diff --git "a/train/AA_wiki_40.txt" "b/train/AA_wiki_40.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_40.txt" @@ -0,0 +1,3606 @@ + +பி.எச்.பி + +பி.எச்.பி ("PHP: Hypertext Preprocessor") என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையக படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை (Dynamic) இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை மீப்பாடக் குறிமொழியிலான (எச்.டி.எம்.எல் - வடிவமைப்பு குறியீட்டு மொழி - HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். பி.எச்.பி இணைய பக்கங்கள் வலை சேவையகத்தால் (Web Server) செயலி தொகுதியின் (Processor Module) உதவியுடன் மொழிப்பெயர்க்கப் படுகின்றது. மேலும் இது கட்டளை நிரல் இடைமுகப்பை தன்னகத்தே கொண்டு தனித்தியங்கும் வரைகலை பயன்பாடுகளில் பயன்படுகின்றது. பி.எச்.பி பெரும்பான்மையான வலை சேவையகங்கள் மற்றும் இயங்கு தளங்களில் இலவசமாக நிறுவி பயன்படுத்த வல்லது. இது மட்டுமின்றி, பி.எச்.பி மைக்ரோசாப்ட் ஆக்டிவ் சர்வர் பேஜஸ் சேவையக படிவ நிரலாக்க மொழி மற்றும் இதையொத்த நிரலாக்க மொழிகளுக்கு போட்டியாக விளங்குகிறது. பி.எச்.பி 20 மில்லியன்கள் இணைய தளங்களிலும், 1 மில்லியன் வலை சேவையகங்களிலும் நிறுவி பயன்படுத்தப் படுகின்றது + +பி.எச்.பியை முதன் முதலில் ராஸ்மஸ் லெடார்ஃ 1995 ஆம் ஆண்டு உருவாக்கினார்.பிறகு பி.எச்.பியின் முக்கிய செயல்பாடுகள் The PHP Group ஆல் கட்டமைக்கப்பட்டது. + +பி.எச்.பி முதலில் "Personal Home Page" என்றழைக்கப்பட்டது. இப்போது "PHP: Hypertext Preprocessor" என்று சுழல்நிலை சுருக்கமாக (recursive acronym) அழைக்கப்படுகின்றது.. + +பி.எச்.பி திறந்த மூல நிரல் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும். + +இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் உலாவியும் இணணய வழங்கியும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்க முடியும். + +பிஎச்பி மடிக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை. + +பரவலாக பிஎச்பிக்கு மையெசுக்யூயெல் தரவுதளமாகப் பயன்படுத்தப்படுகிறது. + +சூன் 1, 2007 அன்று பி.எச்.பி 5.2.3 வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதில் மையெசுக்யூயெல் நிரகம் இணைக்கப்படவில்லை. இதை தனியாக நிறுவிக் கொள்ளவேண்டும். + +பி.எச்.பியை தானியங்கி முறையிலும், சுயமாகவும் (=manual) நிறுவ முடியும். விண்டோஸில் நிறுவுவதற்கென தனி exe ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். + +Eclipse, Dreamweaver போன்று பல தொகுப்பிகள் பி.எச்.பி யை ஏதுவாக்குகின்றன. DzSoft PHP தொகுப்பி நல்ல வணிக தொகுப்பி ஆகும். + +பல இடங்களில் பி.எச்.பி பின் தள செயற்பாடுகளுக்கும், எச்.டி.எம்.எல், யாவாசிகிரிட்டு, சி.எசு.எசு முன் தள வடிவமைப்பு/செயறபாட்டுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. php கோப்பில் பின்வருமாறு எச்.டி.எம்.எல் ச் சேக்கலாம். +சில தொகுப்புகள் தமிழ் சரங்களை சரிவர காட்டா. ஒருங்குறி ஏதுவாக்கப்பட்ட தொகுப்பிகளே பி.எச்.பியை சரிவரக் காட்டும். xampp நிறுவி எளிய தமிழில் பி.எச்.பி என்ற செய்முறையில் சென்ன மாதிரி செய்தால், தமிழை பி.எச்.பியில் பயன்படுத்தலாம். + +பி.எச்.பி மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரலாக பயன்படுகின்றன. + +Syntax மட்டுமே: + +பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + + +படிவ நிரலாக்க மொழி + +படிவ நிரலாக்க மொழிகள் ("Scripting languages") அல்லது படிவ மொழிகள் என்பன நிரலாக்க மொழிகளுள் ஒரு பிரிவாகும். இவ்வகை மொழிகளின் நிரற்றொடர் தொகுப்பு படிவங்கள் ("Scripts") என்றழைக்கப்படும். இப்படிவங்கள் வழக்கமாக மெலிதான மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பின்னர் இயக்கப்படும்.படிவங்கள் நிரல்களிலிருந்து (Programs) வேறுபட்டவை. நிரல்களை இயக்க இருநிலை மொழியில் உள்ள இயக்கக்கூடிய கோப்புக்களாக நிரந்தரமாக மாற்றினால்தான் இயலும்.படிவங்கள் அவ்வாறில்லாமல் எழுதப்பட்ட வடிவிலேயே ஒரு-நிரற்றொடர்-ஒரு-நேரத்தில் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இயக்கப்படும். + +பொதுவாக நாம் ஒரு நிரலை நிரலாக்க மொழியில் எழுதி அதை ""Compile"" செய்த பின்னரே பயன்படுத்த முடியும். அதாவது அதை ""கம்பைளர்"" மூலம் கணினி இயந்திர மொழிக்கு மாற்றிய பின்னரே பயன்படுத்த முடியும். அனால் படிவங்களை நேரடியாக நிரலின் மூலம் ஆரம்பிக்க (Run) முடியும். கணினி நிரல்கள் படிவ நிரலாக்க மொழியை வாசித்து, அதை அறிந்து செயற்படுத்தும். உதாரணமாக சி++(C Plus Plus) மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இனைய உலாவி (Web Browser), இனைய வடிவமைப்பாளர்களால் எழுதப்பட்ட "Javascript" படிவத்தில் உள்ள கட்டளைகளை ஏற்று செயற்படும். + + +@echo off +title Wiki Tamil Script example + +cls +echo Hello! Tamil Wiki User, +set /p name=Please enter your name here : +goto run + +clse +cho Hello %name%, Welcome to wikipedia! The free encyclopedia. +pause +cls +echo This is very easy %name%, Try your own soon! +pause +பச் என்பது மிகவும் இலகுவான ஒரு "படிவ நிரலாக்க மொழியாகும்", விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் இயங்கக்கூடியது + +பொதுவாக நிரலாக்க மொழிகளை விட பாடிவ நிரலாக்க மொழிகள் இலகுவாக வாசித்தறியக்கூடியதாக இருக்கும். + + + + +வலசை போதல் + +வலசை போதல் ("Animal migration") என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன. + +இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன. பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்��த் துவங்குகின்றன. +இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது, மேலும் அவை புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்கரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை. +இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். + +பல வகையான தரைப் புலம்பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்கக் காலத்தை மிதவெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்க்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை (tropics) அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் (temperate zones) பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும். சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள், ஆப்பிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள்(11000கி.மீ) அல்லது அதற்கு அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவைகள் தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும், சரியான இடைவெளியுடனும், ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்கின்றன. +வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும்போது பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலப்பெயர்வின்போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற ��ாதக அம்சங்களை ஈடுசெய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும். + +புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்புப் படிதல் போன்ற உடற்கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூட்டிலடைத்து வளர்க்கப்படும் பறவைகளும், பகல்நேரம் சுருங்குதல், வெப்பநிலை குறைதல் போன்ற எவ்வித சூழல் சார்ந்த குறிகள் எதுவும் இல்லாமலேயே, பறவைகளுக்கிடையில் புலப்பெயர்வு அமைதியின்மையை தோற்றுவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, பறவைகளில் புலப்பெயர்வைக் கட்டுப்படுத்துவதில் உள்ளுணர்வு சார்ந்த நிரலாக்கம் (endogenic programming) செயற்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும்போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள் புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது. அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது. + +பாலைவன வெட்டுக்கிளிப் பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000 டன்கள் தாவரங்களை உண்ணுகின்றன. ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும். + +கடலில் வாழக்கூடிய மீன்கள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஆகியவையும் வலசை போகின்றன. சால்மன் மீன்கள் என்ற மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல்கள் (2400கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து விடுகின்றன. + +ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் வலசை போகின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000கி.மீ) பயணிக்கின்றன. + +வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000கி.மீ) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசை போதலாகும். + +கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடப்பெயர்வைக் கண்டறிந்தார். கி.மு. 384-322-இல் எழுதிய 'விலங்குகளின் வரலாறு' என்ற நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முனைவர் சலீம் அலி (1896-1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. + +பறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது. ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தின் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும்போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார். + +மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. + + + + + + +காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில் + +அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஹரித்துவாரத்திலிருந்து கேதாரிநாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் வழிபட்ட ஸ்தலம் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடல் நலம். திருகாளஹஸ்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே சம்பந்தர் பாடியது . மனோன்மணி உடனுறை அருள்மன்னேஸ்வரர். + + + + + +கட்டிட உயிரியல் + +கட்டிட உயிரியல் (Building biology) என்பது மனிதர்கள் மீது கட்டிடச் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். ஜெர்மனியில் தோற்றம் பெற்ற இத்துறை, தீங்கு விளைவிக்கும் வேதியியற் பொருட்கள், நச்சுப் பொருட்கள், வளியில் மிதக்கும் பல்வேறு துணிக்கைகள், மின்காந்தப் புலங்கள் மற்றும் இவைபோன்ற கூறுகளினால் மனிதருக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. + + + + +மோசிகீரனார் + +மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள "மோசி" என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள "மோசூர்" என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் "கீரன்" குடியைச் சேர்ந்தவராயிருத்தல் கூடும் என்ற கருத்தும் உள்ளது. சேர மன்னனான தகடூர் எறிந்த இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடியதாக அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொரு பாடலும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், புறநானூற்றில் நான்கு பாடல்களும் உள்ளன. +இந்தப் பொறையனின் முரசுக்கு நீராட்டு விழா. விழாவுக்குப் பின் அது மயில் பீலியும், பொன்னால் செய்யப்பட்ட உழிஞைப் பூவும் சூட்டப்பெற்று மீளும். முரசு நீராட்டு விழாவுக்குச் சென்றுவிட்டதால் முரசு வைத்திருந்த கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் ஊற்றும்போது அதில் எழும்பும் நுரை போல அந்தக் கட்டிலின்மேல் மெத்தை போடப்பட்டிருந்தது. மோசிகீரனார் இந்தப் பொறையனைக் காண வந்தார். நடந்துவந்த களைப்பு. அந்த முரசுக்கட்டிலின் மேல் படுத்து உறங்கிவிட்டார். விழா முடிந்து முரசு திரும்பி வந்தது. கட்டிலின் மேல் அரசன் புலவரைக் கண்டான். தனக்கு மகளிர் வீசும் கவரியை எடுத்துப் புலவருக்கு வீசிக்கொண்டிருந்தான். புலவர் எழுந்து பார்த்தபோது துடித்துப்போனார். + +தவறு செய்த என்னைத் உன் வாளால் இரு துண்டாக்கிப் போடாமல் இவ்வாறு செய்கிறாயே! இந்த உலகில் புகழ் உடையவருக்குத்தான் மறுமையில் உயர்நிலை உலகம் கிட்டும் என்று முன்னோர் கூறியதைப் ��ின்பற்றுகிறாயோ! என்று கூறி வியந்து பாடுகிறார். + +கடல் தாண்டிச் சென்றவர் அங்குத் தெரிந்தவர் இருந்தால் மட்டுமே குடிக்க நீர் கேட்டுத் தன் தாகத்தைத் தணித்துக்கொள்வர். நான் வாழுமிடத்தில் அரசர் இருந்தாலும் அவரிடம் நான் சென்று எதுவும் கேட்கமாட்டேன். நீ எனக்குத் தெரிந்தவன் ஆகையால் உன்னிடம் வந்து பரிசு கேட்கிறேன். நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உன் கொடிப்படையின் துணி போல அருவி பொங்கி வழியும் உன் கொண்கான மலையைப் பாடுவேன். அது எனக்கு எளிது என்கிறார் புலவர். + +பாணன் ஒருவன் தன் சீறியாழைக் கக்கத்தில் தழுவிக்கொண்டு என்னை உணர்ந்து என் துன்பத்தைப் போக்குபவர் யார் என்று இந்தப் புலவரைக் கேட்டான். + +நெருஞ்சிப் பூ எப்போதும் சூரியனை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கும். (தாமரைப் பூவைப் போல) அதுபோலக் கொண்கானங் கிழான் புலவரின் வறுமையைப் போக்கி அவர்களின் கொள்கலனை நிரப்புவதற்காக எதிர்பார்த்துகொண்டே இருக்கிறான் என்கிறார் புலவர். + +பிற அரசர்களின் குன்றம் ஒரே ஒரு பெருமையை மட்டுந்தான் கொண்டிருக்கும். கொண்கானங் கிழானின் குன்றம் இரண்டு பெருமைகளைக் கொண்டது. ஒன்று அங்குச் சென்ற இரவலர் தன் வறுமை நீங்கி அங்கேயே தங்கிவிடுவர். மற்றொன்று பிற அரசர்களின் திறைப்பொருள் அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கும். + +உண்மையை விளம்புவது பொருண்மொழி. +நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, +மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், +அதனால், யான் உயிர் என்பது அறிகை +வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. +ஒருவரது உடலுக்கு உயிரைத் தருவது நெல்லும் நீருமாக இருக்கலாம். ஆனால் உலகில் மலரும் மக்களுக்கு மன்னன்தான் உயிர். வேலை வைத்துக்கொண்டு போரில் ஈடுபடும் மன்னன் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்வது அவனது கடமையாகும். + + +பகைவர் தாக்கியபோது, படையினர் தாக்குப்பிடிக்க முடியாமல் கலங்கியபோது, மன்னன் தான் கோட்டைக்குள் இருப்பதை விரும்பாமல் தானே போர்களத்துக்கு வந்து பகைவரைத் தடுத்து நிறுத்தினான். இதனால் இவனை மக்கள் 'கான்அமர் நன்னன்' என்று போற்றினர். + +நன்னனைப் போலத் தலைவன் உனக்குப் புணையாக இருப்பான். அவனை நம்பி உன்னை அவனுக்குத் தா என்று தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துகிறாள். + +அதலைக் கோமான் என்பவன் அதலைக் குன்றத்து அரசன். + +அதலைக் குன்றத்து ஆழமான சுனையில் பூத்த குவளை போன்ற முகத்தில் குளவிப் பூவின் மணம் கமழும் உன் நெற்றி 'தவ்' என்னும்படி உன்னை அவர் மறக்கமாட்டார் - என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள். + +ஆய் அரசன் ஆட்சிக்கு உட்பட்டது பொதியமலை. + +பொதியமலையில் பூத்த வேங்கைப் பூ மணமும், காந்தள் பூ மணமும் தலைவி மேனியில் கமழ்கிறதாம். அவள் அங்குள்ள சுனையில் பூத்த ஆம்பல் மலரைக் காட்டிலும் குளுமையானவளாம். + +அவளைத் தழுவியவன் சற்றே கையை எடுத்துவிட்டு மீண்டும் தழுவியபோது அவள் மேனி வியர்த்துக் கிடந்ததாம். வியர்வைக்குக் காரணம் 'ஏன் கையை எடுத்தாய்' என்று அவள் ஊடியதுதானாம். + +தன் சென்னியை(தலையை)த் தலைவியின் காலில் வைப்பேன். அவள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்கிறான் தலைவன். + +அவள் ஏற்காவிட்டால், குதிரை என்று எண்ணிக்கொண்டு மடல் குதிரை மேல் வருவேன் என்றும் கூறுகிறான். + +இவ்வாறு தலைவன் சொல்வதைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். + + + + +மதிப்பெண் + +பொதுவாகக் கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக மதிப்பெண் வழங்கும் முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறை வில்லியம் ஃபாரிஷ் (William Farish) என்பவரால் உருவாக்கப்பட்டு, 1792 ஆம் ஆண்டில் முதன் முதலாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. + +மதிப்பெண்கள் வழங்குவதென்பது ஒரு தனியான செயற்பாடு அல்ல. இது முழுமையான ஒரு முறைமையின் ஒரு பகுதியாகும். இம்முறைமையானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. + + +மதிப்பெண் முறையானது கற்றலுக்கான ஒரு கருவியாகச் செயற்படக்கூடியது. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள், இதனைக் கற்றலுக்கான வழிமுறையின் ஒரு அம்சமாகக் கொள்ளாது, கற்றலுக்கான நோக்கமே மதிப்பெண் பெறுவதுதான் என்ற நிலைக்கு வந்துவிடுவதுண்டு. + + + + +மெட்ராஸ் டாக்கீஸ் + +மெட்ராஸ் டாக்கீஸ் என்பது இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது உடன்பிறந்த ஜி. ஸ்ரீநிவாசன் ஆகியோரால் 1995 ம் ஆண்டில் தொடங்கப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. + + + + + + +நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் + +நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம். + +பொதுவாகச் சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும் இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாகக் கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. + +மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் +செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி இளமையிலேயே பகைவரைப் பொருது வென்ற பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்றவனே என எடுத்துக்காட்டுவார் முனைவர் வ. குருநாதன். இவர் கூற்றின் படி ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இளமையிலேயே இறந்ததும், அவனது மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறினாள். இந்தத் தலையாலங்கானத்து செருவென்றவனைக் குறிக்கும் பாடல்களும் இவன் இளமையிலேயே அரியணை ஏறியதாகச் சுட்டுகின்றன. அதன்படி இவன் பெற்றோரும் 30 வயதுக்குள்ளேயே மறைந்திருக்க வேண்டும். அதனால் இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்று கூறுகிறார். + +நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்ப��ு வரலாறு இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது. + + + + + + + + + + + + + +பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும் ,மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன. மேலும் முல்லைப்பாட்டு இவனின் மேல் பாடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அந்நூலில் தலைவன் பெயர் குறிக்கப்படவில்லை. + +இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது. அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான். +இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவது வஞ்சினம். + +நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால், +-இவ்வாறு இவன் கூறுவதில் இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன. + +இவனை + +ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். + + + + + + +உருபன் + +உருபனியலில், உருபன் என்பது பொருள் குறித்து நிற்கும் மிகச் சிறிய மொழியியல் அலகு ஆகும். ஒவ்வொரு சொல்லும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களால் ஆனது. ஒரு சொல்லின் பொருளை அறிய உருபன்களை பிரித்து அவற்றின் பொருள்களை அறிதல் உதவும். +பேச்சு மொழியில் உருபன்கள், மொழியியல் அடிப்படையில் வேறுபடுத்தப்படக்கூடிய ஒலியின் மிகச் சிறிய அலகான ஒலியன்களால் ஆனவை. உருபன், சொல் ஆகியவற்றுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருந்தபோதும், இவ்விரு கருத்துருக்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பல ஒலியன்கள், தனிச் சொல்லாக நின்று பொருள்தரமாட்டா. உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக: + +இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் "வாழ்" என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. ஆனால், "கிறு" என்னும் உருபனோ அல்லது இச்சொல்லில் வரும் பொருளில் "ஆன்" என்னும் உருபனோ தனித்துப் பொருள் குறிக்கும் ஆயினும் தனிச் சொல்லாவதில்லை. "கிறு" என்பது தனிச் சொல்லாகாவிட்டாலும் அது நிகழ் காலப் பொருள் குறித்து நிற்பதனால் அது ஒரு "உருபன்" எனப்படுகிறது. இவ்வாறே "ஆன்" என்பது ஆண்பால் குறித்து நிற்பதால் அதுவும் "உருபன்" ஆகிறது. இவ்வாறு தனித்தே சொல்லாகக்கூடிய உருபன்கள் "கட்டற்ற" (free) உருபன்கள் எனவும், அவ்வாறில்லாது இன்னொரு உருபனுடன் சேரும்போதே சொல் ஆகக்கூடிய உருபன்கள் "கட்டுற்ற" (bound) உருபன்கள் எனவும் வழங்கப்படுகின்றன. + + + + +நட்சத்திரம் + +நட்சத்திரம் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. + + + + + +வரலாற்று மொழியியல் + +வரலாற்று மொழியியல் என்பது, மொழிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வாகும். இது நான்கு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை: + + +தற்கால வரலாற்று மொழியியல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், மிகப் பழங்காலத்திலிருந்தே, பண்டைய நூல்களையும் ஆவணங்களையும் ஆயும் துறையான மொழிநூலில் (philology) இருந்து உருவம் பெறத் தொடங்கியது. + +முதலில், வரலாற்று மொழியியல், உள் மீளுருவாக்கம், ஒப்பீட்டு முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, மொழிக் குடும்பங்களை உருவாக்குவதிலும், முன்-வரலாற்று மொழிகளை மீளுருவாக்கம் செய்வதிலும், கவனம் செலுத்தியது. ஆய்வுகள் பெரும்பாலும் பரவலாக அறியப்பட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகள் பற்றியே அமைந்திருந்தன. இம் மொழிகளில் பல நீண்ட எழுதப்பட்ட வரலாறுகளைக் கொண்ட மொழிகளாகும். அதன் பின்னர், குறிப்பிடத்தக்க அளவில், ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகள் உலகின் பல்வேறு மொழிகள் தொடர்பிலும் நடத்தப்பட்டுள்ளன. தற்காலத்தில் ஒப்பீட்டு மொழியியல், பரந்த வரலாற்று மொழியியலின் ஒரு பகுதியாகவே உள்ளது. + + + + +பேச்சுச் சமுதாயம் + +சமூகமொழியியலில், பேச்சுச் சமுதாயம் என்பது, தங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தனித்துவமான முறையில் மொழியொன���றைப் பேசும் தனியான மக்கள் குழு ஒன்றைக் குறிக்கும். + +பேச்சுச் சமுதாயங்கள், தொழில்துறை ஒன்றுக்குச் சிறப்பான சொற்களைக் கலந்து பேசுகின்ற அத் தொழில்துறையைச் சேர்ந்தவர்களாகவோ, கல்லூரி மாணவர்களைப் போன்ற தனியானதொரு சமூகக் குழுவாகவோ, குடும்பங்கள், நண்பர்கள் குழாம் போன்ற இறுக்கமான தொடர்புகளையுடைய குழுக்களாகவோ இருக்கலாம். அத்துடன், பல இணையவழிக் குழுக்களும் கூட பேச்சுச் சமுதாயங்களாக இருக்கின்றன. பேச்சுச் சமுதாய உறுப்பினர்கள், தங்கள் குழுக்களின் சிறப்புத் தேவைகளுக்காகக் குறுமொழி (slang) மற்றும் தொழில்சார் மொழி (jargon) வழக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். + +பேச்சுச் சமுதாயம் என்பதை எவ்வாறு துல்லியமாக வரையறுப்பது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும், இவ் வரைவிலக்கணங்கள், பின்வரும் அம்சங்களை வேறுபட்ட அளவில் முன்னிலைப்படுத்துபவையாக அமைகின்றன. + + +எனினும், இவற்றில் ஒன்றுக்குச் சார்பான மற்றதின் முக்கியத்துவம் மற்றும் மேலே தரப்பட்டுள்ளவற்றின் துல்லியமான வரைவிலக்கணம் என்பன தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர், பேச்சுச் சமுதாயம் ஒரு உண்மையான சமுதாயமாக இருக்கவேண்டும் என வாதிடுகின்றனர். அதாவது அவர்கள், குறிப்பிட்ட நகரில் வாழ்பவர்கள் அல்லது அயலவர்கள் போல ஒரேயிடத்தில் வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்பது அவர்கள் கருத்து. ஆனால் அண்மைக்காலச் சிந்தனைகளின்படி, ஒவ்வொருவரும், அவர்களுடைய வாழிடம், தொழில், பால், வகுப்பு, சமயம், மற்றும் இன்னோரன்ன அம்சங்கள் தொடர்பான பல்வேறுபட்ட சமுதாயக் குழுக்களில் ஒரே நேரத்தில் உறுப்பினராக உள்ளார்கள். அதனால் அவர்கள் அந்தந்தக் குழுக்கள் தொடர்பான பேச்சுச் சமுதாயத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். + +இதுபோலவே, பொது மொழித் தொடர்பு என்பது தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் பொதுவான தாய்மொழியோ அல்லது ஒரே மொழியின் வட்டார வழக்கு மொழிகளைப் பேசுபவர்களாக இருப்பது அவசியம் என்கின்றனர். வேறு சிலரோ, குறிப்பிட்ட மொழியில் பேசுவதற்கும், தொடர்பாடுவதற்கும் முடிந்தால் அதுவே போதுமானது என்று கருதுகிறார்கள். + + + + +சமூக மொழியியல் + +சமூக மொழியியல் என்பது, பண்பாட்டு நெறிமுறை, எதிர்பார்ப்புக்கள், சூழல் என்பவை அடங்கிய சமூகத்தின் எல்லா அம்சங்களும், மொழி பயன்படுத்தப்படும் முறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். + +இனம், சமயம், தகுதி, பால், கல்வி நிலை போன்ற சமூகக் காரணிகளால் வேறுபடுத்தப்படுகின்ற குழுக்களிடையே எவ்வாறு மொழி வேறுபடுகின்றது, எவ்வாறு இத்தகைய வேறுபாடுகளின் தோற்றமும், கடைப்பிடிப்பும், தனிமனிதர்களை இவ்வாறான சமூக வகுப்புக்கள் அல்லது சமூக பொருளாதார வகுப்புக்களுள் வகைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றன போன்ற விடயங்களும் சமூக மொழியியலின் கீழ் ஆய்வு செய்யப்படுகின்றன. மொழியின் பயன்பாடு இடத்துக்கிடம் வேறுபடுவதுபோல், சமூகப் பிரிவினர் மத்தியிலும் மொழிப் பயன்பாடு வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற சமூக மொழிவழக்குகளையே சமூக மொழியியலாளர் ஆய்வு செய்கின்றனர். + + + + +கோட்பாட்டு மொழியியல் + +கோட்பாட்டு மொழியியல் (Theoretical linguistics) என்பது, மொழியியல் அறிவு தொடர்பான மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மொழியியலின் ஒரு துணைத் துறை ஆகும். எலா மொழிகளுக்கும் பொதுவான இயல்புகளைக் கண்டறிந்து விளக்குவதும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். சொற்றொடரியல், ஒலியியல் (phonology), உருபனியல், சொற்பொருளியல் என்பன கோட்பாட்டு மொழியியலின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றன. ஒலிப்பியல் (phonetics) ஒலியியலுக்கான தகவல்களைக் கொண்டிருப்பினும், ஒலிப்பியல், கோட்பாட்டு மொழியியலின் எல்லைக்குள் அடங்குவதில்லை. இதுபோலவே உளமொழியியல், சமூக மொழியியல் போன்றனவும் கோட்பாட்டு மொழியியலினுள் அடங்கா. + +கோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது. + +உருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும். + +சொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை. + +சொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும். + + + + +அறிதிற மொழியியல் + +மொழியியலிலும், அறிதிற அறிவியலிலும் (cognitive science), அறிதிற மொழியியல் என்பது, மொழியை, கூர்ப்பியல் முறையில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்திய உடற்கூற்று அடிப்படையில் நோக்குவதுடன், மனித மூளை பற்றிய நடப்பிலுள்ள புரிதல்களுடன் சிறப்பாகப் பொருந்தி வருகின்ற அல்லது மேலும் மேம்படுத்தக்கூடிய விளக்கங்களைக் கண்டறியவும் முயல்கின்றது. + +மொழி உருவாக்கம், கற்றல், பயன்பாடு என்பன மனித அறிதிறனை அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகின்றன என்பதே அறிதிற மொழியியலுக்கு அடிப்படையாக உள்ள வழிகாட்டற் கொள்கையாகும். அறிதிறன் என்பதே, மொழிக்கு மட்டுமன்றி, மனித அறிவுத்திறன் சார்ந்த எல்லா விடயங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு அடிப்படையான மூளை சார்ந்த செயல்முறையாகும். + +அறிதிற மொழியியல் இரண்டு கற்கைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்விரு பிரிவுகளும் ஒன்றிலொன்று தங்கியிருப்பது புரிந்து கொள்ளபட்டிருப்பதன் காரணமாக இது தற்போது மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது. இவ்விரு பிரிவிகளாவன: + + + + + +பாரந்தூக்கி + +பாரந்தூக்கி என்பது உயர்த்துபொறிகள் (hoists), கம்பி வடங்கள் (wire ropes) கப்பிகள் போன்றவை பொருத்தப்பட்ட ஒரு பொறிமுறைச் சாதனமாகும். இது பொருட்களை உயர்த்தவும், இறக்கவும், கிடைத் திசையில் நகர்த்தவும் பயன்படுத்தப்படக்கூடியது. பாரந்தூக்கிகள் பொதுவாகக் கட்டுமானத்துறையிலும், பாரமான பொருட்களின் உற்பத்தித் துறையிலும் பயன்படுகின்றது. + + + + +லூசியானா வாங்கல் + +லூசியானா நிலம் வாங்கல் என்பது 1803 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூசியானா என்னும் நிலப்பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியதைக் குறிக்கும். இது தாமஸ் ஜெஃவ்வர்சன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்றது. இந்த லூசியானா என்னும் நிலப் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்ச��கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இந் நிலப்பகுதியானது இன்று உள்ள ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒருபகுதிக்கும் அதிகமானதாகும் (21.8% ). + + + + +வரகுண வர்மன் + +வரகுண வர்மன் கி. பி. 862 முதல் 880 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் என்ற பெயரையும் பெற்றிருந்த இம்மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான். பாண்டியன் சீவல்லபனின் முதலாம் மகனான இவன் தனது தந்தை கி. பி. 862 ஆம் ஆண்டு இறந்த பின்னர் பட்டம் பெற்றான். சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு பாண்டியப் பேரரசை மாயப்பாண்டியனிடமிருந்து மீட்டுக் கொண்டான். பல்லவ மன்னனான நிருபதுங்கவர்ம பல்லவனுடனான நட்பின் காரணமாக பாண்டிய, பல்லவப் போர் இவன் காலத்தில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. + +கி. பி. 880 ஆம் ஆண்டில் பெரும்படையுடன் வரகுணவர்மன் சோழநாட்டின் மீது படையெடுத்து அங்கு காவிரியின் வடக்கே உள்ள மண்ணி நாட்டில் இடவை என்ற நகரை வென்றான். ஆதித்த சோழனுடன் போர் புரிந்து அவனை வெற்றி கொண்டான். இடவை நகரில் தன் பாட்டன் கட்டிய அரண்மனையினைக் கைப்பற்றினான். அபராசித வர்ம பல்லவன் வரகுண வர்மனை வெல்ல நினைத்து ஆதித்த சோழனுடனும், கங்க நாடன் பிருதிவிபதியுடனும் வந்தான். திருப்புறம்பியம் போரில் கங்கன் இறந்து சோழ, பல்லவ மன்னர்கள் வெற்றி பெற்றனர். பாண்டியன் தோல்வியுற்றான். கங்க மன்னனுக்கும். பல்லவ மன்னன் ஒருவனுக்கும் உதிரப்பட்டியிலும், கச்சியாண்டவர் கோயிலிலும் நடுகற்கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. + +இவன் ஆற்றிய கோயில்பணிகள் பின்வரும் கல்வெட்டுகளில் அடக்கம். + + + + + + + + + +பராந்தகப் பாண்டியன் + +பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான். + +கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். சமீபத்தில், நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. + +இம்மன்னன், கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது. + + + + +புள்ளன் + +புள்ளன் வரகுண வர்மன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் படைத்தலைவனாகவிருந்தான். நக்கன் என்பவனின் மகனான இவன் "பராந்தகப் பள்ளி வேளாண்" என்ற பட்டத்தினைப் பெற்றவனும் ஆவான். இடவைப்போர் வெற்றிக்குப் படையெடுத்தவன், திண்டுக்கல்லுக்கு அருகில் இராமநாதபுரத்தில் குளம் அமைத்தான் என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + +ஏ. சி. தாசீசியஸ் + +ஏ. சி. தாசீசியஸ் (பி. தாழையடி, இலங்கை) ஈழத்து நவீன நாடக முன்னோடி. இவர் சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். தற்பொழுது இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். + +இவர் பேராதனை பல்கலைக் கழகத்திலும், அக்குவினாஸ் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் பின்னர் லயனல் வென்ற் நாடக அரங்கிலும் உயர் கல்வியும் நாடகத்துறையில் பயிற்சியும் பெற்றார். ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற இவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி ���ருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார். இவரது "பிச்சை வேண்டாம்" "பொறுத்தது போதும்"., "கோடை", "புதியதொரு வீடு", "எந்தையும் தாயும்", "ஸ்ரீசலாமி" போன்ற நாடகங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டார். இவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது. இவர் 1997 இலிருந்து சில வருடங்கள் லண்டன் ஐபிசி அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிந்தார். + + + + + + + + +ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் + +ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் ஈழத்தில் இருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஈழத்துத் தமிழர்களின் வரலாறுகளினைத் தாங்கி தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் உள்ளடக்க முனைகின்றது. + + + + + + +தந்தப் பல் + +தந்தப் பல் ("Tusks") என்பது நீண்ட, வளரும் முன் பல்லினைக் குறிக்கும். இது ஒன்றாகவோ இரண்டாகவோ பாலூட்டிகளில் இருக்கும். தந்தப் பல் தொடர்ந்து வளரும் விதமாக தன்மையைக் கொண்டுள்ளது. + +யானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன்னம் பற்களும் வளர்ந்து யானைக்கோடுகள் ஆகின்றன. யானையின் தந்தப் பல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். இவை பொதுவாக ஆண்டுக்கு ஏழு அங்குலம் (17 அல்லது 18 செமீ) வரை வளர்கின்றன. ஆப்பிரிக்க யானைகளில் களிறு (ஆண்), பிடி (பெண்) இரண்டுமே நன்கு வளர்ச்சியடைந்த தந்தப் பற்களைக் கொண்டுள்ளன. இவற்றின் தந்தப் பல் பத்து அடி (3 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடியது. 