diff --git "a/train/AA_wiki_56.txt" "b/train/AA_wiki_56.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_56.txt" @@ -0,0 +1,3751 @@ + +ஃப்ளேம் ஆஃப் ரெக்கா + +"ரெக்காவின் நெருப்பு" என்ற இத்தொடர், ரெக்கா ஹானபீஷீ என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது ஒத்த வயதினருடன் எப்போதும் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சூழ்நிலைகளின் காரணமாக அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண்; மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணர்கிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் மகன் என்பதையும், மாய ஆயுதங்களால் ஆன "மடோகு"வைக் குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை பயன்படுத்துபவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும். + +ரெக்கா ஹானபீஷி
+"ரெக்கா" இந்த மங்கா தொடரின் கதாநாயகன். நிஞ்சாவை குறித்தும் அதன் தொடர்புடைய அனைத்தின் மீது மிகவும் பற்றுடையவன். தன்னை தோற்கடிப்பவர்களுக்கு தான் நிஞ்சாவாக அவர்களுக்கு பணிபுரிவதாக அறிவித்துக்கொண்டவன். ஹொக்காகே நின்ஜா இனத்தவரின் தலைவர் ஓக்காவின் இரண்டாவது மகன். தன்னுள் 8 டிராகன்களை கொண்டிருப்பவன். 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் ககேரோவால், நிகழ்காலத்துக்கு அனுப்பப்பட்டவன். அவன் தாய் இவனை நிகழ்காலத்துக்கு அனுப்பியதில் இருந்து தான் கதை ஆரம்பமாகிறது. +யனாகி சக்கோஷிட்டா
+"யனாகி", தன்னுள் எவ்வித காயத்தையும் குணமாக்கும் தன்மை கொண்டவள். இவளுடைய கருணை குணத்தைப் பார்த்து இவளுக்கு தன்னை நிஞ்சாவாக அர்ப்பணித்துக்கொண்டான். இ��்தொடரின் வில்லன் கோரன் மோரி தனக்கு அமரத்துவம் கிடைப்பதற்காக இவளை அடைய நினைப்பவர். ஆனால் ரெக்காவும் நண்பர்களும் அதை தொடர்ந்து தடுக்கின்றனர். +ஃபூக்கோ கிரிஸாவா
+"ஃபூக்கோ", முரட்டுத்தனமாக குணமுடைய பெண். ரெக்காவின் குழந்தைப்பருவ தோழி. ரெக்காவை வீழ்த்தி தன்னுடைய நிஞ்சாவாக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உடையவள். ரெக்கா யனாகியின் நிஞ்சா ஆனதை கண்டு தொடக்கத்தில் பொறாமை பட்டாலும், பிறகு மூவரும் சிறந்த நண்பர்களாக ஆகின்றனர். காற்றை கட்டுப்படுத்தும் "ஃபூஜின்" என்ற மடோகுவை கையாள்பவள். "ஃபூஜின்" உதவியுடன் ரெக்காவுக்கும் மற்றவர்களுக்கு உதவி புரிகிறாள். இந்த "ஃபூஜின்" ககெரோவால் ஆரம்பத்தில் ரெக்காவை எதிர்க்க தரப்பட்ட மடோகு. +டொமோன் இஷிஜீமா
+"டொமோன்" ரெக்காவின் பள்ளித்தோழன். 'ஃபூக்கோ'வைப்போல் தொடக்கக் காலத்தில் ரெக்காவைத் தோற்கடிக்கத் துடித்தான். ஆனால் பிறகு மூவரும் இணைபிரியா தோழர்களாயினர். இவன் "டோஸே நொ வா" என்ற மடோகுவை பயன்படுத்துகிறான். இந்த மடோகு பயன்படுத்துபவரின் மனதிடத்திற்கு ஏற்ப அவரின் உடலைத்திடப்படுத்துகிறது. இத்தொடரின் பிற்பாதியில், "குசிபாஷீ-ஓ" என்ற கூரிய மடோகுவை பயன்படுத்துபவன். மேலும் 'டெட்ஸுகன்' என்ற உடலை இரும்பாக்கும் மடோகுவையும் பயன்படுத்தி உள்ளான். +டோக்கியா மிககாமி
+"டோக்கியா" நஷிகிரி உயர்நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவன். இவன் "என்சூயி" என்ற வாளை கையாள்பவன். இந்த என்சூயி தண்ணீரையே தன்னுடைய கூர்மையான வெட்டும் பகுதியாக மாற்றக்கூடியது. தொடக்கத்தில், இறந்த தன் தங்கையை போல் யனாகி இருந்ததால் அவளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினான். பின்னர், தன் தங்கையின் கொலைகாரர்களைப் பழி வாங்கவும் பிற காரணங்களுக்காகவும் ரெக்காவுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து யனாகியை காப்பாற்ற உதவுகிறான். +கவோரு கோகனே
+"கவோரு" ஒரு காலத்தில் குரேயின் 'உருஹா' குழுவில் இடம் பெற்றிருந்தான். பின்னர் ரெக்காவின் 'ஹோக்காகே' குழுவில் உரா பூடோ சட்ஸுஜின் போட்டியின் போது இணைந்தான். இவன் ஐந்து உருவங்ளைக் கொண்ட புதிர் மடோகுவான "கோகன் அங்கி" பயன்படுத்துபவன். மங்காவில் இந்த ஆயுதத்துக்கு 'மு' என்ற ஆறாவது வடிவமும் உள்ளது. +காகே ஹோஷி/ககெரோ
+"காகே ஹோஷி" முதலில் வில்லியாக தொடரில் அறிமுகம் செய்யப்பட்டாள். பி���கு இவள் ரெக்காவின் தாய் எனத் தெரிய வந்தது. இவளிடத்தில் 'எய்க்காய் க்யோக்கு' என்ற பந்தில் பிறருடைய கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் பார்க்க இயலும். மேலும் அதைக்கொண்டு நிழல்கள் மூலமாக நடமாட முடியும். இவள் தான் ரெக்கா கொல்லப்படாமல் தடுப்பதற்காக, தடை செய்யப்பட்ட 'நிஞ்சுட்ஸு'வான 'ஜிக்கூர்யூரி' என்பதை பயன்படுத்தி அவனை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாள். ஆனால் தடை செய்யப்பட நிஞ்சுட்ஸுவை பயன்படுத்தியதின் காராணமாக சாகமுடியாத சாபத்தை பெறுகிறாள். +குரே
+குரே ரெக்காவின் அண்ணன். ரெக்காவைவிட நான்கு வயது பெரியவன். ஓக்காவுக்கும், அவனது மூத்த மனைவியான ரெய்னாவுக்கும் பிறந்தவன். ஹோக்காகே தலைவனாக நியமிக்கப்படவேண்டிய இவன், ரெக்காவின் பிறப்பால் புறக்கணிக்கப்பட்டவன். இவனும் நெருப்பை பயன்படுத்தக்கூடியவன். இவனுடைய நெருப்பு 'ஃபீனிக்ஸ்', இறந்தவர்களின் ஆத்மாவை குரேவின் நெருப்பாக மாற்றக்கூடியது. +ககெரோ ரெக்காவை நிகழ்காலத்துக்கு அனுப்புகையில் தவறுதலாக இவனும் நிகழ்காலத்துக்கு வருகிறான். மோரி குரானால் தத்தெடுக்கப்படுகிறான். ரெக்காவை பழிவாங்க மோரி குரானுக்கு உதவி புரிகிறான். + +மடோகு என்பது ஒருவித மாய ஆயுதங்கள் ஆகும். ஹொகாகே நிஞ்சா இனத்தவரால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவை போரில் பயன்படுத்த உருவாக்கப்பட்டவை. இயற்கையின் கூறுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இதனால் தான் மற்ற நிஞ்சா இனத்தவர், ஹொக்காகே இனத்தவரை கண்டு பயந்தனர். இந்த மடோகுகளை கைப்பற்றத்தான் ஓடா நொபுநகா ஹொகாகே இனத்தவரை அழிக்க துடித்தான். இவனிடமிருந்து காப்பாற்றவே ககெரோ ரெக்காவை ஜிக்கூர்யூரி பயனபடுத்தி நிகழ்காலத்துக்கு அனுப்புகிறாள். + +ஒவ்வொரு மடோகுவின் மீதும் சீன கன்ஜி எழுத்து இடப்பட்டு இருக்கும். அந்த கன்ஜி எழுத்துக்களை பொருத்தே, மடோகுவின் ஆற்றல் இருக்கும்.பழங்கால மடோகுகளை மோரியும், குரேவும் சேர்த்து வைத்து, அதை ரெக்காவுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். இதனை சமாளிக்க ககெரோ தான் பத்திரப்படுத்தியுள்ள சில மடோகுகளை ரெக்காவின் நண்பர்களுக்கு தருகிறாள். இத்தொடரில் உள்ள சில முக்கிய மடோகுகள்(மேற்கூறியவை அல்லாமல்) + + +இவற்றோடு அனைத்து மடோகுகளுக்கு தலைமையான மற்றும் தீய எண்ணம் கொண்ட மடோகு + +கடைசி அத்தியாயங்களில் மோரான், இதை அடைந்து அதனுடன் ஒன்று சேர்கிறான். இத்தொடரின் முடிவில் ரெக்காவும், குரேவும் ஒன்றிணைந்து யனாகியின் உதவியுடன் இந்த டெண்டோ ஜிகோகுவை அழிக்கின்றனர். + +நெருப்பை ஆளுபவர்களின் மூல சக்தியாக விளங்குவது நெருப்பு டிராகன்கள். இந்த நெருப்பு டிராகன்கள் அனைத்தும் ஹொக்காகே முன்னாள் தலைவர்களின் ஆன்மாக்கள். ஒரு ஹொக்காகே தலைவர், இறக்கும் போது நிறைவேறா ஆசைகளுடனோ, நிறைவேற்ற முடியா உறுதிமொழிகளுடனோ இறக்கும் போது, அவர்கள் நெருப்பு டிராகன்கள் ஆகின்றனர். இவர்கள் அடுத்த தலைமுறை தலைவர்களின் உடலில் வாழ்ந்து அவர்களுக்கு நெருப்புத் திறமையினை அளிக்கின்றனர். இப்படி ரெக்காவின் உடலில் ஹொக்காகே இனத்தவரின் எட்டு தலைவர்கள் எட்டு டிராகன்களாக அவனுள் வாழ்ந்து வருகின்றனர் + +அந்த எட்டு டிராகன்களும் அவற்றின் ஆற்றல்களும் + +இந்த மங்கா தொடர், இதே பெயரில் அனிமேவாக உருவாக்கப்பட்டது. இது 19 ஜூலை 1997 முதல் 10 ஜீலை 1998 வரை ஃபூஜி தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மங்காவின் 16 அத்தியாயங்களை 42 எபிசோடுகளாக தயாரித்தனர். மங்காவிற்கும் அனிமே தழுவலுக்கு நிறைய குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உள்ளன். அதில் முக்கியமானது, இந்த அனிமே முற்றுப் பெறாத ஒன்றாக உள்ளது. 33 அத்தியாயங்களில் 16 அத்தியாயங்களே அனிமே தயாரிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன். மேலும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் பல கவனிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன. + + +"ரெக்காவின் நெருப்பு" தொடரை தழுவி இரண்டு விளையாட்டுக்கள் உள்ளன. ஒன்று "ஃப்ளேம் ஆஃப் ரெக்கா" இன்னொன்று "ஃப்ளேம் ஆஃப் ரெக்கா ஃபைனல் பர்னிங்க்". இவ்விரண்டும் ப்ளேஸ்டேஷன் 2க்குகாக தயாரிக்கப்பட்டன. இந்த விளையாட்டுகளின் கதையோட்டம் மங்கா தொடரின் கடைசி 5 அத்தியாயங்களைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளையாட்டுக்களில் உள்ள கதாபாத்திரங்கள் மங்கா கதாபத்திரங்களை பெரும்பாலும் ஒத்து இருந்தது. + +
+ + +
+ +மதன் (இதழாளர்) + +மதன் என்கிற "மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார்", தமிழ்நாட்டு இதழாளர்,கேலிச் சித்திர ஓவியர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். குறைந்த அளவில் கோடுகளைப் பயன்படுத்தி சிறப்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் திறமையானவலாக அறியப்படுகிறார். + +இவர் 1947ஆம் ஆண்டு சூல�� 11 ஆம் நாள் பிறந்தார். திருவரங்கத்தில் பிறந்தார். திருவல்லிக்கேணி "இந்து" பள்ளியிலும் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1969 ஆம் ஆண்டில் விகடன் இதழில் பயிற்சி கேலிச்சித்திரக்காரராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவற்றின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆனந்த விகடனில் இவர் வழங்கி வந்த "ஹாய் மதன்!" எனும் கேள்வி - பதில் பகுதி மிகவும் புகழ் பெற்றது. பிரபலமான கேலிச்சித்திர ஓவியர் ஆர். கே. லட்சுமணனை தனது வழிகாட்டியாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். + +விகடன் குழுமத்தில் 30 ஆண்டு காலம் பணிபுரிந்த மதன், 02.05.2012 நாளிட்ட விகடன் இதழில் வெளியான கேள்வி பதிலுக்கு, விகடன் வெளியிட்ட படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விகடன் குழுமத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார். + +2015 ஆம் ஆண்டு கார்ட்டூன் வாட்ச் என்ற சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வெளிவரும் இதழ் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை மதனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை தமிழன் விருதினையும் இவர் பெற்றுள்ளார். + +சிறந்த திரைப்பட விமர்சகராக இருந்த காரணத்தால் கொலம்பியா டிரைஸ்டார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், பிலிப்பைன்சு நாட்டில் மணிலாவில் நடந்த காட்சில்லா திரைப்பட முன்னோட்டக் காட்சி மற்றும் இயக்குநர்களுடனான பேட்டிக்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக மதன் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் கொழும்புவில் நடைபெற்ற கம்பன் விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த தனிப்பெருமையும் இவருக்குண்டு. + +இவர் "அன்பே சிவம்" என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகராகவும், உரையாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியில் மதன்ஸ் திரைப்பார்வை என்ற திரைவிமர்சன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியில் "மதன் டாக்கீசு" எனும் திரைவிமர்சன நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் ”மதன் மூவி மேட்னி” என்ற பெயரில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் என்ற புதி�� இயக்குநர்களைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியில் இவர் நடுவர்களில் ஒருவராக இருந்தார். மதன் தற்போது வியலாளர்கள், விளம்பர, காட்சி /கேள்வி ஊடக செயல்திட்டங்கள் தொடர்பாக ஊடகத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்கும் 'மதன்'ஸ் ஸ்வே' என்ற பெயரில் படைப்பாக்க ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். + +இவர் முகலாயர்கள் பற்றி எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்து புகழ் பெற்றது. பின்னர் இத்தொடர் நுாலாகவும் வெளியானது. இந்நூல் 18 பதிப்புகளைக் கண்டு 1,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ள நுாலாகும். இவரது கேள்வி பதில்கள் விகடன் பிரசுரத்தால் ஹாய் மதன் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. அதே போன்று இவரது நகைச்சுவைத் துணுக்குகள் விகடன் பிரசுரத்தால் மதன் ஜோக்ஸ் (பகுதி 1,2,3) என்ற நுால்களாக வெளியிடப்பட்டது. இவ்விரு நுால்களுமே இன்று வரை விற்பனையில் தொடர் சாதனை படைப்பவையாக இருந்து வருகின்றன. + + +1998ஆம் ஆண்டு "விண்நாயகன்" என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது. + + + + + +நா. மகாலிங்கம் + +நா. மகாலிங்கம் ("N. Mahalingam", மார்ச் 21, 1923 - அக்டோபர் 2, 2014) தமிழகத் தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார். 'பொள்ளாச்சி' மகாலிங்கம் என்றும் அழைக்கப்படுவார். + +திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், 1923ஆம் வருடம் மார்ச் 21ஆம் நாள் நா.மகாலிங்கம் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945இல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், பேருந்துகளாகவும�� உயர்ந்து பின் 1931இல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 21 பேருத்துகளில் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946இல் 100 பேருந்துகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். 1934இல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார். + +அவர் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டர் நகராட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் அவரும் அரசியலில் ஆரம்ப காலம் முதல் ஆர்வமாக இருந்தார். இவர் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞர் மகாலிங்கம் அவர்கள். பின்னர் 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார். 1969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். + +இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த தொழில் கொள்கைகளைப் பயன்படுத்தி பல்வேறு தொழில் மற்றும் வணிகங்களைத் தொடங்கிருக்கிறார். இன்று சக்தி குழுமம் சர்க்கரை ஆலை, நிதி தொழில், வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டிற்கிறது. + +இக்குழமத்தில் உள்ள மற்ற தொழில்கள்: + +91 வயது வாழ்ந்த இவர் பல்வேறு குழுமங்களுக்குத் தலைவராகவும் கவுரவத் தலைவராகவும் இருந்திருக்கிறார். மாநிலத் திட்டக் குழுமத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கும் பல்வேறு சமுதாய சேவைக்கும் பண உதவியும் செய்து வருகிறார். சென்னையில் அமைந்திருக்கும் ஆசிய ஆராய்ச்சிக் கழகம் இவரது உந்துதலால் 1981 ஆம் ஆண்டு உருவானது. இதுவரை 46க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில��ம் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். 1974யில் 'கிசான் வேர்ல்ட்' என்ற வேளாண்மை மாதயிதழ் மற்றும் 1983யில் ஓம் சக்தி மாத இதழைத் தொடங்கினார். இவரது முக்கியமான கனவு, ரோமானிய மற்றும் கிரந்த லிபிகளை இணைத்து 52 எழுத்துக்கள் கொண்ட வடிவமாய் உருவாக்க பிரத்யேகமான மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்துவதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மொழியின் விளக்கக் கூறுகளையும் உச்சரிப்பையும் பெருமளவு இணைய வாசகர்களுக்கு கற்பிக்க முடியுமென அவர் நம்பினார்.ஆங்கிலத்தில் MRG (Mahalingam Roman Grantha Script) என்று அவர் அதனை அழைத்தார். + + + + + + +தளச் சமச்சீர்க் குலம் + +தளச் சமச்சீர்க் குலம் (plane symmetry group) என்பது, சமச்சீரை அடிப்படையாகக் கொண்ட இரு பரிமாண, திரும்பத் திரும்ப வரும், வடிவுருக்களின் (pattern) கணித வகைப்பாடு ஆகும். இத்தகைய வடிவுருக்கள், கட்டிடக்கலை மற்றும் அலங்காரக் கலைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இவற்றில் 17 வேறுபட்ட குலங்கள் உள்ளன. + +எளிய முறையில் சொல்வதானால், மாற்றத்தின் பின்பும் அச்சொட்டாக அதேபோன்று தோற்றமளிக்கும் வகையில் வடிவுரு ஒன்றில் உருமாற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறையே அந்த வடிவுருவின் சமச்சீர்மை எனப்படுகிறது. மேலே குறிப்பிட்ட, வடிவுருக்களில் ஏற்படுத்தத்தக்க உருமாற்றங்கள் நான்கு வகைப்படுகின்றன. அவை: + + + +ஒரு குறிப்பிட்ட வடிவுரு எந்தத் தளச் சமச்சீர்க் குலத்தைச் சேர்ந்தது என்பதை அறிவதற்கு உதவக்கூடிய அட்டவணை. + +See also . + + + + +சிவ நாடார் + +சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார். + +சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது. + +1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ���.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு போர்ப்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்காரப் பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார். + +சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிக்கொடுக்கும் என்று தெரிவித்தார். + + + + +லாஸ் க்ரூசெஸ் + +லாஸ் கூருசஸ் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். ரியோ கிரானடே என்னும் ஆற்றுக்குப் பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் இந்நகரம் அமைந்துள்ளது. +நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பெயர் பெற்றது. + + + + + +ஜான் எஃப். கென்னடி + +ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி ("John Fitzgerald Kennedy"; மே 29, 1917 - +நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். + +இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார். இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. + +நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை. + + + + + +கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் + +கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். இது தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். 20ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் புகழப்படுகின்றது. இந்த விமான நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. + +மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடர்வண்டிச் சேவையின் வழி, இந்த விமான நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. + +கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 1994இல் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் உருவகம் பெற்றன. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான வடிவமைப்பாளர் டாக்டர் கிசோ குரோகாவா என்பவர் விமான நிலைய வடிவமைப்பைச் செய்தார். + +இந்த விமான நிலையம் 27 ஜூன், 1998இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயின. ஒ��்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன. + +உலகிலேயே, அதிகமான பயணிகள் வந்து போகும் விமான நிலையங்களில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 14வது இடத்தையும், ஆசியாவில் 5வது இடத்தையும் வகிக்கின்றது. 2010ஆம் ஆண்டில், அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுவதில், உலகில் 29வது இடத்தையும் பெறுகின்றது. + +மலேசிய ஏர்போர்ட்ஸ் () நிறுவனம் இந்த விமான நிலையத்தை பராமரித்து வருகிறது. மலேசிய ஏர்லைன்ஸ், மாஸ் கார்கோ, ஏர் ஆசியா, ஏர் ஆசியா X, மலிண்டோ ஏர் போன்ற விமானச் சேவைகளின் தலைத்தளமாகவும் விளங்குகிறது. + +கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா 1993 ஜூன் முதல் தேதி நடைபெற்றது. அதற்கு முன், அப்போது புழக்கத்தில் இருந்த சுபாங் விமான நிலையம், எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பது என அரசாங்கம் முடிவு செய்தது. + +தற்சமயம் சுபாங் விமான நிலையம், சுல்தான் அப்துல் அஜீஸ் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவின் நான்காவது பிரதமராக இருந்த மகாதீர் பின் முகமது, புதிய விமான நிலையத்திற்கு உருவகம் கொடுத்தார். + +மலேசியாவின் "Multimedia Super Corridor" எனும் பல்லூடகப் பெருவழித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய நிர்மாணிப்பு ஆகும். + +கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பரப்பளவு 100 சதுர கி.மீ. உலகிலேயே ஆகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட விமான நிலையம் எனும் சிறப்பைப் பெறுகின்றது. இந்த நிலையத்தில் ஐந்து ஓடு பாதைகள்; விமானங்கள் நிற்பதற்கு இரு முனையங்கள் உள்ளன. + +முதல் கட்டமாக, ஆண்டு ஒன்றுக்கு 25 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் கொள் ஆற்றல் கொண்டதாகவும், ஒரே சமயத்தில் 80 விமானங்களை நிறுத்தி வைக்கும் இட வசதியும் உள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டது. + +இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு 2012 ஆம் ஆண்டில் தொடங்கி 2013இல் முடிவடையும். மூன்றாம் கட்டத்தில் ஓர் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் திறன் கொண்டதாக, இந்த விமான நிலையத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. + +மலேசியாவின் 10வது பேரரசர் மாட்சிமை தங்கிய துங்கு ஜாபார் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை 1998 ஜூன் 27ஆம் தேதி இரவு 8.30க்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். உலக நாடுகளிலிருந்து 1500 பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். திறப்பு விழா நேரத்தில் அது ஒரு தேவதைகளின் கூடாரமாகக் காட்சி அளித்தது. 15 கி.மீ. தொலைவில் இருந்தும் அந்த வண்ண ஒளி வேலைபாடுகள் தெரிந்தன. + +இந்த விமான நிலையத்தைக் கட்டுவதற்கு 25,000 வேலையாட்கள் 24 மணி நேரமும் ஏழு ஆண்டுகளுக்கு அல்லும் பகலுமாக வேலைகள் செய்தனர். ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் திறக்கப்படுவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த கோலாலம்பூர் விமான நிலையம் திறக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு 1998 ஜூன் 30ஆம் தேதி 1998 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகளும் கோலாலம்பூரில் தொடங்கின. + +முதல் விமானமாக குவாந்தானில் இருந்து, மலேசிய ஏர்லைன்ஸ் "MH1263" விமானம் 7.10க்கு தரை இறங்கியது. அனைத்துலக விமானச் சேவையில் மலேசிய ஏர்லைன்ஸ் "MH188" விமானம் 7.30க்கு மாலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வந்தது. இரவு 9.00 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் "MH84" விமானம் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.. + +விமான நிலையம் திறக்கப்பட்டதும், எதிர்பாராமல் சில செயலாக்கப் பிரச்னைகள் ஏற்பட்டன. வான்பாலம், நுழைவழி ஒதுக்கீட்டுத் திட்டம் போன்ற சில அடிப்படையான முறைமைகள் செயலிழந்து போயின. பயணப்பைகளைக் கையாளும் முறையும் தாமதமாகியது. அதனால், பயணிகள் நீண்ட நேரம் வரிசைப் பிடித்து நின்றனர். பயணிகள் சிலரின் பைகளும் காணாமல் போயின. சிலர் ஐந்து மணி நேரம் வரை காத்து நின்றனர் + +பல பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட்டன. ஆனால், பயணப்பைகளைக் கையாளும் முறை மட்டும் பல ஆண்டுகளுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது. இறுதியில் 2007ஆம் ஆண்டு அந்த முறை, முற்றாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர், அந்தப் பிரச்னையும் ஒரு தீர்வு பெற்றது. + +கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்ட காலக்கட்டத்தில், தென் ஆசியாவில் நிதி நெருக்கடிகள் தலைதூக்கி நின்றன. அத்துடன் ‘சார்ஸ்’ நோய், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய், உலகம் முழுமையும் பரவி வந்த பன்றிக்காய்ச்சல் நோய் போன்றவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவிற்கு குறைத்தன. அதனால் பொருளியல் இடர்பாடுகள் ஏற்பட்டன. + +அனைத்துலக விமான நிறுவனங்களான ஆல் நிப்போன் ஏர்வேய்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், லுப்த்ஹான்சா, நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போன்றவை தங்களின் பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிக்க, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன. + +உலகின் மிகப் பெரிய விமானங்களான போயிங் 747, போயிங் 747 LCF, 640 டன்கள் எடை கொண்ட Antonov An-225 Mriya, ஏர்பஸ் A380 போன்றவை தரை இறங்குவதற்கான வசதிகள் இந்த விமான நிலையத்தில் உள்ளன. இதைத்தவிர, விமான நிலையத்தின் உள்ளே 216 பயணிகள் பதிவுச் சாவடிகள் 24 மணி நேரச் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த விமான நிலையத்தின் வருமானத்தில் 65 விழுக்காட்டை, மலேசிய ஏர்போர்ட்ஸ் () நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. + +அனைத்துலகப் பயணங்களுக்காக 143,404 சதுர மீட்டர்கள் (1,543,590 சதுர அடிகள்) பரப்பளவில் ஒரு துணைக் கோள் கட்டடமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக் கோள் கட்டடத்திற்கு, பயணிகள் வான்தொடர்வண்டி மூலமாக வர வேண்டும். இங்கு பல்வகையான தீர்வையில்லாக் கடைகள் உள்ளன. பயணிகளின் வசதிகளுக்காக, குழந்தைகள் விளையாடுவதற்கான அரங்குகள், திரைப்பட அரங்குகள், உடல்பயிற்சி நிலையங்கள் போன்றவையும் உள்ளன. இலவசமாக இணையச் சேவைகளும் வழங்கப்படுகின்றன. + +விமான நிலையத்தின் மையத்தில் ஓர் இயற்கையான மழைக்காடு அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பூக்கும் தாவரங்கள், பச்சைத் தாவரங்கள், மெலிதான மரங்கள் இந்த மழைக்காட்டில் வளர்க்கப்படுகின்றன. அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இந்தக் காட்டில் பலவகையான வண்ணத்துப்பூச்சிகள், தட்டான் பூச்சிகள், பறவைகள், சிறிய வகையான ஊர்வனங்களையும் பார்க்கலாம். + +2012ஆம் ஆண்டில், ஓர் அற்புதமான வன மேடைப் பாதையும் காட்டின் நடுவில் அமைக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும், இந்த மாதிரியான வன மேடைப் பாதை அமைக்கப்படவில்லை. விமான நிலையத்தில் ஒரு காடு என்று இந்த இடம் புகழாரம் செய்யப்படுகின்றது. + +இந்த விமான நிலையத்தில், ஒரே சமயத்தில் மூன்று விமானங்களைத் தரை இறக்கச் செய்யும் மிக நவீனமான கட்டமைப்புகள் இருந்தாலும், அந்த அளவிற்கு பயணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயர்ந்து நிலைக்குமா அல்லது அதன் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே ஒரு ��ிலரின் கேள்விகளாக அமைகின்றன. + +உலகில் வேறு எந்த விமான நிலையத்திலும் அவ்வாறான வசதிகள் இல்லை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். அதிகமான பயணிகளின் வருகையால் தத்தளித்து நிற்கும் லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், சாங்கி விமான நிலையங்களில் கூட அவ்வாறான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இருப்பினும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மிக நவீனமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் ஒரு வெள்ளை யானையாக முடங்கிப் போகக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்தாகும். + +கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மலிவு விலை விமானச் சேவைக்காக Low cost carrier terminal (LCCT) எனும் ஒரு முனையம் 2006இல் திறக்கப்பட்டது. மலிவு விலை விமானத் தளம் உருவாவதற்கு முன்னர், அந்த இடம் சரக்குகளைப் பட்டுவாடா செய்யும் தளமாக இருந்தது. 35,290 சதுர மீட்டர் பரப்பளவில் அந்தத் தளம் உருவாக்கப்பட்டது. + +வழக்கமான விமானச் சேவைகளில் வழங்கப்படும் சில சிறப்புச் சலுகைகள் மலிவு விலை விமானச் சேவையில் வழங்கப்படுவது இல்லை. மலிவு விலை விமானச் சேவைக்காக ஒரு புதிய துணை நிலையமே கட்டப்பட்டு 2013 ஜூன் மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்டது. + +மலிவு விலை விமானச் சேவையை மலேசியாவில் அறிமுகம் செய்தவர் டோனி பெர்னாண்டஸ் எனும் மலேசிய இந்தியர். இவர் ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையையும் உருவாக்கியவர் ஆகும். "இப்போது எல்லோரும் பறக்கலாம்" ("Now everyone can fly") எனும் மகுட வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். + +ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றார். இப்போது 92 ஏர்பஸ் விமானங்களுக்குச் சொந்தக்காரர். மலேசியாவில் ஏறக்குறைய 9200 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். + +ஏர்பஸ் A380 ரக விமானங்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக 135 மில்லியன் ரிங்கிட் (39 மில்லியன் டாலர்கள்) செலவு செய்யப்பட்டு திறம் உயர்த்தப்பட்டது. அதாவது விமான நிலையத்தின் தரத்தில் ஏற்றம் தருதல் என்பதாகும். 2006 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. 2007 மே மாதம் 28ஆம் தேதி வேலைகள் முடிவடைந்தன. + +இரு ஓடுபாதைகளின் தோள்பட்���ைகள் 15 மீட்டர்களுக்கு கூடுதலாக அகலப்படுத்தப்பட்டன. கூடுதலாக வான்பாலங்களும் கட்டப்பட்டன. 2012 ஜனவரி முதல் தேதி ஏர் எமிரேட்ஸ் A380 ரக விமானம் முதன்முறையாகத் தரை இறங்கியது. 2012 ஜூலை மாதத்தில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் A380 ரக விமானங்களும் அந்த ஓடு பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன. + + + + + + + + + + +மலேசியா எயர்லைன்சு + +"சாய்ந்த எழுத்துக்கள்" + +மலேசிய வான்வழி (; ; ஆங்கிலம்: மலேசியா எயர்லைன்ஸ்) மலேசியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலுமுள்ள 100 க்கும் அதிகமான இடங்களுக்கு விமானசேவைகளை நடத்தும் இந்நிறுவனத்தின் பிரதான தளம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். கோத்தகினபாலு சர்வதேச விமான நிலையம், பினாங் சர்வதேச விமான நிலையம், குச்சிங் சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களையும் இந்நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது. + +இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து விமானசேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கும் ஆகும். + + + + +ஏர்ஏசியா + +எயர் ஏசியா மலேசியாவைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். இப்பிராதியத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், ஆசனப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனமுமாகும். இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டு 1996 இல் சேவையை ஆரம்பித்தது. அரச நிறுவனமாக இருந்த இது தொடர்ச்சியாக நட்டமடைந்து கடன்சுமையிலிருந்த நிலையில் 2001 இல் டோனி பெர்னான்டஸ் என்பவரால் ஒரு மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது வலுவான நிலையிலுள்ளது. + +மலேசியாவின் கோலாலம்பூர் நகரினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை ஏர் ஏசியா (ஏர் ஏசியா பெர்ஹாட்) விமானச் சேவையாகும். ஏர் ஏசியா நிறுவனம் கால அட்டவணைப்படி செயல்படும் விமானச் சேவைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சுமார் 22 நாடுகளின் 100 இலக்குகளுக்கு செயல்படுத்துகிறது. ஏர் ஏசியா மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்தின் கிலா2 ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தாய் ஏர் ஏசியா, இந்தோனேசியா ஏர் ஏசியா, பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா, ஏர் ஏசியா ஸேஸ்ட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா போன்றவை ஏர் ஏசியா விமானச் சேவையின் சார்பில் செயல்படும் விமானச் சேவைகளாகும். இதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது, டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம், சியோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம், நினோய் அக்யுனோ சர்வதேச விமான நிலையம் மற்றும் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் கிளை விமானச் சேவையான ஏர்ஏசியா எக்ஸ் நீண்ட தொலைவு பயணக்கூடிய விமானச் சேவைகளை செயல்படுத்துகிறது. ஏர் ஏசியாவின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் செலங்கோர் பகுதியில் பெடலிங்க் ஜெயாவில் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். + +ஏர் ஏசியா மட்டும் தினமும் 180 விமானங்களையும் (கிளைச் சேவைகளை சேர்க்காமல்), ஏர் ஏசியா எக்ஸ் தினமும் 21 விமானங்களையும் செயல்படுத்துகிறது. + +ஏர் ஏசியா கோலாலம்பூர் – சிங்கப்பூர், சிங்கப்பூர் – கோலாலம்பூர், கோலாலம்பூர் – கோடா கின்பாலு, கோலாலம்பூர் – பெனங்க் ஆகிய வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 73, 73, 70 மற்றும் 63 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை சிங்கப்பூர் – குச்சிங்க் மற்றும் மேல் – கோலாலம்பூர் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. + + + + +கதே பசிபிக் + +கதே பசிபிக் அலது கேத்தே பசிபிக் ("Cathay Pacific") ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்ட விமானசேவை நிறுவனமாகும். ஹொங் கொங்கின் தேசிய விமானசேவை நிறுவனமான இந்நிறுவனம் ஹொங் கொங் சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. உலகின் 120 விமான நிலையங்களுக்கு பயணிகள், சரக்கு விமானப் பறப்புக்களை மேற்கொள்கிறது. 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் ஐந்து நட்சத்திர அங்கீகாரம் வழங்கிய் ஐந்து விமானசேவை நிறுவனங்களுள் ஒன்றாகும். + + + + +எமிரேட்ஸ் எயர்லைன் + +அமீரக வான்வழி (ஆங்கிலம்: எமிரேட்ஸ் எயர்லைன், அரபு மொழி : طيران الإمارات தயரான் அல் இமாராத்) ஐ��்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமாகும். மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமான இது வாரந்தோறும் 2350 க்கும் அதிகமான பறப்புக்களை மேற்கொண்டு ஆறு கண்டங்களின் 61 நாடுகளிலுள்ள 97 நகரங்களை இணைக்கிறது.இந்நிறுவனம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்றது. அவ்விமான நிலையந் தொடர்பிலான பறப்புக்களில் ஏறத்தாழ 50% ஆனவை இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. + +2013-ம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த விமானசேவை நிறுவனமாக எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. + + + + +1867 + +1867 (MDCCCLXVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். + + + + + + + + +மெய்வழிச்சாலை + +codice_1 + + + + + + + + + + + + +| list6name = பண்பாடு + + + + + + + +}} + +மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும் தமிழில் எளிதாகக் கற்று ஆத்ம ஞானத்தை பெற மெய்வழி சாலை ஆண்டவர்கள் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு சூபிய மெய்கல்வி பாேதிக்கும் நிலையம் ஆகும். அதனாலேயே மெய்வழிச்சாலைக்கு "மெய்க்கல்விகலா சாலை" என்றும் "சாகாக் கலைக் கல்விசாலை" எனவும் பெயர்களுண்டு. +ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு" இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது. + +மனிதன் பிறந்தது தன் இறுதி நேரத்தில் எமனிடம் மாட்டி முடிவே இல்லாத நரக வாழ்க்கைக்கு போகாமல் இறைவன் திருவடி சோ்வதற்கே. இப்படி மக்களை எமனிடம் இருந்து காப்பற்றவே அனைத்து மதங்களும் ஞானிகளும் வந்தது. ஆனால் மக்கள் இதை மறந்து மறந்தே போய்விட்டாா்கள். +அனைத்து மதகளின் உள்கூறும் உள்கொள்கையும் இதுவே. + +"மெய்வழி சாலை ஆண்டவா்கள்", மக்கள் தாங்கள் கடைசியில் உயிா் விடும்போது எமனிடம் இருந்து காப்பாற்றி இறைவன் திருவடி சோ்க்கும் செயலை செய்கிறாா்கள். இதையே தங்கள் மதத்தின் பெயராக வைத்திர��க்கிறாா்கள் + +குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி என்ற குக்கிராமத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை முஸ்லீம் விவசாய குடும்பத்தில் பிறந்தவா். குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலாபரணத்தையும் மேற்கொண்டாா். தன் மத பெரியவா் ஒருவா் மனிதனின் பிறப்பின் நோக்கமே அனியாய மரணம் அடைந்து எமனிடம் போகாமல் நியாய மரணம் அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து இவாின் நோக்கம் பாா்வை எல்லாமே அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்ற ஏக்கத்தால் ஞான வேட்கை பிறக்கிறது. பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தன் மத வேதத்தையும் சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா். ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் இதையே போதிப்பதை அறிகிறாா். இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின் கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என உணா்கிறாா். அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன் வழக்கமாக்கிக்கொள்கிறாா். + +முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகானை சந்தித்து தனக்கு ஞானம் அளிக்கும்படியும் அநியாய மரணத்திலிருந்து காப்பாற்றும்படியும் மன்றாடுகிறாா். அவ்வாறே தணிகைமணிப் பிரான் அவர்களும் இவரை சீடராக ஏற்றுக்கொண்டு ஞானத்தை அளிக்கிறாா். இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து எமனிடமிருந்து காப்பாற்றுமாறு கட்டளையிடுகிறாா். + + + + + +1860கள் + +1860கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1860ஆம் ஆண்டு துவங்கி 1869-இல் முடிவடைந்தது. + + + + + + + + + +மான்செஸ்டர் + +மான்செஸ்டர் ("Manchester") என்பது இங்கிலாந்து, பாரிய மான்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மான்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர். + +இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மான்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மான்செஸ்டர் நகரம் முன்னணீ நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும். 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு, மற்றும் மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும். + + + + + +1859 + +1859 (MDCCCLIX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + +1642 + +1642 (MDCXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + + +அக்சோப்ய புத்தர் + +வஜ்ரயான பௌத்தத்தில், அக்‌ஷோப்ய புத்தர் ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர். மேலும் ஆதிபுத்தரின் அம்சமாக கருதப்படும் இவர் நிதர்சனத்தின் விழிப்புநிலையை குறிப்பவர். பாரம்பர்யத்தின் படி இவருடைய உலகம் வஜ்ரதாதுவின் கிழக்கே உள்ள "அபிரதி(अभिरति)" ஆகும். ஆனால் மக்களிடத்தில் அமிதாப புத்தரின் சுகவதியே பரவலாக உள்ளது. இவருடைய உலகத்தை குறித்து யாரும் அவ்வளவாக அறியார். இவருடைய துணை லோசனா ஆவார். இவர் எப்பொழுதும் இரண்டு யாணைகளுடனே சித்தரிக்கப்படுவார். இவருடையெ நிறம் நீலம், இவருடைய சின்னம், மணி, மூன்று உடுப்புகள் மற்றும் செங்கோல். இவருக்கு பலவிதமான வெளிப்பாடுகள் உள்ளன. + +அக்‌ஷோப்யர் "அக்‌ஷோப்யரின் புனித புத்த உலகம்" என்ற மஹாயான சூத்திரத்தில் முதன் முதலில் சுட்டப்படுகிறார். அந்த சூத்திரத்தின் படி, அபிரதியில் தர்மத்தை பின்பற்றிய நினைத்த ஒரு பிக்‌ஷு, தான் போதி நிலையை அடையும் வரையில் கோபத்தையும் பகைமையும் எந்த உயிரிடத்திலும் காட்டுதில்லை என உறுது பூண்டார். அவர் இதில் வெற்றி பெற்ற நிலையில், புத்தத்தனமை அடைந்து அக்‌ஷோப்ய புத்தர் ஆனார். + +ஜப்பானில் அக்‌ஷோப்யரையும் ஆசல வித்யாராஜாவையும் இண��த்து வழிபடுவது உண்டு. ஆனால் ஆசலநாதர் கர்பகோசதாது(गर्भखोस धातु)வில் வசிக்கும் ஒரு வித்யாராஜாவே ஒழிய புத்தர் கிடையாது + +பைஷஜ்யகுரு வழிபாடு பரவுவதற்கு முன்னர், அக்‌ஷோப்ய குணப்படுத்தும் செயல்களுக்காக முற்காலத்தில் வழிப்படும் வழக்கம் இருந்தது. + +அக்‌ஷோப்யர் மனிதனின் பயனில்லாத கோபத்தை, பளிங்கு போன்ற தூய விவேகமாக மாற்றுபவர். இந்த விவேகத்தோடு, மனிதர்கள் அனைத்து விடயங்களையும் நடுநிலைமையை மாறாது பார்க்கும் தன்மைப்பெறுகிறார்கள். ஒரு பளிங்கு நல்லதோ கெட்டதோ, தன் மீது விழும் பிம்பத்தை அப்படியே பிரதிபிம்பமாக காண்பிப்பது போல, மனிதர்களுக்கும் அத்தகைய நடுநிலைத்தன்மையை அக்‌ஷோப்யர் அருளுகிறார். + +நீல நிற நீர் எவ்வாறு பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கின்றதோ அவ்வாறே நமக்கு அக்‌ஷோப்யர் அத்தன்மையை அளிக்கிறார். எனவே தான் அவர் நிறம் நீலமாக உள்ளதாக கூறுவர். + +அக்‌ஷோப்யர் பூமிஸ்பரிச(भूमिस्पर्श - பூமியைத்தொடும்) முத்திரையுடன் காணப்படுகிறார். இந்த முத்திரை ஆழ்ந்த நம்பிக்கையும், அக்‌ஷோப்யர் புத்தத்தன்மை அடைய காரணமாக இருந்த அவரது உறுதியையும் குறிக்கிறது. + +அக்‌ஷோப்யருடைய சின்னம் வஜ்ரம். வஜ்ரம், ஒரு மின்னலின் ஆற்றலையும், வலிமையையும் குறிக்கிறது. மேலும் இச்சொல் வைரத்தின் பிரகாசத்தையும், தூய்மையையும் குறிக்கிறது(வஜ்ரம் என்ற வடச்சொல் மின்னலையும் வைரத்தையும் ஒன்று சேரக் குறிக்கக்கூடியது). அக்‌ஷோப்யரின் முத்திரை அவருடைய பூமியைப் போன்ற உறுதியான மனத்தை காட்டுகிறது. அவ்வுறுதியானால் தான் அவர், அனைத்து தடைகளையும் மீறு புத்தத்தன்மை எய்தினார். + +அக்‌ஷோப்யருடைய வாகணம் யாணை. யாணையின் நிலத்தின் மீது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அக்‌ஷோப்யருடைய உறுதியை குறிக்கிறது. + +இவருடைய மந்திரம் + +ஓம் அக்‌ஷோப்ய ஹூம் ॐ अक्षोभ्य हूँ + +அக்‌ஷோப்யருடைய பீஜாக்‌ஷரம் ஹூம்(हूँ) ஆகும் + + + + + + +இயேசு காவியம் + +இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது. + +திருச்சி "கலைக்காவிரி" என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது. + +திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. + +இயேசு காவியத்தின் தொடக்கத்தில் "என்னுரை" என்ற தலைப்பில் கண்ணதாசன் தாம் பாடிய காவியத்தை எவ்வாறு பார்த்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: + +இயேசு காவியம் ஐந்து பாகங்களைக் கொண்டதாக உள்ளது. இயேசுவின் வாழ்வியலைப் பிறப்பு என்னும் தலைப்பில் முதல் பாகமும், யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றுத் தம்மைத் தயார்படுத்திய நிலை இரண்டாம் பாகமாகவும், இயேசு பொதுவாழ்வில் ஈடுபட்டமை மூன்றாம் பாகமாகவும், அவர் அடைந்த மகிமை ஐந்தாம் பாகமாகவும் பாடப்பட்டுள்ளன. + +இயேசு காவியத்தின் காப்பியத் தலைவன் இயேசுவே என்பது நூல் பெயரிலிருந்தே விளங்கும். பெருங்காப்பியங்களின் மரபைப் பின்பற்றி கண்ணதாசனும் பல இடங்களில் பாடுகிறார். நூலின் பாயிரத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கு கம்பன் கவிதையின் கலையும், வீரமாமுனிவரின் விழுமிய சொல் நயமும் விளங்குவதைக் காணலாம். + +இராமர் கதையைக் கூறவந்த கம்பநாடர் அவையடக்கத்தில்,
+ + +"ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு" +"பூசை முற்றவும் நக்குபு புக்கென..." +எனப் பாடுகிறார். + +கம்பரைப் பின்பற்றி, தேம்பாவணி புனைந்த வீரமாமுனிவர் தம் காப்பியத்தின் தொடக்கத்தில்,
+ +"ஓசையுற்று ஒழுகு அமிர்தம் உடைகட லென்ன நண்ணிப்" +"பூசையுற்று அதனை நக்கப் புக்கென..." +என்று பாடினார். + +இதே மரபின் வழிநின்று கண்ணதாசனும்,
+ +"பொங்குமாங் கடலில் புகுந்தள வெடுக்கப்" +என்று இயேசு காவியத்தின் பாயிரத்தில் பாடுவது அவர் தமிழ் இலக்கிய மரபைத் தொடர்வதைக் காட்டுகிறது. + +வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த இம்மூ���்று கவிஞர்களும் ஆழ்ந்து விரிந்த கடல் போன்ற அறிவுக் களஞ்சியத்திலிருந்து வெளிக்கொணரும் செல்வம் உள்ளத்திற்கு உவகையூட்டுவதே. + +எண் 9: தாலேலோ (அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாலாட்டல்): + +"சோதிமணிப் பெட்டகமே சுடரொளியே யூதருக்கு" +"ஆதிமக னாய்ப்பிறந்த அருந்தவமே தாலேலோ!" + +"மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்" +"ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே!" + + +எண் 149: + +"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது" +"சத்திய வேதம் நின்று நிலைத்தது +"எத்தனை உண்மை வந்து பிறந்தது" +"இத்தனை நாளும் மானிடன் வாழ்வது + +"மண்ணிடை இயேசு மறுபடி வருவார்" +"புண்கள் இருக்கும் வரையில் மருந்து" +"விண்ணர சமையும் உலகம் முழுதும்" +"எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே" + + +சூசையப்பருக்கும் மரியாளுக்கும் மகனாய் இயேசு பெத்லேகம் என்னும் ஊரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று இயேசு பிறப்புடன் காவியம் தொடங்குகிறது. தேவன் அருள் பெற்று மரியம்மை கருவுற்றது முதல் இயேசுவை பெற்று எடுத்தது வரையிலான செய்திகளைக் குறிப்பிடுகிறார். மேலும் இது போல் சக்கரியாசு எலிசபெத் என்கிற தம்பதியர் குழந்தையில்லாமல் வேதனை அடைந்து இறைவனை வேண்டினர். அவர்களுக்கு இறைவன் அருளால் அருளப்பன் என்கிற மகன் பிறந்தான் என்கிற செய்தியையும் காவியம் வழி எடுத்துரைக்கிறார். இயேசுவின் பெருமை பிள்ளைப்பருவம் முதலே ஆலயச் சபையில் ஆரம்பம் ஆனது. + +ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல ஆணையிட்டுள்ளான் என்ற செய்தியை சூசையப்பர், தன் கனவில் தோன்றிய தேவதூதன் மூலம் அறிந்து, அவர் சொன்னபடியே எகிப்து நாட்டுக்குப் பயணிக்கிறார். ஏரோது என்ற மன்னன் பெத்லேகம் நகரில் உள்ள இரண்டும் இரண்டிற்கும் கீழ் வயது உள்ள ஆண் குழந்தைகளை வெட்டி வீழ்த்த ஆணையிட்டான். அவனது படைவீரர்கள் வீடு புகுந்து ஆண்குழந்தைகளை வெட்டி கொன்றனர். + +மாபெரும் வஞ்சகம் கொண்ட மன்னன் மாரடைப்பால் மாண்டான். இந்த செய்தியை தேவதூதன் சூசையப்பரின் கனவில் தோன்றி ஏரோது மன்னன் மாண்டுவிட்டான் இனி நீங்கள் எகிப்தை விட்டு இஸ்ரேலுக்குச் செல்லலாம் என்று கூறுகிறான். அதன்படி சூசையப்பரும் மரியாளையும் குழந்தை இயேசுவையும் அழைத்துக் கொண்டு கலிலேயா நாட்டில் நாசரேத் நகரில் குடிபுகுகின்றனர். ஏனென்றால், ஏரோது மன்னனின் மைந்தன் அர்க்கலா என்னும் கொடியோன் அங்கு இருந்ததனால், சூசையப்பர் + +இசுரேலுக்குச் செல்லவில்லை என்ற செய்தியையும் குறிப்பிட்டுச் செல்கிறார் கண்ணதாசன். இயேசு வளர்ந்து பன்னிரண்டு வயது நிரம்பிவிட்ட நிலையில் தன் தந்தையான சூசையப்பர் செய்து வந்த தச்சுத் தொழிலுக்கு உதவி செய்து வந்தார். காலையில் படித்து விட்டு பின்னர் அன்னையின் கடமைகளை முடித்து தந்தைக்கும் உதவி செய்துவிட்டு பின்னர் இரவில் தூங்கினார், அங்குள்ளவர்கள், சூசையப்பரைத் ‘தூயவர்’ என்றும் மரியன்னையை ‘மாதா’ என்றும் அழைத்தனர். + +நாசரேத் விட்டு செருசலேம் செல்லும் வழியில் இயேசுவை தவற விட்டு தவிக்கின்றனர். அப்போது அங்குள்ள தேவாலயத்தில் இயேசு வேதம் படித்த வித்தகர் நடுவே கேட்டு அறிந்தும் கேள்விகள் தொகுத்தும் தத்துவ ஞானத்தில் இருந்தார். இயேசுவை கண்ட தம்பதியர் மகிழ்ச்சி அடைகின்றனர். + +ஆண்டுக்காண்டு இயேசு வளர்ந்த அவ்வண்ணமே அருளப்பரும் வளர்ந்து வாலிபம் எய்தினார். அருள் மிகும் வாக்கும் அன்பும் ஞானமும் கடமை மிகுந்த கட்டளைக் குணமும் கொண்டவராக அருளப்பர் இருந்தார். எருசலேம் நகரில் உள்ள மக்கள் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றனர். மக்களுக்கு பல போதனைகளை அவர் வழங்கினார். என்னுடையத் தகுதி எள்ளளவுதான் கடவுளின் மகனைக் காண்பீர் ஒரு நாள், அவரே உங்கள் அனைவரின் மீட்பர் என்று இயேசுவைப் பற்றி எருசலேம் மக்களுக்கு எடுத்துக்கூறினார். இயேசு அருளப்பரைச் சந்தித்து ஞானஸ்நானம் பெறுகிறார். இயேசு புனித பணியில் புகுந்திடும் முன்னால் பரிசுத்த ஆவி பாலைவனத்துக்கு இயேசுவை அழைத்துச் செல்கிறது. அங்கு நாற்பது பகல் நாற்பது இரவு உண்ணாநோன்பும் உறங்கா விரதமும் இருந்து தவம் புரிகிறார். அப்போது அங்கு கல்லை அப்பமாக்கி அலகை வென்று, இயேசு கலிலேயாவில் காலடி வைக்கிறார் அங்கு மீனவர்கள் அதிசயக்கும் வகையில் அற்புதங்களை நிகழ்த்துகிறார். + +இயேசுவின் அற்புதங்கள் தொடர்ந்தது. இயேசுபிரான் மக்களுக்குள்ளே இணையற்ற பெருமைகளைச் செய்ததாலே அவர் பின்னால் சீடர்கள் பலர் வந்தார்கள். அவர்களில் பன்னிருவரை மட்டும் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து மெய் வண்ணம் போதித்தார். அவர்கள் பெயரை அப்போஸ்தலர் என்று விளங்கச் செய்தார். + +இயேசு அற்புதங்கள் மட்டும் செய்வதோடு நில்லாமல் மக்களுக்கு பல்வேறு போத���ைகளைச் செய்து நல்வழிப்படுத்தினார். கலிலேயாவை ஆண்ட இரண்டாம் ஏரோது மன்னனின் ஆட்சியில் அழகிய பெண்கள் கவலையின்றி வாழ்வது அரிது. தம்பி மனைவியை தன் மனைவியாக்கி இன்புற்றிருந்தான். அவனை நல்வழிப்படுத்த நினைத்த அருளப்பரை சிறையில் அடைத்தான். அவ்வழியே வந்த இயேசுவை தம் சீடர்கள் மூலம் அங்குள்ள மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். பின்னர் ஏரோது மன்னன், மனைவின் ஆசைப்படி அருளப்பர் தலையை வெட்டி பரிசளிக்கிறான் என்பது போன்ற செய்திகளையும் காவியத்தில் வெளிப்படுத்தியுள்ளார். + +கண்ணில்லாதவருக்கு கண் கொடுத்தல், செவிடர்களுக்கு செவி கொடுத்தல், தொழுநோயைக் குணப்படுத்துதல், மரணம் அடைந்தோரை உயிர்த்தெழச் செய்தல், கடல் மீது நடத்தல் போன்ற அற்புதங்களை காவியத்தில் புகுத்தியுள்ளார். எருசலேம் சென்ற இயேசுவை யூதர்களிடத்தில் அவரது சீடர்களில் ஒருவனான யூதாசு என்பவன் முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக் கொடுக்கிறான். பின்னர் இயேசுவை சிலுவையில் அடித்தது முதல் அவர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தது வரையிலானச் செய்திகளைத் தொகுத்து கண்ணதாசன் மரபுக் கவிதையில் இயேசு காவியத்தைப் படைத்துள்ளார். + +கவியரசு கண்ணதாசன், "இயேசு காவியம்", கலைக்காவிரி, 18, பென்வெல்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி 620001. முதல் பதிப்பு: 1982. + + +
