diff --git "a/train/AA_wiki_43.txt" "b/train/AA_wiki_43.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_43.txt" @@ -0,0 +1,5538 @@ + +சைவத் திருமணச் சடங்கு + +'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். + +தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள். + +இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர். + +திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம். + +மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும். + +திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் ���ெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும். + +பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.) + +இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம். + +மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்யவேண்டும். + +முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.) + +பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்கவேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும். + +முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம். + +நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம். + +முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர். + +வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது. + +திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும். + +வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும். + +அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும். + +குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும். + +திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும். + +முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம். + +மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார். + +வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடைமுறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர். + +அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை. + +3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும். + +ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்கவேண்டும். + +பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும். + +அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள் + +மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண்வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்). + +மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும். + +கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர். + +பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர். + +முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர். + +வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமையவேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது) + +தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும். + +இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர். + +மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார். + +மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின��� கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) +மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும். + +கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம் + +“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா +கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” + +‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும். + +தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ...) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில ��ாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். + +மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும். + +தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள். +மாலை மாற்றுதல் என்பதில் தாய் மாமன் பெறும் மரியாதை மிக முக்கியம். +சில இனங்களை கானும் போது தாய் மாமன் தான் மனமக்களை தூக்கி மாலை மாற்ற செய்ய வேண்டும். + +பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு. + +இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும். + +தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். ���லம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள். + +பெண்ணின் வல காலை மணமகள் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும். + +பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது. + +தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது. + +மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. + +மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார். + +“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கேயாகும். + +அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. + +அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும். + +அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம். + +மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும். + +அக்கினி பகவானிடம் செர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம். + +அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள். + +மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர். + +முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும் + +மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும். + +இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. + +விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள். + +மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும். + +பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர். + + +தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க. + +முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்��ள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள். + +அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்). + +நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும். + +ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும். + +ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக). + +மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும். + +இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்). + +நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆக���ே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம். + + + + + +காத்திருப்பேன் உனக்காக + +காத்திருப்பேன் உனக்காக 1977ல் இலங்கையில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. + +மலையகத்தில், வத்தேகம எனும் இடத்தைச்சேர்ந்த மூன்று சகோதரர்கள் -எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜா என்பவர்கள் தங்கள் கலைத்துறை ஆசான் நவாலியூர் நா. செல்லத்துரை யின் கலைத்தாகத்துக்கு தங்கள் பங்களிப்பாக இத்திரைப்படத்தைத் தயாரித்தார்கள். ஒரு சகோதரரான செல்வராஜிடம் இருந்த கதைக்கு, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்பனவற்றை எழுதும் பொறுப்பு ஆசிரியரான நவாலியூர் செல்லத்துரை அவர்களிடமே விடப்ப்பட்டது. அவர் சிறப்பாகவே தன் பணிகளைச் செய்தார். + +கண்டியில் வெளிவந்த "செய்தி" பத்திரிகையின் ஆசிரியரான நாகலிங்கத்தின் மகனான என். சிவராம் (தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார்) இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். அவரோடு கீதாஞ்சலி, ஸ்ரீதேவி, விஸ்வநாதராஜா, நவாலியூர் நா. செல்லத்துரை, செல்வராஜ், சிங்கள நடிகை ருக்மணி தேவி போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த அனுபவத்துடன் எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தின் இயக்குனராகவும், படத்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். எஸ். தேவேந்திரா படப்பிடிப்பாளராகவும், மு. மோகன்ராஜ் இசை அமைப்பாளராகவும் இணைந்து கொண்டார்கள். ஜோசப் ராசேந்திரன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள். + + + + + +பிலிப் ஜான்சன் + +பிலிப் கோர்ட்டலியோ ஜான்சன் ("Philip Cortelyou Johnson") என்னும் முழுப் பெயர் கொண்ட பிலிப் ஜான்சன் (ஜூலை 8, 1906– ஜனவரி 25, 2005) அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவராவார். தடித்த சட்டம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த இவர், பல பத்தாண்டுகளாக அமெரிக்கக் கட்டிடக்கலைத் துறையில் மிகக் கூடுதலாக அறியப்பட்ட ஒருவராக விளங்கினார். + +1930 ஆம் ஆண்டில், நவீன ���லை அருங்காட்சியகத்தில், கட்டிடக்கலைக்கும், வடிவமைப்புக்குமான பிரிவைத் தொடங்கினார். பின்னர் 1978 இல் இதன் நம்பிக்கைப் பொறுப்பாளராக ("trustee"), இவருக்கு அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1979 இல் இவருக்கு முதலாவது கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசும் வழங்கப்பட்டது. + +ஜான்சன் ஓஹியோவிலுள்ள கிளீவ்லாந்தில் பிறந்தார். இவர் நியூ யார்க், டர்ரிடவுனில் உள்ள ஹாக்லி பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், வரலாறும், தத்துவமும் பயின்றார். ஜான்சன் பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட நீண்ட பயணங்களினால் அடிக்கடி அவரது படிப்பு தடைப்பட்டது. எனினும் இப்பயணங்கள் இவரது கல்வியில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தன. இவர் பார்த்தினன் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களுக்குச் சென்று பார்த்ததன் மூலம், கட்டிடக்கலை மீது அவரது ஆர்வம் வளர்ந்தது. + +1928 ஆம் ஆண்டில் இவர், அக்காலத்தில், பார்சிலோனா கண்காட்சிக்கான ஜெர்மனியில் காட்சி மண்டபத்துக்கு வடிவமைப்புச் செய்து கொண்டிருந்த பௌஹவுசைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஜான்சனுக்கு மிக முக்கியமாக அமைந்ததுடன், இவ்விருவருக்கிடையான, ஒத்துழைப்பு, போட்டி என்பவை கொண்ட ஒரு வாழ்நாள் முழுதும் தொடர்ந்த ஒரு தொடர்பின் அடிப்படையாகவும் அமைந்தது. மாணவன், தனது ஆசானை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சந்திப்பு அது. + + + + +மதுபானி ஓவியப் பாணி + +மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தோன்றிய ஓவியப் பாணி என்பதால் இப்பெயர் பெற்றது. இந்த மதுபனி மாவட்டம் நேபாள எல்லைப் பகுதியில் இருக்கிறது. + +மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன. + +மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது. மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, [கடதாசி], கன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன. இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது. மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள். + +இந்த மதுபனி ஓவியக் கலை மற்ற நாட்டுப்பறு ஓவியக் கலையகளைப் போன்றே முழுக்க முழுக்கப் பெண்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலையாகும். மதுபனி பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் கூடித் தங்கள் வீட்டுச் சுவர்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். + +மதுபானி ஓவியங்கள் இயற்கை மற்றும் தொன்மங்கள் சார்ந்த நிகழ்வுகளை அடைப்படையாகக் கொண்டு வரையப் படுகின்றன. ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும், இந்துக் கடவுளரான, கண்ணன், இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன. இயற்கைப் பொருட்களான ஞாயிறு, மதி போன்றவையும், துளசிச் செடி போன்ற மதத் தொடர்பு கொண்ட செடிகளும் இவ்வகை ஓவியங்களில் கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும். இவற்றைவிட அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம்பெறுகின்றன. மேலும் ஓவிய உருவங்களுக்கு இடையில் வெறுமனே இடைவெளி விடாமல் முழுவதும் பூ உருவங்களை வரைகிறார்கள். இதுவே இந்த ஓவிய்களுக்குத் தனி அழகைத் தருகிறன. +1934 ஆண்டில் ஆண்டு மதுபானி மாவட்டப்பகுதியில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க சேதத்தை பார்வையிட அப்போதைய பிரித்தானிய அரசில் ஆட்சியராக இருந்த வில்லியம் ஜி.ஆர்ச்சர் என்பவர் வந்தார். அப்போது இடிபாடுகளுக்கு உள்ளான வீடுகளின் சுவர்களிலிருந்த மதுபனி ஓவியங்களைப் பார்த்து வியந்து அக்கலை பற்றி விசாரித்து அறிந்துகொண்டு, இந்த மதுபனி ஓவியங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதி அனைவரும் அறியும்படிச் செய்தார். மேலும் இந்த ஓவியங்கள் மேற்குலக ஓவியரான பிக்காச���வின் ஓவியங்களுடன் ஒப்பிடத்தக்க ஆற்றல் கொண்டவை என குறிப்பிட்டார். இவரின் இந்த முயற்சிக்குப் பிறகு இந்தக் கலை புத்தாக்கம் பெற்றது. + + + + +மணித்துளி + +மணித்துளி அல்லது நிமிடம் ("minute ") என்பது ஒரு நேரத்தின் கால இடைவெளி அளவு. மணித்துளி என்பது ஒரு மணி நேரத்தில் 60ல் ஒரு பங்கு. மணித்துளி = 1/60 மணி. + +மணித்துளி என்பது SI அல்லது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகு. + +நில உருண்டை ஒரு மணித்துளியில் 15 பாகைத்துளிகள் சுழல்கின்றது. (பாகைத்துளி என்பது ஒரு பாகையின் அறுபதில் ஒரு பங்கு. ஒரு வட்டத்தில் 360 பாகைகள் உள்ளன). + +நேரத்தின் கூறுகளும், கோணங்களின் கூறுகளும் 60 இன் அடிப்படையில் இருப்பதற்குக் காரணம் பாபிலோனியர்களை பின்பற்றி இம்முறைகள் இன்றும் இருப்பதால்தான். + + + + +உலக அறிவுசார் சொத்து நிறுவனம் + +உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள 16 சிறப்புக்கிளை நிலையில் உள்ள நிறுவனங்களுள் ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1967 இல் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினராக 184 நாடுகள் உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவித்து படைப்புகளுக்கு ஏற்பு நல்குவதன் மூலமாக பொதுமக்களின் விருப்பங்களை நிறைவு செய்து பொருளடிப்படையான முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதற்காக இவ்வமைப்பானது ஏற்படுத்தப் பட்டது. உலகெங்கும் பரந்து கிடக்கும் அறிவுசார் சொத்துக்களை அனைவராலும் அணுகக் கூடிய முறையில் சமச்சீரான முறையில் உருவாக்கிட இவ்வமைப்பானது முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. + + + + + +சபாபதி (திரைப்படம்) + +சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +குமாஸ்தாவின் பெண் + +குமாஸ்தாவின் பெண் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் மற்றும் கே. வி. எஸ். வாஸ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆரையம் + +வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் "ஆரையம்" அல்லது "ரேடி" எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது formula_1 ஆகும். (வளரும்) + + + + +நவீன மார்க்கண்டேயா + +நவீன மார்க்கண்டேயா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தானசூர கர்ணா + +தானசூர கர்ணா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துவாரஹாநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை கதை, வசனம், பாடல்கள் எழுதியிருந்தார். + + + + + +ராமலிங்க சுவாமிகள் (திரைப்படம்) + +ராமலிங்க சுவாமிகள் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து பாகவதர், பி. நடராஜ், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) + +விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திலோத்தமா + +திலோத்தமா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எல். என். சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, ஹரிஹர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சதி முரளி (திரைப்படம்) + +சதி முரளி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஹரிஹரமாயா + +ஹரிஹர மாயா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பூலோக ரம்பை (1940 திரைப்படம்) + +பூலோக ரம்பை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில், எம். டி. விஸ்வநாதன், எம். சோமசுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +காம்போஜ் நாட்டு இளவரசன் "புவனேந்திரனும்" (தி. க. சண்முகம்), அவனது நண்பனும் மந்திரி மகனுமான "புத்திசிகாமணியும்" (டி. ஆர். மகாலிங்கம்) தேச யாத்திரை செய்யக் கிலம்புகிறார்கள். இருவரும் குலதெய்வமான காளி கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர். காளிதேவி இளவரசனுக்கு மந்திர வாளும், மந்திரிகுமாரன் வேண்டும் போது ஒரு வரமும் அளித்து ஆசீர்வதிக்கிறாள். + +விரிஞ்சைநகர் இளவரசி "பூலோகரம்பை" (கே. எல். வி. வசந்தா) தன் தோழிகளுடன் நாகபூசை செய்வதற்காக பூங்காவிற்கு வருகிறாள். அப்போது அங்கு வந்த "நாகாசுரன்" (டி. பாலசுப்பிரமணியம்) அவளைத் தூக்கிச் சென்று தன் பாதாள அரண்மனைத் தூக்கிச் செல்கிறான். ரம்பை அங்கிருந்து ஒரு பூசை அறைக்குச் சென்று அவனிடமிருந்து தப்புகிறாள். + +புவனேந்திரனும், புத்திசிகாமணியும் பாதாள அரண்மனைக்குச் செல்லும் இரகசியக் குளக்கரைக்குத் தற்செயலாக வருகிறார்கள். புவனேந்திரன் தனக்கு உணவு தேடித் தரும்படி சிகாமணியை அனுப்பி விட்டு குளக்கரையில் இளைப்பாறுகிறான். அப்போது அங்கு வந்த நாகாசுரன் புபனேந்திரனை சண்டைக்கிழுத்து, அவனது மந்திர வாலால் மடிகிறான். நாகாசுரனின் மோதிரத்தின் சக்தியால் புவனேந்திரனுக்கு குளத்து நீர் வழி விடுகிறது. புவனேந்திரனும் பாதாள அரண்மனைக்குள் சென்று பூலோக ரம்பையை சந்தித்து அவளைக் காந்தர்வ மணம் புரிகிறான். + +இதற்கிடையில், உணவு பெற்றுவரக் கிளம்பிய புத்திசிகாமணியுடன் அந்நகரச் சிப்பாய்கள் சண்டையிட்டுக் காயப்படுத்துகிறார்கள். அவனை "சகுலனும்" (டி. எஸ். துரைராஜ்) அவனது சகோதரி "அலங்காரமும்" (பாபுஜி) காப்பாற்றி நகரின் வெளிப்புறத்தில் மல்லிகாவின் (குமாரி ருக்மணி) வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். அங்கு அவனுக்கு மல்லிகா சிகிச்சை அளிக்கிறாள். மறுநாள் குளக்கரைக்கு வந்தபோது புவனேந்திரனைக் காணவில்லை. பாதாள அரண்மனையில் பூலோக ரம்பையுடன் சல்லாபித்திருந்த புவனேந்திரன் அவளுடன் சதுரங்கம் ஆடும்போது , மந்திரியின் நினைவு வந்து, அவளுடன் பூலோகம் வருகிறான். அப்போது வேட்டையாட வந்த விஜயநகர மன்னன் "விஜயதரனும்" (டி. எஸ். பாலையா) அவனது மந்திரி "துர்முகனும்" (எம். ஆர். சுவாமிநாதன்) பூலோக ரம்பையைப் பார்த்து, அவளை அடைய நினைக்கிறான். துர்முகன் "வெங்கம்மாள்" என்பவளை அனுப்புகிறான். அவள் மேல் இரக்கம் கொண்ட புவனேந்திரன் அவளை பாதாள அரண்மனைக்கு சமையல்காரி ஆக்குகிறான். அவள் ஒருநாள் புவனேந்திரனுக்கு நஞ்சும், ரம்பைக்கு மயக்கமருந்தும் கொடுத்து, அவனது மந்திர மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு ரம்பைஅயி தூக்கிக் கொண்டு போய் விஜயதரனிடம் சேர்ப்பிக்கிறாள். ("இன்னும் வரும்"") + +இவர்களுடன் சின்னச்சாமி, ஏழுமலை, எம். இராமநாதன், கே. சீதாராமன், சகுந்தலா, சரோஜா முதலியானோரும் நடித்திருந்தனர். + +பூலோக ரம்பை திரைப்படத்தில் 13 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை யானை வைத்தியநாதையர் இயற்றியிருந்தார். + + + + +அபலை + +அபலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வசந்த குமார், பேபி பாப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பரசுராமர் (திரைப்படம்) + +பரசுராமர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) + +பக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. சுப்பையா நாயுடு, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அடங்காபிடாரி (திரைப்படம்) + +அடங்காபிடாரி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, டி. மணி ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அதிர்ஷ்டம் (திரைப்படம்) + +அதிர்ஷ்டம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ச. து. சு. யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +பம்பாய் மெயில் + +பம்பாய் மெயில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கம்பர் (கல்வியின் வெற்றி) + +கம்பர் 1938 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். "சி. எஸ். யு. சங்கர்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், சி. நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +விஷ்ணு லீலா + +விஷ்ணு லீலா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தாரம், ராஜா சாண்டோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஸ்ரீ ராமானுஜர் (திரைப்படம்) + +ஸ்ரீ ராமானுஜர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்திலும் மீனாட்சி நாராயணனின் ஒளிப்பதிவிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந. ராமரத்னம் போன்ற பத்திரைக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் நடித்து அவர்களின் கூட்டு முயற்சியால் வெளியானது ஆகும். இப்படத்துக்கு உரையாடலை வ. ராமசாமி எழுத, பாடல்களை பாரதிதாசன் எழுதினார். + +படம் வெளிவந்த பிறகு கதைப்போக்கு உரையாடல் போன்றவை நன்றாக இருக்கின்றன ஆனால் இதில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களின் நடிப்புப்பற்றி கல்கி போன்ற எழுத்தாளர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. + +இராமானுசர�� மைசூர் நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு மன்னனான விட்டுணுவர்தனனைக் கொண்டு திருநாராயணபுரத்தில் ஒரு பெரிய விஷ்ணு கோயிலை கட்டுவிக்கிறார். திருநாராயணபுரத்தில் இருக்கும் தீண்டப்படாத மக்களை திருக்குலத்தார் என பெயர்கொடுத்து அவர்களை கோயில் நுழைவு செய்விக்கிறார். + + + + +கண்ணப்ப நாயனார் (திரைப்படம்) + +கண்ணப்ப நாயனார் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "காளிதாஸ் பிலிம்ஸ்" நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் மாஸ்டர் வி. என். சுந்தரம், மாஸ்டர் கே. வி. நாராயணசுவாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த நாரதர் + +பக்த நாரதர் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காலேஜ் குமாரி + +காலேஜ் குமாரி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஜி. மாமா சிந்தே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பவானி சங்கர், ரோபின் பாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +என் மனைவி + +என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, நாகர்கோவில் கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1941 ஆம் ஆண்டு வெளியான சபாபதி திரைப்படம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட உற்சாகத்தினால் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அதே பாணியில் மற்றொரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். மராட்டிய திரையுலகில் இயக்குநராக விளங்கிய சுந்தர் ராவ் நட்கர்ணி அப்போது சாந்த சக்குபாய் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிலும் காலெடுத்து வைத்திருந்தார். அவரை ஏ. வி. எம். செட்டியார் தனது அடுத்த படத்துக்கு இயக்குநராக நியமித்தார். மராட்டிய மொழியிலான ஒரு சமூக நகைச்சுவைக் கதையை தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இன்னொரு புதிய அம்சத்தையும் புகுத்தினார்கள். அதுவரை புராணப் படங்களில் நாரதர் வேடத்தில் நடித்து வந்த நாகர்கோவில் மகாதேவனை ஒரு உல்லாச வாலிபன் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். + +திரைப்படத் தலைப்பு காட்சிகளிலிருந்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டது + +பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார் எழுதினார். சரஸ்வதி ஸ்டோர் வாத்தியக் குழுவினர் பின்னணி இசை வழங்கினார்கள். "சங்கடமான சமையலை விட்டு .." என்ற பாடல் பிரபலமானது. இப்பாடலை ஆர். நடேசன் பாடினார். "என்னிலும் அவள் .." என்ற பி. ஏ. பெரியநாயகி பாடிய பாடலுக்கு ஆர். பத்மா நடனம் ஆடினார். + + + + +கண்ணகி (திரைப்படம்) + +கண்ணகி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்க் காப்பியத் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எம். சோமசுந்தரம், ஆர். எஸ். மணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. + +கண்ணகி திரைப்படத்தின் பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியவர்கள் கே. வி. நாயுடு குழுவினர். டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் நடனமாடியிருந்தனர். டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். டி. ஆர். ரகுநாத் மாதவியாக நடித்த எம். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். + + + + +மனோன்மணி (திரைப்படம்) + +மனோன்மணி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்துவப் பேராசிரியரும் புலவருமான ராவ்பகதூர் பி. சுந்தரம்பிள்ளையின் கதையில் டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் ராஜகோபாலய்யர், எஸ். வேல்சாமி கவி ஆகியோரின் பாடல்களுக்கு கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். + + + + + +நாடகமேடை (திரைப்படம்) + +நாடகமேடை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், வி. எம். ஏழுமலை ம���்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சதி சுகன்யா + +சதி சுகன்யா ("Sathi Sukanya") 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +சதி சுகன்யா திரைப்படத்துக்கு கல்யாணம் குழுவினர் இசையமைத்திருந்தனர். பாபநாசம் பி. ஆர். ராஜகோபால் ஐயர் பாடல்களை இயற்றினார். + + + + +மாயஜோதி + +மாய ஜோதி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சிவலிங்க சாட்சி + +சிவலிங்க சாட்சி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். கணேச பாகவதர், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்) + +மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வசுந்தரா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். ரஞ்சன் தந்தை, மகன் என இரு வேடங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர். + +மங்கம்மா சபதம் திரைப்படம் அக்காலத்தில் 4 மில்லியன் ரூபாய்களை நிகர லாபமாகப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. + +கலிங்க நாட்டில் வெங்கடாசலம் ("பி. ஏ. சுப்பையா பிள்ளை") என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா ("வசுந்தரா"). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் ("ரஞ்சன்") அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அடப்பங்காரனின் ("பி. அப்பணய்யங்கார்") உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்த��� அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள். +மங்கம்மாவைக் கல்யாணம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளின் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, வாழாவெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள். + +அரசன் (("பி. என். சேசகிரி பாகவதர்") வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை ("பி. வி. ராவ்") அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம் ("கொளத்து மணி") ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள். + +மங்கம்மாவுக்கு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் ("ரஞ்சன்") தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான். + +மங்கம்மா சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள்: + + + + +அருந்ததி (1943 திரைப்படம்) + +அருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி ஆகியோர் எழுதியிருந்தனர். எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேசுவரராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர். + + + + +காரைக்கால் அம்மையார் (திரைப்படம்) + +காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஆசை மகன் + +ஆசை மகன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சத்யன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்பு (திரைப்படம்) + +அன்பு 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்துக்கு எம். நடேசன் எழுதிய கதைக்கு, விந்தன் உரையாடல் எழுதி, நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அவன் (திரைப்படம்) + +அவன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரஜனவதெ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்கபூர், பிரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஔவையார் (திரைப்படம்) + +ஔவையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் ஔவையார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். + + + + + +அழகி (1953 திரைப்படம்) + +அழகி () 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ். நட்கசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தேவதாஸ் (1953 திரைப்படம்) + +தேவதாஸ் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எம். என். நம்பியார், சாவித்திரி (நடிகை) மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +என் வீடு + +என் வீடு 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. நாகையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, பாலையா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளிவந்தது. + + + + + + + +இன்ஸ்பெக்டர் + +இன்ஸ்பெக்டர் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஜாதகம் (திரைப்படம்) + +ஜாதகம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஜெனோவா (திரைப்படம்) + +ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுவாமி பிரம்ம வரதன் கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கண்கள் (திரைப்படம்) + +கண்கள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கம்பதாசன், கே. பொ. காமட்சி, கனகசுரபி ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். + + + + +குமாஸ்தா + +குமாஸ்தா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +லட்சுமி (திரைப்படம்) + +லட்சுமி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாமியார் (திரைப்படம்) + +மாமியார் 1953 ஆம் ��ண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ரெலாங்கி, பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மனம்போல் மாங்கல்யம் + +மனம் போல் மாங்கல்யம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ. ராமாராவ். பாடல்களை கனகசுரபி இயற்றினார். (ராதா) ஜெயலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. லீலா, ஜே. வர்மா, ஏ. எம். ராஜா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +மனிதன் (1953 திரைப்படம்) + +மனிதன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மனிதனும் மிருகமும் + +மனிதனும் மிருகமும் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு மற்றும் எஸ். டி. சுந்தரம் ஆகியோர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். டி. சுந்தரம் மற்றும் நடித்திருந்தனர். + + + + +மருமகள் (1953 திரைப்படம்) + +மருமகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மதன மோகினி + +மதன மோகினி (mathana mohini) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். பதியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, சி. ஆர். ராஜகுமாரி, புளிமூட்டை ராமசாமி ,பொள்ளாச்சி கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை எம். பி. சிவம் இயற்றினார். பின்னணி பாடகர்கள் ஏ. பி. கோமளா, என். எல். கானசரஸ்வதி, கே. வி. மகாதேவன், ஜிக்கி, ஜி. கஸ்தூரி, பி. லீலா, கே. ஆர். லட்சுமி, ஏ. எம். அப்பாதுரை ஆகியோர். + +கடவுளை நம்பாத ஒரு ராஜாவிற்கு, ஒரு மகனும் மதனா , மோகினி என்ற இரண்டு மருமகளும் உள்ளனர். மருமகள்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள். அவர்களில் ஒருத்தி, மதனா மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனையிலும் ஈடுபடுகிறாள். ஆனால் ராஜா அதை விரும்பவில்லை. மதனா தன்னை ஒரு ஆண் போல வேடமிட்டு சுற்றித் திரிபவள். எனவே ஒரு சமயம் அரண்மனையிலிருந்து வெளியேறி, ஒரு கொள்ளைக்கார கும்பலோடு இணைகிறாள். அவர்கள் ராபின் ஹூட் போன்று செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கி உதவுகிறார்கள். இளவரசர், மாறுவேடத்தில், மதனாவை சந்தித்து, அரண்மனையின் உள்ள 3 விலைமதிப்பற்ற கற்கள் வைத்திருக்கும் ஒரு அறையின் ரகசிய வழியை அவர் அறிந்துள்ளதாக கூறுகிறார். அவர்கள் ஒன்றிணைந்து ஒரே ஒரு விலைமதிப்பற்ற கல்லை மட்டும் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் யார் என்பதை அறிய அங்கே அரசன் வருகிறான். மோகினியை இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் தனது மகன், மதனாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிந்து கொள்கிறார். பல திருப்பங்களுக்கு இறுதியாக இளவரசன் மற்றும் மதனா இருவரும் இணைகிறார்கள். + +தி இந்து நாளிதழில் வெளிவந்த தகவலை அடிப்படையாகக் கொண்டது. + +பி. வி. நரசிம்மபாரதி
+சி. ஆர். ராஜகுமாரி
+பி. எஸ். வீரப்பா
+பொள்ளாச்சி கமலா
+எம். எல். பதி
+எம். வி. நவநீதம்
+புளி மூட்டை ராமசாமி
+கே. எஸ். அங்கமுத்து
+வி. எம். ஏழுமலை
+லூஸ் ஆறுமுகம் +இப்பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. + + +சென்னையைச் சேர்ந்த வங்க மொழித் திரைப்பட பிரபலம் ஜ்யோதி சின்கா என்பவரின் ஆலோசனையின் பேரில் படமாக்கப்பட்டது. + + +
+ +மின்மினி (திரைப்படம்) + +மின்மினி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், கிருஷ்ணஷர்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +முயற்சி (திரைப்படம்) + +முயற்சி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. சி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, பி. ஏ. தோமஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நால்வர் (திரைப்படம்) + +நால்வர் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், வி. +எஸ். நடேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நாம் (1953 திரைப்படம்) + +நாம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். +இ்படத்தை மு. கருணாநிதி எழுத, எம். ஜி. ராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய "மேகலா பிக்சர்"சால் தயாரிக்கப்பட்டது. + + + + +பணக்காரி + +பணக்காரி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைக்க பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர். + +ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "அன்னா கரீனா" என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம்1935 ஆம் ஆண்டு வெளியானது. அத் திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், முன்னர் சக்ரதாரி திரைப்படத்தை இயக்கிய கே. எஸ். கோபாலகிருஷ்ணன், அன்னா கரீனா கதையை தமிழில் "பணக்காரி" என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார். ஆனால் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.