90 கிலோ வரை எடை கொண்டது. ஆசிய யானைகளில் களிறுகளுக்கு மட்டுமே நீளமான தந்தப் பற்கள் உள்ளன. பிடிகளுக்கு மிகச்சிறியதாகவோ அல்லது இல்��ாமலே கூட இருக்கலாம். ஆசிய யானைத் தந்தப் பற்களின் நீளம் ஆப்பிரிக்க யானைகளை ஒத்திருந்தாலும் அவை சன்னமானவை. + +யானையின் கோடுகள் மிகவும் மென்மையானது. அதனால் இவற்றைக் கீறி, செதுக்குவதற்கும் துருவுவதற்கும் வசதியாக இருப்பதால் சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதால் தந்த விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது. + + + + +ஏவிஜி ஆண்டிவைரஸ் + +ஏவிஜி ஆண்டிவைரஸ் (இதில் AVG என்பது Anti Virus Guard) மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான பல்வேறு பட்ட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்களின் தொகுப்பு ஆகும். + +ஏவிஜி 1991 இல் உருவாக்கபட்ட கிரிசாப்டினால் தயாரிக்கபடும் மென்பொருளாகும். + +செப்டெம்பர் 2005 இல் பங்குகளின் பெரும்பகுதியானது இண்டெலினால் வாங்கப்பட்டது. ஏப்ரல் 19 2006 ewido நெட்வேக் கிரிசாப்ட் குழுவின் ஓர் அங்கம் ஆகியது. + +நவம்பர் 6, 2006 மைக்ரோசாப்ட் ஏவிஜி பாதுகாப்பு மென்பொருட்கள் விண்டோஸ் செக்கியூரிட்டி செண்டரூடாகத் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என அறிவித்தது. + + +எல்லா பதிப்புக்களும் விண்டோஸ் 64 பிட் பதிப்புக்களுடன் வேலைசெய்யக்கூடியவை எனினும் இலவசப் பதிப்பானது 32 பிட் விண்டோஸ் உடன் மாத்திரமே வேலை செய்யும். + +எல்லா கிரிசாப்ட் பதிப்புகளுமே சோதனைக்காப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியவை இவை 30 நாட்களில் காலவதியாகி விடும் பின்னர் அனுமதியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.. + +கிரிசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் வழங்கிகளுக்கான பதிப்புகளையும் வெளியிட்டுள்ளனர். + + +ஏவிஜி லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ள ஓர் குறிப்பிடத்தக்க வைரஸ் எதிர்ப்புநிரலாகும். இதன் 7.5 ஆம் பதிப்பில் இருந்து முதன் முறையாக பிறீபிஸ்டி (FreeBSD) இயங்குதளத்திற்கு ஆதரவளிக்கப் படுகின்றது. லினக்ஸ்/பிறீபிஸ்டி பதிப்புக்களில் எரிதங்கள் (ஸ்பாம்) கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. + +ஏவிஜி இல் ஏனைய பொதுவான நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள் போலவே காலத்திற்குக் காலம் கிரமமாக கோப்புக்களை கந்தைப்பார்த்தல், SMTP ஊடாக வெளிச்செல்லும் மற்றும் POP3 ஊடாக உள்வரும் மின்னஞ்சல்களை ஸ்கான் செய்து தேர்வுக்குரிய ஸ்கான் செய்யபட்டது என்றாவாறு காட்சியளிக்கும் சொற்பிரயோகத்தையும் சேர்த்துக் கொள்ளும் வசதி. அத்துடன் ஏதாவது வைரஸ் காணப்பட்டால் அதை சுகப்படுத்தவோ முடியாவிட்டால் வைரஸ் வலட் என்கின்ற கோப்புறைக்குள் பாதுக்காப்பாகச் சேமிக்கப்படும். + +AVGADMIN என்கின்ற வசதிகொண்டு வலையமைப்புக்களில் மென்பொருட்களை தானியங்கிமுறையில் கையாளவிலும். + +நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏவிஜி இலவசப் பதிப்பு வித்திட்டது. கிரிசாப்டின் அறிக்கையின் படி இலவசப் பயனர்கள் உட்பட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் கிரிசாப்ட் வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பாவிக்கின்றனர். சிநெட் இணையத்தளத்தில் இதை 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் + +ஏவிஜின் இலவசப் பதிப்பு வர்தகப் பதிப்பை ஒத்திருந்தாலும் கூட வர்தகப் பதிப்பில் உள்ள வசதிகள் யாவும் இதில் கிடையாது. எவ்வாறு வைரஸ் ஸ்கான் செய்யப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது அத்துடன் இம்மென்பொருளில் இடைமுகமானது ஆங்கிலத்தில் மாத்திரமே உண்டு புரொபெஷனல் பல்வேறுபட்ட ஐரோப்பிய மொழிகளை ஆதரித்தாலும் தமிழ் உட்பட இந்திய மொழிகள் ஏதும் இதுவரை கிடையாது. + +கிரிசாப்ட் உடனடியான தொழில்நுட்ப உதவிகளை பணம்செலுத்திய பயனர்களு மாத்திரமே அளிககப்படும் இலவசப்பதிப்பில் தொழில்நுட்ப உதவிகள் எதனையும் கிரிசாப்ட் வழங்காது என்றாலும் கிரிசாப்டின் இணையத்தளத்திலேயே சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள விவாதமேடையில் இதன் விடயங்களை இலவசமாக விவாதிக்கலாம். + +கிரிசாப்ட் அதன் 7.1 இலவசப் பதிப்பு 18 பெப்ரவரி 2007 காலாவதியாகுவதியாகியது. எல்லாப் பயனர்கள் இதன் 7.5 பதிப்பிற்கு மேம்படுத்தல் வேண்டும். கிரிசாப்ட் பயனர்களை வர்தரீதியான பதிப்புக்களை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர். இதற்கு கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்களின் தாக்கமானது வைரஸ்களை விட அதிகமாக உணரப்பட்டதே காரணமாகும். ஏவிஜி ஆண்டிவைரஸ் ஸ்பைவேரை கண்டுபிடிக்காவிட்டாலும் கூட இதன் ஏவிஜி ஆண்டிஸ்பைவேரில் இலவசப்பதிப்பின் மூலம் செய்யலாம் எனினும் இலவசப் பதிப்பில் நிகழ்நிலைத் தற்காப்பு (Realtime Protection) 30 நாட்களுக்கு மாத்திரமே வேலைசெய்யும். + +ஏவிஜி ஆண்டிவைரஸின் விண்டோஸ் இயங்குதளத்திற்கான இலவசப் பதிப்பு 32பிட் விண்டோஸ் கணினிகளில் மாத்திரமே வேலைசெய்யும் 64பிட் இயங்குதளத்தில் வேலைசெய்யாது இதற்குப் புரொபெஷனல் பதிப்பு அவசியம். எனினும் இதன் போட்டியாளர்கள் அவாஸ்ட்! மற்றும் ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் போன்ற இலவசப் பதிப்புக்கள் 64பிட் இயங்குதளத்தில் வேலை செய்யும். + + + + + + +திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் + +திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. + + கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம் உள்ளன. திருச்சுற்றில் மகாலட்சுமி, சுப்பிரமணியர், மகாலிங்கம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, நால்வர், சேக்கிழார், பிரதான விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் உள்ளனர். பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும், துர்க்கையம்மன் சன்னிதியும், பள்ளியறையும், நிர்மால்ய அறையும், உக்ராண அறையும், மடைப்பள்ளியும் உள்ளன. பள்ளியறையை அடுத்து ஜலந்தரவதமூர்த்தி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், விக்னேஸ்வரரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடி மரமும், பலி பீடமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உள்ளார்.மூலவர் சன்னதியின் வலது புறம் ஏழவார்குழலி அம்மை சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர்,இறைவி ஏலவார் குழலம்மை. + + + + + +திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில் + +அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. + +இத்தலம் நாகப்பட்���ினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர்,இறைவி கருந்தார் குழலி. + +திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம். + + + + + + +திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் + +திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் (வர்த்தமானீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 76ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் வர்த்தமானீஸ்வரர்,இறைவி மனோன்மணியம்மை. + +இங்கு முருக நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. + + + + + +ஓட்டப்பிடாரம் + +ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்த வ. உ. சிதம்பரம்பிள்ளை பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. + + + + + +பச்சைக்கிளி முத்துச்சரம் + +'பச்சைக்கிளி முத்துச்சரம்' 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார்,ஜோதிகா,மிலிந்த் சோமன்,ஆந்திரே நடித்துள்ளார்கள்.இத்திரைபடத்தின் இசைவட்டு வெளியீடு சனவரி 20, 2007 இலும்,திரைப்படம் பெப்ரவரி 2007 இலும் வெளிவந்தது. + +ஜேம்ஸ் சீகல் (James Siegel) என்பவரின் டிரேயில் (Derailed ) எனும் நாவலினை மையமாக வைத்து தமிழ் சூழலுக்கு பொருந்தும்வகையில் திரைப��படமாக்கப்படுள்ளது. + +சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் விற்பனைப்பிரதிநிதி.இவருக்கு மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை.இதனிடையில் சரத் வழக்கமாய் பயணிக்கும் ரயிலில் ஜோதிகாவும் பயணிக்கின்றார்.இவர்களிவருக்குமிடயே காதல் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே கதையாகும், + + + + +ஹரிஷ் ஜெயராஜ் இந்தப் திரைப்படத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். + + + + + + + + + + +ஜராசந்தன் + +ஜராசந்தன் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான். + +ஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது: + +பிருகத்ரதன் என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு இளவரசிகளை மணந்து இல்லறம் நடத்திவந்த இவன் புகழ் பெற்ற அரசன். எல்லா வசதிகளும் பெற்று வழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரை அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு இருந்த குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய மனைவியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் பாதிப் பிள்ளைகள் இறந்து பிறந்தன. அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையி��்டான். + +மனிதர்களைத் தின்னும் இராட்சசியான "ஜரா" என்பவள், இவற்றைக் கண்டெடுத்து எடுத்துச் செல்லவதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக் குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய குழந்தையே என்று அறிந்த அரசன் அதற்கு, "ஜரா" என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி "ஜராசந்தன்" என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார். + +ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பைக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், மிகவும் களைப்புற்றுப் பலவீனம் அடைந்த கண்ணன் மதுராவை விட்டுத் துவாரகைக்குச் சென்றான். + +ஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான். பீமன், அருச்சுனன் ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். பிராமணர்கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்னனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான். + + + + + +துச்சாதனன் + +இந்திய நாட்டின் புகழ் பெற்ற இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களுள் ஒருவனே துச்சாதனன். இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன். + +காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்��காலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது. அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார். ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான். + +பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது. இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூளுரைத்தான். + +பாரதப் போரின்போது வீமன் துச்சாதனனுடன் போரிட்டு, அவனைக் கொன்றான். அவனது இரத்ததால் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றியதுடன் பாஞ்சாலியின் சபதமும் நிறைவேற உதவினான். + + + + +புர்ஜ் கலிஃபா + +புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும். 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது .. + +இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான "பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்" வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. + +இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், "ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்" என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது. + +இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது. + + + + + + +சீவல்லபன் + +சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். வரகுண வர்மன், பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர். இவனது சிறப்புப் பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. + +புதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப்பெற்ற��ருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான். குடமூக்கில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மாசுதர் ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான். + +ஈழ நாட்டில் முதலாம் சேனன் அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான். புத்த விஹாரங்களில் இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. + +பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்கள மன்னன் மலைநாட்டுக்குத் தப்பிச் சென்றான். இளவரசன் மகிந்தன் இறந்தான். காசபன் ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதலாம் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது. + +சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் முதலாம் தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், நிருபதுங்கவர்மனுடன் அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான். மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்ட��ல் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது. + +பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் தொண்டை நாட்டினை இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த பாண்டியன் சீீவல்லபன் குடமூக்குப் போரில் போரிட்டான். தஞ்சை கும்பகோணம் அன்று குடமூக்கு என்றிருந்தது. நந்திவர்மனுடன் வந்த கங்கர், சோழர், கலிங்கர் ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் தன் வாகூர்ச் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான். + +நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. லால்குடி, கண்டியூர், திருச்சின்னம் பூண்டி, திருக்கோடிகா போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும். கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான். + + + + +எட்டிச்சாத்தன் + +எட்டிச்சாத்தன் கி.பி. 840 முதல் 855 வரை சீவல்லபனின் அரசியல் அதிகாரியாக பணியிலிருந்தவனாவான். சங்கப் புலவர் சாத்தனார் மரபில் வந்தவனாகக் கருதப்படும் இவனைப் பெரும்புகழ் படைத்தவன் என இவனால் கட்டப்பெற்ற பல குளங்களிலும், கால்வாய்களிலும் அமையப்பெற்றிருக்கும் கல்வெட்டுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. "எட்டி" என்ற சிறப்புப்பெயரைப்பெற்ற இவன் "இருப்பைக் குடிக்கிழான்" என்ற பட்டத்தினை பாண்டிய மன்னனால் பெற்றான். தென்பாண்டி நாட்டில் இவன் பல தொண்டுகள் செய்ததால் புகழ்பெற்றிருந்தான். + +முதலூர், தென்வெளியங்குடி ஆகிய இரு ஊர்களிலும் உள்ள சிவன் கோயிலினைக் கட்டியவன் இவனே. இருப்பைக் குடியில் அமண் பள்ளி அமைத்தான். தென் வெளியங்குடி, கும்மமணமங்கலம் ஆகிய ஊர்களில் பெரிய ஏரிகளை அமைத்தான். இராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஏரி, குளம், கால்வாய்களை அமைத்தான் என எருக்கங்குடிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்வளம் பெருகிய அந்நாடு "இருஞ்சோழநாடு" என அழைக்கப்பெற்றது. + + + + +ஆக்டிவ் வைரஸ் ���ீல்ட் + +ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் அமெரிக்கா ஆண் லைன் நிறுவனத்த்தின் முன்னணியுடன் உருவாக்கப்பட்ட இலவச நச்சுநிரலாகும். இதன் நச்சுநிரல்களைக் கண்டுபிடிக்கும் மென்பொருளானது காஸ்பேஸ்கி நிறுவனத்தால் காஸ்பேக்ஸி 6 ஆவது பதிப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகும். இது இப்போது அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதில்லை. + +ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் நிகழ்நிலைப் பாதுகாப்பை வழங்குகின்றது. இந்த மென்பொருளுக்கான திறவுகோலை பதிவு செய்வதன் மூலம் இலவசமாக 1 வருடத்திற்குப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒரே திறவுகோலை ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளில் நிறுவக்கூடியதாக இருப்பினும் இது எத்தனை கணினிகளில் ஒரே திறவுகோலைப் பாவிக்கலாம் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட திறவுகோல் தேவையென்றால் மீண்டும் விண்ணபிக்கலாம். இதற்கு ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கலாம். ஒரே மின்னஞ்சல் முகவரியில் 10 வரையிலான திறவுகோல்களை எதுவித சிக்கலும் இன்றிப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் திறவுகோல் காஸ்பேக்ஸி ஆண்டிவைரஸ் மென்பொருளில் பாவிக்கவியலாது. ஆரம்பத்தில் இது காஸ்பேக்ஸி இணையத்தளமூடாகவே மேம்படுத்தல்களை மேற்கொண்டதெனினும் பின்னர் இதற்கு மேலதிகமாகப் பல தளங்களூடாக மேம்படுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது. + +எல்லா நிறுவல்களிற்கும் ஆகக்குறைந்தது 50 மெகாபைட் இடவசதி வன்வட்டில் (ஹாட்டிஸ்க்) இல் இருத்தல் வேண்டும். +எடுத்துக்காட்டாக இதை விண்டோஸ் XP இல் இதை நிறுவுவதற்கு ஆகக் குறைந்தது 128 மெகாபைட் நினைவகம் தேவைப்படும் (நினைவகம் வீடியோத் தேவைகளுக்காக பகிரப்பட்டிருந்தால் பகிரப்படாமல் இயங்குதளத்திற்கு இருக்கும் நினைவகமானது ஆகக்குறைந்தது 128 மெஹாபைட் நினைவகம் இருந்தல் வேண்டும்). விண்டோஸ் இயங்குதளங்கள் போன்றல்லாது அதற்குக் குறைவான நினைவகம் உள்ள கணினிகளில் நிறுவாது. இது விண்டோஸ் XP இன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளில் நிறுவலாம். இதன் 6.0.2.621 பதிப்பில் இருந்து விண்டோஸ் விஸ்டா இயங்குதளமும் ஆதரவளிக்கப்படுகின்றது. + + + + + +ஜேம்ஸ் மன்ரோ + +ஜேம்ஸ் மன்ரோ (James Monroe) (ஏப்ரல் 28, 1758 – ஜூலை 4, 1831) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (1817-1825) ஆவார். இவர��டு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்கா நடுநிலையாக இருக்க பெரிதும் உழைத்தார். 1812 ஆம் ஆண்டுப் போருக்கு இவர் தம் ஒப்புதல் அளித்து வலுசேர்த்தார். ஜேம்ஸ் மாடிசனுக்குக் கீழ் இவர் போர்க்காலத்துச் செயலாளராகவும் நாட்டுச் செயலாலராகவும் பணி புரிந்தார். இவர் காலத்தில் 1819ல் ஃவிளாரிடாவை ஐக்கிய அமெரிக்கா சேர்த்துக்கொண்டது. 1820ல் மிசௌரி மாநிலத்தை அடிமைமுறை ஏற்புடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இடங்களை ஐரோப்பாவின் வல்லரசுகள் குடியாட்சிகளாக்கும் முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பையும், ஐரோப்பிய வல்லரசுகளின் சண்டைகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கு கொள்வதில்லை என்றும் இவர் 1823ல் ஒரு கொள்கையை அறிவித்தார் இக் கொள்கைக்கு மன்ரோ கொள்கை என்று பெயர். வெளிநாட்டு உறவுக் கொள்கைகளில் இது ஒரு திருப்புமுனையான கொள்கை. + + + + +ஜான் குவின்சி ஆடம்ஸ் + +ஜான் குவின்சி ஆடம்ஸ் (ஜோன் குயின்சி அடம்ஸ், John Quincy Adams) (ஜூலை 11, 1767 – பெப்ரவரி 23, 1848) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய ஜான் ஆடம்ஸின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமைமுறைய ஒழிக்க முடியும் என கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863.) செய்து அடிமை முறையை ஒழித்தார். + + + + +அவிரா + +அவிரா ஓர் ஜேர்மனி நச்சுநிரல் (ஆண்டிவைரஸ், இணையப் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமாகும். 1988 ���ல் முதன் முறையாக அறிமுகமான இந்த மென்பொருட்கள் "H+BEDV Datentechnik GmbH" என்றவாறு அறியப்பட்டது. இதன் பதிப்புக்களில் ஒன்றான அன்ரிவிர் பேசனல்எடிசன் கிளாசிக் (AntiVir PersonalEdition Classic) பிரத்தியேகப் பாவனைகளுக்கு இலவசமானது ஆகும். இது இயங்குநிலையில் ஒய்யாராமான (ஸ்டைல் - Style) விரிந்த குடையொன்றைக் காட்சியளிக்கும். + +இதன் 8ஆவது பதிப்பானது 14 ஏப்ரல் 2008 இல் வேகமாக நச்சுநிரல்களைத் தேடும் எந்திரத்துடன் புதுப்பொலிவூட்டப்பட்ட இடைமுகத்துடனும் வெளிவந்தது. 