diff --git "a/train/AA_wiki_45.txt" "b/train/AA_wiki_45.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_45.txt" @@ -0,0 +1,3446 @@ + +திருநெல்வேலி மாவட்டம் + +திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , செங்கோட்டை , அம்பாசமுத்திரம் ஆகும். + += வரலாறு = + +திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத் தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலிசீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது. + +சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாகக் காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ்நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்டத்தன: நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன்கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன்பிள்ளையும் ஆவர். + +கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்; மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. + + +இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 60 உள்வட்டங்களும், 559 வருவாய் கிராமங்களும் கொண்டது. + + +இம்மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 425 கிராம ஊராட்சிகள் கொண்டது. + + +அச்சம்புதூர் · +ஆலங்குளம் · +ஆழ்வார்குறிச்சி · +ஆய்குடி · +சேரன்மகாதேவி · +குற்றாலம் · +ஏர்வாடி · +கோபாலசமுத்திரம் · +இலஞ்சி · +களக்காடு · +கல்லிடைக்குறிச்சி · +கீழப்பாவூர் · +மணிமுத்தாறு · +மேலகரம் · +மேலச்சேவல் · +மூலக்கரைப்பட்டி · +முக்கூடல் · +நாங்குநேரி · +நாரணம்மாள்புரம் · +பணகுடி·பண்பொழி · +பத்தமடை · +புததூர் · +இராயகிரி · +சம்பவர் வடகரை · +சங்கர் நகர் · +சிவகிரி · +சுந்தரபாண்டிபுரம் · +சுரண்டை · +திருக்கருங்குடி · +திருவேங்கடம் · +திசையன்விளை · +வடக்குவள்ளியூர் · +வாசுதேவநல்லூர் · +வீரவநல்லூர்· + +மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல் நிலையங்கள்: 80; சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகங்கள்: 48,773; அஞ்சலகங்கள்: 553; தொலைபேசிகள்: 29,779. +பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 - நடுநிலை 411 - உயர்நிலை 90 - மேல்நிலை 129 - கல்லூரிகள் 14 உள்ளன. +இது தவிர தொழில் கல்வி நிறுவனங்கள்-3; அரசு மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி; தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5; ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8. + +மருத்துவ மனைகள்-10; மருந்தகம்-3; தொடக்க மருத்துவ நல நிலையம் 55; துணை தொ.ம.நலநிலையம்-385. + +தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். குற்றாலத்தில் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது. + +இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். + +இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + + + + +பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. + + + +குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன. + +கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் (மேலப்பாளையம் - வழி கருப்பூந்துறை திருநெல்வேலி மாநகரம்) + + +திரு குடும்ப தேவாலயம் அல்லது பரலோகமாதா தேவாலயம் வடக்கன்குளம் (தென் தமிழ்நாட்டின் ரோம் ) + +மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன. + +பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக் கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான். + +இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு. + +அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன. + +பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்க நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. + +தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. + +சம்பங்குளத்தில் உள்ளது கடனாநதி அணை. + +திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும். + +பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது. + +அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும். + +காடுகளின் பரப���பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன. + +செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன. + +மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன. + +திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி ��ிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளை கின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன. இடிந்தகரை மற்றும் உவரி பகுதில் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலம் உள்ளது + +பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர். + +திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன்கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம்மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன்கோயில் நாங்குநேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி. + +1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. 1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன. 1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளை வித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன. குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும். + +சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது. + +உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது. + +அணுசக்திக்க��� தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. + +இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது. + +நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது. + +உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது. + +இம்மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக கீழேகண்ட இடங்களைக் குறிப்பிடலாம் : +அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம் ஈ) கிருஷ்ணாபுரம் உ) திருக்குறுங்குடி ஊ) முண்டந்துறை புலிகள் புகலிடம் எ) களக்காடு புலிகள் புகலிடம் ஏ) கூந்தக் குளம் பறவைகள் புகலிடம் ஐ) அரியகுளம் பறவைகள் புகலிடம். + +தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. + +குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான். + +தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள். + +இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் குளிக்க திரளான மக்கள் கூடுவர். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத துவக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட துவங்கிவிடும். + +குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது. + +தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சன்னதி உள்ளது. + +திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது. + +இது நெல்லையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை சூழ்ந்த மகேந்திர மலை அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையில் இருக்கிறது. பெருமாளுக்கு நம்பிராஜன் என்று பெயர். இத்தென்கலை வைணவக் கோயிலில் சிவபெருமானும் இருக்கிறார். நால்வர், பைரவர், சண்டிகேசுவரர் முதலிய பரிவார தேவதைகளும் இருப்பதால் சிவன் கோயில் வைணவத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு. இங்குள்ள சிவனை "பக்கல் நின்றார்" என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் பெருமாளைப்பற்றி பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார் நம்மாழ்வார், சடகோபர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்குதான் நம்மாழ்வார் பிறந்தார். இக்கோவிலில் கார்த்திகை, பங்குனி, ஏகாதசித் திருவிழாக்கள் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. யாளி மண்டபம், இரத மண்டபம், ஜஂயர் மண்டபம், சித்திர கோபுரம், இசக்கியம்மன், ஆண்டாள், குறுங்குடிவல்லித் தாயார் சந்நிதிகள் உள்ளன. + +திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும். + +திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு பலவகையான தாவரங்களும், பறவைகளும் காணக்கூடியதாக இருக்கின்றன. இங்குப் புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன. இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை. + +சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப்��ட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம். வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. +பூவன்குறிச்சியில் முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டது. + +தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். + +ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் ப1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. + +திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. + +இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் சிற்பபு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதுத + +தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் "கன்னி" என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. சங்கரன்கோவில் மற��றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது + +திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. + +சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்புதான், இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும். இவரின் மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு, அல்லது ஐக்கிய மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர் ஹென்றி பவர் ஐயரின் கல்லறை திருநெல்வேலி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. + +இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + + + + + + +திருவள்ளூர் மாவட்டம் + +திருவள்ளூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத���தின் தலைநகரம் திருவள்ளூர் ஆகும். + +செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. + +3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,728,104 ஆகும். அதில் ஆண்கள் 1,876,062 ஆகவும்; பெண்கள் 1,852,042 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 35.33% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,098 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 405,669 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,325,823 (89.21 %), இசுலாமியர் 143,093 (3.84 %), கிறித்தவர்கள் 233,633 (6.27 %), ஆகவும் உள்ளனர். + +மாவட்ட வருவாய் துறையின் 1 மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் 4 வருவாய் கோட்டங்கள், 10 வருவாய் வட்டங்கள், உள்வட்டங்கள், 792 வருவாய் கிராமங்கள் கொண்டது. + + +உள்ளாட்சித் துறையின் கீழ் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 526 கிராம ஊராட்சிகள் உள்ளது. + + + +இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவள்ளூர், சென்னை வடக்கு, சிறீபெரும்புதூர் மற்றும் அரக்கோணம் என நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளது. இம்மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. + + + + + +திருவண்ணாமலை மாவட்டம் + +திருவண்ணாமலை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவண்ணாமலை ஆகும். + +1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்களாகப் பிரிக்கப்பெற்றன. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது. + +திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6188 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும். + +6,188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 2,464,875 ஆகும். அதில் ஆண்கள் 1,235,889 ஆகவும்; பெண்கள் 1,228,986 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 12.75% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 398 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 83.11 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 272,569 ஆகவுள்ளனர். + +இம்மாவட்டம் திருவண்ணாமலை, செய்யாறு மற்றும் ஆரணி என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 34 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 18 ஊராட்சி ஒன்றியங்களையும், 850 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. . மேலும் இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. + +நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. செய்யாறு நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும். + +மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன. + +மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இந்நகரில் உள்ள அருள் மிகு அண்ணாமலையார் கோவிலும், இரமண மகரிஷி ஆசிரமமும் உலகப் புகழ் பெற்றவை. திரு அண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இங்கு இறைவர் நெருப்பின் வடிவில் வணங்கப் பெறுகிறார். பௌர்ணமி கிரிவலம் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறது ஜவ்வாது மலைத் தொடர் மற்றும் அதைச் சுற்றி உள்ள நிர்வீழ்ச்சிகள் மற்றும் வனம் சுற்றுலா மற்றும் கோடைஸ்தலமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். செய்யாறு நகரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமான வேதபுரிஸ்வரர் ஆலயம், வந்தவாசிக்கு அருகில் தென்னாங்குரிலுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயம், ஆரணி கோட்டை, தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு கனககிரிஸ்வர் மலைக்கோயில், ஆரணிக்கு அருகில் விஜய நகரில் உள்ள கோட்டை மற்றும் மாளிகை ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். + +திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில் சொத்தின் பரப்பளவு 1967.05 ஹெக்டேர் ஆகும். + + + + + +திருவாரூர் மாவட்டம் + +திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும். + +1996 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டகளின் சில பகுதிகளைப் பிரித்து ஏ. டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டமாக இது உருவாக்கப்பட்டது. 1998 இல் மாவட்டத்தின் பெயரானது திருவாரூர் மாவட்டம் என மாற்றப்பட்டது. + +இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 28 உள்வட்டங்களையும், 473 வருவாய் கிராமங்களையும் கொண்டது. + + + +இம்மாவட்டம் 4 நகராட்சிகளையும், 7 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 430 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. + + + + +இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 3 சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடனும், "மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி" தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. + + + + + + +சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் + + + + + +வேலூர் மாவட்டம் + +வேலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் வேலூர் ஆகும். + +19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. + +இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களும், 13 வருவாய் வட்டங்களும், 53 உள்வட்டங்களும், 842 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 20 ஊராட்சி ஒன்றியங்களும் , 743 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 1 மாநகராட்சியும், 11 நகராட்சிகளையும், 16 பேரூராட்சிகளையும் கொண்டது. + +6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் உள்ளனர். + +இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,397,857 (86.32 %), கிறித்தவர்கள் 111,390 (2.83 %), இசுலாமியர் 414,760 (10.54 %) ஆகவும் உள்ளனர். + +வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும். ஆம்பூரிலும், ராணிப்பேட்டையிலும், வாணியம்பாடியிலும் அதிகளவு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது. ஆற்காடு பிரியாணி சிறப்பு பெற்றது. + +இம்மாவட்டத்தின் பகுதிகள் அரக்கோணம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. இம்மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் ஒடுக்கப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. +திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் என மூன்று தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளன. + + + + + + +விழுப்புரம் மாவட்டம் + +விழுப்புரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் விழுப்புரம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டத்திலிருந்து சனவரி 8, 2019 அன்று கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்க தனி அலுவலர் ஒருவரை நியமித்து தமிழக முதல்வர் ஆனையிட்டுள்ளார். + +இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது. + +செப்டம்பர் 30, 1993-ஆம் ஆண்டு முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து "விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்" என உருவாக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +கிழக்கில் புதுச்சேரி மாநிலமும் தெற்கில் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும், வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. + +மணிமுத்தாறு, கோமுகி ஆறு, கெடிலம் ஆறு, சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு, தென்பெண்ணை ஆறு ஆகியன இம்மாவட்டத்தில் பாயும் குறிப்பிடத்தக்க ஆறுகளாகும். இம்மாவட்டத்தில் கப்பியாம்புலியூர் ஏரி,கெங்கவரம் ஏரி,சாலமேடு ஏரி, மல்லிகைப்பட்டு ஏரி, கோமாலூர் ஏரி குறிப்பிடத்தக்க ஏரிகளாகும். + +7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,458,873 ஆகும். அதில் ஆண்கள் 1,740,819 ஆகவும்; பெண்கள் 1,718,054 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஆக 16.84% உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 481 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 71.88% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 404,106 ஆகவுள்ளனர். + +இம்மாவட்டம் 4 வருவாய்க் கோட்டங்களும்,13 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும், 1490 வருவாய் கிராமங்களும் கொண்டது. + + +இம்மாவட்டம் 3 நகராட்சிகளும், 15 பேரூராட்சிகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 22 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 1099 கிராம ஊராட்சிகளும் கொண்டது. + +இம்மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. +விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி. ஆரணி என 3 மக்களவைத் தொகுதிகளையும், 11 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. + +இம்மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. + + + + + + + +விருதுநகர் மாவட்டம் + +விருதுநகர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டமானது 1985 மார்ச் 15 இல் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் விருதுநகர் ஆகும். + +தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விருதுநகர் மாவட்டத்தில் 19,42,288 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 9,67,709 ஆண்கள், 9,74,579 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மாவட்ட மக்கள்தொகையின் பாலின விகிதம் 1007. அதாவது 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 80.15% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.71%, பெண்களின் கல்வியறிவு 72.69% ஆகும். இது தமிழக சராசரி ���ல்வியறிவான 80.09% விட சற்று கூடியதே. விருதுநகர் மாவட்ட மக்கள் தொகையில் 1,97,134 (10.15%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும், 600 வருவாய் கிராமங்களும் கொண்டது. + +இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள: + +விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர், திருத்தங்கல் 7 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 கிராம ஊராட்சிகள் கொண்டது. + +விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி என 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. + +இராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் சஞ்சீவி மலை உள்ளது. இங்குள்ள அமைதியும் எழிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இராமாயணத்தில் இலங்கைப்போரின்போது மயங்கி விழுந்த இலக்குமணனைக் காப்பாற்ற அனுமன் இம்மலையைக் கொண்டு வந்ததாகவும் பின்னர் இங்கு வீசியெறிந்ததாகவும் உள்ளூர்க் கதைகள் கூறுகின்றன. ஆகவே இங்கு உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. + +தமிழக அரசின் இலச்சினையில் இடம் பெற்றிருக்கும் 12 நிலை கோபுரம் இவ்வூரின் அடையாளமாக விளங்குகிறது. இந்தக் கோபுரம் 192 அடி உயரமுடையது. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் வழிபட்ட கோவில் ஆகும். ஆடிப்பூரம் திருவிழாவின்போது ஓடும் தேர் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிப்புதூரின் பால்கோவாவும் பிரசித்தமானது. + +ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள மலைத்தொடரில் பல அரிய தாவரங்களும் உயிரினங்களும் உள்ளன. 480 ச.கி.மீ பரப்பில் 1989ஆம் ஆண்டு செண்பகத்தோப்பு என்றவிடத்தில் மரஅணில் வனவிலங்கு உய்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்மேற்கில் பெரியார் புலிச் சரணாலயத்தினைத் தொடர்ந்தும் வடமேற்கில் மேகமலை காடுகளை அடுத்தும் அமைந்துள்ளது. இந்த உய்விடத்தில் அருகிவரும் மர அணில்களின்(arboreal - Grizzled Giant Squirrel -"Ratufa macrora") வாழ்விடமாக உள்ளது. பழுப்பு நிற அணில்கள் ஓர் சிறு பூனையின் அளவில் 1 முதல் 1.8 மிலோவரை எடையுள்ளன. 735மிமீ வரை நீளமுள்ளன. மரக்கிளைகள் சந்திக்கும் பிரிவுகளில் கூடு கட்டுகின்றன. இத���ால் ஆபத்து நேரங்களில் ஓர் கிளையிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிச் செல்வது எளிதாகிறது. இதனைப் பறக்கும் அணில் என்றும் கூறுவர். + +இராஜபாளையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தென்காசி செல்லும் வழியில் அமைந்துள்ளது , இங்கு சாஸ்தாகோவில் ஆறு மற்றும் அணைக்கட்டும் அமைந்துள்ளது, + +திருச்சுழி திருமேனிநாதர் கோயில் என்ற தேவார பாடல் பெற்ற சிவாலயம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. + + + + + +துங்கா ஆறு + +துங்கா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப் படுகிறது. பின் துங்கபத்ரா ஆறானது கிழக்கு நோக்கி ஓடி ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது. + +துங்கா ஆற்றின் மீது கஜனூர் என்ற இடத்திலும் துங்கபத்ராவின் மீது ஹோஸ்பேட் என்ற இடத்திலும் அணைகள் கட்டப் பட்டுள்ளன. +துங்கா ஆற்றின் மீது சிருங்கேரியில் பல கோவில்கள் உள்ளன. சாரதா கோவிலும் வித்யாசங்கரர் கோவிலும் இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. + + + + +நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் + +நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ("Nagalingam Ethirveerasingam", பிறப்பு: 1933) இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியவர். + +இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் +இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர். + +எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் ய���ழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள். + +இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். + + + + + +ஒலியன் + +ஒரு மொழியின் அடித்தளம் ஒலியன் ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியன் என்பது, கோட்பாட்டு அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், உருபன்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியன்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும். +ஒரு மொழியில் வழங்கும் அடிப்படை ஒலிகளை ஒலியன் என்கிறோம். பல்வேறு நுட்பங்களைக்கொண்ட பேச்சு மொழியில் ஒலி வேறுபாடுகளுக்கு இடையில் மாறாகவும், அடிப்படையானதுமான ஒலியை ஒலியன் என்கின்றனர். இவ்வொலியன் என்பது பேச்சொலியின் சிறு பகுதியாக அமைகிறது. அதே நேரத்தில் பொருள் மாற்றம் செய்யக்கூடிய தனி ஒலியாகவும் விளங்குவதை ஒலியன் என்கிறோம். + +புளுஃமின் என்னும் அறிஞர் மொழிக்கான பொருள் தொடர்பு ஏற்படுத்தும் தகுதிப்பாடு உடைய மிகச்சிறிய கூறு ஒலியன் என்கிறார். + +ஒலியன்களைத் தொகுக்க மொழியியலாளர்கள் ஐந்து கொள்கைகளை வரையறுக்கின்றனர். + + +(வீ) கடம், +இவை மூன்றும் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள். முற்றிலும் ‘டம்’ என்ற ஒலி அமைப்பு உள்ளது. இவற்றின் இடையே உள்ள முதலொலி க, உ, ம, ப, வேறுபட்டு பொருள் மாற்றம் செய்கிறது. இவ்வாறு பொருள் மாற்றம் பெறத்துணைபுரியும் ஒலிகளை குறையொலி என்பர். வேறுபட்ட நிலையால் பொருள் வேறுபடும் நிலையை, வேற்று நிலைக்கொள்கை என்பர். + + இது வேற்று நிலைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. கடல், தங்கம், அகம், இச்செசற்களில் ஒரே ககர ஒலி இல்லாமல் மூன்று ககர ஒலிகளை ரி. நி. பி காணமுடிகி���து. மொழி முதலில் ரி ஒலி வடிவமும் மெல்லினத்தை அடுத்து நி என்ற ஒலி வடிவமும், இரண்டு உயிர் ஒலிக்கிடையில் ‘பி’ என்ற ஒலி வடிவத்தையும் காண்கிறோம் இவைகளும் ஒன்று ஒலியனகவும் மற்றவை மாற்று ஒலியாகவும் இருக்கின்றன. + + சிலச்சொற்கள் பொருள் மாறுபாடு தோற்றுவிக்காமல் அதே நேரத்தில் குறை ஒலி இணைகளாக அமைவதை காண்கிறோம். இவ்வியல்பை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் என்கிறோம். எ.கா.பழம் - பளம் இரண்டும் குறைஒலி இணையாகஅமைந்திருக்கின்றன ழ ள வெவ்வேறு ஒலிகளாக இருந்தாலும் பொருள் வேறுபடு தரவில்லை. இவ்வாறு உறழ்ந்து வருவதனை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் எனலாம். + + க, ச், ட், த், ப், ற் - வல்லினம் ங், ஞ், ந், ம், ன் - மெல்லினம் ஏதோ ஒன்று குறைவதாக உள்ளது அந்த குறைவு ‘ண’ வாகும் மெல்லின எழுத்தில் ‘ண’ இருந்தால் தான் அது அழகமைப்பு கொள்கையாக அமையும் மன்-நிலைபெற்றுஇருத்தல். + + ஒரு மொழியில் ஒரு வகையில் ஒலியன்களை தொகுக்கின்றபோது ஒரு எண்ணிக்கையும் மற்றொரு வகையில் தொகுக்கின்றபோது அதைவிடக் குறைவாக வருகின்றது. இவ்வாறு குறைவாக வருகின்றதையே எடுத்துக்கொண்டால் அதுவே சிக்கனக் கொள்கை என்கிறோம். + +ஒலிகளைப் பற்றி ஆராய்வதே ஒலியனியலாகும். குறைந்த வேற்றுமை உடைய இருசொற்களில் அமைந்து அவற்றின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒலிகள் ஒலியன்கள் எனப்படும். எ-டு. உடல் - ஊடல். இவற்றில் ட்அல் எனும் மூன்று ஒலிகளும் இருசொற்களுக்கும் பொதுவானவை. உ-ஊ என்பவையே சொற்களின் பொருள் மாற்றத்திற்குக் காரணமானவை. ஆகவே இவை தனித்தனி ஒலியன்கள் ஆகும். +தமிழில் நாம் பயன்படுத்தும் அத்தனை பேச்சொலிகளுக்கும் ( Speech sounds - phones) தமிழில் வரிவடிவம் ( graphemes - scripts) கிடையாது. ஒலியன்களுக்கு மட்டுமே வரிவடிவம் உண்டு. + +தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர். + +உயிரொலிகளின் பிறப்பு + +பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் . மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வ���யின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார். + +இக்கால மொழி நூலார் தமிழில் உள்ள உயிரொலிகளை அவற்றின் ஒலிப்புமுறை நோக்கி மூவகையாகப் பிரித்துள்ளனர். + +இ, ஈ, எ, ஏ - முன் உயிர் (Front Vowels) + +அ, ஆ - நடு உயிர் (Central Vowels) + +உ, ஊ, ஒ, ஓ - பின் உயிர் (Back Vowels) + +இப்பாகுபாடு இவ்வெழுத்துகள் பிறக்கும்போது நாக்கு முறையே முன்னும், நடுவிலும், பின்னும் இருக்கும் நிலையை ஒட்டிச் செய்யப்பட்டது. +(ஐ, ஒள என்பன கூட்டொலிகள் ஆதலால் அவற்றை மொழி நூலார் குறிப்பிடவில்லை). தொல்காப்பியரும் மிகப் பழங்காலத்தில் உயிரொலிகளை மூவகையாகப் பிரித்துப் பிறப்பிலக்கணம் கூறியுள்ளார். அ, ஆ : வாயை அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும். இ,ஈ,எ,ஏ,ஐ : வாயை அங்காந்து கூறும் முயற்சியோடன்றி, மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும். உ, ஊ, ஒ, ஓ, ஒள : இதழ் குவி முயற்சியால் பிறக்கும். இப்பாகுபாடு ஒலியுறுப்புகளின் முயற்சி அடிப்படையில் செய்யப்பட்டது. + +அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில் உயிர்கள் , ஆ ஈ ஊ ஏ ஓ எனும் ஐந்தும் நெடில் உயிர்கள் , ஐ, ஒள எனும் இரண்டும் கூட்டொலிகள் ஆகும். எல்லா உயிர்களும் மொழியின் முதலிலும் இடையிலும் வருகின்றன. மொழியின் இறுதியில் ஈ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்கள் வரவில்லை. பிற உயிர்கள் வருகின்றன. ஐ, ஒள ஆகிய கூட்டொலிகளுள் ஐயன், ஐம்பது போன்ற சொற்களில் மொழி முதலிலும் அந்தை, வெள்ளறை, பிடந்தை போன்ற சொற்களில் இறுதியிலும் ஐகாரம் வந்துள்ளது. ஆனால் ஒளகாரம் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படவில்லை. + +உயிர்மயக்கம் + +சொல்லின் இடையிலோ இறுதியிலோ அடுத்தடுத்து இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது உயிர் மயக்கம் எனப்படும். குகைக் கல்வெட்டுகளில் உயிர் மயக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன. + +(எ-டு) பளிஇ, பிணஊ, பணஅன், கொடி ஓர் + +இச்சொற்களில் இஇ, அஊ, அஅ, இஓ என இரண்டு உயிர்கள் சேர்ந்து வந்துள்ளன. சொற்களில் இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து நிற்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. இரண்டு உயிர்களுக்கும் நடுவே யகரம் அல்லது வகரம் உடம்படுமெய்யாக வரும். பளி+ய்+இ = பளியி, பிண+வ்+ஊ = பிணவூ என அவை வரவேண்டும். உடம்படு மெய் இல்லாமல் இரண்டு உயிர்களைச் சேர்த்து எழுதியிருப்பது குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படும் இதனை குறிப்பிடத்தக்க தனி இயல்பு என்று கூறலாம் . + +எழுத்த��� உச்சரிக்கும்போது ஒலி உறுப்புகளில் உரசுதல், தடுத்து வெளியிடுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துவர். + +ஒலிப்பு வேறுபாடுகள் + +தமிழில் பேசும்போது குறிப்பிட்ட சில இடங்களில் ஒலிப்பில் அழுத்தம் தருவது உண்டு. இது ஒலியழுத்தம் எனப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒலியழுத்தத்தில் திரிபு ஏற்பட்டால் பொருளும் மாறிவிடும். இப்படி ஒலி அழுத்தத்தில் ஏற்படும் திரிபை இசைத்திரிபு என்பர். ஒரு முழு வாக்கியத்தை ஒலிக்கும்போது ஒலிப்பில் ஏற்ற இறக்கங்களையும், சமநிலையையும் உணருகிறோம். சில வேளைகளில் இந்த ஏற்ற இறக்கங்களே தொடர்ப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. இதைத் தொடரிசை என்பர். தமிழ் ஒலியியல் ஆய்வில் ஒலியழுத்தம், இசைத்திரிபு, தொடரிசை முதலானவற்றுக்கும் தகுந்த முறையில் இடம் தரப்படுகிறது. மெய்யொலிகள் மொத்தம் பதினெட்டு, இவை அனைத்தும் குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ங், ஞ் ஆகிய இரண்டு தவிரப் பிற மெய்யொலிகள் ஒலியன்களாக வருகின்றன. ஆய்த எழுத்துக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. + +வெடிப்பொலிகள் (வல்லினம்) + +க், ச், ட், த், ப், ற் + +மூக்கொலிகள் (மெல்லினம்) + +ங், ஞ், ண், ந், ம், ன் + +இடையின ஒலிகள் + +ய், ர், ல், வ், ழ், ள் + +மொழிமுதல் + +க், ச், த், ப் - ஆகிய நான்கு வெடிப்பொலிகளும் ந், ம் - ஆகிய இரண்டு மூக்கொலிகளும், ய், வ் - ஆகிய இரண்டு இடையின ஒலிகளும் மொழிக்கு முதலில் வருகின்றன. சகர மெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது ; பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி முதலாகும் என்பர் அரிட்டாபட்டியில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் சடிகன், சந்தரிதன் போன்ற சொற்களில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவதைக் காணலாம். யகர மெய் ஆகார உயிரோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலாகும் என்பர் தொல்காப்பியர். +இவ்விதிக்கு ஏற்ப, புகழூர் என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் யாற்றூர் என்ற சொல் காணப்படுகிறது. (யாற்றூர் - ஆற்றூர்). தனிமெய் மொழி முதலில் வாராது; உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே வரும். குகைக் கல்வெட்டுகளில் இந்த விதி மீறப்படவில்லை. குகைக் கல்வெட்டுகளில் வடமொழிக்கே சிறப்பாக உள்ள ஒலிகளில் ஒன்றாகிய ஸ என்ற மெய்யொலி மட்டும் அதற்குரிய வரிவடிவத்தோடு பல சொற்களில் காணப்படுகிறது. அரிட்டாபட்டிக் கல்வெட்டுகளில் ஸிரிய், ஸுதன், ஸாலகன் என்னும் சொற்கள் காணப்படுகின்றன. + +மொழி இறுதி + +குகைக் கல்வெட்டுத் தமிழில் க், ச், ட், த், ப், ற் - என்னும் ஆறு வெடிப்பொலிகளும் மொழிக்கு இறுதியில் வரவில்லை. மூக்கொலிகளைப் பொறுத்த வரை ண், ம், ன் - ஆகிய மூன்று ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. இடையின ஒலிகளில் ய், ர், ல், ள் - ஆகிய நான்கு ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. + +மொழி இடை + +மொழி இடையில் ஒன்றிற்கு மேற்பட்ட மெய்கள் சேர்ந்து வருவது மெய் மயக்கம் எனப்படும். இது இரு வகைப்படும். ஒரு மெய் தன்னோடு தானே மயங்கி வருவது. அதாவது ஒரு மெய்க்கு அடுத்து அம்மெய்யே வருவது முதலாவது வகை. இதனை உடனிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். ஒரு மெய் மற்றொரு மெய்யொடு மயங்கி வருவது இரண்டாவது வகை. இதனை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். குகைக் கல்வெட்டுத் தமிழில் இவ்விருவகை மெய்ம்மயக்கங்களும் காணப்படுகின்றன. + +வழுத்தி - த்த் - உடனிலை மெய்ம்மயக்கம் +குடும்பிகன் - ம்ப் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம் + +ஒலி மாற்றங்கள் + +குகைக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒலி மாற்றங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். + +மொழி இறுதி மூக்கொலி இழப்பு + +மொழி இறுதியில் வரும் மூக்கொலி அதற்கு முன் நெடில் உயிர் வருமாயின் ஒலிக்கப்படாமல் விடப்படுகிறது. + +(எ.டு) செய்தான் - செய்தா + +இங்கு இறுதியில் ன் என்ற மூக்கொலி, அதற்கு முன்னர் ஆ என்னும் நெடில் உயிர் வருவதால் மறைந்துபோனது. இக்காலப் பேச்சுத் தமிழிலும் இந்த ஒலி மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. + +வெடிப்பொலியின் முன் மூக்கொலி + +அடைமொழியினை அடுத்து வெடிப்பொலி வரும்போது அதன் முன் இன மூக்கொலி தோன்றுகிறது. + +(எ-டு) நெடு + சழியன் - நெடுஞ்சழியன் ச் என்பதன் இனமூக்கொலி ஞ் வந்தது +இள + சடிகன் - இளஞ்சடிகன் +நெடு+சாதன் - நெடுசாதன்,மூக்கொலி வராமையும் உண்டு. + +மெய் இரட்டித்து வாராமை + +இரட்டை மெய் வர வேண்டிய இடங்களில் ஒற்றை மெய் மட்டுமே எழுதப்பட்டது. + +(எ-டு) எருக்கோட்டூர் - எருகோடூர் +கொட்டுபித்த - கொடுபித +சாத்தன��� - சாதன் + +கர உயிரின் பின் யகர மெய் வருதல் + +இகர ஈற்று மொழிக்கண் இகரத்தோடு யகரமும் விரவி வருகிறது. குகைக் கல்வெட்டுகளில் இதை மிகுதியாகக் காணப்படுகிறது . + +(எ-டு) கணிய், பளிய், வழுத்திய் + +தொனி (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வெவ்வேறு சுருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும். பல மொழிகளிலும், உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம். ஆனால், தொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது உயிரொலிகள், மெய்யொலிகளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றி, அதன் பொருளையே மாற்றமுடியும். + +ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன. + +சீரான அல்லது மட்டமான தொனி + +ஏறும் தொனி + +ஏறும் இறங்கும் தொனி + +இறங்கும் தொனி + +எடுத்துக்காட்டு + +ம - மட்டமான தொனி - அம்மா, + +ம - ஏறும் தொனி - நார்ச்செடி, + +ம - ஏறும் இறங்கும் தொனி - குதிரை, + +ம - இறங்கும் தொனி - திட்டு, + + + + +சொல்லியல் + +சொல்லியல் (lexicology) என்பது சொற்கள் பற்றிய ஆய்வு தொடர்பான, மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இது சொற்களுக்கும், சொற் தொகுதி முழுமைக்கும் இடையிலான தொடர்புகளையும் (பொருள் குறித்த) ஆய்வு செய்கிறது. சொல்லியலுக்குத் தொடர்புடைய இன்னொரு துறை lexicography ஆகும். இத்துறை, சொற் தொகுப்புக்கள் அல்லது அகரமுதலிகள் உருவாக்குவது தொடர்பானது. lexicography சொல்லியலின் செயல்முறைப் பகுதி என்றும் சொல்லப்படுவது உண்டு. இது செயல்முறை சார்ந்த ஒரு துறையேயானாலும், இதற்கெனத் தனியான கோட்பாடுகளும் உள்ளன. + + + + +மொழி + +மொழி ("language") என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார். + +மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது. + +மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. + +"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது. + +மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை ���ொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும். + +மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி "பேச்சொலி" (Phonology) வகைக்குள் அடங்குகின்றது. + +மொழியியல் ஆய்வின் மூலமாக , '"மொழி'" என்பது இரண்டு அடிப்படை அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது: + + + +எ.கா: பிரஞ்சு மொழி + +மற்றுமொரு விளக்கமானது மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது. இது வாய்மொழி அல்லது குறியீட்டு ஒலிப்புகளை பரிமாறிக்கொள்ள மனிதர்களுக்கு உதவுகிறது. இந்த வரையறை, மொழியின் சமூக செயல்பாடுகள் மற்றும் மனிதர்கள் தங்களை வெளிப்படுத்தவும், பொருட்களை கையாளவும் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. இலக்கணத்தின் செயல்பாட்டுக் கோட்பாடுகள் இலக்கண அமைப்புகளையும் அவற்றின் தொடர்புகளையும் புரிந்து கொண்டு அதனை இணக்கத்துடன் பயன்படுத்த உதவுகின்றன. + +மொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைக்கின்றது. அவரவர்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன. எனவே உறுதியான முடிவு தெரியவில்லை. மேலும் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை.அது குழப்பமாதாகவே உள்ளது. மேலும் மொழி என்பது தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வகையான கோட்பாடுகள் தொடர்ச்சி சார்ந்த கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தவகையான கோட்பாடுகள் மொழி என்பது மனிதர்களுக்கு மட்டுமான ஒன்று என கூறுகிறது. மேலும் உயிருள்ளபிற விலங்குகளுக்கு இத்தகைய ஒன்று இல்லை என்பதாக கூறுகின்றனர். + +மொழி பற்றிய முறையான ஆராய்ச்சி என்பது இந்தியாவின் பானினி என்பதிலிருந்து தொடங்கியது. மேலும் அவற்றில் கி.மு 5 ல் 3,959 சமஸ்கிருத இலக்கண வரையறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கி.மு 1900 லேயேஎ சுமேரிய எழுத்தாளர்கள் சுமேரிய மற்றும் அக்கேடியன் எழுத்துகளுக்க்கிடையேயான இலக்கண வேறுபாடுகளை கூறியுள்ளனர். + +உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ - ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன. + +பேச்சு என்பது எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்புநிலையிலேயே இருந்து வந்துள்ளது.பேச்சு என்பது உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய உடல்கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது. மனித மொழிக்கான மரபணு தளங்களின் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.மேலும் FOXP2 என்ற மரபணு ஒலியை எழுப்ப பயன்படுவதாக கூறப்படுகிறது. +மூளை அனைத்து மொழியியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுகிறது.அது மொழியியல் அறிவாற்றல் மற்றும் பேச்சுக்களின் இயக்கவியல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. மொழியின் அடிப்படை நரம்பியல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகக் குறைவாக உள்ளது, இருப்பினும் நவீன பட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதில் கணிசமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். மொழியின் நரம்பியல் அம்சங்களைப் படிப்பதனை நரம்பியல் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. + +நரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின் (Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை, ��ாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் (Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். + +மொழியானது அடையாளத் தொடர்பாடல் முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. +அவை அறிகுறிகள், அர்த்தங்கள் மற்றும் அர்த்தங்களையும் அறிகுறிகளையும் இணைக்கும் குறியீடுகள். இந்த அறிகுறிகள் என்பவை ஒலிகள், சைகைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் என்பவற்றின் தொகுப்பாக இருக்கின்றன. அவை மொழியைப் பயன்படுத்தும் முறையில் தங்கியிருக்கும். அதாவது மொழியானது எழுதுவதற்கு, பேசுவதற்கு, குறியிடுவதற்கு என வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும்போது, வெவ்வேறு அறிகுறிகளின் தொகுப்பாக இருப்பதுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை உருவாக்கும். ஒரு தொடர்பாடலில், அறிகுறிகளானவை வழங்குபவரிடமிருந்து ஒரு குறியீடாகக் கடத்தப்படும்போது, அதனைப் பெறுபவர் அந்தக் குறியீட்டைச் சீர்படுத்தி அர்த்தத்தை புரிந்து கொள்வார். + +ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட விவாத நெறிமுறையாகவே அங்கு நிலவிய மொழிகள் விளங்கின. மேலும் அவர்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அவைகள் விளங்கின. மொழிகள் உச்சரிப்பில், சொல்லகராதி மற்றும் இலக்கணத்தில் மட்டும் வேறுபட்டு இருப்பன அல்ல. மேலும் அவைகள் அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. மேலும் மனிதர்கள் தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அது எவ்வாறு மற்றவர்களின் கல்லாச்சாரத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்பதனை எடுத்துக்கூறுகிறது. ஒரே கலாச்சாரத்தினைப் பின்பற்றுபவர்கள் கூட மொழியினை பயன்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றனர். அவ்ர்கள் அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர். + +மொழியியலாளர்கள் ஒரு மொழியினை பல வழிகளில் பயன்படுத்தும் முறையினை வகைப்பாடு என்று கூறுகிறார்கள். இதனை வட்டார மொழி என்றும் கூறப்படுகிறது. மொழியியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிகளை அது பயன்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்து அதற்கு தொடர்புடைய கலா��்சாரப் பின்னனி கொண்டவர்களே அதனை புரிந்துகொள்ள இயலும் எனவும் கூறுகின்றனர். + +ஏனெனில் மொழிக்கான கட்டமைப்புகள் அதனைப் பயன்படுத்தும் மக்களின் மூலமாகவே சென்றடைகின்றன. மேலும் ஒருவர் பயன்படுத்தும் அந்த குறியீடுகளும் அவ்வாறே பிற மக்களை சென்று சேர்கின்றன. மேலும் அவர்களுக்கு அது இரண்டாவது மொழியாக இருப்பின் அதன் உச்சரிப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாம் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவருடைய பிறந்த இடம், அவர்களின் பொருளாதார பின்னனி ஆகியவையும் இதில் பங்காற்றுகின்றன.இவைகள் அனத்தும் மொழியியலின் வகைகளாக அல்லாது இருந்த போதிலும் பங்கு வகிக்கின்றன. + + +வட இந்திய மொழிகள் பல இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இன்று உள்ள பெரும்பாலான வட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியனவே. + +இந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ்.மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவையாகும். + + + + + +ஆனந்தி சூர்யப்பிரகாசம் + +ஆனந்தி சூர்யபிரகாசம் (சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) இலங்கை வானொலியில், சானா சண்முகநாதன் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகவும் இருந்தார். பின்னர் இங்கிலாந்து குடியேறியபின் 70 களில் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராகவும், நேர்முகம் காண்பவராகவும் பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார். + +சீர்காழி கோவிந்தராஜனின் இலண்டன் கச்சேரிக்கு இவர் செய்த அறிமுகம் இவரைப் பலருக்கு தெரியவைத்தது. சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுக்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். + + + + + +புரொவிடன்ஸ் அரங்கம் + + + + + +பிரிஜ்டவுண் + +பிரிஜ்டவுண் நகரம் பார்படோஸ் நாட்டின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். பார்படோஸ் தீவின் தென்மேற்கு கரையி அமைந்துள்ள இந்நகரம் ஒரு துறைமுக நகர��ாகும். நகரின் தற்போதைய அமைவிடம் ஆங்கிலேயர்களால் 1628இல் ஆரம்பிக்கப்பட்ட ஜேம்ஸ்டவுண் குடியேற்றத்தை தொடர்ந்து வருவதாகும். பிரிஜ்டவுண் மேற்கிந்திய தீவுகளின் முக்கிய உள்ளாச பிரயாண மையமாகும். +பாரிய பிரிஜ்டவுண் 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சதுப்பு நிலமாக காணப்பட்ட இப்பிரதேசம் பின்னர் நிரப்பப் பட்டு நகரமாக்கப்பட்டது. நகரின் மையத்தில் கொன்ஸ்டியுசன் ஆறு காணப்படுகிறது. பார்படோஸ் வெப்பவலய காலநிலையைக் கொண்டுள்ளது. + +பிரிஜ்டவுணுக்கான சாதானை வெப்பநிலைகள்: +அதியுயர்: 33C (91.4 F) +தாழ்: 16C (60.8 F) + + + + + +புதுக்கோட்டை + +புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள +புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. + +பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது, தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) மார்ச்சு 3, 1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. + +இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,215 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 58,601 ஆண்கள், 58,614 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை மக்கள் தொகையில் 10,853 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. +இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. +இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடைமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது. + +"மாயிறும் தாழி கவிப்பத் +தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271) + +"மன்னர் மறைத்த தாழி +வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44) + +"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் +தேவர் உலகம் எய்தினன் ஆதலின் +அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம். + +"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் +தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது. +புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. +மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்புக் கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர, சோழ, பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன. + +பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது. + +"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு +சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்" +என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது). +சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன. + +சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச���சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும். + +"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி +பன்றியருவா வதன் வடக்கு நன்றாய +சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் +ஏதமிழ் பன்னிரு நாடென்" +என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. +பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும். +சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். + +திரைகடலோடி திரவியம் தேடிய பண��டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. +புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்) +இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம், + +நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன. + +பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்���து. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது. + +புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. +தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. +புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும். + +தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. + +தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன. + +முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் ம��லாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். + +கோகர்ணேஸ்வரர் கோயில் + + + + +அமுதவல்லி (திரைப்படம்) + +அமுதவல்லி - ஜுபிடர் பிக்சர்ஸ் தயரிப்பாக 1959ல் வெளிவந்த திரைப்படம். இதில் டி. ஆர். மகாலிங்கம் கதாநாயகனாகவும், எஸ். ஏ. நடராஜன் வில்லனாகவும் நடித்தார்கள். டி. ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். + +டி. ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடிய பின்வரும் பாடல் மிகவும் புகழ் பெற்றது: + +இத்திரைப்படம் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்த விமர்சன வரிகள்- +"படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்" + + + + +அடிமைப் பெண் + +அடிமைப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 230 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. + +அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்ற போது வெள்ளை தொப்பியை அணிந்தார் எம்.ஜி.ஆர். அது பிடித்துப் போக தொடர்ந்து பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் அடையாளமாக மாறிப்போனது தொப்பி. + +வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா ("எம்.ஜி.ஆர்"). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார் தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா ("ஜெயலலிதா") என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடு திரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. + + + + + + +அழகன் (திரைப்படம்) + +அழகன், () 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில், மம்முட்டி, பானுப்பிரியா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோவை செழியன் தயாரிக்க கை. பாலச்சந்தர் இயக்கி இருந்தார். + +மரகதமணி இசையமைக்க புலமைப்பித்தன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். + + + + + +அரங்கேற்ற வேளை + +அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். + + +"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ +அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?" + +இத்திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, மற்றும் பிறைசூடன் ஆகி���ோர் எழுதியிருந்தனர். +ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க + + + + +அள்ளித்தந்த வானம் + +அள்ளித்தந்த வானம் 2001 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, முரளி, விவேக், பிரகாஷ்ராஜ் முதலியோர் நடித்தார்கள். வித்யாசாகர் இசையமைத்தார். ஸ்ரீதர் பிரசாத் இத்திரைப்படத்தை இயக்கினார். + + + + +அரசாட்சி (திரைப்படம்) + +அரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா டத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள். + + + + + +அழகிய தீயே + +அழகிய தீயே - 2004ல் திரையிடப்பட்ட இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரசன்னா,நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் முதலியோர் நடித்திருந்தார்கள். + +சினிமாத்துறையில் உதவியாளர்களாக வேலை பார்த்துக்கொண்டே பெரிய டைரக்டராக, திரை எழுத்தாளராக வரவேண்டுமென்று கனவு காணும் மூவரும், நடிகனாக வரவெண்டுமென்ற ஆசையுடன் இருக்கும் நான்காமவருமாக நான்கு நண்பர்களின் கதை. + + + + + +அருள் (திரைப்படம்) + + +விக்ரம் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்திருந்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் கவிஞர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் சிநேகன் ஆகியோரால் எழுதப்பட்டவை. + + + + +அறிவுமணி + +அறிவுமணி - 2004ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை எம். கே. கென்னடி இயக்கினார். முரளி, மீரா வாசுதேவன் முதாலானோர் நடித்தார்கள். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். + + + + +இராகலை தமிழ் மகா வித்தியாலயம் + +இராகலை தமிழ் மகா வித்தியாலயம் இலங்கை மத்திய மாகாணம் நுவரேலியாவில் அமைந்துள்ளது. இப்பாடசாலை 1947, மார்ச் 3 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆதரவில் நிறுவப்பட்டது. + + + + + +இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் + +இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் 29 ஜூலை 1944 இல் ஆரம்பிக்கபட்ட அமைப்பாகும். இதில் தற்போது அண்ணளவ��க 3000 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். + + + + + + +பொன்மணி (திரைப்படம்) + +பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள். + +எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார். + +யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு பிரச்சினையை மையமாகக் கொண்டு இத்திரைப்படக் கதை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண உயர்சாதி இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள் பொன்மணி ("சுபாசிணி"). தாழ்ந்த சாதி இளைஞனைக் ("பாலச்சந்திரன்") காதலித்து தனது காதலுடன் ஓடி விடுகிறாள். உயர் சாதிக் குடும்பத்தினர் பொன்மணியைக் கொன்று விடுகின்றனர். + + + + + + + +எம். வீ. கிருஷ்ணாழ்வார் + +எம். வீ. கிருஷ்ணாழ்வார் -பிரபல கொட்டகைக் கூத்துக் கலைஞர். வடமராட்சி யில் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகக் கொணடவர். ஆசுகவியாக பாடல்களை யாக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றதினால் "கிருஷ்ணாழ்வார்" எனவும், சுபத்திரையாக பெண் வேசத்திலும் நடித்து புகழ் பெற்றதினால் "சுபத்திரையாழ்வார்" எனவும் அறியப்படுபவர். + + + + +டென் ஹாக் + +டென் ஹாக் (டச்சு மொழி: , அதிகாரப்பூர்வமாக ) நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நகரில் பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் மற்றும் மேலும் 150 பன்னாட்டு அமைப்புகள் அமைந்துள்ளன. + + + + +பத்ரா ஆறு + +பத்ரா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு ��ோக்கி தக்காணப் பீடபூமியில் பாய்கிறது. கூட்லி என்னும் இடத்தில் இது துங்கா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என அழைக்கப் படுகிறது. பத்ரா ஆற்றின் மீது லக்கவல்லி என்னுமிடத்தில் அணை ஒன்றும் கட்டப் பட்டுள்ளது. பின் துங்கபத்ரா ஆறு கிருஷ்ணா ஆற்றுடன் கலந்து கடைசியில் வங்காள விரிகுடாவில் சேர்கிறது. + + + + +சரோஜினி நாயுடு + +சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் "பாரத்திய கோகிலா" (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. + +சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். + +12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகை லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் மூலம் படிப்பதற்காக சென்றார். + +உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழி��ளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார். + +இங்கிலாந்தில் தங்கியிருந்த போது தனது 17 வயதில் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில்ரீதியான ஒரு மருத்துவரை சந்தித்து, அவரைக் காதலித்து தனது 19வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 1898 ஆம் ஆண்டு சட்டப்படி சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாதியிடை திருமணங்கள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். +அதற்கு முற்போக்கு சிந்தனையுள்ள அவரது தந்தையின் ஒப்புதலும் கிடைத்தது. அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. + +இவர்களது திருமணம் சென்னையில் டாக்டர் நஞ்சுண்டராவ்வின் ’சசி விலாஸ்’ இல்லத்தில் நடைபெற்றது.அவர் சாதீயக் கட்டுப்பாடுகளின் தீவிர எதிர்ப்பு அலைகளைத் தாண்டி இத்திருமணத்தை நடத்தி வைத்தார். + +ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார். + +1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். + +இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார். + +1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார். + +1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலெட் சட்டத்த��னைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது; மோகன் தாஸ் காந்தி அவர்கள் எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார். + +ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920 இல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார். + +அக்டோபர் 1928 ஆம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார். + +ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன் தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார். + +1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார். + +1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். + +அவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது. சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும், மேலும் அது பாடக் கூடிய வகையிலும் இருக்கும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு "தி கோல்டன் த்ரெஷோல்டு" என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: "தி பேர்ட் ஆஃப் டைம்" (1912) மற்றும் "தி புரோக்கன் விங் " (1917). 1918 ஆம் ஆண்டு, "பீஸ்ட் ஆப் யூத்" வெளியிடப்பட்டது. +பின்னர் அவரது "தி விஸார்டு மாஸ்க்" மற்றும் "எ டிரஷரி ஆஃப் போயம்ஸ்" ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா தனது தாயின் வெளியிடப்படாத கவிதைகளை "தி ஃபெதர் ஆஃப் டான்" என்னும் தலைப்பில் வெளியிட்டார். + + +":Shall hope prevail where clamorous hate is rife," + +நாயுடு அவர்கள், "ஒரு எதிர்ப்பு ஏற்பட்டால், நாம் வெளிப்படுத்த வேண்டிய ஒரே ஒரு சுயமரியாதை, இது இன்று நிறைவடையும் ஏனெனில் என்னுடைய உரிமையே நியாயம்." என்று கூறுகிறார். நாயுடு அவர்கள், "நீங்கள் வலிமையானவராக இருப்பின், வலிமை குறைந்த ஆண் அல்லது பெண்ணிற்கு பணி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் உதவி புரிய வேண்டும்." என்று கூறுகிறார்." + + + + + + +ஆலப்புழா மாவட்டம் + +ஆழப்புழா மாவட்டம் அல்லது ஆலப்புழை மாவட்டம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுள் ஒன்றாகும். இம்மாவட்டம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் நாள் உருவாக்கப் பட்டது. இம்மாவட்டம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா மையம் ஆகும். இப்பகுதி தேங்காய் நார்த்தொழிலுக்கும் புகழ் பெற்றது. இம்மாவட்டம் மாநிலத்தின் பல பகுதிகளுடனும் நீர்வழியினால் நன்கு இணைக்கப்பட்டு உள்ளது. இதுவே மாநிலத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டம் ஆகும். + +இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கட்டு வள்ளம் என்றழைக்கப்படும் படகு வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை. + +இந்த மாவட்டத்தை ஆறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். +அவை: + + + +108 வைணவத் திருத்தலங்களில் மூன்று வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்: + + + + + +பிராவ்தா + +ப���ராவ்தா (ரஷ்ய மொழி: Правда, "உண்மை"; உச்சரிப்பு:ப்ராவ்தா) சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியான ஒரு முன்னணி நாளிதழ் ஆகும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918 - 1991 ஆண்டுகளில் வெளிவந்தது. இப்பத்திரிகை பின்னர் 1991இல் அதிபர் போரிஸ் யெல்ட்சினினால் நிறுத்தப்பட்டது. ஆனால் இதே பெயரில் ரஷ்யாவில் முன்னாள் ப்ராவ்தா ஊழியர்களினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகிறது. முன்னைய ப்ராவ்தா பத்திரிகை பனிப்போர்க் காலத்தில் மேற்குலகில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. + +லியோன் த்ரொட்ஸ்கி பிராவ்தா என்ற பெயரில் முதன் முதலாக ரஷ்யப் பாட்டாளி மக்களுக்காக ரஷ்ய ஜானநாயக சோஷலிசப் பத்திரிகையாக ஆரம்பித்தார். ரஷ்யாவில் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரியாவின் வியென்னாவில் அச்சிடப்பட்டு ரஷ்யாவில் விநியோகிக்கப்பட்டது. அக்டோபர் 3, 1908 இல் முதலிதழ் வெளியானது. இது பின்னர் ஜனவரி 1910 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. கட்சியில் இருந்த உட்பூசல் காரணமாக இப்பத்திரிகை பின்னர் ஏப்ரல் 22, 1912 இதழுடன் நிறுத்தப்பட்டது. + +கட்சியின் லெனின் ஆதரவான போல்ஷெவிக் பகுதியினர் செயின்ட் பீற்றர்ஸ்பேர்க் நகரில் இருந்து டிசம்பர் 1910 இல் "ஸ்வெஸ்தா" என்ற வார இதழை ஆரம்பித்தனர். இது பின்னர் வாரத்தில் நாட்களாக வெளியிடப்பட்டு பின்னர் நாளிதழாக்கப்பட்டது. + +ஏப்ரல் 22, 1912 இல் போல்ஷெவிக்குகளினால் "ப்ராவ்தா" இதழ் அரசாங்கத் தணிக்கையுடன் வெளியிடப்பட்டது. இது பின்னர் ஜூலை, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின்போது அரசினரால் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இப்பத்திரிகை 8 வெவ்வேறு பெயர்களில் வெளிவந்தது.: + + +1917 சோவியத் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் ப்ராவ்தா வெளிவர ஆரம்பித்து, அக்டோபர் புரட்சியின் பின்னர் 100,000 பிரதிகள் தினமும் விற்பனையாகின. + +மார்ச் 3, 1918 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் தலைநகரம் மொஸ்கோவுக்கு இடம் மாறியதில் இருந்து ப்ராவ்தா மொஸ்கோவில் இருந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. + +ஆகஸ்ட் 22, 1991இல் அன்றைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போது ப்ராவ்தா பத்திரிகையும் மூடப்பட்டது. + + + + + +சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி + +சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி ("Communist Party of the Soviet Union", ), சுருக்கமாக ஆங்கிலத்தில் CPSU எனப்படுவது,() + + + + + +இலங்கை சனாதிபதி + +இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் ("President of Democratic Socialist Republic of Sri Lanka") அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். + +இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. + +இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும். + +சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. +1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. +2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார். + +இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல். + + + + + +சபினா பார்க் அரங்கம் + +சபினா பார்க் மைதானம் யமேக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இது கிங்ஸ்டன் துடுப்பாட்டக் கழகத்தின் மைதானமாகும். கிங்ஸ்டணின் உலர் காலநிலையைக் கொண்டப்பகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் கரிபியாவில் மிக வேகமான விளையாட்டரங்காக காண்ப்பட்டது. + +1930 இல் மெல்போன் துடுப்பாட்டக் கழகம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பிரயானம் மேற்கொண்டப் போது இம்மைதானம் தேர்வுத் துடுப்பாட்ட மைதானமானது.துடுப்பாட்ட வரலாற்றின் முதல் மும்மைச் சதமான அண்டி சண்டமின் 325 ஒட்டங்கள் இம்மைதானத்தில் இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கிடையான போட்டியில் பெறப்பட்டது. இம்மைதானத்தில் பெறப்பட்ட சர் கார்பீல்ட் சோர்பசனின் 365 ஓட்டங்கள் 36 ஆண்டுகளாக துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது. 30,000 பார்வையாளருக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. யமேக்காவின் மலைத்தொடர்கள் பின்னணியில் உள்ளதோடு இம்மைதானம் துடுப்பாட்ட மைதானங்களில் அழகிய மைதானங்களில் ஒன்றாகும். 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது பாகிஸ்தான்,அயர்லாந்து, மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய குழு D யின் 6 போட்டிகளையும் ஒரு அரை-இறுதி போட்டியையும் இங்கு நடத்தப்பட்டது. + + + + + + +வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் + +வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் பசேடிரே, செயிண்ட். கிட்சில், செயிண்ட். கிட்ஸ் நெவிசில் அமைந்துள்ள பல்தொகுதி விளையாட்டரங்கமாகும். இது 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது குழு A போட்டிகள் நடைப்பெற்ற வோர்னர் பார்க் மைதானதையும் உள்ளடக்கியதாகும். விளையாட்டரங்கின் கிழக்குப்பகுதியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்துள்ளது. இங்கு 4000 பார்வையாளர்களுகான இருக்கை வசதிகள் உள்ளதோடு 10,000 பேருக்கான தற்காலிக பார்வையாளர் அரங்குகள் முக்கிய விளையாட்டு போடிகளின் போது அமைக்கப்படும். இவ்விளையாட்டரங்கம் சீன குடியரசின் 2.72 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியுடன் அமைக்கப்பட்டதாகும். துடுப்பாட்ட மைதானத்துக்கும் தடகளப் போட்டி மைதானம் என்பவற்றின் கட்டுமான பணிகளுக்கான மொத்தச் செலவு 12 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். விளையாட்டரங்கின் மேற்கு பகுதியில் கால்பந்தாட்ட மைதானமும், 400 மீட்டர் நீள ஓட்டப்போட்டிகளுக்கான ஓடுதளம், டெணிஸ் மைதானங்கள் 3, வலை/கூடைப் பந்து மைதானங்கள் 3, லென் எரிஸ் துடுப்பாட்ட அகடமி, களியாட்ட மைதானம் என்பன அமைந்துள்ளன. + + + + + + +ஏப்ரல் 2007 + +ஏப்ரல் 2007 2007 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். + + +---- + + + + +அமெரிக்கத் தமிழர் + +அமெரிக்கத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியவர்களாவர். அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கல்விக்காகவும் வேலைக்காகவும் அமெரிக்கா சென்று, அந்நாட்டில் குடியுரிமைச் சட்ட உரிமைகளின் அடிப்படையில் அந்நாட்டிலேயே குடியுரிமைப் பெற்றவர்களாவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் அங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழரான ஆனந்த குமாரசுவாமி 1917 களிலேயே (கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்) அமெரிக்கா சென்று நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், ஆய்வாளராகவும் பணிபுரிந்து அங்கேயே குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பிரஞ்சு மேற்கு இந்தியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தும் அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றவர்களும் உள்ளனர். 1983 களின் பின்னர் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்க���ில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் அமெரிக்காவில் புகலிடம் பெற்றவர்களும் உளர். +கலிபோர்னியா, நியூ செர்சி, டெக்சஸ் மாநிலங்களில் தமிழர்கள் செறிவாக வாழ்கின்றனர். + +ஆசிய நாடுகளில் புகலிடம் கோருவோர்களுக்கு அதே நாட்டில் குடியுரிமை வழங்கும் சட்டம் அந்நாடுகளில் இல்லாமையால் யுஎன்எச்சிஆர் போன்ற மனிதவுரிமை அமைப்புகள் மூன்றாம் நாடு வழங்கல் கொள்கையின் ஊடாக மூன்றாம் நாடுகளில் குடியுரிமைப் பெற்று வழங்கிவருகிறது. அதனடிப்படையில் தாய்லாந்து, ஹொங்கொங் போன்ற ஆசியநாடுகளின் ஊடாக அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களில் கணிசமான ஈழத்தமிழர்களும் அடங்குவர். + +அமெரிக்காவின் சில மாகாணங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. மாகாண வாரியாக தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. + + + + + +பெர்மியூடா துடுப்பாட்ட அணி + +பெர்மியூடா துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் பெர்மியூடா சார்பாக விளையாடுகின்றது. 1966 ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு சர்வதேச துடுப்பாட்டச் சபையின் (ICC) அசோசியேற் உறுப்புரிமை (Associate Membership) கிடைத்தது. பெர்மியூடா அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. + + + + +கென்ய துடுப்பாட்ட அணி + +கென்ய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கென்யாவுக்கா விளையாடுகின்றது. +கென்ய அணி தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்குபெறாத அணிகளுள் சிறந்த அணியாக திகழ்கின்றது. ஆபிக்க கண்டத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு அடுத்ததாக கென்ய அணியே வலுமிக்க அணியாகும். கென்ய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. + + + + +நெதர்லாந்து துடுப்பாட்ட அணி + +நெதர்லாந்து துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் நெதர்லாந்துக்காக விளையாடுகின்றது. நெதர்லாந்து அணி 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. + +நெதர்லாந்தில் 1860ம் ஆண்டு காலப் பகுதியில் இ��ுந்து நீண்ட காலமாக துடுப்பாட்டம் விளையாடப்பட்டு வருகின்றது. இருப்பினும், தற்காலத்தில் இங்கு பிற விளையாட்டுக்கள், குறிப்பாக கால்பந்தாட்டம், கூடுதலாக விரும்பி விளையாடப்படுகின்றது. + + + + +இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி + +ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்துக்காக துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடுகின்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணியுடனான இணைப்பில் இருந்து 1994 நீங்கி, International Cricket Councilயிடம் தனியே விளையாடும் அனுமதியை பெற்றது. உலகக்கோப்பை 1999 கலந்து கொள்ள தேர்வு பெற்றாலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வி கண்டது. 2003 இல் உலகக்கோப்பை ஆட்டத்தில் கலந்து கொள்ள தேர்வு பெறவில்லை. ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. + + + + +மோகமுள் (புதினம்) + +மோகமுள் தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற ஒரு புதினம். இது தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது. கருநாடக இசையோடு தொடர்புடைய புதினம். + +அந்தணர் குலத்தில் பிறந்த பாபு மற்றும் மராட்டிய வம்சாவழித் தோன்றலாக, காலவோட்டத்தில் தஞ்சை பூமியில் தங்கி விட்ட இனத்தைச் சார்ந்த யமுனா ஆகியோரின் வாழ்வினையும், பாபு அவள் மீது கொள்ளும் சற்றே மரபு மீறிய காதலையும் பற்றியதான இப்புதினம், ஜானகிராமனின் இதர பல புதினங்களைப் போலவே, கும்பகோணச் சூழலில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புனையப்பட்டு, அக்கால கட்டத்திய நடைமுறைகளையும், சமுதாயச் சட்டங்களையும், நம்பிக்கைகளையும் விரித்துரைத்து அக்காலத்தினை ஆவணப்படுத்தும் ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. இதன் அடிநாதமாக கருநாடக இசை மற்றும் அதனைப் பழகுவோர் பற்றிய ஒரு விமர்சன நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு. இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படாது, ஒன்றையொன்று தாங்கிப் பிடித்ததாக அமைத்திருப்பது தி.ஜானகிராமனின் நுண்ணிய கருத்தாற்றலையும், தாம் எழுதும் விடயங்கள் பற்றி அவருக்கு இருந்த ஆளுமையையும் பறையறிவிக்கிறது. + +தி.ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது. + +1995ஆம் ஆண்டு ஞான���ேகரன் இயக்கத்தில் புதுமுகங்களைக் கொண்டு திரைப்படமாகவும் இது வெளியானது. வணிக ரீதியாக அவ்வளவாக வெற்றி பெறவில்லை எனினும், விமர்சன ரீதியாக திரைப்படமும், இதில் இளையராஜாவின் இசையும் மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றன. + + + + + +தமிழர் இணைப்பகம் + +தமிழர் இணைப்பகம உலகத்தமிழ் மக்களை ஒருங்கினைக்கும் ஒரு இணைய குழுமமாகும்.இது கடந்த வருடம் கனடாவை தளமாகக்கொண்டு இயங்குகின்றது. பிரதானமான, தமிழீழ தேசிய விடுதலை நோக்கியே தமிழர் இணைப்பகம் காணப்படுகின்றது. பல இணையங்களில் பல விடையங்கள் இருப்பினும். புதிய வித்தியாசமான முறையில் தாம் செயற்ப்பட போவதாக அவர்கள் சொல்லுகின்றனர். +இவர்களின் தனித்தன்மையாக அவர்கள் சொல்லும் விடையம், + +-: இரு மொழிகளிலும் கருத்துகளம் +-: யாரும் எங்கிருந்தும் கருத்து வைக்கலாம் +-: தமிழ் -தமிழ் எழுத தெரியாதவர்களும் இலகுவாக எழுத முடியும் +-: நிஜத்தின் பிரதிபலிப்புக்கள் +-: இணைய அரட்டை +-: இன்னும் நீங்கள் விரும்பும், உங்களால் பரிந்துரைக்கப்படும் விடையங்கள் அனைத்தும் இணைப்படும் + +எனவே நீங்களும் இணைந்து கொள்ளமுடியும், தமிழீழ தேசம் நோக்கிய ஊடகப்பணியில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். + + + + +இணைய நெறிமுறை + +இணைய நெறிமுறை (இ.நெறி) (Internet Protocol - IP) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைய செயல்பாட்டு புரிந்துணர்வு நெறிமுறைகள் ஆகும். கணினி இணையங்களின் இணைந்த செயல்பாடுகளை இலகுவாக்குவதே இவ்விதிமுறைகளின் நோக்கமாகும். தமிழில் இணைய விதிமுறைகளை இணைய நெறிமுறைகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. + +இணைய விதிமுறைகள் நான்கு பின்வரும் அம்சங்களை வரையறை செய்கின்றன. + +இணைய விதிமுறைகள் பொதுவாக மென்பொருள் சார்ந்த விதிமுறைகள்தான். பருநிலை சார்ந்த விதிமுறைகள் இவற்றுள் அடங்காது. + +உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் ஐப்'தடித்த எழுத்துக்கள்'பி எனப்படும் இணைய நெறிமுறை. ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்ப���ி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம். + +உதாரணத்திற்கு நம்முடைய அன்றாடப் பாவனையில் இருக்கும் இணைய உலாவியோ, மின்னஞ்சலோ, அரட்டையரங்குகளோ, இப்படி எந்த ஒரு சேவையாக இருந்தாலும், அவையனைத்திலும் ஆழத்தில் இருப்பது தரவுப் பரிமாற்றம். ஒருவர் அனுப்புகிற செய்தி, அஞ்சல், பதிவு, படம், பாட்டு, ஒலிக்கோப்பு, ஒளிக்கோப்பு, எதுவாக இருந்தாலும் அவரின் கணினிக்கும் பிறிதோர் கணினிக்கும் இடையே அந்தத் தரவுகள் செல்ல வேண்டும். அப்படிச் செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு கணினிக்கும் தனித்து இனங்காட்டும் ஒரு அடையாளம் வேண்டும். அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து வரிசைப்படுத்தி அனுப்புவது, கிடைத்த தரவுப் பொட்டலங்களை மீண்டும் சேர்த்து மூல ஆவணத்தை எப்படி மீட்டெடுப்பது போன்ற நடைமுறைகளை விவரிப்பது இந்த வரையறை. அதனால், இதனை ஒரு நடைவரை (Protocol) என்றும் கூறுவர். + +நிகழ் உலகில் நாம் இருக்கிற வீடு அலுவம் இவற்றிற்கெல்லாம் அடையாளப்படுத்தும் முகவரி இருப்பது போல, இணையத்தில் ஒரு வலைப்பின்னலாய்க் கிடக்கிற கணினிகளுக்கும் ஒரு முகவரி அவசியமாகிறது. அப்படிப் பட்ட முகவரியைத் தான் இந்த இணைய நடைவரை (Internet protocol) விவரிக்கிறது. கணினிகளுக்கு எண்களே புரியும் என்பதால், இந்த முகவரியானது வெறும் எண்களால் மட்டுமே ஆனது. + +ஐ.பி, இந்தக் கணினியின் வலை முகவரியை (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட) நான்கு எண்களால் குறிக்கிறது. உதாரணத்திற்கு 216.24.72.101. இதில் இருக்கிற ஒவ்வொரு எண்ணும் கணிப்பேச்சில் சொன்னால் ‘எட்டும எண்’ (எட்டு பிட் அளவு) எனலாம். எளிமையாகச் சொன்னால், இந்த எண்கள் ஒவ்வொன்றிற்கும் உயரெல்லை மதிப்பு = 255. உலகெங்கும் இருக்கிற (இணையத்தில் இணைந்த) கணினிகளில் ஒரே எண் தொகுப்பை இரண்டு கணினிகள் கொண்டிரா. இவ்வாறு இம்முகவரிகள் தனித்துவமாய் இருப்பதைச் சில சர்வதேச அமைப்புக்கள் பார்த்துக் கொள்கின்றன. + +இந்த எண்களின் வீச்சை வைத்து வலையமைப்பு Class A, Class B, Class C என்று மூன்று வகுப்புக்களாக வகைப்படும். இணையத்தில் சேராத தனிவலைகளுக்கென்று ஒரு எண் சாரை இருக்கிறது. எந்த ஒரு தரவுப் பரிமாற்றத்தின் போதும், இந்த நடைவரை முகவரி எண் கலந்தே செல்லும். உதாரணத்திற்கு உலாவ�� வழியாய் எந்த ஒரு வலைமுகவரிக்குச் சென்றாலும், அங்கே ஐ.பி எண் உடன் செல்லும். ஐ.பி முகவரி இணையத்தில் இணைந்த கணினியையே சுட்டும். அது இருக்கும் இடத்தையே காட்டும். சில நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் எல்லாம் ஒரு வலையாக இருந்தாலும், அவை யாவும் நேரடியாக இணையத்தில் இணைந்திரா. சில வழிப்படுத்திகள் (routers) மூலம் மட்டுமே அவை இணையத்தை அடையும். அப்படி இருக்கையில் ஐ.பி முகவரி அந்த வழிப்படுத்திகளின் இருப்பிடத்தையே காட்டும்; அதன் பின்னிருக்கும் தனிக்கணினிகளை அல்ல. + + + + + +இணைய நெறிமுறை முகவரி + +இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) அட்ரஸ் எனப்படும் இணைய நெறிமுறை (இ. நெறி ) முகவரி என்பது ஓர் எண் அடையாளமாகும். குறிப்பாக கணினி வலையமைப்புகளில் இருக்கும் உபகரணங்களுக்கு இடையே இணைய நெறிமுறையைப் பயன்படுத்தும் போது இந்த எண் அடையாளம் அளிக்கப்படுகிறது. +இ.நெறி முகவரியானது வலையமைப்புகளில் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது: ஒன்று, புரவன் (host) அல்லது வலையமைப்பின் இடைமுகத்திற்கு எண் அடையாளம் அளிப்பது; மற்றொன்று, அந்த புரவன் அல்லது வலையமைப்பு அமைந்திருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவது. + +TCP/IP நெறிமுறையை வடிவமைத்தவர்கள், இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் 32-பிட் எண்ணை இ.நெறி முகவரியாகவும் இந்த அமைப்புமுறையை இணைய நெறிமுறை பதிப்பு 4 அல்லது "இ.நெறி ப4" என்றும் வரையறுத்தார்கள். ஆனால், அபாரமான இணைய வளர்ச்சியின் காரணமாகவும், இருக்கும் முகவரிகள் குறைந்து வருவதாலும், 128-பிட்களைப் பயன்படுத்தும் முகவரிக்காக ஒரு புதிய முகவரி அமைப்புமுறை (இ.நெறி ப6) என்பது 1995 அன்று உருவாக்கப்பட்டு, 1998-ல் RFC 2460 ஆல் தரமுறைப்படுத்தப்பட்டது. இ.நெறி முகவரிகள் பைனரி எண்களாக சேமிக்கப்பட்டாலும் கூட (எடுத்துக்காட்டாக, 208.77.188.166 (இ.நெறி ப4 முறை) மற்றும் இ.நெறி ப6 முறையில் 2001:db8:0:1234:0:567:1:1), பொதுவாக அவை மனிதர்கள்-படிக்க கூடிய வகையில் தான் காட்டப்படுகின்றன. + +இணைய நெறிமுறையானது வலையமைப்புகளுக்கு இடையில் தரவு பேக்கெட்களை ரௌட்டிங் செய்யும் பணியையும் மேற்கொள்கிறது. அத்துடன் ரௌட்டிங் அமைப்புமுறையில் அனுப்பும் மற்றும் பெறும் கணைகளின்(node) இடங்களையும் இ.நெறி முகவரிகள் குறிப்பிட்டு காட்டுகின்றன. இந்த தேவைக்காக, இ.நெறி முகவர��யின் சில பிட்கள் ஒரு துணை-வலையமைப்பை (sub-network) உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிட்களின் எண்கள் CIDR குறியீட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவை இ.நெறி முகவரியுடன் சேர்ந்து அனுப்பப்படும். எடுத்துக்காட்டாக, "208.77.188.166/24" . + +தனிமுறை வலையமைப்புகளின் (Private Network) அபிவிருத்திகளால், இ.நெறி ப4 முகவரிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், தனிப்பட்ட முகவரியின் (private address) ஒரு தொகுப்பு RFC 1918 இன் படி ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த "தனிமுறைப்பட்ட முகவரிகளை" எந்த தனிமுறைப்பட்ட வலையமைப்புகளிலும் (private network) பயன்படுத்திக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் உலகளாவிய "பொது" இணையத்தில் வலையமைப்பு முகவரி மாற்றிகளுடன் பயன்படுத்தப்பட்டன. + +இணையத்திற்காக ஒதுக்கப்படும் எண்களின் ஆணையம் (Internet Assigned Numbers Authority - IANA) சர்வதேச அளவில் இ.நெறி முகவரிகளை ஒதுக்கீடு செய்வதை நிர்வகிக்கிறது. வட்டார இணைய பதிவகங்களுக்கும், ஏனைய பிற நிறுவனங்களுக்கும் இ.நெறி முகவரி தொகுப்புகளை ஒதுக்கி அளிக்க, இந்த ஐஏஎன்ஏ (IANA) ஐந்து பிராந்திய இணையப் பதிவகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. + +தற்போது இணைய நெறிமுறையின் (IP) இரண்டு பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அவையானவை: இ.நெறி பதிப்பு 4 மற்றும் இ.நெறி பதிப்பு 6. ஒவ்வொரு பதிப்பும் வெவ்வேறு வகையில் ஒரு இ.நெறி முகவரியை வரையறுக்கிறது. "இ.நெறி முகவரி" என்பது பொதுவாக இ.நெறி ப4 ஆல் வரையறுக்கப்பட்ட முகவரிகளைத் தான் இன்றும் குறிப்பிடுகிறது. + +இ.நெறி ப4 32-பிட் (4-பைட்) முகவரிகளைப் பயன்படுத்துகிறது. இதனால் 4,294,967,296 (2) தனித்தனி முகவரிகள் மட்டுமே சாத்தியமாகும் என்பதால் முகவரிகளின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. தனிமுறை வலையமைப்புகள் (~18 மில்லியன் முகவரிகள்) அல்லது மல்டிகேஸ்ட் முகவரிகள் (~270 மில்லியன் முகவரிகள்) போன்ற சிறப்பு பயன்பாடுகளுக்கான சில முகவரிகளை இ.நெறி ப4 இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண பயனர்களுக்கு ஒதுக்கப்படும் முகவரிகளின் எண்ணிக்கையையும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் முகவரிகளின் எண்ணிக்கையையும் இது கணிசமாக குறைத்துவிட்டிருக்கிறது. இதனால் இ.நெறி ப4(IPV4) முகவரி பற்றாக்குறை தவிர்க்க முடியாததாக உள்ளது. முன்னிற்கும் இந்த பற்றாக்குறை தான் இ.நெறி ப6 பதிப்பு அபிவிருத்திக்கான முதன்மை உந்துசக்தியாக இருந்���து. இது உலகளவில் பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் இருக்கிறது என்பதுடன் இ.நெறி ப4 பதிப்பிற்கு மாற்றாகவும், தொடர்ச்சியான இணைய விரிவாக்கத்திற்கும் இது மட்டுமே ஒரே மூல ஆதாரமாக இருக்கிறது. + +இ.நெறி ப4 முகவரிகள் பொதுவாக புள்ளி-தசம குறியீட்டில் (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட, 0-த்தில் இருந்த 255 வரையிலான நான்கு எண்கள், எடுத்துக்காட்டாக, 208.77.188.166) குறிக்கப்படும். ஒவ்வொரு பாகமும் முகவரியின் 8 பிட்களைக் குறிப்பிட்டு காட்டும். ஆகவே இது ஓர் "ஆக்டட்" (octet) என்று அழைக்கப்படுகிறது. வெகுசில இடங்களில் தொழில்நுட்பரீதியாக, இ.நெறி ப4 முகவரிகள் ஹெக்சாடெசிமலிலும், ஆக்டலிலும் அல்லது பைனரி குறியீடுகளாகவும் குறிப்பிட்டு காட்டப்படும். + +இணைய நெறிமுறை அபிவிருத்தி அடைந்து வந்த ஆரம்ப காலகட்டத்தில், வலையமைப்பு நிர்வாகிகள் ஓர் இ.நெறி முகவரியை வலையமைப்பு எண் பகுதி மற்றும் புரவன் எண் பகுதி என்று இரண்டு பாகங்களாக வகைப்படுத்தினார்கள். ஒரு முகவரியில் இருக்கும் உயர்நிலை ஆக்டெட்களை (முதல் எட்டு பிட்டுகள்) "வலையமைப்பு எண்"களுக்காக வகைப்படுத்தினார்கள். மீதமிருந்த பிட்கள் "ரெஸ்ட் பீல்டு" அல்லது "ஹோஸ்டு ஐடென்டிபியர்" என்று அழைக்கப்பட்டன. அவை ஒரு வலையமைப்பிற்குள் இருக்கும் புரவன்களைக் கணக்கில் கொண்டுவர பயன்படுத்தப்பட்டன. ஒரேயொரு வலையமைப்பு எண்ணால் வடிவமைக்கப்பட்ட வலையமைப்புகளிலேயே உள்ளார்ந்து கூடுதல் வலையமைப்புகள் உருவான போது இந்த முறை போதுமானதாக அமையவில்லை. 1981-ல், இணைய முகவரி தொழில்நுட்ப குறிப்புகள், கிளாஸ் வகையிலான வலையமைப்பு கட்டமைப்பின் அறிமுகத்துடன் மாற்றியமைக்கப்பட்டன. + +கிளாஸ் வகையிலான வலையமைப்பு வடிவமானது, பெருமளவிற்கு தனிமுறை வலையமைப்புகளை அமைக்க உதவியது. ஓர் இ.நெறி முகவரியின் முதல் முக்கிய ஆக்டெட்களில் முதல் மூன்று பிட்கள் முகவரியின் "கிளாஸை" வரையறை செய்தன. சர்வதேச ஒரேதர (Universal unicast) முகவரி பயன்பாட்டிற்காக மூன்று கிளாஸ்கள் ("ஏ", "பி" மற்றும் "சி") வரையறுக்கப்பட்டன. பெறப்பட்ட கிளாஸிற்கு ஏற்ப, மொத்த முகவரியின் ஆக்டெட் எல்லைக்குள் வலையமைப்பின் அடையாளம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிளாஸூம் வலையமைப்பு அடையாளம்காட்டியில் வெற்றிகரமாக கூடுதல் ஆக்டெட்களைப் பயன்படுத்தியது. இதனால் உயர்நிலை கிளாஸ்களில் ("பி" மற்றும் "சி") பு��வன்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டது. + +பின்வரும் அட்டவணை இப்போதிருக்கும் இந்த முழுமையான சிஸ்டத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கும். +'சப்நெட்வொர்க்' மற்றும் 'கிளாஸ் வகையிலான வலையமைப்பு' என்ற கட்டுரைகள் இந்த வடிவத்தின் விபரங்களை விளக்கமாக விவரிக்கும். + +கிளாஸ் வகையிலான வலையமைப்பு வடிவம் வெற்றிகரமான அபிவிருத்தி நிலையில் இருந்தாலும் கூட, இணையத்தின் விரைவான வளர்ச்சிக்கு இணையாக அது போதுமானதாக இல்லை. மேலும் இ.நெறி முகவரி தொகுப்புகளை ஒதுக்குவதற்காகவும், இ.நெறி ப4 முகவரிகள் பயன்படுத்தி ரௌட்டிங் நெறிமுறை பேக்கெட்களுக்கான புதிய விதிமுறைகளுக்காகவும் Classless Inter-Domain Routing (CIDR) உருவாக்கப்பட்ட போது இது கைவிடப்பட்டது. முன்சேர்க்கைகளின் நீள அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காகவும், ரௌட்டிங் செய்வதற்காகவும் CIDR ஆனது variable-length subnet masking அடிப்படையில் அமைக்கப்பட்டது. + +இன்று, கிளாஸ்வகையிலான வலையமைப்பு திட்டங்களின் எச்சசொச்சங்கள் குறைந்தளவு வசதிகளுடன் மட்டும் தான் செயல்பாட்டில் இருக்கின்றன. அதாவது இது சில மென்பொருள் மற்றும் வன்பொருள் வலையமைப்பு பாகங்களில் முன்னிருப்பு உள்ளமைவு அளபுருவாக (default configuration parameter) மட்டுமே இருக்கின்றன. + +ஆரம்பகால வலையமைப்பு வடிவமானது, அதாவது அனைத்து இணைய புரவன்களோடும் உலகளாவிய அளவில் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு இணைப்பு கொடுப்பது குறித்து ஆராயப்பட்ட போது, ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது சாதனத்திற்கு பிரத்யேக முகவரிகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், தனிமுறை வலையமைப்புகள் வளர்ச்சி அடைந்த போதும், பொதுவான முகவரிகளின் எண்ணிக்கைக் குறைந்த போதும் (ஏனென்றால் இ.நெறி ப4 முகவரி தீர்ந்துகொண்டிருந்தது) இவ்வாறு செய்வது எல்லா காலத்திற்கும் சாத்தியப்படாது என்று கண்டறியப்பட்டது. + +TCP/IP வழியாக ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் தொழிற்துறை கணினிகள் போன்ற, இணையத்தோடு இணைக்கப்படாத கணினிகளுக்கு உலகளாவிய-பிரத்யேக இ.நெறி முகவரிகள் தேவைப்படுவதில்லை. தனிமுறை வலையமைப்புகளுக்காக இ.நெறி ப4 முகவரிகளின் மூன்று வரிசைகள் RFC 1918 இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முகவரிகள் இணையத்தில் அனுப்பப்படுவதில்லை. இதனால் இவற்றின் தேவை இ.நெறி முகவர�� பதிவகத்தோடு ஒருங்கிணைய வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது. + +இன்று, இ.நெறி முகவரிகளின் தேவைப்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், இதுபோன்ற தனிமுறை வலையமைப்புகளானது வலையமைப்பு முகவரி மாற்றி (network address translation) மூலமாக இணையத்தோடு இணைக்கப்படுகின்றன. + +எந்த பயனரும் ஒதுக்கப்பட்ட எந்த தொகுப்பையும் பயன்படுத்தலாம். அடிப்படையில், ஒரு வலையமைப்பு நிர்வாகி ஒரு தொகுப்பைத் துணை-பிணையத்தில் பிரித்தளிப்பார்; எடுத்துக்காட்டாக, வீட்டு பயன்பாட்டு ரௌட்டர்கள் பல தானாகவே 192.168.0.0 - 192.168.0.255 (192.168.0.0/24) என்ற ஒரு முன்னிருப்பு முகவரி வரிசையைப் (default address range) பயன்படுத்தும். + +இ.நெறி பதிப்பு 4 முகவரிகளின் எண்ணிக்கை விரைவாக தீர்ந்து வருகிறது. அதாவது உத்தியோகப்பூர்வமாக ஒதுக்ககூடிய முகவரி தொகுப்புகள் தீர்ந்து வருகின்றன. + +மாற்றும் நுட்பங்கள் இருந்த போதினும் கூட, இ.நெறி ப4 முகவரி இடம் விரைவாக தீர்ந்து வந்ததால், இணையத்தின் முகவரி ஒதுக்கும் திறனை விரிவாக்குவதற்காக புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டிய அவசியத்தை இணைய பொறியியல் பணிக்குழுவிற்கு (Internet Engineering Task Force - IETF) ஏற்படுத்தியது. இணைய நெறிமுறையையே மாற்றி அமைப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. இணைய நெறிமுறைக்கான இந்த புதிய தலைமுறை, இணையத்தில் இ.நெறி ப4-க்கு மாற்றாக கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்கு 1995-ல் "இணைய நெறிமுறை பதிப்பு 6" என்று பெயரிடப்பட்டது. முகவரி அளவு 32 பிட்டில் இருந்து 128 பிட்டுகளாக அல்லது 16 ஆக்டெட்களாக அதிகரிக்கப்பட்டது. இணைய முகவரி தொகுப்புகளின் ஒரு சிறப்பார்ந்த ஒதுக்கீட்டுடன் இது, எதிர்வரும் காலத்திற்கு போதுமானதாக கணிக்கப்படிருக்கிறது. கணக்கீட்டளவில், இந்த புதிய முகவரி இடமானது அதிகபட்சம் 2 அல்லது சுமார் 3.403 x 10 பிரத்யேக முகவரிகளை அளிக்கிறது. + +போதுமான அளவிற்கு தரமான முகவரிகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே புதிய வடிவம் அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. மாறாக ரௌட்டிங் நோட்களில் சப்நெட் ரௌட்டிங் பிற்சேர்க்கைகளின் போதுமான வேகத்தை அனுமதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இதன் பயனாக, ரௌட்டிங் அட்டவணை சிறியதாகிவிடும், மேலும் 2 புரவன்களின் ஒரு துணை-வலையமைப்பு குறைந்தபட்சம் சாத்தியப்படும் தனிமுறை ஒதுக்கீடாக அமையும். இது மொத்த இ.நெறி ப4 இணையத்தின் அளவை விட இருமடங்காகும். இந்த அளவுகளில், எந்த இ.நெறி ப6 வலையமைப்பு பிரிவிலும் உண்மையான முகவரி பயன்பாடு விகிதங்கள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த புதிய வடிவமானது, ஒரு வலையமைப்பில் வெளிப்புற தரவு பரிமாற்றத்தை ரௌட்டிங் செய்வதற்கான முகவரி ஒதுக்கி அளிக்கும் பிற்சேர்க்கையைப் பயன்படுத்துவதில் இருந்து, ஒரு வலையமைப்பு பிரிவின் முகவரி ஒதுக்கி அளிக்கும் உள்கட்டமைப்பைப் பிரிக்கும் வாய்ப்பையும் (அதாவது, இது அப்பிரிவில் இருக்கும் இடத்தின் உள்நிலை நிர்வாகம்) அளிக்கிறது. உள்நிலை மறுவடிவமைப்போ (redesign), மறு எண்ணிடுதலோ (renumbering) இல்லாமல் ரௌட்டிங் கொள்கையை மாற்றி, உலகளாவிய இணைப்பிற்காக மொத்த வலையமைப்புகளின் ரௌட்டிங் பிற்சேர்க்கையையும் தானாகவே மாற்றும் வசதிகளையும் இ.நெறி ப6 கொண்டிருக்கிறது. + +இ.நெறி ப6 முகவரிகளின் பெரும் எண்ணிக்கை, குறிப்பிட்ட தேவைகளுக்காக நிறைய முகவரி தொகுப்புகளை ஒதுக்க அனுமதிக்கிறது. இவ்வாறான பிரத்யேக ஒதுக்கீடு, துல்லியமான ரௌட்டிங்கை ஏற்படுத்துவதில் உதவும். நிறைய முகவரி இடம் இருப்பதால், CIDR பயன்படுத்தப்பட்ட சிக்கலான முகவரி மாற்றும் முறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. + +தற்போதைய அனைத்து மேஜை கணினி மற்றும் நிறுவன சர்வர் இயங்குத்தளங்களும் இ.நெறி ப6 நெறிமுறைக்கு பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனால் வீட்டு வலையமைப்பு ரௌட்டர்கள், இணைய நெறிமுறையில் குரல்சேவை மற்றும் மல்டிமீடியா உபகரணங்கள் மற்றும் வலையமைப்பு உபகரணங்கள் போன்ற பிற சாதனங்களில் இன்னும் இது பரவலாக பயன்பாட்டிற்கு வரவில்லை. + +ஒரு இ.நெறி ப6 முகவரிக்கான எடுத்துக்காட்டு: +2001:0db8:85a3:08d3:1319:8a2e:0370:7334 + +தனிமுறை அல்லது உள் வலையமைப்புகளுக்காக இ.நெறி ப4 முகவரிகளை ஒதுக்குவது போலவே, தனிமுறை முகவரிகளுக்காக இ.நெறி ப6 இல் முகவரிகளின் தொகுப்புகள் இருக்கின்றன. இ.நெறி ப6 இல், இவை பிரத்யேக உள் முகவரிகள் (unique local addresses - ULA) என்று குறிப்பிடப்படுகின்றன. RFC 4193, இந்த பிளாக்கிற்காக ரௌட்டிங் பிற்சேர்க்கையான fc00::/7 என்பதை ஒதுக்கி அளிக்கிறது. நிறுவப்பட்ட வெவ்வேறு கொள்கைகளுடன் இரண்டு /8 முகவரி தொகுப்புகளாக இது பிரிக்கப்படுகிறது. இந்த முகவரிகள் ஒரு 40-பிட் போலி-வரிசை எண்ணை உள்ளடக்கி இருக்கும். இது வலைத்தளங்கள் எதிர்பாராமல் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டாலோ அல்லது பேக்கெட்டுகள் தவறுதலாக திருப்பிவிடப்பட்டாலோ முகவரி முரண்பாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. + +இந்த நோக்கத்திற்காக (fec0::) முந்தைய வடிவமைப்புகள் (RFC 3513) வெவ்வேறு முகவரி தொகுப்புகளைப் பயன்படுத்தின. ஆனால், இவற்றில் "வலைத்தளங்கள்" எவற்றால் உருவாக்கப்படுகின்றன என்ற வரையறை தெளிவில்லாமல் இருந்தது. மிகவும் சிக்கலாக வரையறுக்கப்பட்ட முகவரி அளிப்பு கொள்கை (addressing policy) ரௌட்டிங்கில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியது. முகவரி வரிசை அளவு கைவிடப்பட்டது என்பதுடன், புதிய அமைப்புமுறைகளிலும் அவை மேற்கொண்டு பயன்படுத்தப்படவில்லை. + +லிங்க்-லோக்கல் முகவரிகள் என்றழைக்கப்பட்ட, fe80: என்பதில் தொடங்கும் முகவரிகள் லோக்கல் லிங்க் பகுதியில் மட்டும் ஒதுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வலையமைப்பு இடைமுகத்திற்காகவும் இயங்குதளங்களால் தானாகவே முகவரிகள் தோற்றுவிக்கப்பட்டன. இது எந்த இ.நெறி ப6 புரவனிற்கும் உடனடியாக தானாகவே வலையமைப்பு இணைப்பை அளிக்கிறது. ஒரு பொதுவான ஹப் அல்லது சுவிட்சில் பல்வேறு புரவன்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் லிங்க்-லோக்கல் இ.நெறி ப6 முகவரி வழியாக அவை ஓர் உடனடி தொடர்பு பாதையைப் பெற்றிருக்கும். இந்த வசதி பிரத்யேகமாக இ.நெறி ப6 வலையமைப்பு நிர்வாகத்தின் கீழ் அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பெரும்பாலான பயனர்களுக்கு புலனாகாமலும் இருக்கும் (cf. Neighbor Discovery Protocol). + +தனிமுறை முகவரி பிற்சேர்க்கைகள் எதுவுமே பொதுவாக பயன்படுத்தப்படும் இணையத்தில் அனுப்பப்படாது. + +துணை-வலையமைப்பு அமைக்கும் நுட்பம் இ.நெறி ப4 மற்றும் இ.நெறி ப6 ஆகிய இரண்டிலும் செயல்படும். இ.நெறி முகவரிகள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது: அதாவது "வலையமைப்பு முகவரி பிரிவு" மற்றும் "புரவன் அடையாளம் காணும் பிரிவு". சப்நெட் மாஸ்க் (இ.நெறி ப4-ல் மட்டும்) அல்லது CIDR பிற்சேர்க்கையானது, இ.நெறி முகவரி எவ்வாறு வலையமைப்பு மற்றும் புரவன் பாகங்களாக பிரிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது. + +"சப்நெட் மாஸ்க்" என்ற இந்த வார்த்தை இ.நெறி ப4-ல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. CIDR நுட்பத்தையும், குறிமான முறையையும் இரண்டு இ.நெறி பதிப்புகளுமே பயன்படுத்துகின்றன. இதில், வலையமைப்பு பாகத்தைக் குறிப்பதற்காக, இ.நெறி முகவரியானது, அதை தொடர்ந்து ஒரு முன்சாய்வு கோட்டையும், பிட்களின் எண்ணிக்கையையும் கொண்டிருக்கும். இது "ரௌட்டிங் பிற்சேர்க்கை" என்று அழைக்கப்படுகிறது. அதே இ.நெறி முகவரிக்கான CIDR குறிமான முறையும், சப்நெட்டும் 192.0.2.1/24 என்று இருக்கும். ஏனென்றால் இ.நெறி முகவரியின் முதல் 24 பிட்கள் வலையமைப்பு மற்றும் சப்நெட்டைக் குறித்து காட்டும். + +ஒரு கணினியானது ஒவ்வொரு முறை தொடங்கப்படும் போதும் ஒரே இ.நெறி முகவரியைப் பயன்படுத்தும்படி உள்ளமைப்பு செய்யப்பட்டிருந்தால், அது ஒரு "நிலையான இ.நெறி முகவரி" என்று அழைக்கப்படும். மாறாக, கணினியின் இ.நெறி முகவரி தானாகவே அமைக்கப்படும் வகையில் இருந்தால், அது "மாறும் இ.நெறி முகவரி" என்று அழைக்கப்படுகிறது. + +ஒரு கணினிக்கான நிலையான முகவரிகள், வலையமைப்பு நிர்வாகியால் வழங்கப்படும். இதற்கான வழிமுறையானது பயன்படுத்தப்படும் பணித்தளத்தைப் பொறுத்து மாறுபடும். இது மாறும் இ.