diff --git "a/train/AA_wiki_55.txt" "b/train/AA_wiki_55.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_55.txt" @@ -0,0 +1,3379 @@ + +இட்லர் + +அடால்ஃப் இட்லர் ("Adolf Hitler", ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் +சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. + +அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான். + +இட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவளான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்குத் தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவேடுகள் கூறுகின்றன. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. + +இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையைத் தன் தந்தையின் கொடுமைக்குக் கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைப்போன்ற�� சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவைப் பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ஆம் வயதில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை டிப்ளாமா(diplomo) பட்டம் பெறாத நிலையில் நிறுத்திக்கொண்டதாகப் பதிவேடுகள் கூறுகின்றன. + +தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவவியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை. + +அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும். + +இட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழ்ந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், ("Academy of Fine Arts Vienna") அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தத��கப் பதிவேடுகள் கூறுகின்றன. இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ஆம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார். + +வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக ("Anti-Semite") இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான "அகஸ்ட் குபிசெக்" தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதன யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன. + +இட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் ("On the Jews and their Lies") என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று இட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார். + +ஆரியக் கோட்பாட்டுக்கு ("Aryan Race") தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது. + +இட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்தது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார். + +இட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். பல ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுரியம் படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது. + +1914 ஒய்பெர்ஸ் ("Ypers") சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டதாகப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை ("Massacre of Innocents") என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்துப் பேசப்பட்டார். ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் யூத பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு ("Iron Cross II Class"), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு ("Iron Cross I Class") பதக்கங்களைப் பெற்றார். + +15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியைக் காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதானம் செய்து கொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயே இருந்தது என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசப்பற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்ட��ப்போயின. + +இட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் ("Home Front") அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் ("November Criminals") என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. + +ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் ("John Keegan") மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது. +இட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப���பந்தம் நிறைவேறியது. + +இட்லர் ஆஸ்திரியா-ஹங்கேரியில் (தற்போதைய ஆஸ்திரியாவில்) 1889 இல் பிறந்தார். 1913 ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றார். முதல் உலகப் போரில் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றினார். அவர் 1919 இல் NSDAP (நாசிக் கட்சி) இன் முன்னோடியான ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியில் (DAP) சேர்ந்து 1921 ல் NSDAP(நாஜி கட்சி) இன் தலைவராக ஆனார். 1923 ம் ஆண்டு முனிச்சில் அதிகாரத்தை கைப்பற்ற அவர் ஒரு சதியினை முயற்சித்தார். ஆனால் அந்த சதி தோல்வியுற்றதால் இட்லரை சிறைத்தண்டனைக்கு இட்டுச் சென்றது, அதன் போது அவர் தனது சுயசரிதையின் மற்றும் அரசியல் அறிக்கையின் மேன் காம்ப் ("மை ஸ்ட்ரக்ள்") முதல் தொகுதியை எழுதினார்.1924 ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் இட்லர் வெர்சல்லஸ் ஒப்பந்தத்தை தாக்கி, பான்-ஜெர்மைனிசம், யூத எதிர்ப்பு, கம்யூனிச விரோதம் மற்றும் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் மக்கள் ஆதரவை பெற்றார். இட்லர் அடிக்கடி சர்வதேச முதலாளித்துவத்தையும், கம்யூனிஸத்தையும் யூத சதித்திட்டத்தின் பாகமாக கண்டனம் செய்தார். + +1933 ஆம் ஆண்டளவில், ஜெர்மன் ரெய்சஸ்டாகின் மிகப்பெரிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியாக நாசிக் கட்சி இருந்தது, இது ஜனவரி 30, 1933 அன்று அதிபர் பதவிக்கு இட்லரை நியமித்தது. அவரது கூட்டணியின் புதிய தேர்தல்களுக்குப் பிறகு, ரெய்ச்ஸ்டாக், செயல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது, இது வேய்மார் குடியரசை நாஜி ஜெர்மனியாக மாற்றி, தேசிய சோசலிசத்தின் சர்வாதிகார மற்றும் சர்வாதிகார சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு-கட்சி சர்வாதிகாரமாக மாற்றியது. இட்லர் ஜெர்மனியில் இருந்து யூதர்களை அகற்றவும், பிரிட்டனும் பிரான்ஸும் ஆதிக்கம் செலுத்திய முதல் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு அநீதி என்று அவர் கண்டதை எதிர்த்து ஒரு புதிய ஒழுங்கை சாதிப்பதய் இலக்காகக் கொண்டிருந்தார். அதிகாரத்தில் இருந்த அவரது முதல் ஆறு ஆண்டுகள் பெரும் பொருளாதார மந்தநிலையிலிருந்து விரைவான பொருளாதார மீட்புக்கு வழிவகுத்தது, முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சிறப்பாக கைவிடப்பட்டன, மில்லியன் கணக்கான இனவாத ஜெர்மனிய மக்களுக்கு சொந்தமான பிரதேசங்களைக் கைப்பற்றியது - இது அவருக்கு குறிப்பிடத்தக்க மக்���ள் ஆதரவை அளித்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் வெடிப்புக்கான பிரதான காரணமாக அவருடைய ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை கருதப்படுகிறது. அவர் பெரிய அளவிலான மறுமலர்ச்சியை இயக்கி, செப்டம்பர் 1, 1939 இல் போலந்து மீது படையெடுத்தார், இதன் விளைவாக ஜெர்மனியின் மீது படையெடுப்பதாக பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு நாடுகள் பிரகடனங்களை அறிவித்தன. + +ஜூன் 1941 இல், சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பை இட்லர் உத்தரவிட்டார். 1941 இறுதியில் ஜெர்மனிய படைகள் மற்றும் ஐரோப்பிய அச்சு சக்திகள் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தன. டிசம்பர் 1941 ல் இட்லர் முறையாக அமெரிக்கா மீது போரை அறிவித்தார், அவர்களை மோதலில் நேரடியாகக் கொண்டு வந்தார்.போரின் இறுதி நாட்களில், 1945 இல் பேர்லின் போரின் போது, இட்லர் அவரது நீண்ட கால காதலான இவா பிரவுனை மணந்தார். ஏப்ரல் 30, 1945 அன்று, இரண்டு நாட்களுக்குள், சிவப்பு இராணுவத்தால் பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டனர், அவர்களது சடலங்கள் எரிக்கப்பட்டன. + +இட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் இட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் "ஜெர்மன் தொழிலாளர் கட்சி" ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் +இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். + +கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க "தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக" உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார். + +இட்லரின் மரணம் இன்னும் நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது. + +இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. +ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார். + +1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. +இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்துக் கொண்ட தகவல் ஆகும். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர். +இந்நிலையில் இட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாள ரான ரோஹுஸ் மிஷ், 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். எனவே, அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்தது. + +ஏப்ரல் 30ம் தேதி அன்று பங்கரில் உள்ள அனைவரையும் இட்லர் அழைத்து, எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம், தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளலாம் என்றார். இப்படி அவர் சொன்னதால், அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனாக ஆகி விட்டேன். இட்லரும், இவாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவு அப்போதுதான் எடுக்கப்பட்டது. எப்படி தற்கொலை செ���்து கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனையைக் கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ ஆவார். முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது சிறந்த வழி என்றார். இதைக் கேட்ட பின்னர் இட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். + +பின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவை மூடிக்கொண்டார். நெடு நேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை. சிறிது நேரம் இடைவெளியிட்டு இட்லரின் அறையைத் திறந்தோம். நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கு கண்ட காட்சி மனதை உறையச் செய்வதாக இருந்தது. இட்லர் பெரிய சோபாவில் ரத்தக் கறையுடன் இறந்து கிடந்தார் அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா பிரான் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்பு அங்கிருந்த சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர், +இட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபர் மிஷ்தான். இட்லருடன் இருந்து தப்பிய ஒரே நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. +இட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இவரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப் பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அவ மரியாதை செய்யப் பட்டிருந்தது. +இதனை இட்லர் அறிந்திருந்தார். எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால்தான் அவரது மற்றும் இவாவுடைய உடல்களை எரித்துவிடுமாறு ஆணையிட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உண்மை போல இருந்தது. +இந்நிலையில் இட்லர் தற்கொலை செய்துகொள்ளும் தருணம் எப்படி இருந்தது என்பதை, அந்தப் பாதாள அரண்மனைக்குள் செவிலியராகப் பணியாற்றிய பெண்மணி எர்னா பிளஜல் என்பவர், சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றே தைரியம் வந்தவராக ஊடகங்களில் பேசியிருந்தார். + +இட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் 2 பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம். +எரிக்கப்���ட்ட இரு உடல்களும் இட்லர், இவா பிரானுடையது இல்லை. +இட்லர், இவா பிரானைப் போல தோற்றம் கொண்ட 2 பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் இட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர். இட்லரும், இவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறோம். +இட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் இட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேறியது. +ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர். +இட்லரின் பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷ்யா படையினர் அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்கவில்லையே. +இட்லரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக 1968-ஆம் ஆண்டுதான் ரஷ்யாவே அறிவித்தது. +இட்லர் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அமெரிக்க உளவுத் துறை உலகம் முழுவதும் இட்லரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததது. இட்லர் தற்கொலை செய்யவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும் என்று இங்கிலாந்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். + + + + + +மெலனீசியா + +மெலனீசியா ("Melanesia", கிரேக்க மொழியில்: μέλας "கருப்பு", νῆσος "தீவு") என்பது ஓசியானியாவின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து, அரஃபுரா கடல் வரையிலும், ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது. + +இத்தீவுக்கூட்டத்தின் மூதாதையர்கள் பாப்புவா மொழி பேசுவோரின் மூதாதையர்களாவர். + +கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றன. + +கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக கருதப்பட்டாலும், அவற்றில் வாழ்பவர்கள், இனக்கலப்புகளின் காரணமாக தங்களை மெலனீசியர்களாக கருதுவதில்லை. + + + + + +வீ. கே. சமரநாயக்க + +"வித்யா ஜோதி" பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க (1939 – ஜூன் 6, 2007) இலங்கையில் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இதனால் தான் இவர் "இலங்கைய��ன் கணினித் துறையின் தந்தை" என அழைக்கப்படுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றிய பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க ஒரு கணினி விஞ்ஞானப் பேராசிரியர் ஆவார். இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி என்பவற்றின் வளர்ச்சியில் பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பேராசிரியர் வீ. கே. சமரநாயக்க உருவாக்கிய கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி (UCSC) இன்று இலங்கையின் பிரதான கணினிக் கற்கை நிலையமாக விளங்குகின்றது. பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க இறக்கும் போது இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை நிறுவனத்தின் தலைவராக இருந்தார். + +V.W சமரநாயக்க தம்பதிகளின் புதல்வரான பேராசிரியர் சமரநாயக்க தனது இடைநிலைக் கல்வியினை கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியினை இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். + +1961 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் சமரநாயக்க தான் பட்டப்படிப்பினை மேற்கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிய ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 43 ஆண்டுகள் பேராசிரியர் அங்கு பணிபுரிந்தார். (இக் காலகட்டத்தில் 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகமாக மாற்றம் கண்டது.) 43 ஆண்டு காலப் பகுதியில் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் கணணிக் கல்லூரியின் நிறுவனராகவும் இதன் இயக்குனராகவும் பணி புரிந்தார். + +இலங்கை அரசு 1997 ஆம் ஆண்டு பேராசிரியர் சமரநாயக்கவுக்கு “வித்யா பிரசாதினி” விருதையும் 1998ம் ஆண்டு “வித்யா ஜோதி” விருதினையும் வழங்கியது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு மையம் (JICA) 1996 ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவுக்கான தலைவர் விருதினை வழங்கியது. கொழும்பு பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தினை வழங்கியது. + + + + +தென்மராட்சி + +தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. ஏனையவை வடமராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன. தென்மராட்சிக்கு மேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும், தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும், கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன. + +தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. சாவகச்சேரி நகரம் சாவக��்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது.கைதடி,வரணி,மட்டுவில்,கொடிகாமம் கச்சாய் போன்றவை தென்மராட்சியில் உள்ள ஊர்களுட் சில. + + + + + + +1904 + +1904 (MCMIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +1755 + +1755 (MDCCLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + +உருசியாவின் மாகாணங்கள் + +உருசியா 83 நடுவண் அலகுகளாகப் ("subjects", "சுபியெக்தி") பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 அலகுகள் மாகாணங்கள் ("oblasts" (; ஓபிலாஸ்தி) என அழைக்கப்படுகின்றன. + + + + +உருசியக் குடியரசுகள் + +உருசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, உருசியக் கூட்டமைப்பு 85 கூட்டாட்சி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 குடியரசுகள் ஆகும். பெரும்பாலான குடியரசுகள் உருசியர்களல்லாத இனக்குழுக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், பல குடியரசுகளில் உருசியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குடியரசு ஒன்றின் சுதேசிய இனத்தவரின் பெயரைக்கொண்ட ஒரு குடியரசு "பெயரளவிலான தேசியம்" ஆகக் கருதப்படுகிறது. + +ஏனைய உருசிய நடுவண் அமைப்புகளைப் போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது ஆட்சி மொழியைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய நடுவண் அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் நடுவண் அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது. + +உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "நடுவண் மாவட்டங்கள்" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்க��். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. + +2014 மார்ச் 18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் கிரிமியா குடியரசும், செவஸ்தப்போலும் உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன. பெரும்பாலான உலக நாடுகளும், உக்ரைன் அரசும் கிரிமியாவை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன. + +முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உருசிய சோவியத் நடுவண் சோசலிசக் குடியரசு மூன்று வகையான "சுயாட்சி" நிருவாக அமைப்புகளைக் கொண்டிருந்தது. அவை: தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சி மாகாணங்கள் (ஓப்லஸ்துகள்), தன்னாட்சி ஓக்குருகுகள் என்பனவையாகும். + +சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒவ்வொரு தன்னாட்சிக் குடியரசும் அதே பெயரில் குடியரசானது. (செச்சினிய-இங்கூசு சோவியத் தன்னாட்சி சோசலிசக் குடியரசு செச்சினியா, இங்குசேத்தியா என இரண்டு குடியரசுகளாயின.) பல "தன்னாட்சி மாகாணங்கள்" (அடிகேயா, அல்த்தாய், காராசாய்-செர்கெஸ்ஸியா, அக்காசியா) ஆகியனவும் குடியரசுகள் ஆயின. + + + + +அடிகேயா + +அடிகேயா (ரஷ்ய மொழி:Респу́блика Адыге́я) என்பது ரஷ்யக் கூட்டமைப்பில் கிராஸ்னதார் பிரதேசத்தில் உள்ள ஒரு குடியரசாகும். அடிகேயா தெந்கிழக்கு ஐரோப்பாவில் வடக்கு கவ்காசஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் 40 விழுக்காடு பகுதி காடுகளாகும். அடிகேயா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியன மிகுந்த ஒரு பகுதியாகும். இவற்றை விட தங்கம், வெள்ளி, தங்குதன், இரும்பு ஆகியனவும் இயற்கை மூலவளங்களாகும். + + + + +அல்த்தாய் குடியரசு + +அல்த்தாய் குடியரசு ("Altai Republic", ; அல்த்தாய் மொழி: Алтай Республика) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். அல்த்தாய் கிராய் அல்த்தாய் குடியரசின் அருகே அமைந்துள்ள பிரதேசம் ஆகும். அல்த்தாய் குடியரசு ஆசியாவின் நடுவில் அமைந்துள்ளது. சைபீரிய காடுகள், கசக்ஸ்தான் மற்றும் மங்கோலியாவின் பகுதி பாலைவனங்கள் ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ளது. இதன் 25 விழுக்காடு பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன. + +அல்த்தாய் மக்களுக்கு சுயாட்சி ஜூன் 1, 1922 இல் ஒய்ரோட் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் அல்த்தாய் கிராயின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. இப்பகுதியின் ஆரம்பப் பெயர் பாஸ்லா (Bazla) என்பதாகும். ஜனவரி 7, 1948 இல் இதற்கு "கோர்னோ-அல்த்தாய் சுயாட்சி ஓப்லஸ்து" என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1992 இல் இதற்கு அல்த்தாய் குடியரசு என்ற பெயர் வழங்கப்பட்டது. + + + + +பாஷ்கொர்டொஸ்தான் + +பாஷ்கொர்டொஸ்தான் ("Republic of Bashkortostan", ரஷ்ய மொழி: Респу́блика Башкортоста́н; பசுகிர மொழி: Башҡортостан Республикаһы) அல்லது பாஷ்கீரியா ("Bashkiria", Башки́рия) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். இது வோல்கா ஆறு மற்றும் யூரல் மலைகள் ஆகியவற்றினிடையே அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஊஃபா. இதன் எல்லைகளாக வடக்கே பேர்ம் கிராய், வடகிழக்கே ஸ்வெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து, தென்கிழக்கில் செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்து, தெற்கே ஒரென்பூர்க் ஓப்லஸ்து, மேற்கே தர்தாரிஸ்தான், வடமேற்கே உட்முர்டியா ஆகியன அமைந்துள்ளன. + + + + +புரியாத்தியா + +புரியாத் குடியரசு ("Buryat Republic", ரஷ்ய மொழி: Респу́блика Буря́тия; புரியாத் மொழி: Буряад Республика) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். + + + + +தாகெஸ்தான் + +தாகெஸ்தான் குடியரசு ("Republic of Dagestan", ரஷ்ய மொழி: Респу́блика Дагеста́н"), அல்லது தாகெஸ்தான் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். + +இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். 75 விழுக்காட்டினர் வடகிழக்கு கவ்காசியர்கள், டார்ஜின்கள் மற்றும் லெஸ்ஜின்கள் ஆகியோராவார். 16 விழுக்காட்டினர் கூமிக்குகள் மற்றும் நொகாய் மக்களும் ஆவர். மீதமானோர் ரஷ்யர்களும் (5%) அசேரிகளும் (4%) ஆவர். 90.4 விழுக்காட்டினர் முஸ்லிம் மதத்தினர் ஆவர். + + + + +இங்குசேத்தியா + +இங்குசேத்தியக் குடியரசு ("Republic of Ingushetia", ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது. வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)). +இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது. + + + + + +கபர்தினோ-பல்கரீயா + +கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர். + + + + +கரேலியா + +கரேலிய குடியரசு ("Republic of Karelia", ரஷ்ய மொழி: Респу́блика Каре́лия; கரேலிய மொழி: Karjalan tazavaldu) ரஷ்யக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். + +வரலாற்று ரீதியாக, கரேலியா முன்னர் நோவ்கோரத் குடியரசில் உருசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு பிரிவாக இருந்தது. இது இன்றைய பின்லாந்தின் கிழக்கே அமைந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டு தொடக்கம் இதன் பல பகுதிகள் சுவீடியர்களினால் கைப்பற்றப்பட்டு சுவீடியக் கரேலியா என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1721 ஆம் ஆண்டில் உருசியாவினுடனான போரை அடுத்து ஏற்பட்ட உடன்பாட்டின் படி உருசியாவுடன் மீண்டும் இணைக்கப்பட்டது. + +1920 இல், இப்பகுதி கெரேலிய தொழில் கம்யூன் என அழைக்கப்பட்டது. 1923 கரேலிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு ஆனது. 1940 முதல் கரேலோ-பின்னிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆக மாற்றப்பட்டது. ஆனாலும், பின்னரும் தொடர்ந்த போரை அடுத்து கரேலிய இஸ்துமுஸ் எனப்படும் பகுதி லெனின்கிராத் ஓப்லஸ்துடன் இணைக்கப்பட்டது. 1956 இல் இது மீண்டும் தன்னாட்சியுடன் கூடிய சோவியத் சோசலிசக் குடியரசானது. 1941 ஆம் ஆண்டில் தொடர்ந்த போரின் போது பின்லாந்து இதன் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தாலும், 1944 இல் பின்லாந்து அங்கிருந்து பின்வாங்கியது. உருசியாவுக்கு இழந்த கரேலியாவின் பகுதிகளை பின்லாந்து திரும்ப எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாலும், பின்லாந்தின் அரசியலில் எப்போதும் இது ஒரு சூடான பிரச்சினையாகவே இருந்து வருகிறது. + +இப்போதுள்ள தன்னாட்சியுடன் கூடிய கெரேலியக் குடியரசு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து 1991 ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் உருவாக்கப்பட்டது. + + + + + + +மாரீ எல் + +மாரீ எல் என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். 2010-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மொத்த மக்கள்தொகை 696,459. + + + + +வடக்கு ஒசேத்திய-அலனீயா + +வடக்கு ஒசேடியா-அலனீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். + + + + +அக்காசியா + +அக்காசியா குடியரசு ("Republic of Khakassia", உருசிய மொழி: Респу́блика Хака́сия; ஹக்காஸ் மொழி: Хакасия Республиказы) அல்லது ஹக்காசியா (Хака́сия) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இது தென்மத்திய சைபீரியாவில் அமைந்துள்ளது. + + + + +செச்சினியா + +செச்சினியக் குடியரசு ("Chechen Republic", ரஷ்யன்: Чече́нская Респу́блика, "செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா"; செச்சின்: Нохчийн Республика, "Noxçiyn Respublika"), அல்லது, பொதுவாக, செச்சினியா ("Chechnya", Чечня́; Нохчийчоь, "Noxçiyçö"), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். + +இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன. + +1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அது "de facto" அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது. + + + + + +சுவாசியா + +சுவாஷியா(Chuvashia) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். இது மத்திய இரசியாவில் அமைந்துள்ளது. இங்கு பல்கர் துருக்கிய சுவாஷ் மக்கள் வசிக்கின்றனர். + + + + +ஆலோவீன் + +ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் +"சம்ஹைன்" எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது. +மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும். + +ஆலோவீன் பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து வந்தது.. சமஹைன் திருவிழாவானது கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது. பல சமயங்களில் இது செல்டிக் புது வருடம் என அறியப்படும். + +இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர். + +இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. அல்லது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது. + +ஆலோவீன் நாளன்று பழைய எலும்புக்கூடுகளை முன்னிலைப்படுத்துவார்கள். இது அவர்களை விட்டுப் பிரிந்தவர்களை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவிலிருந்தான வழக்கத்தில் முதன்முதலில் டர்னிப் காய்கறியில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டது. அதற்குள் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது "ஜேக்-ஓ-லாந்தர்" (ஜேக்கின் விளக்கு) என்று அறியப்படுகிறது. + +இதன் பின்னணி செவிவழிக் கதையாக கூறப்படுவது: ஜேக் என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள குடிக்கும் பழக்கமுள்ள ஒரு விவசாயி பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமயத்தில் அதன் கிளையை குறுக்காக வெட்டினார். இதற்குப் பழி வாங்கும் விதமாக பேயானது ஜேக் தனது ஒரே விளக்கினைக் கொண்டு பூமியில் அங்கும் இங்குமாக இரவில் அலையுமாறு சாபம் கொடுத்தது. வட அமெரிக்காவில் டர்னிப்புக்குப் பதிலாக பறங்கிக்காய் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி எளிதாகக் கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் செந்நிறத்திலும் இருக்கிறது. + +ஆலோவீனோடு தொடர்புடைய உருவச் சித்திரங்கள் அனைத்தும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வந்துள்ளன. தேச வழக்கங்களும், கோதிக் மற்றும் திகில் இலக்கியங்களும், பிராங்கன்ஸ்டீன், தி மம்மி போன்ற பெரும்புகழ் படைத்த திகில் திரைப்படங்களும் இதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன. இந்தப் பண்டிகை காலத்தில் இத்தகைய ஆலோவீன் அடையாளங்களைக் கொண்டு வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. + +ஆரஞ்சு மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்தில் தொடர்புபட்ட வண்ணங்களாய் உள்ளன. இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது. + +சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள். + +ஆலோவீன் ஆடை அலங்கரிப்புகள் என்பது பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், முறையற்றபடி மந்திர சக்தியை பயன்படுத்தும் சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் அடையாளங்கள் கொண்ட உடை அலங்கரிப்புகளாக இருக்கும். இந்த ஆடை அலங்கரிப்புகள் பாரம்பரிய வகை என்பது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. + +அமெரிக்க தேசிய சில்லரை விற்பனைக் கூட்டமைப்புக்காக பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 2005 ஆம் ஆண்டில் 53.3% நுகர்வோர் ஆலோவீன் அலங்கரிப்புகளுக்காக சராசரியாக $38.11 செலவிடத் திட்டமிட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இது முந்தைய வருடத்தை விட $10 அதிகமான தொகையாகும். + +அமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் கனடாவில் இத்திட்டம் நிர்வாக மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது. + +ஆலோவீன் பாரம்பரியத்தில் பல விளையாட்டுகள் உள்ளன. + +ஆப்பிள் விளையாட்டில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீருக்குள் ஆப்பிள் இடப்படும். உருண்டோடிக் கொண்டிருக்கும் அந்த ஆப்பிளை கைகளைப் பயன்படுத்தாமல் தங்கள் பற்களால் பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். சில ஆட்டங்களில் பற்களில் பிடித்துக் கொண்டுள்ள ஒரு கரண்டியை அந்த உருண்டோடும் ஆப்பிள் மீது இட வேண்டும் என்பதுண்டு. + +இதே போல் உணவுப் பண்டம் ஒரு நூலில் கட்டப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்க, அதனைக் கையால் தொடாமல் உண்ண வேண்டும் என்பது இன்னொரு விளையாட்டு. இவ்வாறு உண்கையில் முகம் முழுவதும் உணவுப் பொருளின் பிசுபிசுப்பு ஒட்டிக் கொண்டு விடும். + +"புய்சினி" ("பூசீனி" என அழைக்கப்படும்) எனும் அயர்லாந்து விளையாட்டின்படி ஒரு மனிதன் கண்கட்டிய நிலையில் ஒரு மேசை முன்பாக உட்காரவைக்கப்படுகிறான். இம்மேசை மீது பல திரவங்கள் நிரப்பிய சிறிய கோப்பைகள் வைக்கப்படுகின்றன. கண் கட்டிய மனிதன் ஒரு கோப்பையில் உள்ள திரவத்தை அல்லது அந்த கோப்பையைத் தொடுகிறான். அந்த கோப்பையைப் பொறுத்து அவனது வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. பாரம்பரியமான அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து வழக்கத்தில் எதிர்கால மனைவியை கணிப்பது எவ்வாறு என்றால் ஒரு ஆப்பிளை நீளவாக்கில் வெட்டி அந்த பகுதியை ஒருவருடைய தோள்களுக்கு மேலாக போட வேண்டும். அந்த பகுதியானது கீழே விழும் போது எதிர்கால மனைவியின் பெயரின் முதல் எழுத்தை சுட்டிக் காட்டுகிறது. + +திருமணம் ஆகாத பெண்கள் ஒரு இருட்டான அறையில் ஆலோவீன் வெளிச்சத்தில் உட்கார்ந்து கண்ணாடியைப் பார்த்தால் எதிர்கால கணவனின் உருவம் கண்ணாடியில் தெரியும். திருமணத்திற்கு முன்பாக வருங்கால கணவன் இறக்க நேரிடின் ஒரு மண்டையோடு கண்ணாடியில் தோன்றும் என்பதாய் அவர்கள் நம்பினர். + +ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன. + +பார்வையாளர்களுக்கு ஒரு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகை திகிலான ஈர்ப்புகள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 300-500 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித் தருவதாக கணக்கிடப்படுகிறது. இந்த ஆர்வம் காரணமாக, தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுக்காகவும், மற்றும் அதைச் சார்ந்த ஆடை அணிவிப்புகளுக்காகவும் பெரும் செலவுகளை நிறுவனங்கள் செய்கின்றன. + +இந்த விடுமுறையானது வருடாந்திர ஆப்பிள் அறுவடையின் போது வருவதால் இனிப்பு ஆப்பிள்கள் ஆலோவீன் கால விருந்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த ஆப்பிள்கள் ஒரு ஈரப்பதமான இனிப்புத் திரவத்தில் உருட்டப்படுகின்றன. சில சமயம் கடலை வகைகளிலும் அவை உருட்டப்படுகின்றன. + +ஒரு சமயம் இந்த உருட்டலில் கூர்மையான ஊசி போன்ற பொருட்களும் சேர்ந்து உருட்டப்படுவதாக செய்திகள் வெளியாயின. அதன்பின் இப்பழக்கம் வெகுவாய்க் குறைந்து போனது. ஆயினும் இத்தகைய சம்பவங்கள் ஏதும் நேர்ந்து இதுவரை தீவிர காயங்கள் ஏதும் ஏற்பட்டதாக செய்தியில்லை. அநாவசிய பரபரப்பு இந்த விடயத்திற்கு வேண்டுமென்றே கொடுக்கப்பட்டு பீதி கிளப்பப்பட்டதாக பலர் நம்புகின்றனர். இத்தகைய தருணங்களில் சில குழந்தைகள் மற்றவர்கள் கவனத்தைக் கவர தங்களது ஆப்பிள்களில் தாங்களே ஊசி போன்றவைகளை வைத்த சம்பவங்கள் நேர்ந்துள்ளன. + +ஆப்பிள், பூசணி மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் ஏராளமான உணவுப் பொருட்கள் பல்வேறு நாடுகளிலும் ஆலோவீன் சமயத்தில் தயாரிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. + +ஆலோவீன் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை. அவரவர் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றது. அமெரிக்காவில் கொண்டாடப்படுவதை வைத்து அதன் உலகளாவிய தாக்கம் அறியப்படுகிறது. + +வட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன. இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர். செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர். + +பல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன.. பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்��ிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர். சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர். இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்.. + +கிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர். + + + + + +மேவாரி மொழி + +மேவாரி மொழி எனப்படுவது, ராஜஸ்தானி மொழியின் முக்கியமான கிளைமொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஆரியப் பிரிவுள் அடங்கியது. இது ராஜ்சமந்த், பில்வாரா, உதய்ப்பூர், சித்தோர்கர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம்மொழி எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என்னும் சொல்லொழுங்கைக் கொண்ட ஒரு மொழியாகும். மேவாரி மொழியில், 31 மெய்கள், 10 உயிர்கள், இரண்டு கூட்டுயிர்கள் ஆகியவை உள்ளன. + +பல்லின உரசொலிகள் இம்மொழியில் தொண்டையின வெடிப்பொலிகளாக மாற்றம் பெற்றுள்ளன. ஒருமை, பன்மை என்னும் இரு எண்களும்; ஆண்பால், பெண்பால் என்னும் இரு பால்களும்; மூன்று வேற்றுமைகளும் இம்மொழியில் உள்ளன. + + + + +ஒருமை + +மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். "கண்" என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. தமிழ் மொழியில், பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது. + +கீழே தரப்பட்டிருப்பவை சில ஒருமைப் பெயர்ச்சொற்களாகும். + +தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் உள்ள பதிலிடு பெயர்களின் ஒருமை வடிவங்களைக் கீழே காண்க. + + +"செய்" என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள். + + + + +இறகு + +இறகுகள் () பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன. + + + + +ரஷ்ய கிராய்கள் + +ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 8 பிரதேசங்கள் எனப்படுகின்றன. இப்பிரதேசங்களை ரஷ்ய மொழியில் 'க்ராய்' என்று கூறுகின்றனர். + + + + + +டொமினிக்கா + +டொமினிக்கா ("Dominica", பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது "ˌdɒmɪˈniːkə" (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது. + + + + + + +மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் + +மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகள் ("Federated States of Micronesia") என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்னர் இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் ஐநாவின் கண்காணிப்பில் இருந்தன. 1979இல் இவை தமது அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து பின்னர் 1986இல் விடுதலை பெற்றன. தற்போது இந்நாடு மிகப்பெருமளவில் வேலையில்லாப் பிரச்சினை, அளவுக்கதிகமான மீன்பிடித்தல், அமெரிக்காவின் அதிக நிதி உதவி போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. + +மைக்கிரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்குரோனீசியா என்ற பகுதியில் அமைந்திருக்கின்றன. மைக்குரோனீசியா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தீவுகள் மொத்தம் ஏழு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மைக்குரோனீசியா என்பது ஒரு நாடல்ல, ஆனா��் இப்பிரில் உள்ள கூட்டு நாடுகள் பலவும் தனித்தனியே சுயாதீன அரசைக் கொண்டுள்ளன. + +இக்கூட்டமைப்பில் நான்கு மாநிலங்கள் உள்ளன: + + + + + +ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள் + +ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் எனப்படுகின்றன. இந்த தன்னாட்சி வட்டாரங்கங்களை ரஷ்ய மொழியில் 'ஒக்ரூகா' என்று கூறுகின்றனர். + + + + + +1834 + +1834 (MDCCCXXXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +யாழ்வாணன் + +யாழ்வாணன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகநாதன் (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) ஈழத்தின் சிறுகதையாசிரியர். + +முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர். + +யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட "சுகாதார ஒலி" என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, "எழில்மிகு யாழ்ப்பாணம்" என்ற இதழையும் வெளியிட்டார். "அண்ணா அஞ்சலி" என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு "அமரத்துவம்" என்ற பெயரில் வெளியானது. இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் மல்லிகை உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. + +கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்.. + + +1987ஆம் ஆண்டு அவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1996 அக்டோபர் 5 இல் மாரடைப்பால் காலமானார். + + + + +1903 + +1903 (MCMIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + + +லா. ச. ராமாமிர்தம் + +லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். + +1916 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். + +லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை "சிந்தாநதி" தினமணி கதிரில் தொடராக வந்தது. + +லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். + +அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது. + +அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன. + +லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91 வயதில், சென்னையில் மரணமடைந்தார். + + + + + +1989ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது. + + + + + +மில் எம்.ஐ.-17 + +மில் எம்.ஐ.-17 (எம்.ஐ.-8எம்.டீ., நேட்டோப் பெயர் இப்-எச்) கசான், உலான்-உடே ஆகி�� இரு நகரங்களில் தயாரிப்பில் உள்ள இரசிய உலங்கு வானூர்தியாகும். + +எம்.ஐ.-8 இன் சட்டத்திற்கு, பெரிய TV3-117MT எந்திரத்தையும், ம்.ஐ.-14க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் எம்.ஐ.-17 தயாரிக்கப்பட்டது. + + + + + + + + + + +சு. ப. தமிழ்ச்செல்வன் + +சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டது. + +தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். + +1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் ���தியுயர் அரசியற் தலைவரானார். + +தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார். + + + +2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர். + + - சு. ப. தமிழ்ச்செல்வன் + + + + + + + +லைக்கா (நாய்) + +லைக்கா ("Laika", ), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குதிரியாவ்க்கா" ("Kudryavka", "кудрявка") என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. + +விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர். + +லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது. + + + + + +சேர் சா சூரி + +சேர் சா சூரி (Sher Shah Suri;1484 - மே 1545) வட இந்தியாவில் டெல்லியை தலைமையாகக் கொண்டு ஆண்ட சூர் வம்சத்தை நிறுவிய முதலாவது அரசராவார். இவரது இயற்பெயர் பரீத் கான். இவர் சேர் கான் என்றும் "அரசர்களில் சிங்கம்" என்றும் அறியப்படுகிறார். இவரது நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை நீர் வடிகால் முறைகள் முகலாயர்களால் தொடரப்பட்டது. + +பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த சேர் சா சூரி 1540இல் முகாலயர் மன்னர் உமாயூனை வென்று முகலாயப் பேரரசைக் கைப்பற்றினார். 1540 முதல் 1545 முடிய தாம் இறக்கும் வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண���டார். இவருக்குப் பின் இவரது மகன் இஸ்லாம் ஷா ஆட்சியேறினார். + +பாபரின் ஆட்சியில் முகலாய இராணுவத்தில் ஒரு தனியார் படைப்பிரிவில் பணியாற்றிய செர் சாசூரி பின்னர் படைத்தளபதியாக உயர்ந்தார். பின்னர் பாபர் ஆட்சியின் கீழ் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். + +1537 இல் பாபரின் மகன் ஹுமாயூன் பயணத்தில் இருந்தபோது சேர் சா சூரி வங்காள மாகாணத்தில் சூர் வம்ச அரசை நிறுவினார். இதனால் ஏற்பட்ட போரில் 1539 ஆண்டு முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்களத்தில் தோற்கடித்ததார். மிகச் சிறந்த அரச தந்திரியான சேர் சா சூரி தன்னை ஒரு உயர் திறன் வாய்ந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுநராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். இவர் செய்த சீரமைப்புப் பணிகள் இவருக்குப் பின்னர் வந்த முகலாய அரசர்களுக்கு குறிப்பாக ஹுமாயூனின் மகனான அக்பர் போன்றோருக்கு முகலாய அரசை வழிநடத்திச் செல்ல ஒரு அடித்தளமாக அமைந்தது. + +1540 முதல் 1545 வரையிலான இவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இவர் குடிமை மற்றும் இராணுவ நிர்வாகங்களை புதிதாகஅமைத்தார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும். மேலும் இவர் இந்திய அஞ்சல் துறையை புணரமைத்தார். ஹூமாயூன் நிர்மாணித்த நகரமான தினா-பானா என்ற நகரை புணரமைத்து அதற்கு சேர் கர் எனும் பெயரிட்டார். மேலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தைப் புதுப்பித்து பாட்னா எனவும் மாற்றினார். மேலும் பீகார் காட்டுப்பகுதியில் ஒரு வளர்ந்த புலியை வெறும் கைகளால் கொன்று புகழ் பெற்றார். மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட செடுஞ்சாலையாகவும் கிழக்கில் வங்காள தேசத்தின் சிட்டகாங்கில் தொடங்கி கங்கை நதிக் கரையோரமாகவே கைபர் மற்றும் கடந்து, பெஷாவர் வழியாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வழியாகவும் செல்லும் கிராண்ட் டிரங்க் சாலையை சேர் சா சூரி ஆப்கானிஸ்தானின் காபூல் வரை விரிவு படுத்தி மேம்படுத்தினார். + +பீகார் மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ஆங்கிலம்: UNESCO) உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. + +சேர் சா தற்போதைய ஹரியானா மாநிலத்தில் மஹேந்திரகர் என்ற மாவட்டத்தில் பிறந்தார். இது முன்னர் ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் ஹிசார் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இவருடைய இயற்பெயர் பரீத் கான். இவருடைய தாத்தா இப்ராஹிம் கான் சூர் ஒரு நிலச்சுவான்தாராகவும்(ஜாகிர்தார்) டெல்லி ஆட்சியாளர்களின் பிரதிநிதியாகவும் விளங்கியவர். இவருடைய தர்கா ஒன்று இன்றளவும் இவருடைய நிணைவாக நாராநவுல் பகுதியில் உள்ளது. தாரிக் இ கான் ஜஹான் லோடி என்பவர் தனது குறிப்பில் இதனைப் பதிவு செய்துள்ளார். + +பிரித்தானிகாக் கலைக்களஞ்சியம் சேர் சா சூரி, பீகாரில் உள்ள சாசாராம் நகரில் பிறந்ததாகக் கூறுகிறது. மியான் ஹாசன்கான் சூர் என்பவருக்கு எட்டாவது மகனாக சேர் சா சூரி பிறந்தார். பெர்சிய மொழி வரலாற்றுக் குறிப்புகள் இவர் ஆப்கானியப் பழங்குடியினத்தவரான பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறன. + +இப்ராஹிம் கான் சூர் டெல்லி சுல்தான் பாஹ்லுல் லோடிக்கும், ஜான்பூர் சுல்தானகத்திற்கு இடையே நீண்ட நாள் நிலவி வந்த போட்டியைத் தீர்க்க உதவினார் எனவே பாஹ்லுல் சுல்தான் இவரது குடும்பத்திற்கென ஹரியானாவிலும் பக்காலாவிலும் ஜாகிர்கள் எனப்படும் பெரும் நிலங்களை வழங்கினார். + +சேர் சா சூரி இளவயதில் பாஹ்லுல் சுல்தானின் ஆலோசகரும் அமைச்சருமான ஓமர் கான் என்பவர் தற்போதைய போஜ்பூர், பக்சர், பீகாரின் பாபுவா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய டெல்லி பர்கானாவை சேர் சாவுக்கு அளித்தார் பல மனைவியரைப் பராமரித்த தனது தந்தை தனக்கு எதுவும் வழங்காததால் சேர் சா சூரி வீட்டிலிருந்து தப்பி ஓடி உத்திரப் பிரதேசம், ஜானாப்பூர் ஆகியவற்ரின் ஆளுநரான ஜமால்கானிடம் பணியாற்றச் சென்றார். அவரது தந்தை பரீத் கானை திருப்பியனுப்பும்படி ஜமால்கானுக்கு கடிதமெழுதினார். ஜமால்கான் சேர் சாவுக்கு அறிவுரைகள் கூறி திருப்பியனுப்பியபோதும் சேர் சா மறுத்தார். தான் அங்கேயே கல்வி பயில்வதாக பதில் எழுதினார். + +பரீத்கானின் வீரத்தைக் கண்ட பீகாரின் ஆளுநரான ஆளுநரான பஹார்கான் லோஹனி என்பவர் பரீத்கானுக்கு புலிகளின் அரசன் என்று பொருள்படக்கூடிய 'சேர் கான்' எனும் பட்டத்தை வழங்கிக் கௌரவித���தார். எனவே (சேர் சா சூரி) முதன் முதலில் பஹார்கானின் கீழ் பணியாற்றத் தொடங்கினார். பஹார்கானின் மறைவுக்குப் பின்னர் அவருடை மகன் ஜலால் கான் ஆட்சிக்கு வந்தார். அவரின் இளவயது காரணமாக சேர்கான் அவரின் பிரதிநிதி ஆட்சியாளராக பீஹாரை ஆண்டார். பீகாரில் சேர்கானின் சக்தியையும் அவருடைய வளர்ச்சியையும் விரும்பாத ஜலால்கான் வங்காளத்தை ஆண்ட கியாசுதீன் மகமது சா என்பவரின் உதவியைக் கோரினார். கியாசுதீன் தனது தளபதி இப்ராஹிம்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். ஆனால் 1534 இல் சேர்கான் அப்படையை சூரஜ்கர் எனுமிடத்தில் வெற்றிகண்டார். இதன் விளைவாக பீகார் முழுவதையும் சேர்கான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 1538 இல் சேர் கான் வங்காளத்தின் மீது படையெடுத்து கியாசுதீன் சாவையும் வென்றார். ஆனால் வங்காள அரசை உடனடியாகக் கைப்பற்ற இயலவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் திடீரென பேரரசர் ஹுமாயூன் அங்கு பயணமாக வந்திருந்தார். 1539 இல் கவுசா எனுமிடத்தில் சேகானுக்கும், ஹுமாயூனுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஹுமாயூன் தோற்கடிக்கப்பட்டார். சேர் சா எனும் பட்டத்திற்கு தான் தகுதியானவன் என்பதை உறுதி செய்த சேர்கான் டெல்லியின் மகுடத்தைச் சூடிக்கொண்டார். + +1543 இல் சேர் சா சூரி 80,000 குதிரைகள் மற்ரும் 50,000 இராணுச வீரர்கள் கொண்ட ஒரு பெரிய படையுடன் ராஜபுதனத்தின் மீது படையெடுத்தார். ராஜபுதன அரசனான மால்தியோ ரத்தோர் இதனை முன்பே அறிந்து தனது இரானுவத்தைத் தயாராக வைத்திருந்தார். சேர் சா படைகளுடன் எதிரியின் தலைநகரத்திற்குச் செல்வதற்குப் பதிலாக ஜோத்பூருக்கு கிழக்கில் தொண்ணூறு கி.