17 அக்டோபர் 2008 இல் இதன் நச்சுநிரற் தேடல் எந்திரத்தினை மேம்படுத்தியது. அவிரா நிறுவம் 20% வரை வேகத்தைக் கூட்டிக் கொண்டதாக அறிவித்தது. + +அவிரா நச்சுநிரல் காலத்திற்குக் காலம் நச்சுநிரற் கோப்பு அகராதியை மேம்படுத்திக் கொள்ளும். இச்செயன்முறையின் போது குறிப்பட்ட அகராதியொன்றை பொதுவான ஓர் அகராதி மூலம் மாற்றீடு செய்து கொள்ளும். இச்செயன்முறை மூலம் வேகமான தேடலை மேற்கொள்ள முடிகின்றது. 22 அக்டோபர் 2008 இல் இதன் ஆகப் பிந்தைய வைரஸ் அகராதி மேம்படுத்தலானது நடைபெற்றது. இச்செயன்முறையின் போது ஏறத்தாழ 15 மெகாபைட் அளவுள்ள கோப்பைப் பதிவிறக்கவேண்டி வந்ததால் பயனர்களுக்கும் வழங்கிகளுக்கும் (சர்வர்) இடையூறு ஏற்பட்டது. இக்காரணத்தால் அவிரா நிறுவனம் பிரத்தியேகப் பதிப்பிற்காக நொடிக்கு 6 ஜிகாபிட்ஸ் தரவுப் பரிமாற்ற வசதியுள்ள இணைப்பைப் பெற்றுக் கொண்டது. + +ஆண்டிவிர் பேசனலெடிசன் கிளாசிக் (AntiVir PersonalEdition Classic) இது பிரத்தியாகப் பாவனைக்கு மட்டுமே. ஏனைய நச்சுநிரல்கள் (ஆண்டிவைரஸ்) போலவே கோப்புக்களை அலசி ஆராய்ந்து வைரஸ் உள்ளதா என்று கண்டறிவதோடு இயங்குதளத்தின் பின்னணியில் இயங்கி திறக்கப்படும் மற்றும் மூடப்படும் கோப்புகளை சோதனைசெய்யும். அத்துடன் இய்ங்குதளத்துடன் இணைந்துள்ள றூட்கிட் (RootKit) ஐயும் கண்டுபிடித்து இயலும் என்றால் நீக்க உதவுகின்றது. இது இணையமூடான மேம்படுத்தலகளை (வழமையானதேர்வு ஒவ்வொருநாளுமாகும்) செய்வதோடு அவ்வாறு செய்கையில் ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பினை ((AntiVir PersonalEdition Premium.) வாங்குமாறு பயனர்களைத் தொந்தரவு செய்யும். + +ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பு (AntiVir PersonalEdition Premium.) வருடத்திற்கு 20 யூறோ விலைமதிப்பானது இது இலவச மென்பொருட்களைத் விட கீழ்கண்ட முக்கியமான மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது. + +ஆண்டிவைரஸ் வேக்ஸ்ரேஷன் வர்தகரீதியான பாவனைக்கானது. இதற்கு வருடத்திற்கு 59 யூறோ கட்டணம் செலுத்தவேண்டும். இது +ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பு (AntiVir PersonalEdition Premium.) இற்கு மேலதிகாம வலையமைப்பூடாகக் கோப்புக்களைப் பரிமாறும் பிட்ரொறண்ட் போன்ற P2P (peer to peer) வலையமைப்பில் இருந்தும் பாதுகாக்கின்றது +ஆண்டிவிர் சேவர் AntiVir Server இது சேவருக்கானது, ஆண்டிவிர் சேவர் (AntiVir MailServer) மற்றும் ஆண்டிவிர் புறொக்ஸிசேவர் (AntiVir ProxyServer) புறொக்கிசேவரைப் பாதுப்பதற்கானதாகும் இவை நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான யூறோ செலவாகும் இவை பயனர் எண்ணிக்கை (10-250) மற்றும் உரிம ஒப்பந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது (1, 3, 5 வருடங்கள்). +ஆண்டிவிர் மொபைல் விண்டொஸ் சீஈ (Windows CE) இயங்குதளத்தில் இயங்கும் பாக்ட்பிஸி (PocketPC) அல்லது சம்பியன் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மாட் போன் இயங்கக் கூடியவை. + + + + + +கரவெட்டி அத்துளு அம்மன் + +அத்துளு அம்மன் கோயில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில். பச்சைப்பசேல் என்ற அத்துளு வயலும், குளமும் சூழ, மரங்களும், கொடிகளும், பற்றைகளுமே இராசகோபுரங்களும், மதில்களுமாக, இயற்கையையே கோயிலாகக் கொண்ட இடம் ஆகும். + +கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கிய இடங்களாக ஐதீகம் சொல்லும் இடங்களில் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயமும் ஒன்று. பொதுவாகவே அம்மன் ஆலயங்களில்தான் பொங்கல் பொங்கப்படுகின்றது. பெண்களுக்கு முக்கியமாக கருதப்படும் இவ்வாலயங்களைப் போலவே கேரளத்திலும் திருவனந்தபுர மாவட்டத்தில் அட்டுக்கல் என்ற இடத்தில் மாசி - பங்குனி மாதங்களில் பகவதி ஆலயத்தில் பெண்களே கலந்துகொள்ளும் பொங்கல் வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அவர்களும் கண்ணகி வந்து தங்கிய இடமாகவே அந்த ஆலயத்தை கருதுகிறார்கள் என்பதுதான் சுவையான விடயம். + +பன்றிதலைச்சி அம்மன் ஆலயத்தின் அளவில் இல்லாவிடினும், அத்துளு அம்மன் ஆலயத்திலும் வருடந்தோறும் கரவெட்டி, அதன் அயல் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வந்து இரவில் பொங்கி, படைத்துப் போவார்கள். + + + + +பின்னத்தூர் (மேற்கு) + +பின்னத்தூர் (மேற்கு) இது கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள அழகிய கிராமம். சிதம்பரத்திலிருந்து சுமார் 6 கி. மி. தூரத்தில் பிச்சாவரம் வனப்பகுதி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கிராமம் முழுவதுமாக இசுலாமியர் வசிக்கின்றனர். + + + + +எஸ். கே. பரராஜசிங்கம் + +எஸ். கே. பரராஜசிங்கம் (கட்டுவன், யாழ்ப்பாணம்), இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும், மெல்லிசை, கர்நாடக இசைப் பாடகருமாவார். "இலங்கை மெல்லிசை பிதா" என்றறியப்படுபவர். சர்வதேச "உண்டா" விருதினைத் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர். தனது சகோதரரான வைத்தியகலாநிதி எஸ். கே. மகேஸ்வரன் உடன் இணைந்து கர்நாடக கச்சேரிகள் செய்திருக்கிறார். வானொலியில் "விவேகச் சக்கரம்" என்ற பொது அறிவு நிகழ்ச்சியை நடத்தியவர். + +இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் விளம்பர நிறுவனம் ஒன்றின் சார்பில் காவலூர் ராசதுரை தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இவரது பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதே இலங்கையில் தமிழ் மெல்லிசையின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது. இவரது மெல்லிசைப் பாடல்கள் 'ஒலி ஓவியம்' என்ற பெயரில் 1994ல் ஒலி நாடாவாக கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனால் வெளியிடப்பட்டது. பின்னர் கனடாவில் 'குளிரும் நிலவு' என்ற தலைப்பில் அருவி வெளியீடாக குறுந்தட்டாக வெளிவந்தது. + + + + + + +திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் + +திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (இராமனதீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமனதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. + + +திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் கிழக்குத் திசையில் உள்ளது ராமநதீச்சரம். இந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயம் ராமநதீசரர் என்றும் இராமநாதர் கோயில் என்றும் கூறப்படுகிறது. + +இத்தலத்திற்கு ராமர் வந்து வழிபட்டதாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இலங்கையில் ராமன் இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மஹஸ்தி தோசம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. + +இராமன் வழிபட்டதால் இது ராமநந்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியை தடுத்து, ராமருக்கு காட்சி தந்ததாகவும் பின்பு ராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீசுவரம் என்பது மருவி இராமநதீஸ்வரம் ஆயிற்று என்போரும் உண்டு. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார். + +மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். +சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. + +திருவாரூர் நாகப்பட்டினம் இடையில் அமைந்துள்ளது. + +திருவாரூரில் இருந்து 13, 22, 14 ஆகிய எண் உடைய பேருந்தில் திருக்கண்ணபுரம் வரலாம். 13 எண் பேருந்தில் திருக்கண்ணபுரம் பால்குட்டை நிறுத்தத்தில் இறங்கி, முதலியார் தெருவில் சண்முக முதலியார் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள சந்தில் சென்றால் கோயிலை அடையலாம். 11 எண் பேருந்தில் நாகப்பட்டினம் இருந்து திருக்கண்ணபரம் வரலாம். + + + + + + +திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் + +திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வணிகனின் சுங்கமில்லாத மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற்றப்பட்டன என்பது தொன்நம்பிக்கை. + +இக்கோயிலில் உள்ள இறைவன் திருப்பயற்றுநாதர்,இறைவி காவியங்கண்ணி. + +பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம் + + + + + +திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் + +திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் பிள்ளையார் கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டார் என்பதும், இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. + +தினமலர் கோயில்கள் தளம் + + + + + +திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் + +திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. + +இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி. + + + + + +சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில் + +திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. + + + + + + + +சிக்கல் நவநீதேசுவரர் கோவில் + +சிக்கல் நவநீதேசுவரர் கோயில் [தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 83ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டுப் பூச��ை முடிவில் அதை எடுக்க முயன்ற போது அது சிக்கிக் கொண்டது என்பது ஒரு தொன்னம்பிக்கை. இங்குள்ள சிக்கல் சிங்காரவேலர் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது + +விசுவாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர் + +இக்கோயிலில் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சனந்தி உள்ளது. திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடந்ததாகக் கூறுவர். இருப்பினும் அதற்கான ஆரம்பம் இத்தலமேயாகும். இங்கு சஷ்டித் திருவிழாவின்போது, வேல்வாங்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது தாயிடம் வேலை வாங்கி முருகன் தன் சன்னதியில் அமர்வார். அந்த வேலின் சிறப்பின்காரணமாக சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகுவதாகக் கூறுவர். + + + + + +கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் + +கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் மூலவர் கேடிலியப்பர். தாயார் வனமுலையம்மன். + +இச்சிவாலயம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. + +இக்கோயில் மாடக்கோயில் அமைப்பைச் சார்ந்ததாகும். கோயிலின் வெளியே கோயில் குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. வெளித் திருச்சுற்றில் கருங்கல்லால் ஆன அழகான கட்டுமானம் உள்ளது. இதே திருச்சுற்றில் லெட்சுமி விநாயகர், முக்குறுணி விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன. அஷ்டபுஜ பைரவர் உள்ளார். உயர்ந்த தளத்தில் உள்ள கருவறையின் முன்பாக பாலசுப்பிரமணியர், காசி விசுவநாதர், கொடுங்கை விநாயகர் (வலது), கொடுங்கை விநாயகர் (இடது) உள்ளார். அங்கு நந்தி, பலி பீடம் உள்ளன. கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலது புறம் தேவநாயகர் சன்னதி உள்ளது. கோயிலின் திருச்சுற்றில் பதரி விநாயகர் சன்னதி, அறுபத்துமூவர், ஜுரதேவர் சன்னதிகளைத் தொடர்ந்து நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து, அகஸ்தீஸ்வரர் சன்னதி, விஸ்வநாதர் சன்னதி, மகாலட்சுமி சன்னதி, ஜம்புகேஸ்வரர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, பிரஹதீஸ்வரர் சன��னதி, அண்ணாமலை ஈஸ்வரர் சன்னதி, ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, குபேரர் சன்னதி, சோளீஸ்வர் சன்னதி, விசுவநாதர் சன்னதி, பைரவர் சன்னதி, சூரியர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். +இத்திருச்சுற்றில் அம்மன் சன்னதி உள்ளது. அருகே நடராஜர் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி சுந்தரகுஜாம்பிகை (வனமுலைநாயகி) ஆவார். +இதே திருச்சுற்றில் அஞ்சுவட்டத்தம்மன் சன்னதி உள்ளது. + +அகத்தியர், மார்க்கண்டேயர், ஆதிசேடன், வசிட்டர், முருகப்பெருமான் முதலானோர் வழிபட்ட திருத்தலம். முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு தடங்கல் ஏற்படா வண்ணம் காவல்காத்த அஞ்சுவட்டத்தம்மன் காளி கோயில் சிறப்பானது. இத்தல விநாயகர் பதரிவிநாயகர். + + + + + +எ.கா + +எ.கா என்பது எடுத்துக்காட்டு என்பதன் "எழுத்துச் சுருக்கம்". ஒன்றை விளக்க எடுத்துக் காட்டப்படும் பொருட்கள் ஆகும். "இனிப்பான" பொருட்கள் என்று கூறும் பொழுது அதற்கு சில எடுத்துக் காட்டுக்கள் கூறுவது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே எ.கா வெல்லம், கருப்பட்டி, கரும்பு, தேன் என குறிப்பிடலாம். + +இது உதாரணம் என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. சுருக்கம் உ-ம். + + + + +சாகரன் + +சாகரன் (எ) கல்யாண் (முழுப்பெயர்: கல்யாணராமன்) (1975- பெப்ரவரி 11, 2007) தேன்கூடு வலைப்பதிவுத் திரட்டியின் உருவாக்குனர் ஆவார். சாகரன் என்ற பெயரில் வலைப்பதிவராக அறியப்பட்டார். பெப்ரவரி 11, 2007 அன்று மாரடைப்பால் சவுதி அரேபியாவில் காலமானார். இவரது இறப்பு, இணையத் தமிழின் நுட்ப வளர்ச்சிக்கு பேரிழப்பாக தமிழ் வலைப்பதிவு ஆர்வலர்களால் கருதப்படுகிறது. தேன்கூடு திரட்டியின் நுட்பத்தை இந்திய மொழிகள் பலவற்றிலும் கொண்டு செல்ல எண்ணியிருந்தார் என்றும் தமிழ்த் தேவைகளுக்கான பல வலைமனைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அறிய முடிகிறது. தமிழ் தொடர்புடைய வலைமனைகளை உருவாக்கியது தவிர, ரியாத்தில் இருந்து செயல்பட்ட பல தமிழ் அமைப்புகளிலும் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளார். + + + + +கட்டிட ஒப்பந்தம் + +கட்டிட ஒப்பந்தம் என்பது, கட்டிடத்தைக் கட்டுவிப்பவருக்கும், ஒரு குறிப்பிட்ட அளவான கட்டிட வேலையை, குறிக்கப்பட்ட சீர்தரத்துக்கு அமைய, குறிப்பிட்ட தொகையொன்றுக்குக் கட்ட ஒப்புக்கொள்ளும் தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். கட்டிட ஒப்பந்தங்கள் பலவகையாக உள்ளன. கட்டிட ஒப்பந்தங்களுக்கிடையே அவற்றின் தன்மை மற்றும் அளவு என்பன தொடர்பில் பெருமளவுக்கு வேறுபாடுகள் காணப்பட்டாலும், எல்லா ஒப்பந்தங்களிலும் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. + + +கட்டிட ஒப்பந்தத்துக்கான பலவித ஒப்பந்த வடிவங்கள் உள்ளன. அவற்றுள் ஜேசிடி (JCT) எனப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் நியாயசபையின் (Joint Contracts Tribunal.)ஒப்பந்த வடிவம், FIDIC ஒப்பந்த வடிவம் என்பன அனைத்துலக அளவில் கைக்கொள்ளப்படுபவை. + + + + +தேவூர் தேவபுரீசுவரர் கோயில் + +தேவூர் தேவபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்பதும் விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்டான் என்பதும் தொன்நம்பிக்கைகள். +தேவர்கள், இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம் + + +தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் +கோவால் கோலம் கொண்ட கொள்கையும் + + + + + + +திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில் + +திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. + +ஜடாயு பேறு பெற்ற திருத்தலம். எனவே குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும். இத்தலத்தில் மூர்க்க மகரிஷி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. + +அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + + +ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில் + +ஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது. + +அசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது. + + + + + +தமிழர் வானியல் + +பல ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாக ஓரேயிடத்தில் வாழ்ந்துவருகின்ற தமிழருக்கு வானியல் துறையில் இருந்த அறிவையும், அது பற்றி அவர்கள் கொண்டிருந்த விளக்கங்களையும், அந்த அறிவை அவர்கள் பயன்படுத்திய முறைகளையும் தமிழர் வானியல் என்னும் தலைப்பில் இக் கட்டுரை விளக்க முயல்கிறது. + +பண்டைக்காலத்தில், வானவியலுக்கு என்று தனியான நூல்கள் எதுவும் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகப்பழைய எழுத்துமூல ஆவணங்கள் சங்க நூல்களேயாகும். சங்கப் பாடல்களை எழுதியவர்கள் பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் வானியல் போன்ற துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. எனினும் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். + +வானிலே உலாவருகின்ற பலவகையான பொருட்கள் பற்றி முற்காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த அறிவு பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் மற்றும் சங்கம் மருவியகால நூல்களிலே கிடைக்கின்றன. சூரியன், சந்திரன் ஆகியவை வானில் மிகத் துலக்கமாகத் தெரிபவை. இயற்கையின் இயக்கத்தில் மிகத் தெளிவான பங்கு வகிப்பவை. இதனால் இவற்றின் இருப்புப் பற்றிய அறிவும், அவற்றின் குணநலன்கள் பற்றிய அறிவு���் நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. மிகமுந்திய தமிழ் இலக்கியங்களிலே இவை பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களும் இப்பாடல்களிலே காணப்படுகின்றன. செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். மேலும் இக்கோளினை "செம்மீன்", "அழல்" எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் "படிமகன்" என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது...இதே பரிபாடல் புதன் கோளைப் "புந்தி" என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு."வியா" என்றால் பெரிய என்ற பொருள். தேவர்களுக்குக் குரு என்று கருதப்பட்ட வியாழனைத் தமிழ்ப் பாடல்கள் "அந்தணன்" என்கின்றன. சூரிய, சந்திரர்களுக்கு அடுத்தபடியாக வானிலே துலக்கமாகத் தெரியும் வெள்ளி, பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் "வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன்" போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. சனிக்கோள் கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள் எனவும் "மைம்மீன்" எனவும் வழங்கப்பட்டது. இப்பெயர் புறநானூற்றுப் பாடலொன்றில் இடம் பெற்றுள்ளது. + +கோள்கள் என அழைக்கப்பட்ட மேற்காட்டியவற்றைவிட பல்வேறு நட்சத்திரங்கள் பற்றியும், நட்சத்திரக் கூட்டங்கள் பற்றியும் அக்காலத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.