நெறி முகவரிகளில் இருந்து வேறுபட்டது. இவை கணினி இடைமுகத்தால் அல்லது புரவன் மென்பொருளினால் தானாகவே அளிக்கப்படும் அல்லது டைனமிக் ஹோஸ்டு கான்பிக்ரேஷன் நெறிமுறையைப் (Dynamim Host Configuration Protocol - DHCP) பயன்படுத்தி வழங்கனால் வழங்கப்படும். இ.நெறி முகவரிகள் டிஎச்சிபி நுட்பத்தில் வழங்கப்பட்டாலும் கூட, அவை நீண்ட காலத்திற்கு ஒரேமாதிரியாக தான் இருக்கும். பிறகு அவை தானாகவே எப்போதாவது மாறிவிடும். சில சமயங்களில், ஒரு வலையமைப்பு நிர்வாகியானவர் மாறிமாறி வழங்கப்படும் நிலையான இ.நெறி முகவரிகளைக் கூட நிறுவுவார். இதுபோன்ற சமயங்களில், ஒரு டிஎச்சிபி வழங்கன் பயன்படுத்தப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கணினிக்கு ஒரே இ.நெறி முகவரியை எப்போதும் அளிக்க சிறப்பாக உள்ளமைப்பு செய்யப்படும். இது வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணினியாக சென்று கைகளால் முறைப்படி மாற்ற வேண்டிய தொந்தரவை ஏற்படுத்தாமல், ஒரேயிடத்தில் இருந்து நிலையான இ.நெறி முகவரிகளை உள்ளமைப்பு செய்ய அனுமதிக்கிறது. + +நிலையான அல்லது நிலையுள்ள (DHCP) முகவரி உள்ளமைவுகள் பழுதுபட்டாலோ அல்லது அது அமைக்கப்படாமல் இருந்தாலோ, ஜீரோகான்ப் போன்ற நிலையில்லா தானியங்கி உள்ளமைவு முறைகளைப் பயன்படுத்தி வலையமைப்பு இடைமுகத்திற்கு ஓர் இ.நெறி முகவரி வழங்கப்படுகிறது. + +மாறும் இ.நெறி முகவரிகளானது பெரும்பாலும் டைனமிக் ஹோஸ்டு கான்பிக்ரேஷன் நெறிமுறை (DHCP) வழங்கன்களைப் பயன்படுத்தி உள்நிலை பகுதி வலையமைப்புகள் (LAN) மற்றும் அகல்கற்றை வலையமைப்புகளில் நிறுவப்படுகிறது. இவை வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் குறிப்பிட்ட நிலையான முகவரிகளை ஒதுக்கும் நிர்வாகியின் வேலையைத் தவிர்ப்பதால் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு வலையமைப்பில் இருக்கும் பல உபகரணங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில உபகரணங்கள் மட்டுமே இணையத்தில் இணைந்திருந்தால், அந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான முகவரிகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது அனுமதிக்கிறது. தற்போதிருக்கும் பெரும்பாலான மேஜைகணினி இயங்குதளங்களில், முன்னிருப்பாகவே மாறும் இ.நெறி உள்ளமைப்பு தூண்டப்பட்டிருக்கும். இதனால் ஒரு டிஎச்சிபி வழங்கனுடன் கூடிய ஒரு வலையமைப்பிற்குள் நுழைய பயனர் எந்த அமைவுகளையும் உள்ளிட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மாறும் இ.நெறி முகவரிகளை ஒதுக்க டிஎச்சிபி மட்டுமே ஒரேயொரு தொழில்நுட்பம் இல்லை. தொலைபேசி அழைப்புமுறை மற்றும் சில அகல்கற்றை வலையமைப்புகள் point-to-point நெறிமுறையின் மாறும் முகவரி வசதிகளைப் பயன்படுத்துகின்றன. + +"ஸ்டிக்கி ஆற்றல்மிகு இ.நெறி முகவரி" அல்லது "ஸ்டிக்கி ஐபி" என்ற உத்தியோகப்பூர்வமான வார்த்தையானது, அடிக்கடி மாறாத ஆற்றல்மிகு முறையில் ஒதுக்கப்படும் இ.நெறி முகவரியைக் குறிப்பிட கேபிள் மற்றும் டிஎஸ்எல் இணைய பயனர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த முகவரிகள் பொதுவாக டிஎச்சிபி நெறிமுறையுடன் வழங்கப்படும். பொதுவாக மோடம்கள் நீண்ட நேரத்திற்கு இயக்கத்தில் இருக்கும் என்பதால், முகவரியும் நீண்ட காலத்தில் மாறாமல் இருக்கும். அதன் ஆயுட்காலம் முடிந்த உடனே மீண்டும் புதுப்பிக்கப்படும். முகவரிக்கான காலம் முடிவதற்கு முன்னரே மோடம் அணைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அதே இ.நெறி முகவரியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. + +RFC 3330 ஆனது, இ.நெறி ப4 வலையமைப்புகளுக்காக லிங்க்-லோக்கல் முகவரி அளித்தலில் சிறப்பு பயன்பாடிற்காக ஒரு முகவரி பிளாக்கை, 169.254.0.0/16, வரையறுக்கிறது. இ.நெறி ப6-ல், ஒவ்வொரு இடைமுகமும், அது நிலையான முகவரி அல்லது மாறும் முகவரி இதில் எதைப் பயன்படுத்தினாலும், fe80::/10 துணை-வலையமைப்பில் தானாகவே ஒரு லிங்க்-லோக்கல் முகவரியையும் பெறுகிறது. + +இந்த முகவரிகள் புரவன் இணைக்கப்பட்டிருக்கும் அந்த லிங்கில் மட்டுமே மதிப்பைப் பெற்றிருக்கும். அதாவது ஒரு உள்நிலை வலையமைப்பு பிரிவு அல்லது பாயிண்ட்-டூ-பாயிண்ட் இணைப்பு போன்றவற்றில் மட்டும். இந்த முகவரிகளை ரௌட்டிங் செய்ய இயலாது. மேலும் தனிமுறை முகவரிகளைப் போல இணையத்தில் குறுக்காக செல்லும் தொடங்கும் அல்லது முடியும் பேக்கெட்களாகவும் இருக்காது. + +லிங்க்-லோக்கல் இ.நெறி ப4 முகவரி பிளாக் ஒதுக்கப்பட்டுவிட்டால், முகவரி தானாகவே மாறும் வகையில் அமைக்கப்பட்ட உள்ளமைவின் செயல்முறைக்காக எந்த தரமுறையும் இருக்காது. இந்த ஒன்றுமில்லாததை நிறைக்க, மைக்ரோசாப்ட்டானது ஆட்டோமெடிக் பிரைவேட் ஐபி அட்ரஸிங் (APIPA) என்றழைக்கப்படும் ஒரு நிறுவுதலை உருவாக்கியது. சந்தையில் இருந்த மைக்ரோசாப்டின் செல்வாக்கால், APIPA மில்லியன்கணக்கான கணினிகளில் நிறுவப்பட்டது, இவ்வாறு அது தொழில்துறையில் ஒரு நிஜமான தரமுறையாக உருவெடுத்தது. பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர், IETF செயல்பாட்டிற்கான ஓர் உத்தியோகப்பூர்வமான தரமுறையை வரையறுத்தது. அதுவே "இ.நெறி ப4 லிங்க்-லோக்கல் முகவரிகளுக்கான ஆற்றல்மிகு உள்ளமைவு" என்ற தலைப்பில் வந்த RFC 3927. + +சில உள்கட்டமைப்பு சூழ்நிலைகள், புரவன் பெயர்களை இ.நெறி முகவரிகளாக மாற்றும் புரவன் பெயர் அமைப்புமுறை வழங்கனைக் கண்டறியும் போது ஏற்படும் சூழ்நிலைகள் போன்ற நிலைமைகளில், நிலையான முகவரிகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். நிலையான முகவரிகளும் சில சௌகரியங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கட்டாயம் இவை தேவை என்பதில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வழங்கன்களைக் கண்டறிவது போன்ற பயன்பாட்டிற்கு இவை தேவைப்படும். ஒரு டிஎன்எஸ் வழங்கனில் இருந்து பெறப்பட்ட ஒரு முகவரி விடுபடுவதற்கான நேரத்தோடு அல்லது கேச் நேரத்தோடு தான் வருகிறது. ஆகவே அதன்பிறகு அது மாறிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த அது மீண்டும் கவனிக்கப்பட வேண்டும். நிலையான இ.நெறி முகவரிகளும் கூட, வலையமைப்பு நிர்வாகியால் மாற்றப்பட்டு விடலாம் (RFC 2072). + + இணையத்தில் பயர்வால்கள் பொதுவாக இருக்கின்றன. வலையமைப்பின் உயர் பாதுகாப்பிற்காக, வாடிக்கையாளரின் பொது இ.நெறியின் (public ip) அடிப்படையில் அவை தனிமுறை வலையமைப்புகளுக்குள் அணுகுவதைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரு கருப்புபட்டியலையோ அல்லது வெள்ளைப்பட்டியலையோ பயன்படுத்தி, தடுக்கப்பட்ட இ.நெறி முகவரி தான் வாடிக்கையாளரின் அறியப்பட்ட பொது இ.நெறி முகவரி என்பதைப் பயன்படுத்தி கொள்கிறது, அதாவது வாடிக்கையாளர் ஒரு புராக்ஸி சர்வர் அல்லது NAT பயன்படுத்துகிறார் என்றால், ஒரு இ.நெறி முகவரியைத் தடுத்தாலே பல தனிமுறை பயனர்களைத் தடுத்துவிடும் என்பதையே இது குறிக்கிறது. + +இ.நெறி முகவரிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக பல பயனர் உபயோகிக்கும் உபகரணங்கள் உருவாகலாம்: ஒரு பகிர்வு ஹோஸ்டிங் வெப் சர்வர் சூழலின் ஒரு பாகமாகவோ அல்லது இ.நெறி ப4 வலையமைப்பு முகவரி மாற்றியின் (NAT) காரணமாகவோ அல்லது புராக்ஸி சர்வர் அதன் பயனர்களுக்குச் சார்பாக ஓர் இடைநிலை முகவராக செயல்படுவதாலோ, இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் நிஜமான தோற்றுவிக்கும் இ.நெறி முகவரிகள் ஒரு கோரிக்கையைப் பெறும் சர்வரில் இருந்து மறைக்கப்படலாம், ஏதோவொரு வகையில் இவ்வாறான உபகரணங்கள் உருவாகலாம். பொதுவான வழக்கம் என்னவென்றால், ஒரு தனிமுறை வலையமைப்பில் பெருமளவிலான இ.நெறி முகவரிகள் NAT-னினால் மறைக்கப்படும். NAT இன் வெளிப்புற இடைமுகங்கள் மட்டும் இணைய-ரௌட்டபிள் முகவரிகளைப் பெற்றிருக்க வேண்டும். + +பெரும்பாலும், NAT சாதனம் வெளியில் இருக்கும் TCP அல்லது UDP போர்ட் எண்களை உள்ளிருக்கும் தனித்தனியான தனிமுறை முகவரிகளுக்கு மேப்பிங் செய்கிறது. ஒரு தொலைபேசி எண் இடஞ்சார்ந்த விரிவெண்களைக் கொண்டிருப்பது போல, இந்த போர்ட் எண்கள் என்பவை ஓர் இ.நெறி முகவரியின் இடஞ்சார்ந்த விரிவாக்கங்களாகும். + +சிறிய வீட்டு வலையமைப்புகளில், இந்த NAT செயல்பாடு பொதுவாக ஒரு ரெசிடென்சியல் கேட்வே சாதனத்தில் நடக்கும், பொதுவாக இது "ரௌட்டர்" என்று குறிப்பிடப்படுவதில் நடக்கும். இந்த விஷயத்தில், ரௌட்டரோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினிகள் 'தனிமுறை' இ.நெறி முகவரிகளைக் கொண்டிருக்கலாம், அந்த ரௌட்டர் இணையத்தோடு தொடர்பு கொள்ள ஒரு 'பொது' முகவரியைக் கொண்டிருக்கலாம். இந்த வகையான ரௌட்டர் பல கணினிகள் ஒரே பொது இ.நெறி முகவரியைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. + +விண்டோஸ் இயங்குதளத்தில், கட்டளை-தள(command prompt) கருவியைப் பயன்படுத்தி ipconfig என்ற கட்டளையின் மூலமாக இ.நெறி முகவரியை வரையறுக்கலாம். யூனிக்ஸில், கட்டளை-தளத்தில் ifconfig என்ற கட்டளை இந்த பணியைச் செய்கிறது. + +ஒரு வழங்கன் பெயரைச் சேர்ந்த இ.நெறி முகவரியை, nslookup, example.net அல்லது dig example.net என்ற கட்டளைகளைப் பயன்படுத்தி வரையறுக்கலாம். + + + +கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் + + + + +எண்ணெண் + +0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்க குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்து இலக்கங்களையும் குறிக்க பயன்படுத்தும் ஒரு முறை எண்ணெண் (octet) ஆகும். எட்டு குறியீடுகளை பயன்படுத்துவதால் எண்ணெண் எனப்பட்டது. இந்த குறிப்பு முறை கணினியியல் துறையில் பயன்படுகின்றது. + +தசம எண் -> எண்ணென் + + + + +ஏரம்பு சுப்பையா + +ஏரம்பு சுப்பையா (சனவரி 13, 1922 - சனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர். + +ஏரம்பு சுப்பையாவின் தந்தை யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் +கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார். + +இந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் நடனக் குழுவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் நடனமாடி நன்மதிப்புப் பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி கலைப்பணிகள் செய்வதில் காலடி எடுத்து வைத்தார். + +அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். + +அரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் சுப்பையா அவர்களே. நெடுந்தீவு மத்திய மகா வித்தி���ாலயத்தின் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய ஏரம்பு சுப்பையா, பின்னர் மண்டைதீவு மகா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), ஏழாலை மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார். + +திரு. சுப்பையா அவர்கள் 1949ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1956ல் கொக்குவிலில் "கலா பவனம்" என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கதகளியையும், பரதசூடாமணி அடையாறு லட்சுமணனிடம் பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார். + +1960ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தது. பின் கலைச்செல்வியினால் நடத்தப்பட்ட கலைவிழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு "கலைச்செல்வன்" என்ற பட்டமும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். அபிநய அரசகேசரி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. + +கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது 54 வது அகவையில் காலமானார். தந்தையால் கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றார் மூத்த பெண் திருமதி சாந்தினி சிவனேசன். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ஆவார். தேசமான்ய விருது பெற்றவர். + + + + +தமிழ்ப் பிராமணர்கள் + +பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தமிழ் நாட்டில் உள்ள ஒரு உயர் சாதி பிரிவை சேர்ந்த வகுப்பினர். சைவம், வைண��ம், இந்து சமயம் ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இழையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் பிராமணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது. + + + + +மோன்ஸ்டர்ஸ், இன்க் + +மோன்ஸ்டர்ஸ், இன்க். (Monsters, Inc.) 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட் டாக்டெர் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. + +இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம் + +இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இசை' ('Best Music, Original Song') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர வேறு 10 விருதுகளையும் பெற்றுள்ளது. + + + + + +ஐராவதேசுவரர் கோயில் + +தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன + +தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். + +1987-ல், பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது. + +சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், ��ுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது. + +வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. + +கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது. + +ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோயில் "விமானம்" 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. + +நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. + +ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது. + +குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. + +கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. + +கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன. + +பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன. + +ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது. + +இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.. + +எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து. + +இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தார���் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது. + +இத்திருக்கோயில் குறித்து "தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)" என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார். + + + + + +மலைநாடு (கர்நாடகம்) + +மலைநாடு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி ஆகும். மலைநாடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு, மேற்குச் சரிவுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இதன் கிழக்குப் பகுதியில் தக்காணப் பீடபூமியும் தெற்கில் குடகுப் பகுதியும் மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன. + +மலைநாடு ஷிமோகா, சிக்மகளூர், உத்தர கன்னடா, ஹஸன் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. + + + + +ஜெய்சங்கர் + +ஜெய்சங்கர் (1938 - சூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். "சங்கர்" என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், "ஜெய்" என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். + +பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். +ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் + +எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். + +100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார். + +ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை "தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்" எனவும் "தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்" எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். + + +2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார். + + + + +அரிமா + +அரிமா என்பது சிங்கம் எனப்பொருள்படும். தமிழ் விக்கிபீடியாவில் அரிமா எனத்தொடங்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய கட்டுரைகள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன பொருத்தமான சுட்டிடில் சொடுகுவதன் மூலம் கட்டுரைப் பக்கங்களைப் அடையளாம்: + + + + + +தயிர் + +தயிர் ஒரு பால் அல்லது பால் பண்ணை குறித்த உற்பத்திப்பொருள் (dairy product) ஆகும், பாலில் நுண்ணுயிர்கள் நொதித்தல் காரணமாக கிடைக்கும் பொருளாகும். லேக்டோசினை (lactose) நொதிக்கும் போது லாக்ட்டிக் அமிலம் கிடைக்கிறது, அது பாலின் புரதத்துடன் செயல்புரியும் போது தயிருக்கு அதனுடைய இழை நய அமைப்பு (texture) மற்றும் அதன் சிறப்பியல்பு கொண்ட புளித்த ருசியை அளிக்கின்றது.சோயா தயிரானது, பால்பண்ணை அல்லாத பதிலீடு, சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. +குறைந்தது கடந்த 5,400 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும் உண்டும் -- வந்திருக்கின்றனர். இன்று அது உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகவும்; புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது. + +இந்த ஆங்கில சொல்லானது துருக்கிய "யோகுர்ட் (yoğurt)" என்ற சொல்லில் இருந்து வந்ததாகும், மற்றும் அது "யோகுர்மாக் (yoğurmak)" பொருள் 'பிசைவது' மற்றும் "யோகுண் (yoğun)" "அடர்ந்த" அல்லது "தடித்த" (கட்டியான) என்ற பொருள் கொண்ட சொற்களின் சேர்க்கையாகும். ğ என குறியிட்ட அரேபிய எழுத்து வழக்கமாக துர்க்கீய ஒலிபெயர்ப்புகளில் "gh" என மொழிபெயர்கிறது, இது அரேபிய எழுத்தின் மாறிய உருவமாகும், இவ்வாறு 1928 ஆண்டில் இலத்தீன் மொழியின் எழுத்து அறிமுகம் ஆகும் வரை தொடர்ந்தது. பழங்காலத்து துருக்கிய மொழியில் இந்த எழுத்து அடுநாப் பின்னண்ணவினம் குரலாக உரசொலித்தது, ஆனால் இந்த ஓசை நவீன துருக்கிய மொழியில் பின்னுயிர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு மாய்ந்து விடுகிறது, இம்முறையில் இவ்வெழுத்தை உச்சரிக்கும் போது. சில கீழத்து கிளை மொழிகள் இந்த மெய்யெழுத்தை இதே நிலைமையில் வைத்திருக்கும், மேலும் பல்கன் வட்டாரத்தைச் சார்ந்த துருக்கியர்கள் இதை கொஞ்சம் அழுத்தி உச்சரிப்பார்கள். + +பல்கேரிய மொழியில் தயிரை "кисело мляко" (kiselo mlyako) கிசலோ ம்லைகோ என்று அழைப்பர், அதன் பொருள் "புளித்த பால்" (திரிந்த பால்?) ஆகும். செர்பியா மற்றும் மாசிடோனிய மொழியில் இதனை "кисело млеко" கிசெலோ ம்லேகோ (kiselo mleko) என்று அழைப்பர், +லெபனான்-இல் இதனை 'லபான்' என்பர் + +ஆங்கிலத்தில், இந்த சொல்லின் எழுத்துக்கோர்வையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன; ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் "yoghurt" என்ற எழுத்துக்கோர்வைப் பயனிலுள்ளது. ஐக்கிய பேரரசுகளில் "yoghurt" மற்றும் "Yogurt" இரண்டு வகைகளும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன, பொதுவாக "yoghurt" பயன்படுத்தப்படுகிறது, மேலும் "yoghourt" என்ற பயன்பாடும் அவ்வப்போது காணப்படுகிறது. அமெரிக்காவில், "yogurt'" என்ற எழுத்துக்கோர்வை பொதுவாக பயன்பாட்டில் உள்ளது மேலும் "yoghurt" சிறுபான்மையாக பயன்படுத்தப்படுகிறது. +எந்த எழுத்துக்கோர்வை ஆனாலும், இந்த சொல் பொதுவாக சிறிய "ஒ" () கொண்டதாக ஐக்கிய பேரரசு நாடுகளில் உச்சரிக்கப் படுகிறது, ஒரு நீண்ட "ஓ" வுடன் () வடக்கு அமேரிக்கா, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்ரிகா போன்ற நாடுகளில் உச்சரிக்கப்படுகிறது, மேலும் நீண்ட அல்லது சிறிய "ஒ" நியூசிலாந்தில் பயன்படுத்தப்படுகிறது. + +குறைந்தது 4,500 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக பால் பொருட்கள் உணவுப் பொருட்களாக தயாரித்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மிகவும் முந்தைய பழமையான காலங்களில் தயிரானது தானே இயங்குகின்ற வகையில் "லாக்டோபசில்லுஸ் டெல்ப்ரூகி துணை வகையினம். பல்கரிகஸ் (Lactobacillus delbrueckii subsp. bulgaricus) என்ற வகையைச் சார்ந்த "இயற்கை நுண்ணுயிரிகளால் நொதிபட்டிருக்கலாம். + +வரலாற்று இடைக்காலத்தில் தயிரின் பயன்பாட்டைப்பற்றி துருக்கியர்கள�� "திவான் லூகட் அல்-துர்க் (Diwan Lughat al-Turk)" என்ற பெயரில் மஹ்முத் கஷ்கரி (Mahmud Kashgari) மற்றும் "குடட்கு பிளிக் (Kutadgu Bilig)" என்ற பெயரில் யூசுப் ஹாஸ் ஹஜிப் (Yusuf Has Hajib) போன்றோர் பதிவுசெய்த புத்தகங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம், இவை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றவையாகும். இந்த இரு புத்தகங்களிலும், "yoghurt" (தயிர்) என்ற சொல் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன மேலும் அதை எப்படி நாடோடிகளான துருக்கியர்கள் பயன்படுத்தினார்கள் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஐரோப்பியர்கள் தயிரை எதிர்கொண்டது பற்றி பிரெஞ்சு மருத்துவ வரலாற்றில் இருந்து பெறலாம்: முதலாம் பிரான்சிஸ் (Francis I) மிகவும் கடுமையான வயிற்றுப்போக்கினால் அவதியுற்றார் மேலும் அதனை ஒரு பிரெஞ்சு மருத்துவராலும் குணப்படுத்த இயலவில்லை. அவருடைய மிகச்சிறந்த‌ நட்பு நாட்டுத்தோழன் சுலைமான் (Suleiman the Magnificent) ஒரு மருத்துவரை அனுப்பினார், அவர் நோயாளியை தயிர் கொடுத்து குணப்படுத்தினார். நன்றிக்கடனாக, பிரெஞ்சு அரசர் தன்னை குணப்படுத்திய உணவைப்பற்றிய தகவலை சுற்றிலுமிருந்த அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். + +1900 ஆண்டுகள் வரை, தயிர் ஒரு முக்கிய உணவாக தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, தென் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு உயிரியல் வல்லுனர் இல்யா இல்யிச் மேச்னிகோவ், (Ilya Ilyich Mechnikov) அவர் பாஸ்ச்சர் இன்ஸ்டியூட், (Institut Pasteur in Paris) பாரிஸில் பணி புரிந்தவர், பல்கேரிய நாட்டு குடியானவர்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ்ந்ததன் காரணம் அவர்கள் எப்பொழுதும் உணவில் உட்கொண்ட தயிரே காரணம் என்று கருதினார். அதாவது, "லாக்டோபசில்லஸ்" எனப்படும் நுண்ணுயிரிகள் உடல் நலனுக்கு மிகவும் தேவையாகும் என்று நம்பிக்கைக் கொண்ட மேச்னிகோவ், அனைத்து ஐரோப்பாவிலும் மக்கள் உணவில் தயிரை சேர்த்துகொள்ள மிகவும் பாடுபட்டார். + +ஜெனீவாவைச் சேர்ந்த பல்கேரிய மருத்துவ மாணவர் ஸ்டாமன் க்ரிகோரோவ் (Stamen Grigorov) (1878–1945) முதல் முறையாக பல்கேரிய தயிரின் நுண்ணுயிரிகளைச் சோதித்தார். 1905 ஆம் ஆண்டில் அவர் அவற்றை உருண்ட மற்றும் கட்டை வடிவம் கொண்ட லாக்டிக் அமில நுண்ணுயிரிகள் கொண்டதாக விவரித்தார். 1907 ஆம் ஆண்டில் கட்டை வடிவம் கொண்ட நுண்ணுயிரிகள் "லாக்டோபேசில்லஸ் புல்கரிகஸ் (Lactobacillus bulgaricus)" என அழைக்கப்பெற்றன (இப்போது "லா��்டோபசில்லுஸ் டெல்ப்ரூகி துணை வகையினம். புல்கரிகஸ் (Lactobacillus delbrueckii subsp. bulgaricus)") என அறியப்படுகின்றன. + +ஐஸாக் கரஸ்சோ (Isaac Carasso) என்ற யூத தொழில் முனைவர் தயிர் உற்பத்தி செய்வதை தொழில் மயமாக்கினார். 1919 ஆம் ஆண்டில், கரஸ்சோ, ஓட்டோமான் (Ottoman) சலோநிகாவை (Salonika) சார்ந்த அவர், ஒருசிறிய தயிர் வணிகத்தை பார்சிலோனாவில் (Barcelona ) டானோன் (Danone) ("சிறிய டேனியல்" ("little Daniel") என்று அவர் மகனுடைய பெயரில் தொடங்கினார். பிறகு இந்த அடையாளம் அமெரிக்காவில் அமெரிக்க பதிப்பு கொண்ட "டான்னன் (Dannon)" என்ற பெயரில் விரிவடைந்தது. +தயிருடன் பழங்களின் பழப்பாகுடன் கூடிய கலவை 1933 ஆண்டில் ப்ரேகில் (Prague) ரட்லிச்க ம்லேகர்ண டைரி (Radlická Mlékárna dairy) என்ற நிறுவனம் தயாரித்து அதற்கு உரிமைக்காப்பு பெற்றது. அதை அமெரிக்காவில் டான்னன் (Dannon) நிறுவனம் 1947 இல் அறிமுகப்படுத்தியது. + +தயிரை முதல் முதலாக அமெரிக்காவிற்கு ஆர்மேனிய நாட்டில் இருந்து வந்த சர்கிஸ் மற்றும் ரோஸ் கோலோம்போசியன் (Sarkis and Rose Colombosian) அறிமுகப்படுத்தினார்கள், அவர்கள் "கொலோம்போ அண்ட் சன்ஸ் க்ரீமேரி" ("Colombo and Sons Creamery") என்ற அமைப்பை அன்டோவேர், மசசுசெட்ஸ் (Andover, Massachusetts) என்ற இடத்தில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கினார்கள். கொலோம்போ தயிர் (Yogurt) அசலில் நியூ இங்கிலாந்து என்ற இடத்திற்கு அருகாமையில் ஆர்மேனிய சொல்லான "மட்சூன் ("madzoon")" என்ற பெயர் பதித்த குதிரை வண்டிகளில்(பின்னர் "யோகுர்ட்" ("yogurt") என மறுவியது) கொண்டு சென்று விற்றார்கள். அக்காலத்தில் அருகாமையில் இருந்த கிழக்கு நாடுகளில் இருந்துவந்து குடிபுகுந்த துருக்கியர்களே அதனை மிகையாகப் பயன்படுத்தினார்கள். 1950 மற்றும் 1960 களில் தயிரை ஒரு உடல் நலம் காக்கும் உணவு என்ற பிரச்சாரம் செய்ததுடன் அமெரிக்காவில் தயிரின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தயிர் அமெரிக்கவில் ஒரு பொது உணவாக ஏற்கப் பெற்றது. கொலோம்போ தயிர் நிறுவனத்தை ஜெனரல் மில்ஸ் (General Mills) நிறுவனம் 1993 ஆம் ஆண்டில் வாங்கியது. இது 2010 இல் கைவிடப்பட்டது. + +இந்தியாவில், தயிரை வர்த்தக்கரீதியில் "கர்ட் (curd)" என்ற பெயரிலோ அல்லது மேலும் பொதுவான உள்ளூர் பெயர்களான "தஹி (dhahi)" (ஹிந்தியில்), பெருகு (Perugu) (தெலுங்கில்), தயிர் (thayir) (தமிழில்), மொசறு (Mosaru) (கன்னடத்தில்) அறியப்படுகிறது. "யோக்ஹுர்ட்" (Yoghurt) என்ற பெயர் இந்தியாவில் வழங்கப்படாதது, மேற்குநாடுகளுடன் தொடர்பு கொண்டவ��்களுக்கு மட்டுமே அதுபற்றி தெரியும். இந்து சடங்குகளில் அடிக்கடி தயாரிக்கப்படும் பஞ்சாமிருதத்தின் (Panchamrita) ஐந்து அமுதங்களில் தயிர் ஒன்றாகும். இந்தியாவின் பல பாகங்களில், உணவு தயிர் சேர்ப்பதனுடன் முடிவடையும். பழங்காலம் தொட்டே, தயிரானது ஜீரணம் மற்றும் அமில எதிர்விளைவுகளில் இருந்து நிவாரணம் பெற உணவில் சேர்த்து வழங்கப்பெற்றது. பல குடியிருப்புகளில் அவரவர்களே வீட்டில் "தயிரை" செய்து அதனை உண்பார்கள். இந்தியா மற்றும் இதர நாடுகளில் தயிரின் பல்வகை செல்வாக்குடைய பயன்பாடுகளைப் பற்றி அறிய கீழே பாருங்கள். + +தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து B6 (vitamin) மற்றும் உயிர்ச்சத்து B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்து ஆதாயங்கள் அதிலிருந்து கிடைக்கும். மிதமான லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம், ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டுவளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவதே. லேக்டோசிலுள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப் பெறுவதால், லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது. + +தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, குறிப்பாக பலவகை இரையக குடலிய நிலைமைகளுக்கு, மற்றும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி-சேர்க்கை கொண்ட வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். "எல்.ஆசிடோபிலஸ் (L. acidophilus)" கொண்ட தயிரை உட்கொள்வதன் மூலம் கேண்டிடா ஆல்பிகன்ஸ் (vulvovaginal candidiasis) பூஞ்சன நோயைக் குணப்படுத்தலாம் என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரம் உறுதியானதாக இல்லை. + +தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது, ஏனென்றால் அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் (probiotic effect) காரணமாகும். + +இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி (International Journal of Obesity) (11 ஜனவரி 2005) என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிகிறது. பரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் உட்கொண்டவர்களின�� எடை 22% அளவுக்கு மேலும் குறைந்ததாகவும், ஆனால் உணவு கட்டுப்பாட்டுடன் இருந்த குழுவினர், அவர்கள் கலோரிகளை குறித்தும் மற்றும் கூடுதாலாக கால்சியத்தை தவிர்த்த குழுவினருக்கு எடை குறையாமலும் இருந்ததாக தெரிந்தது. மேலும் அவர்கள் 81% அதிகமாக வயிற்றுப்பகுதி பருமனையும் இழந்தார்கள். + +அதன் இயற்கையான புளிப்புச்சுவையை ஈடு செய்ய, தயிரை இனிப்புடன் கலந்து சுவையூட்டலாம் அல்லது பழங்கள் அல்லது பழப்பாகு அடியில் வைத்த பாத்திரங்களில் அதை அளிக்கலாம். வாங்குவதற்கு முன்னால் அதில் பழம் நன்றாக கலந்து இருந்தால், அதனை பொதுவாக ஸ்விஸ்-பாணி என்பார்கள். அமெரிக்காவில் கிடைக்கும் தயிரில் மிகையாக பெக்டின் அல்லது ஊன்பசை அதன் அடர்த்தியைச் செயற்கை முறையில் கூட்டவும் மற்றும் வெண்ணெய்ப்பகுதியை (பாலாடைப்பகுதி) அதிகரிக்கவும் விலையை குறைப்பதற்காக சேர்ப்பார்கள். சுவிட்சர்லாந்தில் அதை உண்ணும்விதம் அப்படி இல்லாமல் இருந்தாலும், இது போன்ற கலப்படம் செய்த தயிர் உணவு வகைகளும் ஸ்விஸ்-பாணி என்று சந்தைப்படுகிறது. சில தனிவகை தயிர்களில், அடிக்கடி "கிரீம் லைன்" எனப்படுபவை, அதன் உச்சியில் புளிப்பேறச்செய்த கொழுப்பு சத்துடன் காணப்படும். பழங்களின் துண்டுகளுக்கு பதிலாக பழத்தின் பாகு பழம் கலந்த தயிரில் வழங்கலாம், அதை வாரக்கணக்கில் வைத்துக்கொள்ள இயலும். + +வணிகத்திற்கான தயிரில் கரும்புச்சாறு சேர்த்த சர்க்கரை இனிப்பு பொருட்களும் தயாரிக்கலாம். + +டாடயாஹ் (Dadiah) அல்லது டடிஹ் (Dadih) என்பது மேற்கு சுமத்ராவில் எருமைப் பாலில் இருந்து தயாரித்த ஒருவகை தயிராகும். அது மூங்கில் குழல்களில் (குழாய்களில்) புளிக்க வைத்ததாகும். + +தயிர் நேபாளத்தில் ஒரு பசி தூண்டும் உணவு அல்லது உணவுக்குப்பின் வழங்கப்படும் இனிப்பு வகையாகப் பயன்படுகிறது. உள்ளூரில் இது "தஹி" (दही) என்று அறியப்படுவது, அது நேபாள பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், உள்ளூர் பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகள், விருந்துகள், சமயம் சார்ந்த சடங்குகள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் தயிரானது பயன்படுகிறது. மிகவும் பெயர்பெற்ற நேபாலீய தயிர் "ஜுஜு தஹு (juju dahu)" என வழங்கப்படுகிறது, அது பாக்டபூர் (Bhaktapur) என்ற நகரத்தில் தயாரிக்கப்படுகிறது. + +டரடோர் மற்றும் காசிக் (Tarator and Cacık) போன்றவை தயிரிலிருந்து செய்த பெயர்பெற்ற குளிர்ந்த ரசங்களாகும், கோடைக்காலத்தில் அவை அல்பானியா, பல்கேரியா, ரிபப்ளிக் ஒப் மசிடோனியா மற்றும் துருக்கியில் மிகவும் பிரபலமடைந்ததாகும். அவை அய்ரன் (Ayran), வெள்ளிரிக்காய், வெந்தியம், உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேவைப்பட்டால் பூண்டு மற்றும் அரைத்த அக்ரூட் பருப்புகள் போன்றவைகள் கொண்டு தயாரித்ததாகும்.பல்கரியா-வினர் இதை ஜட்ஸ்கி என்று அழைப்பர் . + +க்ஹ்யார் டபிள்யு லபான் (வெள்ளரி மற்றும் தயிர் கலந்த குளிர்கனிக் கலவை) என்ற உணவு லெபனான் இல் மிகவும் பிரபலம். + +ரகம்ஜோக்ஹுர்ட், ஒரு வெண்ணைத்தயிர் அதில் பால் கொழுப்புச்சத்து மிகையாக இருக்கும், ஆங்கிலேய நாடுகளிலுள்ளதை விட (10%) அதிகம், (ரகம் என்பது ஜெர்மனில் க்ரீம்), இது ஜெர்மனி மற்றும் இதர நாடுகளில் கிடைக்கும். + +கிரீம் டாப் யோகுர்ட் சீராக்கப்படாத பாலில் இருந்து தயாரித்த தயிர் ஆகும். கிரீம் அல்லது பாலாடை கொண்ட ஒரு அடுக்கு மேலே படருகிறது, அப்படி ஒரு வளம் மிகுந்த ஓர் யோகுர்ட் க்ரீம் உருவாகிறது, அதன் ருசி மற்றும் இழை நய அமைப்பு புளிக்க வைத்த க்ரீமைப்போல் இருக்காது. கிரீம் டாப் யோகர்ட் வணிகமுறையில் முதல் முதலாக அமெரிக்காவில் நியூயார்க்கைச் சார்ந்த நியூபீல்டின் பிரவுன் கௌ (Brown Cow) நிறுவனம் பிரபலப்படுத்தினர், குறைந்த மற்றும் கொழுப்பில்லாத போக்கினை மடக்கும் முறையில் அவர்கள் இதை மேற்கொண்டனர். + +காஸ்பியன் கடல் தயிர் ஜப்பான் நாட்டில் 1986 ஆண்டில் அறிமுகமானது. காகாசுஸ் மாநிலத்திற்கு சென்று ஜியோர்ஜியாவிற்கு திரும்பி வந்த சில ஆய்வாளர்கள் அதை அறிமுகப்படுத்தினார்கள். "மட்சொனி (Matsoni)" என்று பெயர் கொண்ட இந்த வகை, "லாக்டோகாக்கஸ் லாக்டிஸ் (Lactococcus lactis)" சுப்ச்ப். (subsp.) "க்றேமொரிஸ் (cremoris)" மற்றும் "அசெடோபக்ட்டர் ஒரிண்டலிஸ் (Acetobacter orientalis)" வகை சார்ந்த நுண்ணுயிரிகளால் துவக்கப்படுகிறது, மேலும் அது ஒரு தனிப்பட்ட பாகுத்தன்மையுள்ள தேன் போன்ற இழை நய அமைப்பு கொண்டதாகும். இதன் சுவை மற்ற யோகுர்ட் வகைகளைவிட மென்மையானதாகும். சிறப்பான காஸ்பியன் கடல் யோகர்ட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம், ஏனென்றால் அதற்கு தனிப்பட்ட கருவிகளோ அல்லது பண்பாட்டு வளர்ப்போ தேவையில்லை. இதனை அறைவெப்பநிலையிலேயே (20–30 °C) 10 முதல் 15 மணி நேரத்தில் தயாரிக்கலாம். ஜப்பானில், குளிர் உலர்விப்பு செய்த தொடக்க பண்பாட்டு வளர்ப்புகள் கடைகளில் விற்கப்படுகின்றன மற்றும் வலைத்தளத்தில் இருந்தாலும் பல மக்கள் பண்பாட்டுவளர்ப்பினை நண்பர்களிடமிருந்து பெறுகின்றனர். + +ஜமீத் (Jameed) என்ற வகை தயிர் உப்பிலிட்டு மேலும் அதைப் பாதுகாப்பதற்காக உலர்த்தப்படுகிறது. இவ்வகை ஜோர்டானில் மிகவும் பிரபலமானது. + +சபடி (Zabady) என்ற வெண்தயிர் வகை எகிப்தில் பிரபலமானது. அது ரம்ஜான் பண்டிகையில் தாகத்தைக் குறைக்கவல்லதாக இருப்பதால், பட்டினி கிடப்பதற்கு மிகவும் உதவும் வகையாக கருதப்படுகிறது. + +ரைத்தா என்பதும் தயிரை ஆதாரமாக கொண்ட தெற்கு ஆசிய/இந்திய சுவையூட்டுப் பொருள் ஆகும். அது ஒரு துணைக் கறியாகப் பயன்படுகிறது. இந்த யோகர்ட் கொத்து மல்லி (கொரியண்டேர்), ஜீரகம், புதினா, சிவப்பு மிளகாய், இதர மூலிகைகள் மற்றும் கறிமசால் பொருள்கள் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. வெள்ளிரிக்காய் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகள் அத்துடன் சேர்க்கப்படுகின்றன. இந்த கலவை பிறகு குளிரவைத்து வழங்கப்படுகிறது. ரைதாவிற்கு மேலண்ணத்தைக் குளிரவைக்கும் தன்மையுள்ளதால், காரமான இந்திய உணவுகளைச் சாப்பிடுவதற்கு அது ஒரு நல்ல முறிவைத்தந்து காக்கிறது. + +"தஹி" அல்லது "பெருகு" இந்திய துணைக்கண்டத்தைச் சார்ந்த தயிர் வகையாகும், அதன் சிறப்பான சுவை மற்றும் ஒத்திசைவிற்கு பெயர் போனதாகும். "தஹி " என்ற சொல் சமஸ்க்ரித சொல்லான "ததியில்" இருந்து வந்ததாகும். ஐந்து அமுதங்களில் ஒன்றானது அல்லது பஞ்சாமிருதம், இந்து சடங்குகளில் அடிக்கடி பயன்படுவது. அது இரு விதமான சுவைகள் கொண்டது, அவற்றில் இரண்டு மிகவும் பெயர் பெற்றவை: புளிப்பான தயிர் ("டாக் டௌய் (tauk doi)" ) மற்றும் இனிப்பான தயிர் ("மீஸ்தி" அல்லது "போடி டௌய் (meesti or podi doi)" ). இந்தியாவில், அது மஞ்சள் மற்றும் தேனுடன் கலந்து ஒப்பனைப்பொருளாக பயன்படுகிறது. புளித்த தயிர் (खट्टी दही) தலை முடியை சீரமைப்பதற்கும் இந்தியாவில் பெண்களால் பல இடங்களில் பயன்படுகிறது. "தஹி" பல்வேறு மொழிகளில் இவ்வாறு அழைக்கப்படுகிறது "தயிரு" ,(Malayalam), "டௌய்" (அசாமீஸ், பெங்காலி), "தோஹி " (ஒரியா ), "பெருகு" (தெலுங்கு), "மோசரு" (கன்னட), "தயிர்" (தமிழ் ), அல்லது "கேசன எ பீநேர்" (பஷ்டோ). + +"ஸ்ரீகண்ட்", இந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு வகை, வடிகட்டிய தயிர், குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் சர்க்கரை போன்றவை கொண்டது ��ேலும் சில நேரங்களில் மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம் போன்ற பழங்களும் சேர்ப்பதுண்டு. + +வடிகட்டிய தயிர் பண்டங்கள் ஒரு காகிதம் அல்லது பாரம்பரியமான மென்துணியால் செய்த துணியை வடிகட்ட பயன்படுத்தி, அதில் உள்ள மோர் நீக்கப்படுகிறது, அதனால் மேலும் அடர்த்தியாகவும், மற்றும் தனிச்சிறப்பு பெற்ற, மென்மையான புளிப்புச்சுவை கொண்டதாகவும் காணப்படுகிறது. + +லப்நெஹ் (Labneh) என்பதும் ஒரு வடிகட்டிய தயிர் வகையை சேர்ந்தது, அது அரபு நாடுகளில் பிரபலமான இடையீட்டு ரொட்டிகளை தயாரிக்க பயன்படுகிறது. ஆலிவ் எண்ணை, வெள்ளிரிக்காய் துண்டுகள், ஆலிவ் பழங்கள், மற்றும் பல பச்சை மூலிகைகள் சேர்க்கலாம். அதை மேலும் கட்டியாக்கி, உருண்டைகளாக உருட்டலாம் மற்றும் ஆலிவ் எண்ணையில் பாதுகாத்து, சில வாரங்களுக்கு புளிக்க வைக்கலாம். சில நேரங்களில் அது வெங்காயம், இறைச்சி, மற்றும் கடலைகள் கொண்டு ஒரு திணிப்பாக பல வகைகளான சிற்றுண்டிகளில் அடைக்கவோ அல்லது கெப்பெஹ் (kebbeh) (كبة) உருண்டைகளில் திணிக்கவோ செய்யலாம். + +ஷன்க்லீஷ் (அல்லது சந்க்ளிச் அல்லது شنكليش) ஒரு வகையான பாலாடையாகும், லெபனான் மற்றும் அதன் அருக்காமையில் உள்ள இடங்களில் உலர்ந்து உலர்த்திய லப்நெஹ் வகைப்படும். லப்நெஹ் உப்பிலிட்டு, உலர்த்திய பின், உருண்டைகளாக செய்யப்படும். அது பல வகைகளில் கிடைக்கும். புத்தம் புதிய நிலை கொண்டதில் இருந்து ஆலிவ் எண்ணை மற்றும் கஸ்கச்சில் (खुसखुस) ஊறவைத்தவை மற்றும் கறிமசால் பொருள்கள் கொண்டு போர்த்திய "முதுமையான" உருண்டைகள் வரை. + +சில வகை வடிகட்டிய தயிரில் செய்த பொருட்களை முதலில் திறந்த வெளியில் பெரும் பாத்திரங்களில் கொதிக்க வைத்து, அதில் இருக்கும் திரவப்பொருளை கூடுமான வரை குறைப்பதும் உண்டு. மிகவும் பிரபலமடைந்த கிழக்கு இந்திய இனிப்புப் பொருளான, பரம்பரையாக வரும் தஹியை போன்ற இன்னொரு வேறுபாடு, மிஷ்டி தஹி எனப்படுவது, மேலும் கட்டியாகவும், கச்டேர்ட்-போன்ற திண்மை கொண்டதும், மேலும் மேற்கத்திய தயிரை விட இனிப்பாகவும் இருக்கும். + +வடிகட்டிய தயிர் கிரேக்க நாடுகளிலும் மக்கள் ரசித்து மகிழ்வதாகும், மேலும் அது த்சட்ஜிகி (tzadziki) என்று வழங்கும் ஒரு இனிப்புப்பொருளின் முக்கிய அங்கமாகும், அது க்ய்ரோஸ் (gyros) மற்றும் சௌவ்லகி பிட ( souvlaki pita) போன்ற இடையீட்டு ரொட்டிகளுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது. + +அய்ரன் அல்லது தல்லா ஒரு தயிரின் அடிப்படையிலான, உப்பு கலந்த பிரபலமான பானமாக அல்பானியா, பல்கேரியா, துருக்கி, அசர்பைஜான், ஈரானிய அசர்பைஜான், மாசிடோனியக் குடியரசு , கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளில் அறியப்படுகிறது. அது தயிருடன் தண்ணீர் கலந்ததாகும் மேலும் (சில நேரங்களில்) உப்பும் சேர்க்கப்படும். இதே பானம் "டௌ(ஹ)" (dough) என இரானில்; "டான்" (tan) என அர்மேனியாவில்; "லபன் அய்ரன்" (laban ayran) என சிரியாவில் மற்றும் லெபனோனில்; "ஷேணின" (shenina) என இராக்கில் மற்றும் ஜோர்டானில்; "லபன் அர்பில்" (laban arbil) என இராக்கில்; "மஜ்ஜிகா"(தெலுகுவில்), "மஜ்ஜிகே" (கன்னடாவில்), மற்றும் "மோரு" (தமிழ்) என தெற்கு இந்தியாவில்; "லஸ்ஸி" என பஞ்சாபில் மற்றும் ஆங்கில சொல்லான "பட்டர்மில்க்" இந்தியா முழுதும் அறியப்படுகிறது. இதைப் போன்ற ஒரு பானம், டூக் (doogh) மத்திய கிழக்கு மாகாணங்களான லேபாநோன், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மிகவும் பெயர்பெற்றது; அது அய்ரனில் இருந்து வேறுபட்டது, அதில் கூடுதலாக மூலிகைகள் கலந்திருக்கும் பொதுவாக புதினாக்கீரை மேலும் காபநேற்றம் செய்த சாதாரணமாக செல்த்சர் வாட்டர் (seltzer water) பயன் படுத்தப்படிருக்கும். + +லஸ்ஸி ஒரு தயிர் கொண்ட பானமாகும், அசலாக இந்திய துணைகண்டத்தைச் சார்ந்தது மேலும் அது உப்பு கலந்ததாகவோ அல்லது இனிப்பாகவோ இருக்கும். லஸ்ஸியை ஒரு உணவாக பஞ்சாபில்; துணைகண்டத்தின் சில பாகங்களில், அதனுடைய இனிப்பான வகை வணிகமயமாக பன்னீர், மாம்பழம் அல்லது வேறு பழ சாறுகளாலும் சுவை கூட்டி ஒரு புதிய பானமாகவே மாற்றி அமைப்பார்கள். உப்பு கலந்த லஸ்ஸி பொதுவாக அரைத்த, வறுத்த சீரகம் மற்றும் சிகப்பு மிளகாயுடன் சேர்க்கப்படும்; இந்த உப்பு கலந்த மாறுபட்ட பானத்தில் மோரையும் பயன் படுத்தலாம் மற்றும் பெயர்மாற்றத்துடன் கோல் என (வங்கதேசத்திலும்), மட்டா (வடக்கு இந்தியா), டாக் (மகாராஷ்டிரா ) அல்லது சாஸ் (குஜராத்தில்) அழைக்கப்படுகிறது. லஸ்ஸி பாகிஸ்தானிலும் பரவலாக குடிக்கப்படுகிறது. + +கெஃபிர் (Kefir) என்பது காக்கேசியாவை (Caucasus) சார்ந்த ஒரு புளிக்க வைத்த பால் ஆகும். இதனுடன் உறவுகொண்ட மத்திய ஆசிய துருக்கிய-மொங்கோலியன் பானம் பெண் குதிரையின் பால், அது குமிஸ் (kumis) எனப்படுவது, அல்லது மொங்கோலியாவில் ஐராக் (airag) என அறியப்படுவது. சில அமெரிக்க பால் பண்ணைகள் "கெபிர்" என்ற பானத்தை பல வருடங்களாக வழங்கி வருகின்றன, அவை பழங்களின் சுவை கொண்டது ஆனால் கார்பனேற்றம் (carbonation) அல்லது சாராயம் (மது) (alcohol) கலக்கப்படாதது. + +இனிப்பு சுவை கொண்ட தயிர் பானங்களே அமெரிக்கா மற்றும் ஐக்கிய பேரரசுகளில் பொதுவாக மக்கள் விரும்புகிறார்கள், அவற்றில் பழங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை தனிப்பட்ட முறையில் "குடிக்கும் / குடிக்கக்கூடிய யோகர்ட்", யாப் (yop) போன்ற பானங்கள் ஆகும். "யோகர்ட் ஸ்மூதீஸ் (smoothies)" போன்ற பானங்களும் கிடைக்கும், அவற்றில் பழங்கள் அதிகமான விகிதத்தில் கலந்திருக்கும் மேலும் அவை ஸ்மூதீஸ் போன்று வழவழப்புடன் கூடியதாக இருக்கும். + +ஈகுவடோரில், யோகுர்ட் ஸ்மூதீஸ் அந்நாட்டு பழங்களுடன் சுவை கூட்டி மேலும் அவற்றுடன் பான் தே யுகா (pan de yuca) என்ற உணவுடன் வழங்கப்படும், அவை துரித உணவு வகையைச் சாரும். + + + + + +கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் + +கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. + + நீளமும் அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக by அளவுகொண்டுள்ளது. லிங்கத்தின் உயரம் ; அடிப்பகுதியின் சுற்றளவு . அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் ; இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்���ோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன. மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும். + +கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி () அமைக்கப்பட்டுள்ளது. கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன. + +அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. கொடி மரம் அமைக்கப்பட்ட பின்னர் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது. + +முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது. + +தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச கோழனின் மகனான இராசேந்திர சோழனால் (1014-44 CE) கிபி 1035 இல் இக்கோயில் கட்டப்பட்டது. முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த ஆறாம் ஆண்டில் (கிபி 1020) கட்டப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான கிபி 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. + +கல்வெட்டுகளிலிருந்தும் 1980களின் அகழ்வாய்வுகளின்படியும் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் இராசேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது. + +முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்குவந்த முதலாம் குலோத்துங்க சோழன் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டினான். 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாண்டியர்கள் சோழர்களை முறியடித்து இந்நகரை அழித்தனர். கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தவிர இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்டப் பிறயாவும் அழிக்கப்பட்டன. + +மூவர் உலா, தக்கயாகப் பரணி போன்ற நூல்களின் பல சமகால இலக்கியங்களில் கங்கைகொண்ட சோழபுர நகரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவரான கம்பர் இயற்றிய கம்ப இராமாயணத்தில் அவரது அயோத்தி நகர வருணனைகளுக்கு கங்கைகொண்ட சோழபுர நகரமைப்புதான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சேக்கிழார் இயற்றிய "பெரியபுராணம்" நூலிலும் இத்தகைய ஒற்றுமையைக் காணமுடிகிறது. சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைப் போன்று இக்கோயிலும் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ளது. இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் இக்கோயிலில் ஆதரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டன. + +தஞ்சைப் பெருவ��டையார் கோயிலும் இக்கோயிலும் திராவிடக் கட்டிடக்கலையின் உச்சநிலையின் வெளிப்பாடாக விளங்குவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால் ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களுள் கங்கைகொண்ட சோழபுர பிரகதீசுவரர் கோயிலும் ஒன்றாகும். அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இக்கோயில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் பட்டியலில் 2004 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. + +தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் ஆதரவுடன், தொல்லியல்துறை 2009 ஆம் ஆண்டில் இங்கு அருங்காட்சியகம், சிற்றுண்டி விடுதிகள், கடைகள் மற்றும் கழிவறைகளை அமைத்துள்ளது. கலாச்சாரத்திலும் இறை வழிபாட்டிலும் இம்மூன்று கோயில்களும் இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குவதால் இவை "சோழர்களின் அழியாப் பெருங்கோயில்கள் என்ற வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன. முதாலம் இராசேந்திர சோழனின் முடிசூட்டுவிழாவின் ஆயிரமாவது நினைவாண்டுத் திருவிழா ஜூலை, 2014 இல் இருநாட்கள் கொண்டாடப்பட்டது. + +தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டிலுள்ள பிற சிவன்கோயில்களில் நடைபெறுவது போன்று இக்கோயிலிலும் நாள்தோறும் நான்குமுறை சைவமுறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன ("காலசந்தி" : காலை 8:30, "உச்சிகாலம்": மதியம் 12:30, "சாயரட்சை": மாலை 6:00, "அர்த்தசாமம்": இரவு 7:30 - 8:00). ஒவ்வொரு வழிபாட்டிலும் அலங்லாரம், நெய்வேதனம், தீப ஆராதனை என மூன்று நிலைகள் உள்ளன. வார, பதினைந்து நாட்கள், மாத இடைவெளிகளிலும் சில குறிப்பிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் கோயில் நாள்தோறும் காலை 6 12:30; மாலை 4-9:00 வரை திறந்திருக்கும். மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி, மார்கழியில் திருவாதிரை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது. ஐப்பசித் திருவிழாவில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. + +1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம���பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. 10 -12 ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமையமைவுகளைக் கொண்டுள்ளன. + + + + + +தம்புள்ளை + +தம்புள்ளை ("'Dambulla", ) மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். இது கொழும்பில் இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முதன்மையான சந்தியில் அமைந்துள்ள இதன் அமைவிடம் காரணமாக இலங்கையின் மரக்கறி விநியோகத்தில் தம்புள்ள முக்கிய இடம் வகிக்கின்றது. + +இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக தம்புள்ளை பொற்கோயில் அமைந்துள்ளது. இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் +தெற்காசியாவில் பேரு வீச்சில் காணப்படுவதான இளஞ்சிவப்பு படிகக் கற்களால் ஆன மலைகள், நா மரக் காடுகள் என்பன இங்கு முக்கியத்துவமானவை. + +கி.மு. 7 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதி மக்கள் குடியிருப்புகள் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகள் என்பன கி. மு.முதலாம் நூற்றாண்டுகுரியன. ஆனால் இந்த ஓவியங்களும் சிலைகளும் 11ஆம், 12 ஆம்,18ஆம் நூற்றாண்டுகளில் புனரமைப்பு செய்யப்பட்டன. அனுராதபுர இராசதானியில் இருந்து தனது இங்கு உள்ள குகைகளில் 14 வது வயதில் நாடு கடத்தப்பட்ட பலகம்பா இங்கு உள்ள குகையில் மறைந்து வாழ்ந்தார். தம்புள்ள குகைக் கோயிலில் தவம் செய்து கொண்டிருந்த புத்த பிக்கு இவருக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றினார்.