கிறது; முதல் பத்து திருத்தங்கள் உரிமைகள் மசோதாவுக்கு வடிவளித்தன, பதினான்காவது திருத்தம் அமெரிக்கர்களின் தனிநபர் உரிமைகளுக்கான மைய அடிப்படையை உருவாக்குகின்றது. அமெரிக்கா இரு கட்சி அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றது. அனைத்து நிலைகளிலும் தேர்தல் பதவிகளுக்கு, மாநில நிர்வாகத்தின் கீழ் முதன்மை தேர்தல்கள் மூலம் அடுத்து வரும் பொது தேர்தல்களுக்கான பிரதான கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 1856 பொதுத் தேர்தல் முதலே, பிரதான கட்சிகளாக 1824 ஆம் ஆண்டில் தொடங்கிய மக்களாட்சிக் கட்சியும், 1854 ஆம் ஆண்டில் தொடங்கிய குடியரசுக் கட்சியும் தான் இருந்து வருகின்றன. உள்நாட்டு போர் காலம் முதல், ஒரே ஒரு மூன்றாவது-கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தான் - 1912 ஆம் ஆண்டில் முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் - மக்கள் வாக்களிப்பில் 20 சதவிகிதம் வரை பெற்றார். அமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள், குடியரசுக் கட்சி மைய-வலதாக அல்லது "பழமைவாத" கட்சியாக கருதப்படுகிறது, ஜனநாயகக் கட்சி மைய-இடதாக அல்லது "தாராளவாத" கட்சியாகக் கருதப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களும் மற்றும் "நீல மாநிலங்கள்" எனப்படும் கிரேட் லேக்ஸ் மாநிலங்களில் சிலவும் ஏறக்குறைய தாராளவாத அடிப்படையிலானவை. தெற்கின் "சிவப்பு மாநிலங்கள்" மற்றும் பெரும் சமவெளி மற்றும் ராக்கி மலைகள் பகுதியின் அநேக மாநிலங்களும் ஒப்பீட்டளவில் பழைமைவாதமுடையவை. 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்களாட்சிக் கட்சியின் பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியும் இப்பதவி வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். முந்தைய ஜனாதிபதி அனைவரும் முழுக்க ஐரோப்பிய வம்சாவளியினர் ஆவர். 2008 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மக்களாட்சிக் கட்சி தனது கட்டுப்பாட்டை அவை மற்றும் செனட் (Senate) இரண்டிலும் வலிமைப்படுத்தியது. 111வது அமெரிக்க நாடாளுமன்றத்தில், செனட்டில் 57 மக்களாட்சிக் கட்சியினரும், மக்களாட்சிக் கட்சியினருடன் கருத்தொருமிப்பு கொண்ட இரண்டு சுயேச்சைகள், மற்றும் 40 குடியரசுக் கட்சியினரைக் கொண்டுள்ளது (ஒரு இடம் பிரச்சினையில் உள்ளது); அவையில் 250 மக்களாட்சிக் கட்சியினரும்; 178 குடியரசுக் கட்சியினரும் உள்ளனர் (ஒரு இடம் காலியாக உள்ளது(கலிபோர்னியாவின் 32வது நாடாளுமன்ற மாவட்டம்)). அமெரிக்கா ஐம்பது மாநிலங்களின் ஒன்றியமாக உள்ளது. ஆரம்பத்தில் பதின்மூன்று மாநிலங்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து போராடியதால் பதின்மூன்று நாடுகளாக உதித்தன. பிற மாநிலங்கள் போர் மூலமாகவும் அல்லது அமெரிக்காவின் பிராந்தியங்களில் இருந்து பிரித்தும் உருவானவையாகும். விதிவிலக்குகளாக வெர்மான்ட், டெக்சாஸ், மற்றும் ஹவாய் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்கள் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்பு சுதந்திர குடியரசாக இருந்தவை. மற்றொரு வகை விதிவிலக்கில் தொடக்கத்தில் இருந்த பதின்மூன்று மாநிலங்கள் அடங்கும். நாட்டின் வரலாற்று துவக்கத்தில், மூன்று வகையில் மாநிலங்கள் உருவாயின: வர்ஜினியாவில் இருந்து கென்டக்கி; வடக்கு கரோலினாவில் இருந்து டென்னெஸ்; மசாசூட்ஸில் இருந்து மென். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது, மேற்கு வர்ஜினியா வர்ஜினியாவில் இருந்து உடைந்தது. கடைசியாக ஹவாய் தனது மாநில அந்தஸ்தை ஆகத்து 21, 1959 அன்று பெற்றது. மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை. போர்டோ ரீகோ மற்றும் கரீபியனில் உள்ள அமெரிக்க வர்ஜின் தீவுகள், அமெரிக்கன் சமோவா, குவாம், மற்றும் பசிபிக்கில் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய ஐந்து கடல்கடந்த பிராந்தியங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பிறப்பவர்கள் (அமெரிக்கன் சமோவா தவிர) அமெரிக்க குடியுரிமை கொண்டவர்களாவார்கள். ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அவை: அரசியல் மற்றும் ராணுவ செல்வாக்கினைப் பயன்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ளது மேலும் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் தலைமையகம் அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை வாஷிங்டனில் கொண்டுள்ளன, பல நாடுகள் நாடெங்கிலும் தூதரக அலுவலகங்களை கொண்டுள்ளன. இதேபோல், ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே அமெரிக்காவுக்கென ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆயினும், கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு (தைவான்) ஆகியவை அமெரிக்காவுடன் முறையான ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது, அத்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது.அமெரிக்க அரசாங்கங்கள் அமைப்பு மூலமாகவும், கனடா மற்றும் மெக்சிகோவுடனான முத்தரப்பு வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகிய சுதந்திர சந்தை ஒப்பந்தங்கள் மூலமும் இது தனது அண்டை நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 2005 ஆம் ஆண்டில், அமெரிக்கா அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்கென 27 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டது, இது உலகளவில் பெரும்பான்மையான பங்களிப்பாகும். ஆயினும், மொத்த தேசிய வருவாய் (GNI) பங்களிப்பில், அமெரிக்க பங்களிப்பான 0.22% இருபத்தி இரண்டு கொடை தேசங்களில் இருபதாவது இடத்தை பிடித்துள்ளது. தனியார் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், மற்றும் கல்வி மற்றும் மத ஸ்தாபனங்கள் 96 பில்லியன் டாலர் தொகையை கொடையளித்துள்ளன. இந்த கூட்டு மொத்தமாக 123 பில்லியன் டாலர் என்பதும் உலகளாவிய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பு என்பதோடு GNI சதவீதத்தில் ஏழாவது இடமாகவும் அமைகிறது. தேசத்தின் ராணுவப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை ஜனாதிபதி கொண்டிருக்கிறார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் படைவீரர்களுக்கான இணை தலைவர்கள் ஆகிய அதன் தலைவர்களையும் இவரே நியமிக்கிறார். அமெரிக்க பாதுகாப்பு துறை ஆயுதப் படையை நிர்வாகம் செய்கிறது, இராணுவம், கடற்படை, கப்பல்படை, மற்றும் விமானப் படை ஆகியவை இதில் அடக்கம். கடலோரப் பாதுகாப்பு படை அமைதிக் காலங்களில் ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை மூலமும் போர் சமயங்களில் கடற்படை துறை மூலமும் செயல்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், ராணுவம் 1.38 மில்லியன் வீரர்களைக் கொண்டிருந்தது, இத்துடன் பல நூறாயிரம் பேர் ரிசர்வ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையில் இருந்தனர், மொத்தம் 2.3 மில்லியன் துருப்புகள் இருந்தனர். பாதுகாப்பு துறை சுமார் 700,000 பொதுமக்களையும் பணியமர்த்தியுள்ளது, ஒப்பந்ததாரர்களைச் சேர்க்காமல்.ராணுவ சேவை தன்னார்வ அடிப்படையிலானது, போர் சமயங்களில் தேர்ந்தெடுத்த சேவை அமைப்பு மூலம் கட்டாய படை சேர்ப்பு நிகழலாம். விமானப் படையின் பெரும் எண்ணிக்கையிலான போக்குவரத்து விமானங்கள் மற்றும் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், கடற்படையின் பதினொன்று இயங்குநிலை விமானம் தாங்கிகள், மற்றும் கடற்படையின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் தொகுப்புகளில் உள்ள கடல் பயண பிரிவுகள் ஆகியவை மூலம் அமெரிக்க படைகள் வெகு துரிதமாக குறிப்பிட்ட இடங்களில் அமைக்க இயலும். அமெரிக்காவுக்கு வெளியே, 770 தளங்கள் மற்றும் இடங்களில் அண்டார்டிகா தவிர ஒவ்வொரு கண்டத்திலும் ராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த அளவுக்கு உலகளாவிய இராணுவ இருப்பு கொண்டிருப்பது சில எழுத்தாசிரியர்களை அமெரிக்கா "தளங்களின் சாம்ராஜ்யத்தை" பராமரிப்பதாக சித்தரிக்க வைத்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் மொத்த அமெரிக்க ராணுவ செலவினமான, 528 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை, உலகளாவிய ராணுவ செலவினத்தில் 46% என்பதோடு அடுத்து வரும் பதினான்கு பெரும் தேசிய ராணுவ செலவினங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதனை விட மிகையானதாக இருக்கிறது. (கொள்முதல் திறன் இணை அளவுகளில், இது அடுத்து வரும் ஆறு இத்தகைய செலவினங்களை சேர்த்தாலும் அதிகமானதாகும்.) தனிநபர் செலவினமான 1,756 டாலர்கள் என்பது உலக சராசரியைக் காட்டிலும் சுமார் பத்து மடங்கு அதிகமானதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.06% உடன், அமெரிக்க ராணுவ செலவினம் 172 நாடுகளில் 27வது இடத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கான முன்மொழிந்த அடிப்படை பாதுகாப்பு துறை பட்ஜெட், 515.4 பில்லியன் டாலர்கள் என்பது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 7% அதிகமாகும், 2001 ஐக் காட்டிலும் 74% அதிகமாகும். ஈராக் போர் அமெரிக்காவுக்கு வைத்திருக்கும் செலவு 2.7 டிரில்லியன் டாலர்களை என மதிப்பிட்டுள்ளது. மே 3, 2009 நிலமையின் படி, போரில் 4,284 பேர் ராணுவ காயத்தால் உயிரிழந்தார்கள், 31,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றின் படி, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14.3 டிரில்லியன் டாலர் என்பது மொத்த உலக உற்பத்தியில் பரிவர்த்தனை விலைகளில் 23% பங்களிப்பும், கொள்முதல் திறன் இணையளவில் (PPP) மொத்த உலக உற்பத்தியில் ஏறக்குறைய 21% பங்களிப்பும் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆக, இது 2007 ஆம் ஆண்டில் கொள்முதல் திறன் இணையளவில் (PPP) இல் மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தினதை விட சுமார் 4% மட்டுமே குறைவானதாக இருந்தது. உலகளவில் சராசரி தனிநபர் GDP இல் உலகளவில் பதினேழாவது இடத்திலும் PPP இல் தனிநபர் GDP இல் ஆறாவது இடத்திலும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப் பெரும் இறக்குமதியாளராகத் திகழ்வதுடன் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது, தனிநபர் ஏற்றுமதியளவு ஒப்பீட்டளவில் குறைவு தான். கனடா, சீனா, மெக்சிகோ, ஜப்பான், மற்றும் ஜெர்மனி ஆகியவை இதன் தலைமை வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றன. ஏற்றுமதியாகும் பொருட்களில் தலைமையில் இருப்பது எலெக்ட்ரிகல் எந்திரப்பொருட்களாகும், வாகனங்கள் தான் இறக்குமதி பொருட்களில் தலைமையிடத்தில் இருக்கிறது. உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் அமெரிக்கா ஒட்டுமொத்த வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சுமார் ஆறு வருடங்களுக்கும் மேல் நீடித்த விரிவாக்க காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2007 முதல் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டில், தனியார் துறை பொருளாதாரத்தில் 55.3% பங்களிப்பு கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஐக்கிய அரசாங்க நடவடிக்கை 24.1% பங்களிப்பும் மாநில மற்றும் பிராந்திய அரசாங்க நடவடிக்கை (ஐக்கிய மாற்றங்கள் உள்பட) எஞ்சிய 20.6% பங்களிப்பையும் கொண்டிருக்கும். பொருளாதாரம் உற்பத்திக்கு பிந்தைய வகையாக இருந்தது, சேவை துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67.8% பங்களிப்பு செய்தது. மொத்த வர்த்தக பெறுகைகளில் தலைமை வர்த்தக பிரிவாக திகழ்வது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்; நிகர வருவாயில் நிதி மற்றும் காப்பீடு. அமெரிக்கா ஒரு தொழில்துறை சக்தியாக திகழ்கிறது, ரசாயன தயாரிப்புகள் தலைமை உற்பத்தி பிரிவாக இருக்கிறது. அமெரிக்கா உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதோடு அதன் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் திகழ்கிறது. எலெக்ட்ரிக்கல் மற்றும் அணு எரிசக்தி, அத்துடன் நீர்ம இயற்கை எரிவளி, சல்பர், பாஸ்பேட்டுகள் மற்றும் உப்பு ஆகியவற்றில் இது உலகின் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது. விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே பங்களிப்பு கொண்டிருக்கிற நிலையில், மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் உற்பத்தியில் அமெரிக்கா உலகின் தலைமை உற்பத்தியாளராக இருக்கிறது. டாலர் வர்த்தகத்தில் நியூயார்க் பங்குச் சந்தை உலகின் மிகப் பெரியதாகும். கொக்கக் கோலாவும் மெக்டொனால்டும் உலகின் மிகவும் பிரபல வர்த்தகப் பெயர்களாக உள்ளன. 2005 ஆம் ஆண்டில், 155 மில்லியன் பேர் வருவாயுடன் பணியமர்ந்தனர். இவர்களில் 80% பேர் முழு நேர வேலைகள் கொண்டிருந்தனர். பெரும்பான்மையினர், 79%, சேவை துறையில் பணியமர்ந்தனர். சுமார் 15.5 பேருடன், சுகாதாரம் மற்றும் சமூக உதவி துறை வேலைவாய்ப்புக்கான முன்னணி துறைகளாக இருக்கின்றன. சுமார் 12% தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள், மேற்கு ஐரோப்பாவில் இது 30% ஆக இருக்கிறது. வேலைக்கு பணியமர்த்துவது மற்றும் நீக்குவதில் எளிமை விஷயத்தில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருப்பதாக உலக வங்கி வரிசைப்படுத்துகிறது. 1973 மற்றும் 2003 க்கு இடையே, சராசரி அமெரிக்கருக்கான ஒரு வருட வேலையானது 199 மணி நேரங்கள் அதிகரிப்பை கண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக அதிக தொழிலாளர் உற்பத்தித் திறனில் தனது முதலிடத்தை அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது.ஆயினும், ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் 1950 ஆம் ஆண்டுகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை அது கொண்டிருந்த தலைமையிடம் இப்போது அதன் வசம் இல்லை; நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் இப்போது கூடுதல் திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன. அமெரிக்க கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி, வரிக்கு முந்தைய சராசரி வீட்டு வருமானம் 2007 ஆம் ஆண்டில் 50,233 டாலர்கள். இந்த சராசரி மேரிலாண்டில் 68,080 டாலர்கள் என்பதில் இருந்து மிசிசிபியில் 36,338 டாலர்கள் என்பது வரை பரவெல்லை கொண்டிருக்கிறது. கொள்முதல் திறன் இணை பரிவர்த்தனை விகிதங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த சராசரி காண்கையில் முன்னேறிய நாடுகளின் மிகவும் வசதியான பிரிவுக்கு ஒத்து இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடுமையாகச் சரிவுற்ற வறுமை விகிதங்கள் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு நிலைப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 11-15% அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள், 58.5% பேர் தங்களது 25 முதல் 75 வயதுக்குள்ளான வாழ்க்கையில் குறைந்தது ஒரு வருடத்தையேனும் வறுமையில் கழிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில், 37.3 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். அமெரிக்க வசதி நிலை என்பது முன்னேறிய நாடுகளில் மிகவும் கண்ணியமானதாகத் திகழ்கிறது, ஒப்பீட்டு வறுமை மற்றும் முழு வறுமை இரண்டுமே பணக்கார நாடுகளுக்கான சராசரியை விட மிகவும் குறைந்ததாக உள்ளது. அமெரிக்க வசதி நிலையானது வயது மூத்தவர்களுக்கு இடையில் வறுமையைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிற நிலையில், " இளைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உதவியையே பெறுகிறார்கள். இருபத்தியோரு தொழில்மய நாடுகளில் சிறுவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்த 2007 ஆம் ஆண்டு யூனிசெப் ஆய்வு ஒன்று அமெரிக்காவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை அளித்தது. உற்பத்தித் திறனில் வலுவான அதிகரிப்பு, குறைந்த வேலைவாய்ப்பின்மை, மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை இருந்தபோதிலும் 1980 ஆம் ஆண்டு தொடங்கி வருவாய் லாபங்கள் முந்தைய தசாப்தங்களைக் காட்டிலும் மெதுவானதாக இருக்கிறது, குறைந்த பரவலுடையதாக இருக்கிறது, மற்றும் அதிகரித்த பொருளாதார பாதுகாப்பின்மை உடன் வருவதாக இருக்கிறது. 1947 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்கும் இடையே, உண்மையான சராசரி வருவாய் அனைத்து தரப்பினருக்கும் 80%க்கும் மேல் அதிகரித்தது, ஏழை அமெரிக்கர்களின் வருமானம் பணக்காரர்களினதை விடவும் துரிதமாய் அதிகரித்தது. சராசரி வீட்டு வருமானம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து தரப்பினருக்கும் அதிகரித்தது, வீட்டில் இரண்டு பேரும் வேலைக்கு செல்வது, பாலின இடைவெளி குறைந்தது, நீண்ட வேலை நேரங்கள் ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன, ஆனால் வளர்ச்சி குறைந்து மேல் தட்டை நோக்கி சாய்வு கொண்டிருக்கிறது. (வரைபடத்தை காணவும்). 2005 ஆம் ஆண்டின் மொத்த அறிவித்த வருவாயில் மேலிருக்கும் 1%-21.8% பேரினது வருவாயின் பங்களிப்பு 1980 தொடங்கி இரட்டிப்பாகி இருக்கிறது, இது முன்னேறிய நாடுகளில் மிகப்பெரும் வருவாய் ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கும் நாடாக அமெரிக்காவை ஆக்கியிருக்கிறது. மேலிருக்கும் 1% 2005 பேர் மொத்த ஐக்கிய வரிகளில் 27.6% ஐ செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்; மேலிருக்கும் 10% பேர் 54.7% ஐ செலுத்துகிறார்கள். வருவாயைப் போலவே சொத்தும் அங்கங்கு குவிந்து காணப்படுகிறது: வயதுக்கு வந்தவர்களில் வசதி படைத்த 10% பேர் நாட்டின் வீட்டு சொத்துகளில் 69.8% ஐ கொண்டிருக்கிறார்கள், இது முன்னேறிய நாடுகளில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கிறது. மேலிருக்கும் 1% மொத்த சொத்துகளில் 33.4% ஐ கொண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில் தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிக்கோலா தெஸ்லா மாறுதிசை மின்னோட்டம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ. ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை(Assembly Line) ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர். 1930 ஆம் ஆண்டுகளில் நாசிசத்தின் எழுச்சியானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், என்ரிக்கோ பெர்மி உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் திட்டம் அணு ஆயுதங்களை உருவாக்கி, அணு ஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளிப் போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், பொருளறிவியல், கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான இன்டர்னெட் ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள், அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன. மரபணு மாற்றிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும். 