பொன்னம்பலம் அருணாசலம் பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 – சனவரி 9, 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு நகரில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள். இவரது தாய் மாமனாரான சேர். முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பில் கொழும்பிலேயே வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இங்கு கல்வி கற்றபோது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார். இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். அவரும் மானிப்பாயைச் சேர்ந்தவர். எட்டு பிள்ளைகள்: பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் ஆகிய ஆண்பிள்ளைகள், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகவும் 1875 ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913 ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். இவ்வனுபவம் காரணமாக மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் சந்தர்ப்பமும் இவருக்குக் கிடைத்தது. இவ் அனுபவத்தைப் பயன்படுத்தி சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதினார். மாவட்ட நீதிபதி பதவி வகித்த காலத்தில்தான் அப்போது தேசாதிபதியாக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இவரைப் பதிவாளர் நாயகமாக (1888–1902) நியமித்தார். பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இப்பதவியை வகித்த காலத்திலேயே சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகவும் விளங்கினார். 1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இவரது அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பங்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினர். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அருணாசலம் அரசியலில் நுழைந்தார். சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் உறுப்பினராக இருந்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய (தன்னாட்சி) உணர்வால் உந்தப்பெற்றார். தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915 ஜனவரி 29 ஆம் திகதி சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கினார். அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1915 ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தினார். தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பரிலும், 1918 டிசம்பரிலும் இரு மாநாடுகளை ஒழுங்கு செய்தார். 1919 ஜூன் 25 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் சேமாவிருத்திச் சங்கத்தை உருவாக்கினார். இதன் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரி. சுந்தரமும் பதவியேற்றனர். இச்சங்கம் 1920 இல் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது. 1921 ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் பிரதிநிதிகளைக் தெரிவு செய்யும் முறை இனவிகிதாசாரப் படி இருக்கவேண்டுமென்பதாலும், கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ், நு. து. சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், சிங்களவர் தங்களைத் தெரிவு செய்யமாட்டாரகள் என்பதனைப்புரிந்து கொண்டு இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். 1921 ஆகத்தில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். தமிழர் அடையாள அரசியலில் அருணாசலத்தின் ஆளுமையை முழுமையாகப் பெற முடியவில்லை. அதற்கு முன்னரே அவர் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி தனது 71 ஆவது வயதில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயப் பிரதேசத்தில் காலமானார். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன் அருணாசலம் மகாதேவா பிற்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக விளங்கினார். அருணாசலம் கேட்ட கொழும்புத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் மகாதேவாவிற்கே கிடைத்திருந்தது. டொனமூர் அரசாங்க காலத்தில் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராகப் போட்டியிட்டு அவரிடம் தோல்வியடைந்தார். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் (தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்துவைக்கப்பட்டது. இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரி சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயரும் சூட்டப்பட்டது. இவை தவிர திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். வெண்ணெய் வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலேடு ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் கொழுப்பும் அதைச் சுற்றி சில நீர்த் துளிகளும் மற்றும் பால் புரதப் பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற பாலூட்டிகளான வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை மற்றும் காட்டெருமை ஆகியவற்றின் பாலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. குளிர் சாதனப் பெட்டியில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி நெய்யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு. பொதுவாக வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு. உப்பு, வாசனைப் பொருட்கள் மற்றும் காப்புப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து வெண்ணெயை விற்பர். தாங்குதளம் தாங்குதளம் என்பது சிற்பநூல் விதிகளின்படி அமைக்கப்படுகின்ற இந்தியாவின் மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் கட்டிடங்களின் உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற்காலங்களில் உபபீடம் எனப்படும் இன்னொரு உறுப்பு தாங்குதளத்தின் கீழ் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. சிற்பநூல்களில் உபபீடங்கள் பற்றி விபரிக்கப்பட்டிருப்பினும் கட்டிடங்களின் அடித்தளமாகக் கருதப்படுவது தாங்குதளமே. சிற்பநூல்கள் இதனை வடமொழியில் பொதுவாக "அதிஷ்டானம்" எனக் குறிப்பிட்டாலும், இந்நூல்களில் தாங்குதளத்துக்குப் பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. மயமதம், கசியப சிற்பசாஸ்திரம் ஆகிய நூல்களில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை உட்படப் பல பெயர்கள் காணப்படுகின்றன. தாங்குதளங்கள் ஒன்றின்மேலொன்றாக வரிவரியாக அல்லது பல படைகளாக அமைகின்ற துணையுறுப்புக்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன. இத் துணையுறுப்புக்களில், உபானம், ஜகதி, குமுதம், கும்பம், பத்மம், கம்பம், கண்டம், பட்டிகை, வாஜனம், கபோதம், பிரதி என்பன அடங்குகின்றன. இத் துணை உறுப்புக்கள், பல்வேறு வடிவவியல் வடிவங்களிலான வெட்டுமுகங்களுடன் பிதுக்கங்களாகவோ அல்லது உள்ளடங்கியோ ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு அடுக்கடுக்காக அமைகின்றன. இத் துணை உறுப்புக்களின் பயன்பாடு, இட அமைவு, உருவ ஒற்றுமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக, குமுதம், பத்மம் ஆகிய பெயர்கள் முறையே குமுத மலர், தாமரை மலர் ஆகிய மலர்களின் வடிவங்களையொத்த வெட்டுமுகத் தோற்றத்தைக் கொண்டிருப்பதனால் ஏற்பட்டவை. தாங்குதளங்களில் அடங்கியுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து, தாங்குதளங்கள் வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை மேலும் பல துணை வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. சிற்பநூல்கள் கூறும் மூன்று வகையான தாங்குதளங்கள் பின்வருமாறு: இவற்றின் வேறுபாடுகளாக மயமதம் 14 துணை வகைகளையும், காசியப சிற்பசாஸ்திரம் 22 துணை வகைகளையும் குறிப்பிடுகின்றன. மார்க்சியம் மார்க்சியம் ("Marxism", மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வருக்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்ட்த்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும். மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது. மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் [வரலாற்றுப் பொருள்முதல் வாதம்]] என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார். மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்; அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும்,அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர்.இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மார்க்சியப் பகுப்பாய்வு சமூகப் பொருள் தேவைகளைச் சந்திக்கும் பொருளாயத நிலைலைகளையும் பொருளியல் நடவடிக்கைகளையும் ஆய்வதில் இருந்து தொடங்குகிறது. பொருளியல் ஒருங்கமைப்பு அல்லது பொருளாக்க உறவுகள் நேரடியாக மற்ற சமூக உறவுகளையும், அரசியல்,சட்ட அமைப்புகள், அறநெறிமுறைகள், கருத்தியல் போன்ற அனைத்து சமூக உணர்வுகளையும் உருவாக்குகிறது அல்லது தாக்கம் செலுத்துகிறது எனக் கொள்கிறது. பொருளியல் அமைப்பும் சமூக உறவுகளும் சமுகத்தின் அடித்தளமாக அமைகின்றன. சமூகத்தின் பொருளாக்க விசைகள் வளரும்போது அதாவது குறிப்பாகத் தொழில்நுட்பம் வளரும்போது நிலவும் சமூகப் பொருளாக்க வடிவங்கள் திறமற்றுப் போகின்றன. அதனால் அடுத்துவரும் சமூக முன்னேற்ரத்தை அவை தடுக்கின்றன. காரல் மார்க்சு கூறுகிறார்: "At a certain stage of development, the material productive forces of society come into conflict with the existing relations of production or – this merely expresses the same thing in legal terms – with the property relations within the framework of which they have operated hitherto. From forms of development of the productive forces these relations turn into their fetters. Then begins an era of social revolution"." இந்தப் பொருளியல் விசைகளுக்கும் பொருளியல் உறவுகளுக்கும் இடையில் எழும் முரண்பாடுகள் வருக்கப் போராட்ட வடிவத்தில் சமூக உறவுகளின் முரண்பாடாக முகிழ்க்கிறது. முதலாளியப் பொருளாக்க முறைமையின் கீழ், இப்போராட்டம் பொருளாக்க அமைப்பை தம்முரிமையில் வைத்திருக்கும் சிறுபான்மை முதலாளிகளுக்கும் பொருள்களையும் சேவைகளையும் உருவாக்கும் பெரும்பான்மை பாட்டாளிகளுக்கும் இடையில் தோன்றுகிறது.இவ்வாறு சமூக மாற்றம், தம்முள் முரண்பட்ட சமூக வகுப்புகளுக்கிடையில் எழும் வருக்கப் போராட்டத்தால் உருவாகிறதெனவும் முதலாளியம் பாட்டாளிகளைச் சுரண்டி அடக்குகிறதெனவும் இதனால் பாட்டாளி வருக்கப் புரட்சி உருவாகிறதெனவும் என மார்க்சியர்கள் கூறுகின்றனர். மார்க்சியத்தின்படி உலக மக்கள் அவர்கள் செய்யும் வேலைகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக வர்க்கங்களாக பிரிக்கப்படுகின்றனர். முதலாளிகளின் எதிரி பாட்டாளிகள் = பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மை பண்ணைகளில் ஊதியத்திற்காக வேலை புரிவதால் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" (அல்லது "பாட்டாளி வர்க்கம்") எனப்படுகின்றனர். பாட்டாளி வர்க்கத்தினரை விட சிறுபான்மையினரான மற்றொரு பிரிவினர் "முதலாளி வர்க்கம்" (அல்லது "பூர்சுவாக்கள்") எனப்படுகின்றனர். இவர்கள் தொழிற்சாலைகள், நிலம், மற்றும் தொழிலாளர்கள் பணி புரியும் கட்டிடங்களுக்கு உரிமையாளர்கள். தவிரவும் பணியாளர்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளும் இவர்களுக்கு உரிமையானது. பாட்டாளிகளின் வேலைத்திறனால் பிழைப்பதால் மார்க்சு இவர்களை "ஆளும் வர்க்கத்தினர்" என்கின்றார். தவிரவும் ஆளும் வர்க்கத்தினர் அரசாங்கம், படைத்துறை, மற்றும் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகின்றனர். மார்க்சியப் பார்வைகளில், மூலதனம் "உற்பத்திக்கான வழிமுறை" ஆகும்; முதலாளிகள் பணத்தை பல வணிக முயற்சிகளில் முதலீடு செய்து, "இலாபம்" அடைந்து தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் முதலாளிகளின் அல்லது "பெடிட்-பூர்சுவா"க்களின் (சிறு வணிக உரிமையாளர்கள்) நிறுவனங்களில் பணி புரிகின்றனர். முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மாற்றாக கூலி தருகின்றனர். முதலாளி தொழிலாளியின் நேரத்தை வாங்கியுள்ளதால் அந்த நேரத்தை முதலாளிக்கு வேலை செய்வதில் செலவிட வேண்டியுள்ளது. மார்க்சிய கருத்துக்களின்படி, விளைபொருள் ஒன்றிலிருந்து கூடுதல் பணம் பெற முதலாளிக்கு இதுவே ஒரே வழி. முதலாளிகள் தொழிலாளியின் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவாக சுரண்டுகின்றனர். முதலாளிக்கு பணியாளர் தயாரித்த பொருளுக்கு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. இந்த விலையை விட பணியாளரின் வேலைநேரத்திற்கு குறைவாக விலை கொடுப்பதால் முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்றனர். இவ்விதமாக தொழிலாளியின் வேலைத்திறனை சுரண்டுகின்றனர்: தொழிலாளர் சுரண்டப்படுவதால் சிறுபான்மை வர்க்கத்தினரான முதலாளிகள் வேலை செய்யாமலே வாழ முடிகின்றது எனவும் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கம் முதலாளிகள் வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியுள்ளது எனவும் மார்க்சு கருதினார். மார்க்சியத்தின்படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு அவுரிநெல்லி புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு விளைகின்றது.எவரேனும் ஒருநாளை செலவழித்து அவுருநெல்லிகளைப் பறிக்கின்றனர். பறிக்கப்பட்ட அவுரிநெல்லிகளைத் தான் விற்கவும் உண்ணவும் முடியும். மார்க்சியக் கருதுகோளின்படி முதலாளிகளும் தொழிலாளிகளும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் "நியாயவாத பொருண்மியம்" என்கின்றனர். இதனிலிருந்தே மனித வரலாறு பல்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையேயான பிணக்குகளின் வரலாறு என்ற கருத்து எழுந்துள்ளது. வெவ்வேறு முடிவுடைய வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையே விவாதங்களும் சண்டைகளும் மூளுகின்றன. சமூக மாற்றமே இதன் தீர்வு. முதலாளித்துவம் தொழிலாளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டும் எனவும் அவர்களது கூலியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் எனவும் மார்க்சியம் கூறுகின்றது. தங்களுக்கு கிடைக்கும் இலாபம் கூட வேண்டும் என்பதற்காகவும் இலாபத்தை விரைவாக அடைய வேண்டும் என்பதற்காகவும் முதலாளிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் கூலிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது; "சுரண்டல் வீதத்தை" குறைத்து தங்கள் வாழ்க்கை அமைதியாகச் செல்லப் போராடுகின்றனர். இதனையே மார்க்சியம் "வர்க்கப் போராட்டம்" என்கின்றது: தொழிலாளர்களும் அவர்களது மேலாளர்களும் தங்கள் தன்னலம் காக்க தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர். மார்க்சியவாதிகள் அனைத்து எழுதப்பட்ட வரலாறும் பொருளியல் வர்க்கத்தினரால் பிரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். காட்டாக நில மானிய முறைமை (நடுக்கால சமூகம் நிலக்கிழார்களாலும் உயர்குடியாளர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்தினரின் செல்வமும் அதிகாரமும் விவசாயிகளின் தொழிலால் விளைந்தவை. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் மேலும் மேலும் உயர்ந்ததால் சிறு வணிகர்களும் அங்காடிகளும் தோன்றலாயின. இவர்கள் தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துக் கொண்டு பணியாளர்களை அமர்த்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த தொழிலாளர்கள் இப்பணிகளால் செழிக்கத் தொடங்கினர். இவையே முதலாளித்துவம் உருவானதற்கான வரலாறாகும். இதேமுறையில், வர்க்கப் போராட்டத்திலிருந்து பொதுவுடைமை (அல்லது சமூகவுடைமை) உருவாகும் என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். இருப்பினும் தொழிலாளர் போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடித்தால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவுடமை தோன்றும் எனக் கருதிகின்றனர். மிலன் மிலன் இத்தாலியின் வட பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். மிலனோ மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே ஆகும். ரோம் நகரத்திற்கு அடுத்து இத்தாலியின் மக்கள்தொகை மிகுந்த நகரம் மிலன் ஆகும். அல்பேனியா அல்பேனியா ("Albania", ; அதிகாரபூர்வமாக அல்பேனியக் குடியரசு ("Republic of Albania") என்பது ஐரோப்பாவின் தென்க்ழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும். அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது. குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொனாக்கோ மொனாக்கோ ("Monaco") என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்) ஆகும், 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட குடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் என்பவராவார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது. சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பரவலாக பிரெஞ்சு மொழியே பேசப்படுகிறது. மொனோக்கொவின் பெயர் கி.மு 6ம் நூற்றாண்டில் போகயா பண்டைக் கிரேக்கத்தில் இருந்து வந்தது. லிகுரியான்களால் மொனிக்கொஸ் எனக் குறிப்பிடப்படுகிறது, கிரேக்க மொழியில் "μόνοικος", "single house", from "μόνος" ("monos") "alone, single". + "οἶκος" ("oikos") "house", மற்ற வகையில் மக்கள் உணர்ச்சிகள் ஒரு வாழ்விடம் அல்லது ஒரு பகுதியில் வாழ்தல் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார். இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் "மாளிகை" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. புணர்ச்சிப் பரவசநிலை புணர்ச்சிப் பரவசநிலை ("Orgasm") அல்லது பாலின்ப உச்சி ("sexual climax") என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் ("psychology"), மற்றும் மெய்ப்பாடு ("emotion") நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் ("spasms") ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன. ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு ("euphoria"), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான ("rhythmic") இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் ("prostate"), சிறுநீர்வழி ("urethra"), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் ("semen") ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு ("peristalsis") முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு ("refractory period") உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம். பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, "vagina") சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் ("clitoris") மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் ("clitoral hood") சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் ("labia minora") இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை ("uterus") தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் ("pelvic muscles") ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும். தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் தமிழ் நாட்டின் நலன்களை பேண, வளர்ச்சிக்கு உதவ 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற, அறநோக்குள்ள நிறுவனம் தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation) ஆகும். கல்வி, சுகாதாரம், ஆபத்து உதவிகள், தொழில் நுட்பம் என்று பல முனைகளில் பல செயல் திட்டங்கள் ஊடாக இந்நிறுவனம் உதவி புரிந்து வருகின்றது. தமிழ்நாடு அறக்கட்டளையின் 32வது ஆண்டுக் கூட்டம் மே 27, 28 ம் திகதிகளில் மிச்சிகனில் நடைபெற இருக்கின்றது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் ("Human Development Index", HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும். 2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 76 ஆவது இடத்திலும், இந்தியா 130 ஆவது இடத்திலும் உள்ளன ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:[தாய்வான்]], லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது. சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது . 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது. சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும். மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத். வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்: வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை. ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பா ஓசியானியா கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது. சனசமூக நிலையம் கூடுதல், பகிர்தல், அறிதல், விளையாடுதல் என சமூக தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படும் ஒரு சமூக நிறுவனமே சனசமூக நிலையம் ஆகும். பொதுவாக சனசமூக நிலையங்கள் இலாப நோக்கமற்ற, சமய/சாதி சார்பற்ற, அரசியல்/கட்சி சார்பற்ற, சமூக சேவையை முன்னிறுத்தும் உள்ளூர் மயப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இவற்றை சமய சார் அமைப்புகள் (கோயில், தேவாலையம், மசூதி), வியாபார நிலையங்கள், தனியார் அமைப்புகளில் இருந்து வேறுபடுத்தி பார்க்கலாம். சனசமூக நிலையங்களை பின்வருமாறும் வரையறை செய்யலாம்: சனசமூக நிலையங்கள் இலங்கையில் பொதுவாக பல ஊர்களில் அமைந்திருக்கின்றன. வலை ஊர்தி வலை ஊர்தி அல்லது சிலந்தி (Web crawler) இணைய தேடுபொறிகளால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இணையத்தில் ஒரு பக்கம் பல பக்கங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வழியைப் பின்பற்றி சிலந்திகள் இணையத்தில் உலாவி தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றன. இந்த தகவல்கள் வரிசைப்படுத்தி சேமிக்கப்படும். பயனர் ஒரு சொல்லை உள்ளிட்டு தேடும்போது அதற்கு ஒப்பான முடிவுகள் காட்டப்படுகின்றன. தூண்டற்பேறு தூண்டற்பேறு ("Response") என்பது ஒரு தூண்டுகோளின் விளைவைக் குறிக்கும் சொல்லாகும். தொலைத்தொடர்பு விடையத்தில் குறிப்பலையினால் ("signal") ஒரு கருவியில் ஏற்படும் மாறுதலைக் குறிக்கும். பாளையக்காரர் போர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆதிக்கத்தை நிலை நாட்டிய ஆங்கிலேயர், பாளையக்காரர்களை நசுக்கியும், குடிமக்கள்மீது வரிச்சுமையை ஏற்றியும் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்தனர். இதன் பின்னணியில் ஏற்பட்ட மோதல்களே பாளையக்காரர் போர்கள். 1736 ஆம் ஆண்டில் கர்நாடகத்தை ஆண்டு வந்த நவாபான சந்தாசாகிபு, மதுரை நாயக்க அரசில் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டு, மதுரை நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் தமிழ்நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால் இப்பகுதிகளுள் அடங்கியிருந்த பாளையப்பட்டுகள் அனைத்தும் கர்நாடக நவாபின் மேலாண்மைக்குள் அடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னரையில் கர்நாடக, தஞ்சை அரசுகளுக்கு உதவியாளர்களாகவும், மத்தியஸ்தர்களாகவும் ஆங்கிலேயர் தமிழக அரசியலில் தலையிட்டு வந்தனர். மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த பாளையக்காரர்கள் தங்கள் நோக்கங்களுக்குத் தடையாக இருக்ககூடும் எனக் கருதியதால், அவர்களை அடிபணியச் செய்வதில் முனைப்புக்காட்டி வந்தனர். பலர் அடிபணிந்தாலும், வேறுசிலர் இம்முயற்சிகளுக்கு எதிர்ப்புக் காட்டியே வந்தனர். நெற்கட்டுச் செவல் பாளையக்காரன் புலித்தேவனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதெல்லாம் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயற்பட்டு வந்ததை வரலாறு காட்டுகின்றது. 1792 இல், தஞ்சை, கர்நாடக அரசுகளிடையே இருந்த பகைமையையும், கர்நாடக நவாபின் வலிமை இன்மையையும் பயன்படுத்திக்கொண்டு, கர்நாடக நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி தமிழ்நாட்டின் தென்பகுதி மீது ஆங்கியேயர் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேயர் பாளையக்காரர்களைப் பழிவாங்கினர். அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாளையங்களை ஒடுக்கினர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து ஆங்கிலேயரைத் துரத்துவதற்குச் சில பாளையக்காரர்கள் திட்டமிட்டனர். ஆங்கிலேயர் ஆட்சி மக்கள்மீதும் அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தங்களுடைய வணிக நோக்கங்களுக்காக, உள்நாட்டுத் தொழில்களை ஆங்கிலேயர் முடக்கினர் இதனால் மக்கள் வறுமையில் வாடினர். ஆனாலும் இதுபற்றிக் கவனியாது வரிகள் உயர்த்தப்பட்டு, ஈவிரக்கமற்ற முறையில் மக்களிடமிருந்து அவை வசூலிக்கப்பட்டன. இச்சூழ்நிலை ஆங்கிலேய எதிர்ப்புணர்வு கொண்ட பாளையக்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் சில கூட்டிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை, என்பனவாகும். சிட்னி முருகன் கோயில் சிட்னி முருகன் கோயில் ("Sydney Murugan Temple") அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது. சிட்னியில் முதன்முதலில் முருக வழிபாட்டைத் தொடங்கியவர் திரு சி. தணிகைஸ்கந்தகுமார். 1983ஆம் ஆண்டு முருகன் சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைத்து தமது இல்லத்திலும் பின்னர் ஸ்ட்ரத்பீல்ட் மகளிர் உயர்நிலைப் பாடசாலையிலும் வழிபாட்டை நடத்தினார். 1985ஆம் ஆண்டு "சிட்னி சைவமன்றம்" ஆர். வடிவேலு என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1990இல் வீதிப் போக்குவரத்து அதிகரசபையிடம் இருந்து மாய்சு ஹில் (Mays Hill) இல் ஒரு காணியைச் சைவமன்றம் வாங்கியது. 1994 ஒக்ரோபர் 9ஆம் நாள் கோயிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஏப்ரல் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகளுடன் முருகன் சிலை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1997இல் கோயிலின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகி 1999 யூன் 17ம் திகதி குடமுழுக்கு நடைபெற்றது. ஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருகன் ஆலயம். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு. அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன. சிட்னி முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத்துடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும். சிட்னி முருகன் கோயில் திருப்பணிகளுக்கு இந்து இளைஞர்கள் மெரும் பங்களிப்பு செய்து வருகிறார்கள். கோயில் துப்பரவாக்கல் முதல் வாகனம் காவுதல், தேர் இழுத்தல், நந்தவனம் பராமரித்தல், கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளுதல் போன்ற பல வழிகளில் தமது பங்களிப்பினை ஆற்றி வருகிறார்கள். அய் ஜிங் அய் ஜிங் (艾青, 1910 -1996) சீன இலக்கியவாதி ஆவார். இவர், சீனாவிலுள்ள ஜியாங் ஹைச்செங்கில், நிலக்கிழார் குடும்பமொன்றில் 1910ஆம் ஆண்டு பிறந்தார். இவரால், பெற்றோருக்குத் தீங்கு விளையுமென ஒரு சோதிடன் கூறியதால், வளர்க்கப்படுவதற்காகத் தொலைவிலுள்ள உழவர் குடும்பப் பெண்ணொருத்தியிடம் சேர்க்கப்பட்டார். 1929 இல் ஓவியம் கற்கப் பிரான்ஸ் சென்று சீனா திரும்பிய பின், 1932 இல் நாட்டுப்பற்று நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1936 இல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் "தயானெ" என்ற முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 1957-58களில் வலதுசாரிகளுக்கெதிரான இயக்கத்தின்போது "வலதுசாரி"யென முத்திரை குத்தப்பட்டு, இவரும் இவரது கவிதைகளும் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டன. 1978 இல் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும் பொதுவாழ்விலும் இலக்கியத் துறையிலும் தோன்றினார்; சீன எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமானார். விமல் திசநாயக்க விமல் திசநாயக்க இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர். சிங்களத்தில் கவிதைகள் எழுதுகிறார். "காலந்தவறிய மழை" (அகல் வஸ்ஸ), "ஒலிகளும் எதிரொலிகளும்" (றவ் பிலிறவ்) முதலிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சிங்கள இலக்கியம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஹவாயிலுள்ள 'கலாசாரத்திற்கும் தொடர்பாடலிற்குமான நிறுவனத்தில்' துணைப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். லாங்ஸ்ரன் ஹியூஸ் லாங்ஸ்ரன் ஹியூஸ் (லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ) அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். ஆங்கிலத்தில் எழுதியவர். 'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமடைந்தார். பெடரிக்கோ கார்சியா லோர்க்கா வெடரிக்கோ கார்சியா லோர்க்கா ("Federico García Lorca", ஜூன் 5, 1898 – ஆகஸ்ட் 19, 1936) ஸ்பெயினில் பிறந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும். "ஃபேர்னாடா அல்பாவின் வீடு", "இரத்தத் திருமணம்", "யேர்மா" முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார். அன்னா அக்மதோவா அன்னா அக்மதோவா 1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, 1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். 1912 இல் முதலாவது கவிதை நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; 1914 இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 - 40 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட 'இரங்கற்பா' நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். 'யுனெஸ்கோ' நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை 'அக்மதோவா ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார். கமலா தாஸ் கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர். அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச குடும்பத்தில் பிறந்த‌வராக இருந்தாலும், டிசம்பர் 11, 1999 இல் இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டு தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். மே 31, 2009 ல், தனது 75 வது வயதில் புனே மருத்துவமனையில் இறந்தார். வான் ரமோன் ஹிமெனெஸ் வான் ரமோன் ஹிமெனெஸ் (1881 - 1958) ஸ்பெயினிலுள்ள 'மொகியர்' என்ற நகரத்தில் பிறந்தவர். தனது பதினேழாவது வயதில் "மட்றிட் றிவியூ" இதழில் வெளியான கவிதைகள் மூலம் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றார். "தூரத்துப் பூங்கா" (1905), "சமீபத்தில் மணமான ஒரு கவிஞனின் நாட்குறிப்பு" (1917), 'பாதாளத்தில் ஒரு விலங்கு' முதலிய நூல்கள் புகழ் பெற்றவை. 1956இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இராபர்ட் புரொஸ்ட் இராபர்ட் புரொஸ்ட் ("Robert Frost", மார்ச் 26, 1874 – சனவரி 29, 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். முதல் நூலான "ஒரு சிறுவனின் தீர்மானம்" 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), "மலை இடைவெளி" (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 1963 இல் மரணமானார். ஆன் றணசிங்க ஆன் றணசிங்ஹ (அக்டோபர் 2, 1925 - திசம்பர் 17, 2016) செருமனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார். ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். "கவிதைகள்" (1971), "சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம்" (1972), "அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக" (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. றொபேட் கிறேவ்ஸ் றொபேட் கிறேவ்ஸ் (Robert Graves; தமிழக வழக்கு: ராபர்ட் கிரேவ்ஸ்; 24 ஜூலை 1895 – 7 டிசம்பர் 1985) 1895 இல் இலண்டனில் பிறந்த ஆங்கில கவிஞர் ஆவார். 'கவிதைகள்' (1953), 'படிகள்' (1958), 'திரட்டிய கவிதைகள்' (1959) முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். உமர்கய்யாமின் 'ருபையாத்' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1961இல் ஒக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் 'கவிதைப் பேராசிரியராகத்' தேர்ந்நெடுக்கப்பட்டார். கவிதக்களைத் தவிர பல வரலாற்று நாவல்களையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். கிரேவ்ஸ் 1985 இல் மரணமடைந்தார். பாதசுவர் சிற்பநூல்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு அமைய அமைக்கப்படுகின்ற இந்திய மரபுவழிக் கட்டிடங்களில் தாங்குதளத்துக்கு மேல் அமையும் உறுப்பு பாதசுவர் ஆகும். இதன் மேற்பகுதி, பிரஸ்தரம் எனச் சிற்ப சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்ற தளத்தின் கீழ் அமைகின்றது. இப்பகுதி கட்டிடத்தின் தன்மைக்கேற்ப சுவர்களாகவோ, தூண்களாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அமைந்திருக்கக் காணலாம். இவ்வுறுப்பு, பாதசுவர், கால், பாதம், ஸ்தம்பம், பித்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு. பாதசுவர், சுவராக அமையும் போதும் வெறுமையான மேற்பரப்பாக அமைவதில்லை. இது, அரைத்தூண்கள், கோட்டங்கள், பஞ்சரங்கள், தோரணங்கள் எனப் பல்வேறு துணை உறுப்புக்களைக் கொண்டு அழகூட்டப்படுகின்றது. பிற்காலக் கட்டிடங்களில் பாதசுவரில் அமையும் அரைத்தூண்கள் முதலியவை நேரடியாகத் தாங்குதளத்திலிருந்து ஆரம்பிக்காமல், தாங்குதளத்தின்மேல், பாதசுவரின் ஒரு பகுதியாக அமையும் வேதிகை எனப்படும் பகுதிக்கு மேல் அமைந்திருப்பதைக் காணலாம். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ("Tamils Rehabilitation Organisation") இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற நிவாரண நிறுவனமாகும். போர், இயற்கை அனர்த்தம்,ஆபத்து உதவிகள், மீள்கட்டுமானம், பொருளாதார வளர்ச்சி ஆகிய சேவைகளை இந்நிறுவனம் இலங்கையில் குறிப்பாக தமிழீழப் பகுதிகளில் வழங்கி வருகின்றது. 1984 ஆம் ஆண்டு தமிழகத்தில் ( இந்தியா)தமிழர்களால்,ஈழத்தமிழர்களால் உருவாக்கபப்ட்டது. தமிழர்களுக்காக உதவி வழங்கும் பன்னாட்டு கட்டமைப்பை கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இந் நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு கட்டமைப்பு அல்ல என்றும், தாம் அவர்களுடன் திட்டங்களில் சேர்ந்து பணியாற்றி மட்டுமே வருகின்றார்கள் என்று கூறி வரும் போதிலும், அமெரிக்கா, இலங்கை போன்ற சில நாடுகள் அக்கூற்றை முழுமையாக ஏற்க மறுக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளின் வழிநடத்தலுக்கு உட்பட்டே நடப்பதாக அமெரிக்க அறிக்கை ஒன்று சுட்டி காட்டியுள்ளது. 2002 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பணி புரிந்து வந்துள்ளது. 2005 இல் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியால் சுனாமி பேரழிவில் திறமையாக செயற்பட்டதற்காக அவாட் வழங்கப்பட்டது. இதே ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அமெரிக்க முன் நாள் அதிபர் ஆகியோரும் சுனாமி பேரனர்த்த செயற்பாட்டை பாராட்டினர். 2007 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கி கனக்கை முடக்கியது. இதே வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆதரவுடன் கிழக்கு மாகானத்தில் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் எழுவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புனர்வாழ்வுக்கழகம் கொழும்பு மேல் நீதிமன்ரத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 2008 இல் அனைத்துலக புனர்வாழ்வுக்கழக நிறைவேற்று அதிகாரி திரு. கே.பி.றெஜி அவர்களை குற்றவாளி என அறிவித்த சிறிலங்கா அரசு அவருக்கு பிடி விறாந்து பிறப்பித்தது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதி சமர் வரை புனர்வாழ்வுக்கழகம் வன்னி மக்களுக்கு இறுதிவரை சேவையாற்றியது. அதன் பின்னர் 40 இற்கு மேற்பட்ட புனர்வாழ்வுகழகத்தினர் கொல்லப்பட்டனர். போர் முடிந்த கையுடன் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரண்டைந்த புனர்வாழ்வுக்கழக தலைவர் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அனைத்துலக அளவில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்காக திரட்டிய நிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை ஐக்கிய அமெரிக்கா முடக்கியுள்ளது. இளங்கீரன் இளங்கீரன் ("சுபைர் இளங்கீரன்", 1927 - 12 செப்டம்பர் 1997) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். புதினம், சிறுகதை, நாடகம், இலக்கிய விமர்சனம், இலக்கியக் கட்டுரைகள் என்பவற்றில் மட்டுமல்லாமல் பத்திரிகையாளராகவும் சேவையாற்றியிருக்கிறார். ஏறத்தாழ இருபதுக்கு மேற்பட்ட புதின நூல்களை எழுதிச் சாதனை புரிந்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். மரகதம் என்ற இலக்கிய சஞ்சிகையை 1961 இல் தொடங்கி சில காலம் நடத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்தோடு அதில் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவர். சுபைர் இளங்கீரன் 1927 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். மலேசியாவில் "இனமணி" பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர் இலங்கையில் "தொழிலாளி", "ஜனவேகம்" ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சமூகப் பிரச்சினைகள் மதம் சார்ந்த கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தினகரன் பத்திரிகையில் இவர் தொடராக எழுதி வந்த "நீதியே நீ கேள்" தொடர் கதை வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டதோடு பின்னர் நூலாக வெளிவந்தது. இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பாகின. "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களும் அவற்றில் அடங்கும். பாரதி நூற்றாண்டை ஒட்டி இவர் எழுதித் தயாரித்த "மகாகவி பாரதி" நாடகம் 1982 டிசம்பரிலும், 1983 மார்ச்சிலும் கொழும்பில் மேடையேறியது. யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்துள்ள குளத்தடி பள்ளிவாசல் (சின்னப் பள்ளிவாசல்) சீர்திருத்த சபையின் செயலாளராகக் கடமையாற்றி பெரிய குளம், சின்னக்குளம் ஆகியவற்றைப் புனரமைத்தார். தெணியான் தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பிறப்பு: சனவரி 6, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் "நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி" என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். யாகூ! நிலப்படம் யாகூ! மேப்ஸ் யாகூ! வலையமைப்பின் ஓர் தேசப்படச் சேவையாகும். இதன் பிரதான போட்டியாளர்களாக கூகிள் மேப்ஸ் மற்றும் விளங்குகின்றன. பிரதான யாகூ! மேப்ஸ் இணையத்தளம் அமெரிக்கா கனடா நாடுகளில் வாகனங்களைச் செலுத்தும் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன. புதிய மேம்படுத்தப் பட்ட யாகூ! மேப்ஸ் பீட்டா இப்போது கிடைக்கின்றது. இது பல்வேறு பட்ட புதிய வசதிகளை அகன்றஅலை இணைபுள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றது. இது அடோப் (அடோபி) பிளாஷ் (முன்னைய மக்ரோமீடியா பிளாஷ்) எழுதப்பட்டுள்ளது. இதன் வசதிகளாவன. இதைவிட நிகழ்நிலைப் போக்குவரத்து நெரிசல்கள், முகவரிப்புத்தகம், தொலைபேசிக்கு அனுப்புதல் போன்றவசதிகளும் உண்டு யாகூ! மேப்ஸ் வீதிகள் மற்றும் வெக்டர் முறையிலான தரவுகளை நவ்ரெக், டெலிஅட்லஸ் மற்றும் பலபொதுவுடமையிலிருந்தே பெறுகின்றனர். வீதிகளின் விபரங்கள் அமெரிக்கா,கனடா, போட்டோறிக்கோ, விர்கின் ஐலண்ட், போன்ற இடங்களில் கிடைக்கின்றன. நாடுகளின் எல்லைகள், நகரங்கள், நீர்த்தேங்கள் போன்ற தகவல்கள் உலகின் ஏனைய பகுதிகளில் கிடைக்கின்றன. ஓரளவு தெளிவான செய்மதிப் புகைப்படம் முழு உலகிற்கும் கிடைக்கின்றது. அமெரிக்க மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரங்களில் 1-2 மீட்டர் துல்லியமாக காணக்க்கூடியதாகவுள்ளது. இதுபோன்ற அல்லது இதிலுள்ள சிலசேவைகளை வேறுபட்ட நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. பிங் மேப்ஸ் பிங் மேப்ஸ் ("Bing Maps") (முன்னதாக: வின்டோஸ் லைவ் லோக்கல், வின்டோஸ் லைவ் வரைபடங்கள், லைவ். சர்ச் வரைபடங்கள், மற்றும் எம்.எஸ்.என் விர்ச்சுவல் எர்த்) என்பது ஓர் இணைய தேசப்பட வழங்கியாகும். இது கூகிள் தேசப்படம், கூகிள் பூமி, யாகூ தேசப்படம் மற்றும் மேப் க்யுயெஸ்ட் போன்று தேசபடங்களை வழங்கும் ஓர் இணைய சேவையாகும். இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ்வின் ஓர் அங்கமாகும்.2005 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஆரம்பிக்கப் பட்ட வின்டோஸ் லைவ் லோக்கல் ("Windows Live Local") இச் சேவையானது MSN மெய்நிகர் பூமி வசதிகளைக் ("MSN Virtual Earth") கொண்டுள்ளது. புருண்டி புருண்டி ("Burundi", உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது. கூட்டு மதிநுட்பம் கூட்டு மதிநுட்பம் என்பது பல முக வரையறைகளைக் கொண்டது. மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டு மதிநுட்ப ஆய்வுப் பிரிவு கூட்டு மதிநுட்பத்தை பின்வருமாறு வரையறை செய்கிறது. கூட்டு என்றால் நபர்கள், கணினிகள், அமைப்புகள் எனப் பல்வேறு கூறுகள் சேர்ந்த ஒரு குழு. மதிநுட்பம் என்பது அந்தக் குழுவின் கூட்டுச் செயற்பாடுகள் உணர்தல், கற்றல், முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல் போன்ற பண்பியல்புகளைக் கொண்டிருத்தல் ஆகும். சமூகத்தின் பல செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தில்தான் தங்கி இருக்கின்றன. கட்டிடம் கட்டுவது, திரைப்படம் தயாரிப்பது, நாட்டை நிர்வாகிப்பது போன்ற செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தின் மூலமே சாத்தியமாகின்றன. சமூகத் தளத்தில் கூட்டு மதிநுட்பம் தானாக உருவாகுவதாகவோ அல்லது இயங்குவதாக கருத முடியாது. மனிதர்கள் கூட்டாக இணைந்து ஒரு குறிக்கோளுக்காக கூட்டு மதிநுட்பத்தை ஆக்கி, சமூகமாக பராமரித்து, விரிவாக்கி, பயன்பெறுகின்றார்கள். ஒரு கூட்டு மதிநுட்பத்தை சார்ந்த சமூகம் தேக்கமடையும் பொழுது அல்லது கலையும் பொழுது அந்த கூட்டு மதிநுட்பமும் அழிந்துபோகும். எடுத்துக்காட்டாக முன்னர் சிறப்புற்றிருந்து பின்னர் அழிந்த நாகரீகங்ளைச் சுட்டலாம். சாம வேதம் சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, "sāmaveda", ' "பாடல்கள்" + ' "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும். திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் பல கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்த கட்டிடங்களில் தூண்கள், அமைப்பியல் அடிப்படையிலும், அழகியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புக்களாகும். திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் இதற்கு விதிவிலக்கானவை அல்ல. இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் திராவிடக்கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பொதுவாக கி.பி 600 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை ஆகும். தமிழகத்தில் கற்களால் கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலப்பகுதியுடன் இது ஒத்திருக்கின்றது எனலாம். இதற்கு முன்னர் கட்டிடங்கள் மரம், செங்கல், சுதை முதலியவற்றால் அமைந்திருந்தன. இக்கட்டிடங்களில் தூண்கள் பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கக்கூடும். கட்டிடங்கள் கற்களால் அமைக்கத் தொடங்கியபோது, மரத்தில் அமைக்கப்பட்டிருந்தவாறே கல்லிலும் பிரதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே திராவிடக் கட்டிடக்கலைப் பாணியின் அடிப்படைகள், சிறப்பாகத் தூண் வடிவமைப்புக்கள், கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்ட காலங்களிலேயே உருவாகியிருக்கக்கூடும். திராவிடக் கட்டிடக்கலை தோன்றி வளர்ந்த காலகட்டம், கி.