பலகம்பா தனது இராசதானிக்கு மீண்டும் திரும்பி ஆட்சிப் பீடம் ஏறியபோது பிக்குவுக்கு நன்றிசெலுத்தும் வகையில் அங்கு மலைக் கோயில் ஒன்றைக் கட்டினான். + +தம்புள்ளைக்கு அருகில் உள்ள இப்பான்கடுவையில் 27௦௦ ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனித என்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மனித நாகரீகம் இங்கு புத்த சமயத்தின் வருகைக்கு முன் நிலவியமையை காட்டுகின்றது. + +இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டதாக கூறப்படுகின்றது. + +இலங்கையில் நன்கு பராமரிக்கப்படும் குகைக் கோயில்களில் மிகப் பெரியது இதுவாகும்.குகையின் உச்சி சுற்றியுள்ள சமவெளியில் இருந்து 160m உயரமானது. மிகக் கவர்ச்சியுடைய விடயம் ஓவியங் களும் சிலைக்கும் கொண்ட 5 குகைகள் காணப்படுதல். கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறுகளை சித்தரிக்கும் படங்களாக இவை உள்ளன.இங்கு மொத்தமாக 153 புத்த சிலைகளும் இலங்கை மன்னர்களின் 3 சிலைகளும் ஏனைய தெய்வங்களுக்குரிய 4 சிலைகளும் காணப்படுகின்றன. பின் குறிப்பிட்ட 4 சிலைகளில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு, விநாயகர் சிலைகளாகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,100 m² ஆகும். சுவர்களின் புத்தரின் போதனைகளைக் காட்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன. + + + + + + + + +ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானம் இப்பிரதேசத்திற்கு பெருமைதரும் ஓர் அமிசமாகும். இது 3 0000 இருக்கைகளைக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன் பரப்பளவு 240000 m² ஆகும்.பன்னாட்டு மட்டத்தினாலான விளையாட்டுப் போட்டிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தம்புள்ளை நகரில் நடைபெறுவது உல்லாசப் பயணிகளைக் கவரும் உத்தியாகும். + +தம்புள்ளை உல்லாசப் பயணத்துறையில் முக்கியம் வாய்ந்தது. இதனால் இது சார்ந்த பொருளாதார செயற்பாடுகள் காணப்படுகின்றன. மரக்கறி விற்பனை பரிமாற்ற மையமும் இதில் காணப்படுகின்றன. + + + + + +ஆயுத உற்பத்தித் துறை + +ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது. இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது. + + + + + +லசித் மாலிங்க + +செபரமாது லாசித் மாலிங்க (Separamadu Lasith Malinga,பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணிய��ல் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். + +பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 , 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மார்ச் 7, 2016 வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார். + +இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் "சூப்பட் எட்டு" போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு இலக்குகளை வீழ்த்தினார். + +சூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், அடம் கில்கிறிஸ்ற், டேலியன் மார்ட்டின், ஷேன் வோர்ன் மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார். இவர் ஆத்திரேலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார். + +2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. + +இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொலொக் இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார். + +டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். + + + + + +திலகரத்ன டில்சான் + +திலகரத்ன டில்சான் ("Tillakaratne Dilshan", பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும். + +பின்வரும் அட்டவணை திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும் + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194 + இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289 + + + + +சராவதி ஆறு + +ஷராவதி ஆறு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது தீர்த்தஹள்ளி வட்டத்தில் (தாலூக்காவில்) அம்புதீர்த்தா என்னும் இடத்தில் உற்பத்தி ஆகிறது. பின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது. ஜோக் அருவியும் இப்பகுதியில் தான் உருவாகிறது. பின் இந்த ஆறு ஹொனேவர் என்னும் இடத்தில் அரபிக் கடலில் கலக்கிறது. + +லிங்கன்மக்கி அணை இவ்வாற்றின் மீது பிரித்தானியர்களால் கட்டப் பட்டது. இரு நீர்மின் நிலையங்களும் இதன் மீது கட்டப் பட்டுள்ளன. + +ஷராவதி ஆற்றுப் படுகை பல்லுயிர் வளம் நிறைந்தது. + + + + +ஏப்ரல் முட்டாள்கள் நாள் + +ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. + +இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது. + +16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. + +எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன. + +புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. + +எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. + +1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது. + + + + + +மான் + +மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ ("Cervidae") என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும். + +மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு "கலை" என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் "பிணை" என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), "மான்மறி" என்று பெயர். + +இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது. + + + + +புறா + +புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 310 வகை இனங்கள் உள்ளன. + +புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. வெப்ப மண்டலக் காடுகளில் இவை அதிகம் வசிக்கின்றன. மேலும் இவை வெப்பப்புல்வெளிகள்(சவானாக்கள்), பிற புல்வெளிகள், சில பாலைவனங்கள், மிதவெப்ப மற்றும் சதுப்புநிலக் காடுகள் , வட்டப்பவளத்திட்டுகளில் உள்ள சரளை மற்றும் மலட்டு நிலங்கள் போன்றவற்றிலும் வசிக்கின்றன. புறாக்கள் பல்வேறு வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கி��ோ எடையுடையவை. மிகச் சிறியவை ஜெனஸ் கொலம்பினா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை. + +புறாக்கள் பறக்கும் திறனுடைய பறவைகள். இவற்றின் உடல் முழுவதும் பறத்தலுக்கென மாறுபட்டுள்ளது. இவை பறத்தலுக்கென இறகுகள் , அலகு , கால் அமைப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளன. புறாக்கள் கதிர் வடிவம் உடையவை. இவற்றின் அளவு 20-25 செமீ ஆகும். உடலானது தலை, கழுத்து, நடுவுடல், வால் எனும் பகுதிகளையுடையது. உருண்டை வடிவத் தலைப்பகுதி முன்புறத்தில் கூர்மையான அலகுப் பகுதியைக் கொண்டுள்ளது. அலகுகளின் மேல்புறத்தில் தடித்த ராம்போதீக்கா எனும் உறை உள்ளது. மேல் அலகின் அடிப்புறத்தில் இணை நாசித்துவாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் அலகுப்பூ எனும் பருத்த தோல் பகுதி உள்ளது. ஓர் இணைக் கண்கள் உண்டு. கண்கள் சற்றுப் பெரியவை. கண்களின் பாதுகாப்பிற்கு மேல்-கீழ் இமைகளும் சிமிட்டுமென்றகடு அல்லது நிமிட்டுச்சவ்வு என்றழைக்கப்படும் மென்படலமும் உள்ளன. கண்களின் பின்புறம் இணை செவித்துவாரங்கள் உண்டு. இவை உள்ளாக செவிப்பறையில் திறந்துள்ளன. நீண்ட கழுத்து உண்டு. நடுவுடல் பகுதியில் ஓரிணை இறக்கைகளும் கால்களும் உள்ளன. உடலின் பின் முனையில் பொதுக் கழிவாய்த் துளையும் அதனைத் தொடர்ந்து வால் பகுதியும் உள்ளன. வால் பகுதியில் கோதுசுரப்பி எனும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் எண்ணெய்ப் பொருள் இறகுகளை அலகினால் நீவிவிட்டுப் பாதுகாக்க உதவும். + +புறாக்களின் உடலில் மூன்று வகை இறகுகள் உண்டு. அவை +இறக்கையில் 23 இறக்கை இறகுகள் உள்ளன. இதில் மேல்கையில் இணைந்துள்ள 11இறகுகள் முதனிலை இறகுகள் எனப்படும். நடுக்கையில் இணைந்துள்ள 12 இறகுகள் இரண்டாம் நிலை இறகுகள் எனப்படும். வால் பகுதியில் 12 இறகுகள் உண்டு. இவை விசிறி வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. +உருவ இறகுகள் சற்றுச் சிறியவை, மென்மையானவை. இவை உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கும். +இழை இறகுகள் மிகவும் மென்மையானவை ஆகும். + +இது தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது.பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. +பழங்கள் போன்றவை அல்லாது பிறவற்றை உண்ணும் புறாக்களும் உ���்டு. நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன. பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன. + +புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்துக் கூடு கட்டுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் புறாக்கள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுகின்றன. குஞ்சுகள் 7 முதல் 27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வருகின்றன. பாறைப் புறாக்கள் சற்றே வித்தியாசமாக இறந்த பறவையுடன் உடலுறவு கொள்ள முயல்கின்றன. + +புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன. அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்கின்றனர். + +பல புறாக்கள் எண்ணிக்கையில் அதிகமாகி இருப்பினும் புறாக்களின் 10 வகைகள் அழிந்து, தற்போது இல்லாமல் போய் விட்டன. அவற்றுள் டூடூ(Dodo) போன்ற புறா வகைகள் அடக்கம். தற்காலத்தில் 59 புறா வகைகள் அழிவின் விழும்பில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகளிலும் தீவுகளிலும் வாழ்கின்றன.இவை கொன்றுண்ணிகள், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன. தற்போது இவ்வினத்தைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை அரசுகள் அமல் படுத்தியுள்ளன. + +மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுப்பெரியவை. + +எபிரேய விவிலியத்தில் விலையுயர்ந்தவற்றைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள் புறாக்களைப் பலியிட்டுப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இயேசுவின் உயிர்த்தெழுப்புக்குப் பின்னர் அவரது பெற்றோர் புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.நபிகள் நாயகத்திற்கு உதவிய காரணத்தால், இசுலாமிய மதத்திலும் புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன. இந்து மதத்திலும் புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது. + +இசுரேலியக் கடவுள் அசெரா, உரோமானியக் கடவுள் வீனஸ், போர்சுனேட்டா, போன்பேசியக் கடவுள் தனித் ஆகியோரினை பிரதிநிதித்துவம் செய்யும் குறியீடாகப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. கிறித்தவத்தில் புறாக்களின் அலகில் தாங்கப்பட்ட ஒலிவ் இலைக் கொத்துக்கள் சமாதானத்தின் குறியீடாகக் கருத்தப்படுகின்றன. + +முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் புறா பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்சு, செருமனி, அமெரிக்கா ஆகிய நாடுகளியே புறாக்கள் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரில் வழங்கப்பட்ட பங்களிப்புக்களுக்காக 32 புறாக்களுக்கு டிக்கின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. + +புறாக்களில் ஒரு சில உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனைத்துப் புறா வகைகளும் உண்ணக்கூடியவையே ஆகும். புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும். பண்டைய மத்திய கிழக்கு, பண்டைய உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய காலப்பகுதிகளில் இருந்தே வேட்டையாடப்பட்ட அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர். + + + + + +பிரித்தானிய கணினிச் சங்கம் + +பிரித்தானிய கணினிச் சங்கம் 1957 இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கணினிச் சங்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கணினி அமைப்புக்களில் முன்ணனி வகிக்கும் அமைப்புகளில் ஒன்றாகும். + +இவ்வமைப்பானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 55, 000 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாக அலுவலகம் ஆனது இலண்டனிற்கு மேற்காக உள்ளது. + +இந்த அமைப்பில் அங்கத்துவ நிலை மற்றும் Fellow (FBCS) ஆகும். இவங்கத்துவ நிலையானது இலங்கையில் ஓர் தகமையாகக் கருதப்படுகின்றபோதில் இந்தியா போன்ற நாடுகளில் இச்சான்றிதழ்கள் பெரிதாகக் கருதப்படுவதில்லை. + + + + +பந்து வீச்சாளர் + +பந்து வீச்சாளர் துடுப்பாட்ட போட்டிகளின் போது பந்து வீசும் வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் பட்டிகையின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் மட்டையாளரை நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு பந்துப் பரிமாற்றத்தை தொடர்ந்து வீச முடியும். அதன் பிறகு ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு பிறகு மீண்டும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய பந்துப் பரிமாற்றங்கள் போட்டி வகையின் படி வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் சகலதுறை ஆட்டக்காரர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் பந்துவீச்சு பாணியைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம். + +வேகப்பந்து வீச்சாளர் பந்தை 160 கிமீ/ம வேகம் வரை வீசுபவர்களாவர். இவர்களே பொதுவாகப் போட்டியில் முதலாவதாகப் பந்து வீசுபவர்களாவர். இவர்கள் பந்தை வீசு முன்னர் நீண்ட தூரம் ஓடி உந்தத்தைப் பெற்று அவ்வுந்தத்தைப் பயன்படுத்திப் பந்தை வேகமாக வீசுவர். + +மிதவேகப் பந்துவீச்சாளர், இவர்கள் பந்தை மித வேகத்தில் வீசுபவர்களாவர். + +சுழற்பந்து வீச்சாளர், இவர்கள் பந்தை மிக மெதுவாக வீசுபவர்களாவர். இவர்கள் பட்டிகையில் படும் பந்தைச் சுழற்றுவதன் மூலம் பந்து வீசுவர். பொதுவாக சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டு கொடுப்பர் ஆனால் அவர்கள் மட்டையாளர்களை தனது தந்திர பந்து வீச்சின் மூலம் வீழ்த்துவர். இந்த தந்திரங்களுக்கு பிளிப்பர், டாப்ஸ்பின்னர் அல்லது தூஸ்ரா, கூக்ளி, போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. + + + + +உலக உணவுத்திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம் + +உலக உணவுத் திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம் ஆனது கீழ்வரும் குறிக்கொள்களைக் கொண்டது. + + +2006 ஆம் ஆண்டில் படி உலக உணவுத்திட்டம் இலங்கையில் 12 மாவட்டங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன்வழி 136, 400 பாலூட்டும் மற்றும் கர்பிணித் தாய்மார்களும் 5 வயதிற்குட்பட்ட 204, 600 சிறார்களும் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். + + + + +சிவிங்கிப்புலி + +சி��ிங்கிப்புலி ("Cheetah") பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். + +சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேங்கையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே. + +வேங்கை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன. + +வேங்கை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது. + + பெண் வேங்கைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் வேங்கைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன. + +சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. + +இந்த விலங்கை பழங்காலத்தில் இருந்து மனிதர்கள் பழக்கப்படுத்தி வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தில் குறுநில மன்னர்கள் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினர். + + + + +மண்ணெண்ணெய் + +மண்ணெய் அல்லது மண்ணெண்ணெய் ("Kerosene") எனபது நிறமற்ற ஹைடிரோகார்பன் எரிபொருளாகும். இது பெற்றோலியத்திலிருந்து (மசகு எண்ணை) 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெட் என்ஜின் விமான எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் விளக்குகள், அடுப்புகள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது. + +மண்ணெண்ணெய் பொதுவாக இங்கிலாந்து, தெற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் பாராஃபின் என்று அழைக்கப்படுகிறது.மிகவும் பிசுபிசுப்புத் தன்மையைக் கொண்ட இது மலமிளக்கும் மருந்தாகப் பயண்படுகிறது.பெட்ரோலியத்திலிருந்து மெழுகுத் தன்மையுள்ள திடப்பொருள் பிரித்தெடுக்கப் படுகிறது. இதனை பாராஃபின் மெழுகு என்பர்.மண்ணெண்ணெய் மண்ணெண்ணெய் பரவலாக ஜெட் விமானத்தின் என்ஜின்கள் (ஜெட் எரிபொருள்) மற்றும் சில ராக்கெட் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும், ஆனால் பொதுவாக சமையல் மற்றும் லைட்டிங் எரிபொருள் மற்றும் எரி பொம்மைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணெண்ணெய் விலை தள்ளுபடி அமைந்துள்ள ஆசியாவின் பகுதிகளில், இது வெளிப்பலகை கொண்ட மீன்பிடி படகுகளின் மொட்டார்களுக்கு எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. +ஆசியா ஆப்பிரிக்கா போன்ற கிராமப்புற பகுதிகளில் மின் விநியோகம் கிடைக்காத அல்லது பயன்படுத்த முடியாத இடங்களில் மண்ணெண்ணெய் விளக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகளில் மண்ணெண்ணெய் விளக்குகள் எரிய ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்கள் அல்லது வருடத்திற்கு கிட்டத்தட்ட 77 பில்லியன் லிட்டர் எண்ணெயை எடுத்துக்கொள்கின்றன. + + + + +குத்துவிளக்கு (திரைப்படம்) + +குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. + +பிரபல கட்டிடக்கலை நிபுணரான வி. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ். ரத்தினம், எஸ். ராமதாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள். + +ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் கதை. ஏழை விவசாயியான வேலுப்பிள்ளைக்கும் ("பேரம்பலம்"), மனைவி லட்சுமிக்கும் ("சாந்திலேகா") மூன்று பிள்ளைகள். தகப்பனுக்கு துணையாக குடும்பப்பொறுப்பை சுமக்கும் மூத்த மகன் சோமு ("ஜெயகாந்த்"), அவனது ஆசைத்தங்கைமார் மல்லிகா ("லீலா நாராயணன்"), ஜானகி ("பேபி பத்மா") ஆகியோர் அடங்கிய அக்குடும்பத்தின் வாழ்க்கை துன்பங்களுடன் நகர்கிறது. அடுத்த வீட்டில் பணக்காரர் குமாரசாமி ("திருநாவுக்கரசு"), பணத்தையே பிரதானமாகக் கருதும் அவரது மனைவி நாகம்மா ("இந்திராதேவி") - இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் செல்வராஜா ("ஆனந்தன்"), நாகரீகச் சின்னமான மகள் ஜெயா. மல்லிகாவுக்கும், செல்வராஜாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இவர்கள் விருப்பத்துக்கு தடை போடுகிறாள், செல்வராஜாவின் தாய் நாகம்மா. கஷ்டப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்ற சோமு தன் தங்கைக்கு சீதனம் தேடுவதற்காக தன் படிப்பையும் இடையில் கைவிட்டு, தன்னையொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டுறவுப்பண்ணை விவசாயம் செய்து பணம் கொண்டு வருகிறான். ஆனால் இதற்கிடையில் செல்வராஜாவிற்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க, சோமுவின் தங்கை மல்லிகா தற்கொலை செய்து கொள்கிறாள். + + + + + + + +செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா + +செயிண்ட். ஜோர்ஜ்ஸ் கிரெனடாவின் தலைநகரமாகும். இது கிரெனடா தீவின் தென்மேற்கில் கரிபியக் கடற்கரையில் அமைந்துள்ளது. 1999 ஆண்டு நகரின் மக்கள் தொகை 7,500 ஆக காணப்படது, நகரத்துக்கு சுற்றுப்புறமுள்ள பிரதேசத்தை���ும் இணைக்கும் பகுதியில் மொத்தம் 33,000 மக்கள் வசித்து வருகின்றார்கள். இது முன்னாள் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக காணப்பட்ட வின்வாட் தீவுகளின் தலைநகரமாகவும் விளங்கியது. நகரம் பழைய எரிமலையொன்றின் வாயின் எச்சங்களால் ஆன மலைத்தொடர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது. + + +செயிண்ட். ஜோர்ஜ்ஸ் 1650 இல பிரென்சியரால் அமைக்கபட்டது. + + + + + +சிவகுமார் + +சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். +மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார். + +திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர். + + + + +கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.. + + + + + +வேலை (இயற்பியல்) + +இயற்பியலில், ஒரு பொருளின் மீது செய்யப்படும் வேலை "(Work)" என்பது அப்பொருளின் மீது விசை செயல்பட்டு, அப்பொருள் விசையின் திசையிலே இடப்பெயர்ச்சி அடைவதால் கிடைப்பதாகும். எடுத்துகாட்டாக, தரையில் இருந்து உயர்த்தப்பட்ட ஒரு பந்து, தானாக விழும் போது, பந்து செய்த வேலை என்பது பந்தின் எடை மற்றும் தரையிலிருந்து அதன் உயரம் ஆகியவற்றின் பெருக்கலுக்குச் சமமானது. + +வேலை என்பது ஆற்றலை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவோ அல்லது ஒரு வகை ஆற்றலை வேறு வகையாக மாற்றவோ பயன்படுகிறது. +பிரான்சு இயற்பியலாளர் காசுபார்டு காசடவ் கைரோலிசு (Gaspard-Gustave Coriolis) 1826 ல் வேலை என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. + +ஒரு பொருளின் மீது விசை ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி அதே திசையில் நகர்ந்தால், விசையினால் "வேலை" செய்யப்பட்டது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் அளவெண் (Scalar) ஆகும். + +அனைத்துலக முறை அலகுகளின் படி வேலையின் அலகு ஜூல் (J) ஆகும். +அனைத்துலக முறை அலகுகளில், ஒரு பொருளின் மீது ஒரு நியூட்டன் அளவுள்ள விசை செயற்பட்டு, அப்பொருள் ஒரு மீட்டர் இடப்பெய���்ச்சி செய்தால், அதனால் செய்யப்பட்ட வேலை 1 சூல் ஆகும். + +பரிமாணப் பகுப்பாய்வின்படி, நியூட்டன்–மீட்டர் என்பதும் வேலையின் அலகும் ஒரே பாிமாண வாய்பாட்டைப் பெற்றிருக்கும். ஆனால், முறுக்கு விசையின் அலகு நியூட்டன் –மீட்டர் என்பதால், வேலையின் அலகு சூல் ஆகும். + +அனைத்துலக அலகு முறை சாராத, வேலையின் அலகுகள் எர்கு (erg), அடி-பவுண்டு (foot-pound), அடி-பவுண்டல் (foot-poundal), கிலோவாட் மணி, குதிரைத் திறன்- மணி ஆகியனவாகும். பரிமாணப் பகுப்பாய்வின்படி, வெப்பத்தின் பரிமாண வாய்ப்பாடும், வேலையின் பரிமாண வாய்ப்பாடும் +ஒன்றாக இருப்பதால் அதன் அலகுகள் தெர்ம் (therm), பிரித்தானிய வெப்ப அலகு, கலோரி ஆகியன ஆற்றலையும் அளக்க பயன்படுகின்றன. + +ஒரு பொருளின் மீது formula_1 என்ற நிலையான விசை செயல்பட்டு, விசையின் திசையில் அப்பொருள் formula_2 தொலைவுக்கு நேர்கோட்டில் இடப்பெயர்ந்தால், விசை செய்த வேலை, formula_3 ஆகும். எனவே வேலை என்பது பின்வரும் பெருக்குத்தொகையால்தரப்படும். + +எடுத்துகாட்டாக, ஒரு புள்ளியின் மீது 10 நியூட்டன்கள் அளவுள்ள (formula_1 = 10 N) விசை செயல்பட்டு, 2 மீட்டர் (formula_2 = 2 m) தொலைவுக்கு புள்ளி விசையின் திசையிலே செயல் பட்டால், அப்போது அந்த விசை formula_3 = (10 N)(2 m) = 20 N m = 20 J வேலையைச் செய்ததாகக் கருதப்படும். இது தோராயமாக, ஒரு 1 கிகி எடையுள்ள பொருளை, ஒருவர் தன் தலைக்கு மேலே ஈர்ப்பு விசைக்கு எதிராகத் உயர்த்தும் போது செய்யும் வேலைக்குச் சமமாகும். எடையை இருமடங்காக உயர்த்தினாலோ அல்லது அதே எடையை இருமடங்கு உயரத்துக்குத் உயர்த்தினாலோ, செய்த வேலையின் அளவு இருமடங்கு ஆகிவிடும். + +வேலை என்பது ஆற்றலோடு நெருங்கிய தொடர்புடையதாகும். வேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி , ஒரு திண்மப் பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின்அளவு, அந்தப் பொருளின்மேல் செயல்படும் தொகுவிசையால் (resultant force) செய்யப்பட்ட வேலையின் அளவுக்குச் சமமாகும். + +நியூட்டனின் இரண்டாம் விதிப்படி, திண்மப் பொருளின் மீது செய்யப்பட்ட வேலை, பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின் formula_8 மதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்குச் சமமாகும். எனவே, + +ஒரு அமைப்பின் இயக்கத்தை நிர்ணயிப்பது கட்டுண்ட விசைகள் (Constraint forces) ஆகும். கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் திசையில், எந்தப் பொருளும் திசைவேகத்தைப் பெறுவதில்லை. அதனால் கட்டுண்ட விசைகள், வேலை ஏதும் செய்யவில்லை எனக் கொள்���லாம். + +ஒரு அமைப்பு காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அதன் மீது செயல்படும் விசைகள் வேலை ஏதும் செய்யவில்லை. + +எடுத்துக்காட்டாக ஒரு பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை அப்பொருளை வட்டப்பாதையிலே சுழலச் செய்கிறது. விசையும் திசைவேகமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படுவதால், விசையினால் செய்யப்பட்ட வேலை சுழியாகும். + +நகரும் பொருளின் திறன் (வேலை/காலம்) கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கணத்தில், விசை செய்யும் வேலையின் வீதம் திறன் எனக் கணக்கிடப்படுகிறது. (இது சூல்/விநாடி அல்லது வாட் என்ற அலகால் அளக்கப்படுகிறது). இது ஒரு அளவெண் அளவை ஆகும்.. +ஒரு குறிப்பிட்ட கணத்தில், ஒரு புள்ளி X அச்சில் v என்ற திசைவேகத்துடன் நகருகிறது. எனில் "dt" என்ற காலத்தில் அது செய்த சிறிதளவு வேலை "δW" கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. + +இதில் என்பது "dt" என்ற காலத்தில் உண்டாகும் திறன். +சிறிய வேலைகளின் கூடுதல் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. + +இதில் "C" என்பது x("t") முதல் x("t") வரையுள்ள வீசு பாதையாகும். + +விசையானது ஒரு கோட்டின் வழியே செயல்பட்டால், "F" என்பது விசையின் மதிப்பு எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. +இதில் "s" கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம். F என்பது ஒரு மாறிலி எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. +இதில் "s" கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம். + +விசையானது ஒரு கோட்டின் வழியே செயல்படா விட்டால், வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் புள்ளிப் பெருக்கல் , பயன்படுத்தப்படுகிறது. +இதில் "θ" விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம், + +கோசைன் 90° என்பது சுழியாகும், விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம் 90° எனில் அதனால் செய்யப்பட்ட வேலையும் சுழியாகும். பொருள் வட்டப்பாதையில் செயல்படும் போது இந்நிலை ஏற்படுகிறது. + +வளைவான பாதையில் செல்லும் பொருளின் விசையின் திசை மாறுவதால், அந்த விசை, மாறுபடும் விசையாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ள விசையால் செய்யப்படும் வேலை தொகையீடு மூலமாக கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது. +formula_15 + +இதில் a என்பது தொடக்கப் புள்ளியையும், b என்பது இறுதிப் புள்ளியைய��ம் குறிக்கிறது. + +வேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி ஒரு பொருளின் மீது விசையால் செய்யப்பட்ட வேலையின் அளவு, அப்பொருளில் ஏற்பட்ட இயக்க ஆற்றல் மாற்றத்திற்கு சமமாகும். + +ஒரு பொருளின் மீது தொகு பயன் விசையால் செய்யப்படும் வேலை "W" எனில் அதன் இயக்க ஆற்றலில் ஏற்படும் மாற்றம் + +formula_16, + +இதில் formula_18 மற்றும் formula_19 என்பது முறையே தொடக்க மற்றும் இறுதி திசைவேகமாகும். "m" என்பது நிறையாகும். + + + + + + +மைக்ரோசாப்ட் வேர்டு + +மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேட் மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் 1983 இல் எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது. பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், SCO யுனிக்ஸ், ஓஸ்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989) இல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஓர் பகுதியாகும் இது 2003 ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது. + +நேரடியாகக் கணினிகளில் இறுவட்டின் மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும். + +ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்த நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2007 இலிருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை பிரித்து நிறுவலில் உள்ள மேம்படுத்தல் எனப்பொருள்படும் Update என்னும் கோபுறைக்குள் போடுவதன் மூலம் நிறுவும் போது தானாகவே மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும். + + + + +அணில் + +அணில் () ("Squirrel") மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும். அணில்கள் அமெரிக்கா, ஐரோவாசியா மற்றும் ஆபிரிக்காவையும் தாய் நாடாக கொண்டவை. பின்னர் ஆத்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. . இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. + +இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும்மு. முதுகுப் பகுதியில் சிறியளவிலான மூன்று கோடுகள் காணப்படும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. +கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும். + +அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும். + +அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும். + +அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும். + + + + +வான்கோழி + +வான்கோழி ("Turkey") தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது "ஃபாசியனிடே" (Phasianidae) என்னும் குடும்பத்தில், "மெலீங்கிரிடினே" (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர். + +இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது. + +வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும். + +கோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். + +வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும். + + + + + +கூட்டல் (கணிதம்) + +கணிதத்தில், கூட்டல் ("Addition") என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை ���ல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு கணிதச் செயல் ஆகும். இது எண்கணிதத்தின் நான்கு அடிப்படைச் செயல்களில் ஒன்றாக உள்ளது. கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும். + +இரு இயல் எண்களின் கூடுதல் அவ்விரு எண்களின் மொத்த மதிப்பினைக் குறிக்கும் இயல் எண்ணாகும். 3 மற்றும் 2 ஆப்பிள்கள் சேர்ந்து மொத்தமாக 5 ஆப்பிள்கள் உள்ள தொகுப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பட விளக்கத்திற்கு இணையான கணிதக்கோவை: +கூட்டல் என்பது, பல தொகுதிப் பொருட்களை இணைத்து ஒரு தொகுதி ஆக்குதல் போன்றவற்றுக்கான ஒரு "மாதிரி" (model) ஆகவும் அமைகின்றது. ஒன்று என்னும் எண்ணைத் தொடர்ச்சியாகக் கூட்டும் செயற்பாடே மிக அடிப்படையான "எண்ணுதல்" ஆகும். கூட்டல், எண்கள் சார்ந்த மிகவும் எளிமையான செயற்பாடுகளில் ஒன்றாகும். + +கூட்டல் குறி எனப்படும் "+" மூலம் கூட்டலானது குறிக்கப்படுகின்றது. இக்குறி, கூட்டப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 + 4). கூட்டலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது மொத்தம், சமன் குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக: + +formula_1 என்பதை "ஒன்றும் ஒன்றும் இரண்டு" என்றோ, "ஒன்று சக ஒன்று சமன் இரண்டு" என்றோ வாசிக்கலாம். + +செயல்முறைக் குறியீடுகள் எதுவும் இல்லாமலேயே கூட்டல் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதும் வேறு முறைகளும் உள்ளன: +எடுத்துக் காட்டாக: +பெரும்பாலான கணிதச் சூழல்களில் இரு கணியங்கள் அடுத்தடுத்து எழுதப்படுவது பெருக்கலைக் குறிக்கும் என்பதால் இரண்டிற்கும் வேறுபாடு அறிவதில் குழப்பமும் நேரலாம் + +தொடர்புள்ள எண்களாலான ஒரு தொடரின் கூடுதலை கூட்டுகைக் குறியைப் பயன்படுத்தி சுருக்கமாக எழுதலாம்: + +கூட்டப்பட வேண்டிய எண்களானவை, "உறுப்புகள்", "கூட்டும் எண்கள் (addend)" அல்லது "கூட்டற்பகுதிகள் (summand)"; என அழைக்கப்படுகின்றன. +பல உறுப்புகளைக் கூட்டும்போது இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. + +இச்சொற்களும் பெருக்கப்படும் எண்களுக்குப் பயன்படுத்தப்படும் "காரணிகள்" என்ற சொல்லும் வெவ்வேறு பொருள்தருபவை. சில கணிதாசிரியர்கள், கூட்டப்படும் முதல் எண்ணை "கூட்டுப்பொருள் (augend)" எனவும் அழைத்தனர். ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் பல ஆசிரியர்கள் கூட்டலில் வரும் முதல் எண்ணை, "கூட்டும் எண்ணாகவேக் (addend)" கருதவில���லை. எனினும் தற்காலத்தில் கூட்டலின் பரிமாற்றுத்தன்மை காரணமாக " கூட்டுப்பொருள் (augend)" என்ற சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது; கூட்டும் எண்கள் என்ற சொல்லே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. + +மேற்கூறப்பட்டுள்ள சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டவையாகும். "Addition", "add" ஆகிய இரு வார்த்தைகளும் இலத்தீன் வினைச்சொல்லான "addere" இலிருந்து பெறப்பட்டவை. "add" என்ற வினைச்சொல்லுடன் "-nd" என்ற விகுதி சேர்த்துப்பெறப்பட்ட பெயர்ச்சொல்லான "addend" என்பது, "கூட்டப்பட வேண்டிய பொருட்கள்" ("thing to be added") என்ற பொருளைத் தருகிறது. இதேபோல "augere" ("to increase") என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து, "augend" ("thing to be increased") என்ற ஆங்கிலச்சொல் பெறப்பட்டுள்ளது. + +"கூடுதல்" அல்லது "கூட்டுத்தொகை" மற்றும் "கூட்டுப்பகுதி" ஆகிய சொற்களுக்கு இணையான "Sum", "summand" என்ற ஆங்கிலச் சொற்கள் இலத்தீன் மொழியின் பெயர்ச்சொல்லான "summa" ("the highest, the top") மற்றும் வினைச்சொல்லான "summare" ஆகியவற்றிலிருந்து உருவானவை. இரு நேர்ம எண்களின் கூடுதல் அவ்விரு எண்களின் மதிப்புகளைவிட அதிகமானது என்பதாலும், பண்டைய கிரேக்கர்களும் பண்டைய ரோமானியர்களும் எண்களைக் கூட்டும்பொழுது கீழிருந்து மேலாகச் சென்று விடையை மேற்புறம் தரும் வழக்கம் கொண்டிருந்ததாலும், "summa" மற்றும் "summare" இலத்தீன் சொற்களின் பொருள் ("the highest, the top") பொருத்தமானதாக அமைகிறது. + +கூட்டல் பரிமாற்றுத்தன்மை உடையது: +கூட்டும் எண்களின் வரிசையை மாற்றினாலும் கூட்டுத்தொகையில் மாற்றமிருக்காது. + +கூட்டலின் பரிமாற்றுப்பண்பானது, "கூட்டலின் பரிமாற்று விதி" எனப்படுகிறது. கணித அடிப்படைச் செயல்களில் கூட்டலும் பெருக்கலும் பரிமாற்றுப்பண்புடையன; ஆனால் கழித்தலுக்கும் வகுத்தலுக்கும் இப்பண்பு கிடையாது. + +கூட்டல் சேர்ப்புத்தன்மை கொண்டது: +மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட எண்களைக் கூட்டும் போது செயலியை அமல்படுத்தும் வரிசை முறை மாற்றப்பட்டாலும் இறுதி விடையில் மாற்றமிருக்காது. + +"a", "b", "c" எவையேனும் மூன்று எண்கள் எனில்: + +எனினும், பிற கணிதச் செயல்களுடன் கூட்டல் இணையும்போது செயலியை அமல்படுத்தும் வரிசை முறை முக்கியமாகிறது. அடுக்கேற்றம், Nஆம் படி மூலம், பெருக்கல், வகுத்தல் இவற்றுடன் கலந்து கூட்டல் செயலி வரும்போது கூட்டலுக்கு கடைசி நிலையே அளிக்கப்படும��. ஆனால் கழித்தலுக்கும் கூட்டலுக்கும் சமநிலை அளிக்கப்படும். + +சுழியத்தை எந்தவொரு எண்ணுடன் கூட்டினாலும் அந்த எண் மாறாது. சுழியமானது கூட்டலின் முற்றொருமை உறுப்பு அல்லது கூட்டல் முற்றொருமை என அழைக்கப்படுகிறது. :"a" ஏதாவது ஒரு எண் எனில்: + +இந்த கூட்டலின் சமனி பற்றிய குறிப்பு கிபி 628 இல் பிரம்மகுப்தரின் "பிரம்மசுபுத்தசித்தாந்தம்" ("Brahmasphutasiddhanta") என்ற நூலில் காணப்படுகிறது. இவ்விதியை அவர் மூன்றுவகையாக, ஒரு எதிர்ம எண்ணுக்கு, சுழியத்துக்கு, மற்றும் ஒரு நேர்ம எண்ணுக்கு என மூன்று வகையாகக் குறிப்பிட்டுள்ளார். இயற்கணிதக் குறியீடுகளில் அல்லாது வார்த்தைகளால் அவற்றை விளக்கியுள்ளார். பின்னர் வந்த இந்தியக் கணிதவியலாளர்கள் இக்கருத்தினை மேம்படுத்தினர். என்ற கூற்றுக்கு இணையானதாக, கிபி 830 களில் மகாவீரா, "எதனுடன் கூட்டப்படுகிறதோ அதுவாகவே சுழியம் ஆகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 12 ஆம் நூற்றாண்டில் என்ற கூற்றுக்கு இணையானதாக, இரண்டாம் பாஸ்கரர் "எந்தவொரு நேர்ம அல்லது எதிர்ம எண்ணுடனும் சுழியத்தைக் கூட்டும்போது அந்த எண்ணானது மாறாமல் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். + + + + + +சிட்டு (பறவை) + +சிட்டுக் குருவி ("Sparrow") முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை "வீட்டுக்குருவிகள்", "அடைக்கலக்குருவிகள்" ,"ஊர்க்குருவிகள்", "சிட்டுக்குருவிகள்" ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும். + +சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும். + +ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காண��்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன. + +சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள்.தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். + +சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன. + + +என குருவிகளில் பல வகைகள் உள்ளன. + +சிட்டுக்குருவியில் இரண்டு இனங்கள் உண்டு. +சிட்டுக்குருவியைச் சிய்யான் குருவி என்றும் கூறுவர். + +சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவையை பாதுகாக்க சிலர் முயற்சி எடுத்துவருகின்றனர். இந்த இனத்தின் அழிவு நிலையைக்கண்டு புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தம்பதிகள் அவர்களின் வீட்டில் கூடுகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடுகிறார்கள். மதுரையில் இந்த குருவிக்காக ஒரு கோவிலை சுதந்திர போராட்ட வீரர் கோவிந்தசாமி என்பவர் கட்டியுள்ளார். + +சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன. + + + + + + +றசல் ஆர்னோல்ட் + +றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் ("Russel Arnold", பிறப்பு: அக்டோபர் 25, 1973, கொழும்பு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். + +1997ல் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாட ஆரம்பித்த இவர், அதே வருடத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடக்கத்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆர்னோல்ட் பின்னர் 5ம், 6ம் துடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் மிகச்சிக்கலான நேரத்திலும் கலங்காமல் விளையாடக்கூடியவர் என்ற பெயரைக் கொண்டவர். ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை பலமுறை தனது அமைதியான ஆட்டத்தினால் காப்பாற்றியிருக்கிறார். சிறந்த களத்தடுப்பாட்டக்காரரும், அவசியமான நேரங்களில் திறமையாக பந்து வீசக்கூடியவருமாவார். மெதடிஸ்த கிறிஸ்தவரான இவரும் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியில் தற்போதுள்ள இரண்டு தமிழ் வீரர்களாகும். + + + + +தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து போய்விட, இவரும் திலகரட்ண டில்சானும் இணந்து 97 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டத்தொகையை ஓரளவு உயர்த்தினார்கள். + + + + + +ஜோர்ஜ்டவுண், கயானா + +ஜோர்ஜ்டவுண் கயானாவின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். டெமெராரா ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் டெமாரா மயேயிகா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் ஆகும். இது கரிபியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. ஜோர்டவுன் நகரம் 18 ஆம் நூற்றாண்டி சிறிய நகரமாக பிரெஞ்சு ஆட்சியின் போது உருவானது. 1781இல் காலனித்துவ ஆட்சி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் ஆறுமுகத்தி இருந்த் சேற்று நிலங்களை நிரப்பி நகரைப் பெருப்பித்தனர். + + + + +தேள் + +தேள் ("Scorpion") என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன. + +அனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை. 25 இனங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மையுடைய நஞ்சினைக் கொண்டிருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை மிக்க தேள்களால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இப்பகுதிகளில் மருத்தவ வசதி குறைந்த இடங்களாகவே உள்ளன. + +இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் +கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன. + +தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும். + + + + +கழித்தல் (கணிதம்) + +கழித்தல் என்பது, நான்கு அடிப்படையான கணிதச் செயல்களுள் ஒன்றாகும். இது கூட்டலுக்கு எதிர்மாறானது. கழித்தல் செயலானது, கழித்தல் (−) குறியினால் காட்டப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: 5 - 3 என்பது ஐந்திலிருந்து மூன்றைக் கழிப்பதைக் குறிக்கும். "சமன்" குறியீட்டுடன் இதற்கான விடை எழுதப்படுவது வழக்கம். + +எ.கா: + +எதிர்ம எண்கள், பின்னங்கள், விகிதமுறா எண்கள், திசையன்கள், தசமங்கள், சார்புகள், அணிகள் போன்ற வெவ்வேறு விதமான பொருட்களைக் கொண்டு, இயற்கையான மற்றும் நுண்புலக் கணியங்களை நீக்குதல் மற்றும் குற��த்தலை, கழித்தல் என்னும் செயலி குறிக்கிறது. + +கழித்தல் பல முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இது பரிமாற்றுவிதிக்கு உட்பட்டதல்ல; அதாவது கழிக்கும் எண்களின் வரிசையை மாற்றினால் இறுதிவிடையின் மதிப்பும் மாறிவிடும். கழித்தலுக்கு சேர்ப்புப் பண்பும் கிடையாது; அதாவது, செயலியை அமல்படுத்தும் வரிசை முறை மாற்றப்பட்டால் இறுதி விடை மாறிவிடும். எந்தவொரு எண்ணிலிருந்தும் எண் ஐக் கழித்தால் மூல எண்ணில் மாற்றமிருக்காது. கூட்டல் (கணிதம்) மற்றும் பெருக்கல் (கணிதம்) தொடர்புடைய யூகிக்கக்கூடிய விதிகளை கழித்தல் நிறைவு செய்யும். இவ்விதிகள் அனைத்தையும் நிறுவ முடியும். முதலில் முழு எண்களைக் கொண்டு நிறுவி, பின்னர் மெய்யெண் மற்றும் அதற்கும் மேற்பட்டவற்றுக்கும் அவ்விதிகளைப் பொதுமைப்படுத்த முடியும். நுண்புல இயற்கணிதத்தில் இத்தகைய ஈருறுப்புச் செயலிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. + +உறுப்புகளுக்கிடையே "−" குறியிட்டு கழித்தல் எழுதப்படுகிறது. விடை சமன் குறி கொண்டு எழுதப்படுகிறது. + +எடுத்துக்காட்டுகள்: + +"−" குறியில்லாமலேயே கழித்தல் செயல் எழுதப்படும் சூழல்களும் உண்டு: + +கழித்தலில், கழிக்கப்படும் எண் "கழிபடுவெண்" அல்லது "கழிக்கப்படுவெண்" ("subtrahend") எனவும், எந்த எண்ணிலிருந்து கழிக்கப்படுகிறதோ அவ்வெண் "கழிமுதலெண்" ("minuend") எனவும். கழிக்கக் கிடைக்கும் விடை "வித்தியாசம்" ("difference") எனவும் அழைக்கப்படுகின்றன. + +"கழித்தல்" என்பதற்கு இணையான ஆங்கில வார்த்தை "Subtraction" , இலத்தீன் மொழியின் வினைச்சொல் "subtrahere" என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்த இலத்தீன் சொல், "sub" ("from under") மற்றும் "trahere" ("to pull") என்ற இரு சொற்களிலிருந்து பெறப்பட்ட கூட்டுச்சொல்லாகும். + +படத்தில், "b" நீளமுள்ள ஒரு கோட்டுத்துண்டின் இடது முனை "a" என்றும் வலது முனை "c" என்றும் குறிப்பட்டுள்ளது. + + +படத்தில், , , எண்கள் ஒரு நேர்கோட்டுத்துண்டில் குறிக்கப்பட்டுள்ளது. + + + + +இயல் எண்களின் கழித்தலுக்கு, அனைத்து இயல் எண்களும் (0, 1, 2, 3, 4, 5, 6, ...) குறிக்கப்பட்ட எண்கோடு வேண்டும். அக்கோட்டில், 4 இலிருந்து நான்கு தொலைவு இடப்புறமாக நகர்ந்தால் 0 ஐ அடையலாம். அதாவது . ஆனால் 4 இலிருந்து 5 தொலைவு இடப்புறமாக நகர்வது இந்த இயல் எண்கோட்டில் இயலாது. () + +இந்நகர்வுக்குத் தீர்வு முழுவெண் கோட்டில்தான் உண்டு. + +எனவே இயல் எண்கள், கழித்தலுக்கு அடைவுப�� பண்பு பெறவில்லை. இரு இயல் எண்களின் கழித்தல் விடை, இயல் எண்ணாகவே இருக்க வேண்டுமானால் கழிமுதலெண், கழிபடுவெண்ணைவிடப் பெரியதாக இருக்க வேண்டும். + +26 ஐ 11 இலிருந்து கழித்தல் முடியாது. இந்நிலையில் இருவித முடிவைக் கொள்ளலாம்: + +மெய்யெண்களின் கழித்தல், குறியிடப்பட்ட எண்களின் கூட்டலாக வரையறுக்கப்படுகிறது. ஒரு மெய்யெண்ணைக் கழிப்பதற்குப் பதிலாக அந்த மெய்யெண்ணின் கூட்டல் நேர்மாறு கூட்டப்படுகிறது. + +இவ்வாறு வரையறுப்பதால், மெய்யெண்களின் வளையத்தில், கழித்தலை ஒரு புதிய செயலியாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியிமில்லாமல் எளிமையாகிறது. பொதுவாக ஒரு வளையம் இரண்டு செயலிகளைக் கொண்டிருக்கும். முழுவெண் வளையத்தில் அவ்விரு செயலிகளும் கூட்டலும் பெருக்கலுமாகும். வளையத்தில் ஏற்கனவே கூட்டல் நேர்மாறு என்ற கருத்து உள்ளது; ஆனால் கழித்தல் என்ற தனிச் செயலி இல்லை. எனவே குறியிடப்பட்ட எண்களின் கூட்டலாகக் கழித்தலைக் கொள்வதால், வளையத்தின் எடுகோள்களை கழித்தலுக்கும் பயன்படுத்த முடிகிறது + +கழித்தல் எதிர்-பரிமாற்றுத்தன்மை கொண்டது. அதாவது கழித்தலில் உறுப்புகளின் வரிசை மாற்றப்பட்டால் கிடைக்கும் விடை, மூல விடையின் எதிர்ம எண்ணாக இருக்கும். + +"a" , "b" இரு எண்கள் எனில், + +கழித்தலுக்கு சேர்ப்புப் பண்பு இல்லை + +முழுவெண்களில், எந்தவொரு முழுவெண்ணிலுமிருந்தும் ("a") எண் 1 ஐக் கழித்தால் கிடைக்கும் எண்ணானது, , மூல எண்ணைவிடச் சிறிய முழுவெண்களிலேயே மிகப்பெரிய முழுவெண்ணாகும். மேலும் என்பது இன் முன்னி (predecessor) எனப்படும். + +கிலோகிராம், மீட்டர், அங்குலம் போன்ற அலகுகளோடு கூடிய இரு அளவை எண்களைக் கழிக்கும் போது, அவை இரண்டும் ஒரே அலகுகளில் அமைந்திருத்தல் அவசியம். கழித்து வரும் விடையும் பெரும்பாலும் அதே அலகிலேயே அமைந்திருக்கும். + +விழுக்காடுகளின் மாற்றமானது, விழுக்காடு வித்தியாசம் மற்றும் சதவீத முனைப்புள்ளி வித்தியாசம் என இருவகையாக உள்ளது. விழுக்காடு வித்தியாசம் என்பது இரு கணியங்களின் சார்மாற்றத்தின் விழுக்காடாகும். சதவீத முனைப்புள்ளி வித்தியாசம் என்பது இரு விழுக்காடுகளின் வித்தியாசம் ஆகும். + +எடுத்துக்காட்டு: +ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 30% குறைபாடுள்ளவை; ஆறுமாதங்களுக்குப் பின்னர் 20% பொருட்கள் குறைபாடுள்��வை என்க. + +கழித்தல் செயலானது பல்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. + +எடுத்துக்காட்டு: +எடுத்துக்காட்டு: +இம்முறையில் கழித்தல் வலமிருந்து இடமாகச் செய்யப்படுகிறது. + +கழிமுதல் எண்ணின் வலக்கோடி இலக்கம் கழிபடு எண்ணின் வலக்கோடி இலக்கத்தை விடச் சிறியதாக இருந்தால் அதனுடன் 10 கூட்டப்பட்டு பின்னர் வித்தியாசம் காணப்படுகிறது. கூட்டப்ப்பட்ட இந்த 10 ஆனது, இடப்பக்க முந்தைய இலக்கத்திலிருந்து கடன்பெற்றதாகக் கொள்ளப்பட்டு, அந்த இலக்கத்திலிருந்து 1 குறைத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அடுத்தடுத்த இடப்பக்க இலக்கங்கள் தேவைப்பட்டால் கடன் வாங்கும் முறையில் கழிக்கப்படுகின்றன. + +எடுத்துக்காட்டு: +அமெரிக்க முறையிலிருந்து இம்முறை சிறிது மாற்றம் கொண்டது. தேவைப்படும் கழிமுதல் இலக்கங்கள் அனைத்துக்கும் கடன்வாங்கி வைத்துக்கொண்ட பின்னரே, கழித்தல் தொடங்கப்படுகிறது. + +Example: +செங்குத்துக் கழித்தல் முறைகளிலிருந்து பகுதி வித்தியாச முறை மாறுப்பட்டதாகும். இதில் கடன்பெறுதல் இல்லை. அதற்குப் பதிலாக, கழிமுதலெண், கழிபடுவெண் இவையிரண்டில் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண் கழிக்கப்பட்டு இடமதிப்புடன் வித்தியாசம் கோட்டின் கீழ் கூட்டல்/கழித்தல் குறியுடன் எழுதிக்கொள்ளப்படுகிறது. பகுதி வித்தியாசங்களின் கூட்டுத்தொகையே தேவையான இறுதி வித்தியாசமாக இருக்கும். + +எடுத்துக்காட்டு: +இலக்கம் இலக்கமாக வித்தியாசம் காண்பதற்குப் பதிலாக, கழிபடு எண்ணிக்கும் கழிமுதல் எண்ணிக்கும் இடையே உள்ள எண்களின் எண்ணிக்கையைக் கீழிருந்து மேல்நோக்கி எண்ணிக் கண்டுபிடிக்கும் முறையாகும். + +எடுத்துக்காட்டு: +1234 − 567 = ? : + +மனக்கணக்காகக் கழித்தலைச் செய்வதற்கு இந்தச் சிறுசிறு படிகளாகப் பிரித்துக் கழித்தல் முறை உதவியாக இருக்கும். + +எடுத்துக்காட்டு: +1234 − 567 = ? : + +கழிமுதல் எண் மற்றும் கழிபடு எண் இரண்டுடனும் ஒரேயெண்ணைக் கூட்ட/கழிக்க இறுதிவிடையில் மாற்றம் இருக்காது என்ற கருத்தின் அடிப்படையில் இம்முறை செயற்படுத்தப்படுகிறது. கழிபடுஎண்ணின் இலக்கத்தில் பூச்சியம் வருவதற்குத் தேவையான எண் கூட்டப்படுகிறது. + +எடுத்துக்காட்டு: + +"1234 − 567 = ?" : + + + + + + +சுத்தியல் + +சுத்தியல் பொருட்களை அடிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதன் முதன்மையா��� பயன்கள், ஆணி அடித்தல், ஒரு பொருளின் பகுதிகளைப் பொருத்துதல், பொருட்களை உடைத்தல் போன்றவையாகும். பெரிய சுத்தியல் சம்மட்டி எனப்படும். + +சுத்தியலைக் கைகளாலோ இயந்திரங்களாலோ இயக்கலாம். இது மனிதன் பயன்படுத்திய பழங்கருவிகளில் ஒன்று ஆகும். சுத்தியல்கள் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன. + + + + +கணுக்காலி + +கணுக்காலிகள் (() ("Arthropod") என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் "ஆர்த்ரோபோடா" ("Arthropoda") என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός ("போடொஸ்" = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புறவன்கூடு உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. பிப்ரவரி 29, 2016 அன்று, 2013ல் தெற்குச் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 52 கோடி (520 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கணுக்காலியின் தொல்படிம மேட்டின் கூடுதல் படிமம் மற்றும் கள ஆய்வில் அதன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் செல்லும் கயிறு போன்ற ஒன்று அதன் கீழ்நரம்பு வடம் எனப் "புரசீடிங்சு ஓப் நேச்சரல் அகாடமி ஆப் சயன்சசு" இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். + +கணுக்காலிகளில் "பிளாங்க்டன்" (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ. அளவில் இருந்து, 20 கிலோ கிராம் எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய நிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன. + +கணுக்காலிகளை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய மூன்று இயல்புகள்: + +இவை பார்வைக்காகக் கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திச���யை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலகக் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் பாக்டீரியாக்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும். + +கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கியப் பங்கை வகிக்கும் இறால், நண்டு என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்துப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. + +ஒரு கணிப்பின் படி இதுவரை அறியப்பட்ட கணுக்காலி இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,170,000 ஆகும். எனினும் புவியில் வாழும் கணுக்காலி இனங்களின் உண்மையான எண்ணிக்கை 5-10 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஒரு பிரதேசத்தின் சராசரி இனப்பல்வகைமையைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனினும் துருவப் பிரதேசங்களை விட அயனமண்டலப் பிரதேசங்களின் கணுக்காலி இனங்களின் பல்வகைமை மிக அதிகமாகும். 