+ +வைரோசன புத்தர் + +வைரோசனர் (அல்லது மஹாவைரோசனர்) மஹாயான பௌத்தத்தின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவரான் இவர், ஒரு தர்மகாய(தர்மத்தையே உடலாக கொண்டவர்) புத்தர் ஆவார். சீன-ஜப்பானிய பௌத்தத்தில், மஹாவைரோசன புத்தர், சூன்யத்தன்மை என்ற பௌத்த சித்தாந்தத்தின் உருவகமாக கருதப்படுகிறார். + +ஐந்து தியானி புத்தர்களுள், இவர் நடுநாயகமான இடத்தைக் கொண்டவர். ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களால் அழிக்கப்பட்ட சிலைகளுள் ஒன்று வைரோசன புத்தருடையது ஆகும். + +மஹாவைரோசன புத்தர் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் மஹாவைரோசன சூத்திரத்திலிருந்து பெறப்பட்டது. சில வஜ்ரசேகர சூத்திரத்தில் இருந்தும் பெறப்பட்டவை. வைரோசனர் சீன ஹுவா-யென் பௌத்த பிரிவினராலும், ஜப்பானிய கெகோன் மற்றும் ஷிங்கோன் பிரிவினராலும் அதிகமாக வணங்கப்படுகிறார். ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் ஒரு மிக முக்கியமான புத்தர் ஆவார். + +சீன - ஜப்பானிய பௌத்தத்தில் வைரோசனரின் வழிபாடு, அமிதாப புத்தரின் வழிபாட்டால் வழக்கிழந்தது. இதற்கு காரணம் சுகவதி பௌத்தம், சீனத்தில் பிரபலமைடந்ததே ஆகும். ஆனால் இன்றும் வைரோசனர், ஷிங்கோன் பௌத்தர்களால் வணங்கப்படுகிறார். + +ரிக்வேதத்தில் 'வைரோசன' என்ற சொல், பிரகாசமான, 'தேஜஸ்'மயமான சூரியனைக் குறிக்கக்கூடியது. எனவே தான் இவரை ஜப்பானிய மொழியில் "டைனிச்சி" என அழைக்கின்றனர். + +மஹாவைரோசன சூத்திரத்தில், வைரோசனர் தர்மத்தை வஜ்ரசத்துவருக்கு உபதேசம் செய்கின்றார். ஆனால் அது முழுவது புரிந்துக்கொள்ளாத தன்மையுடன் விளங்குகிறது. எனவே வைரோசனர், தர்மத்தை எளிதாக புரிந்து கொள்வதாக பல்வேறு தந்திரங்களையும், சடங்குகளையும் விவரிக்கிறார். இதில் இருந்தே தந்திரயான பௌத்தம் தோன்றியதாக கருதப்படுகிறது. + +வைரோசனர் தர்மசக்கர முத்திரையுடன் காணப்படுகிறார். அமிதாபர் கருணையின் உருவகமாக கருதுவது போல, வைரோசனர் புத்தியின் உருவகமாக கருதப்படுகிறார். + +ஷிங்கோன் பௌத்தத்தில் இவரை மஹாவைரோசன ததாகதா என அழைக்கின்றனர். இப்பிரிவின் ததாகதகர்ப தத்துவத்தில், மஹாவைரோசனரே அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுகிறார். எப்போது ஒருவர் தன்னுள் உள்ள வைரோசனரை அறிந்து கொள்கின்றனரோ அப்போது அவர்கள் புத்தத்தன்மை அடைகிறார். + +வைரோசனார், அனைத்து தியானி புத்தர்களின் ஒட்டுமொத்த உருவமாக கருதப்படுவதால், இவர் வெண்மை நிறத்துடன் சித்தரிக்கப்படுகிறார். மேலும், வெண்மை தூய்மையையும் குறிக்கக்கூடியது. + +இவருடைய ஆசனம் பத்மாசனம். இந்த ஆசனத்தை இரண்டு சிங்கங்கள் தாங்குகின்றன. இந்த சிங்கங்கள், புத்தரின் கர்ஜனையை ஒத்த தர்ம உபதேசத்தை குறிப்பன. மேலும் வைரோசனரின் தியான உருவம், ஒருவரின் அறியாமையை நீக்கி தர்மத்தை உணர்த்தக்கூடியது. மஹாவைரோசனரின் மிகப்பெறிய சிலைகள் சூன்யத்தன்மையை குறிப்பன. இவருடைய மிகப்பெறிய சிலைகள்,நிலையில்லாத்தன்மையை விவரிக்கிறது. எப்படி இச்சிலைகள் நிலையில்லாதவையே, அவ்வாறே வாழ்க்கையிம் நிலையில்லாதது, சூன்யமயமானது. + +வைரோசனரின் சின்னம் தங்க அல்லது சூர்ய சக்கரம். + +இவருடைய மந்திரம், ஓம் வைரோசன ஹூம் ஆகும். + +இவருடைய இன்னொரு மந்திரம் ஜுவால(ஜ்வால) மந்திரம் ஆகும். அமோகபாஷாகல்பராஜ சூத்திரத்தில் இருந்து தருவிக்கப்பட்ட இம்மந்திரம், ஷிங்கோன் ப��த்தத்தில் மிக முக்கியம் வாய்ந்தது. அந்த மந்திரம் பின் வருமாறு + +இவருடைய பீஜாக்‌ஷரம் 'அ'. 'அ' ததாகதகர்ப தத்துவத்தின் உருவகம். 'அ' என்பது அனைத்து எழுத்துகளிலும் இருந்தாலும், அது வெளியே தெரிவதில்லை(பிராமியிலிருந்து பிரிந்த அனைத்து எழுத்துமுறைகளிலும் 'அ'கரம் சேர்ந்த மெய்களுக்கு தனி வடிவம் இல்லை. 'அ' எனபது இயல்பாக அனைத்து மெய்யெழுத்து வடிவங்களிலும் உள்ளது. எ.டு க,ங,ச,ஞ முதலியன. இவற்றில் இருந்தே பிற வடிவங்கள் தோன்றுகின்றன). அது போல் மஹாவைரோசனர் அனைவரிடத்திலும் இயல்பாக மறைந்துக் காணப்படுவதை இவருடைய 'அ' பீஜாக்‌ஷரம் குறிக்கிறது + + + + + + + +மொசாம்பிக் + +மொசாம்பிக் ("Mozambique") என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: "República de Moçambique", pron. ), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர். + +போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. "Muça Alebique", என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. +மொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத் தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்ட���ல் அமைந்துள்ளன. + + + + + +ஸ்ரீ + +ஸ்ரீ அல்லது சிறீ (ஆங்கிலம் - Sri, Shri ,Shre அல்லது Shree, தேவநாகரி - श्री, IAST ஒலிபெயர்ப்பு "Śrī") என்றால் செல்வம் எனப் பொருள்படும். "வணக்கத்துக்குரிய" என்பதைக் குறிக்கும் சமசுகிரத அடைமொழியாகவும், "பெருமதிப்புக்குரிய" என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஒரு பெயருக்கு முன்னர் எழுதப்படும் போது ஆங்கிலச் சொல்லான "Mr." , தமிழ்ச்சொல்லான "திரு." ஆகியவற்றுக்கு ஒத்து விளங்குகிறது. + +ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து வடிவம் ஶ் என்ற கிரந்த எழுத்தில் இருந்து தோன்றியது ஆகும். ஸ்ரீ என்பது ’ஶ்’, 'ரீ' ஆகியவற்றைச் சேர்த்த கூட்டெழுத்தின் (வடமொழி:संयुक्ताक्षरं - சம்யுக்தாக்‌ஷரம்) 'ஈ'கார உயிர்மெய் வடிவம் ஆகும். மேலுள்ள படத்தில் காணப்படும் கடைசி இரு வடிவங்களும் ஸ்ரீயை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. + +ஒருங்குறியின் அண்மைய பதிப்பில் ஶ் என்ற கிரந்த எழுத்து தமிழ் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள யூனிகோடு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தும் ஸ்+ரீ-->ஸ்ரீ என்பதற்கு மாறாக, மற்ற இந்திய மொழிகளை பின்பற்றி ஶ் + ரீ --> ஸ்ரீ என எழுத்துவடிவ தோற்ற விதியினை (Glyph Formation Rules) ஒருங்குறி குழுமம் மாற்றி அமைத்துள்ளது. இருப்பினும் ஸ் + ரீ என்ற சேர்க்கையும் எழுத்துருக்களில் ஸ்ரீ என்ற வடிவத்தினை கொடுக்கிறது. + +இந்த எழுத்தை சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். "ஸ்ரீ" என்பது செல்வதைக் குறிப்பதால் ஸ்ரீதேவி என்னும் பெயர் விஷ்ணுவின் துணையும் செல்வத்துக்கான கடவுளும் ஆன இலட்சுமியையும் குறிக்கும். வளத்துக்கு உரிய கடவுளான பிள்ளையாரையும் ஸ்ரீ என்ற பெயர் குறிக்கும். புனிதத் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறவர்களின் பெயர்கள் முன்னும் "ஸ்ரீ" என்ற சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது. வட மொழி மற்றும் இந்தியத் தோற்றத் தாக்கத்தின் காரணமாக, பௌத்த சமயத்திலும் "ஸ்ரீ" என்ற சொற்பயன்பாடு காணப்படுகிறது. இந்து சமய நம்பிக்கை உள்ள சிலர் தாங்கள் எழுதும் ஆவணங்களின் தொடக்க வரியின் நடுவே "ஸ்ரீ" என்று எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இது பிள்ளையார் சுழி, ஓங்காரக் குறி இட்டு எழுதும் வழக்கங்களை ஒத்தது. இந்துக் கடவுளர் பெயர்களுக்கு முன் "ஸ்ரீ" என்று குறிக்கப���பட்டாலும், தமிழ்ச் சூழலில் இதற்கு மாறாக "அருள்மிகு" என்று குறிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. + +வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய நபர்களின் பெயருக்கு முன் பெருமதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக, இச்சொல் பயன்படுகிறது. இச்சொல்லைப் பயன்படுத்த பால் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்றாலும், இச்சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணம், ஸ்ரீமதி போன்ற சொற்பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. + +மன்னராட்சிக் காலத் தாக்கத்தை ஒட்டி, பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுக்கு, "நாட்டிய ஸ்ரீ, சங்கீத ஸ்ரீ, லங்கா ஸ்ரீ" போன்ற பட்டங்களைக் குறிப்பிடலாம். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று தொடர்ந்து இரண்டு, மூன்று முறையும் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். + +வடமொழி வழிப் பெயர்ச்சொற்களில் "ஸ்ரீ" காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஸ்ரீவித்யா, ஸ்ரீதர், ஸ்ரீராம், ராகஸ்ரீ, ஸ்ரீநிவாசன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். + +"வணக்கத்துக்குரிய தீவு" என்று பொருள்படும் வகையில் ஸ்ரீ லங்கா என்ற நாட்டுப் பெயரில் பயன்படுத்தப்படுகிறது. + +தற்போது தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் கிரந்த எழுத்துக்களில் "ஸ்ரீ"யும் ஒன்றாகும். சில வடமொழி வழிப் பெயர்கள், இந்து, பௌத்த சமய மந்திரங்கள், இச்சமயக் கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிடும் போதும் முன்னொட்டாகவும் இவ்வெழுத்து வடிவம் பயன்படுகிறது. தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, "ஸ்ரீ" என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும், பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் பிற மொழிச் சொற்கலப்பை தவிர்த்து எழுதுவோர் "ஸ்ரீ" என்னும் சொல்லுக்கு இணையான "திரு, திருமிகு, அருள்மிகு" போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், "திரு" என்னும் சொல்லை "ஸ்ரீ" என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. "ஸ்ரீ" என்னும் சொல், எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே "திரு" என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இர���ந்திருக்கின்றன. தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே "திருவரங்கம்" என்று குறிக்கப்பட்டு இருப்பதும், "திரு + அரங்கம்" என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் "ஸ்ரீ + ரங்கம்" என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே "திரு" என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக "ஸ்ரீ" என்ற மொழிமாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதப்படவும் வாய்ப்புண்டு. + +கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் "ஸ்ரீ" என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் "சிறீ, சிரீ" ஆகிய சொற்ககளைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் "சிரீ" என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்) + +என்று வருவதைக் குறிப்பிடலாம். + +இலங்கையில் "ஸ்ரீ" என்பதற்கு மாறாக "சிறீ" என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும் ஒரு காரணமாகும். + + + + +ஏபெல் டாஸ்மான் + +ஏபெல் டாஸ்மான் ("Abel Janszoon Tasman"; 1603 – அக்டோபர் 10, 1659), என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். + +இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக "வான் டியெமன் நிலம்" (தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவுகளுக்கும், நியூசிலாந்து மற்றும் பிஜி தீவுகள் போன்றவற்றையும் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார். அத்துடன் இவரும் இவருடன் பயணம் செய்தவர்களும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கண்டறிந்தனர். + +இவர் 1603 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தற்போது குறொனிங்கன் மாகாணம் என்றழைக்கப்படும் லூட்ஜிகாஸ்ற் என்ற இடத்தில் பிறந்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து பல நாடுகளுக்கும் சென்றார். 1634 இல் ஜகார்ட்டா சென்றார். அதே ஆண்டு ஜூலையில் "மோச்சா" என்ற சிறிய கப்பலுக்குத் தலைவரானார். 1637 இல் ஒல்லாந்துக்கு சென்று பின்னர் அக்டோபர் 1638 இல் மீண்டும் ஜகார்ட்டா திரும்பினார். + +1634 இல் டாஸ்மான் வடக்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பல சிரமங்களின் மத்தியில் நவம்பரில் "ஃபோர்மோசாவை (தாய்வான்) அடைந்தார். இவரது கப்பலில் சென்ற 90 பேரில் 40 பேர் இடையிலேயே இறந்து விட்டனர். 1640 இல் ஜப்பான், 1642 இல் சுமாத்ரா ஆகிய நாடுகளுக்கு சென்றார். சுமாத்ராவில் அந்நாட்டு சுல்தானுடன் நட்புறவான வியாபாரத்திலும் ஈடுபட்டார். ஆகஸ்ட் 1642 இல் "பெயர்தெரியாத தென்பகுதி"க்கு மாலுமிகளுக்குத் தலைமைதாங்கி அனுப்பப்பட்டார். ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தை அடைந்தார். (இக்கண்டத்தின் மேற்குக் கரைகளில் ஏற்கனவே சில டச்சுக்கப்பல்கள் சென்றிருந்தன). ஆனாலும் தெற்குக் கரைப்பகுதி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. + +நவம்பர் 24 1642 இல் அவர் தற்போதைய தாஸ்மேனியாவின் மேற்குக் கரையை முதலில் அடைந்தார். இதற்கு அவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநர் அந்தனி வான் டியெமென் என்பவரின் நினைவாக "வான் டியெமெனின் நிலம்" எனப் பெயர் சூட்டினார். + +டாஸ்மான் தொடர்ந்து வடக்கு நோக்கிச் செல்ல உத்தேசித்தாலும் கடும் காற்று காரணமாக கிழக்கை அடைந்தார். டிசம்பர் 13 இல் நியூசிலாந்தின் வடமேற்குக் கரையைக் கண்டார். மேலும் கிழக்கே சென்று ஒன்பது நாட்களின் பின்னர் நியூசிலாந்தை அடைந்தார். அவர் அதை தென்னமெரிக்காவிலுள்ள ஆர்ஜெண்டீனாவின் ஸ்டேட்டன் தீவுடன் சம்பந்தப்படுத்தி அதற்கு அதற்கு அவர் "ஸ்டேட்டன் நிலம்" எனப் பெயரிட்டார். தொடர்ந்து வடக்கு பின்னர் கிழக்காக சென்று கொண்டிருக்கும் போது அவர்களது கப்பல்கள் மவோரிகளினால் (Māori) தாக்கப்பட்டதில் அவது நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர். டாஸ்மான் இதற்கு "Murderers' Bay" (தற்போதைய "Golden Bay") எனப் பெயர் சூட்டினார். + +டாஸ்மானும் அவரது மாலுமிகளும் பின்னர் ஜனவரி 21, 1643 இல் தொங்காத் தீவுக்கூட்டத்தையும் கடந்தனர். பிஜி, நியூ கினி ஆகியவற்றையும் கண்டறிந்து இறுதியாக ஜூன் 15 1643 இல் ஜகார்ட்டா திரும்பினார். + +1644 இல் டாஸ்மான் மீண்டும் தனது பசிபிக் நோக்கிய பயணத்தை மூன்று கப்பல்களுக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். நியூ கினியின் தெற்குக்கரைக்குச் சென்றார். + +டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு இவரது பயணம் அவ்வளவாக வெற்றியளிக்கவில்லை. அவர்களது கடல் வணிகத்துக்கு சிறந்த நாடுகளை அவர் கண்டறியவில்லை. மேலும் ஒரு நூற்றாண்டின் பின்னரே டாஸ்மேனியா, நியூசிலாந்துக்கு ஜேம்ஸ் குக் தலைமையில் ஐரோப்பியர்கள் சென்றனர். + + + + + +அமிதாப புத்தர் + +அமிதாப புத்தர் (சமஸ்கிருதம்: अमिताभः, "Amitābhaḥ"; திபெத்திய மொழி: ஓ-பா-மெ) மஹாயான பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு பிரபஞ்ச புத்தர் ஆவார். இவர் வஜ்ரயான பௌத்தத்தின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர் +ஆவார். இவரது வழிபாட்டை பிரதானமாக கொண்ட பௌத்தப் பிரிவு சுகவதி பௌத்தம்(ஆங்கிலம்: Pure Land) என அழைக்கப்படுகிறது. + +"அமித" என்றால் "அளவில்லாத" என்று பொருள், "ஆப" என்றால் "பிரகாசம்" என்று பொருள். இந்த புத்தர் அளவில்லாத பிராகசத்தை உடையவர் ஆதலால், இவர் அமிதாபர் என அழைக்கப்பட்டார். இவரது அளவில்லாத ஆயுளையும் கொண்டவர் என்பதால் இவர் "அமிதாயுஸ்" (ஆயுஸ் - ஆயுள்) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. + +சுகவதிவியூக சூத்திரம், அமிதாபர் முன்னொரு காலத்தில் இன்னொரு உலகத்தில் 'தர்மகாரர்' என்ற புத்த பிக்ஷுவாக இருந்தாதக கூறுகிறது. பிறகு, தான் புத்தநிலையை அடைய வேண்டி 48 உறுதிமொழிகளை பூண்டார். அந்த உறுதிமொழிகளின் விளைவாக, புத்ததன்மை அடைந்ததும் தனக்குறிய ஒரு புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரத்தை(बुद्धक्षेत्र)) அவர் நிர்மாணித்துக்கொண்டார். அவருடைய முற்பிறவியில் நற்பலன்களால் அந்த உலகத்தில் அனைத்து விதமான நற்குணங்களும் முழுமையாக இருக்கின்றது + +அமிதாபருடைய 18வது உறுதிமொழியின் படி, அமிதபாரின் பெயரை உச்சரிக்கும் அனைவரும் அவருடைய உலகத்தில் மறுபிறவி எய்துவர் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் 19வது உறுதிமொழியில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் குறைந்தது 10 முறையேனும் அமிதாபர் பெயரை அழைத்தால், அனைத்து புத்தர்களும், போதிசத்துவர்கள் அந்த மனிதர் முன்பு தோன்றுவர் எனவும் உறுதி அளிக்கிறார். இந்த எளிமையே, சுகவதி பௌத்தத்தை மஹாயான பௌத்தத்தின் ஒரு பெரும்பிரிவாக மாற்றியது. + + +அமிதாப புத்தரை குறித்த நம்பிக்கைகளும் அவருடைய உறுதிமொழிகளும் கீழ்க்கண்ட சூத்திரங்களில் காணப்படுகின்றன + + + + +அமிதாப புத்தர் தன்னுடைய முயற்சிகளாலும் அவருடைய முன்பிறவி நற்பலன்களாலும் 'சுகவதி' என்ற புத்த உலகத்தை (புத்தக்ஷேத்திரம்) நிர்மாணம் செய்துகொண்டார். சுகவதி (सुखवति) என்றால் 'சுகம் உடைய' என்று பொருள். சுகவதி மேற்கு திசையில் உள்ளது. அமிதாபருடைய உறுதிமொழிகளின் ஆற்றலின் காரணமாக, அவருடைய பெயரை ஜெபிக்கின்ற அனைவருக்கும் சுகவதியில் மறுபிறப்பு நிகழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு பிறக்கும் அனைவருக்கும், அமிதாபரே தர்மத்தை உபதேசம் செய்கின்றார். அந்த உபதேசத்தினால், அனைவரும் புத்தத்தன்மையையும் போதிசத்துவத்தையும் பெறுகின்றனர். பிறகு, பலவேறு உலகங்களில், புத்தர்களாகவும், போதிசத்துவர்களாகவும் அவதரித்து இன்னும் பல உயிர்களுக்கு உதவி செய்கின்றனர். + +அமிதாபர் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா (संज्ञा) என்ற ஸ்கந்தத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு' (நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் வஜ்ரபாணியும் அவலோகிதரரும் இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன. + +இவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக "அமிதாயுஸ்" ஆக வணங்கப்படுகிறார். + +ஷிங்கோன் பௌத்தத்தில் வணங்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர். இவர் கர்பகோசதாதுவில் உள்ள புத்தர்களில் ஒருவராக ஷிங்கோன் பௌத்தத்தினரால் கருதப்படுகிறார். + +வஜ்ரயான பௌத்ததில் அமிதாபரின் மந்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. திபத்திய பௌத்தத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வழங்கப்படுகிறது + +ஓம் அமிதாப ஹ்ரீ: +ॐ अमिताभ ह्री: + +ஷிங்கோன் பௌத்தத்தில் இன்னொரு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. + +ஓம் அம்ருத-தேஜ ஹர ஹூம் +ॐ अमृत-तेज हर हूँ + +இத்துடன், பல பௌத்தப்பிரிவுகள் இவரது பெயரை ஜெபிக்கும் போது நமோ அமிதாப புத்தா(ॐ नमो अमितभ बुद्ध) என்ற சொல்லை ஜெபிக்கின்றனர். இந்த ஜெபத்தை சீனத்தில் 'நியான்ஃபோ' எனவும் ஜப்பானில் 'நெம்புட்ஸு' எனவும் குறிப்பிடுவர். இந்த ஜெபம் சுகவதி பௌத்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. + +அமிதாப(अमिताभ) என்ற சொல் 'அமித'(अमित) மற்றும் 'ஆபா'(आभा) என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் கூட்டுச்சொல் ஆகும். 'அமித' என்றால் முடிவற்ற என்று பொருள், 'ஆபா' எ���்றால் 'பிரகாசம்','ஒளி' என்று பொருள் கொள்ளலாம். எனவே 'அமிதாப' என்ற சொல்லுக்கு 'முடிவற்ற பிரகாசத்தை உடையவர்' என்று பொருள் கொள்வர். + +இவரை வடமொழியில் அமிதாயுஸ்(अमितायुस्) எனவௌம் அழைப்பர். இதற்கு 'முடிவற்ற ஆயுளை(ஆயுஸ்-ஆயுள்) உடையவர் என்று பொருள். + +சீன மொழியில் அமிதாபரை 'அமிடோஃபோ' என அழைப்பர். 'அமிடோ' என்பது 'அமிதாப' என்ற சொல்லின் சீன வடிவம். 'ஃபோ' என்றால் புத்தர் என்று பொருள். மேலும் அமிதாப மற்றும் அமிதாயுஸ் என்ற பெயர்களின் மொழிபெயர்ப்பாக இவரை 'வூலிஆங்குவாங்' எனவும் 'வூலிஆங்க்_ஷௌ' எனவும் அழைப்பர். + +வேறு மொழிகளில் அமிதாப புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவாறு உச்சரிக்கப்படுகிறது. + + +ஜபபானியத்தில் இவரை 'அமிடா ந்யோராய்' எனவும் அழைப்பர். இதற்கு "அமிதாப ததாகதர்" என்று பொருள் + +அமிதாபரையும் கௌதம புத்தரையும் வேறுபடுத்துதல் சிறிது கடினம். ஏனெனில் இருவருமே, அனைத்து புத்த கூறுகள் உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இருவரும் தாங்கள் காட்டும் முத்திரைகளில் வேறுபடுகின்றனர். அமிதாபர் அமர்ந்த நிலையில் தியான முத்திரையுடன் திகழ்கிறார். சாக்கியமுனி புத்தர் பெரும்பாலும் பூமிஸ்பரிச முத்திரையை காண்பிக்கின்றார். + +அமிதாபர் பெரும்பாலும் தனியாக சித்தரிக்கப்படாமல், தன்னுடைய வலது புறத்தில் அவலோகிதேஷ்வர போதிசத்துவர், மற்றும் இடது புறத்தில் மஹாஸ்தாமப்ராப்த போதிசத்துவருடனும் சித்தரிக்கப்படுகிறார். இவ்விருவரும், சுகவதியில் அமிதாப புத்தருக்கு சேவை புரிவதாக நம்பப்படுகிறது. + +திபெத்திய பௌத்தத்தில், அமிதாபருடைய நிறம் சிவப்பு. அவருடைய திசை மேற்கு. ஆகையால், இவரை அஸ்தமன சூரியனாக கருதுவது உண்டு. மேலும் இவர் இயற்கையில் பெரும் ஆற்றலாக கருதப்படுகிறார். எனவே தான் ஐந்து தியானி புத்தர்களுள் இவர் மிகவும் புகழ் பெற்று திகழ்கிறார். + +இவருடைய சின்னம் தாமரை. + + + + + + +1120 + + + + + + + +ஐந்து தியானி புத்தர்கள் + +வ்ஜ்ரயான பௌத்தத்தில், ஐந்து தியானி புத்தர்கள் அல்லது ததாகதர்கள் என்பது ஐந்து புத்தர்களின் குழுமத்தை குறிக்கிறது. இந்த ஐவரும் புத்தரின் ஐந்து குணங்களின் வெளிப்பாடாகவும் உருவகமாகவும் கருதப்படுகின்றனர். இவர்களை வடமொழியில் பஞ்ச மஹா புத்த��்கள் எனவும் ஐந்து ஜினர்கள் எனவும் குறிப்பிடுவர். இந்த ஐந்து புத்தர்களின் வழிபாடு வஜ்ராயனப் பௌத்தத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது + +ஐந்து தியானி புத்தர்கள் என்ற கூற்று, பிற்காலத்தில் திரிகாய தத்துவத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த ஒரு நம்பிக்கையாகும். இந்த திரிகாய தத்துவம் யோகாசாரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து புத்தர்களும் தர்மகாய(தர்மத்தையே உடலாக கொண்டவர்கள்) புத்தர்கள் ஆவர் துவக்கத்தில் 'ப்ரக்ஞை'யையும்(அறிவுணர்ச்சி) 'கருணையையும்' உருவகபடுத்தும் விதமாக அக்ஷோப்ய புத்தர் மற்றும் அமிதாப புத்தர் தோன்றினர். மேலும் இது வளர்ர்சி அடைந்து , சுவர்ணபிரபாச சூத்திரத்தில் ஆற்றலையும் ஆன்மிக செல்வத்தையும் குறிக்கும் வகையில் துந்துபீஷ்வரரும், ரத்னகேதுவும் எழுந்தனர். பிற்காலத்தில் இவர்களுடைய பெயர் அமோகசித்தி எனவும் ரத்தினசம்பவர் எனவும் மருவியது. இவர்கள் நால்வருக்கும் நடுநாயகாம விளங்கும் வண்ணம் மஹாவைரோசன புத்தர் தோன்றலானார். + +இந்த ஐந்து புத்தர்களின் திசையையும் நிறமும் அவரவர்களுடைய மண்டலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். + +வைரோசன மண்டலத்தில் கீழ்க்கண்டவாறு இவர்கள் காணப்படுகின்றனர். +மற்ற மொழிகளில் தியானி புத்தர்களின் பெயர்கள்: +மேற்கூறிய ஐந்து புத்தர்களும், ஐந்து வித்யாராஜாக்களின் மூலம் காக்கப்படுகின்றனர். ஐந்து தியானி புத்தர்களும் வித்யாராஜாக்களும் ஒருங்கிணைந்து ஒன்றாக இரு பிரிவு மண்டலத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். + + + + + + + +இருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல் + +பௌத்த சூத்திரங்களில், கௌதம புத்தருக்கு முன்பு இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறிகின்றன. அவ்வாறாக இந்த கல்பத்தில் அவதரித்த 28 புத்தர்களின் பட்டியல்; + + + + + +அமோகசித்தி புத்தர் + +அமோகசித்தி(अमोघसिद्धि) புத்தர், ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் ஆவார். + +அமோகசித்தி புத்தரின் திசை வடக்கு, நிறம் பச்சை ஆகும். இவர் மனிதர்களுள் உள்ள பொறாமையை அழிக்க உதவுபவர். இவரது வலக்கரத்தில் அபய முத்திரையுடன் காணப்படுகிறார். இவர் அருள்வது சர்வசித்தி புத்தியாகும். + +இவருடைய மந்திரம் கீழ்க்க���்டவாறு + +ஓம் அமோகசித்தி ஆஹா ஹூம் +ॐ अमोघसिद्धि आः हूँ + +இவருடைய பீஜாக்‌ஷ்ரம ஆஹா(आ:) ஆகும். + + + + + +ரத்தினசம்பவ புத்தர் + +ரத்தினசம்பவ(रत्नसंभव) புத்தர், வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர். + +இவருடைய திசை தெற்கு, நிறம் மஞ்சள். இவருடைய இணையாக இருப்பவர் மாமகீ. இவர் வரத முத்திரையுடன் திகழ்கிறார். + +இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு + +ஓம் ரத்னசம்பவ த்ராம் +ॐ रत्नसंभव त्राँ + +இவருடைய பீஜாக்‌ஷரம் த்ராம்(त्राँ) ஆகும். + + + + + +இக்சிதிகர்பர் + +இக்சிதிகர்பர் (क्षितिगर्भ:), மகாயான பௌத்தத்தில் மிகவும் புகழ்பெற்ற போதிசத்துவர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் "ஜிஸோ" எனவும் சீன மொழியில் "டி-ஸாங்க" எனவும் அழைப்பர். ஷிதி(க்‌ஷிதி) என்றால் வடமொழியில் நிலம் என்று பொருள். இச்சொல்லின் மொழிப்பெயர்ப்பே சீன-ஜப்பானிய மொழியில் இவருடைய பெயராக விளங்குகிறது +ஷிதிகர்பர், அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்டவர். இந்த கருணையினாலேயே, அவர் போற்றி வழிபடப்படுகின்றார். இவருடைய இந்த உறுதிமொழி பல மஹாயான பௌத்தர்களால் இன்றளவும் ஜெபிக்கப்படுகிறது. + +பொதுவாக, இவர் ஒரு பௌத்த பிக்குவாக காட்டப்படுகிறார். இவர் கையில் ஒரு கோலும், சிந்தாமனி இரத்தினமும் ஏந்தியவாராய் காட்சியளிக்கிறார். + +ஷிதிகர்பர், மகாயான பௌத்தத்தின் நான்கு முதான்மை வாய்ந்த போதிசத்துவர்களில் ஒருவர் ஆவர். சமந்தபத்திரர்,மஞ்சுஸ்ரீ, மற்றும் அவலோகிதர் மற்ற மூன்று போதிசத்துவர்கள் ஆவர். + +முற்காலத்தின் இவரை ஒரு பூரண போதிசத்துவராக சித்தரித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவரை ஒரு பௌத்த துறவியாகக் கையில் கோலுடன் காட்டப்படும் வழக்கம் பெரும்பான்மையானது. + +பல்வேறு மகாயான சூத்திரங்களின்படி, இவர் மைத்ரேய புத்தர் அவதரிக்கும் வரை ஆறு உலகங்களிலும் தருமத்தைக் கற்பிக்கும் பொறுப்பினை தான் ஏற்பதாக உறுதிமொழி கொள்கிறார். எனவேதான், மகாயான பௌத்த ஆலயஙகளில் இவருடைய வழிபாடு முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. + +சீனத்தில் உள்ள சியூகுவா மலை ஷிதிகர்பரின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்த மலை நாற்பெரும் பௌத்த மலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பொழுது அந்த மலையில் 95 கோவில்கள் மக்களின் வழிப்பாட்டுக்கு உகந்த வண்ணம் உள்ளது. + +சில இடங்களில், இவரை தாவோ மத தேவதையாகவும் வழிபடுகின்றன்ர். தாய்வானில் நிலநடுக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்காக மக்கள் இவரை வணங்குகின்றனர். ஹாங்க்-காங்க் மற்றும் கடல் தாண்டிய சீன மக்கள், இவரது உருவப்படங்களையும், சிலைகளையும் நினைவிடங்களில் வைத்து வணங்குகின்றனர். + +ஜப்பானில் இவரை, "ஜிஸோ" என அழைக்கின்றனர். மிகவும் மரியாதையுடன் இவரை "ஒஜிஸோ-சாமா" என்றழைக்கின்றனர். "சாமா" என்பது ஜப்பானிய மொழியில் மரியாதைக்காக சேர்க்கப்படுவது. (தமிழில் அர்/ஆர் விகுதி போலும், இந்தி மொழியில் 'ஜி' என்னும் பின்னொட்டு போலவும்). இவர் இங்கு, குழந்தைகளின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். அதுவும் முக்கியமாக, பெற்றோர்களூக்கு முன் இறக்க நேரிடும் குழந்தைகளைக் காப்பாற்றுவராக இருக்கிறார். மேலும், பிறக்கும் முன் இறந்துவிடும் கருக்கள், கருக்கலைப்பினால் இறந்து போகும் கருக்கள், ஆகியற்றின் ஆன்மாக்களில் பாதுகாவலராக இவர் திகழ்கிறார். + +இவருடைய சிலைகளின் அருகில் நிறைய கற்களையும் கூழங்கற்களையும் காணலாம். மக்கள், இவ்வாறு கற்களை இவருடைய சிலைகளின் முன் அடுக்குவதால், தங்களுடைய குழந்தை நரகத்தில் இருக்கும் நேரத்தை குறைப்பதாக எண்ணுகின்றனர். மேலும், தங்களுடைய காணாமல் போன குழந்தைகளை காப்பாற்ற வேண்டி, குழந்தைகளின் ஆடைகள், விளையாட்டுப்பொருட்களை இவருக்கு சமர்ப்பிக்கின்றனர். மேலும், குழந்தைகளின் நோய்களை தீர்க்கும் வண்ணமும் இவ்வாறு அவர்கள் செயவதுண்டு. அதானால் தான், இவரை குழந்தைகளின் பாதுகாவலாராக காண்பிப்பதற்காக, இவருடைய சிலைகள் பொதுவாக 'குழந்தையைப்' போன்று அமைப்பதுண்டு. + +மேலும், நரகத்தில் இருக்கும் பாவ ஆன்மாக்களை கரையேற்றுவராக இவர் உள்ளதால், இவரது சிலை சுடுகாட்டில் காணப்படுவது வழக்கம். மேலும், பயணிகளைக் காப்பாற்றுபவராக இவர் கருதப்படுவதால், ஆங்காங்கு வீதிகளில், இவரது சிலைகளைக் காணலாம். + +ஷிதிகர்பருடைய கதை, அவரது பெயருடைய ஷிதிகர்ப சூத்திரம் என்னும் மிகவும் புகழ்பெற்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த சூத்திரம், கௌதம புத்தர் தன்னுடைய வாழ்நாளின் இறுதி நிலையில், திராயஸ்திரிமச உலகத்தை சேர்ந்த தேவர்களுக்கு கற்பிப்பதாக உள்ளது. அவர் இவ்வுலகில் இருக்கும், தன்னுடய தாய் மாயாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சூத்திரத்தை விவரிக்கின்றார். +ஷிதிகர்ப சூத்திரத்தில், புத்தர் முற்காலத்தில் ஷிதிகர்பர் ஒரு பிராமண பெண்ணாக இருந்ததாகக் கூறுகிறார். அந்தப்பெண் தன் தாய் இறந்ததினால் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறாள், ஏனெனில் அவள் தாய் புத்தரையும்,தர்மத்தையும், சங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவாதளாக அவற்றை களங்கப்படுத்துபவளாக இருந்தாள். + +எனவே தன் தாய், நரகத்தின் சித்திரவதைகளை அனுபவிக்காமல் இருக்க, தனக்கிருந்த அனைத்து செல்வங்களை விற்று, அக்காலக்கட்டத்தின் புத்தருக்கு தினமும் நிவேதனம் செய்து, மனமாற வழிபாடு (பிரார்த்தனை) செய்கிறாள். இவளுடைய பிரார்த்தனைகளில், தன் தாயை நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு புத்தரிடம் வேண்டுகிறாள். + +கோவிலில், அவள் இவ்வாறு மன்றாடுகையில், புத்த பகவான் அசரிரீயாக ஒலிக்கிறார். தன் தாயை எங்கிருக்கிறாள் எனபது தெரியவேண்டுமெனில், இல்லத்திற்கு சென்று தன்னுடைய பெயரை ஜெபிக்குமாறு அவளுக்கு கூறுகிறார் புத்த பகவான். அவளும் அவ்வாறே செய்த நிலையில், அவளுடைய மனம் நரகத்துக்கு சென்றது. அங்குள்ள பாதுகவலரிடம் தன் தாயை குறித்து வினவுகிறாள். அந்த பாதுகாவலர், இவளுடைய பிரார்த்தனைகளால் இவள் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்துக்கு சென்றதாக கூறுகிறார். பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டிய அப்பெண், நரகத்தில் இருக்கும் மற்றவர்களுடைய துன்பத்தை கண்டு மனம் பதைக்கிறாள். எனவே, இனிவரும் காலங்களில் தான் நரகத்தில் உள்ளவர்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக உறுதுமொழி பூணுகிறாள். அந்த உறுதுமொழியின் காரணமாக அவள், இந்த கல்ப்பத்தில் ஷிதிகர்பராக பிறக்கின்றாள். + +இவர் மற்ற போதிசத்துவர்களுக்கு மாறாக ஒரு துறவியைப் போன்று சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவருடைய இடக்கரத்தில் சிந்தாமனி இரத்தினத்தையும், வலக்கரத்தில் ஒரு கோலையும் வைத்துள்ளார். இந்தக் கோல் நடக்கும்பாதையில் உள்ள சிறு உயிரினங்கள், மற்றும் பூச்சிகளை அப்புறபடுத்து உதவுகிறது. பெரும்பாலும் தந்திர பூஜைகளில், தியானி புத்தர்களை போல் இவர் மகுடம் அணிந்து காணப்படுகிறார். + +அனைத்து போதிசத்துவர்களைப் போல இவரும் தாமரையின் மீது நி��்றவராக உள்ளார். மேலும் எப்பொழுதாவது இவர் முக்கண்ணுடன் திகழ்கிறார். + +இவருடைய மந்திரம் பின்வருமாறு + +ஓம் க்ஷிதிகர்பாய: +ॐ क्षितिगर्भाय: + + + + + + +வச்ரபானி + +வச்ரபானி மஹாயான பௌத்தத்தின் பழம்பெறும் போதிசத்துவர்களில் ஒருவர். அவருடைய பெயருக்கு கையில் மின்னலை(வஜ்ரம் - மின்னல்) ஏந்தியவர் என்று பொருள். இவர் புத்தரின் பாதுகாவலராக திகழ்கிறார் மேலும் அவர் புத்தரின் ஆற்றலில் உருவகமாக உள்ளார். வஜ்ரபாணி பழங்காலத்தில் பெரும்பாண்மையான பௌத்த வடிவங்களில் புத்தருடன் காணப்படுகிறார். பொதுவாக, வஜ்ரபாணி, அவலோகிதேஷ்வரர், மஞ்சுஸ்ரீ ஆகிய மூவரும் புத்தரின் பாதுகாவலர்களாக சித்தரிக்கப்படுபவர்கள். + +வஜ்ரபாணி, கையில் மின்னலை ஏந்தியவராக உள்ளார். எப்படி, மஞ்சுஸ்ரீ அனைத்து புத்தர்களின் அறிவின் உருவகமாகவும், அவலோகிதேஷ்வரர் அனைத்து புத்தர்களின் கருணையின் உருவமகாகவும் கருதுவது போல, வஜ்ரபாணி அனைத்து புத்தர்களின் ஆற்றலின் உருவகமாக விளங்குகிறார். வஜ்ரபாணியின் இந்த உக்கிர உருவம், தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றலை விளக்குகிறது. அவர் மனிதர்களுள் உள்ள எதிர்மறையான எண்ணங்களை அழிப்பவராக உள்ளார். அவருடைய இடது கையில் வஜ்ராயுதமும், வலது கையில் பாசமும்(पाशं) வைத்துள்ளார். தன்னிடமுள்ள பாசத்தால் அரக்கர்களை கட்டுகின்றார். தன்னுட்ய சிரத்தில் மண்டை ஓட்டை மகுடமாக சூடியுள்ளார். மேலும், கழுத்தில் நாகத்தையும் உடலில் புலித்தோலையும் அணிந்துள்ளார். + +பொதுவாக, வஜ்ரபாணி உக்கிர உருவுடன் காட்சி தருகிறார். மேலும் காந்தார பௌத்த சிற்பங்களில் இவர் கிரேக்க வீரரான ஹெராக்ல்ஸ்'ஐ ஒத்து இருக்கிறார். மேலும் புத்தரின் காவலராகவும் வழிகாட்டியாகவும் இச்சிற்பங்களில் அவர் சித்தரிக்கப்படுகிறார். ஜப்பானின் இவரை ஷுகொங்கோஷின் என அழைக்கின்றனர். புத்தர்களின் பாதுகாவலர்களாக கருதப்படும் வித்யாராஜாக்கள் இவ்ரை வணங்கும் வழக்கத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. + +வஜ்ரபாணியின் மந்திரம் கீழ்க்கண்டவாறு + +ஓம் வஜ்ரபாணி ஹூம் +ॐ वज्रपाणि हूँ + +இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் அளவில்லாத ஆற்றலும் வீரியமும் ஒருவருக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது. + + + + + + + +அப��பாச்சி டாம்கேட் + +அப்பாச்சி டாம்கேட் (இலங்கை வழக்கு: ரொம்கட்) ஆனது அப்பாசி சாப்ட்வேர் பவுண்டேசனின் ஓர் வலை சேவகன் ஆகும். சண் மைக்ரோசிஸ்டத்தின் விதிமுறைகளுக்கமைய ஜாவா செர்வ்லெட் மற்றும் ஜாவா செர்வர்பேஜஸ் ஆகியவற்றை வலை சேவகனிலேயே இயக்கக்கூடிய வசதியுள்ளது. எக்ஸ்எம்எல் முறையிலான கோப்புக்களினால் விருப்பத்திற்கேற்றவாறு இவ் இணையவழங்கியை நிர்வாகிக்கமுடியும். டாம்கேட் தன்னுடைய இணைய வழங்கியைக் கொண்டுள்ளது. + +அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசனின் அங்கத்தவர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்தே டாம்கேட்டை விருத்தி செய்து பராமரிக்கின்றனர். பயனர்கள் அப்பாச்சி அனுமதி மூலம் மூலநிரலையும் இருமத்தையும் பெற்றுக்கொள்ளலாம். டாம்கேட்டின் பதிப்பானது 3.0.x உடன் ஆரம்பிக்கின்றது. (இதற்கு முந்தியவை சண்மைக்ரோசிஸ்டத்தின் உட்பாவனைக்கென உருவாக்கப்பட்டது வெளியில் விடப்படவில்லை). டாம்கேட் 6.0.14, 6.0.x வரிசையில் வரும் பதிப்புக்களின் ஆகப்பிந்தைய வினைத்திறனான பதிப்பாகும். இது சேர்வ்லெட் 2.5 ஐ ஆதரிக்கின்றது., 2007. + +பின்வரும் விபரம் டாம்கேட் 6 க் ஆனது. பிறவு வெளியீடுகளும் இதைப் போன்ற ஒரு படிமுறையையே பின்பற்றும். + +உபுண்டுவில் நிர்வாகிப் பயனரை /etc/tomcat6/tomcat-users.xml சென்று பின்வருமாறு சேர்த்து, பின்னர் டாம்கேட்டை மீண்டும் துவக்க வேண்டும். + + + + + +வச்ரசத்துவர் + +வச்ரசத்துவர் என்பது வஜ்ரயான பௌத்தத்தில் சமந்தபத்திரருடைய பெயர் ஆகும். வஜ்ரயான பௌத்தத்தில் பல புத்தர்களும் போதிசத்துவர்கள் வேறு வடிவில் வணங்கப்படுகின்றனர். வஜ்ரசத்துவர்,மஹாவைரோசன சூத்திரம் மற்றும் வஜ்ரசேகர சூத்திரத்தில் முக்கிய் பங்கு வகிக்கின்றார். இரண்டு சூத்திரங்களிலும், வஜ்ரசத்துவர் மஹாவைரோசன புத்தரிடமிருந்து தர்மத்தை தெரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு சடங்குகளை கற்கிறார். இதிலிருந்தே வஜ்ரயான பௌத்தம் பிறந்த்தாக கூறுவர். + +தந்திர பௌத்த சடங்குகளில், குரு மஹாவைரோசனராகவும் சீடர் வஜ்ரசத்துவராகவும் கருதிக்கொண்டு மேற்கூறிய சூத்த்ரங்களை மந்திரங்களாக உச்சாடனம் செய்வர். + +பௌத்த மறைபொருள்(esoteric) பிரிவை இவரே தோற்றுவித்ததாக கருதப்படுகிறது. வஜ்ரசத்துவர் நாகார்ஜுனருக்கு மறைபொருள் தந்திரத்தை தென்னிந்தியாவில் ஒரு ஸ்தூபியில��� உபதேசித்ததாக கருதப்படுகிறது. + +சில தந்திர பௌத்த பிரிவுகள், இவரை ஆதிபுத்தராக கருதிகின்றன + +இவருடைய மந்திரம் ஓம் வஜ்ரசத்த்வ ஹூம்(ॐ वज्रसत्त्व हूँ) எனபது ஆகும். மேலும் இவருக்கு 100 எழுத்துக்களை கொண்ட மந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. + + + + + + + +சமந்தபத்திரர் + +சமந்தபத்திரர்(समंतभद्र) மஹாயான பௌத்தத்தில் உண்மையின் மூர்த்தியாக கருதப்படுபவர். இவர் அனைத்து புத்தர்களின் தியானத்தின் உருவகமாக திக்ழ்பவர். இவரே தாமரை சூத்திரத்தின் பாதுகாவலராக போற்றப்படுகிறார். மேலும் அவதாம்சக சூத்திரத்தின் படி, போதிசத்துவத்துக்கு அடிப்படையான பத்து உறுதிமொழிகளை இவர் பூண்டுள்ளார். வஜ்ரயான பௌத்தத்தில் இவர் வஜ்ரசத்துவர் என அழைக்கப்படுகிறார். + +சமந்தபத்திரர் என்றால் எங்கும் நிறைந்திருக்கும் வள்ளன்மை என பொருள்கொள்ளலாம். இவர் சாக்கியமுனி புத்தரின் சேவகராக கருதப்படுகிறார். ஜப்பானில் இவர் தாமரை சூத்திரத்தின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். + +பொதுவாக சமந்தபத்திரர் தன்னையே போதிசத்துவராக சுட்டிக்கொண்டாலும், சில மறைபொருள் தந்திர பௌத்த பிரிவுகள் அவளை ஆதிபுத்தராக கருதிகின்றன.மேலும் சில யோகாசார பிரிவுகள் வைரோசனரை தவிர்த்து இவரே யோகாசாரத்தை நிர்மாணித்ததாக நிம்புகின்றனர. + +இவர் பெரும்பாலும் தனியாகச் சித்தரிக்கப்படுவதில்லை. சாக்கியமுனியுடன் திரிமூர்த்தியாகவோ இல்லையெனில் வைரோசன புத்தருடனோ தான் இவர் சித்தரிக்கப்படுகிறார். + +சீனத்தில், சில சமயங்களில், பெண் வடிவத்தில் ஆறு தந்தங்களை உடைய யானையை வாகனமாகவும் கையில் தாமரை இலையை குடையாகவும் கொண்டவராக சித்தரிக்கப்படுவதுண்டு. இவ்வடிவில் இவர், எமேய் மலையில் உள்ள பௌத்த மடங்களின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். + + + + + +அமராவதி ஆறு + +அமராவதி ஆறு கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்��ேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன. + +சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி வந்துள்ளது. கொழுமம், அருகில் இந்த ஆற்றுடன் அசுவநதி குதிரை ஆறு|குதிரையாற்றுடன் இணைந்து வடக்காக செல்கிறது. + +சங்ககால தமிழ்ப்பெயர்: ஆண்பொருனை + + + + +வச்ரதாரர் + +வச்ரதாரர்ர் (वज्रधार) திபெத்திய பௌத்த சித்தாந்தத்தின் படி இவரே ஆதிபுத்தர் ஆவார். வஜ்ரதாரர் சமந்தபத்திரரின் இடத்தை கெலுக் மற்று கக்யு பிரிவுகளில் இவர் நிரப்பினார். + +சமந்தபத்திரரும் வஜ்ரதாரரும் வேறுவேறு பெயர்களுடைய(Cognate Deities) ஒரே தன்மையுடைய புத்தராக கருதப்படுகின்றனர். இருவரும் வேவ்வேறு பெயர்கள், வெவ்வேறு கூறுகள் மற்றும் வெவ்வேறு சித்தரிப்புகளை கொண்ட ஒரே தன்மையுடைய புத்தரையே குறிக்கின்றனர். இருவருமே தர்மகாய புத்தர்களாக கருதப்படுகின்றனர். பொதுவாக சமந்தபத்திரர் ஆபரண அலங்காரங்கள் இல்லாதவராகவும் வஜ்ரதாரார் அணிகலன்கள் அனிந்தவராய் சித்தரிக்கப்படுகிறார். + + + + +ஆதிபுத்தர் + +பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக கருதின்றது. + +அதியோகத்தில் ஆதிபுத்தரை குறித்த பல்வேறு சாதனங்கள்(साधनं) உள்ளன + + + + +ஊ தாண்ட் + +ஊ தாண்ட் ("U Thant", ஜனவரி 22, 1909 – நவம்பர் 25, 1974) என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் அவையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார். + +ஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது. +1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார். + +நவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் +டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார். + +ஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார். + + + + + +பரமபதம் (விளையாட்டு) + +பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8*8, 1-0*10, 12*12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும் பாம்புகளும் இணைக்கும். ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்புபோன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம். + +இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம். + +வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பாண்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்பவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும் புண்ணியம் செயதால் திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்விளையாட்டு அன்று வைணவர்களால் விளையாடப்படுகின்றது. + +தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது. இரண்டு முதல் பலர் விளையாடலாம். இதனை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் வேண்டியதில்லை. பொதுவாக தொடங்குவதற்கு ஒருவர் "1" இனைத் தாயக்கட்டையில் பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்ணிக்கைகேற்ப காய் நகர்த்தப்படும். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும். + + + + +சமாரியம் + +சமாரியம் "(Samarium)" என்பது Sm என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய அணு எண் 62 ஆகும். மிதமான கடினத்தன்மையும் வெள்லியைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட இச்சேர்மம் காற்றில் மெல்ல ஆக்சிசனேற்றம் அடைகிறது. லாந்தனைடு குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருக்கும் சமாரியம் வழக்கமாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. சமாரியம்(II) இன் சேர்மங்க்களும் அறியப்படுகின்றன. குறிப்பாக சமாரியம் மோனாக்சைடு SmO, மோனோசால்கோசெனைடுகள் SmS, SmSe மற்றும் SmTe , சமாரியம்(II) அயோடைடு போன்ற சேர்மங்களும் அறியப்படுகின்றன. சமாரியம்(II) அயோடைடு வேதித் தொகுப்பு வினைகளில் ஒரு பொதுவான ஒடுக்கும் முகவராகும். உயிர்னச் செயல்பாடுகளில் சமாரியத்தின் பங்க்கு ஈதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இது சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டுள்ளது. +1879 ஆம் ஆண்டு பிரெஞ்ச்சு வேதியியலாளர் பால்-எமில் லெக்காக் டி பாய்சுபவுத்ரன் சமாரியத்தைக் கண்டுபிடித்தார். சாமர்சுகைட்டு என்ற கனிமத்திலிருந்து இது பிரித்தெடுக்கப்படுவதால் இத்தனிமத்திற்கு சமாரியம் என்ற பெயரை சூட்டினார். சாமர்சுகைட்டு என்ற பெயரும் முன்னதாக உருசிய கனிமவியல் அலுவலர் வாசிலி சாமர்சிகை-பைகோவெட்சு என்பவரின் நினைவாக சூட்டப்பட்ட பெயராகும். சமாரியம் ஓர் அரு மண் உலோகமாக வகைப்படுத்தப்படுகிறது. புவியில் அதிகமாக கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் சமாரியத்திற்கு 40 ஆவது இடம் கிடைத்துள்ளது. பல்வேறு கனிமங்க்களில் இது 2.8% அளவுக்கு தோன்றுகிறது. செரைட்டு, கடோலினைட்டு, சாமர்சுகைட்டு, மோனசைட்டு மற்றும் பாசுட்னாசைடு உள்ளிட்ட கனிமங்கள் இவற்றில் சிலவாகும். மோனசைட்டு மற்றும் பாசுட்னாசைடு உள்ளிட்ட கனிமங்கள் இரண்டும் வணிக முறையில் சமாரியம் தயாரிப்��தற்கு ஏற்ற பொதுவான கனிமங்களாகும். இவை சீனா, அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இலங்கை, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. சமாரியம் வெட்டி எடுப்பதிலும் உற்பத்தியிலும் சீனா உலகின் முன்னணி நாடாக திகழ்கிறது. +சமாரியம்-கோபால்ட்டு காந்தங்கள் தயாரிப்பில் பயன்படுவது சமாரியத்தின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பயணாகும். நியோடிமியம் காந்தங்க்களை அடுத்து இவை நிலைத்த காந்தங்களாக உள்ளன. இருப்பினும் சமாரியம் சேர்மங்கள் 700 பாகை செல்சியசு வெப்பனிலைக்கும் அதிகமான வெப்ப நிலைகளிலும் நிலையாக காந்தப்பண்புகளை இழக்காமல் எதிர்த்து நிற்கின்றன. கலப்புலோகத்தின் கியூரி புள்ளி இதற்கு காரணமாகும்.சமாரியம் -153 என்ற கதிரியக்க ஐசோடோப்பு சமாரியத்தின் மருத்துவ பயனளிக்கும் திறன் மிக்க ஐசோடோப்பு ஆகும். நுரையீரல் புற்று, மார்பகப்புற்று போன்ற சில வகை புற்று நோய்களுக்கு காரணமான செல்களை அழிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. சமாரியம்-149 என்ற மற்றொரு ஐசோடோப்பு ஒரு வலிமையான நியூட்ரான் உறிஞ்சியாகும். எனவே இதை அணுக்கரு உலைகளில் பயன்படுத்துகிறார்கள். அணுக்கரு உலை செயல்பாடுகளின் போது சமாரியம் சிதைவு விளைபொருளாக உருவாகிறது என்பதால் இதை கருத்திற்கொண்டு அணுக்கரு உலைகள் வடிவமைக்கப்படுகின்றன. வேதி வினைகளில் வினையூக்கியாக, கதிரியக்கக் கார்பன் கணக்கீடு, எக்சுகதிர் சீரொளி என பிற பயன்களுக்காகவும் சமாரியம் அறியப்படுகிறது. +ஓர் அருமண் உலோகமாகக் கருதப்படும் சமாரியம் துத்தநாகத்தின் கடினத்தன்மையும் அடர்த்தியையும் கொண்டுள்ளது. ஆவியாகும் லாந்தனைடுகளில் மூன்றாவது அதிக கொதினிலை கொண்ட தனிமமாக சமாரியம் விளங்குகிறது. இதனுடைய கொதி நிலை 1794 பாகை செல்சியசு ஆகும். இட்டெர்பியமும் யுரோப்பியமும் கொதி நிலை மிகுந்த மற்ற இரண்டு லாந்தனைகள் ஆகும். சமாரியத்தை அதன் கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்க இப்பண்பு பெரிதும் உதவுகிறது. காற்றில் 150 °செல்சியசு வெப்பநிலையில் தீபற்றும். எண்ணெய்க்கடியில் வைத்திருந்தாலும் சிறுகச் சிறுக காலப்போக்கில் ஆக்சிசனேற்றம் அடைந்து சாம்பல்-மஞ்சள் நிறம் பெற்ற ஆக்சைடு-ஐதராக்சைடு பொடியாகின்றது. இவ்வுலோகம் மூன்று வகையான படிக மாற்றங்களை அடைகிறது. சாதாரண வெப்ப சூழல்களில் சமாரியம் செஞ்சாய்சதுர கட்டமைப்பில் (α வடிவம்) காணப்படுகிறது. 731 பாகை செல்சியசு வெப்ப நிலைக்குச் சூடாக்கினால் இதன் படிக வடிவம் அறு கோண மூடிய பொதிவு கட்டமைப்புக்கு மாறுகிறது. இம்மாற்றத்திற்கான வெப்ப நிலை உலோகத்தின் தூய்மையை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகிறது. 922 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தினால் இதன் கட்டமைப்பு பொருள் மைய கனசதுர வடிவுக்கு மாற்றமடைகிறது. 40 கிலோபார் அழுத்தத்தில் சுமார் 300 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தினால் இரட்டை அறுகோண மூடிய பொதிவு கட்டமைப்பு உருவாகிறது, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான கிலோபார் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் பல கட்ட நிலை மாற்றத்திற்கு தூண்டப்படுகிறது. குறிப்பாக 900 கிலோபார் அழுத்தத்தில் நாற்கோண கட்டம் தோன்றுகிறது. Dhcp கட்டம் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படாமலேயே 400 மற்றும் 700 பாகை செல்சியசு வெப்ப நிலையில் உருவாகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. + + +1853 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் ழ்சான் சார்லெ கலிசார்ட் டெ மரின்யாக் என்பவர் டிடிமியம் என்னும் பொருளைக் கொண்டு ஒளிமாலை ஆய்வுகள்செய்த மொழுது ஒளி உள்வாங்கும் அலைநீளங்களைத் துல்லியமாக அளந்த பொழுது சமாரியத்தைக் கண்டு பிடித்தார். பிரான்சில் உள்ள பாரிசில் 1879ல் பால் எமில் பௌத்ரன் என்பவர் சமார்ஸ்கைட் (Y,Ce,U,Fe)(Nb,Ta,Ti)O) என்னும் கனிமத்தில் இருந்து சமாரியத்தைப் பிரித்தெடுத்தார். ஊரல் மலைப்பகுதிகளில் சமார்ஸ்கைட் கிடைத்திருந்தாலும், 1870களில் ஐக்கிய அமெரிக்கா\அமெரிக்காவில் உள்ள வட கரோலைனா மாநிலத்தில் கண்டுபிடித்த புதிய படிவுகளில் இருந்தே சமாரியம் உள்ள டிடிமியம் என்னும் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. + +சமார்ஸ்கைட் என்னும் பெயர் 1854 ல் உருசிய சுரங்க பொறியாளர்களில் தலைவராக இருந்த வாசில் சமார்ஸ்கி-பிக்கோவெட்ஸ் என்பாரைப் பெருமைப்படுத்துவதாக அவர் உயிருடன் இருந்த பொழுதே வழங்கப்பட்டது. + +சமாரியம் தனியாக கிடப்பதில்லை. மற்ற அரிதாகக் கிடைக்கும் தனிமங்களைப்போலவே இதுவும் பிற கனிமங்களில் உள்ள கலவைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. மோனசைட், பாஸ்ட்னாசைட், சமார்ஸ்கைட் ஆகிய கனிமங்களில் இருந்து சமாரியம் கிடடக்கின்றது. மோனசைட் என்னும் கனிமத்தில் 2.8% ம், சமார்ஸ்கைட்டில் 1% அளவும் சமாரியம் கிடக்கின்றது. மின்மவணு-மாற்றிகளில்ன் வழியும், மின்வேதியல் படிவுகளின் வழியும், சமாரியம் (III) குளோரைடு சோடியம் குளோரைடு ஆகியவை சேர்ந்துருகிய கலவைகளில் மின் பகுப்பாய்வு வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. சமாரியம் ஆக்ஸைடில் இருந்து லாந்த்தனம் வழி ஆக்ஸிஜன் இறக்க வினைகளின் வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. + +• அயோடைடுகள் +• ** SmI + +மற்ற லாந்த்தனைடுகள் போலவே சமாரியமும் குறைந்த அல்லது இடைப்பட்ட நச்சுத்தனமை கொண்டது. என்றாலும் இதன் நச்சுத்தன்மைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் விரிவாக செய்யப்படவில்லை. + + + + + + +கெவின் ரட் + +கெவின் மைக்கல் ரட் ("Kevin Michael Rudd", பிறப்பு: செப்டம்பர் 21, 1957) ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார். இவர் ஜூன் 2013 முதல் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும், நாட்டின் 26வது பிரதமராகவும் இருப்பவர். இதற்கு முன்பு 2007 முதல் 2010 வரை பிரதமராகவும், 2006 முதல் 2010 வரை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1949ஆம் ஆண்டு ராபர்ட் மென்சீஸ்க்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவில் ஒரு முன்னால் பிரதமர் மீண்டும் பிரதமாகிறார். + +ஒருபால் திருமணங்களை வெளிப்படையாக ஆதரித்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்தான். ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிகமான பெண்கள் அங்கம் பெற்றுள்ளதும் இவரின் இரண்டாவது அமைச்சரவையில்தான். + +ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி 2013ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து கெவின் ரட் 18 செப்டம்பர் 2013 அன்று இரண்டாவது தடவையாக பிரதமர் பதவியை துறந்தார் + + + + + +ஆங்கிலக் கால்வாய் + +ஆங்கிலக் கால்வாய் ("English Channel") அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் +பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும். + +இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு ("Isle of Wight"), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை. + + + + +ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங���கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது. + + + + +ஆத்திரேலியத் தொழில் கட்சி + +ஆஸ்திரேலிய தொழிற்கட்சி ("Australian Labor Party", ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். + + + + + + +லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா) + +ஆத்திரேலிய லிபரல் கட்சி ("Liberal Party of Australia") என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். + +ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு 1943 இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட்சி ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியுடன் ஆட்சிக்காகப் போட்டியிடுகிறது. நடுவண் அரசியலில் 1983 இலிருந்து எதிர்க் கட்சியாக இருந்த லிபரல் கட்சி 1996 இல் பெரும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றது. நவம்பர் 24, 2007 தேர்தலில் தொழிற் கட்சியிடம் இக்கூட்டணி பெரும் தோல்வி கண்டது. மாநில அளவில் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆறு மாநிலங்களிலும் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. + + + + + +ஜோன் ஹவார்ட் + +ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் ("John Winston Howard", பிறப்பு: ஜூலை 26, 1939) ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார். சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார். இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். + +ஹவார்ட் மால்கம் ஃபிரேசரின் அரசில் 1977-1983 காலப்பகுதியில் பொருளாளராக இருந்தவர். 1985-1989 காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் (ஆஸ்திரேலிய தேசியக் கட்சியுடன் கூட்டணி) இருந்தார். 1995 இல் இவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். + +13 ஆண்டு காலம் எதிர்க்கட்சியில் இருந்த லிபரல் கூட்டணி இவரது தலைமையின் கீழ் 1996 இல் நடந்த தேர்தல்களில�� பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹவார்ட் மார்ச் 11, 1996 இல் நாட்டின் 25வது பிரதமரானார். ஹவார்டின் அரசு 1998, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஐந்தாவது தடவையும் பிரதமராக இருக்க அவர் எடுத்த் முயற்சிகாள் வெற்றி பெறவில்லை. நவம்பர் 24, 2007 இல் நடந்த தேர்தலில் அவர் கெவின் றட் தலைமையிலான ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியிடம் படு தோல்வியைச் சந்தித்தார். + + + + + +அப்பாச்சி ஆன்ட் + +அப்பாச்சி ஆன்ட் மென்பொருட்களை பில்ட் (Build) பண்ணுவதைத் தானியங்கி முறையாக்கும் மென்பொருளாகும். இதில் ஆன்ட் (Ant - Another Neat Tool) என்ற ஆங்கிலப் பதத்தில் இருந்து வந்ததாகும். + + + + +1922 + +1922 (MCMXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +கைத்துப்பாக்கி + +கைத்துப்பாக்கி ("Handgun") ஒரு கையினால் பிடித்துச் சுடப்பயன்படும் ஒரு சுடுகலனாகும். கைத்துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. சிறு கைத்துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கி ஆகியன முக்கிய கைத்துப்பாக்கி வகைகளாகும். சிறுகைத்துப்பாக்கியில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். சுழல்கைத்துப்பாக்கியில் சுழலும் நீள் உருளையின் துளைகளுள் குண்டுகள் இடப்படும். + +ஆரம்பத்தில் ஒரே ஒரு தடவை சுடக்கூடிய கைத்துப்பாக்கிகளே உருவாக்கப்பட்டன. அடுத்தடுத்துச் சுடுவதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுடுகுழல்கள் பயபடுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுழல்கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை ஒரே சுடுகுழலுடன் அடுத்தடுத்துச் சுடுவதைச் சாத்தியமாக்கியது. பின்னர் சிறுகைத்துப்பாக்கிகள் அறிமுகமாயின. + +கைத்துப்பாக்கிகள் சிறியவை; பாரங் குறைந்தவை; இலகுவில் எடுத்துச் செல்லவும் மறைத்து வைக்கவும் கூடியவை. சுடுகலன்களின் பயன்பாடு காரணமாக உடற்பலத்தில் சமமற்றவர்களும் ஒரே அளவான தற்பாதுகாப்பு நிலையைக் கொண்டவர்களாக முடிந்தது. + +கைத்துப்பாக்கிகள் பொதுவாக தற்பாதுகாப்பு ஆயுதங்களாகவே கருதப்படுகின்றன. தேர்ந்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை மிக நெருங்கிச் சென்று தாக்கவும் பயன்படுகின்றன. + + + + + +சுழற்சி + +சுழற்சி என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு புள்ளியைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது அச்சு எனப்படும் ஒரு கோட்டைச் சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாகச் செல்லுமாயின் அது தன்னைத் தானே சுற்றும் சுழற்சியாகும். அவ்வச்சு பொருளுக்கு வெளியில் இருக்குமாயின் அப்பொருள் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகிறது எனப்படும். + +பம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது. + +கணிதத்தில் சுழற்சி என்பது ஒரு, புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற பெயர்ச்சி என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் இருபரிமாணம், முப்பரிமாணம் ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது இயூலரின் சுழற்சித் தேற்றத்தில் இருந்து பெறப்படுகின்றது. + +ஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது. + + + + +1930 + +1930 (MCMXXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +கியூபெக் + +கியூபெக் ("Quebec") என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர். + +கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள். + + + + + +மூரித்தானியா + +மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா ("Mauritania", அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன. + + + + + +பிராங்க்ளின் ரூசவெல்ட் + +பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் ("Franklin Delano Roosevelt", ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார். + +இவர் நியூயார்க்கில் ஹைடி பார்க் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஜேம்ஸ் ரூஸ்வெல்ட் வணிகத் தொழில் செய்தார். ஜேம்ஸ் ரூஸ்வெல்ட், சாரா ஆன் திலானோ ஆகியோர் இவரது பெற்றோர். இவரது பெற்றோரின் குடும்பத்தார் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இளவயதில் அதிக முறை ஐரோப்பாவிற்குச் சென்று வந்ததால், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பேசக் கற்றார். குதிரையேற்றம், போலோ, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுத் தேந்தார். பதின்வயதில் கோல்ப் விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். மாசாசூசெட்ஸ் குரோடன் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் எண்டிகோட் பீபாடி இவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இவரின் திருமணத்தின் பொழுதும், அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இவர் ஹார்வர்டு கல்லூரியில் பயின்றார். ஹார்வர்டு கிரிம்சன் என்ற நாளேட்டின் முதன்மை ஆசிரியராகவும் விளங்கினார். + +இவர் எலியனேர் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவரது இளவயது திருமணத்தை இவரது தாயார் ஏற்கவில்லை. எலியனேரின் மாமா திருமணத்தை நடத்தினார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. + +இளம் தம்பதியினர் ஹைடி பார்க் என்ற அவரது குடும்பத்தின் ஸ்ப்ரிங்வூட் நகரத்திற்கு குடியேறினர், அங்கு ரூசவெல்ட்டின் தாயார் அடிக்கடி வீட்டிற்கு விருந்தாளியாக வந்து சென்றார், எலியனேர் மிகவும் அதிகமான அதிருப்திக்குள்ளானார். 