diff --git "a/train/AA_wiki_42.txt" "b/train/AA_wiki_42.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_42.txt" @@ -0,0 +1,3597 @@ + +வளையல் + +வளையல் (இந்தி: சூடி, வங்கம்: சூரி, கன்னடம்: கஜின பலே, தெலுங்கு: காசுலு, மலையாளம்: வளை, நேபாளி: சுரா) என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. + +பெரும்பாலும் இந்தியா மற்றும் வங்க தேசம் போன்ற தென் ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்துப் பெண்களாலும் ஓரளவு ஆண்களாலும் வளையல் அணியப்படுகிறது. மணப்பெண் தன திருமணத்திலும் தொடர்ந்து முதலிரவு சடங்குகளிலும் வளையல்களை அடுக்கிக் கொள்கிறாள். பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதில் முதிர்ந்த பெண்மணி வரை பல விதமான வளையல்களை அணிகின்றனர். சீக்கிய ஆண்கள் தங்கள் மணிக்கட்டில் கடா அல்லது கரா என்ற பெயரில் ஒற்றை வளையலை அணிகின்றனர். சீக்கிய மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு ஒரு மோதிரம், ஒரு கடா அல்லது கரா (இரும்பு அல்லது ஸ்டீலில் செய்யப்பட்டது) மற்றும் மொஹ்ரவையும் அளிக்கிறார். சூடா என்பது பஞ்சாபிப் பெண்களால் திருமணத்தின் பொது சிவப்பு வெள்ளை நிறங்களில் அணியும் வளையல் வகையாகும். மரபுப்படி ஒரு பெண் வளையல்களை வாங்கக் கூடாது. உலகிலேயே மிகுந்த அளவில் வளையல் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் உள்ள மொராதாபாத் என்னும் நகராகும். +முறையான வளையல்கள் ஆபரணமாகவே அணியப்படுகின்றன. கைப்பை போன்ற பொருட்களைத் தொங்கவிட வசதியாக சில வளையல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. +கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இடக்கையில் வளையல்கள் அணிந்து நட னமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகன்ஜோ தாரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைக்கின்றன. + +இந்தியால் மகுஜ்ஹாரி என்னுமிடத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த செம்பு வளையல் மற்றொரு சரித்தர சான்றாகும். அடுத்து வேலைப்படமைந்த வளையல்கள் மௌரிய சாம்ராஜ்ஜிய (கி.மு 322 - 185) காலத்தது ஆகும். பொன் வளையல்கள் வரலார்ருச் சிறப்பு மிக்க தட்சசீலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) என்ற இடத்தில் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கலைநயமிக்க சிப்பி வளையல்கள் பல மௌரிய சாமராஜ்ஜிய அகழ்வாய்வுகளில் கிடைத்தன செம்பு ஆணிகள் மற்றும் தங்க இழைகள் போன்ற வேறு சில அம்சங்கள் . +கைச்சங்கிலி போலல்லாமல் வளையல்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. வளையல் என்னும் பொருள தரும் ஆங்கில வார்த்தை (Bangle), பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்துள்ளது. இவை பொருள் மதிப்புள்ள மற்றும் பொருள் மதிப்பற்ற தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கண்ணாடி, மரம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களினால் செய்யப்பட்டதாகும். வெள்ளை நிற சங்கு வளையல்களை மணமான வங்கப் பெண்டிர் அணிவது மரபு. + +வளையல்கள் ஒரு இந்திய மரபு அணிகலனாகும். அவற்றை பெண்கள் ஜோடிகளின் எண்ணிக்கைகளில் இரண்டு கைகளிலும் அணிவதுண்டு. பெண்கள் தங்கம் மற்றும் கண்ணாடி வளையல்களைக் கலந்து அணிய விரும்புகிறார்கள். கண்ணாடி வளையல்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் வளையல்களின் உபயோகம் அதிகரித்தாலும், திருமணம், விழாக்கள் போன்ற சடங்குகளில் கண்ணாடி வளையல்களே விரும்பபடுகின்றன. +எளிமையான கைவினைக் கலைஞ்ர்களின் வேலைப்ப்படுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள் மற்றும் நலமுத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு. தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களாலான வளையல்கள் கல கலவென்று ஒலி எழுப்பும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவித ஒலியினை எழுப்பும். + +அடிப்படையில் இரண்டு வகை வளையல்கள் உண்டு: ஒன்று திடமான உருளை வகை மற்றொன்று பிளவுபட்ட சுருள் வகை (split). வளையல்களை பூட்டுதல் திறத்தல் போன்ற வசதிகளுடன் தயாரிப்பது இன்னொரு வகை. வளையல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிபடையில் வகைப்படுத்தப்படுவதும் உண்டு. உதாரணம்: கண்ணாடி முதல் பச்சை பாசிமணி வரை; மற்றும் அரிய உலோகம் முதல் அரக்கு வரை. +விலை மதிப்பைக் கூட்டும் விஷயம் என்னவெனில் உலோகங்களில் செய்யப்படும் கைவினை வேலைப்பாடு ஆகும். இந்த வளையல் அலங்கார வேலைப்பாடு, கண்ணாடித் துண்டுகள் பதித்தல், மணிகளை இணைத்தல் என்பனவாகும் அரிய நிறம் கூட வளையல்களின் மதிப்பைக் கூட்டும். அரக்கு வளையல்கள் பழமையும் முறியும் தன்மையுமுடையது. அரக்கு என்பது ஒரு வகை மண் ஆகும். இவை சூளைகளின் உதவி கொண்டு வளையல்களாக வார்க்கப்படுகின்றன. ரப்பர் வ��ையல்கள் புதிய வரவாகும். பிளாஸ்டிக் வளர்ந்து வரும நவநாகரிகங்களுக்கு ஈடுகொடுக்க வல்லது. +பொதுவாக மக்கள் வளையலை மணிக்கட்டில் அணியும் ஒ௦ரு வகை ஆபரணம் என்று கருதுகிறார்கள். எனினும் தென்னாசிய மற்றும் அரேபிய தீபகற்பங்களின் கலாச்சாரப்படி குறிப்பிட்ட வளையல்கள் குறிப்பிட்ட சடங்குகளில் சம்பிரதாயங்களில் அணிந்து கொள்ளும் ஆபாரணமாகும். + + + + + + +தோடு + +தோடு ("earring") காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. ஆண்கள் அணியும் தோடு "கடுக்கன்" எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட்ட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது. + + + + +விசிறி + +விசிறி ("Fan") என்பது காற்றோட்டத்தை ஏற்படுத்தும் சாதனமாகும். சாதாரணமாகக் காற்றை விசுக்கப் பயன்படுத்தக் கூடிய பொருட்களும் விசிறிகளே. பனையோலை விசிறிகள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. இப்பொழுது அவை அருகி வருகின்றன. மின்சாரமுள்ள இடங்களில் பலவிதமான மின்விசிறிகள் பயன்படுகின்றன. + +மின்சாரத்தால் இயங்கும் விசிறி மின் விசிறி ஆகும். கூரை மின்விசிறிகள் 1886 இல் கண்டுபிடிக்கப்பட்டன. + + + + +கொண்டை ஊசி + +கொண்டை ஊசி (Hairpin) என்பது அலங்கரிப்பட்ட சிகை அலங்காரத்தை கலையாமல் ஒழுங்காக வைத்திருக்கப் பயன்படும் சிறிய நீண்ட கருவியாகும். உலோகம், தந்தம், வெண்கலம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள் பண்டைய அசிரியா, எகிப்து போன்ற இடங்களில் பயன்பட்டுள்ளன. பண்டைய கிரேக்கர்கள், எகிப்தியர்கள், ரோமானியர்கள் கொண்டை ஊசியை ஆடம்பரப் பொருட்களாகவும் பாவித்துள்ளனர். + +1901 ல் நியூசிலாந்தை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் எர்னஸ்ட் கோட்வர்ட் வளைவுகளுடன் கூடிய கொண்டை ஊசியை வடிவமைப்பதில் வெற்றிகண்டார். +க��ண்டை ஊசிக்கான காப்புரிமையை 1925 ம் ஆண்டில் கெல்லி சம்மாண்டி என்பவர் பெற்றுள்ளார். + + + + +பந்து + +பந்துகள் (Balls), பொதுவாக விளையாட்டுகளுக்கு பெரிதும் பயன்படும் பொருட்கள் ஆகும். இவை பொதுவாக கோள வடிவிலும் காற்றை அடக்கியும் இருக்கும். எனினும், சில சமயம் முட்டை போன்ற பிற வடிவங்களிலும் திண்மமாகவும் இருப்பதும் உண்டு. பந்துகளை பயன்படுத்தும் பெரும்பாலான ஆட்டங்களில், பந்தின் இருப்பையும் போக்கையும் பின்பற்றியே ஆட்டமும் அமைந்திருக்கும். + + + + +கோவணம் + +கோவணம் என்பது இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடையாகும். பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது. + +தற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. +கடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை, பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். முற்காலங்களில் ஆண்கள் 1 அல்லது 2 துண்டுகள் வைத்திருப்பாற்கள். குளிக்கும்போது, கோவணத்துடன் குளித்து, பின் ஆடை மாற்றும்போது உலர்ந்த கோவணம் ஒன்றை தரிப்பர். இது வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என அனைவரும் அணிவர். சிறிய ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் உலாவும்போது வேறு ஆடைகள் இன்றி கோவணம் மட்டுமே அணிந்து விடுவர். சிலர் பருவமடையா பெண் குழந்தைகளுக்கு கூட கட்டிவிடுவதுண்டு. சில சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவது குறிப்பிடத்தக்கது. பட்டிணத்தார் அதில் குறிப்பிடத்தக்கவர்.முருகக் கடவுளும் ஆண்டியாக இருந்த போது கோவணம் அணிந்திருந்ததாக சித்தரிக்கப்படுவதுண்டு.கோவணம் கட்டுவதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஹிரணியா எனப்படும் விரைவீக்கத்தை தவிர்க்கலாம். + +5 அல்லது 6 அங்குல அகல துணிஎடுத்து, அரைஞாண் கயிற்றில் ஒரு அந்தத்தை சொருகி பின், துணியினல் ஆண்குறியையும் விதையையும் சேர்த்து சுற்றி கவட்டினூடாக பின்னே எடுத்து, கயிற்றின் பின் புறத்தில் சொருகப்படும். + + + + +கா. அப்துல் கபூர் + +இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் (1924 - 2002) பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், இஸ்லாமிய மார்க்க அறிஞர், பத்திரிகையாளர், பன்மொழி வல்லுனர். + +கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1924-ல் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 2002-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி மறைந்தார். + +சென்னை முஹம்மடன் கல்லூரியிலும் (தற்போதைய காயிதே மில்லத் மகளிர் கல்லூரி), வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தமிழ்த் துறையில் பணியாற்றியவர். + +திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் தமிழ்துறைத் தலைவராகவும், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி, அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். + +சென்னை கிரஸண்ட் பள்ளியின் (பிறைப் பள்ளி) நிறுவன முதல்வர். + +அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர். 'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின் 87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்தது. "ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது. + +இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. + +பேராசிரியர் கா. அப்துல் கபூர் கல்விப் பணி: + +1946 - 1947 பேராசிரியர், தமிழ்த்துறை, முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை + +1947 - 1952 தமிழ்த்துறைத் தலைவர், இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி + +1952 - 1956 கீழ்த்திசை மொழித்துறைத்தலைவ��், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி + +1956 - 1962 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம் + +1962 - 1967 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம் + +1967 - 1974 முதல்வர், பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை + +1976 - 1980 நிர்வாக அதிகாரி, அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் + +நிர்வாக அதிகாரி, திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம் + +வகித்த பிற பொறுப்புகள்: + +1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர் + +2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் + +3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர் + +4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர் + +சிறப்பாசிரியர்: + +மதிநா (சிற்றிதழ்) + +நூல் வரிசை: + +கவிதை + +1. நாயகமே + +2. அன்னை பாத்திமா + +3. நபிமணி மாலை + +4. இறையருள் மாலை + +5. நபிமொழி நானூறு + +6. பொன்மொழி நானூறு + +8. காஜா மாலை + +9. பீரப்பா மாலை + +10. முஹ்யித்தீன் மாலை + +11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்) + +12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்) + +உரை நடை + +1. இலக்கியம் ஈந்த தமிழ் + +2. அற வாழ்வு + +3. வாழும் நெறி இஸ்லாம் + +4. இஸ்லாமிய இலக்கியம் +5 இனிக்கும் இறைமொழிகள் + +6. மிக்க மேலானவன் + +குழந்தை இலக்கியம் + +1. அரும் பூ + +மேல் விவரங்களுக்கு: http://gafoorsahib.blogspot.com + + + + +வடிவமைப்புக் கொள்கை + +வடிவமைப்புக் கொள்கை என்பது, கலைப் பொருள் ஒன்றின் உருவாக்கத்தில், வடிவமைப்புக் கூறுகளின் தெரிவு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன தொடர்பில் உள்ளார்த்தமாக அமைந்துள்ள சில பண்புகளில் ஏதாவதொன்றைக் குறிக்கும். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற கலைகளில் இக் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது தொடர்பான கட்டுரைகளிலும் நூல்களிலும் தரப்படுகின்ற இக் கொள்கைகளும் அவற்றின் எண்ணிக்கையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில பொதுவான கொள்கைகள் பின்வருமாறு: + + +ஒரு கலை ஆக்கத்தில் இவை உரிய முறையில் அமையும்போது, அப் பொருட்கள் காட்சிக்கு இனியனவாக அமைகின்றன. இவை கையாளப்படும் விதமே ஒரு கலைப்பொருளின் அழகியல் பெறுமானத்துக்குக் காலாக அமைகின்றது. + + + + +வடிவமைப்புக் கூறு + +வடிவமைப்புக் கூறு என்பது கலைப் பொரு���ொன்றின் வடிவமைப்பில் அதன் உறுப்புக்களாக அமைவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். அதாவது கலைப்பொருள் ஒன்றின் வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ள உறுப்புக்களே வடிவமைப்புக் கூறுகளாகும். இவை: + + +ஒரு கலை ஆக்கம் இந்தக் கூறுகள் எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. கலைஞனுடைய கற்பனைக்கு ஏற்ப இக் கூறுகளில் ஒன்றுக்கோ பலவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுத்து ஆக்கங்களை உருவாக்கமுடியும். + + + + + +ஆக்சிசன் + +ஆக்சிசன் அல்லது ஒட்சிசன் ("Oxygen"), நாம் வாழும் நில உலகத்தில் யாவற்றினும் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிம வேதிப் பொருள். வேதியியலில் இதற்கான குறியீடு  O ஆகும். ஓர் ஆக்சிசன் அணுவின் கருவினுள்ளே 8 நேர்மின்னிகளும் அதற்கு இணையாக கருவைச்சுற்றி 8 எதிர்மின்னிகளும் பல்வேறு சுழல் பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே ஆக்சிசனின் அணு எண் 8. ஆகும். அணுக்கருவினுள் நேர்மின்னிகள் அன்றி 8 நொதுமிகளும் (நியூட்ரான்களும்) உள்ளன. + +இது தனிம அட்டவணையில் நெடுங்குழு 16 தனிமங்கள் குழுவின் அங்கமாகும். உயரிய வினையாற்றும் அலோக தனிமமும் ஆக்சிசனேற்றியுமான ஆக்சிசன் பெரும்பாலான தனிமங்களுடன் எளிதாக சேர்மங்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) உருவாக்குகின்றது. திணிவின் அடிப்படையில், அண்டத்தில் மிகவும் செழுமையாக உள்ள வேதித் தனிமங்களில் நீரியம், ஈலியம் அடுத்து மூன்றாவதாக உள்ளது. திட்ட வெப்ப அழுத்தத்தில், இத்தனிமத்தின் இரு அணுக்கள் பிணைந்து "டையாக்சிசன்" என்ற ஈரணு மூலக்கூற்று வளிமமாக விளங்குகின்றது; இந்நிலையில் இதற்கு வண்ணம், வாசனை, சுவை எதுவும் இல்லை. இந்நிலையின் வேதியியல் குறியீடு ஆகும். + +வளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிசன். இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது. இதன் செழுமை (பரும அளவில்) 20.95 விழுக்காடு. நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 விழுக்காடு. பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 விழுக்காடு. மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும். + +வாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்கள், கருவ��ிலங்கள், கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் போன்ற கரிம மூலக்கூறுகளில் ஆக்சிசன் உள்ளது; அதேபோல, விலங்குகளின் கூடுகள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய அனங்கக சேர்மங்களிலும் ஆக்சிசன் உள்ளது. மேலும் உயிரினங்களின் திணிவில், பெரும்பகுதி நீராக இருப்பதால் (காட்டாக மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீராகும்) ஆக்சிசன் இருக்கின்றது. ஆக்சிசன் தனிமத்தை நீலப்பச்சைப்பாசி, பாசி மற்றும் தாவரங்கள் உருவாக்குகின்றன; அனைத்துயிர் உயிரணு ஆற்றல் பரிமாற்றங்களிலும் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது. + +நில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரசன்). உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்சிசன். இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது. எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது. அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் தேவை இல்லாமல் இருந்தன. ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்சிசன் வெளிவிடப்பட்டது. இப்படி ஆக்சிசன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள், பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்சிசனின் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான் (பார்க்க: ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்). இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன்ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன. + +பெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும் மிகவும் வீரியமான வேதிவினையாற்றும் இத்தனிமம் தனிநிலையில் நிலைத்தில்லாமையால் புவியின் வளிமண்டலத்தில் கிடைப்பதற்கு சில உயிரினங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தொடர்ந்து ஒளித்தொகுத்தல் வினையாற்றி நீரிலிருந்து மீளுருவாக்க வேண்டியுள்ளது. ஆக்சிசனின் மற்றொரு தனிமப் புறவேற்றுருவான ஓசோன் () புற ஊதாக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொள்வதன் விளைவாக மீயுயரத்தில் உள்ள கமழிப் படலம் உலகத்தை புற ஊதாக் கதிர் தாக்குதலிலிருந்து காக்கின்றது. ஆனால் புவியின் தரையருகே ஓசோன் ஓர் மாசுபொருளாக விளங்குகிறது. இதனினும் உயரத்தில் உள்ள பூமியின் தாழ் வட்டப்பாதை உயரங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள ஆக்சிசன் அணுக்கள் விண்கலங்களின் அரிப்பிற்கு காரணமாகின்றன. நீர்மநிலை காற்றை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு, செயோலைற்றுகளைப் பயன்படுத்தி அழுத்த-சுழற்சி மூலம் காற்றிலிருந்து ஆக்சனை செறிவுறுத்தல், நீரின் மின்னாற்பகுப்பு மற்றும் பிற முறைகளில் தொழில்முறையில் ஆக்சிசன் தயாரிக்கப்படுகிறது. இது எஃகு, நெகிழி, துணி தயாரிப்பு, இரும்பு மற்றும் பிற உலோகங்களை ஆக்சி-எரிபொருள் பற்ற வைத்தல், வெட்டுதல், ஏவூர்தி உந்துகை, ஆக்சிசன் சிகிட்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. தவிரவும் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல், மனித விண்வெளிப்பறப்பு மற்றும் தாவுதலிலும் உயிர்தாங்கி அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றது. + +ஆக்சிசனை 1773 அல்லது அதற்கு முன்பாகவே உப்சாலாவில் கார்ல் வில்லியம் சீலேயும், 1774இல் சோசப்பு பிரீசிட்லியும் தனித்தனியே கண்டறிந்தனர்; இருப்பினும் பிரீசிட்லியே தனது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. "ஆக்சிசன்" என்ற பெயர் 1777இல் அந்துவான் இலவாசியேயால் கொடுக்கப்பட்டது. + +பூமியின் உயிர்க்கோளத்தில் உள்ள காற்று, கடல் மற்றும் நிலம் ஆகியவற்றில் மிக அதிகமான நிறை அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். ஐதரசன் மற்றும் ஈலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகமான அளவில் காணப்படும் வேதியியல் தனிமமும் ஆக்சிசன் ஆகும். சூரியனின் நிறையில் 0.9% ஆக்சிசனாகும். புவியின் மேற்பரப்பு அதன் நிறையளவில் 49.2% சிலிக்கன் டையாக்சைடு போன்ற ஆக்சைடு சேர்மங்களாக காணப்படுகிறது . பூமியின் மேற்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஆக்சிசனும் ஒன்றாகும். உலகத்தில் காணப்படும் கடல்கள் அனைத்திலும் காணப்படும் பொருள்களின் நிறையில் 88.8% ஆக்சிசன் பகுதிப்பொருளாக உள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு இரண்டாவது மிக பொதுவான பகுதிக்கூறு ஆகும், இதன் கன அளவில் 20.8% மற்றும் அதன் மொத்த நிறையில் 23.1% ஆக்சிசன் ஆகும். (சில 10 டன்கள்) . வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு மிகவும் உயர்ந்த செறிவைக் கொண்டிருப்பதால், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமி அசாதாரணமான கிரகமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அதன் கன அளவில் 0.1% ஆக்சிசனைக் கொண்டுள்ளது. வெள்ளி கிரகத்தில் இதைவிடக் குறைவான அளவிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. ஆக்சிசனைக் கொண்டுள்ள கார்பன் டை ஆக்சைடு போன்ற மூலக்கூறுகளின் மீது புற ஊதா கதிர்கள் வினைபுரிந்த காரணத்தால் இக்கிரகங்களைச் சூழ்ந்துள்ள ஆக்சிசன் வாயு தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. + +ஆக்சிசன் சுழற்சியின் விளைவாகவே பூமியில் அதிகப்படியான ஆக்சிசன் அடர்த்தி காணப்படுகிறது. பூமிக்குள்ளும் பூமியிலுள்ள மூன்று முக்கிய களஞ்ச்சியங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், கற்கோளத்திலும் ஆக்சிசன் வாயுவின் இயக்கத்தினை இந்த உயிர்வேதியியல் சுழற்சி விவரிக்கிறது. ஆக்சிசன் சுழற்சி நடைபெறுவதற்கான முக்கியமான காரணியாக ஒளிச்சேர்க்கை திகழ்கிறது. இந்த நவீன வளிமண்டலம் உருவாவதற்கு ஒளிச்சேர்க்கையும் ஆக்சிசன் சுழற்சியுமே முக்கிய காரணிகளாகும். ஒளிச்சேர்க்கையினால் ஆக்சிசன் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுகிறது. சுவாசித்தல், சிதைவு மற்றும் எரிதல் செயல்முறைகள் ஆக்சிசனை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகின்றன. இப்போதிருக்கும் நிலையில் ஆக்சிசன் உற்பத்தியும் ஆக்சிசன் பயன்பாடும் சம் விகிதத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. + +உலக நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்தும் தனி ஆக்சிசன் தோன்றுகிறது. தாழ்வெப்ப நிலைகளில் அதிகரிக்கும் ஆக்சிசனின் கரைதிறன் கடல்சார் வாழ்க்கையுடன் மிக முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வன அடர்த்தியாக துருவக்கடல்களில் காணப்படுவதற்கு அங்கு ஆக்சிசன் அளவு அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும். நைட்ரேட்டு அல்லது பாசுப்பேட்டு போன்ற தாவர நுண்ணுயிரிகளால் மாசடைந்த நீரில் பூஞ்சைகள் வளர்ந்து தூர்ந்துபோவதால் நீர்ப்பகுதிகளில் ஆக்சிசன் அளவு குறைகிறது. தண்ணீரின் உயிர்வேதியியல் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் தண்ணீரின் தரத்தை இறுதி செய்கிறார்கள். அல்ல���ு தண்ணீர் அதன் பழைய நிலையை அடைய எவ்வளவு ஆக்சிசன் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டும் தண்ணீரின் தரத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். + +காரல் வில்லெம் சீலெ ("C. W. Scheele") என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார். 1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார். 1772 ல் இவர் ஆக்சிசனை அறிந்திருந்தார். சூடாக்குவதன் மூலம் மேர்க்கூரிக்கு ஆக்சைடு, பல்வேறு நைத்திரேட்டுக்கள் போன்ற கனிமச் சேர்மங்களைப் பகுத்து இவர் ஆக்சிசனை உற்பத்தி செய்து காட்டினார். ஆக்சிசனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளையும் கண்டறிந்து தெரிவித்தார். அக்காலத்தில், எரிவதற்கு உதவுவதாக அறியப்பட்ட ஒரே பொருள் இதுவே என்பதால் இதை "தீ வளி" என சீலெ அழைத்தார். இக்கண்டுபிடிப்புத் தொடர்பாக "வளியும் தீயும் தொடர்பான நூல்" என்னும் தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதி, 1775 ஆம் ஆண்டு பதிப்பாளருக்கு அனுப்பினார். ஆனால் இது 1777 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இவருடைய இக்கண்டுபிடிப்பு 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையை இவரால் பெறமுடியவில்லை. + +சோசப்பு பிரீசிட்லி பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார். அத்துடன் இவ்வளிமத்தைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தானும் அவ்வளிமத்தைச் சுவாசித்த பின்னர், "என்னுடைய சுவாசப்பை, வழமையான வழியைச் சுவாசிப்பதைக் காட்டிலும் வேறுபட்ட உணர்வு எதையும் பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் சிறிது நேரம் என்னுடைய மார்பு இலகுவாக இருப்பதாக நான் உணர்ந்தேன்" என எழுதினார். சோசப்பு பிரீசிட்லி, தனது கண்டுபிடிப்பை 1775 ஆம் ஆண்டில் "மேலும் வளி தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்கள்" ("An Account of Further Discoveries in Air") என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்றின் மூலம் வெளியிட்டார். இக்கட்டுரை, "பல்வேறு வகையான வளிகள் தொடர்பான சோதனைகளும் கவனிப்புக்களும்" என்னும் அவரது நூலின் இரண்டாம் தொகுதியில் வெளியானது. + +பிரான்சு நாட்டவரான பெயர் பெற்ற வேதியியலாளர் அந்துவான் லோரென்ட் இலவாசியே ("Antoine Laurent Lavoisier") என்பவரும் தனியாக ஆக்சிசனைக் கண்டுபிடித்தாதாகக் கருதப்பட்டது. ஆனால், பிரீசுட்லி 1774 அக்டோபரில் இலவாசியேயைச் சந்தித்துத் தனது சோதனைகள் பற்றியும் அதை அவர் எவ்வாறு உற்பத்தி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். சீலெயும் தனது கண்டுபிடிப்புப் பற்றி 1774 செப்டெம்பரில் இலவோசியேக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதை இலவோசியே ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், சீலெ இறந்த பின்னர் அவரது உடமைகளுக்குள் இக்கடிதத்தின் படி ஒன்று கிடைத்தது. + +சர்ச்சைக்கு இடமில்லாத இலவோசியேயின் பங்களிப்பு, முதன் முதலாக ஒட்சியேற்றம் தொடர்பில் போதிய கணியம் சார் சோதனைகளைச் செய்ததும், எரிதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்துச் சரியான விளக்கம் கொடுத்ததும் ஆகும். இச் சோதனைகளையும் இதுபோன்ற பிற சோதனைகளையும் பயன்படுத்தி, 1774 ஆம் ஆண்டு முதல் புளோசித்தன் கோட்பாட்டைப் பிழை என நிறுவுவதில் ஈடுபட்டதுடன், சோசப்பு பிரீசிட்லி, சீலெயும் கண்டுபிடித்த பொருள் ஒரு வேதியியல் தனிமம் என்பதையும் நிறுவினார். + +18 நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்துவான் இலவாசியே அவர்கள் தவறுதலாக எல்லா காடியில் இருந்து தோன்றும் வளிமம் என்று எண்ணி “காடியிலிருந்து உண்டாவது” என்று பொருள்படும் கிரேக்க மொழி வழிப் பெற்ற பெயராக “ஆக்சிசன்” என்பதனைச் சூட்டினார். கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் "ஜென்" என்றால் உற்பத்தி செய்தல் என்றும் பொருள். உற்பத்தி செய்தால் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி, தங்கம், பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிசனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீசு டை ஆக்சைடு, பேரியம் பெராக்சைடு செவ்வீயம் போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். மாங்கனீசு டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிசன் வெளியேறுகிறது. அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிசன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது. + +ஆக்சிசன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம வடிவில் உள்ள ஆக்சிசன் ஒளி ஊடுருவும் நீல நிறத்தில் இருக்கும். சிறிதளவு நிலைப்பெறா காந்தத்தன்மை (paramagnetic) உடையது. காந்தப் புலனுக்கு உட்படுத்தினால் நீர்ம ஆக்சிசன், காந்த முனைகளுக்கு இடையே, இழுப்புண்டு முனைகளை இணைத்து நிற்கும். உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரையக்கூடியது. நீரில் கரைந்த ஆக்சிசன் நீர் வாழ் உயிரினங்களின் சுவாசித்தலுக்கும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கும் இன்றியமையாததாய் உள்ளது. உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும், உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிசன் தேவை. + +ஹிமோகுளோபின் ("Haemoglobin") என்ற பெரிய புரத ("Protein") மூலக்கூறுகள் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள் இணைந்துள்ளன. ஆக்சிசனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும், ஆக்சிசனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிசன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும். பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும். சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும். இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிசன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும். இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை ("Sickle cell anemia") என்பர். + +சீர்தரம் செய்யப்பட்ட அழுத்த வெப்ப நிலைகளில் ஆக்சிசன் ஈரணு (O) மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றது. வளிம நிலையில் ஆக்சிசன் நிறமற்ற ஒரு பொருள். நீரில் கரைவது மிகவும் குறைவே. ஆக்சிசனின் ஈரணு மூலக்கூற்றின் ( O) பிணைப்பின் நீளம் 121 பி.மீ (pm) ஆகும். பிணைப்பின் வலுவாற்றல் (bond energy) 498 kJ/mol.. ஆக்சிசனின் இயைபு எண் (valency )2. 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிசனின் அணு எண் 8, அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும். + +வேதியியலில் ஆக்சிசன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும். மந்த வளிமம் தவிர்த்த பிற மாழைகள் (உலோகங்கள்), மாழையிலிகளுடன் (அலோகங்களுடன்) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. இவை ஆக்சிசனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம். தங்கமும், பிளாட்டினமும் ஆக்சிசனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன. வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச, நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச, இவை சேர்ந்து இசுட்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்கள் பச்சையம் (Chlorophyl) என்ற நிறமிகளால் (Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிசன் வளிமண்டலத்தில் சேருகிறது. எனவே விலங்கினங்களின் மூச்சுவிடுதலுக்குத் தேவையான ஆக்சிசன் தடையின்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் மட்டுமின்றி கார்பன்-டை-ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது. + +பொதுவாகக் காணப்படும் உரு ஈரணு வடிவம்தான். மூவணு வடிவம் ஒரோவொருக்கால் சிறிதளவே காணப்படும். மூன்று ஆக்சிசன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும். இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக ("non-linear") இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது.புற ஊதாக்கதிர்களால் வளிமண்டலத்தின் மிக உயரமான இடங்களில் தொடர்ந்து உருவாகிக்கொண்டு இருக்கும். வெப்ப இயங்கியல் முறைகளின் படி இந்த மூவணு ஆக்சிசன் உறுதிநிலைப்பெறா வடிவம். ஆக்சிசன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ்சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள், இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது. + +ஓசோன் மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு வேதிச் சேர்மம். இரப்பர், நூலிழைகள், போன்றவற்றை எளிதாகச் சிதைக்கும். ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்���ி செய்யும் மூலங்கள் நைட்ரசன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். நைட்ரசன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர். ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15-50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது. இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வதால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை. + +மிக அண்மையில், உடலின் இயல்பான தடுப்பாற்றல் முறையின் இயக்கத்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த மூவணு ஓசோன் உருவாகின்றது என்று கண்டுள்ளனர். நீர்ம நிலையிலும் திண்ம நிலையிலும் உள்ள ஓசோன் சற்று கூடிய நீல நிறமாக இருக்கும். இவ்வடிவங்களும் உறுதிநிலை கொள்ளா வடிவங்கள்தாம். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும்."ஓ4 என்ற டெட்ரா ஆக்சிசன் என்பதை 2001-ல் கண்டறிந்துள்ளனர். + +ஆக்சிசன், நைதரசனிலும் கூடுதலாக நீரில் கரையக் கூடியது. வளியில் ஆக்சிசனும், நைதரசனும் 1:4 என்னும் விகிதத்தில் இருக்க நீரில் ஒரு ஆக்சிசன் மூலக்கூறுக்கு இரண்டு நைதரசன் மூலக்கூறே காணப்படுகின்றது. ஆக்சிசனின் நீரில் கரையும் தன்மை வெப்பநிலையில் தங்கியுள்ளது. 20 °C யில் கரைவதிலும் (7.6 மிகி·லீ) 0 °C யில் இரண்டு மடங்கு (14.6 மிகி·லீ) ஆக்சிசன் நீரில் கரைகின்றது. 25 °C யிலும் 1 வளிமண்டல அழுத்தத்திலும், நன்னீர் ஒரு லீட்டருக்கு 6.04 மில்லிலீட்டர் ஆக்சிசன் காணப்படும். ஆனால் கடல் நீரில் லீட்டருக்கு 4.95 மில்லிலீட்டர் ஆக்சிசனே காணப்படுகின்றது. 5 °C யில் கரையும் தன்மை அதிகரித்து நன்னீரில் 9.0 மில்லிலீட்டரும், கடல் நீரில் லீட்டருக்கு 7,2 மில்லிலீட்டரும் கரைகின்றது. + +ஆக்சிசன் 90.20 கெல்வின் (−182.95 °செ, −297.31 °பா) வெப்பநிலையில் நீர்மமாக ஒடுங்குகிறது. 54.36 கெல்வின் (−218.79 °செ, −361.82 °பா) வெப்பநிலையில் திண்மமாக உறைகிறது. ஆக்சிசன் நீர்மமும், திண்மமும் இளம் வான்-நீல நிறம் கொண்ட தெளிவான பொருட்கள். நீர்ம வளியைப் பகுதிபடக் காய்ச்சிவடித்தல் (fractional distillation) முறை மூலம் தூய ஆக்சிசன் பெறப்படுகின்றது. நீர்ம நைதரசனைக் குளிர்விப்பானாகப் (coolant) பயன்படுத்தி வளியை நீர்ம நிலைக்கு ஒருக்குவதன் மூலமும் ஆக்சிசனைப�� பெறமுடியும். ஆக்சிசன் தாக்குதிறன் கூடிய பொருளாதலால் இதை எரியக் கூடிய பொருட்களிலிருந்து வேறாக வைத்திருக்க வேண்டும். + +இயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை O, O, and O என்பன. இவற்றுள் O ஓரிடத்தானே மொத்த அளவில் 99.762% ஆகும். ஆக்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது. + +பெரும்பாலான O விண்மீன்களில் இடம்பெற்ற ஈலியச் சேர்க்கையின் ("helium fusion") போது உருவானவை. ஒரு பகுதி நியான் எரிதல் முறையாலும் உருவானது. O, காபன், நைதரசன், ஆக்சிசன் வட்டத்தின்போது ஐதரசன் எரிந்து ஈலியம் ஆகும்போது உருவாகிறது. இதனால் இந்த ஓரிடத்தான் விண்மீன்களில் ஐதரசன் எரியும் வலயங்களில் காணப்படுகின்றது. + +ஆக்சிசனின் 14 கதிரியக்க ஓரிடத்தான்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் O உறுதி கூடியது. இதன் அரைவாழ்வுக் காலம் 122.24 நொடிகள். O 70.606 நொடிகள் அரைவாழ்வுக் காலம் கொண்டது. எஞ்சிய கதிரியக்க ஓரிடத்தான்கள் எல்லாமே 27 செக்கன்களிலும் குறைவான அரைவாழ்வுக் காலம் கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலானவை 83 மில்லி நொடிகளிலும் குறைவான அரைவாழ்வுக் காலத்தோடு கூடியவை. O இலும் நிறை குறைவான ஓரிடத்தான்களின் மிகப் பொதுவான சிதைவு முறை எதிர்மின்னிப் பிடிப்பு (electron capture) முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் நைதரசனாக மாறுகின்றன. O இலும் நிறை கூடிய ஓரிடத்தான்களின் பொதுவான சிதைவு முறை பீட்டா சிதைவு ("beta decay") முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் புளோரினாக மாறுகின்றன + +புவியின் உயிர்க் கோளம், வளி, கடல், நிலம் ஆகியவற்றில் மிகவும் அதிக அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். அண்டத்திலும், ஐதரசன், ஈலியம் ஆகியவற்றுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் தனிமம் ஆக்சிசனே. சூரியனின் திணிவின் 0.9% ஆக்சிசனாக உள்ளது. திணிவின் அடிப்படையில் புவி மேலோட்டின் 49.2% ஆக்சிசன் ஆக இருப்பதுடன், உலகின் பெருங்கடல்களில் இது 88.8% ஆகவும் உள்ளது. புவியின் வளிமண்டலத்தில், கனவளவின் அடிப்படையில் 20.8% ஐயும், திணிவு அடிப்படையில் 20.8% ஐயும் (ஏறத்தாழ 10 தொன்கள்) கொண்ட ஆக்சிசன் அதன் இரண்டாவது முக்கிய கூறாக உள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள பிற கோள்களுடன் ஒப்பிடும்போது, புவியின் வளிமண்டலத்தில் இவ்வளவு அதிகமான ஆக்சிசன் இருப்பது வழமைக்கு மாறானது. செவ்வா���், வெள்ளி ஆகிய கோள்களின் வளிமண்டலங்களில் மிகவும் குறைவான ஆக்சிசனே காணப்படுகின்றது. இவ்வாறு உள்ள ஆக்சிசனும் புறவூதாக் கதிர்கள் காபனீரொட்சைடு போன்ற ஆக்சிசனைக் கொண்ட மூலக்கூறுகளைத் தாக்குவதாலேயே உருவாகின்றது. + +ஆக்சிசன் வட்டத்தின் காரணத்தினாலேயே புவியில் ஆக்சிசன் வளிமம் வழமைக்கு மாறாக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த உயிர்ப்புவிவேதியியல் வட்டம் புவியில் அதன் மூன்று முக்கியமான கொள்ளிடங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், பாறைக்கோளம் ஆகியவற்றுக்கு உள்ளேயும் அவற்றுக்கு இடையிலும் ஆக்சிசனின் நகர்வுகளை விளக்குகிறது. + +தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக காற்றிலிருந்து ஆண்டுக்கு 100 மில்லியன் டன் பிரித்தெடுக்கப்படுகிறது; ஆக்சிசன் தயாரிப்பிற்கு முதன்மையாக இரண்டு செய்முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மிகவும் வழமையான செய்முறை நீர்மநிலையிலுள்ள காற்றிலிருந்து பகுதிபடக் காய்ச்சி பல்வேறு அங்கங்களை வடித்திறக்குவதாகும்; ஆவிநிலையில் வடித்திறக்கப்பட நீர்மநிலையில் அடியில் தங்கியிருக்கும். + +ஆக்சிசன் வளிமத்தை நீரின் மின்னாற்பகுப்பு மூலமாகவும் தயாரிக்கவியலும். நேரோட்ட மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும்: அலையோட்டம் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பக்கத்திலும் ஆக்சிசனும் ஐதரசனும் !:2 என்ற விகிதத்தில் சேகரிக்கப்பட்டு வெடிக்கக் கூடும். + +இதேபோன்ற மற்றொரு செய்முறை ஆக்சைடுகளிலிருந்தும் ஆக்சோ-அமிலங்களிலிலிருந்தும் மின்வினையூக்கி வெளியேறுவதாகும். மின்சாரதிற்கு மாற்றாக வேதி வினையூக்கிகளையும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல்களில் வாழ்வாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிசன் வர்த்திகள் இத்தகையன. இதே கோட்பாடு வணிகமய வானூர்திகளிலும் அமுக்கநிலை குறைவு நெருக்கடிகளின்போது பயனாகின்றது. மற்றொரு முறை சிர்கோனியம் டையாக்சைடு சுட்டாங்கல் மென்றகடுகளில் உயரிய அழுத்தம் மூலமாகவோ மின்னோட்டம் மூலமாகவோ காற்றை கரைய கட்டாயப்படுத்துவதாகும்; இதன் மூலம் கிட்டத்தட்ட தூய்மையான வளிமம் கிடைக்கிறது. + +ஆக்சிசனை உயரழுத்த ஆக்சிசன் கொள்கலன்களிலும் கடுங்குளிரக கிடங்குகளிலும் வேதியச் சேர்மங்களிலும் சேமிக்கலாம். பொருளியல் காரணங்களுக்காக சிறப்பான காப்பிட்ட கொள்கலன்களில் ஆக்சிசன் நீர்ம நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது; ஒரு லிட்டர் நீர்மநிலை ஆக்சிசன் வளிமண்டல அழுத்தத்தில் வெப்பநிலையில் உள்ள வளிமநிலையில் 840 லிட்டர்கள் ஆக்சிசனுக்கு ஈடானதாகும். இத்தகைய கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு திரளான நீர்மநிலை ஆக்சிசன் மருத்துவமனைகள், மற்ற நிறுவனங்களின் வெளியே உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றப்படுகிறது. நீர்ம ஆக்சிசன் வெப்பப் பரிமாற்றிகள் வழியாக செலுத்தப்படும்போது கடுங்குளிரிலுள்ள ஆக்சிசன் வளிமமாக மாற்றப்படுகிறது; அழுத்தப்பட்ட ஆக்சிசனாக சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் சிறிய உருளைகலன்களும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆக்சி-எரிபொருள் பற்றவைப்பு, மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஓரிடத்திலிருந்து எளிதாக எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. +மிக முக்கியமான கரிமச்சேர்மங்களின் வகைப்பாடுகள் அனைத்திலும் ஆக்சிசன் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. இங்கு R என்பது ஒரு கரிமவேதியியல் குழுவாகும். ஆல்ககால்கள் (R-OH); ஈதர்கள் (R-O-R); கீட்டோன்கள் (R-CO-R); ஆல்டிகைடுகள் (R-CO-H); கார்பாக்சிலிக் அமிலங்கள் (R-COOH); எசுத்தர்கள் (R-COO-R); அமில நீரிலிகள் (R-CO-O-CO-R); மற்றும் அமைடுகள் (R-C(O)-NR2) போன்ற அனைத்து கரிமச் சேர்மங்க்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. மிக முக்கியமான கரிமக் கரைப்பான்களான அசிட்டோன், மெத்தனால், எத்தனால், ஐசோபுரோப்பனால், பியூரான், டெட்ரா ஐதரோபியூரான், டை எத்தில் ஈதர், டையாக்சேன், அசிட்டிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் உள்ளிட்ட கரைப்பான்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. + +நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதன் சாதாரணமாக சுவாசிக்கும்போது (மூச்சினை உள்ளிழுத்து மீண்டும் வெளிவிடுவது ) ஒரு நிமிடத்திற்கு 1.8 கிராம் முதல் 2.4 கிராம் வரை ஆக்சிசன் தேவைப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலம் உள்ளிழுக்கப்பட்டு ஆக்சிசன் 6 பில்லியன் டன்கள்களுக்கும் அதிமாகும். + +மூச்சியக்கத்தின்போது முதன்மை நோக்கமே காற்றிலிருந்து ஆக்சிசனை உளவாங்குவது ஆகும்; எனவே மருத்துவத்தில் நிரவலுக்காக ஆக்சிசன் கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் குருதிநாளங்களில் ஆக்சிசனின் அளவு கூடுவது மட்டுமன்றி இரண்டாம்நிலை தாக்கமாக நோய்வாய்ப்பட்ட பல்வேறு நுரையீரல்களில் குருதியோட்டத்திற்கான தடையை குற���க்கிறது; இதயத்தின் வேலைப்பளுவை குறைக்கிறது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, சில இதயநோய்கள் (இதயத் திறனிழப்பு), மூச்சுப்பை தமனி அழுத்தத்தை கூட்டுகின்ற சில நோய்கள், மற்றும் ஆக்சிசன் வளிமத்தை ஏற்கவும் பயன்படுத்தவும் கூடிய உடலின் திறனை தாக்கும் எந்தவொரு நோய்க்கும் ஆக்சிசன் சிகிட்சை பயன்படுத்தப்படுகின்றது. + +ஆக்சிசன் சிகிட்சையை மருத்துவமனைகளைலோ நோயாளியின் வீட்டிலோ பயன்படுத்துமாறு எளிதாக எடுத்துச்செல்லத்தக்க கருவிகள் வந்துள்ளன. ஆக்சிசன் கூடாரங்கள் ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டன; தற்காலத்தில் பெரும்பாலும் ஆக்சிசன் முகமூடிகள் அல்லது மூக்குக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. + +உயரழுத்த ஆக்சிசன் சிகிட்சையில் சிறப்பான ஆக்சிசன் அறைகள் பயன்படுத்தப்படுகின்றன; இங்கு நோயாளியைச் சுற்றி, சிலநேரங்களில் மருத்துவப் பணியாளருக்கும், உயர்ந்த அழுத்தத்தில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது. இத்தகைய சிகிட்சை கார்பனோரொக்சைட்டு நச்சு, வளிம திசு அழுகல், மற்றும் அமுக்கநீக்க நோய்மை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல்களில் கூடிய அழுத்தத்திலான செறிவு கார்பனோரொக்சைட்டு வளிமத்தை குருதிவளிக்காவிகளிலிருந்து வெளியேற்ற உதவுகின்றது. ஆக்சிசன் வளிமம் திசு அழுகலை உண்டாக்குகின்ற காற்றின்றிவாழும் நுண்ணுயிரிகளுக்கு நச்சாக அமைவதால் உயர் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் அவற்றை கொல்கின்றது. ஆழ்நீர் மூழ்கிகள் மூழ்கித் திரும்புகையில் சரியாக அமுக்கநீக்க செய்முறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு அமுக்கநீக்க நோய்மை ஏற்படுகின்றது; அவர்களது உடலில் கரைந்துள்ள வளிமங்கள், பொதுவாக நைத்திரசன், ஈலியம், கொப்புளங்களாக குருதியில் வெளியேறும். இவர்களுக்கும் உயரழுத்தத்திலுள்ள ஆக்சிசன் இந்நோய் சிகிட்சைக்கு உதவியாக உள்ளது. + +மருத்துவக் காரணங்களுக்காக இயக்கமுறை காற்றூட்டம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, காற்றில் காணப்படும் ஆக்சிசனின் செறிவான 21%ஐவிடக் கூடுதலான செறிவில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது. + +பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியலில் O ஓரிடத்தான் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது. + +இயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிசன் ஊட்டம் தேவையாக இருக்கிறது. மலை ஏறுபவர்கள், விமானங்களில் பயணிப்போர், கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர், விண்வெளி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர், நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிசனை வழங்க ஆக்சிசனூட்டம் பயன்தருகிறது. நீர்ம ஆக்சிசனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடிப் பொருளாகின்றது. + +சின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள். இன்றைக்கு ஆக்சிசனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து, குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள். மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிசன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிசன் பயன்படுகிறது. + +வணிகமுறையில் தயாரிக்கப்படும் ஆக்சிசனில் 55% இரும்புத்தாதுவிலிருந்து எஃகை உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் செய்முறையில், உயரழுத்த ஈட்டி மூலமாக உருகிய இரும்பின் மீது செலுத்தப்படுகின்றது; இது கந்தக மாசுகளையும் மிகுதியான கரிமத்தையும் அவற்றின் ஆக்சைடுகளாக, முறையே , வெளியேற்றுகின்றது. இந்த வேதிவினைகள் வெப்பம் விடு வினைகளாதலால் வெப்பநிலை 1,700 °Cக்கு உயர்கின்றது. + +தயாரிக்கப்படும் ஆக்சிசனில் அடுத்த 25% வேதித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது. எத்திலீன் உடன் வேதிவினையாற்றி எத்திலீன் ஆக்சைடு உருவாக்கப்படுகின்றது; இதிலிருந்து எத்திலீன் கிளைக்கால் உருவாக்கப்படுகின்றது; இது பல உறைவுதவிர்ப்பி மற்றும் நெகிழி மற்றும் துணிப் பொருட்களுக்கு தயாரிப்பு மூலமாக விளங்குகின்றது. + +மீதமுள்ள 20% வணிகமுறை ஆக்சிசன் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் ஏவூர்தி எரிபொருளாகவும் நன்னீராக்கலிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆக்சிசன் – அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் பயன்��டுத்துகிறார்கள். இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது. ஆக்சிசன்-நைட்ரசன் எரி வளிமங்கள் பிளாட்டினம், சிலிகா போன்றவைகளுக்குப் பயன்தருகிறது. இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது. 60 செமீ தடித்த உலோகம் ஆக்சி-அசிடிலின் தீச்சுடர் மூலம் சுடவைக்கப்படுகின்றது; இதன்மீது ஓடையை செலுத்தி விரைவாக வெட்டப்படுகின்றது. + +ஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிசனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம் ("Oxidant") என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிசனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை, ஏவூர்திகளில் நீர்ம ஆக்சிசன், ஐதரசன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்சிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள் ("free radicals") உற்பத்தி செய்யப்படுகின்றன. மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும், புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும், புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கும் வேதிப் பொருள், இதய நோய், புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்சிமம் ("anti oxidant") ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்சிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்சிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A, தனிமங்களுள் செலினியம், செம்பு, துத்தநாகம், திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு ("flavonoids") எதிர் ஆக்சிமம் பண்பைக் கொண்டுள்ளன. + +என்.