1992ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி கோஸ்டா ரிகா எனும் சிறிய அயன மண்டல நாட்டில் மாத்திரம் 365,000 கணுக்காலி இனங்கள் உள்ளன. எனினும் துருவங்களுக்கருகிலுள்ள மிகப்பெரிய நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை இதை விடக் குறைவாகவும் காணப்படலாம். + +கணுக்காலிகளின் மிக முக்கியமான தனித்துவமான இயல்பு மூட்டுள்ள தூக்கங்களைக் கொண்டிருத்தலும், கைட்டினாலான புறவன்கூட்டைக் கொண்டிருத்தலுமாகும். இம்மூட்டுள்ள தூக்கங்கள் கணுக்காலிகளின் இடப்பெயர்ச்சி, உணவுண்ணல், புலனுகர்ச்சி போன்றவற்றிற்கு உதவும். இவை இருபக்கச் சமச்சீருள்ள, முப்படை கொண்ட, அனுப்பாத்து துண்டுபட்ட உடலுடைய விலங்குகளாகும். இவற்றிற்குப் பூரணமான உணவுக்கால்வாய் உண்டு. கணுக்காலிகள் திறந்த குருதிச்சுற்றோட்டத் தொகுதியை உடையவையாகும். இவை ஒடுக்கப்பட்ட உடற்குழியையும் நன்கு விருத்தியடைந்த குருதிக் குழியையும் கொண்டுள்ளன. +நன்கு விருத்தியடைந்த வரித்தசை காணப்படும். இக்கூட்டத்தில் தலையாகு செயலும், புறத்தே குறித்த எண்ணிக்கையான உடற்துண்டங்கள் இணைவதன் மூலம் தக்குமா ஆகும் செயலும் சிறப்படைந்து காணப்படுபவை. பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு, இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் தலைநெஞ்சு, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன. முளையவிருத்தி இயல்புகளின் அடிப்படையில் கணுக்காலிகள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். அதாவது இவற்றின் முளைய விருத்தியில் சமிபாட்டுத் தொகுதியில் முதலில் விருத்தியடைவது அவற்றின் வாயாகும். எனினும் முள்ளந்தண்டுளிகள் போன்ற Deutorosome விலங்குகளில் குதமே முதலில் விருத்தியடைகின்றது. வாழும் சூழலுக்கேற்றபடி இனங்களின் சுவாசத்தொகுதியும் இனப்பெருக்க முறையும் வேறுபடுகின்றன. நீரில் வாழும் கணுக்காலிகள் பொதுவாகப் புறக்கருக்கட்டல் முறையையும், நில வாழ் கணுக்காலிகள் அகக்கருக்கட்டல் முறையையும் பின்பற்றுகின்றன. + +கணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்து உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்குச் சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன. + +அனேகமான நீர்வாழ் கிரஸ்டேசியன்களில் புறக்கருக்கட்டல் நிகழும். அனைத்து நிலவாழ் கணுக்காலிகளிலும் அகக்கருக்கட்டலே நிகழ்கின்றது. அதாவது சூழ் பெண்ணங்கியின் உடலினுள்ளேயே இருக்கும் படியாக அசையும் விந்துக்கள் மூலம் கருக்கட்டப்படுவது. சில அங்கிகளில் மாத்திரம் கன்னிப்பிறப்பு காணப்படுகின்றது. அதாவது ஆணங்கியின் துணையின்றி சந்ததியை உருவாக்கல். கருக்கட்டலின் பின்னர் அனேகமான கணுக்காலிகள் முட்டையீனுகின்றன. சில தேள் இனங்கள் மட்டும் சூற்பிள்ளையீனல் (முட்டை தாயினுள்ளேயே பொரித்து குட்டி ஈனப்படல்) காணப்படுகின்றது. +பல கணுக்காலிகள் உருமாற்ற விருத்தியைக் காண்பிக்கின்றன. சில குடம்பிப் பருவமுள்ள நிறையுருமாற்றத்தையும், சில அணங்குப் பருவமுள்ள குறையுருமாற்றத்தையும் காண்பிக்கின்றன. கிறஸ்டேசியன்களில் பொதுவாக முட்டையிலிருந்து நோப்பிளியஸ் எனும் குடம்பிப் பருவம் வெளிவரும். சில கணுக்காலிகளில் நேர்விருத்தி (முட்டையிலிருந்து சிறிய நிறையுடலி வெளிவரல்) முறையும் உள்ளது. + +கணுக்காலிகள் ஐந்து பிரதான உபகணங்களுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு கணம் இனமழிந்த உயிரினங்களை உள்ளடக்கியதாகும். + + + + + +பெருக்கல் (கணிதம்) + +கணிதத்தில் பெருக்கல் ("Multiplication") என்பது ஒரு அடிப்படையான கணிதச் செயல் ஆகும். கழித்தல், கூட்டல், வகுத்தல் ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும். பெருக்கப் படும் இரண்டு எண்களில் ஒன்று முழு எண்ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல், அம் முழு எண்ணின் எண்ணிக்கையளவு தடவை மற்ற எண்ணின் தொடர்ச்சியான கூட்டலாகும். + +எடுத்துக்காட்டாக, 7 × 4 என்பது, 7 + 7 + 7 + 7, அல்லது 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 (நான்கு ஏழுகள் அல்லது ஏழு நான்குகள் = 28) என்பதற்குச் சமனாகும். +formula_2 + +இதில் 7 மற்றும் 4 இரண்டும் காரணிகள் எனவும் 28 பெருக்குத்தொகை எனவும் அழைக்கப்படும். +இரண்டு பின்ன���்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும்போது கிடைக்கும் விடையின் பகுதியும், விகுதியும், பெருக்கப்பட்ட பின்னங்களின் பகுதிகளின் பெருக்கமாகவும், விகுதிகளின் பெருக்கமாகவும் அமையும். + +எடுத்துக் காட்டாக, "a/b" × "c/d" = "(ac)/(bd)". அதுபோலவே, 2/3 × 3/4 = (2×3)/(3×4) = 6/12 = 1/2. + +பெருக்கலின் முக்கியப் பண்பு பரிமாற்றுத்தன்மையாகும். பெருக்கப்படும் இரு எண்களின் வரிசை மாறினாலும் பெருக்குத்தொகையில் மாற்றமிருக்காது. + +நேர்ம முழுஎண்களின் பெருக்கலை செவ்வகமாக அடுக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையாக அல்லது அச்செவ்வகத்தின் பரப்பளவாகக் கொள்ளலாம். பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையின் காரணமாக பரப்பளவு காண்பதற்காக, செவ்வகத்தின் எப்பக்கம் முதலில் அளக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. + +பெருக்கலின் நேர்மாறு செயல் வகுத்தலாகும். எடுத்துக்காட்டாக 3 x 4 =12; 12 ஐ 3 ஆல் வகுக்க 4 உம், 4 ஆல் வகுக்க 3 உம் விடையாகக் கிடைக்கும். ஒரு எண்ணை 3 ஆல் பெருக்கிக் கிடைக்கும் விடையை மீண்டும் 3 ஆல் வகுத்தால் பழைய எண்ணே விடையாகக் கிடைக்கும். + +சிக்கலெண்கள் போன்ற பிறவகை எண்களுக்கும் அணிகள் போன்றவற்றுக்கும் பெருக்கல் வரையறுக்கப்பட்டுள்ளது. + +பெருக்கல், பெருக்கல் குறி எனப்படும் "x" மூலம் குறிக்கப்படுகின்றது. இது பெருக்கப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 x 4). பெருக்கலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது பெருக்குத்தொகை, சமன் குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக: + + +"x" மடங்கு "y" என்பதற்கு "xy" ; "x" இன் 5 மடங்கு என்பதற்கு 5"x" என்றும் எழுதப்படுகிறது. அடைப்புக்குறிக்குள் எழுதப்படும் கணியங்களின் பெருக்கலையும் இம்முறையில் எழுதலாம். எழுத்துக்காட்டாக, 5 x 2 = 5(2) அல்லது (5)(2). + + +கணினி நிரலாக்கத்தில், "உடுக்குக்குறி" பெருக்கலின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. (codice_1) + +பொதுவாக,பெருக்கப்படவேண்டிய எண்கள் "காரணிகள்" என அழைக்கப்படுகின்றன. பெருக்கப்பட வேண்டிய எண் "பெருக்கபடுமெண்" ("multiplicand") என்றும் பெருக்கும் எண் "பெருக்கி" அல்லது "பெருக்கு எண்" ("multiplier") என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு பெருக்கலில்,பெருக்கி முதலிலும், பெருக்குபடுவெண் இரண்டாவதாகவும் எழுதப்படும். (though this can vary by language). சில சமயங்களில் மாற்றி எழுதப்படுவதும் உண்டு. மேலும் சில இடங்களில் "காரணி" என்ற சொல்லுக்கு ஒத்ததாக "பெருக��குபடுமெண்" கருதப்படுகிறது.. இயற்கணிதத்தில் ஒரு மாறி அல்லது கோவையின் பெருக்கு எண்ணானது குணகம் அல்லது கெழு என அழைக்கப்படுகிறது. (3"xy" இல் 3 என்பது கெழு). + +பெருக்கலில் கிடைக்கும் விடை, பெருக்குத்தொகை என அழைக்கப்படுகிறது. முழுவெண்களின் பெருக்குத்தொகை அப்பெருக்கலின் காரணிகள் ஒவ்வொன்றின் மடங்காக இருக்கும். எடுத்துக்காட்டாக 3, 5 இன் பெருக்குத்தொகை 15; 15, 3 மற்றும் 5 இன் மடங்காக உள்ளதைக் காணலாம். + +வழக்கமாக எண் பெருக்கல், பெருக்கல் வாய்ப்பாடு கொண்டு செய்யப்படுகிறது. பெருக்கும் எண்களின் தசமபின்ன இலக்கங்கள் இரண்டிற்கும் அதிகமாக உள்ளபோது பெருக்கல் சற்று கடினமானதாகவும் பிழை நேரக்கூடியதாகவும் ஆகிறது. இந்தகையப் பெருக்கல்களை எளிதாக்குவதற்கு பொது மடக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நழுவு சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று தானங்கள் வரை துல்லியமாகப் பெருக்க இயலும். 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பான்களின் உதவியால் 10 இடங்கள்வரைத் துல்லியமாகப் பெருக்குவது எளிதாயிற்று. தற்காலக் கணினிகள் மற்றும் கணிப்பான்களின் உதவியால், பெருக்கல் வாய்ப்பாடின்றி பெரியளவிலான பெருக்கலையும் எளிதாகச் செய்ய முடிகிறது. + +பண்டைய எகிப்து, பண்டைக் கிரேக்கம், பண்டைய இந்திய மற்றும் பண்டைய சீன வரலாறுப்பதிவுகளில் பெருக்கல் முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பழைய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் நடு ஆப்பிரிக்காவில் பெருக்கல் என்பது அறியப்பட்டிருந்தது என்பதை கிமு 18,000 - 20,000 காலத்திய இஷான்கோ எலும்பு காட்டுகிறது. + +ரைன்ட் கணிதப் பப்பிரசில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள எகிப்திய பெருக்கல் முறையில், முழுவெண்கள் மற்றும் பின்னங்களின் பெருக்கலில், தொடர் கூட்டல்கள் மற்றும் இரட்டித்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது. + +எடுத்துக்காட்டாக, 13 , 21 இன் பெருக்குத்தொகை காண: + +தற்கால தசம முறையையொத்த, அறுபதின்ம இடஞ்சார் குறியீடு முறையை (sexagesimal)பபிலோனியர்கள் பயன்படுத்தினர். எனவே பாபிலோனியப் பெருக்கல் முறையானது, இன்றையத் தசமப் பெருக்கலை மிகவும் ஒத்திருந்தது. பபிலோனியர்கள் பெருக்கல் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தினர். இந்த வாய்ப்பாடுகளில் குறிப்பிட்ட ஒரு முதன்மை எண்ணின் முதல் 20 மடங்குகள் இருந்தன ("principal number" "n": "n", 2"n", ..., 20"n") அதனைத் தொடர்ந்து 10"n": 30"n" 40"n", 50"n" ஆகியவையும் இருந்தன. + +அறுபதின்மப் பெருக்கலில்: 53"n" இன் மதிப்பு காண்பதற்கு: + +துவக்ககாலத்தில் சீனர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு சிறுகோல்களை இடமதிப்புமுறையில் பயன்படுத்தினர். எனினும் கிமு 300க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கணித நூலான "சௌபி சுவான்ஜிங் ("Zhoubi Suanjing") மற்றும் "கணிதக்கலையில் ஒன்பது அத்தியாயங்கள்" "(Nine Chapters on the Mathematical Art)" என்ற நூலிலும் பெருக்கல் கணக்கீடுகள் வார்த்தைகளில் எழுத்துவடிவில் காணப்படுகின்றன. இடமதிப்பு தசம எண்கணிதத் தீர்வுமுறைகள் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி எனும் கணிதவியலாளரால் அரபுநாடுகளில் 9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. + +இந்து-அரபு எண்ணுருக்கள் அடிப்படையிலான தற்காலப் பெருக்கல் முறையானது இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் விவரிக்கப்பட்டது. பிரம்மகுப்தர் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலின் விதிகளை வகுத்திருந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியரான ஹென்றி புர்ச்சர்டு பைன் (Henry Burchard Fine) என்பவரின் கூற்று: + +கட்டமுறை அல்லது பெட்டிமுறைப் பெருக்கல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் துவக்கப்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் இலக்கப் பெருக்கல் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். + +பின்னர் கட்டத்துக்கள் அமையும் நான்கு விடைகளையும் கூட்டி இறுதி விடைப் பெறப்படுகிறது. + +இயல் எண்கள், முழு எண்கள் பின்னங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மெய்யெண்கள் மற்றும் சிக்கலெண்கள் பெருக்கலுக்குக் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. + + + + + + + + + +எண்கள் தவிர்த்த பிற முறமைகளில் பெருக்கலுக்கு இப்பண்புகள் பொருந்தாது. எடுத்துக்காட்டாக, அணிகளின் பெருக்கலுக்குப் பரிமாற்றுத்தன்மை கிடையாது.. + + +மேலும், + + +ஒரே எண்ணைப் பலமுறை பெருக்குவது அடுக்கேற்றம் ஆகும். + + + + + +வகுத்தல் (கணிதம்) + +கணிதத்தில், வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும். + +"c", "b" ஆகியவற்றின் பெருக்கலுக்கான விடை "a", எனின் அது பின்வருமாறு எழுதப்படும்: +இங்கே "b" பூச்சியத்துக்குச் சமமற்றது ஆயின், "a" ஐ "b" ஆல�� வகுக்கும்போதான விடை "c", என்பது, + +என எழுதப்படும். + +அதாவது, + +மேலுள்ள கூற்றில், + +"a" ’தொகுதி’ என்றும், "b" ’பகுதி’ என்றும் அழைக்கப்படுகிறது. + +முழு எண்கள் கணத்தில், கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய மூன்று கணிதச் செயல்களும் அடைவு பெற்றவை. ஆனால் வகுத்தல் அவ்வாறு முழுஎண்கள் கணத்தில் அடைவு பெறவில்லை. ஒரு முழுஎண்ணை மற்றொரு முழுஎண்ணால் வகுக்கும்போது எப்பொழுதுமே ஒரு முழுஎண் கிடைப்பதில்லை. மீதியும் கிடக்கலாம். அந்த மீதியையும் வகுக்கும் வகையில் எண்கள், விகிதமுறு எண்களை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்படுகிறது. + +பெரும்பாலும் வகுத்தலைக் குறிப்பதற்கு, ஒரு சிறு கிடைக் கோட்டுத்துண்டுக்கு கீழ் வகு எண்ணும் அக்கிடைக்கோட்டிற்கு மேற்புறம் வகுபடு எண்ணும் எழுதப்படுகிறது எடுத்துக்காட்டாக, "a" வகுத்தல் "b" என்பது கீழுள்ளவாறு எழுதப்படுகிறது: + +முழுக்கூற்றையும் ஒரே கோட்டில் எழுதுவதற்காக, சாய்கோட்டைப் பயன்படுத்தி வகுத்தல் பின்வருமாறும் எழுதப்படுகிறது: + +இம்முறையில்தான் கணினி நிரல் மொழியில் வகுத்தல் குறிக்கப்படுகிறது. இதிலிருந்து மாறுபட்டு சில கணித மென்பொருட்களில் மாற்றுவரிசையில் பின்சாய்கோட்டைப் பயன்படுத்தி கீழுள்ளவாறும் எழுதப்படுகிறது: + +இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட விதத்தில் கீழுள்ளவாறும் வகுத்தல் குறிக்கப்படுகிறது: + +ஒரு பின்னத்தைக் குறிப்பதற்கு, மேலுள்ள குறியீடுகளில் ஏதேனுமொன்றைப் பயன்படுத்தலாம். + +வகுத்தற்குறியைப் பயன்படுத்தி வகுத்தலைக் குறித்தல்: + +இக்குறியீடு அடிப்படை எண்கணிதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கணிப்பான்களில் வகுத்தல் செயலுக்கான விசையின் மீது அடையாளக்குறியாக இந்த வகுத்தற்குறி பயன்படுத்தப்படுகிறது + +ஆங்கிலம் பேசாத கலாச்சாரத்தில், "a வகுத்தல் b" என்பது "a" : "b" என எழுதப்பட்டது. இக்குறியீடு 1631 இல் வில்லியம் ஆட்ரெட் என்ற கணிதவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர் லைப்னிட்சால் பிரபலமானது. எனினும் ஆங்கிலத்தில் முக்காற்புள்ளி விகிதங்களுக்குப் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ( ""a" is to "b""). + +சில நாடுகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகளில் நெடுமுறை வகுத்தலின் போது, "a" வகுத்தல் "b" என்பது formula_12 அல்லது formula_13 என எழுதப்படுகிறது. அதேபோல குறுமுறை வகுத்தலின் போது formula_14 என (அரிதாக) எழுதப்படுகிற��ு. இக்குறியீடு முதன்முறையாக மைக்கேல் ஸ்டிஃபெல் (Michael Stifel) என்ற ஜெர்மானிய கணிதவியலாளரால் 1544 இல் அவர் வெளியிட்ட புத்தகத்தில் ("Arithmetica integra") அறிமுகப்படுத்தப்பட்டது. + +பெரும்பாலும் வகுத்தலானது, பல பொருட்களடங்கிய ஒரு தொகுப்பைப் ”பகிர்தல்’ என்ற கருத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ”ஒரு பெட்டியிலுள்ள மிட்டாய்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறுவர்களுக்குச் சமமாகப் பகிர்தல்” இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாகும். + +எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பல சுற்றுக்களாக சமமாகப் பகிர்வது கூறாக்கம் ஆகும். அதாவது தொடர் கழித்தலாக வகுத்தல் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவரிடமுள்ள 58 எழுதுகோல்களை ஐந்து பேருக்குச் சமமாகத் தரவேண்டுமெனில், முதற்சுற்றில் ஒவ்வொருவருக்கும் பத்து எழுதுகோல்கள் எனத் தந்துவிட்டு, மீதமுள்ள எட்டை இரண்டாவது சுற்றில் ஆளுக்கொன்றாகத் தர, மீண்டும் மூன்று எழுதுகோல்கள் மீதியாகும். ஆனால் அவற்றை ஐவருக்குச் சமமாகப் பிரிக்க இயலாது. அதாவது, 58 ஐ ஐந்தால் வகுக்கும்போது ஈவு 11 (10+1); மீதி 3. + +வகு எண் சிறியதாக உள்ளபோது குறு வகுத்தலும், வகுஎண் பெரியதாக உள்ளபோது நீள் வகுத்தலும் பயன்படுத்தப்படுகின்றன. தாள், எழுதுகோல் கொண்டு பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தவர்கள் இவ்விரு முறைகளில் வகுத்தலைச் செய்ய முடியும். + +நீள்/ குறு வகுத்தல் முறைகளில், + +நீள்வகுத்தல் முறையில், முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் இடதுபக்கக் கடைசியிலுள்ள இலக்கம் (அல்லது இலக்கங்கள்), வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. ஈவாகக் கிடைக்கும் முழுஎண் மூலக் கணக்குக்குரிய ஈவின் முதல் இலக்கமாகமாகும். மீதியிருந்தால் அதனுடன் வகுபடு எண்ணின் அடுத்த இலக்கம் சேர்க்கப்பட்டு (இது கீழிறக்கப் படுவதாகச் சொல்லப்படும்) வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. வகுபடு எண்ணின் வலது கடைசி இலக்கம் கீழிறக்கப்பட்டு வகுக்கப்படும்வரை இது தொடரப்படும். வகுஎண்ணின் முழுஎண் மடங்காக வகுபடுஎண் இருந்தால் இறுதிமீதி பூச்சியமாகக் கிடைக்கும். இல்லையெனில் இறுதிமீதி வகுஎண்ணை விடச் சிறிய எண்ணாகவும் கிடைக்கும். + + 125 (விளக்கம்) + 4)500 + + 125 (விளக்கம்) + +குறுவகுத்தலில் முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம் (அல்லது இலக்கங்கள்) வகுக்கப்பட்டபின் கிடைக்கும் மீதி மனதிலேயே கணக்கிடப்பட்டுக் கீழே எழுதப்படாமல், பக்கவாட்டில் அடுத்த இலக்கத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு வகுத்தல் தொடர்கிறது. + + +மாறாக, வகுத்தலுக்கான கோட்டை வகுபடுஎண்ணுக்குக் கீழிட்டும் செய்யலாம். + +நீள்வகுத்தல் அளவுக்கு குறுவகுத்தல் எழுதுதாளில் இடமடைப்பதில்லை. எனினும் குறுவகுத்தலுக்கு மனக்கணக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். + +மடக்கையைப் பயன்படுத்தி இரு எண்களின் வகுத்தலுக்கான மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் வித்தியாசத்திற்குச் சமனாகும்: + +மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி இரு எண்களுக்கிடையேயான வகுத்தலை எளிதாகச் செய்ய முடியும். இரு எண்களை வகுப்பதற்கு, + +வகுத்தலுக்கு நழுவு சட்டம் பயன்படுத்தப்படுகிறது. நழுவு சட்டத்தின் C அளவுகோலில் வகுஎண்ணையும், D அளவுகோலில் வகுபடு எண்ணையும் பொருத்த வேண்டும். D அளவுகோலில், C அளவுகோலின் இடதுபக்கச் சுட்டானது பொருந்துமிடம் ஈவைத் தரும். எனினும் நழுவுச் சட்டத்தைப் பயன்படுத்துபவர் தசமபுள்ளியின் நகர்வை கவனமாகப் பார்த்துவர வேண்டும். + +எண்சட்டத்தைப் பயன்படுத்தியும் வகுத்தலைச் செய்யலாம். + +அறிவியல் வளர்ச்சியினால் கணிப்பான்களும் கணினிகளும் அறிமுகமான பின்னர் வகுத்தலைச் செய்வது எளிதாகி உள்ளது. இவற்றைப் பயன்படுத்தி வகுத்தலைத் துல்லியமாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது. + +பெருக்கலைப் போன்று வகுத்தலும் கூட்டல், கழித்தலுடனான வலது-பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும். + +ஆனால் பெருக்கலைப் போல வகுத்தல் இடது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யாது. + +ஒரே வரிசையில் பல வகுத்தல்கள் இருக்கும்பொழுது செயல்முறை வரிசை இடப்பக்கமிருந்து வலப்பக்கம் நோக்கி அமையும். இது வகுத்தலின் இடது-சேர்ப்புப் பண்பு ஆகும்: + +எண்கணிதத்தில் "யூக்ளிடிய வகுத்தல்" என்பது இரு முழு எண்களின் வகுத்தலைக் குறிக்கிறது. இரு முழுஎண்களின் வகுத்தலின் விளைவாக ஒரு ஈவும் மீதியும் கிடைக்கின்றன. இவ்வாறு பெறப்படும் ஈவும் மீதியும் தனித்தவை என்பதையும், அவற்றுக்கான சில பண்புகளையும் தருகின்ற தேற்றம். இரு முழுஎண்களை வகுத்து ஈவையும் மீதியையும் கணக்கிட, முழுஎண் வகுத்தலின் படிமுறைத் தீர்வுகள் உதவுகின்றன. அவற்றுள் நெடுமுறை வகுத்தல் முக்கியமானதாகும். முழுஎண்கள் குறித்த பல கேள்விகளுக்கு, யூக்ளிடிய வகுத்தலும் அதைச் செய்வதற்கான படிமுறைத்தீர்வுகளும் அடிப்படையாக உள்ளன. இரு முழுஎண்களின் மீப்பெரு பொது வகுத்தி காண்பதற்குப் பயன்படும் யூக்ளிடிய படிமுறைத்தீர்வையும், மீதியை மட்டுமே கருத்தில் கொள்ளும் சமானம், மாடுலோ nஐயும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். +யூக்ளிடிய வகுத்தலை கீழ்வரும் விளக்கங்களின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்: + +வகுத்தலின் எதிர்மாறுச் செயலான பெருக்கலைக் கொண்டு இதைச் சரிபார்க்கலாம்: + +இதனைப் கீழுள்ளவாறு பொதுமைப்படுத்தலாம்: + +9 துண்டுகள் கொண்ட ஒரு உணவுப்பண்டத்தை 4 பேருக்குப் பதில் 3 பேருக்குச் சமமாகப் பிரித்தால், ஒவ்வொருவருக்கும் 3 துண்டுகள் கிடைக்கும். மீதியிருக்காது. இங்கு மீதி = 0. இந்த வகுத்தலில் 3 ஆனது 9 ஐச் சரியாக வகுக்கிறது எனப்படும். மேலும், 3 ஆனது 9 இன் வகுஎண் எனப்படும். + +எதிர்ம முழுஎண்களுக்கும் யூக்ளிடிய வகுத்தலை நீட்டிக்கலாம்: + +யூக்ளிடிய வகுத்தலை முழுவெண்கள் வகுத்தலின் முடிவுகளைக் காட்டும் கணித வடிவமைப்பு ஆகும். + +இதில் "q" (ஈவு), "r" (மீதி) இரண்டும் தனித்த முழுஎண்கள். (| "b" | = "b" இன் தனி மதிப்பு). + +முழுஎண்களின் வகுத்தல் அடைவு பெறாதது. அதாவது ஒரு முழுஎண்ணை மற்றொரு முழுஎண்ணால் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு எப்பொழுதும் முழுஎண்ணாக இருக்காது. வகுஎண்ணின் முழுஎண் மடங்காக வகுபடு எண்ணாக இருக்கும்போது மட்டுமே ஈவும் ஒரு முழுஎண்ணாக இருக்கும். மேலும் பூச்சியத்தால் வகுப்பதும் வரையறுக்கப்படவில்லை. + +எடுத்துக்காட்டாக, 26 ஐ 11 ஆல் வகுக்கும்போது, ஈவு ஒரு முழுஎண் அல்ல. இந்நிலையில் கீழ்வரும் ஐந்து விதங்களில் ஏதேனுமொன்று பயன்படுத்தப்படும். + + +கணினி செய்நிரல்களில் முழுவெண்கள் வகுத்தலுக்குத் தனி கவனம் தேவைப்படுகிறது. C நிரல் மொழியில், முழுவெண் வகுத்தல் மேலே தரப்பட்ட வகை 5 போல கொள்ளப்படுகிறது; அதனால் அவ்வகுத்தலின் விடை முழுவெண்ணாகக் கிடைக்கும். மேட்லேப் போன்ற பிற நிரல்மொழிகளில், வகை 3 இல் உள்ளதுபோல விடை விகிதமுறு எண்ணாகக் கிடைக்கும். வகை 3 இன் விடை வாயிலாகவோ அல்லது நேரிடையாகவோ மேலுள்ள மற்ற வகைகளின் விடைகளைப் பெறுவதற்கான சார்புகளை இந்த நிரல்மொழிகள் ��ருகின்றன. + +முழுவெண் வகுத்தலுக்கான குறியீடுகளாக div, /, \, % ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வகுவெண்ணோ அல்லது வகுபடுவெண்ணோ எதிர்ம எண்ணாக இருந்தால் முழுவெண் வகுத்தலின் வரையறை மாறுபடும்: முழுதாக்குதல் பூச்சியத்தை நோக்கியோ அல்லது −∞ நோக்கியோ இருக்கலாம். + +ஒரு முழுவெண்ணை மற்றொரு முழுவெண் சரியாக வகுக்குமா இல்லையா என்பதனை வகுத்தல் விதியைக் கொண்டறியலாம். + +ஒரு விகிதமுறு எண்ணை மற்றொரு விகிதமுறு எண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு விகிதமுறு எண்ணாகும் (வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது). விகிதமுறு எண்கள் "p"/"q" , "r"/"s" இரண்டின் வகுத்தல் வரையறை: + +"p" , "q" , "r" , "s" நான்கும் முழுஎண்கள்; இந்நான்கில் "p" மட்டுமே பூச்சியமாக இருக்க முடியும். வகுத்தல், பெருக்கலின் எதிர்மாறு என்பதை இவ்வரையறை உறுதிப்படுத்துகிறது. + +ஒரு மெய்யெண்ணை மற்றொரு மெய்யெண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு மெய்யெண்ணாகும் (வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது). +மெய்யெண் வகுத்தலின் வரையறை: + +எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுப்பது (வகுஎண் பூச்சியம்) என்பது வரையறுக்கப்படவில்லை. ஏனெனில் எந்தவொரு முடிவுறு எண்ணாலும் பூச்சியத்தைப் பெருக்கினாலும் கிடைக்கும் பெருக்குத்தொகை பூச்சியமே ஆகும். பெரும்பான்மையான கணிப்பான்களில் பூச்சியத்தால் வகுத்தலை அழுத்தினால் ‘பிழை’ என்ற செய்தியே கிடைக்கும். + +ஒரு சிக்கலெண்ணை மற்றொரு சிக்கலெண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு சிக்கலெண்ணாகும் (இதில் வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது). + +சிக்கலெண் வகுத்தலின் வரையறை: + +"p", "q", "r", "s" நான்கும் மெய்யெண்கள்; "r" , "s" இரண்டுமே பூச்சியமாக இருக்கக் கூடாது + +போலார் வடிவில் தரப்படும் சிக்கலெண் வகுத்தல் வரையறை மேலுள்ள வரையறையை விட எளிய வடிவிலமையும்: + +இதிலும் "p", "q", "r", "s" நான்கும் மெய்யெண்கள்; "r" , "s" இரண்டுமே பூச்சியமாக இருக்கக் கூடாது + +ஒரு களத்தில், ஒரு மாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலை வரையறுக்க முடியும். முழுஎண்களின் வகுத்தலைப் போன்றே பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலும் மீதியைக் கொண்டிருக்கும். பல்லுறுப்புக்கோவை நெடுமுறை வகுத்தல் அல்லது தொகுமுறை வகுத்தல் முறைகளில் பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலைக் கைமுறை வழியில் செய்யலாம். + +இரு அணிகளின் வகுத்தல் வரை��றை: + +"A" , "B" இரு அணிகள் எனில்: + +இதில், = "B" இன் நேர்மாறு அணி + +அணிப் பெருக்கலுக்குப் பரிமாற்றுத்தன்மை கிடையாது என்பதால் "A" / "B" , "A" \ "B" இரண்டும் சமமில்லை. + +இடது வகுத்தல் அல்லது பின்சாய்கோட்டு வகுத்தலின் வரையறை: + +இந்த இடது வகுத்தல் நன்கு வரையறுக்கப்பட்டதாக இருப்பதற்கு கண்டுபிடிக்கக் கூடியதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். + +வலது வகுத்தல் அல்லது சாய்கோட்டு வகுத்தலின் வரையறை: + +இந்த வலது வகுத்தல் நன்கு வரையறுக்கப்பட்டதாக இருப்பதற்கு கண்டுபிடிக்கக் கூடியதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். +மேலும் "A" , "B", "C" மூன்று அணிகள் எனில்: + + , ஆகிய இரண்டும் அல்லது ஏதாவது ஒன்று காணமுடியாததாய் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, அணிகளின் வகுத்தல் போலி நேர்மாறு கொண்டு வரையறுக்கப்படுகிறது. + +இதில் , இரண்டும் முறையே "A" , "B" இன் போலிநேர்மாறுகள். +formula_31 அணியின் போலி நேர்மாறு, formula_32 கீழ்வரும் நிபந்தனைக்களுட்பட்ட அணியாகும். + +இரு சார்புகளின் வகுத்தலாக அமையும் சார்பின் வகையிடல், வகையிடலின் வகுத்தல் விதி மூலம் செய்யப்படுகிறது: + + + + + + +தி. வே. கோபாலையர் + +தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1926 - ஏப்ரல் 1, 2007) ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர். + +திருப்பனந்தாள் கல்லூரி (1946-1950), திருவையாறு கல்லூரி (1965-1979), பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் புதுவை மையம் [EFEO] (1979-2007) முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். +இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். + +தி.வே. கோபாலையரின் பெற்றோர் வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர். கோபாலையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. பள்ளியிறுதி வகுப்பினை கோபாலையர் 1940 இல் நிறைவு செய்தார். 1945 இல் தமிழ் வித்த��வான் தேர்வில் தேறி முதல் தகுதியாக ஆயிரம் உரூபா பரிசு பெற்றார். 1951 இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று இலாசரசு பதக்கம் பெற்றவர். 1953 இல் பண்டிதம் தேறி முதல் தகுதியாக 100 உருபா பரிசு பெற்றவர். பி.ஓ.எல். (சிறப்பு) 1958 இல் முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர். தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர். சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர். + +15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். (பேராசிரியர் தா.ம. வெள்ளை வாரணம், முனைவர் கு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள்). 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் (EFEO) தம் ஆய்வுப்பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை மிகச்சிறப்பாகச் செய்தவர். + +தி.வே. கோபாலையர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுடன் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். பல ஊர்களில் தமிழ் நூல்களைச் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அறிமுகம் செய்தவர். பல இதழ்களில், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த புலமையையும் நினைவாற்றலை யும் வெளிப்படுத்திக் கற்றவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியவர். + +தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். + +தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு திருச்சி, திருவரங்கத்தில் தம் 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார். + + + + + + + + + + + +வடிவமைக்கப்பட்ட மொழிகள் + +வடிவமைக்கப்பட்ட அல்லது கலையிடை மொழி, என்பது "வடிவ மொழி" என்றும் அறியப்படுகிறது."வடிவ மொழி" என்பது ஒரு வகையான மொழி. இதன் உச்சரிப்பு, இலக்கணம் மற்றும் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுவதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்கையாக பண்பாட்டைச் சாராமல் வேறுபடுகிறது.இம்மொழிகளை உருவாக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.மனித தகவல் தொடர்பு, குறியீட்டிற்காகவும், அறிவியல் மற்றும் வடிவமைக்கப்பட்ட உல��ம் பற்றிய வாழ்க்கை கண்ணோட்டத்திற்க்காகவும் உருவாக்கப்படுகின்றன.மொழி ஆராய்ச்சிக்காகவும், ஒருவருடைய மொழியார்வத்தை நிறைவு செய்யவும்,மொழி சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. +நிர்ணய மொழி என்ற சொல் சில சமயம் அனைத்துலக தனியுரு மொழியை குறிக்கிறது.ஒரு சிலர் செயற்கை என்ற சொல்லாட்சியை ஒப்புக்கொள்வது இல்லை. Esperanto என்ற மொழியை பயன்படுத்துபவர்கள் செயற்கை என்ற சொல்லாட்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. நிர்ணய மொழி என்று அழைக்கப்படும் போது வடிவமைக்கப்பட்ட மொழி என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிலசமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா இன்டர்லிங்குவா இது இயற்கையாக கிடைக்கப்பெரும் சொற்க்களையும் ,பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. + +மொழிவடிவமைப்பு-ஓவியம் ,இசை,இன்டீரியல் டெகரேஷன், சமையல் போன்று ஒரு கலைதான்.உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் ஈடுபட்டுள்ளனர்.மொழிவடிவமைப்பு மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை கொண்டு மொழி வடிவமைப்பாளர்கள் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள்.இவர்களில் பலர் ஊடகங்களுக்கான மொழிவடிவமைப்பில் உதவுகிறார்கள்.பல ஆங்கிலப் படங்கள் இவர்களின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது, இது படங்களில் வேற்றுகிரக வாசிகள் பேசுவதாகவும்,வேற்றுலக பின்புறத்திலும் ஒரு வேறுபட்ட நடைமுறையில் காணப்படாத மிருகங்கள் பேசுவதாகவும் காட்ட பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவிலும் சில படங்களில் பொருளற்றுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்லாயிரக்கணக்கான வடிவ மொழிகள் புழக்கத்தில் உள்ளன. + +மொழிவடிவமைப்பாளர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல மொழிகளை தெரிந்தவர்களாக உள்ளனர். இவற்றில் பல யாருக்கும் தெரிவதில்லை,மொழியை உருவாக்கியவருக்கும்,அவரது நண்பர்கள் உறவினர்கள் சிலருக்கு மட்டும் தெரியலாம்.சிலர் தம் குழந்தைகளுக்கு அவற்றை பயிற்றுவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சொற்கள் சில சமயம் அவருடைய முதல் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. + +இசை குறியீடுகளை குறிக்கும் மொழி, சுருக்க குறியீட்டு மொழி, பயடுவடிவமொழி என்பன அனைத்தும் வடிவமைக��கப்பட்ட மொழிகளே.மேலும் பல வகைகளில் அறிவியல் மற்றும் கணினி சம்பந்தப்பட்டவைகளில் இது வடிவமொழி என்று உணராமலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.புரோகிராமிங் மொழிகளுக்கான சின்டாக்ஸ் வடிவமைக்கப்பட்ட மொழிவகையை சார்ந்ததாகும்.அது பயன்பாட்டில் இருக்கும் வரையில் பரவலாக அறியப்படும்.அதன் பின் அதை கற்றுக்கொள்ள யாரும் முன் வருவதில்லை,புதிய சின்டாக்ஸ் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. +இந்தியாவிலும் பல வடிவமொழிகள் புழக்கத்தில் உள்ளன.அவற்றை பற்றி அறிய அவற்றுள் சில இங்கு தொகுக்கப்பட்டுள்ளது + + + + + +மகேல ஜயவர்தன + +தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன (Denagamage Praboth Mahela de Silva Jayawardene (;(பிறப்பு:மே 27, 1977), என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு மட்டையாளராக கருட்ர்ஹப்படுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 374 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வலதுகை மட்டையாளர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மட்டையாளர்களின் மிகச் சிறந்த போட்டியாக இது கருதப்படுகிறது. + +1997 ஆம் ஆண்டில்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இலங்கையில் நடந்த தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார். + +ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்கு இலங்கை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மற்ற மூன்று வீரர்கள் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்சான் ஆவர். ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை 3 ஆவது இலக்கிற்க்கு 5826 ஒட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர். இந்தச் சாதனையை காலி பன்னாட்டு அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இவரும் சகவீரரான குமார் சங்கக்காராவும் இணைந்து 5890 ஒட்டஙகள் எடுத்து தகர்த்தனர். இந்த மைதானத்தில் இவர் விளையாடிய இறுதிப் போட்டி இதுவாகும். இந்த இணையின் 222 ஓட்டங்களில் ஜயவர்தனே 56 ஓட்டங்கள் எடுத்தார். + +2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 ,2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார் + +2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தலைவராக இவரைத் தேர்வு செய்தத்கு. மேலும் 2007 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் வீரர்களை "ரன் அவுட் இ செய்தவர்" எனும் சாதனையைப் படைத்தார். + + + + + +உபுல் தரங்க + +வருசவிதான உபுல் தரங்க (பிறப்பு: பெப்ரவரி 2, 1985 பலபிட்டியா), பொதுவாக உபுல் தரங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் குச்சக்காப்பாளர் ஆவார். இவர் 2005 யூலை மாதம் முதலாவதாக இலங்க அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். இலங்கை முதல்தர துடுப்பாட்ட கழகமொன்றான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கு 15 வயது முதலே விளையாடிவந்த உபுல் இலங்கை நாட்டு அணிக்கு விளையாட முன்னர் இலங்கை துடுப்பாட்ட நாட்டு அணியின் 15 வயதுக்கு கீழ், 17 வயதுக்கு கீழ் 19 வயதுக்கு கீழ் இலங்கை A அணிகளுக்கு விளையாடி வந்துள்ளார். + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 + +இதுவரை விளையாடியுள்ள ஒர��நாள் சர்வதேச போட்டிகள்: 112 +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 187 + + + + + +அம்மி + +அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். இது தொல்பழங்காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கற்கருவி ஆகும். அம்மியும் குழவியும் பயன்படப் பயன்பட மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு அம்மி பொளிதல் என்று பெயர். அம்மியையும் குழவியையும் இவ்வாறு பொளிதலால் உராய்வு நன்றாக ஏற்பட்டு, பொருட்கள் நன்றாக அரைபடும். தமிழகத்தில், குறிப்பாக இது சிற்றூர்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது. + +ஓர் அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். + +தமிழகக் கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஓர் அம்மியும் ஓர் ஆட்டுக்கல்லும் வைக்கப்படும். தேவையானவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். + + + + + + +தேங்காய் + +தேங்காய் என்பது தென்னைமரத்தின் "பழம்" ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் "காய்" என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை "நெற்று" என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர். + +தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. + +தேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதை குழம்பில் மசாலாவுடன் சேர்த்து சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது. + + + + +அப்பளம் + +அப்பளம் ("Papadum") உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் உளுந்தினால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான ஒரு துணை உணவாகும். அப்பளம் உளுந்துமாவு கொண்டு வட்டமாகவோ அல்லது விருப்பப்பட்ட வடிவங்களிலோ தேய்க்கப்பட்டு பின் நன்றாகக் காய வைக்கப்படுகிறது. பிறகு தேவையான போது எண்ணெயில் அல்லது அடுப்பில் நேரடியாகப் பொரித்து எடுக்கப்பட்டு துணை உணவாகச் சாப்பிடப்படுகிறது. + +அப்பளித்துருட்டுபவது அப்பளம் என்கிறார் தேவநேயப் பாவாணர். அப்பளித்தல் = சமனாக தேய்தல் + + + + +இளநீர் + +இளநீர் () ("coconut water") தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழு வளர்ச்சி பெற்ற தேங்காயாக மாற சுமார் 1 ஆண்டு ஆகும். ஆனால் சுமார் 6 மாதமாகி முழு வளர்ச்சி பெறாத நிலையில் இளந்தேங்காய் இளநீருக்காக பறிக்கப்படுகிறது. + +இளந்தேங்காயிலிருந்து இளநீர் பெறப்படுவதால் இளந்தேங்காய் நீர் மருவி இளநீர் என பெயர் பெற்றது. செவ்விளநீர் என்பது செந்நிற இளந் தேங்காயில் இருந்து பெறப்படுகிறது. சூரிய செவ்விளநீர் அரிதாக கிடைக்கும் ஓரு வகை தென்னையில் இருந்து பெறப்படுகிறது. + +இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. + + + + +கே. எஸ். சிவகுமாரன் + +கே. எஸ். சிவகுமாரன் (பி. அக்டோபர் 1, 1936) ஈழத்து எழுத்தாளரும், கலை, இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். + +மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். + +இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார். இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். + +ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் எழுதுகிறார். "ரேவதி" என்ற புனைபெயரிலும் திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இவர் எழுதி வந்திருக்கிறார். 1959 இல் "நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம்" என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஜீவநதி சஞ்சிகை கே. எஸ். சிவகுமாரனுடைய பவள விழாச் சிறப்பிதழாக ஓர் இதழை வெளியிட்டுள்ளது. + +இலங்கை வானொலி தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளரான கே. எஸ். சிவகுமாரனுக்கு சென்னையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. + +சென்னை பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இலங்கை வானொலி தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பிரபல தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும��ன வி. கே. டி. பாலன், மற்றும் இலங்கை வானொலி மேனாள் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பார், ஈழத்து எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் துறைத்தலைவர் கே. எஸ். சிவகுமாரனுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் ஒன்றையும் வழங்கினார். + + + + + + +மாநிலம் + +மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும். + + + + +மார்ட்டின் லூதர் கிங் + +மார்டின் லூதர் கிங், இளையவர் ("Martin Luther King, Jr."; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். +அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். +பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. +அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். + +மார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார். இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார். + +மார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார். + +தொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார். தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார். +அட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார். + +மார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார். இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார். + +கிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது. + +மேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் " கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன." +(Matthew 26:52). + +காந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப���ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது " இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்., + +காந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது"(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர். + +ஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள் மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார். மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார். 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார். ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார். + +மார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம். + +மார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின. மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும். + +மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். + +டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவத��� திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. + + + + + + + + + + +குமார் சங்கக்கார + +குமார் சொக்சானந்த சங்கக்கார (Kumar Chokshanada Sangakkara (Sinhalese: කුමාර සංගක්කාර;பிறப்பு: 27 அக்டோபர் 1977, மாத்தளை) அல்லது சுருக்கமக குமார் சங்கக்கார என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும் ,தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார். இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் "வோக்விசயர்" மாகாண அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான "நொன்டிஸ்கிரிப்ட்" துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். + +இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார். + +சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார். + +2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார். + +தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். "எல் ஜி மக்கள் விருதினை" 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது. + +தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார். + +பிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார் + +■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் + +■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர் + +■சச்சின் டெண்டுல்கர் இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர் + +பின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும் + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30 + +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333 + +ஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்தின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார். + + + + + +சாமர சில்வா + +லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடு���்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார். + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64 +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201 + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64 +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201 + + + + +பர்வீஸ் மஹ்ரூப் + +முகமது பர்வீஸ் மவுரூவ் (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக பர்வீஸ் மவுரூவ் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான புலூம்பீல்ட் துடுப்பாட்ட மற்றும் விளையாட்டுக் கழகம், கொழும்பு துடுப்பாடக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். சமிந்த வாசுடன் இணைந்து இலங்கையின் மட்டையாளர் வரிசயில் முக்கிய சகலதுறை ஆட்டக்காராக விளங்குகிறார். + + + + +தில்லார பர்னான்டோ + +கொன்கெனிகே ரந்தி தில்லார பர்னான்டோ (பிறப்பு:ஜூலை 19, 1979, கொழும்பு) அல்லது சுருக்கமாக தில்லார பர்னான்டோ இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது மந்த கதியிலான பந்து பிரசித்தமானதாகும். மந்த கதியிலான பந்தை வீசும் போது விரல்களை விரித்தபடி வீசும் பாணி இவருக்கு புகழ் சேர்த்துள்ளது. 