பி 600 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 17 ஆம் நூற்றாண்டின் முடிவுவரை எனக் கூறலாம். இதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பல்வேறு வம்சங்களின் ஆட்சிக் காலங்களோடு தொடர்புபடுத்தி வகைப்படுத்துவது வழக்கம். இக்கட்டங்கள்: என்பனவாகும். தூண்களின் வடிவமைப்பும் இக் காலகட்டங்களினூடாக வளர்ச்சியடைந்து வந்ததை அவதானிக்கலாம். கட்டிடங்களின் காலத்தைக் கணிப்பதற்குத் தூண்களின் வடிவமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தூண்களும் பல்வேறு உறுப்புக்களால் ஆனவை. தமிழ் நாட்டில், மாதிரிக்காகக் கிடைக்கக்கூடிய மிகப் பழைய திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இத்தொடக்ககாலக் கற்றூண்கள் மிகவும் எளிமையானவை. மிகவும் அடிப்படையான குறைந்த அளவு உறுப்புக்களையே கொண்டிருந்தன. காலப் போக்கில் திராவிடக் கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்தபோது தூண்கள் சிக்கலானவையாகவும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாகவும், பல உறுப்புக்களை உடையவையாகவும் காணப்பட்டன. உலகளாவிய பசுமை கட்சிகள் சூழல் நோக்கிய கவனம் உலகின் பல பாகங்களிலும் முக்கியம் பெற்று வருகின்றது. சூழலை அல்லது சுற்றாடலை தமது முக்கிய முனையாக முன்னிறுத்தி, இட-வல அரசியல் சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனைகளுடன் தம்மை முன்னிறுத்தும் கட்சிகள் பசுமை கட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகம் பூராகவும், குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் இக்கட்சிகள் தற்சமயம் வேரூன்றி வருகின்றன. எனினும், இக்கட்சிகள் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை இன்னும் எங்கும் பெறவில்லை. இக்கட்சிகள் கருத்தியல் கட்சிகளாகவே இப்பொழுது பெருதும் இயங்குகின்றன. ta:உலகளாவிய பசுமை கட்சிகள் கனடா பசுமைக் கட்சி கனடா பசுமை கட்சி (Green Party of Canada) ஒரு கனேடிய தேசிய அரசியல் கட்சி ஆகும். இது 1983 இல் தொடங்கப்பட்டது. எலிசபெத் மே இப்பொழுது இந்தக் கட்சியின் தலைவராக உள்ளார். இக் கட்சி கடந்த தேர்தலில் 4.5% வாக்குக்களையே பெற்றுது. இக்கட்சியில் இருந்து யாரும் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. இராமேசுவரம் இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் ("Rameshwaram", இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது. இந்து தொன்மவியலில் இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது. நகரின் மையத்திலுள்ள இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது. இலங்கையை அடைய மிக அண்மையான துறையாக இராமேசுவரம் உள்ளது. புவியியல் சான்றுகளின்படி ஆதாமின் பாலம் இருநாடுகளுக்கும் இடையே நிலவழி இணைப்பாக முற்காலத்தில் இருந்துள்ளது. எல்லை கடந்ததாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு மற்றும் இலங்கை ஏதிலிகள் தொடர்பான செய்திகளால் இராமேசுவரம் பரவலாக ஊடகங்களில் அறியப்படுகின்றது. இராமேசுவர நகராட்சி 1994இல் நிறுவப்பட்டது. நகரப்பகுதி 53 கிமீ பரப்பளவில் 44,856 மக்கள் தொகையுடன் (2011 கணக்கெடுப்பு) அமைந்துள்ளது. சுற்றுலாவும் மீன்வளமும் முதன்மை பணிவாய்ப்புகளாக உள்ளன. இராமேசுவரத்தின் வரலாறு இராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது. சோழ மன்னர் இராசேந்திர சோழன் (1012–1040 CE) ஆட்சியில் சிலகாலம் இராமேசுவரம் இருந்து வந்துள்ளது. 1215–1624 CE காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது; யாழ்ப்பாண அரசர் "சேதுகாவலன்" என அழைக்கப்பட்டார். இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர். அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் "சேது" என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார். இசுலாத்தின் வெற்றியை நினைவுகூறுமுகமாக "அலியா அல்-தின் கல்ட்ஜி" என்ற மசூதியை நிறுவினார். பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால இராமநாதபுரம், கமுதி, இராமேசுவரம் பகுதிகள் பாண்டிய இராச்சியத்தின் கீழ் இருந்தன. கிபி 1520 இல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர். இவர்கள் இராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர். முக்கியமாக முத்துக் குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டிட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டிடக்கலையாக அமைத்தனர். 18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725–1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது. கிபி 1795யில் இராமேசுவரம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று. இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இராமநாதசுவாமி கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,968 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராமேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராமேஸ்வரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ("Federation of Tamil Sangams of North America", FETNA) என்பது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 50 இற்கும் மேற்ப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி ஒற்றுமையில் பலம், பயன் காண்பதற்கு பாலமாக இருப்பதே இச்சங்க இருப்பிற்கு காரணமாகும். தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை பேணி வளர்ப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்காகும். இச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு மற்றும் ஒன்றுகூடல் நடாத்துகின்றது. 2008 இல் தனது ஆண்டு விழாவை பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவாக இச்சங்கம் கொண்டாடியது. தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்காவின் குடியரசு என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நாடாகும். வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளும்; கிழக்கில் மொசாம்பிக் மற்றும் சுவாசிலாந்து நாடுகளும் அமைந்துள்ளன; அதேசமயம் முற்றிலும் தென்னாப்பிரிக்க நாட்டால் சூழப்பட்ட சுதந்திர நாடான லெசோத்தோ நடுவில் அமைந்துள்ளது. தற்கால மனிதர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு குடியேறி 1,00,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஐரோப்பியர்களுடன் தொடர்பிலிருந்த காலத்தில் பெரும்பான்மையினரான பூர்வகுடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த பழங்குடியினராக இருந்தனர். கிறித்து சகாப்தத்தின் 4ஆம்-5ஆம் நூற்றாண்டிலிருந்து பான்டு மொழி பேசும் மக்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் அசலான மக்களை பதிலீடு செய்தும், போரிட்டும் அவர்களுடன் ஒன்றுகலந்தும் தெற்குப் பகுதிக்கு சீரான அளவில் குடிபெயர்ந்தனர். ஐரோப்பிய தொடர்பிருந்த காலகட்டத்தில் இந்த இரண்டு குழுக்களும் சோசா மற்றும் சூலு மக்களாக இருந்தனர். 1652 ஆம் ஆண்டில் கேப் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பின்னாளில் கேப் டவுன் என்று மாறிய புதுப்பி நிலையத்தை அமைத்தது. கேப் டவுன் 1806 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனி நாடானது. ஐரோப்பிய குடியேற்றங்கள் போயர்களாக (மூலம் டச்சு, ஃபிளமிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு குடியேறிகள்) 1820 ஆம் ஆண்டுகளில் குடியேற்றங்களை விரிவாக்கிக்கொண்டன என்பதோடு 1820 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேறிகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை கைப்பற்றினர். இந்தப் பிரதேசத்திற்கு போட்டியிட்ட சோசா, சூலு மற்றும் ஆப்ரிகானர் குழுக்களுக்கிடையே சண்டைகள் மூண்டன. வைரங்கள் மற்றும் பின்னாளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆங்கிலோ-போயர் போர் எனப்படும் 19 ஆம் நூற்றாண்டு போரைத் தூண்டியது, போயர்களும், பிரித்தானியர்களும், தென்னாப்பிரிக்காவின் கனிம வளத்தைக் கட்டுப்படுத்த சண்டையிட்டுக்கொண்டனர். பிரித்தானியர்கள் போயர்களை தோற்கடித்தனர் என்றாலும், அவர்கள் பிரித்தானிய ஆட்சிப்பகுதியாக 1910 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு நிபந்தனைக்குட்பட்ட விடுதலையை வழங்கினர். நாட்டிற்குள்ளாக விடுதலை குறித்து வெள்ளை தென்னாப்பிரிக்கர்களுக்கிடையே பிரித்தானிய எதிர்ப்பு கொள்கைகள் உருவாயின. டச்சு மற்றும் பிரித்தானிய காலனிய காலகட்டங்களில், "பூர்வகுடி இடவமைப்புச் சட்டம் 1879" மற்றும் "கடந்துசெல்லும் சட்டங்கள்" அமைப்பு ஆகியவை பூர்வகுடி மக்களின் குடியேற்றம் மற்றும் புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டன என்றாலும் இனவாத பிரிவினை அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடந்துவந்தது. அதிகாரங்கள் யாவும் ஐரோப்பிய காலனியவாதிகளிடம் இருந்தன. பிரிட்டோரியா உடன்படிக்கைக்கு ("அத்தியாயம் XXVI" ) வெகு முன்பிலிருந்தே போயர் குடியரசுகளிலும், அதற்கடுத்து வந்த தென்னாப்பிரிக்க அரசாங்களிலும் இது பின்னாளில் "அபர்தைட்" என்று அழைக்கப்பட்ட சட்டப்படி நிறுவப்பட்ட நிறவெறிக்கொள்கை ஆகி மூன்று அடுக்கு பிரிவுகளை நிறுவியது. அவை வெள்ளையினம், நிறத்தவர்கள் மற்றும் கருப்பினம். இவை ஒவ்வொன்றிற்கும் உரிமைகளும் வரம்புகளும் வரையறுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்கா 1961 ஆம் ஆண்டில் குடியரசு தகுதியைப் பெற்றது. நாட்டின் உள்ளேயும் வெளியிலும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், நிறவெறியைத் தொடர்வதற்கான சட்ட வரையறையை அரசாங்கம் இணைத்துக்கொண்டது. 20 ஆம் நூற்றாண்டில் சில மேற்கத்திய நாடுகளும் நிறுவனங்களும் இந்த நாட்டின் நிறவெறிக் கொள்கைகள் மற்றும் குடியுரிமை நசுக்கப்படுவதன் காரணமாக இதனோடு எந்த தொடர்பையும் மேற்கொள்வதை புறக்கணித்தன. கறுப்பு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளால் பல ஆண்டு உள்நாட்டுப் போராட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அரசு தொடங்கிய பேச்சுவார்த்தைகள் இந்த பாரபட்சமான சட்டங்கள் நீக்கப்படுவதற்கும், ஜனநாயகப்பூர்வமான முறையில் 1994 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடப்பதற்கும் வழியமைத்தது. இதன் பின்னர் தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் அவையில் மீண்டும் இணைந்தது. தென்னாப்பிரிக்கா அதனுடைய பரந்தகன்ற பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமய நம்பிக்கைகளுக்காக பிரபலமானதாக இருக்கிறது. அரசியலமைப்பில் பதினோரு மொழிகள் அதிகாரப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரப்பூர்வமான மற்றும் வணிகப் பொது வாழ்க்கையில் ஆங்கிலம் பொதுவான பேச்சுமொழியாக இருக்கிறது; இருப்பினும், இது வீட்டில் பேசப்படும் மொழிகள் வரிசையில் ஐந்தாவது பொதுமொழியாகும். தென்னாப்பிரிக்கா, பாரிய அளவில் ஐரோப்பிய, இந்திய மற்றும் ஆப்பிக்க இனக் கலப்புள்ள சமூகமாக திகழ்கிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் 79.5 சதவிகிதம் கறுப்பினத்தவர் என்பதோடு இவர்கள் வெவ்வேறு விதமான பான்டு மொழிகளைப் பேசும் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாவர், இவற்றில் ஒன்பது மொழிகள் அதிகாரப்பூர்வ அலுவல் மொழித்தகுதியைப் பெற்றிருக்கின்றன. மக்கள்தொகையில் கால்பகுதியினர் வேலைவாய்ப்பில்லாதவர்கள் , அவர்கள் ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர்கள் வருமானத்தில் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க யூனியனின் நிறுவன உறுப்பு நாடுகளுள் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. இது எல்லா உறுப்பு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. இது ஐக்கிய நாடுகள் மற்றும் என்இபிஏடி ஆகியவற்றின் நிறுவன உறுப்பினருமாகும். தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள், அண்டார்டிக் உடன்படிக்கை அமைப்பு, 77 நாடுகள் குழு, தெற்கு அட்லாண்டிக் அமைதி மற்றும் கூட்டுறவு மண்டலம், தெற்கு ஆப்பிரிக்க சுங்க ஒருங்கிணைப்பு, உலக வணிக அமைப்பு, அனைத்துலக நாணய நிதியம், ஜி-20 மற்றும் ஜி8+5 ஆகியவற்றிலும் உறுப்பினராக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இந்த உலகின் பழமையான தொல்பொருள் ஆய்வுத் தளங்கள் சிலவற்றைக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்க்ஃபாண்டின், குரோம்திராய் மற்றும் மகபன்ஸ்கட் குகைகளில் உள்ள பரந்த அளவிற்கான புதைபடிவங்கள் பல்வேறு மனித இனங்கள் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இவை "ஹோமோ ஹேபில்லிஸ்" , "ஹோமோ எரக்டஸ்" மற்றும் நவீன மனிதர்களான, "ஹோமோ சேபியன்கள்". இரும்பு பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்த பான்டு-பேசும் மக்கள் குடியேற்றங்கள், கி. பி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் லிம்ப்போப்போ ஆற்றின் தெற்குப் பகுதியில் முன்பே இருந்திருக்கின்றன. அவர்கள் இடம்மாற்றப்பட்டும், போரிடப்பட்டும் மூல-கொய்சான் பேசுபவர்களை உள்வாங்கிக் கொண்டவர்களாகவும் இருந்தனர். பான்டு மக்கள் மெதுவாக தெற்கு நோக்கி நகர்ந்தனர். அண்மை கால குவாசூலு-நடால் பிரதேசத்து மிகப்பழமையான இரும்பு வேலைப்பாடுகள் 1050 ஆம் ஆண்டிலிருந்து இருந்துவருவதாக நம்பப்படுகிறது. தெற்கு பகுதியில் இருக்கும் குழு சோசா மக்கள் ஆவர், இவர்களுடைய மொழி பழங்கால கொய்சான் மக்களிடமிருந்து குறிப்பிட்ட மொழிசார் பண்பியல்புகளைப் பெற்றுக்கொண்டதாக இருக்கிறது. இந்த சோசா இன்று கிழக்கு கேப் பிரதேசத்தில் இருக்கும் கிரேட் ஃபிஷ் ஆற்றை எட்டினர். அவர்கள் புலம்பெயர்கையில், இந்த பெரிய இரும்பு யுக மக்கள்தொகையினர் இடமாற்றப்பட்டனர் அல்லது வேட்டைக்குழு சமூகங்களாக இருந்த பழங்கால மக்களினத்தோடு இணைந்துகொண்டனர். 1487 ஆம் ஆண்டில், போர்ச்சுக்கீசிய கண்டுபிடிப்பாளரான பார்டலோமு டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த முதல் ஐரோப்பியரானார். தொடக்கத்தில் கேப் ஆஃப் ஸ்டார்ம்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்த இது இந்தியாவின் செல்வ வளத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதால் போர்ச்சுக்கீசிய அரசர் இரண்டாம் ஜான் என்பவரால் இதற்கு "கேபோ டா போவா எஸ்பரென்கோ" அல்லது நன்னம்பிக்கை முனை என்று மறுபெயரிட்டார். டயஸின் மாபெரும் நீண்ட கடல்பயணம் பின்னாளில் கேமியோவின் காவிய போர்ச்சுக்கீசிய கவிதையான "தி லூஸியட்ஸில்" (1572) அமரத்துவம் பெற்றது. 1652 ஆம் ஆண்டில் ஜேன் வான் ரீபீக் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக நன்னம்பிக்கை முனையில் புதுப்பி மையம் ஒன்றை நிறுவினார். டச்சுக்காரர்கள் இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் இந்தியாவிலிருந்து கேப் டவுனில் உள்ள காலனியவாதிகளுக்கான தொழிலாளர்களாக அடிமைகளை கொண்டுவந்தனர். அவர்கள் கிழக்கில் விரிவடைகையில், டச்சு குடியேறிகள் தென்மேற்காக பரவிய சோசா மக்களை ஃபிஷ் ஆற்றின் பிரதேசத்தில் எதிர்கொண்டனர். கேப் முன்னணி போர் என்று அழைக்கப்பட்ட தொடர்ச்சியான போர்கள் முக்கியமாக நிலம் மற்றும் கால்நடைகளின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே உருவாயின. பிரித்தானியப் பேரரசு 1795 ஆம் ஆண்டில் நன்னம்பிக்கை முனைப் பகுதியைக் கைப்பற்றியது, முக்கியமாக புரட்சிகர பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் விழுவதைத் தடுப்பதற்காக. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலான அதனுடைய நிலைகளைப் பாதுகாத்துக்கொள்ள பிரித்தானியப் பேரரசு தனது வணிகர்களின் நீண்ட கடல்பயணத்திற்கான இடைப்பட்ட துறைமுகமாக கேப் டவுனை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. 1803 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களுக்கு கேப் டவுனை பிரித்தானியப் பேரரசு திரும்ப வழங்கியது, ஆனால் வெகுவிரைவிலேயே டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி திவாலானது. 1806 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு, கேப் காலனியை இணைத்துக்கொண்டது. பிரிட்டன், சோசாவிற்கு எதிரான முன்னணிப் போர்களை தொடர்ந்து நடத்தியது, ஃபிஷ் ஆற்றைச் சுற்றிலும் நிறுவப்பட்டிருந்த கோட்டை வரிசைகளின் வழியாக கிழக்கத்திய முன்னணியை கிழக்கு நோக்கி தள்ளியது. அவர்கள் பிரித்தானியக் குடியேற்றங்களை ஊக்குவித்ததன் மூலம் இந்தப் பிரதேசத்தை ஒன்றிணைத்துக்கொண்டனர். பிரிட்டனில் அப்போது இருந்த கொத்தடிமை அழிப்பு இயக்கங்களின் நெருக்கடி காரணமாக பிரித்தானியப் பாராளுமன்றம் முதலில் கொத்தடிமை வணிக சட்டம், 1807-யின் அடிப்படையில் அதனுடைய உலகளாவிய கொத்தடிமை வணிகத்தை நிறுத்தியது, பின்னர் கொத்தடிமைத்தன ஒழிப்புச் சட்டம், 1833-யின் மூலம் தன்னுடைய காலனி நாடுகள் அனைத்திலும் கொத்தடிமைத்தனத்தை ஒழித்தது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில் சூலு மக்கள் அதிகாரத்திற்கு வந்தனர் என்பதோடு அவர்களுடைய தலைவர் சாகாவின் கீழ் தங்களுடைய பிரதேசத்தையும் விரிவுபடுத்தினர். சாகாவின் சூறையாடல் 1820 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு பீடபூமியை அழிக்கச்செய்த மெஃபகேனுக்கு ("நசுக்குதலுக்கு") மறைமுகமாக வழிவகுத்தது. சூலுவின் கிளையான மில்பாலே அவர்களுடைய தலைவர் மிலிலெகாஸியின் கீழ் ஹெவெல்டின் பெரும் பகுதி உட்பட மிகப்பெரிய பேரரசாக உருவானது. 1830 ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 12000 போயர்கள் (பின்னாளில் வூர்டிரெக்கர்ஸ் என்று அறியப்பட்டவர்கள்) கேப் காலனி பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்கு வரும் என்பதால் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் எதிர்கால நடால், மத்திய ஆப்பிரிக்கப் பகுதி மற்றும் டிரான்ஸ்வால் பிரதேசத்திற்கும் குடிபெயர்ந்தனர். போயர்கள் போயர் குடியரசுகளை நிறுவினர்: தென்னாப்பிரிக்க குடியரசு (தற்போது கௌதாங், லிம்போபு, புமலங்கா மற்றும் வட மேற்குப் பிரதேசங்களாக இருப்பவை) மற்றும் ஆரஞ்சு ஃப்ரீ ஸ்டேட் (ஃப்ரீ ஸ்டேட்). உள்நாட்டுப் பகுதியில் 1867 ஆம் ஆண்டில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், 1884 ஆம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் பொருளாதார வளர்ச்சியையும் இடப்பெயர்வையும் ஊக்குவித்தது. இது பூர்வகுடி மக்களின் ஐரோப்பிய-தென்னாப்பிரிக்க கொத்தடிமைத்தனத்தை தீவிரப்படுத்தியது. இந்த முக்கியமான பொருளாதார மூலாதாரங்களை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் ஐரோப்பியர்களுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் இடையிலான மற்றும் போயர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான காரணியாகவும் அமைந்தது. முதல் போயர் போரின்போது (1880–1881) உள்ளூர் நிலைகளுக்கு நன்றாக பொருந்திப்போன கொரில்லா போர்முறை உத்திகளைப் பயன்படுத்தி போயர் குடியரசு வெற்றிகரமாக பிரித்தானிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. இருப்பினும், பிரித்தானியர்கள் இரண்டாம் போயர் போரில் (1899–1902) பெரும் எண்ணிக்கையில், அதிக அனுபவத்தோடு மிகவும் பொருத்தமான உத்திகளோடு போருக்கு வந்தனர், இதில் பிரித்தானியர்கள் வெற்றிபெற்றனர். பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரம், இரண்டாம் போயர் போர் முடிந்து சரியாக எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 31 மே 1910 ஆம் ஆண்டில், கேப் மற்றும் நடால் காலனிகளிலிருந்தும், ஆரஞ்சு ஃப்ரீ ஸ்டேட் மற்றும் டிரான்ஸ்வால் குடியரசுகளிளிருந்தும் தென்னாப்பிரிக்க ஒருமிப்பு உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்னாப்பிரிக்க ஒருமிப்பு, பிரித்தானியப் பேரரசின் ஆட்சியதிகாரத்திற்குள் டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தது. 'கறுப்பர்கள்' நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதை, 1913 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பூர்வக்குடி நிலச் சட்டம் கடுமையாக தடைசெய்தது; அந்நிலையில் அவர்கள் நாட்டின் பரப்பில் வெறும் 7% நிலத்தை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பூர்வக்குடி மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு பின்னாளில் சற்றே கூடுதலாக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டப்பிரிவைக் கொண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இந்த ஒருமிப்பு சுதந்திரத்தை வழங்கியது. 1934 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்க கட்சி மற்றும் தேசியக் கட்சி ஆகியவை யுனைட்டட் கட்சியை உருவாக்க ஒன்றிணைந்தன என்பதோடு ஆப்ரிகானர்ளுக்கும், ஆங்கிலம் பேசும் "வெள்ளையர்களுக்கும்" இடையிலான உடன்பாட்டை கோரியது. 1939 ஆம் ஆண்டில் இந்தக் கட்சி பிரிட்டனோடு கூட்டாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுவதற்கான ஒருமிப்பின் நுழைவு குறித்த சிக்கலில் உடைந்தது, போரில் ஈடுபடுவதை தேசியக் கட்சி தொண்டர்கள் வலுவாகவே எதிர்த்தனர். 1948 ஆம் ஆண்டில் தேசியக் கட்சியானது அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது யூனியன் தொடங்கப்பட்டதிலிருந்து டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனிகள் மற்றும் அடுத்தடுத்து வந்த தென்னாப்பிரிக்க அரசாங்கங்களின் கீழ் தொடங்கிய நிற/இன அடிப்படையில் தனிப்படுத்துகை கொள்கை அமலாக்குவதை தீவிரப்படுத்தியது. தேசியவாத அரசு இருந்துவரும் இத்தனிப்படுத்துகைச் சட்டங்களை அமைப்புமுறையாக்கியது, எல்லா மக்களையும் மூன்று வகுப்பினராகப் பிரித்தது, ஒவ்வொருவருக்கும் கடந்துசெல்லும் விதிகள் மற்றும் குடியிருப்பு தடைகள் போன்ற உரிமைகளையும் வரையறைகளையும் உருவாக்கியது. வெள்ளையின சிறுபான்மையினர் பரந்தகன்ற கறுப்பின பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்தினர். இம்முறையிலான தனிப்படுத்துகை அமைப்பு ஒட்டுமொத்தமாக "அபர்தைட்" என்று அறியப்படலாயிற்று. ஆப்பிரிக்கா முழுவதிலும் ஒப்பிடுகையில், மேற்கத்திய் நாடுகளின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வெள்ளையின சிறுபான்மையினர் அனுபவிக்கையில், கறுப்பின பெரும்பான்மையினர் வருமானம், கல்வி, வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைத் தேவைகள் உள்ளிட்ட ஒவ்வொரு நிலையிலும் கிட்டத்தட்ட எந்த அனுகூலமும் இல்லாதவர்களாகவே இருந்தனர். 1961 ஆம் ஆண்டு மே 31 ஆம் ஆண்டில் வெள்ளையினத்தவர்கள் மட்டும் பங்குகொண்ட பொது வாக்கெடுப்பின் படி, இந்த நாடு குடியரசானது என்பதுடன் (பிரித்தானிய) காமன்வெல்த்திலிருந்து தன்னை விடுவி்த்துக்கொண்டது. கவர்னர்-ஜெனரல் அலுவலகம் என்பது நீக்க்கப்பட்டு, நாட்டின் அதிபர் என்ற பதவிக்கு மாற்றியமைக்கப்பட்டது. நிறவெறி அதிகப்படியான அளவிற்கு முரண்பாட்டிற்கு உள்ளானது, இது பரவலான பன்னாட்டு தடைகள், அதிகாரப்பறிப்பு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்குள்ளான பதட்டம் மற்றும் கொடுங்கோலாட்சிக்கு வழியமைத்தது. அரசாங்கத்தினால் நீண்டகாலத்திற்கு மோசமான கொடுங்கோலாட்சி நடத்தப்பட்டதுடன், வன்முறைத் தடுப்பு காலங்களில் வேலை நிறுத்தங்கள், பேரணிகள், போராட்டங்கள், குண்டுவீசியும் மற்ற பல வழிகளிலுமான நாசவேலைகள் ஆகியவை நடந்தன என்பதோடு மிகவும் குறிப்பிடத்தகுந்தது என்னவெனில் இவற்றை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பின்பற்றியதுதான். 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்கா அணு ஆயுத வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கியது. அதற்கடுத்த பத்தாண்டுகளில் இது ஏவக்கூடிய ஆறு அணு ஆயுதங்களை தயாரித்தது. 1990 ஆம் ஆண்டில் தேசியக் கட்சி அரசாங்கம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் அமைப்புக்களின் தடையை நீக்கியபோது பாகுபாடுகளை நீக்குவதற்கான முதல் அடியை எடுத்துவைத்தது. நாசவேலை தண்டனையாக இருபத்தி ஏழு ஆண்டுகள் சிறைவைப்பிற்குப் பின்னர் நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்தது. ஜனநாயக தென்னாப்பிரிக்காவிற்கான உடன்படிக்கை எனப்பட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கியது. அரசாங்கம் நிறவெறி சட்டவரையறையை நீக்கியது. தென்னாப்பிரிக்கா தனது அணு ஆயுதக்கிடங்கை அழித்ததோடு அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. தென்னாப்பிரிக்கா தனது முதல் பல இனங்கள் பங்குகொண்ட தேர்தல்களை 1994 ஆம் ஆண்டில் நடத்தியது, இதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது. அதிலிருந்து இப்போதுவரை இது அதிகாரத்தில் இருந்துவருகிறது. நிறவெறிக்குப் பிந்தைய தென்னாப்பிரிக்காவில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்தது. கறுப்பினத்தவர்கள் பலரும் மத்திய அல்லது உயர் வகுப்பினராக உயர்ந்தனர், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில்லாத கறுப்பினத்தவர்களின் விகிதம் 1994 மற்றும் 2003 ஆண்டுகளில் மோசமடைந்தது. முன்பு அரிதாக இருந்த வெள்ளையினத்தவர்களுக்கு இடையிலான வறுமை அதிகரித்தது. நிறவெறி அமைப்பு வளர்வதற்கு வெகுசிலர் மட்டுமே பங்களிப்பு செய்திருக்கையில், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் தோல்வியடைவதற்கான பங்களிப்பு அதிகரித்தது. மேலும், தற்போது உள்ள அரசாங்கம், சொத்துக்கள் மறுபகிர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்குமான பண மற்றும் நிதி முறைமைகளை அடைய போராடிக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து தென்னாப்பிரிக்காவினுடைய ஐக்கிய நாடுகள் மனித வளர்ச்சிக் குறியீட்டெண் வீழ்ச்சியுற்றது, அதேசயமத்தில் 1990 ஆம் ஆண்டுகள் வரை சீராக அதிகரித்தது. இவற்றில் சில எய்ட்ஸ் நோய்ப்பரவலுக்கு பங்களித்திருக்கலாம் என்பதோடு அரசாங்கம் இதைத் தெரிவிப்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட தோல்விக்கும் காரணமாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று தலைநகரங்கள் இருக்கின்றன: கேப் டவுன் இவை மூன்றிலும் பெரியது என்பதுடன் "அரசியலமைப்பு" தலைநகரமாகவும் இருக்கிறது; பிரிட்டோரியா "நிர்வாகத்" தலைநகரம்; மற்றும் புளோயம்ஃபாண்டைன் "நீதித்துறை" தலைநகரமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இரண்டு அவைகளைக் கொண்ட பாராளுமன்றமாக இருக்கிறது: பிரதேசங்களின் தேசிய கவுன்சில் (மேலவை) 90 உறுப்பினர்களைக் கொண்டது, தேசிய அசெம்பிளி (கீழவை) 400 உறுப்பினர்களைக் கொண்டது. கீழவை உறுப்பினர்கள் சம அளவிலான பிரதிநிதித்துவத்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்: உறுப்பினர்களில் பாதி தேசியப் பட்டியல்களிலிருந்தும் மீதமிருப்பவர்கள் மாகாண பட்டியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாகாணங்களின் மக்கள்தொகை பொருட்டின்றி பத்து உறுப்பினர்கள் மாகாணங்களின் தேசிய அவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு அவைகளுக்குமான தேர்தல் ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அரசாங்கம் கீழவையில் உருவாக்கப்படுகிறது, தேசிய அசெம்பிளியின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் அதிபராக இருப்பார். டச்சு குடியேற்றங்கள் மற்றும் பிரித்தானியக் காலனிகளின் இறக்குமதிகளாக உள்ள டச்சு மெர்கண்டைல் சட்டம், தனிப்பட்ட சட்டம் மற்றும் ஆங்கிலப் பொதுச் சட்டம் ஆகியவை தென்னாப்பிரிக்க சட்டத்தின் பிரதான மூலாதாரங்களாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் உள்ள முதல் ஐரோப்பியர் அடிப்படையிலான சட்டம் டச்சுக் கிழக்கிந்திய கம்பனி நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பதுடன் இது ரோமன்-டச்சு சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பிய சட்டம், நெப்போலியன் விதியாக வரையறுக்கப்படுவதற்கு முன்பே பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதுடன் பல முறைகளிலும் ஸ்காட்ஸ் சட்டத்தோடு ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலச் சட்டத்தை, "பொது மற்றும் சட்டப்பூர்வ" ஆகிய வழிமுறைகளை பின்பற்றியது. 1910 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமேயான சொந்த பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது, தனிப்பட்ட உறுப்பினர் காலனிகளுக்கென்று முன்னதாக நிறைவேற்றப்பட்டவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது. நிறவெறிக்கொள்கை நடைமுறையில் இருந்த ஆண்டுகளில், நாட்டின் அரசியல் காட்சி பி. ஜே. வோர்ஸ்டர் மற்றும் பி. டபிள்யு. போதா, போன்ற ஆளுமைகளாலும் ஹாரி ஸ்வார்ஷ், ஜோ ஸ்லாவோ மற்றும் ஹெலன் சுஸ்மன் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களாலும் ஆளப்பட்டிருந்தது. 1994 ஆம் ஆண்டில் நிறவெறிக்கொள்கை முடிவுற்றதிலிருந்து தென்னாப்பிரிக்க அரசியல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆளுமையில் இருந்தது, இது 60–70 சதவிகித வாக்குகளோடு முன்னணிக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சியின் முதன்மைப் போட்டியாளராக ஜனநாயக கூட்டணி கட்சி இருக்கிறது, இது 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 16.7 சதவிகித வாக்குகளும், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 14.8 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தது. தனக்கு முன்பிருந்த தேசியக் கட்சியின் மூலமாக நிறவெறி கொள்கையை அறிமுகப்படுத்திய புதிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸூடன் இணைய தீர்மானித்தது. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற மற்ற முக்கிய அரசியல் கட்சிகள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 7.4 சதவிகித வாக்குகளை வென்ற மக்கள் காங்கிரசு மற்றும் சூலு வாக்காளர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் 2009 ஆம் ஆண்டில் 4.6 சதவிகித வாக்குகளைப் பெற்ற இன்கதா விடுதலைக் கட்சி ஆகியனவாகும். 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாடு ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற போராட்டங்கள், சில வன்முறைகள் ஆகியவற்றிற்கு இலக்கானதால், ஒரு ஆய்வாளரின் கூற்றுப்படி "உலகிலேயே போராட்டங்கள் செழித்திருக்கும் நாடு" ஆனது. பெரும்பாலான போராட்டங்கள் தென்னாப்பிரிக்க நகரங்களை சூழ்ந்திருக்கும் ஏழ்மை மிகுந்த நகரங்களிலிருந்து உருவானவையாக இருந்தன. 2008 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்க அரசாங்க இப்ராஹிம் குறியீட்டெண்ணில் இணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் 48 ஆம் ஆண்டில் 5வது இடத்தைப் பிடித்திருந்தது. தென்னாப்பிரிக்கா சட்டப்படியான ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல், பங்கேற்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய பிரிவுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது, ஆனால் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில் மோசமான செயல்திறனைக் கொண்டிருந்தது. இப்ராஹிம் குறியீட்டெண் ஆப்பிரிக்க அரசு முழுவதையும் உள்ளடக்கிய குறியீட்டெண், இது அரசாங்கங்கள் அத்தியாவசிய அரசியல் உரிமைகளை வழங்குவதிலுள்ள வெற்றியை பிரதிபலிக்கும் வெவ்வேறு மாறுபாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது. 1994 ஆம் ஆண்டில் நிறவெறி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர், "விடுதலை பெற்ற" மற்றும் "பாதி விடுதலை பெற்ற" பான்டுஸ்தான்கள், முந்தைய நான்கு மாகாணங்கள் நீக்கத்தினாலும் (கேப் மாகாணம், நடால், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதி மற்றும் டிரான்ஸ்வல்) முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்பது புதிய மாகாணங்களாகவும் தென்னாப்பிரிக்காவின் அரசியல் கட்டமைப்பிற்குள்ளாக ஒன்றிணைந்தன. புதிய மாகாணங்கள் பொதுவாக சிறிய அளவிலானதாக இருந்தால், கோட்பாட்டுரீதியில் உள்ளாட்சிகள் பரவலாக வளங்களை பகிர்ந்தளிக்கக்கூடிய தன்மையை பெற்றுள்ளன என்பதை குறிக்கும். இந்தப் பிரதேசங்கள் 52 மாவட்டங்கள்: 6 மாநகரங்கள் மற்றும் 46 மாவட்ட நகராட்சிகளாக மேலும் பிரிக்கப்பட்டன. மாவட்ட நகராட்சிகள் மேற்கொண்டு 231 உள்ளூர் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மாநகராட்சிகள் மாவட்ட மற்றும் உள்ளூர் நகராட்சிகளின் பணிகளை மேற்கொண்டன. புதிய மாகாணங்களாவன: நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்ததிலிருந்து தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அதனுடைய ஆப்பிரிக்க கூட்டாளிகளின் மீது கவனம் செலுத்துவதாகவே இருந்தது, குறிப்பாக தெற்கு ஆப்பிரிக்க மேம்பாட்டு சமூகம் (எஸ்ஏடிசி) மற்றும் ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு. தென்னாப்பிரிக்கா கடந்த பத்தாண்டில் புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொமொரோசு மற்றும் ஜிம்பாப்வே போன்றவற்றில் நடந்த ஆப்பிரிக்க பிணக்குகளில் ஒரு நடுவராக முக்கியமான பங்காற்றியுள்ளது. நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகளில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்க ஒருங்கிணைப்புக்காக தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகளின் உருவாக்கு உறுப்பினராக இருந்திருக்கிறது. அப்போது பிரதமராக இருந்த ஜான் ஸ்மட்ஸ் ஐக்கிய நாடுகள் வரையறைப் பட்டயத்திற்கான முன்னுரை எழுதினார். தென்னாப்பிரிக்கா 2007 மற்றும் 2008க்கு இடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இருந்து வந்திருக்கிறது என்பதுடன் 2006 ஆம் ஆண்டில் பர்மிய அரசாங்கத்தை விமர்சித்து அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தில் எதிர்த்து வாக்களித்தது. மேலும் 2008 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேயிற்கு வழங்கப்படவிருந்த அமலாக்கங்களுக்கு எதிராக நடந்துகொண்டது ஆகியவற்றிற்காக முரண்பாட்டிற்கு ஆளானது. தென்னாப்பிரிக்கா ஜி-77 இன் உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டில் அதன் தலைமைப்பொறுப்பிலும் இருந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா தெற்கு அட்லாண்டிக் அமைதி மற்றும் கூட்டுறவு மண்டலம், தெற்கு ஆப்பிரிக்க சுங்க ஒருமிப்பு, உலக வணிக அமைப்பு, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஜி-20 மற்றும் ஜி8+5 ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறது. தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை 1994 ஆம் ஆண்டில் முன்னாள் தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படை, ஆப்பிரிக்க தேசியவாத குழுக்களான உம்கோந்தோ வே சிஸ்வே மற்றும் அசனியன் மக்கள் விடுதலைப் படை மற்றும் முன்னாள் பான்டுஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றின் தன்னார்வ படையினராக உருவாக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை நான்கு கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை, தென்னாப்பிரிக்க ராணுவம், தென்னாப்பிரிக்க விமானப்படை, தென்னாப்பிரிக்க கப்பற்படை, மற்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சேவைகள் ஆகும். அண்மைய ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை ஆப்பிரிக்காவில் முதன்மையான அமைதிகாப்பு படையாக இருந்துவருகிறது என்பதுடன் லெசோத்தோ, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் புருண்டி ஆகியவற்றில் ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. இது, பலநாடுகள் ஐநா அமைதிகாப்புப் படைகளின் ஒரு பகுதியாகவும் அங்கம் வகிக்கிறது. தென்னாப்பிரிக்கா 1970களில் அணு ஆயதத் திட்டத்தை மேற்கொண்டது, 1979 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் கடலில் அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கலாம். இது வெற்றிகரமாக அணு ஆயதங்களை உருவாக்கிய ஒரே ஆப்பிரிக்க நாடு ஆகும். இது உக்ரைனைத் தொடர்ந்து தனது அணு ஆயுதத் தயாரிப்பை தாமாக முன்வந்து கைவிட்ட மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட அணு ஆயுதத் திறனுள்ள இரண்டாவது நாடு ஆகும். தென்னாப்பிரிக்கா, இரண்டு பெருங்கடல்கள் சூழ (தெற்கு அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்) ஆப்பிரிக்காவின் கடைகோடித் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. , பரப்பளவில் தென்னாப்பிரிக்கா உலகின் 25வது மிகப்பெரிய நாடு என்பதுடன் கொலம்பியாவின் அளவோடு ஒப்பிடக்கூடியதுமாகும். உயரத்தில் டார்கென்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கும் ஜெசுத்தி, தென்னாப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய மலையுச்சியாகும். மூன்று பக்கங்களிலும் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் சூழ்ந்திருப்பது, மிதவெப்ப தென் அறைகோளத்தில் அமைந்திருப்பது மற்றும் தெற்கு (ஈக்வேடாரை நோக்கி) மற்றும் மேற்கொண்டு உள்நிலப்பகுதி வடக்கு நோக்கி சீராக உயர்வதன் காரணமாகவும், தென்னாப்பிரிக்கா பொதுவாக மிதவெப்ப மண்டல பருவநிலையை கொண்டுள்ளது. இதனுடைய மாறுபடும் நில உருவினாலும் மற்றும் பெருங்கடல் தாக்கத்தினாலும், பெருமளவிற்கு வேறுபட்ட பருவ மண்டலங்கள் இருந்துவருகின்றன. தென்னாப்பிரிக்காவின் பருவ மண்டலங்கள், மொசாம்பிக் எல்லை மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டி, வளமான மிதவெப்ப மண்டலமும், வட மேற்கில் தெற்கு நமீப் பாலைவனத்தை ஒட்டி மிக வறண்டதுமாக, பெரிய அளவில் மாறுபடுகின்றன. கிழக்கிலிருந்து சீராக ஏறுமுகமாக உள்புற மேட்டுநிலத்தை நோக்கிச் மலைத்தொடர்கள் மீதாக, "ஹைவேல்ட்" என்றழைக்கப்படும் இந்த நிலம் உயர்ந்து செல்கிறது. தென்னாப்பிரிக்கா பாதியளவிற்கு வறண்ட நிலப்பகுதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பருவநிலை மற்றும் நில உருவியலில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபாடு நிலவுகிறது. தென்னாப்பிரிக்காவின் உட்புறப்பகுதி பரந்தும், தட்டையாகவும், நமீப் பாலைவனத்தைச் சுற்றி வடமேற்குப் பகுதியை நோக்கிச் செல்லும் உலர்ந்த கரூ என்ற மக்கள்தொகை குறைவான வறண்ட நிலப்பகுதியாகவும் இருக்கிறது. இதற்கு முரணாக, கிழக்கு கடற்கரைப்பகுதி வளமானதாகவும், நல்ல நீர்வசதியுள்ளதாகவும் காணப்படுகிறது, இது வெப்பமண்டலங்கள் போன்ற பருவநிலையை உருவாக்குகிறது. கடைகோடி தென்மேற்குப் பகுதி, ஈரமான மழையும், வெப்பம் மற்றும் வறண்ட கோடையை பண்பை கொண்டுள்ள நடுத்தரை பருவநிலையை ஒத்திருந்து, புகழ்பெற்ற ஃபின்பாஸ் உயிரியகத்தில் காணப்படும் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதி, தென்னாப்பிரிக்காவில் உற்பத்தியாகும் பெரும்பாலான ஒயின் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பகுதி குறிப்பாக ஆண்டின் எல்லா நாட்களிலும் விட்டுவிட்டு வீசும் காற்றிற்காக பிரபலமானதாக இருக்கிறது. இந்தக் காற்றின் தீவிரத்தன்மை நன்னம்பிக்கை முனையில், குறிப்பாக கப்பல் மாலுமிகளுக்கு நம்பகத்தன்மையற்றதாக இருப்பதுடன், பல கப்பல்கள் மூழ்குவதற்கு காரணமாகவும் இருக்கிறது. தெற்குக் கடற்கரையில் உள்ள மேற்கண்ட கிழக்குப் பகுதியில் பெய்யும் மழை அந்த ஆண்டு முழுவதும் மிகவும் சமமான நிலையில் பெய்து பசுமையான இயற்கைக் காட்சியை உருவாக்குகிறது. இந்தப் பகுதி "கார்டன் ரூட்" என்ற பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஃப்ரீ ஸ்டேட் குறிப்பாக உயர்ந்த மேட்டுநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பதன் காரணமாக தட்டையாக இருக்கிறது. வால் நதியின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹைவேல்ட் நல்ல முறையில் நீர்வளத்தைப் பெற்றிருப்பதால் மிதவெப்பமண்டலத்தின் வெப்பநிலைகளுக்கு ஆளாவதில்லை. ஹைவேல்ட்டின் மையப்பகுதியில் இருக்கும் ஜோகானஸ்பேர்க் உயரத்தில் இருக்கிறது என்பதுடன் மழையளவை ஆண்டுதோறும் பெறுகிறது. இந்தப் பகுதிகளில், குளிர்காலம் மிகவும் குளிராக இருந்தாலும், பனிப்பொழிவு அரிதானது. ஜோகானஸ்பேர்க்கின் வடக்கே இந்த உயரம் ஹைவேல்ட்டின் சரிவிற்கு அப்பால் கீழிறங்கிச் சென்று தாழ்ந்திருக்கும் புஷ்வெல்டிற்கு திரும்புகிறது, இது வறண்ட காடு மற்றும் காட்டுவாழ்க்கை கைவிடப்பட்ட கலப்பு பிரதேசமாக இருக்கிறது. ஹைவ்லேண்டின் கிழக்குச் சரிவிற்கும் அப்பால் லோவெல்ட் இந்தியப் பெருங்கடலை நோக்கி நீண்டுசெல்கிறது. இது குறிப்பாக உயர் வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் நீட்டிக்கப்பட்ட துணைவெப்பமண்டல வேளாண்மைக்குரிய இடமாகவும் இருக்கிறது. ஹைவேல்ட்டின் தென்கிழக்கு சரிவுப்பகுதியை உருவாக்கும் உயர்ந்த டிராக்கன்ஸ்பெர்க் மலைத்தொடர்கள், குளிர்காலங்களில் மேலேறுவதற்கு சொற்பமான வாய்ப்புக்களையே வழங்குகின்றன. தென்னாப்பிரிக்காவில் உள்ள மிகக் குளிர்ச்சியான பகுதி மேற்கு ரோக்வேல்ட் மலைத்தொடர்களில் உள்ள சதர்லாந்து ஆகும், இங்கே குளிர்காலத்தின் உச்சக்காலத்தில், வெப்பநிலை -15 Cக்கும் மிகக்குறைவாக செல்கிறது. மிகவும் உட்புறமான பகுதிகளில் மிகுந்த வெப்பநிலை காணப்படுகிறது: 1948 ஆம் ஆண்டில் உபிங்க்டனுக்கு அருகிலுள்ள வடக்கு கேப் கலஹாரியில் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் துணை-அண்டார்டிக் தீவுக்கூட்டம் ஒன்றையும் தென்னாப்பிரிக்கா தன்னகத்தே கொண்டுள்ளது, இது மரியோன் தீவு மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு (இதே பெயரில் உள்ள கனடியப் மாகானத்தொடு குழப்பிக்கொள்ளக்கூடாது) ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. 20000க்கும் மேற்பட்ட வெவ்வேறுவகை தாவர இனங்களில், இப்புவியில் அறியப்பட்ட பல்லுயிர்மத்தில் ஏறத்தாழ 10 விழுக்காட்டுடன் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் பதினேழாவது நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் மிக அதிகமாகக் காணப்படும் உயிரியகம், புல்வெளி ஆகும், குறிப்பாக ஹைவேல்ட்டில், இங்கே இந்த தாவரம் வெவ்வேறு புற்கள், புதர்ச்செடிகள், கருவேல மரங்கள், அதில் முக்கியமாக ஒட்டக-முட்செடி மற்றும் வெள்ளை முட்செடி, ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. குறைவான மழையின் காரணமாக வடமேற்கை நோக்கியப் பகுதிகளில் தாவர வளர்ச்சி அரிதாகவே காணப்படுகிறது. மிகுந்த வெப்பமும் வறட்சியுமான நமகுவாலாந்து பகுதியில் உள்ள கற்றாழைகள் மற்றும் கள்ளிச்செடிகள் போன்ற தண்ணீரை சேகரித்து வைக்கும் சதைப்பற்றுள்ள சில தாவரங்கள் இங்கே இருக்கின்றன. புல் மற்றும் புல்வெளி ஆகியன அடர்த்தியான வளர்ச்சியுடன் நாட்டின் வடகிழக்கு நோக்கி புதர்வெளிகளாக மெதுவாக மாற்றமடைகின்றன. இந்தப் பகுதியில் குரூகர் தேசியப் பூங்காவின் வடக்கு முனைக்கு அருகாமையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான பேபாப் மரங்கள் காணப்படுகின்றன. மேற்கு கேப்பின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள 9000க்கும் மேற்பட்ட தாவர இனங்களைக் கொண்டிருக்கின்ற, ஆறு இனங்களுள் ஒன்றான ஃபயோன்ஸ் உயிரியகம், கேப் ஃப்ளோரிஸ்டிக் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைந்திருப்பது, தாவர இனங்களுள் பல்லுயிரி பெருக்கத்தினை வளம் மிகுந்ததாக உருவாக்கச்செய்ய உதவுகிறது. இங்கு காணப்படும் பெரும்பாலான தாவரங்கள், ஸ்கிலிரோஃபிலஸ் போன்ற ஊசி போல், என்றும் பசுமை மாறாக்கடினமான இலைகளோடு உள்ளன. தென்னாப்பிரிக்காவின் இன்னொரு தனித்துவமான தாவரம், புரோட்டியா வகையின பூக்கும் தாவரங்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவில் புரோட்டியாவில், 130-க்கும் மேற்பட்ட வகையினங்கள் உள்ளன. பூக்கும் தாவரங்களின் வளம் பெருமளவு இருப்பினும், 1% தென்னாப்பிரிக்கா மட்டுமே காடாக இருக்கிறது, அதுவும் அனேகமாக, ஆற்றுப்படுகைகளில் தெற்கு ஆப்பிரிக்க அலையாத்திக் காடுகள் நிரம்பியிருக்ம், ஈரப்பதமான குவாசூலு-நடாலின் கடற்கரைச் சமவெளியில் மட்டுமே காணப்படுகின்றன. மோண்டேன் காடுகள் எனப்படும் தீப்பற்றாத சிறிய தொகுப்பு காடுகளும் இருக்கின்றன. வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களின் தோட்டங்களில் குறிப்பாக வேறு பிறப்பிடமுள்ள தைல மரம் மற்றும் ஏங்கு மரங்கள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன. கடந்த நாற்பதாண்டுகளில் அதிக மக்கள்தொகை, திட்டமிடப்படாத மேம்பாட்டு முறைகள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காடுகள் அழிக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக, தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களை இழந்திருக்கிறது. அயல் தாவரங்களின் ஊடுருவல் (எ.கா. கருப்பு வேட்டில், போர்ட் ஜேக்ஸன், ஹகியா, கொங்கிணி மற்றும் ஜகரண்டா) என்று வரும்போது, உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் தென்னாப்பிரிக்கா என்றாகி, உள்நாட்டில் உள்ள பல்லுயிர்மத்திற்கும், அரிதாகிவிட்ட நீர் ஆதாரங்களையும் அச்சுறுத்துகிறது. முதல் ஐரோப்பிய குடியேறிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூல மிதவெப்பக்காடுகள் கடுமையாக அழிக்கப்பட்டு, தற்போது சிறிய திட்டுக்களாக மட்டுமே எஞ்சியுள்ளது. ரியல் யெல்லோவுட் "(போடோகார்பஸ் லேட்டிஃபோலியஸ்)" , ஸ்டின்க்வுட் "(அகோடியா புல்லடா)" , மற்றும் தென்னாப்பிரிக்க பிளாக் அயர்ன்வுட் "(ஒரியா லாரிஃபோலியா)" போன்ற தென்னாப்பிரிக்க கடின மரங்கள் தற்போது அரசாங்கத்தின் அரவணைப்பில் இருக்கின்றன. சிங்கங்கள், வேங்கைகள், வெள்ளைக் காண்டாமிருகங்கள், நீல காட்டுமான்கள், குடு மான்கள், இம்பாலாக்கள், கழுதைப் புலிகள், நீர் யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பல்வேறு பாலூட்டிகள் புஷ்வெல்டில் காணப்படுகின்றன. குரூகர் தேசியப் பூங்கா மற்றும் மலா மலா ரிசர்வ் ஆகியவற்றிலும் வாட்டர்பெர்க் உயிரியகத்திலும் வடக்குப் பகுதி உள்ளிட்ட பகுதி வரையிலும் வட கிழக்காக புஷ்வெல்டின் குறிப்பிடத்தகுந்த பகுதி நீண்டிருக்கிறது. பருவநிலை மாற்றமானது குறிப்பிடத்தக்க அளவில் அனல்காற்று, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர வெப்பநிலை நிகழ்வுகள், தொடர்ச்சியாகவும், தீவிரத்தன்மையோடும், இப்போதே அரை-உலர் பகுதியாக இருக்கும் இந்த மண்டலங்களுக்கு, மேலும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தேசிய பல்லுயிர்ம நிறுவனம் உருவாக்கிய கணிப்பொறி தட்பவெப்பநிலை மாதிரியாக்கம், கடற்கரையைச் சுற்றி 2050 ஆம் ஆண்டிற்குள், வெப்பமானது, ஒரு டிகிரி செல்சியசிலிருந்து நான்கு டிகிரி செல்சியசு வரையில், இப்போதே சூடாக உள்ள உள்ளடங்கியப் பகுதிகளான வடக்கு கேப்பில் கோடை மற்றும் வசந்த களத்தின் இறுத நாட்களில், அதிகரிக்கும் என்று கூறுகிறது. பருவநிலை மாற்றத்தினால், பல்லுயிர்மப்பெருக்கம் நிறைந்து காணப்படும் உலகின் ஒரு முக்கியமான இடமான கேப்பில் காணப்படும் தாவர இனங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது. வறட்சி, அதிகரிக்கும் காட்டுத்தீயின் வீச்சு மற்றும் நிகழ்வு, மற்றும் உயர்ந்தும் வெப்பநிலை ஆகியவை, அரிய உயிரினங்கள் பலவற்றையும் அழிவை நோக்கித் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா தனக்கேயுரிய பல உயிரினங்களுக்கும் புகலிடமாக இருக்கிறது, இவற்றில் அழிவின் அபாயத்தில் இருக்கும் கரூவில் உள்ள ஆற்று முயலும் ("புனோலாகஸ் மாண்டிகுல்லரிஸ்" ) ஒன்று. ஏராளமான மூலவளங்கள் இருப்பு, நன்கு வளர்ச்சியடைந்த நிதிநிலை, சட்டம், தகவல்தொடர்பு, ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறை, உலகிலேயே முதல் இருபதில் ஒன்றாக உள்ள பங்கு மாற்றகம், மற்றும் இருக்கின்ற நகர்ப்புறங்கள் முழுவதிற்குமாக நுகர்பொருட்களை திறன்மிக்க முறையில் விநியோகிப்பதற்கு நவீன உள்கட்டமைப்பு, ஆகியவற்றோடு ஐநா வகைப்படுத்தலின்படி தென்னாப்பிரிக்கா, நடு-வருமான நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டுவரை மொ.