எப்.பி.ஏ 704 சீர்தரம் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் உடல்நலத்திற்கு தீங்கில்லாததாகவும் எரியாததாகவும் வினையாற்றாததாகவும் ஆனால் ஆக்சிகரணியாக மதிப்பிட்டுள்ளது. செறிந்த ஆவியால் உயராக்சிசன் ("hyperoxia") ஏற்படத் தீவாய்ப்பு, கடுங்குளிர் நீர்மங்களின் பொதுவான தீங்கான தோலுறைவு ஆகிய காரணங்களால் குளிரூட்டப்பட்ட நீர்ம ஆக்சிசனுக்கு ("LOX") தீங்கு மதிப்பாக 3 தரப்பட்டுள்ளது; மற்ற மதிப்பீடுகள் அழுத்தப்பட்ட வளிமத்திற்குரியவையேயாம். + +வளிம ஆக்சிசன் () உயர்ந்த பகுதியழுத்தங்களில் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது; வலிப்புகளும் பிற நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. 50 கிலோபாசுக்கல்களுக்கு (kPa) கூடிய பகுதியழுத்தங்களில் ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; இது சீர்தர அழுத்தத்தில் ஏறத்தாழ 50% ஆக்சிசன் அடக்கம் அல்லது வழமையான கடல்மட்ட பகுதி அழுத்தமான 21 kPaக்கு 2.5 மடங்காகும். + +துவக்கத்தில், குறைப்பிரசவ மழலையர் -கூடிய காற்றுள்ள அடைப்பெட்டிகளில் வைக்கப்பட்டனர்; உயரிய ஆக்சிசனால் சில குழந்தைகளுக்கு கண் குருடானதால் தற்போது இச்செயல்முறை கைவிடப்பட்டுள்ளது. + +குறைந்த அழுத்தத்தில் பயன்படுத்துவதால் விண்வெளியில் தூய ஆக்சிசனை சுவாசிப்பது தீங்கானதல்ல.> விண்வெளியுடைகளில் சுவாசிக்கும் காற்றில் பகுதி அழுத்தம் 30 kPa (வழமையை விட 1.4 மடங்கு) ஆக உள்ளது; இது விண்ணோடியின் தமனிகளில் உள்ள ஆக்சிசன் பகுதி அழுத்தம் கடல்மட்டத்தில் இருப்பதை விட சற்றே கூடுதலாகும். + +ஆழ்கடல் இசுகூபா மூழ்கலிலும் தரைவழி சுவாசாதார மூழ்கலிலும் நுரையீரல்களிலும் மைய நரம்பு மண்டலத்திலும் ஆக்சிசன் நச்சுமை ஏற்படக்கூடும். பகுதி அழுத்தம் 60 kPa விடக் கூடுதலான உள்ள காற்றுக்கலவையை தொடர்ந்து சுவாசிப்பதால் நிரந்தர நுரையீரல் இழைமப்பெருக்கம் ஏற்படும். 160 kPa விடக் கூடுதலான பகுதியழுத்தம் தசைவலிப்புகளுக்கு வழிவகுக்கும்; இது மூழ்குவோருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும். + +செறிவான ஆக்சிசன் விரைவாக தீப்பிடிக்க உதவுகின்றது. ஆக்சிசனேற்றிகளும் எரிமங்களும் அருகருகே இருந்தால் நெருப்பு மற்றும் வெடித்தல் நிகழும் இடையூறுகள் உள்ளன. இருப்பினும் எரிதலைத் தூண்ட, வெப்பம், தீப்பொறி போன்றதோர் தீப்பற்றுதல் நிகழ்வு தேவை. ஆக்சிசன் எரிபொருளல்ல, ஆனால் ஆக்சிசனேற்றியாகும். இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், நைத்திரேட்டுகள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகளிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை. + +செறிந்த விரைவாகவும் ஆற்றலுடனும் தீப்பிடிக்க உதவுகிறது. வளிம அல்லது நீர்ம ஆக்சிசனை சேகரிக்கவும் செலுத்தவும் பயனாகும் எஃகு குழாய்களும் சேகரிப்பு ��லன்களும் எரிபொருளாக செயற்படும். எனவே ஆக்சிசனுக்கான அமைப்புக்களின் வடிவமைக்கவும் தயாரிக்கவும் சிறப்பான பயிற்சி தேவை; தீப்பற்றும் வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும். + +மரம், பெட்ரோ வேதிப் பொருட்கள், அசுபால்ட்டு போன்ற கரிமப் பொருட்களில் நீர்மநிலை ஆக்சிசன் சிந்தி அவை நனைந்தால் பின்னெப்போதும் ஏற்படும் இயக்க மோதல்களின்போது வெடிக்கின்ற அபாயம் உண்டு. மற்ற கடுங்குளிர் நீர்மங்களைப் போலவே மனித உடற் பகுதியுடன் தொடர்பேற்பட்டால் தோலுக்கும் கண்களுக்கும் தோலுறைவு ஏற்படும். + + + + + +யோகா பாலச்சந்திரன் + +யோகா பாலச்சந்திரன் ( பி. 1938, கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர். + +1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். "Never mind Silva", "bye bye Raju", "Broken Promise" போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான கே. பாலச்சந்திரன் "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார். + + +மாவீரன் செண்பகராமன்- நூலகம் திட்டம் + + + + +கால் + +கால் என்பது விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். விலங்குகளுக்குக் கால்கள் சோடிகளாக அமைந்துள்ளன. மனிதரும் பறவைகளும் இரு கால்களும் விலங்குகள் நான்கு கால்களும் கொண்டிருக்கின்றனர். சில ஊர்வன வகைகள் சில நூறு கால்கள் கொண்டுள்ளன. + +ஈ போன்ற சில பூச்சி வகைகள், கால்களால் முகர்வதற்கும் மற்றும் சுவைப்பதற்கும் திறன் பெற்றுள்ளன. + +கணுக்காலுக்குக் கீழே, பாதம் உள்ளது.மேலே, கெண்டைக்கால் உள்ளது. பாதத்தையும், மேற்புற கால் பகுதிகளான தொடை,முட்டி, கெண்டைக்கால் பகுதிகளை���் பாதத்துடன் இணைப்பது, கணுக்கால் மூட்டு ஆகும். + +காலின் அடிப்பகுதி பாதம் எனப்படுகிறது. இதன் எலும்பு அமைவுகள் உடல் எடையைத் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளதே இதன் சிறப்பு ஆகும். விலங்கினங்களில் இச்சிறப்பு, மாறுபட்டு, மேலோங்கி இருக்கிறது. + + + + +1953 + +1953 (MCMLIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +1940 + +1940 (MCMXL) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். + + + + + + + + +நாடு போற்ற வாழ்க + +நாடு போற்ற வாழ்க இலங்கையில் 1981 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. "கணேஷ் பிலிம்ஸ்" இந்த திரைப்படத்தை 1981ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள். + +வி. பி. கணேசன், கே. எஸ். பாலச்சந்திரன், கீதா குமாரதுங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி, எஸ். ராம்தாஸ் உட்படப் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை ஈழத்து இரத்தினம் இயற்றியிருந்தார். + +கண்ணன் ("வி. பி. கணேசன்") என்ற ஏழை இளைஞனும், அவனது நண்பன் மரிக்காரும் ("ராம்தாஸ்") ஒரு பணக்காரரின் ("லத்தீப்") பறிபோன பணப்பெட்டியை மீட்டுக்கொடுத்து, அவரது எஸ்டேட்டிலேயே வேலை பெற்றுக்கொள்கிறார்கள். பணக்காரரின் மகளான சரோஜா "(சுவர்ணா") எஸ்டேட் சுப்பிறிண்டெண்ட் விஸ்வநாத் ("பாலச்சந்திரன்") உடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, கண்ணனுடனும் அன்பாக நடந்து கொள்கிறாள். கண்ணன் இன்னுமொரு செல்வந்தரின் ("ஏகாம்பரம்") மகளான வனிதாவை ("கீதா") தான் உண்மையில் காதலிக்கிறான். இந்த நேரத்தில் சரோஜா கர்ப்பமாகிறாள். பழி கண்ணன் மேல் விழுகிறது. + +அவமானத்தினால் சரோஜா தலைமறைவாகிவிட, அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து, விஸ்வநாத் கண்ணன் மீதுள்ள கோபத்தினால், அவனது காதலி வனிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோய் கொலை செய்யப்போகிறான். கண்ணனுக்கும், விஸ்வநாத்துக்கும் மலை உச்சியில் சண்டை நடக்கிறது. இறந்துபோனதாக நினைத்த சரோஜா திரும்பி வருகிறாள். உண்மை தெரிய வருகிறது. இரண்டு ஜோடியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். + + + + + + +மக்கள் கலை இலக்கிய அமைப்பு + +மக்கள் கலை இலக்கிய அமைப்பு (ம.க.இ.அ) பொருளாதார வசதிகள் குறைந்த 'உழைக்கும் மக்களுக்கு' கலைகளையும் விழுப்புணர்வையும் எடுத்து செல்ல முயலும் ஒரு சமூக அமைப்பாகும். இது தமிழ்நாட்டில் இயங்குகின்றது. மார்சிய பின்புலத்தை கொண்டது. மக்கள் வழிவந்த நாட்டாரியல் கலைவடிவங்களை முன்னிறுத்துகின்றது. + + + + +கிடை வரிசை (தனிம அட்டவணை) + +தொடர் "( period )" என்பது நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகளில் ஒன்றாகும். ஒரு தொடர் வரிசையில் உள்ள எல்லா தனிமங்களும் ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான் கூடுகளைப் பெற்றுள்ளன. ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்கையில் ஒவ்வொரு தனிமமும் ஒரு புரோட்டானை அதிகமாகப் பெறுகின்றன. ஒவ்வொரு தனிமத்தின் உலோகப்பண்பும் முன்னதாக உள்ள தனிமத்தைக் காட்டிலும் குறைகிறது. இதேபோல தனிம வரிசை அட்டவனையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசைகள் தொகுதிகள் எனப்படுகின்றன. ஒரு தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் அவற்ரின் இணைதிரன் கூட்டில் ஒரே எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ஒரே இணைதிற்னையும் பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் அடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தனிமங்களும் ஒரே மாதிரியான இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளைப் பெற்றுள்ளன. உதாரணமாக கார உலோகங்கள் முதல் தொகுதியில் அடுக்கப்பட்டுள்ளன. அதிக வினைத்திறன் மற்றும் மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை அடைய ஓர் எலக்ட்ரானை இழத்தல் உட்பட ஒரே மாதிரியான பண்புகள் பலவற்றைப் பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டின் படி இதுவரை 118 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமவரிசை அட்டவனையில் அவற்றின் இடங்களும் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. + +நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த���தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன. + +தனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. +இயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். +இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன. + +முதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர். + + +இரண்டாவது தொடர்: அணு எண் 3 முதல் அணு எண் 10 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். இலித்தியம் தொடங்கி நியான் வரை 8 தனிமங்கள் உள்ளன. + +மூன்றாவது தொடர்: அணு எண் 11 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். சோடியம் தொடங்கி ஆர்கான் வர உள்ள 8 தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. + +நான்காவது தொடர்: அணு எண் 19 முதல் 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. + +ஐந்தாவது தொடர்: அணு எண் 37 முதல் 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். ருபீடியம் முதல் செனான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. +ஆறாவது தொடர்: அணு எண் 55 முதல் 86 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் +பதினான்கு உள் இடைத் தனிமங்களும் (லாந்தனைடுகள்) காணப்படுகின்றன. + +ஏழாவது தொடர்: அணு எண் 87 முதல் 118 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். ப்ரான்சியம் முதல் 26 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. எஞ்சியிருக்கும் 32 வரை தனிமங்கள் நிரப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. + + + + +ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் + +ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் என்பது மனிதக் குடியிருப்புக்கள் மற்றும் நிலைத்திருக்கும் நகர அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். + +சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது. + + + + + +குட்டி ரேவதி + +குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம் அல்லது மருத்துவர். எஸ். ரேவதி) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர் ஆவார். கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவர் ஆவார். இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார். + +இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவரே இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். இதுவே தமிழகத்தின் முதல் பெண்ணிய செய்தி இதழாகும். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். + +தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர். + +இவர் தனது சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள் தொடர்பான திறனாய்வு இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர் தனது சுய படைப்புகள் குறித்தும் பணிகளைத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார். இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார். இவர் சமகாலத்திய தமிழ் கவிஞராக இருந்து கருத்து முரண்பாடுகளைக் கொண்ட, வாதத்துக்கிடமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். + +சிறுகதை நூல் + +நிறைய அறைகள் உள்ள வீடு , முதல் பதிப்பு (2013), பாதரசம் பதிப்பகம் + + + + + + +படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் + +புலமைச் சொத்துக்களை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் எனப்படுகிறன. + +படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. அவ்வாறு உரிமங்களும் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அழைக்கப்படுகிறன. + +இந்த உரிமங்களின் துல்லியமான கட்டளைகள் அவற்றின் வெளியீடு பொறுத்து சற்று வேறுபடுகின்றன. + +ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. + +படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோட்டு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + +இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்ப��்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + +உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த் தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + +இவ்வுரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + +இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தைனை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம்ச் எய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + +இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் "இலவச விளம்பர" ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். + +சுருக்கமாக + +ஒப்பந்த உரை + + + + + + +முப்பிரிவுகள் விதி + +முப்பிரிவுகள் விதி (rule of thirds) என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றில், கூட்டமைவு (composition) தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும். + +ஒரு ஓவியம் அல்லது நிழற்படம் ஒன்றை குறுக்காகவும், நெடுக்காகவும் இவ்விரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்காக வரையப்படும் நான்கு கோடுகளும் அவற்றுள் ஒன்றையொன்று வெட்டும் நான்கு புள்ளிகள் கிடைக்கும். இந்த நான்கு புள்ளிகளும் அந்த ஓவியத்தின் அல்லது நிழற்படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். படமொன்றைப் பார்க்கும்போது ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இக் குவியப் புள்ளிகள் குறிக்கின்றன. இதனால் ஓவியம் போன்றவற்றில் இடம் பெறுகின்ற முதன்மையான அம்சங்களை அமைப்பதற்கு இப் புள்ளிகளை அண்டிய இடங்கள் பொருத்தமானவை ஆகும். இதுவே முப்பிரிவுகள் விதியாகும். + +அருகிலுள்ள படம் முப்பிரிவுகள் விதியின் பயன்பாட்டை விளக்குகின்றது. படத்திலுள்ள அடிவானம், கீழ் மூன்றிலொரு பகுதியை, மேலுள்ள மூன்றில் இரண்டு பகுதியிலிருந்து பிரிக்கும் கோட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மரம், இரண்டு கோடுகளின் வெட்டுப் புள்ளியில் உள்ளது. படத்தின் முக்கியமான அம்சம், இக்கோடுகளில் ஒன்றை உண்மையில் தொடவேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாகப் படத்தில், அடிவானத்துக்கு மேலுள்ள ஒளி மிகுந்த பகுதி மேற்குறிப்பிட்ட கோடுகளில் ஒன்றின்மேல் பொருந்தி வரவில்லை. எனினும் இது, இரண்டு கோடுகளின் வெட்டுப்புள்ளிக்கு அண்மையில் இருப்பதனால், முப்பிரிவுகள் விதியினால் கிடைக்கக்கூடிய சாதகங்களை அடையமுடிகின்றது. + +முப்பிரிவுகள் விதியின் அடிப்படையில் அமைக்கப்படும் படங்கள், முதன்மை அம்சங்களை நடுவில் வைத்து அமைக்கும் படங்களைவிடக் கூடிய ஆற்றலையும், ஆர்வத்தையும் உருவாக்கக்கூடியன என்பது இவ்விதியைப் பின்பற்றுபவர்களது கருத்தாகும். அத்துடன் இத்தகைய முறையில் அமைந்த நிழற்படங்கள், ஓவியங்கள் முதலியன, கூடுதலான அழகியற் தன்மை கொண்டனவாகவும், தொழில்முறைத் தகுதி கொண்டனவாகவும் இருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது. + + + + + +மரவேலைக் கருவிகள் + + + + + + +தமிழர் தாவரவியல் + +தமிழர் சுற்றாடலில் காணப்பட்ட தாவரங்களை உணவு, மருந்து, உடை, உறையுள் என பலதரப்பட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றார்கள். இதனால் தமிழர்களிடம் இத்தாவரங்கள் பற்றி நுணுக்கிய அறிவு உண்டு. இந்த அறிவை தமிழர் தாவரவியல் எனலாம். + + + + + + +சமநிலை (வடிவமைப்பு) + +வடிவமைப்பு தொடர்பில், சமநிலை என்பது, கலை ஆக்கங்களின் பகுதிகளின் கூட்டமைவில், ஒரு பகுதி இன்னொரு பகுதியை அமுக்கி விடாதபடி இருக்கும் நிலையைக் குறிக்கும். இது வடிவமைப்புக் கொள்கைகளில் ஒன்று. சமநிலையைச் சமச்சீர் ஒழுங்கமைவு மூலம் அல்லது சமச்சீரற்ற ஒழுங்கமைவு மூலம் அடையமுடியும். உண்மையில் சமநிலை என்பது குறிப்பிட்ட ஆக்கத்தின் கூட்டமைவில் காணப்படும் உறுதி நிலை குறித்த உணர்வு ஆகும். + +ஒவியக்கலை, நிழற்படக்கலை, கட்டிடக்கலை போன்றவை தொடர்பான வடிவமைப்புக்களின் போது "சமநிலை" முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. + +அருகில் உள்ளது, 17 ஆம் நூற்றாண்டில் ஜொஹான்னஸ் வேர்மீர் என்னும் ஒல்லாந்த ஓவியர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியமாகும். இது சிறப்பான இதன் சமநிலைக்குப் பெயர் பெற்றது. + + + + +இடது இதயவறை + +இடது இதயவறை (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை இடது சோணையறையில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது. + +இடது இதயவறை உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது இதயவறையை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்க��ன்றன. + + + + + +துரோணர் + +துரோணர் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பரதுவாஜரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதானந்தரின் மகள் கிருபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான். பிரம்மனிடம் இருந்து இந்திரனுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் துரியோதனனுக்குத் தந்தவர். + +பாரத்துவாசர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது க்ருடசி என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்த கந்தர்வக் கன்னியைக் கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் துரோணர். + +துரோணர் பரம ஏழை. அவர் வீட்டில் ஒரு பசு மாடுகூட இல்லை. பாலையே ருசி பார்க்காமல் வளர்ந்தார் மகன் அசுவத்தாமன். கஞ்சிக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தார் அசுவத்தாமன். துரோணரின் இளமைக் கால நண்பர் பாஞ்சால நாட்டு அரசர் துருபதனிடம் போய் ஒரு பசுவை வாங்கி வருமாறு கிருபி துரோணரை நச்சரித்தாள். "சிறுவயதில் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வதாக அவன் சொல்லியிருக்கிறான்" எனக் கூறி துருபதனிடம் சென்று தனது சிறு வயது வாக்குறுதியை நினைவூட்டினார். துருபதன் வாய்விட்டுச் சிரித்தான். "சமமானவர்களுடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியும். நான் செல்வம் மிகுந்த மன்னன்; நீயோ ஏழை முனிவன் நாம் நண்பர்களாக இருக்க முடியாது. நட்பின் அடிப்படையில் பசுவைக் கேட்காதே. தர்மமாக கேள் பசுவை தானமாக தருகிறேன்" என்றார் துருபதன். இதைக் கேட்டதும் துரோணர் வருத்தமும், கோபமும் கொண்டார். "ஒரு நாள் உனக்கு இணையாக மன்னனாகி மீண்டும் வருவேன்" என்று சபதம் செய்து பாஞ்சாலத்தை விட்டு வெளியேறினர். + +போர் வித்தையில் தேர்ந்த ஆசிரியரான பரசுராமனிடம் போய் போர்த் தந்திரங்களைக் கற்றார். என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டு விடாதே என எச்சரித்தார் பரசுராமர். மாட்டேன் என வாக்குறுதி தந்தார் துரோணர். ஆனால் பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே வாக்குறுதியை மறந்து அத்தினாபுரம் சென்று குரு வம்சத்திற���கு ஆசானாகி குரு வம்ச சத்திரிய இளைஞர்களை துருபதனுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார். + +துரோணர் அத்தினாபுரம் வந்த போது குரு வம்சத்துப் பிள்ளைகள் கிணற்றிலிருந்து ஒரு பந்தை மீட்பதில் மும்முரமாக இருந்தனர். இராச குமாரர்களுக்கு உதவ நினைத்தார் துரோணர். நீண்ட ஒரு புல்லை எடுத்து கிணற்றில் இருந்த பந்தின் மீது வீசினார். இது பந்தைத் துளைத்து ஒட்டிக்கொண்டது. அடுத்தப் புல்லை எடுத்து ஏற்கனவே பந்தின் மீது ஒட்டியிருந்த புல்லின் மீது வீசினார் புல்லின் மேல் நுனியோடு சேர்ந்து ஒட்டிக்கோண்டது. இப்படியே அடுத்து அடுத்து எடுத்து வீச ஒரு சங்கிலித் தொடரைப் போல கோர்த்துக் கொண்டதும் புல்லை மெதுவாக மேலே இழுத்தார் பந்து மேலே வந்தது. துரோணர் அடுத்து தன் மோதிரத்தை எடுத்து கிணற்றில் வீசினார். அம்பை எடுத்து வில்லில் பூட்டி எய்தார். அம்பு பாய்ந்து சென்று மோதிரத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டு மேலே வந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போன அரச குமாரர்கள் பீஷ்மரிடம் சென்று நடந்ததை கூறினார்கள். + +துரோணரை அழைத்து அரச குமாரர்களுக்கு ஆசானாக நியமித்தார் பீஷ்மர். ஆனால் துரோணர் அரச குமாரர்களுக்கு ஓர் நிபந்தனை விதித்தார். "எனக்கு குரு தட்சணையாக பாஞ்சால மன்னன் துருபதனை உயிரோடு பிடித்துவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்". "அப்படியே ஆகட்டும்" என ஒப்புக்கொண்டனர் அரச குமாரர்கள். கௌரவர்களையும்,பாண்டவர்களையும் துரோணர் சீடர்களாக எற்றுக்கொண்டார். வெகு சீக்கிரத்திலேயே தருமன் ஈட்டி எறிவதிலும், அருச்சுனன் வில் வித்தையிலும், பீமனும், துரியோதனனும்,துச்சாதன்னும் கதை சுழற்றுவதிலும், நகுலன்,சகாதேவன் இருவரும் வாள் வீச்சிலும் தேர்ந்தனர். + +கௌரவர்களும்,பாண்டவர்களும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றனர். துரோணருக்கு குரு தட்சணை கொடுக்க வேண்டிய தருணம் வந்தது. அவர்கள் பாஞ்சாலத்துக்குள் புகுந்து துருபதனின் பசுக்களை எல்லாம் வெளியே விரட்டிவிட்டு துருபதனைப் போருக்கு அழைத்தனர். பசுக்களை மீட்க துருபதன் வெளியே வந்ததும்,"நம் ஆசான் துருபதனை உயிரோடு பிடித்துக்கொண்டு வர பணித்திருப்பதால் அவனது படைகளுடன் போரிட்டு நாம் களைப்படைந்து விடுவோம் "என்று அருச்சுனன் சொன்னதை பாண்டவர்கள் ஏற்றனர். கௌரவர்கள் எப்போதுமே பாண்டவர்கள���டன் ஒத்துப் போகாதவர்கள் துருபதனின் படைகளை எதிர்த்து போரிட்டார்கள். அருச்சுனன் தேரில் ஏறிக்கொண்டு தருமரிடம் "நீங்கள் குருநாதரிடம் செல்லுங்கள். நாங்கள் நால்வரும் துருபதனை பித்துக்கொண்டு வருகிறோம்" என்றான். பீமன் கதையைச் சுழற்றிக்கொண்டு துருபதனை நோக்கி முன்னேறினான். அருச்சுனனின் தேர்ச் சக்கரங்களைப் பாதுகாத்தபடி நகுலனும்,சகாதேவனும் சென்றனர். கௌரவர்களால் கவனம் சிதறிய துருபதன் அடுத்து யோசிப்பதற்குள் அருச்சுனன் அவன் மீது பாய்ந்து தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். பீமன் கயிற்றால் கட்டி தேரில் ஏற்றினான். அவமானத்தால் குன்றியிருந்த துருபதனை துரோணரின் முன் நிறுத்தினர். தன் முன்னே நின்ற துருபதனைப் பார்த்து "உன் நாட்டில் பாதியை என் சீடர்களுக்குத் தந்தால் உன்னை விடுவிப்பார்கள்" என்றார் துரோணர். துருபதன் அதற்கு சம்மதித்தான். "அப்படியானால் பாஞ்சாலத்தில் கங்கையாற்றின் வட பகுதியை கேட்கிறார்கள். உனது ஆட்சி கங்கையின் தெற்கு பகுதியில் மட்டும்தான் என்றார் துரோணர். + +துரோணர், ஜாதியில் குறைவு கூறி ஏகலைவனை சீடனாக ஏற்க மறுத்ததும், ஏகலைவன் தாமாகவே கற்றுக்கொண்டபின் அவன் அர்ஜுனனுக்கு போட்டியாக இருக்கக்கூடாது என்றும் தமது வார்த்தை பொய் போகக்கூடாது என்றும் கருதி அவனது கட்டை விரலை தட்சிணையாகக் கேட்டதும் துரோணரது குறைபாடு. அஸ்திரசஸ்திரங்களில் நிபுணராக இருந்த துரோணர் ஆத்மகுண நிபுணராக இல்லாததாலேயே துரியோதனன் கட்சியிலிருந்து பாண்டவர்களை எதிர்க்கவேண்டிய தர்மசங்கட நிலை துரோணருக்கு ஏற்பட்டது. + +துருபதனிடம் பெற்ற பாஞ்சாலத்தின் வட பகுதியை துரோணருக்கு குரு தட்சணையாக கொடுத்தனர். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அங்கு நின்ற துருபதனிடம் நான் இப்போது பாஞ்சாலத்தின் ஒரு பாதி நாட்டுக்கு மன்னன், நீ மீதிப் பாதி நாட்டுக்கு மன்னன், நாம் இருவரும் இப்போது சமம், இனி நாம் நண்பர்களாக இருப்போமா"? என்றார். மனதுக்குள் பழி வாங்கும் எண்ணம் இருந்தாலும் துருபதன் அதை ஏற்று சம்மதம் தெரிவித்தான். + +மகாபாரதம் இதிகாசத்தில், துரோண பர்வத்தின் குருச்சேத்திரப் போரில், துரோணர் ஐந்து நாட்கள் கௌரவப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக தலைமை தாங்கி பாண்டவப் படைகளை நிர்மூலம் செய்தார். + +அசுவத்தாமா எனும் இவரது மகன் உயிரோடிருந்த போதே இறந்ததாக துரோணர் கருதும்படி தர்மர், "அசுவத்தாமா ஹத:" என்று சொல்லி பின்னர் கடைசியில் "குஞ்ஜர;" எனும் வார்த்தையைச் சேர்த்தார். கடைசி வார்த்தை காதில் விழாதபடி கிருஷ்ணர் பாஞ்சசன்யத்தை முழக்க; மகன் இறந்ததாக நினைத்து மனமொடிந்து வாழ்வில் விருப்பத்தை விட்டார் துரோணர். + +சத்தியவிரதராக இருந்த காரணத்தால் தரையில் படாமல் நான்கு அங்குலம் மேலே இருந்து வந்த தர்மரின் தேர் பூமியைத் தொட்டது. அதுவரை மற்றவர்களை விட உயர்ந்தவராக இருந்த தர்மர் மற்றவர்களைப் போல் ஆனார். + +அப்போது பீமன், "பிராமணராகிய நீங்கள் குலத்தொழிலை விட்டு போர் புரிய வந்ததால் அரசர்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டீர்கள், நீங்கள் இந்தப் பாப வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது சாபக்கேடு" என்று துரோணரைக் குற்றம் சாட்ட, அதனைக் கேட்ட துரோணர் ஆயுதங்களை எறிந்து விட்டுத் தேர்த்தட்டில் ஏறி உட்கார்ந்தபோது, திரௌபதியின் சகோதரர் திருட்டத்துயும்னனால் கொல்லப்பட்டார். + +போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திருட்டத்துயும்னன் கொல்லப்பட்டார். + + + + + + +வலது ஏட்ரியம் + +வலது ஏட்ரியம் (முந்தைய வழக்கு: வலது ஆரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது இரத்தத்தை மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை, இதயச்சிரை ஆகியவற்றில் இருந்து பெறுகிறது. பின் குருதியானது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது. + + + + + +கரும்புலிகள் நாள் + +கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். + +விடுதலைப்புலிகளின் முதல் தற்கொடைத் தாக்குதல் 1987 சூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. + +கரும்புலிகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் பலவற்றில் ஈ��ச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது. டென்மார்க்கில் இருபதாவது ஆண்டு கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 24.08.2013 அன்று நடத்தப்பட்டது. + + + + + +இலங்கை படைத்துறை + +இலங்கை இராணுவம் 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர். + +http://www.army.lk/ + + + + +ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி + +ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி என்பது இலங்கை இராணுவத்தினுள்ள மறைவாக தாக்குதல் நடத்தும் படைப்பிரிவாகும். இது நீண்ட தூர வேவு காவல் அணி எனவும் மகாசேனன் படைப்பிரிவு எனவும்அழைக்கப்படும். + + + + +தமிழர் விலங்கியல் + +தமிழர் தம் சுற்றாடலில் வாழும் விலங்குகளை உணவு, மருந்து, உடை, வேளாண்மை, போக்குவரத்து என பலதரப்பட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய பயன்படுத்துகின்றார்கள். மாடு, நாய், யானை, குரங்கு, புலி போன்ற விலங்குகளுடன் சமய, உளவியல் அடிப்படையிலான பிணைப்பும் உண்டு. இதனால் தமிழர்களிடம் இவ்விலங்குகள் பற்றி நுணுக்கிய அறிவு உண்டு. இந்த அறிவை தமிழர் விலங்கியல் எனலாம். + + + + + +தமிழர் சிறுபான்மையியல் + +சிறுபான்மை மக்கள் குழுக்களின் அடையாளம், அதிகார ஊடாடல்கள், சிறுபான்மை-பெரும்பான்மை தொடர்பாடல், சிறுபான்மை அரசியல் போன்ற விடயங்களை ஆயும் இயலை சிறுபான்மையியல் எனலாம். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் சிறுபான்மை இனமாகவே இருக்கின்றார்கள். தமிழர்களுடன் தொடர்புடைய அல்லது தமிழர்களை தொடர்புபடுத்தி சிறுபான்மையியல் மேற்கொள்ளப்படும்பொழுது அதை தமிழர் சிறுபான்மையியல் எனலாம். தமிழர்கள் சிறுபான்மையினமாக எங்கும் இருப்பதால் இது ஒரு தமி���ர்களுக்கு ஒரு முக்கிய சமூக அறிவியல் இயலாக இருக்கின்றது. + + + + +புளோரின் + +புளோரின் ("Flourine") அல்லது புளூரின் என்னும் தனிமம் F என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் அணுவெண் 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை ("chemical reativity") கொண்டதும், அதிக எதிர்மின்னி பிணைப்பீர்ப்பும் ("electronetativity") கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய வளிமம். இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது இரட்டை மூலக்கூறாக இருக்கும். இதன் வேதியியல் குறியீடு F. மற்ற ஆலசன்களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும். + +தூய புளோரின் (F) அரிக்கும் பண்புடைய வெளிர் மஞ்சள் அல்லது இளம் பழுப்பு நிற வளிமம். இது வலுவான ஆக்சைடாக்கி. இதன் எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு (electronetativity) 4.0 ஆக இருப்பதால் பெரும்பாலான தனிமங்களுடன் இணைந்து சேர்மங்கள் ஆகின்றது. நிறைவுடைய வளிமங்களாகிய (noble gasses) கிருப்டான் (krypton), செனான் (xenon), ரேடான் (radon) ஆகியவற்றுடன் கூட இணைந்து சேர்மமாகின்றது. ஒளியின்றி, குளிர்ந்த சூழலிலும், புளூரின் ஐதரசனுடன் வெடிப்புடன் இணைகின்றது. மிகவும் வேதியியல் இயைபுடையதால், புளோரின் பீய்ச்சில் கண்ணாடி, மாழைகள், முதலிவவை மட்டுமன்றி நீருடனும் பிறபொருட்களுடனும் சேர்ந்து ஒளிர்வுடன் எரியும். இதன் இயைபுத் தன்மையால் இதனை சாதாரண கண்ணாடி முதலிய கொள்கலங்களில் வைத்திருப்பது கடினம், எனவே புளூரோ-கார்பன் பூச்சுடைய ஒருவகையான சிறப்பு குவார்ட்சு (சிலிக்கான்-டை-ஆக்சைடு) குழாய்களில் இது வைக்கப்பட்டிருக்கும். ஈரப்பதம் உடைய காற்றுடன் கலந்தால் மிகவும் கேடு விளைவிக்கும் ஐதரோ-புளூரிக் காடி உருவாகும். நீர்க்கரைசல்களில், புளோரின் புளோரைடு மின்ம அணுவாய், F, இருக்கும். + +கால்சியம் புளூரைடு (புளூர்சுபார் அல்லது புளூரைட்டு என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, மாழைகளைக் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக 1530ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் . 1670ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை அம்ஃபிரி டேவி, கே லூசாக்கு, அந்துவான் இலவாசியே முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர். + +இந்த ஐதரோ புளூரிக் காடியில் முன்பு கண்டறியாத ஒரு புதுப் பொருள் இருப்பது உணரப்பட்டது. ஆனால் இது மிகவும் விறுவிறுப்பாக பிற பொருட்களுடன் இயைபுற்றதால், இதனை தனியே எளிதில் பிரிக்கமுடியவில்லை. கடைசியாக பல அறிஞர்கள் சுமார் 74 ஆண்டுகளாக முயன்ற பின்னர் 1866ல் என்றி முவாசான் (Henri Moissan) பிரித்தெடுத்தார். +இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. + +அணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய ஓரிடத்தானாகிய U மற்றும் U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது. + + +புளோரின் எனப்படும் மூலகம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. புளோரின் மில்லியனில் 25 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், காற்று வழிகள், நுரையீரல் போன்ற பகுதிகளில் அரிப்பு போன்ற உணர்வை உண்டாக்கும். அத்தோடு கல்லீரல், சிறுநீரகம் என்பவையும் பாதிப்படையலாம். ஆனால் மில்லியனில் 100 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், மூக்கு போன்றவை கடுமையாகச் சேதமடையும். + + + + + +தமிழர் இயல் தலைப்புகள் பட்டியல் + + + + + + + + +http://www.moderntamilworld + + + + + + + விக்சனரியின் "அம்மா" என்ற சொல்லுக்குச் சென்று, கீழுள்ள "உறவுச்சொற்கள்"(~190சொற்கள்) என்ற பகுப்பைக் காணவும். + + + + +தமிழர் நிலத்திணைகள் + + + + + + +ஆன்றி முவாசான் + +பெர்டினாண்டு பிரடரிக் ஆன��றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) (செப்டம்பர் 28, 1852 - பெப்ரவரி 20, 1907) பிரான்சு நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர். இவர் புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. + +முவாசானின் குடும்பத்தினர், பிரான்சில் தூலூசு (Toulouse) என்னும் இடத்தில் இருந்து பாரிசுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு இவர் செப்டம்பர் 28, 1852 இல், கிழக்குத் தொடர்வண்டித் துறையில் (இரயில்வே) பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். 1864 இல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் ("grade universitaire" ) பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் "பாக்குலோரியா" (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874 இல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார். + +முவாசான் முதன் முதலாக 1874 இல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார், குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்ற�� துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார். முவாசான் 1882 இல் இலியோனீ இலியுகோன் (Léonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885 இல் ஒரு மகன் பிறந்தார். 1880 களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி செய்முறையகம் (ஆய்வகம், செய்களம்) ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல செய்முறையகங்களைப் பயன்படுத்தினார், எடுத்துக்காட்டாக சார்லசு பிரீடேல் (Charles Friedel) அவர்களின் செய்களம். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது சூன் 26, 1886 அன்று புளூரின் (ஃவுளூரின்) வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது. முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய "பிராங்கு" தந்தனர். + + + + +வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் + +லிபரேசன் நடவடிக்கை அல்லது வடமராட்சி நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகும். பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும். + +இந்���டவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ,கேர்னல் விஜய விமலரத்ன இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர். ஜூன் 4, 1987 அன்று இந்திய வான்படை இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் வான்பரப்பில் உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது (பூமாலை நடவடிக்கை). இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. + +1987 மே 27 இல் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை எனப்பொருள்படும் ஆப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்டது. 5 நாட்கள் நீடித்த இராணுவத்தரப்பில் இந்த நடவடிக்கை கொப்பேகடுவ வழிகாட்டலில் இந்த அப்பாவித் தமிழர்களை வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கும் இனவாத நடவடிக்கையாக அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலியில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. மேலும் பலாலி விமான நிலையம் இருந்து திருச்சிக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு முழுமையான இராணுவ விமான தளமாக்கப்பட்டது. மேலும் பல அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமானநிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலையீடு வேண்டும் எனக் கோரக் காரணம் ஆயிற்று. இந்த இராணுவ நடவடிக்கை அடுத்தே 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தது. + +1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களி���ால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவ முகாம்களினூடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர், வடராட்சிப் பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர். இந்த இராணுவ நடவடிக்கை வடமராட்சியுடன் இடைநிறுத்தப்பட்ட போதும் இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முழு யாழ்ப்பணத்திற்கும் ஆனதாகக் கருதப்படுகின்றது. + + + + +வாடைக்காற்று (திரைப்படம்) + +வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் "வாடைக்காற்று" என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. "கமலாலயம் மூவிஸ்" தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் "சிறந்த தமிழ்த் திரைப்படம்" என்ற விருதினைப் பெற்றது. + +இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய "பிரேம்நாத் மொறாயஸ்" இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள். + +வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் ("மனோகரன்") உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா ("சந்திரகலா")வுடன் கொண்ட உறவு அவளது தந்தை ("பிரான்சிஸ்"), தமையன் ("கந்தசாமி") ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் ("ஜேசுரட்னம்") பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை ("ஆனந்தராணி") கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு ("பாலச்சந்திரன்") அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு. + +மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் ("இந்திரகுமார்") என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் ("ஜவாஹர்") கிண்டல் செய்கிறான். + +ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. + + + + + + +அனைத்துலக பெண்கள் நாள் + +அனைத்துலக பெண்கள் நாள் ("International Women's Day") ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். + +1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்த��வம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்த��லகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. + +அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். + +பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று. + +1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எ��ிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. + +பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. + + + + + + +லக்சம்பர்க் + +லக்சம்பர்க் (Luxembourg), மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. இங்கு 2,600 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஐந்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழ்கின்றனர். + +லக்சம்பர்கில், அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சியுடன் நாடாளுமன்ற மக்களாட்சி செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக லக்சம்பர்க் பங்கு வகித்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கான லக்சம்பர்க்கின் புரிந்துணர்வை அறியலாம். இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமுமான லக்சம்பர்க் நகரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை இடமாக விளங்குகிறது. + +இங்கு, பிரெஞ்சு மற்றும் லக்சம்பர்கிய மொழியே அன்றாட வாழ்வில் மிகையாகப் பயன்பட்டாலும், ஜெர்மன் மொழியும் அலுவல்முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமய சார்பற்ற நாடாக இருந்த போதிலும், லக்சம்பர்கில் உரோமக் கத்தோலிக்கர்கள் மிகுந்த அளவில் உள்ளனர். + + + + +ஆம்ஸ்டர்டம் + +ஆம்ஸ்டர்டம் , நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரமாகவும் பண்பாட்டு மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. ஆகஸ்ட் 1, 2006 நிலவரப்படி, ஆம்ஸ்டர்டமில் 741,329 மக்கள் வாழ்கிறார்கள். இதுவே, அண்டியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பெரு நகரான ஆம்ஸ்டர்டமையும் கணக்கில் கொண்டால் 15 இலட்சம் மக்கள் வாழ்க���றார்கள். + +ஆம்ஸ்டர்மின் நகர மையம், ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் மையங்களில் ஒன்றாகும். இந்த நகர மையத்தின் வரலாறு 17ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. +ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தின் தலைநகராக இருந்தபோதிலும் நெதர்லாந்தின் நீதிமன்றம், பாராளுமன்றம், அரசாங்க அமைப்புகள் போன்றவை இங்கு இல்லை. இவை அனைத்தும் டென் ஹாக் நகரில் இருக்கின்றன. தவிர, ஆம்ஸ்டர்டம், அது அமைந்திருக்கும் வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமும் அன்று. ஹார்லெம் நகரே வட ஹாலந்து மாகாணத்தின் தலைநகரமாகும். + +ஆம்ஸ்டர்டம், அதன் பன்முகத் தன்மை, பொறுத்துப் போகும் தன்மை, தாராளப் போக்கு ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. +18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆம்ஸ்டர்டாம் ஐரோப்பாவில் நான்காவது பெரிய நகரமாக இருந்தது, கான்ஸ்டான்டிநோபிள் (சுமார் 700,000), லண்டன் (550,000) மற்றும் பாரிஸ் (530,000) ஆகியவற்றின் பின்னணியில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் தலைநகராகவோ அல்லது டச்சுக் குடியரசின் அரசாங்கத்தின் இடமாகவோ இல்லை, ஏனெனில் அது இங்கிலாந்து, பிரான்ஸ் அல்லது ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தை விடவும் மிகவும் சிறியதாக இருந்தது. அந்த மாநகரங்களுக்கு மாறாக, ஆம்ஸ்டர்டாம் லீடென் (67,000), ராட்டர்டாம் (45,000), ஹார்லெம் (38,000), மற்றும் உட்ரெக்ட் (30,000) போன்ற பெரிய நகரங்களாலும் சூழப்பட்டிருந்தது. + +18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகர மக்களின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்தது, 1820 இல் 200,000 ஆக மாறியிருந்தது.19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், தொழில்மயமாக்கல் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சியை தூண்டியது. 1959 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் மக்கள் தொகையில் 872,000 பேர் உயர்ந்தனர். + +1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில், ஆம்ஸ்டர்டாம் அதன் மிகப்பெரிய மக்கள்தொகை சரிவை சந்தித்தது, 1985 ஆம் ஆண்டில் 675,570 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். இது விரைவில் மறு நகர்ப்புறமயமாக்கப்பட்டது, இது 2010 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது.இதனால் ஆராய்ச்சி, தகவல் மற்றும் புள்ளிவிவரம் ஆகியவற்றின் நகராட்சித் துறை 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சியில் ஒரு புதிய சாதனையை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. +ஆம்ஸ்டர்டாம் ஒரு பெரும் கட்டிடக்கலை ���ரலாற்றைக் கொண்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள மிகப்பழைய கட்டிடமான ஓடே கேர்க் (பழைய சர்ச்) என்பது வால்லேன்னின் பகுதியின் இதயத்தில் அமைந்துள்ளது, இது 1306 இல் பிரதிஷ்டை முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.ஆம்ஸ்டர்டாமில் உள்ள பழங்கால மர கட்டடம் பெகிஜின்ஹோஃப் பகுதியில் உள்ள ஹூட்டன் ஹூய்ஸ் என்பதாகும். இது சுமார் 1425 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் இரு மரத்தாலான கட்டிடங்களில் ஒன்றாகும். இது ஆம்ஸ்டர்டாமில் கோத்திக்(Gothic) கட்டிடக்கலைக்கு சில எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். 16 ஆம் நூற்றாண்டில், மர கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அதற்கு பதிலாக செங்கல்கள் பயன்பாட்டிற்க்கு வந்தன.இந்த காலகட்டத்தில், பல கட்டிடங்கள் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டன.ஆம்ஸ்டெர்டாம் விரைவில் தனது சொந்த மறுமலர்ச்சி கட்டமைப்பை உருவாக்கியது. இந்த கட்டிடங்கள் கட்டட வடிவமைப்பாளர் ஹென்ட்ரிக் டி கெய்ஸரின் கொள்கைகளின்படி கட்டப்பட்டுள்ளன.ஹென்ட்ரிக் டி கெய்ஸர் வடிவமைத்த மிக உறைக்கத்தக்க கட்டிடங்களில் ஒன்றுதான் வெஸ்டர்க்கெர்க். 17 ஆம் நூற்றாண்டில் பரோக் கட்டிடக்கலை மிகவும் பிரபலமானது. இது கிட்டத்தட்ட ஆம்ஸ்டர்டாமின் கோல்டன் வயதுடன் ஒத்துப்போனது. ஆம்ஸ்டர்டாமில் இந்த பாணியில் முன்னணி வடிவமைப்பாளர்கள் ஜேக்கப் வான் கேம்பன், பிலிப்ஸ் விங்போன்ஸ் மற்றும் டேனியல் ஸ்டால்பேயிர்ட் ஆகியோர்.பிலிப் விங்போன்ஸ் நகரம் முழுவதிலுமுள்ள வியாபாரிகளின் வீடுகளை அற்புதமாக வடிவமைத்தார். ஆம்ஸ்டர்டாமில் பரோக் பாணியில் ஒரு பிரபலமான கட்டிடம் டாம் சதுக்கத்தில் கட்டப்பட்ட ராயல் அரண்மனை. 18 ஆம் நூற்றாண்டு முழுவதும், ஆம்ஸ்டர்டாம் பிரெஞ்சு கலாச்சாரத்தால் பெரிதும் பாதித்க்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டில், கட்டிடக் கலைகளில் பரோக் பாணியை முற்றிலுமாக கைவிட்டு வெவ்வேறு புதிய பாணிகளில் கட்டத் தொடங்கினர். +ஆம்ஸ்டெர்டாம் நகரில் பல பூங்காக்கள், திறந்தவெளி இடங்கள் மற்றும் சதுரங்கள் உள்ளன. நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக இருக்கும் வொண்டல்பெர்க், ஆட்-சூயிட் நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டின் ஆம்ஸ்டர்டாம் எழுத்தாளர் ஜொஸ்ட் வான் டென் வொண்டல் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை இந்த பூங்கா கொண்டுள்ளது. ���ூங்காவில் ஒரு திறந்த வெளி திரையரங்கு, ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் பல ஹொர்கா வசதிகள் உள்ளன. சூயிட் நகரில், பீட்ரிக்ஸ்ஸ்பார்க், ராணி பீட்ரிக்ஸின் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆம்ஸ்டர்டாம்ஸே போஸ் (ஆம்ஸ்டர்டாம் வனம்), ஆம்ஸ்டர்டாமின் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு இடம். ஆண்டுதோறும் சுமார் 4.5 மில்லியன் மக்கள் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றனர், இது 1000 ஹெக்டேர் அளவுக்கு உள்ளது மற்றும் சென்ட்ரல் பார்கையும்விட மூன்று மடங்கு பெரிய இடத்தை உடைய வனம் இது ஆகும்.