diff --git "a/train/AA_wiki_52.txt" "b/train/AA_wiki_52.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_52.txt" @@ -0,0 +1,3983 @@ + +எஸ். ஏ. கணபதி + +எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். + +அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். + +எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர். + +சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் "(Waterfall Estate)" இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. + +உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரைக் காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். + +நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். எஸ். ஏ. கணபதி தூக்கில் இடப்பட்டதை எதிர்த்து இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. + +எஸ். ஏ. கணபதி தூக்கிலடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்���ும் அமைச்சர் தெரிவித்தார். + +எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். + +ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த "ஆசாத் ஹிந்த் சர்க்கார்" தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் "(Indian National Army)" நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் "Malaya Communist Party (MCP)" கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார். + +எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது. + +1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன. + +சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940இல் நடந்தது. + +அந்த முதல் இந்தியத் தொழிற்சங்கத்திற்கு, அப்போது கோலாலம்பூரில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கிய ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் தலையாய பங்கு வகித்தார். இவர் 1938இல் "தமிழ் நேசன்" நாளிதழின் ஆசிரியர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கிள்ளான் வட்டார இந்தியத் தொழிலாளர்கள் 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர். அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. + +நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்; சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கம் போராட்டத்தில் இறங்கியது. + +1941 பிப்ரவரி மாதம் கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும்; 5 காசு சம்பள உயர்வு தரவும் தோட்ட நிர்வாகங்கள் முன்வந்தன. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தம் 1941 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடு முழுமையும் இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வேலை நிறுத்தம் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. + +மலாயாவில் முதன்முறையாகப் பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்த ஆர். எச். நாதனும், அவருக்கு உதவியாக இருந்த டி. சுப்பையா என்பவரும், 1941 மே மாதம் கைது செய்யப்���ட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். + +1941 டிசம்பர் மாதம் தொடங்கி 1945 வரையில் மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் தொழிற்சங்கங்கள் துடிப்புடன் செயல்படவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தன. 1945 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஜப்பானியர்களின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல தொழிற்சங்கங்கள் மலாயாவின் பல பகுதிகளில் உருவாக்கம் பெற்றன. இந்தியர்கள் பலர் அந்தத் தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்தனர். + + +இவ்வாறு தோன்றிய தொழிற்சங்கங்களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்களும் இந்தத் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாக இணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் "(Pan Malaysian Federation of Trade Union)" எனும் பெயரில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது. + +இந்த அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1946 மே மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் சிலிகி சாலையில் இருந்த ஜனநாயக இளைஞர் கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு லூ சின் இங் என்பவர் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்குப் பிறகு லூ சின் இங், பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்ப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். + +அதன் பின்னர் 1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ். ஏ. கணபதி பொறுப்பேற்றார். அந்தச் சம்மேளனத்தின் மத்திய செயல்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்க்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. வீரசேனன் அந்தத் தொழிற்சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவர். + +அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாட்டில் நிகழ்ந்த பற்பல குழப்பங்களுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சியே காரணமாகவும் இருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர். + +மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் "(Federation of Trade Union)" இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. + +கடைசியில், 1948 ஜூன் 13இல் தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் தடை செய்யப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரிலும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட வேண்டும் என ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் "(Singapore Straits Times)" 19 ஜூன் 1948 இல் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தித் தலையங்கம் எழுதியது. + +அப்போது சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகப் பி. வீரசேனன் என்பவர் இருந்தார். 1947ஆம் ஆண்டில் மட்டும் ஒரு வாரத்திற்கு இரண்டு எனும் எண்ணிக்கையில், 89 ரப்பர் தோட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலைநிறுத்தங்களுக்கு அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன்னோடியாக விளங்கியது. ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மலாயாவுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் "(Sir Edward Gent)" நெருக்குதல்கள் கொடுத்தது. சர் எட்வர்ட் ஜெண்ட் ஓர் உயர் ஆணையராக இருந்தும் மலாயாவில் ஒரு நியாயமான மனிதராக நடந்து கொண்டார். + +எஸ். ஏ. கணபதியை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்; சிங்கப்பூரில் அல்ல என்பதில் சர் எட்வர்ட் ஜெண்ட் பிடிவாதமாகவும் இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் 1948 ஜூலை 4இல், அவர் லண்டன் திரும்பிய போது அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் இறந்து போனார். அந்த விமான விபத்தைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன. + +மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஊடுருவல் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது. + +பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். எஸ். ஏ. கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. + +கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் "(World Federation of Trade Unions)" எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன. + +இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய விடுதலை வீரர் நேதாஜி போன்றோரிடம் எஸ். ஏ. கணபதிக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 1945 ஆகஸ்டு 10ஆம் தேதி ஜப்பான் சரணடைந்த செய்தியை முதன்முதலில் நேதாஜிக்கு அறிவித்ததே எஸ். ஏ. கணபதிதான். சிங்கப்பூரில் இருந்து சிரம்பான் வந்து அந்தச் செய்தியை எஸ். ஏ. கணபதியும் லட்சுமிய்யாவும் நேதாஜியிடம் தெரிவித்தனர் என்று நம்பபடுகிறது. ஜவஹர்லால் நேரு சிங்கப்பூர் வந்திருந்த போது எஸ். ஏ. கணபதியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். + +கணபதியின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்திய்த் தூதர் வே. கி. கிருஷ்ண மேனன் மூலமாகவும் பிரித்தானிய பிரதமரை வற்புறுத்தினார். அதற்கு பிரித்தானிய பிரதமர் சம்மதம் தெரிவித்தார். முறையான உத்தரவு தொலைத்தந்தி வழி அனுப்பபட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை. + + + + +கிர்வார் மொழி + +கிர்வார் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 34,251 மக்களால் பேசப்படுகிறது. இது "கிர்வாரா", "கேர்வாரி" ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுக���ன்றது. + + + + + +மாரியா மொழி + +மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 134,000 மக்களால் பேசப்படுகிறது. இது "மலை மாரியா", "மாதி", "மாதியா", "மோத்", "மோடி" ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. "அபுஜ்மாரியா", "அடேவாடா", "பாமனிமாரியா", "எடப்பள்ளி மாரியா" போன்ற கிளை மொழிகள் இதற்கு உண்டு. + + + + + +மேற்கு முரியா மொழி + +மேற்கு முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர் மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 12,898 மக்களால் பேசப்படுகிறது. இது "ஜோரியா", "மூடியா", "மூரியா கோண்டி" ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. "சோனாபால்", "பஞ்சாபை", "தனோரா" ஆகிய கிளை மொழிகள் இதற்கு உண்டு. + + + + + +தற்காலத் தமிழ்ச் சங்கம் + +தமிழ் மொழியை, பண்பாட்டை, சமூகத்தை பாதுகாத்து, பகிர்ந்து, கொண்டாடி, மேம்படுத்தி, வளர்ப்பதை நோக்காக கொண்டு உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஏற்படுத்தப்படும் ஒர் அமைப்பே தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கம் பொதுமக்களாலேயே, அனைவரையும் உள்வாங்கும் மனப்பாங்குடன் அமைக்கப்படுகின்றது. பொதுவாக தமிழ்ச் சங்கம் இலாப நோக்கு இல்லாமலும், சமய, சாதி, வர்க்க சார்பு அற்றதாகவும், தீவர அரசியல் நோக்குகள் அற்றதாகவும் அமையும். +குறிப்பாக வெளிநாடுகளில் அமைக்கப்படும் தமிழ் சங்கங்கள் தமிழர்கள் எங்கிருந்து ஒர் ஊருக்கு வந்தாலும், தமிழ் என்ற பொது அடிப்படையில் தமிழ் சங்கத்தை அமைப்பர். இருப்பினும் ஒரே ஊரில் சில வேறுபாடுகள் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அமைவதும் உண்டு. +தற்காலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புலவர்களை பெரும்பாலும் கொண்டு அரசர்களால் அமைக்கப்பட்ட பண்டைத் தமிழ்ச் சங்களில் இருந்து வேறுபட்டது. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் தமிழை ஆய்வதற்கு, இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கு களமாக அமைந்தன. அரசர்கள் அல்லது செல்வந்தர்கள் அச் சங்கங்களை ஆதரித்தமையால் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்களை மகிழ்விக்கும் இன்பவியல் இலக்கியங்களாகவோ அல்லது புகழ்ச்சி இலக்கியங்களாகவோ அமைந்தன. தற்காலத் தமிழ் சங்கங்கள் ஒரு சனசமூக அமைப்பாக, பொதுமக்களைப் பெரும்பாலும் உள்வாங்கி, முன்னிறுத்தி, பொது மக்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. தற்காலத் தமிழ்ச் சங்கங்கள் கீழிருந்து எழும் அமைப்புகளாகவே இருக்கின்றன. + +அனேக தமிழ்ச் சங்கங்கள் பொதுவான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஒரு தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களையும், கட்டமைப்பையும், செயல் முறைகளையும் அதன் அமைப்பு யாப்பு அல்லது அமைப்பு விதிமுறைகளில் விபரிக்கப்பட்டிருக்கும். அமைப்பு விதிமுறைகளில் சங்கத்தைப் பற்றிய பின்வரும் விடயங்கள் தெளிவாக்கப்பட்டிருக்கும். + + +சங்கத்தின் மைய செயற்பாடுகளை செயற்குழுவே மேற்கொள்ளும். பொதுவாக ஒரு செயற்குழுவில் பின்வரும் பணியாளர்கள் இருப்பர். + + +தமிழ் சங்கங்கள் தமிழ், தமிழரை முன்னிறுத்தியும் தமிழர் உள்பிரிவுகளை மட்டறுத்தும் இருக்கின்றன. இவை தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் ஒவையார், பாரதி போன்றவர்களின் படைப்புக்ளை அடிப்படையாகக் கொண்டன. + +நுண்கலைகளே பெரும்பாலும் கற்பிக்கப்பட்டாலும், நாட்டார் கலைகளில் ஈடுபாடும் மீள்ளுருவாக்கமும் ஒரு முக்கிய அம்சமாக அமைகின்றது. கிராமத்து நற் விழுமியங்களும் போற்றப்படுகின்றன. + + + +போட்டிகள் பொதுவாக 3 வயது, 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 மேற்பட்டோர், பெரியோர் (20 வயதுக்கு மேற்பட்டோர்) என மேற்கொள்ளலாம். + + + + + + +வரிசைமாற்றக்குலத்தில் இணையியத்தல் + +கணிதத்தில் குலக்கோட்பாட்டில், குறிப்பாக, பரிமாற்றலற்ற குலங்களில், இணை இயத்தல் (Conjugation) என்ற செயல்பாடு குலத்தின் உட்கூறுகளை ஆழ்ந்து நோக்கப் பயன்படுகிறது. இக்கட்டுரை ஒற்றுமை வகுப்பு (Permutation group) இச்செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறது. + +G ஒரு குலம் என்று கொள்க. formula_1 இனுடைய இணையியம் (Conjugate) என்பதற்கு இலக்கணம்: + +எளிதாகவே இணையியத்தல் ஒருசமான உறவு என்று கண்டுகொள்ளலாம். + +formula_4 என்ற ஓர் உறுப்புக்கு இணையியமாக உள்ளதையெல்லாம் ஒரு பகுதியில் போட்டால், formula_4 இன் இணையியச் சமானப்பகுதி (Conjugate equivalence class of a)கிடைக்கும். உண்மையில், + +formula_4 இன் இணையியச் சமானப்பகுதி = formula_7. இதற்குக்குறியீடு: formula_8 + +இணையியத்திற்காக உள்ள வாய்பாடு formula_3 ஐ நினைவில் வைத்துக்கொள்ள பாமர வழக்கில் ஒரு குறிப்பு: + +'கண்களை மூடு; பரம்பொருளை மனதில் நிறுத்து; மூடின கண்களைத்திற'. இதுதான் formula_10. + + + +தேற்றம்: formula_24 இல் இரண்டு வரிசைமாற்றங்கள் ஒரே சுழலமைப்புள்ளதாக இருந்தால், இருந்தால்தான், அவை இணையியங்களாக இருக்கும். + +முதலில் 'இருந்தால்தான்' பாகத்தை நிறுவுவோம். + +அதாவது வரிசைமாற்றங்கள் formula_25 வையும் அதன் இணையியம் formula_26 ஐயும் பார்ப்போம். + +formula_26 = formula_28 இதன் சுழலமைப்பு formula_25 வின் சுழலமைப்புதான். + +மாறாக, 'இருந்தால்' பாகத்தை நிறுவ, formula_25 formula_31 என்ற இரண்டு வரிசைமாற்றங்கள் ஒரே சுழலமைப்பைப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.இரண்டும் ஒரேசுழலமைப்பைப் பெற்றிருப்பதால்,அவைகளை பின்வருமாறு குறிகாட்டலாம்: + +இப்பொழுது, formula_25 வும் formula_31 ம் இணையியங்கள் என்று காட்டுவோம். + +formula_36 என்ற ஒரு வரிசைமாற்றத்தை பின்வருமாறு வரையறை செய்யலாம்: + +ஆகக்கூடி, இப்பொழுது, formula_41 என்பதை எளிதில் சரிபார்ர்த்துவிடலாம். +formula_42 வும் formula_31 ம் இணையியங்கள். Q.E.D. + + + + +மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் + +மலேசியத் தமிழர் தந்த அருந்தமிழ்ச் சொற்கள் என்பவை மலேசியாவின் தோட்டப்புறத் தமிழ் மக்களின் வழக்கிலிருக்கூம் சில தமிழ்ச் சொற்கள் பற்றியதாகும். + +தமிழர்கள் இந்நாட்டிற்கு இரு நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டனர். தமிழரின் உலகப் பரவலை ஆய்வு செய்தால்கண்டறியும் நோக்கில் புதிய இடத்தில் பரவல், கடற் கோளின் கொடுமையால் புதிய இடங்களை நோக்கிப் பரவல்,வணிக நிமித்தமாக சென்று பரவல்,ஆட்சி அதிகாரங்கள் நிமித்தமாகப் பரவல், பிழைப்பு நிமித்தமாக பரவல்,போர் நிமித்தமாகப் பரவல், என்று பலவகையாகப் பிரிக்கலாம். + +இம்மலைத் திருநாட்டிற்கு வந்த தமிழர்கள் பிழைப்பு நிமித்தமாக வெள்ளையரால் கொண்டுவரப் பட்டவராகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் முன்பின் அறியாத இடங்களில் முன்பின் அறியாத தொழிலுக்காக கூட்டம் கூட்டமாக குடியமர்த்தப் பெற்றனர். + +அன்றைய வெள்ளையர்களுக்கு இவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி இருந்ததே ஒழிய இவர்களின் குமுகாய அமைப்பு முறையைச் சிதறடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. தமது வணிக நோக்கிற்காக மட்டுமே இவர்கள் மீது அவர்கள் ஆதிக��கம் செலுத்தினர் எனலாம். அந்த வணிகச் சிந்தனைக்கு முரணான ஓர் இனத்தின் அடிப்படைக் கூறுகளை அவர்கள் எதிர்த்தனர். ஆனால், இன அழிப்பு நோக்கம் அவர்களுக்கிருக்கவில்லை. + +எனவேதான் முதலாளிய மேலாண்மை இருந்த சூழலிலும் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு தமிழ்மக்களால் தடையின்றி பேணப்பட்டன எனலாம். + +இத்தகு நிலையில்தான் முதலாளிய வெள்ளையருக்கு உழைத்த தமிழ் மக்கள் குமுகாய கட்டமைப்பு சிதறாமல் தோட்டப்புறங்களில் வாழ்ந்தனர். + +ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற வகையில் ஒன்றுப்பட்ட தமிழ் மக்கள் ஒரே இடத்தில் வாழுகின்ற பொழுது தாங்கள் பேணி வந்த பழக்க வழக்கங்களையும், மொழி வழக்கங்களையும் மறவாமல் பேணிக் காக்கலாயினர். அனைத்து வகையான விழா நிகழ்வுகளிலும் அவர்களின் அடிப்படையான மரபுகள் பேணப்பட்டன. + +இவற்றுள் மொழிப் பேணலை முகாமையான ஒன்றாகச் சொல்லலாம். கற்றவரை விட கல்லாதவராய் மரபுவழி வாழ்ந்த தோட்டப்புற மக்கள் தமிழின் நிலைப்பாட்டுக்கு ஆற்றிய இயல்பான பங்களிப்புகள் இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வியக்கத் தக்கவனாக உள்ளன. + +இத்தோட்டப்புற மக்கள் புதிய சூழலில் தாங்கள் முன்பின் அறியாத ஒரு தொழிலை மேற்கொண்ட பொழுது, அத்தொழிலை ஒட்டிய பல்வேறு பொருள்களுக்கு பெயர் வைக்க சொல்லைத் தேடி அலையவில்லை. இவர்கள் உருவாக்கிக் கொடுத்த பன்னூற்றுக் கணக்கான சொற்களுக்கு வேர் மூலம் தமிழ் மண்ணில் தோன்றியதாக இருக்கலாம். ஆனால், அவ்வேர்ச் சொற்களையும், மூலச் சொற்களையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளுக்கு பொருந்த பொருளுரைத்ததும் சொல்லமைத்ததும் எண்ணிப் போற்றத் தக்கதாகும். அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம். + + +கோட்டில் வழிந்தோடும் பால் கீழிறங்கி வடிகுழாயின் வாயிலாக பால் குவளையில் வந்து நிறையும்; இவ்வாறு நிறைந்த பாலை எடுத்த பின் மீண்டும் வைக்கப்படும் குவளையில் வடிந்து காய்ந்து போகும் பாலையே கட்டிப்பால் என்றனர். பால் எடுத்த பின்பு வடிகின்ற பால் வடிபால் என்றும் அவ்வடிபால் காய்ந்து போனால் கட்டிப்பால் என்றும் அழைக்கப் பெற்றது. கட்டிப்பாலை எடுப்பதற்கு மங்கு துடைப்பார்கள். கட்டிப்பாலை எடுக்கும் வேளையில் கோட்டுப் பாலையும் உருவி, கீழே கிடக்கும் குச்சியை எடுத்துக் கட்டி தூண்டில் போடுவார்கள். + +உழைப்பதற்கென்றே பிறப்பெடுத��தவராய் காடு மேடெல்லாம் சென்று மரம் வெட்டி காண்டா கம்பு கொண்டு இரு முனைகளிலும் வாளிகளில் பால் நிரப்பி தோள்களில் சுமந்து நெடுந்தொலைவு எம் அன்னைமார்கள் நடந்து சென்று பெரிய தோம்புகளில் ஊற்றுவர். அந்தக் காண்டா கம்புகளின் இரு முனைகளிலும் கொக்கிக் கம்பிகள் இருக்கும். + +நெற்றி விளக்கை நெற்றியில் கட்டிக்கொண்டு, தீட்டுக் கல்லில் தீட்டப்பெற்ற சுணை மிகுந்த மரஞ்சீவும் கத்திகளையும் எடுத்துக் கொண்டு பேர் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்வர். + +அவர்கள் மரம் சீவும் பொழுது சில மரங்களில் கீழ்க்கோடு இருக்கும் சில மரங்களில் கழுத்துக் கோடு இருக்கும். கழுத்தளவு நிமிர்ந்து சீவுவது கழுத்துக்கோடு எனப்பட்டது. கழுத்துக்கும் மேலே இருக்கும் வெட்டுகளுக்கு ஏணி தேவைப்பட்டது. எனவே ஏணி வைத்து ஏறி மரஞ் சீவீனர். இதற்குப் பெயர் ஏணிக் கோடு. + +நான் மூன்றாவது நிரையில் மரம்வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கங்காணி வந்துவிட்டார்; +நீர் - நேர் +நீர் - நீரல் - நிரல் +நீர் - நீரை - நிரை +நிரல் = வரிசை +எ.கா. நிகழ்ச்சி நிரல் +நிரை = பத்தி + +வேலைக்குச் செல்லும் இடத்தை வேலைக்காடு என்றனர்; வேலைக்காடு காடாக இருந்ததனாலா? காடு அடர்ந்த பகுதி அவர்கள் வேலை செய்த இடம் என்பதால் வேலை செய்யும் இடத்தை வேலைக்காடு என்றனர். + +இவ்வாறு ஆய்வு செய்கின்ற பொழுது நம் தோட்டப்புற மக்கள் வகுத்து தொகுத்துக் கொடுத்த தூய தமிழ் கலைச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை. + + +இன்று இச்சொற்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம். காலம் மாறுகின்றது; மக்கள் வாழ்க்கை முறை மாறுகின்றது; அவர்களின் சூழலும் மாறுகின்றது. + +பழக்க வழக்கமே மொழி வளர்ச்சிக்கு முதன்மை காரணம் என்பாரும் அறிவின், மனத்தின் முதிர்ச்சியே மொழி வளர்ச்சி என்பாரும் முரண்பட்டு வழக்காடியதுமுண்டு. சுக்கின்னர் என்பாரும் நோம் சோம்சுகியும் இவ்வகையில் முரண்பட்டு நின்றனர். இவ்வகையில் சுகின்னரின் கருத்தும் சோம்சுகியின் கருத்தும் தமிழரைப் பொருத்தவரை பொருந்த கூடியதாகும். + +இருபது முப்பது ஆண்டுக்கு முன் இருந்த தோட்டப்புற சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகளில் பணியாற்றுகின்றவராய் இன்றைய பெரும்பான்மை தமிழர்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் புதிய சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் அச்சூழ்நிலைக்குரிய தமிழ்ச்��ொற்களை தமிழ் மக்கள் உருவாக்கினர். + +பேராக்கில் கூலா தோட்டம் என்றொரு தோட்டம் இருக்கிறது. இங்கு சென்பனைத் தோட்ட வாய்க்கால்களில் சேற்றை வாரும் எந்திரத்திற்கு சேற்றுக் கப்பல் என்று தோட்டப்புற மக்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்; செம்பனைக் கன்றுகளும் பால் மரக்கன்றுகளும் பயிரிடப்பெற்று பேணப்படும் இடத்திற்குப் பெயர் தவரணை; சாலை வளைவு ‘முடக்கு' என்று அழைக்கப்பெற்றது. நாட்டிலுள்ள எல்லா தோட்டங்களிலும் இந்நிலையே. எடுத்துக்காட்டுக்குச் சில சொற்களைக் காணலாம். + +குச்சு = குடியிருப்புப் பகுதி - யாவாக்குச்சு +பச்சைக்காடு = அடர்ந்த காடு +பொட்டல் = காட்டில் நடுவே தென்படும் வெளிப்பகுதி +பொட்டு = பால்மார வெட்டுகளின் அளவைக் குறிக்க வைகப்படும் குறியீடு. +மயிர் முளைத்தான் = இரம்புத்தான் (மயிர் முளைச்சான்) +திரட்டி - திரட்டு = பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு +கம்பிச் சடக்கு = தண்டவாளம் +வழிமறித்தான் = இரவு நேரங்களில் வழிகளில் நிற்கும் பறவை (வழிமறிச்சான்) +கால்கட்டை = கட்டையால் செய்யப் பெற்று கால்களில் அணியும் காலணி +ஆட்டுக்கல் = இட்டலி, தோசை செய்வதற்காக அரிசியை குழைய ஆட்டி அறைக்கும் கல் +எந்திரக்கல் = வறுத்த அரிசியை மாவாக அறைக்கும் கல் +மத்து = கீரைகளை கடைவதற்குப் பயன்படுத்தப்படுவது. + +இப்படியாக எத்தனையோ சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு சொல்லப் பெற்ற சில கருவிகளும் பெயர்களும் பழம்பொருள்களாகி விட்டன. வீடுகளில் பயன்படுத்தமையால் அறியப்படாத பொருள்களாகியும் விட்டன. சொற்களும் மறையுண்டு வருகின்றன. மலேசியாவில் தோட்டப்புற மக்கள் பாதுகாத்து வந்த அருந்தமிழ்ச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை. + + + + +லியோன் திரொட்ஸ்கி + +லியோன் திரொட்ஸ்கி ("Leon Trotsky", உருசிய மொழி: Лeв Давидович Трóцкий, "Lev Davidovich Trotsky" நவம்பர் 7 1879 – ஆகஸ்ட் 21 1940), உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் "லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின்" (Lev Davidovich Bronstein) என்பதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் செஞ்சேனை அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தா��். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார். + +1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் வைத்து சோவியத் உளவாளியான "ரமோன் மேர்காடெர்" என்பவனால் ஆகஸ்ட் 20 இல் பனிக்கோடரி ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகஸ்ட் 21 இல் இறந்தார். திரொட்ஸ்கியின் கொள்கைகள் திரொட்ஸ்கியிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது. + + + + + +1933 + +1933 (MCMXXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். + + + + + + + + + +பறையர் + +பறையர்அல்லது பெறவா என்போர் கேரளா, தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும். + +பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர். + +2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். + +இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்ற தமிழ்வார்த்தைக்கு சொல் என்ற பொருளாகும். இன்னமும் கூட கேரளாவில் பறை என்பது சொல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்ப்பட்டது. மேலும் பௌத்த தம்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்ப்பட்டது என்று அயோத்தி தாச பண்டிதர் குறிப்பிடுகின்றார். பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர். + +சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். + +கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர். + +தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர். + +ஜெயங்கொண்ட சோழ "சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும்" ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது. + +பறையர் குடியிருப்பு, சேரி என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய "Slum" என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய��த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் கால கல்வெட்டானது பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும். + +வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர். + +இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது. சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்' என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது. + +இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. + +சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது. + +பறையர்களில் நெசவு தொழில் செய்தவர்கள் கோலியர்கள் ஆவார்கள். இவர்கள் நெசவுப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் சாலியர் என்று அறியப்படுகின்றனர். + +பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர���கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி" என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள் என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது. + +தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும் அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார். அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம். + +திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. + +சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது. + +"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" என்றும், "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" என்றும், "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. + +மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்ப்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர். + +1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 84 பறையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது. + +இவற்றில் சோழிய பறையன்(சோழப்பறையர்) கோழிப்பறையன் என்று திரிந்து இன்று காணாமல் போனது இன்றும் பட்டுக்கோட்டை ஐ சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கில் உள்ளது + + + + + + +வின்டோஸ் செர்வர் 2003 + +வின்டோஸ் செர்வர் 2003 மைக்ரோசாப்டினால் வின்டோஸ் 2000 செர்வரின் வழிவந்த வணிகப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு 24 ஏப்ரல் 2003 இல் வெளிவிடப்பட்ட ஓர் வழங்கி (செர்வர்) இயங்குதளமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் சர்வர் 2003 R2 6 டிசம்பர் 2005 இல் வெளிவந்தது. இதன் வழிவந்த 64பிட் செயலிகளுக்கு மாத்திரமேயான விண்டோஸ் செர்வர் 2008 4 பெப்ரவரி 2008 இல் வெளிவந்தது. + +மைக்ரோசாப்ட்டின் கருத்துப்படி இதன் முன்னர் வெளிவிடப்பட்ட விண்டோஸ் 2000 செர்வரை விட வினைத்திறனானதாகும். + +ஏப்ரல் 24, 2003 இல் வெளிவிடப்பட்ட இந்த இயங்குதளம். விண்டோஸ் எக்ஸ்பி உடன் ஒத்திசைவுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 5.2 என்கின்ற பதிப்பெண்ணைக்கொண்ட வின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பி உடனான ஒத்திசைவினைக் கொண்டுள்ளது. புதிய கணினிகள் தாக்குதல்களில் இருந்தான சந்தர்பக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்காக வின்டோஸ் 2000 செர்வர் போன்றல்லாது எந்தவொரு செர்வரின் சேவையும் தாமாக ஆரம்பிக்காது. விண்டோஸ் 2003 கூடுதலான ஒத்திசைவுப் பண்புகளைக் கொண்டுள்ளது. + +இண்டநெட் இன்பொமேஷன் செர்வர் என்கின்றன இணைய வழங்கியின் மூலநிரலானது மீண்டும் ஏறத்தாழ முழையாகவே பாதுகாப்பு, வினைத்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மீள் எழுதப்பட்டுள்ளது. + +இவ் இயங்குதளமானது விருத்தியில் இருக்கும் பொழுது பல்வேறு பெயர்களை பெற்றது. ஆரம்பத்தில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இது ”விசிலர் சேர்வர்” என்று அறியப்பட்டது. பின்னர் இது விண்டோஸ் 2002 சேர்வர் என்றவாறு கொஞ்சக் காலத்திற்கு அழைக்கப்பட்டு மைக்ரோசாப்ட் டாட்.நெட் ஐப் பிரபலப்படுத்தும் வர்தக முயற்சிகளுள் ஒன்றாக இதை ’’விண்டோஸ் டாட்.நெட் சேர்வர் 2003 பெயர் மாற்றப்பட்டது. எனினும் இதில் டாட்.நெட் தொடர்பான பயங்கள் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் இதில் இருந்த டாட்.நெட் என்ற பெயரை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இரண்டாம் சோதனை முயற்சியில் கைவிட்டனர். + +விண்டோஸ் சர்வர் 2003 ஓர் வாங்கி (கிளையண்ட்) இயங்குதளமாக வடிவமைக்கபடாமையினால் கீழ்வரும் வித்தியாசங்களைக் காணலாம். + + + +குறிப்பு: இண்டெல் பெண்டியம் புறோ, பெண்டியம் II ஆகிய இரண்டு மையச் செயலிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மையச் செயலிகளை ஒரே தாய்பலகையில் (மதர்போட்) பொருத்தும் போது தொடர்பாடலில் உள்ள வழுவின் காரணமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் 2003 இந்த இரண்டு இரக மையச் செயலிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மையச் செயலிகளாகக் கருதாது, ஒரு மையச் செயலியையே பாவித்துக் கொள்ளும். இது வன்பொருளில் உள்ள வழு என்பதால், வேறு மையச் செயலிகளுக்கு செல்வதையோ அல்லது ஒரு செயலிகாகப் பாவிப்பதையும் தவிர வேறு ஏதும் செய்ய இயலாது. + +துப்பரவான நிறுவல்கள் வன்வட்டில் இயங்குதளம் இல்லாநிலையில் நிறுவதையோ அல்லது ஏலவே இருக்கும் இயங்குதளத்தை மேம்படுத்தாது விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளத்தை நிறுவதைக் குறிக்கும். + + + +விண்டோஸ் சர்வர் 2003 உடன் இணைந்த நிருவாகப் பொதியை விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளத்தில் Start -> Run -> adminpak.msi (கவனிக்க adminpack.msi என்றவாறு தட்டச்சுசெய்யவேண்டும் adminpack.msi என்றவாறு அல்ல) எனத் தட்டச்சுச் செய்வதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். இப்பொதியை விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் நிறுவதானால் விண்டோஸ் சர்வர் 2003 இறுவட்டில் உள்ள i386 கோப்புறையில் உள்ள adminpak.msi சொடுக்குவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். நிறுவியதன் பின்னர் Start -> All Programs -> Administrative tools மூலம் நிருவாகிப்பதற்குரிய வேண்டிய மென்பொருட் கருவிகளைப் பாவிக்கலாம். + +விண்டோஸ் 2003 பல்வேறுபட்ட பதிப்புக்களில் வெளிவந்துள்ளது. இது பல்வேறு பட்ட வணிகப் பயனர்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் குறுகிய மேலோட்டத்திற்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் செர்வர் 2003 பதிப்பு ஓப்பீடு ஐப் பார்க்கவும். பொதுவாக விண்டோஸ் சேர்வர் எல்லாப் பதிப்புக்களுமே கோப்புக்கள், அச்சியந்திரங்களைப் பகிரும் வசதியுடன் பிரயோகங்களுக்கான வழங்கியாகவும் செயற்படும். + +ஸ்மோல் பிஸ்னஸ் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களைக் குறிவைத்து பூரண தீர்வொன்றை வழங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். இங்கு தொழில் நுட்பங்களானது ஒருங்கிணைக்கபப்ட்டு தீர்வுகளாக றிமோட் டெஸ்க்டாப் வேக்பிளேல் போன்ற தீர்வுகள் வழங்கப்பட்டது. + +ஸ்மோல் பிஸ்னஸ் ஸ்ராண்டட் கூட்டு முயற்சி மென்பொருளான எடிசன் ஷெயார் பாயிண்ட் சேர்வர், மின்னஞ்சலுக்காக மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ் செர்வரையும், தொலைநகல் (பாக்ஸ்) செர்வர் மற்றும் பயனர்களைத் திறப்பட நிர்வாகிப்பதற்காக ஆக்டிவ் டிரைக்டிரியையும் உள்ளடக்கியுள்ளது. இம்மென்பொருளானது அடிப்படையான தீச்சுவர் (பயர்வால்), டீஎச்சீபி என்கின்ற கணினிகளுக்கு ஐபி முகவரிகளை வழங்கும் சேவை, மற்றும் நாட் என்கின்ற ஐபி முகவரிகளை மாற்றீடு செய்யும் முறையிலான ரவுட்டிங்கை 2 நெட்வெர்க் காட் அல்லது 1 நெட்வேர்க் காட் மற்றும் ஒரு வன்பொருள் ரவுட்டர் ஊடாக ஆதரிகின்றது. + +ஸ்மோல் பிஸ்னஸ் பிரிமியம் பதிப்பானது மேலுள்ள வசதிகளுடன் மைக்ரோசாப்ட் சீக்குவல் சேர்வர் 2000 மற்றும் மைக்ரோசாப்ட் இண்டநெட் செக்கியூரிட்டி அண்ட் அக்சல்ரேஷன் சேர்வர் 2004 ஐயும் உள்ளடக்கியுள்ளது. + +விண்டோஸ் சேர்வர் 20003 வெப் எடிசனானது இணையம் சார் பிரயோகங்கள், இணையப் பக்கங்கள், எக்ஸ் எம் எல் ஊடான இணைய சேவைகளை உருவாக்குவதற்கென உருவாக்கப் பட்டதாகும். இது பிரதானமாக இண்டநெட் இன்பமேஷன் செர்வர் 6 ஊடான ஓர் இணைய வழங்கியாகத் ஓர் விரைவாகப் பிரயோகங்களை .நெட் இன் முக்கியமாகன பாகமான ஏஎஸ்பி.நெட் ஊடாகப் பிரயோகங்களை விருத்தி செய்வதற்கென உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பதிப்பில் வாங்கி (கிளையண்ட்) அணுக்க அனுமதி உள்ளடக்கப்படவில்லை அத்துடன் இதில் டேமினல் செர்வர் உள்ளடக்கப்படவில்லை. எனினும் றிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் அதிகபட்சமாகப் 10 பயனர்களே ஒரு பகிரப்பட்ட கோப்புறையை (போல்டர்) அணுகமுடியும். இதில் மைக்ரோசாப்ட் சீக்குவல் செர்வரையோ அல்லது எக்ஸ்சேஞ் சேர்வரையோ இதில் நிறுவ இயலாது. எனினும் இதில் சேவைப் பொதி 1 ஐப் பிரயோகித்த பின்னர் மைக்ரோசாப்ட் டேட்ட பேஸ் என்ஜின் சீக்குவல் செர்வர் 2005 எக்ஸ்பிரஸ் எடிசன் ஆகிய பதிப்புக்களை ஆதரவளிக்கின்றது. டாட்.நெட் பிரேம் வேர்க் 2.0 விண்டோஸ் சேர்வர் 2003 உடன் உள்ளிணைக்கப்படாவிட்டாலும் விண்டோஸ் மேம்படுத்தலுடாகத் தனியே நிறுவிக் கொள்ளலாம். + +விண்டோஸ் 2003 வெப் எடிசன் ஆகக்கூடுதலாக 2 செயலிகளை (புரோசசர்) களை ஆதரிக்கின்றது. இது ஆகக்கூடுதலாக 2 ஜிகாபைட் அளவிலான ராம் என்கின்ற தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. வெப் எடிசன் டொமைன் கண்டோரலாகச் செயற்படவியலாது. மேலும் இதுவே விண்டோஸ் சேர்வர் கிளையண்ட்டின் அணுக்க மட்டுப்பாடு இல்லாத பதிப்பாகும். + +விண்டோஸ் சேர்வர் 2003 ஸ்ராண்டட் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களில் இருந்து நடுத்தர வணிக அமைப்புக்களை குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். ஸ்ராண்டட் எடிசன் கோப்புக்கள் மற்றும் அச்சியந்திரங்களைப் பகிர முடிவதோடு பாதுகாப்பான முறையில் இணையத்தை அணுகவும் உதவி செய்கின்றது. பிரயோகங்களை உருவாக்குவதிலும் உதவி செய்கின்றது. இந்தப் பதிப்பானது 4 மையச் செயலிகளை ஆதரிப்பதுடன் 4 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகம் (ராம்) ஐயும் ஆதரிக்கின்றது. இது 64 பிட் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. ஸ்ராண்டட் எடிசன் 32 ஜிகாபைட் தற்காலிக நினைவகத்தை (ராம்) ஐக் கையாளும் வசதி படைத்தது. விண்டோஸ் சேர்வர் 2003 ஆனது மாணவர்களுக்கான இலவசப்பதிப்பாகவும் மைக்ரோசாப்ட்டின் டீரிம்பார்க் திட்டம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். + +விண்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் மத்திய மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதாகும். இது 8 மையச் செயலிகளை ஆதரிக்கின்றது. இதன் 32 பிட் பதிப்பானது 32 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. இதன் 64 பிட் பதிப்பானது 1 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தைக் கையாளக் கூடியது. + +விண்டோஸ் சேர்வர் டேட்டா செண்டர் எடிசனானது கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது 32பிட், இட்டானியம் புரோசர்கள், 64 பிட் புரோசர்களை ஆதரிக்கும். இதன் 32 பிட் பதிப்பானது ஆக்கக்கூடுதலாக 32 செயலிகளையும் 64 பிட் பதிப்பானது ஆகக் கூடுதலாக 64 புரோசர்களையும் ஆதரவளிக்கும். 32பிட் கட்டுமானமானது ஆகக்கூடுதலாக 64 ஜிகாபைட் அளவிலான நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. 64பிட் பதிப்பானது ஆகக்கூடுதலாக 2 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. விண்டோஸ் 2003 டேட்டா செண்டர் எடிசனானது ஒரு பிரயோகத்திற்கான புரோசசரையும் நினைவகத்தையும் மட்டுப்படுத்த வல்லது. + +குறிப்பு: 64பிட் பதிப்பானது இண்டெல் ஐட்டானியம் செயலிகளுக்குத் தனியாகவும் ஏனைய ஏஎம்டி இண்டெல் செயலிகளுக்கான பதிப்பாக 64பிட் பதிப்பென இருவேறு பதிப்புக்களை வெளியிட்டுள்ளது. + + + + +ஆதி திராவிடர் + +ஆதி திராவிடர் என்பது தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினரை குறிக்கப் பயன்படுகிறது. + +இப்பதம் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா அவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1922ல் பறையர்,பள்ளர்,மாலா,மதிகா என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர்,ஆதி ஆந்திரர் வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எம்.சி.ராஜா அவர்களால் சென்னை மாகாண சட்டசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நான்காம் நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு காந்தியடிகள் பயன்படுத்திய ’அரிஜன்’ எனும் வார்த்தைக்கு மாற்றாக ’ஆதிதிராவிடர்’ என்ற பதத்தை திராவிட நாட்டு ஆதிதிராவிட மக்களைக் குறிப்பிட பயன்படுத்தச் சொல்லி அரசாங்கத்தையும் பொதுமக்களையும் வேண்டிக்கொண்டது. + +இந்து சமூகத்தால் பட்டியல் சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட பறையர்,பள்ளர் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை கூட்டாக அழைக்கப் பயன்படுகிறது. + +கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்பிடப்படுகின்றன. + +இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலும் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகள் பல. + + + + +நாகர்ச்சால் மொழி + +நாகர்ச்சால் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,090 மக்களால் பேசப்படுகிறது. இது "நாகர்", "நாகர்ச்சி" ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. + + + + + +பர்தான் மொழி + +பர்தான் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 116,919 மக்களால் பேசப்படுகிறது. இது "பிரதான்", "பிரதானி" ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. + + + + + +கோயா மொழி + +கோயா மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 330,000 மக்களால் பேசப்படுகிறது. இது "கோய்", "கோய் கோண்டி", "காவோர்", "கோவா", கோய்த்தார்", "கோயாட்டோ", "காயா", "கோயி", ராஜ் கோயா" ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. + +"மலக்கனகிரி கோயா", "போடியா கோயா", "ஜகநாதபுரம் கோயா", "தோர்லி", என்பன இதன் கிளை மொழிகளாகும். + + + + + +குவி மொழி + +குவி மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது "குவிங்கா", "குவி கோண்ட்", "கோண்ட்", "கோண்டி", "ஜடப்பு" ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. + +இம் மொழி ஒரியா எழுத்துக்களில் எழுதப்படுகின்றது. + + + + + +மண்டா மொழி + +மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது. + + + + + +பெங்கோ மொழி + +பெங்கோ மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இம்மொழியை இந்தியாவில், ஒரிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏறத்தாழ 350,000 மக்கள் பேசுகின்றனர். "பெங்கு", "ஹெங்கோ", "ஹெங்கோ பொராஜா", "பங்கோ", "பெங்குவா", "பாங்கோ பராஜா" என்றும் இம்மொழி அழைப்பர். "இண்டி", "ஆவே" என்பன இதன் கிளை மொழிகள். + + + + + +செஞ்சு மொழி + +செஞ்சு மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 28,754 மக்களால் பேசப்படுகிறது. செஞ்சுகூலம், செஞ்சுவார், சென்ஸ்வார், சொஞ்சாரு என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. + + + + + +அருந்ததியர் + +அருந்ததியர் அல்லது சக்கிலியர் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது. + +சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும். + +விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. + +இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும். + +இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் ஒரு சிலர் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடலாம். + +முகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள். + +ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள். + +சட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர். + +ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர். + + + + + + +கமரூன் + +கமரூன் குடியரசு (, ) மத்திய, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், மற்றும் கொங்கோ குடியரசு ஆகியனவும் அமைந்துள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் போன்னிப் பெருங்குடா, கினி வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூனில் 200 வகையான இனக்குழுக்கள் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன ஆட்சி மொழிகளாகும். + + + + + +1911 + +1911 (MCMXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +மன்னா-டோரா மொழி + +மன்னா-டோரா மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிஅக்குக் கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 18,964 மக்களால் பேசப்படுகிறது. . + + + + + +சவாரா மொழி + +சவாரா மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 20,179 மக்களால் ��ேசப்படுகிறது. + + + + + +வட்டர் மொழி + +வட்டர் மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்ட்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,930,000 மக்களால் பேசப்படுகிறது. ஓட், வடரி, வட்ட பேல்தார், வேடர், வொட்டே என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. + + + + + +குமர்பாக் பஹாரியா மொழி + +குமர்பாக் பஹாரியா மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். மால்ட்டோ இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் இம்மொழி பேசப்படுகின்றது. இம் மொழியானது, ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களில் இம்மொழி புழங்குகின்றது. இம்மொழி பேசும் 20,179 பேர் இந்தியாவில் உள்ளனர். + + + + + + +செங்குத்து அணி + +கணிதத்தில் எண்களை அணியாய் வகுத்து அவ்வணிகளை எண்களைப்போல் இயற்கணிதத்துக் உட்படுத்தலாம் என்ற கருத்து 19வது நூற்றாண்டிலிருந்து செயல்படத் துவங்கியது. அணிக் கோட்பாடு என்ற இன்றைய கணிதப்பிரிவு கணிதத்தின் எல்லாப் பயன்பாடுகளிலும் பயன்படும் ஒரு சாதனம். அணிக்கோட்பாட்டில் பற்பல சிறப்பு வாய்ந்த அணிவகைகள் பேசப்படுகின்றன. அவைகளில் ஒன்றுதான் செங்குத்து அணி (Orthogonal Matrix). + +ஒரு சதுர அணி A இன் வரிசைகளையும் நிரல்களையும் ஒன்றுக்கொன்று பரிமாறுவோமானால் கிடைக்கும் அணி இடமாற்று அணி, அணித்திருப்பம், இடம் மாற்றிய அணி, திருப்பிய அணி எனப் பலவிதமாகவும் சொல்லப்படும். அதை A என்ற குறியீட்டால் குறிப்பர். இதை + +A = (formula_1) = (formula_2) என்றும் எழுதலாம். + +மெய்யெண்களைக்கொண்ட ஒரு சதுர அணி M கீழுள்ள பண்பைக் கொண்டிருக்குமானால் அது செங்குத்து அணி எனப்படும்: + +இங்கு formula_4 என்பது M இன் நேர்மாற்று அணி. +இதையே + + + + + +குறிப்பு1.: செங்குத்து அணிகளெல்லாம் நேர்மாறு உள்ள அணிகள். அதாவது, அவை வழுவிலா அணிகள். + +குறிப்பு2.: மெய்யெண்களுக்குப்பதிலாக சிக்கலெண்களைக் கொண்ட சதுர அணிகளில் செங்குத்து அணிகளை ஒத்த, ஆனால் சிக்கல் எண் நிலைக்காக சிறிது மாறான, பண்பைப் பெற்றிருப்பவைகளை அலகு நிலை அணி (Unitary Matrix) என்பர். + + + + + + + + + +பரிமாற்றுக் குலம் + +கணிதத்தில் குலம் என்ற அமைப்பு இயற்கணித அமைப்புகளில் ஓர் அடிப்படை அமைப்பு. ஒட்டுறவுள்ள ஒரு செயல்பாடு அமைக்கப்பெற்ற ஒரு கணத்தில் அதற்கு ஓர் ஒற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறும் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. பரிமாற்று விதிக்கொத்த குலங்கள் பரிமாற்றுக் குலங்கள் என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு ஏபெல் குலங்கள் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர். + +பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் பரிமாறாக் குலங்கள் அல்லது பரிமாறலற்ற குலங்கள் என்று கூறப்படும். + +இருபதாவது நூற்றாண்டில் குவாண்டம் இயக்கவியல் தோன்றிய காலத்திலிருந்து பரிமாறாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் இயற்பியலிலும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. அணிகளடங்கிய பல குலங்களும், ஐந்து பிளேடோனிக் திண்மங்கள் சார்ந்த குலங்களும் பரிமாறாக் குலங்களே. + + + + + +குலம் (கணிதம்) + +கணிதத்தில், குறிப்பாக இயற்கணிதத்தில், குலம் (Group) என்ற கணித அமைப்பு ஒரு அடிப்படைக்கருத்தாகும். அது கணிதத்தில் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் முதலிய பல அறிவியல் துறைகளில் இன்றியமையாததாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேர்க்கருத்து. நுண்புல இயற்கணிதத்தில் ஒரு பிரிவாக அது பட்டியலிடப்பட்டாலும், கணிதத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அடி நீரோட்டமாகப் பாயும் அடித்தளத் தத்துவமாகும். + +எத்துறையிலும் எந்தச்செயல்பாட்டைப்பற்றிப் பேசப்பட்டாலும் நாம் கேட்கக்கூடிய பொதுக்கேள்விகளில் மூன்றை முக்கியமாகச் சொல்லலாம். + + + +இம்மூன்று கேள்விகளுக்கும் 'உண்டு, முடியும்' என்ற நேர்ம விடைகள் கிடைக்கும்போதெல்லாம், குலம் என்ற கணிதக்கருத்து அங்கு இழையோடிக் கொண்டிருக்கிறது என்று கண்டுகொள்ளலாம். + +formula_1 என்ற ஒரு கணத்தை எடுத்துக்கொள்வோம். அதனில் (*) என்ற ஓர் ஈருறுப்புச் செயலி கொடுக்கப்பட்டதாகக் கொள்வோம். அதாவது formula_1 இலுள்ள formula_3 என்ற எந்த இரண்டு உறுப்புகளுக்கும் formula_4 என்றொரு உறுப்பு அவைகளுடன் உறவுபடுத்தப் பட்டு formula_1 இலேயே இருப்பதாகப் பொருள். இப்பொழுது (*) என்ற செயலிக்கு formula_1 ஒரு குலம் ஆகிறது என்பதற்கு இலக்கணம் கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் நிறைவேறுகின்றன என்பதே: + +(கு 1) (ஒட்டுறவு விதி): formula_1 இலுள்ள எந்த formula_8 க்கும் formula_9 + +(கு 2) (ஒற்றொருமை இருப்பு): formula_1 இல் formula_11 என்ற ஓர் உறுப்பு கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது: + +(கு 3) (நேர்மாறு இருப்பு): formula_1 இலுள்ள ஒவ்வொரு formula_13 க்கும் formula_17 என்று பெயரிடக்கூடிய ஓர் உறுப்பு formula_1 இல் கீழ்க்கண்ட பண்புடன் உள்ளது: + +இதை (G, *) ஒரு குலம் என்றோ, சந்தர்ப்பச்சூழலிலிருந்து செயலி என்ன என்று தெரிவதாக இருந்தால்,(*)ஐக்குறிக்காமலேயே, formula_1 ஒரு குலம் என்றோ சொல்வது வழக்கம். + +(கு 1), (கு 2), (கு 3) க்கு மேல் கீழ்க்கண்ட (கு 4) என்ற நிபந்தனையும் நிறைவேற்றப்பட்டால் அந்தக்குலம் பரிமாற்றுக் குலம் (Commutative Group) எனப்படும்: + +(கு 4) (பரிமாற்று விதி): formula_1 இலுள்ள எந்த formula_22 க்கும் formula_23 + +பரிமாற்றுவிதி இல்லாத சூழ்நிலையில், அதாவது, முதல் மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேற்றப்படும் அமைப்புகளை பரிமாற்றா குலம் என்று சொல்லவேண்டும். அதாவது, பரிமாற்றா குலத்தில் formula_24 என்ற விதி ஏதாவது இரண்டு உறுப்புகளுக்காவது செல்லாமல் இருக்கும். + +பரிமாற்றுக்குலத்தை 'ஏபெல் குலம்' என்றும் பரிமாற்றா குலத்தை 'ஏபெலல்லாத குலம்' என்றும் சொல்வதுண்டு. ஏபெல் என்ற கணித இயலர் நார்வேயில் 19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமறிந்த அளவில் பல கண்டுபிடிப்புகளைக் கண்டவர். + +மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை ஒரு முடிவுறு எண்ணாகுமானால், அக்குலம் முடிவுறு குலம் என்றும், அப்படியில்லையானால் முடிவுறாக்குலம் என்றும் கூறப்படும். + + + + + + + + + + + + + + + +பரிமாறாக்குலம் + +கணிதத்தில் குலம் என்ற அமைப்பு இயற்கணித அமைப்புகளில் ஓர் அடிப்படை அமைப்பு. ஒட்டுறவுள்ள ஒரு செயல்பாடு அமைக்கப்பெற்ற ஒரு கணத்தில் அதற்கு ஓர் ஒற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறும் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் பரிமாறலற்ற குலங்கள் அல்லது பரிமாறாக் குலங்கள் என்று கூறப்படும்.இருபதாவது நூற்றாண்டில் குவாண்டம் இயக்கவியல் தோன்றிய காலத்திலிருந்து பரிமா��ாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் இயற்பியலிலும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. அணிகளடங்கிய பல குலங்களும், ஐந்து பிளேடோனிக் திண்மங்கள் சார்ந்த குலங்களும் , சமச்சீர் குலங்களான formula_1 ம் பரிமாறாக் குலங்களே. + +பரிமாற்று விதிக்கொத்த குலங்கள் பரிமாற்றுக் குலங்கள் என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு ஏபெல் குலங்கள் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர். + +formula_2 இன் பெருக்கல் அட்டவணை (கீழே உள்ளது) அது ஒரு பரிமாற்றாக்குலம் என்பதைக்காட்டும். இதுதான் மிகச்சிறிய பரிமாற்றாக்குலம்.அட்டவணை xy ஐ க்காட்டுகிறது. + +formula_3 + + + + + +1877 + +1877 (MDCCCLXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + +1864 + +1864 (MDCCCLXIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்). + + + + + + + +இராமானுசன் கணிதத்துளிகள்: எண் பிரிவினை + +16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக் கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கணிதத்துளி எண் பிரிவினை யைப் பற்றியது. + +ஒரு நேர்ம முழு எண் formula_1 இன் பிரிவினை என்பது கீழ்க்கண்ட பண்புடன் கூடிய formula_2 என்ற நேர்ம முழு எண்களாலான ஒரு முடிவுறுத் தொடர்வு: + +எ.கா.: 4, 3, 3, 2 என்ற தொடர்வு 12 என்ற எண்ணின் பிரிவினை. 