1941 ஆண்டு வரை அவரது தாயார் இறப்பு வரை அந்த வீடு ரூசவெல்ட்டின் தாயார்க்கு சொந்தமாக இருந்தது. கூடுதலாக, ஃபிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் அவரது தாய் சாரா நியூயார்க் நகரத்தில் இளம் தம்பதியினருக்கு அவர்கள் புதிதாக நன்கு திட்டமிட்டு ஒரே மாதிரியாக இருக்குமாறு புதிய இரட்டை வீடுகளை கட்டி முடித்தனர்; அந்த வீடுகளின் ஒவ்வொரு தளத்திலும் இணைப்புகளை வைத்து இரட்டை வீடுகளை கட்டியிருந்தனர். எலியனேர் தனது சொந்த வீட்டில் வசிப்பதாக என்றுமே அவர் உணர்ந்ததில்லை. + +சுயசரிதை எழுத்தாளர் ஜேம்ஸ் மேக்ரிகோர் பர்ன்ஸ் இளைஞரான ரூசவெல்ட் தன்னம்பிக்கை மற்றும் மேல் வர்க்கத்தினராக இருந்தார் என்றார். இதற்கு மாறாக, எலியனேர் அந்த சமயத்தில் சமூக வாழ்க்கையை வெட்கமாகவும் வெறுப்பாகவும் இருந்தார், முதலில் தங்களுடைய பல குழந்தைகளை வளர்க்க வீட்டிலேயே தங்கினார். எலியனேர் அவர்களுக்கு ஆறு குழந்தைகள் இருந்தன: + +1910 ஆம் ஆண்டின் மாநிலத் தேர்தலில் ரூசவெல்ட், நியூயார்க் மாநில செனட் மாவட்டத்தில் உள்ள ஹைடி பார்க் அருகே டச்சு கவுண்டியில் போட்டியிட்டார். இந்தப் பகுதியில் குடியரசுக் கட்சியிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது, 1856 முதல் எந்த ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் இந்த பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. ரூசவெல்ட் அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவராக இருந்தார் மேலும் அவரது உறவுக்காரர் தியோடர் குடியரசுக் கட்சியில் இருந்தார் அதனால் ஜனநாயகக் கட்சி ரூசவெல்ட்டை வேட்பாளராக அறிவித்தது. ரூசவெல்ட் தனது தேர்தல் பிரசாரத்திற்குத் தேவையான செலவுகளை தாமே ஏற்றுக்கொண்டார். அவரது தேர்தல்ப் பிரசாரம் விருவிருப்பாகவும் மற்றும் ஆக்கிரோசத்துடனும் இருந்தது. அதனால் அந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஒரு வரலாற்று சிற்ப்பு மிக்க வெற்றியை பெற்றார். ரூசவெல்ட் பெயர் ஹட்சன் பள்ளத்தாக்கில் மிக்ப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. + +சனவரி 1, 1911 இல் செனட் உறுப்பினராக பதவிப் பிராமானம் எடுத்துக் கொண்ட ரூசவெல்ட், உடனடியாக மாநில ஜனநாயகக் கட்சியை ஆதிக்கம் செலுத்��ிய (Tammany) தம்மானி முதலாளித்துவத்தை எதிர்த்த "கிளர்ச்சியாளர்களின்" குழுவின் தலைவர் ஆனார். சனவரி 16, 1911 இல் ஜனநாயகக் கட்சித் தலைமையுடன் தொடங்கிய அமெரிக்கா செனட் தேர்தல் 74 நாட்களுக்கு இரு பிரிவுகளின் போராட்டத்தால் முடக்கப்பட்டது, புதிய செனட் உறுப்பினரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் வில்லியம் எஃப். ஷீஹன் இந்த சூழலை "தம்மானியின் முழு வலிமை" என்று விவரித்தார். (அமெரிக்க செனட்டர்களின் பிரபலமான தேர்தல், அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை நடைபெறவில்லை) மார்ச் 31 ஆம் தேதி சமரச வேட்பாளர் ஜேம்ஸ் ஏ.ஓ.கோர்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரி ரூசவெல்ட்டிற்கு தேசிய வெளிப்பாடு மற்றும் அரசியல் தந்திரோபாயங்கள் மற்றும் சில அனுபவ ஆலோசனைகளை வழங்கினார்; தம்மானி குழுவின் தலைவர் ஒருவர் ரூசவெல்ட்டை உடனடியாக ஜனநாயகக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் ஏனென்றால் ரூசவெல்ட் உறவுக்காரரால் குடியரசுக் கட்சியில் ஏற்படுத்திய பாதிப்பைப் போல் ரூசவெல்டும் ஏற்படுத்துவார் என்று எச்சரித்தார். நியூயார்க் ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் விரைவில் ரூஸ்வெல்ட் பிரபலமானவராக ஆனார், இருப்பினும் அவர் இதுவரை ஒரு சிறந்த பேச்சாளராக இன்னும் மாறவில்லை. அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் "ரூஸ்வெல்ட்டின் இரண்டாவது வருகையை" சித்தரிக்கத் தொடங்கியது."ரூஸ்வெல்ட் இரண்டாவது வருகை தம்மானி கூட்டத்திற்கு குளிர்க் காய்ச்சல் ஏற்படுவதாக சித்தரித்தது". + +1913 இல் கடற்படை துணைத் தளபதி ஜோசப்ஸ் டேனியல்ஸின் செயலாளராக கடற்படை துணைச் செயலாளராக ரூசவெல்ட் நியமிக்கப்பட்டார். ரூசவெல்ட் கடற்படைக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு கொண்டிருந்தார் - அவர் ஏற்கனவே கிட்டத்தட்ட 10,000 கடற்படை சம்பந்தமான புத்தகங்களை சேகரித்திருந்தார், மேலும் அனைத்தையும் வாசிக்கச் செய்ததாகவும் கூறினார்-மற்றும் அவரது முதலாளி டேனியல்ஸ் ஒரு பெரிய மற்றும் திறமையான கடற்படை சக்தியை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். துணை செயலாளராக ரூசவெல்ட் கடற்படை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை செய்தார். இதன் காரணமாக அமெரிக்க கடற்படை ரிசர்வ் படை நிறுவப்பட்டது. அட்மிரல் வில்லியம் பென்சன் போன்ற பிற்ப��க்குத்தனமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக அவர் "எந்தவொரு பயன்பாட்டையும் கருவியாகக் கருதிக் கொள்ள முடியாது" என்று கூறிய ரூசவெல்ட் - போருக்குப் பின்னர் கடற்படையின் விமானப் பிரிவின் பாதுகாப்பை பலப்படுத்த தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். பில்லி மிட்செலின் போர் கப்பல்களை மூழ்கடிக்கும் குண்டுகள் பற்றி வெளிப்படையாக எச்சரிக்கைகள் செய்தாலும், ரூசவெல்ட் செனட் தலைவர்களுடனும் ஏனைய அரசாங்கத் துறைகளோடும் கடற்ப்படை திட்டங்களுக்கான நிதிப் பெற பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் டெய்லரின் "நிறுத்து-கண்காணிப்பு" முறைமையை எதிர்த்தார், இது கப்பல் கட்டுப்பாட்டு மேலாளர்களால் பாராட்டப்பட்டது, ஆனால் தொழிற்சங்கங்கள் எதிர்த்தது. கடற்ப்படை அலுவலகத்தில் தனது ஏழு ஆண்டுகால அனுபவத்தில் ஒரு தனி தொழிற்சங்க வேலைநிறுத்தம் கூட ஏற்படாமல் பார்த்துக்கொண்டார், இதில் ரூசவெல்ட் தொழிலாளர் பிரச்சினைகள், போர்க்கால, கடற்படை பிரச்சினைகள் மற்றும் தளவாடங்கள், எதிர்கால அலுவலகத்திற்கான அனைத்து மதிப்புமிக்க தகுதிகள் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். + +1920 ஆம் ஆண்டு ஜனநாயக தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக, ஓஹியோவின் கவர்னர் ஜேம்ஸ் எம். காக்ஸ் உடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக ரூசவெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்வு பெரும்பாலான மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தபோதிலும், ரூசவெல்ட் ஒரு மிதமான, ஒரு வில்சோனியஸம், மற்றும் புகழ் ஆகிய பண்புகளை பெற்றிருந்ததால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சமநிலையை உருவாக்கினார். ரூசவெல்ட், ஜனாதிபதி தேர்தலில் கட்சியால் வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டபோது குடியரசு கட்சியின் தியோடாரைவிட நான்கு வயது இளயவராக இருந்தார். காக்ஸ்-ரூசவெல்ட் ஜோடி குடியரசுக் கட்சியினரின் வேட்பாளர்களான வாரன் ஜி. ஹார்டிங் மற்றும் கால்வின் கூலிட்ஜ் ஆகியோரால் ஜனாதிபதி தேர்தலில் பரந்த வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தொழில்முறை சட்டப் பயிற்சி செய்வதற்கு ரூஸ்வெல்ட் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பினார், புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட நியூயார்க் சிவிடான் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தார். + +1920 களில், குறிப்பாக நியூயார்க்கில், ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புபட்டிருந்த மற்றும் தொடர்புடையவர்களை ரூசவெல்ட் பலப்���டுத்துவதற்க்கான வேலைகளை செய்தார். அவர் ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தின் (Tammany) தம்மானி அமைப்பிற்கு ஒரு எதிராளியாக இருந்த போதிலும், அந்த குழுவினரின் தனக்கு எதிரான நிலைப்பாட்டை ரூசவெல்ட் முறியடித்தார். 1922 ஆம் ஆண்டில் நியூயார்க் ஆளுநராக ஆல்ஃபிரட் ஈ. ஸ்மித் தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் 1924 ஆம் ஆண்டில் அவரது உறவினர், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தியோடர் ஜூனியர் ஆகியோருக்கு எதிராகவும் ஸ்மித்தின் ஆதரவாளராகவும் இருந்தார். 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ரூசவெல்ட் ஸ்மித்திற்கு ஆதரவாக உரையாற்றினார் மேலும் +ஸ்மித்திற்கு ஆதரவாக வேட்பு மனுக்களை வழங்கினார்; 1924 தேர்தலில் நடந்த பிராச்சாரத்தின் மூலம் ரூசவெல்ட் பொது வாழ்விற்குத் திரும்பினார். + +1928 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்மித் அறிவிக்கப்பட்டதால், ஸ்மித் ரூசவெல்ட்டை மாநிலத் தேர்தலில் ஆளுநராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஜனநாயகக் கட்சியின் சார்பாக ரூசவெல்ட்டை நியூயார்க் மாநில ஆளுநராக நியமித்தனர். ஸ்மித் ஜனாதிபதி தேர்தலில், அவரது சொந்த மாநிலத்தில் தோற்கடிக்கப்பட்டாலும், ரூசவெல்ட் தேர்தலில் ஒரு சதவிகிதம் வித்தியாசத்தில் நியூயார்க் மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சீர்திருத்த ஆளுநராக, அவர் பல புதிய சமூக திட்டங்களை நிறுவினார், மேலும் பிரான்சஸ் பெர்கின்ஸ் மற்றும் ஹாரி ஹாப்கின்ஸ் ஆகியோரின் அறிவுறைகளை பெற்றார். + + + + + +1912 + +1912 (MCMXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +1520 + +1520 (MDXX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + +இயூலரின் சுழற்சித் தேற்றம் + +இயூலரின் சுழற்சித் தேற்றம் ("Euler's rotation theorem") என்பது வடிவவியல் சார்ந்த ஒரு தேற்றம். இது, "ஒரு முப்பரிமாண வெளியில், விறைப்பான பொருளொன்றில் உள்ள ஏதாவது ஒரு புள்ளி நிலையாக இருக்கும் வகையிலான அதன் இடப்பெயர்வு, அப் புள்ளியூடாகச் செல்லும் அச்சுப் பற்றிய அப்பொருள��ன் சுழற்சிக்கு ஈடானது" என்கிறது. + +1775 ஆம் ஆண்டில் லியோனார்ட் இயூலர் என்பவர், எளிமையான வடிவவியல் முறையைப் பயன்படுத்தி இத் தேற்றத்தை நிறுவினார். அதனால், அவருடைய பெயரைத் தழுவி இத்தேற்றத்துக்கு பெயரிட்டனர். இத்தேற்றம் குறிப்பிடும் சுழற்சி அச்சு இயூலரின் அச்சு எனப்படுகிறது. இது ஓரலகுத் திசையன் (அலகுக்காவி) formula_1 இனால் குறிக்கப்படும். இயக்கவியலில் இத்தேற்றத்தின் விரிவின் மூலம் நொடிச் சுழல் அச்சு எனப்படும் கருத்துரு உருவானது. + +நேரியல் இயற்கணிதத்தின்படி இத்தேற்றம், "முப்பரிமாண வெளியில், பொதுத் தொடக்கப் புள்ளியைக் கொண்ட ஏதாவது இரு கார்ட்டீசியன் ஆள்கூற்றுத் தொகுதிகள் ஏதாவது நிலைத்த அச்சுப் பற்றிய ஒரு சுழற்சியினால் தொடர்பு பட்டுள்ளன" என்கிறது. + + + + + + +கால்வாய் + +கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும். போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதாக வெட்டப்படும் இவை கடற்போக்குவரத்துத் தூரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வெட்டப்படுபவை ஆகும். + +சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் போன்றன கப்பற் போக்குவரத்துக்காக வெட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கால்வாய்களாகும். + +கால்நடை விலங்கால் செலுத்தப்படும் வண்டி போக்குவரத்து திறன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருந்தது. கோவேறு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் அதிகபட்சம் 8 டன் என்ற அளவில் உள்ள எடைகொண்ட சரக்குப் பொருட்களை சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ சுமக்க முடியும். இது மிகச் சிறிய இடைவெளிகளுக்கும், காலத்திற்கும் பொருத்தமானது தவிர, வண்டிகள் செல்ல சாலைகள் தேவை. இதற்கு பதிலாக பழங்காலத்தில் எளிமையான, மலிவான போக்குவரத்திற்கு கால்வாய் பொருத்தமானதாக இருந்திருக்கிறது. + +அறியப்பட்ட பழமையான கால்வாய்களில் முதன்மையானது நீர்ப்பாசனக் கால்வாய்கள், இவைகள் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, இப்போது ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் உள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், பண்டைய இந்தியாவில், கிர்னார் என்னும் இட��்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட நவீன பாசன மற்றும் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. எகிப்து நாட்டில் உள்ள கால்வாய்கள் குறைந்தபட்சம் பெப்பி I மேரி]] (கி.மு 2332-2283 ஆட்சி காலத்தில்) அஸ்வான் அருகிலுள்ள நைல் மீது கடந்து செல்ல ஒரு கால்வாய் கட்டினார். + +பண்டைய சீனா வரலாற்றில், நதிப் போக்குவரத்திற்கான பெரிய கால்வாய்கள் கி.மு 481-221 வரையான காலத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய சரித்திர ஆசிரியரான சிவா கியான் கூற்றுப்படி, மிக நீளமான கால்வாய் ஹாங்கா காௗ என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் சாங், ஜாங், சென், காய், காவ் மற்றும் வேய் போன்ற பகுதிகளை இனைத்திருக்கிறது. இன்றும் உலகின் மிக நீளமான கால்வாய், மற்றும் மிக மிக உயரமான ஒரு கால்வாய்களில் மிக நீண்ட கால்வாய் சீனாவின் "பெரும் கால்வாய்" இருந்து வருகிறது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது. + +கிரேக்க பொறியியலாளர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கால்வாய் தடுப்புகளைப் முதன்முதலாக பயன்படுத்தி இருந்தனர், இந்தத் தடுப்புகள் மூலம் அவர்கள் பண்டைய சூயஸ் கால்வாயில் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர். + +வரலாற்று ரீதியாக கால்வாய்கள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு நாகரிகத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1855 ஆம் ஆண்டில் லேஹீ கால்வாய் 1.2 மில்லியன் டன் சுத்தமான எரியும் அனல்மின் நிலக்கரி சுரங்கத்தை நடத்தியது; சுமார் ஒரு நூற்றாண்டிற்கு செயல்பட்டு வந்த இந்தக் கால்வாய் 1930 களில் இதை உருவாக்கிய் நிறுவனத்தால் இதன் சேவை நிறுத்தப்பட்டது. நமது நவீன காலத்தில் சில கால்வாய்கள் இன்னும் செயல்படுகின்றன, அவை பொருளாதாரத்திற்குத் தேவையான உந்து சக்தியாக இருந்திருக்கிறது, உண்மையில் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு கால்வாய்களின் தேவை இருந்தது. நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற மொத்த மூலப்பொருட்களின் போக்குவரத்து நீர் போக்குவரத்து இல்லாமல் கடினமானதாகவும் பிற போக்குவரத்து செலவை ஒப்பிடும்போது ஓரளவு குறைவாகவும் இருக்கிறது. 17 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது அதிகரித்த இயந்திரமயமாக்கல் சுழற்சியின் விளைவாக தொழில்துறை வளர்ச்சிகள் மற்றும் புதிய உலோகங்கள் இத்தகைய மூலப்பொருட��களுக்கு எரிபொருளாக கால்வாய்கள் செயல்பட்டது. புதிய ஆராய்ச்சி துறைகளில், புதிய தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு வழிவகுத்தது, எந்தவொரு தொழில்மயமான சமுதாயத்திற்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கால்வாய்களின் தேவை முக்கியமானதாகும். + +பெரும்பாலான கப்பல் கால்வாய்கள் உள்ளிட்ட எஞ்சியிருக்கும் கால்வாய்கள் இன்று முதன்மையாக சரக்கு மற்றும் பெரிய கப்பல் போக்குவரத்துத் தொழில்களுக்கு சேவை செய்கின்றன, அதேசமயம் முன்னர் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக்கு உதவிய கால்வாய்கள் பின்நாட்களில் கைவிட்ப்பட்டும், பாராமரிப்பில்லாமலும், நீரோட்டம் மின்றி தூர்ந்துபோயிற்று. அதேசமயம் அணைகள் வெள்ள நீரை கட்டுப்படுத்தவும் சேமிக்கவும் மற்றும் உல்லாச படகு போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1850 களின் நடுவில் அமெரிக்காவில் முதன்முதலாக துவங்கிய கால்வாய் கப்பல் போக்குவரத்து முதன்முதலில் அதிகரித்தது, நாளைடைவில் கால்வாய் போக்குவரத்து, விலை மலிவான இரயில் போக்குவரத்து வந்தவுடன் குறைந்து முற்றிலும் கைவிடப்பட்டது. + +1880 களின் முற்பகுதியில், இரயில் போக்குவரத்துடன் பொருளாதாரரீதியாக போட்டியிடும் திறனைக் கொண்ட கால்வாய்கள் வரைபடத்தில் இருந்து வந்தன. அடுத்த இரண்டு தசாப்தங்களில், நிலக்கரி ஏற்றுமதி அதிகப்படியாக குறைந்து எண்ணெயை எரிபொருளாக கொண்டு வெப்ப உற்ப்பத்தியின் தொடக்கம், மற்றும் நிலக்கரியின் தேவை +இதனால் குறைந்து. பின்னர், முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மோட்டார் வண்டிகள் வந்தபோது, சிறிய அமெரிக்கா கரைகள் கொண்ட கால்வாய்கள் மற்றும் பல ரயில்களுடனான சரக்கு போக்குவரத்து பத்து-மைல்களில் நிலையான சரிவைக் கண்டது, நெகிழ்வுத்தன்மை மற்றும் செங்குத்தான சரிவுகளில் சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தன்மையால் சாலை போக்குவரத்து நெடுகிலும் அதிகரித்தது, மேலும் குளிர்காலத்தில் செயல்பட முடியாத சரக்கு இரயில் போக்குவரத்துக்கு பதிலாக சாலை போக்குவரத்து அதிகரித்தது. + +கால்வாய்கள் கீழ் உள்ள மூன்று வழிகளில் ஒன்று அல்லது மூன்றின் கலவையாக, கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் கிடைக்கக்கூடிய பாதையைப் பொறுத்து இருக்கும்: + + + +இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட��டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும். + +ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும். + +ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய். + +வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும். + +ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது. + +கால்வாய்கள் வெனிஸ் நகரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது, பல (கால்வாய்) மிதக்கும் நகரங்கள் "வெனிஸ் ஆஃப் ..." என்ற பெயரிடப்பட்டது. நகரம் சதுப்பு தீவுகளில் கட்டப்பட்டுள்ளது, கட்டடங்களை ஆதரிக்கும் மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மனிதனால் இந்த நகரம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். தீவுகளுக்கு ஒரு ��ீண்ட நெடிய வரலாறு உண்டு; 12 ஆம் நூற்றாண்டில், வெனிஸ் ஒரு சக்தி வாய்ந்த நகரமாக இருந்தது. + +ஆம்ஸ்டர்டாம் நகரமும் வெனிஸ் போன்று கட்டப்பட்டது. 1300 ஆம் ஆண்டுகளில் இது ஒரு நகரமாக மாறியது. பல கால்வாய்கள் ஆம்ஸ்டர்டாமின் பலமான ஒரு பகுதியாக கட்டப்பட்டன. நகரம் விரிவடைந்து, வீடுகள் கால்வாய்களை ஒட்டியே கட்டப்பட்டது. +விரிவான கால்வாய் கட்டமைப்புடன் உள்ள மற்ற நகரங்கள்: நெதர்லாந்தில் உள்ள ஆல்மாமார், அமர்ஸ்போர்ட், போல்வார்ட், பிரெய்ல், டெல்ஃப்ட், டென் பாஷ், டோக்மும், டார்ட்ரெச்ச்ட், என்குயூஜன், ஃபிரான்கெர், கௌடா, ஹார்லெம், ஹர்லிங்கென், லீவார்டன், லெய்டன், ஸ்னெக் மற்றும் யூட்ரெட்ச் நகரங்கள்; பிரஜி மற்றும் ஜெண்ட்ஸ் ப்ளாண்டர்ஸ், பெல்ஜியம்; இங்கிலாந்தில் பர்மிங்காம்; ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்; போர்ச்சுகில் ஏவிரோ; ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் பெர்லின்; ஃபோர்ட் லாடெர்டேல் மற்றும் கேப் கோரல், புளோரிடா, அமெரிக்கா மற்றும் லாஹோர் பாக்கிஸ்தான். + +லிவர்பூல் கடல் வானிப நகரம் இங்கிலாந்தின் லிவர்பூலின் மையப்பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக உள்ளது, இங்கு முக்கியமாக குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக ஊடுருவிவரும் நீர்வழிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. + + + + +சுயஸ் கால்வாய் + +சுயஸ் கால்வாய் ( "") எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது. + +ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. +இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ் +இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது. + +ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ���வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது. சைய்டின் துறைமுகத்தின் வடக்கு முனையிலிருந்து சூயஸ் நகரத்தில் உள்ள போர்ட் ட்வெஃபிக்கின் தெற்கு முனைவரை இது நீட்டிக்கப்படுகிறது. இதன் வடக்கு மற்றும் தெற்கு அணுகல் கால்வாய்கள் உட்பட. இதன் நீளம் 193.30 கிமீ (120.11 மைல்), 2012 ஆம் ஆண்டில், 17,225 கப்பல்கள் கால்வாயை (நாள் ஒன்றுக்கு 47) கடந்து சென்றன. + +அசல் கால்வாயானது பலாஹ் புறவழி மற்றும் கிரேட் பிட்டர் ஏரி ஆகிய இடங்களைக் கடக்கும் ஒற்றைப் பாதை நீர்வழியாகும். இக்கால்வாயில் நீரை அடைக்கும் அமைப்பு இல்லை, கடல் நீர் இந்த கால்வாய் வழியே ஓடும். பொதுவாக, குளிர்காலத்தில் பிட்டர் ஏரிகளின் வடக்கிலிருந்து கால்வாயில் நீர்பாயும் ஆனால் கோடைக் காலத்தில் தெற்கிலிலுந்து வடக்கே பாய்கிறது. + +இந்தக் கால்வாய் எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் (SCA) பராமரிக்கப்பட்டு வருகிறது. கான்ஸ்டன்டினோபாலின் மாநாட்டின் முடிவின்படி, இக்கால்வாயை "சமாதான காலத்திலும் போர் காலத்திலும், ஒவ்வொரு கப்பலும் வர்தகத்துக்கோ அல்லது போர் பயன்பாட்டுக்கோ கொடி பாகுபாடு இல்லாமல்" பயன்படுத்தப்படலாம். + +2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கால்வாய் பயணத்தின் நேரத்தை குறைக்க 35 கிமீ (22 மைல்) க்கு பலாஹ் புறவழி விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டது. சூயஸ் கால்வாயின் திறனை ஒரு நாளைக்கு 49 என்பதிலிருந்து 97 கப்பல்கள் என இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டது. $ 8.4 பில்லியன் செலவில், இந்த திட்டம் எகிப்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வட்டி ஈட்டும் முதலீட்டு சான்றிதழ்களுடன் நிதியளிக்கப்பட்டது. +இவ்வாறு  "புதிய சூயஸ் கால்வாய்", விரிவாக்கப் பட்டது, இது 2015 ஆகத்து ஆகஸ்ட் 6, அன்று ஒரு விழாவில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. + +மிகப்பழைமையானது சூயஸ் கால்வாய். பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது. பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை வெளியே அகற்றி பல மராமத்துப் பணிகள் செய்து ஏறக்குறைய அதன் அமைப்பை முழுமையாக மாற்றினார். அதன்பின் அதிகம் யாரும் இந்தக் கால்வாய் மீது கவனம் செலுத்தவில்லை. துருக்கி சுல்தானின் வைசிராயாக இருந்த எகிப்தைச் சேர்ந்த கேதிவ் இஸ்மாயில் பிரெஞ்சு நாட்டின் ஆலோசனையில் பிரெஞ்சு மூலதனத்தில் உருவாக்கியதே தற்போதைய கால்வாய். பாலைவனம் வழியே செல்வதால் திரும்பத் திரும்ப மண் சேர்ந்துவிடுவதே இந்தக் கால்வாயின் குறை + +பண்டைய கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குக் கட்டப்பட்டன. எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட் அல்லது இரண்டாம் ரமெசெஸ் காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய் இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. + +பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் நெப்போலியன் மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றாளர் எரோடோட்டசின் வரலாற்றுக் குறிப்புகளின் படி, ஏறத்தாழ கி.மு. 600 அளவில் புபாஸ்டிஸ் மற்றும் பைத்தோம் இடையே கிழக்கு-மேற்குக் கால்வாய் வெட்டும் பணி இரண்டாம் நெக்கோ மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இத்திட்டத்தை நெக்கோ மன்னன் பூர்த்தி செய்யவில்லை..நெக்கோவின் மறைவையடுத்து இக்கால்வாய் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. பண்டைய எகிப்தை வெற்றி கொண்ட பேர்சிய மன்னன் முதலாம் தரியசினால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது. + +1854-1856 காலப்பகுதியில் பிரான்சைச் சேர்ந்த ஃபேர்டினன்ட் டி லெஸ்ஸெப்ஸ் என்பவர் சர்வதேசக் கப்பற் போக்குவரத்துக்காகக் கால்வாய் ஒன்றை அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எகிப்து மற்றும் சூடான் ஆட்சியாளரான முகமது சையத் பாஷாவிடமிருந்து அனுமதி பெற்றார். இவர் 1830களில் பிரெஞ்சு அரச அதிகாரியாக இருந்தபோது சையத் பாஷாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. இதன்படி, இந்நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்புடையது. இவ்வொப்பந்தத்திற்கு அமைவாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சுயஸ் நிலப்பகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பதற்கான சர்வதேச ஆணையகம் கூட்டப்பட்டது. இது ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்நிபுணர் குழு கால்வாய் அமை���்தல் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட அறிக்கையை 1856 டிசம்பரில் தயாரித்தது. இதன் பின்னர் சுயஸ் கால்வாய் நிறுவனம் 1858 டிசம்பர் 15இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி 1859 ஏப்ரல் 25இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. + +இந்தக் கால்வாய் சுமார் 20 மீட்டர் (66 அடி) வரையான நீரில் அமிழும் உயரம் அல்லது 240,000 இறந்தநிறைத் தொன் வரையான எடையும், 68 மீட்டர் (223 அடி) வரையான உயரமும், 77.5 மீட்டர் (254 அடி) வரையான அதிகபட்ச அகலமும் கொண்ட கப்பல்கள் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இக்கால்வாயூடாக பனாமா கால்வாயூடாகப் பயணிக்கக் கூடியதை விட பெரிய கப்பல்கள் பயணிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் சில மிகப்பெரிய கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்க முடியாது. சில கப்பல்கள் பயணிக்க ஏதுவான முறையில் எடையைக் குறைக்கும் பொருட்டு, கால்வாய் நுழைவிடத்தில் கால்வாய்க்குச் சொந்தமான படகுகளில் தமது பொதிகளை இறக்கிவிட்டுக் கால்வாயூடாகப் பயணித்து மீண்டும் கால்வாய் முடிவிடத்தில் பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன. + +பொதுவாக ஒரு நாளில் மூன்று கப்பற்றொகுதிகள் இக்கால்வாயைக் கடக்கின்றன. இவற்றில் ஒரு தொகுதி வடக்கு நோக்கியும் இரண்டு தொகுதிகள் தெற்கு நோக்கியும் பயணிக்கின்றன. இவை ஏறத்தாழ மணிக்கு 8 கடல்மைல் (மணிக்கு 15 கி.மீ) வேகத்தில் பயணிக்கின்றன. கால்வாயைக் கடக்கும் பயண நேரம் சுமார் 11 முதல் 16 மணித்தியாலங்கள் ஆகும். கப்பல்கள் குறைந்த வேகத்தில் பயணிப்பது கால்வாயின் கரைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது. + +இக்கால்வாய் சிறியதாக இருப்பதால் சுதந்திரமான இருவழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. + +சுயஸ் கால்வாய்க்கு பிரதான மாற்று வழியாக ஆபிரிக்காவின் தென் முனையான கேப் அகுலாஸ் ஊடான கடல் மார்க்கம் விளங்குகின்றது. சுயஸ் கால்வாய் அமைப்பதற்கு முன்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான ஒரேயொரு கடல்மார்க்கமாக இதுவே விளங்கியது. கால்வாயூடாகப் பயணிக்க முடியாதளவு பெரிய கப்பல்களுக்கான பாதையாக இப்பொழுதும் இதுவே விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சம் காரணமாக சுயஸ் காலவாயூடான கப்பற் போக்குவரத்தில் ஏறத்தாழ 10% இவ்வழியை���் பயன்படுத்தின. சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு எண்ணெய்க் கப்பல் சுயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமல் இவ்வழியைப் பயன்படுத்தினால் 2,700 மைல்கள் (4,345 கி.மீ) அதிகமாகப் பயணிக்க வேண்டும். + +அண்மைக் காலமாக ஆர்க்டிக் பெருங்கடலில் பனிமூடிய பகுதி சுருங்க ஆரம்பித்ததிலிருந்து, கோடைகாலத்தில் 6 முதல் 8 வார காலப்பகுதிக்கு வட கடலூடாக ஐரோப்பாவிலிருந்து கிழக்காசியாவுக்கான கப்பற் போக்குவரத்து நடைபெறுவது சாத்தியமாயிற்று. இது சுயஸ் கால்வாயூடான பயணத்தை விட பல்லாயிரம் மைல்கள் குறைவான தூரத்தைக் கொண்டது. + +நெகெவ் பாலைவனத்தினூடாக ஒரு ரயில் பாதையை அமைக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. + +சுயஸ் கால்வாயின் தோற்றம், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையில் முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும், கால்வாயின் நடுப்பகுயிலுள்ள கிரேட் பிட்டர் ஏரியில், நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் நடுப்பகுதியிலுள்ள இந்த கிரேட் பிட்டர் ஏரி அலைகள் கூடியதாகவும், அலைகள் சுயசில் வேறுபட்டதாகவும் இருக்கும். இந்த கிரேட் பிட்டர் ஏரி ஆனது, மிகவும் உவரான இயற்கை ஏரியாக இருப்பதனால், உயிரினங்கள் இடப்பெயர்வு தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உவர்த்தன்மை ஓரளவு சமமானதாக வந்திருப்பதால், செங்கடலிலிருந்து உயிரினங்கள் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன. + + + + + +பனாமா கால்வாய் + +பனாமா கால்வாய் () என்பது பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது 48 மைல் (77 கிமீ) நீளமுள்ள நீர்வழி ஆகும். இது பனாமாவின் இஸ்தமுவில் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது மேலும் இக்கால்வாய் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக உள்ளது. இக்கால்வாயில் இருந்து கப்பல்கள் காட்ன் ஏரியை அடையும்வரை கால்வாயின் ஒவ்வொரு முனையிலும் நீரை அடைத்து நீர்மட்டத்தைக் கூட்ட, குறைக்க கதவண�� அமைப்புகள் உள்ளன, கால்வாயை கடல் மட்டத்தின் ஆழத்துக்கு மிக ஆழமாக அகழுவதைத் தவிர்க்கும்விதமாக கடல் மட்டத்திற்கு 26 மீட்டர் (85 அடி) உயரத்திற்கு மேலே ஒரு செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது, இதில் உள்ள கதவணைகள் 33.5 மீட்டர் (110 அடி) அகலம் கொண்டவையாக உள்ளன. மூன்றாவது அகன்ற நீர்பாதையானது அகன்ற கதவணைகளுடன் செப்டம்பர் 2007 மற்றும் மே 2016வுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட கால்வாயில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வணிக நடவடிக்கையைத் தொடங்கியது. புதிய பெரிய கதவணைகளை அமைத்ததற்குப், பிந்தைய பனாமா கால்வாயில் பெரிய கப்பல்களின் போக்குவரத்தை அனுமதிக்க ஏற்றதாகவும், மேலும் மிகுதியான சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டதாகவும் ஆனது. இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது. + +பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1881 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்து இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1904 இல் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 ஆகத்து 15 அன்று பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கடினமான பொறியியல் திட்டங்களில் இது ஒன்று ஆகும். இந்த பனாமா கால்வாயின் குறுக்குவழியானது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே பயணம் செய்யும் கப்பல்களுக்கான நேரத்தைக் குறைத்தது மட்டுமல்லாது, டிராகன் நீரிணை அல்லது மிரெல்லன் ஸ்ட்ரெய்ட் வழியாக தென்னமெரிக்காவின் தென்முனையில் உள்ள அபாயகரமான கேப் ஹார்ன் பாதை ஆகியவற்றை கப்பல்கள் கடந்து செல்லும் பயணத்தை தவிர்த்தன. + +பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. கால்வாய் கட்டுமாணக் காலத்தில் கால்வாயைச் சுற்றியுள்ள பகுதிகளை கொலம்பியா, பிரான்ஸ், பின்னர் அமெரிக்கா ஆகியவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இந்நிலையில் பனாமாவின் அரசாங்கத்தால் 1999 இல் இக்கால்வாய் கையகப்படுத்தப்பட்டது. இப்போது அரசுக்கு சொந்தமான பனாமா கால்வாய் ஆணையத்தால் இது நிர்வகிக்கப்பட்���ு இயக்கப்படுகிறது. + +கால்வாய் 1914 ல் திறக்கப்படும்போது சுமார் 1,000 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து 2008 ல் 14,702 கப்பல்களாக உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு வரை 815.000க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக கடந்துள்ளன. பனாமா கால்வாய் வழியாக கப்பல்கள் செல்ல ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பனாமா கால்வாயை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் குறிப்பிடுகிறது. + +நீளம்: 59 மைல்கள் + +ஆழம்: 41 - 45 அடிகள் + +அகலம் 500 - 1000 அடிகள்(கால்வாயின் மிக குறுகிய அடிப்பகுதி அகலம் 300 அடிகள்) + +இந்த கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கிறது , எனவே எல்லா இடங்களிலும் ஒரே அகலம் , ஆழம் இல்லை. + +பனாமா கால்வாய் ஒரு கட்டத்தில், 9 ° N ஒரு அட்சரேகையில் உள்ளது. அதன் தாழ்ந்த பகுதிகள் வட அமெரிக்க கண்டத்தில் தாழ்நிலை புள்ளிகளாகும். கால்வாய்,பொதுவாக இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கடப்பதிள்லை. இது அட்லாண்டிக் பகுதியில் இருந்து Gatún ஏரியின் பரந்த பகுதியில் ஒரு புள்ளியில் நுழைவாயிலில் காடுன்(Gatún) பூட்டுகளில் இருந்து தென்கிழக்கில் திரும்பி கிழக்கு நோக்கி பனாமா கடலில்னை அடையும் வரை சென்று தெற்கு நோக்கி முடிவடைகிறது.பசிபிக் பகுதியில் பால்போ(BALBOA) அருகே அதன் முனை பெருங்குடல் அருகே 40 கி.மீ. (25 மைல்) கிழக்கே உள்ளது.கால்வாய்க்கு இணையாக பனாமா கால்வாய் ரயில்வே மற்றும் பாய்ட்-ரூஸ்வெல்ட் நெடுஞ்சாலை செல்கிறது. + +பசிபிக் கடலில் இருந்து அட்லாண்டிக் கடலை கடந்து, கப்பல்கள் 11 கிமீ தொலைவில் காடுன்(Gatún) பூட்டுகளை அடைகிறது. கடலில் இருந்து கால்வாயில் மூன்று தொடர் பூட்டுகள் மூலம் காடுன்(Gatún) ஏரிக்கு கப்பல்கள் 26 மீட்டர் (85 அடி) தூக்கப்படுகிறது. + +இந்த கால்வாயில் பல செயற்கை ஏரிகள், பல மேம்பட்ட மற்றும் செயற்கை கால்வாய்கள் மற்றும் மூன்று பூட்டுப்பெட்டிகள் உள்ளன.Alajuela ஏரி என்ற கூடுதல் செயற்கை ஏரி, (மேடன் ஏரி அமெரிக்க காலத்தில் அறியப்படுகிறது), கால்வாயின் நீர்த்தேக்கமாக செயல்படுகிறது. அட்லாண்டிக் இருந்து பசிபிக் நோக்கி கால்வாய் மூலம் ஒரு கப்பல் கடந்து செல்லும் வரைபடம் +காடுன்(Gatún) பூட்டுகள் என்ற நீண்ட பூட்டுகள் 1.9 கிமீ (1.2 மைல்) தூரத்தில் மூன்று கட்டமாக, கடல் மட்டத்திலிருந்து சுமார் 26.5 மீ (87 அடி), Gatun ஏரி நிலைக்கு கப்பல்கள் உயர்த்தப்படுகிறது. +இரண்டு கட்ட மிராப்லோர்ஷ்(Miraflores) பூட்டுகளில் நடுப்பகுதியில் மணிக்கு 16.5 மீ (54 அடி) உயர்த்தப்படுகிறது. + +தற்போது கால்வாயின் கப்பல் போக்குவரத்து கையாளும் திறன் மிகவும் அதிகரித்துள்ளது.1934 ல் கால்வாயின் அதிகபட்ச திறன் ஆண்டு ஒன்றுக்கு 80 மில்லியன் டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேலே குறிப்பிட்டபடி, 2009 ல் கால்வாய் போக்குவரத்து கப்பல் 299,1 மில்லியன் டன்களை எட்டியது. +கால்வாய் நீர்மட்டத்தை உயர்த்த மற்றும் குறைக்க பயன்படும் நீர் பூட்டுகள் Gatun ஏரியின் ஒவ்வொரு தொகுப்பில் இருந்தும் புவியீர்ப்பு விசை மூலம் செயல்படுகிறது. +தற்போதைய பூட்டுதல் அமைப்பில் சாத்தியமான செயல்கள் மூலம் திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. + +இந்த முன்னேற்றங்கள் மூலம் 280-90 மில்லியன் PCUMS (2008) இருந்து 330-40 PCUMS (2012) வரை திறன் அதிகரிக்கும். + +கால்வாயில் ஐந்து சுங்கசாவடிகள் பனாமா கால்வாய் ஆணையம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.இது கப்பல் வகை, அளவு, மற்றும் சரக்கு வகை அடிப்படையில் வரிவசூல் செய்யப்படுகிறது. + +கொள்கலன் கப்பல்களுக்கு இருபது அடிக்கு சமமான அலகுகள் எண்ணிக்கையில் அல்லது கப்பல் திறன் வெளிப்படுத்தப்படும் TEUs பற்றிய மதிப்பீடு. ஒரு TEU என்பது 2.44x8.5 அடி பரப்பும் 6.1 மீ (20 அடி) ஆழமும் கொண்ட கொள்கலன் அளவி உள்ளது. மே 1, 2009 இந்த எண்ணிக்கை TEU ஒன்றுக்கு அமெரிக்க $ 72.00 ஆகும். ஒரு Panamax கொள்கலன் கப்பல் 4,400 TEU வரை செல்லும்.கட்டண எண்ணிக்கை பயணிகள் கப்பல்கள் மற்றும் சரக்கு சுமந்து செல்லும் கொள்கலன் கப்பல்களுக்கு வெவ்வேறாக கணக்கிடப்படும். மே 1, 2009 பயணிகள் கப்பல்களுக்கான நிலைப்படுத்தும் விகிதம் TEU ஒன்றுக்கு அமெரிக்க $ 57.60 ஆகும். +பயணிகள் கப்பல்கள் என பிரபலமாக அறியப்படும் கப்பல்கள் 30,000 டன்கள் (பிசி / UMS)க்கு அதிகமானது. 2007 ல் இருந்து இந்த சுங்கவரிகள் கட்டணம் அதிகரித்துள்ளதால் கப்பல்களில் கட்டணம் அதிகரித்துள்ளது. 30,000 டன்களுக்கு குறைவாக அல்லது பயணிகள் 33 சதவீதற்க்கு குறைவாக உள்ள பயணிகள் கப்பல்களில் ஒவ்வொரு டன் அட்டவணை படி கட்டணம் விதிக்கப்படும். + +2008 நிதியாண்டில், இந்த எண்ணிக்கை அடுத்த 1 முதல் 10,000 டன்க்கு ஐந்து டன் $ 3.90 அமெரிக்க டாலர், அடுத்த 10,000 டன்க்கு ஐந்து டன்க்கு $ 3.19 அமெரிக்க டாலர், அதற்க்கு மேல் டன் ஒன்றுக்கு 3,82 அமெரிக்க டாலர் ஆக உள்ளது டன், மற்றும் குறைந்த எண்ணிக்கையில் கொள்கலன் சரக்கு கப்பல்களுக்கு டன் ஒன்றுக்கு $ 3.76 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது. +கடந்த நூறு ஆண்டுகளில், பனாமா கால்வாய் ஆணையம் "பனாமா கால்வாய் கௌரவப் பைலட்டுகள்" என்று சிலரை நியமித்துள்ளது. இவர்களில் மிக அணைமையில் கமோடோர் ரொனால்ட் வார்விக், RMS ராணி எலிசபெத் 2 மற்றும் RMS ராணி மேரி 2 கப்பல்களின் முன்னாள் தலைவரான மாஸ்டரான கன்னார்ட் லைனர்ஸ், இவர் இக் கால்வாயை 50 க்கும் மேற்பட்ட முறை கடந்து சென்றவர், மற்றும் கேப்டன் ரஃபேல் மினோடோரோ போன்றோராவர். + + + + + +டோவர் நீரிணை + +டோவர் நீரிணை ஆங்கிலக் கால்வாயின் குறுகலான பகுதியில் அமைந்துள்ள நீரிணையாகும். பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள இந்நீரிணை ஆங்கிலக் கால்வாயையும் வடகடலையும் இணைக்கிறது. அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் வட கடல், பால்டிக் கடலுக்குமிடையிலான பெருமளவு கடற்போக்குவரத்து இந்த நீரிணையினூடாகவே நடைபெறுகிறது. தினமும் ஏறத்தாழ 400 வர்த்தகக் கடற்கலன்கள் இந்நீரிணையைப் பயன்படுத்துகின்றன. 1990கள் வரை இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையிலான போக்குவரத்து இந்நீரிணையைக் கடந்தே பெரும்பாலும் அமைந்தது. இப்பொழுது இந்நீரிணைக்கு 45 மீ கீழே செல்லும் சுரங்கப்பாதை இந்நாடுகளை இணைக்கிறது. + + + + +மலாக்கா நீரிணை + +மலாக்கா நீரிணை (, , , , )மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவுக்குமிடையில் உள்ள 805 கி.மீ நீளமான நீரிணையாகும். உலகின் மிக முக்கிய கப்பற்பாதையாக உள்ள இந்த நீரிணையின் முக்கியத்துவம் சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் ஆகியவற்றுக்கு ஒப்பானது. இந்த நீரிணை பசுபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் 50,000 கடற்கலங்கள் இந்நீரிணையில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்நீரிணையில் கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மலேசியாவின் மலாக்கா மாகாணத்தின் பெயரை இந்நீரிணை பெற்றுள்ளது. இந்நீரிணை இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கிறது. + + + + +மேர்க்குரித் திட்ட���் + +மேர்க்குரித் திட்டம் ("Project Mercury") என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளித் திட்டமாகும். இத்திட்டம் 1959 இல் ஆரம்பித்து 1963 வரை தொடர்ந்தது. "மேர்க்குரி-அட்லஸ் 6" என்ற விண்கலம் பெப்ரவரி 20, 1962 இல் விண்ணுக்கு முதன் முதலில் அமெரிக்காவின் மனிதனைக் கொண்டு சென்றது. + +மேர்க்குரித் திட்டத்தின் மொத்தச் செலவு $1.5 பில்லியன் ஆகும். + +இத்திட்டம் மொத்தம் 20 தானியங்கிகளைக் கொண்டு சென்றது. இவற்றில் சிலவே வெற்றிகரமானதாக இருந்தன. இவற்றில் பின்வரும் 4 பயணங்களில் மனிதரல்லாத விலங்குகள் கொண்டு செல்லப்பட்டன. + + + + + + + +அ. மருதகாசி + +மருதகாசி (பெப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். + +திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள். + +மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார். + +1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். "பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ…" என்று தொடங்கும் அந��த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும். + +அதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. + +அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார். + +தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் "மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே" என்ற பாடலை எழுதினார். + +இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம். + +மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார். + + + + + + + + + +பாஸ் நீரிணை + +பாஸ் நீரிணை ("Bass Strait") தாஸ்மானியாவை அவுஸ்ரேலியப் பெருநிலப்பரப்பின் தெற்குப் பகுதியை (குறிப்பாக விக்டோரியா மாநிலத்தை) பிரிக்கும் கடல் நீரிணையாகும். + +இந்நீரிணையை 1797 இல் முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜோர்ஜ் பாஸ் என்பவர். இவரது நினைவாக நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் ஜோன் ஹண்டர் இந்நீரிணைக்குப் இப்பெயரைச் சூட்டினார். + +இந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கிமீ அகலமானது. பொதுவாக 50 மீட்டர் ஆழமானது. இங்குள்ள கிங் தீவு, பிளிண்டர்ஸ் தீவு போன்றவற்றில் மனித குடியேற்றங்கள் இடம்பெற்றன. இந்நீரிணைப் பகுதியில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நீரிணைக்குக் குறுக்காகப் பயணிக்க இலகுவான முறை வான்வழிப் போக்குவரத்தாகும். + +தாஸ்மானியாவின் ஏனைய நீர் நிலைகளைப் போலவே பாஸ் நீரிணையின் குறைந்த ஆழம் காரணமாக கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனால் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பல கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்நீரிணையில் கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டில் டீல் தீவில் கலங்கரை விளக்கம் ஒன்று நிறுவப்பட்டது. பின்னர் 1859 இலும், 1861 இல் கிங் தீவிலும் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டன. + +இந்நீரிணையில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு + + + + +பெரிங் நீரிணை + +[[Image:dateliner cam.jpg|thumb|200px|right|பெரிங் நீரிணையை காட்டும் வலைப்படக்கருவி +[[Image:US NOAA nautical chart of Bering Strait.png|right|thumb|200px|பெரிங் நீரிணையின் கடலோடிகளுக்குரிய அட்டவனை]] + +பெரிங் நீரிணை [[ஆசியா]]வின் [[இரசியா]]வுக்கும் [[வட அமெரிக்கா]]வின் [[அலாஸ்கா]]வுக்கும் இடையிலுள்ள நீரிணையாகும். வட துருவத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீரீணை ஏறத்தாழ 92 கி.மீ அகலமானது. இதன் சராசரி ஆழம் 30 முதல் 50 மீ ஆகும். இந்நீரிணையை செமியோன் டெஸ்னெவ் 1648 இல் கடந்தார். ஆயினும் [[1728]] இல் இந்நீரிணையைக் கடந்த பெரிங் என்பவரது பெயரே இந்நீரிணைக்குச் சூட்டப்பட்டது. முற்காலத்தில் இந்நீரிணைக்குக் குறுக்காக நிலத்தொடர்பு அல்லது [[பனி]] உறைந்திருந்ததால் மனிதரும் மிருகங்களும் கடக்கக் கூடியதாக இருந்ததாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதுவே [[பெரிங் பாலம்]] என்றழைக்கப்படுகிறது. இந்நீரிணைக்குக் குறுக்காக பாலம் அல்லது நிலக்கீழ் சுரங்கம் அமைப்பதற்கான யோசனைகள் உள்ளன. +[[Image:Diomede Islands Bering Sea Jul 2006.jpg|thumb|300px|right|சிறிய டயமிட் தீவு (அமெரிக்கா. இடது) மற்றும் பெரிய டயமிட் தீவு (இரஷ்யா, வலது)]] + + +[[பகுப்பு:நீரிணைகள்]] + + + +மகெல்லன் நீரிணை + +மகெல்லன் நீரிணை தென்னமெரிக்காவின் சிலி பெருநிலப்பரப்புக்குத் தெற்கில் அமைந்துள்ள நீரிணையாகும். பசுபிக் பெருங்கடலுக்கும் அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள முக்கியமான இயற்கை நீரிணை இதுவாகும். இதன் ஆகக் குறைந்த அகலம் 4 கி.மீ ஆகும். இந்தக் குறுகிய அகலம் மற்றும் ஆபத்தான காலநிலை காரணமாக பயணிப்பதற்குச் சிக்கலான ந��ரிணையாக உள்ளது. போர்த்துக்கேய நடுகாண் பயணியான பேர்டினன் மகெல்லன் 1520 இல் இந்நீரிணையில் பயணித்த முதல் ஐரோப்பியரானார். 1914 இல் பனாமாக் கால்வாய் வெட்டப்படும்வரை பசுபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையிலானபிரதான பாதையாக இந்நீரிணையே இருந்தது. + + + + +பளிங்கு அரண்மனை + +பளிங்கு அரண்மனை ("The Crystal Palace") என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய ஒரு கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும். உலகெங்கணும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர். ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி (564 மீ) நீளமும் 110 அடி (34 மீ) உயரமும், உள்ளுயரம் 408 அடியும் (124 மீ) கொண்டது. + +கண்காட்சிக்குப் பின்னர் இம்மாளிகை இலண்டனில் உள்ள "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு முதல் 1936 நவம்பர் 30 இல் இம்மாளிகை தீயில் எரிந்து சாம்பலாகும் வரை இவ்விடத்திலேயே இருந்தது. + +பளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர். 900,000 சதுர அடி (84,000 மீ²) கண்ணாடி பயன்படுத்தப்பட்டது. + +கண்காட்சி ஆறு மாதங்கள் வரை இடம்பெற்றது. கண்காட்சியின் முடிவில் நாடாளுமன்ற எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இம்மாளிகையை "சிடென்ஹாம் ஹில்" என்ற இடத்துக்கு மாற்றும் முடிவு நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளில் இடம் மாற்றப்பட்டது. விக்டோரியா மகாராணி மீண்டும் இதனைப் புதிய இடத்தில் 1854 ம் ஆண்டில் திறந்து வைத்தார். புதிய இடத்தில் இது ஒரு நிரந்தர கண்காட்சிக்கூடமாக மாற்றப்பட்டது. இம்மாளிகையை ஆரம்ப இடத்தில் கட்டுவதற்கு £150,000 செலவு ஏற்பட்டது. ஆனால் இதனை இடமாற்றுவதற்கு மட்டும் £1,300,000 செலவு செய்யப்பட்டது. + +1936 நவம்பர் 30 இல் இவ்வரண்மனைக்கு முடிவு வந்தது. சில மணி நேரங்களில் இவ்வரண்மனை நெரிப்பில் எரிந்து சாம்பலானது. இம்மாளிகை முறையாகக் காப்புறுதி செய்யப்படாததால் இதன் மீளமைப்புக்கான செலவைப் பெற முடியவில்லை. + +இரண்டு பாரிய தண்ணீர்த் தாங்கிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது நாசி செருமனியரினால் இலண்டன் இலகுவாக அடையாளங் காணப்படும் என்ற காரணத்தினால் இந்த இரு தாங்கிகளும் அழிக்கப்பட்டன. + + + + + +உதுமானியப் பேரரசு + +உதுமானியப் பேரரசு (ஒத்தமான் பேரரசு, "Ottoman Empire", 1299–1922, துருக்கி: "Osmanlı Devleti" 'உஸ்மான்லி தவ்லத்தி' அல்லது "Osmanlı İmparatorluğu") என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். + +இது "துருக்கியப் பேரரசு" எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே என்பவரின் தலைமையின் கீழ் வடமேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் முஹம்மதால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒத்தமான் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது. + +இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ஆம் – 17ஆம் நூற்றாண்டுகளில்) இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது. + +உதுமானிய துருக்கிய மொழியில் பேரரசு என்பது தவ்லத் ஏ ஆலிய்யிஏ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه) அல்லது உஸ்மான்லி தவ்லத்தீ (عثمانلى دولتى) என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.நவீன துருக்கி மொழியில் இது 'Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்திய பதிவுகளில் இது "ஒத்தமான்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரட்டையாக எழுதும் +இம்முறை 1920-1923 காலப்பகுதயில்,அங்காரா நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் அன்றிலிருந்து துருக்கி(Turkey) என்ற தனித்த சொல் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. + +துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழ்ந்த அனத்தோலியா பகுதி ஒரு சீரற்ற சுதந்திரப் பிரதேசமாகப் பிரிந்ததுடன் பல துருக்கிய மாநிலங்கள் கா���ி குடியரசுகள் (Ghazi Emirates) என அழைக்கப்பட்டன. இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால் (1258 –1326) நிர்வகிக்கப்பட்டது. உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒத்மான்ன் என்ற பெயர் பெறப்பட்டு பின்னர் அது ஒத்தமான் என அறியப்பட்டது. + +முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார். + +முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஃபல்கேன் வழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன் உர்ஹான் 1324இல் பூர்சா நகரைக் கைப்பற்றியதுடன் அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வடமேற்கு அனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசிடம் (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. + +1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் சிலுவைப்படை எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. + +ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கம் கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் நோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. + +இரண்டாம் முராத் என்பவரின் மகனான இரண்டாம் முகம்மத் ஆடசிப் பிரதேசத்தையும் இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன் 29 மே 1453 அன்று கான்ஸ்டண்டினோப்பிள் நகரைக் கைப்பற்றினார். உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி கிறிஸ்தவ தேவாலயங்களை அவற்றின் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு இரண்டாம் முகம்மத் அனுமதி வழங்கினார். ஏனெனில் ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கும் இறுதி பைசாந்திய இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். + +15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசு ஒரு விரிவடை���ும் காலத்தினுள் நுழைந்தது. இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன் ஆடசிப் பொறுப்புத் திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் வந்தது. உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகள் வழியாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது. + +சுல்தான் முதலாம் சலீம் (1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இஸ்மாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச் செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார். முதலாம் சலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன் கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலைநிறுத்தினார். உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித் தன்மை போர்த்துக்கேய பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் துவங்கியது. +முதலாம் சுலைமான்(1520-1566) 1521இல் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினார், ஹங்கேரி பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டன. 1526இல் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றி பெற்ற பின்னர் இன்றைய ஹங்கேரி (மேற்குப் பகுதி தவிர்ந்த) ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது. + +முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பேரரசின் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர் என்றாகி மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டதுடன் பேரரசின் சக்தி வாய்ந்த கடற்படை ஒன்று மத்திய தரைக்கடலின் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. + +1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக ஸ்டீபன் லீ கூறுகிறார். இடையிடையே சில காலங்களில் மீண்டு வருவதும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகக் கடுமையான நிலையை அடைந்தது. பல வரலாற்றாளர்கள் இக்கூற்றை மறுத்தாலும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற போர்க் கருவிகள்' பற்றாத படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" ஆகிய காரணிகள் ஒத்தமான் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர். தலைமையின் தோல்வியே முதன்மையான காரணம் எனக் கூறும் லீ 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள் இருவரைத் தவிர மற்றோர் ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர் என்கிறார் இவர். மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர். உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாமல் இருந்தன. இறுதியாக உதுமானியப் பொருளாதாரம் சீர் குலைந்தது. போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் போன்றவை பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன. + +டான்சிமாத் காலத்தில் (1839–1876) அரசு மேற்கொண்ட தொடர் சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன. வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது. ஓரினச் சேர்க்கை குற்றமற்றதாக ஆக்கப்பட்டது. சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின. கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது. + +சாமுவெல் மோர்சுக்கு தந்தி கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து முதல் தந்தி தடம் இஸ்த்தான்புல் (கான்ஸ்டான்டினோப்பிள்) - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது. இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு சார்ந்த அரசு இரண்டு ஆண்டுகளே நீடித்தது. + +உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முஸ்லிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர். இது முஸ்லிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது. 