diff --git "a/train/AA_wiki_54.txt" "b/train/AA_wiki_54.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_54.txt" @@ -0,0 +1,3401 @@ + +இண்டியம் + +இண்டியம் "(Indium)" என்பது In என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். அணு எண் 49 கொண்ட இத்தனிமத்தை பின் இடைநிலைத் தனிமம் என்று வகைப் படுத்துகிறார்கள். புவி மேலோட்டில் மில்லியனுக்கு 0.21 பகுதிகள் இண்டியம் தனிமம் காணப்படுகிறது. மிகவும் மென்மையான இத்தனிமத்தை தேவைக்கேற்றார் போல உருவத்தை மாற்றிக் கொள்ள இயலும். சோடியம் மற்றும் காலியம் தனிமங்களைக் காட்டிலும் இண்டியத்தின் உருகுநிலை அதிகமாகும். ஆனால் இலித்தியம் மற்றும் வெள்ளீயம் தனிமங்களைக் காட்டிலும் குறைவான உருகுநிலை கொண்டதாகும். வேதியியல் ரீதியாக இண்டியமானது காலியம் மற்றும் தாலியத்தை ஒத்திருக்கிறது. பெரும்பாலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடையிலான பண்புகளை இண்டியம் வெளிப்படுத்துகிறது. 1863 ஆம் ஆண்டு பெர்டினாண்டு ரெயிச் மற்றும் இயரோனிமசு தியோடர் ரிக்டர் நிறமாலையியல் செயல் முறைகள் மூலம் இண்டியத்தைக் கண்டறிந்தனர். நிறமாலையின் கருநீல வரிகளில் இத்தனிமம் தென்பட்டதால் இதற்கு இண்டியம் எனப்பெயரிடப்பட்டது. 1864 ஆம் ஆண்டில் இண்டியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டது. + +துத்தநாக சல்பைடு தாதுவில் இண்டியம் சிறிதளவு காணப்படுகிறது. துத்தநாகத்தை தூய்மைப்படுத்தும் செயல் முறையில் ஒரு உடன் விளைபொருளாக இண்டியம் கிடைக்கிறது. குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் இத்தனிமத்தை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பற்றாசு போன்ற தாழ் உருகுநிலை கொண்ட கலப்பு உலோகங்களில் இண்டியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உயர் வெற்றிட முத்திரைகள், கண்ணாடிகள் மீது பூசப்பயன்படுத்தும் இண்டியம்வெள்ளீய ஆக்சைடு உற்பத்திக்கு இண்டியம் பயன்படுகிறது. +இரத்த ஓட்டத்தில் இண்டியம் சேர்மங்களைச் செலுத்தினாலும் அவை சிறிதலவு மட்டுமே நச்சுத்தன்மையைக் காட்டுகிறது மற்றும் எந்தவிதமான உயிர்னச் செயல்பாடுகளிலும் இது பங்கேற்பதில்லை. சுவாசம், ஈர்ப்பு முறைகளால் இண்டியம் உடலுக்குள் செல்வதில்லை. உட்செலுத்துதல் மூலம் மட்டுமே இவை உடலுக்குள் செல்கின்றன. + +இண்டியம் தனிமம் வெள்ளி போன்ற வெண்மையான நிறங்கொண்டதாகும். மிகவும் பளபளப்பான இத்தனிமம் பின் இடைநிலைத் தனிமங்கள் வகையில் ஒரு உறுப்பினராகும் . மிகவும் மென்மையான இத்தனிமத்தை கத்தியைக் கொண்டு வெட்டலாம். மோவின் கடினத்தன்மை மதிப்பு 1.2 ஆகும். தனிமவரிசை அட்டவனையின் 13 ஆவது குழுத் தனிமங்களின் குடும்பத்தில் இண்டியமும் ஓரு உறுப்பினர் ஆகும். காலியம் போல் இதுவும் கண்ணாடியில் சற்று பற்றி "நனை"க்கவல்ல பொருள் (பார்க்க: நனைப்புமை).இண்டியத்தின் பண்புகள் நெடுக்க வரிசையில் அடுத்துள்ள தனிமங்களான காலியம் மற்றும் தாலியம் இவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்டதாக உள்ளது. வெள்ளீயம் போலவே இன்டியத்தை வளைக்கும் போதும் படிகப்பகிர்தல் காரணமாக ஓர் உயர்ந்த சத்தம் கேட்கிறது. இலேசான காலியத்தைக் காட்டிலும் உயர்ந்த 156.60 ° செல்சியசு என்ற உருகுநிலையும் கனமான தாலியத்தைக் காட்டிலும் உயர்ந்த உருகுநிலையும் கொண்டதாக உள்ளது. கொதிநிலையைப் பொறுத்தவரை 2072 பாகை செல்சியசு என்ற கொதிநிலையை இண்டியம் பெற்றுள்ளது. இது தாலியத்தைக் காட்டிலும் அதிகமாகவும் காலியத்தைக் காட்டிலும் குறைவானது ஆகும். இப்பண்பு தனிம வரிசை அட்டவணையின் கொதிநிலைப் பண்புகளின் பொதுப் போக்கிற்கு மறுதலையாக உள்ளது. ஆனால் இதர பின் இடைநிலைத் தனிமங்களின் போக்கிற்கு இசைவாக உள்ளது. சில எலக்ட்ரான்களின் உள்ளடங்காப் பண்புடன் கொண்டுள்ள உலோகப் பிணைப்பின் வலிமை இன்மை இதற்குக் காரணமாகும். +7.31 கிராம்/செ.மீ3 என்ற இண்டியத்தின் அடர்த்தியும் காலியத்தைக் காட்டிலும் அதிகம் மற்றும் தாலியத்தைக் காட்டிலும் குறைவாகும். 3.41 கெல்வின் என்ற வெப்பநிலைக்கு கீழ் இண்டியம் ஒரு மீகடத்தியாக மாறுகிறது. திட்டவெப்பம் மற்றும் அழுத்தத்தில் இண்டியம் முகமைய நாற்கோணக வடிவில் இடக்குழு I4/எம் எம் எம் அளவில் படிகமாகிறது. (a = 325 பைக்கோமீட்டர், c = 495 பைக்கோமீட்டர்) ஓர் உருக்குலைந்த முகமைய கட்டமைப்பாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு இண்டியம் அணுவும் 324 மைக்கோமீட்டர் இடைவெளியில் நான்கு அண்டை உறுப்பினர்களையும், 336 மைக்கோமீட்டர் இடைவெளியில் எட்டு சற்று தொலைவிலும் பெற்றுள்ளது . + +அரிதில் கானப்படும் ஒரு பண்பு, இதன் பரவலாக கிடைக்கும் ஓரிடத்தான் சிறிதளவு கதிரியக்கம் கொண்ட ஒன்று. ஆனால் அது மிகவும் மெதுவாக சிதைந்து வெள்ளீயம் ஆக மாறுகின்றது. இதன் அரைவாழ்வு 4.41 ஆண்டுகள். இது அண்டம் தோன்றிய காலத்தைவிட 10,000 மடங்கு அதிகமானது. இயற்கையில் கிடைக்கும் தோரியம் என்னும் கதிரியக்கத் தனிமத்தை விட 50,000 மடங்கு அதிகமான கால அளவு. இந்த கதிரியக்கம் சிறியதென்பதால் கெடுதல் தராத ஒன்று ஆகும். இண்டியமானது, காமியம் போல கூடக்கூட நச்சுத்தன்மை பெறாத ஒரு நெடுங்குழு 5 ஐச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். + +இண்டியம் 49 எலக்ட்ரான்களைக் கொண்டு [Kr]4d105s25p1 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைப்புடன் காணப்படுகிறது. சேர்மங்களாக மாறும் போது இண்டியம் மூன்று வெளிக்கூட்டு எலக்ட்ரான்களை வழங்கி இண்டியம்(III), In3+ ஆக மாறுகிறது. சில நிகழ்வுகளில் 5s எலக்ட்ரான்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் இண்டியம் (I) In+ உருவாகிறது. ஒற்றை இணைதிற நிலையின் நிலைப்புத்தன்மை மந்த இணை விளைவுகளுக்கு காரணம் ஆகும். கன உலோகங்களில் 5s சுற்றுப்பாதையின் சார்பியல் விளைவுகள் நிலைநிறுத்துகின்றன. இண்டியத்தின் ஒத்தவரிசையில் அமைந்துள்ள கன உலோகமான தாலியம் வலிமையான சார்பியல் விளைவைக் காட்டுகிறது இதனால் தாலியம்(III) நிலையைக் காட்டிலும் தாலியம்(I) நிலைக்கு அதிக நிகழ்வாய்ப்பு உள்ளது. இதேபோல இண்டியத்தின் ஒத்தவரிசையில் அமைந்துள்ள இலேசான உலோகமான காலியம் பொதுவாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் காட்டுகிறது. தாலியம் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் இண்டியம் அவ்வாறில்லாததற்கும் இதுவே காரணமாகும். பல இண்டியம்(I) சேர்மங்கள் வலுவான ஒடுக்கும் முகவர்களாக உள்ளன. இண்டியம்(I) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடுகள் அதிக காரமாகவும் இண்டியம்(III) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடும் அதிக அமிலத்தன்மையும் கொண்டுள்ளன. + +நில உருண்டையில் ஏறத்தாழ 0.1 மிஒப (ppm) (மிஒப (ppm) = மில்லியலின் ஒரு பங்கு) உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இது ஏறத்தாழ வெள்ளி போலும் அருகியே கிடைக்கும் ஒரு பொருள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எடைக்கு வெள்ளியை விட இண்டியம் மூன்று மடங்கு விலை உயர்ந்தது. 1924 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதிலும் மொத்தம் ஏறத்தாழ ஒரேஎ ஒரு கிராம் அளவே இண்டியம் பிரித்து எடுக்கப்பட்டிருந்தது. அண்மையில் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெக் கோமின்க்கோ தூய்ப்பிரிப்பு ஆலையில் 2005 ஆம் ஆண்டு 32,500 கிலோ கிராம் பிரித்தெடுத்திருக்கிறார்கள் (2004 ஆம் ஆண்டில் 42,800 கி.கி, 2003 ஆம் ஆண்டில் 36,100 கி.கி). இண்டியம் துத்தநாகம் பிரித்தெடுக்கும் தொழிலில் துணைவிளை பொருளாக கிடைக்கின்றது. 2002 ஆம் ஆண்டு ஒரு கி.கி $94 இருந்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு இண்டியத்தின் விலை ஒரு கி.கி ஐக்கிய அ��ெரிக்க டாலர் $900/kg ஆக உயர்ந்துள்ளது. + + + + + +யுனைட்டட் இந்தியா காலனி + +யுனைட்டட் இந்தியா காலனி சென்னை மாநகராட்சியிலுள்ள கோடம்பாக்கம் பகுதியின் ஒரு பிரிவு ஆகும். + +சென்னை மாநகராட்சியில் மிகப் பிரபலமான திரையரங்குகளின் ஒன்றான லிபர்டி திரையரங்கம் இங்கு உள்ளது. இலையோலா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி (ஆண்கள்), பாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி (பெண்க‌ள்) ஆகிய‌ இரும்பெரும் பள்ளிக்கூடங்கள் இங்குள்ள‌ன‌. அண்ணா பூங்கா யுனைட்டட் இந்தியா காலனியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நடைப்பயிற்சி செய்வதற்காகவும் குழந்தைகள் விளையாடுவதற்காகவும் இப்பூங்காவை இப்பகுதி மக்கள் நாடி வருவார்கள். பாட்டிமா தேவாலையம், உயிர்த்தெழுந்த மீட்பர் ஆலை‌யம் என இரு தேவாலயங்களும், நவசக்தி விநாயகர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன. + +யுனைட்டட் இந்தியா காலனியில் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசும் இந்துக்கள். தெலுங்கு, மலையாளம், மற்றும் மார்வாடி மொழி பேசும் மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர். குறிப்பிடும் அளவிற்கு கிறிஸ்தவர்களும் வாழ்வதால் தீபாவளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையும் இப்பகுதியில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. + +யுனைட்டட் இந்தியா காலனியின் தபால் குறியீட்டு எண் 600024. + + + + +மக்கள் தொலைக்காட்சி + +மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது. இன உணர்வும் சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி "மண் பயனுற வேண்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக் காட்சி முன்வைத்துள்ளது. + +சமுதாயத்துக்குத் தீங்கானவை என இந்நிறுவனம் கருதும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளாமை, இந்திய வணிகத் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்கியிராமை, நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமை என்பவற்றின் மூலம் இத்தொலைக்காட்சி பிற தொலைக்காட்சிச் சேவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண���டுள்ளது. + +பல தமிழ் ஊடகங்கள் பெருமளவில் பிறமொழிச் சொற்களைக் கலந்து நிகழ்ச்சிகளை வழங்கிவரும் காலகட்டத்தில் பிற மொழிகள் அதிகம் கலவாமல் நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் இத்தொலைக்காட்சி கூடிய கவனமெடுத்துக்கொள்கிறது. இதற்காக இதன் ஊழியர்களுக்குப் போதிய தமிழ்ப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாது, தொலைக்காட்சி நேயர்களிடையே நல்ல தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் பல நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அறிஞர்கள் பதிலளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், "தமிழ் பேசு தங்கக் காசு" போன்ற போட்டி நிகழ்ச்சிகள் என்பன இத்தகையவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும். + +தமிழகத்தின் ஊரகப் பண்பாடு தொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கும் இத்தொலைக்காட்சி முதன்மை அளித்து வருகிறது. + +தமிழை வளர்க்கவும், நல்ல தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நடத்தப்படும் முதன்மையான சில நிகழ்ச்சிகள் இங்கே: + + + + +குறை மாழை + +குறை மாழைகள் ("poor metals") என்னும் குழுப் பெயர் தனிம அட்டவணையில் பிறழ்வரிசை மாழைகளைத் தாண்டி உள்ள மாழைத்தன்மை குறைந்த ஆனால் மாழைகளாகிய வேதியியல் தனிமங்களைக் குறிக்கும். இத்தனிமங்கள், எதிர்மின்னிக் கூடுகளில் மிக அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் p-சுற்றுப்பாதைக் கூட்டில் இருக்கும் தனிமங்களுடன் சேர்ந்த ஒரு தனிக்குழுவாகும். குறைமாழைகள் தனிம அட்டவனையில் உள்ள பிறழ்வரிசை மாழைகளை விடவும் மென்மையானவை, குறைந்த உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவை, ஆனால் எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு கூடுதலாக உள்ளவை. தனிம அட்டவணையில் அதே வரிசையில் உள்ள மாழையனை (மாழைபோல்வன) என்னும் வகையைச் சார்ந்த தனிமங்களை விடவும் கூடுதலான கொதிநிலை கொண்டவை. + +குறைமாழைகள் என்பது ஆங்கிலத்தில் Poor metals எனப்படுகின்றன ஆனால் "Poor metals" என்பது அனைத்துலக தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) ஒப்புதல் பெற்ற கலைச்சொல் அல்ல. பொதுவாக குறை மாழைகள் என்னும் குழுவில் உள்ள தனிமங்கள், அலுமினியம், காலியம், இண்டியம், வெள்ளீயம், தாலியம், ஈயம், பிஸ்மத் ஆகும். ஆனால் ஒரோவொருக்கால் ஜெர்மானியம், ஆண்ட்டிமனி, பொலோனியம் ஆகிய தனிமங்களும் சேர்த்துக் கூறுவதுண்டு. ஆனால் பின் கூறியவை பெரும்பாலும் மாழ��யனை (மாழை போலவன) என்னும் குழுவைச் சேர்ந்தவை. +The Chemistry Student's Companion, Stephen Schaffter, Lulu Press, Inc 2006 ISBN 1-4116-9247-0 + + + + + +ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் + +ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் (இறப்பு: சூலை 29, 2014) இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர். + +கனகரத்தினம் பிறந்தது இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் அருகே உள்ள மருதங்குளம் என்ற ஊரில். பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆகியோர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரை பெயர். மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர். + +அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். பொதிகைத் தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார். + +பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள் + +இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார். + + +ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். + + + + + +குலத்தின் கிரமம் (கணிதம்) + +கணிதத்தில், குறிப்பாக இயற்கணிதத்தில், குலம்(Group) என்ற கணித அமைப்பு ஒரு அடிப்படைக் கருத்தாகும். ஒரு முடிவுறு கணம் formula_1, அதனில் சேர்ப்பு விதிக்குட்பட்ட ஓர் ஈருறுப்புச் செயலி, இவையிரண்டும் கொடுக்கப்பட்டு, அச்செயலிக்கு ஒரு முற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறும் இருந்துவிட்டால் அவ்வமைப்பு முடிவுறு குலம் எனப்படும். அப்பொழுது, formula_1-இன் உறுப்புகளின் எண்ணிக்கை அக் குலத்தின் கிரமம் (Order of the Group) எனப்படும். + +ஒரு குலத்தின் அடித்தளக்கணம் முடிவுறாக் கணமானால், அக்குலம் "முடிவுறாக் குலம்" எனப்படும். + +ஒரு குலத்தின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு கிரமம் வரையறுக்கப்படலாம். ஓர் உறுப்பு formula_3-இன் கிரமம் என்பது, formula_4 என்ற சமன்பாட்டுக் குகந்தபடி உள்ள மீச்சிறு formula_5 என்ற எண்ணிக்கை. + +எ.கா. formula_6 என்ற சமச்சீர் குலத்தைப் பார். இதன் கிரமம் 6. இதன் ஆறு உறுப்புகள்: + +formula_7 + +இதனில் முதல் மூன்று உறுப்புகளின் 2-வது அடுக்கு formula_8 ஆகிறது. அதனால் அவைகளின் கிரமம் 2. + +அடுத்த இரண்டு உறுப்புகளின் 3-வது அடுக்கு formula_9 ஆகிறது. அதனால் அவைகளின் கிரமம் 3. + +formula_9-இன் கிரமம் 1. + +formula_1 ஒரு சுழற்குலமானால் அது, formula_12 என்ற உருவத்தில் இருக்கும். இங்கு formula_3 என்பது அச்சுழற்குலத்தின் பிறப்பி. எந்த எண் formula_5 க்காவது formula_4 யாக இருக்குமானால், formula_5-இன் மீச்சிறு மதிப்பு, formula_3-இனுடைய கிரமம். அதுவே சுழற்குலத்தின் கிரமமுமாகும். + +ஆக, ஒரு முடிவுறு சுழற்குலத்தின் கிரமமும் அதன் பிறப்பியின் கிரமமும் ஒன்றே. + +எந்த எண் formula_5 க்கும் formula_4 உண்மையல்லவென்றால், அக்குலம் ஒரு முடிவுறா சுழற்குலமாகும். + + + + +லாக்ராஞ்சியின் தேற்றம் + +லாக்ராஞ்சியின் தேற்றம் ("Lagrange's theorem") கணிதத்தில் குலக் கோட்பாட்டுப் பிரிவில் ஒரு அடிப்படைத் தேற்றம். இத்தாலியக் கணிதவியலாளர் லாக்ராஞ்சி (1736-1813) இதைக் கண்டுபிடித்தார். இத்தேற்றத்தின்படி ஒரு முடிவுறு குலத்தின் வரிசையை (கிரமம்) அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும். + + +ஒரு முடிவுறு குலத்தின் வரிசையை அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும் (மீதமின்றி வகுக்கும்). + +ஏதேனும் ஒரு முடிவுறு குலம் formula_1; அதன் உட்குலம் formula_2 எனில், + +லாக்ராஞ்சியின் தேற்றப்பட���, formula_6 ஐ formula_4 மீதமின்றி வகுக்கும். அதனால் formula_9 இன் மதிப்பு ஒரு முழு எண்ணாகும். இம்மதிப்பு, formula_1 இல் formula_2 இன் குறியெண் எனப்படும். இக்குறியெண்ணின் குறியீடு formula_12 + +வலது இணைக்கணம் என்ற கருத்தைப் பயன்படுத்தி இத்தேற்றத்தை நிறுவலாம். + +formula_14 இன் உறுப்புக்களிடையே formula_15 என்ற உறவை ஏற்படுத்தினால், இவ்வுறவு சமான உறவாகும். மேலும் இது formula_1 ஐ சமானப் பகுதிகளாகப் பிரிக்கும். இச்சமானப் பகுதிகள் formula_2 இன் வலது இணைக்கணங்கள் எனப்படும். உட்குலம் formula_2 ம் ஒரு சமானப் பகுதிதான் -- அது முற்றொருமை உறுப்பு formula_19 ஐ உள்ளடக்கியிருக்கும் சமானப் பகுதி. இச்சமானப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை சமம் என்று காட்டிவிட்டால், லாக்ராஞ்சியின் தேற்றம் நிறுவப்பட்டு விடும். + +formula_20 என்ற ஏதாவது இரு வலது இணைக்கணங்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்கிடையே, + +என்ற கோப்பினை வரையறுக்க, formula_23 formula_24 formula_25 என்பதும் உண்மையாவதால் இக்கோப்பு ஓர் இருவழிக் கோப்பாக அமையும். இந்த இருவழிக்கோப்பின் ஆட்களம் formula_26 மற்றும் இணை ஆட்களம் formula_27 இரண்டின் உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். எனவே formula_1 இன் அனைத்து சமானப்பகுதிகளின் (formula_29 உட்பட) உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். மேலும் அவை ஒவ்வொன்றும் formula_4 க்குச் சமமாகவும் இருக்கும். + + + +என்று எழுதினால், முடிவுறாக் குலங்கள் formula_35 க்கும் எண்ணளவை என்ற கருத்தடிப்படையில் இச்சமன்பாடு உண்மை பயக்கும். + +http://dogschool.tripod.com/lagrange.html + + + + +சுகார்த்தோ + +சுகார்த்தோ ("Suharto" அல்லது "Soeharto", (ஜூன் 8, 1921 - ஜனவரி 27, 2008) இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவத் தலைவரும் அதிபருமாவார். 1967 இலிருந்து 1998 வரை இந்தோனேசியாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவியிலிருந்த அரசியற் தலைவராவார். + +இந்தோனீசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவிடமிருந்து இராணுவத் தலையீட்டின் மூலமும் உள்நாட்டுக் குழப்பங்க்களீன் மத்தியிலும் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். தனது 30 ஆண்டுகால ஆட்சியில், சுகார்த்தோ ஒரு காத்திரமான மத்திய அரசாங்கத்தை இராணுவ வழிமுறைக்களில் அமைத்தார். அவரது நிலையான அரசியற் கொள்கை மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அவருக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டது. ஆனாலும் இவரது ஆட்சிக் காலத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனீஸ்டுக்களும் சீன இந்தோனேசியர்களும் கொல்லப்பட்டனர். கம்யூனிஸ்டுகள், மற்றும் சீனர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. + +ஆனாலும் 1990களில் நாட்டின் பொருளாதார நிலைமை மந்தமடையத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு ஆதரவு குறையத் தொடங்கிற்று. உள்நாட்டுக் குழப்பங்களின் மத்தியில் மே 1998இல் தனது அதிபர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. + + + + + +மயூரன் சுகுமாரன் + +மயூரன் சுகுமாரன் ("Myuran Sukumaran", ஏப்ரல் 17, 1981 - 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. + +தனது தண்டனைக்கு எதிராக சுகுமாரன் மேன்முறையீடு செய்தார், ஆனாலும் பாலி உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து 2011 சூலை 6 அன்று மரணதண்டனையை உறுதிப்படுத்தியது. 2014 டிசம்பர் 30 அன்று சுகுமாரனின் பொதுமன்னிப்புக்கான விண்ணப்பம் அரசுத்தலைவர் ஜோக்கோ விடோடோவினால் நிராகரிக்கப்பட்டு, பாலி ஒன்பதின் இன்னொரு தலைவர் ஆன்ட்ரூ சானுடன் சேர்த்து மரணதண்டனை உறுதியானது< சுகுமாரனும் ஆன்ட்ரூ சானும் பாலி கெரொபோக்கான் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு. 2015 சனவரியில் இவர்கள் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டார்கள். மயூரன், அன்ட்ரூ சான் ஆகியோருக்கு மரணதண்டனை பற்றிய அதிகாரபூர்வமான அறிவித்தல் 2015 ஏப்ரல் 25 சனிக்கிழமை கொடுக்கப்பட்டது. மரணதண்டனை 2015 ஏப்ரல் 29 அன்று அதிகாலை 03:00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. + +லண்டனில் பிறந்த மயூரன் சிறிது காலம் இலங்கையில் வசித்து விட்டு பெற்றோருடன் ஆத்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தார். மயூரன் தனது ஆரம்பக் கல்வியை சிட்னி ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலையிலும் கற்றார். பாடசாலைப் படிப்பு முடிந்ததும் வங்கி ஒன்றிலும் பின்னர் சிட்னியில் கடவுச்சீட்டு அலுவலகத்திலும் பணி புரிந்தார். + +மயூரன் அவரது 24வது பிறந்தநாளான 2005 ஏப்ரல் 17 அன்று பாலியில் வைத்து மேலும் 8 அவுஸ்திரேலியர்களுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். மொத்தம் ஒன்பது பேரில் முதல் நான்கு பேர் மைக்கல் சூகாஜ், ரினாய் லோரென்ஸ் (பெண்), ஸ்கொட் ரஷ், மார்ட்டின் ஸ்டீபன்ஸ் ஆகியோர் பாலியின் அனைத்துலக விமானநிலையத்தில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லக் காத்திருக்கும் போது தமது உடம்புடன் சேர்த்து மொத்தம் 8.3 கிகி போதைப் பொருளைக் கட்டி எடுத்துக் கொண்டு போக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். + +மயூரனும் மேலும் மூன்று பேர் பாலியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 350 கிராம் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மயூரன் தனக்கு இவ்விடயத்தில் ஒரு தொடர்புமிருக்கவில்லை எனத் தெரிவித்தார். + +அதே நாள் மாலை இவர்களின் தலைவர் எனக் கருதப்படும் ஆண்ட்ரூ சான் என்பவர் கைது செய்யப்பட்டார். + +மயூரனுடன் குற்றம் இழைத்த ஸ்கொட் ரஷ் என்பவரின் தந்தை லீ ரஷ், தனது மகனின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சம்பவம் நடப்பதற்கு முன்னர் ஆத்திரேலிய நடுவண் அரசின் காவல்துறையினருக்கு தனது மகன் பாலிக்கு செல்லவிருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தல் வகையான குற்றத்தை அவர் இழைக்கலாம் எனவும் தகவல் கொடுத்தார். தாம் அவரை அக்குற்றம் இழைக்காமல் தடுத்து நிறுத்துவதாக காவல்துறையினர் லீ ரஷ்சிடம் உறுதி அளித்தனர். + +ஆனாலும், காவல்துறையினர் பின்னர் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என ஸ்கொட் ரஷ்சின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆத்திரேலியக் காவல்துறையினர் இந்தோனேசியக் காவல்துறையினருக்கு கைதுகள் நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இது குறித்து எச்சரித்தனர். ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டவுடன் ஆத்திரேலியக் காவல்துறையினரே இந்தோனேசியாவுக்குத் தகவல் தெரிவித்தனர் என்ற செய்தி வெளியிடப்பட்டது. ஆத்திரேலியாவின் இந்த செயல்பாடுகள் குறித்து நாடெங்கும் பலத்த கண்ட���ங்கள் கிளம்பின. + +லீ ரஷ் ஆத்திரேலிய நடுவண் காவல்துறையினருக்கு எதிராக நடுவண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வாறான தகவல்கள் சட்டமா அதிபர் மூலமாகவே வெளிநாடு ஒன்றுக்குக் கொடுக்கப்பட வேன்டும் என ரஷ் இன் வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனாலும், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னரே இது பொருந்தும் என ஆத்திரேலிய அரசு வாதாடியது. 2006 சனவரியில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. + +வழக்கு விசாரணையின் பின்னர் 2006 சனவரி 24 இல் மயூரனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. மயூரனே மற்றவர்களின் உடலில் போதைப் பொருளைக் கட்ட உதவியவர் என்று குற்றஞ் சாட்டப்பட்டது.. இவரது மேன்முறையீடு வெற்றியளிக்கவில்லை. இவர்களின் மற்றுமொரு தலைவாரான அண்ட்ரூ சான் என்பவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனையோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. + +அன்றைய ஆத்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, ""அவுஸ்திரேலிய அரசு மரண தண்டனையை எதிர்க்கிறது என்றும் வேறொரு நாடொன்றின் அவுஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் போது தண்டனையை நிறுத்தும்படி அந்நாட்டு அரசை நாம் முறைப்படி கேட்போம்"" என்றார்.. + +மயூரன் சிறையில் இருந்த காலத்தில் சக கைதிகளுக்கு ஆங்கிலம், கணினி, வரைபட வடிவமைப்பு மற்றும் பல துறைகளில் சொல்லித் தந்தார். சிறைச்சாலையில் கணினி அறை மற்றும் சித்திர அறை ஆகியவற்றைத் திறக்க சுகுமாரன் முன்னின்று உழைத்தார். சுகுமாரன் கேர்ட்டின் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி மூலம் நுண்கலை படித்துப் பட்டம் பெற்றார். ஓவியம் வரைதலில் கெட்டிக்காரரான மயூரன், அவரும் அவரது சக தோழர்களும் தயாரிக்கும் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். + +சிறைச்­சா­லையில் 20 கைதி­களை வழி­ந­டத்தும் தலை­மைப்­ பொ­றுப்பு மயூரனுக்குக் கிடைத்­தது. தனக்குக் கீழிருந்த கைதிகளுக்கு தகுந்த பொறுப்புக்களைக் கொடுப்பது, பாதுகாப்புப் பணியாளர்களுடன் தொடர்புகளைப் பேணல், சர்ச்சைகளைத் தீர்த்து வைப்பது, அத்துடன், துப்பரவு, தோட்டப் பணி, சிறைச்சாலையில் சிறிய திருத்த வேலைகளைச் செய்வது போன்ற பணிகளில் மயூரன் ஈடுபட்டார். + +இறுதிக் காலத்தில் நுசகம்பான்கன் தீவு சிறையில் இருந்த போது மயூரன் தன்னோவியங்கள் பலவற்றை வரைந்தார். இறக்கும் வரை முடிந்த அளவு ஓவியங்களை வரைய வேண்டுமென்பதே அவரது கடைசி விருப்பமாக இருந்தது. இவரது கடைசி ஓவியம் இந்தோனேசியக் கொடியில் சிவப்பு-வெள்ளை நிறத்தில் குருதி வடிவதாக வரையப்பட்டிருந்தது. + +சுகுமாரனுக்கும் சானுக்கும் ஆதரவாக 2015 சனவரி 29 அன்று மாலை சிட்னியின் மையப் பகுதியில் உள்ள மார்ட்டின் பிளேசில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு "கருணை இயக்கம்" என்ற அமைப்பினரால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்திரேலியாவின் பிரபலமான இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதே போன்ற அஞ்சலி நிகழ்வுகள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் மெல்பேர்ண், அடிலெயிட், கான்பரா, பைரன் பே போன்ற பல நகரங்களில் நடத்தப்பட்டன. + +2015 சனவரியில் ராய் மோர்கன் ஆய்வு அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 52% பேர் மரணதண்டனைக்கு ஆதரவாக வாக்களித்தனர். + +2015 பெப்ரவரி 13 இல், ஆத்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப், மரணதண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாலி சுற்றுலா ஒன்றியொதுக்கலுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் ஜூலி பிஷொப், மற்றும் தொழிற் கட்சி வெளியுறவுத்துறைப் பேச்சாளர் தானியா பிலிபெர்செக் ஆகியோர் மயூரனுக்கும் சானுக்கும் கருணை காட்டுமாறு இந்தோனேசியத் தலைவரைக் கேட்டுக் கொண்டனர். விக்டோரியா மாநில உச்சநீதிமன்ற நீதிபதி லெக்சு லாசுரி பாலிக்கு சென்று மயூரனையும், ஆன்ட்ரூ சானையும் சந்தித்தார். + +ஏப்ரல் 29 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் 2015 ஏப்ரல் 28 அன்று மனித உரிமை வழக்கறிஞர் ஜெப்ரி ராபர்ட்சன் சிட்னியில் நடந்த ஒரு நினைவு நிகழ்வில் உரையாற்றினார். + +மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் மயூரன் சுகுமாரனை மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர், டொனி அபொட் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொவுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தார். மயூரன், மற்றும் சானுடன் சேர்த்து மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள 10 பேரினதும் மரணதண்டனையை நிறுத்துமாறு ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் இந்தோனேசியத் தலைவர் ஜோகோ விடோடோவிடம் 2015 ஏப்ரல் 25 அன்று கோரிக்கை விடுத்தார். + +இந்தோனேசிய அரசின் ஆணைப்படி, மயூரன் ச��குமாரன், ஆன்ட்ரூ சான் மற்றும் வேறு ஆறு பேருக்கும் 2015 ஏப்ரல் 29 அன்று இந்தோனேசிய நேரம் அதிகாலை 12:25 மணிக்கு நுசகம்பாகன் தீவில் 12 -பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. + +மயூரன் சுகுமாரனும், அன்ட்ரூ சானும் கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சார்லி பரோஸ் என்ற பாதிரியார் இருவரையும் சந்தித்தார். இருவரும் புனர்வாழ்வு பெற்ற விதத்தை தாம் அவர்களுடன் நினைவு கூர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துப்பாக்கியால் சுடப்படும் போது அவர்கள் அசையாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு எட்டுப் பேரும் தடிகளால் பிணைக்கப்பட்டார்கள் என பாதிரியார் சார்லி பரோஸ் கூறினார். துப்பாக்கியால் சுடப்படும் போது மயூரனும் ஏனைய எழுவரும் தமது கண்களை மூடிக் கட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக "வியக்கத்தக்க அருள்" என்ற கிறித்தவப் பாடலை அவர்கள் இணைந்து பாடிக் கொண்டிருந்தனர். + +மயூரன், சான் ஆகியோரின் நினைவாக அவர்களின் பெயரில் ஆண்டு தோறும் இரண்டு புலமைப் பரிசில்கள் இரண்டு இந்தோனேசிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் 2015 ஏப்ரல் 30 அன்று அறிவித்தது. + + + + + + +வெள்ளீயம் + +வெள்ளீயம் அல்லது தகரம் (ஆங்கிலம் Tin) என்பது ஒரு வேதியியல் தனிமம். அத்துடன் ஒரு உலோகமாகவும் இருக்கிறது. இது தனிம அட்டவணையில் Sn என்னும் குறியீடு கொண்டது. இலத்தீனில் வெள்ளீயத்திற்கு "சிடான்னம்" ("stannum") என்பதால் Sn என குறியீடு. வெள்ளீயத்தின் அணுவெண் 50 ஆகும். வெள்ளீயத்தின் அணுக்கருவில் 69 நொதுமிகள் உள்ளன. வெள்ளீயம் எளிதில் வளையக்கூடிய குறை மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது எளிதில் காற்றில் ஆக்ஸைடு ஆகாத, அரிப்படையாத ஒரு பொருள். இதனால் இதனை பிற மாழைக்கலவைகளில் செய்த பொருட்களுக்கு பூச்சாக இடுவதுண்டு. வெள்ளீயத்தை செப்புடன் கலந்து வெண்கலம் என்னும் வலிமையான மாழைக்கலவை செய்யப்படுகின்றது. ஒலி எழுப்பும் மணி இம் மாழைக்கலவையால் செய்யப்படுகின்றது. வெள்ளீயம் பெரும்பாலும் கேசிட்டரைட்டு என்னும் கனிமத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. + +வெள்ளீயம் வளையக்கூடிய, தகடாக்கக்கூடிய வெண்சாம்பல் நிறம் உள்ள படிகநிலை கொள்ளும் மாழை. இப்படிகம் செவ்வ���ப் பட்டகம் (tetragonal) என்னும் வகையைச் சேர்ந்தது. தடிப்பான தூய வெள்ளீயக் கம்பியை வளைத்தால் "படபட" என படிக உடைவு ஒலி கேட்கும். நீர் போன்ற பொருட்களில் இருந்து அரிப்பைத் தடுத்தாலும், கடும் காடிகளும் காரக் கரைசல்களும் இம் மாழையைத் "தாக்க"வல்லது (வேதியியல் வினையால் அரிக்க வல்லது). + +II அல்லது IV என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் வெள்ளீயத்தின் பெரும்பாலான சேர்மங்கள் காணப்படுகின்றன. + +II மற்றும் IV என்ற ஆக்சிசனேற்ற நிலைகள் இரண்டிலும் ஆலைடு சேர்மங்கள் அறியப்படுகின்றன. Sn(IV) நிலையில் SnF4, SnCl4, SnBr4, SnI4. ஆகிய நான்கு ஆலைடு வகைகளும் அறியப்படுகின்றன. இவற்றில் கன உறுப்பினர்களாகக் கருதப்படும் SnCl4, SnBr4, SnI4 மூன்று ஆலைடுகளும் எளிதில் ஆவியாகக் கூடிய மூலக்கூற்றுச் சேர்மங்களாகும். வெள்ளீயம் டெர்ட்ராபுளோரைடு சேர்மம் மட்டும் பல்பகுதி சேர்மமாகும். Sn(II) நிலையிலும் SnF2, SnCl2, SnBr2, SnI2. ஆகிய நான்கு ஆலைடு வகைகளும் அறியப்படுகின்றன. இவையனைத்தும் பல்பகுதி திண்மநிலை சேர்மங்களாகும். இங்கு குறிப்பிடப்பட்ட எட்டு சேர்மங்களில் அயோடைடுகள் மட்டுமே நிறத்துடன் காணப்படுகின்றன . + +வர்த்தக ரீதியாக வெள்ளீய(II) குளோரைடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குளோரின் வெள்ளீயம் உலோகத்துடன் வினைபுரிந்து SnCl4 உருவாகிறது. ஆனால் ஐதரோ குளோரிக் அமிலமும் வெள்ளீயமும் வினை புரியும் போது SnCl2 சேர்மமும், ஐதரசன் வாயுவும் தோன்றுகின்றன. மாறாக வெள்ளீயமும் அதன் ஆக்சிசனேற்ற நிலை (IV) சேர்மமான SnCl4 சேர்மமும் இணைந்தும் SnCl2 சேர்மத்தை உருவாக்குகின்றன. இச்செயல்முறையை இணைவிகிதமுறல் செயல்முறை என்பர். + +ஆக்சைடுகள், சல்பைடுகள் மற்றும் பிற சால்கோகெனைடு வழிப்பொருட்களாகவும் வெள்ளீயம் உருவாகிறது. வெள்ளீயத்தை காற்றில் சூடுபடுத்தினால் கேசிட்டரைட்டு (SnO2) என்ற ஈரியல்பு கொண்ட ஈராக்சைடு சேர்மம் உருவாகிறது . அமிலம், காரம் இரண்டிலும் கரையக்கூடிய சேர்மங்கள் ஈரியல்பு சேர்மங்களாகும். [Sn(OH)6]2−, K2[Sn(OH)6], என்ற கட்டமைப்பில் அமைந்த வெள்ளீயம் சேர்மங்களும் அறியப்படுகின்றன. H2[Sn(OH)6] என்ற கட்டமைப்பில் அமைந்த வெள்ளீயம் சேர்மம் ஏதும் அறியப்படவில்லை +(II) அல்லது (IV) என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் வெள்ளீயத்தின் சல்பைடு சேர்மங்களான வெள்ளீயம்(II) சலபைடு மற்றும் வெள்ளீயம்(IV) சல்பைடு இரண்டும் அறியப்படுகின்றன. + +(IV) ஆக்சிசனேற்ற நிலையில் வெள்ளீய���் (SnH4) என்ற ஐதரைடாக உருவாகிறது. ஆனால் இது நிலைப்புத் தன்மையற்று உள்ளது. டிரைபியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடு (Sn(CH)H) போன்ற கரிமவெள்ளீயம் சேர்மங்கள் அறியப்படுகின்றன . இத்தகைய சேர்மங்கள் நிலைமாறும் இயல்புடைய டிரைபியூட்டைல்வெள்ளீயம் இயங்குறுப்புகளை வெளிவிடுகின்றன. வெள்ளீயம்(III) ஆக்சிசனேற்ற நிலை சேர்மங்களுக்கு இதுவொரு அரிய உதாரணமாகும் . + +கரிமவெள்ளீயம் சேர்மங்கள் சில நேரங்களில் சிடானான்கள் என்று அழைக்கப்படுகின்றன, இவை வெள்ளீயம்-கார்பன் பிணைப்புகளுடன் கூடிய இரசாயனச் சேர்மங்களாகும் . வெள்ளீயத்தின் கரிம சேர்மங்கள் பயனுள்ள வர்த்தக முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன . கரிமவெள்ளீயம் சேர்மங்கள் நச்சுத்தன்மை மிகுந்திருப்பதால் அவை உயிர்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +1849 இல் எட்வார்ட் ஃபிராங்க்லேண்டு டையெத்திலீன்வெள்ளீயம் டையயோடைடு (C2H5) 2SnI2) என்ற முதலாவது கரிமவெள்ளீயம் சேர்மத்தைக் கண்டு அறிவித்தார். + +பெரும்பாலான கரிமவெள்ளீயம் சேர்மங்கள் காற்று மற்றும் தண்ணீரில் நிலைப்புத் தன்மை கொண்டு திரவங்கள் அல்லது திண்மங்களாக லாணப்படுகின்றன. இவை நான்முக வடிவ கட்டமைப்பை ஏற்கின்றன. டெட்ரா ஆல்கைல் மற்றும் டெட்ரா அரைல் சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம் : + +மறுபங்கீட்டு வினையின் மூலம் கலப்பு ஆலைடு ஆல்கைல் சேர்மங்களைத் தயாரிக்கலாம். இவை டெட்ராகரிம வெள்ளீயம் சேர்மங்களைக் காட்டிலும் வணிக முக்கியத்துவம் மிக்கவையாகும். + +ஈரிணைதிற கரிமவெள்ளீயம் சேர்மங்கள் அசாதாரணமானவையாகும். இருப்பினும் இவை தொடர்புடைய ஈரிணைதிற கரிமசெருமானியம் மற்றும் ஈரிணைதிற கரிமசிலிக்கன் சேர்மங்களைக் காட்டிலும் சாதாரணமானவையாக உள்ளன. அதிக நிலைப்புத்தன்மை கொண்ட Sn(II) "மந்த எலக்ட்ரான் விளைவு" இயல்பைக் கொண்டதாக உள்ளது. + +கரிமவெள்ளீயம்(II) சேர்மங்களான சிடானிலின்கள் ( R2Sn), இருசிடானிலின்கள் (R4Sn2) ஆகியவைகளும் அறியப்படுகின்றன. இவ்விரு பிரிவுகளும் அசாதாரண வினைகளை வெளிப்படுத்துகின்றன. + +குறைந்த-முதல்-நடுத்தர நிறை கொண்ட நட்சத்திரங்களில் வெள்ளீயம் நீண்ட எசு- செயல்முறை மூலம் உருவாகிறது. இறுதியாக இண்டியம் போன்ற கனமான ஐசோடோப்புகளின் பீட்டா சிதைவு மூலமாக வெள்ளீய்டம் உருவாக்கப்படுகிறது . + +பூ���ியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய பொருட்களில் 49 ஆவது மிகுதியான பொருள் வெள்ளீயம் ஆகும். மில்லியனுக்கு 75 பகுதிகள் துத்தநாகம், மில்லியனுக்கு 50 பகுதிகள் தாமிரம், மில்லியனுக்கு 14 பகுதிகள் ஈயம் என்ற அளவுகளுடன் ஒப்பிடுகையில் வெள்ளீயம் மில்லியனுக்கு 2 பகுதிகள் அளவில் கிடைக்கிறது . + +வெள்ளீயம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை ஆனால் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கேசிட்டரைட்டு (SnO2) என்ற ஆக்சைடு தாது மட்டுமே வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் மிக்க தாதுவாகக் கருதப்படுகிறது. சிடானைட்டு, சிலிண்டரைட்டு, பிராங்கைட்டு, கேன்பீல்டைட்டு மற்றும் டியலைட்டு போன்ற சல்பைடு தாதுக்களில் இருந்தும் சிறிய அளவில் வெள்ளீயம் பிரித்தெடுக்கப்படுகிறது. வெள்ளீயத்தின் தாதுக்கள் எப்போதும் கிரானைட்டு எனப்படும் கருங்கற்களுடன் 1% வெள்ளீயம் ஆக்சைடாக சேர்ந்தே கானப்படுகின்றன. +80% வெள்ளீயமானது வெள்ளீய டை ஆக்சைட்டின் உயர் தன்னீர்ப்பு காரணமாக முதன்மைச் சுரங்கத்தின் நீரோட்ட திசையில் படிவுகளாகப் படிந்துள்ள கீழ்நிலைத் திட்டங்களின் மூலமாகக் கிடைக்கும் படிவுகளேயாகும். பெரும்பாலும் கடந்த காலங்களில் அடித்துவரப்பட்டு பள்ளத்தாக்குகளிலிலும் அல்லது கடல்களிலிலும் படிய வைக்கப்பட்ட வெள்ளீயமே தற்பொழுது மீட்டெடுக்கப்படுகிறது. தூர்வாரல், உயரழுத்த அகழ்வு அல்லது திறந்தவெளி சுரங்கம் போன்ற சிக்கனாமான முறைகள் வெள்ளீயத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் பெரும்பாலான வெள்ளீயம் ஒதுக்குப் படிவுகளில் இருந்தே தயாரிக்கப்படுகிறது, இவற்றில் 0.015% அளவிற்கும் குறைவாகவே வெள்ளீயம் இருக்கக்கூடும் . + +2011 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 253000 டன் வெள்ளீயம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் 110,000 டன், இந்தோனேசியாவில் 51,000 டன், பெரு நாட்டில் 34,600 டன், பொலிவியாவில் 20,700 டன், பிரேசில் நாட்டில் 12,000 டன் வெள்ளீயம் வெட்டி எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது .பொருளாதார சாத்தியக்கூறுகள் மற்றும் சுரங்கத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகிய காரணங்களால் வெள்ளீயத்தின் உற்பத்தி மதிப்பீடு வரலாற்று ரீதியாக மாறுபடுகிறது . தற்போதைய நுகர்வு விகிதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விளைவாக அடுத்த 40 ஆண்டுகளில் பூனியில் வெள்ளீயத்தின் அளவு வற்றிப்போகும் அபாயம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. வெள்ளீய உற்பத்தி வருடத்திற்கு 2% வளர்ச்சியை பெற்றிருந்தால் கூட 20 ஆண்டுகளுக்குள் புவியில் வெள்ளீயத்தின் இருப்பு காணாமல் போகலாம் என்று லெசுடர் பிரௌன் பரிந்துரைக்கின்றார் . + +இரண்டாம் நிலை அல்லது பிசிறு வெள்ளீயமும் வெள்ளீயத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இரண்டாம் நிலை வெள்ளீய உற்பத்தி அல்லது பிசிறுகளின் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வெள்ளீயத்தின் அளவு அதிகரித்து வருகிறது. +1993 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வெள்ளீயத்தை வெட்டி எடுக்காமலும் 1989 ஆம் ஆண்டு முதல் உருக்கிப் பிரிக்காமலும் உள்ளது. இந்நாடே இரண்டாம்நிலை வெள்ளீயத்திலிருந்து அதிகமாக வெள்ளீயம் உலோகத்தை தயாரிக்கிறது. 2006 ஆம் ஆண்டில் 14,000 டன் அளவுக்கு மறுசுழற்சி செய்யும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது. + +2009 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் புதிய வெள்ளீயப் படிவுகள் கண்டறியப்பட்டன . இதேபோல தெற்கு மங்கோலியாவிலும் புதிய படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. + + + + + +தொன்மக் கதை + +தொன்மக் கதைகள் என்பது பழங்காலத்தில் இருந்து வழங்கிவரும் கதைகளாகும். சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த உண்மைச் சம்பவங்கள் நோக்கிய விடயத் தகவல்கள் அரிதாகி போவதுண்டு. மகாவலிபுரத்தில் இருந்ததாக க்கூறப்படும் ஏழு கோயில்கள் பற்றய கதைகளை இந்த வகைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. + +பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளை பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம். + +பொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரின���்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு பைபிள் , பைபிள் கதைகள் ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும். + +பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு. + + + + +கிப்பி + +கிப்பி அல்லது ஹிப்பி என்பது "Hippie" என்றதன் நேரடித் தமிழ்ப்படுத்தலாகும். கிப்பி அமெரிக்காவில் 1960 களில் தோற்றங்கண்ட ஓர் எதிர்ப் பண்பாட்டு வாழ்வுமுறையைக் குறிக்கின்றது. 1960 களில் விடுதலை மனப்பாங்குடன், பெரும்பாலும் மைய அதிகார பண்பாட்டுப் போக்குகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், அக்கால மாணவர்கள், இளையோர் மத்தியில் இடம்பெற்ற பல்வேறு தேடல்களின் வெளிப்பாடாக அமைந்தது. + +தலைமயிரை நீளமாக வளர்த்தல், போதைப் பொருட்களை நுகர்தல், வீடுகளை விட்டுவிட்டு ஒருவித நாடோடி வாழ்க்கை வாழ்தல், சமூக குடிமங்களை அமைத்தல் போன்றவை குறிப்பிடத்தக்க கிப்பி போக்குகள் ஆகும். + + + + +தமிழர் பண்பாடு + +தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். +தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். + +தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே. + +"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." + +பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது. + +பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறுப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டா. மாறாகச் சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு. + +தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் + +Tamil panbadu + + + + + +த மாத்தமாட்டிக்கல் இன்டெலிஜென்சர் (கணித இதழ்) + +த மாத்தமாட்டிகல் இன்டெலிஜென்சர் (ஆங்கிலம்: "The Mathematical Intelligencer") என்பது ஆங்கில மொழியில் வெளியாகும் ஒரு கணிதவியல் இதழ். இதனை ஸ்பிரிங்கர் ஃவெர்லாகு என்னும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனப் பதிப்பகம் வெளியிடுகின்றது. இவ்விதழில் கணிதத்தைப் பற்றிய வரலாறு, கணிதவியலாலர்களுடன் உரையாடல்கள், புதிர்க்கணக்குகள், பிற அறிவுத்துறைகளுடன் கணிதத்தின் உறவுகள் முதலால தலைப்புகளில் கணிதவியலாளர்கள் உலகைத் தாண்டி பிறரும் அறிந்து ஆர்வம் கொள்ளுமாறு உள்ளடக்கம் கொண்டது. + +இவ்விதழில் 1980-2000 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் வெளியான கட்டுரைகள் 20 கட்டுரைகளைத் தொகுத்து "கணிதவியல் உரையாடல்கள்" ( "Mathematical Conversations", ) என்னும் நூலை ஸ்பிரிங்கர் ஃவெர்லாகு வெளியிட்டுள்ளது. + + + + + + +ஃபிபனா���்சி எண்கள் + +ஃபிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்கப்படும் ஓர் எண் தொடரின் வரும் எண்கள். இந்த எண் தொடரில், அடுத்தடுத்து வரும் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அமைவது அதற்கு அடுத்து வரும் எண். காட்டாக, formula_1 என்று தொடரும் இவ்வரிசை. முதல் இரண்டு எண்களாக 1, 1 என்பதை எடுத்துக்கொண்டால் அடுத்து வரும் மூன்றாவது எண் 1+1 = 2. நான்காவது எண் 1+2 = 3, ஐந்தாவது எண் 2+3 = 5, இப்படியாக இவ் எண் தொடர் விரிகின்றது. இவ் எண்தொடரும் இதன் பண்புகளும் கணக்கில் அதிகம் தொடர்பு இல்லாதவரையும் ஈர்க்கும் ஒரு கணிதக் கருத்து. இயற்கையிலும் இந்த ஃபிபனாச்சி எண் தொடரில் வரும் எண்கள் பரவலாகக் காணப்படுகின்றன (பூக்களின் இதழ்களின் எண்ணிக்கை, இலைகளின் அடுக்கு முதலானவை). + +வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் (ஏறக்குறைய கி.மு.3-ஆவது நூற்றாண்டு) எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் முதன் முதல் இக்கருத்துப்பொருள் பேசப்பட்டது. ஆறாவது நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆவது நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது. + +மேற்கத்திய வரலாற்றில் லியானார்டோ பிசானோ பிகோலோ (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) (13-ஆவது நூற்றாண்டு) எழுதிய லிபர் அபேஸி (1202) என்ற லத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது. + +formula_2 + +இப்படிப் போகிறது இத் தொடர். + +இத்தொடரின் விதி: formula_4 + +படிமத்தைப்பார். ஒரு மரமும் அதன் கிளைகளும் காண்பிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு 'பழைய' கிளையிலும் (மரத்தையும் சேர்த்துத் தான்) ஓராண்டுக் கொருமுறை புதுக் கிளை முளைக்கிறது. இப்படி முளைக்கும் ஒவ்வொரு புதுக்கிளையும் அடுத்த ஆண்டும் புதுக் கிளையாகவே இருந்து அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து பழைய கியாகப் பங்கு பெறுகிறது. formula_5 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள கிளைகளின் எண்ணிக்கை formula_6 formula_7… . + +formula_8 + +இத் தொடரும் பின்னத்தின் மதிப்பை formula_9 என்று கொண்டால் நமக்குக் கிடைக்கும் சமன்பாடு: + +இதனுடைய (நேர்மத) தீர்வு formula_12 . இதற்குக் குறியீடு: formula_13 + +இத்தொடரும் பின்னத்தின் ஒருங்குகள்: + +formula_14 + +இவ்வொருங்குகளின் விகுதிகள் தான் ஃபிபனாச்சி தொடர் எண்கள். + +இவ்வொருங்குகள் மிக மிக மெதுவாகத்தான் அதன் எல்லையை அடைகின்றன. எல்லாத்தொடரும் பின்னங்களிலும் இதுதான் மிக மெதுவாக எல்லையை நோக்கிச் செல்லும் ஒருங்குகளையுடையது. ஒரு ஒப்பிடுதலுக்கு formula_15 வின் தொடரும் பின்னத்தைப் பார்த்தோமானால், + +formula_16 + +formula_15 வின் 6-ஆவது ஒருங்கு formula_18 க்கும் formula_15 க்கும் உள்ள வித்தியாசம் formula_20; + +formula_13 இன் 6-ஆவது ஒருங்கு formula_22 க்கும் formula_13 க்கும் உள்ள வித்தியாசம் formula_24. + +ஆக, formula_13 இன் தொடரும் பின்னத்தின் ஒருங்கும் வேகம் நூறு பங்கு குறைவு!. + +பாஸ்கல் முக்கோணத்திலிருந்து ஒவ்வொரு நிரை (Row) யாகப் படித்தால் ஒவ்வொரு அடுக்குக்குகந்த ஈருறுப்புக் கெழுக்கள் கிடைக்கும் என்பது கணித உலகில் எல்லோருக்கும் தெரிந்ததே. பாஸ்கலுடைய(1623–1662) காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப்பிறகு வந்த லூகஸ் 1872 இல் அதே பாஸ்கல் முக்கோணத்தில் ஏறுமுக மூலைவிட்டங்களின் உறுப்புகளைக் கூட்டினால் ஃபிபனாச்சி எண்களின் தொடர் கிடைப்பதை கவனித்தார். இதைத் தான் படிமம் காட்டுகிறது. இதில் விந்தை என்னவென்றால் 200 ஆண்டுகள் இதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை என்பதுதான். + +கணிதம் சம்பந்தப்பட்டவரை இதில் ஆச்சரியப்படத் தக்கபடி ஒன்றுமில்லை. ஏனென்றால், படிமத்தில் காட்டியபடி + +இவைகளை நிரல் நிரலாகக்கூட்டினால், + + + + + +உசுபெக்கிசுத்தான் + +உசுபெக்கிசுத்தான் ("Uzbekistan") அதிகாரபூர்வமாக உசுபெக்கிசுத்தான் குடியரசு ("Republic of Uzbekistan", (), நடு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் நிலம்சூழ் இறைமையுள்ள நாடு ஆகும். இது ஒரு மத-சார்பற்ற, ஒற்றையாட்சிக் குடியரசு ஆகும். இந்நாட்டில் 12 மாகாணங்களும், ஒரு சுயாட்சிக் குடியரசும் உள்ளன. உசுப்பெக்கிசுத்தானின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கே கசக்கஸ்தான், ஏரல் கடல் ஆகியனவும், வடகிழக்கே கிர்கிசுத்தான், தென்கிழக்கே தஜிகிஸ்தான், தெற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே துருக்மெனிஸ்தான் ஆகிய ஐந்து நிலம்சூழ் நாடுகளும் அமைந்துள்ளன. தாஷ்கந்து இதன் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். + +தற்போதைய உசுபெக்கிசுத்தான் பண்டைய காலத்தில் ஈரானிய-மொழி பேசும் திரான்சாக்சியானா பகுதியில் பட்டுப் பாதையில் பெரும் வளத்துடன் திகழ்ந்த சமர்கந்து, புகாரா, கீவா ஆகிய நகரங��களைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் ஆரம்பகாலக் குடியேறிகள் சிதியர்கள் ஆவர். இதன் ஆரம்பகால நாகரிகங்கள் கிழக்கு ஈரானிய நாடோடிகளால் உருவாக்கப்பட்ட குவாரெசும் (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பாக்திரியா (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), சோக்தியானா (8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பெர்கானா, மார்கியானா (கிமு 3ஆம்– கிபி 6ஆம் நூற்றாண்டுகள்) ஆகியவையாகும். இப்பிராந்தியம் பாரசீகப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, கிபி 7ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புடன் வீழ்ச்சியடைந்து, பெரும்பான்மையான மக்கள் இசுலாமியத்தைத் தழுவிக் கொண்டனர். 11ஆம் நூற்றாண்டில் உள்ளூரைச் சேர்ந்த குவாரசமியர் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி, 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இன்றைய உசுப்பெக்கிசுத்தானின் சாரிசாப் நகரில் மங்கோலியப் பேரரசர் தைமூர் பிறந்தார். இவர் 14ஆம் நூற்றாண்டில் தைமூரிய வம்சத்தைத் தோற்றுவித்தார். 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி உசுபெக் சாய்பானிதுகளினால் கைப்பற்றப்பட்டு, தலைநகர் சமர்கந்தில் இருந்து புகாராவிற்கு மாற்றப்பட்டது. இப்பகுதி கீவா, கோக்கந்து, புகாரா என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை படிப்படியாக 19ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசுடன் இணைந்தன. தாஷ்கந்து உருசிய துர்க்கிசுத்தானின் முக்கிய அரசியல் மையமாகக் காணப்பட்டது. 1924 இல் சோவியத் ஒன்றியத்தின் குடியரசாக "உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசு" என்ற பெயரைப் பெற்றது. 