2003 ஆம் ஆண்டில், 1000 அமெரிக்கர்களுக்கு 759 வாகனங்கள் இருந்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 1000 பேருக்கு 472 வாகனங்களே இருந்தன. தனிநபர் வாகனங்களில் சுமார் 40% வேன்கள், விளையாட்டு பயன்பாடு வாகனங்கள் (SUV) அல்லது இலகுரக டிரக்குகள். சராசரி அமெரிக்க மனிதர் (அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநரல்லாதவர்கள்) ஒவ்வொரு நாளும் சராசரியாக பயணத்தில் வாகனம் ஓட்டுவதில் பயணிக்கிறார்கள் . அமெரிக்காவின் நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து ஒப்பீட்டளவில் பலவீனமானது. மொத்த அமெரிக்க வேலைப் போக்குவரத்திலும் வெறும் 9% மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள், இது ஐரோப்பாவில் 38.8% ஆக இருக்கிறது. மிதிவண்டி பயன்பாடு என்பது மிக குறைவாக, ஐரோப்பிய அளவுகளுக்கு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. பயணிகள் விமானத் துறை முழுக்க தனியார் வசமே இருக்கிறது, அதேசமயம் அநேக பெரிய விமானநிலையங்கள் அரசுக்கு சொந்தமானவை. சுமக்கும் பயணிகளின் அளவில் உலகின் ஐந்து மிகப்பெரிய விமானசேவை நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களே: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முதலிடம். உலகின் முப்பது பரபரப்பு மிகுந்த பயணிகள் விமானநிலையங்களில் பதினாறு அமெரிக்காவில் இருக்கின்றன, பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமானநிலையம் (ATL) உட்பட. அமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29,000 டெராவாட் அவர்ஸ் (Terawatthour) (ஆக்கசக்தி மணிகள்). தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7.8 டன் கச்சா எண்ணெயிற்க்கு சமமானதாக இருக்கிறது. ஒப்பீட்டில் ஜெர்மனியில் 4.2 டன்களாகவும் கனடாவில் 8.3 டன்களாகவும் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், 40% எரிசக்தி பெட்ரோலியத்தில் இருந்தும், 23% நிலக்கரியில் இருந்தும், 22% இயற்கை எரிவாயுவில் இருந்தும் கிடைத்தது. எஞ்சியவை அணு சக்தி மூலமாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவும் கிடைக்கின்றது. அமெரிக்கா உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய நுகர்வு நாடாக இருக்கிறது. பல தசாப்தங்களாக, பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி என்பது குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், பல்வேறு புதிய அணு உலைகளுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அரசு செய்தது. அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 11.2 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று, அமெரிக்காவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது. சீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.89%, ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினது 0.16%. பிறப்பு விகிதம் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 14.16, இது உலக சராசரியை விட 30% குறைவு, அல்பேனியா மற்றும் அயர்லாந்து தவிர்த்து வேறெந்த ஒரு ஐரோப்பிய நாட்டினதை விடவும் இது அதிகமாகும். அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை அட்டை 2008 நிதி ஆண்டில், 1.1 மில்லியன் குடியேற்றத்தினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைவாசிகள்: 2008” இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மெக்சிகோ புதிய குடியேற்றவாசிகளுக்கான பிரதான மூலமாக இருக்கிறது; 1998 முதல் சீனா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுப்பும் நாடுகளில் தலைமை நான்கில் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமே மிக அதிக அளவிலான மக்கள்தொகை அதிகரிப்புகளை மதிப்பிடும் ஒரே தொழில்மய நாடாகும். அமெரிக்கா ஒரு பன்முக மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ளது - முப்பத்தோரு பழமையான குழுக்கள் ஒரு மில்லியன் உறுப்பினர்களுக்கும் அதிகமாய்க் கொண்டுள்ளன. வெள்ளை அமெரிக்கர்கள்தான் மிகப்பெரிய இன குழு ஆவார்கள், ஜெர்மன் அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், மற்றும் ஆங்கில அமெரிக்கர்கள் ஆகியோர் நாட்டின் நான்கு மிகப்பெரும் பழமைக் குழுக்களில் மூன்றை கொண்டுள்ளார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினர் மற்றும் மூன்றாவது பெரிய பழைமை குழுவாவர். ஆசிய அமெரிக்கர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இன சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; இரண்டு மிகப்பெரிய ஆசிய அமெரிக்க பழமைக் குழுக்களாக சீனர் மற்றும் பிலிப்பைன்சினர் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் ஏதேனும் வகை அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீக குலத்தை (முழுக்க இத்தகைய குலத்தில் இருந்து மட்டும் 2.9 மில்லியன் பேர்) சேர்ந்தவர்கள் சுமார் 4.5 மில்லியன் பேர் இருந்தனர் மற்றும் 1மில்லியன் பேருக்கும் அதிகமானோர் ஏதேனும் வகை ஹவாய் பூர்வீகத்தினராகவோ அல்லது பசிபிக் தீவு குலத்தை சேர்ந்தவர்களாகவோ (முழுக்க இவர்கள் மட்டும் 0.5 மில்லியன்) இருந்தனர். எசுப்பானிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் (இந்த பதங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளலாம்.) மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பெரும் மக்கள் சமூகவியல் போக்காகும். எசுப்பானிய வம்சாவளியை சேர்ந்த 45.4 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தனித்துவமான "இனத்தை" பங்களிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது; 64% ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மெக்சிகோ வம்சாவளியினர். 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில், நாட்டின் ஹிஸ்பானிக் மக்கள்தொகை 27% உயர்ந்தது, அதே சமயத்தில் ஹிஸ்பானியர் அல்லாத மக்கள்தொகை வெறும் 3.6% மட்டுமே வளர்ந்தது. இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி குடியேற்றத்தால் நிகழ்ந்ததாகும்; 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் 12.4% வெளிநாட்டில் பிறந்தவர்கள், அதில் 54% பேர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள். குழந்தைப்பேறும் ஒரு காரணியாக இருக்கிறது; சராசரி ஹிஸ்பானிக் பெண் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒப்பீட்டளவு மகப்பேறு விகிதம் ஹிஸ்பானியர் அல்லாத கறுப்பின பெண்களிடையே 2.2 ஆகவும் ஹிஸ்பானியர் அல்லாத வெள்ளை இன பெண்களிடையே 1.8 சதவீதமாகவும் (இடப்பெயர்ச்சி விகிதமான 2.1 க்கு கீழே) இருக்கிறது. சிறுபான்மையினர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, ஹிஸ்பானியர் அல்லாத, பல இன வெள்ளையர் அல்லாத அனைவரும்) மக்கள்தொகையில் 34% ஆக இருக்கிறார்கள்; இவர்கள் 2042 வாக்கில் பெரும்பான்மையினர் ஆகி விடுவர் என மதிப்பிட்டுள்ளது. 79% அமெரிக்கர்கள் நகர்ப்புற பகுதிகளில் (கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, புறநகர் பகுதிகளும் இதில் அடக்கம்) வாழ்கிறார்கள்; இதில் சுமார் பாதியளவினர் 50,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கிறார்கள். மக்கள்தொகை வரிசையில் அமெரிக்க நகரங்களின் பட்டியல் 2006 ஆம் ஆண்டில், 254 இடங்கள் 100,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன, ஒன்பது நகரங்களிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், நான்கு உலக நகரங்கள் (நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, மற்றும் ஹவுஸ்டன் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ளன. அமெரிக்க மெட்ரோபொலிடன் புள்ளிவிவரப் பகுதிகளின் அட்டவணை 1 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் ஐம்பது மெட்ரோபொலிட்டன் பகுதிகள் இருக்கின்றன. ஐம்பது வேகமாய் வளரும் மெட்ரோ பகுதிகளில், இருபத்தி-மூன்று மேற்கிலும் இருபத்தி ஐந்து தெற்கிலும் உள்ளன. அட்லாண்டா, டல்லாஸ், ஹவுஸ்டன், பீனிக்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் இன்லாண்ட் எம்பயர் ஆகிய மெட்ரோ பகுதிகள் அனைத்தும் 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்க்கு இடையே மில்லியனில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமாக மக்கள்தொகையில் உயர்வை கண்டுள்ளன. ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும், அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டில், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, சுமார் 216 மில்லியன் பேர், அல்லது மக்கள்தொகையில் 81% பேர் வீடுகளில் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களாக இருந்தனர். மக்கள்தொகையில் 12% பேர் வீடுகளில் பேசும் மொழியாக இருக்கும் ஸ்பானிய மொழி பொதுவான புழக்கத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய மொழியாகவும், பரந்த அளவில் பயன்படும் அந்நிய மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தை குறைந்தபட்சம் இருபத்தி எட்டு மாநிலங்களிலேனும் உள்ளபடியே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கு அமெரிக்கர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர். ஹவாய் அரசு சட்டத்தின் படி ஹவாயில் ஹவாய் மொழி மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. நியூ மெக்சிகோ ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷையும், லூசியானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் இரண்டு மாநிலங்களிலுமே அதிகாரப்பூர்வ மொழி என்று எதுவும் இல்லை. கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்கள் நீதிமன்ற படிவங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு ஆவணங்களை ஸ்பேனிஷ் வடிவத்திலும் வெளியிட கட்டாயமாக்கியிருக்கின்றன. பல தீவுக்குட்பட்ட பிராந்தியங்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து தங்களது பூர்வீக மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன: சமோவ மொழி மற்றும் கமாரோ மொழி முறையே அமெரிக்க சமோ மற்றும் குவாம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது; வடக்கு மரியானா தீவுகள் கரோலினியன் மற்றும் கமாரோவுக்கு அங்கீகாரமளித்துள்ளது; பூர்டோ ரிகோவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஸ்பேனிஷ் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு; அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதல் திருத்தம் மதத்தினை சுதந்திரமாய் பின்பற்ற பாதுகாப்பளிப்பதோடு எந்த மதரீதியான ஆட்சியை ஆமோதிபபதையும் தடை செய்கிறது. 2002 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மதம் "தங்கள் வாழ்வில் ஒரு வெகு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியதாக" 59% அமெரிக்கர்கள் தெரிவித்ததார்கள், இது வேறு எந்த பணக்கார நாட்டினதை விடவும் மிக அதிக எண்ணிக்கையாகும். அமெரிக்காவில் கிறித்தவம் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, வயதுக்கு வந்தோரில் 78.4% பேர் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர், புரொட்டஸ்டன்ட்வாதம் இது 1990 இல் இருந்த 86.4% என்பதில் இருந்து சரிவு கண்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் 23.9% ஆகவும், புரொட்டெஸ்டன்ட்கள் 51.3% ஆகவும் இருந்தனர். மக்கள்தொகையில் 26.3% ஆக இருக்கும் வெள்ளை எவாஞ்சலிகள் நாட்டின் மிகப்பெரும் மதக்குழு வகையினர் என்று இந்த ஆய்வு வகைப்படுத்துகிறது; மற்றுமொரு ஆய்வு அனைத்து இனங்களையும் சேர்ந்த மொத்த எவாஞ்சலிகல்கள் 30-35% இருப்பர் என மதிப்பிடுகிறது. 2007 ஆம் ஆண்டு கிறிஸ்தவரல்லாத மொத்த மதத்தினர் எண்ணிக்கை 4.7 சதவீதமாக உயர்வு கண்டிருந்தது, இது 1990 ஆம் ஆண்டில் 3.3% ஆக இருந்தது. கிறிஸ்தவ மதம் அல்லாதவற்றில் முன்னணியில் இருப்பது ஜூதாயிசம் (1.7%), புத்த மதம் (0.7%), இசுலாம் (0.6%), இந்து மதம் (0.4%), மற்றும் ஒன்றுபட்ட பிரபஞ்சவாதம் (0.3%). தங்களை கடவுள்மறுப்பாளர்களாக, நாத்திகர்களாக, அல்லது வெறுமனே தங்களுக்கு மதமில்லை என்பவர்களாக கூறிக் கொள்வோர் எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டில் 8.2% ஆக இருந்து, 2007 ஆம் ஆண்டில் 16.1% ஆக அதிகரித்துள்ளது, இங்கிலாந்து (2005: 44%) மற்றும் ஸ்வீடன் (2005: 85%) போன்ற தொழில்மயத்திற்கு பிந்தைய நாடுகளைக் காட்டிலும் இது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவானதாகும், ஆனால் இது உலகளாவிய விகிதத்தை விட (2005: 12%) அதிகமானது. அமெரிக்க பொதுக் கல்வி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மூலம் இயங்குகிறது, அமெரிக்க கல்வித் துறை மூலம் ஐக்கிய உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் வழியாக இது கட்டுப்படுத்துகிறது. அநேக மாநிலங்களில் சிறுவர்கள் ஆறு அல்லது ஏழு வயது தொடங்கி (பொதுவாக, கின்டர்கார்டன் அல்லது முதலாம் வகுப்பு) அவர்களுக்கு பதினெட்டு வயதாகும் வரை (பொதுவாக 12 ஆம் வகுப்பு, அவர்களது உயர்நிலைப் பள்ளியின் நிறைவு) பள்ளிக்கு செல்கிறார்கள்; சில மாநிலங்கள் சிறுவர்களை பதினாறு அல்லது பதினேழு வயதில் வெளியேற அனுமதிக்கின்றன. திருச்சபை பள்ளி சுமார் 12% சிறுவர்கள் திருச்சபை அல்லது பிரிவுகளினுடையதல்லாத தனியார் பள்ளிகளில் பயில்கின்றன. சுமார் 2% சிறுவர்களுக்கு அதிகமானவர்கள் மட்டும் வீட்டிலேயே கல்வி பயில்கிறார்கள். உயர்கல்விக்கான அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் அமெரிக்கா பல போட்டித்திறன் மிகுந்த தனியார் மற்றும் அரசாங்கத்தினுடைய உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் திறந்த அனுமதிக் கொள்கைகளுடனான பிராந்திய சமுதாயக் கல்லூரிகளும் உள்ளன. இருபத்தி ஐந்து அல்லது அதை விட வயது மிகுந்த அமெரிக்கர்களில், 84.6% பேர் உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்கள், 52.6% ஏதேனும் கல்லூரி கல்வி பெற்றவர்கள், 27.2% ஒரு இளநிலைப் பட்டத்தையும் 9.6% பேர் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள். அடிப்படை எழுத்தறிவு விகிதம் சுமார் 99% ஆக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவுக்கு 0.97 கல்விக் குறியீடை அளித்து உலகில் அதற்கு 12வது இடத்தை இணைந்து பெறச் செய்துள்ளது. அமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். கடந்த இரண்டு தசாப்தங்களில், சராசரி ஆயுள்கால வரிசைப்பட்டியலில் நாட்டின் இடம் உலக அளவில் 11ம் இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது. குழந்தை இறப்பு இதேபோல் ஆயிரம் பேருக்கு 6.37 என்கிற விகிதத்தில் உள்ளது. குழந்தை இறப்பு விகிதமும் அமெரிக்காவை 221 உலக நாடுகளில் 42வது இடத்தில் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் நிறுத்துகிறது. அமெரிக்காவின் புற்றுநோயில் பிழைப்போர் விகிதம் உலகில் மிகப் பெரியதாக உள்ளது. வயதுக்கு வந்த குடிமக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாகவும், இன்னொரு பங்கினர் உடல் எடை மிகுந்தவர்களாகவும் உள்ளனர், தொழில்மய உலகப் பகுதிகளில் மிக அதிகமான அளவுகொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது. உடல்பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் தொற்றுநோயாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் விடலைப் பருவ கர்ப்ப விகிதம் 1,000 பெண்களுக்கு 79.8 ஆக இருக்கிறது, இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும், ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும். விருப்பத்தின் பேரில் கருத்தடை சட்டப்பூர்வமானதாகும், பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும். பல மாநிலங்கள் இந்த நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்கின்றன, காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன, சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவிப்பை கோருகின்றன, காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன. கருத்தடை விகிதம் வீழ்ச்சியுறுகிற சமயத்திலும், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் விகிதம் 241, மற்றும் 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1,000 பேருக்கு 15 பேர் என்கிற கருத்தடை விகிதமும் அநேக மேற்கத்திய நாடுகளை விட அதிகமானதாகும். அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது, தனிநபருக்கான செலவின அடிப்படையிலும் சரி மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகித அடிப்படையிலும் சரி. 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொறுப்புணர்வில் முதலிடத்தை அமெரிக்க சுகாதார அமைப்புக்கு அளித்தது, ஆனால் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 37வது இடமளித்தது. மருத்துவத்துறை புதுப்படைப்புகளில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது.2004 ஆம் ஆண்டில், உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் தனிநபருக்கான செலவினத்தில் ஐரோப்பாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தொழில்துறை அல்லாத பிரிவு செலவளித்தது. மற்ற அனைத்து முன்னேறிய நாடுகள் போல் அல்லாமல், அமெரிக்காவில் சுகாதார பாதுகாப்பு எல்லை உலகபரவல் இன்றி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில், தனியார் காப்பீடு நிறுவனத்தினர் தனிநபர் சுகாதார செலவினங்களில் 36% செலவிட்டனர், தனியார் கைகளில் இருந்தான தொகை 15% செலவுக்கு உதவியது, ஐக்கிய, மாநில, மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் 44%க்கு செலவிட்டன. 2005 ஆம் ஆண்டில், 46.6 மில்லியன் அமெரிக்கர்கள், மக்கள்தொகையில் 15.9% பேர், காப்பீடு இன்றி இருந்தனர், இது 2001 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் 5.4 மில்லியன் அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணம் பணியமர்த்துபவர்கள் ஆதரவிலான சுகாதார காப்பீடு கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த சரிவே ஆகும். காப்பீடு இல்லாத மற்றும் போதிய காப்பீடு இல்லாத அமெரிக்கர்கள் என்பது - இவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் பரந்த அளவில் வேறுபடுகின்றன - ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக மசாசூட்ஸ் ஆனது. சட்ட அமலாக்கம் என்பது அமெரிக்காவில் பிராந்திய போலிசார் மற்றும் ஷெரிப் துறைகளின் பிரதான பொறுப்பாக உள்ளது, மாநில போலிசார் அகன்ற சேவைகளை வழங்குகின்றனர். ஐக்கிய பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) மற்றும் அமெரிக்க மார்ஷல்கள் சேவை ஆகியவை சிறப்பு கடமைகளை செயல்படுத்துகின்றன. ஐக்கிய மட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்திலும், நீதி வழங்கல் ஒரு பொது சட்ட அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. அநேக குற்ற வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன; சில குறிப்பிட்ட வகை குற்றங்களையும் மற்றும் மாநில அமைப்புகளில் வரும் மேல்முறையீடுகளையும் ஐக்கிய நீதிமன்றங்கள் கையாளுகின்றன. முன்னேறிய நாடுகளில், வன்முறைக் குற்ற அளவுகளில் சராசரிக்கும் அதிகமான அளவை அமெரிக்கா கொண்டுள்ளது, குறிப்பாக உயர்ந்த அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் கொலைக்குற்றங்கள் நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டில், 100,000 பேருக்கு 5.6 கொலைகள் நிகழ்ந்தன, இது அண்டை நாடான கனடாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான அளவாகும். 1991 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 42% வரை சரிவு கண்ட அமெரிக்க கொலைக்குற்ற விகிதம் பின் தொடர்ந்து ஏறக்குறைய சீராக இருக்கிறது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை என்பது சர்ச்சைக்குரிய அரசியல் விவாதமாய் இருக்கிறது. ஆவணப்படுத்திய சிறைக்கைதிகள் விகிதம் மற்றும் மொத்த சிறைவாசிகள் எண்ணிக்கையில் உலகின் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா ஆகும். 2008 ஆம் ஆண்டு துவக்கத்தில், 2.3 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் சிறையிலிருந்தனர், இது வயதுக்கு வந்த 100 பேருக்கு 1 என்பதை விட அதிகமாகும். இப்போதைய விகிதம் 1980 ஆம் ஆண்டு அளவைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும். வெள்ளை இன ஆண்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகவும் ஹிஸ்பானிக் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாகவும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் சிறைப்படுகிறார்கள். 