1861இல் உதுமானியக் கிறிஸ்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன. இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர். 1911இல் இஸ்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில் 528 கிரேக்க இனத்தவர்களுக்கு உரிமையாக இருந்தன. + +பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே கிரீமியப் போர் (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகஸ்டு 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளை வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெற்றது. மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர். காக்கேசியப் போர்களின் இறுதியில் 90 விழுக்காடு காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால் காக்கேசியாவின் வடக்கில் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமானியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர். சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக பதினைந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். + +1876இல் பல்கேரிய எழுச்சியின்போது 100000 பேர் கொல்லப்பட்ட பாசி-பசூக். 1877-78இல் நடந்த ரஷ்ய-துருக்கிப் போரில் ரஷ்யா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது. பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. ரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் மொண்டெனேகுரோவும் விடுதலை பெற்றன. 1878இல் ஆஸ்திரியா-ஹங்கேரி தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொஸ்னிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன. + +பெர்லின் பேராயத்தில் பால்கன் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட பிரித்தானியப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரைலி உதவினார். இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு சைப்ரஸ் வழங்கப்பட்டது. உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாகக் கூறி 1882இல் எகிப்திற்கு படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது. + +1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 3 லட்சம் வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். + +இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் ஃபால்கனிய முஸ்லிம்கள் ஃபால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். 1923இல் அனடோலியா மற்றும் கிழக்கு திராஸ் ஆகியவை மட்டுமே முஸ்லிம் பகுதிகளாக இருந்��ன. + +சனஜூலை 3, 1908இல் இளந்துருக்கியர் புரட்சிக்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்பு சார்ந்த அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் திருத்தி அமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது. + +குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே ஆஸ்திரியா-ஹங்கேரி 1908இல் பொஸ்னியா எர்செகோவினாவைக் கைப்பற்றியது. ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா லிபியாவை இழந்தது. ஃபால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தன. இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திராஸ் தவிர பால்கன் நிலப்பகுதிகளை இழந்தது உதுமானியப் பேரரசு. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகரமான எடிர்னேயையும் இழந்தது. மதம் சார்ந்த கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 4 லட்சம் முஸ்லிம்கள் தற்காலத் துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் வாந்திபேதி கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர். 1821 முதல் 1922 வரை ஃபால்கன் நாடுகளில் நடைபெற்ற முஸ்லிம் இன அழிப்பில் பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பலர் வெளியேற்றப்பட்டனர். 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் ஒன்றரை கோடி மக்கள் தற்கால துருக்கியிலும் 45 லட்சம் மக்கள் சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானிலும் 25 லட்சம் மக்கள் ஈராக்கிலுமாக வாழ்ந்திருந்தனர். இது தவிர 55 லட்சம் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தனர். + +நவம்பர் 1914இல் மைய சக்திகள் தரப்பில் உதுமானியப் பேரரசு முதல் உலகப் போரில் பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியப் பேரரசுக்கு கலிப்பொலி போர்த்தொடர் போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் ரஷ்யாவிற்கு எதிராக காக்கஸ் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவி���்லை. + +1915இல் ரஷ்யப் படைகள் பழைய ஆர்மீனியாவினுள் நுழைந்தன. இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது. இது ஆர்மீனிய இனப்படுகொலை என அறியப்படுகின்றது. கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின. + +1916இல் ஏற்பட்ட அரபுப் புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 90 லட்சம் துருக்கிய-முஸ்லிம் அகதிகள் காக்கேசியா, கிரீமியா, பால்கன் குடா, நடுநிலக் கடல் தீவுகளிலிருந்து அனத்தோலியாவுக்கும் கிழக்கு திராசிற்கும் இடம் பெயர்ந்தனர். + +கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்றுகையும் இஸ்மீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. முஸ்தபா கமால் தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் முகம்மது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் துருக்கி குடியரசை நிறுவியது. மார்ச் 3, 1924இல் கலீஃபகமும் கலைக்கப்பட்டது. + + + + + +1853 + +1853 (MDCCCLIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + +பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு + +பிறிமோர்சுக்கி ("Primorsky Krai", ) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் ஆகும். "பிறிமோர்சுக்கி" என்பது உருசிய மொழியின்படி "கடல்சார்ந்த" என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. ஆகவே, இப்பிரதேசம் "கடல்சார்ந்த மாநிலம்" அல்லது "கடல்சார்ந்த நிலப்பகுதி" என்பதை குறிக்கின்றது. இது உருசிய நகரான விலாடிவொஸ்டொக் என்பதன் நிர்வாக மையமாகும். இப்பிரதேசத்தின் சனத்தொகை 1,956,497 (2010 கணக்கெடுப்பு) ஆகும். + + + + +ஓமான் குடா + +ஓமான் குடா, அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் ஒரு நீரிணை (உண்மையான குடா அன்று) ஆகும். ஓமான் குடா, ஹோர்முஸ் நீரிணையை இணைத்த பிறகு பாரசீகக் குடாவுக்கு இட்டுச் செல்கிறது. ஓமான் குடா, பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன. + + + + +இன்சமாம் உல் ஹக் + +இன்சமாம் உல் ஹக்(Inzamam-ul-Haq (;Punjabi, ; (பி. மார்ச் 3, 1970) முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்கு தலைவராக இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள பாக்கித்தானிய வீரர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒட்டுமொத்தமாக 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள வீரர்களில் ஒருவர் ஆவார். + +1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் மூலம் பரவலாக இவர் அறியப்படுகிறார். பத்தாண்டு காலங்களாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அணியின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். 2007 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்ட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தான் வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜாவெட் மியன்டாட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை இழந்தார். ஓய்வு பெற்ற பிறகு "இந்தியன் கிரிக்கெட் லீக்" தொடரின் முதல்பருவத்தில் "ஐதராபாத் ஹீரோஸ்" அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் இரண்டாவது ஆண்டில் "லாஹூர் பாட்ஷா'ஸ்" அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் முழுவதும் பாக்கித்தான் அணி வீரர்களே இருந்தனர். + +ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் அணி வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இவரை பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் நியமனம் செய்தது. + +1991 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 20 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 60 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான துவக்கத்தை அளித்தார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் நூறினைப் பதிவு செய்தார். நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 326 ஓட்டங்கள் எடுத்தார். + +இன்சமாம் உல் ஹக்கை ,அன்றைய துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்த இம்ரான் கான் 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கு தேர்வு செய்தபோது இவரின் பெயர் பலரும் அறியாததாக இருந்தது. இவர் பல வரிசைகளில் விளையாடினாலும் ஒரு சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஓக்லாந்தில் ,நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான அரையிறுதியில் இவர் எழுச்சி கண்டார். நியுசிலாந்து அணி 262 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. சிறப்பாக விளையாடிய இவர் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு உதவினார். இந்தப் போட்டியானது சிறப்பான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. + +மார்ச் 27, 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் எடுத்து முதன்முதலாக தொடரை வெல்வதற்கு உதவினார். + +Dazzling, delicate; a reassuring presence – Cricinfo + + + +சுலோவீனியா + +சுலோவீனியா (Slovenia) கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த ஒரு நாடாகும். இதன் தலைநகரம் லியுப்லியானா. முன்னாள் யுகோஸ்லாவியாவின் உறுப்பினர் நாடாகும். + + + + +கல்வெட்டு + +பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. + +கல்வெட்டுக்கள், பெரும்பாலும் பொது���க்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுக்களைக் காணலாம். கல்வெட்டுப் பொறிக்கும் வழக்கம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. + +கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை ஆதலால், மிகப் பழங்கால வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளுக்கான நம்பகமான சான்றுகளாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுக்கள் ஒரு மொழியில் மட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் ஒரே செய்தியைக் குறிக்கும்படி அமைந்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் வழக்கொழிந்து மறக்கப்பட்டுவிட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. பண்டை எகிப்திய மொழி இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. + +தமிழ் நாட்டின் மிகப் பழைய கல்வெட்டுக்கள் நடுகற்களில் வெட்டப்பட்டவை ஆகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்திகளும் இதற்குச் சான்றாக அமைகின்றன. தொல்காப்பியத்தில், போர்க்களத்திலே வீரச்சாவு அடைந்தோருக்குக் கல்லெடுத்தலும், அக்கல்லில் அவர்தம் வீரச் செயல்களைப் பொறித்தலும் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. + +இவ்வாறாக நடுகற்களில் தோன்றிய கல்வெட்டுக்கள் பல்லவர் காலத்தில் வேறு தேவைகளுக்கும் பயன்படத்தக்கதாக வளர்ச்சியடைந்தன. பல்லவர்களின் தொடக்ககாலக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் சமஸ்கிருதத்திலும் கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல், பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழிலும் பொறிக்கப்பட்டன. + +இவர்களுக்குப் பின்னர் சோழ மன்னரும், பாண்டியரும் கல்வெட்டுக்களைப் பொறிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். இதனால் கல்வெட்டுக்கள் பெரிதும் வளர்ச்சியுற்றன. இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்க���ின் மூலமே தமிழ் நாட்டின் இடைக்கால வரலாற்றின் பெரும்பகுதியை அறிந்து கொள்ள முடிந்தது. + + + + + +சுமையுந்து + +சுமையுந்து என்பது சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டியாகும். பல்வேறு வகையான சுமையுந்து வண்டிகள் உள்ளன. மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற விலங்குகளால் சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளும் சுமையுந்து வகையை சார்ந்தவை. + +இந்தியாவில் சுமையுந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில: + + + + +தக்காளி + +தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் "சோலானம் லைக்கோபெர்சிக்கம்" (Solanum lycopersicum) அல்லது இணையாக "லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம்" (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது. + +ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான "டொமாட்ல்" (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும். + +மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர். + +நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கல் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும்.பின் நிழலான இடத��தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும். + + + + +உருளைக் கிழங்கு + +உருளைக் கிழங்கு () சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. ஆண்டீய மலைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன.. + +முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய "ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு" (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்ததுசோவியத் ஒன்றியம் பிரிந்தபின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. + +உருளையானது பல்லாண்டு வாழ்கின்ற (Perennial) பூண்டுத் (Herbaceous) தாவரமாகும். இவற்றின் தரைகீழ் கிளைகளின் பருத்த நுனிப்பகுதி கிழங்கு ஆகும். + +சிலவகை உருளைக் கிழங்குகள் அதன் தங்க, நீல, சிவப்பு நிறச் சாயங்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றன. +இது உருளைக்கிழங்குப் பயிரில் 5 முதல் 10 சதம் வரை சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றும். இப்புழு கிழங்குகளில் துளைபோட்டு மாவுப் பகுதியை உண்கிற���ு. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் கிழங்கு அழுகிவிடும். + + +கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். + +உருளைக்கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைக் கடைபிடிக்கவேண்டும். + +உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர் வகைகளனா கோதுமை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்ற பயிர்களைப் பயிரிடவேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான முட்டைக்கோசு, பூக்கோசு, கேரட், முள்ளங்கி, அவரை வகைகள் முதலிய பயிர்களைப் பயிரிட்டு பயிர் சுழற்சி செய்யவேண்டும். +உருளைக்கிழங்கில் முன் இலைக்கருகல், பின் இலைக்கருகல், பழுப்பு நிற அழுகல், உருளைக்கிழங்கு வைரஸ் மற்றும் இலைச்சுருள் வைரஸ் போன்றவை முக்கியமான நோய்களாகும். + +புதிய கிழங்குகளை நடவு செய்யும் போது நன்கு ஆழமாக நடுதல் வேண்டும். மேலும் தாய் அந்துப்பூச்சிகளை இனக்கவர்ச்சி கொண்டு கவர்ந்து அழிக்கலாம். இலையில் ஏற்படும் சேதாரங்களைத் தடுக்க வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் (அ) குயினால்பாஸ் 2 மில்லியினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். நடவுக்கு பயன்படுத்தப்படும் விதைக் கிழங்கினைக குயினால்பாஸ் ஒரு கிலோவினை 100 கிலோ கிழங்கு என்ற அளவில் கலந்து நடவு செய்யவேண்டும். + +கிழங்கை நடவு செய்த பின் மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குப் பின் இந்நோய் தொன்றுகிறது. இலைகளில் வெளிர் பழுப்பு நிறமடைய புள்ளிகள் தோன்றும். பின்பு இப்புள்ளிகளில் வட்டவடிவமான வளையங்கள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த பயிர்ச்சுழற்சி செய்வதோடு தோட்டத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நோய் தாக்கி காய்ந்து போன இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். நடவு செய்த 45,68 மற்றும் 75 வது நாட்களில் மான்கோசெப் அல்லது குளோரோதலோனின் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். + +உருளைக்கிழங்கில் தோன்றக்கூடிய அனைத்து நோய்களிலும் மிக முக்கியமானது பின் இலைக்கருகல் நோயாகும். சிறிய பழுப்பு நிறமுடைய நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றுவது இந்நோயின் முதல் அறிகுறியாகும். மழையும் வெயிலிலும் மாறிமாறி இருக்கும்போது இப்புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி, இலைகள் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பூசணம் கிழங்குகளையும் தாக்குகின்றது. நோய் தாக்கப்பட்ட கிழங்கின் மூலம் இந்நோய் பரவுகிறது. எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்காத கிழங்கை நடவுசெய்யவேண்டும். தரையுடன் மூடிய படர் கிளைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கி கீழே விழுந்த இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். முன் இலைக்கருகலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மான்கோசெப் அல்லது குளோரோதலோனில் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தல் நீரில் கலந்து நடவு செய்த 45,68 மற்றும் 75வது நாட்களில் தெளிக்கவேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்பத் திற்ன கொண்ட குப்ரிஜோதி, குப்ரிமலர் மற்றும் குப்ரிதங்கம் ஆகிய இரகங்களைப் பயிரிடவேண்டும். + +இளஞ்செடிகள் உடனடியாக வாடுவதும், இலைகள் பழுப்புநிறமடைந்து தளர்ச்சியுற்றுத் தொங்குவதும் இந்நோயின் அறிகுறிகளாகும். நோய் முற்றிய நிலையில் செடிகள் வாடிக் காய்ந்துவிடும். தண்டின் உட்பகுதியில் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட கிழங்கை வெட்டிப் பார்க்கும் போது கிழங்கின் ஓரத்தில் பழுப்பு நிறமுடைய வளையம் காணப்படும். இதனைத் தொடர்ந்து இக்கிழங்குகள் அழுகிவிடும். வடிகால் வசதி இல்லாத இடங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பயிர்சுழற்சியைக் கடைப்பிடிக்கவேண்டும். நோய் தாக்காத கிழங்கை நடவு செய்ய வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழித்துவிடவேண்டும். + +மொசைக் என்பது ஒரு வகையான வைரஸ் நோய் ஆகும். இந்நோயின் அறிகுறிகளாக இலையில் பச்சையத்திற்கு இடையே மஞ்சள் நிறக் கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத் திட்டுக்கள் காணப்படும். இதில் பாதிக்கப்பட்ட செடி மற்ற செடிகளுடன் உரசும் போது உருளைக்கிழங்கு வைரஸ் அசுவினி மூலம் பரவுகிறது. + +இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டுவிடும். பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி வெளரி நிறமாகத் தோன்றும். இந்த வைரசும் அசுவினி மூலம் பரவுகிறத���. + +வைரஸ் நோய்களை கட்டுப்படுத்த வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்கு எடுத்து அதை நடவு செய்யவேண்டும். தேவையறிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அசுவினியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம். + +உருளைக்கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் பூமியைத் தவிர்க்கவேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளரி மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 வரை ஒர் ஆண்டிற்கு 1200 முதல் 2000 மில்லி மீட்டர் வரை மழை பெறும் பகுதிகளில் இதனைப் பயிரிடலாம். +நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்கவேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். +எக்டருக்கு 3000-3500 கிலோ கிழங்குகள் விதைக்க வேண்டும்.உருளைக் கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பு முக்கியமாக கவனிக்கவேண்டும். புதிய கிழங்குகள் முளைக்காது, ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன்-டை-சல்பைடு என்னும் மருந்தை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும். கிழங்கு களை குவியலாக்கி குவியலின் மேல் ஒரு அகன்ற தட்டில் மருந்தை ஊற்றி பாலித்தீன் தாளினால் மூடிவிடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்தவேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொறுத்து செடிக்கு செடி 15-20 செ.மீ இடைவெளியில் முளைவந்த கிழங்குகளை நடவேண்டும். +நடவுக்குப் பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். + +ஒரு எக்டருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன் உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் எக்டருக்கு 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும். பிறகு விதைத்த 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவே���்டும். + +எக்டருக்கு 120 நாட்களில் 15-20 டன் கிழங்குகள். மகசூல் கிடைக்கும். +குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர் மற்றும் குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ். + + + + +வெண்டி + +வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும். வெண்டி (வெண்டை) "மல்லோ" என்றழைக்கப்படும் "மால்வேசியே" (மால்வேசியே) குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும் (தாவரமாகும்). இதன் அறிவியற் பெயர் "அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ்" (Abelmoschus esculentus) என்பதாகும். அமெரிக்காவில் இதனை "ஓக்ரா" என்று அழைக்கின்றனர். + +இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும். 10 - 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை. 5 - 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 - 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும். + +பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டையின் ஊட்டச்சத்துக்களின் விவரம் : + +எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியே இத்தாவரத்தின் தாயகம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார் போன்ற பல வெண்டை ரகங்கள் உள்ளன. + + + + +சடையப்ப வள்ளல் + +சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." + +சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். +இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. +ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது. + + + + +ஏற்காடு + +ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. + +19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காப்பிச்செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. + +சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். ஏற்காடு ஏரி நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறத���. + +மிகக் குறைந்த செலவில் பயணம் மேற்கொண்டு நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம் என்பது சுற்றுலா பயணிகளின் எண்ணம். + +குளிர்காலம் செப்டம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதங்களில் முடிவுக்கு வரும். குளிர்காலத்தில், மலைகள் மூடுபனி படர்ந்திருக்கும். குளிர்காலத்தில் வெப்பநிலை 12°C முதல் 24°C மற்றும் கோடைகாலத்தில் 16°C முதல் 30°C இருக்கும். சராசரி மழை அளவு 1500-2000 மிமீ ஆகும். + +முக்கிய வருமான ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன. 1820 ஆம் ஆண்டு திரு MD காக்பர்ன் என்பவரால் காபி செடி ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு Grange எஸ்டேட்டில் நடவு செய்யபட்டது. பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி,வாழை,ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன. + +தேசிய தாவரவியல் பூங்கா ஏற்காட்டில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவு 18.4 ஹெக்டேர் ஆகும். இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பூச்சி தின்னும் பிட்சர் தாவரம் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது. இன்னும் ஏற்காட்டின் பல பகுதிகளில் மலைக்காடுகள், விலங்கினங்கள் உள்ளன. + +காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப் பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன. + +- ஏற்காடு, ஐரோப்பியர்களின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக, 1862 ஆம் ஆண்டில், ஆங்கில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த, "டொக்ளசு ஆமில்டன்" (Dougles Hamilton), சென்னை மாகாண அரசிடம்(Madras government) பரிந்துரைத்தார். அப்பரிந்துரையில், ஐரோப்பியர்களின் வருகையால், ஏற்காடு என்ற மலை வாழிடம், கோடை வாழிடமாக வளர்ந்துள்ளதை விளக்கியிருந்தார். அதன்பிறகு, 1863 ஆம் ஆண்டு, சேர்வராயன் மலைப் பகுதியில் இருந்த 80 சுற்றுலா இடங்களை, ஆங்கில அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பால், உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு அதிகமாக வரத் தொடங்கினர். + +மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த ப���ங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும். + +ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம். வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள். + +ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது. + +இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள் இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. + +மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது. + +இது ஏற்காட்டில் இருந்து12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. + +இது ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. + +இது ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது. + + ஏற்காட்டில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,000 பேர் வாழ்கிறார்கள் . பழங்குடியின மக்கள் 24.449 வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்கள். + +கோடை விழா மே மாதத்தில் 7நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி மற்றும் படகு போட்டி நடைபெறும். + +சேலத்தில் இருந்து 36 கி.மீ ஏற்காடு உள்ளது. சேலத்தில் இருந்து நாள் முழுவதும் ஏற்காட்டிற்கு பேருந்து வசதி உள்ளது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல இரண்டு சாலைகள் உள்ளன. + +1) சேலம் - கோரிமேடு - அடிவாரம் – ஏற்காடு (36 கி.மீ). + +2) சேலம் - அயோத்தியப்பட்டினம் - குப்பனூர் - கொட்டசேடு – ஏற்காடு (46 கி.மீ). + + + + + +கத்தரி + +கத்தரி () சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் "சொலனும் மெலோங்கெனா" (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த "சொலானனேசியே" (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள். + +தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் அருகே "சிம்ரன் கத்தரிக்காய்" எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன. + +நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும். + + + + + +நைராத்மியை + +நைராத்மியை ஒரு பெண் புத்தர் ஆவார். இவரை சூன்யத்தன்மையின் தேவி எனவும் புத்கல-நைராத்மியை எனவும் அழைப்பர். பௌத்த சித்தாந்தத்தின் படி ஒருவர் தான் தனித்து இருப்பதாக நினைப்பது மாயை, உண்மையில் அனைவரும் அனைத்துடனும் இணைந்துள்ளனர். இந்த தத்துவத்தின் உருவகமாகவே நைராத்மியை திகழ்கிறார். + +இவருடைய உடல் நீற நிலத்துடன் திகழ்கிறது. நீலம் என்பது எல்லையற்ற வானையும் அதைப்போன்ற இவருடைய உணர்வையும் குறிக்கிறது. விண்வெளியைப் போல இவர் தடையின்றி +இந்த பிரபஞ்சத்தில் உலா வருகிறார். ஏனெனில் இவர் 'தான்' என்ற உணர்வை தாண்டிய நிலையில் உள்ளார். இவர் கண்கள் அறிவாற்றலால் மிளிர்கின்றன. மேலும், தன்னுடைய வாளை மேள்நோக்கி வைத்து இருப்பது, தீய சிந்தனைகளை எழுந்த உடனே அழிப்பதற்கு. தன்னுடைய பிச்சை பாத்திரத்தில் மாயைகளை எரித்து அதன் சுய உருவுக்கு திருப்புகிறார். + + + + + +சீதாதபத்திரை + +சீதாதபத்திரை வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். மேலும் இவர் 'வெண்குடையின் தேவி' என போற்றப்படுகிறார். அசாதாராண ஆபத்துகளில் இருந்து காப்பாற்றக்கூடியவராக இவர் கருதப்படுகிறார். + +சீதாதபத்திரை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலான பெண் போதிசத்துவர் ஆவார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் இணையாக கருதப்படுகிறார். அவலோகிதேஷ்வரரைப் போலவே இவரும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கை-கால் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இல்லையெனில் எளிய வடிவில் ஒரு அழகான பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் வெண்குடையுடன் தொடர்பு படுத்தப்படுகிறார். + + + + +பூசணி + +பூசணி, (, பேரினம் : "Cucurbita spp.") சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா ஆகும். + +பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று. + + + + + + + +கேரட் + +கேரட் அல்லது செம்முள்ளங்கி என்பது ஒரு வேர்க்காய்கறி ஆகும். இது பொதுவாக ஆர���்சு நிறத்தில் இருக்கும். எனினும் ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களிலும் பயிரிடும் வகைகள் உள்ளன. இவற்றின் தாயகம் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகும். முதலில் பெர்சியாவில் தோன்றிய இந்தத் தாவரம், இலைகள் மற்றும் விதைகளுக்காக பயிரிடப்பட்டது. இந்தத் தாவரத்தின் ஆணிவேர் மற்றும் இலைகள் ஆகியவை உண்ணக்கூடிய பகுதிகளாக உள்ளன. + +கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. + + + + +திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்) + +திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. தமிழ் மொழிக்கு வெளிநாட்டவர் ஆற்றிய பணிகள் பற்றிப் பேசும்போது முதன்மையாகப் பேசப்படும் நூல்களுள் இதுவும் ஒன்று. திராவிட மொழிகளின் தனித்துவத்துக்கான சான்றுகளை ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக நிறுவியமையே இந் நூலின் முக்கியமான சாதனை எனலாம். + +இந்நூலை எழுதிய கால்டுவெல் தனது நூலின் தொடக்கத்தில் இதன் நோக்கப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். +அத்துடன் மேலும் விளக்குகையில்; +என்று தமிழ் மொழி பற்றிய தகவல்கள் இந்நூலில் இருக்கும் என்பதைக் கால்டுவெல் கோடி காட்டுகிறார். இவ்வாறு ஒப்பீட்டு மொழியியல் நூலொன்றிற்கான பொதுவான நோக்கங்களையே ஆசிரியர் எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கும் மேலாகத் திராவிட மொழிகள் தொடர்பாக அன்றைய இந்தியாவிலும், அதற்கு வெளியிலும் நிலவிய பிழையான கருத்துக்களை மாற்றவும் இந்நூல் உதவியது. +தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகள் உட்பட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த ஒரு கால கட்டத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவி அவற்றுக்குரிய தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய பெருமையும் இந்நூலைச் சாரும். தமிழ், சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் என்பது மட்டுமன்றி இம் மொழிகளிலிருந்து சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூட சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்றும் இந் நூல் எடுத்துக் காட்டுகின்றது. + + + + +பயனியர் திட்டம் + +பயனியர் திட்டம் ("Pioneer program") ஐக்கிய அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் "பயனியர் 10", மற்றும் "பயனியர் 11" ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை சூரிய குடும்பத்தின் வெளியே சென்று வெளிக் கோள்களை ஆராய்ந்தன. இரண்டும் ஒரு பொற் தகடு (Pioneer plaque) ஒன்றைக் கொண்டு சென்றன. இத்தகட்டில் ஓர் ஆணினதும் ஒரு பெண்ணினதும் வரைபடங்களும் விண்கலங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய சில வரைபுகளையும் கொண்டிருந்தது. வெளி உலகைச் சேர்ந்தவர்கள் யாரேனும் எப்போதாவது ஒரு நாள் இத்தகட்டை காண்பார்கள். + +ஆரம்பகாலப் பயனியர் விண்கலங்கள் பொதுவாக சந்திரனை ஆராயவே முயற்சித்தன. + + +[[வியாழன் (கோள்)|வியாழன்]] மற்றும் [[சனி (கோள்)|சனி]] ஆகிய கோள்களை இவை ஆராய்ந்தன. + + + + +[[பகுப்பு:அமெரிக்க விண்வெளித் திட்டங்கள்]] + + + +லெனினிசம் + +லெனினிசம் ("Leninism") என்பது போல்ஷெவிக் புரட்சித் தலைவரான விளாடிமிர் லெனின் மற்றும் அவரது கொள்கைகளைக் பின்பற்றுபவர்களினாலும் தரப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளாகும். கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளான மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. இது சோவியத் கம்யூனிசத்துக்கு வழிவகுத்தது. + +லெனினின் காலத்தில் "லெனினிசம்" என்ற கருத்து தெரிந்திருக்கவில்லை. லெனின் தனது கடைசிக் காலங்களில் சுகவீனமுற்று சோவியத் அரசில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தாத காலத்திலேயே லெனினிசம் பற்றிய கொள்கைகள் மற்றவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக "அனைத்துலகக் கம்யூனிஸ்டு"களின் மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் "கிரிகோரி சினோவியெவ்" என்பவரே "லெனினிசம்" என்ற கருத்தைப் பரப்பினார். + +சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதில் இருந்து லெனினிசம் என்பது மார்க்சியத்தின் ஒரு முக்கிய கிளாஇயாகப் பரவியிருந்தது. லெனினிசத்திலிருந்து நேரடியாகத் தோன்றியவைகளே ஸ்டாலினின் மார்க்சிசம்-லெனினிசம், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் ட்ரொட்ஸ்கியிசம் ஆகியன. லெனினின் மறைவிற்குப் பின்னர் சோவியத்தின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களாக ஸ்டாலினும் ட்ரொட்ஸ்கியும் விளங்கினார்கள். + +லெனினின் நூல்கள்: + +வேறு இணைப்புகள்: + + + + +சாறு + +சாறு "(Juice)" என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான திரவத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அல்லது பிழிந்து எடுப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இது இறைச்சி மற்றும் கடல் உணவு போன்ற மற்ற உயிரியல் உணவு ஆதாரங்களின் நறுஞ்சுவையூட்டப்பட்ட சுவைமிக்க திரவங்களையும் சாறு எனக் குறிக்கலாம். சாறு பொதுவாக பானமாக உட்கொள்ளப்படுகிறது. அல்லது உணவுகள் அல்லது மிருதுவாக்கிகள் போன்ற மற்ற பானங்களில் ஒரு மூலப்பொருளாகவோ அல்லது சுவையாகவோ சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தாமல் வெப்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை, குறிப்பாக திரவ நிலையில் உள்ள பொருட்களை பதப்படுத்தப் பயன்படும் பாச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாறு ஒரு பிரபலமான பானமாக தேர்வு பெற்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) 2012 ஆம் ஆண்டில் சிட்ரசு வகைப் பழ சாறுகள் உலகெங்கிலும் மொத்தமாக 12,840,318 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது . உலக நாடுகளில் கொலம்பியாவும் நியுசிலாந்தும் அதிக அளவில் பழச்சாறுகளைப் பயன்படுத்துவதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் வருவாய்க்குத் தகுந்தபடி ஒவ்வொரு நாட்டிலும் பழச்சாற்றின் பயன்பாட்டு சராசரி அதிகரிக்கின்றது அமெரிக்க உணவுச் சந்தையில் பழங்களைக் காட்டிலும் பழச்சாறு அதிக அளவு வருவாயை அளிப்பதாகக் கருதப்படுகிறது . + +"சாறு" என்ற பொருள் கொண்ட "juice" என்ற சொல் 1300 களில் பழைய பிரெஞ்சு மொழியில் இருந்து வருகிறது; "jus, juis, jouis என்ற பழைய பிரெஞ்சு சொற்கள் "juice" என்ற சொல் பிறப்புக்கு அடிப்படையாகும். இதன் பொருள் மூலிகைகளைக் கொதிக்க வைத்து பெறப்பட்ட திரவம் என்பதாகும். இலத்தீன். உருசிய மற்றும் கிரேக்க சொற்களிலிருந்து இப்பிரெஞ்சு சொற்கள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது."பழச்சாறுகள் அல்லது காய்கறிகளின் நீர்ப் பகுதி என்று பொருள்படும் "சாறு" என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது . 19 ஆம் நூற்றாண்டு முதல், "சாறு" என்பது மது, இறைச்சியிலிருந்து பெறப்படும் சாறு போன்ற அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது. + +பழச்சாற்றை வீடுகளிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கின்றனர். ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை காரட், தக்காளி போன்ற பலவற்றில் இருந்து சாறு பிழியப்படுகிறது. இப்பொழுது பல பழச்சாறுகளை ஒன்றாக கலக்கும் முறை பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது. ஆனால் பழங்களை உண்ணும் அளவு, பழச்சாறு அருந்துவதால் பயன் கிடைக்குமென்று கூற முடியாது. + +வெப்பம் அல்லது கரைப்பான்களின் பயன்பாட்டின்றி இயந்திர ரீதியாக அழுத்துவதன் மூலமோ அல்லது மெதுவாக சில நேரங்களில் குளிர்ச்சியான நிலையில் அழுத்தம் கொடுத்து பிழிவது மூலம் பழம் அல்லது காய்கறிகளின் சதைப்பாகத்தில் இருந்து சாறு தயாரிக்கப்படுகிறது . ஆரஞ்சு மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆரஞ்சு சாற்றையும், தக்காளிப் பழத்தைப் பிழிந்து தயாரிக்கப்படும் தக்காளிச் சாற்றையும் சாறுகளுக்கு உதாரணமாகக் கூறலாம். வீடுகளில் பல பழ வகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து பல்வேறு வகையான சாறுகள் கை அல்லது மின்சாரத்தினால் இயங்கும் கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பல வணிகரீதியான சாறுகள் தயாரிக்கையில் பழம், காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து அல்லது கூழ் போன்றவை வடிகட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. ஆனால் சதைக்கூழ் அகற்றப்படாமல் தயாரிக்கப்படும் புதிய ஆரஞ்சு பழச்சாறு ஒரு பிரபலமான பானம் ஆகும். உணவுக்கூட்டுப் பொருள்களாக சர்க்கரை மற்றும் நறுமணமூட்டிகள் சேர்க்கப்பட்டும் சாறுகள் தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாச்சர்முறை, அடர்த்தியாக்கல், ஆவியாக்கல் , உறைய வைத்தல், உலர்த்தி மாவாக்குதல் உள்ளிட்ட பல முறைகள் சாறுகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. + +சாறுகள் தயாரிப்பில் செயலாக்க முறைகள் பலவிதமாக மாறுபடும் என்றாலும், சாறுகள் பொதுவாகப் பின் வரும் செயலாக்க முறைகளில் தயாரிக்கப்படுகின்றன:. + + + + + + +பழங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கழுவித் தூய்மை���்படுத்தப்பட்ட இரண்டு தானியங்கி முறைகளில் ஒன்றின் மூலம் சாறு பிரித்தெடுக்கப்படுகிறது. கூர்மையான உலோகக் குழாய்களுடன் கூடிய கீழே உள்ள கிண்ணத்தின் மீது பொருத்தப்பட்ட மற்றொரு கிண்ணம் ஒன்றாகக் கூடி பழங்களில் மேல் தோலை அகற்றுகின்றன. இவை உலோக குழாயினூடாக பழத்தின் சதையைச் செலுத்தவும் செய்கின்றன. பழத்தின் சாறு குழாயில் சிறிய துளைகள் மூலம் வெளியேறுகிறது. உறிக்கப்பட்ட மேல் தோலை தொடர்ந்து பிரிக்கப்பட்டு எண்ணெயை நீக்குவதற்காக வேறுவகையில் பயன்படுத்தலாம், இது முதலாவது தானியக்க முறையாகும். துளைச்சீராக்கியில் செலுத்தப்படுவதற்கு முன்பு பழங்களை இரண்டு பாதிகளாக வெட்டிப் பயன்படுத்துவது இரண்டாவது முறையாகும் . + +சாறு வடிகட்டப்பட்ட பிறகு அது நீராவி உட்செலுத்திகளில் செலுத்தப்பட்டு செறிவூட்டப்படுகிறது. இதனால் சாற்றின் தர மதிப்பீட்டில் காரணி அளவு 5 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டு அதன் காலாவதி தேதியை அதிகரிக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் ஏதுவாகிறது. சாற்றிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு அச்சாற்றை வெற்றிடத்தில் சூடுபடுத்தி பின்னர் 13 டிகிரி செல்சியசு வெப்பநிலை வரை குளிர்வித்து செறிவூட்டுகிறார்கள். சுமார் மூன்றில் இரண்டு பங்கு நீர் இவ்வாறாக நீக்கப்படுகிறது . + +நீர் நீக்கம் செய்யப்பட்ட சாறு பின்னர் மறுசீரமைக்கப்படுகிறது, செறிவு நீருடன் மீண்டும் நீர் மற்றும் பிற காரணிகள் சேர்க்கப்பட்டு இழந்த வாசனை போன்ற இதர அம்சங்கள் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. சாறுகள் செறிவூட்டப்பட்ட நிலையிலும்கூட விற்கப்படுகின்றன. நுகர்வோர் செறிவூட்டப்பட்ட சாற்றுடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து தயாரித்துக் கொள்கின்றனர் . + +சாறுகள் பாசுடர்முறை பதனம் செய்யப்பட்ட பின்னர் பெரும்பாலும் சூடாக இருக்கும்போதே கொள்கலன்களில் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு சூடாக ஊற்றி நிரப்பப்படும் சாறு எவ்வளவு விரைவில் குளிர்விக்க முடியுமோ அவ்வளவு விரைவாக குளிர்விக்கப்படுகிறது. சாறுகளை கொள்கலன்களில் நிரப்புவதற்கு வெப்பத்தை நிலைநிறுத்தக் கூடிய நிபந்தனைகள் முக்கியமல்ல. ஐதரசன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் கொள்கலன்களின் நுண்ணுயிர் நீக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன . தாவரங்களைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 1 ம��தல் 20 டன்கள் சாறுகள் உருவாக்கப்படுகின்றன . + +பொதுவாக எல்லா சாறுகளினையும் பிழிந்த உடனே அருந்திவிட வேண்டும். இல்லையெனில் இவை புளிப்புத்தன்மை கொண்டு பிறகு கெட்டுவிடும். இவற்றினை டின் குப்பிகளில் அடைத்தோ, பாலுடன் கலந்தோ, திடமாக்கியோ உரைய வைத்தோ, ஆவியாக்கியோ பல நாட்கள் வரை பாதுகாக்கலாம். +பழச்சாறுகளை பாசுடர் முறையில் சுத்திகரிப்பதற்கு மாற்றாக உயர் தீவிர மின் புலங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. வெப்பமூட்டுதல் சில சமயங்களில் தரமான நுண்ணுயிர் நீக்க விளைபொருள்களைத் தயாரிப்பதில் தோல்வியில் முடிகிறது . இருப்பினும் அதி தீவிர மின்புலங்களைப் பழச்சாறு பதப்படுத்தலுக்குப் பயன்படுத்துவது தேக்க நிலைப்பு உணவு மற்றும் பாதுகாப்பு உணவுகளை வழங்க வழிகோலுகிறது. மேலும் இம் மின்துண்டல் முறையினால் கூடுதலாக உணவுச் சத்து மதிப்பும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக அறியப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு முறையில் இம்மின்முறை வெப்பமில்லா செயல்முறை வகையாகவும் கருதப்படுகிறது . +தூண்டு மின் புலங்கள் நுண்ணுயிர்களைச் செயலிழக்கச் செய்ய குறைந்த அளவு மின்துடிப்புகளையே பயன்படுத்துகின்றன. கூடுதலாக மின்துடிப்பு பயன்பாடு உணவின் தரத்தில் கெடுதல் விளைவிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது . வெப்ப சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் சாறுகளின் அசல் வண்ணம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றைச் சிறப்பாகப் பராமரிப்பதோடு நுண்ணுயிர்களைக் கொல்லவும் மின்தூண்டல் முறை சுத்திகரிப்பு பயன்படுகிறது. திரவப் பழச்சாறுகளுக்கு இடையில் இரண்டு மின்முனைகள் வைக்கப்பட்டு அவற்றின் வழியாக உயர் மின்னழுத்த துடிப்புகளை சில மைக்ரோ விநாடிகள் முதல் சில மில்லி விநாடிகள் வரை செலுத்துவது இம்மின் துடிப்பு செயல்முறையின் வழிமுறையாகும். செலுத்தப்படும் மின்துடிப்பின் அளவு 10 முதல் 80 கிலோவோல்ட்டு / செமீ வலிமை கொண்டதாகும். + +சாறுகளைப் பதப்படுத்தும் செயல்முறையின் நேரம், துல்லியமான துடிப்புகளின் எண்ணிக்கையை துடிப்பு செலுத்தப்படும் நேரத்தால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. மின் துடிப்புகளின் உயர் மின்னழுத்தம் உருவாக்கும் மின்புலம், சாறுகளில் இருக்கும் நுண்ணுயிர்களின் செயலிழப்புக்கு காரணமாகிறது. வெப்பச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெப்பத்தைவிட குறைவான வெப்பமே இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. உயர் மின்னழுத்த சிகிச்சைக்குப் பிறகு, சாறு சுத்தமாகவும், குளிரூட்டப்பட்டதாகவும் உள்ளது. இச்செயல்முறையினால் சாற்றில் பல்வேறு வகையான அயனிகள் உருவாவதால் இவற்றினால் மின் பரிமாற்றமும் சாத்தியமாகிறது. சாறுகளின் வழியாக மின் புலத்தைச் செலுத்தும் போது சாற்றில் காணப்படும் மின்சுமையேற்ற அயனிகள் வழியாக மின்பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் நுண்ணுயிர்கள் செயல்நீக்கம் செயல்பட்டு பாதுகாப்பான, தரமானம் மேம்படுத்தப்பட்ட காலக் கெடுவுடன் கூடிய புத்துணர்வுச் சாறுகள் தயாரிக்கப்படுகின்றன. + +ஐக்கிய இராச்சியத்தில் வகுக்கப்பட்டுள்ள பழச் சாறுகள் மற்றும் பழப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலும், இசுக்காட்லாந்தின் 2003 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்திலும் பழச் சாறுகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் பழத்தின் பெயரைத் தொடர்ந்து சாறு என்ற சொல் இடம்பெற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவ்விதியைப் பின்பற்றினால் மட்டுமே அச்சாறு 100% பழச்சாறாகக் கருதப்படுகிறது. இருப்பினும், செறிவு மாற்றியமைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் சாறும் சாறு என்றே அழைக்கப்படுகிறது. பழச்சாறு என விவரிக்கப்படும் ஒரு சாறு பழத்தைப் பொறுத்து 25% முதல் 50% வரை அப்பழத்தின் சாற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதே ஒப்புமையுடன் கூடிய விதிகள் பல்வேறு நாடுகளிலும் அம்மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. + +சாறு அருந்தும் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் சுகாதார நலன்களுக்காகப் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஆரஞ்சு சாறு வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் தாவர வேதிப்பொருட்கள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் பல பழச்சாறுகள் கோகோ கோலாவை விட 50% சர்க்கரைச் சத்தை அதிகமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக திராட்சை சாற்றில் 50% அதிகமான பிரக்டோசு சர்க்கரை உள்ளது. + +புற்று நோயை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவற்று உள்ளன. +சில பழச்சாறுகளில் அத்தியாவசியமான அவற்றிலுள்ள நார்ச்சத்துகள் வடிகட்டப்பட்டு விடுகின்றன. சில பழச்சாறுகளில் உணவுக் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சில சாறுகள் அருந்துவதால் நீரிழிவு நோய் அதிக��ிப்புக்கும் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கின்றன. + + + + + + +மைத்திரேயர் + +மைத்திரேயர் என்பவர் உலகத்தில் அவதரிக்க போகின்ற வருங்கால புத்தர் ஆவார். இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையாத காரணத்தினால் மைத்திரேயர் போதிசத்துவர் என அழைக்கப்படுகிறார். + +சாக்கியமுனி புத்தருக்கு அடுத்து, இவ்வுலகில் மைத்திரேயர் அவதரித்து பூரண போதி நிலையை அடைந்து உண்மையான தர்மத்தை உபதேசிப்பாரென பௌத்தர்கள் நம்புகின்றனர். தேரவாத, மகாயான, வஜ்ரயான போன்ற அனைத்து பௌத்த மத பிரிவுகளும் மைத்திரேயரின் அவதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. + +மைத்ரேயவியாகரணா என்ற சமஸ்கிருத நூலில், மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. + +மைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும்பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசகுடும்பத்தினரை போல் சித்தரிக்கப்படுகிறார். + +மைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும் தியானத்தின் மூலம் அவரை தொடர்புகொள்ள இயலும் என கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார். + +பொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாக அவதரிப்பதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடைய அவதார காலத்திற்காக காத்திருப்பர். + +மைத்திரெயரின் அவதாரம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தபின் நிகழும் என கருதப்படுகிறது. மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன்பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ��வுலகில் அவதரித்த ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. + +மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ளலாம். + + +மைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை உபதேசித்து, அனைத்து உயிர்களும் நற்கதி அடைய வழிவகுப்பார். + +மைத்திரேயர் என்ற சொல் மைத்ரீ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. மைத்ரீ என்றால் அன்பு என்று பொருள் (மித்திரன் என்ற சொல்லை கவனிக்க). + +மைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன்முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூததிரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார். + +மைத்திரேயரின் தோற்றம் இந்து மதத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதை கவனிக்கலாம். எனவே சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என கருதுகின்றனர். + +சிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார். + +சரித்திரத்தில் மேலும் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக்கொண்டன, ஆனால் எவரையும் மக்களோ பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை. + + + + + + + +குளிர்களி + +குளிர்களி (ஐஸ்கிரீம்) அல்லது பனிக்கூழ் என்பது பால், கிறீம் போன்ற பாற் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ஆகியன கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும். இக்கலவை குளிரூட்டப்படும்போது பனிக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க மெதுவாகக் கலக்கப்படும். பாற்பொருட்கள் இன்றிச் சோயாப் பால் போன்றவற்றைப் பயன்படுத்தியும் குளிர்களி தயாரிக்கப்படுகிறது. குளிர்களி வனிலா, சொக்லேற், ஸ்ரோபரி போன்ற சுவைத் தன்மைகளுடன் தயாரிக்கப்படுகிறது. + + + + +புத்தத்தன்மை + +பௌத்தத்தில் புத்தத்தன்மை(சமஸ்கிருதம்:"புத்தத்துவம்", பாளி:"புத்தத்த", அல்லது (இரண்டிலும்) "புத்தபாவம்") என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையை சம்யக்சம்போதி என அழைப்பர், அதாவது பரிபூரண போதிநிலை ஆகும். இந்நிலையினை அடைந்த ஒருவரை புத்தர் என அழைப்பர். + +பாளி சூத்திர���்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே "புத்தர்கள்" என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகன் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது. மகாயான பௌத்தத்தில் புத்தர் என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த எவரையும் குறிக்கும். ஆகவே, "அருகன்களும்" ஒருவகையில் புத்தர்களாக கருதவேண்டிவந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மகாயானத்தில் முழுமையான புத்தர்களாக கருதப்படுவதில்லை. இவர்கள் நிர்வாண நிலை அடைந்த போதிலும், மற்றவர்களுக்கு போதிக்கும் திறன் இல்லாததால் இவர்களை மகாயானம் பொதுவாக புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. + +பௌத்தர்கள் கௌதம புத்தரை மட்டுமே ஒரே புத்தராகக் கருதவில்லை. பாளிச் சூத்திரங்களில் சாக்கியமுனி புத்தருக்கு முன் அவதரித்த 28 புத்தர்கள் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. மகாயான பௌத்தம் இதை இன்னும் விரிவாகி, அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் எனப் பல்வேறு புத்தர்களை தன்னுள் இணைத்துக்கொண்டது. அனைத்து பௌத்த பிரிவுகளும் மைத்திரியேரே அடுத்த புத்தர் என ஒன்று சேர்ந்து நம்புகின்றன. + +பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். + + + +சில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக ஸ்ராவபுத்தர்கள் கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் "அருகன்" என அழைக்கப்படுகின்றனர். இவர்களை அனுபுத்தர் எனவும் அழைப்பர். இவர்களே புத்தர்களின் போதனைகளால் போதிநிலை அடைந்ததினால், புத்தரின் போதனைகள் முற்றிலும் மறைந்த நிலையில் இவர்கள் தோன்ற மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களையும் போதிநிலை இட்டுச்செல்ல முடியும் + + +அனைத்து பௌத்த பிரிவினரும், புத்தர் மனதால் மிகவும் தூய்மையானவர் என கருதுகின்றனர். அவருடைய மனம் ஆசை, பகைமை, அறிவின்மை போன்றவற்றுக்கு அப்பாற்ப்பட்டது. புத்தர் சம்சாரத்திலிருந்து முற்றிலும் விடுப்பட்டவர். வாழ்க்கையின் நிலையின்மையைத் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை போதித்து மக்களுக்கு நற்கதி காட்டுபவர். + +பாளிச் சூத்திரங்களில் புத்தரின் மனித இயல்புகளே மெச்சப்படுகின்றன. புத்தர் அளவற்ற மன ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். புத்தரின் மனம் மற்றும் உடலும் கூட நிலையற்றவைதான், இருந்தாலும் புத்தர் அந்த நிலையற்ற தன்மையை புரிந்துப் கொண்டவராக உள்ளார். தர்மத்தின் மாற்றமில்லாத தன்மையை முற்றிலும் அறிந்தவராக உள்ளார். இவையே தேரவாத பௌத்தம் மற்றும் ஆதிகால பௌத்த பிரிவுகளின் கருத்துகளாகும். + +புத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளி சூத்திரங்களில் காணப்படுகிறது. + +மகாயான பௌத்ததில், புத்தர் அழிவற்றவர். தர்மகாய உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் கருதப்படுகிறார். புத்தர்களது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. + +பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை. + +மகாயான பௌத்தத்தில் புத்தரைக் கடவுளைப் போன்ற ஒரு நிலையில் கருதி அவரை வழிபடுகின்றனர். புத்தர் அனைத்தும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் மகாயான சூத்திரங்கள் புத்தரைக் குறித்துத் தெரிவிக்கின்றன. இந்தச் சித்தரிப்பு 'கடவுள்' என்ற ஒன்றை ஒத்து இருந்தாலும், வேறு சில மதங்களின் கடவுள் என்பவர் உலகத்தை படைத்து, காத்து, அழிப்பவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது. + +புத்தர்கள் சிலைகளாகவோ இல்லை ஓவியங்களாகவோ சித்தரிக்கப்படுகின்ற்னர். புத்தர்கள் கீழ்க்கண்ட நிலைகளில் காணப்படுகின்றனர். + +புத்தர்களைக் குறித்த பெரும்பாலான சித்தரிப்புகளில், அவர்களுடைய போதிநிலையினைக் குறிக்கச் சில சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும், கீழ்க்கண்ட இரு குறியீடுகளை அனைத்துச் சித்தரிப்புகளிலும் காணலாம். + + +பாளிச் சூத்திரங்களிலும் இவ்வாறாக புத்தரின் 32 குறியீடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. + +ஒவ்வொரு புத்தருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையும் ஆசனமும் இருக்கும். வஜ்ர முத்திரையை தென் - கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையாகக் காணலாம். வரத முத்திரை, அபய முத்திரை பொதுவாக அனைத்துப் புத்தர்களாலும் காட்டப்படுகிறது. சில நேரங்களில் புத்தர்களை அவர்களுடைய முத்திரையை வைத்துதான் இனம் காண்பர். + + + + + + + +அரியலூர் மாவட்டம் + +அரியலூர் மாவட்டம் சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது. + +அரியலூர் மாவட்டம் இரண்டு வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது. + +இம்மாவட்டம் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 6 ஊராட்சி ஒன்றியங்களும், 171 கிராம ஊராட்சிகளும், அரியலூர் & ஜெயங்கொண்டம் என இரண்டு நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை & உடையார்பாளையம் என இரண்டு பேரூராட்சிகளும் கொண்டது. + +இம்மாவட்டத்தில் அரியலூர், குன்னம் மற்றும் ஜெயங்கொண்டம் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.