diff --git "a/train/AA_wiki_58.txt" "b/train/AA_wiki_58.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_58.txt" @@ -0,0 +1,3709 @@ + +மக்கா + +மக்கா () சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும் குறுக்கமான பள்ளத்தாக்கு ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 மீட்டர் 910 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.. + +நபிகள் நாயகம் இந்நகரிலேயே பிறந்தார். புனித அல்குர்ஆன் முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது (குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது). இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான "மஸ்ஜித் அல் ஹராம்" (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின் (Kaaba) வீடு, முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதத் தலங்கள் காணப்படுகின்றன. +மக்கா, நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களால் மிக நீண்டகாலமாக ஆட்சிசெய்யப்பட்டு வந்ததுடன், அவர்கள் இங்கு சுதந்திர ஆட்சியாளர்களாக செயற்பட்டுவந்தனர். இவ் ஆட்சிமுறை 1925இல் சவுதி அரேபியாவின் உருவாக்கத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில், மக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பிரமாண்ட அளவில் விரிவாக்கப்பட்டு காணப்படுகின்றது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக மக்கா, அஜ்வத் கோட்டை போன்ற சில வரலாற்றுக் கட்டமைப்புகளையும், தொல்லியல் தளங்களையும் இழந்துள்ளது. வருடாந்தம் ஹஜ்ஜுடைய காலங்கள் உட்பட ஏறத்தாழ 15 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவுக்கு செல்கின்றனர். இதன்விளைவாக மக்கா, முஸ்லிம் உலகின் மிகவும் பரந்தநோக்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. + +இந்நகரத்தின் பெயர் தமிழில் 'மக்கா' என மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்நகரின் முழுமையான அதிகாரப்பூர்வ பெயர் 'மக்கா அல்-முகர்ரமா' (مكة المكرمة) ஆகும். இதன் கருத்து 'மதிப்புமிக்க மக்கா' என்பதுடன், இது பொதுவாக 'புனித நகர் மக்கா' எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது. + +பண்டைய காலத்தில் அல்லது ஆரம்பத்தில் இந்நகரம் 'பக்கா' என அழைக்கப்பட்டது. மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் குர்ஆனின் 3:96 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. தேவேளை, மக்கா என குர்ஆனின் 48:24 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. + +மக்கா மாநகர ஆட்சியால், மக்கா நிர்வகிக்கப்படுகின்றது. உள்ளூரில் 14 உறுப்பினர்கள் மக்கா மாநகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மேயர் (அல்-அமீன் என அழைக்கப்படுகின்றது) தலைமை வகிக்கின்றதுடன், சவூதி அரேபியா அரசாங்கத்தால் மேயர் நியமிக்கப்படுகின்றது. மக்கா நகரின் தப்போதைய மேயர் உஸாமா அல்-பார் ஆவார். + +மக்கா மாகாணத்தின் தலைநகரம் மக்காவாகும். இது அண்டை ஜித்தாவையும் உள்ளடக்கியது. மக்கா மாகாணத்தின் ஆளுநராக இளவரசர் அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் 2000 முதல் 2007இல் அவர் மரணிக்கும் வரை செயற்பட்டார். 16 மே 2007இல் காலித் அல்பைஸல் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். + +இஸ்லாமிய மரபு மக்காவின் ஆரம்பத்தை நபி இஸ்மாயீலின் வழித்தோன்றல்களின் பண்புகளில் காட்டுகின்றது. மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் மேற்கோளாக குர்ஆனின் சூரா 3:96ஆம் அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. கி.மு 60-30 இடைப்பட்ட காலத்தில் வாழந்த கிரேக்க வரலாற்றாசிரியரான டொய்டோரஸ் சிகுலுஸ் (Diodorus Siculus) பிப்லிஒட்சக்கா ஹிஸ்டரோரிக்கா (Bibliotheca historica) என்ற புத்தகத்தில் அரேபியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பற்றி ஒரு புனித ஆலயம் என விபரிக்கிறார். அது முஸ்லிம்களால் நோக்கப்படும் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது. "மற்றும் அங்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது. அது மிகவும் புனிதமாகக் காணப்படுகின்றதுடன், அரேபியர்களால் மதிப்புக்குரிய இடமாகவும் போற்றப்படுகின்றது. +தொலமி "மக்கோரபா" என மக்கா நகரை அழைத்திருக்கலாம். எனினும் அது அடையாள சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. +சமரித்தன் இலக்கியத்தில் மக்கா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. + +ஐந்தாம் நூற்றாண்டில் குரைசியர் மக்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், திறமையான வியாபாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் மாறினர். ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதயில் மூன்று பெரும் குடியேற்றங்கள் காணப்பட்டன. இவற்றின் தென்மேற்கு எல்லைகளாக செங்கடலின் கடற்கரைப்பகுதி காணப்பட்டது. செங்கடலுக்கும்,கிழக்குப் பகுதியின் மலைகளுக்கும் இடையில் ஒரு குடியிருக்கத்தக்க பிரதேசம் அமைந்திருந்தது. மக்காவை சுற்றியுள்ள பகுதி ஒரு தரிசு நிலமாகக் இருந்தபோதிலும், செல்வச்செழிப்புள்ள மூன்று குடியேற்றங்களுடன் அதிகமான தண்ணீரைக் கொண்ட புகழ்பெற்ற 'ஜம்ஜம்' கிணற்றை உடைய பகுதியாக காணப்பட்டது. பெரும் ஒட்டக வியாபாரக்கூட்டங்களின் பாதைகள் மக்கா ஊடாக அமைந்திருந்தது. + +ஒட்டக வியாபாரக்கூட்டங்கள் முதலில் நபிகள் நாயகத்தின் முப்பாட்டனாரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது மக்காவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியாக காணப்பட்டது. ஏனைய கண்டங்களிலிருந்து பொருட்கள் மக்கா ஊடாகவும் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக் கணக்குகளின் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் தூரகிழக்கிலிருந்து மக்கா ஊடாக சிரியாவுக்கு வாசனைத்திரவியங்கள், தோல், மருந்து, துணி மற்றும் அடிமைகள் கொண்டுசெல்லப்பட்டதுடன் இதற்குபகரமாக பணம், ஆயுதங்கள் மற்றும் தானியங்கள் என்பன மீள மக்கா பெற்றுக்கொண்டது. இப்பொருட்கள் அரேபியா முழுதும் விநியோகிக்கப்பட்டு வந்தது. + +ஜோர்தானின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமூதிக் கல்வெட்டுக்கள் "அப்த் மக்கத்" (இதன் தமிழ் கருத்து, மக்காவின் ஊழியன்) போன்ற தனிநபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. மேலும் சில கல்வெட்டுகளில் 'மக்கி'(மக்காவாசி) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. எனினும் மக்கா என்ற பெயருடைய கோத்திரத்தார் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பக்தாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜவ்வாத் அலி குறிப்பிடுகின்றார். + +இஸ்லாமிய பாரம்பரியத்தின் கருத்தின்படி, மக்காவின் வரலாறு நபி இப்ராஹிமை பின்னோக்கிச் செல்கின்றது. இவர் கி.மு.2000 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த மகன் இஸ்மாயில் உதவியுடன் காபாவை கட்டினார். + +முஹம்மத் நபி மற்றும் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கும் 628 இல் மக்கா நகருக்குப் புனித யாத்திரிகைக்காக நுழைய வேண்டியிருந்தது. எனினும் குறைசிகள் அவர்களைத் தடுத்தனர். பின்னர், முஸ்லிம்களும் மக்��ாவாசிகளும் ஹுதைபியா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதன்படி குறைசிகள் முஸ்லிம்களுடன் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அடுத்த வருடத்தில் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களை மக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் வாக்குறுதியளித்தனர். இது பத்து வருடங்களுக்கு செல்லுபடியான உடன்படிக்கையாகக் காணப்பட்டது. எனினும், இரண்டு வருடங்களில் குறைசிகள் ஒரு முஸ்லிம்கள் குழுவையும்,அவர்களது கூட்டணியையும் கொலைசெய்து ஒப்பந்தத்தை மீறினர். இதனைத்தொடர்ந்து, முஹம்மது நபியும், அவர்களது தோழர்களும் சேர்ந்த 10,000 பேர் கொண்ட பலமான படை மக்காவை நோக்கி அணிவகுத்துச்சென்றது. அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கு மாறாக மக்கா நகர் முஹம்மது நபியிடம் சரணடைந்தது. முஹம்மது நபி, அந்நகர மக்களுக்கு சமாதானத்தையும், பொதுமன்னிப்பையும் பிரகடனப்படுத்தினார். அங்கிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, இறைவனை வணங்கும் இடமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இஸ்லாத்தின் புனிதஸ்தலமாகவும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனிதயாத்திரையின் மத்திய நிலையமாகவும் மக்கா பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், ஆகிப் இப்னு உஸைத் என்பவரை மக்காவின் ஆளுநராக நியமித்துவிட்டு முஹம்மது நபி மதீனாவுக்கு திரும்பினார். அவரின் ஏனையச் செயற்பாடுகள் அரேபிய தீபகற்பத்தில் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. + +மக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளது. +இரண்டு புனித யாத்திரைகள் காணப்படுகின்றன. அவை ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும். ஒவ்வொரு வயதுவந்த, உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும், பெண்ணும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும். உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது. + +மக்கா கடல் மட்டத்திலிருந்து 277 மீட்டரில் (909அடி) அமைந்துள்ளதுடன், செங்கடலிலிருந்து ஏறத்தாழ 80கிலோமீட்டர் (50 மைல்) தூரத்தில் நிலப்பகுதியில் அமைந்துள்ளது. + + + + +மதீனா + +மதீனா ("Medina", அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. அதற்கு உடனடுத்ததாக முஹம்மது நபியவர்களின் வீடு அமைந்துள்ளது. இஸ்லாமிய உலகின் நினைவுச் சின்னங்களான புராதனமான அவ்வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மதீனா நகரில்தான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. + +இது இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் ஆகும். மேற்கு சவுதி அரேபியாவின் ஹெஜாஸ் பிராந்தியத்திலுள்ள மதீனா மாகாணத்தின் தலைநகராகும். மேலும் இது இஸ்லாமிய தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள் அடக்கமான இடமும் ஆகும். வரலாற்றின்படி இவரது ஹிஜ்ரா போருக்கு பின் இது இவரது சொந்த இடமாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் மறுவருகைக்கு முன்பு இந்த நகரம் யாத்ரிப் என்ற பெயரில் அறியப்பட்டது. பின்னர் இது முஹம்மது அவர்களால் மதீனா என்று பெயரிடப்பட்டது. மதீனாவில் தான் இஸ்லாமின் மூன்று மிகபழம்பெரும் மசூதிகளான அல்-மஸ்ஜித்-நபாவி (தீர்க்க தரிசியின் மசூதி), குபா மசூதி (இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதி), மற்றும் மஸ்ஜித் அல்-குய்ப்லாடின் என்கிற மசூதிகள் அமைந்துள்ளன. சவுதி அரேபிய அரசின் மத கோட்பாடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பின்னாளில் வழிபட்டுத்தலங்கலாக மாறின. சவுதியின் கொலோச்சுதல் உயர்ந்த பின்பு மதினாவின் உண்மையான பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டன. முஹம்மது நபியின் வருகையை அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய நாட்காட்டி உருபெற்றது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் 622 CE லிருந்தே இதன் தொடக்கம் ஆரம்பிக்கிறது. மக்காவைப்போன்றே மதீனாவிலும் இஸ்லாமியர்கள் மட்டுமே நுழைய முடியும். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இங்கு நுழைய அனுமதிக்கபடுவதில்லை. + + + + +நா. காமராசன் + +நா. காமராசன் (1942 - மே 24, 2017) தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புத���க்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர்,கருணாநிதியால் அரசியலுக்கும்,எம்.ஜி.இராமச்சந்திரனால் திரைத்துறைக்கும் வந்தவர். + +1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்கு தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர். + +1964ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு போலிசாரால் விலங்கிடப்பட்றையில் அடைக்கப்பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். + +எம்.ஜி. இராமச்சந்திரனால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990 இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார்,மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991 ல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். + +இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது. இலக்கியத்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். இவர் சிறந்த பேச்சாளர். + +நா. காமராசன் உடல்நல��் குறைவால் 2017 மே 24 அன்று சென்னையில் காலமானார். + + + + + + + + + + +மொசில்லா தண்டர்பேர்டு + +மொசில்லா தண்டர்பேர்டு் மொசில்லா நிறுவனத்தால் விருத்தி செய்யப்பட்ட ஓர் மின்னஞ்சல், செய்திகளை வாசிக்கும் ஓர் வாங்கி (கிளையண்ட்) ஆகும். மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியைத் தொடர்ந்து இம்மென்பொருள் விருத்தி செய்யப்பட்டது. 7 டிசம்பர் 2004 இல் இதன் முதலாவது பதிப்பு வெளியாகியது. இதன் முதலாவது பதிப்பு வெளியாகி 3 நாட்களுக்குள்ளேயே 500, 000 இற்கு மேற்பட்ட பதிவிறக்கத்தைத் தாண்டியது. முதற் 10 நாட்களுக்குள் 1, 000, 000 பதிவிறக்கத்தைத் தாண்டியது. இதன் முதலாவது பதிப்பு வெளியாகியதில் இருந்து 78 மில்லியன் தடவைகளுக்கு அதிகமாக இது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. + +மொசில்லா தண்டர்பேடு ஓர் இலகுவான மின்னஞ்சல் மற்றும் செய்தி ஓடை படிக்கும் மென்பொருள் ஆகும். + +மொசில்லா தண்டர்பேர்டு ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை நிர்வாகிக்கக் கூடியது. இதன் வசதிகளுள் வேகமாகத் தேடல் தேடல்களைச் சேமித்தல், மேம்படுத்தப்பட்ட செய்திகளை வடிகட்டும் தொழில் நுட்பம் ஆகியன அடங்கும். மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் போன்றல்லாது தண்டர்பேர்ட் இன் கோப்புறையானது தமிழ்ப் பெயரிலும் அமையலாம். + +மொசில்லா தண்டர்பேர்டு பேசியன் எரித வடிகட்டலை உள்ளடக்கியுள்ளதோடு வழங்கி (செர்வர்) ஊடான ஸ்பாம் அசாசின் ஐயும் இனம் காணக் கூடியது. + +அடிக்கடி ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை அனுப்புவர்களுக்கு (எடுத்துக்காட்டாக கிளை அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு ஒவ்வொருநாளும் விற்பனை பற்றிய மின்னஞ்சல்கள் அனுப்புவர்களுக்கு) வசதியாக டெம்லேட்டுக்கள் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதில் பயனர் தாம் விரும்பியவாறு மின்னஞ்சலைத் தட்டச்சுச் செய்துவிட்டு டெம்லேட்டுக்களாகச் சேமித்துவிட்டு அதைமீண்டும் மீண்டும் விரும்பியவாறு பயன்படுத்தலாம். + +தண்டர்பேர்டு பாப் (POP) மற்றும் ஐமாப் (IMAP) முறையில் மின்னஞ்சலை அணுகக்கூடியது. + +தண்டர்பேர்டு பல இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் பிரதான தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி + +இலவசமாகக் கிடைக்கும் மூலநிரலை கம்பைல் பண்ணுவதன் மூலம் பல்வேறுபட்ட இயங்குதளங்களில் இயக்க முடியும். + +��ல்வேறுபட்ட நாடுகளில் இருந்தும் பங்களிப்பவர்களால் 36 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொசில்லா தண்டர்பேர்டு கிடைக்கின்றது. + +மைக்ரோசாப்ட் அலுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றல்லாது பதிவிறக்கம் செய்யும் கோப்பின் அளவை மட்டுப்படுத்தவியலும். இது கணினிகளில் அழைத்து இணையும் (டயல்-அப்) பயனர்களுக்குப் பிரயோசனமான ஒன்று தேவை என்றால் மாத்திரம் மிகுதி மின்னஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். இம்முறையால் அதற்குப் பின்னுள்ள மின்னஞ்சகளைக் காலதாமதமாகப் பெறுதல் ஏற்படாது. இதற்கு ரூல்ஸ் மெனியூ (Tools Menu)->பயனர் கணக்கு (அக்கவுண்ட்ஸ் - Accounts) -> இடவசதி (டிஸ்க்ஸ்பேஸ் Diskspace) எடுத்துக்காட்டாக 400 கிலோபைட்ஸ் என்றவாறு தேர்ந்தெடுக்கலாம். + +புதிய மின்னஞ்சல்கள் வந்ததும் கணினித் திரையில் இடது கரை மூலையில் புதிய மின்னஞ்சல் வந்ததாகக் காட்சியளிக்கும் அங்கு சொடுக்குவதன் (கிளிக்) மூலமோ அல்லது தணடர்பேர்டில் n என்ற விசைபலகையை அழுத்துவதன் மூலமோ செல்லலாம். + +விண்டோஸ் கணினிகளில் Start -> Run -> %AppData%\Thunderbird\Profiles\ என்று தட்டச்சுச் செய்ததும் ஒரே எழுமாற்றுப் பெயர் முனனாலும் பின்னாலும் default பின்னாலும் உள்ள ஒரு கோப்புறை காட்சியளிக்கும். இதில் உள்ள அனைத்தையும் இறுகுவட்டிலோ அல்லது வேறேதாவது ஒரு சேமிப்பு ஊடகத்தில் சேமித்து விட்டு பின்னர் தேவையானபோது பின்னர் இதே இடத்தில் மீள்வித்துவிட்டால் மின்னஞ்சல்கள் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளலாம். + + + + +சென்னைத் துறைமுகம் + +சென்னைத் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்ஸென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது. + +தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் க���ை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 ஆம் ஆண்டில் கட்டப்படவை ஆகும். ஆனால் 1868 ஆம் ஆண்டிலும், 1872 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று. 1876 ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச் சுவருக்கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881 ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. + + + + +சோழ மண்டலக் கடற்கரை + +கோரமண்டல் கரை என்பது, இந்தியக் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும்.வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதியான பாண்டிச்சேரியிலும் உள்ளது. + +இச்சொல் வழக்கு சோழர்களின் பகுதி என்னும் பொருள்தரும் தமிழ்ச் சொல்லான "சோழ மண்டலம்" என்பதில் இருந்து போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. இப் பெயர் கரைப்பகுதி என்னும் பொருள் தரக்கூடிய கரை மண்டலம் என்னும் தொடரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள். அதற்கு போதிய வரலாற்று அடிப்படை இல்லை. அராபியர்கள் சோழமண்டல கடற்கரையை "ஷூலி மண்டல்" என்னும் பெயரால் அழைத்தனர். + +கோரமண்டல் கரை பொதுவாகத் தாழ்ந்த பகுதியாகும். காவிரி, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா உள்ளிட்ட பல ஆறுகளின் கழிமுகங்கள் இக்கரையோரத்தைத் துண்டாடுகின்றன. இவ்வாறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகித் தக்காணத்துச் சம வெளிகள் ஊடாக வங்காள விரிகுடாவைச் சேருகின்றன. இந்த ஆறுகளால் உருவான வண்டற் சமவெளிகள் வளமானவையும் வேளாண்மைக்கு வாய்ப்பானவையும் ஆகும். இங்கே அமைந்துள்ள துறைமுகங்களாலும் இக்கரை பெயர் பெற்றுள்ளது. பழவேற்காடு, சென்னை, சதுரங்கப்பட்டினம், பாண்டிச்சேரி, காரைக்கால், கடலூர், தரங்கம்பாடி, நாகூர், நாகபட்டினம் என்பவை இவ்வாறான துறை முகங்களிற் சில. + +சோழமண்டல கடற்கரைக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பண்டைய உரோமையர் காலத்திலிருந்தே வணிகத் தொடர்புகள் இருந்துவந்துள்ளன. ஆயினும் பருவமழைக் காலத்தில் (அக்டோபர் - திசம்பர்) இப்பகுதியில் கடல்பயணம் இடர் மிகுந்தது. + +மார்க்கோ போலோ என்னும் வெனிசு நகர பயணி இப்பகுதிக்குப் பயணமாகச் சென்றதை தாம் எழுதிய (கிபி சுமார் 1295) "மிலியோனே - உலக அதிசயங்கள்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தென்னிந்திய பகுதிகள் அனைத்தும் பாண்டியர் ஆளுமையில் இருந்தது. "சோழமண்டலக் கரையில் செல்வம் கொழித்தது. அங்குக் காணப்படுகின்ற முத்துக்களைப் போல பெரியனவும் அழகுமிக்கவையும் வேறெங்கும் கிடைப்பதில்லை" என்று அவர் கூறுகிறார். + +சோழமண்டலக் கரையின் முதன்மை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அங்கிருந்துதான் சோழ மன்னர்கள் இலங்கை, மலேசியா, சாவகம் (ஜாவா) போன்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள். அச்சமயம் மாமல்லபுரம் துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. + +16-17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாட்டவர் இந்தியாவோடு வாணிகம் செய்ய வந்தபோது சோழமண்டலக் கரையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போட்டியிட்டார்கள். பிரித்தானியர்கள் புனித ஜார்ஜ் கோட்டை (சென்னை), மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களை நிறுவினார்கள். ஒல்லாந்து நாட்டவர் பழவேற்காடு, சதுரங்கபட்டினம் {சாத்ராஸ்) பகுதிகளைக் கட்டுப்படுத்தினார்கள். பிரான்சு நாட்டவர் பாண்டிச்சேரி (புதுச்சேரி), காரைக்கால், நிசாம்பட்டினம் ஆகிய இடங்களில் குடியேற்றம் அமைத்தார்கள். டென்மார்க்கு நாட்டவர் தரங்கம்பாடியில் கோட்டை கட்டினார்கள். + +பல போர்களுக்குப் பின், பிரித்தானியர் பிற ஐரோப்பிய நாட்டவர்களை முறியடித்து, சோழமண்டலக் கரையில் தம் ஆதிக்கத்தை நிறுவினர். பிரான்சு நாட்டவர் மட்டும் பாண்டிச்சேரியிலும் காரைக்காலிலும் 1954 வரை ஆதிக்கம் செலுத்தினர். + +"கோரமண்டல் அரக்கு" என்பது புகழ்பெற்றது. சீன நாட்டில் செய்யப்பட்டு, அரக்கு பூசப்பெற்ற பெட்டிகள், குவளைகள் "கோரமண்டல் சரக்குகள்" என்னும் பெயர்பெற்றுள்ளன. + +சோழமண்டலத்தின் சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழல் முக்���ியத்துவம் கொண்டவை. அங்கு பறவைகள் பாதுகாப்பிடங்கள் உள்ளன (பழவேற்காடு பறவைகள் காப்பகம்). + + + + +உதயணகுமார காவியம் + +உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். + +இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல். +உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது. +கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். + +உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல். + +பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார். + + + + +நாக குமார காவியம் + +நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + +சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது. + +இந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும். +இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார். +இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது. + + + + +யசோதர காவியம் + +தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான ய���ோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + +இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. + +மேற்சொன்ன சமணக் கொள்கையை விளக்கி எழுந்ததே யசோதர காவியம் ஆகும். உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல். + +அரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும். + + + + + +சூளாமணி + +ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது. + +சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசய���் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. + +இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார். + +சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளியும் இந்நூல் எடுத்தியம்புகிறது. + + + +தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் + + + + +அப்துல் ரகுமான் + +அப்துல் ரகுமான்,(நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் "பால்வீதி" என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். + +1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை க��ிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். "ஆலாபனை" கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். + +அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். + +அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். + +சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். + +தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். + +தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார் + + +கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு: + + + + + +திருப்பாவை + +திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். + +தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. + +இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந்நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது. +மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன. + +தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. + +வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப���பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை. + +திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம். + +திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்: + + +ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி + +நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால் + +தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து + +ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக + +பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் + +தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி + +"வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்" + +"நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்" + +குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் + +மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக் + +"கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்" + +"வைத்துக் கிடந்த மலர்மார்பா"..." +ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் + +ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி + +ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் + +பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில் + +ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து + +தாழாதே "சார்ங்க முதைத்த சரமழைபோல்" + +வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் + +மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் +பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பு: "Un texte tamoul de dévotion vishnouite. Le Tiruppāvai d’Āṇṭāl".̣ Pondichéry, Institut français d’indologie (PIFI, 45). Jean Filliozat, 1972 + + + + + +நாச்சியார் திருமொழி + +நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம். + +இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களி��் அமைந்துள்ளன. + + + + + + +மேரு மந்தர புராணம் + +மேரு மந்தர புராணம் என்பது ஒரு சமண சமயத்தைச் சார்ந்த தமிழ் நூலாகும். இது சமண சமயத்தின் சாரம் எனக் கருதப்படுகின்றது. நீலகேசி என்னும் நூலுக்கு உரை வகுத்தவரான வாமனாசாரியரே மேரு மந்தர புராணத்தின் ஆசிரியராவார். +ஆசையே உயிர்களில் துன்பங்களுக்கு மூல காரணம் என்பதைத் தெளிவுபடுத்தி அதனை விலக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதே இந் நூலாகும். +வட நாட்டு மதுரையை ஆண்ட அரசனொருவனுக்கு மக்களாகப் பிறந்த மேரு, மந்தரன் என்னும் இருவர், சமணர்களின் பதின்மூன்றாவது தீர்த்தங்கரரான விமலதீர்த்தங்கரரின் சீடராகித் துறவறத்தை நாடி முத்தியடைந்தனர். இவ்விருவரின் பெயரில் அமைந்ததே இந்த மேரு மந்தர புராணம். எனினும் இந்நூல், இம் மேரு, மந்தரர்களில் பல முற்பிறவிகளில் நடந்த கதைகளையும் உட்படுத்தியுள்ளது. அப்பிறவிகளில் ஆசையினால் ஏற்பட்ட குரோதங்களையும் அவை பல பிறவிகளூடாகத் தொடர்ந்து துன்பம் விளைவித்தமை பற்றியும் எடுத்துக் கூறுகின்ற மேரு மந்தர புராணம் இது தொடர்பான சமணக் கருத்துக்களைத் தெளிவாக உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது. +பிறவிகளுக்கு மூலமாக இருப்பதுவும், வினைகளை உருவாக்குவதும், உயிர்களின் வீடுபேற்றுக்குத் தடையாக இருப்பதும், எல்லா உயிர்களுக்கும் பகையாக உள்ளதும் ஆசையே என்னும் பொருள்படும் இப் பாடல் மேரு மந்தர புராணத்தின் 324 ஆவது பாடலாகும். +இந் நூலில் உள்ள 86 ஆம் பாடலில் அணு பற்றிய அக்காலக் கருத்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. +இதன்படி, இரண்டு ஊறுகள், ஒரு சுவை, ஒரு நிறம் ஆகியவற்றை உடைய அணுக்கள் இரண்டாகப் பிரிக்க முடியாத அளவு சிறியவை. தானாகவே என்றும் இருக்கும் இவை உலகில் உள்ள அனைத்துக்கும் மூலமாக உள்ளன என்பதாகும். + + + + + + +ஐதர் அலி + +ஐதர் அலி ("Hyder Ali", , , ஹைதர் அலி, (பிறப்பு: 7-12-1720) (இறப்பு: 7 திசம்பர் 1782), இசுலாமிய நாட்காட்டியில் 2 முகரம் 1197) மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். "ஐதர்" என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இவரது மகனே தி��்புசுல்தான். + +இவரது முன்னோர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில், ஒரு சூபி குடும்பம் குல்பர்காவை நோக்கி வந்தது. அப்பகுதியில் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சியா சிந்தனைப் பிரிவின் தாக்கமும், பாரசீக மொழியின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், தர்கா பணியாளர்கள் என பலரும் இருந்தனர். + +இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1686ல் ஔரங்கசீப், பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவரான பத்தே முகம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து, இறுதியாக கோலார் பகுதியில் குடியேறினார்கள். அதன்பின், ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அயிதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, 1721ல் பிறந்தார் + +ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், முகலாயப் பேரரசு, அவரது வாரிசுகளின் திறமையின்மையால், அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிசாம்களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலக்கட்டத்தில் தான், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். + +இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு மைசூர் அரசை, விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி சுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது கிருட்டிணராச உடையார் என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. + +தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் தளபதி ஆனா���்.1750-ல் ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடகப் போர் நடைபெற்றது. மைசூர் அரசு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.ஐரோப்பியர்களின் ராணுவ நுட்பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.அமைச்சர் நஞ்ஞராஜர், மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அமைத்தார். + +மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர். + +1759ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் கிருட்டிணராச உடையாரும் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அயிதரைப் போற்றும் வகையில் "தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்" (“பதே ஹைதர் பஹதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது.இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்துக் கொண்டிருந்தார். + +அலியை அடக்குவதற்கு ஆங்கிலேயப் படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் மராத்தியர்களும், அயிதராபாத் நிசாமும் இணைந்தனர். + +மராத்தியரும், நிசாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலி,புதுச்சேரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் கிர��ட்டிணாரச உடையருடன் ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்துக் கொண்ட அலி, அவ்விரு அமைச்சர்களை சிறைப்படுத்தி, பொம்மை மன்னர் கிருட்டிணாராச உடையாரை ஓரங்கட்டி, 1762ல் மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார். + +ஆட்சிக்கு வந்ததும் முதலில் இராணுவத்தை சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, இந்தியாவில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத சம்பளத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது,"பகோடா" என்றழைக்கப்பட்டது. அது தங்கத்தாலும், இந்து கடவுளரும் அமைந்திருந்தது. அவரது இராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் எதிரிகளுக்கும் செய்தி பரவி திகழ்த்தியது. வேளாண்மையினருக்கும் உகந்த நண்பனாகத் திகழ்ந்தார். + +அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது. + +அலியின் ஏவுகணைகள்: அட்டைக்கு பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10அடி உயரமுள்ள மூங்கில்களை பயன்படுத்தி ஏறத்தாழ6கிலோ எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது. + +1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. ஈரோட்டில் ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே மராத்தியரை வென்று மங்களூரை வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர் அச்சத்தால், 23.2.1768-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த நிலப்பகுதிகளை, அவரவர��டமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், மைசூருக்கு ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, "முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்" என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். + +1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அந்த ஓவியத்தில் வரையபட்டிருந்ததை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் "லாலி" என்ற ஆங்கிலேய நிறுவன அதிகாரி. + +"நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் அயிதர் அலி. வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் அயிதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது." + +முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். 1780 முதல் 1784 வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது. +100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் போர் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்னுமிடத்தில் இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர். + +நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும், சனவரி, 1782 ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார். + +"ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான்) மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக இராணுவ நடவடிக்��ை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்." + +இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, அயிதரின் உடல்நிலை, முதுகுத் தண்டுவடப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 திசம்பர் 6-இல் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் திப்பு சுல்தானின் வேண்டுகோளை ஏற்று, ஐதர் அலியின் உடல், சிறீரங்கப்பட்டினம் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. + + + + + + +இவோ ஜீமா சண்டை + +இவோ ஜீமா சண்டை ("Battle of Iwo Jima") ஐக்கிய அமெரிக்காவுக்கும் யப்பான் பேரரசுக்கும் இடையே 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டாம் உலகப்போரின் பசிபிக் போரின் ஒரு பகுதியாக நடைப்பெற்றது. "டிடாச்மென்ட் நடவடிக்கை" (Operation Detachment) என அழைக்கப்பட்ட இவ்வாக்கிரமிப்பு இவோ ஜீமா தீவில் காணப்பட்ட யப்பானிய வான்படைத் தளங்களை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவால் நடத்தப்பட்டது. + +இச்சண்டையானது இந்நடவடிக்கைகளின் போதான மிகக் கடுமையான மோதல்களை கொண்டிருந்தது. யப்பானிய இராச்சியப்ப்படைகளின் நிலைகளானது நன்றாக காக்கப்பட்டவையாகவும், பாரிய பதுங்கு குழிகளைக் கொண்டும், மறைக்கப்பட்ட ஆட்டிலரித் தளங்களையும், மொத்தம் 18 கிலோமீட்டர் (11 மைல்) நீளமான குகைவழிகளையும் கொண்டு பலமாக அமைக்கப்பட்டிருந்தது. இச்சண்டையானது யப்பானிய மண்ணில் நடைப்பெற்ற முதற் சண்டையாதாலாம் யப்பானிய படைகள் தமது நிலைகளை கடும்சமரிட்டு காத்தனர். தளத்தில் இருந்த 21,000 யப்பானிய படைகளில் 20,000 பேர் களச்சாவடைந்தனர் மேலும் 216 பேர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். + +ஜோ றொசெண்டன் என்ற படப்பிடிப்பாளர் ஐக்கிய அமெரிக்க ஈருடக படையினர் 5 பேரும், ஐக்கிய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரும் சேர்ந்து 166 மீட்டர் (546 அடி) உயரமான சுறபாச்சி மலை மீது ஐக்கிய அமெரிக்க கொடியை ஏறுவதை படம் பிடித்தார். இப்படமானது 35 நீடித்த இச்சண்டையின் 5வது நாள் சுறாபாச்சி மலை மீது ஏற்றப்பட்ட இரண்டாம் கொடியேற்றத்தை சித்தரிக்கிறது. இப்படமானது மிகப்பிரசித்தமானதுடன் மிக அதிகளவில் பிரதியெடுக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது. + + + + +1787 + +1787 (MDCCLXXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +அந்தாதித் தொடை + +ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும். +ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே "அசையந்தாதி", "சீரந்தாதி", "அடியந்தாதி" எனப்படலாம். + +மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க. +அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார். +மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன. + +தமிழில் பல அந்தாதி நூல்கள் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் அடுத்தடுத்து வரும் செய்யுள்களின் ஈற்றடி முதலடிகளுக்கு இடையில் மட்டும் அந்தாதிகள் அமைகின்றன. கீழே தரப்பட்டுள்ளவை முக்கியமான சில அந்தாதி நூல்களாம். + + + + + + +பெரம்பூர் + +பெரம்பூர் சென்னை மாநகராட்சியின் வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். சில நுறு வருடங்களுக்கு +முன்பு இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றும் ஒரு தமிழ் பெயர் பிரம்பு அல்லது பெரும்பு ஆகும். பெரும்பு உள்ள ஊர் என்பதே மருவி பெரம்பூர் ஆனது. இது சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 4 கிமி தொலைவில் அமைந்துள்ளது. + +இந்த பகுதி சென்னையுடன் 1742 வருடம் இணைக்கப்பட்டது. இந்த பகுதி குடியிருப்பு ���ற்றும் வணிக நிருவனங்கள் அமைந்த பகுதி. பெரம்பூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான தூய லூர்தன்னை திருத்தலம் இப்பகுதியின் குறிப்பிடத்தகுந்த அடையாளமாக அமைந்துள்ளது. + + + + +எழும்பூர் + +எழும்பூர் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஒரு சட்டமன்றத் தொகுதியும் ஆகும். + +100 ஆண்டு பழமை வாய்ந்த வெஸ்லி சர்ச் இங்குள்ளது. + + + + + + +வில்லிவாக்கம் + +வில்லிவாக்கம் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். + + +வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கோவில்கள்: +அகஸ்தீஸ்வரர் கோவில் +பாலியம்மன் கோவில் +சௌமிய தாமோதர பெருமாள் கோவில் + +முருகன் கோவில் +மஸ்ஜித்-எஹ்-ரஹ்மானிய மசூதி +பிலடெல்பிய சர்ச் (ICF அருகில்) +புனித இருதய தேவாலயம் (ஸ்ரீனிவாசா நகர்) + + + + + + +ராயபுரம் + +ராயபுரம், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியில், சென்னை  மாநகராட்சியில் அடங்கிய ஒரு பகுதியாகும். சென்னையின் பழமையான இடங்களில் இதுவும் ஒன்று.  பாரிமுனை, சென்னை துறைமுகம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் போன்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ளது  இப்பகுதி.  + +ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற மீன்பிடி துறைமுகமாகும் + +ராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது 1856ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும். + + + + +புரசைவாக்கம் + +புரசைவாக்கம் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். புரசைவாக்கத்தை புரசை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குடியிருப்பு பகுதிகளும் வணிக வளாகமும் நிறைந்து காணப்படுகின்றன. . +புரசையின் கவர்ச்சியில் அபிராமி மெகாமாலும் ஒன்று. இம்மாலில் நிறைய கண்கவரும் கடைகளும் உள்ளன. + +புரசைவாக்கத்தின் அருகில் எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்ளன. மாநகர பேருந்துகள் நகரின் பிற பகுதிகளுக்கு புரசைவாக்கம் வழியாக இயக்கப் படுகின்றன. + +மேலும் மிகவும் பழமையான கங்காதீஸ்வரர், சோலை அம்மன் கோவில்கள் புரசையில் பெயர் பெற்ற கோவில்கள். + +Purasawalkam: From old town to shopping hub + + + + +பெசன்ட் நகர் + +பெசன்ட் நகர் சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்டிய ஒரு பகுதியாகும். +இது சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப் படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசிதிபெற்றது. + + + + +கோயம்பேடு + +கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது. + +கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என மருவியதாம். + +லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். வால்மீகி முனிவர் இருந்த ஆஸ்ரமம்தான் தற்போது சென்னையில் இருக்கும் கோயம்பேடு எனும் இடம். இந்த இடத்தில்தான் லவன், குசன் இருவரும் ஈஸ்வரன் கோயில் ஒன்றைக் கட்டினர் + +இங்கு இருக்கும் சிவனுக்குக் குறுங்காலீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணம்? + +லவ, குசர் பூஜை செய்த லிங்கம் நாளடைவில் மணலில் அமிழ்ந்து போயிற்று. பிற்காலத்தில் சோழ மன்னன் அந்தப் பக்கம் தேரில் வர, தேரின் சக்கரம் மணலை அழுத்த, மணலில் புதைந்திருந்த லிங்கத்திலிருந்து இரத்தம் பெருக்கிட்டது. மன்னர் இதைப் பார்த்துப் பயந்து கீழே இறங்கி அந்த லிங்கத்தை எடுத்தார். தன்னால் அந்தச் சிவலிங்கத்திற்கு இப்படியாகி விட்டதே என்று மனம் வருந்தினார். பின் அதற்கு ஒரு கோயிலும் கட்டினார். லிங்கம் தேரின் சக்கரம் பட்டு நசுங்கியதால் குறுகிக் குள்ளமானது . இதனால் பெயரும் குறுங்காலீஸ்வரர் ஆனது. + + + + +சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் + +சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்��ு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. + +இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்கு பெயர் 'எழும்பூர் ரெடோ'. இது சாந்தோமில் உள்ள லீட்ஸ் கோட்டை போன்றுள்ளதாக அறியப்படுகிறது. பிரிட்டிஷாரால் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. +இந்த ரயில் நிலையம் கட்டிடமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி இருந்து பெறப்பட்டதாகும். இவர் முதலில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தான் 1.7 ஏக்கர் சொத்தினை சிரமேற்க்கொண்டு வளர்த்ததின் காரணமாக தர மறுத்துள்ளார். பின்னர் சௌத் இந்தியா ரெயில்வே நிறுவனம் 1,00,000 ரூபாய் கொடுத்து வாங்கியது. + +இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக அறியப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தி சாமிநாத பிள்ளை என்பவரால் 1905ல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுவதற்க்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாக 1908 சூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. + +முதலில் இதற்கு கிளைவ் அவர்களின் பெயர் சூட்டப்பட இருந்தது. எனினும், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் எழும்பூர் தொடருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. நிலையம் திறக்கப்படும் போது அங்கு மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவாகிய பிறகு சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக எழும்பூர் தொடருந்து நிலையம் மாறியது. + +எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. + + + +எழும்பூர் தொடருந்து நிலையம் 925 மீ தூரத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் 11 தளங்கள் உள்ளன. தளம் 1,2,3 குறைந்த நீளம் கொண்ட தளங்கள் ஆகும். இவை சிறிய ரக தொடருந்துகளுக்காக பயண்படுத்தப்படுகிறது. முக்கியமான 4ஆம் தளம் எழும்பூர் தொடருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் தளங்கள் நீள ரக தொடருந்துகளுக்காக பயண்படுத்தப்படுகிறது. + +2004 ஆம் ஆண்டில், பூந்தமல்லி ஹை ரோடு பக்கத்தில் நிலையத்தில் இரண்டாவது நுழைவுவாயில் கட்டுமானம் இந்திய ரூபாய் 115.3 மில்லியன் செலவில் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்த இரண்டாவது நுழைவுவாயில் திறக்கப்பட்டது. + +2013 வரை, இந்த தொடருந்து நிலையம் தினமும் சுமார் 35 முக்கிய வழிவகை ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள், மற்றும் சுமார் 150,000 மக்களை கையாளுகிறது. + +வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. + +சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் [[பேருந்து]], '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. + +மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன. + + +[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]] +[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]] +[[பகுப்பு:தமிழகத் தொடருந்து சந்திப்புகள்]] + + + +சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் + +சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் ("Chennai Mass Rapid Transit System", MRTS) அல்லது பறக்க���ம் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து (இரயில்) சேவையைக் குறிக்கும். + +இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமான சென்னை, 1931-ஆம் ஆண்டிலேயே தனக்கென ஓர் புறநகர் இருப்பு வழியினை அமைத்துக்கொண்டது. மேலே கூறப்பட்ட சேவையானது, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில், மீட்டர் அளவுப்பாதையாக தொடங்கப்பட்டது. பின்னர் 1985-ஆம் ஆண்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய இரு வழித்தடத்தில் அகல இருப்பு வழித்திட்டமாக செயல்படுத்தப்பட்டது. + +1980 - ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையின் நகர மையத்தை இணைக்கும் விதமாக ஒரு இருப்பு பாதையை அமைக்க அரசாங்கம் ஆலோசித்தது. 1985 - ஆம் ஆண்டில் பறக்கும் தொடருந்து திட்டத்திற்கு முறையான திட்டமிடல் செய்யப்பட்டு, 1991 - ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணியானது மிகுந்த கால தாமதத்திற்குப்பின் 1997 - ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இரண்டாம் கட்ட பணியானது 2007ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. + +ஒவ்வொரு பறக்கும் தொடருந்து நிலையமும் வெவ்வேறு கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 பெட்டிகளைக்கொண்ட ஒரு முழு நீள மின் தொடர் இணைப்புப்பெட்டிகளை தன்னகத்தே உள்ளடக்கும் விதமாக, ஒவ்வொரு நிலையமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பறக்கும் தொடருந்து வழித்தடத்தில் வெறும் ஆறு மின் தொடர் இணைப்புப்பெட்டிகள் மட்டுமே உடைய தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. + +சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம், மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அத்திட்டங்களின் விளக்கங்களை காணலாம். + +முதல் கட்டம் மிகுந்த தாமதத்திற்க்குப்பிறகு 1997-ஆம் ஆண்டு பொதுப்போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. முதல் கட்டத்தின் முதல் மூன்று நிறுத்தங்கள் தரை மட்டத்தில் அமைந்துள்ளன. பூங்கா நகர் நிறுத்தத்திலிருந்து, மின் தொடருந்து மெல்ல மேலே ஏறி சிந்ததரிபேட்டை நிறுத்தத்தை அடையும் போது, தொடருந்து முழுவதும் மேலே பயணிக்கும். அந்த நிறுத்தத்திலிருந்து, திருமயிலை நிறுத்தம் வரை, தொடருந்து மேலேயே பயணிக்கும். + +முதல் கட��டத்தில் உள்ள தொடருந்து நிறுத்தங்கள்: + +1) சென்னை கடற்கரை +2) சென்னை கோட்டை +3) பூங்கா நகர் +4) சிந்ததரிபேட்டை +5) சேப்பாக்கம் +6) திருவல்லிக்கேணி +7) கலங்கரை விளக்கம் +8) முண்டக்கன்னியம்மன் கோயில் +9) திருமயிலை + +இரண்டாம் கட்டத்தில் உள்ள தொடருந்து நிறுத்தங்கள்: + +1) மந்தைவெளி +2) கிரீன்வேஸ் சாலை +3) கோட்டூர்புரம் +4) கஸ்தூரிபாய் நகர் +5) இந்திரா நகர் +6) திருவான்மியூர் +7) தரமணி +8) பெருங்குடி +9) வேளச்சேரி + +இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த விரிவக்கத்தின்படி, வேளச்சேரி நிலையம், பரங்கி மலை புற நகர் தொடருந்து நிலையத்தோடு இணைக்கப்படும். இந்த விரிவாக்கத் திட்டத்தின் மொத்தத் தொலைவு மூன்று கீ. மீ. மட்டுமே. + +மூன்றாம் கட்டப்பணியானது, பரங்கி மலை நிறுத்தத்திலிருந்து, சீராக உள் வட்ட சாலை வழியாக வில்லிவாக்கம் வரை சென்று, சென்னை-அரகோணம் புற நகர் தொடருந்து வழித்தடத்தில் இணைவது போல் திட்டமிடப்பட்டது. ஆனால் பிற்பாடு திட்டமிடப்பட்ட சென்னை மெட்ரோ வழித்தடத்தோடு இந்தத் தடம் ஒத்துப்போவதால், மூன்றாம் கட்டத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. + + + + + + +பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) + +பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர். + +வடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. + + + + + +பாகிஸ்தானியர் + +பாகிஸ்தான் நாட்டின் குடிமக்கள் பாகிஸ்தானி என அழைக்கப்படுவர். இவர்களில் பல இனத்தவரும், பல்வேறு மொழிகளைப் பேசுவோரும், பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர். + +பாகிஸ்தானியரில் பல மொழிகள் பேசுவோர் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 44% ஆக உள்ளனர். இவர்களைவிடப் பாஷ்தூ மொழி பேசுவோர் 15% ஆகவும், ச��ந்தி பேசுவோர் 14% ஆகவும், சராய்க்கி மொழி பேசுவோர் 11% ஆகவும் உள்ளனர். உருது நாட்டின் அரச மொழியாக இருப்பினும் அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 8% மட்டுமே. எனினும் பெரும்பாலான பாகிஸ்தானியர் உருது மொழியைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் முகாஜிர் (Muhajir) என்று அழைக்கப்படுகிறார்கள். + +இஸ்லாமிய மார்க்கம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. + + + + +ஒகினவா சண்டை + +ஐஸ்பெர்க் நடவடிக்கை (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட ஒகினவா சண்டை ("Battle of Okinawa") யப்பானிய ஒகினவா தீவுகளில் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் ஒரு அங்கமாக நடைப்பெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும். 1945 ஆம் ஆண்டின் மார்ச் கடைசி முதல் யூன் மாதம் வரை நடைபெற்றது. + +இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் "டைப்பூன் ஃச்டீல்" (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் "தெற்சுனோ அமே" (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர். + +நேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது. + + + + +செய்யுள் + +தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் செய்யுள் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். செய்யுள் ஏழு நிலங்களில் அமையும் அவை பாட்டு, உரை, நூல், பிசி, முதுமொழி, மந்திரம், பண்ணத்தி என்பன. + +செய்யுள் என்னும் சொல் பயிர்செய்யும் விளைநிலத்தைக் குறிக்கும். இதில் பயிர் விளைந்து உணவுப்பொருளைத் தரும். மொழியில் வரும் செய்யுளில் வாழ்வியல் விளைந்து மக்களைப் பண்படுத்தும். + +காரிகை காலம் தொட்டே செய்யுளை, யாப்பு, உரைநடை எனப் பகுத்துக் காணும் நிலை தோன்றிவிட்டது. + +செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஓர் இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன. + +செய்யுள் என்னும் சொல் நன்செய் வயலைக் குறிக்கும். "மருதம் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்" - பதிற்றுப்பத்து 73. தொல்காப்பியர் செய்யுள் என்னும் சொல்லை நன்செய் வயல் போலப் பண்படுத்தப்பட்ட மொழியாக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார். இது ஆகுபெயர். உடல் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் வயல். மனம் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் தொல்காப்பியர் காட்டும் செய்யுள். + +தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நமக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 26+8=34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது. + +1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம், + +27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை. + +யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரி���ை ஆகிய நூல்கள் பிற்காலத்தில் தோன்றிய பாடல்களைத் தொகுத்துப் பார்த்து பாடல்கள் நான்கு எனவும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் நாற்பா இனங்களையும் குறிப்பிடுகின்றன. + +பாட்டியல் நூல்கள் பாட்டுடைத் தலைவனுக்கும் எழுத்துக் கற்பிக்கப்பட்ட இனங்களுக்கும் பொருத்தம் பார்க்கின்றன. அத்துடன் காப்பியம், பிரபந்தம் என்னும் சிற்றிலக்கியம் எனப் பாகுபடுத்திக் கொள்கின்றன. + +செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவை, + + +என்பனவாகும். சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர். + + + + +பள்ளப்பட்டி + +பள்ளப்பட்டி (ஆங்கிலம்:Pallapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8013 ஆண்கள், 11026 பெண்கள் ஆவார்கள். பள்ளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 81.5% விட கூடியதே. பள்ளப்பட்டி மக்கள் தொகையில் 16.5% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இது கரூர் மக்களவைத் தொகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அடங்குகிறது. கரூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் குளித்தலை அருகே இக் கிராமம் உள்ளது. இங்கு பெருவாரியாக முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். ஆண்களிற் பலர் தொழில் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை அராபியர்களின் வழிவந்தவர்கள் எனக் கூறுகின்றனர். + + + + + +அளபெடைத் தொடை + +செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன. + +என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும். + + + + +முரண் தொடை + +செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின் முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம். + + + + +இரட்டைத் தொடை + +செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம். + + + + +செந்தொடை + +மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது. + +அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய இம்மூவகைத் தொடைகளின் இலக்கணம் கூறும் நூற்பா கீழ்வருமாறு: + +""அந்த முதலாத் தொடுப்பதந் தாதி; அடிமுழுதும்
+வந்த மொழியே வருவ திரட்டை; வரன்முறையான்
+முந்திய மோனை முதலா முழுதும்ஒவ் வாதுவிட்டால்
+செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழல் தேமொழியே"" + + +
+ +ஓசை (யாப்பிலக்கணம்) + +ஓசை அல்லது தூக்கு என்பது செய்யுளின் ஒரு கூறு எனத் தொல்காப்பியம் கூறுகிறது. செய்யுள்கள் அல்லது பாக்கள், அவற்றின் சீர்களுக்கு இடையேயுள்ள தளைகளின் தன்மையையொட்டி, வெவ்வேறு விதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன. முக்கியமாக இவ்வோசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. + +ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்பனவாகும். + +இவை ஒவ்வொன்றும் மூன்று துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, + +செப்பலோசை + +அகவலோசை +எடுத்துக்காட்டு + +துள்ளலோசை + +தூங்கலோசை + +என்பனவாகும். + +செப்பலோசை பாவகைகளில் வெண்பாவுக்கு உரிய ஓசையாகும். இது வெண்டளை எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை ஆசிரியப்பாவுக்கும், துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை ஆசிரியத்தளையாலும், துள்ளலோசை கலித்தளை, வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. வஞ்சிப்பாவுக்கு உரியதான தூங்கலோசை, வஞ்சித்தளை என்னும் தளை வகையால் உண்டாவது. + + + + +ஆசிரியப்பா + +ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. + +இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். + +ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. + +ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது. +தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற வாய்பாட்டால் அமையும் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரையாகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். + +தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம். + +தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும். இவை ஆசிரியப்பாவில் வர முடியாது. + +ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும். + +சீர்கள் ஒன்றுடனொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்ட���ை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை எனத் தளைகள் ஏழு வகைப்படும். +மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரியவை. + +காய்முன் நிரை வருதல் கலித்தளை. கனிமுன் நிரை வருதல் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித் தளை. +ஆசிரியப்பாவில் இருவகையான வஞ்சித்தளைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து தளைகளும் வரும். + +ஆசிரியப்பாவுக்குரிய அடி அளவடி. நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாகவும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும் பலவும் குறளடி, சிந்தடிகளாகவும் வரும். ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி. பெருமை, புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. + +ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும். ஒருவர் பேசுதல் போன்ற ஓசை அகவலோசை எனப்படும். + +செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசைகள் நான்கு வகைப்படும். +செப்பலோசை இருவர் உரையாடுதல் போன்றது. இது வெண்பாவுக்கரியது. +துள்ளலோசை சீர்தோறுந் துள்ளினாற்போல் வருவது. (தாழ்ந்துயர்ந்து வருவது). இது கலிப்பாவிற்குரியது. +தூங்கலோசை சீர் தோறுந் துள்ளாது தூங்கி வருவது. இது வஞ்சிப்பாவுக்குரியது. + +எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான ஈறு 'ஏ' ஆகும். ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ என்னும் ஈறுகளும் உண்டு. நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பான ஈறு 'என்' என்பதாகும். +ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன. + + +பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. + + +பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை என்பன இப் பாவகையில் எழுந்த நூல்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும். + + + + + +மைசூர் அரசு + +மைசூர் அரசு ("Kingdom of Mysore", கன்னடம்: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) தென்னிந்தியாவில் 1399 இல் மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்த்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால��� அமைக்கப்பட்ட அரசாகும்.மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராச உடையார் மற்றும் சிக்க தேவராச உடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான தன்னாட்சி அரசு 1761 வரை ஆண்டது. + +மைசூர் அரசைக் கைப்பற்றிய ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர். + +ஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர். + +1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. + +இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது. + + + + + +பாண்டியன் (நடிகர்) + +பாண்டியன் (இ. ஜனவரி 10, 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். + +மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன. + +நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார். + +நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 அன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர். + + + + + +கலிப்பா + +கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூ��் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன. + +கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும். + +கலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வரா. + +பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும். + +இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும். + +கலிப்பாவானது ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என நான்கு வகைப்படும். இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது. + +மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, + + +என்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு, + + +என மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு, + + +என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன. + +கலிப்பாவின் இனங்கள்: + + + + +தரவு (யாப்பிலக்கணம்) + +செய்யுளியலில், தரவு என்பது, செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் முதல் உறுப்பு ஆகும். இது செய்யுளுக்கு முகவுரை போன்றது. எடுத்துக்கொண்ட பொருளை அறிமுகப்படுத்தும் பாங்கில் அமைந்தது. இது குறைந்தது மூன்று அடிகளையும், கூடிய அளவாகப் பன்னிரண்டு அடிகளையும் கொண்டு அமைந்திருக்கும். + +கலிப���பாவின் வகைகளுக்கு ஒப்பத் தரவுகளின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. பெரும்பாலும் ஒரு தரவே வருமாயினும், சில கலிப்பாக்களில் இரண்டு தரவுகளும் காணப்படுவது உண்டு. தரவு இல்லாமலே வரும் கலிப்பாக்களும் உண்டு. + +குமரகுருபரர் எழுதிய சிதம்பரச் செய்யுட்கோவை என்னும் நூலில் வரும் கலிப்பாப் பகுதியில் உள்ள மூன்றடித் தரவு பின்வருமாறு. +குமரகுருபரர் எழுதிய காசிக் கலம்பகம் என்னும் நூலில் வரும் மயங்கிசைக் கொச்சக் கலிப்பா வகைகையைச் சேர்ந்த செய்யுளில் வரும் இரட்டைத் தரவுகள் பின்வருமாறு. + + + + +தாழிசை (பாவகை) + +பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பதனால் தாழிசை என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கலிப்பாவில் பொதுவாக இது முதல் உறுப்பான தரவைத் தொடர்ந்து வரும். கலிப்பாவில் பொதுவாக மூன்று அல்லது ஆறு தாழிசைகள் இருப்பது வழக்கம். பன்னிரண்டு தாழிசைகள் கொண்ட கலிப்பாக்களும் உள்ளன. + +தாழிசை இரண்டு தொடக்கம் நான்கு அடிகளைக் கொண்டிருக்கலாம். எனினும் இவ்வெண்ணிக்கை தரவிலுள்ள அடிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்பது விதி. + +குமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட்கோவையில் காணப்படும் கலிப்பாப் பகுதியின் தாழிசைகளைக் கீழே காணலாம். இதன் தரவு மூன்று அடிகளைக் கொண்டது இதனால் அதனிலும் குறைவான எண்ணிக்கையில் அடிகள் அமையவேண்டும் என்பதால் தாழிசை ஒவ்வொன்றும் இரண்டு அடிகளைக் கொண்டு அமைந்துள்ளன. இங்கே மூன்று தாழிசைகள் உள்ளன. + + + + +அராகம் (யாப்பிலக்கணம்) + +செய்யுளியலில் அராகம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் தரவு, தாழிசை என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து மூன்றாவது உறுப்பாக வரும். இது ஏற்ற இறக்கங்கள் அற்ற ஒலி அளவைக் கொண்டிருப்பது. இது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகளால் அமைந்திருக்கும். அராகங்கள், நான்கு தொடக்கம் எட்டு அடிகளைக் கொண்டவையாக அமைந்திருக்கலாம். + +குமரகுருபரரின் சிதம்பரச் செய்யுட்கோவையிற் காணும் அராகப்பகுதி ஒன்று. எல்லாமே நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் அமைந்த நான்கு அராக���்கள் வந்துள்ளன. + + + + +ஒத்தாழிசைக் கலிப்பா + +ஒத்தாழிசைக் கலிப்பா என்பது தமிழ்ச் செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இது அடிப்படையாகப் பின்வருமாறு உறுப்புக்களைப் பெற்று அமைந்திருக்கும்: + +இக் கலிப்பாவகை மூன்று துணைவகைகளாகக் காணப்படுகின்றன. இவை பின்வருமாறு: + +நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா மேற்கூறிய அடிப்படையான உறுப்புக்களை மட்டுமே கொண்டிருக்க, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா கலிப்பாவுக்கு உரிய அம்போதரங்கம் என்னும் உறுப்பையும் கொண்டிருக்கும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அராகம் என்னும் இன்னொரு உறுப்பும் சேர, கலிப்பாவுக்கு உரிய ஆறு உறுப்புக்களையும் அது கொண்டிருக்கும். + + +வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து +தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் +பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? + +சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால் +பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1) + +சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால் +நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2) + +சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால் +புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3) + +எனவாங்கு + +அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் +பன்னெடுங் காலம் வாழியர் +பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே! + + + + + + +அரிச்சந்திரன் + +அரிச்சந்திரன் (ஹரிச்சந்திரன்) இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக் கதைகளின்படி இவர் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவார். இவர் தனது வாழ்வில், சொன்ன சொல் தவறாமை, வாய்மை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தார். இவரது வாழ்க்கை இந்தியப் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுவதால், பள்ளிப் புத்தகங்களில் இவரது வரலாறு இடம்பெறுவது உண்டு. இந்தியாவில் மிகவும் பெயர் பெற்ற இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நூல்களும், நாடகங்களும், திரைப்படங்களும் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டு உள்ளன. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அவர்அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவர் உண்மையின் சின���னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டுள்ளார். + +விசுவாமித்திரர் என்னும் முனிவர் அரிச்சந்திரனிடம் வந்தார். அரிச்சந்திரன் தனது கனவில் வந்து அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால், அந்நாட்டைத் தனக்கு அவர் தந்துவிடவேண்டும் என்று கூறினார். கனவிலாயினும், தான் வாக்குக் கொடுத்ததாக முனிவர் கூறுவதால் தன் நாட்டை அவருக்கே அரிச்சந்திரன் கொடுத்துவிட்டுத் தனது மனைவியையும் சிறுவனான மகனையும் அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்த வாரணாசிக்குச் செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறினான். + +எனினும் முனிவர் அவனை நோக்கி, அவர் கொடுத்த தானம் நிறைவெய்துவதற்குத் தட்சிணை கொடுக்கவேண்டும் என்றார். தட்சிணையாகக் கொடுப்பதற்குக் கூட ஏதும் கையில் இல்லாத அரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்றார். அதனால் கிடைத்த பணமும் தட்சிணைக்குப் போதுமானதாக இல்லாதிருந்ததால் தன்னையும் புலையர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அரசன் சுடலையில் பிணங்களை எரிப்பதற்கு உதவினார். அவரது மனைவியும் மகனும் பிராமணனின் வீட்டு வேலைக்காரர் ஆயினர். இவ்வாறு இவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். + +ஒரு நாள் பிராமணனின் பூசைக்காகப் பூப்பறிக்கச் சென்ற அரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவி ஏதும் அற்ற அரிச்சந்திரனின் மனைவி தனியாகத் தனது மகனின் பிணத்தையும் தூக்கிக்கொண்டு புலம்பியவளாய் மயானத்துக்குச் சென்றாள். மகனின் பிணத்தை எரிப்பதற்காகச் செலுத்த வேண்டிய வரியைக் கொடுப்பதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. சுடலையில் காவல் காப்போனாக இருந்த அரிச்சந்திரனோ அவரது மனைவியோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தப் பணம் இல்லையெனக் கூறக்கேட்ட அரிச்சந்திரன் கண்ணில் அவள் கழுத்திலிருந்த தாலி பட்டது. அவளைப் பார்த்து அத்தாலியை விற்று வரி கட்டுமாறு அவன் கூறினான். அவளது கணவனான அரிச்சந்திரனுடைய கண்ணுக்கு மட்டுமே அவள் அணிந்திருந்த தாலி தெரியக்கூடியது என்பதனால், காவலாளியாக இருந்தவன் அரிச்சந்திரனே என அவள் அறிந்து கொண்டாள். இதனால் அரிச்சந்திரனும் தனது மனைவியை அடையாளம் கண்டுகொண்டான். + +எனினும் கடமையில் கண்ணாய் இருந்த அரிச்சந்திரன் வரி இல்லாமல் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். அவனது மனைவியிடம் ஒரேயொரு சேலை மட்டுமே இருந்தது. அதில் ஒரு பாதியைக் கிழித்துத் தனது மகனின் உடலைப் போர்த்தியிருந்தாள். மற்றப்பாதியே அவளது உடலை மூடியிருந்தது. அதனை வரியாகக் கொடுத்தால் பிணத்தை எரிக்க முடியும் என அரிச்சந்திரன் ஒப்புக்கொண்டான். அவளும் அதற்கு இணங்கிச் சேலையை அவிழ்க்க முற்பட்டபோது, விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றினர். உண்மை மீது அவன் கொண்டிருந்த உறுதிக்காக அவனைப் போற்றிய அவர்கள் அவனது மகனை உயிர்ப்பித்தனர். + +அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்க பதவி கொடுத்தனர் எனினும் அதனை ஏற்க அவர்கள் மறுத்தனர். தமது குடிமக்களை விட்டுவிட்டுச் செல்வது சரியல்ல என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு கூட்டிச்செல்ல விரும்புவதாகவும் அரிச்சந்திரன் இறைவனிடம் வேண்டினான். ஒவ்வொருவரும் தமது வினைப்பயனுக்கு ஏற்பவே சுவர்க்கம் செல்ல முடியும் என்று அதனால் குடிமக்களை அவன் கூட்டிச் செல்ல முடியாது என்றும் தேவர்கள் கூறினர். ஆகவே தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தனது குடிகளுக்கே கொடுத்து விடுவதாகவும் அவர்களை அங்கே ஏற்றுக்கொள்ளும்படியும் அவன் வேண்டினான். தான் பூமியிலேயே தங்கிவிடவும் தீர்மானித்தான். அவனது செயலுக்காக மகிழ்ந்த இறைவன் அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்கம் அளித்தார். + +விசுவாமித்திரர், அரிச்சந்திரனது நாட்டில் புதிதாக மக்களைக் குடியேற்றி அவனது மகனை அரசனாக்கினார். + + + + + +பாதமி குடைவரைக் கோயில் + +பாதமி குடைவரைக் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதமி என்னும் நகரில் உள்ளது. பாதமி, கி.பி. 6 துடக்கம் 8 ஆம் நூற்றாண்டுகள் வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலை நகரமாக விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது. + +பாதம�� குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளிற் குடையப்பட்டுள்ளன. + + + + +பாலக்காட்டுக் கோட்டை + +பாலக்காட்டுக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகர மத்தியில் அமைந்துள்ளது. கருங்கல்லால் ஆன இக் கோட்டை 1766 ஆம் ஆண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்டது. கேரளாவிலுள்ள கோட்டைகளில் நல்ல நிலையிலுள்ள கோட்டைகளில் ஒன்றாக இது விளங்குகிறது. + +பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை. பாலக்காடு அச்சன் எனும் இப் பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார். எனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757 இல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாடக்காடைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச் சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான். அப்போதிருந்து 1790 வரை இப் பகுதி மைசூர் சுல்தான்களிடம் அல்லது பிரித்தானியரிடம் இருந்து வந்தது. 1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783 இல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக் கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. 1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின. இக் கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இக் கோட்டையில் படைகள் நிலைகொண்டிருந்தன. 1900களின் முற்பகுதியில் இக் கோட்டை தாலுகா அலுவலமாக மாற்றப்பட்டது. இக் கோட்டை ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி "திப்பு கோட்டை" என்றும் அழைக்கப்படுவது உண்டு. + + + + +வேலூர்க் கோட்டை + +வேலூர்க் கோட்டை ("Vellore Fort") 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் இக்கோட்டை அமைந்துள்ளது. + +கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக் கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக் கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் என்பனவும் உள்ளன. + +இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது. + +விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. + +நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் , திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்,இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும். + + + + + +ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் + +ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான். + +இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான். + +எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பிலிமத்தலாவை என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும். + +இவனது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவை ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தப்பி ஓடினான். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான். + +பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட��டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான். + +இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் 2 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான். + + + + + +தென்கோ நடவடிக்கை + +தென்கோ நடவடிக்கை (Kyūjitai: , Shinjitai: "தென்கோ சகுசென்") என்றழைக்கப்பட்ட "தென் இச்சி கோ" (கருத்து:விண்ணகம் நடவடிக்கை ஒன்று) இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியப் பேரரசால் முன்னெடுக்கப்பட்ட இறுதியான பெரும் கடல் நடவடிக்கையாகும். + +1945 ஏப்ரல் மாதம் அப்போது உலகின் பெரிய போர்க்கப்பலான யப்பானிய யமாத்தோ போர்க்கப்பலும் மேலும் 9 போர்க் கப்பல்களும் ஒகினவா சண்டையில் ஈடுப்பட்டிருந்த நேச நாட்டுப்படைகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அங்கு அனுப்பப் பட்டிருந்தன. எனினும் இக்கப்பல் தொகுதி ஒகினவாவை அடையும் முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்களால் யப்பானிய கப்பல் தொகுதி தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு அண்ணளவாக முற்றாக அழிக்கப்பட்டது. யமத்தோவும் மேலும் 5 கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. + +இச்சண்டை பசிபிக் அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் வானாதிக்கத்தையும் வான் பாதுகாப்பற்ற போர்க்கப்பப்பல்களின் நிலையையும் எடுத்துக்காட்டியது. நேசப்படைகளின் யப்பான் மண் ஆக்கிரமிப்பை மந்தப்படுத்துவதற்கு பலனற்ற தாக்குதல்களில் பாரிய அளவு யப்பானியர்களை பலிகொடுக்க தயாராக இருப்பதையும் எடுத்துக் காட்டுயது. + + + + +எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர் + +எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்���ான போர் ("Volcano and Ryukyu Islands campaign") எனபது இரண்டாம் உலகப் போரில் பசிபிக் போரின் ஓர் அங்கமாக நேசப் படைகளுக்கும் யப்பானியப் பேரரசுப் படைகளுக்குமிடையே பசிபிக் பெருங்கடலில் 1945 ஜனவரி முதல் யூன் வரையான காலப்பகுதியில் நடைப்பெற்ற சண்டைகள், முறியடிப்புச் சமர்கள் என்பவற்றைக் குறிக்கும். + +இப் போர் எரிமலை மற்றும் ரியுகுயு தீவுக் கூட்டத்தில் நடைபெற்றது. இப்போரின் முக்கிய சண்டைகளாக இவோ ஜீமா சண்டை (பெப்ரவரி 16-மார்ச் 26, 1945) ஒகினவா சண்டை (ஏப்ரல் 1-ஜூன் 21, 1945) என்பவற்றையும் முக்கிய கடற் சமராக தென்கோ நடவடிக்கையையும் குறிப்பிடலாம். + +இப்போரானது நெசப்படைகளின் யப்பான் அக்கிரமிப்புச் சமரின் ஒரு பகுதியாகும். ஆக்கிரமிப்புக்குத் தேவையான பின்னணித் தளங்களாக இவற்றை பயன்படுத்துவதும் யப்பானின் கப்பல் போக்குவரத்துகளை தடை செய்வதும் இதன் நோக்கமாக இருந்தன. இரோசிமா நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் அறிவிப்பு போன்ற நிகழ்வுகள், யப்பான் சரணடைந்தமை, இரண்டாம் உலப்போர் முடிவுற்றமை ஆக்கிரமிப்பு நடைபெறவில்லை. + + + + +ஹியூஜென்ஸ் (விண்கலம்) + +ஹியூஜென்ஸ் விண்ணுளவி அல்லது ஹியூஜென்ஸ் விண்ணாய்வி ("Huygens probe"), சனிக் கோளின் நிலவான டைட்டனில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி முகமையினால் வடிவமைக்கப்பட்டு நாசா, மற்றும் ஐரோப்பியக் கூட்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி ஆகும். இவ்வுளவிக்கு டச்சு அறிவியலாளர் கிரிஸ்டியன் ஹியூஜென்சின் (1629-1695) நினைவாக "ஹியூஜென்ஸ்" எனப் பெயரிடப்பட்டது. காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் கூட்டாக பூமியில் இருந்து 1997 அக்டோபர் 15 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. "ஹியூஜென்ஸ்", "காசினி" என்ற தாய்க்கப்பலில் இருந்து 2004 டிசம்பர் 25 இல் பிரிந்தது. இது பின்னர் 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டனின் வளி மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் வேகத்தில் சென்று டைட்டனில் 2005 சனவரி 14 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டன் துணைக்கோளில் மட்டுமல்லாது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலமும் ஆகும். பூமியில் இருந்து அதி கூடியளவு தூரத்தில் தரையிறங்கிய ஒரேயொரு விண்கலமும் இதுவாகும். ஹியூஜென்சு ட���ட்டனில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. டைட்டானின் தள வெப்பத்தில் (-179 செ), விண்கலத்தின் மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்து போய் விடும். + +9 அடி விட்டமும் 318 கிலோகிராம் எடையும் கொண்டது ஹியூஜென்ஸ் உளவி. ஆறு ஆய்வுக் கருவிகளைக் கொண்டது. ஹியூஜென்சின் கருவிகளை இயக்கும் மின்கலங்கள் 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. 20 நாட்கள் டைட்டான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலங்கள் இயக்கத்தில் இருந்து, அதன் தன்னியக்கிக் கருவிகள் வாயுவின் அழுத்தம், வெப்பநிலை, திணிவு ஆகியவற்றைப் பதிவு செய்து தாய்க்கப்பல் காஸ்சினி மூலமாகப் பூமிக்கு அனுப்பியது. + +ஹியூஜென்ஸ் முதலில் அனுப்பிய படங்களில் இருந்து அது எண்ணெய்க்கடல் கரை எல்லையில் (Oily Ocean Shoreline) இறங்கியதாக அவதானிக்கப்பட்டது. + + + + + +மின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் + +மின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல். மின்னாற்றல் அமைச்சகத்தின் 31-12-11 குறிப்பின் அடிப்படையாகத் தொகுக்கப்பட்டது. (இலக்கங்கள் எல்லாம் மில்லியன் மெகாவாட்களாகும்) + + + + + +பசிபிக் போர் + +பசிபிக் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் போது பசிபிக் மாக்கடலில் நடைபெற்ற சண்டைகளை கூட்டாக அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்போர் கிழக்கு ஆசியாவில் ஜூலை 7, 1937 முதல் ஆகஸ்ட் 14, 1945 வரை நடைபெற்றது. டிசம்பர் 7, 1941க்குப் பின்னர் பேர்ல் துறைமுகத் தாக்குதல் உட்பட, யப்பானிய படைகளால் நேச நாடுகள் பலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னரே பல முக்கிய போர் நடவடிக்கைகள் தொடங்கின. + + + + +கண்டி நாயக்கர் + +கண்டி நாயக்கர் என்போர் இலங்கையின் கண்டி அரசை ஆண்ட, தென்னிந்திய நாயக்கர் அரச மரபைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். இவர்கள் கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்தனர். இலங்கையின் கடைசி அரச மரபும் இதுவே. இவர்கள் தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் பாளையக்காரராக இருந்து பின்னர் சுதந்திர அரசமரபை உருவாக்கிய மதுரை நாயக்க மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தெலுங்கர்கள் ஆவர். + +கண்டிய அரசமரபினருடன் செய்துகொண்ட மணத்தொடர்புகளின் வழியாகவே இவர்களுக்குக் கண்டியரசின் அரசுரிமை கிடைத்தது. இம் மரபைச் சேர்ந்த நான்கு அரசர்கள் கண்டியை ஆண்டுள்ளனர். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் பின்னர் பௌத்தர்களாக மதம் மாறினர். இலங்கையில் பௌத்தமதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெருந்தொண்டாற்றியுள்ளனர். + +கண்டி நாயக்கர் மரபுக்கு முந்திய கண்டி அரச மரபினர் எப்போதுமே மதுரை நாயக்கர் அல்லது தஞ்சாவூர் நாயக்கர் மரபிலிருந்து பெண் கொண்டனர். கண்டி அரச மரபின் கடைசி அரசன் வாரிசு இல்லாமல் இறந்தபோது, மதுரை நாயக்கர் மரபைச் சேர்ந்த அவனது அரசியின் தம்பி மதுரையில் இருந்து கூட்டிவரப்பட்டு அரசனாக்கப்பட்டான். அக்காலத்தில் வழக்கில் இருந்த மருமக்கதாயம் என்னும் முறையை ஒட்டியே இவ்வாறு செய்யப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து வந்த அரசர்களும் இம் மரபில் இருந்தே வந்தனர். + +கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம். + +ஆட்சியாளர் பட்டியல், இலங்கை + + + + + +ஸ்ரீ விஜய ராஜசிங்கன் + +ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன். + +1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான். + +இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். இந்து சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக்குகைகளில் செதுக்குவித்தான். இவன் தனக்கு சார்பானவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கினான். பிலிமத்தலாவை அரசனுக்கு சார்பாக இருக்கவில்லை. ஆகையால் அவனது மகா அதிகாரம் பதவியை தனக்கு சார்பாக இருந்த சமரக்கொடிக்கு வழங்கினான். லெவ்கே திசாவைக்கு நாலு கோறளை பதவியையும், வெளிவிட்ட சாமநேருவுக்கு ராஜகுரு பதவியையும் வழங்கினான். + +இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான். ஸ்ரீ விஜய ராஜ சிங்கன் நாயக்க வம்ச இளவரசியை மணந்து, அவளை தனது பட்டத்து இராணி ஆக்கினான். கி.