மீ தூரமுள்ள ஜைத்ரன் பர்கானாவில் சம்மல் என்னுமிடத்தில் முகாமிட்டார். ஒரு மாதம் கடந்த நிலையிலும் இவரால் கோட்டையைக் கைப்பாற இயலவில்லை. படைகளுக்கு உணவு வழங்கி பராமரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதைத் தீர்க்க எண்ணிய சேர் சா ஒரு தந்திரத்தைக் கையாண்டார். +ஒரு மாலைப்பொழுதில் மால்தியோ ரத்தோரின் முகாமிற்குள் போலியாகத் தயாரிக்கப்பட்ட சில கடிதங்களை இறைத்தார். அதில் மால்தியோவின் படைத் தளபதிகளுள் சிலர் சேர் சாவுக்கு மறைமுகமாக உதவுவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மால்தியோவிற்கு மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது. எனவே தவறாகப் ���ுரிந்துகொண்டு விசுவாசமில்லாத தனது படைத்தளபதிகளை அவர்களின் விதியை நிணைத்து அங்கேயே விட்டுவிட்டு தனது உண்மையான விசுவாசிகளுடன் ஜோத்பூர் திரும்பினான். + +மால்தியாவின் அறியாமை காரணமாக நடைபெற்ற இச்செயலுக்குப் பின்னும் அவனது ஆளுநர்களான ஜைட மற்றும் கன்பா ஆகியோர் 20,000 வீரர்கள் சேர் சாவின் 80,000 வீரர்களுடன் போர்புரிந்தனர். இப்போரில் சேர் சா வெற்றி பெற்றாலும் அவனுடைய படைத் தளபதிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை பெருமளவு இழக்க நேரிட்டது. இவ்வெற்றிக்குப் பின்னர் தனது ஆளுநரான காவாஸ் கான் என்பவரை அஜ்மீர் முதல் அபுமலை வரை பரந்திருந்த ஜோத்பூர் பிரதேசத்தின் ஆட்சியாளராக நியமித்துவிட்டு டெல்லி திரும்பினான். ஆனால் ஜூலை மாதம் மால்தியோ மீண்டும் எழுச்சிபெற்று தனது பிரதேசங்களைத் திரும்பப் பெற்றான். + +சேர் சா மூன்று உலோகங்களில் நாணயங்களை வெளியிடும் முறையை சேர் சா அறிமுகம் செய்தார். அவற்றில் முகலாய எழுத்துகளுடன் கூடிய முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் பொதுவாக வெள்ளி நாணயங்கள் ரூப்பியா என அழைக்கப்பட்டதால் சேர் சா வெளியிட்ட 178 தானியங்கள் நிலையான எடை கொண்ட ஒரு வெள்ளி நாணயத்திற்கு ரூப்பியா எனப் பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் இக்காலதில் வழங்கப்படும் ரூபாய் என்பதற்கான முன்னோடியாகும். இன்றைய நாளில் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மொரிஷியஸ், மாலத்தீவு, சேச்செல்லஸ் போன்ற நாடுகளில் தேசிய நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. + +மேலும் 169 தானியங்கள் நிலையான எடை கொண்ட 'மொகர்' எனப்படும் தங்க நாணயமும் டேம் என்றழைக்கப்பட்ட செப்பு நாணயங்களும் இவரது ஆட்சியில் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்தன. + +சேர் சா சூரி பல்வேறு நிணைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார். தற்போது பாக்கிஸ்தானில் உள்ல உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ரோட்டாஸ் கோட்டை சேர் சாவினால் கட்டப்பட்டதாகும் மேலும் பீகாரிலுள்ள ரோட்டாஸ்கர் கோர்ரை, பாட்னாவில் 1540-45 களில் கட்டப்பட்டு சேர் சாவின் அடையாளமாகத் திகழும் சேர் சா சூரி மசூதி, ஆகியவை இவரால் எழுப்பபட்டவையாகும். 1533 இல் டெல்லியில் ஹுமாயூனால் தொடங்கப்பட்ட புராணகுயிலா மசூதியை பின்னர் சேர் சா 1541 விரிவு படுத்தி அவ்வளாகத்தினுள் சேர் மண்டல் எணப்படும் ஒரு எண்கோண வடிவ கட்டடத்தையும் கட்டினார். இக்கட்டடம் பின்னர் ஹுமாயூன் காலத்தில் நூலகமாக மாற்றப்பட்டது. 1580 களில் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் வாழ்ந்த அப்பாஸ்கான் சர்வானி என்பவர் தனது 'தாரிக் இ சேர் சாஹி' (சேர் சாவின் வரலாறு) எனும் நூலி சேர் சா சூரியின் நிர்வாகம் பற்றி ஏராளமான செய்திகளை பதிவு செய்துள்ளார். + +1545, மே 22 இல் சாந்தல இராஜபுத்திரர்களுக்கு எதிராக நடைபெற்ற கலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது ஏற்பட்ட ஒரு வெடி விபத்தால் செர் சா சூரி மரணமடைந்தார். இதில் ஏற்பட்ட தீ அவரது கிடங்கு முழுவதும் பரவியது. இவருக்குப் பின் இவரது மகன் ஜலால் கான் என்பவர் இஸ்லாம் சா சூரி என்ற பட்டப் பெயருடன் அரியணை எறினார். சேர் சா சூரியின் நினைவாக கிராண்ட் டிரங்க் சாலையில் அமைந்துள்ள நகரமான சாசாராம் எனுமிடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் நடுவே சேர் சா சூரியின் கல்லறை 122 அடி உயரத்துடன் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது இக்கல்லறை இன்றும் ஒரு நினைவுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. + +பெரும் தலைநெடுஞ்சாலை (Grand Trunk Road , GT Road) தெற்கு ஆசியாவின் மிகத் தொன்மையான மற்றும் நீளமான நெடுஞ்சாலையாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைத்து வந்துள்ளது. இது கிழக்கே வங்காளத்திலிருந்து இந்தியாவின் வடக்கில் சென்று பாக்கிஸ்தானின் பெஷாவரில் முடிகிறது. 16ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் புதிதாக ஓர் நெடுஞ்சாலையை அப்போது வட இந்தியா முழுமையும் ஆண்டுவந்த பஷ்டூன் அரசர் ஷேர் ஷா சூரியால் கட்டமைக்கப்பட்டது. + + + + +தன்மை (இலக்கணம்) + +மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் அல்லது எழுதுபவர் தன்னையோ, தன்னையும் உள்ளடக்கிய பலரையோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்மை என்பதனுள் அடங்கும். + +தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன தன்மைச் சொற்களாகும். + + +வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்���டுகின்றது. + +தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் தன்மை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + +சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை + +2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர். + +இலங்கை வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் இறந்த விடுதலைப் புலிப் போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.. + + + + + + + +தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து பல தலைவர்கள், மற்றும் அரசியல் அமைப்புகள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு, மற்றும் பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் ஆகியோர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு கீழே: + +புலிகள் அமைப்பில் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு எதிரானவர்கள் கொடுத்த தகவல்களில் பேரிலேயே இலங்கை வான்படைக்கு சு.ப. மற்றும் ஏனையவார்கள் தங்கியிருந்த இடம் தொடர்பான தகவல் கிடைத்ததாக இலங்கையின் ஐலன்ட் பத்திரிகை, ஆசியா டிரிபுயூன் இணையத்தளம் ஆகியன தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் கடைசிக் காலத்தில் தலைமையுடன் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் புலிகள் அமைப்பில் பதவிப் போட்டி நிலவி வருவதாவும் அச்செய்திகள் கூறுகின்றன. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இக்கொலைத் தொடர்பான செய்தியில் தாக்குதல் இலங்கை வான்படையின் வேவு விமானங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் தாக்குதலின் போது தாக்குதல் பகுதியில் இருந்து பெறப்பட்ட நேரடி தகவல் மூலமும் தான் இம்மறைவிடம் கண்டுபிடிக்��ப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. + +தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகள் இலங்கை விமானப்படை வீசிய குண்டின் நேரடித்தாக்கத்தால் இறக்காமல் அது காற்றில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக உடற்காயங்கள் இன்றி இறந்தனர் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. + +பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நவம்பர் 5 இல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. வீரவணக்கக் கூட்டத்தில் வன்னி எங்கிலுமிருந்து திரண்ட மக்கள், விடுதலைப் புலிகளின் துறைப் பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், சைவ- கிறிஸ்தவ மதகுருமார்கள், ஆயர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் கிளிநொச்சி நகரிலிருந்து கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6:00 மணிக்கு விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் அவரது உடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது. + + + + + + +பலத்தீன் நாடு + +பலஸ்தீன நாடு ("State of Palestine", அரபு:دولة فلسطين, "dawlat filastin", எபிரேய மொழி: מדינת פלסטין, "medinat phalastin" ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. +பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஜெருசலேம் அதன் தலைநகராகும். + +அலுவலக மொழியாக அரபி மொழி உள்ளது.ஹீப்ரு மொழியும் பேசப்படுகிறது. + +பாலஸ்தீனிய மத்திய புள்ளிவிபர பணியகம் படி, பாலஸ்தீன நாட்டின் 2013 இல் மக்கள் தொகை 4,420,549 ஆகும். நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டர்க்கு 731 மக்கள் என்று உள்ளது. + +பாலத்தீன நாட்டில் 93% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுணி பிரிவை சார்ந்தவர்கள், அகதியாக முசுலிம்கள் சிறிய அளவில் உள்ளனர்.பாலத்தீன கிறித்தவர்கள் 6% உள்ளனர். டுருஸ் சமயத்தவர் சிறிய அளவில் உள்���னர்.யூதர்களும் அங்கு உள்ளனர். +கால்பந்து பாலஸ்தீன மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.ரக்பியும் ஒரு பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. +பாலத்தீனத்தின் மேற்குக் கரையில் சுமார் 7 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. + +"பலஸ்தீன நாடு" உடனடியாகவே அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டடது. ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" ("observer state") என்னும் நிலைக்கு உயர்த்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. + +செப்டம்பர் 2011 வரை, ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளும் 127 (65.8%) பலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை ஓரளவு தூதரக உறவைப் பேணிவருகின்றன. + +விடுதலைப் பிரகடனம் வழியாகப் பலத்தீனம் தன் தலைநகரம் எருசலேம் என்று அறிவித்தாலும், நடைமுறையில் இன்று எருசலேம் இசுரயேல் நாட்டின் தலைநகராகவே இசுரயேலால் கருதப்படுகிறது. இவ்வாறு பன்னாட்டளவில் எழுந்த சர்ச்சை இன்னும் தீர்வு பெறவில்லை. + +2012, ஆகத்து மாதத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மால்க்கி, ரமால்லாவில் செய்தியாளர்களிடம், பாலத்தீனம் ஐ.நா. பொது அவையில் "உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நிலை" பெறுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறினார். + +2012, நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19 தீர்மானத்தை நிறைவேற்றி, பாலத்தீனத்துக்கு "அமர்வோர்" ("entity"') நிலையிலிருந்து "உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு" ("non-member observer state") என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் 138. எதிர்ப்பு வாக்குகள் 9; நடுநிலை வகித்தோர் 41. இவ்வாறு பாலத்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என்பது உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது. + +2012, நவம்பர் 29ஆம் நாள் பாலத்தீனம் "பார்வையாளர் நாடு" என அங்கீகரிக்கப்பட்டதால் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பது குறித்து பல கருத்துகள் உள்ளன. + +இந்த ஐ.நா. பொதுப் பேரவை வாக்கெடுப்பின் விளைவாக உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் பாலத்தீன நாடு முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவாகிட ஆதரவு தெரிவிக்கின்றன. தற்போது பாலத்தீனத்தின் முதல்வரான மம்மூது அப்பாஸ் ("Mahmoud Abbas") இந்த வாக்கெடுப்பின் விளைவாக அதிக வன்மை பெறுகிறார் என்றும், அவரது கட்சிக்கு எதிரான ஹமாஸ் கட்சியின் தீவிரப்போக்கைவிட காசா பகுதியில் அவருக்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. + +பாலத்தீனத்தில் மேற்குக் கரையில் ரமால்லாவிலிருந்து நியூயார்க் சென்று அங்கு ஐ.நா. பேரவையில் உரையாற்றிய அப்பாஸ் பின்வருமாறு கூறினார்: "ஆக்கிரமிப்பும், (இசுரயேலின்) சட்ட எதிரான குடியேற்றமும் நிலக் கைப்பற்றலும் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் தெளிவாகக் கூறவேண்டிய நேரம் வந்துவிட்டது." + +பாலத்தீனத்துக்கு "பார்வையாளர் நாடு" என்னும் நிலை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஐ.நா. பேரவை மன்றத்தில் அந்நாட்டின் தேசிய கொடி உயர்த்தப்பட்டது. + +அந்த நிகழ்ச்சியைச் சிறப்பிப்பதற்காக, பாலத்தீனத்தின் ரமால்லாவில் யாசர் அரபாத் வளாகத்தில் பன்னூறு மக்கள் ஒன்று கூடி, கைகளில் கொடி அசைத்து தேசிய பாடல்கள் இசைத்தனர். + +அப்பாஸ் ஆற்றிய உரையில், பாலத்தீனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டார். பிரித்தானியர் பாலத்தீனத்தை யூதப் பகுதி என்றும் அரபுப் பகுதி என்றும் இரண்டாகப் பிரித்த 65ஆம் ஆண்டு நிறைவின்போது, ஐ.நா. வாக்கெடுப்பு 2012, நவம்பர் 29ஆம் நாள் நிகழ்ந்ததன் உட்பொருளை அவர் சுட்டிக்காட்டினார். பாலத்தீனம் தனி நாடாக உருவெடுத்து செயல்படுமா என்பது குறித்து கடந்த பல பத்தாண்டுகளில் ஐயப்பாடு ஏற்பட்டாலும், அதிசயமான விதத்தில் "தனி நாடு" என்னும் கருத்து நிலைத்து நின்றுள்ளது. + +பாலத்தீனம் என்பது தனி இறையாண்மை கொண்ட ஒரு "நாடு" என்பதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் "பிறப்புச் சான்றிதழ்" அளிக்க அழைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். + +பாலத்தீனத்திற்கு "பார்வையாளர் நாடு" என்னும் நிலை வழங்கியதற்காக இசுரயேல் ஐ.நா. தீர்மானத்தைக் கண்டனம் செய்தது. அப்பாஸ் வழங்கிய உரை இசுரயேலைப் பற்றிப் பொய்யும் புழுகும் கூறுகிறது என்று இசுரயேலி முதல்வர் பென்யமின் நெத்தன்யாகு தெரிவித்தார். இசுரயேலின் ஐ.நா. தூதர் ரான் ப்ரோசோர், "ஐ.நா.வின் தீர்மானம் ஒருதலைச் சார்பானது. அமைதிக்கான உரையாடலை வளர்த்தெடுக்க அது எவ்விதத்திலும் பயன்படாது. மாறாக பின்னோட்டத்தைத் தான் ஏற்படுத்துகிறது" என்று கூறினார். + +அவரது கருத்துப்படி, பாலத்தீனம் தனி நாடாக உருவெடுக���க ஒரே வழி இசுரயேலும் பாலத்தீனமும் "நேரடி கருத்துப் பரிமாற்றத்தில்" ஈடுபடுவதுதான். + +பாலத்தீனத்துக்கு "பார்வையாளர் நாடு" நிலை வழங்கப்படுவதை எதிர்த்து வாக்களித்த முக்கிய நாடு, இசுரயேலைத் தவிர, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகும். + +அமெரிக்கா நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் பாலத்தீனத்துக்கு ஐ.நா. "பார்வையாளர் நாடு" நிலை வழங்கியது "துரதிருஷ்ட வசமானது, எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியது" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: "இரண்டு இன மக்களுக்கு இரண்டு தனி நாடுகள் உருவாக வேண்டும். தனி இறையாண்மை கொண்டு தனித்தியங்கக் கூடிய பாலத்தீன நாடு உருவாக வேண்டும். அது இசுரயேல் என்னும் யூத குடியரசு நாட்டோடு அருகருகே அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவும் வகையில் செயல்பட வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதே ஒரே வழி." + +ஐ.நா. பேரவை பாலத்தீனம் "பார்வையாளர் நாடு" என்று ஏற்றுக்கொண்டதால் பாலத்தீன நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது. பாலத்தீனத்தின் மேற்குக் கரையில் காசா பகுதியில் இசுரயேலின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. + +பாலத்தீனம் பற்றி ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானம் அந்நாடு முழு உறுப்பினர் நாடுகளைப் போல வாக்களிக்கும் உரிமையை பாலத்தீனத்திற்கு அளிக்கவில்லை. வெறுமனே பார்வையாளராக இருந்த நிலை மாறி இப்போது "பார்வையாளர் நாடு" ("observer state") என்னும் நிலையைப் பாலத்தீனம் பெறுகிறது. எனவே பாலத்தீன இறையாண்மை சட்டமுறையாக அமைவதை ஐ.நா. ஏற்கிறது. + +இந்த தீர்மானத்தின் இன்னொரு முக்கிய விளைவு, இனிமேல் பாலத்தீனம் பன்னாட்டு நிறுவனங்களில் "உறுப்பினர்" நிலை பெற முடியும். குறிப்பாக "பன்னாட்டு குற்றவியல் மன்றம்" ("International Criminal Court – ICC"). இவ்வாறு சேரும்போது இசுரயேல் பாலத்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி குற்றம் புரிந்துள்ளது என்னும் வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல பாலத்தீனத்திற்கு உரிமை கிடைக்கும். தான் இவ்வாறு செய்யப்போவதாக பாலத்தீனம் இதுவரை கூறவில்லை என்றாலும், அவ்வாறு நிகழக் கூடும் என்பது இசுரயேலின் அச்சம். + +பாலத்தீனம் ஐ.நா. அவையில் "பார்வையாளர் நாடு" என்னும் நிலை அடைவதற்கு ஆதரவாக உறுப்பினர் நாடுகள் மிகப் பெரும் எண்ணிக்கைய��ல் வாக்கு அளித்தன. + +எதிர்ப்பு வாக்கு அளித்த நாடுகளுள் முக்கியமான நாடு ஐக்கிய அமெரிக்க நாடுகள். மேலும் இசுரயேல், கானடா, செக் குடியரசு தவிர மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா, நவுரு, பலாவு, பனாமா ஆகிய சிறு நாடுகள் உட்பட மொத்தம் 9 நாடுகள். + +பிரான்சு, இத்தாலி, எசுப்பானியா, நோர்வே, டேன்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும் கிரீசும் ஆதரவாக வாக்களித்தன. + +செருமனியும் பிரிட்டனும் நடுநிலை வகித்தன. இசுரயேலோடு அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி அப்பாஸ் வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை பிரிட்டன் காரணமாகக் காட்டியது. + +முதலில் நடுநிலை வகித்த நாடுகள் பல, பின்னர் ஆதரவு அளித்து வாக்கு அளித்தன. இவற்றுள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சில அடங்கும். 2012 நவம்பரின் தொடக்கத்தில் காசா பகுதியில் பாலத்தீனத்துக்கும் இசுரயேலுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 158 பாலத்தீனியரும் 8 இசுரயேலிகளும் உயிர் இழந்த பின்னணியில் பாலத்தீன முதல்வர் அப்பாசுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணம். + +ஐ.நா. அவையில் "பார்வையாளர் நாடு" என்னும் நிலை பெற வற்புறுத்த வேண்டாம் என்று கூறி, இசுரயேலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் பாலத்தீனத்தைக் கேட்டுக்கொண்டன. அவ்வாறு செய்தால் பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்றும் அச்சுறுத்தியிருந்தன. ஆனாலும், நிதி உதவியை நிறுத்திவிட்டால் முதல்வர் அப்பாஸ் சக்தி இழக்க நேரிட்டு அதனால் வேறு அரசியல் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று கருதி, அந்நாடுகள் தங்கள் அச்சுறுத்தலை வலியுறுத்தவில்லை. + +பாலத்தீனம் ஐ.நா. அவையை அணுகி "பார்வையாளர் நாடு" நிலை பெற வற்புறுத்த வேண்டாம் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கருத்தாக இருந்தது. தங்கள் கருத்தை அப்பாஸ் ஏற்கச் செய்வதற்காக அமெரிக்க அரசு வெளியுறவுத் துறை துணை அமைச்சராகிய பில் பர்ன்ஸ் ("Bill Burns") என்பவரை அப்பாசிடம் அனுப்பியது. ஆனால் அப்பாஸ் அதற்குச் செவிமடுக்கவில்லை. + +மேற்குக் கரையில் காசா பகுதியில் இசுரயேல் தனது குடியேற்றத்தை விரிவாக்கியதன் விளைவாக பாலத்தீனத்துக்கும் இசுரயேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கும் பாலத்தீனம் முன்வர வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிர��ட்டனின் கோரிக்கையாக இருந்தது. மேலும், பாலத்தீனம் இசுரயேலுக்கு எதிராகப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை என்று வெளிப்படையாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் அந்நாடுகள் நிபந்தனை விதித்தன. + +பாலத்தீனம் மிகப் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவை ஐ.நா. பேரவையில் பெற்றது குறித்து இசுரயேல் அதிர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, பிரிட்டன், செருமனி போன்ற நாடுகள் பாலத்தீனத்தின் விண்ணப்பத்தை எதிர்த்து வாக்களிக்கும் என்று இசுரயேல் எதிர்பார்த்தது. இறுதியில் பிரிட்டன் நடுநிலை வகித்தது. + +இசுரயேலுக்கு எப்போதுமே முழு ஆதரவு அளித்துவந்துள்ள செருமனி நாடு, பாலத்தீனத்துக்கு எதிராக வாக்கு அளிக்கும் என்று இசுரயேல் எதிர்பார்த்தது. ஆனால், இறுதியில் செருமனி இஸ்ரயேலுக்கு ஆதரவாக வாக்கு அளிக்காமல், நடுநிலை வகித்தது இசுரயேலுக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. ஐரோப்பாவின் ஒரு நாடு மட்டுமே (செக் குடியரசு) பாலத்தீன விண்ணப்பத்தை எதிர்த்து, இசுரயேலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. + +இசுரயேலின் கோபம் உடனடியாக வெளிப்பட்டது. அந்நாட்டின் முதல்வர் நெத்தன்யாகு, ஐ.நா. முடிவைக் கேட்டவுடனேயே, பாலத்தீன மேற்குக் கரை காசாவில் இசுரயேலின் ஆக்கிரமிப்பைத் தீவிரமாக்கிச் செயல்பட ஆணையிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான இசுரயேலரை பாலத்தீன காசா பகுதியில் குடியேற்ற அவர் திட்டமிட்டு அறிவிப்பு வழங்கியுள்ளார். அது மட்டுமன்றி, கிழக்கு எருசலேம் பகுதியிலும் குடியேற்றத்தைத் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. + +பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் 2016 திசம்பர் 24 அன்று நிறைவேறியது. +பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. +இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை எதிர்த்து, எகிப்து ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்திருந்தது. + +இந்த தீர்மானத்தின் மீது 2016 திசம்பர் 24 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஓட்டெடுப்பில் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதனால் தீர்மானம் ��ிறைவேறியது. +பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. + +1967க்கு பிறகு பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்க உள்ளது. அதேபோல இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது. + + + + + +எம். ஆர். ராதா + +எம். ஆர். ராதா (ஏப்ரல் 14, 1907 – செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார். + +எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தாா். இவா் தந்தை ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தாா் உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர். + +சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார். + +இராதாவிற்கு சரஸ்வதி, தனலெட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கையில் கீதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். + +இவா்களுள் இராதாவுடன் நாடகத்தில் நடித்த பிரேமாவதி ஒத்த அரசியலும் கருத்துச்சாய்வும் கொண்டிருந்தார். இருவரும் காதலித்து மணந்துகொண்டனர். சில ஆண்டுகளில் அவர் அம்மைநோயால் இறந்து விட்டார். அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்துவிட்டான். இவர்களின் மரணம் பற்றி அண்ணாதுரையின் திராவிடநாடு இதழில் "வருந்துகிறோம்" என்னும் தலைப்பின் கீழ், "நடிகவேள் தோழர் எம்.ஆர்.ராதாவின் துணைவியார் பிரேமா அம்மையாரும், மகனும் மறைந்துவிட்ட செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகின்றோம். பிரிவுத் துயரால் வாடும் தோழருக்கு நம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்ற துணுக்கு இடம்பெற்றது. + +இராதாவிற்கு தமிழரசன், எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராணி என்ற ரஷ்யா, ர���ிகலா, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா என்னும் பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர். மோகன் ராதா தயாரிப்பாளாராக உள்ளார். + +1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. + +1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான "தூக்குமேடை", "ரத்தக்கண்ணீர்", "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு" ஆகிய நாடகங்களின் தொகுப்பாக "கதம்பம்" என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. + +மு. க. முத்து நடிப்பில் வந்த "சமையல்காரன்" என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மை��� அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார். + +அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர். + +ராதா, திராவிட புதுமலர்ச்சி நாடக சபா என்னும் நாடகக்குழுவின் மூலம் ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய பலிபீடம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தினார். + +ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை சந்தனதேவன், பம்பாய் மெயில், சத்யவாணி, சோகாமேளர். ஆகிய படங்களில் நடித்தாா். + +இதில் சந்தனதேவன், பம்பாய் மெயில் ஆகிய இருபடங்களும் சேலம் மாா்டன் தியேட்டாில் தாயாாிக்கபட்ட படம் இதில் ராதா நடித்து கொண்டு இருக்கும் போது அந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்த பி.எஸ்.ஞானம் என்பவரை கடத்தி கொண்டு போய் காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தபோது அந்த படத்தின் இயக்குனரும் மாா்டன் தியேட்டா்ஸ் உாிமையாளரும் ஆன டி.ஆா்.சுந்தரம் அவா்கள் எம்.ஆா்.ராதாவை அங்கிருந்து வெளியேற்றினாா். ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார். + +பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் +என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது "இழந்தகாதல்" என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது. + +இவர் நடிகனாகவும், நகைச்சுவையாகவும், வில்லனாகவும் பல குணசித்திர வேடங்களில் நடிப்பதை கண்டும் அதில் திராவிட கொள்கையயை தைாியமாகவும் நடிப்பாற்றலால் அந்த கருத்துகளை சமுதாயத்தில் மக்களிடையே கூா்மையான நடிப்பால் காட்டியதால் அவருக்கு அன்றைய திராவிட கொள்கை பரப்பு செயளாலா் ஆன பட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு) கூா்மையான (வேல்) கருத்துகளை கூறுவதால் நடிகவேல் என்ற பட்டத்தை கொடுத்தாா். + +எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். + +துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும், பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் ""வாக்குசேகரித்தார்"". இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். + +தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர். + +எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்: + + + + + + + + +முன்னிலை (இலக்கணம்) + +மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் யாரை விழித்துப் பேசுகிறாரோ, அவரை அல்லது அவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் முன்னிலை என்பதனுள் அடங்கும். + +தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன முன்னிலைச் சொற்களாகும். + + +வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது. + +தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் முன்னிலை சுட்டும் சொற்கள் இறந்த கா��ம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + + +படர்க்கை + +ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல மூன்றாமவர் பற்றியது படர்க்கைஆகும். +பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும். இவ்வகை வேறுபாடுகளைத் தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது. எனவே +இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவரும், பேசுபவர் யாரை விளித்துப் பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும். + +தமிழில் படர்க்கைச் சொற்கள், எண், பால் என்பனவும் குறித்து வருவதுடன், பதிலிடு பெயர்கள் தவிர்ந்த பிற வகைப் பெயர்ச் சொற்களும் இதில் அடங்குகின்றன. தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் படர்க்கைச் சொற்களுக்கான சில எடுத்துக் காட்டுகளைக் கீழே காணலாம். + + +வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது சில படர்க்கைச் சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது. + +தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் படர்க்கை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + +தொங்கா + +தொங்கா ("Tonga", தொங்கா மொழி: "Puleʻanga Fakatuʻi ʻo Tonga"), அதிகாரபூர்வமாக தொங்கா இராச்சியம் ("Kingdom of Tonga") என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர். 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர். + +தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே கெர்மாடெக் தீவுகளினாலும் (நியூசிலாந்தின் பகுதி), மேற்கே நியூ கலிடோனியா (பிரான்ச��), வனுவாட்டு ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது. + +1773 இல் ஜேம்ஸ் குக் இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு "நட்புத் தீவுகள்" என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு "இனாசி" என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது. + +தொங்கா தனது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இதன்மூலம் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது. + + + + + +பெர்வேஸ் முஷாரஃப் + +பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார். + +2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றார். + +2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார். + + + + +ஜோர்ஜியா + +ஜோர்ஜியா என்னும் பெயரில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: + + + + + + +டொமினிக்கன் குடியரசு + +டொமினிக்க குடியரசு ("Dominican Republic", ஸ்பானிய மொழி: "República Dominicana", re'puβlika domini'kana) என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹையிட்டி உடன் ஹிஸ்பனியோலா தீவைப் பகிர்ந��து கொண்டுள்ளது. ஹிஸ்பனியோலா என்பது பாரிய அண்டிலெஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மேற்கேயும் கியூபாவுக்கும் ஜமேய்க்காவுக்கும் கிழக்கேயும் அமைந்துள்ளதுமான ஒரு தீவாகும். + +டொமினிக்கன் குடியரசானது, கரீபியன் கடலில் ஹிஸ்பானியோலா என்னும் தீவில் மூன்றில் இரண்டு பகுதி பரப்பளவு நிலத்தைக்கொண்டுள்ளது.டொமினிக்கன் குடியரசின் மேற்கில் கெய்டியும் கிழக்கில் ஹிஸ்பானியோலா தீவின் பியூடோரிக்காவும் மேற்கில் ஜமைக்காவும் எல்லைகளாக அமைந்தள்ளன.நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் மலைகள் நிறைந்துள்ளதோடு, தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளன. என்ரிகியிலோ ஏரி , இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.யாக் டெல் நோர்ட் எனும் நதி இந்நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.இது தவிர ஏராளமான சிறிய ஆறுகளும் ஓடைகளும் இங்கு பாய்கின்றன. + +1492 ஆம் ஆண்டு இந்நாட்டை கொலம்பஸ் கண்டு பிடித்தார்.அவர் அதற்கு "லா எஸ்பனோல"எனப் பெயரிட்டதோடு,கொலம்பஸின் மகனாகிய டியாகோ முதலாவது ராஜ பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.தலைநகராகிய செண்டோ டொமிங்கோ,1496 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.இதுவே மேற்குலகில் ஐரோப்பியர் குடியேறிய மிகப்பழமையான நகரமாகும். + +தொடர்ந்து ஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கா குடியரசு,1795 இல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் பின் வந்தது.1801 இல் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.1808 இல் செண்டோ டொமிங்கோ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.ஆனால், 1814–1821 வரை ஸ்பானியர்கள் மீண்டும் தமது காலனித்துவத்தை இங்கு நிலை நாட்டினர்.1822-1844 வரை,கேய்ட்டின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, 1844 ஆம் ஆண்டு மாசி 27 ஆம் திகதி பீட்ரோ சந்தானா தலைமையில் டொமினிக்கன் குடியரசு உதயமானது.எனினும்,1861 முதல் 1865 வரை மீண்டும் ஸ்பானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.1865 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி ஸ்பெய்னிடம் இருந்து முற்றாக விடுதலை பெற்று டொமினிக்கன் குடியரசு சுதந்திர அரசாகத் திகழ்ந்தது.எனினும்,ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது.1930 இல் இராணுவம் மேற்கொண்ட புரட்சியின் பலனாக ,இராணுவ ஆட்சி நிலவி, பின்னர் தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக்க ஆட்��ி மலர்ந்தது. + +டொமினிக்கன் குடியரசு மக்கள் ஸ்பானிய - கரீபியன் கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.ஸ்பானிய காலனித்துவ, ஆபிரிக்க அடிமைகள் மற்றும் டேய்னோ பூர்வீகம் ஆகியவற்றின் கலாச்சாரத் தாக்கங்கள் நாடெங்கிலும் முழுமையாகப் பரவிக்கிடக்கின்றன. + +டொமினிக்கன் குடியரசானது வெப்பக் காலநிலையைக் கொண்ட ஓர் நாடாகும்.வருடத்தில் தையும் மாசியும் மிகவும் குளிர்ச்சியான மாதங்களாகும்.ஆனால், ஆவணி மாதம் மிகவும் வெப்பமாக மாதமாகும்.ஆவணி,புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்களில் புயல் காற்று நாட்டைத்தாக்குவதோடு, தென் பிராந்திய கரையோரங்களில் பாரிய சேதங்களை விளைவிக்கும். + + + + + + + +1556 + +1556 (MDLVI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + + +தமிழர் மானிடவியல் + +தமிழ்ச் சமூக களங்களில் இடம்பெறும் மானிடவியல் ஆய்வுகள் தமிழர் மானிடவியல் ஆகும். இத்துறையை முதலில் ஆராய்ந்தவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ இருந்தன. + +பின்னர் தமிழர்களும் மானிடவியல் அணுகுமுறைகளையும், இத்துறையின் கோட்பாடுகளையும் தமிழ்ச் சூழல் கள ஆய்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்கள். முதலில் தமிழியல், நாட்டரியல் துறைகளிலும் பின்னர் சாதி, சாதியம், சமூக அசைவியக்கம், அலைந்துசூழ்வியல் என பல கள முனைகளிலும் மானிடவியல் பயன்படுகின்றது. + +தமிழர் மானிடவியல் பற்றிய ஆய்வுகளுக்கும், தமிழில் மானிடவியல் பற்றிய தகவல்களுக்கும் பக்தவத்சல பாரதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. அவரின் "தமிழர் மானிடவியல்", "மானிடவியல் கோட்பாடுகள்" , " இலங்கை இந்திய மானிடவியல்", "பண்பாட்டு மானுடவியல்" நூற்கள் இத்துறையில் தகுந்த விரிந்த புரிதலை தரவல்லவை. + + + + + +உளவியற் போர் + +திட்டமிட்ட முறையில் பரப்புரை உத்திகளைக் கையாண்டு போர் இலக்குகளுக்கு உதவுவது அல்லது அடைவது உளவழிப்போர் ஆகும். உளவழிப்போர் போரில் நேரடியாக ஈடுபடுவோரை, பொதுமக்களை உளவியில் ரீதியாக அணுகிப் போரியல் இலக்குளை முன்னெடுப்பதை நோக்காக கொண்டது. உளவழிப்போரில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. + + + + +1844 + +1844 (MDCCCXLIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +1759 + +1759 (MDCCLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + +1860 + +1860 (MDCCCLX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + + + + +பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) + +திருத்தந்தை 13ஆம் கிறகோரி ("Pope Gregory XIII", ஜனவரி 7, 1502 – ஏப்ரல் 10, 1585), திருத்தந்தையாக 1572 முதல் 1585 வரை இருந்தவர். + +ஊகோ பொண்கொம்பாக்னி (Ugo Boncompagni) எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1502 இல் இத்தாலிய "பொலொக்னா" (BOLOGNA) நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை பொலொக்னா பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்ததைத் தொடர்ந்து அங்கு சட்டவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இவரது 40ஆவது வயதில் உரோமபுரியில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டதுடன் அன்றைய வழக்கப்படி சாதாரண குடும்ப வாழ்வை மேற்கொண்டு ஒரு மகனுக்குத் தந்தையாகவும் இருந்தார். இவரது மகன் எங்கிள்ஸ்பேர்க்கின் ஆளுநர். + +3ஆவது பவுலின் கீழ் இவர் இவர் முக்கிய நீதி அலுவலராகவும், 4ஆவது பவுலின் காலத்தில் இவர் சில இராஜரீகக் கடமைகளில் ஈடுபட்டதன் பின்பு ஆயராக நியமனம் பெற்றார். ஆலயச் சட்டவிதிகளைக் கையாள்வதில் இவர் கைதேர்ந்தவராக இருந்ததால் திரியெந்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் சங்க அமர்வில் பங்கேற்று அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின் இறுதி வரைவில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 4ஆவது பயஸ் திருத்தந்தை இவரைக் கருதினாலாக நியமனம் செய்ததுடன் ஸ்பானியா நாட்டின் மறைத்தூதராகவும் அறிவித்தார். இதனால் இவர் 2ஆவது பிலிப் மன்னனின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் கருதினால்களின் ஒன்றியத்தால் திருத்தந்தையாகத் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெற்றார். + +இவர் தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்கள் போல் அல்லாது வ���ட்டுக்கொடுப்புடனும் புனித கார்லோ பொறோமயோ அவர்களின் துணையுடனும் ஆழமாக திருஅவையின் கொள்கைகளில் மறுமலர்ச்சி ஏற்பட வழிசமைத்தார். திரியெந்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க கருதினால்கள் அடங்கிய குழுவொன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் கேள்ன், கிராஸ் மற்றும் லுசேனில் திருத்தந்தையின் பிரதிநிதிகளை இவர் நியமனம் செய்தார். ஆனால் பிரெஞ்சு கத்தோலிக்கத் திருஅவையால் திரியெந்து முடிவுகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரிந்து சென்ற சபையினரின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு அருட்பணியாளர்களுக்கு உயர்கல்வியை வழங்குவதற்காக இயேசு சபையின் உதவியோடு உரோமையில் பன்னாட்டு மாணவர்கள் கற்பதற்கான கல்லூரிக்கு புதிய உயிரோட்டம் கொடுத்தார். இது 1551 இலிருந்து இயங்கும்போதும் இவரைக் கௌரவிப்பதற்காக இக் கல்லூரி கிறகோரி சர்வகலாசாலை என அழைக்கப்படுகின்றது. இங்கு ஏற்கனவே கற்பிக்கும் வழக்கிலிருந்த யேர்மானிய மற்றும் மறோனிற்றிச மொழிவழிக்கல்வியுடன் கிரேக்கம், ஆங்கிலம், கங்கேரிய மொழிவழிக் கல்வியும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. + +ஐரோப்பா முழுவதும் பிரிந்து சென்ற சபையினருக்கு எதிரான கொள்கைகள் இவரால் ஆக்ரோசத்துடன் மேற்கொள்ளப்பட்டது. கத்தோலிக்கர் மற்றும் பிரிந்து சென்ற சபையினர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இவர் தலையிட்டு தமது கொள்கைகளை நியாயப்படுத்துவதில் முன்நின்றார். 1572 இல் பிரெஞ்சு கத்தோலிக்க வட்டத்தால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க லீகா எனும் அமைப்பிற்கு முழு ஆதரவு வழங்கி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பத்தலேமு இரவு எனப்படும் நிகழ்விற்கு ரெ டெனும் (Te Denum) எனும் ஆசியையும் வழங்கியிருந்தார். + +இவர் அன்றைய இங்கிலாந்து அரசி எலிசபேத்திற்கு எதிராக ஸ்பானிய அரசாட்சி மேற்கொண்ட பதவிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியதுடன் அந்த அரசி படுகொலை செய்யப்படவும் தனது உதவிகளை வழங்கியிருந்தார். யேர்மனியில் ஏற்பட்ட பிரிவினைச் சபையின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பிரத்தியேகமான கருதினால்களின் குழுவொன்றை ஏற்படுத்தியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்கனவே பிரிவினைச் சபையின் ஆதிக்கத்தில் இருந்த யேர்மனியின் சில பகுதிகள் மீண்டும் கத்தோலிக்க மயமாகியது. அத்துடன் போலந்து நாடும் கத்தோலிக்கத்திற்கு மீண்டும் மாறிக் கொண்டது. ஆனால் சுவீடன் ஆட்சியாளர் குருக்களின் திருமண அனுமதி மற்றும் இரு நற்கருணைகள் வழங்குமாறு விடுத்த வேண்டுகோள் இவரால் நிராகரிக்கப்பட்டது. + +இயேசு சபையினால் கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மறை அறிவிப்பிற்கு இவர் தனது முழு ஆதரவை வழங்கினார். பிலிப்பு நேரியின் சபையை இவர் ஏற்று உறுதிப்படுத்தியதுடன், பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் பணியாற்றிய அவிலா புனித திரேசாளின் காமலீற்றா சபையினரையும் மறுமலர்ச்சி பெறச் செய்தார். + +இவரது பெயர் யூலியஸ் நாட்காட்டியின் மறுமலர்ச்சியுடன் இன்றும் நிலைத்துள்ளது. இந்நாட்காட்டியிலிருந்து 1582 ஆம் ஆண்டில் பத்து நாட்களை இவர் இல்லாது செய்தார். (ஒக்டோபர் 5 முதல் 14 வரை). புதிய விதிகளை ஏற்படுத்தி நெட்டாண்டு முறைப்படி வருடங்களைக் கணிப்பிடுமாறு அறிமுகம் செய்தவர் இவரே. இந்த மாற்றம் செய்யப்பட்ட நாட்காட்டி, இவரது பெயராலேயே கிரெகொரியின் நாட்காட்டி என அழைக்கப்படுகின்றது. இவரது இம் மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் உடனடியாகவே அமுல்படுத்தியபோதும் பிரிவினைச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்பாகவே அமுல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. + +இவர் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்று பல கலையம்சங்களையும் விட்டுச்சென்றுள்ளார். முக்கியமாக இவர் இயேசு சபையினரின் உதவியுடன் "இல் யேசு" என அழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டி முடித்ததுடன் திருத்தந்தையின் கோடைவிடுமுறை விடுதியைக் கட்டுவதற்கு ஆரம்பித்திருந்தார். இந்த முன்னெடுப்புகளால் திருஅவையின் கையிருப்புகள் வெறுமையானது. இதற்காக மேலதிக வரிகளை விதிக்காமல் நாடுகளுக்கு வழங்கியிருந்த உதவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். + +தமது 83ஆவது வயதில் 10.04.1585இல் இறைவனடி சேர்ந்த இவரது கல்லறை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தினுள் அமைந்துள்ளது. + + + + +சாவித்திரி + +சாவித்திரி என்ற தலைப்பில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: + + + + + +சத்தியவான் சாவித்திரி கதை + +சத்தியவான் சாவித்தி���ி கதை, சிவ புராணத்தில் உள்ளதை மகாபாரத இதிகாசத்தில், பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கையில், பதிபக்தியின் மேன்மையை விளக்குமுகமாக திரௌபதிக்கு மார்கண்டேய முனிவர் எடுத்துரைத்தார். + +மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்திரி எனப்பெயரிடப்பட்டாள். நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவியுடன் காடுறை வாழ்வு மேற்கொண்டிருந்தார். அவரின் மகன் சத்தியவானும் தாய்-தந்தையர்களுக்கு துணையாக இருந்தார். + +சாவித்திரி, தான் மணமுடிக்க திறமை வாய்ந்த இளவரசனைக் கண்டறிய நாடு முழுவதும் சுற்றி இறுதியில், சத்தியவான் தங்கியிருந்த காட்டிற்கு வந்த சாவித்திரி, சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை சத்தியவானிடம் பறிகொடுத்தாள். தனது திருமணம் சத்தியவானுடன் நடக்க வேண்டும் என தந்தையிடம் கூற, அப்போது அங்கு வந்த நாரதர், 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' கூறியும், சாவித்திரி சத்தியவானைத் தவிர எவரையும் மணக்க மாட்டேன் என உறுதிபடக் கூறினாள். +சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு, அரசன் அசுவபதியும் திருமணத்திற்குச் சம்மதித்தான். சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது. சாவித்திரி தன் அரண்மனையைவிட்டுக் கணவன் சத்தியவானுடன் காட்டிற்குச் சென்று வாழ்ந்தாள். +சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்த போதிலும், அந்த இரகசியத்தை சாவித்திரி அவனிடம் சொல்லவில்லை. +சத்தியவான் இறப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி கடும் விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. இறுதிநாள் இரவு. இரவெல்லாம் உறங்காமல் கண்ணீர் மல்க கணவனின் நீண்ட வாழ்விற்காக பிரார்த்தனைகள் செய்தாள். அடுத்த நாள் விறகு வெட்டச் செல்லும் கணவன் சத்தியவானுடன் சென்றாள் சாவித்திரி. +காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான், சாவித்திரியின் மடிமீது தலை வைத்து உயிர் துறந்தான். +அப்போது சத்தியவானின் உயிரை அழைத்துச் செல்ல வந்த எமதூதர்களால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்கமுடியவில்லை. எனவே எமனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, சத்தியவானின் உயிர் பிரிந்த உ��லை விட்டுவிடு; மரணம் மனிதனின் விதி என்றதும் சாவித்திரி, சத்தியவான் உடலை விட்டு விலகி நின்றாள். + +பின்னர் சத்தியவானின் உயிரை அழைத்துக்கொண்டு சென்ற எமனின் வழியை பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கக்கூடாது எமனிடம் வேண்டினாள். சாவித்திரியின் பதிபக்தியை கண்டு பாராட்டிய எமதர்மராஜன், எதாவது ஒரு வரம் கேள் என்றார். + +அதற்கு சாவித்திரி, என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்தியவானின் மகன்களுக்கு கிடைக்க வரம் வேண்டினாள். +இதைக் கேட்ட எமதர்மன், உன் கணவன் மீண்டும் உயிர் பெறுவான்; உன் குழந்தைகள் அரசாள்வர்; உன் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று' பாராட்டினார்.. + + + + + + +தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு + +தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாறு; + + + + + + + + +அமூர் மாகாணம் + +அமூர் மாகாணம் ("Amur Oblast", ) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இது உருசியாவின் தூர கிழக்கே ஆமூ தாரியா ஆற்றிற்கும் சேயா ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம் ஆகும். இதன் நிருவாகத் தலைநகர் பிலாகோவெசுச்சென்சுக் ஆகும். இந்நகர் தூரகிழக்கில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான குடியெற்றம் ஆகும். 1856 ஆம் ஆண்டில் இந்நகர் அமைக்கப்பட்டது. வணிகம், மற்றும் தங்கச் சுரங்கத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது. 2010 கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை  830,103 ஆகும். உருசியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி "அமூர் கிராய்" ("Amur Krai", ) என வழங்கப்பட்டு வந்தது. + +அமூர் மாகாணம் உருசியாவின் தென்கிழக்கே உள்ளது. இதன் வடக்கே இசுத்தானவோய் மலைத்தொடருக்கும், தெற்கே அமூர் ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக வடக்கே சகா குடியரசும், கிழக்கே யூதத் தன்னா��்சி மாகாணமும், தெற்கே சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணமும், மேற்கே சபாய்க்கால்சுக்கி கிராயும் உள்ளன. + +2010 மக்கள் கண்க்கெடுப்பின் படி, 94.3% உருசியர்களும் (775,590), 2% உக்ரைனியர் (16,636), 0.5% பெலருசியர் (4,162), 0,4% தத்தார்களும் (3,406) வாழ்கின்றனர். இவர்களைவிட 120 இற்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களும் இங்குள்ளனர். + +2012 அதிகாரபூர்வ ஆய்வின் படி, 25.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுவான கிறித்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% இசுலாமியர் ஆவர். + + + + +பூமாலை நடவடிக்கை + +பூமாலை நடவடிக்கை என்பது 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொருட்களை இட்ட நடவடிக்கைக்கான பெயராகும். யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் எனப்படும் நடவடிக்கையின் போது யாழ் குடாநாட்டில் நிலவிவந்த உணவுப் பொருள் பற்றாக்குறைக் காரணமாக இந்தியா இந்நடவடிக்கையை எடுத்தது. 