1991 இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், 1991 ஆகத்து 31 இல் உசுபெக்கிசுத்தான் குடியரசாகத் தனிநாடாக விடுதலை பெற்றது. + +உசுபெக்கிஸ்தான் வரலாற்றுரீதியாக ஒரு மாறுபட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மொழி உசுபெக் ஆகும். இது இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படும் துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 85% மக்களால் பேசப்படுகிறது. உருசிய மொழி இங்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகும். உசுபெக்கியர்கள் மக்கள்தொகையில் 81%, உருசியர்கள் 5.4%, தாஜிக்குகள் 4.0%, கசாக்குகள் 3.0%, ஏனையோர் 6.5% ஆகும். முசுலிம்கள் 79%, உருசிய மரபுவழிக் கிறித்தவர்கள் 5% ஆவர். ஏனைய சமயத்தோர் அல்லது சமயமறுப்பாளர்கள் 16% ஆவர். உசுபெக்குகளில் பெரும்பாலானோர் பிர���வு-சாரா முசுலிம்கள் ஆவர். உசுபெக்கிசுத்தான் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, ஐக்கிய நாடுகள் ஆகிய உலக அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றது. அதிகாரபூர்வமாக இது சனநாயகக் குடியரசாக இருந்தாலும், 2008 இல் அரச-சார்பற்ற மனித உரிமை இயக்கங்கள் இதனை "வரையறுக்கப்பட்ட மனித உரிமைகளைக் கொண்ட சர்வாதிகார நாடு" என வரையறுத்துள்ளன. + +2016 ஆம் ஆண்டில் முதலாவது அரசுத்தலைவர் இஸ்லாம் காிமோவ் இறந்த பின்னர் பதவியேற்ற சவ்காத் மிர்சியோயெவ் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவரது மாற்றங்கள் "ஓர் அமைதியான புரட்சி" எனக் கூறப்பட்டது. அவர் பருத்தி அடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வந்தார். நுழைவிசைவுகள், வரி மறுசீரமைப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நான்கு புதிய திறந்த பொருளாதார வலயங்கள் திறக்கப்பட்டன. அத்துடன் அரசியல் கைதிகள் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான், ஆப்கானித்தான் ஆகிய அண்டை நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்பட்டன. + +உசுபெக்கித்தானின் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரத்திற்கு படிப்படியாக மாற்றம் அடைந்தது. 2017 செப்டம்பரில், நாட்டின் நாணயம் சந்தை விலையில் முழுமையாக மாற்றத்தக்கதாக அமைக்கப்பட்டது. உசுபெக்கித்தான் பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலகில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன் இது உலகின் மிகப்பெரிய திறந்த-குழி தங்கச் சுரங்கத்தை தெயல்படுத்துகிறது. இயற்கை எரிவளியை பெருமளவு கொண்டிருக்கும் இந்நாடு, நடு ஆசியாவில் மிகப்பெரும் மின்சார உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாட்டின் எரிசக்தித் துறையில் 23% இற்கும் மேற்பட்டதாக உள்ளது. அத்துடன் நீர் மின் ஆற்றல் 21.4% ஆகவும், சூரிய ஆற்றல் 2% ஆகவும் உள்ளது. + +உசுபெக்கிசுத்தானின் பரப்பளவு 447,400 சதுரகிமீ ஆகும். இது பரப்பளவின் படி உலகின் 56வது பெரிய நாடாகவும், மக்கள்தொகைப்படி 42வதும் பெரிய நாடாவும் காணப்படுகிறது. முன்னாள் சோவியத் நாடுகளில் இது பரப்பளவில் 4வதும், மக்கள்தொகையில் 2வதும் ஆகும்.. + +இந்நாடு மேற்கில் இருந்து கிழக்கே 1,425 கிமீ தூரமும், 930 கிமீ வடக்கில் இருந்��ு தெற்கு வரை நீண்டுள்ளது. நடு ஆசியாவில் மிகப்பெரிய நடான உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவின் ஏனைய நான்கு நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடாகும். + +உசுபெக்கிசுத்தான் ஒரு வறண்ட, நிலம்சூழ் நாடாகும். இது உலகில் உள்ள இரண்டு இரட்டை நிலம்சூழ் நாடுகளில் (முற்றாக நிலம்சூழ் நாடுகளால் சூழப்பட்டது) ஒன்றாகும் (மற்றையது லீக்கின்ஸ்டைன் ஆகும்). இந்நாட்டின் எந்த ஆறுகளும் கடலில் கலப்பதில்லை. மொத்தப் பரப்பளவின் 10% இற்கும் குறைவான நீர்ப்பாசன நிலமே ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பாலைவனச்சோலைகளிலும் தீவிரமான பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏனைய நிலம் பாலைவனங்களும், மலைகளுமே. + +உசுபெக்கித்தானின் உயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்த்ய் 4,643 மீ உயரத்தில் உள்ள காசுரெத் சுல்தான் என்ற மலை ஆகும். இது தஜிகிஸ்தான் எல்லையில் துசான்பே இற்கு வடமேற்கே அமைந்துள்ளது. + +உசுபெக்கித்தான் கண்டவெளிக் காலநிலையைக் கொண்டது. ஆண்டுக்கு சிறிய அளவு மழைப்பொழிவு (100–200 மிமீ) எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சராசரியாக 40 °C வெப்பநிலை நிலவுகிறது. குளிர் காலத்தில் சராசரியாக −23 °C ஆக உள்ளது. + +உசுப்பெக்கித்தான் மிகவும் வளமானதும், மாறுபட்டதுமான இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. ஆனாலும், சோவியத் ஆட்சியாளர்களின் பல தசாப்தங்களாக கேள்விக்குரிய பாரிய பருத்தி உற்பத்தி தொடர்பான கொள்கைகள் நாட்டில் காற்று, நீர் ஆகியவற்றின் மாசுபாட்டிற்கும், பேரழிவுகளுக்கும் முக்கிய காரணங்களாக அமைந்தன. + +ஏரல் கடல் உலகின் நான்காவது-பெரிய உள்ளகக் கடலாக இருந்தது. இது காற்று ஈரப்பதத்திலும், வறண்ட நிலப் பயன்பாட்டிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960களில் இருந்து, ஏரல் கடல் நீரின் அதிகரித்த பயன்பாடு காரணமாக இக்கடலின் பரப்பளவு 50% இனால் குறைந்தது. பருத்தி உற்பத்திக்கு பெருமளவு நீர் தேவை என்பதால் நீரின் பயன்பாடும் அதிகரித்தது. + +ஏரல் கடல் பிரச்சனை காரணமாக, அதிக உப்புத்தன்மை மற்றும் கனமான கனிமங்களுடன் கூடிய மண்ணின் மாசுபாடு ஆகியவை, குறிப்பாக ஏரல் கடலிற்கு அருகில் கரக்கல்பாக்ஸ்தானில், பரவலாகப் பரவின. நாட்டின் நீர் ஆதாரங்களின் பெரும்பகுதி விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது, இது நீர் பயன்பாட்டின் கிட்டத்தட்ட 84% இற்கும் அதிகமான மண் உப்புத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்கிறது. பருத்தி விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் கடுமையாகப் பயன்படுத்துவதால் மண் மாசுபாடு அதிகரித்துக் காணப்படுகிறது. + + + + +லாவோஸ் + +லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன. + + + + +துவாலு + +துவாலு ("Tuvalu",IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாயிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு. + +இந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது. + + + + + +தூனிசியா + +துனீசியா ("Tunisia", , தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு ("Tunisian Republic", "அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா"), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆ��ும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும். + + + + + +சுரிநாம் + +சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறிய நாடு ஆகும். + + + + +பலாவு + +பலாவு (பெலாவு, "Palau", (IPA: [pɑˈlaʊ], [pəˈlaʊ]), பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான். + +இந்தத் தீவில் தென்னை மரங்களைக் கொண்ட சோலைகள், எழிலைக் கிழங்கு எனும் மரவள்ளிக் கிழங்குச் செடிகள் அதிகமாக இருக்கின்றன. இந்தத் தீவு மக்களின் உணவாக எழிலைக் கிழங்குகள், தேங்காய், கீரைச் செடிகள் மற்றும் கடலுணவுகள்தான் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன. + +1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் மூழ்காளர்களுக்கான பன்னாட்டுப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட “நீருக்கடியிலான உலக அதிசயம்” பட்டியலில் பலாவு நாடும் ஒன்றாக இருக்கிறது. + + + + + +1854 + +1854 (MDCCCLIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +நங்கமங்களம் + +நங்கமங்களம் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் (கிராமம்). + +இக்கிராமம், ஆந்திர, தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் தமிழும் தெலுங்கும் பேசுவர். காட்பாடி திருப்பதி் ரயில்பாதையும் சென்னை மும்பை தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். இக்கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நகருக்கும் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நகரத்திற்கும் பேருந்து சேவைகள் நிறைய உண்டு. பொம்மசமுத்திரம் ரயில் நிலையம் நங்கமங்களத்தின் அருகிலேயே உள்ளதால் ஆந்திர மாநிலம் திருப்பதி் நகருக்கும் தமிழ்நாட்டிலுள்ள காட்பாடி நகரத்திற்கும் ரயில் சேவையும் உண்டு. + +இக்கிராமம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பதாக தோன்றியிருக்கக்கூடம் என்றுக் கருதப்படுகிறது. அச்சமையத்தில் வேலூரை ஆண்ட பொம்மிநாயக்கன் ஆட்சிக்குள் வந்த இப்பகுதியில் குண்டூர் மற்றும் நெல்லூர் நகரங்களைச் சேர்ந்த ரெட்டிக்கள் வந்து குடிப்பெயர்ந்தார்கள். இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் வேளான்மையையே நம்பி வாழ்கிறார்கள். கரும்பு, வேர்க்கடலை (கடலைக்காய்), நெல் மற்றும் தேங்காய் பயிரிடப்படுகிறது. இக்கிராமத்தைச் சுற்றி மலைகளும், கிராம எல்லையில் ஒரு ஓடையும் உள்ளன. + +இக்கிராமத்தில் இரண்டு பகுதிகள் - கிறிஸ்தவப் பகுதி, இந்துப் பகுதி - உள்ளன. இவ்விருப் பிரிவுகளும் ஒன்றிலிருந்து ஒன்று அறை கிலோ மீட்டர் இடைவேளியில் உள்ளன. கிறிஸ்தவப் பகுதியில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். இப்பகுதியின் மையப்பகுதியில் தென் இந்தியத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு தேவாலையம் உள்ளது. இத்தேவாலையம் வேலூர் டையஸீஸின் கீழ் வருகிறது. இந்துப் பகுதியில் இராம‌லையம் என்ற தர்மராஜருக்கான ஒரு கோவிலும் அமவர் ரேனுகாம்பாவிற்கான ஒரு கோவிலும் உள்ளன. நங்கமங்களத்தின் அருகில் சீயோன் திருமலை என்கின்ற கிறிஸ்தவர்களுக்கான ஒரு புனித இடம் உண்டு. இம்மலையின் மேல் ஒரு புனித தேவாலையம் உண்டு. ஆண்டுதோறும் இவ்விடத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்கும் சீயோன் திருவிழா நடைப்பெறுகிறது. + + + + +நவம்பர் 2007 + +நவம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் பதினோராவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17 இல் தொடங்கி டிசம்பர் 15 இல் முடிவடைகிறது. + + + + + +டிசம்பர் 2007 + +டிசம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது கடைசி மா��மாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 இல் தொடங்கி 2008, ஜனவரி 14 இல் முடிவடைகிறது. + + + + + +சேர்வு (கணிதம்) + +கணிதத்தில் சேர்வு (Combination) அல்லது சேர்மானம் , வரிசைமாற்றம் (Permutation), என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு "சேர்வு" எனப்படும்.இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் "சேர்வு" என்றே பெயர். + +மாறாக, கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து, அவ்வரிசையில் உள்ள உறுப்புகளின் அடுக்கத்தை மாற்றி அமைத்தால் இம்மாற்றடுக்கத்திற்கு வரிசைமாற்றம் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். சேர்வு என்பதில் வரிசை என்ற கருத்து இடர்ப்படாது. இவ்விரண்டு கருத்துக்களாகிற விதைகளிலிருந்து சிறு சிறு செடிகளாகப் பல வேறுபட்ட இடங்களில் வேரூன்றி முளைத்து 19ம் நூற்றாண்டில் பெரிய ஆலமரமாகப் பரவி அதன் விழுதுகள் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், இயலறிவியல்கள் இன்னும் பல அறிவியல் பிரிவுகளிலும் இன்றியமையாத கணிதக் கரணமாகப் பயன்படத் தொடங்கின. இருபதாவது நூற்றாண்டில் அவ்விழுதுகளும் எல்லா பயன்பாடுகளும் ஒன்றுசேர்க்கப் பட்டு இன்று கணிதத்தில் சேர்வியல் (Combinatorics) என்ற ஒரு மிகப் பெரிய பிரிவாகத் திகழ்கிறது. இக்கட்டுரையில் சேர்வு என்ற அடிக் கருத்தைப் பார்ப்போம். சேர்வு என்ற சொல் தமிழ்நாட்டுப் பாட நூல்களில் புழங்கி வருகிறது. சேர்மானம் என்ற சொல் இலங்கைத் தமிழர் வழக்கு. + +முதலில் ஓர் எடுத்துக்காட்டு. ஐந்து நபர்கள் உள்ள ஒரு கூட்டத்திலிருந்து, வேறு எந்த நிபந்தனைகளுமில்லாமல் இரண்டு நபர்களை எத்தனை விதமாக பொறுக்கலாம் என்றால் அது 10 என்று அறிவோம். இதே கேள்வியை குறியீட்டில் கீழ்க்காணுமாறு குறிக்கலாம்: + +பொதுமைப்படுத்தினால், + +formula_4 உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து formula_5 உறுப்புகளைச் சேர்வு கொள்ள உள்ள வழிகளின் எண்ணிக்கையைக் குறியீட்டில் : + +என்பதுதான் மேலேயுள்ள எடுத்துக்காட்டு. + +மேலும் ஒரு சுருக்கமான முறை: + +எட��த்துக்காட்டாக: + +formula_13 + +பாஸ்கலின் முக்கோணம் அவருடைய நிகழ்தகவு நூலில் பிரசுரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஈருறுப்புக்கெழுக்களை கணிப்பதற்குப் பயன்படும் இந்த முக்கோணத்தினுடைய மதிப்பு பாஸ்கலுடைய நிகழ்தகவுப் பிரச்சினைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு தான் தெரிய வந்தது. அதனாலேயே அது இன்றும் பாஸ்கல் முக்கோணம் என்ற பெயரில் புழங்குகிறது. + +இம்முக்கோணத்தில் ஒவ்வொரு உறுப்பும் அதற்கு மேல் வரியில் அதற்கு இருபக்கமும் உள்ள எண்களின் கூட்டுத்தொகை. அதனுடைய ஒவ்வொரு நிரையும், ஒவ்வொரு குறிப்பிட்ட formula_4 க்கு formula_15 என்ற ஈருறுப்பின் அடுக்கினுடைய கெழுக்கள். எடுத்துக் காட்டாக, மேலிருந்து 3ஆவது நிரை formula_16 இன் கெழுக்கள். + + + + +பாஸ்கல் + +பாஸ்கல் என்ற சொல் பின்வரும் எதையும் குறிக்கலாம்: + + + + + +அந்திமனி + +ஆண்டிமனி "(Antimony)" என்பது Sb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அந்திமனி என்ற பெயராலும் அழைக்கப்படும் இத்தனிமத்தின் அணு எண் 51 மற்றும் அணு எடை 71 ஆகும். ஆண்டிமனி பளபளப்பான சாம்பல் நிறமுடைய ஒரு உலோகப் போலியாகும். இயற்கையில் இது சிடிப்னைட்டு (Sb2S3) எனப்படும் சல்பைடு கனிமமாகக் காணப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே ஆண்டிமனி தனிமத்தின் சேர்மங்கள் அறியப்பட்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் தூளாக்கப்பட்டு மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்களாக கோகல் என்ற அரபு மொழிப் பெயரில் பயன்படுத்தப்பட்டன உலோக ஆண்டிமனி குறித்த செய்திகளும் அறியப்படுகின்றன. ஆனால் ஆண்டிமனி கண்டறியப்பட்ட தொடக்கக் காலத்தில் இது தவறுதலாக ஈயம் என்ற தனிமமாகப் பார்க்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் 1540 ஆம் ஆண்டில் ஆண்டிமனி பற்றிய விவரங்கள் வானோக்கியோ பிரிங்கியுக்கியோ என்ற உலோகவியலாளரால் எழுதப்பட்டுள்ளது. + +சில காலம் சீனா ஆண்டிமனி மற்றும் அதன் சேர்மங்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்து வந்தது. பெரும்பாலான உற்பத்தி ஊனானில் இருக்கும் சிக்குவான்சான் சுரங்கத்திலிருந்து கிடைத்தது. சிடிப்னைட்டு கனிமத்தை வறுத்தல் மற்றும் அதனுடன் கார்பன் அல்லது இரும்புடன் நேரடியாகச் சேர்த்து ஒடுக்குதல் செயல்முறைகளால் ஆண்டிமனியை தயாரித்தல் மற்றும் சுத்திகரிப்பதற்கான தொழில்துறை செயல்பாடுகள் நடைபெற்றன. + +உலோக ஆண்டிமனியின் மிகப்பெரிய பயன்பாடுகளில் ஒன்றாக முன்னணி வகிப்பது இதனுடைய கலப்புலோகப் பண்பாகும். ஈயம் மற்றும் வெள்ளீயத்துடன் ஆண்டிமனியை கலந்து தயாரிக்கப்படும் கலப்புலோகம் அதிகமான பயன்களைக் கொடுக்கிறது. ஈயம்-ஆண்டிமனி கலப்புலோகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தகடுகள் ஈய – அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இணைப்புலோகம், தோட்டாக்கள், சாதாரண தாங்கு உருளைகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஆண்டிமனி, ஈயம், வெள்ளீயம் தனிமங்களின் கலப்புலோகம் பயன்படுகிறது. ஆண்டிமனி சேர்மங்கள் பல வணிக மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் காணப்படும் குளோரின் மற்றும் புரோமின் வாயுக்களாலான தீயணைப்பு ஒடுக்கிகளில் முக்கிய கூட்டுப்பொருள்களாகப் பயன்படுகின்றன. மைக்ரோ மின்னியல் துறையில் ஆண்டிமனியைப் பயன்படுத்துவது வளர்ந்துவரும் ஒரு துறையாக மாறிவருகிறது. + +நிக்டோசன் என்றழைக்கப்படும் நெடுங்குழு தனிமங்கள் 15 இல் ஒன்றாகும். இதன் எலக்ட்ரான் ஏற்புத்திறன் 2.05 ஆகும். தனிம வரிசை அட்டவனை போக்குகளுக்கு இணங்க வெள்ளீயம் அல்லது பிசுமத்தை விட எலக்ட்ரான் ஏற்புத்தன்மை அதிகமாகவும் தெலூரியம் அல்லது ஆர்சனிக்கை விட குறைவான எலக்ட்ரான் ஏற்புத் திறனையும் ஆண்டிமனி பெற்றுள்ளது. அறை வெப்பநிலையில் ஆண்டிமனி நிலைப்பித் தன்மையுடனும், காற்ருடன் சேர்த்து சூடுபடுத்தும் போது வினைபுரிந்து ஆண்டிமனி டிரையாக்சைடையும் தருகிறது (SbO). +ஆண்டிமனி வெள்ளி போன்ற பளபளப்பான ஒரு உலோகப்போலியாகும். மோவின் அளவுகோலில் இதனுடைய கடினத்தன்மை மதிப்பு 3 ஆகும். அதாவது கடினமான பொருட்களை உருவாக்க உதவும் மிகவும் மென்மையான பொருளாக ஆண்டிமனி கருதப்படுகிறது. ஆண்டிமனியாலான நாணயங்கள் 1931 ஆம் ஆண்டில் சீனாவின் குயிசோவ் மாகாணத்தில் வெளியிடப்பட்டன, ஆனால் ஆயுள் குறைவாக இருந்ததால் உற்பத்தியானது விரைவில் நிறுத்தப்பட்டது . அமிலங்களால் அரிக்கப்படுவதை தடுக்கும் எதிர்ப்பியாகவும் ஆண்டிமனி பயன்படுத்தப்படுகிறது. + +ஆண்டிமனிக்கு நான்கு புற வேற்றுமை வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நிலைப்புத் தன்மை கொண்டது ஆகும். ஏனைய மூன்றும் (வெடிக்கும் ஆண்டிமனி, கருப்பு ஆண்டிமனி, மஞ்சள் ஆண்டிமனி) சிற்றுறு��ி நிலையில் உள்ளன. தனிமநிலை ஆண்டிமனி வெள்ளியைப் போன்று வெண்மையாக நொறுங்கக்கூடிய உலோகப்போலியாகும். உருகிய ஆண்டிமனியை மெல்ல குளிர்விக்கும் போது அது முக்கோண அலகுகளாக படிகமாகின்றது. ஆர்சனிக்கின் புறவேற்றுமை வடிவமான சாம்பல் நிற ஆர்சனிக்கை ஒத்த வடிவில் உள்ளது. ஆண்டிமனி முக்குளோரைடை மின்னாற்பகுத்து அரியவகை புறவேற்றுமை வடிவமான வெடிக்கும் ஆண்டிமனி தயாரிக்கப்படுகிறது. ஒரு கூர்மையான வெப்ப உமிழ் வினை செயல்பாட்டின் வழியாக இது உருவாகிறது. தனிமநிலை ஆண்டிமனி உருவாகும் போது வெண்புகை தோன்றுகிறது. குழவியிலிட்டு ஓர் உலக்கையால் இதை இடித்தால் கடும் வெடிப்போசை உண்டாகிறது. ஆண்டிமனி ஆவியை திடீரெனக் குளிர்வித்தால் கருப்பு ஆண்டிமனி உருவாகிறது. சிகப்பு பாசுபரசு மற்றும் கருப்பு ஆர்சனிக் தனிமங்கள் பெற்றுள்ளதைப் போன்ற அதே படிகவடிவத்தையே கருப்பு ஆண்டிமனியும் பெற்றுள்ளது. + +100 °செல்சியசு வெப்பநிலையில் இது மெதுவாக நிலைப்புத்தன்மை கொண்ட ஆண்டிமனியாக மாறுகிறது. மஞ்சள் ஆண்டிமனிதான் நிலைப்புத்தன்மை குறைந்த புறவேற்றுமை வடிவ ஆண்டிமனியாகும். சிடைபினை - 90° செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனேற்றம் செய்தால் இதைத் தயாரிக்க இயலும். இதற்கு அதிமான வெப்பநிலையில் இச்சிற்றுறுதி நிலை ஆண்டிமனி அதிக நிலைப்புத்தன்மை கொண்ட கருப்பு ஆண்டிமனியாக மாறுகிறது . +தனிமநிலை ஆண்டிமனி ஓரடுக்கு படிக அமைப்பை (இடக்குழு ஆர்3எம் எண் 166) ஏற்றுக்கொள்கிறது, இவ்வமைப்பில் அடுக்குகள் இணைக்கப்பட்டும் சுருங்கியும் உள்ள ஆறு உறுப்பு வளையங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்தும் அடுத்தடுத்தும் உள்ள இரட்டை அடுக்குகள் ஒவ்வொன்றிலும் மூன்று அணுக்கள் அடுத்துள்ள மூன்று அணுக்களை விட நெருக்கமாக அமைந்து ஒழுங்கற்ற எண்முக வடிவ அணைவாக உருவாகின்றன. ஒப்பீட்டளவில் நெருங்கிய இப்பொதிவு 6697 கிராம் / செ.மீ 3 என்ற அதிக அடர்த்தியைக் கொடுக்கிறது. ஆனால் அடுக்குகளுக்கு இடையிலான பலவீனமான பிணைப்பு ஆண்டிமனிக்கு குறைந்த கடினத்தன்மையையும் நொருங்கும் தன்மையையும் கொடுக்கிறது. + +2005ல், சீனாதான் அதிகம் அந்திமனியைத் தோண்டி எடுத்த நாடு. அந்நாட்டின் உற்பத்தி உலகில் கிடைக்கும் மொத்த அந்திமனியில் 84%. சீனாவை அடுத்து மிக பின்நிலையில் இரண்டாவதாக தென் ஆப்பிரிக்காவும், அதன் பின் பொலிவியா, தஜிக்ஸ்தான் உள்ளன. + +ஆக்சிசனேற்ற நிலையின் அடிப்படையில் ஆண்டிமனி சேர்மங்கள் Sb(III) மற்றும் Sb(V) என வகைப்படுத்தப்படுகின்றன.ஆக்சிசனேற்ற நிலை +5 என்ற நிலையில் உள்ள சேர்மங்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். ஆண்டிமனியின் சில சேர்மங்கள் பின்வருமாறு: + + + + + + + +கர்மா + +இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர் + +என்கிறது யசூர் வேதத்தில் காணப்படும், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5 + +கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. + +இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதி. வரும் பிறவிகளில் செயல்படப் போவது இவ்வினைப்பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது. இதிலிருந்து ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது. + +ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப்பயன்கள் மட்டும் செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே இது. + +வினைப்பயனின் விளைவாக இப்பிறவி அமைந்தாலும், வினைப்பயன் அனுபவிக்கின்ற வேளையிலே புதிய வினைப்பயன்கள் சேர்கின்றன. இவ்வாறு ஒரு பிறவியில் சம்பாதிக்கின்ற வினைப்பயன் ஆகாமிய கர்மம் எனப்படுகிற���ு. இது செயலின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன் தந்தாலும் தரலாம்: அல்லது, சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்பவும் செய்யலாம். + +வேதாந்த தத்துவத்தின்படி தீவினைகள் செய்தவர்கள், மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், பித்ரு லோகம் போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் +பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது. பிறப்பிலா பெருநிலை என்பது, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன் குரு மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் ஆத்மாவை அறிந்து மன அமைதி பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு நிலையாகும். + +ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார். + +ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை வினை விளைவுக் கோட்பாடு குறிக்கின்றது. இது கர்ம கருத்துவுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. உயிருக்கு ஒரு வாழ்க்கையில் கணிக்கப்படும் கர்ம வினைகள் அடுத்த வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கின்றன போன்ற கூறுகளுக்கு அறிவியல் நோக்கில் எந்த ஆதாரமும் இல்லை. + + + + +அரூபா + +அரூபா ("Aruba") வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது. + + + + +பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு + +பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ("Fédération Internationale des Échecs", "World Chess Federation") என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. + +FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் "Gens una sumus", இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. + + + + + + +அசென்சன் தீவு + +அசென்சன் தீவு தெற்கு அட்லாண்டிக் கடலில் ஆபிரிக்காவின் மேற்க்குக் கரையிலிருந்து சுமார் 1000 மைல் (1600 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும். இது செயிண்ட். எலனாவில் இருந்து வடமேற்குத் திசையில் 800 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவு இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்ப்பு (Ascension) திருவிழா நாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இத்தீவிற்கு இப்பெயர் வழங்கிற்று. + +இத்தீவில் அமெரிக்க பிரித்தானிய வான்படைகளின் கூட்டுத்தளமான வைடவேக் வான்படைத்தளம் அமைந்துள்ளது. போக்லாந்து போரின் போது பிரித்தானிய இராணுவத்தால் இத்தீவு பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது. உலக அமைவிட முறைமைக்கான (GPS) மூன்று நில அண்டனாக்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. + +அசெசன் தீவு தனக்கான ஒரு சின்னத்தையோ கொடியையோ கொண்டிருக்கவில்லை, இங்கு பிரித்தானிய கொடியும் சின்னமும் பயன்படுத்தப்படுகிறது. + + + + +அனைத்துலக வன்முறையற்ற நாள் + +அனைத்துலக வன்முறையற்ற நாள் ("International Day of Non-Violence") என்பது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. + +2007, சூன் 15 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2 ஆம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்ன���த்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. + + + + + +காந்தி ஜெயந்தி + +காந்தி ஜெயந்தி ("Gandhi Jayanti") என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது. + +காந்தி ஜயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. + +1969 அக்டோபர் 2 அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- <--பங்குபெற்ற நிகழ்வு. + + + + + +பூப்புனித நீராட்டு விழா + +பூப்புனித நீராட்டுவிழா (Ritu Kala Samskaram) என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன. + +இங்கே விபரிக்கப்படுபவை தென்னிந்திய, ஈழத்து தமிழரிடையே (சாதிப்படிநிலைச் சமூக அமைப்பில்) இந்துக்களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுப்போக்கான சில கூறுகளாகும். இடத்துக்கிடம் இக்கூறுகள் மாற்றம் கணாலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம். + +பெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். இக்காலகட்டத்தில் பெண்ணை குளியறையில் நீராட்டலாம். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர். அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் செருகிவிடுவர். பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் (இந்துத் தமிழ்ச் சூழலில் தாழ்த்தப்பட்ட ஒரு சாதி) கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் (சலவைத் தொழிலாளியைக் குறிக்கும் சாதிப்பெயர்) எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு பிராமண சாதியைச் சேர்ந்த ஒருவரை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள். + +முதற்தண்ணி வார்த்ததும் சில இடங்களில் கத்தரிக்காயை மெதுவாக அடுப்புத் தணலில் சுட்டு எடுத்து, சிறிய உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்தெடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு தரம் இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது என நம்பப்படுகிறது. உணவாக ���ுதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பாற்கறியும் கொடுப்பர். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுக்கும் பொழுது அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக்கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுப்பர். பின்பு காலை உழுத்தங்களி, மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் கொடுப்பர். பொரியல் வகையறாக்கள் நல்லெண்ணெயிலேயே பொரிக்கப்படும். பால் விடாது காலை, மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பர். முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படும். + +அத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரற்பிடி சின்னச் சீரகம், 2 உள்ளிப் பல், சிறுதுண்டு மஞ்சள் இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் குளிசைகளாக்கி 3 நாட்களுக்கு விழுங்கக் கொடுப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது . + +சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து அன்று பருவடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேலோ பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர். அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகள், ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைறைக் காசு முதலியனவும், வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்த காரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் வைப்பார்கள் அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பர். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர். பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள். + +பின்னர் சுமங்கலிப் பெண்கள் இருவர் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது தோளால் உயர்த்தி ஆரத்தி எடுத்து பின் தலையை மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறித்து வேப்பிலையால் தலையைச் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம், ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை). பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்த�� ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர். + +ருது சாந்தியின் போது எடுக்கும் ஆரத்தி 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் கொடுப்பர். (நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும். உணவுத் தட்டங்களைத் தலைக்கு மேல் சுற்றிப் பின்னால் கொடுப்பர். பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும். பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கட்டிக் கட்டாடியிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும். + +பால்சாதம்: பச்சை அரிக்குள் தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கலாம். + +பிட்டு : வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்.. + +களி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைப்பர். + +1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணை தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணையில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும். + +நிறை நாழி (நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்பு சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.) + +பிட்டி, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்), + +தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படு��்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர். + +பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு. + +பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார். + +இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற���றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது. + +இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது. + +புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர். + +கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது. + +இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது. + +அதன் பிறகு ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது. + +முக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது. + +பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். + +பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது. + +தமிழ்நாட்டில் பூப்படைந்த பெண்கள் வீட்டில் பூசாரிகள் மற்றும் சாமியாடிகளாக உள்ள அவர்களது உறவினர்கள் பதினாறு அல்லது முப்பது நாட்கள் வரை எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல பெண்கள் பூப்படைந்த பெண்ணின் வீட்டில் முப்பது நாட்கள் வரை எந்தவிதமான உணவையும் வாங்கிச் சாப்பிடுவதில்லை. பூப்படைந்த பெண்ணிற்கு சில ஆண்டுகள் கழித்து பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டாலும் இவ்விழாக்களில் கலந்து கொள்ளும் பெண்களில் பலரும் தாங்கள் பூப்புனித நீராட்டு விழாக்களில் சாப்பிடுவதில்லை என்பது போன்ற தவறான எண்ணத்தில் மூடநம்பிக்கையில் முடங்கிக் கிடக்கின்றனர். + + + + + + + +தனிம அட்டவணை எதிர்மின்னி வலயம் + +ஓர் அணுவில் உள்ள எதிர்மின்னிகள், அவை பெற்றுள்ள ஆற்றலின் அடிப்படையில் பல்வேறு சுற்றுப்பாதைகளில் உலா வருகின்றன. இவ் வெவ்வேறு சுற்றுப்பாதைகளுக்கு, எதிர்மின்னி வலயம் அல்லது கூடு (ஆர்பிட்டால்) என்று பெயர். ஓர் அணுவில், யாவற்றினும் மிக அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் உலாவரும் வலயத்தின் அடிப்படையிலே, தனிம அட்டவணையில் அடுத்தடுத்து உள்ள நெடுங்குழுத் தனிமங்கள் குழுக்களாக வகைப்படுத்தப்படும். முதல் வலயமாகிய s என்னும் எதிர்மின்னிக் கூட்டில் ஒரு தனிமத்தின் அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் இருந்தால், அவ்வகைத் தனிமங்களுக்கு s-வலயக்குழுவைச் சேர்ந்த தனிமங்கள் என்று பெயர். அதே போல ஒரு தனிமத்தின் உயர்-ஆற்றல் எதிர்மின்னிகள் p என்னும் சுற்றுப்பாதைக் கூட்டில் இருந்தால் அத் தனிமம் p-வலயக்குழுவில் உள்ளதாகக் கொள்ளப்படும். எதிர்மின்னிகள் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்திற்கு மாறும் பொழுது அவைகளுக்கு இடையே உள்ள ஆற்றலை வெளிவிடுகின்றது. அவ்வாற்றல் ஒளியாக வெளிவிடும் பொழுது, அதனை அளக்கப் பயன்படுத்த��ய ஒளிநிற அளவீட்டில் அவை வெவ்வேறு நிறக்கோடுகளாகத் தெரிந்தன. அக்கோடுகளின் தோற்றத்தின் அடிப்படையிலே அவற்றை "தெளிவானது" (sharp), "தலைமையானது" (prinicpal), "பிசிறுடையது" (diffuse), "அடிப்படையானது" (fundamental), என்றும் மற்ற கோடுகளை குறிப்பிட தொடர்ந்து வரும் ரோமானிய எழுத்துக்களாலும் குறித்தனர். எனவே எதிர்மின்னி வலயக் குழுக்கள் கீழ்வருவனவாகும்: + + + + + +எஸ்-வலயக்குழு + +s-வலயக்குழு என்பது தனிம அட்டவணையில் உள்ள முதல் இரு நெடுங்குழுக்களாகிய கார மாழைகளும், காரக்கனிம மாழைகளும், ஹைட்ரஜனும், ஹீலியமும் கொண்ட குழுவாகும். + + + + +பகாமாசு + +பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது. + + + + +சோமாலியா + +சோமாலியா ("Somalia", சோமாலி மொழி: "Soomaaliya", சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது, + +அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது. + +சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது. + + + + + + +வட அயர்லாந்து + +வட அயர்லாந்து ("Northern Ireland") ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கிமீ² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை (ஏப்ரல் 2001) 1,685,000 ஆகுமdvx. + + + + + +வெண்கந்தகம் + +வெண்கந்தகம் அல்லது தெலூரியம் (ஆங்கிலம்: Tellurium (IPA: ) என்பது பளபளப்பான வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Te. இதன் அணுவெண் 52 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு பளபளப்பான வெண்சாம்பல் நிறத்துடன் வெள்ளீயம் போல் உள்ள, ஆனால் எளிதில் உடைந்து நொருங்கக்கூடிய தன்மை உடைய நொறுநொறுப்பான மாழையனை வகையைச் சேர்ந்த தனிமம். வெண்கந்தகம் வேதியியல் பண்புகளில் செலீனியம், கந்தகம் போன்றது. இது பெரும்பாலும் காலியம் ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் அதன் மின்கடத்துமை வகையை மாற்றும் மாசூட்டுப் பொருளாக பயன்படுகின்றது.. + +வெண்கந்தகம், ஆக்ஸிஜன், கந்தகம், செலீனியம், பொலோனியம் அடங்கிய வேதியியல் குழுவை சேர்ந்த அருகியே கிடைக்கும் ஒரு தனிமம். இக்குழுவைச் சால்க்கோஜென் என்றும் அழைப்பர். + +டெலூரியம் என்னும் சொல் இலத்தீன் மொழிச் சொல்லாகிய "tellus" (டெல்லஸ் = மண், நிலம்) என்ப்தைல் இருந்து ஆக்கியது. இத்தனிமத்தை 1782 ஆண்டில் அங்கேரியர் பிரான்சு-ஜோசெப் மியுல்லர் வான் ரைசஷென்ஸ்டைன் (Franz-Joseph Müller von Reichenstein) என்பார் சிபு என்னும் ஊரில் நாகிசேபென் என்னும் இடத்தில் கண்டுபிடித்தார். இவ்விடம் தற்காலத்தில் ருமானியா நாட்டின் நடு மேற்குப் பகுதியில் உள்ளது (இது டிரான்ஸ்சிலவேனியா என்னும் பகுதியைச் சார்ந்தது). 1789ல் பால் கிட்டைபெல் என்னும் இன்னொரு அங்கேரியர் இதே தனிமத்தை தானும் கண்டுபிடித்தார் ஆனால் முதலில் கண்டுபிடித்தப் பெருமையை மியுல்லருக்கே தந்தார். 1798ல் மார்ட்டின் ஹைன்ரிஷ் கிலாப்ரோத் ([Martin Heinrich Klaproth) இத்தனிமத்தை பிரித்தெடுத்து பெயர் சூட்டினார். + +வெண்கந்தகத்தை முதல் அணுகுண்டு செய்தபொழுது வெளிக்கூட்டுக்கு வேதிப்பிணைப்புப் பொருளாகப் பயன்படுத்தினர். 1960களில் வெப்பவேறுபாட்டால் மின்னாற்றல் பெறும் வெப்பமின்னாக்கிகளுக்குப் பயன்படுத்தினர். + + + + +அயோடின் + +அயோடின் அல்லது ஐயோடின் ("Iodine", (, , அல்லது ; கிரேக்க மொழி |"iodes" "கருசெந்நீலம்") ஒரு வேதியியல் தனிமம். இதன் குறியீடு . இதன் அணுவெண் 53 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. அயோடின் ஹாலஜன் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே அசுட்டட்டைனுக்கு அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் மருத்துவம், ஒளிப்படக்கலை, நிறச்சாயத் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் இம்மியப் பொருளாக காணப்படுகின்றது. + +அயோடின் அயோடைடு மற்றும் அயோடேட்டு உள்ளிட்ட பல ஆக்சிசனேற்ற நிலைகளை வெளிப்படுத்துகிறது. இவை தவிர பல பெர் அயோடேட்டு எதிர்மின் அயனிகளையும் வெளிப்படுத்துகிறது. நிலைப்புத்தன்மை கொண்ட ஆலசன்களில் மிகக் குறைவாகக் கானப்படுவது அயோடினாகும். அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இது 61 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அயோடின் குறைபாட்டால் இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. + +மற்ற ஹாலஜன்களைப் போலவே அயோடினும் ஈரணு மூலக்கூறாக (I.) சேர்ந்து இயங்குகின்றது. + +அயோடின் இயற்கையில் கடல்நீரின் கரைந்துள்ள ஒரு பொருளாக உள்ளது.கடல் வாழ் உயிரினங்கள் அயோடினை உருவாக்குகின்றன. + +அயோடின் சாதாரணமாக இருக்கும் பொழுது கரு நீல நிறமாக இருக்கும். அதனை சூடு படுத்தும் பொழுது ஊதா நிறமாக இது மாறுகின்றது அயோடின் 113.7 ° C இல் உருகும். போலார் கரைசலுடன் இது சேரும்பொழுது அயோடின் மின் கடத்தும் தன்மையிணைப் பெறும். தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20 °C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50 °C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது.அயோடின் அதிக எலக்ட்டரான் அடர்த்தி கொண்ட தனிமம் ஆகும். இது ஹாலேஜன் குடும்பத்தை சார்ந்தது ஆகும். இது உலேகமல்லாத வகையை சார்ந்தது ஆகும்.அயோடின் ஆக்சிஜன் அணுக்களை வெளியேற்றப்(oxidizing agent) பயன்படுகிறது. அயோடின் காரங்களுடன் இணைந்து வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது. + +ஆலசன்களில் அயோடின் மிகக்குறைவான வினைத்திறன் கொண்டதாகக் கருதப்பட்டாலும் இது வேகமாக வினையாற்றக் கூடிய தனிமங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உதாரணமாக குளோரின் வாயு கார்பன் மோனாக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் கந்தக டை ஆக்சைடு போன்றவற்றை ஆலசனேற்றம் செய்து முறையே பாசுகீன், நைட்ரோசில் குளோரைடு, சல்பூரைல் குளோரைடு முதலியவற்றைக் கொடுக்கிறது. ஆனால் அயோடின் இவ்வாறு ஆக்சிசனேற்ற முடிவதில்லை. மேலும், குளோரினேற்றம் மற்றும் புரோமினேற்றங்களைக் காட்டிலும் உலோகங்களின் அயோடினேற்றம் தாழ் ஆக்சிசனேற்ற நிலைகளில் நிகழ்கிறது. உதாரணமாக இரேனியம் உலோகம் குளோரினுடன் வினைபுரிந்து இரேனியம் எக்சாகுளோரைடைக் கொடுக்கிறது. ஆனால் புரோமினுடன் வினைபுரிந்து இரேனியம் பெண்டா புரோமைடை மட்டுமே கொடுக்கிறது. இதேபோல அயோடினுடன் வினைபுரிந்து இரேனியம் டெட்ரா அயோடைடை மட்டுமே கொடுக்கிறது. அதேபோல ஆலசன்களில் அயோடின் குறைவான அயனியாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே எளிதாக இது ஆக்சிசனேற்றப்படுகிறது. + +அயோடினின் மிக எளிய சேர்மம் ஐதரசன் அயோடைடு (HI) ஆகும். இது ஒரு நிறமற்ற வாயு ஆகும் ஆக்சிசனுடன் இது வினைபுரிந்து தண்ணீரையும் அயோடினையும் கொடுக்கிறது. ஆய்வக அயோடினேற்ற வினைகளில் ஐதரசன் அயோடைடு பெரும்பங்கு வகித்தாலும் மற்ற ஐதரசன் ஆலைடுகள் போல பேரளவில் தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக அயோடின் ஐதரசன் சல்பைடு அல்லது ஐதரசீன் உடன் வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. + +அறைவெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு தவிர்த்து மற்ற ஐதரசன் ஆலைடுகல் போல இதுவும் நிறமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. ஏனெனில் ஐதரசன் பெரிய மற்றும் எலக்ட்ரான் கவர் தன்மை குறைந்த அயோடின் அணுவுடன் வலிமையான ஐதரசன் பிணைப்பை உருவாக்குவதில்லை. + +−51.0 °செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது. மற்றும் −35.1 °செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது. +ஐதரசன் அயோடைடு ஒரு வெப்பங்கொள் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் வெப்பத்தை வெளியிட்டு இது பிரிகையடைகிறது. ஒரு வினையூக்கி இல்லாவிட்டால் இவ்வினை மிகவும் மெதுவாக நிகழ்கிறது. அயோடின் மற்றும் ஐதரசன் இரண்டும் அறை வெப்பநிலையில் வினைபுரிந்து ஐதரசன் அயோடைடு உருவாகும் வினை நிறைவு பெறுவது இல்லை. H–I பிணைப்பின் பிரிகை ஆற்றல் 295 கிலோயூல்/மோல் ஆகும். இது ஐதரசன் ஆலைடுகளில் மிகவும் குறைவான பிரிகை ஆற்றலாகும். + +நீரிய ஐதரசன் அயோடைடு ஐதரோ அயோடிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வலிமையான அமிலமாகும். ஐதரசன் அயோடைடு விதிவிலக்காக தண்ணீரில் கரைகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 425 லிட்டர் ஐதரசன் அயோடைடைக் கரைக்க முடியும். நிறைவுற்ற கரைசலில் ஓர் ஐதரசன் அயோடைடு மூலக்கூறுக்கு நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மட்டுமே கானப்படுகின்றன. வணிக முறையில் கூறப்படும் அடர் ஐதரோ அயோடிக் அமிலம் என்பது பொதுவாக நிறை அளவில் 48-57% ஐதரசன் அயோடைடு காணப்படுகிறது. 100 கிராம் கரைசலுக்கு 56.7 கிராம் ஐதரசன் அயோடைடில் இக்கரைசல் 126.7° செல்சியசு வெப்பநிலையாகக் கொண்ட கொதிநிலைமாறிலியாக உருவாகிறது. எனவே நீரை ஆவியாக்குவதால் இதைவிட அடர்த்தியானதாக மாற்ற இயலாது. +ஐதரசன் புளோரைடு போல அல்லாமல் நீரற்ற நீர்ம ஐதரசன் அயோடைடுடன் ஒரு கரைப்பானாக பயன்படுத்துவது கடினமானதாகும். ஏனெனில் இதனுடைய கொதிநிலை மிகவும் குறைவாகும். நீர்மமாகும் வீதமும் குறைவாகும். மின்கடத்தாப் பொருள் மாறிலியும் மிகக் குறைவாகும். போதுமான அயனிகளாக இது பிரிகை அடைவதுமில்லை. நீரற்ற ஐதரசன் அயோடைடு ஒரு நல்ல கரைப்பானாகச் செயல்படுவதில்லை. எனவே சிறிய மூலக்கூற்று சேர்மங்களான நைட்ரோசில் குளோரைடு மற்றும் பீனால் போன்ற சேர்மங்களை மட்டுமே கரைக்க வல்லதாக உள்ளது. + +அயோடின் ஒரு இருண்ட ஊதாக் கறுப்பு நிறத் திண்மமாக உள்ளது. இது ஒரு அலோகம் ஆகும். இது ஆலசன் வரிசையிலும் அடங்குகின்றது. அயோடின் நீரில் கரையாது. ஆனால் அயோடின் கரைசல் நீருடன் கரையும். இது கரிமக் கரைப்பான்களில் எளிதாகக் கரைகின்றது. + +இயல்பாக அயோடின் ஈரணு மூலக்கூறு கொண்ட அணுவாகும் .இது I-I பிணைப்பு நீலம் கொண்ட அணுவாகும்.இந்த பிணைப்பே அயோடின் ஹாலஜன்களைவிட அதிக உருகும் புள்ளி கொண்ட காரணம் ஆகும். + +அயோடினை பிரான்சிய வேதியியல் விஞ்ஞானியான பெர்னார்ட் கியூர்டொயிஸ் 1811 இல் கண்டுபிடித்தார். அவருடைய தந்தை ஒரு பொட்டாசியம் நைத்திரேட்டு விற்பனையாளர் ஆவார். இது வெடிமருந்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற நெப்போலியப் போர்களில் பிரான்சும் பங்குபற்றியதால் பொட்டாசியம் நைத்திரேட்டுக்குப் பெரும் கிராக்கி இருந்தது. 1813 இல் அயோடின் ஒரு தனிமம் எனக் கண்டறியப்பட்டது. + +அயோடின் தனிமத்தில் 37 கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் உள்ளன.ஆனால் அவற்றில் I மட்டுமே நிலைத்தன்மை உடையது ஆகும்.அயோடினில் அதிக ஆயுட்காலம் கொண்டது I ஐசோதோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலமே 15.7 மில்லியன் வருடங்கள் ஆகும். .இதற்கு அடுத்ததாக அதிக ஆயுட்காலம் கொண்டது I ஐசோ��ோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலம் 59 நாட்கள் ஆகும். + +நீரில் ஏற்கனவே கரைந்த ஹைட்ரோ-ஐயோடிக் காடி அல்லது பொட்டாசியம் அயோடைடு இருந்தால் அயோடினின் கரையும் தன்மை கூடுகின்றது. ஏற்கனவே கரைந்த புரோமைடு இருந்தாலும் நீரில் கரையும் தனமை கூடுகின்றது. + +அயோடைடுப் பொருட்களை குளோரின் உடன் சேர்த்து ஆக்ஸைடாக்கினால் தனிம அயோடின் கிடைக்கின்றது: + +அல்லது காடிகளில் மாங்கனீசு டை-ஆக்ஸைடு உடன் இயைந்தாலும் கிடைக்கும்: + +ஹைட்ரஜன் சல்பைடு ஐ ஹைட்ட்ரோ அயோடிக் காடியுடன் சேர்த்தாலும் தனிம அயோடின் கிடக்கும்: + +அல்லது ஹைட்ரசைன் மூலமாக (hydrazine): + +நைட்ரிக் காடியால் அயோடின் அயோடேட்டாக ஆக்ஸைடாக்கப்படுகின்றது: + +அயோடின் இயற்கையாகப் பல இடங்களில் உருவாகின்றது. இவற்றுள் இருவகையான அயோடின்கள் வர்த்தக ரீதியான பயன்பாடு உடையவை. இவற்றுள் ஒன்றான கலிக் சிலி நாட்டில் கிடைக்கப்பெறுகின்றது. பெரும்பாலான மற்ற உற்பத்தியாளர்கள் அயோடின் உற்பத்தி செய்ய இயற்கையாகக் கிடைக்கும் உவர் நீரப் பயன்படுத்துகின்றனர். அயோடின் வடிகட்டல் மற்றும் சுத்திகரிப்பிற்குப் பின்னர் பொதிசெய்யப்படும். + +மின்னற்பகுப்பு வழியாகக் கடல்நீரில் இருந்து அயோடின் உற்பத்தி செய்யும் போது அயோடின் நிறைந்த உவர் நீர் போதுமான வளம் காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. + +அயோடின் அசிட்டிக் அமிலம் செய்யப்பயன்படும் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. விலங்குகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அயோடின் பயன்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. + +பூமியில் உள்ள குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் அயோடின் ஏற்றப்பட்ட மேசை உப்பையே பயன்படுத்துகின்றனர். ஆனால் அயோடின் குறைபாடுடைய இரண்டு பில்லியன் மக்கள் இன்றும் உள்ளனர். அயோடின் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள்; + + +அயோடினால் பல தீமைகளும் விளைகின்றன. அணுக்கரு பிளவின் போது வெளிப்படும் அயோடின் காற்றுடன் கலந்து, புற்று நோயினை உண்டாக்குகின்றது.தைராய்டு நோயினை விளைவிக்கின்றது. அயோடின் தோல் எரிச்சலைத்தரும். அதன் ஆவியை நுகர்ந்தால் நுரையீரலில் எரிச்சல் உண்டாகும். 2-3 கிராம் அயோடினினால் ஒரு மனிதனைக் கூட கொல்ல முடியும். அயோடைடுகள் மிகவும் நச்சு தன்மை கொண்டவை ஆகும். + + + + +லெசோத்தோ + +லெசோத்தோ (அல்லது லெசூட்டு, "Lesotho", lɪˈsuːtu), என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் மக்கட்தொகை 2,031,348. +இந்நாட்டின் மக்கட்தொகையில் தோராயமாக 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். + + + + + +1582 + +ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது. + + + + + + +உலக விலங்கு நாள் + +உலக விலங்கு நாள் ("World Animal Day") ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. + +அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நா��் கொண்டாடப்பட்டு வருகிறது. + +விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. + + + + + +இம்மியப் பொருள் + +இம்மியப் பொருள் ("Trace Element") என்பது ஒரு குறிப்பிட்ட பொருளில் மிக மிகச் சிறிதளவே உள்ள வேற்றுப்பொருளைக் குறிக்கும். அளவீட்டு வேதியியலில் ஒரு வேற்றுப்பொருளின் சராசரி அடர்த்தி, அது இருக்கும் பொதுப் பொருளில் ஒரு கிராமுக்கு 100 மைக்ரோ கிராம் இருந்தால் அதனை "இம்மியப்பொருள" எனப்படும். வேறு விதமாக கூறுவதென்றால் B என்னும் ஒரு பொருளில் உள்ள 1 மில்லியன் அணுக்களுக்கு, A என்னும் பொருளின் 100 அணுக்கள் இருந்தால், A என்னும் பொருளை இம்மியப்பொருள் என்பர். + +உயிர்வேதியியலில் ஓர் உயிரினம் சரிவர வளர்ச்சி பெற்று உயிர்வாழ்வதற்குத் தேவைப்படும், அடிப்படையான, ஆனால் மிக மிகச் சிறிதளவே தேவைப்படும் ஒரு பொருளை இம்மியப் பொருள் அல்லது இம்மிய ஊட்டுப்பொருள் அல்லது நுண்ணிய ஊட்டுப்பொருள் என்பர். + +புவிவேதியியலில், கனிமங்களைப் பற்றி கூறும் பொழுது, ஒரு மில்லியன் பங்கில் 1000 பங்குக்கும் குறைவாக இருந்தால், அதாவது 0.1 % க்கும் குறைவாக இருந்தால் அதனை இம்மியப்பொருள் என்பர். + +எனவே இம்மியப்பொருள் என்பது துறைதோறும் சற்று மாறுபடும் பொருள் கொண்டது. + + + + +கிண்டி தேசியப் பூங்கா + +கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். ஒரு மாநகரின் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் கில்பெர்ட் ரோடிரிக்கிசு ("Gilbert Rodericks") என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக ‘கிண்டி லாட்ஜ்’ எனப்பட்டது. இதை, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ரோட்ரிக்ஸிடம் இருந்து அந்த இடத்தை அன்றைய மதிப்பில் 35,000 ரூபாய்க்கு வாங்கியது. இந்த காட்டுப் பகுதியைக் காப்பாற்றுவதற்காக, 1910 இல் மொத்த 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. பின்னர் 1958-இல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் 1961 இல் இருந்து 1977 க்குள் 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபம் போன்றவற்றின் பயன்ப���ட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியிருந்த 270.57 எக்டேர் காட்டுப் பகுதியை 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது. + +இந்த தேசிய பூங்கா உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது. இங்கு 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள் காணப்படுகிறது. + +இங்கு 14 பாலூட்டி சிற்றினங்கள் உள்ளன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற அதிக தொகையில் காணப்படுபவையாகும். 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இங்கு உண்டு. மேலும் பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றினனங்களும் இங்கு காணப்படுகிறது. + + + + +நுங்கம்பாக்கம் + +நுங்கம்பாக்கம் சென்னை மாநகராட்சியின் பழமையான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. நுங்கம்பாக்கம் சென்னையின் முக்கியமான வணிக/வர்த்தக மையமாகும். நுங்கம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. நுங்கம்பாக்கம் மத்தியச் சென்னையில் அமைந்துள்ளது. எழும்பூர், சேத்துப்பட்டு, தியாகராய நகர், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் கீழ்ப்பாக்கம் என்று சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளைக் கொண்டது நுங்கம்பாக்கம். நுங்கம்பாக்கம் பல்வேறு வணிக நிறுவனங்கள்,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள்,  மருத்துவமனைகள், சுகாதார மையங்களை கொண்டுள்ளது. ராசேந்திர சோழனின் கி.பி.11-ம் நூற்றாண்டை சேர்ந்த திருவாலங்காடு செப்பு பட்டயத்தில் நுங்கம்பாக்கத்தினை பற்றிய குறிப்புகள் உள்ளன.   + +சென்னையின் பல முக்கிய இடங்களை இணைக்கும் பகுதியாக நுங்கம்பாக்கம் விளங்குகிறது. சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் இவ்வழியே இயக்க படுகிறது. மேலும் நுங்கம்பாக்கத்தில் கடற்கரை- தாம்பரம் மார்க்க  புறநகர் மின்தொடர் வண்டி நிலையம் சேத்துப்பட்டு கோடம்பாக்கம் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது.   + +முக்கிய சாலைகள்: கல்லூரி சாலை, ஸ்டெர்லிங் சாலை, நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மஹாலிங்கபுரம் பிரதான சாலை, ஷெனாய் சாலை, கே என் கே சாலை, வாலஸ் கார்டன், ஹாடோவ்ஸ் சாலை, புஷ்பா நகர் பிரதான சாலை, கோத்தாரி சாலை, க்ரிஷ்ணமாசாரி சாலை, ஜகந்நாதன் சாலை, லேக் ஏரியா பிரதான சாலை. + +பொது வழிமுறை வளாகம்- DPI இங்கு அமைந்���ுள்ளது. இவ்வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், பள்ளி கல்வி இயக்குனரகம், தமிழ் நாடு பாடநூல் கழகம் இருக்கின்றன. + +இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலகம் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் ESI Corporation, (பிராந்திய அலுவலகம்) ஸ்டெர்லிங் சாலையில் உள்ளது. + +பல்வேறு நடுவண் அரசு அலுவலகங்களை கொண்ட சாஸ்திரி பவன் வளாகம், மகளிர் மேம்பாட்டு கழகம் வருமான வரி அலுவலகம், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் (ESIC) மண்டல அலுவலகம், சுங்கவரி அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம் போன்ற ஒன்றிய அரசு அலுவகங்கள், இந்து அறநிலையத்துறை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் தான் உள்ளது. + +இப் பகுதியில் பல வங்கிகள் தங்கள் சேவையை அளிக்கின்றன. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் , டாய்ஷ் பேங்க், ஆர் பி எல், ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, எஸ், இண்டஸ் இன்ட் போன்ற பன்னாட்டு/தனியார் வங்கிகளும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் நபார்டு  வங்கியின் தமிழ்நாடு மாநில அலுவலகம் இப்பகுதியில் தங்கள் கிளையை திறந்து இருக்கிறார்கள். ஸ்டார் நலக்காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு மாநில அலுவலகம் ஆகியவை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கிறது. + +அடிடாஸ், புமா, நிக்கே, ரீபாக், பேசிக்ஸ், க்ரோமா போன்ற உயர் ரக கடைகள் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. + +தாஜ் கோரமன்டல், தி பார்க், பால்ம்க்ரோவ், பிரதாப் பிளாசா, ஹாரிசன்ஸ், கௌதம் மேனர் போன்ற நட்சத்திர ஹோட்டல்களும். கான்டன், சிக் கிங், கே எப் சி, கஃபே காபி டே, மாமா கோடோ, டாலியா அஞ்சப்பர், தலைப்பா கட்டி, ஆசிப், வேலு மிலிட்டரி உணவகங்கள் அமைந்துள்ளன. + +சர்வதேச தரத்திலான இந்த அரங்கம் நுங்கம்பாக்கத்தின் பெருமைமிகு அடையாளமாகும். + +நுங்கம்பாக்கத்தின்அருகில் அமைந்துள்ள இடங்கள்: + + + + +ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் + +ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் (Johannes Nicolaus Brønsted) (பிறப்பு - பெப்ரவரி 22, 1879, வார்டெ, டென்மார்க்; இறப்பு - டிசம்பர் 17, 1947) டென்மார்க் நாட்டு வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியலில் காடி (= புளிமம், அமிலம்) என்பது ஒரு வேதியியல் பொருள் ஒரு காரப்பொருளுக்கு ஒரு ஹைட்ரஜனை ஈவது என்னும் அட���ப்படையான வரையறை ஒன்றை 1923ல் முன்னிட்டார். அதே ஆண்டு இங்கிலாந்து வேதியியலாளர் தாமஸ் மார்ட்டின் லோரி என்பவரும் இதே கருத்தை பிற தொடர்பின்றி தானும் முன்வைத்தார். மேலும் அதே ஆண்டில் காடியைப் பற்றி கில்பெர்ட் லூயிஸ் என்பார் எதிர்மின்னி இரட்டையைப் பெறுவன (காரம் இரட்டை எதிர்மின்னைகளைத் தருவன) என்னும் எதிர்மின்னிக் கொள்கையை முன்வைத்தார். + +பிரோன்ஸ்ட்டெட் வேதிப்பொறியியல் பட்டத்தை 1899லும், முனைவர் ஆய்வுப்பட்டத்தை 1908லும் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்தவுடனே பேராசிரியராக கரிமமல்லா வேதியல் மற்றும் இயற்பியல் வேதியியல் துறைகளுக்கான பிரிவில் அமர்ந்தார். + +1906ல் முதன்முதலாக இவர் எதிர்மின்னி ஈர்ப்புமை பற்றி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை, வெளியிடத்தொடங்கிய பல ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகும். பின்னர் 1923ல் காடியைப்பற்றிய நேர்மின்னிக் கொள்கை அல்லது எதிர்மின்னி நீங்கிய ஹைட்ரஹனை தரும் கொள்கையை முன்வைத்தார். பின்னாளில் காடிகள், காரங்கள் வழியாக வினையூக்கி முறைகளில் தேர்ந்த வல்லுனர் ஆனார். + +இரண்டாவது உலப்போரின் பொழுது, இவர் நாசியிசக் கொள்கைகளை எதிர்த்தார். 1947ல் இவர் டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் தாம் நோய்வாய்ப்பட்டமையால் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற இயலாது விரைவில் இறந்து போக நேர்ந்தது. + + + + +செனான் + +செனான் "(Xenon)" என்பது Xe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். புவியின் வளிமண்டலத்தில் செனான் வாயு நிறமற்றதாகவும் அடர்த்தி மிகுந்ததாகவும் நெடியற்ற மந்த வாயுவாகவும் ஒரு சிறிய அளவில் காணப்படுகிறது, செனான் ஒரு மந்த வாயுவாகக் காணப்பட்டாலும் சில வேதிவினைகளில் பங்கு கொள்கிறது. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு போன்ற சேர்மங்கள் இவ்வினைகளில் தயாரிக்கப்படுகின்றன. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட மந்த வாயுச்சேர்மமாகும். இவ்வாயுவை மின்கலன் விளக்காகவும் ஒளிவட்ட விளக்காகவும் மற்றும் ஒரு மயக்க மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள் + +எக்சைமர் எனப்படும் முதலாவது கிளர்வுற்ற ஈரணு மூலக்கூறு சீரொளி வடிவமைப்பில் செனா���ின் இருபடி (Xe2) கிளர்வொளியாகும் ஊடகத்தில் பயன்படுத்தப்பட்டது. தொடக்கக் கால சீரொளி வடிவங்களில் செனான் மின்கல விளக்குகள் காற்றழுத்த விசைக்குழாய்களாகப் பயன்படுத்தப்பட்டன. கோட்பாட்டு ரீதியில் பல்வீனமாக இடைவினைபுரியும் பெருந்துகள்கள் பற்றிய ஆய்வுகளில் செனான் பயன்படுத்தப்படுகிறது . விண்கலங்களின் உந்து அமைப்பில் அயனி அமுக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். + +இயற்கையாகத் தோன்றும் செனான் எட்டு நிலையான ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நிலையற்ற செனான் ஐசோடோப்புகள் கதிரியக்க சிதைவுக்கு உட்படுகின்றன. சூரிய மண்டலத்தைப் பற்றிய ஆரம்பகால வரலாற்றைப் படிப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக செனானின் ஐசோடோப்பு விகிதங்கள் கருதப்படுகின்றன . அணுக்கரு பிளவில் உருவாகும் அயோடின்-135 பீட்டா சிதைவு அடைவதால் கதிரியக்க செனான்-135 உற்பத்தி செய்யப்படுகிறது, அணுக்கரு உலைகளில் தேவையற்ற நியூட்ரான்களை உறிஞ்சிக் கொள்ளும் மிக முக்கியமான நியூட்ரான் உறிஞ்சியாக இது பயன்படுகிறது . + +செனான் வளிமம் ஒளிப்படக்கருவிகளில் அதிக வெளிச்சம் தரும் கருவிகளில் பயன்படுகின்றது. செனான் லேசர் செய்யப்படும் பொருள்களில் முக்கியப் பொருளாக உள்ளது. உறள்மக் கட்டிருப்புப் பிணைவு (Inertial Confinement Fusion), அரிதாக நுண்ணுயிர்க்கொல்லி விளக்குகள், சில தோலியல் பயன்பாடுகள் போன்றவற்றுக்கான லேசர் ஆற்றலை உருவாக்குவது இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். +செனான் வளிமம், மருத்துவப் பயனுக்காக மயக்கம் தரும் பொருளாகப் பயன்படுகின்றது, ஆனால் இதன் விலை அதிகம். 2005 ஆண்டில் 99.99% தூய செனான் வளிமம் ஒரு லிட்டருக்கு ஐக்கிய அமெரிக்க டாலர் $ 10 ஆகும் என்றாலும் ஐரோப்பாவில் செனான் தந்து மயக்கம் அளிக்கும் இயந்திரங்கள் வரவிருக்கின்றன +விண்வெளி ஊர்திகளில் மின்மவணு உந்துகள்ளாகப் பயன்படுத்துவதற்கு செனான் பயன் படுகின்றது. உயர்ந்த அணுவெடை கொண்டு இருப்பதாலும், அறை வெப்பநிலைக்கு அருகே உயர் அழுத்த நிலையில் நீர்மமாக ஆக்கவல்லதாலும், வேதியியல் வினை அதிகம் கொள்ளாததாலும், பிற பகுதிகளுக்கு அரிப்பு ஏதும் உண்டாக்காமல் இருப்பதாலும் செனான் விரும்பப்படுகின்றது நாசாவின் டோன் விண்கலம் செனானை அதன் அயனி உந்துகைப் பொறிகளில் பயன்படுத்துகின்றது. + +இசுக்காட��லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் வில்லியம் ராம்சேவும் ஆங்கிலேய வேதியியலாளர் மாரிசு டிராவெர்சும் இங்கிலாந்தில் 1898 செப்டம்பரில் செனான் வாயுவைக் கண்டுபிடித்தனர் . கிரிப்டானையும் நியானையும் அவர்கள் கண்டுபிடித்த பின்னர் திரவக் காற்றிலிருந்து ஆவியாகும் கூறுகளில் காணப்பட்ட கசடாக செனானை அவர்கள் கண்டறிந்தார்கள் . அந்நியன் அல்லது தனியன் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு செனான் என்னும் பெயரை இராம்சே இந்த வளிமத்துக்கு பெயராகப் பரிந்துரைத்தார் . வளிமண்டலத்தில் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு இருக்கலாம் என 1902 ஆம் ஆண்டில் இராம்சே மதிப்பிட்டார் . + +1930 களின் போது, அமெரிக்க பொறியியலாளரான அரோல்டு எட்கர்டன் அதிக வேக புகைப்படத்திற்கான குறிப்பொளி தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக செனான் மின்வெட்டொளி விளக்கு கண்டறியப்பட்டது. இவ்விளக்கில் செனான் வாயு நிரப்பப்பட்ட குழாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு ஒளி உண்டாக்கப்படுகிறது. 1934 இல் எட்கர்டினால் இம்முறையைப் பயன்படுத்தி ஒரு மைக்ரோ நொடிக்குச் சுருக்கமாக மின்வெட்டுகளை உருவாக்க முடிந்தது. + +ஆழ்கடலில் மூழ்கி பணிபுரிபவர்களுக்கு வெறி பிடிப்பதற்கான காரணங்களை 1939 ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவர் ஆல்பர்ட்டு ஆர் பெங்கி சூனியர் ஆராயத் தொடங்கினார். சுவாசக் கலவகளை மாற்றி அம் மாறுபாடுகளின் விளைவுகளை சோதித்துப் பார்த்தார், ஆழமான கடல் பகுதிகளில் இம்மாற்றம் உணரக்கூடியதாக இருப்பதையும் இவர் கண்டுபிடித்தார். இறுதியாக செனான் வாயு ஒரு மயக்கமூட்டியாகச் செயற்படுகிறது என்பதை கண்டறிந்தார். 1941 ஆம் ஆண்டில் உருசிய நச்சியல் விஞ்ஞானி நிகோலய் வி. லாசரேவ் செனான் மயக்க மருந்து குறித்து ஆய்வு செய்திருந்தாலும், செனான் மயக்க மருந்தை உறுதிசெய்த முதல் வெளியீட்டு அறிக்கை 1946 ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் யோன் எச். லாரன்சு என்பவரால் வெளியிடப்பட்டது. எலிகளில் பரிசோதித்தது இவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். 1951 ஆம் ஆண்டில் அமெரிக்க மயக்கவியல் நிபுணர் சுடூவர்ட்டு சி. கல்லென் செனான் வாயுவை இரண்டு நோயாளிகளுக்கு மயக்கமருந்தாகக் கொடுத்து அறுவைச் சிகிச்சையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் + +செனான் மற்ற���ம் இதர மந்த வாயுக்கள் யாவும் நீண்ட காலமாக முற்றிலும் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து சேர்மங்களை உருவாக்கும் சக்தியற்றவை என்று கருதப்பட்டன. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என்ற முதலாவது மந்தவாயுச் சேர்மம் 1962 ஆம் ஆண்டு மார்ச்சு 23 இல் கண்டறியப்பட்டது. இதன்பிறகு பல மந்தவாயுச் சேர்மங்கள் கண்டறியப்பட்டன. 1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80 செனான் சேர்மங்களுக்கும் மேல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. + + + + + +மின்னியலின் வரலாறு + +மின்னியலின் வரலாறு பண்டைய கிரேக்கர்களின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை உள்ளடக்கியதாகும். + +மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்சு என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்சு அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொழுது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்றழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்சு கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம். + +மைக்கேல் பாரடேயை "மின்னியலின் தந்தை" என்றுரைத்தால் மிகையாகாது. இவர் நடத்திய ஆராய்ச்சிகள் ஏராளம், கண்டுபிடித்தவையும் ஏராளம். ஒரு மின்சுருளைச் சுற்றியுள்ள பகுதியில் காந்த அலைகள் வேறுபட்டால் அவ் மின்சுருளில் மின்சாரம் உண்டாகும் எனக் கண்டுபிடித்தார். இதுவே மின் உற்பத்தி இயந்திரம் இயங்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். + + + + +1823 + +1823 (MDCCCXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +சிவபுராணம் + +சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். "திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படுகிறது. சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. + +முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, "முந்தை வினைகள் அனைத்தும் ஓய" இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், "அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன". + +உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல். + + +நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க +இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க +கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க +ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் வாழ்க +ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க + +சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ ச���யம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது. + + +இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை. + + +சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன. + +எண் இறந்து எல்லை இலாதானே" +போக்குவாய்" + +உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் "கன்மம்" என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் "மாயை" என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன. + + +உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன. + + + +இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன. + + + + + + + + +தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் + +தெற்கு யோர்சியா மற���றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும். இது தெற்கு யோர்சியா என்ப்படும் சுமார் 106.25 மைல் (170 கி.மீ.) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட்விச் தீவுகள் எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவணத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர். + +ஐக்கிய இராச்சியம் தெற்கு யோர்சியாவுக்கு 1775 முதல் முடியுரிமையக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச் தீவுகள் 1985 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆர்ஜென்டீனா 1927 ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும் 1938 ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. 1976 முதல் 1982 இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜெனிடீனா தெற்கு சண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்சியா மீதான உரிமைக் கோரல் 1982 ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. + + + + +ஜோசப் ஃபூரியே + +ழான் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே (Jean Baptiste Joseph Fourier) (மார்ச் 21, 1768 - மே 16, 1830) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சுக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆவுகளுக்காவும், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர். + + + + +சீசியம் + +சீசியம் "(Caesium)" என்பது Cs என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 55 ஆகும் இதன் அணுக்கருவில் 78 நொதுமிகள் உள்ளன. சீசியம் மென்மையான வெள்ளிய தங்கம் போன்ற தோற்றம் கொண்ட கார உலோகங்கள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம் என்று தனிம வரிசை அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சீசியத்தின் உருகுநிலை அறை வெப்பநிலைக்கு நெருங்கிய வெப���பநிலையான 28 °செல்சியசு வெப்பநிலையாகும். ருபீடியம் (39 °செல்சியசு), பிரான்சியம் (27 °செல்சியசு), காலியம் (30 °செல்சியசு) போன்ற தனிமங்களும் அறை வெப்பநிலைக்கு அருகாமையில் உருகுநிலையைக் கொண்ட நீர்மநிலை தனிமங்களாகும் துல்லிய அணு மணிகாட்டிகளில் சீசியம் அணு பயன்படுகின்றது. +சீசியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ரூபிடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள அனைத்து உலோகங்களையும் விட அதிக வினைத்திறன் கொண்ட இவ்வுலோகம் காற்றில் தானே பற்றிக் கொள்ளும் உலோகமாக உள்ளது. -116 ° செல்சியசு வெப்பநிலையிலும் கூட தண்ணீருடன் இது வினைபுரிகிறது. பாலிங் அளவு கோலில் 0.79 என்ற மதிப்பைக் கொண்டுள்ள மிகவும் குறைவான எலக்ட்ரான் கவர் ஆற்றலை சீசியம் கொண்டுள்ளது. சீசியம் -133 என்ற ஒரே ஒரு நிலையான ஐசோடோப்பை சீசியம் பெற்றுள்ளது. சீசியம் பெரும்பாலும் பொலூசைட்டு என்ற கனிமத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கதிரியக்க ஐசோடோப்பான சீசியம்- 137 அணுக்கரு பிளவு மூலம் உருவாகும் விளைபொருளாகும். அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளிலிருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது. + +செருமானிய வேதியியலாளர் இராபர்ட் புன்சன் மற்றும் இயற்பியலாளர் குசுடாவ் கிர்சாஃப் ஆகியோர் 1860 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சுடர் நிறமாலை மூலம் சிசியத்தை கண்டுபிடித்தனர். வெற்றிடக் குழாய்களிலும் ஒளிமின்கலன்களிலும் தொடக்கத்தில் சிரிய அளவில் சீசியம் பயன்படுத்தப்பட்டது. ஒளியின் வேகம் பிரபஞ்சத்தில் மிகவும் மாறாத பரிமாணமாக இருப்பதாக ஐன்சுடீனின் ஆதாரத்தின் மீது 1967 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக சர்வதேச அலகு அமைப்பு முறைமைகள் சிசியம் -133 ஐசோடோப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதிலிருந்து, சீசியம் அதிக துல்லியமான அணுக் கடிகாரங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. + +1990 களில் இருந்து சீசியம் தனிமத்தின் மிகப்பெரிய பயன்பாடாகக் கருதப்படுவது துளையிடும் திரவங்களுக்காக இதைப் பயன்படுத்துவது ஆகும். ஆனால் மின்சக்தி உற்பத்தி, மின்னியல் மற்றும் வேதியியல் துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது. கதிரியக்க ஐ��ோடோப்பான சீசியம்-137 அரை ஆயுட்காலமாக 30 வருடங்களைப் பெற்றுள்ளது.இது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கமல்லாத சீசியச் சேர்மங்கள் குறைந்த அளவு நச்சுத்தன்மை கொண்டவையாக உள்ளன. ஆனால் தூயநிலையில் இருக்கும் சீசியம் நீருடன் தீவிரமாக வெடித்தலுடன் வினைபுரிவதால் உதை தீங்கு விளைவிக்கும் தனிமமாகக் கருதுகிறார்கள். கதிரியக்க ஐசோடோப்புகள் குறிப்பிடத்தக்க சுகாதார விளைவுகளையும் சுற்றுச்சூழல் தீங்கையும் விளைவிக்கிறது. + +மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 0.2 மோ மதிப்பைக் கொண்ட சீசியம் ஒரு மென்மையான உலோகமாகக் கருதப்படுகிறது. இதை தகடாகவும் அடிக்கலாம் கம்பியாகவும் நீட்டலாம். வெளிர் நிறத்தில் காணப்படும் ஒரு உலோகம் இதுவாகும். ஆக்சிசனுடன் வினைபுரிந்து கருமையாகிறது. கனிம எண்ணெய்களில் வைத்து எடுத்துச் செல்லும் போது இது தன்னுடைய பளபளப்பை இழந்து சாம்பல் நிறத்திற்கு மங்கிவிடுகிறது. 28.5° செல்சியசு என்ற குறைந்த உருகுநிலையைக் கொண்டு அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் உள்ள சில தனிமங்களின் வரிசையில் ஒன்றாக இதுவும் இடம்பிடிக்கிறது. பாதரசம் மட்டுமே சீசியத்தைக் காட்டிலும் குறைந்த உருகுநிலை கொண்ட தனிமமாக உள்ளது. மேலும் கூடுதலாக சீசியம் மட்டுமே 641° செல்சியசு வெப்பநிலை என்ற குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமாகும். பாதரசம் மட்டுமே இதைவிட குறைந்த கொதிநிலை கொண்ட தனிமமும் ஆகும். சிசியத்தின் சேர்மங்கள் நீல நிறம் அல்லது ஊதா நிறத்துடன் எரிகின்றன. + +மற்ற கார உலோகங்களுடனும், தங்கம், மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களுடனும் சீசியம் உலோகக் கலவைகளை உருவாக்குகிறது. 650 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் இது கோபால்ட், இரும்பு, மாலிப்டினம், நிக்கல், பிளாட்டினம், தங்குதன் ஆகியவற்றுடன் உலோகக் கலவைகளை உருவாக்குவதில்லை. ஆண்டிமனி, காலியம், இண்டியம், தோரியம் போன்ற ஒளி உணர் தனிமங்களுடன் சிசியம் இணைந்து உலோகமிடை சேர்மங்களை உருவாக்குகிறது. இலித்தியம் தவிர மற்ற கார உலோகங்கள் அனைத்துடனும் சீசியம் கலக்கிறது. 41% சீசியம், 47% பொட்டாசியம் மற்றும் 12% சோடியம் கலந்து உருவாக்கப்படும் கலப்புலோகம் மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகக் கலவையாக கருதப்படுகிறது. CsHg2 மற்றும் CsHg உள்ளிட்ட சில இரசக் கலவைகளும் அறியப்படுகின்றன. + +சீசியத்தின் ஐசோடோப்பான Cs 137,புற்றுநோய்கான கதிர்மருத்துவத்திலும் அண்மை கதிர் மருத்துவத்திலும் தொலைக்கதிர் மருத்துவத்திலும் பயன்படுகிறது. அதன் குறைந்த ஆற்றலால் அதனைக் கையாழுவது எளிமையாக இருக்கிறது.30.5 வருட அரை வாழ்நாளும் சாதகமாக உள்ளன. + +அணு உலைகளில் யுரேனியம் பிளவுறும் போது கிடைக்கப்பெறும் பல தனிமங்களில் சீசியம் 137 னும் ஒன்று. இதனுடன் கதிரியக்கம் இல்லாத சீசியம் 133 அணுவும் கதிரியக்கமும் குறைந்த அரை வாழ்நாளும் கொண்ட சீசியம் 134 அணுவும் கிடைக்கின்றன.சீசியம் 137 னின் ஒப்புக் கதிரியக்கம் அதாவது ஒரு கிராம் சீசியம் 137 னுடைய கதிரியக்கம் 25 கியூரி அளவேயாகும். சீசியம் 137 ,கதிர் ஐசோடோப்பிலிருந்து 0.66 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் காமா கதிர்கள் வெளிப்படுகின்றன.இது தோல்பரப்பில் காணப்படும் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ள ஏற்றது.வெளிப்படும் β துகளின் ஆற்றல் 0.51 மி. எ.வோ.அளவே ஆகும். + + + + +குரோவாசியா + +குரோவாசியா ("Croatia", , குரோவாத்ஸ்க்கா, ஹ்ரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு ("Republika Hrvatska" ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும். + +2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. + +குரோவாட்ஸ்க்கர்கள் பால்க்கன் பகுதியில் கிபி 7வது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர். + +குரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது + +குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா ("županija") என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பி���ிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும். + +குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டுக்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு. + + + + + +பேரியம் + +பேரியம் "(Barium)" என்பது Ba என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு எண் 56 மற்றும் இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன. பேரியம் ஒரு மென்மையான உலோகம் ஆகும். வெள்ளி தனிமத்தைப் போல வெண்மை நிறம் கொண்டு பளபளப்பாக காணப்படுகிறது. உயர் வினைத்திறன் காரணமாக பேரியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. ஆதியில் இதனுடைய ஐதராக்சைடு பேரிடா என்ற பெயரில் அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு கனிமமாக இது அப்போது காணப்படவில்லை என்றாலும் பேரியம் கார்பனேட்டை சூடுபடுத்தி தயாரிக்கப்பட்டது. + +பேரைட்டு எனப்படும் பேரியம் சல்பேட்டு (BaSO4), விதரைட்டு எனப்படும் பேரியம் கார்பனேட்டு (BaCO3) இரண்டும் இயற்கையில் தோன்றுகின்ற பொதுவான கனிமங்களாகும். இவ்விரண்டு கனிமங்களும் நீரில் கரைகின்றன. கனம் என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லான பேரிட்டா என்ற சொல்லில் இருந்து பேரியம் என்ற சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பேரிக் என்ற சொல் பேரியத்தின் பெயரடையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1774 ஆம் ஆண்டு பேரியம் ஒரு புதிய தனிமமாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் 1808 ஆம் ஆண்டு மின்னாற்பகுப்பு வரை பேரியத்தை ஒரு தனிமமாக ஒடுக்க முடியவில்லை. + +பேரியத்திற்கென சில தொழிற்சாலைப் பயன்கள் உண்டு. வரலாற்றில் வெற்றிட குழாய்களுக்கான வளிம நீக்கியாகவும், மறைமுகமாக சூடேற்றப்படும் எதிர்மின் வாய்களின் மேல் ஆக்சைடு வடிவத்தில் உமிழும் பூச்சாகவும் பேரியம் பயன்படுத்தப்பட்டது. உயர் வெப்ப நிலை மீக்கடத்திகள் மற்றும் மின் வேதியியல் பீங்கான்களில் இது பகுதிப்பொருளாக உள்ளது. நுண்கட்டமைப்பில் கார்பன் மணிகளின் அளவைக் குறைக்க எஃகு மற்றும் வார்ப்பிரும்புடன் பேரியம் சேர்க்கப்படுகிறது. பேரியம் சேர்மங்கள் பச்சை நிறத்தை வழங்குவதற்காக வானவேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வான வெடிகளில் சேர்க்கப்படுகின்றன. +பேரியம் சல்பேட் எண்ணெய் நன்கு துளையிடும் திரவத்திற்கும், அதே போல் ஒரு தூய்மையான வடிவத்திற்கும் ஒரு உயிரற்ற சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது, இது மனித இரைப்பை நுண்ணுயிர் டிராக்டை உருமாற்றுவதற்காக எக்ஸ்-ரே ரேடியோ கான்ட்ராஸ்ட்ராட் முகவர்களாக உள்ளது. கரையக்கூடிய பேரியம் அயன் மற்றும் கரையக்கூடிய கலவைகள் நச்சுத்தன்மையுடனானவை. பேரியம் சல்பேட்டை ஒரு கரையாத கூட்டுப்பொருளாக எண்ணெய் கிணறுகள், துளையிடும் பாய்மங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். மனித இரைப்பை பாதையை படம்பிடிக்கும் எக்சு கதிர் தொழில் நுட்பத்தில் தூய்மையான பேரியம் பயன்படுத்தப்படுகிறது. கரையக்கூடிய பேரியம் அயனிகள் மற்றும் கரையக்கூடிய பேரியம் சேர்மங்கள் கொறிக்கும் விலங்குகளைக் கொல்லும் மருந்துகளாகப் பயன்படுகின்றன. + +பேரியம் ஒரு மென்மையான வெண்மையான வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு உலோகமாகும். மீத்தூய்மையுடன் காணப்படும் பேரியம் சற்று தங்கம் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது . பேரியத்தின் வெண்மை நிறம் காற்றில் அது ஆக்சிசனேற்றம் அடையும் போது மங்கலாகின்றது. அடர் சாம்பல் நிற ஆக்சைடு படலம் உருவாகிறது. நடுத்தரமான அலகு எடையும், நல்ல மின் கடத்துத்திறனும் கொண்டதாக பேரியம் உள்ளது. மீத்தூய பேரியத்தைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயலாகும். எனவே பேரியத்தின் துல்லியமான பண்புகளையும் இதுவரை கண்டறிய இயலாமல் உள்ளது. + +அறை வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பேரியம் பொருள் மைய கனசதுரக் கட்டமைப்பில் பேரியம்-பேரியம் பிணைப்பு இடைவெளி 503 பைக்கோமீட்டருடன் காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது தோராயமாக 1.8×10−5/°செ வீதத்தில் விரிவடைகிறது. மோவின் கடினத்தன்மை அளவு 1.25 இருப்பதால் பேரியம் மிகவும் மென்மையான உலோகமாகக் கருதப்படுகிறது. 730 பாகை செல்சியசு என்ற வெப்ப நிலையை உருகு நிலையாக பேரியம் கொண்டுள்ளது. இது இசுட்ரோன்சியம் தனிமத்தின் உருகு நிலையைக் காட்டிலும் குறைவாகவும், கன உலோகமான ரேடியத்தின் உருகு நிலையைக் காட்டிலும் அதிகமானதாகவும் உள்ளது. எனினும் இதனுடைய கொதி நிலை இசுட்ர���ன்சியத்தின் கொதி நிலையைக் காட்டிலும் அதிகரித்து காணப்படுகிறது.(3.62 கி/செ,மீ3) என்ற பேரியத்தின் அடர்த்தி இசுட்ரோன்சியத்திற்கும் (2.36 கி/செ.மீ3) ரேடியத்திற்கும் (~5 கிராம்/செ.மீ3) இடைப்பட்டதாக உள்ளது. + +வேதியியல் பண்புகளைப் பொறுத்தவரை பேரியத்தின் வேதிப்பண்புகள் மக்னீசியம், கால்சியம், இசுட் ரோன்சியம் ஆகிய தனிமங்களின் வேதிப்பண்புகளை ஒத்துள்ளது. பேரியம் எப்போதும் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை வெளிப்படுத்துகிறது. BaF போன்ற சில அரிய சேர்மங்கள் மற்றும் நிலைப்புத்தன்மை அற்ற மூலக்கூற்று இனங்கள் மட்டும் வாயு நிலையில் காணப்படுகின்றன. சால்கோசென்களுடன் பேரியம் ஈடுபடும் வினை வெப்ப உமிழ்வினையாகும். ஆக்சிசன் மற்றும் காற்றுடன் அறை வெப்ப நிலையில் இது வினைபுரிகிறது. எனவே பேரியத்தை எண்ணெய்க்கு அடியில் அல்லது மந்தமான சூழலில் சேமிக்க வேண்டும். கார்பன், நைட்ரசன், பாசுபரசு, சிலிக்கன், மற்றும் ஐதரசன் போன்ற அலோகங்களுடன் பேரியம் ஈடுபடும் வினையும் வெப்ப உமிழ்வினையாகும். சூடுபடுத்தும் போது இவ்வினைகள் நிகழ்கின்றன. தண்ணீர் மற்றும் ஆல்ககால்களுடன் இது ஈடுபடும் வினையும் வெப்ப உமிழ் வினையாகும். இவ்வினையின் போது ஐதரசன் வாயு வெளியிடப்படுகிறது. + + + + +பிரெஞ்சு கினி + +பிரெஞ்சு கினி ("French Guinea", Guinée française) என்பது மேற்கு ஆபிரிக்காவில் பிரான்சின் நேரடி ஆட்சியில் இருந்த ஒரு பகுதியாகும். இது பிரான்சின் 1958 அரசமைப்பை ஏற்க மறுத்ததால் பிரான்சிடம் இருந்து அக்டோபர் 2 1958இல் விடுதலை பெற்றது. பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்க மறுத்த ஒரேயொரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடு இதுவாகும். இது தற்போது கினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி உள்ளது. அரேபிய மொழியும் பாவிக்கப்படுகிறது. + + + + + +1889 + +1889 (MDCCCLXXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +1890 + +1890 (MDCCCXC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + +வடபழ��ி + +வடபழநி சென்னை மாந‌க‌ராட்சியில் மேற்கே அமைந்திருக்கும் ஒரு பகுதி. வடபழநி சென்னையின் பழம்பெரும் பகுதிகளில் ஒன்றாகும். வடபழநியில் புகழ்பெற்ற கோவில்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் இருக்கின்றன.வடபழனி தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. + +புகழ் பெற்ற வடபழநி முருகன் கோவில் இங்கு உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் வ‌ட‌ப‌ழனியில் உள்ளது. சிந்தாமணி என்னும் ஒரு சிறிய கோவிலும் இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது. விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், சூரியா மருத்துவமனை மற்றும் பெஸ்ட் மருத்துவமனை என்று சென்னையின் பெயர்பெற்ற மருத்துவமனைகள் வ‌ட‌ப‌ழனியில் அமைந்துள்ளன. எஸ்ஆர்எம் மருத்துவமனையும் உள்ளது. +ஏ.வி.எம், விஜயா வாகுனி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ் திரையுலகின் முன்னனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவண பவன் உணவகம் தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும். + +புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அதன் வளாகத்தை வ‌ட‌ப‌ழனியில் கொண்டுள்ளது.மேற்கு சிவன் கோவில் தெருவில் அப்போலோ நிறுவனத்தின் டிப்ளமோ கல்லூரி உள்ளது. + +சென்னை மாநகரத்தின் பெரும் சாலைகளில் ஒன்றான ஜவஹர்லால் நேரு சாலை (100 அடி சாலை) வடபழநி வழியாக செல்கின்றது. வடபழநியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. சென்னையின் பிறப் பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் வ‌ட‌ப‌ழனியிலிருந்து சுமார் 2 – 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், கோயம்பேட்டிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் 4 கிலோமீட்டர் தொலைவிலும், மீனம்பாக்கத்திலுள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையம் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை சென்ட்ரல் ரயில் நி��ையம் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. + +வடபழநியின் தபால் குறியீட்டு எண் 600026. + +வடபழநி: பழைய பெயர் புலியூர்கோட்டம் + +"அசைதலும் உரியன் அதா அன்று" என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட பழநியிலே பழனி ஆண்டி இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென் பழநி என்றமையால் வடக்கு புறமாக அமைந்த இப்பழநி வடபழநி என்று வந்து விட்டது. + + + + +அபிராமி அந்தாதி + +அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். +ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். + +தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார். + + + + +போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் + +போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் (Polya Enumeration Theorem) என்பது சேர்வியலில் ஒரு சிறப்புத் தேற்றம். இது கோல நூலில் கோலங்களை எண்ணல், வேதியலில் மாற்றியங்களை எண்ணல், சமச்சீர் உள்ள இடங்களிலெல்லாம் சமச்சீரினால் ஏற்படும் எண்ணிக்கைக் குழப்பங்களை விடுவித்தல், போன்ற பல எண்ணிக்கைப் பற்றிய கேள்விகளுக்கு (பிரச்சினைகளுக்கு) அபூர்வமான முறையில் தீர்வு வகுக்க உதவுகின்றது. அதனால் கணிதத்துறையைத் தாண்டி இயற்பியல், சமூகவியல் போன்ற மற்றதுறைகளிலும் பயன்படும் தேற்றமிது. 1927 இல் முதன்முதல் ரெட்ஃபீல்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கணிதவியலர்களுக்கும் கூட நன்கு பிடிபடாத காரணத்தால் கவனிக்கப்படாமல் இருந்து, பிறகு 1937ல் ஜியார்ஜ் போல்யா வினால் அடிப்படையிலிருந்து தொடங்கி ஒரு பெரிய தேற்றமாக நிறுவப்பட்டு பற்பல பயன்பாடுகளுக்கும் செயல்பட வழிவகுப்பட்டது. அன்றிலிருந்து இத்தேற்றமும் அதன் பயன்பாடுகளும் சேர்வியலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை ரெட்ஃபீல்ட்-போல்யா தேற்றம் (Redfield-Polya Theorem) என்றும் சொல்வர். + +கருதுகோள்: + +முடிவு: + +பற்பல பயன்பாடுகள் இருப்பினும் போல்யா தேற்றத்தின் அர்த்தத்தையும் பயன்பாட்டையும் விளக்கக்கூடிய ஒரு சிறு பயன்பாட்டை இங்கு பார்க்கலாம். + +இது ஒரு மாலையின் மணிகளை நிறப்படுத்துதல் என்ற பயன்பாடு. + +ஆறு மணிகளைக்கோர்த்த மணிமாலை ஒன்றை பச்சை, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்களால் நிறப்படுத்தினால் எத்தனை மாதிரி மாலைகள் உண்டுபண்ணலாம்? இதைக் கணக்கிடுவது மட்டுமல்லாமல், போல்யா தேற்றத்தால் அம்மாதிரிகளைப் பட்டியலிடவும் முடியும்.(எண்ணிக்கையைக் கணக்கிடுவது மட்டும் நமது குறிக்கோளானால், அது பர்ன்ஸைட் கொற்கோளாலும் முடியும்). + +formula_21 . இவ்வாறு எண்களும் மாலையில் மணிகளின் இடங்களைக் குறிக்கின்றன. + +formula_2 = பச்சை, சிவப்பு ஆகிய இருநிறங்களால் ஆகிய கணம். + +formula_23 என்ற ஒவ்வொரு கோப்பும் ஒருவித நிறப்படுத்தப்பட்ட மாலையைக் குறிக்கும். + +பச்சை நிறத்துக்கு formula_15 என்ற 'எடை'யையும், சிவப்பு நிறத்திற்கு formula_3 என்ற 'எடை'யையும் கொடுப்போம். + +ஆக formula_26(பச்சை) = formula_15; formula_26(சிவப்பு) = formula_3. formula_30 இரண்டும் ஒரு பரிமாற்று இயற்கணிதத்தின் உறுப்புகள். அதனால் formula_31 இதற்கெல்லாம் அர்த்தம் உண்டு. + +formula_9 இனுடைய ஒரு வரிசைமாற்றுக்குலமாக அதன் சுழற்குலத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது மாலையை சுழற்றுவதால் ஏற்படும் இடமாற்றங்கள் ஒரு வேறு மாலையாகக் கருதப்படமாட்டாது. எடுத்துக்காட்டாக, +ஏனென்றால் இரண்டும் ஒரே மாதிரியைச்சேர்ந்தவை. ஒன்றை சரியான அளவு சுழற்றினால் இன்னொன்று கிடைக்கும். + +இச்சுழற்றுக்குலம் என்பது ஆறு உறுப்புக்களால் ஆனது. அந்த ஆறு உறுப்புகளும் அவைகளின் சுழலமைப்புகளும் கீழே அட்டவணையாகக்காட்டப்பட்டுள்ளன: + +இதனால், இச்சுழற்குலத்தின் சுழற்குறியீடு = formula_34 + +போல்யா தேற்றத்தின்படி, நிறப்படுத்தப்பட்ட மாலைகளைப் பட்டியலிடுவதற்கு இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம், கீழே காட்டியுள்ள பதிலீடுகளை செயல்படுத்தவேண்டும்: + +இச்செயல்பாட்டினால் நமக்குக் கிடைப்பது: + +இதன் கணிப்பு + +இதன் பொருள் + +மாதிரிகளின் எண்ணிக்கை மட்டும் தேவையானால், போல்யா தேற்றத்தின் கடைசி பாகத்தில் சொல்லிய வாய்பாடைப் பயன்படுத்தலாம்: + +மாதிரிகளின் எண்ணிக்கை = formula_45 இங்கு |R| = 2. + +ஆக, மாதிரிகளின் எண்ணிக்கை = formula_46 + +மேலே விவரிக்கப்பட்ட எடுத்துக்காட்டில் வரிசைமாற்றங்களாக மாலையின் 6 சுழற்சிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டோம். சுழற்சிகளுடன் கூட எதிர்வுகளையும் (reflections) எடுத்துக்கொண்டால், தனித்துவப்படுத்தப்பட்ட மாலைகளின் மாதிரிகளின் எண்ணிக்கை மாறும். + +ஆக, இப்பொழுது எடுத்துக்கொள்ளப்படும் வரிசைமாற்றுக்குலம் G இல் + + + + +முதலில், இவை பன்னிரண்டும் சேர்ந்து ஒரு குலமாகின்றது என்பது முக்கியம். இக்குலத்தின் சுழற்குறியீட்டைக்கணிக்கும் வழி: + + + + +ஆக G இன் சுழற்குறியீடு = formula_50 + +மாதிரிகளின் எண்ணிக்கை = formula_51 + +ஏற்கனவே கிடைத்த மாதிரிகளின் படிமங்களைப் பார்த்தால், கடைசி இரண்டு மாதிரிகளும், எதிர்வுகளினால் ஒரேமாதிரியாகக் கணக்கிடப்படும் என்பது புரியும். இதர 13 மாதிரிகள்தான் சுழற்சிகளாலும், எதிர்வுகளாலும் மாறாத மாதிரிகள். + + + + +மனித உடலில் உள்ள தனிமங்கள் + +சராசரியாக 70 கிலோகிராம் எடை உள்ள ஒரு மாந்தனின் உடல் எவ்வெவ் தனிமங்களால் எவ்விகிதத்தில் ஆக்கப்பட்டுள்ளது என்று காட்டும் பட்டியல். மாந்தனின் உடலில் எடையளவில் (நிறை அல்லது திணிவு என்றும் கொள்வதுண்டு) 65-90% நீர்தான் (HO). மீதம் உள்ளதில் மிகப்பெரும்பாலானவை கரிமம் உள்ள கரிமவேதிப் பொருட்களால் ஆனவை. மனித உடலில் 99% ஆறே ஆறு தனிமங்களால் ஆனவையே. அவை ஆக்ஸிஜன், கரிமம், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் ஆகும். + + + + +சென்னை புறநகர் பேருந்து நிலையம் + +சென்னை புறநகர் பேருந்து நிலையம் அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் இந்தியாவின் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.. ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. + +கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. + +இந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. + +புறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் ஏறத்தாழ 1.5  ஏக்கர் பரப்பளவில் "பிராட்வே முனையம்" என அமைந்திருந்தது. வளர்ந்து வந்த போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம்  1,03 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை நவம்பர் 18, 2002இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார். + +இந்த நிலையத்தில் மூன்று கிளைகளில் ஆறு நடைமேடைகளும் 180 பேருந்து நிறுத்துமிடங்களும் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் 270 சேவைப் பேருந்துகள் நிறுத்தப்படவும் ஓய்வுநிலையாக 60 பேருந்துகளும் நிறுத்தப்படவும் கூடும். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது. இங்கு தற்போது ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் பரப்பில் பயணிகளுக்கான வசதிகளும் பரப்பில் தானிகள், வாடகை உந்துகள் மற்றும் தனியார் தானுந்துகளும் பரப்பில் இரு சக்கர தானுந்துகளும் நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு மூன்று தங்கு விடுதிகளும் மூன்று சிற்றுணவகங்களும் மூன்று பயணர் சரக்கு வைக்குமிடங்களும் பத்து பயணச்சேவை முகமையகங்களும் கடைகளும் பேரங்காடிகளும் தாவருவிகளும் வாடகைக்கான தங்கு கூடங்களும் (குளிர்பதனப்படுத்தப்பட்ட மற்றும் அல்லாத) கழிவறைகளும் உள்ளன; இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. +இங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. + + இந்தப் பேருந்து முனையத்தில் 1,500 முதல் 2,000 வரையிலான ஈராழி தன்னுந்துகளும் 60 நாற்சக்கர தன்னுந்துகளும் நிறுத்தக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. +2008ஆம் ஆண்டில் நுழைவாயிலில் பேருந்துகளும் ஈராழி தன்னுந்துகளும் பிற தன்னுந்துகளும் நெரிசலை ஏற்படுத்தாதிருக்கும் பொருட்டு தரைக்குக் கீழே ஓர் ஈரடுக்கு ஈராழி தானுந்து நிறுத்தும் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 9 கோடி திட்டச்செலவில் ஒருநாளுக்கு 3000 ஈராழி தன்னுந்துகள் நிறுத்தும் தேவையை கருத்தில் கொண்டு இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. சனவரி 2009இல் 6,000-ச.மீ பரப்பில் துவங்கிய இப்பணி ஆகத்து 2010இல் 17 கோடி செலவில் நிறைவுற்றது. இந்த நிறுத்தும் வசதியைத் திசம்பர் 26, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். + +சென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும். பேருந்து வளாகத்தின காலிமனையில் உள் வட்டச் சாலையை ஒட்டி இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளது. 3000 ச.மீ பரப்புள்ள ஒவ்வொரு தளத்திலும் 1500 ஈராழி வண்டிகள் நிறுத்தப்படக் கூடும். முதல் தளம் ஆழத்திலும் இரண்டாம் தளம் ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அணுக இரு சாய்தளங்களும் மூன்று மாடிப்படிகளும் உள்ளன. தீயணைப்புச் சாதனங்களும் கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறுத்தற்கூடத்தின் மேற்கூரையில் தெளிப்புப் பாசனத்துடன் கூடிய பூங்கா, நீரூற்று மற்றும் நடப்பவர்களுக்கான சுற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. + +சென்னையில் விளம்பரம் வெளியிட பெரும் வசதியளிக்கும் வளாகங்களில் இந்தப் பேருந்து முனையமும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதி��ன்றத்தால் வெளியிடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை வானூர்தி நிலையம், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் மற்றும் இங்கு மட்டுமே உள்வாயில்-வெளிவாயில்களில் சட்டப்படி விளம்பரப் பதாகைகள் அமைக்க இயலும் என்ற நிலையில் இந்த வளாகத்தில் பரப்பிற்கு காட்சிபடுத்தக்கூடிய வெளி அமைந்துள்ளது. + +சூன் 2009இல், சென்னை மாநகரக் காவல் இங்கு "சிறார்-கவனிப்பு மையம்" ஒன்றை அமைத்து காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் வழிதவறிய சிறுவர்களுக்கும் உதவி வருகின்றனர். மேலும் சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கும் ஆவன செய்து வருகின்றனர். + +இந்த முனையத்தில் 64 மூடியச் சுற்று ஒளிப்படக் கருவிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. + +சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம் ("Chennai Contract Carriage Bus Terminus", CCCBT), பரவலாக ஓம்னி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து ஒப்பந்த அடிப்படையில் (எதிர் பட்டியலிடப்பட்ட வழிதடங்களில்) வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80 பேருந்துகள் நிறுத்தவும் 100 பயணமில்லாப் பேருந்துகள் நிறுத்தவும் 50 பயணச் சேவை முகமையகங்கள் இயங்கவும் ஒரு நேரத்தில் 120 பயணியர் தங்கக்கூடிய 14 பயணியர் காத்திருப்புக் கூடங்களும் அமைந்துள்ளன. இதனையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்பார்த்து வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. +தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது. +சென்னை மெட்ரோ இப்பேருந்து வளாகத்தினுள் உயரத்தில் அமைந்ததாகத் தனது தொடர்வண்டி நிலயத்தை அமைத்து வருகிறது. + +மூன்று வழிகளுடன் ஒரு கிமீ தொலைவும் 11 மீ அகலமும் கொண்ட மேம்பாலம் காளியம்மன் கோவில் சாலை - சவகர்லால் நேரு சாலை சந்திப்பில் கட்டமைக்கப்படுகிறது. 50 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் விருகம்பாக்கத்திற்கும் கோயம்பேட்டிற்கும் இடையேயான போக்குவரத்து பயனடையும். தற்போது இந்த சந்திப்பை ஒரு மணி நேரத்திற்கு 18,000 தானுந்துகள் கடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. + +நகரத்தினுள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க துணை புறநகர் பேருந்து நிலையங்கள் 80 கோடி செலவு மதிப்பீட்டில் வேளச்சேரியிலும் மாதவரத்திலும் கட்டப்படத் திட்டமிடப்படுள்ளன. கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் இராசீவ் காந்தி சாலையில் செல்லும் 300 பேருந்துகள் வேளச்சேரி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். வடக்கு பெரும் முதன்மைச் சாலையில் (ஜி. என். டி ரோடு) செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். இந்த இரு துணை பேருந்து நிலையங்களும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ஒத்த வசதிகளுடன் அமைக்கப்படும். எட்டு ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் மாதவரம் நிலையம் 200 பேருந்துகளை இயக்கும் திறனுடன் விளங்கும். 48 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட இருக்கும் வேளச்சேரி நிலையத்தில் 300 பேருந்துகள் இயங்கக் கூடியதாவிருக்கும். இருப்பினும், சென்னை மோனோரெயில் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு வேளச்சேரி பேருந்து நிலையப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. + +தற்போதுள்ள ஓம்னி பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள 4 ஏக்கர் காலியிடத்தில் ஒருங்கிணைந்த பலநிலை நிறுத்தற்கூடம் அமைக்கப்பட உள்ளது. தரைக்குக் கீழே இரு தளங்கும் தரைக்கு மேலும் தளங்களுடன் அமையவிருக்கும் இந்த நிறுத்தற்கூடத்தில் பணியில் இல்லாத தனியார் ஓம்னி வண்டிகளும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளும் நிறுத்தலாம். இதன் கடைசி மேல்தளத்தில் 400 நான்கு சக்கர தானுந்துகள் நிறுத்தவும் அதன் கீழுள்ள தளத்தில் 1000 ஈராழித் தன்னுந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். முதல் தளத்தில் பணியில் இல்லா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும். தற்போதுள்ள ஒப்பந்தப் பயணச்சேவைப் பேருந்து நிலையம் இந்த நிறுத்தற்கூடத்தின் தரைத்தளத்திற்கு மாற்றப்படும். + + + + + + +தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை + +தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை தமிழ்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஈட்டும் ஒரு கலைத் தொழில்துறை ஆகும். பொருளியல் நோக்கில் மிகச்சிறிய பங்கை வகித்தாலும், கலை, சமூக, அரசியல் நோக்கில் திரைப்படத் துற��� செல்வாக்கு மிகுந்த துறை ஆகும். இங்கு தமிழ் மொழியிலேயே பெரும்பாலான திரைப்படங்கள் ஆக்கப்படுகின்றன. இவற்றை ஆக்கும் கலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் தமிழகத்தில் புகழும், செல்வாக்கும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். + + + + + +1737 + +1737 (MDCCXXXVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை + +மீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் ஆகும். தமிழ்நாடு மீன்பிடி துறை, 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. + +தமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீள கடல்கரையை கொன்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டன்கள். + +தமிழ்நாட்டின் கடலோர நீளம்: + + +தமிழ்நாட்டுப் பொருளாதாரம் +தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை +தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை +தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை +தமிழ்நாட்டு ஓவியக் கலை +தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும் +தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை + + + + + +பர்த்தலோமேயு சீகன்பால்க் + +சீகன் பால்க் ("Bartholomäus Ziegenbalg", சூன் 20, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. + +பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 ஆம் ஆண்டு, சூன் 20 ஆம் நாள் செருமனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் (Pulsnitz) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு - கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையார் பர்த்தலோமேயு, நவதானியங்களை விற்பனை செய்து ��ந்த ஓர் வணிகர், செல்வந்தர். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே, இறைப்பற்று மிக்க அவரின் தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும், அதன்பின்பு ஒரு வருடம் கழித்து ஒரு சகோதரியையும் இழந்தார். + +சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் (Goerlitz) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது. + +17ஆவது வயதில் சீகன் உள்ளத்தில் ஜேக்கப் பாக்மி (Jakob Bohme) யின் புரிந்து கொள்ள முடியாத பரவச மனநிலையில் ஆன்மிக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் (mysticism) கொள்கைகள் விதைக்கப்பட்டன. குழப்பத்திலிருந்த அவர், வேதத்தை நன்கு கற்றிருந்தபடியால் பல மாதப் போராட்டத்திற்குப் பின்பு அதிலிருந்து விடுதலை பெற்றார். + +1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார். “நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார். + +டென்மார்க் மன்னர் 4ஆம் பிரடெரிக், டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் காலனிக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். டென்மார்க் லுத்தரன் திருச்சபை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே மிஷனெரியைத் தெரிவு செய்யும் பணி ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய சரீர பலவீனத்தினால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ர��ச் புளுட்ச்சோ (Henrich Pluetchau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர். + +1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் இருவரும் மன்னர் சார்பில், அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தனது கடற்பயணத்தை, “மரணக் கல்விச் சாலை” (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது ‘‘The General School of True Wisdom’’ என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது. + +இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில், 1706 ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர். மன்னர் அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் மன்னரின் உளவாளிகளாய் இருப்பார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை. அவர்களின் வருகை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கும், டேனிய போதகர்களுக்கும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் கப்பலிலிருந்து கரை வந்து சேர மூன்று நாட்கள் படகுகள் கொடுக்கப்படவில்லை. கவர்னர் ஹாசியஸ் (Hassius) யைச் சந்திக்க காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை காத்துக் கிடந்தனர். பல மணி நேரம் சந்தை வெளியில் தனித்து விடப்பட்டனர். முடிவில் போர்ச்சுக்கீசியருடைய அடிமைகள் தங்கும் இடத்தில் தங்கினர். ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர். +சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் ���ற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார். + +சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் (புதிய எருசலேம் ஆலயம்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது. + +சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார். + +சீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சீகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு திரும்பும் போது தன் அடிமையை ஒரு பெண்ணிடம் விற்று விட்டுச் சென்றார். சீகனும், புளுட்ச்சோவும் இதை எதிர்த்தனர். ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவ, ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார். + +புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது. அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை. ஆகவே வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமானதாக இல்லை. கத்தோலிக்க சபையார் ஏற்கனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழி பெயர்த்திருந்தனர். அவர்கள் பயன்படுத்திய முக்கியமான வார்த்தைகளையே சீகனும் உபயோகித்தார். உதாரணமாக கடவுள் என்னும் பதத்தை மொழிபெயர்க்க அவர்கள் உபயோகித்த ‘சர்வேசுரன்’ என்னும் வார்த்தையையே சீகனும் உபயோகித்தார். ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். (சீகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் (Rev. Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்). இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. + +இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (S P C K - Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. ��ேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715, ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். வீரமாமுனிவர் என்று போற்றப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே! முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்தான். + +1715ஆம் ஆண்டு, சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிக்குப் பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். அவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் 1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். +மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில நூல்களையும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் (Complete description of Malabar Heathendom), தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் (Geneology of Malabar Gods) எழுதினார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதினார். தமிழ் - ஜெர்மன் அகராதியையும் சீகன் ��ழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா - விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது. இவர் தமிழ்நூல்களின் நூற்பட்டியல் (Verzeichnis der Malabarischen Bücher) ஒன்றையும் தொகுத்துள்ளார். + +ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும், தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று. இதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது: + +முதல் இந்திய புராட்டஸ்டண்ட் மிஷனெரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 1719ஆம் ஆண்டு, பெப்ரவரி 23 ஆம் தேதி தரங்கம்பாடியில் காலமானார். அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது. + +பேராசிரியர் சிட்னி சுதந்திரன் எழுதிய “பர்த்தலோமேயு சீகன்பால்க்” கட்டுரை + + + + +1780 + +1780 (MDCCXXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + +தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் + +தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூரப்பட்டுவருகிறது. + +1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். தொடக்கத்தில் பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும், 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர். + +தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத சக்தியாக பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். 1987 ஒக்டோபர் 10, இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலின் கொல்லப்பட்டவரே 2ம் லெப்.மாலதி ஆவார். இதுவரையில் 3000 பெண்போராளிகள் கடலிலும், தரையிலும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + +மேற்கிந்தியத் தீவுகள் + +மேற்கிந்தியத் தீவுகள் ("West Indies") என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல், கரிபியன் கடல் பகுதியிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலீசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளையும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது. அமெரிக்காக்களுக்கான கொலம்பசின் முதல் கடற்பயணங்களை அடுத்து ஐரோப்பியர்கள் "மேற்கிந்தியத் தீவுகள்" என்ற இந்தப் பொருந்தாப் பெயரை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து (தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர். + +வடக்கில் பெரிய அண்டிலிசு, தெற்கிலும் கிழக்கிலும் சிறிய அண்டிலிசு உள்ளடக்கிய கரிபியன் தீவுகள், பெரிய மேற்கிந்தியத் தீவுகள் தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் கரிபியக் கடலுக்கும் வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் (பகாமாசு மற்றும் துர்கசு கைகோசு தீவுகள்) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள பெலீசு, வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. . + +தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை: + + + + +வரிசைமாற்றுக் குலம் + +கணிதத்தில் ஒரு முடிவுறு கணத்தின் உறுப்புகளை வரிசைமாற்றும் எல்லா வரிசைமாற்றங்களுக்குள்ளும் ஒரு இயல்பான செயல்பாடு உண்டு. அதாவது + +இவ்வியல்பான செயல்பாட்டிற்கு ஒரு கணத்தின் மேல் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் வரிசைமாற்றங்கள் ஒரு குலம் ஆகுமானால் அக்குலத்திற்கு வரிசைமாற்றுக் குலம் (Permutation Group) என்று பெயர். இச்செயல்பாட்டை 'வரிசைமாற்றுப் பெருக்கல்' அல்லது 'பெருக்கல்' என்றே சொல்வதும் பொருந்தும். + +(இக்கட்டுரையில் எல்லாப்பெருக்கல்களும் வலதிலிருந்து இடமாகப்போகின்றன. இதை மாற்றி வைத்துக்கொள்பவர்களும் உண்டு). + +கணிதத்தில் குலக் கோட்பாட்டில் பற்பல குலங்கள் கையாளப்படுகின்றன. பொதுவாக அவை முடிவுறு குலங்கள் என்றும் முடிவுறா குலங்கள் என்றும் இருவகைப்படும். குலத்தின் அடிப்படை கணம் முடிவுறு கணமாக இருந்தால் அக்குலம் முடிவுறு குலம் எனப்படும். முடிவுறு குலங்கள் எல்லாம் ஏதோ ஒரு கணத்தின் ஒரு வரிசைமாற்றுக் குலத்திற்கு சம அமைவியமாக இருக்கும் என்பது குலக்கோட்பாட்டில் ஒரு அடிப்படை உண்மை. இதனால் வரிசைமாற்றுக் குலத்தைப்பற்றிய ஆய்வுகளும் தேற்றங்களும் குலக்கோட்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரிசைமாற்றுக்குலத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் கால்வா. சமன்பாடுகளுக்குத் இயற்கணிதத்தீர்வு உண்டா இல்லையா என்ற பிரச்சினை அச்சமன்பாட்டின் மூலங்களின் வரிசைமாற்றக்குலத்தின் சில பண்புகளோடு சம்பந்தப்பட்டது என்ற அடிப்படை உண்மையைக் கண்டுபிடித்தவர் அவர். + +formula_8 என்ற கணத்தின் எல்லா வரிசைமாற்றங்களும் ஒரு குலம் ஆகும். இது formula_9 எழுத்துக்களின் சமச்சீர் குலம் (Symmetric Group on n letters) எனப்பெயர் பெறும். இதற்குக் குறியீடு formula_10. இதனில் + +formula_13 + +இந்த குலத்தின் கிரமம் = formula_14 + +ஒரு வரிசைமாற்றக்குலத்தின் உறுப்புகளை சுழல்களாகவும் எழுதலாம்.கீழுள்ள எடுத்துக்காட்டுகளில் எல்லா வரிசைமாற்றங்களும் சுழல்களாக எழுதப்பட்டிருக்கின்றன. + + +இம்முறையில் எல்லா பெருக்கல்களையும் கணித்து கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. + + + + +பேருந்து + +பேருந்து அல்லது மக்கள் இயங்கி ("Bus") என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும். + +பேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும். + +பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை. + + + + + + +குலம் + +குலம் என்ற சொல் பின்வரும் எதையும் குறிக்கலாம்: + + + + + +கொங்கோ + +கொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்க்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன. + + + + + +இலந்தனம் + +இலந்தனம் "(Lanthanum)" என்பது La என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும் ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இலந்தனத்தின் அணு எண் 57 ஆகும். இதன் அணுக்கருவில் 82 நியூட்ரான்கள் உள்ளன. இலந்தனம் பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் ஒரு திண்மப் பொருள் ஆகும். காற்றில் பட நேர்ந்தால் இது மங்கலாக மாறுகிறது. இலந்தனத்தை கம்பியாக நீட்டலாம். கத்தியால் வெட்டலாம். இலந்தனத்துடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதால் சீரியம் தொடங்கி லித்துவேத்தியம் வரையுள்ள பதினான்கு தனிமங்களும் இலாந்தனைடுகள் எனப்படுகின்றன. இப்பதினான்கு தனிமங்களும் ஒத்த வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளன. இலாந்தனைடுகளுடன் இலந்தனம் சேர்க்கப்படுவது குறித்து ஐயப்பாடுகள் நிலவுகின்றன. இலாந்தனைடு தொடர்வரிசை சேர்மங்களுக்கு இலந்தனம் முதலாவது தனிமமாகவும் முன்னோடித் தனிமமாகவும் அமைந்து ஒப்புமைக்காக ஓர் ஆகுபெயர் ஆகிறது. சில சமயங்களில் இலந்தனம் ஆறாவது தொடரின் முதல் தனிமமாகக் கருதப்பட்டு இடைநிலை உலோகங்களுடன் சேர்க்கப்படுவதுண்டு. பாரம்பரியமாக இலந்தனத்தை அருமண் உலோகங்கள் என வகைப்படுத்துகின்றனர். வழக்கமாக இது சேர்மங்களில் +3. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. மனிதர்களின் உடலில் இலந்தனத்தின் உயிரியற் செயற்பாடுகள் ஏதுமில்லை என்றாலும் சில வகை பாக்டீரியாக்களுக்கு இது அத்தியாவசிய வேதிப்பொருளாகிறது. இலந்தனம் நச்சுத்தன்மை எதையும் வெளிப்படுத்துவதில்லை என்றாலும் கூட சில நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது. + +இலந்தனம் வழக்கமாக சீரியம் மற்றும் பிற அருமண் தனிமங்களுடன் இணைந்து தோன்றுகின்றது. சுவீடிய வேதியியலாளர் கார்ல் குசுதாவ் மொசாண்டர் 1839 ஆம் ஆண்டு முதன்முதலில் இலந்தனத்தைக் கண்டறிந்தார். சிரியம் நைட்ரெட்டில் ஒரு மாசுப்பொருளாக இது கலந்திருந்தது. இதனால் இதற்கு இலந்தனம் என்ற பெயர் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. பண்டைய கிரேக்க மொழியில் லாந்தனின் என்றால் மறைந்திருக்கும் பொருள் என்பது பொருளாகும். புவி மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் இலந்தனம் 28 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. கிடைக்கும் இலந்தனத்தின் அளவு கிட்டத்தட்ட ஈயத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மோனசைட்டு, பாசுட்னசைட்டு போன்ற கனிமங்களில் நான்கில் ஒரு பாகம் இலந்தனம் கலந்துள்ளது . இவ்விரு கனிமங்களில் இருந்து சிக்கலான செயல்முறையின் மூலம் இலந்தனம் பிரித்தெடுக்கப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு வரை தூய இலந்தனம் தனிமைப்படுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்படவில்லை. + +இலந்தனம் சேர்மங்கள் பல பயன்பாடுகளைக் கொண்டவையாக உள்ளன. வினையூக்கியாக, கார்பன் மின்பொறி விளக்குகளாக, கண்ணாடிகளில் சேர்க்கும் உபபொருளாக, பற்றவைப்பான்கள் மற்றும் தீப்பந்தங்களில் தீப்பற்றும் பொருளாக, எலக்ட்ரன் நேர்மின்வாயாக, மினுமினுப்பாக்கியாக என்று பலவாறாக இவை பயன்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு சிகிச்சையில் இலந்தனம் கார்பனேட்டு பாசுப்பேட்டு பிணைப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. +லாந்தனைடுகள் தொடர் வரிசைச் சேர்மங்களுக்கு இலந்தனம் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் முதலாவது தனிமமாகவும் விளங்குகிறது. தனிம வரிசை அட்டவணையில் காரமண் உலோகமான பேரியத்திற்கு வலது புறத்திலும். லாந்தனைடான சீரியத்திற்கு வலதுபுறத்திலும் இலந்தனம் தோன்றுகிறது. இசுக்காண்டியம், ��ட்ரியம், போன்ற இலேசான இணைத் தனிமங்களுடனும், ஆக்டினியம் என்ற இணை கன உலோகத்துடனும் சேர்த்து 3 ஆவது குழு தனிமமாக இலந்தனம் பார்க்கப்படுகிறது . இருப்பினும் இந்த வகைப்பாடும் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இசுக்காண்டியம், இட்ரியம், ஆக்டினியம் தனிமங்கள் போலவே இலந்தனத்திலும் 57 எலக்ட்ரான்கள் [Xe]5d16s2 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைவில் வெளிக்கூட்டில் மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. வேதிவினைகளில் இலந்தனம் 5d மற்றும் 6s துணைக்கூடுகளில் இருக்கும் இம்மூன்று எலக்ட்ரான்களையும் கொடுத்து +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையாக உருவாகிறது. மந்தவாயு செனானின் நிலையான எலட்ரான் ஒழுங்கை அடைகிறது. சில இலந்தனம்(II) சேர்மங்கள் அறியப்படுகின்றன. ஆனால் அவை சிறிதளவே நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளன. + +லாந்தனைடுகளில் இலந்தனத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைவு ஒரு விதிவிலக்காக உள்ளது. ஏனெனில் இதில் 4f எலக்ட்ரான்கள் கிடையாது. லாந்தனைடு வேதியியலில் இந்த 4f எலக்ட்ரான்களின் ஆற்றல் முக்கியத்துவம் பெற்றதாகும். எனவே லாந்தனைடுகள் சீரியத்தில் இருந்து தொடங்குகின்றன. + +தனிமவரிசை அட்டவணையின் போக்குக்ளின்படி லாந்தனைடுகள் மற்றும் 3 ஆவது குழு தனிமங்களில் இலந்தனத்தின் அணு ஆரமே அதிகமாகும். எனவே அவைகளில் இதுவே அதிக வினைத்திறன் மிக்கதாகும். காற்றில் மிக மெதுவாக நிறம் மங்கி காற்றில் எரிந்து இலந்தனம்(III) ஆக்சைடை இது உருவாக்குகிறது. இச்சேர்மம் கால்சியம் ஆக்சைடு போன்ற ஒரு காரமாகும். ஒரு சென்டிமீட்டர் நீலம் கொண்ட இலந்தனம் துண்டு இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல ஓராண்டில் அழிந்துவிடும். அறை வெப்பநிலையில் ஆலசன்களுடன் வினைபுரிந்து டிரை ஆலைடுகளை இலந்தனம் கொடுக்கிறது. நைட்ரசன், கார்பன், கந்தகம், பாசுபரசு, போரான், செலீனியம், சிலிக்கன் மற்றும் ஆர்சனிக் போன்ற அலோகத் தனிமங்களுடன் இலந்தனத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் இருபடி சேர்மங்கள் உருவாகின்றன .தண்ணீருடன் மெதுவாக வினைபுரிந்து இலந்தனம் ஐதராக்சைடை La(OH)3 உருவாக்குகிறது. + + + + +எக்குவடோரியல் கினி + +எக்குவடோரிய கினி ("Equatorial Guinea"), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி என���்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ தோமே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது). + +"ஸ்பானிய கினி" என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள். + + + + + +1492 + +1492 (MCDXCII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + +1798 + +1798 (MDCCXCVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +வஸ்ஹோத் திட்டம் + +வஸ்ஹோத் திட்டம் ("Voskhod programme", ரஷ்ய மொழி: Восход) என்பது சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் வஸ்தோக் திட்டத்தின் தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள். + + +ரத்துச் செய்யப்பட்ட பயணங்கள்: + + + + + +எத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல் + +எத்னோலக் 2006 இல் வெளியிட்ட பட்டியலின்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் விவரம் வருமாறு + + + + + +சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் + +சென்னை மத்திய தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமைய��ன கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. + +சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் "ஹென்ரி இர்வின்" என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. + +இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன. + +சென்னை மத்திய தொடருந்து நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன. + + +இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம் + + + + +உண்ணுதல் + +உணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கும் பிறிதொரு உயிரினத்தை உண்டே உயிர் வாழ்கின்றது. மனிதர்கள் உணவை வாய்க்குள் வைத்து பற்களால் மென்று விழுங்குவர். இந்தத் தொடர் செயற்பாடுளே உண்ணுதல் ஆகும். + + + + +குளித்தல் + +குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தை, நலனைப் பேணுவதற்கு குளித்தல் அவசியம். பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர், + + + + +பல் துலக்குதல் + +ப��்களை பற்தூரிகை, மரக் குச்சிகள் (ஆலும் வேலும்), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது பல் விளக்கல் அல்லது பல் துலக்கல் ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம் (நித்திரை) கொள்ளும் முன்னும் பற்களை விளக்கல்/துலக்கல் நன்று. இரவு துயிலச் செல்வதர்க்கு முன் பல் துலக்குவது காலையில் துலக்குவதைக்காட்டிலும் சாலச் சிறந்தது. ஏனெனில், இரவு முழுவதும் வாய் சுத்தமாக இருப்பதால் தூங்கும் நேரம் கிரிமிகள் வளர்வது தடைபடுகிறது. ஆகையால் பற்களை விளக்கல் பற்சொத்தை மற்றும் பிற நோய்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்க உதவுகின்றது. + + + + +கழுவுதல் + +நீரினால் கை, முகம் போன்ற உடல் பகுதிகளை கழுவுதல் மனிதர் அன்றாட செய்யும் செயற்பாடுகளில் ஒன்று. + +காலை எழுந்தவுடன் முகம் கழுவுதலை பலர் பழக்கத்தில் கொண்டுள்ளார்கள். + +கழிவு அகற்றிய பின்பு கைகளை அலசிக் கழுவுதல் முக்கியமாகும். இது நோய்கள் பரவுதலை தடுக்கின்றது. உணவு உண்ணும் முன்பும் கைகளை கழுவுதல் அவசியம். + +கோயிலுக்குள் புகும் முன்பு கால்களை கழுவுதல் இந்து மதக் கோயில்களில் பரிந்துரைக்கப்படுகின்றது. உறங்கச் செல்வதற்கு முன் கால்களைக் கழுவுதலை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். + + + + +மலம் கழித்தல் + +சமிபாட்டுப் பாதையிலிருந்து மலத்தைக் குதத்தினூடாக வெளியேற்றல் மலம் கழித்தல் ("defecation") ஆகும். பொதுவாக இது அன்றாடம் மனிதர் செய்யும் செயற்பாடுகளில் ஒன்று. உடல் நலத்தைப் பேணுவதில் அன்றாடம் மலத்தைக் கழித்தல் என்பது அவசியமானதாகும். + +உயிரினங்கள் திட, திரவ, அரைத் திண்மநிலையில் உணவுப்பாதையிலிருந்து குதம் வழியாகக் கழிவுகளை வெளியேற்றும் உணவு செரிமானத்தின் கடைசி நிகழ்வே மலம் கழிப்பதாகும். மனிதர்கள் தினமும் சில முறைகளோ அல்லது வாரத்தில் சில முறைகளோ மலம் கழிக்கிறார்கள். பின்னியக்க தசைக் சுருக்கம் (peristalsis) எனப்படும் பெருங்குடல் சுவர்களின் தொடர் தசைக் சுருக்க அசைவுகளின் மூலம் உணவுப்பாதையிலிருந்து மலம் பின் பெருங்குடலுக்குத் (மலக்குடல்) தள்ளப்படுகிறது. செரிமானமாகாத உணவும் இவ்வ��ியாக வெளித்தள்ளப்படலாம். இது, செரிமானப் பண்பற்ற உணவு வெளியேற்றம் (egestion) எனப்படுகிறது. + +மலக்குடல் விரிமுனை (rectum ampulla) செரிமானம் நடைபெற்றபின் இருக்கும் தேவையற்றப் பொருள்களின் தற்காலிகமான சேமிப்பிடமாகச் செயற்படுகிறது. வெளித்தள்ளப்படும் முன், மலம் நிரம்புவதால் மலக்குடல் சுவர் விரிவடைகிறது. இதனால், மலக்குடல் சுவர்களில் உள்ள நரம்புத் தொகுதியின் நீட்சி ஏற்பிகள் (stretch receptors) மூலம் சமிக்ஞைகள் பரிமாறப்பட்டு மலம் கழிக்க வேண்டிய உணர்வினைத் தூண்டுகின்றன. உட்புற மலத்துளை சுரிதசை (internal anal sphincter) தளர்வது, வெளிப்புற மலத்துளை சுரிதசை விரிவடைவது ஆகிய அனிச்சையாக நடைபெறும் மலக்குடல் தசைச் சுருக்கங்கள் மூலம், மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுகிறது. இவ்வித உணர்வு ஏற்பட்ட உடன் மலம் கழிக்காவிட்டால், மலக்குடலிலுள்ளப் பொருட்கள் மீண்டும் பெருங்குடலுக்குச் சென்று அதிகளவு நீர் உறிஞ்சப்பட்டு மீண்டும் மலத்தை வெளித்தள்ளும் சுருக்கங்கள் (அசைவுகள்) ஏற்படும்வரை மலம் சேமிக்கப்படுகிறது. மலம் கழிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டால் மலம் கடினப்பட்டு மலச்சிக்கல் உண்டாகலாம். அதேப்போல அதிகப்படியான நீர் உறிஞ்சப்படும் முன்பே மலம் கழிப்பது மிக வேகமாக நிகழ்ந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். + + + + +பயணித்தல் + +ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு நகர்வது அல்லது இடம்மாறுவது பயணித்தல் ஆகும். மனிதர் அன்றாடம் செய்யும் செயற்பாடுகளில் பயணித்தலும் ஒன்று. பெருந்தூரங்களுக்கு கால் நடையாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பயணிக்கலாம். வீட்டிலிருந்து வேலைக்கு, கல்லூரிக்கு, கடைக்கு, கோயிலுக்கு, பிறர் வீடுகளுக்கு, மற்றும் பிற பல இடங்களுக்கும் அங்கிருந்து வீட்டுக்கும் மனிதர் பயணிப்பர். ஒரு நாளில் குறிப்பிடத்தக்க நேரம் பயணித்தலிலேயே செலவாகின்றது. + + + + +கெய்லி குல அட்டவணை + +கெய்லி(1821-1895) என்ற கணித இயலர்தான் 1854 இல் முதன் முதலில் குலம் என்ற கருத்தை அதன் உறுப்புகளின் பெருக்கல் அட்டவணையின் மூலம் காண்பித்தார். அதிலிருந்து இன்றும், சிறிய முடிவுறு குலங்களை ஒரு நொடியில் ஆராய அவைகளின் பெருக்கல் அட்டவணையைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதனால் ஒரு குலத்தின் பெருக���கல் அட்டவணைக்கு கெய்லி குல அட்டவணை (Cayley Group Table) என்றே பெயர். + +எந்த உறுப்புகளுக்கு எவை எதிர்மாறுகள், குலத்தின் மையம் என்ன, குலத்தின் கிரமம், அது பரிமாற்றுக் குலமா, பரிமாறாக்குலமா, -- போன்ற குலத்தின் பண்புகள் கெய்லி அட்டவணையைப் பார்த்தவுடனே தெரிந்துவிடும். + +குலத்தை formula_1 எனக்கொள்வோம். அட்டவணை formula_2 ஐ க்காட்டுகிறது. ஒவ்வொரு நிரையிலும் முதல் காரணி formula_3 எல்லா உறுப்புக்களுக்கும் பொதுவாக இருக்கும். ஒவ்வொரு நிரலிலும் இரண்டாவது காரணி formula_4 எல்லா உறுப்புக்களுக்கும் பொதுவாக இருக்கும். + +முதலில் அட்டவணையில் தலைப்பு நிரலிலும் தலைப்பு நிரையிலும் உறுப்புகள் ஒரே வரிசையில் எழுதப்பட்டிருப்பது அவசியம். அப்படியிருந்தபின், formula_5ஆவது நிரையும் formula_5ஆவது நிரலும் உறுப்புகளிலும் வரிசையிலும் ஒன்றாக இருந்தால், அந்நிரையின் தலைப்பிலுள்ள உறுப்பு, குலத்தின் மையத்திலிருக்கும் என்று பொருள் கொள்ளலாம். ஏனென்றால், அவ்வுறுப்பை formula_7 எனக்கொண்டால், அந்நிரை + +என்ற வரிசையில் formula_9 இலுள்ள எல்லா உறுப்புகளுடன் பெருக்கலைக் காட்டும். அதேபோல்,formula_10-ஆவது நிரல் + +என்ற வரிசையில் formula_1 இலுள்ள எல்லா உறுப்புகளுடன் பெருக்கலைக் காட்டும். + +இவையிரண்டும் சமமானால், formula_7 என்ற உறுப்பு எல்லா உறுப்புகளுடன் பரிமாறுகிறது என்று பொருள். formula_14இன் மையம். + +எப்பொழுதும், எல்லா குலங்களிலும், formula_15-இன் மையம். + +சமச்சீர் குலம் formula_16 இன் பெருக்கல் அட்டவணை (கீழே உள்ளது) அது ஒரு பரிமாற்றாக்குலம் என்பதைக் காட்டும். இதுதான் மிகச்சிறிய பரிமாற்றாக்குலம்.இதன் கிரமம் 6. இது 3 கூறியீடுகளின் வரிசைமாற்றுக்குலம். + +formula_17 + +இதனுடைய மையம் = formula_18. ஏனென்றால் மற்ற ஒரு நிரையும் அதற்கொத்த நிரலும் சமமாக இல்லை. + +ஒரு ஒழுங்கு முக்கோணத்தின் சமச்சீர்களினால் ஏற்படும் இருமுகக்குலம் 6 உறுப்புகளுடையது: + +இவைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் குலத்தின் அட்டவணை: + +கெய்லி அட்டவணையின் ஒத்தாசையால் நாம் formula_16 யும் formula_24 யும் சம அமைவியங்கள் என்பதைத்தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் + +என்ற இருவழிக்கோப்பை செயல்படுத்தினால், இரண்டு அட்டவணைகளும் ஒன்றாவதைப்பார்க்கலாம். + + + + + +ஒற்றை, இரட்டை வரிசைமாற்றங்கள் + +கணிதத்தில், வரிசைமாற்றங்கள் ஒற்றைப்படை வரிசைமாற்ற��்கள், (Odd permutations) இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் (Even permutations) என இருவகைப்படும்.ஒவ்வொரு வரிசைமாற்றமும் அது எத்தனை இடமாற்றங்களின் சேர்வையாக இருக்கிறது என்பதைப் பொருத்து அது ஒற்றைப்படையாகவோ இரட்டைப்படையாகவோ வகைப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக + +formula_1 மூன்று இடமாற்றங்களின் சேர்வை + +இதனால் இது ஒரு ஒற்றைப்படை வரிசைமாற்றம். + +மாறாக, + +formula_2 இரண்டு இடமாற்றங்களின் சேர்வை + +இதனால் இது ஒரு இரட்டைப்படை வரிசைமாற்றம். + +ஒரு வரிசைமாற்றம் formula_3-இன் குறி (Sign, Signature)என்பது +1 ஆகவோ -1 ஆகவோ வரையறுக்கப்படும். ஒற்றைப்படை வரிசைமாற்றமயிருந்தால் அதன் குறி -1. இரட்டைப்படையாயிருந்தால், +1. இதற்குக் குறியீடு: formula_4 அல்லது formula_5 + +தேற்றம்: சமச்சீர்குலம் formula_8 க்கும் 2-ஆவது கிரம சுழற்குலம் formula_9 க்கும் இடையில் formula_10 என்ற மேற்சொன்ன கோப்பு, ஒரு காப்பமைவியம் (homomorphism). + +இதனால் இக்காப்பமைவியத்தின் உட்கரு (kernel) formula_8 இன் உட்குலமாகும். இந்த உட்குலத்திற்கு formula_12 பொருள்களின் மாறிசைக்குலம் (Alternating Group on n objects) எனப் பெயர். இதற்குக் குறியீடு: formula_13 . இதனுடைய கிரமம்: formula_14 இவ்வுட்குலத்தில் இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் மட்டுமே உள்ளன; formula_15-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம் இதனில் அடக்கம். + +formula_16 இல் 24 உறுப்புகள் உள்ளன. formula_17 இன் 12 உறுப்புகள் (அ-து, 4-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம்) பின்வருமாறு: + + + + +எ.கா.: formula_22 + +இதனில் 2 இரட்டைப்படை நீளமுள்ள சுழல்கள் இருப்பதால், formula_24 ஓர் இரட்டைப்படை வரிசைமாற்றம். + + + + + +வோடபோன் + +வோடபோன் குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் உலகிலேயே யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் பங்குச்சந்தை மதிப்பு £84.7 பில்லியன் (ஜூலை 2007) ஆகும். + +இந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள "நியூபரி" என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது. + +வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது. + +இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்திய��வில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது. + + + + +1917 + +1917 (MCMXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +கோதிக் மொழி + +கோதிக் மொழி ஒரு அழிந்துவிட்ட ஜெர்மானிய மொழியாகும். இது பண்டைய "கோத்" இனத்தவரால் பேசப்பட்டு வந்தது. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கோர்டெக்ஸ் ஆர்ஜெண்ட்டியஸ் (Codex Argenteus) என்னும் பைபிள் மொழிபெயர்ப்பு நூலின் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்றே இம் மொழி பற்றிய தகவல்களின் முக்கிய மூலமாகும். குறிப்பிடத்தக்க அளவில் தகவல்களைக் கொண்டுள்ள ஒரே கிழக்கு ஜேர்மானிய மொழி இதுவே. இக் குழுவைச் சேர்ந்த பிற மொழிகளான பர்கண்டிய மொழி, வண்டாலிய மொழி போன்றவை வரலாற்று நூல்களிலுள்ள மிகக் குறைவான தகவல்களின் மூலம் மட்டுமே அறியப்படுகின்றன. + +ஒரு ஜெர்மானிய மொழி என்ற வகையில் இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம் மொழியிலுள்ள மிகவும் பழைய ஆவணம் கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் இம்மொழியின் அழிவு தொடங்கியது எனக் கருதப்படுகின்றது. ஃபிராங்குகளின் படையெடுப்பினால் கோத்துகளுக்கு ஏற்பட்ட படுதோல்வியும், அதனைத் தொடர்ந்து கோத்துக்கள் இத்தாலியிலிருந்து விரட்டப்பட்டதும், இவர்கள் பெருமளவில் ரோமன் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியமையும் இம் மொழியின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றது. + +இம் மொழியில் கிடைத்துள்ள மிகக் குறைந்த அளவு ஆவணங்கள் இம் மொழியை முழுமையாக மீட்டுருவாக்கப் போதியன அல்ல. + + + + + + + + +பெனின் + +பெனின் அல்லது உத்தியோகப் பட்சமாக பெனின் குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது 1975 ஆம் ஆண்டுக்கு முன்னர் டாகோமே என அழைக்கப்பட்டது. பெனினின் மேற்கில் டோகோவும் நைஜீரியா கிழக்கிலும் புர்கினா ஃபாசோ மற்றும் நைஜீரியா என்பன வடக்கிலும் அமைந்துள்ளன. தெற்கில் பெனின் குடாவில் சிறிய கடல் எல்லையையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் போர்டோ நோவோ, அரசாட்சி மையம் கொடோனௌ ஆகும். ஒடுங்கிய கரையோரப்பகுதிகளைக் கொண்ட இந்நாட்டின், வடபகுத��யில் அடர்ந்த காடுகளும் மேட்டு நிலங்களும் உயர் மலைகளும் காணப்படுகின்றன. தெற்கே சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன. "லா டெரி டி பேரே"மேட்டு நிலம், "அட்டகோரா" மலைகள் என்பன முக்கிய நிலவுருக்களாகும். நைகர் மற்றும் கியூமே என்பன இங்குள்ள முக்கிய ஆறுகளாகும். + +16 ஆம் நூற்றாண்டில் பெற்றிருந்த டஹோமி எனும் மேற்காபிரிக்க அரசின் இருப்பிடம் இதுவே. 1872 இல் பிரான்ஸ் இந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கியது.1960 ஆவணி மாதம் முதலாம் திகதி பெனின் குடியரசாக திகழ்ந்தது. இதனையடுத்து இராணுவ அரசுகளின் ஆதிக்கம் நிலவியதொடு, 1972 இல் மத்தேயு கேரேகௌ எழிச்சியுடன் அது முடிவுக்கு வந்தது. 2006 தேர்தலில் யாயி போனி அதிபராகத் தேர்ந்த்தேடுக்கப்பட்டார். + +பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வர். கோழி இறைச்சி, மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன அவற்றுள் அடங்கும். இவை தவிர: அரிசி, வற்றாளை, மரவள்ளி, உருளைக்கிழங்கு என்பவற்றையும் விரும்பி உண்பர். பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதைபந்தாட்டமும் டென்னிஸ் விளையாட்டும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பெனின் மக்கள் தொகையில் 50% மானோர் ஆபிரிக்காவின் உள்ளநாட்டு மதமாகிய "வூடு" சமயத்தவர்களே. "வூடு" என்றால் "மர்மம் நிறைந்த" என்று பொருள். தலைமுறை தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கைகளும் ஆசார, அனுஸ்டாரங்களும் ஒன்றிணைந்த ஒரு வழிபாட்டு வடிபமே வூடு. + + + + +டேனிய மொழி + +டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜ���ண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். + + + + + +கொக்கோசு (கீலிங்) தீவுகள் + +கொக்கோசு (கீலிங்) தீவுகள் ("Cocos (Keeling) Islands") அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீலிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவாக நடுப்பகுதியில் அமைந்துள்ளன. + +இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும். + +இத்தீவுகள் 1622 முதல் "கோக்கோசு தீவுகள்" எனவும், 1703 முதல் "கீலிங்கு தீவுகள்" எனவும், 1805 முதல் "கோக்கோசு கீலிங்கு தீவுகள்" எனவும், 19-ஆம் நூற்றாண்டில் "கீலிங்கு-கோக்கோசு தீவுகள்" எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு அதிகளவு தென்னை மரங்கள் உள்ளதால் கோக்கோசு எனப் பெயரிடப்பட்டது. 1609 இல் இத்தீவுகளை முதன் முதல் கண்ணுற்ற ஐரோப்பியரான வில்லியம் கீலிங் என்பவரின் பெயரால் இது கீலிங்கு என அழைக்கப்பட்டது. 1825 இல் இங்கு வந்த ஜோன் குளூனீசு-ரொஸ் என்பவர் இத்தீவுக் கூட்டத்தை "போர்னியோ பவளத் தீவுகள்" எனவும், வடக்கு கீலிங் தீவை கீலிங்கு எனவும், தெற்கு கீலிங்கை கோகோசு எனப் பெயரிட்டார். 1916 ஆம் ஆண்டு முதல் இத்தீவுகள் "கோக்கோசு (கீலிங்கு) தீவுகள்" என அழைக்கப்படுகிறது. இப்பெயர் 1955 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக்கப்பட்டது. + +கொக்கோசு கீலிங் தீவுகளில் வடக்கு கீலிங் தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த தென்னை மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். + +இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. நன்னீர்த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு. + +2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் ��ொகை 600 இற்கும் சற்று அதிகமாகும். மேற்குத் தீவில் ஐரோப்பிய இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் மலாய் இனத்தவரும் (500) வசிக்கின்றனர். மலாய் மொழி, மற்றும் ஆங்கிலம் இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் சுணி இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். + + + + + +ஆலும் வேலும் + +"ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பது ஒரு பழமொழி. ஆலமரக் குச்சியும், வேலமரக்குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது பொருள். கையில் பிடித்து பல் விளக்க (பல் துலக்க) வசதியாக ஏறத்தாழ 20 செ. மீ. நீளம் (8 அங்குலம் அல்லது 1-1.5 சாண் நீளம்) உடையதாக இக்குச்சிகளை வெட்டி, ஒரு முனையை கல்லாலோ, சுத்தியலாலோ இலேசாக தட்டி, சிறிதளவு நசுக்கி தூரிகைபோல் ஆக்கி பல் விளக்கப் பயன்படுத்த வேண்டும். பல் விளக்கும் பொழுது பல்லால் கடித்து மேலும் தேவைக்கு ஏற்றார்போல குச்சியின் நுனியை நைக்கலாம். குச்சியால் தேய்க்கும் பொழுதும் கடிக்கும்பொழுதும் வாயில் ஊறும் உமிழ்நீரை வெளியே துப்பிவிட வேண்டும். ஆலமர வேலமர குச்சிகளால் உண்மையான மருத்துவப்பயன் என்ன, அல்லது ஏதும் பயன் உள்ளதா என்பதும் இன்னும் அறியப்படவில்லை. இயற்கையில் கிடைக்கும் பொருள் என்பதும், சுற்றுச்சுழலைக் கெடுக்காத பொருள் என்பதும் உண்மை. மரக்குச்சி ஆகையால் இயல்பாய் மண்ணுடன் எளிதில் மருகி சிதைவுறும் பொருள். + + + + +சுவீடிய மொழி + +சுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், இசுக்கான்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோரிசு மொழியிலிருந்து உருவானது. + +தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன��னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது. + + + + +பீட்டர் குருன்பெர்க் + +பீட்டர் குருன்பெர்க் ("Peter Grünberg") (மே 18, 1939) ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவரும் பிரெஞ்ச் இயற்பியலாளர் ஆல்பெர்ட் ஃவெர்ட் ("Albert Fert") என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது + +குருன்பெர்க் மே 18, 1939 இல், தற்கால செக் குடியரசு நாட்டில் உள்ள பில்சென் ("Pilsen") என்னும் ஊரில் பிறந்தார். உலகப்போர் முடிந்தபிறகு, பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்செ என்னும் மாவட்டத்தில் லௌட்டர்பாஃக் என்னும் ஊருக்குச் சென்று அங்கு உயர்நிலைப்பள்ளியில் (உயர்நிலைப் பள்ளிகள் ஜெர்மனியில் கிம்னேசியம் ("Gymnasium") என்று அழைக்கப்பட்டன) + +குருன்பெர்க் 1962 இல் யோஃகான் வுல்ஃவங்கு கொயெதெ பல்கலைக்கழகத்தில் இடைநிலை பட்டம் பெற்றார். பின்னர் டார்ம்ஸ்டட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1966இல் இயற்பியலுக்கான பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969இல் முனைவர் ஆய்வுப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969-1972 வரை கனடாவில் ஆட்டவாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் மேல்முனைவர் ஆய்வுப்பயிற்சி பெற்றார். அதன் பின் ஐரோப்பாவில் உள்ள சிறந்த ஆய்வகங்களில் ஒன்றான யூலிஷ் ஆய்வு மையம் ("Jülich Research Centre") என்னும் ஆய்வகத்தி��் சேர்ந்து பல்லடுக்கு இரும்பு சேர்ந்த மென்படலத்தின் காந்தப்பண்புகள் பற்றிய ஆய்வில் முன்னிலை எய்தி பின்னர் 2004ல் ஓய்வு பெற்றார். . + +1986இல் இவர் மெல்லிய காந்தப்படலங்களில் செய்த ஆய்வின் பயனாய் ஒரு விளைவைக் கண்டு பிடித்தார். இரும்புக்காந்தப் பண்புள்ள இரண்டு படலங்களுக்கு நடுவே ஒரு மிக மெல்லிய ( ~ 1 நானோ மீட்டர்) இரும்பல்லாத காந்த படலம் (எடுத்துக்காட்டாக குரோமியம்) இருந்தால், இருபுறமும் உள்ள இரும்புக்காந்தப் படலங்கள் அணுக்கருகாந்தத்தன்மையால் தொடர்புற்று, இரும்புக் காந்தகளுக்கு இடையே மாறுதிசையில் காந்தப்பாய்வு ஏற்படும் என்று கண்டுபிடித்தார். பின்னர் 1988இல் இதனை பல்லடுக்கு மெல்லிய படலங்கள் வழி இவ் விளைவை மிகைப்படுத்தி மாபெரும் காந்தமின்தடைமம் (GMR) என்னும் விளைவைக் கண்டு பிடித்தார். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விளைவை தொடர்பேதுமின்றி ஆல்பர்ட் ஃவெர்ட் ("Albert Fert") என்னும் பிரெஞ்ச் இயற்பியலாளர் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ("Université de Paris Sud") தனியாகக் கண்டுபிடித்தார். + + + + + + +ஆல்பெர்ட் ஃவெர்ட் + +ஆல்பர்ட் ஃவெர்ட் (Albert Fert) (பி. மார்ச் 7 1938) ஒரு பிரெஞ்ச்சு இயற்பியலாளர். இவரும் ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg) என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது இவர் தற்பொழுது பிரான்சில் ஆர்சே (Orsay) என்னுமிடத்தில் உள்ள தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ப்ணியாற்றுகிறார். பிரெஞ்ச்சு நாட்டு நடுவண் அறிவியல் ஆய்வகமும் தாலெ குழு (Thales Group) என்னும் நுண்மின்கருவி தொழிலகமும் இணைந்து நடத்தும் ஓர் ஆய்வகத்தின் இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். + +ஃவெர்ட் 1962ல் பிரான்சில், பாரிசில் உள்ள ஈக்கோலே நோர்மாலெ சுப்பீரியெர் (École normale supérieure) பயின்று பட்டம் பெற்றார். பின்னர் 1963ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். அத���் பின்னர் 1970ல் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் +(Université Paris-Sud) முனைவர் ஆய்வுப்பட்டம் (பி. ஹெச். டி) பெற்றார். + +1988ல் ஃவெர்ட் முதன்முதலாக மாபெரும் காந்தமின்தடைமம் விளைவைக் கண்டுபிடித்தார். இவ்விளைவு மெல்லிய படலமாய் இரும்பும் குரோமியமும் மாறிமாறி அமைந்த பல்லடுக்குப் படலத்தில் காந்தப்புலம் செலுத்தினால் மின் தடைமம் மிகுதியும் குறைந்துவிடும் விளைவாகும். இவ்விளைவை இதே காலத்தில் ஜெர்மனியில் பீட்டர் குருன்பெர்க் தன்னாய்வுகளின் பயனாய் கண்டுபிடித்தார். + + + + + + + +வாசித்தல் + +எழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்து, சொற்களைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வதை வாசித்தல் எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறு. இன்றைய அன்றாட வாழ்க்கைக்கு வாசித்தல் அவசியமானது. + +கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால் உச்சரித்துக் சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு அல்லது படிப்பு என்பது டாக்டர் ந.சுப்புரெட்டியார் என்பவரின் கருத்தாகும். வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது கண்ணிற்கும் வாயிற்கும் ஓர் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது, வரிவடிவத்திலுள்ளச் சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் கருத்துணர்வு, எவ்விதப் பிரச்சனையுமின்றி சரளமாக அமையும் எனவும் ந.சுப்புரெட்டியார் கருதுகிறார். + +புத்தகம் வாசகனைப் பார்த்து கூறியது, +"என்னை மேலிருந்து கீழாக படி +உன்னை கீழிருந்து மேலாக உயர்த்துகிறேன்" +என்ற கவிஞர் வாலியின் வார்த்தைககளோடு தொடர்ந்து பயணிக்கலாம். + + + +ஐரோவாசியா + +யுரேசியா என்பது ஏறத்தாழ 53,990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. ஐரோவாசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. ஐரோவாசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆப்பிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். ஐரோவாசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69 விழுக்காடான 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. + +துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் என்பார், உலக வரலாற்றில் ஐரோவாசியாவின் வல்லாண்மைக்கு, அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்புக்கு ஏற்ற இப்பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார். + +வரலாற்றுக் காலகட்டங்களில் ஐரோவாசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய ஐரோவாசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன. + +ஐரோவாசியா ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது ஐரோவமெரிக்கா எனப்படுகின்றது. + + + + +உலகத் தர நிர்ணய நாள் + +உலகத் தர நிர்ணய நாள் ("World Standards Day") என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. + +ஒவ்வோர் ஆண்டும் ஐ.எஸ்.ஓ. மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பல தொழில்நுட்பக் குழுக்களும், துணைக் குழுக்களும், பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை அந்நிபுணர்கள் வகுத்தளிக்கின்றனர் அல்லது மேம்படுத்துகின்றனர். IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. + +இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன. 2007ம் ஆண்டில் கொண்டாடப்படும் 38-ஆவது உலகத் தர நிர்ணய நாளின் மையக் கருத்து, "தரங்களும் மக்களும்: சமூகத்துக்கான சேவை" (Standards and the citizen: Contributing to society") என்பதாகும். + +இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு ("Bureau of Indian Standards - BIS") ஈடுபட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ-வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பு இதுவாகும். + + + + + +54 + +கிபி 54 (LIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெண்டுலசு மற்றும் மார்செலசு நீதிபதிகளின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Lentulus and Marcellus") எனவும், "ஆண்டு 807" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 54 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது 54-ம் ஆண்டாகும். + + + + + + +அண்ணா நகர் + +அண்ணா நகர் சென்னை மாநகரின் ஒரு பகுதி. அண்ணா நகரில் வணிக/வர்த்தக நிறுவனங்களும், கடைகளும், பள்ளிக்கூடங்களும், குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இங்குள்ள அண்ணா டவர் பூங்கா பிரசித்திப் பெற்ற ஒன்று. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேலும், அண்ணா நகர் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ளது. ��ண்ணா நகரின் அஞ்சல் குறியீட்டு எண் 600040. + + + + +சூசை + +கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின் தலைவராக இருந்தவராவார். இவர் அக்டோபர் 16,1963 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார்.1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய "கங்கை அமரன்" இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொட்டு அம்மானுடன் சூசையும் இன்று புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவராக விளங்குகின்றார். இவரை சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) "பயங்கரவாதி"யாக அறிவித்து பிடியாணையொன்றை விடுத்துள்ளது. + +சூசையின் மகன் அதிவேகப் படகு ஒன்றை வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு விடுதலைப் புலி உறுப்பினருடன் மரணமடைந்தார். + + + + +பொய்யடிமையில்லாத புலவர் + +"பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" -திருத்தொண்டத் தொகை. + +மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்சங்கத்திலிருந்து திருவாலவாயரன் சேவடிக்கே பொருளமைத்து அகப்பொருட் செய்யுட்களைப் பாடிய சங்கப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் முதலிய 49 புலவர்களும் அவர்களைப் போன்று பொய்ப்பொருட்களுக்கு அடிப்படாது மெய்ப்பொருளாகிய இறைவனுக்கே அடித்தொண்டு செய்யும் இயல்புடைய புலவர்கள் பலரும் பொய்யடிமை இல்லாத புலவர்கள் எனப் போற்றப்பெறுவர். + +தம் நுண்மான் நுழைபுலத்தால் மெய்ப்பொருட்காட்சி பெற்ற திறவோர் நாக்கொண்டு மானிடம்பானது தாம்கண்ட மெய்ப்பொருட்காட்சியையே பாடுவர் பதினோராம் திருமுறையிலுள்ள அருட்பாக்கள் சிலவற்றை பாடிய கபிலர், பரணர், நக்கீரர் ஆதிய சான்றோர்கள் அத்தகையர். + + + + + +கெரார்டு எர்ட்டில் + +கெர்ரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் இசுடுட்கார்ட்,செருமனி) செருமானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற "மாக்சு பிள���ங்க் கெசெல்சாவ்ட்"டின் "விரிட்சு ஆபர் இன்சுட்டியூட்"டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார். + +கெரார்டு எர்ட்டில் செர்மனியில் உள்ள இசுடுட்கார்ட்டில் அக்டோபர் 10, 1936ல் பிறந்தார். 1955 முதல் 1957 வரை இசுடுட்கார்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1957-1958 இடைப்பட்ட பகுதியில் பாரிசுப் பல்கலைக்கழகத்திலும், அதன் பின்னர் 1958-1959 ஆண்டுகளில் "லூடுவிக் மாக்சிமிலியன் பல்கலைக்கழக"த்திலும் படித்தார். 1961ல் முதுகலைக்கு இணையான இயற்பியல் டிப்ளோமாவை இசுட்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அப்பொழுது அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்த "ஐன்ஸ் கெரிழ்சர்" (Heinz Gerischer) என்பவருடன் இவரும் புறப்பட்டு மியூனிக்கில் உள்ள மியூனிக் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு ஆய்வு செய்து 1965ல் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். + +வினையூக்கியின் வழி இரும்பின் மீது அம்மோனியாவை உற்பத்தி செய்யும் ஆபர்-பாழ்ச் செய்முறையில் நிகழும் துல்லிய மூலக்கூறு அளவிலான வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், பலேடியம் மீது வினையூக்கிவழி கார்பன் மோனாக்சைடை ஆக்ஸைடாக்கும் முறையைப் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் கெர்ரார்டு எர்ட்டில் புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைத் துல்லியமாய் இவர் கண்டறிந்தார். நுண்ணோக்கிவழி காணும் ஒளிதூண்டு எதிர்மின்னி தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள அணுக்களின் நுண்ணிய அசைவுகளை முதன்முறையாகக் கண்டறிந்தார். + +இவர் 1998ல் அங்கேரியில் பிறந்து தற்பொழுது பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேராசிரியாராக இருக்கும் "கேபார் ஏ. சோமார்சியாய்" (Gabor A. Somorjai) என்பாருடன் வேதியியல் துறையின் வுல்ஃவ் பரிசு பெற்றார். இப்பரிசை, படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றி இவர்கள்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் + +கெர்ரார்டு எர்ட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் குழு அளைத்தது. இப்பரிசு ஐக்கிய அமெரிக்கா டாலர் $1.5 மில்லியன் மதிப்புடையது + +கெர்ரார்டு எர்ட்டில் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து வெளியான நூல்: Handbook of Heterogeneous Catalysis + + + + + +பத்தராய்ப் பணிவார் + +"பத்தராய்ப் பணிபவர்க ளெல்லார்க்கும் மடியேன்" - திருத்தொண்டத்திருத்தொகை. + +ஈசனுக்கே அன்புடைய சிவனடியாரைக் கண்டால் அவருடைய சாதி முதலியன விசாரிக்காமல் அவர்களை இறைவனெனவே கொண்டாடி, தாய்ப்பசுவின் கன்று சென்றாற் போன்று பெருவிருப்புடன் அணைந்து பணிவுடையராய் இன்னுரை பகரும் இயல்புடையவர்கள். + +பேரன்பினால் சிவபெருமானை எவ்விடத்தும் யாவரும் வழிபடக் கண்டால் இனிது மகிழ்ந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப்பயன் பெறுபவர். + +அன்பினால் யாவர்க்கும் மேம்பட்டவர்களாய்ச் சிவபெருமானையும் சிவனடியார்களையும் ஆராத காதலினால் உவகையுடன் விரும்பி வழிபடுபவர்கள். + +தம் உடம்பினாற் செய்வினைகள் யாதாயினும் அவ்வினையால் உளவாகும் நற்பயன்களைச் சிவபெருமான் திருவடிக்கே உரிமை செய்து கொடுப்பவர்கள். + +சிவபுராணங்களை அறிந்தவர் சொல்ல விரும்பிக் கேட்குந் தன்மையராய் இறைவன் திருவடித் தாமரையினைச் சேர்வதற்கு உரியவர்கள். + +ஈசனையே பணிந்து உருகி இன்பமிகக் களிப்பெய்தி, வாய்தழுதழுப்பக் கண்ணீர் அருவிபோற் சொரிய மெய்ம்மயிர் சிலிப்ப அனிபினால் விதிர் விதிக்கும் குணத்தால் மிக்கவர்கள். + +நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மன்றாடும் இறைவன் திருவடிகளை மறவாத உணர்வுடையவர்கள். + +சிவபெருமானுக்கு ஆட்பட்ட தம் அடிமைத் திறத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தி அதனாற் பயன்கொள்ளாத் தூய நெஞ்சமுடையவர்கள். + +மேற்குறித்த எண் பெருங் குணங்களாலும் இவ்வுலகினை விளக்கும் பெருமை வாய்ந்த அடியார்களே பத்தராய்ப் பணிவார் ஆகிய திருக்கூட்டத்தாராவர். + +கூடும் அன்பினில் கும்பிடுதல் வீடும் வேண்டா விறலாகும். + + + + + +பரமனையே பாடுவார் + +"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை. + +தென் தமிழும் வடமொழியும் ஏனைய திசைமொழியும் ஆகியவற்றில் இறைவனையே பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இயல் இசைப் பாடல்களை ஒன்றிய மெய்யுணர்வினோடும் இசைகற்கும் வகையால் உள்ளம் உருகிப்பாடும் அடியார்கள் பரமனையே பாடுவார் ஆவார்கள். + +பெருமானுக்கு பாடல் உகந்த அருச்சனைய���தலால் பாடி மகிழுதல் பெரும் பாக்கியமாம். + + + + + +இராயவரம் + +இராயவரம்(Rayavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். + +"எந்தன் ஊரே இராயவரம் +இனிமை மிக்க சிறுநகரம் +மன்னர் ஆண்ட புதுக்கோட்டை +மாவட்டத்தை சேர்ந்ததுவே" + +- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா + +இராயவரம் (ராயவரம் என்றும் எழுதுவர்) சிற்றூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது செட்டிநாட்டில் உள்ள 96 ஊர்களில் ஓன்று. திருச்சியில் இருந்து 72கிமீ தொலைவிலும் மதுரையில் இருந்து 90 கிமீ தூரமும் உள்ளது. தேசிய நெடுச்சாலை 210(NH 210)8 கிமீ தொலைவில் இருக்கிறது. அருகாமையில் உள்ள புகைவண்டி நிலையம் திருமயத்திலும், விமான நிலையம் திருச்சியிலும் உள்ளது. தரை வழியே புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, அரிமலம் மற்றும் திருமயத்துடன் நன்கு இணைக்கபட்டு தினம் 75 பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து சொல்கின்றன. இராயவரத்தை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் முத்தரையர் மக்கள் அதிகம் வாழ்கின்றனர், + + + + +சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் + +"சித்ததைச் சிவன்பாலே வைத்தார்க்கும் மடியேன்" - திருத்தொண்டத் தொகை. + +படைத்தல் முதலிய ஐந்தொழில் செய்யும் பிரமன் முதலிய ஐம்பெருங் கடவுளர்களும் இருக்கும் ஐவகை தாமரைப் பீடங்களுடைய பதவிகளைக் கடந்து அட்டாங்க யோகத்துள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்னும் ஐந்திணையும் பயின்று சித்தத்தை நிறுத்துதலினாலே சிவத்தினிடத்தே நிலைபெற்ற சித்தத்தையுடையவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள் எனப் போற்றப்படுவர். இவர்கள் வேத காரணங்களாகிய அம்பலவர் திருவடித் தொண்டின் வழிநின்று அம்முதல்வரை அடைந்தவராவர். + +தொண்டரின் பெருஞ்சீர் சிவயோகத்திற் பொருந்தி சிவசிந்தனையினாராயிருத்தல். + + + + + +நோர்ட்டன் ஆண்டிவைரஸ் + +சைமண்டெக் காப்ரேஷனின் தயாரிப்பான நோர்ட்டன் ஆண்டிவைரஸ் அல்லது நார்ட்டன் ஆண்டிவரைஸ் என்றழைக்கப்படும் நச்சுநிரல் தடுப்பி (ஆண்டிவைரஸ்) உலகில் பெருமளவில் பாவிக்கப்படும் நசசுநிரலெதிரிகளில் மென்பொருட்களில் ஒன்றாகும். நோர்ட்டான் அன்ரிவைரஸ் தனியாகவும் நோர்ட்டன் இண்டநெட் செக்கியூரிட்டி மற்றும் நோர்ட்டன் சிஸ்டம் வேர்க்ஸ் (நார்ட்டன் சிஸ்டம் ஓர்க்ஸ்) உடன் சேர்த்தும் விநியோகிக்கப்படுகின்றது. இது தவிர பெரிய வலையமைப்புக்களை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட நோர்ட்டன் காப்ரேட் எடிசன் மென்பொருளும் அடங்கும். இந்தக் காப்பரெட் எடிசன் மென்பொருள் தனியாகவும் நிறுவிக்கொள்ளலாம். நோர்ட்டான் நச்சுநிரற் தடுப்பி மென்பொருட்களுள் இலவசமாகக் கிடைக்கும் நோர்ட்டன் செக்கியூரிட்டி ஸ்கான் தவிர எல்லாம் நிகழ்நிலையில் நச்சுநிரல்களைத் தடுக்கும் வசதி வாய்ந்ததாகும். + +1990 இல் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோர்ட்டன் அன்ரிவைரஸ் மென்பொருட்களை அதிகாரப்பூர்வமாகப் பாவித்துள்ளனர். 