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க சிறைவைப்பு விகிதம் அடுத்த உயர்ந்த விகிதத்தில் இருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடான போலந்தைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் உயர்ந்த சிறைவைப்பு விகிதத்திற்கான முக்கிய காரணம் தண்டனையளித்தலும் மருந்துக் கொள்கைகளுமாகும். அநேக மேற்கு நாடுகளில் தடை செய்தபோதும், மரண தண்டனை என்பது அமெரிக்காவில் முப்பத்தி ஆறு மாநிலங்களில் குறிப்பிட்ட ஐக்கிய மற்றும் ராணுவக் குற்றங்களுக்கு அளிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நான்கு ஆண்டு நிறுத்திவைப்புக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை மறுகொணர்வு செய்த பின், 1,000 க்கும் அதிகமான முறை இத்தண்டனைகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டில், உலகில் அதிகமாக மரணதண்டனை அளித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடம் பிடித்தது, சீனா, ஈரான், பாகிஸ்தான், ஈராக், மற்றும் சூடான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து. நியூ ஜெர்சி 2007 ஆம் ஆண்டில், 1976 சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பிறகு சட்டப்பூர்வமாக மரண தண்டனையை தடை செய்யும் முதல் மாநிலமாக நியூ ஜெர்சி ஆனது, அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோ இதனை அமல்படுத்தியது. அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம், பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள், மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக உள்ளது. "அமெரிக்க" இனம் என்ற ஒன்று இல்லை; இப்போது சிறு பூர்வீக அமெரிக்கர்கள் அல்லது பூர்வீக ஹவாய் தீவு மக்களைத் தவிர, ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்கள் அல்லது அவர்களது முன்னோர்களுமே கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்தவர்களே. அநேக அமெரிக்கர்கள் பின்பற்றும் கலாச்சாரமான - பிரதான அமெரிக்க கலாச்சாரம் - மேற்கத்திய கலாச்சாரம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய புலம் பெயர்ந்தவர்களின் மரபுகளோடு சேர்ந்து, ஆப்பிரிக்காவில் இருந்தான அடிமைகள் மூலம் வந்த மரபுகள் போன்ற இன்னும் பல பிற ஆதாரங்களைக் கொண்டு தோன்றியது. ஆசியாவில் இருந்தான மிகச் சமீபத்திய புலம் பெயர்வு, குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இருந்தானது, ஒருதன்மையுற்ற கொதிக்கும் பாத்திரம் என்றும் புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் தங்களின் தனித்துவ கலாச்சார பண்புகளை பாதுகாக்கும் இருதன்மைவாய்ந்த சாலட் பாத்திரம் என்று இரண்டு வகையாகவும் திரியும் ஒரு கலாச்சார கலப்புக் கோர்வையாக உள்ளது. கீர்ட் ஹோப்ஸ்டீட் மேற்கொண்ட கலாச்சார பரிமாண ஆய்வின் படி, ஆய்வு செய்த அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா மிக உயர்ந்த தனித்தன்மைவாத மதிப்பெண்களைப் பெற்றதாகும். வர்க்கமற்ற சமுதாயம் முக்கியமான கலாச்சாரம் அமெரிக்கா ஒரு வர்க்கமற்ற சமூகம் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும், சமூகமயமாக்கல் சமூகவயமாக்கம், மொழி, மற்றும் மதிப்பீடுகளைப் பாதிக்கும் நாட்டின் சமூக வர்க்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்களை அறிஞர்கள் அடையாளம் காண்கின்றனர். அமெரிக்க நடுத்தர வர்க்கம் அமெரிக்க நடுத்தர மற்றும் வல்லுநர் வர்க்கம் நவீன பெண்ணியம், சுற்றுச்சூழலியம், மற்றும் பன்முககலாச்சாரவாதம் போன்ற பல சமகால சமூக போக்குகளுக்கு துவக்கமளித்திருக்கின்றன. அமெரிக்கர்களின் சுய பிம்பங்கள், சமூக பார்வைகள், மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகள் அவர்களின் பணிகளுடன் மிக நெருக்கமான அளவில் பிணைந்துள்ளது. சராசரி ஜோ அமெரிக்கர்கள் பெருமளவில் சமூகபொருளாதார மேம்பாட்டை மதிக்கிறவர்களாக இருக்கும் சமயத்தில், சாதாரணமானவராக அல்லது சராசரியாக இருப்பது பொதுவாக ஒரு நேர்மறை மனோநிலையாக காண்கிறது. அமெரிக்க கனவு அமெரிக்க கனவு, அல்லது அமெரிக்கர்கள் மிக உயர்ந்த சமூக செயல்பாட்டுத்திறன் கொண்டவர்கள் என்கிற புரிதலானது, புலம் பெயர்வோரை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, சில ஆய்வாளர்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் கனடாவைக் காட்டிலும் அமெரிக்காவின் சமூக செயல்பாட்டுத் திறனை குறைவாகவே காண்கிறார்கள். பெண்கள் இப்போது பெரும்பாலும் வீட்டிற்கு வெளியில் வந்து வேலை பார்ப்பதோடு இளங்கலைப் பட்டங்களை பெற்ற பெருமையுடன் ஜொலிக்கிறார்கள்.. 2005 ஆம் ஆண்டில், 28% வீட்டினர் திருமணமான குழந்தையற்ற தம்பதிகளாக இருந்தனர், இது ஒரு மிக பொதுவானவொரு ஏற்பாடு. ஒரே பாலின திருமணம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பல மாநிலங்களும் திருமணத்திற்கு பதிலாக மக்கள் சங்கமத்தை அனுமதிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல், நான்கு மாநில சுப்ரீம் நீதிமன்றங்கள் ஓர்-பாலின திருமணம் மீதான தடைகளை அரசியல்சட்டத்தை மீறியதாக தீர்ப்பளித்த்துள்ளார்கள், பன்னிரண்டு மாநிலங்களுக்கும் அதிகமான இடங்களின் வாக்காளர்கள் இந்த பழக்கத்தின் மீதான அரசியல்சட்ட தடைகளுக்கு ஒப்புதலளித்திருக்கிறார்கள்.2009 ஆம் ஆண்டில், சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் ஓர்-பாலின திருமணத்தை அனுமதிக்கும் முதல் மாநிலங்களாக வெர்மான்ட் மற்றும் மெய்ன் ஆயின. தாமஸ் எடிசனின் கைனடோஸ்கோப்பைப் பயன்படுத்தி உலகின் முதல் வர்த்தகரீதியான நகரும் பட கண்காட்சி நியூயார்க் நகரத்தில் 1894 ஆம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு புரொஜெக்டரிலான படமும் அதே நியூயார்க்கில் முதல் வர்த்தகரீதியான திரையிடலைக் கண்டது, அடுத்து வந்த தசாப்தங்களில் ஒலிப் பட மேம்பாட்டில் அமெரிக்கா முன்னணி வகித்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், அமெரிக்க திரைப்படத் துறை பெருமளவில் கலிபோர்னியாவின், ஹாலிவுட்டைச் சுற்றியே இருந்தது. சினிமாவின் இலக்கணத்தை மேம்படுத்தியதில் இயக்குநர் டி.டபிள்யூ. கிரிப்த் மையமாகத் திகழ்ந்தார், மற்றும் ஓர்சன் வெல்ஸின் சிட்டிசன் கேன் (1941) என்னும் திரைப்படம் அனைத்து காலங்களிலுமான மிகச் சிறந்த படமாக பல சமயங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ஜான் வேன் மற்றும் மர்லின் மன்றோ போன்ற அமெரிக்க திரை நடிகர்கள் மக்கள் மனதில் அழியாத சித்திரங்களானார்கள், தயாரிப்பாளரும்/தொழில்முனைவோருமான வால்ட் டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் மற்றும் திரைப்பட விநியோகம் இரண்டிலுமே முன்னணியில் திகழ்ந்தார். ஹாலிவுட்டின் பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் ஸ்டார் வார்ஸ் (1977) மற்றும் டைட்டானிக் (1997), போன்ற வரலாற்றில் வர்த்தக ரீதியாக மிகப் பெரும் வெற்றிகளைக் குவித்த அநேக திரைப்படங்களை உருவாக்கியுள்ளன, இன்று ஹாலிவுட் தயாரிப்புகள் உலக சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்கர்கள் மிக அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் சராசரியாக அன்றாடம் பார்க்கும் நேரமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2006 இல் ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவழிப்பதாக ஓர் ஆராய்ச்சி கூரியது. அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக வானொலி கேட்கிறார்கள். வெப் போர்ட்டல்கள் மற்றும் வலை தேடல் பொறிகள் தவிர, மிகப் பிரபலமாய் இருக்கும் இணையத்தளங்களாய் இருப்பவை ஃபேஸ்புக், யூட்யூப், மைஸ்பேஸ், விக்கிப்பீடியா, கிரெய்க்ஸ்லிஸ்ட், மற்றும் இபே ஆகியவை. ஆப்பிரிக்க அமெரிக்க இசையின் சந்தமிகு எழுத்துநடை பாணிகள் அமெரிக்க இசையை பெருமளவு ஆழமாய் பாதித்திருப்பதோடு அதனை ஐரோப்பிய மரபுகளில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன. ப்ளூஸ் போன்ற கிராமியப் பதங்களில் இருந்தான கூறுகளும் இப்போது பழைய-இசை என்று கருதப்படும் இசையும் எடுத்து உலகளாவிய ரசிகர்களுடனான வெகுஜன வகைகளாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ட்யூக் எலிங்டன் போன்ற புதுமையாளர்கள் மூலம் ஜாஸ் உருவானது. நாட்டு இசை, ரிதம் அன் ப்ளூஸ், மற்றும் ராக் அன் ரோல் ஆகியவை 1920 ஆம் ஆண்டுகள் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையே எழுந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் கிராமிய மறுமலர்ச்சியில் இருந்து எழுச்சியுற்ற பாப் டைலான் அமெரிக்காவின் மிகப்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவராக ஆனார், ஜேம்ஸ் பிரவுன் ஃபங்க் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றார்.ஹிப் ஹாப் மற்றும் வீட்டு இசை ஆகியவை சமீபத்திய அமெரிக்க படைப்புகள் ஆகும். எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், மற்றும் மடோனா ஆகிய அமெரிக்க பாப் பாடகர்கள் உலகளாவிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள். பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்க கலை மற்றும் இலக்கியமானது பெரும்பாலும் ஐரோப்பியத் தாக்கத்துடன் இருந்தது. நதேனியல் ஹாதோர்ன், எட்கர் ஆலன் போ, மற்றும் ஹென்ரி டேவிட் தொரோ போன்ற எழுத்தாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு தனித்துவமான அமெரிக்க இலக்கிய மரபை நிறுவினார்கள். மார்க் ட்வெயின் மற்றும் கவிஞர் வால்ட் விட்மேன் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் பெரும் புள்ளிகளாக இருந்தார்கள்; தனது வாழ்நாளில் அடையாளமற்றராக இருந்த எமிலி டிகின்சன், இப்போது ஒரு அடிப்படையான அமெரிக்க கவிஞராக அறியப்படுகிறார். ஹெர்மன் மெல்வில்லியின் மோபி-டிக்" (1851), ட்வெயினின் " தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹகிள்பெரி ஃபின்" (1885), மற்றும் எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் " தி கிரேட் கேட்ஸ்பை" (1925) - ஆ"கிய படைப்புகளைப் "மகத்தான அமெரிக்க நாவல்" எனக் கூறலாம்"." பதினொரு அமெரிக்க குடிமக்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றனர். மிக சமீபமாக 1993 ஆம் ஆண்டில், டோனி மோரிசன் பெற்றார். 1954 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே, பல சமயங்களில் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவராய் அழைக்கப்படுகிறார். மேற்கத்திய மற்றும் குற்றப்பின்னணி கற்பனைக்கதைகள் ஒத்த இலக்கிய வகைகள் அமெரிக்காவில் வளர்ச்சியுற்றன. "பீட் தலைமுறை" எழுத்தாளர்கள், ஜான் பார்த், தாமஸ் பைன்கான், மற்றும் டான் டிலிலோ போன்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்கள், புதிய இலக்கிய அணுகுமுறைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டார்கள். ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் தொரோ தலைமையிலான எண்ணஇணைப்பு தத்துவவாதிகள் முதல் பெரும் அமெரிக்கத் தத்துவ இயக்கத்தை நிறுவினார்கள். உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் மற்றும் அவருக்குப் பின் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் டெவெ ஆகியோர் நடைமுறையியல் தத்துவத்தின் உருவாக்கத்தில் தலைமை வகித்தனர். 20 ஆம் நூற்றாண்டில், W.V.குவின் மற்றும் ரிச்சார்டு ரோர்டி ஆகியோரது படைப்புகள் அனலடிக் தத்துவத்தை அமெரிக்க தத்துவவியலாளர்களின் முன்னால் கொண்டுவந்தன. அய்ன் ரான்டின் புறநிலைவாதம் பரவலாக புகழ் பெற்றது. காட்சிக் கலையில், "ஹட்சன் ஆற்றுப் பள்ளி" ஐரோப்பிய இயற்கைவாத வழி வந்த இயக்கமாக அமைந்தது. 1913 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த ஐரோப்பிய நவீனக் கலைக் கண்காட்சியான "ஆர்மரி ஷோ" பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அமெரிக்க கலை உலகை மாற்றியமைத்தது. ஜார்ஜியா ஓ'கெபெ, மார்ஸ்டன் ஹார்ட்லி, மற்றும் பிறர் புதிய பாணிகளைப் பரிசோதித்து, ஒரு மிகவும் தனித்துவம் மிகுந்த உணர்திறனை வெளிப்படுத்தினார்கள்.ஜேக்சன் போலாக் மற்றும் வில்லியம் டி கூனிங்கின் பண்பியல் வெளிப்பாட்டியல் மற்றும் ஆன்டி வரோல் மற்றும் ராய் லிச்டென்ஸ்டீன் ஆகியோரின் பாப் கலை போன்ற பெரும் கலை இயக்கங்கள் பெருமளவு அமெரிக்காவில் உருவாகின. நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவத்தின் அலையானது பிராங்க் லாயிட் ரைட், பிலிப் ஜான்சன், மற்றும் பிராங்க் ஜெரி ஆகிய அமெரிக்க கட்டிட வல்லுநர்களுக்கு புகழ் சேர்த்தது. அமெரிக்க நாடகக் கலையை வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இம்ப்ரசாரியோ பி.டி. பார்னம், இவர் 1841 இல் ஒரு குறைவான மன்ஹாட்டன் பொழுதுபோக்கு வளாகத்தை செயல்படுத்த துவங்கினார்.ஹாரிகன் மற்றும் ஹார்ட்டின் குழு 1870 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி துவங்கி நியூயார்க்கில் பல தொடர்ச்சியான பிரபல இசைக் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்தது. 20 ஆம் நூற்றாண்டில், நவீன இசை வடிவம் பிராட்வேயில் எழுச்சியுற்றது; இர்விங் பெர்லின், கோல் போர்ட்டர், மற்றும் ஸ்டீபன் சோந்தீன் ஆகிய இசைக் குழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் பாப் தரநிர்ணயங்களாக ஆகியுள்ளன. நாடக ஆசிரியரான ஈஜென் ஓ'நெல் 1936 ஆம் ஆண்டில் நோபல் இலக்கிய பரிசை வென்றார், பல புலிட்சர் விருதுகளை வென்ற டென்னெஸ் வில்லியம்ஸ், எட்வர்டு ஆல்பி, மற்றும் ஆகஸ்டு வில்சன் ஆகியோரும் பிற புகழ்பெற்ற அமெரிக்க நாடகத்துறையினரில் அடக்கம். அந்த சமயத்தில் அதிகம் புகழ்பெறாது போனாலும், 1910 ஆம் ஆண்டுகளின் சார்லஸ் இவ்ஸ்யின் படைப்பு மரபுவழி இசையின் முதல் பெரும் அமெரிக்க இசைத்தொகுப்பாளராக அவரை நிறுவியது; ஹென்றி கோவெல் மற்றும் ஜான் கேஜ் ஆகிய பிற பரிசோதனையாளர்கள் மரபுவழி இசைத்தொகுப்புக்கு ஒரு அமெரிக்க அணுகுமுறையை அளித்தனர். ஆரான் காப்லேண்ட் மற்றும் ஜார்ஜ் கெர்ஷ்வின் ஆகியோர் வெகுஜன மற்றும் மரபு இசைக்கான ஒரு தனித்துவமான பகுப்பாய்வை அளித்தனர். இசடோரா டங்கன் மற்றும் மார்தா கிரஹாம் ஆகிய நடன இயக்குநர்கள் நவீன நடனத்தை உருவாக்க உதவினர், ஜார்ஜ் பலான்சின் மற்றும் ஜெரோம் ராபின்ஸ் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டு பாலேயில் முன்னணி வகித்தனர். புகைப்படத்திற்கான நவீன கலை ஊடகத்தில் அமெரிக்கர்கள் வெகு காலமாகவே முக்கியத்துவம் பெற்றிருந்தனர், ஆல்பிரட் ஸ்டீகிளிட்ஸ், எட்வர்டு ஸ்டீசென் மற்றும் அன்செல் ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய புகைப்பட மேதைகளில் அடக்கம். செய்தித்தாளின் காமிக் துண்டு மற்றும் காமிக் புத்தகம் இரண்டும் அமெரிக்க கண்டுபிடிப்புகளே. காமிக் புத்தக சூப்பர்ஹீரோக்களில் முதன்மையானவரான சூப்பர்மேன் ஒரு அமெரிக்க அடையாளமாகவே ஆகியிருக்கிறார். பிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. இவை பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஆரம்பகால ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் தனித்துவமான உணவுவகைகளாகும். மெதுவாக சமைத்த பன்றி மற்றும் மாட்டுக்கறி பார்பெக்யூ, நண்டு கேக்குகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்கலேட் சிப் குக்கிகள் ஆகியவை சிறப்பு உணவுகள். ஆப்பிரிக்க அடிமைகள் உருவாக்கிய சோல் ஃபுட் தெற்கத்திய மற்றும் பிற இடங்கில் உள்ள பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடையே பிரபலமான உணவாக விளங்குகிறது. லூசியானா கிரியோல், கஜுன், மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் (Tex-Mex) ஆகிய கலப்பு சமையல் வகைகளும் முக்கியத்துவம் பெற்றவை. ஆப்பிள் பை, பொறித்த கோழி, பிட்சா, ஹம்பர்கர்கள், மற்றும் ஹாட் டாக் ஆகியவை பல்வேறு புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற சிறப்பு உணவுவகைகள். பிரெஞ்சு ஃபிரைஸ், பரிடோஸ் மற்றும் டகோஸ் போன்ற மெக்சிகன் டிஷ்கள் மற்றும் இத்தாலிய மூலங்களில் இருந்து சுதந்திரமாக பெற்ற பாஸ்தா வகை டிஷ்கள் ஆகியவை பெருமளவில் நுகரப்படுகின்றன. அமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள். ஆரஞ்சு சாறு மற்றும் பாலை சர்வ இடங்களிலும் காலை உணவு பானங்களாக மாற்றியதில் அமெரிக்க தொழில்களின் விளம்பரம் தான் பெருமளவு பொறுப்பு வகிக்கிறது. 1980கள் மற்றும் 1990களில், அமெரிக்கர்களின் கலோரி அருந்துகை 24% ஆக உயர்ந்தது; துரித உணவு கடைகளில் அடிக்கடி உணவு அருந்துவது சுகாதார அதிகாரிகள் அமெரிக்க "உடல்பருமன் தொற்று" என்றழைப்பதுடன் தொடர்புபட்டதாய் இருக்கிறது. மிகவும் இனிப்பேற்றிய மதுபானம் பரவலாக பிரபலமுற்று இருக்கின்றன; சராசரி அமெரிக்கரின் கலோரி உள்ளெடுப்பில் 9% சர்க்கரை பானங்களின் பங்காக இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி, பேஸ்பால் தான் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது; அமெரிக்கன் கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஐஸ் ஹாக்கி ஆகியவை நாட்டின் பிற முன்னணி தொழில்முறை குழு விளையாட்டுகளாகும். மேலும் கல்லூரி கால்பந்து மற்றும் கூடைப்பந்து பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் கால்பந்து தான் இப்போது பார்வையாளர்களிடம் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. குத்துச்சண்டை குதிரைப் பந்தயம் மற்றும் கோல்ப் ஆகியவை ஒரு சமயத்தில் மிகவும் பிரபல தனிநபர் விளையாட்டுகளாக இருந்தன, ஆனால் அவையெல்லாம் பந்தய வாகன போட்டி மற்றும் நாஸ்கார்(NASCAR) ஆகிய விளையாட்டுகளிடம் ஒளியிழந்து விட்டன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை பரவலாக விரும்புகிறார்கள். டென்னிஸ் மற்றும் பல வெளிப்புற விளையாட்டுகளும் பிரபலமானதாகவே இருக்கின்றன. பல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும். லெக்ராஸ் மற்றும் சர்பிங் ஆகியவை மேற்கத்திய தொடர்புக்கு முந்தைய காலத்தின் பூர்வீக அமெரிக்கர் மற்றும் பூர்வீக ஹவாய் நடவடிக்கைகளில் இருந்து பிறந்தவை. அமெரிக்காவில் எட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கோடை ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 2,301 பதக்கங்களை வென்றுள்ளது, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இது அதிகமாய் வென்ற பட்டியலில் இரண்டாவதாகும். ஆத்திரேலியா ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா ("Australia") என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா ("Commonwealth of Australia") என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர், 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து "பொதுநலவாய ஆஸ்திரேலியா" என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு. "ஆஸ்திரேலியா" என்ற பெயர் "Australis" என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. "தெற்கே" என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக "ஆஸ்திரேலியா" என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு "Australische" என்ற பெயரை இட்டனர். ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது "A Voyage to Terra Australis" என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" என்றவாறு பலுக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் ("Oz") என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" ("Aussie") எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ ("Laje Mungo") என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை. ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து ("Nova Hollandia") எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆஸ்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை ("native title") 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் "terra nullius" ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின. ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர். பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார். ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன: இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும். மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் ("local government") போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் ("Premier") எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் ("Chief Minister") எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார். ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன: ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர் பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை ("monolith") எனக் கருதப்படுகிறது. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது. ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு. அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர். குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர், ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர். 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும். 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும். ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849) தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர். ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும். பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர். ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது. ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5 மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும். ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே, அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று. ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். 1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை ("cable"), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் ("Reporters Without Borders") 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி ("biota") தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும். கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும். ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன. ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும். அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் "தி எக்கணமிஸ்ட்" இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் "தி எக்கணமிஸ்ட்" இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன. உயிர்ச்சத்து ஈ உயிர்ச்சத்து E உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது. கண்புரை ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் நினைவு இழப்பு நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெப்ரி ப்ளும்பெர்க் என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த உயிர்ச்சத்தை பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளையிலுள்ள குருதி நாளங்களில் குருதிக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும். உயிர்ச்சத்து பி உயிர்ச்சத்து பி என்பது நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும். வளர்சிதைமாற்றங்களின் தேவைக்கு உயிர்ச்சத்து பி குழுமம் இன்றியமையாத பங்கினை வழங்குகின்றது. ஒவ்வொரு "பி" உயிர்ச்சத்தும் தம்முடன் ஒரு சிறப்பு எண்ணைக் கொண்டுள்ளது (எ.கா.: பி1, பி6, பி12 ...). இது தவிர அவற்றை, ஒவ்வொன்றுக்குமுரிய வேதியியல் பெயர் மூலமும் அழைத்தல் வழமையில் உள்ளது. போதியளவு உயிர்ச்சத்து பி உணவில் கிடைக்காதவிடத்து, குறைநிரப்பு (supplements) குளிகைகள் (மாத்திரைகள்) உட்கொள்ளப்படுவது வழக்கம். எட்டு உயிர்ச்சத்து பி வகைகளும் சேர்த்து பெறப்படும் குளிகை உயிர்ச்சத்து பி தொகுதி (Vitamin B complex) என அழைக்கப்படும். எல்லா உயிர்ச்சத்து பி க்களும் நீரில் கரைபவையாக இருப்பதனால், உடல்முழுவதும் பரந்து காணப்படும். மேலதிகமாக இருக்கும் உய்ரிச்சத்து பி, சிறுநீருடன் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதனால், சீராக தொடர்ந்து மீள்நிறைவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். போதியளவு உயிர்ச்சத்து பி கிடைக்காவிட்டால், பெயரிடப்படக் கூடிய பல குறைபாட்டு நோய்கள் தோன்றும். உயிர்ச்சத்து பி உடலின் தேவைக்கு மேலதிகமாக இருக்கையில், பொதுவாக அது சிறுநீருடன் அகற்றப்படும். இருந்தாலும், அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படும்போது, அது உடலுக்குத் தீங்கான விளைவுகளைத் தரும். பதனிடப்படாத முழுமையான தானியங்களில் உயிர்ச்சத்து பி பெறப்படும். கோதுமை, அரிசி போன்ற தானியங்களின் வெளிப்படலமான தவிடு நீக்கப்பட்டிருப்பின், அங்கே உயிர்ச்சத்து பி குறைந்த அளவிலேயே காணப்படும். இறைச்சி, இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈரல் போன்றவற்றில் உயிர்ச்சத்து பி செறிவடைந்து காணப்படும். பதனிடப்படாத முழுமையான தானியம், உருளைக் கிழங்கு, பருப்பு, அவரை, வாழை, மதுவம் போன்றவற்றிலும், மற்றும் கரும்பு, திராட்சை, சக்கரைக்கிழங்கு (sugar beet) போன்றவற்றில் இருந்து சீனி தயாரிக்கும்போது கிடைக்கும் molasses எனப்படும் துணைப்பொருளிலும் உயிர்ச்சத்து பி அதிகளவில் கிடைக்கும். மதுவத்திலிருந்து பியர் தயாரிக்கப்படும்போது பியரிலும் உயிர்ச்சத்து பி இருந்தாலும், அதிலிருக்கும் எத்தனால் தயமின் (B), இரைபோஃபிளவின் (B), நியாசின் (B), பயோட்டின் (B), போலிக் அமிலம் (B) ஆகியவற்றின் உறிஞ்சப்படும் தன்மையைப் நிரோதிப்பதனால், உடலுக்கு கிடைக்கும் தன்மை குறையும். மேலும், பியரோ அல்லது வேறு எத்தனோல் சேர்ந்த திரவங்களோ உயிர்ச்சத்து பி உறிஞ்சுவதை பொதுவாகவே நிரோதிப்பதனால், அதன் நிகர குறைபாடும், அது சார்ந்த உடநலக் குறைகளும் அதிகரிக்கும். உயிர்ச்சத்து பி ஆக தாவரங்கள் மூலம் கிடைப்பதில்லை. அதனால் அப்படியான உணவுகளை மட்டும் உண்பவர்களில் B குறைபாடு ஏற்படுவது அதிகம். ஆனாலும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உணவுகளைத் தயாரிப்பவர்கள் சிலர் B அங்கேயும் கிடைப்பதாகக் கூறுவது சில குழப்பங்களைத் தருகின்றது. காரணம் இந்த அளவை அளவிடும்போது US Pharmacopeia (USP) B நேரடியாகக் கிடைக்கவில்லை. B ஐ ஒத்த மாற்று வேதியியல் வடிவம் ஒன்று தாவரத்தில் இருப்பதாகவும், அது மனித உடலால் பயன்படுத்த முடியாதது எனவும் அறியப்படுகின்றது. இதே காரணத்தால், வேறு சில உணவுகளிலும் B அளவீடு உண்மையில் இருப்பதை விடவும் அதிகமாகவும் காட்டும். உயிர்ச்சத்து பி குறைபாட்டைப் போக்க ஊசி மூலமும் வழங்கலாம். உயிர்ச்சத்து பி ஐ உடலில் கூட்டிக் கொள்வதற்கு பொதுவாக அவற்றின் குறைநிரப்பும் குளிகைகளும் உட்கொள்ளப்படுவதுண்டு. சந்தையில் 'ஆற்றல் பானங்கள்' (energy drinks) என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில், அதிகளவு பி உயிர்ச்சத்து காணப்படுகின்றது. இப்பானங்கள் பதற்றம், படபடப்பு, அழுத்தங்கள் எதுவுமின்றி நாளைக் கழிக்க உதவுவனவாக விளம்பரம் செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் பேராசிரியர் Hope Barkoukis போன்ற உணவியல் வல்லுநர்கள், வணிகப்படுத்தலுக்கு இது உதவுமேயன்றி, இதில் உண்மையில்லை என்று சொல்லி இதனை மறுக்கின்றனர். உணவில் இருக்கும் ஆற்றல் தரும் பொருட்கள் இலகுவாக உடலால் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு வருவதற்கும் இந்த உயிரிச்சத்து பி உதவுகின்றது. உடலில் மேலதிகமாக இருக்கும் உயிர்ச்சத்து பி யானது உடனுக்குடன் அகற்றப்பட்டு விடுவதனால், உடல் நலத்தைப் பேணுவதற்காக, பொதுவாக உயிர்ச்சத்து பி குறைநிரப்பு குளிகைகள் உட்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதரிலும் உயிர்ச்சத்து பி உறிஞ்சப்படுமளவு, வெளியே அகற்றப்படும் அளவு என்பன வேறுபடுவதனால், ஒருவரின் தேவை என்ன என்பதை அறிவது இலகுவல்ல. முதியோர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் B உறிஞ்சப்படுவதில் உள்ள பிரச்சனைகளாலும், அவர்களுக்கான ஆற்றல் தேவை அதிகமாய் இருப்பதனாலும் அதனை குறைநிரப்பு குளிகைகளாக வழங்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களில் அவர்களது நோய் தொடர்பில் அதிகளவு தயமின் பயன்படுத்தப்படுவதனால், அவர்களுக்குத் தேவையான தயமினை ஈடுசெய்ய குறைநிரப்பு குளிகைகள் வழங்கலாம். அத்துடன் பிறக்கும் குழந்தைகளில் B குறைபாடானது, சில நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதனால், கருத்தரிக்க திட்டமிடும் பெண்கள் முதலிலேயே இதனை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.. ஆனாலும் இக்குளிகைகளை உட்கொள்ளும் அனைவரும், இந்த தேவையின்றியே உட்கொள்வதாகவும், அது ஒரு வணிக நோக்கிலான விளம்பரமே என்ற கருத்தும் உண்டு. உயிர்ச்சத்து டி உயிர்ச்சத்து டி ("Vitamin D") எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி அல்லது டி அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் 'உயிர்ச்சத்து' எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் பொருந்தாது. இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது. ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம். உயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் (வேறு பெயர்கள்: கல்சிபிடையோல், 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோல், 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி, 25(OH)D)பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. கல்லீரலில் ஏர்கோகல்சிபெரோல் (உயிர்ச்சத்து டி) 25-ஐதரொக்சி ஏர்கோகல்சிபெரோலாக (வேறு பெயர்கள்: 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி, 25(OH)D)மாற்றம் அடைகிறது. ஒரு நபரது உயிர்ச்சத்து டியின் நிலையை அறிவதற்கு இந்த இரண்டு உயிர்ச்சத்து 'டி'யின் வளர்சிதைக்கூறுகளின் அளவுகள் குருதித் தெளியத்தில் கணிக்கப்படுகின்றன. தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்ட கல்சிடையோல் நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் ஒரு இயக்குநீராகத் தொழிற்படுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. கல்சிரையோல் பொதுவாக உயிர்ச்சத்து என்று அழைப்பதை விட அதன் தொழிற்பாட்டுதன்மையால் வளரூக்கியாகவே கருதப்படுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்பு, தசைத் தொழிற்பாட்டைச் செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுவுக்கு உறுதுணையாகின்றது. குருதியில் குறைவான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுதல் இறப்பு வீதத்தைக் கூட்டுகின்றது. ஆய்வொன்றில் முதுமை வயதுடைய பெண்களுக்கு உயிர்ச்சத்து டி மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட போது இறப்புக்கான இடர்காரணி குறைவாகக் காணப்பட்டது. உயிர்ச்சத்து டி, அல்பாகல்சிடோல், கல்சிட்ரயோல் என்பன ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கவில்லை. எனினும் மிகையான அல்லது குறைவான உயிர்ச்சத்து டி அளவு அசாதாரண தொழிற்பாட்டுக்கும் இளவயதில் முதுமையடைதலுக்கும் காரணியாகின்றது. உயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம். 1932இல் உயிர்ச்சத்து டிஇன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டிஇன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது. வேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு. உயிர்ச்சத்து டிக்கும் உயிர்ச்சத்து டிக்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. உயிர்ச்சத்து டிஇன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது. உயிர்ச்சத்து டி, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள், பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை. உயிர்ச்சத்து டியை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டிஇன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன. அனைத்துலகிலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உயிர்ச்சத்து டி பற்றாக்குறை திகழ்கின்றது. உணவில் உட்கொள்ளும் அளவு அல்லது கதிரவ ஒளிபடுதல் குறைவதனால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. பாலுணவு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், மரக்கறி உணவையே மட்டும் கடுமையாகக் கடைப்பிடிப்போர் மத்தியில் இப்பற்றாக்குறை ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்களில் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இடர்க்காரணி இருந்தாலும் பொதுவாக சிறுவர் உட்பட ஏனையவர்களிலும் பொதுவாக ஏற்படுகின்றது. உண்ணும் உணவிலிருந்து கல்சியத்தை அகத்துறிஞ்ச உதவுவதன் மூலமும், கல்சியத்தின் வளர்சிதைமாற்றத்துக்கு உதவுவதன் மூலமும் உயிர்ச்சத்து டி எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ளுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் எலும்புகளின் தோற்றம், தன்மை என்பன பாதிக்கப்படுகின்றது. மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் அல்லது எலும்புநலிவு நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. எலும்புகளின் உருவாக்கத்துக்குத் தேவையான கனிமமாக்கல் செயன்முறையில் பாதிப்பு ஏற்படுவதால் இவ்விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றைவிட, உயிர்ச்சத்து டியின் செயற்பாடுகள் உடலில் உள்ள அநேகமான இழையங்களில் நடைபெறுகின்றன. தசைத்தொகுதி, நோய்த்தடுப்புத் தொகுதி, மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி போன்றவற்றில் உயிர்ச்சத்து டி இணைந்து தனது செயலை நிகழ்த்துவதற்காக உயிர்ச்சத்து டி ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் உயிர்ச்சத்து டி உடலின் ஏனைய பகுதிகளில் வகிக்கும் பங்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதய நோயால் பாதிப்படையும் இடர்க் காரணி, சிறுவர்களில் ஈழை நோய், புற்றுநோய், முதலாவதுவகை நீரிழிவு, மன உளைச்சல் போன்றன குருதியில் குறைந்த அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. தண்டுவட மரப்பு நோய், சில புற்றுநோய்கள், காசநோய், தடிப்புத் தோல் அழற்சி போன்ற சில நோய்களுக்குத் துணை மருந்தாக உயிர்ச்சத்து டியைப் பயன்படுத்துவது நன்மையைக் கொடுக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கரும்நிறத் தோலை உடையவர்களிலும் இக்குறைபாடு ஏற்படலாம். இவர்களில் கருநிறமி (மெலனின்) சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களை உட்புகவிடாது தடுப்பது காரணமாகின்றது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு சில ஆய்வுகள் ஆபிரிக்க இனத்தவரிடையே குறைந்தளவு உயிர்ச்சத்து டி காணப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. கொழுப்பு உடலில் அகத்துறிஞ்சப்படுவது பாதிக்கப்படுதலும் உணவினூடாக உயிர்ச்சத்து டி கிடைப்பதைக் குறைக்கிறது. என்புருக்கி நோய் எலும்புகள் மென்மையடைவதால் ஏற்படும் சிறுபிராயத்து நோயாகும். இந்நோயின் முக்கிய காரணி உயிர்ச்சத்து டி குறைபாடு. இருப்பினும், கல்சியம் அல்லது பொசுபரசு குறைபாட்டாலும் ஏற்படலாம். குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்களில் இதன் அளவு குறைவதால், பிள்ளை பிறந்த பிற்பாடு பாலூட்டும் போது குழந்தைக்கும் குறைந்த அளவு செல்கிறது. எனினும், பொதுவாகவே தாய்ப்பாலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு மரக்கறி வகைகள் மட்டுமே கொடுக்கப்படலும் இந்நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. உயிர்ச்சத்து டி செறிவூட்டப்பட்ட பால் வகைகள் சிறுவருக்கு கொடுப்பது இதன் குறைபாடு வருவதைத் தடுக்கின்றது. இந்நோயில், கல்சியம் அல்லது பொசுபரசு குருதியில் சரியான அளவு பேணப்படுவது குழம்புவதால் இந்நோயில் எலும்புகளில் நடைபெறும் கனிமமாக்கல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது, எலும்புகள் நேரான உருவத்தை இழந்து வளைந்து காணப்படுகின்றன, இலகுவில் முறியக்கூடியதாக உள்ளன. வில் போன்று வளைந்த கால்கள், முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள், மண்டை எலும்பு மென்மையுறுதல் போன்ற எலும்பு தொடர்புடைய அறிகுறிகளுடன் பல் சம்பந்தமான பிரச்சனைகள், தசைச்சோர்வு போன்ற அறிகுறிகளும் இந்நோயில் இடம்பெறுகின்றன. வளரந்தவர்களில் உயிர்ச்சத்து டி குறைபாட்டால் எலும்புகளில் மென்மையை ஏற்படுத்தும் நோய். எலும்புகளின் கனிமமாக்கலுக்கு போதியளவு கல்சியம் அல்லது பொசுபரசு இன்மையால் இந்நோய் உருவாகின்றது. இணைகேடயச் சுரப்பிகளின் மிகைத் தொழிற்பாட்டாலும் குருதியில் கல்சியத்தின் அளவு குறையும்போது இந்நோய் உண்டாகின்றது. முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும். எலும்பு நோ, தசைச்சோர்வு என்பன இதன் அறிகுறிகளாகும். உயிர்ச்சத்து டியின் உள்ளெடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்பளவு நாளாந்தத்துக்கு 4000 அனைத்துலக அலகுகள் (IU) ஆகும். இதைவிட அளவுக்கதிகமாக உள்ளெடுத்தால் நச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், பொதுவாக உயிர்ச்சத்து டி நச்சுமை காணப்படுவது அரிது. உயிர்ச்சத்து டி நச்சுமை கதிரவ ஒளியினால் ஏற்படாது, ஆனால் உயிர்ச்சத்து டி மாத்திரைகளின் அளவு மிகைப்புப் பயன்பாடு கூடுவதால் அல்லது உயிர்ச்சத்து டி வலுவூட்டப்பட்ட உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக நுகருவதால் ஏற்படக்கூடும். முதன்மிய இணைக் கேடயச்சுரப்பி இயக்க மிகைப்பு (Hyperparathyroidism) உள்ளவர்கள் உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள். இவர்களில் குருதியில் கல்சியத்தின் அளவு மிகையாகக் காணப்படும். மிகைக் கல்சியக்குருதி கொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் முதிர்மூலவுரு உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிப்படையும் இடர்த்தன்மை காணப்படுகின்றது. எனவே கர்ப்பிணித்தாய்மார் உயிர்ச்சத்து டி மாத்திரைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றே உள்ளெடுத்தல் தேவையானது. மிகைக் கல்சியக்குருதியுடன் அடிக்கடி சிறுநீர் வெளியேறல், தாகம் என்பன உயிர்ச்சத்து டி நச்சுமை உள்ளதென்பதற்கான உறுதியான சுட்டுமை ஆகும். மிகைக் கல்சியக்குருதி சிகிச்சை மூலம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படாவிடின் மெல்லிழையங்களிலும் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளிலும் அதிகளவு கல்சியம் படியத்தொடங்கிவிடும். இவர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற நோய் அறிகுறிகளுடன் சிறுநீர்மிகைப்பு, தாகம், சோர்வு, தூக்கமின்மை, பதட்டம், தோல் அரிப்பு முதலியன ஏற்படும். இறுதியில் சிறுநீரகச் செயலின்மை, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல், சிறுநீரகக்கல் ஆகியன உயிராபத்தை ஏற்படுத்தவல்லனவாகத் தோன்றும். உயிர்ச்சத்து டி நச்சுமையின் வேறு