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானிய போருக்குப் பின் இந்திய விமானப்படை இன்னொரு நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை மீறியதும், இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட்டதும் இதுவே முதல் முறையாகும். + + + + + +கோசலை + +கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். + + + + + +அனைத்துண்ணி + +தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் அல்லது யாவும் உண்ணிகள் (Omnivore) என்று அழைக்கப்படுகின்றன. பல அனைத்துண்ணிகளுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தாவர, விலங்கு உணவு தேவைப்படுகின்றது. + +விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். + + + + + + + + +சுமித்திரை + +சுமித்திரா அல்லது சுமித்திரை இராமாயணக் கதையில் வரும் தசரத மன்னனின் மூன்று மனைவிகளுள் ஒருவர் ஆவார். பிள்ளைப் பேறு கிட்டாதிருந்த தசரதன், பிள்ளைப் பேறு வேண்டி வேள்வி இயற்றினான். அதில் கிடைத்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பகிர்ந்தபோது சுமித்திரைக்கு இரண்டு பங்குகள் கிடைத்ததனால் அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் இவரது மகன்கள் ஆவார். இவ்விருவரும் இரட்டையர்கள். + +இராமாயணக் கதையில் தசரதனின் மூத்த மனைவி கோசலையைப் போன்றோ அல்லது இளைய மனைவி கைகேயியைப் போன்றோ சுமித்திரைக்கு முக்கியமான இடம் இல்லை. எனினும், தன்னலம் அற்ற ஒரு பெண்ணாக அவள் இராமாயணத்தில் உருவகப் படுத்தப்பட்டுள்ளாள். மூத்தோனாகிய இராமனுக்கு முடிசூட்ட இருந்த நிலையில், தனது மகனுக்கு அரசுரிமை கோரிப் போர்க்கொடி தூக்கிய கைகேயியைப் போலன்றித் தனது மக்கள், மூத்தோர்களான இராமன், பரதன் ஆகியோருடைய சேவையிலேயே திருப்தியடைய வேண்டும் என அவள் விரும்பினாள். + +தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை. + + + + +எரா + +எரா ("Hera", கிரேக்கம் ) என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் திருமணம் மற்றும் பெண்கள் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மகள் ஆவார். இவர் சியுசை மணந்த பிறகு விண்ணுலகத்தின் அரசி என்னும் பட்டம் பெற்றார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் எராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவருக்கு இணையான உரோமக் கடவுள் சூனோ ஆவார். +தன் குழந்தைகளால் ஆபத்து வரும் என்று அறிந்த குரோனசு தனக்குப் பிறக்கும் எரா, இசுடியா, பொசிடான், ஏடிசு, எசுடியா ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கிவிடுகிறார். ஆறாவது குழந்தையாக பிறநந்த சியுசை அவரது தாய் ரேயா மறைமுகமாகக் காப்பாற்றுகிறார். சியுசு ஆடவனாக வளரந்த பிறகு தன் சகோதரர்களை குரோனசின் வயிற்றிலிருந்து விடுவித்து அவர்களுடன் சேரந்து டைட்டன்களை வீழ்த்தினார். அதன் பிறகு பொசிடான் மற்றும் ஏடிசு ஆகியோருடன் சியுசு மண்ணுலகை பகிர்ந்துகொண்டார். + +சியுசு தன் சகோதரி எராவின் மேல் காதல் கொண்டார். முதலில் எரா சியுசின் காதலை ஏற்க மறுக்கிறார். பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்கும்படி நடித்தார். அந்த குயிலின் மீது இரக்கம் கொண்ட எரா அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அப்போது சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறினார். இதனால் வெட்கப்படும் எரா சியுசை மணந்துகொள்ள சம்மதித்தார். + +சியுசு பல பெண்கள் மேல் காமம் கொண்டு அவர்களுடன் உறவாடினார். அந்தப் பெண்களின் மீது பொறாமை கொண்ட எரா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பலவிதங்களில் சபிக்கிறார். மேலும் சியுசை எப்போதுமே கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருந்தார் எரா. இதனால் சியுசு எராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல உருவங்கள் எடுத்து பெண்களுடன் உறவாடினார். + +எராகில்சு என்பவர் சியுசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சு பிறப்பதை தடுப்பதற்காக அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலந்திசு தடுக்கிறார். இதனால் எராகில்சு பிறந்துவிடுகிறார். பிறகு எரா காலந்தீசை மர நாயாக மாறும்படி சாபமிட்டார். + +எராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க எரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் எராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். பிறகு அவற்றின் தலையை நசுக்கிக் கொன்றார். + +சியுசு எராவை ஏமாற்றி எராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த எரா எராகில்சை தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தார். அப்போது எராவின் மார்பில் இருந்து சிதறிய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் என்று கூறப்படுகிறது. + +சில கதைகளில் எராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து எராகில்சு அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக எரா தன் அழகான மகள் ஏபேயை எராகில்சுக்கு மணமகளாகக் கொடுத்தார். + +கவிஞர் ஓவிட் எழுதிய மெடாமோர்போசசில் வரும் ஒரு கதையில் எக்கோ என்பவர் சீயசிடமிருந்து எராவை பிரிக்கும் வேலையை செய்து வந்தார். இதனை அறிந்தவுடன் எரா இனி மற்றவர்களின் வார்த்தைகளை எக்கோ எதிரொலிக்குமாறு சாபமிட்டார். இதன் மூலம் தான் எதிரொலி என்பதற்கு ஆங்கில சொல்லான எகோ என்பது வந்தத��. + +லெடோவின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று எரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடவுள் பொசிடான், அவளுக்கு நிலம் மற்றும் தீவு இரண்டும் அல்லாத டிலோசு என்னும் மிதக்கும் தீவிற்கு செல்லுமாறு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது. + +வேறு ஒரு கதையில் எரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே லெடோவிற்கு ஆர்டமீசு பிறந்துவிடுகிறார். பிறகு அவரே குழந்தை பிறப்பு கடவுளாக மாறி அப்பல்லோ பிறக்க உதவியதாகக் கூறப்படுகிறது. + +சியுசால் செமிலி கர்ப்பமாக இருப்பதை அறிந்த எரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். பிறகு செமிலி கட்டாயப்படுத்தியதால் சியுசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு. அந்த குழந்தையே டயோனிசசு. + +மற்றொரு கதையில் எரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் சியுசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது. + +லிபியாவின் அரசியான லாமியாவை சியுசு காதலித்தார். இதனால் எரா லாமியாவை பேயாக மாற்றினார். மேலும் அவரது குழந்தைகளைக் கொன்றார். சில கதைகளில் எரா லாமியாவின் குழந்தைகளைக் கொன்றதால் அதைக்கண்ட லாமியா பேய் உருவிற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. லாமியாவால் தன் கண் இமைகளை மூட இயலவில்லை. அதனால் தன் இறந்த குழந்தைகளை பார்த்ததுக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சியுசு லாமியாவுக்குத் தன் இமைகளை மூடித் திறக்கும்படி வரம் தந்தார். லாமியா மற்ற தாய்மார்கள் மீது பொறாமை கொண்டு அவர்களின் குழந்தைகளைத் தின்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. + + + + +கைகேயி + +கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும் தசரத மன்னனின் மனைவிகளுள் ஒருவர். பரதன் இவருடைய மகன் ஆவார். + +ஒருமுறை போரில் தேரை ஓட்டி தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனி எனப்படும் மந்தரையின் தூண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள். + + + + + +சனகன் + +சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். + +சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான். + +இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் +பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு +பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. + + + + +அப்பல்லோ + +அப்பல்லோ என்பவர் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவரான இவர் கிரேக்கக் கடவுளர்களான சியுசு மற்றும் லெட்டோ ஆகியோரது மகன் ஆவார். சந்திரக் கடவுளான ஆர்ட்டெமிசு அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி ஆவார். + +கோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. இவர் சியுசு கடவுளால் கருத்தரித்து இருப்பதை அறிந்து கோபம் கொள்ளும் எரா, லெடோவிற்கு நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆகவே லெடோ பிரசவ வலி ஏற்பட்ட போது கிரேக்கம் முழுவதும�� அலைந்து திரிந்தார். அவர் மீது இரக்கம் கொண்ட பொசைடன் அவருக்கு நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவிற்கு வழிகாட்டினார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்போலோ, ஆர்ட்டெமிசு ஆகிய இருவரும் பிறந்தனர். பிறகு அந்தத் தீவு அப்பல்லோவின் புனிதத் தலம் ஆனது. + +லெட்டோவைக் கொல்ல பைதான் என்ற கொடிய வேதாளத்தை எரா அனுப்புகிறார். தன் தாயைக் காக்க வில் அம்பு ஆயுதம் தருமாறு எப்பெசுடசுவிடம் வேண்டுகிறார். அதைப் பெற்ற பிறகு அவர் டெல்பியில் உள்ள புனிதக் குகையில் வசிக்கும் பைதானைக் கொன்றார். அப்போது அவர் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையாக இருந்தார். + +லெடோவைக் கற்பழிக்க டைடியோசு என்ற அரக்கனை அனுப்பினார் எரா. இந்த முறை அப்பல்லோ தன் சகோதரி ஆர்ட்டெமிசின் உதவியுடன் அந்த அரக்கனை எதிர்த்து போரிட்டார். அவர்களுக்கு சியுசு கடவுளும் உதவினார். இறுதியில் அந்த அரக்கன் டார்டரசில் அடைக்கப்பட்டான். + + + + +நிலாச்சாரல் + +நிலாச்சாரல் என்பது ஒரு தமிழ் இணைய இதழ். இலண்டனிலிருந்து மே 18, 2001 ஆம் தேதியில் தொடங்கப்பட்ட இந்த இணைய இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த இதழில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், அறிவியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனும் தலைப்புகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. இந்த இதழில் தமிழ் தவிர, ஆங்கில மொழியிலும் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. + + + + + +பரதன் + +பரதன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் கைகேயி. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இவர் தனது தாயார் தனக்காகப் பெற்றுத் தந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணை ஏற மறுத்து, இராமனின் பாதணிகளை அரியனையில் வைத்து பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் ஆட்சியை வழி நடத்தினார். + +கேரள மாநிலத்தில் உள்ள கூடல்மாணிக்கம் கோயிலே இந்தியாவில் பரதனுக்கு உள்ள ஒரே கோயிலாகும். + + + + +ஏதெனா + +ஏதெனா என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு, போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஒரு கிரேக்க நகருக்கு ஏதென்சு என்று பெயரிடப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் ஏதெனா கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும். + +இவர் நகரத்தின்("போலிசு") பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை "ஏதெனா போலிசு" என்ற பெயரில் வழிபடுகின்றனர். + +நீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சியுசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சியுசை விட வலிமையானதாக இருக்கும் என்று முன்கணிப்பு கூறியது. இதனால் பயந்த சியுசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆனால் மெட்டீசு ஏற்கனவே கருத்தரித்து இருந்தாள். பிறகு சியுசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பெசுடசு, ஏரெசு மற்றும் எர்மெசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சியுசின் தலையை வெட்டினர். அதில் இருந்து ஏதெனா தன் உடம்பு முழுவதும் கவசத்துடன் பிறந்தார். + +ஒருநாள் ஏதெனா ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக எப்பெசுடசு கடவுளின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள ஏதெனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் ஏதெனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த ஏதெனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது படட்டதால் அவர் கருத்தரித்தார். இதன் மூலம் எரிச்தோனியசு என்ற மகன் பிறந்தான். + +குழந்தையாக இருந்த எரிச்டோனியசை சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்த ஏதெனா, ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு ஆகிய மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவர்களிடம் ஏதெனா கூறவில்லை. மாறாக இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது அந்தக் குழந்தையைச் சுற்றியிருந்த ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அந்த சகோதரிகள் இருவரையும் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியெறிந்தது.பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான். + + + + +டிமிடர் + +டிமிடர் என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் செரெசு என்பவர் ஆவார். + +பெர்சிஃபோன் அழகில் மயங்கிய ஏடிசு அவரை பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான். இதனால் டிமிடர் மனமுடைந்தார். இதனால் பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்றது. அழிவில் இருந்து உலகைக் காப்பாற்ற சியுசு ஏடிசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த எர்மெசு கடவுளைப் பாதாள உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டு விட்டதால் அவர் இனி நிரந்தரமாக பாதாளத்தில் இருக்க வேண்டும் என்று ஏடிசு கூறுகிறார். பிறகு ஒரு உடன்படிக்கை செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் மற்ற பருவ காலங்களில் தன் தாய் டிமிடருடன் வாழ்வதாகவும் வறட்சி நிலவும் கோடை காலத்தில் மட்டும் பாதாள உலகில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. + +டிமிடர் மேல் பொசைடன் கடவுள் காமம் கொண்டார். இதனை அறிந்த டிமிடர் பெண் குதிரை வடிவமெடுத்து குதிரை மந்தையில் ஒளிந்து கொண்டார். ஆனால் பொசைடன் ஆண் குதிரை வடிவமெடுத்து டிமிடரை துரத்தி அவருடன் வலுக்கட்டாயமாக உறவாடினார். இதனால் டிமிடர் கோபமடைந்தார். இந்த நிலையில் டிமிடர் எரினைசு என அழைக்கப்படுகிறார். பிறகு லாடோன் நதியில் புனித நீராடியபோது டிமிடரின் கோபம் அடங்கியது. இந்த நிலையில் இவர் டிமிடர் லூசியா அல்லது நீராடிய டிமிடர் என்று அழைக்கப்படுகிறார். பொசைடன் மூலம் டிமிடருக்கு ஏரியன் என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது. + + + + +இலட்சுமணன் + +இராமாயணத்தின்படி இலட்சுமணன் (அல்லது இலக்குவன்) அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மை���்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப்போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. + +இலங்கைப்போரில் இலக்குவன் இராவணின் மகனான இந்திரஜித்துடன் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடைந்தார், அதன் பிறகு அனுமான் உதவியினால் சஞ்சீவினி மூலிகையின் மூலம் மூர்ச்சையில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திரஜித்துடன் போர் புரிந்து அவனைப் போரில் வீழ்த்தினார். அதன் பிறகு இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தார். + + + + + +கிரேக்கப் பழங்கதைகளில் வரும் உயிரினங்களின் பட்டியல் + +இக்கட்டுரை கிரேக்கப் தொன்மவியலில் வரும் உயிரினங்களைப் பட்டியல் இடுகிறது. + + + + + +ஈதர்நெட் + +கணினி வலையமைப்பில் ஈதர்நெட் நுட்பமே பெரும்பாலும் பாவிக்கபடுவதாகும். இது உலகம் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஈதர் என்ற இயற்பியற் (பௌதீகவியற்) கோட்பாட்டடிப்படையில் உருவாகியதாகும். இதில் ஐபிஎம் உருவாகிய டோக்கின் றிங்(டோக்கன் ரிங்) தொழில்நுட்பம் போன்று தரவு பொதி மோதற் தவிர்ப்பு நுட்பம் போன்றல்லாமல் இங்கே சுவிச் ஊடாக தரவு பொதி மோதல்கள் எதிர்பாக்கப்படுகின்றன. அதாவது இவ்வலையமைப்பில் எல்லாக் கணினிகளுமே எந்த நேரத்திலும் தரவுகளைப் பிறிதோர் கணினிக்கு அனுப்புவதற்கு தடையேதும் இல்லாததினால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் தரவுப் பொதிகளை அனுப்பினால் தரவுப் போதிகள் மோதிக்கொள்ளும் இவ்வாறான மோதல்கள் அடுத்து ஒர் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்புறம் அனுப்ப முயற்சிசெய்யும். + +பெரும்பாலான ஈதர்நெட் வலையமைப்பானது தற்பொழுது நொடிக்கு 100 மேகாபிட்���் வேகத்தில் தரவைப் பரிமாற வல்லன இது தவிர ஜிகாபிட் ஈதர்நெட் வலையமைப்பானது நொட்டிக்கு 1 ஜிகாபிட்ஸ் தரவுகளைப் பரிமாற வல்லது. நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேக வலையமைப்பில் 8 வயர்களில் 4 வயர்கள் மட்டுமே தகவற் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஏனைய 4 வ்யர்களும் பயன்படாதவை. வயர்கள் 1, 2, 3, 6 ஆகியவையே பயன்படுவை ஏனையவை பயன்படாது. ஜிகாபிட்ஸ் ஈதர்நெட்டை குறுக்குமறுக்கான (Cross Over cable) ஊடாக இருகணினிகளை இணைத்தால் அவை நொடிக்கு 200 மெகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாறும். இரு ஜிகாபிட்ஸ் ஈதர்நெட் கணினிகள் நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமுள்ள சுவிச் ஊடாக இணைக்கப்பட்டால் 100 மேகபிட்ஸ் வேகத்திலேயே பரிமாறும் அதாவது வலையமைப்பில் எந்த சாதனம் மெதுவானதோ அந்த வேகத்திலே கணினி தரவுகளைப் பரிமாறும். + +வலையமைப்பு நிலைமாற்றி + +பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் + +திசைவி + + + + +பவான் நடவடிக்கை + +பவான் நடவடிக்கை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தும் நோக்கில், இந்திய அமைதிகாக்கும் படையால் யாழ்ப்பாணத்தை தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்டு புலிகளின் போர்க் கருவிகளைக் களைவதற்காக 1987 பிற்பகுதியில் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு வழங்கப்பட்டப் பெயராகும்.பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும், விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பல முனைகளில் இருந்தும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்று கிழமையளவு நடைப்பெற்ற கொடுரமான போரின் பின்னர் இந்திய அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தால் 3 ஆண்டுகளாக முயன்றும் முடியாமல் போன யாழ் குடாநாட்டை கைப்பற்றினர். நடவடிக்கையின் போது இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இதன் போது இந்திய அமைதிகாக்கும் படையில் 600 பேர் சாவடைந்தனர். புலிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. + +இந்நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினதும் பங்களிப்புகள் கணிசமான அளவு காணப்பட்டது. இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் அக்டோபர் 1987 இல் இலங்கையின் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன. . இந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். + +இலங்கையின் சரித்திரத்திலேயே அதிக நாட்களைக் கொண்ட ஊரடங்கு உத்தரவு, இந்திய அமைதி காக்கும் படையினரால் பிறப்பிக்கப்பட்டது. யாழ் குடா நாட்டினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முப்பத்து ஐந்து நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இவ்வூரடங்கு உத்தரவின்படி, இத்தகு நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்ரீதியாக கிடைக்கப்பெற்ற உத்தரவுகளிற்கேற்ப மேற்கொள்ளப்பட்டன. + + + + + + +வின்டோஸ் என்டி + +வின்டோஸ் புதிய தொழில் நுட்பம் (Windows New Technology) எனப்பொருள்படும் வின்டோஸ் என்டி மைக்ரோசாப்டினால் 1993 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்க விண்டோஸ் எண்டி ஓர் விண்டோஸ் இயங்குதளக் குடும்பமாகும். விண்டோஸ் எண்டியே மைக்ரோசாப்டின் முதலாவதும் முழுமையானதும் ஆன 32 பிட் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் சேவர் 2008 மற்றும் விண்டோஸ் ஹோம் சேவர் ஆகியவை விண்டோஸ் எண்டி குடும்பத்தைச் சார்ந்ததெனினும் அவை விண்டோஸ் எண்டி என சந்தைப்படுத்தப்படுவதில்லை. + +இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது. + +விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது. + +என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டியிற்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழு���்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை. + + + + +விம் + +விம் (vim) என்பது யுனிக்ஸ் இயங்குதளங்களில் காணப்படும் ஒரு சிறப்பு உரைத்திருத்தி மென்பொருளாகும். இம்மென்பொருளானது vi மென்பொருளினை அடிப்படையாகக்கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. + +விம், க்னூ பொதுமக்கள் உரிமத்தோடு ஒத்திசையக்கூடிய உரிமமொன்றின் அடிப்படையில் திறந்த மூலமாக வழங்கப்படுகிறது. + +இவ்வுரைத்திருத்தியானது ஏராளமான வசதிகளைக் கொண்டிருப்பதுடன் நிரலாளர்களின் உரைத்திருத்தி என்ற புகழையும் லினக்ஸ்/யுனிக்ஸ் வல்லுனர்களிடையே பெற்றிருக்கிறது. +இவ்வுரைத்திருத்தி வரைகலை இடைமுகப்பினைக் கொண்டதல்ல. இது முனையத்திலேயே இயங்கும் உரை வழி இடைமுகப்பைக்கொண்ட மென்பொருளாகும். இதற்கான வரைகலை இடைமுகப்புக்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன என்றபோதும் இதன் உரைவழி இடைமுகப்பே மிகுந்த வரவேற்பைப்பெற்றதும் சக்திமிக்கதுமாகும். + + + + + + +சித்தா மாகாணம் + +சித்தா மாகாணம் ("Chita Oblast", ) என்பது உருசியாவின் ஒரு முன்னாள் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகர் சித்தா ஆகும். சீனாவுடன் (998 கி.மீ) நீள எல்லையும் மங்கோலியாவுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டிருந்தது. அத்துடன் உருசியாவின் இர்கூத்ஸ்க் மாகாணம், அமூர் மாகாணம், புரியாத்தியா குடியரசு, சகா குடியரசு ஆகியனவும் இதன் எல்லைகளாகும். இதன் பரப்பளவு 431,500 சதுரகிமீகள் ஆகும். + +இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் அமைக்கப்பட்டது. பின்னர் 2008 மார்ச் 1 அன்று சபாய்கால்ஸ்கி கிராய் என்ற பெயரில் ஆகின்-புரியாத் தன்னாட்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. + +இந்த மாகாணத்தில் நிறைய இரும்பு, இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த மாழைகளும், கரியும் கிடக்கின்றது. யுரேனியம் மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் யுரேனியம் 145,400 டன் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% காடுகளாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், எரிபொருள், மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் ("reindeer") வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது. + + + + + +கலினின்கிராத் மாகாணம் + +கலினின்கிராட் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள பால்ட்டிக் கடலோரத்தில் உள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின் இச் ஒப்லாஸ்து ரஷ்யாவுடன் நேரடியாக நிலம் வழி தொடர்பு இல்லாமல் உள்ளது. எனவே இவ் ஒப்லாஸ்து முற்றிலும் பிற நாடுகளால் சூழ்ந்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு புறநில ஆட்சிப் பகுதி. + + + + +கெமரோவோ மாகாணம் + +கெமரோவோ மாகாணம் ("Kemerovo Oblast", , "கெமரோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்") என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது குசுபாசு ("Kuzbass", , குஸ்பாஸ்) எனவும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. 95,500 சதுரகிமீ பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் எல்லைகளாக, வடக்கே தோம்சுக் மாகாணம், கிழக்கே கிராசினயார்சுக் கிராய், அக்காசியா, தெற்கே அல்த்தாய் குடியரசு, மேற்கே நோவசிபீர்சுக் மாகாணம், அல்த்தாய் கிராய் ஆகியவை உள்ளன. இம்மாகாணத்தின் தலைநகர் கெமரோவோ. இதன் பெரிய நகரம் நோவோகுசுனெத்சுக் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 2,763,135 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் உருசியர்கள் ஆவர். உக்ரைனியர், தத்தார்களும் இங்கு வசிக்கின்றனர். + +இம்மாகாணத்தில் உள்ள மக்கள் தொகை 2,763,135 (2010) ஆகும். இவர்களில் உருசியர்கள் - 93.7%, தத்தார்கள் - 1.5%, உக்ரைனியர் - 0.8%, செருமனியர் - 0.9%, ஏனையோர் - 1.5%. + +2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி, 34.1% உருசிய மரப��வழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 7% பொதுக் கிறித்தவர்கள், 3% சிலாவிக், 1% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள். + + + + +கூர்சுக் மாகாணம் + +கூர்ஸ்க் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள ஒரு ஆட்சிப்பிரிவு. இது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 177 முதல் 225 மீ உயரத்தில் அமைந்த சமவெளியில் உள்ள ஒப்லாஸ்து. + +கூர்ஸ்க் ஒப்லாஸ்ட்த்தில் 902 ஆறுகளும் ஓடைகளும் பாய்கின்றன. மொத்த நீளம் 8,000 கி.மீ. பாயும் பெரும் ஆறுகள்: செய்ம், பிசியொல், க்ஷென் + +கூர்ஸ்க் ஒப்லாஸ்த்தில் 145 செயற்கையான ஏரிகள் உள்ளன. 550 சிறு நீர்நிலைகள் (குட்டைகள்) உள்ளன. + + + + +1895 + +1895 (MDCCCXCV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + + +தூலா மாகாணம் + +தூலா மாகாணம் ("Tula Oblast", , தூல்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் தூலா நகரமாகும். இம்மாகாணம் 25,700சதுரகிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள்தொகை 1,553,925 (2010) + +இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் உருவாக்கப்பட்டது. + +தூலா மாகாணம் உருசியாவின் மத்திய நடுவண் மாவட்டத்தில் உள்ளது. இதன் எல்லைகளாக மாசுக்கோ, ரியாசன், லீபெத்சுக், ஒரியோல், கலூகா ஆகிய மாகாணக்கள் உள்ளன. இங்கு 1,600 இற்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. + +இம்மாகாணத்தில் இரும்புத் தாது, களிமண், சுண்ணக்கல் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. + +லியோ தால்சுத்தாயின் வீடும் அவரது காணியும் இம்மாகாணத்தில் தூலா நகருக்கருகில் அமைந்துள்ளன. + +இங்குள்ள மக்கள்தொகையில் (1,553,925), உருசியர்கள் - 95.3%, உக்ரைனியர் - 1%, ஆர்மீனியர்கள் - 0.6%, தத்தார்கள் - 0.5%, அசேரிகள் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, செருமானியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.5% ஆவர். + +2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி, 62% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள் ஆவர். மேலும், 19% சமயசார்பற்றவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 3% ஏனைய சமயப் பற்றாளர்கள். + + + + + +வரனியோசு மாகாணம் + +வரனியோசு மாகாணம் ("Voronezh Oblast", , வரனியோஷ்கயா ஓப்லஸ்த்) உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வரனியோசு ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,335,380 (2010). + +இம்மாகாணம் 1934 சூன் 13 இல் அமைக்கப்படது. 1958 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பாவெல் செரன்கோவ் இம்மாகாணத்திலேயே பிறந்தார்.. + +வரனியோசு மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 52,400 கிமீ + +மக்கள்தொகை: 2,335,380 (2010 கணக்கெடுப்பு)); இவர்களில் உருசியர்கள் - 95.5%, உக்ரைனியர் - 1.9%, ஆர்மீனியர்கள் - 0.5%, ரோமா மக்கள் - 0.2%, ஏனையோர் - 1.9% ஆவர். + +2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி, 62% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 3% பொதுக் கிறித்தவர்கள் ஆவர். 22% சமயசார்பில்லாதவர்கள், 6% இறைமறுப்புக் கொள்கையுடையோர். 7% ஏனைய சமயங்கள் + + + + + +பில்லா (2007 திரைப்படம்) + +பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும். இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள்  மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + +இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். + + + + +சியார்சியா + +சியார்சியா அல்லது ஜார்ஜியா ("Georgia", საქართველო, "சக்கார்ட்வெலோ") என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும். + +ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்���ுள்ளது. + + + + + + + + +படைப்பகுதித் தலைவர் + +படைப்பகுதித் தலைவர் என்பது ஒரு இராணுவப் படிநிலையாகும். பிரித்தானிய இராணுவத்திலும் முன்னாள் பிரித்தானிய குடியேற்ற நாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஜெனரல் தரத்தில் இதுவே மிகவும் குறைந்த படிநிலை எனலாம். ஒரு பிரிகேட் இராணுவத்துக்கு தலைமை தாங்குபவர் என்ற அர்த்தத்தை படைப்பகுதித் தலைவர் என்பது குறிக்கிறது. + + + + +லெனின்கிராத் மாகாணம் + +லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது + +இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி). + + + + +வானியல் அலகு + +வானியல் அலகு ("astronomical unit", AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு. இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும். + +1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும். + + +தூரங்கள் இங்கு "சராசரித் தூரங்கள்" ஆகும். + +சில மாற்றீடுகள்: + + + + + + +1444 + +1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும். + + + + + + + +சம்பாதி + +சம்பாதி (வடமொழி:सम्पाति, sampāti) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கரு��னின் தம்பியான அருணனின் மகன், ஜடாயுவின் அண்ணன். + +சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அநுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து ஜடாயுவைக் கொளுத்தி விடும் போல் இருந்தது. சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். + +இராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற வானரர் படைகள் சம்பாதியைக் கண்டு அவனது தம்பி ஜடாயு இராவணனால் கொல்லப்பட்டது பற்றிக் கூறுகின்றனர். கவலையடைந்த சம்பாதி, இலங்கையில் சீதை சிறையிருப்பதைத் தான் இங்கிருந்தே பார்ப்பதாகக் கூறித் தான் காணும் காட்சியையும் விவரமாகச் சொன்னான். "ராம காரியத்தில் நீ உதவுவாய். அப்படி உதவியபோது உன் சிறகுகள் மறுபடி முளைக்கும்" என்று முன்னர் அவன் பெற்ற வரம் அப்போது பலிக்கலாயிற்று. பேச்சு நடக்கும் போதே இளஞ்சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன. சம்பாதிக்கு ஏற்பட்ட துன்பமும் நீங்கியது. சிறகுகளைப் பெற்ற சம்பாதி, ஜடாயுவுக்குக் கடலில் கிரியைகள் செய்து திருப்தி அடைந்தான். + + + + + +1887 + +1887 (MDCCCLXXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்). + + + + + + + +1927 + +1927 (MCMXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் + +தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் நோக்கி எழுப்பப்பட்ட விமர்சனங்களே விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் ஆகும். இந்த விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளைய���ம் கொண்டிருந்தன. யாரால், எந்தத் தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பவற்றைக் கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் முக்கியம். + +புலிகள் நோக்கிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கத்தக்க கட்டமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு புலிகளின் இயக்க அமைப்பில் இல்லை; அப்படி இருந்தாலும் அதைப் பற்றி மக்களோ அல்லது விமர்சகர்களோ அறியவில்லை; அல்லது அப்படியான ஒரு தோற்றப்பாடு இருக்கின்றது. பல தரப்பட்ட பிரிவுகளையும் பலக்கிய கட்டமைப்பையும் புலிகளின் இயக்கம் கொண்டிருக்கின்றது. அப்படியிருந்தும் விமர்சனங்களை, மக்களின் கருத்துக்களை, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி, அவற்றுக்கு ஏற்ற மறுமொழியையோ, மாற்றங்களையோ தாம் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய கருத்து தொடர்பாடலை விடுதலைப் புலிகள் சரிவர செய்யவில்லை. எனவே இது மேலோட்டமான குறையன்று, இது அடிப்படையான (fundamental) குறைபாடு. விமர்சனத்திற்கு தேவையான தனிப்பட்ட மனித உரிமைகளை பேணுவதற்கான சூழலுக்கும், மாற்று அமைப்புக்களுக்கான சூழலுக்கும் விடுதலைப் புலிகள் இடம்தரவில்லை. தமது போராட்ட சூழ்நிலை, வழிமுறை அல்லது தன்மை இவற்றுக்கு இடம்தரவில்லை என்றே இந்த முக்கிய குறையை புலிகள் நியாப்படுத்தி வருகிறார்கள். + +புலிகள் தமது உள் இயக்க விமர்சனங்களையே வன்முறை அல்லது பிளவு மூலமே பல கால கட்டங்களில் கையாண்டிருக்கின்றார்கள். உமாமகேஸ்வரன் விலகல், மாத்தையாவின் மரண தண்டனை, கருணாவின் பிளவு ஆகியவை இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். + +புலிகள் ஒரு தனிமனிதருக்கான உரிமைகள் இவை, இவை என்றும் பேணப்படும் என்று எந்தவித உறுதியையும் இதுவரை உத்யோகபூர்வமாக வெளியிடவில்லை. கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்றோ அல்லது அமெரிக்காவின் Bill of Rights போன்றோ தனிமனித உரிமைகளைப் பேணுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் புலிகள் இதுவரை வெளியிடவில்லை. ஒரு அரசுக்கு தேவையான அடிப்படையான அம்சங்களில் இதுவும் ஒன்று. பல தரப்பட்ட சட்டங்களை இயற்றி மக்களின் பலதரப்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த முனையும் புலிகள் அமைப்பு, இத்தகைய முக்கியமான ஒரு அடிப்படை அம்சத்தை இன்னும் பிற்போட்டிருப்பது ஒரு முக்கிய குறைபாடே. + +புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது அதிகார வீச்சுக்குள் இருக்கும் நிலப்பரப்புகளில் புலிகளை விமர்சிக்கும் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தினமுரசு பத்திரிகை மீதான தடை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. துக்ளக் சஞ்சிகையை தீயிட்டமை இதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. பல தென் இந்திய தமிழ்த் திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. + +தம்மக்கள் மீதே உளவழிப்போர் உத்திகளையும், பரப்புரையையும் புலிகள் பரவலாக பயன்படுத்துகின்றார்கள். தமிழீழ மக்களின் கணிசமானவர்களை "துரோகிகள்" என்று முத்திரை பதித்து மிரட்டி ஒதுக்குவது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும். + +பல எதிர்ப்புப் போராட்ட முறைகளை தகுந்த கருத்தில் கொள்ளாமல் வன்முறையாக சட்டத்தை புலிகள் மீறினார்கள். புலிகள் தொடக்க காலத்தில் செய்ததாக குற்றம் சாட்டப்படும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தற்காலத்தில் சட்டத்தை பேணும் ஒரு அதிகார அரசாக புலிகள் தம்மை முன்னிறுத்த முனைவதில் இருக்கும் ஒரு முக்கிய முரண் இதுவாகும். + +புலிகளின் ஒரு இறுக்கமான மூடிய கட்டமைப்பை பேணி வருகின்றார்கள். மூடிய சமுதாயங்கள் வன்முறையற்ற தலைமை அல்லது அரசியல் மாற்றத்தை செய்யமுடியாதவையாகும். தொலைநோக்கில் விரும்பத்தக்க திறந்த சமுதாயத்தை எப்படி இறுக்கமான மூடிய கட்டமைப்பை கொண்ட புலிகளால் நடைமுறைப்படுத்த முடியும் என்பது கேள்விக்குரியதே. + +சிறுவர்களை புலிகள் போரில் ஈடுபடுத்துவதாக புலிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிறப்பு இறப்பு தரவுகளே இதற்கு தகுந்த சான்றாக அமைந்தன. எனினும் ஜனவரி 01, 2008 முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 18 வயதுக்கு கீழான எந்தவொரு உறுப்பினரும் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என UNICEF அமைப்புக்கு புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் உறுதியளித்தார். + + + + + + +எகல் + +கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் ("Georg Wilhelm Friedrich Hegel", கியார்கு வில்ஃகெல்ம் ஃபிரீடரிக்கு எகல், [ˈgeɔʁk ˈvɪlhɛlm ˈfʁiːdʁɪç ˈhegəl], ஆகத்து 27, 1770 – நவம்பர் 14, 1831) என்பவர் ஒரு புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார். + +இவருடைய கொள்கைகள் இடாய்ச்சுலாந்து மெய்யியல் கருத்துகளிலும் மேற்குலகின��� மெய்யியியல் கருத்துகளிலும் பெரும் செல்வாக்குப் பெற்று, இன்றும் மிக்க புகழுடன் விளங்குவன. இவருடைய கருத்துப்படி மாந்தர்களுடைய எண்ணம், கருத்து, பண்பாடு ஆகிய எந்தவொரு தன்மையையும் அறிந்து கொள்ள, கருத்துகள் எழுந்த வரலாற்றைத் துல்லியமாய் அறிதல் வேண்டும். இவருடைய செல்வாக்கினால், மேற்குலகில் மெய்யியல், கலை, சமயம் (மதம்), அறிவியல், அரசியல் முதலான பல துறைகளிலும் வரலாற்றுக் கண்ணோட்டம் மிகுந்தது. எகல், கருத்துகள் வரன் முறையில் அதிக நாட்டம் காட்டினார். இதன் அடிப்படையில் கருத்துகள் (நிகழ்வுகளும்) படிப்படியாய் எழுவதையும் அது “வளர்ச்சி” அடைவதையும், எதிர்-எதிர் கருத்துகள் எழுந்து (மோதி) விரிவான வளர்ச்சி அடைவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வகை விரிவான கருத்து மோதலினால் ஏற்படும் வளர்ச்சியை டயலெக்டிக் (dialectic) என்று மேற்குலகில் குறிக்கின்றனர். + +எகல் 1770 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் திகதி தென்மேற்கு இடாய்ச்சுலாந்தின் வூட்டம்பேர்க்கில் உள்ள டியூச்சே என்ற இடத்திலுள்ள இசுடுட்கார்ட்டு என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஏதென்சு புரட்சிக் காலத்தில் ஆத்திரேலியாவிலிருந்து வூட்டம்பேர்க் வந்த புரட்டஸ்தாந்து அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். எகலின் நெருங்கிய உறவினர்கள் அவரை "வில்லெம்" என்றே அழைத்தனர். இவரது தந்தை கியார்கு இலூடுவிக்கு ஒரு வரி அறவீட்டாளராக ஒரு சிறு தொழிலில் இருந்தார். இவரது தாயாரான மரியா மக்தலேனா இலூயிசா, வூட்டம்பேர்க்கின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவரின் மகளாவார். எகலின் 13ஆவது வயதில் அவரது தாயார் பித்த நீரால் ஏற்பட்ட காய்ச்சலால் உயிரிழந்தார். எகலையும் அவரின் தந்தையையும் இந்த நோய் தாக்கிய போதும் அவர்கள் உயிர்பிழைத்துக்கொண்டனர். எகலிற்கு கிறிசிட்டியானா +இலூயிசி (1773–1832) என்ற ஒரு உடன்பிறந்தாளும் கியோர்கு இலுட்விக்கு (1776–1812) என்ற ஒரு உடன்பிறந்தானும் இருந்தனர். + +எகல் தனது 3 ஆவது வயதிலேயே ஒரு செருமானியப் பாடசாலைக்குச் சென்றார். அவர் இருவருடங்களின் பின்னர் இலத்தீன் பாடசாலைக்குச் செல்ல முன்பே அவரது தாயார் எகலுக்கு இலத்தீனியச் சொற்களைக் கற்பித்திருந்தார். எகல் தனது ஆரம்பக்கல்வியை இசுட்டுகார்ட்டு கல்விக் கூடத்தில் பெற்றுக்கொண்டார். எகல் 1779 - 1800 காலப்பகுதியில் அவரது சொந்தக் கருத்துகளை +வளர்த்துக்கொண்டார். இக்காலத்தில் இவர் இம்மானுவேல் காந்து, பிஹ்டே ஆகியோரின் மெய்யியல்களைக் கற்றார். எகல் 1788 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் தியூபிஞ்சென் பல்கலைக்கழகத்தின் இறையியல் நிறுவனத்தில் சேர்ந்தார். தியூபிஞ்சென் பல்கலைக்கழகத்திற்கு வரும் பொழுது எகல் புத்தி நுட்பமும் ஊக்கமும் உள்ள மாணவனாக விளங்கினார். இலத்தீன், கிரேக்க மொழிகளில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. அவரது அறிவியல் அறிவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. எகல் 20 ஆவது வயதில் மெய்யியலில் முதுகலை கலைப் பட்டம் (M.A.) பெற்றார். + +ஐந்து ஆண்டுகள் அங்கு பயின்ற காலத்தில் கவி ஓல்டெர்லினின் தொடர்பையும் செல்லிங்கின் தொடர்பையும் பெற்றார். இதன் மூலம் இயற்கை பற்றிய மெய்யியல் (1797), அப்பாலைக் கருத்து முதல்வாத முறைமை (1800) ஆகிய செல்லிங்கின் நூல்களைக் கற்றார். அக்காலகட்டத்தில் எல்லோருக்கும் ஏற்பட்டது போல சிபினோஸாவின் (Spinoza) பாதிப்பு அவரிலும் ஏற்பட்டது. பிஹ்டே ஒழுக்கத்தின் ஊடாகத் தனது முழுமுதல் கோட்பாட்டை அணுகினார். செல்லிங் முழுமுதல் கோட்பாட்டை கலையின் ஊடாக அணுகினார். எகல் அதனை சமயத்தின் ஊடாக அணுகினார். + +எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட "உள்ளத்தின் நிகழ்வியக்கம்" (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட "ஏரணத்தின் அறிவியல்" (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விவரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துகளையும் தொகுத்து "மெய்யியல்களின் கலைக்களஞ்சியம்" (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துகளை "செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துகள்" (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார். + +எகல் தனது கடைசி பத்து வருட காலகட்டத்தில் எந்தவொரு புதிய பதிப்புகளையும் வெளி��ிடவில்லை. ஆனால் அவரால் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம் (இரண்டாம் பதிப்பு, 1827, மூன்றாம் பதிப்பு 1830) முழுவதுமாக திருத்தப்பட்டது. அவருடைய அரசியல் தத்துவத்தில், கார்ல் இலூடுவிக்கு வான் ஆலரின் பிற்போக்குத்தன செயல்பாடுகளை அவர் விமர்சித்தார்,அதில் சட்டங்கள் தேவையில்லை என்று கூறுகிறது. ஏகல் தனது ஆரம்பத்தில் வாழ்நாளிலிலும் மற்றும் அவரது பேர்லின் காலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, மதம், அழகியல் மற்றும் மெய்யியலின் வரலாறு பற்றிய தத்துவங்கள் பற்றிய பல படைப்புகள் அவருடைய மாணவர்களின் விரிவுரை குறிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டன. + +ஒரு சீர்த்திருத்த குருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவராக, எகலின் இறையியல் கருத்துகள் பல அவரது எழுத்துகளில் மற்றும் விரிவுரையில் பிரதிபலித்தன. இயேசு கிறித்துவின் நபர் பற்றிய எகலின் எண்ணங்கள் அறிவொளியின் கோட்பாடுகளிலிருந்து வெளிப்பட்டன. அவரது இறப்புக்குப் பின் வெளியிடப்பட்ட மதத்தின் தத்துவம் என்ற நூலின் மீதான சொற்பொழிவுகள், பாகம் 3 எகல் கடவுளின் இருப்பு மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி ஆதாரங்கள் குறிப்பாக ஏகலின் ஆர்வத்தைக் காட்டியுள்ளது. ஏகலின் மதக்கொள்கைப்படி "கடவுள் என்பவர் கருத்தியல் சார்ந்தது அல்ல, மாறாக ஒரு நித்தியமான கடவுள் என்பவர் நிலைபேறுடைய கொள்கையின் அடிப்படையில் கருதப்படுகிறார், தனக்குள்ளேயே இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு விளங்குகிநார் " அதாவது, கடவுளுடைய குமாரனாக இயேசு தன்னை மற்றவருக்கு எதிராகக் கடவுள்மீது காட்டியிருக்கிறார் என்பதாகும்.எகலுக்கும், இயேசுக்கும் தந்தையாகிய தேவனிற்கும் இடையே மனோதத்துவ ஒற்றுமை ஆகியவற்றைக் காண்கிறார். எகல் கூற்றுப்படி இயேசு என்பவர் தெய்வீக மற்றும் மனித பண்பு இரண்டையும் கொண்டவராவார். எகலை மேலும் கடவுள் என்று (இயேசுவே) இறந்து மட்டும் அல்ல... மாறாக, ஒரு தலைகீழ் நடைபெறுகிறது: கடவுளே, செயல்பாட்டில் தன்னைக் காத்துக்கொள்கிறார், பிந்தையவர் மரணத்தின் மரணம் மட்டுமே. மீண்டும் உயிர்பெற்று, இச்செயல்முறைகள் பின்னோக்கி நடைபெறுகின்றன" + + +இக்கூற்று அன்று நிலவிவந்த கொடுங்கோன்மை, காவலர் ஆட்சி, அரசவை விசாரணை முறைகள், தணிக்கைமுறை ஆகிய அனைத்தையும் புனிதப்படுத்தி அவற்றுக்கு மெய்யியல் நோக்கில் ஏ��்பு வழங்கியதாக கூறப்படுகிறது. மூன்றாம் ஃபிரெடரிக் வில்லியம் மன்னனும் அவனது குடிமக்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் எகலின் கருத்துப்படி, நிலவுகின்ற அனைத்தும் நிபந்தனை இன்றி நிச்சயமாக எதார்த்தம் ஆகிவிட முடியாது. நிலவுகின்ற ஒன்று அவசியமாகவும் இருக்கும்போது மட்டுமே எதார்த்தம் என்னும் பண்பைப் பெறுகிறது என்பது எகலின் கருத்தாகும். + + +எகலைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை – ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு நடவடிக்கையை எகலே எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் – நிபந்தனையின்றி எவ்விதத்திலும் எதார்த்தம் ஆகிவிட முடியாது. எனினும், அவசியமாய் இருக்கின்ற ஒன்று, வளர்ச்சிப் போக்கின் கடைசி நிலையில் தன்னைப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் நிரூபித்துக் கொள்கிறது. + +ஆனால், எதார்த்தம் என்பது சமூக அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிட்ட நிலைமையின் உள்ளடங்கிய பண்பாக எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் எவ்விதத்திலும் இருக்க முடியாது என்பது எகலின் கருத்தாகும். ஃபிரஞ்சு முடியாட்சி 1789-இல் மாபெரும் புரட்சியினால் அழிக்கப்பட வேண்டிய அளவுக்கு எதார்த்தத்துக்குப் புறம்பானதாகவும், அவசியமற்றதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆகிவிட்டிருந்தது. ஆகவே, இந்த எடுத்துக்காட்டில், முடியாட்சி எதார்த்தம் அல்லாததாகவும், புரட்சி எதார்த்தமானதாகவும் இருந்தது. எனவே, வளர்ச்சிப் போக்கில், முன்பு எதார்த்தமானதாக இருந்தது, எதார்த்தம் அல்லாததாக மாறிவிடுகிறது. தனது அவசியத்தை, நிலவுவதற்கான உரிமையை, பகுத்தறிவுக்கு உகந்த தன்மையை இழந்து விடுகிறது. அழிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்துக்குப் பதிலாக ஒரு புதிய, சாத்தியமான எதார்த்தம் எழுகிறது. பழைய எதார்த்தம் புத்திசாலித்தனமாக எதிர்ப்புக் காட்டாமல் சாகுமெனில் இம்மாற்றம் அமைதியாக நிகழும். இந்த அவசியத்தை எதிர்க்குமெனில் இது பலவந்தமாக நிகழும். + + + +திண்ணையில் எகல் பற்றிய கட்டுரை + + + + +விடுதலைப் புலிகளின் வரலாறு + +விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தத���. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தேச் செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது. + +1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது. சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது. +இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்புள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. + +விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றது. எல்லா ஈழ இயக்கங்களுக்கும் இந்தியா ஆதரவளித்து வந்தது. எவ்வாரெனினும், தமிழீழ விடுதலை இயக்கம் போன்றவை இந்தியாவை முழுமையாக ஏற்றுக் கொண்டப் போதிலும் புலிகள் அமைப்பு இந்தியா மீது எச்சரிக்கையாகவே இருந்து வந்தது. முக்கியமாக ராஜிவ் காந்தி ஆட���சிக்கு வந்து புலிகளை தனது ஆளுமைக்குள் வைத்திருக்க முற்பட்டதன் பின்னர் இந்நிலைமை மேலும் கூடியது. புலிகள் அமைப்பானது இந்தியா தனது தேவைகளுக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக புலிகள் கருதிவந்தனர். மேலும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு தம்மை விட அதிக நிதியை கொடுப்பதாகவும் புலிகளுக்கு இந்தியா மீது வருத்தம் இருந்தது. இதனால் புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத அல்லது தீர்வில் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருந்த இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாக கருதப்படுகிறது. இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள் ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர். + +1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இழக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர். + +1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்திய ஊடகங்கள் இந்நடவடிக்கையை கொடுரமான பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நடவடிக்கையாக காட்டி வந்தன. தமிழ்நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும் இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும் ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளை களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா அமைதி காக்கும் படைய அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது. + +ஈழ இயக்கங்கள் அனைத்தும் இவ்வொப்பந்ததை ஏற்றுக் கொண்டாலும், புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மே���்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர். மேலும் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் 167 பேரை கொலையும் செய்தனர். விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் தொடருந்தை மறைந்திருந்து தாக்கி 42 பொதுமக்களையும், நகரில் 40க்கு மேற்பட்ட சிங்களப் பொதுமக்களையும் லாவுகலைக்கு அண்மையில் பேருந்தை தாக்கி 29 பேரையும், ஏராவூரில் 35 மீனவர்களையும் கொலைச் செய்தனர். வார முடிவில் 5000க்கு மேற்பட்ட சிங்களவர்கள் விகாரைகளிலும் இராணுவத் தளங்களிலும் அகதிகாளாக் சென்றனர். + +இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கிடையான போர் வெடித்தது. 1987 அக்டோபர் 8 புலிகள் இந்திய இராணுவத்தின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களைய திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோகில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படையின் செல்வாக்கு குறைந்தது. + +இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும் புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இனங்க இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் இருக்கும் வேளையில் உச்சமாக 50,000 துருப்புக்களைக் கொண்டிருந்தது. + +புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது. இந்தப் சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 சூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர். + +1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிக்கா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 1995ல் ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தன் மூலம் பேச்சுவாத்தைகளை முறித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முக்கியத்துவம் வாய்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது. மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முக்கிய நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வங்கிச் முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர். + +2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தனி நாடு கோரிக்கையை கைவிட்டது. தமிழ் மக்களது அபிலாசைகளை நிறைவுச் செய்யக்கூடிய பிரதேச சுயாட்சி அமைப்பை வரவேற்பதாக கூறினர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை ந���றுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது. + +திசம்பர் 2001 இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிப் பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இராணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்க்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையின் போது புலிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்டோர் தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஈழ இயக்கங்களின் பல உறுப்பினர்களைக் கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. +வெளிநாடுகளில் நடைப் பெற்ற ஆறுச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டு புலிகள் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டனர். இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன அதிபர் சந்திரிக்கா புலிகள் மீது மென்மையான் அனுகுமுறையைக் கையாள்கிறார் எனக் குற்றம் சாட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் களைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைப்பெறவில்லை. + +2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மக்களை வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது. புலிகள் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தமையை ஐக்கிய அமெரிக்கா கண்டித்திருந்தது. + + + + +புதிய தமிழ்ப் புலிகள் + +புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் வே. பிரபாகரனால் இலங்கை அரசி��் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வன்முறை மூலம் எதிர்பதையும் தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடக்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும். இது 1976 மே 5 ஆம் நாள் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. + +இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதை தொடர்நத பல ஒப்பந்தங்கள் மூலம் இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயல் இலங்கையில் இனச் சதவீதத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும் மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்கிந் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் மூலம் அப்பகுதிகளில் தமிழர் சதவீதம் குறைக்கப்பட்டது. சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் சிங்கள மட்டும் சட்டம், 1956,1958 ஆண்டு இனக் கலவரங்கள் மேலும் 1970 இல் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் திட்டம் மூலம் இலங்கை பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது வெறுப்பை கொண்டிருந்தனர். காந்திய அகிம்சை கோட்பாடுகளை கைக்கொண்டு வந்த தமிழ் கட்சிகளின் அகிம்சைப் போராட்டங்களும் பலனற்றுப் போயிருந்தது. 