4,3,3,2 - இவை அப்பிரிவினையின் "பாகங்கள்". +இப்பிரிவினையை பாகங்களுக்கு நடுவில் 'கமா' இல்லாமல் 4332 என்றே எழுதுவது வழக்கம். மற்றும் பிரிவினை எழுதுவதில் இன்னொரு மரபு பாகங்களை இறங்குவரிசையில் எழுதுவது. + +formula_1 என்ற ஒரு எண்ணிற்கு எத்தனை பிரிவினைகள் இருக்கமுடியும்? அப்படி இருக்கக்கூடிய பிரிவினைகளின் எண��ணிக்கை formula_5 என்ற குறியீட்டால் காட்டப்படும். + +சில முதல் மதிப்புகள் : + +p(1) = 1 + +p(2) = 2; ஏனென்றால் 2 இன் பிரிவினைகள் 2; 11 மட்டுமே. + +p(3) = 3: ஏனென்றால் 3 இன் பிரிவினைகள் 3; 21; 111. + +p(4) = 5; p(5) = 7; p(6) = 11; p(7) = 15; p(8) = 22; p(9) = 30; p(10) = 42; p(20) = 627; p(200) = 3972999029388. ஆக, p(n) வெகு வேகமாக பெரிய எண்ணிக்கையை எட்டிவிடுகிறது. + +formula_6 ஐப்பற்றி இராமானுசன் நிறுவிய பல முற்றொருமைச் சமன்பாடுகளில் பேராசிரியர் ஜீ.ஹெச். ஹார்டியும் எண் கோட்பாட்டில் நிபுணரான மேஜர் மெக்மேய்ன் கீழ்க்கண்ட சமன்பாட்டை சிறந்த ஒன்றாகக் கருதுகிறார்கள்: + +1918 இல் ஹார்டியும் இராமானுசனும் சேர்ந்து Proceedings of the London Mathematical Society என்ற ஆராய்ச்சிப்பத்திரிகையில் 40 பக்கத்திற்கு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி அதில் p(n) க்கு பின்வரும் அணுகுமுறை வாய்பாடு தீர்மானித்தனர். எண் பிரிவினைக் கோட்பாட்டில் இது இன்றும் ஒரு பெரிய சாதனையாகக்கருதப்படுகிறது. + +இதைப்பற்றி ஹார்டி இராமானுசனைப்பற்றி எழுதும்போது சொல்கிறார்: ' இராமானுசனுடைய அபார மூளையும் அவருடைய அபூர்வமான உள்ளுணர்வும் இரண்டு முக்கிய திருப்புமுனைகளில் சாதித்த பங்களிப்பு இருந்திராவிட்டால் இந்த வாய்ப்பாடு இன்றைய இந்நிலையை அடைந்திருக்காது'! + +இதைப்பற்றிய பிற்காலத்திய தகவல்களை எண் பிரிவினை என்ற தாய்க்கட்டுரையைப் பார்க்கவும். + + + + + + +இராமானுசன் கணிதத்துளிகள் + +16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம். + + + + + + + + + + + + +ஆட்டோபேட்சர் + +ஆட்டோபேட்சர் அல்லது ஓட்டோபச்சர் (இலங்கை வழக்கு) வின்டோஸ் மேம்படுத்தல்களுக்கான மாற்றாக அந்தோனிஸ் கலாடிஸ் இனால் ஓர் இயங்குதள மேம்படுத்தல்களை ஒன்றாகச் சேர்க்கப்பட்ட வின்டோஸ் பாதுகாப்பு மேம்படுத்தல்கள், சேர்க்கைகள் மற்றும் ரெஜிஸ்டிரி மேம்படுத்தல்கள் ஒன்றாகப் பொதிசெய்து வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2, வின்டோஸ் 2000 சேவைப் பொதி 4, விண்டோஸ் சேவர் 2003 சேவைப்��ொதி 1 மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதள மேம்படுத்தல்களை ஒவ்வொரு முறையும் இணையத்துடன் இணைக்காமல் கணினியில் இருந்தவாறே மேற்கொள்ளவியலும். + +4 வருடங்களாகப் பாவனையில் இருந்த ஆட்டோபச்சர் 29 ஆகஸ்ட், 2007 முதல் இடைநிறுத்தபட்டுள்ளது. இதற்கு மைக்ரோசாப்ட் இயங்குதளப் பாதுகாப்பு மேம்படுத்தலக்ளை மூன்றாம் தரப்பூடாக மேற்கொள்வதால் இயங்குதளத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறிய பொழுதும் இதுதான் உண்மையான காரணம் என்று தெரியவில்லை. இம்மேம்படுத்தல்கள் உரிமையுடைய விண்டோஸ் மாத்திரமன்றி நகல் எடுக்கப்பட்ட விண்டோஸ் கணினிகளில் இதை நிறுவக்கூடியது காரணமாக் இருக்கக்கூடும் என்பதையும் மறுதலித்துள்ளனர். + +ஆட்டோபச்சர் கீழ்வரும் பயனர்களிற்குப் மிகவும் உபயோககரமானது. + +ஆட்டோபச்சர் எந்தவொரு கழற்றக்கூடிய கணினி ஊடகத்தினூடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம் அதாவது இறுவட்டு (சீடி), டிவிடி, யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க், போன்றவற்றினூடாகவோ கணினி வலையமைப்பூடாகவோ கோப்பினைப் பெற்று மேம்படுத்தலாம். + + + + + +வண்ணார் + +வண்ணார் என்போர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு சாதியின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். இவர்களை "வண்ணார்" அல்லது "டோபி" என்கிற பெயர்களிலும் அழைப்பர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர். + +வண்ணார் மக்கள் தமிழ்நாட்டில் 5 விழுக்காடு உள்ளனர். அவர்கள் தங்களை தமிழக அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தியும் அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. இதன்முலம் அரசியல், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு முன்னுரிமையும் கிடைப்பதில்லை.வண்ணார் சமூகம் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயபட்டியலில் உள்ளது. + +வண்ணார் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது அவை ஈரங்குலி வண்ணார், பாண்டிய வண்ணார், தீண்டு வண்ணார், தீண்டா வண்ணார், தொண்டைமான் வண்ணார். + +தமிழகத்தில் வண்ணார்கள் 20 லட்சத்து 637 பேர் வசிக்கின்றனர். + +தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சில சாதியினர் வீடுகளில் சலவைத் தொழிலாளர் பணியினைச் செய்யும் சாதியினர் புதிரை வண்ணான் என்று அழைக்கப்படுகின்றனர். புதிரை வண்ணான் எனும் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். + +இவர்கள் வீரகடவுள் வீரபத்திரன் வழியில் வந்தவர்கள் என்றும்,திருக்குறிப்பு தொண்டர் இவருக்கு அடுத்து வந்த நாயன்மார் கடவுள் என்றும் கூறப்படுகிறது. +அகில இந்திய வண்ணார் (சலவை தொழிலாளர்கள்) மாநாடு சென்னையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநில அளவில் தலைவர்கள் அதில் பங்குகொண்டு சமுதாய நிகழ்வுகளை பேசினர்.தமிழகத்தில் எத்திராஜ் வண்ணாரின் தலைமையில் அனைத்து வண்ணார் சமுதாய மக்களும் கலந்து கொண்டார்கள். + + + + + +ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்) + +பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் அவர்கள் எழுதிய "ஆரி பாட்டர்" நாவல்கள் வரிசையில் ஏழாவது மற்றும் இறுதி நாவல் "ஆரி பாட்டர் அன்டு தி டெட்லி ஹாலோவ்ஸ்" ஆகும்.இந்த புத்தகம் 21 ஜுலை 2007 இல் வெளியிடப்பட்டது. இதோடு 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்ட "ஆரி பாட்டர் அண்டு தி ஃபிளாசபர்ஸ் ஸ்டோன்" முதல் துவங்கிய இந்தப் புத்தக வரிசை நிறைவு பெற்றது. இப்புத்தகம் "ஆரி பாட்டர் மற்றும் ஹால்ஃப் பிளட் பிரின்ஸ்" இன் (2005) முடிவிலிருந்து நேரடியாகத் துவங்கி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரி பாட்டர் மற்றும் லார்டு வால்டுமார்ட் போர் வரை கொண்டு செல்கிறது. + +இங்கிலாந்தில் ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்தாலும், அமெரிக்காவில் ஸ்காலஸ்டிக் கனஎடர் அண்டு தி டெத்லி ஹாலோவ்ஸ் புத்தகம் " வெளியிடப்பட்டது. உலகளவில் 93 நாடுகளில் வெளியிடப்பட்ட "டெத்லி ஹாலோவ்ஸ்" என்னும் இந்த புத்தகம் இதுவரை விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களிலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தகம் என்னும் சாதனையைப் படைத்துள்ளது. வெளியடப்பட்ட 24 மணி நேரங்களில் 15 மில்லியன் புத்தகங்கள் விற்பனையானது. +இதில் யு.எஸ் (அமெரிக்காவில்) மற்றும் யுகேவில் (இங்கிலாந்தில்) மட்டும் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகின. இதன் முந்தைய சாதனை முதல் நாளில் 9 மில்லியன் புத்தகங்கள் விற்றுத்தீர்ந்த "ஆரி பாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பிரின்ஸ்" புத்தகமே. +உக்ர���னியன், ஸ்வீடஷ், போலிஷ் மற்றும் ஹிந்தி உட்பட இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +2008 ஆம் ஆண்டு கோலோரடா ப்ளுஸ்ப்ருஸ் புத்தக விருது மற்றும் அமேரிக்கன் லைப்ரரி அசோசியேஷன்வெளியிட்ட "இளம் பெரியவர்களுக்கான மிகச்சிறந்த புத்தகம்" உட்பட இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சில கதாபாத்திரங்கள் ஏற்கனவே தோன்றியவைகள் அல்லது மாறவில்லை என்று சில விமர்சகர்கள் தெரிவித்தாலும், பொதுவாக இதன் வரவேற்பு நேர்மறையாகவே இருந்தது. இந்த நாவலின் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள இரண்டு பகுதிகளைக்கொண்டுள்ள திரைப்படத்தின் முதல் பகுதி நவம்பர் 2010 இல் வெளியிடப்படவுள்ளது. + +ஆரி பாட்டர் தொடரின் முந்தைய 6 நாவல்களிலும் , முக்கிய கதாபாத்திரமான, ஆரி பாட்டர், தொடர்ந்து வளர்ந்து கொண்டேவரும் இடர்களால் நேரிடும் துன்பங்களால் கஷ்டப்பட்டு அதை சவாலாக ஏற்றுக்கொண்டு புகழ் பெற்ற மந்திரவாதியாகத் திகழ்ந்துள்ளான். +ஆரி சிறு குழந்தையாக இருக்கும்போதே, லார்டு வால்டுமார்ட் என்ற சக்தி வாய்ந்த நிகழ் கால தீய மந்திரவாதி, ஆரியின் பெற்றோர்களைக் கொல்கிறான், ஆனால் ஆரியைக் கொல்ல முயல்கையில் புரியாத புதிராக மறைந்துவிடுகிறான். இதுவே ஆரியின் உடனடிப் புகழுக்குக் காரணமானது. மேலும் மந்திரம் தெரியாத அவனுடைய உறவினர்களான அத்தை பெட்டுனியா மற்றும் மாமா வெர்னன் இவர்களின் கவனிப்பில் விடப்படுகிறான். + +ஆரி தன் 11 ஆவது வயதில், மந்திரவாதம் மற்றும் மந்திரவாதிகளை உருவாக்கும் பள்ளியான ஹோக்வார்ட்ஸ்இல் பதிவுசெய்து அங்கு சேர்ந்து மந்திரவாத உலகில் அடியெடுத்து நுழைந்தான். +அங்கு அவன் ரான் வீஸ்லீயையும், ஹெர்மியான் க்ரேன்ஜரையும் நண்பனாக்கிக் கொண்டு வோல்டர்மார்டை எதிர்த்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற உறுதி கொள்கிறான். +கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பியதும் ,ஹாக்வார்ட்சில் " ரகசியங்கள் நிறைந்த அறை" திறக்கப்பட்டதும் மாணவர்கள் மீது நிறைய தாக்குதல்கள் +நடந்துவிடுகின்றன. +பாசிலிக்சை கொல்வதன் மூலம் ஆரி, இந்தத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான், மற்றும் லார்டு வால்டுமார்ட்டின் அடுத்தகட்ட நடவடிக்கையில் தோற்கடித்து முழு பலத்துடன் மீண்டும் வர செயல்படுகிறான். பின் வரும் +வருடத்தில், தப்பிச் சென்ற கொலைக���ரனான சிரியஸ் பிலாக் தன்னைக் குறி வைத்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறான். +ஹாக்வார்ட்சில் மிகக்கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தும், ஆரி தன் பள்ளி வாழ்வின் மூன்றாவது வருட இறுதியில் ப்லாக்கால் எதிர்க்கப்பட்டான். ப்லாக் உருவாக்கப்பட்டதை அறிந்தான் மேலும் உண்மையில் ஆரியின் வழிகாட்டி ப்லாக் என்பதையும் தெரிந்துகொண்டான். +பள்ளி நான்காவது வருடத்தில் ஆரி, ட்ரைவிஜார்ட் போட்டித்தொடரில் மிகவும் ஆபத்தான மந்திர போட்டியில் போட்டியிட நுழைவதைக் கண்டது. போட்டியின் முடிவில், வால்டுமார்ட் பிரபு முழு பலத்துடன் திரும்ப வந்ததைக் கண்டான். அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியதும், மந்திர அமைச்சகம் +டோலோரஸ் அம்ப்ரிட்ஜ் என்பவரை புதிய ஹோக்வார்ட்சின் உயர் அதிகாரியாக நியமித்தது.அம்ப்ரிட்ஜிற்கு எதிராக ரகசியமாக மாணவர் குழு அமைத்தபின் ,ஆரியும் அவனது நண்பர்களும் வால்டுமார்ட்சின் பிணம் தின்னிகளான இருண்ட மந்திரவாதினி கூட்டங்களையும், மந்திரவாதிகளையும் நேர்கொண்டு /எதிர்கொண்டு விளிம்பில் தோற்கடித்தனர். பள்ளியில் ஆரியின் 6 ஆவது ஆண்டில், வால்டுமார்ட்சாவில்லாத நிலை அடைய, ஹொர்க்ரக்செசை பயன்படுத்தியதை ஆரி அறிந்துகொண்டான். +ஹார்க்ரக்சஸ் என்பது ஆத்மாவின் துண்டுகள் ஒரு பொருளில் வைக்கப்பட்டு, உடல் இறக்கும்போது, ஆத்மாவின் ஒரு பகுதி மிஞ்சியிருக்கும் அதைக்கொண்டு மனிதனுக்கு மறுபிறவி கொடுக்கமுடியும். எப்படியானாலும், தோற்றுவித்தவரின் உடல்அழியும்போது மந்திரவாதியை சவமாக விடாமல், அரை உயிருடன் விட்டுவைக்கிறது, ஹார்க்ரக்சைக் கண்டுபிடிக்கும் வேலை/நோக்கதில் இருந்து திரும்புகையில், ஆரியின் நலம் விரும்பி, மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பேராசிரியர். டம்பல்டோர், செவ்ரஸ் ஸ்னெப்பால்கொலை செய்யப்படுகிறார். செவ்ரஸ் அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் மேலும் அவரோடு பலமுறை ஆரி தொடர்ந்து முரண்பட்டிருக்கிறான், அதோடு அவன் ஒரு பிணம் தின்னி என்ற சந்தேகம் ஆரிக்கு இருந்தது. + +புத்தகத்தின் முடிவில் ஆரி அடுத்த வருடம் பள்ளிக்கு திரும்பாமல், ஹார்க்ரக்சஸைத் தேடிச்செல்ல உறுதி மொழி எடுக்கிறான். + +டம்பில்டோரின் இறப்பைத் தொடர்ந்து, வால்டுமார்ட் அதிகாரத்தை நோக்கி உயர்ந்து செல்லும் வழியை முடி��்துக் கொண்டு மந்திர அமைச்சகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் வெற்றி அடைகிறார்.வால்டுமார்டின் மீதமுள்ள 3 ஹார்க்ருக்செஸை அழிப்பதற்காக ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோன் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்யக் கருதித் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். +அவர்களுக்கு மிஞ்சியுள்ள ஹார்க்ரக்சசைப் பற்றி எந்தத் தகவலும் அறிந்திருக்கவில்லை, ஹோக்வார்ட்ஸ் அமைப்பாளர்களைச் சார்ந்த இரண்டு பொருள்கள் ரோவெனா ரவென்க்லாவ் மற்றும் ஹெல்கா ஹஃப்பெல் பஃப் மற்றும் மூன்றாவதாக நாகினியாக இருக்க சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்பதைத் தவிர அவர்கள் வேறொன்றும் அறியவில்லை. நாகினி, வால்டுமார்ட்டின் இரண்டு பொருள்கள் இருக்குமிடம் ரகசியமாக, அறியப்படாமல் இருந்தது. ஹோர்க்ரக்சசைத் தேடும்போது மூவரும், டம்பில்டோரின் கடந்த காலத்தைப் பற்றியும், ஸ்னேப்பின் உண்மை நோக்கத்தைப் பற்றியும் விரிவாகக் கற்றுக்கொண்டனர். + +சலாஜர் ஸ்ல்ய்தெரினின் பேழையான, வால்டுமார்ட்சின் முதல் ஹோர்க்ரக்சசை மந்திர அமைச்சகத்தை வடிகட்டிக் கைப்பற்றினர். ஹோர்க்ரக்சசை அழிக்கக் கூடிய ஆயுதங்களில் ஒன்றான கோட்ரிக் க்ரிஃபிண்டரின் வாளைக் கைபற்றினர் மேலும் அதை அந்தப் பேழையை அழிக்கப் பயன்படுத்தினர். +அவர்களின் பயணத்தின் போது மூவரும், ஒரு வினோதமான சின்னத்தை கடந்து செல்லும்போது, ஜெனொஃபிலியஸ் லவ்குட் என்ற விசித்திரமான மந்திரவாதி, அது புராணகால மரணபயங்கரமான தீயசக்திகளைக் குறிக்கும் என்று கூறுகிறது.அந்த சக்திகள் 3 புனிதப் பொருள்கள் .1. மறுபிறவிக்கல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சக்தி பெற்ற கல் .2. மூத்த மந்திரக் கோல்.அழிக்கமுடியாத மந்திரக்கோல் மற்றும் அணிந்தால் மறையும் சக்தி பெற்ற மேலாடை. ஆரி, வால்டுமார்ட் மந்திரக் கோலின் பின்னர் இருக்கிறார் என்பதை அறிகிறான், ஆனால் மூவரும் தங்களுக்காக மந்திரக் கோலை கைப்பற்றுவதைவிட, ஹோர்க்ரக்சசைக் கண்டுபிடிப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று +தீர்மானிக்கின்றனர்.மற்றொரு ஹோர்க்ரசசான ஹெல்கா ஹஃப்ல்பஃப் பேழையைத் திரும்பப் பெற, மந்திர வங்கியான க்ரிங்கொட்சில்உள்ள பெட்டகத்தை உடைத்தனர்.மற்றொரு ஹோர்க்ரக்ஸ��, ஹோக்வார்ட்சில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோனுடன் பள்ளிக்குள் நுழைகிறான்.அவர்கள் ராவென்க்லாவின் டியாடெம் என்ற மற்றொரு ஹோர்க்ரக்சையும் கண்டுபிடித்து இரண்டையும் வெற்றிகரமாக அழித்துவிடுகிறார்கள். + +புத்தகம் ஹோக்வார்ட்ஸ் போருடன் உச்சநிலையை அடைகிறது. ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோன், மாணவர்கள் மற்றும் மந்திரவாத உலக உறுப்பினர்களுடன் சேர்ந்து வால்டுமார்ட்டின் வளர்ச்சியை எதிர்த்தும், வோல்டெர்மார்டின் பிணம் தின்னிகள், மற்றும் பல் வேறு மந்திர உயிர்களிடமிருந்தும் ஹோக்வார்ட்சைப் பாதுகாக்கவும் எதிர்த்தனர். போரின் முதல் படியில் சில முக்கிய கதாபாத்திரங்கள் கொல்லப்பட்டன.சிறு குழந்தையாக இருந்தபோது, ஆரியைத் தாக்கும்போது, வால்டுமார்ட் தன்னையும் அறியாமல், ஆரியை ஒரு ஹோர்க்ரக்சாக ஆக்கியிருக்கிறான், அதனால் வால்டுமார்ட்டை அழிப்பதற்காக ஆரியும் இறக்கவேண்டியிருக்கும். ஆரி தானாக வலிய வால்டுமார்ட்டிடம் சரணடைகிறான், உடனே வால்டுமார்ட்கொல்லும் சாபத்தால் ஆரியை தாக்கி அவனை வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் லிம்போவுக்கு அனுப்பிவிடுகிறான். அங்கு ஆரி டம்பில்டோரை சந்திக்க, அவர் வால்டுமார்ட் தன் முழு பலத்தையும் திரும்பப் பெற ஆரியின் ரத்தத்தை பயன்படுத்தியதால், ஆரி,வால்டுமார்ட்டால் இழைக்கப்படும் எல்லாத் தீங்கில் இருந்தும் காக்கப்படுவான், பொருள் ஆரிக்குள் உள்ள ஹோர்க்ரக்ஸ் அழிக்கப்பட்டதும், கொல்லும் சாபத்தால் தாக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் தன் உடலுக்குள் ஆரிதிரும்ப முடியும் என்று விளக்குகிறார். +ஹெரி தன் உடலுக்குள் திரும்பியதும் போர் மீண்டும் தொடங்க, கடைசி ஹொர்க்ரக்ஸ் அழிக்கப்பட்டதும், ஆரி, வால்டுமார்ட்டைத் தோற்கடிக்கிறான். + +வால்டிமார்டின் இறப்பிற்குப் பின் 19 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆரியும் ஜின்னியும் திருமணமாகி தங்கள் மகன்களான ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் _ ஐ ஹாக்வார்டிற்கு அனுப்புகின்றனர். ரானக்கும் மற்றும் ஹெர்மியோனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. + +தலைப்பை வெளியிடுவதற்கு சற்று முன்புவரை, J.K.ரவ்லிங், இந்த புத்தகத்திற்காக 3 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்திருப்பதாக +அறிவித்தார். முடிவாக,"ஆரி பாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோவஸ்" எ��்ற தலைப்பில் 2006, டிசம்பர் 21 பொதுமக்களுக்காக ஒரு சிறப்பு கிறித்துமஸ் கருத்தைக் கொண்ட ஹாங்மென் புதிருடன் ரவ்லிங்கின் வலைத்தளத்தில், குறுகிய கால அவகாசத்தில் புத்தக வெளியீட்டாளர்களின் உறுதியுடன் இதன் மூலமாக வெளியிடப்பட்டது. ஒரு நேரடி பேச்சு வார்த்தையின் போது,அவரிடம், வேறு எந்தத் தலைப்புகள் அவர் தேர்ந்தெடுத்தது என்று கேட்டபோது, ரவ்லிங் கூறியது."ஆரி பாட்டரும்,மூத்த மந்திரக்கோலும்" , மற்றும் "ஆரி பாட்டரும் பெவெரெல் க்வெஸ்ட்டும்." + +2007, ஜனவரியில் ரவ்லிங் எடின்பர்கில் உள்ள பால்மோரல் தங்கும் விடுதியில் இருந்து புத்தகத்தை எழுதி முடிக்கிறார், மேலும் அவர் அறையில் உள்ள ஹெர்மெஸ் என்ற மார்பளவு பளிங்குச் சிலையில் தன் கையொப்பமிட்ட குறிப்பை எழுதி வைக்கிறார். அந்த வாசகம் கூறுவது: "" J.K.ரவ்லிங் ஆரி பாட்டரும் பயங்கரமான தீய சக்திகளும் என்ற புத்தகத்தை இந்த அறையில் (652) ஜனவரி 11, 2007 இல் எழுதி முடித்தார்"." அவருடைய வலைத் தளத்தில், அவர் கூறியது, நான் இதுவரை இந்த மாதிரியான அளவுகடந்த கலவையான உணர்வுகளை என் வாழ்வில் உணர்ந்ததே இல்லை, ஒரே சமயத்தில் இதயம் நொறுங்குவது போலும் மற்றும் பரவசத்தையும் உணருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை". இவர் தன் கலவையான உணர்வுகளை, சார்லெஸ் டிக்கன்ஸ் தன் 1850 ஆம், ஆண்டு பதிப்பான "டேவிட் காப்பர்ஃபீல்டின்" முகவுரையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அதில், " 2 வருட கற்பனையின் உழைப்பு" " அத்தோடு" நான் காணப்பட வேண்டும், 17 வருடங்கள் முயற்சி செய்ததற்கு, சார்லெஸ்..." "அவர் தன் செய்தியை முடித்துவிட்டார்." " "பயங்கரமன தீயசக்திகள்" என்னுடைய விருப்பமானது., மேலும் அது தான் தொடரை முடிக்க அதி அற்புதமான வழி." + +வரவிருக்கும் புத்தகத்தின் வெளியீட்டிற்கு முன்பாக அதைப் பற்றிக் கேட்டபோது, தான் நினைத்தாலும் முடிவை அவரால் மாற்றமுடியாது என்றார். """ இந்தப் புத்தகங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே ஆலோசிக்கப்பட்டது மேலும் இது வரை +6 புத்தகங்கள், அவை எல்லாம் ஒரே திசையில் செல்கின்றன.". " "அதனால், நிச்சயமாக என்னால் முடியாது" இந்தக் கடைசி அத்தியாயம் முந்தைய தொடர்களில் "ஆரி பாட்டரும் பாதி ரத்த -இளவரசி" என்ற புத்தகத்தை நெருக்கமாக ஒத்திருக்கிறது. "ஏறத்தாழ ஒரே நாவலின் 2 பகுதி போல் உள்ளது." அவர் சொன்னது இந்தப் புத்தகத்தின் கடைசி பாகம் "1990 களில் +எழுதியது போல் " தொடர்களில் அவரின் முந்தைய எழுத்தை பிரதிபலிக்கிறது. + +லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பால்லட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1700 விருந்தாளிகளுடன் ரவ்லிங்கும் கலந்து கொண்டு +இரவு முழுவதும் கையெழுத்திடுவதும், வாசிப்பதுமாக, கொண்டாடப்பட்டது. ரவ்லிங், 2007 இல்அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்., அங்கே நியூ யார்க்கில், கார்னெஜி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஒரு நொடியில் விற்றுத் தீர்ந்தன. + +ஸ்கொலஸ்டிக் இன்க் என்ற ஆரி பாட்டர் தொடர்களின் அமெரிக்க வெளியீட்டாளர், பல மடங்கு மில்லியன் டாலர் மதிப்புள்ள " கூடிய விரைவில் வரவிருக்கும் 7" என்ற சந்தைபடுத்தும் பிரச்சாரத்தை 'வீரப் பேருந்து' டன் அமெரிக்காவில் உள்ள 40 நூலகங்கள், இணைய தள ஆன் லைன் விசிறிகள் கலந்துரையாடல்கள் மற்றும் போட்டிகள், தொகுக்கக் கூடிய புத்தக பக்க அடையாளங்கள், டேட்டூக்கள் மற்றும், வெளியிடப்பட்ட 7 "டெத்லீ ஹால்லொஸ் " கேள்விகள் அதிகமாக விசிறிகளால் கேட்கப்பட்டது. +ஸ்கொலேஸ்டிக் 7 கேள்விகளை வெளியிட்டு அதன் பதில்களை கடைசி புத்தகத்தில் காணலாம் என்று வெளியிட்டது. + + +ஸ்கொலெஸ்டிக் " ஆரி பாட்டர் இடம் " - அதன் தலைமையகத்தில் ,நியூயார்க் நகரில் ஒரு மாயமான மற்றும் கற்றுதரக்கூடிய தெரு விழாக்களை நடத்தியது. அங்குதான் முதல் அமெரிக்கக் கையொப்பமிட்ட பதிப்பான "மரணமயமான சதிகள்" 20 ஜுலை 2007 இல் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் 20 அடி உயரமுள்ள (6 மீ) வொம்ப்பிங் வில்லோ, முகத்தில் சாயம் பூசுதல், மந்திரக் கோல் செய்தல், தீ விழுங்குபவர்கள், ஜாலக்காரர்கள் மற்றும் கயிற்றில் நடப்பவர்கள்.ஆகியவை இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களில் அடங்கும். + +J.K.ரவ்லிங் வெளியீட்டாளர்களுடன் சேர்ந்து ஒரு சுவரொட்டி தயாரித்தார் அதில் காணாமல் போன பிரிட்டிஷ்சிறுமியான +மெடலீன் மெகேன் முகம் காணப்பட்டது. 21 ஜுலை 2007 இல் "டெத்லீ ஹால்லோஸ் " வெளியிடப்பட்டபோது எல்லா புத்தக வியாபாரிகளுக்கும் கிடைக்கும்படியாக செய்ததோடல்லாமல், அந்த படங்கள் எல்லாம் முக்கியமாக உலகில் உள்ள எல்லா +கடைகளிலும் ஒட்டப்பட்டிருக்குமென்று நம்பினார். + +ரவ்லிங் பொதுமக்களிடம் யாரவது கடைசி புத்தகத்தில் உள்ள விஷயங்களை/தகவல்களை அறிந்திருந்தால் பிற வாசிப்பாளர்களுக்கு அவர்களின் அனுபவம் கெடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அதைத் தங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தயவிட்டுக் கேட்டுக் கொண்டார். 21 ஜுலை புத்தகம் வெளியாகும் வரை கடைசியில், ப்லூம்ஸ்பரி புத்தகத்தின் விஷயங்களைப் பாதுகாக்க GB 10 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் முதலீடு செய்தார். + +"ஆரி பாட்டர்" தொடர்களின் அமெரிக்கத்தணிக்கையாளரான ஆர்தர் லெவைன், அச்சக பார்வைக்காக "டெத்லீ ஹாலொசின்" பதிப்புகளை முன்னதாகப் பகிர்ந்து கொடுக்க மறுத்துவிட்டார். இருந்தும் இரண்டு U.S பத்திரிக்கைகள் முன்னதாக விளக்க உரை வெளியிட்டுவிட்டனர். + +சில கடைகள் பிரகடனத்தை உடைத்து முன்னதாகவே நகல்களை வினியோகித்து விடுவார்கள் என்று அனுமானிக்கப்பட்டது. முந்தைய தவணைகளின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தால் வினியோகஸ்தர்களுக்கு மேலும் தொடர்களின் நகல்கள் கொடுக்கப்படமாட்டாது என்பது ஒரு தடையல்ல. + +வெளியிடுவதற்கு 1 வாரம் முன்பு, நிஜமானதைப் போன்ற நிறைய நூல்கள் பல வடிவங்களில் தோன்றின. ஜுலை 16,அமெரிக்கப் பதிப்பின் 759 பக்கங்களும் புகைப்படங்கள்வடிவில் வெளியானது. மேலும் அதிகாரப் பூர்வ வெளியீட்டுத் தேதிக்கு முன் முழுவதும் வேறு பிரதி எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் பின்னர் வலைத்தளங்களில் தோன்றின மற்றும் வலைதொடர்புக் குழுக்களுக்கும் சென்றது, ஸ்கொலெஸ்டிக் ஒரு ஆதாரத்தையாவது கண்டுபிடிக்க ஒரு துணையைத் தேட வழிநடத்தியது. + +ஆரி பாட்டர் தொடர் வரலாற்றில் மிக மோசமான பாதுகாப்பு மீறலை இது குறிப்பிடுகிறது. ரவ்லிங்கும் அவர் வக்கீலும் உன்மையான கணினி வழி கசிவுகள் இருப்பதை உறுதிப்படித்தினர். "தி பால்டிமோர் சன்" மற்றும் "தி நியூ யார்க் டைம்ஸ்" இரண்டிலும் ஜுலை 18, 2007 இல் வெளியான மதிப்பீடு / அலசல் கதையின் நிறைய மூலப் பொருள்கள் இந்தக் கசிவோடு ஒத்துப்போனது.மேலும் வெளிவருவதற்கு 1 நாள் முன்பு, "தி நியூ யார்க் டைம்ஸ்" முக்கியமாக சுற்றி வரும் கசிவு நிஜமானது என உறுதி செய்தது. + +ஸ்கொலெஸ்டிக் அமெரிக்காவுக்கு வழங்கியதில் உத்தேசமாக 0.0001 பாகம் ஏற்கனவே அனுப்பபட்டு விட்டதாக -அதாவது 1200 நகல்கள் என்று அறிவித்துள்ளது.இந்த புத்தகம் வெளியிடுவதற்கு 4 நாட்கள் முன்பு, மேரிலேண்டில் உள்ள வாசகருக்குடீப் டிஸ்கவுன்ட்.காம் இல் இருந்து புத்தகத்தின் நகல் வந்தது, ஸ்கொலேஸ்டிக்கிற்கும், இந்த வலைத் தளத்திற்கும் இடையில் ஒரு கச முசா உருவானது. +ஆரம்பத்தில் ஸ்கோலேஸ்டிக் இது ஒரு" மனித குற்றம் " என்று தாங்கள் திருப்தி அடைந்து விட்டதாக அறிக்கை விட்டது, மேலும் அபராத சாத்தியக் கூறுகளைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. + +அஸ்டாவும், UK யில் உள்ள பிற பல் பொருள் அங்காடிகளும் சேர்ந்து, ஏற்கனவே ஒரு பெரிய தள்ளுபடி தொகைக்குப் புத்தகத்திற்கு முன் பதிவு எடுத்திருந்தது. புத்தக வெளியீட்டிற்கு 2 நாட்கள் முன்பு அஸ்டா ,தாங்கள் ஒரு பிரதியை GB 5 பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு அதாவது ஒரு பிரதி ( US$8 ) க்கு விற்கபோவதாக அறிவித்து விலைப் போர் பொறியைக் கிளப்பியது. பிற சில்லறை வியாபாரத் தொடர்களும் அந்த தள்ளுபடி விலைக்கே புத்தகத்தை விற்க முன்வந்தனர். அந்த விலையில் விற்றால் புத்தகம் நஷ்டத்தைநோக்கிச் செல்லும். இதன் காரணமாகத் தொன்று தொட்டு புத்தகவிற்பனை செய்யும் விற்பனையாளர்கள், இது போன்ற போட்டிச் சூழலில் தாங்கள் நம்பிக்கையின்றி இருக்கிறோம் எனக்கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். தனியார் அங்காடிகள் இன்னும் சத்தமாக எதிர்ப்பைக் காட்டினார்கள், ஆனால் UKயின் மிகப் பெரிய, புத்தகத்துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வாட்டர்ஸ்டோன்புத்தக அங்காடி கூட பல்பொருள் அங்காடி விலையுடன் போட்டியிடமுடியவில்லை.சில சின்ன புத்தக அங்காடிகள் தங்கள் தேவையை மொத்தவியாபரிகளிடமிருந்து வாங்காமல், பல்பொருள் அங்காடிகளிடமிருந்து வாங்கின.அஸ்டா இதை சமாளிக்க , ஒரு வாடிக்கையாளருக்கு 2 பிரதிகள் மட்டுமே எனக் குறைத்து ,பெரும்பகுதியாக வாங்குவதைத் தடுக்க முயற்சித்தது. UK புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி , ஃபிலிப் விக்ஸ் கூறியது," நாங்கள் பங்கு கொள்ள முடியாத ஒரு போர் இது. பல்பொருள் அங்காடிகள் இதை ஒரு டப்பா வேக வைக்கப்பட்ட அவரை விதைகளாக நடத்தியது /நினைத்து ,ஒரு நஷ்டப் பொருளாக ஆக்கியதை நாங்கள் அழவேண்டிய / கத்த வேண்டிய மானக் கேடாக எண்ணுகிறோம்". சிம்பா தகவல் நிலயத்தைச் சார்ந்த ஆய்வாளர், மைக்கேல் நோரிஸ் கூறியது," நீங்கள் புத்தகத்தின் விலையை மட்டும் தாழ்த்தவில்லை.இந்த இடத்தில் நீங்கள் வாசித்தலின் மதிப்பையும் தாழ்த்துகிறீர்கள்." + +மலேசியாவில், இந்த புத்தக விற்பனையில் இதே போன்ற விலைப் போர் ஒரு விவாதத்தை/ தர்க்கத்தைக் கொண்டுவந்தது. +மலேசியாவில் உள்ள மிகப் பெரிய புத்தக அங்காடித் தொடர்களில் 4 அங்காடிகளான, MPH புத்தக அங்காடிகள், பாப்புலர்புத்தக அங்காடிகள், டைம்ஸ் மற்றும் ஆரிஸ் போன்றவை, டெஸ்கோ மற்றும் கேர்ஃபோர் ஹைப்பர் சந்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தங்கள் புத்தக அலமாரியில் உள்ள "ஆரி பாட்டர் மற்றும் டெத்லீ ஹால்லோஸ் " புத்தகங்களை அங்கிருந்து நீக்கிவிட தீர்மானித்தனர். +மலேசியாவில் இந்த புத்தகத்தின் சில்லரை விலை மலேசிய ரிங்கிட் 109.90 (உத்தேசமாக GB ps 16), ஹைப்பர் சந்தைகளான டெஸ்கோ மற்றும் கேர்ஃபோர் MYR 69.90(GBps10) க்கு விற்றது. + +புத்தகக் கடைகளின் இந்த நடவடிக்கை, பெங்குயின் புத்தக வினியோகஸ்தர்களை ஹைப்பர் சந்தைகளில் இருந்து தங்கள் புத்தகங்களை நீக்கவைக்கும்/ வெளியே எடுக்க வைக்கும் முயற்சியாகும். ஒருவழியாக இந்த விலை யுத்தம் 24, ஜுலை 2007 இல் ஒரு முடிவுக்கு வந்தது. 4 புத்தகக் கடைகளும் புத்தகங்களை தள்ளுபடி விலைக்கு விற்க முடிவு செய்து, திரும்ப விற்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். டெஸ்கொவும், கேர்ஃபோரும் புத்தகத்தை நஷ்டத்திற்கு விற்பதாக உறுதிசெய்தது அப்படிச் செய்யாமல் நல்ல வியாபார நோக்குடன், அறிவுடன், உணர்வுடன் மற்றும் நியாயமாகத் தொழில் செய்ய வலியுறுத்தியது. [89] + +இஸ்ரேலில் ஒரு சனிக்கிழமை அதிகாலை இந்த புத்தக வெளியீடு ஷப்பாத்தை மீறியதாக விமரிசனம் செய்யப்பட்டது. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான எலி யிஷாயின் கூற்று," யூதக் கொள்கைகளின் படி இது தடைசெய்ய்யப்பட்டது, மற்றும் யூதக் கலாச்சாரப் படி இது மாதிரி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைபெறவேண்டும். அவர்கள் வேறு ஒரு நாளில் வைத்துக் கொள்ளலாமே". இஷாய் இதற்காக பணி நேரங்கள் மற்றும் ஓய்வு சட்டத்தின் அடிப்படையில் அவரால் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.[93] + +"பால்ட்டிமோர் சன்ஸ் இன் விமர்சகர், மேரி கரொல் மெக்காலே தொடரைப் பாராட்டிப் பேசும்போது, " ஒரு சிறந்த பழமை வாய்ந்த கதைஅல்லது பில்டன்ஸ் ரோமன் " என்கிறார். +" " இந்தப் புத்தகம் முந்தைய நாவல்களை விட மிக புத்தி பூர்வமாக உள்ளது மற்றும் நேருக்கு நேரான உரை நடையுடன் உள்ளது. " இன்னும் தி டைம்ஸின், ஆலிஸ் ஃபோர்தம் எழுதுகிறார் " ," "ரவ்லிங்கின் மேதாவித்தனம் ஒரு கனவு உலகத்தை மொத்தமாக உணர்ந்தது மட்டுமல்ல , பக்கங்களை விட்டு குதித்து வெளியேவரும்படியான கதாபாத்திரங்கள், நிஜமான மற்றும் குற்றமுள்ள மற்றும் துணிச்சலான விரும்பத்தக்க முறையில் வெளிப்படுத்திய விதத்திலும் உள்ளது' +". ஃபோர்தம் முடிக்கும்போது, " நாம் ஒன்றாக நீண்டகாலம் கடந்துள்ளோம். மேலும் ரவ்லிங்கோ அல்லது ஆரியோ கடைசிவரை நம்மை தாழ்த்திவிடவில்லை." " "'நியூ யார்க் டைம்சின் "எழுத்தர் மிச்சிகோ ககுட்டானிஆரியை ஒரு கதாநாயகனாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக / உதாரணம் காட்டக் கூடிய ஆக இரண்டு விதங்களிலும் சிறப்புற உருவாக்கிய ரவ்லிங்கின் திறமையைப் பாராட்டியுள்ளார்." +"டைம்" பத்திரிக்கையின் லெவ் க்ராஸ்மேன் இதை 2007 இன் முதல் 10 கதை புத்தகங்களில் ஒன்றாகவும், மற்றும் அதற்கு 8 ஆவது இடத்தையும் மேலும் என்றும் புத்தகங்கள் ஒரு பெரிய பரந்த ஊடகம் என்று நிரூபித்த ரவ்லிங்கையும் பாராட்டியுள்ளார். க்ராஸ்மேன் இந்த நாவலை முந்தைய தொடர் நாவல்களோடு இவ்வாறு ஒப்பிட்டுள்ளார். இது பாட்டர் தொகுப்புகளிலேயே மிக மனதுக்குகந்தது இது ஆனால் ரவ்லிங்கின் கதைக் கருவைஒட்டி பணிந்து போவது இறுதி முடிவோ என்று நினைக்க வைக்கிறது. சாவின் முகத்தில்/முகப்பில் தொடர்ந்து அன்பு செலுத்துவதற்காண அளவு கடந்த முக்கியத்துவம் கூட ஒரு காரணம். நாவல் எழுத்தாளர் எலிசபெத் ஹாண்ட் ""ஆரி பாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோவஸ்" என்னும் இந்த நாவல் மொத்தத் தொடர்களுக்கும் தொப்பி வைத்தது போல் உள்ளது. ஆனாலும், விதவிதமான, வேறுபட்ட பாத்திர நடப்புகளைக் கொண்டு சென்ற விதம், ஒட்டுமொத்த சேர்க்கும் முயற்சியும் ஒரே தொகுப்பில் நெருக்கடியாக, இருப்பதாக அவர் விமரிசித்துள்ளார். + +முரணாக, "க்ரிஸ்டியன் சையின்ஸ் மானிட்டரின்" , ஜென்னி சாயர் கூறுகிறார், " ஹேரி பாட்டர் தொடர்களில் விரும்புவதற்கு நிறைய உள்ளது, பல அடுக்காக மந்திர உலகத்தை உணர்ந்து பிரமாதமாக சொல்லப்பட்ட விதம் முதல் நிறைய உண்டு" இருந்தாலும், வயதுக்கு வருவதை விட்டுத் தள்ளினாலும், ஒரு கதை என்பது ஒருவர் மாறுவதைப் பற்றியது. ஆனால் ஹேரி அதிகம் மாறவில்லை. ரவ்லிங்கின் திட்டமிடப்பட்ட நோக்கில், ஹேரி தடுமாற்றமில்லாமல் நல்ல வழியில் சென்று கடைசியில் வால்டுமார்ட்டை வெல்வது நம்மை உணர்ச்சிவயப்படுத்தியது. இது தவிர்க்கமுடியாத���ு, ஆனால் புனிதமானது/பயங்கரமானது. " 2007 ஆகஸ்ட் 12, "நியூ யார்க் டைம்ஸில்" , க்ரிஸ்டொஃபர் ஹிட்சென்ஸ் இதை இரண்டாம் உலகப் போர் கால ஆங்கிலம் தங்கிப் பயிலும் பள்ளிகளின் கதைகளோடு ஒப்பிட்டுள்ளார், மற்றும் அவர் எழுதுகையில்,இந்தத் தொடர் முழுவதுக்குமாக " ரவ்லிங் அழியாத புகழை வென்றுள்ளார்" என்றும் ஆனால் ரவ்லிங், டியூஸ் எக்ஸ் மசீனாவைபயன்படுத்தியது அவர் விரும்ப வில்லை என்றும், புத்தகத்தின் நடுவில் உள்ள அத்தியாயங்கள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதாகக் கருதுவதாகவும் மேலும்" இயான் ஃப்லெமிங் வில்லனை விட வால்டுமார்ட் அயர்வுடன், தளர்வுடன் காணப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார்.[108] + +ஸ்டீஃபன் கிங், புத்தக விமர்சன கர்த்தாக்கள் சிலரை மெக்காலே உட்பட, அவர்களின் பதில்களை, "அவர்கள் அந்த புத்தக வேலையைப் பற்றி மிக வேகமான/ அவசர முடிவுக்கு வந்து விட்டதாக விமரிசித்துள்ளார்[110] அவர் இது மிகத் தவிர்க்கமுடியாதது.என நினைத்தார் ,ஏனெனில் +வெளியீட்டிற்கு முன்னால் இருந்த அளவு கடந்த ரகசியம் விமரிசன கர்த்தாக்களுக்கு வாசித்து, பொருட்படுத்துவதற்கு போதுமான கால/ நேர அவகாசத்தை அனுமதிக்கவில்லை.ஆனால் இதன் பொருள் முந்தைய விமரிசனங்களில் ஆழம் இல்லாதிருந்தது. எழுத்து நடை ஏமாற்றத்தை தருவதாக இருப்பதை காண்பதை விடுத்து, அது, பக்குவத்துடனும், தரம் உயர்ந்தும் இருப்பதாக உணர்ந்தார். புத்தகங்களில் சொல்லப்பட்ட விஷயக் கருத்துகள் வயது முதிர்ந்ததாக உணர்வதாகவும், தொடர்களின் இடையில் இருந்து ரவ்லிங்க் வயது வந்த வாசகர்களை மனதில் கொண்டு, உறுதியாகத் தெளிவாக எழுதியுள்ளார். இவர் இந்தப் பணியை மிக கௌரவத்துடன்" ஹக்கல்பெர்ரி ஃபின்" மற்றும் "ஆலிஸ் இன் வொண்டர்லேண்டுடன் " ஒப்பிட்டு, அவை எப்படி இன்றுவரை நிலைத்து நிற்கிற வெற்றிகரமான தரமான குழந்தைகள் முதல் வயது வந்த வாசகர்களுக்குப் பிடித்த வகையில் உள்ளதோ அது போல் இருக்கிறது என்கிறார். + +"ஹேரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹால்லோஸ் " விற்பனையில் சாதனை படைத்தது. US இல் "டெத்லி ஹாலோவ்ஸ்" முதல் பதிப்பு 12 மில்லியன் நகல்கள் வரை ஓடியது. மேலும் 1 மில்லியனுக்கும் மேல் அமேஜான் மற்றும் பார்னேஸ் & நோபிலால் முன் பதிவு செய்யப்பட்டது. 2007, ஏப்ரல் 12, பார்னெஸ் & நோபில்அதன் வலைதளத்தின் மூலமாக முன் பதிவு செய்த "டெத்லி ஹாலோவ்ஸ்" பிரதி��ள் , அதன் முந்தைய சாதனையை முறியடித்து 500,000 அதிகமான பிரதிகளை எட்டியது. ஆரம்ப தினத்தன்று US இல் 8.3 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது, மற்றும் UK இல் 2.65 மில்லியனும், + +WH ஸ்மித்தில் விற்பனை 1 நொடிக்கு 15 புத்தகங்கள் என்ற கணக்கை எட்டியதாக அறிவிக்கப்பட்டது. ஜுன் 2008 க்குள் கிட்டத்தட்ட புத்தகம் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டு உலக அளவில் விற்பனை 44 மில்லியன்கள் என்று அறிவிக்கப்பட்டது. +"ஹேரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹால்லோஸ் " நிறைய விருதுகளை வென்றது. +2007 இல் , இந்த புத்தகம் ஒரு நியூ யார்க டைம்ஸ் 100 குறிப்பிடக்கூடிய புத்தகங்கள் என்று பெயரிட்டது, மேலும் அதனுடைய ஒரு நோட்டபில் குழந்தைகள் புத்தகங்கள் என்றும் கூறப்பட்டது.பப்லிஷெர்ஸ் வீக்லி அவர்களுடைய பட்டியலில் 2007 இன் புத்தகங்களில் சிறந்தது "ஆரி பாட்டர் அண்டு தி டெடட்லி ஹாலோஸ்" என்று கூறியுள்ளது. +2008 இல் அமெரிக்க நூலக சங்கம் இந்த நாவலை "இளம் வயதினருக்கான சிறந்த புத்தகங்கள் " என்றும், நோட்டபில்/ குறிப்பிடக்கூடிய குழந்தைகள் புத்தகமாகப் பட்டியலிட்டது. +மேலும் "ஆரி பாட்டர் அண்டு தி டெத்லி ஹாலோவஸ்" இந்த புத்தகம் 2008 கொலராடோ ப்லூ ஸ்ப்ரூஸ் புத்தக விருதையும் பெற்றது. + +ஒரு பேட்டியில், ஆன்லைன் அரட்டையில், ரவ்லிங்கின் வலைதளத்தின் மாதத்தின் மந்திரவாதி பிரிவில் மற்றும் அவருடைய 2007 யூ.எஸ் திறந்த புத்தக சுற்றுப் பயணத்தில் , புத்தகத்தில் சேர்க்கப்படாத கூடுதல் பாத்திரத் தகவலை வெளியிட்டார். இந்த தகவல் குறித்த முதல் துணுக்குகள் மூவர்குழு மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆரி ஆகியோருடன் துவங்குகிறது. + +ஆரி, மந்திர அமைச்சகத்தின் அரசர்ஆனான், பின்னர் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டான். என்று கூறினார். "ஆரி பாட்டர் மற்றும் பாதி ரத்த இளவரசியில்" , ஒரு சமயம் ஹோலிஹெட் ஹார்பீஸ் க்விட்டிச் குழுவுக்காக விளையாடி பின்னர் ஆரியுடன் குடும்பம் அமைக்கச் சென்ற ஆரியின் காதலியான ஜின்னி வெஸ்லே யைப் பற்றியும், பின்னர் ஜின்னி "டெய்லி ப்ரோஃபெட்டின்" தாளாளராக, க்விட்டிஸ்சின் தலைமைஏற்றார்.ரோன் வெஸ்லே சில காலம் ஜியார்ஜின் வீஸ்லீஸ் விஸார்ட் வீசஸ் கடையில் வேலை பார்த்தான், பின்னர் ஆரியுடன் ஆரர் ஆக சேர்கிறான். ஹெர்மியோன் தன் பெற்றோர்களை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடித்து, அவர்கள் மீது பாதுகாப்புக்���ாக வைத்த நினைவாற்றல் மாற்றங்களை எடுத்து விடுகிறாள் . தொடக்கத்தில், மந்திர அமைச்சகத்தில், மந்திர உயிர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் துறையில் வேலை பார்த்தாள் அங்கு வீட்டு எல்வ்ஸ் களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாள். பின்னர் மேஜிக்கள் லா என்ஃபோர்ஸ்மென்ட் துறைக்கு மாறி, சுத்தமல்லாத ரத்தம், கொடுமைப்படுத்தும் சட்டங்களை ஒழித்துக்கட்ட துணை புரிந்தாள்.அந்த மூவர் குழுவில் இவள் ஒருத்தி தான் திரும்பச் சென்று, அவளது ௭ழாவது வருடத்தை ஹோக்வார்ட்சில் முடித்தாள்.மேலே பேசும்போது ரவ்லிங் " டம்பில்டோர் உண்மயில் ஒரு உல்லாசப் பேர் வழி" என்று வெளியிட்டார். அடுத்து, வால்டுமார்ட்டின் தலை விதியை பற்றி வெளியிட்டார். அவரது இறப்புக்குப் பின் வலுக்கட்டாயமாக கிங்கின் க்ராஸ் லிம்போவில் அவனுடைய மிகத் தீவிரமான குற்றங்களால் குறுக்கப்பட்ட வடிவில் பிசாசாக இருக்க வைக்கப்பட்டுள்ளான். + +ரவ்லிங், பரந்த மந்திரவாத உலகில்மேற்கொண்டு உண்டான மாறுதல்களாகப் பின்வருவனவற்றை வெளியிடுகிறார்.கிங்க்ஸ்லி ஷகில்போல்ட், "ஆரி பாட்டர் மற்றும் ஆர்டர் ஆஃப் ஃபினிக்சில்" , ஒரு சின்ன பாத்திரத்தில் அறிமுகமானவர், பின்னர் பெர்சி வெஸ்லே, ரோன்ஸ் சகோதரன் +அவருக்குக் கீழ் உயர்ந்த பதவி வகிக்க, மாயாஜாலத்தின் நிரந்தர அமைச்சர்ஆனார். + +ஷேக்கல்போல்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களில் மந்திரவாத சிறையான அஜ்கபானில் டெமென்டர்சை பயன்படுத்துவது ஒரேயடியாக நிறுத்தப்பட்டது. +அமைச்சகத்தை சீர்திருத்துவதில் ஆரி, ரோன் மற்றும் வெர்மியொன் உறுதுணையாக இருந்தனர். +ஸ்னேப்பின் ஓவியம் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் இல்லை, ஏனெனில் அவர் பதவியை தூக்கி எறிந்தது தான்.என்று ரவ்லிங் கூறுகிறார்.பின் ஆரி, ஸ்னேப்பின் ஓவியம் சேர்க்கப்பட்டதை உறுதிப் படுத்துகிறான், மற்றும் ஸ்னேப்பின் உண்மையான விசுவாசம்/ பக்தியை பொதுமக்களுக்கு வெளியிடுகிறான். + +"ஆரி பாட்டர் அண்ட் டெத்லீ ஹாலோஸின் " உலகளாவிய புகழால், இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.முதல் மொழி பெயர்ப்பு 25, செப்டெம்பர் 2007 இல் (Гаррі Поттер і смертельні реліквії என)உக்ரேனியமொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. " ஆரி பாட்டர் அண்ட் ரெலிக்ஸ் ஆஃப் டெத் என்று புத்தகத்தின் ஸ்வீடத் தலைப்பு ரவ்லிங���கால் வெளியிடப்பட்டது. " ஆரி பாட்டர் அண்டு தி ரெலிக்ஸ் ஆஃப் டெத்" (Harry Potter och Dödsrelikerna)அதாவது வெளியீட்டிற்கு முன் ஸ்வீடன் புத்தக வெளியீட்டாளர் ' டெத்லீ ஹாலொஸ்' என்ற 2 வார்த்தைகளை புத்தகத்தை வாசிக்காமல் மொழிபெயர்ப்பது கடினமாக இருப்பதாகக் கூறியதும் ரவ்லிங் தலைப்பை வெளியாக்கினார். " +ஒரு புதிய தலைப்புடன் 26 ஜனவரி 2008 இல் "முதல் " போலிஷ்மொழி பெயர்ப்பு வெளியானது. அது Harry potter i Insygnia smierci-ஆரிபாட்டர் அண்ட் அண்ட் தி இன்சிக்னியா ஆஃப் டெத். + +டேவிட் யாட்ஸ் இயக்கத்தில் "ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லீ ஹாலொஸின்" 2 பாகத் தழுவல்களை இரண்டையும் அவரே எடுக்கத் திட்டமிடப்பட்டது.பாகம் 1 19 நவம்பர் 2010 இல் வெளியிடவும், பாகம் 2 ஜுலை 15, 2011 இலும் திட்டமிடப்பட்டது. 2007-2008 இல் ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் போராட்டம் முடியும் வரை திரைக்கதை எழுத ஸ்டீவ் க்லோவ்ஸ் வேலையைத் தொடங்க தாமதித்தார் திரைப்பட வேலை 2009 பிப்ரவரியில் தொடங்கி அந்த வருடக் கடைசி வரை நடந்தது. முதல் மூன்று படங்களுக்கும் இசையமைத்த +ஜான் வில்லியம்ஸ் இந்த முறையும் திரும்ப இசையமைக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். + + + + + +இராமானுசன் கணிதத்துளிகள்: இராமானுசன் இரட்டை + +16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக் கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதாகவும் ஒரு கணிதத்துளி இராமானுசன் இரட்டை யைப்பற்றிய வரலாறு. + +உலகப்புகழ் பெற்ற மூன்று 'நோட்புக்குகளில்' இராமானுசன் தன்னுடைய ஆய்வுகளைக் குறித்து வைத்திருந்தார். இவையெல்லாம் அவருடைய பள்ளிநாட்களிலிருந்தே எழுதி வந்தது. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் இவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.. இதனில் இரண்டாவது நோட்புக்கில், மூன்றாவது அத்தியாயத்த���ல் 29ம் குறிப்பு தான் இந்த இராமானுசன் இரட்டைக்கு அடிப்படை. + +இக்குறிப்பு சொல்வது: + +formula_1 + += formula_2 + +இக்குறிப்பின் விசேஷமே இது எழுதப்பட்டு அடிக்கப்பட்டும் இருப்பதுதான். இராமானுசன் எதற்கு இதை எழுதினார், எதற்கு அடித்தார் என்பதை சற்று தீர ஆராய்ந்தால் தான் புரியும். + +சமன்பாட்டின் இருபக்கங்களிலுமுள்ள கோவைகளை formula_3 இன் அடுக்குகளடங்கிய தொடர்களால் விரிப்பதாகக் கொள்வோம். அப்பொழுது நமக்குக் கிடைக்கக் கூடியது: + +இதனில் எல்லா formula_5 ம் அவைகளுக்கொத்த formula_6 க்கு சமமாயிருந்தால் தான் சமன்பாட்டின் இருபக்கக்கோவைகளும் சமம் என்பது உறுதியாகும். இராமானுசன் அவைகள் சமம் என்று நினைத்துத்தான் நோட்புக்கில் எழுதியிருக்க வேண்டும். மேலுள்ள சமன்பாட்டில் நாமே formula_7 என்று முதல் சில formula_8 க்களை சரிபார்க்கலாம். formula_9 வரையில் இது உண்மை. ஆனால் formula_10 + +இராமானுசன் எதையும் தனியாக ஒரு கரும்பலகையிலோ காகிதத்திலோ எழுதிச் சரிபார்த்து அதற்குப் பிறகு தன் நோட்புக்கில் எழுதிவைத்ததாகத் தெரியவில்லை. அவர் நோட்புக்கைப் பார்த்தால் அவ்வப்பொழுது மனதில் தோன்றுவதை அதில் அப்படியப்படியே எழுதிவைத்ததாகத் தான் தெரிகிறது. அதனால் இந்த சமன்பாட்டை எழுதிக்கொண்டே போகும்போதே மனதால் அவர் சரிபார்த்துக் கொண்டே போயிருக்கவேண்டும். சமன்பாட்டை எழுதிமுடித்த அந்த நேரத்திற்குள் அவர் 21 வது கெழுக்கள் சமமில்லை என்று மனதில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். உடனே அந்த சமன்பாட்டை அடித்திருப்பார் என்று தான் நாம் ஊகிக்கவேண்டியிருக்கிறது! அல்லது அவருக்கென்று தனியாக வேறு முறையில் அச்சமன்பாட்டைச் சரிபார்க்கும் வழி இருந்திருக்கவேண்டும். எப்படியிருந்தாலும் அவருடைய கணிதக் கணிப்புத் திறனுக்கு இது ஒரு சிறிய சான்று. + +சமன்பாடு அடிக்கப்பட்டாலும் ஆய்வாளர்கள் அதை விடவில்லை. இரண்டு தொடர்களை இராமானுசன் இரட்டை என்று எப்பொழுது சொல்லலாம் என்று ஓர் இலக்கணம் வகுத்தார்கள். சமன்பாட்டின் இடது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலியவைகளை formula_11 களாலும் வலது பக்கத்திலுள்ள 2,3,5,7,11 ... முதலிய எண்களை formula_12 களாலும் பதிலீடு செய்தால் எப்பொழுதெல்லாம் அச்சமன்பாடு சரியாகிறதோ அந்த தொடர் இரட்டை formula_13ஐ இராமானுசன் இரட்டை என்று பெயரிட்டார்கள். இப்பொழுது ஆய்வுக்குகந்த கேள்வி: இராமானுசன் இரட்டைத் தொடர்கள் எவை? formula_14 நிச்சயமாக இராமானுசன் இரட்டை இல்லை. + +இராமானுசனுடைய நோட்புக்குகளைப் பற்றி பெர்ண்ட் எழுதிய புத்தகத்தில் (பாகம் 1, பக்கம் 130)இராமானுசன் இரட்டைகளின் அதிசயத்தைப் பற்றி எழுதும்போது ஜி.ஈ.ஆண்ட்ரூஸ் 4 இரட்டைகளும், ஹிர்ஷ்ஹோர்ன் 2 இரட்டைகளும், ப்ளெக்ஸ்மித், ப்ரில்ஹரி, கெர்ஸ்ட் இம்மூவரும் சேர்ந்து 2 இரட்டைகளும் கண்டுபிடித்திருக்கிறர்கள் என்றும், ப்ளெக்ஸ்மித் பிற்பாடு கணினியில் சோதித்துப் பார்த்ததில் இந்தப் பத்து இரட்டைகளைத் தவிர வேறு இரட்டைகள் இருக்கமுடியாது என்று தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார். + + +Bruce C.Berndt. Note Books of Srinivasa Ramanujan, Part 1. 2005. Springer. + + + + +நேபாளி குறுக்ஸ் மொழி + +நேபாளி குறுக்ஸ் மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் பேசப்படும் குறுக்ஸ் மொழியிலிருந்து இது வேறுபட்டது. தாங்கர், ஜாங்கெர், ஜாங்கார்ட், ஜாங்கட், உராவோன், ஒராவோன் போன்ற பெயர்களாலும் இம் மொழி குறிக்கப்படுகின்றது. + + + + + + +சௌரியா பஹாரியா மொழி + +சௌரியா பஹாரியா மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். இம் மொழியைப் பேசுவோர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். இதனைப் பேசும் 122,000 மக்களில், இந்தியாவில் 110,000 பேர் உள்ளனர். "மால்ட்டோ", "மால்ட்டி", "மால்ட்டு", "மாலெர்", "சௌரியா மால்ட்டோ" போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. + +"சாகிப்கஞ்ச்", "கொட்டா", "ஹிரன்பூர்", "லிதிபாரா" என்பன இதன் கிளைமொழிகள். குறுக்ஸ் மொழிக்கு நெருக்கமானது. + + + + + + +துருவா மொழி + +துருவா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 75,000 மக்களால் பேசப்படுகிறது. "துர்வா", "பார்ஜி", "பராஜா", "பராஜி", "தகாரா", "துகாரா" என்னும் மாற்றுப் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவது உண்டு. + +"திரியா", "நெதானர்", "தர்பா", "குகானர்" என்னும் கிளைமொழிகள் உள்ளன. + + + + + +இராமானுசன் கணிதத்துளிகள்: பிரிவினைச் சார்பு + +16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதுமான கணிதத்துளிகளில் சில எண் பிரிவினைச் சார்பின் வகுபடும் தன்மையைப் பற்றி இராமானுசன் கண்டுபிடிப்புகளும் யூகங்களும். + +நேர்ம முழு எண் formula_1 இனுடைய கட்டற்ற பிரிவினைகளின் எண்ணிக்கை formula_2 இங்கு பாகங்களின் வரிசைமாற்றத்தினால் மட்டும் வேறுபடும் பிரிவினைகள் வேறாக எண்ணப்படுவதில்லை. எடுத்துக்கட்டாக, p(5) = 7, ஏனென்றால் + +5 = 4+1 = 3+2 = 3+1+1 = 2+2+1 = 2+1+1+1 = 1+1+1+1+1. + +மேஜர் மக்மஹோனால் formula_3 க்குக் கணிக்கப்பட்ட formula_4 இன் மதிப்புகளை ஆராய்ந்து இராமானுசன் சிறுவயதிலிருந்தே p(n) இன் வகுபடும் தன்மைகளைப் பற்றிக் கண்டுபிடித்த வைகளில் முதல் சிலவற்றைக் கீழ்வரும் அட்டவணையில் பார்க்கலாம். + +இராமானுசனுடைய யூகம்: formula_5 ஐ formula_6 சரியாக வகுத்தால், formula_7வை யும் அது சரியாக வகுக்கும். + +காலக்கிரமத்தில் கணித இயலர்கள் இதை சிறிது சிறிதாக வெல்ல முயன்ற முன்னேற்றத்தை கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கலாம்: + +சாவ்லா காட்டின மாறுகாட்டு: formula_8 ஐ formula_9 வகுக்கிறது; ஆனால் formula_10 ஐ formula_9 வகுக்கவில்லை. இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் இராமானுசன் காலத்தில் formula_4 மதிப்புகள் 200 க்குமேல் கணிக்கப்படவில்லை என்பதுதான். + +ஆக, இராமானுசன் யூகம் காலத்தின் போக்கில் தவறு என்று தெரிந்துவிட்டது. ஆனால் கணித இயலர்கள் இந்த ஆய்வை நிறுத்தவில்லை. வெவ்வேறுவிதமாக இராமானுசனின் யூகத்தை மாற்றி அமைக்கப் பார்த்தனர். கடைசியில் 1967 இல் ஐட்கென் என்பவர், முடிவாக நிறுவியது கீழ்வருமாறு: + +வகுக்கும். + + + + + +நாரண. துரைக்கண்ணன் + +நாரண. துரைக்கண்ணன் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். "ஜீவா" என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர். + +துரைக்கண்ணன் 1906 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்ப��ரில் க. வே. நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். +பெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் "துரைக்​கண்ணு' என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது.​ 1932 ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ 1982 ஆம் ஆண்டில் மனைவி காலமானார். + +இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. மறைமலை அடிகள் +போன்றவர்களிடம் தமிழ் பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​ + +வ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே "சரஸ்​வதி பூஜை' என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இத​ழில் வெளியானது. + +பிற்காலத்தில், தமிழ் எழுத்துலகால் இவர் மறக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், 1973 ஆம் ஆண்டு சமயம் திருமயிலை சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண. துரைக்கண்ணன் தமது பேச்சில் தந்த தன்னிலை விளக்கம், பார்வையாளர்களுக்கு அவரது பொருளாதாரச் சூழலைப் புரிய வைத்தது. அதன்பின் ஒளவை நடராஜன் வழிகாட்டுதலில் ’திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி திரட்டி அவரை வறுமைச் சூழலில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தனர். அதற்கு முன்னரே பலர் அவ்வாறு நிதி திரட்ட முயன்று பாதியிலேயே கை விட்ட நிலைமையில் ’அன்னை கலை, இலக்கிய நற்பணி மன்றம்’ சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் அமைந்திருந்த நாரண துரைக்கண்ணர் இல்லம் சென்று அவரிடம் அவருக்கு உதவக்கூடியோர் என்று அவர் கருதுவோரின் பெயர்ப்பட்டியல் பெற்று ஆர்வத்துடன் நிதி திரட்ட முயன்றது. அம்முயற்சியில் எழுத்தாளரான நாரண. துரைக்கண்ணன் வெள்ளை உள்ளத்துடன் இரும்புப்பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தம் இல்லை எனும் நடைமுறை யதார்த்தம் புரியாமல் பலரின் பெயரைத் தந்திருந்ததை உணர்ந்த அக்குழு தாங்கள் பெற்ற பல கசப்பான அனுபவங்களையும் நாரண. துரைக்கண்ணருக்குத் தெரியாமல் மறைத்து, சேர்த்த நிதியை 23.12.1973 அன்று கோகலே மண்டபத்தில் நடந்த விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி மூலம் நாரண. துரைக்கண்ணரிடம் ஒப்படைத்தது. + +பரலி சு. நெல்லையப்பர் மூலம் "லோகோபகாரி" வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானர். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 1932 ”ஆனந்த போதினி” என்ற இதழின் ஆசிரியரானார். அந்த இத​ழில்​தான் "அழ​காம்​பிகை' என்ற சிறு​க​தையை எழு​தி​னார்.​ அதுவே அவருடைய முதல் சிறு​கதை என்று கூற​லாம்.​ 1934 ஆம் ஆண்டு ”பிரசண்ட விகடன்” ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 32 ஆண்​டு​க​ளுக்கு மேல் தொடர்ந்து அதன் ஆசி​ரி​ய​ரா​கப் பணியாற்றினார். + +இத​ழா​சி​ரி​ய​ராக இருந்​த​தால் பல்​வேறு பகு​தி​களை எழு​தும்​போது வெவ்​வேறு புனைப் பெயர்​களை அமைத்​துக்​கொள்ள நேர்ந்​தது.​ தான் ஆசி​ரி​ய​ராக இருந்த ஆனந்த போதினி,​​ பிரசண்ட விக​டன் மாத,​​ மாத​மி​ரு​முறை இதழ்​க​ளில்,​​ மைவண்​ணன்,​​ வேள்,​​ துலாம்,​​ தராசு,​​ திரு​ம​யி​லைக் கவி​ரா​யர்,​​ துரை,​​ லியோ எனப் பல்​வேறு புனைப் பெயர்​க​ளில் கதை,​​ தொடர்​கதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம்,​​ விமர்​ச​னங்​கள்,​​ விவா​தங்​கள்,​​ நாட​கங்​கள் எழு​தினார்.​ அவ்​வாறு எழு​தும்​போது பல்​வேறு பெயர்​க​ளைச் சூட்​டிக் கொண்​டா​லும் "ஜீவா” என்ற பெயர்​தான் வாச​கர்​கள்,​​ எழுத்​தா​ளர்​க​ளி​டையே அன்று பிர​ப​ல​மா​னது.​ + +பிரசண்ட விகடன் மூலம் "ஜீவா" என்ற புனைபெயரில் பல கதைகளை எழுதினார். இவர் எழுதிய "உயிரோவியம்", "நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?", "தாசி ரமணி" முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும். தே​வ​தா​சி​கள் என்ற இழுக்கை சமூ​கத்​தில் இருந்து களைய வேண்​டும் என்ற கிளர்ச்சி நாட்​டில் பர​விய காலத்​தில் எழு​தப்​பட்ட நாவல்​தான் ​ "தாசி ​ர​மணி'.