இம்மாவட்டப் பகுதிகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. + +இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. + +சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக ���ிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. + +இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 மற்றும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது. + + + + + + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 708,397 (93.84 %) ஆகவும், இசுலாமிய மக்கள்தொகை 7,942 (1.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,403 (4.95 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 104 ஆகவும், சமண சமய மக்கள்தொகை 65 ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 88 ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 853 (0.11 %) ஆகவும் உள்ளது. + +1.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவன‌ : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு. + +2.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் : அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம். + +தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடர் வண்டி மூலம் சென்று வர அரியலூர் புகைவண்டி நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது, மேலும் சில தொடர்வண்டி சந்திப்புகள் சில்லக்குடி, செந்துறை, ஒட்டக்கோவில், ஈச்சங்காடு, ஆர்.எஸ்.மாத்தூர், வெல்லூர். + + + + + +மகாசுதாமபிராப்தர் + +மகாஸ்தாமபிராப்தர்(महास्थामप्राप्त) மகாயான பௌத்தத்தில் வணங்கப்படும் போதிசத்துவர் ஆவர். இவர் அறிவாற்றலில் உருவகமாக கருதப்படுபவர். மேலும் அமிதாபர் மற்றும் அவலோகிதேஷ்வரருடன் மும்மூர்த்தியாக அவ்வப்போது சித்தரிக்கப்படு���ிறார். சீன பௌத்தத்தில் அவலோகிதேஷ்வரரைப்போலவே இவரும் பெண் வடிவத்தில் வணங்கப்படுகிறார். ஜப்பானில் வண்க்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர். + +மற்ற போதிசத்துவர்களைப்போல, மகாஸ்தாபமபபிராப்தரின வழிபாடு மக்களிடத்தில் பிரபலமடையவில்லை. சுரங்காம சூத்திரத்தில் மகாஸ்தாமபிரப்தரை குறித்து கூறப்பட்டுள்ளது. + + + + +சூரியபிரபர் + +சூர்யபிரப(सूर्यप्रभ) போதிசத்துவர் அல்லது நிக்கோ போசாட்ஸு(ஜப்பானியம்) சூரியவெளிச்சத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவராக கருதப்படுகிறார். சூரியபிரபர் அவ்வப்போது சந்திரபிரப(चंद्रप्रभ)(கக்கோ போசாட்ஸு) போதிசத்துவருடன் காட்சியளிக்கிறார். சூரியபிரப போதிசத்துவரும் சந்திரபிரப போதிசத்துவரும் பைஷஜ்யகுரு புத்தருக்கு சேவர்களாக உள்ளவர்கள் ஆவர். சூரியபிரபரின் சிலையும் சந்திரபிரப்ரின் சிலை ஓரளவுக்கு ஒத்து இருக்கும். இவர்குளைடய சிலைகளை பௌத்த ஆலயங்களில் வாயில் அருகில் காணலாம் + + + + + + + +கந்தர் (பௌத்தம்) + +கந்த(ஸ்கந்த) போதிசத்துவர் சீன பௌத்த மதத்தினரால் வணங்கப்படும் போதிசத்துவரும் பௌத்த மடாலயங்களின் பாதுகாவலரும் ஆவார். இவர் தர்மத்தையும் அதன் தொடர்புடைய அனைத்து பொருள்களையும் பாதுகாக்கின்றார். இவர் 24 பாதுகாவற்போதிசத்துவர்களுள் ஒருவர். மேலும் சதுர்மகாராஜாக்களுகடைய 32 தளபதிக்கு தலைமை தளபதியாய் இவர் விளங்குகிறார். + +பெரும்பாலான கோவில்களில், இவரது உருவம் கருவறையில் உள்ள புத்த விக்ரகத்தை நோக்கி இருக்கும். பிற ஆலயங்களில் இவர் கருவறையின் வலது புறம் காணப்படுவார். இவரது இடது புறமாக சங்கிராம போதிசத்துவரை காணலாம். சீன சூத்திரங்களில், இவரது உருவம் சூத்திரத்தில் இறுதியில் காணப்படும். புத்த போதனைகளை போற்றி பாதுகாப்பது என்ற கந்தரின் உறுதிமொழியை இது நினைவுகூறுவதாக அமைந்துள்ளது. + +பௌத்த புராணங்களின் படி, கந்தர் புத்தரின் போதனைகளின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ஒர் அரசனின் மகன் ஆவார். புத்தர் பரிநிர்வானம் அடைகையில், கந்தரை தர்மத்தை காக்கும் படி பணித்தார். அன்றிலிருந்த கந்தரின் பணி தர்மத்தை பாதுகாத்தலும், மாரனின் பிடியில் இருந்து பௌத்த சங்கத்தை காப்பாற்றுவதும் ஆகும். + +புத்தர் இறந்த சில நாட்களின், அவரது திருவுடற்பகுதிகள் அசுரர்களால் திருடப்பட்டது. கந்தர் அவரது உறுதிமொழியின் படி, அசுரர்களை வீழ்த்தி புத்தரது திருவுடற்பகுதிகளை மீட்டார். + +கந்தர் எவ்வாறு சீன போதிசத்துவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதற்கு அதிகாரப்பூர்வ கதைகள் இல்லை. கந்தர் இந்து மதக் கடவுளான முருகனின் தாக்கத்தால் பௌத்தத்தில் இவர் தோன்றியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். ஏனெனில் இருவருக்கும் கந்தர் என்பது பொதுப்பெயராக உள்ளது கவனிக்கத்தக்கது. வேறு சிலர் இவர் வஜ்ரபாணியின் அம்சமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.(இருவரும் வஜ்ராயுதம் ஏந்தி உள்ளதால்) + +கந்தர் ஒரு இளம் சீன தளபதியைப் போல் சித்தரிக்கப்படுகிறார். பெரும்பாலும் தனது வஜ்ரதண்டத்தின் மீது இவர் சாய்ந்துகொள்ளும் நிலையில் காணப்படுகிறார். கந்தரை வஜ்ரபாணியை போல் சித்தரிக்கும் வழக்கமும் உள்ளது. கந்தர் வருங்காலத்தில் புத்தர் நிலையை அடைய இருப்பதால், கந்தர் ஒரு தேவகனமாக இருப்பினும், போதிசத்துவராகவே அழைக்கப்படுகிறார். + + + + + +சொற்பொருள் வகுப்பு + +சொற்பொருள் வகுப்பு (Semantic class) என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்பைப் பொதுவாகக் கொண்ட சொற்களின் ஒரு தொகுதியைக் குறிக்கும். வெவ்வேறு சொற்பொருள் வகுப்புக்கள் ஒன்றையொன்று வெட்டக்கூடும். அதாவது அவற்றிடையே பொதுவான சொற்பொருள் இயல்புகளைக் கொண்ட சொற்தொகுதி இருக்கலாம்.எடுத்துக் காட்டாக, "பெண்" என்னும் பொருள் குறித்த சொற் தொகுதிக்கும், "இளமை" என்னும் பொருள் குறிக்கும் சொற் தொகுதிக்கும் பொதுவாகச் "சிறுமி" என்னும் பொருள் குறிக்கும் சொற்தொகுதி இருக்கும். + + + + +சொற்பொருள் இயல்பு + +சொற்பொருள் இயல்பு (semantic property) என்பது, ஒரு சொல்லின் பொருள் குறிக்கும் கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஒருவர் ஒரு சொற்றொடரை இன்னொருவருக்குக் கூறும்போது அத் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அதைக் கேட்பவருடைய மூளையில் அச் சொல் தொடர்பான பல தகவல்களாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இவையே அச் சொல்லின் சொற்பொருள் இயல்புகளாகும். +எடுத்துக் காட்டாக, "சிறுவன் பாடசாலைக்குப் போனான்." என்று சொன்னால் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அச் சொ���்றொடரிலிருந்து பல தகவல்களைப் பெறுகிறார்கள். "சிறுவன்" எனும்போது "ஆண்", "இளம் வயதினன்" போன்ற தகவல்களையும், "பாடசாலை" என்பதிலிருந்து "பாடம் சொல்லிக்கொடுக்கும் இடம்", "கட்டிடம்" போன்ற தகவல்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புரிந்து கொள்ளப்படுபவையே அச் சொற்களின் சொற்பொருள் இயல்புகள் எனப்படுகின்றன. +இச் சொற்பொருள் இயல்புகள் சொல்லொன்றின் பொருளின் பகுதிகளாக அமைகின்றன. "அப்பா, மகன், நடிகன், எருது, சேவல்" போன்ற சொற்களின் பொருள்களின் ஒரு பகுதியாக "ஆண்" என்னும் சொற்பொருள் இயல்பு உள்ளது. மேலே கூறப்பட்ட சொற்களில் "அப்பா, மகன், நடிகன்" என்பவற்றில் "மனிதன்" என்ற சொற்பொருள் இயல்பும் அடங்கியிருப்பதைக் காணலாம். + + + + + +சங்கிராமர் + +சங்கிராம(संघ्राम) போதிசத்துவர் சீன பௌத்தர்களால் போதிசத்துவராகவும் தர்மபாலகராகவும் வணங்கப்படுபவர். இவரை சீன மொழியில் குவான் யூ(Guan Yu) என அழைப்பர். வரலாற்றின் படி,குவான் யூ கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு போர்த்தளபதி ஆவார். + +பௌத்த புராணங்களின் படி, ஓர் இரவு நேரத்தில் குவான் யூவின் ஆன்மா திரிபிடாக குருவான ஸீயீ முன் தோன்றியது. தியானித்தில் இருந்த ஸீயீ குவான் யீவின் ஆன்மா இருப்பதை அறித்து கொண்டு தியானத்தில் இருந்த கலைந்தெழுந்தார். அவ்வேளையில், குவான் யீ தனக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் படி குருவிடம் கேண்டுக்கோண்டார். இதை ஏற்றுக்கொண்ட குரு அவனது ஆன்மாவுக்கு பௌத்த தர்மத்தை உபதேசித்தார். பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்ட குவான் யூ, பௌத்த தர்மத்தையும் பௌத்த மடாலாயங்களையும் பாதுகாப்பதாக உறுதி பூண்டார். அன்றிலிருந்து குவான் யூ மடாலயங்களின் பாதுகாவலர் ஆனார். + +வடமொழியில் சங்கிராம என்பது மடங்களை குறிக்கக்கூடியச்சொல். எனவே சங்கிராமம் என்பது பௌத்த மடங்களையம், கூடவே பௌத்த தர்மத்தையும் காப்பாற்றும் தேவர்களை குறிக்கிறது. காலப்போக்கில் பௌத்த மடாலயங்களில் சங்கிராம தேவர்களின் பிரதிநிதியாய் "குவான் யூ" ஆனார். இவருடைய சிலை, கந்தருக்கு அடுத்து கருவறைக்கு இடது புறமாக அமைந்திருக்கும் + + + + +சொற்பொருள் விருத்தி + +சொற்பொருளியலில் சொற்பொருள் விருத்தி (Semantic progression) என்பது, சொற்களின் பயன்பாட்டில் ��ற்படுகின்ற படிமுறை மாற்றங்களைக் குறிக்கிறது. தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள சொற்கள் பல அவற்றின் தொடக்ககாலப் பொருள்களினின்றும் வேறுபட்ட பொருள்களைக் குறித்து நிற்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சொற்பொருள் விருத்தி ஆகும். + + + + + +சொற்பொருள் மாற்றம் + +வரலாற்று மொழியியலில் சொற்பொருள் மாற்றம் என்பது ஒரு சொல் தொடர்பில் அதன் பொருள்களில் ஒன்றில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லும் பல்வேறுபட்ட விதத்தில் பொருள் குறித்து நிற்கின்றது. காலப்போக்கில் இவ்வாறான அம்சங்களைப் புதிதாகச் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும். பல சமயங்களில் இத்தகைய மாற்றங்கள் காலம் மற்றும் இட வேறுபாடுகளினால், சொற்களை முற்றிலும் வேறான பொருள் குறிப்பவையாக மாற்றி விடுகின்றன. ஒரு கருத்துருக்களுக்கான குறிப்புச்சொல் (designation) பெறப்படுவதற்கான மூன்று வழிமுறைகளில் சொற்பொருள் மாற்றமும் ஒன்று. + +1990 களில் இறுதியில் பிளாங்க் (Blank) என்பவர் சொற்பொருள் மாற்றங்களுக்கான காரணிகளைப் பட்டியலிட்டார். பின்னர் 2004 இல் இப்பட்டியலை கிர்சேகா (Grzega) என்பவர் சற்று விரிவாக்கினார். இக்காரணிகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்: + + + + + + +ஒலி மாற்றம் + +மொழியியலில், ஒலி மாற்றம் அல்லது ஒலிப்பிறழ்வு என்பது ஒரு சொல்லை ஒலிக்கும் (பலுக்கும், உச்சரிக்கும்) பொழுது சில எழுத்தொலிகள் (ஒலியன்கள்) ஒன்று வேறொன்றாக திரிபுறும், இப் பலுக்கல் சொல்லமைப்பில் தாக்கத்தை உண்டாக்கும் மொழி மாற்ற வழிமுறை ஆகும். ஒலி மாற்றம் என்பது மொழியில் உள்ள ஓர் ஒலியனை இன்னொன்றால் (இன்னொரு ஒலியனால்) மாற்றீடு செய்தல், ஓர் ஒலியன் முற்றாகவே இல்லாது போதல் (அற்றுப்போதல்), அல்லது புதிய ஒலி வந்து புகுதல், முதலான மாற்றங்களை உள்ளடக்கி இருக்கக்கூடும். ஒலி மாற்றங்கள், பிற எழுத்தொலிகளுடன் வரும் ஒலிச் சூழலினால் தீர்மானிக்கப் படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட ஒலி மாற்றம் ஒரு வரையறுக்கப்பட்ட எழுத்தொலிச் சூழலிலேயே நடைபெறுகின்றது. அதே வேளை வேறுபிற எழுத்தொலிச் சூழல்களில் அதே எழுத்தொலி மாற்றம் அடைவதில்லை. + +ஒலி மாற்றம் பொதுவாக ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே நடைபெறுவதாகக் கருதப்ப��ுகிறது. அதாவது, எங்கெங்கே அதற்குரிய சூழ்நிலைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் அதே ஒலி மாற்றம் எதிர்பார்க்கப்படலாம். சில சமயங்களில், ஒழுங்கு முறைக்கு மாறாக, ஒலி மாற்றங்கள் எவ்வித ஒழுங்கும் இன்றி ஒரு சொல்லையோ அல்லது சில சொற்களை மட்டுமோ பாதிக்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர். + +எடுத்துக்காட்டாக: + +மேற்காட்டிய எடுத்துக் காட்டிலுள்ள தொடர்பில் தொடக்க ஒலிநிலையும், முடிவு ஒலிநிலையும் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில் இடையே நிகழ்ந்த/நிகழவல்ல மாற்றங்களின் தொகுப்பாக அல்லது சுருக்க உள்ளதர்கான ஒரு குறியீடு மட்டுமே. இடைநிகழ் மாற்றங்களில் சில பின்வருமாறு அமையும்: *t முதலில் பல் உரசொலியாகிய ("த" வை ஒத்த ஒலி) ஆகவும் பின்னர் அது [f] ('வகரம்) ஆகவும் மாறியது. இம் மாற்றங்களை விரிவாகப் பின்வருமாறு காட்டலாம். + +மேற்குறிப்பிட்டக் குறியீடு கட்டுப்பாடுகள் (நிபந்தனைகள்) எதுவும் அற்ற முறையில் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும். மாற்றம் நிகழ, ஒலிச்சூழலில் கட்டுப்பாடுகள் ஏதும் இருந்தால், சூழ்நிலை பற்றியும் குறிப்பிடப்படல் வேண்டும். இது பின்வருமாறு அமையும்: + +எடுத்துக்காட்டாக: + +அதாவது b ஆனது, ஓர் உயிர் எழுத்துக்குப் பின்னும் (அடுத்தும்), அதே அல்லது வேறு ஓர் உயிரெழுத்துக்கு முன்னும் வருமாயின், v ஆக மாறும். + + + + +தாரா (பௌத்தம்) + +தாரா அல்லது ஆர்ய தாரா திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். தாரா திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் நமது நற்செயல்களின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒரு தந்திர தேவதையாக தாரா வஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார். கருணை மற்றும் சூன்யத்தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்து கொள்ள திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர். ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் தாரானி பொசாட்ஸு என அழைக்கப்படுகிறார். + +உண்மையில் "தாரா தேவி" என்பது பொதுவியல்புகளை உடைய பல போதிசத்துவர்களின் ஒரு பொதுப்பெயரே ஆகும். பௌத்தத்தில் போதிசத்துவர்கள் பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருத்தப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு இயல்புகளை இந்த பல்வேறு தாராக்கள் வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம். + +தாரா தேவின் புகழ்பெற்ற வடிவங்கள்: + + +இத்துடன் சேர்த்து 22 தாராக்கள் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படுகின்றனர். + +திபெத்திய பௌத்ததில் தாரா தேவி கருணை மற்றும் செயல்களின் போதிசத்துவராக கருதப்படுகிறார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் அம்சமாக கருதப்படுகிறார், சில கதைகளில் தாரா அவலோகிதேஷ்வரரின் கண்ணீர் துளிகளில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. + +தாரா ரட்சிப்பின் தேவியாக கருதப்படுகிறார். உயிர்களின் துன்பங்களை தீர்த்து அவர்களை சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கிறார். + +தாராவின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது, இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி போல தாரா தேவியும் இன்றளவும் இந்து மதத்தில் வணங்கப்படுகிறார். 6ஆம் நூற்றாண்டில் தாரா பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது. + +பிறகு தாரா, தந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்று, பிரசித்தியுடன் விளங்க ஆரம்பித்தார். தாராவின் வழிபாடு திபெத் மற்றும் மங்கோலியாவில் மிகவும் பரவலாக உள்ளது. + +தாரா போதிசத்துவராகத் தோன்றியது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. + +அவலோகிதேஷ்வரர் உலக மக்களின் துன்பங்களை கண்டு கண்ணீர் துளி வடிந்தது எனவும், அந்த துளியே தாரா தேவியாக உருமாறியது எனவும் பொதுவாக நம்பப்படுகிறது. + +இன்னொரு கதையில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. யேஷே தாவா என்ற இளவரசி பல கோடி வருடங்களுக்கு முன்பு இன்னொரு பிரபஞ்சத்தில் இருக்கிறார். பல கல்பங்களுக்கு அவள் அவளுடைய உலகத்தின் புத்தரான "டோன்யோ துரூபா"வுக்கு பூஜைகள் செய்கிறாள். அவளுக்கு புத்தரிடமிருந்து போதிசித்ததை குறித்து சிறப்பு நெறிமுறைகள் கிடைக்கின்றன. இதை அவள் செய்து முடித்த பின், சில துறவிகள் அவளிடத்தில் வந்து அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமெனில், அடுத்த பிறவில் ஆணாக பிறக்க சிறிது புண்யங்களை அர்ப்பணிக்குமாறு கூறுகின்றனர். இதை கேட்ட இளவரசி, ஆண் பெண் பாகுபாடு என்பது போதிநிலைக்கு கிடையாது எனக் கூறுகிறாள். மிகச்சிலரே உயிர்களுக்கு பெண் வடிவில் உதவுகின்றனர் என சோகத்துடன் தெரிவிக்கிறார். எனவே எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒரு பெண் போதிசத்துவராகவே பி���க்க வேண்டுமென உறுதிபூணுகிறார். பிறகு, ஒரு கோடிவருடங்கள் தியாயனத்தில் மூழ்குகிறார். அந்த ஒரு கோடி வருட தியானத்தின் பயனாக பல கோடி உயிர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகின்றன. இந்த நற்செயலால், அவ்வுலகத்தின் புத்தர் 'டோன்யோ துரூபா' அவள் போதிநிலை அடைந்து பல உலகங்களுக்கு தாரா தேவியாக இருப்பாள் என அவளிடத்தில் கூறுகிறார் + +கீழ்க்கண்ட மந்திரம் அனைத்து தாராக்களும் பொதுவான மந்திரமாகக் கருதப்படுகிறாது + +ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா +ॐ तारे तुत्तारे तुरे स्वाहा + +வெள்ளைத் தாரா தேவிக்கு மேற்கூறிய மந்திரத்துடன் மேலும் சில சொற்கள் இணைக்கப்படுகின்றன + +ஓம் தாரே துத்தாரே துரே மம ஆயு: புண்ய ஞான புஷ்டிம் குரு ஸ்வாஹா +ॐ तारे तुत्तारे तुरे मम आयु: पुण्य ज्ञान पुष्टिं कुरु स्वाहा + +தாராவின் பீஜாக்ஷரம் "தாம்(तां)" ஆகும் + +தமிழ்நாட்டில் 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்தது. பௌத்தம் செல்வாக்கை இழந்து மறைந்த நிலையில், பல பௌத்தக் கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றம் பெற்றன. அவ்வாறே தாரா தேவி கோவில்கள் இந்து அம்மன் கோவில்களாக உருமாற்றம் பெற்றதாக நம்பப் படுகிறது. கிராமங்களில் வணங்கப்படும் திரௌபதியம்மன் கோவில்கள், பழங்காலத்தில் தாரா தேவியை குறித்தனவாக இருக்கும் என கருதப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கூட பழங்காலத்தில் பௌத்த தாரா தேவி கோவிலாக இருந்து பின்னர் இந்து கோவிலாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என அரசு சிற்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்குக் கருவறையில் முற்காலத்தில் இருந்த புத்த விக்ரஹமும் (தற்போது அருங்காட்சியகத்தில் உள்ளது) கோவில் பிரகாரத்தில் இருக்கும் புத்த பகவான் சிலைகள் போன்றவை ஆதாரமாக கூறப்படுகின்றன. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள சில திரௌபதியம்மன் கோவில்களிலும் புத்த பகவான் சிலைகள் காணக் கிடைக்கின்றன. + + + + + + + +இ. ஜெயராஜ் + +இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்த��் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். + +யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த இலங்கைராஜா, குலமணி ஆகியோரின் மகனாக செட்டிக்குளத்தில் பிறந்த இவர், சிறுபிராயம் தந்தையின் தொழில் காரணமாக புசல்லாவை, புத்தளம் எனக் கழிந்து பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாக சொற்பொழிவுகளை ஆற்றும் இவருக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தலங்காவில் ஆலயத்தினர் "கம்பவாரிதி" என்ற பட்டத்தை வழங்கினர். இப்பொழுது இவர் "கம்பவாரிதி ஜெயராஜ்" என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் அறிவுடைய இவர் அவை பற்றி இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவை தவிர ஆண்டுதோறும் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்களையும், இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடாத்தி வருகிறார். அத்தோடு உகரம் இணைய இதழில் தொடர்ச்சியாக இலக்கியம்,அரசியல்,சமயம்,சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருவதோடு வாசகர்களின் கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் பதிலளித்து வருகிறார். + + +ஜெயராஜும் கம்பன் கழகமும் இலங்கையில் இந்துத்துவத்தைப் பரப்புகிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் ஈழத்து இடதுசாரிச் செயற்பாட்டாளர்களால் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. இலங்கை வாழ் பிராமணர்கள் அவர் இந்து மதப் பாரம்பரியத்தை மாற்றியமைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலய குடமுழுக்கு நிகழ்வைப் புறக்கணித்து இருந்தனர். + + + + + + +வேதிப் பொறியியல் + +வேதிப் பொறியியல் "(Chemical engineering)" என்பது வேதிப்பொருட்களையும் ஆற்றலையும் திறனுடன் உற்பத்தி செய்யவும், நிலை மாற்றவும், கொண்டு செல்லவும் வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் அறிவியல் (நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல்), பயன்பாட்டு கணிதவியல் மற்றும் பொருளியல் ஆகிய துறைகளின் கோட்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற ஒரு பொறியியல் துறையாகும். வேதிப்பொருள்கள், மூலப்பொருள்கள், வாழும் செல்கள், நுண்ணுயிர்கள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றை பயனுள்ள பொருள்களாகவும் உற்பத்திப் பொருட்களாகவும் மாற்றுவதற்குத் தேவையான பெரிய அளவிலான செயல்முறைகளை ஓர் இரசாயனப் பொறியியலாளர் வடிவமைக்கிறார். +பாதுகாப்பு மற்றும் அபாய மதிப்பீடு, செயல்முறை வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு, கட்டுப்பாட்டு பொறியியல், வேதிவினைப் பொறியியல், கட்டுமான விவரக்குறிப்பு மற்றும் செயல்பாட்டு அறிவுறுத்தல்கள் உட்பட திட்ட வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் பல அம்சங்களில் வேதியியல் பொறியாளர்கள் ஈடுபடுகின்றனர். + +1996 ஆம் ஆண்டு பிரித்தானிய பத்திரிகை ஒன்றில் வெளிவந்த அறிவியல் கட்டுரையின் வரலாறு என்ற கட்டுரையில் யேம்சு எஃப். டொன்னல்லி என்பவர் கந்தக அமிலத்தின் உற்பத்தியுடன் தொடர்புடைய வேதிப்பொறியியல் பற்றிய 1839 ஆம் ஆண்டு குறிப்பொன்றைக் கொடுத்துள்ளார். இருப்பினும் அதே பத்திரிகையில் சியார்ச்சு இ டேவிசு என்ற ஆங்கில ஆலோசகரருக்கு வேதிப்பொறியியல் என்ற சொல்லை உருவாக்கிய பெருமை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. வேதிப்பொறியியலுக்கான ஒரு சங்கத்தை நிறுவவும் டேவிசு முயற்சி செய்தார். ஆனால் 1881 ஆம் ஆண்டில் அச்சங்கத்திற்கு வேதியியல் தொழிற்சாலைச் சங்கம் என்று பெயரிடப்பட்டது. இச்சங்கத்தின் முதலாவது செயலாளராக டேவிசு செயற்பட்டார். அமெரிக்க அறிவியல் வரலாற்றில் இச்சொல்லின் காலம் 1890 என ஓரு கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. +1850 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் இரசாயனத் தொழிலில் இயந்திர உபகரணங்களை பயன்படுத்துவதை விவரிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வேதிப்பொறியியல் என்ற சொல் பயன்படத்தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் 1910 களில் இருந்தே வேதிப் பொறியாளர் என்ற தொழிலாளர் பெயர் பொதுப் புழக்கத்தில் இருந்தது. + +வேதிப்பொறியியல் என்பது அலகுச் செயற்பாடுகளின் வளர்ச்சியில் உருவானது என்ற கருத்து வேதிப் பொறியியல் துறை பின்பற்றும் ஓர் அடிப்படை கருத்து ஆகும்.அலகு நடவடிக்கைகள் என்ற தத்துவத்தை டேவிசு கண்டுபிடித்தார் என்பதை பெரும்பாலான ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.1887 ஆம் ஆண்டில் மான்செசுட்டர் பல்கலைக் கழகத���தின் ஒரு பிரிவான மான்செசுட்டர் தொழில்னுட்ப பள்ளியில் அலகு நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான விரிவுரையை அவர் கொடுத்தார், இது வேதிப்பொறியியல் பற்றி ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். டேவிசின் விரிவுரைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என்றி எட்வர்ட் ஆம்சுட்ராங்க் என்பவர் இலண்டன் நகரத்தில் வேதிப் பொறியியலில் ஒரு பட்டப் படிப்பை கற்பித்தார். ஆம்சுட்ராங்க்கின் இப்பட்டப் படிப்பு வெற்றி பெறவில்லை. ஏனெனில் இப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. அக்காலத்தில் வேதியியல் பட்டதாரிகளுக்கும் இயந்திரப் பொறியிலாளர்களுக்கும் மட்டுமே அதிக தெவை இருந்தது. அமெரிக்காவின் மாசாசுசெட்சு தொழினுட்ப நிறுவனம், இங்க்கிலாந்தின் மான்செசுட்டரில் உள்ள ஓவன் கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வெதிப்பொறியியல் பட்டப்படிப்பும் இக்காரணத்தினால் பாதிக்கப்பட்டது +1888 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இலூயிசு எம் நார்ட்டான் வேதிப்பொறியியலைக் கற்பிக்கத் தொடங்கினார். இவருடைய பட்டப்படிப்பு சமகாலத்திய ஆர்ம்சுட்ராங்க்கின் பட்டப்படிப்புடன் ஒத்திருந்தது. அவசியமானதாகவும் இருந்தது. இவ்விரண்டு படிப்புகளுமே வேதியியல் மற்றும் பொறியியல் பாடங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருந்தன. பொறியாளர்கள் வெறும் பொறியாளர்கள் மட்டுமே என்றும் வேதியியலர்கள் வெறும் வேதியியலர்கள் மட்டுமே என்று சமாதானப்படுத்துவது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருந்தது. வில்லியம் அல்ட்சு வாக்கர் 1905 ஆம் ஆண்டில் அலகுச் செயல்பாடுகள் பிரிவை இப்பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தினார். + +இயற்பியல், வேதியியல், கணிதம் முதலியவற்றின் கருத்துகளைப் பயன்படுத்தி, நேரடியாகப் பயன்பாடற்ற மூலப்பொருள்களையோ அல்லது மூல வேதிப்பொருள்களையோ, முடிந்த வரையில் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி, விலைமதிப்புமிக்க, பயன்படுத்தக்கூடிய பொருள்களாக உருமாற்றுவது வேதிப்பொறியியலின் மூல நோக்கமாகும். இத்தோடு புதிய உத்திகள், புதிய தொழில்நுட்பஙகள், புதிய பொருள்கள் ஆகிவற்றைக் கண்டறிவதும் இத்துறையின் நோக்கத்தினுள் அடங்கும். முன்னது தொழில்முறைச் செயல்களை சார்ந்தது. பின்னது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைச் ��ார்ந்தது. இத்துறையில் பணிபுரிவோரை வேதிப் பொறியாளர் என அழைப்பர். + +வேதிப் பொறியியல் பெரும்பாலும், பல்வேறு பொருள்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகள், மற்றும் அதன் பராமரிப்பு போன்றவற்றோடு தொடர்புடையது. இதனுள் வேதிசார் தொழிற்சாலைகள் வடிமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவையும் அடங்கும். வேதிப் பொறியியலின் இந்தப் பிரிவில் பணிபுரிபவரை செயல்முறைசார் பொறியாளர்(Process Engineer) என வேதிப்பொறியியல் துறையில் அழைப்பர். வணிகநோக்கில் ஒரு பொருளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது அந்த பொருளைச் சார்ந்த வேதிவினைகளை மட்டுமல்லாது அதன் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல், மூலப்பொருள்களின் தன்மைகள், செயல்முறையின் செயல்திறன், அதற்கான செலவுகள் எனப் பல்முனைக்கூறுகளை ஆராய வேண்டும். இந்தச் செயலே வேதியியலையும் வேதிப் பொறியியலையும் வேறுபடுத்துகிறது. முன்னது ஆய்வுக்கூடத்தில் சிறிய அளவில் நடப்பது, பின்னது வணிகநோக்கில் தொழில்முறை சார்ந்து நடைபெறுவது. + +வேதிப்பொறியியல் மிகப்பரந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. காகிதம் (தாள்) தயாரிதல், நீர் தூய்மைப்படுத்தல், பல விதமான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்தல், பீங்கான், சுட்டாங்கல் (ceramic) தொடர்பான பொருள்களைத் தயாரித்தல், பெட்ரோலியம் தொடர்பான வேதியியல் தயாரிப்புகள், உழவார வேதிப்பொருள்கள், வேதிப்பொருள் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வெடிமருந்துகள், வாசனைப் பொருள்கள் (நறுமணமிகள்), சுவைக்கூட்டும் பொருள்கள், நிறமூட்டிகள் (நிறமிகள்), மருந்துகள், பிளாஸ்டிக் தயாரித்தல் என மிகப்பல பயன்துறைகளைக் கூறலாம். + +அண்மைக்காலமாக, வேதிப் பொறியியலாளர்கள் உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் பணி புரிகின்றனர். வேதிப் பொறியியலின் தாக்கம் உயிரித்தொழில்நுட்பத்திலும் காணப்படுகிறது. வேதிப் பொறியியலைச் சார்ந்து உயிர்வேதிப் பொறியியலும் தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. + +வேதிப்பொறியியல் கீழ்க்கண்ட அடிப்படைத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது + + + + + + +ஒப்பீட்டு மொழியியல் + +ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும். இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்��ுகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். +மரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு முந்து மொழி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் மொழிக் குடும்பங்களை உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது. + +ஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் ஒலியியல் முறைமைகள், உருபனியல் முறைமைகள், தொடரியல், சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும். +நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் எடுகோள்கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த இந்திய-ஐரோப்பிய மொழிகளிலுமே காணப்படாத குரல்வளையொலிகள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற சோசுரே (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் இட்டைட்டு மொழியின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே மெய்யொலி எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது. + + + + +நிஞ்சா + +ஜப்பானிய வரலாற்றில், ���ிஞ்சா(சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். + +ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் சீனத்தாக்கத்தினால் நிஞ்சாக்களின் தோற்றம் நடந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். வரலாற்றுப்பூர்வமாக நிஞ்சாக்கள் ஜப்பானில் 14வது நூற்றாண்டில் தோன்றினர் என அறியப்படுகிறது. நிஞ்சாக்கள் ஜப்பானின் கமகுரா காலம் முதல் ஈடோ காலம் வரை செயல்பட்டனர். அவர்கள் நாசவேலை, உளவு, ஆட்கொலை போன்றவற்றை நிலப்பிரபுக்களின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. + +"நிஞ்சா" என்பது "ஷினோபி-நொ-மோனோ" என்ற ஜப்பானிய சொற்களை எழுத பயன்படுத்தப்படும் 忍者 என்ற இரண்டு கன்ஜி எழுத்துக்களின் ஓன்யோமி உச்சரிப்பாகும் (சீன உச்சரிப்பு). ஷினோபி-நோ-மோனோ என்பதே இக்கன்ஜி எழுத்துக்களின் குன்யோமி உச்சரிப்பு (உள்ளூர் உச்சரிப்பு) ஆகும். நிஞ்சுட்ஸு கலைகளை பயன்படுத்துபவர்களை நிஞ்சாக்கள் என அழைத்தனர். ஜப்பானியத்தில் ஷினோபி என்றால் களவாடுதல் என்று பொருள், மோனோ என்ற மனிதர் என பொருள் கொள்ளலாம். எனவே மறைந்திருந்து தாக்குபவர்களை ஷினோபி-நொ-மொனோ (ஜப்பானிய நொ(の)-தமிழ் 'இன்' போல. இதை ஷினோபியின் மனிதர் என்ற தமிழ்ப்படுத்தலாம். காண்க ரெக்காவின் நெருப்பு- "ரெக்கா-நொ-ஹொனோ" ஹொனோ-நெருப்பு) + +"நிஞ்சா" என்ற சொல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகே மிகவும் புகழ்பெறத் தொடங்கியது. + +நிஞ்சாக்கள் ஆயுதங்கள் தரித்த சாமுராய்களுக்கு எதிராக மறைந்து தாக்கும் திறன்களில் சிறப்புற்று விளங்கினர் என்றாலும் அவர்களுடைய பணி உளவுடன் நின்றுவிடவில்லை. இந்த மறைந்து இருந்து தாக்கும் திறனே(நிஞ்சுட்ஸு) நிஞ்சாக்களை சாமுராய்களிடமிருந்து வேறுபடுத்தியது. ஆயுதங்களேந்திய சாமுராய்களுக்கு எதிராகவே துரிதமாக தாக்கிவிட்டு மறைய வேண்டி, அவர்களுடைய குறிப்பிடத்தக்க போர்த்திறன் மற்றும் ஆயுதங்கள் வடிவைப்பு இருந்தது. + +ஒரு குழுவாக நிஞ்சாக்கள் குறித்து 15வது நூற்றாண்டு வாக்கில் போர்க்குழுக்கள் என்ற முறையில் எழுதப்பட்டது. + +இந்தக்காலக்கட்டத்தில் பல்வேறு சிறு நிலபிரபுக்களுக்க��(டைம்யோ) இடையில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன. எனவே நேரடித்தாக்குதலை விட மறைமுகத்தாக்குதல் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. சாமுராய்கள் மறைமுகத்தாக்குதல்களை இழுக்கு எனக்கருதியதால் சாமுராய்களை இவ்வித தாக்குதல்களின் ஈடுபடுத்த முடியாமல் போனது. எனவே நிலப்பிரபுக்கள் எதிரிகளின் மறைமுகத்தாக்குதலுக்கு நிஞ்சாக்களின் உதவியை நாடினர். + +நிஞ்சாக்கள் தங்களுடைய குறித்த அனைத்து விஷயங்களையும் ரகசியமாக வைத்திருந்ததால், அவர்கள் குறித்து கிடைத்த அனைத்து தகவல்களுமே அவர்களுடைய பிறர் அவர்களுடைய வெளித்தொற்றத்தை கண்டு குறிப்பிட்டதே ஆகும். எனவே நிஞ்சாக்கள் குறித்த பல விஷயங்கள் யூகங்களாகவே உள்ளன. + +நிஞ்சாக்கள் சிறு குழுக்களாக தங்களுடைய குடும்பம் மற்றும் கிரமத்தினை சுற்றி அவர்களுடைய கட்டமைப்பு இருந்தது. பிற்காலத்தில் நிஞ்சாக்களின் கட்டமைப்பு சாமுராய்களின் போர்க்கட்டமைப்புக்கு ஒத்து விளங்கியது. குறிப்பிட்ட நிஞ்சாக்கள் கிராமங்களை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்கிராமங்கிலேயே இருத்தி வைக்கப்பட்டனர். + +பெண்களும் நிஞ்சாக்களாக இருதிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களுடைய கவர்ச்சியினால் எதிரிகளிடமிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அதே சமயத்தில் உளவு பார்க்கும் பொருட்டு பணிஆட்களாகவும் அவர்கள் செயல்புரிந்திருக்கக்கூடும் . + +தற்காலத்தில் சித்தரிப்பது போல், நிஞ்சாக்கள் முற்றிலும் கருப்பு உடைகளை அணிந்திருந்தனர் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. ஒரு வேளை இரவு நேரங்களில் மட்டும் இருண்ட நிறம் கொண்ட உடைகளை அனிந்திருக்கலாம். சில நிஞ்சாக்கள் சாமுராய் போலவோ அல்லது ஒரு சாதாராண குடிமகனைப் போலவோ கூட ஆடை அணிந்து இருந்திருக்கலாம். + +நிஞ்சாக்களின் காலணிகள் ("ஜிகா-டாபி") அக்காலத்திய மற்ற ஜப்பானிய காலணிகளைப் போலவே இருந்தது. அமைதியாக இருக்கும் பொருட்டு அவை மிகவும் மிருதுவாக இருந்தன. நிஞ்சாக்கள் தங்களுடைய காலணிகளுக்கு கீழ்ப்புறம் "அஷிகோ" என்ற கூரிய முனைகளை இணைத்துக்கொண்டனர் + +நிஞ்சாக்கள் ஆட்கொலை, உளவு போன்று மறைமுகச்செயல்களிலேயே ஈடுபட்டிருந்ததால், அவர்களுடைய ஆயுதங்களும் பிற திறன்களும் அதற்கேற்ற வண்ணமே அமைந்திருந்தன. + +நிஞ்சாக்கள் பலவிதமான ஆயு���ங்கள் மற்றும் மாயத்தோற்றங்களை வெடிமருந்து மூலம் செய்தனர். எதிரிகளை திசை திருப்ப புகை குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. "ஓஸுட்ஸு" என்ற பீரங்கி எதிரிகளுக்கு எதிராக தீப்பொறிகளை ஏவும் திறன் கொண்டது. "மெட்ஸுபுஷி" என்ற சிறு குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த குண்டினுள் மண்ணும் உலோக தூளும் நிரப்பப்பட்டிருக்கும். இதை மற்றவர்களின் மீது எறிகையில் அதனுள் உள்ள தூள் வெளிப்பட்டு கண்களை குருடாக்கிவிடும். சில சமயங்களில் கண்ணி வெடிகள் கூட பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்தினை உற்பத்தி செய்யும் வெடி நிஞ்சா குழுக்களிடையே ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. + +தங்களை பின் தொடராமல் தடுக்கவும் திடைதிருப்பவும், தங்கள் கால்களில் "அஷிஅரோ" என்ற மர அட்டைகளை தங்களுடைய காலுறைகளில் கட்டுக்கொள்வர். இந்த மர அட்டைகளை விலங்கின் கால்தடம் போலவோ அல்லது குழந்தையின் கால்தடம் போலவோ அமைந்திருக்கும். எனவே அவர்களை பின் தொடர்ந்து வருவது தடுக்கப்பட்டது. + +நிஞ்சாக்கள் தங்களுடைய விரல்களில் "ஷோபோ" என்ற மோதிரங்களை அனிந்திருந்தனர். இம்மோதிரஙகளில் கீரல் கொண்ட மரத்துண்டுகள், அதைக்கொண்டு அவர்கள் எதிரிகளை தாக்கினர். இதேவிதமாக சுன்டெட்ஸு என்ற மர மோதிரத்தையும் பயன்படுத்தினர் + +நிஞ்சாக்கள் சிறப்பு குறுவாள்களை பயன்படுத்தினார். அவை நிஞ்சாக்கென் அல்லது ஷினோபிகடானா என அழைக்கப்பட்டது. நிஞ்சாக்கென் பெரும்பாலும் போர்முறை அல்லாத பயன்பாட்டிற்கே உபயோகபடுத்தப்பட்டது. "ஷிகோரோ கென்" என்ற இன்னொரு விதமான வாளை அவர்கள் கட்டிடங்களுனுள் நுழைய பயன்படுத்தினர். + + + + + + +தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் + +கல்வி, அரசாட்சி, அரச சேவைகள், நீதி நிர்வாகம் போன்ற தளங்களில் தமிழ் மொழியின் உரிமைகளை உறுதி செய்வதற்காகவும், பண்பாட்டு நோக்கில் அதீத ஆங்கில மோகத்தை கேள்விக்குட்படுத்தியும், சமய நோக்கில் சமஸ்கிரத மொழியின் மேலான்மையைக் கேள்விக்குட்படுத்தியும், தமிழ் மொழியை தற்கால சூழலுக்கேற்ப அறிவியல்-நுட்ப-பொருளாதார நோக்கில் மேம்படுத்துவதையும் நோக்காக கொண்டு பல் துறை சார் தமிழ் மொழி ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஆகும். + +இதன் முதன்மை அமைப்பாளர���கள் பற்றிய விபரம் பின்வருமாறு: + + +மேலும் பல் துறை சார் தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க செய்ற்பாடுகளுடன் இணைந்திருக்கின்றார்கள். + + +தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழ் மொழியை பேணுவதில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய இரு இயக்க முனைகளின் இன்றைய வடிவாக சிலரால் பார்க்கப்படுகின்றது. முதல் மொழிப்போர் இயக்கமாக கருதப்படும் தனித்தமிழ் இயக்கம் மணப்பிரவாள மொழி நடையை தவர்ப்பதையும், தமிழ் மொழியில் அதிகமாக காணப்பட்ட சமஸ்கிரத சொல்லாட்சியை குறைப்பதையும் நோக்காக கொண்டு செயற்பட்டது. இரண்டாவது மொழிப் போராக இந்தி தினிப்பு எதிர்ப்புப் போராட்டம் அமைந்தது. இது திராவிட இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. ஆங்கில மொழி மோகத்துக்கு எதிராக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் பெரும்பாலும் அமைகின்றன. இது மூன்றாவது மொழிப் போராக குறிக்கப்படுகின்றது. + +கனடாவில் பிரேஞ்சு மொழிப் பாதுகாப்பு இயக்கங்கள் செயற்படுகின்றன. இந்த இயக்கத்தின் செயற்பாடே கனடா இரண்டு உத்யோக பூர்வ மொழி கொண்ட நாடாக மாற வழிவகுத்தது. + + + + + +ச. இராமதாசு + +ச. இராமதாசு (ராமதாஸ், பி. யூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார். + +இவர் 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக் கவுண்டர், தாயார் நவநீத அம்மாள் ஆவார். இவரது உடன் பிறந்தோர் நான்கு பேர். ஒருவர் சகோதரி மற்றும் மூவர் சகோதரர் ஆவர். + +மருத்துவக் கல்வி கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இராமதாசு, 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார். + +1980இல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. + +இவர் சரசுவதி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவ���ுக்கு ஸ்ரீகாந்தி, மற்றும் கவிதா என இரண்டு மகளும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகனான அன்புமணியும் ஓர் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். அன்புமணி 2004 இல் இந்திய மாநிலங்களவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். தற்போது (2014-2019) தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். + + + + + +மலையாள எழுத்துமுறை + +மலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுத்தப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுக்களில் இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் வட்டெழுத்து முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை. + +திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். +இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுமுறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. + +சமஸ்கிருதத்தின் பிரச்சாரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்ச��் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளைத் தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதைய மலையாள எழுத்துமுறையினை நிறுவினார். + +மலையாள எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் மலையாள எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. மலையாளம் இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது + +மலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது. + +மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும் போதும் ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிகளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும். + +உதாரணமாக, 'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) என்றே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன. + +தமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்படாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும். + +மலையாளத்தில் எழுதப்படும் வடமொழி சொற்கள் திராவிட முறைக்கு ஏற்றவாறு உச்சரிக்கப்படுகின்றன. + +உதாரணமாக സ്വാഗതം(svāgatam) என்ற எழுதினாலும் அதை svāgadam என்றே உச்சரிக்கின்றனர். இதைபோல் பெரும்பாலான வடமொழி சொற்கள் வடமொழியின் சொற்சேர்க்கையை பின் பற்றினாலும் திராவிட முறைக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன. + +தமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுத பயன்படுத்துவது போல் மலையாளத்தில் 'சந்திரக்கலையை' குற்றியலுகரத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர். + +உதாரணமாக அது - അത്(அத்) தேக்கு - തേക്ക്(தேக்க்) கூடு - കൂട്(கூட��) + +குற்றியலுகரத்தை குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு + +அது - അതു്(அது) தேக்கு - തേക്കു്(தேக்கு) கூடு - കൂടു്(கூடு) + +எனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியவற்றின் குற்றியலுகரமாக ஒலிப்படும். இதைப்போக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளை குறிக்க சில்லெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளையே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர். + +ண் - ണ്‍ ன் - ന്‍ ர் - ര്‍ ல் - ല്‍ ள்- ള്‍ + +மலையாளத்தில் ஈழத்தமிழில் பயன்படுத்துவது போலவே சில எழுத்துப்பயன்பாடுகள் காணப்படுகின்றன. റ്റ(ற்ற) 'ட(t)'வாக ஒலிக்கப்படுகிறது. ന്‍റ(ன்ற) என்பதை nt,nd என்பது போல ஒலிக்கப்படுகிறது. Comedy, October என்பவை കോമടി(கோமடி), ഒക്ടോവര്‍(ஒக்டோபர்) என மலையாளத்தில் வழங்கப்படுகின்றன. + +உதாரணமாக: + +Font - ഫോന്‍റ്(ஃபோன்ற்) Internet - ഇന്‍റെര്‍നെറ്റ്(இன்றெர்னெற்ற்) Pilot - പൈലറ്റ്(பைலற்ற்) + +Antony - ആന്‍റനി(ஆன்றனி) போன்றவைகளை குறிப்பிடலாம். + +கிரந்தத்தில் இருந்து உருவான எழுத்துமுறையாதலால் மலையாளத்தில் பல்வேறு கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. + +உதாரணமாக கீழ்க்கண்ட கூட்டெழுத்துக்களை காணவும் + +ക്ല - க்ல ക്ര - க்ர ക്വ - க்வ ക്യ - க்ய + +ത്ത - த்த പ്പ - ப்ப ന്ന - ன்ன ണ്ണ - ண்ண + + + + + + +1639 + +1639 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + +தெலுங்கு எழுத்துமுறை + +தெலுங்கு எழுத்துக்கள் ( "தெலுகு லிபி") என்பது தெலுங்கு எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். தெலுங்கு எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கதம்ப எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும். + +தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும். + +கீழ்க்கண்ட அட்டவணை தெலுங்கு எழுத்துக்கள் வெவ்வேறு காலத்தில் எவ்வாறு மாற்றம் பெற்று தற்கால வடிவை பெற்றன என்ப��ைக் காட்டுகிறது. +மறைந்த எழுத்து வடிவங்கள் பல 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகே இவை சிறிது சிறிதாக வழக்கிழந்தன. + +தெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க "ந பொல்லு" அல்லது "நகர பொல்லு" (వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్' ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது. + +தெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், கன்னடத்தில் இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕರ್ಮ + +தெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை பாளி மொழியின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. + +ஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது பிறகே இது வழக்கிழந்து விட்டது + +தெலுங்கு எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் தெலுங்கு எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. தெலுங்கு இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது + +தெலுங்கு ఱ(ற - Trill) ஒரு விஷயத்தில் தமிழிலிருந்து வேறுபடுகிறது. அவ்வெழுத்து சேர்த்து எழுத்தும்போது(ఱ్ఱ) அது தெலுங்கில் 'ற'வை இரட்டித்து ஒலிப்பது(RR - Geminate Trill) போன்றே ஒலிக்கின்றது. ஆனால் தமிழில் ற்ற் என்பது Tra போன்ற ஒலியுடைய ஒன்றாக ஒலிக்கிறது("ஈழவழக்கு":tta). + +உதாரணமாக: +గుఱ్ఱం(guRRam) - என்பதை தெலுங்கில் குர்ரம் என்பதை ஒத்து ஒலிப்பர். தமிழ் வழக்கில் இது guTram என ஆகிவிடும். (guRRam - குதிரை) + +மேலும் தெலுங்கில் பழங்காலத்தில் 'ழ' எழுத்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் தெலுங்கு மொழியில் 'ழ' 'ட'வாகவும் 'ர'வாகவும் திரிந்ததால் அவ்வெழுத்து வழக்கொழிந்து விட்டது. எ.டு. ஏழு - ఏడు(Edu), கோழி - కోడి(kODi) போன்றவைகளைக் கூறலாம். + +தெலுங்கில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது. + + + + + + + + + + + + + + + + + +மற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம் + + +மேற்கூறிய ஒத்து உயிர்க்குறி விதியில் ஒரே ஒரு விதி விலக்கு உள்ளது. 'ப'வின் ஒத்து 'உ'கரக்குறியினை மட்டும் பெற இயலும், அதுவும் இன்னொரு 'ப'வுடன் இணைந்திருந்தால் மட்டுமே. + + +அனுஸ்வர்ரம்(தெலுங்கில் - சுன்னா(సున్న -sunna) என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது. + + + + + + + + + + + + + +கன்னட எழுத்துமுறை + +கன்னட எழுத்துக்கள் என்பது கன்னட எழுத்துக்களை எழுத பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். கன்னட.எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. கன்னட எழுத்துக்களை கொங்கணி மொழியையும் துளு, கொடகு போன்ற திராவிட மொழிகளையும் எழுத பயன்படுத்துவர். கன்னட எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களிடம் இருந்து உதித்த பல்லவ கதம்ப எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும். + +தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும். + +கன்னட எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. + +கன்னடத்தில் ಱ(ற)வும் ೞ(ழ)வும் பழங்கன்னடத்தில் ("ஹலே கன்னடா") இருந்த எழுத்துக்கள். இவ்வொலிகள் தற்கால கன்னடத்தில் ("ஹொச கன்னடா") இருந்து மறைந்ததால் இவ்வெழுத்துக்கள் தற்காலத்தில் வழக்கிழந்தன. தெலுங்கு மொழியில் மட்டும் ఱ (ற) இப்பொழுதும் கூட வழக்கில் இருக்கிறது. + +இதே போல் இறுதியில் 'ந'கர ஒற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்த சிறப்பெழுத்து (தெலுங்கில் இது 'ந'கர பொல்லு என அழைக்கப்படுகிறது) தற்கால வழக்கில் இருந்து மறைந்து விட்டது. இருப்பினும் இந்த சிறப்பெழுத்து 1980 வரை தட்சிண கன்னட மாவாட்டத்தில் வழக்கில் இருந்ததாக அறியப்படுகிறது + +கன்னடத்தில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது. + + + + +பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்: + + + + + + + + + +மற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம் + +அனுஸ்வரம் என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது. மெய் ஒலி கொண்டது. + + + + + + + + + + + +நிஞ்சா ரோபோக்கள் + +நிஞ்சா ரோபோக்கள்(ஜப்:忍者戦士飛影) அல்லது நிஞ்சா சென்ஷி டொபிக்காகே என்பது மெக்கா வகையைச் சார்ந்த ஒரு ஜப்பானிய அனிமே தொடராகும். இந்தத் தொடர் 8 அக்டோபர் 1985இல் இருந்து 14 ஜூலை 1986 வரை நிப்போன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. + +இந்தத் தொடர் தென் - ஆசியா, தென்கிழக்காசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்டது. இதேத் தொடல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவணங்களால் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிலி, மெக்ஸிகோ முதலியா நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. + +கதை நடைபெறுவது 2200ஆம் ஆண்டில். இக்க்கதையின் நாயகன் 16 வயதான ஜோ மேயா. + +செவ்வாய் கிரகத்தில் வசிக்கும் ஜோ, வேற்றுகிரகவாசிகளுக்குள் நடக்கும் போரை ஒரு நாள் ��ார்க்கிறான். அந்தப் போரில் ஸபூம் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் ராடுரியோ கிரகத்தின் இளவரசியான ரொமினாவை தாக்குகின்றனர். இளவரசி ரொமினா பிரபஞ்சத்த்தையே கைப்பற்ற நினைக்கும் ஸபூம் கிரக அரசனிடமிருந்து தப்பித்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவள். 