1957 இன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுதல் போன்றச் செயற்பாடுகளால் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும் நம்ப மறுத்தனர். + +இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் வெற்றிடம் ஒன்று தோன்றியிருந்தது. புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இந்த நிலையில் தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கை அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் நடுவே பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. இவ்வமைபின் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக வே. பிரபாகரன் இயங்கினார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர். + +இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு 16 வயதான வே. பிரபாகரன் நான்கு பேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். வே. பிரபாகரன் மட்டும் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. + +தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த இலங்கை அரசு அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரை இலங்கை காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தத்திக் கைடைத்த தகவல்களைக் கொண்டு இயக்கத்தில் முக்கிய பலரை கைது செய்தனர். இதன் போது வே. பிரபாகரன் தமிழகத்திற்குச் தப்பிச் சென்றார். + +வே. பிரபாகரன் தமிழகத்தில் இருந்து 1972 ஆன் ஆண்டின் தொடக்கப் பகுதியில் யாழ்ப்பணம் திரும்பினார். ஆங்காங்கு அரசுக்கு எதிராக போராடும் நோக்கில் சிதறுண்டு இருந்த இளைஞர்களை ஒன்றுச் சேர்த்து 1972 ஆன் ஆண்டின் நடுப்பகுதியில் வே. பிரபாகரன் அவரது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார். இவ்வமைப்பு மிகக் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. + +புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 ஆம் நாள் அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் அப்போதைய இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்நகரத் தந்தையுமான அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை வே. பிரபாகரனே செய்ததாக பின்னர் புலிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. + +புதிய தமிழ்ப் புலிகளின் அடுத்த முக்கிய நடவடிக்கையாக புத்தூர் மக்கள் வங்கிக் கிளை கொள்ளை கருதப்படுகிறது. இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் தேவைப்பட்ட நிதியை சேர்க்கும் நோக்கில் 1976 மார்ச் 5 ஆம் நாள் இலங��கை அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பகலில் வே. பிரபாகரன் தலைமையில் சென்றக் குழு துப்பாக்கி முனையில் 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டுச் சென்றது. + +அல்பிரட் துரையப்பா கொலை, புத்தூர் வங்கிக் கொல்லை ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. + +புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு வே. பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. + + + + +இசுடுட்கார்ட் + +இசுடுட்கார்ட் அல்லது ஸ்சுட்கார்ட் () என்னும் நகரம் டாய்ட்ச் நாட்டின் (ஜெர்மன் நாட்டின்) தென் புறத்தில் உள்ள பாடன் - வியூர்ட்டம்பெர்க் என்னும் மாநிலத்தின் தலைநகராகும். இது டாய்ட்ச் நாட்டின் 6 ஆவது மிகப்பெரிய நகரம். இந் நகரத்தின் மக்கள் தொகை 595,452, ஆனால் புறநகரப் பகுதிகளையும் சேர்த்துக்கொண்டால் மக்கள் தொகை 2.67 மில்லியன் ஆகும் (2007க்கான கணக்கெடுக்குப்படி ). + +ஸ்டுட்கார்ட் நகரம் ஏறத்தாழ கி.பி. 950 ஆண்டளவில் ஸ்வாபியா தற்கால தென் டாய்ட்ச் நாட்டுப்பகுதி) என்னும் பகுதியின் சிற்றரசராகிய "லியூடோல்ஃவ்" என்பவரால் நிறுவப்பட்டது. லியூடோல்ஃவ் ரோமானியப் பேரரசர் பெருமைமிகு ஆட்டோவின் மகன்களில் ஒருவர். + +கி.பி. 1300களில் ஸ்டுட்கார்ட் வியூர்ட்டம்பெர்க்கின் செல்வந்தப் பெருபுள்ளிகளின் வாழ்விடமாக இருந்தது. 1496 இல் இச் செல்வந்தர்கள் புனித ரோமானியப் பேரரசரால் சிற்றரசர்களாக மாற்றப்பட்டார்கள். இச் சிற்றரசர்கள், 1805 இல் அரசரானார்கள். இவ்வளர்ச்சியால் ஸ்டுட்கார்ட் அரசர் வாழ்விடமாக மாறியது. + +ஈருந்து (மோட்டர் பைக்) மற்றும் நான்கு ஆழி (சக்கர)த் தானுந்தும் இங்குக் கண்டுபிடித்து தோற்றம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் நகரம். ஸ்டுட்கார்ட்டில் வாழ்ந்த காட்லீப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் ஆகிய இருவரும் தானுந்து வரலாற்றின் முன்னோடிகள். 1887 இல் காட்லீப் டைம்லரும் வில்ஹெல்ம் மேபாஃகும் தொடங்கிய "டைம்லர் மோட்டொரன் கெசல்ஷாஃவ்ட்" இப்பகுதியை தொழில்மயப்படுத்தியது. எனவே உலக அளவிலும் "தானுந்தின் தொட்டில்" என்று இப்பகுதி சிலரால் புகழப்படுகின்றது. மெர்சிடிஸ்-பென்ஸ், போர்ஷ், மேபாஃக் ஆகிய தானுந்து வகைகள் ஸ்டுட்கார்ட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃவோல்க்ஸ்வாகன் பீட்டில் (வண்டு வடிவத்) தானுந்தின் முதல் வடிவமும் இங்குதான் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. + +ஸ்டுட்கார்ட் தற்பொழுது டாய்ட்ச் நாட்டின் மிக அதிக அடர்த்தியுள்ள அறிவியல், கல்வி, ஆய்வுக் கழகங்களும் நிறுவனங்களும் கொண்ட பகுதியாகும். டாய்ட்ச் நாட்டின் மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவுகளில் 11% இப்பகுதியில் செலவிடப்படுகின்றது. இது ஏறத்தாழ 4.3 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும். + + + + + +மெர்சிடிஸ்-பென்ஸ் + +மெர்சிடிஸ்-பென்ஸ் தானுந்துகள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி (Daimler AG) என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது. + +1880களில் காட்லீப் டைம்லர் (1834–1900), வில்ஹெல்ம் மேபாஃக்குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த கார்ல் பென்ஸ் (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய உள் எரி பொறியால் உந்தப்பெற்ற தானுந்துதனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் டைம்லர்-பென்ஸ் என்னும் கும்பினி 1926ல் கூட்டாக உருவாகியது. + +இந்நிறுவனத்தின் அருங்காட்சியகம் இசுடுட்கார்ட்டு நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட இங்கு இந்நிறுவனத்தின் உலகின் முதன் தானுந்து முதல் இன்றைய தானுந்துகள் வரை வெளிவந்த தானுந்து, சரக்குந்து, பேருந்து முதலான பல வண்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. + + + + +போர்ஷ் + +போர்ஷ் ஏஜி (Porsche AG) என்னும் தானுந்து செய்யும் தொழிற்கூடம், "ஃவெர்டினாண்டு போர்ஷ்" என்னும் ஆஸ்திரிய-அங்கேரியப் பின்னணி கொண்ட டாய்ட்சு நாட்டுப் பொறியாளரால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத் தொழிற்கூடம் டாய்ட்ச் நாட்டில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் சூஃவ்வன்ஹௌசன் (Zuffenhausen) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது போர்ஷ் நிறுவனம் விலையுயர்ந்த மிடுக்கான (ஸ்போர்ட்ஸ்) தானுந்துகளும், கடுவழிப்பயன் தானுந்துகளும் (SUV) உற்பத்தி செய்கின்றது. + + + + + +யோஃகான் ஃவிக்டெ + +யோஃகான் கோட்லீப் ஃவிக்டெ (Johann Gottlieb Fichte) (மே 19, 1762-ஜனவரி 27, 1814) ஒரு டாய்ட்ச் நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் பௌட்சன் (Bautzen) என்னும் ஊருக்கு அருகில் ரம்மெனௌ (Rammenau) ஊரில் பிறந்தார். இவர் டாய்ட்ச் நாட்டுணர்வு மேலிடவும் அந்நாட்டு மெய்யியலில் புதுப்போக்குக்கு வித்திட்டவரும் ஆவார். ஹெகல், ஃவிரீடிரிஷ் ஷெல்லிங், ஆர்தர் ஷோப்பன்ஹைமர் முதலானவர்களின் மெய்யியல் கருத்துக்களில் தாக்கம் ஏற்படுத்தியவர் என்றும் புகழப்படுகின்றார். இவர் டாய்ட்ச் நாட்டின் கருத்தியம் (German Idealism) என்னும் மெய்யியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். டாய்ட்ச் கருத்தியம் என்னும் மெய்யியல் இயக்கம் இம்மானுவேல் கண்ட் என்பவர் துவக்கி வைத்த கொள்கைகளில் இருந்து எழுந்தது. இம்மானுவேல் கண்ட் எழுத்துக்களைப் படித்தபின் ஃவிஃக்டெ மெய்யியல் துறையில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஃவிஃக்டெ எழுதிய Attempt at a Critique of Revelation ("அட்டெம்ட் அட் எ க்ரிட்டீக் ஆஃவ் ரெவெலேஷன்", உணர்ந்ததின் திறனாய்வு பற்றிய ஒரு முயற்சி) என்னும் இவர் எழுதிய நூலை இம்மானுவே கண்ட் புகழ்ந்து, அதனை தன் நூற்களை வெளியிட்ட அதே பதிப்பகத்தாரைக் கொண்டு வெளியிடச்செய்தார். ஆனால் 1792ல் வெளியிட்ட பொழுது அதில் ஃவிஃக்டெயின் பெயரோ முன்னுரையோ இல்லை. படித்தவர்கள் இம்மானுவேல் கண்ட்டை மிகவும் புகழ்ந்தனர். உடனே இம்மானுவேல் கண்ட் அந்நூலை எழுதியவர் தான் இல்லை என்று கூறி எழுதிய ஃவிஃக்டெயின் பெயரைக் கூறியவுடன், ஃவிஃக்டெயின் புகழ் மிக விரைவாகப் பரவியது. இதன் பயனாய் இவர் யேனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். + +இவருடைய தன்னுணர்வுநிலை பற்றிய நுட்பமான கருத்துக்களுக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவருடைய படைப்புகளைப் புரிந்து கொள்வது கடினம் என்று பலரும் நினைக்கின்றனர். இவர் கடவுள் மறுப்புக் கொள்கையர் என்று குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர் பதவியை இழந்தார். பிறகு பெர்லின் நகருக்கு இடம்பெயர்ந்தார். நெப்போலியன் ஆடியில் இருந்த பெர்லினில் இவர் இயற்றிய டாய்ட்ச் நாட்டினருக்கு சொற்பொழிவு என்னும் நூல் புகழ் மிக்கது. +இவருடைய 1796 ஆம் ஆண்டில் வெளியாகிய "இயல்பான வலதுசாரிக் கொள்கைகளுக்கான அடித்தளங்கள்" (Foundations of Natural Right) என்னும் நூலில் தன்னுணர்வு நிலை பற்றியும், குமுக (சமூக) நிகழ்வியக்கம் பற்றியும் எழுதியுள்ளார். ஒவ்வொருவரின் தன்னுணர்வுநிலைக்கு மற்ற அறிவுடையவர்கள் இருப்பது மிகத்தேவையானது என்று கூறுகின்றார். இப்படி மற்ற அறிவுடைவர்கள் இருப்பதால் அவர்களுடைய தாக்கத்தால்தான் தான் தன் அறிவுநிலையை உணர முடிகின்றது என்று கூறுகின்றார். + + + + +வின்டோஸ் ஹோம் சேவர் + +வின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர் 16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது. + + + + +இந்தியாவின் நெடுஞ்சாலைகள் + +இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 ("NH7") இருக்கிறது. இதன் நீளம் 2369 கி.மீ. இது இந்தியாவின் வடக்கே உத்தரப் பி��தேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது. இந்தியாவின் மிகக் குறைவான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 47A("NH47A") இருக்கிறது. இதன் நீளம் 6 கி.மீ. இது கேரள மாநிலத்திலிருக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த குண்டனூரையும் கொச்சி துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது. + +மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன. + +மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்தச் சாலைக் கட்டமைப்பில் இவை 1,31,899 கி.மீ தொலைவு சாலைகளை கொண்டுள்ளன. + + + + + + +அனைத்துலக மக்களாட்சி நாள் + +அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. + +சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன. + +மேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆகுமென பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. + +சகல நாடுகளினதும் பிரதிநிதிகள், ஐ.நா.வின் சகல அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா கேட்டுள்ளது. + + + + + +வின்டோஸ் என்டி 3.1 + +மைக்ரோசாப்ட் வின்டோஸ் என்டி குடும்பத்தில் முதலாவது பதிப்பே வின்டோஸ் என்டி 3.1 ஆகும். இது சேவர் மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளதிற்காக வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பதிப்புக்கள் வெளிவிடப்பட்டது ஒன்று வின்டோஸ் என்டி 3.1 மற்றையது வின்டோஸ் என்டி 3.1 அட்வான்ஸ் சேவர். + + + + +டாய்ட்ச் கருத்தியம் + +செருமனியக் கருத்தியல் அல்லது ஜெர்மன் கருத்தியம் (ஆங்கிலம்: German idealism, டாய்ட்ச்: Deutsche Idealismus) என்பது மேற்குலக மெய்யியல் வரலாற்றில் 18 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் டாய்ட்ச் மெய்யியலாளர்கள் தோற்றுவித்து வளர்த்தெடுத்த ஒரு முக்கியமான மெய்யியல் இயக்கம். 1780களிலும் 1790களிலும் டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கண்ட் தொடங்கிவைத்த மெய்யியல் கருத்துக்களின் விளைவாக இவ் இயக்கம் உருவானது. 18 ஆம் நூற்றாண்டில் மேற்குலகில் எழுந்த "உணர்வெழுச்சி" இயக்கத்துடனும் (ரோமான்ட்டிசிசம்) "அறிவொளிக் கால" (Enlightenment) இயக்கத்துடனும் இக் கருத்தியம் நெருங்கிய தொடர்புடையது. டாய்ட்ச் கருத்தியத்தின் பரவலாக அறியப்பட்ட முன்னணி மெய்யியலாளர்கள்: இம்மானுவேல் கண்ட், யோஃகான் ஃவிக்டெ பிரீடரிக் ஷெல்லிங், ஹெகல். என்றாலும் பிரீடரிக் ஹைன்ரிக் ஜக்கோபி (Friedrich Heinrich Jacobi), கார்ல் லியோனார்டு ரைன்ஹோல்டு (Karl Leonhard Reinhold), பிரீடரிக் ஷ்லையர்மாஃகர் (Friedrich Schleiermacher ) முதலானோர் டாய்ட்ச் கருத்தியத்திற்கு பெரும் பங்களித்தவர்களாவர். + +கருத்தியம் என்னும் சொல் மேற்குலக மெய்யியலில் தனியான ஒரு சிறப்பு பொருளில் ஆளப்படுகின்றது. ஆங்கிலத்தில் "ஐடியலிசம்" ("Idealism") என்றும், டாய்ட்ச் மொழியில் (ஜெர்மன் மொழியில்) "இடேயாலிஸ்முஸ்" ("Idealismus") என்றும் கூறப்படும் சொல் அம்மொழிகளில் அறியப்படும் பொருளாகிய "செம்மையான", "சிறந்த" "குற்றமில்லா" என்னும் பொருட்களில் பொதுவாக ஆளப்படுவது பலரும் அறிவது. ஆனால் ஐடியலிசம் என்னும் சொல் மெய்யியலில் அப்பொருட்களில் ஆளப்படவில்லை. இடேயாலிஸ்முஸ் அல்லது ஐடியலிசம் என்னும் சொற்களுக்கு இணையாக தமிழில் "கருத்தியம்" என்னும் சொல் இச்சூழலில் வழங்குகின்றது. இதன் மெய்யியல் பொருள் என்னவென்றால், ஒரு பொருள் தான் பெற்றிருக்கும் பொருட்பண்புகள் எதுவாக இருப்பினும், அப்பொருள் அதனை உணர்வோர்கள் தம் உள்ளத்தில் எவ்விதமாக என்னவாக ("கருத்தாக") உணர்கிறார்கள் என்பதாகும். எனவே உணர்வோர் உள்ளத்தின் "அறிவு" கடந்து (மீறி) "தனியாக" அப்பொருள் "தன்னுள்ளே" எப்பண்புகள் கொண்டுள்ளன என்னும் எண்ணமே இந்த "கருத்திய"க் கொள்கைக்கு பொருந்தாத ஒன்று. + + + + + +பிரீடரிக் ஷெல்லிங் + +பிர��டரிக் வில்ஹெல்ம் யோசெப் ஷெல்லிங் (Friedrich Wilhelm Joseph Schelling) (ஜனவரி 27, 1775 – ஆகஸ்ட் 20, 1854), பின்னாளில் ஃவான் ஷெல்லிங் (von Schelling) என்று அழைக்கப்பட்ட டாய்ட்ச்(ஜெர்மன்) நாட்டு மெய்யியல்லாளர் ஆவார். இவர் மெய்யியலில் டாய்ட்ச் கருத்தியம் என்று கூறப்படும் கருத்தெழிச்சியில் பங்கு கொண்டு ஆக்கம் அளித்தவர். டாய்ட்ச் கருத்தியம் வரலாற்றில் இவர் தனக்கு அறிவுரை தந்து முன்னோடியாக இருந்த யோஃகான் ஃவிஃக்டெயுக்கும், பின்னர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் ஓரறையில் வாழ்ந்த ஹெகலுக்கும் இடைப்பட்டவராக கருதப்படுகின்றார். ஷெல்லிங்கின் மெய்யியலும் புரிந்துகொள்ளக் கடுமையானது என்று பெயர் பெற்றது. + + + + +தி எக்கனாமிஸ்ட் + +தி எக்கொனொமிஸ்ட் ("The Economist") என்பது ஆங்கில மொழியில் கிழமை தோறும் (வாரம் தோறும்) வெளியாகும் ஒரு கிழமையிதழ் ஆகும். இவ்விதழ் 1843 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இவ்விதழில் அனைத்துலக செய்திகளும், அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளியல், அறிவியல் பற்றிய கருத்துகளும் வெளிவருகின்றன. இவ்விதழை ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1843ல் நிறுவினார். ஜனவரி 2007ல் இவ்விதழின் படிகள் (பிரதிகள்) 1.2 மில்லியன் விற்பனையாகியுள்ளது. அவற்றுள் சற்றேறக்குறைய பாதி வட அமெரிக்காவில் விற்பனையாகியது . + + + + +நீலம் + +நீலம் (Blue) என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது. + +மதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டுள்ளது. + +ஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, ஃபின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும். + +கிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது. + +இந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர். + + + + +மிசோ மொழி + +மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் ��ற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். "மிசோ" என்ற சொல் "மலைவாழ் மக்கள்" எனப் பொருள் தருகிறது. +இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர். + + + + + + +மரைனர் திட்டம் + +மரைனர் திட்டம் ("Mariner program") என்பது செவ்வாய், வெள்ளி (மேர்க்குரி) ஆகிய கோள்களை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்ணாய்வு மையத்தினால் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லா தானியங்கி விண்கப்பல்களுக்கான திட்டமாகும். பூமியில் இருந்து வேறொரு கோளுக்கு முதன் முதலில் ஒரு விண்கப்பலை இத்திட்டத்தின் மூலம் அனுப்பினர். அதுமட்டுமின்றி வேறொரு கோளை அதன் ஒழுக்கில் சுற்றி வந்த முதலாவது கப்பலும் இத்திட்டத்திலேயே அனுப்பப்பட்டது. + +இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்றைய மூன்றும் தொலைந்து போயின. இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட "மரைனர் 11" மற்றும் "மரைனர் 12" ஆகியன வொயேஜர் திட்டத்தில் அனுப்பப்பட்டன. + +மரைனர் திட்டத்திற்கு மொத்தமாக 554 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. + + + + + +பிரையம் + +பிரையம் என்பவர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் வரும் டிராய் நகரத்தின் அரசன் ஆவார். ஹெக்டார், பாரிஸ் ஆகியோர் இவரது மகன்கள். டிரோஜன் போரில் அக்கிலீஸால் கொல்லப்பட்ட தனது மகன் ஹெக்டாரின் உடலை இவர் கிரேக்கர்களின் முகாமுக்கே சென்று வேண்டிப்பெற்று வந்தது குறிப்படத்தக்கதாகும். + + + + +பவதாரிணி + +பவதாரிணி ("Bhavatharini") தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா, உவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர். + +இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் "மயில் போலப் பொண்ணு ஒன்னு" என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது. + + + + +ஞாநி + +ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாள���், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன். + +சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர். +இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். + +2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார். + +அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார். + +இண்டியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975). + +சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார். + + + + + +ஞாநி சங்கரின் முகநூல் பக்கம் + + + + +உருசியாவின் நடுவண் மாவட்டங்கள் + +நடுவண் மாவட்டங்கள் ("federal districts", , "பெதரால்னியே ஓக்ருகா") என்பவை உருசியாவின் are groupings of the நடுவண் அலகுகளின் குழுக்களைக் குறிக்கும். + +நடுவண் மாவட்டங்கள�� நாட்டின் நிருவாக அலகுகள் அல்ல, ஆனால் நடுவண் அரசின் அமைப்புகளினால் இலகுவாக நிருவகிப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு நடுவண் மாவட்டமும் பல நடுவண் நிருவாக அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உருசிய அரசுத்தலைவரின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடுவண் மாவட்டங்கள் உருசிய அரசுத்தலைவரால் "அவரது அரசியலமைப்பு அதிகாரத்தை செயல்படுத்துவதற்கென" 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. சிறப்புத் தூதுவர் அரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசுத்தலைவரின் நிருவாக ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள். + +"மூலம்": + + + + +1505 + +1505 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +வெனேரா + +வெனேரா ("Venera", ரஷ்ய மொழி: Венера) என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஆகும். + +வெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படு‍ம். இது‍ வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும். +விண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது. வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது. வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது. வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின. + + + + + +உலக சகிப்புத் தன்மை நாள் + +உலக சகிப்புத் தன்மை நாள் ("International Day for Tolerance") என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டு���ோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது. + + + + + +புறொக்சி சேவர் + +கணினி வலையமைப்பில் புறொக்ஸி செர்வர்/சேவர் (ஈட்டுவழங்கி) என்பது வாங்கிகள் (கிளையண்ட்) இன் கோரிக்கைகளை உள்வாங்கித் தன் சார்பாக ஏனைய வழங்கிகளுக்கு (சேவர்) அனுப்பும் ஓர் மென்பொருளாகும். வாங்கியானது ஓர் இணையப்பக்கத்தையோ, கோப்பினையோ வேறேதேனும் வழங்கியில் ஓர் சேமிக்கப்பட்ட விடயத்தையோ அதன் சார்பாகப் பெற்றுக்கொண்டு வாங்கியிற்கு வழங்கும். புறொக்ஸி சேவரானது வழங்கியின் விண்ணப்பதைச் சிலசமயம் மாற்றுவதோடு பலசமயங்களில் எடுத்துக்காட்டாக இணையப்பக்கங்கள் போன்றவை ஏற்கனவே அணுகியிருந்தால் வழங்கியிடம் இருந்தல்லாமல் சேமித்ததை வழங்கும். இச்செயற்பாட்டிற்காக தேக்கம் (cache) என்றவாறு அழைக்கப்படும் சேமிப்பு வசதியினைக் கொண்டதாகும். போதுவாக வாங்கிகள் வழங்கியிடம் இருந்து சேவை ஒன்றைப் பெற விண்ணப்பிக்கும் பொழுது ஈட்டுவழங்கியில்( புறோக்ஸியில்) அது சேமிக்கப்படும் எனவே மீண்டும் அதே விபரத்தை வேறு ஓர் வாங்கி பெற முயற்சி செய்தால் புறொக்ஸி சேவர் வழங்கிக்கொள்ளும். இதன் மூலம் வேகமாக சேவையை வழங்கிகளுக்கு வழங்கிக் கொள்ளும். + +ஓர் வலையமைப்பில் வாங்கிகளின் கோரிக்கையை மாற்றம் ஏதும் செய்யாமல் வழங்கும் புறொக்ஸி சேவரானது கேட்வே (Gateway) அல்லது சுரங்க புறோக்ஸி எனப்பொருள்படும் டனலிங் புறொக்ஸி என்றழைக்கப்படும் (tunneling proxy) + +ஓர் புறோக்ஸி சேவர் ஆனது பயனரின் கணினியிலோ அல்லது பயனரின் கணினிக்கும் இணையத்தை அணுகுவதற்கும் இடையிலே இருக்கலாம். + +புறொக்ஸி சேவரானது கீழ்வரும் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பயன்பாட்டினை உடையது. + +ஓர் புறொக்ஸி சேவரானது ஓர் வாங்கியின் கோரிக்கையை வழங்கியிடம் இருந்தல்லாமல் ஏற்கனே அந்தக் வாங்கியோ அல்லது பிறிதோர் வாங்கியோ விடுத்த விண்ணப்பத்தில் இருந்து சேமிக்கப்பட்டதை வழங்கும் ரகமே காஷிங் புறொக்ஸி சேவராகும். + + + + +ஜனவரி 2008 + +ஜனவரி 2008, 2008 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நா���்காட்டியின் படி தை மாதம் ஜனவரி 15 இல் தொடங்கி பெப்ரவரி 12 இல் முடிவடைகிறது. + + +---- + + + + +பெப்ரவரி 2008 + +பெப்ரவரி 2008, 2008 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 29 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13 இல் தொடங்கி மார்ச் 13 இல் முடிவடைகிறது. + + + + + +2008 + +2008 (MMVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். + +தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 12 வரை சர்வசித்து ஆண்டும், ஏப்ரல் 13 இலிருந்து சர்வதாரி ஆண்டும் ஆகும். + +திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2038, ஜனவரி 16 இலிருந்து 2039. + + +மேலும் ஜனவரி 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் பெப்ரவரி 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் மார்ச் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் ஏப்ரல் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் ஜூன் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் ஜூலை 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் ஆகஸ்ட் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் செப்டம்பர் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் அக்டோபர் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் நவம்பர் 2008 நிகழ்வுகளுக்கு.. + + +மேலும் டிசம்பர் 2008 நிகழ்வுகளுக்கு.. + + + + + + +கருப்பு + +கருப்பு அல்லது கறுப்பு ("black") என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். நிலக்கரி, கருங்காலி மரம், சுத்தவெளி போன்றவற்றின் நிறம் கருப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. + +புதிய கற்காலம் சார்ந்த ஓவியர்கள் பயன்படுத்திய நிறம் கருப்பாகும். இது பொதுவாக ரோமானிய பேரரசின் காலத்திலிருந்து துக்கம், மரணம், தீயவை போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. + +கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா..." என்பார் தொல்காப்பியர் (783).* + +பண்டைய எகிப்தில் கறுப்பு என்ற நிறம் மரணத்தை குறிக்கின்றது. கிருஷ்ணா என்ற சொல்லுக்கு "கருப்பு" என்ற பொருள் உள்ளது. + +பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இயல்பாகவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கறுப்பு நிறம் அவர்களின் தோலை கருப்பு நிறம் கொண்டு பாதுகாக்கிறது . + +பல நாடுகளில் கறுப்பு அங்கியே நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறுப்பு நிறமானது சக்தியையும் அதிகாரத்தையும் கொடுப்பதனால் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கீழ்படிதல் மற்றும் தாழ்மை பண்பை கறுப்பு நிறம் உணர்த்துவதால் இந்த நிறத்தில் உடைகள் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + +கே. வி. மகாதேவன் + +கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் "மனோன்மணி" என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் "முருகனே" என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார். + +தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார். + +பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார். + +1942 இல் "மனோன்மணி" என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார். பி. யு. சின்னப்பா பாடிய, கானடா ராகத்திலமைந்த, "மோகனாங்க வதனி" என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் ��ாடலாகும். + +மதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார். + +விரிவான தரவுகளுக்கு - + + +கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார். + + + + + +இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் + +இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் இலங்கையில் விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில் மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரங்கள், தமிழர் பகுதிகளில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்பில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து 1983 ஆண்டு முதல் ஒரு உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. + + + + +பச்சை + +பச்சை என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 520 முதல் 570 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, பச்சை நிறதை உண்டாக்குகிறது. + + + + +அனைத்துலக மாணவர் நாள் + +அனைத்துலக மாணவர் நாள் ("International Students' Day") என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும். + +1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது. + +இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது. + + + + + + +மறையூர் + +மறையூர் என்பது, தென்னிந்திய மாநிலமான கேரளாவின், இடுக்கி மாவட்���த்திலுள்ள ஒரு பெயர் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஒரு இடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டைப் பாதை வழியாக மூணாரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் மறையூர் அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன. 1991 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மறையூரின் மக்கள் தொகை 9,590 ஆகும். + +மறையூர் என்னும் பெயர் "மறை" , "ஊர்" என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை. + +மலைகள் நிறைந்த பகுதியாகையால் "மலையூர்" என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், "மறவூர்", "மறையூர்" ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன. + + + + +இலங்கை இனக்கலவரங்கள் + +இக்கட்டுரை இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களைப் பட்டியல் படுத்துகிறது. + +இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. + +58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது. + +1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது. + +கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது. + +பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலைச் செய்யப்பட்டனர். + +பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப��பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன. + +2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும். + +2006 இன் மத்தியில் , ஒரு குண்டு வெடிப்பு 16 பேரை கொன்றது. தமிழருக்குச் சொந்தமான கடைகள் மற்றும் தமிழ் பொது மக்களை ஒரு சிங்களக் கும்பல் வேட்டையாடியது.ஒரு முக்கிய மருத்துவமனையின் தகவலின் படி, குண்டு வெடிப்யில் 16 பேர், எட்டு தமிழர்கள், ஐந்து சிங்களம், இரண்டு முஸ்லிம் மற்றும் அடையாளம் முடியாத ஒருவர் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் இராணுவத்தின் முழு படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனினும் கலவரம் தன்னிச்சையானதா அல்லது திட்டமிட்டதா என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை தடுத்து நிறுத்தவோ இயலவில்லை. + +17 அக்டோபர் 2006 தமிழருக்குச் சொந்தமான கடைகள் பல சேதமாகின மற்றும் புலிகளின் குழு ஒரு கடற்படை தளம் மீதான தாக்குதலில் மூலம் துறைமுக நகரில் தமிழ் வியாபாரிகளுக்கு எதிரான கும்பல் வன்முறை அழிக்கப்பட்டது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை. + +2018 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இக்கலவரம் தனிப்பட்ட நான்கு பேரின் குடி வெறியினால் ஏற்பட்டது. + + + + + + + + + + + +மு. ஹு. மு. அஷ்ரப் + +முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் (MHM Ashraff, ஒக்டோபர் 23, 1948 - செப்டம்பர் 16, 2000) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார். + +இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் ஒரே புதல்வனாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள். கல்முனைக்குடியில் வாழ்ந்து வந்த த்னது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை உவெசுலி கல்லூரியிலும் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய அஷ்ரப், பேரியல் இசுமாயில் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் மகன் உள்ளார். + +1980களில் அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக மேம்பாட்டுக்கான இயக்கமாக காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. + +நான் எனும் நீ - கவிதை நூல் + + + + +பாலக்காடு + +பாலக்காடு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயின் அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி மலையாளம். எனினும் தமிழும் பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. + +இந்நகரம் தமிழக கேரள எல்லையில் கோயம்புத்தூரில் இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பாரதப்புழா ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. சேலத்தை கன்னியாகுமரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது. +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +பாக்ரி மொழி + +பாக்ரி மொழி, ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழி ஆகும். இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து மில்லியன் பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், ராஜஸ்தானின் ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஹரியானாவின், சிர்சா, ஹிசார் ஆகிய மாவட்டங்களிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஃபைரோஸ்பூர், முக்த்சார் மாவட்டங்களிலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் பகவல்பூர், பகவல்நகர் ஆகிய இடங்களிலும் ���ூடுதலாக வாழ்கின்றனர். இம் மொழி எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்னும் ஒழுங்கிலமைந்த சொற்றொடர்களைக் கொண்ட இந்தோ-ஆரிய மொழியாகும். + + + + + + +கோவாரியா மொழி + +கோவாரியா மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில், ராஜஸ்தானி மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வாழும் சுமார் 25,000 பேர் இம் மொழியைப் பேசி வருகிறார்கள். இவர்கள் இம் மாகாணத்தின் லர்க்கானா, சுக்கூர், மோரோ, பாதின், உமர்கொட் ஆகிய பகுதிகளில் கூடுதலாக வாழுகின்றனர். பெரும்பாலும் இந்துக்களான இவர்கள், வழிபாட்டுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்துகிறார்கள். + +இது இந்தியாவில் கவாரி மொழியை ஒத்ததாகக் கருதப்படுகிறது. ஜோகி, மார்வாரி மேக்வார் ஆகியவை நெருங்கிய கிளை மொழிகளாகும். + + + + + +குஜாரி மொழி + +குஜாரி மொழி, இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில், ராஜஸ்தானி மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. குஜார் இனத்தவரின் மொழியாக இம்மொழி இருந்து வந்தது. ஆனால் தற்காலத்தில், பல்வேறு இடங்களிலும் வாழும் குஜார்கள் அவ்வப் பகுதிகளில் புழங்கும் மொழிகளையே பேசுவதால் இம் மொழியின் பயன்பாடு குறுகி விட்டது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் குஜார்களே பெரும்பாலும் இம் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் குறைந்த அளவில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். + + + + +புரோமித்தியம் + +புரோமித்தியம் அல்லது புரோமீத்தியம் (ஆங்கிலம்: Promethium (prəˈmiːθiəm/, /proʊˈmiːθiəm) ஒரு வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pm, இதன் அணுவெண் 61. இதன் அணுக்கருவில் 84 நொதுமிகள் உள்ளன. + +புரோமீத்தியத்தின் நீண்ட வாழ்வுக்காலம் கொண்ட ஓரிடத்தான் Pm பீட்டாத் துகள் வெளியிடும் பொருள். இதன் அரை-வாழ்வுக்காலம் 17.7 ஆண்டுகளாகும். இது காமாக் கதிர்களை வெளியிடுவதில்லை என்றாலும் வெளிவிடும் பீட்டாத் துகள்கள் அதிக அணுவெண் கொண்ட தனிமங்களின் மீது விழுந்தால் அவை புதிர்க் கதிர்கள் (X-கதிர்கள்) வெளிவிடும். Pm என்னும் பொருள் எக்ஸ் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் வெளிவிடுகின்றன. + +பொகுஸ்லாவ் பிரௌனர் எ���்ப்வர் 1902ல் இத்தனிமம் இருக்கவேண்டும் என்பதை முன்கூறினார். ஹென்றி மோஸ்லி என்பவரும் 1914 ஆம் ஆண்டு, தனிம அட்டவணையில் உள்ள இடைவெளியைக் கொண்டு (61 ஆம் அணுவெண்ணுக்கான இடைவெளி) இக்கருத்துக்கு வலுவிருப்பதாகக் கூறினார். கடைசியாக 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளெண்டனின், சார்லஸ் கோர்யெல் ஆகியோர் யுரேனிய சிதைவு இயக்கத்தின் விளைபொருட்களை ஆய்வு செய்தபொழுது புரோமித்தியத்தைக் கண்டுபிடித்து தனியே பிரித்தெடுத்துக் காட்டி நிறுவினார்கள். எனினும் 19477 இல்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் . +புரோமித்தியம் என்னும் பெயர் கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் புரோமீத்தியஸ் என்னும் டைட்டன் இனத்தவன் ஒலிம்ப்பஸ் மலையில் இருந்து நெருப்பை எடுத்து வந்து மாந்தகுலத்திற்குத் +தந்தவன் என்பதில் இருந்து எடுத்து இட்டப் பெயர். இப்பெயரைச் சார்லஸ் கோர்யெல்லின் மனைவி மேரி கோர்யெல் பரிந்துரைத்தார் என்பர். + +1963ல், மின்மவணு-பரிமாற்ற முறை (ion-exchange methods) வழி அணு உலையின் கழிவுப்பொருளில் இருந்து 10 கிராம் புரோமித்தியத்தை அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் உருவாக்கினார்கள். + +புரோமித்தியம் யுரேனிய சிதைவு அல்லது பிளவில், விளைபொருளாகக் கிடைக்கின்றது. மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாகவே இயற்கையில் கிடைக்கின்றது. யுரேனியக் கனிமமாகிய யுரேனினைட் என்னும் கனிமத்தில் நிறையளவில் குவிண்ட்டில்லியனில் ஒரு பங்களவே (10) கிடைக்கின்றது. யுரேனினைட் என்னும் கனிமம் பிட்ச் பிளெண்டு என்றும் பரவலாக அறியப்படும் கனிமம் ஆகும். + +புரோமித்தியம் ஆண்ட்ரொமெடா நாள்மீன்பேரடையில் உள்ள HR 465 என்னும் விண்மீனில் இருந்து வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்தும் (ஒளி முதலான மின்காந்த அலைகள்), பிரிசிபைலிஸ்கி விண்மீன் என்னும் HD 101065 விண்மீனில் இருந்தும், HD 965. என்னும் விண்மீனில் இருந்தும் வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்து அங்கெல்லாம் புரோமித்தியம் இருப்பதற்கான தடயம் இருப்பதாக விண்ணியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். + + + + + +நீர்வேலி + +நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே க��தடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும். + +பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. + + + + + +ஒருவித்திலை + +ஒருவித்திலைத் தாவரம் அல்லது ஒருவித்திலையி ("Monocotyledon") என்பது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்த இரு பெரும் பிரிவுகளுள் ஒன்றைச் சேர்ந்த தாவரம் ஒன்றைக் குறிக்கும். மற்றப் பிரிவைச் சேர்ந்தவை இருவித்திலைத் தாவரங்கள் ஆகும். ஒருவித்திலையிகள், பல்வேறு வகைப்பாட்டு நிலைகளிலும், பல்வேறு பெயர்களின் கீழும் அடையாளம் காணப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலில், அங்கியோஸ்பேர்ம்கள் தொடர்பான புதிய வகைப்பாட்டு முறைமையான ஏபிஜி II முறைமை, ஒருவித்திலையிகள் என்னும் ஒரு பிரிவை (clade) ஏற்றுக்கொண்டுள்ளது எனினும், இதற்கு ஒரு வகைப்பாட்டியல் தரநிலை (rank) ஒதுக்கப்படவில்லை. + +உயிரியத் தொகுதியில் உண்டாகும் வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். இப் பிரிவுள் 50,000 தொடக்கம் 60,000 வரையிலான சிறப்பினங்கள் (species) இருப்பதாகத் தெரிகிறது. அனைத்துலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் காப்பு ஒன்றியத் (IUCN) தகவல்களின்படி இவ்வெண்ணிக்கை 59,300 ஆகும். இப் பிரிவிலும், பூக்கும் தாவரங்கள் அனைத்திலும், சிறப்பினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், மிகப் பெரிய தாவரக் குடும்பம் ஆர்க்கிட்டுகள் (orchids) ஆகும். சுமார் 20,000 சிறப்பினங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள இவை "ஆர்க்கிடேசியே" குடும்பத்தைச் சேர்ந்தவை. இக் குழுவில் பொருளியல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாவரக் குடும்பம், "போவாசியே" குடும்பத்தைச் சேர்ந்த புற்கள் ஆகும். இக் குடும்பத்தில், தானியங்கள் (நெல், சோளம், கோதுமை போன்றவை), மேய்ச்சற் புற்கள், மூங்கில் போன்றவை அடங்குகின்றன. இவை காற்றினாலான மகரந்தச் சேர்க்கைக்காகக் கூர்ப்பு (evolution) அடைந்துள்ளன. மிகவும் சிறிய புற்களின் பூக்கள், தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் பூங்கொத்துகளாக அமைந்துள்ளன. தென்னை முதலியவற்றை உள்ளடங்கிய "பாம்" குடும்பம் (அரகேசியே), வாழைக் குடும்பம் (முசேசியே), வெங்காயக் குடும்பம் (அலியேசியே) போன்றவை இக் குழுவில் உள்ள, பொருளியற் சிறப்புக் கொண்ட பிற தாவரக் குடும்பங்களாகும். + +பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலையிகளே. லில்லிகள், ஐரிசுகள், ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள் என்பவை இவ்வாறானவை. + +இத் தொகுதியில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருப்பதனால், ஒருவித்திலைத் தாவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறாக இருவித்திலைத் தாவரங்களின் வித்துக்களில் இரண்டு வித்திலைகள் இருக்கும். எனினும், வித்திலைகள் தாவரங்களின் வாழ்க்கையின் குறுகிய காலப் பகுதியிலேயே காணப்படுவதால், வித்திலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தாவரங்களை ஆராய்தல் வசதியானது அல்ல என்பதுடன், இது அவற்றின் நம்பத் தகுந்த இயல்பும் அல்ல. + +இருந்தாலும், ஒருவித்திலைத் தாவரக் குழு சிறப்பியல்புகள் கொண்டது. இவற்றுள் இவ் வகைத் தாவரங்களின் பூக்கள், மூன்று அல்லது அதன் மடங்குகள் எண்ணிக்கையில் இதழ்களைக் கொண்டவையாக அமைந்திருப்பதைக் காணலாம். பொதுவாக, இவற்றின் பூக்கள் மூன்று, ஆறு அல்லது ஒன்பது இதழ்களுடன் அமைந்துள்ளன. பல ஒருவித்திலைத் தாவர இலைகளின் நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்திருப்பதையும் காணலாம். + +பொதுவாக ஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் வருமாறு. இது மேலோட்டமானதே. பல விதிவிலக்குகள் இருப்பதால் இவை எல்லாச் சமயங்களிலும் பொருந்தும் எனக் கூற முடியாது. + + + + + + + +இவ்வேறுபாடுகளை இறுக்கமாகப் பின்பற்ற முடியாது. சில ஒருவித்திலையிகளின் இயல்புகள் இருவித்திலையிகளின் பொது இயல்புகளுக்கு நெருக்கமாக இருப்பதைக் காணலாம். இது போலவே ஒருவித்திலையிகளின் இயல்புகளுக்கு நெருக்கமான இருவித்திலையிகளும் உண்டு. + +ஒருவித்திலையிகள், பூக்கும் தாவரங்களின் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இருந்துவருகின்ற ஒற்றைமரபுக் குலம் ஒன்றை உருவாக்குகின்றன என்று கருதப்படுகிறது. ஒருவித்திலையிகள் தாவரக் குடும்பத்துக்கு மேற்பட்ட நிலையில் உள்ளதால், இதற்குப் பெயரிடுவதில் தாராளம் நிலவியது. ஐசிபிஎன் (ICBN) இன் 16 ஆவது சரத்து இ���ற்கு ஒரு விளக்கப் பெயர் அல்லது இதன் கீழுள்ள குடும்பமொன்றின் பெயரைத் தழுவிய ஒரு பெயரைக் கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறது. + +வகைப்பாட்டியல் வரலாற்றில் இதற்குப் பின்வரும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. + + +மேலே காட்டிய எல்லா முறைமைகளுமே இக் குலத்துக்கான உள் வகைப்பாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. இக் குலத்தின் புற எல்லைகள் மிகவும் உறுதியானவை. இது சிறப்பாக வரையறுக்கப்பட்டதும், உட்பிணைப்புக் கொண்டதுமான ஒரு குலமாகும். எனினும் இதன் உள்வகைப்பாடு உறுதியற்றது. எந்த இரு முறைமைகளுமே இதன் உள்வகைப்பாட்டில் இணங்கியது கிடையாது. + +அண்மைய மூலக்கூற்று ஆய்வுகள் ஒருவித்திலைத் தாவரங்களுடைய ஒற்றை மரபுத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவற்றுக்கிடையிலான உட்தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும் உதவியுள்ளன. ஏபிஜி II முறைமை ஒருவித்திலையிகளுக்கு வகைப்பாட்டுத் தரநிலை ஒன்றை ஒதுக்காவிடினும், ஒருவித்திலைக் கிளேட் ஒன்றை ஏற்றுள்ளது. இம் முறைமை 10 ஒழுங்குகளையும், எந்த ஒழுங்கிலும் சேர்க்கப்படாத இரண்டு குடும்பங்களையும் அடையாளம் கண்டுள்ளது. + + + + + +அவலோகிதர் + +அவலோகிதர் (சமஸ்கிருதம்: अवलोकितेश्वर , "அவலோகிதேஷ்வர" "கீழே நோக்கி பார்க்கும் தேவன்"), மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார். அவர் அனைத்தும் புத்தர்களின் கருணையின் வடிவாக கருததப்படுகிறார். சீனத்தில் இவரை "குவான்-யின்" என்ற பெண் வடிவத்தில் போற்றப்படுகிறார். திபெத்திய மொழியில் இவரை "சென்ரெட்ஸிக்" என்று அழைக்கின்றனர். + +அவலோகிதர் பத்மபானி (தாமரையைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்ற குறிப்புப்பெயரிலும் போற்றப்படுகிறார். திபெத்தின் தலாய் லாமா அவலோகிதரரின் அவதராமாக கருத்தப்படுபவர். + +'லோகேஷ்வர ராஜா' (தமிழில் உலகநாதன்) என்பது அவலோகிதரரின் ஒரு சிறப்புப்பெயாராகும். இதற்கு அனைத்தும் உலகங்களின் அரசன் என்று பொருள் கொள்ளலாம் + +அவலோகிதேஷ்வர என்ற சொல் மூன்று பகுதிகளால் ஆனது , அவ, என்றால் "கீழே" என்று பொருள். லோகித என்றால், "பார்க்க" என்று பொருள், 'ஈஷ்வரர்' என்றால் கடவுள் என்று பொருள். இந்த மூன்று சொற்களும் சமஸ்கிருதம் சந்தி விதிகளின் படி இணைந்து "அவலோகிதேஷ்வரர்" என்று ஆனது. இதற்கு "கீழே (உலகத்தை) பார்க்கும் தேவன்" என்று பொர���ள். திபேத்திய சொல்லான "சென்ரெட்ஸிக்" என்பதற்கு "அனைது உயிர்களையும் பார்ப்பவர்" என்று பொருள் + +இந்தப் பெயரை சீன பௌத்தர்கள் "அவலோகிதேஸ்வரர்" என்று தவறாக புரிந்து கொண்டு, இவரை "உலகத்தின் அனைத்து ஒலிகளையும் கேட்பவர்" ("குவான் யீன்") என்று போற்றினாரென (ஸ்வர என்றால் ஒலி) என கருதியதாக கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி அவலோகிதேஸ்வரர் தான், இந்த போதிசத்துவரின் ஆதிமூல பெயர் என கருதப்படுகிறது. ஏனெனில் "-ஈஷ்வரர்" என்ற பின்னொட்டு சமஸ்கிருதத்தில் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் காணக்கிடைப்பத்தில்லை. மேலும் "அவலோகிதேஸ்வரர்" என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டும் பௌத்த சமஸ்கிருத படைப்புகளின் காணக்கிடைப்பது இந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. + +"அவலோதேஷ்வரர்" மற்றும் "அவலோகிதேஸ்வரர்" ஆகிய இருச்சொற்களுக்கும் அடிச்சொல்லாகிய "அவலோகித"(மேற்பார்வை) என்ற சொல்லைக்கொண்டே இந்த போதிசத்துவர் தமிழில் "அவலோகிதர்" என அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. + +இந்த பெயரின் மூல வடிவம் போதிசத்துவரின் கடமையை உணர்த்துவதாக உள்ளது. எனினும், இந்தப்பெயர் "ஈஷ்வரர்" என மாறியது சைவத்தின் தாக்கத்தை காட்டுகிறது. ஏனெனில் "ஈஷ்வரர்" என்பது இந்து மத தெய்வங்களுடன் முக்கியமாக சிவனுடன் தொடர்புடையது. + +மேற்கத்திய அறிஞர்களிடைய அவலோகிதரரின் தோற்றத்தை குறிந்து ஒருமித்த கருத்து இல்லை. சிலர், இவர் அக்கால வேத மதத்தில் இருந்து தோன்றியவராக இருக்கலாம் என்று கருதிகின்றனர் (ஈஷ்வர - வேத மதத்தின் தேவர்களை குறிக்கக்கூடிய சொல்). + +தேரவாத பௌத்தத்தில், 'லோகேஷ்வரர்' என்பது ஒரு புத்தரை குறிக்கக்கூடிய ஒரு சொல். இந்த புத்தர், அமிதாப புத்தரின் மடத்தில் புத்த பிக்குவாக (பிட்சுவாக) முற்பிறவில் இருந்ததாக கூறுவர் + +அவலோகிதர் வாழ்வதாக பௌத்த சூத்திரங்களில் "போதாலகம்" என்னும் மலை பொதிய மலை எனவும், இவருடைய வடிவத்திற்கும் தெக்கணமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தி வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதென்றும் கூறுவர் (). அவலோகிதர் அகத்திய முனிவருக்கு தமிழ் கற்பித்தார் என வீரசோழியம் கூறுகின்றது . + +மஹாயான கருத்தின்படி, அவலோகிதர் "துன்பத்தில் இருக்கும் அனைத்து உயிர்களின் வேண்டுதலைகளைக் கேட்பதாகவும், அனைத்து உயிர்களும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைய உ��வும் வரையில் தான் புத்தத்தன்மையை அடைவதில்லை" என்ற உயரிய உறுதிமொழி பூண்டவாரக கருதுகின்றனர். மஹாயான சூத்திரங்களுள் இருதய சூத்திரம், தாமரை சூத்திரமும் இவருக்கு தொடர்புடையன. குறிப்பாக தாமரை சூத்திரத்தின் 25-ஆவது அத்தியாயம் 'அவலோகிதேஷ்வர சூத்திரம்' என்று அழைக்கப்படுகின்றது. + +அவலோகிதரரின் ஆறு தன்மைகள்: + +அவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது + +திபெத்திய பாரம்பரியத்தில், அவலோகிதர் சென்ற கல்பத்தில் இருந்த ஒரு கருணை நிரம்பிய புத்த பிக்கு, தற்போதைய கல்பத்தில் போதிசத்துவம் அடைத்தாக கருதிகின்றனர். இன்னொரு கருத்தின் படி அவலோகிதர் பிரபஞ்ச கருணையின் வடிவமாகும். + +அவலோகிதர போதிசத்துவரின் ஏழு உருவங்கள்: + + +திபெத்திய பௌத்தத்தில், அவலோகிதரரை 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரந்தால் வணங்குகின்றனார். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் அதிபதி ஆகையால் இவரை ஷடாக்ஷரி (ஷட-ஆறு, அக்ஷரம் - எழுத்து) என்ற அழைக்கின்றனர். + +ஜப்பானிய ஷிங்கோன் பௌத்த மதத்தில் இவரை 'ஓம் அரோ-ரிக்ய ஸ்வாஹா; என்ற மந்திரத்தை பயன்படுத்தி போற்றுக்கின்ற்னர். 