பி.1747 ல் இவன் இறக்கும் போது இவனுக்கு பிள்ளைகள் இல்லை. + + + + + + +தமிழ் மறுமலர்ச்சிக் காலம் + +வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். "கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது." + +இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழ���களின் ஒப்பிலக்கணம்' "(The Comparative Grammar of the Dravidian Languages)" ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது. + +19 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். + + + + +ச. வையாபுரிப்பிள்ளை + +ச. வையாபுரிப்பிள்ளை ("எஸ். வையாபுரிப்பிள்ளை", அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். + +வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார். + +தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல், ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, "இரசிகமணி" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள். + +வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்�� பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. + +வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். + +வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார். + +இரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். + +மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ. உ. சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாக��ும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். + +அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை. + +நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது. + +தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. + +வையாபுரிப் பிள்ளை 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தினார். + + + + + + + + + +நரேந்திர மோதி + +நரேந்திர தாமோதரதாசு மோதி ("Narendra Dāmodardās Modī", குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்தார். + +நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014 ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார். + +இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசி���லில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார். + +அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிப்பெற்று அக்டோபர் 7, 2001 இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிப்பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். + +மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார். கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது. + +2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். + +2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். + +பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார். + +மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். + + +அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரோலியா சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது. + + + + + + +ரோசா லக்சம்பேர்க் + +ரோசா லக்சம்பேர்க் ("Rosa Luxemburg", மார்ச் 5, 1871 – சனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார். + +"செங்கொடி" ("Die Rote Fahne") என்ற இதழை இவர் ஆரம்பித்தார். முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-மக்களாட்சிக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" ("Spartacist League") என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் செருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் 1919 சனவரியில் நடத்தப்பட்ட பேர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கா���்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலூம் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். + +ரொசாலியா லக்சம்பேர்க் மார்ச் 5, 1870 அல்லது 1871 இல் யூத இன நடுத்தரக் குடும்பத்தில் உருசியக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார். மர வியாபாரியான எலியாஸ் லக்சம்பேர்க் மற்றும் லைன் லோவென்ஸ்டீன் தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரே லைன் லோவன்ஸ்டீன் தம்பதிக்கு கடைசி குழந்தையாவார். பின்னொரு நாளில் தனது தந்தையின் தாராளமயமாக்கள் கருத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக லக்சம்பெர்க் நினைவு கூறுகிறார்.அவரது தாயார் மத நம்பிக்கைகளில் ஈடுபாடு உடையவராகவும் புத்தகங்களை நன்கு படிக்கக்கூடியவராகவும் இருந்தார் . அவரது குடும்பத்தினர் செருமானிய மற்றும் போலிய மொழியையும் பேசினர் லெக்சம்டிபர்க் கூடுதலாக உருசிய மொழியையும் கற்றறிந்தார். ஐந்து வயதிலேயே இவரைப் பாதித்திருந்த இடுப்பு வலியால் இவர் நிரந்தர ஊனமுடையவரானார்.. +1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்குக் குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடது சாரி பாட்டாளிக் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது சகாக்களை இரகசியமாகச் சந்தித்து வந்தார். + +1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்குச் சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இங்குதான் லியோ ஜோகித்சேவை சந்தித்தார். இவர்களுக்கிடையேயான உறவு 1907 இல் ஜோகிசத்சேக்கு அவரது உருசியத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு உருசியத் தோழியுடனான உறவின் பின் முறிந்தது. ஆனால் அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோசாவின் இறுதி நாட்கள்வரை இருவரையும் இணைத்திருந்தது. + +1893 இல் ஜோகித்சேவுடன் இணைந்து "தொழிலாளர் குரல்" ("Sprawa Robotnicza") என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்துத் தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்க முடிய��ம் என்று நம்பினார். குறிப்பாகச் செருமனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது. + +1898 இல் குஸ்தாவ் லூபெக் என்பாரைத் திருமணம் புரிந்து செருமனியக் குடியுரிமை பெற்று பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குச் செருமனியின் சமூக சனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். + +1914, ஆகஸ்ட்டில் கார்ல் லீப்னெக்ட், கிளாரா செட்கின், பிரான்ஸ் மேரிங் ஆகியோருடன் இணைந்து "Die Internationale" என்ற இயக்கத்தை லக்சம்பேர்க் ஆரம்பித்தார். இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி (Spartacist League) என்ற பெயராக மாற்றப்பட்டது. ஸ்பர்த்தாக்கசு என்ற பெயரில் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை எழுதிச் சட்டவிரோதமாக அச்சிட்டு வெளியிட்டார்கள். லக்சம்பேர்க் ஜூனியசு என்ற புனைபெயரில் எழுதினார். செருமனியில் பாட்டாளி வர்க்கத்தைப் போருக்கெதிராகத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டரை ஆண்டுகள் ரோசா, கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டார்கள். + +சிறையிலிருந்து இவர் எழுதிய கட்டுரைகளை அவரது நண்பர்கள் இரகசியமாக வெளியே எடுத்து வெளியிட்டார்கள். இவற்றில் ஒன்று “உருசியப் புரட்சி". இது போல்செவிக்குகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது. அவர்களின் சர்வாதிகாரத் தன்மையை எடுத்துக் கூறியிருந்தார். ஆனாலும் ஒரு கட்சி ஆட்சியை அவர் வெறுத்தாலும், அவர் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதினார். + +1918, நவம்பர் 8 இல் சிறையிலிருந்து விடுதலையானார்கள். விடுதலையான அடுத்த நாள் லீப்னெக்டுடன் இணைந்து பெர்லினில் "சுதந்திர சோசலிசக் குடியரசை" அறிவித்தார்கள். ஸ்பர்த்தாக்கஸ் அணியை மீள நிறுவி "செங்கொடி" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுதினார்கள். + +1918, டிசம்பர் 29 முதல் 31 வரை இடம்பெற்ற ஸ்பர்த்தாசிசுக்களின் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து செர்மனியப் பொதுவுடமைக் கட்சி (KPD) கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் தலைமையில் 1919, சனவரி 1 இல் நிறுவப்பட்டத���. + +1919 சனவரியில் பேர்லின் நகரில் இரண்டாவது புரட்சி வெடித்தது. வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதை லக்சம்பேர்க் எதிர்த்தார். ஆனாலும் "செங்கொடி" இயக்கத்தினரை, லிபரல்களின் பத்திரிகை அலுவலகங்களைத் தமது குழுவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஊக்குவித்தது. இதனை அடுத்து, செருமனிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் இடது சாரிகளை ஒழிக்கத் தமது படையினருக்கு உத்தரவிட்டார். 1919, சனவரி 15 இல் ரோசா, மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலது சாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். லக்சம்பேர்க் ஒட்டோ ரூஞ்ச் (1875–1945) என்பவனால் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு, லெப். ஹெர்மன் சூக்கோன் (1894–1982) என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் எறியப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், KPD இன் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து செருமனியப் புரட்சி முடிவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, சூன் 1 இல் லக்சம்பேர்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது. + +இக்கொலைக்காக ஒட்டோ ருஞ்ச் இரண்டாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். ஏனையோருக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை. + +லக்சம்பேர்க், லீப்னெக்ட் இருவரினதும் உடல்கள் பெர்லினில் உள்ள பிரீட்ரிக்சுபெல்ட் மத்திய சவச்சாலையில் அடக்கம் செய்யப்பட்டது. சோசலிஸ்டுகளும், பொதுவுடமைவாதிகளும் இவ்விடத்தில் ஆண்டுதோறும் சனவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி அவ்விருவரையும் நினைவு கூருகிறார்கள். + +சுவர் ஓவியங்களைத் தீட்டினார். இவை கியூபெக் நகரத்திலுள்ள நுண்கலை தேசிய அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. + + +ரோசா லக்சம்பேர்க் எழுதிய நூல்களில் சில + + + + + +கேரள நீர்த்தேக்கங்களின் பட்டியல் + +கீழுள்ளது கேரள மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் பட்டியல் ஆகும். + + + + +திண்டுக்கல் கோட்டை + +17 ஆம் நூற்றாண்டைச் சே��்ந்த திண்டுக்கல் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது 1605 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டுப் பின்னாளில் மைசூர் அரசனால் கைப்பற்றப்பட்டது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் மைசூரை ஆண்ட காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799 ஆம் ஆண்டில் இது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சில பீரங்கிகளைத் தவிர இதன் உச்சியில் ஒரு கைவிடப்பட்ட கோயிலும் உண்டு. இது இன்றி இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பேணப்பட்டு வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. + + + + +எலிபண்டா குகைகள் + +எலிபண்டா குகைகள், மும்பாய் கடற்கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள "காராப்புரி" (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு "எலிபண்டாத் தீவு" எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. +பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன. + +இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் இராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும். + +இக்குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. பாறைகளில் குகைகள் குட���யப்பட்டுள்ளன. + + + + + +கூகிள் வரலாறு + +கூகிள் ஒரு பிரபலமான தேடுபொறியாகும். + +கூகிள் 1996 ஆம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும், வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிட்டனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலை கொடுப்பதற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். + +தேடப்படும் விடயம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப்படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராய்ச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராய்ச்சி ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராய்ச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக "google.stanford.edu" என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். + +மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com) என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ஆம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய், வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் ("googolplex") எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்து கொண்டது. + +கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ஆம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணினி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவ��ைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது. + +ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப்பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிகப் பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை “கூகிள் தேடுபொறியைப் பாவித்து இணையத்தில் தகவல்களைப் பெறுதல்” என்று விளக்கமளிக்கிறது. + + + + +1711 + +1711 (MDCCXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +பம்மல் சம்பந்த முதலியார் + +பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். + +சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 9 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் ப���ித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார். + +சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த "கிருஷ்ணமாச்சார்லு" என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். + +நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். + +நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். + + +ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். + +பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில: + +பம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல். + + + + + + + + +வஞ்சிப்பா + +வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை, +எனப்படும். குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும். எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும். சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும். எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும். இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம். மூவசைச் சீர்களாயின் அவை வஞ்சிச்சீர் என அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும். நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும். + +வஞ்சிப்பாவில் பெரும்பாலும் கனிச்சீர்களும், இருவகை வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மையாக பிற சீரும், தளையும் வரும். + +வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம். வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும். சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும். + + +‘நாளும்’ என்பது தனிச்சொல். செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. + + +புணையென என்பது தனிச்சொல். இந்தச் செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. + + + +அறிவியல் புனைவு + +அறிவியல் அம்சங்களை சாரமாக அல்லது பின்புலமாக கொண்டு கற்பனையுடன் கலந்து ஆக்கப்படும் படைப்புக்களே அறிவியல் புனைவு அல்லது அறிபுனை ஆகும். "அமெரிக்கன் ஹெரிடேஜ் ஆங்கில மொழி அகராதி" அறிவியல் புனைவுகளை "அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களை தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்ட புனைவு, குறிப்���ாக வருங்கால அறிவியல் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது". என கூறுகிறது. + +கட்டுரை, சிறுகதை, நாவல், கவிதை, திரைப்படம் என பல வடிவங்களில் அறிவியல் ஆக்கம் இருக்கலாம். அறிவியல் ஆக்கங்கள் கற்பனையான கதைப்புலத்தில், ஆனாலும் நடக்கக்கூடியதாக, அதாவது இயற்கைக்கு மீறியதாக அல்லாமல் இருக்கும். எதிர்காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக, அதிக முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக, விண்வெளிப் பயணம், வேற்றுக்கிரக வாசிகள், இயல்புகடந்த நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவியல் புனைவுகள் அமையும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்விளைவுகளை ஆராய்வது அறிவியல் புனைவுகளின் முக்கியமான மையக் கருத்தாகவுள்ளது, இதன் மூலம் அறிவியல் புனைவானது "சிந்தனைகளின் இலக்கியம்" என்றும் கூறப்படுகிறது. + +வெவ்வேறானதும் நடக்கக்கூடியதுமான எதிர்கால உலகத்தைப் பற்றி பகுத்தறிவோடு ஆராய்வதாக அறிவியல் புனைவுகள் அமையும். புனைவின் அடிப்படையில் அறிவியல் புனைவுகள் அதிபுனைவுகளோடு ஒத்துப்போகும், ஆனால், அறிவியல் புனைவுகள் நடைபெறும் நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் அறிவியல் கருதுகோட்களின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் அறிவியல் மேம்பாட்டின் மூலம் நிகழக்கூடியதாகவும் இருக்கும்(எனினும் சில கதாபாத்திரங்கள் அல்லது கருத்துகள் முற்றிலும் கற்பனையானதாகவும் அமையும்). + +வழக்கமாக அறியப்பட்டிருக்கும் நிதர்சனங்களிலிருந்து அறிவியல் புனைவுகளில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வேறுபட்டிருக்கும். ஏறக்குறைய அனைத்து அறிவியல் புனைவுகளும் வாசகர் அல்லது பார்வையாளரின் கற்பனைகளும் முக்கிய பங்காற்றும். மேலும், அவற்றில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு கருதுகோட்களும் கதையோட்டத்திலேயே பின்னர் விவரிக்கப்படும் அல்லது வாசகரின் கற்பனைக்கே விடப்படும். அறிவியல் புனைவின் முக்கிய அங்கங்கள்: + + + + + + + +தண்ணியூற்று + +தண்ணியூற்று ("Thanniyutru") அல்லது தண்ணீரூற்று, இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது ஒரு அழகான, செழிப்பான விளைநிலத்தால் சூழப்பெற்ற கிராமம். ஊற்றக்கரைப��பகுதியில் காணப்படும் இயற்கையான தண்ணீர் ஊற்றின் காரணமாக அமைந்தது இப்பெயராகும். இவ்விடத்தின் பெயருக்கேற்பவே இவ்விடத்தின் தண்ணீர் மிகவும் சுவையானது. முல்லைத்தீவு நகரத்திலிருந்து மாங்குளம் வீதியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பெயருக்கு ஏற்ப நீர் செழிப்பு மிகுதியான ஒரு வளம்மிக்க ஊராகும். (தண்ணீர்+ஊற்று = water-spring) + +வன்னிப் பெருநிலப்பரப்பில் அழகான, செழிப்பான பகுதியாகிய இப்பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் மக்கள் செறிவான பிரதேசமாகும். + + + + + + +கேரள ஆறுகளின் பட்டியல் + +கேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் 41 ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி வருகின்றன. + +கேரளத்தின் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளும் அவற்றின் துணையாறுகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளக் காயல்களிலோ அல்லது அரபிக்கடலிலோ சென்று சேர்கின்றன. ஆறுகளின் நீளம் கிலோ மீட்டர்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. + +கபினி, பவானி, பம்பார் ஆகியன கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் கபினி கர்நாடகத்திற்கும் மற்ற இரண்டும் தமிழ்நாட்டிற்குள்ளும் பாய்கின்றன. + + + + +ஆயங்குடி + +ஆயங்குடி ("Ayangudi"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 14.69% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும . இந்த ஊரின் அருகில் உள்ள்து மேலக்க்டம்பூர்(2கி.மி) அழ்கிய ஊர்,இங்கே ஒரு அழ்கிய சிவன் கோயில் உள்ள்து + +சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது. + +அருகில் உள்ள சிறுநகரங்கள் காட்டுமன்னார்கோயில் மற்றும் இலால்பேட்டை பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மற்றும் நெய்வேலி என்பன இவ்வூரைச் சுற்றி உள்ள பெருநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. + +ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். + +நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும், இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும். + +http://www.ayangudi.net/ +http://www.ayangudi.com/ + + + + +பத்திரிசு லுமும்பா + +பத்திரிசு எமெரி லுமும்பா ("Patrice Émery Lumumba"), (ஜூலை 2, 1925 – ஜனவரி 17, 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்சியத்திடமிருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். + +லுமும்பா பெல்ஜிய கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்குப் படிப்பு காரணமாகப் பெல்ஜியம் சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் ஜூலை 1956 இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி 'கொங்கோ தேச���ய இயக்கம்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்துப் பின்னர் அதன் தலைவரும் ஆனார். டிசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா கலந்து கொண்டார். + +லுமும்பாவின் "கொங்கோ தேசிய இயக்கம்" நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு ஜனவரி 18, 1960 இல் பிரசல்சில் நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். ஜனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே, 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஜூன் 23, 1960 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை ஜூன் 30, 1960 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார். + +லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். + +கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார். + +செப்டம்பர் 1960 இல் அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். செப்டம்பர் 14, 1960 இல் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியிலிருந்து கலைத்தார். லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலிலிருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை ம��ற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் 1960, டிசம்பர் 1 இல் 'போர்ட் ஃபிராங்கி' என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கின்ஷாசா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்பட வேண்டும் என ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம், லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. + +ஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாகச் சோவியத் ஒன்றியம் டிசம்பர் 14, 1960 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்குக் கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தைச் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. + +லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். + +ஜனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கேப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர். கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் ஜனவரி 17, 1961 இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது. + +மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது. + +லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜியத் தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. + + + + + + +அம்பன்கடவு + +அம்பன்கடவு ஆறு, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாயும் தூதப்புழா ஆற்றின் துணையாறு. தூதப்புழா ஆறு பாரதப்புழா ஆற்றின் துணையாறு ஆகும். + + + + + +புதியகற்காலக் கட்டிடக்கலை + +புதியகற்காலக் கட்டிடக்கலை என்பது புதியகற்காலத்தில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் புதியகற்காலம், கி.மு 10,000 களுக்குச் சற்றுப் பின்னர் தொடங்கியது. தொடக்கத்தில், லேவண்டிலும் (Levant) பின்னர் அங்கிருந்து, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் பரவியது. தென்கிழக்கு அனத்தோலியா, சிரியா, ஈராக் ஆகிய பகுதிகளில் கி.மு 8000 அளவில் தொடக்கநிலைப் புதியகற்காலப் பண்பாடு நிலவியது. தென்கிழக்கு ஐரோப்பாவில் உணவு உற்பத்தி செய்யும் சமூகங்கள் முதன் முதலாக கி.மு 7000 அளவிலும், மத்திய ஐரோப்பாவில் கி.மு. 5000 அளவிலும் காணப்பட்டன. ஒரு சில விதி விலக்குகள் தவிர அமெரிக்காவில், ஐரோப்பியத் தொடர்பு ஏற்படும் வரை புதியகற்காலத் தொழில்நுட்பமே புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. + +லேவண்ட், அனத்தோலியா, சிரியா, வடக்கு மெசொப்பொத்தேமியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கட்டிடங்களைக் கட்டுவதில் வல்லவர்களாக விளங்கினர். இவர்கள் சுடப்படாத செங்கற்களைக் கொண்டு வீடுகளையும், ஊர்களையும் கட்டினர். கட்டல்ஹோயுக் (Çatalhöyük) என்னுமிடத்தில், வீடுகளுக்குச் சாந்து பூசி அதிலே மனிதர், விலங்குகள் என்பவை தொடர்பான ஓவியங்களையும் வரைந்தனர். ஐரோப்பாவில், மரக்குச்சிகளையும், களிமண்ணையும் கொண்டு நீள வீடுகள் எனப்படும் வீடுகள் கட்டப்பட்டன. இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் பல அயர்லாந்தில் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் இவ்வாறான அமைப்புக்களை இன்றும் அந்நாட்டில் காண முடியும். +மேற்கு ஐரோப்பாவிலும், மத்தியதரைக்கடற் பகுதியிலும் காணப்படுகின்ற பெருங்கற் சின்னங்களும் புதிய கற்காலத்தில் கட்டப்பட்டவையே. பெருங்கல் அமைப்புக்கள் பல உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும், இங்கிலா��்திலுள்ள ஸ்டோன் ஹெஞ்ச்சே இவற்றுள் கூடுதலாக அறியப்பட்டது எனலாம். நினைவுச் சின்னங்கள், கோயில்களையும், இறந்தவர்களுடைய நினைவுச் சின்னங்களையும், சமய அல்லது வானியற் தொடர்புள்ளவையாகக் கருதப்படும் பிற அமைப்புக்களையும் உள்ளடக்குகின்றன. அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த கோயில் கோசோத் தீவில் உள்ள கண்டிஜா ஆகும். + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2008 + +2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +சுருக்கச் சொல் + +ஒரு நீண்ட சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்கச் சொல் அல்லது சுருக்கம் எனலாம். நபர்களின் பெயர்கள், அமைப்புகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துருக்கள் என பல வகையான சொற்கள் இவ்வாறு சுருக்கமாக எடுத்தாளப்படுகின்றன. + +ஆங்கில எழுத்துக்களைப் போல் தமிழில் capital எழுத்துக்கள் இல்லாததால், abbreviationகளை தமிழில் எழுதும்போது இடையில் புள்ளி வைத்து எழுதுவது நல்லது + + + + + + + +சீனவியல் + +சீனாவைப் பற்றியும் சீனாவுடன் தொடர்புடைய அம்சங்களையும் ஆயும் இயல் சீனவியல் ஆகும். பொதுவாக சீனவியல் சீனர் அல்லாதோராலும், அல்லது சீனாவுக்கு வெளியே வசிக்கும் சீனராலும் மேற்கொள்ளப்படுகின்றது. சீனவியலை தமிழியலுடன் அல்லது சீனத் தமிழியலுடன் ஒப்பிடலாம். + + + + + +இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள் + +இரண்டாம் உலகப்போரின் போது நேச நாட்டுப்படைகளுடன் இணைந்து போரிட்ட அல்லது அவற்றுக்கு துணைப் போண நாடுகளின் முக்கிய அரசியல் படைதுறை சார் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள் என கூட்டாக அழைக்கப்படுகின்றனர். இத்தலைவர்கள் படைத்துறை மானோவியல் தொழிநுட்பத் துறைகளில் புதிய முறையிலான போரை முன்னெடுக்க வேண்டியிருந்தது. + + + + +இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள் + +இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள் இரண்டாம் உலகப��� போரின் முக்கிய அரசியல் படைத்துறை நபர்களாக விளங்கினர். 1940 ஆம் ஆண்டின் முத்தரப்பு உடன்படிக்கை மூலம் அச்சு நாடுகளுகிடையான அணி உருவாக்கப்பட்டது. இத்தலைவர்கள் தீவிர படைத்துறை, தேசியவாத, பொதுவுடமை-எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல அச்சு தலைவர்கள் நரென்பேர்க் நீதி விசாரனைகளின் போது போர் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர். + + + + +1788 + +ஆண்டு 1788 (MDCCLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +1780கள் + +1780கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1780ஆம் ஆண்டு துவங்கி 1789-இல் முடிவடைந்தது. + + + + + + +இடமலயாறு + +இடமலயாறு ஆறு கேரள மாநிலத்தின் நீளமான ஆறான பெரியாற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். + + + + + + +முல்லையாறு (கேரளா) + +முல்லையாறு கேரள மாநிலத்தின் நீளமான ஆறான பெரியாற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்று. + + + + + + +தூதப்புழா + +தூதப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். அமைதிப் பள்ளத்தாக்கின் வழியே பாயும் குந்திப்புழா இதன் துணையாறுகளில் ஒன்று. + + + + + + +காயத்ரிப்புழா + +காயத்ரிப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஆனைமலையில் உற்பத்தி ஆகிறது. இது கொல்லங்கோடு, ஆலத்தூர், வடக்கங்சேரி ஆகிய ஊர்களின் வழியே பாய்ந்து பின் பாரதப்புழா ஆற்றுடன் கூடுகிறது. + + + + + +பறவைக் காய்ச்சல் + +பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த தீ நுண்மங்கள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த���ம். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத்தீ நுண்மம் பரவுமாயின் அது வேகமாகப் பரவும் கூடியது. + +மேற்கூறிய பறவை சார்ந்த தீ நுண்மங்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், 1997 ஆம் ஆண்டிலிருந்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் 2004 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ஆசியாவில் H5N1 தீ நுண்மத்தால் பாரிய அளவிலான பறவை/கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் ஆசியாவில் பண்ணைகளில் பாரியளவிலான தொற்றுகை ஏற்பட்டன. கம்போடியா, சீனா,இந்தோனேசியா, யப்பான், லாவோஸ், தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, துருக்கி, கசகஸ்தான், மங்கோலியா, இரசியா, ருமேனியா ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்ப்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன. +தீ நுண்மங்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் தீ நுண்மமானது மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமேயானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளையை உருவாக்கும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை தீ நுண்மத்தால் உருவாகும் காய்ச்சல் சார் கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன. + +உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி,தொண்டை ப் புண், இருமல், கண் வருத்தம் (Fever, Muscle weakness and/or pain, Sore throat and cough, Sore eyes -conjunctivitis ) + +கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure). + +தமிஃபுளு (Tamiflu) எனப்படும் தீ நுண்ம-எதிர் மருந்தே தற்பொழுது பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் தீ நுண்மத்துக்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை வளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன. இம்மருந்தின் உற்பத்திச் செலவு, அனுமதி விதிகள��� ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்க முடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன. தமிஃபுளுவிற்கு குறித்த தீநுண்மங்கங்கள் இயைபாக்கமடைகின்றனவா எனும் வினாவும் சில சமயங்களில் எழுந்துள்ளது. + +உருவாகப் போகும் தீ நுண்மத்தின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. நோய் பாரிய அளவில் பரவுவதற்கு முன்னதாக தடுப்பு மருந்துகளை பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள் பின் நிற்கின்றன. + + + + + +ஔரங்கசீப் + +ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் "ஆலம்கீர்" (பாரசீக மொழியில் "ஆலம்கீர்" எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள். + +கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. +அவுரங்கசிப்பின் சகோதரர் தாராஷிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப் தன் சகோதரர் தாராஷிகவுடன் போரிட படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ��சி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார். + +இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார். + +இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. +சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சிக் காலத்தில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால், மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவைக் கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி,ந முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது. + +தென் இந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தது. 1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, "சூல்பிகார் கான்" தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக ("நவாப்") ஆக்கினார். வெற்றிகொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகர் ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக("நிஜாம்=நிசாம்") இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்ததால், ஜீல்பிகார் கான் "கர்நாடக நவாபு" என்றே அப்போது அழைக்கப்பட்டார். பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக ("நவாப்") வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்குப் பதிலாக, ஆற்காட்டைத் தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார். + +இத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார். + +’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்தது இல்லை. + +“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். இஸ்லாத்தினை நன்றாகக் கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழத் த‌வறியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பரச் செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை. + +1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது: + +நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும��� இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள். + +தன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312). + +என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும். + +என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள். + + + + + +கண்டிஜா + +கண்டிஜா ("Ġgantija", ச்காண்டிஜா, "இராட்சதக் கோபுரம்") என்பது மத்தியதரைக் கடற் பகுதியில் உள்ளதும் மால்டா நாட்டின் ஒரு பகுதியும் ஆகிய கோசோத் தீவில் அமைந்துள்ள ஒரு புதியகற்காலக் கோயில் ஆகும். புதியகற்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அமைப்புக்கள் தொடர்பில் இத் தீவிலுள்ள இரண்டு கண்டிஜாக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இக் கோயில்கள் கி.மு 3600-2500 ஆண்டுகள் காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை. 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக் கோயில்கள், உலகின் மிகப்பழைய தனித்து நிற்கும் அமைப்பும், மிகப்பழைய சமயம் சார்ந்த அமைப்பும் ஆகும். இவை எகிப்தின் பிரமிட்டுக்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹெஞ்ச் ஆகியவற்றை விடப் பழமையானவை. இக் கோயில்கள் செழுமையியற் சடங்குகள் (Fertility Cult) சார்ந்த தாய்க் கடவுளுக்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளும், உருவங்களும் இத்தகைய சடங்குகளுடன் தொடர்பு உள்ளவை என நம்பப்படுகின்றது. + +மால்ட்டா மொழியில், "கண்டிஜா" என்பது "பூதங்களுக்கு உரியது" என்னும் பொருள் கொண்டது. உள்ளூரில் நிலவும் கதைகளின்படி இக்கோயில்கள் பண்டைக்காலத்தில் இத்தீவில் வாழ்ந்த பூதங்களால் கட்டப்பட்டவை ஆகும். இக் கோயில்கள் அப்பூதங்களால் காவல் கோபுரங்களாகப் பயன்படுத்தப்பட்டன எனவும் அக்கதைகள் கூறுகின்றன. + +இக் கோயில்கள் குளோவர் இலை வடிவம் கொண்டவை. சுவர்கள் சைக்கிளோப்பிய முறையில் அடுக்கப்பட்ட கல் முகப்புக்களுக்கு இடையே உடைகற்கள் நிரப்பி அமைக்கப்பட்டவை. இக் கோயில்கள் ஒவ்வொன்றும் நடுவில் அமைந்த கூடமொன்றுடன் இணைக்கப்பட்ட அரைவட்ட மாடங்களைக் கொண்டவை. இம் மாடங்கள் முற்காலத்தில் கற்களால் அமைந்த குவிமாடக் கூரைகளால் மூடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. சில்லுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும், இரும்புக் கருவிகள் மால்டாவில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறிமுகம் இல்லாது இருந்ததுமான ஒரு காலத்தில் கட்டப்பட்டதனாலும் இக்கோயில்கள் வியக்கத் தக்கவையாக இருக்கின்றன. இங்கு சிறிய கோள வடிவக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கோயில்களைக் கட்டுவதற்கான பாரிய கற்களை நகர்த்துவதற்கு இக் கோள வடிவக் கற்கள் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. + +இங்குள்ள கோயில்களில் தென்பகுதியில் உள்ள கோயிலே மிகப் பழமையானதும், பெரியதும் ஆகும். இது ஏறத்தாழ கி.மு 3600 ஆண்டுகளைச் சேர்ந்தது. மால்ட்டாவில் உள்ள பிற பெருங்கற் களங்களைப் போலவே இக் கோயிலும் தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக் கோயில் 6 மீட்டர்கள் உயரமானது. இதன் வாயிலில் குழிவுடன் கூடிய பெரிய பாறையொன்று காணப்படுகின்றது. கோயிலுக்குள் நுழைவதற்குமுன் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு இடமாக இது இருக்கலாமெனச் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். + +விலங்குகளின் எலும்புகள் பல இங்கிருந்து கண்டு எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே விலங்குகள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற விலங்குகளின் சிற்பங்கள் இங்கே காணப்படுவதால், இவ் விலங்குகள் இங்கே பலி கொடுக்கப்பட்டன என்று கருதலாம். + +கண்டிஜாக் கோயில்கள் கோசோவின் ஆளுனராக இருந்த கர்னல் ஜோன் ஒட்டோ பேயர் (John Otto Bayer) என்பவரால் 1827 ஆம் ஆண்டில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. எனினும் இவர் கோசோவில் இருந்து திரும்பிய பின்னர், இக் கோயில்கள் முறையாகப் பேணப்படாமல் குப்பைகளால் நிரம்பின. 1980 ஆம் ஆண்டிம் இக் கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட பின்னரே முறையாக மீளமைப்பு வேலைகள் தொடங்கின. + + + + + +செழுமையியற் சடங்கு + +உணவுப் பெருக்கம், அதிக பிள்ளைப்பேறு என்பவை கருதி நிகழ்த்தப்படும் சடங்கே செழுமையியற் சடங்கு எனப்படுகின்றது. இத்தகைய சடங்குகள் மூலம் இயற்கையின் சக்திகளை மகிழ்விப்பதன் மூலம் நல்ல அறுவடை, வேட்டைகளில் நல்ல பயன், போரில் வெற்றி மற்றும் பலவகையான பயன்களைப் பெறமுடியும் என முற்காலத்து மக்கள் நம்பினர். இதனால் அவர்கள், நடனம், நாடகம், வழிபாடு போன்ற செயல்கள் உள்ளிட்ட சடங்குகள் மூலம் மழை போன்ற இயற்கை அம்சங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். பிறப்பு, இறப்பு, மீளத்தோன்றுதல் முதலியவைகளை உருவகப்படுத்தி, நாடகங்களாக நடிப்பதன் மூலம் செழுமையியற் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. + +ஒத்துணர்வு மந்திரங்கள் எனப்படக்கூடிய லிங்க வடிவங்களை ஆங்காங்கே வைத்தல், விலங்குகளின் இனப்பெருக்க உறுப்புக்களை நிலத்தில் பரவிவிடுதல், சடங்கு ரீதியாகப் பெண்களுடன் உறவு கொள்ளுதல் என்பனவும் செழுமையியற் சடங்குகளின் வகைகளாகக் கருதப்படக் கூடியன. விலங்குகளையோ அல்லது மனிதர்களையோ பலி கொடுப்பதன்மூலம், வயல்களும், காடுகளும் அதிக செழுமையுள்ளவையாக மாறும் எனப் பழங்காலத்துச் சமூகங்களில் நம்பிக்கை நிலவிற்று இதன் அடிப்படையில் உருவான சடங்குகள் பல தற்காலத்திலும் கூடச் சில சமுதாயங்களில் நிலவி வருவதைக் காணலாம். + + + + +ஒத்துணர்வு மந்திரம் + +ஒத்துணர்வு மந்திரம் (Sympathetic magic) அல்லது போலச்செய்தல் மந்திரம் என்பது போலச்செய்தல், தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் உருவான ஒத்திருத்தல் விதி, தொடர்பு விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை மந்திரம் (magic) ஆகும். ஒத்திருத்தல் விதியில், மனிதரின் சூழலையோ அல்லது சிலசமயங்களில் மனிதரையோ பாதிப்பதற்கு போலியுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பு விதி ஒன்றை அதனோடு தொடர்புடைய இன்னொன்றை அடிப்படையாகக் கொண்டு செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கண், காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய் குணமாவதற்காக அவ்வுறுப்புக்களின் உருவத்தை பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து கோயில்களுக்குக் கொடுப்பதாக நேர்த்தி வைப்பதுண்டு. இது போலச் செய்தல் விதிக்கு உட்பட்டது. இதுபோன்றே கன்று ஈன்ற கால்நடைகளிள் இளங்கொடிகளை பால்மரங்களில் கட்டிவிடும் வழக்கம் உண்டு. இது பால் மரங்களில் கட்டுவதால் கால்நடைகள் நிறைந்த பால் கொடுக்கும் என்னும் எண்ணத்தின் பாற்பட்டது. எனவே இது தொடர்பு விதியோடு சம்பந்தப்பட்டது ஆகும். மேலே ���ண்ட இரண்டு எடுத்துக் காட்டுகளும் ஒத்துணர்வு மந்திர வகையைச் சார்ந்தவை. + + + + +சங்கபரிவார இயக்கங்கள் + +தீவிர வலதுசாரி இந்து இயக்கங்கள் சங்க பரிவாரங்கள்,சங்கபரிவார இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை இருப்பதாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த இயக்கங்கள், இந்தியாவில் நடந்த பல மதக்கலவரங்களுக்குக் காரணமாகவும் அல்லது பின்புலமாகவும் இருந்ததாகவும் கருதப்படுகிறது. + +வர்ணசிரமத்தைத் தங்களது தலையாயத் தர்மமாகக் கொண்ட இந்த இயக்கங்களின் தாக்கம் இந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்தது. + + +இயக்கங்களுடன் அவற்றின் தமிழ்ப் பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. + +1.தெஹல்கா இணைய தளத்தில் குஜராத் 2002 ஒரு தொகுப்பு + + + + +மீனச்சிலாறு + +மீனச்சில் ஆறு கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. ஆற்றின் நீளம் 78 கிலோமீட்டர்கள். இவ்வாறு ஈராட்டுப்பேட்டை, பாலை, எட்டுமனூர், கோட்டயம் ஆகிய ஊர்களின் வழியே ஓடி பின்னர் வேம்பநாட்டு ஏரியில் சேர்கிறது. + +மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி ஓடி வரும் பல ஓடைகள் சேர்ந்து மீனச்சில் ஆறு உருவாகிறது. இவ்வாற்றின் நீர்ப்படுகை 1208.11 சதுர கிலோமீட்டர்கள். ஆண்டுக்கு 2349 மில்லியன் கனமீட்டர் நீரைத் தருகிறது. மீனச்சில் ஆறு மொத்தம் 38 துணையாறுகளைக் கொண்டுள்ளது. + +இந்த ஆறு அருந்ததி ராய் எழுதிய த காட் ஆஃப் சுமால் திங்க்சு என்ற புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + +பாரதப்புழா + +பாரதப்புழா (Bharathappuzha) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. இது கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறு. இதன் நீளம் 209 கி.