'ஐஸ் லாண்டர்' என்ற தளபதியும் அவளுடன் இருக்கின்றான். அவளை தொடர்ந்து ஸபூம் கிரகத்தினரும் செவ்வாயில் தரையிறங்கி ரொமினாவின் விண்கலத்தை தாக்கிய வண்ணம் இருக்கின்றனர். + +அவன் வயதை ஒத்த ரொமினாவை சந்தித்தவுடன் ஜோ அவளுக்கு உதவ முன் வந்து, அவளுடைய விண்கலத்தினுள் நுழைகிறான். அவனுடன் அவனது நன்பர்களான மைக், மற்றும் ரெனி கூடவே வருகின்றனர். அவர்கள் நுழைந்தவுடன் அந்த விண்கலத்தினுள்ள 3 நிஞ்சா ரோபோக்களிடம் வித்தியாசமான விளைவுககள் ஏற்படுகின்றன். பின்னரே அந்த ரோபோக்களை இயக்கக் கூடியவர்கள் இம்மூவரே எனத் தெரிய வருகிறது. இதை இவர்கள் அறிந்தவுடன், அந்த மூன்று ரோபோக்களை இயக்கி ஸபூம் படையுடன் போரிடுகின்றனர். + +இவ்வாறு ஸபூம் கிரகத்தினரை எதிர்த்து மோதி தோற்கும் நிலையில், எங்கிருந்தோ டொபிக்காகே(சைபர்டிரான்) என்ற நிஞ்சா ரோபோ இவர்களுக்கு உதவி செய்து இவர்களை காப்பாற்றுகிறது. இந்த சைபர்டிரான் அந்த மூன்று நிஞ்சா ரோபோக்களுடனும் இணையும் திறன் கொண்டது. சைபர்டிரான் மூன்று ரோபோக்களுடன் இணைந்து வெவ்வேறு விதமாக உருமாறி எதிரிகளை தொற்கடிக்கிறது. பிறகு பலவிதமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஐஸ்லாண்டர் ரொமினாவுக்கு துரோகம் இழைத்து ஸபூம் கிரகத்தாருடன் சேர்ந்து விடுகிறான். ஜோவும் ஒரு சம்பவத்தினால் சைபர்டிரானுடன் இணைந்து அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுகிறான். ஜோவும் ஐஸ்லேண்டரும் பெரும் எதிரிகள் ஆகி இருவரும் அவ்வப்பொது சண்டையிடுகின்றனர். + +ஜோ சைபர்டிரானை கட்டுப்படுத்துவதுப் போலவே, ஒரு கட்டத்தில் ஐஸ் லாண்டரும் 'மான்டிஸ்' என்ற சக்தி வாய்ந்த ரோபோவைக் கட்டுப்படுத்திகிறான். இவ்விருவரும் தத்தம் ரோபோக்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கெதிராக ஒருவர் மோதிக்கொள்கின்றனர். + +இறுதியில் ஜோ எவ்வாறு பூமியையும் ரொமினாவின் கிரகமான ராடுரியோயும் காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. + +ரொமினாவினுடைய கிரகத்தின் தளபதி இவர். ஜோவின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக ஐஸ் லாண்டர் ரொமினாவுக்க�� துரோகம் இழைத்து விட்டு ஸபூம் அரசனுடன் கூட்டுச்சேர்கிறான். ஆரம்பத்தில் எந்த ரோபோவையும் கட்டுப்படுத்தாமல் இருந்தாலும், பின்னர் மாண்டிஸ் என்ற ரோபோவுடன் ஒன்று சேர்கிறான். + + + + + + +குரல்வளை + +குரல்வளை (larynx) என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது. + +ஒலி குரல்வளையில் உருவாக்கப்படுகிறது. இங்கேதான் குரல் எடுப்பும், உரப்பும் உருவாகின்றன. நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றின் வலுவும் உரப்பின் அளவைத் தீர்மானிப்பதுடன், இது குரல் மடிப்புக்கள் பேச்சை உருவாக்குவதற்குத் தேவையானது. குரல்வளையின் செயற்பாடு, ஒரு குறிப்பிட்ட குரல் எடுப்போடு அல்லது மீடிறனோடு கூடிய ஒலியை உருவாக்குகின்றது. இந்த ஒலி குரல் தொகுதியூடாக வரும்போது மாற்றமுறுகின்றது. இவ்வொலி, நாக்கு, உதடு, வாய், தொண்டைக் குழி ஆகியவற்றின் நிலைகளுக்கு ஏற்பப் பல்வேறு விதமாக மாறுகின்றது. இவ்வாறாக ஒலி மாற்றமடைவதன் மூலமே உலகின் மொழிகளிலுள்ள உயிர் மற்றும் மெய்யொலிகள் உருவாகின்றன. + + + + +முஸ்லிம் + +இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை "முஸ்லிம்" என்றும் பெண்களை "முஸ்லிமா" என்றும் அழைப்பதுண்டு. "முஸ்லிம்" என்ற சொல் அரபு மொழியில் "இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்" என்றும், "இறைவனிடம் சரணடைந்தவன்" என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும். + + + + + + +பாபர் மசூதி + +பாபர் மசூதி ("Babri Mosque", உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது "பிறந்த இடத்தின் மசூதி" (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது. இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் கு��்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் டிசம்பர் 6, 1992 இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது. + +இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் அயோத்தி மன்னரெனப் இராமாயணம் மற்றும் புராணங்களில் கூறப்படும் குழந்தை ராமனின் கோயில் ஒன்றை பாபர் மன்னனின் தளபதியான "மீர் பக்கி" என்பவர் உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அயோத்தியில் இம்மசூதியே மிகப் பெரியதாகும். + + + + + + +வான்கார்ட் திட்டம் + +வான்கார்ட் திட்டம்' ("Project Vanguard") என்பது பூமியின் சுற்றுவட்டத்துக்கு செய்மதிகளை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு விண்வெளித் திட்டமாகும். + +அக்டோபர் 4, 1957 இல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 1 செய்மதியை திடீரென விண்ணுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தனது எக்ஸ்புளோரர் திட்டத்தை மீளப் பரிசீலிக்க ஆரம்பித்தது. இத்திட்டத்தின் படி "எக்ஸ்புளோரர் 1" என்ற விண்கலத்தை 84 நாட்களில் தயாரித்து ஜனவரி 31, 1958 இல் விண்ணுக்கு ஏவியது. ஆனாலும் இதன் வேலைகள் முடிய முன்னரே சோவியத் ஒன்றியம் தனது இரண்டாவது ஸ்புட்னிக் செய்மதியை நவம்பர் 3, 1957 இல் அனுப்பியது. இதே நேரம் டிசம்பர் 6, 1957 இல் அமெரிக்கா அனுப்பிய "வான்கார்ட் TV3" செய்மதி ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறிய காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது விண்வெளிப் பயண ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா மிகவும் பின்தங்கி இருந்ததை உலகிற்கு அறிவித்தது. + +மார்ச் 17, 1958, "வான்கார்ட் I" செய்மதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இதுவே பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இரண்டாவது செய்மதியும் சூரிய சக்தியில் இயங்கிய உலகின் முதலாவது செய்மதியும் ஆகும். இச்செய்மதி 152 மிமீ (6 அங்)) விட்டமும் 1.4 கிகி நிறையும் கொண்ட இச்செய்மதியை சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் "கிறேப் ஃபுருட் செய்மதி" என வர்ணித்தார். + +தற்போது பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளில் மிகப்பழமையானது வான்கார்ட் 1 ஆகும். இதற்கு முன்னார் அனுப்���ப்பட்ட ஸ்புட்னிக் 1", "ஸ்புட்னிக் 2", "எக்ஸ்புளோரர் 1" ஆகியன சுற்றுப்பாதையை விட்டு வெளியேறிவிட்டன. + + + + + + +1768 + +1768 (MDCCLXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +இசுட்டீவன் கார்ப்பர் + +சிரீபன் கார்ப்பர் ("Stephen Harper", பிறப்பு: ஏப்ரல் 30, 1959) கனடாவின் 22 ஆவது பிரதமராவார். இவர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சி ஜனவரி 23, 2006இல் நடைபெற்ற கனடா நடுவண் அரச தேர்தலில் சிறுபான்மை வெற்றி பெற்றதன் மூலம், பிரதமர் ஆகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஒரு கடின வலதுசாரி அரசியல்வாதி ஆவார். + + + + +சபர்மதி ஆறு + +சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை "வாகல்" என்றும் அழைக்கிறார்கள். + +பெரும்பகுதியான ஆறானது குஜராத் மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான அகமதாபாத், காந்திநகர் ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. + + + + +உதயப்பூர் + +உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது. + +உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார். + +இங்குள்ள ஏரிகள்: + + + + +ஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்) + +'ஒன்பது ரூபாய் நோட்டு' என்பது 2007 ல் தங்கர்பச்சானின் இயக்கத்தில் வந்த திரைப்படம். இதன் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவும் தங்கர்பச்சான். + +சென்னையிலிருந்து பேருந்தில் தனது கிராமத்துக்கு வரும் சத்யராஜ் தனது கதையைக் கூறுவது போல படத்தை அமைந்திருக்கிறது. + +மாதவர் படையாச்சி, பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊர் மக்களால் மதிக்கப்படுகிற ஒரு மனிதர். அவருக்கு வேலாயி (அர்ச்சனா) என்ற மனைவியும், 5 மக்களும். + +வேளாண்மை தான் படையாச்சியின் உயிர். அவருடைய நெருங்கிய நண்பர்தான் காஜா பாய் (நாசர்). வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவி ஜீவன். அவரது நிலையைப் பார்த்து மாதவரும், வேலாயியும் உதவுகின்றனர். தனக்கென ஒரு தொழிலைத் தொடங்குமாறு கூறி நிறையப் பணத்தையும் கொடுக்கின்றனர். + +சில வருடங்களுக்குப் பிறகு வளர்ந்த விட்ட மாதவரின் பிள்ளைகள், மாதவருக்கு எதிராக திரும்புகின்றனர். சொத்தில் பங்கு கேட்கின்றனர். இவர்களுக்கு மாதவரின் உறவினரான தண்டபாணி (டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்) உடந்தை. மாதவருக்கு எதிராக பிள்ளைகளைத் தூண்டி விடுகிறார் தண்டபாணி. + +இதை வயதான மாதவரும், அவரது மனைவியும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியில் சமைகின்றனர். இறுதியில் பிள்ளைகளை விட்டுப் பிரிய முடிவு செய்கிறார்கள். + +இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு காஜா பாயின் நினைவு வருகிறது. அடுத்த ரயிலைப் பிடித்து ஆம்பூருக்கு ஓடுகிறார்கள். அங்கு காஜா பாய் பெரிய தொழிலதிபராக செட்டிலாகியிருக்கிறார். மாதவரையும், வேலாயியையும் சந்தோஷத்துடனும், பாசத்துடனும் வரவேற்கின்றனர் காஜா பாயும், அவரது மனைவி கமீலாவும். + +விரும்புகிற வரை எங்களுடேனேயே இருங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அதை மறுக்கும் மாதவர், யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தான் பிழைக்க வழி செய்யுமாறு கோருகிறார் மாதவர். + +மாதவரின் உணர்வுகளை மதிக்கும் காஜா பாய், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறார். சில ஆடுகளை வாங்கவும் மாதவருக்கு உதவுகிறார். + +ஒரு நாள் தான் ஆசையுடனும், சொகுசாகவும் வளர்த்த தனது இளைய மகன் சொந்த ஊரிலேயே அடிமை போல நடத்தப்படுவதை அறிகிறார் மாதவர். மனைவியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் அன்று இரவே வேலாயி இறந்து போகிறார். + +அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஜீவன். + + +இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முற���யில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். + +அதன்படி "ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9, 2007 ம் தேதி), முற்பகல் 11.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும். இப்படத்தை பொதுமக்கள் எந்தவிதக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தாமல் பார்க்கலாம். பார்த்த பின்னர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தலாம்" என அறிவிப்புகள் வெளியாயின. + +இதற்கான ஏற்பாடுகளை பிரமீட் சாய்மீரா நிறுவனம் செய்தது. இதற்கான காரணம் மனதை வேதனைப்படுத்துவதாகும். அம்மாத வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. ஆனால் நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே (30 தியேட்டர்கள்) திரையிட முடிந்துள்ளது. + + +இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும். + + + + + +பேர்ள் துறைமுகம் + +பேர்ள் துறைமுகம் ("Pearl Harbor") ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலூலுவின் மேற்கே அமைந்துள்ள ஒவாகு தீவில் உள்ள ஒரு துறைமுகம். இத்துறைமுகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு முக்கிய கடற்படைத்தளமும் ஐக்கிய அமெரிக்கப் பசிபிக் கடற்படையின் தலைமையகமும் ஆகும். ஜப்பானியர்கள் இத்துறைமுகத்தின் மீது டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில் நடத்திய குண்டுத் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட வைத்தது. + +பேர்ள் துறைமுகம் மீதான திடீர்த் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவைத் திகைக்க வைத்தது எனலாம். டிசம்பர் 7, 1941 அதிகாலை ஜப்பான் பேரரசின் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானங்களும் தளபதி இசரோக்கு யமமோட்டோ தலைமையில் இத்துறைமுகம் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டன. இத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே அமெரிக்கா அறிந்திருக்க ஏதுநிலை இருந்திருந்தாலும் அமெரிக்கா இத்தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. அன்று காலை 6:09 மணிக்கு ஆறு விமானத் தாங்கிக் கப்பல்களில் இருந்து 181 விமானங்கள் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் இராணுவத் தளங்களும் அழிக்கப்பட்��ன. மொத்தமாக 21 கப்பல்கள் அழிக்கப்பட்டு 2,350 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 68 பேர் பொது மக்கள். 1,178 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாகக் குதித்தது. + + + + + +தெய்யம் + +தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு நடனக் கலையாகும். கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒரு நடன வகை. தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப்படும் வேண்டுதலாக இதனை ஆடுவர். இந்த ஆட்டக்கலை "தெய்யாட்டம்" எனவும் தெய்யத்தின் வேடத்தை "தெய்யக்கோலம்" என்றும் வழங்குகிறார்கள். + +தெய்வம் என்ற சொல்லில் இருந்தே தெய்யம் என்பது பிறந்திருக்கிறது. அம்மனே ஆடுகின்ற தெய்வீக நடனமாக இது கொள்ளப்படுகின்றது. + +தெய்யம் நடனத்தை ஆண்களே பெண்கள் வேடமிட்டு ஆடுகின்றனர். இவர்கள் பெண்களுக்கான, அழகான வண்ணம் கொண்ட ஆடைகளையும், சில சமயங்களில் பச்சைப் பனை ஓலைகளை ஆடையாக உடுத்தியும், பித்தளை ஆபரணங்களை உடலெங்கும் அணிந்து கொண்டும், அச்சமூட்டும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொண்டும், மிகப்பெரிய தலைக்கவசங்களைப் பொருத்திக் கொண்டும் ஆடுவர். + +தெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் அம்மனே தம்மை ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் ஆடுவர். ஆட்டத்தின் போது ஒரு அசரீரியாக, அருள்வாக்காக அம்மன் பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாகவும், அம்மன் ஆசி வழங்குவதாகவும் தெரிவிப்பார்கள். + + + + + +சுண்டன் வள்ளம் + +சுண்டன் வள்ளம் என்பது கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு ஆகும் (வள்ளம் = படகு). இது கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.வள்ளங்களி எனப்படும் படகுப்போட்டியில் இவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +சுண்டன் வள்ளங்கள் 100 முதல் 158 அடி வரை நீளம் கொண்டவை. வள்ளத்தின் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். முன்பாகம் நீளத்தில் கூர்மையாக இருக்கும். +சுண்டன் வள்ளம் தங்க நாடாக்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருக்கும். ஒன்றோ இரண்டோ முத்துக்குடைகளும் ஒரு கொடியும் சுண்டன் வள்ளத்தில் காணப்படும். + + + + + +காம சாத்திரம் + +வடமொழி இலக்கியங்களில், காம சாத்திரம் என்பது காமத்தைக் குறித்த நூல்களை பொதுவாக குறிக்கின்றது. எவ்வாறாக அர்த்தசாத்திரம் அர்த்தத்தை (பொருள்) குறித்துக் கூறுகிறதோ, அவ்வாறாகவே காம சாத்திரத்தையும் எடுத்துக்கொள்ளலாம். காம சாத்திரம் ஒரு நாகரீக மனிதன் காமத்தை எவ்வாறு நுகருதல் வேண்டும் என்பதை விளக்குகின்றது. காம சூத்திரம் என்பது காம சாத்திரத்தை விளக்கும் மிகவும் பிரபலமான நூல் ஆகும். + +காம சாத்திரத்தின் தோற்றம், நந்தி தேவரால் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. கைலாயத்தில் சிவன், பார்வதி இடையில் காமத்தைக் குறித்த உரையாடல்களைத் தற்செயலாகக் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு 1000 அத்தியாயங்களில் மிகவும் விரிவான நூலாக நந்தி தேவர் எழுதினார் எனக் கூறப்படுகிறது. கி.மு எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது என்பவர் நந்தியின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் எழுதினார். இருப்பினும் அந்நூல் மிகவும் விரிவாக இருந்ததால், பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும், ஷ்வேதகேதுவின் நூலுக்கு இன்னொரு சுருக்கத்தை இயற்றினர். கி.மு மூன்றாம் மற்றும் முதலாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பலர் பாபிரவியரின் நூல்களை ஆராய்ந்து பலரும் பல்வேறு நூல்களை அதன் அடிப்படையில் எழுதினர். + +தற்சமயம், காம சாத்திரத்தைக் குறித்த பழமையான நூலாக கிடைத்திருப்பது வாத்சாயனர் இயற்றிய "காம சூத்திரம்" மட்டுமே. காம சூத்திரத்தில் மேற்கோளாகக் குறிப்பிடப்படும் மேற்கூறப்பட்ட அனைத்து நூல்களும் தற்காலத்தில் மறைந்து விட்டன. + +வாத்சாயனரைப் பின்பற்றி, பலரும் காம சாஸ்திரத்தைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றுள் சில மட்டுமே காம சாஸ்திரத்தை குறித்து தன்னிச்சையாக எழுதப்பட்டன, மற்றவை அனைத்தும் காம சூத்திரத்தைக் குறித்த உரைகளே ஆகும். பிற்காலத்தில் இயற்றப்பட்ட காம சாஸ்திர நூல்களில் புகழ் பெற்றது கோககரின் "ரதி ரகசியம்" மற்றும் கல்யாணமல்லரின் "அனங்கரங்கம்" ஆகியவை ஆகும். காம சூத்திர உரை நூல்களில் புகழ் பெற்றது, ஜெயமங்களரால் இயற்றப்பட்ட உரை நூல் ஆகும். + +காமம் என்ற வடமொழிச்சொல்லுக்கு ஆசை, விருப்பம், இன்பம் என பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் பாலியல் தொடர்பான இன்பம் என்பது அச���சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. + +காமத்தை குறித்த சாஸ்திரம் ஆகையால், இது காமசாஸ்திரம் என அழைக்கப்படுகிறது. + + + +அனைத்து வடமொழி இலக்கியங்களிலும் காவியங்களிலும் காதல் தொடர்பான அனைத்துக் கருத்துகளும் "காம சாத்திரத்தை" அடிப்படையாகக் கொண்டே எழுதுதல் வேண்டும். எனவே வடமொழிப் புலவர்களால் காம சாத்திரம் கற்கப்பட்டது. + + + + + +தன்சானியா + +தன்சானியா ("Tanzania", கிசுவாகிலி: "Jamhuri ya Muungano wa Tanzania"), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை கிளிமஞ்சாரோ மலை. + +தான்சானியாவின் மக்கள் தொகை 51.82 மில்லியன் (2014) இம்மக்கள் பல்வேறு இன, மொழி, சமயக் குழுக்களாக உள்ளனர். தான்சானியாவானது ஜனாதிபதி அரசியலமைப்பு குடியரசாகும், 1996 ஆம் ஆண்டு முதல், அதன் அதிகாரபூர்வமான தலைநகராக டொடோமா, ஜனாதிபதி அலுவலகம், தேசிய சட்டமன்றம் மற்றும் சில அரசாங்க அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. தாருஸ்ஸலாம் நகரம், முன்பு தான்சானியாவின் தலைநகராக இருந்தது, இந்நகரில் பெரும்பாலான அரசாங்க அலுவலகங்களைத் தக்கவைத்துக்கொண்டு, நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும், முக்கிய துறைமுகமாகவும், முன்னணி வணிக மையமாகவும் உள்ளது. தான்சானியா நாடு சாமா சாம்பியோ மப்புண்டூஸி (CCM) என்ற ஒற்றை கட்சியின் மேலாதிக்கத்தில் அதன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இக்கட்சி உருவானதிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை, நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பெரிய கட்சியாக இது மட்டுமே இருந்தது. இந்நிலை 1 ஜூலை 1992 இல் அரசியலமைப்புத் திருத்தங்களால் மாற்றப்பட்டது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளை உருவாக்கவும் அவற்றின் நடவடிக்கைகளை அனுமதித்தும் பல சட்டங்கள் தேசிய சட்டமன்றத்தால் இயற்றப்பட்டன. ஜனாதிபதி மற்றும் நாட்டின் தேசிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 2015 இல் நடைபெற்றது. தேர்தலில் CCM கட்சி சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 75% இடங்களைக் கைப்பற்றியது. + +19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் கிழக்கு ஆபிரிக்காவை உருவாக்கியபோது ஐரோப்பிய காலனித்துவமானது, முதன்முதலாக தான்சானியாவில் தொடங்கியது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தது. முதன்மை நிலப்பகுதி தங்கனிக்கா என்ற பெயரில் ஆளப்பட்டு வந்தது, கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் என்ற பெயரில் ஒரு தனியான காலனியாக ஆட்சி செய்யப்பட்டது. 1961 மற்றும் 1963 இல் இந்த காலனிகள் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய தான்சானிய குடியரசு என்ற பெயரில் இணைந்தன. இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது. + +தான்சானியாவின் வடகிழக்குப் பகுதியில் மலைப்பகுதிகளும் அடர்ந்த காடுகளையும் கொண்டுள்ளது, இப்பகுதியில்தான் கிளிமஞ்சாரோ மலை அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் மூன்று பெரிய ஏரிகளின் ஒரு பகுதி தான்சானியாவுக்குள் உள்ளன. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியும், கண்டத்தின் ஆழமான ஏரியான, விக்டோரியா ஏரி வடக்கே உள்ளது, இந்த ஏரி, அதன் தனித்துவமான மீன் இன வகைக்காக அறியப்படுகிறது. கிழக்கு கடற்கரையானது வெப்பமும் ஈரப்பதமுமானது, இந்தக் கடற்கரை சன்சிபார் தீவுக்கான கடல்வழியாக உள்ளது. ருக்வாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலாம்போ அருவி ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய அருவியாகும் இது ஜாம்பியா எல்லையில் உள்ள தாங்கானிக்கா ஏரியின் தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. மெனாய் விரிகுடா பகுதியானது சான்சிபார் பகுதியின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியாகும். + +தான்சானியாவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன, இது கிழக்கு ஆப்பிரிக்காவில் மொழியியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட நாடாக உள்ளது. தான்சானியாவில் பேசப்படும் மொழிகள் அனைதுதம் நான்கு ஆப்பிரிக்க மொழி குடும்பங்களைச் சேர்ந்தவை அந்த மொழிக்குடும்பங்கள்: பண்டு, குஷிட்டிக், நீலோடிக், கோயிசான் ஆகும். சுவாஹிலியும், ஆங்கிலமும் தான்சானியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. பன்மொழிகள் மிகுந்த நாடான தான்சானியாவில், சுவாகிலி மொழி பாராளுமன்ற விவாதங்களிலும், கீழ் நீதிமன்றங்களிலும், நடுத்தர அளவில் துவக்கப் பள்ளிகளில் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; ஆங்கிலமானது வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், தூதரகங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும், இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியிலும், பயன்படுத்தப்படுகிறது. எனினும் தான்சானியா அரசாங்கம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக நீட்டிகாமல் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல இன குழுக்களை ஒன்றிணைக்கும் ஒரு வழிமுறையாக, சுவாகிலி மொழியின் பயன்பாட்டை ஜனாதிபதி நியேரேர் ஊக்குவித்தார். தான்சானியர்களில் சுமார் 10% சுவாகிலி மொழியை முதல் மொழியாக பேசுகின்றனர், மேலும் 90% வரையானவர்கள் இதை இரண்டாவது மொழியாக பேசுகின்றனர். பெரும்பாலான தான்சானியர்கள் சுவாகிலி மற்றும் ஒரு உள்ளூர் மொழியை பேசுகின்றனர்; தான்ஸானியாவின் பல கல்வி நிலையங்கள் மும்மொழி பாடங்களைக் கொண்டு உள்ளனது; இங்கு ஆங்கிலத்திலும் பேசுகிறனர். சுவாகிலி மொழியைப் பரவலாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது, நாட்டில் உள்ள சிறிய மொழிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது. பெரும்பாலும் நகர்ப்புறங்களில்,  இளம் குழந்தைகள் பெருமளவில் முதல் மொழியாக சுவாகிலி மொழியைப் பேசுகிறார்கள். + +தான்சானியா-மலாவி உறவுகளில் நாட்டின் நேசா ( மலாவி ஏரி) எல்லையை ஒட்டியிருக்கும் எல்லை நிலப்பரப்பு குறித்த சிக்கலின் காரணமாக பதட்டமாகி விட்டன. இச்சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக 2014 மார்ச்சில்நடைபெற்ற முயற்சி தோல்வியுற்றது. சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே.) இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யலாம் என 2013-ல் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. +மலாவி, சர்வதேச நீதிமன்றத்தின் இன் கட்டாய அதிகார வரம்பை ஏற்றுள்ளது ஆனால் தான்சானியா ஏற்க மறுத்துவிட்டது. +"தான்சானியா" என்ற பெயரானது, இரு நாடுகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது, இது தங்கனீக்கா மற்றும் சான்சிபார் நாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து புதிய நாடு உருவானபோது, இரு நாட்டுப் பெயர்களையும் ஒருங்கிணைத்து புதுச்சொல்லாக பெயர் வைக்கப்பட்டது. "தங்கனீக்கா" என்ற பெயர் சுவாகிலி மொழிச் சொற்கலான தங்க (கடற் பயணம்) ��ற்றும் நிக்கா ("மக்களற்ற வெற்று", "வனப்பகுதி") என்ற சொற்களில் இருந்து உருவானது, இது "வனாந்தரத்தில் புறப்பட்டது" என்ற சொற்றொடரை உருவாக்கியது. இது சில சமயம் தங்கனீக்கா ஏரியைக் குறிக்கின்றது. சான்சிபார் என்ற பெயர் "ஜேன்ஜி" என்பதிலிருந்து வந்தது, இது உள்ளூர் மக்களைக் குறிப்பிடும் பெயர் ("கருப்பு" என்று பொருள் கூறப்படுகிறது)   மற்றும் அரபிச் சொல்லான "பார்" (இதற்கு கடற்கரை என்று பொருள்) +ஆகியவற்றின் கூட்டுச் சொலாலாகும். +தான்சானியாவுக்குள் தட்பவெப்பமானது மிகவும் மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில், 10 மற்றும் 20 ° C (50 மற்றும் 68 ° F) வெப்பநிலையானது முறையே குளிர் மற்றும் கோடைப் பருவங்களில் இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் வெப்பநிலையானது 20 ° C (68 ° F) க்கும் குறைவாகவே இருக்கும். கோடைக் காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி (25-31 ° C அல்லது 77.0-87.8 ° F) மாதங்களிலும், மே மற்றும் ஆகஸ்ட் (15-20 ° C அல்லது 59-68 ° F) க்கும் இடையிலான காலம் குளிர் காலமாகவும் இருக்கும். வருடாந்திர வெப்பநிலை 20 ° C (68.0 ° F) ஆகும்.  உயர்ந்த மலைப்பகுதிகளில் காலநிலையானது குளிர்ச்சியாக உள்ளது. + +தான்சானியாவில் இரண்டு முதன்மையான மழைக் காலங்கள் உள்ளன: ஒன்று (அக்டோபர்-ஏப்ரல்) காலகட்டத்திலும் ஒரு பகுதியாகவும், மற்றொன்று இரு முறைகளாக (அக்டோபர்-டிசம்பர் மற்றும் மார்ச்-மே) காலக்கட்டத்தில் பொழிகிறது. + + + + + +காம தேவன் + +காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசித், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், மாறன் புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு. + +காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம். + +புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை ��ிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள். + +காம தேவன் சிவனால் எரிக்கப்பட்ட கதை மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அக்கதை பின் வருமாறு. + +கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார். + +காம தேவனுக்குரிய காயத்ரி மந்திரம் கீழ்க்கண்டவாறு + +காமதேவாய விதுமகே புட்பதேவாய தீமகி +தன்னோ அனங்கப் பரஞ்சோதியது + + + + + +காமம் + +காமம் ("Kāma", சமசுகிருதம், பாளி; தேவநாகரி: काम) என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். + +சைவ, வைணவ மதங்களில், காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்களுள் ஒன்றாக காமம் கருதப்படுகிறது. எனினும் அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என சைவ, வைணவ மதங்களில் நம்பப்படுகிறது. சைவ சமயத்தில் காமத்தின் அதிபதியாக காம தேவன் கருதப்படுகிறார். + +இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடைவதற்காக காமத்தைத் துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக் கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது("காமேஸு மிச்சாசார"). எனினும் வஜ்ரயான பௌத்ததில் காமத்தை குறித்து இவ்வளவு கடுமையான கருத்துகள் இல்லை. +கிறித்தவ மத���்தை பெறுத்தவரை காமம் ஏழு தலையான பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காமத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மறு உலகில் நரகத்திற்கு செல்வர் என நம்பப்படுகிறது. + + + + + + +தற்பால்சேர்க்கை + +ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, ஒருபாலீர்ப்பு அல்லது தன்பாலீர்ப்பு ("Homosexuality") எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும், ஓரினச்சேர்க்கை என்றும் குறிக்கப்படுவதுண்டு. + +தற்பால்ச்சேர்க்கை மனித வரலாறு முழுவதுமே தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப் பட்டது. இன்றளவும் பல நாடுகளில் தற்பால்சேர்க்கை அவமானகரமான விடயமாக, சட்ட விரோதமானதாக உள்ளது. இந்தப் பால்நிலை வகுபாடானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பல நாடுகள் தற்பால்சேர்க்கையைச் சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன. + +தற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் என்கிறார்கள். இவற்றை தமிழில் மகிழ்வன், மகிழினி என்று சுட்டுகிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால்சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு. + +செப்டம்பர் ஆறு 2018 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தற்பால்சேர்க்கையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. + +"ஹோமோ செக்ஸ்" என்ற சொல்லின் அடிப்படை கிரேக்கச் சொல்லான ஹோமோவிலிருந்து வந்ததாகும். கி.பி 1869ல் ஜெர்மனி உளவியல் நிபுணர் "கார்ல் மரியா பென் கெர்ட்" என்பவர் தற்பால்சேர்க்கையை ஹோமோ செக்ஸ் என்று அழைத்தார். கிரேக்க நாகரீகத்தில் தற்பால்சேர்க்கையை போற்றியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால்சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று தெரி���ிக்கின்றார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிரேக்கத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக வீரர்கள் நினைத்தார்கள். + +நான்காம் நூற்றாண்டில் இந்நிலை மாறியது, தற்பால் சேர்க்கை இயற்கைக்கு விரோதமானதாகவும், இறைவனுக்கு எதிரானதாகவும் கருத்து பரவத்தொடங்கியது. இன்றுவரை கொடுமையான தண்டனைகளையும், மரண தண்டனையையும் தரக்கூடிய குற்றமாக கருதப்படத் தொடங்கியது இந்தகாலத்தில்தான். பாலுறவு என்பது குழந்தை பெறுவதற்கவே; குழந்தை பெறமுடியாத பாலுறவுகள் தேவையற்றது என்ற எண்ணம் தற்பாலுணர்வை வெறுக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாகும். மாவீரன் நெப்போலியன் 1804ல் வயதுக்கு வந்த இருவர் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுதல் குற்றமற்றது என சட்டமியற்றினார். + +வரலாற்றில் முதல் தற்பால் சேர்க்கையினராக கி.மு. 2400ல் வாழ்ந்த Khnumhotep மற்றும் Niankhkhnum ஆகிய ஆண் தற்பால் சேர்க்கையாளர்கள் கருதப்பெறுகின்றனர். + +2004 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நெவ்சம் (Gavin Newsom) முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு லெஸ்பியன் தம்பதிக்கு திருமண உரிமத்தை வழங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை. சட்டப்படி ஒரு பால் ஈர்ப்புடையோர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. +நியூ யார்க்கில் நிகழ்ந்த ஸ்டோன்வால் கிளர்ச்சிதான் (Stonewall riots) உலகில் முதல் முதலாக ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி. ஜூன் 28, 1969 அன்று ஸ்டோன்வால் விடுதியில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, அவர்கள் வெகுண்டு எழுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு அலையலையாகப் பரவி உலக கவனத்தை ஈர்த்தது. +ஒருபால் ஈர்ப்புடையோர் சமூகத்திலிருந்து முதல் முறை வெளிப்படையாக அமெரிக்க அரசியலில் உயர் பதவி வகித்தவர் ஹார்வே மில்க். சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் நகர மேற்பார்வையாளராக இவர் பணியாற்றினார். ஒரு பால் ஈர்ப்புடையோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஓர் அரசாணையை பிரகடனப்படுத்தினார். +ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக 1978ல் சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்த பிரம்மாண்டமான திருவிழாவில் முதல் முறையாக 2,50,000 பேர் கலந்து கொண்டனர். +பாலியல் ரீ��ியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் சட்டங்களை 21 அமெரிக்க மாகாணங்களும், பாலின ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் +சட்டங்களை வாஷிங்டன் உள்ளிட்ட 16 மாகாணங் களும் நிறைவேற்றியுள்ளன. வாஷிங்டன் உள்ளிட்ட 6 மாகாணங்களில் ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பட்டுள்ளன. +1982ல் அமெரிக்க மாகாணமான விஸ்கான்சினில் முதல் முறையாக பாலியல் ரீதியான பாகுபாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1984ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்கலி நகரத்தில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெர்மோன்ட் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்பட்டது +அமெரிக்க நாடாளுமன்றத்தின் எம். பியான பெர்னிபிராங்க் மற்றும் ஜிம்ரெய்டி ஆகியோர் ஜூலை 7 2012ல் திருமணம் செய்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பார்லிமென்ட் எம்.பி. தற்பால் சேர்க்கை திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது. + +பாகிஸ்தானைச் சார்ந்த ரெஹனா கவுசார் மற்றும் சோபியா கமர் ஜோடி முதல் தற்பால்சேர்க்கை தம்பதியினர் ஆவர். இவர்கள் முதல் இசுலாமிய தற்பால்சேர்க்கையினராகவும் கருதப்பெறுகின்றனர். + +தற்பால் சேர்க்கை விருப்பத்திற்கு ஜெனடிக் கோட்பாடு, ஹார்மோன் கோட்பாடு, சைக்கோ அனலிடிக்கல் தியரி, பியர் இன்ஃபுளுயன்ஸ் தியரி என்ற நான்கு கோட்பாடுகளையும் மருத்துவ ஆய்வுகள் ஏற்கவில்லை. + +நான்கு சதவீத மக்கள் தற்பால்சேர்க்கையை விரும்புகின்றார்கள். இவர்களின் வளர்ப்பிற்கும் இந்த தற்பால்சேர்க்கை விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பாலியல் தேர்வானது, குறிப்பிட்ட சில குடும்பங்களில் வழிவழியாக தொடர்வதையும், இரட்டையர்களின் தேர்வுகள் ஒரேமாதிரியாக இருப்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே ஓரினச்சேர்க்கை விருப்பம் வளர்ப்பினால் ஏற்படுதில்லை என்று லண்டன் உளவியல் மையத்தின் ஆய்வாளர் க்லென் வில்சன், கிழக்கு லண்டன் பல்கலைக்கழக உளவியல் உயிரியலாளர் காசி ரகுமான் ஆகியோர் தெரிவிக்கின்றனர். + +தற்பால்சேர்கையில் ஈடுபடாத, ட்ரோசோக்பிலா எனும் பூச்சியில் மரபணுவை மாற்றி சோதித்தபோது, அவை தற்பால்சேர்க்கையில் ஈடுபாடுடன் இருப்ப���ை கண்டறிந்தனர். + +"சூழ்நிலை தற்பால்சேர்க்கையாளர்" (Situational Homosexual) என்ற வகையினர் தற்பால் சேர்க்கையில் சூழ்நிலை காரணமாக ஈடுபடுபவர்கள், இவர்களை முழுமையான தற்பால்சேர்க்கையினர் என நினைத்தல் கூடாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கீழ்வரும் காரணிகளால் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது. + + +ஆண் ஓரினச்சேர்க்கை செயல்பாடுகளின் அடிப்படையில் அதில் ஈடுபடுகின்றவர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பெறுகிறார்கள். + + +தற்பால்சேர்க்கையை மனநோய் என்றும், குறைபாடு என்றும் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு போன்றவை கருதி வந்தன. ஆனால் 1973ல் ஆய்வுகளின் மூலம் தற்பால்சேர்க்கை இயற்கையானது என்பதை அறிந்து, இது இயற்கையான உணர்வே என வெளிப்படுத்தினர். சீனாவின் சென்னோங்கியா பகுதியில் உள்ள தங்கநிற குரங்குகளை கண்காணித்ததில், தற்பால்சேர்க்கையில் அவை ஈடுபடுவதை அறிந்துகொண்டனர். அதோடு டால்பின்கள், லேமன் அல்பாற்றாஸ்கள், பூனைகள் போன்ற விலங்குகளும் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுதை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். + +இந்து மதத்தின் ஒழுக்க கோட்பாடுகள் ஸ்மிருதி எனும் நூல்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மிருதிகள் காலத்திற்கு தக்கவாறு மாறுகின்றவை. மனுஸ்மிருதி தற்பால் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் குளித்தாலே போதும் என்று கூறுகிறது. வாத்ஸ்யாயனரின் காமசாத்திரம் நூலில் தற்பால் சேர்க்கையாளர்களின் திருமணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. + +பாற்கடலில் கிடைக்கப்பெற்ற அமுதத்தினை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரித்துதருவதற்காக திருமால் மோகினி அவதாரமெடுத்தார். அதனை காணாத சிவபெருமான் மீண்டும் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச்சொன்னார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன் அவளுடன் உறவுகொண்டதாகவும், அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் ஒரு தொன்மக் கதை உள்ளது. சிலர் இதனை கடவுள்களின் ஓரினச்சேர்க்கை கதையாக கருதுகிறார்கள். + +ஜான் பாஸ்வெல் என்ற வரலாற்று ஆசிரியர் தற்பால்சேர்க்கை கிறித்துவத்தின் தொடக்ககாலத்தில் எதிர்க்கப்பெறவில்லை என்கிறார். ஆனால் மதரீதியாக எதிர்ப்பு மிகவேகமாக பரவியது, செயின்ட் அகஸ்டின், செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற மதகுருமார்களின் கூற்று குழந்தை பெற தகுதிய��்ற தற்பால் புணர்ச்சி இயற்கைக்கு விரோதம் என இருந்தமையும், தற்பால்சேர்க்கை ஒரு குறைபாடு என்ற மருத்துவதுறையின் அப்போதைய கண்ணோட்டமும் இந்த எதிர்ப்பினை வலுப்பெறச் செய்தன. + + + + + + +பாலுறவு + +பாலுறவு (உடலுறவு) எனப்படுவது பாலியல் ரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புக்களைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி இன்பத்துக்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர ஓரினச்சேர்க்கையிலும் பாலுறவு நடைபெறுகிறது. வாய்வழிப் பாலுறவு, குதவழிப் பாலுறவு போன்றன இன்பத்துக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு நடவடிக்கைகளாகும். + + + + + +குழுப் பாலுறவு + +குழுப் பாலுறவு எனப்படுவது இரண்டுக்கு மேற்பட்டோர் இணைந்து பாலுறவுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். இருவர் இணைந்து மேற்கொள்ளும் எல்லாப் பாலுறவுச் செயற்பாடுகளும் பலர் இணைந்து மட்டும் மேற்கொள்ளக்கூடிய பாலுறவுச் செயற்பாடுகளும் குழுப்பாலுறவில் இடம்பெறுகின்றன. ஒத்த பாலினர் மட்டுமோ அல்லது இருபாலினருமோ அவரவர் பாலியல் நடத்தைகளுக்கேற்ப குழுப் பாலுறவில் பங்குபெறுகின்றனர். குழுப்பாலுறவுக்காகவே விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. குழுப்பாலுறவின் பிரதான நோக்கம் பாலின்பம் ஆகும். + + + + +மேற்கத்தைய பாலியல் புரட்சி + +பாலுறவு கொள்ளல், உடல்ரீதியான பாலியல் வெளிப்படுத்தல், பாலுறவு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் போன்ற பாலுறவு தொடர்பான பல விடயங்களில் 1960 கள் தொடக்கம் மேற்கில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் மேற்கத்தைய பாலியல் புரட்சி எனப்படும். இந்தப் புரட்ச்சியை மேற்கில் இடம்பெற்ற ஒரு புரட்சி என்று குறிப்பது முக்கியம். தமிழ்ச் சூழலில் பாலுறவுக்கும் மேற்கத்தைய சூழலில் பாலுறவுக்கும் பல சமூக, பண்பாடு, அரசியல் பாலின நோக்கில் பாரிய வேறுபாடுகள் உண்டு. + + + + +மாரீசன் + +மாரீசன் (வடமொழி: मारीच, mārīcha), இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும். + +பொன் மானாக வந்த அரக்கன் இராவணனின் மாமன் ஆவான். இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினான். அதற்கு அவன் தனது மாமனின் உதவியை நாடினான். அவன் மாமனும் அதற்கு சம்மதித்தான். + +அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதை முன் சென்றான். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு இலக்குமணன் காவலாக இருந்தான். இராமனின் பாணம் மானைக் கொன்றது. திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது. + +இது அந்த அரக்கனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினாள். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனான். + + + + +பாலுறவுச் சம்மத வயது + +பாலுறவுச் சம்மத வயது என்பது சட்டப்படி ஒருவர் பாலுறவில் ஈடுபட உடன்படுவதற்கான வயதெல்லையாகும். சட்டங்களுக்குச் சட்டம் இது வேறுபடுகிறது. பொதுவான பாலுறவுச் சம்மத வயது 16 முதல் 18 ஆண்டுகள் ஆகும். ஆயினும் இது 12 முதல் 21 வயது வரை வேறுபடுகின்றது. சிறுவர்களைப் பாலியல் வன்முறையிலிருந்து தடுக்கவே பாலியற் சம்மத வயது ஏற்படுத்தப்பட்டது எனலாம். சம்மதமளிக்க்கும் வயதினைவிடக் குறைந்தோருடனான பாலுறவு சட்டத்தினால் பாலியல் வன்முறையாகக் கருதப்படுவதுண்டு. + + + + +செயற்கை ஆண்குறி + +செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், இரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது. + + + + +தகாப் பாலுறவு + +தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும். இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க ��ுனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன. + +தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் அண்ணன் ,தங்கை புணர்ச்சிகளும் அடங்குகின்றன. + + + + +1655 + +1655 (MDCLV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +குருதிப் பரிசோதனை + +குருதிப் பரிசோதனை (இரத்தப் பரிசோதனை) என்பது இரத்தக் குழாயிலிருந்து இரத்தத்தை எடுத்துச் செய்யப்படும் பரிசோதனையாகும். நோய்க் கிருமிகளின் இருப்பு, ஊட்ட அளவு, மருந்துச் செறிவு, உடற்பகுதிகளின் தொழிற்பாடு போன்ற பலவற்றை ஆய்ந்தறியும் பொருட்டு குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மருத்துவப் பரிசோதனைகளில் மிக அதிகமாக மேற்கொள்ளப்படுவது குருதிப் பரிசோதனையாகும். + + + + + +ஏர் இந்தியா + +ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. 1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது. +இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது. +ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப் பெயர்மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தைஅத் துவக்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா) இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் இறங்கினார். 1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங���கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான். ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார். அதன்பின்னர் டாடா ஏர்லைன்ஸ் படிப்படியாக வளர்ந்தது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், போபால் என பல நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது.  அதன் முதல் வருடத்தில், விமான சேவையில் 155,000 பயணிகள் மற்றும் 9.72 டன்கள் (10.71 டன்) அஞ்சல் பொதிகளை சுமந்து 160,000 மைல்கள் (260,000 கிமீ) பறந்து, 60,000 (அமெரிக்க $ 930) லாபம் ஈட்டியது. +முதல் தடவையாக மைல் மெர்லின் என்ற ஆறு இருக்கைகள் கொண்ட விமானம் தனது முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையை மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்குத் துவக்கியது. 1938 ஆம் ஆண்டில், டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயர் டாட்டா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது. இலங்கையின்  கொழும்பு மற்றும் தில்லி ஆகியவற்றுக்கு இடையில் 1938 ஆம் ஆண்டுக்கான சேவை துவக்கப்பட்டது. அடுத்து வந்த இரண்டாம் உலகப் போரின்போதும், டாடா ஏர்லைன்ஸ் பெரும் பங்காற்றியது. இடைவிடாமல் பறந்து, பர்மாவில் சிக்கியிருந்த அகதிகளை மீட்டு இந்தியா கொண்டு வந்தது. + +ஏர் இந்தியா ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நிறுவனம் ஆகும், அது போயிங் 707-420 கௌரி ஷங்கர் ஆகும். +இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வழக்கமான வர்த்தக சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. மேலும் டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என்ற பெயரில் 29 ஜூலை 1946 அன்று ஒரு பொது நிறுவனமாக மாறியது. 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, விமான நிறுவனத்தின் 49% பங்குகளை இந்திய அரசாங்கம் 1948 இல் வாங்கியது. 1948 சூன் அன்று லாகீட் கான்ஸ்டலேஷன் L-749A மலபார் இளவரசி என்ற பெயரைக்கொண்ட (பதிவு செய்யப்பட்ட VT-CQP) வானூர்தியைக் கொண்டு முதன் முதலில் லண்டன் ஹீத்ரோவுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்கியது. +1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது, ஆனால் அதன் நிறுவனர் ஜே. ஆர். டி. டாடா 1977 வரை நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தார். இதன்பிறகு  இந்த நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட் என்று பெயர மாற்றப்பட்டது. மேலும் உள்நாட்டு பயணச் சேவைகளை மறுசீரமைப்பதின் ஒரு பகுதியாக உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவு இந்திய ஏர்லைன்ஸ் என்று இதண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன. 1948 முதல் 1950 வரை, கென்யாவின் நைரோபிக்கும், முதன்மையான ஐரோப்பிய பகுதிகளான ரோம், பாரிஸ், தியூசல்டோர்ஃபு போன்ற இடங்களுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பேங்காக், ஹாங்காங், டோக்கியோ, சிங்கப்பூர் ஆகியவற்றிற்கு விமான சேவை வழங்கப்பட்டது. + +1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. + + + + +1901 + +1901 (MCMI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பமும் அதன் முதலாவது ஆண்டும் ஆகும். + + + + + + + + + +சுகவதி பௌத்தம் + +சுகவதி பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு பெரும் பிரிவாகும். இப்பிரிவு தென் - கிழக்கு ஆசியவில் பரவலாக பின்பற்றப்படும் பௌத்த பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அமிதாப புத்தரை நோக்கிய ஒரு பக்தி சார்ந்த பௌத்த பிரிவாகும். + +சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது. + +சுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொள்ளும் பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்றபற்றப்பட்டது. ஏனெனில், வேசிகள் போன்று + +சுகவதி பௌத்தம் சுகவதி சூத்திரங்களை சார்ந்து உள்ளது. இந்த சூத்திரங்களை ஆன் ஷிகாவோ என்னும் துறவி கி.பி 148 ஆண்டில் சீன மொழியில் மொழி பெயர்த்தார். குஷன் துறவியான லோகக்சேமவும் சில முக்கியமான சூத்திரங்களை ஆன் ஷிகாவோக்கு பிறகு மொழி பெயர்த்தார். இந்த சூத்திர்ஙக்ள் அமிதாபர் குறித்து அவரது புத்த உலகான சுகவதியை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. + +அமிதாப புத்தர் பல மகாயான சூத்திரஙகளில் குறிப்பிடப்பட்டாலும். விரிவான சுகவதிவியூக சூத்திரமே மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர், தன்னுடைய சீடர் ஆனந்தரிடம கூறுகிறார். முன்னொரு காலத்தில் தர்மகாரர் என்ற புத்த துறவி, அனைத்து உயிர்க்ளையும் கரையேற்ற வேண்டி பல்வேறு உறுதிமொழிகளை கொண்டார். பின்னர் தன்னுடைய அளவில்லாத நற்கர்மங்க்ளினால் போதிநிலையை அடைந்து தனக்கு என ஒரு புத்த உல்கத்தை படைத்தார். அதுவே சுகவதி என அழைக்கப்படுகிறது. + +சுகவதி பௌத்தம் இந்திய பௌத்ததில் மிகச்சிறிய பங்கு வகித்தது. ஆனால் சீனத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. சீன முழுக்கவும் சுகவதி பௌத்தம் பரவியது. பல்வேறு பௌத்த துறவிகளால் இதன் கருத்துக்கள் செப்பனிடப்பட்டன. பிறகு இது ஜப்பானுக்கு பரவி அங்கே ஜோடோ ஷு என்ற தனிப்பிரிவாக நிலைப்பெற்றது. + +இப்பிரிவின் நம்பிக்கையின் படி, அமிதாப புத்தர் தர்மத்தை தன்னுடைய புத்த உல்கமான சுகவதியில் உபதேசித்துக்கொண்டிருக்கிறார். எனவே சுகவதியில் பிறக்கும் அனைவரும் அமிதாப புத்தரிடமிருந்து நேரடியை தர்மத்தை அறிந்து கொள்கின்றனர். எனவே தான் சுகவதியில் பிறப்பது மிகப்பெரிய பேறாக கருதப்படுகிறது. அமிதாபரிடத்திலிருந்து தர்ம உபதேசனை அறிந்த பிறகு, போதிசத்துவர்களாக வெவ்வேறு உலகங்களுக்கு சென்று அவர்கள் மோட்சம் பெற உதவுகின்றனர். + +சுகவதி பௌத்த சித்தாந்த்த்தில், போதி நிலையை அமிதாபரின் உதவியில்லாமல் அடைவது மிகவும் கடினம். ஏனெனின் நாம் இருப்பது தர்மம் சீர்குலையும் காலம் இது. எனவே தியானத்த���ன் மூலம் மட்டுமே ஞானம் அடைவது மிகவும் கடினமான செயலாகும். ஆகவே அமிதாப புத்தரின் மீது பக்தி செலுத்துவதன் மூலம் மிகவும் எளிதாக போதி நிலையை அடைய இயலும். + +மத்திய கால கிழக்காசிய கலாசாரத்தில் இந்த நம்பிக்க விவசாயிகள் மற்றும் தூய்மையில்லாத தொழில்களை செய்பவர்களாக கருதப்பட்ட வேசிகள், வேடுவர்கள், மீனவர்க்ள் முதலியவர்களால் இது பரவலாக பின்பற்றப்பட்டது. மற்ற பௌத்த பிரிவுகளில் இல்லாத எளிமையினை சுகவதி பௌத்தம் வழங்கிற்று. அதாவது, அமிதாபரின் பெயரை உச்சரித்தாலே அவரது சுகவதியில் பிறக்கலாம் என்பது அந்த கருத்து. இதை நியான்ஃபோ என அழைக்கப்படுகிறது.இது இந்து மதத்தின் நாம ஜெப முறையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. சுகவதிவியூக சூத்திரத்தில், அமிதாபர் 48 உறுதுமொழிகள் பூண்டிருப்பதாக கூறப்படுகிறாது. தன் பெயரை 10 முறையேனும் உச்சரிப்பவருக்கு சுக்வதியில் மறுபிறப்பு அளிப்பதாக அமிதாபர் தன்னுடைய 18வது உறுதுமொழியில் கூறுகிறார். இந்த எளிமையே இந்த பிரிவை மிகவும் பிரபலமாக்கியது. + +அமிதாயுர்-தியான சூத்திரத்தில் இன்னோரு முறையும் கூறப்பட்டுள்ளது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் அரசி வைதேகியிடம் எவ்வாறு அமிதாபர் காட்சியளிப்பார் எனபதையும் அவரை நோக்கி எவ்வாறு தியானம் செய்வது என்பதை குறித்தும் விளக்குகிறார். இந்த முறையினை பௌத்த துறவிகள் பின்பற்றுகின்றனர். + +வஜ்ரயான பௌத்ததில், அமிதாப புத்தரின் சுகவதியை போல், அக்‌ஷோப்ய புத்தருக்கு ஒரு தனி உலகம் உள்ளது. அதை அபிரதி என அழைப்பர். இருந்தாலும் அமிதாபரின் சுகவதியைப் போல், அக்‌ஷோப்யரின் அபிரதி குறித்து மக்களிடத்தில் பரவலாக அறியப்படுவதில்லை. + + + + + + + +வோடபோன் இந்தியா + +வோடபோன் எஸ்ஸார் ஓர் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். +இப்போது இது வோடஃபோன் இந்தியா என்று அழைக்கப் பெறுகிறது இந்நிறுவனம் "ஹச் " நிறுவனத்தை மே 2007ல் கையகப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் காலூன்றியது.வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. அக்டோடபர் 2016 முதல் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. + +மே 2006 இன் படி வாடிக்கையாளர்கள் + +இது இந்தியாவில் 9678308 பாவனையாளர்கள் அல்லது ம��த்தப் (75290092) பாவனையாளர்களின் 12.85% + + + + +முரளீதர சுவாமிகள் + +முரளீதர சுவாமிகள் தென் இந்தியாவில் பிறந்தவர், இந்து சமய சீரமைப்பாளர் என இவரைப் போற்றுவோர் கூறுகின்றனர். மக்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள இந்து மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மீண்டும் புரிந்துகொள்ளூம்படி செய்ய முனைபவராக இவருடைய சீடர்கள் கூறுகிறார்கள். இவர் இறையின் பெயரைப் பாடுவதால் எல்லோர் மனதிலும் மாறுதல் ஏற்பட்டு அதன் மூலம் "உலக மக்கள் அனைவரும் ஓரினம்" என்ற எண்ணத்தை அடைவதே இவரது முக்கியக் குறிக்கோள் என்று இவருடைய சீடர்கள் கூறுகிறார்கள். +இந்தியாவில், தமிழ்நாட்டில் கடலூரில் மஞ்சகுப்பம் என்னுமிடத்தில் இறைபக்தி மிகுந்த ராஜகோபால ஐயர் - சாவித்திரி அம்மாள் என்ற தம்பதியர்க்கு பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் தீபாவளியன்று (நவம்பர் 8, 1961) முரளீதரன் பிறந்தார். + +இவரைப்பற்றி இவருடைய சீடர்கள் கூறுவன: சுவாமி முரளீதரர் குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளிடத்தில் ஈடுபாடும் முக்கியமாக ஸ்ரீனிவாசப் பெருமாளிடம் அதிக பக்தியும் கொண்டிருந்தார். கோவில்களில் நடக்கும் வழிபாடு, சொற்பொழிவு இவற்றைக் கேட்பதில் அதிக நாட்டமுடையவராக இருந்தார். அவருடைய தகப்பனார் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து வரும் சாதுக்களைப் போலவே தாமும் ஆகவேண்டும் என்று விரும்பினார். துறவிகள் அணியும் காவி உடையின் மீது ஒரு ஈர்ப்பு கொண்டிருந்தார். மகான்களின் முன்னிலையிலும், (அதிட்டானங்களிலும்) கோவில்களிலும் நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் தீவிர சீடராகவும் அவரை தரிசிக்கவும் அவருக்கு பணிவிடை செய்யவும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமலும் இருந்தார். + +ஆதி சங்கரர் காட்டிய அத்வைதத் தத்துவத்தில் முரளீதரர் பரிபூரணமாக நம்பிக்கை உடையவரெனக் கூறப்படுகின்றது. தன் உண்மை இயல்பை உணர்வதே (உள்ள இயல்புநிலை (ஆத்ம ஸாக்ஷாத்காரம்)) எல்லா உயிரினங்களின் குறிக்கோள் என எடுத்துரைக்கின்றார். குறிப்பாக இரமண மகரிஷியின் வாழ்க்கையையும் அவர் இயற்றிய "உபதேச உந்தியார்", "அக்ஷரமணமாலை", "உள்ளது நாற்பது" போன்ற நூல்களைப் பற்றி விரிவுரை செய்துள்ளார். இவற்றில் சில குறுந்தகடுகளாகவும் ஒலி நாடாக்களாகவும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன. + +சுவாமி முரளீதரர் அத்வைதத்தில் நம்பிக்கை உடையவராக இருந்தாலும் கடவுளிடத்தில் பத்தியுடன் இருப்பதாலேயே ஒருவர் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் திட நம்பிக்கை உடையவர் ஆவார். முழுப் பரம்பொருள் தன்னுருவான அருள்மிகு கி்ருஷ்ணனிடமும், பாண்டுரங்கன், குருவாயூரப்பன் முதலிய தெய்வங்களிடத்திலும் அன்பான பக்தி கொள்வதே உகந்தது என்பது இவரது சித்தாந்தம் எனக் கூறுகின்றனர். பக்தியின் வடிவமும் புராணங்களில் தலையாயதுமான ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதின் மூலம் ஒருவர் எளிதாக அருள்மிகு கிருஷ்ணனின் அருகாமையை அடைய முடியும் என்று நம்புபவர். இந்த நெறியில் வந்த மகான்களை சுவாமி முரளீதரர் பின்பற்றுபவர். + +இந்த கலி யுகத்தில் முக்தி அடையவும் மற்றும் பக்தி செய்யவும் மிகவும் எளிதான வழி நாம கீர்த்தனம் என்பதை இவர் நம்புகிறார். மறைகள், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் சனாதன தர்மத்தில் உள்ள மற்ற புராணங்களும் கடவுளை அடைய இதே கருத்தைத்தான் கற்பித்து வருகிறது. சாத்திர நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் இறையின் பெயரை மனதுக்குள் செபித்தால் (ஊன்றிக் கூறிவந்தால்) அது அவரை தூய்மைப்படுத்தும். அதே பெயரை உரக்க செபித்தால் அது சொல்பவரையும் கேட்பவரையும் அந்த இடத்தையும் தூய்மைப்படுத்தும். கலி சந்தரண உபநிசதத்தில் குறிப்பிட்டுள்ளபடி +ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே +ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே +என்ற மகாமந்திரத்தை நாமகீர்த்தனம் செய்வதே சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு ஆனந்த நிலையை அடைய மிக எளிதான வழி என்பதை சுவாமி முரளீதரர் சொல்லி வருகின்றார். + +ஸ்ரீ ஸ்வாமிஜி தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவில்களில் ஸனாதன தர்மம், ஆத்ம ஸாக்ஷாத்காரம், வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம், வேதங்கள், உபநிஷதங்கள், குரு, ஸத்ஸங்கம், பக்தி, நாமகீர்த்தனம் உட்பட பல்வேறு ஆன்மீகத் தலைப்புகளில் உபந்யாசம் செய்து வருகிறார். + +இதைத் தவிர ஆதி சங்கரர், நாமதேவர், சனாபாய், துக்காராம், ஞானதேவர், இராமானுசர், வல்லபாச்சார்யார், சிரீ போதேந்திரர், பகவான் இரமணர், சிரீ சதாசிவ பிரம்மேந்திரர், இராம கிருட்டிண பரமகம்சர், தியாகராசர், ஆழ்வார்கள், சிரீ யோகிராம்சூரத்குமார் போன்ற சாதுக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றி சொற்பொழிவு செய்துள்ளார். தன் சொற்பொழிகளில், வேதங்கள், வைதீக தர்மங்களில் சொல்லிய நம் பழம் பெருமை மிக்க பண்பாடு, கலாச்சாரம் மற்றும் இக்கால மக்கள் நேர்வழியில் சென்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தத் தேவையான சமுதாயக் கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார். + +நல்வாழ்க்கை முறை, நெறிகள், ஆன்மீகம் இவற்றைப்பற்றி சுவாமி முரளீதரர் நல்லுரைகள் தமிழ் பொதிகை அலைபரப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பப்படுகின்றது. + +சுவாமி முரளீதரர் தமிழ், சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் பல கீர்த்தனஙகள் இயற்றி உள்ளார் (இயற்றியும் வருகிறார்) . ஆன்மீக சிந்தனைகள், குரு மகிமை மற்றும் கடவுள் மகிமை பற்றி அமைந்துள்ள இக்கீர்த்தனங்கள் இனிமையாகவும் எளிமையாகவும் பக்தி ததும்புபவையாகவும் அமைந்துள்ளன. + +அண்மையில் சுவாமி முரளீதரர் இயற்றிய "கலி தர்ம உந்தியார்" என்ற முப்பது வரிகளைக்கொண்ட எளிமையான தமிழ்க் கீர்த்தனம் நம் வேதங்களில் கடவுளை அடைய சொல்லியுள்ள பல பாதைகளையும் ஒன்றொன்றாக எடுத்துச் சொல்லி, கடைசியில் நாம சங்கீர்த்தனம் மட்டுமே இக்கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழி என்று நிறுவுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகின்றது + +சுவாமி முரளீதரர் இந்தியாவில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீ பெரும்புதூர் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ள மகாரண்யம் என்னும் அழகான கிராமத்தில் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயம் அமைத்துள்ளார். இங்கு தினமும் சுப்ரபாதத்தில் தொடங்கி டோலொத்ஸவம் முடிய முறையாக வழிபாடு நடந்து வருகிறது. இதைத்தவிர முக்கிய தினங்களான ஏகாதசி, அமாவாசை, சிரவண நட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் சிறப்பு பூசை நடக்கிறது. + +சுவாமி முரளீதரர் 1993 ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் தேதி "குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் மிஷன்" என்னும் இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் நோக்கம் பாகவத தர்மத்தைப் பரப்புவதும் சனாதன தர்மத்தின் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி ஆன்மீக காரியங்களை கடைபிடிப்பதாகக் கூறப்படுகின்றது. + +சுவாமி முரளீதரர் வேதங்களைப் பாதுகாப்பதன் மூலம் அதன் உதவியுடன் சமூகத்தில் உள்ள மக்களின் துயரங்களை நீக்க முடியும் என்��தில் திட நம்பிக்கை உடையவராவார். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் (கடவுளை அடைய மேற்கொள்ளும் சாதனைகள்) வேதங்கள் அடிப்படையாய் இருப்பதால் வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இவரது கொள்கை. இவர் மேற்பார்வையில் 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்ரீ சாந்தீபனி குருகுலம் நிறுவப்பட்டது. வேதங்களை காத்து பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். இங்கு யஜுர் வேதம் மற்றும் சாம வேதம் பழங்கால குருகுல முறைப்படி சொல்லிக்கொடுக்கப் படுகிறது. + +இது போன்ற வேத பாடசாலைகள் தமிழ்நாடு, ஆந்திரப்ரதேசம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் செயல் பட்டு வருகின்றன. இவைகளில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். + +சென்னையில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் இந்த நிறுவனம் அமைக்கபட்டது. சமசுக்கிருத மொழியில் "பிக்ஷா" என்றால் "பிச்சை எடுத்தல்" என்று பொருள். +நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடத்திற்கு வர இயலாதவர்களையும் கலந்து கொள்ள முடியாதவர்களையும் கூட நாமா சென்று அடையவேண்டும் என்பது சுவாமி முரளீதரரின் எண்ணம் என்று அவருடைய சீடர்கள் கூறுகிறார்கள். + +ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே +ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே +என்ற மகாந்திரத்தை ஊர் ஊராகப் பரப்பி மக்களிடம் பிச்சை கேட்பதே இந்த அமைப்பின் நோக்கம். +மனித இனத்தின் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் புறவாழ்வு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் மக்களை பகவானின் நாமத்தைச் சொல்ல வேண்டுவதே இந்த அமைப்பின் குறிக்கோள். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் மகாமந்திர சங்கீர்த்தனம் ஒலித்து அதன் மூலம் மக்கள் பிறவிப்பிணியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை. + +இவ்வமைப்பின் முயற்சியால் ஒவ்வொரு ஊரிலும் வாரம் தோறும் பல வீடுகளில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வருகிறது. இது போல் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இந்தொனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, யுனைடட் கிங்டம், ஒமான், நைஜீரியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தற்சமயம் 350க்கும் மேற்பட்ட நாம கேந்திராக்கள் செயல் பட்டு வருகின்றன. + +உலக அமைதி, செழிப்பு, சகோதரத்துவம் மற்றும் இல்லற சுகங்களுக்கும் ஆன்���ீக முன்னேற்றத்திற்கும் திறவுகோலாக உள்ள இந்த மஹாமந்திர கீர்த்தனத்தைப் பெரிய அளவில் பரப்புவதற்காக நாமத்வார் (ஸம்ஸ்க்ருத மொழியில் இதன் பொருள் : "இறை நாமத்தின் வாயில்") துவக்கப்பட்டது. + +"மதுரமுரளி" சுவாமி முரளீதரரின் எண்ணங்களையும் நல்லுரைகளையும் எதிரொலிக்கும் மாத இதழாக வெளி வருகிறது. அக்ஷரமணமாலை, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பாம்பன் சுவாமிகள், திருவலம் சுவாமிகள், நாம மகிமை, போன்ற தலைப்புகளில் சுவாமி முரளீதரரின் சொற்பொழிவுகள், பஞ்ச கீதஙகள், கலி தர்ம உந்தியார், ராஜ் டிவியில் சுவாமி முரளீதரர் சொற்பொழிவுகள் ஆகியவை ஒலிநாடாக்களாகவும், குறுந்தட்டுகளாகவும் வெளி வந்துள்ளன. சுவாமி முரளீதரரின் எண்ணங்கள், கேள்வி பதில்கள், மற்றும் உரைகளின் தொகுப்புகள் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன. + + + + + + +1882 + +1882 (MDCCCLXXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). + + + + + + + +அகில இந்திய முசுலிம் லீக் + +அகில இந்திய முசுலிம் லீக் 1906 இல் பிரித்தானியர் கால இந்தியாவில் டாக்காவில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். இசுலாம் நாடாகப் பாக்கித்தானை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, பாக்கித்தான்களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் கேரளாவிலும் பாகித்தானிலும் செயற்பட்டு வருகிறது. வங்காளதேசத்தில் 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 இடங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது. + + + + +நெட்சுகேப் நவிகேட்டர் + +நெற்ஸ்கேப் நவிகேற்றர் என்பது 1990 களில் பிரபலமாயிருந்த ஒரு வலையுலாவி ஆகும். நெற்ஸ்கேப் கொம்யூனிகேசன்ஸ் கோப்பரேசனின் ஒருகாலத்தில் முக்கிய தயாரிப்பாகவும் வலையிலாவிச் சந்தையின் பிரதான வலையுலாவியாகவும் இருந்த நெற்ஸ்கேப் 2002 இல் தன் முக்கியத்துவத்தை ஏறத்தாழ முழுவதும் இழந்தது. இதற்கான காரணம் மைக்ரோசொப் தனது வின்டோஸ் இயங்குதளத்தில் இன்ரர்நெற் எக்ஸ்புளோரரை இணைத்தமையும் நெட்ஸ்கேப் நவிகேட்ட உலாவியில் புதுமைகளைப் புகுத்தாமையும் ஆகும். நெற்ஸ்கேப்பின் முதற்பதிப்பு 1994 இல் வெளியிடப்பட்டது. + + + + +ரீயூனியன் + +இரீயுனியன் அல்லது இரேயூனியன் ("Réunion ", ) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு. இது மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ (120 மைல்) தென்மேற்காக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சென்-தெனி. இங்குள்ள மக்கள்தொகை 837,868 (2012 சனவரியின் படி) ஆகும். இங்கு குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள். + +ரீயூனியன் பிரான்சின் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படுகிறது. இது பிரான்சின் 27 பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவாரிப் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது யூரோ வலயத்திலும் உறுப்புரிமை வகிக்கிறது. + +16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னரான ரீயூனியனின் வரலாறு அதிகம் பதியப்படவில்லை. அரபு வணிகர்கள் இத்தீவை "டீனா மொர்காபின்" ("Dina Morgabin"') என அழைத்தனர். கிபி 1153 இல் அல்-சரீபு எல்-திரிசி என்பவர் வரைந்த உலக வரைப்படத்தில் இத்தீவும் இருந்திருக்கலாம். சுவாகிலி அல்லது மலாய் மாலுமிகளும் இங்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. + +1507 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச நாடுகாண் பயணிகளின் வரவே இத்தீவை ஐரோப்பியர்களுக்குக் காட்டிக் கொடுத்தது. ஆனாலும் குறிப்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. குடிமக்களற்ற இத்தீவை முதன் முதலில் பெதுரோ மஸ்கரானசு என்பவர் இதனை முதன் முதலில் கண்டார். இரீயூனியன் அடங்கலாக உள்ள தீவுக் கூட்டத்திற்கு மஸ்கரானே தீவுகள் எனப் பெயரிட்டார். அப்பொலோனியா என்ற புனிதர் பெப்ரவரி 7 இல் (அவரது திருவிழா நாள்) போர்த்துக்கீசர் இத்தீவைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். 1509 இல் டியோகோ லோப்பசு டி சிக்குவேரா என்பவர் இரீயூனியன், ரொட்டிகசு தீவுகளில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. + +ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் போர்த்துக்கீசர் சான்டா அப்பலோனியா தீவுகளை விட்டுச் சென்றதை அடுத்து இத்தீவை பிரான்சியர் கைப்பற்றி மொரிசியசுத் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் இருந்து நிருவகித்து வந்தனர். 1638 யூன் மாதத்தில் பிரான்சுவா கோசி, சலமொன் கோபர்ட் ஆகிய பிரான்சியர் இத்தீவிற்கு முதன் முதலில் சென்றிருந்தா���ும், 1642 ஆம் ஆண்டில் ஜாக் புரீனிசு என்பவர் இத்தீவை பிரான்சுக்காகக் கோரி, மடகாசுகரில் இருந்து சில பிரெஞ்சுக் கிளர்ச்சியாளர்களை அங்கு கொண்டு சென்றார். இக்குற்றவாளிகள் பல ஆண்டுகளின் பின்னர் பிரான்சு திரும்பினர். 1649 ஆம் ஆண்டில் இத்தீவு "இலே போர்போன்" ("Île Bourbon") என அழைக்கப்பட்டது. 1665 இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 20 பேரை அங்கு கொனண்டு சென்று குடியேற்றியதில் இருந்து அங்கு குடியேற்றம் ஆரம்பமானது. +பிரான்சில் போர்போன் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, 1792 ஆகத்து 10 இல் மர்சேய் நகர புரட்சியாளர்களும் பிரெஞ்சுத் தேசியப் படையினரும் இணைந்ததைக் குறிக்க, 1793 ஆம் ஆண்டில் இத்தீவிற்கு "இரீயூனியன்" ("Réunion") எனப் பெயரிடப்பட்டது. 1801 இல் இத்தீவிற்கு பிரான்சின் முதலாம் நெப்போலியன் நினைவாக "இலே பொனபார்ட்டே" ("Île Bonaparte") எனப் பெயரிடப்பட்டது. 1810 இல் கொமடோர் யோசை ரவுலி என்பவர் தலைமையில் அரச கடற்படை இத்தீவைத் தாக்கி கைப்பற்றி, இதன் பெயரை மீண்டும் போர்போன் என மாற்றியது. 1815 ஆம் ஆண்டில் வியன்னா மாநாட்டை அடுத்து இது மீண்டும் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. 1848 பிரெஞ்சுப் புரட்சியில் போர்போன்களின் ஆட்சி மீண்டும் முடிவுக்கு வந்ததை அடுத்து இத்தீவு மீண்டும் இரீயூனியன் எனப் பெயரிடப்பட்டது. + +17 முதல் 19ம் நூற்றாண்டுகள் வரை, பிரெஞ்சு மக்களுடன், இத்தீவுக்கு ஆப்பிரிக்கர், சீனர், மலாய், மற்றும் இந்தியர்களும் குடியேறினர். 1690 முதல், ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலானோர் அடிமைகளே. 1848 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல் அடிமைத்தொழில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒப்பந்தக் கூலிகள் அழைத்து வரப்பட்டனர். 1869 இல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதை அடுத்து, ரீயூனியன் கிழக்கிந்திய வணிக வழிக்கான இத்தீவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. + +ரீயூனியன் 1946 மார்ச் 19 இல் பிரான்சின் கடல் கடந்த மண்டலமாக ஆக்கப்பட்டது. + +ரீயூனியன் தீவு பிரெஞ்சு சட்டப்படி நிருவகிக்கப்படுகிறது. இதன் அரசியலமைப்பு 1958 செப்டம்பர் 28 ஆம் நாளைய பிரெஞ்சு அரசியலமைப்பு ஆகும். 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு வாக்குரிமை உண்டு. பிரான்சின் தேசியப் பேரவைக்கு இங்கிருந்து ஏழு உறுப்பினர்களும், மேலவைக்கு மூன்று உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள். + +ரீயூனியன் தீவு 63 ���ிமீ (39 மைல்) நீளமும், 45 கிமீ (28 மைல்) அகலமும் கொண்டது. 2,512 சதுர கிமீ (970 சதுரமைல்) பரப்பளவுடையது. +இத்தீவின் கிழக்கு எல்லையில் உள்ள ஒரு கேடய எரிமலை (பைத்தன் டி லா போர்னைசி) கடல் மட்டத்தில் இருந்து 2,631 மீட்டர் வரை வெடிக்கக்கூடியது, இது அவாய் தீவுகளின் எரிமலைகளின் இயல்புகளை ஒத்தது. 1640 ஆம் ஆண்டு முதல் இவ்வெரிமலை நூற்றுக்கும் அதிகமான தடவைகள் சீற்றம் அடைந்திருக்கின்றது. கடைசியாக 2010 சனவரி 2 இல் சீற்றம் அடைந்தது. பைத்தன் டெஸ் நெய்ஜெசு என்ற எரிமலை என்பதே இத்தீவின் மிக உயரமான புள்ளி ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 3,070 மீ ஆகும். இந்த இரண்டு எரிமலைகளினது சாய்வான நிலப்பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும். தலைநகர் சென்-டெனிசு போன்ற பயிரிடும் நிலங்களைக் கொண்ட பிரதேசம் தீவின் கரையோரத் தாழ்நிலங்களில் அமைந்துள்ளன. மேற்குக்கரை கடற்பகுதியில் பவளப் பாறைகள் காணப்படுகின்றன. + +ரீயூனியனின் தட்பவெப்பநிலை வெப்ப மண்டலக் காலநிலையை ஒத்தது. ஆனாலும், வெப்பநிலை மாற்றமடையக்கூடியது. ஆண்டின் மே மாதம் முதல் நவம்பர் வரை குளிராகவும், உலர் நிலையிலும் காணப்படும். நவம்பர் முதல் ஏப்ரல் வரி சூடானதாகவும், மழைக்காலமாகவும் இருக்கும். கிழக்குப் பகுதியில் மேற்கை விட மழைவீழ்ச்சி அதிகமாக இருக்கும். கிழக்கின் சில பகுதிகளில் சராசரியாக ஆண்டுக்கு 6 மீட்டர் வரையும், மேற்குக் கரையில் ஒரு மீட்டருக்கும் குறைவானதாகவும் மழைவீழ்ச்சி காணப்படும். 1966 சனவரி 7 முதல் 8 வரை தீவின் மத்திய பகுதியில் சிலாவோசு என்ற இடத்தில் 1,869.9 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இதுவே புவியில் 24 மணி நேரத்தில் பதியப்பட்ட ஆகக்கூடிய மழைவீச்சியாகும். + +ரீயூனியன் தீவின் முக்கிய உற்பத்தி, மற்றும் ஏற்றுமதிப் பொருள் சீனி ஆகும். தற்போது சுற்றுலா மூலம் பெருமளவு வருவாய் பெறப்படுகிறது. 2007 இல், ரீயூனியனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.7 பில்லியன்அமெரிக்க டாலர்கள் ஆகும். 2007 இல் நபர் ஒருவருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 23,501 அமெ. டாலர்கள் (இது சந்தை நாணயப் பரிமாற்றல் விகிதத்தில் ஆகும், கொ.ஆ.ச.வில் அல்ல.) இது ஆப்பிரிக்காவிலேயே அதிகூடியதாகும். + +.re என்பது ரீயூனியனுக்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயராகும். பிரான்சின் .fr என்ற ஆள்களப் பெயரும் பயன்படுத்தப்படுகிறது. + +ரீயூனியன் தீவில் ஆப்பிரிக்கர், இந்தியர்கள், ஐரோப்பியர்கள், மலகாசி, சீனர் ஆகியோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களின் உள்ளூர் பெயர்கள்: யாபு, காப்பிரிகள், மலபார்கள், சாராபுகள் (இருவரும் இந்திய வம்சாவழிகள்), மற்றும் சைனோசுகள் ஆகும். ரீயூனியனில் வாழும் மக்கள் ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாட்டில் இருந்து நூற்றாண்டுகளாகக் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இத்தீவு ஆரம்பத்தில் குடிகளற்ற நாடாக இருந்ததால், உள்ளூர் பழங்குடி மக்கள் எவரும் இங்கு இருக்கவில்லை. இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைத்து இன மக்களும் தமக்கிடையே திருமணம் புரிந்து கலந்து வாழ்கின்றனர். முதலாவதாக இங்கு வந்தவர்கள் இந்தோ-போர்த்துக்கீச வம்சாவழியினர். இவர்கள் மடகாசுகர் பெண்களைத் திருமணம் புரிந்தார்கள். + +1958 பிரெஞ்சு அரசியலமைப்பின் படி, பிரான்சைப் போலவே இங்கு இனவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. இதனால் இனவாரியான மக்கள்தொகை அறியப்படவில்லை. ஆனாலும் ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ஐரோப்பியர் ஆவார். இந்தியர்கள் கிட்டத்தட்ட 25% உம், சீன வம்சாவழியினர் கிட்டத்தட்ட 3% ஆகும். ஆப்பிரிக்க-மலகாசி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்களை விட வியட்நாமியர் சிறு எண்ணிக்கையில் வாழ்கின்றனர். + +இந்திய வம்சாவழியினரில் தென்னிந்தியரும் குஜராத்தியரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களை விட பீகாரியர், மற்றும் பல இந்திய மாநிலத்தவரும் வாழ்கின்றனர். வடமேற்கு இந்தியாவில் இருந்து, குறிப்பாக குஜராத்தில் இருந்து ஓரளவு முசுலிம்களும் வாழ்கின்றனர். இவர்கள்சாராபுகள் என அழைக்கப்படுகின்றனர். + +எந்த இனத்தவர் என்ற பாகுபாடில்லாமல், இத்தீவில் பிறந்து வளர்ந்தவர்களை கிரியோல்கள் என அழைக்கின்றார்கள். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மை இனமாகும். கிரியோல்களை விட ஏனையோர் அண்மைக்காலத்தில் பிரான்சில் இருந்து குடிபெயர்ந்த சோரெல்சுகள், மற்றும் மயோட்டே, கொமொரோசு ஆகிய இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர். + +இரீயூனியனில் பெரும்பாலானோர் கத்தோலிக்க மதத்தவர் ஆவர். இவர்களுடன் இந்து, இசுலாம், சீன நாட்டு சமயம், பௌத்தம் ஆகிய சமயத்தவரும் வாழ்கின்றனர். இங்கு அனைத்து சமயத்தவர்களும் அரசுத் தலையீடு இன்றி சுதந்திரமாக தமது சமயத்தைப் பேணி வருகின்றனர். பிரான்சில் சமயம் வாரியாக மக்கள் கணக்கெடுப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், ரீயூனியனிலும் மத ரீதியான தொகை அண்ணளவாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மொத்த மக்கள்தொகையில் கிறித்தவர்கள் 84.9% ஆகவும், இந்துக்கள் 6.7% ஆகவும், முசுலிம்கள் 2.15% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள பெரிய நகரங்களில் முசுலிம் பள்ளிவாசல்கள் உள்ளன. + +பிரான்சிய மொழி ரீயூனியனின் அதிகாரபூர்வ மொழியாகும். ரீயூனியன் கிரியோல் மொழி இத்தீவின் நாட்டக மொழி, பெரும்பாலானோர் இம்மொழியை பேசுகின்றனர். இவற்றை விட, மாண்டரின், கேசியம், காந்தோநீசிய மொழி ஆகிய மொழிகள் சீன சமூகத்தினரால் பேசப்படுகிறது. ஆனாலும், சீன மக்களின் புதிய தலைமுறையினர் பொதுவாக பிரெஞ்சு, கிரியோல் மொழிகளையே பேசுகின்றனர். இந்தியர்களின் மொழிகளைப் பேசுவோரும் (குறிப்பாக தமிழ், உருது, குஜராத்தி) இங்கு குறைந்து வருகின்றனர். அரபு மொழி இங்குள்ள பள்ளிவாசல்களில் பயிற்றப்படுகிறது. + +பிரெஞ்சு பாடசாலைகளின் பாடத்திட்டத்துக்கமைய, ஆங்கில மொழி இங்கு கட்டாய இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனாலும், பிரான்சைப் போன்றே, மிகக் குறைவானோரே ஆங்கிலப் புலமையுள்ளவர்களாக உள்ளனர். சில பாடசாலைகளில் செருமன், எசுப்பானியம், தமிழ் மொழிகள் மூன்றாம் விருப்ப மொழிகளாகப் பயிற்றப்படுகின்றது. + +இத்தீவில் பொதுநலத்திற்கு அச்சுறுத்தல் அதிகம் இல்லை. 2005/2006 காலப்பகுதியில் ரீயூனியனில் சிக்குன்குனியா நோய் கிழக்காப்பிரிக்காவில் பரவியது. இதனால் இத்தீவில் மூன்றில் ஒரு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. + +இரீயூனியனின் கலாசாரம், பண்பாடு ஆகியன ஐரோப்பிய, ஆப்பிரிக்க, இந்திய, சீன, மற்றும் தீவுக்கான பண்பாடுகளின் கலப்பு ஆகும். பிரெஞ்சு கலப்பில் உருவான இரீயூனியன் கிரியோல் மொழி பரவலாகப் பேசப்படுகிறது. ஆப்பிரிக்க, இந்திய, சீன. ஐரோப்பிய கலப்பு உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன. + +ரீயூனியன் தீவில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 2,784 கிமீ தூரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடருந்து சேவைகள் இங்கு இல்லை. ஆனாலும், மிகக் குறுகிய தூர சுற்றுலாப் பயணிகள் தொடருந்து சேவை உள்ளது. இத்தீவில் இரண்டு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. தலைநகருக்கு அருகில் இருக்கும் றோலண்ட் காரோசு பன்னாட்டு வானூர்தி நிலையத்தினூடாக மடகாசுகர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், தீவின் தெற்கே சான் பியேர் நகரில் உள்ள பியேரேபொன்ட்சு வானூர்தி நிலையம் ஊடாக மொறீசியசு, மடகாசுகர் ஆகிய நாடுகளுக்கும் வானூர்தி சேவைகள் நடத்தப்படுகின்றன. + + + + + + +பனிக்கரடி + +பனிக்கரடி (துருவக் கரடி, "polar bear"), நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக்கு மாக்கடல் என்று இவ் உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் ஒரோவொருக்கால் கூறுவதுண்டு. இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத் தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. + +இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய +ஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள் (fossil records) ஏதும் இல்லை எனச் சொல்லப்படுகிறது. + +இனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம். + +இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும் + +வேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும். + +புதிதாய் பூமியைப் பார்த்த போலார��� கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது. + + + + +யமாந்தகர் + +யமாந்தகர்(यमान्तक) வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு யிதம் ஆவார். யாமாந்தகர் மஞ்சுஸ்ரீயின் உக்கிர அவதாரமாக கருதப்படுகிறார். மேலும் இவர் தர்மபாலர்களில் ஒருவர் ஆவார். + +"யாமாந்தக" என்ற வடமொழிப்பெயரை "யம" மற்றும் "அந்த(अन्त)" என பிரிக்கலாம். 'யம' என்பது இறப்பின் கடவுளான யமனை குறிக்கும், 'அந்த(अन्त)' என்றால் முடிவு என்று பொருள். எனவே யமாந்தகர் என்றால் மரணத்தை அழிப்பவர் என்று பொருள். + +பௌத்தத்தில் மரணத்தை அழிப்பது என்பது சம்சார பந்தத்திலிருந்து விடுபட்ட அனைத்து புத்தர்களின் குணமாகும் குறிக்கும். எனவே யமாந்தகர் மகாயானத்தில் போதி நிலையை அடைவதற்கு சம்சார பந்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகிறார். + +"யமாந்தகர்" அல்லது "ஸ்ரீ பகவான் யமாந்தகர்" என்பது வஜ்ரபைரவரின் அல்லது ஸ்ரீ வஜ்ரமகா பைரவரின் இன்னொரு பெயராகும். வஜ்ரபைரவர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவரின் அம்சமாக கருதப்படுபவர். மஞ்சுஸ்ரீ போதிசத்துவர்,ஸ்ரீ வஜ்ரபைரவர், ஸ்ரீ பகவான் யமாந்தகர் ஆகியோர் தர்மகாய தத்துவத்தை உணர்த்துகின்றனர். + +இறப்பு என்பதற்கு உள்ளார்ந்த உறுதியான இருப்பு இல்லாதது. எப்போது ஒருவரின் மனது இதை அறிந்து கொள்கிறது அது மரணத்தை வென்றாதாகிறது. அப்போது யமாந்தகரின் மரணத்தை மீறிய நிலைக்கு செல்லமுடியும். + +யமாந்த தந்திரத்தில் மூன்று விதமான மரணங்கள் குறிக்கப்பெறுகின்றன: வெளி மரணம், அதாவது உடலின் மரணம், உள் மரணம் அதவது மாயையினை உண்மையாக கருதுவது, ரகசிய மரணம், அதாவது மனம் மற்றும் உடலினை இரு தனித்த கூறுகளாக கருதுவது. இம்மூன்று மரண நிலைகளையும் வெல்பவர் புத்த நிலையினை அடைகிறார். + + + + + + +வஜ்ரயோகினி + +வஜ்ரயோகினி அல்லது வஜ்ரவராகி என்பது வஜ்ரயான பௌத்தத்தில் யிதமாக வணங்கப்படும் ஒரு டாகினி(डाकिनी) ஆவார். வஜ்ரயோகினியின் வழிபாடு இந்தியாவில் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் அறிவின்மையின் மீது கொள்ளும் வெற்றியுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். வாருணி(மது மற்றும் குடிகாரர்களின் அதிதேவதை) இவருடைய மறைவான அம்சமாக கருதப்படுகிறார். பொதுவாக, வஜ்ரயோகினி சிவப்பு நிறமுடைய இளம் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவரது நெற்றியில் முக்கண் காணப்படுகிறது. மற்ற தக்கினிகளை போலவே வஜ்ரயோகினியும் திகம்பர(வானத்தையே ஆடையாக கொளவது) உடையுடன் திகழ்கிறார். மேலும் இவர் சேத சாதனம்(छेद साधनं) எனகிற தந்திர சாதனத்தின் முக்கியமான அம்சமாக இருக்கின்றார். வஜ்ரயோகினியின் வழிபாடு உலகப்பற்று அதிகமாக உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடியது என கருதப்படுகிறது. இவருடைய துணை சக்ரசம்வரர். இவர் அவ்வப்போது வஜ்ரயோகினியின் தோளில் ஈட்டியாக சித்தரிக்கப்படுகிறார். வஜ்ரயோகினிக்கும், சின்ன்மஸ்தா என்ற இந்து தெய்வத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. + +வஜ்ரயோகினியின் மந்திரம் பின்வருமாறு: + +" ஓம் வஜ்ரயோகினி ஹூம் ஹூம் பட் பட் " +" ॐ वज्रयोगिनि हूँ हूँ फट् फट् " + + + + + + + +சக்ரசம்வரர் + +சக்ரசம்வரர் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு முக்கியமான யிதம் ஆவார். சக்ரசம்வரர் நீல நிறத்துடனும், நான்முகனாகவும், பன்னிருகரங்கள் உடையவராக காட்சி அளிக்கின்றார். சக்ரசமவரர் தன் துணை வஜ்ரவராகியுடனே எப்போதும் சித்தரிக்கப்படுகிறார். இவருக்கு பல்வேறு கரங்களுடன் கூடிய பிற உருவங்களும் உள்ளன்ர். சக்ரசம்வரரும் வஜ்ரவராகியும் வேறு வேறு அல்லர். இருவரும் ஒரே தத்துவத்தின் இரு வேறு கூறுகளை குறிப்பிவர்கள் ஆவர். இவரை "ஹேருகர்" எனவும் அழைப்பர் + + + + + +வஜ்ரகீலயர் + +வஜ்ரகீலயர் அனைத்து புத்தர்களின் ஆற்றலின் செயல்பாடுகளின் உருவாக கருதப்படும் யிதம் ஆவார்.தர்மத்தை பின்பற்றுகையில் வரும் தடைகளையும் எதிர்மறையான சிந்தனைக்களையும் அழிக்கவே இவர் உக்கிரமான ஆனால் கருணையுடைய உருவத்தில் காட்சியளிக்கிறார். + +வஜ்ரகீலயம் என்பது பௌத்தத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சம்பிரதாய குறுவாள் ஆகும். இதை இந்து மதத்தில் கீலயம் என்று அழைப்பர். + +தடைகளையும் தெளிவற்ற நிலைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு முக்கி��மான வஜ்ரயான தேவதாமூர்த்தியாவார். பத்மசம்பவர் கூட தடைகளை நீக்குவதற்காக முதலில் வஜ்ரகீலயரையே வணங்கினார். + +வஜ்ரகீலயர் புத்தர்களின் மனதில் நிகழும் செயல்களின் உருவகமாகவும் கருதப்படுகிறார். சில சமயங்களில் இவர் வஜ்ரபாணியின் உக்கிர உருவமாகவும் கருதப்படுகிறார். சாக்யப பிரிவின் முக்கியான தேவதாமூர்த்தியாவார். இவர் வஜ்ரகுமாரர் எனவும் அழைக்கப்படுகிறார். + +வஜ்ரகீலயர் மூன்று தலைகள், ஆறு கரங்கள் மற்று நான்கு பாதங்களுடன் காட்சிதருகிறார். வஜ்ர கீலயரின் 3 வலக்கரங்களின் முன் உள்ள வலக்கரத்தை தவிர ஏனைய இரண்டு கரங்களிலும் முறையே ஐந்து மற்று ஒன்பது கவர்முட்கருவிகள் உள்ளன. முன்னுள்ள வலக்கரத்தில் கீலயத்துடனும் வரத முத்திரையுடனும் திகழ்கிறது. வலக்கரங்கள் மூன்று முறையே திரிரத்தினம், திரிசூலம் மற்றும் கீலயம் ஏந்திய வண்ணம் உள்ளன. இவரது பின் புறத்தில் யானையின் தோலும், மனிதனின் தோல் முன் புறத்தில் மார்பின் குறுக்கே காணப்படுகிறது. இவரது இடுப்பில் புலியின் தோல் கட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் நாகாபரணங்களை அனிந்தவராக காட்சிதருகிறார். ஒட்டுமொத்தத்தில் இவரது சித்தரிப்பு மிகவும் உக்கிரமாக காட்டப்படுகிறது. எனினும் இவர் கருணை நிறைந்தவராக கருதப்படுகிறார். + +வஜ்ரகீலயரின் பூஜை சாக்யப பிரிவினாரால் இடைவிடாது நடத்துப்பட்டு வருகிறது. + + + + + +ஹயக்ரீவர் (பௌத்தம்) + +ஹயக்ரீவர் என்பது அவலோகிதேஷ்வரரின் ஒரு உக்கிர அவதாரம் ஆகும். 108 விதமான ஹயக்ரீவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹயக்ரீவர் நோய்களை அதிலும் குறிபாக தோல் நோய்க்ளை தீர்ப்பவராக நம்பப்படுகிறது. தொழுநோயைக்கூட குணப்படுத்தும் தன்மை உடையவரக இவர் நம்பப்படுகிறார். இவர் திபெத்திய பௌத்தத்தில் யிதமாகவும் வணங்கப்படுகிறார். + +திபெத்திய குதிரை வணிகர்கள் இவரை வணங்கியதாக கூற்ப்படுகிறது. ஏனெனில் இவர் குதிரையைபோல் கனைத்து அசுரர்களை விரட்டுவதாக அவர்கள் நம்பினர். + +இவர் ஒரு முகம், இருகரங்கள் மற்றும் இரு கால்களுடன் மிகவும் உக்கிரமாக காட்சிதருகிறார். இவரது மூன்று கண்களும் மிகவும் கோபம் கொண்டவையாக காணப்படுகின்றன. மேலும் இவருக்கு கோரப்பற்களும், மிகுந்த உக்கிரமும், பெருத்த உந்தியும், காணப்படுகின்றன. இவருடைய வலக்கரத்தில் வாளேந்தியவராக உள்ளார். மேலும் இவர் நாகாபரணங்கள் அனிந்தவராகவும் காணப்படுகின்றார். இந்த உக்கிர குணம், தடைகளை விலக்குவதற்காக உதவும் அவலோகிதேஷ்வரரின் கருணை குணத்தின் உறுதியை இது காட்டுகிறது. மேலும் இவர் குதிரை முகம் உடையவராகவும் காட்சி தருகின்றார். + + + + +கட்டு வள்ளம் + +கட்டு வள்ளம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் காணப்படும் ஒருவகையான படகு வீடு ஆகும். கட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும். +இப்படகு வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க அதன் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது. + +சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகள் இல்லாத காலங்களில் வணிகர்களின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு இவை பெரிதும் பயன்பட்டன. + +இப்படகுகள் படகோட்டிகள் தூங்குவதற்கும் சமைப்பதற்கும் போதுமான வசதிகளைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் படகோட்டிகளின் குடும்பமும் படகில் உடன் இருந்தது. இப்படகோட்டிகள் படகு வலிக்கும் போது பாடும் பாடல்களும் அவர்களுடைய சமையல் முறைகளும் மிகவும் புகழ்பெற்றவை. + + + + + +சுஹாசினி + +சுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார். + +இயக்குநர் மணிரத்தினத்தின் ராவ���ன் படத்தில் வசனம் எழுதினார். + + + +சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். + + + + +ஹேருகர்கள் + +"ஹேருகர் என்பது சக்ரசம்வரின் இன்னொரு பெயரும் ஆகும் " + +ஹேருகர்கள்(हेरुक) என்பது திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை குறிக்கும். இவர்கள் உலகத்தின் உயிர்கள் உய்ய வேண்டி உக்கிர உருவத்தை கொண்டுள்ளனர். ஹேருகர்கள் சூன்யத்தன்மையின் உருவகமாக கருதப்படுபவர்கள் + +ஹேருகர் என்பதை "ஹே" + "ருக"(रुक) என்ற இருசொற்கள் இணைந்து ஹேருகர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. ருக - என்றால் அளவில்லாத என்று பொருள். + +கீழ்க்காணும் எட்டு ஹேருகர்கள் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு குணங்களின் அதிதேவதையாகவும் கருதப்படுகின்றனர். + + + + + + + + +ஹேவஜ்ரர் + +ஹேவஜ்ரர் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் மிகவும் முக்கியமான யிதம் ஆவார். இவருடைய வழிபாடு, சடங்குகள், சாதனம், முதலியவை ஹேவஜ்ர தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது துணை நைராத்மியை ஆவார் + +ஹேவரருக்கு ஹேவஜ்ர தந்திரத்தில் நான்கு உருவங்களும் சம்புத தந்திரத்தில் நான்கு உருவங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. + + +ஹேவஜ்ர தந்திரத்தில் கீழ்க்காணும் மந்திரம் காணப்படுகிறது. + +" அகாரோ முகம் சர்வதர்மாணாம் ஆத்யனுத்பன்னவாத் ஆ: ஹூம் பட் ஸ்வாஹா" +" अकारो मुखं सर्वधर्माणां अद्यनुत्पन्नवात् आ: हूँ फट् स्वाहा " +ஹேவஜ்ரர் ஓவிங்கள் + + + + + + + +பூந்தோட்டம் (இலங்கை) + +பூந்தோட்டம் என்பது [ஈழத்தின்] வவுனியா நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள அழகிய ஒரு கிராமமாகும்.. + +இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வியற் கல்லூரி, மற்றும் ஏறத்தாழ 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயம் ஆகியன இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கின்றன. + + + + +பூந்தோட்டம் + +தாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும். + +இவை இயற்கையை அப்படியே பேணும் பூங்காக்களிலிருந்தும், மரக்கறி தோட்டம், வயல்கள் ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்டவை. + + + + +காலச்சக்கர மூர்த்தி + +காலசக்கர மூர்த்தி திபெத்திய பௌத்ததில் வண்ங்கப்படும் ஒரு யிதம் ஆவார். காலசக்கர மூர்த்தி காலசக்கரத்தின் உருவகமாக வணங்கப்படுபவர். அனைத்தும் காலத்துக்கு உட்பட்டு உள்ளதால் காலசக்கரர் அனைத்தும் அறிந்தவராக கருதப்படுகிறார். இவருடைய துணை காலசக்கரி அல்லது கலிசக்கரா என அழைக்கப்படுகிறார். காலசக்கரி காலத்தை கடந்தவராக கருதப்படுகிறார். + +பௌத்த புராணங்களின்படி, சம்பால இராஜ்ஜியத்தின் அரசர் ஸுசந்திரர் புத்தரிடம் உலக இன்பத்தை விடுக்காமல் எவ்வாறு தர்மத்தை பின்பற்றுவது என்பதை உபதேசிக்குமாறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட புத்தர் ஒரே நேரத்தில் இரு இடங்களில் காட்சி அளிக்கலானார். ஒரு இடத்தில் பிரக்ஞபராமித சூத்திரத்தையும், இன்னொரு இடத்தில் காலசக்கர மூர்த்தியாய் தோன்றி அரசர் ஸுசந்திரருக்கு காலச்சக்கர தந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது. + +இவருடைய மந்திரம் + + + + + +யிதம் + +வஜ்ரயான பௌத்தத்தில் யிதம் அல்லது இஷ்டதேவதை(வடமொழி) என்பது தியானத்திற்கான கருப்பொருளாக ஏற்றுக்கொள்ளப்படும் முழுவதும் போதி நிலை அடைந்த ஒரு தேவதாமூர்த்தியை குறிக்கும். ஒருவர் தன்னுடைய யிதத்தை தேர்ந்தெடுத்தும் அந்த யிதத்தை நோக்கியே அவருடைய தியானம் அமைந்திருக்கும். எனவே யிதம் என்பதை தியான் மூர்த்தி என்றும் கொள்ளலாம் + +யிதம் என்பது தியானத்தில் கருப்பொருளாக இருக்கின்ற போதி நிலை அடைந்த ஒருவரைக் குறிக்கும். ஒருவர் தன்னுடைய யிதத்துடன் தன்னை அடையாளம் கண்டுகொள்வதால் புத்த நிலையை அடைவது மிகவும் எளிதாகிறது. தன்னுடைய யிதத்தையே போதி நிலைக்கான வழிகாட்டியா கொள்கின்றனர். ஹயக்ரீவர், வஜ்ரகீலயர்,யமாந்தகர்,ஹேவஜ்ரர், சக்ரசம்வரர், வஜ்ரயோகினி,காலச்சக்கர மூர்த்தி ஆகியோர் வழக்கமாக யிதங்களாக வணங்கப்படுகின்றனர். இருப்பினும், புத்தர்களையும் போதிசத்துவர்களையும், தர்மபாலகர்களையும் கூட யிதமாக கருதி வணங்கலாம்0. அவலோகிதேஷ்வரர், தாரா, மஞ்சுஸ்ரீ, நைராத்மியை ஆகியோரும் யிதங்களாக தேர்ந்தெடுக்கபடுவதுண்டு. + +யிதம் எனபது ஒருவர் எளிதாக போதி நி���ை அடைவதற்காக வணகங்கப்படுபவர் ஆவார். எனவே யிதம் என்பது யித்த்தை தேர்ந்தெடுத்த்வரின் உள்ளார்ந்த போதி நிலையையும் குறிக்கக்கூடியது. ஒருவர் யிதத்தை தேர்ந்தெடுத்தவுடன், அவர் தன்னை அந்த யிதத்தின் குணங்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு யிதத்தின் அனைத்து நற்குணங்களும் தான் அடையும் வரைஅந்த யிதத்தை நோக்கி தியான செய்வார். எனவே யிதத்தை தேர்ந்தெடுக்கும் போது தன் குணத்துடன் ஒத்த குணமுள்ள யிதத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். + +எனவே யிதம் என்பது, ஒருவர் தன்னுடைய மனதை போதி நிலை அடைய வேண்டி பக்குவப்படுத்த உதவுவதற்காக வணங்கப்படும் ஒரு தேவதாமூர்த்தி ஆகும். தன் யிதத்துடன் அனைத்து நிலைகளிலும் ஒன்றிப்போகும் போது ஒருவருக்கு போதி நிலை கிடைக்கிறது + + + + + + +சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட் + +சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்(Superhuman Samurai Syber Squad) என்பது ஓர் அமெரிக்க தொலைக்காட்சித் தொடராகும். இது செப்டம்பர் 12 1994 முதல் ஜூலை 1995 வரை ABC என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலும் தூர்தர்ஷனின் இரண்டாம் அலைவரிசையில் இந்தியாவிலும் ஒளிபரப்பப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற பவர் ரேஞ்சர்ஸ் தொடருடன் நெருங்கிய ஒற்றுமைகள் உடைய தொடராகும். + +இத்தொடர் ஜப்பானின் "டென்கோ சோஜின் க்ரிட்மேன்" என்ற தொலைக்காட்சித் தொடரின் ஆங்கிலத்தழுவலாகும் + +கீலோக்கான் என்ற தீய சக்தி கணினியில் வாழ்ந்து வருகிறது. கீலோக்கான் மேல்கம் ஃபிராங்க் என்பவரின் உதவியுடன் மின்னணு அமைப்புகளை சீர்குலைக்க கணினி வைரஸ்களை உருவாக்குகிறான். ஒரு வித விபத்தினால், சாம் காலின்ஸ் என்பவன் கணினியுள் இழுக்கப்பட்டு செர்வோ என்ற மின்னணு உருவத்தில் மாறுகின்றார். இவனும் இவனது நண்பர்களும் அவர்களுடைய சாமுராய் வாகணங்களுடன் மின்னணு உலகில் நுழைந்து எவ்வாறு கீலோக்கானை எதிர்க்கின்றனர் என்பது தான் கதை. செர்வொவும் அவனது நண்பர்களின் வாகணங்களும் இணைந்து சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட் ஆக உருமாறுகின்றனர். + +சாம் காலின்ஸும் அவனது நண்பர்களும் சாமுராய் குழு என்ற இசைக்குழுவை நடத்தி வருகின்றனர். + + + + + +இத்தொடரில் 53 அங்கங்கள் ஒளிபரப்���ப்பட்டன. இது சனிக்கிழமை அதிகாலையில் ABC தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. எனினும் இது பவர் ரேஞ்சர்ஸ் தொடரைப் போல அவ்வளவாக புகழ்ப்பெறவில்லை. இருந்தாலும் ஜப்பானிய மொழியின் மூல க்ரிட்மேன் தொடரை விட நீண்ட காலத்துக்கு ஒளிபரப்பட்டது. கிரிட்மேன் தொடர் வெறும் 39 அங்கங்கள் வரையே நீடித்தது. + + + + +நியான்ஃபோ + +நியான்ஃபோ(சீனம்) அல்லது நெம்புட்ஸு(ஜப்பானியம்) என்பது மகாயான பௌத்தத்தின் சுகவதி பிரிவினரால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். இதற்கு புத்தரின் நினைவு என பொருள் கொள்ளலாம். பக்தியின் காரணமாக அமிதாப புத்தரை வாழ்த்துவதையே இந்தச்சொல் குறிப்பிடுகிறது. இதை அவ்வபோது கூறுவதினால் அமிதாபரின் சுகவதியில் பிறக்கலாம் என சுகவதி பிரிவினரால் கருதப்படுகிறது. + +"நமோ அமிதாப புத்த" என்ற சமஸ்கிருத சொற்றொடரே ஆரம்ப காலத்தில் நெம்புட்ஸுவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு "அமிதாப புத்தர் போற்றி" என்று பொருள். எனினும் பௌத்தம் பல நாடுகளுக்கு பரவிய வேளையில் இந்த சொற்றொடர் அந்தந்த நாட்டின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றுவிட்டது. + +பின் வரும் அட்டவனையில் இம்மந்திரத்தின் வெவ்வேறு ஒலிப்புகளைக் காணலாம்: + +அமிதாபரின் பெயரை நினைவுக்கூர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தால் அமிதாபரின் சுகவதியில் மறுபிறப்பு கிடைக்குமென சுகவதி பௌத்தத்தினர் நம்புகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இச்செயல் எண்ணிலடங்கா தீய கருமங்களை அழிக்கும் வல்லமை உடையது. + +சுகவதி பௌத்தத்தின் "ஜோடோ ஷின்ஷு" பிரிவனரின் படி "நியான்ஃபோ" என்பதை வேண்டுதலாக இல்லாமல் அமிதாப புத்தரின் மேதுள்ள பக்தியில் செய்யப்படுவது எனக்கருதினர். ஏனெனில் எப்போது ஒருவருக்கு அமிதாப புத்தரின் மீது நம்பிக்கை வருகிறதோ, அப்பொழுதே அவர் சுகவதியில் மறுபிறப்பெய்துவது உறுதி செய்யப்படுகிறது. + +"நியான்ஃபோ"வின் தத்துவம் சுகவதிவியூக சூத்திரத்தில் இருந்து பெற்ப்படுகிறது. இந்த சூத்தரத்தின் படி, அமிதாபர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காக 48 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்கிறார். + +அவரது 18வது உறுதிமொழியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. +இதன் எளிமையின் காரணமாக பொது மக்களிடம் இந்த நெம்புட்ஸு மிகவும் புகழ் பெற்று விளங்கத்தொடங்கியது. + + + + + + +ஓம் மணி பத்மே ஹூம் + +ஓம் மணி பத்மே ஹூம்(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ, IAST:), என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம்(ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் "ஷடாக்ஷரி"(ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார். +அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது. + +பல்வேறு எழுத்துமுறைகளில் மணி மந்திரம்: + + +இந்த மந்திரத்துக்கு பல்வேறு பௌத்த பிரிவினர்களால் பல்வேறு பொருட்கள் கூறப்படுகின்றன. + +மணி பத்மே என்றால் தாமரையில் இருக்கும் மணி என்று பொருள்(பத்மம் - தாமரை). இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும். ஆனால் டோனால்ட் லோபெஸ் என்பவர் மணிபத்மே என்பது மணிபத்மா என்பதின் பெண்பால் விளி எனக்கருதுகின்றார்(வடமொழியில் பெண்பால் பெயர்களை விளிக்கும் போது கடையெழுத்து ஏகாரம் பெறும்). எனவே இது மணிபத்மா என்ற போதிசத்துவரை குறித்தது என இவர் கருதுகின்றார். மணிபத்ம(கையில் ரத்தினமும் தாமரையும் ஏந்தியவர்) என்பது அவலோகிதெஷ்வரரின் இன்னொரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓம் என்பது அனைத்து மந்திரங்களிலும் முன்னொட்டாக வருவது மிகவும் புனிதமாக கருதப்படுவது. ஹூம் என்பது ஒரு பீஜாக்‌ஷரம் ஆகும். குறிப்பித்தக்க பௌத்த மந்திரங்களில் இது பின்னொட்டாக வருகிறது. + +எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முத���்மையானது என பல மகாயான சூத்திரங்கள் கூறுகின்றன. + +இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்" + +ஷிங்கோன் பௌத்தத்திலும் இந்த மந்திரம் பரவலாக பயனபடுத்தப்படுகிறது. எனினும் இந்த மந்திரத்தை விட ஓம் அரோ-ருக்ய ஸ்வாஹா என்ற மந்திரத்தையே அவலோகிதேஷ்வரருக்காக அதிகமாக பயன்படுத்துகின்றனர். + +இந்த மந்திரத்தில் இறுதியில் ஹ்ரீ:(ह्री:) என்ற பீஜாக்‌ஷரம் எப்போதாவது இணைக்கப்படுவதுண்டு. ஹ்ரீ: என்பது அமிதாப புத்தரின் பீஜாக்‌ஷரம் ஆகும். அவலோகிதேஷ்வரர் அமிதாபரின் அம்சமாக கருதப்படுவதால் இதை மணி மந்திரத்தில் இறுதியில் சேர்க்கப்படுவதுண்டு. + + + + + + + +ஜுவால மந்திரம் + +ஜுவால மந்திரம், ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மந்திரங்களில் ஒன்றாகும். எனினும் இம்மந்திரம் மற்ற வஜ்ரயான பிரிவுகளில் வலியுறுத்தப்படுவதில்லை. இதை மந்திரம் "அமோகபாஷாகல்பராஜ சூத்திரத்தில்" இருந்து பெறப்பட்டது ஆகும். அம்மந்திரம் பின் வருமாறு: + +இந்த மந்திரம் ஆணவம் இன்றியும் மிகுந்த நம்பிக்கையுடனும் தெளிவான மனத்துடனும் உச்சரித்து வந்தால், வைரோசனர் தமது முத்திரையை வைத்து அறியாமையும் மாயையும் அகற்றுவார் என ஷிங்கோன் பௌத்தத்தில் நம்பப்படுகிறது. + +இந்த மந்திரம் நெம்புட்ஸுவின் பிரபலாமான அதே காலக்கட்டத்தில் மியோயே என்பவரால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டையுமே பௌத்தர்கள் பின்பற்றி வந்தனர். இறந்தவரின் உடலின் மீது இந்த மந்திரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட தூய்மையான மண்ணை தூவினால் இறந்தவருடைய தீய கருமங்கள் அழிந்து அவர் நரகத்தில் பிறப்பது தடுக்கப்படுகிறது என நம்புகின்றனர். + + + + + +சீறாப் புராணம் + +தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற��றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும். + +இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது. +முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன. +முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 23 படலங்கள் உள்ளன... + +இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன. + +நபிப்பட்டம் பெற்ற படலம் + + +இப்பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்(ஹிஜிறத்துக் காண்டம்காண்டம் அமைந்துள்ளது. இக்காண்டம், மொத்தம் 47 படலங்களைப் பெற்றுள்ளது.அவை வருமாறு;- + + + + + +ததாகதகர்ப தத்துவம் + +ததாகதகர்ப(तथागतगर्भ) தத்துவம் என்பது பௌத்தத்தின் மிக முக்கியமான தத்துவங்களுள் ஒன்றாகும். ததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தநிலையை அடையக்கூடிய தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது. ததாகதகர்பம் ஆத்மனின் உண்மையான சாரம் என புத்தர் மகாபரிநிர்வாண சூத்திரத்தில் கூறியுள்ளார். இது அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது. ஆனால் உலகப்பற்றினாலும், தவறான கருத்துகள், பொருத்தமில்லாத மனநிலை முதலியவற்றின் காரணமாக இந்த ததாகதகர்பம் மனத்திரையால் மறைக்கப்பட்டு அணுக முடியாத நிலையில் உள்ளது. + +ததாகதகர்ப (तथागतगर्भ)என்பதை "ததாகத(तथागत)" மற்றும் "கர்ப(गर्भ)" என இருக்கூறுகளாக பிரிக்கலாம். ததாகத என்பது புத்தரைக்குறிக்கும் ஒரு சொல். "கர்ப" என்றால் "உட்கொண்டிருத்தல்" என பொருள் கொள்ளலாம். புத்தநிலையை உட்கொண்டிருத்தல் என குறிக்கும் வகையில் இது ததாகதகர்பம் என ஆனதாக கொள்ளலாம். + +ததாகதகர்ப சூத்திரங்களில் ததாகதகர்பம், "முழுமையான ஞானம் பெற்ற புத்தரைப்போல் கம்பீரத்துடன் பத்மாசனத்தின் எல்லா உயிர்களின் உடலுள் அமர்ந்த நிலையில்" உள்ள ஒன்றாக உருவகப்படுத்துகிறது. மேலும் இந்த ததாகதகர்பத்தை ஒரு புத்தர் மட்டுமே கான இயலும் எ��வும் அந்த சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு உருவகமே என்பதை இங்கு நினைவுக்கூறுதல் வேண்டும். தத்துவ ரீதியான விளக்கங்கள் "மகாபரிநிர்வாண சூத்திரம்" போன்ற சூத்திரங்களில் காணப்படுகின்றன. இந்த சூத்திரங்களில் ததாகதகர்பம் என்பது உள்ளார்ந்த சாரமாகவும், அழிவற்றதாகவும், அனைத்து உயிரிகளினூடும் இருக்கும் ஒன்றாகவும் இந்த சூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. + +ததாகதகர்ப தத்துவம், சூன்யத்தனைமைக்கு மாறான தத்துவமாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஏனெனில் சூன்யத்தன்மை தத்துவத்தில் புத்தநிலையும் நிர்வாணமும் கூட ஒரு வக்கையில் நிலையற்றதாக கருதப்படுகிறது. ஆனால் ததாகதகர்பமோ புத்தநிலை என்று நிலையானதென விளம்புகிறது. + +ததாகதகர்பத்தை விளக்க பல்வேறு முயற்சிகள் மகாயான சூத்திரங்களில் காணப்பட்டாலும், இந்த தத்துவம் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது. ஸ்ரீமாலா சூத்திரத்தில் இவ்வாறாக கூறுப்பட்டுள்ளது," ததாகதகர்பம் என்பது புத்தர்களின் அறிவுக்கு உட்பட்டது. இந்த தத்துவத்தை பத்தாவது பூமியை அடைந்து போதிசத்துவர்களாலும் தெளிவாக அறிந்து கொள்ள இயலாது. எப்போது ஒரு போதிசத்துவர் இந்த தத்துவத்தை முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் நிலையில் உள்ளாரோ அப்போது புத்தத்தன்மை அந்த போதிசத்துவருக்கு கிடைக்கிறது. " + +ததாகதகர்ப தத்துவம் புத்தத்தன்மையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. குறிப்பாக பரிநிர்வாண சூத்திரத்தில் இவ்விரண்டு சொற்களும் ஏறெத்தாழ ஒரே பொருளைக்குறிக்கவே பயன்படுத்தப்பட்ட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ததாகதகர்ப தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மிகவும் விரும்பத்தக்க செயலாக பல்வேறு சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளன. + +இந்த தத்துவத்துடன் தொடர்புடைய சூத்திரங்களை ததாகதகர்ப சூத்திரம் என அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்களில் ததாகதகர்பம் குறித்த மிக விரிவான கருத்துகள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரம் ததாகதகர்ப தத்துவம் "உத்தரோத்தர(उत्तरोत्तर)" அதாவது முதன்மயிலும் முதன்மையான கருத்து எனக்கூறுக்கிறது. இதே போல் ஸ்ரீமாலா சூத்திரம் இந்த தத்துவமே இறுதியான தத்துவம் என பறைசாற்றுகிறது. + + + + + + + +தாரணி + +தாரணி(धारणी) என்பது ஒரு விதமான புனித சொற்கோர்வை ஆகும். இந்த சொற்கோர்வை சடங்குகளிலும், சில செயலகள் நடைப்பெற வேண்டியும் இது உச்சாடனம் செய்யப்படும். "மந்திரங்களும்" "தாரணியும்" நெருங்கிய தொடர்புடைய சில சமங்களில் ஒத்த பொருளைடைய சொற்களாகவே கருதப்படுகின்றன. எனினும் இவ்விரண்டின் பயன்பாடு வேறு வேறு ஆகும். + +ஜப்பானில் ஷிங்கோன் பௌத்தத்தை நிறுவுன கூக்காய் தாரணியையும் மந்திரங்களையும் இவ்வாறாக வேறுபடுத்துகின்றார். மந்திரங்கள் பௌத்த மறைபொருள்(esoteric) சடங்குகளில் பயன்படுத்த வேண்டியவை. அப்படியுருக்க, தாரணிகளில் எல்லா பௌத்த சடங்குகளிலும் பயன்படுத்த இயலும். தாரணிகள் பாளி சூத்திரங்களிலும் காணப்படுகின்றன. + +தாரணி(धारणी) என்ற சொல் திரு(धृ)என்ற சொல்லில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. திரு(धृ) என்றால் பெற்றிருத்தல்,வைத்திருத்தல் என்று பொருள். எனவே தாரணி என்பது ஒரு சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் தன்னுள் அடக்கிய வாக்கியம் என கருதாலம். தாரணிகள் பொதுவாக நண்மைகள் நடைபெறவும் இன்னல்களிலிருந்து விடுபடவும் உச்சாடனம் செய்யப்படுகின்றன. + +தாரணிகளையும் மந்திரங்களையும் வேறுபடுத்துதல் மிகவும் கடினம். அனைத்து மந்திரங்களையும் தாரணிகள் எனக்கொள்ளலாம் ஆனால் அனைது தாரணிகளையும் மந்திரங்கள் எனக்கொள்ள இயலாது. மந்திரங்கள் பொதுவாக குறைவான அளவுடையவை மேலும் அதிகமாக நேரடிப்பொருளற்ற எழுத்துக்களையும் சொற்களையும் கொண்டிருப்பவை. உதாரண்மாக, ஹூம், பட், ஹ்ரீ:,த்ராம் போன்றியவைகளை குறிப்பிடலாம். கூக்காய் மந்திரஙக்ளை தரணிகளின் ஒரு சிறப்பு வகையாக கருதினா. அவரைப்பொருத்த வரையில் தாரணியின் ஒவ்வொரு எழுத்தும் உணமையின் வெளிப்பாடாகும். + +(எ.டு) அவலோகிதேஷ்வரரின் ஆர்ய ஏகா தசமுக தாரணி(பொருள்:"உயரிய பதினோருமுக தாரணி". திபெத்தியர்களின் மஹாகருணா தாரணி) +நமோ ரத்னத்ர்யாயே நம: ஆர்யஜ்ஞான சாகர வைரோசன வ்யூஹராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்ஸம்புத்தாய: + +நம: ஸர்வ ததாகதேப்ய: அர்ஹதேப்ய: சம்யக்ஸம்புத்தேப்ய: + +நம: ஆர்ய அவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹாகருனிகாய: + +தத்யதா: ஓம் தர தர திரி திரி துரு துரு இதியே விதியே சலே சலே + +ப்ராசலே குசுமே குசும்வரயே இலி மிலி ஜ்வாலம் அப்னயே ஸ்வாஹா + + + + +ரைட் சகோதரர்கள் + +ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ("Wright brothers", ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார். 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது. + +மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867 இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்திலும், ஓர்வில் ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் 1871-இலும் பிறந்தனர். இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. ரியூச்லின் (1861–1920), லோரின், கேத்தரின் ரைட் (1874–1929), இரட்டையர்களான ஓட்டிசு மற்றும் இடா ஆகியோர் இவர்களது மற்ற குழந்தைகளாவர். இவர்கள் 1870 இல் பிறந்து குழந்தைகளாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். + +1878 இல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்க���் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர். + +இரு சகோதரர்களும் உயர்கல்வி வரை பயின்றனர் ஆனால் அதற்கான பட்டயங்கள் எதுவும் பெறவில்லை. 1884 இல் ரைட் குடும்பம் இந்தியானாவிலிருந்து ஒஹையோவிலுள்ள டேட்டனுக்குக் குடிபெயர்ந்தது. இங்கு 1870 வரை இருந்தனர். + +1885 இல் வில்பர் ரைட் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் தனது முன்பற்களை இழந்தார். அதன்பிறகு அவர் முரட்டுத்தனமானவராக மாறினார். எனவே விளையாடச் செல்லாமல் வீட்டிலிருக்கத் தொடங்கினார். சில வருடங்கள் வீட்டில்ருந்த வில்பர் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு உதவியாக இருந்தார். அச்சமயம் தனது தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ந்தார். சில நேரஙக்ளில் தனது தந்தைக்கு உதவியாகப் பிரெத்திரென் சபையில் உதவிகள் செய்தார். + +ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். 'மேற்கத்திய செய்திகள்' (West Side News) என்ற பெயரில் வெளிவந்த இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும் வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். 1890 இவ்விதழை நாளிதழாக மாற்றி 'தி ஈவினிங் ஐடெம்' என்ற பெயரில் வெளியிட்டனர். நான்கு மாதங்கள் வெளிவந்த இவ்விதழ் பிறகு நின்று போனது. அதன்பிறகு வணிக நோக்கிலான அச்சகமாக மாறியது. தனது நன்பர்கள் மற்றும் தன்னுடன் பயின்ற மாணாக்கர்களை தங்களது அச்சகத்தின் வாடிக்கையாளர்களாகப் பெற்றனர். அவர்களில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான 'பால் லாரன்சு டன்பர்' என்பவரும் ஒருவர். அதன் பிறகு டன்பர் ஆசிரியராகப் பணியாற்றிய 'டேட்டன் டாட்லெர்'(Dayton Tattler) என்ற வார இதழ் ஒன்றை நீண்ட நாட்கள் அச்சிடட்டனர். + +அச்சுத்தொழில் நொடிந்த நிலையில் 1892 இல் ஒரு மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தைத் தொடங்கினர்.இங்கு பழைய சைக்கிள்களைப் பரிமாற்றவும் செய்தனர். இது பின்னர் ரைட் மிதிவண்டி நிறுவனமாக மாறியது. 1896 இல் இந்நிறுவனம் தனது மிதிவண்டிகளை சொந்தமாகத் தயாரிக்கவும் செய்தது. + +இதிலிருந்து அவர்களது பேராவலாகிய வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது. 1890 இல் அவர்கள் ஒரு முறை ���ாளிதழ் செய்தி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒட்டோ லிலியந்தால் என்பவர் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். இதே ஆண்டில் அக்டேவ் சான்யூட், சாமுவேல் பி. லாங்லீ ஆகியோர் கிளைடர் விமானப் பயணம் பற்றிய முயற்சிகளையும் ஆர்வமுடன் படித்தனர். பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது ஒட்டோ லிலியந்தால் ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை. சிமித்சோனியன் என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் சாமுவேல் பி. லாங்க்லீ ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார். ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர். +1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது. + +இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தைப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கை மிதிவண்டியுடன் வேலை செய்யும்போது அவர்களுக்கு ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளைச் சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான 'கியார்கு கெய்லே' என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்களுடன் இணைந்து முக்கிய பங்குவகித்தார். + +வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல்' (Thrust), 'மேலெழுச்சி'(Lift), 'திசைதிருப்பி'(Rudder) எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு 'என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர். ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். + +அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina]1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது + +விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரைட் சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1912 இல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். இறுதியாகத் தனது 45 ஆம் வயதில் தமது இல்லத்தில் 1912, மே 30 இல் காலமானார். + +வில்பர் ரைட் இறந்த பிறகு ரைட் நிறுவனத்தை ஆர்வில் ரைட் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் 1915 இல் ரைட் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு திரு���ணம் செய்து கொள்ளாமலேயே தமக்கு உதவியாக இருந்த தமது தங்கை காத்ரீன் ரைட் மற்றும் தனது தந்தையுடனும் ஒஹையோவில் ஓக்வுட் எனுமிடத்திற்குக் குடியேறினார். 1917 இல் ஆர்வில்லின் தந்தை தூங்கும்போதே இறந்து போனார். ஆர்வில் 1911 இல் தயாரிக்கப்பட்ட 'மாடல் பி' என்ற விமானத்தைக் கடைசியாக 1918 இல் ஓட்டினார். அதன் பிறகு தொழிலில் இருந்து ஓய்வுபெற்றார். நாசா உள்ளிட்ட பல்வேறு வானாய்வு நிறுவனங்களில் முன்னனி ஆலோசகராகப் பணிபுரிந்தார். + +1926 இல் தங்கை காத்ரீன் தனதுடன் பயின்ற தோழரான ஹென்றி ஆஸ்கெல் என்பவரை மணந்தார். இது ஆர்விலை மிகவும் பாதித்தது. இந்தத் திருமணத்தில் ஆர்வில் கலந்து கொள்ளவில்லை. அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவுமில்லை. இறுதியாக 1929 இல் காத்ரின் இறப்புக்கு சற்று முன்னரே அவரைப் பார்க்க ஒப்புக்கொண்டார். + +1948, ஜனவரி 30 இல் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு ஆர்வில் ரைட் காலமானார். இவருடைய உடல் ஒஹையோவின் டேய்ட்டனில் உள்ள இவருடைய குடும்பத்திற்குச் சொந்தமான வுட்லாண்ட் இடுகாட்டில் வில்பர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கருகில் அடக்கம் செய்யப்பட்டது. + + + + + + + + + + +துக்ளக் + +துக்ளக் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அரசியல் சமூக நகைச்சுவை, நையாண்டி இதழ் ஆகும். இது 1970 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை ஆசிரியராக சோ ராமசாமி இருந்தார். துக்ளக் இதழின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனிப்பை பெறுபவை. +சோ ராமசாமி மறைவுக்குப் பிறகு சுவாமிநாதன் குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர் ஆனார். + + + + + +வால்ட் டிஸ்னி நிறுவனம் + +வால்ட் டிஸ்னி கம்பனி ("Walt Disney Company") உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது. + + + + +மகிழ்கலை + +மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான "Entertainment" இணையாக பயன்படுகின்றது. தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். + +மகிழ்கலைகள் நிகழ்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம். + + + + +பிளே போய் தொழிலகம் + +பிளே போய் தொழிலகம் (Playboy Enterprises) ஒர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1953 ஆம் ஆண்டில் பெண்களை ஆபாசமாக, நிர்வாணமாக, கவர்ச்சியாக காட்டும் பிளே போய் இதழை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் பிளே போய் இதழினிதும் நிறுவனத்தினதும் தாக்கம் கணிசமானது. + + + + +ஜி. என். பாலசுப்பிரமணியம் + +ஜி. என். பாலசுப்பிரமணியம் (ஜனவரி 6, 1910 - மே 1, 1965), ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர். + +இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்று கருநாடக இசை உலகத்தில் அடையாளப்படுத்துகின்றனர். + +அவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே அமைந்துள்ள கூடலூர் என்னும் ஊரில் ஜி.வி.நாராயணசாமி ஐயர், விசாலம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையார் ஜி. வி. நாராயணசாமி ஐயர் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சிறந்த இசை ரசிகரான அவர் ஒரு சபையை நடத்தி வந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே ஜி.என்.பி.க்கு பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் பழகி அவர்களின் இசையை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்ற பாலசுப்பிரமணியம் கருநாடக இசையை தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார். இசையுலகில் அவருடைய நுழைவு தற்செயலாகத்தான் நிகழ்ந்தது என்றாலும் அவருடைய துடிப்பான "பிருகா"க்கள���ம், அதிரடி சுரக் கோர்வைகளும், ஆழ்ந்த இசை அறிவும் அவரை புகழின் உச்சிக்கு உயர்த்திவிட்டன. பல ஆண்டுகள் அவர் கருநாடக இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார். இவருடைய மாணவர்களில் எம். எல். வசந்தகுமாரி, ராதா ஜெயலட்சுமி, எஸ். கல்யாணராமன், திருச்சூர் வி. இராமச்சந்திரன் ஆகியோர் சிறந்த பாடகர்களாகப் பெயர்பெற்றவர்கள். + +அவர் பாடி இசைத் தட்டாக வெளிவந்த "வாசுதேவயனி" என்று தொடங்கும் கல்யாணி இராகப் பாடல் அக்காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. அது பதிப்பிக்கப்பட்ட 1940 ஆம் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் "ராயல்டி"யாக அவருக்கு இந்த இசைத்தட்டு விற்பனை மூலம் கிட்டியது! + +விரிவாக இராக ஆலாபனைகள் புரிவதில் புதிய முறைகளை அவர் கையாண்டார். பல இராகங்களில் அதுவரை கையாளப்படாத புதிய பரிமாணங்களை அவர் தொட்டு தன் ஆழ்மனத்தில் தோன்றும் கற்பனைகளுக்கு குரல் வடிவம் கொடுத்தார். + +சகுந்தலை திரைப்படத்தில் இடம்பெற்ற "எனை மறந்தனன்” என்று தொடங்கும் விருத்தத்தில் காம்போதி ராகத்தில் வேறு ஒருவருமே கையாண்டிராத வகையில் இரண்டு நிமிடத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் அந்த ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் குழைத்து ஜிஎன்பி பாடியுள்ளார். + +எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சகுந்தலை (1940) எனும் திரைப்படத்தில் நடித்தார். அடுத்து பாமா விஜயம் (1934), சதி அனுசுயா (1937), உதயணன் வாசவதத்தா (1946), ருக்மாங்கதன் (1947) போன்ற படங்களில் நடித்தார். + + + + + + + +பாலுணர்வுக் கிளர்ச்சியம் + +பாலுணர்வுக் கிளர்ச்சியம் (போர்னோகிராபி, "Pornography") என்பது பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிப்படுத்தல் அல்லது வெளிப்படுத்தல் ஆகும். ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு என்று பல வடிவங்களில் பாலுணர்வுக் கிளர்ச்சியம் உள்ளது. + +பாலுணர்வுக் கிளர்ச்சியம் தமிழில் ஆபாசம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. "மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது. + +இணையம், கைப்பேசி என தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் ஒளிப்படமாகவும், நிழல் படமாவும் பரிமாறப்படுகின்றன. கைப்பேசியில் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்வதும் இம்முறையிலேயே அடங்குகிறது. + +திரைப்படங்களின் முப்பரிமான தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட வெற்றியால், பாலியல் திரைப்படங்களையும் முப்பரிமான தோற்றத்தில் மக்களுக்கு கொடுக்க இருக்கின்றார்கள். + + +பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்படுத்தும் ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு போன்றவற்றின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு, உள்நாட்டு வன்முறை, பாலியல் செயல் பிறழ்ச்சி, பாலியல் உறவு சிக்கல்கள், மற்றும் குழந்தையை பாலியல் கொடுமைக்கு ஆளக்கல் போன்ற உள்ளார்ந்த தாக்கங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் சற்று அதிகமாகலாம் என்ற எண்ணத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் சில ஆய்வுகளில் சமூகத்திற்கு இந்த கலையால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. + + + + +மார்வல் மகிழ்கலைக் கொம்பனி + +மார்வல் மகிழ்கலைக் கொம்பனி (Marvel Entertainment, Inc.) ஓர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. சிலந்தி மனிதன் (Spiderman), X-men, கப்டன் அமெரிக்கா போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது. + + + + +மெக்டொனால்ட்சு + +மக்டொனால்ட்சு("McDonalds") (தமிழக வழக்கு: மெக் டொனால்ட்சு) ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப���பட்ட உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும். + +மக்டொனால்ட்சு நிறுவனம் அமெரிக்க வாழ்வுமுறைக்கும் அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்சு ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்சு போன்ற அதிவேகஉணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை + +ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் என்பவர் பொருட்கள் விற்பனை செய்யும் முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் பால் பானம் (மில்க்‌ஷேக்) தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுஉணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது. + +கலிஃபோர்னியாவில் சான் பெர்னார்டினோ (San Bernardino) என்ற பகுதியில் இரண்டு சகோதரர்கள் ("Dick" McDonald , "Mac" McDonald) ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. + +15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியா��� உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை நிறுவன உரிமம் முறையில்('franchised') நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் டெஸ் பிலைனிஸ்(Des Plaines) என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நிறுவன உரிம அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார். +ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ரே க்ராக் பெற்றார். ஆனால் தங்கள் முதல் உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது. + +மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் மிகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகள��ம் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸ் காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. + + + + +மலாய் மொழி + +மலாய் மொழி ("Malay", ; , மலாயு மொழி; ஜாவி எழுத்துமுறை: ) என்பது ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த மலாக்கா சுல்தான்களின் ஆளுமையில் இந்த மொழி செல்வாக்குப் பெற்று இருந்தது. + +இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். இருப்பினும், சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு காளிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. + +மலாய் மொழிக்கு வேறு பல அதிகாரப்பூர்வ பெயர்களும் உள்ளன. "பகாசா கெபாங்சான்", "பகாசா நேசனல்" என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணையில் "பகாசா மலாயு" என்றும்; மலேசியாவில் "பகாசா மலேசியா" என்றும்; இந்தோனேசியாவில் "பகாசா இந்தோனேசியா" என்றும்; அழைக்கப்படுகின்றது. + +மலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென் சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில் மலாய் எழுத்துகள் இ���ுப்பதும் உறுதி செய்யப்பட்டது. + + + + + +மனவளக்கலை + +மனிதனின் மனத்தை அல்லது உள்ளத்தை நலனாக பேண, வளர்க்க, வளப்படுத்த உதவும் அறிவையும் பயிற்சிகளையும் மனவளக்கலைகள் எனலாம். தியானம், அகத்தாய்வு, காயகற்பப் பயிற்சி ஆகியவை மனவளக்கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி தமிழில் மனவளக்கலைகள் பற்றி பல நூற்களையும் பயிற்சிமுறைகளையும் ஆக்கி தந்துள்ளார். எல்லா மனவளக்கலை மன்றங்களிலும் அறிவுத்திருக்கோயில்களிலும் இதனை கற்பிக்கின்றனர். + + + + + + +விமலகீர்த்தி சூத்திரம் + +விமலகீர்த்தி சூத்திரம் அல்லது விமலகீர்த்தி நிர்தேச சூத்திரம்(विमलकीर्ति-निर्देश-सूत्र) இலக்கிய வளம் உள்ள ஒரு மகாயான சூத்திரம் ஆகும். இந்த சூத்திரம் மகாயான கருத்துகளை மிகவும் விரிவாக விவரிக்கின்றது. அதிலும் முக்கியமாக அத்வைத கருத்தினை விரித்துரைக்கிறது. இந்த சூத்திரம் விமலகீர்த்தி போதிசத்துவரால் உபதேசிக்கப்பட்டது. மேலும் இதில் விமலகீர்த்தி சூன்யத்தனமையை குறித்து விவரிக்கையில் இவ்விதமான கருத்துகள் உபதேசிக்கப்பட்டன. +விமல்கீர்த்தி சூத்திரத்துக்கு கீழ்க்கணட மூன்று புகழ்பெற்ற சீன மொழி பெயர்ப்புகள் உள்ளன + + +இதைத் தவிர்த்து இதற்கு முன்னர் சீகியான்(223-228), தர்மாகரர்(308), உபாசூன்யர்(545), ஞானகுப்தர்(591) ஆகியோரும் இதை மொழிபெயர்த்துள்ளனர். + +எனினும் குமாரஜீவரின் மொழிபெயர்ப்பே மிகவும் பரவலாக போற்றப்படுகிறது, + + + + + +உக்கிர மூர்த்திகள் + +உக்கிர மூர்த்திகள் என்பது பௌத்தர்களால் வணங்கப்படும் உக்கிர உருவத்தில் இருக்கும் தேவர்கள் அல்லது போதிசத்துவர்களைக்குறிக்கும். இவர்கள் அமைதியான போதிசத்துவர்களின் அல்லது தேவர்களின் உக்கிரமான அவதாரங்களாக கருதப்படுகின்றனர். இவர்களது உக்கிரத்தை குறிக்க, இவர்கள் மிகவும் பயமுறுத்தும் வகையிலும், ரத்தம், மண்டை ஓடு போன்றவற்றை தாங்கியவர்கள் போலவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர். + +இவர்களுடைய சித்தரிப்பு பௌத்த கருத்துகளுக்கு அந்நியமாக தோன்றினாலும், இவர்களில் சித்தரிப்பு வெறும் உருவகமே என்பதை கருத்தில் கொள்வது அவசியம். இவர்கள் இந்த உக்கி��ம் மனதில் எழும் தீய எதிர்மறையான எண்ணங்களை அழிக்க நிகழும் ஆற்றல் மிகுந்த செயல்களின் உருவகம் ஆகும். எனவே இவர்கள் நம்முடைய தீய எண்ணங்களை அழிப்பத்தற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் அடையாளமே இந்த உக்கிர மூர்த்திகள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்றுவர்களின் பாதுகாவலர்காளகவும் விளங்குகின்றனர். + +உக்கிர மூர்த்திகளை கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கலாம்: + + + + + +தர்மபாலர்கள் + +தர்மபாலர்கள் என்பது வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகள் ஆவர். தர்மபாலர்கள் என்றால் தர்மத்தை காப்பவர்கள் என்று பொருள். வஜ்ரயான பௌத்தத்தில் பல்வேறு தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர். + +வஜ்ரயான பௌத்தத்தில் இவர்கள் மற்ற உக்கிர மூர்த்திகளை போலவே மிகவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் பல கரங்கள், தலைகள் கொண்டவர்களாக காட்சியளிக்கின்றனர். தர்மபாலர்கள் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் அவர்களை அனைவரும் கருணையின் வடிவான போதிசத்துவர்களின் உக்கிர உருவங்களாக இருப்பதால் இவர்கள் இந்த உக்கிரம் உயிர்களின் நன்மைகளுக்கே எனக் கருதப்படுகிறது. + +திபெத்தில், கீழ்க்கண்ட 8 முக்கிய தர்மபாலர்கள் வணங்கப்படுகின்றனர்: + + +தர்மபாலர்களை வழிபடும் வழக்கம் பழங்கால இந்தியாவிலே தொன்றியது. பிறகே தந்திர பாரம்பரியத்தின் மூலமாக திபெத்துக்கு ஜப்பானுக்கும் பிற்காலத்தில் பரவியது. + +திபெத்தில், ஒவ்வொரு புத்தமடமும் ஒரு தர்மபாலகரை வணங்குவது வழக்கமாக உள்ளது. பரவலாக வணங்கப்படும் தர்ம்பாலகர்களின் போதிசத்துவர்களின் அம்சமாகவே வணங்கப்படுகின்றனர். + +தர்மபாலகர்கள் தர்மத்தை காக்கும் பொறுப்புடைய்வர்கள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்ற விடாமல் தடுக்கக்கூடிய அனைத்து உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறத் தடைகளை களைந்து தர்மத்தின் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மனநிலையை அருளக்கூடியவர்கள் என கருதப்படுகின்றனர். தர்மபாலகர்கள் புத்தர்களாகவோ அல்லது போதிசத்துவர்களாகவும் இருக்கலாம். சூன்யத்தன்மையைக் புரிந்துக் கொண்ட தர்மபாலர்களே சரணடைவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். + + + + +மகாகாலன் + +மகாகாலன் வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்ப���ும் ஒரு தர்மபாலர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் "தைக்கோகுதென்" என அழைப்பர். இவரது துணை ஸ்ரீதேவி ஆவார். + +வடமொழியில் "மகாகாலன்"("महाकाल") என்பதை மஹா + கால என பிரிக்கலாம். இதற்கு "மஹா" என்றால் சிறந்த, உயரிய என பொருள் கொள்ளலாம். "கால"("काल") என்றால் கருமை என்று பொருள். திபெத்திய மொழியில் இவரை "கோன்போ பியாக்" என அழைக்கப்படுகிறார். + +திபெத்திய பௌத்தத்தின் அனைத்துப் பிரிவினரும் மகாகாலனை வணங்குகின்றனர். மேலும் அவர் பலவிதமான தோற்றங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஒவ்வொரு தோற்றத்திலும் அவர் (அவலோகிதேஷ்வரர், சக்ரசம்வரர் முதலியவர்களின் அவதாரமாகக் கருதப்படுகிறார். மேலும் ஒவ்வொரு தோற்றங்களிலும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை. + +மகாகாலனின் நிறம் கருப்பு. எப்படி அனைத்து நிறங்களும் ஒன்றினால் கருமை கிடைக்கின்றதோ அதே போல் அனைத்து குணங்களும் தோற்றங்களும் பெயர்களும் மகாகாலனுடன் ஒன்றிவிடுவதாக நம்பப்படுகிறது. மேலும் கருமை என்பது நிறமற்ற நிலையை குறிப்பதினால் மகாகாலனும் குணமற்றவராகக் கருதப்படுகிறார். இதை வடமொழியில் "நிர்குணம்" அதாவது குணமற்ற என குறிப்பிடுவர். + +மேலும் மகாகாலன் எப்போதும் ஐந்து மண்டை ஓடுகளைக் கொண்ட மகுடத்தை அணிந்தவராகக் காட்சியளிக்கிறார். இந்த ஐந்து மண்டை ஓடுகளும் ஐந்து வழுக்களையும்(கிலேசம்) ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதைக் குறிக்கிறது. + +மகாகாலனின் தோற்றங்களில் பல்வேறு விதமான வேறுபாடுகளைக் காணலாம் + +ஆறு கரங்களுடைய மகாகாலன்(வடமொழி:"ஷட்-புஜ மஹாகால" "षड्-भुज महाकाल") திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவினரால் பெரிதும் போற்றப்படுகிறார். இவருடைய இந்த தோற்றம் கருணையின் போதிசத்துவரான அவலோகிதேஷ்வரரின் உக்கிரமான மற்றும் ஆற்றல்வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறார். + +அவருக்கு பின்வரும் குணங்கள் காணப்படுகின்றன: + + +இந்த மகாகாலனுக்கு வெள்ளை நிறத்தோற்றமும் உண்டு. இதை வடமொழியில் "ஷட்-புஜ சீத மஹாகாலன்"(षड्-भुज सीत महाकाल) என அழைக்கப்படுகின்றார். இவர் மங்கோலியாலுள்ள கெலுக் பிரிவினரால் வணங்கப்படுகின்றார். எனினும் இவர் இப்பிரிவினரால் செல்வத்தின் அதிதேவதையாக வணங்கப்படுகின்றார். எனவே அவரது சித்தரிப்பிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவருடைய பிச்சை பாத்திரத்தில் பல்வேறு செல்வங்கள் காணப்படுகின்றன. மேலும் கபால மகுடத்திற்கு பதிலாக ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்தவராக காட்சியளிக்கிறார். + +நான்கு கைகள் கொண்ட மகாகாலர்கள் திபெத்தின் கக்யு பிரிவினரின் பாதுவாலர்களாக கருதப்படுகின்றனர். மேலும் நால்கரங்களுடைய மகாகாலன் மகாசந்தி உபதேசங்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவருடைய நான்கு கரங்களும் நான்கு நற்செயல்களை புரிவதாக நம்பப்படுகிறது. இந்த செயல்களே அவரை வழிபடுபவர்களுக்கு தரும் வரங்களாக கருதப்படுகிறது. + +இவர் திபெத்திய கர்ம கக்யு பிரிவினரின் பாதுககாவலராக கருதப்படுகிறார். அதிலும் முக்கியமா கர்மபாக்களை காப்பாற்றுபவராக கருதப்படுகிறார். பஞ்சரநாத மகாகாலன் என அழைக்கப்படும் இவர் மஞ்சுஸ்ரீயின் அவதாரமாக கருதப்படுகிறார். + + + + + +ஸ்ரீதேவி (பௌத்தம்) + +ஸ்ரீதேவி அல்லது பெல்டென் லாமோ (திபெத்திய மொழி) திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவினரால் வணங்கப்படும் தர்மபாலர் ஆவார். இவர் கௌதம புத்தரின் போதனைகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவரை ரேமதி எனவும் அழைப்பர். உக்கிர மூர்த்தியான இவர் திபெத்தின் காவலராகவும் கருதப்படுகிறார். + +தலாய் லாமா மற்றும் பஞ்சென் லாமாவின் பாதுகாவலரான இவர் மகாகாலனின் துணை ஆவார். இவர் திபெத்திலும் மங்கோலியாவிலும் பரவலாக வணங்கப்படுகின்றார். + +ஸ்ரீதேவி முற்காலத்தில் லாமோ லா-ட்ஸோ என்ற ஏரியின் காவல் தெய்வகாக இருந்ததாக கருதப்படுகிறது. இவர் முதல் தலாய் லாமாவான கெண்டுன் துருப்பின் கனவில் தோன்றி தலாய் லாமாவின் வழிமரபின் வரும் அனைவரையும் தான் காப்பாற்றுவதாக உறுதியளித்தார். + +இந்த ஏரியில் ஸ்ரீதேவியின் தோற்றம் க்யெல்மொ மக்சொர்மா என ஆழைக்கப்படுகிறது. இந்த உருவத்தில் இவர் மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இந்த ஏரியும் இவரது பெயரில் "பல்டென் லாமா காளிதேவா" என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரிலிருந்து இவர் காளி தேவியின் அவதாரமாய கருதப்படுகிறார் என்பதை அறியலாம். + +சொகொர்க்யெல் மடத்தின் தெற்கே இருக்கும் மலையே ஸ்ரீதேவியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. + +சொங்ட்ஸென் கம்போ என்பவரின் ஆட்சியின் போது, ஸ்ரீதேவி அவர் முன் தோன்றி, தனக்கு ஓர் உருவத்தை நிறுவினால், அரசரின் திருலங் புண்ணிய தலத்தைக் காப்பதாக உறுதி கூறி��ார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் லாலுங் பெல்க்யி டோர்ஜெவை பௌத்தத்துக்கு எதிராக இருந்த அரசன் லங்தர்மாவைக் கொலை செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இவரை லாசாவின் தர்மபாலர் எனப் போற்றுகின்றனர். + +எட்டு தர்மாபலர்களுள் ஒரே பெண் ஸ்ரீதேவி மட்டுமே. இவர் நீல நிறத்துடனும், சிவப்பு கூந்தலுடனும் ரத்தக் கடலை தன்னுடைய வெண் கோவேறு கழுதையின் மீதேறி கடப்பதாக சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவரது உக்கிரப் பண்பை உருவகப்படுத்துவதாக உள்ளது. தர்மபாலர் ஆவதற்கு முன்னர் தன்னுடைய மகனையே கொன்று சேணத்தின் போர்வையாக பயன்படுத்திக்கொண்டார் எனவும் நம்பப்படுகிறது. இவர் மகாகாளியின் ஒரு தோற்றமாகவும் சரஸ்வதியின் உக்கிர அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் மூன்று கண்கள் உடையவராகவும் அவ்வப்போது ரத்தத்தை அருந்துபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். + + + + +மேனகா காந்தி + +மேனகா காந்தி (பிறப்பு: ஆகஸ்டு 26, 1956 மேனகா ஆன்ந்த்) ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக உள்ளார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தின் விலகிய உறுப்பினர். + +புது தில்லியில் பிறந்த மேனகா அங்குள்ள லாரன்சு பள்ளி மற்றும் மங்கை ஸ்ரீராம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியும் இவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். முன்னாள் விளம்பர நடிகை மற்றும் சூர்யா இந்தியா இதழின் தொகுப்பாளரான இவர் 1982-ல் சஞ்சய் காந்தி ஒரு விமான நேர்ச்சியில் இறந்தபின் அரசியலில் இறங்கினார். இதனால் இந்திரா காந்திக்கும் இவருக்கும் வெளிப்படையான மோதல்கள் ஏற்பட்டன. + +1979-ல் இந்தியக் குடிமக்களின் நகருதலுக்கான அடிப்படை உரிமை தொடர்பில் "மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்" என்ற வழக்கில் இவர் ஒரு தொடுப்பாளர். அவ்வழக்கு மேனகாவிற்கு இந்திய அரசு பயண உரிமம் வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்சநீதிமன்றம் "ஏ. கே. கோபாலன் எதிர் மெட்ராஸ் மா���ிலம்" என்ற வழக்கில் எடுத்திருந்த தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி வாழ்வு மற்றும் விடுதலை உரிமைகளின் வீச்சை விரிவுபடுத்தி "வரம்பற்ற சரியான முறை" என்ற கருத்தை இந்தியச் சட்டத்தில் சேர்த்தது. அத்தீர்ப்பில் "மக்களாட்சி என்பது விடுதலைச் சூழலில் அமையும் கட்டற்ற உரையாடல் மற்றும் கருத்தாடலை அடிப்படையாகக் கொண்டது, ஏனெனில் அவற்றின்வழியே ஒரு அரசின் செயல்பாடுகளைத் திருத்த முடியும்." என்று குறிப்பிட்டது. + +இவர் 1983-ல் "சஞ்சய் விசார் மஞ்ச்" ("சஞ்சய் எண்ண மேடை") என்ற அமைப்பு ஒன்றைத் துவக்கினார். பின்னர் 1988-ல் ஜனதா தளத்தில் இணைந்தார். 1988 முதல் 1989 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். 1989-ல் தனது முதல் தேர்தல் வெற்றியைக் கண்ட இவர் வி. பி. சிங் அரசில் 1989 முதல் 1991 வரை சுற்றுச்சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1996-இலும் 1999-இலும் உத்திரப் பிரதேசத்திலுள்ள பிலிபிட் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பாஜக அரசில் சமுதாய நலத்துறை துணை அமைச்சராகவும் பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். விலங்குகள் நலத்துறையை உருவாக்கி அதன் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். சமுதாய நலத்துறையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். + +2004 பொதுத்தேர்தலில் பாஜக உறுப்பினராக பிலிபிட் தொகுதியிலிருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் அத்தொகுதியில் வெவ்வேறு கட்சி சார்பிலும் தனியாகக் கட்சி சாராமலும் நின்று தான் போட்டியிட்டதில் ஒருமுறை தவிர ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். இது இவர் தொகுதி நலனில் காட்டும் அக்கறை மற்றும் சீக்கிய சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் என்ற காரணங்களால் இவருக்குள்ள ஆதரவைக் காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் வருண் காந்தியும் ஒரு பாஜக அரசியல்வாதி. + +மேனகா காந்தி விலங்குகள் நல போராளி ஆவார். இவர் போராட்டம் காரணமாக இந்தியாவில் விலங்குகள் உரிமை பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலருக்கு ஏற்பட்டது. 1995 ஆம் ஆண்டு CPCSEA எனப்படும் ஆய்வுக்கு உட்படும் விலங்குகளை மேற்பார்வையிடும் அமைப்புக்கு தலைவரனார். இவரின் வழிகாட்டுதலில் இவ்வமைப்பு அறிவிக்கப்படாத சோதனைகளை விலங்குகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த��ம் ஆய்வங்களில் மேற்கொண்டது. இதன் காரணமாக அவ்வாய்வகங்களில் விலங்குகள் மோசமான நிலையில் கொடுமை படுத்தப்படுவது ஆவணபடுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. CPCSEA பல கட்டுப்பாடுகளை விதித்ததின் காரணமாக ஆய்வக விலங்குகள் மீதான கொடுமை சிறிது குறைந்தது. 1992 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான மனிதர்கள் (People for Animals) என்ற அமைப்பை தொடங்கினார். விலங்குகள் உரிமை மற்றும் நலங்களுக்காக போராடும் அமைப்பில் இந்தியாவில் இதுவே பெரியதாகும். இந்தியா முழுவதும் இதற்கு காப்பகங்கள் உள்ளன. இவர் சைவ உணவு உட்கொள்பவர், அசைவம் தவிர்க்க சொல்லி அனைவரும் சைவம் உட்கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று நன்னெறி & உடல் நலத்தை காரணம் காட்டி வழியுறுத்தினார். +ஹெட்ஸ் அண்ட் டெயில்ஸ் (Heads and Tails) என்ற வாரமொரு முறை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்தினார். இதில் விலங்குகள் படும் துன்பத்தை விளக்கினார், குறிப்பாக வணிக முறையில் பயன்படும் விலங்குகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்று விளக்கினார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் . + +பத்திரிக்கையாளராக மேனகா காந்தி "சூர்யா" இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக புகழடைந்தார். அப்போதய பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும் டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான உடலுறவு புகைப்படக் காட்சிகளை சூர்யா இதழில் வெளியிட்டார். இப்புகைப்படங்கள் சுரேஷ் ராமும் சுஷ்மா சௌதிரியும் நெருக்கமான பாலுணர்வுத் தூண்டற் செய்கைகளில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின. இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது. பாபு ஜகஜீவன் ராம் இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர உதவியவர். அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாக கூடியவர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார். + + + + + +பிராண ஆத்மன் + +பிராண ஆத்மன் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவரை திபெத்திய மொழியில் பெக்ட்ஸே என அழைப்பர். இவர் ஹயக்ரீவ தந்திரத்தின் பாதுகாவலராக கருதப்படுகிறார் + +தர்மபாலகராக கருதப்படும் இவர், பழங்காலத்தில் போர்க்கடவுளாகவே மத்திய ஆசியாவில் வணங்கப்பட்டுவந்தார். இவர் ஒர் யக்‌ஷனுக்கும் ராட்சசிக்கும் பிறந்ததாக கருதப்படுகிறார். இவர் இன்னும் புத்தநிலை அடையாமல் இருப்பதால் கீழ்நிலை பாதுகாவலராக கருதப்படுகிறார். எனவே ஒரு பௌத்தர் இவரிடம் சரணம் அடைய இயலாது ஆனால் இவரை காவலராக வழிபட முடிய்ம். தர்மத்தை பின்பற்றவர்களை பாதுகாக்கவும் மடங்களை பாதுகாக்கவும் இவரை வழிபடலாம். + + + + + +போதிசத்துவ உறுதிமொழிகள் + +போதிசத்துவ உறுதிமொழிகள் என்பது மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்களால் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழிகள் ஆகும். போதிசத்துவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சம்சாரத்தில் இருந்து விடுவித்து நிர்வாண நிலை எய்த வேண்டி இவ்வாறான உறுதிமொழிகளை பூண்டுகின்றனர். போதிசத்துவர்கள் தாங்கள் மட்டும் போதிநிலை அடையாது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்களும் அந்நிலையை எய்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்கள். எனவே எண்ணிலடங்கா நற்கர்மங்களை சேர்ப்பதற்காக இவ்வாறான உறுதிமொழிகளை எடுக்கின்றனர். இந்த நற்கர்மங்களை பிற உயிர்களுக்கு அவர்கள் போதிநிலை அடையவதற்கு உதவும் வகையில் அவ்வுயிர்களுக்கு கொடுக்கின்றனர். எனவே இந்த உறுதிமொழிகள் பிறரின் நண்மைக்காகவும் போதிசத்துவரின் அளவற்ற கருணையின் காரணமாகவும் மேற்கொள்ளப்படுபவை. இதற்கான நயமான உதாரணமாக அவதாம்சக சூத்திரத்தில் சமந்தபத்திரரின் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளலாம். + +பௌத்தர்களும் இது போன்ற உறுதிமொழிகளை தங்களுடைய ஆன்மீக பயனத்தை துவங்குவதற்காக எடுத்துக்கொள்வதுண்டு. + +கீழ்க்கண்ட உறுதிமொழிகள் ஸென் பிரிவினர் எடுத்துக்கொள்வது: +பிரம்மஜால சூத்திரத்தில் பத்து முதன்மையான உறுதிமொழிகளும் 48 ஏனைய உறுதிமொழிகளும் உள்ளன. + +கீழ்க்கண்டவையே பத்து முதன்மையான போதிசத்துவ உறுதிமொழிகள்: + + + + + + + +ஹரல்ட் ஹோல்ட் + +ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் ("Harold Edward Holt", ஆகஸ்ட் 5, 1908 – இறப்பு அநுமானிக்கப்பட்டது: டிசம்பர் 17, 1967) ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமராக 1966 - 1967 காலப்பகுதியில் இருந்தவர். இவர் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது திடீரென காணாமல் போனதையடுத்து இவரது பதவிக்காலம் டிசம்பர் 17, 1967இல் முடிவுற��றது. அவர் இறந்ததை ஆஸ்திரேலிய அரசு டிசம்பர் 19 இல் அதிகாரபூர்வமாக அறிவித்தது. + +ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். வியட்நாம் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்தியமைக்கு ஹோல்ட் இன்னமும் நினைவுகூரப்படுகிறார். +ஹோல்ட்டின் பதவிக்காலத்தில் வியட்நாம் போர் ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபடவைத்தார். பதவிக்கு வந்த அதே மாதத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்ட படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக, 4,500 ஆக, அதிகரித்தார். ஹோல்ட் மிகவும் தீவிரமான அமெரிக்க சார்புக் கொள்கையுடையவராக இருந்தார். அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார். + +ஹோல்ட்டின் இறப்புக் குறித்து பல வதந்திகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ரஷ்ய அல்லது சீன நீர்மூழ்கிக் கப்பலினால் கடத்தப்பட்டார் என்றும் பலர் விவாதிக்கின்றனர். + +1983 இல் பிரித்தானிய ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் மக்கள் சீனக் குடியரசின் உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார். + +ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரே மார்ட்டின் நவம்பர் 2007 இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். "த புலெட்டின்" இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி "ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் ஆகியோர் நிராகரித்திருந்தனர். + +இதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில��� மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது. + + + + + +யமன் (பௌத்தம்) + +யமன் பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவர் நரகத்தின் அதிபதியாகவும் இறப்பவர்களுக்கு தீர்ப்பு அளிப்பவராகவும் இருக்கின்றார். பௌத்தர்கள் வணங்கும் யமனும் இந்து மதத்தில் வணங்கப்படும் யமனும் ஒரே தேவர்களாக இருப்பினும் இருவருக்குமான புராணக்கதைகள், கடமைகள், குணங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. பௌத்தம் பரவிய அனைத்து இடங்களிலும் இவருடைய வழிபாடு காணப்படுகின்றது. + +யமன் பௌத்தத்தில் இறப்பின் கடவுளாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார். மேலும் வெவ்வேறு நரகங்களை மேற்பார்வையிடுவதும் இவருடைய கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. இவருடைய பணி பாளி சூத்திரங்களில் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் மக்களின் பரவலான நம்பிக்கையில் பல்வேறு கருத்துகள் தெளிவாக இருப்பினும் அனைத்தும் பௌத்த சித்தாந்தத்திற்கு ஒத்த கருத்துகளாக இருப்பதில்லை. + +பெற்றோர்கள்,துறவிகள்,புனிதமானவர்கள் மற்றும் பெரியவர்களை தவறாக நடத்தியவர்கள் இறப்புக்கு பிறகு யமனிடம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். பிறகு யமன் அவர்களிடன் தங்களுடைய தீய நடத்தையைக் குறித்து என்றாவது கருதியது உண்டா என கேட்பார். அதற்கு அவர்கள் அச்செயல்களின் கர்ம பலன்களை குறித்து ஆலோசனை செய்ததில்லை என மீண்டும் மீண்டும் தெரிவிப்பர். அதன் விளைவாக அவர்களுடைய தீய கருமங்கள் தீரும் வரை அவர்கள் நரகத்தில் இடப்படுகின்றனர். + +புத்தகோசர் என்ற தேரவாத அறிஞர் யமனை விமானபேதன்(विमानपेत) என அழைக்கின்றார். அதாவது அவர் ஒரு கலப்பு நிலையில் இருப்பவர். ஒரு சமயம் நற்கர்மங்களின் பலனையும் வேறு சமயம் தீய கர்மங்களின் பலனை அனுபவிப்பவர் என்பதை இந்த பெயர் காட்டுகிறது. எனினும் ஒரு அரசராக தர்மத்தை தவறாதவர் எனவும் புத்தகோசர் கூறுகிறார்.(இந்து மதத்தில் இவரை யம தர்ம ராஜன் என அழைப்பது ஒப்பு நோக்கத்தக்கது.) + +தேரவாத பௌத்த மக்களுடைய நம்பிக்கையின் படி, யமன் முதுமையை,நோய்,இயற்கை சீற்றங்கள் முதலியவற்றை மனிதர்கள் தர்மத்தை பின்பற்றுவதற்காக எச்சரிக்கையாக அனுப்புகின்றார். மக்கள் இறந்த பின்னர் யமனே அவர்களுக்கு தீர்ப்பளித்து அவர்களுடைய கர்மத்தின் படி, அவர்களை மனித உலக்���்திலோ, சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ மறுபிறப்பு எய்தும் வண்ணம் செய்கிறார். சில சமயம் ஒவ்வொரு நரகத்துக்கும் ஒரு யமன் இருப்பதாக நம்பப்படுகிறது(இந்து மற்றும் பௌத்த நம்பிக்கைகளின் படி நரகங்களில் பலவகை உள்ளன. தீய கருமங்களுக்கு தகுந்தாற்போல் அந்தந்த நரகங்கள் தண்டனையாக வழங்கப்பெறுகின்றன). + +சீனத்தில் யமனை யான் வாங் அல்லது யான்லுவோ என அழைக்கப்படுகின்றார். ஜப்பானில் இவரை என்மா எனவும் எம்மா எனவும் அழைக்கப்படுகின்றார். + +யமன் நரகத்தை ஆள்பவராக மட்டுமல்லாது நரகத்தில் இறந்தவர்களுக்கு தர்மத்தை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். அவர் எப்போது ஆண் வடிவிலேயே தோற்றம் அளிக்கிறார். தன்னுடன் ஒரு தூரிகை(சீன மற்றும் ஜப்பானிய மொழி பழங்காலத்தில் தூரிகையால் எழுதப்பட்டது), அனைத்து உயிர்களின் மரண தேதியையும் அடங்கிய புத்தகம் முதலியவற்றை வைத்துள்ளார். மேலும் காளை-முகன், குதிரை-முகன் என இருவர் இறந்தவர்களின் ஆன்மாக்களை ஒவ்வொன்றாக யமன் முன் கொண்டு வருகின்றனர். யமனும் அவர்களுடைய கர்மங்களுக்கு தகுந்தாற்போல் தீர்ப்பளிக்கிறார். + +யமன் என்பது தேவராக அல்லது பதவியாக(யம பதவி) கருதப்படுகிறது. பல நல்ல மனிதர்கள் யம பதவி அளிக்கப்பட்டதாக புராணக்கதைகள் உள்ளன, + +திபெத்தில் யமன் சம்சாரத்தை வழிநடுத்துபவராக கருதப்படுகிறார். எனினும் இவர் பயங்கரமாகவே சித்தரிப்படுகிறார். பவச்சக்கரத்தில் வாழ்வின் அனைத்து நிலைகளும் இவருடைய பயங்கரமான கரங்களுக்கு நடுவிலேயோ அல்லது இவருடைய தாடைகளுக்கு நடுவிலேயோ தான் சித்தரிக்கப்படுகிறது. யமனின் துணை யமி என கருதப்படுகிறார். + +மேலும் திபெத்திய பௌத்தத்தில் யமனை மரணத்தின் உருவகமாக கருதுகின்றனர். எனவே தான் மரணத்தை அழிப்பவர் என்ற பெயரில் மஞ்சுஸ்ரீயின் உக்கிர வடிவம் யமாந்தகர் என அழைக்கப்படுகிறது. + + + + + + +யமி + +வேதத்தில் யமி(यमी) முதல் பெண்ணாக கருதப்படுகிறார். யமன் இவருடைய இரட்டை சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சூரிய தேவன் மற்றும் சூரியனின் முதலாவது மனைவி சந்தியா தேவிக்கும் பிறந்தவர்கள் ஆவார். யமியை யமுனா எனவும் அழைப்பர். யமுனா அதே பெயருடைய நதியின் அதிபதியாக உள்ளார். மேலும் யமிக்கு யாமினி(यामीनी) என்ற பெயரும் உண்டு இதற்கு இரவு என்று பொருள். யமி கருமை ���ிறத்துடன் ஆமையை வாகனமாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். + +திபெத்திய பௌத்தத்தில், யமி இறப்பின் அதிதேவதை ஆவார். இவர் நரகத்தில் பெண்களின் ஆன்மாக்கை கட்டுப்படுத்துபவராக கருத்தப்படுகிறார். மேலும் இவர் யமனின் துணையாக கருதப்படுகிறார். + + + + + +ஹாரிதி + +ஹாரிதி(हारीती) பௌத்தத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கும், நற்பிரசவத்திக்கும், குழந்தைகளின் நல்வளர்ப்புக்கும், தாம்பத்திய புரிந்துணர்வுக்கும், காதல் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அதிபதியாக கருதப்படுபவர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் கிஷிமொஜின் என அழைப்பர். குழந்தைப்பேறற்ற பெண்களும் குழந்தை பெறுவதற்காக ஹாரிதியிடம் முறையிடுவர். + +ஆரம்பத்தில், ஹாரிதி நர மாமிசம் தின்னும் அரக்கியாக இருந்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இருந்தனர். அனைவரையும் இவர் போற்றி பாதுகாத்து வந்தார். எனினும் அக்குழந்தைகளின் உணவுக்காக பல்வேறு குழந்தைகளை களவாடி கொன்ற வண்ணம் இருந்தார். இதனால பாதிக்கப்பட்ட இறந்த குழந்தகைளின் தாய்மார்கள் புத்தரிடம் முறையிட்டனர். + +புத்தர் ஹாரிதியின் இளைய மகனான ஐஜியை தன்னுடைய பிச்சை பாத்திரத்தினுள் ஒளித்துக்கொண்டார். ஹாரிதி தனது குழந்தையை பிரபஞ்சத்தின் அனைத்து இடங்க்ளிலும் தேடியும் அவளுக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் இறுதியாக அவள் புத்தரின் உதவியை நாடினாள். நூற்றுக்கணக்கான குழந்தைகளுள் ஒரு குழந்தையை தொலைத்ததற்கே வருத்தப்படுபவள், அவள் கொன்ற பல நூறு குழந்தைகளின் தாய்மார்களின் நிலைமையை கற்பனை செய்யும் படி ஹாரிதியிடம் புத்தர் கூறினார். தன்னுடைய தவறை உணர்ந்த அவள் அனைத்து குழந்தைகளின் பாதுகாவலராக இனி இருப்பதாக புத்தரிடம் உறுதி அளித்தாள். + +சில கதைகளின் இவள் அவலோகிதரின் பெண் உருவான குவான் யின் உடைய அம்சமாகவும் கருதப்படுகிறார். + +பஞ்சிகர் இவருடைய துணை ஆவார். பஞ்சிகர் குபேரனின் 28 ய‌க்‌ஷ தளபதிகளுள் ஒருவர். + + + + + + +பஞ்சிகர் + +பஞ்சிகர்(சீனம்:般闍迦) பௌத்தத்தில் குழந்தையின் பாதுகாவலராக கருதப்படும் ஹாரிதியின் துணை ஆவார். இவர் ஹாரிதியுடன் இணைந்து 500 குழந்தைகளை பெற்றதாக கருதப்படுகிறது. + +இவர் குபேரனின் ய‌க்‌ஷ படைகளின் தலைமை தளபதியாக விள��்குபவர். இவருக்கு கீழ் மேலும் 27 தளபதிகள் இருந்தனர். + +பஞ்சிகரும் ஹாரிதியும் காந்தார முறையில் சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர் பழங்கால இந்தியாவில் வழிபடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. + + + + +கா. அப்பாத்துரை + +கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். "பன்மொழிப்புலவர்" எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். + +அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் "குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு" மற்றும் "தென்னாட்டுப் போர்க்களங்கள்" ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார். + + + + + + +பார்ப்பனியம் + +பிராமணியம் அல்லது வந்தேறி என்பது ஒருவகைப்பட்ட நடைமுறையைக் குறிப்பதேயன்றி பிராமணர் என்று தம்மை அழைத்தும், குறிப்பிட்ட குழுக்களைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களின் பண்பாட்டையோ, கலாசாரத்தையோ, உலகப் பார்வையையோ மட்டுமே குறிப்பன அன்று. + +ஆரிய வேதங்களின் அடிப்படையிலமைந்த 'நால்வருணசாதி' அமைப்பின் கண்ணோட்டத்தைக் கொண்டு உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விளக்கம் கூறி நியாயம் கற்பிக்க முயலும் அணுகுமுறையையே பிராமணியம் அல்லது பார்ப்பனியம் எனப் பொதுவாக அழைக்கலாம். + + + + +யோகாம்பரர் + +யோகாம்பரர் (योगांबर) திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பாதுகாவலர் ஆவார். இவர் அனுத்தரயோக தந்திர பிரிவைச் சேர்ந்தவர் + +இவர��� அபயகரகுப்தரின் வஜ்ரவாலி நூலின் மூலமாகப் பரவலாக அறியப்படுகின்றார். + +உக்கிர உருவம் உடைய இவர், நீல நிறத்தை உடையவராக இருக்கின்றார். இவருக்கு நீலம், வெண்மை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் மூன்று முகங்கள் உள்ளன. + + + + + +மேலணை + +மேலணை, "முக்கொம்பு அணை’" (Upper Anaicut, Mukkombu Anai) என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும். + +இது திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில், கரூர் வழியில் உள்ளது. "இங்கிருந்துதான்" காவிரி ஆறானது காவிரி,கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன. காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசணப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846இல் அணையின்மீது பால உள்ளிட்டவை கட்டப்பட்டன. இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன. + +மேட்டூர் அணையில் இருந்து 177 கீலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும். +2018 ஆகத்து 22 அன்று இரவு இந்த அ��ையில் இருந்த ஐந்தாவது தூண் முதல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒன்பது தூண்களும் மதகுகளும் என 408 அடி நீளத்துக்கு உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. + + + + +1606 + +1606 (MDCVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +மக்காவு + +மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு ("Macau Special Administrative Region"), பொதுவாக மாக்காவு ("Macau" அல்லது "Macao"), என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். இது டிசம்பர் 20, 1999 இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே குவாங்டொங் மாகாணம், கிழக்கு, மற்றும் தெற்கில் தென்சீனக் கடல் ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் பேர்ள் ஆறு ஓடுகிறது. புடவைத் தொழில், இலத்திரனியல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன. + +போர்த்துக்கீச வியாபாரிகள் முதன் முதலில் இங்கு 16ம் நூற்றாண்டில் குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் 1999 வரையில் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது 2049 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்" என்ற கொள்கைப்படி மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் சீனாவின் மத்திய அரசு பொறுப்பாகும். அதே நேரத்தில் மக்காவுக்கு அதன் உள்நாட்டு விவகாரங்களில் (சட்டம், காவற்துறை, நாணயம், வரி போன்றவை) தன்னதிகாரம் இருக்கும். + + + + + +பிற்படுத்தப்பட்டோர் + +பிற்படுத்தப்பட்டோர் , அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று ரீதியாகப் பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை விட பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமை சிறிது மேம்பட்டதாக இ��ுந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவார்கள். எடுத்துக்காட்டாக, 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைப் பண்ணையாட்களாக உழன்ற பொழுது பிற்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் குத்தகை விவசாயிகளாகப் பணி புரிந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புகளால் துன்புற்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடனும் மற்றப் பிராமணரல்லாத உயர்வகுப்பினருடனும் தங்களுடைய பொதுவானா பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களை முன்னிட்டு இணைந்த அரசியல் வரலாற்று நிகழ்வே திராவிட இயக்கத்தின் எழுச்சியாக அமைந்தது. + +பிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5%ம், இசுலாலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5%ம், சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 20%ம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. + +இந்திய அரசு மற்றும் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவன வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. + + + + + +கண்டதேவி + +சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை வட்டத்திலுள்ள ஒரு ஊர் கண்டதேவி ஆகும். இங்கு உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோயில் தேர்ப் பிரச்சனையால் இவ்வூர் தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. காலங்காலமாக இவ்வூரில் உள்ள பட்டியலின மக்களான பள்ளர் மற்றும் பறையர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இக்கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தங்களது மனித உரிமைகளை நிலைநாட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அமைப்புகள் 1998-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை அணுகி அரசியல் சட்ட உரிமையை அனுபவிக்க ஆணை பெற்றன. தாழ்த்தப்பட்டவர்கள் தேரிழுக்கும் உரிமையைச் சட்டரீதியாக பெற்றதைப் பொறுக்காத சாதி வெறியர்கள் தேர் இழுப்பதையே நிறுத்தி விட்டனர். 1998-முதல் இன்று (2007) வரையிலும் இத்தேர் இழுக்கும் போராட்டம் இன்னமும் முடிவின்றி தொடர்ந்து வருகின்றது. + + + + +ஏகஜடி + +ஏகஜடி(एकजटी) அல்லது ஏகஜட(एकजट) பௌத்தத்தில் வணங்கப்படும் 21 தாராக்களில் ஒருவர் ஆவார். இவர் மிகவும் உக்கிரமானவராகவும் ஆற்றல்வாய்ந்தவராகவும் கருதப்படுகிறார். + +இவர் பச்சை தாராவின் மண்டலத்தில் காணப்படுகிறார். எதிரி பயம் நீக்குதல், மகிழ்ச்சியை பரப்புதல் மற்றும் போதி அடைவதற்கு தடைகளாக இருப்பவைகளை நீக்குதல் முதலியவை இவருடைய சக்திகளாக கருதப்படுகின்றன. + +ஏகஜடி ரகசிய மந்திரங்களின் பாதுகவலராகவும் கருதப்படுகிறார். அதனால் தான் இவருடைய மந்திரமும் இரகசியமாக இருப்பதாக கருதப்படுகிறது. + +மேலும் ஏகஜடி மகாசித்தி போதனைகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார். + +இவர் நீல நிற தோலுடனும் சிகப்பு உச்சிக்கொண்டையுடனும் காணப்படுகிறார். இவருக்கு ஒரு தலை, ஒரு மார்பு, இரண்டு கரங்கள் மற்றும் முக்கண்ணும் உள்ளன. எனினும் இவர் பன்னிரு தலைகளுடனும் 24 கரங்களுடனும் கூட சித்தரிக்கப்படலாம். இவருடைய ஆயுதங்கள் வாள், கத்தி, வஜ்ரம் மற்றும் நீல நிற தாமரை கோடரி + +பொதுவான தோற்றத்தில், இவர் கைகளில் கோடரி, கட்வங்கம் மற்றும் கபால பாத்திரத்துடன் காணப்படுகிறார். இவருடைய கட்வங்கத்தில் அக்ஷோப்யரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது + +இவருடைய நடத்தை உறுதியை குறிக்கிறது. ஆணவத்தின் அடையாளாமன சவத்தின் மீது தன் வலது காலை வைத்துள்ளார். இவர் புண்ணகிக்கும் போது இரு நாக்கும் ஒரு பல்லும் வெளிப்படுகிறது. கபாலத்தால் ஆன மாலையும் புலித்தோலையும் அனிந்து காணப்படுகிறார். தாமரையின் மீது வஜ்ராசனத்தில் அமர்ந்துள்ளார் மேலும் அவரை சுற்றி அறிவாற்றலின் அடையாளமான தீப்பிழம்புகள் காணப்படுகின்றன. + + + + + +ஹெஸென் + +கெஸ்சன், ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள 16 மாநிலங்களுள் ஒன்று. எசனின் தலைநகரம் வீஸ்பாடன் ஆகும். + + + + +குபேரன் (பௌத்தம்) + +குபேரன் அல்லது வைஷ்ரவணன்(वैश्रवण) சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவர் வட திசையின் பாதுகாவலராக கருதப்படுகிறார். லோகபாலராக மட்டும் அல்லாது இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவரும் ஆவார். பாளி மொழியின் இவரது பெயர் வே���்ஸவண(वेस्सवण) என அழைக்கப்படுகிறது. + +வைஷ்ரவணன் என்ற பெயர் விஷ்ரவண என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. விஷ்ரவண என்றால் "பெரும் புகழுடைய" என்று பொருள். + +பிற மொழிகளில் பெயர்கள்: + +பௌத்தத்தில் வைஷ்ரவணன் என்றே பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. + +பௌத்த குபேரனும் இந்து மத குபேரனும் ஒருவராகவே இருப்பினும், காலப்போக்கில் பௌத்தத்தில் உள்ள குபேரனுக்கு வெவ்வேறு குணங்கள், செயல்கள், கடமைகள், எனப் புராணக்கதைகளில் பல வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன. கிழக்காசியாவில் பௌத்தத்தின் காரணமாகவே குபேரனின் வழிபாடு பரவினாலும், மரபுகதைகளில்("Folk Stories") இவர் ஓர் அங்கமாகவே ஆகி விட்டார். மேலும் இவர் பௌத்தத்துக்கு அப்பாற்பட்ட நிலையிலும் அறியப்படுகிறார். + +குபேரன் வடக்கு திசையின் காவலர் ஆவார். இவருடைய உலகம் சுமேரு மலையின் கீழ் பாதியில் உள்ள மேல் வரிசையின் வடக்கு கால்வட்டமாகும். குபேரன் அனைது யக்ஷர்களின் தலைவராக கருதப்படுகிறார். + +இவர் மஞ்சள் முகமும் உடையவராக காட்சியளிக்கிறார். இவர் ஓர் அரசர் என்பதை குறிக்கும் வகையில், தன்னுடன் குடையை ஏந்தியுள்ளார். மேலும் இரத்தினங்களை வாயிலிருந்து உதிரும் கீரிப்பிள்ளையை வைத்திருப்பவராகவும் அவ்வப்போது சித்தரிக்கப்படுகிறார். கீர்ப்பிள்ளை பேராசை மற்றும் பகைமையின் சின்னமான பாம்பின் எதி்ரியாகும். மேலும் இரத்தினங்கள் உதிரும் செயல் தானத்தை குறிக்கிறது. + +பாளி சூத்திரங்களில் குபேரன் வேஸ்ஸவணன் என அழைக்கப்படுகிறார். இவர் நான்கு திசைகளையும் காக்கும் சதுர்மகாராஜாக்களில் ஒருவர் ஆவார். இவருடைய உலகம் உத்தரகுரு (उत्तरकुरु) என அழைக்கப்படுகிறது. அவருடைய உலகத்தில் "ஆலகமந்தம்" என்ற செல்வத்தின் நகரம் உள்ளது. மேலும் வேஸ்ஸவணன் யக்‌ஷர்களின் அரசர் ஆவார். + +வேஸ்ஸவணனின் மனைவியின் பெயர் புஞ்சதி (भुञ्जती). இவர்களுக்கு லதா (लता),சஜ்ஜா (सज्जा), பவரா (पवरा),அச்சிமதி (अच्चिमती) மற்றும் சுதா( सुता) என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். இவருடைய சகோதரி (உடன்பிற்றந்தாள்) மகன் நாக கன்னிகையான இரந்தாதியின் (इरन्दाती) கணவன் புண்ணகன் (पुण्णक). இவருக்கு நாரிவாகனம் என்னும் தேர் உண்டு. இவருடைய ஆயுதம் கதாயுதம் ஆகும். எனினும் இந்த ஆயுதத்தை புத்தரை பின்பற்றுவதற்கு முன்பு வரை மட்டுமே பயன்படுத்தினார். + +குபேரன் என்ற பெயர் வேஸ்ஸவனின் முற்பிறவி பெயராகும். முற்பிறவியில் செல்வ செழிப்பான அரைப்பு ஆலைகளின் அதிபதியாக இருந்தான். தன்னுடைய ஏழு அரைவு ஆலையில் இருந்து ஒரு அரைவு ஆலையின் உற்பத்தி முழுவதையும் தானமாக 20,000 ஆண்டுகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நற்செயலில் (நற்கர்மத்தின்) காரணமாக அடுத்த பிறவியில் சதுர்மகாராஜாவாக பிறந்ததாக கருதப்படுகிறார். + +மற்ற பௌத்த தேவதாமூர்த்திகளைப் போல் குபேரன் என்பது ஒரு பதவியாக கருதப்படுகிறது. இவரது இறப்புக்கு பிறகு இன்னொரு குபேரன் இவரது பதவிக்கு வருவார். இவருடையா ஆயுள் 90 லட்சம் ஆண்டுகளாகும். குபேரன் யக்‌ஷர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்க ஏவும் அதிகாரம் உள்ளது. யக்‌ஷர்கள் பாதுகாக்க வேண்டிய இடங்கள் குபேரனின் ஆட்சியின் ஆரம்ப காலத்தின் நிர்ணயிக்கப்படுகிறது. + +கௌதம புத்தர் பிறந்தவுடன். குபேரன் அவருடைய ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலும் புத்தரிடத்தும் அவரின் சீடர்களிடத்து மற்ற தேவர்களிடம் இருந்து மனிதர்களிடமிருந்தும் செய்திகளை கொண்டு வரும் செயலை புரிந்தார். இவர் புத்தர் மற்றும் அவரை பின் தொடர்பவர்களின் பாதுகாவலராகவும் செயல்பட்டார். இவர் புத்தரிடம் ஆடனாடா (आटानाटा) என்ற செய்யுளை அளித்தார். இதை உச்சாடனம் செய்தால் காட்டில் உள்ள புத்தரை நம்பாதை தீய ய‌க்‌ஷர்களிடமிருந்தும் மற்ற தீய மாய உயிர்களிடமிருந்தும் காக்கப்படுவதாக நம்பப்படுகிறது. + +பௌத்த புராணங்களின் படி, மகத அரசன் பிம்பிசாரன் இறப்புக்கு பின்னர் குபேரனின் உலகில் ஜனவாசபன் என்ற யக்‌ஷனாக மறு பிறவி எய்தினார். + +பௌத்தத்தின் ஆரம்ப காலத்தின், மரங்களையே கோவில்களாக கொண்டு மக்கள் குபேரனை வணங்கினார். சிலர் மக்கட்பேறு வேண்டியும் இவரை வழிபட்டனர். + +ஜப்பானில் குபேரன் போர்க்கடவுளாக பாவிக்கப்படுகிறார். மேலும் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் கருதப்படுகிறார். ஒரு கையில் வேலும் இன்னொரு கையில் புத்த பகோடாவும்(Pakoda) வைத்திருக்கிறார். பின்னது செல்வத்தை குறிக்கிறது. பகோடாக்கள் செல்வத்தின் இருப்பிடமாக கருதப்படுவதால் இவர் பகோடாக்களை காவல் காத்து பிறருக்கு அதை அளிப்பதாக நம்பப்படுகிறது. ஷின்டோ மதத்தின் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவர்.. + +இவர் புத்தர் போதனைசெய்த அனைத்து இடங்களை காப்பவராகவும் கருதப்படுகிறார��. + +திபெத்தில் குபேரன் ஒரு தர்மபாலராக கருதப்படுகிறார். மேலும் இவர் வடதிசையின் அதிபதியாகவும் செல்வத்தின் அதிபதியாகவும் இருக்கின்றார். வடதிசையின் காவலராக பௌத்த ஆலயங்களின் பிராதன வாசலுக்கு வெளியே உள்ள சுவரோவியங்களில் வரையப்படுகிறார். அவ்வப்போது நாரத்தை பழத்தை கையில் ஏந்தியவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவர் பருத்த தேகத்துடனும் உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவதுண்டு. அமர்ந்த நிலையில், தன்னுடைய வலது கால் தொங்கும் நிலையில் தாமரை மலரின் மீது ஊன்றிய வண்ணம் உள்ளது. இவரது வாகனம் பனி சிங்கம். + + + + +