அறிகுறிகள்: சிறுவர்களில் மனவளர்ச்சிக்குறை, அசாதாரண எலும்பு உருவாக்கமும் வளர்ச்சியும், வயிற்றோட்டம், எரிச்சற்தன்மை, எடை குறைவு, மன உளைச்சல். உயிர்ச்சத்து டி, கல்சியம் உள்ளெடுப்பது தவிர்க்கப்படல் உயிர்ச்சத்து டி நச்சுமைக்கான சிகிச்சையாகும். சிறுநீரகப் பாதிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது. உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) தோலில் காணப்படும் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோலில் (7-dehydrocholesterol) இருந்து ஒளிவேதியல் வினை மூலம் உருவாகுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் இயல்பாகவே தோலிலும் பாலிலும் காணப்படுகின்றது. பாலை நேரடியாக புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாக்கும் போது பாலில் உயிர்ச்சத்து டியை உற்பத்தி செய்யமுடியும். உயிர்ச்சத்து டி வியாபார நோக்கில் உற்பத்தி செய்யப்படும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். எண்ணெய் மீன்களிலும் காட் மீன் ஈரல் எண்ணெய்களிலும் டி3 காணப்படுகின்றது. உயிர்ச்சத்து டி2 ஏர்கோசுட்டிரோலில் இருந்து உருவானதாகும். ஏர்கோசுட்டிரோல் என்பது சிலவகை அலைதாவரங்கள் (தாவர மிதவைவாழிகள்), முதுகெலும்பிலிகள், மதுவங்கள், காளான்கள் ஆகியனவற்றின் கலமென்சவ்வில் காணப்படும் ஒருவகை இசுட்டிரோல் ஆகும். ஏர்கோசுட்டிரோல் புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உட்படும்போது ஏர்கோகல்சிபெரோல் உருவாகுகின்றது. காளான்களில் குறைந்தளவில் காணப்படும் உயிர்ச்சத்து டி2 அவற்றை புறஊதாக் கதிரின் வினைக்குட்படுத்தும் போது அதிகரிக்கின்றது. தோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாக தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை, முளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது. தோலில் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது. இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன. உயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக மாற்றம் பெறுகின்றது. குருதிச் சுற்றோட்டத்தில் உள்ள கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நோய் எதிர்ப்புத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்டு குருதியருவிக்குள் விடப்படுகின்றது. குருதியில் காணப்படும் உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதத்துடன் அல்லது அல்புமினுடன் இணைந்து கொண்டு வெவ்வேறு இலக்குறுப்புகளுக்கு காவிச்செல்லப்படுகின்றது. நோய் எதிர்ப்புத் தொகுதியின் ஒற்றைக்குழிய-பெருவிழுங்கிகளில் கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. தனித்திறனற்ற நோயெதிர்ப்புத் தொகுதியைத் தூண்டுவதன் மூலம் உடலில் நுண்ணுயிரிகள் நுழைவதைத் தடுக்கும் சைட்டோக்கைன் எனும் உயிரணுத் தொடர்பிகள் போன்று கல்சிரையோல் தொழிற்படுகிறது. தோலில் உருவாகும் அல்லது உணவு மூலம் உள்ளெடுக்கப்படும் கோளிகல்சிபெரோல், கல்லீரலில் நிகழும் வேதியல் வினைமூலம் 25வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்பட்டு 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோலாக (25(OH)D3, கல்சிடையோல்) மாற்றமடைகிறது. இந்த வேதிவினை மைக்ரோசோமில் உள்ள உயிர்ச்சத்து டி 25-ஐதராக்சிலேசு எனும் நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது. கல்சிடையோல் சிறுநீரகத்துக்கு உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு 1வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்படுகின்றது. இதன் மூலம் கல்சிரையோல் என அழைக்கப்படும் 1,25-இரு ஐதரொக்சி கோளிகல்சிபெரோல் (1,25(OH)D) உருவாகின்றது. இந்தத் தொழிற்படுவடிவ கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பிக்கான ஒரு ஏற்பிணைப்பியாகும். கல்சிடையோல் கல்சிரையோலாக மாற்றப்படுவதற்கு 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி 1-அல்பா-ஐதராக்சிலேசு எனும் நொதியம் துணைபுரிகிறது. கல்சிரையோல் தனது உயிரிய வினைகளை உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் (VDR) பிணைக்கப்படுவதன் மூலம் நடுவு செய்கின்றது. இலக்கு உயிரணுக்களின் கருவில் இந்த உயிர்ச்சத்து டி ஏற்பிகள் அமைந்துள்ளன. உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் பிணைக்கப்பட்ட கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பியை ஒரு படியெடுத்தல் காரணியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சி, கல்சியத்தைப் பிணைத்துக்கொண்டு காவும் புரதங்களின் (கல்பைண்டின்) மரபணு வெளிப்பாட்டை இப்படியெடுத்தற் காரணி ஒழுங்குபடுத்துகின்றது. உயிர்ச்சத்து டி ஏற்பி பெரும்பான்மையான உறுப்புகளில் காணப்படுகின்றது: தோல், மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி, இதயம், இனப்பெருக்க உட்சுரப்பிகள். குடல், எலும்பு, இணைக்கேடய சுரப்பிகள் போன்றவற்றில் உயிர்ச்சத்து டி ஏற்பி செயற்படு நிலைக்குள்ளாவது குருதியில் கல்சியம் மற்றும் பொசுபரசு அயனிகளின் மட்டத்தை பேணுகின்றது. இது இணைக்கேடய வளரூக்கி, கல்சிடோனின் வளரூக்கி ஆகியனவற்றின் உதவியுடன் நிகழ்கின்றது. உயிர்ச்சத்து டியின் முக்கிய பங்குகளுள் ஒன்று வன்கூட்டுத்தொகுதியில் எலும்புகளில் உள்ள கல்சியத்தின் சமநிலையைப் பேணுவதாகும். குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சுவது, எலும்புறிஞ்சிக் கலங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் எலும்புகளில் இருந்து குருதிக்கு கல்சியத்தை வெளியுறிஞ்சச் (resorption) செய்வது, இவற்றின் மூலம் கல்சியம் மற்றும் பொசுபரசின் சமநிலையைப் பேணுவது எலும்புகளின் ஆக்கத்துக்கும் மீளாக்கத்துக்கும் இன்றியமையாதது. அமெரிக்க ஆய்வாளர்களான எல்மர் மக்கலம் மற்றும் மார்கேரைட் டேவிசு ஆகியோர் 1914இல் காட் ஈரல் எண்ணெயில் இருந்து ஒரு பதார்த்தத்தைக் கண்டறிந்தனர். இது பின்னர் உயிர்ச்சத்து ஏ என அழைக்கப்பட்டது. பிரித்தானிய மருத்துவர் எட்வார்டு மெலான்பை, காட் ஈரல் எண்ணெய் கொடுக்கப்பட்ட நாய்களில் என்புருக்கி நோய் வரவில்லை என்பதை அவதானித்தார். இதிலிருந்து, உயிர்ச்சத்து ஏ அல்லது வேறொரு நெருங்கிய காரணி இந்நோயைத் தடுக்கின்றது என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1922இல் எல்மர் மக்கலம் உயிர்ச்சத்து ஏ அகற்றப்பட்ட காட் ஈரல் எண்ணெயை நோயுற்ற நாய்களுக்குக் கொடுத்துப்பார்த்தார். அப்போதும் இந்நோய் குணமாகியது. இதிலிருந்து குறிப்பிட்ட அந்தப் பதார்த்தத்துக்கு 'உயிர்ச்சத்து டி' எனப் பெயரிடப்பட்டது. ஏனெனில், இது நான்காவதாகப் பெயரிடப்பட்ட உயிர்ச்சத்து ஆகும். ஆரம்பகாலத்தில் மாந்தரால் உயிர்ச்சத்து டியை சூரிய ஒளி மூலம் தொகுத்துக்கொள்ள முடியுமென்பது பற்றிய அறிவு இருந்திருக்கவில்லை. 1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை புறவூதாக்கதிர் கூட்டுகிறது என்பதை அமெரிக்க உயிர்வேதியியலாளர் காரி இசுடீன்போக் விபரித்தார். கொறிணிகளின் உணவை புறவூதாக்கதிர் வினைக்குட்படுத்திய பிற்பாடு அவை என்புருக்கி நோயில் இருந்து குணமடைந்தது அவதானிக்கப்பட்டது. இவரது முறை பால் போன்ற உணவுப்பொருட்களில் உயிர்ச்சத்து டியைச் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. 1925இல் 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து (தற்போதைய உயிர்ச்சத்து டி) ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார். இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார். 1971-72இல் உயிர்ச்சத்து டியின் வளர்சிதை மாற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் அறியப்பட்டன.கல்லீரலில் உயிர்ச்சத்து டி கல்சிடையோலாக மாற்றப்படுகின்றது என்பது அறியப்பட்டது. கல்சிடையோல், கல்சிரையோல் என்பன மைக்கல் ஒளிக் என்பவரது தலைமையில் நடந்த ஆய்வில் அறியப்பட்டன. வெவ்வேறு நாட்டினது துறைசார் நிறுவனங்கள் வெவ்வேறு அளவுகளைப் பரிந்துரை செய்கின்றன. கதிரவ ஒளி போதுமானதாக இருக்காவிடின் பொதுவாக பரிந்துரை செய்யப்படும் நாளாந்தத்தேவையின் அளவு போதாது. சிலவகை உணவுப்பொருட்களில் இருந்து மட்டுமே உயிர்ச்சத்து டியைப் பெற்றுக்கொள்ள முடியும். கதிரவ ஒளி மூலம் பெற்றுக்கொள்ளப்படுவதே பெரும்பான்மையானவர்களுக்கு பிரதானமான உயிர்ச்சத்து டியின் மூலம் ஆகும். சில நாடுகளில் பால், பழச்சாறுகள், தயிர் (யோகர்ட்) போன்ற அன்றாடம் உட்கொள்ளப்படும் உணவுவகைகளில் உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றது. மக்னீசியம் மக்னீசியம் (Magnesium) ஒரு தனிமம் ஆகும். இது Mg என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இதன் பொதுவான உயிர்வளியேற்ற எண்: +2. காரத்தன்மையுள்ள மக்னீசியம் புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது ஆகும். புவி ஓட்டின் எடையில் இது 2% ஆகும். பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. மக்னீசியம் உலர் அத்திப் பழம், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஒரு சராசரி பன்முக உயிர்ச்சத்து (multi-vitamin) மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350 மில்லிகிராமுக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும். 1808 ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார். நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னாற்பகுப்பு மூலம் மக்னீசியத்தை உற்பத்தி செய்ய முடியும். கார்பனை 2000 டிகிரி C வரை சூடு படுத்தி மக்னீசிய ஆக்சைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தி, வெளியேறும் மக்னீசிய ஆவியை ஹைட்ரஜன் வெளியில் சுருக்கி மக்னீசியத்தை உற்பத்தி செய்யலாம். பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் மக்னீசியம் 8 வது இடத்தில் உள்ளது. இது இலேசான, பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது. இரும்பின் அடர்த்தியில் 9 ல் 2 பங்கும், அலுமினியத்தின் அடர்த்தியில் 3ல் 2 பங்கும் உள்ளது. இது கடல் நீரில் அதிகம் உள்ளது. கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது. கடல் நீரில் அதிகமுள்ள சோடியம் குளோரைடுக்கு அடுத்து அதிகமாக உள்ளது மக்னீசியம் குளோரைடும் அடுத்ததாக மக்னீசியம் சல்பேட்டும் ஆகும். பொதுவாக பூமியில் கிடைக்கும் கடின நீரில் இந்த மக்னீசிய உப்புக்கள் கரைந்துள்ளன. கடின நீரில் சோப்பு நுரை வளம் தருவதில்லை. மெல்லிய கடின நீர் குடிப்பதற்குச் சுவையானது. கால்சிய உப்புக்களை விட மக்னீசிய உப்புக்கள் இரும்பை அரிக்கும் தன்மை கொண்டவை. மக்னீசியம் ஓரளவு மிதமாக வினை புரியக் கூடியது. வறண்ட காற்றில் நிலையானது. ஈரக் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதைக் காற்றில் எரிக்கும் போது கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது. நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று. மக்னீசியம் பெரும்பாலான அலோகங்களுடன் வினை புரிகிறது. மக்னீசியம் ஆக்சிஜன் மீது கொண்டுள்ள நாட்டம் மிகவும் அதிகம். அதனால் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தில் கூட இது தொடர்ந்து எரிகிறது. மக்னீசியத்தை எரியச் செய்ய அதைப் பற்ற வைக்க வேண்டும் என்பதில்லை. ஒரு எரியும் தீக்குச்சியை அதனருகே வைத்திருந்தாலே போதும். குளோரின் நிறைந்த வெளியில் இது அறை வெப்ப நிலையிலேயே நிகழ்ந்து விடுகிறது. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும், வெப்பத்தையும் தருகிறது. இந்த வெப்பம் மிகவும் அதிகமானது. 4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது. காற்று வெளியில் மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் அது பொலிவின்றி மங்கிப் போய் விடுகிறது. இந்த ஆக்சைடு படலம் மக்னீசியத்தின் உட்புறம் மேலும் ஆக்சிஜனேற்றம் பெறாமல் தடை செய்யும் ஒரு காப்பாக அமைகிறது. இதன் வேதிக் குறியீடு Mn. இதன் அணு எண் 12, அணு நிறை 24.31,அடர்த்தி 1740 கிகி/கமீ உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 923.2 K, 1373 K ஆகும். மக்னீசியத்தின் உருகு நிலை குறைவே என்றாலும் அதை உருக்குவது மிகவும் கடினம். ஏனெனில் உருகுவதற்கு முன்பாகவே இது எரிந்து சாம்பலாகி விடுகிறது. தாழ்ந்த அழுத்தத்தில் மந்த வளிம வெளியில் இதை உருக்கலாம். மக்னீசியத்தின் உறுதியை கலப்பு உலோகங்கள் மூலம் உயர்த்திக் கொண்டு அதைக் கட்டுமானப் பொருளாக பயன்படுத்துகின்றார்கள். இதற்கு துத்தநாகம், அலுமினியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அலுமினியமும் துத்தநாகமும் கலப்பு உலோகத்திற்கு வலுவூட்டுகின்றன. மாங்கனீசு உலோக அரிமானத்தை தடுக்கிறது. இக்கலப்பு உலோகத்தினால் எடை குறைவான ஆனால் வலிமை மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும் நெசவுத் தொழில், அச்சுத் தொழிலில் பயன்படவும் செய்கிறது. உயர் வெப்ப நிலையை ஏற்கும் தன்மை, அடித்து கம்பியாக நீட்டக் கூடிய தன்மைகளை அதிகரிப்பதற்கும், ஆக்சிஜனை உட்கவரும் தன்மையைக் குறைப்பதற்கும் மக்னீசியக் கலப்பு உலோகம் பயன்படுகிறது இரும்பு, சிலிகான், நிக்கல் போன்றவை மக்னீசியக் கலப்பு உலோகத்தின் பட்டறைப் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதுடன் அரிமானத்திற்குத் தரும் எதிர்ப்பையும் சீர்குலைத்து விடுகின்றன. உயர் வெப்ப நிலையில் ஆக்சிஜனிறக்கியாக மக்னீசியம் பல தனிமங்களின் உற்பத்தி முறையில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வனேடியம், குரோமியம், டைட்டானியம் போன்றவற்றைச் சொல்லலாம். தூய சிலிகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்சைடுகளிலிருந்து பிரித்தெடுக்க மக்னீசியத்தின் இப்பண்பு உதவியாயிருக்கிறது. உருகிய இரும்புக் குழம்போடு மக்னீசியத்தைச் சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு, பட்டறைப் பயன்பாடு மேலும் சிறப்படைகின்றன. மக்னாலியம் (மக்னீசியம் + அலுமினியம் ) எலெக்ட்ரான் (மக்னீசியம் + துத்தநாகம் ) போன்ற கலப்பு உலோகங்கள் இலேசானவை ஆனால் உறுதியானவை. மக்னீசியம் ஆக்சைடு, உயர் வெப்பம் தாங்க வல்ல செங்கல், பீங்கான், இரப்பர் இவற்றின் உற்பத்தி முறையில் பயன்படுகிறது. அணு உலைகளின் உட்சுவர்களைக் கட்டமைக்கப் பயன்படுகிறது.மக்னீசியம் சல்பேட் அரிகாரமாகவும்,கெட்டிச் சாயமாகவும் துணி மற்றும் காகித ஆலைகளில் பயன்படுகிறது தோல் பதனிடவும் உறுதுணையாக உள்ளது. தூய மக்னீசியம் ஆக்சைடு, நெஞ்சரிப்பு, வயிற்றுப் புளிப்பு மற்றும் அமில நஞ்சுகளுக்கு மருந்தாகிறது. மக்னீசியம் பெர் ஆக்சைடு துணிகளை வெளுப்பூட்டப் பயன்படுகிறது. இது தொற்றுத் தடை மற்றும் நஞ்சுத் தடையாகப் பயன்தருகிறது. நீர் மூலக்கூறு ஏற்றப்பட்ட மக்னீசியம் சல்பேட்டை எப்சம் உப்பு என்பர். இது ஒரு சில வகை பத்துகளுக்கு(rashes) மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்தாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. மக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றிலுள்ள உபரி அமிலத்தை சமப்படுத்திவிடுகிறது என்பதால் நெஞ்சரிப்புக்கு உகந்த மருந்தாகக் கொள்கின்றனர். சர்க்கரைப் பாகிலிருந்து சர்க்கரை எடுக்கவும் இது பயன் தருகிறது. மக்னீசியம் கார்பனேட்,பற்பசை, முகப் பவுடர், வெள்ளி மெருகேற்றி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உயிர் வேதியியலில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று தீர்மானிப்பதில் மக்னீசியத்திற்குப் பங்கிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பொட்டாசியம் நிறைந்த உணவைக் கூடுதலாக உட்கொண்டால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மக்னீசியம், கால்சியம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும் இருக்கும் என்பது இவர்களுடைய ஆய்வு முடிவு. கோழித் தீவனத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் கோழிகள் இடும் முட்டைகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் உடைவதினால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது. எளிதில் கோபப்படுபவர்களுக்கும், உணர்ச்சி வயப்படுகின்றவர்களுக்கும் இதயத் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதற்குக் காரணம் கிளர்வுற்ற நிலையில் உடலில் உள்ள மக்னீசியம் எரிந்து போவதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களில் ஒளிச் சேர்க்கையைத் தூண்டும் குளோரோபில் என்ற பச்சையத்தில் இந்த மக்னீசியம் பங்கு பெற்றுள்ளது. உடலின் திசுக்களின் இயக்கங்களுக்கும் என்சைம்களுக்கும் இந்த மக்னீசியம் தேவை. மக்னீசியக் குறைவு தசை இசிப்பு, தசை முறுக்கு போன்ற பாதிப்புக்களைத் தருகிறது. எலும்புகளின் கட்டமைப்பில் மக்னீசியம் பங்கேற்றுள்ளது. நரம்புகளின் வழி சமிக்கைகளைக் கொண்டு செல்ல இது துணை புரிகிறது. இரும்பு இரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு எண் 26 ஆகும். இரும்பின் பயன்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது என்பதால் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது நான்கவதாக உள்ளது. ஆனால் பூமியின் உள்ளகம் உருகிய இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனது பெரும்பாலான கோள்களின் உள்ளகங்களில் இரும்பு, நிக்கல் இருப்பதாக இன்றைக்குக் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையில் இரும்பு தனித்துக் கிடைப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்டுத்தியதில்லை என்றும், எரிகற்கள் மூலம் கிடைத்த இரும்பையே பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது. எரிகற்களில் இரும்பு தனித்துக் காணப்படுகின்றது. நீர் மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் இரும்பு உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதையே துருப்பிடித்தல் என்கிறோம். இரும்பின் முக்கியமான கனிமங்கள் ஹெமடைட், மாக்னடைட், லிமோசைட், சிடரைட் போன்றவைகளாகும். இரும்புக் கனிமத்தை பழுக்கச் சூடாக்கி அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, ஈரம், கரிமப் பொருட்களை வெளியேற்றிவிடுவார்கள். பின்னர் இதை நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் இவற்றுடன் கலந்து வெடிப்புலையில் 1500 டிகிரி C வரை சூடுபடுத்துவார்கள். உருகிய குழம்பில் மிதக்கும் கழிவுகளை அகற்றி விட்டு இரும்பை வார்த்து வார்ப்பிரும்பாகப் ("Cast iron or Pig iron") பெறுவார்கள். வார்ப்பிரும்பில் 4 முதல் 5 விழுக்காடு கார்பன், 1 முதல் 2 விழுக்காடு சிலிகான் மற்றும் மாங்கனீசு போன்ற வேற்றுப்பொருட்கள் இருப்பதால் இரும்பு எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது. இதனைப் பட்டறைப் பயனுக்கு உள்ளாக்க முடியாததால் இப்பொருட்களை அகற்றிப் பயன்படுத்துவர். ஆக்சிஜன்வெளியில் இத்தாதுவினை எரித்து அதிலுள்ள கார்பனை அகற்றுவார்கள். ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பைத் தேனிரும்பு ("Wrought iron") மற்றும் எஃகு ("Steel") என்பர். எஃகானது வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு இவற்றின் பண்புகளை ஒருசேரக் கொண்டுள்ளது. ஏனெனில் வார்ப்பிரும்பைக் காட்டிலும் குறைவாக ஆனால் தேனிரும்பைக் காட்டிலும் கூடுதலாகக் கார்பனை எஃகு பெற்றுள்ளதே காரணமாகும். வெப்பத்தைக் கொண்டு பண்டுவப்படுத்துவதின் மூலம் கார்பனின் சேர்க்கை விகிதத்தை தேவையான அளவு மாற்றி எஃகிற்கு வேறுபட்ட கடினத் தன்மையை அளிக்கமுடியும். இதைப் பதப்படுத்துதல் என்பர். தொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை இரும்புக் காலம் என்கின்றனர். இக்காலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் இரவிமங்கலம் தொல்லியற்களம் போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன. இரும்பு பிரித்தெடுத்து பயன் படுத்தத் தொடங்கிய காலம் நாகரிக வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டமாக இருந்ததால் அதை இரும்பு யுகம் ("Iron age") என்பர் (1100 BC). இது வெண்கல யுகத்திற்குப் ("Bronze age" – 3000 BC) பிற்பட்டது. இரும்பு மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். குண்டூசி முதல் பெரிய கப்பல் வரை இதனால் செய்யப்படாத பொருட்களே இல்லை எனலாம். இரும்பிற்கு வலிமையூட்டி பெறப்பட்ட எஃகு கலப்பு உலோகங்களினால் ஆன பயன்பாட்டை விரிவடையச் செய்தது இலத்தீன் மொழியில் பெர்ரம் என்றால் இரும்பு என்ற கடினத் தன்மைமிக்க பொருள். இதிலிருந்தே இத்தனிமத்திற்கு வேதிக் குறியீட்டையும் சேர்மங்களுக்கான பெயரையும் இத்தனிமன் பெற்றது. தூய இரும்பு வெள்ளி போன்ற பளபளப்புடன் கூடிய உலோகமாகும் .இதன் அணு எண் 26 அணு எடை 53.85 அடர்த்தி 7860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K, 3073 K ஆகும்.இரும்பு விரைவில் துருப்பிடிக்கிறது. இது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து பெரிக் ஆக்ஸைடாக மாறி மேற்பரப்பில் காரையாகப் படிவதாகும் செந்நிறமுடைய இது நுண்துளை உடையதாலும், புறப்பரப்பில் அழுத்தமாக ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதாலும் காலபோக்கில் இது உதிர்ந்து விடுகிறது. இதனால் அடித் தளங்கள் துருப் பிடிப்பதற்கு உள்ளாகின்றன. எனவே இரும்புப் பொருட்களைச் சரியாகப் பாராமரிக்காது விட்டால் அவை துருப் பிடித்துச் சிதைந்து விடும். எஃகோடு கலப்பு உலோகம் செய்வதற்கு நிக்கல், குரோமியம், வனேடியம், டங்ஸ்டன். மாங்கனீசு, சிலிக்கான், கோபால்ட், மாலிப்டினம் போன்ற உலோகங்கள் பயன்படுகின்றன. இவற்றின் சேர்மான விகிதத்தை கலப்பு உலோகத்தின் சிறப்புப் பயனுக்கு ஏற்ப தக்கவாறு மாற்றிக் கொள்கின்றனர். இரும்பு அல்லது எஃகு உற்பத்தி இரண்டு முக்கிய கட்டங்களை உள்ளடக்கிய ஒரு செயல்முறை ஆகும். முதல் கட்டத்தில் கச்சா இரும்பு ஒரு ஊது உலையில் தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, இது நேரடியாக ஒடுக்க முறையிலும் தயாரிக்கப்படலாம். இரண்டாவது கட்டத்தில் இக்கச்சா இரும்பு வார்ப்பிரும்பாக மாற்றப்படுகிறது . ஒரு சில வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் போது தூய இரும்பு ஆய்வகங்களில் சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. முதலில் இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் ஐதரசனைச் சேர்த்து இரும்பு பென்டாகார்பனைல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கிச் சிதைத்து தூய இரும்புத்தூள் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு குளோரைடு சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் தூய இரும்பு தயாரிக்கலாம். Fe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஏமடைட்டு மற்றும் Fe3O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டமேக்னடைட்டு என்ற இரும்புத் தாதுக்களில் இருந்து தொழிற்சாலை இரும்பு உற்பத்தி தொடங்குகிறது. இத்தாதுக்களுடன் கார்பன் சேர்த்து சூடுபடுத்தப்படும் வினையான உயர்வெப்பக்கார்பன் வினையினால் தாதுக்கள் இரும்பாக ஒடுக்கப்படுகின்றன. இம்மாற்றம் ஊது உலையில் சுமார் 2000° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. கல்கரி வடிவக் கார்பன் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் முறையில் சுண்ணாம்புக்கல் இளக்கியாகச் சேர்க்கப்படுகிறது. இளக்கியின் மூலமாக சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. கல்கரியும் சுண்ணாம்புக்கல்ல்லும் உலையின் மேற்புறமாக தாதுக்களுடன் சேர்க்கப்படுகின்றன. வெப்பக் காற்று ஊது உலையின் கீழ்ப்புறமாக வேகமாகச் செலுத்தப்படுகிறது. ஊது உலையில் கல்கரி ஆக்சிசனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு உருவாகிறது. கார்பன் மோனாக்சைடு தாதுக்களை உருகிய இரும்பாகக் குறைக்கிறது. சிறிதளவு இரும்பு நேரடியாக கல்கரியுடன் வினைபுரிந்து இரும்பாக ஒடுக்கப்படுகிறது. உருகலில் இடம்பெற்றுள்ள சுண்ணாம்புக்கல், கால்சியம் கார்பனேட்டு, டோலமைட்டு போன்ற இளக்கிகள் கார்பன் மோனாக்சைடாக மாறுகின்றன. தாதுவின் தன்மைக்கேற்றப்ப இளக்கிகளும் மாறுபடுகின்றன. கால்சியம் ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடுடன் சேர்ந்து கசடாக மாற்றப்படுகிறது. செயல்முறையில் உருவான இரும்பும், கசடும் தனித்தனியாக வெளியேற்றப்படுகின்றன. நேரடியாக இரும்பு தயாரித்தல் சூழலுக்கு தகுந்தவாறு பின்பற்றப்படுகிறது. நேரடி இரும்பு ஒடுக்கம் முறை மாற்று முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை வாயு பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் மோனாக்சைடு உருவாக்க்கப்படுகிறது. இவ்வாயு இரும்புத்தாதுவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுவதால் இரும்பு உருவாகிறது. சுண்ணாம்புக்கல் இளக்கி சேர்க்கப்பட்டு சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இவற்றுள் பல உட்பிரிவுகள் உள்ளன. குழந்தைகள், விடலைகள், குழந்தை பெறும் வயதையடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மாதவிடாய் நிறுத்தம்' கடந்த பெண்களுக்கும் இந்தக் குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களைப் பெறுவதையும் தடுத்துவிடும். மனதின் வீரத்தையும், உடலின் வலுவையும் இரும்போடு தொடர்புப்படுத்தி உவமைகள் கவிஞர்களால் கூறப்படுகின்றன. இரும்பு இதயம் படைத்தவள், இரும்பைப் போல் உடலுறுதி படைத்தவன், இரும்புத் திரை போல் அமைப்பைக் கொண்ட நாடுகள் போன்றவை இரும்பைத் தொடர்புபடுத்திய உவமைகளாகும். ஆந்த்ராக்ஸ் ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு தீவிரத் தொற்று நோய் ஆகும். இது 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் ("Bacillus anthracis") எனும் கோலுரு நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இந்நோய் கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது. நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும். எனினும் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்போது உயிரிப் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஆந்த்ராக்ஸ் மிகப் பழங்காலத்திலேயே அறியப்பட்ட நோய்களில் ஒன்று. ஒரு காலத்தில் பிளேக் போன்று பேரழிவை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. கோலுரு நுண்ணுயிர்களால் உண்டாகும் நோய்களில் ஆந்த்ராக்ஸ் உண்டாகும் கோலுரு நுண்ணுயிர் தான் முதன்முதலில் பிரித்து கண்டரியப்பட்டது. 1850ம் ஆண்டு ஆந்த்ராக்சால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது சி.ஜெ. டவைன் (C.J. Davaine) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி உருட்டுக் கம்பி வடிவிலான இந்த கோலுரு நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் லூயிஸ் பாஸ்டர் இந்தக் கிருமிகளால் தான் ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுகிறது என்பதை நிரூபித்ததோடு 1881ம் ஆண்டில் இந்த நோய்க்காக விலங்குகளுக்கு போடப்படும் தடுப்பூசியையும் உருவாக்கினார். இதற்கு சில வருடங்கள் முன்பாக 1877ல் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார். 1979ம் ஆண்டு ரஷ்யாவில் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் (தற்போதைய யெகாடெரின்பர்க் (Yekaterinburg)) என்னுமிடத்தில் 'உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை' என்று கருதப்படும் கட்டிடத்திலிருந்து விபத்து மூலம் காற்றில் இந்தக் கிருமிகள் பரவியதால் சுமார் 66 பேர் இறந்தார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு வெளிப்பட்ட கிருமிகள் சுமார் நான்கு புதிய ரகங்கள் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 1998ல் அறிவித்தனர். இதனால் தடுப்பூசிகளால் தடுக்கப்படாத புதிய ரகங்கள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 1991ம் ஆண்டு நடந்த வளைகுடா போரில், ஈராக் நாடு உயிரியல் ஆயுதங்களால் தாக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டதால் சுமார் 150,000 வீரர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. 2001ல் உலக வணிக மையம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கடிதம் மூலம் அனுப்பினார்களா என்றும் ஆராயப்படுகிறது. இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும். ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது. நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும். மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு. இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள், மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக் கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும். இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது. சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ஃப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும். பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacin', பெனிசிலின் போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது. பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது. தீவிரவாதிகளால் பொது மக்களிடையே ஆந்த்ராக்ஸ் நோய் கிருமிகளை பரப்ப, இந்த கிருமிகள் அடங்கிய பூஞ்சைக் கூடுகள் (spores) பொடி வடிவில் கடித உறையில் வைத்து அனுப்பப்படுவதாக நம்பப்படுகிறது. உறையை பிரிக்கும் போது பொடி சிதறுவதால் காற்றில் கலந்து அருகில் இருப்போருக்கு சுவாசம் மூலம் பரவும் வாய்ப்பு ஓரளவுக்கு உண்டு. பொடி வெளிப்புறமாக படிந்திருந்தால் அல்லது சிந்தியிருந்தால்: பொதுவாக இந்தக் கிருமிகள் காற்றில் பரவுவதில்லை. இந்தப் பொடி காற்றில் வேகமாக உதறப்பட்டாலோ அல்லது தெளிக்கப்பட்டாலோ சுற்றியிருப்போரை நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம். ஆகவே மிகச் சிறிய குண்டு வெடிப்பின் மூலம் இந்தக் கிருமிகள் காற்றில் தெளிக்கப்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்த இயலும். இவ்வகை குண்டுகளை தயாரிக்க தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. சித்த மருத்துவம் சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன. "சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய" "சரநூல் மார்க்கம்" "கோதறு வகார வித்தை" "குருமுனி ஓது பாடல்" "தீதிலாக் கக்கிடங்கள்" "செப்பிய கன்ம காண்டம்" "ஈதெலாம் கற்றுணர்ந் தோர்" "இவர்களே வைத்தியராவர்..." சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நம் உடலில் வளி ,அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும். வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும். நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது, 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்' சித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருத்து வடிவங்கள்(forms of medicine) உள்ளன. "மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்" "மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்" "மறுப்ப தினிநோய் வாரா திருக்க" "மறுப்பது சாவை மருந்தென லாமே" திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம். அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளது அகமருந்துகளும் அவற்றின் எடுத்துக்காட்டுக்களும் வெளி அல்லது புறமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளது வெளி அல்லது புறமருந்துகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகரித்து உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது. சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துரைகளையும் அறிவியல் முறையில் கிளினிக்கல் சோதனைக்கு (clinical trials) உட்படுத்தி சீர்படுத்தும் பணியில் சித்த மருத்துவ ஆய்வுக்கான நடுவண் அரசு நடுவம் ஈட்பட்டுள்ளது. நீரழிவு நோய்க்கான D 5 சூரணம் மற்றும் காளாஞ்சக படை நோய்க்கான தயாரிப்பு 777 எண்ணெய் ஆகியன இவ்வாறு கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்புரிமை செய்யப்பட்டுள்ளன. குருதிக் கொடை இரத்ததானம் அல்லது குருதிக் கொடை "(blood donation)" என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர். தானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ மூலிகைகள் மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும். பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும். மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது. அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி ("Euphorbia hirta") ஒரு மருத்துவ மூலிகையாகும். இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது. அம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு. அறுகு அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon" புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு. அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது. வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக இது காணப்படுகிறது. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது. அவுரி (தாவரம்) அவுரி () அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) "இண்டிகோஃவெரா டின்க்டோரியா" (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் "ட்ரூ இண்டிகோ" (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர். இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. இச்செடி (புதர் வகையான செடி) ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது. இச்செடியின் இலைகள் சற்றே வெளிறிய பச்சை நிறத்துடன் கூட்டிலையாக உள்ளன. இதன் பூக்கள் நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இணராக உள்ளன. இச் செடியின் இலைகளை நீரில் ஊற வைத்து புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி புளிக்க வைப்பதால் அதில் உள்ள "கிளைக்கோசைடு இண்டிக்கான்" (glycoside indican) என்னும் பொருளை ஊதாச் சாயமாக மாறுகின்றது. இந்தச் சாயத்தின் பெயர் இண்டிகோட்டின் (indigotin) என்னும் ஊதாச்சாயம் ஆகும். அவுரி ("Indigofera tinctoria") ஒரு மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது. பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி). ஆடாதோடை ஆடாதோடை () அல்லது ஆடாதொடை, வாசை ( (தாவர வகைப்பாடு : "Adhatoda zeylanica") என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது. இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது. இந்தத் தாவரம் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது. இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது. இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும். ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும். இருமல்,இளைப்பு,சுரம் தீரும். கொடுக்க இருமல் தீரும். ஆடுதீண்டாப்பாளை ஆடுதீண்டாப்பாளை ("Aristolochia bracteolata") மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவின. இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைதிருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது. தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு. ஆவாரை ஆவாரை (), ஆவிரை அல்லது மேகாரி ("Cassia auriculata") என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும். நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி. ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது. தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார் குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம். மடல்மா மேல் வரும் ஒருவன் அக்குதிரைக்கு மயில்பீலி, பூளாப் பூ, ஆவிரை (ஆவாரம்பூ) ஆகியவற்றைச் சூட்டியிருந்தானாம். ஆவிரை மலரையும் எருக்க மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அவன் அணிந்திருந்தானாம். காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம். இஞ்சி இஞ்சி () ("Zingiber officinale") உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று. தொடர்ந்து உண்டால் தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும். காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும்,மதிய உணவுக்குப் பின் சுக்கு,கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும்,மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம். இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது. உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகும். கரு ஊமத்தை கரு ஊமத்தை ("Datura metel") மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும். திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும். பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு பாங்கான தங்கத்தின் காசு வாங்கி நேரப்பா கருமத்தின் இலையரைத்து நெகிழவே கவசித்து சீலை செய்து சீரப்பா கசப்புடமே இட்டாயானால் சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன் காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும் பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும் பாங்கான திரேகமது வச்சிரகாயம் தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும் அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம் வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம் மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே. எள் எள் ("Sesamum Indicum") ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் "திலம்" என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெய்யும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது. ஏலம் (தாவரம்) ஏலம் ("Elettaria cardamomum") என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிரிய ஏலக்காய் "எலெட்டாரியா" (Elettaria), பெரிய ஏலக்காய் "அமோமம்" (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை. இத்தகை ஏலக்காய், இந்தியா துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப் படுகிறது. 1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக 2. செரிமானத்தை தூண்டுவதாக, 3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு 4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு . மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும், ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா(Guatemala) விடம் இழந்துள்ளது. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடுகள், BUSCHNEGER உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யபடுகிறது. மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்: 1. கோஸ்ட்டா ரிக்கா 2. குவாத்தமாலா 3. இந்தோனேசியா 4. பிரேசில் 5. நைஜீரியா 6. இந்தியா 7. தாய்லாந்து 8. நிக்கராகுவா 9. தென் ஆபிரிக்கா ஏல மொசைக் (mosaic) தீ நுண்மம், ஏலத் தாவரத்தைத் தாக்கி அதன் விளைச்சலைக் குறைக்கின்றது. இந்நுண்மம் ஓரிழை ஆர்.என்.