+துணுக்கு தகவல்: இதற்கு முன் பிச்சைக்காரி என ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் விமர்சகர்கள் 'பணக்காரியை வாங்கியவர்கள் பிச்சைக்காரர் ஆனார்கள், பிச்சைக்காரியை வாங்கியவர்கள் பணக்காரர் ஆனார்கள்' என எழுதினார்கள். + + +
+ +பூங்கோதை + +பூங்கோதை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு இருமொழித் திரைப்படமாகும். தமிழில் "பூங்கோதை" என்றும், தெலுங்கில் "பரதேசி என்றும் தலைப்பிடப்பட்டது. எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. நாகேஸ்வர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அம்மையப்பன் (திரைப்படம்) + +அம்மையப்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத. ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. வி. நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +என் மகள் + +என் மகள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஆர். ஆச்சார்யா மற்றும் எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். என். நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எதிர்பாராதது + +எதிர்பாராதது 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +"தி இந்து" நாளிதழ் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது. + +இந்தப் பாடல் பட்டியல் கோ. நீலமேகம் எழுதிய "திரைக்களஞ்சியம் தொகுதி-1" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது. + + + + +கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி + +கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கனவு (திரைப்படம்) + +கனவு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. முத்துகிருஷ்ணன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கற்கோட்டை (திரைப்படம்) + +கற்கோட்டை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கெம்பராஜ், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +விளையாட்டு பொம்மை + +விளையாட்டு பொம்மை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, வி. கே. ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, கே. சாரங்கபாணி, குமாரி கமலா, பேபி ராதா, ஈ. வி. சரோஜா, லக்ஸ்மி பிரபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[டி. ஜி. லிங்கப்பா. சுப்பிரமணிய பாரதியார், கே. பி. காமாட்சிசுந்தரம், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர். பாடகர்: டி. ஆர். மகாலிங்கம். பின்னணி பாடியவர்கள்: ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி ஆகியோர். + +[[பகுப்பு:1954 தமிழ்த் திரைப்படங்கள்‎]] +[[பகுப்பு:டி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள்]] +[[பகுப்பு:வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்]] +[[பகுப்பு:கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்]] +[[பகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்]] + + + +வைரமாலை + +வைரமாலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பணம் படுத்தும் பாடு + +பணம் படுத்தும் பாடு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +போன மச்சான் திரும்பி வந்தான் + +போன மச்சான் திரும்பி வந்தான் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +புதுயுகம் + +புதுயுகம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு மற்றும் சுந்தர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், எஸ். வி. சுப்பைய்யா, பி. வி. நரசிம்ம பாரதி, எம். எஸ். திரௌபதி, கிருஷ்ணகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பேராசிரியர் ரகுநாத் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவரின் இளைய சகோதரி செல்லம் ஒரு விதவை. ரகுநாத் தனது மாணவனாகிய சேகருக்கு தனது சகோதரியை மணமுடிக��க திட்டமிடுகிறார். அதனால், சேகரும் செல்லமும் நெருங்கிப் பழகுகின்றனர். அதன் விளைவாக, செல்லம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைகிறாள். ரகுநாத் இதை அறியவில்லை. வியாபாரம் செய்வதற்காக சேகருக்கு, ரகுநாத் தனது வீட்டை அடமானம் வைத்து பண உதவி செய்கிறான். சேகர் வியாபாரத்தில் வளர்ந்தவுடன் பணக்காரப் பெண் சித்ராவை மணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். இதை அறிந்த செல்லம் அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் சேகர் அவளைத் தவிர்க்கிறான். ரகுநாத் தன் தங்கைக்காக சேகரிடம் பேசுகிறான். அப்போதும் சேகர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறான். + +ரகுநாத் செல்லம் கர்ப்பவதி என்று அறிந்து அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். வீடு கடன் கொடுத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. செல்லம், ரகுநாத்தின் மகன் விநோதனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறிய வீட்டில் வசிக்கும் முருகன் மற்றும் வள்ளி இவர்களுக்கு ஆதரவு அளித்தனர். செல்லத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு புஷ்பா எனப் பெயரிடுகிறாள். புஷ்பாவை முருகன் மற்றும் வள்ளியின் பராமரிப்பில் விட்டுவிட்டு செல்லம் வேலை தேடி அலைகிறாள். வயதான தனவந்தரின் பேரன் ராஜாவைக் கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. செல்லம் விநோதனையும் ராஜாவையும் வளர்த்து ஆளாக்குகிறாள். அவர்கள் முறையே மருத்துவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உள்ளனர். புஷ்பா செவிலியராக இருக்கிறாள்.இதற்கிடையில் சேகர் சித்ராவை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறான். செல்லம் சேகரைத் தண்டித்தாளா? அவர்கள் வளர்த்த குழந்தைகளின் நிலை என்னவாயிற்று என்பதுடன் இக் கதை முடிவடைகிறது.. + +பின்வரும் விபரங்கள் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மற்றும் இப் படத்தின் பாட்டு புத்தகம். + + +இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கா. மு. ஷெரீப் ஆகியோர் பாடல்களை இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், கண்டசாலா, எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஏ. பி. கோமளா, ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. எஸ். பகவதி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +துளி விசம் + +துளி விசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வீரசுந்தரி + +வீர சுந்தரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜிங்தே மற்றும் எம். ஆர். ரங்கநாத் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. ஜானகிராம், சாய்ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொர்க்க வாசல் (திரைப்படம்) + +சொர்க்க வாசல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + + +நண்பன் (1954 திரைப்படம்) + +நண்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ரத்தக்கண்ணீர் + +ரத்தக்கண்ணீர். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ரத்த பாசம் (1954 திரைப்படம்) + +ரத்த பாசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +விடுதலை (1954 திரைப்படம்) + +விடுதலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகைய்யா, மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +விடுதலை_(1954_திரைப்படம்) + + + +பொன்வயல் + +பொன்வயல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி ம���்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெண் மனம் + +பெண்மனம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சண்முகம், வி. கே. ராமசாமி, எஸ். ஏ. நடராஜன், எம். வி. ராஜம்மா, எம். என். ராஜம் ஆகியோர் பிரதான பாத்திரங்களேற்று நடித்தனர். + +தஞ்சாவூர் ஜில்லா மாவூர் என்ற கிராமத்தில் பரமசிவம் என்ற விவசாயி வாழ்கிறான். மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறான். திருமணச் செலவுக்காக ஊரிலுள்ள கருணாகரம் பிள்ளையிடம் கடன் வாங்குகிறான். + +பரமசிவத்துக்கு உழவுத்தொழிலில் வருமானம் போதவில்லை. கருணாகரம் பிள்ளை கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்தும்படி நெருக்குதல் தருகிறார். + +இதற்கிடையில் பரமசிவம் மீனாட்சி தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்து விடுகின்றன. கடன் சுமை மேலும் ஏறுகிறது. + +மானத்துக்கு அஞ்சி, மனைவிக்கு கூடச் சொல்லாமல் ஊரை விட்டு வெளியேறுகிறான். கொழும்பு செல்லும் ஒரு நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அவர்களுடன் கொழும்பு செல்கிறான். + +மீனாட்சிக்குத் துணையாக இருந்த அவளின் மாமி இறக்கிறாள். கைக்குழந்தையும் இறக்கிறது. + +கருணாகரம் பிள்ளை பணத்துக்காக வீட்டைத் தான் எடுத்துக் கொண்டு மீனாட்சியையும் குழந்தைகளையும் துரத்தி விடுகிறார். + +மீனாட்சி குழந்தைகளுடன் ஆற்றில் குதிக்க எத்தனிக்கிறாள். அச்சமயம் ஒரு சாது குறுக்கிட்டு குழந்தைகளைக் காப்பாற்றி வாழும்படி சொல்கிறார். + +குழந்தைகளைக் காப்பாற்ற கருணாகரம் பிள்ளையின் இச்சைக்குத் தன்னை பலிகொடுக்க மீனாட்சி சித்தமாகிறாள். ஆனால் ஒரு தீ விபத்துக் காரணமாக அச் சிக்கலிலிருந்து விடுபடுகிறாள். + +ஊரை விட்டுச் சென்ற பரமசிவம் நடுக்கடலில் புயலில் சிக்கி, பின் ஒருவாறு அலைகளால் ஒதுக்கப்பட்டு கொழும்பு சென்றடைகிறான். + +மீனாட்சி தன் சொந்த உழைப்பால் குழந்தைகளை படிக்க வைக்கிறாள். அவள் அதிக செல்லம் கொடுத்ததால் இளையவனான வேலு தத்தாரியாகத் திரிகிறான். ஆனால் பெரியவனான கணேசன் பொறுப்புடன் குடும்பத்தைக் கவனிக்கிறான். கணேசனுக்குத் திருமணம் நடக்கிறது. + +வேலு அண்ணியின் நகையைத் திருடுகிறான். ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேருகிறான். ஒரு நாள் போலீசார் அவனைத் துரத்���ி வர அவன் தாயிடம் தஞ்சம் கேட்கிறான். மீனாட்சி அவனைக் காப்பாற்றுகிறாள். + +பரமசிவம் கொழும்பில் ரிக்சா இழுக்கும் தொழில் செய்கிறான். ஒரு நாள் ஒரு இன்ஸ்பெக்டரின் குழந்தையை கார் விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக அந்தப் பெரிய மனிதர் அவனுக்கு வெகுமதி கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார். + +வேலு தான் சிறுவயது முதல் காதலித்து வந்த மிட்டாதார் மகள் வள்ளியை கடத்திச் செல்கிறான். + +பரமசிவம் ஊருக்குத் திரும்பி வருகிறார். குடும்பம் எப்படி ஒன்று சேருகிறது என்பது தான் மீதிக்கதை. + +டி. கே. சண்முகம்
வி. கே. ராமசாமி
எஸ். ஏ. நடராஜன்
எம். வி. ராஜம்மா
எம். என். ராஜம்
சி. டி. ராஜகாந்தம்
மேனகா
கே. எஸ். அங்கமுத்து
முத்துலட்சுமி
புளிமூட்டை ராமசாமி
கொட்டாப்புளி ஜெயராமன் + +தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை: எஸ். சௌந்தரராஜன்
கதை வசனம்: தஞ்சை ராமையாதாஸ்
ஒளிப்பதிவு: எம். ஆர். புருஷோத்தம்
கலையகம்: சியாமளா ஸ்டூடியோஸ் + +பெண் மனம் படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வெங்கடராம ஐயர். அவருக்கு உதவியாக டி. ஏ. கல்யாணம் பணியாற்றினார். பின்னணி பாடியவர்கள்: எம். எல். வசந்தகுமாரி, ஏ. ஈ. சரஸ்வதி, ஏ. பி. கோமளா, டி. ஏ. மோதி, குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகியோர். + + +
+ +ஆசை அண்ணா அருமை தம்பி + +ஆசை அண்ணா அருமைத் தம்பி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், வி. எம். ஏழுமலை மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +செல்லப்பிள்ளை + +செல்லப்பிள்ளை (Chella Pillai) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை ஆவிச்சி மெய்யப்பன் தனது ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் க. ரா. இராமசாமி, சாவித்திரி, பி. ஆர். பந்துலு, ப. கண்ணாம்பா மற்றும் டி. எஸ். பாலையா போன்றவர்கள் முன்னணி கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் பண்டரிபாய், கே. ஏ. தங்கவேலு, ஜாவர் சீதாராமன் மற்றும் காகா இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். ஜாவர் சீதாராமன் எழுத்தில், ஆர்.சுதர்சனம் இசையில் வெளிவந்துள்ளது. தெலுங்கு மொழியில் "வதின" (1955) என்ற பெயரில் வெளிவ��்துள்ளது. ஒரு அனாதைக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம், குறிப்பாக அக்குழந்தைக்கு செல்லம் அளிப்பதா? அல்லது ஒழுக்கத்தைக் கற்றுத்தருவதா?, என்பதுதான் "செல்லப் பிள்ளை" படத்தின் முக்கிய கருவாகும். + +மணி (க. ரா. இராமசாமி) அவரது சகோதரர் (பி. ஆர். பந்துலு) மற்றும் அவரது மனைவி (ப. கண்ணாம்பா) மூலம் வளர்க்கப்பட்ட ஒரு அனாதை. அவர் செய்யும் அனைத்து மோசமான செயல்களுக்கும், சிறிய குற்றங்களையும் கண்டிக்காமல் வளர்த்து வருவதால் எவ்வித தொல்லையும் இல்லாமல் இருக்கிறார். விரைவில், அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒரு பொறுப்பற்ற இளைஞனாக வளர்கிறார். அவர் ஒரு இளம் நடன பெண் லலிதாவைச் (சாவித்ரியை) சந்திக்கிறார், தான் ஒரு திரைப்பட நட்சத்திரமாக மாறுவதே அவரது கனவாகும். மணி திரைப்படங்களில் அவளை அறிமுகப்படுத்துவதாக வாக்களிக்கிறார். இதற்கிடையில், மணியின் குடும்பம் அவருக்கு சாதாரண குடும்பப் பெண்ணான (பண்டரிபாயை) திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறது. மணி, லலிதாவுடன் திரைப்படத்தை தயாரிப்பதற்கு வீட்டை விட்டு சென்று விடுகிறார். படத் தயாரிப்புகளுக்கு பணம் தேவை என்பதால், தனது சகோதரர் பரமசிவம் வேலை செய்யும் கடையில் திருடுகிறார். பின்னர் கள்ளப் பணம் அச்சிடும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. மணி பரமசிவத்திற்கு உதவுவதற்காக கள்ளப் பணத்தை அச்சிட்டு தனது சகோதரனுக்கு அளிக்கும் போது காவல் துறையினர் பரமசிவத்தை கைது செய்கிறனர். தவறான வழியில் செல்லும் கதாநாயகன் எப்படி தனது வழிகளிலிருந்து மீண்டு வருகிறாரென்பது திரைப்படத்தின் மற்ற பகுதிகள் கூறுகிறது. + + +"செல்லப்பிள்ளை" தெலுங்கு மொழியில் "வதின" என்ற பெயரில் அதே வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்து வெளிவந்தது. விசயவாடவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. + +ராண்டார் கை தி இந்துவில் "செல்லப்பிள்ளை" இக்காலத்திற்கேற்ற ஒரு வித்தியாசமான கதையை கொண்டுள்ளது, மேலும் க. ரா. இராமசாமி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என எழுதினார். ப. கண்ணாம்பா, பி. ஆர். பந்துலு , சாவித்திரி போன்றோர் குணசித்திர பாத்திரங்களிலும் , மேலும், திரைப்பட இயக்குனர் யமனாக டி. எஸ். பாலையா , அவதாரமாக கே. ஏ. தங்கவேலு போன்றவர்கள் நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக சிரிக்க வைக்���ின்றனர். + +இசையமைப்பு ஆர். சுதர்சனம், பாடல்களை உடுமலை நாராயணகவி பாடல்களை எழுத, கே. பி. காமாட்சி, கு. மா. பாலசுப்பிரமணியம் மற்றும், வி.சீதாராமன் (தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும். பின்னணிப் பாடகர்), டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ,ஜிக்கி, டி. எஸ்.பகவதி மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி போன்றோர் பாடியிருந்தனர், இப்படத்தின் பெரும்பாலான பாடல்கள் இந்தி மொழியில் வெளிவந்த பிரபல பாடல்களை தழுவியே இசையமைக்கப்பட்டது. + + + + +டாக்டர் சாவித்திரி + +டாக்டர் சாவித்திரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்) + +எல்லாம் இன்பமயம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஏழையின் ஆஸ்தி + +ஏழையின் ஆஸ்தி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எல். ராமச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்நாலா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கோமதியின் காதலன் + +கோமதியின் காதலன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உலகம் பலவிதம் + +உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. முருகேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கோடீஸ்வரன் (திரைப்படம்) + +கோடீஸ்வரன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். பாலச்சந்தர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாமன் மகள் (1955 திரைப்படம்) + +மாமன் மகள் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெண்ணரசி + +பெண்ணரசி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கணவனே கண்கண்ட தெய்வம் + +கணவனே கண்கண்ட தெய்வம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன் ஆகியோரின் பாடல்களுக்கு ஏமந்தகுமார் இசையமைத்து பி. சுசீலா, பி. லீலா, கண்டசாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர். + + + + + +காவேரி (திரைப்படம்) + +காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். +பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. +நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. +கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். +பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி + +நடனம் + + +ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றினார். + + + + +ஆசை (1956 திரைப்படம்) + +ஆசை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேச��், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அமரதீபம் + +அமரதீபம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு, பத்மினி, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + + +காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்) + +காலம் மாறிப் போச்சு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கண்ணின் மணிகள் + +கண்ணின் மணிகள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஞானகிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குடும்பவிளக்கு + +குடும்ப விளக்கு1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, எம். ஜி. சக்ரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மாதர் குல மாணிக்கம் + +மாதர் குல மாணிக்கம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மந்திரவாதி (திரைப்படம்) + +மந்திரவாதி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எஸ். முத்தையா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராஜபுதன ஓவியப் பாணி + +ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஒவ்வொரு ராஜபுதன அரசுக் காலத்திலும், பாணிகள் சிறிதளவு வேறுபட்டிருந்த போதிலும், சில பொது அம்சங்களை இவை கொண்டிருந்தன. + +ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. இவ்வகை ஓவியங்களுக்குப் பெரிதும் விரும்பப்பட்ட ஊடகமாக சிற்றோவியங்கள் (Miniature) விளங்கின. இவை, பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகின்றன. அரண்மனை, கோட்டை ஆகியவற்றின் சுவர்களிலும் கூட இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. + +இவ்வோவியங்களில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், கனிமங்கள், தாவரங்கள், சிப்பி ஓடுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சில சமயங்களில், பெறுமதியான கற்கள், பொன், வெள்ளி போன்ற உலோகங்களும் இவ்வகை ஓவியங்களில் பயன்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களுக்கான நிறங்களை ஆக்குவது நீண்ட வழிமுறைகளைக் கொண்டது. சில நிறங்களை ஆக்குவதற்குப் பல வாரங்கள் ஆகக்கூடும். மிக மெல்லிய தூரிகைகளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். + +16 ஆம் நூற்றாண்டிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியூடாக வளர்ந்து வந்த இந்த ஓவியப் பாணியில், பல பிரிவுகள் உள்ளன. இவற்றுள், மேவார் வகை, புண்டி-கொட்டா கலம் வகை, ஜெய்ப்பூர் வகை, பிக்கானெர் வகை, கிஷென்கர் வகை, மார்வார் வகை, ராகமாலா வகை என்பன குறிப்பிடத் தக்கவை. + + + + + +கூர்ம புராணம் + +கூர்ம புராணம் தமிழில் அதிவீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. + +காலம் 16ஆம் நூற்றாண்டு. திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பகுதிகளாக உள்ளது. பூர்வ காண்டத்தில் 48 அத்தியாயங்களும், 2729 பாடல்களும் உள்ளன. உத்தர காண்டத்தில் 47 அத்தியாயங்களும் 899 பாடல்களும் உள்ளன, வடமொழியிலுள்ள கூர்ம புராணத்தை இவர் தமிழில் செய்தார் என இந்த நூலின் பாயிரப்பாடல் குறிப்பிடுகிறது. +வடமொழியிலுள்ள கூர்மபுராணம் 9,000 கிரந்தங்களால் ஆனது. இது கூர்ம அவதாரம் எடுத்த திருமால், இந்திரத்துய்மனுக்கும் மற்ற முனிவர்களுக்கும் உபதேசித்த மகா புராணம் எனப்படுகிறது. இந்து மதத்தின் பதினெண் புராணங்களுள் இதுவும் ஒன்ற���கும். + + + + +பசோஹ்லி ஓவியப் பாணி + +பசோஹ்லி ஓவியப் பாணி வட இந்திய ஓவியப் பாணிகளுள் ஒன்று. "பசோஹ்லி" என்பது, பண்டைக்காலத்தில், இன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரவி ஆற்றங்கரையில் இருந்த "விஸ்வஸ்தாலி" என்னும் நாட்டைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனக் கருதப்படுகின்றது. இது இன்று இப்பகுதியில் உள்ள நகர் ஒன்றுக்குரிய பெயர் ஆகும். இந் நகரம் பசோஹ்லி எனப்படும் ஓவியப் பாணிக்குப் பெயர் பெற்றது. இந்த ஓவியப்பாணி, 17 ஆம் நூற்றாண்டின் நாலாம் காலாண்டில் தொடங்கி வளர்ந்த ஒரு பாணியாகும். 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இப்பகுதியை ஆண்ட "ராஜா கிருபால் பால்" என்பவர் காலத்தைச் சேர்ந்த ஓவியம் ஒன்றே இப்பாணியில் வரையப்பட்டு இன்று அறியப்பட்டுள்ள மிகப் பழைய ஓவியமாகும். பசோஹ்லியில் உருவான இந்தப் பாணி, மங்கொட், நூர்பூர், குலு, மண்டி, சுகெத், பிலாஸ்பூர், நாலகர், சம்பா, குலெர், கங்ரா போன்ற மலைப்பகுதி நாடுகளுக்கும் பரவியது. 1921 ஆம் ஆண்டின், இந்தியத் தொல்லியல் ஆய்வு அறிக்கையிலேயே முதன் முதலாக இப்பாணி ஓவியம் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அக்காலத்தில், ஒப்பாணியைச் சேர்ந்த ஓவியங்கள் சிலவற்றை லாகூர் மைய அருங்காட்சியகத்துக்காக வாங்கிய அதன் காப்பாளர், இவை முகலாயர் காலத்துக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். + + + + + +பஹாரி ஓவியப் பாணி + +வட இந்தியாவிலுள்ள, பஞ்சாப் பகுதியின், மலைப்பகுதி மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வழங்கி வந்த, ராஜபுதனப் பாணி சார்ந்த ஓவியப் பாணி பஹாரி ஓவியப் பாணி (Pahari painting) எனப்படுகின்றது. பசோஹ்லி, குலு, குலெர், கங்ரா ஆகிய ஓவியப் பாணிகள் பஹாரிப் பாணியின் பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. + +கலை இலக்கியத் துறைகளில் தேசிய உணர்வுகளின் எழுச்சியும், சமயத்துறையில், பக்தி வழியும், நாட்டுப்புற இலக்கியங்களும், பஹாரி ஓவியங்களுக்கான கருப்பொருட்களை வழங்கின. ராஜஸ்தான ஓவியங்கள் பெரும்பாலும் உருவப்படங்கள் மற்றும் அரசவைக் காட்சிகளை முதன்மைப் படுத்திய போது, பஹாரி ஓவியங்கள், காதல் மற்றும் பக்தி சார்ந்த கருப்பொருள்களை முதன்மைப் படுத்தின. + + + + + +கங்ரா ஓவியப் பாணி + +கங்ரா ஓவியப் பாணி (Kangra painting), 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்திய மலைப்பகுதியான கங்ராவில் வழங்கி வந்தது. இது பஹாரி ஓவியப் பாணியின் ஒரு பிரிவாகும். இப்பகுதியை ஆண்ட மகாராஜா சன்சார் சந்த் என்பவரின் காலத்தில் கங்ரா, பஹாரி ஓவியப் பாணியின் செல்வாக்கு மையமாகத் திகழ்ந்தது. இவர் காலத்திலேயே இப் பாணியிலான சிறந்த ஓவியங்கள் வரையப்பட்டன. பாகவத புராணம், கீத கோவிந்தம், நள தமயந்தி, சத்சாய் போன்ற அக்கால இலக்கியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத் தக்கவை. மகாராஜாவும், மற்றவர்களும் தொடர்புபட்ட அரசவைக் காட்சிகளும் வரையப்பட்டன. + + + + + +திரைச் சுவர் + +கட்டிடங்களில், திரைச் சுவர் (Curtain Wall) என்பது, அதன் சொந்த நிறை தவிரக் கட்டிடத்தின் வேறு எப்பகுதியின் நிறையையும் தன்மீது தாங்காத, கட்டிட முகப்பாக அமையும் சுவர்களாகும். இவற்றின் நிறை இணைப்புக்களின் ஊடாகக் கட்டிடத்தின், தூண்கள், தளங்கள் என்பவற்றுக்குக் கடத்தப்படுகின்றன. இவை சுமை தாங்காவிடினும், வெளியிலிருந்து வரக்கூடிய ஒளி, வெப்பம், சத்தம், மழை நீர், காற்று போன்றவை கட்டிடத்துக்குள் வருவதைக் கட்டுப் படுத்தும் வகையில் வடிவமைக்கப் படுகின்றன. அத்துடன் இவை காற்றின் விசை, நில நடுக்கம் போன்றவற்றினால் உண்டாகக்கூடிய விசைகள் என்பவற்றையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைத்து அமைக்கப்படுகின்றன. +பொதுவாகத் திரைச்சுவர்கள் தற்காலத்தில் அலுமினியம் சட்டகங்களால் தாங்கப்படுகின்ற, கண்ணாடி, அலுமினியம் கூட்டுப் படல்கள் என்பவை மூலம் அமைக்கப்படுகின்றன. எனினும் தொடக்க காலங்களில் உருக்கு அலுமினியத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. இக் கட்டிடப்பொருட்கள், கட்டிடத்துக்கு நவீன தோற்றத்தக் கொடுக்கின்றன. நிரப்பு படல்களாகக் கண்ணாடி அலுமீனியம் தவிர, மெல்லிய கற்பலகைகள், பல்வேறு உலோகத் தகடுகள், சாளரங்கள், என்பனவும் பயன்படுவது உண்டு. + +கடை முகப்புக்களும் இதுபோலவே, தோற்றம் அளித்தாலும், திரைச் சுவர்கள் கட்டிடங்களின் பல தளங்களை மூடி அமைவது இதனைக் கடை முகப்புக்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. இவை பொதுவாகப் பெரிய பரப்பளவை மூடி அமைய வேண்டி இர���ப்பதனால், வெப்ப விரிவு, சுருக்கம் என்பன இவற்றின் உறுதிப்பாட்டில் தாக்கத்தை விளைவிக்கக் கூடியன. இதனால் திரைச் சுவர்களின் வடிவமைப்பில் இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அத்துடன் இது உயரமான கட்டிடங்களில் பயன்படுத்தப் படும்போது, காற்று முதலியவற்றால் கட்டிடங்களில் ஏற்படும் சிறிய ஊசலாட்டம், காற்றின் விசை என்பனவும் திரைச் சுவர் வடிவமைப்பில் முக்கிய கவனம் பெறுகின்றன. + + + + +சேவியர் (கவிஞர்) + +சேவியர் எனும் பெயரில் எழுதும் ஜோசப் சேவியர் குமரி மாவட்டக் காரர். தமிழின் முன்னணி இதழ்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், குங்குமம், குமுதம், தேவதை, பெண்ணே நீ, களஞ்சியம், மங்கையர் மலர், ஹெல்த், கல்வி மலர், மனோரமா இயர்புக், மனோரமா ஹையர் எட்ஜூகேஷன் உட்பட பல இதழ்களில் எழுதி வருகிறார். + +இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவரது கவிதைகள் 'சேவியர் கவிதைகள் காவியங்கள்' எனும் பெயரில் உலக தமிழ் மொழி அறக்கட்டளை யினால் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. + +கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், வாழ்க்கை வரலாறுகள், வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள் என பல தளத்திலும் இயங்கி வரும் இவரது பேட்டிகள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியிருக்கிறன. + +1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் +2. மன விளிம்புகளில் +3. நில் நிதானி காதலி +4. சேவியர் கவிதைகள் காவியங்கள் +5. நில் நிதானி காதலி +6. அன்னை - கவிதை +7. கி.மு - விவிலியக் கதைகள் +8. இயேசுவின் கதை - ஒரு புதுக்கவிதைக் காவியம் +9. ராஜபக்‌ஷே - சூழ்ச்சியும் தந்திரமும் +10. ஷாரூக்கான் - மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி +11. ராகுல் காந்தி +12. டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க +13. வாங்க ஜெயிக்கலாம் +14. குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா +15 ஏன் சாப்பிடவேண்டும், மீன் ! +16. சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் +17. ஐ.டி யில் வேலை வேண்டுமா ? +18. அன்னை - வாழ்க்கை அழகானது +19. அலசல் - கட்டுரைகள் +20. பெண் - ரகசியமற்ற ரகசியங்கள் +21. நிக் வாயிச்சஸ் +22. வேலை நிச்சயம் +23. நீயும் வெல்வாய் +24. தெரியும் ஆனா தெரியாது +25. வெள்ளக்காரன் சாமி +26. இயேசு என்றொரு மனிதர் இருந்தார் +27. கிறிஸ்தவம் ஒரு எளிய அறிமுகம் +28. கல் மனிதன் + +தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என பலரின் பாராட்டுகளையும் பெற்ற இவரது படைப்புகளுக்காக பல அங்கீகாரங்களும் கிடைத்திருக்கின்றன. + + + + + + +வளிப் பதனம் + +பரந்த நோக்கில் வளிப் பதனம் (air condition) என்பது, குளிரூட்டல், வெப்பமூட்டல், காற்றோட்டம் கூட்டல், தொற்று நீக்கல் போன்ற , உடல் வசதிக்காக வளியின் நிலைமையை கட்டுப்படுத்துகின்ற அல்லது மேம்படுத்துகின்ற பலவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொது வழக்கில், வளிப் பதனம் என்பது, கட்டிடங்களுக்குள் உள்ள வளியின் குளிரூட்டலையும், ஈரப்பதம் குறைத்தலையுமே (dehumidification) குறிக்கிறது. + +வளிப் பதனம், வளிப் பதனப் பொறிகள் மூலம் செய்யப்படுகின்றன. வளிப் பதனப் பொறி, குளிரூட்டற் சுற்று முறையைப் பயன்படுத்தி வளியிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி வளியின் வெப்பநிலையைக் குறைக்கிறது. தற்கால வளிப் பதனப் பொறிகள், உடல்வசதிக் குளிரூட்டலுக்காகக் கட்டிடங்களிலும், போக்குவரத்து ஊர்திகளிலுமே பெரிதும் பயன்படுகின்றன. + +இயந்திரங்களைப் பயன்படுத்தி வளிப் பதனம் செய்வது ஒரு அண்மைக்காலப் புத்தாக்கம் ஆகும். ஆனால், கட்டிடங்களைக் குளிரூட்டுவது என்பது நீண்ட கால வரலாறு உடையது. பண்டைக்கால எகிப்தியர்கள் நீர்காவியில் இருந்து நீரைச் சில வீடுகளின் சுவர்களைச் சுற்றிச் செலுத்துவதன் மூலம் குளிரூட்டியது தெரிய வந்துள்ளது. மத்தியகாலப் பாரசீகத்தில், நீர்த் தொட்டிகளையும், காற்றுக் கோபுரங்களையும் பயன்படுத்திக் குளிரூட்டியுள்ளனர். +1820 ஆம் ஆண்டில், பிரித்தானிய அறிவியலாளரான மைக்கேல் பாரடே, அமுக்கத்தின் மூலம் அமோனியாவை நீர்மமாக்கி, அதனை மீண்டும் சடுதியாகக் குறைந்த அமுக்கத்தில் ஆவியாக விடுவதன்மூலம் குளிரூட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். 1942 ஆம் ஆண்டில், புளோரிடாவைச் சேர்ந்த மருத்துவரான ஜான் கோரீ (John Gorrie) என்பவர், இந்த முறை மூலம், பனிக்கட்டிகளை உண்டாக்கியதுடன், தனது நோயாளிகளின் அறைகளைக் குளிரூட்டவும் இதனைப் பயன்படுத்தினார். இவர் தனது பனிக்கட்டி உருவாக்கும் பொறியைக் கட்டிடங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்த எண்ணி இருந்ததுடன், மையப்படுத்திய வளிப் பதன முறைமை ஒன்றின் மூலம் முழு நகரங்களை���ுமே குளிர்மைப் படுத்த முடியும் என்ற தொலை நோக்கையும் கொண்டிருந்தார். + + + + +நீர் தூய்மையாக்கம் + +நீர் தூய்மையாக்கம் (Water purification) என்பது, நீரில் உள்ள மாசுக்களை அகற்றி, மனிதர்களின் குடிநீர்த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் தூய்மை ஆக்குவதையோ அல்லது தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய மாசுக்கள், ஒட்டுண்ணிகள், பக்டீரியாக்கள், அல்காக்கள், வைரசுகள், பங்கசுக்கள், கனிமங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சில உடல் நலத்துக்குக் கெடுதி விளைவிக்கக் கூடியவை. வேறு சில, சுவை, மணம், தோற்றம் போன்ற அம்சங்களில் நீரின் தரத்தைக் கூட்டுவதற்காக அகற்றப்படுகின்றன. தூய்மையாக்கத்தின் இறுதியில், சிறிதளவு தொற்று நீக்கி சேர்க்கப்படுவது வழக்கம். நீர் வழங்கல் வலையமைப்புக்களில் அது மீண்டும் மாசடையாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும். + + + + +அபரணை + +ஹபரணை இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் ஆகும். இது அம்பேபுசை-திருகோணமலை (A6) வீதியில் அமைந்துள்ள ஓர் முக்கிய சந்தியாகும். இங்கிருந்து பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு நகரங்களுக்கான பேருந்து சேவை நடைபெறுகின்றது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் இப்பகுதியிலேயே பேருந்து மாறுதல் வேண்டும். + +இப்பகுதியானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகும். இதற்கருகே சிகிரியாவும் அமைந்துள்ளது. இங்கே யானைகளில் சவாரிசெய்யமுடியும். சுற்றுலாத் துறைக்கெனவே வளர்க்கப்பட்ட நன்கு பழக்கப் படுத்தப்பட்ட யானைகள் இங்கு உள்ளன. + + + + +காத்தான்குடி + +காத்தான்குடி கிழக்கிலங்கையில் ஒரு நகரமாகும். தலை நகரான கொழும்பில் இருந்து 339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. + +மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப் பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும். + +இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்களும் காணப்படுகின்ற���."Xinhua", 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, "August 4, 1990""The New York Times", Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, "August 5, 1990""The Times", Tamils kill 116 Muslims, "August 13, 1990""Associated Press", Tamil Rebels Order Muslims to Leave City, "June 17, 1995" + +வடக்கு: மண்முனை வடக்கு பிரதேச செயலகம். + +கிழக்கு: வங்காள விரிகுடா (கடல்). + +தென்: மண்முனை பற்று பிரதேச செயலாளர். + +மேற்கு: மட்டக்களப்பு வாவி. + +மூலம் : http://www.kattankudy.ds.gov.lk + +இங்கு காணப்படும் பள்ளிவாசல் ஒன்றில் 1990 ஆகஸ்ட் 3 அன்று இரவுத் தொழுகை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர். இது காத்தான்குடி படுகொலைகள் என அழைக்கப்படுகிறது. இத்தாக்குதலின் துப்பாக்கி ரவை துளைகள் இன்றும் இப்பள்ளிவாயல் சுவர்களில் அழியாச் சுவடுகளாய் காணப்படுகின்றன. + +2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கிய சுனாமிப் பேரலையில் காத்தான்குடியில் 108 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காணாமல் போயினர். சுமார் 2500 வீடுகள் சேதமைடந்தன. + + + + +பாலைவனமாதல் + +பாலைவனமாதல் (Desertification) என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும். + +உயிரியற் பல்வகைமை (biodiversity) இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் "வெட்டி எரித்தல்" முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது. + +சில பகுதிகளில், பாலைவனங்கள் மலைகள் போன்ற இயற்கை அமைப்புக்களால் ஏனைய பகுதிகளிலிருந்து தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வேறு சில பகுதிகளில், இவ்வாறான நில அமைப்புக்கள் இல்லாத போது, பாலைவனங்களுக்கும், வறட்சி குறைவான இடங்களுக்கும் இடையிலான பகுதிகள் படிப���படியான மாறுநிலைப் பகுதிகளாகவே உள்ளன. இதனால் பாலைவனத்தின் எல்லை தெளிவாக இருப்பதில்லை. இவ்வாறான மாறுநிலைப் பகுதிகளிலுள்ள உயிர்ச்சூழல் முறைமைகள் எளிதிற் குலைந்து விடக்கூடிய, உறுதிக் குறைவான சமநிலையில் உள்ளன. + +இத்தகைய விளிம்புப் பகுதிகளில், மனிதச் செயற்பாடுகள் உயிர்ச் சூழல் முறைமையில் அது தாங்கக்கூடிய அளவுக்கு மேல் நெருக்கடியை உருவாக்கும்போது, நிலம் தரம் குறைகிறது. + + + + + +ஏப்ரல் 24 + + + + + + + +உடற்கூற்றியல் + +உடற்கூற்றியல் (Anatomy: கிரேக்கம்: ἀνατέμνω anatemnō அனா-மேல், τέμνω temnō டோம்-வெட்டு, கூறு) உடற் கூற்றினைப் பற்றிய அறிவியல் ஆகும். இது தாவரம், விலங்கு உள்ளிட்ட உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய அறிவைத் தருவதாகும். உடலின் பகுதிகள் (கூறுகள்) அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ அல்லது நுணுக்குக்காட்டியில் பார்க்கும் வகையிலோ ஆய்வுக்கு உட்பட்ட கல்வியாகும். + +உடல் அல்லது அதன் பாகங்களை தகுந்த முறையில் வெட்டிக் கூறிட்டோ (dissection), அல்லது வெட்டாமலோ ஆய்வு செய்து, அவை இயற்கையில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனை அறியலாம்.இது உயிரியல், மருத்துவம் ஆகியவற்றின் ஒரு துறையாகும். இதனைத் தாவர உடற்கூற்றியல் (அ) தாவர உள்ளமைப்பியல், விலங்கு உடற்கூற்றியல் என இரண்டாக வகைப்படுத்தலாம். + +விலங்குகள், தாவரங்கள் உடலுக்கு உள்ளாகக் காணப்படும் உறுப்பமைவினை அறிய முயலும் பிரிவு அறிவியலின் உள்ளுறுப்பமைப்பியல் எனப்படும். அறுவைச் சிகிச்சை, மருத்துவம் போன்ற பயன்தரும் துறைகள் தோன்றி மேம்பாடு அடைந்ததற்கு இப்பிரிவின் பங்களிப்பே காரணம் ஆகும். விலங்கு உடற்கூற்றியலில், மனித உடற்கூற்றியலுக்கு சிறப்பு கற்கை நெறி உள்ளது. + +விலங்கு அல்லது மனித உடற்கூற்றியலில் உடற்பாகங்கள் வாரியாக (எ. கா: தலை, கால்) அல்லது தொகுதி வாரியாக (எ.