மீ. இந்த ஆறு நிலா என்றும் அழைக்கப்படுகிறது. + +இந்த ஆற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு உட்பட பல ஆறுகள் இவ்வழியில் சேர்கின்றன. + +பரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப���புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னாணி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது. + +108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. + +Sorted in order from the mouth heading upstream. + +திருநாவாய் + + + + +சடங்கு + +சடங்கு ("ritual") என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். பொதுவாகக் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் செய்யப்படுகின்றன. + +சடங்குகள், ஒழுங்கான கால இடைவெளிகளிலோ, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலோ அல்லது அவரவர் விருப்பப்படியோ நடைபெறலாம். சடங்குகள் தனி மனிதர்களால், குழுக்களால் அல்லது முழுச் சமுதாயத்தாலுமே நிகழ்த்தப்படலாம். இதற்கெனக் குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமன்றி எந்த இடத்திலும் நடத்தப்படக்கூடிய சடங்குகளும் உண்டு. சில சடங்குகள் பொதுவாக நடத்தப்படுகின்றன. வேறுசில தனிப்பட்ட சடங்குகளாகும். இன்னும் சில குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டும் பங்குபற்றும் சடங்குகளாக உள்ளன. + +சடங்குகளில் நோக்கங்கள் பல்வேறுபட்டவையாக உள்ளன. சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன. சில, சடங்கு செய்பவரின் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான திருப்திக்காகச் செய்யப்படுவன. சமூகப் பிணைப்புக்களை வலுப்படுத்தல், மரியாதையை வெளிப்படுத்தல் அல்லது அடிபணிதல், பொதுவான அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான சமூக அங்கீகாரம் பெறுதல், அல்லது வெறுமனே சடங்குகள் செய்வதில் உள்ள இன்பத்துக்காகக் கூடச் சடங்குகள் இடம்பெறுவது உண்டு. +உலகின் பல்வேறு சமூகத்தவரிடையே பல்வேறு விதமான சடங்குகள் நடைபெற்று வருவதைக் காணலாம். சமயங்களினால் வழிபாட்டுத் தேவைகளுக்காக விதிக்கப்படுகின்ற சடங்குகள் ஒருபுறம் இருக்க ஏராளமான சமயம் சார்ந்தனவும் சாராதனவுமான சடங்குகள் உள்ளன. மனிதரின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் தமிழ் மக்களுடைய வாழ்வியலோடு தொடர்புள்ளவை. இவற்றைவிட வீடு கட்டுதல், வண்டிகள் வாங்குதல், தொழில் தொடங்குதல் என்பவை தொடர்பிலும் பல சடங்குகள் நடை பெறுகின்றன. + +மேற்காட்டிய பழைய மரபு சார்ந்த சடங்குகள் தவிரப் பல்வேறு தற்கால நடவடிக்கைகளோடு ஒட்டிய நிகழ்வுகளிலும் சடங்குத் தன்மை பொருந்திய அம்சங்கள் காணப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டங்கள், புதிய அரசுகள் பொறுப்பெடுத்தல், அறிவியல் மகாநாடுகள், நீதிமன்ற விசாரணைகள், குற்றவாளிகளைத் தூக்கில் இடுதல் என்பவற்றில் கூட இவ்வாறான சடங்குத் தன்மைகளைக் காணமுடியும். கைகுலுக்குதல், கண்டதும் வாழ்த்துக் கூறுதல் என்பனவும் சடங்குத் தன்மை கொண்டனவே. + +இவ்வாறு சடங்குகள் மனிதரின் வாழ்வில் பலவாறாகப் பரந்து கிடப்பினும், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அதாவது, இச் சடங்குகளின் குறியீட்டுத் தன்மையானது அச் சடங்கை நிகழ்த்துபவரால் தன்னிச்சையாகத் தெரிந்தெடுக்கப்படுவது அல்ல. இது சமயம், அரசு, நிறுவனங்கள் போன்ற வெளிச் சக்திகளினால் விதிக்கப்படுகின்றன அல்லது மரபுவழியாகப் பெறப்படுகின்றன. + +சிட்சை = எழுத்தியல், வியாகர்ணம் = சொல்லியல், நிருத்தம் = பொருளியல், கல்பம் = செயல்முறை, சந்தஸ் = யாப்பு, ஜ்யோதிஷம் = ஜோதிடம் என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு செய்யும் செயலைச் ஷட் அங்கங்கள் (ஷட் = ஆறு) என்று கூறுவார்கள். இதுவே நாளடைவில் மருவி சடங்குகள் என்று ஆகிவிட்டது. + +சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும். + +சட்ட + அம் + கு = சடங்கு + +‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள். + +‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது + +‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி. + +பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது. + +“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்” + +ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம். + +சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு: + +அரண் – அரணம் – கரணம் + +மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். +தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. + +“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் + +ஐயர் யாத்தனர் கரணம் என்ப” + +வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர். நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. சான்றோர்களைக் குறிப்பிட்டது இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப் பொருள்படும். + +சடங்குகளை வாழ்க்கை வட்ட சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், மந்திரச் சடங்குகள் என நான்காகப் பிரிக்கின்றனர். + +சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு. + + + +மக்கள் வாழ்வில் சாங்கியம் சடங்குகள் + + + + +அபூபக்கர் + +அபூபக்கர் (ரலி) ("Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)" அல்லது "Abū Bakr as-Șiddīq", அரபு: أبو بكر الصديق) அபூபக்கர்(ரலி)என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். முதன் முதலாக இஸ்லாம் சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முகம்மது நபியவர்களின் மரணத்தின் பின்னர் முதல் கலிபாவாக பதவி வகித்தார்.. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது. + +அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்கர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ். +அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088 + +நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற புனைப் பெயரும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. + +அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். அவர்கள்: +இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. + +இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், முஹம்மத், ஆயிஷா, அஸ்மா, உம்மு குல்சூம் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். + +முகம்மது நபியின் காலத்தில் இவர் உஹத் போர், அகழ்ப்போர், பனூ குரைஜா போர், கைபர் போர், ஹூனைன் போர், தாயிப் முற்றுகை, மக்கா வெற்றி போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டிப் பரவியது. + +இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர். + +மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார். + + + + +கோசோ + +கோசோ தீவு ("Gozo"), மத்தியதரைக் கடலில் உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். தென் ஐரோப்பிய நாடான மால்ட்டாவின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. கிரேக்க இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு "கலிப்சோத் தீவு" எனவும் அழைக்கப்படுவது உண்டு. +மோல்டா நாட்டின் மொத்த மக்கள்தொகையான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த கட்டிடங்களாகவும் இக் கோயில்கள் விளங்குகின்றன. + +கோசோவில் கிமு 5000 ஆண்டுகளிலிருந்தே மக்கள் குடியிருந்தனர். சிசிலியில் இருந்து கடல் கடந்து வந்த வேளாண்மைச் சமுதாயத்தினரே இங்கு முதலில் குடியேறியவராவர். இவர்கள் சிசிலியின் சிசானி இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கார் தலாம் (Għar Dalam) காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்ட ஓடுகள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளதை வைத்து, கோசோவில் முதலில் குடியேறியவர்கள் சிசிலியின் அக்ரிஜெண்டோ (Agrigento) பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது குறித்துத் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சிசிலி மால்ட்டாத்தீவிலும், கோசோவுக்கே அண்மையில் இருப்பதால் குடியேறியோர் மால்ட்டாவுக்குச் செல்வதற்கு முன்னர் கோசோவிலேயே குடியேறினர். அவர்கள் இன்று சென் லாரன்ஸ் என அழைக்கப்படும் இடத்தில் புறப் பகுதிகளில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம் எனப்படுகின்றது. + +கோசோ பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடமாகும். கட்டிடக் கலை வளர்ச்சியில் முக்கியமான படிநிலை ஒன்றைக் குறிக்கும் கண்டிஜாக் கோயில்கள் இங்கே அமைந்துள்ளன. இவை எகிப்தியப் பிரமிட்டுகளுக்கும், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்சுகளுக்கும் முந்தியவை. கோசோவில் உள்ள இன்னொரு புதியகற்காலக் களம், சாக்ரா கல் வட்டம் (Xagħra Stone Circle) ஆகும். +1551 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓட்டோமான்களும், பார்பேரியக் கடற் கொள்ளையரும் துர்குத் ரெயிஸ், சினான் பாஷா ஆகியோர் தலைமையில் கோசோவைத் தாக்கிப் 5000 அளவிலான பெரும்பாலான கோசோ மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். பின்னர் மால்ட்டாவின் பிரபுக்களினால், 1565க்கும், 1580க்கும் இடையில் மால்ட்டாத் தீவில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரால் குடியேற்றப்பட்டது. +நெப்போலியனால் தன்னாட்சி வழங்கப்பட்ட 1798 அக்டோபர் 28 தொடக்கம், 1800 செப்டெம்பர் 5 வரையான காலப்பகுதி தவிர, கோசோ மால்ட்டாவின் ஆளுகைக்குக் கீழ் உள்ளதால் கோசோவின் அண்மைக்கால வரலாறு மால்ட்டாவில் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. + + + + +நியூ ஹரைசன்ஸ் + +ந��யூ ஹரைசன்ஸ் ("New Horizons") என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும். + +"நியூ ஹரைசன்ஸ்" விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள "கேப் கனவேரல்" வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும். + +இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. + +ஏப்ரல் 7, 2006, 1000 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது. + +"நியூ ஹரைசன்ஸ்" தனது வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன. + + + + + + +கலீபா + +கலீபாக்கள் (" Caliphs", "அரபு: ") எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. + + + + + + +உதுமான் + +உதுமான்(ரலி) முகம்மது நபியின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது கலீபாவும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்��ட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. + +உதுமான்(ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை எகிப்து மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் கிபி 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். + + + + +அலீ + +முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ(ரலி) அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார். அலி(ரலி) ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ(ரலி) அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ(ரலி) தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா(ரலி) என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். + + + + +பிரான்சின் முதலாம் நெப்போலியன் + +நெப்போலியன் பொனபார்ட் ("Napoléon Bonaparte", 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட��டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். + +கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான். + +1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது. + +நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது. இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான். கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தசுக்கன் மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர். இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் லிகூரியாவில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர். 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.. இந்த ஆய்வுகளின்படி, ஆப்லோகுரூப் வகை E1b1c1 கிமு 1200 ஆம் ஆண்டளவில் வட ஆப்பிரிக்காவில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர். +இவனது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார். நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, பவுலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றான். + +பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்வி கற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன. 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான். அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ���சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் நெப்போலியன்க ற்றுக்கொள்ளவேயில்லை. இதனால் தன்னுடன் படித்த மாணவர்களது கேலிக்கு உள்ளானான். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது. ஓவியம் வரைவதிலும் சிறந்தவன். + +1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தான். 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தான். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தான். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினான். + +"தேசம் அழிந்துகொண்டிருக்கொம்போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது." + +நெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டான். அப்போது அரசவாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தான். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினான். அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் "கப்டன்" தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது. + +நெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பாவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பாவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில�� நெப்போலியனும் ஒரு படைத்தலைவனாகப் பங்கேற்க இருந்தான். பாவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினான். + +1793 ஆம் ஆண்டு சூலையில், "பூக்கெயரில் இரவுச் சாப்பாடு" என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டான். இது புரட்சித் தலைவரான மக்சிமிலியன் ராபெசுபியரே என்பவரின் தம்பியான அகசுத்தீன் ராபெசுபியரேயின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், தூலோன் முற்றுகையின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன. + +குடியரசுப் படையினரின் சுடுகலன்கள் நகரின் துறைமுகம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதிகள் கொண்டது. அவற்றின் மூலம் பிரித்தானியக் கப்பல்களைத் துறைமுகத்தில் இருந்து விரட்ட வழி சமைக்கக் கூடியதுமான குன்று ஒன்றை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் திட்டம் தீட்டினான். இத் தாக்குதல் மூலம் நகரம் கைப்பற்றப்பட்டது, எனினும் , நெப்போலியனின் தொடையில் காயம் ஏற்பட்டது. 24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தான். இவனது திறமையைக் கண்ட "பொதுமக்கள் பாதுகாப்புக் குழு" இவனை பிரான்சின் இத்தாலியப் படைகளின் கனரக ஆயுதப் படைகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்தது. + +இப் பதவி உறுதி செய்யப்படும்வரை, மார்சேய்க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. முதலாம் கூட்டணிக்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சார்டினிய இராச்சியத்தைத் தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தான். + +ஜோஸபின் என்று நெப்போலியனுக்கு ஒரு காதலி இருந்தாள். பின்னாளில் மனைவியுமானாள். இவள் மீது நெப்போலியன் அதீத காதல் கொண்டவனாக இருந்தான். தனது ஒவ்வொரு போாின்போதும் வெற்றியின்போதும் ஜோஸபின் தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினான். அவளுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் புகழ்பெற்றவை. ஆனால், அவளோ நெப்போலியன் தன் மீது கொண்டிருந்த காதல் அளவிற்கு நெப்போலியன் மீது காதல் இல்லாதவளாக இருந்தாள். இவள் ஏற்கனவே பலருக்கு காதலியாக இருந்தவள். நெப்போலியனை மணந்த பின்னும் வேறு ஒருவனுடன் தொடா்பில் இருந்தாள். இவளால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானான் நெப்போலியன். இவளின் மீது தீராத காதல் கொண்டிருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் மனத்தெளிவு பெற்றான். அவளது துரோகச் செயல்களை மன்னித்தான். + +நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது. + + + + +நோமண்டி சண்டை + +நோமண்டி சண்டை (தமிழக வழக்கு: நார்மாண்டி சண்டை, "Battle of Normandy") அல்லது நார்மாண்டி போர்த்தொடர் ("Normandy Campaign") என்பது பின்வருவற்றைக் குறிக்கிறது: + + + + + +மாயன் கட்டிடக்கலை + +மாயன் கட்டிடக்கலை பல ஆயிரம் ஆண்டுகள் நிலவிய ஒரு கட்டிடக்கலை ஆகும். இருந்தாலும், இப்பாணியைச் சேர்ந்ததாக இலகுவில் எல்லோராலும் அடையாளம் காணக்கூடியவை, படியமைப்புப் பிரமிட்டுகள் ஆகும். பொதுவான நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை மரபைச் சார்ந்த இப்பிரமிட்டுகள், மிகவும் நுணுக்கமான செதுக்கு வேலைப்பாடுகளோடு கூடிய கற்களால் ஆனவை. ஒவ்வொரு பிரமிட்டும் குறிப்பிட்ட ஒரு கடவுளுக்கு உரியது. இக் கடவுளுக்கான கோயில் இப் பிரமிட்டுகளின் உச்சியில் அமைந்திருக்கும். மாயன் பண்பாட்டின் உச்ச நிலையில், அவர்களின் சமய, வணிக மற்றும் அதிகாரம் சார்ந்த வல்லமை சிச்சென் இட்சா (Chichen Itza), திக்கல் (Tikal), உக்ஸ்மால் (Uxmal) போன்ற பெரிய நகரங்களை உருவாக்கியது. + +மாயன் நகரங்கள் மெசோ அமெரிக்காவின் பல்வேறுபட்ட புவியியல் தன்மை கொண்ட பகுதிகளில் பரந்து இருக்கின்றன. இவற்றில் திட்டமிடல் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு அமைவிடத்துக்கும் ஏற்றபடி நகரங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நகரங்களின் கட்டிடக்கலையில் இயற்கை அம்சங்கள் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, வட யுக்தான் பகுதியில் சுண்ணாம்புக்கற் சமவெளிகளில் உள்ள நகரங்கள் பரந்து விரிந்த பெருநகரங்களாக வளர்ந்தன. அதே சமயம், உசுமகிந்தா மலைப் பகுதியில் காணும் நகரங்கள் இயற்கையான சமதளங்களைப் பயன்படுத்திக் கோயில்களையும், கோபுரங்களையும் உயரமாக அமைத்துள்ளனர். எனினும் பெரிய நகரங்களுக்குரிய சில ஒழுங்கு முறைகள் மாயன் நகரங்களிலும் காணப்படுகின்றன. + + + + + +பாபி ஃபிஷர் + +பாபி ஃபிஷர் ("Robert James "Bobby" Fischer", மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) அமெரிக்காவில் பிறந்த சதுரங்க மேதை ஆவார். இவர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். + +1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார். இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார். இவரது தாயார் ஒரு யூதர் ஆவார். + + + + + + + +ஏறுதழுவல் + +ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்���ட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. + +தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,[திருச்சி ]] பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. + +சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. + +சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. + +வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. + +மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். + +வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். + +பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. + +சங்க இலக்கியமான கலித்தொகை +என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர். + +பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.. + +ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது . குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ச��்லிக்கட்டு விளங்குகிறது. + +ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது. + +ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். + +மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது. + +உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம். + +ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்கு��ள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. + +சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். + +சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. + +சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 ��னவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர். + +உச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்: + + +இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன. பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிகட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது. சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது. 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது. + +ஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனை��ளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். + +பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன. + +உச்ச நீதிமன்றம் இட்ட 77 கட்டளைகளுள் சில: + +மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார். + +ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது. பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது. + +சில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது. + +ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. + +சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற��ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள். + +சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும். + + + + + + + +பன்மொழிச் சமூகம் + +இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் முதன்மையாக பயன்படும் சமூகங்களைப் பன்மொழிச் சமூகம் எனலாம். உலகின் அனேக நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன, எ.கா இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர். இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் பன்மொழிச் சமூக கட்டமைப்பை ஏதுவாக்கி பேணுவது சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசிமாகின்றது. + +தமிழ்நாடு ஒரு பன்மொழிச் சமூகமே. பெரும்பாலோனார் தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும் பிறதொரு மொழியில் ஆற்றல் மிக்கவர்கள். ஆங்கிலம், சமஸ்கிரதம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழிகளும் தமிழ்நாட்டில் பயன்படுகின்றன. + + + + +நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை + +நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை என்பது, நடு அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய கட்டிடக்கலை மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் பாணிகளைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது. +நடு-அமெரிக்காவில், அண்டவியல், சமயம், புவியியல், கட்டிடக்கலை என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிப் பரந்த அளவி���் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் இயல்புகள் பல சமயம் மற்றும் தொன்மவியல் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக இவ்வாய்வுகளிற் பல எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, நடு-அமெரிக்க நகரங்கள் பலவற்றின் தள அமைப்புகள், முதன்மைத் திசைகளையும், நடு-அமெரிக்கப் பண்பாட்டில் அவை கொண்டுள்ள தொன்மவியல் மற்றும் குறியீட்டுப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. +நடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. கட்டிடங்களிலுள்ள சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள், கொலம்பசுக்கு முற்பட்ட நடு-அமெரிக்கச் சமூகம், அதன் வரலாறு, சமயம் என்பவைபற்றி நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளன. + +பின்வரும் பட்டியல், நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையினதும் தொல்லியலினதும் பல்வேறு காலகட்டங்களைத் தருவதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலுமான குறிப்பிடத்தக்க பண்பாடுகள், நகரங்கள், பாணிகள் மற்றும் தனிப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றோடு அவற்றின் தொடர்புகளையும் எடுத்துக் காட்டுகிறது. + +சமூகத்தில் நிலவிய நம்பிக்கைகளைத் திடமான, புலனாகக்கூடிய வடிவங்களாக வெளிப்படுத்தும் பண்பு நடு-அமெரிக்கச் சமய முறைமைகளின் முக்கிய அம்சம் ஆகும். இதன் மூலம், நடு-அமெரிக்கப் பண்பாட்டினரின் உலகம் அவர்கள் நம்பிக்கைகளின் வெளிப்பாட்டு வடிவமாக விளங்கியது. அதாவது, நடு-அமெரிக்க நகரம் ஒரு நுண்ணண்டமாக (microcosm) இருக்கும்படி அமைக்கப்பட்டது. இது அவர்களின் சமய மற்றும் தொன்மப் புவியியலில் காணப்பட்ட அதே, மனித மற்றும் பாதாள உலகப் பிரிவுகளை வெளிப்படுத்தியது. பாதாள உலகம் வடக்குத் திசையினால் குறிக்கப்பட்டது. இறந்தோர் நினைவிடங்கள் போன்ற பாதாள உலகுடன் தொடர்புடைய பல அமைப்புக்கள் இத்திசையிலேயே காணப்படுகின்றன. தென்பகுதி வாழ்வு, வாழ்வாதாரம், மறுபுறப்பு போன்றவற்றைக் குறிப்பதுடன், நகர அரசின் தொடர்ச்சி, அன்றாட வாழ்க்கை என்பன தொடர்பான பிரபுத்துவ மரபுவழிகளைக் குறிக்கும் நினைவுச் சின்��ங்கள், குடியிருப்புக்கள், சந்தைகள் என்பன இப்பகுதியில் காணப்படுகின்றன. + + + + +செல்வச் சந்நிதி + +செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் "ஆற்றங்கரையான்", "சின்னக்கதிர்காமம்", "செல்லக்கதிர்காமம்", "கல்லோடை" என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது. + +சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்டு முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். இங்கு முருகனின் கையிலுள்ள வேலை வைத்து வழிபடும் முறை தொன்றுதொட்டு காலமாக வழக்கத்திலுள்ளது. இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். திருவிழாக் காலங்களிலும் வேல் உருவிலேயே எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார். இவ்வேலில் சிகண்டி முனிவர் தன்னைத்தாக்க வந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி விசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். + +கதிர்காமத்தைப் போல் வாய்கட்டி பூஜை செய்யும் முறையே இவ்வாலயத்திலும் காணப்படுகின்றது. + +வித்தியாசமான அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் வரலாற்று புகழ் மிக்கது. முன்பு வீரபாகுதேவர் சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. + +இந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தல விருட்சமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்���ு கூறப்படுகிறது. 65 ஆலமர இலையில் முருகனுக்கு அமுது படைத்து பின்பு பக்த கோடிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் முறை இன்றும் இருக்கின்றது. + +12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன் என்ற சோழ அரசனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமானாறு கட்டப்பட்டது. தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டமானாறு வல்லி நதியுடன் இணைந்த பகுதியாகும். இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே கருணாகரத் தொண்டமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டமானாறு என்று அழைக்கப்படுகிறது. + +16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயராலும் அதன் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர்கால பிற்பகுதியில் "மருதர் கதிர்காமர்" என்ற பக்தரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முருகன் தன்மீது அளவு கடந்த பக்தி கொண்டு தன்னை வழிபடும் மருதர் கதிர்காமர் என்பவரிடம் தனக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுக்க விரும்பினார். + +தொண்டமனாறு ஆற்றங்கரையிலே மீன் பிடித்து தனது காலத்தைக் கடத்தி வந்தார் மருதர் கதிர்காமர் இவர் வழமைபோல் அன்றும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு குரல் 'கதிர்காமா இக்கரைக்கு வா" என்றது. ஆச்சரியத்துடன் கரைக்குச் சென்ற கதிர்காமரிடம் சந்நிதிமுருகன் ஒரு சிறுவனாகக் காட்சி கொடுத்தார். அந்தச் சிறுவன் கதிர்காமரை நோக்கி 'இந்த தொண்டைமான் ஆற்றங்கரையிலே இருக்கின்ற பூவரச மரத்தடியில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்த வழிபடுக" என்று பணித்தான். உடனே கதிர்காமர் நானோ கடற்தொழில் செய்பவன். எனக்கு பூஜை முறைகள் தெரியாது என்று பணிவுடன் கூற, சிறுவன் கதிர்காமாரை கண்ணை மூடுமாறு பணித்து கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பூஜை முறைகளை காண்பித்து, வழிபாட்டுக்கு ஒரு வேல் ஒன்றையும் வழங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அன்று தொடக்கம் முருக ஆசாரசீலராகிய கதிர்காமர் தொண்டைமனாற்றங்கரையிலே செழிப்புற்று வளர்ந்துள்ள பூவரச மரத்தடியில் வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்தபின்பு திருநீற்றை கொடுக்கும் முறை தெரியாமல் கதிர்காமர் தடுமாறியபோது, கதிர்காமா நீ திருநீற்றை எடு நான் போடுகிறேன், என்று அசரீரி வாக்கு கேட்டதாகக் கூறப்படுகின்றது. அன���று முதல் தட்டில் இருந்து திருநீற்றை எடுப்பது கதிர்காமராகவும் அதைப்போடுபவர் சந்நிதி முருகனாகவும் பக்தர்கள் கருதி அவரின் காலில் விழுந்து வணங்கி திருநீற்றைப் பெறுகின்றார்கள். காலில் விழுந்து திருநீற்றைப் பெறும்பொழுது தலையிலும் திருநீறு இடப்படும். இக்காட்சியைக் கண்டு பக்தர்கள் பெரிதும் பரவசம் அடைவார்கள். + +பூஜை முடிந்ததும் சந்நிதி முருகப்பெருமானும், கதிர்காமரும் ஆலய முன்பாக உள்ள திண்ணையில் இருந்து இன்றும் கதைப்பதாகக் கூறப்படுகின்றது. + +இவ்வாறு பூஜை செய்து வந்த தொண்டமனாறு கதிர்காமர் மனதில் ஒரு வருத்தம் தென்பட்டது. சந்நிதி முருகனுக்கு நைவேத்தியம் படைக்க தெரியாதே என்று, அப்படியிருக்கையில் ஒரு நாள் முதியவர் ஒருவர் கதிர்காமரை நோக்கி, நான் களைப்பாக இருக்கின்றேன். எனக்கு ஒரு ஆலம் இலையில் கொஞ்சம் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் வைத்துத் தந்தால் போதும் என்றார். பூரிப்பு அடைந்த கதிர்காமர் விரைவாக பொங்கல் பொங்கி, பயற்றங்காய் குழம்பையும் ஊற்றி ஆலம் இலையில் கொடுக்க, முதியவர் அற்புதமான பொங்கல் என்று பெருமிதமடைந்து கொண்டே அங்கே அறுபத்துமூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களும் உனக்கும் சேர்த்து அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது தரவேண்டும் என்று சொல்லி முருகனாக காட்சி கொடுத்தார். கதிர்காமர் சந்நிதியை நோக்கி ஓடினார். 'வேல்" வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்நிதி முருகன் ஆலம் இலையில் வைக்கப்பட்ட பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்காய் குழம்பும் உண்டதாக வரவாறு சான்றுபகர்கிறது. இதனால் தான் இன்றும் செல்லச்சந்நிதியில் பூஜை நேரங்களின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைக்கும் மரபு காணப்படுகிறது. + +இந்த ஆலயத்துக்கான தேர்வடம் கூட கடலிலேயே வந்து சேர்ந்த அற்புதம் இன்று அடியார்களின் மனதிலே ஆழப்பதிந்த ஒரு அதிசயம். தமது நல்ல காரியங்களைக் கூட இங்கேயே தொடங்குகின்றனர். இவ்வளவு பெருமை பொருந்திய செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு இந்த மஷோற்சவத்தின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவர். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான் இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்றும் அழைப்பார்க���். சந்நிதியான் ஆச்சிரமம் ஒவ்வொரு வருடமும் அன்னதானப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றது. கடந்த காலங்களில ஏற்பட்ட போர்சூழலால் அநேகமான அன்னதான மடங்கள் சேதமடைந்துள்ளன. + +அன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது சந்நிதி முருகனுக்கு முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள், இவற்றின் பின்னால் வரும் பஜனைக் குழுக்கள், உருக்கொண்டு தன்னை மறந்து ஆடும் பக்தர்களின் காட்சிகள் இவை எல்லாம் மனதை உருக வைத்துவிடும். + +இக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள். + +செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது. இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம். யுத்த சூழலால் 1986 ஆம் ஆண்டு கோபுரத்தில் எறிகணைபட்டு கோபுரமும் மணியும் சேதமடைந்தன. மீண்டும் சிலகாலம் சென்ற பின்பு வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் விடா முயற்சியால் லண்டனில் மாமணி செய���யப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சந்நிதியான் ஆலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த புதிய மாமணியின் எடை 1250 கிலோ கிராம் என்று கூறப்படுகின்றது. + +பல சிறப்புக்களைக் கொண்ட செல்வச் சந்நிதி முருகனின் அழகிய பெரிய தோற்றத்தைக் கொண்ட சித்திரத் தேர் 1986 ஆம் ஆண்டு போரில் அழிவுற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. + + + + + +இந்திய-ஆரியப் புலப்பெயர்வு + +இந்திய-ஆரியப் புலப்பெயர்வு, பற்றிய கருத்து இந்திய-ஐரோப்பியத்தின் தாயகத்தை இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியில் காணும் எல்லா இந்திய-ஐரோப்பியத் தோற்ற மாதிரிகளினதும் விளைவாகும். +இந்திய-ஆரியம் இதற்கு முந்திய தொல்-இந்திய-ஈரானிய நிலையில் இருந்து உருவானது. இந்நிலை வழக்கமாக, கஸ்பியன் கடற் பகுதியில், வெங்கலக் கால அன்ட்ரோனோவோ பண்பாட்டுடன் அடையாளம் காணப்படுகிறது. அத்துடன், இந்திய-ஆரியர்களின் இந்தியாவுக்கு உள்ளான புலப்பெயர்வு நடு அல்லது பிந்திய வெங்கலக் காலத்தில் இடம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இது பிந்திய ஹரப்பாக் கால கட்டத்துடன் பொருந்தி வருவதாகும். +மாறாக, இந்திய-ஆரியப் புலப்பெயர்வை, இந்தியாவிலிருந்து வெளி நோக்கிக் காணும், இந்தியத் துணைக்கண்டத்தை இந்திய-ஆரியர்களின் தாயகமாகக் கொள்ளும், கொள்கைகளுக்கு அறிஞர் சமூகத்தில் மிகக் குறைவான ஆதரவே காணப்படுகிறது. . + +ஒரு மொழிக் குடும்பத்தின் மூல இடம், அம் மொழிக்குடும்பம் சார்ந்த பல்வகைமை அதிகமான அளவில் காணப்படும் இடமாகும் என்கிறது மொழியியல் புவியீர்ப்பு மையக் கொள்கை. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய மொழிகளில் ஒன்றான ஆங்கிலம் வட அமெரிக்காவில் அதிக அளவில் அங்கு பேசப்படுவதனால், வட அமெரிக்காவே ஜெர்மானிய மொழிகளை அதிக அளவின் பேசும் இடமாக உள்ளது. ஆனால் அங்கு ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் இம் மொழிக் குடும்பம் தோன்றியதாகக் கருதப்படும் வடக்கு ஐரோப்பாவில், ஆங்கிலம் மட்டுமன்றி, ஜெர்மன், டச்சு/பிளெமியம். சுவீடியம்/டேனியம்/நார்வீஜியம் ஆகிய மொழிகளும் பெருமளவில் பேசப்படுகிறது. + +இந்த அடிப்படையில், இந்திய-ஆரியம் என்னும் ஒரே கிளை மொழிக் குடும்பத்தையே கொண்டுள்ள இந்தியா, இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தாயகமாக இருக்க முடியாது. ஆன��ல், மைய-கிழக்கு ஐரோப்பா இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பக் கிளைக் குடும்பங்களான இத்தாலிய, வெனெட்டிய, இல்லிரிய, ஜெர்மானிய, பால்ட்டிய, ஸ்லாவிய, திரேசிய குடும்ப மொழிகளின் தாயகமாக உள்ளது. + + + + +அன்ட்ரோனோவோ பண்பாடு + +அன்ட்ரோனோவோ பண்பாடு என்பது, மேற்கு சைபீரியாவிலும், யுரேசியப் புல்வெளி பகுதிகளிலும், கி.மு 2300-1000 ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிய ஒரேவிதமான பல வெண்கலக் காலப் பண்பாடுகளை ஒருமித்துக் குறிக்கும். 1914 ஆம் ஆண்டில், அழகூட்டப்பட்ட மட்கலங்களோடு, குந்தி இருந்த நிலையில் காணப்பட்ட எலும்புக் கூடுகளோடு கூடிய புதை குழிகள் "அண்ட்ரோனோவோ" என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஊரின் பெயரைத் தழுவியே "அன்ட்ரோனோவோ பண்பாடு" என்ற பெயர் ஏற்பட்டது.AndronovoCultureCulture இதன் பின்னர் இப் பாண்பாடு தெற்கிலும், கிழக்கிலும் பரவிய காலப்பகுதியைச் சேர்ந்த, குறைந்தது நான்கு துணைப் பண்பாடுகளாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை: + + + + +இப் பண்பாட்டின் புவியியல் பரப்பு மிகவும் பெரியது என்பதுடன் இதன் எல்லைகளை அச்சொட்டாக வரையறுப்பதும் கடினமானது. இதன் மேற்கு எல்லைப் பகுதியில் இது ஏறத்தாழ அதே காலத்தைச் சேர்ந்த ஆனால் வேறுபட்ட ஸ்ரூப்னா பண்பாட்டுடன் கலந்துள்ளது. கிழக்கில், மினுசிங்க்ஸ் தாழ்நிலப் பகுதிவரை சென்று அங்கே முந்திய ஆஃபானாசேவோ பண்பாட்டுடன் கலக்கிறது. மேலதிக இடங்கள் தெற்கே, கோப்பெட் டாக் (துர்க்மெனிஸ்தான்), பாமிர் (தாஜிக்ஸ்தான்), தியான் ஷான் (கிர்கிஸ்தான்) ஆகிய இடங்கள் வரை பரவியுள்ளன. + + + + +மார்ச் 2008 + +மார்ச் 2008, 2008 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 13 இல் தொடங்கி ஏப்ரல் 12 இல் முடிவடைகிறது. + + + + + + +ஏப்ரல் 2008 + +ஏப்ரல் 2008, 2008 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 13 இல் தொடங்கி மே 13 இல் முடிவடைகிறது. + + + + + +மருத்த���வ அறிகுறி + +மருத்துவ அறிகுறி ("medical sign") என்பது நோயாளியிடம் இருந்து மருத்துவரால் மருத்துவப் பரிசோதனையின் போது அறியப்படும் நோயின் இயல்புகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் நோயாளிகளால் அறியப்பட வாய்ப்பு இல்லை அல்லது அறிவதற்குத் தகுந்த போதுமான அறிவு அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, குருதி அழுத்தம், சில நோய்களில் நகங்களின் வேறுபாடு, முதிர் வளையம் + + + + + + +பிரான்சின் பதினாறாம் லூயி + +பதினாறாம் லூயி ("Louis XVI"), (23 ஆகஸ்ட், 1754 – 21 ஜனவரி, 1793), பிரான்சின் மன்னனாக 1774 முதல் 1792 வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" ("Louis-Auguste") ஆகும். + +இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். 1792 ஆகஸ்ட் 10 இல் இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 21, 1793 இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது. + + + + +சுடாலின்கிராட் சண்டை + +சுடாலின்கிரட் சண்டை ("Battle of Stalingrad") இரண்டாம் உலகப் போரின் போது யேர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் சோவியத் நகரான சுடாலின்கிரட்டில் (தற்போதைய வோல்கோகிராட்) ஆகஸ்ட் 21 1942 க்கும் பெப்ரவரி 2 1943க்குமிடையே நடைப்பெற்ற சண்டையாகும். சுடாலின்கிரட் சண்டையானது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில் நடைப்பெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது. இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1.5 மில்லியன் பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம். இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள், படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன. சுடாலின்கிரட் சண்டையில் யேர்மனிய படைகளால் சுடாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது, நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள், சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது. + + + + +இசுபிரிட் தளவுலவி + +இசுபிரிட் ("MER-A", "Mars Exploration Rover - A"), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுலவிகளில் ("rover") முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுலவியான ஆப்பர்சூனிட்டி தளவுலவி ("Oppportunity Rover") இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் ("Meridiani Planum") தரையிறங்கியது. + +நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுலவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008). + +இரண்டு ஆண்டுகளில் இசுபிரிட் தளவுலவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் "ஹம்ப்ரீ" என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் "நாசா" அறிவித்தது. + +மார்ச் 11, 2004 இல், பயணத்தின் பின்னர் "ஸ்பிரிட்" தளவுலவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி அகலமும் ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் "ஸ்பிரிட்" இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து "கொலம்பியா குன்றுகளை" நோக்கிச் செலுத்தப்பட்டது. + + + + +1793 + +1793 (MDCCXCIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +கே. எம். ஆதிமூலம் + +கே. எம். ஆதிமூலம் (1938 - ஜனவரி 15, 2008) தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் ஆவார். கோட்டு ஓவியத்தை வெகு மக்கள் ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர், கல்வெட்டு பாணியிலான புது வகை எழுத்து அழகியலை உருவாக்கியவர். மனிதநேய படைப்பாளியாக போற்றப்படுகிறார். + +திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவர் ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். 