பிற பூங்காக்களில் டி பிஜ்ப் நகரிலுள்ள சர்ஃபடிபார்க், ஓஸ்டெர் நகரிலுள்ள ஓஸ்டெர்பார்க் மற்றும் வெஸ்டர்பார்க் நகரிலுள்ள வெஸ்டர்பார்க் ஆகியவை அடங்கும். + +ஐரோப்பாவின் நான்காவது மிகப்பெரிய துறைமுகமான ஆம்ஸ்டெர்டாம் துறைமுகம், உலகின் 38 வது மிகப்பெரிய துறைமுகமும், நெதர்லாந்தில் மெட்ரிக் டன் சரக்குகளின் இரண்டாவது பெரிய துறைமுகமும் ஆகும். 2014 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டெர்டாம் துறைமுகத்தில் மொத்தமாக 97.4 மில்லியன் டன் சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.நெதர்லாந்தின் மிகப்பெரிய கப்பல் துறைமுகம் ஆம்ஸ்டர்டாம் துறைமுகம் ஆகும், ஒவ்வொரு வருடமும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இங்கு வருகின்றன.ஆம்ஸ்டர்டாம் பண்ட பரிமாற்றம் (AEX), (தற்போதய யூரோநெஸ்ட்டின் ஒரு பகுதியாக உள்ளது), உலகின் மிகப் பழைய பங்குச் சந்தை மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். நகர மையத்தில் அணை சதுக்கத்திற்கு அருகில் உள்ளது. ஆம்ஸ்டர்டாம் துறைமுகம், ஐந்தோவன் (பிரைய்ன் துறைமுகம்) மற்றும் ரோட்டர்டாம் (துறைமுகம்), ஆம்ஸ்டர்டாம் (விமான நிலையம்) ஆகியவை டச்சு பொருளாதாரத்தின் அடித்தளமாக அமைகின்றன. +ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் ஆம்ஸ்டர்டாம், ஆண்டுதோறும் 4.63 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹோட்டல்கள் மூன்றில் இரண்டு பங்கு நகர மையத்தில் அமைந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில்லாத பார்வையாளர்களின் மிகப்பெரிய குழு அமெரிக்காவில் இருந்து வருகிறது, இது மொத்த தொகையில் 14% ஆகும். +2008 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாமில் 140 திருவிழாக்கள் நடைபெற்றன. ஆம்ஸ்டர்டாமில் பிரபலமான திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பின்வருமாறு: கோனிங்ஸ்டாக் (2013 இல் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரின் முடிசூட்டு வரை கொங்கிங்கின்னடேக் என்ற பெயரிடப்பட்டது) (அரசரின் தினம் - ராணியின் தினம்); நிகழ்ச்சி கலைகளுக்கான ஹாலந்து விழா;கன்னாபீஸ் கோப்பை; மற்றும் உயிட்மார்க்ட் விழா. ஏப்ரல் 30 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட கோனிங்ஸ்டாக் விழா அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்டெம்போர்க்குக்கு பயணம்செய்வர். இத்தினத்தில் முழு நகரமும் சந்தைகளில் இருந்து தயாரிப்புகளை வாங்குதல் அல்லது பல இசைக் கச்சேரிகளில் ஒன்றில் வருகை தருதல் என கொன்டாட்டத்தில் மூழ்கியிருக்கும். +இது பெருங்கடல்க் காலநிலையைக் கொண்டது. + + + + +ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் + +இலங்கை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கொழும்பில் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் வேளாண்மை ஆய்வுகள் மற்றும் பயிற்றுவிக்கும் நிலையமாகும். + +இது கீழ்வரும் அமைப்புகளுடன் சேர்ந்தியங்குகின்றது. + + + + + +காச நோய் + +என்புருக்கி நோய் அல்லது காச நோய் ("Tuberculosis", "டியூபர்க்குலோசிசு") என்பது மைக்கோபாக்டீரியா ("mycobacteria") என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு ("Mycobacterium tuberculosis") என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. + +காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை. + +இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது "Tubercle bacillus" ("டியூபர்க்கில் பாசிலசு")அல்லது TUBERCULOSIS ("டியூபர்க்குலோசிசு") என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவு��், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. + +இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது "துஞ்சுநிலையில்" (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர். + +நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் "டியூபர்க்குலின்" (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது. + +உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது. + +2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. , , . வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடி தீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது. + +தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. + +நோயானது தீங்குதரத் தொடங்கும்பொழுது, நோயாளிகளில் 75% பேருக்கு நுரையீரல் காச நோயாக (பல்மனரி டிபி, Pulmonary TB) இருக்கும். அவற்றின் அறிகுறிகளாவன; நெஞ்சு நோவு, இருமலுடன் குருதி வெளிவரல், 3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல். குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; காய்ச்சல், தடிமன், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல், உடல் வெளிறியிருத்தல், மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல் + +மீதம் இருக்கும் 25% நோயாளிகளில் இந்த நோயானது நுரையீரலிலிருந்து வேறு உடல் உறுப்புக்களுக்குப் பரவிச் செல்கிறது. இது "நுரையீரலுக்கு வெளியான காச நோயென" (Extra Pulmonary TB) அழைக்கப்படும். இவை பொதுவாக உடலில் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களிலும், குழந்தைகளிலும் ஏற்படும். இவ்வகை காச நோய் நரம்புத் தொகுதியைத் தாக்குகையில் (மூளை, தண்டுவடங்களின் சவ்வு உறையைத் தாக்குகையில்) மெனிஞ்சைட்டிசு (Meningitis) என்றும், நிணநீர்த் தொகுதியைத் தாக்குகையில் கழுத்துப் பகுதியில் சுக்ரோபுயூலா (scrofula) என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிளியூரா (pleura) எனப்படும் நுரையீரல் குழியின் இரட்டைச் சவ்வுப்படலம், இரைப்பை-குடல் தொகுதி, எலும்ப��கள், மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளையும் தாக்கி நோயுண்டாக்க வல்லவை. எலும்பு, மூட்டுக்களைப் பாதிக்கையில் அது பாட்டின் நோய் (Pott's disease) என அறியப்படுகிறது. + +நுண்கிழிவுகளாகக் காணப்படும் குருனைக் காசநோய் (Miliary tuberculosis) மிகவும் கடுமையான ஒரு நோய்த்தன்மை கொண்டதாகும். இந் நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை (millet, தினை) போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் உருவாகிறது. அந்தப் புண்கள் X - கதிர் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.. + +நுரையீரல் காசநோய், நுரையீரலுக்கு வெளியான காசநோய் இரண்டும் ஒரே நோயாளியில் தாக்கியிருக்கவும் கூடும். + +முதன்மையான நோய்க் காரணி "Mycobacterium tuberculosis" (MTB) என்னும் கோலுருவான (bacilli), ஒரு காற்றுவாழ் (aerobic) பக்டீரியாவாகும். இதில் 16-20 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையே உயிரணுப்பிரிவு நிகழ்வதால், ஏனைய பக்டீரியாக்களுடன் ஒப்பிடும்போது (பொதுவாக பக்டீரியா ஒரு மணித்தியாலத்திற்குள் ஒரு தடவை உயிரணுப்பிரிவடையும்), மிகவும் மெதுவான வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கிறது. (E.coli என்னும் மிக விரைவான வளர்ச்சியுடைய பக்டீரியா 20 நிமிடத்திற்கொரு முறை உயிரணுப்பிரிவு அடைகின்றது. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு ("Mycobacterium tuberculosis") உயிரணு உயிரணுச்சுவரைக் கொண்டிருப்பினும், வெளி பொசுபோலிப்பிட் மென்சவ்வைக் கொண்டிராதமையால் கிராம் நேர்வகைப் (Gram positive) பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கிராம் நிறமூட்டுகையின்போது, இதன் உயிரணுச்சுவரில் உள்ள அதிகளவிலான லிப்பிட்டு, மைக்கோலிக் காடி (அமிலம்) (Mycoli acid) காரணமாக, மிக மென்மையாக நிறமூட்டப் பட்டோ, அல்லது நிறமூட்டப்படாமலோ காணப்படுகின்றன. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு ("Mycobacterium tuberculosis") பக்டீரியாவானது பலமற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்து, உலர் நிலையில் பல கிழமைகள் உயிருடன் வாழும் வல்லமை கொண்ட, கோலுருவான பாசிலசு (bacillus) வகையைச் சார்ந்தது ஆகும். இது, இயற்கையில், ஓர் ஏற்புதரும் உயிரினத்தின் உடலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டிருப்பினும், தகுந்த வளர்ப்பூடகத்தில் செயற்கையாக, பரிசோதனைக் குழாய்களில் வளர்க்கப்படக் கூடியவையாய் உள்ளன. + +நோயாளிகளின் வாயிலிருந்து பெறப்படும் சளியில் செய்யப்��டும் இழையவியல் நிறமூட்டுகையில் இருந்து, சாதாரண நுணுக்குக்காட்டி மூலம், அறிவியலாளர்களால் இந்த பக்டீரியாவை இனம்காண முடியும். பொதுவான கிராம் நிறமூட்டுகையின்போது, இவ்வகை பக்டீரியாக்கள் நிறமூட்டப்பட்டாலும், பின்னர் காடிக் கரைசல்களுடன் கையாளப்படும்போது, இந்த பக்டீரியாவானது நிறநீக்கத்துக்கு உட்படாமல், சில நிறங்களை தக்க வைத்துக் கொள்வதனால், இது காடியின் நிலை கொள்ளும் பாசிலசு (Acid Fast Bacillus - AFB) என்னும் பிரிவினுள் வகைப்படுத்தப்படுகிறது.. இவ்வகை பக்டீரியாக்களை இனம்காண பொதுவாக பயன்படும் சோதனைமுறை சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகை ஆகும்.. இந்த சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகையின்போது, நீலநிற பின்புலத்தில், பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும். + +ஔராமைன்-ரோடாமைன் (Auramine-rhodamine) நிறமூட்டுகை, மற்றும் தூண்டொளிர் (fluorescent) நுண்ணோக்கி மூலமாகவும் AFB ஐ இனம்காண முடியும். மேலும் இரு பகுதி, இரு படிமுறை AFB குளிர் நிறமூட்டுகை (two component, two step AFB cold staining method) முறையினாலும் இந்த பாக்டீரியா இனம் காணப்பட முடியும்.. + +M.tuberculosis complex ஆனது, காசநோயை உருவாக்கவல்ல, வேறு மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன M. bovis, M. africanum, M. microti. இவற்றில் M. africanum அதிகளவு பரவியிருக்காவிட்டாலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. முன்னைய ஒரு கால கட்டத்தில் M. bovis காசநோய்க்கான பொதுவான ஒரு காரணியாக இருந்தவந்த போதிலும், பின்னர் கிருமிநீக்கிய பாலின் (pasteurized milk) அறிமுகத்தினால், வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்காரணியால் பொதுவான சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. M. microti யானது பொதுவாக நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்களிலேயே நோயை உண்டாக்குவது அறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்நோய்க் காரணியின் பாதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது. + +நோயை உருவாக்கும் திறனுள்ள வேறு சில மைக்கோபக்டீரியா வகைகளும் உள்ளன. Mycobacterium leprae தொழுநோயை உருவாக்கும் வல்லமை கொண்டது. Mycobacterium avium, M. kansasii ஆகிய இரண்டும் காசநோயை உருவாக்காத மைக்கோபக்டீரியா (Non Tuberculosis Mycobacteria - NTB) வகையினில் அடங்கும். இவையிரண்டும் காச நோயையோ, அல்லது தொழுநோயையோ உருவாக்காவிட்டாலும், காச நோயை ஒத்த நுர��யீரல் சம்பந்தமான சில நோய்களை உருவாக்க வல்லன. + +சாதாரண தடிமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது. நுரையீரல் காசநோய்த் தொற்றுக்குட்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது துப்பும்போது வெளியேற்றும் 05-5 µm விட்டமுள்ள காற்றுத் துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும் + +நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது. காசநோய் அதிகமிருக்கும் இடத்தில் வசிப்பவர்கள், சரியான முறையில் தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகளை போட்டுக் கொள்பவர்கள், தொற்றுக்குட்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள், மனித உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் தன்மை கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், எய்ட்சு நோய்த் தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகள், மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு உதவும், மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியாளர்கள் என்போர் இந்நோய்த் தாக்கத்திற்குட்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருக்கும் + +நோய்க்காரணியினால் தொற்றுக்குட்பட்ட பலரில், நோயானது வெளித்திரியாமல் ஒரு மறைநிலையில் (Latent TB) காணப்படும். இப்படி நோயானது மறைநிலையில் காணப்படும் ஒருவரால் புதிய தொற்று ஏற்படமாட்டாது. நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நிகழ்தகவானது நோய்க்காவியாக (carrier) செயற்படும் ஒருவரினால் வெளியேற்றப்படும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நீர்த் துளிகளின் எண்ணிக்கை, அவர் இருக்கும் இடத்தில் காற்றோட்டத்தின் தன்மை, நோய்க்காரணியை எதிர்கொள்ளும் நேரத்தின் அளவு, "M.tuberculosis" வகையின் நோயேற்படுத்தும் தன்மையின் அளவு (virulence) போன்ற காரணிகளில் தங்கியிருக்கும். இதனால் தொற்றானது தொடராக ஏற்படுவதைத் தவிர்க்க, நோய் செயல்நிலையில் உள்ளவரை உடனடியாக தனிமைப்படுத்தி, காசநோய்க்கெதிரான சிகிச்சையை தாமதிக்காமல் மேற்கொள்வதுமேயாகும். அப்படி சிகிச்சை செய்யப்படுமிடத்து, இரண்டு கிழமைகளில் அவர் பொதுவாக தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு செல்வார். + +புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி நோயின் செயற்படு நிலையில் உள்ள ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும். காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. "Mycobacterium bovis" ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது. + +"M.tuberculosis" இனால் தாக்கத்துக்கு உட்படுவோரில் 90% ஆனவர்கள் அறிகுறிகளற்ற, நோயின் மறைநிலையையே (Latent TB Infection - LTBI) கொண்டிருப்பார்கள். இப்படி மறைநிலையில் இருப்போரில் 10% ஆனவர்கள் மட்டுமே பிந்திய தமது வாழ்க்கைக் காலத்தில், செயற்பாடுள்ள நோயை பெறுகின்றனர். ஆனாலும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து, நோயைப்பெற்ற நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். + +நோய்க்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகளுக்காகப் பெறப்படும் மாதிரிகளில் இருந்து (உமிழ்நீர், சீழ்) நோய்க்காரணி நிச்சயமாக அறிந்து கொள்ளப்படும்போது, நோயானது கண்டு பிடிக்கப்படும். இது சாத்தியமில்லாமல் போகுமிடத்து, X- கதிர் படப்பிடிப்பு மூலமும், அத்துடன், அல்லது டியூபெர்குலின் தோல் சோதனை மூலமும் நோயானது உறுதிப்படுத்தப்படும். +நோய்க்காரணியின் மிக மெதுவான வளர்ச்சி வேகத்தினால் இந்நோயை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குருதி, அல்லது உமிழ்நீர் மாதிரிகளை, தகுந்த வளர்ப்பூடகத்தில் சோதனைச்சாலையில் வளர்த்தெடுக்க 4 - 12 கிழமைகள் பிடிக்கின்றது. காசநோய் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கணிப்பீட்டிற்கு மருத்துவ வரலாறு, நேரடி உடல் சோதனைகள் (Physical examination), நெஞ்சின் X-கதிர் படம், நுண்ணுயிர்களின் பூச்சு (microbial smear), நுண்ணுயிர் வளர்ப்பு (microbial culture) என்பன தேவையாகின்றன. அத்துடன் டியூபெர்குலின் சோதனையும், இரத்த நிணநீர் சோதனை (serological test) போன்றனவும் செய்யப்படலாம். +டியூபெர்குலின் சோதனை முடிவுகளை விளக்குவதானது, ��ற்கனவே குறிப்பிட்ட நபர் காசநோய்த் தடுப்பு (BCG vaccine) செய்துள்ளாரா, அவர் நோயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தாரா போன்ற காரணிகளில் தங்கியிருக்கும். அத்துடன் இந்த சோதனை முறையானது வேறு சில நோயுள்ளவர்கள், சத்தூட்டம் குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது. + +உலக சுகாதார அமைப்பானது இநோயின் தீவிரத்தை முன்னிட்டு, 1993 ஆம் ஆண்டில், "உலகளாவிய காசநோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம்" ஒன்றை முன்னெடுத்தது. அதன் நோக்கம் ஆண்டுகள் 2006 - 2015 இற்கிடையில் இந்நோயினால் நிகழக் கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும். "M.tuberculosis" வகையினால் நோய்த் தொற்றுக்கு உட்படக்கூடிய இனம் மனித இனமாக மட்டுமே இருப்பதனால், வீரியமுள்ள ஒரு தடுப்பு மருந்தின் உதவியுடன் இந்த நோயை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் சாத்தியம் என்றே நம்பப்படுகிறது. +காசநோயை ஏற்படுத்தாத வேறு மைக்கோபக்டீரிய இனங்கள் அதிகமாக உள்ள வெப்ப மண்டல நாடுகளில் இயற்கையாகவே காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது. காசநோய்த் தடுப்பு இரு வழிகளில் நடை முறைப்படுத்தப்படலாம். + +நோய் அதிகம் ஏற்படும் நிகழ்தவுள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி, நோயுள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து, அவர்களை குணப்படுத்துதல். இதன் மூல நோயானது மேலும் பரவுவதை தடுக்கலாம். +1921 ஆம் ஆண்டில் பாசில்லசு கால்மெட்-குவெரின் (பா.கா.கு) (Bacillus Calmette-Guerin (BCG)) தடுப்பூசியானது மனிதர்களில் காசநோயைத் தடுக்கும் நோக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தத் தடுப்பூசி மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) நுண்ணுயிரை வலுவிழக்கச்செய்யும் மாற்றங்களுக்கு உட்படுத்தி தயாரிக்கப்பட்டது. செயற்கையான வளர்ப்பூடகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வளர்த்ததில், மனிதர்களில் நோயை உருவாக்கும் தன்மையை இந்த நுண்ணுயிர் இழந்திருக்கும். இந்த தடுப்பூசியானது குழந்தைகளிலேயே உரிய தொழிற்பாட்டை காட்டுகிறது. பெரியவர்களான பின்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், அது சரியான முறையில் தொழிற்படுவதில்லை. + +1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட���ம் தடுப்பு மருந்தாகும். + +ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். + + +இவ்வகையான நுண்ணுயிர் கொல்லிகளில் சிலவற்றை ஒருசேர எதிர்க்கும் திறனுள்ள (Multi Drug Resistance or Extensively Drug Resistance), "M.tuberculosis" பக்டீரியா வகை புதிதாக உருவாகியிருப்பதால் சில சமயம் சிகிச்சை சரியான பலனைத் தர முடியாமலும் போகின்றது. + +தொல்பழங் காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது. Tuberculosis மாடுகள் / கால்நடைகளிலிருந்து தோன்றி, மனிதர்களைத் தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட ஒரு இனமா, அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறமை கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றி, பின்னர் திரிபடைந்த ஒரு இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் "மை.போவிசு" (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே "மை. டியூபர்குலோசிசு" (M. tuberculosis) திரிபடைந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது. + +முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இநோயை இப்பெயரிட்டு அழைத்தனர். உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. இந்நோயின் ஒரு நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் X - கதிர் படத்தில் காணப்படுகிறது. அது "குருனைக் காசநோய் "(Miliary tuberculosis)" என அழைக்கப்படுகிறது. 1882 இல் "Tuberculosis bacillus" ஐ , தனிப்படுத்தி, பிரித்தெடுத்த (isolated) அறிவியலாளர் ரோபேர்ட் கொக் (Robert Koch) இன் நினைவாக இந்நோய் 'கொக் நோய்' (Koch disease) எனவும் அழைக்கப்படுகிறது + +இயந்திர தொழில் புரட்சிக்கு முன்னைய காலத்தில், இந்நோயானது இரத்தக்காட்டேரித்தனமாக கருதப்பட்டது. காரணம் ஒரு குடும்பத்தினர் இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது சிறிதாக உடல்நலம் குன்றியவர்களாக வருவார்கள். அந்நிலமைக்குக் காரணம் அந்த இறந்துபோனவரின் ஆவியே என்றும், அது மற்றவர்களின் வாழ்க்கையை உறிஞ்சி அழிப்பதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும் காசநோய்க்கு ஆட்பட்ட மனிதர்களில் தோன்றும் அறிகுறிகளும் அவர்களை அவ்வாறு நம்ப வைத்திருந்தது. அதிக ஒளியினால் தாக்கப்படக் கூடிய சிவந்த, வீங்கிய கண்கள், வெளிறிய தோல், மிகவும் குறைந்த உடல் வெப்பம், பலவீனமான இதயம், இரத்தத்தை வெளியேற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களை அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு தள்ளியிருந்தது. இரத்தம் உறிஞ்சப்படும் காரணத்தாலேயே இவ்வாறு இருமும்போது இரத்தம் வருகிறது என்று நினைத்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது. + +1020 ஆம் ஆண்டில் இபுன் சினா (Ibn Sina) என்பவர் எழுதிய "மருத்துவத்தின் அடிக்கோட்பாடுகள்" (The Canon of Medicine) என்னும் நூலில் இருந்து இந்நோய் பற்றிய படிப்பு துவங்கியது எனக் கூறலாம். இது ஒரு தொற்றுநோய் என முதலில் கண்டு பிடித்து அறிவித்து, இது சலரோகம் அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என முதலில் கூறி, இது மண் அல்லது நீரினால் பரவலாம் என்றுக் கூறிய அறிவியலாளர் இவரே. இந்நோயின் பரவலைத் தடுப்பதற்கான முறைய உருவாக்கியவரும் இவரேயாவார். முன்னைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. + +1689 ஆம் ஆண்டில் ரிச்சர்டு மார்ட்டன் (Dr.Richard Morton) என்பவரினால் நுரையீரலில் ஏற்படும் காசநோய்க்கும் டியூபர்கியூலோசிசுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டு இருந்த போதிலும், இந்நோயின் பல வேறுபட்ட அறிகுறிகளின் காரணமாய், 1820 வரையில், இது ஒரு தனியான நோயென்பது சரியாக அறியப்படாமல் இருந்ததுடன், 1839 இல் J.L.Schönlein என்பவர் குறிப்பிடும்வரை Tuberculosis என பெயரிடப்படாமல் இருந்தது. மாமத்து (Mammoth) குகையின் உரிமையாளரான முனைவர் சான் குரோகன் (Dr. John Croghan) என்பவர் 1838 – 1845 ஆண்டுப் பகுதியில், இந்நோயால் தாக்கப்பட்ட சில நோயாளிகளை இக்குகைக்குள் இருக்கும் மாறாத வெப்பநிலையும், சுத்தமான காற்றும் குணப்படுத்திம் என்றெண்ணி கொண்டு வந்து வைத்திருந்த போதும், அவர்கள் ஒரு வருடத்திலேயே இறந்து விட்டனர். இந்நோய்க்கான முதல் ��ிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் செர்மனியில் கோபர்சுடோர்பு (Görbersdorf) என்னுமிடத்தில், (தற்போது போலந்தில் சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில்) எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. + +நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய பக்கம் + + + + + +நீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (ஓவியம்) + +நீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (Woman in Blue Reading a Letter), என்பது, நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் (Johannes Vermeer) என்பவரால், 1663-1664 காலப்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியம் ஆகும். இது தற்போது, அம்ஸ்ட்டர்டாமில் உள்ள "ரைக்ஸ்மியூசியம்" ("அரசு காட்சிக்கூடம்") எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. + +சிந்தனையில் ஆழ்ந்துள்ள பெண்ணொருத்தியின் தனி உருவத்தைக் கொண்டமைந்த இவரது ஓவியமான, முத்துத் தோட்டுடனான பெண் (Girl with a Pearl Earring) என்னும் ஓவியத்தைப்போலவே, தனியான பெண்ணொருத்தி கடிதமொன்றை வாசிக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் கூட்டமைவின் மையமாக இருக்கும் இப்பெண் தனது வேலையில் முழுமையாக ஈடுபட்டிருப்பது படத்தில் தெரிகிறது. + +இவ்வோவியம், இதன் கூட்டமைவின் எளிமை காரணமாகவே வேறு பல ஓவியங்கள் மத்தியில் வெளிப்பட்டு நிற்கிறது. முன்னைய ஓவியங்களில் கட்டாயமாக இருந்த சாளரம் இந்த ஓவியத்தில் கைவிடப்பட்டுவிட்டது. பெண்ணைச் சூழ இருக்கும் நாற்காலிகள், மேசை என்பனவும் முக்கியத்துவம் இல்லாதவையாக உள்ளன. பின்னணியில் உள்ள நிலப்படம் மட்டுமே ஓவியத்தின் ஒருசீர்த் தன்மையைக் (uniformity) குறைக்கும் அம்சமாக உள்ளது. வேர்மீருடைய நிறப் பயன்பாடு, மென்மையானதும், உயர் பண்பாக்கம் (sophistication) கொண்டதுமாக ஆகியுள்ளது. பெண்ணுடைய மேலாடையிற் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நீலம் ஏனைய நிறங்களை விஞ்சி நிற்கிறது. + +இதன் செந்நெறிப் பாங்கான எளிமையும், பீடும், ஏறத்தாழப் பண்பியல்சார் (abstract) கருத்துருவும் இவ்வோவியத்தை வெர்மீரின் மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்று ஆக்குகின்றன. + + + + +முத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்) + +முத்துத் தோட்டுடனான சிறுமி ("Girl with a Pearl Earring", ) நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. இதன் பெயர் குறிப்பதுபோலவே இவர் ஒரு முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் உள்ள "மோரித்சுயிஸ்" எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது சில வேளைகளில், "வடக்கின் "மோனா லிசா"" அல்லது "டச்சு மோனா லிசா" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது. + +பொதுவாக, வெர்மீரைப் பற்றியோ அவரது ஆக்கங்கள் பற்றியோ அதிக விபரங்கள் தெரியாது. இந்த ஓவியம், "IVMeer" என்று ஒப்பமிடப் பட்டுள்ளது. ஆனால், தேதியிடப்படவில்லை. இவ்வோவியத்தை வரைவதற்காக இவரை யாராவது அமர்த்தினார்களா? அப்படியானால் அது யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இது ஒரு வழமையான உருவப்படமாக (portrait) வரையப்படவில்லை என்றே தெரிகிறது. வெர்மீர், இந்தச் சிறுமி யாரையோ நோக்கித் திரும்பிய போதான கணத்தை வரைய முயன்றிருக்கலாம். இந்தச் சிறுமியின் அடையாளம் தெரியவில்லை. எனினும், இது வெர்மீருடைய மகள் மரியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. + +வெர்மீருடைய அரிய ஆக்கங்கள் வெளிநாட்டினருக்கு விலைபோய்விடுவதைத் தடுப்பதற்காகப் பல ஆண்டுகள் முயற்சித்த "விக்டர் டி ஸ்ட்டூவர்" என்பவரின் ஆலோசனைப்படி, ஏ. ஏ. டெஸ் தோம்பே (A.A. des Tombe) என்பவர், 1881 ஆம் ஆண்டில் ஹேக் நகரில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் இந்த ஓவியத்தை, இரண்டு கில்டரும் முப்பது சதங்களும் மட்டுமே கொடுத்து வாங்கினார். அந்த நேரத்தில் இந்த ஓவியம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. டெஸ் தோம்பேக்கு வாரிசுகள் இல்லாததால், இதையும், வேறு ஓவியங்களையும், 1902 ஆம் ஆண்டில் "மோரித்சுயிஸ்" அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். + +1937 ஆம் ஆண்டில், வெர்மீரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட இதே போன்ற இன்னொரு ஓவியம் சேகரிப்பாளரான அண்ட்ரூ டபிள்யூ. மெலொன் (Andrew W. Mellon) என்பவரால், வாஷிங்டனில் உள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்கு (National Gallery of Art) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போது இது ஒரு போலி ஓவியம் எனப் பரவலாகக் கருதப்படுகின்றது. + + + + + +விசுவல் பேசிக் நெட் + +விசுவல் பேசிக் .நெட் விசுவல் பேசிக் வழிவந்த மைக்ரோசப்ட் .நெட்-இல் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மொழியாகும். இதற்கு விஷ்வல் பேஸிக்குடன் பின்நோக்கிய ஒத்திசைவு கிடையாது. + +இதன் வ��ருத்தியாளர்கள் விசுவல் பேசிக் .நெட் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ திறந்த விருத்திச் சூழலான ஷாப்டெவ் இன் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ பாவிப்பர். + +எல்லா .நெட் மொழிகளைப் போலவே விபி .நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் அவசியம். + + + + + + +தனிமம் + +வேதித் தனிமம் "(Chemical element: இலங்கை வழக்கு: மூலகம்") என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும் . 118 தனிமங்கள் இதுவரை அடையாளம் கானப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றுவனவாகும் எஞ்சியிருக்கும் 24 தனிமங்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவனவாகவும் இருக்கின்றன. 80 தனிமங்கள் குறைந்த பட்சமாக ஒரு ஐசோடோப்பையாவது பெற்றுள்ளன. 38 தனிமங்களின் உட்கருக்கள் கதிரியக்க உட்கருக்களாக உள்ளன. ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன், இரும்பு, கந்தகம், பாசுபரசு, தங்கம், பாதரசம், யுரேனியம் போன்றவை தனிமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். புவியில் ஆக்சிசன் என்ற தனிமம் எங்கும் நிறைந்திருக்கும் தனிமமாகவும், இரும்பு என்ற தனிமம் நிறை அடிப்படையில் அதிகமாகக் காணப்படும் தனிமமாகவும் கருதப்படுகிறது. + +அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பருப்பொருட்களால் ஆனவையாகும். இப்பருப்பொருட்கள் யாவும் வேதிதனிமங்களால் உருவாக்கப்பட்டவையாகும். நாம் கண்களால் காணக்கூடிய சாதாரணமான பருப்பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களில் வெறும் 15% மட்டுமே உருவாக்குகின்றன என்று வானியல் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவை கரும்பொருள் எனப்படுகிறது. இதன் பகுதிக்கூறுகள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால்; நிச்சயமாக அது வேதித்தனிமங்களால் ஆக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது. + +ஐதர்சன், ஈலியம் என்ற இரண்டு இலேசானத் தனிமங்களும் பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றியவைகளாகும். இவை பிரபஞ்சத்தில் காணப்படும் மிகப்பொதுவான தனிமங்களாகும். அடுத்த தனிமங்களான இலித்தியம், பெரிலியம், போரான் மூன்றும் பெரும்பாலும் அண்டக்கதிர்வீச்சின் அணுக்கருத் தொகுப்பு வினையால் உருவானவையாகும். எனவே இவை கன உலோகங்களைக் காட்டிலும் அரிதாகக் கிடைக்கின்றன. விண்மீன்களு��்குள் நிகழும் அணுக்கரு இணைவு மூலம் 6 முதல் 26 வரை புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் உருவாகின்றன. ஆக்சிசன், சிலிக்கன், இரும்பு போன்ற தனிமங்கள் அதிக அளவில் காணப்படுவது இதன் பிரதிபலிப்பாகும். 26 புரோட்டான்களைவிட அதிகமாகக் கொண்ட தனிமங்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் மீயொளிர் விண்மீன்களில் தோன்றியவை ஆகும். இவ்விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது இத்தனிமங்கள் விண்ணில் சிதறி கோள்கள் உருவாகும்பொது அவற்ருக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது . + +தனிமம் என்ற சொல்லின் பொருள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டவை எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது அயனியா வேதியியல் முறையில் பிணைக்கப்பட்டுள்ளதா என்பதைப்பற்றி கவலை கொள்வதில்லை. மேலும் ஒரு தூய்மையான வேதிப்பொருள் ஒரே தனிமத்தால் ஆனதையும் தனிமம் என்ற சொல் குறிக்கிறது. உதாரணம் ஐதரசன் .தனிமம் என்பது ஒரு தொடக்கநிலை பொருள் என்ற புரிதலும் கூறப்படுகிறது. இப்பொருளை ஆங்கில வேதியியல் நூல்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சில மொழிகள் அங்கீகரிக்கின்றன. ஓர் எளிய தனிமத்திற்கு பல புறவேற்றுமை வடிவங்கள் இருக்கலாம். + +வெவ்வேறு தனிமங்கள் வேதியியல் முறையில் இணைந்து வேதிச் சேர்மங்களாக உருவாகின்றன. இவ்வாறு இணையும் தனிமங்களின் அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான எண்ணிக்கை தனிமங்களே தூய கனிமங்களாக தனித்துக் கிடைக்கின்றன. செப்பு, வெள்ளி கார்பன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மந்த வாயுக்களும் அரியவகை தனிமங்களும் பிற வேதிப்பொருட்களுடன் இனைந்த நிலையிலேயே கிடைக்கின்றன. இயற்கையில் தனித்துக் கிடைப்பதாகக் கூறப்படும் 32 தனிமங்களும் கூட கலவைகளாகவே கிடைக்கின்றன. ஆக்சிசன், இரும்பு, நிக்கல் போன்ற தனிமங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். + +கார்பன், கந்தகம், செப்பு மற்றும் தங்கம் போன்ற இயல்பான தனிமங்களை கண்டுபிடித்த பழங்கால மனித சமூகங்கள் இத்தனிமங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. பின்னர் தோன்றிய புதிய நாகரீக மக்கள் கரியைப் பயன்படுத்தி தனிமங்களை தூய்மைப்படுத்தவும் பிரித்தெடுக்கவும் கற்றனர். இரசவாதிகளும் வேதியியலாளர்களும் பின்னர் பல ��னிமங்களை அடையாளம் கண்டார்கள்; கிட்டத்தட்ட இயற்கையில் தோன்றும் அனைத்து தனிமங்களும் 1900 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. . + +தனிமங்களின் அணு எண் அதிகரிப்பின் படி அவை தனிம வரிசை அட்டவணையில் அடுக்கப்பட்டன. அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொகுக்கப்பட்டன. மாசுக்கள், அரை வாழ்வுக் காலம், தொழிற்சாலை செயல்பாடுகள் முதலியன அடையாளம் காணப்பட்டன. + +அண்டத்தில் மிகுந்து இருக்கும் முதல் பத்து தனிமங்கள் இங்கு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன. + +ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகியன மிகவும் லேசான இரசாயன தனிமங்கள் ஆகும்.மற்ற தனிமங்களை ஒப்பிடும் போது இதன் நிறை 3 : 1 பகுதியே ஆகும்.தனிமங்கள் இயற்கையாகவும், அணுக்கரு சிதைவின் மூலமும், காஸ்மிக் கதிர்களின் மூலமும் கிடைக்கப்படுகின்றது.ஒவ்வோரு தனிமத்திற்கும் அதன் அணு எண் , அடர்த்தி, உருகுநிலை, மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும். + +ஒரு தனிமத்தின் அணு எண் அதன் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்து வரையறுக்கப்படுகிறது.உதாரணமாக, அனைத்து கார்பன் அணுக்களின் கருவிலும் 6 புரோட்டான்கள் இருக்கும். எனவே கார்பனின் அணு எண் 6 .ஆனால் நியூட்ரான்கள் வெவ்வேறு எண்களில் இருக்கும்; நியூட்ரான்களின் எண்ணிக்கையை வேறுவேறாக கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ' ஓரிடத்தான்கள்' ("isotope") என்று அழைக்கப்படுகின்றன . + +அணு கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கையே எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.அந்த எலக்ட்ரான்களே அந்த தனிமத்தின் மின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. எலக்ட்ரான்கள் அணுவின் பல்வேறு இரசாயன பண்புகளை தீர்மானிக்க, அந்த அணு அதற்கான சுற்றுப்பாதையில் ("orbitals") வைக்கப்படுகின்றது. ஒரு கருவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை இரசாயன பண்புகளை தீர்மானிக்கிறது. + +அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் மின் சுமையையும் தீர்மாணிக்கிறது. மேலும் இதன்மூலம் அந்த அணுவின் அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படுகின்றது. அணுவின் அணுக்கருவைச் சுற்றியுள்ள ஆர்பிட்டால்கள் எனப்படும் பல்வேறு சுற்றுப்பாதைகளில் எலக்ட்ரான்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆர்பிட்டால்களின் அமைப்பு அத்தனிமத்தின் பண்புகளுக்கு காரணமாகிறது. அணு எடை அணுநிறை அணு எண் போன்ற அணுவின் கூறுகள் தனிமங்களின் அடையாளத்திலும் செயல்பாட்டிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. + +தணிமத்தின் பகுப்புகளில் பல்வேறு வகை உள்ளன. பொதுவாக தனிமத்தின் நிறம், மற்றும் இரசாயன பண்புகள், உருகுதல் மற்றும் கொதிநிலை, அவற்றின் அடர்த்தி,படிக கட்டமைப்புகள், மற்றும் தோற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உறுப்புகளின் பண்புகள் பிரிக்கப்படுகிறது. + +ஆக்டினைடுகள், கார உலோகங்கள், கார மண் உலோகங்கள்,ஹாலஜன்கள், லாந்தனைடுகள், அரிய உலோகங்கள்; உலோகப்போலிகள் (மெட்டலாய்டுகள்), மந்த வாயுக்கள், பல்லணுவுள்ள அலோகங்கள் (நான்மெட்டல்கள்), ஈரணு உள்ள அலோகங்கள், மற்றும் இடைநிலை உலோகங்கள் ஆகியன தனிமத்தின் வகைகள் ஆகும். + +தனிமங்கள் மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலான தனிமங்கள் திட நிலையிலேயே இருக்கின்றன. சில தனிமங்கள் வாயுக்களாக கிடைக்கின்றன.ஆனால்,புரோமின் மற்றும் பாதரசம் மட்டும் சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் இருக்கும் போது திரவங்கள் ஆகும். சீசியம் மற்றும் கால்லியம் இரண்டும் திட தனிமங்களாகும். ஆனால், முறையே 28.4° C (83.2 ° F), 29.8 ° C (85.6 ° F) வெப்பநிலையில் உருக ஆரம்பித்துவிடும். + +தனிமங்களுக்கு முறையான பெயர் வைக்கும் முன்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் வழங்களாயிற்று.ஆனால் பின் சர்வதேச தொடர்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக, பண்டைய மற்றும் மிக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்களில் பயன்படுத்த தொடங்கினர். தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலிற்கான சர்வதேச ஒன்றியம் (ஐ. யு. பி. ஏ.) தனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டனர்.இவர்களே புதிய தனிமங்களுக்கும் பெயர் சூட்டுவர்.பொதுவாக தனிமங்களின் பெயர்கள் கண்டுபிடிப்பாளர்களின் பெயரையே சார்ந்து இருக்கும். + +ஐசோடோப்புகள் என்பவை ஒரே தனிமத்தின் வெவ்வேறு வகையான அணுக்களாகும். அதாவது அவற்றின் அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூட்ரான்களும் காணப்படும். உதாரணமாக கார்பனுக்கு மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. கார்பனின் அனைத்து ஐசோடோப்புகளும் 6 புரோட்டன்களைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றில் 6,7,8 நியூட்ரான்கள் இருக்கின்றன. எனவே இவற்ரின் அணு நிறைகளும் முறையே 12,13, 14 என மாறுபடுகின்றன. இதனால் கார்பனின் ஐசோடோப்புகள் க���ர்பன் -12, கார்பன் -13, கார்பன் -14 என்ற பெயர்களைப் பெறுகின்றன. சுருக்கமாக 12C, 13C, மற்றும் 14C என்ற குறியீடுகளாகச் சுருக்கி குறிக்கப்படுகின்றன. ஐசோடோப்புகள் ஓரிடத்தான் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. + +ஓரிடத்தான்களுக்கும் ஏற்புடையய உறுப்புக் குறியீடுகள் உள்ளன. ஐசோடோப்புகள் அணுவின் நிறை எண் (மொத்த புரோட்டான்களும் நியூட்ரான்களும்), மூலம் வேறுபடுகின்றன.ஓரிடத்தான்கலின் குறியீட்டிற்கு தனிமத்தின் குறியீடு எழுதப்பட்டு பின்னர் அணு எண்னை அவற்றின் தலைமீது எழுதிப் பயன்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக 12c மற்றும் 235U. எனினும், கார்பன்-12 மற்றும் யுரேனியம் -235, அல்லது C-12, U-235 போன்ற மற்ற குறியீடுகளையும், பயன்படுத்தலாம். + + + + + +சிறிய தெரு (ஓவியம்) + +சிறிய தெரு (The Little Street) என்பது, நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரால், 1657-1658 காலப் பகுதியில் வரையப்பட்டது. இது ஆம்ஸ்டர்டாமில் உள்ள, "ரிஜ்க்ஸ்மியூசியம்" எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் இதில் ஒரு வீடு மட்டுமே இடம்பெற்றிருப்பதாகக் கருதப்பட்டாலும், இதில் இரண்டு வீடுகள் காணப்படுகின்றன. + +இது மிகவும் எளிமையானதும், எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதுமான ஓவியமாகும். இது, அக்காலத்தில் காணப்பட்ட டச்சு வாழ்க்கையின் பொதுவான அம்சங்களைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றது. ஒரு வாழ்விடம் அங்கே வாழ்பவர்களுக்கு மறைப்பையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. ஆனால் இவற்றின் முகப்புக்கள், இவர்களுடைய நெருக்கமான இருப்பின் வெளிப்புறத்தை மட்டுமே வெளிக்காட்டுகின்றன. இந்த எளிமையை, ஓவியர், ஒரு மதிப்பு மிக்க, அமைதியான தெரு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். + +இவரது சமகாலத்தவர்களான, டி ஹூச் (de Hooch), ஜான் ஸ்டீன் (Jan Steen) போன்றோரும் செங்கல், சாந்து போன்றவற்றை வரைந்துள்ளனராயினும், அவர்கள் அவற்றைக் கையாண்ட விதம், மேலோட்டமான தோற்றத்தில் மட்டுமே வேர்மீருக்கு நெருங்கி வர முடிந்தது. வேர்மீர், தனது ஓவியங்களில் வெளிப்படுத்திய அமைதியான பீடு (கம்பீரம்) மற்றும் பரஸ்பர நெருக்கம் சார்ந்த உணர்வு என்பவை, ஏனையவர்களின் மேலோட்டமான முயற்சிகளைக் கடந்து, அவரது நோக்கங்களைத் தத்துவத்தின் எல்லைகளுக்குள் உயர்த்தியது. + + + + +மோனா லிசா + +மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. + +இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படமாக கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது. + +மோனா லிசா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ஓவியத்தின் தலைப்பு, கியோர்கியோ வசாரி அவர்கள் எழுதிய, "பிரான்சிஸ்கோ டெல் NNNNNகியோகாண்டோவின் மனைவி மோன லிசாவற்காக, லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம்" என்பதிலிருந்து புலனாகிறது. மோனா என்ற பெயரானது, இத்தாலிய வழிச்சொல்லான "மடோனா" என்ற பெயரிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. மேலும் இப்பெயரானது, ஆங்கிலச் சொல்லான "மேடம்" என்பதற்கு ஒத்ததாகும். இந்த மடோனாவின் சுறுக்கமே, மோனா என்பதாகும். கவிஞர் வசாரியின் கூற்றுப்படி, இப்படத்தின் தலைப்பு மோனா என்றானது. பிற்காலத்தில் இப்பெயர் மருவி "மோனலிசா" என்றானது. + +மோனா லிசா என்ற பெயர், வசாரி அவர்கள் 1550ல் வெளியிடப்பட்ட லியோனார்டோவின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் இறந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வோவியத்தின் மூலத்தை கண்டறிந்தனர். 