உ.உ (பிபிபி) வகையில் உலகில் 25வது நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னேறிய வளர்ச்சி நான்கு பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த விதத்தில் இருக்கிறது: கேப் டவுன், போர்ட் எலிசபெத், டர்பன் மற்றும் பிரிட்டோரியா/ஜோகானஸ்பேர்க். இந்த நான்கு பொருளாதார மையங்களுக்கும் அப்பால் முன்னேற்றம் சிறிதளவே காணப்படுவதோடு அரசு முயற்சிகள் இருப்பினும் வறுமையே நிலவுகிறது. இதன் விளைவாக பெரும்பாலான தென்னாப்பிரிக்கர்கள் ஏழ்மை நிலையிலேயே இருக்கின்றனர். இருப்பினும், முக்கியமான பகுதிகளில் சமீபத்தில் விரைவான வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளாவன, மோஸல் விரிகுடாவிலிருந்து பிளாட்டெண்பெர்க் விரிகுடா; ரஸ்டன்பெர்க் பகுதி; நெல்ஸ்புருட் பகுதி; புளோயம்ஃபோண்டெய்ன்; கேப் மேற்குக் கடற்கரை; மற்றும் குவாசூலு-நடால் வடக்குக் கடற்கரை ஆகும். வேலைவாய்ப்பின்மை உச்சநிலையில் இருக்கிறது என்பதுடன் வருமான சமனின்மை ஏறத்தாழ பிரேசிலுக்கு சமமாக இருக்கிறது. 1995–2003 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமான வேலைகள் குறைந்து அதிகாரப்பூர்வமற்ற வேலைகள் அதிகரித்தன; ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை நிலை மோசமடைந்தது. 1995 மற்றும் 2000 ஆம் ஆண்டிற்கு இடையே குறிப்பிடத்தகுந்த அளவில் சராசரி தென்னாப்பிரிக்க வீட்டு வருமானம் குறைந்தது. இனவாத சமனின்மை என்னும் கோட்பாட்டை எடுத்துக்கொண்டால், தென்னாப்பிரிக்க புள்ளிவிவர அமைப்பு, 1995 ஆம் ஆண்டில் சாமானிய வெள்ளையின குடும்பத்தினர், சாமானிய கறுப்பின குடும்பத்தினரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான வருமானத்தை ஈட்டினர். 2000 ஆம் ஆண்டில் சாமானிய வெள்ளையின குடும்பத்தினர், சாமானிய கறுப்பின குடும்பத்தவர்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிக வருமானம் பெற்றனர் என்று கூறுகிறது. கறுப்பருக்கு பொருளாதார அதிகாரம் என்ற ஒதுக்கீட்டு கொள்கை, கறுப்பர்களின் பொருளாதார வளம் கூடியிருப்பதையும், அவர்களுள் தழைத்து வரும் இடைவகுப்பினரையும் காட்டுகிறது. குற்றம், ஊழல் மற்றும் ஹெச்ஐவி எய்ட்ஸ் ஆகியன நாட்டில் உள்ள மற்ற பிரச்சினைகள். வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வலுவான கட்டுப்பாட்டு முறைச் சுமையால் தென்னாப்பிரிக்கா பாதிக்கப்பட்டிருக்கிறது. பல துறைகளிலும் கால்பதிக்க அதிக தடைகளை விதிக்கும் விதமாக அரசு உரிமையுடைமை மற்றும் குறுக்கீடுகள் இருக்கின்றன.. தீவிர சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்ட்ட தொழிலாளர் சட்டநெறிமுறைகள் வேலைவாய்ப்பின்மை சுமையை அதிகரிக்கிறது.. அரசின் நீண்டகால போராட்டம் மற்றும் வெளிநாட்டு தடைவிதிப்புகளால், 1994 ஆம் ஆண்டு சீர்குலைந்த பொருளாதாரத்தையே நாடு பெற்றிருந்தது. அரசாங்கம் வெகுமக்களுக்கான கவர்ச்சிகரமான பொருளாதாரத் திட்டங்களை கைவிட்டன. பணவீக்கம் வீழ்ந்து, பொது நிதிகள் நிலைப்படுத்தப்பட்டு, சில வெளிநாட்டு மூலதனங்களும் கிடைத்தன. இருப்பினும், வளர்ச்சியானது சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொருளாதார வளர்ச்சியையும், வெளிநாட்டு மூலதனங்களையும், கட்டுப்பாடான தொழிலாளர் சட்டங்கள், தனியார்மயமாக்கம் மற்றும் தேவையில்லாத அரசாங்கச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்த அப்போதைய அதிபராக இருந்த தபோ ம்பேக்கி உறுதிபூண்டார். அவருடைய கொள்கைகள் அமைப்புரீதியான தொழிலாளர் இயக்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றன. 2004 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருளாதார வளர்ச்சி இருந்து; வேலைவாய்ப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய இரண்டுமே அதிகரித்தது. தென்னாப்பிரிக்கா இந்தக் கண்டத்திலேயே மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஆகும். தென்னாப்பிரிக்கா பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்வதுடன், சுற்றுலாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கான வருவாயும் கிடைக்கிறது. மாறுபட்ட மற்றும் வண்ணமயமான பண்பாடு, விலங்குகள் வாழ்விடங்கள் மற்றும் உயர்வாக மதிக்கப்படும் உள்ளூர் ஒயின்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். தென்னாப்பிரிக்க ரேண்ட் (இஸட்ஏஆர்) உலகில் மிக அதிகமாக வணிகம் செய்யப்பட்டு வரும் வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணயம் ஆகும். நேர மண்டலங்களினால் ஏற்படும் பரிமாற்ற இடர்களில் தற்காத்துக் கொள்வதற்கு, அந்நியச் செலாவணிகள் உடனுக்குடன் அறுதியீடு செய்யப்படும், தொடர் இணைந்த தீர்வை (சிஎல்எஸ்) எனப்படும் பதினைந்து நாணயங்களின் மேட்டிமைச் சங்கத்தில் இணைந்துள்ளது. புளூம்பெர்க் நாணய மதிப்பீடின்படி, 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ரேண்ட், அமெரிக்க டாலர்களுக்கு (யுஎஸ்டி) எதிராக உயர்செயல்திறனுள்ள பணமாக பயன்படுத்தப்பட்டது. ராண்டின் மாறுபடும் இயல்பு பொருளாதார நடவடிக்கைகளை பாதித்தது என்பதுடன், 2001 ஆம் ஆண்டில் கடுமையாக வீழ்ச்சியுற்று, ஒரு அமெரிக்க டாலர்களுக்கு 13.85 ராண்டு என்ற அளவிற்கு வந்து, பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தி, அதன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கு காரணமாக அமைந்தது. ராண்ட் மீண்டு வந்ததிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை ஒரு டாலருக்கு எதிராக 7.13 ராண்டு என்ற அளவில் வணிகம் செய்யப்பட்டது. இருப்பினும் வலுவான உள்நாட்டு பணத்தால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளானதால் ராண்டின் மதிப்பை சீர்செய்ய அரசு தலையிட வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்தனர். காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட ஏழ்மையான பக்கத்து நாடுகளிலிருந்து வந்த அகதிகள் அதிகாரப்பூர்வமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவினர். தென்னாப்பிரிக்கர்களிடையே அதிக அளவிற்கான வேலைவாய்ப்பின்மை நிலவியதாலும், தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள் பலரும் சொந்த நாட்டு மக்களின் வேலையை இந்த புலம்பெயர்ந்தவர்கள் எடுத்துக்கொள்வதாக ஓர் உணர்வு உள்ளதாலும், மேலும், தென்னாப்பிரிக்க குடிமக்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தில் மற்ற நாடுகளிலிருந்து வந்த இந்த புலம்பெயர்ந்தவர்களை தென்னாப்பிரிக்க முதலாளிகள் கட்டுமானம், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்நாட்டு சேவைத் துறைகளில் இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நிலை உள்ளதும், இந்த அகதிகள் மீதான இனவெறுப்பு உணர்வு தலைதூக்க வழிசெய்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக புலம்பெயர்ந்தவர்கள் முறைசாரா வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பலரும் மோசமான சூழ்நிலைகளிலேயே வாழ்கின்றனர் என்பதோடு, தென்னாப்பிரிக்க குடிநுழைவுக் கொள்கை 1994 ஆம் ஆண்டிலிருந்து கடுமையாக்கப்படுவது அதிகரித்தது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கப்பால் முதன்மையான பன்னாட்டு வணிகக் கூட்டாளி நாடுகள் ஜெர்மனி, அமெரிக்கா, சீனம், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகும். மக்காச்சோளம், வைரங்கள், பழங்கள், தங்கம், உலோகம் மற்றும் கனிமங்கள், சர்க்கரை, மற்றும் கம்பளி ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். இயந்திரத்தொகுதி மற்றும் போக்குவரத்து சாதனங்கள் நாட்டின் இறக்குமதி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட இடத்தைப் பிடித்திருக்கின்றன. வேதியங்கள், உருவாக்கப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியம் ஆகியவை பிற இறக்குமதிகளாகும். மின்சாரம் தயாரிப்பதற்கான தனியார் கட்டுமானத்தை ஊக்கப்படுத்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல வெற்றியடையா முயற்சிகளுக்குப் பின்னர், 2007 ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான எஸ்காம் என்ற மின்சார நிறுவனம் மின்சாரம் தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு உள்கட்டுமானமின்மைப் பிரச்சினையை எதிர்கொண்டது. இது தொழில்துறை மற்றும் நுகர்வோர்களின் தினசரி தேவைகளை நிறைவேற்றும் திறனின்றி இருந்ததுடன் நாடுதழுவிய சுழற்சிமுறை இருட்டடிப்புக்குக் காரணமானது. தொடக்கத்தில் இந்த திறனின்மைப் பிரச்சினை கோபெர்க் அணு ஆற்றல் மையத்தின் செயலிழப்பால் தூண்டப்பட்டதாக இருந்தது, ஆனால் அதிலிருந்து பொதுவான திறனின்மை என்பது அதிகரிக்கும் தேவையினால் ஏற்பட்டது என்பதே உண்மை. போதுமான அளவிற்கு மின்சார தயாரிப்பு திறனை கட்டமைத்துக்கொள்ள தவறியதற்காக இந்த நிறுவனம் பரவலாக விமர்சிக்கப்பட்டது, இருப்பினும் முடிவில் உள்கட்டுமான முதலீட்டிற்கு நிதியளிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்கான தவறு தன்னுடையது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்தப் பிரச்சினை சில மாதங்களிலேயே தீர்க்கப்பட்டது, ஆனால் தேசிய தேவை மற்றும் இருக்கின்ற திறன் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வேறுபாடு குறைவாகவே இருந்து வருகிறது (குறிப்பாக உச்சக்கட்ட நேரங்களில்) என்பதோடு மின்சார மையங்கள் நெருக்கடி நிலையில் இருக்கின்றன, அதாவது எந்தக் காரணத்திற்காக விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டாலும் மற்றொரு சுழற்சிமுறை இருட்டடிப்புக்கு வாய்ப்பிருக்கும். அரசாங்கமும் எஸ்காமும் புதிய மின்சார தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு வருகின்றன. இந்த மின்சார பயனீடு தனது நெய்யரியில் 2025 ஆம் ஆண்டிக்குள் 20,000 மெகாவாட் மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலமாக இருக்கும். தென்னாப்பிரிக்கா பெரிய விவசாயத் துறையைப் பெற்றிருக்கிறது என்பதுடன் வேளாண் பொருட்களின் மொத்த ஏற்றுமதியாளராகவும் இருக்கிறது. நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட ஆயிரம் வேளாண் கூட்டுறவுகள் மற்றும் வேளாண்தொழில்கள் இருக்கின்றன, வேளாண் ஏற்றுமதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் 8 விழுக்காட்டை உள்ளடக்கியிருக்கின்றன. வேளாண் துறை முறைசார் வேலைவாய்ப்பில் ஏறத்தாழ 10 விழுக்காட்டிற்கு பங்களிப்பு செய்கிறது, ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளோடும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடும், ஒப்பிடுகையில் இது குறைவானது என்பதுடன் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2.6 சதவிகிதம் பங்காற்றுகிறது. இருப்பினும், நிலத்தின் உலர்தன்மை காரணமாக 13.5 விழுக்காட்டை மட்டுமே பயிர் வளர்ப்பிற்குப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது, இதில் 3 சதவிகிதம் மட்டுமே அதிக திறனுள்ள நிலம். இருப்பினும் வணிகரீதியான விவசாயத் துறை நன்றாகவே வளர்ச்சியுற்றிருக்கிறது, சில நாட்டுப்புறப் பகுதியிலுள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே உயிர்வாழ்கின்றனர். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய ஒயின் தயாரிப்பாளர் என்பதுடன், சூரியகாந்தி விதைகள் உற்பத்தியில் பதினோராவது இடத்தில் இருக்கிறது. மொத்த வேளாண் தயாரிப்புகள் மற்றும் உணவுதானியங்களின் ஏற்றுமதியாளராக தென்னாப்பிரிக்கா இருக்கிறது, சர்க்கரை, திராட்சை, சிட்ரஸ், நெக்ட்ரைன், ஒயின் மற்றும் உதிரும் பழவகைகள் ஆகியவை பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களாக இருக்கின்றன. உள்நாட்டில் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்படும் பயிரான மக்காச்சோளம், ஒவ்வொரு ஆண்டும் 9 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு 7.4 மில்லியன் டன்கள் நுகரப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கால்நடைகளும் தென்னாப்பிரிக்க பண்ணைகளில் பிரபலமானவையாக இருக்கின்றன, நுகரப்படும் இறைச்சியில் இந்த நாடு 85 விழுக்காட்டை உற்பத்தி செய்கிறது. பால்வளத் துறை 4,300 பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கியிருப்பதோடு 60,000 பண்ணைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது என்பதுடன் 40,000 பேர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விவசாயத் துறை சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இவற்றில் நிலச் சீர்திருத்தம் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சந்தையின் ஒழுங்கின்மை போன்ற சில முரண்பாட்டிற்கு ஆளாகியிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டிற்குள்ளாக வெள்ளையினத்தவர்களிடமிருந்து 30 சதவிகித உற்பத்தித் திறனுள்ள பண்ணை நிலத்தை முன்பு அனுகூலமற்றிருந்த கறுப்பினத்தவர்களுக்கு மாற்றித்தரும் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. நிலச்சீர்திருத்தம் விவசாயக் குழுக்கள் மற்றும் நிலமில்லாத தொழிலாளர்கள் ஆகிய இருவராலுமே விமர்சிக்கப்பட்டது, பின்னவர்கள் மாற்றமடையும் நிலை வேகமானதாக இல்லை என்று குற்றம்சாட்டினர், முன்னவர்கள் இது இனவாத நடவடிக்கை என்று குற்றம்சாட்டினர், அத்துடன் ஜிம்பாப்வேயின் நிலச் சீர்திருத்த கொள்கை போன்றதாக மாற்றிவிடும் என்றும் தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர், இந்த அச்சம் முன்னாள் துணை அதிபரான புன்சைல் லாம்போ-சூசெக் தெரிவித்த கருத்துக்களால் தீவிரமடைந்தது.. வெளிநாட்டுப் போட்டி மற்றும் குற்றம் ஆகிய இரண்டும் இந்தத்துறைக்கு முக்கியமான இரண்டு சவால்களாக இருந்ததால் இந்தத் துறை தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டது. மற்ற வகைப்பட்ட வன்முறைக் குற்றத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசாங்கம் பண்ணைத் தாக்குதல்கள் பிரச்சினையை அதிகப்படியாக கையாளுகிறது அல்லது போதுமான முயற்சி எடுக்கவில்லை என்பதான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. நிலத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் உலகளாவிய பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் தென்னாப்பிரிக்க விவசாயத்தை பாதிக்கும் மற்றொரு பிரச்சினையாகும். தென்னாப்பிரிக்கா வழக்கத்திற்கு மாறான வகையில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பதுடன், இதன் விளைவாக மேல்மட்ட நீராதாரங்களும் குறைந்துவிட்டன. மேற்கு கேப்பின் சில பகுதிகளில் 2070 ஆம் ஆண்டிற்குள்ளாக மேல்மட்ட நீராதார விநியோகம் 60 சதவிகிதம் குறைந்துவிடும் என்பதை சில முன்கூறல்கள் நிரூபித்துள்ளன. நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சேதத்தை மீட்பதற்கு அரசாங்கம் நீண்டகால முன்னேற்றம் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது ஆகிய திட்டங்களுக்கு உதவியது. தென்னாப்பிரிக்காவின் நிலப் பயிர்களின் நிகர மதிப்பில் 36 விழுக்காடு பெரும்பான்மை வகிக்கும் மக்காச்சோள தயாரிப்பும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்மறையான விளைவுகளை எதிர்கொண்டது. கரியமில வாயு உர விளைவுகள் உடனும் அது ஆம் ஆண்டில்லாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட மதிப்பு 10 முதல் 100 மில்லியன் ராண்டுகள் வரையிலுமாக இருந்தது. ] மாறுபட்ட தோற்றுவாய்கள், பண்பாடுகள், மொழிகள் மற்றும் சமயங்களோடு தென்னாப்பிரிக்கா 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் கடைசி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அடுத்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்படும். தென்னாப்பிரிக்க புள்ளியியல் அமைப்பு, மக்களை ஐந்து இனகுழுக்களாக பட்டியலிட்டு தேர்ந்தெடுத்துக்கொள்ளக் காட்டியபோது மக்கள் அந்தப்பட்டியலின் கடைசியாக இருந்த "குறிப்பிடப்படாதது/பிற" என்ற விருப்பத்தை அலட்சியப்படுத்தியதால் அதன் முடிவுகள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன. 2009 ஆம் ஆண்டின் மையப்பகுதி மதிப்பீட்டின்படி மற்ற விருப்பங்களில் மக்கள் தெரிவு செய்தபடியாக, 79.5 சதவிகித கறுப்பு ஆப்பிரிக்கர்களும், 9.2 சதவிகித வெள்ளையினத்தவர்களும் மற்றும் 2.5 சதவிகித இந்திய அல்லது ஆசியர்கள் ஆகியோராவர். கடந்த பத்தாண்டில் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை (முக்கியமாக குடிநுழைவின் காரணமாக) அதிகரித்தது என்றாலும், 2008 ஆம் ஆண்டில் −0.501 சதவிகித (சிஐஏ மதிப்பீடு) மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகை 0.281 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று சிஐஏ மதிப்பிட்டிருக்கிறது. 3 மில்லியன் ஜிம்பாப்வேயர்கள் உட்பட சட்டத்திற்குப் புறம்பாக குடிநுழைந்த 5 மில்லியன் மக்களுக்கு வீடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்ந்து நடந்தன. மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் தங்களை ஆப்பிரிக்கர்கள் அல்லது கறுப்பினத்தவர்களாக அடையாளப்படுத்திக்கொன்டாலும், பண்பாட்டு அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் தென்னாப்பிரிக்கா ஒரே இனத்தைக் கொண்ட நாடல்ல. முக்கியமான இனக்குழுக்களாக சூலு, சோசா, பசோத்தா (தெற்கு சோத்தோ), பாப்பேடி (வடக்கு சோத்தோ), வெண்டா, த்சுவானா, த்சோங்கா, சுவாசி மற்றும் தேபெல்லே, ஆகியவை இருக்கின்றன, இவை அனைத்தும் பான்டு மொழிகளையே பேசுகின்றன. சூலு, சோசா, பாப்பேடி மற்றும் வெண்டா குழுக்கள் போன்றவை தென்னாப்பிரிக்காவையே பிறப்பிடமாகக் கொண்டவை. மற்ற இனங்கள் தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடுகளின் எல்லைகுள்ளும் பரந்து வாழ்கின்றனர்: பசோத்தா இனம் லெசோத்தோவில் உள்ள முதன்மை இனக்குழுவாகும். த்சுவானா இனம் போட்சுவானாவின் பெரும்பான்மையான இனம் ஆகும். சுவாசி இனம் சுவாசிலாந்தில் உள்ள முதன்மை இனக்குழுவாகும். தேபெல்லே இனம் ஜிம்பாப்வேயில் உள்ள மதேபெல்லேலாந்தில் காணப்படுகிறது, இங்கே அவர்கள் மதேபெல்லே எனறு அழைக்கபடுகின்றனர். இந்த தேபெல்லே மக்கள் தங்களுடைய தற்போதைய பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்ததன் மூலம் ஷாகாவின் தண்டனையிலிருந்து தப்பிக்க மிசிலிகசி என்ற போராட்ட வீரரின் கீழ் உள்கலகம் விளைவித்த சூலு சந்ததியினர் ஆவர். தெற்கு மொசாம்பிக்கில் த்சோங்கா இனம் காணப்படுகிறது, இங்கே அவர்கள் ஷங்கான் எனப்படுகின்றனர். வெள்ளை இனத்தவர்கள் இனரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு பின்வரும் பல இனக்குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்: டச்சு, ஃபிளமிஷ், போர்ச்சுகீஸ், ஜெர்மன், கிரேக்க, ஃபிரெஞ்சு ஹுகோநாட், ஆங்கிலேயர், போலிஷ், ஐரிஷ், இத்தாலியர், ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஸ். இங்கே குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் (குறைந்துவிட்டனர் என்றாலும்) யூத மக்களும் இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பான்மையினர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லித்துவேனியாவிலிருந்து வந்தவர்கள்; இருப்பினும், பின்னாளில் பிரிட்டன், முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் இஸ்ரேலிலிருந்தும் வந்தவர்களாவர். பண்பாட்டு வழியிலும், மொழிவாரியாகவும் அவர்கள் ஆப்ரிக்கானர் மற்றும் ஆங்கிலம் பேசுபவர்களாக, இவர்களில் பலரும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சந்ததியைச் சேர்ந்தவர்கள் (பார்க்க "ஆங்கிலோ-ஆப்பிரிக்கர்"), பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்துள்ள பல சிறிய சமூகங்களும் மற்ற மொழிகளைப் பயன்படுத்துவதையும் திரும்பப் பெற்றனர். வெள்ளையின மக்கள்தொகையினர் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்தலின் காரணமாக குறைந்து காணப்படுகின்றனர்; அவர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர முடிவெடுத்ததன் காரணமாக பலரும் கூறுவது, அதிகப்படியான குற்ற விகிதம் மற்றும் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளும் ஆகும். 1994 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 1,000,000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் நிரந்தரமாக வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். அதிகமான புலம்பெயர்வு விகிதம் இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்கர்கள் அல்லாத வெள்ளையினத்தவர்கள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து இந்த நாட்டில் குடியேறியுள்ளனர். உதாரணத்திற்கு, 2005 ஆம் ஆண்டில் 212 000 பிரித்தானிய குடிமகன்கள் தென்னாப்பிரிக்காவில் வாழ்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 2003 ஆம் ஆண்டில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு வரும் பிரித்தானிய குடிபெயர்ந்தவர்களின் எண்ணி்க்கை 50 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. சற்றொப்ப 20, 000 பிரித்தானியர்கள் 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். குறி்ப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வெள்ளையின ஜிம்பாப்வேயர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது, அந்த நாடு தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களால் அவர்கள் குடிபெயர்கின்றனர். சமீபத்திய வருகைகளோடு 1980 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியைத் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த அளவிற்கான வெள்ளையின ஜிம்பாப்வேயர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். இந்த சமூகத்தில் தாயக நாட்டம் மிகவும் உள்ள உறுப்பினர்கள் "வென்வீக்கள்" என்ற ஏடுகளில் அறியப்படுவதந காரணம், ரொடீசியாவில் அவர்கள் வாழ்ந்ததை நினைவு கூறுவதால். கடந்த பத்தாண்டுகளில் தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்த மற்ற பல வெள்ளையின குடியேறிகளும் இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டுகளில் அங்கோலா மற்றும் மொசாம்பிக் போன்ற ஆப்பிரிக்க காலனிகளின் பல போர்ச்சுக்கீசிய குடியேறிகள் அந்த நாடுகளின் சுதந்திரத்திற்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு வாழ வந்தவர்களாவர். போர்ச்சுக்கீசிய காலனிய வீரர்கள் மொசாம்பி்க்கில் உள்ள ஃப்ரலிமோ போன்ற எதிரிகளோடு சண்டையிட்டதிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையோடு ஆழமாக பிணைந்துவிட்டனர். இவர்களில் பலரும் நாட்டில் உணவகங்கள் மற்றும் பல்பொருள் கடைகளைத் திறந்திருக்கின்றனர். அத்துடன், 1980களிலும் 1990களிலும் குறிப்பாக போலந்து மற்றும் ஹங்கேரியிலிருந்து கிழக்கு ஐரோப்பியர் குடிபெயர்வை நிறவெறி அரசாங்கம் ஊக்கப்படுத்தியிருக்கிறது. "நிறமானவர்கள்" என்ற சொற்பதம் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகள், அந்த காலத்தில் கேப்பில் வாழ்ந்த பழங்குடியின கொய்சான், பான்டுக்கள், வெள்ளையினத்தவர்கள் (பெரும்பாலும் டச்சு/ஆப்பிரிக்கானிர்கள் மற்றும் பிரிட்டிஷ் குடியேறிகள்) ஆகியோரின் கலப்பு வம்சாவளி மக்கள் மற்றும் ஜாவானியர், மலாய், இந்தியர், மலகாசி மற்றும் ஆசிய சந்ததியினர் (பர்மியர்கள் போன்றோர்) ஆகியோரைக் குறிக்க இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையினர் ஆப்ரிக்கான்ஸ் மொழி பேசுகின்றனர். கொய்சான் என்பது இரண்டு தனித்தனியான, உடல்ரீதியான ஒற்றுமையுள்ள இரண்டு இனங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: மெல்-தோல் மற்றும் தோற்றத்தில் சிறியவர்கள். ஐரோப்பியர்களால் "ஹொடன்டாட்சு" என்று அழைக்கப்பட்ட, கோய்கோய், ஆடுமேய்க்கும் மக்கள் என்பதோடு அழிக்கப்பட்டுவிட்டனர்; ஐரோப்பியர்களால் புஷ்மென் எனப்படும் சான், வேட்டையினக் குழுக்களாவர். நிறமானவர்கள் சமூகத்திற்குள்ளாக மிகச்சமீபத்திய புலம்பெயர்ந்தோர்களும் காணப்படுகின்றனர்: முன்னாள் ரொடீசியாவிலிருந்து (இப்போது ஜிம்பாப்வே) வந்துள்ள நிறமானவர்கள்; நமீபியா மற்றும் இந்தியா மற்றும் பர்மாவிலிருந்து வந்துள்ள (ஆங்கிலோ இந்தியர்கள்/ஆங்கிலோ பர்மியர்கள்) கலப்பு வம்சாவளி புலம்பெயர்ந்தோர்கள், இந்தியா மற்றும் பர்மா விடுதலை பெற்றபோது கேப்பிற்கு வந்தவர்களாவர். தென்னாப்பிரிக்க ஆசிய மக்கள்தொகையினரின் பெரும்பான்மையானவர் இந்தியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர் (பார்க்க இந்திய தென்னாப்பிரிக்கர்கள்); இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்போது நடால் எனப்பட்ட கிழக்கு கடற்கைப் பகுதியில் சர்க்கரை ஆலைகளில் வேலை செய்வதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் சந்ததியினர் ஆவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கும் சூலுக்களுக்கும் இடைய டர்பனில் தீவிரமான கலவரங்கள் மூண்டன. சீன தென்னாப்பிரிக்கர்களும் (ஏறத்தாழ 100,000 பேர்கள்) மற்றும் வியட்நாமிய தென்னாப்பிரிக்கர்களும் (ஏறத்தாழ 50,000 பேர்கள்) இருக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் 1994 ஆம் ஆண்டிற்கு முன்பு வந்த சீன தென்னாப்பிரி்க்கர்கள் நிறமானவர்கள் என்று மறுவகைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டோரியா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக 1994க்கு முன்பு வந்த, நாட்டில் உள்ள சீன மக்கள்தொகையில் 3-5 சதவிகிதம் இருக்கும் ஏறத்தாழ 12,000–15,000 பழங்குடியின சீன குடிமகன்களால் அரசாங்கத்தின் பிஇஇ கொள்கைகளால் பலன்பெற முடிந்தது. தென்னாப்பிரிக்கா குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் மக்கள்தொகையையும் உள்ளடக்கியிருக்கிறது. அமெரிக்க அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் ஆணையம் பதிப்பித்த "2008 ஆம் ஆண்டு உலக அகதிகள் கணக்கெடுப்பின்படி" இந்த மக்கள்தொகை 2007 ஆம் ஆண்டில் 144,700 என்ற எண்ணி்க்கையில் இருந்தது. அகதிகள் மக்கள் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் 100,000க்கும் மேற்பட்டோரில் ஜிம்பாப்வேயிலிருந்து வந்தவர்கள் (48,400), காங்கோ மக்களாட்சிக் குடியரசிலிருந்து வந்தவர்கள் (24,800), மற்றும் சோமாலியாவிலிருந்து வந்தவர்கள் (12,900) ஆகியோர் உள்ளடங்கியிருக்கின்றனர். இந்த மக்கள் முக்கியமாக ஜோகானஸ்பேர்க், பிரிட்டோரியா, டர்பன், கேப் டவுன் மற்றும் போர்ட் எலிசபெத் ஆகியவற்றில் வாழ்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும் மாநகரப் பகுதிகள் 2005 ஆம் ஆண்டில் 31 விழுக்காடு கருவுற்ற பெண்களுக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் வயது வந்தோர்களிடையே 20 விழுக்காட்டினரிடம் ஹெச்ஐவி தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றால் தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவல் அபாயகரமான பிரச்சினையாக இருக்கிறது. உடலுறவின் மூலமாகவே பரவும் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பு முன்பிருந்த அதிபர் தபோ ம்பெக்கி மற்றும் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மண்டோ ஷபலாலா-சிமாங் ஆகியோரால் மறுக்கப்பட்டது, இந்த அமைச்சர் தென்னாப்பிரிக்காவில் நிகழும் பல இறப்புகள் ஊட்டச்சத்தின்மை மற்றும் வறுமையால் ஏற்படுகிறதே தவிர ஹெச்ஐவியால் அல்ல என்று வலியுறுத்தினார். 2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு வலியுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசு எய்ட்சுடன் போராடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தபோ ம்பெக்கி ஆப்பிரிக்க தேசிய காங்கிரசால் நீக்கப்பட்டு இடைக்கால அதிபராக கலேமா மொட்லாந்தே நியமிக்கப்பட்டார். மொட்லாந்தேயின் முதல் நடவடிக்கைகளுள் ஒன்று திருமதி. ஷபலாலா-சிமாங்கிற்கு பதிலாக தற்போது அமைச்சராக இருக்கும் பார்பரா ஹோஜனை மாற்றியமைத்ததே. உடலுறவு செயல்பாடு மிகுந்திருப்பவர்களையே எய்ட்ஸ் முக்கியமாக பாதிக்கிறது என்பதுடன் கறுப்பின மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும்பாலான இறப்புகள் குடும்பத்தில் வேலை செய்பவர்களுக்கே ஏற்படுவதால், இது பல குடும்பங்களும் தங்களுடைய பிரதான வருமானம் ஈட்டுபவர்களை இழப்பதற்கு காரணமாகிறது. இது பராமரிக்கவும் நிதி உதவிக்கும் அரசை சார்ந்திருக்க வேண்டிய பல 'எய்ட்ஸ் ஆதரவற்றோர்களையும்' உருவாக்கிவிடுகிறது. தென்னாப்பிரிக்காவில் 1,200,000 ஆதரவற்றோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. வயதானவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தின் இளம் உறுப்பினர்களை இழந்துவிடுவதால் தங்களுக்கான உதவியையும் இழக்கிறார்கள். 5 மில்லியன் மக்கள் இந்த நோய்த் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. மனிதனிடமிருந்து மனிதனுக்கு முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை 1967 ஆம் ஆண்டில் குரூட் ஷூர் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சையாளர் கிறிஸ்டியான் பார்னார்டால் செய்யப்பட்டது. மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்தை மாக்ஸ் தெய்லர் உருவாக்கினார், கார்மேக் எக்ஸ்ரே கணக்கிடும் வெட்டுவரைவுக்கு ஆலன் மெக்லீட் முன்னோடியாவார், பளிங்கியன்முறை எதிர்மின்னி நுண்நோக்கியியல் உத்தியை ஆரன் குலுக் உருவாக்கினார். இந்த முன்னேற்றங்கள் யாவும் நோபல் பரிசுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. மிகச்சமீபத்தில் 2002 ஆம் ஆண்டில் சிட்னி பிரென்னர் மூலக்கூறு உயிரியலில் தன்னுடைய முன்னோடி சேவைக்காக நோபல் பரிசு வென்றிருக்கிறார். மார்க் ஷட்டில்வொர்த் முந்தைய இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான த்வாட்டியை நிறுவினார், இது உலகின் முன்னணி நிறுவனமான வெரிசைனால் வாங்கப்பட்டது. உயிரித்தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பத் துறைகளிலான தொழில்களை ஊக்கப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும் தென்னாப்பிரிக்காவில் வேறு எந்த குறிப்பிடத்தகுந்த நிறுவனங்களும் நிறுவப்படவில்லை. இருப்பினும், உற்பத்தியில் கிழக்கத்திய நாடுகளோடு தென்னாப்பிரிக்காவால் போட்டியிட முடியாது என்பதும், தன்னுடைய கனிம வளங்கள் நிரந்தரமானவை என்று இந்தக் குடியரசு நம்பியிருக்க முடியாது என்ற கூற்றுக்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை உயர் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கைகொள்ளும்படி மாற்றியமைக்கச் செய்ய நினைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் வெளிப்படையானதாக இருக்கிறது. விரைவாக விரிவடைந்துவரும் வானியல் சமூகத்தையும் தென்னாப்பிரிக்கா உருவாக்கி வருகிறது. இது தெற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொலைநோக்கியைப் பெற்றிருக்கிறது, இது தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரிய தொலைநோக்கி. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சதுர கிலோமீட்டர் அணி திட்டத்திற்கான தடம்காண்பானாக கரூ அணி தொலைநோக்கியை தற்போது தென்னாப்பிரிக்கா உருவாக்கி வருகிறது. தென்னாப்பிரிக்கா சதுர கிலோமீட்டர் அணியின் இறுதிசெய்வானாகவும், ஆஸ்த்திரேலியா விருந்தினர் நாடாகவும் இருக்கும். பல்லினப் பன்மைய நாடாக தென்னாப்பிரிக்கா இருப்பதால் இங்கே "ஒற்றை" பண்பாடு என்று ஒன்றில்லை என்று வாதிடலாம். இன்று பல பண்பாடுகளிலிருந்தும் வந்துள்ள உணவுப் பன்மையத்தால் எல்லோராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுடன் பெரிய அளவில் தென்னாப்பிரிக்க சமையல் வகைகளை சுவைக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளிடத்தில் இது சந்தைபடுத்தப்படுகிறது. உணவுக்கும் மேலாக இசை மற்றும் நடனம் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க சமையல் சற்றே இறைச்சி சார்ந்தது என்பதுடன் "பிராய்" அல்லது பெர்பெகு எனப்படும் தென்னாப்பிரிக்க சமூக கூட்டுசேர்தலுக்கு வித்திட்டு இருக்கிறது. ஸ்டெலன்போஷ், ஃபிரான்ஸ்சோக், பார்ல் மற்றும் பாரிடேல் ஆகிய பள்ளத்தாக்குகளைச் சுற்றி இருக்கும் திராட்சைத் தோட்டங்களுடன், தென்னாப்பிரிக்கா முக்கியமான ஒரு ஒயின் தயாரிப்பு நாடாக வளர்ந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இசையிலும் பெரும் நாட்டம் காணப்படுகிறது. நிறவெறிக் காலகட்டதின்போது ஆப்ரிகான்ஸ் அல்லது ஆங்கிலப் பாடல்களைப் பாடிய பல கறுப்பின இசைக்கலைஞர்களும் தற்போது பாரம்பரிய ஆப்பிரிக்க மொழியில் பாடத்தொடங்கியிருக்கின்றனர் என்பதோடு குவைதோ எனப்படும் பிரத்யேக பாணியையும் உருவாக்கியிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்தது ஆங்கிலத்தில் பாடப்பட்ட தன்னுடைய "வீக்கெண்ட் ஸ்பெஷல்" என்ற பாடலால் புகழ்பெற்ற பிரெண்டா ஃபாஸி ஆவார். லேடிஸ்மித் பிளாக் மம்பாஸா உள்ளிட்டோர் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களாவர், அதேசமயத்தில் சுவெதோ ஸ்ட்ரிங் குவார்ட்டர் ஆப்பிரிக்க மணத்தோடு பாரம்பரிய இசையை நிகழ்த்துகிறது. வெள்ளையின மற்றும் நிறமான தென்னாப்பிரிக்க பாடகர்கள் ஐரோப்பிய இசை பாணியால் வரலாற்றுப்பூர்வமான தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா உலகப் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர்களையும் உருவாக்கியிருக்கிறது, இவர்களுள் ஹ்யு மஸக்கேலா, ஜோனாஸ் குவாங்குவா, அப்துல்லா இப்ராஹிம், மிரியம் மகேபா, ஜொனாதன் பட்லர், கிரிஸ் மெக்கிரேகர் மற்றும் சதிமா பியா பென்ஜமின் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆப்பிரிக்கானிய இசை பல்வேறு வகையினங்களையும் உள்ளடக்கியிருக்கிறது, அவை தற்காலத்திய ஸ்டீவ் ஹாஃப்மேயர் மற்றும் பன்க் ராக் இசைக்குழுவான ஃபோகோபோலிஸிகர் போன்றவை. வெரிட்டி (இசைத்துறையிலான புத்துருவாக்கத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது) போன்ற கலப்பு கலைஞர்கள் மற்றும் ஜானி கிளெக் மற்றும் அவருடைய இசைக்குழுக்கள் ஜுலுகா மற்றும் சவுகா போன்றவை பல்வேறு வெற்றிகளை நிழலுலகம், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் பெற்றிருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பெரும்பான்மையினர் பெரும்பாலும் ஊர்ப்புறத்தில் வசிக்கும் நிலையில், பெருமளவிற்கு ஏழ்மையான வாழ்நிலையிலேயே இருகிறார்கள். இந்த மக்களிடையே தான் பண்பாட்டு வழிமுறைகள் வலுவாக வாழ்கின்றன; கறுப்பினத்தவர்கள் நகர்மயமாவது மற்றும் மேற்கத்தியமயமாவது ஆகியவை பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகளை வீழ்ச்சியுறச் செய்வதாக இருக்கிறது. நகர்ப்புற கறுப்பினத்தவர்கள் தங்களுடைய சொந்த மொழிக்கும் மேலாக ஆங்கிலம் அல்லது ஆப்பிரிக்கானை பேசுகின்றனர். பதினோரு அதிகாரப்பூர்வ மொழிகளுக்குள் வராத ஆனால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, மற்ற எட்டு மொழிகளுக்குள் வரும் கொய்சான் மொழிகள் பேசும் சிறிய ஆனால் இப்போதும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் உள்ள இனங்களும் இருக்கின்றனர். அழிந்துவரும் மொழிகளைப் பேசும் சிறிய இனங்களும் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வமான தகுதியைப் பெறாத கொய்-சான் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்; இருப்பினும், தென்னாப்பிரிக்காவிற்குள்ளாகவே இருக்கும் சில குழுக்கள் அவற்றின் பயன்பாடு மற்றும் புத்துயிர்ப்பிற்கு முயற்சிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பான்மை வெள்ளையினத்தவர் என்றாலும், தற்போது கறுப்பினத்தவர், நிறமானவர்கள் மற்றும் இந்திய இனத்தவர் என்று இவர்களும் அதிகப்படியாக இந்த வர்க்கத்தில் சேர்ந்து மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் மக்களின் வாழ்கைமுறையை ஒத்து வாழ்கின்றனர். நடுத்தர வர்க்க உறுப்பினர்கள் உலகின் சந்தையோடு பெரிய அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வெளிநாட்டிலேயே படித்துவி்ட்டு பணிபுரிகின்றனர். இந்திய சந்ததியைச் சேர்ந்த ஆசியர்கள், தங்களுடைய சொந்த பண்பாடு, பாரம்பரியம், மொழிகள் மற்றும் சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை கிறிஸ்துவ, இந்து அல்லது சன்னி முஸ்லிமாக இருப்பது மற்றும் இந்தி, தெலுங்கு, தமிழ் அல்லது குஜராத்தி போன்றவற்றை மிகக் குறைவாகப் பேசி இந்திய மொழிகளை தக்கவைத்திருப்பது, ஆகியவற்றின்மூலம் தக்கவைத்துக்கொண்டும், பெரும்பான்மை இந்தியர்கள் தங்களுடைய தாய்மொழியை புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாகவும் வாழ்கின்றனர். முதல் இந்தியர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக நடாலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக புகழ்பெற்ற ட்ருரோ கப்பலில் வந்தவர்களாவர். தென்னாப்பிரிக்காவில் மிகக் குறைவான சீன சமூகம் இருக்கிறது, இருப்பினும் இதனுடைய எண்ணிக்கை சீனக் குடியரசிலிருந்து வந்க புலம்பெயர்வாளர்களின் காரணமாக அதிகரித்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா சாரணர் இயக்கத்திலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது, 1890 ஆம் ஆண்டில் ராணுவ அதிகாரியாக ராபர்ட் பேடன்-பவல் (சாரண நிறுவனர்) இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பல பாரம்பரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. தென்னாப்பிரி்க்க சாரணர் கூட்டமைப்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தனது கதவுகளைத் திறந்த முதல் இளைஞர் அமைப்புக்களுள் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் ஆண்டில் "குவோ வாதிஸ்" எனப்படும் மாநாட்டில் நடைபெற்றது. 1980-களின் நடுப் பகுதியில் உருவாக்கப்பட்ட "குவைதோ" தென்னாப்பிரிக்காவின் புதிய இசை வடிவமாகத் திகழ்ந்து, இது உருவாக்கப்பட்டதிலிருந்து இந்த மக்களிடையே இது மிகவும் பிரபலமான சமூக பொருளாதார தாகங்களை வெளிப்படுத்துவதாக இருந்து வருகிறது. இருப்பினும் சிலர் குவைதோவின் அரசியல் அம்சங்கள் நிறவெறி நீக்கப்பட்டதிலிருந்து குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அரசியல் மீதான மக்களின் ஈடுபாடு நாளாந்த வாழ்க்கையின் குறைந்துபட்ட அம்சமாக ஆகிவிட்டது என்றும் வாதிடுகின்றனர். அரசியல் ஆழம் இல்லா நடவடிக்கைகளில் போராட்ட ஆற்றல் காட்டும் ஒரு அரசியல் சக்தி குவைதோ என்றும் சிலர் வாதிடுகின்றனர். இன்று சோனி, பிஎம்ஜி மற்றும் இஎம்ஐ போன்ற பெரிய நிறுவனங்கள் குவைதோ இசையை உருவாக்கி விநியோகிப்பதற்கான நோக்கத்தோடு தென்னாப்பிரிக்காவில் காணப்படுகின்றன. மிகுதியான இதன் பிரபலத்தின் காரணமாகவும், நாட்டில் இருக்கும் முதல் ஐந்து தாக்கமேற்படுத்தும் சமூகமாகத் திகழும் டிஜேக்களிடம் இதற்கு இருக்கும் செல்வாக்கு காரணமாகவும், குவைதோ, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இதழ்களில் இடம்பிடித்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிறித்தவர்கள், மக்கள்தொகையில் 79.7 விழுக்காட்டினராக இருக்கின்றனர். இதில் சியான் கிறித்தவர்கள் 11.1 விழுக்காடு, பெந்தகோஸ்தல் (கரிஸ்மேட்டிக்) 8.2 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர் 7.1 விழுக்காடு, மெத்தோடிஸ்ட் 6.8 விழுக்காடு, டச்சு மறுசீரமைப்பு 6.7 விழுக்காடு, ஆங்கிலிக்கன் 3.8 விழுக்காடு மற்றும் பிற கிறித்தவர்கள் 36 விழுக்காடு உள்ளிட்டிருக்கிறது. மக்கள்தொகையில் இஸ்லாமிய சமயத்தினர் 1.5 விழுக்காடு இருக்கின்றனர், இந்துக்கள் 1.3 விழுக்காடு மற்றும் யூதர்கள் 0.2 விழுக்காடு இருக்கின்றனர். 15.1 விழுக்காட்டினர் சமய சார்பு எதுவுமின்றி இருக்கின்றனர், 2.3 விழுக்காட்டினர் பிறர் என்பதாகவும், 1.4 விழுக்காட்டினர் எதுவும் குறிப்பிடப்படாமலும் இருக்கின்றனர். ஆப்பிரிக்க பழங்குடியின தேவாலயங்கள் கிறித்துவக் குழுக்களிடைய இருப்பதிலேயே மிகப்பெரியதாகும். அமைப்புரீதியாக்கப்பட்ட சமயத்தோடு சேர்ந்திராதவர்களாக இருக்கும் இவர்களில் பலரும் பாரம்பரியமான பழங்குடியின சமையத்தோடு சேர்ந்திருப்பவர்களாக கருதப்படுகின்றனர். மக்களில் பலரும் கிறித்துவம் மற்றும் பழங்குடியின தாக்கங்கள் கலந்த சமய சடங்குகளை ஒருங்கிணைத்துக்கொண்டவர்களாக காணப்படுகின்றனர். காலனிய காலகட்டத்திற்கு முன்பாக, கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த சூலு, சுவாசி மற்றும் சோசா பழங்குடிகள் இஸ்லாம் சமயம் குறித்து அறிந்திருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தோனேஷிய தீவுக்கூட்டத்திலிருந்து (கேப் மலாய்கள்) அடிமைகளாக வந்தவர்களின் சந்ததியினரான, மேற்கு கேப்பில் உள்ள பல தென்னாப்பிரிக்க இஸ்லாமியர்கள் "நிறமானவர்கள்" என்று விவரிக்கப்படுகின்றனர். இந்தியர்களாக விவரிக்கப்படும் மற்றவர்கள், குறிப்பாக குவாசூலு-நடாலில் தெற்கு ஆசியாவிலிருந்து வணிகம் செய்வதற்காக வந்தவர்களை முன்னோர்களாகக் கொண்டவர்கள் உட்பட்; ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலிருந்து வரும் கறுப்பின மற்றும் வெள்ளையின தென்னாப்பிரிக்க மதமாற்றத்துக்குள்ளானவர்களும் இணைந்துவிட்டனர். இந்த நாட்டில் சமயம் மாறுவதன் மூலம் வேகமாக வளர்ந்துவரும் சமயமாக இஸ்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது, 1991 ஆம் ஆண்டில் 12,000 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2004 ஆம் ஆண்டில் 74,700 என்ற எண்ணிக்கைக்கு கறுப்பின இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கிறது. இந்து சமயம் முக்கியமாக பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முன்னதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டாலும், பின்னாளில் இந்தியாவிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற புலம்பெயர்வு குறிப்பிடத்தகுந்த இந்து மக்கள்தொகையினருக்கு காரணமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான இந்துக்கள் இனரீதியில் தெற்காசியர்கள், ஆனால் கலப்பு இனத்திலிருந்து வந்த பலரும் இஸ்கான் போன்ற இந்து மிஷனரிகளின் முயற்சிகளால் மதம் மாறியவர்களும் இருக்கிறார்கள். சிறிய எண்ணிக்கைகளில் உள்ள பிற மதங்கள் சீக்கியம், ஜைனம் மற்றும் பஹாய் நம்பிக்கை. தென்னாப்பிரிக்கா ஏழு அதிகாரப்பூர்வ மொழிகளைக் கொண்டிருக்கிறது: ஆப்பிரிக்கானம், ஆங்கிலம், தேபெல்லே, வடக்கு சோத்தோ, சோத்தோ, சுவாசி, த்சுவானா, த்சோங்கா, வெண்டா, சோசா மற்றும் சூலு. இந்த வகையில் இது பொலியாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக மூன்றாவதாக வரும். எல்லா மொழிகளும் சட்டப்படி ஒரேநிலையில் இருக்கையில் சில மொழிகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிகப்படியாக பேசப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தாய்மொழியாய்ப் பேசப்படும் முதல் மூன்று மொழிகள் சூலு (23.8%), சோசா (17.6%) மற்றும் ஆப்பிரிக்கானம் (13.3%) ஆகும். வணிகம் மற்றும் அறிவியலுக்கான மொழியாக ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இது 2001 ஆம் ஆண்டில் 8.2% தென்னாப்பிரிக்கர்களால் மட்டுமே பேசப்பட்டது, இது 1996 ஆம் ஆண்டைவிட (8.6 சதவிகிதம்) குறைவு. இந்த நாடு எட்டு அதிகாரப்பூர்வமற்ற மொழிகளையும் அங்கீகரித்திருக்கிறது: ஃபனகாலோ, கோயே, லோபெது, நமா, வடக்கு தேபெல்லே, ஃபுத்தி, சான் மற்றும் தென்னாப்பிரிக்க சைகை மொழி. இந்த அதிகாரப்பூர்வமற்ற மொழிகள், பன்மையமாய் இருக்கிறது என்று தீர்மானிக்கப்படுகின்ற வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சில அதிகாரப்பூர்வ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், அவர்களின் மக்கள்தொகை காரணமாக அவை நாடு முழுவதிற்குமான அங்கீகாரத்தைக் கோருவதில்லை. சான் மற்றும் கோய்கோய் மக்களின் "அதிகாரப்பூர்வமற்ற மொழிகள்" பலவும் நமீபியா மற்றும் போஸ்ட்வானாவை நோக்கிச் செல்லும் வடக்குப்பிரதேச பேச்சுமொழிகளை உள்ளிட்டதாக இருக்கிறது. மற்ற ஆப்பிரிக்கர்களிடமிருந்து உடல்ரீதியில் தனித்து இருக்கும் இந்த மக்கள் தங்களுடைய வேட்டைக் குழு சமீகங்களின் அடிப்படையில் தங்களுக்கேயுரிய பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரிய அளவில் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர் என்பதோடு அவர்களின் மொழிகள் அழிந்துபடும் அபாயத்தில் இருக்கிறது. பல வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களும் போர்ச்சுகீஸ் (அங்கோலன் மற்றும் மொசாம்பிக் கறுப்பினத்தவர்களாலும் பேசப்படுவது), ஜெர்மன் மற்றும் கிரேக்கம் போன்ற மற்ற ஐரோப்பிய மொழிகளையும் பேசுகின்றனர், அதேசமயம் தென்னாப்பிரிக்காவில் உள்ள சில ஆசியர்களும் இந்தியர்களும் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, உருது மற்றும் தெலுங்கு போன்ற தெற்காசிய மொழிகளைப் பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி தென்னாப்பிரிக்கர்கள் பிரெஞ்சு இனத்தவர்களாக இருக்கும் பிரான்ஷ்ஹூக் போன்ற இடங்களில் இருக்கும் பிரெஞ்சு தென்னாப்பிரி்க்கர்களால் இப்போதும் பரவலாக பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்க பிரெஞ்சு மொழி 10,000க்கும் குறைவான தனிநபர்களால் பேசப்படுகிறது. காங்கலிஸ் பிரெஞ்சும் புலம்பெயர்ந்தவர்களால் தென்னாப்பிரிக்காவில் பேசப்படுகிறது. கால்பந்து, ரக்பி யூனியன் மற்றும் கிரிக்கெட் போன்றவை தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கள். குறிப்பிடத்தகுந்த ஆதரவுடன் ஆடப்படும் மற்ற விளையாட்டுக்கள் நீச்சல், தடகள ஆட்டம், கால்ஃப், குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் நெட்பால் ஆகியன. இளைஞர்களிடையே மற்ற விளையாட்டுக்களைத் தொடர்ந்து கால்பந்தாட்டமே முன்னிலையில் இருக்கிறது என்றாலும் கூடைப்பந்து, சர்ஃபிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் போன்ற மற்ற விளையாட்டுக்களும் பிரபலமடைந்து வருகிறது. ஜேகப் மெட்லாலா, உயானி புங்கு, வெல்கம் சிதா, தின்ஜான் தோப்லா, கெர்ரி கூட்ஸி மற்றும் பிரைன் மிட்செல் ஆகியோர் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்களாவர். லூகாஸ் ரெபே மற்றும் ஃபிலிமோன் மஸிங்கா (இருவரும் முன்னாள் லீட்ஸ் யுனைட்டடிற்காக விளையாடியவர்கள்), குவிண்டோன் ஃபார்ச்சுன் (அட்லெடிகோ மேட்ரிட் மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட்), பென்னி மெக்கார்த்தி (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம், எஃப்.