கா: நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி) எனவும் கற்கலாம். தொகுதி சில பாடப் பிரிவுகளில் மண்டலங்களாக குறிப்பிடப்படுவதும் உண்டு. + + + + + + + + + + +உயிரணுக்களின் தொகுப்பு திசுக்கள் எனப்படும். உயிரணுக்கள், இழையங்களின் உடற்கூற்றியலைப் பற்றி முறையே உயிரணுவியல், திசுவியல் மூலம் அறியலாம். + +தாவர மற்றும் விலங்குகளின் திசுக்கள் அவற்றின் செயல் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. விலங்குகள், பல உயிரணுக்களைக்கொண்டும், ஒவ்வொரு உயிரினத்தொகுப்பும் தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளையும் திறம்படச் செய்கின்றன. இழையங்கள், பெரும்பாலான முதுகெலும்பற்ற உயிரிகளில் புறவணியிழையம் (எபிதீலியல் திசு), மற்றும் இணைப்புத் திசு என்ற இரு கூறுகளைக் கொண்டுள்ளன. மேற்புறமமைந்துள்ள உடற்கூடு தோலிழமத்தால் ஆனது. + +விலங்குகளின் இழையங்கள் அடிப்படையில் நான்கு வகைக்குள் அடங்குகின்றன. அவையாவன: +முதுகெலும்பற்றவைகளில் கனிம இழையமும் ஒரு வகையாகவுள்ளது. + +புறவணியிழையம் உடல் உறுப்புகளின் உள், புறச்சவ்வுப் பகுதிகளில் அரணாக விளங்குகிறது. இவ்விழையம் உறுப்புக்களின் புற உறையாகவும், உடலகத்தே உள்ள குழிகள், காற்றுத்துளைகள், இனப்பெருக்கப் பாதைகள், குருதிக்கலன்கள் போன்றவற்றின் அக உறையாகவும் விளங்குகின்றது. அதாவது உடலின் வெளிப்புற மேற்பரப்பையும், உட்புற மேற்பரப்பையும் போர்த்துக் காணப்படுகிறது. இது ஒருகலப்படையாலானதாகவோ, அல்லது பல்கலப்படையாலானதாகவோ இருக்கும். + + + +வெவ்வேறு வகையான இழையங்களை இணைப்பதால் இவ்விழையம், இணைப்பிழையம் எனப்படுகிறது. கொழுப்பிழையம், நாரிழையம், எலும்பு, கசியிழையம் போன்றன முக்கியமான இணைப்பிழையங்களாகும். + + + +தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கும், உடலுறுப்புகளின் அசைவிற்கும் உதவும் இழையம் ஆகும். + + +நரம்பு மண்டலம் சார்ந்த தசையிழைகள். உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் மின் வேதிசமிக்ஞைகளைக் கடத்தும் நரம்பணுக்களின் தொகுதி நரம்பிழையமாகும். + +தாவர இழையங்கள் தோற்ற அமைப்பின் படி புறத்தோல், கலனியிழையம், அடியிழையம் என மூவகைப்படும். +அவற்றின் தன்மையின் அடிப்படையில் பிரியிழையம் (அ) நிரந்தர இழையம் என இரு வகைப்படும். + +உயிரின வகைப்பாட்டின்படி முந்தைய ஒற்றையணு உயிரிகள் முதல் கணுக்காலிகள், மெல்லுடலிகள் வரை முதுகெலும்பற்றவையாகவே உள்ளன. ஒற்றையணு உயிரிகள் நகரிழைகள் (சிலியா), போலிக்கால்கள் (சூடபோடியம்) மூலம் இடம் பெயறுகின்றன. உணவானது உயிரணு விழுங்கல் முறை மூலமும், எரிசக்தி தேவைகள் ஒளிச்சேர்க்கை மூலமும் பெறப்படுகின்றன. செல் அகவங்கூடு அல்லது புற உடற்கூடு போன்றவை புறச்சட்டகம் போன்று ஆதரவு அளிக்கின்றன. சில முந்தைய ஒற்றைய���ு உயிரிகள் பன்மடங்கு காலனிகளை அமைக்கும் திறனும் பெற்றிருக்கின்றன. + +கணுக்காலிகள் (பூச்சிகள், சிலந்திகள், உண்ணி, இறால்கள், நண்டு, கடல் நண்டு) முதலியனவற்றின் புற உடற்கூடு வலுவான 'கைட்டின் ' எனப்படும் புறச்சட்டத்தாலானது. கால்சியம் கார்பனேட் கொண்ட மெல்லுடலிகள், வளைத்தசைப் புழுக்கள் மற்றும் சிலிக்கா படிவங்களைக் கொண்ட நுண்ணிய சிம்ரிவர் மற்றும் புற உடற்கூட்டுக்குண்டுகள் முதலியன வலுவான புறத்தோலை பெற்றிருக்கின்றன. + + + + + + +ஓம் + +ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது. + +ஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம் + +ஓ+ம் = ஓம் om + +’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும். + +ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம். + +ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும். + +இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு. + +மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். + +அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு. + +இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும் + +ஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது. + +கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." + +ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள். அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது. + +என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார். + +" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு +ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு " + +என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். + +ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய "உபதேச ஸாஹஸ்ரி" எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ` ஞானவடிவத்தை உடையதோ.ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ.எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ.பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ.அழிவற்றதோ. எத்துடனும் சேர்க்கையற்றதோ. எங்கும் நிறைந்து உள்ள���ோ. இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே நான் ` ஓம்என்று கூறப்பட்டுள்ளது. (உபதேச ஸாஹஸ்ரி 10. 1). + + + + + +தமனி + +தமனிகள் குருதிக்குழல்களாக இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது. + +சுற்றோட்டத் தொகுதி உயிர் வாழ இன்றியமையால் உள்ளது. எல்லா உயிரணுக்களுக்கு உயிர்வளியையும், ஊட்டக்கூறையும் வழங்கவதும், அதேபோன்று கார்பனீராக்சைடு, கழிவுப்பொருள்களை நீக்குவதும், காரகாடித்தன்மைச் சுட்டெணை (pH) உகந்து பராமரிப்பதும், நோய் எதிர்ப்பு அமைப்பின் புரதங்கள், உயிரணுக்களின் சுழற்சியை உகந்து பராமரிப்பதும் இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பாகக் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், இறப்புக்கு முதன்மையான இரு காரணிகள், மாரடைப்பும் ("Heart Attack") பக்கவாதமும் ("Stroke") ஆகும். இவை தமனி மண்டலத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சீரழிவை ஏற்படுத்துகின்றது, இது பல்லாண்டுகளாக நீடிக்கும் ஒரு செயல்முறையாகும். (இதைப் பார்க்க: தமனிக்கூழ்மைத் தடிப்பு). + + + + +நான் உங்கள் தோழன் + +நான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம். + +அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே. ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம், எம், ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட. எம். கே. றொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை வி.முத்தழகு, கலாவதி, கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லி��ைப்பாடகர்) ("சுண்டிக்குளி பாலச்சந்திரன்"), மொஹிதீன் பெக், கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள். + +கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள். + +ஒரு கிராம மருத்துவமனையில் மருத்துவராக கண்ணன் ("வி.பி.கணேசன்") வேலை பார்க்கிறான். அந்த கிராமத்துப் பெண்ணான ராதாவுக்கு ("சுபாஷினி") கண்ணன் மேல் விருப்பம். ஆனால் அவள் மேல் ராஜன் ("லத்தீப்") மோகம் கொள்கிறான். ராதாவின் எண்ணம் அறிந்த அவனுக்கு கண்ணனை பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜனிடமிருந்து தப்புவதற்காக ராதா கண்ணனின் மருத்துவமனையில் அடைக்கலம் புகுகிறாள், அங்கே தவறுதலாக மயக்கமருந்தை ராதா குடிக்க, ராஜன் அவளைக் கெடுத்து விடுகிறான். பழி எதிர்பார்த்தது போலவே கண்ணன் மேல் விழுகிறது. நல்லகாலமாக ராஜன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, எல்லாம் சுபமாக முடிவடைகிறது. + + + + + +சின்னஞ்சிறு உலகம் + +சின்னஞ்சிறு உலகம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆனந்த ஜோதி + +ஆனந்த ஜோதி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், கமல் ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இப்படத்தின் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். + + + + + +ஆசை அலைகள் + +ஆசை அலைகள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்னை இல்லம் + +அன்னை இல்லம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இச��யமைத்தார். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். + + + + +அறிவாளி (திரைப்படம்) + +அறிவாளி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +ஏழை பங்காளன் + +ஏழை பங்காளன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராகினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஒரு பணக்கார வாலிபன், 'அண்ணல் காந்தியடிகள் தனது பிரசங்கங்களிலும், கட்டுரைகளிலும் உலக மக்களுக்குப் போதித்த உண்மைகளை ஊருக்கு ஒருவராவது பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்து, நாளடைவில் வறுமை ஒழிந்து, வளமான வாழ்வை எல்லோரும் அடைய முடியும்' என நம்புகிறான். + +இதனால் தன்னிடமுள்ள செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளை முன்னேற்றப் பயன் படுத்துகிறான். இதனால் அவன் "ஏழை பங்காளன்" என ஊரார் புகழ்ந்துரைக்கிறார்கள். + +அந்தப் பணக்கார வாலிபன் என்னென்ன செய்தான் என்பதை விளக்குவதே படத்தின் கதை. + +ஜெமினி கணேசன்
+ராகினி
+புஷ்பலதா
+எம். என். நம்பியார்
+எஸ். ஏ. அசோகன்
+கே. பாலாஜி
+டி. எஸ். முத்தையா
+கே. டி. சந்தானம்
+நாகேஷ்
+மனோரமா
+மாலதி
+எம். எஸ். எஸ். பாக்கியம்
+லட்சுமிபிரபா
+தர்மா
+எஸ். வி. ராமதாஸ்
+வி. மகாலிங்கம்
+"ஆள்வார்" குப்புசாமி
+"கரிக்கோல்" ராஜு
+"ஜெமினி" பாலு
+குமரப்பா
+பிரபாகர்
+வி. பி. சாமி
+தண்டபாணி
+"லூஸ்" ஆறுமுகம்
+மாரி
+ராஜு
+தயாரிப்பு: "வயலின்" கே. வி. மகாதேவன்
+இயக்குநர்: கே. சங்கர்
+கதை வசனம்: மா. லட்சுமணன்
+ஒளிப்பதிவு இயக்குநர்: தம்பு
+படப்பிடிப்பு: கே. எஸ். பாஸ்கர் ராவ்
+எடிட்டிங்: கே. நாராயணன்
+ஒலிப்பதிவு இயக்குநர்: டி. எஸ். ரங்கசாமி
+ஒலிப்பதிவு: கே. துரைசாமி
+நடன அமைப்பு: எஸ். எம். ராஜ்குமார்
+சண்டைப்பயிற்சி: வி. பி. சாமி
+கலை: ஏ. பாலு
+ப்ராஸஸிங்: கே. பரதன்
+நிழற்படம்: ஆர். பி. சாரதி
+ஸ்டூடியோ: மெஜஸ்டிக் + +ஏழை பங்காளன் படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர்கள்: கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம�� ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர். + +ஏழை பங்காளன் பாட்டுப் புத்தகம் + + +
+ +இருவர் உள்ளம் (1963 திரைப்படம்) + +இருவர் உள்ளம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத. எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இதயத்தில் நீ + +இதயத்தில் நீ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இது சத்தியம் + +இது சத்தியம்1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +கைதியின் காதலி + +கைதியின் காதலி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கலை அரசி + +கலை அரசி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இந்தியாவின் முதல் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். + + + + +கல்யாணியின் கணவன் + +கல்யாணியின் கணவன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +காஞ்சித்தலைவன் + +காஞ்சித்தலைவன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை மு. கருணாநிதி எழுதினார். + + + + + +கற்பகம் (திரைப்படம்) + +கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது. + + + + + +காட்டு ரோஜா + +காட்டு ரோஜா 1963 ல் வெளிவந்த குடும்பப்பாங்கான தமிழ்த் திரைப்படமாகும்.இதை ஏ.சுப்பராராவ் இயக்கியுள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. எம்.எஸ்.சோலைமணி எழுதிய கதைக்கு என்.பத்மநாபன் மற்றும் ஜி.தேவராஜன் ஆகிய இருவரும் வசனங்களை எழுதியுள்ளனர்.இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர். + +பாஸ்கரன் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) என்கிற அப்பாவி இளைஞன் அவரது வயோதிக பெற்றோர்களான தந்தை பொன்னம்பல முதலியார் (வி.கே.ராமசாமி) தாயார் வடிவு (ஜி. வரலட்சுமி) மற்றும் அவரது உறவினர் குழந்தைவேலுவுடன் (கே.ஏ.தங்கவேலு) தனியாக வாழ்ந்து வருகிறார். அவனது வயதான பெற்றோர்கள் தங்களது குடும்ப நண்பர் சண்முக முதலியாரின் (பி.டி.சம்பந்தம்) மகள் பேபியை (ஜி. சகுந்தலா) பாஸ்கரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். இதற்காக பாஸ்கரனும். குழந்தைவேலுவும் சண்முக முதலியாரின் நீலகிரியுலுள்ள அவரது வீட்டிற்கு வருகின்றனர். வரும் வழியில் அவர்கள் பயணித்த மகிழுந்து பிர்ச்சனைக்குள்ளாகிறது. குழந்தைவேலு தண்ணிரைத் தேடிச் செல்கிறான். இதற்கிடையில் பாஸ்கரன் ஓட்டிச்சென்ற மகிழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. அங்கே வந்த கிராமத்து இளம்பெண் பொன்னி (பத்மினி) அவனைக் காப்பாற்றி அவனது காயத்திற்கு மருந்திடுகிறாள். + +பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் காதலி��்கிறார்கள். இதற்கிடையில்,குழந்தைவேலு சண்முக முதலியார் வீட்டிற்கு செல்கிறான், அங்கே அவன் முதலியார் மகள் பேபியை கண்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுகிறார்கள். பின்னர் குழந்தைவேலு பாஸ்கரனைத் தேடும் முயற்சியில் ஈடுபாட்டு கடைசியில் அவனை கண்டுபிடிக்கிறான். பாஸ்கரனோ "காட்டு ரோஜா", "காட்டு ரோஜா" எனப் புலம்பியவாறே இருக்கிறான். பாஸகரனின் பெற்றோர்களும் குழந்தைவேலுவும் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். இதற்கிடையில் சோமு(ஆர்.எஸ். மனோகர்) பொன்னியின் வீட்டிற்கு வருகிறான்.சாகும் தருவாயில் இருக்கும் பொன்னியின் தந்தை (டி.எஸ்.முத்தையா) அவளை சோமுவின் கரங்களில் ஒப்படைக்கிறார். + +பின்னர், பொன்னம்பலம் என்பவர் வீட்டு வேலைக்காரியாக பொன்னி சேர்கிறாள். இதற்கிடையில், பொன்னம்பலத்தின் குடும்பம் அவரது மகன் மூலம் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தற்செயலாக, பாஸ்கரும்,பொன்னியும் மீண்டும் சந்திக்கிறார்கள். அவளை சந்திக்கும் வரை அவனது இதயம் மிகவும் கலங்கியிருந்தது. இதற்கிடையில், அவரது நெருங்கிய உறவினர் தங்கதுரை (எம். ஆர். ராதா) அவனது சகோதரி புஷ்பாவை (புஷ்பலதா) பாஸ்கருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறான், இதற்காக அவன் ஒரு இரகசிய திட்டத்தை தீட்டுகிறான். பாஸ்கரை தவறான வழியில் நடத்திச் சென்று அவனை மதுவை அருந்த வைக்கிறான். இதைக்கண்ட பாஸ்கரனின் தாயார் தனது மகனின் அணுகுமுறையைப் பற்றி கவலைப்படுகிறார், பாஸ்கர் குடிபோதையில் பொன்னியைத் பலவந்தப்படுத்த முயற்சிக்கிறான். + +பிறகு பொன்னிக்கு சோமுவுடனான் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். பொன்னி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். மலையுச்சிக்குச் சென்று பாஸ்கர் அவளை காப்பாற்றுகிறான். பாஸ்கர் தான் பொன்னியின் முன்னாள் காதலன் என்ற உண்மை சோமுவிற்குத் தெரிய வருகிறது. முடிவில் பொன்னியும் பாஸ்கரனும் திருமணம் செய்து கொள்ளப் போகும் சமயத்தில், அங்கே வந்த தங்கதுரை ,பாஸ்கரனுக்கும் தனது தங்கை புஷ்பாவிற்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றது எனவும் அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது எனவும் அனைவரையும் நம்ப வைத்து அத்திருமணத்தை தடுத்து நிறுத்துகிறான். அந்தப் பெண் குழந்தைக்கு தந்தை யார் என்றக் கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தங்கதுரையால் ஏமாற்றமடைந்த பொன்னியின் தங்கை(பி.எஸ்.சரோஜா) அக்குழந்தையுடன் பாஸ்கரனின் மகிழுந்துவில் சென்று விடுகிறாள். பாஸ்கர் அவளைப் பின்தொடர்ந்து சென்று அக்குழந்தையைக் காப்பாற்றி தங்கதுரையிடம் ஒப்படைக்கிறான். தங்கதுரை பாஸ்கர்,புஷ்பா மற்றும் குழந்தை ஆகியயோரின் புகைப்படத்தை இணைத்து அக்குழந்தைக்கு பொன்னியும் ,பாஸ்கருமே தாய், தந்தை என நம்பவைக்கத் திட்டமிட்டுள்ளான். முடிவில் தங்கதுரை தனது தவறை உணர்ந்து குடும்பத்தை இணைக்கிறான். புஷ்பா சோமுவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். + + + +இப்படத்திற்கு [[கே.வி.மகாதேவன்]]இசையமைத்துள்ளார்.. கவிஞர் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பி.பி.ஶீனிவாசன் பாடிய "எந்த ஊர் என்றவனே" எனறு கதாநாயகன் குடித்துவிட்டு பாடும் பாடல் வெகுவாக புகழ் பெற்றது . +[[பகுப்பு:1963 தமிழ்த் திரைப்படங்கள்]] +[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]] +[[பகுப்பு:எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்]] + + + +கொடுத்து வைத்தவள் + +கொடுத்து வைத்தவள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கொஞ்சும் குமரி + +கொஞ்சும் குமரி (Konjum Kumari) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், மனோரமா மற்றும இரா. சு. மனோகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ். வி. ராமதாஸ், ஏ. கருணாநிதி ,கே. கே. சௌந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதன் இயக்கம் ஜி. விஸ்வநாதன், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் தி. இரா. சுந்தரம் இதை தயாரித்திருந்தார். நகைச்சுவையில் புகழ் பெற்ற மனா மற்றும் கே. தேவராஜன் கதியை எழுதியுள்ளனர். இசை வேதா. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 99வது படமான "கொஞ்சும் குமரி" சென்னையில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது . + +அல்லி (மனோரமா) காட்டில் வாழும் ராணியாகும், இராஜங்கத்தை (இரா. சு. மனோகர்), ஒரு வழிப்பறிக் கும்பல் சூழ்ந்து கொண்��போது அல்லி அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவர் மீது காதல்வயப்படுகிறாள் , ஆனால் இராஜங்கம் அவளது காதலை மறுத்து விடுகிறான். எனவே, அல்லி அவனை துப்பாக்கி முனையில் அவனை மிரட்டி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். இராஜங்கத்தின் சகோதரனை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபடும்போது, அல்லி தான் மீண்டும் அங்கு வந்து அவரை காப்பாற்றுகிறாள்,பின்னர், என்ன நிகழ்கிறது, என்பதும் காதலர்கள் இணந்தனரா என்பது படத்தின் முடிவு சொல்கிறது. + + +பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகை மனோரமா கொஞ்சும் குமரி படத்தில் அதிரடி நாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் தி. இரா. சுந்தரம், படத்தொகுப்பாளாராக இருந்த ஜி. விஸ்வநாதனை இயக்குனராக்கினார். ஹாலிவுட் கதைகளை தழுவி படம் எடுப்பதில் இந்தப்படமும் தப்பவில்லை, மனோரமாவின் வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர், மேலும் நடிகர் இரா. சு. மனோகரனின் திறமையான நடிப்பினாலும், சண்டைக்காட்சிகளாலும், கே. தேவராஜனின் நகைச்சுவை வசனங்களாலும்,குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர் நல்லி ஏ. இரானியின் தந்திரக்காட்சிகளாலும், எஸ்.எஸ்.லால் மற்றும் எல். பாலுவின் படத்தொகுப்பாலும் இந்தத் திரைப்படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. + +இதன் இசையமைப்பாளர் வேதா மற்றும் பாடல்களை வாலி, கருணைதாசன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் எழுதியுள்ளனர்.இதன் பாடல்களை பி. சுசீலா, கே. ஜே. யேசுதாஸ் போன்றோர் பாடியுள்ளனர். திருச்சி லோகநாதன், ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் பி. வசந்தாவும் உடன் பாடியுள்ளனர். நடன அமைப்பாளர் ஒய். சிவையா பானுவுடன் சேர்ந்து சென்னை சகோதரிகள் சசி மற்ரும் கலா ஆகியோர் நடனங்களை அமைத்திருந்தனர். +இரா. சு. மனோகர், ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் ராஜாம்பாள் என்ற படத்தில் நடிக்க துவங்கி ,பின்னர் எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மனோரமா ஒரு அற்புத திறமை மிக்க நடிகையாவார், ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவரது இறப்பு வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தீவிரமாக நடித்து வந்தார். நடிகர் இரா. சு. மனோகர் மற்றும் மனோரமா ஆகிய இருவரையும் தி. இரா. சுந்தரம் தனது 18 படங்களில் நடிக்க வத்துள்ளார், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்துள்ள எந்���வொரு நடிகர்களை விடவும் இது அதிகம். தி. இரா. சுந்தரம் அவர்கள் இரா. சு. மனோகரது ஒழுக்கம், அவரது குரல், உரையாடல் வெளிபடுத்தும்விதம் மற்றும் அவரது ஆங்கில அறிவை மிகவும் விரும்பினார். மனோகர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று. அஞ்சல் துறையில் ஒரு எழுத்தராக பணிபுரிந்தார். + + + + + +குலமகள் ராதை + +குலமகள் ராதை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குங்குமம் (திரைப்படம்) + +குங்குமம் 1963 ஆம் ஆண்டில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. மோகனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். + + + + + +மணி ஓசை + +மணி ஓசை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நான் வணங்கும் தெய்வம் + +நான் வணங்கும் தெய்வம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நானும் ஒரு பெண் + +நானும் ஒரு பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய “கண்ணா கருமை நிறக்கண்ணா... பாடல் பெரிதும் புகழடைந்தது. + + + + +நீங்காத நினைவு + +நீங்காத நினைவு 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டபிள்யூ. ஆர். சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் ந��ித்துள்ளனர். என்ற 1951 ஆம் ஆண்டு வெளியான இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். வாலி, அ. மருதகாசி, கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்களை இயற்றினர். பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பின்னணி பாடினார்கள். + +"நேற்று வந்து, இன்றிருந்து, நாளை போகும்" என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் பாடிய முதல் வாலியின் பாடலாகும். + +நௌஷாத் இசையமைத்த இந்தி பாடலின் மெட்டில் அமைந்த "ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே" என்ற பாடல் பிரபலமடைந்தது. + + + + +நீதிக்குப்பின் பாசம் + +நீதிக்குப்பின் பாசம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நெஞ்சம் மறப்பதில்லை + +நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. + + +இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம். இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர். + +"நெஞ்சம் மறப்பதில்லை" தமிழ் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது. + +2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார். + + + + +பணத்தோட்டம் + +பணத்தோட்டம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்க���்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பார் மகளே பார் + +பார் மகளே பார் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமியாக சௌகார் ஜானகி, ஆரவள்ளியாக மனோரமா, சேகராக முத்துராமன், காந்தாவாக புஷ்பலதா, நட்ராஜாக எம். ஆர். ராதா, சுந்தரமாக ஏ. வி. எம். ராஜன், சோ ராமசாமி, ராமசாமியாக வி. கே. ராமசாமி, சந்திரவாக விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பரிசு (திரைப்படம்) + +பரிசு 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பெரிய இடத்துப் பெண் + +பெரிய இடத்துப் பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். + + + + +இரத்தத் திலகம் + +இரத்தத் திலகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்ணதாசன் உரையாடல் எழுதி, தாதா மிராசியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +குமார் (சிவாஜி கணேசன்), கமலா (சாவித்திரி) ஆகிய இருவரும் கல்லூரித் தோழர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகு கமலா தன் தாய் தந்தையைக் காண சீனா செல்கிறார். கமலாவின் தந்தை சீனாவில் வணிகம் செய்துவந்த ஒரு தமிழர். அதனால் அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 1962 அக்டோபரில் இந்திய சீனப் போர் துவங்குகிறது. போரில் ஈடுபடும் நோக்கத்துடன் குமார் இந்திய இராணுவத்தில் இணைந்து மேஜராக ஆகிறார். அதேசமயம் சீனாவில் உள்ள இந்தியர்கள் வெளியேறவேண்டும் அல்லது காவலில் இருக்கவேண்டும் என சீன அரசு உத்தரவிடுகிறது. கமலாவின் குடும்பத்தினர் இந்தியா திரும்புக��ன்றனர். ஆனால் கமலா அதற்கு மறுத்து தான் பிறந்த சீனாவே தன் தாய்நாடு என அங்கேயே தங்கிவிடுகிறாள். சீன இராணுவ மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு சீன இராணுவத்தில் இணைகிறாள். இதைச் செய்தித் தாளில் படித்த குமார் ஆத்திரம் அடைகிறான். + +இராணுவத்தில் சேர்ந்த குமார் இந்திய எல்லையில் இருக்க கமலா அதை ஒட்டிய சீன எல்லையில் பணிபுரிகிறாள். கமலா இரவு நேரத்தில் இந்திய இராணுவத்து முகாமை டார்ச் ஒளிசமிக்ஞை வழியாக தொடர்பு கொள்கிறாள். மறு எல்லையில் உள்ள குமார் சமிக்ஞையை ஏற்று இருவரும் சந்திக்கின்றனர். கமலா மீது குமார் கோபம் அடைகிறான். இந்திய நாட்டுக்கு உதவவே சீன இராணுவத்தில் சேர்ந்ததாக கமலா கூறி இந்திய இராணுவத்துக்கு சாதகமாக உளவு பார்ப்பதாக கூறுகிறாள். அவ்வாறை அவள் உளவு பார்த்து வருகிறாள். இறுதியில் அவள் கணவனால் அவளது செயல் கண்டறியப்பட்டதா, இறுதியில் என்ன ஆனது என்பதே கதை. + + +படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். "ஓரு கோப்பையிலே", "பசுமை நிறைந்த" போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. +இப்படத்தில் "போகாதே போகாதே" என்றபாடலை மனோரமா சொந்தமாக பாடி நடித்தார். + + + + + +சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்) + +சித்தூர் ராணி பத்மினி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +தர்மம் தலைகாக்கும் + +தர்மம் தலை காக்கும் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வானம்பாடி (திரைப்படம்) + +வானம்பாடி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அம்மா எங்கே (திரைப்படம்) + +அம்மா எங்கே 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன��� இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஆண்டவன் கட்டளை + +ஆண்டவன் கட்டளை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். + + + + + +ஆயிரம் ரூபாய் (திரைப்படம்) + +ஆயிரம் ரூபாய் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொம்மை (திரைப்படம்) + +பொம்மை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த பரபரப்பூட்டும் புதிர் வகையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எல். விஜயலட்சுமி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் படமான "சபடாஜ்" என்பதன் தழுவலாகும். இப்படத்தில் இடம்பெற்ற "நீயும் பொம்மை நானும் பொம்மை" என்ற பாடலைப் பாடியதன் மூலம் கே. ஜே. யேசுதாஸ் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார். + + + + + +என் கடமை + +என் கடமை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். + + + + +கை கொடுத்த தெய்வம் + +கை கொடுத்த தெய்வம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கலைக்கோவில் + +கலைக் கோவில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திர��ாந்தா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கங்கா ஆகியோர் தயாரித்தனர். இது ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். பொருளாதார்ரீதியாக இது ஒரு தோல்விப்படம் ஆகும். + + + + +கர்ணன் (திரைப்படம்) + +கர்ணன் () 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +காப்பியப்படம் / நாடகப்படம் + + + + +கறுப்புப் பணம் (திரைப்படம்) + +கறுப்புப் பணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,கண்ணதாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காதலிக்க நேரமில்லை + +காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் - நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். "அனுபவம் புதுமை" பாடல் லத்தீன் பாடலான "பெசாமே மூச்சோ" () பாடல் போன்று உள்ளது". + +இத்திரைப்படம் "பிரேமின்ச்சி சூடு" (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், "ப்யார் கியே ஜா" என்ற பெயரில் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. + + + + + + +நல்வரவு + +நல்வரவு 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சார்லி, மணியம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +நானும் மனிதன் தான் + +நானும் மனிதன் தான் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +பச்சை விளக்கு + +பச்சை விளக்கு 1964 ஆம் ஆண்டு ���ெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +படகோட்டி (திரைப்படம்) + +படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி டி. கிருஷ்ணசாமி எழுதி, டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் சுறா மற்றும் திருக்கை என்னும் இரண்டு மீனவ குழுக்களைப் பற்றியது. ஜமீன்தாராக தோன்றும் எம். என். நம்பியார் அவர்கள், மீனவர்கள் மத்தியில் தம்முடைய சூழ்ச்சியின் மூலமாக பிரித்தாளும் கொள்கையை மேற்கொள்வார். + +விஸ்வநாதன்,ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை வாலி எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் "தொட்டால் பூ மலரும்" பாடல் "சுத்ததன்யாசி" ராகத்தில் அமைக்கப்பட்டு திரைப்படங்களில் வரும் ராகத்தில் புதுமையை ஏற்படுத்தியது. இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் 2004-ம் ஆண்டு நியூ திரைப்படத்திற்காக புதுமையான முறையில் மறுஆக்கம் செய்திருந்தார். + + + + +பணக்கார குடும்பம் + +பணக்கார குடும்பம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பாசமும் நேசமும் + +பாசமும் நேசமும் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +புதிய பறவை + +புதிய பறவை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சர்வர் சுந்தரம் + +சர்வர் சுந்தரம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஏழை சுந்தரம் (நாகேஷ்) ஒரு நடிகனாகும் குறிக்கோளுடன் மதராஸிற்கு வருகிறான். ஆனால், கிரீன்லேண்ஸ் எனும் உணவகத்தில் ஒரு சர்வர் வேலை தான் கிடைத்தது. ஒரு உணவாகத்தின் உரிமையாளர் சக்ரவர்த்தியின் மகள் ராதா. அவள் மஹாபலிபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் பொழுது, சுந்தரம் ராதாவை சந்திக்கிறான். அவள் நன்கு பழகுவதை காதல் என்று தவறாக எடுத்துக்கொள்கிறான் சுந்தரம். அந்நிலையில், செல்வாக்குள்ள தொழிலதிபரான தன் நண்பன் ராகவனை உணவகத்தில் சந்திக்கிறான். தனது நடிப்புக் கனவை பற்றியும், பெயர் சொல்லாமல் காதலியைப் பற்றியும் ராகவனிடம் கூறுகிறான் சுந்தரம். அந்த பெண்ணிடம் காதலை சொல்லுமாறு சுந்தரத்தை வலியுறுத்துகிறான் ராகவன். + +ராகவன் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் பொழுது, அந்த பெண் தான் சுந்தரம் காதலிக்கும் பெண் என்று தெரியவந்து, பெண் பார்க்க செல்லாமல் சுந்தரத்திற்கு காதல் உதவி செய்ய முடிவு செய்கிறான் ராகவன். மேலும் நடக்கவும் ராகவன் உதவி செய்ய, அப்பாவி கணவன் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகனாக வறள்கிறான் சுந்தரம். அதற்காக சுந்தரத்தைப் பாராட்ட வரும் ராதாவிடம் ராகவன் உரையாடுகிறான். சுந்தரம் ராதாவை காதல் செய்ததால் தான், தான் ராதாவை பெண் பார்க்க வரவில்லை என்று கூறுகிறான் ராகவன். மாறாக, ராதா சுந்தரத்தை காதல் செய்யவில்லை என்று தெரியவர, அதை சுந்தரத்திடம் இருந்து மறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ராகவன். + +சுந்தரம் நடிப்பில் அதிகம் நேரம் செலவிடுவதால், தன் தாயுடன் அதிக நேரம் இருப்பதில்லை என்று சுந்தரத்தின் தாய் வருந்துகிறாள். நாளடைவில் ராதாவின் மீதுள்ள சுந்தரத்தின் அன்பு மறையும் என்று நினைத்தான் ராகவன். மாறாக, சுந்தரத்தின் காதல் அதிகமானதால், தன் ஆசையை துறக்கத் துணிந்தான் ராகவன். ஆனால் சுந்தரத்தின் காதலை ராதா நிராகரிக்கிறாள். பின்னர், ராதாவை யார் மணந்தார் என்பதே மீதிக் கதையாகும். + +நாகேஷ் + +எஸ்.முத்துராமன் + +எஸ்.வி.ரங்கா ராவ் + +எஸ். ராமாராவ் + +மேஜர் சுந்தரராஜன் + +கே.ஆர். விஜயா + +எஸ். என். லட்சுமி + +மனோரமா + +ரமணி திலகம் + +வாலி மற்றும் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர். + + + + + +தாயின் மடியில் + +தாயின் மடியில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +தெய்வத் திருமகள் (1964 திரைப்படம்) + +தெய்வத் திருமகள் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எம். ஏ. சின்னப்ப தேவர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தொழிலாளி (திரைப்படம்) + +தொழிலாளி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +உல்லாச பயணம் (திரைப்படம்) + +உல்லாச பயணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +வழி பிறந்தது + +வழி பிறந்தது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +வாழ்க்கை வாழ்வதற்கே + +வாழ்க்கை வாழ்வதற்கே 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வேட்டைக்காரன் (1964 திரைப்படம்) + +வேட்டைக்காரன் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + + +ஆசை முகம் + +ஆசை முகம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆனந்தி (திரைப்படம்) + +ஆனந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை எம். எஸ். சோலைமுத்து எழுதியிருந்தார். இப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சி. ஆர். விஜயகுமாரி, எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், எம். என். நம்பியார், நாகேஷ், மனோரமா, எஸ். வி. சகஸ்ரநாமம், வி. கே. ராமசாமி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். + + +எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். + + + + + +அன்புக்கரங்கள் + +அன்புக்கரங்கள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஆர். சுதர்சனம் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். + + + + +என்னதான் முடிவு + +என்ன தான் முடிவு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வசந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +இரவும் பகலும் + +இரவும் பகலும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +இதயக்கமலம் + +இதயக் கமலம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இப்படம் சுனில்தத் சாதனா நடித்த "மேரா சாயா" என்னும் இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்.ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த இந்த வண்ணப்படத்தில் கே.ஆர்.விஜயா இரு வேடமேற்றிருந்தார். + +இதில் கே. வ��. மகாதேவன் இசையமைப்பில் பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே பிரபலமாயின. இந்திப் படத்தின் மறுவாக்கமாக இருந்தபோதிலும், பாடல்கள் அவற்றின் சாயலில் அமையாது இருந்தது இப்படத்தின் சிறப்பம்சம். + + + + + + +காக்கும் கரங்கள் + +காக்கும் கரங்கள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கலங்கரை விளக்கம் (திரைப்படம்) + +கலங்கரை விளக்கம் () 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +கல்யாண மண்டபம் (திரைப்படம்) + +கல்யாண மண்டபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மா. ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கன்னித்தாய் (திரைப்படம்) + +கன்னித் தாய் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +கார்த்திகைத்தீபம் (திரைப்படம்) + +கார்த்திகைத்தீபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார். + + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியவர்: ஆலங்குடி சோமு. + + + + + + +காட்டு ராணி + +காட்டு ராணி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். த���வாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். பஞ்சு அருணாசலம், இராம. முத்தையா ஆகியோர் பாடலாசிரியரின் உதவியாளர்களாகப் பணியாற்றினர். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +குழந்தையும் தெய்வமும் + +குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகனே கேள் + +மகனே கேள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நாணல் (திரைப்படம்) + +நாணல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீ + +நீ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கனக சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி. + + + + +நீலவானம் + +நீலவானம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீர்க்குமிழி (திரைப்படம்) + +நீர்க்குமிழி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. கோபாலகிருஷ்ணன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +ஒரு விரல் + +ஒரு விரல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சல்வந்தர் பெர்னாண்டஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பண்டரிநாத், தங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +படித்த மனைவி + +படித்த மனைவி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +பழநி (திரைப்படம்) + +பழநி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பணம் படைத்தவன் + +பணம் படைத்தவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்திற்கு விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். + + + + + +பணம் தரும் பரிசு + +பணம் தரும் பரிசு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருச்சி சௌந்தராஜன், எஸ். எம். ராமன், வி. என். இராமலிங்கம், எம். கே. மணவாளன், ஏ. வி. பிரபாகர், வி. ஆர். திலகம், இரமணதிலகம், இரத்னாதேவி, கமலா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். செல்லத்துரை, டி. எஸ். நடேஸ் ஆகியோர் இசையமைக்க டேப் ராதாமாணிக்கம், தஞ்சைவாணன், அ. க. சுப்பையா, தமிழன்பன், திருப்பனந்தாள் மணியம் ஆகியோர் பாடல்களை யாத்தனர். + +சாண்டோ சின்னப்பா தேவரின் சகோதரரான எம். எம். ஏ. சுப்பையா தேவர் படத்தைத் தயாரித்ததுடன் கதை, வசனங்களையும் அவரே எழுதினார். + +இத்திரைப்படத்தில் நடித்த ரமணதிலகம் என்ற நடிகையை கவிஞர் வாலி பின்னர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். + + + + + +பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்) + +பஞ்சவர்ணக்கிளி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் ���ாடியிருந்தனர். + + + + +பூஜைக்கு வந்த மலர் + +பூஜைக்கு வந்த மலர் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + + +பூமாலை (திரைப்படம்) + +பூமாலை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தாயின் கருணை + +தாயின் கருணை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், லீலாவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாழம்பூ (திரைப்படம்) + +தாழம்பூ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்) + +உன்னைப்போல் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய விருது கிடைத்தது. இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை, பின்னணி இசையை சிட்டிபாபு அமைத்திருந்தார். + + + + + +வல்லவனுக்கு வல்லவன் + +வல்லவனுக்கு வல்லவன்1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மணிமாலா, அசோகன், இரா. சு. மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +வழிகாட்டி (திரைப்படம்) + +வழிகாட்டி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வீர அபிமன்யு + +வீர அபிமன்யு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. மதுசூதன ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வெண்ணிற ஆடை + +வெண்ணிற ஆடை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் முக்கோண காதல் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இப்படமே ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படமாகும். இப்படத்தில் முதலில் தோன்றியதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அறியப்பட்டனர். +பள்ளி மாணவி ஒருவருக்கு விடலைப்பருவத்திலேயே திருமணம் நடந்துவிடுகிறது. அவரது கணவன் ஒரு நேர்ச்சியில் இறந்துவிடுகிறான். கணவன் இறந்த அதிர்ச்சியில் அவளது மனநிலை பாதிக்கப்படுகிறது. அவளுக்கு மருத்துவம்பார்க்கும் மருத்துவரை அவள் காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் அந்த மருத்துவர் ஏற்கனவே வேரொரு பெண்ணைக் காதலித்துவருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை முடிவு. + + + + +அன்பே வா + +அன்பே வா1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க சிம்லாவிலுள்ள தனது மாளிகைக்கு வரும் பாலு, அது சிலருக்குத் தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். இருப்பினும், தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாது தானும் வாடகைக்குத் தங்க வந்தவன் போல நடிக்க, அங்கு இருக்கும் லதா என்னும் இளம்பெண்ணுக்கும் அவனுக்கும் ஏற்படும் மோதல்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் சம்பவங்கள், இவற்றைப் பின் தொடரும் காதல் ஆகியவற்றை நகைச்சுவை மிளிரச் சித்தரித்தது இந்த வண்ணப்படம். + +முதன்மை நடிகர்கள் + +துணை நடிகர்கள் +துணை நடிகைகள் +கீதாவின் தாயார் + + + + + + + + + + + + +அண்ணாவின் ஆசை (திரைப்படம்) + +அண்ணாவின் ஆசை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாட்டா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேச��், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அவன் பித்தனா + +அவன் பித்தனா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சந்திரோதயம் + +சந்திரோதயம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +Blast from the past: Chandhrodhayam (1966), ராண்டார் கை, தி இந்து, சனவரி 9, 2016 + + + + +நகர்படி + +நகர்படி (Escalator) என்பது, மக்களைக் கட்டிடங்களின் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு பொறிமுறையாகும். படி போன்ற அமைப்பைக் கொண்ட இதன் படிகள் மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கித் தொடர்ச்சியாக நகருமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வழமையான படிக்கட்டுகளிற் போல மக்கள் அதன்மீது ஏற வேண்டியதில்லை. படிகளே நகர்ந்து அவர்களைச் செல்ல வேண்டிய இடத்துக்குத் தோக்கிச் செல்கின்றன. இயங்கிக் கொண்டிருக்கும் உலோகப் பட்டிகள் மீது பொருத்தப்பட்டுள்ள இப் படிகள் எப்பொழுதும் கிடை மட்டமாகவே இருக்கும். இதனால் மக்கள் இதன் மீது நின்று கொண்டு மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கிச் செல்ல முடியும். + +நகர்படிகள் உயர்த்திகளைப் போல் வேகமாகச் செல்வதில்லை ஆயினும், உயர்த்திகளைவிடக் கூடிய அளவில் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்ல வல்லவை. அத்துடன், உயர்த்திகளுக்காகக் காத்திருப்பதுபோல் இவற்றுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. + +நகர்படிகள் பொதுவாகக் கட்டிடங்களின் நிலத்தளத்துக்கு அண்மையிலுள்ள சில தளங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. பொதுவாக நகர்படிகள் இணைகளாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று தொடர்ச்சியாக மேல் நோக்கியும், மற்றது கீழ் நோக்கியும் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு அமைவதில்லை. பெரிய அங்காடித் தொகுதிக் கட்டிடங்களில், விற்பனைக்கு இருப்பவற்றை மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்புக்களைக் கூட்டுவதற்காக, ஏறுவதற்கும் இறங்குவதற்குமான நகர்படிகளை அருகருகே அமைக்காமல் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்குமாறு அமைப்பதுண்டு. + +வழமையான படிக்கட்டுகளில் இருப்பதுபோல் நகர்படிகளில், இடையில் படிமேடைகள் இருப்பதில்லை. படிகள் தொடர்ச்சியாகவே ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளம் வரை செல்கின்றன. பெரும்பாலான நகர்படிகள் நேரானவை. ஆயினும், சில இடங்களில் வளைவான நகர்படிகளும் உள்ளன. இவற்றில் படிகள் மட்டுமன்றிப் பக்கங்களிலுள்ள தடுப்புகளுக்கு மேல் அமையும் பற்றுக்கோடுகளும் "(Hand Rail)" நகரும்படி அமைக்கப்பட்டுள்ளன. + + + + + +சுற்றுயர்த்தி + +சுற்றுயர்த்தி (paternoster) என்பது, கட்டிடங்களில் தளங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு உதவும் ஒரு வகை உயர்த்தி ஆகும். இது சங்கிலித் தொடராக இணைக்கப்பட்ட, கதவுகள் அற்ற, உயர்த்திப் பேழைகளைக் கொண்டது. தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் இதன் ஒரு பக்கம் மேல் நோக்கியும், மறு பக்கம் கீழ் நோக்கியும் மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும். இதனைப் பயன்படுத்த விரும்புபவர்கள் சுற்றுயர்த்தி இயங்கிக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏறவோ அதிலிருந்து இறங்கவோ வேண்டும். பழக்கப்பட்டவர்களுக்கு இது கடினமானது அல்ல. இதனால், இவை பொதுவாக, அலுவலகங்கள் போன்ற இடங்களில் அங்கு வேலை செய்வோர் பயன்படுத்துவதற்காக அமைக்கப்படுகின்றன. + +இது முதன்முதலாக இலண்டனைச் சேர்ந்த ஜே. ஈ. ஹால் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அவர் இதனைச் "சுற்று உயர்த்தி" என்னும் பொருள்படும் ஆங்கிலச் சொல்லான "Cyclic Elevator" என்னும் சொல்லால் குறித்தார். இதன் இயக்கம், தியானத்துக்கு உதவும் "செபமாலை" யின் இயக்கம் போல இருந்ததால் அதன் பெயரைக் குறித்த "paternoster" ("எங்கள் தந்தையே", இலத்தீனில் கிறித்து கற்பித்த செபத்தின் துவக்க வார்த்தைகள்) என்னும் பெயரால் அதை அழைத்தனர். இப்பெயரே பின்னர் நிலைபெற்றுவிட்டது. + +வழமையான உயர்த்திகளைவிடக் கூடுதலானவர்களை ஏற்றி இறக்கக் கூடியதாக இருந்ததன் காரணமாகச் சுற்றுயர்த்திகள் 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. இவை ஐரோப்பாக் கண்டத்திற் பரவலாகப் பயன்பட்டன. ஏறி இறங்கும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கருத்திற் கொண்டும், ஊனமுற்றோரின் பயன்பாட்��ுக்கு இத்தகைய உயர்த்திகள் உதவா என்பதாலும், சுற்றுயர்த்திகள் தற்காலத்தில் கட்டிடங்களில் பொருத்தப்படுவதில்லை. + + + + + +வகுப்பறை + +வகுப்பறை என்பது பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய செயல்கள் நடைபெறும் அறைகளைக் குறிக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே வகுப்பறை அமைப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக, உகந்த தளவாடப் பரவமைப்புக்கான (layout) இடவசதி, சிறந்த உள்ளக ஒலிப் பண்பு, ஆசிரியர் கற்பிப்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வடிவமைப்பு, பொருத்தமான ஒளியமைப்பு என்பன வகுப்பறைகளில் இருக்கவேண்டிய சில முக்கிய அம்சங்களாகும். + +பொதுவாக வகுப்பறைகளில் கரும்பலகை இருக்கும் இதில் ஆசிரியர்கள் சுண்ணாம்புக்கட்டியினால் எழுதி மாணவர்களுக்குக் கற்பிப்பர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வகுப்பறைகளில் இக் கரும்பலகைகளின் இடத்தை வெண்பலகைகள், ஊடாடு வெண்பலகைகள் போன்றவை பிடித்துக்கொண்டன. சில வகுப்பறைகளில் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, படமெறிகருவி போன்ற வசதிகளும் உள்ளன. இவை தவிரப் பெரும்பாலான வகுப்பறைகளில் தேசப்படங்கள், பல்வேறு வகையான அட்டவணைகள், விளக்கப்படங்கள் போன்றவையும் இடம்பெறுகின்றன. + + + + + +மும்மலங்கள் + +மும்மலங்கள் பாசத்தின் கூறுகள் என இந்து சமயத்தின் ஒரு தத்துவப் பிரிவாகிய சைவசித்தாந்தம் கூறுகிறது. சித்தாந்தத்தின் உண்மைப் பொருள்கள் பதி பசு பாசம் என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து மும்மலங்கள் என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்��ுக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள். +உண்ட உணவு மலமாகி வெளிப்படுவதை அறிவோம். இது ஒரு கழிவுப்பொருள். வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்றும் உடல் வெளிப்படுத்தும் மலங்கள். அதுபோல உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் காமம், வெகுளி, மயக்கம் எனக் காட்டினர். + +சமயநெறி இவற்றை மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) எனக் காட்டியது. இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார். + +சைவ சமயம் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது. + +சிவஞான சித்தியார் உரை ஆணவம் தவிடு போன்றது, கன்மம் முளை போன்றது, மாயை உமி போன்றது என்று உவமைகளை மாற்றிக் காட்டுகிறது. + +சிவபெருமான் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர். சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர். + + + + +உடல்மலம் தானே கழியும். உள்ளத்தில் இருக்கும் இந்த மும்மலத்தை நாம்தான் கழிக்க வேண்டும். கழித்தால் வாழும்போதே தெய்வநிலை அடையலாம். + +மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை ஆணவம், கன்மம், மாயை எனப்படுகின்றன. +மலங்களுள் முதன்மையானது ஆணவ மலம். இதனால் இது மூல மலம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. தமிழ் நூல்களில் இது "இருள்" என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல்; இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவசித்தாந்தம். + +கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை "வினை" என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்ற��டம் சேர்க்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். வினைகளிலும் மூன்று வகை உண்டு. இவை: +என்பனவாம். இவற்றுள், "பழவினை" என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும். "நுகர்வினை", அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். "ஏறுவினை" என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும். + +மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் சுவாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள். + +மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம். + +மாயையும், தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. + + + + +ஆணவம் + +ஆணவம் என்பது "நான்", "எனது (என்னுடையது)" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல. + +இந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் "அறிவு" தனை மறந்து, "நான்", "எனது" என உரிமை கொண்டாடி (அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல் ஆணவம் எனப்படுகிறது. + +இது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும். + +இதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன. (அபிதான சிந்தாமணி - பக்124) + + + + +வில் + +வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்றாகும். இது அம்புகளை எய்வதற்குப் பயன்படுகின்றது. அம்பு எய்வதற்கான ஆற்றலைப் பெறுவது, வில்லின் மீள்தகவுத் தன்மையில் தங்கியுள்ளது. இறைவனுக்கும் வில் ஓர் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது. + +இதிகாச நாயகர்கள் வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். வில் அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்காக அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொள்வர். வில் போர்க்கலையாக விளங்கியது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் நடைபெற்ற போர்களில் வில்வழி சண்டை செய்வதே வழக்கமாக இருந்திருக்கிறது. வில்வித்தையில் சிறந்த வீரர்களை வில்லாளிகள் என்று போற்றுவது வழக்கமாக இருந்தது. வில்வித்தைக்கு அஸ்திரப் பயிற்சி என்றும் பெயர் உண்டு. வில்லுக்கு விஜயன் என்பது பழமொழி. +மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமமாக வில்வித்தை பயிற்றுவித்தார். துரோணரிடம் வில்வித்தை பயில விரும்பி இயலாமல் போனவன் ஏகலைவன். எனினும் துரோணரின் பிரதிமையைச் செய்து வைத்து வில்வித்தை பயின்றான் என்பது வரலாறு. அருச்சுனன் இரவில் வில்மூலம் அம்பு எய்யவும், நுண்ணிய அம்புகளால் எதிரிகளைப் பயமுறுத்தவும் கற்றிருந்தான். துரோணர் வைத்த வில்வித்தை சோதனையில் அருச்சுனன் ஒருவனே வென்றான் என்பதற்குப் பறவையின் கழுத்தைக் குறித்த கதை இன்றும் வழங்கப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் சிகண்டியால் வீழ்த்தப்பட்ட வீடுமன் அம்புகளால் ஆன படுக்கையிலேயே கிடத்தப்பட்டான். இது வீரர்களுக்குரிய மரபாக இருந்துள்ளது. + +இராமன் உள்ளிட்ட சகோதரர்களுக்கு விசுவாமித்திரரே வில்வித்தைகளைக் கற்றுத் தந்தார். இராமனும் இலக்குவனும் வில்லில் சிறந்த வீரர்களாக விளங்கினர். சனகன் வைத்திருந்த சிவதனுசு வில்லை உடைத்தே இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டான் என்பதும் பரசுராமனின் வில்லை ஒடித்தவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராமன் மராமரம் ஏழும் எய்தவன் என்பது அவனுடைய வில்திறமைக்குச் சான்றாகும். + +வில்லின் சக்தி +வில்லில் பூட்டப்படும் அம்புகள் (அஸ்திரங்கள்) தற்காலத்து ஏவுகணைகள் போலவும் செயல்பட்டுள்ளன. பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னியாஸ்திரம், வருணாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்றவை அத்தகு சக்தி படைத்தவையாக திகழ்ந்திருக்கின்றன. + +வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு. + + + + +அனுராகம் + +அனுராகம் () 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படமகும். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். + +என். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத, அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார். + + + + + +திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் + +உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.) + +இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும். + +பானை செய்யும் குயவனின் சிறுவன் தந்தையைப் போல விளையாடுகையில் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த பச்சைமண் உருண்டை போல் இந்த மலை இருந்ததாம். இதன் அரசன் சோழன் நலங்கிள்ளி என்று புலவர் கோவூர் கிழார் + +இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார். + +விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். + +சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது. + +இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம். + + + + +முகம் + +முகம் தலையின் முன்பகுதியில், புலன்களுக்குரிய உறுப்புக்கள் இணைந்த உடல்!உடலின் ஒரு பகுதியாகும். மனிதரில் நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, கண்கள், மூக்கு, கன்னம், வாய், நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் ஒத்த தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. முக பாவம் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும். + +உடல் உறுப்புக்கள் + +மனித மூளை + + + + +வாய் + +வாய் உயிரினங்கள் உணவு, நீரினை உட்கொள்ளப் பயன்படும் உறுப்பாகும். எல்லாப் பாலூட்டிகளிலும் வாய் முகத்தில் அமைந்துள்ளது. பாலூட்டியல்லாத வேறு சில உயிரினங்களில் உடலின் வேறு பகுதிகளில் வாய் காணப்படுகிறது. சில உயிரினங்களில் குடல் இல்லாததால் வாயினூடாகவே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. + +பெரும்பாலான விலங்குகளின் உடலில் ஒரு பகுதியில் வாயும் மறுபகுதியில�� குதமும் முழுமையான சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டுள்ளன. பொதுவாக வாயின் பயன்பாடு உணவு உட்கொள்ளுதலாகும். பாம்பு நஞ்சினைச் செலுத்தவும் வாயினைப் பயன்படுத்துகிறது. பல விலங்குகள் உணவு உட்பட்ட பொருட்களைப் பிடிக்க வாயினையே பயன்படுத்துகின்றன. + + + + +பல் + +பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் (பால் பற்கள்) ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன. + +பல் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பற்கள் கல்சியம் தாதுவால் ஆனவை. + + + +மனிதரின் பற்கள் முகத்தின் கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை எலும்பான அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும். +மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும். + +பற்களின் உருவத்தையும், அவை அமைந்திருக்கும் இடத்தையும் பொறுத்து அவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும். + +வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களை கடிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் கோடரியால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன. + +கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் வாயின் இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை கிழிக்க உதவுகின்றன. இ���்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருன் மேல் ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன. + +முன் கடவாய்ப் பற்கள் வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை நொறுக்க உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன. + +பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை நசித்து, அரைத்து மெதுமையான துகள் போன்று ஆக்குகின்றன. + +மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0 + +கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 0 +மேற்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3 + +கீழ்தாடை - வெ.ப. 2, வே.ப. 1, மு.க.ப. 2, க.ப. 3 + +குழந்தைகளில் பொதுவாக ஆறு மாதமளவில் முளைக்கும் பாற்பற்கள், 24 மாதமளவில் முழுவதும் முளைத்திவிடும். ஆறு வயதளவில் பாற்பற்கள் விழ, பின்னர் நிலையான பற்கள் தோன்ற ஆரம்பிக்கும். அனேகமாக 24 வயதளவில் 32 பற்களும் முளைத்துவிடும். + +வெவ்வேறு பற்கள் வெவ்வேறு வகையான அமைப்பைக் கொண்டிருக்கும். அவற்றின் வேர்களின் எண்ணிக்கையும் வேறுபடும். சில ஒரு தனியான வேரையும், சில இரண்டு, மூன்று வேர்களையும் கொண்டிருக்கும். + + +பல் மிளிரி எனப்படுவது பளபளப்பானதும் கடினமானதுமான பதார்த்ததாலான, பல்முடியில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பற்களுக்குப் பாதுகாப்பை வழங்கும். + +பற்சீமெந்து எனப்படுவது கடினமான பதார்த்தத்தாலான, பல்வேரில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது பல்லை தாடை எலும்புகளிலுள்ள சிற்றறைகளினுள், மிகவும் இறுக்கமாகப் பொதிந்து வைக்க உதவும். + +பன்முதல் என்பது ஓரளவுக்கு எலும்பை ஒத்த கடினமான அமைப்பைக் கொண்டது. + +பன்மச்சை என்பது பன்முதலின் உள்ளாக அமைந்திருக்கும் ஒரு குழி போன்ற அமைப்பு. இதனுள் இணைப்பிழையம், குருதிக்கலன்கள், நரம்புகள் என்பன காணப்படும். இவை பல்வேரிலுள்ள சிறு துளையூடாக பல்லின் உள்ளே செல்லும். + + + + + +மகதலேனா மரியாள் + +மகதலாவின் மரியா ("Mary of Magadala") அல்லது மகதலேனா மரியாள் ("Mary Magdalene", மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள "மகதலா"வின் மரியாள் எனப் பொருள்ப��ும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே. . + +இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது. + +நம்பிக்கையின் திருத்தூதர்: + +திருத்தந்தை பிரான்சிஸ் சமீபத்தில் ஆற்றிய உரையில் மகதலா மரியாளை நம்பிக்கையின் திருத்தூதராக சுட்டிக்காட்டுகின்றார். + +"மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார், அவர், மரியாவை, பெயர் சொல்லி அழைக்கும்வரை, அவரை யார் என மரியா அறியாமல் இருந்தார். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்தபின், இது அவர் அளித்த முதல் காட்சியாகும். இக்காட்சி, மிகவும் ஓர் ஆழமான தனிப்பட்ட நிகழ்வாக உள்ளது. இயேசு, மகதலா மரியாவிடம் நடந்துகொண்டதுபோன்று, நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். தம் பிரசன்னத்தால் நம்மை மகிழ்வால் நிரப்புகிறார். இயேசுவை நாம் சந்திக்கும்போது, அது நமக்குச் சுதந்திரத்தைக் கொணர்ந்து, வாழ்வை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு, நம் பார்வையைத் திறந்து வைக்கின்றது. அது, இந்த உலகை மாற்றுகின்றது மற்றும், இறவா நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது. உயிர்த்த ஆண்டவர், மரியாவிடம், என்னை பற்றிக் கொள்ளாதே, மாறாக, போய், தம் உயிர்ப்பின் நற்செய்தியை மற்றவருக்கு அறிவி என்று சொன்னார். இவ்வாறு, மகதலா மரியா, கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதராக மாறுகிறார். நாமும், இவரின் செபங்களின் வழியாக உயிர்த்த ஆண்டவரைப் புதிதாகச் சந்திப்போமாக. உயிர்த்த ஆண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார், நம் துன்பங்களை மகிழ்வாக மாற்றுகின்றார் மற்றும், அவர் உண்மையிலேயே உயிர்பெற்றெழுந்தார் என்பதை, நம் வாழ்வால் அறிவிப்பதற்கு நம்மை அனுப்புகிறார்." + +அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலி(திருத்தூதர்களுக்கு திருத்தூதுரைத்தவள்) : + +சமீபத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மகதலா மரியாளின் நினைவு நாளை அப்போஸ்தலர்களை போலவே திருவிழாவாக மாற்றினார். அதில் மகதலா மரியாளின் சிறப்பான அப்போஸ்தல பணியானது சுட்டிக்காட்டப்படுகிறது. "ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் " என்பதே கிறிஸ்தவ மறையின் தலையாய விசுவாசமும் நற்செய்தியும் ஆகும்(1 கொரிந்தியர் 15:14). அதை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தது ஒரு பெண். அவள் தான் மகதலா மரியாள். ஏதேன் தோட்டத்தில், வாழ்வு நிறைந்திருந்த நிலையில் ஏவாள் என்னும் முதல் அன்னை மனிதனுக்கு சாவினை கனி வழியாக அறிவித்தாள். கெத்சமணி தோட்டத்தில் , சாவும் துயரமும் நிறைந்திருந்த நிலையில் மகதலா மரியாள் என்னும் அன்னை மனிதனுக்கு வாழ்வினை நற்செய்தி என்னும் இயேசுவின் கனி வழியாக அறிவித்தாள். இதை புனித தோமா அக்குவினாரும் குறிப்பிட்டுள்ளார். புனிதர்களில் இத்தகு சிறப்பு பெயரை தாங்கியுள்ள ஒருவர் புனித மகதலா மரியாள் என்பது குறிப்பிடப்பட்டது. + +இறைஇரக்கத்தின் சாட்சி: + +கெத்சமணி தோட்டத்தில் தம் அன்பர் இயேசுவை காணாத மகதலா மரியாள் கண்ணீர் வடித்தாள் என்று திருவிவிலியம் கூறுகின்றது . அவளின் அன்புக்கண்ணீரை புனித அன்ஸ்லம் "தாழ்ச்சியின் கண்ணீர் " என்று குறிப்பிடுகின்றார். மகதலா மரியாளின் அன்பால் கசிந்த கண்ணீரை கண்டு இரங்கிய கிறிஸ்து தன் உயிர்ப்பின் மகிமையில் அவளுக்கு தோன்றினார். தான் படைத்த படைப்பு, தன்னை படைத்தவரை அன்பொழுக தேடும் போது அன்பே உருவான இறைவன் ,எவ்வாறு தன்னை மறைத்துக் கொள்வார் ? புனித பாப்பரசர் பெரிய கிரகோரியார் இதை முன்னிட்டே இறை இரக்கத்தின் சாட்சியென மகதலா மரியாளை கூ���ுகின்றார். + + + + +திருச்சிராப்பள்ளி மாவட்டம் + +திருச்சிராப்பள்ளி மாவட்டம் (ஆங்கிலம்:"Tiruchirappalli district") இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருச்சி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள 4 வது பெரிய நகரம். + +தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ,முத்தரையர், பாண்டியர்,விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. + +வடக்கில் பெரம்பலூர் , சேலம் மாவட்டங்களையும், கிழக்கில் அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 506 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. + + + +இம்மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 16 பேரூராட்சிகளும் கொண்டது. + + + +இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களும், 404 கிராம ஊராட்சிகளும் கொண்டது. + +இம்மாவட்டத்தின் பகுதிகள் திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுடன் இணைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. + +திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, க���்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது. + +கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும். + +கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, புதுஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன. + +மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது. + +திருச்சியில் உள்ள சுற்றுலா ���லங்கள். + +முக்கெம்பு திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் இது திருச்சியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது +இது மேலணை எனவும் அழைக்கப்படுகிறது.இது காவிரி கரையில் அமைந்துள்ளது + + + + + + +தமிழ் நாட்டார் கதைகளில் நகைச்சுவை + +நாட்டார் அல்லது நாடோடிக் கதைகளில் நகைச்சுவை அம்சம் நிறைந்து காணப்படுகின்றது. + +வடை உண்ண விரும்பிய கணவன் மனைவிக்கு அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து, குறைந்தது முப்பது வடைகளை செய்ய வேண்டி வேலை சென்றான். வேலையில் இருந்து திரும்பிய கணவன் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும் இருப்பது கண்டு, கோபத்துடன் மிகுதி வடைகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டான். அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள். எப்படி அவள் அதைச் செய்யலாம் என்று கணவன் வினாவினான். அதற்கு அவள் மிகுதியிருந்த ஒரு வடையையும் எடுத்து தன் வாயுக்குள் போட்டு சாப்பிட்டு காட்டினாள். + + + + + +எட்வின் ஹபிள் + +எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் ("Edwin Hubble", நவம்பர் 20, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார். + +இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துற���க்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார். இவர் எழுதிய ஹபிள் விதி அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகிறது. + +நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது. + + + + + + +கொங்குத் தமிழ் + +கொங்கு தமிழ் என்பது கொங்கு நாட்டு அல்லது கோயமுத்தூர் தமிழ் கோவையைச் சுற்றி இருக்கும் கோவை, திருப்பூர்,ஈரோடு மாவட்ட மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்கு. +இவ்வழக்கு ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது. "கொங்கு" என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால் காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது.`மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அழைத்தனர். + +தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். "என்னுடைய", "உன்னுடைய" என்பதை "என்ற", "உன்ற" என்றும், "என்னடா" என்பதை "என்றா" என்பார்கள். "சாப்பிட்டுவிட்டு", "குளித்துவிட்டு" என்பனவற்றை "சாப்டுபோட்டு", "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். "ஏனுங்கோ", "சொல்லுங்கோ", "வாங்கோ", "போங்கோ" என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். "சொல்லுங்", "வாங்", "போங்", "சரிங்", "இல்லீங்" என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள். + + + + + + + + + + + + +முனையில் இரண்டாக பிரிக்கப்பட்ட குச்சி + + -சோம்பல் + - படுத்த நிலை/ உறக்கம் + + + + + + + +துளிவேள / கொஞ்சமாக - குறைவாக + +தெலுவு - பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் + + + + +தமிழ் வேர்ச்சொற்கள் + +ஒரு சொல்லின் அடிப்படைக் கூறே வேர்சொல் ஆகும். தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கான வேர்சொற்கள் இருக்கின்றன. அவற்றை அடிப்படையாக வைத்து ஆக்கப்படும் கலைச்சொற்களே மொழி���ைப் பலப்படுத்தும். + + + + + + +இந்தியத் துடுப்பாட்ட அணி + +இந்தியத் துடுப்பாட்ட அணி (இந்தியக் கிரிக்கெட் அணி) இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கிலாந்துக்கெதிராக இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. கபில் தேவ் த்லைமையில் 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு போட்டித் தொடர்களில் இந்திஒய அணி உலகக் கோப்பையினை வென்றுள்ளது. + +அக்டோபர் 19, 2018 நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் இடத்திலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரண்டாவது இடத்திலும், பன்னாட்டு இருபது20 இல் இரண்டாவது இடத்திலும் உள்ளது. விராட் கோலி தர்போது அனைத்து வடிவ போட்டிகளின் அணித் தலைவராகவும், ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளனர். + +பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. + + + + +ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி + +ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக��கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிப் பெற்றுள்ளது. + + + + +இங்கிலாந்து துடுப்பாட்ட அணி + +இங்கிலாந்து துடுப்பாட்ட அணி என்பது இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் சார்பாக துடுப்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியாகும். இது "இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபை"யால் நிர்வகிக்கப்படுகிறது. + +இங்கிலாந்திலேயே முதன்முதலாக துடுப்பாட்டப் போட்டியைத் தொடங்கினார்கள். இங்கிலாந்து தனது முதலாவது தேர்வுப் போட்டியை 1877இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் விளையாடியது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது. + + + + +பாக்கித்தான் துடுப்பாட்ட அணி + +பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி பாகிஸ்தான் சார்பாகத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது பாகிஸ்தான் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. + +ஜூலை 28, 1952 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் தகைமை வழங்கப்பட்டது. இவ்வணி தனது டெஸ்ட் போட்டியை இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 1952 இல் டில்லியில் விளையாடியது. இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. + + + + +தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி + +தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. + +தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது. + + + + +நியூசிலாந்து துடுப்பாட்ட அணி + +நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. + +இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1929-30களில் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1955-56இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1972-73களில் விளையாடியது. + + + + +சிம்பாப்வே துடுப்பாட்ட அணி + +சிம்பாப்வே துடுப்பாட்ட அணி சிம்பாப்வே நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது சிம்பாப்வே கிரிகெட் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சிம்பாவே அணி சர்வதேசத் துடுப்பாட்ட சபையில் முழு உறுப்புரிமையுள்ள நாடாகும். அதாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தேர்வுத் துடுப்பட்டத்திலும் விளையாட அனுமதி பெற்ற அணியாகும். + +சிம்பாவே அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்கான அனுமதி 1992 இல் கிடைத்தது. + + + + +வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி + +வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் ஒரு பெண்கள் உயர்தரப் பாடசாலையாகும். + +1940களின் ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதி இந்துக்களுக்கு அவர்களின் இந்துத்துவத்தைப் பேணும் வகையில் ஒரு மகளிர் பாடசாலை அமைக்கும் தேவை கருதி இப்பாடசாலை 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எம். கார்த்திகேசு என்பவரின் தலைமையில் ஒரு 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கார்த்திகேசு அவர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டிலேயே இப்பாடசாலை முதலில் பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இப்பாடசாலைக்கென நிரந்தரக் காணி வாங்கப்பட்டு பல வகுப்பறைகளுடன் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் விஸ்தரிக்கப்பட்டன. 1946 இல் இக்கல்லூரி இலங்கை கல்வித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. + +ஆரம்பத்தில் ஆண்களையும் உள்ளடக்கிய வடமராட்சி இந்து கல்லூரி தற்போது பெண்கள் பாடசாலையாக மாற்றபட்டுள்ளது. + +வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரிக்கான பாடசாலைக்கீதம், பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி கமலா பெரியதம்பி அவர்களால் 1954 இல் எழுதப்பட்டது. + +
+வட இந்து மகளிர் கல்லூரி
+வாழிய வாழி நீடுழி - (வட)

+ +
+ஆழி யிறைவன் அருள்நிதம் பாடி
+பாழ்வினை யகலப் பரிவுடன் பயிலும் - (வட)

+ +
+ஈழநன் நாடாம் எங்கள் பொன்னாட்டில்
+திரு வளர்ந்தோடும் பருத்தித்துறையாம்
+தாழ்விலாத் தலத்தில் தவநெறிச் சங்கம்
+தமிழ்மகள் மாற்புறத் தரணியி லருளிய - (வட)

+ +செந்தமிழ் முதலாஞ் சிறந்த நற்கலையும்
+சிந்தையை யேற்றும் நந்திரு மறையும்
+எந்தத் துறையிலும் தேர்ந்திடப் பயிற்சி
+தந்திடும் தர்மம் தனதெனச் சாற்றும் - (வட)

+ +மங்கையர் பண்பும் இங்குநாம் பயின்று
+நங்குலம் தழைக்க நாடும் செழிக்கப்
+பொங்கிடு மன்பும் மங்கிடா வீரமும்
+எங்கணும் சேவைகள் செய்திட வளரும் - (வட)

+ +பன்னரும் பெருமைசேர் பரந்தநல் விண்ணே
+பரிதியும் மதியு மின்றேல் இருட்புண்ணே
+அன்பெனும் நிலவைப் பொழிபவள் பெண்ணே
+இன்பக் கதிரொளி காட்டிடுங் கண்ணே
+நன்மணி விளக்கே மாற்றுயர் பொன்னே
+மண்ணுயர் சேவையை தன்னுயிர் என்னும் - (வட)
+ + + + +