1525ல்,லியொனார்டோவின் உதவியாளரான சாலை இறந்ததற்குப் பிறகு, "லா கியோகாண்டா" என்று பெயரிடப்பட்ட அவருடைய தனிப்பட்ட ஆவணங்களில், இந்த ஓவியம் "லியோனார்டோ மூலம் அவருக்கு வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் அனைத்தும் 2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழக அறிஞர் ஒருவரால், 1477ம் ஆண்டு ரோமனிய தத்துவவாதியான "சிசரோ" எழுதிய ஒரு தொகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. லியொனார்டோவின் சமகாலத்தவரான அகஸ்டினோ வெஸ்புசியின் ஏடுகளில் லியொனார்டோவைப் பற்றின குறிப்புகள் அடங்கியுள்ளன. அதில் அக்டோபர் மாதம் 1503ம் ஆண்டு, பிரான்சிஸ்���ோ டெல் கியோகாண்டோவின் மனைவியான லிசாவின் ஓவியத்தை தீட்டிக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார். +சித்திரத்தில் அமர்ந்திருக்கும் லிசா டெல் கியோகாண்டோ என்பவர், பிளாரன்ஸ் மற்றும் டஸ்கானி அவர்களின் கிரார்தினி குடும்பத்தைச் சார்ந்தவரும், பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டு வர்த்தகரான பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியுமாவார். இந்த ஓவியத்தினை, தாங்கள் குடியேறும் புதிய வீட்டில் வைத்து, அவர்களது இரண்டாவது புதல்வனான ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தனர். லா கியோகாண்டா என்பது, இத்தாலிய மொழியில் "மகிழ்ச்சி தருவன" என பொருள்படும். பிரஞ்சு மொழியிலும் இப்பொருளே தரும். + +உலகப் புகழ்பெற்ற இந்த ஓவியமானது, விரோதிகிருது ஆண்டு ஆவணி மாதம், 5ம் நாள் (21 August 1911) கயவர்கள் சிலரால் திருடப்பட்டது. திருடப்பட்ட மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காக, ஐந்தாண்டுகளாக தன்னகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சாலோன் காரே அருங்காட்சியத்திற்கு சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்கு பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக சித்திரத்தினை புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, சித்திரத்தினை புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது. + +சித்திரம் இனி நமக்கு கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவு +தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர் தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையா, லியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும். மேலும், திருடிய இச்சித்திரத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் கிளர்ந்தான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இச்சித்திரத்தினை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார். இரண்டாண்டுகளில் பொறுமையி���ந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் சித்திரத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்கு திரும்பியது, மோனா லிசா சித்திரம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது. + +தாரண ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாளிற்கு (6 April 2005) பிறகு தொடர்ந்து வந்த நாட்களில் பராமரிக்கவும் பாதுகாக்கவும், சித்திரத்தை அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றினர். மேலும், காலநிலைக்கு ஏற்றார் போலும், குண்டு துளைக்காத கண்ணாடி மூலமாகவும் பராமரிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு வரை, ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்ட சித்திரம், அதற்கு பின்னர் வந்த காலங்களில், அதிக திறன் கொண்ட ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் தாக்கப்படா வண்ணம் வடிவமைத்தருந்தனர். காட்சியகம் பராமரிப்பிற்காக, சப்பானிய நிறுவனம் மூலம் நிதியுதவி பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சித்திரத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர். + + + + + + +சோசப்பு பிரீசிட்லி + +சோசப்பு பிரீசிட்லி ("Joseph Priestley", – 6 பெப்ரவரி 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர். + + + + +கொண்மம் + +கொண்மம் (Capacitance) அல்லது மின் தேக்கு திறன் என்பது மின்னூட்டம் மாறும் வீதத்திற்கும் மின்னழுத்தம் மாறும் வீதத்திற்கும் இடையேயுள்ள விகிதம் ஆகும். இரண்டு இணைகடத்திகள் (இரண்டு இணைதட்டுகள்) குறிப்பிட்ட இடைவெளியால் பிரிக்கப்பட்டு, அந்தக் கடத்திகளில் மின்னூட்டம் (மின்னேற்றம்) இருக்குமானால், அந்தத் தட்டு���ளுக்கு இடையே ஒரு மின்புலம் அமையும். அந்த மின்புலத்தில் தேக்கப்படமுடிந்த மொத்த மின்னூட்ட அளவே கொண்மம் அல்லது கொள்ளளவம் அல்லது மின் தேக்குதிறன் ("Capacitance") எனப்படும். "தன் மின்தேக்கு திறன்" ("self capacitance") மற்றும் "பரிமாற்று மின்தேக்கு திறன்" ("mutual capacitance") ஆகியவை கொண்மத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான இரு இயற்பியல் கோட்பாடுகளாகும். மின்னூட்டம் பெற்ற எந்தவொரு பொருளும் தன் மின்தேக்கு திறனைப் பெற்றிருக்கும். கொடுக்கப்பட்ட மின்னழுத்தத்திற்கு, தன் மின்தேக்கு திறன் அதிகம் கொண்ட ஒரு பொருள், குறைந்த மின்தேக்கு திறன் கொண்ட பொருளை விட, அதிக மின்னூட்டத்தை தேக்கி வைக்கும். பரிமாற்று மின்தேக்கு திறன் என்பது மின்தேக்கிகள் செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. மின்சுற்றுகளில் பயன்படும் மூன்று மின்னணுவியல் கருவிகளில் ஒன்றாகப் பயன்படுகிறது. (மின்தடை மற்றும் மின்தூண்டி ஆகியவை மற்ற இரு கருவிகளாகும்.) + +கொண்மம் என்பது வடிவம் மற்றும் வடிவமைப்பு, (எடுத்துக்காட்டாக தகடுகளின் பரப்பு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள தூரம் ஆகிவற்றை பொறுத்து மின் தேக்கு திறன் அமைகிறது.) மின் உட்புகு திறன் (permittivity), தகடுகளுக்கிடையே பயன்படுத்தப்படும் மின்கடத்தாப் பொருள் (dielectric) பொறுத்தே அமைகிறது. பல மின்கடத்தாப் பொருள்களின் மின் உட்புகு திறன் மற்றும் மின் தேக்கு திறன் ஆகியவை, மின் கடத்திகளுக்கிடையே கொடுக்கப்படும் மின்னழுத்தம் மற்றும் மின்னூட்டம் ஆகியவற்றை சார்ந்திருப்பதில்லை. +அனைத்துலக முறை அலகுகளின் படி கொண்மம் என்பது பாரடு என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில இயற்பியலாளர் மைக்கேல் பாரடே பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரு "பாரடு" கொண்மம் கொண்ட மின் தேக்கி, ஒரு கூலும் +மின்னூட்டத்தையும், தகடுகளுக்கிடையே ஒரு வோல்ட் மின்னழுத்ததையும் பெற்றிருக்கும். + +மின் சுற்றுகளில், இரு மின் கடத்திகள் அல்லது மின் தேக்கியின் தகடுகளுக்கிடையேயுள்ள பரிமாற்று மின்தேக்கு திறன் என்பதன் சுருக்கமாகவே கொண்மம் அல்லது மின்தேக்கு திறன் எனப்படுகிறது. தனித்த ஒரு கடத்தியில் ஏற்படும் கொண்மமே, தன் மின்தேக்கு திறன் எனப்படுகிறது. +தனித்த ஒரு கடத்தியின் மின்னூட்டத்தை உயர்த்தும் போது, அதன் மின்னழுத்தம் ஒரு வோல்ட் உயர்ந்தால், ஒரலகு தன் மின்தேக்கு த���றனை பெற்றிருப்பதாகக் கொள்ளலாம். + +கணக்கிடுதலில், ஒரு கடத்தியின் தன் மின்தேக்கு திறன் என்பது + +இதில் + +இந்த முறையைப் பயன்படுத்தி, "R" என்ற ஆரம் கொண்ட ஒரு கடத்தியின் தன் மின்தேக்கு திறன் + +தன் மின்தேக்கு திறன் அளவிற்கான சில எடுத்துக்காட்டுகள் + +மின் காந்த சுருளிலுள்ள கம்பிகளுக்கிடையே ஏற்படும் மின்தேக்கு திறன், தன் மின்தேக்கு திறன் என அழைக்கப்படுகிறது. + +இது ஒரு இணைத்தகடு கொண்மி அல்லது மின்தேக்கி ஆகும். இதில் இரு மின் கடத்தும் தகடுகளுக்கிடையே, ஒரு மின் கடத்தாப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மின்தேக்கு திறன், தகடுகளின் மேற்பரப்பிற்கு நேர் விகிதத்திலும், அவற்றிற்கிடையேயுள்ள தூரத்திற்கு எதிர் விகிதத்திலும் உள்ளது. + ++"q" மற்றும் −"q" என்பது தகடுகளுக்கிடையேயுள்ள மின்னூட்டங்களின் அளவாகும். "V" என்பது தகடுகளுக்கிடையேயுள்ள மின்னழுத்தத்தின் அளவாகும். +"C" என்பது மின்தேக்கு திறனாகும். + +மின்னழுத்தம்/மின்னோட்டம் ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்பு + +பயன்பாட்டுரீதியாக, பாரடு என்பது பெரிய அலகுகாகும். மைக்ரோ பாரடு, நானோ பாரடு, பிக்கோ பாரடு ஆகியவை பாரடின் சிறிய அலகுகளாகும். சமீப காலங்களில் 1 பாரடு மின்தேக்கு திறன் கொண்ட மின் தேக்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக ஆற்றலை சேமிப்பதால், மின் கலங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +"W" என்ற வேலையைச் செய்யும் மின் தேக்கியிலுள்ள ஆற்றல் + +பாரடை விட சிறிய அளவைக் கொண்ட மின்தேக்கிகள், பெரும்பாலான மின்னணு கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோ பாரடு, நானோ பாரடு, பிக்கோ பாரடு, பெம்டோ பாரடு ஆகியவை பாரடின் சிறிய அலகுகளாகும். "mfd" "mf" ஆகிய குறியீடுகள் மைக்ரோ பாரடை (µF) குறிப்பிடுவன ஆகும். அதே போல் "mmfd", "mmf", "µµF" என்பவை பிக்கோ பாரடை (pF) குறிப்பிடுவன ஆகும். +கடத்திகளின் வடிவங்கள் மற்றும் மின் கடத்தாப் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டு மின் தேக்கு திறன் கணக்கிடப்படுகிறது. ஒரு நேர் மின்னூட்டத்தை கடத்திக்கு வழங்கும் போது, மின் புலத்தை உருவாக்குகிறது. இது மற்றொரு நேர் மின்னூட்டம் நுழைவதை எதிர்க்கிறது, இதனால் மின்னழுத்தம் உண்டாகிறது. இந்நிலையில் எதிர் மின்னூட்டம் கொண்ட கடத்தியை அருகில் வைக்கும் போது, நேர் மின்னூட்டங்கள் அதிக அளவில் முதல் கடத்தியில் குவிக்கப்ப��ுகின்றன. இதனால் மின்னழுத்தம் குறைக்கப்படுகிறது. + +மின் தேக்கியின் மின் தேக்கு திறன், இரண்டு இணை கடத்திகளின் "A" என்ற பரப்பையும், அவற்றிற்கிடையேயுள்ள "d" என்ற தூரத்தையும் பொறுத்தது. கொடுக்கப்பட்ட பரப்பிற்கு "d" அளவு எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு மின் தேக்கு திறன் சிறப்பாக இருக்கும். + +இதில் + +மின் தேக்கியின் மின் தேக்கு திறன், கடத்திகளின் பரப்பிற்கு நேர் விகிதத்திலும், கடத்திகளுக்கிடையேயுள்ள தூரத்திற்கு எதிர் விகிதத்திலும் உள்ளது. + +மின் தேக்கியில் சேமிக்கப்பட்ட ஆற்றலின் அளவு, + +இதில் "W" என்பது ஆற்றலையும், சூல் அலகு; "C" என்பது மின் தேக்கியின் மின் தேக்கு திறன், பாரடு அலகு; மற்றும் "V" என்பது மின்னழுத்தம், வோல்ட் அலகு. + +மின் தேக்கியில் சேமிக்கப்பட்ட ஆற்றல் என்பது மின் தேக்கியினுள் தள்ளப்பட்ட மின்னூட்டங்களுக்கச் சமம். "C" என்பது மின் தேக்கியின் கொண்மம் எனில் +"q" மின்னூட்டம் ஒரு கடத்தியிலும், −"q" மின்னூட்டம் மற்றொரு கடத்தியிலும் வைக்கப்படுகிறது. என்ற மின்னழுத்தத்திற்கு எதிராக d"q" மின்னூட்டத்தின் சிறிய அளவை நகர்த்தும் போது செய்யப்படும் வேலை d"W" எனில் + +இதில் "W" என்பது ஆற்றலையும், சூல் அலகு; "C" என்பது மின் தேக்கியின் மின் தேக்கு திறன், பாரடு அலகு; மற்றும் "q" என்பது மின்னூட்டம், கூலும் அலகு. + +மேலே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டை தொகையீடு செய்தால் கிடைக்கும் வேலையின் அளவு "W" + + + + + + +நொதுமி + +நொதுமி அல்லது நியூட்ரான் ("நியூத்திரன்", Neutron) என்பது அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள். இது மின்மம் ஏதும் இல்லாதிருப்பதால் இதற்கு நொதுமி என்று பெயர் இதன் பொருண்மை (திணிவு) நேர்மின்னியைக் காட்டிலும் மிகமிகச் சிறிதளவே அதிகம்: 939.573 MeV/c² (1.6749 × 10-27 கிலோ கி. (kg)). இதன் தற்சுழற்சி ½. இதன் மறுதலைத் துகளுக்கு மறுதலை-நொதுமி எனப்பெயர் (antineutron). நேர்மின்னி, நொதுமி ஆகிய இரண்டு மட்டுமே அணுக்கருவில் உள்ள அணுக்கூறான துகள்கள் (துணிக்கைகள்). அணுக்கருவில் உள்ள துகள்களுக்குக் அணுக்கருனிகள் என்றும் பெயர். + +ஒரு தனிமத்தில் உள்ள அதே எண்ணிக்கையான நேர்மின்னிகள் அணுக்கருவில் இருந்து, அந்த தனிமத்தைவிட அதிகமான நொதுமிகள் இருக்குமானால் அவைகளை ஓரிடத்தான் என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக, இயல்பாகக் ���ிடைக்கும் கரிம அணுவில், (கரிமம்-12 ல்), 6 நேர்மின்னிகளும் 6 நொதுமிகளும் இருக்கும். ஆனால் கரிமம்-14 என்னும் அணுவில் 6 நேர்மின்னிகளும் 8 நொதுமிகளும் இருக்கும். இப்படி எச்சாக நொதுமிகள் உள்ள கரிம அணுக்களை கரிம ஓரிடத்தான்கள் என்பர். ஒரு தனிமத்திற்கு ஒன்றிற்கு மேலும் ஓரிடத்தான்கள் இருக்ககூடும். ஹைட்ரஜன் அணுவைத் தவிர மற்ற எல்லாத் தனிமங்களின் அணுக்கருவினுள்ளும் நொதுமிகள் உண்டு. ஹைட்ரஜன் அணுவில் ஒரு நொதுமி இருக்குமானால் அது டியுட்டீர்யம் என்னும் ஹைட்ரஜன் அணுவின் ஓரிடத்தான் ஆகும். இரண்டு நொதுமிகள் ஹைட்ரஜன் அணுவின் கருவில் இருந்தால் அது டிரிட்டியம் என்னும் வேறொரு ஹைட்ரஜன் ஓரிடத்தான் ஆகும். + +ஒரு தனிமத்தில் நொதுமியின் எண்ணிக்கைக் கூடக் கூட அதன் கட்டமைப்பின் உறுதிநிலை குறையும். அணுவெண் 82 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமத்தை விட கூடிய அணுவெண் கொண்ட தனிமங்களின் உள்ள அதிகமான நொதுமிகளால், அணுக்கரு தானே பிரிந்து சிதைவுறும். இதனால் அவை வேறு தனிமங்களாக மாறும். + +அணுக்கருவுக்கு வெளியே நொதுமிகள் நிலையாக இருப்பதில்லை. தனி நொதுமிகளின் சராசரி வாழ்காலம் 885.7±0.8 நொடிகள் (சுமார் 15 நிமிடங்கள்). அதன்பின் ஒரு நொதுமி ஒரு எதிர்மின்னியையும் ஒரு மறுதலை குட்டிநொதுமியையும் (antineutrino) வெளிவிட்டு நேர்மின்னியாக மாறுகின்றது. கீழே உள்ளதில் n என்பது நொதுமி, p என்பது நேர்மின்னி, formula_1 என்பது எதிர்மின்னி, +formula_2 என்பது மறுதலை குட்டிநொதுமி. + +இவ்வகையான சிதைவுக்கு பீட்டா சிதைவு என்று பெயர். + +1930ல் ஜெர்மனியைச் சேர்ந்த வால்ட்டர் போத்தேயும் ஹெச். பெக்கர் என்பவரும் பொலோனியம் என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய பெரிலியம், போரான், லித்தியம் ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான கதிர்வீச்சு நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ் சட்விக் என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ நேர்மின்னியின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார் + +நொதுமி பல அண��� எதிர்வினைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, நொதுமி கைப்பற்றல் நொதுமி தூண்டுதலுக்கும் கதிரியக்கத்திற்கும் வழிவகுக்கும். குறிப்பாக, நொதுமி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிவு, அணுக்கரு உலைகள் மற்றும் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. யுரேனியம்-235 மற்றும் புளூடானியம்-239 போன்ற கூறுகளின் அணுக்கரு பிளவு நொதுமிகளை அவை உறிஞ்சுவதால் ஏற்படுகிறது. + +கெட்டிப்படுத்தப்பட்ட பொருளின் பகுப்பாய்வுக்காக எக்சு-கதிர்கள் பயன்படுத்துகிறது. இதே போல் குளிர், அனல் மற்றும் வெப்ப நொதுமி கதிர்வீச்சு நொதுமி சிதறல் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. + +வெற்று கண்ணாடி தந்துகி குழாய்களுக்கு உள் மொத்த உட்புற பிரதிபலிப்பின் அடிப்படையில் அல்லது அலுமினிய தகடுகளில் இருந்து பிரதிபலிப்பு மூலம் "நொதுமி வில்லைகளின்" உருவாக்கப்படுகின்றன. இது நொதுமி நோக்கியியல் மற்றும் நியூட்ரான் / காமா கதிர் வரைவி குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. + +நொதுமிகளின் முக்கிய பயன்பாடு பொருட்களின் கூறுகளில் இருந்து காம்மா கதிர்களை தூண்டுவது ஆகும். இதுவே நொதுமி  செயலாக்க ஆய்வு மற்றும் காமா நொதுமி செயல்பாட்டு பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படை ஆகும். அணுக்கரு உலையில் உள்ள பொருட்களின் சிறிய மாதிரிகளை ஆய்வு செய்யவும், பூமிக்கு அடியில் துளைகளை சுற்றியுள்ள பாறைகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும். + +நொதுமி உமிழிகளின் மற்றொரு பயன்பாடு லேசான கருக்களை கண்டறிதல், குறிப்பாக தண்ணீர் மூலக்கூறுகளில் காணப்படும் ஹைட்ரஜனை. வேகமான நொதுமி ஒரு லேசான கருவின் மீது மோதும் போது, அது அதன் ஆற்றலில் ஒரு பெரிய பகுதியை இழக்கிறது. மெதுவான நொதுமிகள் ஹைட்ரஜன் கருவில் பிரதிபலித்து திரும்பும் வேகத்தை அளவிடுவதன் மூலம், மண்ணில் உள்ள நீர் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கலாம். + +குறைந்த ஆற்றல் நொதுமிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன. + +சுதந்திர நொதுமிகளோடு நீண்ட நேரம் உட்படுத்தல் அபாயகரமானது. உடலில் உள்ள மூலக்கூறுகளுடன் நொதுமிகளின் இடைவினை, மூலக்கூறுகள் மற்றும் அணுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நேர்மின்னி போன்ற பிற கதிர்வீச்சுகளுக்கு வழிவகுக்கும். + + + + + +ஆற���றல் + +. + +இயற்பியலில் ஆற்றல் / சக்தி ("energy", கிரேக்க மொழியில் ἐνέργεια – "energeia", "செயற்பாடு, ἐνεργός – "energos", "சுறுசுறுப்புடன் செயற்படுதல்") ) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். 1 நியூட்டனின் விசைக்கு எதிராக ஒரு பொருளை 1 மீட்டர் தூரத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையின் மூலம் மாற்றப்படும் ஆற்றல் ஒரு யூல் ஆகும். + +இயங்கும் பொருளின் இயக்க ஆற்றல், ஈர்ப்பு சக்தி, மின் அல்லது காந்த சக்தியில் ஒரு பொருளில் சேமிக்கப்படும் நிலை ஆற்றல், திண்மப் பொருட்களை நீட்டும்போது சேமிக்கப்படும் மீள்விசை, எரிபொருள் எரியும்போது வெளியிடப்படும் வேதி ஆற்றல், ஒளியில் சேமிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு ஆற்றல், ஒரு பொருளின் வெப்பநிலை காரணமாகத் தோன்றும் வெப்ப ஆற்றல் போன்றவை அனைத்தும் ஆற்றலின் பொதுவான வடிவங்களாகும். + +நிறையும் ஆற்றலும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் நிறை – ஆற்றல் சமன்பாடு காரணமாக, நிலையாக உள்ள போது எந்தவொரு பொருளும் பெற்றுள்ள மாறா நிறைக்குச் சமமாக அப்பொருள் மாறா ஆற்றலையும் கொண்டிருக்கும். கூடுதலாக ஆற்றல் ஏதாவது எந்த வடிவத்திலாவது அப்பொருளுடன் சேருமாயின் அப்பொருளின் மொத்த நிறையும் ஆற்றலைப் போலவே அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு பொருளை சூடாக்கிய பின்னர், ஆற்றலின் அதிகரிப்பு போலவே நிறையின் அளவிலும் ஏற்படும் அதிகரிப்பை அளவிட்டு உணரலாம். இவ்வதிகரிப்பின் உணர்திறன் போதுமான அளவுள்ளதாக இருக்கும். + +உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலால் மனிதர்கள் உயிர் வாழ்வது போல, பிற உயிரினங்கள் உயிருடன் வாழ்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள்கள், அணு எரிபொருள், அல்லது புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற ஆற்றல் வளங்களிலிருந்து மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்கிறது. புவியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் செயல்முறைகள் ஆகியன சூரியன் மற்றும் புவியில் காணப்படும் ப��விவெப்ப ஆற்றல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கதிரியக்க ஆற்றல் மூலம் பெறப்படுகின்றன. + +வேலை செய்யப்படும் திறமையை ஆற்றல் என்கிறோம். + +ஒரு முறைமையின் மொத்த ஆற்றல் பல்வேறு வழிகளில் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுறது. எடுத்துக்காட்டாக விசையியலிருந்து மரபார்ந்த விசையியல் வேறுபடுத்தப்படுகிறது. விண்வெளியின் ஊடாக நகரும் பொருள் மற்றும் அதன் நிலையாற்றல் ஆகியனவற்றைக் கொண்டு ஒரு பொருளின் இயக்க ஆற்றல் தீர்மானிக்கப்படுகிறது. விண்வெளிக்குள் அப்பொருளின் இருப்பிடம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. புவியீர்ப்பு சக்தி, வெப்ப ஆற்றல், பல வகையான அணுக்கரு ஆற்றல், மின் ஆற்றல் மற்றும் காந்த ஆற்றல் போன்ற ஆற்றல்களுக்கிடையிலான வேறுபாடுகளை விளக்கவும் இத்துறை மிகுந்த பயனளிக்கிறது. இந்த வகைப்பாடுகளில் ஒன்றுடன் ஒன்று; உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக இயக்கவியல் மற்றும் பகுதியளவு சக்திவாய்ந்த பகுதியை கொண்டுள்ளது. இந்த வகைப்பாடுகளில் பல ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாகக் தோன்றுகின்றன. உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக பகுதியளவு இயக்கவியலும் பகுதியளவு நிலையாற்றலையும் கொண்டுள்ளது. + +சில வகையான ஆற்றல்கள் நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிய இரண்டின் மாறுபட்ட கலவையாகும். இயந்திர ஆற்றலை இதற்கு ஒர் உதாரணமாகக் கூறலாம். இது நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவற்றின் கலவையாகும். இந்த பட்டியல் நிறைவுபெற வேண்டியதற்கான அவசியம் இல்லை. எப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஆற்றல் பாதுகாப்பு விதியை மீறுவதாக கண்டறிகிறார்களோ அப்போதெல்லாம் புதிய ஆற்றல் வடிவங்கள் சேர்க்கப்பட்டு முரண்பாட்டினை வெளிப்படுத்துகின்றன. +வெப்பம் மற்றும் வேலை என்பவை சிறப்பு வகை ஆற்றல்களாகும், அவை ஆற்றலின் பண்புகள் அல்ல, மாறாக ஆற்றல் மாற்றச் செயல்முறைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. ஒரு பொருளில் எவ்வளவு வெப்பம் அல்லது வேலை உள்ளது என்பதை பொதுவாக அளவிட முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல்முறை நிகழ்வின் போது அப்பொருட்களில் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தை அளவிட முடியும். நாம் நோக்கும் திசையிலிருந்து வெப்பம் அல்லது வேலையின் அளவு நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக அளவிடலாம். + +நிலையாற்றல்கள் பொதுவாக நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக கணக்கிடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அடிப்படை நிலையில் உள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ உள்ள அளவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கீடு அமைகிறது. அல்லது இடைவினைபுரியும் இரண்டு பொருட்கள் வெகுதொலைவில் இருப்பதைப்போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. கதிர்வீச்சு ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல் போன்ற அலை ஆற்றல்கள், இயக்க ஆற்றல், ஓய்வுநிலை ஆற்றல் முதலானவை ஒவ்வொன்றும் பூச்சியத்திற்குச் சமமாக அல்லது அதிகமாக இருக்கும். ஏனெனில் இவை அடிப்படை நிலை அளவாக பூச்சியத்தை ஒப்பிட்டு முறையே அலையற்ற, இயக்கமற்ற, சடத்துவமற்ற நிலையில் கணக்கிடப்படுகின்றன. + +ஆற்றல் என்ற பொருள் கொண்ட energy என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியில் ἐνέργεια, செயல்பாடு என்ற பொருள் கொண்ட சொல்லில் இருந்து வந்துள்ளது . இச்சொல்லின் பயன்பாடு கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் அரிசுடாட்டிலின் படைப்பில் முதல் முறையாக தோன்றியிருப்பதாக அறியப்படுகிறது. நவீன வரையறைக்கு முரணாக ஆற்றல் என்பது மகிழ்ச்சி, ஆனந்தம் போன்ற பண்பு சார்ந்த ஒரு தத்துவ கருத்தாக அன்று கருதப்பட்டது. + +17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோட்ஃபிரைட் லீப்னிசு இலத்தீன் மொழியில் "vis viva" என்ற கருத்தை முன்மொழிந்தார். ஒரு பொருளின் நிறையை அதன் திசைவேகத்தின் வர்கத்தால் பெருக்கினால் கிடைக்கும் அளவே ஆற்றல் என்று அவர் கூறினார். இம்முழு ஆற்றலும் காப்புற்ற அளவு என்றும் அவர் நம்பினார். உராய்வுடன் ஆற்றலை ஒப்பிட்ட, லீப்னிசு, பரு பொருள்களின் பகுதிகளான உட்கூறுகளின் சீரற்ற இயக்கத்தால் வெப்ப ஆற்றல் தோன்றுகிறது என்று கருதினார். இக்கோட்பாடு பொதுவாக ஒரு நூற்றாண்டுக்கு மேல்வரையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்கால இதனையொத்த இயக்க ஆற்றல் இரண்டு காரணிகளால் வேறுபடுகிறது. + +1807 ஆம் ஆண்டில், தாமசு எங் ஆற்றலை அதன் நவீன பொருளுடன் vis viva என்ற சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார் . 1829 ஆம் ஆண்டில், குசுதாவே-காசுபார்டு கொரியோலிசு இயக்க ஆற்றலை அதன் நவீன பொருளுடன் பயன்படுத்தினார். 1853 ஆம் ஆண்டில் வில்லியம் ராங்கின் நிலை ஆற்றல் என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்தினார். ஆற்றல் அழிவின்மை விதி 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. எந்தவொரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பிற்கும் இவ்விதி பொருத்தப்பட்டது. வ��ப்பம் ஒரு இயற்பியல் தொடர்புடைய பொருள்தானா என்ற வாதம் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. கலோரி அல்லது உந்தம் போன்ற ஓர் அளவு என்று கருதப்பட்டது. இயந்திர வேலைக்கும் வெப்பம் உருவாதலுக்கும் உள்ள இணைப்பை 1845 ஆம் ஆண்டு யேம்சு பிரசுகோட் யூல் கண்டறிந்தார். + +இத்தகைய வளர்ச்சிகள் ஆற்றல் அழிவின்மை கோட்பாட்டிற்கு வழிவகுத்தன. பெரும்பாலும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) வெப்பவியக்கவியல் துறையை முறைப்படுத்தினார். ருடால்ப் கிளாசியசு, யோசியா வில்லார்டு கிப்சு, மற்றும் வால்டர் நெர்ன்சுட் ஆகியோரின் வேதியியல் செயல்முறைகளின் விரைவான வளர்ச்சிக்கு வெப்ப இயக்கவியல் உதவியது. மேலும், இத்துறையானது கிளாடியசின் என்டிரோப்பி உருவாக்கல் தத்துவத்திற்கும், யோசப் சிடீபனின் கதிர்வீச்சு ஆற்றல் விதிகளை அறிமுகப்படுத்தவும் உதவியது. நோயெதரின் வகையிடத்தக்கச் சார்புத் தேற்றம், ஆற்றல் அழிவின்மை என்பது காலப்போக்கில் மாறாதது என்கிறது. ஆகையால் 1918 ஆம் ஆண்டிலிருந்து ஆற்றல் அழிவின்மை விதியானது நேரத்துடன் நேரடி நகர்வு சீரொருமை கொண்ட கணக்கீட்டு அளவு என்று கோட்பாட்டாளர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. + +1843 ஆம் ஆண்டில் யேம்சு பிரெசுகோட் யூல் என்பவர் தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் வெப்பத்தின் பொறிமுறைச் சமவலுவைக் கண்டுபிடித்தார். மிகவும் பிரபலமானவர்களில் பலர் யூல் கருவியைப் பயன்படுத்தினர்: வெப்ப பரிமாற்றம் நிகழாமல் காப்பிடப்பட்டு தண்ணிரில் மூழ்கியுள்ள ஒரு துடுப்பைச் சுழற்றுகின்ற ஒரு கம்பியுடன் இணைக்கப்பட்ட எடையே இக்கருவியாகும். எடை இழந்த ஈர்ப்பு விசையியக்க சக்தியானது, துடுப்பின் உராய்வினால் நீர் பெறற உள் சக்திக்கு சமமாக இருக்கும் என்பதை இக்கருவி காட்டுகிறது. + +அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். யேம்சு பிரெசுகோட் யூல் இதைக் கண்டுபிடித்த காரணத்தால் தருவிக்கப்படும் இவ்வலகு இப்பெயரைப் பெற்றது. ஒரு நியூட்டன் சக்தியைப் பயன்படுத்தி ஒரு மீட்டர் தொலைவு இடப்பெயர்ச்சி செய்ய செலவிடப்படும் ஆற்றலுக்கு சமமாக இருப்பது ஒரு யூல் ஆகும். இருப்பினும் அனைத்துலக முறை அலகுகள் முறைக்கு அப்பாற்பட்டு, எர்கு, கலோரி, பிரித்தானிய வெப்ப அலகு, கிலோவாட்டு மணி, கிலோகலோரி போன்ற பல்வேறு அலகுகள் வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வலகுகளைப் பயன்படுத்தும்போது அனைத்துலக அலகு முறையில் குறிப்பிட ஒரு மாற்றுக் காரணி அவசியமாகிறது. + +அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றல் விகிதத்தின் அலகு வாட் ஆகும். (அதாவது ஓர் அலகு நேரத்திற்கான ஆற்றல்) இது வினாடிக்கு ஒரு யூல் ஆகும். எனவே, ஒரு யூல் என்பது ஒரு வாட்-வினாடி மற்றும் 3600 யூல் ஒரு வாட்-மணிநேரத்திற்குச் சமம் ஆகும். சென்டிமீட்டர்-கிராம்-வினாடி அலகு முறையில் ஆற்றலின் அலகு எர்கு ஆகும். இம்பீரியல் அமெரிக்க அளவு முறையில் இதை அடி-பவுண்டு என்கிறார்கள். இவற்றைத் தவிர எலக்ட்ரான் வோல்ட்டு, கலோரி உணவு, கிலோகலோரி போன்ற அலகுகள் விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. + +பாரம்பரிய விசையியலில் ஆற்றல் என்பது ஒரு கருத்து ரீதியாகவும் கணித ரீதியாகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் இதுவொரு பாதுகாக்கப்பட்ட அளவு ஆகும். ஆற்றலை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி இயக்கவியலில் பல சூத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. + +வேலை என்பது ஆற்றலின் ஒரு வடிவம் ஆகும், இது நேரத்தையும் தூரத்தையும் இணைக்கிறது. + +வேலை (W) என்பது பாதை C வழியாக F விசையின் ஒருங்கிணைப்புக்கு சமமான கோட்டுத் தொகையீடு ஆகும். வேலையும் ஆற்றலும் ஒரு சட்டகம் சார்ந்தவையாகும். உதாரணமாக ஒரு பந்து மட்டையால் அடிக்கப்படுகிறது எனக் கொள்வோம். மட்டை பந்தின்மீது எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. ஆனால் மட்டையை வீசியவனால் பந்தின் மீது போதுமான அளவுக்கு ஒரு வேலை செய்யப்படுகிறது. +ஓர் அமைப்பின் மொத்த ஆற்றல் சிலநேரங்களில் ஆமில்டோனியன் என்று அழைக்கப்படுகிறது. வில்லியம் ரோவன் ஆமில்ல்டன் கண்டறிந்த காரணத்தால் இவ்வாற்றல் இப்பெயரைப் பெற்றது. இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் மிக சிக்கலான அல்லது சுருக்க அமைப்புகளுக்கும் கூட இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் ஆமில்டோனியன் அடிப்படையில் எழுதப்படலாம். இந்தப் பாரம்பரிய சமன்பாடுகள் சார்பியல்சாரா விசையியல் குவாண்டம் இயக்கவியலுடன் குறிப்பிடத்தக்க நேரடி ஒப்புமைகளைக் கொண்டுள்ளன . + +யோசப்-இலூயிசு இலாக்ரேங்கியன் கண்டறிந்த இலாக்ரேங்கியன் கோட்பாடு மற்றொரு ஆற்றல் தொடர்பான கோட்பாடு ஆகும். இம்முறையிலும் ஆமில்டன் கோட��பாட்டின் அடிப்படைகளே பின்பற்றப்படுகின்றன. இவ்விரு கோட்பாடுகளிலும் இயக்கத்தின் சமன்பாடுகள் பெறப்படுகின்றன அல்லது தருவிக்கப்படுகின்றன. பாரம்பரிய விசையியலுக்குப் போட்டியாக இக்கோட்பாடு கண்டறியப்பட்டாலும் நவீன இயற்பியலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக இயக்க ஆற்றலில் இருந்து நிலையாற்றலைக் கழிக்கக் கிடைப்பது இலாக்ரேங்கியன் எனப்படுகிறது. ஆமில்டோனியன் கோட்பாட்டைக் காட்டிலும் இலாக்ரேங்கியன் கோட்பாடு கனிதவியலுக்கு மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. +வகையிடத்தக்க சமச்சீர்நிலையுடைய எந்தவொரு இயற்பியல் முறையின் செயல்பாடும் தொடர்புடைய பாதுகாப்பு விதியைப் பெற்றுள்ளது என 1918 இல் உருவாக்கப்பட்ட நோயிதர் தேற்றம் கூறுகிறது. நவீன கோட்பாட்டு இயற்பியல் மற்றும் நுண்கணித வேறுபாடுகளுக்கு நோயிதர் தேற்றம் ஒரு அடிப்படைக் கருவியாக மாறியது. + + + + + +அணுக்கருனி + +அணுக்கருனி ("நியூக்ளியான்", "Nucleon") என்பது அணுக்கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். நேர்மின்னியும், நொதுமியும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் தனிமங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. ஹைட்ரஜன் அணுவில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற எல்லாத் தனிமங்களிலும் இருவகையான அணுக்கருனிகள் உண்டு. அணுக்கருனிகளின் மொத்தத் திணிவே (பொருண்மையே) அணுவின் பொருண்மைக்கு மிக அணுக்கமானதாக இருக்கும். ஏனெனில் எதிர்மின்னிகளின் திணிவு மிகக் குறைவே. + +அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும், நொதுமியும் அணுவின் அடிப்படைத் துகள்கள் என 1960கள் வரை நம்பி வந்தனர். அணுக்கருவினுள் ஒரே வகையான நேர்மின்மம் கொண்ட நேர்மின்னிகளும், மின்மம் அற்ற நொதுமிகளும் ஒன்றாக கருவினுள் இருக்கத் தேவையான அணுக்கருவினுள் நிகழ்ந்த விசை உறவாட்டங்களை அணுக்கருவின் உள்விசை நிகழ்வுகள் என்று அறிந்திருந்தனர். இதற்கு அடிப்படையானதை அணு விசை அல்லது அணுக்கருப் "பெருவிசை" (Strong Force) என்று அழைத்தனர். ஆனால் இன்றைய இயற்பியலில், அணுக்கருவினுள் உள்ள அணுக்கருனிகள் அடிப்படைத் துகள்கள் அல்ல என்றும் அவையே மேலும் நுட்பமான அடிப்படை நுண்துகள்களாகிய குவார்க் என்பவைகளால் ஆனவை என்று அறிந்துள்ளனர். இன்றைய இயற்பியலில் அணுக்கருவில் இரு பாரியான்கள் (baryons) இருப்பதாகக் கூறுவர். பாரியான் என்பது கிரேக்கச் சொல்லாகிய barys = heavy (கனமானது, எடை, திணிவு, பளு, பாரம் மிக்கது) என்பதில் இருந்து 1953 ஆம் ஆண்டளவில் ஆக்கிய சொல். இந்த பாரியான்கள் மூன்று குவார்க் என்னும் அடிப்படை நுண்துகளால் ஆனவை. அணுக்கருனிகளாகிய நேர்மின்னியும் நொதுமியும் பரவலாக அறிந்த பாரியான்கள் ஆகும், ஆனால், மிகக்குறுகிய நேரமே தோன்றி மறையும் பாரியான்களும் உண்டு. நேர்மின்னியானது இரண்டு மேல் குவார்க்கும் ஒரு கீழ்க் குவார்க்கும் சேர்ந்து ஆன பாரியான். நொதுமியானது இரண்டு கீழ்க் குவார்க்கும் ஒரு மேல் குவார்க்கும் கொண்ட பாரியான் ஆகும். + + + + +கிசெப்பே டோர்னடோரே + +கிசெப்பே டோர்னடோரே (Giuseppe Tornatore) நன்கு அறியப்பட்ட இத்தாலிய திரைப்பட இயக்குநராவார். + +இவர் இத்தாலியின் பகேரியாவில் 1956 மே 27 இல் பிறந்தார். தனது பதினாறாவது வயதில் "பிராண்டலோ, டி ஃபிலிப்போ" ஆகியோரது நாடகங்களை அரங்கேற்றம் செய்தார். தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கினார். எத்னிக் மைனாரிட்டி ஒஃப் சிசிலி என்ற ஆவணப்படம் சாலெர்னோ திரைப்பட விழாவில் அவருக்கு விருது பெற்றுத்தந்தது. தொலைக்காட்சிக்காகவும் இவர் சில நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். + +1984 இல் "குசெப்பே பெராரா" இயக்கத்தில் வெளியான "சென்டோ ஜியோர்னி எ பாலெர்மோ" என்ற படத்தில் இரண்டாம் யூனிட் இயக்குநராக பணியாற்றினார். + +தனது முதல் படமாக 1986 இல் "தி புரொபெசர்" என்ற முழுநீள திரைப்படத்தை இயக்கினார். நிகழ் உலக தாதாக்களைப்பற்றிய இப்படம் அவருக்கு பரவலான அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. + +1989 இல் அவரது இயக்கத்தில் வெளியான "சினிமா பரடைசோ" என்றபடம் அவருக்கு உலகளாவிய பெயரைப் பெற்றுத்தந்ததுடன் மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது. + +இப்படம் பெற்றுக்கொடுத்து விருதுகளில் சில வருமாறு, + + + + + + + +தமிழ் மக்கள் இசை விழா + +தமிழ் மக்கள் இசை விழா என்பது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பினால் ஆண்டுதோறும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பெறும் நிகழ்ச்சியாகும். + +"பார்ப்பனிய, மறுகாலனிய பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போர் முழக்கம்" என்ற முழக்கத்துடன் இவ்விழா நடாத்தப்படுகிறது. + +���டிப்படையில் மறுகாலனியாதிக்க, பார்ப்பனீய கலாசாரக்கூறுகளுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழ் சூழலில் வாழும் மக்களது கலை, பண்பாட்டுக்கூறுகளை முன்னிறுத்தும் வகையில் இவ்விழா ஒழுங்குபடுத்தப்படுகிறது. + + + + +கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை + +கட்டற்ற மென்பொருட்களை ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்காகவும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation) 1985 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984-இல் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமமும் இயற்றப்பட்டது. + + + + +சொலவடை + +கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும். + + + + + +யொஹான்னெஸ் வெர்மீர் + +யொஹான்னெஸ் வெர்மீர் ("Johannes Vermeer") அல்லது யான் வெர்மீர் (Jan Vermeer) (என்பவர் நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 1632 ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றார். 1675 டிசம்பர் 15 ஆம் தேதி இறந்தார். இவரது ஓவியங்களிற் பல நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் உள்ளகக் காட்சிகளாக அமைந்துள்ளன. நெதர்லாந்தின் "டெல்வ்ட்" என்னும் நகரிலேயே இவர் தனது முழு வாழ்க்கைக் காலத்தையும் கழித்தார். அக்காலத்தில் இவர் ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஓவியராகத் திகழ்ந்தார். எக்காலத்திலும் இவர் பண வசதி உள்ளவராக இருந்ததாகத் தெரியவில்லை. குறைந்த அளவு ஒவியங்களை இவர் வரைந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். இவர் இறக்கும் போது அவரது மனைவியையும், பதினொரு பிள்ளைகளையும் கடனாளிகளாக விட்டுவிட்டே இறந்தார். ஏறத்தாழ 200 ஆண்டுகள் அவர் முற்றாகவே மறக்கப்பட்டு இருந்த போது, 1866 ஆம் ஆண்டில், கலை விமர்சகரான தோரே பியூகர் (Thoré Bürger), 66 ஓவியங்களை அவருடையதாகக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினார். இன்று அவற்றில் 34 ஓவியங்கள் மட்டுமே அவருடையவையாகக் கணிக்கப்படுகின்றன. அக்கட்டுரைக்குப் பின், அவரது புகழ் வேகமாக உயர்ந்தது. இன்று, நெதர்லாந்தின் பொற்காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த ஓவியராக வெர்மீர் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். குறிப்பாக, ஒளியை இவர் தனது ஓவியங்களில் கையாண்ட விதத்துக்காகப் பெரிதும் சிறப்பிக்கப்படுகின்றார். + +வெர்மீரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதளவே தெரிய வந்துள்ளது. இவரைப் பற்றிய தகவல்கள், சில பதிவுகள், சில அரச ஆவணங்கள், பிற ஓவியர்களுடைய கருத்துக்கள் என்பன மூலமே ஓரளவுக்குத் தெரிய வந்துள்ளது எனலாம். + +ஜொஹான்னெஸ் வெர்மீர் பிறந்த தேதி தெளிவாகத் தெரியவில்லை எனினும், 1632 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ஞானஸ்நானம் பெற்றது தெரிய வந்துள்ளது. இவரது தந்தையாரான ரேனியெர் வெர்மீர் (Reynier Vermeer), கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பட்டு நூற்பாளரும், ஓவிய விற்பனையாளரும் ஆவார். இவரது தாயார் பெல்ஜியத்தின் "ஆண்ட்வ்வெர்ப்" (Antwerp) என்னும் இடத்தைச் சேர்ந்த "டிக்னா" என்பவர். ஜொஹான்னெஸின் தந்தையாரே அவரை ஓவியத்துறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கக் கூடும். 1641 ஆம் ஆண்டில் டெல்வ்ட்டில் உள்ள சந்தைச் சதுக்கத்துக்கு அருகே ஒரு பெரிய விடுதியை வெர்மீர் குடும்பத்தினர் வாங்கினர். அதன் பின், ரேனியர் ஒரு விடுதி உரிமையாளராகவும் அதே வேளை ஒரு ஓவிய விற்பனையாளர் ஆகவும் இருந்திருக்கக் கூடும். ரெய்னியர் இறந்த பின்னர் "மெச்செலென்" என்ற அவரது விடுதியும், ஓவிய வணிகமும் ஜொஹானசிற்கு உரிமையானது. + +ஜொஹான்னெஸ் வெர்மீர் ஒரு புரட்டஸ்தாந்த மதத்தினராக இருந்தபோதும், ஒரு கத்தோலிக்கரான, கத்தரீனா போல்னெஸ் (Catherina Bolnes) ஏப்ரல் 1653 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். போல்னெசின் குடும்பத்தினர், வெர்மீர் குடும்பத்தினரைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் கூடிய பணவசதி கொண்டவர்களாக இருந்தனர். திருமணத்துக்கு முன்னர் இவர் கத்தோலிக்கராக மதம் மாறிவிட்டதாகக் கருதப்படுகின்றது. இவரது பிள்ளைகள் அனைவருக்கும், கத்தோலிக்க மதப் பெரியார்களின் பெயர்களே இடப்பட்டிருந்தது இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. இவரது ஓவியம் ஒன்றுக்கு "நம்பிக்கையின் உருவகம் (The Allegory of Faith)" என்று பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கத்தோலிக்க மத நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது. + + + + + + +குவார்க்கு + +குவார்க்குகள் என்பன அணுக்கூறுகளும் ஆகுமாறு உள்ள இரண்டு அடிப்படையான நுண் பொருள் வகைகளில் ஒன்று. மற்றது லெப்டான்கள் எனப்படும். எல்லாப் பொருட்களும் சில அடிப்படையான சிறு துகள்களால் ஆனவையே. முதலில் இவை அணுக்கள் என்று அறிந்தனர். பின்னர் அணுவும் அதனினும் சிறிய துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அணுவின் கூறுகளாக நேர்மின்னி, நொதுமி, எதிர்மின்னி என்னும் மூன்று பொருட்கள் உள்ளன என்று உணர்ந்தனர். ஆனால் இன்று இந்த அடிப்படை அணுக்கூறுகளும் அதனினும் மிகச் சிறிய நுண் பொருட்களால் ("நுட்பிகள்") ஆனவை என்று உணர்ந்துள்ளனர். இந்த நுண்பொருட்களில் ஒரு வகையே "குவார்க்" ஆகும்.இவை பேரியான், ஹார்ட்ரானுகளை உருவாக்குகின்றன. + +நேர்மின்னியும் நொதுமியும் குவார்க்குகளால் ஆனவையே. குவார்க் என்னும் இந்த அடிப்படைப் பொருள் ஒன்று மட்டுமே இயற்கையில் உள்ள நான்கு அடிப்படையான விசைகளினூடும் இயங்குகின்றது. இந்த மிகு நுண்பொருளாகிய குவார்க்குகள் மொத்தம் ஆறு உள் வகைகள் உள்ளன. இந்த உள் வகைகளைக் குறிக்க "மணம்" என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த "மணம்" நுகரும் மணம் இல்லை. + +ஒவ்வொரு துகளுக்கும் ஒரு மறுதலைத் துகள் உண்டு. இந்தக் குவார்க்குகளின் மறுதலைத் துகள்களுக்கு, மறுதலை-குவார்க்குகள் (antiquarks) என்று பெயர். + +தனியான குவார்க்குகள் இயற்கையில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் இரட்டையாகவோ (மேசான்), மூன்று இணைந்துள்ள குழுவாகவோ (பாரியான்) தான் கிடைக்கின்றது. + +மேல் மற்றும் கீழ் குவார்க்குகள் அடிப்படை துகள்கள் ஆகும். அனைத்து பொருள்களிலும் இவை இயல்பாக இருக்கும்.ஏதிலி மற்றும் கவர்ச்சி ஆகிய குவார்க்குகள் நிலையில்லாதவை ஆகும்.இவை முதல் தலைமுறை அணுக்களினுள் ஏற்படும் அணுக்கரு உட் பிளவு ஆகியவை ஏற்படும்போது உருவாகுவனவாகும்.உச்சி மற்றும் அடி குவார்க்குகள் மிகவும் நிலையற்ற தன்மை உடையனவாகும்.இவை இரண்டாம் தலைமுறை துகள்களில் ஏற்படும் அணுக்கரு பிளவுகளினால் உருவாகுபவையாகும். + +மேல் மற்றும் கீழ் குவார்க்குகளே மிகவும் குறைந்த அடர்த்தியுடையனவாகும். + +ஒரு புரோட்டானில் +2/3 மின்னூட்டம் உடைய இரண்டு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய ஒரு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து புரோட்டானிற்கு +1 மின்னூட்டத்���ினைத் தரும். இதேபோல் நியூட்டரானில் +2/3 மின்னூட்டம் உடைய ஒரு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய இரண்டு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து நியூட்டரானிற்கு சமநிலை (0) மின்னூட்டத்தினைத் தரும்.குவார்க்குகள் ஒரு துகளிலிலிருந்து மற்றொன்றிக்கு மாறிக்கொண்டே இருப்பதால் புரோட்டானும்,நியூட்டரானும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நொடியில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை நியூட்டரானும் , புரோட்டானும் மாறும். இவற்றைத் தீர்மாணிப்பது குவார்க்குகளே ஆகும். + +குவார்க்குகளில் மூன்று அடிப்படை நிறங்கள் உள்ளன.அவை, பச்சை, நீலம், சிவப்பு ஆகும். இவைகள் இணைந்து நிறமற்ற துகள்களை உருவாக்குகின்றன.மறுதலைத்துகளுக்கு மறுதலை பச்சை,மறுதலை நீலம்,மறுதலை சிவப்பு ஆகியன நிறங்களாக இருக்கும். + +அனைத்து துகள்களுக்கும் மறுதலைத்துகள்கள் உள்ளன. மறுதைத்துகள்கள் இயற்கையாக கிடைப்பதில்லை. இவை பெறும்பாலும் துகள்கள் மோதும்போது உருவாக்கப்படுகின்றன. இவை இணைந்து மறுதலை உள்ள நொதுமிகள்,நேர்மின்னி எதிர்மின்னிகளை உருவாக்குகின்றன. மாறுதலைத் துகள்களில் நிறை மற்றும் ஆற்றல் ஒரே அளவுகளில் காணப்படும்.ஆனால் அவற்றின் நிறமும் , மின்னேற்றமும் மாறுபடும். + +குவார்க்குகளில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை குவார்க்குகள் , மறுதலைக்குவார்க்குகள். வகைப்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல். இந்த அறு குவார்க்குகள் ஆவன : + +இவற்றில் மேல் குவார்க்கு,கவர்ச்சி குவார்க்கு,மற்றும் உச்சி குவார்க்குகளுக்கு நேர் மின்சுமையும்(Positive electric charge),கீழ் குவார்க்கு, ஏதிலி குவார்க்கு, அடி குவார்க்கு ஆகியனவற்றுக்கு எதிர் மின்சுமையும் கொண்டிருக்கும்.இவை மூன்று தலைமுறைகளாகப் பிரிக்கப்படுகின்றன.அவற்றின் படி இவற்றின் நிறையும் மாறுபடும். + +குவார்க்குகள் மிகச் சிறியது ஆகும்.குவார்க்கின் அளவு 10மீட்டர் அல்லது 10நானோ மீட்டர் ஆகும்.இவை அட்டோ அளவுகோளின் கீழ் வருவனவாகும். + + + + + +அவள் ஒரு ஜீவநதி + +அவள் ஒரு ஜீவ நதி இலங்கையில் தயாரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியீடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் ஓர் எழுத்தாளரான மாத்தளை கார்த்திகேசு. இவர் எழுதிய பல நாடகங்கள் கொழும்பில் மேடையேறியிருந்தன. எனவே நா���க மேடை அனுபவத்துடன் திரைஉலகத்திகு வந்தார் என்று சொல்லலாம். + +டீன்குமார், விஜயராஜா, கே. எஸ். பாலச்சந்திரன், பரீனாலை, எம். ஏகாம்பரம், மாத்தளை கார்த்திகேசு முதலானோர் இந்தத் திரைப்படத்தில் நடித்தனர். ஜோ மைக்கல் என்பவரே தொடக்கத்தில் இந்தத் திரைப்படத்தின் இயக்குனராக செயற்பட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஜே. பி. ரொபேர்ட் பின்னர் இயக்குனராகினார். 'கவின் கலை மன்றம்' நாடக மன்றத்தில் கார்த்திகேசுவின் நாடகங்களை இவர் இயக்கியவர். + +ஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள். + +மலையகத்தில் உள்ள ஓர் எஸ்டேட் சொந்தக்காரரின் ("கார்த்திகேசு") ஒரேயொரு செல்லமகள் ("பரீனாலை") தன் சொந்த அத்தானை ("விஜயராஜா") விரும்புகிறாள். ஆனால் அது ஒருதலைக் காதலாகிப் போய்விடுகிறது. பொதுத் தொண்டில் ஈடுபடும் அவனை, அவன்மீது ஆத்திரம் கொண்ட அவனது நண்பனே ("பாலச்சந்திரன்") ஆள் வைத்து பொதுக்கூட்டத்தில் கல்லால் எறிவித்து காயம் அடையச் செய்கிறான். அந்த அத்தான் தனக்கு இரத்ததானம் செய்து தன்னைக் காப்பாற்றிய மருத்துவ தாதியை ("அனுஷா") விரும்பி மணம் செய்து கொள்கிறான். ஏமாற்றமடைந்த அவனது மைத்துனியான அந்தப் பணக்காரப்பெண் தற்கொலை செய்யப் போகிறாள். அவளை கெடுக்கமுற்படும் தீயவர்களிடமிருந்து ஓர் எழுத்தாளன் ("டீன்குமார்") காப்பாற்றுகிறான். இருவரும் ஒன்றாக இருக்க நேர்ந்தபோதிலும் அவர்களிடையே பரிசுத்தமான நட்பே இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த எழுத்தாளன் கொலை செய்யப்பட, அந்தப்பெண் துறவறம் பூணுகிறாள். + + + + + +அடிப்படை விசைகள் + +அடிப்படை விசைகள் என்பவை நான்கு என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா இயற்பியல் வினைகளும் (இதில் வேதியியல் முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். அணுவுக்குள் குவார்க்குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் விண்மீன், நாண்மீன்பேரடை, முதலியன நகர்��தும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும். + +இந்த நான்கு விசைகளாவன: பொருள் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை. இவ்விசைகளின் வலுவின் அளவு ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபடுவது. இந் நான்கு விசைகளில் மூன்று விசைகளுக்கு அடிப்படையில் ஒரு விசை இருக்க வேண்டும் என கருதுகிறார்கள், ஆனால் இன்றளவும் இவை தனித்தனி அடிப்படை விசைகளாகவே கருதப்படுகின்றன. மின்னியலும், காந்தவியலும் சேர்ந்து இன்று மின்காந்தவியல் என்று இணைந்த ஒரு இயக்கமாக அறியப்படுவது போலவும், குறைந்த ஆற்றல் எல்லைகளில் மின்காந்தவியலின் விசையும் மென்விசையும் ஓர் அடிப்படை மின்னிய மென்விசையின் இரு கூறுகள் என அண்மையில் உணரப்படுட்டுள்ளது. இதே போல கருப் பெருவிசையையும் சேர்ந்தெண்ணுமாறு ஓர் ஒருங்கிணைப்புக் கருத்து உருவாகும் என கருதுகின்றனர். எனினும் ஏதும் இன்றளவும் நிறைவேறவில்லை. பொருள் ஈர்ப்பு விசையையும் இணைக்கும் (குவாண்ட்டம் ஈர்ப்புக் கொள்கை) எண்ணங்களும் உள்ளன. + + + + +மதி (திரைப்படம்) + +மதி என்ற திரைப்படம் கனடாவில் இளையதலைமுறைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு 2006ல் திரையிடப்பட்டது + +இந்தத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் நியூயோர்க் ராஜ், தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர்களைக் கொண்டு, பாரதியின் பாடல்களை தனது நவீன இசையில் பாடச்செய்து, "புதுமைப் பாரதி" என்ற இறுவட்டை வெளியிட்டவர் என்பது குறிப்பிடற்குரியது. +மதி திரைப்பட வலைத்தளம் + + + + +சதம் (நாணயம்) + +பல நாடுகளின் நாணயங்களில், சதம் அடிப்படை பண அலகில் பகுதியாக் காணப்படுகிறது. சொற்பிறப்பியலில், "சதம்" இலத்தீன் சொல்லான "சென்டம்" ("centum") என்பதில் இருந்து உருவாகியது "சென்டம்" என்பது நூறு என பொருள்படுகிறது. சதம் என்பதனை ¢ என்ற குறியீடு மூலமும் அல்லது ஆங்கில எழுத்தான "c" என்பது மூலமும் குறிப்பிடலாம்.) + +நாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது. + +1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்��ளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதற்காக அக்காலத்திய ஒரு இந்திய ரூபாய் 100 சதமாக வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான முதல் நாணயங்கள் பிரித்தானிய இந்திய அரசின் கல்கத்தாவிலிருந்த (இன்றைய கொல்கத்தா) நாணயச் சாலையில் வார்க்கப்பட்டு 1872 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தக் காசுகளில் இவற்றின் பெறுமானங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும், சிங்களத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. + +1890 ஆம் ஆண்டில், இந்திய வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக, உள்ளூர் வெள்ளி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசு முன்மொழிந்தது. ஆனால் இந்தியாவின் ரூபாய் தொடர்ந்தும் சீர்தரமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பகுதிகள் மட்டும் 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட வெள்ளி நாணயங்களால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்றும் கருத்து நிலவியது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் நாளில் இந்த முன்மொழிவை இலங்கையின் சட்டசபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையின் நாணய முறைமை பின்வருமாறு அமைந்திருந்தது: + + + + +நாணயவியல் + +நாணயவியல் என்பது, எல்லா வகைகளிலுமான நாணயம், அதன் வரலாறு முதலியன தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும். இது பெரும்பாலும், நாணயம் பற்றிய ஆய்வு, நாணயச் சேகரிப்புப் போன்றவை தொடர்பிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தாலும், பணக் கொடுக்கல் வாங்கல் ஊடகங்கள் சம்பந்தமான விரிவான ஆய்வுகளையும் இத்துறை உள்ளடக்குகிறது. அமைப்பு சார்ந்த பண முறைமை இல்லாத நிலையில், பழைய காலத்திலும், சில இடங்களில் இன்றும்கூட மக்கள் பண்டமாற்று முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக, உள்ளூரில் காணப்படும், உள்ளார்ந்த பெறுமதியைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். கிர்கிஸ் மக்கள், குதிரைகளைப் பொருட்கள் வாங்குவதற்கான நாணய அலகாகப் பயன்படுத்தினார்கள். சிறிய நாணய அலகுகளுக்கு ஆட்டுத்தோல் பயன்பட்டது. ஆட்டுத்தோல் நாணவியல் ஆய்வுக்கு��் சிலவேளை பயன்படக்கூடும். ஆனால், குதிரைகள் நாணயவியலில் ஆராயப்படுவதில்லை. பல விதமான பொருட்கள், நாணயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. சிப்பிகள், விலையுயர்ந்த உலோகங்கள், பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் என்பவை இவற்றுட் சில. + +தற்காலத்தில், பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளார்ந்த, சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது கடன் பெறுமானங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. நாணயவியல் பெறுமானம் என்பது, சட்டமுறையிலான பெறுமானத்திலும் கூடுதலாக இருக்கக்கூடிய பணப் பெறுமானம் எனலாம். இது "சேகரிப்பாளர் பெறுமானம்" என்றும் வழங்கப்படுவதுண்டு. + +பணத்தின் பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான ஆய்வு அதன் பௌதீக உள்ளடக்கம் தொடர்பான நாணயவியலிலிருந்து வேறுபட்டது. ஆனாலும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை ஆகும். + +நாணயச் சேகரிப்பு, பண்டைக் காலம் முதலே இருந்து வருகின்ற ஒன்றாகும். ரோமப் பேரரசர்களும், நாணயச் சேகரிப்பாளராக இருந்திருக்கிறார்கள். இது "அரசர்களின் பொழுதுபோக்கு" எனவும் அழைக்கப்பட்டது. நாணயவியல், மத்தியகால இறுதியிலும், மறுமலர்ச்சிக் காலத் தொடக்கத்திலும், உச்ச நிலையில் இருந்தது. இக் காலத்தில் பண்டைக்கால நாணயங்கள் சேகரிப்பது, ஐரோப்பிய அரச குடும்பத்தவர் மத்தியிலும், பிரபுக்கள் மத்தியிலும் காணப்பட்டது. ரோமப் பேரரசர்களான அகஸ்ட்டஸ், ஜூலியஸ் போன்றோர் கிரேக்க நாணயங்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிகின்றது. மேலும், இத்தாலியக் கவிஞன் பெட்ராக் (Petrarch), ரோமப் பேரரசன் மாக்சிமிலியன், பிரான்சின் லூயிஸ் XIV, ஹென்றி IV ஆகியோர் குறிப்பிடத்தக்க நாணயச் சேகரிப்பாளர்கள் ஆவர். + +19 ஆம் நூற்றாண்டு நாடுகள் வாரியான சேகரிப்புக்களின் வளர்ச்சி, விபரப்பட்டியல்களின் வெளியீடு என்பவற்றுக்குச் சிறப்பான காலமாக இருந்தது. + +ஒரு பிரதேசத்தின் வரலாறு தொடர்பான தகவல்களைக் கண்டறிவதில் நாணயங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன . நாணயத்தை ஆக்கும் உலோகம், நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு, அதனை வெளியிட்ட அரசு மற்றும் நாணயத்தில் காணப்படும் கலையம்சங்கள் போன்றவை நாணயவியலிலும் வரலாற்றுத் துறையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவன. உதாரனமாக நாணயத்தை ஆக்கிய உலோகத்தின் மூலம் நாணயத்தை வெளியிட்ட அரசின் பொருளாதார நிலமையைக் கண்டறிய முடியும். சந்திரகுப்���ன் காலத்தில் வெளிவந்த தங்க நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார இஸ்திரத்தன்மையையும் ஸ்கந்தகுப்தனின் காலத்தில் வெளிவந்த தங்க முலாமிடப்பட்ட செப்பு நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார வீழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றன. + + + + +நாணயச் சேகரிப்பு + +நாணயத்தை அதன் பெறுமானம் கருதிச் சேமிக்கும் வழக்கம் நாணயம் உருவான காலத்திலேயே தோன்றிவிட்டதாகக் கருதலாம். ஆனால், நாணயச் சேகரிப்பு என்பதை ஒரு கலையாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியது பிற்காலத்திலேயே ஆகும். "அரசர்களின் பொழுதுபோக்கு" எனப்பட்ட நாணயச் சேகரிப்பின் புதிய வடிவம் 14 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. ரோமப் பேரரசர்களின் நாணயச் சேகரிப்புப் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டாலும், அவர்கள் இவை பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தனரா அல்லது வெறுமனே சேமித்து வைத்தார்களா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. + +நாணயச் சேகரிப்பு பெரும்பாலும், நடப்பில் உள்ள நாணயங்கள் கிடைக்கும் போது சேமித்து வைப்பதுடன் தொடங்குகின்றது. இவை, வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் மீந்தவையாகவோ, சுற்றோட்டத்தில் இருந்த பழைய நாணயம் ஒன்றாகவோ இருக்கக்கூடும். பொதுவாக இத்தகைய பல சந்தர்ப்பங்கள் நாணயங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்குகின்றன. இவ்வார்வம் காலப்போக்கில் அதிகரிக்கும்போது, வெறுமனே புதிய நாணய மாதிரிகளுக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. புதுப்புது நாணயங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருக்கும். + +பொதுவாக, கிடைக்கக்கூடிய எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான நாணயங்களில் வெளியிடப்பட்ட எல்லாவற்றையுமே சேகரிக்க முயலலாம். முதல் வகைச் சேகரிப்பில் முழுமையான சேகரிப்பு என்பது அடைய முடியாத ஒன்று எனலாம். ஆனால், இரண்டாவது வகையில் சேகரிப்புக்காக எல்லையை வரையறை செய்வதன் மூலம் சேகரிப்பை முழுமை ஆக்குவதற்கான சாத்தியங்கள் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக, லூயிஸ் எலியாஸ்பர்க் (Louis Eliasberg) அமெரிக்க ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட எல்லா நாணயங்களையும் சேகைப்பதில் வெற்றி பெற்றார். ஆனால், உலகில் இவர் மட்டுமே இவ்வாறான ஒரு முழுமையான சேகரிப்பைச் செய்ய முடிந்துள்ளது. + +இவ்வாறு நோக்கை வரையறை செய்வதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட முழு நாணயங்களையும் சேகரித்தல், ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களைச் சேகரித்தல், தவறுள்ள நாணயங்களைச் சேகரித்தல், எனப் பல வழிகளில் சேகரிப்புப் பரப்பை வரையறுக்க முடியும். சேகரிப்பாளர்கள் தங்களுடைய ஆர்வம், பொருள் வசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள முடியும். + +உலகில் நாணயங்களை வெளியிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நாட்டுக்கு ஒன்றாக நாணயங்களைச் சேகரிக்க முடியும் சிலர் இவ்வாறான சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் சேகரிப்பைக் குறிப்பிட்ட ஒரு நாடு வெளியிட்ட எல்லா நாணயங்களையுமே சேகரிப்பது என்ற நோக்கத்துள் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். + +சில நாணயங்கள் குறிப்பிட்ட ஒரு வடிவமைப்பை நீண்ட காலத்துக்கு மாறாமல் வைத்திருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு முறை மீள வெளியிடும்போதும், அதிலுள்ள தேதிகள் மட்டும் மாற்றம் அடைகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் லிங்கன் செண்ட் நாணயத்தைக் குறிப்பிடலாம். எனவே வகைசார் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட வடிவமைப்பில் அமைந்த, ஒரு நாணயத்தை மட்டுமே தமது சேகரிப்பில் சேர்த்துக்கொள்வர். தேதி வேறுபாடுகளையோ, வார்ப்பிடக் குறி வேறுபாடுகளையோ அவர்கள் கவனிப்பதில்லை. + +ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நாணயம் பல்வேறு ஆண்டுகளில் வெளியிடப்படும்போது, அவற்றில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மாதிரியைச் சேகரிப்பது ஆண்டுச் சேகரிப்பு ஆகும். + + + + + +கூட்டமைவு VII (ஓவியம்) + +கூட்டமைவு VII (Composition VII) என்பது, ரஷ்யாவில் பிறந்த, புகழ் பெற்ற ஓவியரான வசிலி கண்டின்ஸ்கி வரைந்த ஓவியம் ஆகும். 