தானே ஒளி தருபவை "நாள்மீன்" என்றும் சூரியனிடம் இருந்து ஒளியை பெறுபவை கோள்மீன் என்றும் அழைக்கப்பட்டன "நாள்", "மீன்" போன்ற பெயர்களில் அழைக்கப்பட்ட அவை பற்றிய குறிப்புக்களும் பழந்தமிழ்ப் பாடல்களிலே உள்ளன. உரோகிணி, அருந்ததி, ஓணம் (திருவோணம்), ஆதிரை (திருவாதிரை), கார்த்திகை, சப்தரிசி மண்டலம் என்பன பற்றியும் இவை தகவல் தருகின்றன. இவற்றுள் கார்த்திகை "அறுமீன்" எனவும், சப்தரிசி மண்டலம், "எழுமீன்" எனவும், அருந்ததி, "வடமீன்" எனவும் தமிழில் அழைக்கப்பட்டன. இவற்றோடு, "மகவெண்மீன்" என மகமும், "வேழம்" எனப் பரணியும், "முடப்பனையத்து நாள்" என அவிட்டமும் பாடல்களிலே இடம் பெறுகின்றன. அகத்தியன் என்று பெயரிடப்பட்டுள்ள மீனைப் பரிபாடல் 'பொதியில் முனிவன்' எனக் குறிப்பிடுகிறது. + +சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற விண்பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான அறிவு சங்ககாலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்தது. கவனிப்புகள் மூலம் பெற்றுக்கொண்ட தரவுகளை வைத்தே இவ்வியக்கங்கள் தொடர்பான புரிந்துணர்வுகளை அவர்கள் வளர்த்துக் கொண்டனர். புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடியவற்றுக்கு அப்பால், நிகழ்வுகளுக்கு ஊகங்கள் மூலம் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. + + + + + + + +தாவர உண்ணி + +தாவர உண்ணி அல்லது இலையுண்ணி (Herbivore) என்பது மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும். + +விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும். + +பொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற ஏனைய உயிரினங்கள் தாவர நோய்க்காரணிகள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது ஒட்டுண்ணித் தாவரம் எனப்படும். + + + + + + +பூச்சியுண்ணி + +பூச்சியுண்ணி ("Insectivore") என்பது பெரும்பாலும் பூச்சிகளையே தம் உணவாகக் உட் கொள்ளும் விலங்கு வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளும் ஒரு வகையான ஊனுண்ணிகளே. பலவகையான பறவைகள், தவளை, பல்லி முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான புரதச் சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன. + +சதுப்பு நிலத்தில் வாழும் சில தாவரங்கள் ஊட்டச்சத்தைப் பெ��ும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன. + +மனிதனும் சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றான். மனிதரில் இந்த பூச்சியுண்ணும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Entomophagy என அழைக்கின்றனர். தாய்லாந்து, சீனா, யப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது. + + + + + + +விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் + +விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 90ஆவது சிவத்தலமாகும்.இத் தலத்தின் மீது பாடப்பெற்ற "மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்" என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அடங்கிய திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. + +திருவாரூர் நகருக்கு அண்மையில் ஓடம்போக்கி என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் பதஞ்சலி முனிவர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. + + + + + + +கரையபுரம் கரவீரேசுவரர் கோயில் + +கரையபுரம் கரவீரேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. +பெரிய திருக்கோயில் சிறிய ஊரில் அமைந்திருக்கின்றது. + +கரவீரம் என்ற சொல்லுக்கு பொன் அலரி என்பது பொருள். இத்தலத்தின் தல விருட்சம் அலரி ஆகும். + + + + + +மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் + +மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் ம��வட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து சாலையில் மணக்கால் என்ற இடத்தின் அருகே உள்ளது. + +திருக்கோயில் உள்ளே வைகுந்த நாராயணப் பெருமாளுக்குத் தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் மோகினி வடிவெடுத்த பெருமாள் இறைவனை வழிபட்டு ஆண்வடிவம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. + +பிருங்கி முனிவர், கௌதமர் வழிபட்ட திருத்தலம் +சித்தர்களின் பார்வையில் திருப்பெருவேளூர் +திக்கு சொல் கருகி நிற்ப திக்கலே மணக்க வாழக் காண்பீரே +அபியமுக்தி நாதனைக் கைத்தொழுவார் பிறவாரே +வன்னியாந் தலவிருட் சமேத்தி தந் நாமத்தே +பொய்கை புக்கு பெருவேளூரே. 1 +சரவண பொய்கை புக்கு கங்கையோடு ஏழவார் குழவிக்கு +குழவினானே யடிபணிந்து யருளும் வேலாம் பொருளும் +கொள்ள தொழுவார் குறை தீர்த்தே பொருளுமா +வாணாளுங் கூட்டு வன் திண்ணமே. +பெரு வேளூருடனே திருவிடையாஞ் சுழி +வைத்தீசனே யென வரிக்கோண வேலாயுதங் +கொண்டவித்தலத்தே ஆளுமை யாரிடத் தோதற் பாற்றே. +யபிமுக்த தலத்தார் காலத் திரு வடுக பயி ரவணாப் +பாடு வாருக்கு சரும வாதை விலகுமே. +வாஸ்து தோச முடனே துலங்க பீடை பற்பலவாம் விலகவே +வில்லங்க மறுக்கவே சோமாஸ் கந்த வடிவுடை +அபினாம்பிகை சரணஞ் செயவே. +கொண்டேத்த தண்டனை தான் தந்த பஞ்சாயத்தாரும் மாற்றி +சாதகஞ் செய்தின் பூட்டுவர் யிது விதியே +மாயமான தனமொடு வடிவழகுங் கலையுஞ் +சேருமொன்று மய்யமிலையே. +ஊமை யூக்கமாய் பாட,கற்ற வித்தையால் பெருமை சேர்க்கலாமே +எப் பரீட்சையத் தேர்வுந் தேறலாமே. + + + + + +திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் + +திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் 53.சிமிழி ஊராட்சி கும்பகோணம்-திருவாரூர் பேருந்து சாலையில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடினான் என்பது தொன்நம்பிக்கை. + +கபில முனிவர் வழிபட்ட திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் நோய் தீர்க்கும் சிறப்புடையது. + + + + + +குடவாசல் கோணேசுவரர் கோய��ல் + +குடவாசல் கோணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 94ஆவது சிவத்தலமாகும். + +இவ்வூர் திருக்குடவாயில் என்றும் இங்குள்ள கோயில் குடவாயிற்கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது அனைத்து உயிர்களும் அழிந்துவிடகூடாதே என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்து வந்தார். காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத்தை புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பேரிய மலை போல் ஆனது. புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை வெளிபடுத்தினார். இதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார். அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன் கோணேசர் ஆனார். +தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டார் என்பது புராணம். ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. முதல் பாகமாகிய அடிபாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும் ஈசனை ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது. நடுபாகம் விழுந்த இடம் கலயநல்லூர் இன்றைய சாக்கோட்டை ஆகும் இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர் ஆவார். குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில்(குடவாசல்) ஆயிற்று. +இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொது அமிர்த தீர்தத்தை தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள். இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் ஸ்நானம் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள். +இக்கோவிலுக்கு தொழுநோயால் அவதியுற்ற திருணபிந்து என்ற முனிவர் வழிபட, ஈசன் குடமூக்கில் இருந்து வெளிப்பட்டு முனிவருடைய தொழுநோயை தீர்த்ததால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. +உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது தொன்நம்பிக்கை.இத்திருக்கோயில் பெயர் குடவாயிற் கோட்டம் என்பதாகும். + +ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றிநாதர் உள்ளார். கோயிலின் முன்பு குளம் உள்ளது. + +கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் + +மேற்கு நோக்கிய இறைவன் சந்நதி, மாடக்கோவில் அமைப்பு. இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும். + + + + +திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் + +திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 95ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருச்சேரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாகச் சென்றால் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. + +சாரபரமேசுவரர் கோவில் எனவும் உடையார் கோயிலெனவும் அழைக்கப்படும் இத்தலம் சைவம், வைணவம் ஆகிய மதங்களின் சிறப்பு வாய்ந்த தலமாகும். திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ளது போன்றே ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு இங்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது. சகல விதமான கடன் தொல்லையில் இருந்தும் நம்மைக் காக்க வல்ல அந்த சர்வேஸ்வரர், ரிண விமோசனர் என்ற பெயரோடு இங்கு எழுந்தருளியுள்ளார். இவரை பிரதிஷ்டை செய்தவர் வசிஷ்ட மகரிஷி.திங்கட்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பு. ரிண விமோசனருக்கு அபிஷேகம் செய்து தலமரமான மாவிலங்கை இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்யப் படுகிறது. பதினோரு திங்கட்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் முற்றிலும் அகன்றுவிடும். ஸ்வாமி மற்றும் அம்பாள் ஆகியோர் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறார்கள். தௌமிய முனிவர் மார்க்கண்டேய முனிவரால் வணங்கப் பெற்றது. மார்க்கண்டேய லிங்கம் என்ற சன்னிதியும் ஆலயத்தில் உள்ளது. மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை நேரத்தில் சூரியனின் கிரணங்கள் செந்நெறியப்பரின் மீது படுகின்றன. அப்போது சூரிய பூஜை நடக்கிறது. + +கோபுரம் இல்லாமல் இருந்த நுழைவாயிலில் தற்போது (பிப்ரவரி 2017)ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.அதனை அடுத்து கொடி மரம், பலி பீடம் காணப்படுகின்றன. அதற்கடுத்தபடியாக ஒரு சிறிய கோபுரம் உள்ளது.கருவறையின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் முன்பாக வலது புறத்தில் விநாயகரும், இடது புறத்தில் நால்வரும் உள்ளனர். கோஷ்டத்தில் லிங்கம், விநாயகர், நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், துர்க்கை, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார். திருச்சுற்றில் பின்புறம்விநாயகர், லிங்கம், ரிணவிசனலிங்கேஸ்வரர், முருகன், மகாலட்சுமி, லிங்கம் ஆகியோரைக் காணலாம். மூலவர் சன்னதியின் இடப்புறம் ஞானாம்பாள் உள்ளார். மொட்டை கோபுரமாக இருந்த நுழைவாயிலில் பெரிய ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவுறும் நிலையில் உள்ளது.இதற்கு முன்னர் 18 மார்ச் 1992 மற்றும் 4 ஏப்ரல் 2004இல் குடமுழுக்கு நடைபெற்றத��்கான கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. + +மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் ஆகியோர் வழிபட்ட தலமெனப்படுகிறது. + + + + + +ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் + +ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இக்கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். + +குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய் என்பதாகும். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது. கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர். + +முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார். பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார். கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி. சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார்.கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மா���ையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான்.கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழையினைப் பொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார். + + ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் சொர்ணப்பிள்ளையார், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், உரோமச மகரிஷி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், தட்சிண கைலாசர், கும்பகர்ண பிள்ளையார், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், உத்ர கைலாசர், அருணாசலேஸ்வரர், விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், நடராஜர் தனி சன்னதியில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக மூலவர் சன்னதியின் இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம்மன் சன்னதிக்கு முன்பாக துவாரசக்திகள் உள்ளனர்.கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், ஆகியோர் உள்ளனர். + +காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர் ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த பிள்ளையார் கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார். + + +கவனிப்பாரற்று இருந்த இத்திருக்கோயில் திருப்பணிகள் 1960 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பணவசதியின்மையால் பாதியிலேயே நின்றுவிட்டன.பின்னர் மீண்டும் 2008 ஆம் வருடம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. + + + + + + +ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் + +ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். + +இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது. + + +விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். + + + + + + + +க. வீரகத்தி + +பண்டிதர் க. வீரகத்தி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட "தங்கக் கடையல்" என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். + +தனது "வாணி கலைக் கழகம்" என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார், + + + +1981-ல் "கிருத யுகம்" என்ற இதழை நடத்தினார். + + + + + +மன்னவன் கந்தப்பு + +முருகேசு கந்தப்பு எனற இயற்பெயர் கொண்ட மன்னவன் கந்தப்பு (18 சூன் 1926 - 15 பெப்ரவரி 2004) ஒரு ஈழத்து எழுத்தாளர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர் கவிதை புனைதல், பட்டி மன்றப்பேச்சு என்பனவற்றில் திறமை காட்டியவர். சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட. முற்போக்குச் சிந்தனையாளரான இவர் பாடசாலைத் தல���மை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். + +கந்தப்பு யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் பிறந்தவர். தமிழ் புலமையையும், கவி புனையும் ஆற்றலையும் தென்புலோலியூர் கந்தமுருகேசனாரிடம் கற்றுக்கொண்டவர். உயர் கல்வி பயிலும்பொழுதே இவரது தமிழ் ஆளுமையை அவதானித்த கலாநிதி சிவப்பிரகாசம் இவரை "மன்னவன்" என்று அழைக்கத்தொடங்கினார். பின்னர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். + +1960-1972 வரையிலான காலப்பகுதியில் இலங்கை வானொலியில் கவியரங்குகளில் பங்குபற்றி புகழ் பெற்றவர். வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட. + +வடமராட்சியில் கம்பன் கழகத்தை நிறுவியதோடு, அங்கு கம்பன் விழாவை சிறப்புற நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். பண்டிதர் க. வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி அதன் ஊடாக பண்டித வகுப்புகளை நடாத்தியவர். வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேசக் கலாசாரப் பேரவையின் உருவாக்கத்தில் பங்காற்றியவர். + + + + + + +அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில் + +அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில் (அரதைப்பெரும்பாழி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 99ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் பன்றி வடிவங் கொண்டு பள்ளம் பறித்தார் என்பது தொன்நம்பிக்கை. + +திருமால் பன்றி உருவங் கொண்டு பூமியைப் பள்ளம் (துவாரம்) செய்த தலமாதலால் அரித்துவாரமங்கலம் என்று பெயர் பெற்றது +இன்றளவும் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. +இக் கோயிலில் நவக் கிரகங்கள் கிடையாது. +பூமியில் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடவுளான நாராயணனுக்கு திடீரென்று சிவனின் பாதத்தைத் தரிசிக்க வேண்டும் என்று ஓர் ஆசை உதித்தது. சிவபெருமானும் அதற்கு இசைவு தெரிவிக்க, பூமிக்கடியில் இருக்கும் அவரது பாதத்தைக் காண வராக அவதாரம் எடுத்தார். தனது முகத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி, அவ்வழியே உள்ளே சென்றார். ஆனால் பாதத்தைத��� தான் காண முடியவில்லை. சற்றே விரக்தி தோன்றியதால், பூமியின் மேலே வந்தார். அங்கே நாராயணன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். நாராயணன் அன்று ஏற்படுத்திய துவாரம் தென்தமிழகத்தில் உள்ள அரித்துவாரமங்கலத்தில் உள்ளதாகத் தல புராணம் கூறுகிறது. + +அரித்துவாரமங்கலம் மூலஸ்தானத்தில் சிவபெருமானின் அருகில் இந்தத் துவாரம் உள்ளது. ஹரியாகிய நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துவாரம் போட்டதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது. மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். + +பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அலங்கார வள்ளி