1994 இல் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்துடன் விநியோகிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய சென்டரல் பாயிண்ட் சாப்ட்வேரை உள்வாங்கிக் கொண்டது. + +குறிப்பு நோர்ட்டான் ஆண்டிவைரஸ் 2008 மற்றும் நோர்ட்டான் இண்டநெட் செக்கியூரிட்டி ஆகியவற்றில் வைரஸ் மேம்படுத்தல்கள் இதன் முன்னைய பதிப்புகளிலும் வேறானவை. + +சைமண்டெக்கின் நிகழ்நிலை மேம்படுத்தல் (லைவ் அப்டேட்) ஊடாக சைமண்டெக் வைரஸ் வரைவிலக்கணங்கள் மேம்படுத்தப்படும். 2 அக்டோபர் 2007 வரை 73, 701 வைரஸ்கள் அறியப்படுகின்றது. இவ்வாறாக இணையமூடாக மேம்படுத்தல்களைப் பெறுவதற்கு உரிய அங்கத்துவம் இருத்தல் வேண்டும் பொதுவாக ஒருவருடத்திற்கும் கணினித் தயாரிப்பாளர்களூடாக விநியோகிக்கப்படும் பிரதி ஆனது 90 நாட்களிற்கும் வேலைசெய்யும். ஒரு பயனரின் அங்கத்துவம் முடிவடைந்ததும் அதிகாரப்பூர்வமாக வைரஸ் மேம்படுத்தலகளை மேற்கொள்ளவியலாது எனினும் கணினியின் நாளைப் பின்போடுவதன் மூலம் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கிய மேம்படுத்தல்கள் ஊடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம். எவ்வாறெனினும் அங்கத்துவம் முடிவடந்தாலும் நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்யும் பச்களை பெற்றுக்கொள்ளலாம். + +இதன் காப்பரேட் எடிசன் ஆனது வாங்கி வழங்கி (கிளையண்ட் - சேவர்) தத்துவத்தில் இயங்குகின்றது. இதில் எல்லாக் கணினிகளிலும் நிகழ்நிலை மேம்படுத்தல்கள் நிறுவப்பட்டிராதெனினும் அதனுடன் இணைக்கப்பட்ட வழங்கி (சேவர்) ஊடாக மேம்படுதிக் கொள்���ும். இவ்வாறான சேவர் மாத்திரமே சைமண்டெக்கின் இணையத்தளத்தூடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளும். இதன் மூலமாக ஒரு வலையமைப்பில் நூற்றுக்கணக்கான கணினிகள் ஒரே மேம்படுத்தல்களை மேற்கொள்ளாமல் ஒரு மேம்படுத்தலை மேற்கொள்வதன் மூலம் இணைய இணைப்பை வினைத்திறனாகப் பயன்படுத்துவதோடு அந்த வழங்கியில் இருந்த ஒவ்வொரு கணினிக்கும் செல்லாமல் வரும் சிக்கல்களை கம்பியூட்டர் மனேஜ்மண்ட் கன்சோல் ஊடாகச் செய்யவியலும். + +நோர்ட்டன் ஆண்டிவைரஸ் கணினி வைரஸ்களை மாத்திரம் அன்றி கெட்டமென்பொருட்கல்ளான , ஒற்றுமென்பொருள் (ஸ்பைவேர்) மற்றும் விளம்பரமென்பொருள் (அட்வேர்) போன்றவற்றையும் நீக்கப் பாடுபடுகின்றது. இது இலவச மென்பொருட்களான ஒற்றுமென்பொருட்களைத் தானியங்கி முறையில் தேடி அழிக்கும் எனப் பொருள்படும் ஸ்பைபாட் சேச் ஆண்ட் டிஸ்றோய் போன்ற மென்பொருட்களுடன் போட்டியிடுகின்றது. + + + + +பாரிமுனை + +பாரிமுனை சென்னை மாந‌க‌ரின் முக்கியமான‌ வ‌ர்த்தக‌/வ‌ணிக‌ மைய‌மாகும். பாரிமுனை வடச் சென்னையில் உள்ளது. சென்னையின் வ‌ட‌க்கு க‌டற்க‌ரை சாலையும் எந்.எஸ்.ஸி.போஸ் சாலையும் ச‌ந்திக்குமிட‌த்தில் அமைந்துள்ள‌து பாரிமுனை. சென்னைத் துறைமுக‌த்தின் அருகில் அமைந்துள்ள‌ இப்ப‌குதி, ஆங்கிலேய‌ வர்த்த‌க‌ரான‌ திரு. தாம‌ஸ் பாரி என்ப‌வ‌ருக்குப்பின் இப்பெய‌ர் பெற்ற‌து. இவர், 1788 ஆம் ஆண்டு சூலை 17ல் இ.ஐ.டி.பாரி என்கின்ற‌ நிறுவ‌ன‌த்தை இவ்விட‌த்தில் துவ‌க்கினார். இன்றுமுள்ள‌ இந்நிறுவ‌ன‌த்தின் த‌லைமை அலுவலகம் பாரிமுனையில் இருக்கின்ற‌து. மேலும், பாரிமுனையில் ஏராள‌மான‌ ம‌ற்ற‌ நிறுவ‌ன‌த்தின் அலுவ‌லக‌ங்க‌ளும், க‌டைக‌ளும் உள்ள‌ன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் பாரிமுனையில் அமைந்துள்ள‌து. பாரிமுனையின் த‌பால் குறியீட்டு எண் 600001. + + + + +டோரிஸ் லெசிங் + +டோரிஸ் லெசிங் ("Doris Lessing") பிரித்தானிய புதின, நாடக எழுத்தாளர். ஈரானில் கெர்மன்ழ்சா என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 ஆம் நாள் பிறந்தார். இவ்வாங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப��பட்டங்களாகிய CH "மாண்பின் இணையர்", OBE "பிரித்தானிய பேரரசின் வரிசையர்" முதலிய பட்டங்களைப் பெற்றவர். பிறந்தபொழுது இவருடைய பெயர் "டோரிஸ் மே டெய்லர"் (Doris May Tayler) என்பதாகும். இவர் எழுதிய த கோல்டன் நோட்புக் என்னும் புதினம் புகழ்பெற்றது. + +இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013 நவம்பர் 17 அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்தார். + + + + + + +கேப் வர்டி + +கேப் வர்டி ("Cape Verde", (போர்த்துக்கீசம்: "Cabo Verde", கபு வர்டி) ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொலெமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கபு வர்டி எனப் பெயரிடப்பட்டது. + + + + +கரிபியக் கடல் + +கரிபியக் கடல் "( Caribbean Sea)" (எசுப்பானியம்: Mar Caribe;பிரஞ்சு: Mer des Caraïbes இடச்சு: Caraïbische Zee) மேற்கு அரைக்கோளத்தின் அயனமண்டலத்திலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணையும் ஒரு கடல் ஆகும். மேற்கிலும் தென்மேற்கிலும் மெக்சிகோவும் மத்திய அமெரிக்காவும், வடக்கில் கியூபாவில் தொடங்கும் பெரிய அண்டிலிசு தீவுக்கூட்டமும், கிழக்கில் சிறிய அண்டிலுசு அல்லது கரிபீசு தீவுக்கூட்டமும், தெற்கில் தென் அமெரிக்க வடக்கு கடற்கரையும் கரிபியக் கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. + +கரிபியக்கடலின் முழுப்பகுதியும், மேற்கிந்தியத் தீவுகளின் அனைத்துத் தீவுகளும், அருகே அமைந்துள்ள கடற்கரைகள் அனைத்தும் கூட்டாக கரிபியன் என அழைக்கப்படுகின்றன. 1,063,000 சதுரமைல் பரப்பளவைக் கொண்டுள்ள கரிபியக் கடல் மிகப்பெரிய கடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கடலின் மிக ஆழமான கடலடி ஆழப்பகுதி கேமான் பள்ளமாகும். 7686 மீட்டர் ஆழம் கொண்ட இப்பள்ளம் கேமான் திவுக்கும் யமைக்காவுக்கும் இடையில் அமைந்துள்ளது. + +கரீபியன் கடலோரப்பகுதிகளில் பல வளைகுடாக்களும் விரிகுடாக்களும் இடம்பெற்று���்ளன. கோணாவ் வளைகுடா, வெனிசுலா வளைகுடா, தாரைன் வளைகுடா, மசுகிட்டோ வளைகுடா, பாரியா வளைகுடா மற்றும் ஓண்டுராசு வளைகுடா போன்றவை அவற்றில் சிலவாகும். + +கரிபியக் கடலில் மெசோ அமெரிக்கன் பவளத்திட்டு என்ற உலகின் இரண்டாவது மிகப்பெரிய பவளத்திட்டு அமைந்துள்ளது. மெக்சிகோ, பெலிசு, குவாட்டிமாலா மற்றும் ஓண்டுராசு கடலோரங்களில் 1000 கிலோமீட்டர் தொலைவுக்கு இப்பவளத்திட்டு நீண்டுள்ளது . + +15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியர்களுடன் தொடர்பு தொடங்கிய நேரத்தில் அப்பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்திய அமெரிக்க குழுக்களில் ஒன்றான கரிபியர்களிடமிருந்து கரீபியன் என்ற பெயர் தோன்றியுள்ளது. 1492 ஆம் ஆண்டில் கிறிசுடோபர் கொலம்பசு அமெரிக்காவை கண்டுபிடித்த பின்னர் எசுப்பானிய சொல்லான அண்டிலிசு என்ற பெயர் இப்பகுதிக்கு வந்தது. இதிலிருந்தே அண்டிலிசு கடல் என்ற பெயர் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் கரீபியன் கடல் என்ற பெயருக்கான பொதுவான மாற்றுப் பெயராக மாறியது. வளர்ச்சிக்கான முதல் நூற்றாண்டின் போது எசுப்பானியா நிலையாக ஆதிக்கம் செலுத்தியது. + +16 ஆம் நூற்றாண்டு முதல், கரீபியன் பகுதிக்கு வருகின்ற ஐரோப்பியர்கள் இப்பகுதியை தெற்கு கடல் என்றும் (பனாமாவின் பூசந்திக்குத் தெற்கேயுள்ள பசுபிக் பெருங்கடல்) என்றும் வட கடலுக்கு எதிரானது (அதாவது அதே பூசந்திக்கு வடக்கே உள்ள கரிபியக் கடல்) என்றும் அடையாளப்படுத்தினர் . + +கிறிசுடோபர் கொலம்பசு கரீபியன் கடல் வழியாக ஆசியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிப்பதற்கான வேட்டையில் ஈடுபடும் வரை யூரேசியாவின் மக்கள் கரிபியக் கடலை அறிந்திருக்கவில்லை. அந்தச் சமயத்தில்; பொதுவாக மேற்கு அரைக்கோளத்தைப்பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை கொலம்பசு கண்டறிந்ததைத் தொடந்து அங்கு மிக விரைவாக மேற்கத்திய குடியேற்றங்கள் நடைபெற்றன. தொடக்கத்தில் எசுப்பானியர்கள் பின்னர் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர்கள் என பல்வேறு குடியேற்றங்கள் இங்கு நிகழ்ந்தன. கரீபியத் தீவுகளில் நிகழ்ந்த குடியேற்றத்தைத் தொடர்ந்து கரீபியக் கடல் பகுதி ஐரோப்பிய வணிகம் சார்ந்த கடல் வர்த்தகத்திற்கும் போக்குவரத்திற்கும் ஒரு சுறுசுறுப்பு மிக்க இடமாக மாறியத��. இந்த பரபரப்பான வர்த்தகம் இறுதியில் சாமுவேல் பெல்லமை மற்றும் பிளாக்பேர்டு போன்ற கடற் கொள்ளையர்களை ஈர்த்தது. + +ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய ஒளி கிடைக்கின்ற காரணத்தாலும் வெப்பமண்டல வெப்பநிலை காரணமாகவும் இப்பகுதியில் கிட்டத்தட்ட நிலையான வர்த்தக காற்றுகள் வீசின. பார்வையிடுவதற்கு அழகிய இடங்களும் தோன்றின. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலும், 21 ஆம் நூற்றாண்டிலும் கரிபியக் கடல் பிரபலமான சுற்றுலாத்தலமாக வளர்ந்தது. +2015 ஆம் ஆண்டு நிலவரப்படி கரிபியக் கடலில் 22 தீவு பிரதேசங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 நாடுகளுக்கு எல்லையாகவும் இக்கடல் விளங்குகிறது. + +அனைத்துலக நீர்நிலையியல் நிறுவனம் பின்வருமாறு கரீபியன் கடல் எல்லையை வரையறுக்கிறது: . + +வடக்கிலுள்ள காற்றோட்டக் கால்வாய்-எயிட்டியில் உள்ள பியர்ல் புள்ளியையும் (19°40′வ) காலிட்டா புள்ளியையும் (74°15′மே) இணைக்கும் கால்வாய். + +மோனா செல்வழியில் - புவேர்ட்டோ ரிக்கோவிலுள்ள அகுயெரியடாவின் (18°31′வ 67°08′மே) கடைகோடி மற்றும் இங்கானோ முனையை இணைக்கும் கால்வாய். + +கிழக்கு எல்லை: சான் டியாகோ (புவேர்ட்டோ ரிக்கோ) விலிருந்து நெடுவரை வழியாக வடக்கு திசையில் (65°39′மே) 100 அடி ஆழக்கால்வாய் மற்றும் இவ்விடத்திலிருந்து தெற்கும் கிழக்கும். மேலும் இதேபோல அமைந்திருக்கும் அனைத்து தீவுகள், மணல் திட்டுகள், சிறிய அண்டிலிசு பகுதியின் குறுகிய நீர்வழிகள், கலேரா புள்ளிவரை (டிரினிடாட் தீவின் வடகிழக்கில் உள்ள கடைகோடித் தீவு) விரிந்துள்ள பகுதிகள் உள்ளிட்டவையும் கரிபியக் கடலில் அடங்குகின்றன.கலேரா புள்ளியில் தொடங்கி டிரினிடாட் வழியாக கேலியோட்டா புள்ளி (தென்கிழக்கு கடைகோடி) வரை மற்றும் அங்கிருந்து வெனிசுலாவிலுள்ள பாயா புள்ளி (9 ° 32'வ 61 ° 0'மே) வரைக்கும் இக்கடல் பகுதி விரிந்துள்ளது. +பார்படோசு அதே கண்டத்தின் பரப்பில் உள்ள ஒரு தீவு என்றாலும், பார்படோசு கரீபியன் கடலுக்கு பதிலாக அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளதாகக் கருதப்படுகிறது. + +கரிபியத் தட்டின் பெரும்பகுதியாக கரிபியன் கடல் அமைந்துள்ளது. மேலும் இது பல்வேறு வயதுடைய தீவுகளின் பல தீவு வளைவுகள் மூலம் பெருங்கடலில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவின் கடற்கரையோர டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வடகிழக்கில் வ��து குறைந்த தீவுகள் சிறிய அண்டிலிசு முதல் கன்னித் தீவுகள் வரை நீண்டுள்ளன. கரீபியன் தட்டும் தென் அமெரிக்கத் தட்டும் மோதியதால் இந்த தீவுவளைவு உருவானது. அழிந்துவிட்ட குமுறும் எரிமலையான பெலே மலை, கரிபியன் நெதர்லாந்தின் அங்கமான சின்டு யுசுடாசியசில் கொயில் எரிமலை மற்றும் டொமினிக்காவில் மோர்ன் துரோயிசு பிடான்சு போன்ற செயல் திறமிக்க அழிந்த எரிமலைகள் இவ்வளைவில் உள்ளன. கியூபாவுக்கு வடக்குப் பகுதியிலுள்ள இசுபானியோலா, யமைக்கா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ பகுதியில் இருக்கும் பெரிய தீவுகள் ஒரு பழைய தீவு வளைவில் இடம்பெற்றுள்ளன. + +கரிபியக் கடலின் புவியியல் வயது 160 முதல் 180 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மெக்சிகோ சகாப்தத்தில் பான்கையா என்ற மீக்கண்டத்தில் ஏற்பட்ட ஒரு கிடைமட்ட முறிவு மூலமாக உருவாக்கப்பட்டது . இது டெவோனியக் காலத்திலிருந்த புரோட்டோ-கரிபியன் வடிநிலத்தைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. வடக்கில் கோண்ட்வானாவின் ஆரம்பகால கார்போனீஃபரசு கால நகர்வுடன் யுரோ அமெரிக்க வடிநிலத்தின் கூட்டிணைவால் இதன் அளவு குறைந்தது. 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய டிராசிக் காலத்தில் கரிபியன் கடலின் அடுத்தக்கட்ட உருவாக்கம் தொடங்கியது. சக்தி வாய்ந்த வெடிப்புகளால் நவீன நியூஃபவுண்ட்லேண்ட்லிருந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேற்கு கரையோரம் வரை நீட்சியடைந்து மணல்மிகு வண்டல் பாறைகள் உருவாகின. சக்திவாய்ந்த கடற்கோள் காரணமாக ஆரம்பகால சுராசிக் காலத்தில், தற்போதைய மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஒரு பரந்த ஆழமற்ற குளம் உருவாகியது. கரீபியனில் உள்ள ஆழமான வடிநிலங்கள் மத்திய சுராசிக் பிளவின் போது வெளிப்பட்டன. இந்த வடிநிலங்களின் வெளிப்பாடு அட்லாண்டிக் பெருங்கடலின் துவக்கத்தைக் குறிக்கின்றது மற்றும் பிற்கால சுராசிக் கால முடிவில் பான்கையா என்ற ஒரு நிலத்தை அழிப்பதற்கு பங்களித்தது. கிரீத்தேசியக் காலத்தில் கரிபியன் கடல் கிட்டத்தட்ட தற்காலத்தில் இருக்கும் வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகால தொன்னெழு காலப்பகுதியில் கடல் பின்னடைவு காரணமாக கரிபியன் பகுதி மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து கியூபா மற்றும் எயிட்டி நிலப்பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அண்மைய ஊழிக்காலத்தில் ஒலோசின் காலம் வரை இப்படியே இருந்த கரிபியன் பகுதி கடல்களின் நீர் அளவு உயர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலோடு தொடர்பு கொள்ளத்தொடங்கின. + +கரீபியன் கடலின் தரைப்பகுதியானது வடிநிலங்களிலும், பெரும் பள்ளங்களிலும் ஆழ்ந்த சிவப்புக் களிமண் படிவுகளால் உருவாகியுள்ளது. கண்டச் சரிவுகள் மற்றும் முகடுகளில் சுண்ணாம்புப் படிவுகள் காணப்பட்டன. பெருநிலப்பகுதிகளின் ஆறுகளான ஒரினாக்கோ மற்றும் மெக்தாலினா ஆறுகள் களிமண் தாதுக்களை படியச் செய்தன. இப்படிவுகள் கரீபியன் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் அடிப்பகுதியில் சுமார் 1 கிமீ (0.62 மைல்) தடிமன் அளவில் உள்ளது. இடை ஊழிக்காலம் தொடங்கி அண்மை ஊழிக்காலம் வரை (250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போது வரை) மேல் வண்டல் அடுக்குகளுக்கும், தொல்லூழிக் காலம் முதல் இடை ஊழிக்காலப்பகுதி வரை கீழ் வண்டல் அடுக்குகளுக்கும் தொடர்புடைய காலப்பகுதிகளாக இருந்துள்ளன. + +கரீபியன் கடலின் தரைப்பகுதியானது தொடர் குன்றுகள் மற்றும் மலைத்தொடர்கள் மூலம் ஐந்து வடிநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலின் தண்ணீர் சிறிய அண்டிலிசுக்கும் கன்னித்தீவுகளுக்கும் இடையில் உள்ள அனெகடா செல்வழி வழியாக கரிபியன் கடலுக்குள் நுழைகிறது. கியூபாவிற்கும் எயிட்டிக்கும் இடையில் விண்ட்வார்டு செல்வழி அமைந்துள்ளது. மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் இடையிலுள்ள யூகேடான் கால்வாய் மெக்சிகோ வளைகுடாவை கரிபியன் கடலுடன் இணைக்கிறது. கரிபியன் கடலின் ஆழமான பகுதி கேய்மான் பள்ளத்தில் தோரயமாக 7686 மீட்டர் ஆழத்துடன் காணப்படுகிறது. இருந்த போதிலும், கரிபியன் கடல் மற்ற கடல்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் ஆழமற்ற கடலாகவே கருதப்படுகிறது. + +கரிபியன் கடலுக்கு கிழக்கிலுள்ள தென் அமெரிக்கத் தட்டின் அழுத்தம் காரணமாக கீழ் அண்டிலிசு பகுதி எரிமலை செயல்திறன் அதிகமாக கொண்டிருக்கிறது. 1902 ம் ஆண்டு இங்குள்ள பெல்லே எரிமலை வெடித்ததில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன, +கரிபியன் கடலின் தரைத்தளத்தில் இரண்டு பெருங்கடல் அகழிகள் காணப்படுகின்றன. கேமன் அகழி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ அகழி ஆகிய இவ்விரண்டு அகழிகளால் இப்பகுதிக்கு பூகம்பம்ப ஆபத்து அதிக அளவில் ��ள்ளது. சுனாமியை உருவாக்கும் அச்சுறுத்தலை நீருக்கடியில் நிகழும் பூமியதிர்ச்சிகள் ஏற்படுத்துகின்றன, இதனால் கரீபியன் தீவுகளில் பேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்படலாம். கடந்த 500 ஆண்டுகளில் இந்த பகுதியில் மட்டும் ரிக்டர் அளவு 7.5 ஆக உள்ள 12 பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவியல் தரவுகள் தெரிவிக்கின்றன . மிகச்சமீபத்தில் எயிட்டியில் 7.1 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் சனவரி 2010 இல் நிகழ்ந்தது. + +கரிபியன் கடலின் நீரியல் உயர் சமச்சீர்மை தன்மையுடன் காணப்படுகிறது. கடலின் மேற்பரப்பில் மாதாந்திர சராசரி வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் மாறுபாடுபவது 3 ° செல்சியசு வெப்பநிலையை தாண்டாது. கடந்த 50 ஆண்டுகளில் கரிபியன் கடலில் வெப்பநிலை குறைவு மாறுபாடுகள் மூன்று நிலைகளில் நிகழ்ந்துள்ளது. 1974-1976 மற்றும் 1984-1986 ஆண்டுகளில் மிகக் குளிரான காலநிலை கட்டமும், இதையடுத்து ஆண்டுக்கு 0.6 செல்சியசு வெப்பநிலை உயர்வு காலகட்டமும் நிகழ்ந்துள்ளது. கரிபியன் கடலின் உவர்ப்புத் தன்மை 3.6%, அடர்த்தி 1,023.5–1,024.0 கிலோகிராம்/மீ3 ஆகும். மேற்பரப்பு கடல் நீரானது நீலமும் பச்சையுமாக அல்லது பச்சையாக காணப்படுகிறது. + + + + + +பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் + +பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14 ஆட்சிப்பகுதிகளாகும். + +2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர்1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் "காலனிகள்" அல்லது "முடியாட்சிக்குரிய காலனிகள்" என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை "பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள்" என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு . + + + + +கேமன் தீவுகள் + +கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும். + + + + +லூசியானோ பாவ்ராட்டி + +லூச்சியானோ பாவ்ராட்டி (ஆங்கிலம்: Luciano Pavarotti) (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆப்பரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெனர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார். + + + + + +சீரியம் + +சீரியம் "(Cerium)" என்பது Ce என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதனுடைய அணுஎண் 58 ஆகும். சீரியத்தில் தொடங்கி லித்துவேத்தியம் வரையுள்ள 14 தனிமங்களும் லாந்தனைடுகள் எனப்படுகின்றன. இவை யாவும் இலந்தனம் தனிமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் லாந்தனைடுகள் எனப்படுகின்றன. + +சீரியம் பார்ப்பதற்கு வெள்ளியைப் போல வெண்மையான தனிமமாகும். மென்மையான இதை கத்தியால் வெட்டலாம். தகடாகவும் அடிக்கலாம். கம்பியாகவும் நீட்டலாம். காற்றில் படநேர்ந்தால் இது தன் பளபளப்பை இழக்கிறது. லாந்தனைடு தொடரில் இரண்டாவது தனிமமான இது +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. விதிவிலக்காக சீரியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் நிலைப்புத்தன்மை கொண்டு நீரை ஆக்சிசனேற்றம் செய்யாத தன்மையை வெளிக்காட்டுகிறது. உயிரினச் செயல்பாடுகள் எதையும் சீரியம் கொண்டிருக்கவில்லை. மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட தனிமமாகவும் இது இல்லை. + +மோனசைட்டு மற்றும் பாசுடனசைட்டு போன்ற கனிமங்களில் மற்ற அரிய-மண் தனிமங்களுடன் எப்பொழுதும் கலந்தே காணப்பட்ட போதிலும் சீரியத்தை அதன் தாதுகளிலிருந்து பிரித்தெடுப்பது எளிதான செயலாகும். ஏனெனில் அதன் தனித்தன்மையான +4 என்ற ஆக்சிசனேற்ற நிலை இதை எளிதாக பிரித்தெடுக்க உதவுகிறது. சீரியத்தைப் போல நியோடிமியம், இலந்தனம், பிரசியோடைமியம் போன்ற தனிமங்களும் லாந்தனைடுகளில் பொதுவானவையாகும். புவி மேலோட்டில் மில்லியனுக்கு 66 பகுதிகள் என்ற அளவில் சிரியம் காணப்படுகிறது. அதிகமாகக் காணப்படும் தனிமங்கள் வரிசையில் இதற்கு 26 ஆவது இடமாகும். குளோரின் அளவில் பாதியாகவும் ஈயத்தைக் காட்டிலும் இது ஐந்து மடங்கும் அதிகமாகும். + +சுவீடனிலுள்ள பாசுட்னாசில் 1803 ஆம் ஆண்டு யோன் யோக்கோபு பெர்சிலியசு மற்றும் வில்லெம் இசிங்கர் ஆகியோர் கண்டுபிடிக்கப்படவேண்டிய லாந்தனைடுகளில் முதலாவதாக சீரியத்தைக் கண்டுபிடித்தனர். மார்ட்டின் எயின்ரிச் கிளாப்ரோத் செருமனியில் இதைத் தனியாகக் கண்டறிந்தார். 1839 இல் காரல் குசுடாப் மசாண்டர் சீரியத்தை தனித்துப் பிரித்தெடுத்தார். இன்று சீரியமும் அதன் சேர்மங்களும் பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக சீரியம்(IV) ஆக்சைடு பளபளப்பான கண்ணாடிகளிலும் வினைவேக மாற்ரியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீரியம் உலோகம் பெர்ரோசீரியம் தீமூட்டிகளில் அதனுடைய தானே பற்றிக் கொள்ளும் பண்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. + +லாந்தனைடு தொடரில் சீரியம் இரண்டாவது தனிமமாகும். தனிமவரிசை அட்டவணையில் இதன் இடப்புறத்தில் இலந்தனமும் வலப்புறத்தில் பிரசியோடிமியமும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலே ஆக்டினைடான தோரியம் இடம்பெற்றுள்ளது. கம்பியாக நீட்சியடையும் தன்மையை சீரியம் கொண்டிருக்கிறது. இதனுடைய கடினத்தன்மை வெள்ளியை ஒத்ததாக உள்ளது. சீரியத்தின் 58 எலக்ட்ரான்களும் [Xe]4f15d16s2 என்ற எலக்ட்ரான் அமைப்பில் நிரம்பியுள்ளன. வெளிக்கூட்டில் உள்ள 4 எலக்ட்ரான்களும் இணைதிறன் எலக்ட்ரான்களாகும். இலந்தனத்திற்கு அடுத்ததாக உள்ள 4f ஆர்பிட்டல்கள் திடீரென ஒடுங்கி சுருங்குகிறது. இணைதிற எலக்ட்ரான்களின் மீது உட்கருவின் ஈர்ப்பு அதிகரிப்பதால் கூடு ஒடுங்குகிறது அல்லது சுருங்குகிறது. இதனால் அணுப்பருமன் குறைந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் இவ்விளை சீரியத்தில் போதுமான அளவுக்கு வலிமையாய் இல்லை. எனவே இங்கு 5d துணை ஆர்பிட்டால் நிரம்புகிறது. எஞ்சியிருக்கும் 4f எலக்ட்ரான்கள் மிக வலிமையுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான லாந்தனைடுகள் மூன்று எலக்ட்ரான்களையே இணைதிறன் எலக்ட்ரான்களாக பயன்படுத்துகின்றன. சீரியம் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். +4 ஆக்சிசனேற்ற நிலையில் சீரியம் உள்ளது. + +திட்ட அழுத்தத்தில் சீரியத்திற்கு நான்கு புறவேற்றுமை வடிவங்கள் உள்ளன. α முதல் δ: வரையிலான பெயர்கள் அவற்றுக்கு இடப்பட்டுள்ளன :. + + + + + +காரக்கனிம மாழைகளில் ஐரோப்பியம் என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தன���மம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த நீரில் இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும். + +சீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் புற ஊதாக்கதிர்களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். அமோனியாவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடும் லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும். + +காரக்கனிம தனிமங்களிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் சீரியம்தான். இது நில உருண்டையின் புற ஓட்டின் எடையில் 0.0046% ஆகும். சீரியம் கிடைக்கும் கனிமங்கள்: அல்லனைட் (allanite) அல்லது (ஆர்த்தைட்) என்றழைக்கப்படும் கனிமம் —(Ca, Ce, La, Y)(Al, Fe)(SiO)(OH), மோனசைட்டு (monazite) (Ce, La, Th, Nd, Y)PO, பாசுட்னசைட்டு (bastnasite) (Ce, La, Y)COF, ஹைட்ராக்ஸைல்பாஸ்ட்னாசைட்(hydroxyl)(bastnasite) (Ce, La, Nd)CO(OH, F), ராப்டொஃவேன்(rhabdophane) (Ce, La, Nd)PO-HO, சிர்க்கோன்(zircon) (ZrSiO), சின்ச்சிசைட் (synchysite) Ca(Ce, La, Nd, Y)(CO)F ஆகும்.மோனாசைட்டும் பாசுட்னசைட்டும் சீரியம் பெறுவதற்கு தற்பொழுது இரண்டு முதன்மையான கனிமங்களாகும். + +மோனசைட்டு கனிமம் மோனசைட்டு மணல் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீரியம் மற்றும் இலந்தனம் ஆகியவற்றின் ஆர்த்தோபாசுப்பேட்டுகளும் தோரியாவும் கொண்ட கலவையாகும். தோரியத்தை தயாரிக்க இது பெருமளவில் பயன்படுகிறது.சீரியத்தின் நீரேற்றம் பெற்ற சிலிக்கேட்டு சீரைட்டு எனப்படுகிறது. பாசுட்டனசைட்டில் சிறிதளவு தோரியம் காணப்படுகிறது. + + + + +சராசரி + +கணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி ("Average") என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண�� மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை ("measure of central tendency")எனவும் சராசரி அழைக்கப்படுகிறது. + +கீழ்க்காணும் ஐந்தும் சராசரியின் முக்கிய வகைகளாகும்: + +இவை ஐந்தில் தரவின் தன்மைக்குப் பொருத்தமான சராசரி காணப்படும். பொதுவாக கூட்டுச் சராசரி ஏற்புடைய சராசரியாகக் கருதப்பட்டாலும், கோட்டமுடைய பரவல்களுக்கு அது பொருத்தமாக இராது. கோட்டமுடைய பரவல்களில் சமவாய்ப்பு மாறியின் பெரும்பான்மையான மதிப்புகளை விட அதன் சில மதிப்புகள் மிக அதிகமானவையாகவும், வேறு சில மிகக் குறைவானவையாகவும் இருக்கும். இதனால் கணக்கிடப்பட்ட கூட்டுச் சராசரியின் மதிப்பானது அப்பரவலின் தன்மையைச் சரியானபடிச் சுட்டும் அளவாக இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட்டுச் சராசரியை விட இடைநிலையளவு பொருத்தமான அளவையாக இருக்கும். ஏனெனில் இடைநிலையளவு காணும்முறை எல்லையோர மதிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. + +கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றும் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படும் சராசரிகளாகும். இவை பித்தாகரசின் சராசரிகள் எனப்படுகின்றன. + +"a", "i" = 1, ..., "n" என்ற "n" எண்கள் தரப்பட்டிருந்தால் அவற்றின் கூட்டுச் சராசரி: + +2, 8 இன் கூட்டுச் சராசரி = (2 + 8) / 2 = 5. இம்மதிப்பு 2 ஐ விடக் குறைவாகவோ 8 ஐவிட அதிகமாகவோ அமையாது. + +"n" எதிரிலா எண்களின் பெருக்கல் சராசரி, அந்த எண்களின் பெருக்கற்தொகையின் வர்க்கமூலம் ஆகும். + +"a", "a", ..., "a" ஆகிய "n" எண்களின் பெருக்கல் சராசரி: + +எடுத்துக்காட்டு: +2, 8 இன் பெருக்கல் சராசரி, + +எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் பெருக்கல் சராசரியை அந்த எண்களின் மடக்கைகளின் கூட்டுச் சராசரியின் எதிர்மடக்கையாகக் கருதலாம். + +"a", "a", ..., "a" ஆகிய "n" பூச்சியமில்லா எண்களின் இசைச் சராசரி, அந்த எண்களின் தலைகீழிகளின் கூட்டுச் சராசரியின் தலைகீழியாகும்: + +எடுத்துக்காட்டு: +"A" லிருந்து "B" -க்குச் சென்ற பயணத்தின் வேகம் 60 கிமீ/மணி, "B" லிருந்து "A" -க்குத் திரும்பிய பயணத்தின் வேகம் 40 கிமீ/மணி எனில், மொத்தப் பயணத்தின் சராசரி வேகம்: + +தரப்பட்ட நேர் எண்களின் கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றுக்கும் இடையேயுள்ள சமனின்மைத் தொடர்பு: + +இச்சமனின்மை ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்துள்ளதால் இத��ை நினைவில் கொள்வது எளிது. + +தரவின் முகடு அல்லது ஆகாரம் ("mode") என்பது அத்தரவில் அடிக்கடி காணப்படும் மதிப்பாகும். இது எளிதாகக் கணிக்கக் கூடிய சராசரி. மற்ற சராசரிகள் போலன்றி எண்வடிவில் அமையாத தரவுகளுக்கு முகடு காணலாம். + +ஒரு தரவிற்கு ஒரேயொரு முகடு மட்டுமே இருக்கும் என்றில்லை. ஏனென்றால் சமமான அளவில் அதிகமாக காணப்படும் மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக அத்தரவில் இருக்கலாம். தரவு நிகழ்வெண் பரவலாக இருந்தால் சமமான மிக அதிகமான நிகழ்வெண் கொண்ட மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கலாம். சில சமயங்களில் பரவலின் சமவாய்ப்பு மாறியின் அனைத்து மதிப்புகளுமே இவ்வாறு சம நிகழ்வெண் கொண்டிருக்கலாம். ஒரேயொரு முகடுடைய தரவு "ஒரு முகட்டுத் தரவு" என்றும் இரு முகடுகளையுடைய தரவு "இரு முகட்டுத் தரவு" என்றும் இரண்டுக்கும் மேற்பட்ட முகடுகளையுடைய தரவு "பல முகட்டுத் தரவு" என்றும் அழைக்கப்படும். + +தரவின் இடைநிலையளவு அல்லது இடையம் என்பது தரவின் மதிப்புகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள மதிப்பைக் குறிக்கும். மதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள மதிப்பு இடைநிலையளவாக அமையும். மதிப்புகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு மதிப்புகளின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும். + +சராசரி எனும் கருத்துருவை சார்புகளுக்கும் நீட்டிக்கலாம். நுண்கணிதத்தில் தொகையிடக்கூடிய சார்பு "ƒ" இன் சராசரி மதிப்பு, ["a","b"] இடைவெளியில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: + + + + +கூட்டுச்சராசரி + +கணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி ("Arithmetic mean") என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் தொகுப்பில், சமபங்கீட்டு முறையில் காணப்பட்ட நடுநிலை எண்ணைக் குறிப்பதாகும். பெருக்கற் சராசரி, இசைச்சராசரி போன்ற பிற சராசரிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இச்சராசரி கூட்டுச் சராசரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பிலுள்ள எல்லா எண்களின் கூட்டுத்தொகையை அத்தொகுப்பிலுள்ள மொத்த எண்களின் எண்ணிக்��ையால் வகுக்கக் கிடைக்கிறது. + +கூட்டுச்சராசரி = இராசிகளின் கூட்டுத்தொகை / இராசிகளின் எண்ணிக்கை + +கூட்டுச்சராசரி என்பது, மிக குறைந்த இராசியை விடப் பெரியதாகவும், மிக அதிகமான இராசியை விடப் சிறியதாகவும் இருக்கும். வீச்சு அதிகமாக உள்ள தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பின் சரியான நடுமதிப்பாக இருக்காது. + +formula_1 என்ற தரவின் கூட்டுச் சராசரி formula_2 பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: + +இது எடுத்துக்கொள்ளப்பட்ட தரவு முழுமைத்தொகுதி எனில் முழுமைத்தொகுதி சராசரி எனவும், தரவு மாதிரித் தரவு எனில் மாதிரிச் சராசரி எனவும் அழைக்கப்படுகிறது. மாறியின் மீது ஒரு கோடிடப்பட்டுக் (formula_4) குறிக்கப்படுகிறது. + +கூட்டுச்சராசரியின் பண்புகள் அதனை மிகவும் பயனுள்ள மைய நோக்கு அளவுகளில் ஒன்றாக ஆக்குகின்றன. + + +formula_7 என்பது formula_8 இலிருந்து சராசரி formula_9 இன் தொலைவைத் தருவதால், சராசரிக்கு இடதுபுறம் அமைந்துள்ள எண்கள், வலப்புறம் அமைந்துள்ள எண்களுடன் சமநிலைப்படுத்தப்படுகின்றன என இப்பண்பைக் கூறலாம். + + + + + + +இடைநிலையளவு + +கணிதம் மற்றும் புள்ளியியலில், இராசிகளின் இடைநிலையளவு அல்லது இடையம்("median") என்பது இராசிகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள இராசியைக் குறிக்கும். இராசிகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள இராசி இடைநிலையளவாக அமையும். இராசிகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு இராசிகளின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும். + +இடைநிலையளவு காண வேண்டிய தரவு சீர்படா தரவாகவோ அல்லது தொகுக்கப்பட்டத் தரவாகவோ அமையும். + +ஒரு முடிவுறு சீர்படா தரவின் (raw data) இடைநிலையளவைப் பின்வருமாறு காணலாம்: + +தரவிலுள்ள மதிப்புகளின் எண்ணிக்கை N எனில் அவற்றை ஏறு அல்லது இறங்கு வரிசையில் எழுத, + +இடைநிலையளவு = (N/2) + 1 ஆவது உறுப்பு (N ஒற்றை எண்) + +எடுத்துக்காட்டு: + +தரவு: 4, 8, 1, 6, 10 எனில் ஏறுவரிசையில் எழுத, +மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 5, ஒற்றை எண்ணாக உள்ளது. + +தரவு: 3, 5, 1, 11, 23, 7, 13, 19 எனில் ஏறுவரிசையில் எழுத, +மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை 8, இரட்டை எண்ணாக உள்ளது. + +தொகுக்கப்பட்ட தரவு (grouped data) நிகழ்வெண் அட்டவணை வடிவில் (தொடர் நிகழ்வெண் பரவல்) தரப்பட்டிருந்தால் அதன் இடைநிலையளவைப் பின்வரும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்திக் காணலாம்: + + + + + +முகடு + +கணிதம் மற்றும் புள்ளியியலில், தரவின் முகடு அல்லது ஆகாரம் ("mode") என்பது அத்தரவில் அடிக்கடி காணப்படும் மதிப்பாகும். கூட்டுச் சராசரி, இடைநிலையளவு போன்று இதுவும் ஒரு மையப்போக்கு அளவையாகும். ஒரு தரவின் தன்மையைப் பிரதிபலிக்கும் தனி மதிப்புகளான மையப்போக்கு அளவைகளில் ஒன்றாக முகடு இருந்தாலும் அது கணிக்கப்படும் முறையால் துல்லியமான அளவையாகக் கொள்ள முடியாது. எனினும் இது எளிதாகக் கணிக்கக் கூடிய ஒரு மையப்போக்கு அளவையாகும். + +இயற்பியலில் முகடு என்பது அதிர்வின் மையப் புள்ளிக்கு மேலே இருப்பனவாகும் + +இயல்நிலைப் பரவலில் கூட்டுச் சராசரி, இடைநிலையளவு, முகடு மூன்றும் ஒரேயளவாக இருக்கும். ஆனால் அதிகளவு கோட்டமுடையப் பரவலில் (skewed distribution) இவை மூன்றும் வெவ்வேறு மதிப்புகளாக இருக்கும். + +ஒரு தரவிற்கு ஒரேயொரு முகடு மட்டுமே இருக்கும் என்றில்லை. ஏனென்றால் சமமான அளவில் அதிகமாக காணப்படும் மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக அத்தரவில் இருக்கலாம். தரவு நிகழ்வெண் பரவலாக இருந்தால் சமமான மிக அதிகமான நிகழ்வெண் கொண்ட மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கலாம். சில சமயங்களில் பரவலின் சமவாய்ப்பு மாறியின் அனைத்து மதிப்புகளுமே இவ்வாறு சம நிகழ்வெண் கொண்டிருக்கலாம். ஒரேயொரு முகடுடைய தரவு "ஒரு முகட்டுத் தரவு" என்றும் இரு முகடுகளையுடைய தரவு "இரு முகட்டுத் தரவு" என்றும் இரண்டுக்கும் மேற்பட்ட முகடுகளையுடைய தரவு "பல முகட்டுத் தரவு" என்றும் அழைக்கப்படும். + +முகடு காணப்பட வேண்டிய தரவுகளின் வெவ்வேறுவித அமைப்புகளைப் பொறுத்து காணும் முறைகள் மாறுபடும். + + + +முகடு = formula_1 + + + + + + + + +பிரசியோடைமியம் + +பிரசியோடைமியம் (ஆங்கிலம்: Praseodymium (IPA: or ) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 59. இத்தனிமத்தின் அணுக்குறியீடு Pr, இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன. + +பிரசியோடைமியம் மென்மையான வெண்மையான மாழை. இது லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு மாழை. இது யூரோப்பியம், லாந்த்தனம், சீரியம், அல்லது நியோடைமியம் ஆகியவற்றை விட காற்றில் அதிகம் அரிப்படையாதது, ஆனால் காற்றில் பசுமை நிறமுடைய ஆக்ஸைடாகின்றது. இதனால் பிரசியோடைமியத்தை எண்ணெய்க்கடையில் வைத்திருப்பர் அல்லது காற்றுபுகா கண்ணாடிக் குமிழுள் வைத்திருப்பர். + + +பிரசியோடைமியம் என்னும் பெயர் கிரேக்க மொழியில் பச்சை என்னும் பொருள்படும் "prasios" மற்றும் இரட்டை என்னும் பொருள்படும் "didymos" என்னும் சொற்களில் இருந்து ஆக்கப்பெற்றது. + +1841 ஆண்டு மோசாண்டர் (Mosander) என்பவர் லாந்த்தனா என்னும் கனிமத்தில் இருந்து டிடிமியம் என்னும் காரக்கனிமப் பொருளைப் பிரித்தெடுத்தார். 1874ல் பெர் டியோடோர் கிளீவ் (Lecoq de Boisbaudran) என்பவர் இந்த டிட்மியம் என்பது இரண்டு தனிமங்கள் கொண்டது என்று முடிவு செய்தார். 1879ல் லெக்காக் டி புவாபவுதிரான் (Lecoq de Boisbaudran) சமர்ஸ்க்கைட் என்னும் கனிமத்தில் இருந்து பெற்ற டிடியத்தில் இருந்து சமாரியம் என்னும் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். 1885ல், ஆஸ்திரியா நாட்டு வேதியியலாளர் கார்ல் அவெர் வான் வெல்ஸ்பாஃக் (Carl Auer von Welsbach]) டிடியத்தில் இருந்து பிரசியோடைமியம் நியோடைமியம் ஆகிய இரண்டையும் பிரித்தெடுத்தார். இவை வெவ்வேறு நிறமுடைய உப்புகள் ஈன்றன. + +பிரசியோடைமியம மிகச் சிறிய அளவிலேயே நில உலகின் புற ஓட்டில் இருந்து கிடைக்கின்றது. மில்லியன் பங்கில் 9.5 பங்கு (ppm) பிரசியோடைமியம ஆகும். + +பிரசியோடைமியச் சேர்மங்களில் சில: + + +"இவற்றையும் பார்க்க:." + +Naturally occurring praseodymium is composed of one stable ஓரிடத்தான், Pr. Thirty-eight கதிரியக்க ஓரிடத்தான்s have been characterized with the most stable being Pr with a அரைவாழ்வுக் காலம் of 13.57 days and Pr with a half-life of 19.12 hours. All of the remaining கதிரியக்கம் isotopes have half-lives that are less than 5.985 hours and the majority of these have half-lives that are less than 33 seconds. This element also has six meta states with the most stable being Pr (t 2.12 hours), Pr (t 14.6 minutes) and Pr (t 11 minutes). + +The isotopes of praseodymium range in atomic weight from 120.955 u (Pr) to 158.955 u (Pr). The primary கதிரியக்கம் before the stable isotope, Pr, is electron capture and the primary mode after is பீட்டா சிதைவு. The primary decay products before Pr are element 58 (சீரியம்) isotopes and the primary products after are element 60 (நியோடைமியம்) isotopes. + +மற்ற காரக்கனிம மாழைகள் போலவே பிரசியோடைமியமும் நச்சுத்தன்மை குறைந்த ஒரு பொருள்தான். உயிரினங்களின் இயக்கத்தில் பிரசியோடைமியத்தின் பங்கு ஏதும் இன்னும் அறியப்படவில்லை. + + + + + + +வள்ளுவர் + +அரசனின் ஆணையை முரசு அறைந்து அறிவிப்பவன் வள்ளுவன் என்னும் செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார். + +காலத்தைக் கணிக்கும் வல்லுனரை தமிழகத்தில் உள்ள காமங்களில்(கிராமங்களில்) வள்ளுவர் என்றழைப்பர். இவர்கள், கணியர்களைப் போலவே சோதிடம் மற்றும் வானியல் முதலிய கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாவர். இவர்கள், காலத்தைக் கணிப்பது, நிமித்தம் பார்ப்பது, மழைவருவதைக் கணிப்பது, திருமணத்திற்கு நாள் மற்றும் பொருத்தம் பார்ப்பது, ஒரு குடும்பத்தில் அல்லது ஊரில் நடைபெறும் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்களுக்கு நேரம் காலம் கணித்துத் தருவது, கணி கேட்டு வருபவர்களுக்கு கணி சொல்வது முதலியவற்றைச் செய்பவர்கள். + +கலைகள்(அறிவியல்) என்பது மானிட இனத்தின் நன்மைக்குப் பயன்படும் நோக்கத்துடன் கண்டுபிடித்து வளர்க்கப்படுபவை என்பதை உணர்ந்தறிந்த சித்தர்கள், அதன் மூலம் தாங்கள் செய்யும் நன்மையின் மூலம் பயன்பெறும் மக்களிடம் கட்டணம் வாங்கவில்லை. பயன்பெற்றவரே முன்வந்து அவரால் முடிந்தளவு பொருள்(பணம்) அல்லது தானியம் கொடுப்பர். இதற்கு, காணிக்கை என்று பெயர். இவ்வாறு முற்காலங்களில், மக்களுக்கு இலவசமாகத் தீர்வுகளைத் தந்த சித்தர்களைப் போல, வள்ளுவர், வைத்தியர், பூசாரி(குறிசொல்லுபவர்), நாடி சோதிடர் முதலியவர் தாங்கள் கற்றறிந்த கலைகள் மூலம் மக்களுக்குச் செய்யும் நன்மைகளுக்கு கட்டணம் வாங்கும் பழக்கம் முன்னாட்களில் இல்லை. காணிக்கை கொடுக்கும் வழக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்காலத்தில் சிலர் இக்கலைகள் மூலம் செய்யும் நன்மைக்கு கட்டணம் வாங்கும் வழக்கம் உள்ளது. + + + + +கிறிஸ்துமசு தீவு + +கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி ("Territory of Christmas Island") இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது. + +1643 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந���தியக் கம்பனியைச் சேர்ந்த "ரோயல் மேரி" கப்பலின் தலைவன் கப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் கிறிஸ்துமசு நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார். 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் டச்சு நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு "மோனி" எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த "சிக்னெட்" கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போர்ணியோ தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன. + +இந்த தீவில் அரியவை உயிரினங்கள் அதிகமாக காணப்படுகின்றது. இவற்றில் தேங்காய் நண்டு பிரசித்தி பெற்றதாகும். இந்த வகை நண்டுகள் 3 அடிகள் நீளத்துடன், 4 கிலோ எடைகள் கொண்டதாக உள்ளது. இது தன் ஒரு காலால் ஒரு தேங்காயை உடைக்கும் திறன் படைத்ததாக உள்ளது. + + + + +அருந்ததி + +அருந்ததி என்னும் சொல் பின்வருவனவற்றுள் ஏதாவது ஒரு பொருளைக் குறிக்கக்கூடும். + + + + + +ஆக்கபூர்வமாகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பேர்கோப் ஆய்வுநிலையம் + +முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கோப் ஆய்வுநிலையம் 1993 ஆம் ஆண்டு முரண்பாடு ஆய்வுகளுக்கான பேர்கோப் நிலையத்தினரால் சமூக அரசியற் பிரச்சினைகளை ஆக்கபூர்வமான நடைமுறைகள் மூலம் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. + +இனம் மற்றும் அரசியல் பிணக்குகளுக்குத் தீர்வு காண, கருத்தியல் கொள்கைக்கும் நடைமுறை நிலைப்பாட்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எய்தி அணுகுவது ஆய்வுமையத்தின் குறிக்கோள் ஆகும். இந்நிலையத்தினூடாகச் செய்யப்படும் ஆய்வுகள் ஊடாக முரண்பாட்டில் இருந்து நீங்குவதற்கான எண்ணக்கருக்கள், வழங்கள், கருவிகள் வழங்குகின்றன. இந்த அமை��ின் இலட்சியமானது சமானத்தைக் கட்டிக்காப்பதற்கு உதவுவதுடன் அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும். + +இவ்வமைப்பின் கற்கைகளுள் பிரதானமானவை எவ்வாறு முரண்பாடு ஒன்றில் இருந்து சமாதானத்தை உருவாக்குவதாகும். இதற்காக சமூகத்தில் எவ்வாறான தூண்டுதல்களை உருவாக்க வேணடும் போன்ற விடயங்களை ஆய்வுசெய்வதாகும். அத்துடன் அரசியற் சக்திகள், மக்கள் குழுக்கள், அரசு அல்லாத சக்திகள் (Non state Actors) போன்றவை எவ்வாறு சிக்கலான இவ்விடயத்திற்கு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கலாம் என்பதேயாகும். + +இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இவ்வலுவலகம் ஆனது 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு விடுதலைப் புலிகள் பல்வேறு பட்ட சமாதானப் பேச்சுவார்தைகளுக்கமைய பல்வேறு மாற்றங்களை இந்த அமைப்பு ஏற்படுத்திக் கொண்டது. இலங்கையில் இந்த அமைப்பிற்கு வெளிநாட்டு அலுவல்களுக்கான சுவிஸ் சமஷ்டி அமைப்பு, ஜேர்மனியின் பொருளாதார விருத்தி மற்றும் கூட்டுறவு அமைச்சு, ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய அமைப்புக்கள் அனுசரணை வழங்குகின்றன. + + + + + +இலந்தனைடு + +இலந்தனைடுகள் "(Lanthanides)" என்பவை இலந்தனம் தனிமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வேதியியல் தனிமங்கள் கொண்ட வரிசை இலந்தனைடுகள் எனப்படும். இவ்வரிசையில் உள்ள தனிமங்கள் அணு எண் 57 முதல் அணு எண் 71 வரை உள்ளவை. அதாவது இலந்தனம் முதல் லியுத்தேத்தியம் வரையுள்ள 15 தனிமங்களும் இலந்தனைடுகள் எனப்படுகின்றன.இத்தனிமங்கள் யாவும் ஒரே மாதிரியான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன. இத்தனிமங்களுடன் இசுக்காண்டியம் மற்றும் இரிடியம் தனிமங்களையும் சேர்த்து அருமண் உலோகங்கள் என்கிறார்கள். +முறைசாரா வேதியியல் குறியீடான Ln என்பதை இலந்தனைடுகளைக் குறிக்கும் பொதுக் குறியீடாக விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். இக்குறியீடு எந்தவொரு இலந்தனைடையும் குறிக்கும். இக்குழுவில் உள்ள 15 தனிமங்களில் ஒன்றைத் தவிர அனைத்தும் f- தொகுதித் தனிமங்களாகும். அது இலந்தனம் அல்லது லியுதேத்தியம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம். அது டி தொகுதி தனிமமாக கருதப்படுகிறது. ஆனால் வேதியியல் ஒற்றுமைகள் காரணமாக அதையும் இக்குழுவில் சேர்த்துக் கொள்கிறார்கள். 14 தனிமங்களின் எலக்ட்ரான்���ள் 4 f- ஆர்பிட்டால்களில் படிப்படியாக நிரப்பப்படுகின்றன . இதனால் இவற்றை 4 f- தனிமங்கள் என்றும் அழைக்கிறார்கள். அனைத்து இலந்தனைடு தனிமங்களும் மூவிணைதிற நேர்மின் அயனிகளாக (Ln3+) உருவாகின்றன.இவற்றின் வேதியியல் அயனி ஆரத்தை பொருத்து அமைகிறது. இது இலந்தனம் தொடங்கி லியுதேத்தியம் வரை படிப்படியாகக் குறைகிறது. + +இக்குழுவில் உள்ள தனிமங்கள் யாவும் இலந்தனத்தின் பண்புகளை ஒத்திருப்பதால் இத்தனிமங்களை இலந்தனைடுகள் என்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் இலந்தனம் மற்றும் லியுதேத்தியம் இரண்டையும் 3 ஆவது நெடுங்குழுத் தனிமங்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அவை 5டி கூட்டில் ஓர் இணைதிறன் எலக்ட்ரானைப் பெற்றுள்ளன. இருப்பினும் அவற்றை இலந்தனைடுகள் தொடர்பான விவாதங்களில் இணைத்துக் கொள்கிறார்கள். இலந்தனம், லியுதேத்தியம் இரண்டையும் ஒப்பிடுகையில் பெரும்பாலும் இலந்தனம் இக்குழுவில் இருந்து விலக்கப்படுகிறது. ஏனெனில் இவற்றின் பண்புகள் 3 ஆவது குழுத்தனிமங்களின் பெயருக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பதுதான் காரணமாகும். இலந்தனம் என்பது இலந்தனம் என்ற தனிமத்தைக் குறிக்குமே ஒழிய அது இலந்தனைடு அல்ல என்று வாதிடுவோரும் உண்டு. ஐயுபிஏசியும் இதன் பயன்பாட்டு கருதியே இக்குழுவில் இதைச் சேர்த்துக் கொண்டுள்ளது + +இலந்தனம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்களின் அணு நிறை பேரியம் மற்றும் ஆஃபினியம் தனிமங்களின் நிறைகளுக்கு இடைப்பட்டதாக இருப்பதால் 4f தனிமங்கள் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடையில் தனிம வரிசை அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளன. பேரியம் காரமண் உலோகமாகும். இது IIஏ தொகுதி தனிமமாகும். ஆஃபினியம் தைட்டானியம் மற்றும் சிர்க்கோனியம் தனிமங்களின் பண்புகளைப் பெற்றுள்ள IIபி தொகுதி தனிமமாகும். எனவே இவை III pi தொகுதியில் இட்ரியத்திற்கு கீழே வைக்கப்படவேண்டும். இருப்பினும் இவை தனிம வரிசை அட்டவணையின் கீழே அடிப்பகுதியில் 4ஃ தனிமங்கள் என தனியாக வைக்கப்படுகின்றன. அட்டவணையை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே இலந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் ஆறு மற்றும் ஏழு தொகுதிகளுக்குப் பதிலாக அடியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. + +புரொமெத்தியம் தவிர்த்த மற்ற இலந்தனைடுகளையும் இசுக்காண்டியம், இட்ரியம் ஆகியவற்றையும் சேர்த்து அருமண் உலோகங்கள் என்ற ���ெயரால் அழைத்து வந்தனர். ஆனால் இது ஏற்ற கலைச்சொல் இல்லை என்று தூய மற்றும் பயன்முக வேதியியலுக்கான அனைத்துலக ஒன்றியம் (IUPAC) பரித்துரைக்கின்றது. ஏனெனில் இவ்வரிசையில் பல தனிமங்கள் நிறையவே (மலிவாகக்) கிடைக்கின்றன. மேலும் ஆங்கிலக் கலைச்சொல்லில் உள்ள எர்த் என்பது பொதுவாக நீரில் கரையா கடும் கார ஆக்சைடுகளைத் தரும் உலோகங்களை 18 ஆம் நூற்றாண்டுகளில் உருக்குலையில் இட்டு உலோகமாக பிரித்தெடுக்க இயலாத பொருட்களைக் குறிக்கப் பயன்படுத்தினர். அரிதாகக் கிடக்கும் என்று கூறுவது சீரியம் போன்ற தனிமங்களுக்குப் பொருந்தாது, ஏனெனில் அது உலகில் கிடைக்கும் பொருட்களில் 26 ஆவது நிலையில் அதிகமாகக் கிடைக்கும் பொருளாகும். நியோடைமியம் என்னும் தனிமம் தங்கத்தை விட அதிகமாகக் கிடைக்கும் பொருள். சற்று அரிதாகக் கிடைக்கும் தூலியம் கூட அயோடினை விடக் கூடுதலாகக் கிடைக்கின்றது . எனவே அரிதாகக் கிடக்கும் தனிமங்கள் என்னும் சொல்லாட்சி தவிர்க்கப்படவேண்டியது. இலந்தனைடு என்பதைக்காட்டிலும் இலந்தனாய்டு என்னும் சொல்லை IUPAC பரிந்துரைக்கின்றது. இலந்தனாய்டு என்பதன் பொருள் தமிழில் இலந்தனம் போன்றவை" என்று கூறலாம். + +இலந்தனைடு தொடரில் உள்ள தனிமங்கள் வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றன. நேர் மின்சுமை கொண்ட இவை அதிக வினைத்திறன் கொண்டவையாக உள்ளன. + +இலந்தனைடுகளின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு முற்றிலுமாக நிறுவப்படவில்லை. பேரியத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு [Xe]]6s2 ஆகும். எனவே இலந்தனம் [Xe]]6s25d1 என இருக்க வேண்டும். எனவே இலந்தனைடுகளின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு [Xe]]6s25d14f 1-14 என்று அமையும். இலந்தனைடுகளின் பொதுவான இனைதிறன் 3 ஆகும். +இலந்தனைடுகள் பொதுவாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளன. +2 மற்றும் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்ட இலந்தனைடு சேர்மங்களும் அறியப்படுகின்றன. உதாரணமாக +2 ஆக்சிசனேற்ற நிலையில் சீரியம் டைகுளோரைடும், +4 ஆக்சிசனேற்ற நிலையில் சிரியம் டெட்ராபுளோரைடும் உள்ளன. + ++3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள உள்ள இலந்தனைடு அயனிகள் படிகங்களிலும் கரைசல்களிலும் வெவ்வேரு நிறங்களைக் கொண்டுள்ளன. இலந்தனம் அயனியும் லியுதேத்தியம் அயனியும் நிரமற்று உள்ளன. + +•இலந்தனம் மற்றும் லியுதேத்தியம் தனிமங்கள் தவிர ஏனைய தனிமங்கள் பாராகாந்தத் தன்ம���யை பெற்றுள்ளன. இவையிரண்டும் டயா காந்தப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. +•இலந்தனைடுகளின் குளோரைடுகளும் நைட்ரேட்டுகளும் நீரில் கரைகின்றன. கார்பனேட்டுகளும் புளோரைடுகளும் நீரில் கரைவதில்லை. +•குளிர்ந்த நீருடன் இவை மெதுவாக வினைபுரிகின்றன. சூடுபடுத்துகையில் இலந்தனைடுகள் தீவிரமாக வினைபுரிகின்றன. + + + + + +ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் + +ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் (, AAT) என்பது அண்டார்க்டிக்காவில் ஆஸ்திரேலியாவினால் உரிமை கோரப்பட்ட பிரதேசம் ஆகும். இதுவே அக்கண்டத்தில் நாடொன்றினால் உரிமை கோரப்பட்ட மிகப் பெரிய பிரதேசம் ஆகும். + +இது தென் அகலாங்கு 60°க்கு தெற்காகவும், கிழக்கு நெட்டாங்குகள் 44°38' க்கும் 160° க்கும் இடையில் அமைந்துள்ள அனைத்துத் தீவுகளையும் பிரதேசங்களையும் அடக்கியுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கும் அடேலி நிலம் ஆஸ்திரேலியப் பிரதேசத்துக்குச் சொந்தமானதல்ல. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 கிமீ² ஆகும். இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. ஆஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரிவு மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. மோசன், டேவிஸ், கேசி ஆகிய மூன்று நிரந்தர ஆய்வு மையங்கள் இங்குள்ளன. + +இப்பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்கு வரை ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: +1841, ஜனவரி 9 இல் விக்டோரியா நிலம் முதன் முதலில் பிரித்தானியாவால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் 1930 இல் எண்டர்பை நிலத்தை பிரித்தானியா கோரியது. 1933 இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி ஆஸ்திரேலியாவுக்குக் கொடுக்கப்பட்டது. 1947 இல் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. 1954 பெப்ரவரி 13 இல் மோசன் நிலையம் என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது. + +ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. + + + + + +கிலோபைட்டு + +கிலோபைட்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிலோ என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவா 1000 அல்லது 1024 என்றவாறு கையாளப்படுகின்றது. + +பொதுவாக் கணினிகளில் அடி இரண்டில் உள்ள எண்களே பாவிக்கப்படுவதால் 2 = 1024 ≈ 1000 என்றவாறு எண்ணளவாகக் கருதப்படுகின்றது. எனினும் 1024 ஐயும் 1000 ஐயும் வேறு வேறாக இனம் காண்பதற்காக பொதுவாக 1024 ஐ K (பெரிய எழுத்துக்களிலும்) 1000 ஐச் சிறிய எழுத்துக்களிலும் கையாள்கின்றனர். (K என்பது கெல்வினைக் குறித்தாலும் கூட). + + + + +பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் + +பிரித்தானிய அண்டாடிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர். + + + + + +பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் + +பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் (ஆங்கிலம்:British Indian Ocean Territory) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான தியேகோ கார்சியாவில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது. + + + + +பப்கெம் + +பப்கெம் (Pubchem) என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம். இத்தரவுக் களத்தையும் முறைகளையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம் (National Center for Biotechnology Information, (NCBI) என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது. இந்நிறுவனம் தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா நிறுவனத்தின் (National Institutes of Health) கீழ் இயங்கும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் என்னும் நிறுவத்தின் ஓர் உறுப்பாகும். பப்கெம் தரவுக்களத்தில் இருந்து மில்லியன் கணக்கான வேதியியல் பொருள்களைப் பற்றியத் தரவுகளை இலவசமாக இணையவழி பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 அணுக்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன. தற்பொழுது 80 வேதியியல் நிறுவனங்கள் பப்கெம்முக்குத் தரவுகளை நல்குகின்றது. 15.7 மில்லியன் வேதியியல் சேர்மங்களைப் பற்றிய செய்துகள் தற்பொழுது உள்ளன. துல்லியமான எண்னை இணைய வழி பார்க்கலாம்]. பலவகையான முறைகளில் தேவையான வேதியியல் பொருளைத் தேடும் வசதியும் உள்ளது. + + + + +பிரித்தானிய கன்னித் தீவுகள் + +பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டல அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தில் தலைந்கரான ரோட் டவுண் டொர்டோலாவில் அமைந்துள்ளது. + +வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். + +வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "Santa Ursula y las Once Mil Vírgenes" ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் "Las Vírgenes" எனச் சுறுக்கப்பட்டது. + +எசுப்பானிய பேரரசு 16 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளுக்கு உரிமைக் கோரியது எனினும் நிரந்தர குடியேற்றங்களை அமைக்கவில்லை. பின்வந்த ஆண்டுகளில் பிரித்தானியா,நெதர்லாந்து, பிரான்ஸ் Snish டென்மார்க் போன்ற நாடுகள் இத்தீவுகளிற்கு உறிமைக் கோரின. இத்தீவுகளில் முதற்குடிகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடையாது எனினும் கிட்டிய செயிண்ட்.குரொயிஸ் தீவில் காணப்பட்ட முதற்குடிகள் முற்றாக அழிக்கப்பட்டது. + +நெதர்லாந்து 1648 ஆம் ஆண்டளவில் டொர்டோலாத்தீவில் நிரந்தர குடியேற்றமொறை அமைத்தனர். 1672 இல் இங்கிலாந்து டொர்டோலாவைக் கைப்பற்றியது, 1680 இல் அனேகாடா, வெர்ஜின் கோர்டாத் தீவுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் 1672 முதல் 1733 வரையான காலப்பகுதியில் டென்மார்க் அருகிலுள்ள செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டது. + +பிரித்தானியர் இத்தீவுகளை அவற்றில் கேந்திர முகியத்துவம் வாய்ந்த இடத்துக்காக வைத்திருந்தாலும் இத்தீவில் வர்த்தாக நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர். இங்கு ஆரம்பிக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகளாக ஆபிரிக்காவிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1800களில் நடுப்படுகுதிவரை இக்கரும்புத் தோட்டங்கள் இத்தீவுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1800களின் நடுப்பகுதிக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்காவில் கரும்பு மற்றும் ஐரோப்பாவில் சினிபீட் வளர்க்கத் தொடங்கியதன் காரணமாகவும் , அடிமைமுறை மண்டலத்துள் நீக்கப்பட்டது காரணமாகவும் பல நாசகார சுறாவளிகள் காரணமாகவும் கரும்பு உற்பத்தி பெருமளவில் குறைந்��ு, இத்தீவு பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டது. + +1917 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளை 25 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக் கொடுத்து வாங்கி அமெரிக்க வெர்ஜின் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்தது. இம்மண்டலத்தின் பெயர் வெர்ஜின் தீவுகள் என்பதேயானாலும் அமெரிக்க மண்லத்திலிருந்து இத்தீவுகளை வேறுபடுத்தும் நோக்கில் 1917 இல் இருந்து இம்மண்டலம் பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2000 ஆண்டுகளில் ஆரம்பம் முதல் போட்ட்ரிகோ தனது கலேப்ரா, வியேகுயிஸ் என்றத் தீவுகளை உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் பொருட்டு எசுப்பானிய வெர்ஜின் தீவுகள் என்று அழைத்து வருகின்றது. + +பிரித்தானிய வெர்ஜின் தீவுகள், காற்றுமுகத்தீவுகளில் ஒரு பகுதியாகவும், செயிண்ட். கிட்ஸ் நெவிசின் ஒரு பகுதியாகவும் தீவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் மூலமாகவும் என்றவாறு பலவராக ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளன. தனியான காலனித்துவம் என்றத் தகுதி 1960இல் வழங்கப்பட்டது மேலும் 1967 இல் சுயாட்சி வழங்கப்பட்டது. தற்போது இத்தீவுகள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவந்த விவசாயத்தை முதன்மைப் படுத்திய பொருளாதார முறையிலிருந்து நீங்கி உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், மற்றும் சேவைகள் போன்றவற்றை முதன்மை படுத்தியுள்ளது. + +பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் சுமார் 60 உப அயணமண்டலத் தீவுக்ளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 20 கி.மீ. நீள்மும் 5 கி.மீ. அகலமும் கொண்ட டொர்டோலா தீவு முதல் மனித வாசத்திற்கு பொருந்தாத சிறிய மணல்மேடுகள் வரையடங்கும். வெர்ஜின் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள இம்மண்டலத்தின் மேற்கில் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே கரிபியக் கடலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பெரும்பாண்மையானத் தீவுகள் எரிமலை மூலம் தோன்றியவையாகும். இவை கரடுமுரணனான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. அனேகாடா புவியியல் ரீதியாக மண்டலத்தின் ஏனைய தீவுகளிலிருந்து வேறுபட்டத் தீவாகும். இது முருகை பாற்களால் ஆனத் தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டத் தீவாகும். +டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் தீவுகளும் காணப்படுகின்றன: + +பிரித்தானிய வெர்ஜி��்தீவுகள் ப்ருவக்காற்றுகளால் கட்டுப்படுத்தப்படும் அயணமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை வேறுபாடு மிகச் சிறியதாகவே காணப்படுகிறது. தலைநகரம் ரோட் டவுணில் கோடைக் காலத்தில் அதி கூடிய வெப்பநிலை 32 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதுகூடிய வெப்பநிலை 29 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. கோடைக் காலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 24 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 21 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. சராசரியாக ஆண்டுக்கு 1150 மி.மி. மழைவீழ்ச்சி கிடைக்கிறது. மிகவும் கூடிய மழைவீழ்ச்சி அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிடைக்கிறது.ஜூன் தொடக்கம் நவன்பர் வரையான சூறாவளிப் பருவத்தில் சில சூறாவளிகள் இத்தீவைத் தாக்குகின்றன. + +நிறைவேற்றதிகாரம் அரசியிடமே தங்கியுள்ளது அவருக்குப் பதிலாக பிரித்தானிய பாராளுமன்றின் ஆலோசனைப்படி அரசியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றார். வெளியுரவு மற்றும் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிய யாப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் படி அரச தலைவர் பிரதமராவார் இதற்கு முன்னர் இப்பதவி முதலமைச்சர் என் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு சபையையும் 13 ஆசனங்களையும் கொண்ட சட்டவாக்கக் கழக முறை உள்ளது. தற்போதைய ஆளுனர் டேவிட் பியரே ஆவார், மேலும் தற்போதைய பிரதமர் ற்ல்ஃப் டி. ஓநீள் ஆவார். + +மண்டலம் 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இவை நிர்வாக அலகுகளாக தொழிற்படுவதைவிட திட்டமிடல் அலகுகளாகவே காணப்படுகின்றன. + +ஏனையத் தீவுகள் என்பதில் மீதமுள்ள எல்லாத்தீவுகளும் அடங்குவதில்லை மாறாக டொர்டோலாவுக்கு தெற்கேயும் வெர்ஜின் கோர்டாவுக்கு தென்மேற்காகவும் காணப்படும் ஜிஞ்சர் தீவு,பீட்டர் தீவு,கூப்பர் தீவு,சால்ட் தீவுகள் மாத்திரமே இதில் அடக்கப்பட்டுள்ளன. ஏனய சிறிய தீவுகள் அவற்றுக்கு அண்மையில் காணப்படும் முக்கிய தீவோடு இணைத்து பிரிக்கப்பட்டுள்ளன. + +இங்கு 6 குடி மதிப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன: + +குடிப்பதிவு மாவட்டங்கள் C, D, E என்பன டொர்டோலா மாவடத்தில் அமைந்துள்ளன. + + +பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் சிறந்த பொருளாதாரதைக் கொண்டு விளங்குகிறது. ஆள்வீத வருமானம் 38,500 அமெரிக்க டொலராகும் (2004 மதிப்பீடு). + +உல்லாசப் பிரயாணம் மற்றும் சேவைகள் துறை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளின் பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய காரணிகளாகும். அதிகளவான மக்கள் உல்லாசப்பிரயணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சேவைகள் துறை அதிக வருவாய் பெற்றுத்தரும் துறையாக உள்ளது. + +உல்லாசப்பிரயாணத்துறை மணடலத்தின் வருவாயில் 45 விழுக்காட்டை ஈட்டிக் கொடுகிறது. இந்த தீவுகள் ஐக்கிய அமெரிக்க குடிகளின் பிரசித்தமான உல்லாசப்பிரயான கழிப்பிடமாகும். சுமார் 350,000 உல்லாசப்பிரயாணிகள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இங்கு வருவதாக 1997 இல் மதிப்பிடப்பட்டது. இங்குள்ள வெள்ளை மணல் கடற்கரைகளும் முருகை பாறைகளும் முக்கிய உல்லாசப்பிராயாண கவர்ச்சிகளாகும். + +வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவு காரணமாகவும் பெருமளவான வருவாய் ஈட்டப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 550,000 நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளன. 2000 KPMG அறிக்கையின் படி உலகின் கரை கடந்த நிறுவனங்களில் 41% மானவை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. + +விவசாயம் மண்டலத்தின் மொத்த வருவாயில் ஒரு சிறிய பகுதியையே ஈட்டிக் கொடுக்கிறது. விவசாய உற்பத்திகளில் பழங்கள், கரும்பு, மரக்கரி, கால்நடை என்பனவும் ரம் வடிக்கட்டலும் அடங்கும். + +அமெரிக்க டொலர் 1959 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் புழக்கத்தில் உள்ளது. + +பிரித்தானிய வெர்ஜிந் தீவுகள் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான முக்கிய வழியாக விளங்குகிறது. பொதுநலவாய அலுவலக அறிக்கையின் படி போதைப் பொருள் கடத்தல் வெர்ஜின் தீவுகளின் எதிர்க்காலத்துக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். + +2003 ஆம் ஆண்டு இம்மண்டலத்தின் மொத்த மக்கள்தொகை 21,730 ஆகும். இதில் 83% இத்தீவிற்க்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆபிரிக்க மக்களுக்கும் ஐரோப்பியருக்கும் பிறந்த ஆபிரிக்க கரிபியராவர். ஏனைய இனத்தவர்கள் பிரித்தானிய ஐரோப்பிய தொடக்கத்தைக் கொண்டவர்களாவர். + +1999 மக்கள்தொகை கணிப்பீடு: + +இம்மண்டலத்தில் மக்கள் மறுசீரமைப்பு கிறிஸ்தவ சம்யத்தைப் பின்பற்றுபவர்களாவர். மெதடிஸ்ட்,(33%) அங்கிலிக்கன் (17%) உரோமன் கத்தோலிக்கம் (10%). + +மண்டலம் சிறிய தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளப்படியால் போக்குவரத்துவசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகக் காண���்படுகின்றன. இங்கு மொத்தம் 113 கி.மீ. நீளமான பாதைகள் காணப்படுகின்றன. முக்கிய விமான நிலையம் ( பீஃப் விமானநிலையம் என்வும் அறியப்படும் டெரன்ஸ் பி. லெஸ்டோம் பன்நாட்டு விமான நிலையம்) டொர்டோலா தீவின் கிழக்கில் அமைந்துள்ள பீஃப் தீவில் அமைந்துள்ளது. வெர்ஜின் கோர்டா, அனேகோடா தீவுகளிலும் சிறிய விமான நிலையங்கள் காணப்படுகின்றன. முக்கிய துறைமுகம் ரோட் டவுணில் அமைந்துள்ளது. + +பிரித்தானிய வெர்ஜின் திவுகளின் பாரம்பரிய இசைவடிவம் பங்கி என அழைக்கப்படுகிறது. ஆபிரிக்க ஐரோப்பிய இசை வடிவங்களின் இணைவு காரணமாக பங்கி இசை தனக்கேயுரிய சிறப்பான ஒலிகளைக் கொண்டுள்ளது. இது பாரம்பரிய நாட்டுக் கூத்து, மற்றும் வரலாறு மக்களிடையே கொண்டுச் செல்லப்படும் ஊடகமாக விளங்குகிறது. பங்கி இசை பாடசலைக் கல்வித் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விசையை வாசிக்கும் இசைக்குழுக்கள் ஸ்கெரெச் பாண்ட் என அழைக்கப்படுகின்றன. + +அமெரிக்க வெர்ஜின் தீவுகள் + + + + + + + + +கோன்ஸ்கோவோலா + +கோன்ஸ்கோவோலா என்பது போலந்து நாட்டின் தென்பகுதியில் பாயும் குரோவ்க்கா ஆற்றங்கரையில் புலாவி, லூபிலின் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓர் ஊர். இவ் ஊரில் 2004 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2188 மக்கள் வாழ்கிறார்கள். இவ் ஊரின் பெயரில் உள்ள வோலா (Wola) என்பது ஊர், சிற்றூர் என்னும் பொருள் கொண்டது. ஊர்ப்பெயரை நேரடியாக மொழிபெயர்த்தால் குதிரையின் விருப்பம் அல்லது குதிரையின் உள்ள உறுதி என்று பொருள்படுமாம். "யான் கொனினா" அல்லது "யான் கோனிஸ்கி" (Jan Koniński) என்னும் ஒருவருக்குச் சொந்தமான ஊர் (வோலா) என்பதால் கோன்ஸ்கோவோலா எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். இவ்வூரின் பெயர் 1442ல் பதிவாகியுள்ளது. முன்னர் இவ்வூரின் பெயர் விட்டோவ்ஸ்கா வோலா என்பதாகும். + +ஹென்றிக் சியென்க்கீவிக்ஸ், என்னும் நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் தன்னுடைய "நெருப்புடனும் வாளுடனும்" (With Fire and Sword) என்னும் வரலாற்றுப் புதினத்தில் இவ்வூரைப்பற்றி ஒரு குறிப்பு தந்துள்ளார். + + + + + +அவெஸ்தான் மொழி + +அவெஸ்தான் மொழி, கிழக்கத்திய பழைய ஈரானிய மொழியாகும். ஸோரோவாஸ்த்திரிய சமய நூல்களும் (அவெஸ்தாக்கள்), சுலோகங்களும் இம் மொழியிலேயே எ��ுதப்பட்டன. இம் மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியத் துணைக் குழுவைச் சேர்ந்தது. அவெஸ்தான், பழைய பாரசீக மொழியைப்போல் மிகப் பழைய ஈரானிய மொழிகளுள் ஒன்று. அவெஸ்தான் மொழியை அவெஸ்தான் எழுத்துக்களுடன் இணைத்துக் குழம்பக் கூடாது. அவெஸ்தான் எழுத்துக்கள் பிற்பட்ட காலத்தவை. + +அவெஸ்தாக்களில் காணும் இம்மொழி இரண்டு வடிவங்களாக உள்ளது: + + + + + +மராந்தாசியே + +மராந்தாசியே ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும். இது இதன் பெரிய மாச்சத்து உள்ள கிழங்குகளுக்காகப் பெயர் பெற்றது. அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து இது ஆபிரிக்காவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது. எனினும், ஆபிரிக்கா இதன் பரம்பலின் மையப் பகுதியில் இல்லை. இக் குடும்பத்திலுள்ள பெரிதும் அறியப்பட்ட இனம் அரோரூட் "(மராந்தா அருண்டினேசியே)" ஆகும். கரிபியப் பகுதியைச் சேர்ந்த இத் தாவரம், இதன், இலகுவில் சமிபாடடையக் கூடிய மாப்பொருளுக்காகப் பயிரிடப்படுகின்றது. கரிபியனின் சில பகுதிகள், ஆஸ்திரலேசியா, கீழ்-சஹார ஆபிரிக்கா ஆகிய பகுதிகள் இது பயிரிடப்படும் சில இடங்களாகும். + + + + +லியோனிடு ஹுர்விக்ஸ் + +லியோனிடு ஹுர்விக்ஸ் ("Leonid Hurwicz", ஆகஸ்ட் 21, 1917 - ஜூன் 24, 2008) ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை பேராசிரியர் எரிக் மாஸ்க்கின், பேராசிரியர் ரோஜர் மையெர்சன் ஆகியோருடன் சேர்ந்து வென்றார். பேராசிரியர் ஹூர்விக்ஸ் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே அகவை அதிகம் உள்ளவர் இவர்தான். தனது 90 ஆவது அகவையில் நோப்ல பரிசு பெற்றுள்ளார். + +இவர் பொருளியல், அரசியலறிவியல், குமுக அறிவியல் (சமூக அறிவியல்) ஆகிய துறைகளில் பயன்படும் முடிவுக்கேற்ற திட்டவகுதி (மெக்கானிசம் டிசைன்) என்னும் கருத்தை முன்வைத்தவர் என்றும், கேம் தியரி என்னும் மிகைமப் பகிர்வுக் கொள்கையை பொருளியலில் பயன்படுத்திய முன்னோடி என்றும் கருதப்படுகின்றார். இவருடைய கருத்தை எரிக் மாஸ்க்கின், ரோஜர் மையெர்சன் ஆகியோர் இன்னும் வலுவூட்டி, நடைமுறைச் சந்தைச் சூழல்களுக்கும் பயனாகும்படி வளர்த்தெடுத்தனர். + +ஹூர்விக்ஸ் (Hurwicz) 1917ல் முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் போலந்தில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். பிறந்தபின் ரஷ்யாவுக்குக் குடிபெயர்ந்து சென்று பின்னர் மீண்டும் போலந்தில் வார்சா நகரத்திற்குத் திரும்ப நேர்ந்தது. 1938ல் வார்சா பல்கலைக்கழகத்தில் LL.M பட்டம் பெற்றார். 1939ல் இலண்டன் பொருளியல் கல்லூரியில் படித்து பின்னர் ஜெனிவா நகரத்திற்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் துவங்கிய பின்னர், அவர் போர்த்துகலுக்குச் சென்றார். பின்னர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல நேந்தது. அங்கு ஹார்வர்டு பல்கலைகழகத்திலும் சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர்ந்தார். + + + + +எரிக் மாஸ்க்கின் + +எரிக் ஸ்டார்க் மாஸ்க்கின் (Eric Stark Maskin) (பிறப்பு: திசம்பர் 12, 1950, நியூ யார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து வென்றார். மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வழிகோலியவர்கள் என்பதால் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.("for having laid the foundations of mechanism design theory.") + +மார்ஸ்க்கின் 1950ல் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஏ. பி. பட்டமும், முனைவர் ஆய்வுப்பட்டமும் (பி.ஹெச்.டி, Ph.D) பெற்றார். பின்னர் 1976ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுனராகச் சென்றார். தற்பொழுது பிரின்ஸ்ட்டனில் உள்ள இன்ஸ்ட்டிட்யூட் ஃவார் அட்வான்ஸ்டு ஸ்டடி (உயர்கல்விக்கான கல்லூரி) என்னும் கல்லூரியில் குமுக அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஓ ஹிர்ஷ்மன் பேராசிரியராக உள்ளார். + + + + +சிறிய அண்டிலிசு + +சிறிய அண்டிலுசு அல்லது கரிபீஸ் +அண்டிலுசுவின் ஒரு பகுதியாகும். சிறிய அண்டிலிசு, பெரிய அண்டிலிசு, பகாமாசு என்பவை கூட்டாக மேற்கிந்தியத் தீவுகளை ஆக்குகினறன. சிறிய அண்டிலிசில் காணப்படும் தீவுகள் நீண்ட எரிமலை வில்லை ஆக்குகின்றன, இவற்றுள் பெரும்பாலான தீவுகள் கரிபியக் கடலின் கிழக்கு எல்லையில் அட்லாண்டிக் பெருங்கடலுடானான மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. சிலத் தீவுகள் தென் அமெரிக்காவிற்கு சற்றே வடக்கே அமைந்துள்ளன. சிறிய அண்டிலுசு க��ிபிய புவியோட்டை ஒத்துப் போகின்றது இத்தீவுகளில் பெரும்பான்மையானவை ஒன்று அல்லது ஒன்றுக்க்கு மேற்பட்ட புவியோடுகள் கரிபிய புவியோட்டுக்கு கீழாக நகர்வதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும். + +சிறிய அண்டிலிசின் தீவுக் கூட்டங்கள் தெற்கே காணப்படும் காற்றுமுகத் தீவுகள் மற்றும் வடக்கே காணப்படும் காற்றெதிர்த் தீவுகள் என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து பருவக்காற்றுகளின் உதவியுடன் இங்கு வந்த ஆரம்ப கப்பல்கள் காற்றெதிர் தீவுகளை விட அதிகமாக காற்றுமுகத் தீவுகளை அடைந்தமை இப்பெயரீடுகளுக்க்கு காரணமாக அமைந்தது. வெனிசூலாவின் கரையருகே காணப்படும் தீவுகள், காற்றெதிர் தீவுகளில் காணப்படும் ஒரு தீவு என இரண்டாகப் பிர்க்கப்பட்டுள்ள நெதர்லாந்து அண்டிலுசும் சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாகும். + +முக்கியத் தீவுகள்: + +காற்றெதிர்த் தீவுகள்: + +செயிண்ட் தாமஸ், செயிண்ட் தாமஸ்,செயிண்ட் ஜான், செயிண்ட் க்ரோக்ஸ். + + +காற்றுமுகத் தீவுகள்: + + +காற்றெதிர் அண்டிலிசு – வெனிசுவேலாக் கரைக்கு வடக்கேயுள்ள தீவுகள் (மேற்கிலிருந்து கிழக்காக): + + + + + + +அமெரிக்க கன்னித் தீவுகள் + +அமெரிக்கக் கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் ("United States Virgin Islands") கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர்த் தீவையும், மேலும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). 2000 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர். + +வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 ஆண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேற்றப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அர���வாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். + +வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ். இவர் 1493 இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்" ("Santa Ursula y las Once Mil Vírgenes") எனப் பெயரிட்டார். பின்னர் "Las Vírgenes" எனச் சுருக்கப்பட்டது. அடுத்து வந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகளான ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்சு, தென்மார்க்கு போன்றவை இத்தீவுகளின் ஆட்சியைக் மாறிமாறிக் கொண்டிருந்தன. + +டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி 1672 இல் சென் தோமஸ் தீவிலும் 1694 இல் சென் ஜோன் தீவிலும் குடியேற்றங்களை அமைத்தது. 1733 இல் சென் குரொயிஸ் தீவை பிரான்சிடமிருந்து விலைக் கொடுத்து வாங்கியது. 1754 ஆம் ஆண்டு இத்தீவுகள் டென்மார்க் அரச குடியேற்ற நாடாகக் கொள்ளப்பட்டது. இங்கு விளைவிக்கப்பட்ட கரும்பு காரணாமாக 18ஆம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அடிமை முறை ஒழிக்கப்படும் வரை பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. + +டென்மார்க் ஆட்சியின் எஞ்சிய காலப்பகுதியில் இத்தீவுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு, தீவின் செலவுகளைப் பேணுவதற்காக டென்மார்க்கிலிருந்து மேலதிக நிதி கொண்டுவரப்பட்டது. 1867 இல் இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. தீவுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன எனினும் அவை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. தீவுகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் இரண்டாவது சட்டமூலம் டென்மார்க் நாடாளுமன்றத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது. + +முதலாம் உலகப் போரின் போது இத்தீவுகள் செருமனியால் நீர்மூழ்கி கப்பல் தளமாக பயன்படும் நோக்கில் கைப்பற்றப்படலாம் எனக் கருதியதால் மீண்டும் இத்தீவுகளை வாங்கும் நோக்கில் டென்மார்க்கை அணுகியது. சில மாதங்களாக நடைபெற்ற பேரங்களின் பின்னர் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இத்தீவினை விற்பனை செய்ய டென்மார்க் அரசர் முடிவு செய்தார். தீவுகளின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் விற்பனை செய்யாவிடின் அமெரிக்கா தீவ��களைக் கைப்பற்றிக் கொள்ளும் என்ற அச்சம் இம்முடிவுக்கு காரணமாக கொள்ளப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடைப்பெற்ற டென்மார்க் மேற்கிந்தியத் தீவுகளின் விற்பனை மக்கள் கருத்துக் கணிப்பில் விற்பனைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. இதன் படி 1917 ஜனவரி 17 இல் விற்பனைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 1917 மார்ச் 31 இல் அமெரிக்கா இத்தீவுகளைப் பெற்றுக் கொண்டது. 1927 ஆமாண்டு இத்தீவில் வசித்தவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. + +சென் தோமஸ் தீவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய தீவான தண்ணீர்த் தீவு இவ்விற்பனையில் உள்ளடக்கப் படவில்லை. 1944 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவால் 10,000 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கப்படும் வரை இத்தீவு டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி வசமிருந்தது. ஆரம்பத்தில் இத்தீவு அமெரிக்க கூட்டாட்சி அரசால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இத்தீவின் 50 ஏக்கர் நிலம் கன்னித்தீவுகள் மண்டலத்துக்கு வழங்கப்பட்டது. மீதமிருந்த 200 ஏக்கர் நிலமும் 2005 ஆம் ஆண்டு 10 அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்தின் மூலம் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்திலிருந்து இத்தீவு கொள்வனவுச் செய்யப்பட்டது. + +அமெரிக்க வெர்ஜின் தீவுகள் கரிபியக் கடலிலும் அத்திலாந்திக் பெருங்கடலிலும் போட்ட ரிக்கோவிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தில் நான்கு முக்கிய தீவுகள் அமைந்துள்ளன: சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ், தண்ணீர்த் தீவு இவற்றுக்கு மேலதிகமாக பல சிறிய தீவுகளையும் மணல்மேடுகளையும் கொண்டுள்ளது. + +அமெரிக்க கன்னித் தீவுகள் அதன் வெள்ளை கடற்கரைகளுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கும் பிரசித்தமானதாகும். செயிண்ட். தோமஸ் தீவு அடங்கலாக பெரும்பான்மையான தீவுகள் எரிமலை மூலம் தோன்றியத் தீவுகளாகக் காணப்படுகின்றன. உயரமான மலை முகடான கிரவுண் மலை (474 மீட்டர்) செயிண்ட். தோமஸ் தீவில் காணப்படுகிறது. மண்டலத்தின் மிகப்பெரியத் தீவான செயிண்ட். குரொயிஸ் மண்டலத்தின் தெற்கில் அமைந்துள்ளதோடு இது தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. செயிண்ட். ஜோன் தீவின் பரப்பில் அரைவாசிக்கும் மேலான பகுதியும் அசெல் தீவின் முழுமையும் பல ஏக்கர் முருகைப் பாறைகளும் அமெரிக்க வனத்துறை சேவைகளுக்கு சொந்தமானதாகும். + +அமெரிக்க கன்னித்தீவுகள் வட அமெரிக்கப் புவியோட்டினதும் கரிபிய புவியோட்டினதும் எல்லையில் காணப்படுகிறது. இங்கு நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் காணப்படுகின்றன. + +அமெரிக்கக் கன்னித் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவிற்குரிய மண்டலமாகும். இம்மண்டலத்தின் குடிகள் சட்டத்தின்படி அமெரிக்கக் குடிகளாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் இம்மண்டலத்தின் குடிகள் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் குடியேறும் போது அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமைப் பெறுகின்றனர். + +இங்கு கன்னித்தீவுகளின் சனநாயகக் கட்சி, கன்னித்தீவுகளின் குடியரசுக் கட்சி, மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் இயங்கி வருகின்றன. மேலதிகமாக வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தல்களில் போட்டியிடுகின்றார்கள். + +அமெரிக்க கன்னித் தீவுகளிலிருந்து ஒரு ஒரு பிரதிநிதியை அமெரிக்க காங்கிரசுக்கு தெரிவு செய்கிறது. ஆனால் இப்பிரதிநிதியால் குழுநிலை வாக்கெடுப்பில் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும். காங்கிரஸ் பொது வாகெடுப்பில் கலந்துக் கொள்ள முடியாது. + +மண்டல மட்டத்தில் 15 சட்டவாக்கக் கழக உறுப்பினர்கள் ( செயிண்ட். குரொயிஸ் மாவட்டதிலிருந்து 7 பேர், செயிண்ட். தோமஸ் மற்றும் செயிண்ட். ஜோன் மாவட்டங்களிலிருந்து 7 பேர் மற்றும் செயிண்ட். ஜோன் மாவட்டதிலிருந்து 1 சிறப்புப் பிரதிநிதி) ஓரவை சட்டவாக்கக் கழகத்துக்கு 4 ஆண்டு பதவிக் காலத்துக்குத் தெரிவுச் செய்யப்படுகின்றனர். 1970 ஆம் ஆண்டிலிருந்து நான்காண்டுகளுக்கு ஒரு முறை மண்டல ஆளுனர் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்து வந்துள்ளது. 1970க்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஆளுனர்களை நியமித்து வந்தார். + +அமெரிக்க கன்னித்தீவுகள் மாவட்ட, உயர், உச்ச நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம் சட்ட ஒழுங்குக்குப் பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்றம் அமெரிக்க கன்னித் தீவுகளின் நீதிக்கு பொறுப்பாக உள்ளதோடு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திலிருந்து வரும் வினவல்களை விசாரிக்க பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுனராலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அதிபராலும் நியமிக்கப் படுகின்றனர். + +ஐக்கிய அமெரிக்காவால் ��த்தீவுகளுக்கு விடுதலை அல்லது மாநில அந்தஸ்த்து வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புகள் மக்கள் ஆதரவைப் பெறாத நிலையில் இத்தீவுகள் தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்காவின் மண்டலாமாக இருக்கும். + +இத்தீவுகளுக்கு விடுதலை அளிக்க அமெரிக்கா முன்வந்ததைக் கருதாமல் ஐக்கிய நாடுகள் அவையின் அடிமை நாடுகள் ஒழிப்புக் குழு அமெரிக்க கன்னித் தீவுகளை சுயாட்சியற்ற மண்டலங்களாக பட்டியலிட்டுள்ளது. + +சுற்றுலாத் தொழிற்துறை இம்மண்டலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தீவுகள் ஆண்டுக்கு அண்ணளவாக 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது. இவர்களில் பெரும்பாலோனோர் சுற்றுலாக் கப்பல்கள் மூலமே இங்கு வருகின்றனர். + +உற்பத்தித் தொழிற்துறையில் பெற்றோலியம் சுத்திகரிப்பு, ஆடை உற்பத்தி, இலத்திரனியல் உற்பத்தி, ரம் வடிக்கட்டல், மருந்து உற்பத்தி, கடிகார உற்பத்தி போன்றவை முக்கியமானவையாகும். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் இத்துறையும் வளர்ந்து வருகின்றது. விவசாயத்துறை சிறியதாகும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய சுத்திகரிப்பகங்களில் ஒன்று செயிண்ட். குரோயிக்ஸ் தீவில் அமைந்துள்ளது. + +இத்தீவுகள் பகலொளி சேமிப்பு நேரத்தில் பங்குக் கொள்வதில்லை. ஐக்கிய அமெரிக்கா சீர் நேரத்தில் இருக்கும்போது அமெரிக்க கன்னித் தீவுகள் 1 மணித்தியாலம் முன்னால் இருக்கும். ஐக்கிய அமெரிக்கா பகலொளி சேமிப்பு நேரத்தில் இருக்கும்போது ஐக்கிய அமெரிக்காவும் அமெரிக்க கன்னித் தீவுகளும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளன. + +இத்தீவுகள் அயணமண்டல புயல்களுக்கும் சூறாவளிகளுக்கும் ஆளாகின்றன. அமெரிக்க கன்னித்தீவுகள், பாதையில் வாகனங்கள் இடதுபுறமாக பயணிக்கும் வழக்கு கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் ஒரே பகுதியாகும். இருப்பினும் இங்க்குள்ள வாகனங்கள் சாரதி ஆசனத்தை இடதுபுறம் கொண்டவையாக விளங்குகின்றன. + +2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணிப்பீட்டின் படி இங்கு மொத்தம் 108,612 பேர் வசிக்கின்றனர். இவர்களுள் 76.19% கருப்பினத்தவர் அல்லது ஆபிரிக்க வம்சாவழியினர், 13.09% வெள்ளையினத்தவர், 7,23% ஏனைய இனத்தவர், 3.49% கலப்பினத்தவர் ஆவர். எந்த இனத்திலு��் இலத்தீனோ அல்லது இசுப்பானிய மரபினர் 13.99% ஆக காணப்பட்டது. + +இங்கு 40,648 வீடுகள் காணப்பட்டன, அவற்றுள் 34,7% வீடுகளில் 18 வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் காணப்பட்டன, 33.2 சதவீதமான வீடுகளில் மணமுடித்த தம்பதியினர் மட்டும் வசித்தனர், 24.9 சதவீதமான வீடுகள் பெண் குடும்ப தலைவியைக் கொண்டிருந்தன, மேலும் 34.5 சதவீதமான வீடுகள் குடும்பங்களைக் கொண்டிருக்கவில்லை. எல்லா வீடுகளினது 30.2 சதவீதமான வீடுகளில் தனிநபர்களே வசித்து வந்தனர். 6.3 சதவீதம்மன வீடுகள் 65 வயதிற்கு மேற்பட்டு தனியாக வாழும் நபர்களைக் கொண்டிருந்தது. சராசரி வீட்டில் 2.64 பேர் வசிப்பதோடு ஒரு குடும்பத்தில் சராசரியாக 3.34 பேர் வசிக்கின்றனர். + +இம்மண்டலத்தின் மக்கள் தொகையில் 31.6 சதவீதமானோர் 18 வயதிலும் குறைவானவர்களாவர், 8 சதவீதமானோர் 18 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாவர், 27.1 சதவீதமானோர் 25 வயதுக்கும் 44 வயதுக்குட்பட்டவர்களாவர், 24.9 சதவீதமானோர் 44 தொடக்கம் 64 வயதுக்குட்பட்டவர்களாவர், 8.4 சதவீதமானோர் 64 வயதை விட கூடியவர்களாவர். இடைய வயது 33 ஆகும். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 91.4 ஆண்களும், 18வயதும் அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 87.7 ஆண்கள் காணப்படுகின்றனர். ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சிவீதம் -0.12% ஆகும். + +வீடு ஒன்றின் தலா ஆண்டு வருமானம் $24,704 அமெரிக்க டொலராகவும் குடும்பமொன்றின் தலா ஆண்டு வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. ஆண்களி சராசரி வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் பெண்களில் அது $28,309 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. 28.7 சதவீமான குடும்பங்களும் 32.5 சதவீதமான மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள். + +ஐக்கிய அமெரிக்க கன்னித் தீவுகள் இரண்டு மாவட்டங்களாகவும் 20 துணை மாவட்டங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப் படுகிறது. மாவட்டங்களும் துணை மாவட்டங்களும் பின்வறுமாறு: + +
+ + + + + + +
+ +உலக வறுமை ஒழிப்பு நாள் + +உலக வறுமை ஒழிப்பு நாள் ("International Day for the Eradication of Poverty") ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ��ற்றுக்கொண்டது. +உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். + + + + + + +அலாஸ்கா நாள் + +அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867 இல் இரசியாவிடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது. +அலாஸ்கா நாள் மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் முக்கிய கொண்டாட்டங்கள் சித்கா நகரில் மட்டுமே நடைபெறுகின்றன. + + + + +படுகர் + +படுகர் ("Badagas" அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். +படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது. + +படுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் +படுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது. +நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன. +படுகர்களில் உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய எனும் பிரிவுகள் உள்ளன + +மலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அட��� 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர். + +இவர்கள் கர்நாடக மன்னர் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, மைசூர் பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர் கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளனர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன் நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர். + +நீலகிரிமலைப்பகுதிகளில் ஆதிகாலம் முதல் வாழும் தோடர்கள் போன்றோ அல்லது காடர்கள் போன்றோ அல்லது இருளர்கள் போன்றோ, படுகர்கள் பழங்குடிகள் அல்ல. மேலும் படுகர்கள் அடர்ந்த காடுகளிலும் குடிசை போட்டு பழங்குடியினர் வாழ்க்கை வாழ்வதில்லை. படுகர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். + +படுகர்களின் வீடு ஒரு மாடியுடன், வீட்டைச் சுற்றிலும் சிறிது இடம் விட்டு மண், கருங்கல், செங்கலால் கட்டப்பட்டிருக்கும். + +மற்ற பழங்குடியினரை விட படுகர்கள் மரணச்சடங்கை விமரிசையாகக் கொண்டாடுவர். முக்கியமான சடங்காக இறந்தவரின் பாவத்தைப் போக்க ஒரு கன்றுக்குட்டியை மக்கள் பாவப்பட்டது என்று முழக்கமிட, அது இறந்தவரின் பாவத்தைச் சுமந்து செல்வதாகக் கருதி மந்திரித்து விரட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். + +காலனீய ஆதிக்கத்திற்கு முன்பு வரை உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் நம்பியிருந்த படுகர்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கல் உடைத்தல், சாலை போடுதல், மரவேலைகள் முதலானவற்றில் பயிற்சி பெற்று தொழிலில் முன்னேறினர். + +படக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். + +1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் படுகர்கள் பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். 1941 ஆம் ஆண்டு உலகப்போர் ��ாரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவில் 1950ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருந்து காரணம் குறிப்பிடப்படாமல் நீக்கப்பட்டிருந்தனர். 1970ஆம் ஆண்டு காலகட்ட அளவிலேயே படுகர் மக்கள் இதனை உணர்ந்து மீண்டும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராட ஆரம்பித்தனர். + +2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர், பிரதம மந்திரிக்கு படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பரிந்துரைத்துக் கடிதம் எழுதியிருந்தார். + +படுகர்கள் கர்நாடகா சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியல் பழங்குடி மக்களுக்கான (Scheduled Tribes) சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் படுக இன மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்தாலும் அவர்களிடம் “பட்டியலிட்ட பழங்குடியினருக்கு (Seheduled Tribes) உரிய எந்த அடையாளமும் காணவில்லை. நடுவன் அரசு வகுத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான விதிகளின்படி நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, அவர்கள் கேட்கும் தகுதி பொருந்தி வராத காரணத்தினால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு “பட்டியலிட்ட பழங்குடியினர்”(Scheduled Tribes) என்ற தகுதி வழங்கவில்லை. + + + + + +ஆன் என்ரைட் + +ஆன் என்ரைட் (Anne Enright) (பிறப்பு: 1962 , டப்லின் அயர்லாந்து) அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றா. இவர் பல கட்டுரைகளும், குறுங் கதைகளும், நான்கு புதினங்களும் ஒரு புதினமல்லாப் பொதுநூலும் எழுதியுள்ளார். + +ஆன் என்ரைட் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் விக்டோரியாவில் உள்ள லெஸ்ட்டர் பியர்சன் யுனைட்டடு வோர்ல்டு காலேஜ் ஆவ் தெ பசிபிக் கல்வி நிறுவனத்தில் படித்து, பின்னர் டப்லினில் உள்ள டிரினிட்டி காலேஜ் டப்லினில் படித்தார். அதன் பின், ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவருடைய ஆசிரியர்களாக "ஆஞ்செலா கார்ட்டர்", "மால்க்கம் பிராட்பரி" இருந்தனர் ஆறு ஆண்டுகளாக டப்லினில் ரேடியோ டைலிவிஸ் ஐரியான் என்னும் தொல���க்காட்சிப் பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார் 1993 ஆம் ஆண்டுமுதல் முழுநேர எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார். + +இவருடைய எழுத்துக்களும் கட்டுரைகளும் பல புகழ்பெற்ற ஆங்கில இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றுள் த நியூ யார்க்கர் (The New Yorker), த பாரிஸ் ரிவ்யூ (The Paris Review), மற்றும் கிராண்ட்டா (Granta) ஆகியன அடங்கும். இவை பின்னர் த போர்ட்டபில் வர்ஜின் என்னும் தொகுப்பாக 1991 ல் வெளியாகியது. இது ஐரிஷ் இலக்கியத்திற்கான ரூனி பரிசைப் பெற்றது இவருடைய புதினங்கள்: "த விக் மை பாதர் வோர்" ("என் தந்தை அணிந்த பொய்முடி", The Wig My Father Wore), "வாட் ஆர் யூ லைக்" ("நீ எப்படிப் பட்டவன்(/ள்)?", What Are You Like?) , "த பிளஷர் ஆவ் எலிசா லிஞ்ச்" ("எலிசா லிஞ்ச்சின் இனபம்," The Pleasure of Eliza Lynch), "த காதரிங்" ("கூட்டம்", The Gathering) (2007) குறிப்பிடத்தக்கன. நீ எப்படிப்பட்டவன்(/ள்) என்னும் புதினம் ராயல் சொசைட்டி என்க்கோர் பரிசு பெற்றது. இவருடைய புதினமல்லா பொது நூல் 2005ல் எழுதிய தாய்மையைப் பற்றிய, "மேக்கிங் பேபீஸ்" (குழந்தைகள் ஆக்குதல், Making Babies) என்பதாகும். + +இவர் BBC ரேடியோ 4 க்கு வழக்கமாக பங்களிப்பவர். அக்டோபர் 16, 2007 ஆம் நாளன்று "த காதரிங்" ("கூட்டம்") என்னும் புதினத்திற்காக மான் புக்கர் பரிசு பெற்றார். இப்பரிசின் மதிப்பு £50,000 + +இவருடைய கணவர் மார்ட்டின் மர்ஃவி என்னும் நடிகர். இவர் இரு குழந்தைகளுடன் விக்லோ மாவட்டத்தில் பிரே என்னும் ஊரில் வாழ்கிறார். + + + + + + +கடையிற் சுவாமிகள் + +கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். +இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார். + +இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார். + +இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார். + +இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும். + +வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். +கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார். + +யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது. + + + + + + + +ஆங்கிலிக்க ஒன்றியம் + +ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம் (Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகப்பெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதப்பிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிற்கு பிராந்திய பேராயர்கள் தலைமையேற்கின்றனர். மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன. + +77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும். + +தமிழ் நாடு உட்பட தென் இந்திய மாநிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன. + + + + +பரமகுரு சுவாமிகள் + +இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கோவணமும் பச்சை நிறப்போர்வையும் அணிந்தவராக இவர் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. + +இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று வந்த இவர் இந்தியாவின் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாமி நிரஞ்சனானந்தர் என்ற பெயரும் இவருக்கு இந்தியாவிலேயே இடப்பட்டது. குழந்தைவேற் சுவாமிகளுக்கு அறிவுரை தருவதற்காக கடையிற் சுவாமிகள் இவரை கீரிமலைக்கு வரப்பண்ணியதாக கூறுவர். குழந்தைவேற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகளுக்கும் கடையிற் சுவாமிகளுக்கும் பணிவிடை செய்துவந்துள்ளார். + +மருதனார்மடம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அக்காலங்களில் பாசிப்பயற்றினை அவித்துக் கஞ்சியாகக் குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பரமகுரு சுவாமிகளின் பெயரால் காங்கேசன்துறையிலும் கீரிமலையிலும் மடங்கள் கட்டப்பட்டன. சேணிய தெருவில் இருந்த சின்னத்தம்பி என்பவரே இவ்விரு மடங்களையும் கட்டுவித்தவராவார். + +பரமகுரு சுவாமிகளின் சமாதி விழா 1904ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது. இவரது சமாதி அமைக்கும் பணிகளை சேர். அருணாசலம் முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார். + + + + + +மைதிலி மொழி + +மைதிலி மொழி (मैथिली) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், இந்திய-ஈரானிய மொழிகள் குழுவின் துணைக் குழுவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான பீஹாரிலும், நேபாளத்தின் "தேரை" (Terai) பகுதியிலும் பேசப்படுகின்றது. மொழியியலாளர் இதனை ஒரு கிழக்கு இந்திய மொழியாகக் கருதுவதால், மத்திய இந்திய மொழியான ஹிந்தி மொழியில் இருந்தும் இது வேறுபட்டது. இது ஹிந்தி, வங்காளம் ஆகிய இரு மொழிகளினதுமே கிளை மொழியாகக் கருதப்பட்டு வந்தது. 2003 ல் மைதிலி மொழி, இந்தியாவில் தனி மொழித் தகுதியைப் பெற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இதற்கு அலுவல் மொழித் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான இயக்கத்தின் காரணமாக மைதிலி மொழிக்கு 2003 இல் இத் தகுதி வழங்கப்பட்டது. + +மைதிலி மொழி மரபு வழியாக மைதிலி எழுத்து முறையில் எழுதப்பட்டு வந்தது. வங்காள மொழி எழுத்துக்களை ஓரளவுக்கு ஒத்த இவ்வெழுத்தை, "திர்ஹுத்தா" அல்லது "மிதிலக்ஷர்" என்றும் குறிப்பிடுவது உண்டு. "கைத்தி" எழுத்து முறையிலும் இது எழுதப்படுவது உண்டாயினும், இன்று பெரும்பாலும் தேவநாகரி எழுத்து முறையே பயன்பாட்டில் உள்ளது. மரபு வழியான மைதிலி எழுத்து முறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. + +மைதிலி என்ற பெயர் முற்காலத்தில் ஒரு தனி அரசாக இருந்த மிதிலா (மிதிலை) என்பதன் பெயரிலிருந்து பெறப்பட்டது. இதற்கு வளமான இலக்கியமும் உள்ளது. + + + + +ஒடியா மொழி + +ஒடியா மொழி (பழைய பெயர் ஒரியா மொழி) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது . இம்மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான மேற்கு வங்காள மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், சார்க்கண்ட் மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒடிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான குசராத்திலும் ஒடியர்கள் வாழுகிறார்கள். இம்மாநிலத்தில் உள்ள சூரத் நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒடியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒடியா, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று ஆதி என்னும் பிராகிருத மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் பிரிவின், இந்திய-ஆரிய மொழிகள் குழுவைச் சேர்ந்தது. + +இம்மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ மொழிகளான வங்காள மொழி, மைதிலி மொழி, அசாமிய மொழி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம். இத்தகைய வளமான இலக்கிய நடைகளைக் கொண்டிருப்பதால் ஒடியா மொழி செம்மொழி என இந்திய அரசால் 2014 ஆவது ஆண்டில் அறிவிக்கப்பட்டது. + +ஒரியா மொழிக்கு சுமார் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நல்ல வளமான இலக்கிய வரலாறு உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சரள தாசர் மகாபாரதத்தை ஒரியாவில் மொழி பெயர்த்தார். இதனால் இவர் ஒடிசாவின் வியாசர் என்று போற்றப���படுகிறார். உண்மையில், சமஸ்கிருத நூல்களான மகாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றை மொழிபெயர்த்ததின் மூலமே ஒரிய மொழி பொதுமைப்படுத்தப்பட்டது. ஜகனாத தாஸ் என்பவர் பாகவதத்தை ஒரியாவில் மொழிபெயர்த்தார். இதுவே ஒரியாவின் எழுத்து மொழியைப் பொதுமைப்படுத்த உதவியது. ஒரியாவுக்கு சிறப்பாகப் பக்தி அடிப்படையிலான வலுவான கவிதை மரபும் உண்டு. + +இம்மொழியில் உரைநடை ஒரு பிற்கால வளர்ச்சியாகும். பக்கீர் மோகன் சேனாபதி, மனோஜ் தாஸ், பிபுத்தி பட்நாயக், பிரதிபா ராய், சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், காலினி சரண் பாணிக்கிரகி, ஹரி ஹர தாஸ், கோபிநாத் மொகந்தி என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை எழுத்தாளர்கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் கவிதையே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் கவிஞர்களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, ராமகாந்த ராத், சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர். + +ஒடியா மொழி வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாகப் பிரிப்பது வழக்கம். இவை: + + +ஒடியா 28 மெய் ஒலியன்களையும், 6 உயிர் ஒலியன்களையும் கொண்டது. + + + + +கிறகுஜேவாச் படுகொலைகள் + +கிறகுஜேவாச் படுகொலைகள் ("Kragujevac massacre") என்பது நாசி செருமனிய இராணுவத்தினரால் சேர்பிய (அன்றைய யுகோஸ்லாவியா) நகரான கிறகுஜேவாச்சில் பெண்கள் குழந்தைகள் உட்பட சேர்பிய, ரோமானிய இனத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும். இம்மனிதப்படுகொலை 1941 அக்டோபர் 20-21 நிகழ்ந்தது. ஆகிய நாட்களில் நடைப்பெற்றது. இது செருமனியின் சேர்பிய ஆக்கிரமிப்பின் போது நடைப்பெற்ற கொடுரமான படுகொலைகளில் ஒன்றாகும். + +இரண்டாம் உலகப் போரின் போது செருமனியர்கள் போரில் காயமுறும் ஒவ்வொரு செருமனியருக்கும் 50 சேர்பியர் வீதமும், கொல்லப்படும் ஒவ்வொரு செருமனியருக்கும் 100 சேர்பியரும் கொலைச் செய்ய்ப்படுவர் எனக் கூறியிருந்தனர். ஜேர்மன் துருப்புக்கள் யுகோஸ்லாவிய பார்டீசன் படைகளாலும், செட்னிக்ஸ் விசுவாசிகளாலும் கொரொஞ்சி மிலனொவக் நகருக்கு அருகே தாக்கப்பட்டனர். இதன் போது தாங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காகவே ஜேர்மனியர் இப்படுகொலைகளைச் செய்தார்கள். + +அக்டோபர் 19 முன் காலையில் முழுநகரமும் சுற்றிவலைக்கப்பட்டது. 