1913 ஆம் ஆண்டில் வரையப்பட்ட இவ்வோவியம், முதலாம் உலகப் போருக்கு முற்பட்ட, கண்டின்ஸ்கியின் சாதனைகளின் உச்சக்கட்டம் எனக் கருதப்படுகின்றது. + +கண்டின்ஸ்கி இந்த ஓவியத்தை நேரடியாக வரையத் தொடங்கவில்லை. இதனை வரையுமுன், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி முப்பது ஓவியங்களைச் சோதனை நிலையில், வரைந்துள்ளார். இவருடைய இந்தச் சோதனைக் கட்டத்தின் பின் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் இறுதி ஓவியத்தை வரை���்து முடித்ததார். + +இந்த ஓவியம் நடுவில் ஒரு ஒழுங்கற்ற செவ்வகத்தால் வெட்டப்படுகின்ற நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனைச் சுற்றிலும், பல விதமான வடிவங்களும், நிறங்களும் சுழல்வதுபோல் உள்ளன. இவ்வோவியத்தின் இறுதி வடிவத்தில் படம் சார்ந்த எதுவும் இல்லாமல் முழுதும் பண்பியல் (abstract) ஓவியமாகவே உள்ளது. + + + + +பண்பியல் ஓவியம் + +தற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. அக்காலத்தைச் சேர்ந்த கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது. + + + + +நக்மா + +நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவர். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர். இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். + +தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. + +2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார். + +நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு + + + + +மீனா (நடிகை) + +மீனா (பிறப்பு: 16 செப்டம்பர், 1976; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் "நெஞ்சங்கள்" திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். + + + + + +வசுந்தரா தாஸ் + +வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் பத்ம ஸ்ரீ கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்தினூடக அறிமுகம் ஆனார். தமிழ் (தெலுங்கு டப்பிங் உட்பட) படமான முதல்வன் "ஷகலக்க பேபி" பாடலைப் பாடியுள்ளார். + + + + + +பொங்கலோ பொங்கல் + +பொங்கலோ பொங்கல் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வி.சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், வடிவேலு, சின்னி ஜெயந்த், சார்லி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +சமூகத் திரைப்படம் + +கிராமத்தில் வாழும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சுயமுயற்சியால் சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதை +நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான திரைச்சித்திரம். உழைப்பின் அருமையையும் எல்லாரும் அரசு வேலையை நம்பிக் காத்திருக்காமல் சுயமாக உழைக்க வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் படம். + + + + +திருமால் பெருமை (திரைப்படம்) + +திருமால் பெருமை 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேச���், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஆன்மிகப்படம் / நாடகப்படம் + + + + + +விக்ரம் பேத்தால் + +விக்ரம் பேத்தால் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்கமூட்டப்பெற்ற பன்மொழித் திரைப்படமாகும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் வெளியிடப்பெற்ற இத்திரைப்படம் விக்கிரமாதித்தன் கதைகளின் பின்னணியில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. + +இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம் + + + + +ரிஷி (2001 திரைப்படம்) + +ரிஷி 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் குமார், சங்கவி, அருண் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 16 பிப்ரவரி 2001 அன்று வெளியான இப்படம் ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது. + +மசாலாப்படம் + +திருடுதலை தொழிலாகக் கொண்டவன் ரிஷி (சரத் குமார்). கொள்ளைக்கார ரவுடியான சாத்தியனிடம் (அருண் பாண்டியன்) அடியாளாக வேலை செய்கிறான் ரிஷி. அவ்வாறாக ஒரு சமயம், மந்திரி தேவராஜ் (தேவன்) பத்திரிக்கையாளர் ஹேமாவை கொல்வதை பார்த்துவிடுகிறான் ரிஷி. சாகும் தருவாயில், ஹேமா ரிஷியிடம் ஒரு பிளாப்பி டிஸ்கை தருகிறாள். ஆனால், அதை பெரிதாக சட்டை செய்யவில்லை. ஆனாலும் அந்த பிளாப்பி டிஸ்க் தேவராஜுக்கு தேவையாக இருக்கிறது. +வேலு பார்ப்பதற்கு ரிஷியை போலவே இருப்பான். ஆனால், மிகவும் நல்லவன். அந்நிலையில், கண்கள் தெரியாத நந்தினியை (சங்கவி) காப்பாற்றி கண் அறுவை சிகிச்சைக்கு பணம் உதவி செய்து அவளை பார்த்துக்கொள்கிறேன் ரிஷி. வேலுவை ரிஷி என்று நினைத்து தேவராஜுவின் அடியாட்கள் தாக்குகிறார்கள். வேலுவும் ரிஷியும் மருத்துவமனையில் சந்திக்கும் பொழுது நட்புக் கொள்கிறார்கள். + +தேவராஜின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டதால், நந்தினியை கடத்தி, ரிஷியை முதலமைச்சரை (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) கொல்லும்படி மிரட்டுகிறான் தேவராஜ். ரிஷிக்கு பதிலாக வேலு அந்த இடத்திற்கு சென்றுவிடுகிறான். வேலுவுக்கும் ரிஷிக்கும் என்னவானது? முதலமைச்சர் காப்பாற்றப்பட்டாரா? நந்தினிக்கு என்னாவது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும். + + +பா. விஜய் மற்றும் பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை���்தார். + + + + +பந்தா பரமசிவம் + +பந்தா பரமசிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, அப்பாஸ், வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +நகைச்சுவைப்படம் + + + + +உயர்ந்த மனிதன் + +உயர்ந்த மனிதன் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். குமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +நாடகப்படம் + +பாடல்கள் - வாலி + + +  + + + + +பேர் சொல்லும் பிள்ளை + +பேர் சொல்லும் பிள்ளை 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ராதிகா, கே. ஆர் . விஜயா, கவுண்டமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +மசாலாப்படம் + +பாடல்கள் - புலவர் புலமைப்பித்தன் + + + + +கிழக்குச் சீமையிலே + +கிழக்குச்சீமையிலே 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +கிராமப்படம் + +பாடல்கள் - வைரமுத்து + + + + +அது ஒரு கனாக்காலம் + +அது ஒரு கனாக்காலம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், பிரியாமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +காதல்படம் / கலைப்படம் + +அது ஒரு கனாக்காலம் - விமர்சனம் + +திரை விமர்சனம் + + + + +காலம் பதில் சொல்லும் + +காலம் பதில் சொல்லும் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. பி. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, மனோரமா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +மசாலாப்படம் + + + + +நீலக்குயில் (திரைப்படம்) + +நீலக்குயில் 1995 ஆம��� ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஷ்ரஃப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். பாண்டியராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + +நடனம் - ராஜூ சுந்தரம் + +பாடல்கள் - வாலி + + + + +வண்ண வண்ண பூக்கள் + +வண்ண வண்ண பூக்கள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மௌனிகா, வினோதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +காதல்படம் + + + + +யூர்ட் + +யூர்ட் "(Yurt)" என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் மாற்றி அமைக்கத்தக்க ஒரு வகை உறையுள் (வீடு) ஆகும். இது நடு ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. + +"யூர்ட்" என்னும் சொல் தொடக்கத்தில் துர்க்கிக் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இச்சொல், "தாய்நிலம்" (homeland) என்ற தொனியில், "குடியிருக்கும் இடம்" (dwelling place) எனப் பொருள்படும். ரஷ்யாவில் இது "யூர்ட்டா" என அழைக்கப்பட்டது. ரஷ்ய மொழியிலிருந்து இச்சொல் ஆங்கில மொழிக்கு வந்தது. + +மரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். + +வீட்டுக்கான சட்டகம், ஒன்று அல்லது இரண்டு சாளர அமைப்பு, கதவு நிலை, கூரைக்கான வளைகள், ஒரு முடி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில வகை யூர்ட் களில், முடியைத் தாங்குவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தூண்களும் அமைந்திருப்பது உண்டு. சட்டகத்தின் மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி வகைத் துணியைப் போர்த்துவர். இதன் மேல் சில சமயங்களில், கிடைப்பதைப் பொறுத்து, "கான்வஸ்" துணியாலும் போர்த்தப்படும். கயிறுகளைப் பயன்படுத்திச் சட்டகத்தை உறுதியாக ஆக்குவர். அமைப்பு, மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் பாரத்தால் நிலத்தில் உறுதியாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால், கூரையின் மையப்பகுதியில் இருந்து பாரமான வேறு பொருட்களைத் தொங்க விடுவதும் உண்டு. யூர்ட்டின் அளவு, நிறை, கூரை மரங்களின் அமைப்பு என்பன இடத்துக்கிடம் வேறுபடுவதையும் காணலாம். + + + + +குகை ஓவியம் + +குகை ஓவியம் அல்லது பாறை ஓவியம் என்பது, குகைகள், பாறைகள் போன்றவற்றில் வரையப்பட்ட பண்டைக்கால ஓவியங்களைக் குறிக்கும். இவை பொதுவாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. குகை ஓவியங்கள், 40,000 ஆண்டுகள் வரை பழமையான, மேற் பழைய கற்காலக் காலத்திலிருந்தே வரையப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வோவியங்கள் பெரும்பாலும் சமூகத்தின் மதிப்புக்குரிய மூத்தோராலேயே வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. + +1837 ஆம் ஆண்டில், சர். ஜார்ஜ் கிரே ("Sir. George Grey") என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார். ஆனாலும் ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. பின்னர், 1879 ஆம் ஆண்டில் இன்னுமொரு குகை ஓவியக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்டமிரா என்னுமிடத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி குகை ஓவியம் ஒன்றைக் கண்டு பிடித்தாள். இக் கண்டுபிடிப்பின் பின்னரே மானிடவியல், தொல்லியல் போன்ற துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடையே குகை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது. + +முதன் முதலாக ஐரோப்பாவில் அல்டமிராவில் மக்தலேனியப் பண்பாட்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது ஒரு ஏமாற்று என்று கல்வியாளர்களால் கருதப்பட்டது. எனினும், பிற்காலத்து மீள் மதிப்பீடுகளும், தொடர்ந்து இடம்பெற்ற புதிய குகை ஓவியக் கண்டு பிடிப்புக்களும், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளன. அத்துடன், மிக எளிமையான கருவிகளைப் பயன்படுத்திய மேற் பழையகற்கால மனிதர்களின் உயர் தரத்திலான கலைத் திறமையையும் அவை வெளிக் கொணர்ந்துள்ளன. +இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் வயதைக் கணித்த ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்ஸி���ே ஆபோர்ட், இந்த மரோஸ் குகையிலுள்ள ஓவியங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஆண்டுகளாவது வயதிருக்கும் என்று கணித்திருக்கிறார். +இந்தோனேசிய குகை ஓவியங்களுக்கு சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். +இந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள் குறைந்தது 13 ஆயிரம் ஆண்டுகளுக்காவது ஓவியங்களை வரைந்துவந்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடிகின்றது. +குகை ஓவியங்கள் அவை வரையப்பட்ட கால கட்டங்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கான பெறுமதியான தகவல்களையும் நமக்குத் தருகின்றன. + +ஆஸ்திரேலியக் குகை ஓவியங்கள் சிலவற்றைக் கீழே காண்க. + + + + + +குடும்பிமலைச் சண்டை + +மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கரடியானாறு, புல்லுமலை, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சுவிமானம் குண்டுகளை வீசிவருகின்றது. தவிர சத்துருகொண்டான், மட்டுநகர், புதூர், பிள்ளையாரடி,ஒட்டமாவடி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களிருந்து தொடர்ச்சியாக செக் நாட்டுப் பல்குழற் பீரங்கிகள், ஆட்டிலறி மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதால் மட்டக்களப்பு நகரப்பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது. + +பெப்ரவரி 27 ல் இத்தாலிய, அமெரிக்க இராஜதந்திரிகள் மட்டக்களப்பு வந்திறங்கியபோது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இலங்கை இராணுவத்தால் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்கள் நோக்கி மூர்க்கத்தமாக குண்டுகளை வீசிவருகின்றது. மேலும் தரைவழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறவும் முயற்சிக்கின்றது. + +40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பெரும்பாலும் உடுத்த உடையுடனேயே மட்டக்களப்பு நகரப்பகுதியை சார்ந்த பிரதேசங்களான புதூர், கள்ளியங்காடு, பிள்ளையாரடி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போதுள்ள நலன்புரி நிலையங்கள் இவர்களால் நிரம்பி வழிகின்றன. மட்டு அரச அதிபர் திணைக்களம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உட்படப் பல்வேறு அமைப்புக்களும் உதவியை ஆரம்பித்துள்ளபோதும் தொடர்ந்துவரும் யுத்த சூழ்நிலைகாரணமாக உதவிவழங்குவதில் தாமதமேற்படுகின்றது. + +கம்பிவழி தொலைபேசி தவிர்ந்த எனைய நகர்பேசி மற்றும் CDMA சேவைகள் 6 மார்ச் 2007 இல் இருந்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால், உதவி வழங்குதலில் ஐக்கிய நாடுகள் (சொந்த வானொலித் தொடர்பாடல் வலையமைப்பைப் கொண்டுள்ளதால்) தவிர்ந்த ஏனைய அமைப்புக்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிகின்றது. + + + + + +காற்றோட்டம் + +ஏயர் (ஏரிஃபிரேஷன் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது காற்று மூலம் பரவுகிறது, கலக்கப்பட்டு அல்லது திரவத்தில் அல்லது கலக்கத்தில் கலக்கப்படுகிறது. + +திரவங்களின் காற்றோட்டம் (பொதுவாக நீர்): +பொறான பீங்கான் டிஃப்பியூசர்கள் அலுமினிய ஆக்சைடு தானியங்களை உருகுவதன் மூலம் பீங்கான் பத்திரங்களைப் பயன்படுத்தி ஒரு வலுவான, ஒரே சீரான நுண்ணிய மற்றும் ஒத்த அமைப்பை உருவாக்குகின்றன. இயற்கையாக ஹைட்ரோபிலிக் பொருள் எளிதில் ஈரப்பதமான விளைவை ஏற்படுத்துகிறது, இதனால் சீரான குமிழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. +காற்று அல்லது திரவ ஒரு குறிப்பிட்ட அளவு, மேற்பரப்பு பரப்பு வீழ்ச்சியுடன் அல்லது குமிழி அளவு விகிதத்தில் மாற்றங்கள், பரிமாற்றம் ஏற்படலாம் மிகவும் மேற்பரப்பு பகுதி. மிகவும் சிறிய குமிழ்கள் அல்லது சொட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் உயர் தொடர்பு மேற்பரப்புப் பகுதியின் காரணமாக எரிவாயு பரிமாற்ற விகிதம் (காற்றோட்டம்) அதிகரிக்கிறது. இந்த குமிழ்கள் கடந்து செல்லும் துளைகள் பொதுவாக மைக்ரோமீட்டர் அளவு.  + + +மண்ணில், காற்றோட்டம் காற்று இடைவெளிகளின் அளவைக் குறிக்கிறது. + +மண் வளிமண்டலமானது எந்திரவியல் அல்லது கைமுறை உபகரணங்களைப் பயன்படுத்தி துளையிடுதலுடன் (ஸ்பைக் காற்றோட்டம்) மண் அல்லது தரையில் (முக்கிய காற்றோட்டம்) சுமார் 1 "x 2" மண்களை நீக்க வேண்டும். ஒரு புல்வெளி மீட்டெடுக்க முயற்சிக்கும் போது காற்றோட்டம் கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மீண்டும் கொண்டு வர மிகவும் முக்கியம். [சான்று தேவை] அது வடிகால் அதிகரிக்கிறது மற்றும் puddles உருவாக்கம் குறைக்கிறது.  + +ஸ்பைக் காற்றோட்டம் ஒரு காற்றோட்டம் இயந்திரத்தை பயன்படுத்துவது, நீளமான ஒரு அடி அல்லது அதற்கு மேல். சில நேரங்களில் தரைப்பகுதிகளில் வடிகால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. கோர் காற்றோட்டம் டர்ப் காம்பாக்சைக் குறைப்பதன் மூலம், அந்தக் கட்டமைப்பைக் குறைத்து, நீர் / சத்துக்களை ஊடுருவி மேம்படுத்துதல், ஆழமான வேர்களை ஊக்குவித்தல், புல் விதை மண்ணுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சூழலை உருவாக்குதல் போன்ற கருவியாகும். [சான்று தேவை]  + +பல வகையான புல்வெளிகளும், மாதிரிகள் பின்னால் நடைபயிற்சி, பதிப்புகள் மற்றும் டிராக்டரை இழுத்து பதிப்புகள், அதே போல் ஸ்பைக் ஷூக்கள் போன்றவையும் உள்ளன + +காற்று உணவு உருப்படிக்குள் உறிஞ்சப்படும் செயல்முறையை குறிக்கிறது. இது கேக்குகள் மற்றும் ரொட்டியின் ஈரப்பதத்தை குறிக்கிறது, அவர்கள் கொண்டிருக்கும் துளைகள் வகை, மற்றும் காற்று குமிழ்கள் இணைக்கப்பட்டுள்ள சில சாஸ் நிறம் மற்றும் அமைப்பு. + +திராட்சை மது வகைகளில் மது அருந்துதல் மற்றும் கண்ணாடிகளில் சுழற்சிக்கல் ஒயின் உள்ளிட்ட ஏராளமான வழிவகைகளை வாங்குதல், காற்றுக்கு வெளிப்பாடு அதிகரிக்க ஒரு டிக்னெட்டரின் பயன்பாடு அல்லது ஒரு விசேஷ ஒயினரே.  + +அஸ்டுரியஸிலிருந்து சாறு காற்றோட்டத்தை அதிகரிக்க 1 meter (el escanciado) உயரத்திலிருந்து கண்ணாடிக்குள் ஊற்றப்படுகிறது. + + +ஆக்ஸிடெர்பைன் ஏஜெட்கள் + + + + +உள்ளக வளிப் பண்பு + +உள்ளக வளிப் பண்பு (Indoor Air Quality) என்பது, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும் வளியின் தரம் தொடர்பானது ஆகும். இது, உள்ளக வளியில் கலந்திருக்கக் கூடிய, மனிதரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய, பல்வேறு வகையான அம்சங்களைப் பற்றிக் கவனத்துக்கு எடுக்கிறது. உள்ளக வளியில், நுண்ணுயிரிகள் (பூஞ்சணம், பாக்டீரியா), வேதியியல் பொருட்கள் (காபனோரொட்சைட்டு, ரேடான்), மற்றும் பல வகையான, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் கலக்கின்றன. அண்மைக்கால ஆய்வுகள் உள்ளக வளி, வெளியே இருக்கும் வளியைவிட அதிக மாசடைந்தது எனக் காட்டுகின்றன. உண்மையில் உள்ளக வளி, வெளிப்புற வளியைவிட, உடற் தீங்கு விளைவிப்பதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. காற்றோட்டத்தின் மூலம் மாசுகளின் செறிவைக் குறைத்தல், வடித்தல், மாசுகள் உருவாகக் கூடிய இடங்களிலேயே அவற்றைத் தடுத்தல் அல்லது குறைத்தல் என்பன உள்ளக வளிப் பண்பை மேம���படுத்துவதற்கான அடிப்படை வழிமுறைகள் ஆகும். + + + + +மண்ணரிப்பு + +மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது. + +மண்ணரிப்பு ஒரு இயற்கையான நடைமுறையே. சுமார் 450 மில்லியன் ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிற ஒன்று. ஆனால், பொதுவாக இயற்கையின் செயற்பாட்டின் போது, மேல் மண் புதிதாக உருவாகும் வேக அளவுக்கு ஈடாகவே அரிப்பும் நடைபெற்றது. மனிதனுடைய அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தச் சமநிலையைக் குழப்பிவிட்டன. இதனால் அரிப்பு வேகமாக நடைபெற்று வளமான நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன. + +மண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. சரிவு கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும். + +மண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம். + + + + + + + + +வி. திவ்வியராஜன் + +வி. திவ்வியராஜன் (பி: வரணி, யாழ்ப்பாணம்) பாடகர், பாடலாசிரியர், நடிகர், கதாசிரியர், இசை அமைப்பாளர், திரைப்பட இயக்குனர் என்ற பல அடை மொழிகளுக்கு உரித்தானவர். இலங்கையில் ரூபவாகினி நடத்திய "உதயகீதம்" மெல்லிசைப்போட்டியில் கலந்து முதலிடம் பெற்றவர். அங்கே "கிராமத்துக் கனவுகள்" முதலான வானொலி நாடகங்களிலும் நடித்தவர். இவர் பாடிய, மெட்டமைத்த பல பாடல்கள் கனடாவில் இறுவட்டுக்களாக வந்திருக்கின்றன. + +இவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படங்கள் + + + + +ஊரான ஊரிழந்தோம் - பாடல் கேட்க + + + + +எங்கோ தொலைவில் + +எங்கோ தொலைவில் கனேடிய தமிழ் கலைஞர் கழகத்தினரால் தயாரிக்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த, கே. எஸ். பாலச்சந்திரனின் "எங்கோ தொலைவில்" என்ற சிறுகதை மே���ைநாடகமாக்கப்பட்டு வின்னிபெக், சஸ்கட்டூன், வன்கூவர் நகரங்களிலும், ரொரன்ரோவில் உலக பண்பாட்டு மகாநாட்டிலும் மேடையேறியது. அந்த நாடகமே பின்னர் திரைப்படமாகியது. +இந்த திரைப்படத்தில் எஸ். ரீ. செந்தில்நாதன், எஸ். மதிவாசன், துஷி ஞானப்பிரகாசம், மேகலா, சுப்புலட்சுமி காசிநாதன், எஸ். ஆர். காசிநாதன் முதலானோர் நடித்தார்கள். இரட்டைப்பாதை சேகர் எழுதிய பாடலுக்கு, தாரணி மதிவாசன் இசையமைக்க, சித்திரா பீலிக்ஸ் பாடியிருந்தார். எம். ஜெயக்குமார் (கண்ணன்) படப்பிடிப்பு, படத்தொகுப்பு இரண்டினையும் செய்தார். + + +என் படைப்புக்கள்- எங்கோ தொலைவில் - வலைத்தளம் + + + + +புத்தளம் இந்து மத்திய கல்லூரி + +புத்தளம் இந்து மத்திய கல்லூரி இலங்கையின் புத்தளம் நகரில் உள்ள ஒரு தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இது மறைந்த நடராஜ தேவரினாலும் மறைந்த இரட்ணசிங்கம் அவர்களாலும் 1979 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் ஆரம்ப இடைநிலை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலை வளாகத்தில் முருகன் கோவில் உள்ளது. இப்பாடசாலையில் பெரிய விளையாட்டுத்திடலும் அமைந்துள்ளது. + + + + +கெர்கஸ்வோல்ட் இல 2 தமிழ் வித்தியாலயம் + +நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் அமைந்துள்ள்ள கெக்கஸ்வோல்ட் இல 02 தமிழ் மகாவித்தியாலயம் 1941 இல் லெட்சுமித் தோட்டத்தில் ஆரம்பப்பிரிவுப் பாடசாலையாக விளங்கியது (தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை). இப்பாடசாலை காலப்போக்கில் மாணவர் வரவு குறைந்தமையால் மூடப்பட்டு அழிவுற்ற நிலையில் இருந்த்தாக அறியக்கிடைகின்றது. இந்நிலையைல் மலையகத்தின் பெரும்பாலன பாடசாலைகளுக்குப் புத்துயிரூட்டும் வகையில் “சீடா” செயற்திட்டத்தினூடாக பாடசாலைகளுக்கு தளவாடங்கள் மற்றும் சிறிய வழங்கள் கிடைத்தது. + +ஒரு அதிபருடனும் இரண்டு ஆசிரியருடனும் தரம் 1 இல் 14 மாணவர்களுடனும் தரம் 6 இல் 17 மாணவர்களுடனும் 1992 இல் புதிய கட்டடத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இப்பாடசாலை டியன்சின் தமிழ் வித்தியாலயத்தின் ஓர் இணைப்புப் பாடசாலையாகவே இருந்தது. + + + + + + + + +உயிரே உயிரே (1998 திரைப்படம்) + +உயிரே உ��ிரே - கனடாவில் ஜனகன் பிக்சர்ஸ் ஸ்ரீமுருகன் தயாரித்து 1998ல் வெளிவந்த திரைப்படம். வர்த்தக நோக்கில் கனடாவில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. + +கே. எஸ். பாலச்சந்திரன், ஆனந்தி ஸ்ரீதாஸ், ரமேஷ் புரட்சிதாசன், ராஜ்குமார், எலிசபெத் மாலினி, ஸ்ரீமுருகன் முதலானோர் நடித்த இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். இசைத்தொகுப்பையும், படத்தொகுப்பையும் ஆர். கே. வி. எம். குமார் செய்தார். + +உயிரே உயிரே Video Clips + + + + +பேசாலை + +பேசாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால் விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குத் தடுக்கப்பட்ட பொருட்களான சீமெந்து, பெற்றோல் போன்றவற்றைக் கடத்ததும் நிலையமாகவும் விளங்கிவருகின்றது. மீன்பிடியில் அவ்வப்போது இந்திய மீன்பிடிவள்ளங்களுடன் பிணக்குகள் ஏற்படுவது வழக்கமாகும். + + + + +வட்டுக்கோட்டை + +வட்டுக்கோட்டை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 11 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் பொன்னாலையில் இருந்து கிழக்கு நோக்கித் திரும்பும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி (AB21) ஊடறுத்துச் செல்கின்றது, இதைத்தவிர இவ்வூரை கொக்குவில்-வட்டுக்கோட்டை வீதி வழியாகவும் வந்தடையலாம். இவ்வூரைச்சூழ அராலி, மூளாய், சித்தங்கேணி போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவ்வூரில் நடைபெற்றது ஒரு சிறப்பம்சம் ஆகும். + +வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை என்பதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும், மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து (வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை) வந்தது என்றும் வாதிடுகின்றனர். + + + + + + +மைக்ரோசாப்ட் அவுட்லுக் + +மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் (இதன் முழுப்பெயரானது மைக்ரோ���ாப்ட் ஆபிஸ் அவுட்லுக் என மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மென்பொருளில் இருந்து அறியப்படுகின்றது.) ஓர் பிரத்தியேக தகவல் முகாமைத்துவ மென்பொருளாகும். இது ஆபிஸ் மென்பொருளின் ஓர் அங்கம் ஆகும். + +இது பிரதானமாக மின்னஞ்சலிற்கே பயன்பட்டாலும் இது நாட்காட்டி, Task, Contact Management, குறிப்பெழுதும் வசதிகளைக் கொண்டது. + +இது ஓர் தனியான மென்பொருளாக இயங்குமெனினும் மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச் சேவருடன் கூட்டியங்கி மின்னசல்களைப் பகிர்தல் அதாவது நாட்காட்டி, பொதுவான கோப்புறைகளை வைத்திருத்தல் (Common Folders) மற்றும் கூட்டங்களுக்கான கால அட்டவணை (இலங்கை வழக்கு: நேர சூசிகை) தயாரித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. + +அவுட்லுக் மைக்ரோசாப்டின் முந்தைய செடியூல்+ (Schedule+) மற்றும் எக்ஸ்சேஞ் கிளையண்டை மாற்றீடு செய்ய உருவாகப்பட்ட மென்பொருளாகும். + +முக்கியமான அவுட்லுக் பதிப்புக்களாவன + + + + +காடழிப்பு + +காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன. இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. + +போதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது. + +காடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு ("edge effects"), வாழிடத் துண்டாக்கம் ("habitat fragmentation") போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன. +காடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும். காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன. + +2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. + +காடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது. + +காடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர���க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது. + +உள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும். + +குறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது. + +காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்கு காரணமாகும். + +நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை. சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை கொடுக்கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டல காடுகள் அழிவதற்கான காரணங்கள��ல் இதன் பங்கு 8% என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. + +சமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும், செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம், + +மக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும். உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது, இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன. + +2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் " என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம். +காட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்கு காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை. உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைக்கிறது. இந்த சேவைகளுக்கு போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகள் வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும். +கடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேஷியா, லத்தீ���் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது. + +ref> +காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது. +காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்கு காரணம். அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களை பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும். காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்க செய்கிறது கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது. இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம். பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும். காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது. புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை. + +மழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள், வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு -- () 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும். + +இடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது. + +சீனாவின் சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்���ப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கதகு பள்ளதாக்குகள்உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீரிக்கு மஞ்சள் நிறத்தை தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் எந்த ஆற்றை சீனாவின்துன்பம் என்று அழைக்கிறார்கள். + +மரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது . வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும்,மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பை குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன. + +மர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்ற இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது. + +பல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும். மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதொ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது. + +காடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது. காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது. +வெப்பமண்டல மழைக்காடுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும். உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும். காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. + +மழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி ��னங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. + +சிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன. + +பிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது. + +உயிரியல் பன்முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது. வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்���ிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள். + +காட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது. + +வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளது. + +உலக காடழிப்பு 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.ref name="Wilson">E. O. Wilson, 2002, "The Future of Life", Vintage ISBN 0-679-76811-4 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிர��்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர். +மதிப்பீடுகளும் வெப்பமண்டல காடுகளின் அழிப்பை போலவே பரவலாக வேறுபடுகிறது. விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டல காடுகள் உள்ளன.21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள். + +செயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது. மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது. + +சிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவை பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது. + +ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது. இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதை காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா.கணக்கெடுப்பின் படி காடு என்பது 10% மரங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,"என்று லண்டனை தளமாக கொண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டும்மின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடு���ர்.(சட்டவிரோதமான அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை). + +மழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது. + +மடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது. 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா, மலேஷியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர். பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர். அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. + +1951 முதல் 1980 வரையில் ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன. + +உலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது. ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. +சீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும். + +வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும். + +மேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் . + +ஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு தடுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையை��ும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும். + + + + + + +சர்மிளாவின் இதய ராகம் + +சார்மிளாவின் இதய ராகம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம். இது 1993இல் திரையிடப்பட்டது. இலங்கையின் வாரப் பத்திரிகையான சிந்தாமணியில் ஜெக்கியா ஜுனைதீன் என்ற பெண் எழுத்தாளர் 32 வாரங்களாக எழுதிய ஒரு தொடர்கதை மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, நாவலாகவும் வெளி வந்தது. இவரது கணவரான பேராதனை ஜுனைதீன் ஏற்கனவே இலங்கையில் தயாரான ஆங்கிலப்படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களான டாக்சி டிரைவர், தெய்வம் தந்த வீடு ஆகியவற்றுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியவர். எனவே தனது மனைவியின் நாவலை படமாக்க நினைத்தார். இலங்கையின் மூன்று இனத்துக் கலைஞர்களையும் சம்பந்தப்படுத்தி படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்துவிட்டது. + +சிங்களத் திரைப்படங்களில் சற்று பிரபலமாக இருந்த சசி விஜேந்திரா, வீணா ஜெயக்கொடி இருவரும் பிரதான பாத்திரங்களிலும், எஸ். ராம்தாஸ், கே. எஸ். பாலச்சந்திரன், எம். எம். ஏ. லத்தீப், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா போன்ற பலர் துணைப் பாத்திரங்களிலும் நடித்தார்கள். சிங்களப் படங்களை இயக்கிய சுனில் சோம பீரிஸ் இந்தப் படத்தை இயக்கினார். படப்பிடிப்பு செய்தவர் ஜே. ஜே. யோகராஜா. சரத் தசநாயக்காவின் இசையில், விஸ்வநாதராஜா, இஸ்மாலிகா, ஜுனைதீன் எழுதிய பாடல்களை, முத்தழகு, கலாவதி, எஸ். வீ. ஆர். கணபதிப்பிள்ளை, ராணி ஜோசப் ஆகியோர் பாடினார்கள். + + + + + + +குமார் பொன்னம்பலம் + +குமார் பொன்னம்பலம் (ஆகத்து 12, 1940 - சனவரி 5, 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். குமார் பொன்னம்பலம் 2000, சனவரி 5 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் கஜேந்திரகுமார் தற்போது தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். + +யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், அழகுமணி ஆகியோருக்குப் பிறந்தவர் குமார். யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மணந்தார். தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார். + +1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டில் தந்தை இறந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானார். + +இவர் சார்ந்திருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் கூட்டணியின் ஒரு உறுப்புக் கட்சி ஆகியது. தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே குமாரின் தந்தை ஜீ. ஜீ. பொன்னம்பலமும், எஸ். ஜே. வி. செல்வநாயகமும் காலமாகிவிட்டனர். இத் தேர்தலில் கூட்டணி சார்பில், தனது தந்தை பல தடவைகள் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்குக் குமார் பொன்னம்பலம் விருப்பம் கொண்டிருந்தார். எனினும் ஏற்கனவே உறுப்புக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதியிலேயே அக்கட்சியினர் போட்டியிட வேண்டும் என்ற கொள்கைக்கு அமையக் காங்கிரஸ் கட்சியினருக்கு, யாழ்ப்பாணத் தொகுதி ஒதுக்கப்படவில்லை, பதிலாக வட்டுக்கோட்டைத் தொகுதி குமாருக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத குமார் யாழ்ப்பாணத் தொகுதியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார். எனினும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி சார்பில் எத்தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்ற நிலை இருந்தும், கிடைத்த தொகுதியை ஏற்காது தனித்துப் போட்டியிட்டதன் மூலம் தனது வாழ்வில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை அவர் இழந்தார். + +1977 ஆம் ஆண்டுப் ��ொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தனியாக இயங்கச் செய்வதில் குமார் ஆர்வம் காட்டினாலும், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியிலேயே இயங்கினர். இத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்ப் பகுதிகளில் மிதவாதிகளின் கை தாழ்ந்து வந்தது. தீவிரவாதம் முனைப்புடன் தலை தூக்கியது. காலப்போக்கில் சொந்தக் காலில் நின்று தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்த மிதவாதக் கட்சிக்குமே வாய்ப்புக் கிட்டவில்லை. + +எனினும், முழு நாட்டுக்கும் நடைபெற அதிபர் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். வெற்றிபெற முடியாது என்பது உறுதியாக இருந்தும், தமிழீழத்துக்கான, நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். + +நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். + +இவர் இறந்த பின்னர், விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர். + + + + + +ஏப்ரல் 17 + + + + + + + +ஏப்ரல் 18 + + + + + + + +ஏப்ரல் 19 + + + + + + + +ஏப்ரல் 20 + + + + + + + +ஏப்ரல் 21 + + + + + + + +ஏப்ரல் 22 + + + + + + + +ஏப்ரல் 23 + + + + + + + +கிபிர் + +கிபிர் (; , "சிங்கக்குட்டி") என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன. + + + + + +ஓர விளைவு + +ஒன்றுக்கொன்று இயைபில்லாத அல்லது முரண்படுகின்ற சூழல்கள் ஒரு சூழல் மண்டலத்தில் ("ecosystem") அருகருகே அமைவதால் ஏற்படும் விளைவே ஓர விளைவு அல்லது விளிம்பு விளைவு (edge effect) எனப்படுகின்றது. இது பொதுவாக, இரண்டு வாழிடங்களுக்கு ("habitats") இடையிலான எல்லைத் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துரு ஆகும். சிறப்பாகக் காடுகளுக்கும், இயல்பு குலைக்கப்பட்ட அதன் பகுதி அல்லது மேம்படுத்தப்பட்ட நிலப் பகுதிகளுக்கும் இடையிலான எல்லைகள் தொடர்பில் பயன்படுகின்றது. இவ்விளைவு, சிறிய வாழிடத் துண்டுகளில் ("habitat fragments") தெளிவாகத் தெரியும். இவ்வாறான இடங்களில் எல்லைகளில் மட்டுமன்றி விளைவுகள் முழுப் பகுதியிலுமே பரந்து காணப்படலாம். + + + + +வாழிடத் துண்டாக்கம் + +வாழிடத் துண்டாக்கம் (Habitat fragmentation) என்பது, சூழலியல் மாற்றம் உருவாகின்ற ஒரு வழிமுறை ஆகும். இதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவது போலவே, இது, ஒரு உயிரினத்தின் விருப்பமான சூழலில் தொடர்ச்சியின்மை ஏற்படுவதைக் குறிக்கிறது. வாழிடத் துண்டாக்கம், நிலவியல் வழிமுறைகளினால் அல்லது மனிதச் செயற்பாடுகளினால் ஏற்படக் கூடும். நிலவியல் வழிமுறைகளினால் ஏற்படுகின்ற மாற்றம் மிகவும் வேகம் குறைந்தது. மெதுவாகவே இயற்பியற் சூழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மனிதச் செயற்பாடுகளினால் ஏற்படும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் போன்றவை மிக வேகமாகச் சூழலில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முதல் முறையிலான மாற்றங்களே பல்வேறு உயிரினப் பிரிவுகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், இரண்டாவதான மனித செயற்பாடுகள், இன்று பல இனங்கள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறது. + +வாழிடத் துண்டாக்கம், பெரும்பாலும், மனிதர்களால் ஏற்படுகின்றன. இது, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகராக்கம் போன்றவற்றுக்காக தாவர வகைகளை அழிக்கும்போது நடைபெறுகிறது. ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த வாழிடங்கள் (Habitats) துண்டுதுண்டாகப் பிரிவடைகின்றன. பெரும் எடுப்பிலான அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், துண்டுதுண்டான வாழிடங்கள் மேலும் சிறுத்து ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தீவுகள் ஆகிவிடுகின்றன. இவை பயிர் நிலங்களாலும், புல்வெளிகளாலும், செயற்கைத் தளங்களாலும் சில வேளைகளில் தரிசு நிலங்களாலும் பிரிக்கப்படுகின்றன. தரிசு நிலங்கள், பொதுவாக, காட்டை அழித்து எரித்துப் பயிர் செய்யும் முறையின் விளைவாக உருவாகின்றன. + +ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் 90% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இது மோசமான வாழிடத் துண்டாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. + + + + +சீனக் கட்டிடக்கலை + +சீனக் கட்டிடக்கலை என்பது, சீனாவில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்த கட்டிடக்கலையைக் குறிக்கும். இதன் வளர்ச்சியில், கட்டிடங்களின் அமைப்பு முறையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூற முடியாது எனினும், அழகூட்டல் அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. சீனாவை ஆண்ட டாங் வம்சக் (Tang Dynasty) காலத்தில் இருந்து, சீனாவின் கட்டிடக்கலை அயல் நாடுகளான, கொரியா, ஜப்பான், தாய்வான், வியட்நாம் முதலிய நாடுகளின் கட்டிடக்கலைகளில் குறிப்பிடத் தக்க செல்வாக்குச் செலுத்தியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனக் கட்டிடக்கலையில் ஐரோப்பியச் செல்வாக்கு ஏற்படுவதற்கு முன் சீனாவின் மரபுவழிக் கட்டிடக்கலையே பயன்பாட்டில் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், மேற்கத்திய முறைக் கல்விகற்ற சீனக் கட்டிடக்கலைஞர்கள் சீனாவின் மரபுவழி அம்சங்களை மேற்கத்திய முறைகளுடன் கலந்து கட்டிடங்களை வடிவமைக்க முயன்றார்கள். எனினும் இது அதிகம் வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. + + + + + +கொங்கு நாடு + +கொங்கு நாடு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ளப் பகுதியாகும். + +கொங்கு எல்லையை வரையறுத்துக் கூறப்பட்ட முதன்மை மூலங்களாக இரண்டு தனிப்பாடல்களும் கொங்குமண்டல சதக பாடலும் சுவடி உரைநடைக்குறிப்பும் உள்ளன. இம்மூலங்களில் உள்ள எல்லைகள் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. மேலும், இந்த முதன்மை மூலங்களின் அருத்தத்தை விளங்கிக்கொள்வதிலும் பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இக்கருத்துகள் எல்லையை வரையறுத்துக் கூறும் இரண்டாம்கட்ட மூலங்களாக உள்ளன. + +முதன்மை மூலங்களில் கொட��க்கப்பட்டுள்ள எல்லைகள் பின்வருமாறு + +கொங்கு எல்லை குறித்து பொதுவாக ஆய்வாளர்களிடையே நிலவும் முரண்கள் கீழ்கண்டவைகளாகப் பகுக்கலாம். + +கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்திற்கு கி.