1959 இல் சென்னைக்கு வந்தவர் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளோமா' பட்டம் பெற்றார். + +சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன. + +1966-இல் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அதன் பின்னர் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. + +இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர். + +இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார். + +வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. + +தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரே வகையான தட்டையான எழுத்துருக்கள் புழங்கிவந்த காலத்தில் அழகான நவீன எழுத்துருக்களை உருவாக்கி அளித்தார். திருக்குறள் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார். + +1964 இல் மாநில அளவிலான பரிசு பெற்றார், +லலித் கலா அகாடமியின் தேசிய விருது, மும்பாய், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர். + +இவர் தனது கடைசி காலத��தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ஜனவரி 15, 2008 இல் சென்னையில் தனது 70வது அகவையில் காலமானார். + + + + + + +தீரன் சின்னமலை + +தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர். + +இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். + +தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது. + +இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கி���்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் "கொங்குப்படை" சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. + +நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. + +இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். + +1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார். + +போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர். + +முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. + +2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது. + +தீர்த்தகிரி கவுண்டரின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார். + + + + + + + +1905 + +1905 (MCMV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + + +சாலமன் தீவுகள் தொடர் சமர் + +சாலமன் தீவுகள் தொடர் சமர் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் போது இடம்பெற்ற முக்கிய தொடர் சமராகும். 1942 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் யப்பானிய பேரரசு பிரித்தானிய சாலமன் தீவுகளினதும் போகன் வில்லே திவுகளதும் சில இடங்களில் தரையிரங்கி அவ்விடங்களை ஆக்கிரமித்ததுடன் சாலமன் தீவுகள் தொடர் சமர் தொடங்கியது.பப்புவா நியூகினி மீதான யப்பானிய தாக்குதல்களுக்கு பின்பலமாக அமையுமாறு தாங்கள் ஆக்கிரமித்தப் பகுதிகளில் யப்பானியர்கள் வான்,கடற்படைத் தளங்களை அமைக்கத் தொடங்கினர். பப்புவா நியுகினியாவின் புதிய பிரி்த்தானியத் தீவில் அமைந்திருந்த யப்பனியரது முக்கியத் தளமான ரபாவுல் தளத்துக்கு பாதுகாப்பு அரணாகவும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் அவுசுதிரேலியா, நியூசிலாந்துக்கு மிடையான நேசநாட்டு வழங்கள் பாதைகளை வழிமறிப்புச் செய்யும் தளமாகவும் செயற்படும் படைத்துறை நோக்கமும் இத்தளங்களில் அமைப்பில் காணப்பட்டது. + +தென் பசிபிக் மாக்கடலில் தங்களது வழங்கள், தொலைத் தொடர்பு பாதையை தக்கவைத்துக் கொள்ளவும் நியூகினியில் யப்பானியர்களுக்கு எதிரான எதிர்த்தாக்குதல்களுக்கு ஆதரவை வழங்கவும், யப்பனியரது முக்கியத் தளமான ரபாவுல் தளத்தை தனிமைப் படுத்தும் வகையிலும் நேச நாட்டுப் படைகள் சாலமன் தீவுகளில் காணப்பட்ட யப்பானிய நிலைகள் மீது தாக்குதல் த��டுத்தன. நேச நாட்டுப்படைகள் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குவாடல் கால்வாய்ப் பகுதியில் தரையிரங்கினர். இத்தரையிரக்கங்கள் காரணமாக நேசநாட்டுப் படைகளுக்கும் யப்பானிய படைகளுக்கும் இடையில் தொடக்கத்தில் குவாடல் தொடர் சமர் மூண்டது இதன் பின்னர் மேலும் சில சண்டைகளும் நடைப்பெற்றன. இச்சண்டைகள் நடு,வடக்கு சாலமன் தீவுகளிலும் நியூ யோர்ஜியாவிலும் நடைப்பெற்றன. + +இச்சமரின் போது நேசநாட்டுப் படைகள் பகல் வேளையில் முழுமையான வானாதிக்கத்தைக் கொண்டிருந்தன. இதன் காரணாம யப்பானியர் தங்களது வழங்கள்களை இரவு வேளியில் மேற்கொண்டனர், இது எலி போக்குவரத்து(Rat Transportation) என யப்பானியர்களாலும் தோக்யோ கடுகதி (Tokyo Express) என நேச நாட்டுப் படைகளாலும் அழைக்கப்பட்டது. யப்பானியர்களது வழங்கள் பாதையை தடுக்கும் நோக்கில் பல கொடுரமான சண்டைகள் நடைப்பெற்றன. இதன் போது இருதரப்பும் பல கப்பல்களை இழந்தன. + +இச்சண்டையில் நேச நாடுகளின் வெற்றி காரணமாக அவுஸ்திரேலியா நியூசிலாந்து என்பன ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கக் கூடியதாக இருந்ததோடு நேச நாடுகளின் இயளுமையை அதிகரித்தது. இதன் போது கைப்பற்றப் பட்டப் பகுதிகள் 1943 ஜூன் 30 அன்று தொடங்கப் பட்ட நியூ கினியா தொடர்ச் சமருக்கு முக்கிய தொடக்க மையமாக செயற்பட்டது. நியூ கினி தொடச் சமரின் போது யப்பானியரது முக்கியத் தளமான ரபாவுல் தளம் தாக்கியழிக்கப்பட்டதோடு தென் பசிபிக் மாக்கடலில் யப்பானின் வான், கடல் ஆதிக்கம் வீழ்ச்சியைக் கண்டது. இது பின்னர் பிலிபைன்சைக் கைப்பற்ற நடைப்பெற்ற பிலிபைன்ஸ் தொடர் சமருக்கும் தொடக்கமாக அமைந்தது. + +சாலமன் தீவுகள் தொடர் சமர் வந்தீவிர போகன்வில்லே தொடர்சமரின் தொடக்கத்துடன் முடிவுற்றதாக கருதப்படும். + + + + + + +மங்கலம் ஆறு + +மங்களம் ஆறு காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும். + +செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. + + + + + + +வண்டாழிப்புழா + +வண்டாழிப்புழா காயத்ரிப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறு. + + + + + +அயலூர்ப்புழா + +அயலூர்ப்புழா காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று. + + + + +இத்திக்கரை ஆறு + +இத்திக்கரை ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு. இதன் நீளம் 56 கிலோமீட்டர். இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடி என்ற இடத்தில் உற்பத்தியாகி பின் கொல்லம் மாவட்டம் வழி பாய்ந்து இறுதியில் பரவூர்க் காயலில் சென்று சேர்கிறது. +கொல்லத்தில் இருந்து 15 கிலோமீட்டரில் இந்த ஆற்றின் கரையில் இத்திக்கரை என்ற சிற்றூர் உள்ளது. + + + + +கொங்கோ குடியரசு + +கொங்கோ குடியரசு (அல்லது "காங்கோ குடியரசு") ("Republic of the Congo", பிரெஞ்சு: République du Congo) என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது "கொங்கோ-பிரசாவில்", or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, அங்கோலா மற்றும் கினி வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. 1960 இல் விடுதலை அடைந்த பிற்பாடு முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான மத்திய கொங்கோ, கொங்கோ குடியரசாகியது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு மார்க்சிய நாடாக இருந்த கொங்கோ குடியரசு 1990 இல் மார்க்சியத்தைக் கைவிட்டது. 1992 இல் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. 1997 இல் சிறிது காலம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த பின்னர் முன்னாள் மார்க்சிய அதிபர் டெனிஸ் நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவிக்கு வந்தார். + + + + + +கனவுகள் (திரைப்படம்) + +கனவுகள், கனடாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தரமானது என்று கணிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. அப்பன் நடா அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பி.எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா (செந்தில்), ச���ப்புலட்சுமி காசிநாதன், ஆர்.எஸ்.காசிநாதன், சுரேஸ் ராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள். + +படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். + + + + +உள்ளம் கவர்ந்தவளே + +இந்தியாவில் தயாரான கனேடிய தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் உள்ளம் கவர்ந்தவளேயும் ஒன்று. 'தமிழ் மகன்' தயாரான பிறகு, பலர் இவ்வாறு இந்தியாவில் அங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். + +அர்விந்த் என்பவர் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தை தயாரித்தவர் ஜெய்ச்சந்திரன். படத்திற்கான இசையை கபிலேஷ்வர் வழங்கினார். கே.எம்.எஸ். சகாயராஜா இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவினை ஷிவா என்பவர் கவனித்துக் கொண்டார். + + + + +தீர்ப்பளியுங்கள் + +தீர்ப்பளியுங்கள், கனேடியக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் பங்குபெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்காவது திரைப்படம். ஆரம்பத்தில் "துரோகம்" என்று பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்படம் பின்னர் "தீர்ப்பளியுங்கள்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. +இத்திரைப்படத்தில் தரன், பி.எஸ்.சுதாகர், சித்து ஆகியவர்கள், இந்தியக் கலைஞர்களுடன் நடித்தார்கள். +இந்திரசித்து இயக்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு வேலைகளை ரவி அச்சுதன் கவனித்தார். + + + + +மஸ்ஜிதுல் ஹராம் + +புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் (Al-Masjid al-Ḥharām ( ) பள்ளிவாசல் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரில் அமைந்துள்ள உலகிலேயே பெரிய பள்ளிவாசல் ஆகும். இது காஃபத்துல்லா எனவும் அழைக்கப்படும். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனைவரும் இந்த பள்ளிவாசலை நோக்கியே, இறைவனுக்காக தொழுவது என்பது மரபு. உலகில் முதன் முதலாக இசுலாமியர்களால் இறைவனுக்காக கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் தற்போதய கட்டமைப்பு உட்புற வெளிப்புற தொழுகை இடங்களையும் உள்ளடக்கி 3,56,800 சதுர மீட்டர்களாகும் (88.2 ஏக்கர்). இதில் 4 மில்லியன் இசுலாமிய ஹஜ் பயணிகள் தங்குவதற்கு இடம் உண்ட��. ஹஜ் என்பது உலக அளவில் பக்தர்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளில் ஒன்றாகும். + +இந்த பள்ளிவாசல் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்பே தேவதைகளால் கட்டப்பட்டதாக இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. புவியில் தொழுகைக்காக இடம் அமைக்கவேண்டி இறைவன் நினைத்த பொழுது உதித்த சுவர்க்க பூமியின் பெயர் அல்-பயது ல்-மௌமூர் (Arabic: البيت المعمور, "The Worship Place of Angels"). காலப்போக்கில் இயற்கை சீற்றங்களால் அழிந்து போன பள்ளிவாசல் ஒவ்வொருமுறையும் புதுப்பிக்கப்பட்டது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படிக்கு இந்த பள்ளிவாசல் இப்ராஹிமால் அவரது மகன் இஸ்மாயில் உதவியுடன் மீண்டும் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கடவுளின் ஆணைப்படி அவர்களிருவரும் பள்ளிவாசலையும் காபாவையும் கட்டினார்கள். காபாவின் கிழக்கு முனையில் சற்று கீழிறங்கி அமைக்கப்பட்டிருக்கும் கருங்கல் (ஹஜார்-உல்-அஸ்வத்) மட்டுமே இப்ராஹிமால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் மிச்சமாகும். காபா இருக்கும் திசையே உலகின் அனைத்து இஸ்லாமியர்களின் தொழுகை திசை ஆகும். இந்த பாலைவன சோலையின் ஜம்ஜம் நீரூற்றானது கண்டறியப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை வற்றியதே இல்லை என்று இஸ்லாம் அதன் புகழை விளக்குகிறது. + +இஸ்லாமிய நம்பிக்கையின்படி இஸ்மாயிலின் சரித்திரக் கதையில் அவரது அன்னையும் இப்ராஹிமின் மனைவியுமான ஹாகர், நீரைத்தேடி பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியும் சஃபா மற்றும் மர்வாஃஹ் இடங்களுக்கிடையேயும் ஓடித்திரிந்தார். இதற்கிடையில் கடவுளின் கருணையால் அங்கு ஜம்ஜம் நீரூற்று தோன்றியது. அன்று முதல் அந்த நீரூற்று வற்றாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஜ்ரா முடித்து வெற்றியுடன் மெக்கா திரும்பிய முகம்மதுவும் அவரது மருமகன் அலி இப்ன் அபி தலிப் - உம் காபாவினுள்ளும் புறமும் இருந்த சிலைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினார். அன்று முதல் காபாவில் இஸ்லாமியம் செழித்தது. + +இயற்கையால் சீர்குலைந்த இந்த பள்ளியின் முதன் முதலில் பெரிய அளவில் மேம்படுத்தும் பணியானது 692 இல் நடந்தது. அப்போது தான் பள்ளியின் வெளிப்புற சுவர்கள் எழுப்பப்பட்டு உட்புற கூரைகளில் அலங்காரங்களும் அமைக்கப்பெற்றன. 700களின் இறுதியில் பள்ளிவாயிலின் மரத்தூண்களானது பளிங்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலும் தொழுகை இடங்களும் விரிவுபட��த்தப்பட்டன. மத்தியக் கிழக்கு திசை நாடுகளில் இஸ்லாமின் வளர்ச்சியும் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் கணக்கிலடங்கா வருகைகளும் மெக்காவை மேலும் வளப்படுத்தியது. மேலும் பள்ளியானது 1570இல் சுல்தான் சலீம் ஈயின் ஆஸ்தான கட்டிட வல்லுனரால் கூரைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அதன் பின் பலமுறை இந்த பள்ளிவாசல் பல கட்டுமான மாற்றங்களை சந்தித்திருந்தாலும் 1570ஆம் ஆண்டு தான் கடைசியாக இந்த பள்ளிவாசல் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டதாக சவுதி அரசாங்கம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது. அதன் பின்பு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்தப் பள்ளிவாசல் எந்த விதமான சீரமைப்பிற்கும் உட்படாமல் நிலைத்து நிற்கின்றது. + +இதில் ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும். + + + + +1873 + +1873 (MDCCCLXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + + + +ரீமா சென் + +ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். + + + + +பெரிஞ்சான்குட்டி ஆறு + +பெரிஞ்சான்குட்டி ஆறு கேரள மாநிலத்தில் பாயும் ஒரு ஆறு. இது கேரளத்திலேயே நீளமான ஆறான பெரியாற்றின் துணையாறும் ஆகும். + + + + + + +புன்னப்புழா + +புன்னப்புழா (மலையாளம்:പുന്നപ്പുഴ) கேரள மாநிலத்தில் பாயும் கரிம்புழாவின் துணையாறு. கரிம்புழா சாலியாற்றின் துணையாறுகளுள் மிகவும் பெரியது. புன்னப்புழா தமிழ்நாட்டில் பாயும் போது பாண்டியாறு என அழைக்கப்படுகிறது. + +இதன் ஒரு கிளை முக்கூர்த்தி தேசியப்பூங்காவின் வடபகுதியிலும் மற்றோர் கிளை தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கூடலூரிலும் தோன்றுகின்றன. இவ்விரு கிளைகளும் கூடலூருக்கு தென்மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் கூடுகின்றன. இந்த ஆறு இடக்கரை என்ற இடத்தை அடையும் போது மருதப்புழா இத���ுடன் சேர்கிறது. பின்னர் இது கரிம்புழா ஆற்றுடன் கூடி முடிவடைகிறது. + +சுங்கத்தரை, இடக்கரை ஆகியன இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும். + + + + +துப்பாண்டிப்புழா + +துப்பாண்டிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர்ஆறு. இது தூதப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இது பிலந்தோல் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. பள்ளிப்புரம் என்ற இடத்தில் இது தூதப்புழாவுடன் கலக்கிறது. + + + + + + +குண்டுமணி + +குண்டுமணி என்பது பின்வருவனவற்றுள் ஒன்றைக் குறிக்கலாம். + + + + + + +காரட் (அலகு) + +காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும். + +carob என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும். இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" +என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது. +18k,22k, 24k + + + + +ரைசின் + +ரைசின் என்னும் புரதப் பொருள், ஆமணக்கம் விதையில் இருந்து பெறப்படும் ஒரு வகை நச்சுப்பொருள் ஆகும். + +ரைசினை, சுவாசத்தோடு உள்ளிழுப்பதன் மூலம், ஊசியினால் செலுத்துவதன் மூலம், அல்லது வாய் வழியாக உட்கொள்வதன் மூலம் அது புரதத் தொகுப்பைப் (protein synthesis) பாதிக்கிறது. ரைசின், சயனைட்டிலும் 6,000 மடங்கும், rattlesnake என்னும் நச்சுப் பாம்பின் நஞ்சிலும் 12,000 மடங்கும் கூடிய நச்சுத்தன்மை கொண்டதாகும். இந்த நஞ்சை முறிப்பதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கப் படையினர் இதற்குத் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந் நஞ்சிலிருந்து பிழைத்துக் கொள்பவர்களின், உறுப்புக்களில் நீண்டநாள் பாதிப்புகள் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ரைசின் தீவிரமான வயிற்றோட்டத்தை ஏற்படுத்தி, அதனால் பாதிக்கப்படுபவர்கள் அதிர்ச்சியினால் இறக்கும் நிலை ஏற்படலாம். + +ஆமணக்கு விதைகளை உட்கொண்டு இறப்பது மிகவும் அரிது. எட்டுக் காய்களில் அடங்கியுள்ள விதைகளில், வளர்ந்த ஒருவரைப் பாதிக்கக்கூடிய அளவு நஞ்சு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ரைசின் நஞ்சை அளவுக்கு மீறி உட்கொண்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு சேலைன் மற்றும் குளுக்கோசுக் கரைசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. + + + + +இருபடிச் சேர்மம் + +வேதியியலில், இருபடிச் சேர்மம் என்பது இரண்டு ஒரே மாதிரியான துணை அலகுகள் அல்லது ஒருபடிச் சேர்மங்கள் இணைந்து இருக்கும் ஒரு மூலக்கூறு ஆகும். + +இருபடிச் சேர்மத்தில் உள்ள மூலக்கூறுகள், இணைப் பிணைப்பை (covalent bonds) அல்லது ஐதரசன் பிணைப்புப் (hydrogen bonds) போன்ற வலுக்குறைந்த பிணைப்புக்களைக் கொண்டவை. + + + + +திரைப்படத் தொகுப்பு + +படத்தொகுப்பு என்பது, திடைப்பட உருவாக்கத்தில் முக்கியமான ஒரு செயற்பாடு ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை இணைத்தல் மீண்டும் அவற்றை ஒன்றுடன் ஒன்று உரிய முறையில் இணைத்து முழுத் திரைப்படத்தை உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும். படத்தொகுப்பு என்பது திரைப்படத்துக்கே உரிய தனித்துவமான செயற்பாடாகும். இது திரைப்படக் கலையை நிழற்படக்கலை, நாடகம், நடனம், எழுத்து போன்ற பிற கலைகளினின்றும் வேறுபடுத்துகிறது. வெறுமனே, காட்சிகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதோ அல்லது சிலவற்றை வெட்டி நீக்குவதோ மட்டும் படத்தொகுப்பு ஆகிவிடுவது இல்லை. ஆனால் படத்தொகுப்பு ஒரு திரைப்படத்தை வெற்றி பெறவோ அல்லது தோல்வி அடையவோ செய்யக்கூடிய ஒரு கலையாகும். ஒரு படத்தொகுப்பாளர் படிமங்கள், கதை, இசை, இசைவு, வேகம், நடிப்பு போன்ற பல விடயங்களைக் கையாளுகிறார். படத்தொகுப்பின்போது அதனை மீள இயக்குவதுடன், சில சமயங்களில் அதனைத் திரும்ப எழுதுகிறார் என்றும் சொல்லலாம். படத்துண்டுகளை ஒழுங்கு படுத்துவதற்கு இருக்கக்கூடிய எண்ணற்ற வழிகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, ஒருங்கிணைந்த, முழுமை கொண்ட ஒரு திரைப்படத்தைக் கொடுப்பதில் பெரும்பங்கு படத்தொகுப்பாளருக்கு உண்டு. + + + + +1897 + +1897 (MDCCCXCVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + + + +புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி + +புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ("Puerto Rican Independence Party", ஸ்பானிய மொழி: "Partido Independentista Puertorriqueño", PIP) என்பது புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் ஓர் அரசியல் கட்சியாகும். இது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் விடுதலைக்காகப் போராடி வருகிறது. புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள மூன்று பெரும் அரசியல் கட்சிகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இது இரண்டாவது பழமையானதுமாகும். + +இக்கட்சி அக்டோபர் 20, 1946 இல் கில்பேர்ட்டோ டெ கிராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் விடுதலையை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட "பிரபல்யமான மக்களாட்சிக் கட்சி" பின்னர் விடுதலைக் கோரிக்கையை விட்டுக் கொடுத்தமையால் கிராசியா புதிய கட்சியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். + + + + + +மலையேற்றம் + +மலையேற்றம் ("Mountaineering") என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன. உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர். + + + + +ஆயிரத்தில் ஒருவன் + +ஆயிரத்தில் ஒருவன் என்றத் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளன. பொருத்தமான தலைப்பில் அழுத்துவதன் மூலம் அவ்வவ் கட்டுரைகளை அடையலாம். + + + + + +ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்) + +ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் கார்திக் சிவக்குமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை,திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். + +கி.பி. 1279 இல் கதை தொடங்குகிறது. சோழர் ஆட்சியின் கடைசிக்கட்டம். பாண்டியர் சோழரோடு போரிட்டு, பாண்டியரின் குலதெய்வச் சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்னாம் அருகிலுள்ள ஓர் தீவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைத் தேடி செல்லும் தொல்பொருளாய்வாளர் அன்ரியாவின் அப்பா. சென்ற இடத்தில் காணாமல் போய்விடவே அங்கே அவரைத் தேடி செல்லும் குழுவில் இடம்பெறுகிறார்கள் ரீமாசென் மற்றும் அன்ரியா. மூட்டை தூக்குபவர் கார்த்தி. ஒரு வகையாக தீவை சென்றடைகிறார்கள். அங்கே தம் இளவரசனின் பாதுகாப்பைக் கருதி சோழர் செய்து வைத்துவிட்டுப் போன பொறிகள் இவர்கள் பயணத்தை கடினமாகவும், ஆபத்து மிக்கதாகவும் ஆக்குகிறது. பழங்குடியினர், காவல் வீரர்கள், பாம்புகள், மணலுள் மறைந்திருக்கும் பொறிக்கதவுகள் என பொறிகள் ஏராளம். இவைகளை தாண்டி உள்ளே சென்றவர்கள் கார்த்திக், ரீமா, அன்ட்ரியா மேலும் சிலரே. இதில் முதல் மூவரும், குழுவை விட்டு தொலைவில் வந்து சோழர்களின் சிதையுண்ட நகரைக் காண்கிறனர். பின்னர் சோழரையும் காண்கிறனர். அடியோடு அழிந்து விட்டதாக கருதப்பட்ட சோழர் வந்த இடத்தில் நகரமைத்து வாழ்ந்திருப்பதாக காட்டப்படுகிறது. ஆயினும் முன்னிருந்த செல்வ வளம் குன்றி, பண்பாட்டுக் கூறுகளை பெரும்பாலும் இழந்தவர்களாகவே காட்டப்படுகிறனர். தற்கால தமிழ் புரியாமையால், அவர்கள் மூவரையும் கொல்லும் தறுவாயில் ரீமாசென் பேச தொடங்குகிறார். பாண்டிய அரச குடும்பத்தின் எச்சங்களே ரீமாசென், அவருடன் வந்த இராணுவ அதிகாரி, ஒரு அமைச்சர் உள்ளிட்ட எண்வர் கொண்ட குழு. தம் குலதெய்வ சிலையை மீட்க வந்த அவர், சோழரை பூண்டோடு அழிக்க மனத்தில் சூளுரை எடுத்துக் கொள்கிறார். தன்னை சோழனை மணம் முடித்து, தாய்த்தேசம் அழைத்துவரும்படி சொன்னதாக பொய் சொல்கிறார். சிறுவயதிலிருந்தே அவர் பெற்றோர் பாண்டியராகவே வளர்த்தமையும், தம் குலதெய்வ சிலையை மீட்க வேண்டியது இன்றியமையாததென்பதையும் வளர்த்தமையையும் நினைவுகூர்கிறார். இதனாலேயே, ரீமாவால், சோழர் தமிழ் பேச முடிந்தது. சிறைக்கைதிகளுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கார்த்திக் சோழன் மதிப்பை பெறுகிறார். பின் ரீமாசென் கெட்டவள் என்றறியும் போது காலம் கடந்துவிட்டது. இது���ாலும், சோழர் ஒரு தூதுவன் வந்து தம்மை மீட்பான் என முன்னோர் சுவரில் தீட்டி வைத்திருந்த சித்திரத்தில் இருந்தே தெரிந்து கொண்டனர். அதில் உள்ளது போலவே, கார்த்திக் வந்து இளவரசனை தூக்கும் போது, மாரி பொழிகிறது. சோழருக்கெதிராக படை தொடுக்கிறனர். கவண் முதலிய பழைய உத்திகளை கையாளும் சோழர் படை, ரீமாசென் தண்ணீரில் கலந்துவிட்டுச் சென்ற மருந்தால் படைவீரர் விழவும், புது ஆயுதங்களுக்கு தாக்குபிடிக்காமையானும் சிறைபிடிக்கப்படுகின்றனர். ஓவியத்தில் காட்டப்பட்டது போலவே கார்த்திக் சோழ இளவரசனுடன் விரைகிறார். + + + + +பிரிவோம் சந்திப்போம் + +பிரிவோம் சந்திப்போம் கரு பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா முக்கிய வேடங்களில் நடிக்க 2008 ஆம் ஆண்டு ஜனவரி 14 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடியில் உள்ள நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தின் கூட்டுக் குடும்பம் ஒன்றில் புதிதாக மணமானவர் இருவரின் கதையை இப்படம் சித்திரிக்கிறது. + +இக்கதை சாலாவைச்(சினேகா) சுற்றி பின்னப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒரே பிள்ளையான சாலா பட்டப்படிப்பை முடித்து கூட்டுக்குடும்பம் ஒன்றில் வசிக்கும் ஒருவரை மணக்கிறார். கூட்டுக்குடும்பத்தில் இருந்துவிட்டு தனிக்குடித்தனம் போகும் சாலாவை தனிமை வாட்டுகிறது. இத்தனிமையைப் பயன்படுத்தி இயக்குனர் தமிழர் வாழ்வு முறைப்பற்றி விளக்குகிறார். + + + + + +பழனி முருகன் கோவில் + +பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. + +ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அத��ல் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது. + +பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. + +புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது. + +முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. + +போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார். + +அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்��ி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.klkl + +பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள், + + + +உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளது +1.யாணை பாதை +ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும் +2.நோ் பாதை +இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம் + +பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில். + +வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. + +பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. +பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. +தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. + + + + + +அயோத்தி பிரச்சினை + +அயோத்தி பிரச்சினை என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்��ியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது. + +பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன. 1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. 1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. + +2010ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும் இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சுன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்கப்பட்டன. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன. இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது + + + + +யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் + +இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. + + + + + + + + + + + + + + +வடகடல் + +வடகடல் ஐரோப்பியக் கண்டத்திட்டின் மீதமைந்த ஆர்க்டிக் மாக்கடலினுள் உள்ள ஒரு கடல். இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள். இதன் சராசரி ஆழம் 100 மீட்டர்கள். அதிகபட்சமாக 700 மீ ஆழம் வரை காணப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தின் ஆறுகளுள் பல இக்கடலில் வந்து சேர்கின்றன. ராட்டர்டேம், ஹாம்புர்க் முதலிய பல முக்கியமான துறைமுகங்கள் இக்கடலில் அமைந்துள்ளன. + +வரலாற்று ரீதியாக, வடக்கு கடல் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் முக்கிய இடம்பெற்றள்ளது, குறிப்பாக வட ஐரோப்பாவில். மத்திய காலங்கள் மற்றும் நவீன சகாப்தத்தில் உலகளாவிய அளவில் வடக்கு ஐரோப்பாவை மதிப்பிடுவதன் மூலம் இது உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. வட கடல் வைக்கிங்ஸ் உயர்வு மையமாக இருந்தது. இதன் விளைவாக, ஹான்சியடிக் கூட்டமைப்பு, நெதர்லாந்து மற்றும் பிரிட்டிஷ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் வட கடலில் மேலாதிக்கம் செலுத்த முயன்றன, இதன் கடல் மூலம் உலகின் சந்தைகள் மற்றும் வளங்களை அணுகியது. இரண்டு உலகப் போரின்போது வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்திருக்கிறது. + +வடக்குக் கடல் ஓர்க்கி தீவுகள் மற்றும் மேற்கு பிரிட்டனின் கிழக்கு கடற்கரையால் பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் நார்வே, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் பிரான்ஸ் ஆகியவை உட்பட கிழக்கு மற்றும் தெற்க்காக மத்திய ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பு வடக்குக் கடல் சூழ்ந்துள்ளது. தென்மேற்கில், டோவர் நீரோட்டத்திற்கு அப்பால், வட கடல் அட்லாண்டிக் பெருங்கடலில் இணைக்கும் ஆங்கில கால்வாயாக மாறுகிறது. + +கிழக்கில், ஸ்கார்கரக் மற்றும் கத்தகட், ஆகிய நாடுகளின் வழியாக ஒரு குறுகிய ஜலசந்தி டென்மார்க்கை முறையாக நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து தனித்தனியாகக் பிரித்து பால்டிக் கடலோடு இணைக்கிறது. வடக்கில் இது ஷெட்லாண்ட் தீவுகளின் எல்லையாக உள்ளது, மற்றும் அட்லாண்டிக்கின் வடகிழக்கு பகுதியில் அமைந்த நார்வே கடலுடன் இணைக்கிறது. + +வட கடல் நீளமாகவும், மற்றும் அகலமாகவும், அதன் பரப்பளவு ஆகவும் மற்றும் அதன் கொள்ளவு ஆகவும் உள்ளது. வட கடலை சுற்றியும் மற்றும் விளிம்புகளிலும் சிறிய மற்றும் பெரிய அள்விலான தீவுக்கூட்டங்கள் மற்றும் தனித் தீவுகள் கொண்டிருக்கிறது. அவைகளில் ஷெட்லாண்ட், ஓர்கேனி மற்றும் பிரிசியன் தீவுகளும் அடங்கும். வடகிழக்கு ஐரோப்பிய கண்டங்களின் நீர்த்தேக்கங்கள், அதே போல் பிரிட்டிஷ் தீவுகள் ஆகியவற்றிலிருந்து நன்னீரைப் பெறுகிறது. ஐரோப்பாவின் வடிகால் பகுதியின் பெரும்பகுதி வட கடலுக்குள் நுழைகிறது, பால்டிக் கடல் நீர் உட்பட. வட கடலில் பாயும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஆறுகள் ரைன் மற்றும் எல்பை - மௌஸ் (நதி). சுமார் 185 மில்லியன் மக்கள் வறண்ட நிலப்பகுதிகளை உள்ளடக்கிய வட கடலுக்குள் வெளியேறுகின்ற ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழ்கின்றனர். + +வட கடலின் பெரும் பகுதி ஐரோப்பா கண்டத்தின் நிலத்திட்டுகளில் அமைந்துள்ளது மற்றும் அதன் ஆழம் ஆகும். இதன் ஒரே விதிவிலக்கு நார்வே அகழி. இது நார்வே கடற்க்கரைக்கு இனையாக ஒஸ்லோவிலிருந்து வடக்கில் பெர்கன் வரை பரவியுள்ளது. இதன் அகலம் ஆகவும் மற்றும் இதன் அதிகபட்ச ஆழம் ஆகவும் உள்ளது. + +டோக்கர் பேங்க் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு பரந்த பணிக்குவ��யில் உள்ளது. அதன் உயரம் 15 முதல் 30 மீட்டராகவும் மற்றும் அதன் ஆழம் 50 முதல் 100 அடியாகவும் உள்ளது. இந்த சிற்ப்பு அம்சம் வட கடலின் மிகச்சிறந்த மீன்பிடி இடமாக அமைந்துள்ளது. நீளமான நாற்பது மற்றும் அகலமான பதினான்கு ஆகிய பெரிய பகுதிகள் ஏறக்குறைய சீரான ஆழத்தில் உள்ளது. (நீளமான நாற்பது 73 மீட்டர் ஆழமும் மற்றும் அகலமான பதினான்கு 23 மீட்டர் ஆழமாகவும் இருக்கிறது. இந்தப் பெரியக் கரைகள் வட கடலை மிகவும் அபாயகரமானதாக மாற்றுகிறது. இந்த அபாயங்கள் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் செயல்பாட்டால் குறைக்கப்பட்டுள்ளது. +சர்வதேச நீரப்பரப்பிற்குரிய நிறுவனம் (International Hydrographic Organization) பின்வருமாறு வட கடல் எல்லை வரையறுக்கிறது: + +தென்மேற்குப் பகுதியில். வால்ட் கலங்கரை விளக்கம் (பிரான்ஸ், 1 ° 55'E) மற்றும் லெதர்ஸ்கோட் பாயிண்ட் (இங்கிலாந்து, 51 ° 10'N) ஆகியவற்றுடன் இணைந்த ஒரு கோடு. +வடமேற்கில். ஸ்காட்லாந்தில் டூனெட் தலையில் (3 ° 22'W) இருந்து ஹோய் தீவில் டோர் நெஸ் (58 ° 47'N) வரை இந்த தீவு வழியாக ஹேய் (58 ° 55'N) (58 ° 58'N) இந்த தீவு வழியாக கோஸ்டா ஹெட் (3 ° 14'W) மற்றும் வெஸ்ட்ரே வழியாக வெஸ்டிரேவில் உள்ள இங்கா நெஸ் (59'17'N), போ ஹெட் வரை, ) மற்றும் சீல் ஸ்கெர்ரி (வடக்கு ரொனால்ட்ஸின் வட பகுதி) மற்றும் அங்கிருந்து ஹார்ஸ் தீவு (ஷெட்லாண்ட் தீவுகளின் தென் பகுதி) ஆகிய இடங்களுக்கு முழுவதும் செல்கிறது. +வடக்கில். யெல் தீவில் யெல்லிலிருந்து க்ளூப்ஸ் நெஸ் (1 ° 04'W) மற்றும் ஸ்பூ நெஸ் வரை, கிரெலண்ட் நெஸ் (60 ° 39'N) வரை, ஷெட்லாண்ட் தீவுகளின் பிரதான நிலப்பகுதியிலிருந்து (பெத்தலாண்ட் பாயிண்ட்) (60 ° 45'N) Unst தீவில், யூன்ஸ்ட்-ஹெர்மா நெஸ் (60 ° 51'N) வழியாக, Rumblings SW புள்ளியில் மற்றும் Muckle Flugga (60 ° 51'N 0 ° 53'W) இவை அனைத்தும் வட கடல் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது; நார்வே கடலோரத்திற்கு இணையாக, 0 ° 53 'மேற்கு' 61 ° 00 'வடக்கு மற்றும் கிழக்கிற்கு இணையாக அமைந்திருக்கும் வைக்கிங் கரை முழுவதும் வட கடலில் சேர்க்கப்பட்டுள்ளது. +கோடை காலத்தில் சராசரி வெப்பம் ஆகவும் மற்றும் குளிர் காலத்தில் ஆக இருக்கும். பருவநிலை மாற்றத்தால் சராசரி வெப்பம் 1988 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகரித்துள்ளது. காற்றின் வெப்பநிலை சனவரி மாதத்தில் சராசரி என்ற இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும் மற்றும் சூலை மாதத்தில் என்ற இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும். குளிர் காலத���தில் பொதுவாக பனிப்புயல் உருவாகும். + +வட கடல் நீரில் ஒரு லிட்டருக்கு 34 முதல் 35 கிராம் வரை உப்புத்தன்மை சராசரியாக உள்ளது. நன்னீர் ஆறுகளான ரைன் மற்றும் எல்பே ஆறு முக்த்துவாரங்கள் கடலில் கலக்கும் இடத்தில் உப்புத்தன்மை மிக அதிகமான மாறுபாடு கொண்டிருக்கிறது, மேலும் பால்டிக் கடல் சங்கமிக்கும் இடம் மற்றும் நார்வே கடற்க்கரை ஓரங்களிலும் உப்புத்தன்மை மாறும். + +வட கடலில் நீரின் ஓட்டம் விளிம்புகளில் இடஞ்சுழி சுழற்சி ஆகும். +வட கடல் என்பது அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் ஒரு அங்கமாகும் மேலும் அதன் நீரின் ஓட்டம் வடமேற்குத் திசையில் இருந்து ஆரம்பமாகிறது மற்றும் ஆங்கிலம் கால்வாயின் சிறிய வெதுவெதுப்பான நீரின் ஓட்டத்தின் ஒரு சிறிய பகுதி நார்வே கடலோரப் பகுதிகளிலிருந்து இந்த நீரோட்டங்கள் நீண்டு செல்கின்றன. மேற்பரப்பு மற்றும் ஆழமான நீரோட்டங்கள் வெவ்வேறு திசைகளில் நகரலாம். குறைந்த உப்புத்தன்மை மேற்பரப்பு கொண்ட கடல் நீர், மற்றும் ஆழமான, அடர்த்தி உயர் உப்புநீரை கொண்ட கடற்பகுதியில் நீரோட்டம் கரையோரமாக நகரும். + +வட கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளானது பனிக்கட்டி காலங்களில் பனிப்பாறைகளால் உருவானதாகும். தெற்குப்பகுதி முழுவதும் கரையோரப் பகுதிகள் உறைபனி படிந்து மூடப்பட்டுள்ளது. நார்வேயின் மலைப்பகுதிகள் கடலில் ஆழத்தில் மூழ்கி பல தீவுகளையும் மற்றும் தீவுக்கூட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது. கிழக்கு உம்ஸ்காட்டிஷ் கடற்கரையானது நார்வேயின் கடற்கரையை விட கடுமை குறைவாக இருந்தாலும் இதேபோன்றது. இங்கிலாந்தின் வடகிழக்கில் இருந்து, பாறைக் கோடுகள் குறைவாக மாறி, குறைவான தடுப்பு பனிகுவியல்களை உருவாக்குகின்றன, அவை மிகவும் எளிதில் அழிக்கப்படுகின்றன, இதனால் கடலோரங்கள் மேலும் வட்டவடிவமாக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் கிழக்கு ஆங்க்லியாவில் கடற்கரையிம் அடர்த்தி குறைவாகவும் சதுப்பு நிலமாகவும் உள்ளது. கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு தெற்கே (வாடென் கடல்) ஆகியவை கடற்கரைப்பகுதிகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக பெல்ஜியம் மற்றும் டென்மார்க் ஆகிய இடங்களில் நீண்ட கடற்கரையோரமாக உள்ளன. + + + + +சுள்ளியாறு + +சுள்ளியாறு காயத்ரிப்புழாவின் ��ுணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா, கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறு ஆகும். + + + + + +அயர்லாந்து குடியரசு + +அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து ("Ireland", ஐரிஷ்: "Éire") என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் "கோர்க் (Cork)" ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம். + +அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரிஷ் கடல் அமைந்துள்ளது. + +அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும். + + + + + +ஏழு கொடுமுடிகள் + +ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள மிக உயரமான கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும். இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு ("Richard Bass") என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார். இந்தியர்களான மல்லி மஸ்தான் பாபு மற்றும் டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள் ஏழு கொடி முடிகளில் ஏறி சாதனை செய்துள்ளனர். + + + + + + +ஊர்மிளா + +ஊர்மிளா இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர். + +மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. + +மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா. + + + + +சத்துருக்கன் + +இராமாயணக்கதையின் படி சத்துருக்கன் அல்லது சத்துருக்கனன் இராமரின் தம்பி. இவரும் இலக்குவனும் இரட்டையர்கள். இவரும் இலக்குவனும் தசரதருக்கும் சுமித்திரைக்கும் பிறந்தவர்களாவர். இலக்குவன் இராமனுக்கு நெருக்கமாக இருந்ததைப் போலவே சத்துருக்கன் பரதனுடன் நெருக்கமாக இருந்தான். சுருதகீர்த்தி இவனது மனைவி. + +சத்துருக்கனனுக்கு கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பாயம்மல் என்னுமிடத்தில் சத்துருக்கன் கோயில் ஒன்று உள்ளது. + + + + +பழனி (2008 திரைப்படம்) + +பழனி, பேரரசு இயக்கத்தில் பரத் முன்னணி பாத்திரம் ஏற்று நடிக்க ஜனவரி 14, 2008 அன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இப்படத்தை தாயா���ித்துள்ளார். படத்துக்கான இசை சிறிகாந்த் தேவா வழங்கியுள்ளார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளதோடு குஷ்பூ கதாநாயகனின் அக்காவாக நடித்துள்ளார். படம் ஜனவரி 10 வெளியிட்டு வைக்கபட்டது ஜனவரி 14, 2008 முதல் திரையரங்குகளில் காட்சிக்கு விடப்பட்டது. + +தனது தாய் நலமாக வாழ்வதற்காக கொலை செய்துவிட்டு சிறுவயதிலேயே சிறைச்சாலை செல்லும் பழனி (பரத்) விடுதலையாகி வெளியே வந்தவுடன் தனது சகோதரியின்(குஷ்பு) வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதையின் மையப் பொருள். இதன் போது செய்யப்படும் சில கொலைகள் காரணமாக மீண்டும் பழனி சிறைக்குச் செல்கிறார். + + + + + + +ஏமாற்றம் (திரைப்படம்) + +ஏமாற்றம் 1995-இல் வெளிவந்த கனடாவின் இரண்டாவது தமிழ்த்திரைப்படம். முதலாவது திரைப்படத்தைத் தயாரித்த ஏ.முருகு என்பவரே இத்திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். + +கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில் நுட்பப் பொறுப்புக்களையும் ஏற்றதோடு நடித்துமிருந்தார். + +மஞ்சுளா, மாலா, பிரசாந்த், சர்மா என்பவர்கள் இவருடன் கூட நடித்தார்கள். + +இணைக்கமரா என்று வரதன் குறிப்பிடப்பட்டிருந்தார். + + + + +அன்பு ஊற்று + +1992ல் வெளிவந்த கனடாவின் முதல் தமிழ்த்திரைப்படம். ஏ.முருகு என்பவர் கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றதோடு தயாரித்து இருந்தார். + +ஜே.ஜே.எம்.ராஜா, செல்வம், சிவகுமார், ஜசிந்தா சிவகுமார், ஆனந்தன் ஆகியோர் நடித்திருந்தார்கள் + + + + +நஞ்சு + +உயிரியலைப் பொறுத்தவரை, நஞ்சு என்பது, உயிரினங்களுக்கு கெடுதியை அல்லது நலக்குறைவை அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும். ஓர் உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும்போது, மூலக்கூற்று மட்டத்தில் நிகழும் வேதியியல் தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான கேடுகள் ஏற்படுகின்றன. நச்சியலின் (toxicology) தந்தை எனப்படுகின்ற பராசெலசு (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில்தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சாகும்" என்னும் பொது வழக்கு சொல்வதையும் ஏறத்தாழ இதே பொருளைத்தான் உணர்த்துகின்றது. + +மருத்துவத் துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நச்சுப்பொருள் (toxin), பாம்புக்கடி போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு (venom) என்பவை பொதுவான நஞ்சு (poison) என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. + +நச்சுப் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகவும், களைக்கொல்லிகள் ஆகவும் பயன்படுத்தப்படுவதுடன், கட்டிடப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும் பயன்படுகின்றன. பொதுவாக இத்தகைய பயன்பாடுகளில், மனிதரைப் பாதிக்காத நஞ்சுகளே விரும்பப்படுகின்றன. + +மனித வரலாற்றில், கொலை, தற்கொலை, மரண தண்டனை போன்றவற்றுக்கு நஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. + + + + +வசந்த கானம் + +வசந்த கானம், கனேடியக் கலைஞர்களால் கனடாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். + +இத்திரைப்படத்தில், எஸ்.ராகுலன், ஏ.பிரேமினி, சுரேஷ் அச்சுதன், சுப்புலட்சுமி காசிநாதன், திருநாவுக்கரசு, பவானி திருநாவுக்கரசு, சித்திரா பீலிக்ஸ், அன்ரன் பீலிக்ஸ், எஸ். ஆர்.காசிநாதன், குணா செல்லையா ஆகியோர் நடித்தார்கள். + +திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆகிய முக்கிய பொறுப்புக்களை தயாரிப்பாளரான டொக்டர் விக்டர் ஜோன் பிகராடோ அவர்களே ஏற்றுக்கொண்டார். படப்பிடிப்பை ரவி அச்சுதன் கவனித்தார். + + + + +பென்னகர் + +பென்னகர் ("Pennagar"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி வட்டத்தில், வல்லம் ஒன்றியத்தின் கீழுள்ள ஊராட்சி ஆகும். + +இது செஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் இருக்கிறது. + + + + + + + +அனுசுக்கா செட்டி + +அனுஷ்கா ஷெட்டி ( ஸ்வீட்டி ஷெட்டி, பிறப்பு: நவம்பர் 7, 1981 ) இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது. + +2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். + +துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெறிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. + +அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது, மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார். + +அனுஷ்கா ஷெட்டி 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார்.. +இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா, இல்லத்தரசி.. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்கிறார்கள்.. மூத்தவர் சாய் ரமேஷ் ஷெட்டி.. ஒரு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுனர்.. இளையவர் குணா ரஞ்சன் ஷெட்டி.. + +திராவிட கிளை மொழியான துளு-ஐ தாய் மொழியாக்கொண்டவர்கள்.. தற்போது பெங்களூரில் வசிக்கின்றனர்.. இவர்களுக்கு சொந்தமான ஓர் உணவகம் பெங்களூர் நகரில் உள்ளது.. + +அனுஷ்கா பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் பள்ளியில் கல்வி பயின்றார். பின் கணிணி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.. +தான் கல்வி பயின்ற பள்ளியிலேயே ஓராண்டு பூகோள ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார்... + +தனது தந்தையின் வற்புருத்தலின் பேரில், விடுமுறைக்கால யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டவர், யோக முறைகளினால் கவரப்பட்டு முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை எடுத்துக்கொண்டார்.. +பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார். + +இவரது யோகா குரு பரத் தாகூரின் மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்தது.. ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத அனுஷ்கா வந்த வாய்புகளை தட்டிக்கழித்தார்.. + +பின் தனது குரு பரத் த��கூரின் அறிவுரையின் பேரில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜகன்நாத்தை மும்பையில் சந்தித்து அவர் கேட்டுக்கொண்டதற்காக ஹைதராபாத்திற்குச்சென்று புகைப்பட ஒத்திகையில் கலந்துக்கொண்டார்.. + +அதில் தேர்வு செய்யப்பட்ட அனுஷ்கா, 2005-ம் ஆண்டு தனது முதல் திரைப்படமாக பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார்.. இத்திரைப்படம் 2005 ஜூலை மாதத்தில் வெளியானது.. இத்திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல துவக்கத்தை அனுஷ்காவிற்கு கொடுத்தது.. + +அதே ஆண்டில் அனுஷ்கா நடித்த இரண்டாவது திரைப்படம் மகாநந்தி வெளியானது.. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது.. இருப்பினும் அனுஷ்காவிற்கு நடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் கிடைத்தது.. + +2006-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியானது.. +முதலாவது, தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர், திரு.ராஜ மெளலியின் இயக்கத்தில், ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த விக்ரமார்க்கடு.. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது.. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா ஒரு கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார்.. நடிப்புத்திறனை வெளிக்காட்டும் அளவிற்கு அழுத்தமான கதாபாத்திரமாக இத்திரைப்படம் அமையவில்லை.. +இரண்டாவதாக அஸ்திரம் திரைப்படம் வெளியானது.. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது.. மூன்றாவதாக, சி.சுந்தர் இயக்கத்தில், மாதவனுடன் இணைந்து நடித்த ரெண்டு எனும் தமிழ் திரைப்படம் வெளியானது.. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா முழுவதும் கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார்.. குறிப்பாக பாடல் காட்சிகள், ( மொபைலா, யாரோ எவரோ ) அனுஷ்காவின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டவே எடுக்கப்பட்டதாக இருந்தது.. எனினும், இத்திரைப்படம் இளைஞர்களை கவர்ந்த அளவிற்கு மற்றவர்களை கவரவில்லை.. நான்காவதாக, ஸ்டாலின் திரைப்படத்தில் கெளரவ வேடம்.. + +2007-ம் ஆண்டில் அனுஷ்காவின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது.. முதலாவது லக்ஷ்யம், இரண்டாவது ராகவா லாரன்ஸின் டான் திரைப்படம்.. லக்ஷ்யம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றித்திரைப்படமானது.. +டான் மசாலா திரைப்படமாகவே அமைந்தது.. இந்த இரு படங்களிலும் அனுஷ்கா கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார��.. + +2008-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த ஆறு திரைப்படங்கள் வெளியானது.. +முதலாவது, ஒக்கமகடு.. நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்தது.. இரண்டாவது, ஜகபதி பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்வாகதம்.. மூன்றாவது ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த பாலதூர்.. நான்காவது கோபி சாந்துடன் இணைந்து நடித்த செளரியம்.. ஐந்தாவது சிந்தகாயல்யா.. ஆறாவது, கெளரவ தோற்றத்தில் கிங் திரைப்படம்.. இந்த ஆறு திரைப்படங்களில் செளரியம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது. மற்ற திரைப்படங்கள் சராசரியாகவே இருந்தது.. இந்த திரைப்படங்கள் எதிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இல்லாமல் சராசரி நாயகியாகவே அனுஷ்கா வந்துச்சென்றார்.. + +2009-ம் ஆண்டு அனுஷ்கா நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியானது.. +முதலாவது, மூன்று ஆண்டு தயாரிப்பில் எடுக்கப்பட்ட அருந்ததி திரைப்படம்.. ( தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது ).. +இந்த திரைப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.. இரு வேடங்களும் அழுத்தமான கதாபாத்திரங்கள்.. அவருடைய முழு நடிப்புத்திறனையும் வெளிக்காட்டும்படியாக அமைந்தன.. குறிப்பாக முரசு நடன பாடல் காட்சி.. ஒரு மாதகாலம் படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்டது.. இந்த பாடல் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.. மேலும், இத்திரைப்படத்தின் கதையாக்கம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்ததால் பட்டிதொட்டியெங்கும் சிறப்பான ஒரு வெற்றியை பெற்றது.. பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வசூல் செய்தது. +சுமார் 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 73 கோடிகளை வசூலித்தது.. இந்த திரைப்படம் வெளியான பின் அனுஷ்காவின் பெயர் மாறி அருந்ததி என்றே அழைக்கப்பட்டார்.. தெலுங்கு திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை இத்திரைப்படம் பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நந்தி விருதையும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றுத்தந்தது.. அனுஷ்காவின் திரை வாழ்வில் முதல் மைல் கல்லாக அமைந்த திரைப்படம்.. + +இரண்டாவதாக வெளியான பில்லா திரைப்படம்.. இது தமிழில் 1980-ல் ரஜினிகாந்த் நடித்ததும், 2007-ல் அஜீத்குமார் நடிப்பில் மீண்டும் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் தெலுங்கு மறு உருவாக்கம்.. இந்த திரைப்படத்தில் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபாஸ்ஸுடன் இணைந்து நடித்திருந்தார்.. மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூல் செய்தது.. இந்த திரைப்படத்தில், தனது தங்கையைக்கொன்ற ஒரு கொடூரமான கொலை மற்றும் கொள்ளைக்காரனை பழிவாங்க முற்படும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா தனது நடிப்பை வெறிப்படுத்தினார்.. கவர்ச்சியான கதாநாயகி பாத்திரமாக இருப்பினும், அனுஷ்காவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது இந்த திரைப்படம்.. + +மூன்றாவதாக, தமிழில் வெளியான வேட்டைக்காரன்.. விஜய்யுடன் இணைந்து நடித்தது.. இத்திரைப்படம் விஜய் பார்முலா படம் என்பதால் அதில் கதாநாயகிக்கு என்ன பங்கு உண்டோ அதை அனுஷ்கா சிறப்பாக செய்திருந்தார்.. குறிப்பாக, “கரிகாலன்” மற்றும் “என் உச்சி மண்டையிலே” பாடல் காட்சிகளில் விஜய் மற்றும் அனுஷ்காவின் நடிப்பும், நடனமும் குறிப்பிடும்படியாக இருந்தது.. இந்த திரைப்படம், அனுஷ்காவிற்கு தமிழில் மறுபிரவேசம் செய்ய உதவியாக இருந்தது.. + +2010-ல் எட்டு திரைப்படங்கள் அனுஷ்காவின் நடிப்பில் வெளியானது.. +முதலாவது சிங்கம்-1, நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தது.. இது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.. பாடல்கள் மற்றும் பாடல் காட்சிகள் சிறியவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு விருந்து படைத்தது.. +குறிப்பாக “என் இதயம்”, “ காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே ”, “ She stolen my heart ” ஆகிய மூன்று பாடல்களும் ஒலிக்காத இடமே இல்லை.. மேலும், பாக்ஸ் ஆபீசிலும் சாதனை படைத்தது.. 18 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 79 கோடிகளை வசூலித்தது.. + +இரண்டாவதாக கிரிஸ் இயக்கத்தில் வெளியான வேதம் திரைப்படம்.. +இந்த திரைப்படம் ஐந்து கிளைக்கதைகளைக்கொண்டிருந்தாலும், அனுஷ்கா ஏற்று நடித்த விலைமாது கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததுடன் அனுஷ்காவிற்கு, அருந்ததி திரைப்படத்திற்கு கிடைத்தது போன்றே பாராட்டும், நற்பெயரும், விருதுகளும் கிடைத்தது.. திரைப்படமும் வெற்றி பெற்றதுடன், பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலைக்கொடுத்தது.. 14 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 25 கோடியை வசூலித்தது.. அனுஷ்காவின் திரை வாழ்வில் இரண்டாவது மைல் கல்லாக அமைந்த திரைப்படம்.. + +மூன்றாவதாக வெளியான பஞ்சாக்ஸ்ரி திரைப்படம்.. இதில் மீண்டும் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார்.. பெண்ணை மையப்படுத்திய ஒரு குடும்ப சித்திரம்.. தெலுங்கு ரசிகர்களுக்���ு மிகவும் பிடித்துப்போனது.. + +நான்காவதாக, மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த கேலிஜா திரைப்படம்.. அனுஷ்கா இந்த திரைப்படத்தில் வழக்கமான நாயகியாகவே வந்துச்சென்றார்.. சராசரியாக அமைந்த திரைப்படம்.. + +ஐந்தாவதாக நாகவல்லி திரைப்படம்.. தமிழில் ரஜினி நடித்து பெறிய வெற்றியை பெற்ற திரைப்படத்தின் தெலுங்கு மறுஉருவாக்கம்.. ரஜினியின் பாத்திரத்தை தகுபதி வெங்கடேஷூம், ஜோதிகாவின் பாத்திரத்தை அனுஷ்காவும் செய்திருந்தனர்.. இத்திரைப்படம் ஒரு வெற்றித்திரைப்படமாகவும், பாக்ஸ் ஆபீஸில் சராசரி வசூலையும் கொடுத்தது.. ஆறாவதாக, கிங் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த ரகதா திரைப்படம்.. மாமூல் மசாலா.. நாயகிக்கு உண்டான பாத்திரத்தை அனுஷ்கா நன்றாக செய்திருந்தார்.. மற்ற இரண்டு திரைப்படங்கள், கேடி மற்றும் தகிட தகிட சிறப்புத்தோற்றம்.. + +2011-ம் வருடம் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியானது.. +முதலாவது கிரிஸ் இயக்கத்தில் வெளியான வானம் திரைப்படம்.. இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வேதம் திரைப்படத்தின் தமிழ் உருவாக்கம்.. தெலுங்கு படத்தில் நடித்தவர்களே பெரும்பாலோர் இத்திரைப்படத்திலும் நடித்தனர்.. தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த பாத்திரத்தை தமிழில் சிலம்பரசன் செய்திருந்தார்.. +தெலுங்கைப்போன்றே தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நற்பெயரையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது.. + +இரண்டாவதாக, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் திரைப்படம்.. நடிகர் விக்ரம் இத்திரைப்படத்தில் மனவளர்ச்சிகுன்றிய ஒரு தகப்பனாக, தன் மகளின் வளர்ப்பு உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடும் பாத்திரத்தில் நடித்திருந்தார்.. அனுஷ்கா வழக்குரைஞர் பாத்திரத்தில், தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.. இத்திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்ததுடன், இதில் நடித்த அனைவருக்கும் நற்பெயரையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது.. இத்திரைப்படத்தில் வரும் “விழிகளில் ஒரு வானவில்” எனும் பாடல் காட்சியில் அனுஷ்கா ஒரு தேவதையாகவே காட்சிப்படுத்தப்பட்டார்.. 20 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 45 கோடிகளை வசூலித்தது.. பின்னர் இத்திரைப்படம் தெலுங்கிலும், மளையாளத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.. இத்திரைப்படம் அனுஷ்காவிற்கு, அதிக அளவில் மளையாள மொழி ரசிகர்களை பெற்றுத்தந்தது.. மேலும், அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாகவும் அமைந்தது.. + +2012-ம் ஆண்டில் அனுஷ்காவின் மூன்று திரைப்படங்கள் வெளியானது.. +முதலாவது, சகுனி திரைப்படத்தில் சிறப்புத்தோற்றம்.. இரண்டாவதாக, +ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தாண்டவம் திரைப்படம்.. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அனுஷ்காவின் இரண்டாவது திரைப்படம்.. +நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமும் கூட.. அனுஷ்காவிற்கு ஒரு சிறப்பான இடத்தை ரசிகர்கள் மனதில் உண்டாக்கிய திரைப்படம்.. திரைக்கதை மற்றும் பாடல் காட்சிகளில் அனுஷ்காவை ஒரு புதிய பரிமாணத்தில் தோன்றச்செய்தது.. இந்த திரைப்படத்தில் வரும், “அநிச்சம் பூவழகி”, “ அதிகாலை பூக்கள் ”. “ஒரு பாதி கதவு நீயடி”, +“உயிரின் உயிரே” ஆகிய நான்கு பாடல் காட்சிகள் மூலம், அனுஷ்கா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சராசரியாகவே இருந்தது. காரணம், இத்திரைப்படத்தில் அனுஷ்கா குண்டு வெடிப்பில் பலியாவதாக சித்தரிக்கப்பட்டதால், மறுமுறை பார்க்கும் ரசிகர்களை இந்த திரைப்படம் இழந்தது.. இருப்பினும் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாக அமைந்தது.. + +மூன்றாவதாக, நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த மாயாஜால திரைப்படம் தமார்க்கும்.. வழக்கமான மசாலாவுடன் மாயாஜாலத்தையும் சேர்த்து எடுத்திருந்தார்கள்.. அனுஷ்காவிற்கு நடிப்பதற்கான வாய்புகள் இல்லாமல் சராசரியாகவே அமைந்தது.. இருப்பினும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றது.. 48 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.. + +2013-ம் ஆண்டில் அனுஷ்காவின் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியானது.. முதலாவது, கார்த்தியுடன் நடித்த அலெக்ஸ் பாண்டியன்.. +மாமூல் மசாலா.. இது ஒரு தோல்விப்படமானது.. +இரண்டாவது, நடிகர் பிரபாஸூடன் இணைந்து நடித்த மிர்ச்சி திரைப்படம்.. +மசாலா திரைப்படமாகவும், குடும்பச்சித்திரமாகவும் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைக்கொடுத்தது.. இத்திரைப்படத்தில், அனுஷ்கா வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில், படித்துவிட்டு கிராமத்தில் சுட்டித்தனம் செய்துக்கொண்டிருக்கும் ஒரு இளமங்கையாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.. இத்திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதாக இருந்தது.. குறிப்பாக “ பண்டகதா ”, +“ ஏதோதோ பாகுந்தி ”, “டார்லிங்கே”.. அகிய பாடல் காட்சிகள்.. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது.. 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 90 கோடிகளை வசூலித்தது.. இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாகவும் அமைந்தது.. + +மூன்றாவது திரைப்படம், ஹரி இயக்கத்தில் முன்பே வெளியான சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.. சிங்கம் திரைப்படம் போன்றே மசாலா திரைப்படம்.. அனுஷ்கா நன்றாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.. +“ சிங்கம் டான்ஸ் ” மற்றும் “ வச்சுக்கவா ” ஆகிய இரண்டு பாடல் காட்சிகளில் மட்டும் சூர்யாவுடன் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை கொடுத்தது.. சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 122 கோடிகளை வசூலித்தது.. + +நான்காவது, வர்ணஜால இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கப்பட்ட, இரண்டாம் உலகம் திரைப்படம்.. அனுஷ்கா மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.. முதலாவது பாத்திரம், சென்னைப்பட்டிணத்தில் ஒரு மருத்துவராகவும், இரண்டாவது பாத்திரம்.. இணை உலகத்தில் வர்ணா என்கிற பழங்குடி இனத்துப்பெண்ணாகவும் நடித்திருந்தார்.. இரண்டு கதாபாத்திரங்களுமே அனுஷ்காவிற்கு சவாலான பாத்திரங்களாக இருந்தது.. இரண்டையும் சிறப்பாக செய்திருந்தார்.. இத் திரைப்படத்தில் வரும் “ ஒரு காதல் தீ ”, “ கனிமொழியே ”, “ கள்ளா விஷமுள்ளா ”, “ என் மன்னவனே ” ஆகிய நான்கு பாடல்களும், பாடல்களை காட்சிப்படுத்திய விதமும் அருமையாக இருந்தது. அனுஷ்கா, இத்திரைப்படத்திற்காக வால் பயிற்சியை எடுத்துக்கொண்டு, சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார்.. மேலும், இத்திரைப்படத்தில் அனுஷ்காதான் ஹீரோ என்று தன்னுடன் நடித்த ஆர்யாவால் புகழப்பட்டார்.. இத்திரைப்படம் வர்த்தக ரீதியில் சராசரியாகத்தான் இருந்தது என்றாலும், அனுஷ்காவின் திரை வாழ்வில் மூன்றாவது மைல் கல்லாக அமைந்தது.. + +2014-ம் வருடம் அனுஷ்காவின் நடிப்பில் ஒரே திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினியுடன் நடித்தது.. வழக்கமான ரஜினி திரைப்படம்.. இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள்.. தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை நன்றாக செய்திருந்தார்.. குறிப்பாக “ மோனோ கஸோலினா ” பாடல் காட்சி சிறப்பாக அமைந்தது.. + +2015-ம் வருடம் அனுஷ்காவின் திரை வாழ்வில் ஒரு சாதனை ஆண்டாக அமைந்தது.. மொத்தம் நான்கு திரைப்படங்கள் வெளியானது.. முதலாவது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம்.. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா, முதன் முறையாக அஜீத்துடன் இணை சேர்ந்து நடித்திருந்தார்.. இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள்.. இரண்டு பேருக்கும் நடிப்பதற்கு சமமான வாய்புகள் வழங்கப்பட்டிருந்தது.. தனக்கு வழங்கப்பட்ட தேன் மொழி கதாபாத்திரத்தில், ஒரு இயல்பான நடிப்பை, மிகையில்லாமல் சிறப்பாக செய்திருந்தார்.. திரைப்படம் பார்க்கும் போது, அவர் நம்முடன் வாழ்வதாகவே ஒரு உணர்வு ஏற்படுத்தியது.. இத்திரைப்படத்தில் அனுஷ்காவின் கண்களும், முக பாவனைகளும், உடல் மொழியும் ஓராயிரம் கதைகள் பேசின.. +ஒரு மார்டன் பெண்ணாக “அம்மம் மரகதம்” பாடலிலும், ஒரு தோழியாக “இதயத்தில் ஏதோ ஒன்று” பாடலிலும், அனுஷ்காவின் நடிப்பு அசத்தலாக இருந்தது.. இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது.. சுமார் 50 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூலித்தது.. மேலும், இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாக அமைந்தது.. + +இரண்டாவதாக, சுமார் இரண்டு வருட கடின உழைப்பில் வெளியான வெற்றி இயக்குநர் ராஜ மெளலியின் “பாகுபலி-துவக்கம்” திரைப்படம்.. +இந்திய திரைப்பட வரலாற்றில் ஓர் புதிய சகாப்தத்தையும், சாதனையையும் உண்டாக்கிய திரைப்படம்.. உலக அளவில் பாராட்டுதல்களைப்பெற்றது.. இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தமது பாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தார்கள்.. +அனுஷ்காவும் தனக்கு வழங்கப்பட்ட அடிமை பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்திருந்தார்.. ஆனால், அனுஷ்காவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த ஒரு திரைப்படமாக இருந்தது.. காரணம் திரைப்படம் முழுவதும் தங்களுக்கு அபிமானமான ஒருவர் அடிமையாக சித்தரிக்கப்பட்டதை ஏற்கமுடியவில்லை.. மற்றபடி, இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைத்தது. 120 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.. + +மூன்றாவதாக வெளியான ருத்திரமாதேவி.. கலைத்திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கும் குணசேகரின் வாழ்நாள் கனவுத்திரைப்படம்.. அனுஷ்காவின் மூன்று வருட கடின உழைப்பில் வெளியானது.. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை.. மாறாக, ருத்திரமாதேவியாகவே வாழ்ந்திருந்தார்.. இந்த திரைப்படத்தில் வரும், “பெளர்னமி பூவே”, “உன்னால், உன் முன்னால்”, “அந்தப்புரத்தில்” ஆகிய மூன்று மெலடி பாடல்களும், பாடல்களை காட்சிப்படுத்திய விதமும் ஒரு கலைக்காவியமாகவே இருந்தது.. இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் நான்காவது மைல் கல்லாக அமைந்தது.. என்றாலும் பாக்ஸ் ஆபீசில் சாதனை நிகழ்த்தவில்லை.. சுமார் 80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், முதல் நாள் மட்டும் 32 கோடிகளை வசூலித்து ஒரு புதிய சாதனை படைத்தது என்றாலும், பின்னர் படிப்படியாக வசூல் குறைந்தது.. காரணம், ரசிகர்கள் பாகுபலி திரைப்படத்துடன் இந்த திரைப்படத்தை ஒப்பிட்டு பார்த்ததே.. பாகுபலி திரைப்படத்திற்கு முன்பே இந்த திரைப்படம் வெளியாகியிருந்தால் வசூலிலும் பெரிய சாதனை படைத்திருக்கும்.. எனினும், இறுதியாக சுமார் 86 கோடிகளை இந்த திரைப்படம் வசூலித்தது..( உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 110 கோடி வசூல் )சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு + +நான்காவதாக, தமிழில்- “ இஞ்சி இடுப்பழகி ” என்றும், தெலுங்கில் – +“ சைஸ் ஸீரோ ” என்றும் வெளியான திரைப்படம்.. இந்திய திரைப்பட வரலாற்றில், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காகவே சுமார் 18 கிலே உடல் எடையைக்கூட்டி நடித்த நடிகை அனுஷ்கா ஒருவர்தான்.. வேறு யாரும் இதுவரை செய்ததில்லை.. இனியும் செய்யப்போவதில்லை.. +ஒருவர் நிஜ வாழ்வில் எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாரோ அத்தனை உணர்ச்சிகளையும் அனுஷ்கா இந்த ஒரு திரைப்படத்தில் வெளிக்காட்டி நடித்திருந்தார்.. வேறு ஒருவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சாதனையை, இந்த திரைப்படத்தின் மூலம் அனுஷ்கா செய்துள்ளார்.. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் ஒரு வெற்றித்திரைப்படமாக அமைந்துள்ளது.. சுமார் 10 கொடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 45 கோடிகளை வசூலித்துள்ளது.. +இந்த திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் ஐந்தாவது மைல் கல்லாக அமைந்தது.. + +2016-ம் ஆண்டு இறுதியில், இவர் நடித்த இரண்டு படங்கள் திரையிடுவதாக இருந்தது. எதிர்பாராத சில நிகழ்வுகளால், திரையிடுவது தள்ளிப்போடப்பட்டது. + + 2017-ம் ஆண்டு இவர் நடித்த திரைப்படம், இந்திய திரைப்பட வரலாற்றில் ஓர் புதிய சாதனையை நிகழ்த்தும் வண்ணம் அமைந்தது. இந்த ஆண்டில், இவரது நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகிது. + +ஆண்டு துவக்கத்தில், அடுத்தடுத்து வெளியான இரண்டு திரைப்படங்கள்.. முதலாவது, ஹரி இயக்கத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்த சிங்கம் வரிசை திரைப்படங்களில் மூன்றாவது படம் – சிங்கம் 3. முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக வரும் கதையமைப்பு. விருவிருப்பான திரைப்படம். கதாநாயகன் சூரியாவிற்கு, மனைவி பாத்திரம். திரைப்படம் முழுவதும், அவ்வப்போது வந்து செல்லும் பாத்திரம். ஆங்காங்கே பாசம், நேசம், பரிவு, காதல், சோகம் போன்ற உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தினார். குறிப்பாக, முதல் முறையாக எனும் பாடல் காட்சியில், தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்தது. பாக்ஸ் ஆபீஸிலும், இத்திரைப்படம் ஒரு வெற்றித்திரைப்படமாக அமைந்தது. சுமார் 80 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், சுமார் 130 கோடிகள் வரை வசூலித்தது. + + இரண்டாவது, ஓம் நமோ வெங்கடேசாய எனும் தெலுங்கு மொழித் திரைப்படம். பின்னர் தமிழ் மொழியில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை, பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார். வெங்கடேச பெருமாளை, மானசீகமாக விரும்பும் முதிர் கன்னி வேடத்தில் நடித்திருந்தார். பாத்திர அமைப்பில் இவர் ஒரு பெண் துறவியாகவும், பாடல் காட்சிகளில் இவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவை, இவரை ஒரு பெண் தெய்வமாகவும் தோன்றச்செய்தது. இத்திரைப்படமும், இவரது திரை வாழ்கையில் ஒரு குறிப்பிடும்படியான இடத்தை கொடுத்துள்ளது. + +மூன்றாவது, பாகுபலி -2 திரைப்படம். பாகுபலி முதல் பாகத்தில், வயதான ஒரு அடிமைப்பெண் வேடத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர், இந்த திரைப்படத்தில், மூன்று கால கட்டங்களை தன்னுடைய நடிப்பால் மட்டுமல்ல, உடல் அளவிலும் முழுமையான மாற்றங்களை வெளிப்படுத்தி இருந்தார். முதலாவது, இளவரசியாக ஒரு தோற்றம்.. நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த தோற்றம்..அதில் துடிப்பான ஒரு இளவரசியாக சண்டைக்காட்சிகளிலும், அழகு மங்கையாக பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்... குறிப்பாக, கண்ணா நீ தூங்கடா... பாடல் காட்சியில், தனது காதலை மிக அழகாக ஒரு நாட்டிய மங்கையின் அபிநய நளினங்களுடன் வெளிப்படுத்தினார். இரண்டாவது, கர்பிணிப்பெண்ணாக ஒரு தோற்றம்... இந்த தோற்றத்தில் ஓர் கர்பிணிப்பெண்ணுக்கு ஏற்படும் முக மற்றும் உடல் மாற்றங்களை அப்படியே தன்னுடைய முகத்திலும், உடலிலும் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார்... மூன்றாவது, வயதான தாய் வேடம்... இதில் அடிமையாக, தான் அனுபவிக்கும் சித்திரவதைகளையும், தன்னுடைய கோபத்தையும், தாயாக மகன் மீது காட்டும் பாசத்தையும் நன்கு வேறுபடுத்தி, தன் திறமையை நிரூபித்திருக்கிறார்... இந்த திரைப்படத்தில் இவர் நடித்தார் என்பதை விட, திரைப்பாத்திரமாகவே வாழ்ந்தார் என்பதே சரி... இந்த திரைப்படம், இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும், சுமார் 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, சுமார் 1700 கோடிகள் வரை வசூலித்தது. இந்திய திரைப்படம் ஒன்று, இத்தனை கோடிகளை வசூலிப்பது இதுவே முதன் முறையாகும். இந்த திரைப்படமும், இவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. + +Head and Shoulders, Colgate Active Salt , Intex smart phones, சென்னை சில்க்ஸ், பாண்டிச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லர்ஸ் மற்றும் சில்வர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுஷ்கா விளம்பர தூதுவராகவும் செயல்பட்டிருக்கிறார்.. + +TeachAIDS-எனப்படும் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப்பணிகளிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.. + +2014-ம் வருடம், ஆந்திராவில் வீசிய “ஹூட் ஹூட்” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக தன்னுடைய திரைப்படக்குழுவினருடன் பல நிகழ்ச்சிகள் நடத்தி, கணிசமான நிதியை அரசிடம் ஒப்படைத்தார்கள்.. + +மேலும், 2015-ம் வருடத்தின் துவக்கத்தில் Meelo Evaru Koteeswaradu – +Season -2, Episode-36, 37 –ல் கலந்துக்கொண்ட, அதில் தான் வெற்றி பெற்ற பத்து லட்ச ரூபாய் பரிசுத்தொகையை, Teach for India எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க���னார்.. + +அனுஷ்காவின் பெயரில், அவரது ரசிகரும் நலவிரும்பியுமான திரு.ஹேம்சாந் என்பரால், Facebook-முகநூல் பக்கம் ஒன்று துவங்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹேம்சந்த்தாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது.. இந்த முகநூல் பக்கத்தை அனுஷ்கா 2013-ம் ஆண்டு நவம்பார் மாதம் 7-ம் தேதி தனது பிறந்த நாள் அன்று, சிறிய பெயர் மாற்றத்துடன் தனது பொருப்பில் எடுத்துக்கொண்டார்.. அப்போது வரை சுமார் பத்து லட்சம் பேர் அந்த பக்கத்தில் இணைந்திருந்தனர்.. + +அனுஷ்கா தன் முகநூல் பக்கத்தை தானே எடுத்துக்கொண்டு நிர்வகிக்க ஆரம்பித்தவுடன், லட்சக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள், தங்களை இணைத்துக்கொண்டனர்.. தற்போதுவரை அனுஷ்காவின் முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சத்தையும் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.. +தென்னிந்திய திரைப்படத்துறையில் வேறு யாருக்கும் இத்தனை எண்ணிக்கையில் முகநூல் ஆதராவாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.. + +புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளும் மற்றொரு இணையதளமான இன்ஸ்டாகிராமில் 2015-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அனுஷ்கா ஒரு கணக்கை துவங்கினார்.. அதில் தற்போது வரையில் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.. + +அனுஷ்கா எல்லோருடனும் சகஜமாக பழகும் இயல்பை கொண்டுள்ளார்.. இவரிடம் பேசிப்பழகியவர்கள், இவரது அன்பில் கட்டுண்டு இருக்க வேண்டியதுதான்.. அவருடன் ருத்திரமாதேவியில் இணையாகவும், பாகுபலி திரைப்படத்தில் எதிர் நாயகனாகவும் நடித்த ராணா, பாகுபலி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவின் போது பின் வருமாறு கூறினார்.. “அனுஷ்காவிடம் ஒரு சிறப்பு குணம் ஒன்று உள்ளது.. அது, தனது அன்பால் யாவரையும் கொலை செய்வதுதான்.. அவர் யாரிடம் பழகினாலும், தனது நற்குணங்களால் அவரை கொன்றுவிடுவார்”... + +துவக்கத்தில் அனுஷ்காவின் குணநலன்களை அறியாத செய்தி ஊடகங்கள், தங்களுடைய தவறான அனுமானத்தினால், அவருக்கு ஐந்து முறை திருமணம் நடத்தி வைத்தார்கள்.. பின்னர், அனுஷ்காவின் குணங்களை அறிந்ததும் தவறாக செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொண்டார்கள்.. + +அனுஷ்கா, தனது திருமணம் பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது.. “ திருமணம் என்பது, மிகவும் அற்புதமான ஒன்று, நான் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்ளுவேன்.. என்னுடை�� விருப்பப்டிதான் கனவரை தேர்ந்தெடுப்பேன்.. அது எப்போது நிகழும் என்பது எனக்கு தெரியவில்லை.. அதுவரையில் நல்ல நல்ல திரைக்கதைகளாக தேர்வு செய்து, அதில் நடிப்பதில் தான் எனது கவனம் முழுவதும் உள்ளது”- என்று தெரிவித்துள்ளார்.. மேலும், பிரென்ச்சு மொழி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.. காரணம் பிரென்ச்சு மொழி திரைப்படங்கள் மிகுந்த கதை அம்சமுள்ளது என்பதால்.. + + + + +திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் + +இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. + + + + + + +மஞ்சள் கடல் + +மஞ்சள் கடல் கிழக்கு சீனக்கடலின் வடபகுதியில் உள்ளது. பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள இக்கடலின் மேற்கில் சீனாவும் கிழக்கில் கொரியத் தீபகற்பமும் உள்ளன. சீனாவில் பாயும் மஞ்சள் ஆறு மஞ்சள் நிற மணலைக் கொண்டு வந்து இக்கடலில் சேர்ப்பதால் இது மஞ்சள் கடல் என அழைக்கப்படுகிறது. + + + + + +கிழக்கு சீனக்கடல் + +சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப் பகுதியையே குறிக்கும். + + + + + +தென்சீனக் கடல் + +சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக் கடல் ("South China Sea") என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப���பு உள்ளதாக நம்பப்படுகிறது. + +இந்தப் படல் பகுதியின் அமைவிடம் + + +இக்கடலில் பலநூறு சிறு தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன. +தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும் (வடக்கில் துவங்கி கடிகாரச்சுற்றில்):மக்காவு மற்றும் ஃகொங்கொங் உள்ளிட்ட சீன மக்கள் குடியரசு, சீனக் குடியரசு (தைவான்), பிலிப்பீன்சு, மலேசியா, புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் வியட்நாம். + +இந்தக் கடலில் விழும் பெரும் ஆறுகள்: பவழ ஆறு , மின் ஆறு, ஜியுலொங் ஆறு, சிவப்பு ஆறு, மேக்கொங், ரஜங் ஆறு, பகாங் ஆறு, பம்பங்கா ஆறு, மற்றும் பாசிக் ஆறு. +இந்த கடல்பகுதி உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர்ப்பகுதியாகும். உலகின் இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் கடல் வழி ஆகும். உலகின் வருடாந்திர வணிக கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 50%க்கும் மேலான எடையளவு மலாக்கா நீரிணை, சுந்தா நீரிணை மற்றும் லோம்பொக் நீரிணைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒருநாளைக்கு 1.6 மில்லியன் க.மீ (10 மில்லியன் பீப்பாய்கள்) பெட்ரோலியம் எடுத்துச் செல்லப்படுகிறது. அடிக்கடி கடற்கொள்ளை நிகழ்வுகள் பதியப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டின் நடுக்காலங்களில் இருந்ததைவிட குறைந்துள்ளது. + +இந்தப் பகுதியில் உறுதிசெய்யப்பட்ட பாறை எண்ணெய் இருப்பு ஏறத்தாழ 1.2 கன கி.மீ (7.7 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும், மொத்தம் மதிப்பிடப்பட்ட இருப்பு 4.5 கன கி.மீ (28 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும் உள்ளது. இயற்கை எரிவளி வளங்கள் மொத்தம் 7,500 கன கி.மீ (266 டிரில்லியன் கன அடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. + +பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. + +தென்சீனக் கடல் பகுதிகளின் மீது பல நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக ஆட்சிஎல்லை உரிமைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிற���ு. +சீன மக்கள் குடியரசும் (PRC) சீனக் குடியரசும் (ROC) இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த எதிர் உரிமைக்கோரல்கள் : + +சூலை 22, 2011 அன்று வியட்நாமிற்கு நட்புக்காகச் சென்றிருந்த இந்தியாவின் போக்குவரத்து போர்க்கப்பல் ஐஎன்எஸ் ஐராவத் வியட்நாம் கடலோரத்திலிருந்து 45 கடல் மைல்கள் தொலைவில் தென் சீனக்கடலில் இருக்கும்போது அனைவருக்குமான வானொலி அலையில் சீனக் கப்பற்படை தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்புகொண்டது. இந்தியப் போர்க்கப்பல் சீனாவிற்கு உரிமையுள்ள பகுதியில் பயணிப்பதாக எச்சரித்தது. இந்தியக் கப்பற்படையின் தகவலாளர்கள் ஐராவத்தின் பாதையில் எந்தவொரு கப்பலையோ வானூர்தியையோ சந்திக்கவில்லை என்றும் அது தனது திட்டமிட்ட வழியில் பயணித்தது என்றும் விளக்கமளித்தனர். " ஐஎன்எஸ் ஐராவத்தைப் பொறுத்தமட்டில் எந்தவொரு மோதலும் நிகழவில்லை. இந்தியா பன்னாட்டு கடல்களில், தென் சீனக்கடல் உட்பட, கடல்போக்குவரத்துக்கான சுதந்திரத்தையும், ஏற்கப்பட்ட பன்னாட்டு சட்ட கோட்பாடுகளின்படி பயணிப்பதற்கான உரிமையையும் ஆதரிக்கிறது. இந்தக் கொள்கைகளை அனைவரும் மதிக்க வேண்டும்." என மேலும் விளக்கினர். + +செப்டம்பர் 2011இல் சீனாவும் வியட்நாமும் தென் சீனக் கடலில் தங்கள் பிணக்குகளை குறைத்துக்கொள்ள உடன்பாடு கண்டபின்னர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஓஎன்ஜிசியின் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் "ஓஎன்ஜிசி விதேஷ்" தென் சீனக்கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய்வள ஆய்வுகள் மேற்கொள்ளவும் நில எண்ணெய்த் துறையில் நெடுநாள் கூட்டுறவிற்காகவும் "பெட்ரோவியட்நாம்" நிறுவனத்துடன் மூன்றாண்டு உடன்பாடு கண்டது. இதற்கு எதிர்வினையாக சீன அயலுறவு அமைச்சகத்தின் தகவலாளர் ஜியாங் யூ, இந்தியாவைப் பெயரிடாது, கீழ்வருமாறு கூறினார் :"தென் சீனக்கடல் மற்றும் தீவுகள் மீது சீனாவிற்கு பூசலுக்கு இடமற்ற ஆளுமை உள்ளது. சீனாவின் நிலை வரலாற்றுச் சான்றுகளின்படியும் பன்னாட்டு சட்டத்தின்படியும் ஆனது. சீனாவின் ஆளுமை உரிமைகளும் நிலைகளும் வரலாற்று நிகழ்வுகளால் ஏற்பட்டவை; இந்த நிலையை சீன அரசு பன்னெடுங்காலமாக எடுத்த��ள்ளது. இதனடிப்படையில், தென் சீனக்கடல் பகுதியில் அமைதி நிலவ நேர்மறையாக பங்கெடுக்கும் வண்ணம், ஆட்சிப்பகுதிகளைக் குறித்தும் கடல்சார் உரிமைகள் குறித்தும் உள்ள பூசல்களுக்கு அமைதியான பேச்சு வார்த்தைகள் மூலமும் நட்பான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வுகாண சீனா தயாராக உள்ளது. சீன நிலையை தொடர்புடைய நாடுகள் மதிக்கும் என்றும் ஒருதரப்பான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினையை சிக்கலாக்காதும் பெரிதுபடுத்தாதும் இருக்கும் என்றும் நம்புகிறோம். மேலும் இந்தப் பகுதியில் உள்ள நாடுகள் தங்களுக்குள் இருதரப்பு பிணக்குகளை இருதரப்பு பேச்சுக்களின் மூலம் தீர்த்துக்கொள்ள பிற நாடுகள் ஆதரவளிக்கும் என நம்புகிறோம். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளைப் பொறுத்தவரை எங்களது தொடர்ந்தநிலை சீனாவின் எல்லைக்குள் உள்ள கடல்களில் எந்த நாடும் ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ளுவதை எதிர்க்கிறோம் என்பதாகும். வெளி நாடுகள் இந்த தென் சீனக்கடல் பிணக்குகளில் இணைந்து கொள்ளாது என்றும் நம்புகிறோம்.” இந்திய அரசின் அயலுறவு அமைச்சக தகவலாளர் இதற்கு பதிலளிக்கையில் “சீனர்களுக்கு இதில் கவலை இருந்தாலும் நாங்கள் வியட்நாம் அதிகாரிகளின் கூற்றுப்படி செயல்படுகிறோம்; இதனை சீன அரசிற்கும் தெரிவித்து விட்டோம்.” இந்திய -வியட்நாமிய வணிக நடவடிக்கையை சீன அரசின் நாளிதழ் குளோபல் டைம்சும் பழித்துரைத்துள்ளது. + + + + +சத்துருக்கனன் கோயில் + +சத்துருக்கனன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் சத்துருக்கனுக்கு உள்ள கோயில். இது பாயம்மல் என்ற இடத்தில் உள்ளது. சத்துருக்கனுக்கென்றே உள்ள மிகச் சில கோயில்களுள் இதுவும் ஒன்று. + +இராம சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. இவை நாலம்பலம் (நான்கு+அம்பலம், அம்பலம்=கோயில்) என அழைக்கப்படுகின்றன. + + + + +சுருதகீர்த்தி + +சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். +மதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள். இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். + + + + + +தக்கா�� சுல்தானகங்கள் + +தக்காணத்து சுல்தானகங்கள் ("Deccan sultanates") என்பன தெற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஐந்து முஸ்லிம் பேரரசுகளைக் குறிக்கும். இவைகள் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமதுநகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பேரர் சுல்தானகம் ஆகியனவாகும். தக்காணத்து சுல்தானகங்கள் தக்காணத்து மேட்டுநிலப் பகுதியில் ("Deccan Plateau"), கிருஷ்ணா ஆறு மற்றும் விந்திய மலைத்தொடருக்கு இடையில் அமைந்திருந்தன. இவைகளில் பீஜாப்பூர், அஹ்மட்நகர், பெரார் ஆகியன 1490 இலும் பிடார், 1492 இலும் கொல்கொண்டா 1512 இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. 1510 இல் பீஜாப்பூர் கோவா நகரில் போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பை முறியடித்தனர் ஆயினும் பின்னர் அதே ஆண்டின் இறுதியில் அந்நகரத்தை இழந்தனர். + +இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். 1574 இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. 1619 இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் 1616 க்கும் 1636 க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பீஜப்பூர் சுல்தானகம் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன. + + + + + +உயிரெழுத்து + +உயிரெழுத்துக்கள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ + + + + +பீமா (திரைப்படம்) + +பீமா லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் திரிஷா, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்க 2008 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாடல்களை ந. முத்துகுமார், ப.விஜய், வைரமுத்து ஆகியோர் எழுத ஹாரிஸ் ஜயராஜ் படத்துக்கு பின்னணி இசையை வழங்கியுள்ளார். படப்பிடிப்பு 2006 ஏப்ரல் 24 ஆம் நாள் தொடங்கி படப்பிடிப்பு இந்தியாவின் பலப் பாகுதிகளிலும் நாடைப்பெற்றது. 2007 ஆம் தைப்பொங்கலுக்கு வெளியிட ஏற்பாடாகியிருந்தப்போதும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமக வெளியீடு மே 11 2007க��கு பிற்போடப்பட்டது.சிவாஜி திரைப்படத்தின் வெளியீடு காரணமாக மீடும் வெளியீடு பிற்போடப்பட்டது. படத்தின் இசை இருவட்டு ஆகஸ்ட் 10 2007 இல் வெளியீடு வைக்கப்பட்டது, படம் ஜனவரி 15 2008 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. + +சென்னையில் தனது பலத்தை நி்ருபிக்க முயலும் சின்னாவின் (பிரகாஷ் ராஜ்) குழுவுக்கும் பலமான பெரியவரின் (ரகுவரன்) குழுவிற்கும் இடையான சண்டைகளை மையப்படுத்தி இத்திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. சிறுவயது முதலே சின்னாவை தனது இலட்சிய மனிதனாக போற்றி வளர்ந்து வரும் சேகர் (விக்ரம்), சின்னாவின் குழுவில் இணைந்து பெரியவரின் குழுவிற்கு சவாலாக விளங்குகிறார். சென்னை நகருக்கு புதிதாக வரும் காவல்துறை அதிகாரி (அசிஷ் வித்தியார்த்தி) இவ்விரண்டுக் குழுக்களையுமே எப்படியாவது அழிப்பதற்காக சிறிய அணியொன்றை அமைத்து சட்டவிரோத குழுக்களை தேடி அழிக்கிறார். + +சென்னையின் சட்டவிரோதக் குழுக்கள் பல அழிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளின் மத்தியில் சேகர் சின்னாவின் பழைய காதலை இணைத்து வைத்து தானும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெரியவரின் கும்பலை முற்றாக அழித்துவிட்டு சென்னையில் சின்னாவை பலமிக்க மனிதனாக ஆக்கிவிட்டு சேகர் சின்னா குழுவில் இருந்து பிரிகிறார். படத்தின் கடைசியில் சின்னா, சேகர், சின்னாக்குழு முழுவதும் காவல் துறையால் கொல்லப்படுகிறது. + + + + + +ஆர்தர் பிலிப் + +ஆர்தர் பிலிப் ("Arthur Phillip", அக்டோபர் 11, 1738 – ஆகஸ்ட் 31, 1814) பிரித்தானிய றோயல் கடற்படை அட்மிரலும் காலனித்துவ நிர்வாகியுமாவார். பிலிப் ஆஸ்திரேலியா கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக, இருந்தவர். இவரே சிட்னி நகரை அமைத்தவர் ஆவார். + +ஆர்தர் பிலிப் தனது 15வது அகவையில் பிரித்தானியாவின் றோயல் கடற்படையில் சேர்ந்தார். 1756 இல் மத்தியதரைப் பகுதியில் மினோர்க்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பங்குபற்றினார். 1762 லெப்டினண்ட் ஆக பதவிஉயர்வு பெற்றார். 1763 இல் போர் முடிவடைந்ததும் இவர் திருமணம் புரிந்து கொண்டு ஹாம்ப்ஷ்யரில் விவசாயத் தொழிலில் ஈடுபடலானார். + +1774 இல் பிலிப் போர்த்துக்கல் கடற்படைக் கப்டனாகச் சேர்ந்து ஸ்பெயினுக்கெதிரான போரில் பங்கு பற்றினார். போர்த்துக்கலுடன் பணியில் இருக்கு���் போது இவர் போர்த்துக்கல் கைதிகளை பிரேசில் நாட்டுக்கு கொண்டு சென்று குடியேற்றும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டார். இதன் காரணமாகவோ என்னவோ பிலிப் சிட்னிக்கான பயணத்தை மேற்கொள்ளவென பிரித்தானிய அரசினால் அழைக்கப்பட்டார். 