​ + +"தீண்டாதார் யார்?" என்னும் சமுதாயப் புரட்சி நாடகத்தை எழூதினார். "காதலனா? காதகனா?" என்பது மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவல். இவற்றை விட "இலட்சிய புருடன்" என்னும் அரசியல் "வேலைக்காரி", "நடுத்தெரு நாராயணன் போன்ற சமூக சீர்திருத்தக் கதைகளையும் எழுதினார். + +பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார். + +இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ள���.​ + +இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக "பாரதி விடுதலைக் கழகம்" என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார். + +தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். + +மக்​கள் நாள்​தோ​றும் பயன்​ப​டுத்​தும் வகை​யில் தோத்​தி​ரப் பாடல்​களை "அருட்​கவி அமு​தம்' என்ற பக்​திப் பாடல்​கள் தொகுப்​பாக வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ + +வள்​ள​லார் மற்​றும் மகா​கவி பார​தி​யின் நூல்​களை ஆர்​வத்​து​டன் கற்​றார்.​ திருவருட்பா பற்​றிய நூலொன்றை எழு​தி​னார்.​ 1949-இல் மகா​கவி பார​தி​யார் இலக்​கி​யங்​களை நாட்​டு​டை​மை​யாக்​கப் போராட ஏற்​பட்ட குழு​வில் முக்​கிய பங்​கு​வ​கித்து வெற்றி பெற்​றார்.​ அதற்​கென ஏற்​பட்ட குழு​வி​னர் சார்​பில் பார​தி​யின் துணை​வி​யார் செல்​லம்​மாளை திரு​நெல்​வே​லிக்​குச் சென்று,​​ கண்டு,​​ ஒப்புதல் கடி​தம் வாங்​கி​னார். + + + + + +தோவாளை சுந்தரம் பிள்ளை + +தோவாளை சுந்தரம் பிள்ளை (1903 - 1961) பழந்தமிழர் கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப் பாட்டுக் கலைஞர் ஆவார். வில்லுப் பாட்டு வழிவழியாய் பல புலவர்களால் பாடப் பெற்று 20ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. வில்லுப் பாட்டு என்று குறிப்பிடும் போது தோவாளை சுந்தரம் பிள்ளை முதலிடம் பெற்று விளங்கினார். பின்னாளில் வந்த புலவர்களெல்லாம் தோவாளை சுந்தரம் பிள்ளையை வழிமுறையாகக் கொண்டு வணக்கம் சொல்லி ஆரம்பிப்பது வழக்கமாய் இருக்கிறது. + +"வில்பாவலர்", "ரேடியோ ஸ்டார்" என்று பட்டங்கள் பெற்று விளங்கினார். தேரூர் ஆண்டார் பிள்ளையை குருவாகக் கொண்டு வில்கலையை வளர்த்தார் எனினும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் இலக்கியங்கள், புராண இதிகாசங்களைக் கையாண்டு தனித் தன்மையோடு விளங்கினார். பெண்கள், ஆண்கள், இளவயதினர், முதியோர் என அனைத்துத் தரப்ப���னரும் அவர் சொல்லழகில் மயங்கிக் கட்டுண்டு கிடப்பர். + +கோயில் கொடை விழா என்று இல்லாமல் தமிழ் சங்கம் பொது விழாக்களிலும் அவர் தீந்தமிழ் விரும்பி ரசிக்கப்பட்டு வந்தது. பொருளாதார மேதை டாக்டர் நடராஜன், பேராசிரியர் இலக்குவனார் போன்ற தமிழ் ஆர்வலர்களோடு நெருங்கிய உறவு வைத்ததோடு அவர்களால் பாராட்டப்பட்டார். + +வில் பாவலர் சுந்தரம் பிள்ளை குழுவில் சேர்ந்து பக்க வாத்தியங்கள் இசைப்பதைப் பெருப் பேறாகக் கருதினார்கள் பக்க மேளக்காரர்கள். அண்ணாவி என்று அவர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவரோடு இணைந்தவர்கள் பிற புலவர்கள் அழைத்தாலும் போக மாட்டார்கள். சுருங்கக் கூறின் பக்க மேளக் காரர்களுக்கு வேலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர் சொல் அலங்காரத்தில் மக்கள் கட்டுண்டு கிடப்பதால் பாட்டுக்க நேரம் குறைவாகவே கிடைக்கும். + +தந்தை வேலாயுதம் பிள்ளை, தாய் இராமலட்சுமி இவர்களுக்கு புதல்வராய் தோவாளையில் அவதரித்தார். முழுப் பெயர் கடம்பவன சுந்தரம் பிள்ளை, பின்னர் கே சுந்தரம் பிள்ளை என்று வழங்கலாயிற்று. இவருக்கு கைலாசம் பிள்ளை, பூதலிங்கம் பிள்ளை என்று இரு சகோதரர்கள். கைலாசம் பிள்ளையும் வில்லுப் பாட்டுக் கலை பயின்று பாடி வந்தார். பூதலிங்கம் பிள்ளை சிறந்த தமிழ் வித்துவான், உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பல இலக்கியங்களை படைத்துள்ள சிறந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமாவார். மூன்று சகோதரிகளும் இருந்தனர். + +திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் இடைவிடாது கலைப் பணியாற்றச் செல்ல வேண்டியிருந்தமையால் தேரேகால் புதூர் என்னும் ஊருக்கு இடம் மாறினார். + +இவர் திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வானொலி நிலையங்களில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். இந்துக் கல்லூரியில் "வில்லிசை வேந்தர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. + +நாகர்கோவிலில் 1957ல் இந்து சமயம் மற்றும் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாக்டர் நடராஜன், இலக்குவனார், தெ பொ மீ, சமயத் தலைவர்கள் என்று பல் துறை அறிஞர்கள் பங்கு பெற்று மிகச் சிறப்பாக ஒரு வாரம் நடை பெற்றது. அந்த பெரும் சபையில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி அறிஞர்களால் பாராட்டப்பட்டார். + +நாஞ்சில் நாடு மட்டும் அன்றி தமிழகம் முழுவதும் மற்றும் தமிழ் கூறும் அன்றைய திருவிதாங்கூர் தேசத்திலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. பழகிய யாவரும் அவரை உறவு சொல்லியே வருவது வழக்கமாக இருந்தது. இப்போதும் அவர் வழி வந்த சந்ததியினரை அவர் கலைத் துறை ஆட்கள் சந்திக்க நேர்ந்தால் உறவு முறை சொல்லியே அறிமுகப் படுத்திக் கொள்வர். + +பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இறை நம்பிக்கையால் அருளும் அன்பும் சேர்த்து வைத்துள்ளார். தமிழுக்கும் கலைக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்து மத்திய வயதிலேயே உலகை நீத்தார் இறுதியா திருநெல் வேலி மாவட்டம் தனக்கர் குளத்தில் (வடக்கன் குளம்) கோயில் விழாவில் கலைப் பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் போதே உயிர் நீத்து, கலையோடு ஐக்கியமானார். + +சென்னையில் நடந்த கிராமீயக் கலைவிழா, சேலத்தில் நடந்த பொருட்காட்சி ஆகியவற்றிலும் தன் குழுவினருடன் பங்கேற்றுப் பெருமை பெற்றார். + +தொல் பொருள் ஆய்வாளர் "டாக்டர் பத்மநாபன்" தன்னுடைய கட்டுரையில் கீழ்வருமாறு கூறி உள்ளார்: + +"தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப் பாட்டில் பல புரட்சிகளை செய்துள்ளார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரிடம் தமிழ்ப் பயிற்சி பெற்றமையால் அவரால் இனியமையாகவும் மனதை உருக்குமாறும் பாடல்கள் இயற்றிப் பாட முடிந்தது. நாஞ்சில் நாட்டில் வழக்குச் சொல் ஒன்று உண்டு. அதாவது, சொல்லுக்கு சுந்தரம், வில்லுக்கு கோலப்பன், பேய்க்கு நாராயணன். அதன் பொருள் சுந்தரம் பிள்ளை சொற்சுவைக்கு பேர் போனவர். + +விற்கலையை சுந்தரம் பிள்ளை மக்களிடம் தேசிய உணர்வு ஊட்ட ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். காந்திய வழியைப் பின்பற்றிய அன்னார் எப்போதும் தூய கதராடையை அணிவார். அவர் பின்னால் பெரும் ரசிகர் கூட்டம் எப்போதும் கூடியிருக்கும்." + +பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி வாயிலாக தெரிய வருவதாவது: + +"லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜான் டூவீ 1957ம் ஆண்டு நாஞ்சில் வந்த போது, தோவாளை சுந்தரம் பிள்ளையினுடைய வில்லுப் பாட்டை ஒரு மணி நேரத்துக்கு பிபிசி வானொலிக்காகப் பதிவு செய்து சென்றுள்ளார்." + + + + +கானா பாடல்கள் + +வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின், குறிப்பாக சென்னைச் சேரி மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் பச்சையப்பன் கல்லூரி, பிற கல்லூரி மாணவர்களால் பரவத் தொடங்கின. + +"கானாவின் வேர்கள் சென்னை நகரின் இறுக்கமான சேரிகளில் இருந்தாலும், அதை சென்னை நகரத்து (கலைக்)கல்லூரிகளே பிரபலப்படுத்தியது. பச்சையப்பா கல்லூரி, அதன் தலித் மாணவர்கள் இந்த பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர்." + +" கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம்." + +"கானாவின் மிக முக்கிய அம்சமே பங்கேற்பு. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்" + + கடவுள் படைத்த கடலைக்கூட + +கானா கட்டியவர்: மரண காணா விஜி + +கானா கட்டியவர்: மரண காணா விஜி + + + + + + +இராமானுசனின் டௌ-சார்பு + +கணித மேதை இராமானுசனின் சாதனைகளில் மிக முக்கியமானவைகளில் ஒன்று, இராமானுஜனின் டௌ-சார்பு (Ramanujan's tau Function) என்று பிரசித்தி பெற்ற எண் கோட்பாட்டுச் சார்பு. ஒரு முழு எண்ணை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எப்பொழுதெல்லாம் எப்படியெல்லாம் சொல்லலாம் என்ற எளிமைத் தோற்றமுடைய பிரச்சினைக்கும் இந்த உயர்ந்த கணிதச் சார்புக்கும் உள்ள உறவைக்காட்டி இரமானுசன் இச்சார்பை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். + +பிரச்சினையின் தொடக்கம் மிகச் சுவையானது. + +எ.கா.1: + +formula_8 + +எ.கா. 2: + +formula_13 + +எ.கா. 3: + +formula_16 + +நான்காம் நூற்றாண்டில் டயொஃபாண்டஸ் என்ற கிரேக்க கணித இயலர் n = 4q - 1 உருவத்திலுள்ள எந்த முழு எண்ணும் இரண்டு வர்க்கங்களின் தொகையாக இருக்கமுடியாது என்று அறிந்தவர். 1632 இல் ஜிரார்ட் என்பவர் ஒரு யூகத்தை முன்மொழிந்தார்: அதாவது, + +இதற்கு ஆய்லர் 1749 இல் நிறுவலளித்தார். (ஃபெர்மா வும் 1641இல் ஒரு நிறுவல் காட்டியதாக சொல்லப்படுகிறது.) + +1798 இல் லெஜாண்டரும், 1801 இல் காஸும் formula_23 க்கு வாய்பாடுகள் கொடுத்தனர். + +1621 இல் பாஷெ ஒரு யூகத்தை முன்வ���த்தார்: +இது டயோஃபாண்டஸுக்கே தெரிந்திருந்தாலும் இருக்கும். 1770 இல் லக்ராண்ஜி தான் இதற்கு நிறுவலளித்தார். + +1829 இல் ஜாகோபி உயர்தர கணிதத்தைச் சார்ந்ததான நீள்வட்டச்சார்புகளையும் தீட்டா சார்பு களையும் பயன்படுத்தி k = 2,4,6,8 மதிப்புகளுக்கு formula_6க்கு வாய்பாடுகள் அளித்தார். + +ஜாகோபியின் வாய்பாடுகள்: + +இங்கெல்லாம் formula_28 இனுடைய (4m+1)-வகைக் காரணிகளின் எண்ணிக்கை; + +இவையெல்லாவற்றையும் அறிந்தோ அறியாமலோ இராமானுசன் 1916 இல் ஒரு விந்தையளிக்கும் வாய்பாடை பிரசுரித்தார்: + +இங்குதான் இராமானுசன் டௌ-சார்பை அறிமுகப்படுத்தினார். அது இன்று எண்கோட்பாட்டின் எல்லைகளையும் தாண்டி இயற்கணித இடவியல், மற்றும் இன்னும் சில கணிதப் பிரிவுகளை ஆக்கிரமித்துவிட்டது. இப்பிரிவுகளே இராமானுசன் காலத்திற்கு மிகப்பிற்காலத்தியவை. + +formula_36 என்பது ஒரு முடிவுறாச் சரத்தில் formula_37 இன் கெழு. இந்த முடிவுறாச் சரமே ஒரு முடிவுறாப் பெருக்கீட்டின் விரிபாடு. அதாவது, + +formula_38 + +இதிலிருந்து formula_39 + +formula_40 + +formula_41 + +formula_42 + +formula_43 + +formula_44 + +formula_45 + +என்று தெரிந்துகொள்ளலாம். + +இது இராமானுசனுடைய யூகம். இதற்கு நிறுவல் 1917 இல் மார்டெல் ஆல் கொடுக்கப்பட்டது. + + + + + + + + + + +யுனைட் டி'ஹபிட்டேஷன் + +யுனைட் டி'ஹபிட்டேஷன் (Unité d'Habitation) என்பது இரண்டாவது உலகப் போரை அடுத்து, பிரான்சில் உள்ள மார்செயில் என்னும் நகரில் 1947 - 1952 காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வதிவிடக் கட்டிடத் தொகுதி ஆகும். இதே கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பில் மேலும் சில கட்டிடங்கள் இதே பெயரில் அமைக்கப்பட்டன. பிரெஞ்சு மொழியில் இச் சொல், "வதிவிட அலகு" அல்லது "வதிவிட ஒற்றுமை" என்னும் பொருள் தரக்கூடியது. புகழ் பெற்ற பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியேயினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம் பின்னர் உருவான இது போன்ற பல கட்டிடத் தொகுதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. லெ கொபூசியேயின் மிகப் புகழ் பெற்ற கட்டிடங்களில் ஒன்றான இது, தொடர்ந்து வந்த பல கட்டிட வடிவமைப்புக்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தியதுடன், பின்னாளில் உருவான புரூட்டலிஸ்ட் கட்டிடக்கலைப் பாணிக்கு (Brutalist architectural style) ஒரு அகத்தூண்டலாக விளங்கியதாகக் கூறப்படுகிறது. + +மார்செயிலில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம், 337 வதிவிட அலகுகளைக் கொண்டது. நிலத�� தளத்தில் பாரிய காங்கிறீற்றுத் தூண்களால் தாங்கப்பட்டுள்ள இத் தொகுதியில், கடைகள், விளையாட்டு வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், தங்கு விடுதி போன்ற பல வசதிகள் அடங்கியுள்ளன. இதன் கூரை ஒரு மொட்டை மாடியாக அமைக்கப்பட்டுள்ளது. அதில், கட்டிடச் சேவைகள் தேவைக்கான அமைப்புக்கள் சிற்பங்கள் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மொட்டை மாடியில் ஒரு நீச்சல் குளமும் உண்டு. + +பொதுவாக இது போன்ற கட்டிடங்களில் நடுவில் ஒவ்வொரு தளத்திலும், ஒரு நடைவழியும், அதன் இரு பக்கங்களிலும் வதிவிட அலகுகளும் அமைந்திருக்கும். இவ்வமைப்பில், வதிவிட அலகுகளில் ஒரு பக்கத்தில் மட்டுமே சாளரங்கள் அமைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் அவ்வலகுகளில் குறுக்குக் காற்றோட்டம் இருக்காது. லெ கொபூசியே இப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய அணுகுமுறை ஒன்றை இக் கட்டிடத்தில் கையாண்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு அலகும் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், நடைவழிகள் மூன்று தளங்களுக்கு ஒன்று மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், ஒவ்வொரு அலகும் கட்டிடத்தின் முழு அகலத்துக்கும் அமைந்துள்ளதுடன், எதிர்ப் பக்கங்களில் சாளரங்களும் அமைக்கக்கூடியதாக உள்ளது. + + + + +மூதிலி கடாபா மொழி + +மூதிலி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 8,000 மக்களால் பேசப்படுகிறது. + +தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோர் அன்றாட நடவடிக்கைகளின் பல துறைகளிலும் தங்கள் மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமது மாநிலத்தின் முதன்மை மொழியான தெலுங்கில் குறைந்த அளவு அறிவே பெற்றுள்ளனர். + + + + + +பொட்டங்கி ஒல்லார் கடாபா மொழி + +ஒல்லார் பொட்டாங்கி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15,000 மக்களால் பேசப்படுகிறது. "ஒல்லார் கடாபா", "ஒல்லாரி", "ஒல்லாரோ", "ஹல்லாரி", "ஹொல்லார் கட்பாஸ்", "சான் கடாபா", "கடாபா", "சானோ", "கோண்டேகார்", "கோண்ட்கோர்" போன்ற மாற்றுப் பெயர்களிலும் இது குறிப்பிடப்பட்டு வருகிறது. இது புழங்கும் இரண்டு மாநிலங்களிலுமாக 5 கிளைமொழிகள் அறியப்பட்டுள்ளன. + +ஒரியா எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றில் எழுதப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோர் அன்றாட நடவடிக்கைகளின் பல துறைகளிலும் தங்கள் மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமது மாநிலத்தின் முதன்மை மொழிகளில் சிறப்பான அறிவு பெற்றவர்கள் அல்ல. + + + + + +1825 + +1825 ((MDCCCXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்). + + + + + + +அல்லர் மொழி + +அல்லர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தின் மலப்புறம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 350 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. "அலன்", "அலன்மார்", "அலர்", "அல்லன்", "சட்டன்" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி மலையாளத்துடன் 61% சொல் ஒற்றுமையையும், தமிழுடன் 59% சொல் ஒற்றுமையையும் கொண்டுள்ளது. இம்மொழி மலையாள எழுத்தில் எழுதப்படுகின்றது. + + + + + +பாசிகர் மொழி + +பசிகர் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவில், ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இம்மொழி ஏறத்தாள 58,236 மக்களால் பேசப்படுகிறது. + +சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு மிகவும் குறைவானது. + + + + + +பாரியா மொழி + +பாரியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 196,512 மக்களால் பேசப்படுகிறது. + +"பார்", "பாரத்", "பூமியா", "பாலிஹா" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம் மொழியைத் தேவநாகரி எழுத்தில் எழுதுகிறார்கள். + + + + + +காமர் மொழி + +காமர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 23,456 மக்களின் தாய் மொழியாகும். எனினும் பலர் இம்மொழியைக் கைவிட்டு சட்டிஸ்காரி, இந்தி போன்ற மொழிகளைப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. + + + + + +காணிக்காரர் மொழி + +காணிக்காரர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வாழும் 25,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். காணிக்காரர் என்ற பழங்குடி இனமக்களே இம்மொழி பேசுபவர்கள் ஆவர். + +"கணிக்கர்", "கணிக்கன்", "கணிகாரன்", "கண்ணிக்காரன்", "மலம்பாஷி", “கன்னித்தமிழ்” போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். +இம்மொழி மலையாளத்தையும் தமிழையும் ஒத்திருக்கும். + +விக்கிமீடியாவின் அடைக்காப்பகத் திட்டத்தில் காணிக்காரர் மொழியில் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கோடு சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காணிக்காரர் விக்கிப்பீடியா + + + + + +குறிச்சியா மொழி + +குறிச்சியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளாவின், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்திலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 29,375 மக்களால் பேசப்படுகிறது. + +"கோவோகன்", "குறிச்சியார்", "குருச்சன்" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசியோரில் பலர் இதனைக் கைவிட்டு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாறிவருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம்மொழி அழியும் ஆபத்து உள்ள மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. + + + + + +மலங்குறவன் மொழி + +மலங்குறவன் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்ம���ழி ஏறத்தாள 7,339 பேர்களால் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் போன்ற மாவட்டங்களிலும் இம்மொழி புழங்கிவருகின்றது. + +"மலைக்குறவன்", "மலக் கொறவன்" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பலர் இன்று மலையாளத்தையே முதல் மொழியாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. + + + + + +விஷாவன் மொழி + +விஷாவன் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 150 பேர்களால் மட்டுமே பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. + +"மலங்குடி", "மலர்குடி" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. + + + + + +வடமேற்குக் கோலமி மொழி + +வடமேற்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 50,000 மக்களால் பேசப்படுகிறது. "கோலம்போலி", "குலமே", "கோலம்", "கோல்மி" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுகின்றது. இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன. தென்கிழக்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு. இதனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கணிக்கப்படுகிறன. + + + + + +பிட்டிபென்டர் + +பிட்டிபெண்டர் ஆண்டிவைரஸ் சாப்ட்வின் இனால் விருத்தி செய்யப்பட்ட மென்பொருளாகும். இது ஆரம்பத்தில் நவம்பர் 2001 வெளிவந்ததுடன் இதன் இப்போது 10ஆவது பதிப்பில் உள்ளது. பிட்டிபெண்டர் இதன் முன்னைய ஆன்டிவைரஸ் எக்ஸ்பிரஸ் மென்பொருட்களை மாற்றீடு செய்துள்ளது. பிட்டிபெண்டர் ஆண்டிவைரைஸ் மென்பொருட்கள் வீட்டுப் பாவனையாளர்கள், வீட்டுப் பாவனையாளர்கள், வர்தரீதியாகப் பாவிப்பவர்கள் மற்றும் இணைய சேவை வழங்குனர்கள் ஆகியோரிற்காக விருத்தி செய்யப்பட்டுவருகின்றது. + +பிட்டிபெண்டர் PC World 2006 ஆம் ஆண்டு தரப்படுத்தலில் முதலாவதாக வந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்��ாகும் .இது இலவச இணையம் வழி ஸ்கான் மற்றும் இலவசப்பதிப்பினையும் வெளியிட்டுள்ளது + + + + + +1906 + +1906 (MCMVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + +கலவைப் பாடல் + +கலவைப் பாடல் மூலப் பாடலை அல்லது பாடல்களை மாற்றி அல்லது வேறு பாடல்களின் கூறுகளுடன் கலந்து ஆக்கப்படும் ஒரு பாடல். கலவைப் பாடல் பயன்படுத்தி ஆக்கப்படுகின்றது. ஒரு மூலப்பாட்டுக்கள் எவ்வளவு கலக்கப்படுகின்றது என்பது பாடலுக்கு பாடல் வேறுபடும். + +கட்டற்ற படைப்புக்கள் கலவை செய்வது வரவேற்க்கப்படுகின்றது. ஆனால் காப்புரிமைப் பாடல்கள் கலவை செய்வது பொதுவாக வரவேற்க்கப்படுவதில்லை. + + + + + +1609 + +1609 (MDCIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + +தென்கிழக்குக் கோலமி மொழி + +தென்கிழக்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,000 பேர்களால் பேசப்படுகிறது. இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன. வடமேற்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு. இதனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கணிக்கப்படுகிறன. + + + + + +17-ஆம் நூற்றாண்டு + +17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும். + +17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக் நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது. + + + + + + +1920 + +1920 (MCMXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். + + + + + + + + +யூதர் + +யூதர் (எபிரேயம்: יְהוּדִי, "யெகுடி" (ஒருமை) יהודים "யெகுடிம்" (பன்மை), ஆங்கிலம்: "Jew", "Jews" or "Jewish") எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர். + +யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது . இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. + +விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் "இறை புகழ்" என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35). + +சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி "இசுரயேல்" (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி "யூதா" என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே "இசுரயேல்" என்பதும் குறிப்பிடத்தக்கது. + + + + +1880கள் + +1880கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1880ஆம் ஆண்டு துவங்கி 1889-இல் முடிவடைந்தது. + + + + + + + +இராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பின் வளர்வு + +கணித மேதை இராமானுசனின் சாதனைகளில் மிக முக்கியமானவைகளில் ஒன்று, இராமானுஜனின் (Ramanujan's tau Function) என்று பிரசித்தி பெற்ற எண் கோட்பாட்டுச் சார்பு. இராமானுசன் கணிதத்துளிகளில் விந்தை மிக்க பல செய்திகள் உள்ளன. அவைகளில் டௌ-சார்பின் வளர்வைப் பற்றிய (Growth of tau-Function) இராமானுசனின் யூகத்தைச் சரியென்று நிறுவல் கொடுப்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் கணிதமேதைகள் பலரின் பங்களிப்புகளும் தேவைப்பட்ட செய்தி மிக்க சுவையானது. + +formula_1 என்பது ஒரு முடிவுறாச் சர���்தில் formula_2 இன் கெழு. இந்த முடிவுறாச் சரமே ஒரு முடிவுறாப் பெருக்கீட்டின் விரிபாடு. அதாவது, + +formula_3 + +டௌ சார்பில் சாரா மாறியாக இருப்பது எண்கள். எந்த எண் formula_4 க்காவது formula_1 சூனியமாகுமா என்பது முதல் கேள்வி. லெமர் என்ற கணித இயலர் 'ஆகாது' என்ற யூகத்தை கணித உலகத்தின் முன் வைத்திருக்கிறார். Serre என்ற கணித இயலரின் ஆய்வுகளிலிருந்து formula_6 க்கு உகந்த எல்லா formula_7மதிப்புகளுக்கும் இந்த யூகம் சரியென்றே தெரிகிறது. ஆனால் முழு யூகம் இன்னும் திறந்த வண்ணமே உள்ளது. + +சாராமாறியான formula_4 பெரிதாகப்போகப்போக, formula_1 இன் மதிப்புகள் என்ன ஆகும் என்று தெரிந்துகொள்வது அதன் 'வளர்வை'ப்பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய குறி. இதைப்பற்றி 1916 இல் இராமானுசன் கணித உலகின் முன்வைத்த யூகம் கணித உலகையே ஒரு ஆட்டு ஆட்டிவைத்துவிட்டது. + +இராமானுசனின் யூகம்: + +formula_17 என்பது மிக எளிதில் நிறுவப்பட்டுவிட்டதால், இராமானுசனின் யூகத்தில் formula_18 ஐ மாற்றி அதைவிடச் சிறிய எண்ணைக்கொண்டு இன்னொரு யூகம் சொல்ல முடியாது. + +இப்பொழுது பிரச்சினையெல்லாம் இராமானுசனின் யூகத்தை அப்படியே நிறுவல் கொடுத்துத் தீர்மானிப்பதுதான். + +ஹார்டி மிகப்பெரிதாக உள்ள எல்லா formula_10 க்கும் , formula_20 என்று நிறுவல் கொடுத்தார். இதன் பொருள் இரமானுசனின் யூகத்தில் formula_21 இன் இடத்தில் 8 இருப்பதாக நிறுவப்பட்டது. + +இராமானுசனே அதை 7 வரையில் கொண்டு வரக்கூடிய நிறுவல் கொடுத்தார். + +இதற்குப்பிறகு 1918 இல், ஹார்டியும் லிட்டில்வுட்டும் சேர்ந்து, வாரிங் பிரச்சினை என்று பிரசித்திபெற்ற ஒரு எண்கோட்பாட்டுப் பிரச்சினைக்காக அவர்கள் பயன்படுத்திய மிக சிடுக்கான வழிகளின் மூலம், 7 ஐ 6 ஆக்கி நிறுவலளித்தனர். + +1927 இல் க்ளூஸ்டர்மன் என்பவர் அந்த எண்ணை formula_22 க்கு இறக்கிக்கொண்டு வந்தார். formula_14 ஐ ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இது இராமானுசன் யூகித்த formula_24)க்கும் மேலேயே formula_25 இல் நிற்கிறது. + +1933இல் டாவன்போர்ட்டும் ஸாலீ யும் சேர்ந்து இதை இன்னும் கீழே formula_26 அதாவது, formula_27 க்குக் கொண்டுவந்தனர். + +1939இல் ரான்கின் இதை formula_28 அதாவது formula_29க்கு இறக்கிக் கொண்டுவந்தனர். + +ஆனால் இரமானுசனின் யூகம் formula_30 இந்தக் கடினமான கடைசிச் சாதனை 1974 இல் டெலீன் (Deligne) என்பவரால் சாதிக்கப்பட்டது. இந்த நிறுவல் வெறும் எண்கோட்பாட்டு சாதனங்களைக்கொண்டு செய்யப்படவில்லை. இயற்கணித வடிவியல் என்ற 20ம் நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவில் ஆண்டர் வைல் என்பவர் 1946 இல் முன்மொழிந்திருந்த மூன்று யூகங்களைப் பற்றிய டெலீனின் ஆய்வுகளிலிருந்து வந்தது. இதில் ரீமான் ஜீட்டா சார்பின் நுண்புலப் பெயர்ப்பும் அடக்கம். இயற்கணித இடவியல், இயற்கணித வடிவியல், இயற்கணித எண்கோட்பாடு என்ற மூன்று பெரிய பிரிவுகளை ஒன்றுசேர்க்கும் சாதனையாக மிளிர்ந்த இந்த ஆய்வுக்காக டெலீனுக்கு ஃபீல்ட்ஸ் மெடல் என்ற பதக்கம் 1978 இல் ஹெல்ஸின்கியில் நடந்த பன்னாட்டுக் கணித காங்கிரஸில் வழங்கப்பட்டது. + +இராமானுசனின் யூகத்தின் உண்மையை நிறுவவதில் மேற்சொன்ன கணித இயலர்களல்லாது பீடர்ஸன், ஸெல்பர்க், ஸெர், ஐக்லர் ஆகிய மற்றவர்களுடைய பங்களிப்பும் அடக்கம். + +இதில் சிறப்பு என்னவென்றால், இவ்வளவு மேதைகளும், இவ்வளவு உயர்தர கணிதச் சாதனங்களும் தேவைப்பட்ட ஒரு யூகம் இராமானுசன் மனதில் எப்படித் தோன்றியது என்பதுதான்! + + + + + +அயோத்தி தாசர் + +அயோத்தி தாசர் ("C. Iyothee Thass", மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார். +1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர். + +பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது. + +அயோத்திதாசர் 1845 மே 20 இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது. + +தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார். + +தன்னுடைய 25 ஆம் வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவினார் . அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகி ராமன், இராசராம் என்றும். புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி எனப் பெயர் சூட்டினார். + +அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குவாதம், பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாகவும் அது அமைந்தது. + +பண்டிதருடைய காலம் (19 நூற்றாண்டின் பிற்பகுதி ) இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலமாக இருந்தது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தும் இந்து சமயத்துக்குள் திணிக்கப்பட்டது. 'யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர் இல்லையோ' அவர்களெல்லாம் இந்துக்கள் என 1861 முதல் 1891 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'இந்து' அடையாளத்திற்குள் வலிய திணிக்கப்பட்டார்கள். பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் 'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தவர். அவ்வாறு 'இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் ம���க எச்சரிக்கையாக இருந்தார். அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளம் ஒன்றைத் தேடத் துவங்கினார். தமிழகத்தில் பக்தி வடிவங்களில் 'தமிழ்ச் சைவ' மீட்டுருவாக்க முயற்சி நடந்தது. இதுவும் ஒரு வகையில் சாதியத்தை உள்வாங்கியவர்களின் முயற்சியாகவே இருந்தது. 'தமிழ் சைவம்' பிராமண எதிர்ப்புப் பேசினாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் பண்டிதர் தமிழ் சைவத்தோடு இணையவில்லை. + +பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, மேற்படி 10 கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். இந்த அவமானபடுத்துதல் பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. நாம் யார்? இந்துக்களா ? சாதி இழிவுகள் ஏன் நம்மீது திணிக்கப்படுகிறது? என எண்ணி சுயத்தைத்தேடி நகர்ந்தார். வேதம், இந்து, பிராமணீயம்,சடங்குவாதம்..முதலானவற்றை கேள்விக்குட்படுத்தினார். + +1870 களில் அயோத்தி தாசர் நீலமலையின் தோடர் மற்றும் பிற மலைவாழ் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தார். 1875இல் அத்வைதானந்த சபையை நிறுவினார். வெசிலியன் மிஷன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக நடத்திய அருட்திரு டி ஜான்ரத்தினத்துடன் (Rev. John Rathinam) தொடர்பு ஏற்பட்டது. ஜான்ரத்தினம் நடத்திய 'திரவிடர் கழகம்' அதன் சார்பாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார். + +1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார். அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் "திராவிட மாகாசன சபை"யை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார் இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் ப���த்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன. + +அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி அதை இரண்டு பிரிவாக பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு, அது வங்காளின் கங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண காங்கிரசு என விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார். ஆக மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசபிகல் தொடர்பு, காங்கிரசு கட்சி, அனைத்திலுமிருந்து வேறுபட்டும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் சுய கருத்தியலை, சுய அரசியலைத் துவக்கினார். + +ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார். + +இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்: + +1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடுஇணையற்ற மாமனிதர். + +அயோத்தி தாசர் தனது வழிநடப்பவர்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டைச் சந்தித்து பௌத்தத்திற்��ு மாறும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழகப் பறையர்கள் பௌத்த மதத்தினரே என்றும் அவர்களுக்குச் சொந்தமான தமிழகத்தை ஆரியர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அயோத்திதாசர் கருத்துத் தெரிவித்தார். ஆல்காட்டின் உதவியுடன் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரிடம் "தீட்சை" பெற்றார். அங்கிருந்து திரும்பிய அயோத்திதாசர் சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியைத் தோற்றுவித்து, தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார். ’’இந்திய பௌத்த சங்கம்’’ எனவும் அறியப்பட்ட சாக்கிய பௌத்த சொசைட்டி 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. + +சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 சூன், 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது + +இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் அந்த இதழில் விளக்கியிருந்தார்: + +இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடும் நேர்த்தியாகவும் இதழின் சின்னம் இருந்தது. + +முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டது. + + +ஓராண்டுக்குப் பிறகு, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' (26. ஆகத்து 1908 - பக் 2) என்ற விளக்கத்துடன் 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26. ஆகத்து 1908 முதல் வெளிவந்தது. + +தமிழனில் வெளி வந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக மகளிர் பத்தி (Ladies column) தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றது. அடுத்து பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்��ிகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது. + +மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ’யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ’வேஷ பிராமண வேதாந்த விவரம்’, ’ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு’, ’விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார். + +தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தற்வு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீணடாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன. + +திராவிட மகாஜன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார். + +பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது. + +க. அயோத்தி தாசர் நூல்கள் + +(ரெவரென்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து) + + + + + + + +உயர் வர்க்கம் + +ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி, சமூக, ஊடகவியல் முனைகளில் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள்குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றனர். பொதுவான சமூகப் கட்டமைப்பில் ஒர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். +தமிழ் கதையாடலில் உயர் வர்க்கத்தைக் குறிக்க மேட்டுகுடிகள், மேட்டுக்குடி வர்க்கம் என்ற சொற்தொடர் பயன்பாடும் உண்டு. + +அரசர்களால் (சோழர்கள் உட்பட) தலித் மக்கள் ஒதுக்கப்பட்ட தாழ்ந்த நிலப்பரப்புகளிலேயே வாழமுடியும் என்ற சட்டம் இருந்தது. இதனால் மேட்டின் மீது வசிப்போரை, அதவாது உயர் செல்வாக்கு, அல்லது அதிகாரம் உள்ளோரை குறிக்க இப்பதம் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். + + - ம. செந்தமிழன். + + + + + + +தலித் + +இந்திய மற்றும் தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள். + +=பெயர்க் காரணம்= + +"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள மக்களை மராத்திய மொழி சொல்லில் தல���த் என்று குறிப்பிடப்படுவதுண்டு. இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார். சட்ட மாமேதை Dr.B.R.அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டம்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தச் சொல்லை அந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் ஜாதி சான்றிதழ்களிலோ அரசு ஆணைகளிலோ இந்தப் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அட்டவணை ஜாதிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. + +=தமிழகத்தில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்காரணம்= +தமிழகத்தில் பட்டியலின ஜாதிகளை அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதற்கானத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும் அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது திராவிட அரசியலை மையப்படுத்துவதாக ஜாதிய அமைப்புகள், சங்கங்கள் கருதியதால் இந்த வடமொழிப் பெயரை ஒரு சில ஜாதிய அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. +தலித் என்று அழைத்துக்கொள்ளப்படும் பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.2% ஆகும். தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87ஜாதிகளாக உள்ளது. + +"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" + + +தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித்துகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது. + + + + + + + +புதிய தமிழகம் கட்சி + +புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார். + + + + + +டோமாரி மொழி + +டோமாரி மொழி (Domari) ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது ரோமானி, ராஜஸ்தானி, கிழக்குப் பஞ்சாபி ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது மத்திய கிழக்கைச் சேர்ந்த "டொம்" எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம் / இஸ்ரேல், ஆகிய பகுதிகளில் பரந்துள்ளனர். அராபியப் பகுதிகளில் இதற்கெனத் தனி எழுத்து வடிவம் கிடையாது. சமயங்களில் இது அரபி எழுத்துக்களில் எழுதப்படுவது உண்டு. இம் மொழியில் ஏராளமான அரபி, பாரசீகச் சொற்கள் காணப்படுகின்றன. + +அரபி மொழியில் இம்மொழியை "நவாரி" என அழைக்கின்றனர். இச்சொல் ஒரு இழிவு படுத்தும் சொல்லாகக் கருதப்படலாம். + + + + + + +துறை சார் சமூகம் + +துறை சார் சமூகம் ஒரு துறையை அல்லது தொழிலை மையமாக வைத்து பின்னப்படும் ஒரு சமூகமாகும். ஒரு துறையைப் பற்றிய அறிவை பகிர, மேம்படுத்த, முன்னேற்ற, சீர்தரங்களை ஏற்படுத்த, துறை சாரரின் நலன்களைப் பேண, துறையின் முக்கியத்துவை விளக்கி அதின் சமூக நிலையை உயர்த்த இச்சமூகங்கள் பங்காற்றுகின்றன. + +இச்சமூகங்கள் தொழிலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்திய மற்றும் தமிழ்ச் சாதிச் சமூகங்களில் இருந்து வேறுபட்டவை ஆகும். துறை சார் சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை. பொதுவாக யார் அத்தொழிலை மேற்கொண்டாலும் அத்துறைசார் சமூகத்தில் சேரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் துறை சார் சமூகங்களுக்கு மத்தியில் சமூக படி நிலை ஏற்ற தாழ்வுகள், பொருளாதார படிநிலைகளும் உண்டு. + + + + +வவுனியா இந்துக் கல்லூரி + +வவுனியா இந்துக் கல்லூரி இலங்கையின் வவுனியா கோவில்குளத்தில் உள்ளது. இறம்பைக்குளம் தபால் பெட்டி சந்தியில் இருந்து உமாமகேஸ்வரன் வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பள்ளியில் சுமார் 850 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். இங்கு க.பொ.த சாதாரண தரம் ம���்றும் உயர்தரம் (கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு) வரை உள்ளது. இது ஒரு நவோதயா பாடசாலையாகும். + + + + +ஒட்டுப் பால் + +பால் மரத்தை வளைவுக் கோடாக சீவியப் பின் வடியும் பால் காய்ந்து அச்சீவுக் கோட்டிலேயே ஒட்டிக் கொள்ளும். காய்ந்த பாலை ஒரு முனையிலிருந்து பிடித்து இழுத்தால் வெட்டுக் கோட்டிலிருந்து தனித்து கயிறு போல வந்து விடும். இதனை ஒட்டிக் கொண்டிருந்த காரணத்தால் ஒட்டுப் பால் என்றும் கோட்டில் இருந்த காரணத்தால் கோட்டுப் பால் என்றும் நம் மலேசியத் தமிழர் பெயரிட்டழைத்தனர். + + + + +மல்தோவா + +மல்தோவா குடியரசு ("Republica Moldova") கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது. + +மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது. + + + + + +மவுண்ட்பேட்டன் பிரபு + +லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் ("Louis Francis Albert Victor Nicholas George Mountbatten", ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் ("Earl") மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் ("Viceroy") விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் ("Governor-General") இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். + + + + + + +1896 + +1896 (MDCCCXCVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்). + + + + + + + +சான்சிபார் + +சன்சிபார் ("Zanzibar", zænzɪbɑː(ɹ)) என்பது தன்சானியா நாட்டின் ஒரு பகுதியாகும். இது இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் இருந்து 25-50 கிமீ தொலைவில் உள்ள தீவுகளைக் குறிக்கும். இது இரண்டு பெரிய தீவுகளான "உங்குஜா", "பெம்பாத் தீவு" ஆகியவற்றையும் வேறு பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது. உங்குஜா தீவே பெரும்பாலும் சன்சிபார் என்று அழைக்கப்படுகிறது. இத்தீவுகள் முன்னர் "சன்சிபார்" என்ற தனிநாடாக இருந்தது. டிசம்பர் 10, 1963 இல் இது ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தானின் கீழ் முடியாட்சி ஆனது. ஆனாலும் ஜனவரி 12, 1964 இல் மன்னராட்சி கலைக்கப்பட்டு ஏப்ரல் 26, 1964 இல் தங்கனீக்கா நாட்டுடன் இணைக்கப்பட்டு இரண்டும் தன்சானியா என்றழைக்கப்பட்டன. எனினும் இது தன்சானியாவின் மத்திய ஆட்சியின் கீழ் முழுமையான சுதந்திரம் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. சன்சிபாரின் தலைநகரம் சன்சிபார் நகரம் ஆகும். + + + + + +பிராஜ் பாஷா + +பிரிஜ் பாஷா ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பிராஜ் பாஷா, டைஹாத்தி ஸாபான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, ஹிந்தி மொழிக்கு நெருக்கமானதாகும். இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கொள்ளப்படுவதும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் இதுவே இலக்கிய மொழியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பிராஜ் பூமி என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 42,000 மக்களால் பேசப்படுகிறது. மகாபாரதக் கதையின் படி அக்காலத்தில் இது ஒரு நாடாக இருந்தது. + +இன்று பிராஜ் பாஷா, மதுரா, பிருந்தாவனம், ஆக்ரா, பிரோசாபாத், ஹத்ராஸ், ஏட்டா, அலிகர், பரேலி, புலந்த்சாகர், பரத்பூர், தோல்பூர் ஆகிய பகுதிகளில் புழங்கிவருகிறது. மத்திய காலப் பகுதியில் பெரும்பாலான ஹிந்தி இலக்கியம் இப் பகுதியிலேயே உருவானது. தற்காலத்தில், ஹிந்தியின் இன்னொரு கிளைமொழியான கரிபோலி இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. + + + + + + +கரிபோலி + +கரிபோலி ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது கடிபோலி எனவும் அழைக்கப்படுவதுண்டு. இதுவே ஹிந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியாகும். மேற்கு உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளுக்குச் சொந்தமான இம்மொழி, உருது மொழியின் கிளை மொழியும் கூட. கரிபோலியின் தாயகமான மேற்கு உத்தரப் பிரதேசத்தில், 18 ஆம் நூற்றாண்டுக்கு முன், நாட்டுப்புற, பாமரத்தனமான மொழியே வழங்கிவந்தது. எனினும் இதன் மேற்கிலும், கிழக்கிலும் முறையே டெல்லியிலும், லக்னோவிலும் அதிகாரவர்க்க முஸ்லிம் பண்பாடு நிலவியது. இவர்கள் பாரசீக, துருக்கிய மற்றும் அரபி மொழிகளிலிருந்து பெருமளவுக்குக் கடன்பட்ட ஒரு இலக்கியத்தை ஆதரித்து வந்தனர். இந்தப் பண்பாட்டுக் கலப்புக்கு உட்பட்டே ஹிந்தியின் கரிபோலி கிளைமொழி வளர்ச்சியடைந்தது. + +டெல்லியைச் சுற்றியிருந்த பகுதிகள் நீண்ட காலமாகவே வட இந்தியாவின் அதிகார மையமாகத் திகழ்ந்ததால், இயல்பாகவே அப்பகுதிக்குரிய கிளை மொழியான கரிபோலி, நகர்சார் மொழியாகவும், ஹிந்தியின் ஏனைய கிளை மொழிகளிலும் உயர்வானதாகவும் கருதப்படும் நிலை உருவானது. இப்போக்கு 19 ஆம் நூற்றாண்டில் படிப்படியாக உரம் பெற்றுவந்தது. இதற்கு முன் இலக்கியத்துக்குரிய மொழிகளாக இருந்த ஆவாதி, பிராஜ் பாஷா என்பன முக்கியத்துவம் இழந்தன. + +இந்திய விடுதலைக்குப் பின், ஹிந்தியின் கரிபோலி கிளைமொழி, தெற்கு மற்றும் வட இந்தியப் பகுதிகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைய அரசின் செயற்பாட்டுக்குரிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +1950 இல் இந்தியின் கரிபோலி கிளைமொழி மைய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டபின், அரச ஊக்குவிப்பின் கீழ், அதில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் முக்கியமானது ஹிந்தியின் சமஸ்கிருதவயமாக்கம் ஆகும். இதன் கீழ் ஏராளமான சமஸ்கிருத மொழிச் சொற்கள் கரிபோலியில் அறிமுகப்படுத்தப்பட்டன. + + + + +1891 + +1891 (MDCCCXCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + +1845 + +1845 (MDCCCXLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +சயன்டிஃபிக் அமெரிக்கன் + +சயன்டிஃபிக் அமெரிக்கன் ("Scientific American") ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 28, 1845 இல் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கில மாத இதழாகும். அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மிகப்பழைய இதழும் இதுவே. இது முதலில் வாராந்த இதழாக வெளியிடப்பட்டது தற்போது மாதாந்த இதழாக வெளிவருகிறது. அறிவியலின் பல துறைகளிலும் நிகழும் நிகழ்வுகளை மக்களின் பல மட்டங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்ற விதத்தில் கட்டுரைகளை இவ்விதழ் வெளியிட்டு வருகிறது. + +"சயன்டிஃபிக் அமெரிக்கன்" இதழ் அமெரிக்காவில் மட்டும் (டிசம்பர் 2005 இல்) மாதாந்தம் கிட்டத்தட்ட 55,000 பிரதிகளும் அனைத்துலக ரீதியாக 90,000 பிரதிகளும் விற்பனையாகிறது. + + + + + +1907 + +1907 (MCMVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + +கியூபெக் பாலம் + +கியூபெக் பாலம் ("Quebec Bridge") (பிரெஞ்சு: "Pont de Québec") கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது. + +இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும். + +1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர். + +இதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். + +முடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது. + + + + + +சூறாவளி கத்ரீனா + +சூறாவளி கத்ரீனா ("Hurricane Katrina") என்பது ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றி��் மிகவும் மோசமான விளைவுகளைத் தந்த ஒரு சூறாவளியாகும். இதுவே அட்லாண்டிக் மாகடலில் பதிவாகிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஆறாவதாகும். கட்ரீனா ஆகஸ்ட் 23, 2005 இல் உருவாகி, அமெரிக்க வளைகுடாக் கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. மிகவும் மோசமான பாதிப்பு லூசியானாவில் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் ஏற்பட்டது. இச்சூறாவளி மிசிசிப்பியின் முழு கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. + +ஆகஸ்ட் 23, 2005 இல் பஹாமாசில் ஆரம்பமாகிய கட்ரீனா தெற்கு புளோரிடாவைத் தாண்டிய போது இதன் தாக்கம் அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும் சில உயிரிழப்புகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. பின்னர் அது மெக்சிகோ வளைகுடாவைத் தாண்டியபோது அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் 29 இல் லூசியானாவில் நிலைகொண்டபோது அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. + +குறைந்தது 1,836 பேர் மொத்தமாக இச்சூறாவளியின் பாதிப்பால் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் 1928ம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளிக்கு அடுத்தபடியாக இதுவே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியாகும். $81.2 பில்லியன் கணக்கில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. + + + + + +சூறாவளி + +சூறாவளி அல்லது புயல், பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது.. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. + +பெரிய அளவில் உண்டாகும் சூறாவளிகள் பெரும்பாலும் குறைந்த காற்றழுத்த மண்டல பகுதிகளில் தான் உண்டாகின்றன.. மிகப் பெரிய குறைந்த காற்றழுத்த அமைப்புகள் குளிர்ந்த துருவப் பகுதிகளிலும், வெப்ப மண்டலங்களுக்கு மேற்பட்ட பகுதிகளிலும் உள்ள சைநோப்டிக் அளவுகோலில் இருக்கும் இடங்களில் காணப்படுகின்றன. சற்று வெப்பத்துடன் இருக்கும் வெப்ப மண்டல சூறாவளிகள், துருவ பகுதிகளில் உண்டாகும் குறைந்த காற்றழுத்த சூறாவளிகள், மீசோ சூறாவளிகள் ஆகியவை குறைந்த அளவுகோலான மீசோ ஸ்கேல் இடங்களில் உண்டாகின்றன. மிதமான வெப்ப மண்டலத்தில் நடுத்தரமான அளவில் சூறாவளிகள் உருவாகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய் கிரகம், நெப்டியூன் போன்ற இதர கோள்களிலும் சூறாவளிகள் உண்டாகின்றன. + +சூறாவளி உருவாகுவதையும் அது வலுவடைவதையும் சைக்ளோஜெனிசிஸ் விவரிக்கிறது.. பாரோக்ளினிக் மண்டலங்கள் என்று அழைக்கப்படும் பெரிய பரப்பளவைக் கொண்ட மத்திய நில நடுக் கோடுகள் இருக்கும் வெப்ப மண்டலங்களில் உருவாகும் வெப்பமண்டலங்களுக்கு வெளியே உண்டாகும் சூறாவளிகள் அலைகள் போல் உண்டாகின்றன. சூறாவளிகள் சுழற்சி மூடி வலுவடையும் போது, பல மண்டலங்களும் ஒன்று கூடி ஒரு வானிலை முற்றத்தை உண்டாக்குகின்றன. முற்றிலும் குளிர்ந்த அமைப்பு தடுப்புகளாக, சூறாவளிகள் அவற்றின் ஆயுள் காலத்தின் இறுதியில் உருவெடுக்கின்றன. இரண்டிலிருந்து ஆறு நாட்கள் வரை ஆயுள் காலத்தைக் கொண்டிருக்கும் இந்தச் சூறாவளிகளை, துருவ மண்டலங்கள் அல்லது வெப்பமண்டலத்துக்கு வெளியே உள்ள மண்டலத்தில் இருக்கும் விரைகாற்றோடைகள் (jet streams) வழி நடத்திச் செல்லுகின்றன. + +வித விதமான திண்மையை கொண்டு தனித்தனியே இரண்டு விதமான காற்றுத் திணிவை கொண்டுள்ள இந்த காற்று முற்றம் முக்கியமான வானவியல் நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. முற்றத்தால் பிரிக்கப்படும் காற்று திணிவுகள் தட்ப வெப்பத்திலும், ஈரப்பதத்திலும் நிறைய வேறுபாடுகளுடன் இருக்கின்றன. சில சமயங்களில் உண்டாகும் புயல் வீறீட்டு கோடுகள், வரண்ட கோடுகளை பின் தொடர்ந்து, கடுமையான வானிலை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பின் தொடரலாம்; சிறிய அளவில் சூறாவளிகள் உண்டாகலாம்; வலுவான குளிர்ந்த முற்றங்களால் இவை உருவாகின்றன. அவை சுழல் மையத்தின் மேற்கு பகுதியில் தோன்றி, பொதுவாக மேற்கில் இருந்து கிழக்கை நோக்கி நகர்கின்றன. வெப்ப முற்றங்கள் பொதுவாக சூறாவளி மையங்களுக்கு கிழக்கே தோன்றுகின்றன. அப்படி தோன்றுவதற்கு முன்னால் அதிக அளவில் தொடர் மேக படலங்கள் உருவாகுதல், நீராவியின் உறைவு படிவங்கள் விரைவு படுதல், மூடு பனி உண்டாகுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுகின்றன. இவை சூறாவளியின் பாதையில் துருவங்களை நோக்கி சூறாவளிகளுக்கு முன்னரே செல்கின்றன. தடைப்பட்டிருக்கும் முற்றங்கள் பொதுவாக சூறாவளிகளின் ஆயுட்காலத்தின் கடைசிப் பகுதியில் தோன்றுகின்றன. இவை சூறாவளியின் மையப் பகுதிக்கு அருகாமையில் தோன்றி சூறாவளி மையத்தை சுற்றி வளைத்துக் கொள்கின்றன. + +டிராபிகள் சைக்லோஜெநிசிஸ் வெப்ப மண்டலங்களில் உண்டாகும் சூறாவளிகளைப் பற்றி விவரிக்கின்றது. உள்ளிருக்கும் வெப்பத்தாலும், இடியுடன் கூடிய மழையுடன் இருக்கும் வெப்பமண்டல சூறாவளிகள் அடிப்படையில் வெப்பத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சரியான சூழ்நிலைகளில் இந்த சூறாவளிகள் வெப்பமண்டலங்களுக்கு வெளியேவும்; மிதமான வெப்ப மண்டலத்துக்கும், வெப்பமண்டலத்துக்கும் இடையேயும் தாவுகின்றன. நிலத்தின் மேல் வெப்பத்துடன் உருவாகின்ற இந்த மீசோ சூறாவளிகள் சுழற்காற்று உண்டாக காரணமாக இருக்கின்றன. மீசோ சூறாவளிகளால் நீர் தாரைகளும் உண்டாகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் நிலையான சுற்றுப்புற சூழல்கள் இல்லாததாலும் குறைவான செங்குத்தான காற்றுப்பெயர்ச்சியினாலும் தான் தோன்றுகின்றன. + +எல்லா சூறாவளிகளுக்கும் நிறைய பொது உருவமைப்புப் பண்புகள் இருக்கின்றன. இவை குறைவான காற்றழுத்த பரப்புகளாக உள்ளதால், ஒரு பகுதியில் இருக்கும் காற்று மண்டலத்தில் மிக குறைவான காற்றழுத்தம் இருக்கும் இடத்தில் இவை மையம் கொள்கின்றன. இவை முற்றிய சூறாவளிகளில் கண் என்று அழைக்கப்படுகின்றன. மையத்தின் அருகே, காற்றழுத்த சாய்வளவு ஆற்றல் (சூறாவளியின் வெளியே இருக்கும் காற்றழுத்தத்தை விட அதன் மையத்தில் இருக்கும் காற்றழுத்தத்திலிருந்து) மற்றும் கொரியோலிஸ் ஆற்றல் ஆகிய இரண்டும் சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், சூறாவளி காற்றழுத்தத்தின் வேறுபாட்டினால் தன் மேலேயே நிலை குலைந்து விழுந்துவிடும். கொரியோலிஸ் விளைவாக வட துருவத்தில், பெரிய சூறாவளிகளின் காற்றோட்டம் இடஞ்சுழியாகவும், தென் துருவத்தில் வலஞ்சுழி ஆகவும் உள்ளது. (சூறாவளியல்லாமல் மற்றவகை வளிகள், வட துருவத்தில் வலஞ்சுழி ஆகவும் தென் துருவத்தில் இடஞ்சுழி ஆகவும் வீசுகின்றன .) + +காற்று மண்டலத்தின் ஒரு பகுதியில் உருவாகும் அல்லது வலுவடையும் காற்றுச் சுழற்சியை சைக்லோஜெநிசிஸ் என்று கூறலாம். (குறைந்த காற்றழுத்த மண்டலம்). சைக்லோஜெநிசிஸ் என்பது ஒரு பொதுச் சொல் போன்றது. இது எந்த முறையில் ஒரு சூறாவளி உண்டானாலும் அதனை குறிக்க உதவுகிறது. இது எந்த அளவிலும் ஏற்படலாம். (ஒரு மைக்ரோ ஸ்கேலில் இருந்து சைநோப்டிக் ஸ்கேல் அளவு வரை) ஒரு வெப்ப மண்டலத்தில் அதிக வெப��பத்துடன் உண்டாகும் சூறாவளி தனது ஆயுள் காலத்தின் இறுதியில் குளிர்ந்த சூறாவளியாக உறைவதற்கு முன்னர், வானிலை முற்றத்துடன் அலையாக உருவெடுக்கின்றது. மறைந்திருக்கும் வெப்பத்தினாலும், இடியுடன் கூடிய மழை போன்ற காரணிகளாலும் உண்டாகும் வெப்பமண்டல சூறாவளிகள் சூடாக இருக்கின்றன. நிலத்தின் மேல் வெப்பத்துடன் உண்டாகும் மீசோ சூறாவளிகள் சுழல் காற்றாகவும் உருவெடுக்கின்றன. இந்த மீசோ சூறாவளிகளால் நீர் தாரைகள் உண்டாகின்றன. ஆனால் பெரும்பாலும் இந்த நீர் தாரைகள் நிலையில்லாத சுற்றுப்புறச் சூழலினாலும், செங்குத்தான காற்று பெயர்ச்சி குறைவாக இருப்பதினாலும் உண்டாகின்றன. சைக்லோஜெநிசிஸ் என்பது சைக்லோசிச்க்கு எதிர்மறையானது. இதனிடம் அதிக காற்றழுத்த மண்டலங்களை கையாளும் அளவுக்கு (அதிக காற்றழுத்த அமைப்பு) ஆற்றல் உண்டு. இதனால் சூறாவளி நின்றும் போகலாம். இதனை ஆண்டி சைக்லோஜெநிசிஸ் என்று அழைக்கலாம். + +மேற்பரப்பு குறைவு வெவ்வேறு காரணங்களால் உண்டாகலாம். வடக்கு-தெற்கு மலை தடைக்கு கிழக்கே அடர்த்தியான குறை அதிக காற்றழுத்த அமைப்பு மேடாகும் போது, இடவிளக்க விவரம் மேற்பரப்பு குறைவை காட்டுகின்றது. துவக்க காலங்களில் வெப்பத்துடன் காணப்படும் மேற்பரப்பு குறைவுகளை மீசோஸ்கேல் கன்வெகடிவ் அமைப்புகள் உருவாக்குகின்றன. முன்னிலையில் இருக்கும் இந்த தடங்கல், அலைகள் போன்ற உருவத்தை கொண்டு வளரலாம்; அப்போது குறைபாடு உச்ச இடத்தில் இருக்க நேரிடுகிறது. இந்த தாழ்வை சுற்றி சூறாவளியின் ஓட்டம் கண்டிப்பாக இருக்கிறது. ஈகுவேடரை நோக்கி இந்த தாழ்வுக்கு மேற்கே துருவ காற்று சுழற்சியோட்டத்தால், குளிர் முற்றத்தின் வழியாக தள்ளப்படுகின்றது. இதே சமயத்தில் வெப்ப காற்றுடன் இருப்பவை வெப்ப முற்றத்தின் வழியே தள்ளப்படுகிறது. சூறாவளிக்கு வெளியே இருக்கும் அதிக திண்மை உடைய காற்று திணிவு அரிக்கப்படும்போது வெப்ப முற்றத்தை விடக் குளிர் முற்றம் அதிக வேகத்தில் நகர்ந்து வெப்ப மண்டலத்தை பிடிக்க முயற்சி செய்கிறது. இந்த உயர்ந்த திண்மையை கொண்டுள்ள காற்றுத்திணிவு, சூறாவளியின் பின் சென்று, ஒரு குறுகிய வெப்ப பரப்பை உண்டு பண்ணுகிறது. இந்த கட்டத்தில், வெப்ப காற்று திணிவு, மேலே இருக்கும் ஒரு வெப்ப பாத்திரம் போல் இருக்கும் குழியை நோக்கி அனுப்பப்படு��ிறது. அப்போது அங்கு ஒரு தடையுடன் கூடிய முற்றம் தோன்றுகிறது. + +காற்று மண்டலத்தில் வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாவதையும் வலுவடைவதையும் வெப்ப மண்டல சைக்லோஜெநிசிஸ் என்ற பெயரைக் கொண்டு அழைக்கலாம். வெப்ப மண்டல சைக்லோஜெநிசிஸ் மத்திய நில நடுக்கோட்டு சைக்லோஜெநிசிஸ் உருவாவதை விட வித்தியாசமான முறையில் உருவாகின்றது. ஒரு சாதகமான காற்றுமண்டல சுற்றுப்புற சூழலில் தெளிவான சலனத்தால் வெப்பத்துடன் உருவாகும் சூறாவளியை வெப்ப மண்டல சைக்லோஜெநிசிஸ் என்று கூறலாம். வெப்ப மண்டல சைக்லோஜெநிசிஸ் என்று அழைக்கப்பட அது முக்கியமான ஆறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது: போதுமான அளவு கடல் மேற்பரப்பில் வெப்பம், காற்றுமண்டலத்தில் நிலை இல்லாமை, அடிவளி மண்டலத்தின் கீழ் மற்றும் மத்திய பகுதிகளில் அதிக அளவு ஈரப்பதம், குறைந்த காற்றழுத்த மையத்தை உருவாக்கும் அளவுக்கு போதிய அளவு கொரியோலிஸ் ஆற்றல், முன்னதில் உருவாக்கி இருக்கும் குறையழுத்த மையம் அல்லது தடைகள் மற்றும் குறைந்த செங்குத்தலான வின்ட் ஷியர்கள். உலகெங்கும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 86 வெப்ப மண்டல சூறாவளிகள் சுழல் காற்று உக்கிரத்துடன் உருவாகின்றன. அவற்றில் 47 புயல் காற்று/ புயல் சூறாவளி வலு அடைகின்றன. 20 மிக தீவிரமான வெப்பமண்டல சூறாவளிகளாக உருவெடுக்கின்றன. (சாப்பிர் - சிம்ப்சன் புயல் காற்று அளவுகோலில் மூன்றாவது வகையில் உள்ளது. (Saffir-Simpson Hurricane Scale)). + +காற்றின் வேகம் அதிகரிக்கும் போது அல்லது உயரத்தின் திசை ("காற்று பெயர்ச்சி") மாறும் போது மீசோ சூறாவளிகள் உருவாகின்றன. இது காற்று மண்டலத்தின் கீழ்ப்பகுதியை கண்ணுக்கு தெரியாத குழாய் போன்ற உருண்டை வடிவில் சுழல வைக்கிறது. இடியுடன் கூடிய புயலின் சலன படிவம் இந்த சுழல் காற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. இந்த உருண்டையான மாதிரியை மேலெழச் செய்கிறது. (நிலத்திற்கு இணையொத்து இருப்பதிலிருந்து செங்குத்தாக மாறுகிறது). இதனால் முழு படிவமும் செங்குத்தலான பத்தியாக சுழலவைக்கிறது. மீசோ சூறாவளிகள் பொதுவாக குறைவான அளவில் தோன்றக்கூடியவை: அவை சைநோப்டிக் அளவுகோலுக்கும் (நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்), மைக்ரோ அளவுகோலுக்கும் (நூற்று கணக்கான மீட்டருக்கும்) மத்தியில் இருக்கிறது. இந்த பண்புகளை ரேடார் படங்களின் உதவியோடு பார்க்க முடிகிறது. +சூறாவளியின் கண் பொதுவாக அமைதியாகவும் ஒரு நிலையாகவும் இருக்கிறது. + +சூறாவளி அல்லது புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் "சூறாவளி" ("Hurricane") என்றும், ஐக்கிய அமெரிக்காவில் "சுழன்றடிக்கும் சூறாவளி" (Tornado) என்றும், சீனக் கடற்கரைப் பகுதிகளில் "சூறாவளிப் புயல்" ("Typoon") என்றும், மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் "வில்லி வில்லி" ("Willy Willy") என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் (Cyclone) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கிது. + +முக்கியமான ஆறுவகையான சூறாவளிகள் உள்ளன: துருவ மண்டல சூறாவளிகள் (போலார் சைக்ளோன்), துருவ பகுதிகளை நோக்கிய சூறாவளிகள் (போலார் லோ), வெப்பமல் மண்டல சூறாவளிகள் (எக்ஸ்ட்ரா-ட்ராபிகல் சைக்ளோன்), சப்ட்ராபிகல் சைக்ளோன்{/0, {0}ட்ராபிகல் சைக்ளோன் மற்றும் மீசோ சைக்ளோன் + +போலார் வோர்டேக்ஸ் என்றும் அழைக்கப்படும் போலார் , சப்-போலார் , அல்லது ஆர்க்டிக் சூறாவளி , ஒரு குறைவான காற்றழுத்த பகுதியாகும், இது குளிர் காலத்தில் வலுவடைந்து கோடைக்காலத்தில் வலு இழக்கிறது. இந்த போலார் சூறாவளி, ஒரு குறைந்த காற்றழுத்த வானிலை அமைப்பாகும். இலிருந்து வரை சுழல்கின்ற காற்று, வடக்கு அரை கோளத்தில் இடஞ்சுழி திசையிலும் தெற்கு அரை கோளத்தில் வலஞ்சுழி திசையிலும் சுற்றுகின்றது. வடக்கு அரை கோளத்தில் சூறாவளிகளுக்கு சராசரியாக இரண்டு மையங்கள் இருக்கின்றன. ஒரு மையம் பாபின் தீவின் அருகிலும் மற்றொன்று வட கிழக்கு சைபீரியா அருகிலும் உள்ளன. தென் அரைக் கோளத்தில், 160 மேற்கு காலக்கோட்டிற்கு அருகே உள்ள ராஸ் பனி தட்டின் விளிம்பில் காணப்படுகிறது. போலார் வோர்டேக்ஸ் வலுவானதாக இருக்கும் போது வெஸ்டர்லீசின் ஓட்டம் பூமியின் மேற்பரப்பை நோக்கி இருக்கிறது. போலார் சூறாவளி வலுவிழந்து இருக்கும் போது, கடும் குளிர் பிறக்கிறது. + +போலார் லோ என்பது சிறிய அளவில் தோன்றி, சிறிது காலமே உயிர் வாழ்கின்ற ஒரு குறைந்த காற்றழுத்த அமைப்பாகும் (காற்றழுத்த இழிவு). இது துருவ பகுதிகளுக்கு அருகே உள்ள கடல் பகுதிகளில், அதுவும் வடக்கு மற்றும் தெற்கு அரை கோளங்களில் துருவ முற்றத்தில் காணப்படுகின்றன. இந்த அமைப்பு, கிடையான நீள அளவுகோலில், ஐ விட குறைவாக இருக்கி���து. மேலும் இது இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடித்து இருப்பதில்லை. இவை மீசோ அளவுகோல் வானிலை அமைப்புகளின் ஒரு பகுதியாய் இருக்கின்றன. மரபொழுங்கை தழுவி வெளியிடப்படுகின்ற அறிக்கைகளைக் கொண்டு போலார் லோக்களை கண்டுபிடிக்க முடியாது. இவை மேல் நிலநடுக்கோடுகளில் நடக்கும், கப்பல்துறை, வாயு, எண்ணெய் தொழில் முறைகளுக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன. போலார் லோக்களை போலார் மீசோஸ்கேல் வோர்டேக்ஸ், ஆர்க்டிக் புயல், ஆர்க்டிக் லோ, குளிர்ந்த காற்றழுத்த இழிவு என்று பல பெயர்களைக் கொண்டு இதனை அழைக்கலாம். இன்று இந்த சொற்றொடர் குறைந்தது 17 m/s. வேகத்தையாவது கொண்டுள்ள மேற்பரப்பின் அருகில் உள்ள காற்றில் ஏற்படுகின்ற கடுமையான அமைப்புகளுக்கு மட்டும் பொருந்தும். + +வெப்ப மண்டல மற்றும் குளிர் துருவ பண்பு நலன்கள் இல்லாமல் சைநோப்டிக் ஸ்கேல் மதிப்பிடும் அளவில் இருக்கும் குறைந்த காற்றழுத்த வானிலை அமைப்பை எக்ஸ்ட்ரா ட்ராபிகல் சூறாவளி என்று அழைக்கிறோம். இவை தட்ப வெப்பத்தில் உள்ள கிடையான சாய்வளவுடனும் முற்றங்களுடனும், டியூ பாயிண்ட்ஸ் உடனும் தொடர்பு கொண்டிருக்கின்றன. அந்த இடங்களை பாரோக்ளினிக் சோன்கள் என்று நாம் அழைக்கலாம். + +கோளத்தின் மத்திய நில நடுக்கோட்டுப் பகுதிகளில் இந்த வகை சூறாவளிகள் உண்டாகின்றன என்று, எக்ஸ்ட்ரா ட்ராபிகல் (வெப்ப மண்டலத்துக்கு வெளியே) என்ற பெயரே விளக்குகிறது. இந்த அமைப்புகள் மத்திய- நில நடுக்கோட்டு சூறாவளிகள் என்று அவை உருவாவதன் காரணத்திற்காக அழைக்கப்படலாம், அல்லது "வெப்பமண்டலத்தைக் கடந்த சூறாவளிகள்" என்றும் அழைக்கப்படலாம். இங்கு தான் கூடுதல் வெப்ப மண்டல மாற்றங்கள் நிகழ்கின்றன. வானிலை ஆய்வாளர்களாலும் பொதுமக்களாலும் இவை காற்றழுத்த இழிவு என்றும் குறைபாடு என்றும் அழைக்கப்படுகின்றன. சூறாவளிகள் அல்லாதவற்றுடன் எல்லா நாட்களிலும் காணப்படுகின்ற நிகழ்வுகள் சேர்ந்து, உலகெங்கும் இருக்கின்ற வானிலையை ஆட்டிவைக்கின்றன. + +வெஸ்டர்லீசுக்குள் இருக்கும் தட்ப வெப்பம் மற்றும் டியூ பாயின்ட் சாய்வளவு பகுதிகள் ஓரம் உருவாவதினால் எக்ஸ்ட்ரா ட்ராபிகல் சூறாவளிகள் பெரோக்ளினிக் என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் இவை பேரோ ட்ராபிக் ஆக அவற்றின் வாழ்நாளின் முடிவில் மாற்றமடைகின்றன. அப்பொழுது இந்த தட்ப வெப்ப மாற்றம் சூறாவளியை சுற்றிச் சீராக விநியோகப்பட்டிருக்கும் போது, சூறாவளியின் ஆரையும் சீராக இருக்கிறது. சூறாவளி வெப்பமான நீரின் மீது நீடித்து இருந்து, அதன் மையம் சூடாகும் போது மற்றும் அங்கு மத்திய சலனம் அதிகம் ஆகும் போது, எக்ஸ்ட்ரா ட்ராபிகல் சூறாவளியாக இருப்பது சப் ட்ராபிகல் சூறாவளியாக மாற நேரிடுகிறது. சமயங்களில் அதுவே வெப்ப மண்டல சூறாவளியாகவும் மாற நேரிடுகிறது. + +மித வெப்ப மண்டல சூறாவளியானது ட்ராபிகல் சூறாவளி மற்றும் கூடுதல் வெப்ப மண்டல சூறாவளியின் பண்பு நலன்களைக் கொண்டுள்ள ஒரு வானிலை அமைப்பாகும். இவற்றால் நிலநடுக்கோட்டுக்கும் 50 வது இணை-க்கும் நடுவே உருவாக முடிகிறது. 1950 ஆம் ஆண்டுகளின் ஆரம்பக்காலங்களில் வானவியல் ஆய்வாளர்கள் இவை வெப்ப மண்டல சூராவளிகளா அல்லது மித வெப்ப மண்டல சூறாவளிகளா என்று பிரிக்க முடியாமல் குழம்பி இருந்த நிலையில் இவற்றை அவர்கள் பகுதி வெப்ப மண்டலம் ட்ராபிகல் மற்றும் அரைகுறையான வெப்பமண்டல சூறாவளிகள் என்று அழைத்து வகைப்படுத்திக்கொண்டனர். 1972 ஆம் ஆண்டுக்குள், தேசிய சூறாவளி மையம் இந்த சூறாவளியை தெளிவாக அதிகாரபூர்வமாக வகைப்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு, அட்லாண்டிக் பேசினில் உள்ள வெப்ப மண்டல சூறாவளி அட்டவணையில் இல்லாத பெயர்களை மித வெப்ப மண்டல சூறாவளிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். இவை வெப்ப மண்டல சூறாவளிகள் மாதிரி அல்லாமல், அதிக அளவு காலத்தில் நிறைய படிவங்களை உடைய காற்றை கொண்டிருக்கின்றன. இந்த சூறாவளி குறைவான அல்லது வலு இல்லாத தட்ப வெப்ப நிலை சாய்வளவு இருக்கின்ற இடங்களில் தோன்றுகிறது. + +இவை வெப்ப மண்டலங்களில் காணப்படுவதை விட குளிர்ந்த தட்ப வெப்பத்துடன் இருக்கும் கூடுதல் வெப்ப மண்டல சூறாவளிகளில் இருந்து தோன்றுவதனால், இவற்றுக்குத் தேவையான கடல் மேற்பரப்பு தட்ப வெப்பம் வெப்ப மண்டல சூறாவளிகளை விட மூன்று டிகிரீ செல்ஷியஸ் குறைவாகவோ, அல்லது ஐந்து டிகிரீ பாரென்ஹீட்/0} குறைவாகவோ, 23 டிகிரி செல்ஷியஸ் அளவு பதிவாகிறது. இதற்கு மித வெப்ப மண்டல சூறாவளிகள் பொதுவாகவே புயல் தோன்றும் மரபு எல்லை கோட்டுக்களுக்கு வெளியே உருவாகின்றன என்று பொருள். மித வெப்ப மண்டல சூறாவளிகள் மிக குறைவான புயல் ஆற்றல் காற்றுக்களைக் கொண்டிருந்தாலும், சில சமயங்களில் அவற்றி���் மையம் வெப்பம் அடையும் போது அவை வெப்ப மண்டல சூறாவளியாக மாறுகின்றன. + +ட்ராபிகல் சூறாவளி என்பது ஒரு புயல் அமைப்பாகும். இதில் ஏராளமான இடியுடன் கூடிய புயல்களும் ,குறைந்த காற்றழுத்த மையங்களும் உள்ளன. இதன் மூலமாக பலமான காற்றுகளும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் மழையும் உண்டாகின்றன. ஈரப்பதத்துடன் இருக்கும் காற்று வெளிப்படும் போது, வெப்ப மண்டல சூறாவளி வெப்பத்தை உள்ளிழுக்கிறது. இதனால் ஈரப்பதத்துடன் இருக்கும் காற்றில் இருக்கின்ற நீராவி குளுமை அடைகிறது. நார்தீச்டர்ஸ், யூரோபியன் விண்ட்ச்டார்ம்ஸ், போலார் லோ போன்ற மற்ற சூறாவளி அமைப்புகள் போல் அல்லாது ட்ராபிகல் சூறாவளி வேறு விதமாக உருவாகின்றது. இதனாலேயே அவை வெப்பக் கருவுடைய சூறாவளி அமைப்பு என்று அழைக்கப்படுகின்றது. + +ட்ராபிகல் என்னும் சொல் இந்த அமைப்புகள் தோன்றும் பூகோள இடத்தை குறிப்பதுடன் (இவை ட்ராபிகல் மண்டலம் என்று கூறப்படுகின்ற இடங்களில் தோன்றுகின்றன), இவை தோன்றும் கடல் வெப்ப காற்று திணிவுகளையும் குறிப்பிடுகின்றது. சூறாவளி என்னும் சொல் இப்படிப்பட்ட அறிகுறிகளை காட்டும் புயல்களை, அதாவது வடக்கு அரைகோளத்தில் இடஞ்சுழி திசை போகும் காற்றையும் தெற்கு அரைகோளத்தில் வலஞ்சுழி திசை அடிக்கும் காற்றையும் குறிப்பிடுகின்றது. தோன்றும் இடத்தையும், அடையும் அளவையும் பொருத்து ட்ராபிகல் சூறாவளிகள், சுழல் காற்று, புயல் காற்று, வெப்ப மண்டல புயல், புயல் சீற்றம், வெப்ப மண்டல காற்றழுத்த இழிவு அல்லது சாதாரணமாக புயல் என்று அழைக்கப்படுகின்றது. "பொதுவாக" சொல்லப்போனால், அட்லேண்டிக் பேஸினிலும், பெசிபிக் பகுதியிலுள்ள இந்த வெப்ப மண்டல் சூறாவளியை ஹரிகேன் என்று அழைக்கின்றனர். (இது மத்திய அமெரிக்க காற்று கடவுளான ஹரகன் பெயரில் உள்ளது) + +இந்த வெப்ப மண்டல சூறாவளிகளால் மிக பலத்த காற்றுடன் பயங்கரமான மழையையும் உருவாக்க முடியும். இவற்றுடன் இந்த சூறாவளிகள் உயரமான அலைகளையும், அழிவு உண்டாக்கக்கூடிய புயல் அலைஎழுச்சிகளையும் உருவாக்க முடிகிறது. இவை பெரிய பரப்பைகொண்ட வெப்ப நீர் வளங்கள் மீது தோன்றுகின்றன. நிலம் மீது இவை நகரும் போது தங்கள் வலுவை இழக்கின்றன. இதனால் தான் கடலோர பகுதிகள் வெப்ப மண்டல சூறாவளிகளால் பெரும் சேதம் அடையும் போது, உள்ளடங்கிய நிலப்பரப்புகள் எந்த வித பயமும் இன்றி பலத்த காற்றுகளிடமிருந்து பத்திரமாக இருக்கின்றன. அனால் இந்த பலத்த மழையினால் உள்ளே இருக்கும் நிலங்களும் கூட வெள்ளப்பெருக்கெடுத்து ஓடலாம். புயலினால் உருவாகும் அலை எழுச்சிகளால் கடலோரப் பகுதிகள் கூட சமயங்களில் வெள்ளப்பெருக்கால் மூழ்கலாம். மக்கள் தொகை மீது பேரழிவுகளை இந்த வெப்ப மண்டல சூறாவளிகள் கொண்டு வந்தாலும், இவை வறட்சி நிலவரங்களை போக்க பெரிதும் உதவுகின்றன. இவை வெப்ப மண்டலத்தில் இருக்கும் சூட்டையும், ஆற்றலையும் மிதமான வெப்ப நில நடுக்கோட்டு மண்டலத்துக்கு எடுத்துச் செல்கின்றன. இந்த காரணத்தால் வெப்ப மண்டல சூறாவளிகள் உலக காற்றுமண்டலத்தில் ஏற்படும் சுழற்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது என்று கூறலாம். இதன் விளைவாக வெப்ப மண்டல சூறாவளிகள் புவியின் அடிவளி மண்டலத்தில் ஒரு சமநிலையை கொண்டுவருகின்றன. + +காற்று மண்டலத்தில் ஒரு லேசான குழப்பம் ஏற்படும்போது அங்கு வெப்ப மண்டல சூறாவளிகள் ஏற்பட கூடுகின்றன. இதர வகை சூறாவளிகள் வெப்ப மண்டல சூறாவளிகளின் பண்பு நலன்களை பெறும்போது தோன்றுகின்றன. வழிநடத்தி செல்லும் காற்றுகளால், அடிவளி மண்டலத்தில் வெப்ப மண்டல சூறாவளிகள் நகர்த்தப்படுகின்றன; இந்த நிலை சாதகமாக இருந்தால் வெப்ப மண்டல சலனம் அதிகரித்து அங்கு ஒரு கண் உருவாகின்றது. ஆனால், இந்த அமைப்பை சுற்றியுள்ள நிலைமை வலுவிழக்க நேரும் போது, வெப்ப மண்டல சூறாவளிகள் குறைந்து, காணாமல் போக நேரிடுகின்றன. தட்ப வெப்பத்தில் இருக்கும் காற்றுத் திணிவுகளில், ஆற்றல் மூலங்கள் குளுமையாகும் போது மாற்றம் ஏற்பட்டால், வெப்ப மண்டல சூறாவளிகள், மேல் நோக்கிய நில நடுக்கோட்டு மண்டலங்களுக்குச் செல்கின்றன. அவற்றை அப்போது நாம் கூடுதலான வெப்ப மண்டல சூறாவளிகள் என்று அழைக்கிறோம்; விவரமாக கணிக்கும் போது ஒரு வெப்ப மண்டல சூறாவளி எக்ஸ்ட்ரா ட்ராபிகல் சூறாவளியாக மாறிக்கொண்டு இருக்கும் போது, அது மித வெப்ப மண்டல சூறாவளியாக மாற வாய்ப்பே கிடையாது. + +மீசோ சைக்ளோன் என்பது சுழல் காற்றாகும், இது ஒரு கன்வெகடிவ் புயலுக்குள் ஏறத்தாழ கிலோமீட்டரிலிருந்து கீலோமீட்டர் வரை வட்ட குறுக்களவை கொண்டிருக்கும். (வானவியலின் மீசோ ஸ்கேல்) +ஒரு செங்குத்தான சுழலச்சை சுற்றி சுழன்று காற்று உயரும், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட அரைகோளத்தில் குறைந்த காற்றழுத்த அமைப்புகள் இருக்கும் திசையில் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் நடக்கும் இந்த சூழல் தீவிரமான இடியுடன் கூடிய புயலுடன் உருவாகின்றது. இந்த சூறாவளிகளால் பலமான மேற்பரப்பு காற்றுகளும் தீவிரமான ஆலங்கட்டி மழைகளும் உருவாகலாம். மீசோ சூறாவளிகள் சூப்பர் செல்களில் இருக்கும் படிவங்கள் இருக்கும் இடத்தில் சூறைக்காற்று போலவே உண்டாகின்றன. அமெரிக்கா முழுதிலும் உருவாகின்ற 1700 மீசோ சூறாவளிகளில், பாதிமட்டும் தான் சூறைக்காற்றுகளாக உருவாகின்றன. + +சூறாவளிகள் இந்த புவிக்கு மட்டுமே நிகழ்ந்தேறுவன அல்ல. நெப்ட்யூனில், ஒரு சிறிய கரும்புள்ளி இருக்கிறது. அதைப்போல் ஜோவியன் கோள்களிலும் புயல்கள் மிக சாதாரணமானவையாகும். இது மந்திரவாதியின் கண் என்று அழைக்கப்படுகிறது, இது பெரிய கரும்புள்ளியில் மூன்றில் ஒரு பங்கு அளவை கொண்டுள்ளது. இது கண் போன்று இருப்பதால் இதற்கு மந்திரவாதியின் கண் என்ற பெயர் வந்தது. இந்த மந்திரவாதியின் கண்ணில் ஒரு வெள்ளை மேகமும் இருக்கின்றது. செவ்வாய் கிரகத்திலும் பல புயல்கள் உருவாகியுள்ளன. கிரேட் ரெட் ஸ்பாட் போன்ற ஜோவிய புயல்கள் பேய்க்காற்றாகவும், புயல் சுழற்சியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இது ஒரு தவறான கணிப்பு. இந்த கிரேட் ரெட் ஸ்பாட் ஆண்டி சைக்லோனின் எதிர்மறையாகும். + + + + + +சோழர் கலை + +கி.பி 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களில் சிம்மவிஷ்ணு வம்சம் தோன்றியது முதல், தமிழ்நாட்டில் கலையில் வரலாறு அறுதியிட்டுக் கூறும் முறையில் தொடங்குகிறது. மண்டகப் பட்டில்(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம்) முதல் தடவையாக ஒரு குகைக் கோயிலைக் குடைந்து எடுத்தப் பிறகு, மாமல்லன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கட்டுக்கடங்கவில்லை. அந்தச் சாதனையை அவன் உடனே கல்வெட்டில் பொறித்தான். செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவை உபயோகிக்காமல், பிரமன், சிவன், விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எடுத்த பெருமையை, அரிய சாதனையை அவன் அக்கல்வெட்டில் பறை சாற்றுகிறான். + +அவன் காலத்துக்கு முன் கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டன என்றும், மரங்களை இணைக்க உலோக ஆணிகள் அல்லது வார்ப்பட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்றும் செங்கல்-சுண்ணாம்பு ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று உறுதியாகத் தெரிகிறது. அவற்றில் மரமும் உலோகமும் கூட பயன்பட்டிருக்கலாம். இத்தகைய பழைய கட்டடங்கள் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை; அவையாவும் அழிந்துவிட்டன: அவற்றின் அமைப்புகள், சாயல்கள், இலச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்லவர்களின் கட்டடங்கள், தூண்கள், நகரங்கள், அலங்கார வரைபடங்கள் முதலியயாவும் ஏற்பட்டிருக்க வேண்டும். + +அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று அதிகப்படியாயும் கற்பனையோடும் புனைப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களின் பேராதரவில் கல் கட்டட நிர்மாணக் கலையும் கல் சிற்ப வேலைப்பாடும் மிக உயர்ந்த நிலைய அடைந்தன. கல்லெல்லாம் கலை வண்ணம் காட்டும் மாமல்லபுரத்தில் எழிலுடன் திகழும் கடற்கரைக் கோயில் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோயில்கள் ஆகிய மூன்றையும் பல்லவர் கலைத் திறனுக்குச் சிகரங்கள் என்று சொல்லலாம். + +பிறகு, பல்லவர் செல்வாக்குக் குறைந்து அவர்களுடைய இறுதி நாட்களில், பொருளாதாரக் கட்டுப்பாடு ஏற்பட்டு சின்னஞ்சிறு கட்டடங்கள் உருவாயின. தென்னிந்திய வெண்கலப் படிமம் ஒன்றுகூட, 'உறுதியாக இது பல்லவர் காலத்தியதே' என்று அறுதியிட்டுச் சொல்லத் தக்கவையாக இல்லை. ஆனால், சோழர் ஆட்சியின் தொடக்கத்திலேயே உலோக வார்ப்புக்கலை உயர்ந்த நிலை அடைந்திருந்தது என்பதால், இந்தக் கலையின் வளர்ச்சி பல்லவர் காலத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. + +பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. + +அங்கே நகர அமைப்புக் கலையின் இடைவிடாத தொடர்ச்சியும், முக்கியமான இடங்களில் அன்று முதல் இன்று வரை தெருக்களின் பெயர்கள் நின்று நிலவுவதையும் காணலாம். மலையிலிருந்து அப்படியே கோயில்களையும் மண்டபங்களையும் குடைந்து எடுக்கிற அரிய கலை, பிற்காலப் பல்லவ ஆட்சியில் கைவிடப் பட்டது. கல்கோயில்களைக் கட்டுவது பெரிது வழக்கமாகப் பரவியது. இந்தப் பழக்கத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்பினார்கள் என்பது சோழர்களுக்குரிய தனிப்பெருமை. ஆரம்பகால சோழர்கள் கட்டிய கட்டடங்களுக்கும், பல்லவ பேரரசு சரிந்து கொண்டிருந்த சமயங்களில், பிற்காலப் பல்லவர்கள் கட்டிய கோயில்களுக்கும் அவ்வளவாக வேற்றுமை கண்டுகொள்ள முடியாது. + +பிற்கால நிலை இதனின்றும் முற்றுலும் வேறுபட்டது. சோழ ஆட்சியின் பரப்பும் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரியவும் பெருகவும் ஆயின. இதற்குத்தக்க அவர்கள் கட்டிய கோயில்களும் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புக்களுடன் அமைந்தன. தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள். + +சோழர்களுடைய கட்டடத் திறமைக்கும் கலை ஆர்வத்திற்கும் முடிசூட்டியது போல கும்பகோனத்திற்கு அருகே தாராசுரத்திலும் திருபுவனத்திலும் இரு பெரிய கோயில்கள் உள்ளன. சிற்பம், ஓவியம் வெண்கலக் படிகக்கலை ஆகிய துறைகளும், கோயில் கட்டடக் கலையோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின. + +தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பற்றி அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்வதற்கு வித்திட்டவர் ழூவே தூப்ராய்(G. Jouveau-Dubreuil)என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர். அவர் கூறியிருப்பதாவது: "சிற்பக்கலையில் பல்லவர்கள் மேம்பட்ட நிலையை அடைந்தனர்ர். ஏனைய துறைகளை விட கட்டடக்கலையிலேயே சோழர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எளிமையும் பெரிமையும் கலந்த ஓர் அமைப்பு முறையை அவர்கள் தங்களுக்கென்று வகுத்த���க் கொண்டார்கள்." சோழர் கட்டடக்கலை வல்லவர்களை விட, சோழ சிற்பக்கலைஞர் தங்கள் ஆற்றலில் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் பல்லவச் சிற்பக் கலைஞர்கள் கல்லில் காட்டிய ஆற்றலை இவர்களும் காட்டியிருக்கிறார்கள். + +வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில் வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண் ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும் அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். + +சோழர் ஆட்சி ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம். + +தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத + +கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. + +ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. + +'செப்புப் படிமங்கள்' என்னும் சொல் எந்தெந்த உலோகங்கள், எந்தெந்த அளவில் சேர்த்து வார்க்கப்பட்டிருப்பினும், பொதுவாக உலோகத் திருவுருவங்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுவதாகும். சோழர் காலத்து உலோகத் த்ருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன. + +இந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்காமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன. + +முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதாலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது. இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகு���ியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழாகீய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும். + +சோழர் கலைகளின் ஏனைய பகுதிகளைப் போலவே சோழர்களின் ஓவியக்கலையும் பல்லவ பாண்டியர் வளர்த்த துறையின் தோடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சுவர்களில் தீட்டப்பட்ட வண்ணச் சித்திரங்களில் அளவு, சிறப்பு ஆகியவற்றை இலக்கியங்களில் ஆதாரமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வண்ணச் சித்திரங்களின் மாதிரிகள் எவையும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் பயிலப்பட்ட வண்ண ஓவியக் கலையின் தன்மையைப் பற்றி அவற்றை உற்றுப் பார்த்து நாமே கருத்தைச் சொல்வதற்கேற்ற சான்றுகள் இல்லை. + +கலைப் பொருள்களிலேயே, ஓவியங்கள் தான் மிக மென்மையானவை. காலத்தாலும், இயற்கை சீற்றங்களாலும் மலைகளில், இரசாயனங்களால் உண்டாகும் மாறுதல்களாலும். உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களாஅலும் வண்ண ஓவியங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும். தஞ்சாவூர்போல, பல இடங்களில், முதலில் வரையப்பட்ட அழகான ஓவியங்களின் மீது பிற்காலத்தில் அவற்றைவிடச் சற்று மட்டமான ஓவியங்கள் தீட்டப்ப்பட்டிருக்கின்றன. ஓவிய வரலாற்றில் தொடர்ச்சி வளர்ச்சியில்லாமல் இடைக்காலங்கள் உள்ளன. தவிரவும் சில காலப்பகுதிகள் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. இந்தக் குறைபாடுகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் ஓவியத்துறையில் தொடர்ந்து ஒரு மரபு நீடித்து வந்திருக்கிறது என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது. + + + + +அனைத்துலக காணாமற்போனோர் நாள் + +அனைத்துலக காணாமற்போனோர் நாள் ("International Day of the Disappeared") ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்���ெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட "கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு" (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. +அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது. + + + + + +1918 + +1918 (MCMXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + +நளினகாந்தி + +நளினகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + + + + +வல்லவ சக்தி பிள்ளையார் கோயில் + +திருகோணமலை வல்லவசக்தி பிள்ளையார் கோயில் திருகோணமலை நகரப்பகுதியில் மனையாவளியில் உள்ளது. இவ்வாலயத்தில் ஓமகுண்டத்தில் வேப்பம் இலை, வேப்பமரக்கட்டை வைத்து ஓமம் வளர்ப்பது வழமையாகும். இவ்வாலத்தில் 3 நேரப்பூசை, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றது. அரசமரமும் வேப்பமரமும் இருக்கும் ஆலயத்தில் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால் இவ்வாலயத்தில் வழிபடுவது வழக்கமாகும். + + + + +உடவளவை தேசியப் பூங்கா + +உடவளவை தேசியப் பூங்கா இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தேசிய வனமாகும். 1972 ஆம் ஆண்டு வளவை ஆற்றின் நீரேந்துப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. பூங்கா மொத்தம் 306 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பூங்கா புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும�� ஆனது. + +பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன. காட்டு யானைகளை இலகுவாக பார்வையிட முடியும். மேலும் இங்கு சிறுத்தைகளும் காணப்படுகின்றன. முதலை, பொன்நிற நரி, நீர் எருமை போன்றவை இங்கு காணப்படும் முக்கிய விலங்குகளாகும். + + + + +இருபடிய எச்சம் + +கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபடிய எச்சம் (Quadratic Residue) என்ற கருத்து ஒரு அடிப்படைக் கருத்து. ஓர் முழுஎண்ணானது சமானம் மாடுலோ கருத்துருவின்கீழ் மற்றொரு முழுஎண்ணினின் முழுவர்க்கத்திற்குச் சமானமாக இருந்தால் அது இருபடிய எச்சம் எனப்படும். + +சமானம் மாடுலோ "n" இருபடிய எச்சம் முழுஎண் "q" எனில் பின்வரும் கூற்றை நிறைவு செய்யும் வகையில் "x" என்ற முழுஎண்ணைக் காணலாம்: + +இரண்டு இருபடிய எச்சங்களின் பெருக்குத்தொகையும் ஒரு இருபடிய எச்சமாக இருக்கும். + +எடுத்துக்காட்டாக, + +பெர்மா, ஆய்லர், லாக்ராஞ்சி, லெஜாண்டர் மற்றும் பல 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டின் கோட்பாட்டாளர்கள் இருபடிய எச்சம் குறித்த பல தேற்றங்கள், அவற்றின் நிறுவல்கள் மற்றும் அனுமானங்களைக் கண்டறிந்திருந்தாலும் ஜெர்மானிய கணித வல்லுனர் காஸினால் அவர் அறிமுகப்படுத்திய மாடுலோ எண் கணிதம் மூலம் விவரமாக ஆய்வு செய்யப்பட்டது. இருபடிய எச்சம் குறித்த முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை முதன்முதலில் கணிதவியலாளர் காசின் புத்தகத்தில் (§ IV "Disquisitiones Arithmeticae" (1801)) காணப்பட்டது. "இருபடிய எச்சம் (quadratic residue)" என்ற சொல் இப்புத்தகத்தில் பிரிவு 95 இல் தரப்பட்டுள்ளது. சிலசமயங்களில் ’இருபடிய’ என்ற அடைமொழியின்றி ’எச்சம்’ என்று மட்டும்கூட குறிப்பிடப்படலாம். + +ஒரு பகா எண் formula_3 ஐயும், ஒரு முழு எண் formula_4 ஐயும் எடுத்துக்கொள்வோம். ஏதாவது ஒரு முழு எண் formula_5 க்கு + +என்பது உண்மையானால், மாடுலோ formula_3 க்கு formula_4 ஒரு இருபடிய எச்சம் என்று கூறப்படும். இதையே formula_4 என்ற எண் formula_3 இனுடைய இருபடிய எச்சம் என்றும் சொல்வதுண்டு. + +இக்கட்டுரை முழுவதும் மாடுலோ எண்கணிதத்தைப்பற்றியே இருப்பதால் 'formula_12' இருக்கவேண்டிய இடத்தில் '=' குறியையே பயன்படுத்துவோம். + +எந்த முழுஎண் formula_5 க்கும் + +என்பது உண்மையானால், மாடுலோ formula_3 க்கு formula_4 ஒரு இருபடிய எச்சமல்லாதது (quadratic non-residue) என்று கூறப்படும். இதையே formula_4 என்ற எண் formula_3 இனுடைய இருபடிய எச்சமல்லாதது என்றும் சொல்வதுண்டு. + +இர��படிய எச்சமாக இருப்பதைக் குறிக்க R ம் இல்லாததைக் குறிக்க N ம் காசால் பயன்படுத்தப்பட்டது + +ஆனால் 7, மாடுலோ 11 க்கு ஒரு இருபடிய எச்சமல்லாதது. குறியீட்டில் formula_25 + +11 இன் எல்லா எச்சங்களையும் வர்க்கப்படுத்தி பட்டியலிட்டால் இதைச் சரிபார்க்கலாம். + +"a" ≡ ("n" − "a") (மாடுலோ "n") என்பதால் 1 முதல் "n" − 1 வரையிலான முழு எண்களை வர்க்கப்படுத்தி, மாடுலோ "n" இன் இருபடிய எச்சங்களைக் காணலாம். + + +மாடுலோ 4 இன் இருபடிய எச்சம்: 1 + + +மாடுலோ 5 இன் இருபடிய எச்சங்கள்: 1, 4 + + +மாடுலோ 10 இன் இருபடிய எச்சங்கள்: 1, 4, 5, 6, 9 + +மாடுலோ "n" இன் இருபடிய எச்சங்களின் எண்ணிக்கையானது, + +மேலேதரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின்படி: + + + + + + +1923 + +1923 (MCMXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +சோழர் படை + +சோழர் படை ("Chola Military") என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். +கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது. + +ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படையை துவக்கிய காலத���தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம். + +சோழர் படை புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. கைக்கோளாளரைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது. + +வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர்ப் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவையிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இலங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது. + +பிற்கால இலக்கியச் சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் பாண்டிய நாட்டில் பணியாற்றிய "தென்னவன் ஆபத்துதவிகள்" என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது. + +அத்துடன் "நடப்பு" என்ற உணவு உடையளிக்கும் பிரிவும், "பயணம்" என்ற கடற்படை நிர்வாக உணவு உடை விடயங்களைக் கவனிக்கும் பிரிவும் காணப்பட்டன. இவ்வாறு படையினுள் காணப்பட்ட பிரிவினால் சோழர் படை புத்தாக்கம் பெற்ற பாரிய வெற்றிகளை ஈ��்டக்கூடியவாறு காணப்பட்டது. + +"கட்டளையிடும் அதிகாரியின் தரம்": சேனாதிபதி +"தற்கால சமமான தரம்": படைத்தலைவர் + +பல சேனைகளினால் படை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூட்டப்பட்ட ஒவ்வொரு சேனையும் அதனுடைய இடம், பங்கு என்பனவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தது. பொதுவாகச் சோழர் சேனை பெரிய அமைப்புப் பிரிவாகக் காணப்பட்டது. பல காலகட்டத்திற்கேற்ப படை ஒன்று முதல் மூன்று சேனைகளைக் கொண்டிருந்தது. + +"கட்டளையிடும் அதிகாரியின் தரம்": தளபதி - (கடற்படையின் தளபதி தரத்திற்கு ஒப்பானது) +"தற்கால சமமான தரம்": தளபதி + +சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது. + +"கட்டளையிடும் அதிகாரியின் தரம்": அணிபதி +"தற்கால சமமான தரம்": துணைத் தளபதி + +தளம் பல சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அணி என்பது பொதுவாகத் தளத்தின் 1/3 ஆகும். அணி பொதுவாகப் பின்வருமாறு காணப்படும். + +படையணிகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. + +வேளைக்காரப் படை அல்லது வேளைக்காரர் என்பது அரசனின் படையணியிலுள்ள காவல் படையணியாகும். ஸ்டெயின் போன்ற வரலாற்றாளர்கள் சிலர் கருத்துப்படி, இவர்கள் சாதாரண மக்களாகவிருந்து போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தேசிய காவலாளிகளாக இருந்திருக்கலாம் என ஸ்டெயின் கருதுகிறார். இவர்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்படி, சிங்கள அரசு சோழ அரசுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்த முற்பட்டது. பின்னர் இவர்கள் கலகம் செய்ததும் கலைக்கப்பட்டனர். + +நாட்டில் தங்கியிருந்த கோட்டைக் காவற்படைகளும் அவர்களின் பாளையமும் "கடகம்" எனப்பட்டது. பாண்டிய நாட்டுடன் ஏற்பட்ட குழப்பத்தின் பின் முதலாம் குலோத்துங்க சோழன் தன் படையினரை பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டிற்கும் இடையேயான பிரதான பாதையில் படை குடியேற்றங்களை ஏற்படுத்தி நிறுத்தினான். அவ்வாறான குடியிருப்புக்களில் இரண்டு தமிழ்நாட்டின் தென் ஆற்காட்டிற்கு அருகிலுள்ள மடவிலகத்திலும் மற்றது கோட்டாறிலும் கண்டுபிடிக்கப்பட்டன. + +ஆட்சேர்ப்பு எவ்வாறு நடைபெற்றது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆயினும், படைவீரர்களின் வாரிசுகள் தங்களை படையில் இணைத்துக் கொண்டிருப்பர் என நம்பப்படுகின்றது. படையில் இருந்தவர்களுக்கு கடினமான, ஊக்கமளிக்கக்கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியம் குறிப்பிடும் "கடகம்" தொடர்ச்சியான பயிற்சிகளும் படை முறைகளும் இருந்தன எனக் குறிப்பிடுகின்றது. + +திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீசுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்கிருந்த மூன்று கை மகாசேனை(மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை)யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகிறது. அக்கல்வெட்டு முதலாம் இராஜராஜன் அல்லது முதலாம் இராஜேந்திரன் காலத்திலோ எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். அக்கல்வெட்டில் காணப்படுபவை. + +மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிகள் அனைத்தும் இராஜராஜன், அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் அடைந்த வெற்றிகளாகும். கி.பி. 1096ல் பொறிக்கப்பட்ட சேரன் மாதேவி(சேரமாதேவி) கல்வெட்டு ஒன்றில் இம்மாசேனையினரின் வீரக்கனவுகள் பற்றிக் கூறப்படுகிறது. மற்றொரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் இம்மான்சேனை தன் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவந்தது என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது. + +கி.பி. 1225-ல் ஒரு சீன புவியியலாளர் "சா யூ-குவா" சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். + +சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா (மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது. + +9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலைதீவு ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. + +சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது எ��்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று பெரிப்ளசு என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு இராஜேந்திரன் பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிகள் பெற்றதனையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. இதில் சொழாந்தியம், சங்கரா எனும் கடற்கலங்கள் பாவனையில் இருந்துள்ளன. + +போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மறந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர். + +ஈழத்திலும் கருநாடகப் பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சாளுக்கியக் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்குக் கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாகக் கூறுகின்றன. + +பொதுவாகப் போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை முதலாம் இராஜராஜன் தமது 6ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தனது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + + +இருபடிய நேர் எதிர்மை + +கணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் இருபடிய நேர் எதிர்மை ("Quadratic Reciprocity") என்பது ஒரு மையக்கருத்து. + +லெஜாண்டர் ஏற்கனவே இருபடிய எச்சங்களைப் பற்றிய ஒரு சுவையான விதியைக் கண்டுபிடித்திருந்தார். அது, formula_1 என்ற இரண்டு ஒற்றைப்படைப்பகாதனிகளைப் பொருத்த விஷயம்.அதாவது,அவை ஒன்றுக்கொன்று இருபடிய எச்சங்களா அல்லது இருபடிய எச்சமல்லாதவைகளா என்பதைப் பற்றிய இரு தேற்றங்கள்: + +இந்த விதிக்கு "இருபடிய நேர் எதிர்மை" (Law of Quadratic Reciprocity) என்று பெயர் வைத்ததே காஸ் தான். பெயர் வைத்ததோடு மட்டுமல்லாமல் இவ்விதிக்கு ஒரு கண்டிப்பான (rigorous) நிறுவல் கொடுத்தவரும் அவரே. + +p, q இரண்டும் ஒற்றைப்படை பகா எண்கள் எனக்கொள்வோம். கீழுள்ள இரண்டு சமான உறவுச் சமன்பாடுகளைக் கவனி. + +formula_11 அல்லது formula_12 அல்லது இரண்டுமோ உண்மையென்றால், + +formula_13 ஆகிய இரண்டும் உண்மையென்றால் + + +இங்கு formula_20 என்பதையும் கவனிக்க. + + +ஆனால் 7, 11இனுடைய எச்சமல்லாதது. ஏனென்றால், + +இங்கு formula_35 என்பதையும் கவனிக்க. + +ஆய்லரும் லெஜாண்டரும் முயற்சி செய்து நிரூபிக்கத் தவறின இத்தேற்றத்திற்கு, 19 வயதே ஆகியிருந்த காஸ் தன்னுடைய நூல் Disquisitiones Arithmetica வில் முழுநிறுவலும் கொடுத்தது ஒரு பெரிய சாதனை. எண்கோட்பாடுதான் கணிதத்தின் இராணி என்றும், இருபடிய நேர் எதிர்மையை எண் கோட்பாட்டின் சிகரமென்றும் கூறுவார் காஸ். அவர் இவ்விதியை மிகவும் நேசித்ததால், தன் ஆயுளில் திரும்பத் திரும்ப இதை அலசிப்பார்த்து, இதற்கு ஆறு நிறுவல்கள் கொடுத்திருக்கிறார். + +இருபடிய நேர் எதிர்மையை இன்னும் நுண்பியப்படுத்தி, காஸ் நாற்படிய நேர் எதிர்மை ஒன்றையும் கண்டுபிடித்தார். + + + + + +ஃபெர்மா எண் + +கணிதத்தில் ஃபெர்மா ("Pierre de Fermat" 1601-1665) என்பவர் பகாதனி ("Prime") களைப் பற்றி பல கேள்விகள் எழுப்பினார். + +என்ற எண்கள் ஃபெர்மாவின் பெயரை உடைத்தவை. அவைகளெல்லாமே பகாதனிகளாக இருக்கும் என்பது ஃபெர்மாவின் யூகம். n = 0,1,2,3,4 க்கு ஒத்ததான ஐந்து ஃபெர்மா எண்கள் பகாதனிகள் தாம். இவ்வைந்தும் ஃபெர்மா பகா எண்கள் அல்லது ஃபெர்மா பகாதனிகள் என்று பெயர் பெறும். ஆனால் ஆறாவது, அதாவது, + +பகா எண்ணல்ல. இதை 100 ஆண்டுகள் கழித்து அவ்வெண்ணுக்கு 641 என்ற எண் காரணியாக உள்ளது என்று ஆய்லர் கொடுத்த நிறுவல் தீர்த்து வைத்தது. இந்த ஆய்வில் இன்னும் தீராத சுவையான பிரச்சினை: ஃபெர்மா பகாதனிகள் இவ்வைந்துதானா, இன்னும் உளதா? + +இவ்வெண்களை ஃபெர்மா முதலில் அறிமுகப்படுத்தும்போது, எல்லா formula_4 க்கும், formula_6 கள் பகா எண்களாக இருக்கவேண்டும் என்று யூகித்தார். ஆனால் formula_7 பகா எண்ணல்ல என்று ஆய்லர் காட்டினவுடன் நிலைமை மாறுபட்டது. 1796 இல் காஸினுடைய யூகமோ, ஃபெர்மா பகாதனிகள் formula_8 ஆகிய ஐந்து மட்டுமே என்பது. இந்த யூகம் இன்னும் (2007 வரையில்) நிரூபிக்கப்படவில்லை. + +கிரேக்கர்கள் காலத்திலிருந்து மட்டக்கோல், கவராயம் இவைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒழுங்குப் பலகோணம் வரைவதெப்படி என்று ஆய்வுகள் இருந்தவண்ணமே உள்ளன. 3,4,5,6, 8, 10, 15 பக்கங்களுள்ள ஒழுங்குப் பலகோணத்தின் வரைமுறை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் 7,9,11,13 ... முதலிய பக்கங்களுடைய ஒழுங்குப் பலகோணத்தின் வரைமுறையைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனவர்கள் பலர். கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் தான் ஒற்றைப்படை எண்ணிக்கை n உள்ள பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இரண்டைக் கொண்டு வரையப்படவேண்டுமென்றால், n ஒரு ஃபெர்மா பகா எண்ணாகவோ அல்லது அவைகளின் பெருக்குத்தொகையாகவோ இருந்தாக வேண்டும் என்று கண்டுபிடித்தார். 18வது வயதில் இதைக் கண்டுபிடித்தவுடனேதான் தன் கணிதக் கண்டுபிடிப்புகளுக்காக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார். அவர் காலமாகி 43 ஆண்டுகள் கழித்தே அவருடைய நாட்குறிப்பு உலகத்தாரின் முன்னிலையில் வைக்கப்பட்டது. காஸினுடைய கண்டுபிடிப்பின்படி, கிரேக்கர்களுக்குத் தெரிந்த 3, 5, 15 ஐத்தவிர 17, 257, 65537 பக்கங்களுக்கும் அல்லது இவைகளின் பெருக்குத்தொகையை எண்ணிக்கையாகக் கொண்ட பக்கங்களுக்கும் ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இவைகளை மட்டும் கொண்டு வரையமுடியும். + +ஆனால் 7, 9, 11, 13, ... ஆகிய எண்ணிக்கை கொண்ட பக்கங்களுடன் ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல் கவராயம் இவைகளை மட்டும் கொண்டு வரைய முடியாது என்பதும் நிரூபணம் ஆகியது. + + + + + + +1792 + +1792 ((MDCCXCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + +1666 + +1666 ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + + +1790கள் + +1790கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1790ஆம் ஆண்டு துவங்கி 1799-இல் முடிவடைந்தது. + + + + + + + + + + + + + + + + + + + + + + + +1660கள் + +1660கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1660ஆம் ஆண்டு துவங்கி 1669-இல் முடிவடைந்தது. + + + + + + +புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல் + +இந்தப் பட்டியல் 192 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 194 சட்டவழி மற்றும் செயல்வழி (de facto) நாணயங்களையும், ஒரு ஐநா அவதானி நாட்டினதும், மூன்று பகுதி அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளினதும், ஆறு அங்கீகரிக்கப்படாத நாடுகளினதும், 32 சார்பு நாடுகளினதும் நாணயங்களையும் உள்ளடக்கியுள்ளது. சார்பு நாடுகள் சாய்வெழுத்துக்களிலும், பகுதி அல்லது முழு அங்கீகாரம் கொண்ட நாடுகள் தடித்த எழுத்துக்களிலும் காட்டப்பட்டுள்ளன. தலைமை நாட்டிலிருந்து மாறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்தும் சார்பு நாடுகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன. + + + + + + + +கார்ல் பிரீடிரிக் காஸ் + +கார்ல் பிரீடிரிக் காஸ் (; "Johann Carl Friedrich Gauss", ஏப்ரல் 30, 1777 – பெப்ரவரி 23, 1855) கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அ���ிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால், வானியல், புவிப் பரப்பு, எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர். + +தந்தை கெப்பார்ட் ஒரு சாதாரண ஏழைத்தொழிலாளி. தாய் டொரொத்தியா கெப்பார்டுக்கு இரண்டாம் மனைவியாகும் முன் வீடுகள்தோறும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தவர். மூன்று வயதிலேயெ காஸ் தன் தந்தை கூலியாட்களுக்கு சம்பளம் தரும்போது அவர் கணிப்பில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்தவன். ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே, எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன; அதாவது, {1, 100}, {2, 99}, {3, 98}, முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050. ஆசிரியருக்கு மாணவன்மேல் உவகை பொங்கியது. பையனை பள்ளி நேரங்களுக்கு அப்பால் கணிதத்தின் மற்ற நெளிவு சுளுவுகளையெல்லம் கற்றுத் தருவதற்காக அனுமதி கேட்டு அவன் பெற்றோர்களை அணுகினார். அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்தது கணித உலகின் பேறு; இல்லையென்றால் மகனுடைய அபார கணிப்புத் திறமையை ஒரு காட்சிப் பொருளாக ஆக்க நினைத்து, இசைமேதை வோல்ஃப்காங் மொசார்ட்டின் தந்தை ஊர் ஊராக அவனைக் கூட்டிப்போன மாதிரி அவர்களும் செய்திருக்கக் கூடும். + +பதினொன்றாவது வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு தொல்நூல்களில் காஸுக்கு நல்ல கல்வி கிட்டியது. ஆனால் அதைவிட முக்கியமானதாகக் கூறப்படவேண்டியது அவனுக்கு நேருக்கு நேராகவும் தானாகவே படித்தும் கணிதத்தில் கிடைத்த கல்வியைத்தான். நியூட்டனுடைய 'ப்ரின்ஸிபியா' பெர்னொவிலியினுடைய 'ஆர்ஸ் கந்ஜெக்டாண்டி' போன்ற சிறந்த நூல்களை முழுக்கக் கற்றுத் தெளியும் வாய்ப்பு கிட்டியது. 15 வயதுக்குள் அவனுடைய கல்வியின் உயர்ந்த தரத்தைப் பார்த்து மெச்சிய பிரன்ஸ்விக் பிரபு (Duke of Brunswick) ஃபெர்டினாண்ட் என்பவர் அவனுக்கு கல்லூரியில் படிக்க ஊக்கத்தொகை கொடுத்து உதவினார். + +கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பகா எண்களின் எண்ணிக்கை formula_1 க்கு இரண்டு யூகங்கள் அளித்துவிட்டான்: + +இதை பிற்பாடு மாற்றி அவன் முன்மொழிந்தது: + +கணிப்புப் பிரச்சினைகளில் அன்றாடம் முழுகி விளையாடும் இம்மாணவன் தன்னுடையதேயான வாய்பாடுகளைச் சோதிப்பதற்காக formula_1 இன் மதிப்புகளை formula_5 வரையில் கணித்துப் பார்த்து விட்டான். + +கெட்டிங்கென் பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகள் படித்தார் காஸ். ஆனால் அவருடைய காலத்திற்குப் பல்லாண்டுகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்பட்ட அவருடைய குறிப்புப் புத்தகங்களிலிருந்து, கெட்டிங்கெனிலிருந்த கணித ஆசிரியர்களைவிட தொல்லிலக்கியங்கள் பிரிவில் இருந்த ஆசிரியர்களே அவரை ஈர்த்ததாகத் தெரிகிறது. எனினும் ஃபெர்மா பகாதனிகளைப் பற்றியும், ஆய்லர் formula_6 என்ற ஆறாவது ஃபெர்மா எண் பகா எண்ணல்ல என்று கொடுத்த தீர்வைப் பற்றியும் தெரிந்துகொண்டதும், இதர ஃபெர்மா எண்கள் பகாதனிகளாக இருக்கமுடியாது என்றொரு யூகத்திற்கு வந்தார். இதற்குப் பிறகு தன்னுடைய எதிர்காலம் தொல்லிலக்கியத்திலல்ல, கணிதத்தில் தான் என்றொரு முடிவெடுத்தார். கெட்டிங்கெனில் தனக்கு வழிகாட்ட ஆசிரியர்கள் ஒருவரும் இல்லை என்று தீர்மானித்து தன்னுடைய ஊரான பிரன்ஸ்விக்குக்கே திரும்பிவந்து, முனைவர் பட்டத்திற்காக ஆய்வுக் கட்டுரை எழுதத் தொடங்கினார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பொருள் இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம். அதாவது: + +என்னும் தேற்றம்.1799இல் இவ்வாய்வுக்கு ஹெம்ஸ்டெட் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டமளித்தது. அத்தேற்றம் இன்றும் அவருடைய பெயரிலேயே புழங்குகிறது. இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் இத்தேற்றத்திற்கு அவரே தன்னுடைய ஆயுளில் இன்னும் மூன்று நிறுவல்கள் கொடுத்தார் என்பது. கடைசி நிறுவல் அவரது 70வது வயதில் கொடுத்தது. + +சிக்கலெண்களை ஒரு தளத்தின் புள்ளிகளுக்கு ஒத்தவையாக ஆக்கி, ஒவ்வொரு புள்ளி formula_7 ஐயும் formula_8 என்ற சிக்கலெண்ணுடைய ஒரு குறிகாட்டி (Representation) என்று தற்காலத்தில் கூறும் முறையில் சிக்கலெண்களின் பெயரிலேயே அனாவசியமாகப் புனையப்பட்டிருக்கும் 'சிக்கல்' என்ற கருத்தை விடுவித்த முதல் கணித இயலர்களில் காஸும் ஒருவர். + +17 வது வயதிலிருந்தே தன் மனதில் எண்களைப்பற்றித் தோன்றியதையெல்லாம் ஒரு நூலாக வடிக்கவேண்டுமென்ற ஆசை 1798 இல் +Disquisitiones arithmeticae என்னும் நூலாக உருவெடுத்து 1801 இல் 24வது வயதில் கணித உலகத்துக்கும் எண்கோட்பாட்டுக்கும் அவர் அளித்த மாபெரும் பொக்கிஷமாக மிளிர்ந்தது. உண்மையில் அதற்கு முன்னால் எண் கோட்பாடு என்ற ஒரு கோட்பாடே இருந்ததாகச் சொல்லமுடியாது. ஏனெனில், கிரேக்க காலத்திலிருந்து அன்றைய வரையில் எண்களைப் பற்றித் தெரிந்ததெல்லாம் தனித்தனியே நின்ற பல தேற்றங்கள் தாம். அவைகளை இணைத்து ஒரு கோட்பாடாக்கக் கூடிய நிலையில் யாரும் -- ஃபெர்மா, ஆய்லர், லக்ராஞ்ஜி, லெஜாண்டர் -- அவைகளைக் கண்டுகொள்ளவில்லை. காஸினுடைய சமானம், மாடுலோ n என்ற கருத்து அவர்களுடைய கருத்துகள் பலவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்க உதவியது. + +காஸினுடைய நூலின் நான்காவது அத்தியாயத்தில், இருபடிய எச்சங்கள் (Quadratic Residues) எடுத்துக்கொள்ளப்படுகின்றன. + +என்பதை வேறுவிதமாக, அதாவது, + +என்றும் சொல்வதுண்டு: + +எடுத்துக்காட்டாக, + +எந்த எண் formula_11 க்கும் formula_12 இருக்கமுடியாவிட்டால், formula_21 இனுடைய இருபடிய எச்சமல்லாதது (Quadratic non-residue) எனப்பெயர் பெறும். + +லெஜாண்டர் ஏற்கனவே இருபடிய எச்சங்களைப்பற்றிய ஒரு சுவையான விதியைக்கண்டுபிடித்திருந்தார். அது, formula_22 என்ற இரண்டு பகாதனிகளைப் பொருத்த விஷயம்.