பி. 1923 ஆண்டில் உரை எழுதி வெளியிட்ட திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள், எல்லையைக் கூறும் அப்பாடலுக்கு, "கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலமென்பதாம்.", என்று உரை எழுதியுள்ளார். + +தனிப்பாடல் வெண்பாக்கள் படி, "கொங்கு நாட்டின் வடக்கு எல்லை தலைமலை/பெரும்பாலை என்றும், மேற்கு எல்லை வெள்ளி மலை என்றும், கிழக்கு எல்லை குளித்தலை என்றும் தெற்கு எல்லை வைகாவூர் என்னும் பழநி என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன", என்கிறார் கோவைக்கிழார். + +கிழக்கு எல்லையாக கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதக பாடலிலும் சுவடி உரைநடைக்குறிப்பிலும் குறிப்பிடப்படும் மதிற்கரை(மதுகரை) என்பது தற்கால மாயனூர் அடுத்த மதுக்கரை எனவும், வடக்கு எல்லையாக முதலாம் தனிப்பாடலில் கூறப்பட்டுள்ள தலைமலை என்றால் தலைமலை எனவும், வடக்கு எல்லையாக பிற பாடல்களில் கூறப்பட்டுள்ள பெரும்பாலை என்பதை தொப்பூர் மலைகளுக்கு அருகே உள்ள தற்கால பெரும்பாலை எனவும் கொள்கிறார். + +மேலும், எல்லைகளைப் பற்றிக் கூறும் போது, "நான்கு மலைகளைக் கொங்கு மண்டலத்தின் நான்கு எல்லைகளாகக் கூறும் ஒரு பழைய வெண்பா; அதன்படி, வடக்கே தலைமலை, தெற்கே வராகமலை, கிழக்கே கொல்லிமலை, மேற்கே வெள்ளிமலை கொங்குமண்டல எல்லைகள். இவ்வாறு கூறுவது, பழங்கால இயற்கை வாழ்வு முறைக்கு ஏற்றவாறு உள்ளது", என்று கூறுகிறார். இதிலுள்ள நான்கு மலைகளை விளக்குகையில், +என்றுக் கொள்கிறார். + +கொங்கு மண்டலத்தின் எல்லையாக, + +முதற்பாடல் படி, காவிரியின் தென்கரையில் உள்ள தற்கால கோயமுத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கரூர் மாவட்டத்தின் பெரும்பகுதி, திண்டுக்கல் மாவட்டத்தின் வடபகுதியான பழனி வட்டம் கொங்கு மண்டலமாகக் கூறப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. இரண்டாவது பாடல், மூன்றாம் பாடல், சுவடி உரைநடைக்குறிப்பு ஆகியவற்றின் படி, முதற்பாடல்களில் ��ுறிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்புடன் காவிரியின் வடகரையில் உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் கங்கவள்ளி வட்டம் தவிர்த்த சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஆகிய பகுதிகளையும் சேர்த்து கொங்கு மண்டலமாகக் கூறப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. + +கொங்கு என்ற சொல்லின் பெயர்க்காரணமாக கீழுள்ள காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. + +கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. +24 நாடுகள் + + +இணைநாடுகள் + + +முதலானவை + +மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது. + +"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373 + +"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160 +'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. + +"விரவியவீங்கோய் மலைமுதலாக விமலர்தம் பதிபலவணங்கிக் + +குரவலர் சோலையணிதிருப்பாண்டிக் கொடு முடியணைந்தனர் கொங்கில்"- பெரிய புராணம்(-ஏயர்கோன்-85) + +"காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும் + +நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலசுழியச் + +சீரூரும் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்"-பெரிய புராணம்(-சேரமான்-164) +கெட்டியான பாறைகள��க் கணிச்சியால் உடைத்து ஆழ்கிணறுகள் தோண்டுவார்கள். 'பத்தல்' என்னும் வாளியைக் கயிற்றில் கட்டி அக் கிணற்றில் நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும்போது பாடிக்கொண்டே இறைப்பார்கள். தண்ணீரை முகந்து பாடுவதால் இப் பாட்டை 'முகவை' என்றனர். + +1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), +2. காஞ்சி (நொய்யல்), +3. வானி (வவ்வானி, பவானி), +4. பொன்னி (காவேரி), +5. சண்முகநதி, +6. குடவனாறு (கொடவனாறு), +7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), +8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு) +9. மீன்கொல்லிநதி +10. சரபங்கநதி +11. உப்பாறு +12. பாலாறு + +கொங்கு நாடு குறித்த மூதுரை : + +கொங்கு மலிந்தால் எங்கும் மலியும் +கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் + + +உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்),கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள் + +கொங்கு நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளுமை 1659 இல் தொடங்கி 1672 இல் முடிவடைந்தது. + + + + + +இலங்கை தொலைபேசிக் குறியீடுகள் + + + + + + +மள்ளர் + +மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். + +இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். + +மள்ளர் எ���்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள். + +‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு. + +சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர். + +திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு + +நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது. + +மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக + +மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். + +இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில். + +என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். +வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப��பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. + +இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும். + +தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் : + +தெய்வேந்திரன் விருதுகள் : + +சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். + +பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. + +இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன. + + + + + +சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் + +சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் ("Swami Vipulananda Institute of Aesthetic Studies") இலங்கையில் மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவகம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுவாமி விபுலாநந்தரின் நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் இக்கல்லூரி கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது. இது முன்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. + +1981 ஆம் ஆண்டு மார்ச் 25 இல் கட்டிடத்திற்கன ஆரம்பப்பணிகள் அமைச்சர் செ. இராசதுரையினால் கல்��டி உப்போடையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழக இசை விற்பன்னர்கள் ஆகிய சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரது கலைநிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 29 ஆம் நாள் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஜீவனானந்தாஜி மஹராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் 2001 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது. + +இக்கல்லூரியில் சுமார் 200 மாணவர்கள் வரை இளமானிப்பட்ட கற்கை நெறியினைத் தொடர்ந்து வருகின்றனர். இசை, நடனம்-நாடக அரங்கியற்றுறை, கட்புலக்கலைத்துறை எனும் மூன்று துறைகளைக் கொண்ட கல்வி நிர்வாகக் கட்டமைப்புடன் இக்கல்லூரி இயங்கி வருகிறது. நுண்கலைத்துறைகளுள் முதன்மை பெறும் இசைத் துறையில் தற்போது வாய்ப்பாட்டு,வீணை, வயலின், மிருதங்கம் போன்ற பட்டப்பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 200 மாணவர்கள் வரை (இசையினைப் பிரதான பாடமாகவும் துணைப்பாடமாகவும் கொண்ட), இசைப்பேராசிரியர் எஸ். இராமநாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய விரிவுரையாளர்களால் செயன்முறை மற்றும் எழுத்துமுறை மூலம் இசை கற்பிக்கப்பட்டு வருகின்றது. வாய்ப்பாட்டிற்கு ஆறு(06) விரிவுரையாளர்களும் வீணைக் கற்கைநெறிக்கு இரு விரிவுரையாளர்களும் மிருதங்கப் பாடநெறிக்கு இரு விரிவுரையாளர்களும் வயலின் பாடநெறிக்கு மூன்று விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர். + + + + +பண்பாட்டுப் பொதுமை + +பண்பாட்டுப் பொதுமை என்பது உலகில் உள்ள எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, ஒரு கூறையோ ஒழுங்கமைப்பையோ (pattern) குணப்பாங்கையோ (trait) நிறுவனத்தையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, திருமணம், மொழி, கலை போன்றவை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினருக்கு மட்டுமன்றி எல்லாப் பண்பாட்டினர் இடையிலும் உள்ளன. இவை பண்பாட்டுப் பொதுமைகள் ஆகும். 250க்கும் மேற்பட்ட பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்த, ஜார்ஜ் பீட்டர் மர்டாக் என்பவர், ஏறத்தாழ இவ்வாறான 70 பொதுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். டொனால்டு பிரவுன் (Donald E Brown) என்பவர் கிட்டத்தட்ட 200 பொதுமைகளைத் தொகுத்துள்ளார். + +பண்பாட்டுப் பொதுமைகள் காணப்படுகின்றன எனினும், அவற்றைத் பாகுபடுத்திப் பார்ப்பது சிக்கலானது என்று தான் எழுதிய "மனிதப் பொதுமைகள்" என்னும் நூலில் பிரவுண் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பொதுமைகளை விளக்குவதற்கு ஒருங்கிணைந்த ஒரே கோட்பாடு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவரது கருத்து. ஆனாலும், இப் பொதுமைகளுக்கான ஒரே மூலத்தை, "மனித இயல்பில்" தான் காணமுடியும் என்றும், அம் மனித இயல்பின் அடிப்படை மனித மனம் தான் என்றும் அவர் கருதுகிறார். + +இவ்வாறு பொதுமைகள் காணப்படுவதற்கு, மனிதனுடைய அடிப்படைத் தேவைகள் ஒன்றாக இருப்பதே காரணம் என்று சிலர் கருதுகிறார்கள். உணவு ஈட்டுதல், உறுப்பினர்களை நெறிப்படுத்தல், உறைவிடம் மூலம் பாதுகாப்பளித்தல், இனம் தொடர்ந்து இருப்பதற்காக இனப்பெருக்கம் செய்தல், குழந்தைகளுக்குப் பண்பாடு கற்பித்தல் என்பன எல்லாப் பண்பாட்டினருக்குமே அடிப்படைத் தேவைகளாக இருப்பதால், இவற்றின் மூலம் பண்பாட்டுப் பொதுமைகள் ஏற்படுகின்றன என்பது அவர்கள் கருத்து + + +பிரவுனால் தொகுக்கப்பட்ட பண்பாட்டுப் பொதுமைகள் + + + + +ஜார்ஜ் பீட்டர் மர்டாக் + +ஜார்ஜ் பீட்டர் மர்டாக் (George Peter Murdock, மே 11, 1897 - மார்ச் 29, 1985) என்பவர், ஒரு குறிப்பிடத்தக்க மானிடவியலாளர் ஆவார். இவர், கனெடிகட்டிலுள்ள, மெரிடென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் அவ்விடத்திலேயே ஐந்து தலைமுறைகளாக வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். இவரது இளமைக்காலத்தில் பெருமளவு நேரத்தைப் பண்ணையில் வேலை செய்தே கழித்தார். இதன் மூலம், மரபுவழியானதும், இயந்திரமயம் ஆகாததுமான பல வேளாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொண்டார். இவர் யேல் பல்கலைக் கழகத்தில் படித்து, அமெரிக்க வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் ஹாவார்ட் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். எனினும் இரண்டாவது ஆண்டில் கல்லூரியை விட்டு விலகி, நீண்டதொரு உலகப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணமும், மரபுவழிப் பண்பாடுகளில் இவருக்கிருந்த ஆர்வமும், இவரது ஆசிரியராயிருந்த ஏ. ஜி கெல்லர் என்பரிடமிருந்து கிடைத்த அகத் தூண்டுதலும் இவரை மானிடவியல் மீது ஆ���்வம் கொள்ள வைத்தன. இதனால், யேல் பல்கலைக் கழகத்திலேயே மானிடவியலும் கற்றார். 1925 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று, அப் பல்கலைக் கழகத்திலேயே மானிடவியல் துறைக்குத் தலைவரானார். + + + + +படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்) + +படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது, அடிமன வெளிப்பாட்டுவாத (Surrealist) ஓவியரான ரேனே மார்கிரிட் (René Magritte) என்பவரால் வரையப்பட்டது. இது, இவ்வோவியத்தில் எழுதப்பட்டுள்ள "இது சுங்கான் அல்ல" (Ceci n'est pas une pipe = this is not a pipe) என்னும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது இப்பொழுது, லாஸ் ஏஞ்சலிசில் உள்ள கவுண்டி ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது. + +இந்த ஓவியத்தில், புகையிலைக் கடையின் விளம்பரத்தில் வருவதுபோல, ஒரு சுங்கான் வரையப்பட்டுள்ளது. இதற்குக் கீழே "இது சுங்கான் அல்ல" என்றும் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும், இதுவே உண்மையாகும். இது சுங்கானின் ஒரு படிமம் மட்டுமே. மார்கிரிட் ஒருமுறை பின்வருமாறு கூறினார்: + +பிரான்சிய இலக்கியத் திறனாய்வாளரும், தத்துவவியலாளருமான மைக்கேல் ஃபௌகல்ட் என்பார் இவ்வோவியம் மற்றும் அதனுடைய முரண்பாட்டைப் பற்றியும் "இது சுங்கான் அல்ல" (1973) என்னும் நூலில் எழுதியுள்ளார். + + + + +வளைவுந்தம் + +கோணவுந்தம் அல்லது வளைவுந்தம் ("Angular momentum") என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் சுழலும் பொழுது, அப்பொருள் சுழலும் இருப்புவரையின் தொடுகோட்டில் கொண்டிருக்கும் உந்தம் ஆகும். வேறு புறத் திருக்கம் ஏதும் அப்பொருளின் மீது செயல்படாதிருக்கும் வரையிலும், அப்பொருள் அதே கோணவுந்தத்தைப் பெற்றிருக்கும். + +இயற்பியலில், கோண உந்தம் "(angular momentum)" (அரிதாக, உந்தத் திருப்புமை "(moment of momentum)" அல்லது சுழற்சி உந்தம் "(rotational momentum)") என்பது நேரியக்க உந்தக் கருத்துப்படிமத்தின் சுழற்சியியக்க ஒப்புமையாகும். இது இயற்பியலில் முதன்மை வாய்ந்த அளவாகும். ஏனெனில், ஓர் அமைப்பின் மொத்தக் கோண உந்தம், புறத்திருக்கத்துக்கு ஆட்பட்டால் ஒழிய, மாறுவதில்லை. + +முப்பருமான வெளியில், ஒரு புள்ளித்துகளின் கோணவுந்தம் என்பது r×p எனும்பகுதிநெறியம் ஆகும். இது துகளின் இருப்பு நெறியம் r (குறிப்பிட்ட அச்சு சார்ந்தது), அதன் உந்த நெறியம் p= "mv ஆகியவற்றின் குறுக்குப் பெருக்கல் ஆகும். இந்த வரையறையைத் திண்மம் அல்லது பாய்மம் அல்லது புலம் போன்ற தொடர்மங்களின் ஒவ்வொரு புள்ளிக்கும் பொருந்துவதாகும். உந்த்த்தைப் போலல்லாமல், துகளின் இருப்பு அச்சில் இருந்து அளக்கப்படுவதால், கோணவுந்தம் தேர்வு செய்த அச்சைச் சார்ந்துள்ளது. புள்ளித் துகளின் கோணவுந்த நெறியம், கோண விரைவு (எவ்வளவு வேகமாக கோண இருப்பு மாறுகிறது எனும்) ω மதிப்புக்கு நேர்விகிதத்திலும் அதன் திசைக்கு இணையாகவும் அதாவது, துகளின் "mv நெறியத்துக்கு இணையாகவும் அமையும். இங்கு விகித மாறிலி பொருளின் பொருண்மையையும் பொருள் அச்சில் இருந்துள்ள தொலைவையும் பொறுத்தமையும். தொடர்ந்த விறைத்த பொருள்களுக்குத் தற்சுழற்சி கோணவுந்தம் கோண விரைவுக்கு நேர்விகிதத்தில் இருந்தாலும் பொருளின் தற்சுழற்சிக் கோணவுந்த நெறியத்துக்கு இணையாக அமைவதில்லை. இதனால், விகித மாறிலி I (உறழ்மைத் திருப்புமை எனப்படுவது) அளவனாக அமையாமல் இரண்டாம் தர உயர்நெறியமாக விளங்குகிறது. + +கோணவுந்தம் கூட்டக்கூடியதாகும்; அமைப்பின் மொத்தக் கோணவுந்தம் தனிக் கோணவுந்தங்களின் நெறியக் கூட்டலுக்குச் சமமாகும். தொடர்மங்களுக்கும் புலங்களுக்கும் தொகைத்தல் (integration) முறையைப் பயன்படுத்தலாம். ஒரு விறைத்த பொருளின் மொத்தக் கோணவுந்தத்தை இரண்டு முதன்மை உறுப்புகளாகப் பகுக்கலாம்: அவை அச்சில் இருந்தமையும் பொருண்மை மையத்தின் கோணவுந்தம், (இங்கு பொருண்மை என்பது மொத்தப் பொருண்மை ஆகும்) பொருளின் பொருண்மை மையத்தில் இருந்தமையும் தற்சுழற்சிக் கோணவுந்தம் என்பனவாகும். + +திருக்கம் என்பது கோணவுந்தத்தின் மாற்றவீதம் என வரையறுக்கலாம். இது விசையை உந்த மாற்றவீதமாக வரையறுத்தலுக்கு ஒப்பானதாகும். கோணவுந்த அழியாமை பல நோக்கீட்டு நிகழ்வுகளை விளக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக கைகளைக் குறுக்கும்போது பனிச்சறுகலத்தின் தற்சுழற்சி வேகம் கூட்ய்வதையும் நொதுமி விண்மீன்களின் உயர் உயர்சுழற்சி வீத்த்தையும் புவியின் கரோலிசு விசை விளைவையும் சுழலும் பம்பர உச்சியின் தலையாட்டத்தையும் கொட்புநோக்கி இயக்கத்தையும் சுட்டலாம். இதன் பயன்பாடுகளில் கொட்புத் திசைகாட்டி, கட்டுபாட்டுத் திருப்புமை கொட்புநோக்கி உறழ்மை வழிகாட்டு அமைப்புகள் எதிர்வினைச் சக்க��ங்கள், சமன்சக்கரங்கள் புவியின் சுழற்சி போன்றவற்றைக் கூறலாம். பொதுவாக, அழியாமை நெறிமுறை அமைப்பின் இயக்கத்தை வரம்புபடுத்துகிறது என்றாலும் சரியான இயக்கத்தை ஒருமுகமாகத் தீர்மானிப்பதில்லை. + +குவைய இயக்கவியலில், கோணவுந்தம், குவையப்படுத்திய ஐன் மதிப்புகளைக் கொண்ட கோணவுந்த வினையியாக (operator) அமைகிறது. இங்கு, கோணவுந்தம் ஐசன்பர்கின் உறுதியின்மை நெறிமுறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள், குறிப்பிட்ட நேரத்தில், துல்லியமாக ஒரே ஒரு உறுப்பை மட்டுமே அளத்தல் இயலும் என்பதும் மற்ற இரண்டை அளக்க இயலாது என்பதும் மேலும், அடிப்படைத் துகள்களின் தற்சுழற்சி நாம் விளங்கிக்கொள்ளும் தற்சுழற்சி இயக்கத்தோடு ஒத்தமையாது என்பதும் ஆகும். + +கோணவுந்தம் ஒரு யூக்ளிடிய நெறிய அளவாகும். இது (மிகவும் துல்லியமாக ஒரு பகுதி நெறியமாகும்) பொருளின் உறழ்மைத் திருப்புமையையும் ஓர் அச்சில் இருந்துள்ள கோணவிரைவையும் பெருக்கிவரும் மதிப்பாகும். என்றாலும், துகள் ஒரே தளத்தில் இருந்தல் கோணவுந்தத்தின் நெறிய தன்மையை நீக்கிவிட்டு அதை ஓர் அளவனாகக் கருதினாலே போதுமானதாகும் (மிகவும் துல்லியமாக பகுதி அளவனாகக் குருதினாலே போதும்). கோணவுந்தத்தை நேர் உந்தத்தின் சுழற்சி ஒப்புமையாகக் கருதலாம். இவ்வாறு நேர் உந்தம்formula_1, formula_2 எனும் பொருண்மைக்கும் நேர் விரைவு ஆகியவற்றுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். + +கோணவுந்தம் formula_4, is proportional to moment of inertia formula_5 எனும் உறழ்மைத் திருப்புமைக்கும் formula_6 எனும் கோண வேகத்துக்கும் நேர்விகிதத்தில் இருக்கும், + +பொருளின் பொருண்ம அளவை மட்டுமே பொறுத்துள்ள பொருண்மையைப் போன்றல்லாமல், உறழ்மைத் திருப்புமை சுழல் அச்சின் இருப்பையும் பொருளின் உருவடிவத்தையும் பொறுத்திருக்கிறது. நேர்க்கோட்டில் உள்ள நேர்வேகத்தைப் போலல்லாமல், கோணவேகம் ஒரு சுழற்சி மையத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே, துல்லியமாக பேசினால் formula_4 அம்மையம் சார்ந்த கோணவுந்தம் எனக் குறிப்பிடப்படவேண்டும். + +தனியொரு துகளுக்கு formula_9 என்பதாலும் வட்ட இயக்கத்துக்கு formula_10 என்பதாலும் கோணவுந்தத்தை formula_11 என விரிவாக்கி, பின்வருமாறு குறுக்கலாம் + +இது சுழல் ஆரம் formula_13, துகளின் நேர் உந்தம் formula_14 ஆகியவற்றின் பெருக்கல் ஆகும், இங்கு formula_15 (formula_16) என்பது formula_13ஆரத்தில் அமைந்த தொடுகோட்டில் உள்ள நேர்வேகத்��ுக்குச் சமம் ஆகும். + +இந்த எளிய பகுப்பாய்வை, ஆர நெறியத்துக்குச் செங்குத்தாக உள்ள உறுப்பைக் கருதினால் வட்டம் அல்லாத இயக்கத்துக்கும் பயன்படுத்தலாம். அப்போது, + +இங்கு formula_19 என்பது இயக்கத்தின் செங்குத்து உறுப்பாகும். formula_20 என்பதை விரிவாக்கி, மீளமைத்தால், formula_21 வரும் இதைக் குறுக்கினால், கோணவுந்த்த்தைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்; + +இங்கு formula_23 என்பது திருப்புமைக் கையின் நீளம் ஆகும். இது அச்சில் இருந்து துகளின் வழித்தடத்துக்கு வ்ரையும் செங்குத்துக் கோடாகும். இந்த எனும் கோணவுந்த வரையறையைத் தான் "உந்தத் திருப்புமை" எனும் சொல் குறீக்கிறது. + +கோணவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாகக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் கோணவுந்தம் +தொடர்புடையது. + +எனவே திணிவு, விரைவு, விலகு தொலவு ஆகிய மூன்றும் வளவுந்தத்தைக் கணிக்கத் தேவைப்படும். ஒரு பொருள் ஓர் அச்சுப் புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் பொழுது அதன் வளைவுந்தமானது அச்சுப் புள்ளியும் வளைந்து செல்லும் பாதையும் அமைந்த தளத்திற்குச் "செங்குத்தான" திசையில் இயங்கும். + +இவ் வளைவுந்தானது இயற்பியலில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது முழு இயக்க அமைப்பொன்றில் புற திருக்கம் ஏதும் இல்லை எனில் மாறாதிருக்கும் அளவுப்பொருளாகும். இதற்கு வளைவுந்தம் மாறாக் கொள்கை என்று பெயர். +திருக்கம் என்பது வளைவுந்தம் மாறுபடும் வீதம் ஆகும். அதாவது ஒரு நொடிக்கு வளைவுந்தம் எவ்வளவு மாறுகின்றது என்பதாகும். + +ஓர் அச்சுப்புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளின் வளைவுந்தத்தை L என்று கொள்வோம். நடுப்புள்ளியில் இருந்து பொருள் விலகி இருக்கும் தொலைவை விலகுத்தொலைவு நெறியம் ("திசையன்") (vector) r எனக் கொள்வோம். பொருளின் திணிவு (பொருண்மை) m எனக் கொள்வோம். இயங்கும் பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் அப்பொருளின் நேர் விரைவு v எனக்கொள்வோம். பொருளின் நேர்திசை உந்தம் p (= mv) எனக் கொண்டால், வளைவுந்தம் L என்பதைக் கீழ்காணுமாறு கணிதக் குறியீடுகள் வழி விளக்கப்படும். பெருக்கல் குறியானது குறுக்கு நெறியப் பெருக்கலைக் குறிக்கும் (நெறியம் = திசையன்). எனவே L இன் திசையானது r, p ஆகிய இரண்டு நெற��யங்களும் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும். + +வளைவுந்தத்தின் SI அலகு நியூட்டன்.மீட்டர்.நொடி (N•m•s); அல்லது கிலோ.கி. மீ/நொ (kg.ms) +வளைவுந்தத்தின் பரும அளவானது திணிவு (m), நடு விலகுதொலைவின் இருமடி (r), வளைந்தோட்ட விரைவு (v) ஆகியவற்றின் பெருக்குத்தொகை (mvr) ஆகும். + +உதாரணமாக கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் பொருத்திவிட்டு அச்சாணி பொருத்துவது கோண உந்தத்தினால் சக்கரம் கழன்று விடாமல் இருப்பதற்காகவே. + + + + + +அடிமன வெளிப்பாட்டியம் + +அடிமன வெளிப்பாட்டியம் ("Surrealism") என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் நம்பினர். இதை மனிதனது அடிமனத்தின் கற்பனா சக்தியைச் செயற்படுத்துவதன் மூலம் அடைய முடியும் என்று "அடிமன வெளிப்பாட்டுவாதம்" வலியுறுத்தியது. இயல்புநிலையிலும் மெய்மையான இந்த நிலை, தனிமனித, பண்பாட்டு மற்றும் சமூகப் புரட்சியையும், கட்டற்ற வாழ்க்கையையும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் என்றும் இக் கொள்கையினர் நம்பினர். இந்தக் கருத்துருவை முதன் முதலில் முன்வைத்த அண்ட்ரே பிரெட்டன் ("André Breton") என்பவர், இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்ட உண்மை அழகியல் சார்ந்தது என்றார். அடிமன வெளிப்பாடு என்ற இந்தக் கருத்துருவைப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் பயன் படுத்தியபோது இது அடிமன வெளிப்பாட்டுவாத இயக்கம் எனப்பட்டது. + + + + +மென்மையான வைரங்கள் + +மென்மையான வைரங்கள் என்பது கனடா தமிழீழச்சங்கத்தினரால் ஒன்ராரியோ மாநில அரசின் நிதிஉதவியுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். குடியேறிய மக்களிடையே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அதற்கு அவர்கள் எடுக்கவேண்டிய மாற்று வழிகளையும், அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் எடுத்துக் கூறும் திரைப்படமாக இருக்கவேண்டும் என்று மாநில அரசு விரும்பியது + +இந்தத் திரைப்படத்தில் எஸ். மதிவாசன், எஸ். ரி. செந்தில்நாதன், ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்), அனுஷா, துஷி ஞானப்பிரகாசம் முதலான பல கலைஞர்கள் நடித்திருந்தனர். எஸ். எஸ். அச்சுதன் எழுதிய மூலக்கதைக்கு, கே. எஸ். பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, இத்திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் ரவி அச்சுதன் பணியாற்றினார். + +மறைந்த நாதஸ்வர மேதை அளவெட்டி என். கே. பத்மநாதன், தவில் வித்துவான் நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை ஆகியோர் கலந்துகொள்ளும் நாதஸ்வர கச்சேரியின் ஒரு பகுதியும் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றது. + + + + +உந்தம் + +ஒரு அசையும் பொருளின் உந்தம் ("momentum") என்பது, மரபு இயக்கவியலில் (classical mechanics) அதன் திணிவு (mass) (m) , மற்றும் அதன் வேகம் (formula_1) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையென வரையறுக்கப்படுகிறது. உந்தம் என்பது பருமனும் (magnitude) திசையும் (direction) கொண்ட ஒரு காவிக்கணியம் (vector quantity) ஆகும். இந்த வரவிலக்கணம் நேர்கோட்டில் இயங்கும் துணிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் இதனை நேரியக்க உந்தம் (linear momentum) அல்லது பெயர்வியக்க உந்தம் (translational momentum) என்றும் அழைப்பதுண்டு. + +உந்தத்தை (formula_2) என்று குறித்தால், +formula_3 ஆகும். + +உந்தம் = திணிவு X வேகம் + +மேலும் புறவிசைகளின் தலையீடு இல்லாமல் தனிமைப்படுத்தப் பட்ட ஒரு தொகுதியின் மொத்த உந்தம் காக்கப்படுகின்றது. அதாவது அந்த தொகுதியினுள் நடக்கும் இயக்க மாற்றங்கள் அந்தத் தொகுதியின் மொத்த உந்தத்துக்கு குந்தகம் விளைவிப்பதிலை. இதனை உந்தக்காப்பு விதி என்று அழைப்போம். + +நொடிக்கு 10 m வேகத்தில் செல்லும் 10 kg திணிவு கொண்ட ஒரு பொருள் கொண்டிருக்கும் உந்தம் 10 x 10 = 100 Kgm/s ஆகும். இதே பொருள் நொடிக்கு 20 m வேகத்துடன் செல்லுமானால், அது இரு மடங்கு உந்தம் கொண்டிருக்கும். உந்தம் என்பதைக் கருத்தளவில் இரு விதமாக எண்ணலாம். ஒரு குறிப்பிட்ட உந்தம் கொண்ட ஒரு பொருளானது வேறு ஒரு பொருள் மீது மோதினால் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்றோ, அல்லது ஓர் உந்தம் கொண்ட பொருளை நிறுத்துவது எவ்வளவு கடினம் என்றோ காட்டும் ஓர் அளவு என்றோ கொள்ளலாம். இந்த உந்தம் என்னும் கருத்தை ஐரோப்பாவில் உள்ள பல அறிஞர்கள் எண்ணிக் குறித்து உள்ளனர். பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் ரெனே டேக்கார்ட்டு (René Descartes) அவர்கள் இந்த திணிவு-வேகப் பெருக்கத்தை குறிக்கும் உந்தத்தை "நகர்ச்சியின் அடிப்படை விசை" என்று குறித்தார் கோடி குரூசே (Codi Kruse) அவர்கள் தன்னுடைய "இரு புதிய அறிவியல்கள்" ( Two New Sciences ) என்னும் நூலில் இயக்க ஊக்கம் ("impeto") என்னும் இத்தாலிய மொழிச் சொல்லால் குறித்தார். ஐசாக் நியூட்டன், இலத்தீன் மொழியில் "மோட்டஸ்" ("motus"). இதனைத்தான் இங்கு உந்தம் என்று குறிப்பிடுகிறோம். + +நியூட்டோனிய விதிகளில் குறிப்பிடப்படும் விசை (F) என்பது உண்மையில் உந்த மாற்று வீதம் (rate of change of momentum) ஆகும். + +திணிவு (m), மாறிலியாக (constant) இருப்பின், இவ்விளக்கம் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியைத் துல்லியமாய் விளக்குகின்றது. formula_5. இதில் formula_6 என்பது வேக வளர்ச்சி வீதமாகிய ஆர்முடுகல் (acceleration) ஆகும். + +ஆகவே வேகம் மாறாதிருக்குமானால் அப்பொருள் மீது விசைகள் ஏதும் உஞற்றப்படவில்லை என வெளிப்படையாகிறது கீழ்வரும் சமன்பாட்டில் இருந்து. + + + + +திசையன் + +அடிப்படை இயற்கணிதம், இயற்பியல் மற்றும் பொறியியலில் திசையன் ("vector") அல்லது காவி என்பது அளவும் திசையும் கொண்டதொரு வடிவவியல் பொருளாகும். சிலசமயங்களில் இத்திசையன், + +பெரும்பாலும் ஒரு திசையனானது, குறிப்பிட்ட திசையிடப்பட்ட கோட்டுத்துண்டாகவோ அல்லது ஆரம்பப் புள்ளி "A" மற்றும் இறுதிப் புள்ளி "B" -யை இணைக்கும் அம்பாகவோ, வரைபடம் மூலமாகக் குறிக்கப்படுகிறது. இதன் குறியீடு formula_1 ஆகும். இத்திசையன்களின் கூட்டல் இணைகர விதிப்படி அமையும். + +ஒரு திசையன் என்பது, "A" -புள்ளியை "B" -புள்ளிக்கு எடுத்துச் செல்லத் தேவையான ஒன்றாகும். "வெக்டர்" எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் "எடுத்துச் செல்வது" ஆகும். "A" , "B" -புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம் formula_2 அத்திசையனின் அளவையும் "A" -லிருந்து "B" -க்குள்ள இடப்பெயர்ச்சி அதன் திசையையும் தருகின்றன. மெய்யெண்களிலுள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், எதிர்மறை போன்ற அடிப்படை இயற்கணிதச் செயல்களுக்கு ஒத்த செயல்கள் திசையன்களுக்கும் உண்டு. மேலும் அச்செயல்கள், பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புத்தன்மை, பங்கீட்டுத் தன்மை போன்ற வழக்கமான இயற்கணிதப் பண்புகளையும் கொண்டிருக்கும். திசையன்களின் இச்செயல்களும் அதன் தொடர்பான விதிகளுமே அவற்றைத் திசையன் வெளியின் உறுப்புகளாக வரையறுக்கப்படும் கருத்துருவின் பொதுமைப்படுத்தலாக்குகின்றன. + +இயற்பியலில் திசையன்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன: ஒரு நகரும் துகளின் திசைவேகம், முடுக்கம் மற்றும் அதன்மீது செயல்படும் விசை ஆகிய அனைத்தும் திசையன்களாக விவரிக்கப்படுகின்றன. இன்னும் பல இயற்பியல் அளவுகளும் திசையன்களாகக் கருதப்படும்போது பயனுள்ளவையாக அமைகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தூரத்தையோ அல்லது இடப்பெயர்ச்சியையோ குறிக்காவிடினும் அவற்றின் நீளம் மற்றும் திசை ஒரு அம்பின் மூலமாகக் குறிப்பிடப்படலாம். ஒரு இயற்பியல் திசையனின் கணிதக் குறியீடு, அதனை விவரிக்க எடுத்துக்கொள்ளப்படும் ஆய அச்சு முறைமையைப் பொறுத்து அமையும். + +இயற்பியலிலும் பொறியியலிலும் திசையனானது அளவு, திசை என்ற இரண்டு பண்புகளைக் கொண்டதொரு வடிவவியல் பொருளாகக் கருதப்படுகிறது. யூக்ளிடிய வெளியில் அமைந்த ஒரு திசையிடப்பட்ட கோட்டுத்துண்டு அல்லது ஒரு அம்பாகவும் திசையன் வரையறுக்கப்பட்டுள்ளது. + +தூய கணிதத்தில் (pure mathematics), திசையன் வெளியில் அமைந்த பொதுவானதொரு உறுப்பாக வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு வரையறுக்கப்படும் திசையன், அளவும் திசையும் கொண்டிராத நுண்மப் பொருளாக அமைகிறது. இந்த பொதுமைப்படுத்தப்பட்ட வரையறையிலிருந்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடிவவியல் பொருளானது யூக்ளிய வெளி என்ற சிறப்பு வகைத் திசையன் வெளியில் அமைவதால், ஒரு சிறப்பு வகைத் திசையன் என அறிந்து கொள்ளலாம். + +திசையன் வெளியிலோ அல்லது வேறு இடங்களிலோ வரையறுக்கப்படும் திசையன்களிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டவேண்டிய சந்தர்ப்பங்களில் இத்திசையன் "வடிவவியல் திசையன்" அல்லது "இடத்திசையன்" அல்லது யூக்ளிடிய திசையன் என அழைக்கப்படுகிறது. + +யூக்ளிடிய வெளியில் ஓர் அம்பால் குறிக்கப்படும் திசையன், குறிப்பிட்ட ஆரம்பப்புள்ளியும் இறுதிப்புள்ளியும் கொண்டது. இத்தகைய திசையன் "வரம்பு திசையன்" (bound vector) எனப்படும். திசையனின் அளவும் திசையும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்போது அதன் ஆரம்பப் புள்ளி முக்கியமானது இல்லை. இத்தகைய திசையன் "கட்டற்ற திசையன்" (free vector) எனப்படும். எனவே formula_3 மற்றும் formula_4 அம்புகள் இரண்டின் அளவுகளும் திசைகளும் சமமாக இருந்தால் அவை இரண்டும் ஒரே திசையனைக் குறிக்கும். அப்பொழுது நாற்கரம் "ABB′A′" ஒரு இணைகரமாக அமையும். யூக்ளிடிய வெளியில் ஓர் ஆதிப் புள்ளி எடுத்துக் கொண்டால், ஒரு கட்டற்ற திசையனும் அதே அளவும் திசையும் கொண்டு, ஆதிப்புள்ளியை ஆரம்பப் புள்ளியாகக் கொண்ட வரம்பு திசையனும் சமானமானவையாக அமையும். + +திசையன்கள் உயர்பரிமாணங்களுக்கும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளன. + +திசையன்கள் பொதுவாக தடித்த அல்லது தடித்துச் சாய்ந்த சிறிய ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. + +எடுத்துக்காட்டு: + +திசையன்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பிற குறியீடுகள் (முக்கியமாக கையால் எழுதும்போது): + +புள்ளி "A" -லிருந்து புள்ளி "B" -க்கான திசையிடப்பட்ட தூரத்தையோ அல்லது இடப்பெயர்ச்சியையோ குறிக்கும் திசையன் formula_3 அல்லது "AB" ஆகும். (படத்தைப் பார்க்கவும்.) + + + +எடுத்துக்காட்டு: + +இருபரிமாணத்தில், ஆதிப்புள்ளி "O" = (0,0) -லிருந்து புள்ளி "A" = (2,3) -க்கு அமையும் திசையன் (படத்தைப் பார்க்கவும்): + +முப்பரிமாண யூக்ளிடின் தளத்தில் (அல்லது formula_8), திசையன்கள் மூன்று திசையிலிக் கூறுகளுடன் குறிக்கப்படுகின்றன: + +இந்த எண்கள் பெரும்பாலும் "நிரல் திசையனாகவோ" (column vector) அல்லது "நிரை திசையனாகவோ" (row vector) தரப்படுகின்றன: + + +எடுத்துக்காட்டு (முப்பரிமாணத்தில்): + +திசையன் அடுக்களம்: + +இவை கார்ட்டீசியன் ஆய முறைமையின் "x", "y", மற்றும் "z" மூன்று ஆய அச்சுகளில் அமையும் அலகுத் திசையன்களாகக் கொள்ளப்படுகின்றன. + +இவற்றின் மூலமாக formula_8 -ல் அமையும் ஒரு திசையன் a, பின்வருமாறு தரப்படுகிறது: + +அல்லது + +இங்கு a, a, a -மூன்றும் a திசையனின் அடுக்களத் திசையன்களின் திசைகளில் ("x", "y", மற்றும் "z" அச்சுகளின் திசைகள்) அமைந்த "திசையன் கூறுகள்". இதேபோல் a, a, a -மூன்றும் a திசையனின் அடுக்களத் திசையன்களின் திசைகளில் ("x", "y", மற்றும் "z" அச்சுகளின் திசைகள்) அமைந்த "திசையலிக் கூறுகள்". + +ஆரம்ப நிலை இயற்பியல் பாடப்புத்தகங்களில் திட்ட அடுக்களத் திசையன்கள், formula_17 (formula_18) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு ^ குறியீடு அலகுத்திசையன்களைக் குறிக்கிறது. a, a, a-மூன்றும் திசையிலிக் கூறுகள்; a, a, a -மூன்றும் திசையன் கூறுகள். + +இப்பிரிவில் பின்வரும் அடுக்களத் திசையன்களைக் கொண்ட கார்ட்டீசியன் ஆயமுறைமைப் பயன்படுத்தப்படுகிறது: +அனைத்துத் திசையன்களும் ஒரு பொதுப் புள்ளியை ஆதிப்புள்ளியாகக் கொண்டுள்ளதாகக் கொள்ளப்படுகின்றன. மேலும் ஒரு திசையன் a : + +இரு திசையன்களின் அளவுகளும் திசைகளும் சமமாக இருந்தால் மட்டுமே அவ்விரண்டு திசையன்களும் சமமானவையாகும். + +a மற்றும் b -இரு சமமில்லா திசையன்கள் என்க. +a மற்றும் b -ன் கூட்டல்: + +இக்கூட்டலை வரைபட மூலமாகவும் தரலாம். b -திசையனின் அம்பின் ஆரம்பப் புள்ளியை a -திசையனின் அம்பின் இறுதிப்புள்ளியுடன் அமையுமாறு வரைந்து கொண்டு பின், a அம்பின் ஆரம்பப் புள்ளியை b -ன் இறுதிப்புள்ளியுடன் இணைத்து ஒரு புதிய அம்பு வரைந்தால் அது a + b -திசையனைக் குறிக்கும்: + +திசையன் கூட்டல் முறை "இணைகர விதி" என அழைக்கப்படுகிறது. a மற்றும் b இரண்டும் ஒரு இணைகரத்தின் அடுத்துள்ள பக்கங்களாகக் கொண்டால் அந்த இணைகரத்தின் ஒரு மூலைவிட்டமாக a + b -திசையன் அமையும். a , b இரண்டும் பொது ஆரம்பப் புள்ளி கொண்ட இரு வரம்பு திசையன்கள் எனில் a + b -திசையனின் ஆரம்பப்புள்ளியும் அதே பொதுப்புள்ளியாக அமையும். + +a + b = b + a (பரிமாற்றுப் பண்பு) + +வரைபடம் மூலமாக கழித்தலைப் பின்வருமாறு காணலாம்: +a மற்றும் b -இரு திசையன்களின் இறுதிப்புள்ளிகளும் ஒன்றாக இருக்கும்படி அதன் அம்புகளை வரைந்து கொண்டு, a -ன் ஆரம்பப் புள்ளியிலிருந்து b -திசையனின் ஆரம்பப் புள்ளியோடு இணைத்து வரையப்படும் அம்பு, a − b -திசையனைக் குறிக்கும்: + +ஒரு திசையனை ஒரு திசையிலியால் பெருக்குவது "திசையிலிப் பெருக்கல்" (scalar multiplication) எனப்படும். இச்செயலின் விளைவாகக் கிடைக்கும் முடிவு ஒரு திசையனாக இருக்கும்: + +formula_21 -திசையனை "r" -எனும் திசையிலியால் பெருக்கக் கிடைக்கும் திசையன்: + + +"r" = −1 மற்றும் "r" = 2 என்பதற்கான திசையிலிப் பெருக்கலின் விளக்கம் படத்தில் தரப்பட்டுள்ளது. + +திசையிலிப் பெருக்கல் திசையன்களின் கூட்டலின் மீதான பங்கீட்டுப் பண்புடையது: + +ஒரு திசையன் a -ன் நீளம் (length) அல்லது அளவு (magnitude) அல்லது நெறிமம் (norm) என்பதன் குறியீடு: + +சில சமயங்களில் இது |a| எனவும் குறிக்கப்படுகிறது. ஆனால் இதனை ஒரு திசையிலியின் தனிமதிப்பு எனத் தவறுதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. + +a -திசையனின் நீளம்: + +எந்தவொரு திசையனின் நீளமும் ஒரு அலகாக இருந்தால் அத்திசையன் அலகுத் திசையன் எனப்படும். வழக்கமாக அலகுத் திசையன்கள், திசைகளை மட்டும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. + +பெரும்பாலும் â -ல் உள்ளதுபோல ஒரு அலகுத் திசையன் தொப்பிக் குறியீட்டுடன் எழுதப்படுகிறது. +ஏதேனும் ஒரு திசையனை அதன் நீளத்தால் வகுக்க அதன் அலகுத் திசையன் கிடைக்கும். இச்செயல் "நெறிமப்படுத்தல்" (normalaisation) எனப்படுகிறது. + +a = ["a", "a", "a"]திசையனை நெறிமப்படுத்தல்: + +ஒரு திசையனின் நீளம் பூச்சியம் எனில் அத்திசையன் பூச்சியத் திசையன் ("zero vector" அல்லது "null vector") எனப்படும். பூச்சியத் திசையனின் ஆய அச்சுத்தூர வடிவம்: (0,0,0). இதன் குறியீடு: formula_33, அல்லது 0 அல்லது 0. மற்ற எந்தவொரு திசையனையும் போலல்லாது பூச்சியத் திசையனின் திசை தீர்மானிக்க முடியாததும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததுமாக இருக்கும். மேலும் பூச்சியத் திசையனை நெறிமப்படுத்தல் இயலாது. + +பூச்சியத் திசையனை எந்தவொரு திசையன் a -உடன் கூட்டக் கிடைப்பது a ஆகும். + +அதாவது திசையன் கூட்டலின் முற்றொருமை உறுப்பாகப் பூச்சியத் திசையன் அமைகிறது. + +a மற்றும் b ஆகிய இரு திசையன்களின் புள்ளிப் பெருக்கம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: + +இங்கு "θ" என்பது a , b -களுக்கு இடையேயுள்ள கோண அளவு. + +புள்ளிப் பெருக்கத்தின் வரையறை: + +இரு திசையன்களின் குறுக்குப் பெருக்கம் இருபரிமாணம் மற்றும் எழுபரிமாணத்தில் மட்டுமே பொருளுடையது. இரு திசையன்களின் புள்ளிப் பெருக்கத்தின் முடிவு ஒரு திசையிலி என்றால் அவற்றின் குறுக்குப் பெருக்கத்தைன் முடிவு ஒரு திசையனாகும். இதனால் தான் முன்னது "திசையிலிப் பெருக்கம்" என்றும் பின்னது "திசையன் பெருக்கம்" எனவும் மாற்றுப் பெயர் கொண்டுள்ளன. + +a , b -திசையன்களின் குறுக்குப் பெருக்கத்தின் வரையறை: + +இங்கு "θ" என்பது a , b திசையன்களுக்கு இடையேயுள்ள கோண அளவு; a , b ஆகிய இரு திசையன்களுக்கும் வலக்கை அமைப்பின்படியுள்ள செங்குத்துத் திசையில் அமையும் அலகுத் திசையன் n . a , b ஆகிய இரு திசையன்களுக்கும் செங்குத்துத் திசையில் அமையும் அலகுத் திசையன்கள் n மற்றும் (–n) என இரண்டு உள்ளதால் வலக்கை அமைப்பின் படி எடுக்க வேண்டிய அவசியம் எழுகிறது. + +a × b -ன் அளவு, a மற்றும் b -திசையன்களை அடுத்துள்ள பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பாக அமையும். + +formula_39 + +formula_23 எனில் அவற்றின் குறுக்குப் பெருக்கம்: + +திசையிலி முப்பெருக்கம் என்பது மூன்று திசையன்களுக்கு, புள்ளிப் பெருக்கம் மற்றும் குறுக்குப் பெருக்கத்தைச் செயல்படுத்துவதாகும். இப்பெருக்கம் பெட்டிப் பெருக்கம், கலப்புப் பெருக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. a , b, c -ஆகிய மூன்று திசையன்களின் திசையிலிப் பெருக்கத்தின் வரையறை: + +இப்பெருக்கத்திற்கு மூன்று பயன்பாடுகள் உள்ளன. + + +formula_23 + +formula_45 எனில்: + + +Mathematical treatments + +Physical treatments + + + + + +சங்கீத லவ குசா (1934 திரைப்படம்) + +சங்கீத லவ குசா 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ் நாடு டாக்கீஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், நாராயணன், சீதா, லக்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஸ்ரீ கிருஷ்ண லீலா + +ஸ்ரீ கிருஷ்ண லீலா அல்லது கிருஷ்ண லீலா ஸ்ரீ 1934 ஆம் ஆண்டு வெளிவந்த 18,000 அடி (14300) நீளமுடைய கல்கத்தா - புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த சுமார் 60 பாடல்களைக்கொண்ட இத்திரைப்படத்தில் சி. எஸ். ஜெயராமன், சி. எஸ். ராமண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பவளக்கொடி (1934 திரைப்படம்) + +பவளக்கொடி 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே எம். கே. தியாகராஜ பாகவதரின் முதல் படமாகும். இப்பாடத்தில் 55 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் 100 வாரங்கள் ஓடியது. . + + + + + +சதி சுலோச்சனா + +சதி சுலோச்சனா 1934 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 இல் வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பாரத் லக்ஸ்மி பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். ஜி. நடராஜ பிள்ளை, டி. என். நடராஜ பிள்ளை, ஏ. ஆர். சரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மேலும், பாபுலால் சௌகானி தயாரித்த இப்படத்தில், ப. சம்மந்த முதலியார் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். + + + + +சகுந்தலா (திரைப்படம்) + +சகுந்தலா 1934 ஆம் ஆண்டு, ஆகத்து 11 இல் வெளிவந்த 14,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனியர் பிலிம் கம்பனி சார்பில் பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மதுரை பாஸ்கரதாஸ் பாடல்கள் படைக்க, பி. எஸ். வேலு நாயர், எம். எஸ். முருகேசன், எல். நாராயணராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சீதா கல்யாணம் (1934 திரைப்படம்) + +சீதா கல்யாணம் 1934 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபாத் டாக்கீஸ் தயாரிப்பில் பாபுராவ் பண்டர்கர் இயக்கிய இப்படத்தில், எம். எஸ். சுப்பிரமணிய ஐயர் வசனமும், ஏ. என். கல்யாண சுந்தரம் இசையும், பாபனாசம் சிவன் பாடலும் படைத்து வெளிவந்த இத்திரைப்படத்தில், எஸ். ராஜம், ஜி. கே. செஷகிரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காலவா + +காலவா 1932ஆம் ஆண்டு வெளிவந்த ("பம்பாய் - புராணம் - நாடகம்") முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். + + + + +காளிதாஸ் (1931 திரைப்படம்) + +காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். + +இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது. + +இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது. + + +இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன "ரத்தினமாம் காந்தி கை பானமாம்", "இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார். + + + + + + + +பாரிஜாத புஷ்பஹாரம் + +பாரிஜாத புஷ்பஹாரம் 1932-ஆம் ஆண்டு, சனவரி 1-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்மராவ், கே. டி. ருக்மணி, ஆர். நாகேந்திரராவ், லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். + + + + +சம்பூர்ண ஹரிச்சந்திரா + +சம்பூர்ண அரிச்சந்திரா 1932ஆம் ஆண்டு சனவரி 1இ��் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். + + + + +கோவலன் (திரைப்படம்) + +கோவலன் 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இம்பீரியல் பிலிம் கம்பனியினரால் தயாரித்து, இராசா சாண்டோ இயக்கி வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம ராவ், லீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.. + + + + + +நந்தனார் (1933 திரைப்படம்) + +நந்தனார் 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தாரினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சத்தியவான் சாவித்திரி (1933 திரைப்படம்) + +சத்யவான் சாவித்திரி 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதன் தியேட்டர்ஸ் வெளியிட்ட இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். மணி, டி. பி. ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வள்ளி (1933 திரைப்படம்) + +வள்ளி 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நேஷனல் மூவிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பங்கஜம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வள்ளி திருமணம் + +வள்ளி திருமணம் 1933ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய கல்கத்தா புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி சார்பில், பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எம். துரைசாமி, டி. வி. சுந்தரம், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ள இப்படத்தில் மதுரகவி பாஸ்கர தாஸ் பாடல்கள் படைத்துள்ளார். + + + + +பாமா விஜயம் (1934 திரைப்படம்) + +பாமா விஜயம் (Bama Vijayam) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனிக் லால் டண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஜி. என். பாலசுப்பிரமணியம், பி. எஸ். ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். +நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும். மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி (மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர்) கிருஷ்ணர் வேடத்திலும், "பாளையம்கோட்டை சகோதரிகள்" என அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் ஆகியோர் ருக்மணி, சத்தியபாமா வேடங்களிலும் நடித்தனர். இத்திரைப்படம் வசூலில் பெரும் வெற்றி பெற்றது. 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற மனிக்லால் டண்டன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். + +இப் படத்திற்கு இசையமைத்தோர் சென்னை அரங்கசாமி நாயகர் குழுவினர். + + +நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பாலசுப்பிரமணியத்தின் பெயர் "ஹட்சின்ஸ் பிளேட் ஃபேம் சங்கீதா வித்வான்" என்று தோன்றியது. இத் திரைப்படத்தை ஏ. என். மருதாச்சலம் செட்டியார் 'செல்லம் டாக்கீஸ்' பெயரில் தயாரித்தார். "செல்லம்" என்பது செட்டியாரின் செல்லப் பெயராகும். இப் படத்தின் முடிவில், இதில் நடித்த அனைவரும் சேர்ந்து பாடிய ஜன கண மன பாடல் காட்சி காண்பிக்கப்பட்டது. இது குறித்து திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை, முதன்முறையாக, இந்திய நாட்டுப்பண் ஐ திரையில் காட்சிப்படுத்திய முதல் படம் என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் இது திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் தேசிய உணர்வை தூண்டுவதாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. + +கே. தியாகராஜ தேசிகர் இப் படத்திற்கு இசை அமைத்திருந்தார். 