சி. போர்டோ மற்றும் பிளாக்பர்ன் ரோவர்ஸ்), ஆரன் மகோனா (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம், பிளாக்பர்ன் ரோவர்ஸ் மற்றும் போர்ட்ஸ்மவுத்), டெல்ரான் பக்லே (பொரூசியா டார்ட்மண்ட்) மற்றும் ஸ்டீவன் பியேநர் (அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் மற்றும் எவர்டான்), முக்கியமான வெளிநாட்டு கிளப்களில் விளையாடிய கால்பந்து வீரர்கள் ஆவர். 1979 ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் மோட்டார் பந்தய உலகச் சாம்பியன் ஜோடி ஷெக்டரை தென்னாப்பிரிக்கா வழங்கியிருக்கிறது. ஹெர்ஷெல் கிப்ஸ், கிரேமி ஸ்மித், ஜாக் காலிஸ், ஜேபி டுமின் இன்னபிறர் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாவர். இவர்களில் பெரும்பாலோனோர் இந்திய பிரிமியர் லீக்கில் பங்கேற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா பல்வேறு உலகத்தரம்வாய்ந்த ரக்பி வீரர்களையும் உருவாக்கியிருக்கிறது. அவர்கள், பிரான்கஸ் பயினார், ஜுஸ்ட் வான் டெர் வெஸ்தூஸன், டேனி கிரேவன், ஃப்ரிக் டு பிரீஸ், நாஸ் போதா மற்றும் பிரைன் ஹபானா. 1995 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கோப்பையை முதல் முயற்சியிலேயே தென்னாப்பிரிக்கா வென்றது, பிரான்சில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. நிறவெறிக் கொள்கை முடிவுற்றது முதல் 1995 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாப்பிரிக்கா விளையாட அனுமதிக்கப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கோப்பை 1996 ஆம் ஆண்டு தேசங்களின் ஆப்பிரிக்க கோப்பையை நடத்தியதன் மூலம் பெற்றது. இந்தப் போட்டியில் தேசிய அணியான 'பஃபானா பஃபானா' வென்றது. இது 2003 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையையும், 2007 ஆண்டு உலக டிவெண்டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தினர். 2010 பிஃபா உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியது. இது ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியாகும். 2004 ஆம் ஆண்டில் ரோலண்ட் ஷூமன், லிண்டன் ஃபெர்ன்ஸ், டேரியன் டவுன்சண்ட் மற்றும் ரைக் நீத்லிங் அடங்கிய நீச்சல் அணி ஏதென்சில் நடந்த 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 4x100 ஃப்ரீஸ்டைல் தொடர் சாதனையை அடுத்தடுத்து முறியடித்தார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் பென்னி ஹெய்ன்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். கால்ப் ஆட்டத்தில் கேரி பிளேயர் எல்லா காலத்திற்குமான சிறந்த கால்ப் ஆட்டக்காரராக குறிப்பிடப்படுகிறார், இவர் கேரியர் கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள ஐந்து விளையாட்டு வீரர்களுள் ஒருவராவார். பாபி லாக், எர்னி எல்ஸ், ரெடிஃப் கூஸன் மற்றும் டிராவர் இம்மல்மேன் ஆகியோர் முக்கியமான போட்டிகளை வென்ற பிற தென்னாப்பிரிக்க கால்ப் ஆட்டக்காரர்களாவர். தொடக்கநிலைப் பள்ளிகள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு கல்வியளிப்பவையாக இருக்கின்றன. நிறவெறிக்காலகட்டத்தில் கறுப்பின மக்களுக்கான பள்ளிகளுக்கு பாகுபாடுகளாக, போதிய நிதி வழங்காமல் இருத்தல் மற்றும் "பான்டுக் கல்விமுறை" என்ற வெறும் கூளித்தொழிலார்களை மட்டும் உருவாக்கும் தனி கல்வி முறை செயல்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பயிற்சிகள் ஆபிரிக்கான மொழியிலும் அளிக்கப்படுகிறது. 2002-05 ஜிடிபியில் கல்வி மீதான பொதுச் செலவினம் 5.4 விழுக்காடாக இருந்தது. ஐக்கிய நாடுகளால் தொகுக்கப்பட்ட 1998–2000 ஆம் காலகட்டத்திற்கான கணக்கெடுப்பின்படி தென்னாப்பிரிக்கா கொலைகளில் முதலாவதாகவும், வன்முறைகள் மற்றும் கற்பழிப்புகளில் இரண்டாவதாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாளும் தென்னாப்பிரிக்காவில் 52 பேர் கொல்லப்படுவதாக காட்டுகின்றன. ஒரு வருடத்திற்கு தெரிவிக்கப்பட்ட கற்பழிப்பு எண்ணிக்கை, 55,000 என்ற அளவில் இருக்கிறது, என்பதுடன் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் கற்பழிப்புகள் ஆண்டிற்கு 500,000 என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த குற்ற விகிதத்தில் தரவுத் தொகுப்பில் 60 நாடுகளில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் பிறக்கும் ஒரு பெண் படிக்கக் கற்றுக்கொள்வதைக் காட்டிலும் கற்பழிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல், அதிகாரமளிப்பு மற்றும் வெளிப்படைச் சமூகத்தால் கேள்வி கேட்கப்பட்ட 4000 பெண்களில் மூன்றில் ஒருவர் கடந்த ஆண்டில் தாங்கள் கற்பழிப்புக்கு ஆளானதாக தெரிவித்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில்தான் உலகிலேயே சிறுபிள்ளைகள் மற்றும் குழந்தைகள் கற்பழ்ப்புக்கு ஆளாகும் விழுக்காடு அதிகப்படியாக காணப்படுகிறது. இது தொடர்பாக சொவீடோ நகரத்தில் 1500 பள்ளிக்குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நேர்காணல் செய்யப்பட்ட கால்பகுதி சிறார்கள், 'ஜேக்ரோலிங்' என்று சொல்லப்படும் குழுக்கற்பழிப்புச் செயல் ஒரு வேடிக்கையான விளையாட்டு என்று கூறினர். நடுத்தர வர்க்க தென்னாப்பிரிக்கர்கள் குடியிருப்பு சமூகங்களில் பாதுகாப்பு கோருகின்றனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த பலரும் தாங்கள் வெளியேறுவதற்கு குற்றங்களே பெரும் உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றனர். விவசாய சமூகத்திற்கெதிரான குற்றச்செயல் பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது. பல ஆப்பிரிக்க நாடுகளைப்போல், தென்னாப்பிரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளில் அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுதலை எதிர்கொண்டிருக்கிறது. இது பிரதேச பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும், சுகாதார உள்கட்டமைப்பு அதிகம் தேவைப்படும் பெரும்பான்மையான மக்களின் நல்வாழ்வை நோக்கும்போதும், குறிப்பிட்டு ஹெச்ஐவி/எய்ட்ஸ் பரவலை நோக்கும்போதும், இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் திறமைகள் வெளியேறுவதில், இனவடிப்படை உள்ளதென்று நிரூபிக்கும் வகையில், (இயல்பாகவே தென்னாப்பிரிக்காவின் திறமைகள் எங்கே உள்ளது என்று நோக்கும் பொது) பெரும் அளவில் தென்னாப்பிரிக்க சமூகத்தினர் அயல்நாட்டில் குடியேறுவதற்கு காரணமாகிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கெதிராக இருந்த நீண்டகால பகைமை, 100 பேரின் சாவு மற்றும் 100,000 பேரின் இடம்பெயர்வுக்கு காரணமான அமைந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ("Dalit Panthers or Viduthalai Siruthikal katchi") தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார். இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார். தமிழகத்தின் 13 ஆவது சட்டமன்றத்தில், இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் டி. இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். இந்தியா 2020 இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதற்கான ஒரு திட்டமே இந்தியா 2020. அப்துல் கலாம், ய. சு. ராஜன் மற்றும் பலரின் சிந்தனையில், வழிகாட்டலில் இந்திய இளைஞர்களுக்குரிய ஒரு சவாலாக, கடமையாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வருணன் வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன். உலகம் முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவனாகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர் சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான். அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் கண்கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன. ஆரம்பகாலத்தில் இப் பிரபஞ்சம் முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் வேதகாலத்தின் பிற்பகுதிகளில் இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம். நெய்தல் எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பழையர் பரதவர் எனப்படும் குடிமக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் கடல் தெய்வத்துக்குக் காணிக்கையாகச் சொரிந்து வழிபட்டனர். யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய மாதவி கோவலன் அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள். காந்தம் காந்தம் "(magnet)" (கிரேக்கம் "magnḗtis líthos", "மகனீசியக்கல்" என்பது காந்தப் புலத்தை உருவாக்கும் பொருளாகும். இந்தக் காந்தப் புலம் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் காந்தத்தின் குறிப்பிடத்தகுந்த இயல்பான காந்த விசைக்குப் பொறுப்பாகிறது: காந்தவிசை இரும்பைப் போன்ற இரும்பியல்காந்தப் பொருள்களை இழுக்கிறது.மேலும், மற்ற காந்தங்களை ஈர்க்கிறது அல்லது விலக்குகிறது. நிலைக்காந்தம் "(permanent magnet)" என்பது காந்தமுற்று நிலயான காந்தப் புலத்தை தரவல்ல பொருளால் செய்ததாகும். அன்றாட வாழ்க்கை எடுத்துகாட்டாக, உறைபதனக் காந்த்த்தைக் கூறலாம். இது உறைபதனியின் கதவில் குறிப்புகளைப் பிடித்துவைக்க உதவுகிறது. சிலவகைப் பொருள்களுக்குக் காந்தமேற்றினால் அவை காந்தங்களை ஈர்க்கும். இத்தகைய பொருள்கள் இரும்பியல் காந்தப் பொருள்கல் அல்லது இரும்பயல் காந்தப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியனவும் அருமண் தனிமங்களின் பொன்மக் கலவைகளும் காந்தக்கல் போன்ற சில இயற்கை கனிமப் பொருள்களும் அடங்கும். காந்தப் பொருள்களாக வழக்கில் கருதப்பட்ம் அளவுக்கு இரும்பியல் பொருள்களும் இரும்பயல் பொருள்களும் மட்டுமே காந்தங்களோடு வலிவோடு ஈர்த்தாலும் காந்தப் புலத்தால் மெலிவாக ஈர்க்கப்படும் பல பிற பொருள்களும் காந்த ஈர்ப்பு வகைமைகளும் இயற்கையில் நிலவுகின்றன. இரும்பியல் காந்தங்களை மென்வகையாகவும் வன்வகையாகவும் இரண்டாகப் பிரிக்கலாம். மென்வகையைக் காந்தமேற்றினால் காந்தமாகும். ஆனால் அதில் காந்த இயல்பு நிலைத்திருக்காது. பதனாற்றிய இரும்பு இவ்வகைக்கு எடுத்துகாட்டாகும். வன்வகையைக் காந்தமேற்றினால் அதை காந்த இயல்பு நிலைத்திருக்கும். நிலைக்காந்தங்கள் வன்காந்தப் பொருள்களால் செய்யப்படுகின்றன. இதற்கு அல்நிக்கோவும், பெர்ரைட் எனும் இரும்பகிகளும் பயன்படுகின்றன. நிலைக்காந்தங்களைச் செய்யும்போது வலிய காந்தப்புலங்களுக்கு ஆட்படுத்தி, அவற்றின் அகப் படிகக் கட்டமைப்பு திசையொருங்க வைக்கப்படுகிறது. எனவே இவற்றைக் காந்தமிறக்கம் செய்தல் அரிதாகும். நிறைவுற்ற காந்த்த்தைக் காந்தமிறக்கம் செய்ய போதுமான அளவு காந்தப் புலம் தேவைப்படுகிறது. இந்த வாயில் காந்தப் புல அளவு, அந்தப் பொருளின் முரண்மை (Coercivity) அல்லது முரண்திறம் எனப்படுகிறது. வன்காந்தங்கள் உயர்முரண்மை கொண்டவை. மென்காந்தங்கள் தாழ்முரண்மை கொண்டுள்ளன. மின்காந்தம் கம்பிச் சுருளால் செய்யப்படுகிறது. இதில் மின்னோட்டம் பாயும்போது காந்தம் போலச் செயல்படுகிறது. மின்னோட்டம் நின்றுவிட்டால் காந்த இயல்பை இழந்துவிடுகிறது. வழக்கமாக இந்தக் கம்பிச் சுருள் எஃகைப் போன்ற மென்வகை இரும்பியல்காந்த அகட்டிம் மீதுசுற்றப்படுகிறது. இந்த எஃகு சுருள் விளைவிக்கும் காந்தப் புலத்தை மிகவும் செறிவாக்குகிறது காந்தத்தின் ஒட்டுமொத்த வலிமை அதன் காந்த்த் திருப்புமையால் அளக்கப்படுகிறது அல்லது அது உருவாக்கும் காந்தப் பெருக்கால் (பாயத்தால்) அளக்கப்படுகிறது. காந்த்த்தின் கல வலிமை அதன் காந்தமாக்கத்தால் அளக்கப்படுகிறது. காந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். இரும்பை ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite (FeO) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும். பண்டைய மக்கள் இரும்புத் தாதுத் துண்டுகளைக் காந்தக்கல் இயற்கையாக ஈர்ப்பதில் இருந்து கந்த இயல்பு பற்றி அறிந்திருந்தனர். இலத்தின மேக்நெட்டம் ( "magnetum"-காந்தக்கல் ) எனும் சொல்லில் இருந்து இடைக்கால ஆங்கிலம் மேக்நெட் எனும் சொல்லை உருவாக்கி கொண்டது. இந்த இலத்தீனச் சொல் கிரேக்கச் சொல்லாகிய ("magnētis [lithos]") எனும் சொல்லில் இருந்து பெறப்பட்ட்தாகும். இதன் பொருள் " பண்டிய கிரேக்கப் பகுதியாகியமகனீசியா நாட்டுக் கல்" என்பதாகும். மகனீசியாவில் காந்தக்கற்கள் பரவலாகக் கிடைத்துள்ளன. தொங்கும் காந்தக்கற்கள் காந்தவட்டின் ஊசியை திருப்பவலானவாக அமைந்தன. 2500 ஆண்டுகளுக்கு முன்பே காந்தமும் அதன் இயல்பும் பற்றிய விவரிப்புகள் கிரேக்கம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. பிளினி, முதுவல் தன் கலைக்களஞ்சியமான "Naturalis Historia" எனும் நூலில் காந்தக்கற்களின் இயல்புகள் பற்றியும் அவை இரும்பை ஈர்ப்பது பற்றியும் எழுதியுள்ளார். சீனாவிலும் ஐரோப்பாவிலும் அரேபியத் தீவகத்திலும் பிற இடங்களிலும் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் காந்தவட்டுகள் கடற்பயணத்தில் திசைகாட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. காந்தப் பெருக்கு அடர்த்தி (அல்லது B காந்தப் புலம் அல்லது வெறுமனே காந்தப் புலம் B குறியீட்டால் சுட்டப்படுகிறது) என்பது நெறியப் புலம் ஆகும்]. குறிப்பிடா வெளியின் ஒரு புள்ளியில் அமையும் B காந்தப் புல நெறியம் பின்வரும் இரண்டு இயல்புகளை பொறுத்துள்ளது: செப SI அலகுகளில், B காந்தப் புலத்தின் வலிமை தெசுலாக்களில் குறிப்பிடப்படுகிறது. காந்தம் ஒன்றின் காந்த்த் திருப்புமை (அல்லது காந்த இருமுனைத் திருப்புமை (இது வழக்கமாக μ குறியீட்டால் குறிக்கப்படும்) வடியல் நெறியம் ஆகும். இது காந்தத்தின் ஒட்டுமொத்த இயல்புகளைப் பான்மைப்படுத்துகிறதுசட்டக்காந்த காந்த்த் திருப்புமையின் திசை தெற்கு முனையில் இருந்து வடக்கு முனையை நோக்கி அமைகிறது. இதன் பருமை காந்த முனைகளின் வலிமையையும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவையும் சார்ந்துள்லது. செப( SI) அலகுகளில், காந்தத் திருப்புமை A•m (amperes times meters squared) எனும் கோவையால் குறிக்கப்படுகிறது. காந்தம் காந்தப் புலத்தை உருவாக்குவதோடு பிற காந்தப் புலங்களுக்கும் எதிர்வினை புரியும். ஒரு புள்ளியில் அமையும் காந்தப் புலத்தின் வலிமை காந்தத்தின் காந்த்த் திருப்புமையின் பருமைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் ஒரு காந்த்த்தை வேறொரு காந்தத்தால் ஏற்படும் வெளிக் காந்தப் புலத்தில் வைக்கும்போது, அது திருக்கத்துக்கு ஆட்பட்டுத் தன் காந்தத் திருப்புமையை அக்காந்தப் புலத் திசைக்கு இணையாக வைக்க முயலும். இந்தத் திருக்க அளவு வெளிப் புல வலிமைக்கும் கந்த்த் திருப்புமைக்கும் நேர்விகித்த்தில் அமையும். காந்தம் ஒரு விசைக்கு ஆட்பட்டு ஏதாவது ஒரு திசையில் நகரும். இந்தவிசை காந்தத்தின் திசைவைப்பையும் வாயிலின் திசையையும் சார்ந்திருக்கும். காந்தப் புலம் வெளிமுழுதும் சீராக இருந்தால், அது திருக்கத்துடன் நிகர விசை ஒன்றுக்கும் ஆட்படும். "A" பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் "I" மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை "IA" மதிப்புக்குச் சமம் ஆகும். காந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, M எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு A/m ஆகும். இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m காந்தத் திருப்புமையையும்a volume of 1 cm, அல்லது 1×10 m பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன. இருவேறு காந்தப் படிமங்கள் நிலவுகின்றன. இவை காந்த முனைகளாலும் அணு மின்னோட்டங்களாலும் குறிப்பிடப்படுகின்றன. நாம் மிக ஏந்தாக, காந்தத்தை வடமுனையாலும் தென்முனையாலும் குறிப்பிட்டாலும் இருமுனைகளிலும் வட, தென் துகள்கள் என ஏதும் அமைவதில்லை. எனவே முனைக் கருத்துப் படிமத்தை அப்படியே நிலவுவதாக எடுத்துக் கோள்ள முடியாது. இது காந்த முனைகளைச் சுட்டும் ஒரு குறிப்பீட்டு முறையே தவிர, காந்தத்தில் அப்படி தெளிவானவட, தென் முனைகள் ஏதும் இல்லை. ஒரு சட்டக் காந்த்த்தை இரண்டாக உடைத்தால் வடமுனையையும் தென்முனையையும் தனிதனியாகப் பிரிக்க முடியாது. மாராக இதன் விளைவாக இரண்டு தனி சட்டக் காந்தங்கல் தான் கிடைக்கும். இரண்டிலுமே வட, தென் முனைகள் அமையும். என்றாலும், தொழில்முறைக் காந்தவியலாளர்கள் நிலைக்காந்தங்களைக் குறிப்பிட காந்தமுனை அணுகுமுறையையே பயன்படுத்துகின்றனர். மின்னோட்டப் பாய்வுகளின் திசையை வலது கை விதி கூறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் ("Electronic voting machine") சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் பட்டுக்கு வந்தன. இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் எற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகி வருகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு மிகக்குறைவான அளவு ஓட்டுச்சீட்டுகளே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்பாடு குறைக்கப்பட்டது. இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு கருவி், ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும். இந்த இரு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின்னிணைப்பு வடம் (கேபிள்) மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யத்தயாராகும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் இம்முறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகின்றது. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிருபிக்கும் நிலையில் அதை சரி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று நிருபிக்கவில்லை. தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகள் இதில் பதிவு செய்யும் தகவல்களை மாற்ற முடியும் என்று காரணம் கூறி இம்முறையை ஏற்க தயங்கி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் ("Election Commission of India") இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல் : மாநிலத்தின் அளவு, தொகுதியின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் மக்களவை தொகுதிக்கு ரூ.40 இலட்சமும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ.16 இலட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று மத்தியத் தேர்தல் ஆணையம் வரம்பு விதித்துள்ளது. இந்திய உயர் நீதிமன்றங்கள் இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25"இந்திய உயர் நீதிமன்றங்கள்"' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன. வரையரை உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தண்டணை அதிகாரம் உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல்(சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும். விசாரணை அதிகாரம் கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-ன் படி விசாரணை செய்யும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214 ன் படி நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கப்படும். இவை மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும். உரிமை இயல்(சமூக நல) வழக்குகள் மாவட்ட நீதிபதியால் மேற்கொள்ளப்படும் . குற்றவியல் வழக்குகளை அமர்வு நீதிபதி மேற்கொள்வார். அமர்வு நீதிபதியே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரத்தில் உள்ள நீதிபதியாவார். உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். உயர் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்குகின்றன. இவர்களின் பதவிப்படி நிலை மாநிலத்திற்குள்ளே #14 என்றும் மாநிலத்திற்கு #17 என்றும் வழங்கப்பெற்று அழைக்கப்படுகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கை இதர நீதிபதிகளின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தேசிய சராசரி சதவிகிதம் கணக்கிட்டு அதன்படி நீதிபதிகளின் எண்ணிக்கைக் கூட்டவோக் குறைக்கவோப் படுகின்றது. பழமையானது இந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே. இது நிர்மானிக்கப்பட்டது 1862. சுற்று அமர்வு அமர்வு நீதிமன்றங்களும் மாநில, வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சிறிய மாநிலங்களில் சுழற்சி அ சுற்று அமர்வு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. இவை சுழற்சி அ சுற்று நீதிமன்றங்கள் எனப்படுகின்றது. இருபத்தினான்கு ஏக பிரதிநிதித்துவம் ஏக பிரநிதித்துவம் (sole representation) என்பது முழு ஆதிக்க, எதிர்ப்புக்கள் அற்ற, தனியுரிமை கொண்ட, மொத்த பிரதிநிதித்துவத்தையே குறிக்கும் எனலாம். ஏக என்ற சொல்லை ஆங்கிலத்தில் sole, mono, total, absolute போன்ற சொற்கள் குறித்து நிற்கின்றன. பொதுவாக, சுதந்திரமான நம்பிக்கைக்குரிய தேர்தல் மூலமே ஒரு மக்கள் குழுவை ஒரு கட்சியோ, தலைவர்களோ பிரதிநிதித்துவம் செய்ய உரிமை பெறுகின்றனர். ஏக பிரதிநித்துவம் என்பது 100 விழுக்காடு ஆதவுடன் பிரதிநிதித்துவம் செய்ய உரிமை பெறுவதென்பதாகும். உடல்சார் மானிடவியல் உடல்சார் மானிடவியல் அல்லது உயிரியல்சார் மானிடவியல் என்பது, உயிரியல்சார் பரிணாமம், பரம்பரையியல் மரபுரிமை, போன்றவற்றின் பொறிமுறைகள், மற்றும் உயர்பாலூட்டியியல், மனித பரிணாமத்தின் தொல்லுயிர்ப் பதிவுகள் முதலியவை பற்றி ஆராயும் துறையாகும். சார்லஸ் டார்வினுடைய பரிணாமக் கோட்பாடு அல்லது கூர்ப்புக் கோட்பாடு எனப்படும், இயற்கைத் தேர்வுக் கோட்பாடு, மற்றும் கிரெகோர் மெண்டலின் பரம்பரையியல் கோட்பாடு ஆகியவற்றின் தோற்றத்துக்கு முன்பே 19 ஆம் நூற்றாண்டில் உடல்சார் மானிடவியல் தோற்றம் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் (കന്യാകുമാരി ജില്ല), (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை என 4 நகரங்கள் உள்ளன. தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 டிசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது. இம்மாவட்டம் நாகர்கோயில் மற்றும் பத்மநாபபுரம் எனும் இரண்டு வருவாய் கோட்டங்களும், அகத்தீஸ்வரம் வட்டம், தோவாளை வட்டம், கல்குளம் வட்டம், விளவங்கோடு வட்டம் எனும் நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 வருவாய் பிர்காக்களும், 188 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், 55 பேரூராட்சிகளையும், 9 ஊராட்சி ஒன்றியங்களையும், 90 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. 1,684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாவட்டம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு கிள்ளியூர் தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது. சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழப் பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்களின் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு(வேணாடு), சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்குச் சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்துப் பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609-ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும், சந்தா சாகிபுவைச் சமாளிக்க முடியாததால், போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது. வேணாடு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகைத் திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர். பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பெற்றிருந்ததன் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவளப்பாறையின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறைந்ததாக இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது. இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன. இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பறளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, கடியப்பட்டணம் அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது. "முதன்மைக்கட்டுரை:பேச்சிப்பாறை அணை" இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897–1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. 1958இல் கட்டி முடிக்கப்பட்ட இவ்வணையின் கொள்ளவு 72 அடியாகும். முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது. சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகள் சிற்றாறின் குறுக்கே 1970-ல் கட்டி முடிக்கப் பட்டது. இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கடந்த 2010-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும். இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி,பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும். இம்மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், "அகஸ்தீஸ்வரமுடையாருக்கு" சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த மண்டைக்காடு கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ராஜாக்கமங்கலம, ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர். குமரிமாவட்ட காவல்துறை, காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. இவரின் கீழ் இரண்டு கூடுதல்-காவல்துறை கண்காணிப்பாளர்கள் இயங்குகின்றனர். குமரிமாவட்ட காவல்துறை நிர்வாகம், நான்கு துணைப்பிரிவுகளாக இயங்குகிறது. குமரிமாவட்டதில் கீழ்க்கண்ட ஏழு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன. கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன. கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை தமிழ் மொழியையும், பண்பாட்டையும், சமூகத்தையும் மேம்படுத்திப் பயன் பெறுவதை நோக்கமாக கொண்ட ஒரு அமைப்பே உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) ஆகும். இவ்வமைப்பு பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிலேயே இயங்குகின்றது. எனினும், உலகத் தமிழர்கள் பலரும் இணைந்து செயலாற்றுகின்றார்கள். அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (All India Forward Bloc) இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939-ஆம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போசால் துவக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942 இல் தடை செய்யப்பட்டது. 1939 இல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தார். இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸ் ஏப்ரல் 29,1939 இல் மோகன்தாசு கரம்சந்த் காந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார். பின் அனைந்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியினை மே 3, 1939 இல் தோற்றுவித்தார். இந்தக் கட்சிக்கான அறிவிப்பினை அவர் கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் பொதுமக்களிடையே அறிவித்தார். இந்தக் கட்சியினை உருவாக்கி போஸ் அதன் தலைவரானார். மேலும் எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவரானார். சூன் மாதத்தின் இறுதியில் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு மும்பையில் நடந்தது. சூலை, 1939 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் குழு உறுப்பினர்களை சுபாஷ் சந்திர போஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவராகவும், புது தில்லியைச் சேர்ந்த லால் சங்கர்லால், பொதுச் செயலாளராகவும்,மும்பையைச் சேர்ந்த பி. திரிபாதி மற்றும் குர்செத் நரிமன் ஆகியோர் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அன்னபூர்னியா மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மும்பையைச் சார்ந்த சேனாபதி பாபத், ஹரி விஷ்னு கம்னாத் பீகாரைச் சார்ந்த ஷீல் பாத்ரா யாகீ ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். மேற்கு வங்காளத்தின் கட்சிச் செயலாளராக சத்யா ரஞ்சன் பக்‌ஷி நியமனம் செய்யப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பார்வர்டு பிளாக் எனும் இதழை சுபாஷ் சந்திர போஸ் தொடங்கினார். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தனது புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டினார். சூன் 20- 22 1940 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடந்தது. அனித்து உரிமைகளும் இந்திய மக்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில்சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், எச். வி. காம்நாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சூலை 2 சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 1941 இல் வீட்டுக் காவலில் இருந்து அவர் தப்பிச் சென்றார். ஆப்கானித்தான் வழியாக் சோவியத் ஒன்றியம் சென்றார். இந்திய விடுதலப் போராட்டத்திற்காக சோவியத் ஒன்றியத்தின் உதவியை நாடினார் போஸ். ஆனால் ஜோசப் ஸ்டாலின், போஸின் கோரிக்கையை நிராகரித்தார். எனவே போஸ் ஜெர்மனி சென்றார். அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு அர்ரா, பீகாரில் ஜனவரி 12-14 1947 இல் நடைபெற்றது. எஸ். எஸ். கேவ்ஷீர் தலைவராகவும், ஷீல் பத்ரா யாகீ பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பற்றுறுதியதாளர் முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1963 இல் இறந்தார். இவரின் இறப்பினால் அதிகாரத்திற்கு வருவது யார் என்பதில் சசிவர்ன தேவர் மற்றும் பி. கே. மூக்கையா ஆகிய இருதலைவர்களிடையே பிரச்சினை எழுந்தது. இதில் பி. கே. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார். சசிவர்ன தேவர் கட்சியில் இருந்து விலகி சுப்பாசிஸ்ட் பார்வர்டு பிளாக் எனும் ஒரு புதிய கட்சியைத் துவங்கினார். முத்துராமலிங்கத் தேவரின் இறப்பினால் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.அதில் முதல் முறையாக பார்வர்டு பிளாக் கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஏ. ஈ. மனோகரன் ஏ. ஈ. மனோகரன் (இறப்பு: 22 சனவரி 2018) இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். "பொப்பிசைச் சக்கரவர்த்தி" எனப் பாராட்டுப் பெற்றவர். இவரது ரசிகர்கள் தமிழர் மட்டுமின்றி சிங்களவரும் ஆவர். இவர் பாடிய "சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா..." என்ற பாடல் இலங்கை இந்திய இரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இவர் "சிலோன் மனோகர்" என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் உள்ளார். சென்னை கந்தன்சாவடியில் வசித்து வந்த ஏ. ஈ. மனோகரன் சிறுநீரகக் கோளாறு காரணமாக, 2018 சனவரி 22 அன்று இரவு 7.30 மணியளவில் தனது 73-வது அகவையில் சென்னையில் காலமானார். சுற்றுச்சந்தி சுற்றுச்சந்தி (roundabout) என்பது சாலைச் சந்திப்பு வகைகளுள் ஒன்றாகும். இவ்வகைச் சந்திப்புகளில், மையத்தில் அமைந்துள்ள வட்டவடிவத் தீவு ஒன்றைச் சுற்றிப் போக்குவரத்து நகர்ந்து செல்லும். சந்திப்பை நோக்கி வருகின்ற வண்டிகள், தீவைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கும் வண்டிகளுக்கு வழி விட்ட பின்பே சந்திப்புக்குள் நுழைய முடியும். இக்காலத்தில் புழக்கத்திலிருக்கும் சுற்றுச்சந்திகள் அறிமுகமாவதற்கு முன்னர், போக்குவரத்து வட்டப்பாதைகள் (traffic circle) என அழைக்கப்பட்ட அளவில் பெரியவையான ஒருவகைச் சந்திப்புகள் இருந்தன. சுற்றுச்சந்திகள், போக்குவரத்து வட்டங்கள் மற்றும் வழமையான குறுக்குச்சாலைச் சந்திப்புகளைவிட பாதுகாப்பானவையாகும். ஆனாலும் சுற்றுச் சந்திகள் நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றையொத்த விரைவு வாகனப் போக்குவரத்துள்ள சாலைகளின் போக்குவரத்துக்குப் பொருத்தம் இல்லாதவையாகும். முதலாவது நவீன சுற்றுச்சந்தி, 1904 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது. எனினும், பழைய போக்குவரத்து வட்டப்பாதைகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கொள்ளளவுப் (capacity) பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, பிரித்தானியப் பொறியியலாளர்களால் அவை திருத்தியமைக்கப்பட்ட பின்பே சுற்றுச்சந்திகள் பரவலான புழக்கத்துக்கு வந்தன. சுற்றுச்சந்திகளில் மையப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மூலம் சந்திப்புக்குள் நுழைவது ஒழுங்கு படுத்தப்பட்டதனால், இது தொடர்பில் வட்டப்பாதைகளிலிருந்த குழப்பநிலை தவிர்க்கப்பட்டதுடன், நிறச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்ட சந்திப்புகளில் உள்ளது போன்ற தாமதங்களும் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டன. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஜனநாயக முற்போக்கு கூட்டணி (Democratic Pograssive Alliance) 2006 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். ! கட்சி ! தொகுதிகள் ஜனநாயக மக்கள் கூட்டணி ஜனநாயக மக்கள் கூட்டணி (Democratic People Alliance) 2006 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். ! Party ! Seats ஏப்ரல் 2006 மங்களூர் மங்களூர் () கன்னடத்தில் "மங்களூரு" துளுவில் "குட்லா" கொங்கணியில் "கொடியல்" மற்றும் பியரியில் "மைகலா"என அழைக்கடுகிறது) கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது ஒரு துறைமுக நகரமாகும். மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. இங்கு துளு,கொங்கணி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்படுகின்றன. இடைவெட்டுச் சந்தி ஒரே தளத்தில், நிலமட்டத்தில், சாலைகள் ஒன்றையொன்று சந்திக்கும் அல்லது இடைவெட்டும் இடம் இடைவெட்டுச் சந்தி (intersection) எனப்படும். மூன்று சாலைகள் ஓரிடத்தில் சந்திக்கும்போது அது முச்சந்தி எனவும் நான்கு சாலைகளின் சந்திப்பு நாற்சந்தி எனவும் அழைக்கப்படுகின்றது. முச்சந்தி என்பது தொடர்ந்து செல்லும் சாலையொன்றை இன்னொரு சாலை சந்திக்கும்போது ஏற்படும் "T" - சந்திப்பாகவோ அல்லது, மூன்று வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் "Y" - சந்திப்பாகவோ இருக்கலாம். அதுபோலவே நாற்சந்தியும் இரண்டு தொடர்ந்து செல்லும் சாலைகள் இடைவெட்டும் இடமாகவோ அல்லது நான்கு வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் இடமாகவோ இருக்கக்கூடும். நான்குக்கு மேற்பட்ட சாலைகளும் ஒரே சந்திப்பில் இடம் பெறுவதுண்டு. இடைவெட்டுச் சந்திகள், கட்டுப்பாடுகளற்ற சந்திகளாக அல்லது கட்டுப்பாட்டு ஒழுங்குகளுடன் கூடிய சந்திகளாக இருக்கின்றன. இடைமாற்றுச்சந்தி சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி [Interchange (road)] என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும். மைக்கேல் பரடே மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே. மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். இவர் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய "எலிபண்ட் அண்ட் காசில்" (Elephant and Castle) என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் (Newington Butts) என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ (George Riebau) என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது. இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பரடே அனுப்பினார். சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார். அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ் (Jane Apreece), பரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார். மைக்கேல் பாரடே ஆரம்பகாலத்தில் ஹம்ப்ரி டேவியின் உதவியாளராக பணிபுரிந்தார். பாரடே குறிப்பாக குளோரின் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்; அவர் குளோரின் மற்றும் கார்பன் ஆகியவற்றை கொண்டு இரண்டு புதிய வேதியல் கலவைகளை கண்டுபிடித்தார். வாயுக்களின் பரவலைப் பற்றிய முதல் கடினமான பரிசோதனையும் அவர் நடத்தினார், இது ஜான் டால்டன் முதலில் சுட்டிக்காட்டிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் தாமஸ் கிரஹாம் மற்றும் ஜோசப் லோஸ்மிமிட் ஆகியோரால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. பாரடே பல வாயுக்களை திரவமாக்கினார், எஃகின் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார், மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். புன்சன் பர்னரின் ஆரம்ப வடிவத்தை பாரடே கண்டுபிடித்தார்,இது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் வெப்பத்தை உண்டாக்கும் வசதியான ஆதாரமாக நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.பாரடே வேதியியல் துறையில் விரிவாகப் பணியாற்றினார், பென்சீன் போன்ற இரசாயன பொருட்கள் (அவர் ஹைட்ரஜன் பைக்கார்புரத் என அழைத்தார்) மற்றும் குளோரின் போன்ற திரவ வாயுக்களை கண்டுபிடித்திருக்கிறார்.வாயுக்களின் திரவமாக்குதல், வாயுக்கள் திரவங்களை மிக குறைந்த கொதிநிலை கொண்டிருக்கும் நீராவிகளாக மாற்றியமைக்க உதவியது மற்றும் மூலக்கூறு திரட்சியின் கருத்துக்கு இன்னும் திடமான அடிப்படையை வழங்கியது. கார்பன் மற்றும் குளோரின், C2Cl6 மற்றும் C2Cl4 ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை பாரடே 1820 ஆம் ஆண்டில் வெளியிட்டார், மேலும் அடுத்த ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார்.1810 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவினால் கண்டுபிடிக்கப்பட்ட குளோரின் க்ளேரேட் ஹைட்ரேட் தொகுப்பை பாரடே நிரூபித்தார். மின்னாற்பகுப்பின் விதிகளை கண்டுபிடிப்பதற்கும், நேர்மின், எதிர்மின், மின்முனை மற்றும் அயனி போன்ற சொற்களஞ்சியங்களை பிரபலப்படுத்துவதற்கும் பாரடே பொறுப்பாளியாக உள்ளார். மின்சாரம் மற்றும் காந்தவியல் தொடர்பான அவரது ஆராய்ச்சிகளுக்கு பாரடே புகழ்பெற்றவர்.அவரது முதல் பதிவு செய்யப்பட்ட பரிசோதனை ஏழு நாணயங்களைக் கொண்ட ஒரு வோல்டாக் குவியலைக் உருவாக்கியதாகும், ஏழு வட்டு துத்தநாகத் துணுக்குகள் மற்றும் உப்பு நீரில் கரைக்கப்பட்ட ஆறு காகித துண்டுகளால் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த குவியலோடு அவர் மக்னீசியம் சல்பேட் கலந்துவிட்டார். (அபோட்டிற்கு முதல் கடிதம், 1812 ஜூலை 12). 1821 ஆம் ஆண்டில், டேனிஷ் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் Ørsted மின்காந்தவியல் நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே,டேவி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் ஹைட் வொல்லஸ்டன் ஒரு மின்சார மோட்டார் வடிவமைக்க முயற்சித்தார்கள், ஆனால் அதில் தோல்வி கண்டனர்.பாரடே, இருவர்களுடனான பிரச்சனையைப் பற்றி பேசினார், அவர் "மின்காந்த சுழற்சியை" என்று அழைத்த இரண்டு சாதனங்களை உருவாக்கினார். இவற்றில் ஒன்று, ஒற்றைதுருவ மோட்டார் என அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான் வட்டபாதை கொண்ட சுழற்சியை அல்லது இயக்கத்தை உருவாக்கியது, அது ஒரு காந்தத்தை வைக்கப்படும் பாதரசத்தின் ஒரு நீளத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு வட்டத்தை சுற்றி வட்ட சுழற்சியை காந்த விசை மூலம் உருவாக்கப்பட்டது; வேதியியல் பேட்டரி மூலம் மின்னோட்டத்தை வழங்கினால், கம்பி பின்னர் காந்தத்தை சுற்றி சுழலும். இந்த சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்தன. பாரடே இந்த கண்டுபிடிப்பின் உற்சாகத்தில், வொல்லஸ்டன் அல்லது டேவிடனுடன் தனது கண்டுபிடிப்பை பற்றி கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவுகளை வெளியிட்டார். ராயல் சொசைட்டிற்குள் ஏற்பட்ட சர்ச்சையால் டேவியுடனான அவரது உறவில் விரிசல் ஏற்ப்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மின்காந்தவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதைத் தடுக்க மற்ற நடவடிக்கைகளுக்கு பாரடே நியமிக்கப்பட்டிருக்கலாம். 1821 ஆம் ஆண்டில் அவரது ஆரம்ப கண்டுபிடிப்பிலிருந்து, பாரடே தனது ஆய்வகப் பணியை தொடர்ந்தார், பொருட்களின் மின்காந்த பண்புகளை ஆய்வுசெய்து தேவையான அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். 1824 ஆம் ஆண்டில், பாரடே, ஒரு காந்த மண்டலம் தற்போதைய ஒரு ஓட்டத்தில் மின்னோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியுமா என்று ஆராய ஒரு படிப்பு வட்டத்தை அமைத்தார், ஆனால் அத்தகைய உறவு எதுவும் இல்லை பல கட்ட சோதனைகள் மூலம் நிருபனமானது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளி மற்றும் காந்தங்கள் மூலம் நடத்தப்பட்ட இதேபோன்ற வேலைகளைத் தொடர்ந்து இந்த சோதனையும் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தது. 1832 ஆம் ஆண்டில், மின்சாரத்தின் அடிப்படைத் தன்மையைப் பற்றி ஆராயும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகளை அவர் நிறைவு செய்தார்; மின்னாற்பகுப்பு ஈர்ப்பு, மின்னாற்பகுப்பு, காந்தவியல் ஆகியவற்றின் நிகழ்வை தயாரிப்பதற்காக "நிலையான", பேட்டரிகள் மற்றும் "விலங்கு மின்சாரம்" ஆகியவற்றை பாரடே பயன்படுத்தினார். அவர்து காலத்தின் விஞ்ஞான அபிப்பிராயத்திற்கு மாறாக, பல்வேறு "வகையான" மின்சக்தி மாயைகளை. அதற்குப் பதிலாக பாரடே ஒரே ஒரு "மின்சாரம்" மட்டும் இருப்பதாக முன்மொழிந்தார், மேலும் அளவு மற்றும் தீவிரத்தன்மை (தற்போதைய மற்றும் மின்னழுத்தம்) ஆகியவற்றின் மாறிவரும் மதிப்பீடுகள் வெவ்வேறு குழுக்களில் நிகழ்வுகளை உருவாக்கின. அவருடைய ஆராய்ச்சிகளின் முடிவில், பாரடே, மின்காந்தவியல் விசை கடத்தி வெற்று இடம் வரை நீட்டியது என்று முன்மொழிந்தார். இந்த யோசனை அவரது சக விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டது மற்றும் பின் வந்த அறிஞர்கள் அறிவியலில் அவரது கருத்தை இறுதியாக ஏற்றுக்கொண்டதை பார்க்க அப்போது பாரடே உயிரோடுடில்லை. மின்னூட்டங்கள் மற்றும் காந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் புலன் கோடுகள் மின்சார மற்றும் காந்த புலங்களைப் பார்ப்பதற்கு வழிவகுத்தன; 19 ஆம் நூற்றாண்டின் எஞ்சியுள்ள பொறியியல் மற்றும் தொழில்துறைக்கு ஆதிக்கம் செலுத்திய மின்மயமான சாதனங்களின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான பாரடேயின் கருத்தாய்வு மாதிரியானது முக்கியமானதாக இருந்தது. பன்சன் சுடரடுப்பு பன்சன் சுடரடுப்பு (Bunsen burner) என்பது எல்லாச் சோதனைச்சாலைகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும். இது சூடாக்குதல், எரித்தல், தொற்று நீக்குதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது. ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன் (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது மைக்கேல் பரடேயின் முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும். இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக மீதேன் எனும் வாயுவைக் கொண்டிருக்கும், இயற்கை எரிவளி, புரொப்பேன், பியூட்டேன் என்பன அடங்கிய திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நிலக்கரி வாயுவையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர். பன்சன் சுடரடுப்பு, ஒரு பாரமான அடியையும், அதிலிருந்து மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயையும் கொண்டது. இக் குழாயின் அடிப்பகுதியில், அடிக்குச் சற்று மேலாக வாயு வழங்கும் குழாயைப் பொருத்துவதற்கான இணைப்புகள் உள்ளன. சோதனைச்சாலை மேசைகளில் பல முனைகளைக் கொண்ட வாயு வழங்கும் இணைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இம்முனைகளில் இருந்து ரப்பர் குழாய்கள் மூலம் பன்சன் சுடரடுப்புக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பன்சன் சுடரடுப்பின் நிலைக்குத்துக் குழாயின் அடிப்பகுதியில் நுண்ணிய துளை மூலம் செலுத்தப்படும்வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளூடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக வெளிவரும் இக்கலவை எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும். சூழ்பொருளியல் சூழ்பொருளியல் (Pragmatics) என்பது, சொற்றொடரின் பொருளுக்கும், பேசுபவரின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆராயும் துறையாகும். எனவே இத்துறையில், சூழ்நிலை (context) எவ்வாறு பொருள்கொள்ளலில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சூழ்பொருளியல் பொதுவான மொழியியலின் ஒரு துணைப் பிரிவாகும். சூழ்பொருளியல், பொதுவாக உரையாடற் சூழ்நிலையில், சொற்றொடர்களாலான பேச்சுத் தொடர்களிலேயே (utterances) முக்கியமாக ஆர்வம் காட்டுகின்றது. சூழ்பொருளியலில், சொற்றொடர்ப் பொருள் (sentence meaning), பேசுனர் பொருள் (speaker meaning) ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியப்படுகின்றது. "சொற்றொடர்ப் பொருள்" என்பது சொற்றொடரால் குறிக்கப்படுகின்ற நேரடியான பொருளாகும். "பேசுனர் பொருள்" எனும்போது அது, பேசுனர் தெரியப்படுத்த விரும்பும் கருத்துருவைக் குறிக்கிறது. இன்னொரு பேசுனர் தெரிவிக்க விரும்பும் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல், "சூழ்பொருளியல் ஆற்றல்" எனப்படுகின்றது. சொற்றொடரியல் சொற்றொடரியல் அல்லது தொடரியல் ("syntax") என்பது, ஒரு சொற்றொடரில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் (clauses), அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்கள் (sentences) ஆகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. சொற்றொடரியல் விளக்கமுறை (descriptive) இலக்கணத்தை ஒழுங்குபடுத்த முயல்கிறது. சுவாமிதோப்பு பதி சுவாமிதோப்பு பதி அய்யாவழி சமயத்தின் தலைமையகமாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிகவும் முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும். பதிகள் பதிகள் அய்யாவழியின் புனிதத்தலங்களுள் மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கும் அகிலத்தில் பதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை ஐந்து ஆகும். இவை அல்லாது வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவைகளும் பதிகள் என்றே அறியப்படுகின்றன. பால பிரஜாபதி அடிகளார் பால பிரஜாபதி அடிகளார் அய்யாவழியின் தற்போதைய தலைவராக அறியப்படுகிறார். இந்து சமயத்தை போன்று அய்யாவழியும் ஒரு ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால் ஆட்சி ரீதியாக அல்லாமல் சமய ரீதியாக மட்டும் அதன் தலைவராக அடிகளார் இருக்கிறார். ஆகையால் அய்யாவழியின் மொத்த கட்டுப்பாடும் அவரின் ஆளுமைக்கு கீழ் வருவதில்லை. இவர் சுவாமிதோப்பு பதியின் தற்பொதைய பட்டத்து அய்யாவாகவும் உள்ளார். மேலும் இத்தலைமையை அய்யாவழியின் சில உட்பிரிவுகள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1992-ல் ஏற்பட்ட மண்டைக்காடு மதக்கலவரத்தின் போது அதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர் ஆவார். அதர்காக தமிழக அரசின் 2003-ஆவது ஆண்டின் மத நல்லிணக்கத்துகான கோட்டை அமீர் விருதை பெற்றார். பையன் வாரிசு பையன் வாரீசினர் தற்பொதைய தலைமைப்பதி நிர்வாகிகளாவார்கள் ஆவர்கள். இவர்கள் அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போது அய்யாவுக்கு பணிவிடை செய்ய அய்யாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பையனின் சந்ததியினர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் பால் பையன் பற்றிய எந்த குறிப்புகளும் அகிலத்தில் இல்லை. ஆனால் அருள் நூலின் பத்திரத்தில் வரும் ""பையன்மார் பத்திரம்"" என்னும் சொற்றொடர் இவர்களை குறிப்பதாக கூறப்படுகிறது. அய்யாவழி புராணம் அய்யாவழி புராணம் அய்யாவழி சமயத்தின் வழியில் நின்று பிரபஞ்ச உற்பத்தி முதல் உலகின் வரலாற்றையும் அதனுடனிணைத்து கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்கால சம்பவங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் அகிலத்திரட்டு அம்மானை ஆகும். இது அய்யாவழியின் புனித நூலாகும். பஞ்சப்பதி பஞ்சப்பதி என்பது தென்னிந்திய சமயமான அய்யாவழியின் புனித தலங்களாகும். இவை ஐந்து ஆகும். மேலும் அவதாரப்பதியும் வாகைப்பதியும் இரண்டாம் நிலை புனித தலங்களாக கருதப்படுகிறது. ஏகம் ஏகம் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் அனைத்தையும் கடந்த சக்தியாகவும் அடிப்படை ஒருமையாகவும் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் உற்பத்தி மூலமாகவும் பொருள்கொள்ளப்படும் பதமாகும். அகிலத்தின் இரண்டாம் திருவாசகத்தில் இது தெளிவு படுத்தப்படுக்கிறது. மேலும் பல பகுதிகளில் இப்பதம் பயன்படுத்தப்படுகிறது. அவதாரம் அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள். விஷ்ணுவின் பத்து அவதாரங்கள். சைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது. நிழல் தாங்கல் நிழல் தாங்கல், அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். இவை பதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளாகும். அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுள் அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவைகளெல்லாம் தாங்கல்கள் என்றே அகிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இவை பதிகளை விட அளவில் சிறியவை. மேலும், இங்கு எந்த வித சிலைகளும் இருக்காது. ‌இவை மிகத் தூய்மையுடன் பேணப்படுகின்றன. 1996- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 தாங்கல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன. இதில் முக்கிய தாங்கலாக ராஜாக்கமங்கலம் ஒற்றை தென்கன்விளை உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் (, பிறப்பு: ஜனவரி 14 1951) எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் "ஓ.பி.எஸ்" என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "டான்சி" வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார். 27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எஸ். வி. சேகர் சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். எஸ். வி. சேகர், இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும், காற்று பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி சரிசெய்தல் போன்றவற்றிலும் பட்டயம் பெற்றுள்ளார். இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார். "நாரதர்" தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விசயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, "சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது"–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார். இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார். இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார். 1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர், கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக முழுதும் வெளிநாட்டில் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட "அமெரிக்காவில் அருக்கானி" தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர். தன்னுடைய "பெரியதம்பி" நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார். நாடக சபாக்களாலும் நிறுவனங்களாலும் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை முகநூலில் பகிர்ந்ததற்காக, இவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட, 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.இதனால், தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர். பயன்பாட்டு மொழியியல் பயன்பாட்டு மொழியியல் அல்லது பயனாக்க மொழியியல் என்பது, மொழியியலின் ஒரு பிரிவாகும். இது மொழியியற் கோட்பாடுகளை உலகின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இது மொழிக் கல்வி, இரண்டாம் மொழிகற்றல் போன்ற துறைகளிலேயே அதிகம் பயன்பட்டு வந்தது. இத்துறை மொழி கற்றல் ஆய்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பவர்களுக்கும், இல்லை, இது மொழியியற் கோட்பாடுகளின் பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்குகிறது என்போருக்கும் இடையே தொடர்ச்சியான இழுபறிநிலை இருந்து வந்தது. தற்காலத்தில், மொழியியல் தொடர்பான அறிவு பல்வேறுபட்ட அறிவுத்துறைகளுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. இலக்கியம், நாட்டுப்புறவியல், அகராதியியல், சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளிலும், உளவியல், கணினி அறிவியல், நரம்பியல், தகவல் தொடர்பியல் போன்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் மொழியியலின் தேவை பெருமளவுக்கு உணரப்பட்டுள்ளது. இத்துறைகளிலான ஆய்வுகளில் மொழியியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காசி ஆனந்தன் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர். பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி சென்றார். பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான "மாமனிதர்" விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் "உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள்" உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார். குறவஞ்சி குறவஞ்சி ஒரு தமிழ் பாடல் நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர் குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் "குறவஞ்சி" என்னும் பெயர் பெற்றது. குறவஞ்சி இலக்கியம் பின்னாளில் "குறத்திப்பாட்டு" என்றும் வழங்கலாயிற்று. குறவஞ்சி பாடல் நாடகங்கள் ஆரம்பத்தில் வசதிபடைத்தோருக்காக ஆடப்பெற்றாலும் அவற்றின் மையபாத்திரங்கள் நாடோடிகள் ஆவார்கள். குறவஞ்சியில் பல விதங்கள் உண்டு. அவற்றுள் "குறத்தி குறி கூறுவதுங் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் குறவஞ்சி ஒரு பிரபல விதமாகும். குறிஞ்சி நிலத்துச் செய்திகளைக் குறவஞ்சி வருணிக்கும். சேரிவழக்கு முதலியன இதில் இடம்பெறும்". குறவஞ்சி நாடகங்கள் பற்றி ஆய்வு செய்வோரில் இந்திரா பீட்டர்சன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அண்ணமார் சாமி கதை அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்". இக்கதை இன்று வழக்கொழிந்து வரும் நிலையில் இவரின் "அண்ணமார் கதை" நூலும், இயங்குபடமும் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது. பொன்னர் சங்கர் கதை அண்ணமார் படுகளம் தாமரை நாச்சிக்கதை வீரப்பூர் கதை அலைந்துசூழ்வியல் அலைந்துசுழல் மக்களை (diaspora people), அலைந்துழல்வு (diaspora) காரணிகளை, வாழ்வியலை, வாழ்வியல் பிரச்சினைகளை ஆயும் இயலை அலைந்துசூழ்வியல் (diaspora studies) எனலாம். அலைந்துழல்வு என்பது ஒரு தேசிய இன மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சிதறுதலை குறிக்கின்றது. அலைந்துசுழல் மக்கள் அலைந்துழல்வுக்கு உட்பட்ட மக்களை குறித்து நிற்கின்றது. அலைந்துசுழல்வின் கோட்பாட்டியல் (diaspoara theory) அலைந்துசுழல்வை விளங்கிகொள்வதற்குரிய சமூக விஞ்ஞான கோட்ட்பாட்டை உருவாக்க, விபரிக்க முனைகின்றது. சந்திரயான்-1 சந்திரயான்-1 ("Chandrayaan-1" வடமொழி: चंद्रयान-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும். இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 3.8 பில்லியன் (சுமார் 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும். சந்திராயன்-1 இல் ஏற்றப்பட்டிருந்த (அமெரிக்க) நாட்டு வானியல்-விண்வெளியியல் நிறுவனம் நாசாவின் எம் 3 எனப்படும் நிலவுக் கனிமவியல் வரைவி (Moon Mineralogy Mapper), நிலவு மோதல் ஆய்வி யின் மோதலை ஆய்வு செய்தது; இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பதும விபூசன் விருதாளரும் நன்கறியப்பட்ட இந்திய அண்டவியலாளருமான சயந்து நருலிகர் கூறுகையில், நிலவில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஒரு முக்கிய திருப்புமுனை அல்ல என்றும் பொதுசன மனிதனும் இதில் ஆர்வத்துடன் இருப்பதால் இது ஓரு சுவையான கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். சந்திரயான் இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களுக்கு பிறகு எதிர்பாராத விதமாக சந்திரயானின் தரைக்கட்டுப்பாடு நிலையத்துடனான இணைப்பு துண்டித்தது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சந்திரயான் செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  10 மாதங்களே செயல்பட்டாலும் சந்திரயான் தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். சொற்பொருள் அம்சம் மொழியியலில், சொற்பொருள் அம்சம் என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்புகள் இருப்பதையோ, இல்லாதிருப்பதையோ எடுத்துக்காட்டுவதற்குப் பயன்படுகின்ற குறியீட்டு முறையைக் குறிக்கும். இங்கே நேர் (+) மற்றும் எதிர் (-) அடையாளக் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளின் (meaning) முக்கியத்துவம் பற்றிய கருத்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே முன்வைக்கப்பட்டபோதும், மொழியியலில் இதற்கு உரிய இடம் இருக்கவில்லை. பொருள் பற்றிய ஆய்வு மிக அண்மைக் காலத்திலேயே நவீன மொழியியலில் இடம்பெறத் தொடங்கியது. அமைப்பியல்வாதிகள் (structuralists), மொழியின் பொருள் பற்றிக் கவனம் செலுத்தாமலே மொழியைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வந்தனர். மொழியியலின் ஒரு துணைத் துறையான சொற்றொடரியல் (Syntax) சொற்றொடர்களின் அமைப்புப் பற்றியே கவனம் செலுத்தியது. பொருள் ஆய்வின் முக்கியத்துவத்தை விளக்க நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) என்பார் 1957 இல், பின்வரும் சொற்றொடரை எடுத்துக்காட்டினார். இச் சொற்றொடர், சொற்றொடரியல் அடிப்படையில் சரியானதாகும். ஆனால், சொற்பொருளியல் அடிப்படையில் இது பிழையானதும், பொருளற்றதும் ஆகும். சொற்றொடரியல், மொழியின் வடிவங்கள் உலகப் பொருட்களுடன் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியே கவனம் செலுத்துகின்றது. சொற்பொருளியல் அம்சம் என்பது, சொற்களில் இயல்புகளைக் குறியீட்டுடன் கூடிய சொற்களைப் பயன்படுத்தி விளக்குவதாகும். எடுத்துக்காட்டாக, சிறுவன், சிறுமி என்பவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம்: இது, சொற்களுக்கு இடையேயான தொடர்புகளையும், வேறுபாடுகளையும் நிறுவ முயற்சிக்கிறது. அத்துடன், ஒரு தொகுதி சொற்களும், பொருள்களும் (things) ஒன்றுடனொன்று எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்பதை அறியவும் உதவுகின்றது. அடித்தளம் (கட்டுமானம்) கட்டுமானத்துறையில் அடித்தளம் என்பது, கட்டிடம் அல்லது ஒரு அமைப்பின் சுமையை நிலத்துக்குக் கடத்துவதற்கான ஒரு அமைப்புக் கூறு ஆகும். இவை பொதுவாக நிலத்தின் கீழேயே அமைகின்றன. இதனால் இவை கட்டிடங்களின் நிலக்கீழ் அமைப்பின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன. அடித்தளமானது கட்டடத்தின் ஒரு முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. இது நிலத்துடன் நேரடித்தொடர்பை வைத்திருக்கிறது. அடித்தளங்களின் வடிவமைப்பானது, கட்டிடம் அல்லது அமைப்பின் உயரம், அதன்மீது சுமத்தப்படவுள்ள நிறை உட்பட அதன் நிறை, மண்ணின் தாங்குதிறன், மண்வகை, நிலக்கீழ் நீர்மட்டம் போன்ற பல விடயங்களில் தங்கியுள்ளது. அடித்தளங்கள், கட்டுமானம் மற்றும் மண்ணின் இயல்புகளைப் பொறுத்து இரு விதமாக உள்ளன. மேலோட்ட அடித்தளம், பொதுவாக மண்ணில் சில மீட்டர்கள் வரை புகும்படி அல்லது பற்றி உட்பொதிக்கப்பட்ட வகையில் அமைக்கப்படும். சிறிய மட்டும் நடுத்தர உயர கட்டடங்களில் பொதுவாக இந்த வகை அடித்தளங்கள் அமைக்கப்படும். ஆழ்ந்த அடித்தளம் என்பது ஓர் கட்டிட அமைப்பில் இருந்து, மண்ணில் உயர் பகுதியில் உள்ள பலவீனமான படலத்திலிருந்து மண்ணின் கீழே உள்ள ஒரு உறுதியான ஆழ்ந்த படலத்திற்க்கு பளு அல்லது சுமையை மாற்றப் பயன்படுகின்றது. வானளாவி போன்ற உயரமான கட்டடங்களில் இவ்வகை அடித்தளங்கள் பயன்படுத்தப்படும். மங்கா மங்கா (kanji: ; ; அல்லது ) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல். இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை. பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும். ஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை  பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டுக்குள், சர்வதேச வரைகதை மீதான மங்காவின் செல்வாக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. "செல்வாக்கு" இங்கு யப்பான் வெளியே உள்ள வரைகதை சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் வரைகதை கலைஞர்கள் மீது உள்ள அழகியல் பாதிப்புகளை குறிக்கும். பாரம்பரியமாக, மங்கா கதைகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடது ஓடுகிறது. சில மொழிபெயர்ப்பு மங்கா வெளியீட்டாளர்கள் இந்த அசல் வடிவமைப்பை வைத்துக்கொள்வர். சில வெளியீட்டாளர்கள் மொழிபெயர்ப்பை அச்சிடுவதற்கு முன் கிடைமட்டமாக பக்கங்களை பிரதிபலிக்கிறார்கள், வாசிப்பு திசையை இன்னும் "மேற்கத்திய" இடதுபுறமாக மாற்றுவதால், வெளிநாட்டு வாசகர்கள் அல்லது பாரம்பரிய காமிக்ஸ்-நுகர்வோர் குழப்பம் அடையாமல் இருப்பர் . 2000 ஆம் ஆண்டிலிருந்து, கியோட்டோ சேகா பல்கலைக்கழகத்தில் என்ற யப்பானிய பல்கலைக்கழகத்தில், மங்காவிரற்க்கென படிப்பை வழங்ககியது. பின்னர், பல நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நிறுவின. தேனீர் சடங்கு ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பண்புபடுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேனீர் சடங்கு (Tea Ceremony) வழங்குகின்றது. தேனீர் சடங்கு நடத்துனர் மரபுகளுக்குமைய தேனீரை தாயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம். தேனீர் சடங்கு நடத்துனர் தேனீர் வகைகள், தயாரித்தல், பரிமாறல் போன்ற கலைகளில் மட்டுமல்லாமல், போன்று பல கலைகளை அறிந்து அவற்றின் சடங்கின் பங்கினையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இக்கலையை முழுமையாக கற்க பல ஆண்டுகள் தேவையாகும். தேனீர் சடங்கை வெறும் தேனீர் அருந்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்க முடியாது. ஆத்மீக, உளவியல், சமூக நிலையில் தேனீர் சடங்கை அணுகினாலே அது வழங்கும் பண்பாடுகளில் அதற்கு இருக்கும் முக்கியதுவத்தை புரிந்து கொள்ள முடியும். இலவசப் பண்டம் இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடைப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும். உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள் கொள்வனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப் பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும். இலவசப்பண்டமாக இருப்பவை கிடைப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது. இணைப்புப் பண்டம் இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும். பண்டங்கள் "அ", "ஆ" ஆனது இணைப்புப்பண்டங்களாயின், "அ" வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ" வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும். உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல் வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும். பிரதியீட்டுப் பண்டம் பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப் பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும். இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும். இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும். எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட் இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும் உயிரியற் பல்வகைமை உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்ப‌து புவியின் எல்லாப் ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரின‌ங்க‌ளைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இது புவியில் காணப்படும் அனைத்து, பல்வேறுபட்ட சூழல் மண்டலங்களையும், அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், மரபணுக்களைப் பற்றியும் குறிக்கின்றது. இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌ன. இந்த உலகிலே, பல வடிவங்களிலும், அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவு முறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில், கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. உயிரியற் பல்வகைமை இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு வரைவிலக்கணம் கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், "உயிரினங்களின் பல்வேறுபட்ட தன்மை" என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் ""உயிரினங்கள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை, உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்"" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம். உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவிட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கம் என்னது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாழ்க்கை, சூழ்நிலை முறைகளைக் கொண்ட உயிரினங்களாகும். இன்னொரு வரைவிலக்கணம் உயிரியற் பல்வகைமை என்பது, "வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு" ஆகும் என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை "ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை" எனக் கூறுகின்றது. மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன் உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன: 1992 இல் ரியோ டி ஜனேரோவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் புவி மேல்நிலை மாநாடு (United Nations Earth Summit) இன்னொரு வரைவிலக்கணத்தை வழங்கியது. இதன்படி, உயிரியற் பல்வகைமை என்பது, "தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல், ஏனைய நீரியற் சூழல்கள், சூழலியற்றொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும். இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமையை உள்ளடக்குகின்றது". ஐக்கிய நாடுகள் அவையின் உயிரியற் பல்வகைமை மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால், சட்டபூர்வமான அங்கீகாரம் பெறக்கூடிய நிலையிலுள்ளது கடைசியாகத் தரப்பட்ட வரைவிலக்கணமேயாகும். நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌... நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்கும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான். இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து. இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. ப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன்ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இப்படிப்பட்ட இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள். சான்றாகப் பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியாது. தொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் ஹிப்போ(HIPPO) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார். மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகப் ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌ன. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து மனித வாழிட‌ங்க‌ள் பெருக்கி கொள்ளப்படுகிறது. கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும். உல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌.. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து எளிமையாக இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை தனதாக்கி த‌ன்னுடைய‌ இன‌த்தை பெருக்கச் செய்கின்றன. சான்றாக வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம். தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ வகைகளில் (ர‌க‌ங்க‌ளில்) மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப‌டும் வகைகள் த‌ங்க‌ளின் தாய‌க‌ வகைகளுடன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளைப் பார்ப்ப‌து அரிதாகிவிடும். எந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து. சான்றாக தற்போது சந்தையில் உள்ள‌ மரபணு மாற்றப்பட்ட க‌த்திரியைக்(Genetically Modified Brinjal) குறிப்பிடலாம். ஆண்டுதோறும் அதிக‌ரித்து வரும் ம‌னித‌ ம‌க்க‌ள்தொகை வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து. தாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை நுகர்வதற்காக (உண‌வு) என்று பெரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் மரபுவழிகளை உருவாக்குவ‌த‌ற்கு முதன்மைத் தரப்படுவதில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ப் ப‌யிர்க‌ளை ப‌யிர்செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம். இதனாலும் பல்லுயிர் பெருக்கம் பாதிப்படைகிறது. தொழிற்புரட்சி தொழிற்புரட்சி ("Industrial Revolution") என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது. தொழிற்புரட்சி மனித சமுதாயத்தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தொழிற் புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி, தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் கூடத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில்நுட்பக் கல்வி விரிவடைந்தது. பஞ்சு நூற்பாலைகளில் தொடங்கி மாந்தர்கள் கைகளால் செய்த பற்பல பணிகளை இயந்திரமயமாக்கி, பெரும் எண்ணிக்கையிலும், மலிவாகவும் பொருள்களைப் படைக்கப் புதுமுறைகள் உருவாக்கினார்கள். உற்பத்தித் துறை மட்டுமல்லாது அச்சுத்தொழில், வெகு மக்கள் தொடர்பு ஊடகங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் முதலான பல துறைகள் பெருகி "சேவை என்பது தொழில்" என்ற நிலைக்கு மாறியுள்ளது. இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி மேற்கத்திய நாடுகளில் அரசியல் பொருளாதாரம் வாழ்வியல் மற்றும் தொழிற்சாலை, வர்த்தகம் ஆகியவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி என்ற சொல் விவசாயம் சார்ந்த கைவினைத் தொழில் சார்ந்த உழைப்பாளிகளை மையப் படுத்திய பொருளாதார அமைப்பிலிருந்து இயந்திர உற்பத்தி, தொழிற்சாலைகள், மூலதனம் பரிவர்த்தனை போன்றவற்றை மையப்படுத்திய முறைக்கு மாறுவதைக் குறிப்பதாகும். முதலீட்டாளர்கள் கச்சாப்பொருளைச் சேகரித்து அதனைச் செய்பொருட்களாக்க கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விநியோகம் செய்தனர். வேறுபட்ட பல்வேறு இடங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியதால் இயந்திரங்கள் உருவாயின. தொழிற்புரட்சி என்ற சொல் புதிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு ஆலைகளில் பொருட்கள் பேரளவில் உற்பத்தி செய்ததை விளக்குவதற்குப் பயன்பட்டது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை முழுவதுமாக மாற்றியமைத்தன. இப்புரட்சி முழுவதுமாகப் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வன்முறையின்றி, இரத்தமின்றி அமைதியான முறையில் தொழில் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி என்ற சொல்லை முதன் முதலில் பிளாங்கி (Blangui) என்ற பிரஞ்சு எழுத்தாளர் உருவாக்கினார். 18ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மக்கள் தங்கள் வீடுகளிலும் பட்டறைகளிலும் தங்கள் உள்ளூர் தேவைக்கேற்ற முறையில் பொருள்களை உற்பத்தி செய்தனர். இங்கிலாந்தில் 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குச் சாதகமான சூழ்நிலை நிலவியது. இங்கிலாந்து கடல் போக்குவரத்திலும், காலனியாதிக்கத்திலும் முதன்மையான உலகநாடாக விளங்கியது. அதனுடைய கடல் வலிமையும், குடியேற்ற ஆதிக்கமும் அந்நாட்டின் தொழில் மற்றும் தொழிற்சாலைகளின் தீவிர வளர்ச்சிக்குத் தேவையான கச்சாப்பொருள்களையும், புதிய சந்தைகளையும் பெற்றுத் தந்தன. மேலும் கனிம வளம் போன்ற பல இயற்கைவளங்களைப் பிரித்தானியா கொண்டிருந்தது. அதனுடைய கடற்கரையமைப்பு மற்றும் பருவநிலை ஆகியவை தொழிற்சாலைகளுக்குச் சாதகமாக இருந்தன. இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனியார்களது பெரும்பங்கும் தனிச்சிறப்பளித்தது. தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் செய்யப்பட்ட இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. சமயக் கொடுமையின் காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்சிலிருந்து வெளியேறிய புராட்டஸ்டண்டு கைவினைஞர்கள் இங்கிலாந்திற்குக் குடியேறினர். இங்கிலாந்து அரசாங்கம் அவர்களுக்கு அடைக்கலமும் பண உதவியும் தந்து அதற்குப் பதிலாக அவர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. தேவைப் பெருக்கத்தை ஈடுகட்ட உற்பத்தியின் வேகத்தைப் பெருக்கக் கூடிய வழிவகைகள் நாடப்பட்டன. எனவே பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் பெருமளவில் தொழிற்சாலைகள் ஏற்பட்டு வளர்ச்சியடைந்தன. 1700களில் அகண்ட பிரித்தானியாவின் ஒரு பகுதியில் தொழிலாளர்களைச் சார்ந்திருந்த பொருளாதாரமானது இயந்திரங்களைச் சார்ந்த உற்பத்தி முறைக்கு மாறியது. இது துணி உற்பத்தித் தொழிலின் இயந்திரமயமாக்கம், இரும்பு உற்பத்தித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தூய்மைப்படுத்திய நிலக்கரியின் கூடிய பயன்பாடு ஆகியவற்றுடன் தொடங்கியது. கால்வாய்கள், சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் என்பன அமைக்கப்பட்டதும் வணிக விரிவாக்கத்துக்கு வழிகோலியது.. இரயில் வண்டிகள் இயக்கவும், இரயில் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகள் தொழிற்புரட்சியின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக அமைந்தது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறவும், சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின. நீராவிப் பொறியின் கண்டுபிடிப்பினாலும் அதன் ஆற்றல் முதலில் நெசவு இயந்திரங்களிலும் பின்னர் இரும்பு தயாரித்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப் பட்டதன் மூலமும் உற்பத்தி வெகுவாகப் பெருகியது. முதல் தொழிற்புரட்சி 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி 1850ஆம் ஆண்டில் இரண்டாம் தொழிற்புரட்சியுடன் இணைந்தது. 1850ஆம் ஆண்டளவில், நீராவிக் கப்பல், நீராவித் தொடர்வண்டிகள் பின்னர் உள்ளெரி பொறிகள், மின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்தோடு தொழில்நுட்பமும், பொருளாதாரமும் வீறு கொண்டு வளர்ந்தன. தொழிற்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதியை வரலாற்றாளர்கள் வெவ்வேறு விதமாகக் கூறுவர். எரிக் ஹாப்ஸ்பாம் என்பவர், தொழிற்புரட்சி 1780இல் தொடங்கியது என்றும் 1830 அல்லது 1840களிலேயே முழுமையாக உணரப்பட்டது என்றும் கூறினார். டி. எசு. ஆசுட்டன் ("T. S. Ashton") என்பவர் ஏறத்தாழ 1760க்கும், 1830க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இது தொடங்கியது என்கிறார். சான் கிளப்பாம் ("John Clapham"), நிக்கோலாசு கிராப்டு ("Nicholas Crafts") போன்ற சில இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பொருளாதார, சமூக மாற்றங்கள் படிப்படியாகவே ஏற்பட்டனவென்றும், நீடித்த காலத்தில் நடந்தவற்றை விளக்குவதற்குப் "புரட்சி" என்ற சொல் பொருத்தமற்றது என்றும் சொல்கின்றனர். வரலாற்றாளர்கள் இடையே இது இன்னும் ஒரு விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வருகிறது. தொழிற்புரட்சியும், தற்கால முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரமும் தலை தூக்கும் முன்னர் மக்களின் ஒரு தலைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி சீரானதாகவும் நிலையானதாகவும் இருந்தது வந்தது. தொழிற்புரட்சியின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் ஒரு தலைக்கான பொருள் வளர்ச்சி மிகவும் வளர்ந்தது. பல பொருளாதார வரலாற்றாளர்கள், தொழிற்புரட்சி உலக வரலாற்றின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். மனித குலம் காட்டு விலங்குகளைப் பழக்கி, காட்டுச் செடிகளை வீட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நடைமுறைகளுக்குப் பிறகு, தொழிற்புரட்சியே மனித வளர்ச்சியில் நடந்த முக்கிய நிகழ்வு என்பது அவர்களின் கருத்து. 18ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்புகள் வேளாண்மை முறைகளிலும் அமைப்புகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. பழமையான விவசாய முறைகள் வீழ்ச்சியடையலாயின. விவசாயம் முதலாளித்துவ அமைப்பாகியது. மேலும் நிலமானிய முதலீட்டாளர்கள் அடிமைத்தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பண்ணையாட்களாகவும், குத்தகைக்காரர்களாகவும் உயர்த்தப்பட்டனர். இங்கிலாந்தில் செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துகொண்டே போனது. வர்த்தக விரிவாக்கத்தின் விளைவாகப் புதிய நாடுகள் மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை பரவல் வேகமாகியது. திறமையான விவசாயமுறை, சரியான உணவூட்ட விநியோகத்தால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நீங்கிப் பிறப்பு விகிதம் அதிகரித்தது. விஞ்ஞான வளர்ச்சி, உற்பத்தி முறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இத்துடன் பல இயற்கைச் சூழ்நிலைகளும் தொழிற்புரட்சிக்குச் சாதகமாயிருந்தன. கிராமக் கைத்தொழில் உற்பத்தி மிக வேகமான வியாபர வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று. வணிக விரிவாக்கத்தின் விளைவாகப் புதிய சந்தைகளைத் தேடினர். முதலாளிகளின் ஊக்கத்தினால் அறிவியல் அறிஞர்கள் இயந்திரங்களைக் கண்டுபிடித்தனர். பின் ஐரோப்பிய நாடுகள் தனது குடியேற்றங்களைச் சுரண்டின. இது முதலாளித்துவம் ஏற்பட வழிவகுத்தது. முதலாளிகள் அதிக பொருட்களை உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்ட விழைந்தனர். எனவே ஆலைகளை அமைத்தனர். புதிய இயந்திரங்களின் உதவியால் மக்கள் பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தனர். ஐரோப்பாவில் வேகமான தொழில்துறை மாற்றங்கள் ஏற்பட மேற்கண்ட காரணிகள் உதவின. மறுமலர்ச்சிக்கு முன்பு அறிவியல் அறிவு செயல்முறையில் பயன்படுத்திடாமல் இருந்தது. ஆனால் தற்போது விழிப்புணர்வு எல்லாத்துறைகளிலும் ஏற்படலாயிற்று. கைத்தொழிலிலிருந்து இயந்திரங்கள் மூலமான உற்பத்திக்கும், மனித அல்லது விலங்கு இயக்கச் சக்திக்கு மாற்றாக, நீராவி போன்ற வேறு உற்பத்தி சக்திகளுக்குமான மாற்றத்தினை தொழிற்புரட்சி கொண்டு வந்தது. இயந்திரக் கருவிகள் இல்லாமல் தொழிற்புரட்சி நடந்திருக்க இயலாது. 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் இதற்கு மிகவும் உதவின. அதிலும் மரபு சார்ந்த வகைகள் என்று தற்போது வகைப்படுத்தப்படும் இயந்திரங்களான கடைசல் இயந்திரம், அலைவு மைய இயந்திரங்கள் போன்றவை பெரும் பங்கு வகித்தவை. கடைசல் இயந்திரம் தவிர்த்து அகழ் இயந்திரமும் உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற முக்கியப் பொறிகளில் துளையிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள்மூலம் வேகம்பெற்ற முதலாவது துறையாக நெசவுத்துறை விளங்கியது. 1846-ல் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தொழிலில் ஏற்பட்ட மாற்றத்தால் பிற தொழிற்சாலைகளில் மாற்றம் விரைவுபடுத்தப்பட்டது. குறிப்பாகப் போக்குவரத்துத் தகவல் தொடர்புத் துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டது. மேம்பட்ட சாலைகள் அமைப்பதற்கு 'தோமஸ் டெல்போட்','ஜான் மெக்காப்' மற்றும் 'ஜான் மெக் ஆதம்' ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்தது. மெக் ஆதம் தரமான பாதை அமைக்கும் முறையைக் கண்டு பிடித்தார். அச்சாலைகள் "மெக் ஆதம்" சாலைகள் எனப்பட்டன. பிரித்தானியா சாலைகள் ஆயிரக்கணக்கான உள்ளூர் பங்குகளினால் மிக எளிய முறையில் பராமரிக்கப்பட்டன. ஆனால் 1720-களில் சாலைகளின் மேம்பாட்டிற்காகவும் பராமரிக்கவும் வரி வசூல் செய்யப்பட்டது. இதனால் சில வரி வசூலிப்பு நிறுவனங்கள் உருவாயின. போக்குவரத்திற்கான முக்கியச் சாலைகள் அதிகரித்ததன் காரணமாகச் சாலைகளின் எண்ணிக்கையுடன் வரி வசூலும் அதிகரித்தது. 1750 களில் இவ்வரிவசூலிப்பு முறை விரிவடைந்து அனைத்து சாலைகளும் வரிவசூலிக்கும் நிறுவனங்களின் பொறுப்பின் கீழ் வந்தன. இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜான் பிரின்லே என்பவர் கால்வாய்களை இணைக்கும் முறையினைக் கண்டுபிடித்தார். இதனால் முக்கிய நகரங்களான பெர்மிங்ஹாம், லண்டன், லிவர்பூல், மான்செஸ்டர் போன்ற நகரங்கள் கால்வாய்கள்மூலம் இணைக்கப்பட்டது. நாட்டின் நடுப்பகுதிகளும் வடக்குப் பகுதிகளும் பெரிய தொழில் மையங்களாக இருந்தன. எனவே அவற்றை இலண்டனுடனும் மற்ற துறைமுகங்களுடனும் இணைப்பதற்காகக் கால்வாய்கள் வெட்டினார்கள். குதிரைகளைக் கொண்டும் தரையில் குதிரை வண்டிகளைக் கொண்டும் எடுத்துச் செல்வதையும் விடப் பல மடங்கு பொருட்கள் கால்வாய்கள்மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதனால் உற்பத்தி செய்த பொருட்கள் பயன்படும் இடங்களுக்கு எளிதில் கொண்டு சென்றார்கள். செலவும் குறைந்தது. கால்வாய் வலையமைப்பு இரயில் பாதைகள் அமைக்கப்படுவதற்கும் முன்னோடியாக இருந்தது. சர் ரௌலண்ட் ஹில் என்பவர் பென்னி அஞ்சல் முறையினைக் கண்டுபிடித்ததன் விளைவால் வணிகர்கள் தங்கள் அருகிலும் தொலைவிலும் இருந்த தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. கம்பியில்லா மின்விசைக் கம்பிமூலம் செய்திகளை அனுப்பும் தந்தி முறையை மோர்ஸ் கண்டுபிடித்தார். 1835-ல் முதல் மின்சார தந்தி முறை நடைமுறைக்கு வந்தது. தொழிற்புரட்சி தோன்றுவதற்கு முன்பே வேளாண்மைத் துறையில் புரட்சி தோன்றிவிட்டது. நிலங்களைப் பண்படுத்தப் புதிய விவசாயக் கருவிகளான, எஃகுக் கலப்பைகள் மற்றும் கடப்பாரைகள் பயன்படுத்தப்பட்டன. "டிரில்" என்ற விதை விதைக்கும் கருவியும், குதிரைமூலம் நிலங்களை உழும் மரக்கலப்பைகளுக்கு மாற்றாக எஃகுக் கலப்பைகளும் உழுவதற்குப் பயன்பட்டன. கதிர் அறுக்கவும், கதிரடிக்கவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணை வளப்படுத்த "பயிர் சுழற்சி முறை" நடைமுறைப் படுத்தப்பட்டது. மண்ணின் வளத்தை மீட்டெடுத்த "குளோவர்(Clover) என்ற ஒருவகைச் செடியினைப் பயிரிட்டனர். இங்கிலாந்தின் நிலவுடைமையாளர்கள் தங்கள் பண்ணைகளை விரிவுபடுத்தத் துவங்கினர். கிராமங்களில் சிதறிக்கிடந்த நிலங்களை ஒன்றிணைத்துக் கூட்டுப்பண்ணையாக்கி உற்பத்தியைப் பெருக்கினர். கண்ணாடி தயாரித்தலில் 'உருளைப் பொறிமுறை' எனும் புதிய முறைமை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாகத் தட்டையான நீண்ட கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. இவை கட்டடங்களில் கண்ணாடிச் சுவர்கள் அமைப்பதற்கு பெரிதும் உதவின. லண்டனில் உள்ள படிக மாளிகை இவ்வாறான ஒரு கட்டட அமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். 1798 இல் நிக்கலஸ் லூயிஸ் ரொபேர்ட் என்பவரால் தொடர் கடதாசித் தாள்களைத் தயாரிக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. சமூக அமைப்பைப் பொறுத்த மட்டில், தொழிற்புரட்சியால் ஏற்பட்ட ஒரு முக்கிய விளைவு தொழிலதிபர்கள், வணிகர்கள் போன்றோரை உள்ளடக்கிய "நடுத்தர மக்கள்" மேன்மையடைந்தது ஆகும். இவர்கள் முற்காலத்தில் இருந்த நிலக்கிழார்களையும் அதிகார மேல்மட்டத்தினரையும் தாண்டி முன்னேறினார்கள். சாதாரண உழைப்பாளிகளுக்கு ஆலைகளிலும் தொழிற்கூடங்களிலும் வேலைவாய்ப்பு கூடியது. ஆனால், வேலைச் சூழ்நிலை கடினமானதாகவும், வேலை நேரம் நீண்டதாகவும் அமைந்து, இயந்திரங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. 1900ஆம் ஆண்டுகளில் கூட ஐக்கிய அமெரிக்காவில் தொழிற்கூட வேலையாட்கள் எஃகுத் தொழிற்சாலைகளில் நாளுக்கு 12 மணி நேரமும் பிற தொழிற்சாலைகளில் 10 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பெற்ற ஊதியமோ அக்கால வாழ்க்கைத்தரத்துக்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியத்தில் 20-40 விழுக்காடு மட்டுமே என்றிருந்தது தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் தொழிற்சூழல் கடினமானது என்று கூறமுடியாது. அதற்கு முன்னரே சமூகத்தில் சிறார் தொழில், மாசுபட்ட தொழிற்சூழமைவு, நீண்ட வேலை நேரம் இருந்ததுண்டு. தொழிற்புரட்சி மக்கள் தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குழந்தைச் சாவு குறைந்தது என்றாலும் குழந்தைப் பருவம் தாண்டி வாழும் வாய்ப்பு அதிமாக உயரவில்லை. கல்வி வாய்ப்பு பரவலாகவில்லை. எனவே குழந்தைத் தொழிலாளர்கள் பெருகினார்கள். வளர்ந்தோர் செய்யும் வேலைக்குச் சமமான வேலை செய்தாலும் சிறுவர்களுக்குச் சம ஊதியம் கொடுக்கப்படவில்லை. இயந்திரங்களை இயக்க அதிக உடல் வலிமை தேவைப்படவில்லை என்பதாலும், வேலை அனுபவம் பெற்ற வளர்ந்தோருக்குத் தட்டுப்பாடாக இருந்ததாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினார்கள். குறைந்த சம்பளத்துக்கு சிறுவர்களிடமிருந்து வேலை வாங்க முடிந்ததால் 18,19ஆம் நூற்றாண்டுகளில், தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் சிறுவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. இங்கிலாந்திலும் இசுக்கொட்லாந்திலும் 1788ஆம் ஆண்டில் இருந்த 143 நீர் இயக்கப் பருத்தி ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்களில் மூவரில் இருவர் குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கல்வி வாய்ப்பும் மக்கள் தொகையும் வளரத் தொடங்கிய நிலையில் குழந்தைத் தொழிலாளர் முறை பலரது கண்களை உறுத்தத் தொடங்கியது. வளர்ந்தவர்களின் வேலைச் சூழலைவிட மோசமான சூழலில், அவர்களைவிடக் குறைந்த ஊதியத்துக்கு (10-20% ஊதியத்துக்கு) சிறுவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. நான்கு வயது சிறுவர்களைக் கூடப் பணிக்கு அமர்த்தினார்கள். வேலைத்தளத்தில் சிறுவர்களை அடிப்பதும், நீண்ட நேர வேலை வாங்குவதும் வழமையாக இருந்தது. நிலக்கரிச் சுரங்கத்தில் விடிகாலை 4 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சிறுவர்கள் வேலை செய்தனர். ஆபத்தான பணிச்சூழலில் களைப்பால் கண்ணயர்ந்த சிறுவர்கள் வண்டிப்பாதையில் விழுந்து உயிரிழந்ததும் உண்டு. நச்சு வளி வெளிப்பட்டதால் இறந்த சிறுவர் தவிர பல சிறுவர்கள் நுரையீரல் புற்றுநோயாலும் பிற நோய்களாலும் 25 வயதாகும் முன்னரே இறந்தனர். ஏழைகளின் பராமரிப்புக்காக இங்கிலாந்திலும் வேல்சிலும் வேலை இல்லங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு உறவுகளற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள் "ஏழை தொழில் பயில்நர்களாக" விலைக்கு விற்கப்பட்டனர். அதாவது, கூலி கொடுக்காமல் அச்சிறுவர்களிடமிருந்து கட்டாய வேலை வாங்கினார்கள். தங்க இடமும், உண்ண உணவும் மட்டுமே அவர்கள் பெற்றனர். வேலையின் கொடுமை தாங்காமல் ஓடிவிட்ட சிறுவர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் தங்கள் முதலாளிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும் தப்பி ஓடிவிடாதவாறு அச்சிறுவர்களைச் சங்கிலியால் கட்டிப்போட்ட முதலாளிகளும் இருந்தார்கள். பெரும்பான்மையான சிறுவர் பஞ்சு ஆலைகளில் "பொறுக்குநர்களாக" வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நூலை முறுக்கேற்றவும் துணி நெய்யவும் பயன்பட்ட எந்திரங்களுக்குக் கீழே சென்று, பஞ்சு மற்றும் நூல் துண்டுகளைப் பொறுக்குவதும் தரையை சுத்தப்படுத்துவதும் அவர்கள் வேலை. இருபுறமும் இருந்து வருகின்ற எந்திரங்கள் தங்களை நெருங்கியதும் சிறுவர் தரையில் படுத்துவிடாவிட்டால் தலை, உடல், விரல் பகுதிகள் துண்டுபடும் ஆபத்து நிலவியது. இவ்வாறு தரையில் ஊர்ந்து துண்டுகளைப் பொறுக்கிய சிறுவர்கள் வாரத்தில் ஆறு நாள்கள், ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது. சிறுமிகள் பலர் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். தீக்குச்சி மருந்திலிருந்து வெளிப்பட்ட நச்சுப்புகை அவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாகத் தோல் நோய்களும், தாடை எலும்பை உருக்குலைத்த ஒருவகை புற்றுநோயும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டன. கண்ணாடித் தொழிற்சாலைகளில் பணியாற்றிய சிறுவர்கள் பார்வை இழப்பதும், சூடு படுவதும் வழமையாக இருந்தது. மண்பாண்டத் தொழிற்சாலைகளில் நச்சு கலந்த மண்துகள்களை சுவாசிப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் சிறுவர்கள் அனுபவித்த இன்னல்களைப் பற்றிய அறிக்கைகள் வெளியாயின. குறிப்பாக, நிலக்கரிச் சுரங்க வேலை, பஞ்சு ஆலை வேலை போன்றவற்றால் சிறுவர்கள் சந்தித்த பாதிப்புகள்பற்றிய விழிப்புணர்வு வளர்ந்தது. நடுத்தர மக்களும் மேல்மட்ட மக்களும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அரசியல்வாதிகளும் அரசும் குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்ற முனைந்தனர். ஆனால் தொழிலதிபர்கள் அதை எதிர்த்தனர். தங்கள் தொழிற்சாலைகளில் சிறுவர்களுக்கு வேலை கொடுக்காவிட்டால் அவர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று சிலர் வாதாடினர். சிறுவர்களுக்கான வேலைவாய்ப்பு வறுமை ஒழிப்புக்கு வழி என்றனர். பிறர் குறைந்த கூலிக்குக் கிடைக்கும் உழைப்பைக் கைவிட மனமில்லாதிருந்தனர். 1833, 1834ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான சட்டங்களை நிறைவேற்றினார்கள். அதன்படி, ஒன்பது வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தார்கள். இரவு வேலையைத் தடை செய்தார்கள். 