+ +வங்காளதேசத் துடுப்பாட்ட அணி + +வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வங்காள தேசத்தின் சார்பாக துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது வங்காள தேச துடுப்பாட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. + +வங்காள தேச அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை டாக்காவில் இந்திய அணிக்கு எதிராக ஆடி உலகின் 10வது டெஸ்ட் தகைமை உடைய அணியாகியது. இவ்வணி விளையாடிய முதல் 34 டெஸ்ட் போட்டிகளில் 31 போட்டிகளில் தோல்வி கண்டது. முதலாவது வெற்றியை ஜனவரி 2005இல் சிம்பாப்வே அண��யுடன் சிட்டகொங்கில் மோதிப் பெற்றது. + +மார்ச் 17 2007இல் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியைத் தோற்கடித்து சாதனை புரிந்தது. + + + + +மாண்டூக்ய காரிகை + +மாண்டூக்ய காரிகை என்பது மாண்டூக்ய உபநிடதத்தின் விளக்கமாக அமைந்த ஒரு வடமொழி உரை நூலாகும். இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் என்பவரால் இயற்றப்பட்டது. மாண்டூக்ய உபநிடதத்தின் சாரம், 215 வரிகள் மூலம் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆதி சங்கரரால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட அத்வைத வேதாந்தக் கொள்கையின் அடிப்படைகள் இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளன. இதனால், அத்வைதச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்திய முதல் நூல் மாண்டூக்ய காரிகையே எனக் கூறப்படுகின்றது. இந்நூலில் கௌடபாதர் கையாண்டுள்ள மொழியும், தத்துவங்களும் அவருக்குப் பௌத்த தத்துவங்களில் இருந்த அறிவை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். + +மாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், தருக்க முறையினாலும் பிரம்மன் (இறைவன்) ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் பிரகரணங்கள் எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்: + + +என்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன. + +முதல் பிரிவான ஆகமப் பிரகரணம், மாண்டூக்ய உபநிடதத்தின் சுருக்கமான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதியான வைதத்யப் பிரகரணம், உலகப் பொருட்கள் அனைத்தும் மாயையே என நிறுவ முயல்கிறது. கனவில் காண்பன எல்லாம் எவ்வாறு மாயையோ அதுபோலவே விழித்திருக்கும்போது தோன்றுவனவும் மாயையே என்கிறார் நூலாசிரியர். மூன்றாவது பகுதியில், இறைவனும், உயிர்களுமாக இருக்கின்ற ஒன்றே உண்மையானது என்றும், ஏனையவை எல்லாம் மாயையே என்னும் அத்துவித (இரண்டற்ற) நிலை விளக்கப்படுகிறது. கடைசிப் பகுதியில் இருமைத் தன்மையாகத் தோன்றும் மாயையை அகற்றும் வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. + + + + + + +கௌடபாதர் + +கெளடபாதர் ஒரு வேதாந்தி ஆவார். வேதவியாசரின் மகன் சுகர் என்னும் இருடிக்கு மாணாக்கர் என்பர். இவர் குரு பதஞ்சலி மகரிஷியின் 1000 சீடர்கள் உயிர் பெற்றவர் ஒருவரே... கல்வி ஞானி அறிவை புகட்ட குரு பதஞ்சலியர் இவரை தலைகீழாக தொங்கவைத்து பாடம் எடுத்துள்ளார்...குருவின் பெயர் சொல்லும் சீடன். இவர் இராமேஸ்வரம் சென்று குரு பதஞ்சலியார் அமர்ந்த இடத்தை கண்டு விட்டு வருகையில்...மதுரை மாவட்டம் ( மதுரை-இரமேஸ்வரம் ரோட்டில்) என்னும் சக்குடி + +வைகை ஆற்றின் ஓடையில் உள்ள ஒரு ஆலமர பொந்தில் அமர்ந்து தவநிலை பெற்றுஉள்ளார்... + +இவரின் மாணாக்கரான கோவிந்த பகவத் பாதர், ஆதி சங்கரருக்குக் குரு. இவர் உத்தரகீதை என்னும் வேதாந்த நூலுக்கு உரை செய்துள்ளார். கௌடபாதர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் இது பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. + +மகாயான பௌத்த மதத்தின் தத்துவங்கள் பலவற்றை இந்து சமயத் தத்துவங்களுக்குக் கொண்டுவந்து அவை அத்துவைத வேதாந்தமாக வளர்ப்பதில் கௌடபாதருக்குப் பங்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது (பக்.96- India Philospy). + +மாண்டூக்ய உபநிடதத்துக்கு விளக்கமாக அமையும் உரை நூலாகிய மாண்டூக்ய காரிகை இவரால் எழுதப்பட்டது. "ஆன்மாவும் இறைவனும் வேறு" என்னும் இருமை இல்லாத நிலைக்கு, அதாவது அத்துவிதத்துக்கு விளக்கம் தரும் இந்நூலில், கண்ணில் தெரியும் உலகம் ஒரு மாயத் தோற்றமே எனவும் கௌடபாதர் விளக்குகிறார். + + + + +ஏமாளிகள் + +ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம். + +என். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள். + + + + + +அறிவியல் மொழிகள் + +தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்���ு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக வெளியிடப்படுன்றனவோ அம்மொழிசார் மக்களுக்கு இந்த அறிவு இலகுவில் கிட்டிவிடுகின்றது. எந்த மொழிகளில் அறிவியல் ஆய்வு ஏடுகள் ஓரளவாவது வெளிவருகின்றனவோ அவற்றை அறிவியல் மொழிகள் என்றும், எதில் கூடுதலாக வெளிவருகின்றனவோ அதை அறிவியலின் மொழி என்றும் கூறலாம். அறிவியல் மொழி என்ற தரம் எந்த ஒரு மொழியின் தனிப்பட்ட தன்மையிலும் இல்லை, அதன் பயன்பாட்டில்தான் தங்கியிருக்கின்றது. +வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது. +ஆங்கிலத்தின் அறிவியல் மேலாண்மை உறுதியானது. ஆனால் அது தொடர்ந்து தனிப்பெரும் அறிவியல் மொழியாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சீனம், யப்பானிய மொழி,உருசியன்,பிரேஞ்சு, அரபு,ஸ்பானிஸ்,இந்தி போன்ற மொழியினரின் அறிவியல் பங்களிப்பு கூடும் பொழுது அவர்கள் அவர்களது மொழியிலேயே கருத்து பரிமாற முயலலாம். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறையலாம். மேலும் பொறிமுறை மொழிபெயர்ப்பு விருத்தி பெறும் பொழுது மொழி இடைவெளிகள் குறையும். + +"முதன்மைக் கட்டுரை: அறிவியல் தமிழ்" + +தமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. இதற்கு தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுர���களை படைப்பது இதற்கு ஒப்பானது. +இன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை. +தாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை வலு அடுக்கமைவு உண்டு. தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே. + + + + + +தேர்வுத் துடுப்பாட்டம் + +தேர்வுத் துடுப்பாட்டம் "(test cricket match)" (டெஸ்ட்/ரெஸ்ற் போட்டி) துடுப்பாட்ட வகைகளில் ஒன்றாகும். துடுப்பாட்ட வகைகளில் மிக நீண்டதும் இதுவே. பொதுவாக தகுதி வழங்கப்பட்ட நாடுகளுக்கிடையில் மட்டுமே நடைபெறுகிறது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காள தேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் நாடுகளாகும். + +அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15 1877 முதல் மார்ச் 19 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் +ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. + + + + + +மேந்தலைச் செலவு + +வணிகத்தில் மேந்தலைகள் அல்லது மேந்தலைச் செலவுகள் (Overhead cost) என குறிப்பிடப்படுவது, வணிக செயற்பாட்டு நடவடிக்கையின்பொழுது ஏற்படும் நிலையான செலவுகளை (Fixed cost) ஆகும். + +கிரயக் கணக்கீட்டிலும்,பொருளொன்றின் விலையினை தீர்மானிப்பதற்கும் வணிக நடவடிக்கைகளின் போது ஏற்படும் செலவுகளை பகுத்து ஆய்வு செய்வது அவசியமாகும். அந்த வகையில் ஏற்படும் செலவுகளை நேர்ச் செலவுகள்,நேரில் செலவுகள் என இரண்டாக வகைப்பிரிக்கலாம்.இதில் நிலையான நேரில் செலவுகளே மேந்தலைகள் ஆகும். + +எடுத்துக்காட்டாக பொருளொன்றின் உற்பத்தி நடவடிக���கையில் அதில் நேரடியாக ஈடுபடும் ஊழியரது சம்பளம் நேர்ச் செலவாகும்,ஆனால் இதனை மேற்பார்வை செய்யும் முகாமையாளரது சம்பளம் நேரில் செலவாகும் அதாவது மேந்தலையாகும்.பொதுவாக மேந்தலைகளாக குறிப்பிடப்படுவது,வாடகை,அலுவலக மின்சாரம்,காப்புறுதி போன்றனவாகும். + +மேந்தலைகள் தொடர்பான செலவுகள் உற்பத்தி பொருட்களின் நேர்கிரயங்களோடு மேந்தலை உறிஞ்சல்,மேந்தலை பகிர்தல் அல்லது மேந்தலை ஒதுக்கம் மூலம் சேர்த்து கூட்டப்பட்டு மொத்தச்செலவு கணிக்கப்படும்.இதன் அடிப்படையிலே விலை தீர்மானம்,முகாமை தீர்மானங்கள் துணியப்படும். + + + +அனைத்துலக மொழிகள் + +அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்துலக மொழியாக இருக்கிறது. ஜோர்ஜ் வெபர் ("George Weber") என்பவரின் ஆய்வுக் கட்டுரைக்கிணங்க பின்வரும் மொழிகளின் அடுக்கமைவு அமைகின்றது. + + +எண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் வங்காள மொழியை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம். + +தமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன. + +பொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும். + + + + +வானியற்பியல் + +வானியற்பியல் ("Astrophysics"), வானியல் துறையின் ஒரு பிரிவாகும். இது, விண்மீன்கள், விண்மீன்பேரடைகள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான ஒளிர்மை, அடர்த்தி, வெப்பநிலை, வேதியியற் கூறுகள் போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் இயற்பியல் பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், விண்மீன்களிடை ஊடகம், வான் பொருட்களிடையேயான இடைத்தொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த கோட்பாட்டு வானியற்பியல் ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது. + +வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், இயக்கவியல் (mechanics), மின்காந்தவியல், வெப்ப இயக்கவியல், புள்ளியியல் இயக்கவியல், குவைய இயக்கவியல் (quantum mechanics), சார்புக் கோட்பாடு, அணுக்கரு இயற்பியல், அணுத்துகள் இயற்பியல், அணு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல் போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது. + +வானியல் தனக்கென ஒரு பழைமையான வரலாற்றைக் கொண்டிருப்பினும், இயற்பியற் புலத்தில் இருந்து நீண்டகாலமாக பிரிந்திருந்துள்ளது. அரிசுடாட்டில் கருத்தின்படி விண்பொருட்கள் சீரான கோளவடிவத்தையுடையனவும், வட்ட ஒழுங்குகளைக் கொண்டுள்ளனவுமாகக் கருதப்பட்டன. எனினும் புவிமையக் கோட்பாடு அக்கருத்திலிருந்து விலகியது. இதனால் இவ்விரு கருத்துக்களும் தொடர்பற்றனவாகக் காணப்பட்டன. + +சாமோசு நகர அரிசுடாக்கசு என்பவர், புவியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன எனக் கருதுவதன் மூலம் வான் பொருட்களின் இயக்கத்தை விவரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். ஆனால், புவிமையக் கோட்பாடு வேருன்றியிருந்த அக்காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாடு முரண்பட்டதும், கேலிக்குரியதுமாக இருந்தது. கி.பி. 16ம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசின் சூரியமையக் கோட்பாடு உருவாகும் வரை பல நூற்றாண்டு காலத்துக்கு புவிமையக் கோட்பாடு ஐயத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்க, உரோம வானியலாளரான தாலமியின் அல்மகெஸ்ட் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட புவிமையக் கோட்பாட்டின் செல்வாக்கே இதற்குக் காரணமாயமைந்தது. + + + + +விண்மீன்களிடை ஊடகம் + +விண்மீன்களிடை ஊடகம் (interstellar medium) என்பது, விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் பரவியிருக்கும் தூசி, வளிமங்கள் போன்றவற்றைக் குறிக்கும். விண்மீன்களிடை ஊடகம் என்பது, கலக்சிகளில் உள்ள விண்மீன்களுக்கு இடையில் உள்ள பொருட்களைக் குறிக்கும் அதே வேளை, அவ் வெளியில் பரந்திருக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு, விண்மீன்களிடைக் கதிர்வீச்சுப் புலம் (interstellar radiation field) எனப்படுகின்றது. + +விண்மீன்களிடை ஊடகம், அயன்கள், அணுக்கள், மூலக்கூறுகள், பெரிய தூசிப் பருக்கைகள், அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் போன்றவற்றின் மிக ஐதான கலவையைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பொருட்கள் திணிவு அடிப்படையில் 99% வளிமங்களையும், 1% தூசியையும் கொண்டுள்ளது. + + + + +ஆண்பிள்ளை சிங்கம் + +ஆன்பிள்ளை சிங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் இதுவாகும். + + + + +அமுதா (திரைப்படம்) + +அமுதா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வெங்கட்ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அணையா விளக்கு + +அணையா விளக்கு 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்பே ஆருயிரே (1975 திரைப்படம்) + +அன்பே ஆருயிரே () 1975 ஆம் ஆண்டு வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் விசுவநாதன் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் சீட்டுக் கூண்டுவில் (box-office) மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித்தந்தது. மேலும் இத்திரைப்படமானது 1967 ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பானுமதி ஆகியேர் நடிப்பில் வெளியான கிரகலக்சுமி என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். + + + + +அன்பு ரோஜா + +அன்பு ரோஜா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அந்தரங்கம் + +அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்) + +அவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவளும் பெண்தானே (திரைப்படம்) + +அவளும் பெண் தானே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்) + +ஆயிரத்தில் ஒருத்தி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சினிமா பைத்தியம் (திரைப்படம்) + +சினிமா பைத்தியம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +டாக்டர் சிவா + +டாக்டர் சிவா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எனக்கொரு மகன் பிறப்பான் + +எனக்கொரு மகன் பிறப்பான் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எங்க பாட்டன் சொத்து + +எங்க பாட்டன் சொத்து 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எங்களுக்கும் காதல் வரும் + +எங்களுக்கும் காதல் வரும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இங்கேயும் மனிதர்கள் + +இங்கேயும் மனிதர்கள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இப்படியும் ஒரு பெண் + +இப்படியும் ஒரு பெண் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இதயக்கனி + +இதயக்கனி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காரோட்டிக்கண்ணன் + +காரோட்டிக்கண்ணன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கஸ்தூரி விஜயம் + +கஸ்தூரி விஜயம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்ப��த்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கதவை தட்டிய மோகினி பேய் + +கதவைத் தட்டிய மோகினி பேய் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாலை சூடவா + +மாலை சூட வா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனிதனும் தெய்வமாகலாம் + +மனிதனும் தெய்வமாகலாம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மஞ்சள் முகமே வருக + +மஞ்சள் முகமே வருக 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மன்னவன் வந்தானடி + +மன்னவன் வந்தானடி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மயங்குகிறாள் ஒரு மாது + +மயங்குகிறாள் ஒரு மாது 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கான கதை பஞ்சு அருணாசலம் எழுதி, எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மேல்நாட்டு மருமகள் + +மேல் நாட்டு மருமகள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நாளை நமதே + +நாளை நமதே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தம��ழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நம்பிக்கை நட்சத்திரம் + +நம்பிக்கை நட்சத்திரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நினைத்ததை முடிப்பவன் + +நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா ,சாரதா,லதா,நம்பியார்,அசோகன்,தேங்காய்சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருந்தார். + +எம்,ஜியார் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருந்தார். + +சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். +ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். + + + + +ஒரு குடும்பத்தின் கதை + +ஒரு குடும்பத்தின் கதை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமத்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பல்லாண்டு வாழ்க + +பல்லாண்டு வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பணம் பத்தும் செய்யும் + +பணம் பத்தும் செய்யும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ரத்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பட்டாம்பூச்சி (திரைப்படம்) + +பட்டாம்பூச���சி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்) + +பட்டிக்காட்டு ராஜா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாட்டும் பரதமும் + +பாட்டும் பரதமும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிஞ்சு மனம் + +பிஞ்சு மனம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிரியாவிடை + +பிரியா விடை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புதுவெள்ளம் + +புதுவெள்ளம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொந்தங்கள் வாழ்க + +சொந்தங்கள் வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சுவாமி ஐயப்பன் (திரைப்படம்) + +சுவாமி ஜயப்பன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாய்வீட்டு சீதனம் + +தாய் வீட்டு சீதனம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்கத்திலே வைரம் + +தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேன்சிந்துதே வானம் + +தேன் சிந்துதே வானம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தென்னங்கீற்று (திரைப்படம்) + +தென்னங்கீற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருடனுக்கு திருடன் + +திருடனுக்கு திருடன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணன், மம்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருவருள் + +திருவருள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தொட்டதெல்லாம் பொன்னாகும் + +தொட்டதெல்லாம் பொன்னாகும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உங்கவீட்டு கல்யாணம் + +உங்க வீட்டு கல்யாணம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +உறவு சொல்ல ஒருவன் + +உறவு சொல்ல ஒருவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உறவுக்கு கை கொடுப்போம் + +உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வைர நெஞ்சம் + +வைர நெஞ்சம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வாழ்ந்து காட்டுகிறேன் + +வாழ்ந்து காட்டுகிறேன் (Vaazhnthu Kaattugiren) கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை மகேந்திரன் எழுதியுள்ளார். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஆர். முத்துராமன், சுஜாதா, இவர்கள் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் பத்மபிரியா, ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), எம். என். ராஜம், மனோரமா, மற்றும் சுருளி ராஜன் போன்றோர் உடன் நடித்திருந்தனர். +ஆர். முத்துராமன் - ராமநாதன்
+சுஜாதா -கீதா
+பத்மபிரியா -பங்கஜம்
+ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) - பாஸ்கர் அல்லது சுப்பாராவ்
+எம். என். ராஜம் - ராமநாதன் தாயார்
+மனோரமா - டோலக் சுந்தரி
+எம். பானுமதி - லட்சுமி
+சுருளி ராஜன் - குமரப்பா
+ராதிகா - வனஜா
+விஜயசந்திரிகா - ராணி
+எஸ். ராமாராவ் - ( சிறப்புத் தோற்றம்)
+ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - சந்தானம்
+சிவகங்கை சேதுராமன் - பாலாஜி
+என்னத்த கன்னையா - சண்முகம் + +கலை: மோகனா
+ஸ்டில்ஸ்: வேலாசாமி
+வடிவமைப்பு: கே. மனோகர்
+விளம்பரம்: எலிகன்ட்
+படக்கலவை: ஆர். எம். சூர்யா பிரகாஷ் விஜயா லேபராட்டரிக்காக
+தலைப்புகள்: ஜெயராம்
+பிராப்பர்டிஸ்: நியோ பிலிமோ கிரப்ட்ஸ்
+வெளிப்புறப் படப்பிடிப்பு: துர்கா வெளிப்புறப் படப்பிடிப்பு அலகு
+ஒலிப்பதிவு (வசனம்): பி. கோபாலகிருஷ்ணன்
+ஒலிப்பதிவு (பாடல்கள்): வி. சிவராம்
+ரீ- ரெக்கார்டிங் - வி. சிவராம்
+நடனம்: மதுரை கே. ராமு
+சண்டை: ஆம்பூர் ஆர். எஸ். பாபு + +இப்படத்திற்கு இசையமைப்பாளார் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.. இப்படத்தின் பாடல்களை பின்னணி பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர். + + +
+ +யாருக்கு மாப்பிள்ளை யாரோ + +யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +யாருக்கும் வெட்கமில்லை (திரைப்படம்) + +யாருக்கும் வெட்கமில்லை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஏழைக்கும் காலம் வரும் + +ஏழைக்கும் காலம் வரும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆசை 60 நாள் + +ஆசை 60 நாள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அக்கா (திரைப்படம்) + +அக்கா ("Akka") 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா உட்படப் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார். + + + + +அன்னக்கிளி (1976 திரைப்படம்) + +அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்���ில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படம் ஆகும். இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இத்திரைப்படம் கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கருநாடக இசையுடனும் இணைந்து இருந்தது. + + + + +பத்ரகாளி (திரைப்படம்) + +பத்ரகாளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ்ப் புதினம் ஒன்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் இதே பெயரில் தெலுங்கில் 1977 இல் தயாரிக்கப்பட்டது. + +பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார். கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமானநிலயத்துக்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர். + + + + +சித்ரா பௌர்ணமி (திரைப்படம்) + +சித்ரா பௌர்ணமி1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இன்ஸ்பெக்டர் மனைவி + +இன்ஸ்பெக்டர் மனைவி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இதயமலர் + +இதய மலர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இது இவர்களின் கதை + +இது இவர்களின் கதை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. அருணாச்சலம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், அமுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காலங்களில் அவள் வசந்தம் + +காலங்களில் அவள் வசந்தம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரலேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கணவன் மனைவி + +கணவன் மனைவி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கிரஹபிரவேசம் + +கிரஹபிரவேசம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குலகௌரவம் + +குல கௌரவம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேக்கடி சிவராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குமார விஜயம் + +குமார விஜயம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +லலிதா (திரைப்படம்) + +லலிதா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மதன மாளிகை + +மதன மாளிகை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், அல்ஹா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மகராசி வாழ்க + +மகராசி வாழ்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனமார வாழ்த்துங்கள் + +மனமார வாழ்த்துங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்ரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மேயர் மீனாட்சி + +மேயர் மீனாட்சி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மிட்டாய் மம்மி + +மிட்டாய் மம்மி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மன்மத லீலை + +மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஹாலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். +திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளரார் காமுகனான மதன் (கமலகாசன்). இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாயிக்குத் தெரிந்தும் காண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வ���ழ்கிறான் + + + + +மோகம் முப்பது வருஷம் + +மோகம் முப்பது வருஷம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மூன்று முடிச்சு (திரைப்படம்) + +மூன்று முடிச்சு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +முத்தான முத்தல்லவோ + +முத்தான முத்தல்லவோ 1976ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். + + + + +நல்ல பெண்மணி + +நல்ல பெண்மணி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீ இன்றி நானில்லை + +நீ இன்றி நான் இல்லை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீ ஒரு மகாராணி + +நீ ஒரு மகாராணி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீதிக்கு தலைவணங்கு + +நீதிக்கு தலைவணங்கு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நினைப்பது நிறைவேறும் + +நினைப்பது நிறைவேறும் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. தண்டபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்���டத்தில் விஜயகுமார், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஓ மஞ்சு + +ஓ மஞ்சு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேகர், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஊருக்கு உழைப்பவன் + +ஊருக்கு உழைப்பவன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒரே தந்தை + +ஒரே தந்தை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஒரு கொடியில் இரு மலர்கள் + +ஒரு கொடியில் இரு மலர்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது + +ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதன் கதை புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்டது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாலூட்டி வளர்த்த கிளி + +பாலூட்டி வளர்த்தகிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பணக்கார பெண் + +பணக்கார பெண் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பயணம் (திரைப்படம்) + +பயணம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும பலரும் நடித்துள்ளனர். + + + + +பேரும் புகழும் + +பேரும் புகழும் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரோஜாவின் ராஜா + +ரோஜாவின் ராஜா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சந்ததி (திரைப்படம்) + +சந்ததி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கௌசிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சத்யம் (திரைப்படம்) + +சத்யம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தசாவதாரம் (1976 திரைப்படம்) + +தசாவதாரம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாயில்லாக் குழந்தை + +தாயில்லாக் குழந்தை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துணிவே துணை + +துணிவே துணை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உனக்காக நான் + +உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உணர்ச்சிகள் (திரைப்படம்) + +உணர்ச்சிகள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், எல். காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +உங்களில் ஒருத்தி + +உங்களில் ஒருத்தி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உண்மையே உன் விலையென்ன + +உண்மையே உன் விலை என்ன 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உறவாடும் நெஞ்சம் + +உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உத்தமன் + +உத்தமன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உழைக்கும் கரங்கள் + +உழைக்கும் கரங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வாங்க சம்மந்தி வாங்க + +வாங்க சம்மந்தி வாங்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. பானுமதி ராமகிருஷ்ணா, சந்திரமோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வரப்பிரசாதம் + +வரப்பிரசாதம் 1976 ஆம் ஆண்டு வெளி���ந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வாயில்லா பூச்சி + +வாயில்லா பூச்சி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வாழ்வு என் பக்கம் + +வாழ்வு என் பக்கம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்) + +ஆடு புலி ஆட்டம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆளுக்கொரு ஆசை + +ஆளுக்கொரு ஆசை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆறு புஷ்பங்கள் + +ஆறு புஷ்பங்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆசை மனைவி + +ஆசை மனைவி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்) + +ஆட்டுக்கார அலமேலு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அண��ணன் ஒரு கோயில் + +அண்ணன் ஒரு கோவில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுமித்ரா, சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்று சிந்திய ரத்தம் + +அன்று சிந்திய ரத்தம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்) + +அவன் ஒரு சரித்திரம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தீபம் (திரைப்படம்) + +தீபம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேவியின் திருமணம் + +தேவியின் திருமணம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துர்க்கா தேவி (திரைப்படம்) + +துர்க்கா தேவி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எல்லாம் அவளே + +எல்லாம் அவளே 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. முத்து,சந்திரலேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +என்ன தவம் செய்தேன் + +என்ன தவம் செய்தேன்1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்ற���ம் பலரும் நடித்துள்ளனர். + + + + +எதற்கும் துணிந்தவர்கள் + +எதற்கும் துணிந்தவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. எஸ். ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கியாஸ்லைட் மங்கம்மா + +கியாஸ்லைட் மங்கம்மா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காயத்ரி (திரைப்படம்) + +காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினி காந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இளைய தலைமுறை + +இளைய தலைமுறை1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இன்றுபோல் என்றும் வாழ்க + +இன்று போல் என்றும் வாழ்க 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காலமடி காலம் + +காலமடி காலம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கவிக்குயில் + +கவிக்குயில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாமியார் வீடு + +மாமியார் வீடு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்��ிரைப்படத்தில் ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மதுரகீதம் + +மதுர கீதம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மழை மேகம் + +மழை மேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மீனவ நண்பன் + +மீனவ நண்பன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +முன்னூறு நாள் + +முன்னூறு நாள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். தேவதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +முருகன் அடிமை + +முருகன் அடிமை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நல்லதுக்கு காலமில்லை + +நல்லதுக்கு காலமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நாம் பிறந்த மண் + +நாம் பிறந்த மண் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வின்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நந்தா என் நிலா + +நந்தா என் நிலா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற���றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீ வாழவேண்டும் + +நீ வாழ வேண்டும் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஒளிமயமான எதிர்காலம் + +ஒளி மயமான எதிர்காலம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஓடிவிளையாடு பாப்பா (திரைப்படம்) + +ஓடி விளையாடு பாப்பா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒருவனுக்கு ஒருத்தி + +ஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாலாபிஷேகம் (திரைப்படம்) + +பாலாபிஷேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பலப்பரீட்சை + +பலப்பரீட்சை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பட்டினப்பிரவேசம் + +பட்டினப்பிரவேசம் (Pattina Pravesam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலம் மீரா, டெல்லி கணேஷ், ஸ்வர்ணா, சரத் பாபு, ஜெயஸ்ரீ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். + +கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தில் விதவையான தாய், தனது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறாள். அவர்கள் அனைவரும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருகின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரும் நகர வாழ்க்கையில் ஈடு கொடுக்க முடியாமல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் அனைவரும் கிராமத்திற்கே சென்றுவிடுகின்றனர். + + டெல்லி கணேஷ் - முருகன்
+ +"பட்டினப் பிரவேசம்" திரைப்படத்தை எழுதி இயக்கியவர் கைலாசம் பாலசந்தர். இது 1977இல் விசு எழுதிய மேடை நாடகத்தின் கதையாகும். பிரேமாலயா பிலிம்ஸின் ஆர். வெங்கட்ராமன் இப் படத்தை தயாரித்துள்ளார். இதில், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன், மற்றும் சரத் பாபு நடித்துள்ளனர். கணேஷ் இப் படத்தின் மூலமான நாடகத்திலும் நடித்துள்ளார். மற்றும் அதே கதா பாத்திரத்தில் திரைப்படத்திலும் நடித்துள்ளார். காத்தாடி ராமமூர்த்தி, 'வெகுளி தண்டபாணியாக' நாடகத்திலும், அதே கதா பாத்திரத்தை திரைப்படத்திலும் நடித்துள்ளார். + +இப் படத்திற்கு இசை அமைத்தவர் ம. சு. விசுவநாதன் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இப் படதில் வரும் " வான் நிலா நிலா" என்னும் பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. +"பட்டினப் பிரவேசம்" செப்லம்பர் 9, 1977இல் வெளியிடப்பட்டது. "ஆனந்த விகடன்" பத்திரிகை இப்படத்திற்கு 100க்கு 52 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. + + + +