59 பாடல்கள் உள்ள இத் திரைப்படத்தில், 10 பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "பாலகனகமையா" எனத் தொடங்கும் தியாகராஜர் "கீர்த்தனை" ஆகும். இது அடாணா இராகத்தில் அமைந்துள்ளது. "கோடி நாதுலு" எனத் தொடங்கும் தோடி இராகப் பாடலை பாலசுப்பிரமணியம் மற்றும் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி இணைந்து பாடியுள்ளனர். + +இத் திரைப்படம், 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது என ராண்டர் கை குறிப்பிட்டுள்ளார். + + + + + +சக்குபாய் + +சக்குபாய் 1934ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நிரலகம் + +மென்பொருள் ஒன்றினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் துணைநிரல்களினது சேகரம் (தொகுப்பு) நிரலகம் (Library) எனப்படுகிறது. நிரலகங்கள் பெரும்பாலும் துணை ஆணைத்தொடர்களையும் தரவுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கும். இவை தனித்தியங்கும் மென்பொருள் ஒன்றிற்கு தேவைப்படும் சேவைகளை வழங்கும். + +வெவ்வேறு இயக்குதளங்கள், தத்தமக்கென தனித்தனியான நிரலகப் பெயரிடல் மரபினை கடைப்பிடிக்கின்றன. இப்பெயரிடலைக்கொண்டு இயக்குதளங்களில் உள்ள நிரலகங்களை பிரித்தறியலாம். + +libfoo.a, libfoo.so போன்ற கோப்புக்கள் /lib, /usr/lib அல்லது /usr/local/lib/ ஆகிய அடைவுகளுள் வைத்திருக்கப்பட்டிருக்கும். + +கோப்புப்பெயர்கள் எப்போதும் lib என ஆரம்பிக்கும். கோப்புப்பெயரின் பின்னொட்டாக, a (.களஞ்சியங்கள், நிலையான நிரலகங்களுக்கு) அல்லது, .so (பகிரப்பட்டவை, இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகங்களுக்கு) ஆகியவை அமையும். பெயர் பின்னொட்டுக்கு மேலதிகமாக இடைமுகப்பு எண் இடப்படக்கூடும். +எடுத்துக்காட்டாக, libfoo.so.2 என்று பெயரிடப்பட்ட நிரலகமானது libfoo எனும் இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகத்தின் இரண்டாவது பெரும் இடைமுகப்பு மாற்றமாகும். +.la என்ற கோப்புப்பெயர் பின்னொட்டுடன் காணப்படும் நிரலகங்கள் libtool களஞ்சியங்களாகும். + + + + +தேவகன்யா + +தேவகன்யா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மனாபனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பல மாயாஜாலக் காட்சிகளைக் கொண்டது. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது. + +எஸ். ஜி. செல்லப்பா ஐயர் இயற்றிய பாடல்களுக்கு பலவான்குடி வி. சாமா ஐயர் இசையமைத்திருக்கிறார். மொத்தம் 16 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. + + + + + +சுமாத்திரா + +சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர். + + + + +சி. சிவலிங்கராசா + +யாழ் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறை பேராசிரியர் சி. சிவலிங்கராசா (பி:கரவெட்டி, யாழ்ப்பாணம்), பல ஆய்வு நூல்களை எழுதி உள்ளார். இவர் பண்டிதர் கே. வீரகத்தி, பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் ஆகியோரிடம் பயின்றவர். ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான வேர்களைத் தேடும் ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். 2005ஆம் ஆண்டுக்கான சம்பந்தர்விருது இவருக்கு வழங்கப்பட்டது. + + +பேராசிரியர் சிவலிங்கராஜா + + + + +சுமைதாங்கி + +சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் எளிதாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது. + +பல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கி���ாகும். + +சுமைதாங்கி, ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல், இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. + +சுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு. + +தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது. + +சுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது "சுமைதாங்கிபோடுதல்" எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை. + + + + + +நளாயினி (திரைப்படம்) + +நளாயினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஓரியண்டல் சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வசந்த் ராவ் பெயின்டர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். கோவிந்தராஜு, சி. என் நீலாவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஸ்ரீநிவாச கல்யாணம் + +ஸ்ரீநிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், செருகளத்தூர் சாமா, ஆர். பி. லக்ஸ்மி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் +ஆர். பி. லக்ஸ்மி தேவி +பி. எஸ். கமலவேணி +செருகளத்தூர் சாமா +எம். டி. பார்த்தசாரதி +கே. எஸ். அங்கமுத்து + +தயாரிப்பாளர்: ஏ. நாராயணன் +வசனம், பாடல்கள்: இராமாநுஜ ஐயங்கார் +இசை: சி. ஆர். எஸ். மூர்த்தி +ஒளிப்பதிவு: ஆர். பிரகாஷ் +ஒலிப்பதிவு: மீனா நாராயணன் "(முதலாவது பெண் ஒலிப்பதிவாளர்)" +கலை: சி. எஸ். இராணி + + + + + +திரௌபதி வஸ்திராபகரணம் + +திரௌபதி வஸ்திராபகரணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏஞ்சல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. என். வாசுதேவ பிள்ளை, சி. எஸ். ராமண்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மார்க்கண்டேயா + +மார்க்கண்டேயா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா, கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், சி. எஸ். குழந்தைவேலு பாகவதர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +என்றும் 16-வயதாக இருக்க சிவபெருமானால் வரமளிக்கப்பட்ட மார்க்கண்டேயர் என்னும் சிறுவனின் புராணக் கதையே இதன் திரைக்கதை ஆகும். + +பின்னாளில் பிரபல பின்னணிப் பாடகராக விளங்கிய வி. என். சுந்தரம் மார்க்கண்டேயராக நடித்தார். அவரது பெயர் "மாஸ்டர்" வி. என். சுந்தரம் எனக் காண்பிக்கப்பட்டது. குழந்தைவேலு பாகவதர் மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு முனிவராகவும் கண்ணாபாய் தாயாகவும் நடித்தனர். கண்ணாபாய் நன்கு பாடக்கூடியவராக இருந்ததால் அவர் "லேடி பாகவதர்" என அழைக்கப்பட்டார். கே. பி. ஸ்ரீநிவாசன் நாரதராக நடித்தார். எஸ். என். கண்ணமணி ஒரு நாடோடிப் பெண்ணாக பாடி, ஆடி நடித்திருந்தார். + +இத்திரைப்படத்தில் தென்னிந்திய திருத்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்கடையூர் ஆகிய இடங்களிலுள்ள திருக்கோவில்கள் சிறப்பாக கே. ராம்நாத்தினால் படம்பிடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டன. + + + + +மேனகா (1935 திரைப்படம்) + +மேனகா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படமாகும். வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய "மேனகா" என்ற துப்பறியும் புதினத்தைத் தழுவி மேடையேற்றப்பட்ட டி.கே.எஸ்.சகோதரர்களின் "மேனகா" என்ற நாடகத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். என். எஸ். கிருஷ்ணன் இத்திரைப்படத்தில் அறிமுகமானார். + + + + +டம்பாச்சாரி + +டம்பாச்சாரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பம்பாயில் தயாரிக்கப்பட்டது. எம். எல். டண்டன் இயக்கத்தில் பயோனீர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +தூக்குத் தூக்கி (1935 திரைப்படம்) + +தூக்குத் தூக்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 15,000 அடி நீளமுடைய கிராமீயத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, கிளௌன் சுந்தரம், கே. டி. ருக்மணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1935 இல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் புதிய பதிப்பு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 இல் வெளியானது. இதற்குச் சான்றாக இரண்டு படங்களுடனும் நேரடி தொடர்புள்ள ஒருவர் உடுமலை நாராயண கவி ஆவார். இத்தகைய உடுமலைதான், மதுரையைச் சேர்ந்த 'ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' 1935 இல் எடுத்த ‘தூக்குத் தூக்கி’யின் கதை, வசனம் பாடல்களை எழுதியவர். மேலும், சென்னையில் முதன்முதலில் பேசும் பட ஸ்டூடியோவை அமைத்து அதை ஒலிநகரம் ஆக்கிய ஏ. நாராயணன் மேற்பார்வையில், ஆர். பிரகாஷின் திரைக்கதை, கேமரா, இயக்கத்தில் 1935 இன் ‘தூக்குத் தூக்கி’ திரைக்கு வந்தது. +சிவாஜி கணேசன் 1954 இல் நடித்த பிரதான வேடத்தை இப்படத்தில் நடித்தவர் சி. வி. வி. பந்துலு. + + + + +நல்லதங்காள் (திரைப்படம்) + +நல்லதங்காள் 1935 ஆம் ஆண்டு, சூ��் 1 இல் வெளிவந்த, 19,041 அடி நீளமுடைய கிராமீயத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சி. எஸ். ஜெயராமன் கே. ஆர். காந்திமதி பாய், பி. எஸ். சிவபாக்கியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நளதமயந்தி (1935 திரைப்படம்) + +நள தமயந்தி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனியர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன், மங்கல் ராஜேஷ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த ராம்தாஸ் + +பக்த ராம்தாஸ் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருந்தனர். + + + + +ஞானசௌந்தரி (1935 திரைப்படம்) + +ஞானசௌந்தரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கி, ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாச ராவ், சரோஜினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்) + +அல்லி அர்ஜூனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும். கே. எஸ். அனந்தநாராயண ஐயர் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார். + + + + + +சந்திரசேனா (திரைப்படம்) + +சந்திரசேனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷெசாஸ்த்ரி, சுந்தர்ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே தமிழ், இந்தி ���கிய மொழிகளில் ஒரே காலத்தில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும். + + + + +கௌசல்யா (1935 திரைப்படம்) + +கௌசல்யா 1935 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். சவுத் இண்டியன் பிலிம் கார்பொரேசன் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் பி. எஸ். வி. ஐயர், கே. ஆர். செல்லம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தை பி. எஸ். வி. ஐயர் இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. + + + + +பட்டினத்தார் (1935 திரைப்படம்) + +பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +பீஷ்மா (1936 திரைப்படம்) + +பீஷ்மா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வை. அல்தெகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சிவானந்தம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வசந்தசேனா (திரைப்படம்) + +வசந்த சேனா அல்லது மிருச்சகடிகா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 18,600 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். திருப்பூர் டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எஸ். பி. எல். தனலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சத்யசீலன் (திரைப்படம்) + +சத்ய சீலன் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். பி. மோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சமூகம் சார்ந்த கருத்துகள் அதிகம் பிரதிபலித்தன. + +சமூகம் சார்ந்த கருத்துகள் கொண்ட பாடல்கள் உள்ளது. அந்த காலகட்டத்தில் பிரித்தானிய அரசு இவற்றை தடுத்து தடைவிதித்தது. இந்திய சுதந்திர வேட்கை கொண்ட பாடல்களை படங்களில் வராமல் கவனமாக பிரித்தானியர்கள் பார்த்துக்கொண்ட��ர். + + + + +தர்மபத்தினி (திரைப்படம்) + +தர்ம பத்தினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. லஷ்மணதாஸ் வசனம், மற்றும் பாடல் படைக்க, பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராஜா தேசிங்கு (1936 திரைப்படம்) + +ராஜா தேசிங்கு 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சுந்தரப்பர், வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியது. இதே கதையினை ஒட்டி 1960-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று. + +இத்திரைப்படத்தில் ருக்மிணி தேவி அருண்டேல் நடனம் ஆடியுள்ளார். + + + + +பதி பக்தி (1936 திரைப்படம்) + +பதி பக்தி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி (நாடகம்) நிறுவனத்தினரின் தயாரிப்பில், அலெதெகர், மற்றும் டி. ஆர். பி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. கேசவன், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + + +புத்தியல் ஓவியம் + +புத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டுவரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது. + + + + +புது உறவு + +இந்தத் திரைப்படம் 2005ல் கனடாவில் வெளியானது. ஜனகன் பிக்சர்ஸ் வெளியிட்ட இரண்டாவது படம். +1995ல் ஸ்ரீமுருகன், வி. திவ்வியராஜன், ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்), தாரணி, வள்ளிநாயகி இராமலிங்கம் முதலியோர் நடிக்க ஆர்ம்பிக்கப்பட்ட இத்திரைப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. 10 வருடங்களின் பின்னர் கதையின் தொடர்ச்சியில் இரண்டாவது தலைமுறைக் கதையாக மாற்றம் செய்யப்பட்டு, பல புதிய கலைஞர்களை இணத்து 2005ல் வெளியானது. + + + + +கதிரொளி (திரைப்படம்) + +கதிரொளி என்பது கனடாவில் தயாரான நான்கு தமிழ்க் குறும்படங்களின் தொகுப்பாக வெளிவந்த ஒரு திரைப்படம் ஆகும். இக்குறும்படங்கள் வெவ்வேறு கதைகளுடன் வேறுபட்ட சுவையுள்ளன்வாக உருவாக்கப்பட்டதினால் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. + +பி. எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா, செந்தூரன், கணபதி ரவீந்திரன் ஆகியோர் நடித்தார்கள் +கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், டக்ள்ஸ் மணிமாறன், யசோ, சுதன், தனுஷா ஆகியோர் நடித்தார்கள் + + + + + +சுகம் சுகமே + +கனடாவிலும், இந்தியாவிலும் படமாக்கிய திரைப்பட வரிசையில் இரண்டாவது திரைப்படம். தென்னிந்திய கலைஞர்களுடன் கனேடிய கலைஞர்கள் சிலரையும் வைத்து, அங்குள்ள பின்னணியில் பெரும்பாகம் எடுத்துவிட்டு, மிகுதியை இங்குள்ள் கலைஞர்களை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படம். அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டது. + +தென்னிந்திய கலைஞர்களைத்தவிர, இத்திரைப்படத்தில் ஸ்ரீமுருகன், ரவி அச்சுதன், கதிர் துரைசிங்கம், சுதன் மகாலிங்கம், குவின்ரஸ் துரைசிங்கம், எஸ். மதிவாசன் முதலிய பலர் நடிதிருந்தார்கள். ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். மூலக்கதையை விமர்சகர் அருண் எழுத, எழுத்தாளர் குரு அரவிந்தன் திரைக்கதை, வசனம் எழுதினார். கபிலேஷ்வர் இப்படத்தின் இசை அமைப்பாளர். + + + + +ராஜயோகம் (திரைப்படம்) + +ராஜ யோகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சமங்கி, எம். நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தேச பக்தி + +தேசபக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாந்தி ஜே. தவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபதி ஆர். ஆர், சி. என். பாண்டுரெங்கன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மீனாட்சி கல்யாணம் (திரைப்படம்) + +மீனாட்சி கல்யாணம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஜெயபாரதி (தமிழ்த் திரைப்படம்) + +ஜெய பாரதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கிருஷ்ணன் தூது (திரைப்படம்) + +கிருஷ்ணன் தூது அல்லது ஸ்ரீ கிருஷ்ணன் தூது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன், பி. கண்ணாம்மா, டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மணிமேகலை (பாலசன்யாசி) + +மணிமேகலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் இரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +வாயாடி (திரைப்படம்) + +வாயாடி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரஹதி பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +திருமங்கை ஆழ்வார் (திரைப்படம்) + +திருமங்கை ஆழ்வார் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். லக்ஸ்மனன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீலமலைக் கைதி + +நீலமலைக் கைதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஆர். சந்தோ, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நவீன விக்ரமாதித்தன் + +நவீன விக்ரமாதித்தன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நவயுவன் (கீதாசாரம்) + +நவ யுவன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிசெல் ஒமலெவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், சேசகிரி பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்) + +சுந்தர மூர்த்தி நாயனார் 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 11 இல் வெளி வந்த 15000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திகேயா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து முருகதாசா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், பி. வி. ரெங்காச்சாரி, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +வரலாற்றுப்படம் / ஆன்மிகப்படம் + + + + + +பக்கா ரௌடி + +பக்கா ரௌடி ("தஞ்சாவூர் ரௌடி") 1937 ஆம் ஆண்டு, யூலை 14 இல் வெளிவந்த 14664 அடி, தமிழ்த் திரைப்படமாகும். மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில், "ராமனிக்லால்" மற்றும் "மோகன்லால்" என இவர்கள் இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனிவாசராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +முதலில் "தஞ்சாவூர் ரெளடி" என்ற பெயரில் இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது, ஆனால் தஞ்சை வாழ் மக்கள் படத்தின் தலைப்பை மிக வன்மையாகக் கண்டித்து எதிர்த்தனர். இதனால் "பக்கா ரெளடி" என்று பெயர் மாற்றம் பெற்று இப்படம் வெளியாயிற்று. + + + + +மின்னல் கொடி + +மின்னல் கொடி என்பது 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்ப���த்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது. + +இப்படத்தில் சீனிவாசராவுடன் ("போலீஸ் அதிகாரி"), கே. டி. ருக்மணி ("மின்னல் கொடி, மோகினி"), பாட்சா ("வில்லன்"), கொக்கோ ("காமெடி நண்பன்") ஆகியோர் நடித்தனர். + + + + +பக்த துளசிதாஸ் (1937 திரைப்படம்) + +பக்த துளசிதாஸ் 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 இல் வெளிவந்த 20000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கி பிலிம்சு தயாரித்து, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. கே. ஜெயராம ஐயர் இசையமைத்திருந்தார். + + + + +சிந்தாமணி (திரைப்படம்) + +சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சேர்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பத்மஜோதி + +பத்ம ஜோதி 1937 ஆம் ஆண்டு, ஆகத்து 21 இல் வெளிவந்த 14500 அடி தமிழ்த் திரைப்படம் ஆகும். மோடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தில் டி. எம். சங்கரன், எம். எஸ். முத்துகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த ஜெயதேவ் + +பக்த ஜெயதேவ் 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 இல் வெளிவந்த 16000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கி, ரம்பா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில், செல்லம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த அருணகிரி + +பக்த அருணகிரி 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 18 இல் வெளிவந்த 13133 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மயூரா பிலிம்ஸ் பட நிறுவனத்தினரால் தயாரித்து, 'எஸ். டி. எஸ். யோகியார்' ம���்றும் 'டி. எஸ். சண்முகம்' இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சங்கரலிங்கம், சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அருணகிரிநாதர் (1937 திரைப்படம்) + +அருணகிரிநாதர் 1937 ஆம் ஆண்டு, ஆகத்து 20 இல் வெளிவந்த 15,287 அடி புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். மாணிக்க பாகவதர், நாராயண ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்) + +ஆண்டாள் திருக்கல்யாணம் அல்லது ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்) 1937ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் சாரதா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. + + + + +அம்பிகாபதி (1937 திரைப்படம்) + +அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த 52 வாரங்கள் ஓடிய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சேலம் சங்கர் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் தயாரித்து, எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய உரையாடல் அனைவரையும் கவரும்வகையில் அழகுத் தமிழில் இருந்தது. இது தமிழ் சினிமா உரைநடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இப்படம் வருவதற்கு முன்பு மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுவந்த தமிழ் சினிமாவின் உரையாடல் நல்ல தமிழுக்கு மாறத் துவங்கியது. +ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், கொன்னப்ப பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெ��்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது. + + + + + +மெதுவாக உன்னைத் தொட்டு + +கனேடியப்படமான மெதுவாக உன்னைத் தொட்டு இந்தியாவிலும், இலங்கையிலும், கனடாவிலும் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம். தமிழ் மகன் திரைப்படத்திற்குப் பிறகு தென்னிந்தியக் கலைஞர்களையும் சம்பந்தப்படுத்தும் இரண்டாவது முயற்சி. + +திண்ணை வலைத்தளத்தில் விமர்சனம் + + + + +ஆர்யமாலா + +ஆர்யமாலா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆபிரகாம் லிங்கன் + +ஆபிரகாம் லிங்கன் ("Abraham Lincoln", பெப்ரவரி 12, 1809 — ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். + +ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதி��் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார். + +1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ் ("Nancy Hanks"). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன. + +ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் ("black hawk war") கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது. + +1833இல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் (1842) மேரி டாட் ("Mary Todd") எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. + +தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார். + +அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். + +அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!", "என நக்கலாக சொல்ல", ���து என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும். "என்றார் அமைதியாக". + +பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர். + +லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் ("confederacy") அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்" ("emancipation proclamation") ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது. + +அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று. + +4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. + +1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ("Gettysburg speech") "விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. "மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது". எனக் குறிப்பிட்டார். + +என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது. + +1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ ("Robert Lee") வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் ("general grant") முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். + +1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் ("John Wilkes Booth") என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வ���த்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது. பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை. + +பல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார். + +அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது. + +லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் "ஒரு தேசியத் தியாகி" என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார். + +அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி. யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. + +இவரது நினைவாக உலக கடிகார நிறுவனங்கள் இவர் சுட்டு கொல்லப்பட்ட நேரமான 10:10 என்பதை விளம்பர கடிகார நேரமாக வைத்துள்ளனர். + + + + + +குறுக்குப் பெருக்கு (திசையன்) + +கணிதத்தில் குறுக்குப் பெருக்கல் அல்லது குறுக்குப் பெருக்கு அல்லது திசையன் பெருக்கல் (cross product or vector product) என்பது யூக்கிளீடிய இட வெளியில் உள்ள இரு திசையன்களுக்கு இடையே நிகழ்த்தும் கணிதச் செயல் (வினை) ஆகும். இந்த குறுக்கு பெருக்கலின் விளைவாக பெறப்படுவதும் ஒரு திசையனே. இந்தத் திசையன் பெருக்கப்படும் இரு திசையன்கள் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும். இப் பெருக்கலை "புறப்பெருக்கல்" என்றும் கூறுவர். இப்பெருக்கல், குறுக்குப் பெருக்கம் எனவும் சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது. + +a என்னும் திசையனை b என்னும் திசையனால் குறுக்குப் பெருக்கல் செய்வதை a × b எனக்குறிப்பர் (பெருக்கல் குறி x என்பதை ஆங்கில எழுத்தாகிய x உடன் குழப்பிக்கொள்ளாமல் இருக்க இப்பெருக்கலை a∧b என்றும் எழுதுவர்). இந்த a × b என்னும் குறுக்குப் பெருக்கானது இவ்விரண்டு யன்களுக்கும் செங்குத்தான திசையில் இருக்கும். பெருக்குத்தொகையின் பரும அளவு a, b ஆகியவற்றை பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு ஆகும். இதனைக் கீழ்க்காணுமாறு கணிதக் குறியீடுகளால் குறிக்கலாம்: + +இதில் θ என்பது aக்கும், bக்கும் இடையே உள்ள கோணம் ஆகும். இக்கோணம் 0° ≤ θ ≤ 180°. "a" யும் "b" யும் a, b ஆகிய திசையன்களின் பரும அளவுகள் ஆகும். formula_2 என்பது a, bஆகியவற்றுக்குச் செங்குத்தான திசையில் உள்ள அலகு திசையன் ஆகும். சில நேரங்களில் அலகு நெறிமத்தின் மேலே காட்டப்பட்டுள்ள கூரைக் குறி விடுபட்டும் இருக்கும். எனினும் அது அலகு திசையன்தான். குறுக்குப் பெருக்கலின் விளைவாக எழும் திசையனின் திசையை அறிய a என்னும் திசையனை b என்னும் திசையன் நோக்கிச் சுழற்றினால், ஒரு வலஞ்சுழி திருகாணி எத்திசையில் நகருமோ அதே திசையில் இருக்கும். இதனை படத்தில் காணலாம். + +எண் கணிதத்தில் 2x4 = 8 என்றால், 4x2 என்பதும் 8 தான். ஆனால், திசையன்களின் பெருக்கலாகிய குறுக்குப் பெருக்கலில் a × b ≠ b × a. + + + + +திருகாணி + +திருகு "(screw)" மரையாணியைப் பொன்ற பொன்மத் திருகுபுரி (வெளிப்புரி அல்லது துருத்துபுரி (ஆண்புரி) அமைந்த ஒருவகைப் பிணைப்பி/பூட்டி ஆகும்.திருகுபுரி ஆணிமேல் சுருளை அல்லது எழுசுருள் வடிவில் இருக்கும். எனவே, திருகாணி என்பது அழுத்தி முறுக்கித் திருகினால் மரம் அல்லது வேறு செலுத்தப்படும் ஒரு பொருளுள் நகர்ந்து அப்பொருளுள் பதிந்து பற்றிக் கொள்ளும் திருகுபுரி உள்ள ஓர் ஆணி. ஆணி அடித்து சட்டங்களை இணைப்பதுபோல், திருகாணியால் முடுக்கி இணைப்பதும் பரவலாக கைக்கொள்ளும் இணைப்பு முறையாகும். பல வகையான திருகாணிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. +திருகு என்பது ஓர் ஆணியில் சுற்றிவைத்த சாய்தளம் ஆகும். சில திருகு புரிகள் நிரப்பு புருயுடன் இணையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிரப்பு புரி " பெண்புரி" அல்லது "ஏற்பு புரி" எனப்படுகிறது. பின்னது ஒரு மரையாகவோ அகப்புரி வெட்டிய குழலாகவோ அமையலாம். பிற திருகுகள் மென்மையான பொருளில் திருகும்போது ஊடுருவி சுருளை அல்லது எழுசுருள் வகைக் காடியை வெட்டும்படி வடிவமைக்கபட்டுள்ளன. பொதுவாக திருகுகள் பொருள்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கவும் குறிப்பிட்ட இருப்புகளில் அவற்றை நிறுத்தவும் பயன்படுகின்றன. + +பெரும்பாலான திருகுகள் கடிகாரச் சுழல்முறையில் திருப்பி இறுக்கப்படுகின்றன. இது வலஞ்சுழி புரியமைப்பு எனப்படுகிறது; "வலதே இறுக்கு; இடதே தளர்த்து" எனும் பொதுவான நினைவுகொள் மொழி திருகின் இயக்கத்தில் பயன்படுகிறது திருகை முடுக்குவதற்கான மற்றொரு விதி பன்வருமாறு: திருகை வலது கையால் பிடிக்கும்போது கட்டை விரல் காட்டும் திசையில் திருகு நகரும். திருகு வலஞ்சுழியினதாக இருந்தால் முடுக்குதல் விரல்களின் திசையில் இருக்கும்போது திருகு கட்டை விரல் திசையில் நகரும். இடஞ்சுழித் திருகுகள் சில விதிவிலக்குகளில் மட்டுமே பயன்படும். குறிப்பாக திருகு இடஞ்சுழித் திருக்கத்துக்கு ஆட்படும்போது, வலஞ்சுழி புரி கழன்றுவிடும் என்பதால், இடஞ்சுழி புரிதான் சரியான தகுந்த தேர்வாகும். மிதிவண்டியின் வலது பக்க மிதியில் இடஞ்சுழி திருகுபுரிகள் அமைந்துள்ளன. + +திருகின் ஒரு முனையில் தலை அமையும். தலை கருவியால் திருப்ப அல்லது முடுக்கிச் செருக ஏற்ற���டியான சிறப்பு வடிவமைப்பைப் பெற்றிருக்கும். திருகுகளை முடுக்க பொதுவாக திருகுமுடுக்கிகளும் கவ்விகளும் பயன்படுகின்றன. தலை திருகுடலை விட பெரியதாக இருக்கும். இது திருகு நீளத்தை விட திருகை ஆழமாக திருகவிடாமல் காக்கும். மேலும் தலை "தாங்கும் பரப்பு" ஆகவும் அமையும். இதற்கு விதிவிலக்குகள் உண்டு;எடுத்துகாட்டாக, உள்முடுக்கத் தேவையற்ற ஊர்தி மரையாணிகலின் தலைகள் குவிமுக வடிவில் அமைகின்றன; அமைப்புத் திருகுகளின் தலைகள் திருகின் வெளி விட்டத்தைக் காட்டிலும் சிறியனவாக அமைகின்றன. உள்முடுக்கத் தேவையற்ற J-திரிகுகள்J-வடிவத் தலையைப் பெற்றுள்ளன. இவை உள்ளே முடுக்கப்படுவதில்லை; மாறாக கற்காரைக்குள் புதைக்கப்படுகின்றன. எனவே இவை நங்கூர மரையாணிகளாகப் பயன்படுகின்றன. தலை முதல் நுனி வரை தலைக்குக் கீழே உள்ள உருளைப் பகுதி உடல் அல்லது தண்டு எனப்படுகிறது; இதில் புரிகள் முழுவதுமோ அல்லது ஒரு பகுதி வரை மட்டுமோ வெட்டப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு புரிக்கும் நடிவில் அமையும் தொலைவு புரியிடைத் தொலைவு அல்லது வெறுமனே "புரியிடை" எனப்படும். + +மிகப்பொதுவாக, திருகு என்பது பற்றி, நுண்ணளவி, கப்பல் முற்செலுத்தி, அல்லதுஆர்க்கிமெடீசு திருகு நீரெக்கி போன்ற எதையும் குறிப்பிடலாம். + +மரையாணி, திருகாணி இடையே உலகளாவியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிசமான வேறுபாடு எதுவும் இல்லை. + +மிக எளிய வேறுபாடு இருப்பது கண்கூடான உண்மை என்றாலும், தெளிவான வேறுபாட்டை வகைப்படுத்த இயலவில்லை, அதாவது மரையாணி இணைக்கப்படவேண்டிய இரு பொருள்கள் வழியாக நுழைந்து அப்பொருளின் மற்றொரு பக்கத்திலுள்ள மரைவில்லையினுள்ளே(NUT) திருகுவதின் மூலம் அவ்விரு பொருட்களை இணைக்கிறது; அதே நேரத்தில் ஒரு திருகாணி எந்தவிதமான கூடுதல் கருவிகளின் உதவியுமின்றி நேரடியாகவே இருபொருள்களினுள்ளேயுள்ள மறையின் வழியே திருகுவதின் மூலம் எளிதில் இருபொருட்களையும் இணைக்கிறது.திருகு ஒரு பொருளுக்குள் முடுக்கப்படுகிறது; மரையாணி பல பொருள்களை இணைக்கிறது. எனவே பொதுவாக திருகுகளை வாங்கும்போது மரைகள் ஏதும் தரப்படுவதில்லை. ஆனால், மரையாணிகள் எப்போதும் மரைகளுடனே விற்கப்படுகின்றன.வட்டார அல்லது திசை மொழி வேறுபாட்டலும் இந்தக் குழப்பம் விளைகிறது. "எந்திரங்களின் கையேடு" இந்த வேறுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறது: + +சில அகராதிகளின் வரையறைகளுடனும் ASME B18.2.1 பிரிவுடனும் "திருகு" "மரையாணி "யின் வேறுபாடு ஒத்துபோகிறது. + +"எந்திரங்களின் கையேடு" வழி எது திருகு, எது மரையாணி எனும் வேறுபாட்டுச் சிக்கல் முழுமையாகத் தீர்க்கப்படுவதில்லை. என்றாலும், இந்த முரண்பட்ட சொற்களால் சில பகுதிப் பெயர்களின் வேறுபாடும் பயன்பாடும் குழப்பம் தருவதாகவே உள்ளது. இந்தச் சில சிக்கல்கள் கீழே விவரிக்கப்படுகின்றன: + +ASME செந்தரங்கள் பலவகை "எந்திரத் திருகுகள்" பற்றிக் குறிப்பிடுகிறது இவற்றின் விட்டங்களது நெடுக்கம் 0.75 அங்குலம் (19.05 மி.மீ) வரை வேறுபடுகிறது. இவை அடிக்கடி மரைகளுடன் பயன்படுகின்றன. ஆனால், இவை மரைகள் இல்லாமலும் மடுத்தப் துளைகளில் முடுக்கப்படுவதுண்டு. "எந்திரங்கலின் கையேட்டு" வேறுபாட்டின்படி இவற்றைத் துருகாகவோ மரையாணியாகவோ கருதலாம். நடைமுறையில், இவை பெரும்பாலும் சிறிய திருகுகளுக்கே குறிப்பிடப்படுகின்றன. சிறிய திருகுகள் எப்போதுமே எந்திரத் திருகுகள் என்றே அழைக்கப்படுகின்றன. என்றாலும் சிலவகை எந்திரத் திருகுகள் அடுப்பு மரையாணிகள் எனப்படுவதும் உண்டு. + +மரையாணி எப்பொழுது மரைவில்லையுடன் சேர்த்தே பயன்படும். திருகாணிகளை திருகுவதற்கு திருப்புளிகள் மட்டுமே பயன்படுத்தலாகாது, சில சமயங்களில் திருகுச்சாவிகளும் பயன்படுத்த நேரிடும். + +ASME செந்தரம் B18.2.1-1996 பிரிவு விட்டத்தில் 0.25–3 அங்குலம் (6.35–76.20 மி.மீ) உருவளவு நெடுக்கம் உள்ள அறுபக்கக் கவிப்புத் திருகுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவை மிக நெருக்கமாக அறுகோண மரையாணிகளைப் போன்றவையே ஆகும். ஒரே வேறுபாடு இவை அறுகோண மரையாணிகளை விட கூடுதல் பொறுதியுடன் செய்யப்படுகின்றன என்பதே ஆகும். "எந்திரங்களின் கையேடு" இவற்றைச் " சீர்பட்ட அறுகோண மரையாணிகள்" எனக் கூறுகிறது" + + +அதிகப்படியான திருக்கம் பயன்படும்போது இவை கழன்றுவிழ, சில திருகாணிகள் முறியும் தலையுடன் செய்யப்படுகின்றன. இது எளிதில் இணைப்போடு குறுக்கிட முடியாத காப்பைத் தருவதோடு, தகுந்தபடி இணைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா எனச் சரிபார்க்கவும் உதவுகிறது. எடுத்துகாட்டாக, ஊர்திகளின் திசைமாற்றித் தண்டுகளில் பற்றவைப்பு நிலைமாற்றியைக் காப்பாகச் செருகப் பயன்படும் துணிப்புவகை மரையாணிகளைக் கூறலாம். + +நிகழ்காலத் திருகுகள் பலவகை முடுக்குதல் வடிவமைப்புகலப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொன்றுக்கும் முடுக்கவும் கழற்றவும் ஒரு தனிக் கருவி தேவைப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் காடியிட்ட திருகு முடுக்கியும் பிலிப்சு திருகு முடுக்கியும் பரவலான பயன்பாட்டில் உள்ளன; சில பயன்பாடுகளில் அறுகோணவகையும் இராபர்ட்சன் வகையும் டார்க்சு வகையும் பரவலாக பயன்படுகின்றன. ஐரோப்பாவில் போழிமுடுக்கி ( Pozidriv) பிலிப்சு முடுக்கியைப் பதிலீடு செய்துவிட்டது. தானூர்திகளைப் போன்ற பெருந்திரளாக்கத் தன்னியக்கப் பூட்டலில் சில சிறப்புவகைத் திருகு முடுக்கிகள் தேவையாகின்றன. குறுக்கீடுகளைத் தவிர்க்கவேண்டிய சூழல்களில் ஏறுமாறான திருகு முடுக்கிகள் பயன்படுத்த நேரலாம். எடுத்துகாட்டாக, வீட்டுப் பயனர் பழுதுபார்ப்பு மேற்கொள்வதைத் தவிர்க்கும் மின்னனியல் பயன்கருவிகளைக் கூறலாம். + +திருகை முடுக்கும் கைக்கருவி திருகுமுடுக்கி எனப்படுகிறது. அதே பணியைச் செய்யும் மின்கருவி மின் திருகுமுடுக்கி எனப்படும்; திருகு முடுக்கும் இணையேந்துடன் மின் துரப்பணங்களையும் திருகை முடுக்கப் பயன்படுத்தலாம்.திருகு இணைப்பின் பிடிதிறம் உய்யநிலையில் உள்ளபோது திருகுங்கால் கூடுதல் விசை செயல்படுவதைத் தவிர்க்க, திருக்கம் அளக்கும் அல்லது திருக்கம் கட்டுபடுத்தும் திருகு முடுக்கிகளைப் பயன்படுத்தலாம். அறுகோனத் திருகுக்குக் கவ்வி அல்லது திருகு கழற்றியைப் பயன்படுத்தலாம். இதற்கு மின்முடுக்கி பயன்படுத்தப்பட்டால், அப்போது நாம் ஒரு மரைப்படிவியைப் பயன்படுத்தலாம். + + + + + +சொத்துரிமை + +சொத்து உரிமை என்பது ஒருவர் அல்லது ஒரு குழு நேர்மையான வழியில் உழைத்த சொத்துக்கான உரிமை ஆகும். சொத்தின் சொந்தக்காரர் அந்தச் சொத்தை நுகர, விற்க, வாடகைக்குவிட, பிறருக்கு கையளிக்க, அழிக்க உரிமை பெறுகிறார். ஆதனச் சொத்து (நிலம், வீடு), தனிநபர் சொத்துக்கள் (வாகனம், உடை போன்ற பொருட்கள்), அறிவுசார் சொத்து, பொதுச் சொத்து என்று பல்வேறு வகையான சொத்துக்கள் உள்ளன. + + + + + +ஆரையம்பதி + +ஆரையம்பதி ("Arayampathy") இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் - தாழங்குடாவும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை - காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. + +ஆரம்பத்தில் காலத்திற்கு காலம் கரையூர், மண்முனை, ஆலஞ்சோலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. 16 அம் நுாற்றாண்டில் வாழ்ந்திருந்த வேடுவத்தலைவன் காத்தான் என்பவன் குடியிருந்தமையால் காத்தான்குடி என பெயரில் அறியப்பட்டது. 1872 இல் காத்தான்குடியில் இருவேறு பக்கங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் அரசால் இரண்டாக பிரிக்கப்பட்ட போது இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதி காத்தான்குடி எனவும் தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஆரைப்பற்றை எனவும் பிரிக்கபட்டதன் பின்னர் இக்கிராமம் “ஆரைப்பற்றை" எனும் பெயர் பெற்றது. இக்கிராமத்தில் “ஆரைப்பற்றை தெரு"ப்பகுதியில் ஒடும் நீரோடைகளில் ஆரை எனப்படும் ஒரு வகை கீரை அதிகமாக வளர்ந்து காணப்பட்டதால் “ஆரைப்பற்றை“ என அழைக்கப்பட்டது. ”ஆரைப்பற்றை தெரு” என்னும் அத்தெருவின் பெயரே முழுக்கிராமத்திற்கும் பெயராக அமைந்தது. + +அரசால் 1872 இல் ஆரைப்பற்றை என பெயர் பதிவேடுகளில் பதியப்பட்ட தமது ஊரை, கிராம மக்கள் ஆரையம்பதி என்றே அழைத்து வந்தனர். 1992இல் ஆரைப்பற்றை “ஆரையம்பதி” என அரசால் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது. + +காட்டுமாவடி, ஆலையடி, கயிற்றுச்சங்கத்தடி, கல்வீட்டுத்திண்ணையடி, வட்டையரின் வெட்டை, கேணியடி, வம்மிகேணியடி, எள்ளுச்சேனையடி, செல்வாநகர், இராஜதுரைகிராமம், துரும்பன் கேணியடி, திருநிற்றுக்கேணியடி, சிகரம், கோயில்குளம் + +கி.மு 2 ஆம் நுாற்றாண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் தனது பாதுகாப்புக்காக மட்டக்களப்பு வாவியோரங்களில் ஆற்றுக்காவல் படையினராக நிறுத்தி வைத்திருந்தவர்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழத்தொடங்கியதாக சொல்லப்படுகின்றது. கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்தில் இருந்து வந்து மண்முனையில் ஆட்சி செய்த சிற்றரசி உலகநாச்சியுடன் வந்த குடிகள் சில இங்கு குடியேறி இருக்கின்றன. அதன் பின்னர், கி.பி 12 ஆம் நுாற்றாண்டில் மாகோன் காலத்திலும், போர்த்துக்கேயரால் கோயில்குளத்தில் அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் 16 ஆம் நுாற்றாண்டில் சிதைக்கப்பட்ட பின்னரும் பல குடிகள் இவ்வூரில் வந்து குடியேறி இருக்கின்றன. சேரநாட்டிலிருந்தும் சில குடியேற்றங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. + +அலையன் குளம், ஆனைக் குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, திருநீற்றுக்கேணி, துரும்பன் கேணி, தோணாபால் வாத்த ஓடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்க்கின்றன. + +தீர்வைத்துறை, காட்டுமாவடித்துறை, ஆலடித்துறை, காங்கேயன்ஒடைத்துறை என மட்டக்களப்பு வாவியின் போக்குவரத்துக்காகவும் தற்போது மீன்பிடிக்காகவும் பயன்படுத்தப்படும் துறைகள் உள்ளன. + +ஆரையம்பதியின் வரலாற்று நோக்கிலான சாதிய அடக்கமைவு அதன் தெரிப்பெயர்களில் வெளிப்படுகின்றது. முகத்துவாரத்தெரு, நடுத்தெரு, ஆரைப்பற்றைதெரு என குருகுலத்தோரும், வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் தெரு, பொற்கொல்லர் தெரு, என தெருப் பெயர்கள் வெவ்வேறு சாதிய சமூங்களின் பெயர்களைச் சார்ந்து உள்ளன. + + + + + +அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும். + + + + + +மச்ச புராணம் + +மச்ச புராணம் 14,000 கிரந்தப் பாடல்கள் (சுலோகம்) கொண்டது. இதில், மச்சாவதாரத் தோற்றம், திருமால் +நீர்ப்பிரளயத்திலிருந்து வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும் காத்து உலகில் மீண்டும் சீவராசிகளை வளர்ச்சியடையச் செய்ததையும், பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், +பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது. + + + + + +கண்டுபிடிப்பு + +கண்டுபிடிப்பு (() என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். ப���துவாகக் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்வதற்கு, ஏற்கனவே இருக்கும் ஒரு எண்ணக்கருவையோ, வழிமுறையையோ மேம்படுத்தி ஒரு கண்டுபிடிப்பாக்க முடியும் என்ற புரிதல் இருப்பது அவசியம். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு. + +மனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. "தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது. + +எண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. "ஆகாயக் கோட்டை கட்டுதல்" போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது. + + + + +பண்பாட்டு மாற்றம் + +குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவினருக்கு உரிய பண்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைப் பண்பாட்டு மாற்றம் எனலாம். பண்பாடு என்பது இயக்கத் தன்மை கொண்டது இதில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது. இது குறித்த சில பண்பாடுகளுக்கு மட்டுமன்றி எல்லாப் பண்பாடுகளுக்குமே பொருந்தும் ஒரு விடயம் ஆகும். + +போக்குவரத்து வசதிகள், தொ��ர்பு வசதிகள் என்பன மிகவும் குறைவாக இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. இன்றைய காலகட்டம் பல துறைகளிலும் வேகமான மாற்றங்களைக் காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது. + +பண்பாடு என்பது வெறுமனே பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பு அல்ல. அவை ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகச் செயற்படுவதில்லை. + +இதனால் ஒரு அம்சத்தில் நிகழும் மாற்றங்கள், பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் தாக்கங்களை உண்டாக்குகின்றன. பண்பாட்டின் பல்வேறு கூறுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு பண்பாட்டு ஒருங்கிணைப்பு (Integration of Culture) எனப்படுகின்றது. பண்பாட்டு ஒருங்கிணைப்பு இறுக்கமாக இருக்கும் சமுதாயங்கள் வேண்டாத மாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை. + +பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய வழிமுறைகளை அறிஞர்கள் பகுத்தாய்ந்து வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுட் சில: + + + + + + +அமைப்பு + +அமைப்பு (Organization) என்பது பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேறுபடும். + +கோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டாகும். + + + + + +கட்டமைப்பு + +எப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் கட்டமைப்பு (Structure) எனலாம். + + + + +செயல்முறையாக்கம் + +ஒரு ஒழுங்கமைப்பில் வரிசையாக அல்லது முறையாக செய்யப்படவேண்டியவற்றை செயல்முறையாக்கம் (process) எனலாம். செயலாக்கம் என்றும் முறைவழி என்றும் தமிழில் குறிப்பிடப்படுவதுண்டு. + +செயல்���ுறையாக்குத்தல் அல்லது செயலாக்குதல் அல்லது முறைவழிப்படுத்தல் processing குறிக்கும். + + + + +இனியவர்கள் + +இனியவர்கள் கனடாவில் தயாரான ஒரு தமிழ்த் திரைப்படம். இளைய தலைமுறையினரால் உருவாக்கப்பட்டு 2005ல் திரையிடப்பட்டது. + +கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றை லெனின். எம். சிவம் செய்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை வைரமுத்து சொர்ணலிங்கம், கமலா பெரியதம்பி ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். பாடல்களை ஆனந்த பிரசாத், அருட்செல்வி அமிர்தநாதர், சங்கவி கிரிதரன், சுகல்யா ரகுனாதன் ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். இசை அமைத்தவர் சங்கவி கிரிதரன். + + + + + + +புள்ளிப் பெருக்கல் + +கணிதத்தில் புள்ளிப் பெருக்கல் என்பது இரு திசையன்களுக்கு இடையே நிகழ்த்தும் ஒரு செயல் அல்லது வினை. இப் புள்ளிப் பெருக்கலின் விளைவாய்ப் பெறும் விடை ஒரு பரும அளவுள்ள மெய்யெண்ணே (R) தவிர ஒரு திசையன் அல்ல. மாறாக இதே இரு திசையன்களைக் கொண்டு செய்யும் குறுக்குப் பெருக்கலில் கிடைக்கும் பெருக்கு விளைவு ஒரு திசையன் ஆகும். இந்த புள்ளிப் பெருக்கல் என்பது யூக்ளீடிய இட வெளியில் உள்முகப் பெருக்கல் எனப்படும். + +a, b என்னும் இரு திசையன்களை எடுத்துக்கொள்வோம். இவ்விரு திசையன்களும் திசையன் வெளியில் உள்ள முழுதும் வேறுபட்டவைகளாகக் கொள்வோம். ஈவிரு திசையன்களையும் கீழ்காணுமாறு கொண்டால் +a = ["a", "a", … , "a"] மற்றும் b = ["b", "b", … , "b"], புள்ளிப்பெருக்கலானது: +மேலுள்ளதில் Σ என்னும் குறி தொடர் கூட்டுத் தொகைக் குறி ஆகும். + +எடுத்துக்காட்டாக முத்திரட்சி (முப்பரிமாணம்) கொண்ட இரு திசையன்கள் [1, 3, −5] மற்றும் [4, −2, −1] ஆகியவற்றின் புள்ளிப் பெருக்கல்: + +அணி கணிதத்தில் வழங்கும் பெருக்கலைப் பயன்படுத்த திசையன்களை "n"×1 அணிகளாகக் கொண்டும் புள்ளிப் பெருக்கலை அறிய கீழ்க்காணுமாறு எழுதலாம்.: + +மேலுள்ளதில் a a யின் அணித் திருப்பம் என்பதைக் குறிக்கும். மேற்கண்ட எடுத்துக்காட்டில் உள்ளதை கணித்தால் 1×3 அணி (இங்கு திசையனைக் குறிக்கின்றது) பெருக்கல் 3×1 அணி (அணிப்பெருக்கலில் கிடைப்பது 1×1 அணியாகும். இது ஒரு பரும அளவு கொண்டதே.): + +யூக்ளீடிய இட வெளியில் இந்த புள்ளிப் பெருக்கலுக்கும் நீளத்திற்கும் கோண���்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. a என்னும் திசையன் தொடர்பாக a•a என்பது a ஐ பக்கமாகக் கொண்ட சதுரத்தின் பரப்பளவுக்குச் சமம். இன்னும் பொதுவாக எண்ணினால் இரண்டாவது திசையன் b ஆக இருக்குமானால் + +மேலுள்ளதில் |a| யும் |b| யும் a மற்றும் b நீளத்தை (பரும அளவைக்) குறிக்கும். θ என்பது இரண்டிற்கும் இடையே உள்ள கோணத்தைக் குறிக்கும். + +cosine 90° இன் மதிப்பு சுழி (0) ஆகையால் இரு செங்குத்தான திசையன்களின் புள்ளிப் பெருக்கல் தொகை சுழியாகும் (0). a , b ஆகிய இரண்டின் நீளம் ஓர் அலகாக இருப்பின் , அவைகளின் புள்ளிப் பெருக்கல் அவைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் கோசைன் மதிப்பைத் தரும். எனவே இரு திசையன்களுக்கும் இடையே உள்ள கோணத்தை அறிய கீழ்க்காணும் வாய்பாட்டை (வாய்பாடு = உண்மைக் கூற்று, சமன்பாடு) பயன்படுத்தலாம்: + +இயற்பியலில் புள்ளிப் பெருக்கலின் விளைவு பரும அளவுள்ள எண்ணாக இல்லாமைல் அது ஒரு இயற்பியல் பண்புடைய ஒன்றின் அலகோடு குறிக்கப்படும். + +எடுத்துக்காட்டு: + +a, b, மற்றும் c ஆகிய மூன்றும் திசையன்களாக இருப்பின், "r" என்பது பரும அளவு கொண்ட ஒன்றாக இருப்பின், கீழ்க்காணும் பண்புகள் உண்மையாகும்: + +புள்ளிப் பெருக்கல் இடமாற்றம் பண்பு கொள்ளும் (commutative): + +புள்ளிப் பெருக்கல் இருநேர்ப் பகிர்வுப் பண்பு கொள்ளும் (bilinear): + +புள்ளிப் பெருக்கல் பகிர்ந்தளிப் பண்பு கொள்ளும் (distributive): + +பரும அளவால் பெருக்கப்பட்டால் புள்ளிப்பெருக்கல் கீழ்க்காணும்படி இயங்கும்: +(இந்த கடைசி இரண்டு பண்புகளும் முதல் இரண்டு பண்புகளில் இருந்து பெறப்படும்). + + +சாதாரண எண்களின் நீக்கல்விதி: + +திசையன்களுக்கு: + +எனவே a மற்றும் (b − c) திசையன் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைகின்றன. இம்முடிவினால்: + +உள்முக பெருக்கலை அணிக் கணித ஒப்புரு வழிக் காட்டலாம். எடுத்துக்காட்டாக இரு திசையன்ங்கள்: + +என்பதை அடிப்படைக் கணம் வழிக் குறிப்பிடலாம். + +formula_12: + +இதன் எந்த உள்முகப் பெருக்கலையும் கீழ்க்காணுமாறு குறிக்கலாம்: + +இங்கு உள்முகப் பெருக்கலைக் குறிக்கும் 3x3 அணி formula_15 + +formula_12 மூலமாகத் தரப்பட்ட உள்முகப் பெருக்கலின் அணி formula_17 எனில், formula_15 -ன் மதிப்பைப் பின்வரும் சமன்பாட்டுத் தொகுதியைத் தீர்ப்பதன் மூலம் காணலாம்: + +formula_19 + +அடிப்படைக் கணங்களைக் கீழ்க்காணுமாறு கொடுத்தால் + +formula_12 மூலமாகத் தரப்பட்ட உள்முகப் பெருக்கலின் அண��: + +formula_17-ன் ஒவ்வொரு உறுப்பையும் பின்வருமாறு இரு அடிப்படைத் திசையன்களின் உள்முகப் பெருக்கலுக்குச் சமப்படுத்தலாம். + +இது ஒன்பது சமன்பாடுகளையும் ஒன்பது மதிப்பறியா மாறிகளையும் தருகிறது. + +இச்சமன்பாடுகளைத் தீர்க்க: + +formula_28 + + + + + +குறுக்குப் பெருக்கல் + +கணிதத்தில் குறுக்குப் பெருக்கல் ("Cross-multiplication") என்பது அடிப்படை எண்கணிதம், அடிப்படை இயற்கணிதத்தில் இரு பின்னங்கள் அல்லது இயற்கணிதக் கோவை#விகிதமுறு கோவைகளுக்கிடையேயான சமன்பாட்டை எளிய வடிவிற்கு மாற்றவும் அவற்றிலுள்ள மாறிகளின் மதிப்புகளைக் கண்டுபிடித்து அச்சமன்பாட்டின் தீர்வு காணவும் பயன்படும் எளிய கணக்கீட்டு முறையாகும். + +தரப்பட்டுள்ள சமன்பாடு: + +இச்சமன்பாட்டைக் குறுக்கே பெருக்கிப் பின்வரும் முடிவைப் பெறலாம்: + +யூக்ளிடிய வடிவவியலின் விகிதங்களை வடிவொத்த முக்கோணங்களின் விகிதங்களைப் போன்று கருதுவதன் மூலம் யூக்ளிடிய வடிவவியலிலும் குறுக்குப் பெருக்கலைச் செய்யலாம். + +குறுக்குப் பெருக்கலில் விகிதமுறு சமன்பாட்டின் இருபுறம் உள்ள பின்னங்களில், + +குறுக்குப் பெருக்கலை முறையை கீழுள்ள கணிதச் செயற்பாடுகளின் மூலம் சரிபார்க்கலாம்: + +எடுத்துக்கொள்ளப்படும் விகிதமுறு சமன்பாடு: + +எந்தவொரு சமன்பாட்டையும் அதன் இருபுறமும் ஒரே உறுப்பால் பெருக்கும்போது அச்சமன்பாடு மாறாது என்ற முடிவின்படி, இச்சமன்பாட்டை இருபுறமும் ஆல் பெருக்க: + +ஒவ்வொரு புறமுமுள்ள பொதுக்காரணியால் சுருக்க: + +குறுக்குப் பெருக்கலை கீழுள்ள மற்றொரு முறையிலும் சரிபார்க்கலாம்: + +இடதுபுறம் = 1 ஆலும், வலதுபுறம் = 1 ஆலும் பெருக்க: + +, இரண்டும் பூச்சியமல்ல என்பதால், இருபுறமும் பொதுவான பகுதியாகவுள்ள = ஐ நீக்க: + +பின்னச் சமன்பாடுகளைச் சுருக்கவும், தீர்க்கவும் குறுக்குப் பெருக்கல் பயன்படுகிறது. + +இச்சமன்பாட்டில் "x" இன் மதிப்பைக் காண வேண்டுமெனில் குறுக்குப் பெருக்கலைப் பயன்படுத்த, + +எடுத்துக்காட்டு: + +மாறாத வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மகிழுந்து கடந்த மூன்று மணி நேரத்தில் 90 கிமீ கடந்துள்ளது என்றால், ஏழு மணி நேரத்தில் அது கடக்கும் தூரம் எவ்வளவு? + +இக்கணக்கின் விடைகாண்பதற்கு, தரவு கீழ்வரும் விகிதச் சமனாக எழுதப்படுகிறது. இதில் "x" என்பது 7 மணி ந���ரத்தில் கடக்கும் தொலைவைக் குறிக்கிறது. + +குறுக்குக் பெருக்கலின்படி: + +இப்போது குறுக்குப் பெருக்கலைப் பயன்படுத்தி "x" இன் மதிப்பைக் காணலாம்: + +"மூன்றின் விதி" ("Rule of Three") என்பது குறுக்குப் பெருக்கலுக்கான ஒரு சுருக்கு வழிமுறையாகும். பிரெஞ்சு தேசிய பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது. + +தரப்பட்டுள்ள சமன்பாடு: + +இதில் மதிப்பு காணப்பட வேண்டிய மாறியானது வலதுபக்கத்தில் பகுதியாக உள்ளது. மூன்றின் விதிப்படி: + +இதில் , ”ஓரமதிப்பு”” ("extreme") எனவும் , இடைமதிப்புகள் ("means") எனவும் அழைக்கப்படுகின்றன.. + + + + + + +ஜேம்ஸ் போக் + +ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் (நவம்பர் 2 1795–ஜூன் 15 1849) ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார். + + + + +துருபதன் + +துருபதன் பாஞ்சால தேசத்துப் பிரஷதனின் மகன். அக்கினி கோத்திர முனிவரின் மாணாக்கன். +இவரும் துரோணாச்சாரியாரும் ஒரு சாலை மாணாக்கராயிருக்கும்போது, தனக்கு நாடு கிடைத்தால் பாதி நாட்டைத் துரோணாச்சாரியாருக்குத் தருவதாக வாக்களித்தார். பின்னர் நாடு கிட்டியவுடன், அங்குவந்த துரோணரைக் கண்டுகொள்ளவில்லை. சினமுற்ற துரோணர், "என் மாணாக்கனால் உன்னை சிறுமைப்படுத்துவேன்" என சூளுறைத்தார்.