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களிடமிருந்து 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதைத் தடுத்தார்கள். சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்று அறிய சோதனையாளர்களை நியமித்தார்கள். ஆனால், சோதனையாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்ததால் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினமாகவே இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின், சிறுவர்களையும் பெண்களையும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றினார்கள். இச்சட்டங்களின் விளைவாகக் குழந்தைத் தொழிலாளர் முறை சிறிது சிறிதாகக் குறைந்தது. என்றாலும், ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரவே செய்தது. தொழிற்புரட்சிக் காலத்தில் முதலாளிகளின் மாளிகைகள் ஆடம்பரத்திலும் செல்வக் கொழிப்பிலும் திளைத்தன. ஆனால் உழைப்பாளரின் இல்லங்களில் வறுமை நிலவியது. அவர்களது வீடுகள் சிறியனவாகவும் நெருக்கமாகவும் அமைந்தன. தனிக் கழிப்பறைகள் இருக்கவில்லை; சாக்கடைகளும் திறந்து கிடந்தன. கட்டடங்களில் ஈரக்கசிவுக்கும் குறையில்லை. இதனாலும் மாசடைந்த தண்ணீராலும் நோய்கள் பரவும் ஆபத்து தொடர்ந்து இருந்து வந்தது. எனினும் 19ஆம் நூற்றாண்டில் உழைப்பாளரின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. சாக்கடை அமைத்தல், சுற்றுச் சூழல் தூய்மை பேணுதல், வீடுகள் இடம் விட்டுக் கட்டப்படுதல் பற்றிப் பொதுநலச் சட்டங்கள் இயற்றப்பட்டு, செயலாக்கம் பெற்றது இந்த வாழ்க்கைச் சூழல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. தொழிற்புரட்சிக் காலத்தில் வேலை செய்த எல்லா உழைப்பாளர்களும் வறுமையில் வாடினார்கள் என்று சொல்லமுடியாது. பெருமளவில் "நடுத்தர மக்கள்" எழுச்சியுற தொழிற்புரட்சி வாய்ப்பளித்தது. வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்ற சிறப்புத் தகுதியினர் தோன்றத் தொடங்கினர். சுற்றுச் சூழல் தூய்மை மேம்பட்டது. நாட்டுப்புறங்களில் ஏற்பட்ட பஞ்சம் தொழிற்சாலைப் பகுதிகளில் ஏற்படவில்லை. இருந்தாலும், போதிய இட வசதியின்றி, நெருக்கமாக வாழ்ந்ததால் நகர்ப்புற உழைப்பாளிகள், குறிப்பாகச் சிறு குழந்தைகள், நோயுற்றனர். இட நெருக்கடியால் காச நோய், சுரங்க வேலையால் நுரையீரல் நோய்கள், அசுத்த நீரால் வாந்திபேதி, குடற்காய்ச்சல் போன்றவை பரவின. தொழிற்புரட்சிக் கால இங்கிலாந்தில், 1844இல் ஆலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல் எந்நிலையில் இருந்தது என்பதை மார்க்சிய இணைநிறுவுநரான பிரெட்ரிக் எங்கெல்சு தாம் எழுதிய "1844 இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை" என்னும் நூலில் விரிவாக விவரித்துள்ளார். அந்நூலின் மறுபதிப்பு 1892இல் வெளியானது. அதற்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்சு இங்கிலாந்து நாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார். தொழிற்புரட்சி ஐரோப்பியர் வாழ்க்கையில் எல்லாவகையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாய உற்பத்தியில், வியாபார அமைப்புகளில், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சமூகத்திலும், அரசியலிலும் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. கிராமப் பகுதியிலிருந்து மக்கள் தொழிற்சாலைகள் இருந்த நகரங்களுக்கு ஈர்க்கப்பட்டனர். அதனால் பல தொழில் நகரங்கள் உருவாயின. மக்கள்தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. காற்று, நீர்,ஒலி போன்றவை மாசடைந்ததால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. சிறுவர்களும் பெண்களும் பெருமளவில் குறைந்த கூலிக்கு ஆலைகளில் பணிபுரிந்ததால் தொழில் அதிபர்கள் பெருத்த இலாபம் ஈட்டினர். பெருமளவில் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டமும் குறைந்த கூலியும் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறின. மேலும், பழைய சமுதாயப் பிரிவுகள் அழிந்து "முதலாளி-தொழிலாளி" என்ற இரண்டு புதிய பிரிவுகள் தோன்றின. மக்களின் ஏழை-பணக்காரன் என்ற வர்க்கங்கள் பேசப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்ததால், அவர்கள் வேறு வழியின்றி தங்களுக்கெனப் புதிய குடியேற்ற நாடுகளை அமைக்கவும், மற்ற கண்டங்களில் கச்சாப்பொருளைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கவும் உட்படுத்தப்பட்டனர். இவ்வாறாகக் காலனி தேடல் தீவிர காலனி ஏகாதிபத்தியத்திற்கு அடிகோலியது. பெரிய நகரங்கள் தோன்றியதால் பராளுமன்ற சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. பல பாராளுமன்ற சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து தொழிலாளர்களைக் காக்கவும, தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் 1819,1833 மற்றும் 1837-களில் தொழிலாளர்களின் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1825-ஆம் ஆண்டு தங்கள் உரிமைகளைப் போராடிப் பெற "தொழிலாளர் சங்கங்கள்" ஏற்படுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்துத் தகவல் தொடர்பு வாயிலாகத் தேசியம், பன்னாட்டு தேசியம் போன்ற கருத்துகள் தோன்றலாயின. அதனால் பொருளாதார அடிப்படையில் மக்களாட்சி அரசு தேவை அதாவது சமதர்மம்(சோஷலிசம்) தேவை என்ற கருத்து தோன்றியது. தொழிற்புரட்சி இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. உலகத்திலேயே அதிக முன்னேற்றமடைந்த நாடாக இங்கிலாந்து உருவானது. இங்கிலாந்து நாட்டு வருமானம் அதன் வளர்ச்சியடைந்த வாணிகத் தொடர்புகளால் அதிகரித்தது. குடிசைத் தொழில்கள், ஆலைகளுடம் போட்டியிட இயலாமல் நாளடைவில் அழிந்தன. ஆலைகளின் வளர்ச்சியால் மான்செஸ்டர், லங்காஷியர், பர்மிங்காம், செப்பீல்டு போன்ற பல புதிய தொழில் நகரங்கள் தோன்றின. முதலாளி-தொழிலாளி என்ற வர்க்கங்கள் தோன்றியதால் நாட்டின் ஒட்டு மொத்த முதலீடும் முதலாளிகளின் வசமானது. தொழில்புரட்சியினால் அடிக்கடி பயன்படுத்துகின்ற பல அரசியல் சொற்கள் பிறந்தன. பொருட்களின் உற்பத்தி பெருகியதால், பெரிய தொழிற்சாலைகளின் உடமையாளர்கள் செல்வந்தர்களாயினர். அதன் விளைவாக முதலாளித்துவம் தோன்றியது. பெரும் தொழிற்சாலைகள் வணிக முதலீடுகளைப் பெருக்கியதே முதலாளித்துவத்தின் தாக்கமாகும் தொழிலாளர் வர்க்கத்தினர் முதலாளி வர்க்கத்தினரை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்கள். தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளையும், மனித உரிமைகளையும் உள்ளடக்கிய சமத்துவ "பொதுவுடைமைத்" தத்துவங்கள் செல்வாக்குப் பெற்றன. சமத்துவத்தின் நோக்கம் செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் சென்றடையாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு மறைய வேண்டும். எவரும் பட்டினியால் வாடாமல் அனைவரின் தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதாகும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தொழில்மயமாதல் கூர்மைப்படுத்தியது. இந்தப் பாகுபாட்டைப் போக்க முதன் முதலாக "இராபர்ட் ஓவன்" என்பவர் சமத்துவம் என்ற சொல்லை உருவாக்கினார். மார்க்க்சிசம் என்பது உழைப்பினால் ஏற்படும் இலாபத்தில் உழைப்பாளர்களுக்கும் உரிய பங்கு வேண்டும் என்பதாகும். ஜெர்மனி நாட்டு சமத்துவவாதி 'கார்ல் மார்க்ஸ்' மார்க்க்சிசம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார். இவரது கோட்பாடு உற்பத்திக்கும், உழைக்கும் உடல்சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று வலியுறுத்தியது. இத்தகைய சோசலிச பொதுவுடைமைத் தத்துவங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாகத் தொழிற்புரட்சியும் மார்க்சிய தத்துவங்களும் காரணமாக இருந்தன. தொழிற்புரட்சியின் விளைவாகவும் முதலாளிகளின் சந்தை நோக்கங்களுக்காகவும் தடையிலா வாணிபக் கொள்கை தோன்றியது. இக்கொள்கையின் படி வியாபாரம் மற்றும் ஆலைகளின் நடவடிக்கைகளில் தலையிட அரசுக்கு உரிமையில்லையென வியாபாரிகள் மற்றும் முதலாளிகள் கோரினார்கள். தொழிற்புரட்சியினால் மனித இனத்திற்கு நன்மை விளைந்ததா தீமை விளைந்ததா என்னும் கேள்வி இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஒருசிலர் தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட நன்மைகளை மட்டுமே வலியுறுத்தினாலும், அப்புரட்சி சில தீய விளைவுகளுக்கு அடித்தளம் இட்டது என்பதையும் மறுக்கமுடியாது. தொழிற்புரட்சியினால் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையானான். ஆலைத் தொழிலாளிகள் இரக்கமின்றி முதலாளிகளால் சுரண்டப்பட்டனர். ஆலைகளில் வேலைநேரம் பதினான்கு முதல் பதினாறு மணி நேரம் வேறுபட்டிருந்தது. பெண்களும் சிறுவர்களும் குறைவான ஊதியம் மற்றும் பாதுகாப்பில்லாத அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சினையாக ஆனது. மக்கள் செயற்கை வாழ்க்கை வாழத்துவங்கினர். தொழிற்புரட்சியானது நன்மை தீமை இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் அதன் விளைவுகள் நிறைவேற நீண்டகாலம் ஆனது. டேவியின் கூற்றுப்படி தொழில்புரட்சி ஒரு வரமல்ல; தொழிற்சாலைகளின் அமைப்பும் செயல்பாடும் பல தொழிலாளர்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. மனித குலத்திற்கு நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கிய குடிசைத் தொழில்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மனித வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்பதை மறுக்க இயலாது. ஆனால், தொழிற்புரட்சியின் விளைவாகச் சுற்றுச்சூழல் மாசுபடல், மனித உழைப்பு சுறண்டப்படல், ஆகியவை விரிவடைந்தன. சுருக்கமாகக் கூறின், இன்றைய நவீன உலகத்தைத் தொழிற்புரட்சியே உருவாக்கியது எனலாம். தமிழ்நாடு அரசின் சமச்சீர்கல்விப் பாடநூல், ஒன்பதாம் வகுப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வெளியீடு-2011. __NOEDITSECTION__ ஆடம்பரப் பண்டம் ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள் ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர் வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம் அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும். எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக் காணப்படும் அதே சமயத்தில் கீழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக் கருதப்படும். உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள் வாழிடம் (சூழலியல்) சூழலியலில் (ecology), வாழிடம் (habitat) என்பது குறிப்பிட்ட உயிர் இனம் (species) வாழ்ந்து வளர்கின்ற இடத்தைக் குறிக்கும். இது ஒரு இனக் கூட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள சூழலைக் குறிக்கும். ஒரு தனி உயிரினம் வாழும் இடத்தையன்றி, ஒரு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கூட்டமாக வாழ்ந்து பெருகும் ஒரு புவியியல் பிரதேசத்தையே "வாழிடம்" என்ற சொல் குறிக்கிறது. வாழிட வகைகள்: நீர் வாழிடம் - காட்டு வாழிடம் - நிலக்கீழ் வாழிடம் - பாலைவன வாழிடம் துளுவம் துளு அல்லது துளுவம் ஒரு திராவிட மொழியாகும். இதனை தற்போது இரண்டு மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகிறது. இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம்) மலையாளத்தை ஒத்திருந்தாலும் தற்காலத்தில் கன்னட மொழியின் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது. முன்னர் துளு மொழி கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் சந்திரகிரி ஆற்றின் மேற்கிலிருந்து, கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தின் கோகர்ணா வரை பேசப்படுப்பட்டது. தற்போது இம்மொழி பேசுபவர்கள் கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் வட பகுதியில் சில இடங்களிலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் தக்சிண கன்னட மற்றும் உடுப்பி மாவட்டத்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் துளு கலாச்சாரம் தற்போது நிலவுகிறது, இப்பகுதி துளுநாடு என்றும் அழைக்கின்றனர். வழக்கமாக உபயோகிக்கப்படும் சில துளு சொற்கள்: மரபியற் பல்வகைமை சூழ்நிலைமண்டலம் (ecosystem) மற்றும் மரபணுப் பொதுச்சேர்மங்கள் (gene pools) ஆகியவற்றில், ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை மரபியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய பஞ்சத்துக்கு, நாட்டின் உருளைக்கிழங்குப் பயிர்களில் குறைவான மரபணுசார்ந்த வேறுபாடுகள் இருந்ததும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது. இது பெரும்பாலான பயிர்களை வைரஸ் தாக்கி அழிப்பதை இலகுவாக்கியது. உயிர்த்தொகை மரபியல் (population genetics) என்னும் கல்வித்துறை மரபியற் பல்வகைமை தொடர்பான பல எடுகோள்களை (hypotheses) உள்ளடக்கியுள்ளது. சிம்லா சிம்லா, தற்பொழுது பெயர் ஷிம்லா என மாற்றப்பட்டுள்ளது, இமாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு புகழ் பெற்ற கோடை இருப்பிடமும் ஆகும். 1864-ம் ஆண்டு, இந்தியாவின் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோடைகாலத் தலைநகராக சிம்லா விளங்கியது. 'குன்றுகளின் ராணி' என்று ஆங்கிலேயர்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற ஷிம்லா, ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இமாலய மலைத் தொடரின் வடமேற்குப் பகுதியில், உயரமான மேட்டில் ஷிம்லா அழகான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது. தேவதாரு, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், ரோடோடென்ரான், கருவாலி போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் போர்வையால் சூழப்பட்ட இந்த ஷிம்லா நகரம், இதமான கோடை காலத்தையும் பனிமழை பொழியும் குளிர்ச்சியான குளிர்காலத்தையும் வழங்குகிறது. காலனி ஆதிக்கத்திலிருந்தே தோன்றிய நியோ-கோதிக் மற்றும் டியுடோர்பீதன் கட்டிடக்கலையின் சாயல் கொண்ட பல கட்டிடங்களுக்கு இந்த நகரம் பெயர் பெற்றது. கால்கா-ஷிம்லா ரயில்வே என்னும் மிக நீண்ட தூர குறுகிய ரயில் பாதை கால்கா நகருடன் ஷிம்லாவை இன்றும் இணைக்கிறது. மிக அண்மையிலுள்ள பெரிய நகரமான சண்டிகரிலிருந்து ஷிம்லா சுமார் 115 கி.மீட்டர் (71.4 மைல்) தூரத்திலும், இந்தியத் தலைநகரமான புதிய தில்லியிலிருந்து சுமார் 365 கி.மீட்டர் (226.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து கடவுள் காளியின் மறு அவதாரமாகக் கருதப்படும் சியாமளா தேவி அன்னையை போற்றும் வகையில், இந்நகருக்கு ஷிம்லா என்று பெயர் வந்தது. கூர்க்கா போரின் பிறகு, 1819-ம் ஆண்டு பிரித்தானியர்கள் சிம்லாவைத் தன்வசமாக்கிக் கொண்டனர். அச்சமயத்தில் இந்துக் கடவுள் சியாமளா தேவியின் கோவிலால் இந்த ஊர் பெருமை பெற்றிருந்தது. 1822-ஆண்டு, சார்லஸ் பிராட் கென்னடி என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரியே, பிரித்தானிய முதல் கோடைக்கால இருப்பிடத்தை ஷிம்லாவில் கட்டினார். 1823 முதல் 1828 வரை வங்காளத்தின் கவர்னர்-ஜெனரலாக இருந்த ஆம்ஹெர்ஸ்ட் பிரபு என்பவர்தான் 1827-ம் ஆண்டு கோடை முகாமைத் துவக்கி வைத்தார். அச்சமயத்தில் ஷிம்லா நகர் முழுவதற்கும் ஒரே ஒரு குடில் மட்டுமே இருந்தது. பிறகு அவ்வாண்டில் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றபோது, சுமார் ஆறு குடில்கள் மட்டுமே கட்டி முடிந்தன. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குள், நூற்றுக்கும் மேற்பட்டவை உருவாகின. 1828 முதல் வங்காள கவர்னர்-ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங்க் பிரபு (பின்னர் 1833-ம் ஆண்டு கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கிய பிறகு இந்தியா முழுமைக்கும் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்) என்பவரின் கவனத்தை, அண்மைக்காலம் வரை சிம்லா என்று விளங்கிய ஷிம்லா ஈர்த்தது. 1832-ம் ஆண்டு கர்னல் சர்ச்சிலுக்கு "லூதியானவிலிருந்து நான்கு நாள் பயணத் தொலைவில், எளிதாக அடையக் கூடியதாகவும் இந்துஸ்தானத்தின் கடுமையான கோடை வெப்பத்தின் எரிச்சல் மிகுந்த சமவெளிகளில் இருந்து தப்பிச் செல்ல உகந்த அடைக்கலமாகவும் உள்ளது" என்று எழுதினர். அவருக்குப் பின்னால் வந்த பிரபுக்களில் ஒருவரும் 1864 முதல் 1869 வரை இந்திய நாட்டின் வைஸ்ராயாக இருந்தவருமான ஐயா ஜான் லாரன்ஸ் என்பவர் பிரித்தானியர்கள் நிர்வாகத்தை ஆண்டுக்கு இருமுறை கல்கத்தாவிற்கும் அதிலிருந்து 1000 மைலுக்கும் அதிக தூரத்திலுள்ள தனி மையத்திற்கும் இடையே மாற்றும் முடிவை, அதை அடைவது கடினமான செயலாக இருந்தாலும், மேற்கொண்டார். 1876-1880-ம் ஆண்டில் வைஸ்ராயாக இருந்த லிட்டன் பிரபு என்பவர், 1876-ம் ஆண்டு முதல் நகரை வடிவமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முதலில் பீட்டர் ஹோஃப் எனும் வாடகை வீட்டில் தங்கியிருந்தாலும் வைஸ் ரீகல் லாட்ஜ் என்னும் அரசப்பிரதிநிதிக்குரிய மாளிகையைக் கட்டத் திட்டமிட்டு, அதை வானமண்டல ஆராய்ச்சி நிலைய குன்றில் கட்டினார். இந்தியக் குடிமக்கள் தங்கி இருந்த "மேல் சந்தை" என்ற பகுதி எரிந்த பொழுது, பெரும் நிலப்பரப்பு வெட்ட வெளியாகியது. கிழக்குப்பகுதியை ஐரோப்பியர்களின் நகர மையமாக ஆக்கும் திட்டத்தால் அவர்கள் முகட்டிலிருந்து செங்குத்தான சரிவுகளில் கீழிறங்கி நடு மற்றும் கீழ் சந்தைக்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேல் சந்தையில் நூலகம், அரங்கம் ஆகிய வசதிகள் மட்டுமல்லாமல், காவலர், இராணுவ தன்னார்வலர்கள் ஆகியோரின் அலுவலகங்கள், நகராட்சி நிர்வாகம் போன்ற வசதிகளுடன், ஊர்ச் சாவடி அமைய இடம் ஏற்பட்டது. கோடை காலங்களில் பஞ்சாப் மாநில அரசின் கோடைத்தலைநகராக மட்டுமல்லாமல், இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மற்றும் பல அரசுத் துறைகளின் தலைமை அலுவலகமாகவும் சிம்லா விளங்கியது. கோடைக்காலத்தில், பெரும்பாலான பிரித்தானிய இல்லத்தரசிகள் மற்றும் சமவெளியில் வசிப்போரது பெண்மக்கள் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து கொள்வர். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உருவானதே 'ஷிம்லா சமுதாயம்' ஆகும். சார்லஸ் ஆலன் என்பவரின் கூற்றுப்படி, "இது பிரித்தானிய இந்தியாவிற்கு ஒரு மேல் தட்டு ஏற்பட்டதைப் போன்றதாகும்". மிக அதிகமான விலைவாசி, மிக உன்னதமான, விரும்பத்தகுந்த பருவநிலை, மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள தங்குமிடங்கள், போன்ற காரணங்கள் இதற்கு உதவியிருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், பிரித்தானிய ராணுவ வீரர்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் இந்திய கங்கை நதி சமவெளியின் கோடைகால வெப்பத்திலிருந்து தப்புவதற்காக அங்கே செல்வர். திருமணமாகாத ஆண்கள், குடும்ப உறவற்றவர்கள், கோடையைக் கழிப்பதற்காக வந்துள்ள பெண்டிர் ஆகியோர் அங்கு இருப்பதால், சிம்லா விபச்சார நடவடிக்கைகள் நடைபெறும் இடம் என்றும் விபச்சாரம் பற்றிய வம்புப் பேச்சுகள் உலவும் இடம் எனவும் பெயர் பெற்றது. ஆலன் குறிப்பிடும் கடிதத்தில் ரூடியார்ட் கிப்ளிங் என்பவர் குறிப்பிட்டது போல் சிம்லா "அற்பத்தனம், வம்புப்பேச்சு, சதியாலோசனை ஆகியவற்றுக்காகப் புகழ் பெற்றிருந்தது. இதனையும் பார்க்கவும்[95] 1906-ல் கட்டிய, கால்கா-ஷிம்லா ரயில் தடம் சிம்லாவுக்குப் பிரபலத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கால்கா, ஷிம்லா ரயில் தடமானது, 806-க்கும் அதிகமான பாலங்களையும், 103 குகைகளையும் கொண்டதாகும். இது ஒரு பொறியியல் விந்தை எனவும் , கிழக்கிந்தியாவின் பிரித்தானிய அணிகலன் எனவும் பெருமை பெற்றது. 2008-ம் ஆண்டில், யூனேஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் , இந்தியாவின் மலை ரயில் தடமாக இடம் பிடித்தது. அது மட்டுமன்றி, பிரித்தானிய இந்தியாவின் பிரிவினைக்கு முன் இப்பகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தனர். மேலும், 1871-லிருந்து, இன்றைய தலைநகரான புதிய சண்டிகர் நகரம் கட்டி முடிக்கப்படும் வரையிலும் , பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்திற்கு ஷிம்லா தலைநகரமாய் இருந்தது. 1971-ல் ஹிமாச்சல பிரதேசம் உருவானபோது ஷிம்லா இதன் தலை நகரமாயிற்று. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டிடங்கள் இன்றும் சிம்லாவில் காணப்படுகின்றன. அரசுப் பிரதிநிதி மாளிகை,ஆக்லாந்து இல்லம், கோர்டான் கோட்டை, பீட்டர் ஹாஃப் இல்லம், கெயிட்டி திரையரங்கம் ஆகியன பிரித்தானிய இந்திய ஆதிக்கத்தின் சுவடுகளாக எஞ்சி இருக்கின்றன. ஜக்கோ மலை மற்றும் பிராஸ்பெக்ட் மலை என்ற இரு குன்றுகளுக்கிடையே, மலைத்தொடரில் சுமார் ஒன்றரை மைல் நீளத்திற்கு பிரித்தானிய ஷிம்லா அமைந்திருந்தது. இந்த மலைமுகட்டின் நீளவாட்டில் முதுகுத் தண்டுபோல அமைந்தது தான் 'மால்' எனப்படும். இதன் தென்திசை விரிவாக்கம் வைஸ்ராய் மற்றும் அவரது மனைவியின் வண்டிகள் தவிர பிற போக்குவரத்துக்குத் தடை விதித்த பகுதியாகும். இமயமலையின் வடமேற்குத் தொடரில் ஷிம்லா அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 2397.59 மீட்டர் (7866.10 அடி) உயரத்திலுள்ள இந்நகரம், ஒரு மலை முகட்டிலும்அதன் ஏழு முள்போன்ற கூரிய அமைப்புகளின் மீதும் பரந்து விரிந்துள்ளது. இந்நகரம் கிழக்கு மேற்காக சுமார் 9.2 கி.மீட்டர் (22) நீண்டுள்ளது. ஷிம்லாவில் 2454 மீட்டர் (8051 அடி) உயரத்திலுள்ள ஜாக்கோ குன்றுதான், மிக உயரமான இடமாகும். இந்தியாவின் நிலநடுக்க ஆபத்து மண்டலங்களுள் ஷிம்லா நான்காவது மண்டலமாகும் (அதிக அளவு பாதிப்பு விளையும் பகுதி) வலுவற்ற கட்டிடக்கலை நுட்பமும், பெருகி வரும் மக்கள் தொகையும், ஏற்கனவே நிலநடுக்க வாய்ப்புள்ள ஷிம்லா நகரத்தை அச்சுறுத்துகின்றன. நகரில் முக்கிய நீர் நிலைகள் ஏதுமில்லை. 21 கி.மீ.(13 மைல்) தூரத்திலுள்ள சத்லஜ் ஆறு தான் அதற்கு மிக அண்மையிலுள்ள நதியாகும். கிரி, பப்பர் யமுனையாற்றின் கிளைநதிகள் இரண்டும், ஷிம்லா மாவட்டத்தில் நகருக்குத் தொலைவில் ஓடும் ஆறுகளாகும். ஷிம்லாவின் திட்டப்பரப்பில் பசுமைப் பகுதி சுமார் 414 ஹெக்டேர் (1023 ஏக்கர்) ஆகும். நகரின் உள்ளேயும், சுற்றி புறத்தேயும் நிறைந்துள்ள, தேவதாரு, டியோடர், கருவாலி, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், (ரோடா டென்டிரான்) போன்ற மரங்களே முக்கிய காடுகளாகும். ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பராமரிக்கும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், சுற்றுப்புற சூழல் சீரழிந்து, ஷிம்லாவின் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் என்ற புகழ் மங்கி விட்டது. கனமழைப் பொழிவுக்குப் பின் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளும் இவ்விடத்தில் இப்போது அதிகரித்து வரும் பிரச்சனையாகும். குளிர்காலத்தில் மிகுதியான குளிர்ச்சியும், கோடைக் காலத்தில் மிதமான வெப்பமும் ஷிம்லாவின் தட்பவெப்ப நிலையாகும். வெப்பநிலையானது, ஆண்டு முழுவதும் 3.95 °C (39.11 °F) முதல் 32.95 °C (91.31 °F) வரையிலான வரையறைக்குட்பட்டது. கோடையில் சராசரி வெப்பம் 14 °C முதல் 20 °C வரையும், குளிர்காலத்தில் -7 °C முதல் 10 °C வரையும் பதிவாகின்றன. மாதத்தின் மழை அளவு நவம்பரில் 24 மி.மீ என்ற அளவிற்கும் ஜூலை மாதம் 415 மி.மீ என்ற அளவிற்கும் இடையே வேறுபடுகிறது. குளிர் மற்றும் வசந்த காலத்தில் மாதத்தில் 45 மி.மீ மழை பெய்வதும் பருவ மழை தொடங்கும் ஜூன் மாதத்தில் 115 மி.மீ மழை பெய்வதும் வழக்கமாகும். ஓராண்டில் பொழியும் மொத்த மழையின் சராசரி அளவு 1520 மி.மீ (62 அங்குலம்) ஆகும். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்து வந்த பனிப் பொழிவு, அண்மைக் காலங்களில் (கடந்த பதினைந்து ஆண்டுகளாக), ஆண்டுதோறும் சனவரி, பிப்ரவரியில் நிகழ்கின்றது. சுற்றுலா மற்றும் அரசுத்துறை இங்கு வேலைவாய்ப்பைத் தருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் நிர்வாகத் தலைநகரம் என்பதாலேயே, மத்திய, மாநில அரசுகளின் பல அலுவலகங்கள் இங்குள்ளன. வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட பாதி மக்கள் (47%) அரசுப் பணியில் இருப்பவர்களாகும். நேரடி விருந்தோம்பும் தொழிலாளிகளான சுற்றுலா வழிகாட்டிகள், உறைவிடங்களிலும், உணவு விடுதிகளிலும் பணிபுரிவோர் மற்றும் பலர் மிகக் குறைவானவர்களே (10%). எஞ்சியவர்களுள் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவு பரிசுப் பொருட்களை உற்பத்தி செய்தல், தோட்டவிளைபொருட்களைப் பதனிடுதல் போன்ற கைவினைகளிலும், சிறு தொழில்களிலும் ஈடுபடுவோராவர் . இப்பிரதேசத்தின் வியாபாரம் மற்றும் போக்குவரத்தின் மையமாக ஷிம்லா நகரம் விளங்குவதுடன், இந்திரா காந்தி மருத்துவமனை (முன்னாள் ஸ்நோடவுன் மருத்துவமனை), தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை (முன்னாள் ரிப்பன் மருத்துவமனை), கமலா நேரு மருத்துவமனை மற்றும் இண்டஸ் மருத்துவமனை ஆகிய நான்கு பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஒரு மருத்துவக் கல்லூரியை இப்பகுதிக்கு வழங்கி உடல்நலம் பேணும் மையமாகவும் திகழ்கிறது. ஷிம்லாவை ஒரு கவர்ச்சியான ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு, நகரின் முன்னேற்றத் திட்டங்கள் முனைகின்றன. ஷிம்லா நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தால்லி, டுட்டு, புதிய ஷிம்லா ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்புகள் ஷிம்லா நகராட்சி மன்றத்திற்குண்டு. 1851 ம் ஆண்டு துவங்கிய இந்த நகராட்சி மன்றத்தில், இமாசலப் பிரதேச அரசு நியமிக்கும் 3 உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 27 உறுப்பினர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். சமூக சேவை, கல்வித் துறை மற்றும் பிற செயல்களில் மேம்பாட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் செய்கிறார்கள். 33 சதவீத இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. மேயரையும், துணை மேயரையும் மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். 2008 ம் ஆண்டு ஜுன் மாத நிலவரப்படி இந்திய தேசிய காங்கிரஸ் (எதிர்க்கட்சி) மற்றும் பாரதீய ஜனதா கட்சி (ஆளும் கட்சி) ஆகியவை இரண்டு பெரிய அரசியல் கட்சிகளாகும். மாநில அரசால் நியமிக்கப்படும் ஆணையர்தான் நகரசபையின் நிர்வாகத் தலைவர். ஷிம்லா நகரமானது, மாநிலங்களவைக்கு (விதான் சபா) ஓர் உறுப்பினரையும், பாராளுமன்ற மக்களவைக்கு (லோக் சபா) ஓர் உறுப்பினரையும் அனுப்பி வைக்கிறது. நகரின் சட்டம், ஒழுங்குமுறைகளை காவல்துறை, கண்காணிப்புத்துறை, அமலாக்க இயக்குனரகம், தடய அறிவியல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை மற்றும் ஊர்க்காவல் துறை ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பராமரிக்கி றார்கள். சிம்லா நகரில் மட்டும் 5 காவல் நிலையங்களும், 3 தீயணைப்பு நிலையங்களும் உள்ளன. ௦காவல் துறை மேலாளர், காவல் துறைக்குத் தலைமை ஏற்றுள்ளார். மாநிலத்திலுள்ள நான்கு ஆயுதம் தங்கிய போலீஸ் பட்டாளத்தில் ஒன்றான முதலாம் ஆயுதம் தாங்கிய போலீஸ் பட்டாளமும், நகரிலுள்ள காவல் துறையினருக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். விரைவு நடவடிக்கை நீதிமன்றம் உள்பட, மொத்தம் பதினொரு நீதிமன்றங்கள் இந்த மாவட்டத்தில் செயல்புரிகின்றன. ஷிம்லா நகரம் என்பது, ஷிம்லா நகராட்சி மன்றம் மற்றும் சிம்லா திட்ட விரிவாக்கப் பகுதிகள் ஆகிய இரண்டையும் கொண்டது. ஷிம்லா திட்ட விரிவாக்கப் பகுதி என்பது, தால்லி, டுட்டு, புதிய ஷிம்லா நகர்ப்புற தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது. 2001-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஷிம்லா நகரமானது 1,042,161 ஜனத்தொகையுடன் 19.55 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடையது. சுற்றுலாத்துறையின் மூலமாக வந்துபோகும் பயணிகளால் நிரந்தரமற்ற மக்கள்தொகை 75000 ஆகும். மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், அதாவது சுமார் 55% சதவீதத்தினர் 16–45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். அடுத்து 28 சதவீதத்தினர் 15 வயதிற்குக் குறைவான சிறார்கள். 2001 கணக்கின்படி, 1000 பையன்களுக்கு, 930 பெண்கள் என்ற குறைவான பால் விகிதம் இம்மாநிலத்திற்கு இயல்பற்றதல்ல எனினும் கவலைக்குரியதாகும். 1992-ல் 36% சதவீதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை, 2006-ல் 22.6% சதம் என்று கணிசமாக குறைந்துவிட்டது. சமீபத்திய தொழில்மயமாக்கல், சேவை செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி, மற்றும் அறிவு வளர்ச்சி என்ற காரணங்களாலேயே வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தது என்று குறிப்பிடப்படுகிறது.ஷிம்லா மாவட்டத்தில் 80சதவீதத்தினரும், மொத்த மாநிலத்தில் 77 சதவீதத்தினரும் கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதை ஒப்பிடும்போது ஷிம்லா நகரத்தில் 84 சதவீதத்தினர் படித்தவர்களாவர். இமாசலப் பிரதேசத்தின் பூர்வீகக் குடிமக்களே ஷிம்லா நகரின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினையின்போது, இங்கிருந்த பெரும்பாலான முகமதியர்கள் வெளியேறாமல் இங்கயே தங்கிவிட்டார்கள். சோலன் பகுதியல் வசிக்கும் சாஹ்னிஸ் போன்ற முஸ்லிம்களும் இதில் அடக்கம். ஹிந்தி, பஞ்சாபி, பிஹாரி போன்றவை மக்கள் பரவலாக பேசும மொழிகளாகும். இங்குள்ள முக்கியமான மதம் இந்து மதமாகும் (89%), அதற்கடுத்தது சீக்கிய மதமாகும் (9.7%), சிறுபான்மையினராக கிறித்துவர்களும், திபெத்திய பெளத்தர்கள், இசுலாமியர் ஆகியோரும் உள்ளனர். ஷிம்லா நகரவாசிகளை ஷிம்லாயிட்ஸ் என்று சாதாரணமாக அழைக்கிறார்கள். அதிக அளவில் பட்டணத்து மேட்டுக்குடி மக்கள் இருப்பதால், அவர்கள் இங்கு பல வகையான விழாக்களை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் காலத்தில் சிம்லா கோடைத் திருவிழவானது, 3 - 4 நாட்கள் மலைமுகட்டில் கொண்டாடுகிறார்கள். இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரபலமான பாடகர்கள் வந்து பாடுவது இந்தக் கோடை விழாவின் சிறப்புகளில் ஒன்று. ஷிம்லாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. பலரும் கூடும் இடங்களான மால் சாலையும், மலைமுகடும் நகரின் மையத்தில் உள்ளன. புரதான கட்டிடங்கள் பலவும் அவற்றின் தொன்மையான டூ டர்பீதன் கட்டிடக்கலை அம்சங்களுடன் இன்னும் பாதுகாக்கிறார்கள். இந்திய உயர்கல்விக் கலாசாலை அமைந்துள்ள வைஸ் ரீகல் லாட்ஜ்ம், தற்போது ஆடம்பர விடுதியாக இருக்கும் வைல்ட் ஃப்ளவர் ஹாலும், அவற்றுள் பிரபலமானவையாகும். 1974-ல் கட்டிய அரசு அருங்காட்சியகத்தில், சிம்லா பிராந்தியத்தின் ஓவியங்கள், ஆபரணங்கள், துணிமணிகள், கலாச்சாரத்தை விவரிக்கும், ஆடைகள் ஆகியவற்றைக் காணலாம். நகரிலிருந்து இன்னும் சற்றுத் தொலைவில் சென்றால், இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த, ஒன்பது குழிகள் கொண்ட நல்டேரா கோல்ப் மைதானத்தைக் கண்டு மகிழலாம். பனிக் காலத்தில் மட்டும் நடக்கும் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கமான குப்ரி நகரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலைமுகட்டில்நீண்டு அமைந்திருக்கும் லக்கர் பஜார் என்பது, மரத்தால் செய்த கைவினைப் பொருட்கள், பரிசு நினைவுப்பரிசுப் பொருட்கள் விற்பனையாகும் அங்காடியாகும். சத்லஜ் ஆறு ஆற்றங்கரையில், ஊருக்கு 55 கிலோமீட்டர் தொலைவில், டாட்டா பாணி என்ற பெயருடையதும் மருத்துவ முக்கியத்துவம் கொண்டுள்ளதாகக் கருதப்படுவதுமான கந்தக சுடு நீரூற்று அமைந்துள்ளது. ஆசியா கண்டத்திலேயே உள்ள ஒரே ஒரு இயற்கைப் பனிச் சறுக்கு போட்டிக்களமும் ஷிம்லாவில் மட்டுமே உள்ளது. மாநில மற்றும் அகில இந்திய அளவிலான போட்டிகள் அடிக்கடி இங்கே நடக்கும். இந்த போட்டிக்களத்தை நிர்வகிக்கும் தி சிம்லா ஐஸ் ஸ்கேட்டிங் கிளப் என்ற நிறுவனம், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஒரு மனமகிழ் விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் மாறுவேடப் போட்டியும், பனிக் கட்டியில் சறுக்கும் போட்டியும் சிறப்பம்சங்களாகும். சமீபகாலமாக, பூமி வெப்பமயமாதலாலும், சிம்லா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நகர்ப்புற வளர்ச்சி அதிகரிப்பதாலும், இங்கு குளிக் காலத்தில் பனிக் கட்டிகள் மீது நடைப்பெறும் விழாக்கள், நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகின்றன. அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பல பக்தர்கள் வந்து அடிக்கடி தரிசனம் செய்யும் பல கோவில்கள் ஷிம்லாவில் உண்டு. இந்துக் கடவுளான காளிக்காகப் படைத்த காளிபாரி- கோவில் மாலுக்கு அருகில் உள்ளது. இந்துக் கடவுளான ஹனுமனுக்காக ஏற்ப்பட்ட "ஜக்கூ" கோவில் சிம்லாவின் உச்சியில் இருக்கிறது. மற்றொரு ஹனுமான் கோவிலான சங்கட்மோச்சன் எப்போதும் பல குரங்குகள் கூடி இருக்கும் இடம் எனப் புகழ் பெற்றது. இந்தக் கோவில் சிம்லா-கால்கா நெடுஞ்சாலையில் நகருக்கு தொலைவில் உள்ளது. அருகேயுள்ள "தாராதேவி" ஆலயம், பல பண்டிகைகளும், மதச்சடங்குகளும் நடத்தும் இடமாகும். பேருந்துகளின் கடைசி நிறுத்தத்தின் அருகிலுள்ள குருத்வாராவும் மலைமுகட்டில் உள்ள மாதாகோயிலும், வணங்கத்தக்க பிற முக்கியமான இடங்களாகும். மேலும்,முஸ்லிம்களின் இரண்டு பள்ளி வாசல்களும் இங்கு உள்ளன. இங்கு காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்கள் ரயில்வே போர்டர்களாகவும் சுமை தூக்கும் கூலி ஆட்களாகவும் உள்ளனர். சமீபத்தில் சிம்லா சென்ற எனக்கு இந்த காஷ்மீர் மக்களின் துயரங்களை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே காஷ்மிரி நபர் ஒரு பெரிய இரும்பு பீரோ வை தூக்கி சென்ற காட்சிகள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. நகரில் 14 சிறார் பராமரிப்பு நிலையங்களும், 63 ஆரம்பப்பள்ளிகளும் உள்ளன. பிரித்தானிய காலம்தொட்டே பல பள்ளிகள் இயங்குகின்றன. "பிஷப் காட்டன் பள்ளி" , "சிம்லா பப்ளிக் பள்ளி,", "செயின்ட் எட்வார்ட்ஸ் பள்ளி," "தாரா ஹால்" , "ஹைனால்ட் பப்ளிக் பள்ளி" , "டிஏவி க்கர் பஜார்" , "டிஏவி புது சிம்லா" , "ஆக்லேண்டு ஹவுஸ் பள்ளி " , "தயானந்து பப்ளிக் பள்ளி" , சாரப்ராவில் உள்ள செயின்ட் பீட்ஸ் (பெண்கள்) பள்ளி மற்றும் ஹிமாலயன் இன்டர்நேசனல் பள்ளி, செயின்ட் தாமஸ் சிம்லா, சாப்ச்லீ பள்ளி ஆகிய பள்ளிகள் பிரபலமானவை. கேந்திரிய வித்யாலயா ஷிம்லா ஜக்கூ என்பது ஷிம்லாவில் உள்ள தரமான பள்ளிகளில் ஒன்று. ஹார்கோர்ட் பட்லர் பள்ளி என்பதே இதன் முந்தைய பெயர். இந்திர காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி ஷிம்லாவிலுள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களாகும். "செயின்ட் பீட்ஸ்" மற்றும் ராஜ்கியா கன்யா மகாவித்யாலயா (ஆர் கே எம் வீ) ஆகியவை பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரிகள். "சஞ்சாவுலி அரசுக் கல்லூரியும், சவுரா மைதான அரசுக் கல்லூரியும் நகரிலுள்ளன." "வைஸ் ரீகல் லாட்ஜில் அமைந்துள்ள இந்திய உயர்கல்வி கலாசாலை யானது கலை, இலக்கியம், இந்திய பண்பாடு, , மதம், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கான உறைவிட மையமாகும். " "இமாசலப் பிரதேச மாநிலப் பல்கலைக் கழகமும் ஷிம்லாவில் அமைந்துள்ளது. " " பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப கலாசாலை, (UIIT) என்னும் தொழில் நுட்பக் கல்வியளிக்கும் ஒரு முதன்மை நிறுவனம் இங்கு அமைந்துள்ளது." சுமார் 47,000 பழைய புத்தகங்களை தம்மிடையே சேமித்து வைத்துள்ள இரண்டு நூலகங்கள் ஷிம்லாவில் உள்ளன. பல்கலைக் கழகத்தின், காந்தி பவனில் உள்ள நூலகத்தில் 40,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களும், மலைமுகட்டிலுள்ள புராதன நினைவுக் கட்டிடத்திலுள்ள நூல் நிலையத்தில் சுமார் 7000 புத்தகங்களும் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) அங்கமாகிய, மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிறுவனமும், இந்தியத் தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் தேசிய தணிக்கை மற்றும் கணக்கு கல்விக் கழகம்]] ஷிம்லாவில் உள்ள பிற உயர் கல்வி நிறுவனங்களாகும். ஷிம்லா நகரின் பிரதான கடைத்தெரு மால். உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், வங்கிகள், மதுபானக் கடைகள், தபால் நிலையங்கள், சுற்றுலா அலுவலகங்கள் ஆகியவன அனைத்தும் அங்குள்ளன. கெய்ட்டி திரையரங்கும் இங்குதான் உள்ளது. இந்த இடம் அனைத்து மக்களும் கூடும் முக்கியமான இடமாதலால், மக்கள் இத்தெருவில் மெதுவாக மேலும், கீழும் நடமாடிக் கொண்டும் இடையில் நின்று யாருடனாவது வம்பு பேசிக்கொண்டும் இருப்பார்கள். ரிட்ஜ் மற்றும் ஸ்கேண்டல் பாயிண்ட் இரண்டும் மாலில், முக்கியமான ஒன்று கூடும் இடங்கள். கிறைஸ்ட் சர்ச் : ஷிம்லாவின் ரிட்ஜ் என்ற மலை யுச்சி முகட்டில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ ஆலயம் வட இந்தியாவின் இரண்டாவது மிகத் தொன்மையான ஆலயமாகும். இது ஒரு கம்பீரமான வெளித் தோற்றம் உடையது. உட்புறத்தில் வண்ணமிகு கண்ணாடி ஜன்னல்களின், அழகும் கண்ணைக் கவரும். இந்த கண்ணாடி ஜன்னல்கள் இறைவன் மேலுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அருளிரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, தன்னடக்கம் போன்ற குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன. இங்கு வரும் அனைவரும் இந்த கிறிஸ்து தேவாலயத்தில் சிறுது நேரம் செலவிட வேண்டும். ஜக்கு மலை : ஷிம்லா நகரிலிருந்து 2 கீ.மீ. தூரத்திலுள்ளதும், 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளதுமான மிக உயர்ந்த சிகரமான இந்த ஜக்கு மலையுச்சியிலிருந்து, ஷிம்லா நகரின் அற்புதமான அழகையும் பனிக்கட்டிகள் மூடிய இமயமலைத் தொடர்களையும் காணலாம். இந்த மலை உச்சியில், ஒரு பழமையான அனுமான் கோவில் உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் போடும் தின்பண்டங்களால் பசியாறக் காத்திருக்கும் குறும்புத்தனம் மிக்க எண்ணற்ற குரங்குகளுக்கு இக்கோவில் இருப்பிடமாகும். ஷிம்லா அரசு அருங்காட்சியகம் : 1974-ல் துவங்கிய இந்த அருங்காட்சியகம், இந்த மலை மற்றும் மலை சார்ந்த இயற்கை வளங்களையும், கலாச்சார செல்வத்தையும் பாதுகாக்கிறது. மிகச் சிறிய அளவில் வரையப்பட்ட பஹாரி ஓவிங்கள், சிற்பங்கள், வெண்கல மற்றும் மர வேலைப்பாடுகளும் இந்த மாநிலத்திற்குரிய அழகு சாதனப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஆகியன இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய உயர்கல்விக் கலாசாலை 1884-88 ல் வைஸ் ரீகல் லாட்ஜில், இந்நிறுவனம் துவங்கியது.. கோடை மலை : மலையுச்சி முகட்டிலிருந்து (ரிட்ஜ்) சுமார் 5 கி.மீ. தொலைவில், சுமார் 6,500 அடி உயரத்தில், ஷிம்லா-கால்கா ரயில்பாதையில் அழகான கோடை மலைக் குடியிருப்பு அமைந்துள்ளது. மகாத்மா காந்தியடிகள் சிம்லாவுக்குச் சென்றபோதெல்லாம், இந்த அமைதியான சூழலில் தான் வசித்து வந்தார். இமாசலப் பிரதேசத்தின் பல்கலைக் கழகம் இங்குதான் உள்ளது. அண்ணான்டேல் : ரிட்ஜிலிருந்து சுமார் 2–4 கி.மீ. தூரத்திலுள்ள அண்ணான்டேல் ஒரு சிறப்பான விளையாட்டு மைதானமாக 6,117 அடி உயரத்தில் உருவெடுத்துள்ளது. கிரிக்கெட், பிக்னிக், போலோ போன்றவற்றுக்கு மிகவும் விரும்பப்படுகின்ற இடம். தாரா தேவி : ஷிம்லா பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ளது. தாரா தேவி மலையின் உச்சியில் நட்சத்திர தேவதைகளுக்காக அர்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. இராணுவ பால்பண்ணை நகரும், அகில இந்திய சாரணர் இயக்கத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளன. சங்கட் மோச்சன் : ஒரு அனுமன் கோவில் இங்குள்ளது. ஜுங்கா : ஷிம்லாவிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ஜுங்கா, ஒரு தாலுக்காவாகும். இதன் பழங்காலப் பெயர் ஜுங்கா . கியோன்தால் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட, ஜுங்கா என்ற மாநிலத்தின் அரசகுடும்பம் தனிமையில் ஓய்வெடுக்கும் இடமாக இது இருந்துள்ளது. மஷோப்ரா : ஷிம்லாவிலிருந்து 13 கி.மீ. தூரத்திலுள்ள இவ்விடத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் சிப்பி என்னும் விழா கொண்டாடப்படுகிறது. குப்ரி, ஷிம்லாவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் 8,600 அடி உயர சிகரத்தில் குளிர்கால விளையாட்டுத் தலை நகரமாகவுள்ள குஃப்ரியில் சிறு மிருகக் காட்சி சாலையும் உள்ளது. சாரப்ரா : குஃப்ரிக்குச் செல்லும் வழியில் ஷிம்லாவிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. நல்தேரா : ஷிம்லாவிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒன்பது துளை நல்தேரா கோல்ப் கிளப் இங்குதான் உள்ளது. ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் நல்தேராவில்தான் சிப்பி திருவிழா நடைபெறும். ததாபானி : ததாபானி புனிதக் கோவிலருகே கந்தக வெந்நீர் ஊற்று இருக்கிறது. செயில் : இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பாட்டியாலா மகா ராசாவிற்குச் சொந்தமான இப்பகுதி கோடைக்கால, தலை நகரமாயிருந்தது. உலகிலேயே அதிக உயரத்திலுள்ள கிரிக்கெட் ஆடுகளம் இங்குதான் உள்ளது. ஆர்க்கி : அந்நாளைய பாகல் என்ற மலை நாட்டின் தலைநகரமாக இருந்தபோது கட்டிய, 18 ம் நூற்றாண்டின் பழமையான கோட்டையும் இங்குள்ளது. சஞ்சாவுலி : ஷிம்லா நகரின் முக்கியமான புறநகரமாகும். ஷிம்லாவின் உள்ளூர் போக்குவரத்து, அரசுத் துறை பேருந்துகள் அல்லது தனியார் வாகனங்கள் மூலமாக நடைபெறுகிறது. நகரின் மையப் பகுதியைச் சுற்றிலும் உள்ள வட்டமான சாலையில் அடிக்கடி பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நகரத்தை விட்டு வெளியே செல்வதற்கு சுற்றுலா வாடகை வண்டிகளும் கிடைக்கின்றன. உள்ளூர் வாசிகள் நகருக்குள் நடந்தே செல்கிறார்கள். மால், ரிட்ஜ் மற்றும் அருகிலுள்ள கடைத்தெருக்களில் தனியார் வாகனங்கள் செல்லுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறுகலான ரோடுகள், செங்குத்தான சரிவுகள் உள்ள காரணத்தினால், இந்தியாவின் பிற நகரங்களில் பொதுவாகப் பயன்ப்படும் ஆட்டோ ரிகஷாக்கள் இங்கு காணப்படுவதில்லை. ஷிம்லா நகரம், ரயில் மற்றும் சாலை வசதியால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 22 (NH 22) ஷிம்லா நகரை அருகிலுள்ள பெரிய ஊரான சண்டிகருடன் இணைக்கிறது. கல்கா ஷிம்லா ரயில் [[மிகக் குறுகிய ரயில் பாதையில்]] 96 கி.மீ. தூரத்துக்கு, மிக செங்குத்தாக உயர்ந்து செல்வது "கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. கல்கா என்ற சமவெளி ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற பெரிய நகரங்களுக்குக்கும் தினமும் ரயில்கள் புறப்பட்டுச் செல்கின்றன. 12 கி.மீ. தொலைவிலுள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷிம்லாவை டெல்லியுடன் இணைக்கிறது. நிலம் நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும். பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது. "நிலம்" என்பது "நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை" எனப் பொருள் கூறப்படுகிறது. நிலையாக நிற்பது என்னும் பொருளில் "நில்" என்னும் அடியில் இருந்து "நிலம்" என்னும் சொல் உருவானது. இது ஒரு திராவிட மொழிச் சொல். பிற திராவிட மொழிகளில் இதற்கு "நிலம்" {மலையாளம்), "நெல" (கன்னடம், துளு, குடகு, படகர்), "நேல" (தெலுங்கு), "நெல்ன்" (துட) போன்ற சொற்கள் பயன்படுகின்றன. நீட்சிப் பொருள் கொண்ட வேர்ச்சொல் "நுல்". இதிலிருந்து "நிலம்" என்னும் சொல் பின்வருமாறு பெறப்படும்: "நுல்" --> "நெல்" --> "நெள்" --> "நெரு" --> "நெகிழ்" {"நெகிள்") --> "நீள்" --> "நிள்" --> "நில்" --> "நிலம்" நிலம் அல்லது இயற்கை வளம் - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு வாடகை ஆகும். தாய்மொழி (சஞ்சிகை) தாய்மொழி சிறிது காலம் ஈழத்திலிருந்து வெளியான ஒரு தமிழ் சஞ்சிகை. 1999ம் வருடம் சித்திரைப் புது வருட தினத்தில் வெளியானது.. பிரபல தமிழ் சஞ்சிகைகளான குமுதம், ஆனந்த விகடன் சாயலில் மாதம் இருமுறை வெளியானது. இதன் ஆசிரியர் உமாபாஸ்கரன், இணையாசிரியர் கா. தேவேந்திரராசா. அரசியற் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பொது அறிவு, போட்டி மற்றும் சினிமா விடயங்களை கொண்டிருந்தது. இலங்கையின் பத்திரிகைப் பரிமாணத்தில் தாய்மொழியைப் போன்று சகல அம்சங்களையும் கொண்ட சஞ்சிகையைக் காணவில்லையென யாழ்ப்பாண பல்கலைக் கழக பதிவாளர் செங்கை ஆழியான் க. குணராசா ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். தாய்மொழி பதிவு செய்த பல அரசியற் கட்டுரைகள் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் எச்சரிக்கையினால் தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது. தாய்மொழிக்குத் தடா எனத் தலைப்பிட்டு சரிநிகர் பத்திரிகை தனது ஆதங்கத்தினை கவலையுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. லைலா லைலா (பிறப்பு: அக்டோபர் 24, 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார். பிரசாந்த் பிரசாந்த் (பிறப்பு: ஏப்ரல் 6, 1973) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். பிரசாந்த் நடித்தப்படங்களில் வெற்றி வாய்ப்பைத் தந்தப் படங்களில் சில: சரண் சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். "ஜெமினி புரொடக்சன்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பிரபுதேவா பிரபுதேவா ( ஏப்ரல் 3, 1973, சென்னை) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். சென்னையில் பிறந்த பிரபுதேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது. பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார். அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன. 