ஏ கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை போட்டிவிரிடீ (Potyviridae) என்னும் செடிகொடி தீநுண்மக் குடும்பத்தில், "மெக்ளாரா தீநுண்மம்" (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வால்பாறையில் இருந்து கர்நாடகா வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதன் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக மதுரை காமராசர் பலகலைகழகத்தில் ஆய்வு செய்து வரும் "பேராசிரியர் உசா" அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது. இத்தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஓமம் ஓமம் ("Trachyspermum copticum") மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஓமம் ("Carom Seeds"), சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணங்கொண்ட இத்தாவரத்தை, வெதுப்பி ("Bread"), மாற்றும் அணிச்சல் ("Cake") தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Hill, Tony. (2004) "Ajwain" in "The Contemporary Encyclopedia of Herbs and Spices: Seasonings for the Global Kitchen." Wiley. p. 21-23. ISBN 978-0-471-21423-6. கசகசா கசகசா () ("Papaver somniferum") ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது. தீரும் நோய்கள்: பேதி. கசகசா ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும் கண்டங்கத்தரி கண்டங்கத்தரி () என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும். கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தச மூலம் என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும். இவை பின் விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும். கல்யாணப் பூசணி கல்யாணப் பூசணி ("Cucurbita moschata") ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும். இப்பூசணிக் காய்கள் இனிப்புச் சுவையுடையவை. மஞ்சள் தோலும் செம்மஞ்சள் நிறச் சதையுமுடையவை. பழுக்கும்போது கரும் செம்மஞ்சள் நிறமாகும். இது உடல் பருக்க, உடல் சூட்டைக் குறைக்க உதவும். கற்பூரவல்லி கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி ("Coleus aromaticus") என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. மணம்மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற பயன்படுகிறது. இது குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜீரணம் குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றாகும்.. காச இருமல் கதித்தம சூரியயையம் பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங் கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங் கற்பூர வள்ளிதனைக் கண்டு கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே கடுகு கடுகு () என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும். கடுகுக்கு தன் சுவை கிடையாது . குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணையில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள். கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணையில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும். கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை ("Eclipta prostrata") ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும். இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது. கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை. கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்: உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும். கறிவேம்பு கறிவேம்பு (), கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை () ("curry leaf") என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ ("Murraya koenigii") என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன. வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும். சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர். கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும். "கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை. இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. "கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறிப்பில்லை, கருவேப்பிலை, கறிவேம்பு, கரிப்பிலை, காட்டு வேப்பிலை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு. கத்தூரி மஞ்சள் பூமிக் கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், "Curcuma aromatica") என்பது ஒரு மருத்துவ மூலிகை. இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள். சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம். கிராம்பு கிராம்பு (இலவங்கம், "Syzygium aromaticum") ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு. கீழாநெல்லி கீழாநெல்லி ("Phyllanthus niruri") ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும். உட்கொள்ளும் முறை: முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும். குடசப்பாலை குடசப்பாலை (கருப்பாலை, "Holarrhena pubescens") மூலிகையானது மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. இது சீதக்கழிச்சல் போக்க உதவும். குப்பைமேனி குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி ("Acalypha indica") என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும். கொத்தமல்லி கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன. உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர். கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும். நிலத்தினை உழுது , தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள். கோரை கோரை (coco-grass, "Cyperus rotundus") ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ (55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கொவ்வை கோவை அல்லது கொவ்வை ("ivy gourd", "Coccinia grandis") மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு. கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது. இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார். மூலிகையே மருந்து: கோவை ‘குணம்’ காண்! சந்தனம் சந்தனம் ("Santalum album", Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது. இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது. இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன. வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர். வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற் பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ் சரும வழகுந் தனிமோ கமுமாம் மிருமுநோ யேகும் பறழ்ந்து - பதார்த்த குணபாடம் - பாடல் (209) சிறுகண் பீளை சிறுகண் பீளை "(Aerva Lanata)" ஒரு மருத்துவ மூலிகையாகும். இது பூலாச்செடி, கண்ணுப்பீளை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கும், சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலைக் குறைக்கவும், சிறுநீரில் இரத்தம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குறைக்கவும் இம்மூலிகை பயன்படுகிறது. சிறுகீரை சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு, பொரியல், புலவு எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது. உடல் பலம் பெற, சிறுநீர் நன்கு பிரிய உதவும். காசநோய், மூலநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும். வாயு மற்றும் வாதநோயை அகற்றும். சீதா (மரம்) சீதா (Sugar apple,தாவர வகைப்பாடு : "Annona squamosa"), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த "அனோனா" (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் "புத்தர் தலை" என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது. சீதா மரம் வளர உகந்த காலநிலை 25 °C (77 °F) முதல் 41 °C (106 °F) வரையாகும்.பெரும்பாலான "அனோனா" சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ(6600 அடி) உயரத்தில் வளரக்கூடியது. சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது. சீரகம் சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : "Cuminum cyminum") ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும். சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது. 100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன. சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. என சித்தர் பாடல் ஒலிக்கிறது. சுண்டை சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ("Solanum torvum") என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. சுண்டையானது ஓரளவு வளரும் பெருஞ்செடி வகையான முட்கள் கொண்ட தாவரம் ஆகும். இதன் இலைகள் அகன்று விரிந்தும் சிறிய பிளவுகள் தென்படுவதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டதாகவும், கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்களைக் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு. காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன. சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும். நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம் விஞ்சுவா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக் காயைச் சுவைப்பவர்க்குக் காண் என்று சுண்டைக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாட பாடலில் கூறப்பட்டுள்ளது. சுண்டைக்காய் வற்றல் (Dried Turkey berries) பற்றி மற்றொரு வெண்பா பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும் உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய் பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான் சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல். தவசி முருங்கை தவசி முருங்கை (தாவர வகைப்பாடு : "Justicia tranquebariensis") மூலிகை மருத்துவத்திலும் உணவுத் தயாரிப்பிலும் பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படும் இது பத்திய உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் இலைச் சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர் வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தாளிசபத்திரி தாளிசபத்திரி என்பது காட்டுக் கருவாமரம் (Wild cinnamon, Cinnamomum iners) என்பதன் இலை. இம் மரத்தை இலவங்க மரம் என்றும் அழைப்பர். இம்மரத்தின் பகுதிகள் சில மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன. இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்தாகப் பயன்படுகிறது.. தான்றி தான்றி ("Terminalia bellerica") ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின் சாம்பல் நிறப் பழங்களாகும். இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன. இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும். முடிதும்பை முடிதும்பை என்றழைக்கப்படும் தும்பை ("Leucas Aspera") ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இச்செடி LABIATACEAE என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. 50 செ. மீ. வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி மற்ற செடிகளுடன் தோட்டங்களிலும் வயல், வரப்புகளிலும், கிராமப்புறங்களின் சாலையின் இருமருங்குகளிலும், புதர்களின் ஓரங்களிலும் வளரும் தன்மை உடையது. இந்தச் செடி 20 செ.மீட்டர் உயரத்தில் 10 செ.மீ. அகலம் வரை தரையோடு குத்துச்செடி போல வளரும். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. தும்பைச் செடி அடித் தண்டிலிருந்தே, மூன்று நான்கு கிளைகளுடன் வளரும் தன்மை கொண்டது. கிளைகளில் பல சிறு கிளைகள் தோன்றி, அந்தக் கிளைகளில் பல இலைகள் நீண்ட காம்புகளுடன் அடர்த்தியாகப் பற்றி இருக்கும். ஒவ்வொரு சிறு கிளையின் நுனியிலும் சிறிய பந்து போன்று ஒரு பிரிவு வளர்ந்து அதன் துளைகளிலிருந்து மொக்கு வெளிவந்து அழகான வெண்மைநிற பூக்கள் பூக்கும் விதம் பார்வைக்கு மிக்க அழகாக தோற்றமளிக்கும். இதன் இலை அடி அகன்றும், நுனி குறுகியும் காணப்படும்.சுமார் 4 செ.மீ. நீளத்தில் ஒரு செ.மீ அகலத்திலிருக்கும். இலை சற்று கனமாக இருக்கும். இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் ஒரு காரமான வாடை இருக்கும். தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டி தொல்காப்பியத்தில் தும்பை ஒரு திணையாகக் கொள்ளப்பட்டு தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார். இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர். இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன . என்று பல வகைகளுண்டு. சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதனை துரோன புஸ்பி என்று அழைப்பர். துளசி துளசி ("Ocimum tenuiflorum") மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. துழாய் (நீல நிற துளசி. இதனை கிருஷ்ண துளசி எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி. இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர். தூதுவளை தூதுவளை ("Solanum trilobatum") என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு. தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஈழை நோய்க்கு (ஆஸ்துமா) இது மருந்தாகப்பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. தூதுவளை பறித்து நிழலின் கீழ் இலைகளை உலர்த்தி பின்னர் முள்களை நீக்க வேண்டும். ஏனெனில் முள் உள்ள செடிகளில் சற்று நச்சுத்தன்மையுள்ளதாக கருதப்படுவதால் சமையல் செய்வதற்கு முன்பே இந்த முள்ளை நீக்க வேண்டியது அவசியம். பின்னர் எண்ணெய் அல்லது நெயில் சிறிது வறுக்கவும், பின்னர் அதை அரைத்து சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட சளி, காய்ச்சல் மற்றும் பொதுவான குளிர் சிகிச்சை செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த மூலிகை நிழலின் கீழ் இலைகளை உலர்த்தியதன் மூலம் தூள் வடிவத்தில் சேமிக்கப்படலாம். நந்தியாவட்டை நந்தியாவட்டை | நந்தியார்வட்டை ("Ervatamia divaricata", "Tabernaemontana divaricata", "Crepe jasmine", "East Indian Rosebay", "Nandivrksah") ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர். சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது. நந்தியாவட்டையின் இலைகளை நன்றாக அலசிச் சுத்தமாக்கி, இடித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து நந்தியாவட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண்பார்வை மங்குதல் என்பவற்றுக்கு இது கண்ணில் ஒரு துளி (மூலிகை மருத்துவம் தெரிந்தவரின் மருத்துவ ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்) விடப்படுகிறது. சரும நோய்களுக்கும் தடவலாம். இதன் விவரங்கள் பிறமொழிகளில் இதன் பெயர்களையும் காணலாம். நன்னாரி நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி ("Hemidesmus indicus" ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: "Indian Sarsaparilla") என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டதாக, பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும். மேலும் இதன் இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும். நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். "நன்னாரி சர்பத்" என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் "அனந்தமூலா" (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் நன்னாறிக்கு அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்ற வேறு பெயர்கள் உண்டு. இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் ‘பாற்கொடி’ என்றும், வாசனையைக் கொடுப்பதால் ‘சுகந்தி’ என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பால் ‘பாதாளமூலி’ என்ற பெயரும் இதற்கு அமைந்தது. இதில் நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகள் உள்ளன. போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது. நாயுருவி நாயுருவி அல்லது அபமார்க்கி (தாவரவியல் பெயர்; அசய்ரந்தெஸ் அஸ்பெர ("Achyranthes aspera") என்பதாகும். ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும். நாயுருவிக்கு அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. இவற்றின் விதைகள் (அரிசி) கொண்ட சிறு நெற் கதிர் போல காணப்படுவதால் "கதிரி" என அழைக்கப்படுகிறது. நாட்டினத்தைக் குறிக்க ‘நாய்’ எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் தாவரத்திலிருந்து ‘உருவி’ உடலில் ஒட்டிக்கொள்வதால், ‘நாயுருவி’ என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். மேலும் இதற்கு கஞ்சரி. சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறுகடலாடி, சகரிகம், கொட்டாவி, நாயரஞ்சி போன்ற வேறு பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. நாயுருவியானது சிறுசெடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகளில் மென்மையான ரோம வளரிகளோடு, தலைகீழ் முட்டை வடிவத்தில் காணப்படும். இலைகளும் தண்டும் சிவந்து காணப்படுவது செந்நாயுருவி வகையாகும். இந்தத் தாவரமானது பீட்டா கரோடீன் (Beta-Carotene), வைட்டமின் – சி, கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. =செந்நாயுருவி= இவ்விரு வகைளிலும் செந்நாயுருவி சிறப்புடைது. நிலவேம்பு நீர்முள்ளி நீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் ("Hydrophila spinosa") மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும். இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டது. இது நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் பெற்றது. மேலும் இந்தத் தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது வயல்கள், குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரக்கூடியது. இதன் இலைகள் ஈட்டி வடிவமுடையவை. இதன் கணுக்களில் நீண்ட முட்கள் காணப்படும். இதன் பூ ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடையது. இதன் விதைகள் பழுப்பு நிறத்தவை. நீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க்கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும். நெருஞ்சி நெருஞ்சி அல்லது செப்புநெருஞ்சில் ("Tribulus terrestris"; "Caltrop") ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்படு உடையன. இதற்கு நெருஞ்சில், திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. யானையின் பாதங்களைத் துளைத்து, அதைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன. நெருஞ்சிலானது மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடியாகும். இந்தத் தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். நொச்சி பப்பாளி பப்பாளி ("Carica papaya") ("பறங்கிப்பழம் என்பது மற்றோரு பெயர் ஆகும்") ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும். பப்பாளி மரத்தின் இலைகள் ஆமணக்கு செடியின் இலைகளின் வடிவத்தை ஒத்திருக்கும். நெடு நெடு என்று விரைவாக வளரக் கூடிய மரமாகும். பப்பாளி மரம் இலைகளை உதிா்த்து தழும்புகளை உண்டாக்கி விடுவதால் அடி முதல் நுனி வரை சொரசொரப்பான மேடு பள்ளங்களை கொண்டிருக்கும். இது சுமாா் பத்து மீட்டா் வரை வளரும்.பப்பாளி மரம் இருபது ஆண்டுகள் வரை உயிா் வாழும். பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது .இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும். கனி டியு பப்பாளி வகையானது விதைகளற்றதால் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. பிரண்டை பிரண்டை அல்லது வச்சிரவல்லி ("Cissus quadrangularis") மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு. பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறுது. நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும். பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது. " கண்ணிப்பிள்ளைச்செடிகள் சிலவற்றோடு பிரண்டைக்கொடியின் சில துண்டுகளும் " நட்டு வைப்பது மரபாகத் தொடர்ந்து வருகிறது. புதினா புதினா ("Mentha spicata") ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பேரரத்தை பேரரத்தை ("Alpinia galanga") மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது. சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி. பொடுதலை பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம் பூற்சாதம் ("Phyla nodiflora") என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது. "பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி" என்பது பழமொழி. மஞ்சள் மஞ்சள் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: மருதோன்றி மருதோன்றி (மருதாணி, "Lawsonia inermis") ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய சிறு மரம் அல்லது புதர் ஆகும். இதற்கு அழவணம், மருதாணி, மருதோன்றி ஆகிய பெயர்கள் உண்டு. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் (ஐ-அழகு) என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் (ஐ-கபம்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் (சரணம்-பாதம்) என்ற பெயரும் உள்ளது. இத்தாவரம் ஒரு சிறு மர வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும். இதன் இலைகள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்குள் இருக்கும். அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம், வெளிர்பச்சையாகவும், முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும். இதன் மணமுடைய மலர்கள், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். மல்லிகை "இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை (சஞ்சிகை) பக்கத்துக்குச் செல்லுங்கள்." மல்லிகை ("Jasminum sambac") ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும். தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு "மல்லிகை". தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது. "ஜாஸ்மினம்" என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் "யாஸ்மின்" என, அதாவது "கடவுளின் பரிசு" எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம். இதில் பின்வரும் இனங்கள் அடங்கும்: வணிக ரீதியாக மலர்களுக்காகப் பரவலாகப் பயிரிடப்படும் மல்லிகையை வீட்டுத்தோட்டத்தில் பூசைக்காகவும் பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும் வளர்க்கப்படுகிறது. சீனாவில் ஜாஸ்மின் தேநீரைப் பருகுகின்றனர். அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் (茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா) என்றழைக்கிறார்கள். "ஜாஸ்மினம் சாம்பாக்" மலர்களும் மல்லிகைத் தேநீர் உருவாக்கப் பயன்படுகின்றன. இது பெரும்பாலும், பச்சைத் தேநீர் என்பதன் அடிப்படையில் அமைந்தது. ஆனால், சில நேரங்களில் ஓலாங்க் அடிப்படையும் பயன்படுகிறது. வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களில் மலர்கள் மற்றும் தேயிலை ஆகியவை "இணைவுறுத்தப்படுகின்றன". மல்லிகை மலரின் வாசம் மற்றும் நறுமணம் ஆகியவற்றை உட்கிரகிப்பதற்குத் தேயிலைக்கு நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். மிக உயர் தரங்களுக்கு இந்த செய்முறையானது ஏழு முறைகள் வரையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும். காரணம், மலர்களின் உள்ளார்ந்த ஈரப்பசையை தேயிலை உட்கிரகித்து விட்டால், அது கெடாதிருக்க அதனை மறுதீயிட வேண்டும். பயனபட்டு விட்ட மலர்களை இறுதிப் பொருளிலிருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் விடலாம். காரணம் இந்த மலர்கள் முழுதும் வறண்டு வாசமற்றே இருக்கும். அடர்த்தி மிகுதியான தேயிலைகளிலிருந்து இதழ்களை ஊதி நீக்குவதற்கு ராட்சசக் காற்றாடிகள் பயன்படுகின்றன. தேயிலையில் இவை இருந்தாலும் பார்வைக்கு அதன் அழகைக் கூட்டுவதைத் தவிர, தேயிலையின் தரத்திற்கு எந்த விதமான சுட்டிக்காட்டலையும் வழங்குவதில்லை. ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக் கூழ் புகழ் பெற்றது. பெரும்பாலும், மல்லிகை மலர்ச் சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக் கூழ் சிறு ரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது. மல்லிகைச் சார எண்ணை பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணைக்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணையில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச் சார எண்ணை தயாரிக்கும் நாடுகளில் சில இந்தியா, எகிப்து, சீனா மற்றும் மொரோக்கோ ஆகியவை. இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல் மற்றும் சிகேடோல் ஆகியவற்றை உள்ளடக்கும். மல்லிகையின் பல இனங்கள் ஒரு தனிமானியையும் நல்குகின்றன. இது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உருவாக்கப் பயன்படுகிறது. பின்வரும் நாடுகளில் மல்லிகை தேசிய மலர் என விளங்குகிறது. சிரியா நாட்டில் இது டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலராகும். இந்த நகரே மல்லிகை நகர் என அழைக்கப்படுகிறது. "ஜே.ஃபிளூமினென்ஸ்" , ஹவாய் நாட்டில் ஒரு ஊடுருவி இனம் என்பதாக உள்ளது. இங்கு இது சில நேரங்களில், அவ்வளவாகத் துல்லியமற்றதான, "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. "ஜே.டிகோட்டம்" என்பது ஃபுளோரிடாவிலும் ஊடுருவியுள்ளது. தாய்லாந்து நாட்டில், மல்லிகை மலர்கள் அன்னை என்னும் கருத்துருவின் சின்னமாகப் பயன்படுகின்றன. ஜப்பான் நாட்டின் ஓகினாவாவில், மல்லிகைத் தேநீர் சன்பின் ச்சா (さんぴん茶) எனப்படுகிறது. ""மோத்தி" " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் ""முக்தா" " அல்லது ""முக்தாமணி" " அல்லது ""மௌடிகா" " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு). இந்தி மொழியில் இது முத்து எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் ""மோத்தியா" " என்னும் பெயர் பெற்றது. வங்காள மொழியில் ""ஜூயி" " தெலுங்கு மொழியில் ""மல்லே" " மிளகு மிளகு ("பைப்பர் நிக்ரம்" "Piper nigrum") என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இடைக்காலத்தில் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விளைந்த மிளகு உலகமெங்கும் சந்தை படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும், இந்தோனேசியா, மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு சீனாவிலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், ஐரோப்பாவின் மிளகு வணிகம் இந்தியாவை நம்பியே இருந்தது. இந்தியாவில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது. ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவிற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது. மிளகை பண்டைய காலத்தில், இலத்தீன் மொழியில் "பைப்பர்" என்று குறிப்பிட்டனர்.பழம்பெரும் நாகரிகமான எகிப்து நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், பிரமிடுகளில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்த்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்த்தின் அரசனான இரண்டாம் ராம்சிஸ் இறப்பின்போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு இந்தியாவிலிருந்து எகிப்து வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை. பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, அரபிக்கடலின் கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு வாணிகம் குறைந்த அளவிலே நடைபெற்றது. கி.மு. 30 இல், எகிப்து ரோமப் பேரரசின் பகுதியானபின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து அரபிக் கடலின் வழியே ஐரோப்பாவுக்கு முறையான வணிகக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. ரோமப் பேரரசின் வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் கப்பல்கள் இந்தியாவுக்கு பருவக்காற்று காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட [[நறுமணப் பொருள்களும், [[முத்து]], [[வைரம்]] போன்ற கற்களும், [[மத்திய ஆசியா]]வில் உள்ள [[செங்கடல்]] வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, [[நைல்]] ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, [[மத்தியதரைக் கடல்]] வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் [[கப்பல்]] மூலமாக [[ரோம்]] நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது. [[படிமம்:Piper nigrum drawing 1832.jpg|left|thumb|200px|மிளகுக் கொடி ஓவியம்]] சுமார் நான்கு [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் [[மரம்]], தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இத்தாவரத்தின் [[இலை]]கள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் சிறிய [[மலர்]]கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள [[ஊசி]]யைப் போன்ற தோற்றமுடைய [[மலர்]]க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிளகாகச் சுண்டி சிறுத்துவிடும். இதுவே மிளகாகும். மிளகு விளைச்சலுக்கு நீண்ட மழைபொழிவு, சீராண உயர் வெப்பம் மறும் பகுதி நிழல் ஆகியவை தேவை மிளகு [[இந்தியா]]வில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து [[ஐரோப்பா]], [[சீனா]], மத்திய கிழக்கு நாடுகள், [[வட ஆப்பிரிக்கா]] மிளகு பயிரிடும் முறை பரவியது. 16ம் நூற்றாண்டில் [[ஜாவா]], [[சுமத்திரா]], [[மடகாஸ்கர்]] மற்றும் [[மலேசியா]]வுக்குப் பரவியது. மிளகுக் கொடி மிதமான ஈரப்பதமிக்க, வளமான [[மண்]]ணில் நன்கு வளரக்கூடியது. 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டங்களாக இக்கொடியின் தண்டுப் பகுதியை, வெட்டி நடுவதின் மூலம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக மரங்களின் அருகாமையில் வளர்க்கப்படும் இக்கொடி அம்மரங்களைப் பற்றி வளரும் வண்ணம் மரபட்டைகள் நிறைந்த மரங்களுடன் வளர்க்கப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகள் இத்தாவரம் மிகுந்த கவனிப்புடன் வளர்க்கப்படுகிறது. நான்காம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டு வரை இக்கொடி பூத்து காய்க்கிறது. ஒவ்வொரு காம்பிலும் சுமார் 20 முதல் 30 பழங்கள் காணப்படுகின்றன. ஒரு காம்பில் உள்ள சில காய்கள் [[சிவப்பு]] நிறமாகிப் பழுத்தவுடன், காம்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. பின் வெயிலில் காய வைக்கப்பட்டு, காய்ந்தவுடன், காம்புகளில் இருந்து பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. வால்மிளகு(Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர். இதன் மணத்திற்காக சமையலில் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படுகிறது. [[படிமம்:Dried Peppercorns.jpg|left|thumb|200px|கருமிளகு மற்றும் வெண்மிளகு வகைகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படுகின்றன]] பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, [[பூஞ்சை]]களின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான [[சூரியன்|சூரிய ஒளி]]யும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. [[படிமம்:pepper091.jpg|thumb|150px|right|பச்சை மிளகு காய்கள்]] [[படிமம்:TVM Pepper.JPG|thumb|left| இந்தியாவின் கேரளா பகுதியில் உள்ள ஒரு மிளகுக் கொடி. காய்களுடன்]] பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, [[கந்தக டை ஆக்சைடு]]டன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. [[வினிகர்|வினிகருடன்]] ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. [[ஆசியா|ஆசிய]] சமையல் முறைகளில் ஒன்றான, [[தாய்லாந்து]] நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. . உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை. [[படிமம்:4 color mix of peppercorns.jpg|right|thumb|200px|கருப்பு, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெண் நிற மிளகு வகைகள்]] வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது. [[படிமம்:Spilled Pepper.jpg|left|thumb|200px|பொடியாக்கப்பட்ட மிளகு, உணவு மேசைகளில் காணப்படும் முக்கிய சுவைப்பொருளாகும்]] தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான [[பொங்கல்]], மிளகு ரசம், மிளகுக் [[கோழி]] வருவல், [[முட்டை]] வருவல், [[உருளைக்கிழங்கு]] பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான [[செட்டிநாடு]] [[சமையல்|சமையலில்]] மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான [[மிளகாய்]], மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், மிளகை "பெப்பர்" என்றும், மிளகாயைச் "சில்லி பெப்பர்" என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர். மிளகு ரகங்கள் அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் அறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகைகளாக அறியப்படுவன : [[மலபார்]] மிளகு மற்றும் [[தாலச்சேரி]] மிளகு. இதில் தாலச்சேரி மிளகு உயர்தரமாக மதிக்கப்படுகிறது. [[மலேசியா]] நாட்டின் [[சரவாக்]] மிளகு , [[போர்ணியோ]]த் தீவிலும், [[இந்தோனேசியா]] நாட்டின் [[லம்பூங்]] மிளகு [[சுமத்திரா]]த் தீவுகளிலும் விளைகிறது. 2002 ஆம் ஆண்டில், மிளகு, உலக தாளிப்புப் பொருள் வாணிபத்தில் சுமார் 20 விழுக்காட்டினைப் பெற்றது. மிளகின் விலை உலகச் சந்தையில் உற்பத்திக்கேற்ப வெகுவாக மாறக்கூடியது. சர்வதேச மிளகுச் சந்தை [[கொச்சி]] நகரில் அமைந்துள்ளது. தற்காலத்தில், [[வியட்நாம்]] நாடு உலக மிளகு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. வியட்நாமிலிருந்து, 2003 ஆம் ஆண்டில், சுமார் 82,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. வியட்நாமை அடுத்து, [[இந்தோனேசியா]] (67,000 டன்), [[இந்தியா]] (65,000 டன்), [[பிரேசில்]] (35,000 டன்), [[மலேசியா]] (22,000 டன்), [[இலங்கை]] (12,750 டன்), [[தாய்லாந்து]], [[சீனா]] ஆகிய நாடுகளும் மிளகு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. [[பகுப்பு:மூலிகைகள்]] [[பகுப்பு:சுவைப்பொருட்கள்]] [[பகுப்பு:மூவடுக்கிதழிகள்]] [[பகுப்பு:கொட்டைகள்]] முடக்கொத்தான் முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் ("Cardiospermum halicacabum") என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் ஏராளமாக காணப்படும் உயரப் படரும் ஏறுகொடி ஆகும். இதன் பிளவுபட்ட இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் அழைப்பதுண்டு. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன மருத்துவப் பயன்பாடுடையவை. இவை  பெரும்பாலும் சாலையோரங்களிலும், ஆறொரங்களிலும் பரவலாக களைபோல வளர்ந்து இருப்பதைக் கணலாம். அது ஆன்டிடிராரிஹோலை மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றில் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை என்ற பெயரில் செய்வார்கள். பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது. ` மூக்கிரட்டை மூக்கிரட்டை ("Boerhavia diffusa") ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆஸ்துமா குணமாக, சிறுநீர் நன்கு பிரிய உதவுகிறது. முக்கிரட்டைக் கீரையை சுத்தமாகக் கழுவி எடுத்து மை போல அரைத்து, பெரிய நெல்லிக்காயளவு எடுத்து, கால் ஆழாக்கு கருங்குறுவை அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவை ஒரு அடையாகத் தடி வாணலியில் தாராளமாக நெய்விட்டு அதி அடையை வேக வைத்து வேளைக்கு ஒரு அடைவீதம் காலையும் மாலையும் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் எனப்படுகிறது. இம்மருந்து சாப்பிடும்போது காரம், மீன், கருவாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வல்லாரை வல்லாரை ("Centella asiatica") அல்லது சரஸ்வதி கீரை ("Asiatic pennywort", "Indian pennywort") ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் "வல்லாரை" எனப்பெயர் பெற்றது. "சரசுவதிக் கீரை" யென்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது. வாதநாராயணி வாதநாராயணி ("Delonix elata") மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். இது இரண்டரை முதல் 15 மீற்றர் உயரம் வளர்கிறது. பொதுவாக இது எல்லா இடங்களிலும் வளரும். இது பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் நிறைய காணப்படும். செம்மண் நிலத்தில் இதனை நிறையக் காணலாம். 20 முதல் 30 அடி வரை வளரும். இது பூவரசு, தேக்கு போல வலிமையான மரம் இல்லை. முருங்கைமரம் போல வலிமை இல்லாத மரம். இது விதை மூலமும், கிளை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி நட்டாலே வளரக்கூடியது. தண்ணீர் அதிகம் தேவை இல்லை. அதிக நிழல் தராது. இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். வாத நாராயண மரம் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். வெற்றிலை வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம். நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள். வேம்பு வேம்பு அல்லது வேப்பை ("Azadirachta indica", "Neem") இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது. 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது. மின் விலாங்குமீன் மின் விலாங்கு மீன் ("Electric eel") தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். விலாங்கு என்று பெயர் இருப்பினும் இது விலாங்கு மீன் அல்ல; மாறாக இது ஒரு கத்திமீனாகும். மின் விலாங்கு மீன், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது. மின்னழுத்தம் உச்சமாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். இம்மீன், தென் அமெரிக்க நீர்நிலைப் பகுதிகளில் காணப்படும் முக்கிய கொன்றுண்ணி ஆகும். இது அமேசான் மற்றும் ஓரினோகோ (Orinoco) ஆற்றுப் படுகைகளிலும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோகிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களை பொதுவாக காணலாம். அமேசான் மற்றும் ஒரினோகோ ஆகிய நன்னீர் ஆற்றுப் படுகைகளில் மின் விலாங்கு மீன்கள் வாழ்கின்றன. மேலும் வெள்ளம், சதுப்பு நிலம், சிற்றோடைகள், சிற்றாறுகள் மற்றும் கடலோர சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேற்றின் அடிப்பகுதியில் உள்ள கலக்கமற்ற அல்லது தேங்கிய நீரில் வாழ்கின்றன. மின் விலாங்கு மீன்கள் முதுகெலும்பற்ற உயிரிகளை உண்டு வாழ்பவையாக இருப்பினும் அவற்றில் வயது முதிர்ந்த விலாங்குகள், சிறு மீன்கள் மற்றும் எலி போன்ற பாலூட்டிகளையும் உண்ணும். இளம் மின் விலாங்குகள் முதுகெலும்பற்ற இறால் மற்றும் நண்டுகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. மின் விலாங்கு மீன்கள் வினோதமான இனபெபருக்க முறையைக் கொண்டுள்ளன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக் கொண்டு ஒரு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3000 மீன் குஞ்சுகள் வரை பொரிகின்றன. பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளர்கின்றன.ref> ஏப்ரல் 2005