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரத்தையும் அவ்வப்போது பயன்படுத்துவர். + +இவருடன் தொடர்புடைய இன்னொரு பிரபலான மந்திரம் மஹா கருணா தாரணி அல்லது நீலகண்ட தாரணி ஆகும். + +புத்த புராணங்களின் படி அவலோகிதர் அனைத்து உயிர்களும் மோட்சம் அடையும் வரை ஒய்வெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழி பூண்டவர். அந்த உறுதிமொழியின் படி அவர் அனைத்து உயிர்களும் நிர்வாணம் அடைய உதவி வந்தார். ஆனால் எவர், எவ்வளவு முயன்றும் அவர் கரையேற்ற பல உயிர்கள் இருந்தன. இந்த போராட்டத்தில் அவர், தலை பதினோரு துண்டுகளாகவும், கைகள் ஆயிரம் துண்டுகளாகவும் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அமிதாப புத்தர், அந்த பதினோரு துண்டுகளையும் முழுமையாக்கி பதினொரு தலைகளும், ஆயிரம் துண்டுகளை முழுமையாக்கி ஆயிரம் கைகளும் தந்தார். அவலோகிதர் இந்த பதினோரு தலைகளால் பதினோரு திசைகளை கண்காணித்து, ஆயிரம் கரங்களால் துன்பத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்களுக்கு உதவுகிறார். + +திபெத்திய பௌத்தத்தில் அவலோகிதர் ஒரு போதியை எய்திய ஒரு பூரண புத்தரகவ��� கருதப்படிகிறார். மற்ற மஹாயான பிரிவுகளில் அவர் ஒரு உயரிய போதிசத்துவர். + +திபெத்தில் இவர் பொதுவாக 'சஹஸ்ரபுஜ' மற்றும் 'ஏகாதசமுக' ரூபத்தில் வணங்கப்படுகிறாம். திபெத்திய பௌத்ததில் தாரா தேவி இவரிடம் இருந்து தோன்றியவர். உயிர்களின் துன்பங்களை கண்டு இவர் வடித்தே கண்ணீரே தாரா தேவியாக உருவானது. + +அவலோகிதரருக்கு பல அவதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியவானவை + + + + + + +புத்தர் + +புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவக்கிய கௌதம புத்தரேயே குறிக்கும். பொதுவாக அவர் வெறும் புத்தர் என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" (Tathaagatha) என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடிய சொல். + +பௌத்த மதத்தில் புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவனற்றும் எவையேனும் ஒன்றைக் குறிக்கலாம் + + + + + +எப்பெசுடசு + +எப்பெசுடசு (/hɪˈfεstəs/) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவரும் சியுசு மற்றும் எராவின் மகனும் ஆவார். இவர் கொல்லர்கள், கைவினைஞர்கள், சிற்பிகள் ஆகியோரின் கடவுளாகவும் உலோகங்கள், உலோகவியல், நெருப்பு மற்றும் எரிமலைகள் ஆகியவற்றின் கடவுளாகவும் திகழ்கிறார்.. இவருக்கு இணையான ரோமக் கடவுள் வல்கன் ஆவார். + +இவர் ஒலிம்பசுவில் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் ஆயுதங்களைத் தயாரித்துத் தருகிறார். எப்பெசுடசு தொழில் கடவுளாக இருப்பதால் ஏதென்சு போன்ற தொழில்நகரங்களில் வாழும் கிரேக்க மக்கள் அவரை வழிப்பட்டு வந்தனர். + +ஒலிம்பசு மலைச்சிகரத்தில் எப்பிசுடசுவிற்குத் தனியாக அரண்மனையும் தொழிற்சாலையும் இருந்தது. இவர் கிரேக்கக் கடவுள்களுக்குப் பல வலிமையான ஆயுதங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். இவர் எர்மீசுவின் பெடாசோசு(இறகுள்ள தலைக்கவசம்), தலாரியா(இறகுள்ள காலணி), ஏகிசு(மார்புக்கவசம்), அப்ரோடிட்டின் இடைக்கச்சை, ஈலியோசின் தேர் ஆகியவற்றைச் செய்திருக்கிறார். +எப்பெசுடசு ஆட்டோமெடான் எனப்படும் தானியங்கி உலோகங்களைத் தனக்கு வேலை செய்ய உருவாக்கினார். திறமையுள்ள கொல்லனாக இருந்த எப்பெசுடசு ஒலிம்பிய மலைச்சிகரத்தில் உள்ள அனைத்து அரியாசனங்களையும் செய்தவர் ஆவார். + +அப்ரோடிட் மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழ���மோ என்று பயந்த சியுசு அவரை அழகற்ற எப்பெசுடசிற்கு கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தார். இதனால் மகிழ்ந்த எப்பெசுடசு அப்ரோடிட்டிற்குப் பல நகைகளைச் செய்து கொடுத்தார். ஆனால் அப்ரோடிட்டோ அவரை ஏமாற்றிவிட்டுப் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் விரக்தியடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்தார். பிறகு அவர் சியுசு மற்றும் யுரோனிமின் மகளும் கிரேசுகளில் ஒருவருமான அக்லேயாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு இயுக்லியா, இயுபிமி, ஃபிலோப்ரோசைன் மற்றும் இயுதெனியா ஆகியோர் பிறந்தனர். + +ஒருநாள் ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக கடவுள் ஏதெனா எப்பெசுடசுவின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள ஏதெனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் ஏதெனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த ஏதெனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது பட்டதால் அவர் கர்ப்பமானார். இதன் மூலம் எரிச்தோனியசு பிறந்தான். இவனே பிற்காலத்தில் ஏதென்சின் அரசன் ஆனான். + + + + +நா. கண்ணன் + +முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்கள்; நிறுவனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவர். + +நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு தற்போது கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராக செயல்படுகிறார். + +இவ்வமைப்பின் மூ��மாக காலத்தால் அழிவுறும் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர். இது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்பவர். இதற்காக இருமுறை இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்து இந்திய மைய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்திய மா-கணினி மையம் (பெங்களூர்) எடுத்தாளும் இந்திய இலக்க நூலகம் மற்றும் மில்லியன் புத்தகத் திட்டத்தில் தொடர்ந்து இவ்வமைப்பின் மூலமாகப் பங்களித்து வருகிறார். + +தமிழ் வரலாறு, கலை, இலக்கிய ஆவணப்பதிவுகள் இந்திய மண் தாண்டி காலனியாதிக்க அரசுகளிடம் உள்ளது அறிந்து பிரித்தானிய நூலகத்திலுள்ள புத்தகங்களை இலக்கப்பதிவாக்கும் முயற்சியையும் அறிமுகப்படுத்தியவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலமாக தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பேகத்தின் எழுத்தைத் தமிழக இலக்கிய உலகில் பிரபலப்படுத்தினார். அது போல் சிட்டி சுந்தரராஜன் அவர்களின் மூலமாக தமிழின் முதல் புதினம் (நாவல்) இலக்கப்பதிவாகிறது. தமிழில் உருவாகிய முதல் நுதலியப்பொறி (optical character recognition software) வாசித்த 1941ம் ஆண்டுப் புத்தகமும் தமிழ் மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டதே. அதே போல் தமிழ்ப் பாரம்பரியம் சார்ந்த பல குறுந்தகடுகளை த.ம.அ வெளியிட்டுள்ளது. + +கணித்தமிழ் இயக்கத்தின் மூத்த அமைப்பாளர்களுள் ஒருவர். தமிழ் வரிவடிவ அமைப்பு முயற்சிகளில் மெக்கிண்டாஷ் இயங்கு தளத்தில் முயன்று பார்த்தவர். இதற்காக கலிபோர்னியப் பல்கலைக்கழகப் (பெர்கிலி) பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் நடாத்திய பட்டறையில் கலந்து கொண்டவர். இது உத்தமம் எனும் அமைப்பு தோன்றி முறையாக எழுத்துச் சீர்மையில் இறங்கும் முன்னமே நடந்தது. உத்தமம் அமைப்பின் தொன்மை உறுப்பினர். பல வருடங்கள் ஐரோப்பிய கிளையின் தலைவராக செயல்பட்டு இருக்கிறார். + +தமிழின் முதல் மடலாடற் குழுவான தமிழ்.வலை குழுமத்தில் தீவிரப் பங்கு கொண்டவர். அது பொழுது இவர் எழுதி பரபரப்பாக வாசிக்கப்பட்ட "பாசுர மடல்கள்" குறுந்தகடு வெளியீடாக தமிழ் இணைய மாநாட்டில் (கோலாலம்பூர்) வெளிவந்த போது இம்முயற்சிகளின் முன்னோடி எனும் தகுதியும் இவருக்குக் கிடைத்தது. இம்மடலாடற்குழு உருவாக்கிய மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராக இயங்கிவருகிறார். + +தமிழை மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் முயற்சி நிமித்தமாக காலச்சுவடு இதழ் நடாத்திய "தமிழினி 2000" எனும் கருத்தரங்கில் இணையமும் இலக்கியமும் எனும் அமர்வை உருவாக்கி, மின்னுலகம் என்பது தமிழின் ஆறாம்திணை எனும் கோட்பாட்டை முன்வைத்தார். + +தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிதையால் உந்தப்பட்டு உள்ளே நுழைந்த நா.கண்ணன் 70களிலிருந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என பங்களித்து வருகிறார். இவரது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்து இருக்கின்றன. + +தொடர்ந்து இவரது இலக்கியப் பங்களிப்பு மின்னுலகில் நடந்து வருகிறது. மின்னுலகின் பல்லூடகத்தன்மையைப் பயன்படுத்தி இவர் தனது படைப்புகளை ஒலிப்பதிவாக்கி வருகிறார், மாலன் அவர்கள் தொடங்கி நடத்திய திசைகள் மின்னிதழில் சில காலம் ஆசிரியர் குழுவிலும், இ-சங்கமம் இதழின் இணை ஆசிரியராகவும், சிஃபி டாட் காம் இதழில் பத்தியாளராகவும் உள்ளார். + + + + + + + + +பைசையகுரு + +பைசையகுரு (藥師佛/薬師 சீனம் "Yàoshīfó", ஜப்பானியம் "Yakushi", சமஸ்கிருதம் "भैषज्यगुरु", IPA "Bhaiṣajyaguru" ) முழுமையான பெயர் Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 "Yakushirurikō nyorai") மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். மகாயன பௌத்தத்தில் இவரை சாக்கிமுனி புத்தரின் குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை 'மருத்துவ புத்தர்' என்றும் அழைப்பர். + +பைசையகுரு பைசையகுரு சூத்திரம் எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதிமொழிகளை நிறைவேற்றிடும் போதிசத்துவராக அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர். +"வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்" - "பைசையகுரு புத்தர்" +அவர் புத்தத்தன்மை அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு சூர்யப்ரபர் மற்றும் சந்திரபிரபர் என்ற இரண்டு போதிசத்துவர்கள் அவருக்குச் சேவை புரிகின்றனர் + +ஜப்பானிய மொழியில் பைஷஜ்யகுருவை 'யகூஷி' என்று அழைக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்த அக்‌சோப்ய புத்தரின் வழிபாடு, இந்தப் புத்தரின் வரவால் பொலிவிழந்து போனது. மேலும் யகூஷியின் குணப்படுத்தும் செயல் க்‌ஷிதிகர்ப போதிசத்த்வராலும் செய்யப்படுவதால், ஜப்பானில் பெரும்பாலும் குணப்படுத்தும் வழிபாட்டிற்கு 'ஜிஸோ' என்றழைக்கப்படும் க்‌ஷிதிகர்பரையே வணங்குகின்றனர். இருந்தாலும் மரணத்தின் போது பைஷஜ்யகுரு வணங்கப்படுகிறார். + +திபெத்தில் பெரும்பான்மையான மக்கள், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது. + +மருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இணைந்து திரிமூர்த்திகளாகத் திகழ்கின்றனர். சீனப் பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களைக் குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர். + +மஹாயான பௌத்தத்தில் மருததுவ புத்தர் தொடர்பான பல மந்திரங்கள் உள்ளன. + +அவற்றில் முக்கியமாக, பைசையகுரு சூத்திரத்தில் கீழ்கண்ட தாரணி அமைந்துள்ளது + +"namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā" + +மேற்கூறிய மந்திரத்தின் இன்னோரு பதிப்பு: + +"oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā" + +மேற்கூறிய மந்திரத்தின் இறுதிப் பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது + +ஷிங்கோன் பௌத்தத்தில் கீழ்க்கண்ட வேறு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது + +தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிற���ு. ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர் + +மேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிருந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை தீமையகல ஓதினால், கொல்லப்பட்ட விலங்கு மறுபிறவியில் மோட்சம் அடையும் எனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர். + + + + + + +இருவித்திலைத் தாவரம் + +இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி (Dicotyledon) என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரக் குலமொன்றைச் சேர்ந்த தாவரமாகும். இக் குலத்தில் சுமார் 199,350 சிறப்பினங்கள் இருக்கின்றன . இருவித்திலைத் தாவரங்கள் அல்லாத பிற பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் ஆகும். இவை தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருக்கின்றன. + +தற்போது, இருவித்திலைத் தாவரக் குலத்தை ஒரு முறையான குலமாக எடுத்துக்கொள்வது இல்லை. வகைப்பாட்டியல் குறித்த தேவைகளுக்காவது இருவித்திலைத் தாவரம், இருவித்திலையி போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படா. எனினும் பழைய இருவித்திலைத் தாவரக் குலத்தில் காணப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் eudicots எனப்படும் ஒற்றைமரபுக் குலமொன்றை உருவாக்குகின்றன. இவற்றை, இவற்றின் மகரந்தத் தூள்களின் அமைப்பைக் கொண்டு ஏனைய தாவரங்களிலிருந்து பிரித்தறிய +முடியும். + +பழைய மரபுப்படி, இவை வகைப்பாட்டின் எந்தநிலையில் கருதப்பட்டாலும், இருவித்திலைத் தாவரங்கள் (அல்லது டைகோட்டிலெடோனியே) என அழைக்கப்பட்டன. குரொன்குயிஸ்ட் முறைமையில் உள்ளதுபோல இக் குலத்தை ஒரு வகுப்பாகக் கருதினால், இது, மக்னோலியோப்சிடா என அழைக்கப்பட்டது. சில முறைமைகளில் eudicots, ரோசோப்சிடா (இன வகை "ரோசா") எனும் தனியான வகுப்பாக அல்லது தனியான பல வகுப்புக்களாகக் கருதப்பட்டது. + +பின்வரும் பட்டியல், இருவித்திலைக் குலத்தினுள் முன்னர் சேர்க்கப்பட்டிருந்த தாவர ஒழுங்குகளையும், ஏபிஜி மற்றும் குரோன்குயிஸ்ட் முறைமைகளில் அவற்றின் புதிய இடங்களையும் காட்டுகிறது. + + + + +எசிடியா + +எசிடியா என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கன்னிப் பெண் கடவுள் ஆவார். இவர் அடுப்பு, கட்டிடக்கலை மற்றும் வீடு, குடும்பம் மற்றும் மாநிலத்தின் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கடவுளாக இருக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் வெசுடா ஆவார். + +எசிடியா தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றுவதற்காக பொசிடான் மற்றும் அப்போலோவின் திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். இவர் சகோதரர் சியுசு இவருக்கு ஒலிம்பிய தீப்பந்தந்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்தார். அந்தப் பொறுப்பின் காரணமாக எசிடியா பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவராக இருக்க முடியவில்லை. சில கதைகளில் எசுடியா மனிதராக வாழ விரும்பியதாகவும் அதனால் தன் ஒலிம்பிய இடத்தைக் கடவுள் டயோனைசசுக்கு விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. + + + + +டெபியன் + +ஞாலமனைத்திற்குமான இயங்கு தளம் எனும் அடை மொழியுடன் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளம் டெபியன் ஆகும். இது நிலைத்த பயன்பாட்டினைத் தரவல்லது எனப் பெயர் பெற்றது. இன்று பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் குனாப்பிக்ஸ், உபுண்டு போன்ற இயங்கு தளங்கள் டெபியனிலிருந்தே தருவிக்கப் பட்டன. + +டெபியன் முதலில் +1993ம் ஆண்டு வெளியிடப்பட்டது. + +குனுவின் கட்டற்ற மென்பொருட்களையும் லினக்ஸ் கருவினையும் ஏனைய கட்டற்ற மென்பொருட்களையும் பயனர்களுக்கு தொகுத்து ஒரு சேரத் தர முற்பட்ட துவக்க கால இயங்கு தளங்களுள் டெபியனும் ஒன்று. பொது நோக்கத்திற்கான மென்பொருள் அறக்கட்டளை இதற்கான ஆதரவினை நல்குகிறது. + +டெபியன், லினக்ஸ் மற்றும் FreeBSD கெர்னல்களை அடிப்படையாக கொண்டது. மேலும் 51000 முன் தொகுப்பட்ட மென்பொருள்களை கொண்டுள்ளது. + +வெளி இணைப்புக்கள் + + + + + +மகாயான பௌத்தம் + +மகாயானம் ( சீனம்: 大乘, "Dàshèng"; ஜப்பானியம்: 大乗, "Daijō"; கொரிய மொழி: 대승, "Dae-seung"; வியட்னாமிய மொழி: "Đại Thừa"; திபெத்திய மொழி: "theg-pa chen-po"; மங்கோலிய மொழி: "yeke kölgen") புத்த மதத்தின் இரு பெரும்பிரிவுகளின் ஒன்றாகும். மகாயான பௌத்தம் தென்கிழக்காசிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கிறது. + +மகாயானம் என்ற சொல் "மஹா" மற்றும் "யானம்" ஆகிய இரு சொற்��ளால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள் கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் ஹீனயானம் அதாவது தாழ்வான வழி அல்லது குறைபாடுள்ள வழி' என குறிப்பிடப்படுகிறது. + +மகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் கௌதம புத்தரின் போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார்.மகாயான பௌத்தர்கள், பல போதிசத்த்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். + +மகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது. + +மகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார் + +"மகாயானா" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் தாமரை சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலேயே மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் சீனா, தாய்வான், கொரியா, வியட்னாம், திபெத் முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது. + +மகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு பரவியது + +மகாயான பௌத்தத்தைக் குறித்து சில விடயங்களே சொல்ல இயலும். அதன் தொடக்க கால நி���ையை குறித்துத் தெளிவாகத் தெரியாவில்லை. பல விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மகாயான என்பது பல சித்தாந்தங்கள், போதனைகளின் ஒரு தெளிவற்ற கலவையாக இருக்கின்றது. இந்த தெளிவற்ற தன்மையினாலே தன்னுள்ளேயே பல முரணான கருத்துகளை இதனுள் அடக்க முடிந்தது. + +மகாயானம் ஒரு மிகப்பெரிய மத மற்றும் சித்தாந்த அமைப்பாகும். பாளி சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனாலேயே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார். + +மகாயான சித்தாந்தம், பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் நிர்வாணம் அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள். + +சென் புத்தமதம் போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள். + +எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், மோட்சம் ��ரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். சுகவதி பௌத்தத்தில் அமிதாப புத்தரின் பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து. + +மகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது. + +பல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. + +பல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல தேவர்கள், நாகர்கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. + + +தத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது. + +மகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வா���மும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர். + +அனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமரர்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும். + +மகாயான சூத்திரங்களின் படி, ஹீனயான பௌத்தம் மிகவும் மோட்சத்திற்கு மிகவும் குறுகலான பாதையை கொண்டது. ஏனெனில் அனைவரையும் சம்சாரத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான ஊக்குவிப்பு அதில் காணப்படவில்லை. மேலும் ஹீனயானத்தில் மோட்சம் அடைவதற்கான வழி துறவு சார்ந்த ஒன்றாகவும், சுய-சார்பு கொண்டதாகவும் உள்ளது. இதைப் பன்பற்றி புத்தத்தன்மை அடைந்தவர்களை மகாயான பௌத்தத்தில், ஸ்ராவகபுத்தர்கள் மற்றும் ப்ரத்யேகபுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். + +மகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் போதிசித்தம். போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த போதிசத்துவராகத் திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி(பொறுமை),வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை. + +கருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்க்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம். + +போதிசத்துவர்கள் கருணையில் இருப்பிடமாக கருதப்படுபவர்கள். உலக உயிர்களின் நன்மைக்காக தங்களது சொந்த மோட்சத்தையே தாமதப்படுத்துபவர்கள். அதில் முக முக்கியமாக அவலோகிதேஷ்வரர், பிரபஞ்ச புத்த்ர்களின் கருணையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறார். போதித்துவர்கள் கருணையின் காரமாக மற்றா உயிர்கள் புத்தத்தன்மை அடைய உதவி செய்கின்றனர். + +மகாயானத்தில் மோக்‌ஷம் என���பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும். + +உபாயம் என்ற சொல் முதன்முதலில் தாமரைச் சூத்திரத்தில் இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்க்கு உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம், + +மகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். த்ரிகாய தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. + +போதிசத்துவர்களும் புத்தர்களும் வாழும் உலகில் மறுபிறயெடுக்க ஒரு குறிப்பிட்ட புத்தரையோ, போதிசத்துவரின் மீதோ பக்தி செலுத்துகின்றனர். அவர்களின் இந்த பக்தியின் காரணமாக அந்த புத்த உலகத்திலேயோ அல்லது போதிசத்துவ உல்கத்திலேயோ மறுபிறவி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஏனெனில் இந்த உலகங்களில், போதி நிலை அடைவது மிகவும் எளிது. உதாரணமாக சுகவதி பௌத்தத்தில், அமிதாப புத்தரை 'நமோ அமிதாப புத்தா' என்ற மந்திரத்தால் போற்றினால், அமிதாப புத்தருடைய உலகமான சுகவதியில் மறுபிறவி நடக்கும் எனபது நம்பிக்கை. + +எனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம். + +ததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தத்தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது.இதன் கருத்து என்னவென்றால், அனைவருக்கும் போதி நிலையுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. ஒருவர் அதை உணர்ந்து புத்தத்தன்மை அடைவதும் அடையாததும் ஒருவரின் முயற்சியை பொருத்தது. புத்ததாது அழிக்கமுடியாத ஒன்று, அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுவது. + +இந்த புத்ததாது(बुद्धधातु) அல்லது ததாகதகர்பம் அனைத்து உயிர்களின் ஒரு பகுதியாகத் திகழ்வது. இதை குறித்த கருத்துகள் ததாகதகர்ப சூத்திரங்களில் விரிவாக உள்ளன. இந்த ததாகதகர்பம் இயற்றப்படாத மற்றும் அழிவற்ற ஒன்று ஆகும். ஒருவர் இடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, ஆசைகளை அழிக்கும் போது, மனத்திரை விலக்கப்பட்டு இந்த புத்ததாது ஒருவரை புத்தராக உருமாற்றுகிறது. எனவே அனைவரிடத்திலும் புத்தத்தன்மை அடங்கியுள்ளதால் அனைவருமே போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் + +தேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. + +இவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம். + + + + + + +ஜி. வி. பிரகாஷ் குமார் + +ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். +எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார். + +ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். + + + + + +வேர்ட்பிரசு + +வேர்ட்ப்ரஸ் (WordPress), ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்டு மையெசுக்யூயெல் தரவுத்தளத்தால் தாங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. ஆகஸ்ட் 2013 கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த 10 மில்லியன் வலைதளங்களில் 22% தளங்கள் வேர்ட்பிரசு மூலம் இயங்கின. + +வேர்ட்பிரஸ் ஆனது Michel Valdrighi என்பவரினால் தயாரிக்கப்பட்ட b2/cafelog என்னும் மென்பொருளின் உத்தியோக பூர்வமான தொடர்ச்சியாக இருக்கின்றது. + +இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. + +வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களை மையமாக்கொண்டு செயற்படுகின்றது, இதனால் HTML, PHP போன்றவற்றை தொகுக்காமலேயே பக்கங்களின் தோற்றங்களை மாற்றியமைக்கலாம். வார்ப்புருக்களையும் இலகுவாக மாற்றிக்கொள்ளலாம். மேலதிக வடிவமைப்பு வேலைகளுக்கு HTML, PHP போன்றவற்றை தொகுத்து அமைத்துக்கொள்ளலாம். + +1.0 பதிப்பிற்க்கு பிறகு வெளிவந்த அனைத்து முக்கிய பதிப்புகளுக்கும் பிரபலமான ஜாஸ் இசை கலைஞர்களின் பெயர் சூட்டப்படுகிறது + + + + + + +குரு நானக் + +குரு நானக் பஞ்சாபி: ਗੁਰੂ ਨਾਨਕ; இந்தி: गुरु नानक, உருது: گرونانک : குரு நானக்) (15 ஏப்ரல் 1469 - 22 செப்டம்பர் 1539) சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்.இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார். + +சீக்கியர்கள், குரு நானக்கை தொடர்ந்து வந்த குருக்கள் அனைவரும், குரு நானக்கின் தெய்வீகத்தன்மை மற்றும் மத அதிகாரம் பெற்றிருப்பதாக நம்புகின்றனர், மற்றும் "நானக்" என்று பெயரிடப்படுகின்றனர். குரு நானக் ஏப்ரல் 15,1469 அன்று , தற்போது ராய் பொய் டி டல்வாண்டி என வழங்கப்பெறும் கிராமத்தில் ஒரு இந்து மதக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்தநாள் "குரு நானக் தேவ் பிரகாஷ் திவாஸ்" எனக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது அவ்விடம் லாகூர், பாக்கிஸ்தான் அருகில், நன்கான சாஹிப் என அழைக்கப்படுகிறது. இன்று , அவரது பிறந்த இடம் குருத்வாரா ஜனம் அஸ்தானால் குறிப்பிடப்படுகிறது. சிலர், 20 அக்டோபர், அவர் ஞானம் பெற்ற நாள் என்றும் கருதுகின்றனர். அவரது தந்தை, மேத்தா கல்யாண் தாஸ் பேடி, பிரபலமாக களு மேத்தா என அழைக்கப்படுகிறார். அந்த பகுதியில், ராய் புலர் பாட்டி என்ற முஸ்லீம் நில உரிமையாளரிடம் பயிர் வருவாய் கணக்காளராக ஒரு வேலை செய்தார்.நானக் அம்மா ட்ரிப்பா தேவி ஆவார். அவர் சகோதரியான பீபீ நாநகி தன் சொந்த விருப்பத்தில�� ஒரு ஆன்மீகவாதியாக ஆனார். + +நாநகி, டவ்லட் கான் லோடி என்பவரிடம் மேலாளராக வேலைச் செய்த ஜெய் ராம் என்பவரை மணந்து, அவர் ஊரான சுல்தான்பூர்க்குச் சென்றார்.குரு நானக், அவரது மூத்த சகோதரி மீது கொண்ட பற்றாலும், மற்றும் பாரம்பரிய இந்திய வழக்கத்தாலும் , அவர் மற்றும் அவரது கணவருடன் வாழ சுல்தான்பூர் சென்றார். அவர் 16 வயதிருக்கும் போது , டவ்லட் கான் என்பவரிடம் வேலை கிடைத்தது.புரதன் ஜனம் சக்கி குறிப்பிடுவதைப் போல ,அது தான் அவர் வாழ்வின் மிகவும் பயனுள்ள நட்களாய் அமைந்தது. + +அவரது வாழ்க்கைப் பற்றியான விளக்கவுரைகள், ஒரு இளம் வயதிலேயே அவர் பெற்ற மலர்ச்சி, விழிப்புணர்வு ஆகிய விவரங்களை கொடுக்கிறது. ஐந்து வயதில், குரு நானக் தெய்வீக பாடங்களில் விருப்பம் தெரிவித்தார் என கூறப்படுகிறது. அவரது தந்தை, களு மேத்தா, வழக்கத்தைப் போல கிராம பள்ளியில் அவரை சேர்த்தார்.ஒரு குழந்தையாக அவர், தன் ஆசிரியரின் வியப்புக்கு , அகரவரிசையின் முதல் எழுத்து ,அரேபிய வழக்கில் கணித ஒன்றை ஒத்து இருப்பதை வைத்து கடவுள் ஒன்று என்ற வாதத்தை முன்வைத்தார். நானக்கின் பிற குழந்தைப் பருவ குறிப்புகள் , ஒரு விஷப் பாம்பு, கடுமையான சூரிய ஒளியில் தூங்கும் குழந்தையின் தலை கவசமாக இருப்பதை ராய் புலர் பார்த்தது போன்ற விசித்திரமான மற்றும் அதிசயமான நிகழ்வுகளை கூறுகிறது. + +குரு நானக் பற்றிய மிகப் பழைய வாழ்க்கைச் சுயசரிதை ஆதாரங்கள், ஜனம்சகிஸ் (வாழ்க்கை நிகழ்வுகள்) மற்றும் எழுத்தர் பாய் குர்தாஸ் என்பவர் எழுதிய வர்ஸ் (விளக்கவுறைகள் ).மிகவும் பிரபலமான ஜனம்சாக்கி, குருவின் நெருங்கிய தோழமையன பாய் பாலாவால் எழுதப்பட்டதாக கூறப்படுகிரது. எனினும்,பயன்படுதப்பட்ட எழுத்து பாணி மற்றும் மொழி ஆகியவை மாக்ஸ் ஆர்தர் போன்ற சில அறிஞர்களை , அவை அவரது இறப்புக்கு பிறகு இசையமைக்கபட்டதென கருதச் செய்கிறது. +பாய் குர்தாஸ்,குரு கிரந்தின் ஒரு நம்பிக்கையான எழுத்தர், அவரது வர்ஸில் குரு நானக் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். இது ,குரு நானக் வாழ்ந்ததிற்கு சில காலம் கழித்து தொகுக்கப்பட்டது என்றாலும் அவை ஜனம்சகிஸ்யை விட குறைவாக விவரங்கள் கொண்டுள்ளது.ஜனம்சகிஸ்,அவரது பிறப்பின்போது அவர் ஜாதகத்தை எழுத வந்த ஒரு ஜோதிடர், குழந்தையை பார்க்க வலியுறுத்தினார் என்றும்,பார்த்தவுடன் கை��ளால் அவரை வழிபட்டதாகவும் மற்றும் "நான் இளம் குரு நானக்கை பெரியவனாக காண முடியாதே என்று தான் வருந்துகிறேன்" என குறிப்பிட்டதாகவும் கூறுகிறது. + +ராய் புலர் பாட்டி, உள்ளூர் உரிமையாளர், மற்றும் குரு நானக் சகோதரி பீபீ நாநகி, பையனிடம் தெய்வீக குணங்கள் இருப்பதை அறிந்த முதல் மக்கள் ஆவர். அவர்கள் , அவனுக்கு மேலும் ஊக்கம் அளித்து படிப்பு மற்றும் பயணம் தொடர துணைபுரிந்தனர். சீக்கிய பாரம்பரியம் படி, கி.பி. 1499 அளவில்,30 வயதில், அவர் அறிவு விளக்கம் பெற்றதாக கூறுகிறது. அவர் நீருள் சென்று திரும்பாத பிறகு,அவரது ஆடைகள் பெயின் காளி என்ற உள்ளூர் ஓடை அருகே கண்டுபிடிக்கப்பட்டன. ஊர் மக்கள், அவர் ஆற்றில் மூழ்கி போனார் என்று கருதினர். டவ்லட் கான் ஓடையில் தேடச் சொன்னார், ஆனால் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு, குரு நானக் அமைதியாக மீண்டும் தோன்றினார். +அடுத்த நாள், அவர் பேசினார் "யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் " என்றார்.குரு நானக், அவர் கடவுளின் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார். அங்கு, அவருக்கு தேன் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரம் வழங்கப்பட்டு, "இது கடவுளின் ஆற்றல் நிறப்பட்ட கோப்பை, அதை குடி, நான் உன்னுடன் இருக்கிறேன், நான் உன்னை ஆசீர்வதித்து உன்னை உயர்த்துகிரேன்.யார் உன்னை நினைக்கிரார்களோ, அவர்கள் என் ஆசிற்வாதம் பெறுவர்" என்று கடவுள் அவ்வரிடம் சொன்னர்.அந்நிகழ்வுக்குப் பிறகு அவர் "குரு" என அழைக்கப்பட்டு சீக்கிஸம் தோன்றியது. + +அவரின் பயணம் பற்றிய துல்லியமான கணக்குகள் விவாதத்திற்குரியதாகவே உள்ளது என்றாலும், அவர் பரவலாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்த 4 பயணம் ,அஃதாவது, வங்காளம் மற்றும் அசாம் நோக்கி கிழக்கு முதல் சுற்றும், இரண்டாம் பயணம் தெற்கு தமிழ்நாடுக்கும் , காஷ்மீர், லடாக்,டிபேட் நோக்கி மூன்றாவது பயணம் வடக்கு நோக்கியும் , அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாக்தாத், மெக்கா மற்றும் மதினா நோக்கி இறுதி பயணம் மேற்கும் சென்றார். + +குரு நானக்,அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.அவர் லாசா(தி��ெத்) செல்லும்போது, தவாங் வழியாக பூடானைக் கடந்து சம்துராங் சு வழியாக திபெத்துள் நுழைந்தார்.அவர் லாசாவிலிருந்து திரும்பி, புகழ்பெற்ற மடாலயமான ஸமிய் சென்று பின்னர் அருணாச்சல பிரதேசத்தின் பெமொஷுபு மென்சுக்கா நுழைந்தார். அவர் இந்த இடத்தில் சில காலம் தவம் இருந்தார்.அவர் மென்சுக்காவிலிருந்து திபெத் சென்று, தெற்கு திபெத் குடிமக்களை அழைத்து வந்து அவர்களை மென்சுக்காவில் குடியேற்றினார் . பின்னர் அவர் அஸ்ஸாம்க்கு மீண்டும் செல்லும் முன்னர்,சைத்யா மற்றும் பிரம்-குந்த் சென்றார். + +குரு நானக்,16 வயதில் மாதா சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணம் பட்டாலா நகரத்தில் நடைபெற்றது. பெண் வீட்டார், சுல்தான்பூர் லோதி நகரத்தில் இருந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்,ஸ்ரீ சந்த் மற்றும் லக்ஷ்மி சந்த் பிறந்தனர். + +குரு நானக் அவருக்கு அடுத்து, குருவாக் பை லென்னா என்பவரை "குரு ஆங்க்" என மறுபெயரிட்டு அவரை நியமித்தார். விரைவில், அடுத்த குரு என பாய் லென்னா பிரகடனப்படுத்தியதுக்கு பிறகு, ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி 70 வயதில், தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கர்த்தார்பூரில், 22 செப்டம்பர் 1539 அன்று கடவுளுடன் (ஜோதி ஜொயொத் சமயி) இணைந்தார். + +குரு நானக்கின் போதனைகள் குர்முகியில் பதிவுச் செய்யப்பட்டதைப் போல, சீக்கிய மத இலக்கியமான குரு கிரந்த் சாஹிப்யில் காணலாம். +இதில் சில பொதுவான கொள்கைகள் அறிந்துகொள்ளவேண்டியவை. புரிந்துகொள்ளமுடியாத,உருவற்ற,அழிவில்லாத, அனைத்து முக்கிய மதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள் ஒருவரே. + +குரு நானக், "தான்" என்ற எண்ணத்தால் விளையும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி ,தன் பக்தர்களை "கடவுள்"-ன் நாமத்தால் வழிபட வேண்டும் என்றும், சமயங்களில் குருவின் வழிகாட்டலின் படி செயல்பட வேண்டும் என்றார்.ஆனால் அந்த வழிப்பாடுகள் தன்நலமற்றதாக இருக்க வேண்டும் .இவை, கடவுளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும் ,அவர் இல்லையேல் இவ்வுலகில் எதுவும் இல்லை, என்ற கொள்கையை தழுவியது. குரு நானக், இந்த மனித நேயத்தில் பரவலாக உள்ள மற்றும் சமய நடவடிக்கைகளை கூட வீணாக்க முடிந்த , பாசாங்குத்தனம் மற்றும் பொய்யான பாசம் குறித்து எச்சரித்தார்.நானக்கை பொறுத்தவரை, துறவி நடைமுறைகளை புறக்கணித்து, இல்லற வாழ்வில் ஈடுப்பட்டு ,தெய்வப் பற்று பெற்று வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். + +பிரபல பாரம்பரியத்தில், குரு நானக்கின் போதனைகள் மூன்று வழிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது: + +குரு நானக், கடவுளின் நாமத்தால் செய்யப்படும் வழிபாடுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வைத்தார்.(நாம் ஜப்னா). ஒரு மனிதன், ஞானம் பெற்ற பெரியவர்களின் (குர்முக் அல்லது கடவுள் சித்தித்தது)வழிக்காட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றும்,தன் சுய புத்தியின்(மன்முக்) அடிப்படையில் நடக்கக் கூடாது என்றும் போதித்தார்.இல்லையேல், வாழ்க்கை ஏமாற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். + + + + +பூச்சி + +பூச்சி ("insect") கணுக்காலிகள் (ஆத்திரப்போடா) வகையுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று சோடிக் கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு சோடி உணர்வுறுப்புக்களையும் (antennae) கொண்டவையாக இருக்கும். இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வுத்துறை பூச்சியியல் எனப்படும். + +உலகில் உள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் இருப்பதுடன், ஒரு மில்லியனுக்கும் கூடுதலான விவரங்கள் அறியப்பட்ட பூச்சி இனங்கள் இருக்கின்றன. இந்த இனங்களில் எண்ணிக்கை, உலகில் உள்ள அறியப்பட்ட விலங்குகளில் அரைவாசிக்கும் மேலானவையாக இருக்கின்றன.. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும், அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. அவை பூமியில் இருக்கும் வேறுபட்ட விலங்குகளில் 90% மாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. + +பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் இசைவாக்கம் அடைய வல்லனவாகவும் இருக்கின்றன. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் பூச்சிகள் வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் (Torpor) இருக்கின்றனவாகவோ உள்ளன. வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause). கணுக்காலிகளில் இன்னொரு பிரிவான கிரஸ்ரேசியாக்கள் (Crustaceans) ஆட்சி செலுத்தும் பெருங்கடல்கள் சில வகை பூச்சி இனங்களையே கொண்டுள்ளது. + +"பூச்சி", ஆங்கிலத்தில் Insect என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான "insectum" என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. "insectum" என்பதன் பொருள் "வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல்" என்பதாகும். இலக்கிய ரீதியில் "வெட்டப்பட்ட" (cut into) என்பதே ஆகும். உண்மையிலேயே பூச்சிகளின் உடல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூத்த பிளினியே இலத்தீனில் "insectum" எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார். அச்சொல் கிரேக்கச் சொல்லான "ἔντομος" (éntomos) என்பதிலிருந்து இலத்தீனுக்குள் உள்வாங்கப்பட்டது. இக்கிரேக்கச் சொல்லை அரிஸ்ட்டோட்டில் பயன்படுத்தியுள்ளார், இதன் அர்த்தமும் வெட்டப்பட்ட (notched) உடல் என்பதே ஆகும். ஆங்கிலத்தில் "insect" எனும் சொல் இலக்கிய மூலாதாரமாக 1601 இல் "பிலேமோன் ஹாலந்து" என்பவருடைய நூலிலிருந்து மூத்த பிளினியினியால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +மனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக (பீடைகளாக) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு, வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கு, பயிர்விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், ஏனைய உணவு வகைகளுக்கு, கால்நடைகளுக்கு அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன. எனவே அவற்றை அழிக்க அல்லது கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள், அல்லது வேறு தொழில்நுட்பங்கள், மேலாண்மை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிகொல்லிப் பயன்பாடு மனிதருக்கும், சூழலுக்கும் தீங்கு தருவதாக இருக்கின்றது. இதனால் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை யானது பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. இது பல இயல்பான அறிவுசார் மேலாண்மை நடைமுறைகளை ஒன்றிணைத்து சூழலுக்கு அதிகம் தீங்குதராத முறையில் தீங்குயிர்களினால் விளையும் கேடுகளைத் தடுக்க உதவுகின்றது. + +சில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்களில் அல்லது அவற்றிலிருந்து விளைபொருளில் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன. வெட்டுக்கிளி, நீள்மூஞ்சி வண்டு போன்றன வேளாண்மையில் தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன. அந்துப்பூச்சிகள் சில சேமித்து வைக்கப்படும் தானியங்களிலிருந்து அவற்றை நாசம் செய்கின்றன. + +வேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும் (எ.கா. பேன், மூட்டைப் பூச்சி). வேறுசில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைக் கடத்தும் நோய்க்காவியாகத் தொழிற்படும் (எ.கா. கொசு, இருசிறகிப் பூச்சிகள்). கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி ( போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன. + +அதேவேளை சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன. +அனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து அவற்றிற்குக் கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுவதனால், உயிரியல் பல்வகைமையையும் கூட்ட உதவுகின்றன. + +பட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. +சில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் (எ.கா. சீமாட்டிப் பூச்சி (), பின்னல் சிறக��� (), கும்பிடு பூச்சி ()), அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால் (எ.கா. குளவி, இருசிறகிப் பூச்சிகள்), மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன. ஒட்டுண்ணியாக இருக்கும் பூச்சிகள் பொதுவாகத் தமது விருந்து வழங்கிகளின் மேலேயோ, உள்ளேயோ முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்து வெளிவரும் குடம்பிகள் அவற்றை உண்பதனால் அழித்துவிடும். பூச்சிகளில் ஒட்டுண்ணியாக வாழும் பூச்சிகளைப் "பூச்சியுண்ணும் பூச்சிகள்" (Entomophagous insects) எனலாம். சில பூச்சிகளை அழிக்கும் வேறு பூச்சிகள் பூச்சியுண்ணிகள் எனப்படும். இவை மனிதருக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும்போது, மனிதருக்கு நன்மை பயக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சீமாட்டிப் பூச்சிகள் அசுவுணிகளை அழிக்கின்றன. இவ்வாறான பூச்சியுண்ணிகள் இல்லையெனில் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டற்று அதிகரிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. + +சில பூச்சிகளின் குடம்பிகள் அல்லது முதிர்நிலைகள், சில இடங்களில் மனித உணவாகவும் பயன்படுகின்றது. இதனைப் பூச்சியுண்ணல் என்பர். சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.. + +சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +சில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர். + +ஸ்கிரப் வண்டுகள் (Scarab beetles) பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் மற்றும் உலகின் பழைய அசாதாரண கலாச்சாரம் போன்றவற்றில் கலாச்சாரக் குறியீடாக மதிக்கப்பட்டன. + +பூச்சிகள் நடத்தல், பறத்தல், நீந்துதல் என்று பலவைகைப்பட்ட அசைவுகளைக் கொண்டிருக்கின்றன. சில பூச்சிகள் (எ.கா. நீர்ப்பூச்சி (Water strider)) நீரின்மேல் நடந்து செல்லக் கூடியவையாக இருக்கின்றன. பல பூச்சிகள் த��து வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதியை நீரினுள் கழிப்பனவாக இருக்கின்றன. நீரினுள் வாழ்வதற்கான செவுள்களும் (பூக்களும்) விருத்தியடைந்திருப்பதுண்டு. முதுகெலும்பிலிகளில் பூச்சிகள் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டனவாக இருப்பதே அவற்றின் வெற்றிகரமான விருத்திக்கு முக்கிய காரணமாகும். + +பூச்சிகளில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு அசைவை அல்லது இடப்பெயர்ச்சியைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பூச்சியிலேயே, வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு விருத்தி நிலைகள் வேறுபட்ட அசைவைக் காட்டி நிற்கும். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சியில் முட்டைகளும், கூட்டுப்புழுவும் அசைவற்ற நிலையில் இருப்பனவாகவும், குடம்பி நிலையான மயிர்க்கொட்டியானது சுற்றிழுப்பசைவு போன்ற அசைவினை ஒத்த ஒரு தனித்துவமான அசைவைக் கொண்டதாகவும், முதிர்நிலையானது பறத்தல் அசைவைக் கொண்டதாகவும் இருக்கின்றன. + +பறக்கக்கூடிய முள்ளந்தண்டிலிக் கூட்டம் பூச்சிகளே ஆகும். சில கணவாய் இனங்களும் நீரின் பரப்பிலிருந்து 10 மீட்டர் மேலெழுந்து தாண்டக் கூடியன (தம்மை வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்ப). + +பொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், பெரிய மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களாக வாழும் தன்மை கொண்டன. சில பூச்சிகள் (எ.கா. காதுப்பூச்சி ()) தாய்ப் பராமரிப்பை வழங்குவனவாக, அதாவது முட்டை, மற்றும் இளம் பருவநிலைகளைப் பாதுகாப்பனவாக இருக்கின்றன. தேனீ, குளவி போன்றவற்றில் முதிர்நிலையானது, சந்ததிகளுடன் நேரடித் தொடர்பாடலைக் கொண்டிராவிடினும், சந்ததிக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்து, அதிலேயே முட்டையை இடுவதனால், முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் உயிருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தாய்ப்பராமரிப்பு வழங்கப்படுகின்றது. + +பூச்சிகள் பல்வேறு வழிகளில் தமக்கிடையே தொடர்பாடலைச் செய்வனவாகவும் இருக்கின்றன. தொட்டுணர்வு, வேதிப்பொருட்கள், சத்தங்கள், பார்த்துணர்தல் போன்ற வெவ்வேறு முறைகளில் பூச்சிகளிடையே தொடர்பாடல் நிகழ்கின்றது. அந்துப்பூச்சிகளில், ஆண்கள் இன ஈர்ப்புச் சுரப்புகள் மூலம் பெண்களை வெகுதொலைவிலிருந்தே ��றிந்து கொள்கின்றன. சில பூச்சிகள் சத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமும் (எ.கா. வெட்டுக்கிளி), வேறுசில ஒளியைச் செலுத்துவதன் மூலமும் (எ.கா. சில வகை வண்டு இனங்கள்) தொடர்பாடலை மேற்கொள்கின்றன. எறும்புகள், கறையான்கள் தமது உணர்விழைகளினால் தட்டித் தொட்டுணர்வினால் தொடர்பு கொள்கின்றன. தேனீக்கள் தமது நடனம் போன்ற அசைவுகளில் காட்டும் வேறுபாடுகளைக் கொண்டு தேனிருக்கும் தூரம், திசை என்பவற்றை தமது ஏனைய குழு உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றன. சில அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் பூச்சிகள் தமக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. வண்ணத்துப் பூச்சிகள் போன்ற சில பூச்சிகளில், சிறகுகளின் நிறம் போன்றனவும் தமது இனத்தைக் கண்டறிதல் போன்ற தொடர்பாடலுக்கு உதவுகின்றன. + +குழுவாக வாழும் பூச்சிகளில் மிக நீண்ட தூரம் சென்ற பின்னரும், தமது குறிப்பிட்ட வாழிடத்தின் திசையறிந்து, மீண்டும் அதே இடத்திற்கு வரும் தன்மை காணப்படுகின்றது. இதனை "வீடு திரும்புதல்" எனலாம். மொனார்க் பட்டாம்பூச்சி எனப்படும் பட்டாம்பூச்சிகள், சில காலங்களில் வேறுபட்ட புவியியல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர், தமக்கேற்ற காலநிலை வந்ததும், மீண்டும் தமது பழைய இடத்திற்கே வரும் வல்லமை கொண்டனவாக இருக்கின்றன. + +சில பூச்சிகள் பறத்தலின்போது கலவி கொள்வனவாக இருக்கின்றன. தேனீயின் கலவிப் பறப்பு ஒரு சிறந்த உதாரணமாகும். அனேகமான பூச்சிகள் முட்டை பொரித்தல் மூலம் வெளிவரும். தாயின் இழையங்களைக் கொண்ட ஒரு உறையினால் மூடப்பட்ட முட்டையினுள்ளே கருக்கட்டலும், விருத்தியும் நிகழும். ஏனைய கணுக்காலிகளின் முட்டைகளை விடவும் பூச்சிகளின் முட்டைகள் வறட்சியைத் தாங்கும் தன்மை கூடியனவாக இருக்கும். முட்டையினுள் இருக்கும் முளையத்தை மூடி இருக்கும் ஒரு மேலதிக மென்சவ்வான செரோசா கைட்டினாலான ஒரு புறத்தோலைச் சுரப்பதனால் நீரழப்பு தடுக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். ஆனாலும் சில பூச்சிகளில் இந்தப் புறத்தோல் இல்லாமையால், அவை ஈரலிப்பான இடங்களில் முட்டையிடும். + +பூச்சிகளில் ஒரு வருடத்தில் ஒரு சந்ததியையோ, அல்லது இரு சந்ததிகளையோ அல்லது பல சந்ததிகளையோ உருவாக்குகின்ற வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன. பூச்சிகளில் இனப்பெருக்கமும் விருத்தியும், மிகவும் பன்முகப்பட��த்தப்பட்டதாக இருக்கின்றது. +கரப்பான் பூச்சி, வேறுசில செடிப்பேன்கள் முளையவிருத்தி முற்றாக நிகழ்ந்து, அவை பொரித்து வெளிவரத் தயாராகும் நிலைவரை தாயின் உடலின் உள்ளேயே வைத்திருக்கப்படும். இதனைத் தாயுள்ளான முட்டை விருத்தி () எனலாம். இப்படியான பூச்சிகளில் முட்டை வெளியேறிய உடனேயே பொரித்து குடம்பி வெளிவரும் என்பதனால் சில பூச்சியியலாளர்கள் இதனை Ovolarviporous என்பார்கள். +கரப்பான் பேரினத்தைச் சேர்ந்த வேறுசில பூச்சிகள் முட்டையிடாமல், முழுமையான விருத்தி தாயின் வயிற்றிலேயே நிகழ்ந்தபின்னர், நேரடியாகப் புதிய உயிரினத்தை வெளியேற்றும். இது பிள்ளையீனும் தன்மை (Viviparous) ஆகும். + +வேறுசில பூச்சிகள் பல்முளையம் (Polyembryony) உருவாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையானது பலதடவை பிரிவடைந்து, சிலசமயம் ஆயிரக் கணக்கில் பூச்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கும். +கருக்கட்டல் நிகழாமலே, கலவியற்ற இனப்பெருக்க முறையில் முளையம் உருவாகி விருத்தியடைதல் கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுகின்றது. பூச்சிகளில் நிகழும் கன்னிப்பிறப்பானது, பல்வேறுபட்ட பொறிமுறைகளினூடாக நிகழ்கின்றது. இவ்வாறான தோன்றல்கள் ஒரு இனத்தில் ஆண், பெண் இரண்டுமாகவோ, அல்லது பெண் மட்டுமாகவோ, அல்லது ஆண் மட்டுமாகவோ இருக்கலாம். + +செடிப்பேன்களில் கலவியற்ற இனப்பெருக்கமான இவ்வகை கன்னிப்பிறப்பும், கலவிமுறை இனப்பெருக்கமும் மாற்றி மாற்றி ஒன்று அல்லது பல சந்ததிகளுக்குச் சுழற்சி முறையில் நடைபெறும். கோடை காலத்தில் பொதுவாகச் செடிப்பேன்கள் கன்னிப்பிறப்பினால் உருவாகும் பெண்களாக இருக்கும். பின்னர் இலையுதிர் காலத்தில் கலவிமுரை இனப்பெருக்கத்திற்காக ஆண்கள் உருவாக்கப்படும். +தேனீ, குளவி, எறும்பு போன்றவற்றில் கன்னிப்பிறப்பினால் உருவாகும் தனியன்கள் ஆண்களாக இருக்கின்றன. ஆனாலும் கருக்கட்டல் மூலம் பெறப்படும் பெண் தனியன்களே மிக அதிகளவில் காணப்படும். இங்கே ஆண்கள் ஒருமடிய நிலையையும், பெண்கள் இருமடிய நிலையையும் கொண்டிருக்கின்றன. + +பூச்சிகளில் ஆண், பெண் ஆகிய இனப்பெருக்க உறுப்புக்களையும் கொண்ட இருபாலுயிரிகள் (Hermaphroditism) அரிதாகவே இருப்பினும், ஒரு சில இனங்களில் இந்த இயல்பு காணப்படுகின்றது. செதிற்பூச்சியும் (Scale insect) அதற்கு நெருக்கமான ஒரு சில இனங்களும் மட்டுமே இவ்வகையான இருபாலுயிரி இயல்பைக் கொண்டிருக்கின்றன. + +வழமையிலிருந்து வேறுபட்ட இனப்பெருக்க, விருத்திநிலைகள் பூச்சிகளில் காணப்படுகின்றன. + +எறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற இனங்களில் பல்லுருத்தோற்றம் சாதியமைப்பிற்கேற்ப காணப்படுகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட குழுவிலிருக்கும், வெவ்வேறு தொழிலைச் செய்யும் அதன் உறுப்பினர்களிடையே தோற்றத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. உயிரணுக்களில் இருக்கும் நிறப்புரிகளின் தொகுதி எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடே இதற்குக் காரணமாக உள்ளது. கருக்கட்டல் நடைபெறாத ஒருமடிய கருமுட்டை உயிரணுக்களிலிருந்து ஆண் பூச்சிகளும், கருக்கட்டலுக்குட்பட்ட இருமடிய உயிரணுக்களிலிருந்து பெண் பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும். + +சில பூச்சிகளில் ஆண், பெண் பூச்சிகள் தோற்றத்தில் குறிப்பிடத் தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஆண்களிலும், பெண்களிலும்இருக்கும் இந்தத் தோற்ற வேறுபாட்டுக்கு, அவை வளரும் வீதத்தில் இருக்கும் வேறுபாட்டால், விருத்திக்கான காலத்தில் இருக்கும் வேறுபாடே காரணமென ஆய்வொன்று குறிப்பிடுகின்றது. + +ஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேறொரு இனத்தின் தோற்றத்தையொத்த அமைப்புடன் விருத்தியடைதல். ஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் தோற்றவமைப்பைக் கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்திலிருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கு ஏற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சிகளின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல். + +பூச்சிகளில் விருத்தியில் ஏற்படும் வெவ்வேறு நிகழ்வுகளில் காலமாற்றம் ஏற்படுவதனால், ஒத்த மரபணுத்தொகையைக் கொண்டிருந்தாலும் கூட, முன்னர் இருந்ததைவிடவும் வேறுபட்ட பருமன், உருவம் கொண்ட முதிர்நிலைகள் புதிதாகத் தோன்றும். இங்கு தோன்றும் முதிர்நிலைகள் தமது மூதாதையரிலிருந்து வேறுபட்டவையாகக் காணப்படும். இது இருவகையில் நிகழலாம். + +வெவ்வேறு இனப் பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் வேறுபட்டிருப்பினும், அனேகமானவை முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும். முட்டையிலிருந்து வெளிவரும் உயிரினத்தின் வளர்ச்சியானது, இழுபடும் தன்மையற்ற புறவன்கூட்டின் காரணமாகக் கட்டுப்படுத்தப்படுவதனால், வளர்ச்சியின்போது, சில தடவைகள் தோல்கழற்றலுக்கு உட்படும். பூச்சிகள் தமது புறவன்கூட்டினுள் வளர்ந்துகொண்டு போகையில், புறவன்கூட்டின் இறுக்கமான தன்மையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளர முடியாமல் போகும். அப்போது சில இயக்குநீர்களின் தூண்டலால் தோல்கழற்றல் தொழிற்பாடு ஆரம்பிக்கும். இந்தத் தூண்டலால், மேற்றோலானது (Epidermis), பழைய உட்புறத்தோலில் (Endocuticle) இருந்து பிரிய ஆரம்பிக்கும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின் போதும் பூச்சிகளில் உருமாற்றம் நிகழ்வதனால், பிரித்தறியக்கூடிய சில பருவநிலைகள் காணப்படும். ஒவ்வொரு தோல்கழற்றலும் ஒரு வளர்நிலை முடிவுக்கு வந்து அடுத்த வளர்நிலை உருவாவதைக் காட்டும். + +முழுமையான உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சி இனங்களில், ஒவ்வொரு பருவநிலையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டிருப்பதுடன், பூச்சி தனது முதிர்நிலையை அடைவதற்கு முன்னராக, கூட்டுப்புழு என்றழைக்கப்படும் தொழிற்பாடற்ற, அசைவற்ற நிலையையும் உள்ளடக்கியிருக்கும். முழுமையற்ற உருமாற்றத்திற்குட்படும் பூச்சி இனங்களில், அவை தமது முதிர்நிலையை அடைவதற்கு முன்னர், முதிர்நிலையை ஓரளவு ஒத்த பல வளர்நிலைகள் காணப்படும். அந்நிலையில் அவை அணங்குப்பூச்சிகள் என அழைக்கப்படும். + +முழு உருமாற்றம் அல்லது முழுமையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளில் முட்டை அல்லது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு நிலைகள் காணப்படும். இந்த நான்கு நிலைகளும் உருவவியல் அடிப்படையில் மிகத் தெளிவான வேறுபாடுடைய நிலைகளாகும். இங்கே முட்டை பொரித்து வெளிவரும் நிலையான குடம்பியானது பொதுவாகப் புழுப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். அவை மயிர்களைக் கொண்ட மயிர்க்கொட்டி வடிவில், மிகவும் தடித்த புழுக்கள் வடிவில், அல்லது தட்டையான புழுக்கள் வடிவில் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். குடம்பிகளுக்கு அடுத்த நிலையான கூட்டுப்புழு நிலையானது அசைவுகளற்ற அல்லது மிகவும் குறைந்த அசைவைக்கொண்ட வடிவமாகும். இந்நிலையில் இவை ஒரு தடித்த உறையினால் (cocoon) மூடப்பட்டுக் காணப்படலாம். இந்தக் கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போதே உடல் விருத்தி நிகழ்ந்து தோல்கழற்றலின்போது முதிர்நிலை வெளிவரும். சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் முற்றாக விருத்தியடைந்த முதிர்நிலைகள் தோல்கழற்றலைத் தொடர்ந்து வெளிவரும். + +இவ்வகையான விருத்தியானது வெறெந்தக் கணுக்காலிகளிலும் காணப்படாத, ஒரு சிறப்பான