என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். + +இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று. + +பஞ்சாரண்ய ஷேத்திரங்கள் + +முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் பஞ்சாரண்ய ஷேத்திரங்கள். இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர். + +இதற்கு, உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும், காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும், உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும், சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும், அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும். + +மூலவர் பாதாளேஸ்வரர் அம்பாள் அலங்காரவள்ளி. ஸ்தல விருட்சம் வன்னி மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். + +எங்குள்ளது? + +தஞ்சாவூர் - திருவாரூர�� சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரித்துவாரமங்கலம். +Keywords: அரித்துவாரமங்கலம் கோயில், பாதாளேசுவரர் கோயில், ஆலயம் ஆயிரம், திருத்தலம் அறிமுகம், கோயில் அறிமுகம், தலவரலாறு, சிவன் கோயில், பாதாள லிங்கம் +' + + + + + +அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் + +அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஆறரை மைல் தொலைவில் உள்ள திருத்தலமிது. கோயில் வெண்ணி இருப்புப்பாதை நிலையத்திலிருந்தும் செல்லலாம். தஞ்சாவூரிலிருந்து அம்மாப்பேட்டை வழியே கும்பகோணத்திற்கு செல்லும் பேருந்துப்பாதையில் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் அர்ச்சகரின் மூத்த மகளுக்கு அம்மை போட்டு உருவம் மாறியதால் யாத்திரை போய்த் திரும்பிய கணவன் இளையவளே தன் மனைவி என்று கூறிய போது இறைவன் இறைவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி சாட்சி கூறி ’அவள் இவள்’ என்று காட்டித் தந்து அருள் புரிந்தார். +கர்ப்பகிருகத்தில் சிவபெருமானும் உமையம்மையும் ரிஷப வாகனத்தில் காட்சி தருகின்றனர் இறைவனாரின் அருள்படி மூத்தவள் சுசீலை இத்தலத் தீர்த்தத்தில் நீராடி அழகிய வடிவையும் கண் பார்வையையும் பெற்றாள். இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்குத் தம்பரிசுடையார், சாட்சிநாதர் என்றும் இறைவிக்குச் செளந்தரியவல்லி என்றும் பேர். தீர்த்தம் சந்திரபுட்கரணி. தலவிருட்சம் பாதிரி. + +வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர். + + + + + +பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் + +பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம். + +இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. + +அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + + +கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் + +கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 102ஆவது சிவத்தலமாகும். + +இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்வெண்ணி எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-நீடாமங்கலம் அல்லது தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் சாலியமங்கலத்தைக் கடந்து கோயில்வெண்ணி நிறுத்தத்திலிருந்து இடப்புறமாக 1/2 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம். + +இச்சிவாலயத்தின் இறைவன் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவி அழகிய நாயகி. + +இத்தலம் முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி செய்த தலமாகும். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார் இங்கு வாழ்ந்துள்ளார். + +அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + + +பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் + +பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவத்தலமாகும். இத்தலம் அப்பர் பாடல் பெற்றதாகும். + +திருவாரூர், நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பூவனூர் இறங்கி பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். + +இத்தலத்தில் சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. + +வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கொண்டு மணந்ததால் இத்தல இறைவனாருக்கு சது���ங்க வல்லபேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சாமூண்டீசுவரர் சந்நிதி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. + +அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + + +கரவை க. கந்தசாமி + +கரவை க. கந்தசாமி (இறப்பு: திசம்பர் 31, 1994) ஈழத்து எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, பேச்சாளர். கரவைக் கிழார் என்ற புனைபெயரில் எழுதியவர். + +கந்தசாமி யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பனங்காமத்துத் தலைவனாகிய கயிலாய வன்னியன் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தருக்குப் பணிய மறுத்துப் பன்னிரண்டாண்டுகள் திறை செலுத்தாமற் போராடி வீழ்ந்த கதையை நாடக நூலாக இவர் எழுதியுள்ளார். இந்நூல் "தணியாத தாகம்" என்ற பெயரில் 1968 ஆம் ஆண்டில் வெளிவந்தது, + +இடதுசாரி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கரவை கந்தசாமி 1960களில் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது நா. சண்முகதாசனுடன் பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மலையகத்தில் செங்கொடி தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். 1971 இல் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, என். சண்முகதாசனுடன் இவரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். + +ஈழத் தமிழ்ப் போராளிக் குழுவான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் துணைத் தலைவராக 1994 பொதுத்தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். + +கரவை கந்தசாமி 1994 டிசம்பர் 31 அன்று இரவு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். + + + + + +காட்டீசியன் ஆள்கூற்று முறைமை + +கணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த ���ரண்டு எண்களும் குறிப்பிட்ட தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் "கிடை" நிலையிலும், y- அச்சை "நிலைக்குத்தாக"வும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி "தொடக்கப்புள்ளி" எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன. இவ்விரு அச்சுக்களும் உள்ள தளத்திலுள்ள ஏதாவது ஒரு புள்ளி, இவ்விரு அச்சுக்களிலும் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது எனக் குறிப்பதன்மூலம் அப்புள்ளியை ஏனைய புள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். அதாவது அவ்விரு எண்களும், குறிப்பிட்ட புள்ளிக்குரிய தனித்துவமான இயல்பு ஆகும். y- அச்சிலிருந்து ஒரு புள்ளியின் தூரம் அப்புள்ளியின் x- ஆள்கூறு ஆகும். x- அச்சிலிருந்து அதன் தூரம், y- ஆள்கூறு ஆகும். ஒரு புள்ளியின் x- ஆள்கூறு 2 அலகு ஆகவும், y- ஆள்கூறு 3 அலகுகளாகவும் இருப்பின் அப்புள்ளியை (2,3) எனக் குறிப்பது மரபு. +ஒரு தளத்தில் மட்டுமன்றிக் காட்டீசியன் ஆள்கூற்று முறைமையை முப்பரிமாண வெளியிலும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு இட "வெளி"யில் உள்ள புள்ளியொன்றை வேறுபடுத்திக் குறிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று திசையில் உள்ள கோடுகள் பயன்படுகின்றன. அதாவது இங்கே 3 அச்சுகள் இருக்கும். மூன்றாவது அச்சு z-அச்சு ஆகும். இதனால் இட வெளியில் உள்ள ஒரு புள்ளியைக் குறிப்பிட மூன்று அச்சுகளிலிருந்தும் அளக்கப்படும் தொலைவுகளைக் (x, y, z) கொடுப்பதன்மூலம் குறிக்கப்படுகின்றது. +காட்டீசியன் ஆள்கூற்று முறைமையைப் பயன்படுத்தி, வடிவகணித வடிவங்களைச் சமன்பாடுகள் மூலம் குறிக்கமுடியும். அதாவது, குறித்த வடிவத்திலுள்ள ஒவ்வொரு புள்ளியின் x, y ஆள்கூறுகளுக்கு இடையேயான கணிதத் தொடர்பை ஒரு சமன்பாடடால் முற்றிலுமாய் விளக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2 அலகு ஆரையைக் கொண்ட வட்டம் ஒன்றை x² + y² = 2 எனக் குறிப்பிடலாம். (படம்-2 ஐப் பார்க்கவும்) + + + + +மருந்து + +=மருந்து= +உ���லில் உள்ள உடலியல் மாற்றத்தை உண்டாக்குகிறது, உட்செலுத்தப்படும் போது, உட்செலுத்தப்படும் போது, புகைக்கப்பட்டு, நுகரப்படும், தோலில் ஒரு இணைப்பு வழியாக உறிஞ்சப்படுவதோ அல்லது நாக்கு கீழ் கரைந்து போவதோ ஒரு மருந்து (ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் உணவு தவிர). [2] [ 3] + +மருந்தாக்கியல், ஒரு மருந்து மருந்து அல்லது மருந்தாகவும் அழைக்கப்படும் ஒரு மருந்து மருந்து, சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும், தடுக்கவும் அல்லது நோயைக் கண்டறியவும் அல்லது நல்வாழ்வை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயன பொருள். [2] மருத்துவ தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதன் மூலமாக பாரம்பரியமாக மருந்துகள் பெறப்பட்டன, ஆனால் சமீபத்தில் கரிம சேர்மத்தில். [4] மருந்துகள் ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படலாம் அல்லது நாட்பட்ட குறைபாடுகளுக்கான வழக்கமான அடிப்படையில் பயன்படுத்தப்படலாம். [5] + +மருந்து மருந்துகள் பெரும்பாலும் போதை மருந்து வகுப்புகளாகப் பிணைக்கப்படுகின்றன. இதே போன்ற ரசாயன கட்டமைப்புகள், அதே செயல்முறை செயல்முறை (அதே உயிரியல் இலக்குக்கு பிணைப்பு), தொடர்புடைய செயல் முறை, மற்றும் அதே நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்துகள். 6] [சான்று தேவை] [7] மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மருந்து வகைப்பாடு அமைப்பு (ATC), மருந்துகள் ஒரு தனிப்பட்ட ATC குறியீட்டை அளிக்கிறது, இது ATC அமைப்பில் உள்ள குறிப்பிட்ட மருந்து வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் ஒரு எண்ணெழுத்து குறியீடு ஆகும். . மற்றொரு பெரிய வகைப்பாடு முறையானது பயோபோர்மேசுடிக்ஸ் கிளாசிக் சிஸ்டம். இது அவற்றின் கரைதிறன் மற்றும் ஊடுருவுதல் அல்லது உறிஞ்சுதல் பண்புகளின் படி மருந்துகளை வகைப்படுத்துகிறது. [8] + +நுண்ணுயிரியல் மருந்துகள் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும், உணர்தல், மனநிலை அல்லது நனவை மாற்றும் இரசாயன பொருட்கள் ஆகும். [9] அவை ஆல்கஹால், ஒரு மனத் தளர்ச்சி (சிறிய அளவிலான தூண்டுதல்) மற்றும் தூண்டிகள் நிகோடின் மற்றும் காஃபின் ஆகியவை அடங்கும். இந்த மூன்று உலகளவில் மிகவும் பரவலாக நுண்ணுணர்வு மருந்துகள் [10] மற்றும் அவை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. [11] மற்ற பொழுதுபோக்கு மருந்துகள் ஹாலியூசினோஜன்கள், ஓபியேட்ஸ் மற்றும் ஆம்பெட்டமைன்கள் மற்றும் இவை சில ஆன்மீக அல்லது மத அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. சில மருந்துகள் அடிமையாக்கும் [12] மற்றும் அனைத்து மருந்துகளும் பக்க விளைவுகள் ஏற்படலாம். [13] தூண்டுதலின் அதிகப்படியான பயன்பாடு தூண்டும் உளப்பிணி ஊக்குவிக்கலாம். பல பொழுதுபோக்கு மருந்துகள் சட்டவிரோதமானவையாகும், அவை தடை செய்யப்படுவதற்காக நோர்கோடிக் மருந்துகளின் ஒற்றை மாநாடு போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளன + + + இக்கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது + + + +மருந்தியல் + +மருந்தியல் (, "ஃபார்மகோன்" , "மருந்து"; மற்றும் , "-லாஜியா" என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது) என்பது மருந்து செயல்பாட்டினைப் பற்றிய துறையாகும். குறிப்பாக இது, வாழும் உயிர்கள் மற்றும் இயல்பான உயிர்வேதியியல் செயல்பாட்டை மாற்றியமைக்கும் புற உருவாக்கத்தின் மூலம் உருவான வேதிப்பொருள்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள இடைசெயல்களைப் பற்றிய கல்வியாகும். பொருள்களுக்கு மருந்தியல் பண்புகள் இருந்தால், அவை மருந்தியல் பொருள்களாகக் கருதப்படுகின்றன. மருந்து இயைபு மற்றும் பண்புகள், இடைசெயல்கள், நச்சுத்தன்மை, சிகிச்சை மற்றும் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோய்த்தாக்க எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது. மருந்தியல் என்பதும் மருந்தாள்மை என்பதும் ஒன்றல்ல, மருந்தாள்மை என்பது ஒரு தொழிலைக் குறிக்கும், இருப்பினும் பொதுப் பயன்பாட்டில் இவை இரண்டும் பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. மருந்தியலானது ஒரு செயல்பாட்டைப் பாதிப்பதற்காக மருந்துகள் எவ்வாறு உயிரியல் அமைப்புகளுடன் இடைசெயல் புரிகிறது என்பதைப் பற்றியதாகும். இது மருந்துகள், மருந்துகளுக்கு உடலின் எதிர்வினைகள், மருந்தின் மூலங்கள், அவற்றின் இயல்புகள் மற்றும் அவற்றின் பண்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவாகும். மாறாக, மருந்தாள்மை என்பது மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க பயன்பாட்டைப் பற்றிய மருத்துவ அறிவியலாகும். + +மருத்துவ மருந்தியலின் தோற்றமானது, ஏவிசென்னாவின் "த கேனன் ஆஃப் த மெடிசின்" , பீட்டர் ஆஃப் ஸ்பெயி��ின் "கம்மெண்ட்டரி ஆன் இசாக்" மற்றும் ஜான் ஆஃப் செயிண்ட் அமாண்டின் "கம்மெண்ட்டரி ஆன் அண்டிடோட்டரி ஆஃப் நிக்கோலஸ்" ஆகியவற்றிலிருந்து இடைக்காலத்திலிருக்கலாம் என்று அறியப்படுகிறது. மருந்தியல் என்பது 19ஆம் நுற்றாண்டின் இடைப்பகுதி வரையில் அக்காலத்தின் பெரும் உயிர்வேதியியல் மறுஆய்வாளர்களிடையே ஒரு அறிவியல் பூர்வமான கல்வித் துறையாக வளர்ச்சி பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பாதிக்கு முன்பு, மார்ஃபின், குவினைன் மற்றும் டிஜிட்டாலிஸ் போன்ற மருந்துகளின் குறிப்பிடத்தக்க திறன் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் போன்றவை தெளிவாக விளக்கப்படவில்லை, மேலும் அவை சில குறிப்பிட்ட சில உறுப்புகள் அல்லது திசுக்களுடனான அற்புதமான வேதியியல் ஆற்றல்கள் மற்றும் ஈர்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே விளக்கப்பட்டன. சிகிச்சை மருந்துகள் மற்றும் நச்சுகள் எவ்வாறு தங்கள் விளைவுகளை உருவாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையினை அங்கீகரிக்கும் வகையில் 1847 இல் ருடோல்ப் புச்செயிமால் முதல் மருந்தியல் துறை உருவாக்கப்பட்டது. + +பழங்கால மருந்தியலாளர்கள், இயற்கைப் பொருள்களிலேயே, குறிப்பாக தாவர சாரங்களிலேயே கவனம் செலுத்தினர். மருந்தியலானது 19ஆம் நூற்றாண்டில் சிகிச்சைச் சூழல்களுக்கு அறிவியல் பூர்வமான சோதனைகளைப் பயன்படுத்தும் உயிர்மருத்துவ அறிவியலாக வளர்ந்தது. + +மருந்தியலானது மருந்தியலாளர்களால் வேதி அறிவியலாகப் பயிற்சி செய்யப்படுகிறது. அதன் துணைப் பிரிவுகளில் பின்வருவன அடங்கும் + +வேதிப்பொருள்களைப் பற்றிய ஆய்வுக்கு பாதிக்கப்படும் உயிரியல் அமைப்பு பற்றிய நெருங்கிய அறிவு அவசியமாகும். செல் உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய துறைகளிலான அறிவு வளர்ந்துகொண்டே வரும் நிலையில், அதன் விளைவாக மருந்தியல் துறையும் மாறியுள்ளது. ஏற்பிகளின் மூலக்கூறியல் பகுப்பாய்வின் மூலம் குறிப்பிட்ட செல்லியல் சமிக்ஞைகள் அல்லது (செல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் செல்லியல் சமிக்ஞை அனுப்பும் பாதைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் மட்டுப்படுத்தும்) செல் ஏற்பிகளின் மேலுள்ள இடங்களை நேரடியாக பாதிப்பதன் மூலம் வளர்சிதைமாற்றப் பாதைகளைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருள்களை வடிவமைப்பது சாத்தியம���கியுள்ளது. + +மருந்தியலின் கருத்துக்கோணத்தின் படி ஒரு வேதிப்பொருளுக்கு பல்வேறு பண்புகள் உள்ளன. மருந்தியக்கத்தாக்கியல் வேதிப்பொருளின் மீதான உடலின் விளைவுகளையும் (எ.