1778 இல் இங்கிலாந்து மீண்டும் போரில் ஈடுபட்டது. இதனால் பிலிப் மீண்டும் போர்ச் சேவைக்கு அழைக்கப்பட்டு 1781 இல் "இயூரோப்" என்ற கப்பலுக்கு கப்டனானார். + +அக்டோபர் 1786 இல், பிலிப் HMS சிரியஸ் என்ற கடற்படைக் கப்பலுக்கு காப்டனாகவும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் புதிதாக கைதிகளுக்காக அமைக்கப்படவிருந்த நியூ சவுத் வேல்ஸ் என்ற காலனி நாட்டுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். + +இவர் கொண்டு சென்ற 772 கைதிகளைக் முதல் தொகுதி மே 13, 1787 இல் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டது. இவர்களில் கடற்பயணத்தின் போது உயிர் தப்பியவர்கள் 732 பேர் மட்டுமே. இந்த 732 பேரும் படிப்பறிவோ அல்லது வேலைத்திறனோ அற்றவர்கள். சேரிகளில் சில சில்லறை திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். பிலிப்புடன் புதிய காலனியை நிர்வகிப்பதற்காக சிலரும் சென்றிருந்தனர். + +பிலிப்பின் கப்பல் பொட்டனி பே என்ற இடத்தை ஜனவரி 18, 1788 இல் அடைந்தது. இந்த இடம் குடியேற்றத் திட்டத்திற்கு உகந்ததாக இல்லாத காரணத்தினால் அவர்கள் மேலும் நகர்ந்து போர்ட் ஜாக்சன் என்ற இடத்தை ஜனவரி 26, 1788 இல் அடைந்தனர். சிட்னி பிரபுவின் நினைவாக இதற்கு அவர் சிட்னி எனப் பெயர் சூட்டினார். + +சிட்னி துறைமுகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஈயோரா பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் பிலிப் உதறுதியாக இருந்தார். பழங்குடிகள் எவரைனும் கொல்லப்பட்டால் மரணதண்டனைக்கு உள்ளானார்கள். பிலிப் பெனலோங் என்ற பழங்குடிமகன் இர்ர்வராருடன் நட்புக் கொண்டு தான் இங்கிலாந்து திரும்பும் போது அவரையும் அழைத்துச் சென்றார். + +1790 ஆம் ஆண்டளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 2,000 பேர் வரையிலானவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன. உணவுப் பொருட்கள் பயிரிடப்பட்டன. ஜூன் 1790 இல் இன்னும் பல நூற்றுக் கணக்கானோர் இங்கிலாந்தில் இருந்து வந்து சேர்ந்தனர். + +1792இல் பிலிப்பின் உடல் நிலை திருப்திகரமாக இல்லாமையினால் அவர் இங்கிலாந்து திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 11, 1792இல் பெனெலோங் என்ற அவரது பழங்குடி நண்பரையும் அழைத்துக் கொண்டு கப்பலேறினார். அவர் நியூ சவுத் வேல்சை விட்டுக் கிளம்பும் போது அங்கிருந்த மக்கள் தொகை 4,221 ஆகும். இவர்களில் 3,099 பேர் கைதிகள். பிலிப் மே 1793 இல் லண்டன் வந்து சேர்ந்ததும் தனது சேவையிலிருந்து இளைப்பாறினார். + +பிலிப்பின் மனைவி, மார்கரெட், 1792 இல் இறக்கவே 1794 இல் இசபெல்லா என்பவரை மறுமணம் புரிந்தார். பிலிப்பின் உடல்நிலை சிறிது தேறவே, மீண்டும் 1796 இல் கப்பல் பணியில் சேர்ந்து பிரான்ஸ் நாட்டுடனான போரில் பங்கு பற்றினார். 1805 இல் தனது 67 வது அகவையில் கடற்படையில் இருந்து அட்மிரலாக விலகினார். 1814 இல் இங்கிலாந்தின் பாத் என்ற இடத்தில் காலமானார். + + + + + +1565 + +1565 (MDLXV) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். + + + + + + + + +1560கள் + +1560கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1560ஆம் ஆண்டு துவங்கி 1569-இல் முடிவடைந்தது. + + + + + + + +கட்டுவிரியன் + +கட்டுவிரியன் (Common Krait - "Bungarus caeruleus") என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள காடுகளில் காணப்படும் நச்சுப் பாம்பினம் ஆகும்.கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரும் நான்கு என்றழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இப்பாம்பு தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் + +ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. + +கட்டுவிரியன் பாம்பை,விரியன் பாம்பு என்றும் அழைப்பர். இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். இதன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வால் பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் பொதுவாகக் காணப்படும். + +ஆண் பாம்பு பெண்ணை விடப் பெரிதாகவும் நீண்ட வாலினைக் கொண்டும் இருக்கும். + + +பாக்கிசுதானின் சிந்து மாகாணத்தில் இருந்து மேற்கு வங்கச்சமவெளி வரை வாழ்கின்றன. மேலும் தென்னிந்தியா முழுவதும் இலங்கையிலும் இவை உள்ளன. + +பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன. + +இது இரவில் சுறுச��றுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை. + +கட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. மேலும் பல்லிகளையும், பாம்பரணைகளையும் தின்கின்றன. இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்பு கொண்டவை. இதன் பாம்புக்குட்டிகள் கணுக்காலிகளையும் உண்கின்றன. சில சமயங்களில் இவை சிறு பாலூட்டிகள், தவளை போன்றவற்றையும் தின்கின்றன. + +இவை இரவில் திரியும் பாம்புகளாகையால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ, மண், குப்பை கூளங்களுக்கிடையிலோ பதுங்கிக் கொள்கின்றன. பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன. எனினும் இரவில் இவை எதிர்க்கும். பங்காரசு இனப்பாம்புகளில் இதுவே மிகவும் ஆபத்தானது. + +கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது. + + + + + +வியட்நாம் போர் + +வியட்நாம் போர் ("Vietnam War"), () அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர், வியட்நாம் பகுதிகளில் அமெரிக்க எதிர்ப்புப் போர் () அல்லது சுருக்கமாக அமெரிக்கப் போர், வியட்நாம், லாவோசு மற்றும் கம்போடியாவில் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975ல் சைகானின் வீழ்ச்சி வரை நடைபெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுகளை வியட்நாம் பிரச்சினை ("Vietnam Conflict") என்று குறிப்பிடுவர். இப்போரானது அதிகாரப்பூர்வமாக வியட்நாம் சனநாயகக் குடியரசு (வட வியட்நாம்) க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது, தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. எனவே இப்போர் பனிப்போர் காலத்திய பதிலிப்போர் என்று கருதப்படுகிறது. + +வியட்டு காங் (தேசிய விடுதலை முன்னணி என்றும் அறியப்��டுகிறது), வடக்கினால் ஆதரிக்கப்பட்ட ஒரு தெற்கு வியட்நாமிய கம்யூனிச முன்னணி, அப்பகுதியில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொரில்லா போர் முறையில் சண்டையிட்டது, அதேவேளையில், வியட்நாமின் மக்கள் படை, வடக்கு வியட்நாமிய இராணுவம் என்றும் அழைக்கப்படுகிறது, பெரும் படைகளுடன் வழக்கமான போர்முறையில் சண்டையிட்டது. போர் தொடர்ந்த போது வியட்டு காங்கின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்தது ஏனெனில் வடக்கு வியட்நாமிய இராணுவத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளின் அதிகமாகின. அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமிய படைகள், தேடி அழிக்கும் செயல்பாடுகளுக்கு, வான் வலிமை மற்றும் தரைப்படைகள், ஆட்டிலரி, வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றைச் சார்ந்திருந்தன. போரின் போக்கில், அமெரிக்கா வட வியட்நாமின் மீது மிகப் பெரிய அளவில் திட்டமிட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது. + +வட வியட்நாமிய படைகள் மற்றும் வியட்டு காங், வியட்நாமை மீண்டும் ஒருங்கிணைக்கப் போரிட்டன. அவர்கள் இப்பிரச்சினையை ஒரு காலனியாதிக்க போராகவும் பிரஞ்சு மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்தோசீனா போரின் தொடர்ச்சியாகவும் பார்த்தனர். அமெரிக்கா அரசு இப்போரில் தங்களின் பங்கெடுப்பை தெற்கு வியட்நாமை கம்யூனிச அரசு கைப்பற்றுவதைத் தடுக்கும் ஒரு வழியாகப் பார்த்தது. மேலும் இது உலகம் முழுவதும் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒடுக்குதல் கொள்கையாகும். +1950 களின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அப்போதைய பிரஞ்சு இந்தோசீனாவிற்கு வந்தனர். 1960களில் அமெரிக்க படைகளில் பங்கு, 1961 மற்றும் 1962இல் படைகளை மும்மடங்காக்கியதுடன் அதிகமாகியது. அமெரிக்கா படைகளில் பங்கு 1964இல் டோகின் வளைகுடாவில் வடக்கு வியட்நாமியப் படையின் விரைவுப் படகுடன் அமெரிக்காவின் அழிப்பு போர்க்கப்பல் மோதிய நிழ்வுக்குப் பின் இன்னும் அதிகமாகியது. அதைத் தொடர்ந்து வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் இருப்பை அதிகப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் டோகின் வளைகுடாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1965இன் தொடக்கத்தில் அமெரிக்க தாக்குதல் படைகள் தொடர்ந்து வியட்நாமில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றின் தாக்குதல்கள் பன்னாட்டு எல்லைக்கோட்டையும் தாண்ட��யது: 1968 இல் அமெரிக்காவின் பங்கெடுப்பு உச்சத்தில் இருந்தபோது லாவோசு மற்றும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளிலும் கடுமையாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதேவேளையில் வியட்நாமிய கம்யூனிசப் படை எதிர் தாக்குதல்களைத் (Tet Offensive) தொடங்கியது. இந்த எதிர்தாக்குதல்கள் அதன் இலக்கான தெற்கு வியட்நாம் அரசை பதவியிலிருந்து விலக்குவதில் தோல்வியுற்றது, ஆனால் இது போரின் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தெற்கு வியட்நாமிற்கு பல ஆண்டுகள் இராணுவ உதவி செய்திருந்தாலும், இந்தப் போரில் அமெரிக்க அரசு வெற்றியை நோக்கி நகர்கிறது என்ற அரசின் வாதம் கற்பனையானது என்பதை இந்த எதிர்தாக்குதல் பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு உணர்த்தின. + +வடக்கு வியட்நாமின் கம்யூனிசிப் படையினை எதிர்த்துப் போர் புரிவதை தெற்கு வியட்நாமிடமே ஒப்படைக்கும், "வியட்நாமியமாக்கல்" கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கப் படைகள் படிப்படியாக பின்வாங்கின. 1973இல் அனைத்து தரப்பினரும் கையெழுத்த பாரிசு அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னும் போர் தொடர்ந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகில் ஒரு எதிர்ப்புக் கலாச்சாரமாக வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் பெருமளவில் தோன்றியது. + +1973, ஆகஸ்ட் 15 அமெரிக்கப்படைகள் முழுமையாகப் பின்வாங்கின. 1975 வடக்கு வியட்நாம் படை சைகானைக் கைப்பற்றயதுடன் போர் முடிவுக்கு வந்தது. அதை அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது. +இப்போர் பெருமளவும மனித உயிர்களைப் பலிவாங்கியது. இப்போரின் போது இறந்த வியட்நாமிய வீரர்கள் மற்றும் மக்களின் தோராயமான எண்ணிக்கை 966,000 இலிருந்து 3.8 மில்லியன்கள் வரை இருக்கும். 240,000 - 300,000 கம்போடியர்களும், 20000 - 62,000 லாவோசு மக்கள், 58,220 அமெரிக்க வீரர்களும் இப்பிரச்சினைகளில் கொல்லப்பட்டனர், மேலும் காணாமல் போன 1626 நபர்கள் இன்றும் கிடைக்கவில்லை. + +இந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக வியட்நாம் போர் என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் "இரண்டாம் இந்தோசீனப் போர்" மற்றும் "வியட்நாம் முரண்பாடு" எனவும் அழைக்கப்படுகின்றது. + +இந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போர��ன் தலைமை எதிர்ப்பாளர்களான வியட்நாமின் பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர். வியட்நாமிய மொழியில் இப்போர் பரவலாக 'காங் செயின் சோங் மை' (அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பு போர்) என்று அறியப்படுகிறது, சுருக்கமாக 'சூ சென் டிரான் மை' (அமெரிக்கப்போர்) என்றும் அழைக்கப்படுகிறது. சில வேளைகளில் 'சென் திரான் வியட்நாம்' (வியட்நாம் போர்) என்றும் அழைக்கப்படுகிறது. + +பிரான்சு 1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் வியட்நாமில் ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டது. தற்போது கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் 1888 இல் பிரெஞ்சு இந்தோ சீனக் குடியேற்றமாக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்றத்தில் லாவோசும் இணைக்கப்பட்டது. + +வியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இப் போரின்போது இருதரப்பினராலும் கற்பழிப்பு, குடிமக்கள் படுகொலை, பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் போர்க் கைதிகள் கொலை போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக பொதுக் குற்றங்களான திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்றவையும் இடம்பெற்றன. + + + + + +காளை (திரைப்படம்) + +காளை தருன் கோபி இயக்கத்தில் வேதிகா, மீரா சோப்ரா, சங்கீதா ஆகியோருடன் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்க 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக "சென்னையில் இருந்து மதுரை", "மோசமானவன்", "அகராதி" போன்றப் பெயர்கள் இப்படத்துக்கு முன்மொழியப்பட்டன. + +இத்திரைப்படத்தில் மூன்று காதாபாத்திரங்கள் ஜீவா என்றப் பெயரைக் கொண்டுள்ளன இதன் மூலம் திரைப்படத்தின் தொடக்கத்தில் சுவாரசியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. + +ஜீவாவின் (சிலம்பரசன்) பாட்டி பத்து வயதாக இருக்கும் போது கிராமத்தில் கள்ளச் சாரயம் காய்ச்சிய 5 பேரை கொலை செய்துவிட்டு சிறைச் செல்கிறார். சிறையிலிருந்து திரும்பும் அவரை கிராம மக்கள் தமது தலைவியாக பதவியேற்றுகின்றனர். அவ���து ஆட்சியின் கீழ் கிராமத்தில் தீய நடவடிக்கைகள் இல்லாமல் நல்லாட்சி நிலவுகிறது. இதன் போது அங்கே வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் அக்கிராமத்தில் பிழை செய்யும் ஒருவரையேனும் பிடிக்க முற்பட்டு தோல்வியடைகிறார். இதனால் கோபமுற்ற காவல்துறை அதிகாரி சிம்புவின் பாட்டியை உயிருடன் எரிக்கின்றார். + +இதனால் கோபமுற்ற ஜீவா (சிலம்பரசன்) அவரை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதே கதையின் மிகுதி பாகமாகும். + + + + + + +டாட்டா நேனோ + +டாட்டா நேனோ அல்லது டாட்டா நானோ ("Tata Nano") என்பது இந்தியாவின் டாட்டா மோட்டார்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. இது சனவரி 10, 2008 இல் புது டெல்லியில் நடந்த தானுந்து காட்சியின் போது அறிமுகப்படுத்தப் பட்டது. மக்கள் தானுந்து ("People's Car") என்றழைக்கப்படும் இவ்வண்டி தற்போது உலகில் உள்ளவற்றில் எல்லாம் மலிவானது. அறிமுகப்படுத்தும் போது இதனுடைய விலை (வரிகள், போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து) ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். இதனால் இவ்வண்டி லட்ச ரூபாய் கார் எனவும் அழைக்கப்படுகிறது. + + + + +அவுஷ்விட்ஸ் வதை முகாம் + +அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு ("Auschwitz-Birkenau"; "") என்பது 1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜேர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது. + +இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன. + +அவுஷ்விட்ஸ் முகாம்களை நேரடியாக மேற்பார்வை செய்தவர், ஹிட்லரின் விசுவாசியான ருடொல்ஃப் ஹஸ் ("Rudolf Höß") என்பவர். சுமார் 3 மில்லியன் மக்கள் இம்முகாமில் அவரது மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக இவர் பின்னர் நடந்த நுரம்பர்க் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். எனினும் அவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் குறைத்திருந்தார். இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள் ஆவர். யூதர்களை விட கம்யூனிஸ்டுகள், ருஷ்யப் போர்க் கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள், அரசியல் அதிருப்தியாளர்கள் ஆகியோரும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தார்கள். + +ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்படுக் கொலை செய்யப்பட்டார்காள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச் சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர். + +நவம்பர் 1944 இல் சோவியத் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க நாசிகள் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். 1945 ஜனவரியில் நாசிகள் அந்த முகாம்களைக் கைவிடத் தொடங்கியிருந்தார்கள். ஜனவரி 27, 1945 இல் கிட்டத்தட்ட 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள். மே 7, 1945 இல் ஜெர்மனி சரணடைந்தது. நுரம்பர்க் விசாரணை தொடங்குவதற்கு முன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். + + + + + +சாலஞ்சர் விண்ணோடம் + +சாலஞ்சர் விண்ணோடம் ("Space Shuttle Challenger") (மீள்விண்கலம்) என்பது நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் ஏப்ரல் 4, 1983 இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28, 1986 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதற���யது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோடம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற்தடவையாக ஏவப்பட்டது. + +"சாலஞ்சர்" ஜனவரி 28, 1986 இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து புளோரிடா, "கனாவரல் முனை" (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர். + + + + + +தக்காணப் பீடபூமி + +தக்காணப் பீடபூமி ("Deccan Plateau") (தக்காண மேட்டுநிலம்)என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது. + +கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காணப் பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. + +மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் உயரமாக இருப்பதால் தென்மேற்கு பருவக்காற்று மூலம் வரும் ஈரப்பதத்தை தடுத்து விடுகிறது. இதனால் தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. + +மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் கோதாவரியும் அதன் துணையாறுகளும் தக்காணப் பீடபூமியின் மேற்பகுதியையும் கிருஷ்ணாவும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் நடுப்பகுதியையும், காவிரி அதன் துணையாறுகளும் தக்காணத்தின் கீழ்ப்பகுதியையும் வளம்பெறச் செய்கின்றன. + + + + +பஞ்சமரபு + +பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். "சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை" எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். + + +மரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது. + +தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன. + +பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது. + +சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது. + +சிலப்பதிகார உரையாசிரியர் "அரும்பதவுரைகாரர்" பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அ��ியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது. + +சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. + +அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார். + +1. ஓங்கிய மூங்கில் ...(3 : 26 , 17 : .20) + +2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20) + +3. இருவிரல்கள் நீக்கி...(3 : 26, 17 : 20) + +4. வளைவாயரு...(3 : 26, 17 : 20) + +என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும். + + + + + + + +முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. + +தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்) + + + + + + + + + + + + + + + +சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன. + + + + +ஐந்தொகை + + + + + +மனையாவெளி கிராம அலுவலர் பிரிவு + +244 F இலக்கம் உடைய மனையாவெளி கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1176 குடும்பத்தைச் சேர்ந்த 5689 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். + + + + + +அருணகிரிநகர் கிராம அலுவலர் பிரிவு + +244 G இலக்கம் உடைய அருணகிரிநகர் கிராம அலுவலர் பிரிவு () திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 575 குடும்பத்தைச் சேர்ந்த 2573 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். + + + + + +திருமுறை + +திருமுறை என்னும் சொல் பின்வருபனவற்றில் ஒன்றைக்குறிக்கலாம் + + + + + +காரைநகர் + +காரைநகர் ("Karainagar") இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். + +இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது. + +பிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். + +இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமு���் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது + + + + + + +சோஷோன் + +சோஷோன் ("Shoshone") எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளாவர். இவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு சோஷோன்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வாழ்கிறார்கள். இவர்களில் வடக்கு சோஷோன்கள் கிழக்கு இடாகோ, மேற்கு வயோமிங், மற்றும் வட-கிழக்கு யூட்டா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். கிழக்கு சோஷோன்கள் வயோமிங், வடக்கு கொலராடோ, மொன்டானா ஆகிய மாநிலங்களில் வசித்து வந்தார்கள். 1750ம் ஆண்டளவில் ஏனைய பழங்குடிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இவர்கள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள். மேற்கு சோஷோன்கள் நடு இடாகோ, வடமேற்கு யூட்டா, நடு நெவாடா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். இக்குழுவினர் "பனாமிண்ட்" (Panamint) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு சோஷோன்களின் இடாகோ குழுவினர் "டுக்குவாடுக்கா" ("Tukuaduka"), அதாவது ஆடு தின்னிகள் எனவும், நெவாடா/யூட்டாக் குழுக்கள் "கோசியூட்" ("Gosiute") அல்லது "டோய் டிக்கூட்டா" எனவும் அழைக்கப்படுகின்றனர். + +1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிடட்த்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள். + +1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர். + +1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து "மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில்" என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள். + + + + + +மாத்தளை மேற்கு தமிழ் வித்தியாலயம��� + +மாத்தளை மேற்கு தமிழ் வித்தியாலயம் மாத்தளை நகரின் மேற்குப்பகுதியில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இப்பாடசாலையானது ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டபொழுது 1 ஆசிரியரும் 14 மாணவர்களும் உடன் இருந்த பாடசாலையானது இன்று ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான மாணவர்களிற்கு கல்வியை வழங்கி வருகின்றது. இப்பாடசாலைக்கு அஸ்கிரிய, மாதிவளை ஆகிய தோட்டப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். + +1980 இல் தோட்டப்புறப்பாடசாலைகளை அரசுடமையாக்கும் திட்டத்தின் கீழ் இப்பாடசாலையானது 1980 ஜூன் 15 ஆம் திகதி அரசுடமையாக்கப்பட்டது. 1995 இல் பெருந்தோட்டப்பாடசாலைகளை முன்னேற்றும் நோக்கில் நடத்தப்பட்ட சீடா உதவித்திட்டத்தின் கீழ் இப்பாடசாலையும் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை ரூபா 2 மில்லியன் பெறுமதியான கட்டம் ஒன்றையும் அதிபர் விடுதியையும் பெற்றுக்கொண்டது. 2007 ஆம் ஆண்டில் இருந்து இப்பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களிற்கு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. + + + + + +கொக்குவில் + +கொக்குவில் ("Kokkuvil") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் கோண்டாவிலும் உள்ளன. கிழக்குத் திசையில் திருநெல்வேலி அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது. + +திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, காங்கேசந்துறை வீதியைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில் இந்துக் கல்லூரி இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது. + +கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும். + + +இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில், மஞ்சவனப்பதி முருகன் கோயில், மணியர்பதி சிவசுப்பிரமணியர் கோயில், நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மாள் கோயில், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பொற்பதி விநாயகர் கோயில், ஸ்ரீ ஞான வைரவர் கோயில் போன்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன. + + + + + + +கோண்டாவில் + +கோண்டாவில் ("Kondavil") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் இருபாலை அமைந்துள்ளது. + +இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது. + +யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள கோண்டாவில் பின்வரும் 6 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: + + +2011 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி கோண்டாவிலின் மொத்த மக்கள்தொகை 10,659. இதில் ஆண்கள் 4,989 (46.8%), பெண்கள் 5,670 (53.20%). கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் கோண்டாவிலின் மக்கள் தொகை விபரம்: + +இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில் + + +போன்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன. + + +அந்த மக்கள் தற்போதும் கோண்டாவில் மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். + + +கோண்டாவிலை பூர்வீகமாக கொண்ட பல மக்கள் யுத்த காலங்களில் வெளியேறி உலக நாடுகள் பலவற்றில் வாழ்கின்றனர். + +புகையிலை, வெங்காயம், கோவா போன்றவற்றுக்கு கோண்டாவில் விளைச்சல் மண் பிரபலமானது. + + + + + +கலகலப்பு (திரைப்படம்) + +கலகலப்பு () என்பது கனடாவில் முதல் முதலாக தமிழில் தயாரிக்கப்பட்ட முழுநீள நகைச்சுவைத்திரைப்படமாகும். யாழ்ப்பாணத்தில், இணுவில் கிராமத்திலிருந்து "கலகலப்பு" என்ற நகைச்சுவை சஞ்சிகையை வெளியிட்டு வந்த எஸ். கேதீஸ்வரன் (எஸ். கே. தீசன்) என்ற கலைஞரே இத்திரைப்படத்தையும் உருவாக்கினார். + +இவருடன், கரு.கந்த���யா, நீதன், ஸ்ரீமுருகன், அனுராகவன் கேதீஸ்வரன், நடா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்தார்கள். + +இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.மதிவாசன். படப்பிடிப்பை தர்மராஜாவும் இசையை தாரணி மதிவாசனும் பொறுப்பேற்றார்கள். + + + + +மானிப்பாய் + +மானிப்பாய் ("Manipay") யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பிரிவில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும். + +மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன. + +மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் (த.லெ.5:3191) என்ற அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம். மானிப்பாயில் பண்டை நாளிற் பிராமணக் குடியிருப்பு பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மானி என்பது பிராமணரையும் பிரமச்சாரியையும் +குறிக்கும் சொல்லாக வழங்கியுள்ளது. + +மேலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்களின் சான்றுகளை நோக்கும்போது 'மானி' என்பது +கோயில்களுடன் தொடர்புபட்டிருந்த பிரமச்சாரிகளைக் குறிப்பிடுவதையும், இப்பிரமச்சாரிகள் கோயில் தொண்டுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டைச் சான்று காட்டி, மானி என்பது பிராமணர், பிரமச்சாரி, கோயிற்றொண்டர் என்ற பொருள் தந்து நிற்கின்றது என்கிறார் பேராசிரியர் நாகசாமி. அந்நிலையில் அத்தகையோர் (மாணி , மானி) இருந்த இடம் (மானி+பாய்) ம��னிப்பாய் எனப் பெயர் பெற்றதெனல் பொருத்தமாகும். + +கோயில் அல்லது அரண்மனைச் சமையற்காரர் என்ற நிலையில் மானி என்போர் மடப்பளியர் எனவும் அழைக்கப்பட்டனர். மடப்பள்ளி, மடப்பள்ளியார் என்பவற்றிகு நூலோர் தரும் பின்வரும் விளக்கங்களை அறிந்து கொள்ளுதல் சமூகநிலை நோக்கிய பயனுறு செயலாம். + + +மானி, பாய் என்னும் இரு திராவிடச் சொற்களின் இணைவால் அமைந்த இவ்விடப்பெயரை குமாரசாமி (1918:160), மானப்பாய, அல்லது மானிப்பாய ( M'anayi or Mani...a plant justicis) என்ற சிங்களப் பெயரின் திரிபு என்று எழுதியுள்ளார். இவற்றோடு வீமன்காமத்தில் மாந்தப்பாய், தனப்பாய், மல மண்டலப்பாய் (மலை + மண்டலப்பாய்) ஆகிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. தையிட்டியில் தண்டலப்பாய், சவங்கடப்பாய், தொங்களப்பாய், என்பனவும், உரும்பிராயில் தோலப்பாய், சுதுமலையில் கச்சப்பாய், சுழிபுரத்தில் இயக்கடப்பாய், மானிப்பாயில் கிணாப்பாய், தொல்புரத்தில் தலக்கடப்பாய் என்பனவும் குறிச்சிப் பெயர்களாக வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்திற்கும் சி்ங்கள விளக்கம் கொடுக்கிறார் குமாரசாமி (1918:160-161). ஆயினும் பாய் ஈற்று இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மொழியின் மூலமும் பொருளும் கொண்டவை என்பதற்கு தக்க விளக்கங்கள் மேலே தரப்பட்டுள்ளமை காண்க. + +யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பார் 1864 ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது. + +மானிப்பாய் கல்வித துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. 89 சதவீதமான மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆங்கில மிசனறிகள் சில பாடசாலைகளையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் மானிப்பாய் மெமோறியல், மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி என்பன முக்கியமானவை. இவை மட்டுமல்லாது மானிப்பாய் நூலகமும் கல்வித் துறைக்கு போதுமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. + +மானிப்பாய் கிறித்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்து வந்ததால் இங்கே அச் சமயத்தவரின் புனித பேதுரு பவுல் ஆலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம் உட்படப் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன. + +தவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது. + +இங்குள்ள மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானமானது இளைஞர்கள் மட்டுமல்ல முதியோர் மத்தியிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது. + + + + + + + +ரிச்சா பலோட் + +ரிச்சா பலோட் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார். + + + + +பம்பை ஆறு + +பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. + + + + +தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008 + +மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவ���்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இந்நிகழ்வு செவ்வாய், ஜனவரி 29 2008 அன்று மணி 2.25 பி.ப இடம்பெற்றது. இந்தக் தாக்குதலை இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணி நடத்தியதாக புலிகள் குற்றம் சாட்டினர். இராணுவம் இந்த நிகழ்வுக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்று தெரிவித்தது. + + + + + +விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவிய தாக்குதல்கள் + +விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவியத் தாக்குதல்கள் ஈழப்போரின் ஒரு அங்கமாக தொடர்ந்து நடைப்பெற்று வந்துள்ளது. கள முனைக்கு அப்பால் இலங்கை அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவும் தனி நபர் அல்லது சண்டைக் குழு நடத்தும் தாக்குதல்கள் இவ்வகையில் அடக்கப்படலாம். சிறப்புப் பயிற்சிப்பெற்ற கரும்புலிகளே இவ்வாறான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். தற்கொலைத் குண்டுத்தாக்குதல்,கிளைமோர், வாகன குண்டு என்பன 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் ஆழ ஊடுருவும் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன எனினும் 2007 ஆம் ஆண்டு முதல் அதிரடித் தாக்குதல்களும் கரந்தடி தாக்குதல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. + + + + + + +நவூரு + +நவூரு அல்லது நவுறு ("Nauru", , அதிகாரபூர்வமாக நவூரு குடியரசு ("Republic of Nauru") என்றும் பொதுவாக இனிமையான தீவு ("Pleasant Island") எனவும் அழைக்கப்படுவது தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிக அண்மையிலுள்ள தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் மாவட்டத்தில் உள்ளது. இதன் மக்கள்தொகை 9,378 பேர், இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். "நவூரு" என்ற சொல் நவூருவ மொழியில் "அனாஓரோ," "நான் கடற்கரைக்குப் போகிறேன்" எனப் பொருள். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. + +மைக்குரோனேசிய மற்றும் பொலினேசிய மக்கள் வசிக்கும் நவூரு தீவு 19��் நூற்றாண்டின் இறுதியில் செருமன் பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின், ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் உலக நாடுகளின் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நவூரு சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது. + +நவூருத் தீவின் மேற்பரப்பில் பொஸ்பேட்டுப் பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 1960களின் இறுதியிலும், 1970களின் தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாகக் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. 2001 முதல் 2008 வரை, பின்னர் 2012 செப்டம்பர் முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது. + +நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகள், ஆசிய வளர்ச்சி வங்கி, பசிபிக் தீவுகளின் ஒன்றியம் ஆகியவற்றில் நவூரு உறுப்பு நாடாகவுள்ளது. பொதுநலவாய விளையாட்டுக்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பங்குபெறுகின்றது. + +நவூருவில் முதன் முதலாகக் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்குரோனேசிய, மற்றும் பொலினேசிய மக்களால் குடியேற்றம் ஆரம்பமானது. + +1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமியும் திமிங்கில வேட்டையாடியவருமான ஜோன் பேர்ன் என்பவரே நவூருவில் கால் வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தீவிற்கு "இனிமையான தீவு" ("Pleasant Island") எனப் பெயரிட்டார். 1830கள் தொடக்கத்தில் ஐரோப்பாவிலிருந்து திமிங்கில வேட்டையாளர்களாலும், கு��ிப்பாக நன்னீர் பெற்றுக் கொள்வதற்காகவும் கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன. இக்காலப்பகுதியில் ஐரோப்பியக் கப்பல்களிலிருந்து தப்பி வந்தவர்கள் இங்கு வாழத் தொடங்கினர். இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்தார்கள். 1878 இல் ஆரம்பமான 12 இனங்களுக்கிடையேயான போரின் போது இந்தச் சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை நீடித்த இப்போரில் ஏறத்தாழ 500 பேர் வரையில் (தீவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) கொல்லப்பட்டனர். + +1888 ஆம் ஆண்டில் நவூரு செருமனியுடன் இணைக்கப்பட்டு மார்சல் தீவு காப்பரசின் கீழ் நிருவகிக்கப்பட்டது. செருமனியரின் வரவு அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, நவூரு மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது. இத்தீவின் மன்னர்களில் ஆயுவேயிதா என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவ மதப்பரப்புனர்கள் 1888 இல் கில்பர்ட் தீவுகளில் இருந்து வந்தனர். செருமனியக் குடியேற்றவாதிகள் இத்தீவை நவோடோ என்றும், ஒனெவேரோ என்றும் அழைத்தனர். முப்பதாண்டுகளுக்கு செருமனியினர் இத்தீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் புரிந்த செருமனிய வணிகர் இராபர்ட் ராசுச் என்பவர் 1890 ஆம் ஆண்டில் நவூருவின் முதலாவது செருமனிய நிருவாகியாக நியமிக்கப்பட்டார். + +1900 ஆம் ஆண்டில் நவூருவில் வளவாய்ப்புத் தேடுநரான ஆல்பர்ட் எலிசு என்பவரால் பொஸ்பேட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பசிபிக் பொஸ்பேட்டு கம்பனி 1906 ஆம் ஆண்டில் செருமனியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு 1907 ஆண்டு முதல் பொஸ்பேட்டுகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததை அடுத்து நவூரு ஆத்திரேலியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன நவூரு தீவு உடன்படிக்கையில் 1919 இல் கையெழுத்திட்டன. இதன்படி நவூருத் தீவில் பொஸ்பேட்டுகளை தோண்டி எடுப்பதற்கு பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திற்கு உரிமைகள் வழங்கப்பட்டன. + +1920 இல் நவூருவில் ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கியதில் உள்ளூர் மக்களில் 18 விழுக்காட்டினர் இறந்து போயினர். 1923 இல் உலக நாடுகளின் அமைப்பு நவூருவுக்க���ன பொறுப்பாளராக ஆத்திரேலியாவையும், இணைப் பொறுப்பாளர்களாக ஐக்கிய இராச்சியத்தையும், நியூசிலாந்தையும் நியமித்தது. 1940, திசம்பர் 6, மற்றும் திசம்பர் 7 இல் கொமெட், ஓரியன் ஆகிய செருமானியப் போர்க் கப்பல்கள் நவூரு கடல்பகுதியில் பல கப்பல்களை மூழ்கடித்து நவூருவின் பொஸ்பேட்டுச் சுரங்கப் பகுதிகளின் மீது குண்டுகளை வீசித் தாக்கின. +1942 ஆகத்து 25 ஆம் நாள் நவூரு சப்பானியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. சப்பானியர்கள் அங்கு விமான ஓடுபாதை ஒன்றை அமைத்தனர். அது 1943 மார்ச்சு 25 இல் அமெரிக்க வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்கானது. 1,200 நவூரு இனத்தவர்களை வேலைக்காக சூக் தீவுகளுக்கு சப்ப்பானியர்கள் அனுப்பினர். நவூரு 1945 செப்டம்பர் 13 ஆம் நாள் ஆத்திரேலிய இராணுவத்தினரால் சப்பானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது. சூக் தீவுகளில் சப்பானியர்களினால் வேலைக்கமர்த்தப்பட்டவர்களில் உயிருடன் எஞ்சி இருந்த 737 நவூருவர்கள் 1946 சனவரியில் நாடு திரும்பினர். 1947 இல், ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் பங்கெடுப்பில் ஒரு ஐநாவின் பொறுப்பாட்சி நிறுவப்பட்டது. + +1966 சனவரியில் நவூரு சுயாட்சி பெற்றது. இரண்டாண்டுகளின் பின்னர் 1968 இல் விடுதலை அடைந்தது. ஆமர் டெரோபர்ட் என்பவர் முதலாவது அரசுத்தலைவரானார். 1967 இல் பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திடம் இருந்த பங்குகள் அனைத்தையும் நவூரு பெற்றுகொண்டது. 1970 சூனில் நவூரு பொஸ்பேட்டு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. பொஸ்பேட்டு சுரங்க வருமானம் பசிபிக் தீவுகளிலேயே மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நவூரு மக்களுக்கு வழங்கியது. 1989 இல், பொஸ்பேட்டு சுரங்கத் தொழிலினால் நவூரு தீவின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நவூரு அரசு வழக்குத் தொடுத்தது. நவூருவில் இருந்த சுரங்கப் பகுதிகளில் மறுவாழ்வளிக்க உதவுவதாக ஆத்திரேலியா ஒப்புக் கொண்டது. + +நவூரு நாடாளுமன்ற முறையைக் கொண்ட ஒரு குடியரசு நாடு. இதன் தலைவர் நாட்டுத் தலைவராகவும், அரசுத்தலைவராகவும் உள்ளார். 18-உறுப்பினர் கொண்ட ஓரவை நாடாளுமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. அரசுத்தலைவர் ஐந்து முதல் ஆறு பேரடங்கிய அமைச்சரவையை நியமிப்பார். நாடாளுமன்றத்துக்கு சுயேட்சையாகவே பொதுவாகவோ உறுப்பினர்கள் போட்டியிடுவர். இங்கு அரசியல் கட்சிகள் எதும் பொதுவான அமைப்பாக இல்லை. தற்போதைய நாடாளுமன்றத்தில் (2012) 18 பேரில் 15 பேர் சுயேட்சை உறுப்பினர்கள் ஆவர். + +நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபட்டது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளனர். அரசாங்கமோ அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் உரிமையாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளருடனான குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் நவூரு குடிமக்கள் அல்லாதோர் இங்கு நிலம் வாங்க உரித்துடையவர் அல்லர்.. + +1968 இல் விடுதலை அடைந்த பின்னர், நவூரு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சிறப்பு உறுப்பினராக இணைந்தது; 2000 ஆம் ஆண்டில் முழுமையான உறுப்புரிமை பெற்றது. 1991 இல் ஆசிய வளர்ச்சி வங்கியிலும், ஐக்கிய நாடுகளில் 1999 ஆம் ஆண்டிலும் இணைந்தது. நவூரு பசிபிக் தீவுகளின் ஒன்றியத்திலும் உறுப்பினராக உள்ளது. அமெரிக்கா தனது வளிமண்டல கதிரியக்க அளவீட்டுத் திட்டதிற்கான காலநிலை-கண்காணிப்பு நிலையம் ஒன்றை நவூரு தீவில் அமைத்துள்ளது. + +நவூருவில் இராணுவப் படை எதுவும் இல்லை, ஆனாலும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் சிறிய அளவில் காவல்துறையினர் உள்ளனர். இத்தீவின் பாதுகாப்பு ஆத்திரேலியாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆத்திரேலியாவுடன் 2005 இல் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆத்திரேலியா நவூருவிற்கான நிதியுதவி, மற்றும் தொழிநுட்பத் தேவைகளை வழங்குகின்றது, அத்துடன் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. பதிலாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் வெளிநாட்டு அகதிகளை அவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் இத்தீவில் தங்க வைத்துப் பராமரிப்படுகின்றனர். நவூரு அதிகாரபூர்வ நாணயமாக ஆத்திரேலிய டாலரைப் பயன்படுத்துகிறது. + +2002 சூலை 21 இல், சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தி $130 மில்லியன் நிதியுதவியை அந்நாட்டிடமிருந்து பெற்றுக் கொண்டது. இரண்டு நாட்க���ின் பின்னர் சீனக் குடியரசு நவூருவுடனான உறவுகளைத் துண்டித்தது. பின்னர் 2005 மே 14 இல் மீண்டும் சீனக் குடியரசுடன் உறவுகளைப் புதுப்பித்தது, இதனால் சீனாவுடனான உறவுகள் பாதிப்படைந்தன. ஆனாலும், சீனா தனது பிரதிநிதி ஒருவரை நவூருவில் தொடர்ந்து வைத்துள்ளது. + +2008 இல், நவூரு கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரித்தது, 2009 இல் சியார்சியாவில் இருந்து விடுதலையை அறிவித்த அப்காசியாவை அங்கீகரித்ததன் மூலம், உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அந்நாட்டை அங்கீகரித்த நான்காவது நாடானது. இதன் மூலம் நவூரு $50 மில்லியன் நிவாரண உதவியை உருசியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது. + +நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆத்திரேலியாவிடமிருந்து கிடைக்கும் உதவிமூலம் கிடைக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவை நோக்கிச் சென்ற படகில் இருந்த 438 பர்மிய அகதிகளை எம்வி டாம்பா என்ற நோர்வே கப்பல் மீட்டது. நவூருவுடன் ஆத்திரேலியா எட்டிய பசிபிக் தீர்வு என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் ஆத்திரேலியா நவூரு தீவில் தற்காலிகமாகக் குடியேற்றியது. ஆத்திரேலியாவின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு நவூரு அங்கு ஒரு அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றை நிருவகித்தது. இம்முகாமில் இருந்தவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரீலிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2006, 2007 காலப்பகுதிகளில் இலங்கையர் உட்பட மேலும் பலர் நவூருவுக்கு அனுப்பப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் கெவின் ரட் அரசு இம்முகாமை மூடியது. ஆகத்து 2012 இல் ஆத்திரேலிய அரசு மீண்டும் நவூருவில் தடுப்பு முகாம் ஒன்றை நிறுவியது. 