16 தொடக்கம் 60 வயதுடைய சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டனர். பாடசலைகளிலிருந்தும் மாணவர்கள் கொண்டுச் செல்லப்பட்டனர். அடுத்த நாள் அக்டோபர் 20 மாலை 6 மணியளவில் படுகொலைகள் தொடங்கின. சுமார் 400 பேர் கொண்ட குழுக்களாக மக்கள் துப்பாகியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடுகள் அடுத்த நாளும் மந்தகதியில் (அக்டோபர் 21) தொடர்ந்தன. துப்பாக்கிச் சூடுகளின் முடிவில் மீதமிருந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். + +இப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களை நினவுக்கூறும் வகையில் படுகொலைகள் நடைப்பெற்ற சுமாரைஸ் என்ற இடம் நினைவுப் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இப்பூங்காவில் பல நினைவுக் கற்கள் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டதை நினைவுக் கூறுமவகையில் பல கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. + + + + + +நியோடைமியம் + +நியோடைமியம் "(Neodymium)" என்பது Nd என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு எண் 60. இதனுடைய அணுக்கருவில் 82 நியூட்ரான்கள் உள்ளன. இது வெள்ளிய வெண்மை நிற தோற்றத்தில் உள்ளது. காற்றில் பட நேர்ந்தால் ஆக்சிசனேற்றம் அடைந்து மங்கலான மேலுறை உருவாகி ஒளி மங்கிப் போகிறது. நியோடைமியம் 1885 ஆம் ஆண்டு ஆத்திரிய வேதியியலாளர் காரல் அவுர் வோன் வெல்சுபேட்சு என்பவரால் கண்டறியப்பட்டது. மோனசைட்டு மற்றும் பாசுட்னசைட்டு கனிமங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நியோடைமியம் கலந்துள்ளது. இயற்கையில் உலோக வடிவில் நியோடைமியம் காணப்படுவதில்லை. அருமண் தனிமமாக வகைப்படுத்தப்படும் நியோடைமியம் பொதுப் பயண்பாட்டுக்காக தூய்மைப்படுத்தப்படுகிறது. கோபால்ட், நிக்கல் அல்லது தாமிரம் தனிமங்கள் போலவே பரவலாக பூமியில் கிடைக்கிறது . வர்த்தகத்தில் பயன்படும் பெரும்பாலான நியோடைமியம் சீனாவில் இருந்துதான் கிடைக்கிறது. + +நியோடைமியம் சேர்மங்கள் முதலில் வணிக ரீதியாக கண்ணாடி சாயங்களாக 1927 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டன, மேலும் அவை கண்ணாடிகளில் பிரபலமான சேர்க்கைப் பொருட்களாக நீடித்து இருக்கின்றன. நியோடைமியம் சேர்மங்களின் நிறம் அதனுடைய Nd3 + அயனிகள் காரணமாக பெரும்பாலும் சிவப்பு-ஊதாவாக காணப���படுகிறது. ஆனால் அது வெளிச்சத்தின் வகைக்கேற்ப மாறுகிறது, பாதரசம், மூவிணைய யூரோப்பியம் அல்லது டெர்பியம் தனிமங்களின் கூர்மையான கட்புல உமிழ்வு கற்றைகளின் சுற்றுப்புற ஒளியுடன் நியோடைமியத்தின் கூர்மையான ஒளி உறிஞ்சுதல் பட்டை ஈடுபடும் இடைவினை இதற்கு காரணமாகும். சில நியோடைமியம் கலப்பு கண்ணாடிகள் சீரொளிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை 1047 மற்றும் 1062 நானோமீட்டர்கள் அலைநீளத்திற்கு இடைபட்ட அகச்சிவப்பு கதிர்களை உமிழ்கின்றன. +நியோடைமியம் இட்ரியம், அலுமினியம் கார்னட் போன்ற மற்ற அடிமூலக்கூற்று படிகங்களுடனும் சீரொளிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச்சீரொளி வழக்கமாக 1064 நானோமீட்டர்கள் அலைநீளத்தில் அகச்சிவப்பு கதிர்களை உமிழ்கிறது. மேலும் இவ்வகை சீரொளி பொதுவாக பயன்படுத்தப்படும் திட-நிலை சீரொளிகளில் ஒன்றாகும். + +உலோகக் கலவைகளைப் பயன்படுத்தி அதிக-வலிமை கொண்ட நியோடைமியம் காந்தங்கள் தயாரிக்கப் பயன்படுவது நியோடைமியத்தின் மற்றொரு முக்கியமான பயனாகும் . இக்காந்தங்கள் வலிமையான நிலைக் காந்தகளாகும். ஒலிவாங்கிகள், தொழில்முறை ஒலிபெருக்கிகள், காதொலிவாங்கிகள், உயர் செயல்திறன் பொழுதுபோக்கு நேர்மின்சார மின் மோட்டார்கள் மற்றும் கணிப்பொறி வன் தட்டுகள் மற்றும் வலுவான காந்த புலங்கள் தேவைப்படும் இடங்களில் எல்லாம் இந்த காந்தங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.பெரிய நியோடைமியம் மின்னாக்கிகள் வின்கலன் போன்றவற்றில் மின் உற்பத்திக்காகப் பயன்படுகின்றன . + +நியோடைமியம் ஓர் அருமண் உலோகமாகும். உலோக நியோடைமியம் வெள்ளியைப் போல வெண்மையான பளபளப்பான ஓர் உலோகமாகும். சாதாரணக் காற்றில் இது வேகமாக ஆக்சிசனேற்றமடைகிறது. ஆக்சிசனேற்ற அடுக்கு உதிர்ந்து மீண்டும் உலோகம் ஆக்சிசனேற்றமடையும். இதனால் ஒரு சென்டிமீட்டர் நீளமுடைய நியோடைமியம் ஓர் ஆண்டில் முற்றிலுமாக ஆக்சிசனேற்றம் அடைந்து விடும். +பொதுவாக இரண்டு புறவேற்றுமை வடிவங்களில் நியோடைமியம் காணப்படுகிறது. இரட்டை அறுகோண வடிவம், உடல்மைய்ய கனசதுரக் கட்டமைப்பு வடிவம் என்பன அவ்விரண்டு வகையாகும். 863 °செல்சியசு வெப்பநிலையில் இரட்டை அறுகோணம் உடல்மைய்ய கனசதுரக் கட்டமைப்பு வடிவத்திற்கு மாறுகிறது. + +நியோடைமியம் காற்றில் ஆக்சிசனேற்றமடைந்து மெல்ல தன் நிறத்த�� இழக்கிறது. 150 ° செல்சியசு வெப்பநிலையில் இது உடனடியாக தீப்பற்றி எரிந்து நியோடைமியம்(III) ஆக்சைடு உருவாகிறது. + +நியோடைமியம் குளிர் நீரில் மெதுவாக வினைபுரிகிறது. ஆனால் சுடுநீரில் உடனடியாக வினைபுரிந்து நியோடைமியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது. + +எல்லா ஆலசன்களுடனும் நியோடைமியம் தீவிரமாக வினைபுரிகிறது. + +2 Nd (தி) + 3 F2 (வாயு) → 2 NdF3 (தி) [ஊதா நிறப்பொருள்] +2 Nd (தி) + 3 Cl2 (வாயு) → 2 NdCl3 (தி) [மெல்லிய ஊதா நிறப்பொருள்] +2 Nd (தி) + 3 Br2 (வாயு) → 2 NdBr3 (தி) [ஊதா நிறப்பொருள்] +2 Nd (தி) + 3 I2 (வாயு) → 2 NdI3 (தி) [பச்சை நிறப்பொருள்] + +நீர்த்த கந்தக அமிலத்தில் நியோடைமியம் கரைந்து Nd(III) அயனி உருவாகிறது. இவ்வயனி [Nd(OH2)9]3+ என்ற அனைவுச் சேர்மத்தில் காணப்படுகிறது. + +2 Nd (தி) + 3 H2SO4 (நீ) → 2 Nd3+ (நீ) + 3 SO2− +4 (நீ) + 3 H2 (வாயு) + +ஆலைடுகள், ஆக்சைடுகள், சல்பைடுகள், நைட்ரைடுகள், ஐதராக்சைடுகள், பாசுபைடுகள், கார்பைடுகள், நைட்ரேட்டுகள், சல்பேட்டுகள் என்று எல்லாவிதமான சேர்மங்களையும் நியோடைமியம் உருவாக்குகிறது. + + + + + + +1469 + +1469 (MCDLXIX) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + +சிந்தி மொழி + +சிந்தி மொழி தெற்காசியாவின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானியப் பிரிவைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. இது பாகிஸ்தானில் சுமார் 18.5 மில்லியன் மக்களாலும், இந்தியாவில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இது மேற்படி இரண்டு நாடுகளிலும் உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இம் மொழி ஒர் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டு உள்ள போதும், இதில் திராவிட மொழிச் செல்வாக்குக் காணப்படுவதால் இது ஒரு தனித்துவமான மொழியாக விளங்குகிறது. பெரும்பாலான சிந்தி போசுவோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றனர். ஏனையோர் இந்தியாவிலும், உலகின் வேறுபல நாடுகளில் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர். + +இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்து சிந்திகள் சிந்து மாகாணத்தை விட்டு வெளியேறியபோது, சிந்தி மொழி பரவத் தொடங்கியது. முன்னர் இம் மொழ��� தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், கிழக்கிந்தியக் கம்பனியின் உதவியுடன், சிந்து மொழிக்காக மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர், இந்திய அரசு, அரபி எழுத்து முறையுடன், தேவநாகரி எழுத்து முறையையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது . + +தென்கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகளில் சிந்தி மொழி முதல் மொழியாகப் பயிற்றப்படுகிறது. இந்தியாவில், சிறப்பாக மகாராட்டிர மாநிலத்தில் பல பாடசாலைகள் சிந்திச் சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்றன. இப் பாடசாலைகளில் சிந்தி கல்வி மொழியாகவோ அல்லது ஒரு பாடமாகவோ இருக்கிறது. சிந்தி மொழி ஏராளமான சொற்களைக் கொண்டது. இதனால், இது இலக்கியங்களை ஆக்குவதற்கு ஏற்ற மொழியாக விளங்கியது. கவிதைகள் உட்படப் பல இலக்கியங்கள் இம்மொழியில் ஆக்கப்பட்டன. சிந்தியின் கிளைமொழிகள் பாகிஸ்தானின், தெற்குப் பஞ்சாப், பலூச்சிஸ்தான், வடமேற்கு முன்னரங்க மாகாணம் ஆகிய இடங்களிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பேசப்பட்டு வருகின்றன. + + + + +சென்னை விக்கி பட்டறை + +சென்னை விக்கி பட்டறை (Chennai Wikicamp) விக்கி தொழில் நுட்பத்தை மையப்படுத்தி பெப்ரவரி 25, 2007 இல், சென்னை Tidel Park இல் நடைபெற்ற ஒரு பட்டறை ஆகும். இது தன்னார்வலர்களாலும், த நாலட்ஜ் பவுண்டேழ்சன் (The Knowledge Foundation) என்னும் நிறுவனத்தாலும் அகில இந்திய நோக்கில் ஆங்கிலத்தில் இடம்பெற்ற ஒரு பட்டறை ஆகும். இந்த பட்டறை "அன்கான்பெரன்ஸ்" ("unconference") முறையில் ஒழுங்கமைக்கப்பட்டது. + +சென்னை விக்கிப் பட்டறைக்கு விக்கிபீடியாவை ஆரம்பித்தவரில் ஒருவரான சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். + +இந்த நிகழ்வுக்கு தமிழ் விக்கிபீடியாவும் குறிப்பிடத்தக்கவாறு பங்களித்தது. தமிழ் விக்கிபீடியா பயனர்களான சுந்தர், கணேஸ், மஹீர் ஆகியோர் அங்கு பயற்சிகள் வழங்கியதுடன், தமிழ் விக்கிபீடியாவையும் பரந்த களங்களில் அறிமுகப்படுத்தி வைத்தனர். மேலும், தமிழ் விக்கிபீடியா சென்னை விக்கி பட்டறை தொடராக பின்வரும் அறிக்கையை வெளியிட்டது. + + + + + +பிரான்ஸ் தலித் மாநாடு + +பிரான்ஸ் தலித் மாநாடு பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியிரால் முதன்முறையாக ஒக்டோபர் 20, 21 2007 காலப்பகுதிகளில் பாரிசில் நடைபெறுகிறது. "இலங்கைத் தலித்மக்களின் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டது." + +இந்த மாநாடு தமிழ்த் தேசியத்துக்கு, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துப் போக்கை கொண்டுள்ளது என சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. + +இந்த மாநாடு இலங்கைத் தமிழர்கள் புகலிடத்தில் சாதி தொடர்பாக மேற்கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். புகலிடத்தில் சாதிய சமூகக் கட்டமைப்பின் அழுத்தம் இறுக்கமாக தொடர முடியாவிட்டாலும், திருமணம், ஊர் ஒன்றியங்கள் ஊடாக புகலிடங்களிலும் சாதியக் கட்டமைப்பின் தாக்கம் தொடர்ந்து இருந்தே வருகின்றது என்பது இங்கு குறிக்கத்தக்கது. + + + + + +வரிசைமாற்றக் குலத்தின் சுழற் குறியீடு + +வரிசைமாற்றங்கள் என்பது கணிதத்தில் மாத்திரமல்ல, பற்பல சூழ்நிலைகளிலும் எல்லாப் பயன்பாடுகளிலும் நேரக்கூடிய ஒரு கணிதக் கருத்து. வரிசை மாற்றங்கள் அவைகளின் சேர்வு என்ற செயல்பாட்டினால் குலம் என்ற கணித அமைப்பாகக் கூடும். அப்படி ஏற்படும் வரிசைமாற்றக் குலம் (Permutation Group) ஒவ்வொன்றுக்கும் அதைத் தனிப்படுத்திக் காட்டக் கூடிய ஒரு கருத்து தான் அவைகளின் சுழற் குறியீடு (Cycle Index). ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும் ஒரு சுழலமைப்பு உண்டு. ஒரு வரிசைமாற்றக்குலத் திலுள்ள வரிசைமாற்றங்களின் சராசரிச் சுழலமைப்பிற்கு அதன் சுழற்குறியீடு என்று பெயர். + +formula_1 குறியீடுகளின் வரிசைமாற்றங்களின் குலம் formula_2 ஒன்றை எடுத்துக் கொள்வோம். formula_2 இனுடைய சுழற்குறியீடு என்பது கீழே வரையறுக்கப்பட்டபடி நேரும் formula_4 என்ற ஓர் அடையாளப் பல்லுறுப்புக் கோவை. அதன் மாறிகளாகத் திகழ்வது formula_5 என்ற தேரவியலாக் குறியீடுகள்: + +ஏதாவதொரு formula_14 வெறும் 1 ஆக இருந்தால், formula_15 ஐ formula_16 என்றே எழுதலாம். + +formula_17 ஐ formula_18 என்றும் எழுதுவதுண்டு. இங்கு, formula_19 என்பது formula_20 என்ற சுழலமைப்பைக் குறிக்கும். + + + + +மேலுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து formula_1-கிரமச் சமச்சீர் குலத்தின் (அதாவது, formula_27 இன்) சுழற்குறியீட்டைக் கணிப்பதற்கு நமக்குத்தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒ��்றுதான்: அ-து, formula_27 இலுள்ள ஒவ்வொரு சுழலமைப்பு வகையிலும் எத்தனை வரிசைமாற்றங்கள் உள்ளன, என்பதுதான். இக்கேள்விக்கு விடை கோஷி தேற்றத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தினால், + +அல்லது, formula_30 + +ஓர் ஒழுங்கு நான்முகியின் சுழற்சிச் சமச்சீர் குலத்தில் இவை பன்னிரண்டும் அடக்கம்: + +இவைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை மாதிரிக்காக கீழ்க்கண்டபடி அட்டவணைப் படுத்தலாம்:(குறிப்பு: உச்சிகளை 1,2,3,4 என்றும், ஓரக்கோடுகளை 1-2, 1-3, 3-4, .. என்றும் முகங்களை 1-2-3, 2-3-4, .. என்றும் குறிப்போம்). + + + + +முதற்கண் சுழற்சிச் சமச்சீர்களை கவனிப்போம். இவை 24. அதாவது: + + + + + + +இவைகளின் செயல்பாட்டினால் + + + + +போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் + +சமச்சீர் பல்லுறுப்பு + + + + +காஷ்மீரி மொழி + +காஷ்மீரி மொழி ஒரு வடமேற்கு இந்திய-ஆரிய மொழியாகும். இது, முக்கியமாக இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படுகிறது. இம் மொழி பேசும் 4,611,000 தொகையினரில், 4,391,000 பேர் இந்தியாவிலும் மிகுதிப் பேர் பாகிஸ்தானிலும் உள்ளனர். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்த இந்த மொழி புவியியல் அடிப்படையிலான துணைக் குழுவான தார்டிக் மொழிகள் குழுவில் அடங்குகிறது. இது இந்தியாவின் அட்டவணைப் படுத்தப்பட்ட 23 மொழிகளுள் ஒன்றாகும். + +காஷ்மீரி ஒரு வினை இரண்டாவதாக வரும் சொல் ஒழுங்கு (V2 word order) கொண்ட ஒரு மொழியாகும். ஷாரதா எழுத்து முறையில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் இருந்தபோதும் காஷ்மீரி மொழி அண்மைக்காலம் வரை பேச்சு மொழியாகவே இருந்தது. பின்னர் இது பார்சிய-அரபி எழுத்துக்களில் எழுதப்பட்டது. தற்போது இம்மொழி, பார்சிய-அரபியில் அல்லது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. எழுதும் போது உயிர் எழுத்துக்களை எப்பொழுதும் பயன்படுத்துவதனால், பார்சிய-அரபியில் எழுதப்படும் மொழிகளுள் காஷ்மீரி தனித்துவமானது ஆகும். + +பல்வேறு அரசியற் காரணங்களினாலும் போதிய கல்வி வசதிகள் இல்லாமையாலும் காஷ்மீரி மொழிக் கல்வி பெரிதும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இதனைப் பேசுவோர் தொகையும் குறைந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உத்தியோக மொழி காஷ்மீரி அல்ல என்பதும், இத் தகுதியை உருது மொழியே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. காஷ்மீரி பேசுவோரிற் சிலர் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் அல்லது ஹிந்தியைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளாக காஷ்மீரி மொழி இப் பகுதியிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளுக்கான பாடத் திட்டங்களிலும் இதனைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. + +ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் என்பவர், 1919 ஆம் ஆண்டில் எழுதும்போது, தார்டிக் மொழிகளில் காஷ்மீரி மட்டுமே இலக்கியத்தைக் கொண்ட மொழி என்று குறிப்பிட்டார். காஷ்மீரி மொழியில் காணப்படும் இலக்கியங்கள் சுமார் 750 ஆண்டுகள் வரை பழமையானவை. இதுவே ஆங்கிலம் உள்ளிட்ட பல நவீன மொழி இலக்கியங்களின் வயதாக உள்ளது. + + + + + +நந்தனார் + +நந்தனார் என்னும் தலைப்பில் கீழுள்ள கட்டுரைகள் உள்ளன: + + + + + +வரிசைமாற்றத்தைப் பற்றிய கோஷி தேற்றம் + +கணிதத்தில் ஓர் n-கணத்தின் வரிசைமாற்றம் என்பது அவ்வுறுப்புக்களை ஒரு வரிசையிலிருந்து வேறொரு வரிசைக்கு மாற்றும் செயற்பாடு. ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும் அதிலுள்ள சுழல்களைப்பொருத்து அதன் (சுழல்)வகை தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, +formula_1 +என்ற 9-வரிசைமாற்றத்தில் +உள்ளன. இதனால் இதன் சுழல்வகை formula_2 என்ற குறியீட்டால் குறிக்கப்படும். இதே சுழல்வகையைக் கொண்டதாக எத்தனை 9-வரிசைமாற்றங்கள் இருக்கமுடியும் என்ற கேள்விக்கு கோஷி (1789-1857) தேற்றம் விடை தருகிறது. அதன்படி இவ்வகையில் 11,340 வரிசைமாற்றங்கள் இருக்கின்றன. + +ஓர் formula_3-வரிசைமாற்றத்தில் + +இருந்தால், வரிசைமாற்றத்தின் வகை (type) formula_7 என்று சொல்லப்படும். சுருக்கமாக வகை formula_8 என்றும் சொல்லலாம். நிச்சயமாக + +இவ்வகையிலுள்ள formula_3-வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை = + +formula_12 +என்ற குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வெண்ணிக்கையை formula_13 என்று சுருக்கமாகவும் சொல்லலாம். + + + +ஒரு மாதிரிக்காக 27 குறியீடுகள் கொண்ட ஒரு கணத்தின் வரிசைமாற்றங்களில் (j) = formula_18 என்ற சுழல்வகையை கவனிப்போம். இவ்வரிசைமாற்றம் + +என்ற வகையில் இருக்கும். அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளியின் இடத்திலும் 27 குறியீட்டிலிருந்து ஒன்றை (எந்த குறியீட்டையும் இரட்டிக்காமல்) பொருத்திவிட்டால் நமக்கு வேண்டிய ஒரு வரிசைமாற்றம் கிடைத்துவிடும். மொத்தம் 27! வழிகளில் இதைச்செய்யலாம். ஆனால் பல முறைகள் ஒரே வரிசைமாற்றத்தில் வந்து முடியும். இப்படி நேரும் இரட்டிப்புகளை நம் எண்ணிக்கையிலிருந்து தள்ளிவிட வேண்டும். இந்த இரட்டிப்புகள் இரண்டு விதமாக நேரலாம்: + +எழுதலாம். ஆனால் இவையெல்லாம் ஒரே வரிசைமாற்றத்தையே குறிக்கும். + +இதனால் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிடுவதற்கு 27! என்ற எண்ணிக்கையை formula_24 ஆல் வகுக்கவேண்டும். + +இதே நியாயத்தினால்தான் தேற்றத்தின் நிறுவலும் தீர்மானிக்கப்படுகிறது. + + + + + +கோனார் + +கோனார் (ஆங்கிலம்: "Konar") என்போர் தமிழ்நாட்டிலுள்ள யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழுவினர் ஆவர். கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது .கோனார் என்னும் பட்டம் தென்தமிழக யாதவர்களை குறிக்கும் வட தமிழக யாதவர்கள் கோனார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை. + +இவர்கள் கால்நடை மேய்த்தல் தொழிலைச் செய்பவர்களாக இருந்தனர். தமிழ்நாடு சாதிகள் பட்டியல் காட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இவர்கள் யாதவா என்னும் பெயரில் உள்ள தமிழ் பேசும் இடையர்கள் ஆவர். இவர்களோடு தெலுங்கு பேசும் வடுக அஸ்த்தர கோல்லாவும் யாதவா பிரிவில் அடக்கப்பட்டுள்ளனர். + +யாதவர் + + + + +ஜான் ஆபிரகாம் + +ஜான் ஆபிரகாம் (John Abraham) (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக் கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர். + +ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம். + +ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர். + + + + + + +பஷ்தூ மொழி + +பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். + +இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியப் பிரிவின் தென்கிழக்கு ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்தது. சாரிக்கோலி, வாக்கி, முஞ்சி, ஷுக்னி போன்ற மொழிகளும் இக் குழுவைச் சேர்ந்த மொழிகளாகும். ஈரானிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த பாரசீக மொழி, குர்தி மொழி, பலுச்சி மொழி, கிலாக்கி மொழி என்பனவும், காக்கேசியப் பகுதியில் பேசப்படும் ஒசெட்டிக் மொழியும் பஷ்தூ மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ளவை. + +பஷ்தூ, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணம் மற்றும் பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வடக்குப் பகுதியிலும் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு ஈரானிலும் சிறிய சமுதாயங்களாக இம் மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர். + + + + +பிளாஸ்மோடியம் + +பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் பாதிக்கின்றன. + +இவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்ச்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன. + +1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் "Culex" கொசுக்களில் பிளாஸ்மோடியம் உள்ளதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Giovanni Battista Grassi என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலஸ் கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார். + +பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன. + +பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள "ரெட்டிகுலோ எண்டோதீலியல்" ("reticuloendothelial") செல்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது. + +கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமு���ையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன. + +சிவப்பணுக்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக ("gametocyte") உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன. + +கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் ("Zygote") என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை ("ookinetes") எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன. + +மீரோசோயிட்டுகள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது இரத்ததில் கலக்கும் நச்சுப் பொருட்களே மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும். + +பிளாஸ்மோடியம் வாழ்க்கைச் சுழற்ச்சி + + + + +ஆய்லரின் டோஷண்ட் சார்பு + +கணிதத்தில், குறிப்பாக எண் கோட்பாட்டில்,ஆய்லர் டோஷண்ட் சார்பு ஒரு முக்கியமான சார்பு. + +formula_1 ஒரு நேர்ம முழு எண் ணானால், formula_1-ஐ விடப் பெரியதல்லாததாகவும், formula_1-ஐப் பகாத எண் ணாகவும் (அ-து,formula_1-உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது) இருக்கும் நேர்ம முழு எண்களின் எண்ணிக்கை formula_5 எனப்படும். formula_6 என்ற சார்பிற்கு ஆய்லர் டோஷண்ட் சார்பு அல்லது ஆய்லர் formula_7-சார்பு எனப் பெயர். + +எ.கா.: + +formula_12 என்ற இரண்டு நேர்ம முழு எண்கள் (1 ஐத்தவிர) பொதுக்காரணியற்றதானால், + +எ.கா.: formula_14 + +formula_10 ஒரு பகா எண்ணாகவும், formula_16 ஓர் இயல்பெண்ணாகவும் இருக்குமானால், formula_17 உடன் காரணிகளைப் பங்கு போட்டுக்கொள்ளும் எண்கள் formula_10-இனுடைய அடுக்குகள் மட்டுமே. அவைகளில் formula_17 ஐவிடப் பெரியதல்லாதவை : formula_20. இதனால், + +எ.கா.: formula_22 + +formula_25 + + + + +தருமம் + +தருமம் அல்லது அறம் என்பது இந்து சமயம், புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். வட மொழி நூலான மனுதரும சாத்திரம் வருணாசிரம தருமம் என நான்கினைக் குறிகிறது. பொதுவாக கொடையாளர்கள் அல்லது யாசிப்பவர்கள் தருமம் என்ற சொல்லை பயன்படுத்துவர். + +மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம். + +வேதாந்த சாத்திரங்களின்படி ”எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறுகிறது. அவைகள் தனி மனித தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்க்கான தருமம் என்று ஐந்தாக தருமங்கள் உள்ளது. + +என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு: + + +தனி மனித தருமங்களை]] கடைப்பிடிக்கவர்கள் இணைந்தவர்களின் கூட்டமே சமூகம் ஆகும். இத்தகைய சமூகம் சீரிய முறையில் செயல்படும். அதுவே சமூக தர்மம் எனப்படும் சமாஜ தருமம் ஆகும். ஒரு சமூகம் பல்வேறு வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது மனித சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது. ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்; + + +நாடு சிதறுண்டால் சமூகம் நிலைக்காது. நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் தனி நபர்கள் மற்றும் சமூகம் தியாகங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே இராஷ்ட்டிர தருமம் அல்லது தேசிய தருமம் ஆகும். + +மனித இனம் இன்றேல் நாடு, சமூகம் மற்றும் தனி நபர் இல்லை. எனவே மனித இனம் நிலை பெற்று இருக்க, தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்து பல விசயங்களை தியாகம் செய்ய வேண்டும். + + + + +எல்லாளன் நடவடிக்கை 2007 + +எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர். மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும். + +புலிகள் வில்பத்து சரணாலயத்துக்கூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடுருவி அங்கிருந்து காடுகள் வழியாக அனுராதபுர வான்படைத்தளத்துக்கு அருகிலிருக்கும் நுவரவாவிக்கு வந்தடைததாக கருதப்படுகிறது. அக்டோபர் 22 வான்படைத் தளத்துக்கு அருகாமையில் காட்டில் தலைத் துண்டிக்கப் பட்டநிலையில் காணபட்டவரை தங்களைக் கண்டமையால் புலிகள் கொலைச் செய்திருக்கலாம் என இலங்கை காவல்துறையினர் கருதுகின்றனர். இவ் விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலித் தாக்குதல் அணியினர் வான்படைத் தளத்துக்கருகில் உள்ள தென்னந்தோப்பில், கிளிநொச்சியிலிருந்து வரவேண்டிய கட்டளைக்காக காத்திருந்தனர். இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். + +2007 அக்டோபர் 21 இரவு சிரச தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி நடப் பெற்றுக் கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் பெருந்தெருவைக் கடந்து தளத்தின் வடக்குப் பகுதியை அடைந்தது. முன்காலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலி, இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் சமாந்தரமாக தளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது கம்பி வேலி, இவையிரண்டுக்கும் இடையில் செயற்படா நிலையில் இருந்த மின்வேலி என்பவற்றை வெட்டி தளத்தினுள் உட்புகுந்தனர். + +உள்நுழைந்த அணியினர் தாமிருந்த நிலைக்கும் வானூர்தி ஓடுபாதைக்கும் இடையில், முதல் நிலை பதுங்கு குழிகளுக்கு குறுக்காக புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். பாதையின் இருபுறமும் பதுங்கு குழிகளை நோக்கி மிதிவெடிகள் நிலைக்குத்தாக புதைக்கப்பட்டிருந்தன. சத்தவெடிகளை அகற்றியவுடன் விடுதலைப் புலிகளின் அணியினர் முதல் நிலை பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி ஊர்ந்து செல்ல தொடங்கினர். இரண்டாவது குழுவினர் அணையின் மற்றைய முனையை அடைந்து முதன் நிரை பதுங்கு குழிகளில் இரண்டு பதுங்கு குழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். 3 விடுதலைப் புலிகள் மாத்திரம் நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவற்காக பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர். எவ்வாறெனினும் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. + +14 பேரைக் கொண்ட முதலாவது அணியின் பணிஉலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதாகும். இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி துப்பாகி சூட்டை நடத்தி முதல் நிரல் பதுங்கு குழிகளில் காவலுக்கு இருந்த வான்படையினரை கொன்றப் பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கிய நேரம் அக்டோபர் 22 முன்காலை 3:20 ம���ியாகும். துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. + +தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டமையால் வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. கோபுரத்திற்கு அருகில் இருந்த 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை சில நிமிட கடும் தாக்குதலுக்கு பின்னர் புலிகள் வசமானது. வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத் தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து முன்காலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு சிறு ரக விமானங்கள் தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசித் தாக்கினர். + +இவ்விமானங்கள் வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள இந்தியாவால் வழங்கப்பட்ட ராடார்களின் இணங்கானப்பட்டது. வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்திகள் அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு கிடைத்த தகவலின் படி ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 வகை உலங்குவானூர்தியில் புறப்பட்டனர். இவ்வுலங்குவானூர்தி அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியது. இதன்போது இதில் பயணம் செய்த 4 வான்படை வீரர்களும் இறந்தனர். இவ்வானுர்தி வவுனியா வான் படைத்தளத்தை அண்டிய பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மிகிந்தலையில் வீழ்ந்து நொறுங்கியதாக வவுனியா வான்படைத்தள வீரர்களை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வாரெனினும், இவ்வானூர்தி இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் வானூர்தி என எண்ணி சுட்டு வீழ்த்தப்படவ��ல்லை என் இலங்கை அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று இலங்கை இராணுவத்தின் ராடார் ஏல்லைக்கு வெளியே சென்று திரையில் இருந்து மறைந்து விட்டன. + +வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும், அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர். + +கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த நிலையில் சமர் தொடர்ந்தது.பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் புலிகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்து, தாக்குதலில் காலை 11:00 மணியளவில் 21 சிறப்புக் கரும்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்ட நிலையில், மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் 6 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்க செய்து தற்கொலைச் செய்திருப்பது தெரிய வந்தது. + +இலங்கையின் முக்கிய இராணுவ ஆய்வாளரான இக்பால் அத்தாசின் நிரலை தாங்கி வரும் சண்டே டைம்ஸ் பததி்ரிகை புலிகளின் தாக்குதல் அணியில் 27 வீரர்கள் காணப்பட்டதாகவும் மிகுதி 6 பேர் சுமார் காலை 5 மணியளவில் தளத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் வெளியேறிச் சென்றவர்களை அயலில் வசிக்கும் கிராமத்தவர்கள் கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. + +இலங்கையில் உள்ள 13 வான் தளங்களில் அனுராதபுர வான்படைத்தளம் நவீன வசதிகள் பொருந்திய ஒரு முக்கிய இராணுவ வான்படைத் தளமாகும். வட கிழக்குக்கு அருகாமையிலும் அதேவேளை சிங்கள் உள் நிலப்பரப்பிலும் அமைந்துள்ளதால் வடகிழக்கில் இருக்கும் இராணுவத்துக்கும், இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆள் ஆயுத வழங்கல்களுக்கு இந்த தளம் முக்கியமானதாகும். இந்த தளம் மீதான தாக்குதலின் பின்பு, இந்த தளம் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. + +எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்த தகவலை சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக பொதுவாக சிங்கள பௌத்தச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. இந்தப் பெயரின் தெரிவு தற்கால நிகழ்வை ஒரு வரலாற்று பின்னணியுடன் தொடர்பு படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல், சிங்கள ஆட்சியாளர்கள் மீதானா புலிகளின் விமர்சனமான "மகாவம்ச சிந்தனைக்கு" தொடர்பாகவும் இந்தப் பெயர் தெரியப்பட்டிருக்கலாம். + +இத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்களை முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் இலங்கை வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான இலங்கை வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட் டிருக்களாம் என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார். + +தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இவ்விருவழித் தாக்குதலில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 8 விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டதாக வீரகேசரிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். பயிற்சி விமானம் ஒன்று, எ��்.ஐ. 24 வகை உலங்கு வானூர்திகள் இரண்டு, பி.டி. 6 வகை விமானம் ஒன்று, பெல் 212 வகை உலங்கு வானூர்தி ஒன்று, உளவு விமானம் ஒன்று, சி.டி.எச். 748 ரக விமானம் ஒன்று, மற்றும் வகை அறியப்படாத இன்னுமொரு விமானம் ஒன்றும் தாக்கியழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் கோரினார்கள். + +இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிவிக்கும் வார இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் அக்டோபர் 22,2007 அன்று நடைபெற்ற போது இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜன்த சில்வா படையினரின் பதில் தாக்குதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், செவ்வி கொடுக்கப்படு நேரம் வரை விடுதலைப் புலிகளின் 20 சடலங்களைப் படையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். புலிகளின் இத்தாக்குதலின் போது விமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஐ. 24 ரக விமானங்கள் இரண்டுக்கும் கே. 8 ரக ஜெட் பயிற்சி விமானத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இதன்போது தளத்தில் இருந்த 5 விமானப்படை வீரர்கள் பலியாகியும், 18 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். + +மூலம்:சண்டே டைமஸ் + +புலிகள் தொடக்கம் முதலே 8 வான் ஊர்திகள் முற்றாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தாலும், அந்த செய்தியை இராணுவம் ஆரம்பத்தில் மறுத்தது. பின்னர் இலங்கை பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க இலங்கை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை யொன்றின் மூலம் தளத்தில் 7 வானூர்திகளும் மிகிந்தலையில் விழுந்து நொருங்கிய வானூர்தியையு சேர்த்து மொத்தம் 8 வான் ஊரிதிகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்தியை ஒத்துக் கொண்டார். உண்மையான இழப்புகளை தொடக்கத்தில் குறைத்து அல்லது மறைத்து வெளியிட்டமை இலங்கை இராணுவத்தினதும் அரசினதும் நம்பகத்தன்மையை மேலும் பாதித்துள்ளதாக இதைப் பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு சுட்டியுள்ளது. + +எல்லாளன் நடவடிக்கையின் போது மொத்தம் 10 வானூர்திகள் முற்றாக அழைக்கப்பட்டதாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நவம்பர் 7, 2007 இல் இடம்பெற்ற விசாரணைகளில் அநுராதபுரம் காவற்துறைத் தலைமையகத்தினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின என்றும் தெரிவித்தனர் + +உள்ளக சிங்கள நிலப்பரப்பில் இடம்பெற்ற பு���ிகளின் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. புலிகள் விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீசிய பொழுதும், அவை துல்லியமாகப் படை இலக்குகளைத் தாக்கியது. கடந்த சில வருடங்களாக புலிகள் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை இயன்றளவு தவிர்த்து வருவதற்கு இந்த ஒழுக்கமான படை நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த அவதானிப்பை வெளி நாட்டு ஊடகங்களும், தீவர சிங்கள இராணுவ சார்பு ஊடகங்களும் சுட்டியதும் இங்கு குறிக்கத்தக்கது. இராணுவ விமான குண்டுவீச்சுகளின் போதும் படைநடவடிக்கைகளின் போதும் பொதுமங்கள் பெரும் பாதிப்பு உள்ளாவதும், இடம்பெயர்வதும் இங்கு குறிக்கத்தக்கது. + +படைத் துறை ஆய்வாளர், இக்பால் அத்தாசின் கருத்துப்படி, இல்ங்கை பன்னாட்டு விமானங்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை கருதாத விடத்து 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக வான்படைத்தளத்தில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்களை விட அனுராதபுரத் தளத்தில் ஏற்பட்ட இழப்புகள் அதிகமானதாகும். + +இந்தத் தாக்குதலில் இழக்கப்பட்ட வான் ஊர்திகள் 40 மில்லியனுக்கு மேலான அமெரிக்க டொலர் பெறுமதி மிக்கவை. இலங்கை மொத்த இராணுவ செலவுகளில் இது ஒரு சிறு விழுக்காடு எனினும், இலங்கை இராணுவம் இந்த தாக்குதலின் பின்பு அதை நிவர்த்தி செய்வதற்கும், இத்தாக்குதல் மூலம் வெளிவந்த பாதுகாப்பு ஓட்டைகளை (எ.கா: புலிகளின் தொடர் வான்வெளி தாக்குதல் திறன்) அடைப்பதற்கு தேவைப்படக்கூடிய பொருளாதார ஆயுத வளங்கள் கரிசமானதாக இருக்கும். + +இலங்கையின் சிங்கள உட்பகுதியில் அமைந்த, உல்லாசப் பயணிகள் தொடர்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அனுராதபுரத்தில் அமைந்த ஒரு இராணுவ இலக்கை தாக்கியதன் மூலம் இலங்கை அரசின் உல்லாச தொழிற்துறையைத் இந்த தாக்குதல் பாதிக்கும். புலிகள் நேரடியாக பொருளாதார இலக்குகளைத் சமீபகாலமாக தாக்கவில்லையாகினும், இலங்கை அரசின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்ததக்க இராணுவ இலக்குளை தெரிந்தெடுத்து தாக்குதலில் தொடர்ச்சியாக எல்லாளன் நடவடிக்கையையும் பார்க்கலாம். + +இந்த நடவடிக்கை தொடர்பாக புலிகளை விமர்சித்து எஸ். மனோரஞ்சன் எழுதிய "மாவீரர் வேள்விக்கு வளர்த்த வான் கரும்புலிக் கடாக்களும், அநுராதபுரத் தாக்குதலும், தமிழரும்" என்ற கட்டுரையில் பின்வரும் வ��மர்சனத்தை முன்வைத்துள்ளார். + +தாக்குதலின் பங்கெடுத்த விடுதலைப் புலிகளின் மென்ரக விமானங்கள் தரையிரங்கிய இடங்கள் இனங்கானப்பட்டு குறித்த இலக்குகள் மீது அக்டோபர் 22,2007 காலை 5.30 மணியளவிலிருந்தே இலங்கை விமானப் படையின் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன என இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜந்த சில்வா தெரிவித்தார். இலங்கையில் வெளியாகும் நாளேடான தினக்குரல் இதன் போது வன்னியில் தாக்குதல் நடத்தப்படவில்லையென்றும் ஆறு மிக் மற்றும் கிபிர் வகை விமானங்கள் வன்னிக்குச் சென்று பராவெளிச்சக் குண்டுகளை வீசி புலிகளின் வீமானங்களை தேடியாதாக செய்தி வெளியிட்டது. + +மேலும் அனுராதபுர நகருக்கு ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிளேயே இருக்குமாறு கேட்கப்பட்டனர். பின்னர் நடந்த தேடுதல்களின் போது 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல் துறையினர் அறிவித்தனர். + +இத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக "இந்தியா டெய்லி" என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் புலிகளின் வானுர்திகளுக்கு எதிராக ராடார் துணை ஏவுகணை ஈடுபடுத்த விரும்புவதாகவும் அதற்கு முன்னர் தெற்காசிய நாடுகள் பலவற்றுடன் இலங்கை அரசு ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. + +அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பின் படி வானூர்தி ஓட்டப்பாதைகளைக் கொண்ட வான் படைத்தளங்களின் பாதுகாப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவம், வான்படை, கடற்படை, காவல்துறை என்பவற்றுக்கு கட்டளையிடும் தகுதிபெற்ற "பிராந்திய கட்டளை அதிகாரி" என்ற புதிய பதவியை ஏற்படுத்தி அனுராதபுர பிராந்திய கட்டளை அதிகாரியாக முன்னாள் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்னவை நியமித்தார். + +எல்லாளன் நடவடிக்கையின் போது தம்மால் கைப்பற்றப்பட்ட இறந்த 20 புலிகளின் உடல்களையும் நிர்வாணமாக ஊர்வலமாக உழவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்ட ஒரு திறந்த பெட்டியில் அனுராதபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்டது. இது அடிப்படை மனிதாபினத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக அமைவது மட்டுமல்லாமல், போர் நடிவடிக்கையில் பேணப்படும் போரில் இறந்தவர் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் எதிரானது எனக் குற்றஞ் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இப்படி நடைபெறவில்லை என்று இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்த போதும், Lanka Dissent, தமிழ்நெற், பதிவு ஆகிய இணையத்தளங்கள் படங்களுடன் இந்த செயற்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளன. இலங்கை அரசு இப்பங்கள் உண்மையான படங்கள் கிடையாது எனவும் இலங்கை இராணுவத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இறந்த புலிகளின் உடல்களை சர்வதேச நெஞ்சிலுவைச் சங்கம் ஊடாக புலிகளுக்கு ஒப்படைக்க ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. இறந்த கரும்புலிகளின் சடலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றின் உத்தரவின் பேரிலே தாங்கள் புதைத்து விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.. எனினும் அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி மரணமடைந்த கரும்புலிகளின் உடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.. + +அக்டோபர் 25 வியாழக்கிழமையன்று புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பெருநிலப்பரப்பில் தாக்குதலில் பலியான 21 சிறப்புக் கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழுவுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டன. + +தாக்குதலில் பங்கேற்ற 21 சிறப்புக் கரும்புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். அவை பின்வரும் அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன. + +இந்த நடவடிக்கையில் பலியான பதின்நான்கு வான்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடல்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்பு சொந்த ஊர்களுக்கு எடுத்துசெல்லப்பட்டு அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் இறுதி மரியாதைகள் ஒக்டோபர் 24, 2007 அன்று நடைபெறவுள்ளன. இந்த நட +டிக்கையில் இறந்த இலங்கைப் படையினரின் விபரங்கள் பின்வருமாறு. + + + +எல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான விருதுகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வழ���்கி மதிப்பளித்துள்ளார். வன்னியில் நவம்பர் 1, 2007 இல் தளபதிகள், போராளிகள், மத்தியில் இந்நிகழ்வு நடைபெற்றது. தனியாள் போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறமாணி விருது, குழுப்போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறவர் விருது தனியொருவரின் துறைசார் அருஞ்செயல்களுக்கான தமிழீழ ஒளிஞாயிறு விருது ஆகியன வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகரத் தாக்குதல் பறப்புக்களை மேற்கொண்ட தமிழீழ வானோடிக்கு நீலப் புலி விருது வழங்கப்பட்டுள்ளது. + + + + + + + +1925 + +1925 (MCMXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +சாம்பியா + +சாம்பியா ("Zambia") அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது. + + + + + +டிஸ்கவரி விண்ணோடம் + +டிஸ்கவரி விண்ணோடம் ("Space Shuttle Discovery") என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். மற்றைய இரண்டும் "அட்லாண்டிஸ்" மற்றும் "எண்டெவர்" ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. "டிஸ்கவரி" விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் "டிஸ்கவரி" மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. + +கடைசியாக "டிஸ்கவரி" வீண்ணோடம் பிப்ரவரி 24, 2011 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 9, 2011 இல் டிஸ்கவரி விண்கலம் முறைப்படி ஓய்வு பெற்றது. +இது தற்போது ஸ்மித்‌சோனியன் நிறுவனத்தின் தேசிய வான் மற்றும் விண்வெளி நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. + + + + + +கசக்கஸ்தான் + +கசக்கஸ்தான் ( அல்லது ; "Qazaqstan", ), அதிகாரபூர்வமாக கசக்கஸ்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்கஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) ரசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்கஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை (2013 கணிப்பீடு) 17 மில்லியனாகும். மக்கள்தொகை அடிப்படையில் கசக்கஸ்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும். (சதுர மைலுக்கு 15 பேர்). 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது. + +கசக்கஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாகக் கசக்கஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. 16ம் நூற்றாண்டில் கசாக்குகள் ஒரு தனித்துவமான குழுவாக எழுச்சி பெற்றதுடன் மூன்று கோத்திரங்களாகவும் பிளவுற்றனர்.18ம் நூற்றாண்டளவில் ரசியர்கள் கசாக்கு ஸ்டெப்பீ புல்வெளிகள் நோக்கி முன்னேறியதுடன் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசக்கஸ்தானின் சகல பகுதிகளும் ரசியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. 1917ன் ரசியப் புரட்சியின் பின்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தும், கசக்கஸ்தானின் பகுதிகள் மீளமைக்கப்பட்டு 1936ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசு எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியானது. + +1991ல் சோவியத் ஒன்றியத்தின் சிதறலையடுத்து இறுதியாக விடுதலையை அறிவித்த நாடு கசக்கஸ்தானாகும். தற்போதைய சனாதிபதியான நர்சுல்தான் நசர்பாயேவ் அவர்களே 1990இலிருந்து நாட்டின் தலைவராக உள்ளார். நாட்டின் அரசியலில் நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். விடுதலையடைந்ததிலிருந்து கசக்கஸ்தான் ஒரு சமநிலை வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதுடன் தனது பொருளாதாரத்தை விருத்தி செய்வதிலும், குறிப்பாகத் தனது ஐதரோகாபன் கைத்தொழிலை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது. + +கசாக்ஸ்தான் கலாசார மற்றும் இனப்பல்வகைமையுடைய நாடாகும். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின்போது பல்வேறு இனக்குழுக்களின் நாடுகடத்தலும் இதற்குக் காரணமாகும். கசக்கஸ்தானின் சனத்தொகை 16.6 மில்லியனாக இருப்பதோடு 131 இனக் குழுக்களும் காணப்படுகின்றது. இவற்றுள் கசாக்குகள், ரசியர், உக்ரேனியர், ஜெர்மானியர், உஸ்பெக்கியர், தாத்தார்கள் மற்றும் உய்குர்கள் என்போர் குறிப்பிடத்தக்கோர். சனத்தொகையில் 63%மானோர் கசாக்குகளாவர். கசாக்ஸ்தான் சமயச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. கசாக்ஸ்தான் ஓரளவு மதச் சகிப்புத்தன்மையுள்ள நாடாகும். ஆயினும் பிற்காலத்தில், மதச் சுதந்திர மீறல்களுக்காகச் சர்வதேச கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரந்துக்கான ஆணைக்குழு 2013ல் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இறுக்கமான சட்டங்களின் பிரயோகம் காரணமாகக் கசாக்ஸ்தானினின் சர்வதேச மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு பல கசாக்கு மக்களின் சமயச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. சனத்தொகையில் 70%மானோர் இசுலாமியராக இருப்பதோடு, 26%மானோர் கிறித்தவராவர். நாட்டின் தேசிய மொழியாகக் கசாக்கு மொழி இருப்பதோடு, ரசிய மொழி உத்தியோகபூர்வ நிலையிலுள்ளது. சகல மட்டங்களிலுமுள்ள ஆவணங்களிலும் இரு மொழிகளும் இடம்பெற்றுள்ளன. + +"கசாக்கு" எனும் சொல் சீனா, ரசியா, துருக்கி, உசுபெகிசுத்தான் மற்றும் அருகில் உள்ள நாடுகளில் வாழும் கசாக்குகளின் வழித்தோன்றல்களை அழைக்கப் பயன்படுத்துப்படுவதோடு, "கசாக்குசுத்தானி" ( ; ) எனும் சொல் கசாக்குசுத்தானில் வாழும் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "கசாக்கு" எனும் இனப் பெயர் "சுதந்திரம்; விடுதலை உணர்வு" எனப் பொருள்படும் பண்டைய துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இக் கருத்து கசாக்குகளின் நாடோடி ���ாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பாரசீகப் பின்னொட்டான ""இசுத்தான்"" என்பது "இடம்" அல்லது "நிலம்" எனும் பொருளைத் தரும். ஆகவே "கசாக்குசுத்தான்" என்பது "கசாக்குகளின் நிலம்" எனும் பொருளைத் தரும். + +புதிய கற்காலப்பகுதியிலிருந்தே கசாக்குசுத்தானில் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. இப்பகுதியின் காலநிலையும் நிலப்பண்பும் கால்நடைவளர்ப்புக்கு உகந்ததாக இருந்ததால் நாடோடிகளின் வாழ்க்கைக்கும் உகந்ததாக இருந்தது. தொல்பொருளாய்வாளர்களின் கூற்றுப்படி இப்பகுதியில் காணப்படும் பரந்த தெப்பி புல்வெளியில் முதன்முதலில் மனிதர் குதிரைகளை வளர்த்துள்ளதாகத் தெரியவருகிறது. + +மத்திய ஆசியாவில் உண்மையில் குடியேறியோர் இந்தோ-ஈரானியராவர். இவர்களுள் குறிப்பிடத் தக்க குழுவினர் நாடோடிகளான சித்தியர் ஆவர். கிபி 5ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியளவில் துருக்கிய மக்கள் ஈரானியர் மீது ஆக்கிரமிப்பு நடத்தினர். இவர்கள் மத்திய ஆசியாவில் செல்வாக்கு மிக்கோராக மாறினர். கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பட்டுப்பாதையின் வழித்தட நிலையங்களாகத் தராசு (ஓலி-அதா) மற்றும் அசுரத்து-இ துருக்கிசுத்தான் ஆகியன செயற்பட்டிருந்தாலும், உண்மையான அரசியல் ரீதியிலான ஒன்றிணைப்பு 13ம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட மங்கோலிய ஆக்கிரமிப்பின் பின்னரே ஆரம்பித்தது. மங்கோலியப் பேரரசின் கீழ், நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதோடு, இவை பின்னர் எழுச்சிபெற்றுவந்த கசாக்கு கானகத்தின் கீழ் வந்தன. + +இக்காலப்பகுதியில், நாடோடி வாழ்க்கையும் கால்நடைவளர்ப்பின் அடிப்படையிலான பொருளாதாரமும் தெப்பி புல்வெளியில் ஆதிக்கம் செலுத்தின. 15ம் நூற்றாண்டில், துருக்கியக் குழுக்களிடையே தனித்துவம் மிக்க கசாக்கு அடையாளம் எழுச்சிபெறத் தொடங்கியதோடு, 16ம் நூற்றாண்டளவில் கசாக்கு மொழி, பண்பாடு மற்றும் பொருளாதாரம் என்பன உறுதிநிலை பெற்றது. + +இதுதவிர, இப்பகுதி சுதேச கசாக்கு ஆமிர்களுக்கும் தெற்கே வசித்த பாரசீக மொழி பேசும் மக்களுக்குமிடையிலான அதிகரித்த குழப்பங்களுக்கும் நிலைக்களனாக விளங்கியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்கள் காரணமாகக் கசாக்கு கானகம் அல்லலுற்றது. இதனால், இதன் சனத்தொகை பெரும், மத்திய மற்றும் சிறு குழுக்களாகப் பிரிவடைந்தது. அரசியல் பிரிவினைகள், இனக்குழு மோதல்கள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான வர்த்தகப் பாதை முக்கியத்துவமிழப்பு என்பன கசாக்கு கானகத்தை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச் சென்றன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கீவா கானகம் மங்கிசுலாக்கு குடாவை இணைத்துக் கொண்டது. ரசியர்களின் ஆக்கிரமிப்பு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கு உசுபெக்கு ஆட்சி நிலைத்திருந்தது. + +17ம் நூற்றாண்டளவில் கசாக்குகள், சங்கார்கள் உள்ளிட்ட மேற்கு மங்கோலிய குழுக்களின் கூட்டமைப்பான ஒய்ராத்துகளுடன் போரிட்டனர். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கசாக்கு கானகம் அதன் உச்சநிலையை எட்டியது. சங்கார்களின் கசாக்கு பகுதிகளின் மீதான "பேரழிவு" ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, இக்காலப்பகுதியில் சிறு குழுப் பகுதி 1723-1730 போரில் சங்கார்களுக்கு எதிராகப் போரிட்டது. சங்கார்கள், தோல்வியுற்ற கசாக்குகளின் புல்நிலங்களைக் கைப்பற்றியதோடு, பலரைச் சிறைப்பிடித்ததோடு பல இனக்குழுக்களின் கட்டமைப்பையும் சிதறடித்தனர். அபுல் கைர் கானின் தலைமையின் கீழ் கசாக்குகள், 1726ல் புலந்தி நதிக்கரையிலும் 1729ல் அன்ரகாய் போரிலும் சங்கார்களுக்கெதிராகப் பெருவெற்றி பெற்றனர். 1720களிலிருந்து 1750கள் வரை சங்கார்களுக்கெதிராக இடம்பெற்ற முக்கிய போர்களில் பங்குபற்றிய அப்லாய் கான், மக்களால் மாவீரராகப் போற்றப்படுகிறார்.மேலும் கசாக்குகள், வொல்கா கல்மிக்குகளின் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களுக்கும் இலக்காயினர். சங்கார்கள் மற்றும் கல்மிக்கு ஆக்கிரமிப்புகள் காரணமாகப் பலவீனமடைந்திருந்த கசாக்கு இனக்குழுக்கள்மீது படையெடுத்த கொகாந்து கானகம், 19ம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் கசாக்குசுத்தானின் தலைநகராயிருந்த அல்மாடி உள்ளிட்ட இன்றைய கசாக்குசுத்தானின் தென்கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும், ரசிய வருகைக்கு முன், சிம்கென்ட் பகுதியைப் புகாரா அமீரகம் ஆட்சி புரிந்தது. + +19ம் நூற்றாண்டில், ரசியப் பேரரசு மத்திய ஆசியா நோக்கி விரிவடைந்தது. "பெரு விளையாட்டு" காலப்பகுதி பொதுவாக 1813லிருந்து 1907ன் ஆங்கில-ரசிய உடன்பாடு வரையான காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. தற்போதைய கசாக்குசுத்தானியக் குடியரசின் பகுதிகளை அப்போதைய சார் மன்னர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தனர். + +பிரித்தானியப் பேரரசுடனான "பெரும் விளையாட்டு" ஆதிக்கப் போட்டியில், மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், இங்கு ரசியப் பேரரசு ஒரு நிர்வாகப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியதோடு காவலரண்களையும் நிர்மாணித்தது. முதலாவது ரசியக் காவலரணான ஓர்சுக்கு 1735ல் கட்டப்பட்டது. மேலும் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அமைப்புக்களிலும் ரசிய மொழி கட்டாயமாக்கப்பட்டது. ரசியாவினால் அதன் முறைமைகளை அறிமுகப்படுத்தும் செயற்பாடு கசாக்கு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. கசாக்கு மக்களின் பாரம்பரிய நாடோடி வாழ்க்கை முறைமீதும் கால்நடை வளர்ப்பு அடிப்படையிலான பொருளாதார முறைமீதும் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் சில கசாக்கு இனக்குழுக்களையே அடியோடு அழிக்கக் காரணமாயிருந்த பஞ்சம் என்பன காரணமாக, 1860ம் ஆண்டளவில் பெரும்பாலான கசாக்குகள் ரசிய இணைப்பை அடியோடு எதிர்த்தனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கசாக்கு தேசிய இயக்கம், தம்மீதான ரசியப் பேரரசின் அடக்குமுறையை எதிர்ப்பதனூடாகத் தமது சுதேச மொழியையும் தமது இன அடையாளத்தையும் பாதுகாக்கப் போராடியது. + +1890களிலிருந்து, ரசியப் பேரரசிலிருந்து பாரியளவிலான குடியேற்றக்காரர்கள் கசாக்குசுத்தானின் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இவ்விடங்களில் செமிரெச்யே மாகாணம் குறிப்பிடத் தக்கதாகும். 1906ல் அமைத்து முடிக்கப்பட்ட, ஓரென்பேர்க்கிலிருந்து தாசுகென்ட் வரையிலான ஏரல் கடப்பு புகையிரதப் பாதையின் காரணமாக,குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் இக்குடியேற்றச் செயற்பாடு புனித.பீட்டர்சுபேர்க்கில் விசேடமாக உருவாக்கப்பட்ட குடிப்பெயர்வுத் திணைக்களத்தினால் (Переселенческое Управление) மேற்பார்வை செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டில், 400,000 ரசியர்கள் கசாக்குசுத்தானுக்கு குடிபெயர்ந்ததோடு, 20ம் நூற்றாண்டின் முன் மூன்றிலொரு காலப்பகுதியில் ஒரு மில்லியன் சிலாவியர், செருமானியர், யூதர் மற்றும் ஏனையோர் இப்பகுதியில் குடியேறினர். வசீலி பலபானோவ் என்பவர் இக்குடியேற்றப் பகுதிகளின் நிருவாகியானார். + +கசாக்குகளுக்கும் புதிய குடியேற்ற வாசிகளுக்குமிடையில் நிலம் மற்றும் நீருக்காக ஏற்பட்ட போட்டி காரணமாகச் சாரிய ரசியாவின் இறுதிக் காலப் பகுதியில் குடியேற்றவாத ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இவற்றுள் மிகவும் கொடிய கிளர்ச்சி 1916ல் ஏற்பட்ட மத்திய ஆசியக் கலகமாகும். கசாக்குகள், ரசியர்கள் மற்றும் கொசாக்கு குடியேற்றக்காரர்களையும் இராணுவக் காவலரண்களையும் தாக்கினர். இக்கலகம் காரணமாகப் பல மோதல்கள் உருவானதோடு இருதரப்பினராலும் கொடூரப் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. 1919ன் இறுதிப் பகுதிவரை இரு தரப்பினரும் பொதுவுடமை அரசாங்கத்தை எதிர்த்தனர். + +ரசியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கொந்தளிப்பான ஒரு குறுகிய காலப்பகுதியில் கசாக்குசுத்தான் சுயாட்சி (அலாசு சுயாட்சி) பெற்றிருந்தது. இதன் பின், கசாக்குசுத்தான் சோவியத் ஆட்சிக்குள் உள்வாங்கப்பட்டது. 1920ல், இன்றைய கசாக்குசுத்தான் பகுதி, சோவித் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு சுயாட்சிக் குடியரசாகியது. + +மேல்தட்டு வர்க்கத்தினர் மீதான சோவியத் அடக்குமுறை மற்றும் 1920கள் மற்றும் 1930களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயக் கூட்டுப்பண்ணைத் திட்டம் காரணமாகப் பெரும் பஞ்சம் ஏற்பட்டதுடன் கலகங்களும் உருவாகின. 1926க்கும் 1939க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பட்டினி மற்றும் குடியகல்வு என்பன காரணமாகக் கசாக்கு மக்கள்தொகை 22% வீழ்ச்சியடைந்தது. இன்றைய மதிப்பீடுகளின் படி பட்டினியும் குடியகல்வும் ஏற்படாதிருந்தால் கசாக்குசுத்தானின் மக்கள்தொகை சுமார் 20 மில்லியனாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது. 1930களில், அடக்குமுறை மற்றும் கசாக்கு அடையாளம் மற்றும் பண்பாட்டை அழித்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு, பல புகழ்பெற்ற கசாக்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வரலாற்றியலாளர்கள் போன்றோர் ஸ்டாலினின் ஆணையின் கீழ் கொல்லப்பட்டனர். சோவியத் ஆட்சி நிறுவப்பட்ட பின், கசாக்குசுத்தானை சோவியத் முறைமையுடன் ஒன்றிணைக்கும் வகையில் சமவுடைமை அரசொன்றும் செயற்படத் தொடங்கியது. 1936ல் கசாக்குசுத்தான் ஒரு சோவியத் குடியரசாக உருவானது. 1930கள் மற்றும் 1940களில் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து நாடுகடத்தப்பட்டோரின் உள்வருகையைச் சந்தித்தது. கசாக்குசுத்தானின் இன மரபுரிமைகள் அல்லது நம்பிக்கைகள் காரணமாக நாடுகடத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் கசாக்குசுத்தான் அல்லது சைபீரியாவ���க்கே நாடுகடத்தப்பட்டனர். உதாரணமாக, சூன் 1941ல் செருமானிய ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 400,000 வொல்கா செருமானியர் உக்ரேனிலிருந்து கசாக்குசுத்தானுக்கு மாற்றப்பட்டனர். + +நாடுகடத்தப்பட்டோர் பாரிய சோவியத் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவற்றுள் அசுதானாவுக்கு வெளியே அமைக்கப்பட்ட அல்சைர் முகாமும் அடங்கும். இம்முகாமில் "மக்களின் விரோதிகள்" எனக் கருதப்படுவோரின் மனைவிமார் அடைக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது சோவியத் ஒன்றியத்தின் சார்பில் கசாக்குசுத்தானிலிருந்து ஐந்து படைப்பிரிவுகள் சேவையாற்றின. போர் முடிந்து இரண்டாண்டுகளின் பின், அதாவது 1947ல், செமே நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்ட செமிபலாடின்சுகு பரிசோதனைக்களம், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய அணுவாயுதப் பரிசோதனைக் களமாகச் செயற்பட்டது. + +இரண்டாம் உலகப்போரின்போது, போர் முயற்சிகளுக்கு ஆதரவாகக் கைத்தொழில்மயமாக்கலும் கனிய அகழ்வும் அதிகரித்தன. எவ்வாறாயினும், சோவியத் தலைவர் ஸ்டாலினின் இறப்பு வரை, கசாக்குசுத்தான் பெரும்பாலும் விவசாயப் பொருளாதாரத்தையே கொண்டிருந்தது. கசாக்குசுத்தானின் பாரம்பரியப் புல்வெளிகளைச் சோவியத் ஒன்றியத்தின் பாரிய தானிய விளைநிலங்களாக மாற்றும் பொருட்டு, 1953ல், சோவியத் தலைவர் நிகிட்டா குருசேவ் விளைநிலத் திட்டத்தை முன்னெடுத்தார். இத்திட்டம் பொதுப்படையான விளைவுகளையே அளித்தது. எனினும், சோவியத் தலைவர் லியோனிட் பிரெசினேவின் பின்னைய நவீனமயமாக்கல் திட்டங்கள் காரணமாக, கசாக்குசுத்தான் மக்கள்தொகையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாகக் காணப்பட்ட விவசாயத்துறையில் துரித அபிவிருத்தி ஏற்பட்டது. 1959ம் ஆண்டளவில், கசாக்குகள் மக்கள்தொகையில் 30%மாகவும், ரசியர்கள் 43%மாகவும் காணப்பட்டனர். + +1980களில் சோவியத் சமுதாயத்தில் அதிகரித்த முறுகல்கள் காரணமாக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்பற்றிய கோரிக்கைகள் முதன்மை பெற்றன. 1949ல், லாவ்ரென்டி பேரியாவால், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசின் செமே பகுதியில் அணுகுண்டுப் பரிசோதனை நடத்த எடுக்கப்பட்ட முடிவு இதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாகப் பாரிய சூழலியல் மற்றும் உயிரியல் அனர்த்தங்கள் ஏற்பட்டன. இது பல வருடங்களுக்குப் பின்னரே உண��ப்பட்டது. இதன் காரணமாகச் சோவியத் ஒன்றியம்மீது கசாக்குகளின் எதிர்ப்பு அதிகரித்தது. + +டிசெம்பர் 1986ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசின் பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த தின்முகாமெத் கோனாயேவ் என்பவருக்குப் பதிலாக ரசிய சோவியத் கூட்டுச் சமவுடமைக் குடியரசின் கென்னடி கொல்பின் என்பவரை நியமித்தமைக்கு எதிராக, கசாக்கு இளைஞர்களால், பின்னர் செல்தோக்சான் கலகமென அழைக்கப்பட்ட, பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கப் படைகள் கலகத்தை அடக்கின. பல மக்கள் கொல்லப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் சிறையிலிடப்பட்டனர். சோவியத் ஆட்சியின் இறுதி நாட்களின்போது, ஆட்சிக்கெதிரான அதிருப்தி அதிகரித்ததோடு, சோவியத் தலைவர் மிகேல் கோர்பச்சேவின் கிளாசுனொசுட் கொள்கைக்கெதிரான கருத்துக்களும் தோன்றின. + +டிசம்பர் 16, 1991ல் இது சுதந்திரமடைந்தது. இதுவே இறுதியாகச் சுதந்திரம் பெற்ற சோவியத் குடியரசாகும். பொதுவுடமைக் காலத் தலைவரான நர்சுல்தான் நசர்பாயேவ் நாட்டின் முதல் சனாதிபதியானதோடு, அடுத்த இரண்டு தசாப்த காலத்துக்கு அவரே பதவி வகித்தார். நாட்டின் அரசியல் மீது நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். + +சுயாட்சி வேண்டிய சோவியத் குடியரசுகளின் கருத்துக்களை உள்வாங்கியமையால், ஒக்டோபர் 1990ல் கசாக்குசுத்தான், சோவியத் சமவுடமைக் குடியரசுகளின் ஒன்றியத்தினுள்ளேயே தன்னை ஒரு இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆகத்து 1991ல் மாசுகோவில் நடத்தப்பட்ட தோல்வியடைந்த கிளர்ச்சி நடவடிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பவற்றைத் தொடர்ந்து, டிசெம்பர் 16, 1991ல் கசாக்குசுத்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது. சோவியத் குடியரசுகளிலேயே இறுதியாகச் சுதந்திரத்தை அறிவித்தது கசாகுசுத்தானாகும். + +சுதந்திரத்துக்குப் பின்னான ஆண்டுகளில் சோவியத் சார்புப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை என்பவற்றில் குறிப்பிடத் தக்க சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1989ல் கசாக்குசுத்தான் பொதுவுடமைக் கட்சியின் தலைவராகவும், பின்னர் 1991ல் கசாக்குசுத்தானின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட நர்சுல்தான் நசர்பாயேவின் ஆட்சியின் கீழ் கசாக்குசுத்தான் சந்தைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. + +1998ல் கசாக்குசுத்தானின் தலைநகர், நாட்டின் மிகப்பெரிய நகரான அல்மாடியிலிருந்து, அசுதானாவுக்கு மாற்றப்பட்டது. + +தனியாள் கூட்டமைப்புச் செயற்திட்டம் எனப்பட்ட ஒப்பந்தம் சனவரி 31, 2006ல், NATO, உக்ரேன், ஜோர்ஜியா, அசர்பைசான் மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது. (பின்னர் இணைந்த நாடுகள், மோல்டோவா, பொசுனியா மற்றும் எர்சகோவினா மற்றும் மொன்டெனேக்ரோ என்பனவாகும்.) + +யூரல் நதியின் இருபுறமும் அமைந்துள்ளதால், இரு கண்டங்களில் அமைந்துள்ள நிலம்சூழ் நாடு எனும் சிறப்பைக் கசாக்குசுத்தான் பெற்றுக் கொள்கிறது. + +கசாக்கு நிலப்பகுதி மேற்கே கசுபியன் கடலிலிருந்து கிழக்கே அல்டாய் மலைத்தொடர் வரையிலும், வடக்கே மேற்குச் சைபீரியச் சமவெளியிலிருந்து தெற்கே மத்திய ஆசியப் பாலைவனங்கள் மற்றும் பாலைவனச்சோலைகள் வரையிலும் பரந்துள்ளது. பரப்பளவு கொண்ட கசாக்கு தெப்பீ நாட்டின் மூன்றிலொரு பகுதியை உள்ளடக்கியுள்ளதோடு, உலகின் மிகப்பெரிய உலர் தெப்பி வலயமாகவும் காணப்படுகிறது. தெப்பீ நிலப்பரப்பு பாரிய புல்வெளிகளையும் மணற் பகுதிகளையும் கொண்டுள்ளது. ஏரல் கடல், இலி நதி, இர்திசு நதி, இசிம் நதி, யூரல் நதி, சிர் தர்யா, சாரின் நதி மற்றும் பள்ளத்தாக்கு, பல்காசு ஏரி மற்றும் சேசான் ஏரி என்பன குறிப்பிடத் தக்க நதி மற்றும் ஏரிகளாகும். + +நாட்டின் காலநிலை வெப்பமான கோடைகாலம் மற்றும் குளிரான குளிர்காலம் என்பன கொண்ட கண்டக் காலநிலையாகும். படிவு வீழ்ச்சியின் படி இது வறள் மற்றும் அரை வறள் வலயத்தினுள் அமைந்துள்ளது. + +சாரின் பள்ளத்தாக்கு 150–300 மீற்றர் ஆழமும், நீளமும் கொண்டது. இது செம்மணற்கல் நிலத்தினூடாகச் சென்று வடக்கு தியான் சானில் ("சொர்க்கத்து மலைத்தொடர்கள்", அல்மாடிக்குக் கிழக்கே ) உள்ள சாரின் நதிப் பள்ளத்தாக்கு வரை விரிகிறது. செங்குத்தான மலைச்சரிவுகள், மலைத்தூண்கள் மற்றும் வளைவுகள் என்பன 150-300 மீற்றர் உயரம் வரை வேறுபடுகின்றன. மலைப்பள்ளத்தாக்கு அணுகவியலாத் தன்மை கொண்டுள்ளதால், இது பனி யுகக் காலத்தில் காணப்பட்ட அரிய வகைச் சாம்பல் மரத்தின் புகலிடமாக விளங்குகிறது. இம்மரம் தற்போது ஏனைய பகுதிகளிலும் வளர்கிறது. பிகாச் குழி என்பது பிளியோசீன் அல்லது மையோசீன் காலத்து எ��ிகற்குழியாகும். இதன் விட்டம் ஆகும். 5±3 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதன் அமைவிடம் ஆகும். + +கசாக்குசுத்தான் 14 மாகாணங்களாகப் () பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள் மேலும் மாவட்டங்களாகப் () பிரிக்கப்பட்டுள்ளன. + +அல்மாடி மற்றும் அசுதானா நகரங்கள் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு எந்த மாகாணங்களுடனும் இணைக்கப்படவில்லை. பைக்கானூர் நகர் சிறப்பு நிலை பெற்றுள்ளது. ஏனெனில் இது 2050 வரை பைக்கானூர் ஏவுதளத்துடன் சேர்த்து ரசியாவுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. + +ஒவ்வொரு மாகாணத்துக்கும் சனாதிபதியால் நியமிக்கப்படும் அகிம் (மாகாண நிர்வாகி) தலைமை வகிப்பார். நகர அகிம்கள் மாகாண அகிம்களால் நியமிக்கப்படுவர். டிசம்பர் 10, 1997ல் கசாக்குசுத்தான் அரசாங்கம் தனது தலைநகரை அல்மாடியிலிருந்து அசுதானாவுக்கு மாற்றிக்கொண்டது. + +இரண்டாம் நிலைக்கல்வி வரை அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 99.5%மாகும். கல்வி மூன்று கட்டங்களாகக் காணப்படுகிறது. முதல் நிலைக் கல்வி (படிவம் 1-4), அடிப்படைப் பொதுக் கல்வி (படிவம் 5-9) மற்றும் உயர்நிலைக் கல்வி (படிவம் 10-11 அல்லது 12) என்பனவாகும். இவை தடர் பொதுக் கல்வி மற்றும் தழிற்கல்வியென இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (முதல் நிலைக் கல்விக்கு முன் ஓராண்டு முன்பள்ளிக் கல்வி உண்டு.) இவ்வெவ்வேறு கட்டங்களை ஒரே பாடசாலையிலோ அல்லது வெவ்வேறு பாடசாலைகளிலோ கற்க முடியும் (உதாரணமாக முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் தனித்தனியே கற்க முடியும்). அண்மைக் காலங்களில் சில இரண்டாம் நிலைக் கல்லூரிகள், விசேட பாடசாலைகள், உடற்பயிற்சி அரங்குகள், மொழியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது. + +தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், கல்வி நிறுவகங்கள், இசைக்கல்லூரிகள் மற்றும் உயர் கல்லூரிகள் என்பன காணப்படுகின்றன. இவ்வுயர் கல்வியில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை, அடிப்படை உயர் கல்வியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாடத் துறையில் அடிப்படைத் தகைமையை வழங்கி இளமாணிப் பட்டத்துக்கு இட்டுச் செல்கின்றது. அடுத்த நிலையில், க���றித்த தெரிவுப் பாட நெறியில் சான்றிதழ்ப் பட்டக் கல்வி வழங்கப்படுகிறது. இறுதி நிலையில் விஞ்ஞான ரீதியிலான உயர்கல்வி மூலம் முதுமாணிப்பட்டம் வழங்கப்படுகிறது. பட்டப்பின் படிப்பின்மூலம் கலாநிதிப் பட்டத்தைப் பெற முடியும். கல்வி மற்றும் உயர்கல்வியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மூலம் தனியார்க் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. + +கசாக்குசுத்தானில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மொத்தத் தொகை 9 மில்லியன் டொலர்களாகும். அதிகளவான மாணவர் கடன்கள் அல்மாடி, அசுதானா மற்றும் கிசிலோர்தா ஆகிய நகரங்களில் பெறப்பட்டுள்ளன. + +கசாக்குசுத்தானியக் கல்வியமைச்சினால் "போலாசாக்" எனப்படும் புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5,000 கசாக்குசுத்தான் குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிசிலின் மூலம் உதவி பெறுவோருக்கு, கல்விக்கான நிதி, வெளிநாட்டில் வாழ்வதற்கான வாழ்க்கைச் செலவு என்பவற்றோடு வருடத்தில் ஒருமுறை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு வந்து திரும்புவதற்கான பயணச் செலவு என்பன வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்விகற்கத் தேவையான நிபந்தனைகளைத் திருப்தி செய்திருந்தால் குறித்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் இணைய முடியும். புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எடின்பரோ பல்கலைக்கழகம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம், லண்டன் அரசுக் கல்லூரி, டொரன்டோ பல்கலைக்கழகம், ஒக்சுபோட்டுப் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, பேர்டூ பல்கலைக்கழகம், மசாசூசெட்சு தொழில்நுட்ப நிறுவகம், சிட்னிப் பல்கலைக்கழகம், மியூனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி, தோக்கியோ பல்கலைக்கழகம், வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் பல கல்வி நிறுவகங்களில் கல்வி பயில முடியும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்கள் கட்டாயமாக மீண்டும் நாட்டுக்குத் திரும்பி, தொடர்ச்சியாகக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பது இப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதில் உள்ள முக்கிய விதிமுறையாகும். + +நவம���பர் 2012ல், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 183 உறுப்பு நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் மூன்று வருடக் காலத்துக்குச் சேவையாற்றும் வகையில் கசாக்குசுத்தானைத் தேர்ந்தெடுத்தன. இவ்வமைப்பு உலகெங்கிலுமுள்ள அடக்கப்பட்ட மக்களின் மனித உரிமைச் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் அமைப்பாகும். + +2009ல் கசாக்குசுத்தான் ஒரு மனித உரிமைகள் செயற்திட்டமொன்றை வெளியிட்டது. + +கசாக்குசுத்தான் 2002ல் மனித உரிமைகள் குறைகேளதிகாரிப் பதவியை உருவாக்கியது. இதன்மூலம், அரச அதிகாரிகள்மூலம் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறைக்கப்பட்டு பாதுகாப்பான சட்ட அமுலாக்கம் ஏற்படுத்தப்படுவதோடு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தலும் விரிவாக்கலும் நடைமுறைப்படுத்தப்படும். + +2002 மார்ச் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆணையொன்றில் (அரசாங்கத்தை வாதியாகக் குறிப்பிட்டு) "ரெசுபப்லிகா" பத்திரிகையை அச்சிடுவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இவ்வாணையை ஏய்க்கும் வகையில் அப்பத்திரிகை வேறு தலைப்புகளில் (உதாரணமாக, "நொட் தற் ரெசுபப்லிகா" - அந்த ரெசுபப்லிகா அல்ல) வெளியிடப்பட்டது. + + + + + +ஒலிபெயர்ப்பு + +ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் உள்ள எழுத்துக்களை கணினியில் உருவாக்க அம்மொழியிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஈடான ஒலி வடிவைத் தரும் ஆங்கில எழுத்தையோ அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பையோ தட்டுவதன் மூலம் அவ்வெழுத்தைப் பெறும் அமைப்பு மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. இம்முறை ஒலிபெயர்ப்பு (transliteration) என அறியப்படுகிறது. உதாரணமாக "அ" எனும் தமிழ் எழுத்தை "a" எனும் ஆங்கில எழுத்தைத் தட்டிப் பெறலாம், "ம" எனும் தமிழ் எழுத்தை "ma" எனும் இரு ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பைத் தட்டிப் பெறலாம். "அம்மா" எனும் தமிழ் வார்த்தையை "ammaa" எனும் ஆங்கில எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். "உனக்காக" எனும் தமிழ் வார்த்தையை "unakkaaga" எனும் ஆங்கில எழுத்துக்கள் உருவாக்குகின்றன. இதில் "க" எனும் குறில் எழுத்துககான "ka" என்பதில் "a" ஒரு முறையும் "கா" எனும் நெடில் எழுத்துக்கான "kaa" என்பதில் "a" இரு முறையும் வரும் வகையில் ஒலி பெயர்ப்பு அமையப்பெற்றுள்ளது. + +தமிழ் எழுத்துக்க��ின் ஒலி வடிவமைப்பு (transliteration scheme) + +தமிழை கணினியில் வடிக்க உதவும் ஒலிபெயர்ப்பு மென்பொருட்களை உருவாக்குவோர் பயன்படுத்தும் தமிழெழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்கள் அனேகமாக ஓரேவிதமாக இருப்பினும் அவற்றில் வேற்றுமைகளும் உள்ளன, சில மென்பொருட்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சில ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய தமிழ் ஒலியமைப்பைப் பெறாமலும் இருப்பதுண்டு. இது நடைமுறைச் சிக்கல்களில் ஒன்று. +இயல்பாகத் தமிழ் எழுதுக்களுக்கீடாக அமையும் ஆங்கில எழுத்துக்களும் அவற்றின் தொகுப்பும் கீழ்க்கண்ட அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் தமிழில் இயல்பாக இல்லாத ஒலிகளை உள்ளடக்கிய க்ரந்தம் எனப்படும் வடமொழி எழுத்துக்களும், ஆங்கில வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யாமல் அவற்றின் உச்சரிப்பில் தமிழில் எழுத உதவும் விசேஷமான எழுத்துக்களும், அவற்றுக்கீடான ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளன. + +உயிரெழுத்துக்களும் ஆய்த எழுத்தும் + +மெய்யெழுத்துக்கள் + +க்ரந்த எழுத்துக்களும் விசேஷ எழுத்துக்களும் + +உயிர்மெய்யெழுத்துக்கள் + +ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் உரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புடன் தேவையான உயிரெழுத்துக்குரிய ஆங்கில எழுத்து அல்லது ஆங்கில எழுத்துக்களின் தொகுப்பைத் தட்ட முறையான உயிர்மெய்யெழுத்துக்கள் கிடைக்கின்றன. + + + + +1881 + +1881 (MDCCCLXXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). + + + + + + + +தாஜிக் மொழி + +தாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி +யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும். + +ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின��� தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும். + + + + +சுழற் குலம் + +கணிதத்தில், குலம் என்பது ஓர் இயற்கணித அமைப்பு. எல்லா குல அமைப்புகளிலும் மிக்க எளிமையானது சுழற் குல அமைப்பு. ஒரே உறுப்பின் அடுக்குகளினால் பிறப்பிக்கப்பட்ட குலத்திற்கு சுழற் குலம் (Cyclic Group) எனப்பெயர். அது ஒரு முடிவுறு குலமாகவும் இருந்தால் அதன் உறுப்புகளை + +பட்டியலிடலாம். இச்சூழ்நிலையில் formula_3 என்ற உறுப்பு குலத்தின் பிறப்பி (Generator) எனப்படும். + +எப்பொழுதும் சுழற் குலம் பரிமாற்றுக்குலமே. + + + + + + + + + +கொங்கு மங்கலவாழ்த்து + +கொங்கு மங்கலவாழ்த்து என்பது கொங்கு வேளாளர் மற்றும் கொங்கு வேட்டுவக் கவுண்டர் என்ற இனத்தவர்கள் திருமணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்றாகும். குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் தி.அ. முத்துசாமி குறிப்பிடுகிறார். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளியுள்ளார். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' என்பது கவுண்டர்களின் கங்க அரச வம்சப் பெயராகும். + + + + + +1876 + +1876 (MDCCCLXXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + + + + +துருக்மெனிஸ்தான் + +துருக்மெனிஸ்தான் ("Turkmenistan") அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ��கியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார். + + + + +தாமேலி மொழி + +தாமேலி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இப் பகுதி மிர்க்கானி கோட்டையிலிருந்து "அரண்டு" கணவாய்க்குச் செல்லும் பாதையில் "தோர்ஷ்" என்னுமிடத்திற்கு 10 மைல்கள் தெற்கே சித்ரால் ஆற்றின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இப் பகுப்பு மொழியியல் அடிப்படையிலன்றி புவியியல் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. + +தாமேலி பேசப்படும் ஊர்களில் இது இன்னமும் முக்கிய மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களால் தொடர்ந்தும் பயிலப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோரில் வளர்ந்த ஆண்கள் பாஷ்தூ மொழியை இரண்டாவது மொழியாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் கோவார், உருது போன்ற மொழிகளையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். எனினும் தாமேலி மொழிப் பயன்பாட்டில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. + + + + + +கலஷா மொழி + +கலாஷா மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. + +கலாஷா மொழி பேசுவோர் எல்லோர���ம் தொடக்கத்தில் தமக்கென ஒரு சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பிற்காலத்தில் பலர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டனர் எனினும் சுமார் 3000 பேர் வரை இன்னமும் தங்கள் மரபுவழிச் சமயத்தையே பின்பற்றி வருகின்றனர். + +இம் மொழி தொடர்பில் நிபுணரான ரிச்சார்ட்டு ஸ்ட்ராண்ட் என்பவர், "கலாஷா" என்னும் பெயர் ஆப்கானிஸ்தானின், நூரிஸ்தான் மாகாணத்தில் கலாஷ் பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் வாழும் நூரிஸ்தானி மக்களின் இனப் பெயரோடு தொடர்பு உடையது எனக் கருதுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் தெற்குச் சித்ரால் பகுதிவரை பரவியிருந்த இந்த நூரிஸ்தானிகளிடம் இருந்தே இப் பெயரை கலாஷா மொழி பேசுவோர் பெற்றிருக்கலாம் என்பது இவர் கருத்து. எனினும், இந்திய-ஈரானிய மொழிப் பிரிவின் இன்னொரு குழுவைச் சார்ந்த நூரிஸ்தானி மொழியாகிய கலாஷா-அலாவுக்கும், இந்திய-ஆரிய மொழியாகிய கலாஷா-முன் மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. + + + + +கோவார் மொழி + +கோவார் மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் யாசின் பள்ளத்தாக்கு, "கில்கிட்" பகுதியிலுள்ள "குப்பிஸ்", மேல் "சுவாத்" பகுதியின் சில இடங்கள் ஆகியவற்றில் பேசப்படும் ஒரு மொழியாகும். அத்துடன் இம் மொழி "கில்கிட்", "குன்சா" பகுதிகளின் பிற மொழி பேசும் இடங்களில் இரண்டாம் மொழியாகவும் பயன்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, தாஜிக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் இம்மொழி பேசுவோர் குறைந்த அளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. + +கோவார் மொழியில், பிற தார்டிக் மொழிகளுடன் ஒப்பிடும்போது கூடுதலான ஈரானிய மொழிகளின் செல்வாக்கு உள்ளது. ஷினா, கோஹிஸ்தானி என்பவை போலன்றிக் குறைந்த அளவு சமஸ்கிருதச் செல்வாக்கே கோவார் மொழியில் காணப்படுகின்றது. + + + + +கோஹிஸ்தானி மொழி + +கோஹிஸ்தானி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள கோஹிஸ்தான் பகுதியில் பேசப்படும் ஒரு ம��ழியாகும். எத்னோலாக் கோஹிஸ்தானி என்பதை பல மொழிகளைக் கொண்ட ஒரு குழுவின் பெயராகக் கொடுத்துள்ளது. எனினும் கோஹிஸ்தானில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியே இங்கே கோஹிஸ்தானி எனக் குறிப்பிடப்படுகின்றது. வேறு பல மலைப்பகுதி மொழிகளும் கோஹிஸ்தானி என்ற பெயருள் அடக்கப்படுவதனால், வேறுபடுத்துவதற்காக இம் மொழி "சிந்து-கோஹிஸ்தானி" என்ற பெயராலும் அழைக்கப்படுவது உண்டு. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. + +கோஹிஸ்தானி மொழியில் வாய்மொழி அல்லது எழுதப்பட்ட இலக்கியங்கள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. இம் மொழி பற்றிப் போதிய அளவு ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னரும் இம் மொழி பற்றிக் குறிப்பிட்டவர்கள் பல்வேறு பெயர்களால் இதனை அழைத்துள்ளனர். "மையா' (Maiya), கில் (Khil), சேயோயிஸ் (Seois)" என்பவை அவற்றுட் சில. + + + + + + +சினா மொழி + +சினா மொழி அல்லது ஷினா மொழி, பாகிஸ்தானின் வட பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். இதுவே பாகிஸ்தானின் வட பகுதிகளில் பாசப்படும் மொழிகளுள் முக்கியமானது. இது இந்தியாவிலும் வடக்குக் காஷ்மீர் பகுதியில் பேசப்படுகின்றது. பாகிஸ்தானில் இம் மொழி பேசுவோர் பெரும்பாலும் கில்கிட் மற்றும் தயமெர் மாவட்டங்களிலேயே வாழுகின்றனர். இவற்றைவிட பால்ட்டிஸ்தான், கோஹிஸ்தான் மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர் + +இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. + +இம் மொழி குறித்த ஆய்வுகள் இதன் கிளை மொழிகளின் வேறுபாடுகள் குறித்து ஒத்த கருத்து உடையவையாக இல்லை. எனினும் இம் மொழியின் அடையாளத்தை நிறுவுவதிலும், இலக்கணத்தை உருவாக்குவதிலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 1980 ஆம் ஆண்டிலிருந்து லெயிட்னர் (Leitner), கிரியர்சன் (Grierson), லாரிமர் (Lorimer), பெய்லி (Bailey) ஆகியோர் இம் மொழி தொடர்பாகப் பல பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இவர்களுள் பெய்லியே இதன் இலக்கணம், ஒலியனியல் என்பவை தொடர்பில் ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் ஆவார். இவர் தனது ஆய்வுகள் மூலம் மூன்று வகையான ஷினா மொழிகளை அடையாளம் கண்டார். இவை கில்கிட்டி, கோஹிஸ்தானி, அஸ்டன் என்பனவாகும். + +கில்கிட் மாவட்டத்தில் பேசப்படும் மொழியே பொது ஷினாவாகக் கொள்ளப்படுகின்றது. எனினும் இதனைப் பொது மொழியாக உயர்த்துவதற்கு நிறையச் செய்யவேண்டி இருக்கிறது. இப்பொழுதுதான் இக் கிளை மொழியில் இலக்கியங்கள் சில வரத் தொடங்குகின்றன. பாகிஸ்தான் வானொலியும் சில நிகழ்ச்சிகளை இம்மொழியில் தயாரித்திருக்கிறது. + + + + + + +கோஹிஸ்தான் மாவட்டம் + +கோஹிஸ்தான் (کوہستان) பாகிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது வடமேற்கு முன்னரங்க மாகாணத்தின் ஆளுகைப் பரப்புக்கு உட்பட்டது. பாரசீக மொழியில் கோஹிஸ்தான் என்பது "மலை நாடு" என்னும் பொருள் தரும் ஒரு சொல்லாகும். நடு, தென் மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புப் பதையாக இருந்ததனால் இப் பகுதிக்குச் சிறப்பான வரலாறு உண்டு. இப் பகுதியில், மிகப் பழங்காலம் முதலே பெரும்பான்மையாகத் தார்டிக் மற்றும் பஷ்தூன் இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். இப் பகுதி வரலாற்றில், பாரசீகர், கிரேக்கர், சித்தியர், குஷாண்கள், துருக்கியர், ஆப்கானியர், முகலாயர், பிரித்தானியர் போன்றோரால் கைப்பற்றப்பட்டு இருந்துள்ளது. + +இம் மாவட்டம் மிகவும் குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட ஒரு மாவட்டமாகும். இது, காஷ்மீரின் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட ஆசாத் காஷ்மீரைக் கிழக்கு எல்லையாகவும், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தை மேற்கு எல்லையாகவும் கொண்டது. யூரேசிய நிலத்தட்டும், இந்தியத் துணைக்கண்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதால், இப் பகுதி, 2005 ஆம் ஆண்டில் காஷ்மீரில் இடம்பெற்றது போன்ற நிலநடுக்கங்களுக்கு உட்படக்கூடியது. + +பசுமையான காடுகளையும், பாரிய மலைகளையும், ஆறுகளையும் கொண்டது இம் மாவட்டம். சிந்து நதி இப் பகுதியை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. கிழக்குப் பகுதி சிந்து கோஹிஸ்தான் என்றும் மேற்குப் பகுதி சுவாத் கோஹிஸ்தான் என்றும் அழைக்கப்படுகின்றது. கில்கிட்டுக்குப் போகும் காராக்கோரம் நெடுஞ்சாலை கோஹிஸ்தான் ஊடாகச் செல்கிறது. இச் சாலையில் உள்ள கோஹிஸ்தான் நகரங்கள் எல்லாமே கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளன. + +கோஹிஸ்தான் மாவட்டம் தாசில்கள் எனப்படும் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இவை, பாலாஸ், பட்டான், தஸ்சு என்பனவாகும். தஸ்சு நகரம் இம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். + +பெரும்பாலான கோஹிஸ்தானியர் கால்நடை வளர்ப்பிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும், மாடுகள், செம்மறியாடுகள், ஆடுகள் என்பவற்றை வளர்க்கின்றனர். + + + + +குரோவர் கிளீவ்லாண்ட் + +ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் ("Stephen Grover Cleveland", மார்ச் 18, 1837 – ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார். 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார். + + + + + +பலூச்சி மொழி + +பலூச்சி மொழி ஒரு வடமேற்கு ஈரானிய மொழியாகும். மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் உள்ள பலூச்சிஸ்தானின் பலூச் பகுதியின் முதன்மை மொழி இதுவாகும். இது சில பிராகுயிக்களால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது. இது பாகிஸ்தானின் ஒன்பது உத்தியோக மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. + +பலூச்சி மொழிக்குப் பல கிளைமொழிகள் உள்ளன. எத்னோலாக் மூன்று கிளைமொழிகளாக, கிழக்குப் பலூச்சி, மேற்குப் பலூச்சி, தெற்குப் பலூச்சி என்னும் மூன்றையும் குறித்துள்ளது. ஈரானிக்கா கலைக்களஞ்சியம் ஆறு கிளைமொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. இவை, ரக்ஷானி, சரவானி, லக்ஷாரி, கேச்சி, கரையோரக் கிளைமொழிகள், கிழக்கு மலைப்பகுதிப் பலூச்சி என்பனவாகும். இவற்றுள் ரக்ஷானிக்குத் துணைக் கிளைமொழிகளாக கலாத்தி, பஞ்குரி, சர்ஹாத்தி என்னும் மூன்று மொழிகள் தரப்பட்டுள்ளன. + +19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பலூச்சி எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியாகவே இருந்தது. உத்தியோக எழுத்து மொழியாக பாரசீகம் இருந்தபோதும், பலூச் நீதிமன்றங்களில் பலூச்சி பேசப்பட்டு வந்தது. பிரித்தானிய மொழியியலாளர்களும், அரசியல் வரலாற்று அறிஞர்களும் ரோம எழுத்து வடிவங்களையே ���யன்படுத்தினர். பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர் பலூச் அறிஞர்கள், நஸ்டாலிக் அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் பாஷ்தூ மொழியை எழுதப் பயன்படுத்தும் மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். + + + + +பண்டுவாசுதேவன் + +பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்றுவித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன்பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். + +சிறிது கால இடைவெளியின் பின்னர் கலிங்கநாட்டில் இருந்த பண்டுவாசுதேவன் அழைத்து வரப்பட்டு முடி சூட்டப்பட்டான். இளவரசன் பண்டுவாசுதேவன் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான உதவியாளர்களுடன் வந்ததாக இலங்கைச் சரித்திரம் கூறும் நூலான மகாவம்சம் கூறுகின்றது. கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசியான புத்தகாஞ்சனா என்பவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டான். புத்தகாஞ்சனா பண்டைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும் புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரனுமான "பாண்டா" என்னும் அரசனுடைய மகளாவாள். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான். + + + + + +பண்டுகாபயன் + +பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம்மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் ���ருமகனும் ஆவான். + +"பண்டு காபய" என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் "பண்டு கபாயன்" (பண்டு என்றால் "பழைய" ,கபாயன் என்றால் "சிவன்") என்றும் இது இந்துக்களின் பழ‌ம்பெரும் தெய்வ‌மான "முந்துசிவ‌ன்" என்ற‌ பெய‌ரை ஒத்து உள்ளது என்றும், இத‌ன்மூல‌ம் இவ‌ன் ஒரு த‌மிழ் ம‌ன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. + +இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் இறந்த பிறகு அவனுடைய மகனான அபயன் வட இலங்கைக்கு அரசனானான். பண்டுவாசனுடைய பத்துமகன்களையும் (அபயனையும் சேர்த்து) அவர்களது சகோதரியான சித்தா என்பவனின் மகனான பண்டுகாபயன் கொலை செய்வான் என்று நிமித்தர்கள் கூறியதால் அந்த பதின்மரும் பண்டுகாயனை கொல்ல முயன்றனர். அவன் இவர்களிடம் அகப்படாமல் மாவலி கங்கையின் தெற்கு பகுதியில் மறைந்து கொண்டான். பிற்பாடு சேதியா என்னும் இயக்கர் குலப்பெண்ணின் உதவியோடு வட இலங்கையை கைப்பற்றினான். அனுராதபுரத்தின் காவல் தெய்வங்களாக சித்தராசன் என்னும் இயக்கர்களின் தெய்வத்தை நிறுவியதும் அல்லாமல் தனக்கு உதவிய சேதியாவுக்கும் கோயில் எடுத்தான். இயக்கர்களில் ஒருவனான காளவேள என்பவனை கிழக்குப் பகுதிக்கு அமைச்சனாக நியமித்தான். இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாக தெரிகிறது. + + + + + +1605 + +1605 (MDCV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +1863 + +1863 (MDCCCLXIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். + + + + + + + +கொங்கணி மொழி + +கொங்கணி மொழி இந்தியாவில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடு���்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்திலுள்ள இந்திய-ஆரிய மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. இப் பிரிவின் தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இம் மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. போத்துக்கேயம், கன்னடம், துளு, மராத்தி, பாரசீக மொழி போன்ற பல மொழிகளின் செல்வாக்கு இம் மொழியில் உண்டு. + +இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான கொங்கண் என அழைக்கப்படும் பகுதியில் இது பேசப்படுகின்றது. மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கண் பிரிவு, கோவா, கனரா (கரையோரக் கர்நாடகம்), கேரளாவின் சில இடங்கள் என்பன இப் பகுதியுள் அடங்குகின்றன. இப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பேசப்படுவது கொங்கணியின் வெவ்வேறு கிளைமொழிகளாக உள்ளன. இவை, ஒலிப்பு முறை, சொற் தொகுதி, தொனி, சில சமயங்களில் இலக்கணம் போன்ற அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. + +1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கொங்கணி பேசுவோர் தொகை 1,760,607 ஆகும். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் 0.21% ஆகும். பேசுவோர் தொகையின் அடிப்படையில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இது 15 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற கொங்கணி பேசுவோர் பலர் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். எத்னோலாக் கொங்கணி பேசுவோர் தொகையை 7.6 மில்லியன் எனக் குறிப்பிட்டுள்ளது. + +கொங்கணி மொழி கொங்கண் பகுதியில் சிறப்பாக கோமந்தக் எனப்பட்ட இன்றைய கோவாப் பகுதியிலேயே வளர்ச்சி பெற்றது. இம்மொழியின் தோற்றம் பற்றி இரு வேறு கோட்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடிய சரஸ்வதி ஆறு சுமார் கி.மு. 1900 ஆவது ஆண்டு காலப் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக நிலத்துள் அமிழ்ந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்தோர் அப்பகுதியை விட்டு வேறிடங்களுக்கு இடம் பெயரவேண்டி ஏற்பட்டது. நீண்ட பயணத்தின் பின் இவர்களில் ஒரு பகுதியினர் கோமந்தக் பகுதியில் தங்கினர். அவர்கள் தங்கள் மொழியாகிய சௌரசேனி பிராகிருதம் என்ற மொழியைப் பேசினர். இதுவே காலப்போக்கில் தற்காலக் கொங்கணி மொழியாக வளர்ச்சி பெற்றது என்பது ஒரு கோட்பாடு. + +அடுத்த கோட்பாட்டின்படி, தற்காலக் கொங்கணி மொழி கோக்னா இனக்குழுவினர் பேசிவந்த மொழியின் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்ட வடிவம் என்பதாகும். கோக்னா இனக்குழுவினர், வடக்கு மகாராஷ்டிரத்திலும், தெற்குக் குஜராத்திலும் வாழ்கின்றனர். இவர்களே கொங்கண் பகுதியின் முதன்மையான குடியேற்றவாசிகளாக இருந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த ஆரியர் இம் மொழியில் சமஸ்கிருத மற்றும் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து. + +கொங்கணி பல எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்து பின்னர் வழக்கிழந்து விட்டது. கோவாவில் இப்பொழுது தேவநாகரியே அதிகாரபூர்வமான எழுத்தாக உள்ளது. ரோம எழுத்துக்களும் கோவாவில் பயன்பாட்டில் உள்ளன. கராடகத்தில் வாழும் கொங்கணி பேசுவோர் கன்னட எழுத்துக்களையும், கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வாழ்வோர் மலையாள எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் வாழும் சில முஸ்லிம்கள் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். + + + + +1502 + +1502 (MDII) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + +நேபாளி மொழி + +நேபாளி மொழி நேபாளம், பூட்டான், ஆகிய நாடுகளிலும், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்தின் ஒரு பிரிவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. + +"நேபாள்" என்பது முன்னர், காத்மண்டுப் பள்ளத்தாக்கைக் குறித்தது. இதனால் இப் பகுதியின் உள்ளூர் மொழியான, திபேத்திய-பர்மிய மொழியான "நேவாரி" அல்லது நேபாள் பாஷாவே "நேபாளி" என்னும் பெயரால் குறிக்கப்பட்டது. இன்று நேபாளத்தின் அதிகாரபூர்வ மொழியே நேபாளி என வழங்கப்படுகிறது. இக் கட்டுரையும் இறுதியாகக் குறிக்கப்பட்ட மொழி பற்றியதே ஆகும். இம்மொழி நேபாளத்தில் மட்டுமன்றி சிக்கிமிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது. + +நேபாளத்தில் மொத்த மக்கள் தொகையின் அரைப் பங்கினரே இம் மொழியைப் பேசுகின்றனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இதனை மட்டும் கல்வித் துறை, நீதிமன்றம், அரச நிர்வாகம் ஆகியவை தொடர்பில் உத்தியோக மொழி ஆக்கியமை சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. 1996-2006 காலப் பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இது ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விளங்கியது. + +இம் மொழி வேறு பல பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. கூர்க்காக்களின் மொழி என்பதால் "கூர்க்காலி" அல்லது "கோர்க்காலி" என்றும், "மலைப் பகுதி மொழி" எனப் பொருள்படும் "பர்பாத்தியா" என்றும் அழைக்கப்படுவது உண்டு. "காஸ்கூரா" என்பதே இதன் பழைய பெயராகும். "காஸ்கூரா" என்பது "காஸ் இனத்தவரின் பேச்சு" என்று பொருள்படுகின்றது. இவர்கள், வரலாற்றுக்கு முந்திய அல்லது வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் கர்னாலி-பேரி நீரேந்து பகுதிகளில் அரிசி பயிரிட்டு வாழ்ந்த இந்திய-ஆரியக் குடியேற்றவாசிகளாவர். + +நேபாளத்தின் கிழக்குப் பகுதி, இந்திய மாநிலங்களான உத்தர்கண்ட், இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வரும் பஹாரி மொழிக் குழுவில் கிழக்குக் கோடியில் உள்ள மொழி நேபாளி மொழியேயாகும். இம் மொழி, நேபாளி பாஷா போன்ற பல திபேத்திய-பர்மிய மொழிகளுக்கு அண்மையில் வளர்ந்ததால் இம்மொழியில் அம் மொழிகளின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. + +இது ஹிந்தி மொழிக்கு நெருங்கியது எனினும் இது கூடிய பழமைக் கூறுகளைக் கொண்டது. பெருமளவுக்குப் பாரசீக மற்றும் ஆங்கிலச் சொற்களின் கலப்பின்றி, சமஸ்கிருத மொழிச் சொற்களே இம் மொழியில் அதிகமாக உள்ளன. வேறெந்த மொழியைக் காட்டிலும், சமஸ்கிருதத்துக்கு மிக நெருக்கமானது நேபாளி மொழியே என்று கூறப்படுகின்றது. + +தற்காலத்தில் இம் மொழியை எழுதுவதற்குத் தேவநாகரி எழுத்துக்களே பயன்படுகின்றன. புஜிமோல் எனப்படும் பழைய எழுத்து முறை ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. + +நேபாளி மொழியில், குறிக்கப்படுபவரின் பால், எண், தொலைவு, தகுதி என்பவற்றில் தங்கியுள்ள ஒரு சிக்கலான பதிலிடு பெயர் முறைமை உண்டு. தகுதி மூன்று நிலைகளில் உள்ளது. இவை: "கீழ் நிலை, இடை நிலை, உயர் நிலை" என்பவை ஆகும். படர்க்கைப் பதிலிடு பெயர்களில், குறிக்கப்படுபவர் அவ்விடத்தில் இல்லாவிட்டால் அல்லது அவர் தகுதி குறைந்தவராக இருந்தால் கீழ் நிலைச் சொல் பயன்படுகின்றது. இடை நிலைச் சொல் சிறப்பாகப் பெண்களைக் குறிக்கும்போது பயன்படுகின்றது. இதன் பன்மைச் சொல் ஒரு குழுவினரைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு. உயர் நிலைச் சொற்கள், குறிக்கப்படுபவர் நேரில் இருக்கும்போது அல்லது உயர் தகுதி கொண்டவராக இருக்கும்போது பயன்படுகின்றது. + + + + + +காளிதாஸ் + +காளிதாஸ் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன: + + + + + +1811 + +1811 (MDCCCXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +வன்னியர் + +வன்னியர் அல்லது வன்னிய குல சத்திரியா எனப்படுவோர் வடதமிழகத்தில் அடர்த்தியாகவும் , தென்தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவார். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர். + +படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 500க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள். + +வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது. வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது. + +தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில், இவர்களே மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவார். + + + + + + + +1931 + +1931 (MCMXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். + + + + + + + + + +இந்தியாவில் நில உரிமை கோரி நடைப்பயணம் + +இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்து நிலமற்றவர்களும், ஏழைத் தொழிலாளிகளும், பழங்குடிமக்களும் தமக்கு உரித்தான உரிமையான நிலத்தையும் நீரையும் தமக்கு உறுதி செய்ய வேண்டியும், தகுந்த சீரமைப்பு நடவடிக்கையை இந்திய அரசு எ��ுக்க வேண்டும் என்று கோரியும் நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பாராளுமன்றம் அமைந்துள்ள டெல்லிக்கு அக்டோபர் 29, 2007 வந்தடைந்தனர். + +பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் நிலமளிக்கும் இந்திய அரசு இந்தியர்களான தங்களுக்கு உரிமையான சிறு நிலம் அளிப்பதில் என்ன தடை இருக்க முடியும் என்று கேள்வியெழுப்பினர். + + + + + +இந்திய இழைத்துடுப்புப் பாரை + +இந்திய இழைத்துடுப்புப் பாரை ("Alectis indicus") என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலான கடற்கரைகளோரம் கூடுதலாக வாழுகின்றன. வயது வந்த மீன்கள் 100 மீ ஆழம் வரையிலான கடற் படுகைகளிலும் இளம் குஞ்சுகள் கயவாய்களிலும் ("estuary") ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கொன்றுண்ணி வகையைச் சேர்ந்த இவை பல்வேறு வகையான மீன்கள், சிறு கணவாய்கள், கடல் இழுதுகள், ஓடுடைய இனங்கள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. +இவை 165 செ. மீ நீளமும் 25 கிலோ எடை வரையும் வளரும் பெரிய மீன்கள். இவை பிற மீன்கள், நத்தைகள், கணவாய்கள், மற்றும் கடல்வாழ் விலங்குகளை உண்டு வாழும் கோண்மாக்கள். இவ்வகை மீன்களை சிங்கப்பூரில் வணிக அளவில் உணவிற்காக பண்ணைகளில் வளர்க்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட தொல்பொருளியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களின் அடிப்படையில் இவற்றை மனிதர்கள் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தியுள்ளது அறியப்பட்டுள்ளது. + +இவற்றின் குஞ்சுகளை வீட்டு வளர்ப்பு விலங்குகளாக மீன் தொட்டிகளில் வளர்ப்பதுண்டு. ஆனால் அதற்கு பெரிய தொட்டிகளும் உடன்வளர்க்கப்படும் மீன்கள் அமைதியானவைகளாக இருப்பதும் தேவை. + + +