இயல்பாகும். இவ்வகையான உருமாற்றம் பொதுவாக உள் இறக்கை அமைப்புடைய Endopterygota என்னும் துணை வகுப்பைச் சேர்ந்த பூச்சிகளில் காணப்படும். வண்டு, எறும்பு, தேனீ, குளவி, பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி, இரு சிறகிப் பூச்சிகள் போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சியினங்களாகும். + +சில தொடர்ச்சியான தோல்கழற்றல் நிகழ்வுக்கு உட்பட்டு, படிப்படியான மாற்றங்களுடன் ஏற்படும் உருமாற்றம் குறை உருமாற்றம் அல்லது முழுமையற்ற உருமாற்றம் எனப்படும். இங்கு முட்டை, அணங்கு, முதிர்நிலை என்று மூன்று முக்கியமான நிலைகள் காணப்படும். ஆனாலும் அணங்குகள் சிலதடவைகள் தோல்கழற்றலுக்கு உட்பட்டும் வெவ்வேறு அணங்கு நிலைகளில் காணப்படும். சிறகற்ற அணங்காக முட்டையிலிருந்து வெளிவந்து, பின்னர் படிப்படியாகச் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்களைப் பெற்று முதிர்நிலையை அடையும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின்போதும், முதிர்நிலையை அண்மிக்கும் இயல்புகள் அதிகரித்துச் செல்லும். தும்பி, கரப்பான், கறையான், புத்தகப்பூச்சி, வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி (), காதுப் பூச்சி (), குச்சிப் பூச்சி (), வெள்ளிப் பூச்சி () போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளுக்கு உதாரணமாகும். + +பூச்சிகளின் முதிர்நிலைகள் கைற்றின் எனப்படும் கடினமான பதார்த்தத்தாலான புறவன்கூட்டினால் மூடப்பட்ட, துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டிருக்கின்றன. உடல் துண்டங்கள், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட தலை, மார்பு, வயிறு என்ற மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். + +புறவன் கூடானது வெளிப்புறமாகக் கைற்றினற்ற, மெழுகு போன்ற, நீரை உட்புகவிடாத தன்மை கொண்ட மெல்லிய ஒரு மேற்புறத்தோலை��ும் (epicuticle), உட்புறமாகக் கைற்றினால் ஆன மிகவும் தடிப்பான புறத்தோலையும் (procuticle) கொண்டிருக்கும். இந்தப் புறத்தோலானது வெளிப்புறமாக, மிகவும் திண்மையான கடினமாக்கப்பட்ட வெளிப்புறத்தோலையும் (exocuticle), உட்புறமாக, ஓரளவு நெகிழும் தன்மை கொண்ட, உறுதியான உட்புறத்தோலையும் (endocuticle) கொண்டிருக்கும். குடம்பி நிலை போன்ற மென்மையான உடல் கொண்ட நிலைகளில் இந்த புறவன்கூடு பெரிதும் ஒடுக்கப்பட்டிருக்கும். + +தலைப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கிய பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும். + +மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு சோடிக் கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு சோடிச் சிறகுகளும் காணப்படும். மார்புப் பகுதியின் ஒவ்வொரு துண்டமும் நான்கு மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அவை முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதி, இரு பக்கமும் காணப்படும் பக்கவாட்டுப்பகுதிகள் ஆகும். + +வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும். வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும். + +இவையே பூச்சிகளுக்கான பொதுமைப்பாடான வெளித்தோற்ற அமைப்பாக இருந்தபோதிலும், இதில் பல வேறுபாடுகள் காணப்படும். + +பூச்சிகளின் நரம்புத் தொகுதியானது மூளை, வயிற்றுப்புற நரம்பு அல்லது "நாண்" எனப்படும் இரு பாகங்களைக் கொண்டிருக்கின்றது. த���ைப்பகுதியானது 6 துண்டங்கள் ஒன்றாக இணைந்த பகுதியாகும். இதில் ஒவ்வொரு துண்டத்திற்குமான ஒரு சோடி நரம்புக்கலத்திரள் அல்லது, ஒன்றாக இணைந்த நரம்புக் கலங்கள் மூளைக்கு வெளிப்புறமாகக் காணப்படும். இவற்றில் முதல் மூன்று சோடி நரம்புக்கலத்திரளும் மூளையுடன் இணைந்த நிலையிலும், அடுத்த மூன்று சோடியும் இணைந்தபடி உணவுக்குழாய்க்குக் கீழாகவும் காணப்படும்.. +மார்புத் துண்டங்களும் பக்கத்திற்கு ஒன்றாகச் சோடி நரம்புக்கலத்திரள்களைக் கொண்டிருக்கும். வயிற்றுத் துண்டங்களிலும் இதே போன்ற ஒழுங்குபடுத்தல் காணப்படினும், முதல் 8 துண்டங்களிலேயே இவ்வாறு இருக்கும். இணைதலினால் இந்த எண்ணிக்கை சிலவற்றில் மேலும் குறைவாக இருக்கும். + +ஒரு சில பூச்சிகளில் வலி போன்றவொரு உணர்வு அறியப்படுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான கருத்திணக்கம் ஏற்படவில்லை. + +பூச்சிகள் உண்ணும் உணவிலிருந்து, ஊட்டச்சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுவதில் இந்தச் சமிபாட்டுத் தொகுதி உதவுகின்றது. உணவானது கூட்டுச்சர்க்கரை, புரதம், கொழுப்பு, கருவமிலம் போன்ற பருமூலக்கூறுகள் வடிவில் உள்ளெடுக்கப்படும். இந்த உணவானது சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டினால், வளர்ச்சி, இனப்பெருக்கம், ஏனைய உடல் இயக்கங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்காக, சிதைமாற்றம் (catabolism) மூலம் எளிய மூலக்கூறுகளாக மாற்றப்படும். + +சமிபாட்டுத் தொகுதியானது, உடலின் நீளப்பாட்டிற்குச் செல்லும் மூடிய நீண்ட குழாய் அமைப்பையுடையது. வாயிலிருந்து, குதம் வரைக்கும் ஒரு வழிப் பாதையில் உணவையும், அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் கழிவுகளையும் எடுத்துச் செல்லும். இந்த அமைப்பானது முன்குடல் (foregut), நடுக்குடல் (midgut), பின்குடல் (hindgut) என்னும் முக்கிய மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் வேறுபட்ட தொழில்களைப் புரிவதாக அமைந்திருக்கும். இவற்றுடன் வாயுறுப்புக்களும்(mouthparts), ஒரு சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளும், உமிழ்நீர்த் தேக்கங்களும் இணைந்து செயற்படும். இவை முன்குடலை அண்மித்த அமைப்புக்களாக மார்புப் பகுதியில் காணப்படும். + +உமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ் நீரானது, உமிழ்நீர்த் தேக்கத்தில் சேமிக்கப்படும். பின்னர் உமிழ்நீர்க் கான் மூல��் வாயுறுப்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே வாயுறுப்புக்களின் அசைவினால், உணவுடன் சேர்க்கப்படும். பின்னர் வாயினுள் செலுத்தப்பட்டு, அங்கே உணவு உடைக்கப்படும். பின்னர் உணவுக்குழாயினூடாகச் செல்கையில் நொதியங்களின் தாக்கத்தால் உணவு சமிபாட்டுக்கு உள்ளாகி, பின்னர் எளிய மூலக் கூறுகள் உறிஞ்சி எடுக்கப்படும். + +சில பூச்சிகளில் சமிபாட்டுக்கான நொதியம் உடலின் வெளியே, உணவின் மேல் சுரக்கப்பட்டு, அங்கேயே பகுதியாகச் சமிபாடடையச் செய்யப்பட்டு பின்னர் உள்ளெடுக்கப்படும். + +பூச்சிகளின் சுவாசம் நுரையீரல் இன்றியே நடைபெறும். பூச்சிகளின் உடலின் உட்புறத்தில் காற்றை அல்லது வாயுவைத் தீவிரமாக அல்லது பரவலாகக் கக்கக்கூடிய உள்குழாய்களின் தொகுதியும் காற்றுப் பைகளும் (sac) காணப்படுகின்றன. பிராணவாயு பூச்சிகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ஸ்பிரக்கிள் (Spiracle) என்று சொல்லப்படும் பகுதியினால் உள்வாங்கப்படுகின்றது. குடம்பிகள், போலவே சில பூச்சிகளுக்குப் பூக்கள் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் நீரில் கலந்துள்ள ஆக்சியன் பூச்சிகள் உள்ளெடுக்கின்றன. சில பூச்சிகள் டொல்பின்கள் போல நீர்நிலைக்கு மேலே பாய்ந்து காற்றை நிரப்புகின்றன. இச்செயற்பாடு பூச்சிகளில் உள்ள விசேட கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படலாம். + + + + + +இரா. நெடுஞ்செழியன் + +இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார். + +பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) என்னும் மகனும் உள்ளனர். இவர் பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். + +புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார். + +சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன். கல்வி முடிந்ததும் 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில் அவிநாசி சாலையிலிருந்து யூ.எம்.எஸ்.விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார். + +பல்கலைக்கழகத்தில் பயிலும்பொழுதே இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அதில் சேர்ந்தார். + +இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்ணணிபேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். அப்பொழுது பெரியாரைப்போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார். + +பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. சம்பத், நெடுஞ்செழியன், என். வி. நடராசன். க. மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழு செயலாளராக இருந்தார். 1957 முதல் 1962 வரை அக்கட்சியின் இரண்டாவது பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவிவகித்தார். + +1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து க. இராசராமோடு இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றது. + +1977ஆம் ஆண்டில் ம.தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார். + +ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். + +பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். + + +அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார். + + + +மன்றம் அச்சம் என்னும் பெயரில் ஓர் அச்சகத்தையும் மன்றம் பதிப்பகத்தையும் 26, நைனியப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1 என்னும் முகவரியில் 1953 மார்ச் மாதம் நிறுவினார். + +இவர் 12-1-2000ல் காலமானார். + + + + +உளவியல் + +உளவியல் அல்லது மனோதத்துவம் ("Psychology") என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும். இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிக்கும் பொழுது, அடிப்படையான உளவியல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளும் வெளிப்படுத்தப்படுகிறது. + +உளவியலின் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பு ஊக்கம், மூளை செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றை கொண்டதாகும். சில, குறிப்பாக ஆழ்ந்த உளவியல் என்பது மயக்கநிலை மனது என்று கருதப்படுகிறது. உளவியலாளர்கள், உளவியல் சமூக வேறுபாடுகளுக்கு இடையேயான காரணம் மற்றும் எதிரெதிரான தொடர்புகளைத் தீர்மானிப்பதற்கு மெய்யறிவான முறைகளை பின்பற்றுவர், மருத்துவ உளவியலாளர்கள் சில நேரம் குறிப்பால் உணர்த்தும் முறையை அல்லது இதர தூண்டும் நுட்பங்களை சார்ந்திருப்பர். + +உளவியல் அல்லது மனோதத்துவம் சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் வுண்டட் ஜெர்மனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப��படுகிறது. + +சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் ""logia"" விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும். அதன் பொருள் 'மனதைப் படிப்பது'. psukhē எனில் 'சுவாசம், ஆவி, ஆன்மா' . "logia" எனில் 'ஆய்வு' அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் பயிற்சி ஒழுங்குமுறை மற்றும் அறிவியலார்ந்த மானிட, விலங்குகளின் மனோ செயல்முறை மற்றும் நடத்தை பற்றியதாகும். அவ்வப்போது ஓர் அறிவியல் வழிமுறைக்கு எதிராகவோ, கூடுதலாகவோ பயன்படுத்துகின்றபொழுது, அது குறியீட்டுப் பொருள் விளக்கம் மற்றும் விமர்சன ஆய்வை சார்ந்துள்ளது. இருந்தபோதிலும் சமூக இயல் போன்ற சமூக அறிவியல்களை விட முக்கியத்துவம் குறைந்தே உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வநிலை ஆய்வுகளை உளவியல் ஞானிகள் புலன் உணர்வு, அறிவாற்றல், கவனம், மனஎழுச்சி, செயல்நோக்கம், ஆளுமை, நடத்தை, தனிப்பட்ட உறவுகள் இடையில் உள்ளவை ஆகிய அனைத்தும் ஆய்ந்தறிகின்றனர். சில ஆழ்நிலை உளவியல் ஞானிகள் பிரத்தியேகமாக, தன்னுணர்வற்ற மனம் பற்றி புத்தாய்வு செய்கின்றனர். + +உளவியல் ஞானம் பல்வேறு மானிட செயல்பாடுள்ள துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அன்றாட வாழ்வில் உள்ள நடைமுறைகளில் அதாவது, குடும்பம், கல்வி, தொழில் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்குரிய சிகிச்சை யாவும் ஆராயப் படுகின்றன. உளவியல் ஞானிகள் தனி நபர் மற்றும் சமூக நடத்தை பற்றிய மனோ ரீதியான வினைச் செயல்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். மேலும் நரம்பு மற்றும் உடல் சார்ந்த வழிமுறைகளின் அடிப்படை அம்சங்களை புத்தாய்வு செய்கின்றனர். உளவியல் ஆய்வில் துணைத் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் அடங்கி உள்ளன. அத்தகைய துறைகளாவன: மானிட வளர்ச்சி, விளையாட்டுகள், உடல்நலம், தொழிற்சாலை, ஊடகம், மற்றும் சட்டம் முதலியனவாகும். சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் மற்றும் கலை, இலக்கியங்கள், மனிதப்பண்புகள் யாவும் பற்றிய ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதே உள வியலாகும். ஓர் உளவியல் ஞானி என்பார் உளவியல் பயிற்றுவிப்பவரும், தொழில்முறைக் கோட்பாட்டை பின்பற்றுபவரும் ஆவார். + +உளவியல் ஆய்வு தத்துவ ரீதியில் எகிப்து, கிரீஸ், சீனா, இந்தியா, பாரசீகம் போன்று புராதன நாகரிகங்கள் பற்றி அறிய காலத்தால் பின்னோக்கி செல்கின்றது. உளவியல் ஓர் படுக்கை வசதி கொண்ட மருத்துவ போதனை சாலை மற்றும் பரிசோதனை நோக்கினை முதலில் ஏற்றுக்கொண்��வர்கள் இடைக்காலத்து முஸ்லிம் உளவியலாளர்கள் மற்றும் உடலியலார்கள் ஆவார்கள். அவர்கள்தாம் மனநல மருத்துவ மனைகளை அத்தகு நோக்கங்களுக்காக எழுப்பினார்கள். + +1802 ஆம் ஆண்டில் பிரெஞ்சு உளவியல் ஞானி பைர்ரி கேபானிஸ் உயிரியல் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்: Rapports du physique et du moral de l'homme என்பதே அக்கட்டுரை ஆகும். அதன் பொருள்: மனிதனின் இயற்பியல் மற்றும் அறநெறி அம்சங்கள் பற்றிய உறவுகள் மீது என்பதே ஆகும். கேபானிஸ் பொருள் விளக்குவது முந்தைய உயிரியல் ஆய்வுகள் அடிப்படையில் யாதெனில், நரம்பு மண்டலத்தின் உடைமைகளாக உள்ளது ஊறுகோள் உணர்வு மற்றும் ஆன்மா இரண்டுமே தான் என்று விவாதித்து உள்ளார். + +அல்ழ்கேனின் "காட்சிஒளி ஆய்வு நூல்" 1021 ல் வெளி வந்தமையால் அதுவேதான் உளவியல் பரிசோதனை முறை பற்றி விவரமறிய காலத்தின் பின்னோக்கிச் செல்கின்றது. அதன் விளைவாக உளவியல் ஒரு சுயேட்சையான ஆய்வுக்கு பரிசோதனைக் களமாக 1879 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் வுண்ட்ட் முதல் பரிசோதனைக்கூடம் ஒன்று நிறுவினார். அது உளவியல் ஆராய்ச்சிக்காக பிரத்தியேகமாக ஜெர்மனி லேப்ஜிக் பல்கலைக்கழகத்தில் நிறுவினார். எனவே வுண்ட் "உளவியலின் தந்தை"யாகப் போற்றப்படுகின்றார். 1879 ஆம் ஆண்டு அதனால் சில சமயங்களில் உளவியலின் "பிறந்த நாள்" என்று கருதப்படுகின்றது. அமெரிக்கத் தத்துவ, உளவியல் ஞானியுமான வில்லியம் ஜேம்ஸ் வெளியிட்ட இனப்பெருக்கம் பற்றிய புத்தகம், "'உளவியல் கோட்பாடுகள்'" 1890 ஆம் ஆண்டில் பல்வேறு வினாக்களுக்கு அடிகோலியது. அதனால் உளவியல் ஞானிகள் தொடர்ந்து மேலும் பல வருடங்களாக கவனம் செலுத்தலாயினர். உளவியல் துறையில் முக்கியப் பங்காற்றிய பிற அறிஞர்களில் ஒருவராகிய ஜெர்மன் உளவியல் ஞானி ஹேர்மண் எப்பின்காஸ் (1850–1909), நினைவகம் பற்றிய ஒரு பரிசோதனை ஆய்வினை பெர்லின் பல்கலைகழகத்தில் நடத்தினார். மேலும் ரஷிய உளவியல் ஞானி இவன் பாவ்லோவ் (1849–1936) என்பார் ஆய்ந்து அறிந்து கற்பிக்கும் வழிமுறை தற்போது 'சிறப்பு வாய்ந்த சூழ்நிலை அமைப்பாக' குறிப்பிடுவதற்கு காரணமாக விளங்கினார். + +1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய பரிசோதனை நுட்பங்கள் வுண்ட்ட், ஜேம்ஸ் ஜெம்ஸ், எப்பின்காஸ் ஆகியோர்களால் வரையறுக்கப்பட்டது. மற்றவர்கள் அதை பரிசோதனை உளவியல் என்ற��� வலியுறுத்துகின்றனர். அது அறிவாற்றல் ஆகவும் வளர்ந்துள்ளது. (செய்தி மற்றும் செயல் பாங்கு சம்பந்தம் கொண்டிருப்பினும் இறுதியாக ஒரு பரந்த அறிவாற்றல் விஞ்ஞானத்தின் பகுதியாக அமைந்துள்ளது). ஆரம்ப வருடங்களில் இந்த வளர்ச்சி ஒரு "புரட்சி" என்று கருதப்படுகின்றது. அது எண்ணத்தின் கடும் சுமைகளுக்கு எதிரிடையாகவும், ஈடு கொடுத்தும் வந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் மனோ இயக்கவியல், நடத்தையியல் போன்றன வளர்ச்சியடைந்துள்ளது. + +1890 களில் இருந்து இறப்பு வரை 1939, ஆஸ்திரியன் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் ஒரு மனோ நோய்நீக்கும் முறையை மனோ பகுப்பாய்வு எனும் பெயரில் கண்டார். பிராய்டின் மனதை கிரகித்தல் பெரும்பாலும் உட்பொருள் வெளிப்படுத்தும் முறைகளான உள்முக நோக்கு, படுக்கை மருத்துவ பயிற்சி உற்று நோக்கல்கள் அடிப்படையில் சார்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக தன்னுணர்வற்ற சச்சரவுகள், மன இறுக்கம் மற்றும் மனோ நோய் குணம் தீரக் கூடியதாக உள்ளது. பிராய்டின் கோட்பாடுகள் பிரபலம் அடைந்தன ஏனென்றால் பால் தன்மை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்குதல், தன்உணர்வற்ற மனம் ஆகியவற்றை எல்லாம் சமாளிப்பதாக அமைந்திருப்பதே காரணமாகும். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் தொடக் கூடாத பாடங்களாக கருதப்பட்டன. பிராய்ட் அவைகளுக்கு ஒரு கிரியா ஊக்கியை அளித்ததால் பண்பட்ட சமுதாயத்தில் திறந்த மனதுடன் விவாதிக்க முடிந்தது. மருத்துவப் பயிற்சி ரீதியில் எண்ண இயைபுமுறை, நோய்நீக்கும் கலை மீதுள்ள அக்கறை கனவுகளில் வளர ஒரு முன்னோடி உதவிகரமாக அவர் திகழ்ந்தார். + +பிராய்ட் ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஸ்விஸ் உளவியல் ஞானி கார்ல் ஜங் மீது கொண்டிருந்தமையால், அவரின் பகுப்பாய்வு மனோ தத்துவம், ஆழ்நிலை மனோதத்துவத்திற்கு ஒரு மாற்றாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிற நன்கறிந்த உளவியல் பகுப்பாய்வு சிந்தனையாளர்கள் பின்வருபவர்கள் ஆவர்: சிக்மண்ட் பிராய்ட் மகள் அன்னபிராய்ட், அவரும் ஒரு உளவியல் பகுப்பாய்வாளர், மேலும் ஜெர்மன் அமெரிக்கன் உளவியல் ஞானி எரிக் எரிக்சன், ஆஸ்திரியன் -பிரிட்டிஷ் உளவியல் ஞானி மேலானீ க்லேன், ஆங்கில உளவியல் பகுப்பாய்வாளர் மற்றும் மருத்துவருமான டி.டபள்யூ. வின்னிகாட்ட், ஜெர்மன் உளவியல் ஞானி கரேன் ஹோர்நே, ஜெர்மனில் பிறந்த உளவியல��� ஞானி மற்றும் தத்துவ ஞானி எரிச் பிரோம், ஆங்கில உளவியல் ஞானி ஜான் பவுல்பி. இருபதாம் நூற்றாண்டு முழுமையும் இத்தகைய மாறுபட்ட சிந்தனைக் கூடங்கள் வளர்ச்சி கண்டன. அவைகள் புதிய-பிராடியன் என்றும் வகைப்படுத்தப்பட்டது. + +மனோ-பகுப்பாய்வுக் கோட்பாடு மற்றும் நோய் நீக்கும் கலையினை விமர்சனம் செய்தவர்கள் பி.எப்.ஸ்கின்னர், ஹான்ஸ் ஹைஸென்க் போன்ற உளவியல் ஞானிகள், தத்துவ ஞானிகள் காரல் போப்பர், ஸ்கின்னர் மற்றும் நடத்தையியலாளர்கள் ஆவர் அவர்கள் நம்பிக்கை கொண்ட கருத்தாவது, உளவியல் செயலறிவால் தெரிந்துகொள்வதை விட, மேலும் திறம்பட விளங்க, அதுவும் மனோ-பகுப்பாய்வை விட விளங்க வேண்டும் என்பதே ஆகும். என்றாலும் அவர்கள் அடிக்கடி ஒப்புக்கொண்டது யாதெனில் காலப் போக்கில் பிராய்ட் பலவழிகளில் புறக்கணிக்கப்படும் நிலைமை நிலவுவதுதான். போப்பர் ஒரு அறிவியல் தத்துவ ஞானி ஆவார், அவர் வாதம் பிராய்டின் அதே போல ஆல்பிரெட் ஆட்லெர்தம் மனோ- பகுப்பாய்வுக் கோட்பாடு செயல்அறிவால் தெரிந்துகொள்வதன் முரண்பாடுகளுக்கு ஒரே பணிக்குரிய பாதுகாப்புகள் காணப்பட வேண்டும். ஏனெனில் கோட்பாடு அறிவியல் ஆய்வின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளமை கண்கூடு. ஒரு மாறுதலுக்காக, ஹைஸென்க் நிலைநிறுத்த முயன்றது பிராய்டின் கருத்துக்கள் பரிசோதனை விஞ்ஞானத்திற்கு உட்பட வைக்கலாம் ஆனாலும் அவைகள் பரிசோதனைத் தேர்வுகளுக்கு ஈடு கொடுக்காது என்பதேயாகும். இருபத்தோராம் நூற்றாண்டில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உளவியல் துறைகளில் பரிசோதனைமயம் ஆகியதால், பிராய்டின் கோட்பாடு வரலாற்று நூலறிவார்ந்த நிலையிலும் “காய்ந்துலர்ந்து ஜீவனற்ற” கருத்தென்றே கருதப்படலானது. இதற்கிடையில், ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல்-மனோ-பகுப்பாய்வு என்ற புதிய துறை உருவானதால், சில பிராய்டின் கருத்துக்கள் விஞ்ஞான ரீதியில் ஆதரிக்க முற்பட்டனர். ஆனால் பிற கலை,இலக்கிய மனிதப்பண்புகள் பயில் மேதைகள் தொடர்ந்து பிராய்ட் ஒரு விஞ்ஞானியே அல்லர் வெறும் கருத்து விளக்குபவர் மட்டும் தான் என்று நிலைநிறுத்தினர். + +இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடத்தையியல் துறை அமெரிக்க உளவியல் ஞானி ஜான் பி. வாட்ஸன் அவர்களால் நிறுவப் பட்டது. பிறகு அதை தழுவி விரிவாக்கப் படுத்திய அமெரிக்கர்கள் எட்வர்டு தார���ன்டைக், க்ளார்க் எல். ஹல், எட்வர்டு சி. டோல்மன் மற்றும் பின்னாளில் பி. எப்.ஸ்கின்னர் ஆவார்கள். நடத்தைநெறியியல் ஒரு நம்பிக்கையாக பிரதிபலித்தது ஆய்வுக் கூடத்தில் விலங்கு வைத்த பரிசோதனை மேற்கொள்ளும் வழிமுறையியல் பிரசித்திப் பெறலானது, ஓர்உயிரின அறிவியல் துறை நடைமுறை அறிவிற்கேற்ப வளர்ந்தது போல!எனவே பலன்தரும் மனோ சமூக புரிந்துணரும் வகையில் ஆய்வுகளுக்குட்படுத்தப் பட்டமையால் மனோ இயக்க பகுப்பாய்வு பிராய்டால் கையாளப் பட்டது அல்லது வுண்ட் உள்முக நோக்கு என்பதை கையாண்டார். ஆனால் ஜேம்ஸ் அம்மாதிரி செய்யவில்லை. + +நடத்தைநெறியியலாளர்கள் தம் முன்னோடிகளுடன் தத்துவார்த்தமான சாய்வுநிலையில் நேர்முகவியல், தீர்மானவியல் என்பதன் அடிப்படையில் கருத்துக்கனைப் பங்கிட்டுக் கொண்டனர். ஸ்கின்னருடன் அவர்கள் ஒரு கருத்துக் கோட்டிற்குள் நுழைந்தனர், ஆஸ்திரிய மருத்துவர் மற்றும் தத்துவ ஞானி எர்னெஸ்ட் மாச் உடன் நீடித்துச்சென்று அவர்களது ஆராய்ச்சி வழிமுறை அறிவியல் சார்பிற்கு உண்மையாக ஈடுகொடுத்து “ வாழ்க்கைப் பிரச்னைகளின் கட்டுப்பாட்டுக்குரிய கருவிகள் பின்பற்றி செல்வது என்பது காலம்கடந்த உண்மைகள் தேடிப் போவதை விட மேல்” என ஏற்றுக் கொண்டனர். +மேலும் அவர்கள் பல மனத்தின் உட்பொருள் விஞ்ஞான பூர்வமான ஆய்விற்கு உகந்ததாக இல்லை. உளவியல் விஞ்ஞான ரீதியில் அமைய அது நடத்தைநெறியை உற்றுப்பார்த்து கண்டறியும் வண்ணம் அமையவேண்டும் என வலியுறுத்தினர். நடத்தைநெறியாளர்கள் நடத்தை-சூழ்நிலை உறவுகள் மீது கவனம் செலுத்தினர்.அதே சமயம் ஓர் உயிரினம் சூழ்நிலையில் எங்ஙனம் செயல்படுகின்றது என்பதை வெளிப்படையாகவோ, அன்றி ரகசியமாகவோ (உதாரணம்: தனிப்பட்ட) பகுப்பாய்வு நடத்துவதையே முக்கியமாகக் கருதினர். ஆகையால், அடிக்கடி அவர்கள் அதை ஒதுக்கித்தள்ளினர். இரட்டை விளக்கம் அதாவது "மனம்” அல்லது “தன்உணர்வறிதல்” என வலியுறுத்துவதை கைவிட்டனர். “தன்உணர்வற்ற மனம்” அதனை ஆய்வதைவிட அதில் தன்உணர்வற்ற நிலை அதன் மாற்றாக அவர்கள் “தற்செயல் நிகழ்ச்சி வடிவமைக்கும் நடத்தைகள்” பற்றியே ஆய்ந்தனர். தன்உணர்வு என்பது வெளிப்புறத்தில் வெளிப்படையாக உள்ளது மட்டுமே ஆகும் எனக் கருதினர். + +நடத்தை நெறியியலாளர்களின் புகழ்பெற்ற கருத்துக்களாவன வாட்ஸனுடைய சிறப்பான சூழ்நிலை அமைப்பைப் பயன்படுத்துதல் ஆகும். ஸ்கின்னரின் கருத்து, செயல்முறைப் படுத்தும் சூழ்நிலை அமைப்பு அது மானிட முகமையால், சூழ்நிலை உந்துதல், நடத்தை எதிர்ச்செயல்களுக்கு ஈடுதருதல் இவைகளை மேற்கொண்டு நடத்தையை எவ்விதம் பாதிக்கின்றது என்பதெல்லாம் கண்டறிய உதவுகின்றது. அமெரிக்காவின் பன்மொழி அறிஞர் நோயம் சோம்ஸ்கி அவர்களின் திறனாய்வுக் கட்டுரையில், நடத்தையாளரின் மொழிஈட்டுத்திறன் பற்றிய மாதிரி அறிக்கையில், அதுவே நடத்தையியல் மங்கிட ஓரு முக்கியக் காரணமாகி உள்ளது.. ஆனால் ஸ்கின்னரின் நடத்தையியல் முற்றிலும் மடிந்து விடவில்லை ஒரு வேளை மடிந்திருந்தால் அது ஒருபகுதிக்கு உரியதாகப் பொருந்தும். அது வெற்றிகரமான நடைமுறை பயன்பாடுகளை பெருக்கியுள்ளது. நடத்தையியலின் வீழ்ச்சி உளவியலில்ஒரு புதிய வலுவான '‘மேற்கோள் வாய்ப்பாட்டை,” அறிவாற்றலுக் குரிய அணுகுமுறைகள் அதன் வாயிலாகப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது + +மனித இனநல உளவியல் என்பது 1950களில் நடத்தையியல் மற்றும் மனோபகுப்பாய்வு இரண்டின் விளைவாக இக்கோட்பாடு வளர்ச்சி கண்டது. +அது பயன்படுத்தும் உத்திகளானவன: அறிவின் அடிப்படையில் நிகழ்ச்சிஉணர்வுகள் மட்டும் ஆய்வது என்ற கோட்பாடு, அகநிலை எனும் உள்ளுணர்வு சார்பு, முதல்-நபர் வகைப்பாடுகள், மனிதஇனநல நோக்கு, அனைத்தும் கையாண்டு ஒரு முழுமனிதனின் கணநேரத் தோற்றம் காணப்பெறுவதேயாகும். அவனுடைய ஆளுமையின் துண்டு துணுக்குகள் காண்பதில்லை. அவனது அறிவாற்றல் செயல்படுவதும் எப்படி என ஆராய்வதுமில்லை. மனதஇனநலக் கோட்பாடு அடிப்படையில், தனிச்சிறப்பம்சமாக மானிடப் பிரச்சனைகள், அதாவது சுயஅடையாளமறிதல், இறப்பு, தனிமை, சுதந்திரம், மற்றும் அர்த்தம் என்பதெல்லாம் ஆய்ந்து அறிவதே ஆகும். + +அக்கோட்பாட்டின் நோக்கம் யாதெனில், அகநிலை பொருள், தீர்மானவியல் புறக்கணித்தல், நேர்முக வளர்ச்சிக்குரிய கவலை, இவைகள் எல்லாம் தான் வலியுறுத்தப்படுகின்றதே தவிர நோய்க்குறி நூல்அறிவு மட்டுமல்ல. இத்தகைய சிந்தனைப் பள்ளியின் ஸ்தாபகர்கள் அமெரிக்க உளவியல் ஞானிகள் ஆப்ரஹாம் மாஸ்லோவ் என்பார் மனிதனின் அத்தியாவசியங்கள் ஒருதொகுப்பாக அல்லது படிநிலை அமைப்பாக வெளியிட்டார். அடுத்து கார்ல் ரோஜெர்ஸ் வாடிக்கையாளர் மையம் கொண்ட நோய்நீக்கல்முறை ���ருவாக்கி வளர்ச்சி அடையச் செய்தார். அதற்குப்பின் ஜெர்மானிய-அமெரிக்க உளவியலாளர் ஃபிரிட்ஸ் பேர்ல்ஸ் ஜெஸ்டால்ட் நோய்நீக்கல் கலையினை உடன்ஸ்தாபகராக இருந்து உருவாக்கினார். அது மிகவும் ‘மூன்றாம் சக்தி’ உளவியலில் தோன்றும்அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் நேர்முக உளவியல் மனிதஇன நல ஆய்வுக்கட்டுரைகள் படைக்கவும் விஞ்ஞான ரீதியில் ஆய்ந்தறிவதன் வகைகள் தோன்றவும் வழிவகுத்தது. + +ஜெர்மானியத் தத்துவ ஞானி மார்ட்டின் ஹைடெக்கெர், டச்சுத் தத்துவ ஞானி சோரன் கியர்க்கிகார்டு போன்றவர்களால் தாக்கம் பெற்ற மனோ-பகுப்பாய்வின் பயிற்சி பெற்ற அமெரிக்க உளவியல்ஞானி ரோல்லோ மே வாழ்வியல் தோன்றச் செய்தார். அது 1950களிலும் மற்றும் 1960களிலும் உருவெடுத்தது. அக்கோட் பாட்டிற்கு அவரே முன்னோடியாக விளங்கினார். +அக்கோட்பாட்டு உளவியலாளர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்டு இருந்தனர். அவர்கள் மனிதஇனநலக் கோட்பாட்டாளர்களை மானிட இயல்பின் நடுநிலையில் ஒப்பீடு செய்தனர். கவலைப்படுவதைப் பற்றிய நேர்முக மதிப்பீடும் தொடர்பு படுத்திச் செய்தனர். இத்தகு கோட்பாட்டாளர்கள் மானிட இயல்பான ஆய்வுக்கட்டுரையில் இறப்பு, சுயேச்சை விருப்பம், அர்த்தம், யாவையும் வலியுறுத்தனர். அர்த்தம் என்பதற்கு அதை புராண ரீதியில் அல்லது சொல்நவிலும் பாங்கில் வடிவமைக்கக் கூடும் என்றும் அபிப்பிராயம் கூறினர். சுயேச்சை விருப்பப்படி அதை ஊக்கப்படுத்தலாம் என்றும் அதுவே உண்மையான அதிகாரப் பூர்வநிலை இருப்பினும், கவலை, மரணத்தைப் பற்றிய எண்ணம், எதிர்கால நலன்கள் பற்றிய எண்ணம் யாவும் தோன்றக் கூடும் என்றும் மேலும் கூறினர். ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த இக்கோட்பாட்டாளர் ஹாலோகாஸ்ட் எனும் இடத்தில் எஞ்சியவரும் ஆன விக்டார் ஃபிரான்ங்க்ள் அர்த்தத்தின் நோய்நீக்கும் முறைக்கு சாட்சியங்கள் கண்டு ஆராய்ச்சி செய்தார். அவைகள் அவரின் சொந்த அக நிலையின் பிரதிபலிப்புகளே ஆகும். அதன்மூலம் அவர் எனும் புதுமுறை உருவாக்கினார்.மே மற்றும் ஃபிரான்ங்க்ள் இவர்களுக்கும் கூடுதலாக, சுவிஸ் மனோ பகுப்பாய்வாளர் லுட்விக் பின்ஸ்வேங்கர் மற்றும் அமெரிக்க உளவியலாளர் ஜார்ஜ் கெல்லி இருவரும் இக்கோட்பாட்டாளர்கள் எனக் கருதப்படுகின்றனர். + +நோயம் சோம்ஸ்கி “அறிவாற்றல் புரட்சி�� உளவியலில் தோன்றக் கனலூட்டினார். நடத்தையியலார்கள் தம் கருத்துக்களான “தூண்டுதல்” “எதிர்ச்செயல்” “வலிமை யூட்டுதல்” ஆகியனவெல்லாம் ஸ்கின்னர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை பரிசோதனை செய்வதிலிருந்து பெற்ற சொற்கள் அவைகள் சிக்கலான மனித நடத்தைக்கு மட்டுமே உகந்ததே ஒழிய அதிலும் ‘மொழியீட்டம்’ என்பது மட்டுமே குறிப்பிடத்தக்க தாகும். அதுவும் நடைமுறை பாணியில் மேலெழுந்த வாரியாக அமைந்திருக்கும். +சோம்ஸ்கி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ஒரு குழந்தையின் உள்ளார்ந்த பங்கீட்டை அத்தகு நடத்தையைப் பொறுத்தமட்டிலும் புறக்கணிக்கக் கூடாதென்றும் வலியுறுத்தனார். ஆனால் அதே சமயம் சமூகக் கற்பிப்பு கோட்பாட்டாளர்களான ஆல்பர்ட் பாண்டுரா விவரிப்பது குழந்தையின் சூழ்நிலை அதன் பங்களிப்பை அதனுடைய சொந்த நடத்தையைச் சார்ந்திருக்கும் அதுவே உற்றுநோக்கும் பாடப் பொருளாகவும் விளங்கும் ஆகிய கருத்துக்களாகும்.நடத்தை உள்முக வழிமுறையால் அதன் செயல்பாட்டால் கடுவேகம் அடையும் அல்லது வெளியில் சுற்றுப் புறங்களைக் காண்கின்றதனால் அந்நிலைமை தோற்றுவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே ஒரு சவாலை நடத்தையியலாருக்கு கொடுத்துள்ளது. அதாவது நடத்தை அதனுடைய எதிர்ச்செயல்கள் மற்றும் இனிப்பான கசப்பான தூண்டுதல் இரண்டிற்கும் இடையே உள்ள முன்கூட்டிய இணைப்புகளை ஒட்டியே எதிர்பாராத நிகழ்வுகளை நடத்த ஏதுவாகின்றது + +இதற்கிடையில் குவிந்துவரும் தொழில் நுட்பங்கள் மனோ நிலைகளில் அதன் பிரதிநித்துவங்களில் அக்கறையும் நம்பகமும் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எடுத்துக் காட்டாக அறிவாற்றல் கோட்பாடு நடத்தையியலார்களின் ஆதரவிழக்க லாயிற்று. ஆங்கில நரம்பியல் ஞானி சார்லஸ் ஷிர்ரிங்டன் மற்றும் கனடியன் உளவியல் ஞானி டோனால்டு ஓ. ஹெப்ப் பரி சோதனை முறைகளையே பயன்படுத்தினார். அதுவே உளவியல் அபூர்வத்தை மூளையின் கட்டமைப்பு அதன் செயல்முறை இரண்டோடு இணைத்திட உதவியது. செயற்கை நுண்ணறிவு சான்ற கணணி அறிவியலின் வருகை மனிதர்களின் செய்தியை நடைமுறைப் படுத்தல் மற்றும் இயந்திரங்களின் செய்தி நடைமுறைப் படுத்தல் இரண்டிற்கும் இடையில் பகுப்பாய்வுகள் நடத்த ஏதுவாகின்றன. ஆராய்ச்சியானது, அறிவாற்றல் பொறுத்த மட்டில், நடைமுறைக்குகந்ததாக இருந்தது என்பது இரண்டாம் உலகப் போரில் ஆயுதங்கள் இயக்கப்படும் முறைகளுக்கு உதவிகரமாக அமைந்ததிலே அறிந்திட முடிந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவாற்றல்இயல்பு உளவியலின் முக்கியஅம்சமாகியது அதன்விளைவாக அறிவாற்றல் உளவியல் எனும் பிரிவு பிரசித்தி பெற்ற பாடக்கிளையாக உருவெடுத்தது. + +ஒளிவுமறைவான மனம் அறியப் படவேண்டும் என்பதும், அதன் விஞ்ஞான முறைமையும் படிக்கப் படவேண்டும் என்பதும் கருத்திற்கொண்ட அறிவாற்றல் உளவியலாளர்கள் அதற்கென சில கோட்பாடுகளை மேற்கொண்டனர். அதன்படி “ உள்ளுணர்வு ஆன்மாவின் நடைமுறை”, “பொருள்தொக்கி நிற்கும் நினைவகம்” ஆகிய இரண்டும் குறிப்பிட வேண்டும். அவைகளே மனோ-பகுப்பாய்வின் “தன்உணர்வற்ற மனம்” அல்லது நடத்தையியலாரின் “தற்செயல் நிகழ்ச்சியால் வடிவமைக்கும் நடத்;தைகள்” இவைகளுக்கு மாற்றாக விளங்கலாயிற்று. நடத்தையியல், அறிவாற்றல் உளவியல் இரண்டின் அம்சங்கள் பிணைந்து அறிவாற்றல் நடத்தை நோய்நீக்கல்முறை தோன்ற வழிவகுத்தது. அது மாற்றியமைக்கப் பட்ட மனோ நோய்நீக்கும் முறையாகும். அம்முறையை அமெரிக்க உளவியல்ஞானி ஆல்பர்ட் எல்லீஸ், அமெரிக்க மனநோய் மருத்துவர் ஆரோன் டி. பெக் பேணி வளர்த்தனர். அறிவாற்றல் உளவியல் மற்ற பாடங்களுடன் கலந்து அறிவாற்றல் விஞ்ஞானம் என்ற பாடத்துக்குடையின் கீழ மனத்தத்துவம், அறிவியல் கணணி, நரம்பியல் விஞ்ஞானம் என மருவியது. + +பல்வேறு சிந்தனைப்பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மாதிரியை வழிகாட்டும் கோட்பாடாகப் பயன்படுத்தி எல்லா அல்லது பெரும்பான்மையான மனித நடத்தையினை விவரிக்க வேண்டும் என வாதித்துள்ளன. ஆனால் இதன் பிரசித்தம் கூட நாளடைவில் குன்றி மங்கிவிட்டது. சில உளவியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியை வலியுறுத்துபவர்களாகவும், மற்றதை புறக்கணிப்பவர்களாகவும் இருக்கின்றனர். எனினும் ஒவ்வொருவரும் மனத்தைப் புரிந்து கொள்ள அணுகுவதே பிரதானம் என்றும், பரஸ்பரம் கோட்பாடுகளை தேவையென கருதவில்லை என்றும் அபிப்பிராயப் படுகின்றனர்.எனவே டின்பெர்கென்னின் நான்கு கேள்விகளின் அடிப்படையில் உளவியல் ஆய்வுத்துறைகளின் எல்லா புலங்களின் குறிப்புகளுக்கான வரைசட்டம் நிலை நிறுத்தப்படலாம் ( மனிதஇன நூல் ஆய்வு, கலை இலக்கியப் பாடங்கள் உட்பட). + +நவீன காலங்களில், உளவியல் என்���து தன்உணர்வு, நடத்தை, சமூக செயல் எதிர்ச்செயல் மூன்றுமே ஒருங்கிணைந்த ‘தகவுநோக்காக’ ஆகியுள்ளது. +இந்தத் தகவுநோக்கு பொதுப்படையாக உயரியல் மனோ சமூக நோக்காகவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த நோக்கின் அடிப்படைக்கருத்து ஒரு கொடுக்கப் பட்ட நடத்தை அல்லது மனோ செயல்முறை பாதிக்கப் படுகின்றது அல்லது உயிரியல், மனோயியல், மற்றும் சமூக இயல் இவற்றின் இயக்கபூர்வமான உள்தொடர்புடைய நிலையில் பாதிக்கப்படுகின்றது என்பதே யாகும். + +உளவியல் அம்சம்எனக் குறிக்கப்படுவது அவ்வியலின் ஓர்அபூர்வ நிகழ்ச்சியின் பால் அறிவாற்றல் மனஎழுச்சிகள் இவைகளின் பங்கு எந்த அளவிற்குள்ளது என்பதை பொறுத்தமையும். உதாரணமாக மனோநிலையின் விளைவு அல்லது நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எப்படி ஒரு தனிநபரின் எதிர் விளைவுகள் ஒரு நிகழ்ச்சிக்கு அமைந்தது என்பதே கருத்தில் கொள்ளப்படும். "உயரியல் அம்சங்கள் " குறிப்பிடுவது யாதெனில் உளவியல் அபூர்வ நிகழ்ச்சியில் எப்படி எதிர்விளைவு ஏற்படுத்துகின்றது என்று கண்டறியப் படும். உதாரணமாக, பேறு காலச் சூழ்நிலையில் மூளை வளர்ச்சி எப்படி உள்ளது, அறிவாற்றல் திறன்கள் அல்லது மரபணுக்களின் செல்வாக்கு தனிநபரின் ஒழுங்கமைதிக் குதவுகின்றன என்பதெல்லாம் ஆராயப்படும். "சமூகப்பண்பாட்டின் அம்சம் " என்பது அவை சம்பந்தப்பட்ட சூழலில் உளவியல் அபூர்வ நிகழ்வு எப்படி நடக்கின்றது என்பதும் ஆய்ந்தறியப்படும்.- உதாரணமாக அதில் பெற்றோர்கள் பங்கு மற்றும் சமகாலத்தவர்கள் பங்கும் நடத்தையில் அல்லது ஒழுங்குநெறியில் தனிநபர் மீது செல்வாக்கு பெறுவது ஒட்டியே அமைந்திருக்கும். + +உளவியல் ஒரு பரந்த எல்லைப்பரப்பைச் சுற்றி யுள்ளதாகும். அதில் பலநோக்குகள் உள்ளடங்கியுள்ளன. மனோ நடைமுறைகள், நடத்தைகள் பற்றிய ஆய்வு நடத்துவதே தலையாய பணியாகும். பின்வரும் விசாரணையின் முக்கிய பகுதிகள் உளவியல் சார்ந்துள்ளன.ஒரு சுருக்கமான பட்டியல் அதில் துணைக்களங்கள் அல்லது பிரதேசங்கள் உளவியல் உள்ளே காண இயலும் அதில் அவ்வியல் சம்பந்தமான தலைப்புகள் மற்றும உளவியல் பாடப்பிரிவுகள்யாவும் அடங்கியுள்ளன. + +நெறிபிறழ் உளவியல் அத்தகைய நடத்தை பற்றிய ஆய்வினைக் குறிக்கும். நெறிபிறழ் நடத்தை வகைகள் அவைகளை விளக்குதல், ஊகித்தறிதல், விவரம் அளித்தல், அதன்ச���யல் முறையை மாற்றுதல் யாவும் உள்ளடங்கும். இத்துறை நடத்தும் ஆய்வில் மனோநோய் தீர்க்கும் முறை அதன் காரணங்கள் அது பற்றிய ஞானம் அதை எப்படி மருத்துவப் பயிற்சியில் பயன்படுத்த இயலும் அதனால் உளவியல் கோளாறுள்ளவர்களின் எப்படி குணப்படுத்த முடியும் என்பதெல்லாம் அடங்கியுள்ளன. + +இயல்பான நடத்தை, நெறிபிறழ் நடத்தை இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் காண கோடு போடுவது கடினமான பணியாகும்.பொதுவாக நெறிபிறழ் நடத்தைகள் சூழ்நிலைக் குகந்தனவா இல்லை தனிப்பட்ட அசௌகிரியம் காரணமாக மருத்துவ நலன் மற்றும் சிகிச்சை பெறும்படி உள்ளனவா என்றெல்லாம் கண்டறியப்படல் வேண்டும். டிஎஸ்எம்-ஐவி-டிஆர் படி, நடத்தைகள் பிறழ்ந்த இயல்புகொண்டதாகக் கருதப்பட உரிய காரணங்களாவன: +செயல்புரிய இயலாமை, தனிப்பட்ட மனஇறுக்கம், சமூக நெறிமுறைகளை மீறிய நிலை, அல்லது செயல்முறை மீறல் ஆகியனவாகும். + +உயிரியல் உளவியல் என்பது நடத்தை மற்றும் மனநிலை சம்பந்தப்பட்டதை அறிவியல் ஆய்வு செய்வதாகும். + +எல்லா நடத்தைநெறிகளும் நரம்பு மண்டலத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதால் உயரியில் உளவியலாளர்கள் கருதுவது எப்படி மூளை வேலை செய்கின்றது என்பதை அறிவதே முக்கியமென்பதாகும். + +இத்தகு அணுகுமுறை நடத்தை நரம்புவிஞ்ஞானம், அறிவாற்றல் நரம்புவிஞ்ஞானம், நரம்பு உளவியல் மூன்றிலும் கையாளப்பட்டு வருகின்றது. + +நரம்பு உளவியல் மனோதத்துவத்தின் ஒரு கிளையாகும். அதன் நோக்கம் மூளையின் அமைப்பு அதன் செயல்முறை ஆய்வதே ஆகும். அதனால் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.நரம்பு உளவியல் மூளைக்காயம் பற்றியும் கிரகித்துக் கொள்ள உதவும். +இயல்பான உளவியல் செயல்முறை பற்றியும், அறிவாற்றல் நரம்புவிஞ்ஞானம் மூளை, நடத்தை இரண்டிற்குமுள்ள இணைப்பை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பட்சத்தில் நரம்புப்பிம்பக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. + +அதன்மூலம் மூளையின் எந்த பகுதிகள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக எப்படி சுறுசுறுப்புடன் இயங்குகின்றது என்றும் தெரிந்துகொள்ள முடியும். + +மருத்துவமனைப் பயிற்சி உளவியலில் அதன் ஆய்வு மற்றும் பயன்பாடு உள்ளடங்குகின்றன. அதன் நோக்கமானது அறிவதும், தடுப்பதும், விடுவிப்பதும் எனக் கொண்டு, கடும்துன்பம் அல்லது இயல்பு கடந்தமை நோய்தணிவிப்பதுவும், அகஎண்ணத்தின் நலம், தனிப்பட்ட வளர்ச்சி இரண்டையும் மேம்பாடு செய்வதுமாக உள்ளது. அதன் மையமாக அமைவது உளவியல் மதிப்பீடு மனோ நோய்தீர்க்கும் முறை பற்றி பயிற்சி பெறுதலாகும். அத்தகைய மருத்துவப்பயிற்சி பெறுவோர்கள் ஆராய்ச்சி, கற்றல், ஆலோசனை அளித்தல், தடயச் சான்றளித்தல், திட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாகம் அனைத்திலும் ஈடுபாடு செலுத்துவார்கள். + +சில படுக்கை மருத்துவமனைப் பயிற்சி பெறுவோர்கள் அம்மனையின் மேலாண்மை பற்றியம் நோயுற்றோர்களின் மூளைக்காயம் பற்றியும் கவனம் செலுத்துவர். + +பலநாடுகளில் மருத்துவமனையின் உளவியல் ஒரு கட்டுப்பாடுள்ள மனநல தொழிலாகவே உள்ளது. + +மருத்துவ மனை சார்ந்த உளவியலாளர்கள் பணி பல்வேறு சிகிச்சை முறைகளால் தாக்கம் பெற்றுள்ளனர். அனைத்துமே தொழில் முறையினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ( வழக்கமாக தனிநபர், தம்பதியர்கள், குடும்பத்தினர், மற்றும் சிறுகுழுவினர்) உள்ள குறிப்பிட்ட உறவினை பற்றி அறிவதில் அக்கறை காட்டுகின்றனர். + +பலவகையான சிகிச்சை முறைகள் அல்லது பயிற்சிகள் ஆகியன பலவகையான கோட்பாட்டுகளின் கண்ணோட்டத்துடள் தொடர்பு கொண்டிருப்பது பற்றியும் அல்லாது ஒரு சிகிச்சைமுறை கொண்ட கூட்டணி ஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. மனஇயல் பிரச்னைகளில் தன்மை பற்றியும் ஆராய ஏதுவாகின்றது. புதிய வழிகளை காண, அறிய, அதன்படி நடக்க, ஊக்குவிக்கின்றது. + +நான்கு முக்கியமான கோட்பாட்டுக் கண்ணோட்டங்கள் ஆவன, மனோ இயக்கம், அறிவாற்றல் நடத்தைமுறை, மனித இனநலக் கோட்பாடும் வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடும் மற்றும் வழிமுறைகள் அல்லது குடும்ப சிகிச்சை அனைத்து மாகும். பல்வேறு பட்ட சிகிச்சை அணுகுமுறை வளர்ச்சிக்குரிய சான்றுகள் பெறும்முறைகளை ஒருங்கிணைத்தல் அதிக மேம்பட்ட விஷயங்களான பண்பாடு, பால், ஆன்மீகம், மற்றும் பால்உணர்வு சார்ந்தது யாவும் உள்ளடங்கும். + +மனநோய் தீர்க்கும் முறைபற்றிய புதுப்புது ஆராய்ச்சிகள் குவிந்து வருவதால் முக்கிய சிகிச்சை முறைகளுக்கு சமமான பலாபலன் தந்துள்ளமை வளர்ச்சிக்குரிய சான்றுகளாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்குமே ஒருபொதுவான முக்கியத்துவமான அம்சம் சிகிச்சை சார்ந்த கூட்டணியாகும். + +இதன்விளைவாக அதிக பயிற்சி திட்டங்கள் மற்றும் உளவியலாளர��களின் பின்பற்றும் சிகிச்சை முறை தற்போது பலகோட்பாடுகளையும் இசைந்தேற்றும் கொள்ளும் தன்மையால் நோய்தீர்க்கும்முறை பன்னலம் சார்ந்துள்ளது.ஒருங்கிணைந்த மனோ-நோய் தீர்க்கும் முறை + +அறிவாற்றல் உளவியல் ஆய்வின் படி அறிவாற்றல், மனநடை முறைகள், குறிப்பாக மனத்தின் செயல்முறைகள் பற்றியே அமைந்துள்ளன +உணர்வுக்காட்சி, கற்றல், பிரச்னை தீர்க்குதல், காரணம்அறிதல், எண்ணுதல், நினைவகம், கவனம், மொழி மற்றும் மனஎழுச்சி ஆகிய அனைத்து பகுதிகளும் ஆராய்ச்சிக்குட்பட்டவைகளாகும். + +தனிச்சிறப்பான அறிவாற்றல் உளவியல் அது சம்பந்தமான சிந்தனைப்பள்ளியுடன் இணைந்துள்ளது. அதைப்பின்பற்றி உள்ளவர்கள் வாதிடுவது யாதெனில் மனத்தில் செயல்முறையால் அதன் நடைமுறையால் பெறும்செய்தி, பரிசோதனை சார்ந்த உளவியலாலும் மற்றும் இயல்பான செயற்பாங்காலும் அதனைத் தெரியப்படுத்தச் செய்கின்றது என்பதேயாகும். + +பரந்த அளவில் அறிவாற்றல் விஞ்ஞானம் ஒரு இடைநிலைப்பட்ட பாடத்திட்டமாகும். அது அறிவாற்றல் உளவியலாளர்கள், அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானிகள்,செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சியாளர்கள், +மொழியியலார்கள், மற்றும் சமூக அறிவியலார்கள் ஆகியோர்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர். கணணிமாதிரிகள்,அளவை நூலாளர்கள் சமூக அறிவியலார்கள் சில சமயம் பண்புநலன் பற்றிய அபூர்வநிலை அறிய அல்லது ஊக்குவிக்கப்பயன்படுகின்றனர். + +அத்தகைய கணணிமாதிரிகள் ஒரு கருவியை அளிக்கின்றது. அது மனத்தின் செயல்முறை ஒழுங்கமைப்பை பற்றி ஆய்கின்றது. நரம்புவிஞ்ஞானம் மனத்தின் செயல்முறையை அளவிட உதவுகின்றது. + +ஒப்பிடும் உளவியல் மனிதர்களைப்போல மிருகங்களின் மனோவாழ்க்கை அவைகளின் நடத்தை பற்றிய ஆய்வினைக் குறிக்கின்றது. +உளவியலுக் கப்பால் உள்ள பாடத்திட்டங்கள் அதிலும் மிருக நடத்தை பற்றிய ஆய்வு பண்பாண்மை ஆக்கம் பற்றிய நூல்மனிதப் பண்பான்மை ஆக்கம் பற்றிய அறிவு நூல் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. +உளவியல் துறை ஆரம்பக் கட்டத்தில் மனிதர்கள் சம்பந்தப் பட்டிருந்த போதிலும், மிருகங்களின் நடத்தை அவைகளின் மனோ நடைமுறைகள் உளவியல் துறையின் ஆராய்ச்சிக்கு வேண்டிய முக்கிய பங்கு பெற்றுள்ளது. +இது தன்னுரிமை கொண்ட ஒரு பாடம் (உதாரணமாக மிருகங்கள் அறிவாற்றல் மற்றும் மனிதப் பண்பாண்மை, ஆக்க நூல்) அல்லது வள���்ச்சி இணைப்புகள் பற்றிய அதிக வலியுறுத்தல் மேலும் சர்ச்சைக் கிடமாக இருப்பினும், மனித உளவியல் உள்நோக்கு (நுழைபுலம்) பலாபலன் பெற்றிடும் முறையாக உருவெடுத்துள்ளது. +இது ஒப்பிடும் உளவியல் பெற்ற வெற்றியாகும். ஓப்பீடு மிருக முன்மாதிரிகள், மனஎழுச்சிகள், நடத்தை நடைமுறைகள் எப்படி உளவியல் நரம்பு விஞ்ஞானத்தில் காணப்படுகின்றன (உதாரணமாக பாதிக்கும் நரம்புவிஞ்ஞானம் மற்றும் சமூக நரம்பு விஞ்ஞானம் போன்ற பாடப்பிரிவுகள்) + +கருத்துரை வழங்கும் கலந்தாய்வு உளவியல் தனிப்பட்ட அதன் இடைப்பட்ட செயல் முறைகள் வாழும்காலம் எல்லாம் பெருங் கவனம், மனஎழுச்சி, சமூக, வாழ்க்கைத் தொழில், கல்வி, உடல்நலம் சம்பந்தம், வளர்ச்சிமுகம், மற்றும் ஸ்தாபன ரீதியில் வசதிவாய்ப்பு பெருக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. +ஆலோசகர்கள் அடிப்படையில் படுக்கை மருத்துவ பயிற்சியாளர்கள் ஆவார்கள். அவர்கள் மனோநோய் தீர்க்கும் முறை அல்லது பிற இடையீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கின்றனர். +பாரம்பரியமாக கலந்தாய்வு உளவியல் சாதாரண வளர்ச்சி விஷயங்கள் அதிலும் அன்றாட மனஅழுத்தம் மீது கவனம் செலுத்துகின்றனர். மனோ நோய்க்குணம் அதனினும் இக்கவனம் மேம்பட்டுள்ளது. இந்த தெளிவான வேறுபாடு காலப்போக்கில் மிருதுவாக்கப்பட்டுள்ளது கலந்தாய்வு உளவியலாளர்கள் பல்வேறுபட்ட நிலையங்களில் பணிபுரிந்துகொண்டு வருகின்றனர். பல்கலைக் கழகங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள், வணிகநிலையங்கள், தனியார் பயிற்சி, சமூக மனநல மையங்கள் என அவைகள் உள்ளன. + +நெருக்கடி உளவியல் இத்துறையில் நுண்ணாய்வுக் கோட்பாடு பயன்படுத்தவதை வலியுறுத்துகின்றது. +அதன்படி, உளவியலாளர்கள் தம்தரப்பிற் குரிய பங்கினை எதிரிடையான கோட்பாடுகள் மாற்றுவதைக் கடனாக ஆற்ற முனைந்து வருகின்றனர். அதனாற்றான் பாதிக்கப்பட்டுள்ள சமூக கட்டமைப்புகள் புனரமைப்பு பெற இயலும். இந்த உளவியல் துறை ஒரு நம்பிக்கையில் பேரில் இயங்குகின்றது.முக்கிய நீரோட்டமான உளவியல் துறையின் குறுகிய கண்ணோட்டம் சார்ந்த அறிநெறி உரிமைக் கட்டளையை மனித நலத்துக்குரிய மேம்பாடு காண வைப்பதேயாகும். எனவே நெருக்கடி உளவியல் இந்நோக்கத்தை இன்னும் விசாலப்படுத்த முயல்கின்றது. + +நெருக்கடி நுண்ணாய்வு செய்யும் உளவியலாளர் வினவக் கூடும் ஒருவேலை மனஅழுத்த வழக்கில் முயற்சிகள் வேண்டப்படுகின்றனவா?!பெரிய அளவில் நடைமுறைகள் அவ்வேலையைக் கட்டுப்படுத்துகின்றதா? தனிநபர்களை அவர்களின் மனஅழுத்த அனுபவத்தால் அவதிப்படும் பொழுது உரிய சிகிச்சை தனிமையில் அளிப்பது நடைமுறைக்கு உகந்ததா எனவும் வினவலாம். மேலும் அவர்கள் வினவலாம்: +யுத்த சீரழிவடையும் சமுதாயங்களில் ஏன் முக்கிய நீரோட்டமான அடிவேதனைப் படுகாயம் துடைக்க செய்யும் முயற்சிகள் ஒரு கவனத்தை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியின்பால் செலுத்திட தவறுதல் அடைகின்றது? +சுருக்கமாக நவிலும் பட்சத்தில், நெருக்கடி நுண்ணாய்வு உளவியல் எதிர்பார்ப்பது அதற்குச் சரிஎனப்படுவதும், அதனால் உளவியல் தரத்தை பகுப்பாய்விலிருந்தும் அதே சமயம் தனிநபரி டமிருந்தும் சமுதாயத்திற்கு உயர்த்தப் படவேண்டும் என்பதேயாகும். +அதனால் உளவியல் துறையை அடிப்படை ரீதியாக மேன்மைப்படுத்துதல் கைகூடும். அத்துறை உளவியலின் பிற உபதுறைகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பும் ஏற்படும். பல கோட்பாட்டாளர்கள் முக்கிய நீரோட்டம் எனக் கருதப்படும் தொழில்துறைகளிலேயே பணியாற்றிக்கொண்டு வருதல் கண்கூடு. + +ஆயுட்காலம் முழுவதும் மனித மனம் வளர்ச்சி காண்பதை முக்கியமாக ஒருங்குவித்து, வளர்ச்சி வாய்ந்த உளவியல் மூலம் எப்படி மக்கள் காண்கின்றனர், புரிந்து கொள்கின்றனர், செயல்படுகின்றனர் இவை யாவும் இவ்வுல வாழ்வில், வயது ஆக நடைமுறையில் தோன்றும் மாற்றங்கள் என்ன என்பதை கிரகித்துக் கொள்ள முயல்வதே உளவியல் நோக்கம் ஆகும். இக்கொள்கை நுண்ணறிவு, அறிவாற்றல், நரம்பு மண்டலம், சமுதாயம் அல்லது அறநெறி வளர்ச்சி அனைத்தின் மீது கவனம் குவிப்பதே ஆகும்.ஆராச்சியாளர்கள் குழந்தைகள் பற்றி ஆய்வு நடத்துகையில், பற்பல தனிசிறப்பான வழிமுறைகளை இயற்கை சூழலில் உற்று நோக்கல்கள் செய்தும், அல்லது, பரிசோதனை பணிச்சுமைகளில் ஈடுபட்டும் பயன்படுத்துகின்றனர். அத்தகு பணிச்சுமைகள் விளையாட்டுகள் அதன் நடவடிக்கைகள் ஏற்ப பிரத்தியேகமாக வரையறை செய்தது போல ஒத்திருக்கும். குழந்தைகள் மகிழ்ச்சி பெறுவதற்காக, அறிவியல் பயன்பாட்டிற்காக, ஆராச்சியாளர்கள் புத்திசாலித் தனமான வழிமுறைகள் மேற்கொண்டு சிறார்களின் மனதின் நடைமுறைகளை ஆராய்கின்றனர். இதுமட்டும் அல்���ாமல், குழந்தைகளை ஆராய்ச்சி செய்வதுடன், வளர்ச்சி நோக்கும் உளவிய லாளர்கள் கூடவே வயது முதிர்வது, அதன் நடைமுறைகள், ஆயுட்காலம், அதுவும் வேகமாக வாழும் நேரங்களில் தோன்றும் மாற்றங்கள் ( வளர் இளமைப்பருவம், வயதான காலம்) உடன்அறியும் பணி மேற்கொள்கின்றனர்.வளர்ச்சி காணும் உளவியலாளர்கள் அறிவிலான ஆய்விற்கு வேண்டியதை முழு அளவில் உள்ள கோட்பாடுகள் மூலம் பெறுகின்றனர். + +கல்வி உளவியல்கல்வி உளவியல் என்பது கற்கும் அமைப்புகளில் மனிதர்கள் எப்படி பயில்கின்றனர், அதன் இடைஈடுகளின் பலா பலன் கிடைக்கும் விதம், கற்பிக்கும் உளவியல், சமூக உளவியல் பள்ளிக் கூடங்கள் ஸ்தாபனங்களாக செயல்படும் முறையாவும் உள்ளடக்கும்.குழந்தை உளவியலாளர்கள் லேவ் வ்ய்கோட்சகி, ஜீன் பியாகெட், மற்றும் ஜெரோம் ப்ருநேர் இவர்கள் எல்லாம் கற்பிக்கும் முறைகள், கல்விப் பயிற்சி அளிக்கும் முறைகள் எல்லாம் உருவாக காரணம் ஆனவர்கள் ஆவார்கள்.கல்வி உளவியல் பாடமானது ஆசிரியர் கல்வி திட்டங்களில் வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. + +கல்வி உளவியல் மனதில், நடத்தையில் உள்ளமரபணு வேர்கள் பற்றி ஆய்கின்றது. பொதுவான வகைப்பாடுகள் தோன்றுகின்றன.அவைகள் சுற்றுப்புறங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்று உள்ளன.அதனால் படிப்படியான வளர்ச்சி பெறவும் ஒருவேளை ஒருசில வகைப் பாடுகள் இன்றைய சூழ்நிலைகளுக்கு பொருந்தி வரவில்லை எனினும் மற்றையவை உகந்தபணிகளை செய்து வருகின்றது. + +படிப்படி வளர்ச்சிக்கு நெருங்கியுள்ள பிற துறைகள் விலங்கு நடத்தை வாழ்க்கைச் சூழல், மனித நடத்தை வாழ்க்கைச் சூழல், இரட்டை மரபுரிமைக் கோட்பாடு மற்றும் சமூக உயிரியல் ஆகியன ஆகும்.ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எனும் பிரிட்டிஷ் படிப்படி வளர்ச்சி உயிரியலார் கண்ட கோட்பாடு மெமெதிக்ஸ் ஆகும். பண்பாட்டு வளர்ச்சி மேண்டேலியான் பின் இயக்கங்களை தாண்டி சுயேட்சையாக டார்வினின் பொருள்படி நிகழும். ஆகையால் அது எண்ணங்கள் அல்லது மெமெ மரபணுக்களில் சுதந்திரமாக படிப்படி வளர்ச்சி பெற ஏதுவாகும். + +சட்ட ஆய்வு உளவியல் வழக்கு விவகாரங்களுக்கு பயன்படுகின்றது. பரந்த அளவில் நடைமுறைகளை மருத்துவமனை மதிப்பீடுகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பெறும் பிரதி வாதியின் அறிக்கைகள், நீதிமன்றம் க��ரும் சான்றிதழ்கள் எல்லாம் இதில் அடங்குகின்றன. சட்ட ஆய்வு உளவியலாளர்கள் நீதி மன்றத்தால் முறைப்படி அவர்களுக்குரிய பதவியில் நியமிக்கப்படுவார்கள் அல்லது, சட்டத் துறை சார்ந்த வழக்கறிஞர்களால் வாடகை அடிப்படையில் அமர்த்தப்படுவார்கள். சட்ட இசைவுகள் பெறுகின்ற வழிமுறைகளை முன்னின்று நடத்துவதே அவர்கள் முக்கியப் பணியாகும். வழக்கு விசாரணை மதிப்பீடுகள், சட்ட நிறைவேற்ற மதிப்பீடுகள், மூளைக் கோளாறு அற்ற நிலை பற்றிய மதிப்பீடுகள், தானாக நிகழும் ஒப்படைப்பு மதிப்பீடுகள், தண்டனை விவரம் நிறைவேற்றும் பரிந்துரைகள், மேலும் நீதி மன்றத்திற்கு செய்யப்படும் பரிந்துரைகள் அறிக்கைகள் மற்றும் அத்தாட்சிப் பத்திரங்கள், எழுத்து வடிவில் அளிப்பது ஆகிய எல்லாவற்றினையும் அவர்களே செய்வர். பல கேள்விகள் நீதிமன்றம் சட்ட ஆய்வு உளவியலாளர்களை கேட்பது இறுதியில் சட்ட சம்பந்தம் ஆகிவிடும். இருப்பினும் ஓர் உளவியலாளர் சட்ட சம்பந்தமான கேள்விகளுக்கு உரிய விடை நீதி மன்றத்திற்கு அளிக்க இயலாது.எடுத்துக் காட்டாக, மூளை கோளாறு அற்ற நிலை என்பதற்கு ஒரு வரையறை உளவியலில் கிடையாது.உலகில் இடத்துக்கு இடம் அதன் பொருள் மாறுபடுகின்றது. ஆகையால், சட்ட ஆய்வு உளவியளாருக்கு வேண்டியது சட்டத்தை நன்கு புரிந்து கொண்ட தன்மை, அதுவும் குற்றவியல் சட்டம் பிரத்தியேகமாக அறிந்து கொண்டதே பிரதான தகுதியாகும். + +உலகளாவிய உளவியல் ஒரு துணைத் துறையாகும். உலகளாவிய முறையில் விவாதம் பல விஷயங்களில் எழுப்பப்பட்டு அதற்குரிய வலுவாதாரம் பெற வைப்பதாகும்.