கா. அரை ஆயுள் காலம் மற்றும் பரவல் கன அளவு), மருந்தியக்கச்செயலியல் உடலின் மீதான மருந்தின் (விரும்பப்படும் அல்லது நச்சுத் தன்மை கொண்ட) விளைவுகளையும் விவரிக்கிறது. + +ஒரு வேதிப்பொருளின் மருந்தியக்கசெயலியல் பண்புகளை விவரிக்கும் போது, மருந்தியலாளர்கள் பெரும்பாலும் "LADME" ஐக் கருத்தில்கொள்கின்றனர்: + +மருந்துகளுக்கு ஒரு குறுகிய அல்லது பரந்த "சிகிச்சையியல் குறியீடு" அல்லது "சிகிச்சையியல் சாளரம்" இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நச்சுத் தன்மைகொண்ட விளைவுக்கான விரும்பப்படும் விளைவேற்படுத்தல் விகிதத்தை விவரிக்கிறது. குறுகிய சிகிச்சை குறியீடு (ஒன்றுக்கு நெருங்கிய மதிப்பு) கொண்ட ஒரு சேர்மம் அதன் நச்சுத் தன்மை அளவுக்கு அருகாமை மதிப்பிலான விரும்பத்தக்க விளைவை வழங்குகிறது. பரந்த சிகிச்சைக் குறியீடு (ஐந்துக்கும் அதிகம்) கொண்ட ஒரு சேர்மாமானது அதன் நச்சுத் தன்மை அளவுக்கும் மிகவும் குறைவான விரும்பத்தக்க விளைவைக் கொடுக்கிறது. குறைந்த மதிப்பு கொண்டவற்றை அளவறிதலும் நிர்வகிப்பதும் கடினமாகும், மேலும் அவற்றுக்கு சிகிச்சையியல் மருந்து கண்காணிப்பு தேவையாகலாம் (வேஃபரின், சில வலிப்புத் தாக்க எதிர்ப்பான்கள், அமினோகிளைக்கோசைடு நோய்க்கிருமி கட்டுப்படுத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்). பெரும்பாலான புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் குறுகிய சிகிச்சைக் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளன: கட்டிகளை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் அளவுகளின் போது எப்போதும் நச்சுத் தன்மை கொண்ட பக்க விளைவுகள் எதிர்கொள்ளப்படுகின்றன. + +மருந்துகளின் உருவாக்கம் என்பது மருத்துவத்தின் மிகவும் முக்கியமான விவகாரமாகும், ஆனால் அதற்கு வலுவான பொருளாதாரவியல் மற்றும் அரசியல் தாக்கங்களும் உள்ளன. நுகர்வோர் மீதான முறைகேட்டுப் பயன்பாட்டைத் தடுக்க, பல அரசாங்கங்கள் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் நிர்வகித்தலை ஒழுங்குபடுத்துகின்றன. அமெரிக்காவில், மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகமாகும், மேலும் அது அமெ��ிக்க மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது. ஐரோப்பிய யூனியனில் மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு EMEA ஆகும், அது ஐரோப்பிய மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது. + +பல உறுப்பு மருந்துகளைக் கொண்ட மொத்த மருந்துக்கூட்டமைப்பின் வளர்சிதைமாற்ற நிலைத்தன்மை மற்றும் வினைபுரிதல் தன்மை ஆகியவற்றின் மருந்தியல் வளர்சிதைமாற்றத் தன்மை மற்றும் நச்சியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மருந்தியல் வளர்சிதைமாற்றத்திற்கான அளவறி முன்கணிப்புக்கான பல முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன; SPORCalc என்பது சமீபத்திய கணிப்பு முறைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். ஒரு மருந்து சேர்மத்தின் வேதிக்கட்டமைப்பு சிறிதளவு மாற்றப்பட்டால், அது சிறிதளவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ சேர்மத்தின் மருத்துவ குணங்களை மாற்றக்கூடும், அது தனது மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அடிமூலக்கூறு அல்லது ஏற்பியின் இடம் ஆகியவற்றின் கட்டமைப்பு இயைபுடன் தொடர்புடையதாக இருப்பதால் இந்த விளைவு மாற்றமானது அதில் செய்யப்படும் மாற்றத்தின் அளவைப் பொறுத்து இருக்கும், இந்தக் கருத்தே கட்டமைப்பியல் செயல்பாட்டு தொடர்பு (ஸ்ட்ரக்ச்சுரல் ஆக்டிவிட்டி ரிலேஷன்ஷிப்) (SAR) எனப்படுகிறது. இதில் அதாவது பயன்மிக்க செயல்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால், சேர்மத்தின் விரும்பத்தக்க மருத்துவ விளைவுகளை அதிகரிக்கும் முயற்சியாக, வேதியியலாளர் பிரிதொற்றுகள் எனப்படும் அவற்றை ஒத்த சேர்மங்களை உருவாக்குவர் என்பது இதன் பொருளாகும். இந்த உருவாக்க கட்டமானது முழுவதும் முடிய சில ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம், மேலும் இது மிகவும் செலவு நிறைந்ததும் ஆகும். + +இந்தப் புதிய பிரிதொற்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை மனிதர்கள் உள்ளெடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, மனித உடலில் அதன் நிலைத் தன்மை மற்றும் மாத்திரை அல்லது கூழ்மம் போன்ற, விரும்பிய உறுப்பு அமைப்புக்கு அதை வழங்குவதற்கானச் சிறப்பான வடிவம் ஆகியவை தீர்மானிக்கப்பட வேண்டும். முடிவதற்கு 6 ஆண்டுகள் வரையிலான காலத்தை எடுத்துக்கொள்ளும் விரிவானச் சோதனைக்குப் பிறகு, பு���ிய மருந்தானது சந்தைப்படுத்தலுக்கும் விற்பனைக்கும் தயாராகிறது. + +பிரிதொற்றுகளை உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் நீண்ட காலம் தேவைப்படுவது மற்றும் வழக்கமாக சாத்தியக்கூறுள்ள 5000 மருந்துகளில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாகச் சந்தைக்கு வருகிறது என்ற உண்மை ஆகியவற்றின் காரணமாக, இது மிகவும் செலவு மிகுந்த வழியாக உள்ளது, இதற்கு மில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவாகிறது. இந்தச் செலவை ஈடுசெய்வதற்காக மருந்தியல் நிறுவனங்கள் பலவற்றைச் செய்யக்கூடும்: + +அமெரிக்காவில், மருந்துகளின் பயன்பாட்டுக்கான ஒப்புதலளிப்பதற்கான வழிகாட்டல்களை உருவாக்குவது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) பொறுப்பாகும். FDA ஐப் பொறுத்தவரை ஒப்புதலளிக்கப்பட வேண்டிய மருந்துகள் பின்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்: + +வழக்கமாக FDA ஒப்புதல் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். விலங்குகளைக் கொண்டுச் செய்யப்பட்ட சோதனைகள் விரிவானதாகவும் மருந்தின் விளைவுத்திறன் மற்றும் நச்சுத் தன்மை ஆகியவற்றை மதிப்பிட உதவியாக இருக்கும் வகையில் பல உயிரினங்களைக் கொண்டு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒப்புதலளிக்கப்பட்ட மருந்தின் பயன்பாட்டுக்கான அளவானது ஒரு சிகிச்சைக்குரிய விளைவு அல்லது விரும்பிய விளைவை ஏற்படுத்தும் வகையிலான பொருத்தமான வரம்புக்குள் இருக்குமாறு அமைக்கப்படுகிறது. + +அமெரிக்காவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் விளைவுத்திறன் ஆகியவை, 1987 ஆம் ஆண்டின் கூட்டிணைய பரிந்துரைக்கப்படும் மருந்து சந்தைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. + +மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தல் முகமையும் (MHRA) UK வில் இதே போன்ற பங்கு உள்ளது. + +மருந்தியல் துறையிலான கல்வி உலகளவில் பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது.
+மருந்தியல் கல்வித் திட்டங்கள் மருந்தாள்மை கல்வித் திட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மருந்தியலின் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அதில் அவர்கள் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புக்கு வழிகோலும் வகையிலான இயங்கியலைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காக பொருள்களின் விளைவுகளைப் பற்றிப் படிக்கின்றனர். மருந்தாள்மை மாணவர்கள் மருந்து விநியோகிக்கும் நிறுவனங்கள் அல்லது நோயாளியின் மீது கவனம் செலுத்தும் பிற பொறுப்புகளில் இருப்பார்கள், ஆனால் மருந்தியலாளர்கள் பெரும்பாலும் ஆய்வகச் சூழலிலேயே இருப்பார்கள். + +சில உயர் கல்வி நிறுவனங்கள் மருந்தியல் மற்றும் நச்சியல் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரே கல்வித் திட்டமாக வழங்குகின்றன. மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டியும் இதைப் போன்றதே ஆகும். மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டி மருந்தியல் & நச்சியல் ஆகிய துறைகளிலான PhD பயிற்சியை வழங்குகிறது, இதனுடன் சுற்றுச்சூழல் நச்சியல் சிறப்புக் கல்வி விருப்பப்பாடமாக உள்ளது. அதில் ஒருங்கிணைக்கப்பட்ட மருந்தியலில் தொழில்முறை அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. + + + +
+ +ஏரல் கடல் + +ஏரல் கடல் ("Aral Sea") (கசாக் மொழி: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது. + +'வட ஏரல் கடல்' என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர் ஆகும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சூழ்ந்து முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. + + + + +காசுப்பியன் கடல் + +காசுப்பியன் ��டல் ("Caspian Sea") உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே. 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் (3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது. + +இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது. + +இவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர். + +இவ்வேரிக்கு அருகில் வாழந்த ஆதிகாலமக்கள் கஸ்பியன் கடலை ஒரு சமுத்திரமாக கருதினார்கள்.பெரும்பாலும், இதன் உவர்ப்புத்தன்மையும்,எல்லையற்றுக் காட்சியளிக்கும் தோற்றமும் +இதற்கு காரணமாகும். + +காசுப்பியன் என்ற சொல் கஸ்பி(பாரசீகம்:کاسپی‎)என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.ஆதிகாலமக்கள் டிரான்ஸ்கெளகேசியா பகுதயின் தென்-மேற்குப்பகுதயின் கடல்பகுதயில் வாழ்ந்துள்ளனர். காசுப்பியேன் பிரதேசம் அல்பேனிய நாட்டவர்களுக்கு சொந்தமானது என ஸ்டர்பு(Strabo) எழுதுகிறார்.இது காசுப்பியன் கோத்திரத்துக்குப்பின்னர் இப்பெயர் வழங்கப்பட்டதுடன்,கடலொன்றும் காணப்பட்டது.ஆனால் தற்போது அக்கோத்திரம் மறைந்துவிட்டது. +மேலும், காசுப்பியன் வாயில்கள்( Caspian Gates)இது ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தில் ஒரு பிரதேசத்தை குறிக்கின்றது ,அவர்கள் கடலின் தென் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தமைக்கு இது ஒரு சாத்தியமான சான்றாகும். ஈரானின் கஸ்வின் நகரம் அதன் பெயரை கடலுடன் பகிர்ந்துள்ளது.உண்மையில்,பஹ்ர் அல் கஸ்வின்(கஸ்வினின் கடல்) என்ற பாரம்பரிய அரபுமொழி பெயரால் அது அழைக்கப்படுகின்றது. + +ஏரல்கடல் மற்றும் கருங்கடல் போலவே கா��ுப்பியன் கடலும் ஆதிகால +பரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது. தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில் மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்தன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும். + +உலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன், +உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது. காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக அஸர்பைஜான்,ஈரான்,கசக்ஸ்தான்,ரஷ்யா மற்றும் துருக்மேனிஸ்தான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன் , அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது. கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும். + +மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.காசுப்பியனின் மத்தியபகுதயில் சராசரி ஆழம் 160மீற்றர்(620 அடி)ஆகும்.தென் காசுப்பியன் பிரதேசம் சமுத்திரங்கைளப் போன்று அதிக ஆழமானது.அதன் சராசரி ஆழம் 1000மீற்றர்கள���கும்(3,300 அடி).மத்திய சாசுப்பியன் பிரதேசமானது நீரின் மொத்தக்கனவளவின் 33-66 சதவீத கனவளைவைக் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் வட பிரதேசமானது பொதுவாக குளிர்காலத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறும்.மேலும்,காசுப்பியன் கடலின் தென்பகுதியும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக மாறும். + +ஏறத்தாள 120நதிகள் காசுப்பியனை நோக்கி உட்பாய்கின்றன. இதில் வோல்கா ஆறு மிகப்பெரியதாகும்.இரண்டாவது செழிப்பான,ஊறல் நதியானது வடபகுதயில் இருந்து பாய்கின்றது.மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காசுப்பியன் கடலில் சங்கமிக்கின்றது. +காசுப்பியன் பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது.இவை காசுப்பியனின் வடபகுதியில் நிலையாக அமையப்பெற்றுள்ளதுடன்,இந்நிலப்பரப்பு ஏறத்தாள 770சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டுள்ளது. + +காசுப்பியன் கடல் முழுவதும் எண்ணற்ற தீவுகள் காணப்படுவதுடன்,அவை அனைத்தும் கடற்கரைகளை அண்மித்து காணப்படுகின்றன.இத்தீவுகள் ஒன்றும் ஆழமான பகுதிகளில் இல்லை.இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவாகும்.இத்தீவானது 37கிலேமீற்றர்(23மைல்) நீளமுடையது.வட காசுப்பியன் பகுதியில் +உள்ள பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் வாழத்தகுதியற்றவையாக காணப்படுகின்றன.எனினும்,டியுலேனி அர்ச்சிபெலாகோ மற்றும் முக்கிய பறவைகள் பிரதேசம் போன்ற சில தீவுகளில் மனிதக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன. + +காசுப்பியன் கடல்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது.இது பொதுவாக உலகின் மிகப்பெரிய ஏரி என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றது.எனினும், இது நன்னீர் ஏரி அல்ல. +பல நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக காசுப்பியனின் நீர்மட்டம் கூடி,குறைந்தவாறு காணப்படுகின்றன.பல நூற்றாண்டு காலமாக காசுப்பியனின் கடல் மாட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் +வோல்கா ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவில் தாக்கம் செலுத்திவருகின்றனதுடன், இது காசுப்பியனின் பரந்த நீர்பிடுப்பு மடுவின் மீதான மழைவீழ்ச்சி மட்டத்தில் தங்கியுள்ளது.இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) கடல்மட்ட குறைவால் தொடங்கியது.இது 1997 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) ஆல் கடல்மட்டம் அதிகரித்தது.அன்று சிறியஅளவிலான +ஏற்றத��தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன. + +காசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக்குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன் +கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன. + +1950ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய துர்க்மன் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நீர் மார்க்கம் நீர்ப்பாசன தேவைகளுக்கன்றி, கப்பல் போக்குவரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது. + + + + +ஹரால்டு ஷிஃப்மன் + +கரொல்ட் ஃப் சிஃப்மன் (Harold. F. Schiffman) மேற்கத்தைய தமிழறிஞர்களில் ஒருவர். தமிழியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் செயலாற்றி தமிழ்க் கல்விக்கு உதவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். இவர் பேச்சுத் தமிழ் பற்றிய இலக்கண நூல் ஒன்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். + + + + + + +ஆன்ட்ரூ ஜாக்சன் + +ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர். + + + + +லுடுவிக் வான் பேத்தோவன் + +லூடுவிக் வான் பேத்தோவன் ("Ludwig van Beethoven", ; 1770 - மார்ச் 26, 1827) அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார். + +இவர் 1792ல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரிலேயே 1827ல் இறந்தார். + +யோகன் பீத்தோவன் மற்றும் மரியா மாக்டலேன் கவேரிச் ஆகியாரின் மகனாராக 1770ஆம் ஆண்டில் பான் என்னும் ஊரில் பிறந்தார் லூடுவிக் வான் பீத்தோவன். இவரது பிறந்த தேதி தொடர்பான முறையான ஆவணங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. லூடுவிக்கின் தந்தை யோகன் பீத்தோவன் ஒரு இசைகலைஞர் மற்றும் இசை ஆசிரியராவார். லூடுவிக்கின் முதல் இசை ஆசிரியர் அவருடைய தந்தை யோகன் தான். பின்னர் உள்ளுரில் இவருக்கு வேறு இசை ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். பிள்ளை பருவத்திலேயே இசை கற்ற தொடங்கினார் லூடுவிக். யோகன் மிக கண்டிப்பான ஆசிரியராக திகழ்ந்தவர். அச்சிறு வயதிலேயே லூடுவிக்கின் இசை திறமை வெளிப்பட தொடங்கியது. தந்தையிடன் இசை கற்றபோதே பிற இசைகலைஞர்களிடமும் இசை கற்றார் லூடுவிக். கில்லாசு ஃவான் ஈடென், தோபியாசு பிடெட்ரிச் ஃபெய்ஃபர் (பியானோ), பிரான்சு ரோவண்டினி (வயலின் மற்றும் வியோலா) போன்றோரிடமும் இசை கற்றுக்கொண்டார் இளம் லூடுவிக். லூடுவிக்கை தன் இசை வாரிசாக நிறுவ முனைந்த தந்தை யோகன் லூடுவிக்கின் ஆறாம் அகவையில் (1778ல்) அவருடைய முதல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். + +பின்னர் 1779ல் லுடுவிக் தனது வாழ்வின் முக்கியமான ஆசிரியரான கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப்பிடம் இசையமைத்தல் பற்றி கற்கத் தொடங்கினார். நீஃப்பிடம் இசை எழுத கற்றதோடு அவருடைய உதவியுடன் தனது முதல் இசை படைப்பை 1783ல் வெளியிட்டார் லூடுவிக். 1784 முதல் நீஃப்பின் துணை இசைக்கலைஞராக அரசவை இசைக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார். 1783ல் லூடுவிக் தனது முதல் மூன்று பியானோ சொனாட்டாகளை மாக்சுமிலியன் பெடரிக் என்பவருக்காக உரித்தாக்கினார். +லூடுவிக்கின் இசை திறமையினால் ஈர்க்கப்பட்டு, அவரின் இசை கல்விக்காக கொடையளித்தார் மாக்சுமில்லியன். மொசார்டுடன் இணைத்து இசை கற்பதற்காக 1787 மார்ச் மாதம் வியன்னா சென்றார். அவர்களுடை நட்பு குறித்து தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. தன் தாயாரின் மறைவு காரணமாக உடனேயே அவர் பான் திரும்பினார். தந்தையும் நோயுற்ற காரணத்தினால், குடும்ப சுமை லூடுவிக் மீது விழுந்தது. + +1796 ஆம் ஆண்டு பீத்தோவனின் 26 ஆம் வயதில் அவருக்கு காது கேளாமை ஆரம்பித்தது. கேட்கும் திறனை அவர் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கினார். + +காதிரைச்சல் நோயால் அவர் தீவிரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தார்.ஒரு விதமான இரைச்சல் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததால் அவரால் இசையை கேட்க முடியாமல் போனது. +காதில் வலி ஏற்படுவதால் அவர் பேசுவதைக்கூட குறைத்துக்கொண்டார். + +என்ன காரணத்தினால் அவருக்கு காதுகேளாமை வந்ததென்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அவருக்கு டைபஸ் நோய் இருந்தது என்று மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் அவருக்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவும் பழக்கம் இருந்தது எனவும், அதனால் இந்நோய் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உட்காதுகளில் இருந்த நாள்பட்ட புண்களே செவிட்டுத்தன்மைக்கு காரணம் என்று கூறியது. + +1801 வாக்கில் தனது காதின் நிலை பற்றி விளக்கி தன் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார் பீத்தோவன்.சில நெருங்கிய நண்பர்கள் செவிட்டுத்தன்மை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர். +பின் மருத்துவரின் ஆலோசனைபடி வியன்னாவுக்கு அருகில் உள்ள சிறிய ஆஸ்திரிய கிராமமான ஹெலிசாட்டில் வசித்து வந்தார். அவர் அங்கு 1802 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வசித்து வந்தார். + +ஹெலிசாட்டில் இருந்தபோது பீத்தோவன் தன் தமயனுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி இருந்தார். அதில் அவர் செவிட்டுத்தன்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடேன் என்று கூறீருந்தாராம். + +இறுதியில் அவரால் எதையுமே கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. தனது ஒன்பதாம் ஒத்தினி இசையை வாசிக்கும் பொழுது , அவ்விசை அவர் காதுகளிளேயெ விழவில்லையாம். பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பதும், கைத்தட்டல் ஓசைகளும் கூட அவர் காதுகளில் விழவில்லையாம். சுற்றி பார்த்துதான் அவர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டாராம் பீத்தோவன்.அதன் பின் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பதை நிறுத்திக் கொண்டாராம் பீத்தோவன்.அவரின் ஏராளமான காது கேட்கும் கருவிகள் தற்போது ஜெர்மனியின் , போன் என்னும் நகரில் உள்ள பீத்தோவனின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.(பீத்தோவனின் பிறந்த வீடே தற்போது பீத்தோவனின் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது). + +செவிட்டுத்தன்மை காரணமாக பீத்தோவன் உரையாடல்களை நோட்டுபுத்தகத்த்ல் நிகழ்த்த தொடங்கினார்.