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை விளையாடினார். + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 16 + +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 141 + +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 207 +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 16 +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 141 +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 207 + + + + +இதயக்கமலக் கோலம் + +இதயக்கமலக் கோலம் என்பது, புள்ளிகள் இட்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். புள்ளி���ள் இட்டபின் ஓரிடத்தில் தொடங்கிக் கையை எடுக்காமலே இக் கோலத்தை வரைந்து முடிக்கலாம் என்பது இதன் சிறப்பு ஆகும். இதனால் இக் கோலத்துக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகத் தமிழரில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள். இக் கோலத்தை இறைவனின் இதயமாகக் கருதும் அவர்கள் வீடுகளில் பூசை அறைகளில் இதனை வரைவது வழக்கம். இக் கோலத்தைக் கையெடுக்காமல் வரைந்தால், நினைத்தது நிறைவேறும் எனக் கருதுபவர்களும் உள்ளனர். + +ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி ஆறு புள்ளிகள் கொண்ட வரிசைகள் எட்டுத் திசைகளிலும் இடப்படுகின்றன. இவ்வாறு இடப்படும் 41 புள்ளிகளைக் குறித்த முறையில் வளைகோடுகளால் இணைப்பதன் மூலம் இக் கோலம் பெறப்படுகின்றது. + + + + +நுவான் குலசேகர + +குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர (பிறப்பு:ஜூலை 22, 1982 நிட்டம்புவை) அல்லது சுருக்கமாக நுவன் குலசேகர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட்ட கழகத்துக்கும், காலி துடுப்பாட்டக் கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். குசேகர தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை நவம்பர் 18, 2003 அன்று இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தம்புளையில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை ஏப்ரல் 4 2005 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் விளையாடினார். + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2 + +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83 +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 161 + +இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2 +இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83 + +இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 161 + + + + + +மாலிங்க பண்டார + +சர்த்த மாலிங்க பண்டார (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக மாலிங்க பண்டார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகம���ன காலி துடுப்பாட்ட க் கழகம், மற்றும் இங்கிலாந்தின் குளுசெஸ்டர்சேயார் கவுண்டி துடுப்பாட்டக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். பண்டார தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை ஜனவரி 6, 2006 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் வெளிங்டன் நகரில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மே 27 1998 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்பில் விளையாடினார். + + + + + +டொம் மூடி + +தோமஸ் மேசன் மூடி(பிறப்பு:அக்டோபர் 2, 1965 அடிலேட்), ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்பு மட்டையாளரும் தற்போதைய இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனரும் ஆவார். + + + + +ஞாயிறு (கிழமை) + +ஞாயிற்றுக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். சனிக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை வரும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. + +உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் ஆகும். + + + + +நீர் சுழற்சி + +நீர் சுழற்சி "(Water cycle}" என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக இயங்கும் நீரின் இயக்கத்தைக் குறித்த செயல்பாடாகும். ஐதரலாசிக்கல் சுழற்சி ஐதரலாசிக் சுழற்சி என்ற பெயர்களாலும் நீரின் சுழற்சி அறியப்படுகிறது. பூமியிலுள்ள நீரின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகிறது. ஆனால் பனி, நன்னீர், உப்பு நீர் மற்றும் வளிமண்டல நீர் ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களில் அதை பகிர்ந்து வைத்தல் என்பது பரந்த அளவிலான காலநிலை மாறுபாடுகளைச் சார்ந்துள்ளது. ஆற்றிலிருந்து கடலுக்கு அல்லது கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு நீர் செல்வதைப் போல ஒரு நீர்தேக்கத்திலிருந்து மற்றொரு நீர்தேககத்திற்கு நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆவியாதல், ஆவிசுருங்குதல், வீழ்படிவாதல், ஊடுருவல், மழைபொழிவு, மேற்பரப்பு ஓட்டம், துணைமேற்பரப்பு ஓட்டம் போன்ற இயற்பியல் செயல்பாடுகள் நீரின் இயக்கத்திற்கு உதவிபுரிகின்றன. இவ்வாறான இயக்கத்தின் போது நீரானது நீர்மம், திண்மம், வாயு என வெவ்வேறான வடிவங்களில் செல்கிறது. +நீர் சுழற்சியின் போது ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது. இதனால் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீர் ஆவியாகும் போது அது தன் சுற்றுப்புற சூழல்களில் இருந்து வெப்ப ஆற்றலை எடுத்துக் கொண்டு சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக்குகிறது. அதே போல நீரானது உறையும் போது வெப்பத்தை உமிழ்ந்து சுற்றுச்சூழலை வெப்பமாக்குகிறது. இந்த வெப்பப் பரிமாற்றம் காலநிலை மாற்றத்தில் முக்கியபங்கு வகிக்கிறது. + +சுழற்சியின் நீராவியாகும் கட்டத்தில் நீரானது சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நன்னீராக நிலப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது. திரவ நீர் மற்றும் பனி போன்றவை மண்ணில் ஓடுவதால் கனிமங்கள் உலகெங்கும் கடத்தப்படுகின்றன. மேலும் இது அரிப்பு மற்றும் படிவு உட்பட்ட செயல்முறைகள் மூலம். புவியின் புவியியல் அம்சங்களை மாற்றியமைப்பதிலும் ஈடுபடுகிறது. பூமியின் பெரும்பாலான உயிர்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கும் நீரின் சுழற்சி அவசியமாகிறது. + +நீர் சுழற்சி சூரியனால் இயக்கப்படுகிறது. அது பெருங்கடல் மற்றும் கடல் போன்ற நீர்தேக்கங்களிலுள்ள நீரை சூடாக்குகிறது. நீர் நீராவியாக மாறி காற்றில் கலக்கிறது. சிறிதளவு பனி மற்றும் பனிக்கட்டி போன்றவையும் பதங்கமாகி நேரடியாக நீராவியுடன் கலக்கின்றன. மண்ணிலுள்ள தாவரங்களும் அங்குள்ள நீரை நீராவியாக்குதல் செயல்முறை மூலம் நீராவியை உருவாக்கி காற்றில் கலக்கின்றன. வளிமண்டலத்தில் நைட்ரசன் (N2) மற்றும் ஆக்சிசன் (O2 ) வாயுக்கள் அதிக அளவில் இருப்பதால் நீராவியின் நீர் மூலக்கூறுகள் (H2O) குறைந்த அளவு மூலக்கூற்று நிறையைக் கொண்டுள்ளன. எனவே இதன் அடர்த்தி குறைவானதாக உள்ளது. குறிப்பிடத்தக்க இந்த அடர்த்தி வேறுபாடு காரணமாக ஈரக்காற்று மிதக்குந்தன்மை பெற்று மேலே உயர்ந்து மிதக்கிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறைந்து வாயு விதிகளின் படி வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. +வெப்பநிலை குறைவால் நீராவி சுருங்கி சிறிய சிறிய திரவ நீர்த் துளிகளாக மாறுகிறது. இவை காற்றை விட கனமானதாக இருக்கும், மேலும் அதை தாங்கும் ஒரு மேம்போக்கான ஆதரவு இல்லாததால் கீழே விழுகிறது. வளிமண்டலத்தில் ���வ்வாறு அதிக அடர்த்தியாகச் சேர்ந்து பெரிய இடத்தை ஆக்ரமித்து திரளும் நீர் துளிகளை மேகங்களாகக் காண முடிகிறது. இத்தகைய மேகங்கள் சில சமயங்களில் பூமியின் தரைமட்டத்திற்கு அருகில் ஒடுக்கமடைந்து நீராக மாறுகிறது. இதையே மூடுபனி என்கிறோம். + +வளிமண்டல நீர் சுழற்சியால் நீராவியானது உலகெங்கும் நகர்கிறது. மேகம் துகள்கள் மோதுகின்றன வளகின்றன. மற்றும் மழை போல மேல் வளிமண்டல அடுக்குகளில் வீழ்படிவாக விழுகின்றன. சில பொழிவுகள் பனி அல்லது ஆலங்கட்டி மழையாகப் பெய்கின்றன. பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளாக திரள்கின்றன. உறைந்த நீரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இவற்றால் சேமிக்க முடியும். விண்ணில் திரண்ட மேகங்களில் பெரும்பாலானவை மீண்டும் நீராக கடலுக்கு அல்லது நிலப்பகுதிக்கு மழையாக திரும்புகின்றன. நில மேற்பகுதியில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. பின்னர் சிற்றோடைகள், அருவிகள், ஆறுகள் வழியாகப் பாய்ந்து மீண்டும் கடலை நோக்கி இந்நீர் செல்கிறது. சிறுபகுதி நீர் நிலத்தடி நீராகவும் ஏரிகள் அணைகள் போன்ற நீர்த்தேக்கங்கங்களில் நன்னீராகச் சேமிக்கப்படுகிறது. நிலத்தின் மேற்பகுதியில் ஓடும் தண்ணீர் முழுவதும் ஆறுகள் வழியாகப் பாய்ந்துவிடுவதில்லை. அந்நீர் ஊடுருவல் மூலம் நிலத்தடிக்குள்ளும் செல்கிறது. சிறிதளவு நீர் நிலத்தடியில் மிகுந்த ஆழத்திற்கும் ஊடுருவிச் சென்று நீர்நிலைகளை உருவாக்குகிறது. இங்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு நன்னீராகவே இருக்கிறது. நிலப்பரப்பிற்கு சற்று கீழே சேகரமாகும் தண்ணீர் ஊற்றாகச் சுரந்து மீண்டும் புவிமேற்பரப்பிலுள்ள சமவெளிகளின் நீர்நிலைகளை அடைந்து கடலை நோக்கி ஓடுகிறது. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் பரிமாற்றம் புவியில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இருதியாக கடலுக்குச் செல்லும் தண்ணீர் நீர் சுழற்சியை தொடர்கிறது. + +விண்ணில் உள்ள நீராவி குளிர்ச்சியடைந்து பெரும்பகுதி மழையாக புவியின் மேற்பரப்பை அடைகிறது. பனி, பனிக்கட்டி, ஆலங்கட்டி, மூடுபனி, சொட்டுநீர், போன்ற வடிவங்களாகவும் அந்நீர் புவியை அடைகிறது . நிலப்பகுதியில் மழையாகப் பொழியும் நீரின் அளவு ஆண்டுக்கு 107,000 கி.மீ3 (26,000 கன அடி மைல்) ஆகும். பனியாகப் பொழியும் நீரின் அளவு 1,000 கி.மீ3 (240 கன மைல்) மட்டுமே ஆகும் . +உலகப் பொழ���வில் 78% கடற்பரப்பின் மேலேயே பொழிகிறது . + +தரையில் விழுவதற்குப் பதிலாக கவிந்து கிடக்கும் தாவர இலைகளால் குறுக்கிடப்படும் மழைப்பொழிவு இறுதியில் தரையில் விழாமலேயே வளிமண்டலத்திற்கு மீண்டும் ஆவியாகிச் செல்கிறது. + +பனி உருகுதல் காரணமாகவும் வெள்ளப்பெருக்கு உண்டாகி நிலப்பரப்பில் நீர் ஓடுவதுண்டு. + +நில மேற்பரப்பிலும் கால்வாய்கள் வழியாகவும் பல்வேறு வகை முறைகளில் நீர் பாய்ந்து சென்றாலும் தண்ணீர் நிலத்தடியில் கசிந்து ஒழுகுகிறது. காற்றில் ஆவியாகிறது. ஏரிகளிலும் நீர்தேக்கங்களிலும் சேமிக்கப்படுகிறது. விவசாயத்திற்காகவும் மனித பயன்பாட்டிற்காகவும் பிரித்தெடுக்கப்படுகிறது. + +தரையில் இருந்து நிலத்தடிக்குள் ஊடுருவிய நீர் மண்ணின் ஈரப்பதம் அல்லது நிலத்தடி நீர் ஆக மாறுகிறது . இருப்பினும், அனைத்து மண் ஈரப்பதமும் நிலத்தடிநீர் புதுப்பித்தலுக்கு அல்லது தாவர நீர்போக்குக்கு சமமாக கிடைக்கவில்லை என்று நீரில் நிலைத்திருக்கும் ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. + +நிறைவுறா மண்டலங்கள் மற்றும் நீர்நிலைகளின் வழியாக நிலத்தடியில் பாயும் வெள்ள நீர் ஊற்று மூலமாகவோ குழாய் மூலமாகவோ புவி மேற்பரப்புக்கு மீண்டும் வந்து சேர்ந்து பின்னர் கடலைச் சென்று சேர்கிறது. புவியீர்ப்பு அல்லது ஈர்ப்பு விசை அழுத்தத்தினால் நிலத்திற்குள் ஊடுருவிய நீர் அவ்விடத்தைவிட குறைந்த உயரம் கொண்ட நிலப்பகுதி வழியாக மேற்பரப்புக்குத் திரும்பச் செலுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் மெதுவாக நகர்ந்து நீர்நிலைகளை மெதுவாக நிரப்புகிறது, எனவே அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகநிலத்தடியில் நீராக இருக்கும். + +நீர்மநிலையில் உள்ள நீர் வாயு நிலைக்கு மாறுவதை ஆவியாதல் என்கிறோம். நிலமேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீர். நிலத்தடிநீர். வளிமண்டலத்தில் இருக்கும் நீர் முதலியன ஆவியாகின்றன. ஆவியாதலுக்கு பெரும்பாலும் சூரியனின் கதிர்வீச்சு ஆற்றல் உதவுகிறது. தாவரங்கள் மூலமாகவும் நீராவிப்போக்கு நிகழ்கிறது. ஆண்டுக்கு மொத்தமாக சுமார் 505,000 கி.மீ3 (121,000 கன மைல்) நீரின் அளவு ஆவியாகிறது. அதில் , 434,000 கிமீ 3 (104,000 கன மைல்) நீர் கடலில் இருந்து மட்டுமே ஆவியாக மாறுகிறது. உலக அளவில் ஆவியாகும் நீரில் 86% கடலி��் மட்டுமே நிகழ்கிறது + +நேரடியாக நீர்மநிலையிலிருந்து தண்ணீர் ஆவி நிலைக்கு மாறுவதை பதங்கமாதல் என்கிறோம் . + +நீராவி நேரடியாக வாயி நிலையிலிருந்து திண்ம நிலைக்கு செல்வது இவ்வாறு குறிக்கப்படுகிறது. + +வளிமண்டலத்தில் தண்ணீர் நகரும் விதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது . கிடை அசைவு இல்லாவிட்டால் கடலிலிருந்து ஆவியாகும் நீராவி நிலப்பகுதியில் படிவாகாது. + +வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது ஒடுக்கமடைந்தால்தான் நீர்மநிலை நீர்த்துளிகளாக மாறி மூடுபனி, மேகம் என மாற்றமடைகிறது . + +தாவரங்களிலிருந்தும் மண்ணிலிருந்தும் நீராவி காற்றில் கலப்பது நீராவிப் போக்கு எனப்படும். + +ஈர்ப்பு விசையால் நிலத்தடி நீர் மண் மற்றும் பாறைகளில் இருந்து செங்குத்தாக வெளியேறுகிறது. + +புவித்தட்டுகள் நகர்வினால் உள்ளிறங்கும் நீர் எரிமலை வெடிப்புகளால் மீண்டும் புவி மேற்பரப்பை அடைகிறது. +நீர் சுழற்சியில் இத்தகைய செயல்முறைகள் பலவும் இடம்பெறுகின்றன. + +நீரியல் சுழற்சியின் ஒரு தேக்கத்தில் அல்லது நீர்நிலையில் "தேங்கி இருத்தல் நேரம்" என்பது அந்த்த் தேக்கத்தில் நீர் மூலக்கூறு செலவிடும் அல்லது தேங்கியிருக்கும் நேரமாகும்மிது அந்த தேக்கத்தில் தேங்கியிருக்கும் சராசர் அகவை ஆகும். + +நிலத்தடி நீர் புவியை விட்டு வெளியேறும் முன் மண் அடியில் 10,000 ஆண்டுகள் தேங்கியிருக்கிறது. இத்தகைய பழைய நிலத்தடி நீர் புதைபடிவ நீர் எனப்படுகிறது. மண்ணில் தேங்கியுள்ள நீர் புவியில் மெல்லிய படலமாகப் பரவியிருப்பதாலபது அங்கே சிறிதுகாலமே அங்கே இருக்கும். இது வேகமாக ஆவியாதல், நீராவிப்போக்கு, ஓடை பாய்வு, நிலத்தடி நீராக ஊறல் வழியாக தீர்கிறது. ஆவியானதும் அது செறிந்து மழையாகப் பொழிவதற்கு முன் அதன் வளிமண்டல தேங்கியிருப்பு நேரம் 9 நாட்கள் ஆகும். + +அண்டார்ட்டிகா, கிரீன்லாந்து ஆகிய பெரும் பனிப்பாளங்கள் நெடுங்காலத்துக்குப் பனியைத் தேக்கிவைக்கிறது. அண்டார்ட்டிகா பனி அண்மைக்கு முன் 800,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். என்றாலும் இதன் சராசரி தேங்கியிருப்பு நேரம் மிகவும் குறுகியதாகும். + +நீரியலில், தேங்கியிருப்பு நேரம் இருவழிகளில் மதிப்பிடப்படுகிறது. மிகவும் பொதுவான வழிமுறை பொருண்மை அழியாமை நெறிமுறையைப் பன்பற்றுகிறது. இது ஒரு தேக்கத்தில் உள்ல நீரளவு நிலையானதாக ஜகொள்கிறது. இம்முறையில், தேங்கியிருப்பு நேரம் தேக்கத்தின் பருமனளவை தேக்கத்துக்குள் நீர் நுழையும் வீதம் அல்லது தேக்கத்தில் இருந்து வெளியேறும் வீதத்தால் வகுத்துப் பெறப்படுகிறது. கருத்தளவில், நீர் வெளியேறாதபோது தேக்கம் வெற்றாக இருந்து முழுமையாக நிரம்ப பிடிக்கும் நேரத்துக்குச் சமமாகும் அல்லது நீர் நுழையாதபோது முழுமையாக நீர் நிரம்பிய தேக்கம் வெறுமையாகப் பிடிக்கும் நேரத்துக்குச் சமமாகும். + +தேங்கியிருப்பு நேரத்தை மதிப்பிடும் மற்றொரு வழிமுறை, நிலத்தடி நீரின் தேங்கியிருப்பு நேரத்தைக் கண்டுபிடிக்க பரவலாகப் பயன்படுகிறது. இம்முறை isotopic நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இம்முறை isotope நீரியல் துணைப்புலத்தில் பயன்படுகிறது. + +பின்வரும் மாந்தர்செயல்பாடுகள் நீரியல் சுழற்சியில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. + +நீரியல் சுழற்சிக்குச் சூரிய ஆற்றல் பயன்படுகிறது. 86% அளவு புவிக்கோள ஆவியாதல் கடல்களிலேயே நிகழ்கிறது. இந்த ஆவியாதலால் கடல்களின் வெப்பநிலை குறைகிறது. இந்தக் குளிர்வைப் புறக்கணித்தால், பசுமையில்ல விளைவு 67 பாகை செல்சியசு அளவுக்கு வெப்பநிலையை உயர்த்தி மிகவும் சூடான புவிக்கோளத்தை உருவாக்கும். + +நீரக நீரின் பயன்பாடும் புதைபடிவ எரிபொருள் எடுக்க வெளியேற்றப்படும் நீரும் நீர்க்கோளத்தின் நீர் உள்ளடக்கத்தை கூட்டுகிறது. இது கடல்நீர் மட்டம் உயர்கிறது. + +பண்டைய காலத்தில் நீர்நிலையின் மீது நிலம் மிதப்பதாகக் கருதப்பட்டது. ஆறுகளீன் நீர் நிலத்துக்கு அடியில் இருந்து பெறப்படுவதாக கருதப்பட்டது. இந்த நம்பிக்கைக்கான சான்றை ஓமரின் நூல்களில் காணலாம்(கி.மு 800 ). + +பண்டைய அண்மைக் கிழக்கு நாட்டு எபிரேய அறிஞர்கள் ஆறுகள் கலைற் சென்று கலந்தாலும் கடல்கள் நிரம்புவது இல்லை என்பதை நோக்கீடாகப் பதிவு செய்துள்ளனர் (எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 1:7). சில அறிஞர்கள் இக்காலத்தில் நீரியல் சுழற்சி முழுமையாக அறியப்பட்டிருந்ததாக பின்வரும் பகுதியைச் சுட்டிக் காட்டுகின்றனர்: "காற்று தெற்கு நோக்கிப் போகிறது;பிறகு வடக்காகத் திரும்புகிறது; இது தொடர்ந்து சுழியாக சுழனல்கிறது; பின்னர் காற்று மீண்டு அதன் சுற்றோட்டங்களுக்கு ஏற்ப சுழற்சியை முடிக்கிறதுணனைத்து ஆறுகளும் ஓடிக் கடலில் கலக்கின்றன; ஆனால், கடலோ நிரம்புவதில்லை. அவை எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்புகின்றன" (எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 1:6-7, KJV). இந்நுலின் காலம் பற்றி முற்றமுடிந்த கருத்தெதையும் ஏற்கவில்லை; என்றாலும் இது தாவீதுக்கும் பாதுழ்சேவாவுக்கும் பிறந்த சாலமன் காலத்தது எனச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்; "அதாவது மூவாயிரம் ஆன்டுகளுக்கு முந்தையது எனச் சொல்கின்றனர்; இக்காலம் கி.மு 962-922 என குறைந்த அளவு ஏற்பு நிலவுகிறது. மேலும், முகில்கள் நிரம்பியுள்ளநிலையில்லவை புவியில் மழையாக பொழிவுற்று காலியாகின்றன(எக்லேசியாசுதெசு (Ecclesiastes) 11:3).னாதோடு, கி.மு 793-740 கால இடைவெளியில் ஓர் எபிரேய நெடுநோக்காளரான அமோசு, தண்ணீர் கடலில் இருந்து வருகிறது. அது மீன்டும் நிலத்தில் பொழிகிறது எனக் கூறியுள்ளார்ரமோசு (Amos) 5:8, 9:6). + +விவிலிய யோகாபு நூலில் (கி,மு 7 ஆம் நூற்றாண்டு-22 ஆம் நூற்றாண்டு காலத்தது), நீரியல் சுழற்சியின்போது மழைப்பொழிவு குறித்த விவரிப்பு உள்ளது; "ஏனெனில், அவர் மழையின் சிறுதுளிகளை உருவாக்குகிறார். அங்கிருக்கும் ஆவியளவுக்கு ஏற்ப அவை மழையாக பொழிகின்றன; முகிலும் இப்படி மழையைப் பேரளவில் தூய நீராக மாந்தன் மீது பொழிகிறது" (Job 36:27-28, KJV) என எழுதப்பட்டுள்ளது. + +மறுமலர்ச்சிக் காலம் வரை, ஆறுகளின் நீரோட்டம் தொடர்ந்து நிலவவும் நீர்ச்சுழற்சி முடிவுறவும் மழை மட்டுமே போதுமானதல்லவெனவும் கடல்நீர் நிலத்தடி நீராக மேலெழுவதுவே அதற்குக் காரணம் எனவும் கருதப்பட்டது. இந்தக் கண்ணோட்டத்தை இங்கிலாந்தின் பெர்தலோமியசும் (கி.பி 1240) இலியனார்தோ தா வின்சியும் (கி.பி 1500) அதான்சியசு கிர்ச்சரும் (கி.பி 1644). + +பெர்னார்டு பாலிசி முதன்முதலில் மழை மட்டுமே ஆறுகளின் நீரோட்ட்த்துக்குப் போதுமானதென வெளியிட்ட சிந்தனையாளர் ஆவார் (கி.பி 1580). இவர்தான் நீர்ச்சுழற்சி குறித்த புத்தியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவரது கோட்பாடு அறிவியலாக 1674 வரையில் நிறுவப்படவில்லை. இதை அறிவியல் முறையில் நிறுவியவராக பியேர் பெரவுல்ட் (அறிவியலாளர்) கருதப்படுகிறார்ரென்றாலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை முதன்மை அறிவியல் அறிஞர்களல் ஏற்கப்படவில்லை. + + + + + + + + +பறவைகள் பட்டியல் + +அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந |ப | ம | ய | ர | ல | வ + + + + + + + + + + + + + + + + + + + + +சக்த��� + +சக்தி என்ற தலைப்பினை தொடர்புடைய கட்டுரைகள்: + + + + + +வேதி வினை + +வேதி வினை "(Chemical reaction)" என்பது வேதிப்பொருட்களின் ஒரு தொகுதி வேறு வேதிபொருட்களின் தொகுதியாக மாற்றம் அடையும் செயல்முறை வேதிவினை எனப்படும் . அணுக்களுக்கு இடையில் வேதிப்பிணைப்புகள் உடையும் போதும், உருவாகும் போதும் எலக்ட்ரான்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் செயல் வேதிவினையில் உள்ளடங்குகிறது. இத்தகைய இடமற்றத்தின் போது அணுவின் உட்கருவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. வினையில் ஈடுபடும் தனிமங்களிலும் எந்தவிதமான மாற்றமும் நிகழ்வதில்லை. இச்செயல்முறை பெரும்பாலும் வேதிச்சமன்பாட்டின் மூலம் விவரிக்கப்படுகிறது. நிலையற்ற மற்றும் கதிரியக்கத் தனிமங்களின் வேதிவினையில் எங்கெல்லாம் மின்னணு மற்றும் அணுக்கரு மாற்றங்கள் இரண்டும் நிகழ்கிறதோ, அத்தகைய வினைகளை உள்ளடக்கிய வேதியியல் துணைப்பிரிவு அணுக்கரு வேதியியல் எனப்படுகிறது. + +வேதிவினையில் தொடக்கத்தில் ஈடுபடும் பொருள்கள் வினைபடு பொருள்கள் எனப்படுகின்றன. வேதிவினைகள் அனைத்திலும் ஒரு வேதிமாற்றம் நிகழ்தல் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது. இம்மாற்றம் வேதி வினையின் முடிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பொருட்கள் விளைகின்றன. இவை வினைபடு பொருட்களின் பண்புகளிலிருந்து வேறுபடுகின்றன. ஒரேபடிநிலையில் வினைபடு பொருட்கள் வினையில் ஈடுபட்டு இடைநிலை விளைபொருட்கள் எதையும் உருவாக்காமல் நேரடியாக வினைவிளை பொருட்களைக் கொடுத்தால் அவ்வினைகள் தொடக்க வினைகள் எனப்படும். சில வினைகள் இத்தகைய தொடக்க வினைகளுடன் தொடர்ச்சியாக மேலும் சில துணை-படிநிலைகளிலும் நிகழ்கின்றன. தொடக்க வினையில் தொடங்கி இறுதி வினைவிளை பொருள் உருவாகும் வரையிலான வினை நடவடிக்கைகளை துல்லியமாகக் கூறுதல் வினைவழிமுறை எனப்படுகிறது. வேதிவினைகள் வேதிச் சமன்பாடுகளால் விவரிக்கப்படுகின்றன, இச்சமன்பாடுகளில் வினைபடு பொருட்கள், வினை விளைபொருட்கள், சிலசமயங்களில் இடைநிலைப் பொருட்கள் மற்றும் வினைக்கான நிபந்தனைகள் முதலானவை இடம்பெறுகின்றன. + +கொடுக்கப்படும் வெப்பநிலை, அடர்த்தி ஆகியனவற்றுக்கு ஏற்ப வேதிவினைகளின் வினைவேகம் அடையாளப்படுத்தப்படுகிறது. குறிப்பாக வெப்பநிலை அதிக���ிக்க அதிகரிக்க வினைவேகம் அதிகரிக்கிறது. ஏனெனில் அணுக்களுக்கு இடையில் இருக்கும் பிணைப்புகளை உடைப்பதற்குத் தேவையான வினையூக்க ஆற்றலைப் பெற அதிக அளவு வெப்ப ஆற்றல் அவசியமாகும். + +வேதிச்சமநிலையை அடையும் வரை அல்லது வினை நிறைவடையும் வரை வேதிவினைகள் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ நிகழ்கின்றன. சமநிலையை அணுகுவதற்காக முன்னோக்கு திசையில் நிகழும் வினைகள் பெரும்பாலும் தன்னிச்சையான வினைகள் என விவரிக்கப்படுகின்றன, இவ்வினைகள் முன்னோக்கிச் செல்ல கட்டற்ற ஆற்றல் எதுவும் உள்ளிடத் தேவையில்லை. தன்னிச்சையற்ற வேதி வினைகள் முன்னோக்கி நிகழ ஆற்றலை உள்ளிட வேண்டியது அவசியமாகும். மின்கலனுக்கு மின்னேற்ற அதையொரு மின் ஆற்றல் மூலத்துடன் இணைப்பது அல்லது ஒளிச்சேர்க்கை மூலம் மின்காந்த கதிரியக்கத்தை சூரிய ஒளி வடிவில் ஈர்த்துக் கொள்வதும் உதாரணமாகும். + +தேவையான ஒரு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேதித் தொகுப்பு வினைகளில் பல்வேறுவகையான வேதிவினைகளை ஒன்றாக இணைத்தும் தொகுக்கப்படுகின்றன. உயிர்வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினையின் விளைபொருள் அடுத்தவினையின் வினைபடு பொருளாகச் செயல்படும்படியாக வளர்சிதைமாற்ற வழிமுறைகள் உதவுகின்றன. புரத நொதிகள் இவ்வினைகளை ஊக்குவித்து வினைவேகத்தை அதிகரிக்கின்றன. எனவே சாதாரண நிபந்தனைகளில் வளர்சிதைமாற்ற தொகுப்பு வினைகளுக்கு சாத்தியம் இருப்பதில்லை. செல்லினுள் உள்ள வெப்பநிலை மற்றும் அடர்த்தியினால் மட்டுமே இத்தொகுப்பு வினைகள் தோன்றுகின்றன. + +அணுக்களை விட சிறியதாக இருக்கும் கூறுகளுக்கிடையிலான அணுக்கரு வினைகள், கதிரியக்கச் சிதைவுகள், மற்றும் குவாண்டம் புலக்கோட்பாடு மூலம் விவரிக்கப்படும் அடிப்படைத் துகள்களுக்கிடையில் நடைபெறும் வினைகள் போன்றவற்றையும் வேதி வினைகள் என்றே குறிப்பிடுகின்றனர். + +நெருப்பில் எரிதல், நொதித்தல் மற்றும் தாதுக்களை உலோகங்களாகக் குறைத்தல் போன்ற இரசாயன வினைகள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்டன. பொருட்களின் உருமாற்றம் பற்றிய தொடக்கநிலைக் கோட்பாடுகள் கிரேக்க தத்துவவாதிகளால் உருவாக்கப்பட்டன, அனைத்துப் பொருட்களும் தீ, நீர், காற்று மற்றும் மண் ஆகிய நான்கு கூறுகளால் ஆனவை என்று சாக்ரடீசுக்கு முற்பட்ட தத்���ுவ அறிஞரான எம்பெடோக்களசு என்பவர் தன்னுடைய நான்கு-உறுப்புக் கோட்பாட்டின் மூலம் விளக்கினார். இடைக்காலத்தில் இரசவாதிகள் வேதி மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்தனர். குறிப்பாக அவர்கள் ஈயத்தை தங்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதற்காக கந்தகத்துடன் ஈயம், செப்பு உலோகக் கலவைகளை பயன்படுத்தி வினைகளை உருவாக்கி ஆய்வு மேற்கொண்டனர் . + +கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களின் தொகுப்பு போன்ற பொதுவாக இயற்கையில் தோன்றாத இரசாயன பொருட்களை உற்பத்தி செய்ய நீண்டகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்ச்சைக்குரிய இரசவாதியான யபீர் இபின் அய்யான் இம்முயற்சிகளை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. சல்பேட்டு மற்றும் நைட்ரேட்டு கனிமங்களான தாமிர சல்பேட்டு, படிகாரம், பொட்டாசியம் நைட்ரேட்டு போன்றவற்றை சூடாக்குவது இச்செயல்முறையில் அடங்கும். 17 ஆம் நூற்றாண்டில் யோகான் ருடால்பு கிளௌபர் சோடியம் குளோரைடையும் கந்தக அமிலத்தையும் வினைபுரியச் செய்து ஐதரோகுளோரிக் அமிலத்தையும் சோடியம் சல்பேட்டையும் தயாரித்தார். 1746 இல் காரீய கோபுரச் செயல்முறையும், லெப்லாங்கு முறையும் மேம்பாடு அடைந்தவுடன் பெருமளவில் முறையே கந்தக அமிலமும், சோடியம் கார்பனேட்டும் தயாரிக்கப்பட்டன. இரசாயன வினைகள் தொழிற்துறையில் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. கந்தக அமிலத் தயாரித்தல் தொழில்நுட்பம் மேலும் ஏற்புடையதாக மாறியதால் 1880 களில் தொடுகைச் செயல்முறை தோன்றியது . 1909-1910 களில் அமோனியா தயாரிக்க உதவும் ஏபர் செயல்முறையும் வளர்ச்சியடைந்தது . + +16 ஆம் நூற்றாண்டு முதல் யான் பாப்டிசுட் வேன் எல்ல்மோண்ட், ராபர்ட் பாயல் மற்றும் ஐசக் நியூட்டன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், சோதனைக்குட்படுத்தப்பட்ட வேதியியல் மாற்றங்களின் கோட்பாடுகளை நிறுவ முயன்றனர். புளோக்கிசுட்டன் கோட்பாடு 1667 ஆம் ஆண்டில் யோகான் யோயாச்சிம் பெச்சரால் முன்மொழியப்பட்டது. புளோக்கிசுடன் என்றழைக்கப்படும் நெருப்பு-போன்ற உறுப்பு எரியத்தக்க பொருட்களில் அடங்கியிருக்கிறது. அது எரியும்போது வெளியிடப்படுகிறது என்பதை அக்கோட்பாடு முன்மொழிந்தது. இது 1785 ஆம் ஆண்டில் அந்துவான் லவாய்சியரால் தவறு என நிருபிக்கப்பட்டது, காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிசனுடன் எரிபொருள் வினைபுரிவதே எரிதல் என்று சரியான விளக்கத்தை கண்டுபிடித்தார் . யோசப் இலூயிசு கே லூசக் 1808 இல் வாயுக்கள் ஒன்றுடன் ஒன்று வினைபுரியும் போதெல்லாம் அவற்றுக்கிடையே ஒரு குறிப்பிட்ட வகையான தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்தார். இதனடைப்படையில் யான் டால்டன் அணுக்கொள்கையையும், யோசப் பிரௌசுட்டு அறுதி விகிதசம விதியையும் உருவாக்கினர். பின்னர் இதுவே விகிதவியல் அளவுகளுக்கும் வேதிச்சமன்பாடுகளுக்கும் வழி வகுத்தது . + +கரிம வேதியியலைப் பொறுத்தவரை, உயிரினங்களில் இருந்து பெறப்பட்ட சேர்மங்களை செயற்கை முறையில் தயாரிப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று நீண்ட காலமாக நம்பப்பட்டது. உயிர்வாழ்தல் என்ற கோட்பாட்டின்படி கரிமப் பொருட்கள் அனைத்தும் உயிர் விசை எனப்படும் சக்தியால் ஆக்கப்பட்டு கனிம மூலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. 1828 ஆம் ஆண்டில் பிரடெரிக் வோலார் யூரியாவைத் தயாரித்ததன் மூலம் இந்த பிரிவும் முடிவடைந்தது. ஈதர்களை தொகுத்த அலெக்சாண்டர் வில்லியம் வில்லியாம்சன், பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிறிசுடோபர் கெல்க் இங்கோல்ட முதலானோர் கரிம வேதியியலுக்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கிய பிற வேதியியலாளர்கள் ஆவர். பதிலீட்டு வினைகளுக்கான வினைவழிமுறைகளும் இக்காலத்தில் நிறுவப்பட்டன. + +வேதியியற் சமன்பாடுகள் வேதியியல் வினைகளை ஒரு வரைபடம் போலத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வேதி வாய்ப்பாடு அல்லது வேதிக் கட்டமைப்பு மூலம் வினைபடும் பொருட்கள் இடது புறத்திலும், வினை விளை பொருட்கள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. இவை இரண்டையும் ஒரு முன்னோக்கு அம்புக்குறி (→) பிரிக்கிறது. கொடுக்கிறது என்ற பொருளுடன் இந்த அம்புக்குறி வினையின் திசையையும் வகையையும் காட்டுகிறது. அம்புக்குறியின் முனை எந்த திசையில் வினை நிகழ்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எதிரெதிர் திசைகளைச் சுட்டும் இரட்டை அம்புக்குறி (⇌) சமநிலை வினைகளைச் சுட்டிக் காட்ட பயன்படுகிறது. சமன்பாட்டின் இடதுபுறத்தில் வினையில் ஈடுபடும் ஒவ்வொரு இனத்தின் அணுக்களின் எண்ணிக்கையும், வலப்புறத்தில் வினையில் விளையும் பொருட்களிலும் அதற்குச் சமமானதாய் இருக்கவேண்டும் என்பது விகிதவியல் விதியாகும். வினையில் பங்கேற்கும் மூலக்கூறுகளின் முன்பு எண்ணிடுதல் மூலமாக ஒரு சமன்பாட்டைச் சமப்படுத்தமுடியும். (A, B, C மற்றும் D என்பவை ஓர் உதாரணச் சமன்பாட்டுத் திட்டத்தில் கீழே தரப்பட்டுள்ளன. அவை தோராயமான முழு எண்களால் "a, b, c" மற்றும் "d". சமப்படுத்தப்பட்டுள்ளன + +மேலும் விரிவான வினைகளை இதுபோன்ற வினைத்திட்டங்களில் பிரதியிட்டுக் காட்டமுடியும். வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளைபொருட்களைத் தாண்டி கூடுதலாக வினை இடைநிலைப் பொருட்களையும் குறித்துக் காட்டவியலும். இவைதவிர இடையிலுள்ள அம்புக்குறிக்கு மேலாக வினையூக்கி, வெப்பம், தண்ணீர், ஒளியூட்டல் போன்ற சில சிறுசிறு நிபந்தனைகளையும் எழுதிக் காட்டலாம்.அம்புக்குகுறிக்கு கீழாக வினையில் நீக்கப்படும் சிறுபான்மை விளைபொருட்கள் எதிர்குறியான கழித்தல் குறியிட்டும் காட்டப்படுகின்றன. + +பின்னோக்கு பகுப்பாய்வை சிக்கலான தொகுப்பு வினையை வடிவமைக்க பயன்படுத்த முடியும். இங்கே விளைபொருட்களிலிருந்து பகுப்பாய்வு தொடங்குகிறது, உதாரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேதிப்பிணைப்புகளை பிரிப்பதன் மூலமாக நம்பத்தகுந்த தொடக்க வினைப்பொருட்களை அறியலாம். இவ்வகை வினைகளில் சிறப்பு அம்புக்குறி (⇒) பயன்படுத்தப்படுகிறது . + +அடிப்படை வினை என்பது ஒரு இரசாயன வினையின் சிதைக்கப்படக்கூடிய மிகச்சிறிய பிரிவு ஆகும், இவ்வினையில் இடைநிலை விளைபொருட்கள் உருவாவதில்லை . கவனிக்கப்பட்ட பெரும்பாலான வினைகள் அடிப்படை வினைகளுக்கு இணையாக அல்லது அவற்றின் தொடர்ச்சியாகவே நிகழ்கின்றன. தனித்தனியாகத் தொடரும் இந்த்தகைய அடிப்படை வினைகளின் தொடர்ச்சியை வினைவழிமுறை என்கின்றனர். எளிய அடிப்படை வினையில் ஒன்று அல்லது இரண்டு மூலக்கூறுகள் பங்கேற்கின்றன. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல மூலக்கூறுகள் சந்திப்பதற்கான நிகழ்தகவு குறைவாகும் . + +மிக முக்கியமான அடிப்படை வினைகள் ஒற்றை மூலக்கூற்று வினையாகவும் இரு மூலக்கூற்று வினையாகவும் உள்ளன. ஒற்றை மூலக்கூற்று வினையில் ஒரேவொரு மூலக்கூறு மட்டுமே வினையில் பங்கேற்கிறது அதுவே மாற்றீயம் அல்லது மறுசீரமைப்பு மூலமாக அல்லது பிரிகையடைந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகளாக பிரிந்து வேதிமாற்றம் அடையும். இவ்வகை வினைகளுக்குக் கூடுதலாக வெப்பம் அல்லது ஆற்றல் சூரிய ஒளி அல்லது வெப்பம் மூலம் தேவைப்படுகிறது. ஒருபக்க-மறுபக்க மாற்றீயமாதல் (cis– trans) வினைகள் ஒற்றைமூலக்கூற்று வினைகளுக்கு எடுத்துக்காட்டாகும். ஒருபக்க மாற்றீய சேர்மம் இவ்வினையில் மறுபக்க மாற்றீய சேர்மமாகவோ அல்லது மறுபக்க மாற்றீய சேர்மம் ஒருபக்க மாற்றீய சேர்மமாகவோ மாற்றமடைகின்றன. +ஒரு குறிப்பிட்ட பிரிகை வினையில் ஒரு மூலக்கூறில் உள்ள பிணைப்பு பிளவுபடுகிறது. இதன் விளைவாக இரண்டு தனித்தனி மூலக்கூறு துண்டுகள் உருவாகின்றன. இப்பிளவு ஒரேவகை அல்லது பல்வகைப் பிளவு என்பனவற்றில் ஒன்றாக இருக்கலாம். முதல்வகை பிளவில் வேதிப்பிணைப்பு பிரிகிறது. ஒவ்வொரு விளைபொருளும் ஓர் எலக்ட்ரானை தக்கவைத்துக் கொள்கின்றன. எனவே அம்மூலக்கூறு நடுநிலை இயங்குறுப்பாக மாறுகிறது. இரண்டாவது வகை பிளவில் வேதிப்பிணைப்பிலுள்ள இரண்டு எலக்ட்ரான்களும் ஒரே விளைபொருளில் தங்கி அம்மூலக்கூறை மின்சுமையேற்ற அயனியாக்குகிறது. ஐதரசன் – ஆக்சிசன் அல்லது பலபடியாக்கல் வினைகள் போன்ற தொடர்வினைகளைத் தூண்டுவதில் பிரிகை வினைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. + +இருமூலக்கூறு வினைகளில் இரண்டு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதி வினைபுரிந்து ஒன்றாக இணைகின்றன. இவ்விணைப்பு வேதியியலில் வேதித் தொகுப்பு அல்லது கூட்டு வினை எனப்படுகிறது. + +ஒருமூலக்கூறின் ஒரு பகுதி மட்டும் மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றமடையும் சாத்தியமும் உண்டு. இவ்வகை வினைகள் உதாரணமாக ஏற்ற ஒடுக்க வினைகளிலும், அமிலக் கார வினைகளிலும் நிகழ்கின்றன. ஏற்ற ஒடுக்க வினைகளில் மாற்றப்படும் துகள் ஓர் எலக்ட்ரானாகும். அதேவேளையில் அமிலக்கார வினைகளில் மாற்றப்படுவது மூலக்கூறின் ஒரு பகுதியாகும். இவ்வகையை மெய் இடம்பெயர் வினைகள் என்பர். + +உதாரணமாக, + +பெரும்பாலான இரசாயன வினைகள் மீளமைக்கப்படும் வினைகளாக உள்ளன. அவை முன்னோக்கு மற்றும் பின்னோக்கு என்ற இரு திசைகளிலும் நிகழ முடியும். முன்னோக்கு விசையும் தலைகீழ் பின்னோக்கு வினையும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் போட்டியிடுகின்றன மற்றும் வினை வேகத்தில் வேறுபடுகின்றன. வினைபடு பொருள்களின் அடர்த்தியைச் சார்ந்து வினையின் வேகம் இருப்பதால் வேதி மாற்றம் நேரத்தைப் பொறுத்தே நிகழ்கிறது. தலைகீழ் மீட்சி படிப்படியாக அதிகரித்து ஒரு நிலையில் முன்னோக்கு விசையின் வினைவேகத்துடன் சமநில��யை அடைகிறது. முன்னோக்கு வினை வேகமும் பின்னோக்கு வினை வேகமும் சமநிலையை அடையும்போது வினைபடு மற்றும் வினைவிளை பொருட்களின் செறிவுகள் வினை நேரத்தைப் பொறுத்து மாறாமல் இருக்கும். 0 பாகை வெப்பநிலையில் பனிக்கட்டி உருகுதல் மற்றும் நீர் உறைதல் இரண்டும் நடைபெறுகிறது. + +வெப்பம், அழுத்தம், பயன்படுத்தப்படும் பொருட்கள் முதலிய அளவுகோல்கள் ஒரு வினை வேதிச்சமநிலையை அடைவதற்கான நேரத்தை நிர்ணயிக்கின்றன. சமநிலையில் உள்ள வினையில் கிப்சின் ஆற்றல் சுழியாகும். வேதிவினையின் வெப்பநிலை, வேதிவினையின் அழுத்தம், வேதிப் பொருட்களின் செறிவு ஆகிய மூன்றும் மாறும் போது வேதிச்சமநிலை மாறும் விதத்தை லீ சாட்லியர் தத்துவம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, கன அளவு குறைவதால் வேதியியல் அமைப்பின் அழுத்தம் அதிகரிக்கப்படுமாயின் வேதிச்சமநிலை குறைவான அழுத்தம் உள்ள திசையில் நகரும் . +சமநிலையில் உருவாகும் விளைபொருள் நிலைத்திருக்கும், ஆனால் வினை கலவையிலிருந்து விளைபொருளை பிரித்தெடுத்து அல்லது வெப்பநிலை அல்லது அழுத்தத்தை அதிகரித்து இதை மாற்றலாம். வினைகளின் செறிவுகளில் ஏற்படும் மாற்றம் சமநிலை மாறிலியைப் பாதிக்காது, ஆனால் சமநிலை நிலையின் இடத்தைப் பாதிக்கும். + +இரசாயன வினைகள் வெப்பவியக்கவியல் விதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. வினைகள் ஆற்றலை வெளியிடும் வினைகளாக இருந்தால் அவை தன்னிச்சையாக முன்னோக்கி நிகழ்கின்றன. வினைகளுடன் தொடர்புடைய ஆற்றலானது என்தால்பி மற்றும் எண்ட்ரோப்பி என்ற இரண்டு வெவ்வேறு வெப்பமண்டல அளவுகளால் ஆனது: + +வினைகள் வெப்ப உமிழ்வினைகளாக இருக்கலாம், அங்கு ΔH எதிர்மறையாக இருக்கும் மற்றும் ஆற்றல் இங்கு வெளியிடப்படுகிறது. வீழ்படிவாக்கல் வினைகளும் படிகமாக்கல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகளுக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். இதில் சீர்குலைந்த வாயு அல்லது நீர்ம கட்டங்களிலிருந்து சீரான திண்மங்கள் உருவாகின்றன. மாறாக வெப்பங்கொள் வினைகளில் சூழலிலிருந்து வெப்பம் ஈர்க்கப்படுகிறது. அமைப்பின் எண்ட்ரோப்பியை அதிகரிப்பதன் மூலம் இந்நிலை தோன்றுகிறது. பெரும்பாலும் அதிக எண்ட்ரோப்பி மதிப்பைக் கொண்ட வாயுநிலை வினை விளை பொருட்கள் மூலம் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எண்ட்ரோப்பி வெப்பந��லையுடன் அதிகரிக்கும் என்பதால் பல வெப்பங்கொள் வினைகள் அதிக வெப்பநிலையில் நிகழ்கின்றன. அதேபோல படிகமாக்கல் போன்ற வெப்ப உமிழ்வினைகள் தாழ்வெப்பநிலையில் நிகழ்கின்றன. வெப்பநிலையில் தோன்றும் மாற்றங்கள் சிலவேளைகளில் மாலிப்டினம் டையாக்சைடு கார்பன் மோனாக்சைடாக ஒடுக்கமடையும் வினை போன்ற நிகழ்வுகளில் வினையின் என்தால்பியை தலைகீழாக்குகின்றன. + +கார்பன் டை ஆக்சைடும் மாலிப்டினமும் உருவாவதற்கான இவ்வினை தாழ்வெப்பநிலையில் ஒரு வெப்பங்கொள் வினையாகும். வெப்பநிலை அதிகரிக்கும்போது இது மேலும் குறைந்து 1885 கெல்வின் வெப்பநிலையில் ΔH° சுழியாகிறது. இவ்வெப்பநிலைக்கு மேல் வினை வெப்ப உமிழ்வினையாக மாறுகிறது. +வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் வினை நிகழும் திசையின் போக்கை தலைகீழாக மாற்ற முடியும். உதாரணமாக, நீர்வாயு பெயர்ச்சி வினையைக் கூறலாம். + +தாழ்வெப்பநிலையில் இது சாத்தியமாகிறது. ஆனால் இதன் தலைகிழி உயர் வெப்பநிலைகளில் நிகழ்கிறது. வினையின் திசையில் இடம்பெயரும் போக்கு வெப்பநிலையில் தோன்றுகிறது. +உள்ளக ஆற்றலைக் கொண்டும் வினைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எண்ட்ரோப்பி மாற்றம், கண அளவு, வேதிப்பண்பு முதலானவை இங்கு கணக்கில் கொள்ளப்படுகின்றன. இங்கு வேதிப்பண்பி என்பது வினையில் ஈடுபடும் பொருட்களின் வேதிப்பண்புகளைக் குறிக்கிறது . + +எந்த வேகத்தில் வினைகள் நிகழ்கின்றன என்பது வினை இயக்கவியல் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. வினைவிகிதம் பல்வேறு அளவுருக்களைச் சார்ந்துள்ளது. அவை, + + + + + +மூலக்கூற்று நிலையில் வினை வேகத்தைக் கணக்கிட பல கோட்பாடுகள் அனுமதிக்கின்றன. இத்துறை வினை இயங்கியல் எனப்படுகிறது. முதல் வகை வினையில் வினையின் வேகம் v ஆனது பொருள் A இன் சிதைவு ஆகும். இதை, + +இதன் தொகையீடு தருவது: + +வினைவேக மாறிலி k இன் அலகானது வினையின் வினைவேகம், வினைபடு பொருள்களின் அடர்த்தி, வினைவகை ஆகியவற்றை பொருத்து அமைகிறது. முதல்வகை வினையின் பரிமாணம் 1/நேரம் [A](t) ஆனது ஓர் அலகு நேரம் t மற்றும் [A]0 இல் இருந்த தொடக்க செறிவு ஆகும். வினைவேக மாறிலியின் வெப்பநிலைச் சார்பானது பொதுவாக அரீனியசுச் சமன்பாட்டுக்குக் கட்டுப்படுகிறது. + +இங்கு E செயலாற்றும் ஆற்றல் ஆகும். + +k போல்ட்சுமான் மாறிலியாகும். + +இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய பொர்ட்க���் இணைந்து புதிய மேலும் சிக்கலான பொருள்கள் உருவாகும் வினைகள் இவ்வகையாகும். பொதுவாக வினைகளின் பொது அமைப்பு கீழ்கண்ட வடிவில் இருக்கும். + +இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் இணைந்து ஒரே வினைவிளை பொருளைக் கொடுக்கும் வினைகளை தொகுப்பு வினைகள் என்று அடையாளம் காணலாம். இரும்பும் கந்தகமும் சேர்ந்து இரும்பு(II) சல்பைடு உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். + +எளிமையான ஐதரசன் வாயுவும் எளிமையான ஆக்சிசன் வாயுவும் இணைந்து சிக்கலான கூட்டு விளைபொருளான தண்ணீர் உருவாகின்ற வினையையும் தொகுப்பு வினைக்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். + +வேதிச் சிதைவு என்பது ஒரு சிக்கலான கூட்டுச்சேர்மம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரண்டு எளிய பொருள்களாகப் பிரியும் வினையைக் குறிக்கும் . +வேதியியலில் மூன்று வகையான சிதைவு வினைகள் உள்ளதாக வகைப்படுத்தப்படுகிறது. வெப்பச் சிதைவு, மின்பகுச் சிதைவு, வினையூக்கச் சிதைவு என்பன அம்மூன்று வகைச் சிதைவு வினைகளாகும். + +வேதிச் சிதைவின் பொதுவான அமைப்பு வாய்ப்பாடு இவ்வாறு அமையும்: + +தண்ணீரின் நீராற்பகுப்பு வினையை சிதைவு வினைக்கு சரியான உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு நீர்ம நிலையிலுள்ள நீர் மூலக்கூறு வாயு நிலையில் உள்ள ஐதரசன் மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது. + +ஐதரசன் பெராக்சைடு, மெல்ல தண்ணீர் மற்றும் ஆக்சிசனாகச் சிதைவதைத் தன்னிச்சையானச் சிதைவடைதலுக்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். + +கார்பனேட்டுகளைச் சூடாக்கும்போது அவை சிதைவடைகின்றன. கார்பானிக் அமிலம், HCO இதற்கு விதிவிலக்காகும். கார்பானிக் அமிலம் மட்டும் தன்னிச்சையாகச் சிதைவடைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரராக பிரிகிறது. சோடா உடைக்கும்பொழுது வெளிப்படும் ஓசை மற்றும் மதுபானங்கள் திறக்கும்போது வெளிப்படும் ஓசைகள் சிதைவடைந்த வாயுவின் வெளிப்பாடு ஆகும். + +மற்ற கார்பனேட்டுகளைச் சூடுபடுத்தினால் அவை அவற்றின் உலோகம் மற்றும் ஆக்சைடுகளாகச் சிதைவடைகின்றன. + +வினையில் உள்ள "M" ஓர் உலோகத்தைக் குறிக்கிறது. + +குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கால்சியம் கார்பனேட்டு சிதைவடைதலைச் சொல்லலாம்.: + +உலோக குளோரேட்டுகளும் சூடாக்கும் போது சிதைவடைகின்றன. இச்சிதைவு வினையில் ஓர் உலோக குளோரைடும் ஆக்சிசனும் விளைகின்றன. + +பொதுவாக கு��ோரேட்டுகள் ஆக்சிசனை வெளிவிட்டு சிதைகின்றன. உதாரணமாக பொட்டாசியம் குளோரேட்டு ஆக்சிசனை வெளியிட்டு பொட்டாசியம் குளோரைடாக மாறுகிறது. + +சிதைவு வினைகள் தொகுப்பு வினைகளுக்கு நேரெதிர் வினைகளாகக் காணப்படுகின்றன . + +தனித்த நிலையில் காணப்படும் ஒரு வினைபடு பொருள், வினையில் ஈடுபட்டு உருவாகும் ஒரு விளைபொருள் சேர்மத்தில் இடம்பெயர்ந்து காணப்படும் வினை ஒற்றை இடப்பெயர்ச்சி வினை எனப்படுகிறது. ஒரு தனிமம் ஒரு சேர்மத்திற்கு இடம்பெயரும் வினை என்று சுருக்கமாகக் கூறலாம். இவ்வகை வினையின் பொது அமைப்பு இவ்வாறு அமைகிறது. + +மக்னீசியம் ஐதரசனை இடப்பெயர்ச்சி செய்து மக்னீசியம் ஐதராக்சைடாகவும் ஐதரசன் வாயுவாகவும் மாறும் வினையை ஒற்றை இடப்பெயர்ச்சி வினைக்கு உதாரணமாகக் கூறலாம். + +இரண்டு சேர்மங்களின் நேர்மின் அயனிகளும் எதிர்மின் அயனிகளும் தங்களுடைய இடங்களை மாற்றிக்கொண்டு முற்றிலும் புதிய சேர்மங்களாக மாறுகின்ற வினையை இரட்டை இடப்பெயர்ச்சி வினை என்கின்றனர். These reactions are in the general form: + +உதாரணமாக, பேரியம் குளோரைடு [[(BaCl) மற்றும் [[மக்னீசியம் சல்பேட்டு]] (MgSO) இரண்டும் வினைபுரியும் போது SO எதிர்மின் அயனி 2Cl எதிர்மின் அயனியின் இடத்திற்கு இடம்பெயர்ந்து புதிய சேர்மங்கள் BaSO மற்றும் MgCl உருவாகின்றன. + +[[ஈய(II) நைட்ரேட்டு]] மற்றும் [[பொட்டாசியம் அயோடைடு]] சேர்ந்து [[ஈய(II) அயோடைடு]] மற்றும் [[பொட்டாசியம் நைட்ரேட்டு]]கள் உருவாகும் வினையையும் இரட்டை இடப்பெயர்ச்சி வினைக்கு உதாரணமாகக் கூறலாம். + +[[File:redox reaction.png|thumb|right|250px|ஆக்சிசனேற்ற ஒடுக்க வினை]] + +[[File:Common-salt.jpg|thumb|right|250px|சோடியம் தனிமமும் குளோரின் வாயுவும் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையில் ஈடுபட்டு [[சோடியம் குளோரைடு]] உருவாகும் வினை]] + +வினையில் ஈடுபடும் ஒரு ஒடுக்கும் முகவரிடமிருந்து மற்றொரு ஆக்சிசனேற்றும் முகவருக்கு எலக்ட்ரான்கள் மாற்றமடையும் வினைகள் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகள் எனப்படுகின்றன. இச்செயல்முறையில் முதலாவதாகக் கூறப்பட்ட ஒடுக்கும் முகவர் ஆக்சிசனேற்றம் அடைந்ததாகவும், இரண்டாவதாகக் கூறப்பட்ட ஆக்சிசனேற்ற முகவர் ஒடுக்கம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் இவ்வரையறை சரியென்றாலும் இது மிகச் சரியான வரையறையல்ல. ஆக்சிசனேற்றம் என்பது ஆக்சிசனேற்ற நிலை அதிகரிப்பு என்றும் ஒடுக்கம் என���பது ஆக்சிசனேற்ற நிலையில் ஏற்படும் குறைவு என்றும் கொள்ளப்படுகிறது. +எலக்ட்ரான்கள் மாற்றமடையும் போதெல்லாம் ஆக்சிசனேற்ற நிலையில் மாற்றம் அடைகிறது என்பது நடைமுறையாகும். ஆனால் சகப்பிணைப்புகள் பங்கேற்பது போன்ற பல வினைகளில் எலக்ட்ரான்கள் மாற்றம் இல்லையென்றாலும் அவ்வினைகள் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகள் என அழைக்கப்படுகின்றன. + +கீழ்கண்ட ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையில், [[சோடியம்]] உலோகம் [[குளோரின்]] வாயுவுடன் இணைந்து அயனச் சேர்மமான [[சோடியம் குளோரைடு]] அல்லது சாதாரண உப்பு உருவாகிறது. + +இவ்வினையில் தூய்மையான சோடியம் உலோகம் ஆக்சிசனேற்ற நிலை பூச்சியத்திலிருந்து ஆக்சிசனேற்ற நிலை ஒன்றுக்குச் செல்கிறது. வேறுமுறையில் சொல்வதென்றால் சோடியம் ஒரு எலக்ட்ரானை இழந்து ஆக்சிசனேற்றம் அடைந்தது என்று சொல்லலாம். மறுபுறத்தில் குளோரின் வாயு ஆக்சிசனேற்ற நிலை பூச்சியத்திலிருந்து ஆக்சிசனேற்ற நிலை -1 என மாறுகிறது. வேறுமுறையில் சொல்வதென்றால் குளோரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று ஒடுக்கம் அடைந்தது என்று சொல்லலாம். ஏனெனில் குளோரின் ஓர் எலக்ட்ரான் ஏற்பியாகும். இது சோடியத்தின் ஆக்சிசனேற்றத்தைத் தூண்டுகிறது. எனவே குளோரினை ஓர் ஆக்சிசனேற்ற முகவர் என்பர். அதேபோல சோடியம் ஓர் எலக்ட்ரான் வழங்கியாகும். இது குளோரினின் ஒடுக்கத்தைத் தூண்டுகிறது. எனவே சோடியம் இங்கு ஒடுக்கும் முகவராகக் கருதப்படுகிறது. + +தனிமங்களின் எலக்ட்ரான் கவர் திறனைக் கொண்டு அவற்றில் ஆக்சிசனேற்ற முகவர் மற்றும் ஒடுக்கும் முகவர்களை கண்டறியலாம். குறைந்த எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட, எலக்ட்ரான்களை வழங்கி ஆக்சிசனேற்றமடையும் உலோகங்கள் ஒடுக்கும் முகவர்களாகும். அதேபோல உயர் ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்ட H2O2, MnO−4, CrO3, Cr2O2−7, OsO4 போன்ற அயனிகள் ஒன்று அல்லது இரண்டு எலக்ட்ரன்களை ஏற்று ஆக்சிசனேற்றும் முகவர்கள் என அழைக்கப்படுகின்றன. +ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளில் ஏற்கப்படும் அல்லது இழக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை வினைபடு பொருளின் எலக்ட்ரான்களின் அமைப்பு முறையிலிருந்து கணிக்கமுடியும். தாழ்ந்த ஆற்றல் மந்தவாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையை அடைய முயலும் தனிமங்களான கார உலோகங்கள் எலக்ட்ரான் வழங்கிகளாகவும், இவ்வகை ஆலசன்கள் எலக்ட்ரான் ஏற்பிகளாகவும் இருக்கின்றன. மந்தவாயுக்கள் வேதிவினைகளில் மந்தமான வினையையே வெளிப்படுத்துகின்றன + +மின் வேதியியல் வினைகள் ஒரு முக்கியமான வகை ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளாகும். செலுத்தப்படும் மின்னாற்றலில் உள்ள் எலக்ட்ரான்கள் இங்கு ஒடுக்கும் முகவராகச் செயல்படுகின்றன. இவ்வகை வினைகள் [[குளோரின்]], [[அலுமினியம்]] போன்ற தனிமங்களை உற்பத்தி செய்யும் வினைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் தலைகீழ் ஆக்சிசனேற்ற ஒடுக்க செயல்முறையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுகின்றன. இவற்றை மின்கலன்களில் மின்னாற்றலாகப் பயன்படுத்த முடியும். + +[[File:Ferrocene-from-xtal-3D-balls.png|160px|thumb|பெர்ரோசின் என்ற இரும்பு அணுவானது இரண்டு CH ஈந்தனைவிகளுக்கு இடையில் அடுக்கப்பட்டுள்ளது]] + +பல ஈந்தணைவிகள் உலோக அணுவுடன் வினைபுரிந்து ஒருங்கிணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. இவ்வினையில் உலோக அணுவின் காலி ஆர்பிட்டால்களுக்கு ஈந்தணைவிகளின் தனி இணை எலக்ட்ரான்கள் வழங்கப்பட்டு இருமுனைய பிணைப்புகள் உருவாகின்றன. கார்பன் ஓராக்சைடு, அமோனியா. தண்ணிர் போன்றவை இங்கு ஈந்தணைவிகளாகும். இவை அயனிகளாகவும் நடுநிலை மூலக்கூறுகளாகவும் இருக்கவியலும். மைய அணுவுடன் வினைபுரியும் ஈந்தணைவிகளின் எண்ணிக்கையை 18 எலக்ட்ரான் விதியின் மூலம் அறியமுடியும். தாண்டல் உலோகங்களின் இணைதிறன் கூடுகளில் 18 எலக்ட்ரான்கள் இடம்பிடிக்கும். அதேபோல