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார். பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார். பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக "அக்னி நட்சத்திரம்" போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த "இதயம்" திரைப்படத்தின் "ஏப்ரல் மேயிலே" பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் "ஜெண்டில்மேன்" திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் "சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே" பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் "ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா" பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான "காதலன்" திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை "ஏழையின் சிரிப்பிலே" திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். மும்பை: டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். பத்மசிறீ விருது செந்தில் செந்தில் (பிறப்பு: மார்ச் 23, 1951), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவரை இன்முகத்துடன் வரவேற்க்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. இவரது நகைச்சுவையான வசனங்கள் சில: கவுண்டமணி கவுண்டமணி (பிறப்பு: மே 25, 1939) ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு. கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25, 1939 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த "வாழைப்பழம்" வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது. இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு மேலும் பார்க்க , கவுண்டமணி நடித்த திரைப்படங்கள் கார்த்திக் (தமிழ் நடிகர்) கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் இவரது மூத்த மகனாவார். சரத்குமார் சரத்குமார்,(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது. சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த "கோடீஸ்வரன்" என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார். 1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார். 31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சரத்குமார் ஆவார். "கோடீஸ்வரன்" என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார். ____________________________________________________________________________________________________________ படிக்கட்டு படிக்கட்டு வெவ்வேறு மட்டங்களில் உள்ள தளங்களைப் போக்குவரத்துக்காக இணைப்பதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். மாடிப்படி என்றும் இது அழைக்கப்படுவதுண்டு உண்மையில் இது, கடக்க வேண்டிய நிலைக்குத்துத் தூரத்தைச் சிறு சிறு தூரங்களாக ஏறிக் கடப்பதற்காகச் செய்யப்படும் ஒழுங்கு ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒரு பிரிவு நிலைக்குத்துத் தூரத்தை ஏற உருவாக்கிய அமைப்புப் "படி" எனப்படுகின்றது. எனவே படிக்கட்டு என்பது பல படிகள் கொண்ட ஒரு தொகுதி ஆகும். படிக்கட்டை அமைப்பதற்கான இடவசதி, அழகியல் நோக்கம், மற்றும் பலவற்றைக் கருத்தில் கொண்டு, படிக்கட்டுகள் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுவதுண்டு. நேர்ப் படிக்கட்டு (stright staircase), இடையில் திசைமாறும் படிக்கட்டுகள், வளைவான படிக்கட்டுகள் (curved staircase), சுருளிப் படிக்கட்டு (spiral staircase) எனப் படிக்கட்டுகள் பலவகையாக உள்ளன. படிக்கட்டு பல கூறுகளால் அமைந்தது. இவற்றிற் சில கூறுகள் படிக்கட்டுகள் அமைக்கப் பயன்படும் கட்டிடப் பொருள்கள் அல்லது அவற்றின் வடிவமைப்பைப் பொறுத்து இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமல் இருக்கலாம். ஆனாலும் பல கூறுகள் எல்லா வகையான படிக்கட்டுகளுக்கும் பொதுவாக அமைகின்றன. படிக்கட்டுகளின் கூறுகள் மற்றும் துணைக்கூறுகள் சில பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன. ஒரு படியில் ஒரு கிடைத்தள மேற்பரப்பும், ஒரு நிலைக்குத்து அல்லது ஏறத்தாழ நிலைக்குத்தான மேற்பரப்பும் காணப்படும். இவை முறையே மிதி (tread) என்றும், ஏற்றி (riser) என்றும் அழைக்கப்படுகின்றன. படிகளில் ஏறும்போது கால் வைத்து ஏறும் இடமே மிதி. இரண்டு மிதிகளுக்கு இடைப்பட்ட நிலைக்குத்துப் பகுதியே "ஏற்றி". சில படிக்கட்டுகளில் இந்த ஏற்றிப் பகுதி மூடியிருக்கும். இவ்வாறிருக்கும் படிக்கட்டு மூடிய ஏற்றிப் படிக்கட்டு எனப்படும். சில படிக்கட்டுகளில், மிதிகள் தனித்தனியான பலகைகளாகக் காணப்பட, "ஏற்றிப்" பகுதி திறந்திருக்கும். இத்தகைய படிக்கட்டுகள் திறந்த ஏற்றிப் படிக்கட்டுகள் எனப்படுகின்றன. ஒரு படிக்கட்டில் இடம்பெறும் எல்லா மிதிகளும், அதேபோல எல்லா ஏற்றிகளும் சமனானவையாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாகும். இது ஒரு குறிப்பிட்ட இசைவொழுங்கில் (rhythm) காலெடுத்து வைத்து நடப்பதை உறுதிப்படுத்தும், இல்லாவிடில் தடுக்கி விழ நேரிடும். "ஏற்றி" பொதுவாக 150 மில்லிமீட்டருக்கும் 200 மில்லிமீட்டருக்கும் இடைப்பட்ட அளவுடையதாக இருப்பது வழக்கம். ஏற்றியின் அளவின் அடிப்படையில் மிதியின் அளவைத் தீர்மானிப்பதற்கு சில சூத்திரங்கள் (formulas) பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏறும்போது வசதியாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவை தவிரச் சில சமயங்களில், மிதி, ஏறுபடிக்கு வெளியே சிறிது நீண்டிருப்பதைக் காணமுடியும். இக்கூறு படிநுனி (nosing) எனப்படும். எல்லாப்படிகளிலும் படிநுனி இருப்பதில்லை. தொடர்ச்சியாக அமைந்திருக்கும் படிகளின் ஒரு தொகுதி ஏற்றம் (flight) எனப்படுகின்றது. கட்டிடங்களில் பொதுவான தளங்களுக்கிடையே அமையும் படிக்கட்டுகளில், படிகள் தொடர்ச்சியாக அமைவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்றங்களாக வடிவமைக்கப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்றங்கள் அமையும்போது இரண்டு ஏற்றங்களுக்கு இடையே ஒரு அகன்ற படி போன்றதொரு பகுதி அமைகின்றது இது படிமேடை (landing) எனப்படும். படிக்கட்டில் ஏறும்போது விழுந்துவிடாமல் இருப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் தடுப்புக்கள் அமைப்பது வழக்கம். பொதுவாக இது ஏறத்தாழ ஒரு மீட்டர் வரை உயரமான தடுப்புச் சுவராகவோ (parapet), கந்தணியாகவோ (balustrade) கம்பித் தடுப்புகளாகவோ (railing) அல்லது வேறுவகை அமைப்புக்களாகவோ இருக்கலாம். இவற்றின் மேற்பகுதி பொதுவாகக் கைப்பிடிச் சட்டமாக அமைந்திருப்பது வழக்கம். தடுப்புகள் காங்கிறீற்று, மரம், இரும்பு, அலுமினியம், கண்ணாடி போன்ற பல்வேறு வகையான கட்டிடப்பொருட்களினால் அமைக்கப்படுகின்றன. 1861 1861 (MDCCCLXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். திறந்த சமுதாயம் திறந்த சமுதாயம் ("Open Society") என்ற எண்ணக்கரு என்றி பெர்க்சன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. திறந்த சமுதாயத்தில் அரசு responsive and tolerant ஆகவும், அரசு அமைப்புகள் ஒளிவுமறைவற்றதாகவும் (transparent), எளிதில் மாற்றங்களை உள்வாங்கக் கூடியதாகவும் (flexible) இருத்தல் வேண்டும். அரசு எந்த வித இரகசியங்களைப் பேணாமலும், ஏகபோக தன்மையற்றதாகவும், அனைத்துத் தகவல்களும் அனைவரின் நம்பிக்கைக்கு உரியதாகவும் அமைய வேண்டும். அரசியல் உரிமைகளும் மனித உரிமைகளும் திறந்த சமுதாயத்தின் அடிப்படைகளாகும். கார்ல் பொப்பர் தனது "The Open Society and Its Enemies" என்ற நூலில் தந்த வரைவிலக்கணப்படி திறந்த சமுதாயம் தனது தலைவர்களை வன்முறையற்று தேர்வு செய்யும் திறனைக் கொண்டிருக்கும் என்கிறார். மூடிய சமுதாயங்கள் வன்முறையற்ற தலைமை அல்லது அரசியல் மாற்றத்தை செய்யமுடியாதவையாகும். திறந்த சமுதாயங்களுக்கு மக்களாட்சி எடுத்துக்காட்டு ஆகும். மூடிய சமுதாயங்களுக்கு சர்வாதிகாரம் அல்லது ஏகபோக முடியாட்சி உதாரணங்கள் ஆகும். கார்ல் பொப்பர் எப்படி அரசாள்வது சிறந்தது என்பது பற்றி இறுதியான, முழுமையான, தீர்க்கதரிசனமான அறிவை பெறுவது இயலாது என்பதால், எந்த ஓர் அரசும் அதன் அரசியலை மாற்றி அல்லது மாற்றங்களை அனுசரித்துப் போககூடியதாக இருத்தல் வேண்டும் என்கிறார். மேலும், திறந்த சமுதாயம் பன்முக தன்மையோடும் (pluralistic) பல்பண்பாட்டோடும் (multicultural) இருந்தாலே பிரச்சினைகளுக்குப் பல அணுகுமுறைகளை அலச வாய்ப்பளிக்கும். மாலதி படையணி மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் பெயரில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய தாக்குதற் படையணியாகும். இப்படையணியானது பல சமர்க்களங்களைத் தனியே தலைமையேற்று நெறிப்படுத்தி வெற்றிகளைக் கண்டது. மரம் (கட்டிடப் பொருள்) பெரிய, பல்லாண்டுத் தாவர வகைகளுள் ஒரு வகை "மரம்" எனப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் குற்றிகளாகவோ ("logs"), அறுக்கப்பட்டுப் பலகைகள், அல்லது வேறு வடிவிலோ மிகப் பழங்காலம் முதலே கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட கட்டிடப் பொருளைக் குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. மரம் (கட்டிடப் பொருள்) எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது. மரம், விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு பொருள். மரத்தினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக மிகப் பழையகால மரக் கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. எனினும், தொல்பொருளாய்வு, இலக்கியம், மற்றும் பழங்காலக் கட்டிடக்கலை எழுத்தாக்கங்கள் என்பவற்றினூடாக, பல ஆயிரம் ஆண்டுகளாகவே மரம் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டுவருவதை அறிய முடிகின்றது. ஆரம்பகாலத்தில் மரம், குற்றிகளாகச் செப்பனிடப்படாத வடிவிலேயே பயன்படுத்தப்பட்டன. காலப் போக்கில், ஒழுங்கான வடிவத்திலும், தேவையான அளவுகளிலும் மரங்களை அரிந்து பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் உருவாயின. மரம் ஒரு சிறந்த கட்டிடப் பொருளாயினும், அது தொடர்பிலும் சில வரையறைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியான வரையறைகள், பொருளாதார ரீதியான வரையறைகள், சூழலியல் தொடர்பான வரையறைகள், என்பவற்றினால் விளையக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில், செய்முறை மர உற்பத்திகள் ("processed wood products") விருத்தி செய்யப்பட்டன. ஒட்டுப்பலகை ("plywood"), நார்ப்பலகை ("fibre board"), சிம்புப்பலகை (chip board) என்பன இவற்றுட் சில. அண்மைக் காலங்களில், அடுக்குத்தகட்டு மரக் கட்டுமானக் கூறுகள் ("laminated wood components") பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுப்பலகை மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் (composite wood) பலகை. உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கூட்டு மரப் பலகை இதுவே எனலாம். பல்வேறு பயன்பாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பலவகையான ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. மென்மர (Softwood) ஒட்டுப்பலகைகள் பொதுவாக, டக்ளஸ் பர் (Douglas fir), ஸ்புரூஸ், பைன் (pine), பர் (fir) போன்ற மரவகைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வகை ஒட்டுப்பலகை, கட்டுமானம் மற்றும் தொழிற்துறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. அலங்கார ஒட்டுப்பலகைகள் பொதுவாக மேற்பரப்பில் வன்மர (hardwood) மென்தகடுகள் ஒட்டப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக சிவப்பு ஓக், பர்ச், மேப்பல், மகோகனி போன்ற பலவகையான வன்மர வகைகள் பயன்படுகின்றன. பொதுவான ஒட்டுப்பலகை விலை குறைந்த பீனோல் போமல்டிகைட்டுப் பசையினால் ஒட்டப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றது. நீர்ப்பற்றுள்ள இடங்களில் நிலைத்து நிற்கும் தன்மை இதற்குக் கிடையாது இதனால் இவ்வகை ஒட்டுப்பலகை கட்டிடங்களுள் உலர்வான பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படக்கூடியது. நீர்ப்பற்றான இடங்களில் பயன்படக்கூடிய ஒட்டுப்பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் நீர்ப்பற்றைத் தாக்குப்பிடிக்கக்கூடிய பசைகள் பயன்படுகின்றன. இவ்வகைப் பசைகள், நீப்பற்றினால் ஒட்டு விலகுவதைத் தடுப்பதுடன், உயர்ந்த ஈரப்பதன் கொண்ட சூழலில் ஒட்டுப்பலகையின் வலு குறையாமலும் பாதுகாக்கின்றது. ஒட்டுப்பலகை உற்பத்திக்கு அளவிற் பெரிய நேரானதும், ஒழுங்கானதுமான வடிவம் கொண்ட மரக்குற்றிகள் பயன்படுகின்றன. இவற்றை இயந்திரங்களிலிட்டுக் கூரான கத்திமுனைகளுக்கு முன் சுழற்றுவதன் மூலம் அல்லது வேறு முறையில் மரத்தகடுகளாக உரித்து எடுக்கப்படுகின்றன. இது தேவையான அளவுகளில் வெட்டப்பட்டு, ஒன்றுடனொன்று ஒட்டி ஒட்டுப்பலகைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. ஒட்டும்போது அடுத்தடுத்துள்ள தகடுகள் அவற்றின் இழையின் திசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்குமாறு வைக்கப்படும். ஒட்டுப்பலகைகளை உருவாக்கும் மரமென்தகடுகள் பொதுவாக 1/8 அங்குலங்கள் தடிப்புக் கொண்டவை. ஒட்டுப்பலகைகள் மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றை எண்ணிக்கை கொண்ட தகடுகளை ஒட்டித் தயாரிக்கப்படுகின்றன. கந்தணி கந்தணி (Baluster) என்பது, படிக்கட்டுகள், மாடங்கள் (balcony), மேல் முற்றங்கள் (terrace) போன்றவற்றின் விளிம்புகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் ஒரு குட்டையான தடுப்பைக் குறிக்கும். இச்சொல் "கந்து" + "அணி" என இரு சொற்கள் இணைந்து அமைந்தது. இங்கே "கந்து" என்பது குட்டையான ஒரு கம்பம் அல்லது தூணைக் குறிக்க, "அணி" வரிசையாக அமைந்தது எனப் பொருள் படுகிறது. எனவே கந்தணி குட்டைத் தூண்களின் வரிசை எனப்பொருள்படும். இச்சொல் "balustrade" என்னும் ஆங்கிலச் சொல்லின் சொல்வரலாற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொல் ஆகும். கந்தணி என்பது வரிசையாக அமைந்த கந்து எனப்படும் குட்டைத் தூண்களையும் அவற்றின் மீது தாங்கப்படுகின்ற சட்டம் ஒன்றையும் ஒருங்கே குறிக்கப் பயன்படுகிறது. இது, மரம், காங்கிறீற்று, உலோகம், பிளாஸ்டிக்கு போன்ற பல வகைப் பொருட்களால் உருவாக்கப்படுகின்றது. தாழ்த்தப்பட்டோருக்கான இட-ஒதுக்கீடு அமுலாக்க தீர்மானம் இந்திய நடுவண் அரசு உயர்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமுலாக்க தீர்மானித்துள்ளது. May 23 2006
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்பப் பேரவை (Tamilnadu State Council for Science and Technology) தமிழ்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் 1984ம் ஆண்டு துவக்கப்பட்ட ஓர் அரச நிறுவனம் ஆகும். இந் நிறுவனம தமிழ் நாட்டு பிரச்சினைகளை நோக்கி திட்டங்களையும் ஆராய்ச்சிகளையும் நடாத்துகின்றது. இந்நிறுவனம் மாணவர்கள்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்ககளையும் ஊக்குவிக்கின்றது. திறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, அச்சிட, விநியோகிக்க அனைவருக்கும் அளிப்புரிமை தரப்பட்ட படிமங்கள் கட்டற்ற படிமங்கள் ஆகும். பொதுவாக இவை கட்டணமும் அற்று இலக்கமியல் வடிவில் கிடைக்கும் படிமங்களையே சிறப்பாக குறிக்கும். கட்டற்ற படிமங்களை பதிப்புரிமை கொண்ட படிமங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். அல்லைப்பிட்டி அல்லைப்பிட்டி ("Allaippiddy") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் (லைடன் தீவில் / Leyden) உள்ள ஒரு கிராமம் ஆகும். குறும்பொருளியல் குறும்பொருளியல் ("Microeconomics") ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும். நெகிழ்ச்சி, நுகர்வோன் மிகை இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம் Production theory basics, உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல், நிறைவுப்போட்டி, தனியுரிமைப்போட்டி, தனியுரிமை, இருவருரிமை சரவணை சரவணை (Saravanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மண்கும்பான் மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும் மண்குமபா காரைதீவு காரைதீவு ("Kaaraitivu") இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலமாகும். இப்பெயரை உடைய ஊர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு என தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேசங்களிலும் உண்டு. அவை பின்வருமாறு: அனலைதீவு அனலைதீவு ("Analaitivu") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். கந்தபுராண கலாச்சார காலத்தில் கோமேதகம் என்றும், காலணித்துவ காலத்தில் சைவமணித்தீவு என்ற காரணப்பெயரும், போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் டொனா கிளாரா என்றும், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் "Annelletivoe" அல்லது "Rotterdam" என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. இத்தீவிலே பல கோயில்கள் அமைந்துள்ளன. எழுவைதீவு எழுவைதீவு (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும்.ரோமன் கத்தோலிக்க சமயம் இந்து சமயம் என்னும் சமயங்கள் காணப்படுகிறது.பனை வளம் கொண்டுள்ளது.இலங்கையில் முதன் முதலில் ஒன்றினைந்த மின்சார நிலையம் எழுவை தீவில் அமைக்கப்பட்டுள்ளது.கடற்தொழில் பிரதான காணப்படுகிறது. மண்டைதீவு மண்டைதீவு (Mandathivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் (எழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் இங்குள்ள கத்தோலிக்கர்களின் வணக்கத்தலமாகும். மண்டைதீவின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், போர்க்காலத்தில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. இதனால் இங்கு வழிபாடும் தடைப்பட்டிருந்தது. வருடந்தோறும் ஆனி மாதம் இத் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேர் திருவிழா, சூரன் போர் போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. மிக அழகிய கடற்கரைகளும் செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும் கம நிலங்களையும் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மக்களையும் கொண்டிருந்த மண்டைதீவு போர்ச்சூழல் காரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி கைமாறிக்கொண்டேயிருந்தது. யாழ் நகருக்கும் கடலுக்கும் நடுவே அமைந்திருந்ததினால் போர்க்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்டைதீவு இருந்தது. கடும் வெய்யில் மற்றும் வறட்சியான காலநிலை இருந்தாலும், கல்வி செல்வம் நிறைந்த குடிமக்களை கொண்டிருந்தது. மண்டைதீவு மக்கள் ஆசிரியத்தொழிலிலும் குறிப்பிட்ட வியாபாரத்திலும் சிறந்து விளங்கினர். எனினும் பிற்காலத்தில் மக்கள் பல பகுதிகளுக்கும் பரவிச்சென்றபடியால் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது. மண்டைதீவில் 3 பாடசாலைகள் இருக்கின்றன. மண்டைதீவு மகாவித்தியாயலம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய பாடசாலையாகும். மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் கார்த்திகேய வித்தியாசாலையும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மட்டும் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவதே இதற்கான காரணமாகும். மண்டைதீவில் மூலிகைகள் அதிகமான காணப்படுகின்றன. இதனால் சமாதான சூழ்நிலை நிலவிய முன்னைய காலங்களில் யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இங்கு வந்து தாவரவியல் தொடர்பான ஆராய்சசிகளை மேற்கொள்வதுண்டு. மண்டைதீவு படுகொலைகள் பெரிய அளவில் இராணுவத்தால் படுகொலைகள் 2 தடவைகள் நடந்துள்ளன. இதில் ஒன்று 1986ம் ஆண்டு ஆனி மாதம் பத்தாம் திகதி நடைபெற்றது. கிராம சேவையாளர் பிரிவு, : ஜே / 08 கலேவலா கலேவலா ("Kalevala") உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849 ஆம் ஆண்டிலேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கிபி 1ம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன. சிறந்த மொழிநூல் வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (1802-1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் நாட்டார் இலக்கியத்தின் முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான நாட்டுப் பாடல்களே இத் தொகுப்பின் மூலங்களாகும். கரேலியா என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. புரட்டஸ்தாந்தம், லூத்தரன் கிறித்தவ இயக்கம் ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த பழமைவாதக் கிறித்தவம் பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே இதற்குக் காரணமாகும். கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி. 1155 இல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறித்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று. "கலேவலா" என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது. கலேவலா பாடல்கள் இற்றைவரை தமிழ் உட்பட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது. நோர்சு தொன்மவியல் நோர்சு தொன்மவியல் (Norse mythology) அல்லது இசுகான்டனேவியன் தொன்மவியல் கதைகள் கிரேக்க-ரோமன் தொன்மவியல் கதைகளுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் பல்வேறு வழிகளில் வேறுபட்டது, தனுத்துவமானது. நோர்ஸ் தொன்மவியல் நோர்டீக் அல்லது ஸ்கான்டனேவியன் நாடுகள் என்று கூறப்படும் டென்மார்க், ஐஸ்லான்ட், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் வழங்கிய தொன்மவியல் கதைகளையே குறித்து நிற்கின்றது. (பொதுவாக பின்லாந்தும் மொத்த ஐந்து நோர்டீக் நாடுகளில் ஒன்று, ஆனால் தொன்மவியல் கதையாடிலில் பின்லாந்து தனித்துவமான மரபை கொண்டுள்ளது, குறிப்பாக கலேவலா இலக்கியம்.) நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் எக்டிர்சல் (Yggdrasil) எனப்படும் உலக மரத்தில் பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான வட்டு போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு: மேல் உலகம் நடு உலகம் கீழ் உலகம் இவ் உலக மரம் என்றும் இருந்ததில்லை, அதற்கு ஒரு தோற்ற கதை உண்டு. நோர்ஸ் தொன்மவிய்ல் கதைகளின் கூறுகள் பல பிரபல ஆங்கில நாவல் மற்றும் திரைப்படமான த லோட் ஒவ் த ரிங்ஸ் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆர். சிவலிங்கம் ஆர். சிவலிங்கம் (பிறப்பு: 25 மே 1935) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். உதயணன் என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து பின்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு உரைநடையில் கலேவலா ஆர். சிவலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்னும் ஊரில் 1935 சூன் 25 இல் பிறந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். சிவலிங்கம் காங்கேசன்துறை உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் சென் யோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் போரை அடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார். 1983 இனக்கலவரத்தை அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் பின்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிய மொழியை இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர். இவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது "தேடி வந்த கண்கள்" சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் சுதந்திரன், வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், கலைச்செல்வி, அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் "பொன்னான மலரல்லவோ", "அந்தரங்க கீதம்" ஆகியவை 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன. பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. உதயணன் பல ஆண்டுகாலமாக பின்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தவர். அப்போது அவர் பின்லாந்து மொழியுடனும் அந்நாட்டுக் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், கலேவலாவின் பின்லாந்து-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது. இம்மொழிபெயர்ப்பை அடுத்து இவர் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். கால்நூற்றாண்டு காலம் இவர் பின்லாந்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் புலம் பெயர்ந்து கனடா சென்றார். காவலூர் ராசதுரை காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை (அக்டோபர் 13, 1931 - அக்டோபர் 14, 2014) ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை. 'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை அரங்கேற்றியவர். சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். "தேவ கிருபையை முன்னிட்டு வாழும்" என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு "தர்மயுக்" என்ற இதழில் வெளியாகியது. இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன."காலங்கள்" என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. "வீடு யாருக்கு?" என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது. யூனிசெப் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக "வசீகரா" என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இழிவுப் பண்டம் பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும். உ+ம்: பீடி,போலிநகை தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும். ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும். விண்டோஸ் லைவ் மெயில் விண்டோஸ் லைவ் மெயில் ஆனது மைக்ரோசாப்ட்டின் இணையமூடான மின்னஞ்சல் சேவையாகும். இதன் வெள்ளோட்டப் பதிப்பானது 1ஆம் திகதி நவம்பர் 2005 இல் இலிருந்து விண்டோஸ் லைவ் உடன் வெளியிடப்பட்டது. இது முன்னர் ககூனா (Kahuna) என இரகசியப் பெயரிடப்பட்ட விண்டோஸ் லைவ் மெயில் முழுமையாக வளர்ச்சியடைந்ததும் ஹொட்மெயிலை மாற்றீடுசெய்யும். இது 2 ஜிகாபைட் அளவு சேமிக்கும் இடம், தானாகவே எழுத்துப் பிழை பார்த்தல், மின்னஞ்சல்களைத் தானகவே பிரித்தல், மற்றும் பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகும். பொதுவாக விண்டோஸ் லைவ் இணையத்தளத்தினூடாகவோ அல்லது விண்டோஸ் லைவ் மெயிலைச் சோத்தித்துக் கொண்டிருக்கும் பயனரின் அழைப்பினூடாகவோ இதைப் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாகவே விண்டோஸ் லைவ் இணையமூடாகப் பதிவதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விண்டோஸ் லைவ் மெயில் 1996 ஆம ஆண்டில் சபீர் பாத்தியா மற்றும் ஜக் ஸ்மித்தால் ஆரம்பிக்கப் பட்ட , ஹொட்மெயிலின் வழிவந்த ஓர் உலாவியூடான மின்னஞ்சல் சேவையாகும். இச்சேவையை மைக்ரோசாப்ட் 1997 ஆம் ஆண்டில் வாங்கிக் கொண்டது. 1999 இல் 30 மில்லியன் பயனர்கள் இருந்தனர். 2004 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தினர் தமது சொந்த மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையை ஆரம்பித்தனர். ஜிமெயிலில் 2.7 ஜிகாபைற்றிற்கும் மேற்பட்ட சேமிக்கும் வசதி, இலகுவான பயனர் இடைமுகம் ஆகியன இணையமூடான மின்னஞ்சலில் மாற்றங்களை ஏற்படுத்தின. விண்டோஸ் லைவ் மெயிலானது ஜிமெயில், யாகூமெயில் ஆகியவற்றிற்கான ஓர் விடையாகும். மின்னஞ்சலை எழுதும்போது பெறுபவரின் முதலெழுத்தைத் தட்டச்சுச் செய்ததும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் மின்னஞ்சல் முகவரிகள் யாவும் பட்டியலிடப்படும் விண்டோஸ் லைவ் மெயிலானது பெரிய பட இணைப்புக்களைத் தானகவே முன்னோட்ட்டத்திற்கு மாற்றிவிடும். ஒர் கிளிக்கின் மூலம் முழுப் படத்தையும் பார்வையிடலாம். விண்டோஸ் லைவ் மெயிலானது மவுஸ் மாத்திரம் அன்றி விசைப்பலகைக் குறுக்கு வழிகளையும் ஏற்கின்றது. வின்டோஸ் லைவ் மெயிலானது AJAX தொழில் நுட்பத்தால் வேகமாக இயங்க வல்லது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புக்களில் உள்ளதைப்போன்று இங்கும் தட்டச்சு செய்யும்போதே பிழைதிருத்தும் வசதியுள்ளது. எழுத்துப் பிழையுள்ள சொற்கள் இங்கும் சிவப்புப் கோடிட்டுக்க் காட்டப் படும் அச்சொல்லின் மேல் Right click செய்யும் போது பொருத்தமான் வேறு சொற்களைக் காட்டும். தற்போது பிழைதிருத்தும் வசதியானது ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன், இத்தலிய மொழிகள் மாத்திரமேயுள்ள போதிலும் ஏனைய மொழிகள் பின்னர் சேர்த்துக் கொள்ளப்டும். விண்டோஸ் லைவ் மெயிலானது 2 ஜிகாபைற் அளவான இடவசதியை அளிக்கின்றது. மின்னஞ்சலானது 2 ஜிகாபைற் அளவை அண்மிக்கும் போது 50 மெகாபைற் அளவு குறைவானபோது ஓர் மின்னஞ்சலானது அநுப்படும். தொலைபேசி தொலைபேசி (Telephone) என்பது நேரடியாகப் பேசமுடியாத தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு தொலைதொடர்புக் கருவி. தொலைபேசி குரலைத் திறம்பட செலுத்தவல்ல வடத்திலோ பிற ஊடகத்திலோ, நெடுந்தொலைவுக்கு அனுப்பவல்ல மின்னனியல் குறிகைகளாக மாற்றி, அந்த குறிகைகளை மறுமுனையில் அதே நேரத்தில் பயனர் கேட்கும்படி மீளத் தருகிறது. இதில் பேசும்போது ஒலி அலைகள் ஒரு தகட்டினை அதிரச் செய்கிறது. அந்த அதிர்வுகள் மின் குறிப்பலைகளாக மாற்றப்பட்டதும் பின்னர் இம்மின்னலைகள் மின்கம்பியின் வழியே செலுத்தப்படுகின்றன. மறுமுனையில் மீண்டும் இவை ஒலியலைகளாக மாற்றப்படுவதால், ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்க முடிகிறது. இக்கருவியைச் சுகாட்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) என்பவர் வடிவமைத்து பதிவுரிமம் பெற்றார் என்று பொதுவாகக் கூறப்படினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பலநாட்டு ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து தொலைபேசி தொடர்பான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். தொலைபேசிகள் வணிக, அரசு, தொழிலக, வீட்டு பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. இது இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள பொதுப்பயன்கருவி ஆகும் இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிகைகளைச் செலுத்தும்படி தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசியின் அடிப்படை உறுப்புகளாக பேசும் ஒலியை வாங்கி செலுத்தவல்ல நுண்பேசி. எனும் அலைசெலுத்தியும் மறுமுனையில் பேச்சை மீளாக்கம் செய்து கேட்க ஓர் அலைவாங்கியும் அமைகின்றன. மேலும் இவற்றோடு உள்வரும் அழைப்பை அறிவிக்க ஒலியெழுப்ப ஒலிப்பியும் அழைக்கும் தொலைபேசி எண்ணை உள்ளிட, சுழல்முகப்பு அல்லது அழுந்து பொத்தான்பலகமும் உறுப்புகளாக அமையும். அனைத்து தொலைபேசிகளும் 1970 கள் வரை சுழலும் முகப்பைப் பெற்றிருந்தன. இவை இப்போது இருகுரல் பல் அலைவெண் குறிகைப் பொத்தான்களால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை முதலில் பொதுமக்களுக்கு 1963 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அலைசெலுத்தியும் அலைவாங்கியும் கையில் எடுத்து பேசும் முண்டகத்தில் பேசும்போது வாயிலும் கையிலும் அமையுமாறு பொருத்தப்படுகின்றன. முகப்பு முண்டகத்திலோ அதை வைக்கும் அடிஏந்தியிலோ அமையலாம். அலைசெலுத்தி பேச்சு ஒலியலைகளை மின்குறிகைகளாக மாற்றி தொலைபேசி வலையமைப்பு வழியாக கேட்கும் பேசிக்கு அனுப்புகிறது. கேட்கும் பேசி இந்த மின்குறிகையை கேட்க கூடிய ஒலியலைகளாக அலைசெலுத்தியில் அல்லது ஓர் ஒலிபெருக்கிவழி மாற்றுகிறது. தொலைபேசிகள் இருவழித் தொடர்பை நிகழவிடுகின்றன. இதன் பொருள், இருபுறமும் உள்ள மக்கள் தொடர்ந்து ஒருங்கே பேசவும் கேட்கவும் செய்யலாம். முதலில் தொலைபேசிகள் நேரடியாக ஒருவாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரது இருப்பிடத்துக்கு இணைக்கப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கு மேல் இம்முறை நடைமுறையில் அரிதாக அமைந்ததால், மையப்படுத்திய நிலைமாற்றிப் பலகைகள் வழியாக உரிய இயக்குவோரால் இணைப்பு நல்கும் முறை வழக்கிற்கு வந்தது. இது கம்பிதொடர் தொலைபேசிச் சேவைக்கு வழிவகுத்தது. இதில் ஒவ்வொரு தொலைபேசியும் அதற்கே உரிய இரு கம்பிதொடரால் மைய நிலைமாற்றிப் பலகைகளுக்கு இணைக்கப்பட்டது. இது பிறகு முழுமையாகத் தன்னியக்கம்வாய்ந்த சேவையாக 1900 களில் உருவாகியது. 20 ஆம் நூற்றாண்டின் நடுவில் கப்பல், தானூர்தி போன்ற இயங்கும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ள வானொலிவகை அலைசெலுத்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1973 இல் இருந்து தனிப்பயனருக்கான கைப்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1970 களின் இறுதிக்குள் உலக முழுவதும் பல நகர்பேசி வலையமைப்புகள் இயங்கலாயின. 1983 இல் மேம்பட்ட நகரும் தொலைபேசி அமைப்புகள் தொடங்கப்பட்டன. இவை அலுவலகம் அல்லது வீட்டுக்கு அப்பால் பயனர்கள் இருந்தாலும் தொடர்புகொள்ள ஏற்ற செந்தரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின. இந்த ஒப்புமை கலப்பேசி அமைப்பு பின்னர் நல்ல பாதுகாப்பும் உயர் இயக்கத் திறமையும் மலிவு விலையில் வட்டாரம் முழுவதும் பரவிய இலக்கவியல் வலையமைப்புகளாக படிமலர்ந்தன. பல நிலைமாற்ற மையங்கள் படிநிலை அமைவில் இணைந்த பொது நிலைமாற்றல் தொலைபேசி அமைப்புகள், உலக முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ளும்படிஅனைவருக்கும் இணைப்புகளை வழங்குகின்றன. E.164 எனும் செந்தர அனைத்துலக எண் அமைப்புவழி, ஒவ்வொரு தொலைபேசியும் ஒரு அடையாளத் தொலைபேசி எண்ணால் வலையமைப்பில் உள்ள மற்றொரு தொலைபேசியுடன் தொடர்புகொள்ள முடிகிறது. முதலில் பேசுவதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டாலும், பல தொழில்நுட்பங்களின் ஒருங்கு குவிதலால் நிகழ்காலக் கலப்பேசிகள் பல கூடுதல் பயன்களைத் தரவல்லனவாக வடிவமைக்கப்படலாயின. இன்று கலப்பேசிகள் பேச்சுத் தகவலைப் பதிகின்றன; பாடப் பகுதிகளை அனுப்பிடவும் பெறவும் செய்கின்றன; ஒளிப்படங்களைப் பிடித்து காட்சிப்படுத்துகின்றன; காணொலிக் காட்சிகளைப் படம்பிடிக்கின்றன; இசை மீட்டுகின்றன; காட்சி விளையாட்டுகளை விளையாட பயன்படுகின்றன; இணையத்தில் உலாவ விடுகின்றன; ஊர்தி ஒட்ட படிபடியாக வழியைக் காட்டுகின்றன. மெய்நிகர் உலகில் உலவ விடுகின்றன. 1999 அளவில் இருந்து கலப்பேசி துடியான பல செயல்பாடுகளைச் செய்யவல்லனவாகி விட்டன. இவை அண்மையில் அனைத்து இயங்குநிலைத் தொடர்பையும் கணிப்புத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றன. மரபான நிலத்தொடர் தொலைபேசி அமைப்பு, அதாவது பழைய எளிய தொலைபேசிச் சேவை,(POTS), வழக்கமாக, முறுக்கிய இரட்டைக் காப்பிட்ட கம்பித் தொடரிலேயே ( விளக்கப்படத்தில் "C") கட்டுபாட்டுக் குறிகைகளையும் குரல்சார்ந்த குறிகைகளையும் அனுப்பிப் பெறுகிறது. இந்தத் தொடர் தொலைபேசித் தொடர் எனப்படுகிறது. இதில் அமைந்த கட்டுபாட்டு, குறிகை பரிமாற்ற அமைப்பு மூன்று உறுப்புகளைக் கொண்டுள்ளது அவை ஒலியெழுப்பி, இணைப்பு நிலைமாற்றி, முகப்புத் தட்டு என்பனவாகும். ஒலியெழுப்பி அல்லது மணியடிப்பி அல்லது ஒளிச்சுடர் அமைப்பு (A7), பயனருக்கு வரும் அழைப்புகளை உணர்த்துகின்றன. இணைப்பு நிலைமாற்றி மைய அலுவலகத்துக்கு பயனர் அழைப்பைக் கேட்கவோ அல்லது அழைக்கவோ தன் கைப்பேசியை எடுத்துவிட்டதைக் குறிகையால் அறிவிக்கின்றன. முகப்புத் தட்டு அழைப்பு தொடங்கும்போது, வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணை மைய அலுவலகத்துக்குச் செலுத்த பயன்படுகிறது. 1960 கள் வரை சுழல் முகப்புத் தட்டுகளே பயனில் இருந்தன. பின்னர் இவை இருகுரல் பல் அலைவெண் குறிகை முறையால் பதிலீடு செய்யப்பட்டன. இவற்றில் அழுந்து பொத்தான்களும் (A4) வழக்குக்கு வந்தன. கம்பித் தொடர்த் தொலைபேசி சேவையின் பெரும்பாலான செலவு, இணைப்பகத்துக்கு வெளியிலேயே அமைகிறது. தொலைபேசிகள் உள்வரும்/வெளியேகும் பேச்சுக் குறிகைகளை ஒரே ஒற்றைக் கம்பியிணையில் மட்டுமே இருவழியிலும் செலுத்துகின்றன. முறுக்கிய இணைகம்பிகள் மின்காந்தக் குறுக்கீட்டையும் குறுக்குப் பேச்சையும் முறுக்காத இணைகம்பிகளைவிட திறம்பட தவிர்க்கின்றன. வலிமை மிகுந்த ஒலிபேசிச் செலுத்தியின் வெளியேகும் பேச்சுக் குறிகை, வலிவு குறைந்த ஒலிபெருக்கி வாங்கியின் குறிகையை மிகாமல் இருக்க, கலவைச் சுருள் (A3) பயனாகிறது. பிற உறுப்புகள் இரண்டுக்கும் இடையில் அமையும் சமனின்மையைச் சமன்செய்கின்றன. சந்திப் பெட்டி (B) மின்னலையை (B2) எதிர்கொண்டு தொடரின் நீளம் முழுவதற்கான தடையத்தை (B1) சரிசெய்து குறிகைத் திறனைப் பெருமம் ஆக்குகிறது. தொலைபேசிகள் இதேபோன்ற சரிசெய்தலை(A8) அகத் தொடரின் நீளத்துக்கும் பெற்றுள்ளன. தரையை ஒப்பிடும்போது தொடரின் மின்னழுத்தம் எதிர்மையதாக அமையும். இந்நிலை துத்தநாக்க் கரிப்பினைத் தவிர்க்கிறது. எதிர்மை மின்னழுத்தம் நேர்மின்னூட்ட பொன்ம மின்னணுக்களை கம்பியின்பால் ஈர்க்கிறது. தொலைபேசியை தொலைபேசி வலையமைப்பில் இணைக்க நான்கு வழிமுறைகள் பயன்படுகின்றன. வழக்கமான ஓரிடத்தில் நிலையாக இருந்து இயங்கும் தொலைபேசியில் அதற்கெனவே மின்கம்பி இணைப்புகள் அமைந்திருக்கும். கம்பியில்லா தொலைபேசி மின்குறிப்பலைகளை 0,1 எனும் இரும எண்மக் ( இரும இலக்கவியல்) குறிப்பலை வடிவிலோ அல்லது ஒப்புமைக் குறிப்பலை வடிவிலோ பயன்படுத்தும். செயற்கைமதித் தொலைபேசிவழித் தொலைத் தொடர்பாடலும் . இணையத்தில் பயன்படும் குரல்வழித் தொலைபேசிகளும் அகல்பட்டை (அகன்ற அலைவரிசை) இணைய இணைப்புக்களைப் பயன்படுத்துகின்றன. நிலத்தொடர் தொலைபேசி, (A4) எனும் நிலைமாற்றும் இணைப்பையும் (A7 எனும் ஒலியெழுப்பி எச்சரிக்கும் அமைப்பையும்)பெற்றுள்ளது. இது பேசி இணைப்பில் உள்ளபோது பேசியின் தொடரில் இணைந்திருக்கும் நிலைமாற்றி (A4) திறந்திருக்கும். பேசி பிரிந்துள்ளபோது பிற உறுப்புகள் இணைக்கப்படுகின்றன. பிரிந்தநிலையில் இணையும் உறுப்புகளாக, ஒலிசெலுத்தியாக அமையும் நுண்பேசி A2, ஒலிவாங்கியாக செயல்படும் ஒலிபெருக்கி அல்லது கேட்பி A1, முகத்தல், வடித்தல், மிகைத்தலுக்கான சுற்றதர்கள் ஆகியவை அமைகின்றன. ஒருவர், மற்ற ஒருவரோடு பேசக் கருதி அவரை அழைக்க, தொலைபேசியின் கைம்முண்டகத்தை எடுக்கும்போது, ஒரு நெம்பை இயக்கிட, அது (A4) எனும் இணைப்புதரும் கொக்கியை மூடுகிறது. இச்செயல் ஒலிசெலுத்தி (நுண்பேசி அல்லது பேசி), ஒலிவாங்கி (ஒலிபெருக்கி அல்லது கேட்பி), பிற பேச்சு சார்ந்த உறுப்புகளைத் தொலைபேசித் தொடரில் இணைத்து, தொலைபேசிக்கு மின் திறனைத் தருகிறது.பிரிநிலைச் சுற்றதர் 300 ஓமுக்கும் குறைவான மின் தடையே பெற்றுள்ளதால், தொலைபேசி இணைப்பகத்தில் இருந்து மின் தொடரூடாக(C) நேர்மின்னோட்டத்தைப் பெறுகிறது. இணைப்பகம் இந்த மின்னோட்டத்தைக் கண்டுபித்து, தொடரில் இலக்க ஒலிவாங்கிச் சுற்றதரை இணைக்கிறது; ஆயத்தநிலையைக் குறிப்பிட இணைப்பொலியை அனுப்புகிறது. நிகழ்கால அழுத்துகுமிழ் தொலைபேசியில், அழைப்பவர் என்குமிழ்களை அழுத்தி, அழைக்கப்படுபவரின் தொலைபேசி எண்ணைப் பதிவார். இக்குமிழ்கள் ஒரு குரலாக்கச் சுற்றதரைக் (காட்டப்படவில்லை) கட்டுபடுத்திட, அது DTMF குரல் ஒலிகளை இனைப்பகத்துக்கு அனுப்புகிறது. ஒரு சுழல்வலயத் தொலைபேசி துடிப்புவகை அழைப்பைப் பயன்படுத்துகிறது; இது மின் துடிப்புகளை அனூப்புகிறது; இந்த்த் துடிப்புகளை இணைப்பகம் எண்ணித் தொலைபேசி எண்ணைக் கணிக்கிறது ( 2010 வரையிலும் பல இணைப்பகங்கள் துடிப்பு வலய அழைப்புக் கருவியையே பயன்படுத்துகின்றன). அழைக்கப்படுபவரின் இணைப்பு கிடைத்தால், இணைப்பகம் இடைவிட்ட 75 அல்ல்து 60 வோல்ட் மாறுமின்னோட்ட அழைப்புக் குறிகையை அனுப்புகிறது. இது அழைக்கப்பட்டவரை அழைப்பு வருவதை அறிவிக்க எச்சரிக்கிறது. அழைக்கப்பட்ட்வர் தொடரிணைப்பு பயனில் இருந்தால், இணைப்பகம் அழைத்தவருக்குப் பயனில் இருப்புக் குறிகையைத் திரும்ப அனுப்புகிறது. அழைக்கப்பட்டவர் பயனில் இருந்தாலும் அழிப்பை நிலுவையில் வைத்து, இணைப்பகம் அழைக்கப்பட்டவருக்கு இடைவிட்ட கேட்புக் குரலை, உள்வரும் அழைப்பை அறிவிக்க, அனுப்புகிறது. தொலைத்தொடர் தொழில்நுட்பரின் கைக்கருவி என்பது தொலைபேசி வலையமைப்பினை ஓர்வுசெய்ய வடிவமைக்கப்பட்ட தொலைபேசியாகும். இதை மேனிலைத் தொலைபேசித் தொடரிலோ மற்ற அகக்கட்டமைப்பு உறுப்புகளிலோ பொருத்தி ஆய்வை மேற்கொள்ளலாம் . தொலைபேசி பழுதுபார்ப்புக்கும் பேசி சார்ந்த அச்சுத் தகவலுக்கும் பயன்படும் வரைபடக் குறியீடுகளில் ℡ (U+2121), ☎ (U+260E), ☏ (U+260F), ✆ (U+2706), and ⌕ (U+2315) ஆகியவை உள்ளடங்கும். 2009 ஆம் ஆண்டின் முடிவில், உலக அளவில் ஏறத்தாழ 6 பில்லியன் நகர்பேசிகளும் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் நடப்பில் இயங்குகின்றன. இவற்றில் 1.26 பில்லியன் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் 4.6 பில்லியன் நகர்பேசிகளும் அடங்குகின்றன. பயன்பாடு ஒரு பொருளிலோ அல்லது ஒர் பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவுசெய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு ("Utility")எனப்படும்.பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும்.எடுத்துக்காட்டாக எழுதத்தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும் எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது ("Usefulness") பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக மதுவானது அதனை அருந்துபவர்களுக்கு ஒர் பயன்பாடுள்ள பொருள், அதேநேரம் சமுக நோக்கில் அது ஒர் பயனற்ற பொருளாகும்.பயன்பாடானது சார்பு மாறியாகும்,இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஒர் பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான அல்பிரட் மார்ஷல் இதனை பணத்தின் அளவினைக்கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் உபேட்சை வளையீ ("Indifference curve") முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது. சீர்திருத்த செயலாக்கம் ஆங்கிலத்தில் affirmative action என்ற செயற்பாட்டை தமிழில் சீர்திருத்த செயலாக்கம் எனலாம். பரிவுச் செயலாக்கம் என்றும் சிலர் தமிழில் குறிப்பிடுவர். எச் சொல் பொருத்தமானது என்று ஒரு பொது இணக்கம் இன்னும் இல்லை. சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை என்பது நோக்கி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் சில பின்வருவன: கலம்பகம் (இலக்கியம்) தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174) (பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து) என்று ஓர் அடி பெரும்பாணாற்றுப் படையில் வருகின்றது. இதற்கு, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார். பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை. ஆகையால் கலம்பக மாலை என்கிறார். தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இந்தச் சொல்லைப் பிரிக்கலாம். பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே - உள்ளே - கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது. கலம் என்றால் 12 என்று பொருள். பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கும் பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே, 12 + 6 = 18. இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது எனலாம். பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது. பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன. நந்திக் கலம்பகம் நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' - என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூலின் வெண்பா வரிகளும், "கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி" -என்னும் தொண்டை மண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இதற்கேற்ப இந்நூலிலும் பல வசைக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதனை மறுத்துக்கூறுவாரும் உள்ளனர். நந்திக் கலம்பகம் கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30 எனும் அளவில் கலம்பகப் பாடல்கள் அமைய வேன்டும் என்பது விதி. இந்த அளவினை மீறி கலம்பகங்கள் பாடப்பட்டுள்ளன. நந்திக் கலம்பகத்தில் அகம் ,புறம், ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்ற போதும் அவற்றுள் அகத்திணைச் செய்திக்ள் பெரும்பான்மையினதாகவும் புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுகின்றது. நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 90 பாடல்களுடையதாய் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவெ, இதில் உள்ள அதிகப்படியான 54 பாடல்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது. நந்திக் கலம்பகப் பாடல்களில் வீரமும் நகைச்சுவையும் கலந்து காணப்படுகிறது. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவன், பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூது அனுப்புகிறான் பாணரின் தூது உரை கேட்டுச் சினம் கொண்ட தலைவி அவனை இழித்துரைப்பதாக அமையும் வீட்டிலிருந்து பாட விடிவளவும் -கேட்டிருந்தோம் பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி நாயென்றாள் நீ என்றேன் நான்". என்னும் பாடல் வரிகளால் இதனை அறியலாம். தமிழுக்காகத் தன்னுயிர் நீத்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறு நிலையாகப் பாடப்பட்டுள்ள பாடல் புலவரின் புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு நந்தியின் சிறப்பையும் புலப்படுத்துகிறது. 1.மர்ரே எஸ். ராஜம் அவர்கள் 1960-ல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். 2.தமிழ் இலக்கிய வரலாறு - ஜனகா பதிப்பகம் ஜார்ஜ் பூல் சியார்ச்சு பூல் ("George Boole", ஜார்ஜ் பூல்) இங்கிலாந்தில் பிறந்த ஒரு கணிதவியலாளர் மற்றும் தத்துவவியலாளர் ஆவார். இவர் 1815 நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். தனது 49 ஆவது அகவையிலேயே அயர்லாந்தில் இறந்து போனார். இவரே இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப்பெறும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் கணினி அறிவியல் துறையின் தோற்றுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். திண்மப்பொருள் இயற்பியல் திண்மநிலை இயற்பியல் (Solid state physics) திட அல்லது திண்ம நிலையில் உள்ள பொருட்களின் இயற்பியல் பண்புகள் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் பிரிவு. ஆதிகாலத்தில் இத்துறை உலோகங்கள் பற்றியறியும் ஒரு துறையாகவே கருதப்பட்டது, பின்னர், அனைத்து வகை திண்மப் பொருட்களைப் பற்றியும் விளக்குமொரு துறையாக விரிவடைந்தது. இந்த அறிவியற் துறையே இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்பங்களில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானியல், தொகுப்புச் சுற்று வடிவமைப்பு மற்றும் பல்வேறு உணர்திறன் கொண்ட கருவிகளின் உருவாக்கம் எனப்பல வகையில் இத்துறை முக்கியத்துவம் பெற்றதாயிருக்கிறது. லெ. முருகபூபதி லெ. முருகபூபதி (பிறப்பு: சூலை 13, 1951, நீர்கொழும்பு, இலங்கை) 1972ல் "கனவுகள் ஆயிரம்" சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான "சுமையின் பங்காளிகள்" என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகாவித்தியாலத்திலும் கல்விகற்றார். 