அதாவது,அவை ஒன்றுக்கொன்று இருபடிய எச்சங்களா அல்லது இருபடிய எச்சமல்லாதவைகளா என்பதைப் பற்றிய இரு தேற்றங்கள்: + +இந்த விதிக்குப்பெயர் இருபடிய நேர் எதிர்மை (Law of Quadratic Reciprocity) என்று பெயர். பெயர் வைத்ததே காஸ் தான். பெயர் வைத்ததோடுமட்டுமல்லாமல் இவ்விதிக்கு ஒரு கண்டிப்பான (rigorous) நிறுவல் கொடுத்தவரும் அவரே. + +கிரேக்கர்கள் காலத்திலிருந்து மட்டக்கோல், கவராயம் இவைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒழுங்குப் பலகோணம் வரைவதெப்படி என்று ஆய்வுகள் இருந்தவண்ணமே உள்ளன. 3,4,5,6, 8, 10, 15 பக்கங்களுள்ள ஒழுங்குப் பலகோணத்தின் வரைமுறை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் 7,9,11,13 ... முதலிய பக்கங்களுடைய ஒழுங்குப் பலகோணத்தின் வரையறையைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனவர்கள் பலர். காஸ் தான் ஒற்றைப்படை எண்ணிக்கை n உள்ள பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இரண்டைக் கொண்டு வரையப்படவேண்டுமென்றால், n ஒரு ஃபெர்மா பகா எண்ணாகவோ அல்லது அவைகளின் பெருக்குத்தொகையாகவோ இருந்தாக வேண்டும் என்று கண்டுபிடித்தார். 18வது வயதில் இதைக் கண்டுபிடி���்தவுடனேதான் தன் கணிதக் கண்டுபிடிப்புகளுக்காக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார். அவர் காலமாகி 43 ஆண்டுகள் கழித்தே அவருடைய நாட்குறிப்பு உலகத்தாரின் முன்னிலையில் வைக்கப்பட்டது. காஸினுடைய கண்டுபிடிப்பின்படி, கிரேக்கர்களுக்குத் தெரிந்த 3, 5, 15 ஐத்தவிர 17, 257, 65537 பக்கங்களுக்கும் அல்லது இவைகளின் பெருக்குத்தொகையை எண்ணிக்கையாகக் கொண்ட பக்கங்களுக்கும் ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இவைகளை மட்டும் கொண்டு வரையமுடியும். + +யூக்ளீட் காலத்திலிருந்து இணை முற்கோள் கணித உலகத்திற்குப்பெரிய தலைவலியாகவே இருந்து வந்தது. அதற்கு நிறுவலொன்றும் கிடைக்காமல் அதை முற்கோளாக வைத்திருக்கவேண்டிய அவசியத்தைத் தகர்த்தெறிய வேண்டும் என்று பல நூற்றாண்டுகளில் பலர் முயன்றனர். கடைசியில் 19வது நூற்றாண்டில் லொபசெவிஸ்கி, போல்யாய் இருவரும் தனித்தனியே கணிதத்திலேயே ஒரு அடிப்படை மாற்றம் உண்டாகும் வழியில் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தனர். ஆனால் காஸ் அவர்களுக்கு முன்பே அதே வழியில் சென்று அதே மாற்றங்களுக்குத் தன் மனதில் ஒப்புதல் கொண்டு தன் நாட்குறிப்புகளில் எழுதி வைத்திருந்தார். இதனால் இன்றும் யூக்ளீடற்ற வடிவியலுக்குத் தந்தைகளாக இம்மூவருமே சொல்லப்படுகிறார்கள். + +காஸ் காலத்தியவர்கள் அவரை கணிதவியலராக மாத்திரம் மதிப்பிடவில்லை. ஏனெனில் அவருடைய ஈர்ப்புகள் பயனியல் கணிதத்தை ஒட்டிய புவிப்பரப்பு அளவைகளில் வெகுகாலம் இருந்தன. இளம் வயதுகளில் அவைகளில் ஈடுபட்டவர், தன்னியல் கணிதமான எண் கோட்பாட்டினால் கவரபட்ட பிறகு ஒரு பதினைந்து ஆண்டுகள் தன்னியல் கணிதத்தின் பிரிவுகளான பகுவியல் முதலியவைகளில் தன் மனதைச்செலுத்தினார். 1817 இல் ஹனோவர் மாகாணத்திற்கு புவிப்பரப்பு அளவைகள் எடுக்கும் பொறுப்பு அவரை வந்தடைந்தது. அக்காலத்திலிருந்த அளவுமானிகளைப் பயனற்றதாகக்கருதி ஒரு புதிய 'ஹெலியொட்ரோப்' என்ற மிகவும் பயனுள்ள சாதனம் ஒன்றை உண்டாக்கினார். இதைத்தவிர தன்னுடைய கணிப்புத்திறமையினால் உந்தப்பட்டவராய் இவ்வளவைகளின் மூலம் செய்யப்படும் அளவுகளைக்கணிப்பதில் பல நுட்பமான மாற்றங்கள் செய்து அவைகளின் தரத்தை உயர்த்தினார். + +இதெல்லாவற்றையும் விட முக்கியமானது பெரிய முக்கோணங்களின் கோண அளவுகளை அளந்து தன்னுடைய யூக்ளீடற்ற வடிவியலுக்க��� பெளி உலகில் அத்தாட்சி கிடைக்குமா என்று சோதனை செய்தது தான். அதுவரையில் செய்யப்பட்ட பெரியமுக்கோண அளவை அவர் செய்தது. + +1142 மீ உயரமுள்ள ப்ரோக்கன் சிகரம், 20 கி.மீ. தூரத்திலிருந்த இன்ஸெல்பர்க் (915 மீ) சிகரம், கெட்டிங்கனுக்குத் தென்மேற்கே 12 கி.மீ. தூரத்திலுள்ள ஹோஹர்ஹாகென் சிகரம் (508 மீ) இம்மூன்று சிகரங்களாலேற்படும் முக்கோணங்களின் மூன்று கோணங்களையும் அளந்தார். இம்முக்கோணத்தின் பக்கங்கள் 70, 110 கி.மீ. இருந்தாலும் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை 180 0' 15" தான் இருந்தது. அவருடைய யூக்ளீடற்ற வடிவியல் கணிப்பு 180 சுழியளவிலிருந்து இன்னும் அதிக வித்தியாசத்தை எதிர்பார்த்தது. அதற்கு இன்னும் பெரிய முக்கோணத்தை அளந்தாக வேண்டும் என்று உணர்ந்து இணைமுற்கோளைப்பற்றிய தன்னுடைய ஆய்வுகளை பிரசுரிக்காமலே இருந்தார். 1831 இல் ஜொஹான் போல்யாய் தன் மகன் வோல்ஃப்காங் போல்யாய் யூக்ளீடற்ற வடிவியலின் அவிரோதத்தை (consistency)ப்பற்றிக் கண்டுபிடித்திருக்கும் முடிவுகளைத் தெரியப்படுத்தினதும் 'இதெல்லாம் நான் முன்னமே அறிந்ததுதான்' என்று அவருக்கு இவர் மறுமொழி கூற, அந்த ஹங்கேரிநாட்டுத் தந்தையும் மகனும் இவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர்! + +1801, ஜனவரி 1ம் நாள் பியாஜ்ஜி என்பவர் முதல் குறுங்கோளொன்றைக் கண்டுபிடித்து அதைக் கொஞ்சதூரம் மேற்குவானில் தொலைநோக்கி வழியாகப் பார்த்து மறுபடியும் கீழ்வானில் பார்க்க முயன்றபோது அவர்கள் வானியல் கணிப்புகளின் துல்லியம் போராமல் அதைத்தவற விட்டனர். காஸ் இக்கணிப்புகளைத் துல்லியமாக கணித்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து 14 சந்திரன் அளவுகள் தள்ளி ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல, அவ்விடத்தில் அக்குறுங்கோள் (சிரிஸ் என்ற பெயருள்ளது) காணப்பட்டது. 24 வயதே ஆன இளம் விஞ்ஞானி காஸ் இதனால் உலகப்புகழ் பெற்றார். + +அக்காலத்துப் பிரென்ச் கணித இயலர்களில் லப்லாஸ் முக்கியமான ஒருவர். ஜெர்மனியின் சிறந்த கணித இயலர் யார் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது அவர் 'ப்ஃஆஃப்' (Pfaff) என்றார். 'காஸை மறந்துவிட்டீர்களே' என்று திருப்பிக் கேட்டார்களாம். அவர் கூறிய பதில்: காஸ் உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணிதவியலர்! + + + + + +301 + +ஆண்டு 301 (CCCI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஜூலியன் ஆண்டு ஆகும். + + + + + + +1801 + +1801 (MDCCCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +கத்தார் + +கத்தார் ("Qatar" அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளன. பாரசீக வளைகுடாவின் ஒரு பகுதி இதனை அருகில் உள்ள தீவு நாடான பகுரைனில் இருந்து பிரிக்கிறது. + +உதுமானியர் ஆட்சியைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 1971 இல் விடுதலை பெறும் வரை, கத்தார் ஒரு பிரித்தானிய பாதுகாப்பு பெற்ற நாடாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தானிகள் அவை கத்தாரை ஆண்டு வருகிறது. ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார். கத்தார் ஒரு மரபுவழி முடியாட்சி. அதன் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல் தானி ஆவார். இது ஒரு அரசியல்சட்ட முடியாட்சியா அல்லது முழுமுதல் முடியாட்சியா என்பது தெளிவாக இல்லை. 2003ல் நடந்த பொது வாக்கெடுப்பில், கத்தாரின் அரசியல் சட்டம் ஏறத்தாழ 98% பேராதரவுடன் ஏற்பு பெற்றது. 2017 இன் தொடக்கத்தில், கத்தாரின் மொத்த மக்கள் தொகை 2.6 மில்லியனாக இருந்தது. இவர்களுள் 313,000 மக்கள் கத்தார் குடிமக்கள். 2.3 மில்லியன் மக்கள் அயல்நாட்டைச் சேர்ந்த குடியிருப்போர். இசுலாம் இந்நாட்டின் அலுவல்முறை சமயம் ஆகும். + +கத்தார், உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவளி மற்றும் எண்ணெய் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ஓர் உயர் வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதல் இடம் வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கத்தாரை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே மனித வளங்கள் அடிப்படையில் மிகவும் முன்னேறிய நாடாகவும் காண்கிறது. + +கத்தார் அரேபிய உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. அரேபிய வசந்தத்தின் போது, பல்வேறு போராளிக் குழுக்களுக்கு நிதியாகவும் உலகெங்கும் வளர்ந்து வரும் அதன் ஊடகப் பிரிவான அல் ஜசீரா ஊடகக் குழுமம் வழியாகவும் ஆதரவு அளித்ததாக கருதப்படுகிறது. + +கத்தார் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதால், இடைநிலை அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. கத்தார் 2022 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியை நடத்துகிறது. கத்தார் இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும். + +சூன் 2017ல், சவூதி அரேபியா, பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது. + + + + +வைக்கிங் திட்டம் + +வைக்கிங் திட்டம் ("Viking Mission") என்பது செவ்வாய்க் கோளை ஆராய்வதற்கென நாசா நிறுவனம் தயாரித்த ஒரு விண்வெளிப் பயணத் திட்டமாகும். வைக்கிங் 1, வைக்கிங் 2 என இரண்டு விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டன. இதன் மொட்த்தாச் செலவு கிட்டத்தட்ட $1.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆகஸ்ட் 20, 1975 இல் வைக்கிங் 1 ஏவப்படட்து. அதே ஆண்டு செப்டம்பர் 9 இல் "வைக்கிங் 2" ஏவப்பட்டது. இரண்டும் "ஒழுக்குச் சிமிழ்" எனப்படும் "Orbiter Capsule", மற்றும் "தளச் சிமிழ்" எனப்படும் "Lander Capsule" ஆகியவற்றைக் கொண்டு சென்றன. இரண்டு விண்வெளிக் கப்பல்களும் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்து பல விபரங்களை வண்ணப் படங்களுடன் பூமிக்கு அனுப்பின. + +வைக்கிங்-1 ஏவிப் பத்து மாதங்களில் செவ்வாய்க் கோளைச் சுற்ற ஆரம்பித்து, ஜூலை 20, 1976 இல் செவ்வாயில் தரையிறங்கியது. அதே நேரம் வைக்கிங் 2 அதே ஆண்டு ஆகஸ்ட் 7 இல் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர ஆரம்பித்து, செப்டம்பர் 3, 1976 இல் தரையிறங்கியது. + +இரண்டு வைக்கிங் விண்கலங்களினதும் முடிவுகள் பின்வருமாறு: +அனைத்து வைக்கிங் திட்டமும் முடிவில் மே 21 1983 இல் கைவிடப்பட்டது. + + + + + +செவ்வாய் + +செவ்வாய் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்��ன. + + + + + +சான் மரீனோ + +சான் மரீனோ ("San Marino", (இத்தாலிய மொழி: "Serenissima Repubblica di San Marino") அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும். + +சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது. + +1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது. + +1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது. + +சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை. + + + + + +1800கள் + +1800கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1800ஆம் ஆண்டு துவங்கி 1809-இல் முடிவடைந்தது. + + +முதலாவது விண்கற்கள் (asteroids) கண்டுபிடிக்கப்பட்டன: + + + + + +கருணா (ஓவியர்) + +கருணா ("இயூஜின் வின்சென்ட்", இறப்பு: பெப்ரவரி 22, 2019) ஓர் ஈழத்து ஓவியர் ஆவார். + +இயூஜின் வின்சென்ற் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி மேற்கு, அரசடியை அண்மித்த பகுதியில் பிறந்தவர். புகழ் பெற்ற ஓவியர் மாற்குவின் மாணவர். புலம்பெயர்ந்து கனடா, டொராண்டோவில் வாழ்ந்து வந்த இவர் ஏராளமான தமிழ் நூல்களின் அட்டைப்படங்களை வரைந்துள்ளார். "திண்ணை", "உலகத் தமிழோசை" உள்ளிட்ட பல இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு போன்றவற்றில் பெயர் பெற்ற இவர் சிறந்ததொரு ஒளிப்படக் கலைஞருமாவார். + + + + + +ஸ்ரீசங்கர் + +ஶ்ரீசங்கர் இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். + +யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீசங்கரின் வி. வைத்திலிங்கம். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவ���ம் நடித்தார். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார். + + + + +தமிழ் இளையோர் அமைப்பு + +தமிழ் இளையோர் அமைப்பு புகலிட நாடுகளில் தமிழ் இளையோரைத் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் ஆக்கபூர்வமான முறைகளில் ஈடுபடுத்துவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பண்பாடு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், கலைகள், கலை நிகழ்வுகள், அரசியல், எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகள் எனப் பல தளங்களில் இவ்வமைப்பு செயற்படுகின்றது. இவ் அமைப்பு புகலிட நாடுகளில் வளரும் அடுத்த தலைமுறையினரைத் தமிழ்த் தேசிய நிகழ்வு-சிந்தனைப் புலத்துக்கு உள்வாங்கி அவர்களின் ஆற்றலைத் தமிழ்த் தேசியத்தின் குறிக்கோள்களுக்காகப் பயன்படுத்துவதில் கவனம் காட்டுகின்றது. இது புகலிட தமிழ் இளையோருக்கிடையே இடம்பெறும் குழுச் சண்டைகளுக்கு ஒரு மாற்றாக இருந்து புகலிட மற்றும் தாயக மக்களுக்குப் பயன் தரும் செயற்பாடுகளுக்குப் பலவகைகளில் உதவக்கூடிய ஓர் அமைப்பாகப் பரிணமிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. + + + + + + +லெஜாண்டர் குறியீடு + +கணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் ஆய்லர் (1707-1783), லெஜாண்டர்(1752-1833) முதலியோர் தொடங்கிவைத்த இருபடிய எச்சம் என்ற கருத்துக்கு லெஜாண்டர் குறியீடு (Legendre Symbol) மிக்க பயனளிப்பது. + +என்பதை வேறுவிதமாக, அதாவது, + +என்றும் சொல்வதுண்டு: + +எடுத்துக்காட்டாக, + +a, p இரண்டும் பரஸ்பரப்பகாதனிகள் (coprime) என்று கொள்வோம். இப்பொழுது,லெஜாண்டர் + +என்ற குறியீட்டுக்கு கீழ்க்கண்டபடி பொருள் கற்பித்தார். அதாவது + +மாடுலோ formula_2 க்கு, formula_1 ஒரு இருபடிய எச்சம் என்பதை formula_13 என்றும் + +மாடுலோ formula_2 க்கு, formula_1 ஒரு இருபடிய எச்சமல்லாதது என்பதை formula_16 என்றும் + +குறிகாட்டுவோம். + +formula_17 + +formula_18 க்கு தீர்வு கிடையாது. formula_19 + +formula_21 + + + + +formula_34 + +காஸின் இருபடிய நேர் எதிர்மை இப்பொழுது ஒரு எளிதான வாசகத்தைக்கொள்கிறது: + +எ.கா.: formula_36 இன் ஒரு இருபடிய எச்சமா அல்லவா என்பதைப்பார்ப்போம்: + += formula_38 + +formula_39 + +formula_40 இன் இருபடிய எச்சமே. + + + + + +தமிழ் கிறித்துவப் பாடல்கள் + +கிறித்தவ சமயத்த��ல் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறித்தவ பாடல்கள் என்று குறிப்பிடலாம். + +கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உட்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். சீர்திருத்தத் திருச்சபைகளில் பாடல்களில் இயேசு, அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் ஆகியவை இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன. + +இவற்றுக்கு மேலதிகமாக கத்தோலிக்க திருச்சபையில் மரியாள் மற்றும் ஏனைய புனிதர்கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன. + + + + + +கனடியத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் + +1990 களின் இறுதியில் கனேடியத் தமிழ் இளையவர்கள் மத்தியில் மிகுந்திருந்த வன்முறை குழுச் சண்டைகள் மற்றும் பிற பிரச்சினைகளில் இருந்து அவர்களுக்கு நல்வழிகாட்ட கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்களாலும் பட்டதாரிகளாலும் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பே கனடியத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் கனடிய தமிழ் இளையவர்களை கனடிய மைய நீரோட்டத்தோடு ஆக்கபூர்வமாக இணைந்து இயங்க உதவுதல் ஆகும். அந்நோக்கில் பல முன் உதாரணங்களை எடுத்துக்காட்டி, தாமே முன் உதாரணங்களாக செயற்பட்டு இயங்கி வருகின்றார்கள். + + + + + + +எஸ். ராம்தாஸ் + +எஸ். ராமதாஸ் (இறப்பு: சூலை 13, 2016) இலங்கையின் புகழ் பெற்ற வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். இலங்கையில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். நகைச்சுவைப் பாத்திரங்களிலும், குணச்சித்திரப் பாத்திரங்களிலும் பிரகாசித்த சிறந்த நடிகர். "மரிக்கார்" ராமதாஸ் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டவர். + +கலைவாழ்வில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த வகையில் 1990இல் தனது கலையுலக சகாக்களான ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் ஒரே மேடையில் வெள்ளிவிழா கொண்டாடியவர். + +இலங்கை வானொலியில் வர்த்தகசேவையில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதி, நடித்ததோடு தயாரித்தும் வழங்கியவர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய "கோமாளிகள் கும்மாளம்" என்ற பிரபலமான நாடகத்தொடரை இவரே எழுதியதோடு, 'மரிக்கார்' பாத்திரத்திலும் நடித்து அதையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவர். இதுவே பின்னர் 'கோமாளிகள்' என்ற பெயரில் திரைப்படமாகியது. கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய வானொலித் தொடர்நாடகமான 'கிராமத்துக்கனவுகள்' நாடகத்தில் யாழ்ப்பாண கிராமத்தில் வாழ்ந்த ஒரு இந்திய ஆசிரியராக குணசித்திர பாத்திரத்தில் நடித்து உருக வைத்தவர். + +'மலையோரம் வீசும் காற்று', 'எதிர்பாராதது', 'காணிக்கை' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததோடு எழுதித் தயாரித்தும் இருக்கிறார். + + + +மரிக்கார் எஸ்.ராம்தாஸ் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் 2016 சூலை 13 அதிகாலை தனது 69வது அகவையில் சென்னையில் காலமானார். + + + + +வி. வி. வைரமுத்து + +வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். + +யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3 ஆம் வகுப்பில் சேர்ந்தார். பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் சங்கீத வித்துவானாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். 1944 இல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். + +இலங்கை திரும்பியவருக்கு இரத்தினபுரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. நாடகக் கலையில் ஆர்வமுள்ள வைரமுத்து, அடிக்கடி விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்து மேடை நாடகங்களில் நடிப்பார். இதனால் இவரின் ஆசிரியர் வேலை பறி போனது. கலைப்பணி மீது கொண்ட பற்றால் ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே வைரமுத்துவுக்கு முதலில் கிடைத்தது. சத்தயவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாக நடித்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாகவும், ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளியாகவும், நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளகவும் பெண் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். + +1950 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்திலேயே வைரமுத்து முதன் முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது மயான காண்டம் என்னும் இசை நாடகம். இது இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது. + +இலங்கை வானொலியில் பல இசை நாடகங்களை வழங்கினார். மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஜலதங்கரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பவளவிழாவின் போது இவர் பாடி நடித்த 'நந்தனார்' இசை நாடகத்தை ஒலிப்பதிவு செய்து இறுவட்டாக வெளியிட்டார்கள். இலங்கை வானொலியில் முதல் முதலாக வெளிவந்த நாட்டுக்கூத்து நாடகம் இதுவாகும். + +கலைஞர் ஏ. ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் இவரது 'மயானகாண்டம்' இசை நாடகத்தின் பகுதியும் இணைக்கப்பட்டது. + +முனைவர் காரை சுந்தரம்பிள்ளை இவர்பற்றிய ஆய்வு நூலாக ' நடிகமணி வி.வி. வைரமுத்து வாழ்வும் அரங்கும்' என்ற நூலை எழுதியுள்ளார். + + +வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார். + + + + + +எண் கோட்பாடு + +கணிதத்தில் எண் கோட்பாடு (Number Theory) ஒரு முதன்மையான பழமையான பிரிவு. 19ம் நூற்றாண்டிலிருந்து தான் இது ஒரு தனிப் பிரிவாகக் கருதப்படத் தொடங்கியது. இன்று அது மற்ற எல்லாப் பிரிவுகளுடன் நன்கு கலந்து ஒரு பிரச்சினையை அணுகும்போது இது எண் கோட்பாட்டின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமா என்று சொல்லமுடியாத அளவுக்கு வளர்ந்து ஆனாலும் ஒரு தனிப்பிரிவாக உள்ளது. இதனுடைய பல வளர்வுகளைப் பற்றி சிறு குறிப்புகள் கொடுக்க முயல்கிறது இக்கட்டுரை. + +கிரேக்க காலத்திய யூக்ளீடின் 'பகா எண்கள் முடிவிலாதவை' என்ற தேற்றமும் இரட்டைப்படை செவ்விய எண்ணைப்பற்றிய (Perfect number) விபரமும் முதன்முதலில் எண் கோட்பாடு என்ற பிரிவில் சேர்க்கக்கூடிய முக்கிய கண்டுபிடிப்புகள். நான்காவது நூற்றாண்டில் எண் கோட்பாட்டில் சிறந்து விளங்கியவர் அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த டயோஃபாண்டஸ். ஜூலியன் என்று பெயருடைய அரசன் (361-363) காலத்தியவர் டயோஃபாண்டஸ் என்றும் அவர் 84 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று மட்டும் தெரிகிறது. அவருடைய "எண்கணிதம்" (Arithmetic) என்ற நூல் 13 புத்தகங்களைக் கொண்டது என்று அவர் தானே அதற்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரிகிறது. 1621 இல்தான் முதன் முதல் அவருடைய நூலில் கிடைத்துள்ள பாகங்கள் அச்சாகின. அவருடைய ஆய்வுகளில் மிகப் பிரசித்தமானது தேரவியலாச் சமன்பாடுகளின் வழிமுறைகள். + +தேரவியலாச் சமன்பாடுகள் (Indeterminate Equations) முதன்முதலில் இந்தியக் கணிதத்தில், கிறிஸ்து சகாப்தத்தில் முதல் சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பாக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் காணப்படுகின்றன. இந்தியக் கணித நிபுணர்கள் பிரம்மகுப்தர் (7ம் நூற்றாண்டு), பாஸ்கரர் I (600 - 680), பாஸ்கரர் II (1114-1185) தேரவியலாச் சமன்பாடுகளைப் பற்றி பற்பல தீர்வு முறைகளைக் கண்டுபிடித்து எழுதியுள்ளனர். பாஸ்கரர் II வின் சக்ரவாள முறை இன்றும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. + +காலக்கிரமத்தில் தனிப்பட்ட தேற்றங்கள், விபரங்கள், யூகங்கள் முதலியவை வந்துகொண்டே இருந்தன. 17வது நூற்றாண்டில் ஃபெர்மா (1601-1665) பல்வேறு கணிதப் பிரச்சினைகளில் பங்களித்தார். அக்காலத்தில் தற்காலம் போல் கணிதத்திலோ வேறு அறிவியலிலோ ஆய்வுப் பத்திரிகைகள் கிடையாது. அதனால் யார் எதைக் கண்டுபிடித்தாலும் தனக்குத் தெரிந்த சில அறிவியலாளர்களுடன் அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் கடிதப் போக்குவரத்தில் தான் அவைகளை எழுத்தில் வடிப்பார்கள். அப்பொழுதும் ஒரு தேற்றத்தைக் கண்டுபிடித்தவர் அதனுடைய முழு நிறுவலையும் கொடுத்துவிடமாட்டார். இம்மாதிரி கடிதப் போக்குவரத்துகளில் ஃபெர்மாவுக்கு நிறைய பங்கு உண்டு. ஆனால் ஃபெர்மாவின் கடிதங்களில் பல Father மெர்சீன் (1588-1648) மூலமாகத்தான் வெளி உலகத்திற்குப் போயின. ஃபெர்மா வாழ்ந்த காலத்தில் அவரை மிஞ்சின கணித இயலர் ஒருவருமில்லையென்று தெரிகிறது. + +ட்யோஃபாண்டஸின் 'எண்கணிதம்' என்ற மதிப்பு மிகுந்த நூலின் ஒரு பிரதி ஃபெர்மாவிடமிருந்தது. அதில்தான் அவர் ஒரு இடத்தில் பக்க ஓரத்தில் இதற்கு எனக்கு நிறுவல் தெரியும், ஆனால் பக்க ஓரத்தில் அதை எழுத இடமில்லை என்று எழுதிவைத்துவிட்டுப் போனார். வரலாற்றுச் சிறப்பு பெற்ற அந்தக் குறிப்புதான் பெர்மாவின் கடைசித் தேற்றம் என்ற பெயரில் நான்கு நூற்றாண்டுகளுக்கு கணித உலகத்தையே ஆட்டிவைத்தது. + +கணித இயலர் கார்ல் பிரெடெரிக் காஸ்(1777-1855) என்பவர் கி. பி. 1798 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆராய்ச்சிப் பட்டப் படிப்பிற்குரிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அக்கட்டுரையில் n படிப் பல்லுறுப்புக் கோவைக்குச் சரியாக n தீர்வுகள் உண்டு என்று நிரூபித்துக் காட்டினார். இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றமாக இவருடைய இந்த முடிபுகள் உள்ளன. மேலும், 1801 இல் 'எண்கணித உரைகள்' (Disquisitiones arithmeticae) எழுதினார். தற்கால எண் கோட்பாட்டின் தொடக்கம் இதுதான் என்று கூறும்படி இந்நூல் இதற்கு முன்னால் எண் கோட்பாட்டில் புழங்கிய தேற்றங்களும் மற்ற விபரங்களும் ஒரு சீரான கோட்பாடாக விளங்கும்படிச்செய்தது. மாடுலோ என்கணிதம் என்ற முறையை அறிமுகப்படுத்தி காஸ் எண்கோட்பாட்டின் சிதறிய பாகங்களையெல்லாம் ஒன்றுசேர்த்தார். இந்நூலில் ஏழு பிரிவுகள் இருந்தன. அவை + +இவைகளில் பல தனிப்பட்ட பாகங்கள் ஏற்கனவே ஃபெர்மா, ஆய்லர் (1707-1783), லாக்ராஞ்சி(1736-1813), லெஜாண்டர்(1752-1833) முதலியவர்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், காஸ் அவைகளெல்லாவற்றையும் தன்னுடைய பொதுத் தேற்றங்களிலிருந்து கொண்டுவந்தது இந்நூலின் சிறப்பு. எடுத்துக்காட்டாக, formula_1 என்ற உருவமுடைய எந்த பகா எண்ணும் இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகை, அதுவும் ஒரே ஒரு வழியில்தான், என்ற ஃபெர்மாவின் சுவையான தீர்வு காஸின் இரும இருபடிய அமைப்புகளின் பொதுக்கோட்பாட்டிலிருந்து இயல்பான முறையில் உருவாகிவிடுகிறது. + +எல்லாவற்றிலும் தலைதூக்கி நின்றது இருபடிய நேர் எதிர்மை என்ற கடினமான, ஆனால் சுவையான, தேற்றமும் அதன் பயன்பாடும். + +பகா எண் என்ற கருத்து தோன்றிய காலத்திலிருந்து பகா எண்கள் எவ்வளவு இருக்கும்? எப்படிப் பரவி இரு��்கும்? என்ற கேள்விகள் முதன்மையான பிரச்சினைகளாயின. + +கணிதத்தில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பிரச்சினைகளில் முதல் இடம் வகிக்கும் பிரச்சினையான ரீமான் கருதுகோள் பிரச்சினை க்கும் பகாஎண்களின் எண்ணிக்கை பிரச்சினைக்கும் மிகச்சிடுக்கான வழியில் பிணைப்புள்ளது. 1859 இல் பெர்ன்ஹார்ட் ரீமான் (1826-1866) இனால் முன்மொழியப்பட்டு இன்று வரையில் தீர்வு இல்லாமல் இருந்து கொண்டிருக்கிற இக்கருதுகோள் பிரச்சினை ரீமான் ஜீட்டா-சார்பு என்ற ஒரு புகழ் வாய்ந்த சார்பின் சுழிகளைப் பற்றியது. இதன் வரையறை: + + +இங்கு formula_3 என்ற மாறி ஒரு சிக்கலெண் மாறி. formula_4. formula_5 வும் formula_6 யும் மெய்யெண்கள். formula_7 என்பது கற்பனை அலகு. + +இச்சார்பில் formula_8 ஆக இருந்தால் formula_9 என்பது தெரிந்த விஷயம். இவைகளை வெற்றுச்சுழிகள் (trivial zeros) என்பர். வெற்றல்லாத சுழிகளைப் பற்றியது ரீமான் கருதுகோள். + +formula_4 என்ற சிக்கலெண் ரீமான் ஜீட்டா சார்பின் வெற்றல்லாத சுழியாயிருந்தால், formula_11. என்பது ரீமானின் யூகம். அதாவது, சிக்கலெண் தளத்தில், வெற்றல்லாத சுழிகளெல்லாம் formula_11 என்ற செங்குத்துக்கோட்டில் தான் இருக்கும். + +பகா எண்களின் பட்டியல்களைக் கவனமாக ஆய்ந்ததில் காஸ், லெஜாண்டர் (1752-1833)முதலியோர் பகா எண் தேற்றம் என்றதோர் தேற்றத்தை யூகமாக முன்மொழிந்தனர். இத்தேற்றம் பகா எண் தேற்றம் என்று பெயர் பெற்றது. அதிலுள்ள ஆங்கிலச்சொற்களின் (Prime Number Theorem) முதல் எழுத்துக்களை வைத்து PNT என்றும் புழக்கத்தில் குறிக்கப்பட்டது. + +டிரிச்லே (1805-1859)யின் தேற்றம்: a,d என்பவை இரண்டு பரஸ்பரப் பகாதனிகள் என்றால் a(mod d) க்கு சமானமாக முடிவிலாத எண்ணிக்கை கொண்ட பகாஎண்கள் இருக்கும். இத்தேற்றம் பகா எண்கள் முடிவிலாத அளவில் இருக்கும் என்ற யூக்ளீடின் தேற்றத்தை நுண்புலப்படுத்திய தேற்றம். இதை நிறுவுவதற்கு டிரிச்லே பகுவியல் முறைகளைக்கொண்டுவரவேண்டியிருந்தது. இதிலிருந்து எண் கோட்பாட்டில் தொடங்கிய முறைகளெல்லாம் சேர்ந்து பகுவிய எண் கோட்பாடு (Analytic Number Theory)என்ற பிரிவாக இயங்குகிறது. + +முதல் formula_13 நேர்ம முழு எண்களில் எவ்வளவு எண்கள் பகாதனிகளாக இருக்கும்? இந்த எண்ணிக்கையை formula_14) என்று அழைப்பது வழக்கம். இதற்கு ஒரு தோராய மதிப்பைத் தருவதுதான் பகா எண் தேற்றம். இதை 1898 இல் தனித்தனியே நிறுவியவர்கள் ஹாடமார்டும் டெ லா வாலி புவாஸான் என்பவரும். இதன்படி + +formula_15 இன் தோராய மதிப்பு formula_16. அதாவது, formula_13 முடிவிலியை நோக்கி ஒருங்கும்போது, + +இந்த நிறுவலில் ரீமன் இசீட்டா சார்பியம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1948 இல் ஸெல்பர்க், பால் ஏர்டோசு இருவரும் சேர்ந்து இதற்கு ஒரு மாற்று நிறுவல் கொடுத்தார்கள். அதில் ரீமான் ஜீட்டா சார்பின் தேவையில்லை. அதனால் இதற்கு 'பகா எண் தேற்றத்தின் சாதாரண நிறுவல்' (Elementary Proof of PNT) என்று பெயர் வந்தது. + +தொடர் மாறிகளையும் சார்புகளையும் பற்றிப் பேசும் கணிதப்பிரிவு பகுவியல் எனப்படும். இயல் எண்களின் பண்புகளைப் பற்றிப் பேசுவது எண் கோட்பாடு. இவ்விரண்டுக்கும் ஒரு இன்றியமையாத பிணைப்பு இத்தேற்றத்தின் மூலம் ஏற்படுகிறது. இது கணிதத்தில் ஒரு விந்தையே. + +விகிதமுறாஎண்களின் வரையறைகளையும் அதை ஒட்டி அவைகளின் கோட்பாடுகளையும் டெடிகிண்ட் (1831-1899) செய்தார். அவர்தான் சீர்மங்களின் கோட்பாட்டைத் தொடங்கிவைத்தவர். இதற்கு மூலப் பொருளே இயற்கணிதம் தான். முக்கியமாக ஒரு எண்ணை அதன் காரணிகளின் பெருக்குத் தொகையாகக் காட்டுவதில், (அ-து, formula_19) உள்ள சிக்கல்களில் இவ்வாய்வு ஆரம்பித்து, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்காக வெகுவாக வளர்ந்து இன்று இயற்கணித எண் கோட்பாடு (Algebraic Number Theory) என்று எண் கோட்பாட்டின் ஒரு பிரிவாகவே பிரிந்து இயங்கி வருகிறது. + +எர்னெஸ்ட் கம்மர் (1810 - 1893) கணிதத்தின் பல துணைப் பிரிவுகளில் பங்களித்திருக்கிறார். ஆனால் அவர் எண் கோட்பாட்டில் அளித்த பங்கு குறிப்பிடத்தக்க பங்கு. ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தின் தீர்வுக்காக பாரிஸ் அகாடெமி 3000 பிரான்க் பெறுமானமுள்ள ஒரு தங்கப் பதக்கம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. யாருடைய பங்களிப்பும் பரிசளிப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றாதபடியால் அப்பரிசை யார் அதிக அளவிற்கு இத்தேற்றத்தின் தீர்விற்கு உதவியளிக்கும்படி பங்களித்திருக்கிறார்களோ அவருக்குக் கொடுப்பது என்று தீர்மானித்து, 1849 இல் அப்பரிசை கம்மருக்களித்தார்கள். ஃபெர்மாவின் கடைசித்தேற்றம் ஒரு குறிப்பிட்ட பகா எண் வகைகளுக்கு உண்மையாகும் என்பது கம்மரின் தீர்வு. இந்தப் பகா எண் வகையை ஒழுங்குப்பகா எண்கள் (Regular Primes) என்பர். கம்மர், க்ரானெக்கர் முதலியோர் இயற்கணித என் கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள். + +டயோஃபாண்டஸ் சிர்க்கா என்னும் நகரத்தில் வாழ்ந்தவராகக��் கூறப்படுகிறது. டயோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஷ்டிக் கணித அறிஞர் என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலத்தை ஒருதரப்பினர் கி. பி. 200 இலிருந்து கி. பி. 284 என்றும், மற்றொரு தரப்பினர் கி. பி. 214 இலிருந்து கி. பி. 294 என்றும் எடுத்துரைக்கின்றனர். இவர் பதின்மூன்று புத்தகங்கள் அடங்கிய "அரித்மேட்டிகா" என்னும் நூலின் தொகுப்பாசிரியர் ஆவார். இந்நூல் கணிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும். மேலும், இந்நூலில் தற்போது ஆறு நூல்கள் மட்டுமே எஞ்சிக் காணப்படுகின்றன. வடிவியல் முறைகள், பாபிலோனியக் கணிதவியல் ஆகியவற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. தோராய தீர்வுகளுக்குப் பதிலாக, இவர் எப்போதும் துல்லியமிக்க தீர்வுகளையே முன்னிலைப்படுத்தினார். எனினும், இந்த நூலானது கிரேக்க மரபுக் கணிதவியல் விளக்கங்களுடன் சிறிதளவே பொதுவாகக் காணப்பட்டது. + + + + + + + +றாமென் + +யப்பானில் றாமென் பல வகைகளில் கிடைக்கிறது. இவை உணவகம், புவியியல் அமைவு என்பவற்றுடன் வேறுபடக்கூடியது. பொதுவாக றாமென் இரண்டு முக்கியக் கூறுகளைக் கொண்டது. அவையாவன நூட்ல்ஸ், சூப் என்பனவாகும். + + + + + +1781 + +1781 (MDCCLXXXI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + + +சிம்மவிஷ்ணு + +சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான். + +சிம்மவிஷ்ணுவின் ஆட்ச��க்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர். + +சிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான். + +சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம். + +சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்ப்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான். + + + + + + +1888 + +1888 (MDCCCLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +தம்பையா ராஜகோபால் + +ரி. ராஜகோபால் என அழைக்கப்படும் தம்பையா ராஜகோபால் (பிறப்பு: 4 அக்டோபர் 1942), இலங்கையின் புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகர். ஐநூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். "அப்புக்குட்டி ராஜகோபால்" எனவும் இவர் அழைக்கப்பட்டார். + +யாழ்ப்பாணத்தில், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் ஆரம்பக் கல்வியை மானிப்பாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1959 ஆம் ஆண்டில் குறிப்பாகக் கல்லூரிக் காலங்���ளில் இல்லப்போட்டிகளின் கலைவிழாக்களில் நடிகனாக கால் பதித்தார். 1960களில் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிந‌டத்தலில் ‘தேரோட்டி மகன்’ நாடகத்தின் மூலம் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தவர். "கோமாளிகள்" நாடகக் குழுவில் யாழ்ப்பாணத் தமிழில் பேசும் 'அப்புக்குட்டி' பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பமாகும். மூத்த சகோதரர்களான அரியரட்னம், மெய்கண்டதேவன், இளைய சகோதரர் தயாநிதி ('நையாண்டி மேளம்' நடிகர்) ஆகிய அனைவரும் நாடகக் கலைஞர்களே. + +1990ல் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தன் கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர். + +இலங்கை வானொலியில் வர்த்தக சேவை, தேசிய சேவை இரண்டிலும் ஏராளமான நாடகங்களில் நடித்த்வர். எஸ்.ராம்தாஸின் 'கோமாளிகள் கும்மாளம்', கே. எஸ். பாலச்சந்திரனின்' கிராமத்துக் கனவுகள்' போன்ற பல தொடர் நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும், குணசித்திர பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். + +கோமாளிகள், ஏமாளிகள் போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். + +கே. எம். வாசகர் ("புரோக்கர் கந்தையா", "பார்வதி பரமசிவம்"), எஸ். ராம்தாஸ் ("காதல் ஜாக்கிரதை", "கலாட்டா காதல்"), எஸ். எஸ். கணேசபிள்ளை ("கறுப்பும் சிவப்பும்") ஆகியோரின் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். + + + + + + +வின்ரவுட் + +கேரியோ வின்ரவுட் பயர்வால் ரைனி சாப்ட்வேர் மற்றும் கேரியோ ரெக்னோலொஜிஸ் விருத்தி செய்பட்ட பாதுகாப்புச் சுவர் (பயர்வால்), புரொக்சிசேவர், DHCP சேவர் மற்றும் DNS வசதிகளுடன் கணினி ஒன்றிற்கான இணைய வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதியுடைய ஓர் மென்பொருள் ஆகும். இதில் ஒருங்கிணைக்கப்பட்ட மெக்காபி McAfee ஆண்டிவரைஸ் வசதிகளுடன் இணையத்தில் உள்ள தேவையற்றவற்றை கட்டுப்படுத்தும் வசதிகளும் உடையது. + + + + +புகழேந்திப் புலவர் (நளவெண்பா) + +புகழேந்திப் புலவர் என்னும் பெயருடன் இருவேறு காலங்களில் இருவேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர். +புகழேந்தி நளவெண்பா எழுதிய புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். புகழேந்தியும், புலவர் ஒட்டக்கூத்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார். + +எந்தெந்ந வகையான பாடல்களில் யார் யார் சிறந்து விளங்கினர் என்பதைத் தெரிவிக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை வெண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது. + +புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகவும், பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்துக் கொண்ட போது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், புகழேந்தி மீது பொறாமை கொண்டான் என்றும் கூத்தனுக்கும் புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும், கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள். + +செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாக இருக்கவேண்டும். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதே! புகழேந்தி ஒட்டக்கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்திருக்க வேண்டும், புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர் இதன் காரணமாகவே வழக்கத்தில் இருந்தது. நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது, சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; இதன் காரணமாகத் தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் மட்டுமே கையாளக் கூடியதாக வெண்பா இருந்தது, அத்தகைய இலக்கணங்கள் உடைய வெண்பாவில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக புலவ புகழேந்தி இருந்தார். புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையனவாகயிருந்தன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது. + +இலக்கியச் சிறப்பில்லாத வேறு பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புப்படுத்திச் சொல்லும் மரபாகத்தான் இதைப் பார்க்க முடியும் ஏனென்றால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறுதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை. + +மாளுவ நாட்டில் "முரணைநகர் சந்திரன் சுவர்க்கி" என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம். + + + + + +சூறாவளி டீன் (2007) + +டீன் சூறாவளி (Hurricane Dean) 2007 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் நான்காவது பெயர் சூட்டப்பட்ட புயலும், முதல் சூறாவளியும், முதல் தரம் 5 இலான சூறாவளியுமாகும். 2005 ஆம் ஆண்டு சூறாவளி "வில்மா"வுக்கு பின் ஏற்பட்ட மிகவும் செறிவான அயனமண்டல சுழல் காற்றாகும். டீன், பதிவுகளில் உள்ள சூறாவளிகளில் 9வது பலம்மிக்க சூறாவளியும் தரைத்தட்டிய சூறாவளிகளில் 3வது பலமிக்கதுமான சூறாவளியாகும். கேப் வேர்டே வகை சூறாவளியான டீன் கரிபியக் கடலில் வடமேற்கு திசையான பாதையில் ஆகஸ்டு 20 இல் யமேக்காவுக்கு சற்று தெற்காக கடந்து சென்று ஆகஸ்டு 21 இல் யுகடான் தீபகற்பத்தில் தரைத்தட்டி கம்பாச்சி குடாவை அடைந்தது, மீண்டும் மெக்சிகோவின் டெகுலூட்டாவுக்க்கு அண்மையில் ஆகஸ்டு 22 இரண்டாவது முறை தரைத்தட்டியது. டீன் சூறாவளியால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளதோடு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. + +15 ஆண்டுகளின் பின்னர் அத்திலாந்திக் கடலில் தரம் 5 இலான சூறாவளியாக தரைத்தட்டிய முதல் சூறாவளி டீன் ஆகும். இதற்கு முன்னர் சூறாவளி "அன்றுவ்" ஆகஸ்டு 24 1992 இல் தரம் 5 இலான சூறாவளியாக தரைத்தட்டியது. டீன் அன்றுவை விட பாரிய சூறாவளியானாலும் டீன் மக்களடர்த்தி குறைவான பகுதியில் தரைத்தட்டியதால் சேதங்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. + +ஆகஸ்டு 11, 2007, ஆபிரிக்காவின் மேற்கு கரையிலிருந்து நகர்ந்த அயனமண்டல அலை, சாதகமான வானிலைக் காரணிகளிகளை எதிர்க் கொண்டதன் காரணமாக மிக விரைவாக அயன மண்டல தாழ் அமுக்கம்-4 ஆக கேப் வேர்ட்க்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 520 மைல் (835 கி.மீ) தொலைவில் வளர்ச்சியடைந்தது. இத்தாழ் அமுக்கம் மேற்கு திசையாக கடந்துச் சென்று ஆகஸ்டு 14, 1500 UTCக்கு அயனமண்டல புயல் டீனாகா தரமுயர்ந்தது. வடக்கில் இருந்தான குளிர்ந்த உளர் வளி டீனின் வளர்ச்சியை தடுத்தாலும சுழல்காற்றின் செறிவு தொடர்ந்து அதிகரித்தது. ஆகஸ்டு 15 அன்று சுழல்காற்றில் பட்டைகள் தோன்றின புயலின் கண் அதே நாள் பின்நேரம் தென்பட்டது. + +சுழல் காற்றின் செறிவு அதிகரித்து, ஆகஸ்டு 16, 0900 UTCக்கு சூறாவளி டீனாக தரமுயர்ந்தது. வானிலைக் காரணிகள் டீனை மேற்குத் திசையாக கரிபியக் கடலை நோக்கி நகரச் செய்தது. சூறாவாளி விரைவாக தரம் 2 இலான சூறாவளியாக செறிவடைந்தது. வளர்ச்சி சிறிது மந்தப் பட்டது ஆனாலும் சூறாவளி அவதானிப்பு விமானாம் ஆகஸ்டு 17 அன்று டீனின் கண் மூடப் பட்டிருப்பதை அவதானித்தது. விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி டீன் தரம் 3க்கு செறிவடைந்திருப்பது அறியப்பட்டது. அந்நேரம் சூறாவளியின் பட்டைகள் Lesser Antillesக்கு மேலாக காணப்பட்டன. ஆகஸ்டு 17 மாலையில் டீன் தரம் 4க்கு செறிவடைந்தது, இரவில் செறிவு மற்றும் பருமனிலும் வளர்ச்சிக் கண்டது. ஆகஸ்டு 18 இல் இரட்டை கண் சுவர்கள் அவதானிக்கப்பட்டன. இவ்விரட்டை கண் சுவர்களின் பறிமாற்றம் டீனின் செறிவில் தலம்பல் நிலையை ஏற்படுத்தியது. இத்தலம்பல்கள் சூறாவளியை பாதிக்கவில்லை. கண்சுவர் பரிமாற்றத்தை முடித்து, ஆகஸ்டு 19 காலையில் டீன் செறிவில் சிறு வீழ்ச்சியைக் கண்ட நிலையில் யமேக்காவை எட்டியது. + +சூறாவளி டீன் ஆகஸ்டு 19 மாலையில் யமேக்காவுக்கு தெற்காக கடந்து சென்று அன்றிரவு மீண்டும் செறிவடைய தொடங்கியது. சூறாவளியின் கண்பறிமாற்றம் முற்றுப் பெற்றதாக கருதப்பட்டது. ஆகஸ்ட் 20 காலையில் மீண்டும் இரட்டை கண் சுவர் தென்பட்டது இர்ப்பினும் அது சிறிது நேரத்தில் மறந்தடது. வடக்கே காணப்பட்ட உயர் அமுக்கம் காரணமாக மேற்கு- வடமேற்காக வெப்பமான கடலுக்கு மேலாக தொடர்ந்து நகர்ந்த சூறாவளி டீன் மீண்டும் செறிவடைய தொடங்கியது. கண்சுவர் தெளிவாக தெரியத்தொடங்கியது. ஆகஸ்டு 21 0035 UTCக்கு டீன் சரிப் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் மிகக் கூடிய தரமான, தரம் 5 இலான சூறாவளியாக தரமுயர்த்தப்பட்டது. டீன் தரம் 5இலான சூறாவளியாக யுகாடான் தீபகற்பத்தில் தரைத்தட்டியது. தரயில் செறிவு குன்றிய டீன் யுகடான் தீபகற்பத்தின் மேற்கில் தரம் 1இலான புயலாக மெக்சிகோ குடாவை எட்டியது. மெக்சிகோ குடாவில் தரம் 2இலான புயலாக செறிவடைந்த டீன் ஆகஸ்டு 22 11.30 CDTக்கு டெகுலூட்டாவுக்கு அண்மையில் தரைத் தட்டியது. அங்கிருந்து மேற்காக நகர்ந்த டீன் மத்திய மெக்சிகோவுக்கு மேலாக தனது செறிவை இழந்து மறைந்தது. + +சுமார் 12 சுற்றுலாப்பயணக் கப்பல்கள் சூறாவளி டீன் காரணமாக தமது பாதையை மாற்றியமைத்துக் கொண்டன. மசகு எண்ணெய்க் கிணறுகள் பாதிப்படையும் என்ற ஆய்வளர்களில் கருத்துக் காரணமாக எண்ணெய் கேள்வி அதிகரித்தது. ஆகஸ்டு 15 இல் டிரான்ஸ் ஓசன் நிறுவனம் சூறாவளியின் பாதையில் இருந்த தமது எண்ணெய் கிணறுகளில் இருந்து அத்தியாவசியமற்ற 11 பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது. ஆகஸ்டு 16 இல் செல் நிறுவனம் சூறாவளியின் பாதையில் இருந்த தமது எண்ணெய் கிணறுகளில் இருந்து 275 மேலதிக பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது. + +ஆகஸ்ட் 18, 2007 இல் ஒரு நாளுக்கு 10,300 பெரல் மசகு எண்ணெயும் (1,210 m³) 11 மில்லியன் கன அடி (310,000 m³) இயற்கை எரிவளியும் உற்பத்தி குன்றியது. மெக்சிகோ அரச மசகு எண்ணெய் நிறுவனமான பேமெக்ஸ் ஆகஸ்ட் 19 இல் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி தமது 13,360 பணியாளர்களை வேறு இடங்களுக்கு அனுப்பியது. + +சூறாவளீ டீனின் பாதிப்பு 15 நாடுகளில் உணரப்பட்டதோடு மொத்தம் 42 மரணங்கள் ஏற்பட்டது. + + + + + + +சுவாசிலாந்து + +சுவாசிலாந்து இராச்சியம் ("Kingdom of Swaziland") தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடாகும். ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்நாட்டின் கிழக்கே மொசாம்பிக் நாடும் மற்றைய பகுதிகள் யாவும் தென்னாப்பிரிக்காவும் சூழ்ந்துள்ளன. இந்நாடு பண்டு ஆதிவாசிகளைச் சேர்ந்த சுவாசி இனத்தின் பெயரை அடியாகக் கொண்டது. + + +சுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன. +இதன் தலைநகரான உம்பானேயில் ("Mbabane") 67,200 பேர் (2004) வசிக்கிறார்கள். +சுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றானாலும், இது உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகும். +இதன் 38.8% வீதமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொட்சுவானாக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிகமானோர் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளார்கள். + +82.70% வீதமானோர் இங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம்: 0.95%, பஹாய்: 0.5%, மற்றும் இந்து: 0.15%. + + + + + +1522 + +1522 (MDXXII) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். + + + + + + +லாகூர் + +லாகூர் (Lahore) (உருது: "لاہور", பஞ்சாபி மொழி: "لہور", "lahore") பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும். பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா) பண்பாடு மையமாக லாகூர் விளங்குகிறது., பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. + +லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாக்கித்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது. + +லாகூரின் துவக்கமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் பாக்கித்தானின் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது. + +பின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது. பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாக்கித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக லாகூர் உள்ளது. + +லாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-பிருனி எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் எழுத்தாளர் 11-ஆம் நூற்றாண்டில் தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் லாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார். அமீர் குஸ்ராவ் எனும் எழுத்தாளர் தில்லி சுல்தானகத்தில் வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்புத்தின் காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + + +கவுண்டர் + +கவுண்டர் என்ற சொல் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும். +கவுண்டர் என்பது ராஷ்டரகூட அரசர்கள், நுளம்ப பல்லவ வேந்தர்கள், ஆட்சியில் நாடு அல்ல��ு ஊர் அதிகாரம் பெற்றவர்.காமுண்டன் எனச் சொல்லப்பட்டார். இப்பெயர் இந்நாட்டில் வந்து காமிண்டன் என்று திரிந்தது போலும் - காமுண்ட - காமிண்ட என்னும் பெயர், கிராமப் பெரிய தனக்காரர்கள் பெற்று நாளடைவே காவண்ட - காவுண்ட என்று, பின் கவண்ட - கவுண்ட என்று மருவிற்று என்பது சாசன பரிசோதகர்கள் கருத்து.இது போலவே கன்னட தேசத்தார் கவுடு என்று வழங்குகிறார்கள் - கவுண்டிக்கை என்பது ஊர்ப்பெரிய தனத்தைக் குறித்ததாக வழக்கத்திலிருக்கிறது.நாட்டுக் +கவுண்டன் - ஊர்க் கவுண்டன் என்பதாலறியலாம்.முதன்மையாளர் கொள்ளும் பெயரை அவர்கள் சுற்றத்தவர்களும் பாராட்டலாயினர். இக்கொங்கு நாட்டுப் புறங்களில் அங்கங்கு ஊர் முதன்மை பெற்றுள்ளவர்களான வேட்டுவர், வேளாளர், ஊராளிகள் மற்றும் படையாட்சி முதலிய வகுப்பினருள்ளுங் கவுண்டர் என்று வழங்கி வருதல் காண்கிறோம். .கொங்கு நாட்டில் முதல் முதலாக கவுண்டர் பட்டம் சூடிய பெருமை முழுவதும் கொங்கு வேட்டுவ கவுண்டர் இனத்தையே சேரும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் வேட்டுவக் கவுண்டர், கொங்கு வேளாளர்- கவுண்டர் என்று அழைக்கப்படுகின்றனர். "கவுண்டர் சமூகம்" என கொங்கு வேட்டுவக் கவுண்டர் சமுதாயமும் கொங்கு வேளாளர் சமுதாயமும் தமிழகத்தில் பொதுவாக அழைக்கப்படுகிறது.தமிழக அரசு வழங்கும் அரசு சாதி சான்றிதழிலும் வேட்டுவர் மட்டுமே கவுண்டர் என்னும் பட்டத்தை பெற்றுள்ளனர்.இவர்களை தவிர ஊராளிகள், வொக்கலிகர், மற்றும் வன்னியர் சமூகங்களின் சில பிரிவினரும் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர். + +கொலைத்தொழில் புரிந்தோர் கவுண்டர் என்று தமிழின் தொன்மையான நிகண்டான திவாகரம் நிகண்டு கூறுகிறது. +குணுங்கர், வங்கர், கவுண்டர், கனகதர், இழிஞர், கொலைஞர், புலைஞர் என்றங்கிசையும் பெயர் சண்டாளர்க்கெய்தும். எனவே போர்த்தொழில் செய்த சமூகங்களான வேட்டுவர்-களுக்கே இப்பெயர் மிகவும் பொருத்தமானதாக அறியப்படுகிறது பின்னாளில் வேளாளரும் தங்களை மேல்நிலையாக்கம் செய்யும் பொருட்டு கவுண்டர் என்னும் பட்டத்தை இணைத்துக்கொண்டனர். + +சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். + +சத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர். + +கொங்கு வேளாளர் காராளர் என்று சொல்லி வருகின்றனர்.காரளர் என்பவர்கள் வினைஞர்,பின்னவர்,சூத்திரர்,சதுர்த்தர், வளமையர்,மண்மகள் புதல்வர், வார்த்தை தொழிலோர், வண்களமர், சீர்த்தஏரின் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டுவந்தனர்.இதிலிருந்து கொங்கு வேளாளர் சூத்திரர் மரபினர் என்று சேந்தன் திவகாரம் நிகண்டு கூறுகிறது.சூத்திரர் என்னும் பெயர் பெற்ற அக்கால வேளாள மரபினர் கவுண்டர் பட்டத்தினை பெறவில்லை என்பது தெளிவாகிறது. + +சூத்திரர் என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வணிகர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர். + + + + + +கொங்கு வேளாளர் + +கவுண்டர் என்றுப் பொதுவாக அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள் . தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்பது பொருளென்று புலவர் ராசு கூறுகின்றார் . + +கவுண்டர்கள் இன்று பெருமளவு உழவிலும் தொழிற்��ுறையிலும் ஈடுபட்டு வருவதோடு தமிழக அரசியலிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். + +கவுண்டர்கள் + +கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார். 13ம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார். காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார். விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர். அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. + +தீரன் சின்னமலை - இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி, கொங்கு நாட்டை ஆண்டார். 