உருவாகும் ஒருங்கிணைவுச் சேர்மத்தின் சீர்மை ஒழுங்கை படிகப்புலக் கோட்பாடு மற்றும் ஈனிப்புலக் கோட்பாடுகளின் மூலம் கணிக்க முடியும். ஒருங்கிணைவு வினைகளில் ஈந்தணைவி மற்றொரு ஈந்தனைவியால் பரிமாற்றஞ் செய்யப்படுகிறது. ஆக்சிசனேற்ற ஒடுக்க வினை மைய உலோக அணுவின் ஆக்சிசனேற்ற நிலையை மாற்றுகிறது. + +[[புரோட்டான்]]கள் (H+) ஓர் அமில இனத்திலிருந்து மற்றொரு கார இனத்திற்கு மாற்றப்படும் வினைகள் அமிலக் கார வினைகள் என்று பிரான்சிடெட்டு அமிலக் கார கோட்பாடு வரையறை செய்கிறது. ஓர் அமிலத்திலிருந்து ஒரு புரோட்டான் நீக்கப்பட்டவுடன் உருவாகும் இனம் அவ்வமிலத்தின் இணைகாரம் என பெயரிடப்படுகிறது. பொதுவாக அமிலங்கள் புரோட்டான் வழங்கிகள் என்றும் காரங்கள் புரோட்டான் ஏற்பிகள் என்றும் அறியப்படுகின்றன. இதற்கான சமன்பாடு கீழே தரப்பட்டுள்ளது + +இவ்வினைக்கான தலைகீழ் எதிர் வினை நிகழவும��� சாத்தியமுண்டு. இதனால் அமிலம்/காரம் மற்றும் இணைகாரம்/இணை அமிலம் வினையானது எப்போதும் சமநிலையிலேயே இருக்கும். இச்சமநிலையை வினையில் பங்கேற்கும் பொருட்களின் அமிலக் கார பிரிகை மாறிலிகளைக் (Ka மற்றும் Kb) கொண்டு உறுதி செய்ய முடியும். நடுநிலையாக்கல் வினை அமிலக் கார வினைகளில் நிகழும் ஒரு சிறப்பான வினையாகும். நடுநிலை உப்பிலிருந்து சம அளவில் அமிலமும் காரமும் ஒரு வினைக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. + +அமிலக் கார கோட்பாடுகளின் அடிப்படையில் அமிலக் கார வினைகள் வெவ்வேறு வகையான வரையறைகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் சில பொதுவான வரையறைகள் இங்கு தரப்படுகின்றன. + + + +[[File:Chemical precipitation diagram.svg|thumb|வீழ்படிவாக்கல்]] + +ஒரு வேதி வினையின் போது ஒரு கரைசலில் அல்லது ஒரு திண்மத்தில் திண்மம் ஒன்று உருவாகின்ற வினையைக் குறிக்கும். வழக்கமாக கரைசலில் கரைந்துள்ள அயனிகளின் செறிவு கரைதல் திறனின் எல்லையைத் தாண்டும் போது வீழ்படிவாகல் நிகழ்ந்து கரையாத உப்பு உருவாகிறது . + +இந்தச் செயல் முறையானது வினைக் கரைசலுடன் ஒரு வீழ்படிவாக்கும் முகவரைச் சேர்ப்பதன் மூலம் அல்லது அக்கரைசலில் உள்ள கரைப்பானை நீக்குவதன் மூலம் நிகழ்த்தப்படுகிறது. விரைவு விழ்படிவாக்கல் முறையின் மூலம் படிகவடிவமற்ற திண்மம் அல்லது நுண்படிகங்களின் எச்சம் மட்டுமே உருவாகிறது. இயல்பான வீழ்படிவாக்கல் வினையினால் ஒற்றைப்படிகங்கள் கிடைக்கின்றன. நுண்படிகங்களை மீள்படிகமாக்கல் முறையில் படிகமாக்கி ஒற்றைப்படிகங்களைத் தயாரிக்கலாம் . + +இரண்டு திடப்பொருட்களுக்கு இடையிலும் வினைகள் நிகழ முடியும். எனினும், திடப்பொருட்களில் பரவல் வேகம் சிறிய அளவில் காணப்படுவதால் தொடர்புடைய இரசாயன வினைகள் திரவ மற்றும் வாயு நிலை வினைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாகவே நிகழ்கின்றன. வினையின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலமும், வினைபடு பொருள்களின் தொடும் மேற்பரப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இவ்வினையின் வினை வேகத்தை அதிகரிக்கச் செய்யலாம் . + +திண்மவாயு இடை முகப்பிலும் வேதி வினைகள் நிகழ்கின்றன. மீவுயர் வெற்றிடம் போன்ற தாழ் அழுத்த மேற்பரப்புகளில் இவ்வினைகள் நிகழ்கின்றன. [[வருடு ஊடுருவு நுண்ணோக்கி|வருடி ஊடுறுவும் நுண்ணோக்கி]] வாயிலாக அறியமுடியும். வினையின் அளபுருக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வினைகளை நிகழ்விண்வெளியில் கவனிக்க இயலும் . சில திண்மவாயு இடை முகப்பு வேதி வினைகள் வினையூக்கிகளுடன் தொடர்பு கொண்டவையாகும். + +[[File:Paterno-Buchi reaction.svg|thumb|பேட்டர்னோ-புச்சி வினையில் ஒளிக்கிளர்வு அடைந்த ஒரு கார்பனைல் குழு கிளர்வடையாத ஒர் ஒலிபீனுடன் சேர்ந்து ஆக்சிடேனைக் கொடுக்கிறது.]] + +ஒளிவேதியியல் வினைகளில் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஒளிரும் விளக்கிலிருந்து ஆற்றலை (ஒளியன்கள்) உறிஞ்சி கிளர்வு நிலைக்கு மாற்றுகின்றன. பின்னர் வேதியியல் பிணைப்புகளை உடைப்பதன் மூலம் இந்த ஆற்றல் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் இயங்குறுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஐதரசன் - ஆக்சிசன் வினைகள், இயங்குறுப்பு பலபடியாதல் வினைகள், சங்கிலி வினைகள் மற்றும் மறுசீரமைப்பு வினைகள் உள்ளிட்டவை ஒளிவேதியியல் வினைகளில் அடங்கும் . + +ஒளிவேதியியலுடன் பல முக்கியமான செயல்முறைகள் தொடர்பு கொண்டுள்ளன. ஒளிச்சேர்க்கை இவற்றில் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. பல தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடையும் நீரையும் குளுக்கோசாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. ஆக்சிசனை உடன் விளைபொருளாக வெளிவிடுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. ரோடோப்சின் என்ற வேதிப்பொருளின் ஒளிவேதியியல் வினையினாலேயே பார்வைத் திறன் கிடைக்கிறது. மின்மினிப்பூச்சிகளின் வயிற்றுப்பகுதியிலுள்ள நொதி ஒளிவேதியியல் வினைக்கு உட்பட்டு உயிரொளிர்வெளிச்சத்தைக் கொடுக்கிறது. [[ஓசோன்]] உருவாக்கம் போன்ற குறிப்பிடத்தக்க ஒளிவேதியியல் வினைகள் மூலமாக சுற்றுச்சூழலும் அது தொடர்பான வேதியியல் பிரிவும் உருவாகின்றன. + +ஒரு சேர்மம் எத்தகைய வினைவேக மாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேக மாற்ரி எனப்பெயர். இத்தகைய செயல்முறை வினைவேக மாற்றம் எனப்படும். + +வினைவேகமாற்ற வினைகளீல் வேதிவினைகள் நேரடியாக நிகழ்வதில்லை. ஆனால் வினையின் வேகத்தை கூட்டுவதற்காக மூன்றாவதாக சேர்க்கப்படும் வினையூக்கி என்ற பொருளின் மூலம் நிகழ்கின்றன. வினைவேக மாற்ரிகள் வினையைத் தொடங்குவதில்லை. ஆனால் குறிப்பிட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வினையின் வேகத்தை மாற்றுகின்றன. வினையூக்கிகள் வி���ையில் பங்கு பெறுகின்றன என்றாலும் வினையின் முடிவில் அவை தங்களுடைய அசல் நிலையிலேயே திரும்பக் கிடைக்கின்றன. இருப்பினும் இரண்டாம் நிலை செயல்முறைகளால் இவற்றை தடை செய்யவோ, செயலிழக்கச்செய்யவோ அல்லது அழிக்கவோ முடியும். வினைவேக மாற்றி வினைகளை பலபடித்தான வினைவேக மாற்றம், ஒருபடித்தான வினைவேக மாற்றம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். + +ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைவேக மாற்றி ஆகியவை ஒரே நிலைமையில் இருக்கும். பலபடித்தான வினைவேக மாற்ற வினைகளில் இவை வெவ்வேறு நிலைமைகளில் இருக்கும். +பண்புகள் மற்றும் செயல்படும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாற்றிகளை வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வினையின் வேகத்தை அதிகப்படுத்தும் வினைவேக மாற்றிகள் ஊக்க வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன. மாறாக வினையின் வேகத்தைக் குறைக்கின்ற வினைவேக மாற்றிகள் தளர்வு வினைவேக மாற்றிகள் அல்லது குறைப்பான்கள் எனப்படுகின்றன . சில வகை வினைகளில் வினையில் உருவாகும் விளைபொருள் வினைவேக மாற்றியாகச் செயல்படுகிறது. இத்தகையவை தன் வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன. சாதாரண நிலையில் நிகழாத ஒரு வினையின் வேகத்தை வினைபடு பொருள் ஒன்று மாற்றினால் அவ்வினை தூண்டப்பட்ட வினை எனப்படுகிறது. வினைவேக மாற்றியின் செயல்திறனை இழக்கச் செய்யும் சேர்மம் வினைவேக மாற்றி நச்சு எனப்படுகிறது. + +பலபடித்தான வினையூக்கிகள் பொதுவாக திண்மங்களாகும். இவற்றை தூளாக்கி பயன்படுத்தினால் வினையின் பரப்பளவை அதிகரித்துக் கொள்ள முடியும். பலபடித்தான வினைவேக மாற்ற வினைகளில் குறிப்பாக பிளாட்டினம் குழு தனிமங்களும் தாண்டல் உலோகங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நைட்ரிக் அமிலம், அமோனியா தயாரிப்பு மற்றும் ஐதரசனேற்றம் போன்ற வினைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. அமிலங்கள் பொதுவாக ஒரு படித்தான வினையூக்கிகளாகும். இவற்றை வினைபடு பொருட்களுடன் சேர்ப்பது எளிது ஆனால் விளைபொருட்களிலிருந்து பிரிப்பது கடினம். எனவே பலபடித்தான வினைவேக மாற்றிகளை தொழில்துறையில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. + +ஆக்சிசனேற்றம், ஒடுக்கம் அல்லது அமிலக் கார வினைகளுடன் கூடுதலாக கரிம வேதியியலில் எண்ணற்ற பல வினைகள் நிகழ்கின்றன. கார்பன�� அணுக்கள் அல்லது ஆக்சிசன், நைட்ரசன், ஆலசன்கள் போன்ற மற்ற அணுக்களுக்கிடையில் சகப்பிணைப்புகள் இவ்வினைகளில் பங்கேற்கின்றன. கரிம வேதியியலில் பல வினைகள் அவற்றைக் கண்டுபிடித்த அறிஞர்களின் பெயர் சூட்டப்பட்டு பெயர் வினைகளாக அழைக்கப்படுகின்றன. + +ஒரு குறிப்பிட்ட வேதிச் சேர்மத்தின் கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் அணு அல்லது ஓரு தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொரு அணு அல்லது தொகுதி அவ்விடத்தை அடைந்து கார்பனுடன் பிணைப்பு ஏற்படுமாயின் அவ்வினை பதிலீட்டு வினை எனப்படும். பதிலீடு செய்யப்படும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வினைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை கருக்கவர் பதிலீட்டு வினைகள், எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள், தனி உறுப்பு பதிலீட்டு வினைகள் என்பன அம்மூன்று வகைகளாகும். + +முதல் வகையில் எலக்ட்ரானை மிகையாகக் கொண்டு எதிர்மின் சுமையை அல்லது பகுதி மின்சுமையுடன் உள்ள ஒரு கருக்கவர் அணு அல்லது மூலக்கூறு மற்றொரு அணுவை அல்லது அடிமூலக்கூறை இடப்பெயர்ச்சி செய்கிறது. கருக்கவரியில் உள்ள எலக்ட்ரான் இணை அடிமூலக்கூறைத் தாக்கி ஒரு புதிய பிணைப்பாக உருவாகிறது. விடுவிக்கும் தொகுதி அதேவேளையில் ஒரு எலக்ட்ரான் இணையை விடுவித்து வெளியேறுகிறது. கருக்கவரி அநேகமாக மின்சுமையற்று அல்லது எதிர்மின் சுமையுடன் காணப்படும். அடிமூலக்கூறு குறிப்பாக மின்சுமையற்று அல்லது நேர்மின் சுமையுடன் காணப்படும். ஐதராக்சைடு அயனி, ஆல்காக்சைடுகள், அமீன்கள், ஆலைடுகள் போன்றவை கருக்கவரிகளுக்கு உதாரணங்களாகும். அலிபாட்டிக் ஐதரோகார்பன்களில் இவ்வினை பிரதானமாகவும் அரோமாட்டிக் ஐதரோகார்பன்களில் அரிதாகவும் இவ்வினை நிகழ்கிறது. + +பதிலீட்டு வினை ஒரு கருகவர் கரணியால் ஏற்படுமாயின் அது கருக்கவர் பதிலீட்டு வினை எனப்படுகிறது. இதை SN என்று குறித்துக் காட்டுகிறோம். SN வகை வினை வழிமுறைகளை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை SN1 மற்றும் SN2. வழிமுறைகளாகும். SN1 இல் உள்ள S பதிலீடு என்பதையும் N என்பது கருக்கவர் என்பதையும் 1 என்ற எண் வினையில் பங்குபெறும் மூலக்கூற்றின் எண்ணிக்கையையும் குறிக்கின்றன. + +SN1 வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. முதலில் விடுபடும் தொகுதி விடுவிக்கப்பட்டு ஒரு கார்பன்நேர்மின்னயனி உருவாகிறது. பின்னர் இது கருக்கவரியுடன் விரைவுவினைக்கு உட்படுகிறது . +SN2 வழிமுறையில் கருகவரியானது தாக்கப்பட்ட மூலக்கூறுடன் சேர்ந்து ஒரு வினையிடை பொருளாக உருவாகிறது. இதன்பிறகே விடுபடும் தொகுதி பிளவுபடுகிறது. விளைபொருட்களின் முப்பரிமாண வேதியியலில் இவ்விருவழிமுறைகளும் வேறுபடுகின்றன. SN1 வினை முப்பரிமாணச் சிறப்புக் கட்டுமாணமல்லாத கூட்டுவினைக்குச் செல்கிறது. நாற்தொகுதி மையத்தில் இவ்வழிமுறை முடிவதில்லை. ஆனால் ஒருபக்க/மாறுபக்க வடிவவியல் மாற்றியங்கள் உருவாகின்றன. மாறாக SN2 வழிமுறையில் வால்டன் தலைகிழி உருவாகிறது . +எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையானது கருக்கவர் பதிலீட்டு வினையை ஒத்த எதிர்வினையாகும். இப்பதிலீட்டுவினை எலக்ட்ரான் கவர் கரணியால் துவக்கப்படுகிறது. காபனைல் குழுக்களின் கார்பன் அணுக்கள், கார்பன்நேர்மின்னயனிகள் அல்லது கந்தகம் அல்லது நைட்ரோனியம் நேர்மின்னயனிகள் போன்றவை முக்கியமான எலக்ட்ரான் கவரிகளாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பன்களில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இங்கு இவை அரோமாட்டிக் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள் எனப்படுகின்றன. கருக்கவர் பதிலீட்டு வினைகள் போலவே இவ்வினையிலும் இரண்டு வகைகள் உண்டு. அவை SE1 மற்றும் SE2 எலக்ட்ரான் கவர் வினைகளாகும் + +[[File:Electrophilic aromatic substitution.svg|center|thumb|648px|அரோமாட்டிக் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையின் வினைவழிமுறை]] + +தனி உறுப்புகளால் துவக்கப்பட்டு நிகழும் வினைகள் தனி உறுப்பு பதிலீட்டு வினைகள் எனப்படுகின்றன . இவை பெரும்பாலும் தொடர் வினைகளாகவே நிகழ்கின்றன. உதாரணமாக ஆல்க்கேன்கள் ஆலைடுகளுடன் ஈடுபடும் வினையைக் கூறலாம். முதல்படிநிலையில் ஒளியால் அல்லது வெப்பத்தால் தூண்டப்பட்டு தனி உறுப்பு உருவாகி வினை தொடர்கிறது + +இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு உடைய சேர்மங்கள் இத்தகைய வினைகளில் ஈடுபடுகின்றன. இவ்வகையில் இரண்டு மூலக்கூறுகள் கூடி ஒரே சேர்மத்தைத் தருகின்றன. + +கூட்டு வினையும் இதனையொத்த எதிர்வினையான நீக்கல்வினையும் கார்பன் அணுவில் பதிலீடுகளின் எண்ணிக்கையை மாற்றிக் கொண்டு உருவாகின்றன அல்லது சகப்பிணைப்புகளாக பிளவுறுகின்றன. பொருத்தமான விடுபடும் குழுவை நீக்குவதன் மூலம் இரட்டைப் பிணைப்பும், முப்பிணைப்பும் வினையில் உருவாகின்றன. கருகவர் பதிலீட்டு வினைகளைப் போல பலவிதமான வினைவழிமுறைகள் இங்கும் சாத்தியமாகின்றன. வினைவகையின் அடிப்படையில் நிகழும் வினைகளுக்கு உரிய பெயரிடப்படுகின்றன. E1 வினைவழிமுறையில் முதலில் விடுபடும் குழு விடுவிக்கப்பட்டு கார்பன்நேர்மின்னயனி உருவாகிறது. அடுத்த கட்டத்தில் ஒரு புரோட்டான் நீக்கப்பட்டு இரட்டைப் பிணைப்பு தோன்றுகிறது. E1cb வினைவழிமுறையில் இவ்விடுபடல் தலைகீழாக நிகழ்கிறது. அதாவது முதலில் புரோட்டானும் பின்னர் விடுபடும் குழுவும் நீக்கப்படுகின்றன. இணைகாரம் பங்கேற்பது இவ்வினைவழிமுறையின் முக்கியத் தேவையாகும் . ஒரே மாதிரியான நிபந்தனைகள் என்பதால் E1 அல்லது E1cb நீக்க வினைகள் SN1 வழிமுறைக்கு போட்டியாக உள்ளன + +[[File:E2-mechanism.svg|thumb|300px|E2 நீக்கம்]]. + +E2 வினைவழிமுறை வினைக்கும் ஓர் இணை காரம் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு காரம் தாக்கப்படுவதும் விடுபடும் குழு நீக்கமும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. அயன இடைநிலைகள் ஏதும் உருவாவதில்லை. E1 நீக்குதல்களுக்கு மாறாக E2 வினைவழி முறையில் உருவாகும் வினை விளைபொருளுக்கு வெவ்வேறு முப்பரிமான கட்டமைப்புகள் சாத்தியமாகின்றன, ஏனென்றால் வெளியேறும் குழுவிற்கு எதிர் அமைப்பில் முன்னுரிமையுடன் காரம் தாக்கப்படுகிறது. அதே நிபந்தனைகளும் வினைப்பொருள்களும் தேவை என்பதால் E2 நீக்கம் எப்போதும் SN2 பதிலீட்டு வினைக்கு போட்டியாக நிகழ்கிறது. + +[[File:HBr-Addition.png|thumb|300px|ஐதரசன்புரோமைடின் எலக்ட்ரான் கவர் கூட்டு வினை]] + +நீக்கல் வினையை ஒத்த எதிர்வினையான கூட்டுவினையில் இரட்டை அல்லது முப்பிணைப்புகள் ஒற்றைப் பிணைப்புகளாக மாற்றப்படுகின்றன. பதிலீட்டு வினைகள் போலவே கூட்டு வினைகளிலும் பல்வேறு வகையான வினைகள் வகைப்படுத்தப்படுகின்றன. தாக்கும் பொருளை அடிப்படையாகக் கொண்டே இவ்வினைகள் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஐதரசன் புரோமைடின் எலக்ட்ரான் கவர் கூட்டு வினையில் எலக்ட்ரான் கவரியான புரோட்டான் இரட்டைப் பிணைப்பைத் தாக்கி கார்பன்நேர்மின் அயனி தோன்றுகிறது. பின்னர் இது கருகவரியான புரோமினுடன் வினைபுரிகிறது. இரட்டைப் பிணைப்பின் இரு முனைகளிலும் அவற்றுடன் இணைந்துள்ள குழுக்களைப் பொறுத்து கார்பன்நேர்மின்னயனி உருவாக முடியும். இதன் எலக்ட்ரான் அமைப்பு முறையை மார்க்கோனிக்காவ் விதியின் மூலம் கணிக்க முடியும் . ஆல்க்கீன் அல்லது ஆல்கைனுடன் ஒரு துருவ மூலக்கூறின் சமச்சீரற்ற கூட்டு வினையில், அதியுயர் மின்னெதிர் தன்மையுள்ள துருவ மூலக்கூறு குறைந்த எண்னிக்கையில் ஐதரசன் அணுக்கள் இணைந்துள்ள கார்பன் அணுவுடன் இணையும் என்று இவ்விதி கூறுகிறது. + +ஒருவேளை குறைவாக பதிலீடு செயப்பட்ட ஓர் இரட்டைப் பிணைப்பின் கார்பன் அணுவுடன் ஒரு வேதிவினைக் குழு சேர்ந்தால், அமிலங்களுடன் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைக்கு சாத்தியமில்லை. இந்நிகழ்வில் ஐதரோபோரனேற்ற-ஆக்சிசனேற்ற வினையைப் பயன்படுத்த வேண்டும். முதல்படி நிலையில் போரான் அணுஎலக்ட்ரான் கவரியாகச் செயல்பட்டு குறைவாக பதிலீடு செயப்பட்ட கார்பனுடன் சேர்கிறது.இரண்டாவது படிநிலையில் கருகவர் ஐதரோபெராக்சைடு அல்லது ஆலசன் எதிர்மின்னயனி போரான் அணுவைத் தாக்குகிறது . + +அதேவேளையில் எலக்ட்ரான் மிகு ஆல்க்கீன்கள் மற்றும் ஆல்க்கைன்களுடன் சேர்வது பிரதானமாக எலக்ட்ரான் கவரி கூட்டு வினைகளாகும். கார்பன்-வேற்றணு பல் பிணைப்புகளில் கருகவர் கூட்டுவினைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக கார்பனைல் குழு இதன் மிக முக்கியமான பிரதிநிதியாகும். இச்செயல்முறை பெரும்பாலும் நீக்கல் வினைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே வினை முடிந்தபிறகும் கார்பனைல் குழு மீண்டும் வினைகலவையில் இருக்கிறது. எனவேதான் இவ்வினையை கூட்டு-நீக்க வினை என்கிறார்கள். குளோரைடுகள், எசுத்தர்கள் அல்லது நீரிலிகள் போன்ற கார்பாக்சிலிக் அமில வழிப்பொருள்களில் இவ்வினை தோன்றுகிறது. மேலும் இவ்வினை பெரும்பாலும் அமிலம் அல்லது காரத்தால் வினையூக்கம் செய்யப்படுகிறது. அமிலங்களில் கார்பனைல் குழுக்கள் ஆக்சிசனுடன் பிணைந்து எலக்ட்ரான் கவர்தன்மை மிகுந்துள்ளது. அதேபோல காரங்கள் தாக்கும் கருக் கவரிகளின் கவரும் தன்மையை அதிகரிக்கின்றன + +[[File:H-Add-El.Mechanismus.PNG|thumb|center|500px|அமில வினையூக்கியால் நிகழும் கூட்டு-நீக்க வினையின் வினைவழிமுறை]] + +கார்பன் எதிர்மின்னயனிகளின் கருகவர் கூட்டுவினை அல்லது ஆல்பா, பீட்டா நிறைவுறா கார்பனைல் சேர்மத்தின் இரட்டைப் பிணைப்புடன் மற்றொரு கருக்கவரி மைக்கேல் வினையின் மூலம் முன்னெடுப்பது முதலியன இணைக் கூட்டுவினைகளாகக் கருதப்படுகின்றன. C–C பிணைப்புகளின் இடை உருவாக்கத்திற்கு இம்முறை மிகுந்த பயனளிக்கும் முறையாக உள்ளது . + +கருக்கவரிகள் மற்றும் எலக்ட்ரான் கவரிகளால் நிகழ்த்தப்படாத சில கூட்டு வினைகள் தனி உறுப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன, தனி உறுப்பு பதிலீடு மூலம் தனி உறுப்பு சேர்வதனால் தொடர் வினைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய வினைகள் தனி உறுப்பு பலபடியாக்கல் வினைகளுக்கு அடிப்படையாகும். + +[[File:Cope Rearrangement Scheme.png|left|thumb|3-மெத்தில்-1,5-எக்சாடையீன் சேர்மத்தின் கோப் மறுசீரமைப்பு வினை]] +மறுசீரமைப்பு வினையில் ஒரு மூலக்கூறின் கார்பன் கூடு மாறியமைந்து அசல் மூலக்கூறின் அமைப்பு மாற்றியனாக உருவாகிறது. வேக்னர் மீர்வெயின் மறுசீரமைப்பு வினைகள் போன்ற ஐதரைடு நகர்வு வினைகள் இதற்கு உதாரணமாகும். இவ்வினைகளில் ஒரு ஐதரசன், ஆல்க்கைல் அல்லது அரைல் குழு ஒரு கார்பனிலிருந்து அடுத்துள்ள கார்பனுக்கு நகர்கிறது. பெரும்பாலான மறுசீரமைப்பு வினைகளிலும் பழைய பிணைப்புகள் பிரிந்து புதிய கார்பன் – கார்பன் பிணைப்புகள் உருவாகின்றன. கோப் மறுசீரமைப்பு வினை போன்ற சிக்மா மின்னணு நகர்வு வினைகள் இதற்கு உதாரணமாகும் . +வளைய கூட்டுவினைகள், பெரிசைக்ளிக் என அழைக்கப்படும் சுற்று வளைய வினைகள் உள்ளிட்ட வினைகள் வளைய மறுசீரமைப்பு வினைகள் என்ற வகையில் அடங்கும். இவ்வகை வினைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகள் கொண்ட சேர்மங்கள் ஒரு வளைய மூலக்கூறாக உருவாகின்றன. டையீல்சு- ஆல்டர் வினை வளைய கூட்டு வினைக்கு ஒரு மிக முக்கியமான உதாரணமாகும். இணை டையீனும் பதிலீடு செய்யப்பட்ட ஆல்க்கீனும் சேர்ந்து வளைய எக்சேன் அமைப்பு [4+2] வளையக்கூட்டு என்ற இவ்வினையில் உருவாகிறது. + +வினையில் ஈடுபடும் வேதி இனங்களின் மின்னணு ஆர்பிட்டல்களை அடிப்படையாகக் கொண்டே வளையக்கூட்டு வினைகள் நிகழ்கின்றன. ஒரேவகை மின்சுமை கொண்ட ஆர்பிட்டல்கள் மட்டுமே மேற்பொருந்தியும் இடைவினை புரிந்தும் புதிய பிணைப்புகளாக உருவாகின்றன. வழக்கமாக வளையக் கூட்டு வினைகளுக்கு வெப்பம் அல்லது ஒளி துணைபுரியும். இக்குழப்பச் செயல்முறையால் கிளர்வு நிலையில் வெவ்வேறு வகையான மறு சீரமைப்புகள் தோன்றுகின்றன. [4+2] டையீல்சு ஆல்டர் வினைக்கு வெப்பமும், [2+2] வளையக் கூட்டு வினைக்கு ஒளியும் துணையாக நிற்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். உட்வார்டு ஆப்���ான் விதி வளையக் கூட்டு வினைகளில் ஆர்பிட்டல்களின் நிலையை விளக்குகிறது. + +[[File:Induced fit diagram.svg|thumb|left|380px|நொதி நடவடிக்கை வினையின் ஒரு மாதிரி]] + +உயிர்வேதியியல் வினைகள் முக்கியமாக நொதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தப் புரதங்கள் ஒற்றை வினைகளை குறிப்பாக வினையூக்கியாக செயலாற்றி நிகழ்த்துகின்றன. எனவே வினைகள் மிகவும் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. அமினோ அமில எச்சங்களின் வரிசையிலுள்ள ஒரு பிளவு அல்லது பையில் காணப்படும் நொதியின் ஒரு சிறிய பகுதியில் வினை நிகழ்கிறது. நொதியின் எஞ்சிய பகுதி நிலைநிறுத்துதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. நொதிகளின் வினையூக்க நடவடிக்கைகள் மூலக்கூறின் வடிவம், பிணைப்பின் திரிபு, புரோட்டான் நன்கொடை அல்லது திரும்பப்பெறுதல், மூலக்கூறுகளின் நோக்குநிலை போன்ற காரணிகளைச் சார்ந்தே நிகழ்கின்றன . + +உயிர் வாழ்வனவற்றில் ஏற்படும் உயிர்வேதியியல் வினைகள் ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றம் என்ற செயலால் அறியப்படுகின்றன. இதன் இயங்கமைப்பில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது உட்சேர்க்கையாகும். இதில் பல்வேறு டி.என்.ஏ மற்றும் நொதிகளால் கட்டுப்படுத்தப்படும் செயல்முறைகள் வழியாக சிறிய அலகுகளிலிருந்து புரதங்கள் மற்றும் கார்போவைதரேட்டுகள் போன்ற பெரிய மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன . உயிரிய ஆற்றலியல் துறை இத்தகைய வினைகளுக்கான ஆற்றல் மூலத்தை ஆய்வு செய்கிறது. குளுக்கோசு ஒரு முக்கியமான ஆற்றல் மூலமாகக் கருதப்படுகிறது. இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது உணவு செரித்தலால் தோன்றுகிறது. எல்லா உயிரினங்களும் இவ்வாற்றலைப் பயன்படுத்தி அடினோசின் டிரைபாசுபேட்டை உற்பத்தி செய்து மற்ற செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலாகப் பயன்படுத்துகின்றன. + +[[File:Velp-thermitewelding-1.jpg|thumb|தண்டவாளம் பற்ற வைப்பு வினையின் செயல்முறை. தண்டவாளத்தின் இடைவெளிகளில் நீர்ம இரும்பு நிரம்புகிறது.]] + +வேதியியல் வினைகள் யாவும் இரசாயனப் பொறியியல் துறைக்கு மையமாக இருக்கின்றன, அவை இயற்கை மூலப்பொருட்களான பெட்ரோலிய மற்றும் கனிம தாதுக்கள் போன்ற புதிய சேர்மங்களைத் தொகுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வினையை செயல்திறன் மிக்கதாகவும், விளைபொருட்களின் அளவை அதிகரிக்கவும், ஆற்றல் உள்ளீ��ுகள் மற்றும் கழிவுகளை குறைக்கவும் வேதிவினைகள் அவசியமாகின்றன. வினைத்திறனுக்குத் தேவைப்படும் ஆற்றலை குறைப்பதற்கும், வினை வேகத்தை அதிகரிக்கவும் வினையூக்கிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. + +வினைவழிமுறைகளை மேற்பார்வையிடுவது வேதிவினைகளின் வினைவேகத்தைச் சார்ந்துள்ளது. ஒப்பீட்டளவில் மெதுவாக நிகழும் செயல்முறைகள் தனிப்பட்ட வேதிப் பொருட்களின் செறிவு மற்றும் அடையாளங்களை வினைத் தளத்திலேயே பகுப்பாய்வு செய்யமுடியும். உண்மையான நிகழ் நேரப் பகுப்பாய்வுகளுக்கு முக்கிய கருவிகள் pH அளவீடு மற்றும் ஒளியியல் உறிஞ்சுதல் (நிறம்) மற்றும் உமிழ்வு நிறமாலை பகுப்பாய்வு போன்ற முறைகள் பயனாகின்றன. கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி செய்யப்படும் பகுப்பாய்வுகள் மிகத்துல்லியமான அளவீடுகளை அளிக்கின்றன. வேகவினைகள் அதிவேக சிரொளி நிறமாலை நுட்பம் மூலமாக ஆராயப்படுகின்றன . + +[[பகுப்பு:வேதி வினைகள்| ]] +[[பகுப்பு:வேதியியல்]] + + + +வேதியியற் பிணைப்பு + +வேதியியற் பிணைப்பு ("chemical bond") அல்லது இரசாயனப் பிணைப்பு என்பது அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடு ஆகும். + +இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. எதிர்மின் மற்றும் அணுக்கருக்களுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது இருமுனை ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது. அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான சகப் பிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பு, பலவீனமான இருமுனை ஈர்ப்பு விசைகள் அதாவது இலண்டன் விலக்கு விசைகள், மற்றும் ஐதரசன் பிணைப்புகள் என கணிசமாக மாறுபடுகிறது. + +எளிய மின்காந்த விசையால் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற விதிப்படி எதிர் மின்சுமை கொண்ட இலத்திரன்களும் உட்கருவைச் சுற்றிவரும் நேர் மின்சுமை கொண்ட புரோத்தன்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இரண்டு உட்கருக்களுக்கு இடையே உள்ள ஒரு இலத்திரன் அவ்விரண்டு உட்கருக்களாலும�� ஈர்க்கப்படுகிறது. அவ்வாறே, இரண்டு இலத்திரன்களுக்கு இடையே உள்ள உட்கருவும் அவ்விரண்டு இலத்திரன்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இந்த ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று கூறப்படுகிறது. எலக்ட்ரான்களின் குறைவான நிறை மற்றும் அலை இயக்கப் பண்பு ஆகியவற்றின் காரணத்தால் உட்கருவை ஒப்பிடுகையில் அவை அதிகமான இடத்தை ஆக்கிரமிகக வேண்டியுள்ளது. அணுக்கருக்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காட்டிலும் இவ்வாறு ஆக்கிரமித்துள்ள எலக்ட்ரானகள் சற்றுத் தொலைவிலேயே அணுக்கருவை வைத்திருக்கின்றன ஒரு பிணைப்பிலுள்ள அணுக்களுக்கும் உட்கருவிற்கும் இடையே உள்ள தொலைவை இந்நிகழ்வு கட்டுப்படுத்துகிறது. + +வேதியியற் பிணைப்பு, ஈரணு அல்லது பல்லணு வேதியியற் சேர்மங்களின் உருவாக்கத்திற்கான உறுதிப்பாட்டை வழங்குகிறது. சக்திச்சொட்டு மின்னியங்கியல் (quantum electrodynamics) விதிகளால் கையாளப்படும் இத்தகைய ஈர்ப்பு விசை தொடர்பான விளக்கங்கள் மிகவும் சிக்கலானவை. நடைமுறையில், வேதியியலாளர்கள், குறைவான சிக்கல்தன்மை கொண்ட சக்திச்சொட்டுக் கோட்பாடு அல்லது பண்பியல் விளக்கங்களின் மூலம் இதனைப் புரியவைக்க முற்படுகிறார்கள். பொதுவாக, வேதிப் பிணைப்புகளின் வலிமை அப்பிணைப்பில் பங்கேற்கும் அணுக்களுக்கு இடையேயான இலத்திரன்களின் பகிர்வு அல்லது பரிமாற்றத்தைச் சார்ந்துள்ளது. இயற்கையாக நம்மைச் சுற்றியுள்ள உலோகங்கள், பளிங்குகள், ஈரணு வாயுக்கள், மூலக்கூறுகள் போன்ற யாவும் வேதியியற் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்புகள் பருப்பொருளின் கட்டமைப்பு குறித்த ஒட்டுமொத்த இயல்புகளை நமக்கு விளக்குகின்றன + +பிணைப்புக்களின் வலிமை பரந்த அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன. பொதுவாக அயனிப் பிணைப்புக்கள் வலுவானவை. ஐதரசன் பிணைப்புக்களும், வாண்டெர்வால் பிணைப்புக்களும் வலிமை குறைந்தவை. எனினும், வலிமை குறைந்த பிணைப்புகளில் வலிமை கொண்ட பிணைப்புகளும், வலிமை மிகுந்த பிணைப்புகளில் குறைந்த வலிமையுள்ள பிணைப்புக்களும் அமையக் கூடும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். + +அறிவியாள்ர்களின் கருத்துப்படி, அணுக்களுக்கிடையே நிகழும் வேதி பிணைப்புகளில் மூன்று வகையான வேதிப்பிணைப்புகள் உள்ளன.பிணைப்பால் உருவாகும் மூலக்கூறுகள் வெவ்வேறு சிறப்புப் பண்புக��ைப் பெற்றுள்ளன.அவை, + + + + +ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் நேர்மின் மற்றும் எதிர்மின் அய்னிகளுக்கிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும். இத்தகைய பிணைப்பை பெற்றுள்ள சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படும். பொதுவாக எலக்ட்ரான்க்ளை உலோகங்கள் இழப்பவையாகவும் அலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்பவையாகவும் உள்ளன. ஆனால் சில மூலக்கூறு அயனிகள் மிகவும் சிக்கலான தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன. உதாரணம் NH , SO போன்ற மூலக்கூறு அயனிகள் + +அயனிப் பிணைப்பு குறிப்பிட்ட திசையில் இல்லாமல் அனைத்து திசைகளிலும் உள்ளது. எனவே திடநிலையில் ஒரேயொரு அயனி மூலக்கூறு தனியாக இருக்காது. நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் பல ஒன்று சேர்ந்த நிலையில் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு அயனிச் சேர்மமாக இருக்கும். நிலையான ஒரு அயனிச் சேர்மம் உருவாகும்போது அதன் ஆற்றல் குறையும். அதாவது நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுக்கிடையே அயனிப்பிணைப்பு உருவாகும் போது ஆற்றல் வெளிப்படுகிறது. + + + + +பாறை எண்ணெய் + +பெட்ரோலியம் "(Petroleum)" என்றால் பாறை எண்ணெய் அல்லது கல்லெண்ணெய் என்பது பொருளாகும். கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் பாறை அல்லது கல் என்று பொருளாகும். ஓலியம் என்றால் எண்ணெய் என்பது பொருள்). இயற்கையில் நிலத்திலுள்ள பாறைகளிலிருந்து தோற்றம் பெற்று கிடைப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. + +நீர்ம நிலையில் உள்ள பல ஐதரோகார்பன்களின் கலவை பெட்ரோலியம் ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் CH இல் இருந்து CH வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், திண்ம நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் நிலக்கரி ஆகும். + +இயற்கையில் கிடைக்கும் பாறை எண்ணெயில் உலோகமற்ற தனிமங்களான கந்தகம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. + +பாறை எண்ணெயை முதன் முதலாக 1556 இல் ஜெர்மன் கனிமவியலாளர் ஜியார்ஜியஸ் அகிரிகோலா ("Georgius Agricola") என்று அறியப்பட்ட, "கியார்கு பௌவர்" ("Georg Bauer") என்பவர் பயன்படுத்தியதாக அவருடைய ஆய்வுநூல் தெரிவிக்கின்றது. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், மே 26, 1908 ஆம் நாள் பெர்சியாவில், ஒரு பிரித்தானியக் கும்பினி எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி எண்ணெய் எடுத்ததே இன்றைய பாறை எண்ணெய்ப் பயன்பாட்டுக்கு வழிவகுத்த முதல் நிகழ்வு. "டார்சி” ("D'Arcy") என்பவர் 1901 ஆம் ஆண்டு பெர்சிய அரசிடம் இருந்து பெற்ற உரிமத்தின்படி, ஈரானில் எண்ணெய் இருக்கும் இடத்தைத் தேடினர். பணமின்றி அவரது கும்பினி முழுகும் தருவாயில் இருந்தபொழுது, கும்பினியைச் சேர்ந்த "ஜியார்ஜ் ரேய்னால்ட்ஸ்" ("George Reynolds") என்பவர் "மஸ்ஜித்-இ-சுலைமான்" ("Masjid-i-Suleiman") என்னும் இடத்தில் 1,180 அடி ஆழத்தில் தோண்டிய பொழுது, எண்ணெய் குபுக்கென்று மேல் பரப்புக்கு மேலே, 75 அடி உயரமாய் பீய்ச்சி அடித்தது. இக் கண்டுபிடிப்பின் பயனாய் ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் ("Anglo-Persian Oil Co") உருவாகியது. பின்னர் அது பற்பல வடிவங்களில் உருமாறிப் பின் 1954 இல் பிரித்தானியப் பாறை எண்ணெயாகவும் ("British Petroleum"), அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு ”பி.பி” ("BP") ஆகவும் உருப்பெற்றது. + +பாறை எண்ணெயைக் கச்சா எண்ணெய் அல்லது "பாறைநெய்" என்றும் கூறலாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மடிந்து (மரித்துப்) போன பின், கடல் அடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, கோலுரு நுண்ணுயிர்களால் (பாக்டீரியாக்களால்) சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வளிமமாகவும் மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் புவியின் பாறை வெடிப்புக்களுக்குள் சென்று எண்ணெய் வளங்களாக மாறுகின்றன. அதனாலேயே இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது அமைந்திருக்கின்றன. +மண்ணடியில் இருந்து எடுக்கும் எண்ணெயில் அடங்கி இருக்கும் வேதிப்பொருட்களின் அளவுகள் உருவான சூழலுக்கு ஏற்றாற்போல இடத்துக்கு இடம் வெகுவாக மாறும், ஆனால் அவற்றின் விகிதங்களை ஓரளவுக்கு நெருக்கமான எல்லைகளுக்குள் கீழ்க்காணுமாறு கொடுக்கலாம்: +இற்றையாண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் மு��்னணியில் இருப்பது சவுதி அரேபியா தான். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவே எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட தொழில்கள் சிறந்து விளங்கின. இந்த வளமும் போகமும் தொடர்ந்து நிலைக்கும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்த வளமான நிலை எப்போதும் நிலைக்காது என்று 1950 வாக்கில் ஒரு எண்ணெய் வள ஆய்வு நிபுணர் கணித்துக் கூறியிருந்தார். அவர் பெயர் மேரியான் கிங் ஹப்பர்ட் (Marion King Hubbert). பொதுவாக எண்ணெய் கண்டுபிடிப்பு, பயன்பாடு, இவற்றையெல்லாம் வைத்து ஆய்ந்து உருவகப் படுத்தி, ஒரு கணிப்பைச் சொல்லி இருந்தார். ஒரு மணி-வளைவு (bell curve) போல எண்ணெய் வளம் உச்சத்தை (ஹப்பெர்ட் உச்சம், Hubbert Peak) அடைந்து பிறகு குறைந்து விடும் என்று அவர் கணித்தபடியே எழுபதுகளில் எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து போனது. + +அமெரிக்க எண்ணெய் உற்பத்தியைப் போலவே உலக எண்ணெய் உற்பத்தியும் (உற்பத்தி என்பதே தவறான சொல்லாடல் என்று சிலர் கருதுகின்றனர் - கண்டுபிடிப்பு என்பதே சரி) அதே மணி-வளைவைத் தழுவி இருக்கிறது என்றும், தற்போது அந்த வளைவின் உச்சத்தில் இருக்கிறோம் என்றும் சில ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுகின்றனர் (The End of the Age of Oil). ஆனால் இத்தகைய கணிப்புக்கள் எல்லாம் தோராயமானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இயற்கையில் இருந்தது அல்லது இப்போது இருப்பது எவ்வளவு என்று கணக்கிட்டதும் ஒரு குத்துமதிப்பான கணக்குத் தான். இருப்பினும் எந்த இயற்கை வளத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதன் அடிப்படையிலும், கண்டுபிடித்து வெளியெடுக்கும் வேகத்தைவிட பயன்படுத்தும் வேகம் அதிகமாய் இருப்பதாலும், இந்த ஹப்பெர்ட் உச்சம் உலக எண்ணெய் வளத்திற்கும் உண்டு என்பது ஒரு வாதம். + +1999ல் கச்சா எண்ணெயின் விலை சுமார் $16 அமெரிக்க டாலர் என்னும் அளவிலே இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவன, இராக்கிய எண்ணெய் வயல்களில் அதிகமான உற்பத்தியும், ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையும் ஆகும். கச்சா எண்ணெயின் விலை, பிப்ரவரி 2005 வாக்கில் ஒரு பேரலுக்கு(பீப்பாய்க்கு) ஐம்பது அமெரிக்க டாலர் என்னும் அளவில் இருந்தது. அதுவே பிப்ரவரி 2008ல் ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக��க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள். + +சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள் (refineries) புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர். + +கச்சா எண்ணெயின் விலை மார்ச் 12 2008 ல், $110 ஆகவும், மே 9, 2008 ல, $125 ஆகவும் மே 21, 2008 ல, $130 ஆகவும் உயர்நதுள்ளது. ஜுன் 26, 2008 $145 தாக உயர்ந்து, ஜுலை 3, 2008 ல் $ 145 ஆக உயர்ந்தது. + +எண்ணெய் வளம் குறையக் குறையப் பிற மூலங்களில் இருந்து ஆற்றலைப் பெறும் முறைகள் அதிகரிக்கலாம். வருங்காலத்தில், மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா, சீனா முதலிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் இன்னும் அதிகரிக்கும். + +இன்னும் நுட்பியல் வளர்ச்சிகள் கூடிய எண்ணெய் கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் உதவலாம். மீண்டும், ஆற்றல் தேவைகளுக்கு உலகம் கரிக்கும் அணுச்சக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரக் கூடும். கரிவழி ஆற்றல் மாசு நிறைய உண்டு பண்ணுவது. ஆனால் கரி வளம் இன்னும் நிறைய இருக்கிறது என்று கருதுகின்றனர். இவை தவிரப் பிற புதிய மூலங்கள் மூலமும் ஆற்றாலை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கனடாவின் எண்ணெய்கலந்த மணல்வெளிகள், காற்று, கதிரொளி, கடல் பேரலைகள், ஹைட்ரொஜன் இவற்றில் இருந்தெல்லாம் ஆற்றலை உருவாக்கும் முறைகள் வளரலாம். + + + + + +மூலக்கூறு + +மூலக்கூறு ("Molecule") என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு மின்சுமை ஏதுமின்றி நடுநிலையுடன் காணப்படும் ஒரு தொகுதியாகும். மூலக்கூறுகள் மின்சுமையற்றவை என்பது மட்டுமே அயனிக்கும் மூலக்கூறுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். இருப்பினும் குவாண்டம் இயற்பியல், கரிம வேதி���ியல், மற்றும் உயிர் வேதியியல் துறைகளில் மூலக்கூறு என்ற சொல் பெரும்பாலும் பல்லணு அயனி என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. + +உட்கூறுகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், மூலக்கூறு என்பது வாயுநிலையில் உள்ள துகள் என்ற அர்த்தத்துடன் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூலக்கூறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. மந்த வாயுக்களின் அணுக்கள் உண்மையில் ஓரணு மூலக்கூறுகளாயிருந்தாலும் வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின்படி அவை மூலக்கூறுகளாகக் கருதப்படுகின்றன . +ஒரு மூலக்கூறு என்பது ஓரினவுட்கருவாக இருக்கலாம். அதாவது ஆக்சிசன் மூலக்கூறில் (O2) இருப்பது போல ஒரேயொரு வேதித்தனிமத்தின் அணுக்களைக் கொண்ட தொகுதியாக ஒரு மூலக்கூறு இருக்கலாம். அல்லது ஒரு மூலக்கூறு என்பது பல்லினவுட்கருவாக இருக்கலாம். அதாவது நீர் மூலக்கூறில் (H2O) உள்ளதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்களைக் கொண்ட தொகுதியாக இருக்கலாம். சகப்பிணைப்பால் பிணைக்கப்படாமல் ஐதரசன் பிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள அணுக்களும் அணைவுத் தொகுப்புகளும் பொதுவாக ஒற்றை மூலக்கூறுகளாக கருதப்படுவதில்லை . + +பருப்பொருளின் அங்கங்களாக உள்ள மூலக்கூறுகள் என்பவை கரிமப்பொருள்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. இந்த காரணத்தாலேயே உயிர் வேதியியல் என்ற துறையும் தோன்றியது. பருப்பொருளின் அங்கங்களாலேயே பெரும்பாலான பெருங்கடல்களும் வளிமண்டலமும் தோன்றியுள்ளன. எனினும், பூமியின் மேலோடு, அதையடுத்த மூடகம் அல்லது காப்புறை, புவியின் மையப்பகுதி முதலானவற்றை உருவாக்கிய, பூமியின் மேல் பெரும்பான்மையாகக் காணப்படும் நன்கு அறியப்பட்ட திடப்பொருட்களாக உள்ள கனிமங்கள் பல வேதிப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை அடையாளம் கண்டுகொள்ளத்தக்க மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை. பெரும்பாலும் அலகு செல் மீண்டும் மீண்டும் திரும்பிவந்து கிராபீனில் உள்ளது போல சமதளத்தில் நீட்சி பெற்று அல்லது வைரம், குவார்ட்சு, அல்லது சோடியம் குளோரைடில் உள்ளது போல முப்பரிமானத்தில் நீட்சி பெற்று இருந்தபோதிலும், அயனிப் படிகங்களுக்காகவும் (உப்புகள்), சகப்பிணைப்பு படிகங்களுக்காகவும் (வலை அமைப்பு திண்மங்கள்) குறிப்பிட்டதொரு மூலக்கூறு எதுவும் வரையறுக்கப்படவில்லை. மீளும் அலகுசெல் கட்டமைப்பின் கருப்பொருள் உலோகப்பிணைப்பின் பல சுருங்கமைப்பு நிலைகளுக்குப் பொருந்துகிறது. திட உலோகங்களும் மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை என்பது இதன் பொருளாகும். கண்ணாடிகளிலும் அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் இணைக்கப்பட்டு ஒன்றாக இருந்தாலும் இங்கும் அடையாளம் காணக்கூடிய மூலக்கூறுகள் எதுவுமில்லை, அல்லது படிகங்களை அடையாளப்படுத்தும் மீளும் அலகு செல் ஒழுங்குமுறையும் இல்லை. + +மூலக்கூறுகளைப் பற்றிய அறிவியல் பிரிவு மூலக்கூற்று வேதியியல் அல்லது மூலக்கூற்று இயற்பியல் என்று அழைக்கப்படுகிறது. மூலக்கூறுகள் வேதியியலை மையமாகக் கொண்டு இருந்தால் அப்பிரிவு மூலக்கூற்று வேதியியல் எனவும் அவை இயற்பியலை மையமாகக் கொண்டு இருந்தால் அப்பிரிவு மூலக்கூற்று இயற்பியல் என்றும் கருதப்படுகிறது. வேதிப் பிணைப்புகள் உருவாக்கத்திலும் சிதைவிலும் தொடர்புடைய மூலக்கூறிடை வினைகளின் விதிகளை மூலக்கூற்று வேதியியல் ஆராய்கிறது. மூலக்கூறுகளின் கட்டமைப்பு, பண்புகள் தொடர்பான விதிகளை ஆராய்வது மூலக்கூறு இயற்பியலாகும். எனினும், நடைமுறையில், இவ்வேறுபாடுகள் தெளிவற்றனவாக உள்ளன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் சேர்ந்த தொகுதியே மூலக்கூறு என்று மூலக்கூற்று அறிவியல் திட்டவட்டமான நிலையான எல்லையை குறிப்பிடுகிறது. பல்லணு அயனிகள் சில சமயங்களில் மின்சுமையேற்ற மூலக்கூறுகளை விவரிக்க பயனுள்ளதாக உள்ளது. அதிக வினைத்திறன் கொண்ட மூலக்கூறுகளை விவரிக்க நிலைப்புத்தன்மையற்ற மூலக்கூறுகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒத்திசைவு எலக்ட்ரான்கள், உட்கருக்கள், இயங்குறுப்புகள், மூலக்கூற்று அயனிகள், இரிட்பெர்க்கு மூலக்கூறுகள், இடைநிலைகள், வாண்டர்வால்சு அணைவுச் சேர்மங்கள், போசு-ஐன்சுடீன் செறிபொருளில் மோதும் அணுக்கள் போன்றவை அதிக செயல்திறன் மிக்க மூலக்கூறுகளாகக் கருதப்படுகின்றன. + +மெரியம் வெப்சுடர் மற்றும் நிகழ்நேர சொற்பிறப்பியல் அகராதியின்படி "மூலக்கூறு" என்ற சொல் இலத்தீன் மொழி சொல்லான மோல்சு அல்லது நிறையின் சிறிய அலகு என்பதிலிருந்து பெறப்பட்டது ஆகும். + +மூலக்கூறு (1794) – "மிகவும் நுண்ணிய துகள்" என்ற பொருள் கொண்ட மாலிகியூல் என்ற பிரெஞ்சு மொழி சொல்லிலிருந்தும் (1678), புதிய இலத்தீன் மொழிச் சொல்லான மாலிகியூலா என்ற சொல்லிலிருந்தும், மிகவும் சிறிய என்ற பொருள் கொண்ட மோல்சு என்ற இலத்தீன் சொல்லில் இருந்தும் பெறப்பட்டது. முதலில் தெளிவற்ற பொருள் கொண்டிருந்த 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இலத்தீன் வடிவத்திலேயே பயன்படுத்தப்பட்ட இச்சொல், இரெனே டேக்கார்டின் தத்துவத்தினால் இனங்காணப்பட்டது . + +மூலக்கூறு பற்றிய அறிவு வளரவளர மூலக்கூறு தொடர்பான வரையறைகளும் விரிவடைந்தன. தொடக்கக் கால வரையறைகளில் துல்லியம் குறைவாக இருந்தது. மூலக்கூறுகள் என்பவை தூய வேதிப்பொருட்களின் வேதிப்பண்புகளும் உட்கூறுகளும் கொண்ட மிகச்சிறிய துகள்கள் என்று அவை வரையறுத்தன .சாதாரணமாகக் காணப்படும் பாறைகள், உப்புகள், உலோகங்கள் போன்றவை வேதியியல் முறையில் பிணைக்கப்பட்ட அணுக்கள் அல்லது அயனிகளின் பெரிய படிக வலையமைப்புகளால் உருவாக்கப்பட்டவையாகும் ஆனால் இவை வெவ்வேறான மூலக்கூறுகளால் உருவாக்கப்படவில்லை என்பதால் மேற்கண்ட வரையறை முக்கியத்துவம் பெறவில்லை. + +சகப்பிணைப்பு அல்லது அயனிப் பிணைப்பால் மூலக்கூறுகள் பிணைக்கப்பட்டு ஒன்றாக உள்ளன. பலவகையான அலோகங்கள் வளிமண்டலத்தில் மூலக்கூறுகளாக உள்ளன. உதாரணமாக ஐதரசன், ஐதரசன் மூலக்கூறாகவே உள்ளது. ஒரு சேர்மத்தின் மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களைக் கொண்டது ஆகும். + +ஒரு சகப் பிணைப்பு என்பது பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கு இடையில் எலக்ட்ரான் இணைகள் பங்கீடு அடைவதால் உருவாகும் பிணைப்புவகையாகும். இந்த எலக்ட்ரான் இணைகள் பகிர்வு இணைகள் அல்லது பிணைப்பு இணைகள் எனப்படுகின்றன. எலக்ட்ரான் இணைகளை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு அணுக்களுக்கிடையில் நிலவும் கவர்ச்சி விசையையும் விலக்கு விசையையும் நிலையாக வைத்திருக்கும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படுகிறது . பங்கீட்டு வலுப்பிணைப்பு, பகிர்பிணைப்பு என்ற பெயர்களாலும் இப்பிணைப்பு அறியப்படுகிறது. + +சகப்பிணைப்பின்போது அணுக்கள் நிலையான எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன. இச்செயல்முறையின்போது அணுக்களில் உள்ள அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் எலக்ட்ரான்கள் தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்கின்றன. அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் உருவாகும் அணுக்களுக்கிடைப்பட்ட பிணைப்பே சகப்பிணைப்பு என்றும் இப்பிணைப்பை வரையறுக்கலாம். பொதுவாக அணுக்களின் இணைதிறன் கூட்டிலுள்ள ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள், எலக்ட்ரான் பங்கீட்டில் பயன்படுத்தப்படுகிறது. பங்கிடப்பட்ட எலக்ட்ரான்கள் சகப்பிணைப்பின் மத்தியில் அமையும். மேலும், சகப்பிணைப்பில் பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இணையையும் சேர்த்து ஒவ்வோர் அணுவும் எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருக்கும். ஐதரசன் அணுக்களில் உள்ள இரண்டு s-ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள் மேற்பொருந்துவதால் சகப்பிணைப்பு உருவாகிறது. ஒவ்வொரு H அணுவும் முழுமையடைந்த K கூட்டினைப் (1s2) பெற்றுள்ளது. + +ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுகிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும். இத்தகைய பிணைப்பைப் பெற்றுள்ள சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் அல்லது அயனிகள் நேர்மின் அயனிகள் எனப்படும். இதேபோல ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் அல்லது அயனிகள் எதிர்மின் அயனிகள் எனப்படும். இந்த எலக்ட்ரான்களின் மாற்றம் இணைபிணைப்பெண் என்பதற்குப் பதிலாக மின் இணைதிறன் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக உலோக அணுக்கள் நேர்மின் அயனியாகவும் அலோக அணுக்கள் எதிர்மின் அயனியாகவும் உள்ளன என்று கருதலாம். இதன்படி ஒரு உலோகத்திலிருந்து எலக்ட்ரான் அலோகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு அணுக்களும் இனைதிறன் கூட்டில் முழுமையடைவதே அயனி பிணைப்பு என்றும் வரையறுக்கலாம். + +மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மூலக்கூறுகளை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது. ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன. டிஎன்ஏ,வை ஒரு பேரளவு மூலக்கூறாக பார்க்க இயலும் இதேபோல பல பாலிமர்களையும் பேரளவு மூலக்கூறுகளாக காணமுடியும். + +பொதுவாக கரிம தொகுப்புக்கான கட்டுமான அடுக்குகளாகப் பயன்படும் மூலக்கூறுகள் சில ஆங்சுடிராம் முதல் பல டசன் ஆங்சுடிராம் வரை பருமன் கொண்டவையாக அல்லது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு அளவு பரிமாணத்தைக் கொண்டுள்ளன. + +மேலே குறிப்பிட்டது போல பரிமாணமுள்ள ஒற்றை மூலக்கூறுகளை பொதுவாக ஒளியில் காணமுடியாது. ஆனால் சிறிய மூலக்கூறுகளையும் தனிப்பட்ட சில அணுக்களின் கோட்டு வரைபடத்தையும் சில சூழல்களில் அணு விசை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். சில பெரிய மூலக்கூறுகளை பேரளவு மூலக்கூறுகள் அல்லது மீமூலக்கூறுகள் எனப்படுகின்றன. + +ஈரணு ஐதரசன் மிகச்சிறிய மூலக்கூறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வணுவின் பிணைப்பு நீளம் 0.74 Å ஆகும் . + +நிகர மூலக்கூற்று ஆரமே கரைசலில் ஒரு மூலக்கூறின் அளவு ஆகும். + +ஒரு மூலக்கூறின் மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் குறிப்பிட வேதித் தனிமங்களின் குறியீடுகள், எண்கள் சில சமயங்களில் அடைப்புக்குறிகள், கோடுகள், அடைப்புக்குறிக்குள் கூட்டல் கழித்தல் குறியீடுகள் போன்றவற்றை ஒற்றை வரியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடையாளச் சின்னங்களையும் அச்சுக்கலையின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு கீழ்க்குறியீடுகள் மற்றும் மேலெழுத்துக்களாக மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. + +ஒரு சேர்மத்தின் அனுபவ வாய்ப்பாடு என்பது ஒரு மிக எளிய வேதி வாய்ப்பாடு ஆகும். இவ்வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள அணுக்களின் விகிதம் மிக எளிமையான முழு எண்களில் இருக்கும். உதாரணமாக தண்ணிரில் ஐதரசனும் ஆக்சிசனும் எப்போதும் 2:1 என்ற விகிதத்தில் இருக்கும். இதேபோல எத்தில் ஆல்ககாலில் கார்பன், ஐதரசன், ஆக்சிசன் மூன்றும் 2:6; 1 என்ற விகிதத்தில் சேர்ந்து உருவாகியிருக்கும். எனினும், அனுபவ வாய்ப்பாடைக் கொண்டு ஒரு மூலக்கூறின் தனித்துவத்தை உறுதிபடுத்த முடிவதில்லை. டை மெத்தில் ஈதரிலும் எத்தனாலில் உள்ள பகுதிப்பொருட்களின் விகிதமே இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது ஆகும். ஒரே மூலக்கூற்று வாய்ப்பாட்டையும் வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்களை மாற்றியன்கள் என்பர். கார்போ ஐதரேட்டுகளிலும் ஒரே விகிதமும் வெவ்வேறு எண்ணிக்கையில் அணு எண்களும் கொண்ட சேர்மங்கள் காணப்படுகின்றன. + +மூலக்கூற்று வாய்ப்பாடு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை மிகச்சரியாக எடுத்துக் காட்டுகிறது. அதே வேளையில் அம்மூலக்கூறிலுள்ள அணுக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. எனினும் வெவ்வேறு மாற்றியன்கள் வெவ்வேறு மூலக்கூறுகளாயிருந்தாலும் ஒரே வகையான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. +அனுபவ வாய்ப்பாடு பெரும்பாலும் மூலக்கூற்று வாய்ப்பாட்டோடு ஒத்திருந்தாலும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக அசிட்டிலீன் மூலக்கூறு C2H2,என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் எழுதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள தனிமங்களின் எளிய முழு எண் விகிதம் 1:1 ஆகும் (CH) வேதி வாய்ப்பாட்டிலிருந்து மூலக்கூற்று நிறையைக் கணக்கிட முடியும். வழக்கமான அணுநிறை அலகுகளில் இந்நிறை குறிப்பிடப்படுகிறது. கார்பன் 12 அணுவின் நிறையில் 1/12 பங்கு உள்ள நிறை அளவே ஒரு அணுநிலை அலகு ஆகும். வலைப்பின்னல் திண்மங்களுக்கு விகிதவியலில் வாய்ப்பாட்டு அலகு முறை பயன்படுகிறது. + +குறிப்பாக நான்கு வெவ்வேறு தொகுதிகள் பிணைக்கப்பட்ட அணுக்கள், குறிப்பாக சிக்கலான முப்பரிமாண கட்டமைப்பைக் கொண்டுள்ள மூலக்கூறுகளை விளக்க ஒரு எளிய மூலக்கூற்று வாய்பாடு அல்லது அரை கட்டமைப்பு வேதியியல் வாய்ப்பாடு முற்றிலும் போதாது. இவ்வகையான நிகழ்வுகளில் அமைப்பு வாய்ப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. அமைப்பு வாய்ப்பாடுகள் ஒரு பரிமாண வேதிப் பெயரையும் பல சொற்கள் கொண்ட பெயரிடு முறையையும் பயன்படுத்துகிறது. + +அதிர்வு மற்றும் சுழற்சி இயக்கங்கள் மூலம் தொடர்ச்சியாக இயங்கும் மூலக்கூறுகள், நிலையான சமநிலை வடிவம், பிணைப்பு நீளம் மற்றும் பிணைப்புக் கோணம் முதலியவற்றைக் கொண்டுள்ளன. ஒரு தூய்மையான பொருள் அதே சராசரி வடிவவியல் அமைப்பைக் கொண்ட மூலக்கூறுகளால் உருவாகியுள்ளது. ஒரு மூலக்கூறின் வேதிவாய்ப்பாடும், அதன் கட்டமைப்பும் அதன் வினைதிறனை உறுதிப்படுத்துதலில் முக்கியமான இரண்டு காரணிகளாகக் கருதப்படுகின்றன. மாற்றியன்கள் வேதி வாய்ப்பாட்டை பகிர்ந்து கொண்டாலும் அவற்றின் கட்டமைப்பு மாற்றம் காரணமாக வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை முப்பரிமாண மாற்றியன்கள் ஒரே மாதிரியான இயற்பியல், வேதியியல் பண்புகளைப் பெற்றிருந்தாலும் உயிர்வேதியியல் பண்புகளில் மாறுபடுகின்றன. + +அறியப்பட்ட ஆற்றல் ஆய்வுகள் அல்லது பிளாங்கு மாறிலியின் அதிர்வெண்ணுடன் மூலக்கூறுகள் உண்டாக்கும் எதிர்வினையைப் பற்றி மூலக்கூற்று நிறமாலையியல் ஆய்வு செய்கிறது. மூலக்கூறுகள் அனைத்தும் குறைந்தபட்ச ஆற்றல் மட்டங்களைக் கொண்டுள்ளன. ஏற்பு அல்லது உமிழ்வு மூலமாக அம்மூலக்கூறின் ஆற்றல் பரிமாற்றத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் இந்த ஆற்றல் மட்டங்களை ஆராய முடியும் . + +படிகங்களில் நடப்பதைப்போல நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள், அல்லது உயர் ஆற்றல் எக்சு கதிர்களுடன் மூலக்கூறுகள் வழக்கமாக நிகழ்த்தும் இடைவினைகளின் போது, நிறமாலையியல் விளிம்புநிலை ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. மூலக்கூறுகளின் சுழற்சி வேறுபாடுகளை நுண்ணலை நிறமாலையியல் அளவிடுகிறது. புறவெளியிலுள்ள மூலக்கூறுகளை அடையாளம் காண இம்முறை பயன்படுகிறது. நீட்சி, வளைவு அல்லது திருப்ப இயக்கங்கள் உள்ளிட்ட மூலக்கூறுகளின் அதிர்வு மாற்றங்கள அகச்சிவப்பு நிறமாலையியல் அளவிடுகிறது. நுண்ணலை நிறமாலையியல் பொதுவாக மூலக்கூறுகளின் பிணைப்பு வகைகள் அல்லது வேதி வினைக்குழுக்களை அடையாளம் காணப் பயன்படுகிறது. எலக்ட்ரான் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், புற ஊதா, கட்புல அல்லது அண்மை அகச்சிவப்பு கதிர்களின் ஏற்பு அல்லது உமிழ்வு வரிகளில் வண்ணங்களை உண்டாக்குகின்றன. ஒரு மூலக்கூறில் உள்ள குறிப்பிட்ட உட்கருக்களை அணுக்கரு ஒத்திசைவு நிறமாலை ஆய்வு செய்கிறது. மூலக்கூறின் வெவ்வேறு நிலைகளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை அறிவதற்கு அணுக்கரு ஒத்திசைவு நிறமாலை ஆய்வைப் பயன்படுத்த முடியும். + +மூலக்கூறு இயற்பியல் மற்றும் கோட்பாட்டு இரசாயனவியல் மூலம் மேற்கொள்ளப்படும் மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வு பெரும்பாலும் குவாண்டம் இயங்கியல் அடிப்படையில் அமைந்திருக்கிறது. வேதிப் பிணைப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள இது அவசியமாக உள்ளது. + +ஐதரசன் மூலக்கூறிலுள்ள அயனியே மிகவும் சிறிய மூலக்கூறாகக் கருதப்படுகிறது. இதேபோல வேதிப்பிணைப்புகளிலும் மிகச்சிறியதாக ஓர் எலக்ட்ரான் பிணைப்பு ஆகும். எலக்ட்ரான் – எலக்ட்ரான் தள்ளுகை விசை இல்லாத காரணத்தால் இத்திட்டத்தின் சுரோடிங்கர் சமன்பாட்டிற்கு எளிதாக தீர்வு காணமுடியும் என்பது இதன் பொருளாகும். வேகமான எண்ணிம கணினிகள் வளர்ச்சியால், மிகவும் சிக்கலான மூலக்கூறுகளுக்கான தோராயமான தீர்வுகளை கண்டறிவது கணக்கீட்டு வேதியியலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. +ஒரு மூலக்கூறாக கருதுவதற்கு அணுக்களின் அமைப்பு போதுமான அளவுக்கு நிலையானதாக் உள்ளதா என்பதைக் கண்டறிய கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஐயுபிஏச��� இதற்கான பரிந்துரைகளை அளிக்கிறது . இவ்வரையறை அணுக்களுக்கிடையிலான இடைவினைகளின் தன்மையைப் பொறுத்ததல்ல ஆனால் அவற்றின் வலிமையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். உண்மையில், இது பலவீனமாக பிணைக்கப்பட்ட இனங்களை உள்ளடக்கியுள்ளது. ஈலியம் இருபடி போன்ற (He2) பாரம்பரியமாக மூலக்கூற்களாக கருதப்படாதவையும் இதில் அடங்கியுள்ளன. தாழ்வெப்பநிலைகளில் மட்டுமே இவற்றின் கட்டுண்ட நிலையை அறியமுடியும் . + +ஒரு மூலக்கூறாகக் கருதப்படுவதற்கு போதுமான அணு அமைப்பு இருக்கிறதோ இல்லையோ, இயற்கையாகத் தத்துவரீதியாக அமைந்த ஒரு செயல்பாட்டு வரையறையாக இது உள்ளது. எனவே, மூலக்கூறு என்பது ஒரு அடிப்படை தனிப்பொருளல்ல. ஆனால் இதன் தத்துவம் அணுக்களுக்கு இடையிலான இடைவினைகளின் வலிமையை வேதியியலர்கள் அறிந்து கொள்ள உதவும் வழியாக பெரிதும் உதவுகிறது. + + + + +வேதியியற் சமன்பாடு + +வேதிச் சமன்பாடு "(Chemical equation)" என்பது ஒரு வேதி வினையை குறியீடுகள் மற்றும் வாய்ப்பாடுகள் வடிவத்தில் எடுத்துக் கூறும் குறியீட்டு முறையாகும். இச்சமன்பாட்டில் வினைபடு பொருள்கள் இடதுபக்கத்திலும் வினை விளைபொருள்கள் வலது பக்கத்திலும் இடம்பெறுகின்றன . இச்சமன்பாடுகளில் இடம்பெறும் ஒவ்வொரு குறியீடு மற்றும் வாய்ப்பாடுகளுக்கு அடுத்ததாக இடம்பெற்று இருக்கும் குணகங்கள் விகிதவியல் எண்களின் முழு மதிப்புகளாகும். முதல் வேதிச் சமன்பாடு 1615 இல் யீன் பெகுயின் என்பவரால் எழுதப்பட்டது. + +ஒரு வேதிச் சமன்பாட்டில் வினையில் பங்குபெறும் வேதிப் பொருள்களின் மூலக்கூற்று வாய்ப்பாடுகள் இடம்பெறுகின்றன. வினையில் பங்குபெறும் பொருட்கள் என்பவை அவ்வினையின் தொடக்கத்தில் பங்கேற்கும் வேதிப்பொருள்களையும், வினையின் முடிவில் உருவாகும் புதிய வேதிப் பொருள்களையும் குறிக்கும். வினையின் தொடக்கப் பொருள்கள் வினை படு பொருள்கள் என்றும் வினை முடிவில் தோன்றும் பொருட்கள் வினை விளைபொருள்கள் என்றும் கருதப்படுகின்றன. இடது புறத்தில் வினைபடு பொருள்களும் வலது பக்கத்தில் வினை விளை பொருள்களும் எழுதப்படுவது வழக்கம் ஆகும். இவ்விரு பகுதிகளையும் பிரித்துக் காட்ட ஒரு படுக்கை வாட்டிலான அம்புக் குறியீடு (formula_1 இடப்படுகிறது. வழக்கமாக வேதியியலில் இந்த அம்புக் ���ுறியை கொடுக்கிறது அல்லது உற்பத்தி செய்கிறது என்று பொருள் கொள்வர். வினையில் பங்கேற்கும் ஒவ்வொரு வேதிப் பொருளுக்கும் இடையில் கூட்டல் குறியீடு (+) இடுவர். + +எடுத்துக்காட்டாக ஐதரோகுளோரிக் அமிலமும் சோடியமும் வினைபுரிந்து சோடியம் குளோரைடும் ஐதரசனும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பின்வருமாறு வேதிச் சமன்பாடாக எழுதலாம். + +இச்சமன்பாட்டை படிக்கும் போது இரண்டு எச்.சி.எல் கூட்டல் இரண்டு என்.ஏ கொடுக்கிறது இரண்டு என்.ஏ.சி. எல் கூட்டல் எச் இரண்டு என படிக்க வேண்டும். சிக்கலான வேதிப்பொருள்களின் சமன்பாட்டை எழுதிப் படிக்கையில் ஐயூபிஏசி முறைப் பெயர்களைப் பயன்படுத்தி வாசிக்க வேண்டும். இவ்வினையையே பின் வருமாறு படிக்கலாம். இரண்டு ஐதரோகுளோரிக் அமிலம் கூட்டல் இரண்டு சோடியம் கொடுக்கிறது இரண்டு சோடியம் குளோரைடு கூட்டல் ஐதரசன் இரண்டு எனப் படிக்கலாம். + +இரண்டு ஐதரோகுளோரிக் அமில மூலக்கூறுகள் இரண்டு சோடியம் மூலக்கூறுகளுடன் சேர்ந்து இரண்டு சோடியம் குளோரைடு மூலக்கூறுகளையும் ஐதரசன் வாயுவையும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இச்சமன்பாட்டின் பொருளாகும். இரண்டு ஐதரோகுளோரிக் அமில மூலக்கூறுகளுடன் வினைபுரிய தேவை என்பதையும் இச்சமன்பாடு கூறுகிறது. வினையின் முடிவில் இரண்டு மூலக்கூறு சோடியம் குளோரைடும் ஓர் ஈரணு மூலக்கூறான ஐதரசனும் உருவாகின்றன என்பதையும் இச்சமன்பாடு கூறுகிறது. மேலும் ஒவ்வொரு இரண்டு மூலக்கூறு ஐதரசன் குளோரைடு இரண்டு மூலக்கூறு சோடியத்துடன் வினைபுரியும் போதெலாம் ஓர் ஈரணு ஐதரசன் வாயு உருவாகும் என்ற செய்தியையும் இதிலிருந்து அறியமுடிகிறது. வேதிப் பொருள்களுக்கு முன்னால் இடப்படும் எண்கள் விகிதவியல் குணகங்கள் ஆகும். நிறை அழிவின்மை விதியின் அடிப்படையில் வேதிச் சமன்பாடுகளை சமப்படுத்துவதற்காக இக்குணகங்கள் இடப்படுகின்றன. + +பல்வேறு வகையான வினைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. +வினை வகைகளை குறிக்க பின் வரும் குறியீடுகள் பொதுவாக இச்சமன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. + +குறிப்பாக அயனியாக்க வினைகளில் வினைகளில் பங்கேற்கும் பொருள்களின் அடிப்படை நிலைகளான திண்மம், நீர்மம், வாயு ஆகியனவற்றைக் குறிக்கும் எழுத்துகளும் பொருள்களுக்கு பின்னால் எழுதுவது வழக்கம் ஆகும். +திண்மப் பொருள்களைக் குறிப்பிட (தி) என்றும் திரவத்தைக் குறிப்பிட (நீ) என்றும் வாயுப் பொருள்களைக் குறிப்பிட (வா) என்றும் நீரிய கரைசல் என்பதைக் குறிப்பிட (நீர்) என்றும் எழுதி வேறுபடுத்திக் காட்டுவார்கள். +நடைபெறும் வினைக்கு அளிக்கப்படும் ஆற்றல் வெப்ப ஆற்றலாக இருந்தால் அம்புக்குறிக்கு மேலாக டெல்டா எனப்படும் (formula_6) என்ற குறியீடும், அளிக்கப்படும் ஆற்றல் ஒளி ஆற்றலாக இருந்தால் formula_7 என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க வினை போன்ற வினைகளின் சமன்பாடுகளுக்கு சில குறிப்பிட்ட குறியீடுகள் பயன்படுவதுண்டு. +எடுத்துக்காட்டாக ஏபர் செயல்முறையில் நிகழும் வினையை பின்வருமாறு குறிக்கப்படுகின்றது. + +வினையில் ஈடுபடும் பொருள்களின் மொத்தப் பொருண்மை வினையில் விளைகின்ற பொருள்களின் மொத்தப்பொருண்மைக்குச் சமம் என்பது நிறை அழிவின்மை விதியாகும். இவ்விதியின் படி ஒரு வேதி வினையில் பங்குபெறும் பொருள்களின் அளவு விண்னையில் விளையும் பொருள்களின் எண்னிக்கைக்குச் சமமாக இருக்க வேண்டும். அதாவது சமன்பாட்டின் இடது பக்கத்தில் ஈடுபடும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை வலது பக்கத்தில் விளையும் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்க வேண்டும். +ஒரு வேதி வினை எடுத்துக்காட்டுக்காக சமப்படுத்தி காட்டப்படுகிறது. +மீத்தேன் ஆக்சிசனில் எரிந்து கார்பனீராக்சைடும் நீரும் உருவாகின்றன என்பது வினையாகும். + +இதை பின்வரும் சமன்பாடாக எழுதலாம். + +CH4 + O2 → CO2 + H2O + +சமன்பாட்டை உற்று நோக்கும்போது நிறை அழிவின்மை விதியின்படி சமன்பாடு சமப்படுத்தப்படவில்லை என்பதை அறியலாம். ஐதரசன் இடது புறத்தில் 4 அணுக்களும் வலது புறத்தில் இரண்டு அணுக்களும் சமமின்றி காணப்படுகிறது. எனவே சமன்பாடு சமப்படுத்த வேண்டும். முயன்று தவறி கற்றல் முறையில் முயற்சிக்கும் வகையில் மீத்தேனுக்கு முன்னால் 1 என்ற எண்ணை இடலாம். + +இரண்டு பக்கத்திலும் 1 கார்பன் சமமாக உள்ளது. அடுத்துள்ள ஐதரசன் அணுவை நோக்கினால் வலது புறத்தில் இரண்டு ஐதரசனும் இடது பக்கத்தில் நான்கு ஐதரசன்களும் உள்ளன. இதைச் சமன்செய்ய வலதுபுறத்திலுள்ள நீர் மூலக்கூறுக்கு முன்னால் 2 என்ற எண்னை இட்டால் ஐதரசன் அணுக்கள் இரண்டு பக்கத்திலும் 4 ஆகி சமம் ஆகின்றன. +1 CH4 + O2 → CO2 + 2 H2O + +அடுத்து கடைசியாக உள்ள ஆக்சிசன் சமமாக உள்ளதா என ஆய்வுசெய்தால் வலது பக்கம் நான்கு ஆக்சிசன் அணுக்களும் இடது பக்கம் 2 ஆக்சிசன் அணுக்களும் சமமின்றி உள்ளதை அறியலாம்.. இடது புறத்தில் உள்ள ஆக்சிசனுக்கு முன்னால் 2 என்ற எண்னை இட்டால் முழுமையாக சமப்படுத்தப்பட்ட சமன்பாடு கிடைக்கிறது. + +CH4 + 2 O2 → CO2 + 2 H2O + + + + +விடுபடு திசைவேகம் + +விடுபடு திசைவேகம் ("escape velocity") எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறும திசைவேகம் ஆகும். + +ஒரு பொருளை வானத்தில் வீசியெறிந்தால் புவியீர்ப்பு விசை காரணமாக அதன் வேகம் படிப்படியாகக் குறைந்து ஓர் உயரத்தில் சற்றே நின்று பிறகு அப்பொருள் கீழே விழத் தொடங்குகிறது. அந்தப் பொருளை அதிக விசையுடன் மேலே எறிந்தால் அது அதிக உயரம் சென்ற பிறகு தரையில் விழத் தொடங்குகிறது. பூமியின் ஈர்ப்பு விசை உயரே போகப் போக வலுக்குறையும். பல கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் படியான விசையுடன் ஒரு பொருளை மேலே வீசினால் அது தனது பயணப் பாதையில் உயர்ந்த இடத்தை எட்டும்போது அதன் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை கணிசமாகக் கறைந்திருக்கும். அதனால் அந்த உயரங்களில் அதன் வேகம் குறைகிற வீதம் குறைவாயிருக்கும். அதன் காரணமாகப் பொருள் கூடுதலான உயரத்தைச் சென்றடையும். + +ஒரு பொருளை விசையுடன் மேல் நோக்கி வீசும்போது அதற்கு ஒரு தொடக்கத் திசை வேகமிருக்கும். அப்பொருளின் திசை வேகம் தொடக்கத் திசை வேகத்தில் பாதியாகக் குறையும்போது பொருள் எட்டியிருக்கிற உயரத்தில் புவியீர்ப்பு விசை தரையிலிருப்பதில் பாதிதானிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே போல் பொருளின் திசை வேகம் தொடக்கத் திசை வேகத்தில் கால் பங்காகக் குறையும்போது புவியீர்ப்பு விசையும், தரையிலிருப்பதில் கால் பங்குதான் இருக்கும். இந்த நிலையில் பொருள் மேலே போகப் போக புவியீர்ப்பு குறைவதால் அந்த பொருள் நின்று திரும்பிப் பூமியில் விழாது. அது பூமியின் ஈர்ப்பு விசையின் பிடியிலிருந்து தப்பி நிரந்தரமாக விண்வெளிக்குப் போய் விடும். அது போன்று ஒரு பொருள் தப்பிச் செல்ல வேண்டுமானால் அதற்குத் தரவேண்டிய தொடக்கத் திசை வேகத்திற்குத் விடுபடு திச��வேகமென்று பெயர். + +m திணிவுள்ள ஒரு பொருள் formula_1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படும் போது, அதன் இயக்க ஆற்றல் குறைந்து செல்ல, மாறாக அதன் நிலை ஆற்றல் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் நிலை ஆற்றல் தொடக்க இயக்க ஆற்றலுக்குச் சமனாகும் போது பொருள் கண நேரம் நின்று, கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும். எனவே, பொருள் புவியின் கவர்ச்சியைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், அதன் மீது அவ்வெல்லையிலுள்ள நிலை ஆற்றலுக்குச் சமமான இயக்க ஆற்றலைத் தரவேண்டும். + +இங்கு + +"G", ஈர்ப்பு மாறிலி ("gravitational constant"), + +"M", பொருள் எந்தக் கோளிலிருந்து எறியப்படுகிறதோ அதன் திணிவு, + +"m", எறியப்படும் பொருளின் திணிவு, + +"r", கோளின் மையத்திற்கும் விடுபடு திசைவேகம் கணிக்கப்படும் புள்ளிக்கும் இடைப்பட்ட உயரம். + +பூமியில் ஒரு பொருளை விநாடிக்கு 11.2 கிலோ மீட்டர் என்ற தொடக்கத்திசை வேகத்துடன் மேல் நோக்கி வீசினால் அது தப்பியோடி விடும். பூமியை விட நிறை அதிகமான கோள்களில் தப்பித்தல் திசைவேகம் இன்னும் அதிகமாகவும் பூமியை விட நிறை குறைந்ந கோள்களில் குறைவாகவுமிருக்கும். + + + + +ஹேபர் செயல்முறை + +ஹேபர் செயல்முறை ("Haber Process") அல்லது ஹேபர்-பொஸ்ச் செயல்முறை ("Haber–Bosch process") என்பது, நைதரசனும், ஐதரசனும் சேர்ந்து அமோனியா உருவாகும் வேதி வினையைக் குறிக்கும். + +நைதரசன் வளிமமும் (N), ஐதரசன் வளிமமும் (H) இரும்பை வினை ஊக்கியாகப் (Fe) பயன்படுத்தி வினையுறுகின்றன. அலுமினியம் ஆக்சைடும் (AlO), பொட்டாசியம் ஆக்சைடும் (KO) ஊக்கிமுடுக்கியாகப் (promoters) பயன்படுகின்றன. இவ் வேதி வினை 250 வளிமண்டல அழுத்தத்திலும், 450-500 °C வெப்பநிலையிலும் நிகழ்த்தி 10-20% விளைவைப் பெறுமாறு இயக்கப்படுகின்றது. + +இங்கே, ΔH என்பது வினைவெப்ப ஆற்றல் ஆகும். ஹேபர் செயல்முறைக்கு இது 25 °C வெப்பநிலையில் -92.4 கிலோ ஜூல்/மோல் (kJ/mol) ஆகும். + +லீ சாட்லியர் தத்துவம் மூலம் அம்மோனியா உருவாதலுக்குச் சாதகமான நிலைகளை அறியலாம். + +இச்செயல்முறை முதலில் 1908 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் BASF என்னும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, இம்முறையை வணிகநோக்கில் வெற்றிகரமாக ஆக்கினார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மானியர்கள் இம் முறையைப் பயன்படுத்தி முதன் முதலாகத் தொழில் முறையில் உற்பத்தி செய்தனர். + + + + + +மீள் வினை + +வேதியியலில், மீள் வினை அல்லது மீள்தாக்கம் (reversible reaction) என்பது, முன்நோக்கிய திசையிலும், பின்நோக்கிய திசையியில் நடைபெறக்கூடிய ஒரு தாக்கத்தைக் குறிக்கும். அதாவது, தொடக்கத் தாக்கத்தை உருவாக்கிய பொருட்கள் விளைவுகளைக் கொடுத்ததுபோல், மேலதிக வேதியியற் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமலேயே விளைவுகள் சேர்ந்து மீண்டும் தொடக்கப் பொருள்களை உருவாக்குவதை இது குறிக்கும். + +வினைபடுபொருள் விளைபொருளாக மாற்றமடைந்தபின் அதே சூழலில் அது மீண்டும் வினைபடு பொருளாக மாறும் தன்மை கொண்ட வினைகளை மீள் வினைகள் என வரையறுக்கலாம். + +குறியீட்டு அடிப்படையில், + +என எழுதலாம். + +விளைவுகள் formula_1 and formula_2, formula_3 மற்றும் formula_4 என்பவற்றிலிருந்து உருவாகின்றன, அதுபோல, formula_1 மற்றும் formula_2, formula_3 மற்றும் formula_4 என்பவற்றிலிருந்து உருவாக முடியும். + +எடுத்துக் காட்டு; +நைட்ரஜன் + ஹைடிரஜன் \rightleftharpoons அம்மோனியா + + + + + +வேதியியற் சமநிலை + +வேதியியற் சமநிலை என்பது, ஒரு வேதியியற் தாக்கத்தின்போது, தாக்கத்தில் ஈடுபடும் வினைபொருட்களும் (reactants), வினைபடு பொருட்களும்(products), ஒரே செறிவு நிலையில் மாற்றமின்றி இருக்கும் நிலையைக் குறிக்கும். இந் நிலை, பொதுவாக, முன்நோக்கிய தாக்கமும், பின்நோக்கிய தாக்கமும் ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால் ஏற்படுகின்றது. முன்நோக்கிய, பின்நோக்கிய தாக்க வீதங்கள் என்றும் பூச்சியமாக இருப்பதில்லை, ஆனால் அவை ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால், மொத்தமாகப் பார்க்கும்போது பொருட்களின் அளவுகளில் மாற்றங்கள் எதுவும் இருப்பதில்லை. இச் செயற்பாடு இயக்கச் சமநிலை எனப்படுகின்றது. அடிப்படையில், இங்கே தாக்கங்கள் முழுமையாக நடைபெற்று முடிவதில்லை ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமநிலை அடைகின்றது. + +இவ்வாறு ஓர் அமைப்பில் எந்தவொரு வேதிவினையும் நிகழாதிருந்தாலோ, அல்லது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குப் பரவலின் வழியாகப் பொருள் நகர்ச்சி இல்லாதிருந்தாலோ அவ்வமைப்பில் வேதியியற் சமநிலை இருக்கிறது எனலாம். இரண்டு அமைப்புகள் வேதியியற் சமநிலையில் இருந்தால் அவற்றின் வேதிப்பண்பு சமமாக இருக்கும். + + + + +கரைசல் + +வேதியியலில், கரைசல் () ("solution") என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். ஒரு கரைசல் என்பது கரைபொருள் மற்றும் கரைப்பான் எனப்படும் பதார்த்தத்தால் ஆன ஒருபடித்தான கலவையாகும். + +பொருள்களில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை +இது ஒரு ஒருபடித்தான கலவை ஆகும். இதில் கரைபொருளின் துகள்கள் கரைப்பானில் நன்கு கரைந்திருக்கும். (எ.கா) சர்கரை கரைசல். + +இது பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் என்ற இரண்டு பகுதிகளாலான ஒரு வித கலவையாகும். + +கரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவையே தொங்கல்கள் அல்லது தொங்கல் கரைசல் எனப்படும். (எ.கா) சுண்ணாம்பு நீரின் கலவை. + +எ.கா: மதுசாரக் கரைசல் +எ.கா: சோடாநீர் +எ.கா:உருக்கு (எஃகு) +எ.கா: சீனிக்கரைசல் +எ.கா: வளிமண்டல வளி + + + + + +கண்டி தேர்தல் மாவட்டம் + +கண்டி தேர்தல் மாவட்டம் ("Kandy (Mahanuwara) electoral district") என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஓர் அலகாகும். இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுள் இம்மாவட்டம் 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இங்கு 2010 ஆம் ஆண்டில் 970,456 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். + + + + + +அக்குரணை + +அக்குரனை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளர் பிரிவு ஆகும். அக்குரனை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. + +அக்குரனை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 543.7632 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. +இது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செ��ளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் முஸ்லிம்களை மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கைமுக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. அக்குரனை மக்கள் மொத்த வியாபாரம் மற்றும் வாகன இறக்குமதிக்கு புகழ்பெற்றவர்களாவர். + + + + + +தெல்தோட்டை + +தெல்தோட்டை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். தெல்தோட்டை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. + +தெல்தோட்டை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1071.98 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். தமிழர்களும், முஸ்லிம்களும் கூட இங்கு வாழ்கின்றனர். + +இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகின்றன. + + + + + +ஊக்கிமுடுக்கி + +ஊக்கிமுடுக்கி (Promoter) என்பது ஊக்கியியலில் (Catalysis) ஒரு வேதியியல் வினை நிகழ்வை ஊக்கும் வினையூக்கியுடன் சேர்ந்து வினையூக்கியின் திறனைக் கூட்டுவதாக அமையும் ஒரு பொருள் ஆகும். இவை வினையூக்கியின் தொழிற்பாட்டை விரைவுபடுத்தவோ தடை ஏற்படுத்தும் பிறவினைகளின் விளைவைக் குறைக்கவோ வினைத் தேர்வை (பொறுக்குதிறனை)க் (selectivity) கூட்டவோ செய்யும் ஒரு பொருள் ஆகும். பொதுவாக வினையூக்கியின் செயற்பாட்டை தேவைக்கு ஏற்றார்போல ஏதேனும் ஒரு வகையில் கட்டுறுத்தும் ஒரு பொருள். எனவே வினையூக்கியின் செயற்பாட்டைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றும் பொதுவாக அறியப்படுகின்றது, ஆனால் வினையூக்கியின் செயற்பாட்டைக் குறைக்கும் பொருளுக்���ு ஊக்கித்தணிப்பி என்றும் கூறுவர். + +அனைத்துலக இயல் மற்றும் பயன்முக வேதியியல் ஒன்றியத்தின் கலைசொற் தொகுப்பு (IUPAC) + + + + +தொழுவை + +தொழுவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். தொழுவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது. தொழுவை இலங்கையி நீளமான ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ளது. மேலும் கமபளைக் கண்டி இடையிலான மாற்றுப்பாதையூடாக அமைந்துள்ளது. + +தொழுவை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 611 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. மணல் அகழ்வும் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது. + + + + + +குண்டசாலை + +குண்டசாலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.குண்டசாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் கண்டி - திகனை பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையின் கரயில் கண்டி நகருக்கு சற்று வெளியே அமைந்துள்ள குண்டசாலை பிரதான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும். +குண்டசாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 464.82 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்ம��ற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைப்பெற்றாலும் இப்பிரதேசத்தில் தீப்பெட்டி, ஊதுவர்த்தி உற்பத்தி பொன்ன்ற கைத்தொழில்கள் பிரசித்தமாக உள்ளன. தென்னை தோட்டங்களும் காணப்படுகின்றன. + + + + + + +வேஸோவேகல் + +வேஸோவேகல் ("vasovagal") என்பது இரத்த ஓட்டத்தின் கட்டுப்பாட்டில் ஏற்படும் தற்காலிக தடுமாற்றத்தால் ஏற்படும் உடல் கோளாறு. இதனால் மயக்கம் போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒருவர் சற்றுநேரம் உட்கார்ந்திருந்த பிறகு திடீர் என்று எழுந்திருக்கையில் ஏற்படுகிற இரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதில் ஏற்படும் கோளாற்றால் அவருக்கும் மயக்கம் முதலியன ஏற்படலாம். + +சில சமயங்களில், சிலருக்கு இரத்தத்தை பார்க்கையிலோ அவர்கள் கண்கள் பரிசோதிக்கப்படுகையிலோ அவர்களுடைய தானியங்கு நரம்பு மண்டலம் அவர்கள் படுத்திருக்கையில் செயல்படுவது போல செயல்படுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோதான் இருப்பார்கள். பயத்தின் காரணமாக அவர்களுடைய இருதயத் துடிப்பு படு வேகமாக ஏறுகிறது. பிறகு, அவர்களுடைய நாடித்துடிப்பு திடீரென சரிகிறது. அவர்கள் கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் விரிந்துவிடுகின்றன. அதன் விளைவாக, அவர்கள் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி தலையில் இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது. அதனால் அவர்கள் மூளைக்குப் போதுமான உயிர்வளி கிடைக்காமல் அவர்கள் மயக்கம் அடைகிறார்கள். + + + + +விழித்தெழு! + +விழித்தெழு! ஒரு மாதாந்த சஞ்சிகை (இதழ்). 81 மொழிகளில் பிரசுரிக்கப்படும் இந்த இதழ் சராசரியாக 3,42,67,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன (2007). தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது. இதன் முதல் பதிப்பு 1 ஒக்டபர் 1919 ஆண்டு அச்சிடப்பட்டது. 06 ஒக்டபர் 1937-ல் இருந்து ஆறுதல் என்று அதன் பெயர் மாற்றப்பட்டது. 22 ஆகஸ்ட் 1946-ம் ஆண்டிலிருந்து விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பத்திரிக்கையின் நோக்கம் அதில் பின்வருமாறு ��ிளக்கப்படுகிறது. + + + + +நீளம் தாண்டுதல் + +நீளம் தாண்டுதல் (இலங்கை வழக்கு: நீளப்பாய்ச்சல் அல்லது நீளம் பாய்தல்) என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். அதன் ஒரு முனைக்கு அருகே பாய்தலைத் தொடங்குவதற்கான இடம் குறிக்கப்பட்டிருக்கும் இவ்விடத்தில் இதற்கெனச் செய்யப்பட்ட மரப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதற்கு அப்பால் வீரர்கள் ஓடு வருவதற்கான ஓடுதடம் இருக்கும். இந்த ஓடுதடத்தில் தமக்கு வசதியான ஓர் இடத்திலிருந்து வீரர்கள் வேகமாக ஓடிவந்து குறிப்பிட்ட மரப்பலகையில் காலூன்றி எழும்பிப் பாய்வார்கள். அவர்கள் பாய்ந்த தூரம் அளக்கப்படும். அதிக தூரம் பாய்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவர். + +பாயும் போது வீரர்களின் காலடியின் எப்பகுதியாவது மரப்பலகையைத் தாண்டி உள்ளே இருப்பின் அப் பாய்ச்சல் விதிப்படியான பாய்ச்சலாகக் கணிக்கப்பட மாட்டாது. விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிப்பது நடுவரின் கடமையாகும். மரப்பலகைக்குப் பின்னால் எவ்விடத்திலிருந்தும் வீரர்கள் பாயத் தொடங்கலாம். எனினும், தூரங்கள் மரப்பலைகையின் விளிம்பிலிருந்தே அளக்கப்படும். இதனால், பாய்ச்சலின் அதிக தூரம் அளக்கப்பட வேண்டுமாயின் வீரர்கள் இக் கோட்டுக்கு எவ்வளவு அண்மையில் இருந்து தொடங்க முடியுமோ அவ்வளவு அண்மையிலிருந்து பாயத் தொடங்க வேண்டும். + +நீளம் தாண்டற் போட்டிகளுக்கான நடைமுறை வடிவம் சந்தர்ப்பத்துக்கும், இடத்துக்கும் தகுந்தபடி மாறக்கூடும். எனினும், பொதுவாக, ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாண்டும் வாய்ப்புக்கள் வழங்கப்படும். விதிமுறைப்படி தாண்டப்பட்ட மிகக்கூடிய தூரம் கணக்கில் கொள்ளப்படும். பெரும்பாலான போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் மூன்று தடவைகள் பாயும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. பல போட்டியாளர்கள் பங்குபற்றும் போட்டிகள் இரண்டு சுற்றுக்களாக நடைபெறக்கூடும். முதற் சுற்றில் தெரிவு செய்யப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள். இறுதிச் சுற்றில் வழங்கப்படும் வாய்ப்புக்கள் முதற் சுற்றில் வழங்கப்பட்டவற்றுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட வாய்ப்புக்களாகவே கணிக்கப்படுகின்றன. இதனால், இறுதிச் சுற்றில் போட்டியிடும் போட்டியாளர் ஒருவர் தாண்டும் அதிகூடிய தூரம் கணிக்கப்படும்போது, அவர் முதற் சுற்றில் தாண்டிய தூரங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. + +நீளம் தாண்டுதலில் நான்கு கூறுகள் உள்ளன. + + +அணுகு ஓட்டத்தின் வேகம் கூடிய தூரம் பாய்வதற்கு முக்கியமானதாகும். இதனாலேயே பல அதிவேக ஓட்ட வீரர்கள் வெற்றிகரமான நீளம் தாண்டல் வீரர்களாகவும் உள்ளனர். + + + + + +மானிடவியல்சார் மொழியியல் + +மானிடவியல்சார் மொழியியல் (Anthropological linguistics) என்பது, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இத்துறை, மனித உயிரியல், அறிதிறன் (cognition), மொழி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இது, மனிதர்களை அவர்களுடைய மொழிக்கூடாக ஆய்வு செய்யும் மானிடவியற் துறையான மொழியியல்சார் மானிடவியல் துறையுடன் பல விடயங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளது. + + + + + +மினிப்பே + +மினிப்பே இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவாகும்.மினிப்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் நீண்ட ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்துக்கு அருகில் மகாவலி கங்கையின் நீரை விவசாயத்துக்காக திசைதிருப்பும் மினிப்பே அணைக்கட்டு இங்கு அமைந்துள்ளது. இதில் இருந்து மகாவலி வலதுகரை கால்வாய் ஆரம்பிக்கிறது. மினிப்பேக்கு அருகே இலங்கையின் பெரிய நீரைக்கொண்டுச் செல்லும் நீர்ப்பாலம் அமைந்துள்ளது. இதனைச் சூழவுள்ள பெரும்ப்பாலான பிரதேசங்கள் அதியுயர் பாதுகப்பு வலயமாகவோ வனவிலங்கு சரணலாயமாகவோ காணப்படுகிறது. + +மினிப்பே அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் மத்திய மலைநாட்��ின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 152.7048 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை, சோளப்பயிர்செய்கை இடத்தை பெருகிறது. + + + + + +அறிதிறன் + +அறிதிறன் (cognition) என்னும் சொல், மனிதர்களைப் போல, தகவல்களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ செயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான மனம், தர்க்க அறிவு(ஏரணம்), நோக்கு (perception), நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது. + + + + + + +மனம் + +மனம் ("mind") என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. + +மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளன��். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை (consciousness)என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. + +எந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர். இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு என்பன சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். + +மனதைப்பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்பொழுது, அது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும், அப்படி ஆராய்ந்தால் தான் அது வளப்படும் என்றும் கூறுகிறார். எனவே இதை மனவளக்கலை என்று அவரது போதனையாக அறிமுகப்படுதியிருக்கிறார்." + +"சிந்தித்தல்" அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. +ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்ம���யாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. +இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. +காரணம் ("Reason") என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், ஏரணம் பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கும் தகவல் அடிப்படையில் உள்ள நிறுவன அமைப்பும் நம்பிக்கையும் ஆகும். இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான மெய்யியல், அறிவியல், மொழி, கணிதம், கலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது. +காரணம் அல்லது அதன் பண்பு சிலவேளை பகுத்தறிவு என கருதப்படுகிறது. + +மன மெய்யியல் என்பது மனதின் தன்மை, மனம் சார்ந்த தொடர்புகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும் இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் (எ.கா: உடலுடன் மனதுக்குள்ள தொடர்பு) முக்கிய விடயமாகவும், பெளதீக உடலுடன் மனதின் இயல்பு உறவு அற்றது என்ற விடயமும் அதாவது, குறிப்பிட்ட மன நிலையின் இயல்பும் நனவுநிலையும் எப்படி சாத்தியம் போன்ற விடயங்களைக் கொண்டும் உள்ளது. + +ஒரு தொடர்வண்டி பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் "'to think for myself' became less favorable".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும். + +அறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து, கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்றல் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர்(Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர்(Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka) போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே)Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன. + +தனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். + +அறிவாற்றல் நரம்பு அறிவியல் ("cognitive neuroscience") என்பது அறிவாற்றல் உளவியலின் ஒரு பிரிவு. இது மன செயல்பாட்டின்போது மூளையின் அமைப்பையும் செயல்களையும் விவரிக்கிறது. அறிவாற்றல் உளவியல் என்னும் அறிவியலில் உயிரினங்களின் அறிவாற்றல் திறன்களான தகவல் சேமிப்பு, படைப்பாற்றல், மொழி உற்பத்தி, மக்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல், பகுத்தறிதல், தீர்வு காணுதல் போன்ற செயல்களுக்கு எவ்வாறு மூளை மன செயல்முறைகள் பொறுப்பாகின்றன என்பதை அறியலாம். காயம்பட்ட மூளையிலும் நரம்புகளிலும் ஏற்படும் செயல்பாட்டை வைத்து, இயல்பான மனநிலை செயல்பாடுகளை ஊகிக்கலாம். மூளை காயமடைந்த நோயாளிகளை ஆய்வு செய்வதன் மூலமும் அவர்களின் குறையுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் சான்றுகள் கிடைக்கும். + +வெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தன���். +மேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது. + +நரம்புசார் உளவியல் ("Neuropsychology") மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட உளவியலின் கிளைத்துறை ஆகும் + +நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள். + +இந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது. + +இந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள், மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்; + + + + + +ஆன்மிக உளவியல் ("Parapsychology") இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் விசாரனை கருத்து பற்றிய கற்றல்சார் துறையாகும். தொலை நுண்ணுணர்வு, முன்னறிவு, மனக்கண் தொலைக்காட்சி, தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், மரணத்திற்குக்கிட்டிய அனுபவம், மறுபிறப்பு, அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விபரங்கள் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள். + +ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. + + + + +பன்விலை + +பன்விலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். பன்விலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் பன்விலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகிறது. + +பண்விலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 800-1000 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது இந்திய தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் இந்து மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு கிராமப்புரங்களில் நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடல் மட்டத்தில் இருந்தான உயரம் அதிகரிக்கும் போது நெற்பயிர்செய்கை குறைந்துச் செல்கிறது இப்பகுதிகளில் மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. பன்விலையின் உயர் நிலங்களில் தேயிலை பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. இவை இம்மக்களின் முக்கிய சிவனோபாய தொழிலாக காணப்படுகிறது. + + + + + +நுண்ணறிவு + +நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், உளவியலாளர்கள், இதனை, ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள். + + + + +பஸ்பாகே கோறளை + +பஸ்பாகே கோரளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இது நிர்வாகம் சார்ந்த பிரிவாகும். நாவலப்பிட்டி இப்பிரிவில் அமைந்துள்ள பெரிய நகரமாகும். நாவலப்பிட்டி நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் ��ோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பஸ்பாகே கோரளை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளன.வட்டச் செயலாளர் பிரிவு மற்றும் பிரதேச சபை,நகரசபை என்பன ஒன்றை ஒன்று சார்ந்த சமாந்தர அரசியல், நிர்வாக அலகுகலாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. + +பஸ்பாகே கோரளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 602-1000 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22-18 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3750 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு மாகாவலிகங்கையின் இருமருங்கிலும் நெற்பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. உயரம் கூடிய பகுதிகளில் மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. பெரிய தேயிலைப் பெருந்தோட்டங்களும் இங்கு அமைந்துள்ளன. + + + + + +நான் கடவுள் (திரைப்படம்) + +நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதியுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிய, சூப்பர் சுப்பராயன் சண்டையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். + +ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என சோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் ஆற்றில் எ‌ரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அ���ோரித் துறவியாக உள்ளான். "அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் ஆசிரியர். ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள். + +உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்ளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான். கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றம் சென்றாலும், அவன் தான் குற்றவாளி என்று நிறுவ வழி இல்லாததாலும், ருத்ரனை தாண்டவனிடம் இடமே மாட்டி விட காவலர்கள் நினைப்பதாலும், வழக்கிலிருந்து விடுபடுகிறான். இதற்கிடையே, தாண்டவன் அம்சவல்லி மேல் கோபம் கொண்டு கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, இறுதிக் காட்சியில், தாண்டவனைக் கொல்கிறான். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, அவனது ஆசிரியர் குறிப்பிட்டபடி, மீண்டும் காசிக்குச் செல்கிறான். + + + + + +வெயில் (திரைப்படம்) + +வெயில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது. + + + + +வசந்தபாலன் + +வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். + +இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. + + + + +சந்தியா (நடிகை) + +சந்தியா (பிறப்பு - 1989, கேரளம்; இயற்பெயர் - ரேவதி), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். + +சந்தியா எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் "ரேவதி" என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இவர் சென்னையில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது காதல் திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். + +காதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் கோபிகா ஆவார். இப்படம் குறுகிய கால படம் என்பதால் புதுமுக நடிகையான சந்தியா அறிமுகம் ஆகி இப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்த டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். 2017 வரை நாற்பதுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த கம்பியூட்டர் துறையில் வேலை பார்க்கும் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். இவர்களது திருமணமானது குருவாயூர் கோவிலில் டிசம்பர் 6, 2015 இல் நடைபெற்றது. அப்போது சென்னையில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு +அளித்தார்கள். + + + + + +பாட்டி வடை சுட்ட கதை + +பாட்டி வடை சுட்ட கதை, தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவிவழி நீதிக்கதையாகும். தலைமுறை தலைமுறையாக வளர்ந்தவர்களால் சிறுவர்களுக்கு இக்கதை சொல்லப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதலில் கேட்கும் கதையாக பெரும்பாலும் இக்கதையே அமைவது இதன் சிறப்பு. + +சில சிறுவர் இலக்கிய நூல்களில் இக்கதை அச்சுவடிவத்திலும் காணக்கிடைகிறது. + +ஒரு பாட்டி மற்றும் குழந்தைகள் அறிந்த சில விலங்குகள் இக்கதையின் பாத்திரங்களாக வருகின்றனர். +பல்வேறு சிறு சிறு திரிபுகளுடன் இக்கதை எல்லா இடங்களிலும் பொதுவானதாக காணப்படுகிறது. + +ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து "காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு" என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது. + +இக் கதை பிரான்ஸ் நாட்டிலும் உள்ளது. ஆனால்,நரியும் காகமும் மட்டும் தான் உள்ளன. வடைக்கு பதிலாக பாலடைக்கட்டி இருந்துள்ளது. 1621-1695-ல் ஆண்டில் "லா ஃபொன்டென்" என்பவரால் தொகுக்கப்பட்டது. + +இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும். இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது: + +சிறுவர்களிடம் ஏமாற்றுவதை சொல்லிக் கொடுத்த பாட்டி வடை சுட்ட கதை இருபத்தொன்றாம் நுாற்றாண்டில் முற்றலும் வேறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது.அதாவது, +"பாட்டியிடம் திருடவந்த காக்கையைப் பார்த்து பாட்டி பேசுகின்றது.நான் வடை சுடுவதற்கு ஏதுவாக ஏதேனும் உதவி செய்தால் உழைப்புக்கு அடையாளமாக ஒரு வடை தருகிறேன் என்று பாட்டி கூறியுள்ளது.காக்காயும் மரங்களில் உள்ள காய்ந்த குச்சிகளை ஒடித்து வந்து பாட்டியிடம் கொடுக்க, பாட்டியும் அதற்கு ஒருவடையை கொடுத்துள்ளது.இக்கதையில் குழந்தைகளுக்கு உழைக்கக் கூடிய பழக்கத்தை அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. +இக்கதை தமிழ் திரைப்படப்பாடல்களில் எடுத்தாளப்பட்டிருப்பதுடன் சிறுவர் நாடகங்களாகவும் நடிக்கப்படுகிறது. + + + + +தமிழ்நாட்டில் எயிட்ஸ் + +இந்தியாவிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. அண்மைக்காலத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்புத் திட்டங்களால் எயிட்ஸ் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிய முடிகின்றது. + + + + + +பசுபதி (நடிகர்) + +பசுபதி, தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். + +இவர் நடித்துள்ள திரைப்படங்கள்: + + + + +மொழி (திரைப்படம்) + +மொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். + +மெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது. + + +வித்யாசாகர் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. + + + + + +அணியக்கூடிய கருவி + +அணியக்கூடிய கருவி அல்லது அணியக்கூடிய கணினி என்பது உடலில் ஆடை அணிகலன்கள் போல் உடுத்திக் கொள்ளத்தக்க கருவி அல்லது கள் ஆகும். இவ்வகைக் கணினிகள் ஒருவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், உடனுக்குடன் தேவைப்படும் தகவல்களை இணையவழிப் பெறவும், ஐம்புல உணர்வுகளை விரிவு படுத்தவும் என பற்பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் கருதுகிறார்கள். ஒருவருடைய புலன் உறுப்புகள் சூழலில் பதிந்து இருக்கும் பொழுது, தேவைப்படும் கூடிய கணிக்கும் திறன் உள்ள சூழ்நிலைகளின் இவ்வகை உடுப்ப��க் கணினிகள் பயன்படும் என நினைக்கின்றனர். பொதுவாக ஐம்புல உணர்வுகளை மேம்படுத்தும் (பல வழிகளின் வலுப்படுத்தும்) ஒரு கருவியாக உடுப்புக்கணிகள் கருதப்படுகின்றன. + +அணி கணினிகள் செயற்பாட்டுக்கும் நிறைய கணிக்கும் திறன் வேண்டும். பல்வேறு தரவுகளைப் பதியச் செய்யவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், புதிய தரவுகளை இணையவழிப் பெறவும், பிற இடங்களுக்குச் செலுத்தவும் பயன்படும். இந்த உடுப்புக் கணினிகளுக்குத் தேவையான மின்னாற்றலும் சூழிடங்களில் இருந்தே பெறப்படும். கூடவே எடுத்துச் செல்லும் மின்கலங்கள், சூழலில் உள்ள ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் ஒளி மின்கலங்கள் முதலிவற்றால் பெறப்படும். + +காண்க தொழில்நுட்ப அணி + + + + + +வடை + +வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு. + +உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம். உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடுவர். ஏனேனில் அப்பொழுதுதான் வடை முழுவதுமாக வெந்து மெதுவாக இருக்கும். + + +வடையைச் சாம்பார், தயிர் ஆகியவற்றில் போட்டும் ஒரு பண்டமாகக் கொடுப்பர். இவற்றை முறையே சாம்பார் வடை, தயிர் வடை என அழைப்பர். + + + + + + +தெய்வச் சிலையார் + +தெய்வச் சிலையார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களில் ஒருவர். இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டு. இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் எனக் கருதப்படுகின்றது. + +இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. நச்சினார்க்கி��ியர் உரை தொல்காப்பியம் ஏறக்குறைய தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. இவர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதி நூன்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. + +தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஐந்துபேர் எழுதிய உரைகள் கிடைத்துள்ளன. அறுவர் எனக் கூறுவர். இந்த ஐவருள் ஒருவர் தெய்வச்சிலையார். ஏனையோர் இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடனார், நச்சினார்க்கினியர் ஆகியோர் + +தெய்வச் சிலையார் என்னும் பெயரைக்கொண்டு இவர் தெய்வங்களுக்குக் கற்சிலை வடித்து வாழ்ந்தவர் என எண்ண இடமுண்டு. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இவரது உரை ஏனைய நால்வர் உரையினும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். + +"இவர் சைவ நெறியாளர். வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி, பதியும் பசுவும் பாசமும் அனாதி என வரும்" என உரை எழுதுவதால் சைவர் என்பது புலனாகிறது. + + + +