துரோணர் பீஷ்மரை அணுகி கெளரவருக்கும் பாண்டவருக்கும் வில்வித்தை கற்றுத்தர அனுமதி பெற்று அருச்சுனனைச் சிறந��த வில்லாளியாக்கினார். அவனைக் கொண்டே துருபதனைக் கட்டி இழுத்துவரச் செய்தார்.மனம் நொந்த துருபதன், "துரோணரைக் கொல்ல ஒரு மகனும் திட்டத்துய்மன், அருச்சுனனுக்கு மணம் புரிந்து வைக்க ஒரு மகளையும் திரெளபதி வேண்டித் தவமியற்றி அவ்வாறே பெற்றான். + +சிகண்டி, சுமித்திரன், பிரியதர்சனன், சித்திரகேது, சுகேது, துவசசேநன் ஆகியோரும் துருபதனின் மகன்களாவார்கள். + + + + + +சிவப்பிரகாசர் (துறைமங்கலம்) + +சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் "துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்". சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். + +தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தார். + +தந்தை இறந்த பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று, அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர் நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் "சோணாசலமாலை" என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார். + +அதன் பின்னர், சிவப்பிரகாச அடிகளார் தமிழ்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்கள் கற்பான்வேண்டி, தணியா வேட்கையுடன் வடநாட்டுக்குத் தன் தம்பியருடன் சென்று வாலிகண்டபுரத்துக்குத் தென்பாலுள்ள துறைமங்கலம் அடைந்து ஆங்கோர் நந்தவனத்தில் சிவவழிபாடு செய்தார். அப்போது அவ்வூரின் அதிபதியும் கல்வி கேள்விகளில் சிறந்தவருமான அண்ணாமலை ரெட்டியார் அங்கு வந்து வணங்கி நின்றார்; அடிகளின் நல்லருள் பெற விழைந்தார். அடிகளை அங்கேயே தங்கியிருந்து அருட்பணிபுரிதல் வேண்டுமென இறைஞ்��ியதால், அடிகளாரும் ஒப்பினார். அதன்பின், அண்ணாமலை ரெட்டியார், தம் குருவாகிய சென்னவசவையர் திருமடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடம் கட்டுவித்து, அதில் அடிகளை இருக்கச் செய்து தானும் அணுக்கத் தொண்டனாக அருகிருந்து அறிவுரைகள் பெற்று இரண்டரையாண்டு ஆனந்தித்திருந்தார். + +அதன்பின் அடிகளார் தென்னாடு செல்ல விழைந்து தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்துப் புறப்பட்டுத் திருநெல்வேலியை அடைந்தார். + +திருநெல்வேலியை அடைந்த அடிகளார், அங்கிருந்த சிந்துபூந்துறையில் தருமபுர ஆதீன "வெள்ளியம்பலவாண சாமிகள்" இலக்கண இலக்கிய நூற்புலமையில் வல்லுனரெனக் கேள்வியுற்று, அவரிடம் சென்று வணங்கி நின்று தாம், "இலக்கணம் கற்கவேண்டி வந்தோமென்றார்." அதற்கியைந்த குரு, சிவப்பிரகச அடிகளாரின் இலக்கியப் பயிற்சியைச் சோதிக்க எண்ணி, "ஐயா! 'கு'விலாரம்பித்து, 'ஊருடையான்' என்பதை இடையிலமைத்து, 'கு'என்னும் எழுத்தில் முடியுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடுக" என்றார். + +உடனே அடிகளார்: + +என்னும் வெண்பாவை இயற்றிப் பாடினார். + +இருவருக்கும் பதினைந்து தினங்களில் ஐந்து இலக்கணங்களையும் பாடம்சொல்லி அவர்களின் இலக்கணப் புலமையினை நிறைவுபெறச் செய்தார். + +அடிகளார் தனக்கு அண்ணாமலை ரெட்டியார் வழிச்செலவுக்காகத் தந்தனுப்பிய பொன்னில் 300 பொன்னைக் குரு காணிக்கையாகத் தர அதை மறுத்த குரு, "திருச்செந்தூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் புலவரை வென்று செருக்கழித்து வாரும்; அதுவே குரு காணிக்கை" என்றார். + +கருத்தறிந்த சிவப்பிரகாச அடிகளார் திருச்செந்தூர் சென்று திருக்கோவில் வலம்வருங்கால், செருக்குற்ற புலவரைச் சந்தித்தார். சொற்போர் ஆரம்பித்தது. போட்டி என்ன? என்றதற்குத் திருச்செந்தூரார், "நாம் இருவரும் நீரோட்டக யகமம் (வாயிதழ் குவியா அடிமுதல் மடக்கு) பாட்டு முருகப் பெம்மானைப் போற்றிப் பாடவேண்டும்; முன்னர் பாடி முடித்தவற்கு, அஃ·தியலாதார் அடிமையாக வேண்டும்" என்றார். அடிகள் நீரோட்டக யமகவந்தாதியின் "கொற்ற வருணை" எனத் தொடங்கும் காப்புச் செய்யுளை முதற்கொண்டு "காயங்கலையநலி" என முற்றுப்பெறும் செய்யுளோடு, முப்பத்தியொரு கட்டளைக் கலித்துறைப் பாக்களை முதலில் பாடி முடித்தார். திருச்செந்தூராரோ, ஒரு பாடலைக்கூட முடிக்க இயலவில்லை. திருச்செந்தூராரை அடிமையாக்கி��் தம் குரு, வெள்ளியம்பலத் தம்பிரானிடம் அவரை ஒப்புவித்தார். + +பின்னர் தம்பிரான், "தாங்கள் பாடிய செய்யுளில் சிவனுக்குகந்தது சிதம்பரமே எனக் குறிப்பாலுணர்த்தியதால், அத்தில்லையில் சில காலம் இருக்க" எனப் பணித்து விடை கொடுத்தார். அடிகளார் அவ்வாறே சிதம்பரத்தில் சிலகாலமிருந்தார். + +பின்னர், சிவதலங்களுக்குச் சென்று வணங்கிப் பின்னர் துறைமங்கலத்திற்குப் போய் அண்ணாமலை ரெட்டியாரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கித் திருவெங்கைமாநகரில் தம்பொருட்டு அவரால் கட்டப்பட்ட திருமடத்தில் வாழ்ந்து, அந்நகரிலுள்ள பழமலைநாதரைப் போற்றி திருவெங்கைக்கோவை முதலிய நான்கு நூல்களை இயற்றித் தந்தார். + +பின்னர், அண்ணாமலை ரெட்டியார் "அடிகள் இல்லறம் மேற்கொள்ளவேண்டும்" என்று தம் உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்க அடிகள் உடனே, + +என்னும் பாவால் தம் இசைவின்மையை உணர்த்தினர். இதேபோல, அடிகளின் தம்பிகள் இருவரிடமும் ரெட்டியார் வினவ, அவர்கள் திருமணம் செய்துகொள்ள இயைந்தனர். இளவலிருவரின் இச்சையைப் புரிந்துகொண்ட அடிகள் இருவருக்கும் தக்கபடி திருமணம் செய்து வைத்தார். + +அதன்பின்னம், ரெட்டியாரோடு சிதம்பரம் சென்று, ஆங்கொரு திருமடம் கட்டுவித்து இறைவழிபாடு செய்து வந்தனர். அப்பொழுது, தருக்க பரிபாஷை, சிவப்பிரகாச விலாசம், நால்வர் நான்மணிமாலை, சதமணிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். பின் அங்கிருந்து கிளம்பி பல சிவத்தலங்களுக்கும் சென்று பின்னர் திருக்காட்டுப்பள்ளியை அடைந்தார். + +ரெட்டியாரோடு காஞ்சி செல்லும் வழியில் சாந்தலிங்க சுவாமிகளச் சந்தித்தார். சாந்தலிங்க சுவாமிகள் போரூர் செல்லும் காரணத்தை வினவ, அதற்கு அவர் சிவஞான பாலைய தேசிகரைத் தரிசிக்கச் செல்வதாகக் கூறினார். பின்னர் இருவரும் போரூர் செல்லும் வழியில் புத்துப்பட்டு கிராமத்தில் தங்கி இருக்கும்போது, அடிகளாரை நோக்கி சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய தேசிகரைப் புகழ்ந்து சில பாக்களை இயற்றவேண்டினார். அதற்கு அடிகளார், "யாம் மக்களைப் பாடுவதில்லை" என மறுத்தார். இரவு உறங்குங்பொழுது, முருகன் கனவில் தோன்றி ஒரு பாத்திரத்தில் விடுபூக்களை இட்டு, "இவற்றைத் தொடுத்து மாலையாக்கி எமக்கிடுவாயாக" எனக் கூறி மறைந்தார். + +உதயத்தில், சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவைக் கூறுகையில், "முருகன் உத்திரவு ���ந்துவிட்டது; பாடுங்கள்" என்றார். மறுக்கவியலாது, சிவஞான பாலைய தேசிகரின் பெருமையை, "நெஞ்சுவிடு தூது, தாலாட்டு" என்னும் நூல்களாக இயற்றிச் சிவஞான பாலைய தேசிகரின் முன் அரங்கேற்றினார். தேசிகரும் அடிகளாருக்கு உண்மையறிவைப் புகட்டினார். தேசிகனாரின் கட்டளைக்கிணங்கி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தன் தங்கை ஞானாம்பிகையாரைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, ரெட்டியாரைத் துறைமங்கலத்துக்குச் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் சிவஞான பாலைய தேசிகருடன் தங்கிவிட்டார். + +சிலகாலம் கழித்து, சிவஞான பாலைய தேசிகரிடம் விடைபெற்று காஞ்சி சென்று இறைத்தொண்டு புரிந்திருந்தபோது, நிசகுணயோகி என்பவரால் கன்னட மொழியில் இயற்றப்பட்ட விவேக சிந்தாமணியின் ஒரு பாகமாகிய "வேதாந்த பரிச்சேதத்திற்கு வேதாந்த சூடாமணி" என்னும் பெயரிட்டுத் தனி நூலாகப் பாடினார். இரேணுகர் என்னும் கணத்தலைவரால் அகத்தியருக்கு அருளப்பட்ட சித்தாந்த சிகாமணியையும் பாடினார். அத்தருணத்தேதான் அல்லமதேவராகிய பிரபுதேவர் வரலாறான பிரபுலிங்க லீலையும் இயற்றி அருளினார். + +சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார். + +இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் புரட்டாசிப் பவுர்ணமியில் இட்டலிங்கப் பரசிவத்தில் காலமானார். அவர் இயற்றியவற்றில் எளிதாகக் கிட்டுவது பிரபுலிங்க லீலை மட்டுமே. + +இவர் வீரசைவச் சமயச் சார்புள்ள பல நூல்களை இயற்றினார். + + + + +நையாண்டிப் போலி + +நையாண்டிப் போலி (Parody) என்பது, இன்னொரு ஆக்கத்தை நையாண்டி செய்யும் பாணியில் ஆக்கப்பட்ட ஆக்கம் ஒன்ற��க் குறிக்கும். இந்த நையாண்டி, ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவோ, அந்த ஆக்கம், அதில் இடம் பெறும் பாத்திரம், ஆக்கியோன் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றின் மீதான விருப்பத்தைக் காட்டுகின்ற ஒரு வேடிக்கையாகவோ, இருக்கலாம். + +"நையாண்டிப் போலி, விமர்சனத்துடன் கூடிய ஒரு போலச் செய்தல்" என்று, இலக்கியக் கோட்பாட்டாளரான லிண்டா ஹச்செனன் (Linda Hutcheon) என்பவர் கூறுகிறார். சைமன் டென்ட்டித் என்னும் இன்னொரு திறனாய்வாளர், நையாண்டிப் போலிக்கு, "இன்னொரு பண்பாட்டு ஆக்கம் அல்லது செயல்முறை குறித்து, தருக்க வாதத்துடன் கூடிய போலச் செய்தலை முன் வைக்கும், ஒரு பண்பாட்டுச் செயல்முறை" என விளக்கம் அளித்துள்ளார். + +நையாண்டிப் போலிகள், இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை உள்ளிட்ட எல்லாக் கலை ஊடகங்களிலும் காணப்படுகின்றன. பண்பாட்டு இயக்கங்களும் நையாண்டிப் போலிக்கு உட்படுவதுண்டு. + + + + +விமல் சொக்கநாதன் + +விமல் சொக்கநாதன் ஒரு வானொலிக் கலைஞர். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். "சிறுவர் மலர்" நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் இவரது குரல் பன்னாட்டு வானொலிகளிலும் ஒலிக்கிறது. இவர் சட்டம் படித்து லண்டனில் வழக்கறிஞர் நிறுவனம் நடத்திவருகிறார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார். +இலங்கை வானொலியில் இவர் படைத்த "இசையும் கதையும்", "வாலிப வட்டம்" போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய "களம் பல காண்போம்" என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி "வானொலிக் கலை" என்ற நூலை எழுதியுள்ளார். + + + + + + + + +பார்சிலோனா நாற்காலி + +பார்சிலோனா நாற்காலி, புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) என்பவராலும் அவரது அப்போதைய பங்காளரான லில்லி ரீச் என்பவராலும் வடிவமைக்கப்பட்ட ஒரு நாற்கால��� ஆகும். + +1929 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டின் பாசிலோனாவில் நடைபெற்ற, பாசிலோனா உலகக் கலை விழாவுக்காக, ஜெர்மன் நாட்டுக்கான காட்சி மண்டபத்தைக் கட்டுவதற்கு மீஸ் வான் டெர் ரோவை ஜெர்மனி அரசு நியமித்தது. இதற்காக இவரது வடிவமைப்பில், கண்ணாடி, உருக்கு என்பவற்றைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம், இன்றுகூடக் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு நவீன கட்டிடமாகவே உள்ளது. இக் கட்டிட வடிவமைப்புக்கு உகந்த உள்ளக அலங்கார வடிவமைப்பின்போது, அதன் ஒரு பகுதியாக இந்த நாற்காலியும் வடிவமைக்கப்பட்டது. + +மேற் குறிப்பிட்ட விழாவும், அதன் பகுதியாகிய கண்காட்சியும், அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தினரும், ஐரோப்பா முழுவதிலுமிருந்து பல அரச அதிகாரிகளும் கலந்து கொள்வர். எனவே இந்த நாற்காலி, அழகிய தோற்றம் கொண்டதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும் என மீஸ் கருதினார். + +இந்த நாற்காலிக்கான இவரது வடிவமைப்புக்கான அடைப்படைகளை, பண்டைக்கால எகிப்திய பாரோக்கள் பயன்படுத்திய மடிப்பு நாற்காலியின் வடிவமைப்பில் இருந்தும், ரோமரின் x- வடிவ நாற்காலியிலும் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு பண்டைக்கால வடிமைப்புக்களைப் பின்பற்றியிருந்தாலும் இவருடைய வடிவமைப்பு நவீனமானதாக இருந்தது. இது கண்காட்சி மண்டபத்தில், ஒரு சிற்பம் போலவே இருந்ததாகக் கூறப்படுகின்றது. 1970 களை அண்டி ஒவ்வொரு இளம் கட்டிடக் கலைஞரும், சொந்தமாக வைத்திருக்க விரும்பும் அளவுக்கு வடிவமைப்பாளரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந் நாற்காலி இன்றும் பலரால் விரும்பப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. + + + + +ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் + +ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் (Ronchamp chapel) என வழங்கப்படும், பிரான்ஸின், ரொஞ்ச்சாம்ப் என்னும் இடத்திலுள்ள நொட்ரே டேம் டு ஹோட் (Notre Dame du Haut) என்னும் கிறிஸ்தவ சிற்றாலயம், அதன் கட்டிடக்கலைக்காகப் புகழ் பெற்ற நவீன கட்டிடம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் ஒருவரான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1954 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த கட்டிடக்���லைக்கு வெற்றிகரமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். + + + + +லெ கொபூசியே + +சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர் லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று, நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார். + +நவீன வடிவமைப்புத் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்ற இவர், நெருக்கடியான நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை நிலையை வழங்கும் முயற்சியில் உழைத்தார். 50 ஆண்டுகள் கட்டிடக்கலையில் தொழில் புரிந்த இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. மத்திய ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உள்ளன. இவர் ஒரு கட்டிடக்கலைஞர் மட்டுமன்றி, ஒரு நகரத் திட்டமிடலாளர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் மற்றும் நவீன தளபாட வடிவமைப்பாளரும் ஆவார். + +இவர் வட மேற்குச் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரா மலைப் பகுதியில் அமைந்த நியூச்சாட்டல் கன்டனில் இருக்கும் லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் என்னும் சிறிய நகரம் ஒன்றில் பிறந்தார். இந் நகரம் பிரான்சுடனான எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காட்சிக் கலைகளின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் பயின்றார். இங்கே இவரது கட்டிடக்கலை ஆசிரியர் ரேனே சப்பலாஸ் என்பவராவார். லெ கொபூசியேயின் தொடக்ககால வீட்டு வடிவமைப்புக்களில் இவரது செல்வாக்கு அதிகம் காணப்பட்டது. + +இளமைக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். 11907 ஆஅம் ஆண்டளவில் பாரிசுக்குச் சென்ற இவர் வலிதாக்கப்பட்ட காங்கிறீற்றைப் பயன்படுத்துவதில் பிரான்சில் முன்னோடியாக விளங்கிய அகஸ்ட்டே பெரெட் என்னும் கட்டிடக்கலைஞரின் அலுவலகத்தில் பணிக்கு அமர்ந்தார். அக்டோபர் 1910 க்கும் மார்ச் 1911 க்கும் இடையில் பீட்டர் பெஹ்ரென்ஸ் என்னும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் ஒருவருக்காக பெர்லின் நகருக்கு அண்மையில் ஓரிடத்தில் பணி புரிந்தார். இங்க��� அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் இருவரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, வால்ட்டர் குரொப்பியஸ் ஆகியோரைச் சந்தித்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக் காலத்தில் இவர் ஜெர்மன் மொழியையும் கற்றுக்கொண்டார். இளமையில் இவ்விரு பணியிடங்களிலும் கிடைத்த பட்டறிவு இவரது பிற்கால வடிவமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்தியது. + +1915 ஆம் ஆண்டில் இவர் பால்கன் நாடுகளில் பயணம் மேற்கொண்டார். கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் சென்ற அவர் அங்கே அவர் கண்டவற்றை வரைபடங்களாக வரைந்து கொண்டார். இவற்றுள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த கட்டிடமான பார்த்தினனைப் பார்த்து வரைந்த வரைபடங்களும் அடங்கும். + +முதலாவது உலகப் போர்க் காலத்தில் இவர் தான் தொடக்கத்தில் கல்வி பயின்ற லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். போர் முடியும் வரை இவர் பாரிசுக்குச் செல்லவில்லை. இவ்வாறு சுவிட்சர்லாந்தில் இருந்த நான்கு ஆண்டுக் காலத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டிடக்கலைக் கோட்பாட்டு ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்தார். "டொம்-இனோ" வீடு எனப்படும் திட்டமும் இவற்றுள் ஒன்றாகும். இக் கட்டிடத்துக்காக இவர் வடிவமைத்த மாதிரி; காங்கிறீட்டுத் தளங்களையும், விளிம்புப் பகுதிகளில் அவற்றைத் தாங்கும்படி அமைக்கப்பட்ட குறைந்த அளாவிலான மெல்லிய வலிதாக்கப்பட்ட காங்கிறீட்டுத் தூண்களையும், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்வதற்கான காங்கிறீட்டாலான படிக்கட்டு அமைப்பையும் கொண்ட திறந்த தள அமைப்பையும் கொண்டு அமைந்திருந்தது. இந்த மாதிரி அமைப்பே பின் வந்த பத்து ஆண்டுகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. விரைவிலேயே தனது ஒன்று விட்ட சகோதரரான பியரே ஜெனெரெட் என்பவருடன் சேர்ந்து சொந்தத் தொழில் தொடங்கினார். இக் கூட்டுத் தொழில் 1940 ஆம் ஆண்டு வரை நீடித்தது. + +1918 ஆம் ஆண்டில், முன்னர் கியூபிச ஓவியராக இருந்து பின்னர் அதன்மேல் வெறுப்புக் கொண்ட அமெடீ ஒசன்பன்ட் (Amédée Ozenfant) என்பவரைச் சந்தித்தார். லெ கொபூசியேயை ஓவியம் வரையுமாறு ஒசன்பன்ட் ஊக்குவித்தார். இருவரும் இத் துறையில் கூட்டாக இயங்க முடிவு செய்தனர். கியூபிசம், பகுத்தறிவுக்கு ஒவ்வாதது எனவ��ம், மிகைப்படுத்தப்பட்டது எனவும் கூறிய இவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கியூபிசத்துக்கு மாற்றாக தூய்மையியக் (Purism) கலை இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். இந்த இயக்கத்துக்கான இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆயினும் இவர் கியூபிச ஓவியரான பெர்னண்ட் லெகர் (Fernand Léger) என்பவருக்கு நல்ல நண்பராகவும் விளங்கினார். + +இவர்கள் வெளியிட்ட இதழின் முதல் வெளியீட்டில் கொபூசியே தனது தாய்வழிப் பாட்டனின் பெயரைச் சிறிது மாற்றி "லெ கொபூசியே" என்னும் புனைபெயரில் எழுதினார். அக் காலத்தில், சிறப்பாக பாரிசில், பல துறைக் கலைஞர்கள் தங்களை ஒற்றைப் பெயரினால் அடையாளப் படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்பட்டது. + +1918 க்கும் 1922 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் ஒரு கட்டிடம்கூடக் கட்டவில்லை. தனது தூய்மையியக் கோட்பாட்டை வளர்ப்பதிலும், ஓவியம் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். 1922 ஆம் ஆண்டில் லே கொபூசியேயும், ஜீனரெட்டும் பாரிசில் கலைக்கூடம் ஒன்றைத் தொடங்கினர். + +இவருடைய கோட்பாட்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பல தனியார் வீடுகளை இவர் வடிவமைத்தார். இவற்றுள் பிரெஞ்சுத் தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருக்காக வடிவமைத்த "சிட்ரோகான்" மாளிகையும் ஒன்று. இவ்வீட்டின் அமைப்பில் பல நவீன தொழில்நுட்ப முறைகளையும், கட்டிடப்பொருட்களையும் லே கொபூசியே பயன்படுத்தினார். இம் மாளிகை மூன்று மாடிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் வசிக்கும் அறை இரட்டை உயரம் கொண்டதாக இருந்தது. படுக்கையறைகள் இரண்டாம் மாடியிலும், அடுக்களை மூன்றாம் மாடியிலும் அமைக்கப்பட்டன. கூரை வெய்யில் காய்வதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. கட்டிடத்துக்கு வெளிப்புறத்தில் நிலத் தளத்திலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இக்காலத்தைச் சேர்ந்த பிற கட்டிடங்களில் இருந்ததைப் போலவே இக் கட்டிடத்திலும், இடையீடற்ற தொடர்ச்சியான பெரிய பல சாளரங்களை லே கொபூசியே வடிவமைத்திருந்தார். இதன் தளம் செவ்வக வடிவானது. வெளிப்புறச் சுவரின் சாளரங்கள் இல்லாத பகுதி வெறுமனே சாந்து பூசி வெண்ணிறம் தீட்டப்பட்டது. லெ கொபூசியேயும் ஜீனரெட்டும் இக் கட்டிடத்தின் உட் புறத்தை அதிகம் அலங்காரம் செய்யாமல் வெறுமையாகவே விட்டிருந்தனர். தளவாடங்கள் பெரும்பால��ம் எளிமையானவையாக உலோகக் குழாய்களினால் ஆனவையாகவும், மின்விளக்குகள் அலங்காரம் இன்றி வெறும் குமிழ்களாகவுமே இருந்தன. உட்புறச் சுவர்களும் வெண்ணிறமாகவே விடப்பட்டன. 1922 ஆம் ஆண்டுக்கும் 1927 ஆம் ஆண்டுக்கும் இடையில் லெ கொபூசியேயும் ஜீன்னரெட்டும் பாரிசுப் பகுதியில் இருந்த பலருக்கு வீடுகளை வடிவமைத்துக் கொடுத்தனர். + +பல ஆண்டுகளாகவே பாரிசின் அதிகாரிகள் நகரின் பெருகி வந்த அழுக்கடைந்த சேரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றும் முடியாதவர்களாக இருந்தனர். இவ்வாறான நகர்ப்புற வீடமைப்புத் தொடர்பான நெருக்கடி நிலையில் பெருமளவு மக்களைக் குடியமர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் லெ கொபூசியே ஆர்வம் கொண்டார். நவீன கட்டிடக்கலை வடிவங்கள் வருமானம் குறைந்த பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அமைப்பு அடிப்படையிலான தீர்வுகளைக் கொடுக்கும் என அவர் நம்பினார். அவருடைய "இம்மெயுபிள்சு வில்லாக்கள்" எனப்படும் திட்டம் இந் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் வசிக்கும் அறைகள், படுக்கையறைகள், அடுக்களைகள் ஆகியவற்றைக் கொண்ட வீட்டு அலகுகள் ஒன்றொன்மீது ஒன்று அடுக்கிய வடிவில் அமைந்த பல பெரிய கட்டிடங்களை உள்ளடக்கியிருந்தது. + +இவ்வாறான அடுக்கு மாடி வீடுகளை வடிவமைப்பதுடன் மட்டும் திருப்தியடையாமல் முழு நகர்களின் வடிவமைப்புக் குறித்தும் லெ கொபூசியே ஆய்வுகளில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டில் "சமகால நகரம்" (Contemporary City) என அழைக்கப்பட்ட, ஒரு மில்லியன் மக்கள் வசிக்கத்தக்க நகரத்துக்கான திட்டம் ஒன்றை இவர் வெளியிட்டார். இதன் முக்கிய பகுதி சிலுவை வடிவில் அமைந்த 60 மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள், உருக்கினாலான சட்டக அமைப்பைக் கொண்டு கண்ணாடி போர்த்தப்பட்ட அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும். இவ் வானளாவிகள் செவ்வக வடிவான பெரிய பூங்கா போன்ற அமைப்பைக் கொண்ட பசுமையான பகுதியில் அமைந்திருந்தன. இவற்றின் நடுவே மிகப் பெரிய போக்குவரத்து மையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பல தளங்களைக் கொண்டதாக அமைந்திருந்த இந்த மையத்தில் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், நெடுஞ்சாலைச் சந்திப்புகள், மேல் தளத்தில் ஒரு வானூர்தி நிலையம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வணிக அடிப்படையில் இயங்கக்கூ��ிய வானூர்திகள் மிகப்பெரிய வானளாவிகளுக்கு இடையில் இருக்கும் இடங்களில் வந்து இறங்க முடியும் என்று அவர் நம்பினார். லெ கொபூசியே நடைபாதைகளை, வண்டிகளுக்கான சாலைகளில் இருந்து வேறுபடுத்தித் தனித்தனியாக அமைத்ததுடன், தானுந்துகளே முக்கிய போக்குவரத்துச் சாதனங்களாக இருக்கும் எனவும் கருதினார். மையப் பகுதியில் உள்ள வானளாவிகளில் இருந்து வெளிப்புறமாகச் செல்லும்போது, சிறிய குறைவான உயரம் கொண்ட வதிவிடக் கட்டிடங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பிரான்சியத் தொழில் முனைவோர், அமெரிக்கத் தொழில் துறை மாதிரிகளைப் பின்பற்றி சமூகத்தை மீளமைப்பதில் முன்னணியில் இருப்பார்கள் என லெ கொபூசியே நம்பினார். நோர்மா எவென்சன் என்பவர் கூறியதைப் போல முன்வைக்கப்பட்ட இந்த நகரத் திட்டம் சிலரைப் பொறுத்தவரை புதிய உலகத்தை உருவாக்குவதற்கான துணிச்சலான நோக்கு ஆனால், வேறுசிலர் இதனைப் பழக்கமான நகரச் சூழலை மறுக்கின்ற, தன்னைத்தானே பெருமை பீற்றிக்கொள்ளும் அளவு கொண்ட ஒரு திட்டமாகப் பார்த்தனர். + +எல்லா சமூக பொருளாதார மட்டங்களிலும் உயர்வான வாழ்க்கைத் தரத்தோடு கூடிய மிகுந்த செயற்றிறன் மிக்க சூழலாக சமூகத்தை மாற்றுவதற்காக நவீன தொழில் துறை நுட்பங்களையும், வழிமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என வாதிடும் ஆய்வுச் சஞ்சிகை ஒன்றிலும் லெ கொபூசியே எழுதிவந்தார். சமூகத்தை வேறு வகைகளில் உலுக்கக்கூடிய புரட்சிகள் உருவாகமல் தவிர்ப்பதற்கு இத்தகைய மாற்றங்கள் அவசியம் என அவர் உறுதியாக வாதிட்டார். "கட்டிடக்கலை அல்லது புரட்சி" என்னும் அவரது கருத்து இவ்வாய்வு இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மூலமே உருவானது. அத்துடன், 1920க்கும் 1923க்கும் இடையில் இச் சஞ்சிகையில் கொபூசியே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான " ஒரு கட்டிடக்கலையை நோக்கி" என்னும் நூலின் மையக் கருத்தும் இதுவே. + +கோட்பாட்டு அடிப்படையிலான நகர்ப்புறத் திட்டங்களில் லெ கொபூசியே தொரர்ந்து ஈடுபட்டார். இன்னொரு தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட "பிளான் வொயிசின்" என்னும் திட்டத்தை 1935 ஆம் ஆண்டில் அவர் காட்சிக்கு வைத்தார். இத்திட்டத்தில், செயினுக்கு வடக்குப் புறம் இருந்த பாரிசின் மையப்பகுதியின் பெரும்பகுதியை இடித்துவிட்டு அதற்குப் பதிலாக "சமகால நகர"த் திட்டத்தில�� அவர் முன்மொழிந்த சிலுவை வடிவிலான 60 மாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்மொழிந்தார். இக் கட்டிடங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டும் சாலை வலையமைப்பையும், பூங்காக்களையொத்த பசுமைப் பகுதிகளுக்கும் நடுவில் வடிவமைக்கப்பட்டிருந்தன. லெ கொபூசியேயின் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த டெயிலரியம், ஃபோர்டியம் ஆகியவை தொடர்பான எண்ணத்துக்கு, ஆதரவானவர்களாக இருந்தபோதும், பிரான்சியத் தொழில்துறையினரும், அரசியலாளர்களும் அத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தனர். எப்படியாயினும், பாரிசு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த நெருக்கடி, அழுக்குப் போன்றவற்றைக் கையாள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களை இத்திட்டம் தோற்றுவித்தது. + +1965 ஆம் ஆண்டு ஆகசுட்டு 27 ஆம் தேதி, 77 வயதான லெ கொபூசியே அவரது மருத்துவர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு பிரான்சிலுள்ள ரோக்கேபுரூன்-கப்-மார்ட்டின் என்னும் இடத்துக்கு அருகில் நடுநிலக்கடல் பகுதியில் நீந்தச் சென்றார். அதுவே அவரது வாழ்வின் இறுதியாக முடிந்தது. இவரது உடல் கடலில் குளித்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர் மாரடைப்பினால் இறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது இறுதிக் கிரியைகள் லூவர் மாளிகை முற்றத்தில் 1965 செப்டெம்பர் முதலாம் தேதியன்று இடம்பெற்றன. அப்போது பிரான்சின் கலாச்சார அமைச்சராக இருந்த, எழுத்தாளரும் சிந்தனையாளருமான அண்ட்ரே மல்ருக்சின் இந் நிகழ்வுகளை வழிநடத்தினார். + +இவரது இறப்பு பண்பாட்டு மற்றும் அரசியல் உலகில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது மிகப்பெரிய கலை எதிரிகளுள் ஒருவரான சல்வடோர் டாலி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இவரது இறப்பையிட்டு வருத்தம் தெரிவித்தனர். அமெரிக்க சனாதிபதி லின்டன் பி. ஜான்சன், லெ கொபூசியேயினது செல்வாக்கு உலகம் தழுவியது என்றும், இவரது வேலைகள் உலக வரலாற்றில் ஒரு சில கலைஞர்களால் மட்டுமே அடைய முடிந்த தரம் கொண்டவையாக இருந்தன என்றும் புகழ்ந்தார். நவீன கட்டிடக்கலையின் மிகப் பெரிய சாதனையாளரை உலகம் இழந்துவிட்டதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. + +லெ கொபூசியே, உலகின் மூன்று கண்டங்களில் 7 நாடுகளில், 17 இடங்களில் தனது புகழ்பெற்ற கட்டிடங்களை நிர்மானித்துள்ளார். அவைகக���ில் சில கட்டிடங்கள், ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு உறுப்பான யுனெஸ்கே நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. + + + + + + +சிக்வின் + +சிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம். + + + + +கோமாளிகள் + +கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற "கோமாளிகள் கும்மாளம்" என்ற வானொலித்தொடர் நாடகமே "கோமாளிகளாக" திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன. + +எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார். + +யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள் + +இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கோமாளிகள் கும்மாளம் என்னும் தொடரை வாரந்தோறும் விரும்பிக்கேட்ட வானொலி நேயரான எம். முகம்மது என்னும் வணிகர், இதனைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார். எஸ். ராமதாசிடம் தன் எண்ணத்தைக் கூற அவரும் ஒத்துக்கொள்ள படம் எடுக்கத்தொடங்கினர். + +நாற்பத்தைந்து நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் 1976 நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட���டது. இலங்கையில் கொழும்பு பிளாசா திரையரங்கு (55 நாட்கள்), கொழும்பு செல்லமகால் திரையரங்கு (76 நாட்கள்), யாழ்ப்பாணம் (76 நாட்கள்), திருகோணமலை (76 நாட்கள்), மட்டக்களப்பு (76 நாட்கள்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. + + + + + +எஸ். கே. மகேஸ்வரன் + +எஸ். கே. மகேஸ்வரன், பேராசிரியர், வைத்திய நிபுணர் ஈழ மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களுள் ஒருவர். + +யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட மகேஸ்வரன் தனது இளைமைக் காலத்தை மலேசியாவிலும், தனது இறுதிக் காலங்களை அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலும் கழித்தார். + +மலேசியாவில் வாழும் காலத்தில் கல்வியோடு, இசையையும் கற்கும் வாய்ப்புப் பெற்றார். பின் தனது பதினேழாவது வயதில் இலங்கை திரும்பி யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துறையில் இணைந்தார். மருத்துவப் பட்டதாரியாய் வெளிவந்த இவர் பின்னர், இலண்டன் சென்று மருத்துவத்துறையில் பின்பட்டம் பெற்றார். + +ஐந்து ஆண்டுகள் யாழ். வைத்தியசாலையில் பணியாற்றிய இவர் பின்னர் எட்டாண்டுகள் நைஜீரியாவில் தொழில் புரிந்தார். அதன் பின்னர் மலேசியப் பல்கலைக்கழகம், சிட்னிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றி ஈழமண்ணுக்குப் பெருமை சேர்த்தார். 1994 முதல் 2000 ஆண்டு வரை கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியராய்ப் பணியாற்றிய இவர் அக்காலத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையினை ஆரம்பிக்க ஆலோசகராகவிருந்து முழுமையாகப் பாடுபட்டார். அதே காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திலும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலைக்கழக மருத்துவத்துறைப் பேராசிரியராகத் தனது வாழ்வின் நிறைவு வரை பணியாற்றினார். + +டாக்டர் மகேஸ்வரன் மருத்துவத்துறையில் பணியாற்றியதோடு அமையாமல் கலைத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இளமை முதல் இசைத்துறையில் இவரும் இவரது சகோதரருமான ஈழத்தின் பிரபல பாடகரான எஸ். கே. பரராஜசிங்கமும் ஈடுபாட்டோடு இயங்கி வந்தனர். இவ்விருவரும் சேர்ந்து பல மேடைக்கச்சேரிகளையும் நிகழ்த்தியுள���ளனர். ஆழமான சங்கீத அறிவு கொண்ட டாக்டர் மகேஸ்வரன் அவர்கள் இலங்கை வானொலியில் பலகாலம் இசை நிகழ்ச்சிகளை வழங்கியும் வந்துள்ளார். இலங்கை கலாசார அமைச்சின் கலாசார நிலையத் தலைவராகவும், இலங்கை வானொலி இசைத்தேர்வுக்குழு உறுப்பினராகவும், அகில இலங்கைக் கம்பன் கழக இசை ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்து இசைத்துறைக்குப் பெரும் பணியாற்றிய பண்பாளர் இவர். + +இவர் தன் நிறைவுக் காலத்தில் அவுஸ்திரேலியாவில் அவர் வாழ்ந்து வந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் இலங்கைக்கு விஜயம் செய்து தான் சார்ந்த துறைகளை இம்மண்ணில் வளர்த்தெடுக்க பெரிதும் முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தம்பியாரான பாடகர் எஸ்.கே. பரராஜசிங்கத்தின் மறைவால் பெரிதும் வருத்தமுற்ற டாக்டர் மகேஸ்வரன் தன் தம்பியாரது இசை முயற்சிகளைக் குறுந்தட்டுகளாக வெளியிட்டார். அத்தோடு தம் சகோதரரின் ஞாபகார்த்தமாக கம்பன் கழக இசை வேள்வியின் ஒருநாள் நிகழ்ச்சியை `அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் அரங்கு' எனும் பெயரிட்டு நடத்தி வந்தார். + +பின்னாளில், தான் நோய் வாய்ப்பட்டதும் தான் பிறந்த மண்ணுக்குப் பணி செய்ய வேண்டும் எனும் பெரு விருப்பில் `டாக்டர் மகேஸ்வரன் குடும்ப அறக் கட்டளை' எனும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி பெருந்தொகைப் பணத்தை அதற்காக்கியதோடு கொழும்பிலிருந்த தனது வீடு முதலியவற்றையும் விற்று அவ்வமைப்புக்காக்கி அவ்வமைப்புக்குத் தனது பிள்ளைகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து இலங்கையில் பல அநாதை மடங்களுக்கும், கலையமைப்புகளுக்கும் ஆதரவு நல்க ஆவன செய்துள்ளார். + + + + +நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல் + + + + + + + + + + + + + +இலங்கை நில அளவைத் திணைக்களம் + +இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையில் முதலாவதாக பிரித்தானியர் ஆரம்பித்த திணைக்களம் ஆகும். இது 2 ஆகஸ்ட் 1800 இல் ஆரம்பிக்கப்பட்டது. தியத்தலாவையில் நிலவளவைப் பயிற்சிக் கல்லூரியும் இத்திணைக்களத்தின் ஆதரவுடன் இயங்கிவருகின்றது. + +இலங்கை ஆள்கூறு + + + + + +சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் + +சைகுத் தம்பி ஞானியார் சாகிப் (1829 - 1888) சூபிக் கலைஞர்களில் தலை சிறந்த ஒருவர். + +சைகுத் தம்பி ஞானியார் சாகிப் 1829 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சைகு முகியித்தீன் மலுக்கு முதலியார் என்பதாம். இவரின் தந்தை பெயர் சைகு மன்சூர் சாகிப் என்னும் சைகு உதுமான். "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு", "மெய்ஞ்ஞான விளக்கம்" போன்ற பல அரிய கருவூலங்களை சைகுத் தம்பி ஞானியார் சாகிப் அவர்கள் தமிழுக்குத் தந்துள்ளார். + +சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்களைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து, கொட்டாம்பட்டி கருப்பையா பாவலர் "திருக்கோட்டாற்றுக் கலம்பகம்" என்னும் நூலை இயற்றியுள்ளார். இவர் "மெய்ஞ்ஞான விளக்கம்" நூலுக்குத் தந்துள்ள வாயுரையின் வாயிலாகத்தான் மேற்கூறிய தகவல்களை அறிய முடிகிறது. + +"திருக்கோட் டாற்றுறை திருவுடைச் செல்வர் +திருக்கோட் டாற்றினைச் செம்மையி னுணர்ந்தோர் +வளர்புகழ் சைகுது மான்லப் பையாலீம் +உளமகிழ் குமாரர் ஒலிசைகு மன்னான் +செல்வப் புதல்வர் சைகு அபூ பக்கர் +பிறங்குஞா னியரொடு பிறந்த விளைஞர் +மலிபுகழ் வரத்தார் மன்னுதா வரத்தார் +ஒலிகொடைக் கரத்தார் யோகசா கரத்தார் +சைகுது மானெனுந் திருப்பெய ருடைய +மெய்குறி யிளைய மெய்ஞ்ஞா னியர்தம் +புத்ரசி காமணிப் பொற்பில் வருமணி +எத்தரத் தவரு மேந்து நவமணி +மதிமணி துதிமணி வளமணி யொளிமணி +மதிமுக சைகு மன்சூர் சாகிப் +தருசே யாகத் தறையுளோர் தவமே +ஒருசே யாக வுருவெடுத் தாங்கு" + +"இன்னுயி ரதனை ஹிஜ்றிஆ யிரத்து +முன்னுற் றாறின் முஹற மாதத் +திருபத் துமூன்றி னெய்திய வாதி +வாரத் திராவில் வல்லவன் சமுகஞ் +சேரத் துறந்தோர் சைகுத் தம்பி +எனுமபி தானத் தினர்மெய்ஞ் ஞானியார் +மனமொரு நிலையின் வயக்கிய தீரர் +அன்பொடு கற்றோ ரகவிரு ளகல +இன்பமெய்ஞ் ஞான விளக்க மெனவே +வகுத்தரு வியவிம் மாண்புறு நூலின் +மகத்துவ முற்றும் வழுத்தற் பற்றோ." + +மெய்ஞ்ஞான விளக்கம் - சிறப்பு: + +"அறம்பொரு ளின்ப மார்த்துயர் வீட்டி +னுறவரு ணெறிதனை யுதவ மாமறை +அவரவர் பக்குவ மறிந்தரு ளுட்டித் +தவமதிற் புகுத்தத் தக்கது வாயிற் +பெறவரும் ஞானப் பெரும்பே +றுறுவீர் புலவீ ருணருமின் னீரே. + +"ஞானநடனம்" என்னும் நூலில் அந்தாதித் தொடைகளாக, ஞானம் என்னும் பரந்த பொருளில் பல்வேறுவகைப் பிரிவுகள் உள்ளனவென்றும், அவற்றை முறைப்படிகூற முற்படுவதாயும் அதற்கு "இறைவா நீ அருள் புரிவாய்" எனவும் இறையை வேண்டுகிறார். + +"அருள���ிய ஞானத் தருமுறையைப் பூமேல் +பொருளறியச் சொல்லப் புகுவாம் - இருளறவே +எவ்வகையை நீயருள்வா யாதி. + +சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்கள் ஞானாசிரியன் வேண்டுமென வலியுறுத்துகிறார். + +"அறிந்தவ ரிடத்திற் சென்றங்கருகிருந் தநேக நாளாய் +அறிந்தவ ரிடத்திற் சென்றங் கவரமு தருந்திக் கொண்டு +அறிந்தவ ரிடத்திற் சென்றங் கவர்பதம் பணிந்து கொண்டால் +அறிந்தவ ரவனுக் கென்றே யருள்முறைசொல்லு வாரே." + +"இந்த வணக்க மறிவதற்கிங் +கிசையுமூன் றுண்ட தறியவேண்டும் +முந்தஹ றுபொன்றா யானதுக்குள் +முடிவைய றிந்துதான் முடுகவேண்டும் +அந்தப் படிதரும் வணக்கத்திலே +யருளாய்க் காண்பது மவர்சூறத்தாம் +சொந்தமா கவேதெரி சித்தக்கால் +தோற்றும துக்குளே தன்சூறத்தே." + +(அல்லாவைத் தவிற யாருக்கும் தலைவணங்கோம் என்று வாதிடுபவர்களுடன் வாதம் செய்ய எனக்குத் தகுதியில்லை!) ஒவ்வொரு முஸ்லிமும் கலிமாவை நாடுதல் வேண்டும். அதனை உச்சரிக்க வேண்டும். உள்ளத்தால் கலிமாவைச் சிந்தித்து, உள்ளத்து உணர்வுகளையுணர்ந்து, நினைவில் வைக்கவேண்டும். அதற்கிணங்க நடத்தல் வேண்டும். அப்படிபட்டோருக்கே, கியாமத் என்னும் இறுதித் தீர்ப்பு நாளில் நபிகள் நாயகத்தின் மன்றாட்டமெனும் அறபில் சபாஅத் (பாரிய சிபாரிசு) கிட்டும். + +"இந்தவகை மூன்றறிய வேதநாயன் சொன்னதை +முந்தவள்ள லானவெங்கள் முஸ்தபா நபிசொன்னார் +அந்தவகை யானதை யறிவதுவும் பறுலுமாம் +இந்தவகை பீருட னிருந்தறிய வேண்டுமே." + +சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்கள் படைப்புக்களிலிருந்து சில நித்திலங்கள்: + +"ஈன்றெடுத்த தாய்தந்தைக்கு மென்கிளையோர் யாவருக்கும் +ஆண்டு முந்தி நீதாவென் னாண்டவனே யென்கோவே." +"எங்குந்திரிந் தலைவோர்க்கின மிலையேயின மிலையே +பங்கப்படு மவரேமனப் பங்கப்படு மவரே +துங்கச் சுடர் கதிருந்துணிந் தறிவோர்க்கு நீதுணையே +தங்கப்பதி வழியேபரந் தரிப்போர்க்கு நீதயவே." + +"எல்லா வுயிர்க்குளு நிறைந்தது யெப்படி மயிலே - அது +எள்ளுக்குள் ளெண்ணை போலாகி மகிழ்வாங் குயிலே." +"செல்வ விஷெடத்தைச் சீராகச் சொன்ந்தார்மயிலே - அது +சைகு முகியித்தீன் மலுக்கு குயிலே." + +"சைகு முகியித்தின் மலுக்கு முதலி +செல்வ ரொலியின் துணைவ ரானோர் +யோகம் பெறவவர் பாதப்புகழ் நித்தம் +ஓங்கக் கும்மி யடிப்பமடி - வினை +நீங்கக் கும்மி யடிப்பமடி." + +"காயாய்க் கனியாய்ப் பூ���ானாய் தகவவ் வடிவம் நீயானாய் +தாயாய் வந்தென் றனக்கு அமுதந் தருவதினி நீயெக்காலம்." +'கன்னி யழகி ககன வடிவா னவளென் +தன்னில் பொருந்தித் தான்மகிழ்வ தெந்நாளோ." + +"பெற்றார்க்குப் பித்தமுண்டும் பிறந்தார்க்குக் குற்றமில்லை +உற்றவுடல் மேனிகண்டு முகந்திருப்ப தெந்நாளோ." + +இறைவனே அடைக்கலமென்று: + +"மாரிகால மழைபெய்யிநீ தன்மையாய்ச் +சீருமென்னுட் சிறப்புமே நன்மையாய் +ஊரைவிட்டு முலகினில் ஆனேன் +ஆருமில்லை அடைக்கல நாதனே." + +"ஆறுநூறு மாறாயிரத் தறுபத்தாறு +ஆதியான கலாமில் மறைந்தவா +பேருமுரும் பிறப்பு மில்லாதவா +பின்னு முன்னு மடைக்கல மானனே." + +இங்கு கலாம் என்னும் சொல் பேரறிவைக் குறித்து அல்குரானைச் சுட்டி நிற்கிறது. +சைகுத் தம்பி ஞானியார் சாஹிப் அவர்களின் படைப்புக்கள் முழுமையாக இனங்காட்டப்படாதது தமிழ் உலகிற்கு பேரிழப்பே. + + + + + +மார்க்கண்டேயர் + +மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். + +பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார். + + + + + +கேதாரகௌரி விரதம் + +கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு. +கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. + +முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்��ியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று "அங்கனமே ஆகுக" என்று அருள் புரிந்தார். + +ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ஷ தசமியில் இவ்விரத்ததை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும். + +ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமா��ை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம். + +சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார். + +தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். + + + + +கரடியனாறு சிவன் கோயில் + +கரடியானாறு சிவன் கோயில் இலங்கையின் மட்டக்களப்பு கித்துள்வெவ குடியேற்றத்திட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் பூசைகள் நடைபெறுகின்றது. புரட்டாதிப் பூரணையையொட்டி ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவதுடன் நாயன்மார்கள் குருபூசை நாட்களும் சிறப்பாகக் கொண்டாப் படுகின்றது. + + + + + +காலி ஸ்ரீ மீனாஷி சுந்தரேசர் + +காலி சிவன் கோயில் என்றழைக்கப்படும் இவ்வாலயம் 1850 இருந்து சிறுவேல் ஒன்றை வழிபடு தெய்வமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தவர் கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு சுமார் 1873 இல் சிற்சில திருப்பணிகள் இடம்பெற்று ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயமாக உருப்பெற்றது. 1886 மேலும் பல திருப்பணிகள் நிறைவேறி மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த ஆண்டில்தான் தற்போதுள்ள இலிங்க மூர்த்ததை அவிமுக்த ஷேத்திரமாகிய காசியினுன்றும் கொண்டுவந்து ஸ்தாபித்தாகக் கூறுகின்றார்கள். தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் இதுதான். + +1930 முதல் ஆலயத்தை பரிபாலிக்க தர்மார்த்தா சபை நிறுவப்பட்டு ஆலயபரிபாலானம் நடைபெற்றது. 1948 இலிருந்து 1965 க்குள் ஆலய விமானங்கள் பழுதுபார்க்கபபட்டு மேலும் திருப்பணிகள் நிறைவேறி 1955ஆம் ஆண்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. + + + + + +எபன் மாக்லன் + +எபன் மாக்லன் (Eben Moglen) ஒரு வழக்குரைஞர். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர். கட்டற்ற மென்பொருளுக்கான சட்ட மையத்தின் தலைமைப் பொறுப்பாளர். கொலம்பியா சட்டக் கல்லூரியின் பேராசிரியர். + + +