1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். + +கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் 8 பேர் கொங்கு வேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே. இந்திய மத்திய அரசிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுகவைச் சேர்ந்த ஒரு கொங்கு வேளாளர் அமைச்சராக உள்ளார். கொங்கு வேளாளர் நலனுக்காக தமிழ்நாட்டில் இரு சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு முன்னேற்ற கழகமும் மற்றும் உ. தனியரசு தலைமையில் செயல்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை + +தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மாவட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கொங்கு வேளாளர்களுக்கு சொந்தமானவை. நாமக்கல் பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், கோழிப் பண்ணைகள் போன்ற தொழில்கள் கவுண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறை, பின்னலாடை, கனரக மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி நிறுவனங்கள், முட்டை மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கொங்கு வேளாளர்கள் ஈடுபட்டுள்ளனர். + +இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது. கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். + +கொங்கு வேளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கும் கூட்ட முறைய�� உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதெய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணங்குவதுடன் தமது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள். + +கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை "அருமைக்காரர்" என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது. + +கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. + +"நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்" +"அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய" +"தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்" +"நம்பிக்கை உண்டே நமக்கு." + +என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும். + +முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள். + +இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர். + +இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர். + +இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) - அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார். + +இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார். + +இரண்டாம் நாள் (இணைச்சீர்) - இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையைத் தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும். + +மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர். + +மூன்றாம் நாள் (முகூர்த்தம்) - இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல நாணைக் கட்டுவார். + +கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. + + +கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் பல சாதிய உட்பிரிவுகள் இருப்பினும் அவற்றில் முக்கியமானவை சில இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னராகவே தனி சாதியினராய் பிரிந்த வரலாறும் செப்பேடுகளில் பதியப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. + + +நாட்டு கவுண்டர்கள் கொங்குநாட்டின் 24 நாடுகளுக்கும் தலைமையான நாட்டாச்சி நடத்துபவர்கள் ஆவார்கள். இவர்கள் குடகொங்கு எனப்படும் காவிரிக்கு மேற்கு & தெற்கு கரைகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் அங்கமாகவும், மழகொங்கு எனப்படும் காவிரிக்கு கிழக்கு & வடக்கு கரைகளில் நாட்டு வெள்ளாள கவுண்டர் என்று வழங்கப்படும் தனித்த சாதியினராய் இன்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப்பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாய் கிடைக்கின்றன. மழகொங்கில் இவர்கள் பெரும்பாலும் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, இராசிப���ரம் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். மழகொங்கில் இருக்கும் நாட்டார் மட்டுமே நாட்டு கவுண்டர் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் இருந்து வருகின்றது. 13ஆம் நூற்றாண்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஹரூர் பகுதிகளில் இருந்த நாட்டு கவுண்டர்கள் அனைவரும் பெரும்பாலையை கடந்து காவிரிக்கரைக்கே வந்துவிட்டனர் என்ற கூற்று இருப்பினும் இன்றும் அப்பகுதிகளில் நாட்டு கவுண்டர் சிலர் இருக்கவே செய்கின்றனர். நாட்டாரில் இருந்து பிரிந்து வேறு இடத்தில் காணி வாங்கி ஆட்சி அமைப்பவர்கள் காணியாளர் எனப்பட்டார்கள். இவர்கள் காணியாட்சி நடத்துவார்கள். உதாரணமாக மோகனூர் மணியன் கூட்டத்தினர் மோகனூர் நாட்டாரில் ஒருவர். இவர்களில் இருந்து பிரிந்து முத்தூரில் முத்தன் குல பெண்ணை மணந்து சீதனமாக முத்தூர் காணியை வாங்கிய மணியன் கூட்டத்தார் முத்தூர் மணியன் எனப்பட்டனர். இவர்கள் காணியாளர்கள். பின்னர் கொங்கு நாட்டை கைப்பற்றிய வீரபாண்டியன் முத்தூர் மணியன் கூட்டத்தாரின் ஒரு குடும்பத்தை சேலம் அருகே வீரபாண்டி என்ற ஊரை உருவாக்கி அதன் நாட்டாச்சியை அவர்களிடம் பாண்டியன் ஒப்படைக்கிறார். இதனை புலவர் இராசு கொங்கு வேளாளர் குல வரலாறு எனும் நூலில் ஆதாரங்களுடன் பதித்துள்ளார். இன்றும் அவர்கள் வீரபாண்டி மணியன் என்று வழங்கப்படுகின்றனர். அவர்கள் மணவினை கொள்கைகள் மழகொங்கு நாட்டார்களுடன் மட்டுமே கொள்கின்றனர். + +கொங்கு 24 நாட்டின் நாட்டார் பிரிவுகள்: + + + + + + + + + + + + + + + + எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள்: +இவர்கள் இன்று தனி சாதியாய் உள்ளார்கள். ஆயினும் இவர்கள் தென்திசை வெள்ளாள கவுண்டர் / செந்தலைக் கவுண்டர்களே ஆவர். சோழர் காலத்தில் மழகொங்கின் நாட்டாட்சி நிர்வாகத்திற்காக இவர்கள் சோழர்களால் முடிசூட்டிவைக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள் என்பது வரலாறு . இவர்களுக்கும் மழகொங்கை பூர்வீகமாகக்கொண்ட வடகரை வெள்ளாள கவுண்டர்களுக்கும் அவர்களின் நாட்டார் பிரிவினருக்கும் சம்பந்தம் கிடையாது. + + + + + பால வெள்ளாள கவுண்டர் நாட்டார்கள்: +இவர்களும் இன்று தனி சாதியாய் உள்ளார்கள். இரட்டை சங்கு கோத்திரங்களில் 5, ஒற்றை சங்கு பிரிவில் 18 கோத்திரங்கள் என 23 கோத்திரங்கள் இவர்களில் உண்டு + + +ஆறை நாட்டாரான சோழியாண்டார் கிடாரம் மேல் மணியன் கோத்திரம் & ���ுண்டடம் சுற்றத்தில் உள்ள கீரனூர் கழஞ்சியர் கோத்திரத்தாரிடம் மட்டுமே மணவினை கொள்வர். தொரவலூர் வெள்ளத்தலை / வைத்தலை கோத்திரம், ஆதவூர் குந்தலை கோத்திரம் இவர்களுக்கு பங்காளிகலாவர். துடியலூர் வீரபாண்டி அருகே உள்ள இடிகரை சுற்றத்தில் மதிப்பானல்லூர் கொற்றந்தை / கொட்டந்தை கோத்திரத்தார் இவர்களுக்கு நெருங்கியவர்கள் ஆவர். 23 நாடுகளுக்கு நாட்டார் உண்டு என கல்வெட்டிகள் கிடைப்பதாக கொங்கு சோழர் எனும் நூலில் புவனேஸ்வரி குறிபிட்டுள்ளார். + +அந்தியூர் காணியாளரான பொன்னாளிக் கவுண்டர் மரபினர் + + +மழகொங்கு எனப்படும் காவிரியின் கிழக்கு & வடக்கு பகுதிகளில் இன்றைய பவானி, சத்தியமங்கலம், தாரமங்கலம், மேட்டூர், சேலம், சேலத்து ஆத்தூர், ஊத்தங்கரை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பரவலாக தொன்றுதொட்டு வாழ்கிறார்கள் . இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், நரம்புகட்டி கவுண்டர் எனவும், நார்முடி வேளாளர் எனவும் வழங்குவர். இவர்கள் மழகொங்கின் பூர்வீக குடிகளாவர் . செந்தலை வெள்ளாள கவுண்டர்களின் பழக்கவழக்கங்கலுக்கும், வடகரையாரின் வழக்கங்களுக்கும் மாறுபாடுகள் உள்ளன. ஆநிரை சார்ந்த வாழ்க்கை அமைப்பு இவர்களுடையது. பசு மட்டுமின்றி ஆடு வளர்ப்பும் இவர்களிடம் மிகுதியாக உண்டு. தருமபுரியில் இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், செந்தலை வெள்ளாள கவுண்டர்களை தெக்கத்திக் கவுண்டர் எனவும் பிரித்து வழங்குகின்றனர் . இவர்களுக்கும் அதியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை முன்னாள் தமிழக தொல்லியல் துறை & A.S.I யின் தலைவராகவும் இருந்த டாக்டர் நாகசாமி அவர்கள் தன் இணையத்தில் குறிபிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும் . இவர்களை பற்றி பல நூல்களும் வெளியாகியுள்ளன. + +புலவர் ராசு அவர்கள் கள ஆய்விலும், கல்வெட்டு & இலக்கிய ஆய்விலும் வடகரை வெள்ளாள கவுண்டர்களின் கூட்டப்பெயர்களை தொகுத்து கொங்கு வேளாளர் குல வரலாறு நூலில் வெளியிட்டுள்ளார். அவை, + +இவற்றில் எருமை குலம் என்பது செந்தலை வெள்ளாள கவுண்டரில் மேதி என்று வழங்கும். கல்வெட்டுகளும் மேதி என்றே வழங்குகின்றது. + + + + + +கோ சன் + +கோ சன் ("Ko San", பிறப்பு: அக்டோபர் 19, 1976) தென்கொரிய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளரும் தொழில்முனைவோரும் ஆவார். + +கோ புசான் நகரில் அக்டோபர் 19, 1976 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவரையும் இவரது சகோதரியையும் தாயார் வளர்த்தார். மேல்நிலைப் பள்ளியில் சீன மொழியை முக்கிய பாடமாக கொண்டு தேர்ந்த கோ, சோல் தேசிய பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தென்கொரிய தேசிய புதுனர் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப்பத்தக்கதைப் பெற்றார், மேலும் அதே ஆண்டு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள 7,546 மீட்டர் உயரமான முஸ்டக் அடா மலையையும் ஏறினார். + +2006 டிசம்பர் 25 அன்று கோ, சோயூஸ் டிஎம்ஏ-12 விண்கலத்தில் விண்ணோடுவதற்கான தென்கொரியாவின் முதல் விண்ணோடிக்கான தேர்வுகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானார். 2005 செப்டம்பர் 5 இல் தென்கொரிய அறிவியல் தொழினுட்ப அமைச்சு, உருசியாவில் நடைபெற்ற பயிற்சி மற்றும் தேர்வுகளின் மூலம் கோவை 29வயதான யீ சூ யியொன்னுக்கு மேலாக தெரிவு செய்தது. ஆனாலும், கோ விண்ணோடிகளின் யூரி ககாரின் பயிற்சி நிலையத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை இரு தடவைகள் மீறியதாகக் கூறி உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் இவருக்குப் பதிலாக வேறொருவரை தெரிவு செய்யுமாறு கேட்டது. இதனால், அவரது தெரிவு மீளப் பெறப்பட்டது. + +உருசியாவில் இருந்து திரும்பிய கோ, தொடர்ந்து கொரிய விண்வெளி ஆய்வு நிலயத்தில் பணி புரிந்தார். + + + + + +51826 கல்பனாசாவ்லா + +51826 கல்பனாசாவ்லா (2001 OB) என்பது ஒரு விண்கல் (asteroid). இது இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா என்னும் விண்வெளி வீராங்கனையின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட விண்கல். STS-107 என்னும் விண்வெளி ஊர்திக்கலம் "கொலம்பியா" தன் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு, பெப்ரவரி 1, 2003ல் நில உலகின் காற்று மண்டலத்தினுள் மீண்டும் நுழையும் பொழுது வெடித்துச் சிதறிய கொடும் நிகழ்வில் கல்பனா சாவ்லா உயிரிழந்தார். இதே போல 51823 முதல் 51829 வரை எண்ணுள்ள விண்கற்களும் கொலம்பியா விண்வெளி ஊர்தியில் உயிரிழந்தவர்களில் நினைவாக பெயர்சூட்டப்பட்டுள்ளன. + +51826 கல்பனாசாவ்லா என்னும் விண்கல் ஜூலை 19, 2001ல் பாலோமர் தொலைநோக்கியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. + + + + +மதுவந்தி + +மதுவந்தி ஒரு ராகத்தின் பெயர். இது வடமொழிச் சொல். இதற்கு தேனைப் போன்ற இனிமையானது என்று பொருள். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்று அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவர். + + + + + + + +கோப்பெருஞ்சோழன் + +உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தார்். + + + + +சூறாவளி ஃவீலிக்ஸ் (2007) + +ஆகஸ்டு 24 இல் ஆபிரிக்காவின் மேற்கு கரையில் இருந்து அயன் மண்டல் அலை ஒன்று மேற்குத் திசையாக 14 mph (23 km/h) வேகத்தில் தலைகீழான V வளைவுடன் நகர்ந்தது. ஆரம்பத்தில் செயற்கை கோள்களினால் உணர முடியாத, அலை முகடு ஈரமான காலநிலைக் காரணமாகவும் பரவலான இடி மழைக் காரணாமாகக் கண்டறியப்பட்டது. ஆகஸ்டு 25 இல் செயற்கைக் கோள் படங்கள் அயன இடை கலப்பு வலயத்துக்கு சற்று வடக்கில் சுழல் காற்றுகளை காட்டியது. அலை மத்திம மற்றும் செறிவான வெப்பச் சலனக் காற்றுகளை ஏற்படுத்திவந்த்தோடு, ஆகஸ்டு 27 இல் 1012 mbar அளவான தாழ் அமுக்கம் கேப் வேர்டேக்கு 830 மைல் (1,340 கி.மீ.) மேற்கு-தென்மேற்குத் திசையில் அவதானிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு தொகுதி எதுவித வளர்ச்சியையும் காட்டவில்லை; ஆனாலும், ஆகஸ்டு 30 இல் சுழல்காற்றுகளுடன் தாழ் அமுக்கமாக மாறுவதற்கான ஆயத்தங்களைக் காட்டியது. சுழற்சி அடுத்த நாள் அதிகரித்துக் காணப்பட்டது, சூறாவளி அவதானிப்பு விமானம் ஒன்று குறை நிலை சுழற்சி காணப்படுவதை அவதானித்தது. அதன் பிறகு ஆகஸ்டு 31, 2100 UTCக்கு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் அயன மண்டல தாழ் அமுக்கம்-6 தொடர்பான எச்சரிக்கைகள வழங்க ஆரம்பித்தது. இதன் போது தாழ் அமுக்கம் காற்றுமுகத்தீவுகளுக்கு 180 மைல் (295 km) கிழக்கு-தென்கிழக்குத் திசையில் காணப்பட்டது. + +அயன மண்டல சுழல் காற்றாக செறிவடைகையில் தாழ் அமுக்கம், வடக்கே காணப்பட்ட பலமான உயரமுக்கம் காரணமாக மேற்கு-வடமேற்குத் திசையில் நகரத்தொடங்கியது. தொகுதி வளைவான மழைப்பட்டைகளையும் அதிகரிக்கும் வெளியோட்டத்தையும் சிறிய காற்று shear ஐயும் கொண்டிருந்த்தோடு, வெப்பமான நீரின் மேலாக நகர்ந்தமை புயலின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்து. அதன் ஆலமான வெப்பச் சலனங்கள் அதன் மையத்துக்கு அணமையில் அமைந்திருந்தன. கிரெனடாத் தீவைக் கடந்தப் பின்னர் செப்டம்பர் 1, 0900 UTCக்கு அயனமண்டல புயாலாக செறிவடைந்து அயனமண்டல புயல் ஃவீலிக்ஸ் என்றப் பெயரைப் பெற்றது. ஃவீலிக்ஸ் விரைவாக செறிவடைந்து வெப்பச் சலனங்கலையுடைய மையக் கருவையும் அதனைச் சூழ பிணையப்பட்ட பட்டைகளையும் கொண்டது. செப்டம்பர் 1 அன்று எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களில் புயலின் கண் தென்பட்டது. சூறாவளி அவதானிப்பு விமானத்திலிருந்துப் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம், புலானது செப்டம்பர் 2 இல் பொனெய்ரேக்கு கிழக்கு-வடகிழக்குத் திசையில் 155 மைல் (250 km) தொலைவில் அமைந்திருந்தப் போது சூறாவளி தரத்தை எட்டியதாக மதிப்பிட்டது. +குறைந்த காற்றழுத்தம் உள்ளதும் உயர் வெப்பக் கொள்லளவை கொண்டதுமானப் பகுதியூடாக நகர்ந்ததன் மூலம் சூறாவளி ஃவீலிக்ஸ் விரைவாக நன்கு வரையறுக்கப்பட்ட கண்ணையும் சமச்சீரான முகில் அமைப்பையும், செறிவான மேல் வெளியோட்டத்தையும் கொண்டது. ஃவீலிக்ஸ் செப்டம்பர் 2 1800 UTCக்கு யமேக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு தென் கிழக்கில் 490 மைல் (790 km) தொலைவில் அமைந்திருந்தப் போது முக்கிய சூறாவளியாக தரமுயர்ந்தது. விரைவான செறிவாக்கம் தொடர்ந்து, அதே நாளில் சூறாவளி சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் தரம் 4ஐ எய்தியது. ஆக குறைவான அமுக்கம் 957 mbar அளவுக்கு குறந்த்து இது மணிக்கு 3.4 mbar என்ற வீதத்திலான குறைவாகும். அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் இந்த அமுக்க குறைவினை தாம் அவதானித்த வேகமான அமுக்க குறைவுகளில் ஒன்றாக குறிப்பிட்டது. சூறாவளி ஆர்வளர்களின் விமானமொன்று சூறாவளியின் கண் 14 miles (22 km) ஆக குறைந்திருப்பதைக் அவதானித்தது. அடுத்த சூறாவளி ஆர்வளர்களின் விமானம் 175 mph (280 km/h) வேகமான காற்றுகளையும், 163 mph (263 km/h) வேகமான மேற்பரப்பு காற்றுகளையும் கண்சுவரின் தென்மேற்குப் பகுதியில் அவதானித்தது;189 mph (306 km/h) வேகமான மேற்பரப்புக் காற்றுகள் கண்சுவரின் வடகிழக்குப் பகுதியில் அவதானிக்கப்பட்டன. இருப்பினும் அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் இவ்வாசிப்புகள் முகில்களில் காணப்பட்ட பணித்துளிகள் காரணமாக ஏற்க முடியாதவை என் முடிவு செய்தது. அவதானிப்புகளில் இருந்து ஃவீலிக்ஸ் செப்டம்பர் 3 0000 UTCக்கு யமேக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு தென் கிழ��்கில் 90 miles (625 km) தொலைவில் அமைந்திருந்தப் போது 165 mph (265 km/h) வேகமான காற்றுகளை கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. இதன் படி ஃவீலிக்ஸ் சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் தரம் 5ஐ எய்திய சூறாவளியாக மாறியது. சூறாவளியை அவதானிக்கச் சென்ற சூறாவளி ஆர்வளர்களின் விமானம் ஆபத்தான பனித்துளிகளையும் சுழிகளையும் முகில்களில் எதிர் நோக்கியமையால் அவதானிப்புகள் கைவிடப்பட்டன. + +விரைவாக மேற்கு நோக்கி நகர்ந்த ஃவீலிக்சின் கண் 12 மைல் (19 km) ஆக குறைந்தது. அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் ஃவீலிக்ஸ் தரம் 5இலான சூறாவளியாக மாறி 9 மணி நேரத்தில் ஆகக் குறைந்த அமுக்கமான 929 mbar அடைந்ததாக கணக்கிட்டது. முதலில் ஃவீலிக்ஸ் மேற்கு- வடமேற்காக நகரும் என முன்னறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் பாதை மேற்குத் திசையாகவே காணப்பட்டது. சூறாவளியின் மேற்பரப்பில் காணப்பட்ட முகிழ்கள் வெப்பமடைந்து கண் மறையத் தொடங்கியது. செப்டம்பர் 3 1800 UTCக்கு ஃவீலிக்ஸ் 145 mph (235 km/h) வேகமான காற்றுக்களை கொண்ட நிலையில் தரம் 4 ஆக வீக்கமடைந்தது. செப்டம்பர் 4இல் ஃவீலிக்ஸ் கண்சுவர் பரிமாற்ற வட்டத்தை முடித்த நிலையில் மீண்டும் செறிவடைய தொடங்கியது, ஃவீலிக்ஸ் அதே நாள் 1040 UTCக்கு மீண்டும் தரம் 5இலான சூறாவளியாக மாறியது. இந்நிலையில் 160 mph (260 km/h) வேகமான காற்றுகளுடன் ஃவீலிக்ஸ் நிக்கராகுவாவின் வடகிழக்குப் பகுதியில் தரைத்தட்டியது. தரைத் தட்டி 9 மணித்தியாளங்களுக்குப் பின்பும் தொகுதி நல்ல முகிலமைப்பைக் கொண்டிருந்த்தது. எனினும் காற்றின் வேகம் விரைவாக குறைய தொடங்கியது. செப்டம்பர் 5 காலையில் ஃவீலிக்ஸ் அயன மண்டல புயலாக வீக்கமடைந்தது. தொகுதி அயன மண்டல் தாழ் அமுக்கமாக விக்கமடைந்த நிலையில் தெற்கு ஒண்டூராசுக்கு நகர்ந்தது. செப்டம்பர் 5 0900 UTCக்கு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் ஃவ்விலிக்ஸ் தொடர்பான தனது கடைசி அறிவிப்பில் தொகுதியானது ஒண்டூராசுக்கு மேலாக பரந்த தாழ் அமுக்க வலயமாக வீக்கமடைந்ததாக அறிவித்தது. + + + + +1822 + +1822 (MDCCCXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + +1820கள் + +1820கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1820ஆம் ஆண்டு துவங்கி 1829-இல் முடிவடைந்தது. + + + + + + +எஸ். செல்வசேகரன் + +எஸ். செல்வசேகரன் (இறப்பு: டிசம்பர் 28, 2012, அகவை: 64) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, வானொலி, திரைப்பட நடிகர். கோமாளிகள் நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசும் 'உபாலி' பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதை அடுத்து "உபாலி செல்வசேகரன்" எனவும் அழைக்கப்பட்டார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடித்தவர். + +செல்வசேகரனின் பெற்றோர் முத்தையா, அந்தோனியம்மா. இலங்கையின் தெற்கே பாணந்துறையில் பிறந்தார். தந்தை பானந்துறையில் ஒரு உடுப்புத் தைக்கும் கடை வைத்திருந்தார். பின்னர் கொட்டாஞ்சேனைக்குக் குடி பெயர்ந்தார்கள். கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன். + +இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் எஸ். ராம்தாசின் "கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும், எஸ். எஸ். கணேசபிள்ளையின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். + +ரூபவாகினியில் 'எதிர்பாராதது' முதலிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். + +கோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் நடித்தார். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்தபோது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது. புஞ்சி சுரங்கனாவ, மச்சான், மாபா, சூரியஹரன ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'புஞ்சி சுரங்கனாவி’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. + +கே. எம். வாசகரின் 'சுமதி', எஸ். ராம்தாசின் 'காதல் ஜாக்கிரதை', 'கலாட்டாக் காதல்' உட்படப் பல மேடை நாடகங்களில் நடித்திருந்தார். + + + + + +இரத்மலானை வானூர்தி நிலையம் + +கொழும்பு விமான நிலையம் ("Colombo Airport") அல்லது இரத்மலானை வானூர்தி நிலையம் ("Ratmalana Airport") இலங்கையின் உள்ளூர் வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப��படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது. + +1934ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை அரசாங்க சபை இரத்மலானையில் வானூர்தி நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி மதராசில் இருந்து வந்திறங்கியது. + +இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய வானூர்திகளுக்கெதிரான பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் வானூர்திகள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது. + +இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது. + + + + +சோ ஓயு மலை + +சோ ஓயு (அல்லது கோவோவுயாக்; நேபாள மொழியில் चोयु சோயு, திபெத்திய மொழியில் "jo bo dbu yag" ஜொ போ த்பு ஓயு, சீன மொழியில் 卓奧有山 சௌ ஆஓயு ஷான்) மலையானது உலகிலேயே ஆறாவது உயரமான மலை ஆகும். இது இமய மலைத்தொடரில் உள்ளது. எவரெஸ்ட் மலைக்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ளது. சோ ஓயு என்றால் திபெத்திய மொழியில் பசும்நீல அம்மன் என்று பொருள்படும். + +சோ ஓயு மலையை முதன்முதலாக ஏற 1952ல் எரிக் ஷிப்டொன் (Eric Shipton) தலைமியில் ஒரு முகாம் முயன்றது. ஆனால் 6,650 (21,820 அடி) உயரத்திற்கு மேலே அன்றைய நிலைமையில் ஏற முடியாதவாறு பனி முகடு ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் ஏறுவது கைவிடப்பட்டது. இன்றைய முறைப்படி இவ்வகை பனி முகடுகளைக் கடக்க கையிறேணிகள் பயன்படுத்தப்படுகின்றது. அக்டோபர் 19, 1954ல் முதன்முத்லாக +ஹெர்பர்ட் டிச்சி (Herbert Tichy), யோசெப் யோஃலெர் (Joseph Jöchler) மற்றும் ஷெர்ப்பா பசாங் தவா லாமா (Pasang Dawa Lama) ஆகியவர்கள் தென்மேற்கு முகமாக ஏறி வெற்றி கண்டார்கள். இவர்கள் ஆஸ்ட்டிரியா நாட்டின் அணியினர் ஆவர். சோ ஓயு மலைதான் 8000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மலைகளில் ஐந்தாவதாக ஏறி வெற்றி கொண்ட மலை. இதற்கு முன்னர் மற்றவர்கள் அன்னபூர்னா மலையை ஜூன் 1950லும், எவரெஸ்ட் மலையை மே 1953லும், நங்கா பர்பத் மலையை ஜூலை 1953லும், கே-2 மலையை ஜூலை 1954லிலும் ஏறி வெற்றி கொண்டனர். + + + + +ஆனைமுடி (மலை) + +ஆனமுடி (தமிழ்நாட்டில் ஆனைமுடி) என்னும் மலை முகடு தான் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடம். இதன் உயரம் 2, 695 மீ (8, 842 அடி). இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது. + +உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலை : ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது. இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது. இந்த மலைத் தொடரை ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய உலகப் பாரம்பரிய இடங்கள் குறித்து ஆராயும் குழு, உலகப் பாரம்பரிய மலைத் தொடராக தேர்வு செய்துள்ளது.இதற்கான குழுக் கூட்டத்தில், அல்ஜீரியா, கம்போடியா, கொலம்பியா, எஸ்தோனியா, எத்தியோப்பியா, ஈராக், ஜப்பான், மலேசியா, மாலி, மெக்சிக்கோ, கத்தார், ரஷ்யா, செனகல், செர்பியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து ஆகிய, 17 நாடுகள் உறுதியான ஆதரவு அளித்தன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஏன் பாரம்பரியப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, இந்திய தரப்பில் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விரிவான விளக்கங்களை அளித்தனர். + +மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கவுரவம் ஏன்?பல்வேறு காரணங்களால்,இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை, "யுனெஸ்கோ'வின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு,உலகில் உள்ள இயற்கை மற்றும் பாரம்பரிய சிறப்புமிக்கஇடங்களை தேர்வு செய்து பாதுகாக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு, 2006ம் ஆண்டு இந்தியா கோரிக்கை விடுத்தது. இம்மலைத்தொடரில் 10க்கும் மேற���பட்ட தேசிய சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிகளுக்கான பகுதிகள், அரிய உயிரினங்கள், மூலிகைகள் ஆகியவை உள்ளதால் இக்கோரிக்கை விடப்பட்டது. இதை ஆய்வு செய்த "யுனெஸ்கோ' குழு, மேற்குத் தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. +962 இடங்கள்: ஒரு நாட்டிற்கு பெருமையும், அழகும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், இயற்கை வளங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. உலகின் முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க"யுனெஸ்கோ' நிறுவனம் முயற்சிக்கிறது. இதுவரை 962 இடங்கள் உலகின் கலாசார மற்றும்பண்பாட்டு இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 745 கலாசாரம் / பாரம்பரிய பிரிவிலும், 188 இயற்கைப் பிரிவிலும், 29 இடங்கள் இரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் தாஜ் மகால், பதேபூர் சிக்ரி, குதுப் மினார், அஜந்தா, எல்லோரா குகைகள், மாமல்லபுரம் சிற்பங்கள் உள்ளிட்ட 28 இடங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள் ளன. தற்போது 29வதாக மேற்குத் தொடர்ச்சி மலையும் (இயற்கைப் பிரிவு) இணைந்துள்ளது. + +வடக்கு முதல் தெற்கு வரை: இந்தியாவின் மேற்கே மகாராஷ்டிரா - குஜராத் எல்லையில் தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பரவிக் கன்னியாகுமரியில் முடிகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1,600 ச.கி.மீ., சராசரி உயரம் 3,900 அடி. நாட்டின் 40 சதவீத நீர் உற்பத்தி இதன் மூலமே கிடைக்கிறது. இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு நல்ல மழைப் பொழிவைத் தருகிறது. இம்மலைத் தொடரில், அகஸ்தியர், பெரியார், ஆனைமலை, தலைக்காவிரி, நீலகிரி,குதிரைமுக், சயாத்ரி மலை ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன. + +சுற்றுலாத் தலங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்ற பெருமையை "ஆனைமுடி' சிகரம் பெற்றுள்ளது. இதன் உயரம் 8841 அடி. கொடைக்கானல், ஊட்டி, மூணாறு உள்ளிட்ட மலைவாச சுற்றுலாத் தலங்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன. பத்தில் ஒன்று இம்மலைத் தொடர், உலகில்"பல்லுயிரினம் மிக்க 10 இடங்களில்' ஒன்று. 5000 வகைத் தாவரங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 பறவைகள் மற்றும் 179 நீரிலும், நிலத்திலும்வாழும் உயிரினங்கள் இதில் வாழ்கின்றன. உலகளவில் அழியும் நிலையில் உள்��� 325 வகை உயிரினங்கள் இங்கு உள்ளன. + +ஆறுகள்: மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, கிழக்கு நோக்கி பாயும் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை இதில் உற்பத்தி ஆகின்றன. + +அணைகள்:இம்மலைத் தொடரில் உருவாகும் ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு விவசாயம் மற்றும் மின்சாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. + + + + +இலோட்ஃசே மலை + +இலோட்ஃசே என்னும் மலை (Lhotse, நேபாளியில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: "lho rtse"; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: "Luòzǐ Fēng") உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது. + + + + +எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் + +எண்ணாயிரத்தவை ("eight-thousanders") அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப்பகுதிலளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7000 மீட்டர் உயரமலைகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. + + As of September 2003, data from "Chinese National Geography" 2006.8, page 77. + + + + + +அனைத்துலக எழுத்தறிவு நாள் + +அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.. + +உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். + +யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி , தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. + +எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. + + + + + + +மாக்கடோனியக் குடியரசு + +மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: "Република Македонија", "Republika Makedonija" "Republic of Macedonia" , பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்தது. + +இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன. + +1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரீஸ் நாட்டுடன் இருந்து வருகிறது. + +பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று. + +30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. + + + + + +அப்காசியா + +அப்காசியா ("Abkhazia") என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகஸ்ட் 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தியாவையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. ஐநாவின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை. + +அப்காசியா கருங் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் ரஷ்யா உள்ளது. இதன் தலைநகர் சுகுமி. + +அப்காசிய மக்களின் பிரிவினைவாதிகள் 1992 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். 1994 இல் ஐநாவின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. ஜூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் "கடோரி கோர்ஜ்" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. ஆகஸ்ட் 2008 இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது. + + + + +1900 + +1900 (MCM) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு விதிவிலக்கான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும். + + + + + + + +சென் பீட்டர்ஸ்பேர்க் + +சென் பீட்டர்ஸ்பேர்க் ("Saint Petersburg", ரஷ்ய மொழி: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், "Sankt Peterburg") ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: பெட்ரோகிராட் (Петрогра́д, 1914 - 1924), லெனின்கிராட் (Ленинг��а́д, 1924 - 1991). + +இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27, 1703 இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது. இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு (1712-1728, 1732-1918) மேலாக இருந்து வந்துள்ளது. 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது.. மாஸ்கோ, லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும். + +ஸார் பீட்டர் பெருமகனரால் சுபானு ஆண்டு வைகாசி மாதம் 17ம் நாள் (27 மே 1703), திங்கட்கிழமையன்று "சென் பீட்டர்ஸ்பேர்க்" என்ற பெயரிட்டு நிறுவினார். மேலும் ருசியப் பேரரசின் தலைநகராக இருநூற்றாண்டுகளுக்கு மேலாக (1712–1728, 1732–1918) இருந்தது. 1917 ஆண்டில் நடந்த ருசியப் புரட்சிக்கு பின்னர், 1918ம் ஆண்டிலிருந்து தலைநகரை மாற்றியது ருசியப் பேரரசு. + +செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் ரோஸ்டாடின்படி சென் பீட்டர்ஸ்பேர்கின் மொத்த மக்கள்தொகை 5,281,579 அல்லது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3.6% ஆகும். இது 2010 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 4,879,566 (3.4%) ஆகவும் மற்றும் 1989 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 5,023,506 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை இன ரீதியான கணக்கெடுப்பு : ரஷ்யர்கள் 80.1%, உக்ரேனியர்கள் 1.3%, பெலாரியர்கள் 0.8%, தாடார் 0.6%, ஆர்மீனியர்கள் 0.6%, யூதர்கள் 0.5%, உஸ்பெகியர்கள் 0.4%, தாஜிக்கியர்கள் 0.3%, அஜெரியர்கள் 0.3%, ஜோர்ஜியர்கள் 0.2%, மோல்டோவியர்கள் 0.2%, ஃபின்ஸ் 0.1%, மற்றவை - 1.3%. மீதமுள்ள 13.4% இன மக்கள் குறிப்பிடப்படவில்லை. + +20 ஆம் நூற்றாண்டின் போது, நகரம் வியத்தகு மக்கள் தொகை மாற்றங்களை அனுபவித்தது. 1916 இல் இருந்த 2.4 மில்லியன் மக்கள் தொகை 1917 ரஷ்ய புரட்சியாலும் ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தினாலும் 740,000 க்கும் குறைவாக குறைந்தது. + +நகரின் மொத்த பரப்பளவு, வாக உள்ளது. ஒருங்கிணைந்த நகராக ​ஒன்பது நகராட்சி நகரங்கள் மற்றும் இருபத்தியொரு நகர குடியேற்றங்களை கொண்டு வாக உள்ளது. + +சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை, ஈரப்பத தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இங்குள்ள நேவா ஆறு, உறைபனியால் மூடியிருக்கும். நகரில் சராசரியாக 135 நாட்கள், உறைபனி இல்லாத காலமாக நீடிக்கிறது. நகரின் புறநகர் பகுதிகளைவிட சற்று வெப்பமான காலநிலையை கொண்டிருக்கிறது. வானிலையானது ஆண்டு முழுவதும் மாறி மாறி வரும். + +சென் பீட்டர்ஸ்பேர்க்கானது, போக்குவரத்தின் முனையமாக உள்ளது. ரஷ்ய தொடர்வண்டி நிலையமானது, 1837 முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பானது அசுர வேகத்துடன் வளர்ச்சி பெற்றது. டிராம், மெட்ரோ, உள்ளூர் மேம்பாட்டுச் சாலைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என பல போக்குவரத்து சாதனங்கள் தன்னகத்தே அடக்கியுள்ளது. நகரானது, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் சர்வதேச தொடருந்துத் தடங்கள் மூலம் ரஷ்யா முழுவதும் பரந்த உலகுடன் இணைக்கப்பட்டுள்ளது. + +1851ம் ஆண்டு மாஸ்கோவையும் சென் பீட்டர்ஸ்பேர்க்கையும் இணைக்கும் நீளம் கொண்ட தெடருந்து தடத்தின் மூலம் பயணியர், மூன்றரை மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றுவிடலாம். + +புல்கோவா பன்னாட்டு விமான நிலையமே பிரதான நிலையமாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்த நிலையாக மூன்று விமான நிலையஙகள் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர். நகரிலிருந்து விமான நிலையத்திற்கு, 24 மணிநேரமும் பேருந்து சேவையுள்ளது. + +செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மூன்று வானளாவியங்கள் உள்ளன: லீடர் டவர் (140 மீ), அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி (124 மீ) மற்றும் அட்லாண்டிக் சிட்டி (105 மீ). இம்மூன்று இடங்களும் வரலாற்று மையங்களில் இருந்து தொலைவில் உள்ளன.310 மீட்டர் (1,020 அடி) உயரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டிவி கோபரம் நகரத்தில் மிக உயரமான கட்டடம் ஆகும். +மாஸ்கோவிலுள்ளது போலல்லாமல், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரோக் மற்றும் நியோகிளாசிக்கல் கட்டிடங்களை உள்ளடக்கிய நகர மையத்தின் வரலாற்று கட்டமைப்பு, பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது; எனினும் லெனின்கிராட் முற்றுகை மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகாரம் கைப்பற்றியபின்பும் பல கட்டிடங்கள் இடிந்துபோனது. +பீட்டர் மற்றும் பால் கோட்டை, பீட்டர் மற்றும் பால் தேவாலயம் ஆகியவற்றுடன் இணைந்து நெவா ஆற்றின் வலது கரையிலுள்ள ஜயச்சி தீவில் அமைந்துள்ளது. 1913 இல் திறக்கப்பட்ட போது ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதியாக இருந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மசூதி அருகிலுள்ள வலதுபுற கரையில் அம���ந்துள்ளது. டிரினிட்டி கதீட்ரல், மரின்ச்கி அரண்மனை, ஹோட்டல் அஸ்டோரியா, பிரபலமான மாரின்ஸ்கி நாடக அரங்கம், நியூ ஹாலந்து தீவு, செயிண்ட் இசாக்ஸ் கதீட்ரல் (நகரத்தின் மிகப்பெரியது) மற்றும் செனட் சதுக்கத்தில் அடங்கும் பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் கடற்படை நிர்வாகக்குழு கட்டிடத்தின் மேற்கே மற்றும் தெற்கே அமைந்துள்ளது. + +அனைத்து முக்கிய ரஷ்ய செய்தித்தாள்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயலில் உள்ளன. இந்நகரம் தொலைத்தொடர்பு அமைப்பில் அதித வளர்ச்சி பெற்றுள்ளது . +நகரத்தில் பெறக்கூடிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்: + +மற்றும் பல. +2006/2007 வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1024 மழலையர் பள்ளி, 716 பொதுப் பள்ளிகள் மற்றும் 80 தொழிற்கல்வி பள்ளிகள் இருந்தன. [பொது உயர் கல்வி நிறுவனங்களில் மிகப் பெரியது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஏறத்தாழ 32,000 இளங்கலை மாணவர்களை சேர்ப்பது;மிகப்பெரிய அரசு சாராத உயர் கல்வி நிறுவனம் சர்வதேச பொருளாதார உறவுகள், பொருளாதாரம் மற்றும் சட்ட நிறுவனம் ஆகும். +செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், ஹெர்ஜன் பல்கலைக்கழகம், பொருளியல் மற்றும் நிதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இராணுவ பொறியியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை பிற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும். +பீட்டர் தி கிரேட் - பின்னர் ரஷ்ய பேரரசர் +விளாடிமிர் புடின் - ரஷ்யாவின் தலைவர் +டிமிட்ரி மெட்வெடேவ் - ரஷ்யாவின் பிரதமர் +கேதரின் தி கிரேட் - ரஷ்யா பேரரசி +அலெக்சாண்டர் இரண்டாம் - ரஷ்யா பேரரசர் +கிரிகோரி ரஸ்புடின் - ரோமானியர்களுக்கான ரஷ்ய மறைபொருள் மற்றும் ஆலோசகர் +மைக்கேல் குளுசோவ் - ரஷ்யப் பேரரசின் கள மார்ஷல் +மைக்கேல் ஆண்ட்ரியாஸ் பார்க்லே டி டோலி - ரஷியன் பீல்ட் மார்ஷல் மற்றும் போர் அமைச்சர் +அலெக்ஸாண்டர் மென்சிகோவ் - ரஷ்ய அரசியலமைப்பாளர், ஜெனரல்சிஸ்மோ, அட்மிரால், புனித ரோம சாம்ராஜ்யத்தின் இளவரசர் +கார்ல் கெஸ்டாஃப் எமில் மேனேர்ஹெய்ம் - பின்னிஷ் இராணுவத் தலைவரும் அரசியலாரும் +அலெக்சாண்டர் புஷ்கின் - ரொமாண்டிக் சகாப்தத்தின் ரஷ்ய எழுத்தாளர் +அலெக்ஸாண்டர் பிளாக் - ரஷ்ய கவிஞன கவிஞர் +அன்னா அக்தோவாவா - ரஷ்ய நவீன நவீன கவிஞர் +ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்க�� - ரஷ்ய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் +சாண்ட்ரா ட்ரெக்கர் - கச்சேரி பியானிஸ்ட் +நிகோலாய் கோகோல் - ரஷ்ய நாடகவாதி, நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் +மைக்கேல் லெர்மினோவ் - ரஷ்ய காதல் எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓவியர் +நிகோலாய் லெஸ்வவ் - ரஷ்ய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் +ஃபியோடார் டைட்டெவ்வ் - ரஷ்ய கவிஞர் கவிஞர் +வசுலி டுயூகோவ்ஸ்கி - ரஷ்ய கவிஞர் +நிகோலாய் நெக்ராவோவ் - ரஷ்ய கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் வெளியீட்டாளர் +விளாடிமிர் மயாகோவ்ஸ்கி - ரஷியன் கவிஞர் +ஜோசப் ப்ரோட்ஸ்கி - ரஷ்ய கவிஞர் மற்றும் கட்டுரையாளர் +விளாடிமிர் நபோக்கோவ் - ரஷ்ய-அமெரிக்க நாவலாசிரியர் +ஆல்ஃபிரட் நோபல் - ஸ்வீடிஷ் வேதியியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆயுத உற்பத்தியாளர்கள் +டிமிட்ரி மெண்டலீவ் - ரஷ்ய வேதியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் +மைக்கேல் லொமோமோஷோவ் - ரஷியன் பாலிமாத், விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் +கார்ல் ஹெய்ன்ரிச் வோன் சீமென்ஸ் - ஜெர்மன் தொழில் முனைவர் +நிக்கோலஸ் மிகுலோ-மேக்லே - ரஷ்ய ஆராய்ச்சியாளர், எதனலாளர், மானுடவியலாளர் மற்றும் உயிரியலாளர் +இகோர் சிகார்ஸ்கி - ரஷ்ய ஏவியேஷன் முன்னோடி +கிரிகோரி பெர்ல்மேன் - ரஷ்ய கணிதவியலாளர் +இவன் பாவ்லோவ் - ரஷியன் உடலியல் மருத்துவர் +டிமிட்ரி லிஹாகோவ் - ரஷ்ய மொழியியல் அறிஞர் +லெவ் கும்லேவ் - ரஷ்ய சரித்திராசிரியர், எதனலாளர், மானுடவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் +செர்ஜி ராச்மோனினெஃப் - ரஷ்ய இசையமைப்பாளர், பியானோ, மற்றும் நடத்துனர் +மோடஸ்ட் முஸ்வர்கிசி - ரஷ்ய இசையமைப்பாளர் +மைக்கேல் கிளின்கா - ரஷ்ய இசையமைப்பாளர் +வாலரி கர்கிவ் - ரஷ்ய நடத்துனர் மற்றும் ஓபரா நிறுவனத்தின் இயக்குனர் +நிகோலாய் ரிம்ஸ்கி-கோர்சாகோவ் - ரஷ்ய இசையமைப்பாளர் +டிமிட்ரி ஷோஸ்டகோவிச் - ரஷ்ய இசையமைப்பாளர் மற்றும் பியானிஸ்ட் +இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி - ரஷ்ய இசையமைப்பாளர், பியானோ மற்றும் நடத்துனர் +பீட்டர் கார்ல் ஃபேபெர்கே - ரஷ்ய நகைகள் +டொமினிகோ ட்ரிசினி - சுவிஸ் இத்தாலிய கட்டிடக் கலைஞர் +மற்றும் பலர். + + + + + +சூறாவளி கால்வெஸ்டன், 1900 + +சூறாவளி கால்வெஸ்டன், 1900, ("The Galveston Hurricane of 1900") அமெரிக்காவின் டெக்���ாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் நகரில் செப்டம்பர் 8, 1900 இல் பலத்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. காற்றின் வேகம் மணிக்கு 135 மைல்கள் (215 கிமீ/மணி) என மதிப்பிடப்பட்டது.. + +இச்சூறாவளி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 6,000 இலிருந்து 12,000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என மதிபிடப்பட்டுள்ளது. இச்சூறாவளியே ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கிய மிகப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியாகும். + + + + + +சுற்றுக்காலம் + +சுற்றுக்காலம் ("Orbital period") என்பது ஒரு கோள் (அல்லது ஏதேனும் ஒரு விண்பொருள்) தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும். + +சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன. + + + + + + + + +பார் (அளவை) + +பார் ("bar") என்பது அழுத்ததின் அளவீட்டு அலகு ஆகும். டெசிபார் ("decibar", dbar), மில்லிபார் ("millibar", mbar, அல்லது mb) என்பன பார் என்னும் அழுத்ததின் பத்தில் ஒரு பகுதி, ஆயிரத்தில் ஒரு பகுதி என்னும் உள்பகுப்பு அளவைகளாகும் (கீழ்வாய் அலகுகளாகும்). இவை SI அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை வளிமண்டல அழுத்தத்துடன் ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் ஆங்கில மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி என்று பொருள்படும்) + + +"பார்" (bar) என்ற சொல் கிரேக்க மொழியில் "βάρος" (பாரொஸ், baros), அதாவது நிறை ஆகும். + +பார், மில்லிபார் அளவைகள் சேர் நேப்பியர் ஷா ("Napier Shaw") என்பவரால் 1909 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது 1929இலேயே அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது. + + + + + +அக்ரோத்திரியும் டெகேலியாவும் + +அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்தப் போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது. + + + + +தமிழக அரசு திரைப்பட விருதுகள் + +தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் விசேட திறமையைக் காட்டியவர்களுக்காக வழங்கப்படும் விருதாகும். இது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர்,சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற வகைகளில் வழங்கப்படுகிறது. + + + + + +எட்மண்ட் இல்லரி + +சர் எட்மண்ட் ஹில்லரி ("Sir Edmund Percival Hillary"; ஜூலை 20, 1919 – ஜனவரி 11, 2008) நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர்; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951 , 1952 களில் இவரின் சோ ஒயு என்ற மலை ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் மே 29 1953 ஆம் நாள் தனது 33 ஆம் அகவையில் நேபாள நாட்டின்ஷெர்ப்பாஇனத்தைச் சேர்ந்த மலையேறுநர் டென்சிங் நோர்கே வுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும். + +நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் நீ கிளார்க் எனுமிடத்தில் எட்மண்ட் ஹில்லரி பிறந்தார். இவரது தந்தை அகஸ்டஸ் ஹில்லாரி தாயார் ஜெர்ட்ரூட் ஹில்லாரி. வட ஆக்லாந்தின் கல்லிபோலி போரில் இவரது தந்தை பணியாற்றியதால் ஆக்லாந்து அரசாங்கம் அவரது குடும்பத்துக்கென தெற்கு ஆக்லாந்தில் டுவாக்காவு என்ற இடத்தில் நிலமொதுக்கியது. எனவே 1920 களில் ஹிலாரியின் குடும்பம் அங்கு குடியேறியது. அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது. +ஹிலாரி டகாவு வில் உள்ள தொடக்கப்பள்ளியில் (இது பிறகு ஆக்லாந்து இலக்கணப்பள்ளி எனப்பட்டது) தனது கல்வியைத் தொடங்கினார். He finished primary school two years early and at high school achieved average marks. தனதுடன் பயின்றவர்களை விட ஹிலாரி தோற்றத்தில் சற்று குறைந்து காணப்பட்டதால் வெட்கத்தின் காரணமாக எப்பொழுதும் புத்தகங்களைப் படிப்பதிலும் விநோதமான சாகச நிகழ்ச்சிகள் நிறைந்த உலகினைக் கற்பனை செய்வதுமாக காலம் கழித்தார். உயர் கல்வி கற்க தனது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நாள்தோறும் இரண்டு மணிநேரம் தொடருந்தில் பயனம்செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தை பயனுள்ளதாக்கி ஹில்லாரி புத்தகங்களை வாசித்தார். அதனால் வாழ்க்கையில் அவருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது +ஹில்லரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி ராபியூ மலைக என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹில்லரிக்கு ஆர்வம் பிறந்தது. அவர் உடல் ரீதியாகவும் தனதுடன் பயிலும் தோழர்களை விடத் தன்னை வலிமை வாய்ந்தவராக நினைக்கத் தொடங்கினார். ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் கணிதம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றார். 1939 இல் இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் உள்ள மவுண்ட் குக் மலைக்கருகிலுள்ள மவுண்ட் ஆலிவர் என்ற பன்னிரெண்டாயிரம் அடி மலையில் தனது சகோதரர் ரெக்ஸ் என்பவருடன்ஏறினார். கோடைக் காலத்தில் மலை ஏறித் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டதால் குளிர் காலத்திலும் மலை ஏறுவதற்கு அப்பயிற்சி உதவியாய் இருந்தது. + +ஹில்லாரி ரேடியண்ட் லிவிங் என்ற மலையேறுவோருக்கான கழகத்தில் சேர்ந்தார். அங்கு உடல் நல ஆலோசகர் ஹெர்பெர்ட் சட்க்ளிஃப் என்பவர் இவருக்கு போதித்தார். இதன் உறுப்பினர்களுடன் சுற்றுலாவாகச் சென்று சேர்ந்து மலையேறுவதை ஹிலாரி மிகவும் நேசித்தார். + +இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து ஆகாயப்படையில் சேர்ந்த அவர் ராயல் நியூசிலாந்து வான்படையில் நிரந்தரமாகச் சேர விண்ணப்பித்தார். ஆனால் அவரது மதம் சாந்த கொள்கைகள் இதற்கு ஒவ்வாததாக அவர் எண்ணியதால் தனது விண்ணப்பத்தைத் திரும்பப்பெற்றார். 1943 இல் பசிபிக் கடற்பகுதியில��� ஜப்பானின் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்ட போது சமாதான மற்ரும் அமைதி எண்ணமுடைய ஹில்லாரியும் கட்டயாமாக வான்படையில் சேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ராயல் நியூசிலாந்து வான்படையில் இணைந்து படைப்பிரிவுகள் 5 , 6 மற்றும் கேடலினா என்ற பறக்கும் படகுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். 1945 இல் பிஜித் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கு சண்டையிட அணுப்பப் பட்ட போது ஒரு படகில் ஏற்பட்ட பெரும் விபத்தில் காயமடைந்தார். எனவே தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார். + +வான்படையில் பணியாற்றிய போது வார இறுதியில் அருகிலிருந்த மவுண்ட் எக்மென்ட் என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. + +ஹாரி ஏயர்ஸ், மிக் சல்லிவன் ஆகியோர் தலைமையில் ஹில்லாரி, ரூத் ஆடம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று நியூசிலாந்தின் த்ன் எல்லியிலுள்ள மவுண்ட் குக் மலையின் மிக உயர்ந்த சிகரமாகிய அவுராக்கி உச்சியை 1948 ஜனவரி 30 அன்று அடைந்தது. 1953இல் மெகப் பெரிய உலக சாதனையை செய்வதுதற்கு முன்னர் ஹில்லாரி 1951 இல் எரிக் ஷிப்டான் என்பவரின் தலைமையிலான பிரித்தானியக் குழுவின் மலையேறுநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார். + +எரிக் ஷிப்டான் தலைமையிலான பிரித்தானியக் குழுவில் இடம் பெற்றிருந்த அதன் ஒரு பகுதியாக எட்மண்ட் ஹிலாரியும் ஜியார்ஜ் லோவே என்பவரும் சோ ஒயு மலையேற முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. +அதன் பிறகு இக்குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியது. ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. +1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது. +எட்மண்ட் 1953 ஆம் ஆண்டு மேரி ரோஸ் என்பவரை மணம் முடித்தார். அவர் மூலமாக ஒரு மகனையும் இரு மகள்களையும் பெற்றெடுத்தார். 1975ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அவரது மனைவியும் ஒரு மகளும் பலியாயினர். 