+ +பெண் ஜென்மம் + +பெண் ஜென்மம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பெண்ணை சொல்லி குற்றமில்லை + +பெண்ணை சொல்லி குற்றமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பெருமைக்குரியவன் + +பெருமைக்குரியவன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புனித அந்தோனியார் (திரைப்படம்) + +புனித அந்தோனியார் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாஞ்சில் துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புண்ணியம் செய்தவர் + +புண்ணியம் செய்தவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரகுபதி ராகவன் ராஜாராம் + +ரகுபதி ராகவன் ராஜாராம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +வாலி எழுதிய பாடல்கள்.. + + + + + +அழியாத கோலங்கள் + +அழியாத கோலங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +ராசி நல்ல ராசி + +ராசி நல்ல ராசி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விதுபாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரௌடி ராக்கம்மா + +ரௌடி ராக்கம்மா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு + +சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொன்னதைச் செய்வேன் + +சொன்னதைச் செய்வேன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில�� வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொந்தமடி நீ எனக்கு + +சொந்தமடி நீ எனக்கு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொர்க்கம் நரகம் + +சொர்க்கம் நரகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஸ்ரீ கிருஷ்ணலீலா + +ஸ்ரீ கிருஷ்ணலீலா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாலியா சலங்கையா + +தாலியா சலங்கையா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தனிக் குடித்தனம் + +தனிக்குடித்தனம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தூண்டில் மீன் + +தூண்டில் மீன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துணையிருப்பாள் மீனாட்சி + +துணையிருப்பாள் மீனாட்சி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உன்னை சுற்றும் உலகம் + +உன்னை சுற்றும் உலகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ���ுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்கமல்ஹாசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உயர்ந்தவர்கள் + +உயர்ந்தவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அச்சாணி (திரைப்படம்) + +அச்சாணி () 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +அக்னி பிரவேசம் (திரைப்படம்) + +அக்னி பிரவேசம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அல்லி தர்பார் + +அல்லி தர்பார் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆனந்த பைரவி + +ஆனந்த பைரவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ வித்யா நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அன்னலட்சுமி (திரைப்படம்) + +அன்னலட்சுமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுவர்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அன்னபூரணி (திரைப்படம்) + +அன்னபூரணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அந்தமான் காதலி + +அந்தமான் காதலி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அதை விட ரகசியம் + +அதை விட ரகசியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருபா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அதிர்ஷ்டக்காரன் + +அதிர்ஷ்டக்காரன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேணுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவள் அப்படித்தான் + +அவள் அப்படித்தான் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். + +=சிறு குறிப்பு= +சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது + +=கதைக் குறிப்பு= +ஆவணப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அருண் (கமலஹாசன்) என்னும் இளைஞன், விளம்பர நிறுவனம் நடத்துகிற தனது நண்பன் (ரஜினிகாந்த்) அலுவலகத்தில் பணியாற்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். உலகில் பெண்களின் இருப்பைப் பற்றியதான, "முழு வானில் பாதி' என்று தான் பெயரிட்ட அந்த ஆவணப்படத்திற்கு உதவியாகப் பணி புரியுமாறு வேண்டுகையில், மஞ்சு தயக்கத்துடன் சம்மதிக்கிறாள். + +இருவருக்கும் இடையிலான சந்திப்புகளில் அருண் மெள்ள மெள்ள, துவக்கத்தில் ஆணவம் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் மஞ்சு, வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த தொடர் தோல்விகளின் காரணமாக, வாழ்க்கையின் மீதும், மனிதர்களின் மீதும் நம்பிக்கையற்றுப் போயிருப்பதை உணர்கிறான். அவளுக்கு நம்பிக்கை அளித்து தானே மணக்க விரும்பும் அருணின் முயற்சி தோல்வியடையவும், அவன் தனது தந்தை தனக்காகப் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறான். அச்சமயமே அவன் மீது தனக்குள்ள காதலை உணரும் மஞ்சு, ""மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்"." + +=வெளியீடும் விமர்சனங்களும்= + +கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக நிலைபெறத் துவங்கியிருந்தபோது, வண்ணப்படங்கள் மிகுந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருகையில், கருப்பு வெள்ளைப் படமாக இது 1978ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. இதன் நெகிழ்வற்ற திரைக்கதை அமைப்பினாலும், உத்திகளும், குறியீடுகளும் நிறைந்த இயக்க முறைமையினாலும் வர்த்தக ரீதியாக (நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும்) தோல்வியுற்றது. மேலும், அச்சமயம் வெளிவந்த கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் மற்றும் ரஜினிகாந்தின் தப்புத் தாளங்கள் ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது. + +வெகுஜன ரசிகர்கள் முதல் பார்வையில் நிராகரித்து விட்டபோதிலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் இதனை வெகுவாகப் பாராட்டினார். சிகப்பு ரோஜாக்களின் இயக்குனரான பாரதிராஜா, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதனாலேயே இது போன்ற படத்தைத் தம்மால் இயக்க இயலவில்லை என மனம் திறந்து குமுதம் பத்திரிகையில் பாரட்டியிருந்தார். + +ஆயினும், இதற்கென ஒரு ரசிகர் குழாம் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் பல திரையரங்குகளில் இது மீண்டும் மீண்டும் காலைக் காட்சிகளாக வெளியானது. + +=படத்தின் சிறப்பம்சங்கள்= + +மஞ்சு என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, செயற்கையான திருப்பங்கள் ஏதுமின்றி இயல்பாக அமைந்திருந்த திரைக்கதையும், அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஸ்ரீபிரியாவின் நடிப்பும் குறிப்பான சிறப்புக்கள். + +கதாநாயகர்களாக நிலைபெற்று இருப்பினும், கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே படத்தின் மற்றும் தங்களது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, எந்த ஒரு நிலையிலும் தங்களது ஆதிக்கம் வெளிப்படாதவாறு இயக்குனரின் நடிகர்களாக, தமது பங்கீட்டை வழங்கியிருந்தனர். + +தனது கடந்த கால ஏமாற்றம் ஒன்றை விவரிக்கையில் ஆவேசம் (hysteria) மிகுந்து வெளிப்படும் காட்சியில் ஸ்ரீபிரியாவின் நடிப்பாற்றலும், அக்காட்சியமைப்பினைத் தாங்கும் வண்ணம் கமலஹாசனின் இயல்பான நடிப்பும் பாராட்டைப் பெற்றன. + +இசையினை இளையராஜா வழங்கியிருந்தார். முதன்மையாக பியானோ இசையில் உருவாக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பாடிய "உறவுகள் தொடர்கதை" என்னும் பாடல் பிரபலம். எஸ்.ஜானகி "வாழ்க்கை ஓடம் செல்ல" (பந்துவராளி என்னும் ராகத்தின் அடிப்படையில்) எனும் பாடலைப் பாடியிருந்தார். கமலஹாசன் தனது சொந்தக் குரலில் "பன்னீர் புஷ்பங்களே" (ரேவதி இராக அடிப்படையில்) எனும் பாடலைப் பாடியிருந்தார். + + + + +அவள் ஒரு அதிசயம் + +அவள் ஒரு அதிசயம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவள் ஒரு பச்சைக் குழந்தை + +அவள் ஒரு பச்சைக் குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், பவானி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவள் தந்த உறவு + +அவள் தந்த உறவு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சாரதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஆயிரம் ஜென்மங்கள் + +ஆயிரம் ஜென்மங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பைரவி (திரைப்படம்) + +பைரவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சிட்டுக்குருவி (திரைப்படம்) + +சிட்டுக்குருவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +என் கேள்விக்கு என்ன பதில் + +என் கேள்விக்கு என்ன பதில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +என்னைப்போல் ஒருவன் + +என்னைப்போல் ஒருவன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.மாதவன், டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா, உஷாநந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கங்கா யமுனா காவேரி + +கங்கா யமுனா காவேரி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஜெனரல் சக்ரவர்த்தி + +ஜெனரல் சக்ரவர்த்தி1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இளையராணி ராஜலட்சுமி + +இளையராணி ராஜலட்சுமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இறைவன் கொடுத்த வரம் + +இறைவன் கொடுத்த வரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரவு பன்னிரண்டு மணி + +இரவு பன்னிரண்டு மணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜசிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இது எப்படி இருக்கு + +இது எப்படி இருக்கு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும�� பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதாவின் அனிதா-இளம்மனைவி என்ற புதினமாகும். + + + + +இவள் ஒரு சீதை + +இவள் ஒரு சீதை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஜஸ்டிஸ் கோபிநாத் + +ஜஸ்டிஸ் கோபிநாத் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கை பிடித்தவன் + +கை பிடித்தவன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காமாட்சியின் கருணை + +காமாட்சியின் கருணை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காஞ்சி காமாட்சி (திரைப்படம்) + +காஞ்சி காமாட்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கண்ணாமூச்சி (திரைப்படம்) + +கண்ணாமூச்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கண்ணன் ஒரு கைக்குழந்தை + +கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கராத்தே கமலா + +கராத்தே கமலா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்பட��ாகும். கே. எஸ். கிரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயமாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காற்றினிலே வரும் கீதம் + +காற்றினிலே வரும் கீதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கருணை உள்ளம் + +கருணை உள்ளம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கவிராஜ காளமேகம் + +கவிராஜ காளமேகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குங்குமம் கதை சொல்கிறது + +குங்குமம் கதை சொல்கிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகுமார், படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மச்சானை பாத்தீங்களா + +மச்சானை பார்த்தீங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் + +மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் ஓடிய படமாக அமைந்தது. + +இ��்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் "புரட்சித்தலைவன்"' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது. + + + + +மக்கள் குரல் + +மக்கள் குரல் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யு. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாங்குடி மைனர் + +மாங்குடி மைனர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனிதரில் இத்தனை நிறங்களா + +மனிதனில் இத்தனை நிறங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +மாரியம்மன் திருவிழா + +மாரியம்மன் திருவிழா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மீனாட்சி குங்குமம் + +மீனாட்சி குங்குமம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மேளதாளங்கள் + +மேளதாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +முடிசூடா மன்னன் + +முடிசூடா மன்னன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நிழல் நிஜமாகிறது + +நிழல் நிஜமாகிறது 1978 ஆம் ஆண்டு வெ��ிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரத்பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் + +ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒரு வீடு ஒரு உலகம் + +ஒரு வீடு ஒரு உலகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +2 கொரிந்தியர் (நூல்) + +2 கொரிந்தியர் அல்லது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் ("Second Letter [Epistle] to the Corinthians") +என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஏழாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் B' Epistole pros Korinthious (B' Επιστολή προς Κορινθίους ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Corinthios எனவும் உள்ளது . இம்மடலைத் தூய பவுல் கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து . + +கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் திருத்தூதர் பவுலின் தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது திருத்தூதர் பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது. + +திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை எழுதிய பின் கொரிந்திலிருந்த போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர். நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர். அவர் தற்பெருமை மிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர். + +திருத்தூதர் பவுல் தம் உடன்பணியாளரான தீத்துவைக் கொரிந்துக்கு அனுப்பி இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பணித்தார். தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம் மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார். குறிப்பாக, 1 கொரி 5இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம் மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே, மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப் பணியின் அதிகாரத்தை ஏற்காதோரை அதை ஏற்கச் செய்யும் நோக்குடனும் அவர் இம்மடலை எழுதினார். + +இம்மடல் கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். + +இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை சிலர் இன்னும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர். + +மற்றும் சிலர் 1 முதல் 9 வரையிலான அதிகாரங்களை ஒரு மடலாகவும், 10 முதல் 13 வரையிலான மடலை இன்னொரு மடலாகவும் பார்க்கின்றனர். + +இன்னும் சிலர் கருத்துப்படி, இம்மடல் ஐந்து வெவ்வேறு மடல்களின் தொகுப்பு ஆகும். இதைக் கீழ்வருமாறு பகுக்கின்றனர்: + +மேற்கூறியவாறு பகுத்து, அவ்வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் தெளிவும் கிடைக்கிறது. + +இத்திருமுகத்தின் முதற்பகுதியில் திருத்தூதர் பவுல் கொரிந்து திருச்சபையுடன் தமக்கிருந்த உறவை +விவரிக்கிறார். புதிய உடன்படிக்கையே தம் பணிக்கும் கிறிஸ்துவின் பணிக்கும் அடிப்படை என்கிறார். பணியில் வரும் துன்பங்கள் குறித்தும் அப்பணிக்கான நோக்கம் குறித்தும் பேசுகிறார். அந்நோக்கம் கிறிஸ்துவுடன் ஒப்புரவு ஆதல் என்கிறார். தாம் வரும்போது நன்கொடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார். + +இறுதியில், தாம் நிச்சயமாகக் கொரிந்துக்கு வரப்போவதாக வலியுறுத்தித் தாம் உண்மையான திருத்தூதர் என்றும், ஒரு திருத்தூதருக்குரிய தன்மையுடன் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் கூறுகிறார். + +2 கொரிந்தியர் 12:1-6 +
"பெருமை பாராட்டுதல் பயனற்றதே. +
ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் +
ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன். + +
கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். +
அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை +
மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். +
அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். +
கடவுளே அதை அறிவார். +
ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். + +
நான் மீண்டும் சொல்கிறேன்; +
அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். +
கடவுளே அதை அறிவார். +
அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். +
இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். + +
என் வலுவின்மையே எனக்குப் பெருமை. +
அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. +
நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். +
ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட +
உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன். + +
எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு +
பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. +
அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. +
நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. +
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். +
ஆனால் அவர் என்னிடம், +
"என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார். + +
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். +
அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். +
ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் +
இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் +
கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். +
ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்." + + + + +
+ +சைவ தத்துவங்கள் + +சைவ தத்துவங்கள் எண்ணும் எழுத்தும் குறிப்பவை: + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +ம. பொ. சிவஞானம் + +ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் "சிலம்புச் செல்வர்" என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது. + +மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது. + +1945 ஆம் ஆண்டு ம.பொ.சி தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் 1946 ஆம் ஆண்டில் நவம்பர் 21 ஆம் நாள் தமிழ் இளைஞர்கள் அடங்கிய கூட்டமொன்றில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அது பற்றி ம.பொ.சி. தனது தமிழ்முரசு இதழில் + +நவம்பர் மாதம் 21ஆம்தேதி மாலை தமிழ்முரசு காரியாலயத்தில், தமிழரசுக் கோரிக்கையை ஆதரிப்போரின் கூட்டம் ஒன்று கூடியது. நகரின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 70 பேருக்கு மேல் வந்திருந்தனர். திரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலி��� பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக்கூறினார். + +மேலும், பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார். நெடுநேர ஆலோசனைக்குப்பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “ என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார். + +ஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். + +மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. + +பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம. பொ. சி பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்: + +சிலப்பதிகாரத்தின் புகழை முதல் பரப்பிய பெருமை ம. பொ. சியை சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி. எழுதிய நூல்கள்: + + +1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது.ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க,டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது.அடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர். + +வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்: + + +1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். + +ம.பொ.சி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. +இந்நூலை தழுவி பி. ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்: + + +திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி எழுதிய நூல்கள்” + +இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்: + + +இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். + + + + + + + + +அல்லி பெற்ற பிள்ளை + +அல்லி பெற்ற பிள்ளை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன், "வயலின்" மகாதேவன், கவிஞர் அ. மருதகாசி, வி. கே. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாகத் தயாரித்த இத் திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி இயற்றினார். பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், ஜி. ராமநாதன், எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினர். + +தமது சீடரான கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் ஜி. இராமநாதன் பாடிய "எஜமான் பெற்ற செல்வமே" என்ற பாடல் புகழ் பெற்றது. + + + + +அன்புள்ள ரஜினிகாந்த் + +அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அடுத்த வீட்டுப் பெண் + +அடுத்த வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இத்தமிழ்த் திரைப்படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தார். உடன் நடித்தவர் டி. ஆர். ராமச்சந்திரன். நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம். + + + + + + +சகுனி + +சகுனி மகாபாரதக் கதையில் வரும் கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். சகுனியின் தந்தை சுபலன். சகுனியின் மகன் "உல்லூகன்". + +குருச்சேத்திரப் போர்க் களத்தில் சகாதேவனால் சகுனி கொல்லப்பட்டான். + +சகுனியின் சகோதரர்கள் வ்ருஷன், அசலன். + +காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன்தான் சகுனி. காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர பீஷ்மர், ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும்,அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை. +ஆடு மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுகடாவாகியிருக்கும் என்று சோதிடர்கள் கூறியது பீஷ்மர்க்கு அதிக கோபத்தைத்தூண்டியது."என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார்.ஒருகுடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்."ஒருகுடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார்.இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்துதான் மடியவேண்டும். உணவு தரப்படும்போது மகளின் வீட்டிலிருந்து ஓடுவதும்" அதர்மம் என்று சுவலன் அறிந்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். + +வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். கடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார். சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார். சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்தான். + +பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்��த்திலிருந்து அவமானப் பட்டு திரும்பிய துரியோதனன் மனமுடைந்து போயிருந்தான், பொறாமை எனும் தீ அவனுக்குள் பொங்கி வழிந்தது. அவர்களின் நாடு என்னுடையதைவிட செல்வமிக்கது, அவர்களின் செல்வாக்கோ மிகப் பெரியது என்ற தாழ்வான மன அழுத்தத்தில் இருந்தான். துரியோதனனின் மன ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான். அறத்தில் தருமர் உயர்ந்தவராக இருக்கலாம் ஆனால் அவரிடம் கூட ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம் அவரை சூதாட்டத்தற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது. "உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் தாய ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியுடனும் பாண்டவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உனக்கு பிடுங்கித் தருகிறேன், நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் பிச்சைக்காரர்களாகி நிற்பார்கள்". இதற்கு துரியோதனன் இரட்டிப்பு சந்தோசமடைந்தான், ஆனால் தன் மாமன் குரு வம்சத்தையே அழிக்கப் போகிறான் என்பதை உணராத துரியோதனன். + +ஹஸ்தினாபுரத்திலிருந்து சூதாட்டப்போட்டிக்கு அழைப்பு வந்தது,அதை ஏற்காவிட்டால் நன்றாக இருக்காது என்றார் தருமர். சூதாட்ட அழைப்பு வந்தபோது கிருஷ்ணன் துவாரகையில் சிசுபாலனின் சினேகிதர்களான சால்வன் மற்றும் தந்தவக்கிரனுடன் போர்புரிந்து கொண்டுருந்தார். சூதாட்ட நாளன்று கிருஷ்ணனோ,திரௌபதியோ தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று காத்திராமல் சூதாட சென்றார்கள் பாண்டவர்கள். கௌரவர் சார்பில் சகுனியும், பாண்டவர் சார்பில் யுதிஷ்டிரனும் சூதாடினார்கள். துவக்கத்தில் பணயத்தொகை குறைவாக இருந்தது. சகுனி ஒவ்வொருமுறையும் தாயக் கட்டையை உருட்டிவிட்டு பார் நான் வென்றுவிட்டேன் என்பார். இழந்ததை எல்லாம் மீட்க வேண்டும் என்ற யுதிஷ்டிரனின் ஆசையை கிளரிவிட்டு, ஒவ்வொரு தடவையும் "நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்", என்று யுதிஷ்டிரனின் விளையாட்டு வேகத்தைக் கூட்டி ஆட்டம் சூடுபிடித்து வரும் வேளையில் "போதும் நிறுத்துங்கள்" பின் வாங்குவதில் அவமானமில்லை, மதுராவை மீட்கும்போது 17 முறை கிருஷ்ணனும் பின் வாங்கியுள்ளார் என்றனர் பாண்டவர், ஆனால் தருமர் ஏற்க மறுத்துவிட்டார். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுருந்தனர். "இந்த பைத்தியக்கார ஆட்டத்தை நிறுத்துங்கள்" என்றார் விதுரன். திருதராஷ்டிரன் கூடாது, தருமர் ஒரு மன்னன் என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் என்றார். + +தருமர் சூதாட்டத்தில் தனது ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அனைத்தையும் இழந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதினொராவது ஆட்டத்தில் தன் சகோதரர்கள் ஒவ்வொருவராக பணயம் வைக்க தொடங்கினார் முதலில் நகுலன், பின் சகாதேவன், தொடர்ந்து பீமன், வில்வித்தையில் தேர்ந்த அருச்சுனன் என எல்லோரையும் இழந்தார். இறுதியில் தருமர் தன்னையே வைத்து இழந்தார். ஆனால் ஆட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. "திரெளபதியை பணயமாக வைக்கப்போகிறேன்" என்றார், மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்தார்கள் துரியோதனன் புன்னகைத்து பணயத்தை ஏற்றுக்கொண்டார். பதினேழாவது முறையாக சகுனி தாயக்கட்டையை உருட்டினார். "பார் நான்தான் வென்றேன்" என்றார், அனைத்தையும் இழந்து நின்றார் தருமர். துரியோதனன் தம்பி துச்சாதனனை அழைத்து திரௌதியை சூதாட்ட மண்டபத்திற்கு வழுக்கட்டாயமாக இழுத்து வரச்செய்து துகிலுரியச் செய்தான். தொடர்ந்து பாண்டவர்களையும் அவ்வாறே செய்ய துரியோதனன் கட்டளையிட்டான் யாரும் எதுவும் பேசவில்லை, மூத்தவர்கள் பீஷ்மர் உட்பட அனைவரும் அமைதி காத்தனர். + +இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான். + + + + + +இயந்திரம் + +இயந்திரம் () ("Machine") அல்லது எந்திரம் என்பது ஆற்றலைப் பயன்படுத்திப் பயனுள்ள வேலையைச் செய்கின்ற அல்லது செய்ய உதவுகின்ற ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்கும் உள்ளுறுப்புகள் கொண்ட கருவியையே குறிக்கின்றது. எந்திரம் வேதி, வெப்ப. மின் ஆற்றல் வடிவங்களைப் பயன்படுத்துகிறது. வரலாற்றியலாக, எந்திரம் என அழைக்கப்பட இயங்கும் உறுப்புகள் அமைதல் வேண்டும். என்றாலும், மின்னனியல் வளர்ச்சிக்குப் பிறகு, இயங்கு உறுப்புகளற்ற எந்திரங்கள் நடைமுறையில் வ��்துவிட்டன. + +பொதுவாக, வெப்ப ஆற்றலையோ அல்லது ஏதேனும் ஓர் ஆற்றலையோ இயங்கு ஆற்றலாக மாற்றும் கருவி பொறி ("Engine") அல்லது ஓடி ("motor") அல்லது இயக்கி என்று அழைக்கப்படுகிறது. + +தனி எந்திரம் என்பது விசையின் திசையையோ பருமையையோ (அளவையோ) மாற்றும். ஆனால், ஊர்திகள், மின்னனியல் அமைப்புகள், மூலக்கூற்று எந்திரங்கள், கணினிகள், வானொலிகள், தொலைக்காட்சி எனும் காணொலிகள் போன்ற சிக்கலான பலவகை எந்திரங்களும் பல்கிப் பெருகிவிட்டன. + +தன் திறனை வளப்படுத்த மனிதன் முதலில் செய்த கருவி கைக்கோடரியாகும். இது ஆப்பு வடிவில் பளிங்குக் கல்லால் செய்யப்பட்டதுஆப்பு என்பது பக்கவாட்டு விசையையும் இயக்கத்தையும் பணி செய்யும் பொருளில் நெடுக்குவாட்டு விசையாகவும் இயக்கமாகவும் மாற்றும் எளிய தனி எந்திரம் ஆகும். + +"தனி எந்திரம்" எனும் எண்ணக்கரு, முதலில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்க்கிமெடீசின் சிந்தனையில் விளைந்த்தாகும் இவர் நெம்புகோல், கப்பி, திருகு ஆகிய தனிஎந்திரங்கலை ஆய்வு செய்தார். இவை ஆர்க்கிமெடீசு தனி எந்திரங்கள் எனப்படுகின்றன. + +மறுமலர்ச்சிக் கால கட்டத்தில் தனி எந்திரங்களால் செய்ய முடிந்த பயனுள்ள வேலை குறித்த ஆய்வுகள் தொடங்கின. இந்த ஆய்வால் இயக்கவியல்/எந்திர வேலை எனும் புதிய எண்ணக்கரு உருவாகியது. சைமன் சுட்டெவின் எனும் பொறியாளர் சாய்தளத்தின் எந்திரப் பலனைக் கண்டறிந்து சாய்தளத்தைத் தனி எந்திர வரிசையில் வைத்தார். தனி எந்திரங்களைப் பற்றிய முழுமையான இயக்கவியல் கோட்பாட்டை கி.பி 1600 இல் தனது "இயக்கவியலைப் பற்றி" எனும் நூலில் இத்தாலிய அறிவியலாளராகிய கலீலியோ கலிலீ உருவாக்கினார்.இவர் தான் முதலில் தனி எந்திரங்கள் ஆற்றலை உருவாக்குவதில்லை எனவும் அவை உருமாற்றம் மட்டுமே செய்கின்றன என்பதை உணர்ந்து தெளிவாக்க் கூறினார். + +எந்திரங்களின் ஊர்தல் சார்ந்த உராய்வின் செவ்வியல் விதிகளை இலியனார்தோ தா வின்சி (1452–1519) கண்டறிந்தார். ஆனால், இவை அவரது குறிப்பேடுகளில் மட்டும் வெளியிடப்படாமல் இருந்தன. இவை குயில்லவுமே அமோந்தோன்சுவால் மீள1699 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைச் சார்லசு அகத்தின் தெ கூலம்பு மேலும் விரிவாக்கினார் (1785). + +எந்திரவியல் எனும் சொல் எந்திரங்கள் எந்திரத் தொகுதிகள் செய்யும் வேலையைக் குறிப்பிட்டது. இத்துறை பெரிதும�� எந்திரக் கருவிகளையும் அறிவியலின் எந்திரவியல் பயன்பாட்டையும் குறித்த புலமாகும். இதன் இணை சொற்களாக தன்னியக்கம், எந்திரமயம் ஆகிய சொற்கள் தொழில்துறையில் வழங்குகின்றன. + +எளிய இயங்கும் அமைப்புகளாக எந்திரங்களைப் பிரிக்கும் எண்ணக்கருவழி ஆர்க்கிமெடீசு நெம்பையும் கப்பியையும் திருகையும் தனி எந்திரமாக வரையறுத்தார். மறுமலர்ச்சிக் காலத்தில் இவற்றோடு சக்கரமும் இருசும், ஆப்பும் சாய்தலமும் சேர்ந்துக் கொண்டன. +குறித்த வேலையை நிகழ்த்தும் எந்த ஏந்தும் எந்திரம் ஆகும். + +பொறி "(engine)" அல்லது ஓடி "(motor)" என்பது ஆற்றலை பயனுள்ள இயக்கமாக மாற்றும் எந்திரமாகும். உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற வெளி எரி பொறி ஆகிய வெப்பப் பொறிகள், எரிபொருளை எரித்து வெப்பத்தை உருவாக்கி அந்த வெப்பத்தால் இயக்கத்தை உருவாக்குகின்றன. மின்னியக்கிகள் மின்னாற்றலை எந்திர இயக்கமாக மாற்றுகின்றன. வளிம இயக்கிகள் அமுக்கக் காற்றைப் பயன்படுத்தி இயக்கத்தை உருவாக்குகின்றன. சுருள்வில் பொம்மைகள் மீட்சித் தகைவாற்றலைப் பயன்படுத்தி இயக்கத்தை உருவாக்குகின்றன. உயிரியல் அமைப்புகளில், தசைகளில் அமைந்த மியோசின்கள் போன்ற மூலக்கூற்று ஓடிகள் வேதியியல் ஆற்றல் பயன்பாட்டல் இயக்கத்தை உருவாக்குகின்றன. + +ஒரு தானூர்தியின் பொறி உள் எரி பொறி எனப்படும். ஏனெனில் அது ஒரு உருளையின் உள்ளே எரிபொருளை எரித்து, விரிவடைகின்ற வளிமத்தைப் பயன்படுத்தி உந்துருளை எனும் உலக்கையை இயக்கப் பயன்படுகின்றது. + +மின்னியல் எனும் அடைமொழி மின்சாரம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முன்னொட்டாக வரும். மின்னாக்கம், மின்னியக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் மின்பயன்பாடு ஆகியவை சில மின்சாரம் சார்ந்த செயல்பாடுகளாகும். + +மின்பொறி இயக்க ஆற்றலை மின் ஆற்றலாகவோ (மின்னாக்கி) அல்லது மின் ஆற்றலை இயக்க ஆற்றலாகவோ (மின்னோடி அல்லது மின்னியக்கி) மாற்றும் எந்திரத்துக்கான பெயராகும். இது மாமி மின்னோட்டத்தினை ஒரு மின்னழுத்த மட்டத்தில் இருந்து மற்றொரு மினழுத்த மட்டத்துக்கும் (மின்மாற்றி) மாற்றலாம். + +மின்னனியல் இயற்பியல், பொறியியல், தொழில்நுட்பப் புலமாகும். இப்புலம் செயல்முனைவான மின்னனியல் உறுப்புகள் அமைந்த மின்சுற்றதர்களைப் பற்றி ஆய்கிறது. மின்னனியல் உறுப்புகளாக, வெற்றிட்க் ���ுழல்களோ திரிதடையங்களோ இருமுனையங்களோ ஒருங்கிணைந்த சுற்றதர்களோ அமையலாம். இதில் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பமும் உள்ளடங்கும். மின்ன்னியல் உறுப்புகளின் நேரியல்பற்ற நடத்தையும் மின்னன்களைக் கட்டுபடுத்தும் அவற்றின் திறமையும் மெலிவான குறிகைகளை மிகைப்படுத்த உதவுகின்றன. இந்த இயல்பு தகவல்கைய்யளலிலும் குறிகைக் கையாளலிலும் பயன்படுகிறது. மேலும், மின்னனியல் கருவிகள் நிலைமாற்றிகளாகச் செயல்பட வல்லவையாக உள்ளதால் இலக்கவியல் (எண்மவியல்) தகவல் கையாளலிலும் பயன்படுகின்றன. சுற்றதர்ப் பலகைகள், மின்னனியல் தொகுப்பு, தொலைத்தொடர்பு சார்ந்த பலவகை ஏந்து வடிவங்கள் ஆகியவை தொடர்பான இணைப்புத் தொழில்நுட்பங்கள் சுற்றதர் முழுமையை உருவாக்குகின்றன. இந்த அனைத்தும் இடைமிடைந்த உறுப்புகள் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டு அமைப்பாக அமைகின்றன. + +கணினிகள் எண்வடிவில் உள்ள தகவல்கலைக் கையாளும் எந்திரங்கள் ஆகும். சார்லசு பாபேஜ் 1837 இல் மடக்கைகளையும் பிற சார்புகளையும் பட்டியலிட பலவகை எந்திரங்களை வடிவமைத்தார். இவரது வேற்றுமைப் பொறி ஒரு மிகவும் மேம்பாடான எந்திரவகைக் கணிப்பியாகும். இவரது பகுப்பாய்வுப் பொறி நிகழ்காலக் கணினியின் முன்னோடியாகும். ஆனால் இது அவர் காலத்தில் ண்டைமுறையில் உருவாக்கப்படவில்லை. + +நிகழ்காலக் கணினிகள் மின்னனியலானவை. இவை தகவலைக் கையாள, மின்னூட்டம், மின்னோட்டம், காந்தமாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. கணினி வடிவமைப்பியல் கணினிகளின் விரிவான கருப்பொருளாக கொண்டுள்ளது. வரம்புநிலை எந்திரம், டூரிங் எந்திரம் போன்ற எளிய கணினிப் படிமங்களும் உள்ளன. + + + + + + + +உராய்வு + +உராய்வு விசை என்பது இரு திடபொருள் அடுக்குகள் அல்லது திரவ அடுக்குகள் ஒன்றன்மீதொன்று சறுக்கும்போது ஏற்படும் விசையாகும். உராய்வு விசைகளில் பல வகைகள் உள்ளன: + + +தொடர்பில் இருக்கும் பரப்புகள் ஒன்றுக்கொன்று நகரும்போது, அவ்விரண்டு பரப்புகளுக்கு இடையே, உராய்வு விசை வெப்பம் மூலம் இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு இரு மரத்துண்டுகளை தேய்ப்பதன் மூலம் தீயை உண்டாக்கிவிடலாம். இயக்க ஆற்றல் உராய்வு விசை உள்ள இடங்களில் வெப்பமாக மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தை கிளறும்போது அத்திரவம் வெப்பமடைதலைக் காணலாம். + +உராய்வு விசையே ஒரு அடிப்படை விசை இல்லை. ஆனால் இரண்டு தொடர்பிலுள்ள பரப்புகளில் உள்ள மின்சுமை (charge) கொண்ட துகள்களுக்கு இடையே உள்ள அடிப்படை மின்காந்த சக்தியால் எழுகிறது. இந்த இடையீடுகளின் சிக்கலான தன்மையால் முதலிலிருந்து நியூட்டன் கொள்கைகள் மூலம் உராய்வு விசையை கணக்கீடு செய்வது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியவை மிகக் கடினமாகின்றன. ஆதலால் சோதனைகளின் மூலம் உராய்வு விசை தத்துவத்தை மேம்படுத்த வேண்டி இருக்கிறது. + +உராய்வு விசையின் விதிகள் முதன்முதலில் லியோனார்டோ டா வின்சி (1452-1519) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரது குறிப்பேடுகளில் இவை வெளிப்படுத்தப்படவில்லை. இவைகள் அமோண்டோன்ஸ் என்பவரால் திரும்பக் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்பரப்பு சீரின்மை மற்றும் பரப்புகளை ஒன்றாக அழுத்தும் எடையை எழுப்பத் தேவைப்படும் விசை ஆகியவை மூலமாக அமோண்டோன்ஸ் உராய்வு விசையின் தன்மையை விளக்கினார். பிறகு யூலர் இத்தத்துவத்தை மேம்படுத்தி நிலையான உராய்வு விசை மற்றும் அசைவு உராய்வு விசைகளை நன்கு பிரித்து விளக்கினார். + +உராய்வு விசை பற்றி மேலும் சார்லஸ்-ஆகஸ்டின் டி கூலாம்ப் (1785) ஆராய்ச்சி செய்தார். கூலோம்ப் தொடர்பில் உள்ள பொருட்களின் தன்மை, எவ்வளவு பரப்பளவு தொடர்பில் இருக்கிறது, எவ்வளவு எடை அழுத்தம் இருக்கிறது என்பனவற்றை கண்காணித்து உராய்வு விசை தத்துவத்தை முன்வைத்தார். + +இன்றளவில் உராய்வு விசையால் அணு அளவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஆராய்சிகள் நடக்கின்றன. + +அசைவு உராய்வு விசையின் அடிப்படை பண்புகள் 15இலிருந்து 18ஆம் நூற்றாண்டுகளில் நடத்திய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவை மூன்று சட்டங்களாக தெரிவிக்கப்பட்டது: + +உலர் உராய்வு விசை தொடர்பில் உள்ள இரண்டு திட பரப்புகளின் ஒப்புமை நகர்தலை (relative motion) தடுக்கும் வண்ணம் அமையும். உலர் உராய்வு விசை, நகரும் பரப்புகளுக்கு இடையே வரும் அசைவு உராய்வு விசை மற்றும் நகரா பரப்புகளுக்கு இடையே வரும் நிலையான உராய்வு விசை என மேலும் பிரிக்கப்படும். + +சார்லஸ் ஆகஸ்டின் டி கூலாம்பின் கீழ் பெயரிடப்பட்டுள்ள கூலூம் உராய்வு விசை, உலர் உராய்வு விச��யை கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு தோராயமான மாதிரி. கீழ்வரும் சமன்பாடால் இவ்விசை கணிக்கப்படுகிறது: +இதில் + +கூலாம்ப் உராய்வு விசை சுழியத்திலிருந்து formula_5 வரை எந்த எண்ணை வேண்டுமானாலும் அதன் அளவாக எடுத்துக்கொள்ளலாம். + +எனவே, நிலைமை நிலையில், உராய்வு விசை பரப்புகளுக்கு இடையே நிகழக்கூடிய நகர்தலை தடுக்க போதுமான அளவு விசையையே கொடுக்கும். ஆதலால் இந்த வழக்கில், உராய்வு விசையை சரியாக கணிப்பதற்கு மாறாக அதிகபட்சம் என்ன அளவை உராய்வு விசை எடுக்கும் என்பதை இந்த கூலாம் தோராயம் வழங்குகிறது. + +இதுவே அசைவு உராய்வு விசையெனின் அது எப்பொழுதும் formula_5 என்ற அளவை கொண்டிருக்கும். உராய்வு விசை எப்போதும் இரண்டு பரப்புகளுக்கு இடையே நிகழக்கூடிய ஒப்புமை நகர்தலை தவிர்க்கும் வண்ணம் அமையும். + +செங்குத்து விசையென்பது இரண்டு பரப்புகளை அழுத்தும் விசையாக விவரிக்கப்படுகிறது. அதன் செயல்படும் திசை பரப்புகளுக்கு செங்குத்தாக இருக்கும். மிக எளிமையான நிலையில், ஒரு பொருள் ஒரு பரப்பின் மேல் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசை காரணமாக செங்குத்து விசையை கொண்டிருக்கும். இந்த இடத்தில், உராய்வு விசை , அளவில், பொருளின் எடை, ஈர்ப்பு காரணமாக முடுக்கம், மற்றும் உராய்வு விசை குணகம் (coefficient of friction) ஆகியவற்றின் பெருக்கலாக அமையும். எனினும், உராய்வு விசை குணகம் பொருட்களின் எடையை பொறுத்தோ கொள்ளளவை பொருத்தோ அமையாது. அது இரு பொருட்களும் யாவை என்பதை மட்டுமே பொருத்து அமையும். உதாரணமாக, ஒரு பெரிய அலுமினிய தொகுதி ஒரு சிறிய அலுமினிய தொகுதியின் உராய்வு விசை குணகத்தையே கொண்டுள்ளது. எனினும், உராய்வு விசையின் அளவு செங்குத்து விசையை சார்ந்து அமையுமாதலால் பொருளின் எடையை மறைமுகமாக சார்ந்து அமையும். + +ஒரு பொருள் ஒரு மட்டமான பரப்பில் இருக்கும்போது மேலும் அதன் மீது செயல்படும் விசை செங்குத்து உறுப்பு எதுவும் கொண்டிருக்காதபோது அதன் மீது செயல்படும் செங்குத்து விசையானது அதன் எடையாகவே அமையும். மாறாக ஒரு பொருள் ஒரு சாய்தளத்தில் இருக்கும்போது அதன்மீது செயல்படும் செங்குத்து விசை அதன் எடையை விட குறைவாக இருக்கும். ஏனெனில் எடையை விட குறைவான விசையே தளத்திற்கு செங்குத்தாக செயல்படுகிறது. எனவே, இது போன்ற நிலைகளில் செங்குத்து விசை திசையன் பகுப்பாய்வு மூலம் கணிக்கப்படுகிறது. நிலைமையை பொறுத்து, செங்குத்து விசை கணக்கீடு ஈர்ப்பு தவிர வேறு விசைகளை கணக்கில் கொள்ளக்கூடும். + +பெரும்பாலும் கிரேக்க எழுத்து μவால் குறிக்கப்படும் உராய்வு விசை குணகம் (COF), இரண்டு உடல்கள் மற்றும் அவற்றை ஒன்றாக அழுத்தும் விசை ஆகியவற்றின் விகிதத்தை விவரிக்கும் பரிமாணமற்ற ஸ்கேலார் மதிப்பு ஆகும். உராய்வு விசை குணகம் பயன்படுத்தப்படும் பொருட்கள் இரண்டையும் சார்ந்துள்ளது; உதாரணத்திற்கு இரும்பு மற்றும் பனி ஆகியவை குறைந்த உராய்வு விசை குணகத்தை கொண்டுள்ளன. அதே நேரத்தில் ரப்பர் மற்றும் சிமெண்ட் தரை ஆகியவை உராய்வு விசை குணகத்தை உயர்வாக கொண்டுள்ளன. பூஜ்ஜியத்திற்கு அருகில் என்பதில் இருந்து ஒன்றை விட அதிகம் என்பது வரை உராய்வு விசை குணகத்தின் மதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நல்ல சூழ்நிலையில், எடுத்துக்காட்டாக, உறுதியான ஒரு டயர் 1.7 என்ற உராய்வு விசை குணகத்தை கான்கிரீட் மீது கொண்டு இருக்கலாம். +ஒன்றுக்கொன்று ஒப்பிடுகையில் ஓய்வில் இருக்கும் பரப்புகளில் நிலையான உராய்வு விசை குணகம். இது பொதுவாக அதன் அசைவு உராய்வு விசை குணகம் எதிர்வை காட்டிலும் பெரியது. + +ஒப்பிடுகையில் இயக்கத்தில் உள்ள பரப்புகளில் formula_7 இதில் formula_8 அசைவு உராய்வு விசை குணகம். கூலாம் உராய்வு விசை formula_5 என்பதனற்கு சமமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பரப்பிலும் செயல்படும் உராய்வு விசை மற்ற பரப்பிற்கு