நெருக்கடி நுண்ணாய்வு உளவியல் போல உலகளாவிய உளவியல் மிகபெரிய அளவில் போக்குகள் விரிவைடைய செய்யும். உலக வெப்பம் ஆகுதல் அதன் விளைவுகள் பொருளாதார சீர்குலைவு பிற பெருமளவிலான விந்தை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆராயும். உலகளாவிய வலுவாதாரம் அல்லது தாக்குப்பிடிக்கும் திறன் தனிநபர்கள் மற்றும் பண்பாடுகள் விழுமியதாக இருப்பின் வெற்றிகரமாக கைகூடும். உலக உளவியலாளர்கள் ஆதரவாக வாதாடுவது, ஓர் எளிமையான, அறிவு பூர்வமாக, கிரகித்துக்கொள்ளும் உளவியல்தான் அதன் வலிமை என்பது யாதெனில் நெடுங்காலமாக மானிட இனம் நன்னலம் பெறுவது ஒன்றே ஆகும். + +உடல் நல உளவியல் மனோரீதியான கோட்பாடு மற்றும் ஆராய்ச்சி இவைகளின் பயன்பாடு உடநலம், நோ��், உடல்நல கவனிப்பு மூன்றினை ஒட்டி அமையும்.படுக்கை மருத்துவ மனை உளவியல் மனநலம், நரம்பு ரீதியான நோய், உடல்நல உளவியல், பற்றி ஆய்வது போல உடல்நல உளவியல் உடல்நல சம்பந்தமான நடத்தை பற்றி பரவலாக வரிசையில் அக்கறை செலுத்துகின்றது. அதில் இன்னும் உள் அடங்குவது, ஆரோக்கிய உணவுமுறை,மருத்துவர் நோயை உறவு, நோயாளியின் உடல்நலம் பற்றிய செய்தி அறிதல், அவரின் நோய் பற்றி கொண்டுள்ள நம்பிக்கை முதலியன ஆகும்.உடல் நல உளவியலாளர்கள் பொது சுகாதார தொடர் திட்ட நடவடிக்கைகள் ஈடுபாடு கொண்டு நோய்நொடி தாக்கத்தை அல்லது ஆரோக்கிய கொள்கையின் படி வாழ்க்கைத்தரம் அமைத்தல் மட்டும் அல்லாது உடல்நலம், சமூக கவனிப்பு இரண்டின் தாக்கம் உளவியல் ரீதியில் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர். + +தொழில் மற்றும் ஸ்தாபன உளவியல் மனோதத்துவ ரீதியில் உள்ள கோட்பாடுகள், வழிமுறைகள், யாவும் பயன்படுத்தி,பணி இடத்தில் மனிதனின் உள்ளாற்றல் தன்னை விழுமியதாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. பணியாளர்கள் உளவியல் தொ/ஸ்தா உளவியலின் ஒரு துணைத்துறை ஆகும். அது மனோதத்துவ அடிப்படை கொண்டு பணியாளர்களை தேர்ந்தெடுத்தல் அவர்களை மதிப்பீடு செய்தல் பற்றிய முறைகள், கொள்கைகள் பயன்படுத்துகின்றன. தொ/ஸ்தா உளவியலின் மற்றும் ஒரு துணைத்துறை ஸ்தாபன உளவியல் ஆகும். அது வேலைஇடத்தின் சுற்றுபுறங்கள், நிர்வாகத்தின் நடத்தும் முறை பணியாளர்களை ஊக்குவிப்பது, தொழில் திருப்தி, மற்றும் உற்பத்தி திறன் யாவையும் ஆய்கின்றன. + +சட்ட உளவியல் ஆராய்ச்சி சார்ந்த துறை ஆகும். அதில் அடங்கி உள்ளவர்கள் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள். உளவியலின் பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள். ( சமூகம், அறிவாற்றல், மனோ தத்துவ ஞானிகள் என வகைபடுத்தலாம்.)சட்ட உளவியலாளர்கள் நடுவர் தீர்மானம் செய்முறை, நேரில்கண்ட சாட்சியர்களின் நினைவகம், அறிவியலான தடயம்,மற்றும் சட்டக்கொள்கை இவைகளை எல்லாம் அறைந்து அறிவது."சட்ட உளவியல்" என்னும் சொல்லாக்கம் சமீப காலத்தில் தான் புழக்கத்தில் வந்துள்ளது. வகைப்படுத்தல்படி, அது மருத்துவமனை சாராத சட்ட தொடர்பான ஆய்வை மட்டுமே குறிப்பிடும். + +வாழ்க்கை உடல்நல உளவியல் (ஒஎச்பி) ஒரு பாடப் பிரிவாகும். அது உடல்நல உளவியல் மற்றும் தொழில்/ஸ்தாபன உளவியல் மூன்றிலிருந்து தோன்றி வந்ததாகும். ��எச்பி மனோ-சமூக அம்சங்கள் வேலையிடத்தில் உள்ளனவற்றை அடையாளம் காண்பதே ஆகும். அது இதய செல்குழாய்-நாள நோய், மனநலம், (உதாரணம் மன இறுக்கம்) தொடர்பான பிரச்சினைகளை ஆராய்கின்றது.ஒஎச்பி வேலை இடத்தில் காணப்படும் உளவியல் அம்சங்கள் பற்றி விசாரித்து அறிகின்றது. பணியாட்களின் தீர்மானத்தின் வீச்செல்லை, மற்றும் மேற்பார்வையாளர் ஆதரவு பற்றி அலசி ஆராய்கின்றது.ஒஎச்பி பல இடையீடுகள் பற்றிய கவலைகளை ஆராய்கின்றது. வேலை சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சினைகள் தடுப்பதும், மேன்மைப் படுத்துவதும் அது செய்து முடிக்கின்றது. அத்தகைய இடையீடுகள் முக்கிய, பலன்தரும் நிறுவனத்தின் பொருளியல் வெற்றியை உள்ளார்ந்த நிலையில் கொண்டுள்ளது. ஒஎச்பி யின் பிற கவலைகள், பணி இட வன்முறை, வேலைவாய்ப்பு இன்மை, பணி இட பாதுகாப்பு இவைகளையும் ஆராய்கின்றது.இரண்டு பின்பற்றி படிக்கும் ஒஎச்பி பத்திரிகைகள் ஆவன, வாழ்க்கை உடல்நல உளவியல் பத்திரிகை மற்றும் வேலையும் மன அழுத்தமும் குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு முக்கியாயத்துவமான தொழில்ரீதியான நிறுவனங்கள் உள்ளடக்கும் அமைப்புகள் ஆவது, வாழ்க்கைத் தொழில் உடல் நல உளவியல் ஐரோப்பியன் அகடெமி, வாழ்க்கைத்தொழில் உடல் நல உளவியல் சங்கம் ஆகும். + +ஆளுமை உளவியல் நடத்தை,எண்ணம்,மனஎழுச்சி அவைகளின் நீடித்த போக்குகள் மூன்றும் தனிநபர்களுக்கென பொதுவாக குறிப்பிடப்பட்டு ஆய்வதே யாகும். பல்வேறு உளவியல் பள்ளிகள் மற்றும் தொடர்பிணைவுகள் ஆளுமைக் கோட்பாடுகள் பற்றி உள்ள வேற்றுமைகளை விவரிக்கின்றன. அவைகள் வித்தியாசமான கருத்து யூகங்களை, தனுணர்வற்ற நிலை, குழந்தை பருவத்து அனுபவங்களின் முக்கியத்துவம் கொண்டு செல்லும் பங்காற்றுகின்றன.பிராய்ட் பொறுத்தவரை ஆளுமையானது, தன்முனைப்பு, உச்ச முதன்மை வாய்ந்த தன்முனைப்பு, உந்து உணர்வு இவைகளின் இயக்காற்றல் மிக்க செயல் எதிர் விளைவு அடிப்படையைச் சார்ந்து உள்ளது.பண்புத்திறன் கோட்பாடுகள் ஒரு மாறுதலில் ஆளுமையை தொடர்பற்ற எண்ணிக்கையில் முக்கிய பண்புத் திறன்கள் காரண பகுத்தாய்வு எனும் புள்ளிவிவர வழிமுறைப்படி ஆய்கின்றது.முன்மொழியப்படும் பண்புத் திறன்களின் எண்ணிக்கை பரவலாக மாறு பட்டுள்ளது.ஹான்ஸ் ஹைஸென்க் முன்மொழிந்த ஆரம்ப மாதிரி வாயிலாக அவர் தெரிவிப்பது என்னவென்றால் மனித ஆளுமை மூன்று பண்புநலன்கள் உள்ளடங்குகின்றன. வெளியில் உள்ள விஷயங்கள் விரும்புதல்-சுய எண்ணங்கள் உணர்வுகள் பற்றி பெரிதாக் கருதல், மட்டு மீறிய கூருணர்வு, மன ஆற்றல் குன்றியமை இவைகளே அப்பண்பு நலன்களை பாதிக்கின்றன.ரேமொன்ட் காட்டேல் முன்மொழியும் மற்றொரு கோட்பாடு பதினாறு ஆளுமை காரணங்கள் கொண்டுள்ளன.பண்புநலன்கள் கோட்பாடுகளில் ' பெரிய ஐந்து' அல்லது ஐந்து காரண மாதிரி கோட்பாட்டை லேவிஸ் கோல்ட்பெர்க்கின் கூற்றே பெரும் ஆதரவு பிறவற்றில் எல்லாம் கொண்டுள்ளது. + +எண் அளவு உளவியல் கணக்கு, புள்ளிவிவரம் மாதிரிகளை நன்கு பயன் படுத்தி மனோ அராய்ச்சி செய்யவும், புள்ளி விவர முறைகள் கொண்டு நடத்தை தரவினை விவரிக்கவும், பகுப்பாய்வு முடிக்கவும் ஏதுவாகின்றது. +'எண் அளவு உளவியல்' ஒரு புதிய, சிறிதளவு பயன்படுத்தும் சொல்லாக்கம் என்றுள்ளது.( பி எச் டி முனைவர் பெரும்பட்டம் பெற சமீப காலத்தில் தான் இத்துறை பெயரில் உருவாகிஉள்ளது. துணை துறைகளாக உள்ள மனோ யாப்பியல், கணக்கியல்உளவியல் இரண்டும் தளர்நிலையிலும் நெடுங்காலமாக இருக்கின்றன. + +மனோயாப்பியல் உளவியல் துறையில் கோட்பாடு மற்றும் தொழில் நுட்பம் கொண்டு உளவியல் அளவீடு செய்ய உதவுகின்றது. அதில் அடங்குவது அறிவு, திறமைகள், பழக்க நடவடிக்கை மற்றும் ஆளுமை பண்புநலன்கள். இத்தகைய அபூர்வத்தை அளப்பது சிரமம் எனினும்அதை வரையறை செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் நிரம்ப அராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.மனோயாப்பு ஆராய்ச்சி இரு முக்கிய ஆய்வுப்பணிகளை உள்ளடக்கி உள்ளது. கருவிகள் அமைப்பும் அளவிடும் முறைகளும், கோட்பாட்டு நோக்கங்களை வளர்ச்சி மற்றும் செம்மை அளவீடு செய்வதும் ஆகும். + +கணக்கியல் உளவியல் ஒரு துணை பாடப்பிரிவாகும். அது முக்கிய அக்கறை உளவியல் கோட்பாடு கணக்கு, புள்ளிவிவரம் படங்களில் வளர்ச்சி பெற வைப்பதே ஆகும்.இதில் அடிப்படை தலைப்புகள் ஆவன: அளவை கோட்பாடு, கணக்கியல் கற்கும் கோட்பாடு மேலும் மனோ, இயக்க விசை நடை முறைகள்.மனோயாப்பு அதிகம் தொடர்பு கல்வி உளவியல், ஆளுமை, மருத்துவமனை உளவியல் துறைகளில் கொண்டுள்ளது.கணித இயல் உளவியல் அதிக நெருக்கம் தொடர்பு உள்ள உளவியல் பொருளாதாரம் பரிசோதனை, அறிவாற்றல், உடல்-உளவியல், அறிவாற்றல் நரம்பு அறிவியல் ஆகிய எல்லாவகையான துறைகளில் கொண்டுள்ளது. + +சம���க உளவியல் சமூக நடத்தை மற்றும் மனத்தின் நடைமுறைகள் எப்படி மனிதர்கள் ஒவ்வொருவர்களை பற்றி நினைக்கின்றனர் எப்படி ஒவ்வொருவர்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பதை நன்கு ஆராய்வதே ஆகும்.சமூக உளவியலாளர்கள் பிரத்தியேகமாக எப்படி மக்கள் சமூக சூழ்அமைதிகளில் எதிர்வினை புரிகின்றனர் என்பதை பற்றியே ஆர்வம் காட்டுகின்றனர்.அவர்கள் தனிநபர் நடத்தை பற்றி எப்படி மற்றவர்கள் செல்வாக்கை செலுத்துகின்றனர் அது சம்பந்தமான தலைப்புகளை ஆராய்கின்றனர். அவைகளாவன: ஒத்துப் போகுதல் (இணக்கம்), இணங்க வைத்தல், நம்பிக்கைகளின் உருவாக்கம், மனப் பான்மைகள், பிறர் காலநிலை வேறு பாடற்ற வகை ஆகியன ஆகும்.சமூக அறிவாற்றல், சமூக மற்றும் அறிவாற்றல் சார்ந்த உளவியல்களில் அதன் அம்சங்களை கலந்திடச் செய்து, எப்படி மக்கள் சமூகத்தின் செய்தியை வழிமுறைப் படுத்துவது, நினைவுக்குக் கொண்டுவருவது, சிதைந்திடச் செய்வது அனைதையையும் ஆராய்கின்றனர்.குழு விசைஇயக்கம் பற்றிய ஆய்வு என்னவெனில், தலைமை, செய்தி தொடர்பு, பிற அபூர்வம் நுண்சிறு சமூக மட்டத்திலிருந்து எப்படி தோன்றி வருகின்றது எல்லாவற்றிலும் நன்மை நாடும் உள்ளாற்றல் அதன் தன்மை வாயிலாக எப்படி செய்தி வெளிப்படுத்துகின்றது என்பதை ஆய்வு செய்கின்றனர்.சமீப வருடங்களில், பல சமூக உளவியலாளர்கள் அதிகமாக ஆர்வம் செலுத்துவது தெளிவான அளவீடுகளில் ஆகும். மத்தியஸ்த மாதிரிகள், ஒரு நபர் சமூக மாறியல் மதிப்புருகள், நடத்தையை மாற்ற எங்ஙனம் உதவுகின்றது என்பதை ஆய்வதும் ஆகும். + +பள்ளி உளவியல் என்பது கல்வி உளவியல் மருத்துவமனை உளவியல் இரண்டின் கொள்கைகளை இணைப்பதாகும். கற்பிப்பதில் குறைதிறன்கள் கொண்ட மாணவர்கள் புரிந்து கிரகித்துக் கொள்வதும், அதே போல நுண்ணறிவு வளர்ச்சிப்பேறு பெற்ற மாணவர்கள் நிறைதிறன்கள் பேணுவதும், வளர் இளமைப்பருவத்தினரின் சமூக ஆதரவு நடத்தையை கவனித்து, ஒரு பாதுகாப்பான, ஆதரவான, பலன்தரும் கற்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஆகிய அனைத்தும் செய்கின்றது.பள்ளி உளவியலாளர்கள் கல்வி மற்றும் நடத்தை மதிப்பீடு செய்ய பயிற்சி பெற்றமையால் இடையீடு, வருமுன் காப்பு, ஆலோசனைகள், போன்றவற்றில் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியிலும் அவர்கள் பரவலான பயிற்சி பெற்றுள்ளனர். நடப்பு காலத்தில், பள்ளி உளவியல் ஒர��� துறையினர்தான், தொழில் ரீதியில் ' உளவியலாளர்' என்று அழைக்கப் படுகின்றனர். ஆனாலும் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அல்லர். அதற்கு மாற்றாக (ஏன்எஎஸ்பி) என்ற தேசிய அமைப்பு- பள்ளி உளவியலாளர்கள் என்பதில் நுழைவு மட்டத்தில் நிபுணத்துவ பட்டம் பெற்றுள்ளனர். இது ஒருவகையில் சர்ச்சைக்கிடமான விஷயமாகும்.ஏபிஏ டாக்டரேட் பட்டத்துக்கு கீழ் நுழைவு அளவில் ஓர் உளவியலாருக்கு பிற பட்டம் ஏதும் ஏற்பதில்லை. நிபுணர் அளவில் பள்ளி உளவியலாளர்கள் மூன்றாண்டு கால பட்டப்பயிற்சி பெறுகின்றனர். பள்ளிக்குரிய முறைமைகளுக்குள் அவர்கள் செயலாற்றுகிறார்கள். டாக்டர் பட்டம் பெற்றோர் பல்கலை கழகங்கள், மருத்துவ மனைகள், படுக்கை மருத்துவ மனைகள், அல்லது தனியார் பயிற்சி அமைப்புகள் இவைகளில் பணிபுரிகின்றனர். + +உளவியல் பல கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அளித்து நம்மை 'பன்னலத் திரட்டாளர்' ஆக்கும். அதற்கு செய்ய வேண்டியது அறிவை பிற துறைகளில் இருந்து ஈர்த்துக்கொள்ள வேண்டும். பின்னரே உளவியல் அபூர்வத்தை விளக்கவும் புரிந்து கொள்ளவும் இயலும்.இன்னும் கூடுதலாக, உளவியலாளர்கள் மூன்று வகையான அனுமானங்களை பரவலாக பயன்படுத்துகின்றனர். சி.எஸ்.பியர்சி சொல்வதன்படி, உய்த்து உணர்தல், தொகுப்பு ஆய்வு, பிரித்தெடுத்தல், மற்றும்( தாற்காலிக பொது விளக்கக் கோட்பாடு உருவாகுதல்) ஆகியன வாகும்.உளவியலாளர்கள் அடிக்கடி உய்த்துணர்தல் ஆய்வினையே பயன்படுத்தினாலும், தொகுப்பு ஆய்வை பல விவரங்கள் காரணத்துடன் உருவாக்க அதன் மீது சார்ந்துள்ளனர்.எடுத்து காட்டாக படிவளர்ச்சி உளவியலாளர்கள் மனித நடத்தையைப் பற்றிய விளக்கம், அதை தேடி அடைவோர்களின் பலன் கருதி முன்மொழிகின்றனர். + +அகடெமி சார்ந்த உளவியலாளர்கள் ஆராய்ச்சி, உளவியல் கோட்பாடுகள் மீதே கவனம் செலுத்துவர். அவர்கள் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பகுதியை உளவியல் ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே யாகும். ஆனால் மற்ற உளவியலாளர்கள் தம் துறையை பயன் படுத்தும் நோக்கத்திற்காக அந்த அறிவை உடனடி செயல் முறை பலனுக்காக உபயோகிப்பர்.இந்த அணுகுமுறைகள் பரஸ்பரம் பரவலானது மட்டும் அல்ல, பல உளவியலாளர்கள் உளவியலை ஆராய்வதுடன், அதை பயன்படுத்தவும் சில கருத்திற்காக தொழில் முறையில் செய்கின்றனர்.பல மருத்துவ மனை சார்ந��த திட்டங்கள் கொண்ட நோக்கத்தின் படி, அவைகளை நடைமுறைப் படுத்தும் உளவியலாளர்கள் ஆராய்ச்சி, பரிசோதனை முறைகளை அறிவு நலனுக்காக பயன் படுத்துகின்றனர். மனோதத்துவ ரீதியாக பிரச்சினைகள் கொண்ட தனிநபர்களை சிகிச்சை அளிக்க அவர்கள் உபயோகிக்கின்றனர். + +ஓர் அக்கறையான பகுதி அதற்கென குறிப்பிட்ட பயிற்சி, குறிப்பிட்ட அறிவு பெறுவது தேவைப் படும் நிலையில், உளவியல் அமைப்புகள் ஒரு ஆளும் குழுவை நியமித்து பயிற்சிக்கான தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.அது போலவே, உளவியல் பட்டம் பல்கலைகழகத்தில் பெற வேண்டி, சில தேவைகளை பூர்த்தி செய்தால்தான், மாணவர்கள் பல பகுதிகளில் போதிய ஞானம் பெற இயலும்.கூடுதலாக, ஆள்கின்ற முகமையர்கள், உளவியலாளர்கள் சிகிச்சை தர வேண்டி, அவர்களுக்கு முறையான அரசாங்கக் கட்டுபாடுகள் கொண்ட குழுமங்களால் உரிமம் வழங்கலாம். + +உளவியலின் அதிக பகுதிகளில் ஆராய்ச்சி அறிவியல் பூர்வமாக தரங்களை ஒட்டியே நடத்தப்படுகின்றன.உளவியலாளர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு நலன் கொண்ட வகைப்பாடுகளை, பொது விளக்கக் கோட்பாடுகளை, உருவாக்கிட வேண்டி தரவுகள் தரமார்ந்த, எண்ணிக்கை வழிமுறைகளில் அல்லது இரண்டும் கலந்ததை நாடுகின்றனர். + +தரமான உளவியல் ஆய்வு முறைகளில் அடங்குவது: நேர்முகப் பேட்டி, முதல் தரப்பு உற்று நோக்கல்கள், மற்றும் பங்கேற்பாளரின் உற்றுநோக்கல் ஆகியனவாகும். +தரமான ஆய்வாளர்கள் சிலசமயங்களில் இடையீடுகளைச் செழுமைப் +படுத்துவர்.திறனாய்வுக் கோட்பாடு குறியீடுகளை செம்மைப் படுத்துவர். அதேபோல் உட்படுத்தப்பட்ட அனுபவங்கள், அல்லது சமூக கட்டமைப்பகள் இவைகளையும் மேம்படுத்துவர். +அதேபோல பொருள்கோள்இயல் சார்ந்த துறைப்படி திறனாய்வு நோக்கங்கள் 'எண்ணளவான வழிமுறைகள்' என்று கருதப்படுகின்றன. எரிக் ஃப்ரோம்ம் ஆய்வுப்படி நாஸிகள் வாக்குமுறை அல்லது ஸ்டான்லி மில்கிராம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிதல் அய்வுகள் படி அதேபோல் கருதப்படுகின்றன. + +எண்ணளவான உளவியல் ஆய்வு தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாட்டுக்குரிய புள்ளிவிபரச் சோதனைகள் நடத்த உறுதுணைபுரிகின்றது. +மேலும் இத்தகு ஆய்வில் உள்ளடங்குவன: பரிசோதனை, அரை-பரிசோதனை, குறுக்கு வெட்டு ஆய்வு,முன்மரபு கட்டுப்பாடு விளக்க ஆய்வு, நீட்டுப்போக்கான ஆய்வு ஆகியனவாகும். +முக்கிய மான கட்டுதிட்டங்கள் அவைகளின் அளவீடு, இயக்குமுறை இப்படிப்பட்ட ஆய்வு வரையறைகளில் பங்குவகிக்கின்றன. +புள்ளி விவர முறைகள் உள்ளடக்குவன: பியர்ஸன் பெருக்கல் தருணம் உறவுடைய குணகம், வேறுபாடின் பகுப்பாய்வு பன்மடங்கு ஒருபடி பின்னடைவியக்கம், கணிப்பியல் பின்னடைவியக்கம், கட்டுமான சமன்பாட்டு மாதிரி ,படிநிலை அமைப்பில் ஒருபடி மாதிரி ஆகியனவாகும். + +கட்டுப்பாடான நிலவரங்கள் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் தான் பரிசோதனை உளவியல் ஆராய்ச்சி நடத்தப்படுகின்றது. இந்த வழிமுறை விஞ்ஞான முறையில் நடத்தைப்பற்றி புரிந்துகொள்ள பயன்படுகின்றது. + +பரிசோதனை ஆய்வாளர்கள், பல்வேறு வகையான அளவீடுகள், இணக்கவீதம், எதிர்ச்செயல் புரியும் நேரம், பல்வேறு மனோரீதியான அளவீடுகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர். +பரிசோதனைகள் குறிப்பிட்ட தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாடுகள் பெற அதை சோதிக்க (விதிதரு அணுகுமுறையிலும்), (தொகுப்பாய்வு அணுகு முறையிலும்) செயல்முறை உறவுகள் மதிப்பிட ஏதுவாகின்றன. +அவைகள் ஆய்வாளர்கள் நடத்தை, சூழ்நிலை இரண்டிற்குமுள்ள தொடர்புகள் நிறுவப்பட துணைபுரிகின்றன. +ஒரு பரிசோதனையில் ஒன்று அல்லது அதற்குமேலும் உள்ள (மாறியல் மதிப்புரு) நலன்களை சுயேச்சையான மதிப்புருக்களைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மற்ற முறையில் அளவிட (சுயேச்சை மாறியல் மதிப்புருக்கள்) அம்மதிப்புக்களையே பயன்படுத்தியே பல்வேறு நிலவரங்கள் காணலாம். +பரிசோதனைகள் உளவியலில் பல பகுதிகளில் ஆரம்ப வழிமுறை ஆய்வுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக அறிவாற்றல் பகுதி- மனோஆதராரம்- கணக்கியல் உளவியல், மனோ உடலியல், உயிரியல் உளவியல், மற்றும் அறிவாற்றல் சார்ந்த நரம்பு இயல் விஞ்ஞானம் ஆகும். + +பரிசோதனைகள் மனிதர்கள்பால் நடத்துகையில் சில கட்டுதிட்டங்களுக்குள் உட்படுத்தப்படுகின்றன. அது தகவல் தெரிவிக்கப்பட்டும் அல்லது தன்னார்வமாகவோ விதிக்கப்படுகின்றன. +இரண்டாம் உலகப்போருக்குப்பின் நூரம்பர்க் தொகுப்பேடு உருவாக்கப்பட்டது. ஏனெனில் நாஸிக்கள் பரிசோதனைப் பொருள்கள் மேல் வசவு பொழிந்தனர். +பின்னாளில் பலநாடுகள் (அவைகளின்விஞ்ஞான சஞ்சிகைகள்) ஹெல்சிங்கி அறிக்கையைப் பின்பற்றினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், தேசிய சுகாதார நிறுவனங்கள், 1966 ஆம் ஆண்டில் ஸ்தாபன மதிப்பீட்டு கழகம் ஒன்றை நிறுவியது. +அது 1974 ஆம் ஆண்டில் தேசிய ஆராய்ச்சி சட்டம் (எச்.ஆர்.7724) அமுலுக்கு வந்தது. +எல்லா நடவடிக்கைகளும் ஆராய்ச்சி யாளர்களை பரிசோதனை ஆய்வுக்குட்படும் பங்கேற்பாளர்கள்தம் அறிவிக்கப்பட்ட இசைவை முன்கூட்டியே பெற ஊக்குவிக்கப் பட்டது. பல்வேறு செல்வாக்குமிக்க ஆய்வுகள் இந்த விதியை நிலைநாட்டச் செய்தது. அத்தகைய ஆய்வுகள் எம்ஐடி மற்றும் பெர்ணாண்ட் பள்ளியின் ஊடுகதிர் ஓரகத்தனிம ஆய்வுகள் நடைபெற ஏதுவாயின. தாலிடோமைட் துன்பநிகழ்வு, வில்லோபரூக் கல்லீரல் அழற்சி ஆய்வு, ஸ்டான்லி மில்கிராம் அதிகாரத்திற்கு கீழ்ப்படியும் ஆய்வுகள் ஆகியனவும் நடைபெற்றன. + +புள்ளி விவர சர்வேக்கள் உளவியலில் மனப் பான்மைகள், பண்புநலன்கள், மனநில மாறுதல்களை மேற்பார்வையிடுதல், பரிசோதனை வினைத்திறன் கையாளுதல், போன்ற பலவகை யான உளவியல் தலைப்புகள் யாவும் பயன் படுத்துகின்றன +பொதுப்படையான முறையில் உளவியலாளர்கள் பென்சில்-தாள் சர்வேக்களையே உபயோகிக் கின்றனர். + +சர்வேக்கள் தொலைபேசி மின் - அஞ்சல் வாயிலாகவும் நடத்தப் படுகின்றன. இணையதள சர்வேக்களின் உபயோகம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. +அதேபோல ஒத்த வழிமுறையியல்படி, பயன்பாட்டு அமைப்புக்கேற்ப அதாவது மருத்துவமனை மதிப்பீடு மற்றும் வேலையாட்களின் மதிப்பீடு இரண்டிலும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. + +நீண்டகால ஆய்வு ஒரு ஆராய்ச்சி வழிமுறையாகும். அதன்படி ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையினரை குறிப்பிட்ட காலம் வரை உற்றுநோக்கலே ஆகும். +ஒருவர் குறிப்பிட்ட மொழியியல் ஊறுகள் (எஸ்எல்ஐ) பற்றி ஆய்வு பற்றிக் கூறலாம். இம்முறையில் ஒரு நிலவரத்தின் படி, அது எவ்வகையில் தனிநபர் குழுக்களை நெடுங்கால அளவில் பாதிக்கும் என்றறியலாம். +ஆயினும், அத்தகைய ஆய்வுகள் தேய்ந்து போய் வீழ்ந்து போகும் அல்லது மடிந்தும் போக நேரிடும். +சமூகத்தில் குழு உறுப்பினர்களிடையே உள்ள வித்தியாசங்கள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் மக்கள்தொகை பற்றிய இறுதி முடிவுகள் காண மிகவும் சிரமமாகும். +நீண்ட கால ஆய்வு ஒரு வளர் ஆய்வு யுக்தி யாகும். அதன்படி ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினர் பற்றிய மீண்டும் மீண்டும் சோதனை வருடக்கணக்கில் நடத்தினால் உரிய பலன்கிட்டும். +நீண்டகால ஆய்வு மக்கள் எங்ஙனம் வளர்ச்சி காண்கின்றனர் என்பது பற்றி��� முக்கியத்துவம் மிகுந்த வினாக்களுக்கு விடை காண்பதும் வேண்டப்படுகின்றது. இந்த வளர்ச்சியடைந்த ஆய்வு பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன் விளைவு நம்ப முடியாத வரிசையில் கண்ட விடைகள் குறிப்பாக உளவியல் பிரச்னைகள் சம்பந்தப்பட்டதாகும். + +சில நீண்ட கால ஆய்வுகள் பரிசோதனைகளாக இருக்கும். அவைகள் மீள் பரிசோதனை அளவுகள் என்றும் அழைக்கப்பெறும். + +உளவியலாளர்கள் அடிக்கடி பயன்படுத்துவது குறுக்குவெட்டு வகைப்பாடு முறைமை ஆகும்.அதனால் உடன்தொக்கியுள்ள குழப்பமான பாடங்கள் அதன் எண்ணிக்கையை குறைத்திட அவைகளின் தாக்கத்தை மட்டுப்படுத்த இயலும். + +இதே வழியில் ஜேன் குட்ஆல் சிம்பான்சிக் குரங்கின் சமூக குடும்ப வாழ்க்கையை ஆய்வு நடத்தினார். உளவியலாளர்கள் அதேபோல் ஒத்த உற்றுநோக்கல் ஆய்வுகளை மனித சமூகம் அவர்களின் தொழில், குடும்ப வாழ்க்கைகள் பற்றி நடத்தியுள்ளனர். சிலநேரங்களில் பங்கேற்பாளர்கள் நன்கறிந்துள்ளனர் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் உற்றுநோக்கிக்கொண்டே உள்ளார்கள் மற்ற சமயங்களில் அது மறைமுகமாக நடந்துகொண்டு வருகின்றது. பங்கேற்பாளர்கள் அதை அறியாமல் இருக்கலாம். +மறைமுக உற்றுநோக்கல் நடைபெறும்போது அறநெறிசார்ந்த வழிகாட்டுரைகள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம். + +நடப்பு விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடைகாண்பதை ஆராய்ச்சிகள் வகைப் படுத்திக்கொண்டு வருகின்றது. அதாவது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் எல்லாம் விளக்கமான ஆராய்ச்சி எனப்படும், + +அவ்வகை ஆராய்ச்சி தரமானதாக அல்லது எண்ணளவு கொண்டும் அதன் சார்பில் இருக்கும். தரமான ஆராய்ச்சி என்பது விளக்கமான ஆராய்ச்சி ஆகும். +நிகழ்ச்சிகள் மீது கவனம் குவிந்திருக்கும். அது நடக்கும் போது உரிய விளக்கமும் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் நடத்தையின் மேம்பாடு ஒன்றையே இலக்காகக் கொண்டு அந்த அபூர்வத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்படும். ஒருவேளை மேலோட்டமான சோதனைகள் நடத்தப்படும் போது முடிவுகள் காண்பது தவற விடப்படக்கூடும். + +நரம்பு உளவியல் வழிமுறையில் தனிநபர்கள் மற்றும் நோயாளிகள் இருவரையும் பற்றிய ஆய்வு நடத்துவதே ஆகும். அவர்கள் மூளைக்காயம் பட்டிருக்கலாம் அல்லது மனநோய் கொண்டுமிருக்கலாம். + +அறிவாற்றல், நரம்பு உளவியல் மற்றும் அறிவாற்றல் நரம்பு மனோசிகிச்சை அளிக்கும் ஆய்வு, நரம்பு சம்பந்தமான அல்லது மனஊறு ஏற்படுவதன் ஆய்வு, அதன்கோட்பாடுகள் சாதாரணமான மனம், மூளை இரண்டின் செயல்முறைகள் யாவையும் அராய்வதாகும். + +இந்த வகையில் ('செயல்படும் இணைப்பறு அமைப்புகள்') அதன் எஞ்சியுள்ள திறனாற்றல் அதன் வகைப்பாடுகள் எப்படி விளக்கக்குறிப்புகளை அளிக்கின்றது, திறனாற்றல்கள் உள்ளடங்கும் சிறுசெயல்முறைகள் எப்படி ஒற்றை அறிவாற்றல் பின்னியக்கவிசையால் கட்டுப்படுத்தப் படுகின்றது என்றெல்லாம் ஆராய்கின்றது. + +இதற்கும் கூடுதலாக பரிசோதனை தொழில்நுட்பக் கூறுகள் ஆரோக்கியமான தனிநபர்களை பற்றியும், நரம்பு உளவியல் பற்றியும் ஆராய்வதாகும். +நடத்தை பற்றிய பரிசோதனைகள், மூளை ஸ்கேன் செய்வது, செயல்படுத்தும் நரம்புபிம்பங்கள் எடுத்துப் பார்த்து மூளை எப்படி இயங்குகின்றது என அறியலாம். கடினகாரியம் நிறைவேற்றுதல், தொழில்நுட்பக் கூறுகள் அதாவது மூளையின் சிறு பகுதிகள் தண்டுவடம் ஊடுசெல்லும் காந்த ஊக்குவிப்புகள் வெளிப்படுத்துவது மனோஇயக்கத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஆய்ந்தறியப் படுகின்றது. + +கணணி மாதிரி ஒரு கருவியாகும் அது கணக்கியல் உளவியல் அறிவாற்றல் உளவியல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை ஊக்குவிக்க கணணியைப் பயன்படுத்துகின்றது. +இந்த முறை பல நன்மைகள் கொண்டதாகும். நவீன கணணிகள் முழுவீச்சில் துரிதமாக இயங்குகின்றன. குறுகிய காலத்தில் பல ஊக்குவிப்புகள் கொண்டு செயல்படுகின்றன. புள்ளிவிவரங்கள் ஏராளமாக எடுக்க உதவுகின்றன. +மாதிரியமைப்புகள் உளவியலாளர்கள் தாற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடுகளை கண்பார்வையில் புலப்பட வைக்கின்றது. மன நிகழ்ச்சிகளை செயல்முறை அமைப்பால் அறியக் கூடும் ஏன்எனில் நேரடியாக ஒரு மனிதனுள் காண இயலாது. + +பல்வேறு வகையிலான மாதிரியமைப்பு நடத்தையைப் படித்தறிய உதவுகின்றது. +நரம்பு வலைப்பின்னல்கள் தொடர்புகள் கொண்டிருப்பதால் மூளையை ஊக்குவிக்க இயலுகின்றது. இன்னொரு வழிமுறை குறியீட்டு மாதிரியமைப்பாகும். அது மனத்தின் பலவகைப்பொருள்களை மாறியல் மதிப்புரு அதன் விதிகள் பயன்படுத்தி அறிய உதவுகின்றன. +பிற மாதிரியமைப்பு உள்ளடக்குவது யாதெனில் இயக்கவிசை மண்டலங்கள் அதன் மாதிரியமைப்பு புள்ளிவிபரமாகப் பகுத்தாய்ந்தாலும் துல்லியமாக கணிக்கவொண்ணாத வண்ணம் அது இருக்கும். + +விலங்குகள் கற்கும் பரிசோதனை உளவியல் அம்சங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதாவது உயிரியல் அடிப்படையில் கற்றல், நினைவகம், நடத்தை பற்றியெல்லாம் விசாரனை செய்வது போலவே ஆகும். + +1890 ஆம் ஆண்டில் உடல்நூலியலார் ஐவான் பாவ்லாவ் நாய்களைப் பிரசித்தி பெற்ற அளவில் பயன்படுத்தினார். அதன்மூலம் தக்க சூழ்நிலையமைப்பை விவரித்தார். + +மேலும் மனிதல்லாத வகையில் பால்குடி உயிரினங்களான பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் கொறி விலங்குகள் உளவியல் பரிசோதனைகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. கட்டுப் பாடான பரிசோதனைகள் ஒரே ஒரு மாறியல் மதிப்புரு ஒரே நேரத்தில் இருப்பதால் விலங்குகள் பரிசோதனைகளுக்குட்பட ஆய்வுக் கூடத்து அமைப்புகளில் பயன்பாட்டிற்கென வைத்திருக்க வேண்டியதாயிற்று. + +இதற்கு மாறாக மனிதச்சூழ்நிலை, மரபணு பின்னணிகள் பரந்த அளவில் மாறுபாடு அடைவதால் மானிடப் பாடங்களுக்கென முக்கிய மாறியல் மதிப்புருக்களைக் கட்டுப்படுத்தல் இயலாததாக இருந்தமையால் விலங்குகளை நாட வேண்டியதாயிற்று. + +உளவியல் பற்றிய விமர்சனங்களில் அடிக்கடி வருவது புலனுணர்வுக் காட்சிகள் மூலமாகவேதான், அதாவது அது ஒரு 'குழம்பிய' விஞ்ஞானம் எனப்படுவதேயாகும +தத்துவஞானி தாமஸ் குஹ்ன் 1962 ஆம் ஆண்டில் உளவியல் பற்றி மொத்தத்தில் ஒரு முன்-இலக்கண மேற்கோள் வாய்ப்பாடு நிலையிலே உள்ளது. இயற்பியல். ரசாயனம் போல முதிர்ந்து விஞ்ஞானமாக கோட்பாட்டு ரீதியில் ஒத்து இருக்கவில்லை. +எனவே உளவியலாளர்கள், தத்துவ ஞானிகள் அந்த பிரச்சனையை பல்வேறு முறைகளில் தீர்த்து வைக்க முனைந்தனர். + +ஏன் என்றால் உளவியலின் சில பகுதிகள் ஆராய்ச்சி வழிமுறைகள் ஆன சர்வேக்கள் மற்றும் வினாப்பட்டியல்களை சார்ந்தே உள்ளது. அது விஞ்ஞானபூர்வமற்றது. (அதிகப் படியாக சர்வே ஆராய்ச்சி தொடர்பியல்பு கொண்டுளளது) என்று விமர்சனதாரிகள் குறை கூறினர். +பிற அபூர்வநிலை என உளவியலாளர்கள் அக்கறையுடன் ஆராய்வது ஆளுமை, எண்ணுதல், மனஎழுச்சி யாவும் நேரடியாக அளவிடமுடியாது. அது அடிக்கடி குறிப்பிடப்படுவது சுயஅறிக்கைகள் அதுவும் அதில் பிரச்சனைகள் உள்ளதென்று! + +பொதுவிளக்கக் கோட்பாடு நிறுவும்போது தவறான முடிவுக்கும் வர உளவியலில் வாய்ப்புகள் உள்ளனவென்று கூறப்பட்டுள���ளது. அதுவும் டாக்டர் பட்டம் உளவியலில் மற்றும் புள்ளியியலில் பெற்றிராதவர்கள் உரிய பயிற்சி இன்மையால் அப்படி நேர்ந்திட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. +ஆராய்ச்சியின்படி பல உளவியலாளர்கள் புள்ளிவிவர முக்கியத்துவம் நடை முறை முக்கியத்துவத்தும் இன்றி உள்ளதை பற்றிக் குழப்பமாகவே கருத்துக்கொண்டுள்ளனர். +புள்ளிவிவரம் என்பது முக்கியமானதுதான் ஆனால் நடைமுறையில் அதிகம் படி மாதிரிகளில் முக்கியமில்லாத முடிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அபிப்பிராயப் படுகின்றனர் +சில உளவியலாளர்கள் புள்ளி விவரம் விடைதரும் அளவு பயன்படும், அதுவும் ஒருதனி சார்பாக பிஷரியன் "p" <. 05 கொள்கைப்படி தனிச்சிறப்பான மூலப்பிரமாணம் என்றே கருதுகின்றனர். (அதன்படி உற்றுநோக்கிய வித்தியாசம் 'புள்ளிவிவரப்படி சிறப்புத்தன்மை' கொண்டதாகவே விளங்கும். அது அளவில் 5% ஈடாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். சுயேச்சையான விடைகள் ஒருவேளை உகந்ததாக இருக்கும். பொதுவிளக்கக் கோட்பாடுகள் தாற்காலிகமாகவும் இருதரப்பான சிகிச்கைகளுக்கிடையில் செல்லுபடி ஆகாமல் இருக்கும்). + +சில சமயங்கள் விவாதங்கள் ஆய்வுக் கூடங்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கிளினிக்குகளில் பயிற்சியாளர்கள் இடையில் தோன்றி வரும். +ஒரு வாதம் என்னவென்றால் மதிப்பிழந்த கோட்பாடுகள் அடிப்படையில் சிகிச்சைகள் உள்ளன அதுவும் செயலறிவால் அதன் சாட்சியங்களால் அவை ஆதரவு பெறவும் இல்லை. +மற்ற பக்கக் கருத்துக்கள் சமீப ஆராய்ச்சிக்கென உள்ளது யாதெனில் எல்லா முக்கிய நீரோட்ட சிகிச்சை முறைகள் சமமான விளைவையே ஏற்படுத்தும். கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அடிக்கடி உண்மையான உலக நிலவரங்களுக்குகந்ததாக கருத்தில் கொள்ளப்படமாட்டாது. + +விஞ்ஞானக் கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடு இரண்டிற்கும் இடையே கண்ணில் புலப்படும் அளவிற்கு இடைவெளி உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுவதும் உண்டு. அதுவும் கிளினிக் நிருபிக்கப்படாத ஆதாரமில்லாத மருத்துவமனைப் பயிற்சிகளே பயன்படுத்தப்படுகின்றன. +ஆராய்ச்சியாளர் பெயர்ஸ்டெயின் (2001) நிறைய அளவில் மனநல பயிற்சி திட்டங்கள் அதிகரித்தாலும் அவைகள் விஞ்ஞான முறையில் இல்லை என வலியுறுத்தப் பட்டுள்ளது. +ஆலென் ந்யூரின்ஜெர் 1984 ஆம் ஆண்டில் அதேபோல ஒத்த கருத்தை பரிசோதனைப் பகுப்பாய்வு முறையின் அடிப்படையில் நடத்தையைப்பற்றி ஆய்கையில் இவ்வாறு கூறியுள்ளார். + + + + + + +லாத்வியா + +லாத்வியா (lætviːə) அல்லது லாத்வியக் குடியரசு ("Republic of Latvia", லாத்விய மொழி: "Latvija" அல்லது "Latvijas Republika", லிவோனிய மொழி: "Lemō"), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது. + + + + + +மணித்தியாலம் + +மணி ("hour") அல்லது மணித்தியாலம் என்பது காலத்தை அளவிடப் பயன்படும் ஓர் அடிப்படை அலகாகும். இது SI அல்லது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகாகும். + +தற்போதைய பயன்பாட்டில், ஒரு மணித்தியாலம் என்பது 60 மணித்துளிகளை அல்லது 3,600 நொடிகளைக் குறிக்கும் ஒரு கால அளவு. இது அண்ணளவாக ஒரு சராசரி புவி நாளின் 1/24 பங்காகும். + + + + + +முட்டை + +முட்டை என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு. + + + + +போதிசத்துவர் + +பௌத்த சித்தாந்தத்தில், போதிசத்துவர் (பாளி: போதிசத்தா; தாய்: போதிசத், โพธิสัตว์) என்ற சொல்லுக்குப் 'போதிநிலையில் வாழ்பவர்' என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பௌத்த பிரிவும் "போதிசத்துவர்" என்பதை வெவ்வேறு விதமாக விளக்குகின்றன. கௌதம புத்தர் போதிநிலையை அடைவதற்கு முற்பட்ட காலத்தில், தன்னை போதுசத்துவர் என்றே அழைத்துக்கொண்டார். + +மஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள். + +மகாயானம் அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் போதிசத்துவ உறுதிமொழிகள் எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர். + +போதிசத்தா என்ற பாளிச் சொல், சாக்கியமுனி புத்தர் தனது முற்பிறவியில் தன்னைச் சுட்டுவதற்கும், போதி ஞானம் கிடைப்பதற்கு முன்பிருந்த தம்மைச் சுட்டுவதற்கும் பயன்படுத்திய ஒரு சொல். புத்தர் போதசத்தாவாக இருந்த காலக்கட்டத்தில் அவர் தனக்கு ஞானம் கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்ததாக கூறுவர். எனவே அவர் தனது போதனைகளில் தனது முற்பிறவிக் கதைகளைக் கூறுகையில், "நான் ஒரு ஞானம் பெறாத போதிசத்தாவாக இருந்த காலத்தில்..." என தனது உரையைத் தொடங்குவார். எனவே தேரவாதத்தில் போதசத்துவர் என்றால் 'போதி நிலைப் பெற ஆயத்தமானவர்' என பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. சாக்கியமுனி புத்தர் முற்பிறவியில் போதிசத்துவராக இருந்த விபரங்கள் ஜாதகக் கதைகளில் காணக் கிடைக்கின்றது. + +மைத்ரேய புத்தரைப்(கௌதம புத்தருக்கு அடுத்து, பூமியில் அவதரிக்கப் போகின்ற புத்தர்) பொறுத்தவரையில், தேரவாதம் அவரைப் போதிசத்துவர் என்றழைக்காமல், அடுத்த ஞானம் பெறப்போகின்ற புத்தர் என்றே விளிக்கின்றது. அவர் கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தவுடன், இந்த பூமியில் அவதரித்து தர்மத்தை உபதேசிப்பார். + +மஹாயானத்தைப் பொறுத்த வரையில், போதிசத்துவர் என்பது மற்றவர்களுடைய நன்மைக்காகப் புத்த நிலை அடைய விழைகின்றவர் என்று பொருள். மஹாயானத்தின்படி, இந்த உலகம் சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற உயிர்களைக் கொண்டது. எனவே, போதிசத்துவர்கள் என அழைக்கபடுபவர்கள் மற்ற உயிர்களைச் சம்சாரத்திலிர���ந்து விடுவிக்க உறுதிபூண்டவர்கள். இந்த மனநிலை தான் போதிசித்தம் என்று அழைக்கப்படுகிறது. போதிசத்துவர்கள் புத்தநிலையை அடைவதற்கும், மற்ற உயிர்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு உறுதிமொழிகளைப் பூணுகின்றனர். மேலும் இந்த போதிசத்துவம் உறுதிமொழிகளோடு பிரிக்க முடியாதது பரிணாமனம் (புண்ணிய தானம்) ஆகும். + +போதிசத்துவர்களைக் கீழ்க்கணடவாறு மூன்று விதங்களாகப் பிரிக்கலாம் + + +அவலோகிதேஷ்வரர் மூன்றாவது வகையை சார்ந்தவர். + +மஹாயான சித்தாந்ததில், 'போத்சத்துவ கருத்து' மற்ற பௌத்த பிரிவுகளின் கருத்துகளில் இருந்த மாறுபட்டது. ஓர் அருக நிலையை அடைந்தவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டாலும் அவர் மற்ற உயிர்கள் விடுபட உதவ இயலாதவர், எனவே மஹாயானம் அருக நிலை அடந்தவரை ஒரு பூரண ஞானம் பெற்ற புத்தராகக் கருதவில்லை. + +மஹாயான பாரம்பரியத்தில், ஒரு போதிசத்துவர் புத்தநிலையை அடைவதற்குப் 'பத்துப் பூமிகளை' கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையைக் குறிக்கக்கூடியது. இந்த பத்து பூமிகளின் விவரங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படலாம் + + +மஹாயான பௌத்தத்தின் படி, இந்த பத்து பூமிகளை கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார். மஹாயானத்தில் பல போதிசத்துவர்கள் உள்ளனர். மிகவும் பிரபலாமனா போதிசத்துவர் கருணையின் உருவான ஸ்ரீ அவலோகிதேஷ்வர போதிசத்துவர். இவரையே சீனத்தில் குவான் - யின் என்ற பெண் வடிவில் வழிபடுகின்றனர். க்ஷீதிகர்ப போதிசத்துவர் ஜப்பானில் வணங்கப்படுகிறார். மேலும் ஆகாஷகர்ப போதிசத்துவர், வஜ்ரபானி, வஜ்ரசத்துவர், வசுதாரா முதலிய பல போதிசத்துவர்கள் மஹாயானத்தை பின்பற்றுவர்களால் வணங்கப்படுகின்றனர். + +போதிசத்துவரால் புனிதப்படுத்தப்பட்ட இடம் போதிமண்டலம் என அழைக்கப்படுகிறது + + + + + + +கோலாலம்பூர் + +கோலாலம்பூர் ("Kuala Lumpur", மலாய் மொழி ஒலிப்பு: குவாலா லும்பூர்) மலேசியாவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை, 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 1.5 மில்லியன் ஆகும்; 2012 மதிப்பீட்டினபடி 1.6 மில்லியன் ஆகும். பெரும் கோலாலம்பூர், அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 7.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மலேசியாவில் மக்கள்தொகையிலும் பொருளாதாரத்திலும் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகத் தரவரிசையில் 48வதாக "பாரின் பாலிசி" நிறுவனமும் 67வதாக "2திங்க் நவ்" நிறுவனமும் மதிப்பிட்டுள்ளன. +மலேசியாவின் நாடாளுமன்றம் இங்கு அமைந்து உள்ளது. நாட்டின் நிருவாக மற்றும் நீதித்துறை தலைமையகங்கள் இங்கிருந்து 1999ஆம் ஆண்டில் புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் சில நீதித்துறை அலுவலகங்கள் இன்னும் இங்கு இயங்கி வருகின்றன. கோலாலம்பூரில் மலேசியப் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங்கின் அரண்மனை "இஸ்தானா நெகாரா" உள்ளது. + +இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சி பிரதேசங்களில் ஒன்று. மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது. கோலாலம்பூர் நகரவாசிகள் "கேலைட்சுகள்" என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். + +1990கள் முதல், இந்த நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1998ஆம் ஆண்டு இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் நடந்தேறின. பார்முலா 1 உலகப் போட்டிகளின் அங்கமாக இங்கு நடைபெறும் தானுந்து பந்தயம் விளங்குகிறது. + +இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகவும் பதிவு பெற்றன. + +1850களில், கிள்ளானில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா, வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீனத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, கோலாலம்பூரின் வரலாறு தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறும் (முன்னதாக லும்பூர் ஆறு - கலங்கிய ஆறு) கிள்ளான் ஆறும் கலக்கும் இடத்தில் தங்கினர். பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது. + +வெள்ளீயம் எடுப்பவர்கள் அம்பாங்கில் தங்கி தங்களுக்குள் அதிகார மையங்களை உருவாக்கிக் கொண்டனர். அவர்களுக்குள் இருபெரும் சீன கோஷ்டிகள் உருவாகின. பெரும்பான்மை ஹக்காக்கள் கொண்ட ஹை சான் இரகசிய சமூகமும், ஹொக்கைன் பிரிவைச் சேர்ந்த கீ ஹின் சமூகமும் ���ெள்ளீய உற்பத்தியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சண்டையிட்டு வந்தன. அடிக்கடி நடைபெற்ற இந்தச் சண்டைகளால் உற்பத்தி பாதிப்படைந்தது. அப்போது மலாயாக் கூட்டமைப்பை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் கோலாலம்பூரை ஆட்சி செய்வதற்கு காப்பித்தான் சீனா எனும் ஒரு சீனத் தலைவரை நியமித்தனர். முதல் காப்பித்தானாக லுக்குட் சுரங்கத்தின் முதலாளியாக இருந்த ஹியு சியு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் + +துவக்க காலங்களில் கோலாலம்பூர் சிலாங்கூர் உள்நாட்டுப் போர், தொடர்ந்த நோய்த்தொற்றுக்கள், தீ மற்றும் வெள்ளக் கேடுகள் என பல சிக்கல்களை சந்தித்தது. 1870களில் மூன்றாவது சீன காபிடனாக விளங்கிய யாப் ஆ லோய் முறையான, சீரான வளர்ச்சிக்கு வித்திட்டார். ஓர் சிற்றூராக விளங்கிய கோலாலம்பூரை வளர்முக சுரங்க நகரமாக மாற்றினார். 1880இல் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் உத்திகளுக்காக கிளாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது. + +1881ஆம் ஆண்டில் முன்னதாக சேதப்படுத்திய தீ விபத்தினை அடுத்து வெள்ளம் சூழ்ந்து நகரைச் சேதப்படுத்தியது. இவற்றால் நகரின் மரத்தினாலும் "அடப்" என்ற தென்னக்கீற்றுகளாலும் ஆன கட்டமைப்புக்கள் பலவும் முற்றிலும் அழிந்தன. இதனையடுத்து சிலாங்கூரின் பிரித்தானிய ஆட்சியர், பிராங்க் ஸ்வெட்டன்ஹாம், கட்டிடங்களை செங்கற்கள்,ஓடுகள் கொண்டு கட்ட விரும்பினார். எனவே கோலாலம்பூரின் மீளமைப்பை முடுக்கிவிட காபிடன் யாப் ஆ லோய் செங்கற் சூலைகள் அமைக்க பெரும் நிலப்பகுதியை வாங்கினார். இந்த இடமே இன்று "பிரிக்பீல்ட்சு" (லிட்டில் இந்தியா) என்று வழங்கப்படுகிறது. நகரத்தின் வடிவமைப்பை அவர் மீண்டும் சீராக்கினார். அப்போது கட்டப்பட்ட பல செங்கற் கட்டிடங்களும் தென் சீனத்தின் கடைக் கட்டிடங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன;வீடுகளின் முதல்தள முகப்பு தெருவோர நடைபயணிகளுக்கு நிழல் தருமாறு தரைத்தளம் உள்ளடங்கியும் (ஐந்தடி வழி) திறன்மிக்க தச்சு வேலைப்பாடுகளுடனும் அமைந்திருந்தன.இவையே இந்தப் பகுதியின் தனித்துவமிக்க கட்டிட வடிவமைப்பாக திகழ்ந்தது. தொடர்வண்டி நிலையம் வளரும் நகருக்கான அணுக்கத்தைக் கூட்டியது. 1890களில் விரைவாக கண்ட வளர்ச்சியால் சுகாதார வாரியம் உருவானது. வெள்ளீயச் சுரங்கங்களை நகருடன் இணைத்து யாப் ஆ லோய் $20,000 செலவில் பல ��ாலைகளை கட்டமைத்தார். அம்பங் சாலை, புடு சாலை, பெடலிங் தெரு என்பன முதன்மைச் சாலைகளாக அமைந்தன. + +சீன காபிடன் என்ற பதவியால் யாப் ஆ லோயிற்கு மலாய் தலைவர்களுக்கு இணையான அதிகாரங்கள் இருந்தன. இதனைக்கொண்டு சட்ட சீர்திருத்தங்களையும் புதிய சட்ட முறைமையையும் கொணர்ந்தார். ஆறு பேர் கொண்ட காவல்துறை கொண்டு சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக்கூடிய சிறைச்சாலையைக் கட்டினார். கோலாலம்பூரின் முதல் பாடசாலையையும், பெடலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் நிறுவினார். + +1896இல் புதியதாக உருவாக்கப்பட்ட "மலாய் கூட்டாட்சி மாநிலங்களின்" தலைநகரமாக கோலாலம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மெதுவாக பல்வேறு சமூகங்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறத் துவங்கினர். சீனர்கள் பெரும்பாலும் கிளாங் ஆற்றின் கிழக்கே சீனாடவுனை ஒட்டிய வணிக மையமான சந்தைச் சதுக்கத்தில் குடியேறினர். மலாய் மக்கள், தமிழ் செட்டியார்கள், இந்திய இசுலாமியர் ஜாவா தெருவினை (இன்றைய ஜாலன் துன் பெராக்) ஒட்டி குடியேறினர். படாங் என்றழைக்கப்பட்ட இன்றைய மெர்டேக்கா சதுக்கத்தில் பிரித்தானிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்திருந்தன. + +இரண்டாம் உலகப் போரின்போது, சனவரி 11, 1942 அன்று கோலாலம்பூர் சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகத்து 15, 1945 வரை நகரம் அவர்களின் வசம் இருந்தது. இந்தப் போர்க் காலத்தில் இரப்பர், வெள்ளீயம் பண்டச்சந்தைச் சரிவு, மலேசிய அவசரநிலை முதலிய நிகழ்வுகளை எதிர்கொண்டது. மேலும் பொதுவுடமைக் கொள்கைசார் போராட்டங்கள் மிகுந்திருந்தன. 1957இல் பிரித்தானியர்களிடமிருந்து மலேயக் கூட்டாட்சி விடுதலை பெற்றது. மலேசியா உருவான செப்டம்பர் 16, 1963 வரை தலைநகரமாக தொடர்ந்தது. + +மே 13, 1969 அன்று மலேசியாவின் மோசமான இனச்சண்டைகள் கோலாலம்பூரில் நடந்தேறின. தங்கள் சமூக-அரசியல் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருந்த மலாயர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரங்களில் 196 நபர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சீனர்களின் ஏகபோகத்தைக் குறைக்கும் வகையில் நாட்டின் பொருளியல் கொள்கைகளில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. + +கோலாலம்பூர் 1972இல் நகரமாக தகுதிபெற்றது; விடுதலையடைந்த மலேசியாவில் ஒரு குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டது இ���ுவே முதல்முறையாகும். பின்னர், பெப்பிரவரி 1, 1974 அன்று கூட்டாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்திற்கு ஷா ஆலம் புதிய மாநிலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. மே 14, 1990இல் நூற்றாண்டு நகராட்சி சாதனையைக் கொண்டாடியது. புதிய கொடியும் நகரப்பண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டன. + +1998இல் "ரிபார்மசி" என்ற அரசியல் இயக்கம் கோலாலம்பூரில் துவங்கியது. முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் வெளியேற்றம் மற்றும் கைதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் 1999இல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அவரது விடுதலையைக் கோரியும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கூட்டும் சீர்திருத்தங்களைக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அரசு நிர்வாகச் செயல்பாட்டில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. + +பெப்பிரவரி 1, 2001 அன்று புத்ரஜெயா கூட்டாட்சிப் பகுதியாகவும் கூட்டாட்சி அரசின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டது. கோலாலம்பூரிலிருந்து அரசு நிர்வாக அலுவலகங்களும் நீதித்துறை அலுவலகங்களும் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் நாடாளுமன்றத்தை கோலாலம்பூர் தக்க வைத்துக் கொண்டது. அரசியலமைப்பின் தலைவரான மன்னரின் இருப்பிடமும் இங்கேயே உள்ளது. + +கோலாலம்பூர் நகரம் கிளாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் கிழக்கில் டிடிவாங்சா மலைகளும், வடக்கிலும் தெற்கிலும் பல சிறு குன்றுத் தொடர்களும், மேற்கில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன. குவாலா லும்பூர் என்ற மலாய் மொழிச் சொல்லிற்கான "கலங்கிய சங்கமம்" என்ற பொருளுக்கேற்ப இந்த நகரம் கிளாங் ஆறும் கொம்பக் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. + +சிலாங்கூர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநில அரசாட்சியின் கீழ் இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டில் செலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு முதல் மலேசிய கூட்டாட்சி அரசின் நேரடி ஆட்சியில் அமைந்த கூட்டாட்சிப் பிரதேசமாக உருவானது. மலேசியத் தீபகற்பத்தின் சமதளமான மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மலேசியாவின் மற்ற நகரங்களை விட விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. நகராட்சியின் பரப்பளவு ஆகவும், சராசரி உயரம் ஆகவும் உள்ளது. + +கிழக்கில் டிடிவாங்சா மலைகளாலும் மேற்கில் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள கோலாலம்பூரில் வெப்பமண்டல மழைக்காடுகள் வானிலை நிலவுகிறது. சூரிய ஒளி மற்றும் வெப்பத்துடன் கூடிய அளவு மழைவீழ்ச்சியுடன் காணப்படுகிறது. முக்கியமாக அக்டோபர் முதல் மார்ச்சு வரையான வடகிழக்குப் பருவ காலத்தில் மிகுந்த மழை பெய்கிறது. வெப்பநிலை எப்போதும் ஒரே சீராக கூடுதல் ஏற்ற இறக்கமின்றி காணப்படுகின்றது. கூடுதல் வெப்பநிலை ஆகவும் குறைந்த வெப்பநிலை ஆகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு குறைந்தளவு மழையாக ஆவது பெய்கிறது; சூன், சூலை மாதங்களில் மழை குறைவு என்றபோதும் அப்போதும் மாதத்திற்கு கூடுதலாக மழை பெய்கிறது. + +பெருமழைக் காலங்களில் நகர மையத்திலும் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவது வழமையாக உள்ளது. அண்மையிலுள்ள சுமாத்திராவின் காட்டுத்தீயினால் ஏற்படும் தூசுத் துகள்கள் இங்கு சிலநேரங்களில் மூட்டம் ஏற்பட ஏதுவாகின்றன. இதனுடன் கட்டுமானப் பணிகள், வாகனப்புகை உமிழ்வுகள் மற்றும் திறந்தவெளி எரித்தல்கள் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை கேட்டிற்கு வழிவகுக்கின்றன. + +கோலாலம்பூரை ஏப்ரல் 1, 1961 முதல் 1972ஆம் ஆண்டில் நகரமாக அறிவிக்கும் வரை தனியாள் நிறுவன அமைப்பில் கூட்டாட்சி தலைநகர் ஆணையர் நிர்வகித்து வந்தார். நகராட்சி அமைந்தபிறகு இந்த அதிகாரம் மேயர் ("தாடுக் பண்டார்") வசம் சென்றது. இதுவரை ஒன்பது மேயர்கள் பதவியேற்றுள்ளனர். தற்போதைய மேயராக அகமது புயாத் இஸ்லாமி திசம்பர் 14, 2008 முதல் ஆட்சி புரிந்து வருகிறார். + +மலேசியாவின்கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சகத்தின் கீழியங்கும் கோலாலம்பூர் நகர அரங்கம் ("கோலாலம்பூர் சிடி ஹால்") உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இது பொதுச் சுகாதாரம், கழிவு அகற்றல் மற்றும் மேலாண்மை, நகரமைப்புத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுமானப் பணிகள் கட்டுப்பாடு, சமூக பொருளியல் வளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பின் பொதுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதன் செயல் அதிகாரியாக விளங்கும் மேயர் துறை அமைச்சரால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறார். 1970இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்தபிறகு இவ்வாறு மேயரை நியமிப்பதே வழமையாக உள்ளது. + +மலேசியாவின் நாடாளுமன்றம் கோலாலம்பூரில் இயங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின்படி செயலாக்கம், நீதி மற்றும் சட்டமாக்கல் என மூன்று பிரிவுகள் ஆளுகையின் அங்கமாக விளங்குகின்றன.நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது. மேலவை "தேவான் நெகரா" என்றும் கீழவை "தேவான் ரக்யாத்" என்றும் அழைக்கப்படுகின்றன. + +கோலாலம்பூர் நகரத்திலிருந்து கீழவைக்கு பதினோரு உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் முதன்முறையாக எதிர்கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பகாதன் ரக்யாத் கட்சிக்கூட்டணிக்கு ஐந்து இடங்களும் மக்கள் நீதிக்கட்சிக்கு நான்கு இடங்களும் அனைத்து மலேசிய இசுலாமிய கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளன. ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கு ஓரிடமே கிடைத்துள்ளது. + +மலேசியாவில் பொருளியல் மற்றும் தொழில்துறையில் விரைவாக முன்னேறிவரும் பகுதியாக கோலாலம்பூரும் அதன் சுற்றுப் பகுதிகளும் அமைந்துள்ளன. அரசு அலுவலகங்கள் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டபோதும் பாங்க் நெகரா மலேசியா ("மலேசியத் தேசிய வங்கி"), மலேசிய கம்பனிகள் ஆணையம், பங்குச்சந்தை ஆணையம் போன்ற சில அரசுத்துறை நிறுவனங்கள், பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் இங்கிருந்து மாறவில்லை. + +நாட்டின் பொருளியல் மற்றும் வணிக மையமாக இந்த நகரம் விளங்குகிறது. மேலும் நிதி, காப்புறுதி, நில முதலீடுகள், ஊடகங்கள் மற்றும் கலைகளுக்கு இது முதன்மை இடமாக அமைந்துள்ளது. உலக நாடுகளை உலகமயமாக்கல் அளவீட்டில் மதிப்பிடும் அமைப்பு (GaWC) மலேசியாவின் ஒரே உலகமயமாக்கல் நகரமாக கோலாலம்பூரை "ஆல்ஃபா உலக நகரம்" என அறிவித்துள்ளது. இந்தப் பொருளியல் முன்னேற்றத்திற்கு சிபாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், பல்லூடக சூப்பர் காரிடர் உருவாக்கம், கிளாங் துறைமுக விரிவாக்கம் போன்ற சுற்றுபகுதிகளில் மேற்கோண்ட கட்டுமானப் பணிகள் பெரிதும் தூண்டுதலாக அமைந்தன. + +மலேசியாவின் பங்குச்சந்தையான "புர்சா மலேசியா" இங்கு அமைந்துள்ளது; நவம்பர்20, 2007 அன்று சந்தை முதலீடு $ 318.65 பில்லியனாக இருந்தது. + +2008இல் கோலாலம்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) RM73,536 மில்லியனாகவும் ஆண்டுக்கு 5.9 விழுக்காடாக வளர்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் மொத்த உற��பத்தி RM48,556 ஆக இருந்தது. இங்கு பணிக்கு அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை மதிப்பீடு 838,400 ஆகும். நிதி, காப்பீடு, நில முதலீடு, வணிக சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உணவகங்களும் தங்குவிடுதிகளும், போக்குவரத்து, சேமிப்பகங்கள், தொலைதொடர்பு, பொதுப் பயனுடமை சேவைகள், அரசு சேவைகள் என சேவைதுறை பொருளாதாரம் மொத்த பணிகளில் 83 விழுக்காடு இடங்களை அளித்துள்ளது. ஏனைய 17 விழுகாட்டை தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு துறைகள் பங்களிக்கின்றன. + +கோலாலம்பூரின் சராசரி வீட்டு மாத வருமானம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த RM3,371 (USD 1,087)இலிருந்து 1999ஆம் ஆண்டில் RM4,105 (USD 1,324) ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 66% கூடுதலாகும். +பல பன்னாட்டு வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் கோலாலம்பூரிலிருந்து இயங்குகின்றன. உலகளாவிய இசுலாமிய நிதி அமைப்பு மையமாகவும் முன்னேறி வருகிறது. உலகின் மிகப்பெரும் இசுலாமிய வங்கியான அல்-ராஜி வங்கி மற்றும் குவைத் நிதி இல்லம் போன்ற வளைகுடா வங்கிகளும் பிற இசுலாமிய நிறுவனங்களும் கோலாலம்பூரில் பெருமளவில் இசுலாமிய விதியொட்டிய வங்கித்துறையை வளர்த்து வருகின்றன. மேலும் புர்சா மலேசியாவுடன் இணைந்து டௌ ஜோன்சு நிறுவனம் இசுலாமிய பங்குச்சந்தைப் பரிமாற்ற நிதியத்தை உருவாக்க முனைந்துள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்களின் கிளை மற்றும் மண்டல அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன.திசம்பர் 2007 நிலவரப்படி, பெட்ரோனாஸ் தவிர, 14 ஃபோர்ப்ஸ் 2000 நிறுவனங்கள் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளன. + +கல்வியும் மருத்துவத்துறையும் இந்த நகரின் மற்ற முக்கியமான பொருளியல் செயல்பாடுகளாகும். பல கல்வி நிறுவனங்கள் கோலாலம்பூரின் பரந்த பரப்பில் பன்முக கல்வித்திட்டங்களை வழங்கி வருகின்றன. பல தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் பொது உடல்நலம் மற்றும் பலதரப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிட்சைகளை வழங்கி வருகின்றன. மருத்துவச் சுற்றுலாவும் வளர்ந்து வரும் ஓர் பொருளியல் செயல்பாடாகும். + +ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே இங்கு மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிலையமும் மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனமும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இயங்கி வருகின்றன. வரும் ஆண்டுகளில் மே���ும் பல சிறப்பு ஆய்வகங்களை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. + +நகரின் சேவைசார் பொருளியலில் சுற்றுலாத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் பல பெரிய தங்குவிடுதி பிணைப்புகள் இங்கு தங்கள் தங்குவிடுதிகளை கொண்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் 8.94 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த கோலாலம்பூர் உலகின் ஆறாவது மிகவும் வருகை புரிந்த நகரமாக விளங்குகிறது. நகரத்தின் பன்முக பண்பாடு, ஒப்பீட்டளவில் குறைந்த செலவினங்கள், பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் அங்காடிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சந்திப்புகள், ஊக்கிகள்,மாநாட்டு வசதிகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலா அண்மைக்காலங்களில் இத்தொழிலின் வலிமை மிக்க கூறாக விளங்குகிறது. இங்குள்ள கூடிவரும் குறைந்த வாடகை தங்குவிடுதிகள் இத்துறையின் மற்றுமொரு போக்காக உள்ளது. + +கோலாலம்பூரின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக மெர்டெக்கா சதுக்கம், மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், பெடலிங் தெரு, இஸ்தானா நெகரா (தேசிய அரண்மனை), கோலாலம்பூர் கோபுரம், தேசிய அருங்காட்சியகம், மத்திய சந்தை, தேசிய நினைவுச் சின்னம் என்பனவாகும். சமயச் சுற்றுலாவிற்கு ஜாமிஃ பள்ளிவாசல், பத்துமலை போன்ற தலங்கள் உள்ளன. கோலாலம்பூரில் மகாமாரியம்மன் கோவிலின் தைப்பூசம் ஊர்வலம் போன்ற பன்முக பண்பாட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. + +நகரத்தின் மனமகிழ்வு மையங்கள் "ஜாலன் பி. ராம்லீ", "ஜாலன் சுல்தான் இசுமாயில்", அம்பங் சாலையால் அமைந்த தங்க முக்கோணத்திற்குள் அமைந்துள்ளன. பீச் கிளப், எஸபனடா, ஹக்கா ரிபப்ளிக் வைன் பார் மற்றும் உணவகம், ஹார்ட் ராக் கஃபே, லூனா பார், நுவோவோ, ரம் ஜங்கிள், தாய் கிளப், சூக் போன்ற இரவுமன்றங்கள், குடியகங்கள், உணவகங்கள் இங்கு அமைந்துள்ளன. +மலேசியாவின் நுகர்வோர் வணிக மற்றும் புதுப்பாங்கு மையமாக விளங்கும் கோலாலம்பூரில் 66 அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. 2006ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவின் நுகர்வோர் வணிகம் RM7.7 பில்லியன் (USD 2.26 பில்லியன்) மதிப்புடையதாக இருந்தது. இது மொத்த சுற்றுலா கொள்முதலில் 20.8 விழுக்காடு ஆகும். + +பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடியில் அமைந்துள்ள சூரியா கேஎல்சிசி மலேசியாவின் முதன்மையான அங்காடி வளாகமாகத் திகழ்கிறது. இதைத் தவிர, "தங்க முக்கோணத்தில்" அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் கோலாலம்பூரின் பெரும்பாலான அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு பல உணவகங்கள், தெருவோர அல்பிரெஸ்கோக்கள், நுகர்வோர் வளாகங்கள் அமைந்துள்ளன. பங்சார் மாவட்டத்திலும் சில அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. சிலாங்கூரின் டாமன்சாராவில் நாட்டின் ஒரே 'ஐக்கியா' பன்னாட்டு அறைகலன் அங்காடி அமைந்துள்ளது. + +அங்காடி வளாகங்களைத் தவிர கோலாலம்பூரில் துணிமணிகள், கைவினைப் பொருட்கள் போன்ற உள்ளூர்த் தயாரிப்புகளை விற்க பல பகுதிகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. பெட்டாலிங் தெரு எனப்படும் சீனநகர் இவ்வாறு புகழ்பெற்றது. இங்கு விடுதலைக்கு முந்தைய சீன மற்றும் குடிமைப்பட்ட கால கட்டிடங்களைக் காணலாம். "பசார் செனி" எனப்படும் கோலாலம்பூரின் மத்திய சந்தையில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. + +2000 ஆண்டு முதல் மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சகம் பெரும் விற்பனை விழாவினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு மூன்றுமுறை - மார்ச்சு, மே, திசம்பர் - நடத்தபடும் இந்த விழாவில் அனைத்து வணிக வளாகங்களும் பங்கேற்று கோலாலம்பூரை முதன்மை பொருள் வாங்கச் செல்லுமிடமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. + +கோலாலம்பூர் நகர்ப்பகுதியில் மட்டும் 2010இல் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 6,696 (2585 மைல்)ஆக மலேசியாவின் மிகவும் அடர்ந்த நிர்வாக மாவட்டமாக விளங்குகிறது. கோலாலம்பூர் பெருநகரில் மக்கள்தொகை 6.9 மில்லியனாக உள்ளது. + +கோலாலம்பூரில் பன்முக இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்;முதன்மையான மூன்று இனங்களாக மலாய்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஆங்கிலோ இந்தியர்கள், மலேசியத் தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். +பிறப்பு விகிதங்கள் இறங்குமுகமானதை அடுத்து 15 அகவைக்கு குறைந்தோர் எண்ணிக்கை 1980இல் இருந்த 33%இலிருந்து 2000இல் 27%ஆக குறைந்துவிட்டது. அதேநேரம் வேலைக்குச் செல்லும் 15–59 வயதுடையோர் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 63%இலிருந்து 67% ஆக உயர்ந்துள்ளது. வயதானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழுக்காடு 4%இலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளது. + +கோலாலம்பூரின் விரைவான வளர்ச்சியால் இந்தோனேசியா, நேபாளம், பர்மா, தாய்லாந்து, வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து திறமைவேண்டா/குறைதிறன் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்தனர். இவர்களில் பலருக்கு முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. + +கோலாலம்பூரில் பல சமயத்தவர்களும் இணைந்து வாழ்கின்றனர்.பல்வேறு சமயத்தினர்களுக்கும் வழிபட வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. மலாய்களும் இந்திய முசுலிம்களும் இசுலாமிய சமயத்தை கடைபிடிக்கின்றனர். சீனர்கள் பௌத்தம், கன்ஃபூசியசம், டௌவிசம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சில சீனர்களும் இந்தியர்களும் கிறித்தவத்தைப் பின்பற்றுகின்றனர். + +பகாசா மலேசியா கோலாலம்பூரின் முதன்மை மொழியாக உள்ளது. பெரும்பாலோர் ஆங்கில அறிவு உடையவர்களாக உள்ளனர். வணிக மொழியாக விளங்கும் ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. கண்டோனீசு மற்றும் மண்டாரின் மொழிகள் மலேசியச் சீனர்களால் பேசப்படுகிறது. மற்றுமொரு முதன்மை மொழியாக "ஹக்கா மொழி" உள்ளது. உள்ளூர் மலேசிய இந்தியர்களின் முதன்மை மொழியாக தமிழ் உள்ளது. பிற இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபியும் இந்தியர்களால் பேசப்படுகிறது. + +மலேசிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடுத்து 92 எக்டேர் பரப்பளவில் நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் "ஏரிப் பூங்கா" முன்னர் பிரித்தானிய குடியேற்ற அலுவலரின் இல்லமாக இருந்தது. இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்கா, மான் பூங்கா, மந்தாரைத் தோட்டம் (Orchid Garden), செம்பருத்தித் தோட்டம் ஆகியனவுடன் தெற்காசியாவிலேயே பெரிய பறவைகள் பூங்காவான கோலாலம்பூர் பறவைப் பூங்காவும் அமைந்துள்ளது. இதைத் தவிர, ஆசியான் சிற்பப்பூங்கா, கேஎல்சிசி பூங்கா, டிடிவாங்சா ஏரிப் பூங்கா, கெபோங்கிலுள்ள மெட்ரோபொலிடன் ஏரிப் பூங்கா, வன ஆராய்ச்சி கழகம், தமன் டாசிக் பெர்மைசூரி (அரசி ஏரிப் பூங்கா), புகிட் கியாரா தாவரப் பூங்கா, குதிரைச்சவாரிப் பூங்கா, மேற்கு பள்ளத்தாக்குப் பூங்கா மற்றும் புகிட் ஜலீல் பன்னாட்டுப் பூங்கா என பல பூங்காக்கள் அமைந்துள்ளன. + +நகரத்தினுள்ளேயே மூன்று வனக் காப்பகங்கள் உள்ளன: நகரமையத்தில் உள்ள நாட்டின் பழைமையான பரப்பளவில் அமைந்துள்ள "புகிட் நானாஸ் வனக் காப்பகம்", பரப்பளவில் அமைந்துள்ள "புகிட் சுங்கை புடி வனக் காப்பகம்", ப���ப்பளவில் அமைந்துள்ள "புகிட் சுங்கை பேசி வனக் காப்பகம்". ஒரு நகரத்தின் உள்ளே அமைந்துள்ள உலகின் பழைமையான மாசுபடா வனப் பகுதியாக புகிட் நானாஸ் விளங்குகிறது. இந்த வனப்பகுதிகள் பல விலங்குகள், குறிப்பாக குரங்குகள், மரச் சுண்டெலிகள்,அணில்கள் மற்றும் பறவைகள் தங்குமிடமாக உள்ளன. + +கோலாலம்பூருக்கு அண்மையில் டெம்ப்ளர் பூங்கா உள்ளது;இதனை 1954ஆம் ஆண்டில் நெருக்கடி காலத்தில் சேர் ஜெரால்டு டெம்ப்ளர் உருவாக்கினார். + +கோலாலம்பூர் மலேசியாவின் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. மகாமேரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நாடு முழுமையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஓவியங்களும் கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏழாயிரம் இசுலாமிய கலைப்பொருட்களும் அரிய சில காட்சிப்பொருட்களும் கொண்ட இசுலாமிய கலை அருங்காட்சியகத்தில் இசுலாமிய கலை குறித்த நூலகமும் உள்ளது. +நிகழ்த்துகலைகளுக்கான முதன்மையான அரங்கமாக பெட்ரோனாஸ் பிலார்மானிக் மண்டபம் விளங்குகிறது. இங்கு மலேசிய பிலார்மானிக் ஆர்ச்செஸ்ட்ரா தன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. செந்துல் மேற்கில் அமைந்துள்ள கோலாம்பூர் நிகழ்த்துகலைகள் மையத்தில் (KLPac) பல நாடகங்கள், இசைக்கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள் அரங்கேறியுள்ளன. + +மலேசிய பன்னாட்டு உயர்தர உணவு விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் உள்நாட்டு வல்லுனர்கள் போட்டியிடும் கோலாலம்பூர் புதுப்பாங்கு வாரம் நடத்தப்படுகிறது. + +கோலாலம்பூர் பார்முலா 1 திறந்த சக்கர தானுந்து போட்டிகள் ஏ1 கிராண்ட்பிரீ மற்றும் விசையுந்து கிராண்ட் பிரீ உலகப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகும். இவை சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்த செபாங் பன்னாட்டு சுற்றுகையில் நடைபெறுகின்றன. + +கேஎல் கிராண்ட் பிரீ சிஎஸ்ஐ 5*, என்ற பன்னாட்டு குதிரைச் சவாரி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறுகிறது. + +கேஎல் கோபுரம் ஓட்டம் மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு மராத்தான் ஓட்டம் ஆகியனவும் டூர் டெ லங்காவி என்ற மிதிவண்டி போட்டியும் மற்றபிற விளையாட்டுக்களாகும். + +பாட்மின்டனுக்கான ��ருடாந்திர மலேசியா ஓப்பன் முக்கியமான மற்றொரு விளையாட்டு நிகழ்வாகும். + +1998ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்திபிறகு பன்னாட்டுத் தரமுள்ள பல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. + +கோலாலம்பூரில் பல குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. +2015ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 127வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு கோலாலம்பூரில் நடக்கவுள்ளது. இந்த அமர்வில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் தேர்ந்தெடுக்கப்படும். + +கோலாலம்பூரில் நாளிதழ்கள்,வணிக இதழ்கள், எண்ணிம இதழ்கள் என பல செய்தித்தாள்கள் வெளியாகின்றன. நாளிதழ்களில் த ஸ்டார், நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், த சன், மலாய் மெயில், கோஸ்மோ!, உடுசான் மலேசியா, பெரிடா அரியான், அரியான் மெட்ரோ ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். குவாங் மிங் நாளிதழ், சின் சூ நாளிதழ், சைனா பிரெஸ், நன்யங் சியாங் பௌ போன்ற மண்டாரின் மொழி நாளிதழ்களும் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற தமிழ் நாளிதழ்களும் வெளியாகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துக்களை தாங்கி ஹராகா, சுயாரா கேடிலன், சியாசா, வாசிலா நாளிதழ்கள் வெளியாகின்றன. மலேசியாவின் தேசிய வானொலியான "ரேடியோ டெலிவிசன் மலேசியா"வின் (RTM) தலைமையகம் இங்குள்ளது. வணிகமய தொலைக்காட்சி அலைவரிசைகளான டிவி 3, 8டிவி, டிவி 9 போன்றவை கோலாலம்பூரைத் தலைநகராகக் கொண்ட "மீடியா பிரைமா" என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் மலாய் மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீன மொழிகளில் அலைபரப்பப்படுகின்றன. +அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் செயற்கைக் கோள் வழியாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை பரப்பி வருகிறது. தோகாவைச் சேர்ந்த அராபிய செய்தி தொலைக்காட்சி நிறுவனம் அல்-ஜசீரா கோலாலம்பூஇல் தனது ஆங்கிலச் செய்தி அலைவரிசையை நிறுவியுள்ளது. + +திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை மற்றும் நூல்களில் கோலாலம்பூரை மையப்படுத்தி புனையப்பட்டுள்ளன. சியான் கானரி நடித்த "என்ட்ராப்மென்ட்", பெட்ரோனாஸ் கோபுரங்கள் தீயால் சூழப்பட்டதாக காட்டப்பட்ட "சில்ட்ரன் ஆப் மென்" ஆகியத் திரைப்படங்கள் கோலாலம்பூரை மையமாகக் கொண்டவை. "த சிம்ப்ஸ்சன்ஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோலாலம்பூரை மையப்படுத்திய நூல்களாக "கேஎல் 24/7", "மை லைப் அஸ் அ ஃபேக்", மற்றும் "டெமோக்ரசி " ஆகியவற்றைக் குறிப்பிடலாம். + +அரசு புள்ளிவிவரங்களின்படி கோலாலம்பூரின் படிப்பறிவு பெற்றோர் வீதம் 2000 ஆம் ஆண்டில் 97.5% ஆக இருந்தது; இது மலேசியாவின் வேறெந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதியை விடக் கூடுதலானதாகும். இங்கு மலாய் மொழி பயிற்றுமொழியாக உள்ளது. ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பயிற்றுமொழியாகவும் உள்ளது. சில பாடங்களுக்கு தமிழ் அல்லது மண்டாரினில் பயிற்றுவிக்கும் பள்ளிகளும் உள்ளன. + +கோலாலம்பூரில் 13 மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்களும் 79 உயர்நிலைப் பள்ளிகளும் 155 துவக்கப்பள்ளிகளும் 136 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன. நூறாண்டுகளுக்கும் மேலாக புகிட் பின்தாங் பெண்கள் பள்ளி (1893–2000, பின்னர் தமன் சாமெலின் பெர்காசாவிற்கு மாற்றப்பட்டது),விக்டோரியா கல்விநிலையம் (1893), மெதாடிஸ்ட் பெண்கள் பள்ளி (1896), மெதாடிஸ்ட் ஆண்கள் பள்ளி (1897), புகிட் நானாஸ் கன்னிமாடம் (1899), புனி ஜான் கல்விநிலையம் (1904) போன்ற கல்வி நிலையங்கள் இருந்துள்ளன. + +1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியாவின் மிகப்பழமையானப் பல்கலைக்கழகமாகும். இங்குள்ள பிற பல்கலைக்கழகங்கள்: மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம், யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகம், பன்னாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், மலேசியா திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம், வாவாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம். + +மற்ற ஆசிய நகரங்களைப் போலன்றி கோலாலம்பூரில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வண்டி ஓட்ட வேண்டியுள்ளது. எனவே இந்த நகரத்தில் சாலைகள் மிகவும் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்தின் பிற இடங்களுடன் நெடுஞ்சாலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. +கோலாலம்பூரில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. முதன்மையான கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) சிலாங்கூர் மாநிலத்தின் "செபாங்" என்ற இடத்தில் அமைந்துள்ளது. மலேசியாவின் வான்வெளிப்பயணங்களுக்கு மையவிடமாக உள்ள இந்த வானூர்தி நிலையம் நகரத்திலிருந்து தெற்கே தொலைவில் உள்ளது. "சுல்தான் அப்துல் அசீசு ஷா வானூர்தி நிலையம்" அல்லது "சுபாங் ஸ்கைபார்க்" என அறியப்படும் ���ரண்டாவது வானூர்தி நிலையம் 1998இல் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டு பயணங்களுக்கான வாயிலாக இருந்தது. தற்போது இது தனியார் மற்றும் டர்போபிராப் வானூர்திகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசிய ஏயர்லைன்ஸ், குறைந்த கட்டண சேவை வழங்கும் ஏர் ஏசியா ஆகியவற்றின் முதன்மை இருப்பிடமாக விளங்குகிறது. கேஎல் சென்ட்ரலிலிருந்து இந்த பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடைய மிகவிரைவு தொடர்வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இது 28 நிமிடங்களில் சென்றடைகிறது. ஏர் ஆசியா இயங்கும் குறைந்த கட்டண முனையத்திற்கு கேஎல் சென்ட்ரலிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. +பொதுப்போக்குவரத்திற்கு பேருந்துகள், தொடர்வண்டிகள் மற்றும் வாடகைவண்டிகள் இருந்தபோதும் இவற்றைப் பயன்படுத்துவோர் வீதம் 16 விழுக்காட்டிற்கும் கீழாக இருப்பதாக 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று மதிப்பிடுகிறது. தொடர்வண்டிப் போக்குவரத்தில் லைட் ரெயில், ராபிட் டிரான்சிட், மோனோரெயில், கம்யூட்டர் ரெயில் என்று பலவகை தொடர்வண்டி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துவகை தொடர்வண்டிகளுக்கும் சந்திப்பு நிலையமாக கேஎல் சென்ட்ரல் உள்ளது. இங்கிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரையும் வடக்கில் தாய்லாந்தின் "ஹாத் யை" வரையும் தொடர்வண்டி இணைப்புகள் உள்ளன. + +கோலாலம்பூரில் உள்ள வாடகைவண்டிகள் வேறுபடுத்தும் வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு தோற்றத்தைக் கொண்டுள்ளன. இங்குள்ள வண்டிகள் பெரும்பாலும் இயற்கை எரிவளியில் இயங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கோருவதாக முறையீடுகள் உள்ளன. + +நகரத்திலிருந்து தென்மேற்கே ஏறத்தாழ தொலைவில் கிளாங் துறைமுகம் அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான இந்த துறைமுகம் 2006ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் இருபது அடி நிகர் அலகு (TEU) சரக்குகளை கையாண்டுள்ளது. + +கோலாலம்பூர் பல வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. + + + + + +புவேர்ட்டோ ரிக்கோ + +புவேர்ட்டோ ரிக்கோ ("Puerto Rico", ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும். + +இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது. + +புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. + + + + + +இயல் மொழி ஆக்கம் + +"இயல் மொழி" என்கிறபொழுது, தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை மக்கள் தங்கள் இயல்பான வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துகின்றனரோ அத்தகையது எனப் பொருள்கொள்கிறோம். + +நிரலாக்க மொழிகள் முதலிய செயற்கை மொழிகளைப் போல் அல்லாது இயல் மொழிகள் வாழையடி வாழையாய் தழைத்து வந்துள்ளமையால் குறிப்பிட்ட விதிகளைக் கொண்டு விளங்கிக் கொள்வது கடினம். + +சற்றே பரந்த நோக்கில் இயல் மொழி ஆக்கம் என்பதனை (சுருக்கமாக இ.மொ.ஆ) இயல் மொழியொன்றினை கணினியாக்கத்திற்கான எத்தகைய ஒரு பணியாகவும் எடுத்துக் கொள்வோம். + +ஒரு பக்கம் அது கொடுக்கப் பட்டுள்ளப் பத்தியில் 'ஆ' எத்தனை முறை வருகிறது எனக் கணக்கிடுவதாக இருக்கலாம். மற்றொரு பக்கம், இ.மொ.ஆ மனிதன் மொழிபவற்றை புரிந்து கொள்வதாய், குறைந்த பட்சம் அவர்களுக்கு பயனுள்ள பதில் அளிக்கவல்லதாய் அமையலாம். + +இயல் மொழியாக்கத்துக்கான பைதான் நிரலகம் + + + + +மஞ்சுசிறீ + +"'மஞ்சுஸ்ரீ" (சீனம்: 文殊 "Wénshū" or 文殊師利菩薩 "Wénshūshili Púsà"; ஜப்.: "மோன்ஜு"; திபெ.: "ஜம்பெல்யாங்";), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, அறிவுக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார். + +ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ, எட்டு அறிவாற்றலின்(பிரக்ஞை) போதிசத்துவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார். + +மஞ்சுஸ்ரீ பல மஹாயான சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார். அவற்றில் முக்கியமனது பிரக்ஞாபாரமித சூத்திரம். தாமரை சூத்திரத்தின் படி இவருடைய உலகம் 'விமலம்' என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரத்தின் படி இவ்வுலகம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இவரை மஞ்சுகோசர் எனவும் அழைப்பர் +இவர் திபெத்திய பௌத்தத்தில் யிதம் ஆக கருதப்படுகிறார். இவர் ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார் + +ஓம் அரபசன தீஹி "ॐ अरपचन धी:" என்பது இவருடைய மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஒருவருடைய அறிவாற்றல், நினைவாற்றல், எழுதும் திறன் முதலியன மேம்படுவதாக நம்பப்படுகிறது. + +தீஹி "धी:" என்பது இவருடைய பீஜாக்ஷரம் ஆகும். இது மிகுந்த முக்கியத்துவத்துடன் உச்சாடனம் செய்யப்படுகிறது. + +இவருடன் தொடர்புடைய இன்னொரு முக்கியமான மந்திரம் கீழ்வருமாறு + +நமோ மஞ்சுஸ்ரீயே நமோ சுஸ்ரீயே நமோ உத்தமஸ்ரீயே ஸ்வாஹா + +பொதுவாக மஞ்சுஸ்ரீ, வலது கையில் தீப்பிழம்புடன் கூடிய வாளை ஏந்தியவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த வாள் அனைவருடைய அறிவின்மையையும், தீய கருத்துகளையும் அகற்ற வல்லது. அவருடைய இடது கையில் பிரக்ஞாபாரமித சூத்திரம் உள்ளது. பிரக்ஞபராமித சூத்திரம் அவருடை போதிநிலையையும் அவருடை மனத்தெளிவையும் காட்டுகிறது. அவருடை தந்திர வடிவங்களாவன, குஹ்ய-மஞ்சுஸ்ரீ, குஹ்ய-மஞ்சுவஜ்ரா மற்றும் மஞ்சூஷ்வரி ஆகும். இவை பெருபாலும் திபெத்திய பௌத்தத்திலேயே காணப்படுகின்றன. + +சீன புராணங்களின் படி, சீனாவை ஆண்ட மன்சு இனத்தவர் தங்களை 'மஞ்சுஸ்ரீ' போதிசத்துவரின் வழித்தோன்றலாகக் கருதிக்கொண்டனர். எனவே தான் தனது இனத்து 'மன்சு' (சீனத்தில் மஞ்சுஸ்ரீயின் இன்னொரு பெயர்) என அழைத்ததாக கருதப்படுகிறது. + +யமாந்தகர் (யமா-இறப்பு அந்தம்-முடிவு, இறப்பை அழிப்பவர்) மஞ்சுஸ்ரீயின் ஒரு உக்கிர வடிவாகும். இவர் திபெத்திய பௌத்தத்தின் ஒரு முக்கிய தந்திர தேவதாமூர்த்தியாகவும் மற்றும் யிதம் ஆகவும் திகழ்கிறார். + +சுயம்பு புராணத்தின் படி, காத்மாண்டு பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது. மஞ்சுஸ்ரீ அதன் நடுவில் ஒரு அழகிய தாமரைப்பூவைக் கண்டான், அதன் பிறகு ��ரியின் அனைத்து தண்ணீரை வெளியேற்றினார். அதன் பிறகு அந்த இடம் மக்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நேவர் இனத்தவர் அவரை வழிபடுகின்றனர். + + + + + + +வசுதாரா + +வசுதாரா(वसुधारा) என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாகக் கருதுவர். + +வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர். + +பொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார். + +கீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன.மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது. + + + + + +ஆகாயகர்பர் + +ஆகாயகர்ப போதிசத்துவர் (சீனம்: 虛空藏菩薩 Xūkōngzàng púsà; சமஸ்கிருதம்: आकाशगर्भ ஆகாஷகர்ப) அட்டமா போதிசத்துவர்களுள்(அஷ்ட மஹா போதிசத்துவர்கள்) ஒருவர் ஆவார். இவரது பெயருக்கு ஆகாயத்தை போன்ற அளவில்லாத அறிவாற்றலை உடையவர் என்று பொருள். இவருக்கு நெருங்கிய தொடர்புடைய இன்னொரு போதிசத்துவர் ஷிதிகர்பர் ஆவார். ஆகாயகர்பரை ஜப்பானில் கொகுஃஸோ(Kokūzō) என அழைக்கின்றனர். + +ஷிங்கோன் பௌத்தத்தை தோற்றுவித்தவரான கூக்காய், இவரது மந்திரத்தை புத்த துறவியாக இருக்கும் போது உச்சரித்ததால் ஆகாயகர்பருடை தரிசனம் கிடைத்ததாக கூறுவர். கூக்காய் மந்திரத்தை உச்சரிக்கையில் ஆகாயகர்பர் தரிசனம் தந்து, ஞானத்தை மஹாவைரோசன சூத்திரத்தில் தேடுவதற்கு பணித்தார். + +இவருடைய கீழ்க்கண்ட மந்திரம் பொதுவாக ஷிங்கோன் பௌத்த பிரிவினராலும், பௌத்த கலைஞர்களாலும் பயன்படுத்தபடுகிறது. இந்த மந்திர உச்சாடனம் செய்தால் ஞானம் பெருகும் என்றும், அறிவின்மை அகலும் எனவும் நம��பப்படுகிறது. + + +இவர் தொடர்புடை இன்னொரு மந்திரமும் உள்ளது + + + + + + + +1493 + +1493 (MCDXCIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். + + + + + +பூநகரி + +பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும். இதனுள் இரணைதீவு. பல்லவராயன்கட்டு, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் அடங்குகின்றன. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி இறங்குதுறை யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும். + +பூநகரில் அமைந்திருந்த கூட்டுப் படைத் தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1993 இல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலத்த சேதங்களுக்குள்ளானதோடு நாகதேவன் துறையிலுள்ள அதிவேகப் படகுகள் புலிகளின் வசமாகியது. பின்னர் 2000 ஆண்டளவில் எதுவித தாக்குதலும் இன்றி ஆனையிறவு இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நோக்குடன் பின்வாங்கிச் சென்றனர். இப்பொழுது பலாலித் தளத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்கள் பூநகரியிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுவதால் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது. + + + + + +கனிமொழி + +கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. தற்போது, இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. + +மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார். + +சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பர���்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து "கருத்து" என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார். + +"தி இந்து" நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார். + +2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. + +இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். + +சூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார். + +இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். + +இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார். + + + + + + + +உலக சுகாதார நாள் + +உலக நலவாழ்வு நாள் ("World Health Day") என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மான��க்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது. + + + + + + + +குழந்தைகள் நாள் + +குழந்தைகள் நாள் ("Children's Day") உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. + +குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு (கிழமை) அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் நாள் என ஆனது. + +அனைத்துலக குழந்தைகள் நாள் டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. + +பன்னாட்டு குழந்தைகள் நாள் பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன. + +இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள். + +இலங்கையில் குழந்தைகள் நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. + +அர்கெந்தீனா நாட்டில் குழந்தைகள் தின விழாவானது ஆகஸ்டு மாதம் 3 ஆவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. + +ஆர்மீனியா நாட்டில் சூன் 1 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது. + +ஆத்திரேலியாவில் குழந்தைகள் வாரமானது வருடம்தோறும் அக்டோபர் மாதம் நாண்காவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. உலக குழந்தைகள் தினத்திற்கு முந்தைய சனி (கிழமை) முதல் அதற்கு அடுத்த ஞாயிறு (கிழமை) வரை குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினமானது ஆத்திரேலியாவின் பல மா���ாணங்களில் நடைபெற்றது. மேலும் நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 1984 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது. + +வங்காளதேசத்தில் மார்ச் 17 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சேக் முஜிபுர் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் தினமும் கொண்டாடப்படுகிறது. 2009]] ஆம் ஆண்டு முதல் ஜேக்கொ அறக்கட்டளையானது நவம்பர் 20 அன்று நாடு முழுவதும் தொடக்கக்கல்வி மற்றும் குழந்தைகளின் நலம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. + +பொலிவியாவில் ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. + +பொசுனியா எர்செகோவினா நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. + +பல்காரியாவில் சூன் 1 அன்று குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது.இங்கு பாரம்பரியமாக குழந்தைகளை அவர்களின் பிறந்தநாள் போன்றே பரிசுகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். 1925 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. + +கமரூன் நாட்டில்1990ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. + +கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கமரூன், எக்குவடோரியல் கினி, காபோன், சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் டிசம்பர் 25 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு குழந்தைகள் சிறப்பிக்கப்படுகிறார்கள். + +சீனாவில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சீனக் குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட போது அதன் அமைச்சரவையானது சூன் 1 அன்று அரை நாள் விடுமுறை நாளாக அறிவித்தது. பின்பு 1956 ஆம் ஆண்டு முதல் முழுநாள் விடுமுறை தினமாக அறிவித்தது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பேரணி , இலவச திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர். + +கொலம்பியாவில் ஏப்ரல் மாதம் கடைசி சனி (கிழமை) அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2001 ஆம் + +ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. + +கோஸ்ட்டா ரிக்காவில் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது. + +கியூபாவில் சூலை மாதம் மூன்றாவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. + +செக் குடியரசு சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. 1950 ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. + +எக்குவடோர் நாட்டில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. பன்னிரண்ட�� வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிகள் வழங்குவர். + +எகிப்து நாட்டில் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது + + + + + +ஆர்வர்டு பல்கலைக்கழகம் + +ஹார்வர்டு பல்கலைக்கழகம் ("Harvard University") ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு என்னும் மதகுரு ஒருவரால் 1639 ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லுரியாக உருவாக்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது. + +2007 கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது. + + + + +நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் + +நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ("New Mexico State University"), ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அரசு சார்புப் பல்கலைக்கழகமாகும். லாஸ் குரூசஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் 1888 ஆம் ஆண்டு விவசாயக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26,400 மாணவர்களை உள்ளடக்கிய இப்பல்கலைக்கழகம் 1:19 என்னும் ஆசிரியர்:மாணவர் விகுதி கொண்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகப் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. நாசா ஆராய்ச்சிக் கூடத்தின் புரிந்துணர்வு பல்கலைக்கழங்களில் இது முதல் 12 இடங்களில் உள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். + + + + + +சர்யா + +சர்யா ("Zarya", ), என்பது விண்வெளியில் நிறுவப்படவிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது பகுதி (module) ஆகும். இதற்கு Functional Cargo Block அல்லது FGB (ரஷ்ய மொழியில் "функционально-грузовой блок") என்றும் பெயர். இது பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் (பவிநி) ஆரம்ப இயக்கத்துக்கும் தேவையான மின்சக்தி, காப்பகம், மற்றும் பல பொருட்களைக் காவிச் சென்றது. + +சர்யா ஐக்கிய அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும். அதன் இயக்கத்துக்குத் தேவையான செலவு முழுவதுக்கும் அமெரிக்காவே பொறுப்பெடுத்துள்ளது. இதன் கட்டுமானப்பணி ரஷ்யாவில் மாஸ்கோ அருகில் குரூனிச்சேவ் என்ற இடத்தில் டிசம்பர் 1994 இல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 1998 இல் முடிவடைந்தது. "சர்யா" 19,300 கிகி எடையும், 12.55 மீ நீளமும் 4.1 மீ அகலமும் உடையது. + + +"சர்யா" கசக்ஸ்தானின் பாய்க்கனூர் விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 20, 1998 இல் 400 கிமீ உயர வட்டமையத்துக்கு ("orbit") ஏவப்பட்டது. இதன் வாழ்வுக்காலம் குறைந்தது 15 ஆண்டுகளாகும். சர்யா வட்ட ஒழுக்கை அடைந்ததும், STS-88 என்ற வேறொரு விண்ணூர்தி டிசம்பர் 4, 1998 இல் யுனிட்டி மொடியூலை இணைக்க ஏவப்பட்டது. + + + + +விண்டோசு என். டி. 3.5 + +வின்டோஸ் என்டி 3.5 வின்டோஸ் என்டி குடும்ப இயங்குதளத்தின் இரண்டாவது வெளியீடாகும். இவ்வியங்குதள விருத்தியின் இலக்குகளிள் முக்கியமாக வேகமான ஓர் இயங்குதளத்தை உருவாக்குவதாகும். இதனால் இத்திட்டத்தின் இரகசியப் பெயராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டேரோனா பன்னாட்டு நெடுஞ்சாலையைக் சூட்சுமமாகக் குறிப்பிடும் வண்ணம் டேரோனா எனப் பெயரிடப்பட்டது. + + + + +தமிழ்நாடு அரசியல் + +1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன. + +தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆ��ியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். + +தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் , புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. + +காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது. + +தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார். + +இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிப் பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராசர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கியக் கூறாக விளங்கியது. இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார். + +சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது. + +1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. +தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றையப் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன. + +அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழிக் கொள்கையும், சுயமரியாதைக் கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கியப் பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார். இக்காலக் கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்தார். கருணாநிதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தனி கட்சியைத் தொடங்கினார். + +தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்காலக் கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்காலக் கட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார். + +1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்காலக் கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் 2004ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. 2006ம் ஆண்டு தமிழக அரசியலில் முதன் முறையாகப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது. + +திமுக-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்குப் பின் அஇஅதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. + +"விரிவாக பார்க்க" தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 + +2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அஇஅதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அ���்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 89 இடங்களில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். இம்முறை காங்கிரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன. + +தமிழ்நாட்டில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31 சனவரி, 1976 முதல் 30 சூன், 1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 17 பெப்ரவரி, 1980 முதல் 6 சூன், 1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னரும், 30 சனவரி, 1988 முதல் 27 சனவரி, 1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30 சனவரி 1991, முதல் 24 சூன், 1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. + +− +−* A Time of Coalitions: Divided We Stand +−* தமிழக அரசியல் வட்டார செய்திகள்வலைத்தமிழ் +−* தமிழக அரசியல் ஒரு பார்வை +−* பெரியார் வரலாறு +−* காணாமல் போன அரசியல் கட்சிகள் + +− + + + +மு. க. அழகிரி + +மு. க. அழகிரி (பிறப்பு: 30 சனவரி, 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார். + +இவர் தனது தந்தையின் சொந்த ஊரான திருக்குவளையில் 30-1-1950-ல் பிறந்தார். இவருடைய சகோதரர்கள் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, தங்கை செல்வி. மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல��வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அது முதல் மதுரையிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்தியசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். + +திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்று பணியாற்றியுள்ளார். + +முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன், 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது. + +மார்ச் 25, 2014 ஆம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் அழகிரி + + + + + +க. அன்பழகன் + +க.அன்பழகன் (பிறப்பு: திசம்பர் 19, 1922) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். + +அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் "இராமையா". அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் (எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். + +தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்���ினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். + +”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர். + +க. அன்பழகன் சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்) முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். + +எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் பின்வறுமாறு: + + +இவர் வெற்றிச்செல்வி என்பவரை 21-2-1945ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: 17-2-1952 ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர். சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார். +
+ +க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது. மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் வ���ரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 11-9-1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. + + +
+ +ஆற்காடு வீராசாமி + +ஆற்காடு நா. வீராசாமி, (ஆங்கிலம் Arcot N. Veeraswami) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். திமுக முன்னாள் பொருளாளர் 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார் .தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார் . +மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். +வேலூர் மாவட்டம் குப்புடிச்சாத்தத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, 1971இல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1996, 2001 Legislative Council 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 Legislative Council 1988 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார் .2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை. + + + + +தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 + +தவளைப் பாய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் என்று பெயரிடப்பட்டது. + +நான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். நாகதேவன்துறையிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. + + + + + + +கோ. சி. மணி + +கோ. சி. மணி ("Ko.Si. Mani", செப்டம்பர் 13, 1929 - திசம்பர் 2, 2016), +தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் கூட்டுற��ு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தவர். + +நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மேக்கிரிமங்கலம் என்ற கிராமத்தில் கோவிந்தசாமி, அஞ்சலை தம்பதிக்கு மகனாகப் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியன் ஆகும். இவருக்கு சாவித்திரி, கிருஷ்ணவேணி என்ற இருமனைவிகள். இவரது மூத்த மகன் கோ.சி.மதியழகன் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியத் தலைவராக பணியாற்றி இவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் நவம்பர் 26, 2009ஆம் ஆண்டில் காலமானார். இவரது அடுத்த மகன் கோ.சி.இளங்கோவன் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். + +1948இல் பண்டாரவாடை இரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார்பூசி அழித்தமைக்குக் கைது செய்யப்பட்டுத் தண்டனை பெற்றவர். இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார். + +"ஓய்வறியா சிங்கம், "சின்னக் கலைஞர்" என்றெல்லாம் காவிரி டெல்டா தி.மு.க.வினரால் செல்லமாக அழைக்கப்படும் கோ.சி. மணி, நான்கு முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1968 முதல் 1980 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழகச் சட்டமேலவை உறுப்பினராக போன்ற பதவிகளை வகித்தவர். தமிழகச் சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தவர். இவர் திசம்பர் 2, 2016 ஆம் ஆண்டு இறந்தார். + + + + + +வீரபாண்டி எஸ். ஆறுமுகம் + +வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (26 ஜனவரி 1937 - 23 நவம்பர் 2012) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பக் காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தார். + +சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், திமுகவின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார். + +1957ஆம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958ஆம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962 ஆம் ஆண்டு முதல் முறையாகச் ச���்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியடைந்தார். + +வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011ஆம் ஆண்டு சூலை 30ஆம் நாள் சேலம் மாவட்ட துணை ஆய்வாளர் சத்யபிரியாவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். + +உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார். + + + + + +துரைமுருகன் + +துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தமிழக அரசியல்வாதியும் மற்றும் வழக்குரைஞரும் ஆவார். திமுக பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார். + +துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். + + + + + + +க. பொன்முடி + +க. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதியாவார். தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். + +தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். + + + + + +கே. என். நேரு + +கே. என். நேரு ("K. N. Nehru", பிறப்பு: நவம்பர் 9, 1952) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1986 முதல் பங்குபெற்று வருகின்றார். + +கே. என் .நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். . நெய்குளம் கிராமத்தில் 9 நவம்பர் 1952 ஆம் ஆண்டு பிறந்தார் . ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன்   தலைவராக இருந்துள்ளார் . . சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல்  திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினர் கே. என் .நேரு . . இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார். + + + + + +எ. வா. வேலு + +எ. வா. வேலு ("E. V. Velu", பிறப்பு: மார்ச் 15, 1951) ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார். + +இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் பேருந்து நடத்துநராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். + + + + + +தங்கம் தென்னரசு + +தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும் மற்றும் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகனும் மற்றும் பெண் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் அண்ணனும் ஆவார். + +தென்னரசு மல்லாங்கிணறு கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். + + + + + +கிராஸ்னதார் பிரதேசம் + +கிராஸ்னதார் பிரதேசம் ("Krasnodar Krai", உருசியம்: "Краснода́рский край", கிராஸ்னதார்ஸ்கி கிராய்) என்பது என்பது உருசியக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் (கிராய்) ஆகும். தெற்கு நடுவண் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இப்பிரதேசத்தின் நிருவாகத் தலைநகர் கிராஸ்னதார் ஆகும். இதன் பக்கள் தொகை 5,226,647 (2010 கணிப்பு). + +கிராசுனதார் பிரதேசத்தில் எல்லைகளாக உக்ரைன், உருசியாவின் ரஸ்தோவ் வட்டம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, கரக்காய் செர்க்கேசியா குடியரசு, ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்த அப்காசியா ஆகியன அமைந்துள்ளன. அடிகேயா குடியரசு கிராஸ்னதார் பிரதேசத்தினுள் அமைந்துள்ளது. கிராசுனதார் கிராயின் தெற்கு எல்லையில் கருங்கடல் உள்ளது. + + + + +உலகத் தொலைக்காட்சி நாள் + +உலகத் தொலைக்காட்சி நாள் ("World Television Day") உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. + +நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொ��்டாடப்பட்டது. +ஐநாவின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தில் இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது. + + + + + +கிராமபோன் + +போனோகிராஃப் ("phonograph"), அல்லது கிராமபோன் ("gramophone") என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும். + +ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை ("phonautograph") பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது. + +பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் ("Charles Cros") என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் டிசம்பர், 1877 இல் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயன்முறை விளக்கம் தரமுடியவில்லை. அதே நேரம் தோமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். + +நவம்பர் 21, 1877]] இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் [[பெப்ரவரி 19, [[1878]] இல் அவரால் [[காப்புரிமம்]] (US Patent 200,521) பெறப்பட்டது. + +எடிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி [[வெள்ளீயம்|வெள்ளீயத்]] தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது. + +[[எமிலி பேர்லினர்]] (Emile Berliner) என்பவர் [[1887]] இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார். + + +[[பகுப்பு:ஒலியியல்]] +[[பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்]] +[[பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்]] + +