1989 ஆம் ஆண்டு ஜீன் மல்க்ரூ என்பவரை மணம் முடித்தார். + +எட்மண்ட்தனது 88 ஆம் அகவையில் இதயநோயினால் காலமானார். + + + + + + +செர்ப்பா + +செர்ப்பா அல்லது ஷெர்ப்பா என்றழைக்கப்படும் மக்கள் நேபாளத்தில் உயர்மலைப்பகுதியாகிய இமய மலைப் பகுதியில் வாழும் ஓரினத்தவர். திபெத்திய மொழியில் "ஷர்" என்றால் "கிழக்கு" என்று பொருள்;" பா" என்னும் பின்னொட்டு மக்களைக் குறிக்கும். எனவே ஷெர்ப்பா என்னும் சொல் கிழக்கத்திகாரர்கள் என்னும் பொருள்படும் சொல். ஷெர்ப்பாக்கள் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு திபெத்தில் இருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. ஷெர்ப்பா இனப் பெண்களைக் குறிக்க "ஷெர்ப்பாணி" என்னும் சொல் ஆளப்படுகின்றது. + +ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். மிகுந்த பளுவைத் தூக்கிக்கொண்டு கடினமான மலைப்பாதைகளில் அயர்வின்றி ஏறும் இவர்கள் திறமை உலகப்புகழ் பெற்றது. உலகில் யாவற்றினும் மிக உயரமான எவரெஸ்ட் மலை மீது முதன்முதலாக ஏறி வெற்றி நாட்டியவர்களில் தேஞ்சிங் நோர்கே என்னும் ஷெர்ப்பா ஒருவர் (இவர் எட்மண்ட் ஹில்லரியுடன் சேர்ந்து இந்த அரிய செயலை செய்து புகழ் நாட்டினார்). + +பெரும்பாலான ஷெர்ப்பாக்கள் நேபாளத்தின் வடகிழக்கு பகுதிகளான சோலுகும்பு மாவட்டம் அல்லது ஃவராக் என்னும் பகுதியில் வாழ்கின்றனர். ஒரு சிலர் மேற்கே தொலைவில் உள்ள ரோல்வாலிங் பள்ளத்தாக்கிலும், சிலர் காத்மாண்டு நகருக்கு வடக்கே உள்ள ஹெலம்பு பகுதியிலும் வாழ்கின்றனர். பங்போச்சோ என்னும் ஊர்தான் நேப்பாளத்தில் ஷெர்ப்பாக்கள் வாழும் மிகப்பழைய ஊர். இச்சூர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஷெர்ப்பா மக்கள் தங்களின் தனி மொழியாகிய ஷெர்ப்பா மொழியைப் பேசுகிறார்கள். இது திபெத்திய மொழியின் ஒரு கிளை மொழி போல உள்ளது. ஷெர்ப்பா மக்கள் உயர் நிலங்களில் கோதுமை, பார்லி போன்றவற்றை பயிர் செய்வதும், வணிகம் செய்வதும் வழிவழியாக செய்துவரும் தொழில்கள். இவர்களில் சிலர் நாம்ச்சே பசார் என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். ஷெர்ப்பா மக்களுக்கு நெருக்கமான அன மக்கள் ஜிரேல் என்னும் மக்கள். இவர்கள் ஜிரி என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். இந்த ஜிரேல் மக்கள் ஷெர்ப்பாவின் கிளை மக்கள் என்கிறார்கள் (ஷெப்பா பெண்களுக்கும் சுனுவார் என்னும் மக்களின் ஆண்களுக்கும் பிறந்தவர்கள்). இந்தியாவில் ஷெர்ப்பா மக்கள் டார்ஜிலிங் கலிம்ப்பாங் ஆகிய இடங்களிலும் சிக்கிம் மாநிலத்திலும் வசிக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு நேப்பாள கணக்கெடுப்பின் படி 154,622 ஷெர்ப்பாக்கள் நேப்பாலத்தில் வாழ்கிறார்கள். இவர்களில் 92.83% மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள், 6.26 மக்கள் இந்து மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.63% மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.20% மக்கள் "போன்" (Bön) வழியைப் பின்பற்றுகிறார்கள். + + + + + + + +கேப் வேர்டே வகை சூறாவளி + +கேப் வேர்டே வகை சூறாவளி என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கேப் வேர்டே தீவுகளுக்கு அண்மையில் தொடங்கும் ஒருவகை அத்திலாந்திக் சூறாவளியாகும். பொதுவாக ஒரு சூறாவளி பருவத்தில் இரண்டு கேப் வேர்டே வகை சூறாவளிகள் ஏற்படும். இவ்வகையான சூறாவளிகள் தரைத்தட்டு முன்னர் பெரிய அளவில் வெப்பமான நீரின் மேல் நகர்வதால் இவை பொதுவாக மிகபலமிக்கவையாக காணப்படும். + +கேப் வேடே வகை சூறாவளிகள் பொதுவாக ஆபிரிக்க சவன்னாவில் இருந்து நகரும் அயன மண்டல அலைகள் காரணமாக ஏற்படுகின்றது. இவ்வயன மண்டல அலை மழைப் பருவத்தில் சவன்னாவில் தொடங்கி பின்னர் ஆபிரிக்காவின் உப பாலைவனத்துக்கு நகரும். பின்னர் இவ்வலை ஆபிக்காவின் மேற்குக் கரையை கடந்து அத்திலாந்திக் பெருங்கடலை அடையும். கேப் வேர்டே தீவுகளை அண்மிகும் போது இது அயன மண்டல் புயலாகவோ அயன மண்டல சுழல்காற்றாகவோ செறிவடையும். இது பொதுவாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடைப்பெறும். + +தரம் என்பது சரிப் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறையின்படியான சூறாவளியின் உச்ச வீரியமாகும். + + + + + +1899 + +1899 (MDCCCXCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + + +தஜிகிஸ்தான் + +தஜிகிஸ்தான் குடியரசு ("Tajikistan", தஜிக் மொழி: Тоҷикистон), மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடாகும். இதன் எல்லைகளாக த���ற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன. தஜிக் இனக்குழு தஜிகிஸ்தானின் முக்கிய இனமாகும். இவர்கள் பொதுவாக ஈரானியர்களினதும் உஸ்பெக் மக்களினதும் கலாச்சாரம், மற்றும் வரலாறுகளை ஒத்துள்ளனர். தஜிக் மொழியைப் பேசுகின்றனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு "தஜிக் சோவியத் சோசலிசக் குடியரசு" என்று அழைக்கப்பட்டது. + +செப்டம்பர் 9, 1991இல் சோவியத்தில் இருந்து விடுதலை அடைந்த பின்னர் 1992 முதல் 1997 வரையில் இங்கு மிக மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. போரின் முடிவில் அரசியல் சீரடையத் தொடங்கியதும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. பொருளாதாரம் வளரத் தொடங்கியது. இந்நாட்டின் இயற்கை வளங்களான பருத்தி, அலுமீனியம் ஆகியன பொருளாதாரம் சீரடைய உதவின. + +இந்நாட்டின் வரலாறு கிமு 4,000 ஆண்டு பழமையானதாகும். பல இராச்சியங்களின் ஆட்சியில் இது இருந்திருக்கிறது. பாரசீகர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்தனர். அரபுகள் 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைக் கொண்டு வந்தனர். மங்கோலியர்கள் மத்திய ஆசியப் பகுதியைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். அப்போது தஜிகீஸ்தானும் அவர்களின் ஆட்சிக்குட்பட்டது. + +19 நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யா மத்திய ஆசியப் பகுதிக்குள் ஊடுருவியதில் தஜிகிஸ்தான் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1917 இல் ரஷ்யப் புரட்சியின் பின்னர் தஜிகிஸ்தானின் சில புரட்சியாளர்கள் ரஷ்ய போல்ஷெவிக்குகளுடன் விடுதலைக்காகப் போரிட்டனர். நான்கு ஆண்டுகள் போரில் பல மசூதிகள், கிராமங்கள் அழிக்கப்பட்டன. + +1924 இல், சோவியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசுடன் இது இணைக்கப்பட்டது. பின்னர் 1929 இல் சோவியத்தின் தனியான குடியரசாக ஆக்கப்பட்டது. 1980களின் இறுதியில் தஜிக் தேசியவாதிகள் அதிக உரிமைகள் கேட்டுப் போராட ஆரம்பித்தனர். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர் 1991 இல் தஜிகிஸ்தான் விடுதலையை அறிவித்தது. + +விடுதலையின் பின்னர் நாட்டில் உடனடியாகவே உள்நாட்டுக் குழப்பங்கள் உருவாகின. பல குழுக்களும் ஆட்சிக்காக தமக்கிடையே மோதின. இஸ்லாமியர்கள் அல்லாதோர், குறிப்பாக ரஷ்யர்களும் யூதர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். எமோமாலி ரஹ்மானொவ் 1992 இல் ஆட்சியைக் கைப��பற்றி இன்று வரையில் ஆண்டு வருகிறார். 1997 இல், அதிபருக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து 1999 இல் அமைதியான தேர்தல்கள் இடம்பெற்றன. எனினும் ரஹ்மானொவ் மீண்டும் அமோகமான ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். 2005ம் ஆண்டு வரையில் ரஷ்யா தனது படைகளை ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளைக் காப்பதற்காக இங்கு வைத்திருந்தது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகளும் இங்கு நிலை கொண்டிருந்தன. + +தஜிகிஸ்தான் மத்திய ஆசியாவின் மிகச் சிறிய நாடு. பாமிர் மலைகளினால் மூடப்பட்டுள்ளது. 50 வீதமான நாட்டின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர்கள் உயரத்தில் உள்ளன. + + + + + +1870கள் + +1870கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1870ஆம் ஆண்டு துவங்கி 1879-இல் முடிவடைந்தது. + + + + + + + + +தமிழர் பழக்கவழக்கங்கள் + +தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களை பட்டியலிட்டு சிறு விளக்கங்களைத் தர இக்கட்டுரை முனையும். + +இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும். + +பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல். + +வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது. + +வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு. + +மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்சிவயப்பட்டவர்கள். செத்த வீட்டில் ஓவென நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. + +தமிழர்கள் நேரம் தொடர்பாக இறுகிய கட்டுப்பாட்டை அற்றவர்கள். அதாவது ஒரு நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்தால் அது 6:45 ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது பொதுவாகத் தமிழர்களுக்கிடையே யான நிகழ்வுகளுக்கே. + + + + +15-ஆம் நூற்றாண்டு + +கிபி 15ம் நூற்றாண்டு 1401 இல் ஆரம்பித்து 1500 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு ஆகும். + + + + + + + + +தமிழ்த் திரைப்படக் கதைகளின் பட்டியல் + + + + + + + + + + + + +சேதுபதி மேல்நிலைப் பள்ளி + +சேதுபதி மேல்நிலைப் பள்ளி மதுரை மாநகராட்சிப் பகுதியில் வடக்கு வெளி வீதியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றான இப்பள்ளி மதுரைக் கல்லூரி வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. + +இப்பள்ளி 1889 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமையுடையது. அவரது நினைவாக பள்ளி நுழைவாயிலில் அவருடைய சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 1700 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். கல்வி சேவையில் 125 ஆண்டுகளை முடிக்க உள்ளது. செப்டம்பர் 12 மற்றும் டிசம்பர் 11 ஆகிய நாட்களில் ஆண்டு தோறும், பாரதியாரின் நினைவு மற்றும் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுகிறது. + + + + +பழகு வட்டு + +வன்தட்டில் நிறுவாமலேயே ஒரு குனு/ லினக்ஸ் வழங்களுக்குத் தேவையான மென்பொருட்களை உள்ளடக்கி, வட்டிலிருந்தே துவங்க வல்லதாய் அமைக்கப் பட்ட வட்டினைப் பழகு வட்டு என்கிறோம். வட்டைக் கொண்டே இயங்குகின்றக் காரணத்தால் இதை நீக்கியதும் தங்களின் கணினி அதன் முந்தைய நிலைக்கே வந்துவிடும். + +முன்னேற்பாட்டுடன் கிடைக்க வல்ல வட்டொன்றையோ அல்லது இத்தகைய வட்டுக்களின் ஐ.எஸ்.ஓ இமேஜினை பதிவிறக்கி வட்டுக்களில் பதிந்தோ இதனைப் பயன்படுத்தலாம். + +துவங்கிய பின்னர் நிறுவும் பொருட்டு திரையிலிருந்து துவக்க வல்ல நிறுவியொன்றின் இணைப்பினைக் கொண்டவாறு பல பழகு வட்டுக்கள் கிடைக்கின்றன. + + + + + +அயனமண்டல புயல் கபிரியேல் (2007) + +உப அயனமண்டல புயல் கபிரியேல் 2007 அத்திலாந்திக் சூறாவளி பருவத்தில் 7வது பெயரிடப்பட்ட புயலும், இரண்டாவது உப அயனமண்டல புயலுமாகும். தற்போது இது அத்திலாந்தின் பெருங்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்தவண்ணம் உள்ளது. + + + + +அபிலீன் தோற்றமுரண் + +அ��ிலீன் தோற்றமுரண் ("Abilene paradox") என்பது ஒரு குழுவினர் கூட்டாக எடுக்கும் ஒரு முடிவு அந்தக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு எதிராக அமையும் தோற்றமுரணின் ("paradox") பெயராகும். குழுவின் சாய்வு தமது தனிப்பட்ட விருப்பத்தேர்விற்கு எதிராகவே உள்ளது என்ற தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கத் தவறுதல் இத்தோற்றமுரணின் கூறாகும். இது பொதுவாகக் குழுக்களில் காணப்படும் தகவல் தொடர்புக் குறைபாடுகளினால் நேருகிறது. + +இம்மெய்மையை ஜெர்ரி ஹார்வே என்ற மேலாண்மை அறிஞர் தான் முதன்முதலாக "அபிலீன் முரண்படு மெய்ம்மை மற்றும் மேலாண்மைமீது இன்னபிற எண்ணங்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டார். இம்மெய்மையின் பெயர் இவர் தனது கட்டுரையில் பயன்படுத்தியிருந்த எடுத்துக்காட்டிலிருந்து பெறப்பட்டது: + +இம்மெய்ப்பாடு குழுச்சிந்தனையின் ஓர் வெளிப்பாடாக இருக்கலாம். இதை சமுதாய ஒத்திசைவு மற்றும் சமுதாய அறிதிறன் போன்றவற்றைப் பற்றிய சமுதாய உளவியல் தேற்றங்களைக் கொண்டு விளக்க முடியும். இத்தேற்றங்களின்படி மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் போக்கிற்கு எதிராகச் செயல்படத் தயங்குகிறார்கள் என அறியப்படுகிறது. அதேபோல், மக்களின் கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னால் மறைமுகக் குறிப்புகளும் நோக்கங்களும் பல்கியுள்ளதைக் காணலாம். இது பொதுவாக தனிநபர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துதற்கும் ஆவல்களைத் தொடர்வதற்கும் எதிராக அமையும் சமுதாய நிலவரங்களினால் ஏற்படுகிறது. + +இக்கருத்துரு குழுச்சிந்தனைக் கருத்துருவுடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டுமே சமுதாயச் சூழலில் குழுக்களின் நடவடிக்கைகளைப் பற்றியவை. குழுக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமல்ல, கருத்தொருமையைச் சமாளிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதை இது காட்டுகிறது. இக்கருத்துரு சமுதாயவியலில் உள்ள பிற தேற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல்வகைமை கொண்ட குழுக்களும் கருத்து தெரிவிக்கத் தயக்கமற்ற சூழலும் இவ்விளைவை ஓரளவு தவிர்க்கக் கூடும். + +இவ்வெடுத்துக்காட்டு நிகழ்வை ஒரு குறும்படமாகச் செய்து மேலாண்மைக் கல்விக்குப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குழுவமைத்து மு��ிவெடுத்தலின்போது நேரும் தவறான முடிவுகளை விளக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நிகழாதிருக்க குழுவினர் முடிவெடுக்கும் தருவாயில் ஒருவரை ஒருவர் "நாம் அபிலீனுக்கு செல்கிறோமா?" என்று கேட்டுக் கொண்டால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வு வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + + + +வி. பி. கணேசன் + +வி. பி. கணேசன் ("V. P. Ganesan", இறப்பு: 2 ஆகத்து 1996) என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத் தொழிற்சங்கத்தின் நிறுவனரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். + +இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "புதிய காற்று", "நான் உங்கள் தோழன்" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான 'நாடு போற்ற வாழ்க" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத் திரைப்படமாகவும் உருவாகியது. அரசியல்வாதிகள் பிரபா கணேசன், மனோ கணேசன் ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார். + +வி. பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன்" என்ற பெயரில் எழுத்தாளர் மொழிவாணன் எழுதி வெளியிட்டுள்ளார். + + + + + +ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு + +ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ("Asia-Pacific Economic Cooperation", "APEC") என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது. + +ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது. + +ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது. + +முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது. + +தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. + +அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா, போன்றவையும் விண்ணப்பித்துள்ளன. + + + + + +உரோமானிய மொழிகள் + +உரோமானிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒரு பெருங்கிளைக் குடும்ப மொழிகள் ஆகும். இவையனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த மொழிகளாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து வென்ற நாடுகளில் பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழிகள் தோன்றின. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. + +இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் ரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், ரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி, 2) போர்த்துகீசிய மொழி, 3) பிரெஞ்சு மொழி, 4) இத்தாலிய மொழி, 5) உருமானிய மொழி + +ரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்: + +இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழிக்குடும்பம் ஆகையால், ரோமானிய ��ொழிகளின் பல பண்புகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை ஒத்து இருக்கின்றன. ஆனால் வேற்றுக் குடும்ப மொழிகளாகிய அரபு மொழி, பாஸ்க்கு மொழி, அங்கேரிய மொழி, தமிழ் மொழி, சியார்சியன் மொழி முதலானவற்றில் இருந்து மாறுபடுகின்றது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துள்ள பண்புகள்: +கீழ்க்காணும் அட்டவணையில் இலத்தீன் மொழியில் இருந்து எவ்வாறு ரோமானிய மொழிச் சொற்கள் மாறுபடுகின்றன என்று காணலாம். ஒப்பீட்டுக்கு ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டூள்ளன. + + + + +சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் + +சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் என்பது "அயனமண்டலத் தாழமுக்கம்", "அயனமண்டலப் புயல்" என்பவற்றைவிட வீரியம் கூடி சூறாவளியாக மாறும் புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஏற்படும் அயனமண்டல சுழல்காற்றுகளைத் தரப்படுத்தும் முறைமையாகும். இம்முறைமை சூறாவளிகளை அவற்றின் காற்றின் வேகங்களைக் கொண்டு தரப்படுத்துகிறது. இத்தரப்படுத்தலின் முக்கிய நோக்கம் சூறாவளி தரைத்தட்டினால் ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கு, காற்றினால் ஏற்படும் சேதங்களை முன்னதாகவே அறிந்துக் கொள்வதாகும். சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறை அத்திலாந்திக் பெருங்கடலிலும், பன்னாட்டு நேரக் கோட்டுக்கு மேற்காக வட பசி்பிக் பெருங்கடலிலும் ஏற்படும் சூறாவளிகளை தரப்படுத்த மாத்திரமே பயனபடுத்தப்படுகிறது. ஏனைய பகுதிகள் தமக்கான சூறாவளி தரப்படுத்தல் முறைகளைக் கொண்டுள்ளன. + +சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் முறைமையின் கீழ் சூறாவளிகள் மொத்தம் ஐந்து தரங்களாக பிரிக்கப்படுகின்றன. + +தரம் 1 புயல்கள் கட்டிடங்களுக்கு பெறிய அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துவது இல்லை, இருப்பினும் நகரக்கூடிய வீடுகளுக்கும் மரங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். கரையோரங்களில் சிறிய வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துவதோடு சிறிய துறைமுகங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். + +இத்தரத்திலான புயல்கள் கூரைகள், கதவுகள், யன்னல்கள் போன்ன்றவற்றுக்கு சேதம் விளைவிக்க வல்லவை. தாவரங்கள், நடமாடும் விடுகள், பெயர் பலகைகள், சிறிய துறைமுகங்கள், போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படலாம். + +இத்தரத்திலான அல்லது இதனைவ��ட வீரியம் கூடிய சூறாவளிகள் முக்கிய சூறாவளிகள் என அழைக்கப்படுகின்றன. இச்சூறாவளிகள் சிறிய வீடுகளுக்கு அவற்றின் அமைப்பிற்கு் சேதங்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். நகரும் வீடுகள் பொதுவாக அழிக்கப்படுகின்றன. கரையோரத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சிறிய கட்டிடங்களை அழிக்கும் மேலும் பெரிய கட்டிடங்கள் வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள் காரணமாக சேமாகும். தரைத்தோற்றத்தைப் பொறுத்து வெள்ளப்பெருக்கு உள் நோக்கி நகரலாம். + +இத்தரத்திலான சூறாவளிகள் தடுப்புச் சுவர்களை சேதமாக்க வல்லவையாகும். மேலும் இவை கூரைகளை முற்றாக அழிக்கக் கூடியவையாகும். கரயோரங்களில் பெரிய மண்ணரிப்பு ஏற்படும். வெள்ளம் தரை நோக்கி நகரலாம். + +இத்தரத்திலான சூறாவளிகள் மக்களடத்தி கூடிய பகுதிகளைத் தாக்கும் போது பாரிய சேதங்கள் ஏற்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆகக் கூடுதலான உயிர் சேதங்கள் ஏற்படுத்திய சூறாவளி கால்வெஸ்டன், 1900 ஒரு தரம் 4 இலான சூறாவளியாகும். + +இதுவே சபீர் சிம்சன் சூறாவளி தரப்படுத்தலில் உயர்வான தரமாகும். இத்தரத்திலான சூறாவளிகள் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் கூரைகளை முற்றாக சேதமாக்கக் கூடியவையாகும். சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படுவதோடு சிறிய கட்டிடங்கள் காற்றில் எடுத்துச் செல்லப்படலாம். வெள்ளப்பெருக்கு கரையோரக் கட்டிடங்களின் கீழ் மாடிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும். பாரிய அளவிலான மக்கள் அகதிகளாக வாய்ப்புண்டு. + +இத்தரத்திலான சூறாவளிகள் மிக நாசகாரமானவை.சூறாவளி ஃவீலிக்ஸ் (2007),சூறாவளி டீன் (2007) என்பவை இரண்டு உதாரணங்களாகும். + + + + + +கமலினி செல்வராஜன் + +கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார். + +கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ��ட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். செல்வராசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெரல்டின் ஜெசி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகளும் இருந்தனர். + +சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார். + +ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார். + +இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். "ஆதர கதாவ" என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன். + + +1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து கொழும்பில் தனது ஒரே மகன் அதிசயனுடன் வசித்து வந்த கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 அன்று கொழும்பில் காலமானார். + + + + +மெய்ப்பாடு + + + + + +கூட்டுத்தொடரில் பகா எண்கள் + +கணிதத்தில், எண் கோட்பாடு (Number Theory) என்ற பிரிவில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவிலாதது என்பது யூக்ளீட் காலத்திலிருந்தே தெரிந்த ஒரு கூற்று. ஆனால் அதைவிட இன்னும் அதிசயமான விஷயம் பல கூட்டுத்தொடர் (Arithmetic Progression) களிலும் முடிவிலாத எண்ணிக்கையில் பகா எண்கள் இருக்கும் என்பது தான். + +கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு வரிசையிலும் பத்து பத்தாக இயலெண்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பகா எண்கள் தடித்த அச்சில் காண்பிக்கப்பட்டுள்ளன. + +1- - 2- - 3- -4-- 5 - -6-- 7-- 8-- 9--10 + +11-12-13-14-15-16-17-18-19-20 + +21-22-23-24-25-26-27-28-29-30 + +31-32-33-34-35-36-37-38-39-40 + +41-42-43-44-45-46-47-48-49-50 + +51-52-53-54-55-56-57-58-59-60 + +61-62-63-64-65-66-67-68-69-70 + +71-72-73-74-75-76-77-78-79-80 + +81-82-83-84-85-86-87-88-89-90 + +91-92-93-94-95-96-97-98-99-100 + +இப்பொழுது ஒவ்வொரு நிரலாகப் பார்த்தால், ஒவ்வொரு நிரலும் 10 என்ற பொது வித்தியாசமுளமுள்ள ஒரு கூட்டுத்தொடர். இவைகளில் 1, 3, 7, 9 இலிருந்து தொடங்கும் கூட்டுத் தொடர்களில் ஒன்றுக்குமேல் பல பகா எண்கள் தென்படுகின்றன: + +1-11-31-41-71-... + +3-13-23-43-53-73-83- ... + +7-17-37-47-67-97- ... + +19-29-59-79-89-... + +இந்நிரல்களைத் தொடர்ந்து கொண்டேபோனால் பகா எண்களும் வந்துகொண்டே இருக்குமா அல்லது சில நிரல்களில் பகா எண்கள் முடிந்துவிடுமா? இக்கேள்வியைக் கேட்பது எளிது. ஆனால் இருபது நூற்றாண்டுகளுக்கு முன் யூக்ளீட் நிறுவிய பகா எண்களின் முடிவிலாப் பண்பைப் பின்பற்றிய கேள்வி இது. ஆயினும் இருபது நூற்றாண்டுகளாக இதற்கு விடை கிடைக்காமலே இருந்திருக்கிறது. கடைசியில் இதற்கு விடை 1837 இல் கிடைத்தது. + +formula_1 இரண்டும் ஒன்றுக்கொன்று பகா எண்களானால், + +formula_2 + +என்ற கூட்டுத்தொடரில் முடிவிலாத எண்ணிக்கையில் பகா எண்கள் இருக்கும். +டிரிச்லெ என்ற பிரான்ஸ் நாட்டுக் கணித இயலர் (1805-1859) 1837 இல் இந்த நேர்த்தியான தேற்றத்தை நிறுவினார். இது அவருக்கு முன்னமேயே லெஜாண்டரால் (1752-1833) முன்மொழியப்பட்டு நிறுவலும் கோடுக்கப்பட்டது. ஆனால் லெஜாண்டரின் நிறுவலில் ஒரு தீர்க்கமுடியாத சறுக்கல் இருந்தது. வெகு கடினமான வேறோர் முறையில் டிரிச்லெ நிறுவல் கொடுத்தார். டிரிச்லெயின் தேற்றம் யூக்ளீடின் தேற்றத்தைப் பொதுப்படுத்தியதாகும். + +எண் 10ஐ பொது வித்தியாசமாகவுள்ள கூட்டுத்தொடர்களை மேலே பார்த்தோம். எண் 12ஐ பொது வித்தியாசமாகவுள்ள கூட்டுத்தொடர்களை கீழுள்ள அட்டவணையின் நிரல்களில் பார்க்கலாம். முன்போல் பகா எண்கள் தடித்த அச்சில் காட்டப்பட்டுள்ளன: + +1----2----3----4----5----6----7----8-----9-----10---11----12 + +13--14--15--16--17--18--19--20---21-----22---23----24 + +25--26--27--28--29--30--31--32---33-----34---35----36 + +37--38--39--40--41--42--43--44---45-----46---47----48 + +49--50--51--52--53--54--55--56---57-----58---59----60 + +61--62--63--64--65--66--67--68---69-----70---71----72 + +73--74--75--76--77--78--79--80---81-----82---83----84 + +85--86--87--88--89--90--91--92----93-----94---95----96 + +97--98--99--100-101-102-103-104--105--106--107--108 + +109-110-111-112-113-114-115--116-117-118-119-120 + +இங்கு முதலாவது, ஐந்தாவது, ஏழாவது, பதினொன்றாவது நிரல்களில் உள்ள கூட்டுத்தொடர்களில் பல பகா எண்கள் இருக்கின்றன. இக்கூட்டுத் தொடர்களெல்லாம், டிரிச்லெ தேற்றத்தின் கருதுகோளை ஒப்புகின்றன. (அதாவது,formula_1 இரண்டும் ஒன்றுக்கொன்று பகா எண்கள்). அதனால் அத்தொடர்களில் முடிவிலாத எண்ணிக்கையில் பகா எண்கள் இருக்கும் என்பதுதான் ம��டிவு. + + + + +தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை + +தியாகராசர் கலைக்கல்லூரி அல்லது தியாகராசர் கல்லூரி என்பது மதுரையில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கருமுத்து தியாகராஜன் என்பவரால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. + +கருமுத்து தியாகராஜன் செட்டியார் என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய மதராஸ் மாநில ஆளுநரான பாவ்நகர் மன்னர் கிருஷ்ண குமார்சிங்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன. + +13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் ராமநாதபுரம் செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. + + +இந்தத் துறைகளின் கீழ் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. + + +B. Com + +இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, திரைப்படம், அரசியல் போன்ற பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். அவர்களில் சிலர்: + + + +திரைப்பட இயக்குநர் சிம்புதேவன் + + + + + + + + +யாதவர் கல்லூரி + +யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள தன்னாட்சிபெற்ற இருபாலர் பயிலும் அரசுதவிபெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும் தமிழ்,வரலாறு,வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் கல்வி வழங்குகிறது. + +பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ஆம் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு தமிழக அரசின் உதவி கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ஆம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது + +இந்தியாவின் தமிழகத்தில் மதுரை, மேற்குப்புறநகர�� பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில் நத்தம் சாலையில் ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது. + + + + + + + +1898 + +1898 (MDCCCXCVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். + + + + + + + + +செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் + +செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. +நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள். உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். + +2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கைப்பற்றப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கைப்பற்றினர். மேலும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கைப்பற்றினர். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தலுக்காக தெரிவு செய்தனர். + +தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு விமானங்களின் விபரம்: +உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலிற்கு பிறகு நடந்த தாக்குதல்களை ஊடகங்கள், தொடர்ந்து தங்களது காட்சி ஊடகத்தின் மூலம் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர். + +தாக்குதல்கள் நடந்த சில மணி நேரத்திற்குள் சந்தேகிக்கப்படும் படியான விமானிகள் மற்றும் விமான கடத்தல்காரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமும், ஜெர்மனி உளவுத்துறையும், இத்தாக்குதலிற்கும் ஒசாமா பின் லேடனிற்கும் தொடர்பு இருக்குமென சந்தேகித்தது. இதனிடையில், 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, தாக்குதல் நடத்திய 19 விமானக் கடத்தல்காரர்களின் புகைப்படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டது. + +தீவிரவாத தாக்குதலின் சூழ்நிலையை தொகுத்து அறிக்கை தயார்படுத்த 2002ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தேசிய தீவிரவாத தாக்குதல் ஆணையம் (9/11 ஆணையம்), நியு ஜெர்ஸியின் முன்னாள் ஆளுனர் தாமஸ் கேனின் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஜூலை 22, 2004 அன்று, 9/11 ஆணையம், தாக்குதலின் நிகழ்வுகளை விரிவாக ஒரு அறிக்கையாக வெளியிட்டது. அறிக்கையின் படி, தாக்குதல்களுக்கு அல் கொய்தா உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்ட சதிகள் கண்டறியப்பட்டது. மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளை வலுப்படுத்துவதற்கான ஆய்வையும் மேற்கொண்டனர். சுயாதீன கட்சிக்குழுவால் பிரதிநிதிகள், ஆளுநர்கள் மற்றும் ஆணையர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணையத்தின் படி சிந்தனை, கொள்கை, திறன்கள், மற்றும் மேலாண்மை ஆகிய காரணிகளால்தான் தாக்குதல் நடந்தேறியுள்ளது என நம்பப்படுகிறது. மேலும், எதிர்கால தாக்குதல்களை தடுக்க வழிமுறைகளும் இவ்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதன் ஒரு சில பரிந்துரைகளை, 2011ல் அரசு நிறைவேற்றியது. + + + + + + +பி. விக்னேஸ்வரன் + +விக்னேஸ்வரன் பரமநாதன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (1970) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக (1979)பொறுப்பேற்றார். இவர் காலத்தில் வானொலி தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரூபவாகினி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(1982) இவர், திருமதி ஞானம் இரத்தினம் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக (1984) நியமிக்கப்பட்டார். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார். + +இலங்கை வானொலியில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர். + +இவர் எழுதிய "வாழ்ந்து பார்க்கலாம்" என்ற வானொலித் தொடர்நாடகம், கனடா தமிழோசை வானொலியிலும்(1995), கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது. + +தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு, பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய "கற்பனைகள் கலைவதில்லை" பெற்றது. + +தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிவதோடு, பல நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். + +கனடாவில் மனவெளியின் அரங்காடல் நாடக விழாவிற்காக பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியிருக்கிறார். + + +இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைப்படப்பிரதிக்கான போட்டியில் இவர் எழுதிய ' கிராமத்து இதயம்' என்ற பிரதி சிறந்த தமிழ்ப் பிரதிக்கான விருதைப் பெற்றது. + + + + + + +தமிழ் நாட்டார் பாடல்கள் + +தமிழில் அமையும் நாட்டார் பாடல்கள் தமிழ் நாட்டார் பாடல்கள் அல்லது தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் எனப்படுகின்றன. + +தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப் பெற்றனவே இந்த நாட்டுப்புறப் பாடல்கள். இன்றி எமக்கு எழுத்தில் கிடைப்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், அதற்குப் பின்பும் சில அறிஞர்களின் அயராத பணியால் ஆவணப்படுத்தப்பட்டவை ஆகும். இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட பாடல்கள் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு துளி என்றால் மிகையாகாது. + +தமிழ் நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா.வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவர் வட்டாரங்கள் வாரியாக தொகுத்த நாட்டார் பாடல்களை "தமிழர் நாட்டுப் பாடல்கள்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். + +அவரது தொகுப்பில் நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்: + +பின்னர் விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் தம்பதியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைகள் துறையின் உட்பிரிவான "கலை வரலாறு மற்றும் நாட்டார் கலைகள்" துறையின்கீழ் ஆய்வுகள் மேற்கொண்டனர். + +கமு. அருணாச்சலம் வகைப்பாடு + +கி.வா செயகாந்தன் வகைப்பாடு + +அன்னகாமு வகைப்பாடு + +மா. வரதராசன் வகைப்பாடு + +பெ. தூரன் வகைப்பாடு + +தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்களின் வாழ்க்கைமுறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது. + +நாட்டுப்பாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன்னதாக கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றுக்கான நாட்டுப்பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவை இயற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்���ோது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் நாட்டார் பாடல்களில் காணலாம். + +விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் ஆகியோர் ஒலி நாடாக்கள் வழியாகவும் நிகழ்ச்சிகள் ஊடாகவும் நாட்டார் பாடல்களைப் பரப்பினர். பின்னர் புசுபவனம் குப்புசாமி-அனிதா தம்பதியினரும் பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் வழியாகவும் நாட்டுப்புறப் பாடல்களைப் பரப்பினர். பரவை முனியம்மா கொல்லங்குடி கருப்பாயி ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் திரைப்படங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். + + + + + +டிரிஃக்லெ + +டிரிஃக்லெ (Dirichlet, [diʀiˈkle] ) (1805-1859) 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர். அவருடைய முழுப்பெயர் யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ(Johann Peter Gustav Lejeune Dirichlet). + +டிரிஃக்லெ ஜெர்மனியில் டியூரென் இல் பிறந்தார். அவர் தந்தை ஓர் அஞ்சல் அலுவலகத் தலைவர்.பெல்ஜியத்தில் ரிச்லெட் நகரிலிருந்து வந்த குடும்பமானதால் அவருக்கு செல்லப் பெயர் 'லாழ்ஜூன் டிரிஃக்லெ'.பெற்றோர்கள் அவரை வியாபாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோதிலும் சிறுவயதிலேயே கணிதத்தில் ஆர்வத்தைத் தெரியப்படுத்தியவர். 'ஓம் விதி'(Ohm's Law) என்று இயற்பியலில் புகழ்பெற்ற ஜார்ஜ் ஸைமன் ஓம் (George Simon Ohm) (1787-1854)கோலோனில் அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். 1821 இல் தன் பள்ளிப் படிப்பை முடித்தபோது பாரிஸ் நகர் உலகமறிந்த கணித இயலர்களைப் பெற்றிருந்ததாலும் அங்கு அவருடைய உறவினர்கள் இருந்ததாலும் அங்கு போய் ஜெனெரல் ஃபாய் என்ற ஒரு பண்புள்ளவரின் குடும்பத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகத் தொழில் புரிந்து தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். அவ்வில்லத்தில் அவருக்கு பல பெரிய மனிதர்களையும் அறிவாளிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. + +இக்காலத்தில் தான் அவர் காஸ் இனுடைய 'எண்கணித உரைகள்' என்ற பெரும் நூலைப் படிக்கும் பேறு பெற்றார். அச்சமயம் அந்நூலை முழுதும் கற்றறிந்தவர் சிலரே இருந்தனர். டிரிஃக்லெ அந்நூலின் ஒரு கிழிந்த படியை (பிரதியை) தன்னுடன் எப்பொழுதும், ஏன், தான் பயணங்களில் இருந்தபோதும் கூட, வைத்திருந்தாராம். கடினமான அந்நூலை பிற்காலத்தியவர் படித்துப் புரிந்துகொள்வதற்காகக் கடுமையாக உழைத்தவர் டிரிஃக்ல���. பாரிஸ் அகாடெமி க்கு அவர் அனுப்பிய முதல் ஆய்வுக்கட்டுரை எண் கோட்பாட்டைப் பற்றியதுதான். அக்கட்டுரையைத் தரம் பார்த்து வெளியிட அனுமதித்தது லெஜாண்டர். இதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதே லெஜாண்டரின் ஒரு யூகத்திற்கு டிரிஃக்லெ நிறுவல் கொடுத்தார். ஆனால் அப்பொழுது லெஜாண்டர் காலமாகியிருந்தார். + +ஃபொரியர் (1768-1830) -- இயற்பியலில் வெப்பக்கோட்பாட்டுப் பிரிவுக்கு வித்திட்டவர் -- டிரிஃக்லெயின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தார். டிரிஃக்லெயை கணித இயற்பியலில் ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். + +1827 இல் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் டிரிஃக்லெக்கு ப்ரெஸ்லௌ பல்கலைக்கழகத்தில் ஒரு உபகாரச் சம்பளம் வாங்கிக் கொடுத்தார். பிறகு பெரிலினிலேயே ஒரு பணியில் அமர்த்தினார். அங்கு டிரிஃக்லெ 27 ஆண்டுகள் பணி புரிந்தார். 1855 இல் கெட்டிங்கென் பல்கலைக் கழகத்தில், புகழ்பெற்ற காஸ் அமர்ந்திருந்த பதவியில் அவருக்குப் பின் அமர்ந்தார். ஆனால் நான்கே ஆண்டுகள் தான் அங்கிருந்தார். 1859 இல் இருதய பாதிப்பினால் இறந்தார். அவர் இறந்தபின் அவரைத் தொழில் அடிப்படையில் அறிந்தவர்கள் அவர் இன்னும் சில ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்திருந்ததாகவும் ஆனால் அவருடைய அந்த எழுத்துப் படிகள் (பிரதிகள்) கிடைக்காமலே போய்விட்டதால் கணித உலகத்திற்கு அவை பெரிய இழப்பென்றும் கூறினர். ஓர் ஆய்வின் கடைசி முடிவு வரும் வரையில் அதை மனதிலேயே வைத்திருக்கும் அவருடைய பழக்கம் தான் இதற்குக்காரணமென்று ஊகிக்கவேண்டியிருக்கிறது. + +ஐஸென்ஸ்டைன், க்ரானெக்கர், லிப்ஷிட்ஸ் டெடிகிண்ட் ஆகியோர் அவருடைய மாணவர்களாயிருந்தவர்கள். கெட்டிங்கெனின் வரலாற்றில் காஸுக்கும் ரீமானுக்கும் இடையில் போற்றப்படவேண்டியவர் டிரிஃக்லெ. பகுவியலை எண் கோட்பாட்டில் பயன்படுத்தும் முறைக்கு மிகவும் பங்களித்தவர் டிரிஃக்லெ. + +ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்கு ஒரு நிறுவலை கம்மர் அனுப்பியபோது பெரிய கணித இயலர் கோஷியே அதை நம்பிவிட்டார். டிரிஃக்லெதான் தவற்றைக் கண்டுபிடித்து எண்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம் கம்மர் பயன்படுத்திய களத்திற்கு செல்லாது என்பதைக் குறிப்பிட்டு கம்மருடைய சீர்மங்கள் கோட்பாட்டிற்கு வழிவகுத்தார். + +கூட்டு��்தொடரில் பகா எண்கள் என்ற தேற்றமும் இன்னும் பலவும் அவர் பெயர் பெற்றவை. + + + + +காங்கேசன்துறை + +காங்கேசன்துறை ("Kankesanthurai", KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன. + + + + + + + +ஐபீரிய மூவலந்தீவு + +ஐபீரிய மூவலந்தீவு அல்லது ஐபீரிய குடாநாடு என்பது ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய எசுப்பானியம், போர்த்துக்கல் ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர ஆண்டோரா நாடும், கிப்ரால்ட்டர் பிரித்தானிய ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று மூவலந்தீவில் இதுவே தென்மேற்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் நிலநடுக்கடலும், வடக்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ (km²). + +இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த "முன்மாந்த" இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் "அட்டாப்புயெர்க்கா" (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் . இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் பாசுக் மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் "யூசுக்கால்டுனாக்" (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசும் மனிதர்கள் + +கடலோடிகளாகிய ஃவினீசியர்களும், கிரேக்கர்களும், கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை "ஐபீரியா" என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால இலத்தீன் பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)). + +ஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை ஆபிரிக்காவின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன. + +இந்த மூவலந்தீவின் தென் முனையாக புன்ரா டி டரிபாவும் (36°00′15″N 5°36′37″W) வட முனையாக புன்ரா டி எஸ்ரகா டி பரேசும் (43°47′38″N 7°41′17″W) அமைந்துள்ளன. இந்த இரு முனைகளுக்கும் இடையிலான அகலம் ஏறத்தாழ 865 கிலோமீட்டர் ஆகும். இதன் மேற்கு முனையாக கபோ டா றொக்காவும் (38°46′51″N 9°29′54″W) கிழக்கு முனையாக கப் டி கிரியசும் (42°19′09″N 3°19′19″E) விளங்குகின்றன. இது ஏறத்தாழ 1,155 கிலோமீட்டர் நீளம் ஆகும். இதன் சீரற்ற கிட்டத்தட்ட எண்கோணமான வடிவமானது புவியியலாளர் சிடிரபோவினால் எருதுத் தோலிற்கு ஒப்பிடப்பட்டது. + +எசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது. ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது. இ��ு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன. + +ஐபீரிய மூவலந்தீவின் மொத்தக் கடற்கரை 3,313 கிலோமீட்டர் (2,059 மைல்) நீளமானதாகும். இதில் 1660 கிலோமீட்டர் (1,030 மைல்) மத்தியதரைக்கடல் பக்கத்திலும் 1,653 கிலோமீட்டர் (1,027 மைல்) அத்திலாந்திக் பெருங்கடல் பக்கத்திலும் உள்ளது. + +எப்ரோ ஆறு, டோவுரோ ஆறு, தாகசு ஆறு, குவாடியானா ஆறு, குவாடல்குவிர் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இந்த மூவலந்தீவில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. இவற்றின் நீர் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இவற்றுள் மிகப்பெரியதான தாகசு ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து போர்த்துக்கல் ஊடாகச் செல்கிறது. டோவுரோ ஆறும் மேற்கு நோக்கிப் பாய்கிறது. குவாடியான ஆறு தெற்கு நோக்கிப் பாய்ந்து அதன் இறுதியில் நீண்ட தூரத்திற்கு எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது. + +ஐபீரிய மூவலந்தீவின் பெரும்பான்மை நில அமைப்பானது மலைகளால் ஆனது. இவற்றுள் பிரதான மலைத் தொடர்களாகப் பின்வருவன அமைகின்றன. + + +ஐபீரிய மூவலந்தீவானது இரு பெரும் காலநிலை வகைகளைக் கொண்டுள்ளது. அவை அத்திலாந்திக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் நிலவும் கடல்சார் காலநிலை மற்றும் மத்தியதரைக்கடல் பக்கமாக நிலவும் மத்தியதரைக் காலநிலை ஆகும். கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது. எனினும் போர்த்துக்கல் மற்றும் எசுப்பானியாவின் பெரும்பாலான பகுதிகள் வேறுபட்ட பனிப்படிவைக் கொண்டனவாகவும் கடலிலிருந்தான தூரம் மற்றும் உயரத்தைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலைகளை உடையனவாகவும் உள்ளன. + +எசுப்பானியா + +போர்த்துக்கல் + +பிரான்சு + +அந்தோரா + +ஜிப்ரால்ட்டர் + +மட்ரிட் + +பார்சிலோனா + +லிஸ்பன் + +போர்ட்டோ + +வாலேன்சியா + + + + +தமிழர் அணிகலன்கள் + +தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு ப��ற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்." இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம். +பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை இருப்பதால், இந்த செயற்பாடு அல்லது வழக்கம் சேமிப்பை தகுந்த வகையில் முதலீடு செய்து வருவாய் ஈட்ட தடையாக இருப்பதாகவும் பொருளியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றார்கள். + +முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்". உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள். + + +பண்டைய தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. + + + + + + + + + + + + + + + +பி. எச். அப்துல் ஹமீட் + +பி. எச். அப்துல் ஹமீட் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட பன்னாட்டுப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர். அமீட் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும், இந்தியா, சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார். + +அப்துல் ஹமீது கொழும்பு நகரில் தெமட்டகொடை என்ற புறநகர்ப் பகுதியில் ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும் போதே தந்தையார் காலமாகி விட்டார். தாயார் கடையப்பம் தயாரித்து தர அதை இவர் சுமந்து விற்று வருவார். + +ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம் ஆகியோரிடம் அவர் அங்கு தமிழ் கற்றார். பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1960ம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார். +சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில் இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமாக நாடகம், உரைச்சித்திரம் தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர். செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார். + +இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே ஏராளமான நிகழ்ச்சிகளை வர்த்தகசேவையிலும், தேசியசேவையிலும் தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன. + + +"பாட்டுக்கு பாட்டு" முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள் கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன. + +இந்திய தொலைக்காட்சி நிலையங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இவர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. + +இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர் தென்னிந்திய சினிமாவிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார். கே. எஸ். ரவிகுமாரின் "தெனாலி", மணிரத்தினத்தின் " கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. + +இலங்கையிலும், இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார். + +1990 ஆம் ஆண்டு தனது கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், ரி. ராஜகோபால், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடினார். + + + + + +மூவலந்தீவு + +நில அமைப்பியலில் மூவலந்தீவு ("peninsula", ; ' "கிட்டத்தட்ட”, ' "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும். சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன. + +மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன. + + + + + + + + + + + + +கிருத்துராஜ் கல்லூரி + +கிறிஸ்துராஜ் கல்லூரி(Christhu Raj College) திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் நகராட்சியில் அமைந்துள்ளது. இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்லூரி ஆகும். இங்கே கலை, அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புக்களும் பட்டமேற்படிப்புக்களும் கற்றுத்தரப்படுகின்றன. + +இந்தக் கல்லூரியின் தலைவர் முனைவர் திரு அருணாச்சலம் அவர்கள், தாளாளர் முனைவர் திருமதி சீதா அருணாச்சலம் அவர்கள் ஆவர். இந்தக் கல்லூரியை நடத்தும் நிறுவனம் தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் 'அடைக்கல மாதா கல்லூரி' என்ற கல்லூரியையும் நடத்திவருகிறது. + + + + +அல் காயிதா + +அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ஆகஸ்ட்-க்கும் 1989 ன் வருடக்கடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும். + +அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா, இசுரேல், யப்பான், the நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து என்பவை முக���கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைதாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. + +தொடக்ககாலத்தில் பின் லாடன் தனது சொந்தப்பணத்தை இந்த இயக்கத்திற்காக செலவளித்துள்ளார். 2001 -ல் ஆப்கான் நடவடிக்கைகளுக்குப் பின் இவ்வியக்கத்திற்கு வரும் நிதியின் அளவு முடக்கப்பட்டது.குவைத் , சவுதி அரேபியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் இவ்வியக்கத்திற்கு முக்கிய நன்கொடையாளர்களாக இருந்துள்ளனர்.ஹெராயின் போதைப் பொருள் வணிகம் மூலமும் அதிக அளவு நிதியைத் திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் -ன் ஆவணங்களின் படி சவுதி அரேபியா சுணி இஸ்லாமியக் குழுக்களுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது.. +அல்-காய்தாவின் தனித்தியங்கும் சிறு குழுக்கள் காரணமாகத் தாக்குதல்களுக்கான சூத்திரதாரிகளை இனம்காண்பது கடினமாகும். அல்-காய்தாவுக்கு எதிரான அரசுகள் அல் கைடாவின் உலக நீட்சியை ஏற்றுக் கொள்கின்றன. +இருப்பினும் அல்-காய்தாவின் உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட்டு காண்பிக்கப்படுவதாக கருத்தும் உண்டு. என்பது அல் கைடாவுக்கு ஆதாரவாகவோ அல்லது அவர்களைப் பின்பற்றி அதே பாணியிலும் அல் கைடாவுடன் தொடர் பற்ற வேறு சிறு குழுக்கள் பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபடுவதை "அல் கைடாயிசம்" எனலாம். + +அல் கைதா அமைப்பு நடத்திய தாகுதல்களில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உலகை அதிர வைத்தது. நான்கு பயணி விமானங்களைக் கடத்திக் கொண்டு சென்று ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிக உயரமான உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கியதுடன் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழக்க காரணமாயினர். மேலும் வாசிங்டன் டி. சி.யில் உள்ள அமெரிக்காவின் இராணுவ அலுவலகமாக பெண்டகன் மாளிகையையும் ஒரு பயணி விமானத்தை கடத்திச் சென்று மோதி பெருஞ்சேதப்படுத்தினர். இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா நாட்டிற்கு பத்து பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டது. இத்தாக்குதலுக்கு அல்கைதா அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. + + + + + +உசாமா பின் லாதின் + +உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் (, (பிறப்பு மார்ச் 10, 1957 - இறப்பு மே 1 2011)) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். + +இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார். +ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார். + +மே 1, 2011 அன்று ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சியில் பாக்கிஸ்த்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பில் லாதின் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார் மரபணு சோதனைக்குப் பின் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. + +உசாமா பின் முமது பி்ன் அவத் பின் லாதின் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் சவுதி அரசுக் குடும்பத்துக்கு நெருக்கமானவரும் பெருஞ்செல்வரும் கட்டிட வணிகருமான முகமது பின் அவத் பின் லாதினுக்கும் அவரது பத்தாவது மனைவி அமீதா அல்-அட்டாசுக்கும் மகனாகப் பிறந்தார். 1998 நேர்காணல் ஒன்றில், பின் லாதின் தமது பிறந்த நாள் மார்ச்சு 10, 1957 எனக் கூறியுள்ளார். + +உசாமா பின் லாதின் பிறந்த பின்னர் முமது பின் லாதின் தமது மனைவி அமீதாவிடமிருந்து மணமுறிவு பெற்றார். தமது கூட்டாளியான முகமது அல்-அட்டாசுக்குப் அமீதாவை திருமணம் செய்யுமாறு பரிந்துரைக்க 1950களின் பிற்பகு���ியிலோ 1960களின் முற்பகுதியிலோ இருவரும் மணம் புரிந்து இன்றுவரை இணைந்துள்ளனர். பின் லாதின் குடும்பம் கட்டமைப்புத் தொழிலில் இருந்து $5 பில்லியன் பணம் ஈட்டியது; இதிலிருந்து உசாமாவிற்கு தன்பங்காக $25–30 மில்லியன் கிட்டியது. + +பின் லாதின் ஓர் நம்பிக்கையுள்ள வகாபி முசுலிமாக வளர்க்கப்பட்டார். 1968 முதல் 1976 வரை, சமயசார்பற்ற உயர்மட்ட அல்-தாகெர் மாடல் பள்ளியில் படித்தார். கிங் அப்துலாசிசு பல்கலைக்கழகத்தில் பொருளியலும் வணிக மேலாண்மையும் படித்தார். சில கூற்றுக்களின்படி 1979இல் குடிசார் பொறியியல் அல்லது 1981இல் பொது நிர்வாகம் படித்ததாகவும் அறியப்படுகிறது. ஒரு ஆதாரத்தின்படி அவர் "கடும் உழைப்பாளி" என்றும் அறியப்படுகிறது; ஆனால் இன்னொன்று அவர் மூன்றாமாண்டிலேயே கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல்கலைக்கழகத்திலிருது வெளியேறினார் என்றும் கூறுகிறது. பல்கலைக்கழகத்தில் உசாமாவின் முதன்மை ஆர்வமாக சமயத்துறை இருந்தது. "திருக்குர்ஆனையும் ஜிகாத்தையும் புரிந்துகொள்ளவும்" சமயத்தொண்டு குறித்தும் அறிய மிகுந்த ஆவலாயிருந்தார். மற்ற பொழுதுபோக்குகளாக கவிதை எழுதுவது, பீல்டு மார்ஷல் பெர்னார்டு மொன்கொமரி, சார்லஸ் டி கோல் போன்றோரின் ஆக்கங்களைப் படிப்பது என்பனவாக இருந்தது; மேலும் கருப்பு ஆண் குதிரைகள், காற்பந்தாட்டம் ஆகியவற்றிலும் ஆர்வமுள்ளவராக இருந்தார்; காற்பந்தாட்டத்தில் நடு முன்னோக்கிய வீரர் இடத்தில் ஆடிய உசாமா இங்கிலாந்து காற்பந்தாட்ட அணியான ஆர்சனல் கழகத்தின் இரசிகராக இருந்தார். +1974இல் தமது 17வது அகவையில் சிரியாவின் லடாக்கியாவில் நஜ்வா பின் லாதினை கரம் பற்றினார்; ஆனால் செப்டம்பர் 11, 2001க்கு முன்னரே இந்தத் திருமணம் முறிவடைந்தது. இவரது மற்ற மனைவிகளாக கதீஜா சரீஃப் (திருமணம் 1983, மணமுறிவு 1990s); கயிரியா சபர் (திருமணம் 1985); சிகாம் சபர் (திருமணம் 1987); அமல் அல்-சதா (திருமணம் 2000) ஆகியோர் அறியப்படுகின்றனர். சிலர் ஆறாவதாக ஒருவரைத் திருமணம் செய்து மணவிழா முடிந்த உடனேயே மணமுறிவு பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்த மனைவிகள் மூலமாக பின் லாதினுக்கு 20 முதல் 26 வரை மக்கள் பிறந்தனர். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஈரானுக்கு ஓடினர். ஈரானிய அரசு 2010 வரை இவர்களது இடமாற்றங்களை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறத��. + +பின் லாதினின் தந்தை 1967இல் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த வானூர்தி விபத்து ஒன்றில் உயிரிழந்தார். பின் லாதினின் மாற்றாந்தாய் அண்ணன் சலேம் பின் லாதின் 1988இல் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் சான் அன்டோனியோ அருகில் தனது வானூர்தி மின்கம்பிகளில் சிக்கிக்கொள்ள உயிரிழந்தார். + +பின் லாதின் ஒல்லியான, உயரமான மனிதராக, 6 அடி 4 அங் - 6 அடி 6 அங் (193–198 செமீ) உயரமுள்ளவராக, எடையுள்ளவராக அமெரிக்கப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. இடது கை பழக்கமுள்ளவராகவும் ஒரு கைத்தடியின் உதவிநுடன் நடப்பவராகவும் விவரிக்கிறது. வெள்ளை வண்ண தலையணி அணிந்தவராகவும் அறியப்படுகிறார். சவுதி அரேபியாவின் வழமையான ஆண்களுக்கான தலையணியை இவர் அணியவில்லை. மென்மையாகப் பேசும் பின் லாதின் மிகுந்த பண்புள்ளவராக விளங்கினார். + +ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன. + + + + + +பீட்டில்ஸ் + + பீட்டில்ஸ் ("The Beatles") இங்கிலாந்தின் லிவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த புகழ்பெற்ற ஒரு ராக் இசைக்குழுவாகும். 1960-ல் இக்குழு உருவானது. 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இசைக்குழு வரலாற்றில் இவர்களுடைய காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலுமே தனிப்பெருமை வாய்ந்த குழுவாக இருந்த பெருமை பீட்டில்ஸையே சாரும். மிகவும் புகழ் பெற்ற இசைக்குழுவாக இவர்கள் வளர்ந்தபோது, பீட்டில்மேனியா எனப்படும் அளவுக்கு இக்குழுவின்மீது ரசிகர்களிடையே மிகுந்த பற்று  வளர்ந்தது. அவர்களின் பாட்டுக்களும் நாளாக நாளாக மிகவும் முன்னேற்றம் அடைந்தது. வளர்ச்சித் தத்துவங்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த அவர்களின் பாட்டுக்கள் 1960-களில் சமூக மற்றும் கலாச்சார புரட்சிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.  + +1957 மார்ச்சில், ஜான் லெனான்(John Lennon) தன்னுடைய பதினாறாம் வய��ில், குவாரி பேங்க் உயர்நிலை பள்ளியில், சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கினார். அவர்கள் தங்களைச் சுருக்கமாக 'கருப்பு உயர்த்துனர்கள்' (Blackjacks) என்று அழைத்துக்கொண்டனர். பின்னர் தங்கள் பெயரை 'கற்சுரங்க மனிதர்கள்' (Quarrymen) என்று மாற்றிக்கொண்டனர். + +ஜூலை மாதம், லெனானை பதினாறு வயது பால் மெக்கார்ட்னி (Paul McCartney) சந்தித்தார்.  விரைவில் ஒரு கிட்டார் கலைஞராக சேர்ந்தார். 1958 பிப்ரவரியில், மெக்கார்ட்னி தனது நண்பர் ஜார்ஜ் ஹாரிஸனை(George Harrison) இசைக்குழுவுக்கு அழைத்தார். லெனான் ஆரம்பத்தில் ஹாரிஸன் மிகவும் இளைஞர் என்ற காரணத்தால் குழுவில் சேர்க்க விரும்பவில்லை. பதினைந்து வயதான ஹாரிஸன் தன்னை குரல் வள ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டார். தன் பாடலால், லெனான் மனதில் தன்னைப் பதியச் செய்தார்.  லெனான் அவரைப் பாராட்டினார். ஹாரிஸனின் நிலைப்பாட்டிற்குப் பின் ஒரு மாதம் கழித்து மெக்கார்ட்னியால் இரண்டாவது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. லிவர்பூல் பஸ்சின் மேல் தளத்தில் இசைக்கப்பட்ட "ராஞ்சி(Raunchy)" என்ற இசைக்கருவிப் பாடலுக்கான முன்னணி கிட்டார் பகுதியை அவர் நிகழ்த்தினார்.  அவர் முன்னணி கிதார் கலைஞராகப் பதிவானார். 1959 ஜனவரியில், லெனோனின் 'கற்சுரங்க வங்கி(Quarry Bank )' குழுவை விட்டு அனைவரும் வெளியேறினர். லெனோன் லிவர்பூல் கலைக் கல்லூரியில் படிப்பைத் துவங்கினார். மூன்று கிட்டார் கலைஞர்களும், ஜானி மற்றும் மூண்டோங்ஸ் குழுவினரைக் காட்டிலும் குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமாகத் தங்களுக்கு ஊதியம் நிர்ணயித்துக் கொண்டனர். +அவர்கள் ஒரு தோலிசைக்கருவி வாசிப்பவர் கிடைத்த போதெல்லாம் ராக் அண்டு ரோல் வாசிக்கத் தொடங்கினர். + +லெனானின் கலை பள்ளி நண்பர் ஸ்டூவர்ட் சுட்க்ளிஃப்(Stuart Sutcliffe), அவரது ஓவியங்களில் ஒன்றை விற்பனை செய்தார். 1960 ஜனவரிஇல் லெனானுடன் குழுவில் இணைந்தார். ஒரு பாஸ் கிதார் வாங்க இணங்கினார். + +பட்டி ஹால்லி (Buddy Holly) மற்றும் கிரிக்கெட்ஸ் (Crickets) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இசைக்குழுவின் பெயரை பீட்டல்ஸ் என்று மாற்றுவதற்கு பரிந்துரைத்தார். ஜூலை ஆரம்பத்தில், தங்கள் குழுவின் பெயரை வெள்ளி பீட்டில்ஸ் (Silver Beetles) என்றும் ஆகஸ்ட் நடுப்பகுதியில் பீட்டில்ஸ் (Beatles) என்றும் மாற்றினர் +பீட்டிலின் அதிகாரப்பூர்வமற்ற மேலாளர், ஆலன் வில்லியம்ஸ் (Allan Williams) ஹாம்பர்க்கில் அவர்களுக்கு ஒரு உறைவிடத்தை ஏற்பாடு செய்தார். +முழு நேர டிரம் வாசிப்பவர் இக்குழுவில் இல்லை. எனவே 1960 களின் நடுப்பகுதியில் பீட் பெஸ்ட் (Pete Best) அப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். + +இந்த இசைக்குழு கூடலக உரிமையாளர் ப்ரூனோ கொஸ்மைடருடன் (Bruno Koschmider) கூடலகத்தை 3½ மாத காலத்திற்கு ஒப்பந்தம் செய்தது.   பீட்டில்ஸ் வரலாற்று ஆசிரியர் மார்க் லூயிசோன் (Mark Lewisohn) பின்வருமாறு எழுதுகிறார்:  "ஆகஸ்ட் 17 அன்று மாலை அவர்கள் ஹம்பர்க் நோக்கி இழுத்தனர்.  +சிவப்பு-விளக்குப்பகுதி செயல்படத் தொடங்கும் நேரம்... ஒளிரும் நியான் விளக்குகளின் ஒளியில், பல்வேறு பொழுதுபோக்கு வாய்ப்பு அலறல்கள். அதே நேரத்தில், வியாபார வாய்ப்புகளை எதிர்பார்த்து கடை ஜன்னல்களில் சேதமடைந்த ஆடைகள் அணிந்து உட்கார்ந்திருக்கும் பெண்கள்." + +ஆரம்பத்தில் பீட்டில்ஸ் இசைக் குழுவிற்கு கொஸ்ஸைமர் இந்திரா கூடலகத்திற்கு ஏற்பாடு செய்தார்.  இரைச்சல் புகார்கள் காரணமாக 90அங்கிருந்து அக்டோபரில் கைசர்கெல்லர் (Kaiserkeller) என்ற இடத்திற்கு மாறினர். அவர்கள் ஒப்பந்தத்தை மீறிய போது உயர்ந்த 10 கூடலகங்களில் தாமும் போட்டியாளராக இருப்பதை உணர்ந்தனர். கூடலக உரிமையாளர்  இசைக்குழுவினருக்கு  +ஒரு மாத காலத்திற்குள் காலி செய்வதற்கான அறிவிப்பை வழங்கினார்  ஜேர்மன் அதிகாரிகளுக்கு ஹாரிசன் வயது குறைந்தவர்.  தனது வயதைக் குறித்து பொய் சொல்லி ஹம்பர்கில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.  நவம்பர் மாத இறுதியில் ஹாரிசன் நாடுகடத்தலுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.  ஒரு வாரம் கழித்து, கோஸ்கிமேடர், மெக்கார்ட்னி மற்றும் பெஸ்ட் ஆகியோர் ஒரு கான்கிரீட் நடைபாதையில் ஒரு ஆணுறைக்கு தீ வைத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் அவர்களை நாடு கடத்தினர்.  டிசம்பர் தொடக்கத்தில் லெனான் லிவர்பூலுக்கு திரும்பினார், அங்கு சுட்லிக்ஃபி (Sutcliffe) ஹாம்பர்க்கில் பிப்ரவரி கடைசி வரை இருந்தார். அவர்,  + பீட்டில்ஸின் முதல் பகுதியளவு தொழில்முறை புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். + +அடுத்த இரண்டு ஆண்டுகள், பீட்டில்ஸ் இசைக்குழுவினர் ஹேம்பர்க்கில் காலத்திற்கு வசித்துவந்தனர். அவர்கள் பொழுதுபோக்குவதற்காகவும், அனைத்து இரவு நிகழ்ச்சிகளிலும் தங்களது ஆற்றலை பராமரிக்கவும் ப்ருளூடினைப் (Preludin) பயன்படுத்தினர்.  1961 ஆம் ஆண்டு, நகரில் அவர்களின் இரண்டாம் நிச்சயதார்த்தத்தில், கிர்க்கெர்(Kirchherr) தன்  "எக்ஸி(Exi)" எனும் இருத்தலியல் பாணியில் சுட்க்ளிஃபின் (Sutcliffe) வாரிசு உரிமையை வெட்டினார். இது பின்னர் பிற பீட்டில்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  சுட்க்ளிஃப் அந்த வருடத்தின் ஆரம்பத்தில் இசைக்குழுவை விட்டு வெளியேறி, ஜெர்மனியில் தன்னுடைய கலைப் படிப்புகளைத் தொடர முடிவு செய்தபோது, மெக்கார்ட்னி பாஸ் இசைக்கருவிப் பொறுப்பு வழங்கப்பட்ட90து.  ஜூன் 1962 வரை குழுவில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். தயாரிப்பாளர் பெர்ட் காம்ப்பெர்ட் (Bert Kaempfert) இக்குழுவுடன் ஒப்பந்தம் செய்தார்.  பாலிடோர் ரெக்கார்ட்ஸ் (Polydor Records) என்ற பெயரில் டானி ஷெரிடனால் (Tony Sheridan) பதிவு செய்யப்பட்ட பேக்கிங் பேண்டு (backing band) என்ற தொடர் இசைப் பதிவில் இக்குழுவின் இசை பயன்படுத்தப்பட்டது.  அமர்வுகளின் பகுதியாக, பாலிடோர் ரெக்கார்ட்ஸ் உடன் பீட்டில்ஸ் இசைக்குழு ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1961 ஜூனில், "மை போனி(My Bonnie)", எனும் இசைத்தொகுப்பு "டோனி ஷெரிடன் மற்றும் பீட் சகோதரர்கள்(Tony Sheridan & the Beat Brothers)" இணைந்து ஒற்றைப் பதிவு செய்யப்பட்டது. வெளியிடப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பின் மியூசிக் மார்கெட்டின் (Musikmarkt) விற்பனை வரிசையில் 32 வது இடத்தைப் பிடித்தது. + +அவர்கள் அதே கூடலகங்களில்  இரவுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் ஒரே மாதிரியான பணியால் சோர்வுற்றனர். + +1961 நவம்பர் மாதம், இக்குழுவின்  நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் பதிவு அங்காடி உரிமையாளரும், இசை கட்டுரையாளருமான   பிரையன் எப்ஸ்டீனுடன் (Brian Epstein), எதிர்பாராத, குறுகிய கால சந்திப்பு ஏற்பட்டது. + +அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: நான் கேட்டது எனக்கு உடனடியாகப் பிடித்திருந்தது. அவர்கள் புதியவர்கள். அவர்கள் நேர்மையானவர்கள். நான் நினைத்த வகையில் அவர்கள் இருந்தார்கள். நட்சத்திர தரம் உடையவர்கள். அடுத்த இரண்டு மாதங்களில் எப்ஸ்டீன் (Epstein) இசைக்குழுவினரை அழைத்து, 1962ஆம் ஆண்டு ஜனவரியில் அவரை மேலாளராக நியமித்தனர். 1962 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும் எப்ஸ்டீன், பீட்டில்ஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சிகளை, பெர்ட் காம்ஃபெர்ட் தயாரிப்பு (Bert Kaempfert Productions) நிறுவனத���திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கினார். ஒப்பந்த காலத்திற்கு ஒரு மாத காலத்திற்கு முன், தொடக்க வெளியீட்டு நிகழ்ச்சி வைப்பதற்காக, ஹம்பர்கில் கடைசி பதிவு அமர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். ஏப்ரல் மாதம் ஜேர்மனிக்கு அவர்கள் திரும்பியபோது, அவர்களுக்கு ஒரு துயரம் காத்திருந்தது. சுட்க்ளிஃபின் மரணம் சார்ந்த முந்தைய நாளின் செய்தியுடன் துயரர் கிர்ச்செர் அவர்களை விமான நிலையத்தில் சந்தித்தார். பின்னர் அவரின் மரணம் மூளை இரத்த அழுத்தம் காரணத்தால் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. எப்ஸ்டீன், பாலிடருடன் கையெழுத்தான பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். டோனி ஷெரிடனுக்கு ஆதரவாக கையெழுத்திடப்பட்ட அதிகமான இசைப் பதிவுகளுக்கு மாற்றாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. ஒரு புத்தாண்டு தின குரல் வளத் தேர்வுக்குப் பிறகு, பின்வரும் கருத்துடன் டெக்கா ரெக்கார்ட்ஸ் (Decca Records) நிறுவனம் இந்த இசைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்துள்ளனர்: "திரு எப்ஸ்டீனின் கவனத்திற்கு; கித்தார் குழுக்கள் தற்போது தம் செல்வாக்கை இழந்து வெளியே செல்கின்றன." எனினும், மூன்று மாதங்கள் கழித்து, தயாரிப்பாளர் ஜார்ஜ் மார்ட்டின்(George Martin), இ. எம். ஐ. யின் (EMI) பார்லோபோன் (Parlophone) முத்திரைச் சீட்டுக்கு பீட்டில்ஸ் இசைக்குழுவுக்கு கையெழுத்திட்டார். + +இசுக்கிபிள் இரக இசை, தாளயிசை மற்றும் 1950களில் பரவலாக இருந்த ராக் அண்டு ரோல் பாணிகளை அடிப்படையாகக் கொண்ட பீட்டில்சு பின்னர் பல இசை வகைகளிலும் பாடிவந்தனர். பரப்பிசை சந்தப் பாடல்கள், இந்திய இசை, சீக்கதேலிக்கு ராக் மற்றும் கடின ராக் வகைகளில் செந்நெறி கூறுகளை இணைத்துப் பாடினர். தங்கள் பாடல்களின் மூலம் 1960களின் எதிர்ப்பண்பாட்டு காலத்தின் முன்னோடிகளாக கருதப்பட்டனர். +பீட்டில்சு 1960 முதல் மூன்றாண்டுகளாக லிவர்பூலிலும் ஹம்பர்கிலும் மனமகிழ் மன்றங்களில் பாடிப் பிரபலமாயினர். மேலாளர் பிரியன் எப்சுடீன் அவர்களை ஓர் தொழில்முறை பாடற்குழுவாக மாற்ற உதவினார். தயாரிப்பாளர் ஜார்ஜ் மார்ட்டின் அவர்களின் இசைத்திறன் வளர உதவினார். 1962ஆம் ஆண்டில் வெளியான, அவர்களது முதல் வெற்றிப்பாடலான, "லவ் மீ டொ"விற்குப் பிறகு பீட்டில்சின் புகழ் பரவத் தொடங்கியது. அடுத்த ஆண்டில் பீட்டில்மேனியா உருவானபின்னர் "சீர்மிகு நால்வர்" ("Fab Four") என்றழைக்கப்பட்டனர். 1964ஆம் ஆண்டு துவக்கத்தில் பன்னாட்டளவில் புகழ் பெற்றனர். ஐக்கிய அமெரிக்காவில் "பிரித்தானியப் படையெடுப்பை" முன்னெடுத்தனர். 1965 முதல் பீட்டில்சு மிக அருமையான, புத்தாக்க, தாக்கமேற்படுத்தும் இசைத்தட்டுகளை வெளியிட்டனர். "இரப்பர் சோல்" (1965), "ரிவால்வர்" (1966), "சார்ஜென்ட் பெப்பர்சு லோன்லி ஆர்ட்சு கிளப் பாண்டு" (1967), "தி பீட்டில்சு (இசைத்தொகுப்பு)" (பொதுவாக "வைட் ஆல்பம்" எனப்படுகின்றது, 1968) மற்றும் "அப்பெ ரோடு" (1969) ஆகியன குறிப்பிடத் தக்கன. 1970ஆம் ஆண்டில் பிரிந்தபிறகு ஒவ்வொருவரும் தனித்தனியாக வெற்றிகரமான இசைவாழ்வைத் தொடர்ந்தனர். 1980ஆம் ஆண்டு திசம்பரில் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்; நவம்பர் 2001இல் ஆரிசன் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார். மீதமுள்ள மக்கார்ட்னியும் இசுட்டாரும் இன்னமும் இசையில் ஈடுபாட்டுடன் உள்ளனர். + + + + + +வெண் எகிர்சிதறல் + +ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளி திறன் ("Albedo") என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும், இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) பரிமாணமற்ற குறிப்பளவாகும். ("Albedo" என்பது இதன் ஆங்கில நிகர்ப்பதமாகும், இவ்வார்த்தை, "albus" எனும் "வெண்மை" என்பதற்கான இலத்தீன் வார்த்தையினின்று வரையப்பட்டது.) + +வெண் எகிர்சிதறல் என்பது வானிலை ஆய்வு மற்றும் வானியல் ஆகியத்துறைகளில் ஒரு முக்கிய கருதுகோளாகும். வானிலைஆய்வில் சிலசமயங்களில் இஃதை சதவிகிதமாகவும் வழங்குவதுண்டு. +இதன் மதிப்பு உள்வரு கதிர்வீச்சின் அதிர்வெண் சார்ந்தது: தகுதிமுறையின்றி (ஆனால் வழக்கில்), இஃது (கண்னுக்கு புலனாகும்) ஒளி நிழற்பட்டையிலான அனைத்து அதிர்வெண்களுக்கான மதிப்பின் ஏற்புடைய சராசரியாகக் கொள்ளப்படும். பொதுவில், வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசை மற்றும் திசைப்பரவலை சார்ந்தும் இருக்கும். ஆனால், எல்லா கோணங்கனின்றும் ஒரே அளவில் ஒளியைச்சிதறும் லாம்பெர்ட்சியன் (Lambertian) பரப்புகள் இதற்கு விதிவிலக்கு, ஆதலின், அவற்றின் வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசைப்பரவலை சார்ந்திராது. + +வெண் எகிர்சிதறல்கள் ஒரு பயனுள்ள முதல்நிலை தோராயமதிப்பு என்றாலும், நடைமுறையில், ஒரு பெருளின் ஒளிச்சிதறல் பண்புகளைத் துல்லியமாயறிய இருவழி பிரதிபலிப்பு பரவல் சார்பு (bidirectional reflectance distribution function (BRDF)) தேவை. + +கண்னுக்கு புலனாகும் ஒளியில் புதுவெண்பனிக்கு 90% என்பது முதல் கருமையான கரித்துண்டிறகு 4% என்பதுவரை வெண் எகிர்சிதறலின் மதிப்புகள் மாறுபடும். கரும்பொருளின் சூன்ய மதிப்பை அனுகும் வெண் எகிர்சிதறல் தெரிநிலை மதிப்புகள் பெறவல்ல நிழற்சூழ் பள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு. தொலைவினின்று காண்கையில் கடற்பரப்புகள், பெரும்பான்மயான வனப்பகுதிகளைப் போன்றே, மிகக்குறைந்த வெண் எகிர்சிதறலையே கொண்டுள்ளன. ஆனால், பாலைவனங்கள் நில்பரப்புகளிலேயே மிகவதிகமான வெண் எகிர்சிதறல் மதிப்பை பெற்று விளங்குகின்றன. பெரும்பான்மயான நிலப்பரப்புகள் 10 முதல் 40% வரையே வெண் எகிர்சிதறல் பெற்று விளங்குகின்றன. + +பூமியின் சராசரி வெண் எகிர்சிதறல் மதிப்பு 30% ஆகும், இஃது கடல்பரப்பின் மதிப்பைவிட மிகஅதிகம், காரணம் பூமியைச் சூழ்ந்துள்ள மேகங்களேயாகும். + +கோள்கள், துணைக்கோள்கள், விண்கல்கள் முதலியவற்றின் வெண் எகிர்சிதறல் மதிப்புகள் அவற்றின் பண்பியல்புகளை அறிய உதவும். வெண் எகிர்சிதறல்கள், ஒளியலைநீளம், ஒளிக்கோணம் (அதிர்முகக் கோணம்) மற்றும் காலம் சார்ந்து வெண் எகிர்சிதறல்களின் வேறுபாடு இவையே photometry என்னும் வானியல்துறையின் பெறும்பகுதியாகும். தொலைநோக்கியில் பிரித்தறிய இயலாத சிறிய மற்றும் தொலைதூர விண்பொருட்களைப்பற்றி நாம்மறியும் பலத்தரவுகள் வெண் எகிர்சிதறல் மூலம் அறியப்பட்டதே. + +உதாரணமாய், சூரியமண்டலத்திற்கு அப்பாலுள்ள விண்பொருட்களின் தனிமுழு வெண் எகிர்சிதறல் மதிப்பைக் கொண்டு அவற்றின் பரப்பிலுள்ள பனியளவை அளக்கலாம். +அதேபோல், அலைமுகக் கோணம் சார்ந்த வெண் எகிர்சிதறலின் மாற்றங்களைக் கொண்டு அவ்விண்பொருட்களின் பாறைப்போர்வையின் பண்பியல்புகளை அறியலாம். + +ஒற்றைச்சிதறல் வெண் எகிர்சி என்பது சிறியத் துகள்களின் மேல் மின்காந்த கதிர்களின் சிதறலை அளக்கும். இஃது அத்துகளின் பண்பியல்பு (ஒளிமுறிவுச் சுட்டெண் [அ] ஒளிவிலகல் எண்), அளவு, மற்றும் உள்வரு கதிரின் அலைநீளம் ஆகியவற்றை சார்ந்து இருக்கும். + + + + +பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் + +பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் ("BackStreet Boys", பின்தெரு பசங்க) பிரபல அமெரிக்க பாப் இசைக்குழுவாகும். இது 90களின் மத்தியிலும் 2000 ஆண்டின் ஆரம்பக்காலத்திலும் மிகப்பிரபலமாக இருந்த இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு சிறந்த இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதிற்காக பலமுறை பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இவர்களது இசைத்தட்டுக்கள் 130 கோடி விற்பனையாகி உலகின் முதல் நிலை இளைஞர்கள் இசைக்குழு என்ற பெயர் பெற்றனர். + +இவர்கள் 1993ல் உருவானார்கள். 1995ல் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், 1998 பேக்ஸ்ட்ரீட்ஸ் பேக், 2000ல் மில்லினியம், 2002ல் ப்ளேக் அண்ட் ப்ளூ, 2005ல் நெவெர் கோன் ஆகிய ஆல்பங்களை வெளியிட்டனர். பின்பு கெவின் ரிச்சர்ட்சன் இக்குழுவை விட்டு வெளியே சென்றார், பின்பு நாலு பேர் கொண்ட குழுவாக 2007ல் அன்பிரேக்கபுல், 2009ல் திஸ் இஸ் அஸ் போன்ற வெற்றி ஆல்பங்களை வெளியிட்டு உள்ளனர் . 2010ல் நியூ கிட்ஸ் ஆன் தி பிளாக் என்னும் குழுவுடன் சேர்ந்து என்கேஒடிபீஎஸ்பீ என்னும் பெரிய குழுவாக உலகம் முழுவதும் சுற்றி நல்ல வரவேற்பு பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு முடிவில் கெவின் ரிச்சர்ட்சன் ஏப்ரல் 29ம் தேதி பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்ல் மறுபடியும் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகத்து 31 இல் ஜிஎம்யெ என்னும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தில் முதல் முறையாக 2006 இற்குப் பின்னர் ஐந்து பேராகப் பாடினார்கள். +2012 நவம்பர் 6 ம் தேதி இட்ஸ் கிறிஸ்துமஸ் டைம் எகெயின் என்னும் பாடல் வெளியிட்டனர். + + + + +யு2 + +யூ2 இசைக்குழு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினை மையமாகக் கொண்டு இயங்கும் இசைக்குழு ஆகும். இதில் போனோ, த எட்ஜ், ஆதம் க்ளேடன் மற்றும் முல்லேன் ஜூனியர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ராக் இசைக்குழு உலகம் முழுவதும் மிகப்பிரபலமாக அறிமுகமான ஓர் இசைக்குழு ஆகும். யூ2 சிறப்பான இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை 22 முறைகள் வென்று "ராக்" இசைக்குழுக்களில் தன்னிகரற்று விளங்குகிறது. + + + + + +சுற்றுப்பாதையின் வட்டவிலகல் + +வானியற்பியலில், நிலையான கோட்பாடுகளின்படி, எந்தவொரு சுற்றுப்பாதையும் கூம்பு வெட்டு வடிவில்தான் இருத்தல் வேண்டும். இந்தக் கூம்பு வெட்டின் வட்ட விலகல், சுற்றுப்பாதையின் வட்டவிலகல் ("Orbital eccentricity") என அறியப்படும். இது அச்சுற்றுப்பாதையின் முக்கிய பண்புகளில் ஒன்று, இதுவே சுற்றுப்பாதையின் முழு வடிவத்தை வரையறுக்கிறது. வட்டவிலகல் என்பதை இந்த வடிவம் வட்ட வடிவிலிருந்து எந்தவரையில் விலகியுள்ளது என்பதன் அளவெனக் கொள்ளலாம். + +நிலையான கோட்பாடுகளின்படி, வட்டவிலகல் வட்டம், நீள்வட்டம், பரவளைவு, அதிபரவளைவு ஆகிய அனைத்து வடிவ சுற்றுப்பாதைகளுக்கும் கண்டிப்பாய் வரையறுக்கப்பட்டுள்ளது, அம்மதிப்புகள் கீழ்கண்டவாறு: + +நீள்வட்டப் பாதைகளுக்கு, அதன் வட்டவிலகலின் நேர்மாறு சைன் (sinformula_5) தரும் கோணமானது, ஒரு சீர்வட்டத்தினை formula_5 வட்ட விலகல் கொண்ட நீள்வட்டமாய் வீழ்ப்பு வரைவு செய்யத்தேவையான கோணமாகும், என்பதை எளிதாய் நிறுவலாம். + +ஆக, ஒரு கோளின், உதாரணமாகப் புதனின், வட்டவிலகலை (புதனின் வட்ட விலகல் = 0.2056) காண, அதன் நேர்மாறு சைனை கணித்தால் வீழ்ப்பு வரைவுக் கோணம் 11.86 பாகையென அறியலாம். பின் ஏதேனுமொரு சீர்வட்ட பரப்புள்ள பொருளை (வட்டமான அடிப்பாகம் கொண்ட கோப்பை போன்றவை) இக்கோணத்திற்கு சாய்ப்பதன் மூலம் காணப்படும் நீள்வட்டம் புதனின் வட்டவிலகல் கொண்டதாய் இருக்கும். + +ஒரு சுற்றுப்பாதையின் வட்டவிலகலை அதன் நிலைத் திசையன்களிலிருந்து வட்ட-விலகல் திசையனின் அளவுப் பருமனென கணிக்கலாம். +இங்கு: +நீள்வட்டப் பாதைகளுக்கு, அப்பாதையின் திணிவுமையக் குறைவிலக்கம், திணிவுமையக் மிகைவிலக்கம் ஆகியவற்றைக் கொண்டும் வட்டவிலகலைக் கணிக்கலாம்: +இங்கு: + + + + + +ஜான் லெனன் + +ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940 – டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக "கற்பனை செய் (Imagine)", "அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance)" பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும். + + + + +1921 + +1921 (MCMXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +ஜிகாத் + +ஜிகாத் ("Jihad", , ஜிஹாத்) எனும் அரபு மொழிச் சொல்லுக்கு முயற்சித்தல், கடுமையாக உழைத்தல், போராடுதல், தற்காப்பு போன்ற பல்வேறு பொருள்கள் உண்டு. ஜிகாத்தை மேற்கொள்ளுபவர் முஜாஹித் என அழைக்கப்படுகிறார். முஜாஹிதீன் என்பது இதற்கான பன்மை சொல்லாகும். "ஜிகாத்" தொடர்பான பல வசனங்கள் குரானில் காணப்படுகின்றன. இது கடவுளின் வழியில் உழைத்தல், முயற்சித்தல் மற்றும் போராடுதலை குறிக்கும் (striving in the way of God (al-jihad fi sabil Allah).. + +முஸ்லீம் மற்றும் முஸ்லீமல்லாத அறிஞர்கள் பலர், "ஜிகாத்" எனும் சொல்லுக்கு இரண்டு விதமான பொருளை தருகின்றனர். (மன இச்சைகளுக்கு எதிரான) "உள்ளக ஆன்மீக போராட்டம்" (inner spiritual struggle) ஒரு பொருளாகவும் , இஸ்லாமிய எதிரிகளுடனான உடல்ரீதியான போராட்டம் (outer physical struggle) மற்றொரு பொருளாகவும் கையாளப்படுகின்றது. அகிம்சை போராட்டம் மற்றும் வன்முறை போராட்டம் ஆகிய இரண்டும் இரண்டாவது பொருளில் சேரும். + +இது "புனிதப்போர்" ("Holy War") எனவும் பரவலாக மொழிப்பெயர்க்கப்படுகின்றது. இது சர்ச்சைக்குரிய மொழிப்பெயர்ப்பாகும். பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், அறிஞர்களும் 'புனித போர்' என்ற மொழியாக்கத்தை ஏற்பதில்லை. மொழியியலாளரான "பெர்னார்டு லீவிஸ்" (Bernard Lewis) ஜிகாத் என்பது ஆயுதப் போராட்டம் என்ற பொருளிலேயே பலராலும் புரிந்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார். ஜாவித் அஹமத் கமிதி (Javed Ahmad Ghamidi) "ஜிகாத்"தானது தவறாக செயல்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் ஆயுத நடவடிக்கையையும் உள்ளடக்கியது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். + +சுன்னி இசுலாமில் அதிகாரபட்சமாக இடமில்லாத போதும் சில வேளைகளில் ஜிகாத் இசுலாமின் ஆறாவது தூணாகவும் அழைக்கப்படுவதுண்டு. சியா இசுலாமில் ஜிகாத் 10 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பொதுவாக, ஜிஹாதின் ஒரு பகுதியான ஆயுத போராட்டம் கலீபாக்களால் தான் அறிவிக்கப்பட வேண்டும், ஆனால் இஸ்லாமியர்கள் "கலீபா"க்களின் மத அதிகாரத்தை (spiritual authority) ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் 1923 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலீபாக்கள் இடம் வெற்றிடமாகவே உள்ளது. சுன்னி இசுலாமைச் சாராதவர்கள் ஆயுத போராட்டத்திற்கு தமது ஆட்சியாளர்கள் அற���கூவல் விடுத்தால் போதும் என எண்ணுகின்றனர். + +நவீன காலத்திய அரபி மொழியில் "ஜிகாத்" என்பது மதம் சார்ந்த காரணங்களுக்காகவோ அல்லது மதச்சார்பற்ற காரணங்களுக்காகவோ போராடுவதைக் குறிக்கிறது. இதில் ஜிகாத் என்பதற்கு சண்டை போடுதல், போர் புரிதல், ஜிகாத், புனிதப்போர் மற்றும் சமயப் பணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அர்த்தம் குரானில் கூறப்பட்டபடி முகம்மது நபி செய்த செயல்களால் பொருள் கொள்ளப்படுகிறது. குரானிலும் அதற்குப் பின்னான இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளிலும் "ஜிகாத்"தானது "கடவுளின் வழியில்" (in the path of God) என பின்பற்றப்பட்டது. மேலும் மதச்சார்பு இல்லாமல் போர் (crusade) செய்வதையும் "ஜிகாத்" என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ளப்பட்டது. + +குரானில் 41 வசனங்களில் ஜிகாத் மற்றும் அதன் கிளைச் சொற்கள் இடம்பெற்றுள்ளதாக அஹ்மத் அல் தாவூதி கூறுகின்றார். இதில் 11 வசனங்கள் மக்காவில் இருந்தபோதும், 30 வசனங்கள் மதினாவில் இருந்த போதும் அருளப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். உறுதி, உழைத்தல், கட்டாயப்படுத்துதல், அழைப்பு பணி, ஆயுத போராட்டம் போன்ற பல்வேறு பொருள்களில் குரானில் ஜிகாத் பயன்படுத்தப்பட்டுள்ளது. + +அ) உழைத்தல் என்ற பொருளில் குரான் வசனங்கள் 9:79, 29:6, 29:69 ஆகியவற்றில் ஜிகாத் குறிப்பிடப்பட்டுள்ளது. + +இந்த குரான் வசனங்களில் 'உழைப்பு, உழைப்பவர், உழைக்கிறார், உழைப்போர்' போன்றவற்றை குறிக்க ஜுஹ்த, ஜாஹத, ஜாஹிது, ஜாஹதூ ஆகிய ஜிகாத் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. + +ஆ) வற்புறுத்துதல் என்ற பொருளில் ஜிகாத், குரான் வசனங்கள் 29:8, 31:15 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. + +இந்த இரண்டு குரான் வசனங்களில் 'உன்னை வற்புறுத்தினால்' என்பதற்கு ஜாஹதாக என்ற ஜிகாத் கிளைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. + +இ) ஜிகாத் என்பதற்கு உறுதி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 5:53, 6:109, 16:38, 24:53, 35:42-43 ஆகியவை ஆகும். இந்த வசனங்களில் 'உறுதி' என்பதை குறிக்க ஜஹத என்ற ஜிகாத் கிளைச் சொல் இடம்பெற்றுள்ளது. + +ஈ) ஜிகாத் என்பதற்கு அழைப்பு பணி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 22:78, 25:52, 9:73 ஆகியவை ஆகும். + +இவை அல்லாத ஏனைய வசனங்களில் ஜிஹாத் என்பது ஆயுத போராட்டம்/இராணுவ நடவடிக்கை என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆயுத போராட்டமாக இருக்கும் பட்சத்தில் ஜிகாத் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பத��்கு குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன. + +அநீதி இழைக்கப்படும் சூழலிலும், பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் பொருட்டும் ஆயுத போராட்டம் நடத்தப்படலாம் என்று குரான் கூறுகின்றது. மேலும், உடன்படிக்கைகள் முறிக்கப்படும் போதும், சொந்த நிலத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும் ஆயுத போராட்டத்தை நடத்திக்கொள்ள குரான் அனுமதிக்கின்றது. + +எப்படியான சூழல்களில் ஆயுதப்போராட்டம் நடத்தப்படக்கூடாது என்பதற்கும் குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன. மதத்தை பரப்ப போர் செய்யக்கூடாது என்றும், போரை முதலில் துவக்கக்கூடாது என்றும், சமாதானம் செய்துக்கொள்ள விரும்புபவர்களுடனும், விலகிக்கொள்ள விரும்புபவர்களுடனும் சண்டையிட கூடாது என்றும் குரான் விதிமுறைகளை வகுத்துள்ளது. +"ஜிகாத்" எனும் சொல் அரபு மொழியில் குரானின் காலத்திற்கு முன்னர் காணப்படவில்லை. தொடக்க காலத்தில் முஸ்லீம்களின் அருகில் இருந்த எதிரிகளைக் குறிக்கும் பொருட்டே "ஜிகாத்" எனும் சொல் குரானில் குறிப்பிடப்பட்டது, அதன் பின்னான காலங்களில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் குரானின் "ஜிகாத்" எனும் வார்த்தை காலத்திற்கேற்ப முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான எனப் பொருள்கொள்ளப்பட்டது என "ஜோனதன் பெர்க்கி" (Jonathon Berkey) கூறுகிறார். + +குரானைப் போல, நபிமொழி தொகுப்புகளான ஹதீஸ்களிலும் ஜிகாத் பல்வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது. 'தன்னுடைய உள்ளத்தை எதிர்த்து போராடுவதே ஜிகாத் (உள்ளக ஆன்மீக போராட்டம்)' என்று முஹம்மது நபி கூறியதாக நஸயி நூலில் வரும் ஹதீஸ் பதிவு செய்கிறது. + +பெற்றோருக்கு பணிவிடை செய்வதை ஜிகாத் என்று முஹம்மது நபி குறிப்பிட்டதாக புகாரி நபிமொழி தொகுப்பில் காணப்படுகின்றது. + +பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் (புனித யாத்திரை) செய்வதே ஜிஹாத் என்ற பொருளிலும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளது. + +அநியாயக்கார தலைமையிடம் நீதியை எடுத்துரைப்பதே சிறந்த ஜிகாத் என்று முஹம்மது நபி கூறியதாக அபூதாவுத் மற்றும் அஹ்மத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. + +முகம்மது நபியிடம் "ஜிகாத்"தின் சிறப்பைப் பற்றிக் கேட்டபோது, + +"ஜிகாத்தின் சிறப்பென்பது, உனது குதிரை வன்முறையில் கொல்லப்பட வேண்டும் மற்றும் உனது இரத்���ம் தெறிக்க வேண்டும்" என்றார். (The best jihad is the one in which your horse is slain and your blood is spilled) + +"ஜிகாத்" குறித்து பிற இஸ்லாமிய குழுக்களின் பார்வை கீழே, +"ஜிகாத்" என்பது மதத்தைக் காத்துக் கொள்வதற்கான ஒன்றாகும் அதில் வன்முறையை கடைசி வாய்ப்பாக மட்டுமே கொள்ள வேண்டும். + +குரானியர்கள் "ஜிகாத்"தை புனிதப் போராகக் கருதுவதில்லை. ஜிகாத் என்பது திண்டாட்டம் என்றே பொருள் கொள்கின்றனர். இது இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத இடங்களிலும் பொருள்படும் ஒன்று. போர் என வரும் போது தற்காத்தல் எனும் பொருளிலேயே "ஜிகாத்" கொள்ளப்படுகிறது. + +சூஃபிக்கள் "ஜிகாத்"தை பெரிய ஜிகாத் மற்றும் சிறிய ஜிகாத் என இரண்டாகப் பார்க்கின்றனர். தன் மனதை வெல்வது எனும் பொருளில் பெரிய ஜிகாத்தும், வெளிப்புற போர்கள் மற்றும் கலவரத்தை சைதானுடனான போர் என சிறிய ஜிகாத்தையும் வகைப்படுத்துகின்றனர். +இவர்கள் "ஜிகாத்" எழுத்து வடிவத்திலிருந்து நீக்கப்பட்ட ஒன்று எனக் கருதுகின்றனர். + + + + + +எமினெம் + +எமினெம் மற்றும் ஸ்லிம் ஷேடி ( ஆங்கிலத்தில் EMINEM மற்றும் Slim Shady ) என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமெரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடலாசிரியர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். தமது தனிப்பட்ட பாடல்கள் மட்டும் இல்லாமல் D12, Bad Meets Evil, Royce da 5'9" ஆகிய இசைக்குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். உலகில் அதிக பாடல்கள் விற்பனை செய்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் இவர். இவருடைய பாடல்கள் எட்டு கோடியே அறுபது இலட்சம் பிரதிகளைத் தாண்டி அகில உலகம் முழுவதும் விற்பனையாகியிருக்கின்றன. இதன் காரணமாக 2000த்தின் தொடக்கங்களில் இவர் விற்பனையின் அடிப்படையில் இவர் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக அறியப்பட்டார். ரோலிங் ஸ்டோன் போன்ற பல பத்திரிக்கைகள் இவரை மிகச்சிறந்த இசைக்கலைஞர்களுள் ஒருவராக அறிவித்துள்ளன. மேலும் ராப் இசைக்கலைஞர் வரிசையில் இவருக்குத்தான் இப்பொழுது முதலிடம். ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை இவரை ஹிப் ஹாப்பின் ராஜா என்று பாராட்டியது. எமினெம் என்பது மார்ஷல் மாதர்ஸின் சுருக்கமான எம் அண்ட் எம் இன் கலப்பே ஆகும். + +1996இல் இன்ஃபினிட் ஆல்பம் வெளிவந்த பிறகு 1999இல் த ஸ்லிம் ஷேடி LP மூலம் பிரதான பிரபலத்தன்மை அடைந்தார். த ஸ்லிம் ஷேடி LPக்காக சிறந்த ராப் இசை ஆல்பத்திற்கான கி���ாமிவிருதைப் பெற்றார். இவரது அடுத்த இரண்டு ஆல்பங்களான த மார்ஷல் மாதர்ஸ் LP மற்றும் த எமினெம் ஷோ இவருக்கு கிராமிவிருதை பெற்றுதந்தது. இதனால் முதல் முறையாகத் தொடர்ந்து மூன்று முறை சிறந்த ராப் LP-க்காக கிராமி விருது வென்ற பெருமையை எமினெம் பெற்றார். இதை தொடர்ந்து 2004இல் ஆன்கோர் வெளிவந்தது. 2005இன் இசைப்பயணத்திற்குப்பிறகு இவர் மிகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டார். மே 15 2009இல் இவரின் ரிலாப்ஸ் ஆல்பம் வெளியானது. இது அந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமாகும். 2010இல் இவரது ஐந்தாவது ஸ்டூடியோ ஆல்பமான ரெகவரி வெளிவந்து உலகளாவிய வெற்றி பெற்று 2010இன் சிறந்த விற்பனையான ஆல்பமாக வந்தது. ரிலாப்ஸ், ரெகவரி ஆகிய இவ்விரண்டும் கிராமி வென்றது. எமினெம் தம் வாழ்வில் இதுவரை 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். உலகில் அதிக ராப் இசை ஆல்பம் விற்ற இவரது எட்டாவது ஆல்பமான த மார்ஷல் மாதர்ஸ் LP 2 நவம்பர் 15 2013இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். + +ஷேடி ரெகர்ட்ஸ் எனப்படும் இசைப்பதிவு, Shade 45 எனும் வானொலி தடம் ஆகியவற்றைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். 8 மைல் எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் "இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)"என்னும் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார். இவ்விருதை வென்ற முதல் ராப் இசைக்கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. + +எமினெம் மார்ஷல் புரூஸ் மாதர்ஸ் ஜூனியர் (பிறப்பு: சி. 1951) மற்றும் டெபோரா ஆர் "டெப்பி" நெல்சன் (1955 இல் பிறந்தவர்)ஆகிய பெற்றோருக்கு அக்டோபர் 17, 1972 அன்று மார்ஷல் புரூஸ் மூன்றாம் மாதர்ஸாக செயின்ட் ஜோசப், மிசோரியில், பிறந்தார். எமினெம் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்காட்டிஷ், மற்றும் சுவிஸ் வம்சாவளியை சேர்ந்தவர். +14 வயதில், அவர் உயர் பள்ளி நண்பர் மைக் ரூபியுடன் இணைந்து பாடத் தொடங்கினார். அவர்கள் இருவரும் "மனிக்ஸ்" மற்றும் "எம் & எம்," ஆகிய பெயர்களை ஏற்றுக்கொண்டனர். இதுவே பின்னர் எமினெம் என மாறியது. + +எமினெம் குறைபாடுடைய இளைஞர்களுக்கு உதவ, மார்ஷல் மாதர்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் தனது சொந்த அறப்பணி மன்றத்தை நிறுவினார். இது அடிக்கடி நார்மன் யட்டூமா என்ற டெட்ராய்ட் வழக்கறிஞர் நிறுவிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யும். + +எமினெம் சூப்பர் பவுல் XLV போது ஒளிபரப்பப்பட்ட இரண்டு விளம்பரங்களில் இடம்பெற்றார். முதல் விளம்பரம் லிப்டன் பிரிஸ்க் ஐஸ் தேயிலைக்கானது. ஒரு களிமண் அனிமேசன் உருவமாக அவர் இதில் இடம்பெற்றார். அடுத்தது சூப்பர் பவுல் வரலாற்றில் மிக நீண்ட (இரண்டு நிமிடம்) விளம்பரமாக இருந்தது. அது டெட்ராய்ட்டில் அவர் பயணம் செய்து ஃபாக்ஸ் தியேட்டரில் ' ' இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் ' ' பாடல் பின்னனியில் பாடிக்கொண்டிருக்க மேடையில் ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுருந்தது. + +எமினெம் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குறியதாய் இருந்து வருகிறது. அவர் உயர்நிலை பள்ளியில் சந்தித்த கிம்பர்லி அன்னே "கிம்" ஸ்காட்டை, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். எமினெம் 15 வயதில் முதலில் கிம்மை சந்தித்த போது அவருக்கு 13 வயது. அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக இருந்து வருகின்றனர். அவர்கள் மகள் ஹேலி, 1995 டிசம்பர் 25 ம் தேதி பிறந்தார். இந்த ஜோடி 1999 ல் திருமணம் செய்து கொண்டனர். 2000ல் கிம் இரண்டாவது முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டனை பெற்ற பிறகு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அவர் 2001 ஆம் ஆண்டு கிம்மை விவாகரத்து செய்தார். அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறுமணம் புரிந்து கொண்டனர். ஆனால் அவர் மீண்டும் ஏப்ரல் 2006 இல் விவாகரத்து தாக்கல் செய்ததோடு அவர்கள் இரண்டாவது திருமணம் முடிவுக்கு வந்தது. + + + + + +50 சென்ட் + +51 CENT என்றழைக்கப்படும் கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் அமெரிக்காவின் பலரறி ராப் இசைப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான "கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது)" மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான "தி மாசக்கர் (The Massacre - படுகொலை)" இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார். + +ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் போதைப் பொருள் விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒன்பது முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். + +2005 இல் ஹால��வுட் உலகிலும் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பின் தலைப்பிலேயே வந்த "கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin')" மூலம் நடிகரானவர். தொடர்ந்து 2006ல் ஈராக் போரை மையமாக வைத்து வெளிவந்த தி ஹோம் ஆஃப் ப்ரேவ் (The Home of Brave - வீரர்களின் தாயகம்) படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக இசை உலகின் புகழ்மிகுந்த விருதான கிராமி விருதுக்கான தேர்வுக்குழுவில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + +எஸ். நடராஜசிவம் + +எஸ். நடராஜசிவம் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாவார். தற்போது தனியார் வானொலி நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். + +" ஒதெல்லோ", "நத்தையும் ஆமையும்" முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார். + +ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர் + +ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர். + + + + + +மக்காலு + +மக்காலு (நேபாளத்தில் ஏற்புடைய பெயர் "मकालु; சீனாவில் ஏற்புடைய பெயர் மக்காரு"':马卡鲁山; பின்யின்:மக்காலு ஷான் "Mǎkǎlǔ Shān") உலகிலேயே ஐந்தாவது உயரமான மலை. இது இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலைக்கு கிழக்கே 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மக்காலு தனி முகடாக நான்கு முகம் கொண்ட சதுரவடி கூம்புப் பட்டகம் போல் உள்ளது. மலையின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து 8,462 மீட்டர் (27,762 அடி) உயரத்தில் உள்ளது. உயரமான பின்புல மலைப்பகுதியில் இருந்து இதன் தனி முகடு மட்டுமே 2,386 மீ (7,828 அடி) நிற்கின்றது. + +மக்காலு மலையை ஒட்டி இரு துணை முகடுகள் உள்ளன. அவற்றுள் வடமேற்கே ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் கங்ச்சுங்ஸ்ட்டே (Kangchungtse,) அல்லது மக்காலு-2 என்னும் மலைமுகடு உள்ளது. அதன் உயரம் 7,678 மீ (25,190 அடி). மக்காலு மலைக்கு 4 கி.மீ தொலைவில் மக்காலு-2 உடன் ஒட்டி இரண்டாவது துணை முகடு உள்ளது. இதன் பெயர் சோமோ லோன்சோ (Chomo Lonzo). இதன் உயரம் 7,818 மீ (25,650 அடி). + + + + + +தவளகிரி + +தௌலாகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், "தௌளகிரி இமாலயம்" என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. "பொக்காரா" என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள "காளி கண்டாகி" என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னப்பூர்னா மலை உள்ளது. தௌலாகிரி என்றால் "வெண்மலை" என்று பொருள். + + + + + +மோண்ட் பிளாங்க் + +மோண்ட் பிளாங்க் (பிரெஞ்ச் மொழியில் Mont Blanc) அல்லது மோன்தே பியாங்கோ (இத்தாலிய மொழியில் Monte Bianco) என்னும் மலை மேற்கு ஐரோப்பியாவிலேயே மிக உயரமான மலை. மோண்ட் பிளாங்க் என்பது "வெண்மலை" என்று பொருள் தரும். இம்மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 4808 மீ (15,774 அடி) ஆகும். + + + + +மனசுலு + +மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும். + + + + +8 மைல் + +8 மைல் 2002ல் ஆசுக்கார் விருது பெற்ற ஆலிவுட் திரைப்படம் இதில் அமேரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைப்பாடகர் எமினெம் நடித்திருக்கிறார். இந்தப் படம் எமினெமின் வாழ்க்கையை ஒரு அளவிற்கு மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். + +8 மைல் என்ற பெயர், நிகழ்ச்சிகள் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப் (பணக்காரர்கள்-ஏழைகள்) பிரிக்கும் தொலைவு ஆகும். அந்த 8 மைல் தொலைவை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதை இப்படம் சொல்கிறது. பெரும்பாலும் கறுப்பினத்தவரே இயங்கும் ராப் இசை உலகில் எமினெம் எப்படி நுழைந்து வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிய படமே 8 மைல். + +இந்தப் படத்தில் இடம் பெறும் "இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)" என்னும் பாடல், சிறந்த பாடலுக்கான ஆசுக்கார் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +2007 ஐசிசி உலக இருபது20 + +2007 ஐசிசி உலக இருபது20 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 24 வரை தென்னாபிரிக்காவில் நடைப்பெறவுள்ளது. இதுவே முதலாவது இருபது20 உலகக்கிண்ணப் போட்டித்தொடராகும். 10 தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளோடு 2007 ஐசிசி உலகக் துடுப்பாட்ட லீக் முதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கென்யா மற்றும் ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணிகளையும் சேர்த்து மொத்தம் 12 தேசிய துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குப்பெறத் திட்டமிடப்பட்டுளன. + +குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு: + +இரண்டு அணிகளும் தமக்கான பந்துப் பரிமாற்றங்கள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். + +குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்: + + +12 அணிகளும் குழுவுக்கு 3 அணிகள் வீதம் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.திறமையான இரண்டு அணிகள் அடுத்த்ச் சுற்றுக்கு தகுதிபெறும். + +கீழேயுள்ள சூப்பர் 8 போட்டிகளில் A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும். இது குழுநிலைப் போட்டிகளில் அவ்வணி குழுவில் பெற்ற இடத்தைக் குறிக்காது. குழுவின் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமாயின் அவை தாம் பெற்ற இடங்களை அல்லாமல் முன் குறிப்பிடப்பட்ட இடங்களையே பெறும். இவ்விரண்டு அணிகளும் தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று பிரதியிடப்படும். உதாரணமாக ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும். + +8 அணிகளும் இரண்டு உப குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நாடாத்தப்படும். ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு திறமையான அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். + +எல்லப் போட்டிகளும் பின்வரும் மூன்று விளையாடரங்களில் நடைப்பெற்றான: + + + + + + +தொரீ + +தொரீ (அல்லது டொரீ) என்பது சின்த்தோ கோவில்களில் காணப்படும் ஜப்பானியக் கதவு ஆகும். இது புத்தக் கோவில்களிலும் காணப்படுகிறது. இதில் இரண்டு நெடுக்குச் சட்டங்கள் தூண் போன்றும் இரு குறுக்குச் சட்டங்கள் அவற்றின் மீது அமைந்தும் காணப்படுகின்றன. இவற்றின் மீது பொதுவாக காவி கலந்த செந்நிறம் பூசப்பட்டு இருக்கும். + + + + +கியோத்தோ + +கியோத்தோ ("Kyoto", + + + + +ஐரோப்பியத் தமிழ் வானொலி + +ஐரோப்பியத் தமிழ் வானொலி என்பது ஈ.ரி.ஆர். (E.T.R - Euroepan Tamil Radio) என்ற பெயரில் ஜேர்மனியில் இருந்து ஒலிபரப்பாகும் 24 மணி நேரத் தமிழ் வானொலி ஆகும். + +1999 இல் ஜேர்மன் மண்ணில் ஒரு சிறு வானொலிக் கலையகம் தோன்றியது. இந்தக் கலையகத்தில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள், நாளுக்கு 45 நிமிடங்கள் அலைபரப்பு நிகழ்ந்தது. + +2005 பெப்ரவரி 11 இல் இந்த கலையகம் மேலும் சற்று வளர முற்பட்டது. நேயர்களை நேரடித் தொலைபேசித் தொடர்புகளால் இணைத்து, வானொலியுடன் தொடர்பு கொள்ளச் செய்தது. +ஆனாலும் இன்னொரு வானொலியுடன் இணைந்துதான் அப்போது இந்த முயற்சியில் காலடி எடுத்து வைத்திருந்தது. + +இந்த கலையகத்தின் வானொலி அலைபரப்பு ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கியது செப்டம்பர் 6, 2006 அன்று. 2006 செப்டம்பர் 11 இல் ஐரோப்பிய தமிழ் வானொலி என்ற பெயரில் இருபத்தினான்கு மணிநேரம் வானொலி வழியே நேயர்களைச் சென்றடைந்தது. + +இந்த சிறப்பு நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் நேரடியாகவே ஈ.ரி.ஆர் (ஈ.டி.ஆர்)கலையகத்திற்கு வந்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்தும் வைத்தார். + +இதுவே ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச்சேவை. + +செய்மதி ஊடாக வானொலிக்கு நிகழ்ச்சிகளை எடுத்து வந்த ஈ.ரி.ஆர் வானொலிக் கலையகம் இணையத்தளத்தின் ஊடாகவும் அலைபேசிகளில் முதலாவது தமிழ் வானொலியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களைச் சென்றடைகிறது. + + + + + +வட்டவிலகல் + +கணிதத்தில் வட்டவிலகல் ("Eccentricity") என்பது அனைத்து கூம்பு வடிவத்திற்கும் அறியப்படும் ஒரு கணிதவியல் கருத்தாகும். இஃதை அவ்வடிவம் வட்ட வடிவிலிருந்து எந்தளவிற்கு பிறழ்ந்துள்ளது என்பதன் அளவாய் கொள்ளலாம். குறிப்பாக, + +வட்டவிலகலின் வரையறை பின்வருமாறு தரப்படும்: + +இதில், formula_2 என்பது அவ்வடிவத்தின் அரை-பெரும் அச்சின் நீளம், formula_3 என்பது அரை-சிறு அச்சின் நீளம் மற்றும் "k" என்பது நீள்வட்டதிற்கு +1, பரவளைவிற்கு 0, அதிபரவளைவிற்கு -1 எனவாகும். + +இஃது முதல் வட்டவிலகல் எனவும் அறியப்படும், கணித இலகுவிற்காக கொள்ளப்படும் இரண்டாம் வட்டவிலகலினிர���ந்து "e"' பிரித்தறிய இவ்வாறு குறிக்கப்படும். +இரண்டாம் வட்டவிலகல் பின்வருமாறு வருனிக்கப்படும்: + +மேலும், இவையிரண்டும் கீழ்கண்டவாறு தொடர்புடையன: + +அரை-பெரும் அச்சின் நீளம் formula_2 எனவும், அரை-சிறு அச்சின் நீளம் formula_3 எனவுமுடைய எந்தவொரு நீள்வட்டதிற்கும் அதன் வட்டவிலகல், "e", என்பது அவ்வடிவின் "கோணவட்ட விலகலின்", formula_8, சைனாகும் என்பது கீழ்கண்ட சமன்பாட்டின்படி அறியப்படும்: + +வட்டவிலகல் என்பது குவியங்களுக்கு (formula_10 மற்றும் formula_11) இடையிலான தொலைவு மற்றும் பெரும் அச்சின் நீளத்திற்கான விகிதமாகும் formula_12. + +அதேபோல், இரண்டாம் வட்டவிலகல், "e"', formula_8ன் டேன் ஆகும்: + +ஒரு நேர்கோட்டை அல்லது கோட்டுத்துண்டை சிறு அச்சின் நீளம் சுழி (பூஜ்யம்) எனக்கொண்ட ஒரு நீள்வட்டம் என்பதாக கொள்ளலாம், அதன்படி formula_3 சுழியாகும். formula_3-ன் இந்த மதிப்பை நீள்வட்டத்தின் வட்டவிலகல் காணும் சமன்பாட்டில் ஏற்ற, அதன் வட்டவிலகல் 1 எனப்பெறலாம். + +கூம்பு வெட்டின் மாற்று வரையருவாக, அஃது புள்ளி P மற்றும் வரைகோடு L-ஐ சுற்றி புள்ளிகள் Q-வின் ஒழுக்கு எனக்கொள்கையில், formula_17 என்பதாகவும், formula_18 என்பது Q-விற்கும் L-க்குமான செங்குத்து தொலைவாகவும், "e" என்பது வட்டவிலகல் என்றுமாகையில், "e" = ∞ மதிப்பு ஒரு நேர்கோட்டை ஈனும் (தரும்). + +அரை-பெரும் அச்சின் நீளம் formula_2 எனவும், அரை-சிறு அச்சின் நீளம் formula_3 எனவுமுடைய எந்தவொரு அதிபரவளைவிற்கும் அதன் வட்டவிலகல் கீழ்கண்ட சமன்பாட்டின்படி அறியப்படும்: + +ஒரு பரப்பின் வட்டவிலகல் என்பது அப்பரப்பின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் (அல்லது வெட்டின்) வட்டவிலகலாகும். எடுத்துக்காட்டாய், ஒரு மூவச்சு நீள்கோளத்தின் "உச்சி வட்டவிலகல்" என்பது மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அச்சுக்களை (இவற்றில் ஒன்று முனையிடை (துருவ) அச்சாக இருக்கும்) உள்ளடக்கிய தளவெட்டுப்பகுதியில் தோன்றும் நீள்வட்டதின் வட்டவிலகலாகும், மற்றும், "நடுவரை வட்டவிலகல்" என்பது முனையிடை (துருவ) அச்சிற்கு செங்குத்தாய் மையத்தில் இருக்கும் தளவெட்டில் (அஃதாவது, நடுவரைத் தளத்தில்) காணப்படும் நீள்வட்டதின் வட்டவிலகலாகும். + +வானியக்கவியலில், கோளவடிவ புலனிலையால் கட்டுற்ற சுற்றுப்பாதைகளுக்கு மேற்க்கூறிய வரையறை முறையின்றி நுண்பியலாக்கப்படுகிறது. மிகைமையத் தொலைவும் குறைமையத் தொலைவும் நிகராய் இருக்கையில் ��ட்டவிலகல் குறைவு எனவும், அவையிரண்டும் மிகவேறுபட்டு இருக்கையில் அச்சுற்றுப்பாதை வட்டத்தினின்று மிகுதியாக பிறழ்ந்துள்ளது, அதன் வட்டவிலகல் ஏறத்தாழ 1 எனவும் கொள்ளப்படுகிறது. இவ்வரையறை, கெப்லெரியன் புலனிலைகளில் (அஃதாவது, formula_22 புலனிலை), நீள்வட்டதிற்கான வட்டவிலகலின் கணித வரையறையுடன் ஒத்துப்போகின்றது. + + + + + +1832 + +1832 ((MDCCCXXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. + + + + + + + + +சி++ + +சி++ ("C++") சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பியார்னே இசுற்றூத்திரப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது. + +அமெரிக்க பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய பியார்னே இசுற்றூத்திரப்பு சியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது. + +சி++ இன் வாழ்நாள் முழுவதும், அதன் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு விதிமுறை தொகுப்பு முறைசாராமல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. + + + + + + + + + char *name="John"; + +சி++ பி.எச்.பி போன்ற இதர மொழிகள் போல் அல்லாமல் சொற்தொடர்களை தெரிவில் பயன்படுத்த முடியாது. + +சி ++ நன்கு வகையான நினைவாக ஒதுக்கீடு கொண்டு உள்ளது +நிலையான நினைவாக ஒதுக்கீடு:இந்த நிலையான நினைவாக ஒதுக்கீடு என்பது ஒரு நிலையான வேரியபுல்கு ஒரு பொருளை ஒதுக்கீடுசெய்வது ஆகும் இந்த ஒதுக்கீடு கம்பையில் டைம்இன் போது நடை பெரும் ஒரு செயல் ஆகும் ஒதுக்கப்பட்ட சேமிப்பு பகுதி ஒரு நிலையான இடமாகும் செமிகபடுபோது அதனுடன் செயல்படும் நிரல் அமைந்து இருக்கும் .இது போன்ற திறவுசொர்கள் ஸ்டாடிக் என்ற சொலுடன் இணைத்து டிச்ளைர் செய்யப்படும். + + + + + +டர்பன் + +டர்பன் (சூலு: "eThekwini" (IPA: ) தென்னாபிரிக்காவின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகாணத்தில் பெரிய நகரமாகும். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலை காரணமாக உல்லாசப் பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது. + +2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வசிக்கின்றனர். டர்பன் பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாப்பிரிக்க நகரங்களை விடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி . சற்று குறைவானதாகும். + + + + +ரைன்ஹோல்ட் மெஸ்னெர் + +ரைன் மெஸ்னர் (பி. செப்டம்பர் 17, 1944) ஒரு புகழ்பெற்ற இத்தாலிய மலையேறுநர். உலகிலேயே மிகச்சிறந்த மலையேறுநர் எனப் புகழப்படுபவர். எவரெஸ்ட் மலையுச்சியை ஆக்ஸிஜன் உருளி இல்லாமல் முதன்முறையாக ஏறி அருஞ்செயல் புரிந்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக கடல்மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரத்தை மீறும் உலகத்தில் உள்ள எல்லா மலைகளையும் (14 மலைகளையும்) ஏறி அருஞ்செயல் புரிந்தார். + + + +