1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர் 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டார். இணைபயன் வளையீ நுகர்வோனின் பயன்பாட்டு அடிப்படையில் ஒர் குறிப்பிட்ட பொருட்தொகுதிக்குரிய (Combination) கேள்விக்கோட்டினை இணைபயன் வளையீ (Indifference curve) விபரிக்கும்.எடுத்துக்காட்டாக நுகர்வோன் ஒருவர் 25 Aயினையும்,1 Bயினையும் நுகரும்போதும், 1 Aயினையும் 20 Bயினையும் நுகரும்போதும் சமமான பயன்பாட்டைப்பெறுகிறார் இவ்விரு பொருட்தொகுதிக்கிடையே உள்ள பல பொருட்தொகுதிகளிலும் சமபயன்பாட்டை பெறுகின்றார். இத் தரவுகளை வரைவாக்கும்போது இணைபயன் வளையீ பெறப்படும்.இணைபயன் வளையீள்ள எல்லா புள்ளிகளும் சமமான பயன்பாட்டை காண்பிக்கும். Indifference curve தமிழில் உபேட்சைவளையீ/சமபயன் வளையீ/சமநோக்கு வளையீ பல பெயர் பெறும். இணைபயன் வளையீ F.Y.Edgeworth என்பரால் உருவாக்கப்பட்டு Pareto என்பவரால் விரிவாக்கப்பட்டது இணைபயன் வளையீ வரைவதற்கு சில எடுகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவ்வாறன உபேட்சை வளையீவரைபடத்தினையே நுகர்வோன் காண்பிப்பான். இவற்றில் I3 வளையீ எனைய வளையீகளை விட மிகுந்த பயன்பாட்டை காண்பிக்கும். பிரதியீட்டுப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீயானது parallel கோடுகளாகக்காணப்படும்.இவ்விரு பண்டங்களுக்கான கேள்வி அதிகரிப்பு அல்லது குறைவு ஒரு குறிப்பிட்ட எண்விகிதத்தில்(fixed ratio) காணப்படுவதே இதன் காரணமாகும். பூரணமான இணைப்புப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீ L வடிவில் காணப்படும்.உதாரணமாக வலது இடது சப்பாத்து இவற்றில் ஒரு வலபக்க சப்பாத்திற்கு இன்னொரு இடபக்கச்சப்பாத்து மூலம் பயன்பாட்டை பெறலாம் அதிகமாக வலப்பக்கச்சப்பாத்தினை வைத்திருப்பதால் நுகர்வோனின் பயன்பாடு அதிகரிக்காது. நுகர்வு கோட்பாட்டினை மற்றும் நுகர்வோன்மிகை என்பனவற்றை விளக்க உதவும் அறுபடைவீடுகள் தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று. திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். வித்துமூடியிலி வித்துமூடியிலிகள் (Gymnospermae) என்பது, வித்து உருவாக்கும் தாவரக் கூட்டமொன்றின் பெயராகும். இதன் ஆங்கிலப் பெயர் "நிர்வாண வித்துக்கள்" எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ஒப்ப இதன் வித்துக்கள் வித்து மூடிகளுக்குள் அமைந்திருப்பதில்லை. ஒட்டக்கூத்தர் ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு. நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக வாழ்ந்த செங்குந்தர் குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை. இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை. பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. "கூத்தர்" என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார். இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார். =சரஸ்வதி கோயில்= கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார். அவரை அவரை () என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு ("Lablab purpureus") ஆகும். இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி ("Fabaceae") என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை). ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார். தமிழ் வளம்-நூல் பக்கம் 35, ஆசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை. ஒருதுணை மணம் ஒருதுணை மணம் (Monogamy) என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. சில சமுதாயங்களில், ஒருவர் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும், ஒருவரை மட்டுமே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ கொண்டு வாழும் ஒருதுணை மணமுறை உள்ளது. வேறு சில சமுதாயங்களில், எந்தவொரு காலகட்டத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டு வாழும் முறை உள்ளதாயினும், காலத்துக்குக் காலம் துணைவர்களை மாற்றிக்கொண்டு வாழ்வதையும் காணலாம். இது, கணவனோ, மனைவியோ இறந்து போவதனாலும், விவாகரத்தினாலும் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மணத் தொடர்புகளை ஒரு துணைவருடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும், இத்தகைய மணமுறை "தொடர் ஒருதுணை மணம்" என அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில் பெரும்பாலான நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறையே பின்பற்றப்பட்டு வந்தாலும், மனித வரலாற்றில், மிகப் பெரும்பாலான சமுதாயங்களில், பலதுணை மண முறையே பின்பற்றப்பட்டு வந்ததைக் காணமுடியும். ஒரு காலத்தில் மனித இனத்தின் கூர்ப்பில் (பரிணாமம்) உயர்ந்தநிலை ஒருதுணை மண முறையே எனக்கருதப்பட்டு வந்த போதிலும், தற்காலத்தில் மானிடவியலாளர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. நவீன சமுதாயங்களில் இது விரும்பிப் பின்பற்றப்படும் ஒரு முறை என்ற அளவிலேயே இதில் சிறப்புக் காணமுடியும். இந்து சமயம், கத்தோலிக்க சமயம் முதலான பல சமயங்கள் பலதுணை மணத்தைப் பொதுவாக ஏற்பதில்லை. இதுவும் ஒருதுணை மணமுறை பரவி வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும். பல சமுதாயங்களில் பலதுணை மணத்துக்குத் தேவையை ஏற்படுத்துகின்ற பொருளாதாரக் காரணங்கள், நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறைக்கே சாதகமாக உள்ளன. பலதுணை மணம் ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி மணம் (polygyny) என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் (polyandry) என்றும் அழைக்கப்படும். உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும். மாத்தளை மாத்தளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். மாத்தளை மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். மாத்தளை இலங்கையின் மலைநாட்டில் கொழும்பிலிருந்து 96 மைல் தொலைவிலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிறி முத்துமாரியம்மன் கோவில் மிகப் பிரச்சித்தமான வணக்கத்தளமாகும். மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. நுவரெலியா நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும். சிங்கள மொழியில் "நுவர" என்பது நகரம் என்பதையும், "எலிய" என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு. பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் "குட்டி இங்கிலாந்து" என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு கதையொன்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அணுக்கம் இல்லை. இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்து தொன்மவியலின் வரலாற்றின்படி இங்குள்ள "சீதாகோவில்" (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் இராமாயணக் காவியத்தின் நாயகி சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் "சீதா எலியா" என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து பதுளை செல்லும் வழியில் ஹக்கலா தாவரப் பூங்காவை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, "இராமாயண வழித்தடம்" என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் "திவுரும்போலா" இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை இலங்கையின் அரச ஆசியர்ச் சமூகம் எதிர்த்துள்ளது. பதுளை பதுளை ("Badulla", "බදුල්ල" சிலவேளைகளில் வதுளை) இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையின் கடைசி தொடருந்து நிலையமான பதுளை, ஆளிஎலை தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகளில் இந்நகரை அடையலாம். பதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. மாத்தறை மாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன. இரத்தினபுரி இரத்தினபுரி (சிங்களம்: රත්නපුර , ஆங்கிலம்: Ratnapura) இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றும், சபரகமுவா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தையும் இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இரத்தினபுரி என்ற பெயர், இங்கு உற்பத்தி செய்யப்படும் கித்துள் மரத்தின் வெல்லத்துக்கான போர்த்துக்கேய மொழி பதமான "இராபாதுரா" என்பதில் இருந்து தோன்றியதாகும். எவ்வாராயினும் பிரபலமான பெயர் தோற்றம் "இரத்தினம்" + "புரம்" அல்லது இரத்தினங்களின் நகரம் எனற பெயர் தோற்றமாகும். இது இங்கு காணப்படும் இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு இசைவாக உள்ளதால் பிரபலமடைந்துள்ளது. மாநகரமானது மாநகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சபை 15 ஆசனங்களைக் கொண்டுள்ளது. 2006 உள்ளூராட்சி தேர்தலின் போது 29159 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் இரத்தினபுரி மாநகரக எல்லைக்குள் இருந்தனர். இரத்தினபுரி நகரின் பொருளாதாரம் இரத்தினக்கல் வியாபாரத்தில் பாரிய அளவில் தங்கியுள்ளது. இலங்கையின் முன்னணி இரத்தினக்க்ல வியாபாரிகள் இரத்தின்ப்புரி நகரை தளமாக கொண்டுள்ளனர். வெளிநாட்டவர்களுன் இங்கு இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். இரத்தினக்கல் அகழ்வுக் குழிகளை நகரைச் சுற்றியப்பகுதிகளில் காணலாம். ஒவ்வொருநாள் காலையில் நகரின் மையத்தில் இரத்தினக்கல வியாபாரம் நடைபெறும். வெளிப்பகுதிகளில் இருந்தும் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அதிகளவானோர் வருகின்றனர். மடகாஸ்கர் நாடில் உயர்தரத்திலான இரத்தினக்கற்களில் கண்டுப்பிடிப்பைத் தொடர்ந்து நகரின் வியாபாரிகள் இரத்தினக்கல் வியாபாரத்துக்காக மடகஸ்கார் செல்கின்றனர். இந்த நகரம் விவசாயம் சார்ந்த தொழில்களும் நன்றாக முன்னேறியுள்ளன. தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் இந்நகரத்தை சுற்றி காணப்படுகின்றன. ஒரு காலத்தின் இந்நகரத்தை சுற்றியும் எங்கு நோக்கினும் நெல் வயல்களாக இருந்தது. எனினும் தற்காலத்தில், பல விவசாயிகள் நெல் சாகுபடியை விடுத்து ரத்தின சுரங்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், இந்நகரத்தின் நெல் சாகுபடி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்படுகிறது. மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களும் பல காய்கறிகளும் சந்தை விற்பனைக்காக இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இரத்தினபுரி ஈர மண்டலம் என அழைக்கப்படும் இலங்கையில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்லது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென் மேற்கு பருவமழையின் மூலமாக பெரும்பாலும் மழையினை பெறுகிறது. வருடத்தின் பிற மாதங்களில், வெப்பசலன மழையினை(Convective Rainfall) பெறுகிறது. இதானல் நிகழும் வருடாந்திர மழைப்பொழிவு 4,000 மீ.மீ முதல் 5,000 மி.மீ ஆகும். சராசரின் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரீ செல்சியஸ் வரை வேறுபடும். மேலும் மிகவும் ஈரப்பதம் நிறைந்த பகுதியாக இரத்தினபுரி விளங்குகிறது மூலம்: இரத்தினபுரி நகரம் காலு(Kalu) ஆற்றின் வெள்ளப்பெருக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே, பொதுவாக மே மாதத்தில் இந்நகரம் வெள்ளப்பெருக்கால் அவதிப்படும். மேலும், இந்த ஆற்றை சுற்றி அணை ஏதும் கட்டப்படாததால், ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலையில் இந்நகரம் உள்ளது. வெள்ளப்பெருக்கை தடுக்க பல திட்டங்களை முன்வைக்கப்பட்ட போதிலும், எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து இது வரை சந்திக்காத மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை மே 2003 அன்று சந்தித்தது. இந்நகரத்தை சுற்றி பல வழிபாட்டுத்தலங்கள காணப்படுகின்றன. இவ்விடத்தில் பௌத்தர்கள் பெரும்பாண்மையினராக உள்ளதால், பௌத்த வழிபாட்டு தலங்களை மிக அதிகமாக காணப்படுகின்றன. இருந்தாலும் கூட, பிற மதங்கள் சார்ந்த வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றும் முக்கியமானவை: இந்த இடம், பௌத்த தேவதாமூர்த்தியான "சமனுக்கு" உரிய இடம் ஆகும். "சமன்" இரத்தினபுரியின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இரத்தினபுரியை போர்த்துகீசியர் கைப்பற்றிய போது, இந்த தலத்தில் இருந்த புராதன சமன் கோயிலை இடித்து, அதன் மீது போர்த்துகீசிய தேவாலயத்தை நிர்மாணித்தனர். கண்டி அரசு, இரத்தினபுரியை மீண்டும் மீட்டெடுத்த போது, போர்த்துகீசிய தேவாலயத்தை இடித்துவிட்டு மறுபடியும் சமன் ஆலயத்தை கட்டினர். பழைய பௌத்த ஆலயம் இருந்ததற்கான நேரடி ஆதாரங்காள் இல்லை.போர்த்துகீசியர் வருகைக்கும் முன்பு இந்து ஆலயத்தை போன்ற தோற்றத்துடன் இந்த ஆலயம் இருந்ததற்கான மறைமுக ஆதாரங்கள் காணப்படுகின்றன. தற்சமயம், இந்த தலம் பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது இரத்தினபுரியில் கத்தோலிக்கரது வரலாறு இப்பகுதியை போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்திடமிருந்து கைப்பற்றியப் பின்னர் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் வெகு சில கத்தோலிக்கரே இங்கு வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பான்மையினர் போர்த்துக்கேயர் அல்லது போர்த்துக்கேயரை திருமணம் செய்த இலங்கையர்களாக காணப்பட்டனர். போர்த்துக்கேயர் இப்பகுதியில் காணப்பட்ட பௌத்த/இந்து தேவாலயம் ஒன்றை இடித்து அதன்மீது ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாலயம் மீண்டும் இப்பகுதி கண்டி இராச்சியத்தால் கைப்பற்றப்பட்டப் போது இடிக்கப்பட்டது. தற்போதய புனித.இராயப்பர் சின்னப்பர் ஆலயம் இடம் மாற்றப்பட்டு நகரின் மத்தியில் அமைந்த மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் முத்திபேறு பெற்ற யோசப் வாஸ் அடிகளால் ஆரம்பிக்கப்பட்தாக கருதப்படுகிறது. 2 நவம்பர் 1995 இல் இரத்தினபுரி இலங்கையில் ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் பேராலயமாக மாற்றப்பட்டது. இலங்கை தேசிய நூதனசாலையின் கிளையொன்று இரத்தினபுரி நகரில் அமைந்துள்ளது. இது இரத்தினபுரி - கொழும்பு பெருந்தெருவில் அமைந்துள்ள "எகலபொல வளவு" என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது 1988 மே 13 முதல் இயங்கி வருகின்றது. இங்கு இப்பிரதேசத்தில் அகழ்தெடுக்கப்பட்ட சரித்திரத்திற்கு முற்பட்டகால தொல்பொருளியற் பொருட்கள், இப்பிரதேசத்தின் இயற்கை விஞ்ஞான மரபுரிமைகள், பூகற்பவியல், மானிடவியல் மற்றும் விலங்கியல் தொடர்பான மாதிரிகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி நகரை கொழும்பில் இருந்து AA4 பெருந்தெருவூடாக அவிசாவளை, எகலியகொடை, குருவிட்டை நகரங்கள் ஊடாக அணுகலாம். பேருந்துச் சேவைகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், மல்வத்தை தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுகின்றன. தனியார் மற்றும் அரச பேருந்துச் சேவைகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மேலும் இரத்தினபுரி நகரமூடாக செல்லும் தூரச்சேவை பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்தே செல்கின்றன. இரத்தினபுரி மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து வடமாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள் நடைபெறுகின்றன. காலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை கொழும்புக்கு 15 நிமிடத்துக்கு ஒரு பேருந்துச் சேவை காணப்படுகிறது. கண்டி, காலி அம்பாந்தோட்டை, கல்முனை, அம்பாறை பதுளை போன்ற நகரங்களுக்கு 1 மணித்தியாலத்துக்கு ஒரு பேருந்துச் சேவை நடைபெறுகின்றது. 2006 ஆம் ஆண்டு இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவிசாவளை வரைக் காணப்படும் களனிப் பல்லத்தாக்கு தொடருந்துப்பாதையை இரத்தினபுரி நகரம் வரை நீடிப்பதற்கான திட்டத்தை திறந்து வைத்தார். திருச்செந்தூர் திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்ட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. திருச்செந்தூர் பேரூராட்சி, தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8,271 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 32,171 ஆகும் 10.5 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருச்செந்தூரின் கிழக்கில் வங்காள விரிகுடாவும்,வடக்கே காயல்பட்டிணமும்,தெற்கே ஆலந்தலையும்,மேற்கே மேலத்திருச்செந்தூரும் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது. வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில். திருச்செந்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. பழமுதிர்ச்சோலை பழமுதிர்ச்சோலை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். "சோலைமலை" என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகனின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது. அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார். சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார். சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன. மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது. திருவாவினன்குடி திருவாவினன்குடி ஆறுபடை வீடுகளுள் ஒன்று. 3-ம் படை வீடாக பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூாிய பகவானும் இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் இந்த ஊா் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமா்ந்த முருகப்பெருமானை சிவனும் பாா்வதியும் இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே நாளைடவில் மருவி பழநி என்று ஊா் பெயா் வர காரணமானதாக ஸ்தல புராணம் கூறுகின்றது. இத் திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் பழநி மலை அடிவாரத்தில் வையாபுாி ஏாிக்கரையில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு. மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பொிய சந்தேகம் உள்ளது. திருவாவினன்குடி கோவிலையே நக்கீரா் பெருமான் திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக "தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உாியன்: அதாஅன்று" அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவா்க்கும் நன்மையே விளைவிக்கும் உயா்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உாிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளாா் என்பதாக சொல்லப்படுகிறது. கோபம் கொண்டு வந்து அமா்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமா்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறாா். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சோ்த்தே இந்த ஊாின் பெயா் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆக நக்கீரா் பெருமகனாா் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும். ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயா்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயா்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தோ் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன. திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி திருவாவினன்குடி முருகன் கோயில் காணொளி காட்சி பலமனைவி மணம் பலமனைவி மணம் அல்லது பலதார மணம் ("polygyny") என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் மண உறவு கொண்டு வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இம்முறையே உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய மணமுறைக்குச் சட்டப்படியான ஏற்பும் இருப்பதில்லை. எனினும், ஏதோ ஒரு வகையில் இச் சமுதாயங்களிலும் பலமனைவி மண முறை இருந்துதான் வருகிறது. இந்துக்கள் பொதுவாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்னும் கருத்துக்குப் புனிதத்துவம் கொடுத்து வந்தபோதிலும் கூட , அரசர்கள், சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் முதலானோர் பல பெண்களை ஒரே நேரத்தில் மணந்து வாழ்வதை இந்து சமுதாயம் ஏற்று வந்துள்ளது. இசுலாம் பலமனைவி மணத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுள்ளது. பலமனைவி மணம் பரந்த அளவில் உலகில் கைக்கொள்ளப்பட்டு வருவதற்கான காரணங்களை ஆராய்ந்த மானிடவியலாளர்கள், பலவிதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் பாலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பு மனிதனில் அடிப்படை உயிரியல் பண்பாக இருப்பதாகவும், அதனால்தான், உலகளவில் பலமனைவி மணம் பரந்துள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதைவிடப் பலவாறான பொருளாதாரக் காரணங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. வாழ்க்கைக்கான பொருளாதாரச் செயற்பாடுகளில், பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் சமுதாயங்களில் பலமனைவி மணமுறை அதிக அளவில் இருப்பதாக மானிடவியலாளர் கூறுகிறார்கள். குறிப்பாக முற்காலத்தில், உணவு சேகரித்தல், விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பெண்களின் பங்களிப்பை வேண்டிநின்றன. இதனால் வசதி படைத்தவர்கள் பல பெண்களை மணந்து கொண்டனர். அடிக்கடி ஏற்படும் போர் போன்ற நிகழ்வுகளில் பெருமளவில் ஆண்கள் இறக்க நேரிடுவதால் சமுதாயத்தின் மக்கள்தொகையில் பெண்களின் தொகை கூடுவதால், எல்லா பெண்களும் மணம் முடிப்பதை உறுதி செய்வதற்காகப் பல சமுதாயங்களில் பலமனைவி மணமுறை தேவைப்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். ஆனால், ஆண், பெண் மக்கள்தொகைச் சமநிலை காணப்படுகின்ற சமுதாயங்களிலும், சிலசமயங்களில், ஆண்கள் பெண்களைவிடக் கூடுதலாக இருக்கும் சமுதாயங்களிலும்கூட, பலமனைவி மணமுறை பின்பற்றப்படுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மின்வேதியியல் மின்வேதியியல் (மின்னிரசாயனவியல், "Electrochemistry") என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை "மின்வேதியியல்" ஆய்கின்றது. இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் காரைக்குடி நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மின்வேதியியல் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. தெகுரான் தெஹரான் ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள். கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். மேற்கு ஆசியாவிலுள்ள மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நகரமும் மத்திய கிழக்கிலுள்ள மூன்றாவது பெரிய பெரு நகர வட்டாரமும் இதுவாகும். உலக அளவில் 29வது பெரிய பெரு நகர வட்டாரம் இதுவாகும். பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது ஈரானின் காக்கேசியா அருகில் உள்ள பகுதிகளை எளிதில் அடைவதற்காக 1796ஆம் ஆண்டு குசார் அரசமரபு வழிவந்த ஆகா முகமது கான் தெகுரானை முதன் முதல் ஈரானின் தலைநகர் ஆக்கினார். உருசிய-பெர்சிய போர் காரணமாகவும் முன்னால் ஈரானை ஆண்ட அரசமரபுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் காக்கேசியா ஈரானிடம் இருந்து பிரிந்தது. பல முறை ஈரானின் தலைநகர் மாறியுள்ளது. 32வது முறை நாட்டின் தலைநகராக தெகுரான் ஆகியுள்ளது, ஈரானின் கடைசி இரு அரசமரபுக்களான குசார், பாலவிசு ஆகியவற்றின் தலைநகராக தெகுரான் இருந்துள்ளது. சாடாபாத் வளாகம், நியவரன் வளாகம், கோல்சுடன் வளாகம் ஆகிய அரசு வளாகங்கள் இங்கு உள்ளன. பெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன. தெகுரானின் புகழ் பெற்ற கட்டடங்கள் பாலவி காலத்தில் கட்டப்பட்ட ஆசாதி கோபுரம், 2007இல் கட்டப்பட்ட உலகின் 17வது உயர்ந்த கட்டடமான மிலாட் கோபுரம், 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட டாபியட் பாலம் ஆகியவை ஆகும் தெகுரானின் பெரும்பாலான மக்கள் பாரசீக மொழி பேசுபவர்கள், 99% மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்களாகவோ புரிந்து கொள்பவர்களாகவோ உள்ளார்கள். அசர்பைசானியர்கள், அருமேனியர்கள், குர்துகள் என பல இனக்குழுக்கள் பாரசீக மொழியை இரண்டாம் மொழியாக பேசுகிறார்கள். தெஹ்ரான் நகரம் 2006 இல் சுமார் 7.8 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அதன் பரந்த சுற்றுப்புறத்தில் நாட்டிலுள்ள பல்வேறு இன மற்றும் மொழியியல் குழுக்களுக்கு இடமாக உள்ளது. நகரத்தின் சொந்த மொழி பெர்சிய மொழியின் தெஹ்ரானி உச்சரிப்பு ஆகும், மேலும் தெஹ்ரான் மக்கள் பெரும்பான்மையினர் பெர்சியர்கள் எனக் கூறுகின்றனர். எனினும், தெஹ்ரானில்-ரே பிரதேசத்தின் சொந்த பேச்சுவார்த்தை பெர்சிய மொழியாக இல்லை, இது தென்மேற்கு ஈரானிய மொழியாகும் மற்றும் நாட்டின் தெற்கில் ஃபார்ஸில் (பார்ஸில்) உருவானது.ஈரானிய அசர்பைஜானியர்களே, நகரத்தின் இரண்டாவது மிகப் பெரிய இனக் குழுவினர், மொத்த மக்கள் தொகையில் 25% முதல் 1/3 வரை உள்ளனர்.மசன்டெரானி மக்கள் மூன்றாவது பெரிய இன குழு. மொத்த மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 16%.மற்ற இன குழுக்கள் குர்துகள், ஆர்மீனியர்கள், ஜோர்ஜியர்கள், பாக்தாரிரிஸ், தாலீச் மக்கள், பலோச் மக்கள், அசிரியர்கள், அரேபியர்கள், யூதர்கள் மற்றும் செர்சியர்கள் ஆவர். தெஹ்ரானியர்கள் பெரும்பான்மையினர் அதிகாரப்பூர்வமாக பன்னிருவர்கள் சியா முஸ்லிம்கள், இது ஈரானின் சஃபாவிட் மாற்றம் முதல் மாநில மதமாக உள்ளது. நகரில் உள்ள மற்ற மத சமுதாயங்கள் சுன்னி மற்றும் மிஸ்டிக் இஸ்லாமிய கிளைகள், பல்வேறு கிறிஸ்துவ பிரிவினைகள், யூதம், ஜோரோஸ்ட்ரியம் மற்றும் பஹாய் நம்பிக்கை மக்கள் ஆகியோர். மசூதிகள், தேவாலயங்கள், யூத கோயில்கள் மற்றும் ஜோரோஸ்ட்ரிய தீ கோயில்கள் உள்ளிட்ட பல மத மையங்கள் உள்ளன.உள்ளூர் குருத்துவாரா கொண்டிருக்கும் மூன்றாவது தலைமுறை இந்திய சீக்கியர்களும் இந்த நகரத்தில் உள்ளனர். இது 2012 ல் இந்திய பிரதம மந்திரி இங்கு விஜயம் செய்துள்ளார். தெஹ்ரான் உலகின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது, மேலும் இது இரண்டு பெரிய தவறுகளுக்கு அருகில் அமைந்துள்ளது.தலைநகரை நகர்த்துவதற்கு ஒரு திட்டம் முன்னதாக பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது, முக்கியமாக இப்பகுதியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.இந்த நகரம் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது. 80% நகரின் மாசுபாடு காரினால் ஏற்படுகிறது. மீதமுள்ள 20% தொழில்துறை மாசுபாடு காரணமாக உள்ளது. மற்ற மதிப்பீடுகள் தெஹிரானில் 30% காற்று மற்றும் 50% ஒலி மாசுபாட்டிற்கான காரணம் மோட்டார் சைக்கிள்கள்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாசுபாட்டின் அபாயங்களைப் பற்றி மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும் உள்ளன. தெஹ்ரான் ஈரானின் பொருளாதார மையமாகும். ஈரானின் பொதுத்துறை ஊழியர்களில் சுமார் 30% மற்றும் அதன் பெரிய தொழில்துறை நிறுவனங்களில் 45% நகரம் உள்ளது. எஞ்சியுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள். அரசாங்கத்தின் சிக்கலான சர்வதேச உறவுகளின் காரணமாக சில வெளிநாட்டு நிறுவனங்கள் தெஹ்ரானில் செயல்படுகின்றன. ஆனால் 1979 புரட்சிக்கு முன்னர், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டன. இன்று, நகரங்களில் உள்ள பல நவீன தொழில்கள், வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் மின்சார உபகரணங்கள், ஆயுதங்கள், ஜவுளி, சர்க்கரை, சிமெண்ட் மற்றும் இரசாயன தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன.தெற்கே பெரிய தெஹ்ரான் பெருநிலப்பகுதியில் ரே அருகில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. கம்பளம் மற்றும் மரச்சாமான் விற்பனையில் இது ஒரு முன்னணி மையமாகும். தெஹ்ரானில் நான்கு விமான நிலையங்கள் இருந்தன. மெஹ்ராபத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம் ஆகியவை மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.துஷான் டப்பே ஏர்பேஸ் தற்போது மூடப்பட்டுள்ளது. முன்னாள் காலே மோர்கி விமானத்தளம் வேலாயுட் பார்க் என்ற பெயரில் ஒரு கேளிக்கை பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு டெஹ்ரான் தனியார் கார்கள், பேருந்துகள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் டாக்சிகள் ஆகியவற்றையே நம்பியுள்ளது.தெஹ்ரான் உலகிலேயே மிகவும் கார் சார்ந்து இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். டெஹ்ரான் பங்குச் சந்தை, பங்குச் சந்தைகள் சர்வதேச கூட்டமைப்பு (FIBV) மற்றும் யூரோ-ஆசிய பங்கு பரிவர்த்தனை கூட்டமைப்பு நிறுவகத்தின் முழு உறுப்பினராக உள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த பங்குச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. தெஹ்ரான் பாரம்பரிய பஜாரில் இருந்து நவீன ஷாப்பிங் மால்கள் வரை பல்வேறு வகையான ஷாப்பிங் மையங்களைக் கொண்டுள்ளது. தெஹ்ரானின் கிராண்ட் பஜார் மற்றும் தாஜ்ரிஷ் பஜார் தெஹ்ரானில் மிகப்பெரிய பழைய பஜார்கள் ஆகும்.நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும்பாலான சர்வதேச வர்த்தக முத்திரை கடைகள் மற்றும் உயர்வர்க்க கடைகளும் அமைந்திருக்கின்றன, மீதமுள்ள ஷாப்பிங் மையங்களும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தெஹ்ரானின் சில்லறை வணிகம் பல புதிதாக கட்டப்பட்ட மால்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களுடன் வளர்ந்து வருகிறது. தெஹ்ரான் ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், இது பல கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளது.கோலஸ்டன், சதாபாத் மற்றும் நியாவரன் வளாகங்கள் உட்பட நாட்டிலுள்ள கடைசி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரச வளாகங்கள் இங்கு காணப்படுகின்றன.தெஹ்ரான் உலகின் பெரிய நகை தொகுப்பாக இருக்கும் என கருதப்படும் ஈரானிய பேரரசைச் சார்ந்த அரச ஆபரணங்களின் வீடாக இருக்கிறது. இந்நகைகள் ஈரானின் மத்திய வங்கியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தெஹ்ரான் சர்வதேச புத்தக கண்காட்சி ஆசியாவில் மிக முக்கியமான புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். தெஹ்ரானில் 2,100 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, பழமையான பூங்கா ஜம்ஷெதியஹ் பூங்கா ஆகும். கஜர் இளவரசன் ஜம்ஷைத் தவலுக்காக ஒரு தனியார் தோட்டமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது, பின்னர் ஈரான் கடைசி பேரரசான ஃபராஹ் டிபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தெஹ்ரானுக்குள் இருக்கும் மொத்த பச்சை பகுதி 12,600 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது, இது நகரின் பரப்பளவில் 20 சதவீதத்திற்கும் மேலானதாகும்.தெஹ்ரானின் பூங்கா மற்றும் பசுமை வெளியிட சங்கம் 1960 இல் நிறுவப்பட்டது. நகரத்தில் நகர்ப்புற இயல்பைப் பாதுகாப்பதற்காக நிருவப்பட்ட சங்கம் இது. தெஹ்ரானின் பறவைகள் தோட்டம் ஈரானின் மிகப் பெரிய பறவை பூங்கா ஆகும். தேஹ்ரான்-கரஜ் எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ள ஒரு பூங்கா சுமார் ஐந்து ஹெக்டேர் பரப்பளவில் 290 வகையான உயிர்களைக் கொண்டுள்ளது.தெஹ்ரானில் நான்கு பூங்காக்கள் பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்கோன்காகுவா அக்கோன்காகுவா ("Aconcagua") தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில், அதன் மேற்கே உள்ள மெண்டோசா மாநிலத்தில், உள்ள பெரு மலையாகும். இதுதான் மேற்கு உலக நாடுகளிலேயே உள்ள மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 6,962 மீ. ஆண்டீய மலைத்தொடரில் உள்ள இம்மலை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய எல்லாவிடங்களிலும் உள்ள மலைகள் யாவற்றினும் மிகப் பெரியது. இந்திய வட எல்லையில் உள்ள இமய மலைத்தொடரில் மட்டும் தான் இதனினும் மிக உயர்ந்த மலை முகடுகளும் கொடுமுடிகளும் உள்ளன. இமய மலையிலே 7000 மீ உயரத்தையும் தாண்டிய ஓங்கிய கொடுமுடிகள் (சிகரங்கள்) 100க்கும் மேலாக உள்ளன. அக்கோன்காகுவா மலை உலகில் ஏழு கொடுமுடிகள் என்று மலையேறும் வல்லுநர்கள் சிறப்பித்துச் சொல்லும் கொடுமுடிகளில் ஒன்று. அக்கோன்காகுவா என்னும் பெயர் அந்நாட்டில் வாழும் பழங்குடிகளாகிய கெச்சுவா மொழியில் கூறும் "அக்கோன் காஃஉஅக்" (பொருள்: கல் காப்பு மதில்) என்பதில் இருந்தோ அல்லது அங்கு வாழும் ஆராஉக்கா மக்கள் தங்கள் மொழியில் கூறும் "அக்கோன்கா-ஃஉஅ "என்னும் சொல்லிலிருந்தோ வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இம்மலையில் பல உறைபனிப் பையாறுகள் பல உள்ளன. அவற்றுள் போலந்தார் உறைபனிப் பையாறு புகழ் பெற்றது. 1934ல் போலந்து நாட்டினர் வழி கண்டு ஏறியதன் நினைவாக இப்பெயர் ஏற்பட்டது. பூஜி மலை பூஜி மலை ("Mount Fuji") சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது. அந்தீசு மலைத்தொடர் அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக வடக்குத் தெற்காக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை "அந்தீசு நாடுகள்" என்று அழைப்பதும் வழக்கம். இந்த மலைத்தொடரானது அதன் இயற்கை அமைப்பால் பல எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைப் பகுதியில் பல உயர்ந்த பீடபூமிகளின் இருப்பிடமாக உள்ளது - சிலவற்றில்  கித்தோ, பொகோட்டா, அரேக்கிப்பா, மெதெயின், சுக்ரே, மெரிடா மற்றும் லா பாஸ் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. திபெத்திய பீடபூமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயரமான பீடபூமியான அலிப்ளானோ பீடபூமி இம் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியின் எல்லைகள் காலநிலை அடிப்படையில் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை:  வெப்ப மண்டல ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், மற்றும் வெப்பமண்டல மழை மிகுந்த ஆண்டிஸ் போன்றவை ஆகும். ஆசியா கண்டத்துக்கு வெளியே உள்ள உலகின் மிக உயரமான மலைகளைக் கொண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் ஆகும். ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலை, அக்கோன்காகுவா மலை, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீ (22,838 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. புவியின் சுழற்சியின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விட பூமியின் மையத்திலிருந்து எக்குவடோர் ஆண்டிஸி மலையில் உள்ள சிம்போரசோ மலை உச்சி கூடிய தூரத்தில் உள்ள இடம் ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே.   சிலி-அர்ஜென்டீனா எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஓஜோஸ் டெல் சலாடோ உள்ளிட்ட உலகின் மிக உயரமான எரிமலைகள் உள்ளன, இது 6,893 மீ (22,615 அடி) உயரும் கொண்டது. வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிவரை "முதுகெலும்பு" போல உருவான மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் சங்கிலி, ஆண்டிஸ் அமெரிக்கன் கார்டில்லெராவின் பகுதியாகும். ஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா(Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது. அந்தீசு மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். ஆண்டிஸ் என்ற வார்த்தையின் சொற்பிற்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தாக கெச்வா மொழிச் சொலான ஆண்டி என்ற சொல்லில் இருந்து இது உருவானது என கருதப்படுகிறது, இச்சொல்லின் பொருள் "கிழக்கு" அதாவது அன்டிசுயுவில் ("கிழக்குப் பிராந்தியத்திற்கான கௌசோவா"), இன்கா பேரரசின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாகும். வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள வடக்கு ஆண்டிசானது, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று இணை எல்லைகளைக் கொண்டது. ஆண்டிஸின் வடக்கு பகுதியானது, சியரா நெவாடா டி சாண்டா மார்தா தீவு மலைத்தொடர் பெரும்பாலும் ஆண்டிசின் பகுதியாக கருதப்படுகிறது. ஆண்டிசு மலைப்பகுதி அதன் நீளம் முழுவதும் 200 கிமீ (124 மைல்) அகலத்தில் உள்ளது,   இதில் 640 கிலோமீட்டர் (398 மைல்) அகலம் கொண்ட பொலிவிய பகுதி ஒரு விதிவிலக்கு ஆகும். அந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்னமெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும். அந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன. இம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும். டக்ளஸ் தேவானந்தா டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda, நவம்பர் 10, 1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2010) இலங்கையின் 15வது நாடாளுமன்றம் (2015) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கே-2 கொடுமுடி உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த ஜில்ஜிட்-பல்திஸ்தானில் உள்ளது. சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் - ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு. கஞ்சஞ்சங்கா மலை கஞ்சன்சங்கா ("Kangchenjunga", நேப்பாளம்: कञ्चनजङ्घा "Kanchanjaŋghā"), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ. இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும். கஞ்சன் ஜங்கா என்பது "பனியின் ஐந்து புதையல்கள்" என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை. 1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது. நீரூர்தி நீரூர்தி் நீரில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் வாகனமாகும். இவை மக்களையோ பொருட்களையோ ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லவோ, அல்லது உடற்பயிற்சிக்காகவோ, மகிழ்வாக நீர்நி்லைகளில் உலா வரவோ பயன்படலாம். சிற்றோடைகளிலும், பெரும் ஆறுகளிலும், கடலிலும், மாக்கடலிலும் செல்லவல்ல பற்பல நீருர்திகள் உள்ளன. பொதுவாக நீர் ஊர்திகளை இரு வகையாகப் பிரிக்கலாம். வௌவால் வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை "வவ்வால்" என்றும் "வாவல்" என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் "Chiroptera" என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன. வௌவால்கள் பகல் பொழுது முழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இவை உலவ ஆரம்பிக்கும்.இரவு நேரங்களிலேயே இவை உணவு உண்ணும். வௌவால்கள் நரியின் முகத்தோடும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்,அதன் இறக்கைகள் வழு வழுவென காட்சி அளிக்கும். இட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது. ஆங்கில அறிவியல் இதழான சயன்சு இல், ஏப்ரல் 18 அன்று ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு அகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்திய பழங்கள் உண்ணும் வெளவால் தன் இட மெய்மிகளாலேயே தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்துவருகிறது என கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இரண்டாயிரம் வகையான வௌவாள்கள் வாழ்கின்றன். இவ்வகை வௌவால்களை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்னும் உட்பிரிவில் உள்ள துரிஞ்சில்கள் என்பார்கள். மற்றுமோர் உட்பிரிவாகிய பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) வகை சற்றே உடல் பெரிதாகவும் நீண்ட முகம் (நெடுமுகம்) உடையதாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் பழம் தின்னிகள் ஆகும். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை பறக்கும் நரி (flying fox) என்றும் அழைப்பர். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன. பழந்திண்ணி வௌவால்கள் இரவு நேரங்களில் நாற்பத்து எட்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.இவை பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுதாக திண்றுவிடும்.இவை மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும்.வௌவாள்கள் பயிர்களையும் தின்றுவிடும். அதனால் இது விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகின்றது. குறும் கைச்சிறகி வகையச் சேர்ந்த சில வௌவால்கள் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பனவாகவும்(குருதியுறுஞ்சும் வௌவால்) உள்ளன. சில மீன் உண்ணுகின்றன. பபுவா நியூ குய்னியா விலும் , பசுபிக பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் வௌவால் உணவாக பயன்படுத்தப்படுகின்றது.ஆசியாவின் சில பகுதிகளிலும் வௌவாள்கள் தீனி போன்று உண்ணப்படுகின்றது. வௌவால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிறிய வௌவால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வௌவால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வௌவால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வௌவால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வௌவால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும். வெறிநாய் கடியினால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகிய ராபீசு போலவே பிற விலங்குகளில் இருந்தும் இவ்வகை நோய் உண்டாகலாம். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் இந்நோய் பற்றிக் கொள்ளலாம். அமெரிக்காவில் காட்டேரி வௌவாள் என்று அழைக்கப்படும் ஒரு வகை வௌவாள்கள் வாழ்கின்றன.அவை ரத்தம் குடிப்பவை ஆகும்.அந்த வௌவால்கள் காட்டு விலங்குகள், மிருகங்கள், ஆடு மாடுகள்,சில நேரங்களில் மனிதர்களின் இரத்தத்தையும் குடிக்கும்.காட்டேரி(வாம்பயர்) கதைகள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆகும். இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால். வௌவால் தன் வாய் வழியாக உண்ட உணவு செறித்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகிறது. வௌவாளின் கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது.இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாக பயன்படுகிறது.இவை அதிக அளவு லாபத்திற்கு விற்கப்படுகின்றன. குகைகள் மற்றும் ரூஸ்டிங் மரங்களையும் முகவர்கள் குத்தகைக்கு விடுவர், அதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்வர். தியோடலைட்டு தள மட்டக் கோணமானி அல்லது தியோடலைட்டு என்பது நில அளவைக்குப் பயன்படும் ஒரு நில அளவையியல் கருவியாகும். இதன் உதவியால் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி முக்கோண வழி அளவீடு முறை மூலம் கோணங்களைத் துல்லியமாகப் அளக்கக்கலாம். இதன் மூலம் ஒரு பரப்பின் பல்வேறு பகுதிகளின் மட்டத்தை அறியலாம். இக்கருவியில் ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில் மேலும் கீழுமாகவும் இடவலமாகவும் நகர வல்ல ஒரு தொலை நோக்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் தகடும் குமிழி மட்டமும்(Spirit level) உள்ளன. இவைகள் கோணங்களை அளவிட உதவுகின்றன. இது முக்கோண முறையில் நிலத்தின் அமைப்புகளை அளவிட மிகவும் பயனுடைய கருவி. இக்கருவியை முதன் முதலாக தாமசு டிக்சு (Thomas Digges) என்பவர் 1571 ஆம் ஆண்டு எழுதிய "பான்ட்டோ மெட்ரியா (Pantometria)" என்னும் நில அளவையியல் நூலில் விளக்கினார். இவருடைய தந்தையாகிய லியோனார்டு டிக்சு அவர்கள் தான் இக்கருவியக் கண்டு பிடித்ததாகக் கூறுவர். இந்த தள மட்டக் கோணமானி, பழைய அரேபிய முறையாகிய அல்-ஃஇடேடு முறையைப் பின்பற்றியது. அரேபிய மொழியில் அல்-இடாட என்றால் அளவுகோல் என்று பொருள். அசையாக்கரடி அசையாக்கரடி ("sloth") தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். அதன் அசையாத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே இது வசிக்கும். இவை விட்டை போட மட்டுமே, வாரத்துக்கு ஒருமுறை மரத்தில் இருந்து தரையிறங்கும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் விட்டை போடும். “இரையுண்ணிகளால் வேட்டையாடப்படும் ஆபத்து இருந்தும் விட்டை போட மட்டும் தரையிறங்குவதன் காரணம் தெரியவில்லை. யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர். உலகில் இன்றுள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன. மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட "பிராடிபொடிடீ" (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும். மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள "மெகலோனிசிடீ" (Megalonychidae) குடும்பம் ஆகும். மூவிரல் அசையாக்கரடியைன் விட இருவிரல் அசையாக்கரடி சற்றே பெரிதாகவும், சற்றே விரைவாகவும் நகரும், ஆனால் இவ் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை. இவ்விரு வகை அசையாக்கரடிகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரே காடுகளில்தான் வாழ்கின்றன. அண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர். இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம்தான் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்