2012 செப்டம்பரில் கிறித்துமசுத் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 30 பேரடங்கிய முதலாவது குழு நவூரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர் + +நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக் கோட்டின் தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் பவளத் திட்டுகள் காணப்படுகின்றன. இப்பவளத்திட்டுகள் காரணமாக இங்கு துறைமுகம் ஒன்று அமைக்கப்படமுடியாதுள்ளது, ஆனாலும் இங்குள்ள கால்வாய்கள் வழியே சிறிய ரகப் படகுகள் தீவுக்குள் வரக்கூடியதாக உள்ளன. வள��ான கரையோரப் பகுதி நிலம் கரையிலிருந்து 150 முதல் 300 மீட்டர்கள் வரை உள்ளே உள்ளது. + +பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்திலிருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது. நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் வாழை, அன்னாசி, மரக்கறிகள், தாழை மரங்கள் ஆகியனவும், புன்னை போன்ற கடின மரங்களும் விளைகின்றன. + +பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பாசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை கிரிபட்டியில் உள்ள பனாபா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியாவில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பாசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாசுப்பேட்டு சுரங்கத் தொழில்மூலம் இப்பகுதியில் 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற்ற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40 விழுக்காடு அழிந்துள்ளது. + +இத்தீவிற்குரிய உயர் தாவரங்களாக 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் அகணிய உயிரிகள் அல்ல. தென்னை வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன. இத்தீவிற்குரிய பாலூட்டிகள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கள்மூலம் கொண்டுவரப்பட்டவையாகும். + +நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் உப்பகற்றல் முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை பருவப் பெயர்ச்சி மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் எல் நீனோ-தெற்கத்திய அலைவினால் வறண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது. வெப்பநிலை பொதுவாகப் பகல் நேரத்தில் முதல் வரை ஆகவும், இரவு நேரத்தில் முதல் வரை ஆகவும் உள்ளது. + +பாசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன. பாசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பாசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது. சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது. + +தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் ஆவர். சுற்றுலாத் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை. 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது. இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது. + +சூலை 2011 தரவின் படி நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும். மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பாசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, துவாலு நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நௌருவ மொழி இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும். ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும். + +நவூருவில் அதிகமாக வாழும் இனக் குழு நவூருவர்கள் (58%), ஏனைய பசிபிக் தீவு மக்கள் (26%), ஐரோப்பியர் (8%), சீனர்கள் (8%). பெரும்பாலானோரின் மதம் கிறித்தவம் (மூன்றில் இரண்டு பங்கு சீர்திருத்தக் கிறித்தவர்கள், ஏனையோர் கத்தோலிக்கர். இவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு பகாய் மதத்தவர்கள் (10%) உள்ளனர். உலகிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிக பகாய் மதத்தைச் சேர்ந்தவர்கள் நவூருவிலேயே வசிக்கின்றனர்., பௌத்தர்கள் (9%), முசுலிம்கள் (2.2%) வசிக்கின்றனர். + +நவூருவர்களின் எழுத்தறிவு 96 விழுக்காடு ஆகும். ஆறு முதல் பன்னிரண்டு வயதானவர்களுக்குக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது. + +நவூருவர்களே உலகிலேயே அதிக உடற் பருமன் உள்ள மக்கள் ஆவர்: ஆண்களில் 97 விழுக்காட்டினரும், பெண்களில் 93 விழுக்காட்டினரும் அதிக உடற்பருமனைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, உலகின் அதிகளவு இரண்டாம் வகை நீரிழிவு நோய் நவூருவிலேயே காணப்படுகிறது. இங்குள்ள 40 விழுக்காட்டினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவூருவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 60.6 ஆண்டுகளும், பெண்களுக்கு 68.0 ஆண்டுகளும் (2009 தரவுகள்) ஆகும். + +நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். இங்கிருந்த 12 இனக்குழுக்களில் இரு குழுக்கள் 20ம் நூற்றாண்டில் அழிந்து போயினர். இரண்டு உலகப் போர்களில் இருந்தும், 1920 ஆம் ஆண்டு வைரசு நோய்ப் பரவல் அழிவில் இருந்தும் நவூருவ மக்கள் மீண்டதை நினைவு கூரும் முகமாக அக்டோபர் 26 இல் அங்கம் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிவாசிகளின் பழைமையான பழக்க வழக்கங்கள் ஒரு சிலவே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனாலும் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், மீன்பிடித்தல் போன்றவை இப்போதும் நடைமுறையில் உள்ளன. + +நவூருவில் செய்திப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. "முவினென் கோ" என்ற இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. என்டிவி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சி இயங்குகிறது. இது முக்கியமாக ஆத்திரேலிய, நியூசிலாந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அத்துடன் அரசின் நவூரு வானொலி ஆத்திரேலிய வானொலி, மற்றும் பிபிசி செய்திகளை ஒலிபரப்புகிறது. + +நவூருவில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், பாரம் தூக்குதல் ஆகியவை தேசிய விளையாட்டுகள் ஆகும். நவூரு பொதுநலவாய விளையாட்டுக்கள், கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கு பற்றுகிறது. + +நவூருவில் பாசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின. நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் கொறிணிகள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும். + + + + + +ஆசலர் + +ஆசலர் வஜ்ரயான பௌத்தத்தில் கர்பகோசதாதுவின் ஐந்து வித்யாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவரை "ஆசநாதர்", "ஆர்யாசலநாதர்", "ஆசல-வித்யாராஜா" மற்றும் "சண்டமஹாரோஷனர்" என பலவாறாக அழைப்பர். "அசல (अचल)" என்ற வடமொழிச்சொல்லுக்கு "அசைக்க இயலாத" என்று பொருள். இது போதிசத்துவர்கள் பயணம் செய்யும் பத்து பூமிகளுள் எட்டாவது பூமியின் (அசலம்) பெயராக இருப்பது குறிப்பிடத்தக்கது. + +ஆசலர் மாயத்தை அழிப்பவர் ஆவார். இவர் சிற்றின்ப ஆசைகளால "அசைக்க இயலாதவர்" என்பதையே இவருடைய பெயர் குறிப்பிடுகிறது. மிகவும் உக்கிரமான உருவத்தை கொண்டிருந்தாலும், புத்தரின் போதனைகளை கொண்டு சென்று அனைத்து உயிர்களுக்கு வழிகாட்டுவதே இவரின் பணி ஆகும். இவர் குறிக்கொள்களை அடைவதற்கு உதவுபவராகவும் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார். +அக்ஷோப்யர் என்ற பெயர் கூட "அசைக்க இயலாத" என்ற பொருள் கொண்டிருப்பததால், சில நேரத்தில் இருவர் ஒருவரை குறிப்பதாக தவறாக கருதப்படுகிறது. எனினும் அக்ஷோப்யர் புத்தர் ஆவர். ஆசல வித்யாராஜா ஜப்பானில் வணங்கப்படும் பதின்மூன்று புத்தர்களுள் ஒருவர் ஆவார். +பௌத்தத்தில் அறிவு மற்றும் நெருப்பின் அதிதேவதையாக இருக்கின்றார். இவர் விதயாராஜாக்களுள் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தவராக உள்ளார். ஆபத்து ஏற்படும் போது காப்பாற்றுவதற்காக ஆசலர் அழைக்கப்படுகிறார். இவருடைய கோவில் ஜப்பானின் ஓகியாமா மலையின் மீது அமைந்துள்ளது. ஆசலர் ஒரு தீப்பிழம்புகள் சூழப்பட்ட அழகற்ற முதியவராக காணப்படுகிறார். இவரை காண்பவர்கள் அனைவருக்கும் குருடர்கள் ஆவதாக நம்பப்படுகின்றனர். ஆசலை குறித்த புகழ்பெற்ற கதையில், ஓ ஆய் சன் என்ற இளம்பெண் ஜப்பானின் ஆவா மாகானத்தின் ஒஹாராவில் உள்ள அவரது கோவில் அருகில் உள்ள அருவியின் கீழ் நிர்வாணமாக 100 நாட்கள் அவரை வேண்டி வந்தார். அதன் பலனாக அவளது தந்தையின் நோய் தீர்ந்ததாக கூறப்படுகிறது. + +ஆசலர் பொதுவாக அசுரர்களை அடக்குவதற்கு வலது கையில் வாளுடனுடம், அவர்களை கட்டுவதற்கு இடது கையில் பாசத்துடனும் காணப்படுகிறார். இவருடைய வாள் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மனத்தூய்மையை குறிக்கும் விதமாக நீல முகத்துடன் தீப்பிழம்புகள் சூழ காணப்படுகிறார். அவருடைய அசையா உறுதியை குறிக்கும் விதமாக பாறையில் நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு இருக்கிறார். அவரது கூந்தல் ஏழு முடிச்சுகளை கொண்டிருக்கிறது. மேலும் அவ்வப்போது இரு கோரப்பற்களுடன் காட்சியளிக்கிறார், ஒன்று கீழ்புறமும் இன்னொன்று மேற்புறமும் நோக்கிய விதமாக உள்ளது + + + + + +செறுகுன்னப்புழா + +செறுகுன்னப்புழா மங்களம் ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. மங்களம் ஆறு, கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறுகளில் ஒன்றான காயத்ரிப்புழாவின் துணையாறு ஆகும். இவ்வாறு இயற்கை அழகு மிகுந்த இடங்களினூடு ஓடுகின்றது. பாலக்காட்டில் இருந்து சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளதும், கேரளாவிலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமாக விளங்கும் மங்கலம் அணை செறுகுன்னப்புழாவின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது. + + + + +கர்பகோசதாது + +வஜ்ரயான பௌத்தத்தில், கர்பகோசதாது (சமஸ்கிருதம்: गर्भकोस-धातु; ஜப்பானியம்: 胎蔵界 "டைஸோகை") அல்லது கர்ப மண்டலம் என்பது ஐந்து வித்யாராஜாக்கள் வசிக்கும் மண்டலம் ஆகும். + +கர்மகோசதாதுவை குறித்த விவரங்கள் மகாவைரோசன சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த மண்டலத்தின் பெயர் மகாவைரோசன சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரத்தில் இருந்து பெறப்படுகிறது. அதில் மஹாவைரோசனர் இந்த மண்டலத்தின் ரகசிய போதனைகளை வஜ்ரசத்துவருக்கு தன்னுடைய "காருண்ய கர்பத்தில்" இருந்து உபதேசித்ததாக கூறப்பட்டுள்ளது. . +அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும் + + + + +உடுவில் + +உடுவில் ("Uduvil") இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமம். இது நான்கு புறமும் நெல் வயல்களும், மரக்கறி விளை நிலங்களும் சூழ்ந்துள்ள ஊர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி, மானிப்பாய், சுதுமலை, இணுவில் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி உடுவிலைத் தொட்டுச் செல்லும் காங்கேசன்துறை வீதியும், மருதனார்மடம் சந்தியிலிருந்து, மேற்கு நோக்கி உடுவிலை ஊடறுத்துச் செல்லும் கைதடி - மானிப்பாய் வீதியும் உடுவில் ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களாகும். + +இங்குள்ள மக்கள் தமிழர்களாவர். பேசும் மொழி தமிழ் மொழி. இங்கு இந்துக்களும், கிறித்தவர்களும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றார்கள். கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகமானாலும் புரட்டஸ்தாந்து மதத்தையும் பிற்காலங்களில் தோன்றிய ஏனைய கிறித்தவ மதப் பிரிவுகளைப் பின்பற்றுபவர்களும் வாழ்கின்றார்கள். + +இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வருகின்றது. ஆயினும் கல்வியறிவு வளர்ச்சியாலும், மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற விளைந்தமையாலும், வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும் தற்போதைய இளம் சந்ததியினர் அரசாங்க மற்றும் தனியார் தொழில்களை பெரும்பாலும் நாடிச் செல்கின்றனர். பலர் புதிய வியாபார, வணிக முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவற்றினை விட பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட சில தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள், சிலர் வேறு தொழில்களை நாடிச் செல்ல மற்றயவர்கள் தம் பரம்பரை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். + + +உடுவில் கிராமமானது 5 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்டுள்ளது. +அவையாவன + + + +இங்கு பல கிறித்தவ தேவாலயங்களும் அமைந்துள்ளன. அவையாவன + + + + + + +வஜ்ரதாது + +வஜ்ரயான பௌத்தத்தில் "வஜ்ரதாது" (சமஸ்கிருதம்:"वज्रधातु", ஜப் "kongōkai") என்பது ஐந்து தியானி புத்தர்கள் வசிக்கும் ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலம் வஜ்ரசேகர சூத்திரம் என்ற மறைபொருள்(Esoteric) பௌத்த சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுந்தது ஆகும். + +அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும் + + + + + +பட்டுக்கோட்டை விஸ்வநாதன் + +பட்டுக்கோட்டை விஸ்வநாதன் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் பன்னைவயல், என்னும் ஊரில் பிறந்தார். ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த அவர்,வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினர்.பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக பொறுப்பேற்ற இவர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஒருமுறை இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இவரின் துணைவியார் ஜெயபாரதி விஸ்வநாதனை நிற்கவைத்து நகரசபை தலைவராக வெற்றிபெறவைத்தார். + +மதிமுக பிரிவிற்குமுன் திமுகவின் முக்கியநபராக இருந்த இவர், உள்கட்சி சண்டையில் சக திமுக பிரமுகர் சீனி.பண்ணீர்செல்வம் கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். இதனைத்தொடர்ந்து திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது. மதிமுக, திமுகவில் இருந்து பிரிந்தபோது இவரும் மதிமுகவில் இணைந��தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுகவின் சார்பில் இவர் பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) யில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்று தோல்வியடைந்தார். 16-8-2007 அன்று காலமானார். + + + + +இரு பிரிவு மண்டலம் + +இரு பிரிவு மண்டலம் (ஜப். 両界曼荼羅 "Ryōkai mandara") என்பது ஐந்து வித்யாராஜாக்களின் கர்பகோசதாதுவையும் ஐந்து தியானி புத்தரிகளின் வஜ்ரதாதுவையும் உள்ளடக்கிய ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலத்தில் சுமார் 414 பௌத்த தேவதாமூர்த்திகள் உள்ளதாக கருதப்படுகிறது. + +வஜ்ரதாது புத்தரின் மாறாத பிரபஞ்சத்தன்மையையும், கர்பகோசதாது புத்தரின் வீரியம் நிறைந்த செயல்பாட்டுடன் கூடிய தன்மையையும் குறிக்கிறது. எனவே மகாயான பௌத்தத்தில் இந்த இரு மண்டலங்களும் தர்மத்தை முழுவதுமாக குறிப்பதாக கருதப்படுகிறது. இவையே வஜ்ரயான பௌத்தத்தின் கருவாகவும் விளங்குகிறது. ஜப்பானிய ஷிங்கோன் பௌத்தத்தில் இந்த மண்டலத்தின் படங்கள் சுவரில் மாட்டப்படுகின்றன. + + + + +போச்புரி + +போச்புரி ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு பீகார், வட மேற்கு சார்கண்ட், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய நேப்பாள நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சில திரைப்படங்களும் உண்டு. + +டைம்சு ஆவ் இந்தியா நாளிதழில் வெளியான கட்டுரையில் குறித்துள்ளபடி உத்தரப் பிரதேசத்தில் ஏறத்தாழ 70 மில்லியன் மக்களும், பீகாரில் மேலும் ஒரு 80 மில்லியன் மக்களும் போச்புரி மொழியைத் தங்கள் முதல் அல்லது இரண்டாவது மொழியாகப் பேசுகின்றனர். பீகார் மற்றும் பூவாஞ்சல் பகுதிகளின் வெளியேயும் மேலும் 6 மில்லியன் மக்கள் போச்புரி மொழியைப் பேசுகின்றார்கள். இப்பகுதிகள்: நேப்பாளம், குறிப்பாக அங்கே பிர்குஞ்சுப் பகுதி, மோரீசியசு, பீச்சி (Fiji), சுரினாம், கயானா, உகாண்டா, சிங்கப்பூர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, செயின்ட் வின்சென்ட், கிரெனாடின், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகியவை ஆகும். ஆகவே உலகம் முழுவதிலும், போச்புரி மொழி பேசுவோர் ஏறத்தாழ 150 மில்லியன் ஆகும். +ஆனால் இந்தியாவின் ஏற்புபெற்ற 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தி மொழியின் வட்டாரக் கிளைமொழியாக (dialect), போச்புரி மொழி பேசுவோர் தொகை 33 மில்லியன் ஆகும். + + + + +கொலம்பியா விண்ணோடம் + +கொலம்பியா விண்வெளி ஓடம் ("Space Shuttle Columbia") நாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும். இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 12, 1981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது. பெப்ரவரி 1, 2003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர். + +கொலம்பியா விண்ணோடம் 28 தடவைகள் பயணித்தது. மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்தது. 4,808 சுற்றுக்களை முடித்துக் கொண்டது. 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது. + + + + + +திறிகுவே இலீ + +திறிகுவே லீ ("Trygve Halvdan Lie") (ஜூலை 16, 1896 – டிசம்பர் 30, 1968) என்பவர் நோர்வேயின் ஓர் அரசியல்வாதியாவார். 1946 முதல் 1952 வரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இவர் பதவி வகித்தார். + + + + + +நோய் + +நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம். நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. + +நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக்காரணிகளால் ஏற்���டும் நோய்களாகும். + +வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும். + +நோய்வாய்ப்பட்டு இறப்பது இயற்கையான மரணமாகக் கருதப்படுகிறது. நோய்களை நோய் விளைவிக்கின்றவை, குறைபாட்டு நோய், பரம்பரை வியாதி, உடலியக்கப் பிறழ்வுகள் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நோய்களைத் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கலாம். மனிதர்களில் கொடிய வியாதியாகக் குருதியோட்டத்தைத் தடுக்கும் வளி குறைபாட்டு இதயநோயையும் (ischemic heart disease), இதற்கு அடுத்ததாகப் பெருமூளை குருதிக்குழல் நோய் (cerebrovascular disease), கீழ் சுவாசக்குழாய்த் தொற்றுகள் (lower respiratory infections) ஆகியவற்றைக் கூறலாம். + +நோய், பிறழ்வுகள், நோயுற்ற விகிதம், உடல்நலக் குறைவு ஆகிய சொற்கள் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாகப் பல இடங்களில் வேறுபடுத்தப்படாமல் உபயோகப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில், குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்துவது விரும்பப்படுகிறது. + + + + + + + +இன்ஃபுளுவென்சா போன்ற ஒரு சில தொடுதல் மூலம் பரவும் நோய்களாகவோ அல்லது பொதுவாக அறியப்படும் தொற்று நோய்க்களாகவோ நோய்க்காரணிகள் இருக்கக்கூடும். இந்த நோய்களை உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளானது நோய்க்காரணிகளாக அறியப்படுகி��்றன மற்றும் பாக்டீரியா வகைகள், வைரசுகள்,ஓரணு உயிர்கள் (protozoa) மற்றும் பூஞ்சை வகைகளும் இதில் அடங்கும்.தொற்று நோய்களானது தொற்றுள்ள பொருட்களை தொட்ட கைகள் மூலம் வாய்க்கோ, நோய்கிருமிகளைத் தாங்கித் திரியும் பூச்சிகள் கடிப்பதாலோ, அசுத்தமான உணவு மற்றும் நீரைப் பருகுவதாலோ (சில சமயங்களில் மலம் வழியாக) பரவுகின்றன . கூடுதலாக, பாலியல் பரவும் நோய்களும் உள்ளன. சில நோய்கள் தடுக்கப்படலாம் அல்லது பொருத்தமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் பிந வாழ்க்கை முறை மூலமாகவும் நோய் பாதிப்பிலிருந்து சீராக்கிக்கொள்ளலாம். + +புற்றுநோய், இதய நோய் மற்றும் மனநல குறைபாடுகள் போன்ற பெரும்பாலான நோய்கள் (சிலவற்றைத் தவிர) போன்றவை தொற்றா நோய்களாகும். பல தொற்றா நோய்கள் பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ மரபணு அடிப்படையில் (மரபணு கோளாறு பார்க்கவும்) ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவுவதாக உள்ளன. + +உடல்நலம் சார் சமூகக் காரணிகளும் (Social determinants of health -SODH) நோய் சமூக நலமும் அவர்களின் உடல்நலத்தை நிர்ணயிக்கின்றன.நோய்கள் பொதுவாக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சூழ்நிலைகளுக்கு தொடர்புபடுத்தப்படுகின்றன. + +இந்த நோயானது காற்று வழியாக பரவும் அனைத்து தொற்று நோய்க்காரணிகளால் ஏற்படுகிறது.நோய்த்தாக்கத்தின் விளைவாக மருத்துவரீதியாக வெளிப்படையான நோயாகும் (அதாவது, நோய் அறிகுறிகள் அல்லது மருத்துவ நோய் பண்புகள் மூலமாக) + +தொற்று நோய்கள் என்று அழைக்கப்படும் அவை பரவும் நோய்கள் என்றும் அழைக்கப்படுகிறது.தொற்று நோய்கள் - காய்ச்சல் அல்லது பொதுவான குளிர், பொதுவாக ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது - பரவும் நோய்கள் என்பது ஒரு நபர் ஒருவருக்கொருவர் தொடாமலேயே காற்று , நீர், உணவு வழியாக பரவுகின்றன. + +நோய் விளைவிக்கும் பாக்டீரியங்கள், நச்சு, வைரசுகள்,ஒட்டுண்ணிகள் அடங்கிய உணவினை உட்க்கொள்வதால் உணவுவழிப் பரவும் நோய்கள் அல்லது உணவு நஞ்சாதல் ஏற்படுகிறது. + +தொழில்மயமாதலின் மூலமாக பல நாடுகளில், மக்களின் வாழ்க்கை முறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவர்களின் பழக்கவழக்க மாற்றங்களும் போதிய உடலுழைப்பு இல்லாத காரணமும்,உமிநீக்கப்பட்ட மாவுப்பொருள் (refined carbohydrates) துரித உணவுப்பழக்க வழக்ககங்களும் , மாறுபக்க கொழுப்பு (trans fat) உணவுகளும், மது நுகர்வுப் பழக்கமும் வாழ்க்கை முறை நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும். + +நலக்குறைபாடுகளால் ஏற்படும் நிதி செலவீனம், இறப்பு, நோயுற்ற விகிதம், பிற சுட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பகுதியில் நிகழும் பாதிப்புகளைக் கணக்கிடுவது நோய்க் கடப்பாடு (Disease burden) எனப்படுகிறது. + + + + + +நோய்களை வகைப்படுத்தல் + +நோய்கள் மனித வாழ்வின் நிலையான ஒர் அம்சம். நோய்கள் பல வகைப்படும். இவற்றை மருத்துவர்களோ அல்லது துறைசார் வல்லுனர்களோ வகைப்படுத்துவதே பொருந்தும். எனினும் நோய்கள் பற்றி பொது மக்கள் பல தகவல்களை தம்மிடம் கொண்டுள்ளார்கள். மேலும் பல தரப்பட்ட மருத்துவ வழிமுறைகள் உலகில் உண்டு. எனவே நோய்களை திறந்த முறையில் பல ஊற்றுக்களில் இருந்தும் தகவல்களை உள்வாங்கி வகைப்படுத்தும் முறை இன்று பல முனைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. +தமிழ் விக்கிபீடியாவில் தமிழில் நோய்கள் பற்றி தகவல்களை சேகரிப்பது, உறுதிப்படுத்துவது தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் நோய்களை வகைப்படுத்தல் ஒரு அவசியமான பங்கு வகிக்கின்றது. + + + + + + +ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி + +ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கலைக்கும் படி தடைசெய்யப்பட்டு, மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்திய அமைதி காக்கும் படையுடன் வந்து மீண்டும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கம் முதன்மையானதாக இயங்கியது அல்லது இந்தியாவால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் ஆக்கப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தாரே தவிர, முதலமைச்சர் எனும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நட���ப்பெறவில்லை. ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாகத்தில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் செல்வாக்கு கொண்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். மிகுதியானோர் இந்திய-இலங்கை ஒருங்கிணைவின் படி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினர். + +2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர். + +இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது. + + + + + +பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை + +இலங்கையின் வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 30 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 பிரிவுகளும், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகளும், வவுனியாவில் 4 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம். + + + + + + + + + + +வேலணை பிரதேசச் செயலாளர் பிரிவு + +வேலணை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது தீவுப்பகுதி தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வடக்கு மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள தீவுகளில், நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, சிறுத்தீவு, வேலணைத்தீவின் தென் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவு 50 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. + +இப் பிரிவின் பரப்பளவு 78 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +ஊர்காவற்றுறை பிரதேசச் செயலாளர் பிரிவு + +ஊர��காவற்றுறை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது தீவுப்பகுதி வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளது. இப் பிரிவு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு மேற்குத் திசையில் உள்ள தீவுக் கூட்டங்களில், அனலைதீவு, எழுவைதீவு, பருத்தித்தீவு, காரைநகர், வேலணைத்தீவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவு 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் அனலைதீவில் 2 பிரிவுகளும், எழுவைதீவில் ஒன்றும், காரைநகரில் 9 பிரிவுகளும், வேலணைத்தீவில் 12 பிரிவுகளும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. + +இது 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + + + + + + +வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("Valikamam South Divisional Secretariat") அல்லது உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. உடுவில், சுன்னாகம், சங்குவேலி, கந்தரோடை, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை, இணுவில், தாவடி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் அமைத்துள்ளன. + +இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும். + +வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம், +உடுவில் கிழக்கு, +சுன்னாகம், +இலங்கை + + + + + + +வள்ளங்களி + +வள்ளங்களி அல்லது வள்ளம் களி என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு படகுப்போட்டி ஆகும். (வள்ளம் = படகு, களி = களியாட்டம், விளையாட்டு). இது அறுவடைத் திருவிழாவான ஓணத்தின் போது நடைபெறும். சுருளன் வள்ளம், இருட்டுகுத்தி வள்ளம், ஓடி வள்ளம், வெப்பு வள்ளம் (வைப்புவள்ளம்), வடக்கந்நோடி வள்ளம், கொச்சுவள்ளம என பல வகையான வள்ளங்களுக்கு இப்போட்டிகள் நடைபெறும். எனினும் இவற்றில் சுண்டன் வள்ளம் வள்ளங்களி மிகவும் புகழ்பெற்றது. + + + + + + +வலிகாமம் கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அச்சுவேலி, ஆவரங்கால், இடைக்காடு, இருபாலை, கல்வியங்காடு, கோப்பாய், நவக்கிரி, நீர்வேலி, பத்தமேனி, புத்தூர், சிறுப்பிட்டி, தம்பாலை, கதிரிப்பாய், ஊரெழு, உரும்பிராய், வளலாய், வாதரவத்தை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு எல்லையாக உள்ளது. மேற்கில் தெல்லிப்பழை, உடுவில், நல்லூர் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், தெற்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவுடன் தொண்டைமானாறு நீரேரி, உப்பாறு நீரேரி என்பனவும் உள்ளன. + +இதன் பரப்பளவு 102 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு + +நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 40 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அரியாலை, கந்தர்மடம், கொக்குவில், கோண்டாவில், நல்லூர், திருநெல்வேலி, வண்ணார்பண்ணை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப் பிரிவின் தெற்குப் பகுதியில் யாழ்ப்பாண மாநகரமும் நீரேரியும் அமைந்திருக்கின்றன. வடக்கு எல்லையில் உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு உள்ளது. மேற்கில் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. + +இது 38 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டத��. + + + + + + +யாழ்ப்பாணம் பிரதேசச் செயலாளர் பிரிவு + +யாழ்ப்பாணம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. மாவட்டத் தலை நகரும், வட மாகாணத்தின் முக்கிய நகருமாகிய யாழ்ப்பாண நகரம் இப்பிரிவினுள்ளேயே அடங்கியுள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அத்தியடி, சுண்டிக்குளி, கொழும்புத்துறை, ஈச்சமோட்டை, கோட்டை, பெரியகடை, குருநகர், யாழ்ப்பாண நகரம், கொட்டடி, மருதடி, சோனகதெரு, நாவாந்துறை, நெடுங்குளம், பாசையூர், சிறாம்பியடி, சின்னக்கடை, திருநகர், வண்ணார்பண்ணையின் ஒரு பகுதி என்பன இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்துள்ள இப் பிரிவின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடல் உள்ளது. வடக்கில் நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளன. + +இதன் பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +எக்டேர் + +எக்டேர் அல்லது எக்டயார் ("hectare", ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும். + +"ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:" + + + + + + + +சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு + +சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, வட்டுக்கோட்டை தெற்கு, வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை மேற்கு, அராலி வடக்கு, அராலி கிழக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி, சங்கரத்தை, தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மேற்க��, பொன்னாலை, மூளாய், பண்ணாகம், பனிப்புலம், சித்தங்கேணி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மத்தி, சங்கானை கிழக்கு, சங்கானை தெற்கு, சங்கானை மேற்கு, சங்கானை மத்தி என்பனவாகும்.இங்குள்ள முக்கிய ஊர்கள் அராலி, சங்கானை, சுழிபுரம், மூளாய், பண்ணாகம், பனிப்புலம், பொன்னாலை, சங்கரத்தை, சித்தங்கேணி, தொல்புரம், வட்டுக்கோட்டை என்பனவாகும். இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவுடன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் சங்கானையில் அமைந்துள்ளது. + +2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 46,343 பேர் வசிக்கின்றனர். இது 44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும். + +2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. + +2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர். + + + + + + +வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு (Valikamam South-West Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனைக்கோட்டை, இளவாலை, மானிப்பாய், மாரீசன்கூடல், மாசியப்பிட்டி, மாதகல், முள்ளானை, நவாலி, பண்டத்தரிப்பு, பெரியவிளான், பிரான்பத்தை, சண்டிலிப்பாய், சாவற்காடு, சில்லாலை, சுதுமலை, உயரப்புலம், வடலியடைப்பு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்குத் தெற்காகக் குடாநாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகளைத் தொட்டு நிற்கின்ற இப்பிரிவின் வடக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன. கிழக்கில் தெல்லிப்பழை, உடுவில், நல்லூர் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், மேற்கில் சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் சண்டிலிப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது. + +இப் பிரிவின் பரப்பளவு 45 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு + +தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 45 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + +இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு எல்லையாக உள்ளது. மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் தெல்லிப்பழையில் அமைந்துள்ளது. + +இதன் பரப்பளவு 57 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + + +தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவு + +சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு அல்லது தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவு (Thenmaradchi Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 60 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அல்லாரை, கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, தாவளை, இயற்றாளை, குடமியான், நாவற்காடு, இடைக்குறிச்சி,மந்துவில், எழுதுமட்டுவாள், கச்சாய், கைதடி, சந்திரபுரம், கல்வயல், கரம்பகம், கரம்பைக்குறிச்சி, கெற்பெலி, கோவிலாக்கண்டி, மீசாலை, மட்டுவில், நுணாவில், மறவன்புலவு, மிருசுவில், நாவற்குழி, பாலாவி, ராமவில், சங்கத்தானை, சரசாலை, தனங்கிளப்பு, உசன், வெள்ளாம்போக்கட்டி, விடத்தல்பளை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. மேற்கு, தெற்கு எல்லைகளில் நீரேரிகளும், கிழக்கில் கிளிநொச்சி மாவட்டமும், நீரேரியும், வடக்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய், கரவெட்டி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும் உள்ளன. + +இப்பிரிவு 221 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + +2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. + +2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர். + + + + + + +வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("Vadamaradchi South-West Divisional Secretariat") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அல்வாய், அத்தாய், இமையாணன், கட்டைவேலி, கப்பூது, கரணவாய், கரவெட்டி, மாத்தோணி, நெல்லியடி, சமரபாகு, இலக்கிணாவத்தை, துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. பருத்தித்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு இதன் வடக்கு எல்லையாக உள்ளது. கிழக்கில் பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், தெற்கில் சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவுடன் தொண்டைமானாறு நீரேரியும் எல்லைகளாக உள்ளன. + +இதன் மொத்தப் பரப்பளவு 88 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +வடமராட்சி வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +பருத்தித்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("Vadamaradchi North Divisional Secretariat") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. துன்னாலை, தும்பளை, புலோலி, மந்திகை, பருத்தித்துறை, அல்வாய், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, கெருடாவில், தொண்டைமானாறு, வியாபாரிமூலை, கற்கோவளம், வல்லிபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் உள்ளது. மேற்கில் தொண்டைமானாறு நீரேரியும், தெற்கில் கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ளது. + +இதன் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +வடமராட்சி கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு ("Vadamaradchi East Divisional Secretariat") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆழியவளை, அம்பன், செம்பியன்பற்று, சுண்டிக்குளம், குடத்தனை, மணல்காடு, மருதங்கேணி, முள்ளியான், நாகர்கோயில், பொக்கறுப்பு, பொற்பதி, உடுத்துறை, வதிரி, வெற்றிலைக்கேணி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. ஒரு சிறு பகுதி தவிர்ந்த குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள இப் பிரிவு ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ளது. இக் கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது. மேற்கில் ஒடுங்கிய நீரேரி இதனைச் சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு, கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது. இதன் நீளம் குறைந்த வடக்கு எல்லையில் கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு உள்ளது. + +இதன் பரப்பளவு 179 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +நெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு + +நெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவை உள்ளடக்கியது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. நெடுந்தீவு என்னும் ஒரு தீவு மட்டுமே இப் பிரதேசச் செயலாளர் ��ிரிவினுள் அடங்குகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இலங்கைக் கரையில் இருந்து கடலுள் கூடிய தொலைவில் அமைந்துள்ள பிரதேசச் செயலாளர் பிரிவு இதுவேயாகும். + +இதன் பரப்பளவு 45 சதுர கிலோமீட்டர் ஆகும். + + + + + + +1509 + +1509 (MDIX) ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + + +1500கள் + +1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது. + + + + + + +பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு + +பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + +பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + + + + + + + + +வளபட்டணம் ஆறு + +வளப்பட்டணம் ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளுள் ஒன்று. இது கண்ணூர் பகுதியிலேயே மிகப்பெரிய ஆறு. வளப்பட்டம் என்ற ஊர் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. புகழ்பெற்ற முத்தப்பன் கோயிலும் இவ்வாற்றின் கரையில் உள்ளது. + + + + +கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு + +கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + +இப்பிரிவு 318 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + + + + + + +கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு + +கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கில் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 44 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + + +கரைச்சி என்ற பெயரில் தற்போது எந்த ஒரு ஊரும் இல்லை. ஒரு நிர்வாகப் பிரிவு மட்டுமே. இது முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் 1980களில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதில் அதனுடன் இணைக்கப்பட்டது. + +கரைச்சி என்பது "கரை" (கடல், ஏரி போன்றவற்றின் கரையோரப் பகுதி) என்ற சொல்லில் இருந்து பிறந்திருப்பதாகக் கருதப்படுகிறது. + + + + + + +மகாகாலா (டைனோசர்) + +மகாகாலா என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு டைனோசர் இனம் ஆகும். பௌத்த தர்மபாலரான மகாகாலனின் பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான எலும்புக்கூடு கோபி பாலைவனத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. + +மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 அங்குலம் ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, பூமியில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர். + + + + + +ராஜாசரஸ் + +ராஜாசரஸ் என்பது ஒரு புலால் உண்ணும் டைனோசர் ஆகும். இது முதன் முதலில் சிக்காகோ தொல்லுயிர் அறிஞர்களான பால் செரீனோ, ஜெஃப் வில்சன் மற்றும் இந்திய நிலவியல் கழகம்("Geological Suvery of India") தொல்லுயிர் அறிஞர் சுரேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் 2003-ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது. இந்த டைனோசர் இனத்தில் புதைபடிவமாக்கப்பட்ட எலும்புகள் சுரேஷ் ஸ்ரீவஸ்தாவால் 1982-1984இல் குஜராத்தில் உள்ள கேதா மாவட்டத்தின் ராஹியோலி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போன்ற புதைபடிவங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரு இடங்களின் தூரத்தை கணக்கில் கொண்டு இந்த "ராஜாசரஸ்" டைனோசர் குஜராத்தில் நர்மதா நதிவரை பரவியிருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. + +"ராஜாசாரஸ் நர்மதென்ஸிஸ்" என்ற பெயருக்கு "நர்மதாவின் ராஜ டைனோசர்" என்று பொருள். இந்த டைனோசர் இந்திய துணைக்கண்டம் ஆசியப் பெருநிலபரப்புடன் மோதுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த இந்திய நிலப்பரப்பில் இருந்திருக்கிறது. + + + + + +பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு + +பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + +இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + + + + + + +துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவு + +துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆலங்குளம், அமைதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், அனிச்சியன்குளம், இயங்கன்குளம், கல்விளான், கோட்டைகட்டியகுளம், மல்லாவி, பழையமுறிகண்டி, பாரதிநகர், புகழேந்திநகர், புத்துவெட்டுவான், தெண்ணியான்குளம், தேராங்கண்டல், திருநகர், துணுக்காய், உயிலங்குளம், யோகபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் கிளிநொச்சி மாவட்டமும், மன்னார் மாவட்டமும்; தெற்கிலும், கிழக்கின் ஒரு பகுதியிலும் மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கின் எஞ்சிய பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. + +இப்பிரிவு 329 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + + + + + + +மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு + +மாந்தை கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது பாண்டியன்குளம் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்��ே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பாள்புரம், கரும்புள்ளியன், கொல்லவிளாங்குளம், மூன்றுமுறிப்பு, நாட்டான்கண்டல், ஒட்டறுத்தகுளம், பாலிநகர், பாண்டியன்குளம், பொன்னகர், பூவரசங்குளம், செல்வபுரம், சிரட்டிகுளம், சிவபுரம், வன்னிவிளாங்குளம், விநாயகபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் துணுக்காய் பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், தெற்கில் மன்னார், வவுனியா மாவட்டங்களும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன. + +இப்பிரிவு 490 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. + + + + +