ஒப்பிடுகையில் உராய்வு விசை இல்லையெனில் இதன் இயக்கம் என்னவாக இருந்திருக்குமோ அதனை எதிர்க்கும் வகையில் அமையும். + +உராய்வு விசை குணகம் என்பது ஆர்தர்-ஜூல்ஸ் மோறன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உராய்வு விசை குணகம் ஒரு அனுபவ அளவீடு ஆகும். அதாவது சோதனைகள் நடத்துவதன் மூலமே இந்த உராய்வு விசை குணகத்தை கண்டறிய முடியும். பொதுவாக நிலையான உராய்வு விசை குணகம் , அசைவு உராய்வு விசை குணகத்தை விட சற்று அதிகமாக இருக்கும். டெப்ளான் மற்றும் டெஃப்ளான் போன்ற சில இணைகளுக்கு இவை இரண்டும் சமமாகக்கூட இருக்கும். + +அநேகமான பொருட்கள் 0.3 மற்றும் 0.6 என்பதற்கு இடையே தங்களுக்கான உராய்வு விசை குணக மதிப்பை கொண்டிருக்கும். இந்த வரையறைக்கு வெளியே உராய்வு விசை குணகத்தின் மதிப்பு போவது மிக அரியதாகும். ஆனால் டெஃப்ளான், எடுத்துக்காட்டாக, 0.04 என்றளவில் கு��ைந்த உராய்வு விசை குணகத்தை கொண்டிருக்க முடியும். உராய்வு விசை குணகத்தின் மதிப்பு சுழியம் என்றால் உராய்வு விசையே இல்லை என்றாகிவிடும். ஆனால் காந்த இலகுமம் கொண்ட வாகனங்கள் கூட காற்றினால் இழுவை கொண்டுள்ளன என்பதை காண்க. மற்ற பரப்புகளில் தொடர்புகொள்ளும்போது ரப்பர் 1-2 வரையறையில் உராய்வு விசை குணக மதிப்புகளை பெறலாம். இயற்பியலில் ஒரு வழக்கமாக μ எப்போதும் <1 என்று பராமரிக்கப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. மிக பொருத்தமான பயன்பாடுகளில் பெரும்பாலும் μ <1 என்ற கூற்று உண்மையே. μவின் மதிப்பு 1க்கு மேலே என்பது ஒரு பொருள் சரிய அதன் மீது செயல்படும் செங்குத்து விசையை விட அதிக விசை அளிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். எடுத்துக்காட்டாக, சிலிகான் ரப்பர் அல்லது அக்ரிலிக் ரப்பர்-பூசிய பரப்புகளில் 1ஐ விட கணிசமான அளவிற்கு உராய்வு விசை குணகத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும். + +உராய்வு விசை குணகம் ஒரு "பொருள் சார்ந்த பண்பு " என்றபோதிலும் வெப்பநிலை, சுற்றுப்புற தட்பவெப்பநிலை முதலியன சார்ந்தும் மாறுபடும். + +ஒரு AlMgB-TiB கலப்பு, தோராயமாக 0.02 என்ற உராய்வு விசை குணகத்தை கொண்டுள்ளது. இது நீர்-கிளைகோல் சார்ந்த லூப்ரிகண்டுகள் இருக்கும்போதாகும். சாதாரண உலர் நிலைகளில் 0.04 முதல் 0.05 வரை உராய்வு விசை குணகத்தை இது கொண்டிருக்கும். + +சில பயன்பாடுகளில் இரு பொருட்களில் ஒன்று சரியத்தொடங்கும் அதிகபட்ச கோணம் அடிப்படையில் நிலையான உராய்வு விசையை விவரிப்பது நன்றாக இருக்கும். இந்த கோணம்தான் உராய்வு விசை கோணம் என்று அழைக்கப்படுகிறது. இது எப்படி விவரிக்கப்படும் எனில்: + +இதில் θ என்பது செங்குத்திலிருந்து கணக்கிடப்படும் கோணமாகும். μ என்பது நிலையான உராய்வு விசை குணகமாகும். இந்த சூத்திரம் மூலம் கோணத்தை சோதனை அளவீடுகளில் இருந்து கணக்கிட்டு μவை கண்டுபிடிக்க உதவும். + +கூலாம்பின் உராய்வு விசைக்கான தோராயம் + +ஆகிய அனுமானங்கள் வைத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த அனுமானங்கள் ஒரு புறம் இருக்க இது முழுக்க முழுக்க சோதனைகளால் உருவாக்கப்பட்ட ஒரு சூத்திரமாகும். இது ஒரு மிகவும் சிக்கலான இயற்பியல் விளைவின் தோராயமான ஆனால் மிகத்துல்லியமான சூத்திரமாகும். இத்தோராயத்தின் வலிமை இதன் எளிமை மற்றும் பற்செயலாக்கம் ஆகியவை ஆகும். இது அநேக சாதாரண சந்தர்ப்பங்களுக்கு ஒத்துப்போகும் சூத்திரமாகும். + +உலர் உராய்வு விசை இல்லாதபோது ஒரு நிலையான நடத்தையை காட்டும் இயந்திர அமைப்புகளில் நிலையற்ற தன்மை பல வகையில் உராய்வு விசையால் தூண்டிவிடப்படலாம். உதாரணமாக, உராய்வு விசை தொடர்புடைய இயக்கவியல் நிலையற்ற தன்மை பிரேக் கீச்சென்று தீர்க்கமாய் சத்தமிடுவது மற்றும் யாழிலிருந்து வரும் இசை ஆகியவற்றிற்கு காரணமாக கருதப்படுகிறது. + +ஆற்றல் அழிவின்மை விதிபடி உராய்வு விசையால் எந்த ஆற்றலும் அழிக்கப்படுவதில்லை. மாறாக அது வேறொரு வகையில் இழக்கப்படுகிறது. ஆற்றல் பிற வடிவங்களில் இருந்து வெப்பமாக மாற்றப்படுகிறது. தரையில் உருளும் ஒரு பந்து நின்றுவிடுவதெதனால் என்றால் அதன் இயக்க ஆற்றல் வெப்பமாக மாற்றப்பட்டு அது இயக்கமற்று போகிறது. வெப்பம் விரைவில் சிதறடிக்கப்படுவதால் அரிஸ்டாட்டில் போன்ற பல பழங்கால தத்துவ மேதைகள் ஒரு இயக்க விசை இல்லையெனில் நகரும் பொருட்கள் ஆற்றல் இழந்துவிடுவன என்று எண்ணினார். + +ஒரு பொருள் ஒரு பரப்பில் தள்ளப்படுகிறபோது, வெப்பமாக மாற்றப்படும் ஆற்றல் பின்வருமாறு: + +இதில் +உராய்வு விசை காரணமாக இழக்கப்படும் வெப்பம் தெர்மோடைனமிக் மீளாத்தன்மைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் + + + + + +சென்னை மாவட்டம் + +சென்னை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் ஆகும். + +178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது. + +சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 426 கிமீ பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் 25.60கிமீ கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை கூவம் மற்றும் அடையார் ஆகும். + +தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். + +தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.. + +தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர். + +இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %) +ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், சமணர்கள் 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது. + +சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டனார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 இல் சென்னையானது பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. +சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் லார்டு பென்டிங் பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த சிங்காரவேலர் பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. + +மாவட்ட ஆட்சியர் அலுவலகம் +சிங்காரவேலர் மாளிகை, +62, ராஜாஜி சாலை, +சென்னை - 600 001. + +விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 122 வருவாய் கிராமங்களும் கொண்டது. மேலும் இம்மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது. + + +சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. + + + + + + + + + +குவாண்டம் இயற்பியல் தலைப்புகள் பட்டியல் + + + + + + +நேரம் + +வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. + +நேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு. மேலும் நேரம் அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயல்பியல் நோக்கு ஆகும். + +இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம் என்பது அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், பல்வேறு நிகழ்வுகளையும் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள். நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைக்க்காலத்தையும் அளந்து கொள்கிறார்கள். பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடுகிறார்கள். மேலும், இக் கருத்துப்படி, நேரம் பாய்ந்து செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக் கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ், இம்மானுவேல் கண்ட் போன்றவர்கள் இக்கருத்தைக் கொண்டிருந்தனர். + +பொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்க பயன்படும் ஒரு அளவை ஆகும். காலத்தை அளக்க நிறைய வழிகள் உள்ளன இதனை அளந்தறிவதற்கு கால அளவியல் என்று பெயர். +அறிவியலில், வெளியுடன், நேரமும் அடிப்படையானது ஆகும். அதாவது, இவை, வேறு அளவுகளால் வரையறுக்கப்படக் கூடியன அல்ல. இவற்றினாலேயே ஏனைய அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால், இவற்றை அளப்பதன்மூலம் மட்டுமே வரையறுக்க முடியும். ஒழுங்காக நடக்கும் நிகழ்வுகளும், குறித்த கால அடிப்படையில் இயங்கும் பொருட்களுமே நெடுங்காலமாக நேரத்தை அளக்கும் அலகுகளின் அடிப்படையாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகள்: + + +பண்டைய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது. நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை மாதங்கள் என்றும், மாதங்களுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள். பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. சூரியக் கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும். அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர். அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர்க் கடிகாரம், மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர். + +எகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அளக்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும். இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள். இக்கருவியே பின் நாளில் சூரியக் கடிகாரமாக வளர்ந்தது. + +பழைய கற்காலத்திலிருந்தே நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகில் உள்ள அனைத்து கலாச்சார மக்களும் நாட்காட்டி பயன்படுத்தியுள்ளனர். நாட்காட்டி பயன்படுத்துவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. + +சந்திர நாட்காட்டியே பழைய நாட்காட்டியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சந்திர நாட்காட்டியில் சிலர் 12 மதங்களையும்(354),சிலர் 13 மாதங்களையும்(384) ஓராண்டாக பின்பற்றி வந்துள்ளனர். யூலியசு சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர். பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார். அந்நாட்காட்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது. + +தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது. + +தற்பொழுது பயன்பாட்டில் உள்ள நொடியின் கால அளவை கணக்கிடும் முறை ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிபடையில் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். அதன்படி ஒரு நொடி என்பது நூற்று முப்பத்து மூன்று அணு எண் கொண்ட ஒரு சீசியம் அணு(இயல்பு நிலையில் சீசியத்தின் வெப்பம் சுழியம் ஆகும்) 9192631770 முறை அதிர்வதற்கு சமமான நேரம் ஆகும். + +அலகு என்பது ஒன்றன் அளவைக் குறிக்கப் பயன்படும் முறை ஆகும். நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன. நிமிடம், மாதம், நாள், வாரம், நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும். + +சர்வதேச முறை அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நொடி ஆகும். நாள், மாதம், ஆண்டு, மில்லி நொடி போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும். நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன. + + +நேரத்தை அளக்கப்பயன்படும் கருவிகளில் +நேரத்தை அளவிடுவதற்கு பலவிதமான அளவிடும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனங்களைப் பற்றிய ஆய்வு கால அளவியல் என்று பரவலாக அறியப்படுகிறது. + +கி.மு. 1500 கி.மு. வரை பயன்படுத்தப்பட்ட ஒரு எகிப்து நாட்டின் சாதனம், டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் போன்றது, அதன் கால்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குறுக்குச்சட்ட உழலையிலிருந்து தோன்றும் நிழலைக்கொண்டு நேரம் கணக்கிடப்பட்டது. +டி-சதுர வளைவரைக்கு ஒத்த வடிவம் கொண்ட சட்டமானது, காலையில் கிழக்கு நண்பகல் வேளையில் சுழற்றி மாலைவேளையில் நிழல் தரும்படியும் வைக்கப் படுகிறது. + +ஒரு சூரிய மணிகாட்டியில் நிழலினாற் பொழுதறிதற்காக நேராக நடப்பெறும் சங்குக் குச்சி எனும் கோல் ஏற்படுத்தும் நிழலை அடிப்படையாகக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு அளவிடக்கூடிய அடையா��ங்கள் வரையறுக்கப்படுகின்றன. நிழலின் நிலை நேர வலயம் எனும் உள்ளூர் நேரத்தை மணி என்னும் அலகில் குறிக்கிறது. எகிப்தியர்கள் ஒரு நாளை சிறிய பகுதிகளாக பிரிக்க திட்டமிட்டு இரட்ட எண்முறையை அவர்களின் சூரிய மணிகாட்டியில் உருவாக்கினர். + +ஒரு வருடத்தில் சந்திர சுழற்சியின் எண்ணிக்கை மற்றும் இரவு நேரத்தில் நேரத்தைக் கழிக்கப் பயன்படுத்தப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 12 எனும் இலக்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. + +பண்டைய வரலாற்றுப்படி பூர்வ உலகின் மிக துல்லியமான காலவரிசை சாதனம், நீர் கடிகாரம் அல்லது நாழிகை வட்டில் எனப்படும் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு நேரம் அறிய உதவும் ஒரு கருவி ஆகும். இதில் ஒன்று அமன்ஹோதெப் I எனப்படும் எகிப்திய பாரோவின் (1525-1504 கி.மு.) கல்லறையில் காணப்பட்டது. இரவில் கூட நேரத்தை அளவிடுவதற்கு அவை பயன்படுத்தப்படலாம். ஆனால் நீரின் ஓட்டத்தை நிரப்புவதற்கும், பராமரிக்கவும் மனித ஆற்றல் வேண்டும். பண்டைக் கிரேக்கர்களும்,சாலடிய நாகரிகத்தினரும் (தென்கிழக்கு மெசொப்பொத்தாமியாவின் மக்களும்) தங்களது வானியல் ஆய்வுகளின் ஒரு முக்கிய பகுதியாக காலக்கெடுவைப் பதிவு செய்துள்ளனர். இடைக்காலத்தில் அரேபிய கண்டுபிடிப்பாளர்களும் பொறியியலாளர்களும் தண்ணீர் கடிகாரத்தைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டனர். + +11 ஆம் நூற்றாண்டில், சீன கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தாமாக இயங்கும் முதல் இயந்திர கடிகாரங்களைக் கண்டுபிடித்தனர். +மணல் ஓட்டத்தைக் கொண்டு நேரத்தை அளவிடுவதற்கு மணற்கடிகாரம் அல்லது மணற்கடிகை எனப்படும் மணல் சொரிந்து காலம் காட்டும் கருவி பயன்படுத்தப்பட்டது. பெர்டினென்ட் மகலன் தன்னுடைய 18 கப்பல்களிலும் கப்பலுக்கு ஒன்றாக மணற்கடிகையைப் பயன்படுத்தி உலகைச் சுற்றினார்(1522). மத்திய காலங்களில், உலகம் முழுவதிலும், பொதுவாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் தூபக் குச்சிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் எரிவதற்கு ஆகும் காலத்தைக்கொண்டு நேரம் அளவிடப்பட்டது. + +ஆங்கில வார்த்தை கடிகாரம் என்பது அநேகமாக மத்திய டச்சு சொல் 'குளோக்' (klocke) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என கருதப்படுகிறது. இது, இடைக்கால லத்தீன் வார்த்தையான 'கிளோகா'விலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்டிக் (Celtic) நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, லத்தீன் மற்றும் ஜேர்மனிய சொற்களால் மணி என்ற பொருளை விளக்கும் சொற்களே நேரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. + +கடலில் பயணநேரமானது, மணிகளால் குறிக்கப்பட்டது.(பார்க்கவும்: கப்பல் மணி). + +கடிகாரங்களில் கைக்கடிகாரம் போன்ற நீண்ட கால கவர்ச்சியான வகைகள் உள்ளன. + +கடிகாரங்களின் பொதுக் கட்டுப்படுத்திகள்: + +முதன்முதலாக கி.மு. 250ல் பூர்வ கிரேக்கத்தில், தண்ணீர் கடிகாரங்களில் கால மணி ஒலிப்பு அறிவிப்பிக் கடிகாரங்கள் ஒரு விசில் ஒலி ஏற்படுத்தும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த உத்தியை பின்னர் லேவி ஹட்சின்ஸ் (Levi Hutchins) மற்றும் சேத் இ தாமஸ் (Seth E. Thomas) ஆகியோர் எந்திரமயமாக்கப்பட்ட கடிகாரங்களில் பயன்படுத்தினர். + + + + + +வகுப்பு + +இத் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன. + + + + + +வர்க்கம் (சமூகவியல்) + +சமூகவியலில் (குமுகாயவியலில்), வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். பழைய காலத்தில் இருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார் . இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும். +வர்க்கம் சமூகப் கட்டமைப்புகளினால் நிர்பந்திக்கப்பட்ட ஒரு நிலை என்ற கருத்துருவே பல இடங்களிலும் இருந்தாலும், பலருக்கு இது ஒரு வாழ்முறை தெரிவாகவும் அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் சொத்துக்களைச் சேர்ப்பதில் (long term capital accumulation) சிலர் அக்கறை காட்டுவதில்லை. மாற்றாக தமது அன்றாட வாழ்வை சிறப்பாக அமைப்பதில் தமது வருமானத்தை செலவு செய்கின்றனர். மொத்த நிலையைக் கணக்கிட்டால் அவர்களுக்கு கடனும் இருக்கலாம். அதற்காக அவர்களை அடிமட்ட மக்கள் என்று வகைப்படுத்துவது தவறு. + + + + +தாமிரபரணி (திரைப்படம்) + +தாமிரபரணி 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபு, நதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது. + +கோபமும் வீரமும் கொண்ட இளைஞனாக வரும் விஷாலை சுற்றி கதை தொடங்குகின்றது. தனது மாமா பிரபுவின் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும உள்ள விஷால் மாமாவை எதிர்த்து யாரேனும் பேசினால் அவர்களிடம் சண்டைக்கு போகின்ற குணமுடையவர். அதே ஊரின் பெரிய மனிதரான விஜயகுமாரின் மகள் நதியா, நதியாவின் அண்ணன் நாசர். இவர்கள் குடும்பத்திற்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஆகாத நிலையில் நதியாவையும் நாசரையும் மாமா பிரபுவிற்காக பலமுறை எதிர்க்கிறார் விஷால். + +இந்நிலையில் நதியாவின் மகளான பானு விஷாலைச் காதலிப்பதாக கூறுகின்றார். இதனை நம்பாத விஷால் எங்கே பானு தன்னை வம்பில் சிக்கவைத்துவிடுவாரோ என்று நினைத்து அவரை விட்டு ஒதுங்குகின்றார். ஒரு கட்டத்தில் பானு விஷாலுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துவிட அதனை தொடர்ந்து இரு குடும்பத்திற்கும் பிரச்சனை வலுக்கின்றது. இந்நிலையில் பானு தன் மாமா பிரபுவின் மகள் என்பதும் தான் விரோதியாக நினைக்கும் நதியா மாமாவின் மனைவி என்பதும் விஷாலிற்குத் தெரியவருகிறது. பிரபு தன் மனைவி நதியாவைப் பிரிந்ததே தனக்காகவும் தன் தாய் ரோகினிக்காகவும் தான் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட விஷால் தன்னால் களங்கப்பட்ட பானுவை எப்படியாவது திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்ததா? இரு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதி கதையாகும். + + + + + + +எல்லாரும் இந்நாட்டு மன்னர் + +எல்லார��ம் இந்நாட்டு மன்னர் 1960-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார். + +காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது - + +"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ +இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே +கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் +காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே" + +இலங்கையரான கவிஞர் ஈழத்து இரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர். + +பாட்டுப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது. + + + + +பாவை விளக்கு (திரைப்படம்) + +பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், மகாகவி பாரதியாரின் "மயங்கியதோர் நிலவினிலே" பாடலைத் தவிர்த்து இதர அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார். + + + + + +எங்கேயோ கேட்ட குரல் + +பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது. கதை-வசனத்தை அவரே எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார். + +ரஜனிகாந்த், ராதா, அம்பிகா, டெல்லி கணேஷ், கமலா காமேஷ் முதலானோர் நடித்தார்கள். + +பஞ்சாயத்து தலைவர் (டெல்லி கணேஷ்) - அவரது மனைவி (கமலா காமேஷ்) ஆகியோருக்கு பொன்னி)(அம்பிகா), காமட்சி(ராதா) இருவரும் மகள்கள். பொன்னி படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும் தெரியாது. பொன்னி அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்) செல்லப்பிள்ளை. காமாட்சி குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவள். இவர்களுக்கு முறை மாப்பிள்ளை (ரஜினிகாந்த்). விருப்பம் இல்லாமலேயே முறை மாப்பிள்ளையை மணக்கிறார், பொ���்னி. கணவன் அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்" என்பாள். + +பொன்னி கர்ப்பமாவாள். அதைக் கலைக்க முயற்சிப்பார். தாயாரும், கணவனும் தடுத்து விடுவார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார். இந்நிலையில், பொன்னியின் மீது அன்பு செலுத்திய பெரியவரின் மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள். + +"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால், இரு வரும் சேர்ந்து வாழலாம்" என்று பொன்னியிடம் பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும் சலனத்தால், அவருடன் பொன்னி சென்னைக்கு செல்கிறாள். + +அங்கு சென்றதுமே அவள் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறாள். மயக்கம் அடைந்து விழுகிறாள். பிறகு, தீக்குளிக்க முயலுகிறாள். சிறு காயத்துடன் தப்புகிறாள். + +இதற்கிடையே `ஓடிப்போன பொன்னியை கிராமத்தை விட்டு பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. அவள் கணவனின் (ரஜினியின்) துயரத்தைப் போக்க, காமட்சியை (ராதா) அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பொன்னியின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல காமட்சி வளர்க்கிறாள். + +இந்த தகவல், பொன்னியை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத் தெரிகிறது. அதை அவளுக்கு கூறுகிறார். `கிராமத்துக்கு வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித் தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம்" என்று கூறி அனுப்பி வைக்கிறார். + +துறவு வாழ்க்கை + +மனதில் சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத பொன்னி, தன் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறாள். இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய் நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறாள். நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறாள். தாய்ப்பாசத்தால், அவளை பார்க்க வருகிறார்,தாய் (கமலா காமேஷ்) "அம்மா! நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும், உடலில் களங்கப்படாதவள்" என்று கூறி, நடந்ததையெல்லாம் கூறுகிறாள் பொன்னி. +"நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது" என்பார், தாய். "அம்மா! சாவதற்க�� முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்!" என்று தாயிடம் கூறுகிறாள் பொன்னி. + +கடைசி ஆசை + +பொன்னி களங்கமற்றவள் என்பதை அறியும் கணவன் அவளை பார்க்கச் செல்வார். கணவரை பார்த்துக் கதறுவாள் பொன்னி. + +"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு" என்பார் +"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால், எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும். என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என் கடைசி ஆசை" என்று கண்ணீருடன் யாசிப்பாள்.. + +"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்று கூறிவிட்டு நடப்பார், கணவன்.அடுத்த நிமிடமே, அவர் விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு விழுந்து உயிர் துறப்பாள். + +இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து தலைவர் பொன்னியின் அப்பாதான்) + +பொன்னி ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவள் என்பதால், அவள் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும். + +இதை அறியும் கணவன் தன் மனைவியின் உடலை தான் தகனம் செய்யப்போவதாக அறிவிப்பார். + +"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான்" என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார். + +அதையும் மீறி, பொன்னியின் உடலை தன் இரு கைகளாலும் தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு வெளியேறுவார்,கணவன்(ரஜினி). + +காமட்சியும் (ராதா), மகளும் (மீனா) அவருடன் செல்வார்கள். + + + + +திருக்கோவையார் + +திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதை "திருச்சிற்றம்பலக்கோவையார்" என்றும் அழைப்பர். இந்நூலுக்கு பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், "நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு" என்பதால் விளங்கும். + +இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் "பேரின்ப நூல்" ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர். + +"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்"
+"மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை"
+"திருவா சகமும் திருமூலர் சொல்லும்"
+"ஒருவா சகமென் றுணர்." + +திருக்குறள், நால்வேத முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் (மூவர் தமிழும்), முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே (உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றே). + +"ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல்,"
+"வாய்ந்த நற்கோவையாம்" - வச்சநந்திமாலை. + +அஃதாவது, நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம் என்கிறது வச்சநந்திமாலை. + + +திருக்கோவையார் நூல் + + +
+ +த கைட் ரன்னர் + +த கைட் ரன்னர் ("The Kite Runner"): "பட்டம் தேடி ஓடுபவன்" என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்டது ஒரு ஆங்கில நூல். ஆப்கானிய-அமெரிக்கரான "காலித் ஹுசைனி"யால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் இதுவாகும். ரிவர்ஹெட் புக்ஸ் நிறுவனத்தினரால் இந்நூல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. + +காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் இனச் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் எனும் பையனைப் பற்றிய கதையைச் சொல்கிறது இந்நூல். தனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இன வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது + + +கதை அமீரின் பார்வையில் சொல்லப்படுகிறது. அமீர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒரு ஆப்கானியன். 1970-களிலான தன் சிறுவயது ஞாபகங்களை அ���ைபோடுகிறான். + +ஞாபகங்களைச் சொல்லும் போது, போருக்கு முந்திய ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பிக்கிறான். சிறுவயதில் அமீரும் ஹசரா இன வேலைக்காரச் சிறுவனுமான ஹசனும் நாட்களை ஒன்றாகவே கழிக்கின்றனர். அமீரின் விருப்பமான நினைவுகளில் ஒன்றாக அவன் ஒரு மாதுளை மரத்தின் கீழிருந்து ஹசனுக்குக் கதைகளைக் கூறுவது இருக்கிறது. இறந்து போன தாயைப் போலவே அமீருக்கு இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறதைக் கண்டு அவனது தந்தை தன்னைப் போல விளையாட்டு வீரனாக துடிப்புள்ளவனாக அமீரை ஆக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. தனது எழுத்தார்வத்தைத் தொடரும் அமீர் பல சிறுகதைகளை எழுதுகிறான். அவற்றில் தந்தை ஈடுபாடு காட்டாத போதும் தந்தையின் நண்பரான ரகீம்கான் அமீரைப் பாராட்டுகின்றார். + +காபூலில் ஒரு நாள் அமீரும் ஹசனும் சுற்றுகையில் ஆசிவ்வைச் சந்திக்கின்றனர். ஆசிவ் ஹசரா இனத்தவர் மேல் வெறுப்புக் கொண்ட முரட்டுக் குணமுள்ள பையன். அமீரைச் சண்டைக்கு இழுக்கும் ஆசிவ்வை ஹசன் உண்டிவில்லால் அடித்து ஒற்றைக்கண் ஆசிவ் என அறியப்பண்ணுவதாகச் சொல்கிற போது ஆசிவ் பின்வாங்குகிறான். ஆனாலும் மீண்டும் தாம் சந்திப்போம் எனச் சொல்கிறான். ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டான பட்டம் விடும் விளையாட்டு நடக்கையில் ஆசீவ்வின் பயமுறுத்தல் உண்மையாகிறது. + +அமீர் இப்போட்டியில் வெற்றியையும் தந்தையின் பாராட்ம் பெறுகிறான். விருதாகக் கருதப்படும் அமீரின் பட்டத்தைத் தேடிச் செல்லும் ஹசன் ஆசிவ்வையும் அவனது இரு தோழர்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ஹசன் ஆசிவ்விடம் அடிவாங்கி அவனால் வன்புணரப்படுகிறான். இதைக் காணும் அமீர் பயத்தினால் உதவ முன்வராமல் ஒளிந்திருந்து பார்க்கிறான். இதைத் தொடர்ந்து ஹசன் உற்சாமின்றிக் காணப்படுகிறான். ஏனென்று அமீருக்குத் தெரிந்திருந்தாலும் அதை இரகசியமாயே வைத்திருக்கிறான். ரகீம்கானிடமிருந்து ஒரு கதையைக் கேள்விப்படும் அமீர் ஹசன் வெளியேறுவதே நல்லதென்று நினைத்து ஹசன் மேல் களவுக்குற்றம் சுமத்துகிறான். ஹசன் அதனை ஒத்துக் கொண்டாலும் அமீரின் தந்தை ஹசனை மன்னித்து விடுகிறார். ஆனாலும் அவருக்கு மனவருத்தம் தரும் வகையில் அலியும் ஹசனும் வீட்டை விட்டு நீங்குகின்றனர். இது நடந்து கொஞ்ச நாட்களில் ரஷ்யப்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கிறது. அமீரும் தந்தையும் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்கின்றனர். ஒரு சிறு வீட்டில் குடியிருக்கின்றனர். தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்குப் போகிறார். பாவித்த பொருட்களை சந்தையில் கொண்டு விற்பதன் மூலம் மேலதிகமாக ஒரு சிறு வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அங்கே சொராயாவைச் சந்திக்கும் அமீர் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அமீரின் தந்தை நுரையீரற் புற்றுக் காரணமாய் இறக்கிறார். அமீருக்கும் சொராயாவுக்கும் தம்மால் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிய வருகிறது. + +அமீர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளனாகித் தனது முதற் புதினத்தை வெளியிடுகிறான். ரகீம்கானின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவரைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் செல்லும் அமீர், தலிபானால் ஹசனும் அவனது மனைவியும் கொல்லப்பட்டதாயும் ஹசன் தனது தந்தைக்கும் அலியின் மனைவிக்கும் பிறந்தவன் எனவும் அறிகிறான். ஹச்னின் மகனான் சோராபை ஒரு அனாதை இல்லத்திலிருந்து மீட்குமாறு ரகீம்கான் வேண்டுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் தான் ஏமாற்றப்பட்டிருப்பதைக் குறித்துக் கோவம் கொண்டிருந்தாலும் தலிபான் கட்டுப்பாட்டிலிருக்கும் காபூலுக்கு சோராபைத் தேடும் முகமாக அமீர் செல்கிறான். + +தேடுகையில், சோராப் ஒரு தலிபான் அதிகாரிக்கு அடிமையாக விற்கப்பட்டதும் அவ்வதிகார் சோராபை சிறுமியர் போல அலங்கரித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதையும் அறிகிறான் அமீர். அந்தத் த்லிபான் அதிகாரியைச் சந்திக்கும் அமீர், அவன் ஆசிவ் என அறிகிறான். அமீர் தன்னைச் சண்டையில் வென்றால் சோராபை விடுவிப்பதாக ஆசிவ் சொல்கிறான். ஆசிவ் அமீரை படுகாயப்படுத்தினாலும் ஆசிவ்வின் மீதான சோராபின் தாக்குதலால் உயிர் தப்புகிறான். ஆசிவ், கண் தாக்குதலுக்கு உட்பட்டதையடுத்து ஹசன் சிறு வயதில் பயமுறுத்தியது போல ஒற்றைக் கண் ஆசீவ்வாக ஆக்கப்படுகிறான். காவலர்கள் ஆசிவ்வுக்கு உதவுகையில் சோராபும் அமீரும் தப்பிச் செல்கின்றனர். + +சோராபைத் தத்தெடுக்க விரும்பும் அமீர் அதற்கான நடைமுறைகளில் இடர்களை எதிர் கொள்ளும் போது, தான் அமெரிக்கா சென்று தேவையான ஒழுங்குகள் செய்யும் வரை சோராப் ஆப்கானிஸ்தானிலேயே இன்னும் சற்றுக்காலம் இருக்க வேண்டி வரும் என சோராபிடம் சொல்கிறான். தனது முந்தைய அனுபவங்களால் பயந்து போயிருக்கும் சோராப் தற்கொலைக்கு முயற்சிக்கிற போதிலும் தக்க் நேரத்தில் அமீரினால் கண்டெடுக்கப்பட்டு காப்பாற்றப் படுகிறான். சோராபும் அமீரும் அமெரிக்கா செல்கின்றனர். உள்ளத்தள்வில் பாதிக்கபட்டிருக்கும் சோராப் பேச மறுக்கிறான். ஒரு பட்டம் விடும் போட்டியின் போதே சோராபின் இவ்விறுக்கம் தளர ஆரம்பிக்கிறது. ஒரு கடைவாய்ப் புன்னகையை சோராப் சிந்துவாதாயும் அதை முழுமனதோடு அமீர் பெற்றுக் கொள்கிறான். ஹசனின் பட்டம் விடும் தந்திரங்களில் ஒன்றைப் பிரயோகித்து சோராபின் பட்டத்தை வெற்றி பெறச் செய்கிறான் அமீர். + +இக்கதை திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவுற்றது. 2007 நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும். + +இதில் காலித் அப்தல்லா, ஹுமாயூன் எர்ஷாதி மற்றும் அகமத் மஹ்மிட்சதா என்போர் நடித்திருக்கிறார்கள். படத்தில் தமது பாத்திரங்கள் குறித்து ஆப்கானிஸ்தானின் எதிர்விளைவு எப்படியிருக்குமோ எனக் குழந்தை நடிகர்கள் தயக்கமுறுவதாக அறியப்படுகிறது. + + + + + +கோயம்புத்தூர் மாவட்டம் + +கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும். + +பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்ற��� அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள், விஜய நகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. + +கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர். அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. + +1550 களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர். 1700 களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. + +பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. இராட்டிரகூடர்களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் இராஜராஜ சோழன் காலத்தில் சோழர் கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு சாளுக்கியர்களாலும் பின்னர் பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உண்ணாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, டெல்லி சுல்தான் தலையிட்டதனால் இப்பகுதி மதுரை சுல்தானின் கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் விஜய நகரப் பேரரசு கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை மதுரை நாயக்கர்கள் ஆண்டனர். + +1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத���தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. + +அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது. + +கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. + +இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு முதல் நெசவு நூற்பாலை 1888 இல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றது. இது உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும் காரணமாக அமைந்தது. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. + +கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாந���லமான கேரளத்திற்க்கும் புகழ் மிகுந்த உதக மண்டலத்திற்கும் நுழை வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ் பெற்ற மலைத் தண்டவாளம் இங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்துப் போக்குவரத்துக்கள் உள்ளன. + +இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை ஆகியவை உள்ளன. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது. + +கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகளை 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகிறது. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆணைமலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆணைமலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன. + +இம்மாவட்டத்தில் குறிப்பிடதக்க கனிம வள இடங்கள் உள்ளன. கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. + +கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையிலும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல சிறந்து விளங்குகிறது. மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன. + +நெல், சோளம், கம்பு, ராகி, தினை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின��றன. பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யுப்படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். +கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது. + +ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. + +உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் சிறுவாணி ஆறு இருக்கிறது. + +கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 11 வருவாய் வட்டங்களையும், 38 உள்வட்டங்களையும், 295 வருவாய் கிராமங்களையும் கொண்டது. + +கோயம்புத்தூர் மாவட்டம் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 227 கிராம ஊராட்சிகள் மற்றும் 37 பேரூராட்சிகளைக் கொண்டது. + +கோயம்புத்தூர் மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது. + +இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர். + + + + + +எளிய இயந்திரம் + +ஒரு இயந்திரம் ஒரே ஒரு முறை விசையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வேலையைச் செய்யுமானால் அது எளிய இயந்திரம் எனப்படும். + +மரபு சார்ந்த எளிய இயந்திரங்கள் ஆறு. அவையாவன: + + + + + +கோபால்சாமி துரைசாமி நாயுடு + +ஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். + +இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். + +எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர். + +வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். + +இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார். + +சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார். + +அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். + +பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார். + +ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததா��் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார். + +முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. + +தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு. + +முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். + +இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல. + +மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை. + +எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு. + +அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. + +புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. + +நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி ��ேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன. +ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்". +அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ + +மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார். + +நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது. + +எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார். + +அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். + +விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன! + +அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது. + +அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை. + +1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். + +தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். + +அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது. + +இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். + +நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன. + +இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும். + +நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றைப் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர். + +‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார். + +‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா. + +'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன். + +அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பொருட்காட்சி அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. + + + + + + +போக்கிரி (திரைப்படம்) + +போக்கிரி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினைப் பிரபுதேவா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய், அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2005-ல் வெளியான திருப்பாச்சி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தபடம் இவரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் தனது திறமையை வெளிப்படுத்தியது போல வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது மேலும் இப்படத்திற்கு சிறப்பாக அமைந்தது. + +விஜய்யின் பற்றிக் கேள்விப்பட்டு ஊரின் பிரபல தாதாவான வின்சென்ட் அசோகன் விஜயைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவர்களது எதிர் கும்பலான ஆனந்தராஜ் ஆட்கள் விஜய்யுடன் மோத - அடுக்கடுக்காய் அவர்களை கொலை செய்கின்றார். ஒரு கட்டத்தில் வின்சென்ட் கொல்லப்பட - அவரது தலைவரான பிரகாஷ்ராஜ் இந்தியா வருகிறார். வந்தவர் ஆனந்த்ராஜை கொன்றது மட்டுமல்லாது மத்திய மந்திரியையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். இதனை அறியும் போலீஸ் கமிஷனர் நெப்போலியன் பிரகாஷ்ராஜை தந்திரமாகக் கைது செய்கிறார். தங்கள் தலைவனை விடுவிக்க நெப்போலியன் மகளைக் கடத்துகிறது பிரகாஷ்ராஜின் கும்பல். தன் மகளுக்காக பிரகாஷ்ராஜை விடுதலை செய்கின்றார் நெப்போலியன் இதன போது தங்���ள் ஆட்களுக்குள் பொலிஸ் உளவாளி இருப்பதாக பிரகாஷ் ராஜ் அறிந்து கொள்ள கதை முடிவை நோக்கி செல்கின்றது + +இப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார். + + + + + + +இம்மானுவேல் காந்து + +இம்மானுவேல் காந்து ("Immanuel Kant", ஏப்ரல் 22, 1724 – பெப்ரவரி 12, 1804) இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் கிழக்குப் பிரசியாவின், கோனிக்சுபர்கு (இன்றைய உருசியாவிலுள்ள கலினின்கிராடு) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பிய தத்துவவியலாளரான இவர் தற்கால தத்துவவியலின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். மனித மனமானது, மனித அனுபவத்தின் கட்டமைப்பை உருவாக்குகிறது என்று காந்து வாதிட்டார். இக்காரணமே அறநெறிக்கு ஆதாரமாக இருக்கிறது. இது பற்றற்ற தீர்ப்புப் புலத்திலிருந்து அழகுணர்வு தோன்றுகிறது. அந்த இரடவெளி மற்றும் நேரம் நம்முடைய உணர்திறன் வடிவங்கள், மற்றும் உலகம் "அதுவே" என்ற நம் கருத்துகள் சுயாதீனமாக உள்ளது. பழைய நம்பிக்கையான சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகக் கூறும் கோபர்நிக்கசின் புவி மையத் தத்துவத்தை, "கோப்பர்நிக்கன் புரட்சியை" தமக்குள்ளாக காந்து ஏற்படுத்திக் கொண்டார். அவரது நம்பிக்கைகள் சமகால தத்துவத்தில், முக்கியமாக மாய உருத்திரிபு, ஒளிர்வுக் கோட்பாடு, நெறிமுறைகள், அரசியல் கோட்பாடு மற்றும் அழகுணர்ச்சி ஆகியவற்றின் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. + +எமானுவேல் ("Emanuel") என்னும் பெயரில் மதப் புனிதக்குளியல் செய்யப்பட்ட இவர் எபிரேய மொழியைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களின் ஒன்பது பிள்ளைகளில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரசியாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய தந்தையார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜஇடாய்ச்சுலாந்தின் வட கோடியில் அமைந்திருந்த மெமெல் என்னும் இடத்தைச் சேர்ந்தவொரு கைப்பணியாளர். இவரது குடும்பம் கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, கணிதம், அறிவியல் என்பவற்றுக்கும் மேலாக இலத்தீன், சமயக் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது. +காந்து, 1740 ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கோனிசுபர்குப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், இலீபினிசு, வோல்ஃப் ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். பிரித்தானியத் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், நியூட்டனுடைய கணிதம் சார்ந்த இயற்பியலை காந்துக்கு அறிமுகப்படுத்தினார். 1746 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்சுபர்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் ("Thoughts on the True Estimation of Living Forces") 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், 1755 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவியல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காந்து கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார். + +ஞானம் என்றால் என்ன என்பதற்கு, "வெளிப்புற அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் நீயே சுயமாக யோசிக்கவும், செயல்படவும் கற்றுக்கொண்டால் அதுவே ஞானம்" என்று கூறியுள்ளார்.. + +நற்குணங்கள் யாது என்பதற்கு, "அது கடவுள் கொடுத்தது அல்ல. இயற்கையில் வருவதும் அல்ல. உன் நினைப்புதான் அது. எந்த மிருகத்துக்கும் இதுதான். சுய சிந்தனை தான் ஒருவரின் நற்குணங்களை எதிரொளிக்கும் கண்ணாடியாக உள்ளது" என்றார். + +கருத்தியல் ஒருங்கிணைப்பும் ஒருமைப்பாடும், மனதளவில் கருத்துக்கள் அல்லது "புரிந்துகொள்ளுதலில் பிரிவுகள்" ஆகியவை, விண்வெளி மற்றும் நேரத்திற்குள் புலனுணர்வைக் கொண்டிருக்கும் தன்மையின் மீது செயல்படுகின்றன என்கிறார் காந்து. + +காந்தின் அழகியல் பண்புகளைக் குறித்தும் கம்பீரமானவர்களின் உணர்ச்சிகளைக் குறித்தும் அழகு மற்றும் மேன்மைக் குணங்களின் உள்ளார்ந்த தன்மை பற்றியும் விவாதிக்கிறது (1764). அழகியல் கோட்பாட்டிற்கான காந்தின் பங்களிப்பு, தீர்ப்பின் விமர்சனம் 1790 இல் உருவாக்கப்பட்ட��ு. அதில் அவர் "சுவையின் தீர்ப்புகள்" என்ற சாத்தியக்கூறு மற்றும் தர்க்கரீதியான நிலையை ஆராய்கிறார். தீர்ப்பின் விமர்சனத்தின் முதல் முக்கிய பிரிவின் "அழகியல் தீர்ப்பு பற்றிய விமர்சனத்தில்" காந்து "அழகியல்" என்ற சொற்றொடரை பயன்படுத்தினார். காந்து அறிஞர் டபிள்யூ. எச்சு வால்சு, +கூற்றுப்படி இது தற்கால பொருளிலிருந்து வேறுபடுகிறது. இதற்கு முன், தூய நியாயத்தின் விமர்சனத்தில், சுவை, நியாயத் தீர்ப்புகள் மற்றும் அறிவியல் தீர்ப்புகள் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு இடையேயான முதலடிப்படையான வேறுபாடுகளை கண்டறிந்த காந்து, "அழகியல்" என்ற வார்த்தையை "சுவைக்கான விமர்சனத்தைத் தீர்மானித்து" சுவை தீர்ப்புகள் "சட்டங்கள் ஒரு முன்னோடி" மூலம் "இயங்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டார். அழகுநோக்கியல் (Aesthetica) (1750-58) என்ற நூலினை எழுதிய ஏ.சி.பம்கார்டன் காந்தின் தத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தத்துவ அமைப்புக்கு அழகியல் கோட்பாட்டை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் முதல் தத்துவவாதிகளில் ஒருவராக இருந்தார். அவருடைய தத்துவ கருத்துக்கள் முழுவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த கருத்துக்களைப் பயன்படுத்தி இருந்தார். + +மேற்கத்திய சிந்தனை மீது காந்தின் செல்வாக்கு ஆழமாக உள்ளது. குறிப்பிட்ட சிந்தனையாளர்களிடம் தனது செல்வாக்கினை மென்மேலும் தத்துவார்த்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பை காந்து மாற்றியுள்ளார். மேலும் அவர் கருத்தியல் மாற்றத்தினை நிறைவேற்றினார். தற்பொழுது மிகக் குறைந்த தத்துவமானது இப்போது கான்டியன் தத்துவத்திற்கு முந்தைய பாணியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாற்றமானது, தத்துவம் மற்றும் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயங்களில் பொதுவாகத் தோன்றிய பல நெருக்கமான கண்டுபிடிப்புகள் ஆகும் + + + + + + +மெய்யுணர்தல், செயற்கையாக உணர்தல், முன்னம் உள்ளது, உள்ளதை உள்ளபடியாக உணர்தல். பின்னம் உள்ளது, நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல் என்று அறிவியல்பற்றிக் கூறியுள்ளார். + +இம்மானுவேலின் கல்லறை ருஸியாவில் உள்ளது. அவரின் கல்லறை உள்ள பகுதி ருஸியாவால் கைபற்றப்பட்ட பின்னரும் பாதுகாக்கப்படுகின்றது. பல புது மண தம்பதிகளும் இவரின் கல்லறையில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்ற���ர். + +அவரின் சிலை இன்னும் அந்த கல்லறையின் முகப்பை அலங்கரித்து வருகின்றது. + + + + +தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் + +தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் ("Amyotrophic lateral sclerosis" - ALS) என்பது ஒரு நரம்பு தொடர்பான நோய். இந் நோய் இயக்க நரம்பணு நோய் (motor neuron disease), அல்லது லூ கெரிகு நோய் என்றும் அறியப்படுகின்றது. இது குறிப்பாக இச்சைவழி இயங்கு தசைகளான எலும்புத்தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்பணுக்களில் இறப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இது நரம்பணுச்சிதைவு () எனப்படுகின்றது. + +இந்நோயின் அறிகுறிகளாகத் தசையிறுக்கம், தசைத்துடிப்பு என்பன ஏற்படுவதுடன் தசையின் பருமன் குறைந்து செல்வதனால், படிப்படியாக தசைகளில் பலவீனம் அதிகரித்துச் செல்லும். இந்நோயின் தாக்கத்தால் பேசுதல், விழுங்குதல், இறுதியில் மூச்சுவிடல் போன்ற செயற்பாடுகளைச் செய்ய இயலாமல் போகும். + +இதற்கான காரணம் 90 - 95% மானோரில் அறியப்படவில்லை. ஏனையை 5 - 10% மானோருக்குப் பெற்றோரிலிருந்து மரபு வழி இந்நோய் கடத்தப்படுகின்றது. அவ்வாறு கடத்தப்படும் நிகழ்வுகளில் அரவாசியானவை, இதற்குக் காரணமான இரண்டு மரபணுக்களில் ஒன்றால் ஏற்பட்டதாக இருக்கின்றது.. நோய் அறுதியிடலானது, நோய் அறிகுறி, நோய் உணர்குறி (Signs and Symptoms) போன்றவற்றைக் கொண்டும், ஏனைய காரணங்களைப் பொருத்தமற்றவை என்று நீக்கும் சோதனை முறையிலும் செய்யப்படுகின்றது. + +இந்நோய்க்கான நிரந்தரத் தீர்வாக எதுவும் இன்னமும் அறியப்படவில்லை. ரிலுசோல் ( riluzole) எனப்படும் ஒரு மருந்து, வாழ்வுக்காலத்தை 2-3 மாதங்கள் பின்போடுவதற்கு உதவும். மூக்கு வழியாகக் காற்றோட்டம் வழங்குவதன் மூலம் () வாழ்க்கைக் காலத்தை நீடிப்பதுடன், தரத்தையும் முன்னேற்றலாம். + +எந்த வயதிலும் இந்நோய் ஏற்படக் கூடுமாயினும், பொதுவாக 60 வயதிற்கு மேலானவர்களுக்கும், மரபுவழி வருவதாயின் 50 வயதிற்கு மேலானவர்களுக்கும் நோய்த் தாக்கம் ஆரம்பிக்கும். பொதுவாக நோய்வாய்ப்பட்ட ஒருவர், நோய் ஆரம்பித்த காலத்திலிருந்து சராசரியாக இரண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகளே வாழும் வல்லமை கொண்டிருக்கிறார். 10% மானோர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றார்கள். அனேகமானோர் மூச்சியக்கம் நின்றுபோவதனாலேயே இறக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும், இந்நோயால் தாக்கப��படுவோரின் வீதம் அறியப்படவில்லை. ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்க மாநிலத்திலத்திலும் ஒவ்வொரு ஆண்டிலும், 100,000 பேரில் இரண்டு அல்லது மூன்று பேர் இந் நோய்த் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். + +தசையை இயக்கும் நரம்பணுக்கள் படிப்படியாய்க் கெட்டு சிதைவடைவதால் உடலில் உள்ள நம் விருப்பத்தால் இயக்க்கப்படும் தசைகள் எல்லாம் இயக்க இயலாமல் பழுதடைகின்றன. தசைகளை இயக்க நரம்புவழி வரும் உடலியக்கச் செய்திகள் மெல்ல மெல்ல அருகி, கடைசியில் மூளை செய்திகள் அனுப்பும் வல்லமையையே இழந்து விடுகின்றது. ஆனால் இந்நோயினால் நோயுற்றவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் முதலான மூளையின் பிற இயக்கங்களில் கெடுதி (பாதிப்பு) ஏதும் ஏற்படுவதில்லை. உடல் இயக்கம் மிகவும் கெட்டாலும் மூளையின் நினைவாற்றல், அறிவாற்றல், அவர்களின் ஆளுமை இயல்புகள் ஏதும் மாற்றம் அடைவதில்லை. + +இந் நோயின் பெயரில் உள்ள "அமையோட்ரோபிக்" என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறுவதாகும். இது மூன்று சொற்களால் ஆனது : அ + மையோ + ட்ரோபிக் (அ = அல்ல, மையோ = தசை, ட்ரோபிக் = ஊட்டம்) அதாவது "தசை ஊட்டம் பெறாமை" என்பது அதன் பொருள். "லேட்டரல்" என்பது பக்கக் கிளை என்னும் பொருள் தரும். அதாவது தண்டுவடத்தின் பக்கங்களில் கிளைக்கும் நரம்புகள் தசைகளைக் கட்டுப்படுத்தும் பகுதியைக் குறிக்கும். "ஸ்க்லெரோசிஸ்" என்பது இருகிக் கெடுவது என்னும் பொருள் தரும். எனவே இது நரம்பணுக்களின் குறைபாடால் தசைகள் ஊட்டம் பெறாமல் உடல் குறைவுறும் நோய் ஆகும். + +1824 இல் சார்ல்ஸ் பெல் (Charles Bell) என்பவரால் இந் நோய் குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் 1869 இல் ஜீன் மார்ட்டின் சார்கொட் (Jean-Martin Charcot) என்பவரால் இந்த நோயின் உணர்குறிகளுக்கும், நரம்புப் பிரச்சனைகளுக்கும் இடையிலான தொடர்பு முதன் முதலாக விளக்கப்பட்டது. அதன் பின்னர் 1874 இல் அவர் "தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்" (Amyotrophic lateral sclerosis) என்ற பெயரைக் கொடுத்தார். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் தொடர்பில் பரவலாகப் பலரும் அறிந்து கொண்டனர். 1939 இல் அடிபந்தாட்ட வீரரான லூ கெரிகு என்பவர் இந்நோயால் பீடிக்கப்பட்டமையால், ஐக்கிய மெரிக்காவிலும், பின்னர் பிரபல அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங் இந்நோயால் பீடிக்கப்பட்டமையால் உலகளவிலும் பரவலாகப் பலரும் இந்நோய்பற்றி அறிந்து கொண்டனர். 2014 இல் ப��ிக்கட்டி வாளி அறைகூவல் என்னும் ஓர் செயற்பாட்டை பலரும் நிகழ்ப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டதன் மூலம் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வைப் பரவலாக்கினர். + +வெவ்வேறு வழிகளில் இந்த நோய் வகைப்படுத்தப்படுகின்றது. நோய் மெதுவாக வீரியமடைகின்றதா அல்லது விரைவாக வீரியமடைகின்றதா, மரபு வழி வந்ததாதா, அல்லது சரியான காரணம் தெரியாமல் எழுந்தமானமாக வந்ததா, உடலின் எந்தப் பகுதியில் நோய் ஆரம்பிக்கிறது போன்றவற்றை வைத்து வகைப்படுத்தப்படுகின்றது. பொதுவாக (70% மானவை) கைகள் அல்லது கால்களில் இந்நோயின் அறிகுறி அல்லது உணர்குறி தெரிய ஆரம்பிக்கும். இந்த நிலையில் மூளையில் இருக்கும் இயக்க நரம்பணுக்களும், முள்ளந்தண்டு வடத்திலிருக்கும் இயக்க நரம்பணுக்களும் முதலில் இறக்க ஆரம்பிக்கும். 25% மானவர்களில் முகம், வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் நோய் தெரிய ஆரம்பிக்கும். இவை முள்ளந்தண்டு வடத்திலுள்ள நரம்பணுக்களுடன், முகுளம் எனப்படும் மூளைத் தண்டுப் பகுதியில் உள்ள இயக்க நரம்பணுக்களும் முதலில் பாதிப்புக்கு உள்ளாவதனால் ஏற்படும். 5% மானவர்களில் தலை கை, கால்கள் தவிர்ந்த உடற்பகுதியில் ஆரம்பிக்கும். எந்த வகையாக இருந்தாலும், நோயானது ஏனைய பகுதிகளுக்குப் பரவி ஏனைய பகுதிகளையும் பாதிக்கும். சில சமயம் உணர்குறிகள் முள்ளந்தண்டின் ஒரு பகுதியில் மட்டும் வரயறுக்கப்பட்டிருக்கும். + +நரம்பணுக்களின் இறப்பினால் ஏற்படும் இந்தச் சீர்குலைவினால் தசைப் பலவீனம், தசைச் சுருக்கம், தசைத் துடிப்பு என்பன ஏற்படும். சிறுநீர்ப்பை, குடல் போன்றவை தொடர்ந்து தொழிற்பட்டாலும், இந் நோயினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு இச்சைவழி இயங்கு தசைகள் தொடர்பான இயக்கங்களை ஆரம்பிக்கவோ, அல்லது கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்படும். நோயின் இறுதி நிலையை அடையும்வரை கண்ணின் அசைவைக் கட்டுப்படுத்தும் தசைகள் இயங்கிக் கொண்டிருந்தாலும், இறுதி நிலையில், அதுவும் நின்று போகும். + +30 - 50% மானோரில் உய்த்தறியும் ஆற்றல், மற்றும்ம் அவர்களின் நடத்தயில் பிறழ்ச்சி ஏற்படும். நோய்க்குட்படுபவர்களில் அரைவாசியானோரில் இவ்வகையான மாற்றங்கள் சிறிதாக இருப்பதுடன், ஒரு வகையான மறதிநோய் காணப்படும். ஒரே சொற்றொடரை மீண்டும் மீண்டும் சொல்லுதல், ஒரே உடலசைவை மீண்டும் மீண்டும் செய்தல், செயல��களில் அக்கறையின்மை, செயல்களைத் தடுக்க முடியாத நிலைமை போன்றன பொதுவாக இந் நோய்க்கு உட்பட்டவர்களில் காணப்படும். மொழியைப் பயன்படுத்துவதில் சிக்கல், செயற்பாடுகளில் பிறழ்ச்சி, சமூக செயற்பாடுகளில் குழப்பம், சொற்களை நினைவில் கொள்வதில் குறைபாடு போன்றன பொதுவாகக் காணப்படும் நோய் அறிகுறிகளாக இருக்கும் வேளையில், இத்தகைய குறைபாடுகளுக்கும், நோயின் தீவிரத் தன்மைக்கும் ஒரு நேரடித் தொடர்பு அறியப்படவில்லை. ஆனால் இத்தகைய அறிகுறிகளுக்கும், அவர்கள் உயிர் வாழுப் போகும் எஞ்சிய காலத்துக்கும் தொடர்பு இருப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் இருப்பதனால், சமூகத்துடன் இயைந்து செல்ல முடியாமல் போவதனால், நோய் வாய்ப்பட்டவர்களைப் பராமரிப்பவர்களுக்கு மிகக் கடினமாகப் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இந் நோய்க்குள்ளானவர்களில் அரைவாசிப் பேர் மன உணர்வில் நிலையற்ற தன்மையைக் கொண்டு இருப்பதனால், காரணமற்று சிரிக்கவோ, அழவோ செய்வர். + +உணர்வு நரம்புகளும், தன்னிச்சை நரம்பு மண்டலமும் பொதுவாக இந் நோயால் பாதிப்படைவதில்லை. அதாவது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொட்டுணர்வு ஆகியவற்றில் குறைபாடு இருப்பதில்லை. + +இந்த நோயைக் குறித்த விழிப்புணர்வை கூட்டும் பொருட்டு ஆகத்து 14 அன்று பல உயர்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் மீது பனிக்குளிரூட்டிய நீரைக் கொட்டிக் கொண்டு பரப்புரை ஆற்றினர். + + + + +முத்துராமலிங்கத் தேவர் + +முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். + +இவர் ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். + +பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். + +1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். + +பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். + +இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். + +1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார். + +தேவர் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். தேவரைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற இஸ்லாம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். +தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார். தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீரமாக எதிர்த்தார். + +1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார். + +அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார். + +தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார். + +ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது. + +குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார். + +1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது. + +1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராம���ாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார். + +பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை. + +மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர். + +1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் ��லன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார். + +1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார். + +பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார். + +வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை காரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந���திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார். + +மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). + +1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது. + +1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார். + +1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). + +1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது. + +தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். + +தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன. + +இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.  கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவா���ம் ஏற்பட்டது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. + +மறுநாள் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது. + +பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 இல் விடுவிக்கப்பட்டார். + +வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் (INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது. + +பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினா��். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை. + +உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. + +இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர். + +ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. +என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். + +ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை. + +அதே நேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர். + +ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன. + +தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். + +பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. 1995-ம் ஆண்டு மத்திய அரசு தேவரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டது. + +தமிழக முதல்வர் ஜெயலலிதா 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார். + + + + + + +சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி + +சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி ("Chakravarti Rajagopalachari", 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். "சேலத்து மாம்பழம்" என செல்லப் பெயர் கொண்டவர். + +கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார். +ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் "சி ஆர் பார்முலா" என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார். + +ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார். + +1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் "பெர்மிட்-கோட்டா ஆட்சி"க்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. + +1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது + +ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்த�� கண்ணா" இவர் இயற்றிய பாடலே. +1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். + +இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். + +தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.பார்க்க + + + + + + + + +என் தங்கை (1952 திரைப்படம்) + +என் தங்கை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர். ��ம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை படத்தில் அவருக்கு விழியிழந்த தங்கையாக ஈ. வி. சரோஜா நடித்தார். சிவாஜி கணேசன் அப்போது என் தங்கை நாடகத்தில் நடித்து வந்த பாத்திரத்தில் எம்.ஜி.ஆர் திரையில் நடித்தார். + + + + + +சீன சிங்க நடனம் + +சீன சிங்க நடனம் பாரம்பரிய சீன நடனங்களில் ஒன்று. சிங்கத்தின் அசைவுகளை சிங்கம் போன்று உடையணிந்து பாசாங்கு செய்வதே சிங்க நடனம் ஆகும். பொதுவாக இரண்டு பேர் சிங்க நடனத்தை ஆடுவர். ஒருவர் தலையை பிடித்துக்கொண்டு முதல் இரு கால்களுமாக, மற்றவர் உடல் போன்ற போர்வைக்குள் பின் இரு கால்களுமாக சேர்ந்து ஒரு மிருகமாக, சிங்கமாக ஆடுவர். சிங்கத்தின் தலை கண்களையும் வாய்களை திறந்து மூடும்படி செய்யப்பட்டிருக்கும். இசைக்கேற்ப தாளத்துடன் சிங்கம் அங்கும் இங்கும் அசைந்து ஆடும். கால்களின் ஒத்திசைவு, இரு ஆட்டக்காரர்களின் ஒத்தசைவு இங்கு முக்கியம். + + + + +பம்பலப்பிட்டி + +பம்பலப்பிட்டி ("Bambalapitiya") இலங்கையின் தலைநகர் கொழும்பின் ஒரு நகர்ப் பகுதியாகும். கொழும்பு 4 என்ற குறியீட்டுடன் காலி வீதியில் கிட்டத்தட்ட 1.5 கிமீகள் தூரம் இது பரந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் தெற்கே வெள்ளவத்தை, வடக்கே கொள்ளுப்பிட்டி ஆகியவையும் அமைந்துள்ளன. இங்கு தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கு வழிபாட்டுத் தலங்களாக பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில், பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கவிநாயகர் கோயில், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. தமிழ்ப் பாடசாலையாக பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. இது தவிரப் பல ஆங்கில மொழியூடாகக் கற்பிக்கப்படும் சர்வதேசப் பாடசாலையும் அமைந்துள்ளது. + + + + +மாறுகால் மாறுகை + +மாறுகால் மாறுகை வாங்குதல் என்பது தமிழர் மத்தியில் வரலாற்று ரீதியாக புழக்கத்திலுள்ள ஒரு தண்டிக்கும் முறையாகும். + +பழிவாங்கும் முறையாகவும் கூட இது காணப்படுகிறது. + +இடது காலையும் வலது கையையும் அல்லது வலது காலையும் இடது கையையும் கூரிய ஆயுதம் கொண்டு வெட்டி எடுத்தல் என்று இது பொருள்படும். தமிழர் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான அரிவாள் கலாசாரத்தோடு இது இணைத்துப்பார்க்கப்படக்கூடியது. + +ஒருவர் மீது ஏற்படும் பல்வேறு காரணங்களின் பின்னணியாக எழும் அதீதமான கோபத்தின் விளைவாகவே இவ்வாறு மாறுகால் மாறுகை வாங்கப்படுகிறது. இந்த பழிவாங்கல் அல்லது தண்டனை, ஒருவரை முற்றிலுமால செயலிழக்கச்செய்துவிடுகிறது. + + + + +அரிக்கமேடு + +அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது. + +புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள் கடலூர் சாலை வழியாக அரியாங்குப்பம் சென்று அங்கிருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையில் "காக்காயந்தோப்பு" என்னும் சிற்றூருக்குச் செல்லவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது + +அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது. + +1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரேஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச்சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர். + + + + + + + +தென்றலும் புயலும் + +தென்றலும் புயலும் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அவ்வாண்டில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும், அலிமான் படத் தொகுப்பையும் செய்திருந்தனர். + + +இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. அதே ஊரைச் சேர்ந்த ரி. பத்மநாதன் இசையமைத்தார். இவரே நிர்மலா திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள். + + + + + + +மாலன் + +மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் (பிறப்பு: செப்டம்பர் 16, 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். திசைகள் என்ற இணையம் வழி��் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் + +ஆசிரியராகவும் பணியாற்றியவர். + +1950ம் ஆண்டு தமிழ்நாடு, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த மாலன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன இவர், 1970 - 1985 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார். மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர். + +1981ல் 'திசைகள்' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சன்நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஒருங்குறி எழுத்துருவில் அமைந்த முதல் தமிழ் இணைய இதழான 'திசைகள்' இதழின் ஆசிரியர். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார். + +இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டவர். முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். + +இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்திலுள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றம் ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும், + +சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். + +இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலி���ர் பெரி தொகுத்த ஒரு நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய் மொழிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது. + +திசைகள் - திசைகள் முதலில் 1981 ஜனவரியில் அச்சில் வார இதழாக வந்தது. 2003-ல் இணையத்தில் மின் இதழாக வந்தது. அது ஒரு வாசகசாலை. + +www.thisaigal.in + +அக்ஷர - 24 மொழிகளில் ஒரு இணைய இதழ். akshra - Multilingual Online Journal for Indian Writing.இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ். + +சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது 'அக்ஷர'. + +http://www.akshra.org/ + + + + + +அரைஞாண் + +அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறித்தவ ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும் இதை அணியும் பழக்கம் உண்டு. + +அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கங்கள் சார் காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப��படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை "முழு முண்டமாக" இருப்பதாகக் குறிப்பிடுவதையும் காணலாம். + +உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோத்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது. + +தமிழ் நிலப்பகுதிகள் போக இந்தியாவிலும் பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம். அரைஞாண் அணிவது இனம் சார் பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோத்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத்தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது. +ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு. +பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை. +மகாபாரதம் காவியத்தில் திருதராட்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரி தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார்,இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில், துரியோதனன் உடல் வலிமையை காந்தாரி தன் பார்வை சக்தியால் அதிகப்படுத்த துரியோதனனை ஆடையின்றி வருமாறு கூற, அவ்வாறு துரியோதனன் வரும் வழியில் கிருஷ்ணன் குறுக்கிட்டு 'பெற்ற தாயே ஆனாலும் முழு ஆண்மகன் இப்படியா முழு நிர்வாணமாகச் செல்வது எனப் பரிகாசம் செய்து இடையில் சிறு கயிற்றை��் கட்டச்செய்தார், காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலவில்லை, கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான். + + +வில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை "அருணாக்கயிறு", "அர்ணாக்கயிறு" என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். + + + + +தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை + +இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. + +இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர், முஸ்லிம் காங்கிரசின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் ஆவார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக 1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு மே 15 ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது. + +2004ம் ஆண்டு தொடக்கம் வெளிவாரியாகவும் மாணவர்களுக்கு பட்டப்பாடநெறிகளை ஆரம்பித்தது. +கலைமாணி(பொது-வெளிவாரி), +வணிகமாணி(பொது-வெளிவாரி), +வியாபார நிர்வாகமாணி(பொது-வெளிவாரி), + +2011 ன் ஆரம்பத்தில் இருந்து வியாபார முகாமைத்துவத்தில் முதுமானி பட்டத்திற்கான கற்கையினையும் (MBA) ஆரம்பித்துள்ளது. + + + + + +இலங்கை திறந்த பல்கலைக்கழகம் + +இலங்கைத் திறந்த பல்கலைகழகம���னது நாவலை, நுகேகொடை, கொழும்பில் அமைந்துள்ளது. இங்கு உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் தொலைக்கல்வியைத் தொடரவியலும். இது 1978 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகச் சட்டம் மூலம் ஆரம்பிக்கப்பட்டு 1980 கல்விப் பணிகளை ஆரம்பித்தது. + +இது ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்கள் போன்ற அந்தஸ்தை உடையது. இதனூடாக மாணவர்கள் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியை இந்தப் பல்கலைகழகமூடாகத் தொடரவியலும். + + + + + + +நீச்சற் குளம் + +நீச்சற் குளம் என்பது, தொட்டி போன்ற அமைப்புக்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள செயற்கைக் குளம் ஆகும். இது, நீச்சல் தொடர்பான போட்டி, பொழுதுபோக்கு, நீர்ப் பாய்ச்சல் அல்லது வேறு குளியல் தேவைகளுக்குப் பயன்படுகிறது. + +நீச்சற் குளங்கள் தனிப்பட்டவர்களால் தங்கள் சொந்தத் தேவைக்கு அல்லது பலருக்குப் பொதுவாக அமைக்கப்படலாம். சொந்தத் தேவைக்கான நீச்சற் குளங்கள் பொதுவாக தனிப்பட்டவர்களின் வசிப்பிடங்களிலேயே காணப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் தனிப்பட்ட நீச்சற் குளத்தைக் கொண்டிருப்பது ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. பொதுக் குளங்களும் கூட, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பயன்பாட்டுக்காக மட்டும் இருக்கக்கூடும். இத்தகைய குளங்கள், பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள், அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், தங்கு விடுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை தவிர எவரும் பயன்படுத்தக்கூடிய நீச்சற் குளங்களும் உள்ளன. + +நீச்சற் குளங்கள் பல வடிவங்களில் உள்ளன. போட்டிகளுக்குப் பயன்படக்கூடிய நீச்சற் குளங்கள் பெரும்பாலும் செவ்வக வடிவம் கொண்டவை. போட்டிகளுக்கும், போட்டிகளுக்கான பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுவதனால் பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள் போன்ற இடங்களில் காணப்படும் குளங்கள் செவ்வக வடிவம் உள்ளவையாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றின் நீள, அகலங்களும் குறிப்பிட்ட விதிகளுக்கு அமையவே இருப்பது வழக்கம். பொழுது போக்குத் தேவைகளுக்கான குளங்கள் பல வகையான வடிவங்களில் அமைக்கப்படுவது உண்டு. இத்தகைய குளங்களைத் தனியார் வீடுகளிலும், தங்கு விடுதிகளிலும் காண முடியும். இவ்வாறான நீச்சற் குளங்கள் பல இடங்களில் நிலத் தோற்ற வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே அமைவதுண்டு. இதனால் இவை செயற்பாட்டுத் தேவைகளை மட���டுமன்றிச் சூழலை அழகூட்டுவதற்கும் உதவுகின்றன. + +நீச்சற் குளங்கள் கட்டிடங்களுக்கு உள்ளேயோ, வெளியேயோ அமையலாம். பொதுவாக நல்ல காலநிலையைக் கொண்டிராத இடங்களில் நீச்சற் குளங்கள் மூடிய கட்டிடங்களுக்கு உள்ளேயே அமைக்கப்படுகின்றன. தேவை ஏற்படுமிடத்து இக் கட்டிடங்கள் வளிப் பதனம் செய்யப்படுகின்றன அல்லது வெப்பமூட்டப் படுகின்றன. நல்ல காலநிலை உள்ள இடங்களில், சிறப்பாக பொழுதுபோக்குக்கு உரிய குளங்கள் கட்டிடங்களுக்கு வெளியே அழகிய சூழலில் அமைக்கப்படுவதே வழக்கம். + + +