அவரின் நண்பர்கள் சொல்லவிரும்புவதை உரையாடல் கையேட்டில் எழுதுவார்கள். அதற்கு பீத்தோவன் வாய் மொழியாகவோ, அல்லது எழுத்து மூலியமாகவோ பதில் அளிப்பார்.இவ்வாறு பீத்தோவன் 400 உரையாடல் கையேடுகளை வைத்திருந்தார்.அதில் 264 கையேடுகள் அவரின் இறப்பின் பின் அழிக்கப்பட்டன.மீதம் உள்ளவற்றையும் சில மாறுதல்களை செய்து மக்களின் காட்சிக்கு வைத்துள்ளனர். + +பீத்தோவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான காதுவலியால் அவதிப்பட்டே கழிந்தது. இருபதாவது வயது முதலே எரிச்சலூட்டும் கடுமையான வயிற்று வலியாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பீத்தோவானுக்கு தற்கொலை செய்து கொள்ளூம் எண்ணம் தோன்றியதாகவும் பதிவு செய்துள்ளார். இருமுனையப் பிறழ்வு எனப்படும் மனநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அறியப்படுகிறது . ஆயினும்கூட, அவருடைய வாழ்நாள் முழுவதும் நெருங்கிய மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பர்களின் வட்டத்தை இவர் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையின் முடிவில், பீத்தோவனின் நண்பர்கள் அவரது தனிப்பட்ட செயல்திறன்கள��க்குன் கூட அவருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டனர் . + +பீத்தோவன் தனது படைப்புகளை வெளியிட்டும் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருமானத்தை ஈட்டினார். ஆனாலும், வருவாய்க்கு ஆதரவாளர்களின் தாராள மனப்பான்மையை அவர் சார்ந்திருந்தார், இளவரசர் லோக்கோவிட்சு மற்றும் இளவரசர் லிச்னொவ்சுகி உள்ளிட்ட ஆரம்பகால ஆதரவாளர்கள் கூடுதலாக இவருக்கு வருடாந்திர உதவித்தொகையை அளித்தனர். + +பேத்தோவன் தனது மீதமுள்ள மாதங்களில் பெரும்பாலான நாட்கள் படுக்கையிலேயே இருந்தார். அவர் ஒரு இடியுடன் கூடிய மழை நாளில், தனது 56 ஆம் வயதில் மார்ச் 26,1827 அன்று கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.அவரின் பிரேத பரிசோதனையில் அதிக மது அருந்துதல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.பீத்தோவனின் இறுதி ஊர்வலத்தில் வியன்னாவின் குடிமக்கள் 20,000 பேர் கலந்து கொண்டனராம். + +பல வாழ்க்கை வரலாற்றுத் திரைபடங்களில் பீத்தோவானின் வாழ்க்கை மையப் பொருளாக இடம்பெற்றுள்ளது. +பீத்தோவான்சு டென்த் என்றவொரு நாடகத்தில் பீட்டர் உசிட்டினோவ் இரட்டை வேடங்களில் நடித்தார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் நவம்பர் 27 இல் உசிட்டினோவ் தானே முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கேற்று சியார்ச்சு ரோசு உள்ளிட்ட துணை நடிகர்களுடன் இணைந்து நடித்தார் . + +பீத்தோவன் நினைவுச்சின்னம், பான் நகரில் அவரது 75 வது ஆண்டு நினைவாக 1845 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. செருமனியில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும். பிரான்சு லிசித்து என்ற இசை வல்லுநரின் தூண்டுதலால் இக்கலை அரங்கம் ஒரே மாதத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வொல்ஃப்கேங்க் அமதியுசு மோட்சார்ட் என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளருக்கு 1842 ஆம் ஆண்டில் ஆசுத்திரியாவிலுள்ள சால்சுபர்க் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. ஆனால் வியன்னா நகரில் 1880 ஆம் ஆண்டு வரை பீத்தோவானுக்கு சிலையேதும் வைக்கப்படவில்லை என அறியப்படுகிறது . + +பாசுடனில் அமைக்கப்பட்டுள்ள சிம்பொனி அரங்கத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகடுகள் ஒன்றே ஒன்றில் மட்டும் பீத்தோவானின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற தகடுகள் அனைத்தும் காலியாகவே விடப்பட்டுள்ளன என்பதை கூர்ந்து ந���க்கினால் பீத்தோவான் அடைந்திருந்த புகழின் பெருமை நன்கு விளங்கும் . +பான் நகரில் மையத்தில் ஒரு அருங்காட்சியகம், அவருடைய பிறப்பு இடமான பீத்தோவான் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதே நகரில் 1845 ஆம் ஆண்டு முதல் ஒரு இசை விழா, பீத்தோவென் இசைவிழா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நடைபெறாமல் இருந்தது, ஆனால் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. + +புதன் கோளின் மீதுள்ள மூன்றாவது பெரிய கிண்ணக்குழிக்கு பீத்தோவானின் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. + +பீத்தோவனின் மூன்று உலக புகழ் பெற்ற இசைகள். + + + + + + + +நியூட்டனின் முதலாவது விதி + +நியூட்டனின் முதலாவது விதி ("Newton's first law: law of inertia") என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி ஐசாக் நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் முதலாவதாகும். இவ்விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: "ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்". இவ் விதியை ஐசாக் நியூட்டன் 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் எழுதியுள்ளார். + +ஐசாக் நியூட்டனின் முதல் விதியின் இலத்தீன் மொழிக் கூற்று: + +Lex I: Corpus omne perseverare in statu suo quiescendi vel movendi uniformiter in directum, nisi quatenus a viribus impressis cogitur statum illum mutare. + +நியூட்டனின் முதல் விதியை அசையாநிலை விதி ("law of inertia") என்பர். அதாவது விசை ஏதும் இல்லை என்றால் ஒரு பொருளானது தன் நிலையிலேயே (அசையாமலோ, தான் ஒரே சீரான விரைவோடு சென்றுகொண்டிருந்த நிலையிலோ) இருக்கும் என்பதாகும். + +உரை : ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது. +பொருளின் இந்த பண்பே நிலைமம் எனப்படுகிறது. நிலைமம் பற்றி அறிய இவ்விதி உதவுகிறது. + +இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு மட்டுமே பொருந்தும்; நிலைமம்-சாரா குறிப்பாயங்களுக்கு பொருந்தாது. இந���த விதி விசையை ஒரு பண்பறி அளவில் வரையறுக்கின்றது. + + + + + +நியூட்டனின் இரண்டாம் விதி + +நியூட்டனின் இரண்டாவது விதி என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் இரண்டாவதாகும். நியூட்டனின் இரண்டாம் விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: +ஒரு விசையானது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது நேரத்திற்கு நேரம் விரைவு அல்லது திசைவேகம் மாறுபடும் வீதத்தைக் குறிப்பது. முடுக்கம் = கால அடிப்படையில் விரைவு அல்லது திசைவேகம் மாறும் வீதம். இவ் விதியை நியூட்டன் அவர்கள் 1687ல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் எழுதியுள்ளார். + +உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும். + + + + + +பாமணி நாகநாதர் கோயில் + +பாமணி நாகநாதர் கோயில் (பாதாளேச்சுரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 104ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாதாளத்திலிருந்து ஆதிசேடன் தோன்றி வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. + +தனஞ்சயர் வடிவில் ஆதிசேஷன் வந்து தரிசனம் செய்ததால் தனஞ்சயருக்கு சந்நிதி உள்ளது. இறைவனார் காமதேனுவுக்கு அருள்புரிந்த தலம் + + +அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + + +திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் + +திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவ���ரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. +இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. + +களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம். + +கோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது. + + + + + +சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் + +சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. + +இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம். + + + + + +கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில் + +கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில் (திருவுசாத்தானம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் முத்துப்பேட்டை அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் விசுவாமித்திரருக்கு நடனக்காட்சி அருளினார் என்பதும் இராமர் சேது அணை கட்டுவதற்காக இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றார் என்பதும் தொன்நம்பிக்கைகள். + + + + +இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் + +இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துற���ப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி. + +இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம். + +இக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர். + +இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்: + + +நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம் +பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக் +கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி +ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. + + + + + +கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் + +கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும். + +இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர். + +இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம். + +இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. + + + + + +தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் + +தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 110ஆவது சிவத்தலமாகும். + +இத்தலத்தில் அரிவாட்டாய நாயனார் முத்தி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. அரிவாட்டாய நாயனார் அவதாரத் தலம் இதே ஊரில் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் எனும் மற்றோர் சிவத்தலமும் உள்ளது + +ஆமை அவதாரம் எடுத்த திருமால் செருக்கால் கடலைக் கலக்கிய ��ோது சிவபெருமான் ஆமையைக் கொன்று ஆமை ஓட்டினை அணிந்தருளிய தலம். + +இத்தல இறைவனாரைப் பற்றி படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலை நீள்நெறி எனும் சதக நூல் ஆகும். + + + + + +கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் + +கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது சிவத்தலமாகும். திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் கொழுந்தீஸ்வரர்,இறைவி மதுரபாஷிணி. + +இத்தலத்தில் அரம்பையும் ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் + +திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. இத்தலம் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார் என்பது தொன்நம்பிக்கை.இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது. + +சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே. + +விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர் + +இது முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் அழைக்கப்படும். கோயிலுக்கு மேற்கே இந்த ஆறு ஓடுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடஞ்செலுத்தியது. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர். இது ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. + +ஓட விழா, ஐப்பசி அமாவாசையில் நடத்தப்பெறுகிறது. இவ்விழா இத்திருகோயிலில் நடைபெறும் சிறப்பான விழாவாகும். + + + + + +வினைப் பெயர் + +வினைச்சொல்லில் இருந்து உருவாகும் பெயர்ச்சொல் வினைப் பெயர் எனப்படுகின்றது. வினைப் பெயர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை: + + +ஆக்கப் பெயர்கள் வினைச் சொல்லிலிருந்து தோன்றினாலும், அவை எல்லா விதங்களிலும் ஒரு பெயர்ச் சொல்லைப் போலவே செயற்படுகின்றன. "ஒழுக்கம், மறைவு, வளர்ச்சி, எழுச்சி, சிறப்பு" என்பன ஆக்கப் பெயர்கள் ஆகும். இவை வினைச்சொற்களான, ஒழுகு, மறை, வளர், எழு, சிற ஆகிய வினைச் சொற்களில் இருந்து உருவாகின்றன. இவை, சொற்றொடர்களில் எழுவாயாக வருதல், பெயரெச்சங்களை ஏற்றல், வேற்றுமைகளை ஏற்றல் முதலிய பெயர்ச் சொற்களுக்கு உரிய பண்புகளை உடையவை. + +தொழிற் பெயர்கள் பெயர்களைப் போலச் செயற்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் வினச் சொற்களின் பண்புகளையும் வெளிக்காட்டுகின்றன. தொழிற் பெயர்களைக் "காலம் காட்டாத தொழிற் பெயர்கள்", "காலம் காட்டும் தொழிற்பெயர்கள்" என இரண்டாக வகுத்துப் பார்க்க முடியும். + + + + +கரிமச் சேர்மம் + +கரிமவேதியியல் சேர்மம் ("Organic compund") அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் ("Carbon compound") என்பது, கரிமம், ஐதரசன் (ஹைட்ரஜன்) ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்வையைக் குறிக்கும். இதனால், கார்பைட்டுகள், காபனேட்டுகள் (காபனேற்றுகள்) போன்றவையும் தனிமக் கரிமமும் கரிமவேதியியலைச் சேர்ந்தவை அல்ல. அறியப்பட்ட வேதியியல் சேர்வைகளுள் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவை கரிமவேதியியல் சேர்வைகள் ஆகும். இதனால், இவற்றை வகைப்படுத்துவதற்கு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சில கரிமவேதியியல் சேர்வைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + +சுவீடிசு தமிழியல் + +சுவீடிசு தமிழியல் ("Swedish Tamil Studies") என்பது சுவீடன் மற்றும் சுவீடிசு மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். + + + + + +பென்சீன் + +பென்சீன் என்பது ஆறு கரிம அணுக்கள் ஒரு வளையம் போல் சேர்ந்து உருவாகும் ஒரு கரிமவேதியியல் சேர்வையாகும். இதன் வேதியியல் குறியீடு CHஆகும். ஐதரசன் மற்று���் கார்பன் அணுக்கள் மட்டுமே இணைந்து பென்சீன் உருவாவதால் இதுவும் ஒரு ஐதரோ கார்பனாகவே கருதப்படுகிறது. இது சுருக்கமாக Ph-H எனவும் குறிக்கப்படுவதுண்டு. பென்சீன், ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மம் (திரவம்). ஒப்பீட்டளவில் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டது. இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டதால், எரிபொருட்களில் இவற்றைச் சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொழில்துறையில் ஒரு முக்கியமான கரைப்பானாகப் பயன்படுவதுடன், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், செயற்கை இறப்பர், மற்றும் சாயப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணிப் பொருளாகவும் உள்ளது. பென்சீன், கச்சா எண்ணெயில் ஒரு சேர்பொருளாக உள்ளது. ஆனாலும், இது பெட்ரோலியப் பொருட்களில் இருக்கும் வேறு சேர்வைகளிலிருந்து செயற்கையாக ஆக்கப்படுகின்றது. + +"பென்சீன்", என்ற சொல் பென்சோயின் பிசின் என்ற இத்தாலிய சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். சில நேரங்களில் இது "பெஞ்சமின் பிசின்" அல்லது சாம்பிராணி பிசின் என்றும் அழைக்கப்படுகிறது, பதங்கமாதல் மூலமாக பென்சோயினிலிருந்து ஒரு அமிலத்தன்மை கொண்ட பொருளாக இது வடித்தெடுக்கப்பட்டு பென்சாயின் மலர்கள் அல்லது பென்சாயிக் அமிலம் எனப்பெயர் சூட்டப்பட்டு இறுதியாக பென்சால் அல்லது பென்சீன் என்ற பெயரைப் பெற்றது. + +1825 ஆம் ஆண்டு, ஒளியூட்டப்பட்ட எரிவாயுவை உற்பத்தி செய்யும்போது எண்ணெய்பசை கொண்ட ஒரு வீழ்படிவாக மைக்கேல் பாரடே பென்சீனைத் தனிமைப்படுத்தினார். ஹைட்ரஜனின் பைகார்புரெட் என்று அதற்கு பெயருமிட்டார் + +1833 இல், இலார்டு மிட்செர்லி என்பவர் பென்சாயிக் (பென்சோயின் பிசின்) அமிலம் மற்றும் சுண்ணாம்பை வடிகட்டுதல் வழியாக ஒரு கலவையைத் தயாரித்து அதற்கு பென்சீன் என்ற பெயரைக் கொடுத்தார். + +1836 ஆம் ஆண்டில், பிரஞ்சு வேதியியலாளர் அகஸ்டி லாரெண்ட் என்பவர் இக்கலவைக்கு பீனே என்று பெயரிட்டார்.. ஹைட்ராக்சில் ஏற்றம் பெற்ற பென்சீனான பினால் சேர்வைக்கும் மற்றும் பென்சீனிலிருந்து தனி ஹைட்ரஜன் அணு பிரித்தெடுப்பு எதிர்வினையின் மூலமாக உருவாகும் பினைல் தனிஉறுப்புக்கும் இப்பெயரே வேர்ச் சொல்லாக அமைந்தது + + + + +நிகழ்தகவு + +நிகழ்தகவு "(Probability)" என்பது ஒரு நிகழ்ச்சி நிகழவல்ல வாய்ப்பின் அளவாகும். ���ிகழ்தகவு சுழிக்கும் ஒன்றுக்கும் இடையில் உள்ள எண்ணாக அமைகிறது; இங்கு, மேலோட்டமாக கருதினால், 0 என்பது நிகழும் வாய்ப்பின்மையைச் சுட்டும்; 1 என்பது நிகழவல்ல உறுதிப்பாட்டைக் குறிக்கும். ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு உயர்வாக அமையும்போது, அந்நிகழ்வு கூடுதலான வாய்ப்புடன் நிகழும். எளிய எடுத்துகாட்டாக ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுதலாகும். நாணயம் சமச்சீரினதாகையால் தலை விழுதலும் பூ விழுதலும் சம நிகழ்தவுடையவை ஆகும்; அதாவது தலை விழுதலின் நிகழ்தகவு பூ விழுதலின் நிகழ்தகவுக்குச் சமமாகும்; மேலும் வேறு நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இல்லாத்தால், தலையோ பூவோ விழும் வாய்ப்பு 1/2 ஆகும். இதை 0.5 எனவோ 50% எனவோ கூட எழுதலாம். + +இந்தக் கருத்துப்படிமங்கள் நிகழ்தகவுக் கோட்பாட்டில் கணிதமுறை அடிக்கோளியலாக குறிவழி விளக்கப்படுகிறது; இக்கோட்பாடு கணிதம், புள்ளியியல், சீட்டாட்டம், அறிவியல் (குறிப்பாக, இயற்பியல்), செயற்கை நுண்மதி/எந்திரப் பயில்வு, கணினி அறிவியல், ஆட்டக் கோட்பாடு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயன்படுகிறது. எடுத்துகாட்டாக, இவற்றில் அமையும் நிகழ்ச்சிகளின் எதிபார்க்கும் நிகழ்திறத்தின் அல்லது நிகழ்மையின் உய்த்தறிதலைக் கணிக்கப் பயன்படுகிறது. இக்கோட்பாடு சிக்கலான அமைப்புகளின் இயக்கத்தையும் ஒழுங்குபாடுகளையும் விவரிக்கவும் பயன்படுகிறது. + +நிச்சயமற்ற தன்மையை அளவிடுவதற்கு, டெம்ப்ஸ்டர்-ஷாஃபர் கோட்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு போன்ற கோட்பாடுகளும் உள்ளன. ஆனால் இவை நிகழ்தகவின் விதிகளிலிருந்து மாறுபட்டிருப்பதுடன், அதனுடன் ஒத்திசைவதும் இல்லை. + +நாணயத்தைச் சுண்டிவிடுதல் போன்ற தூய கோட்பாட்டுச் சூழலில் நன்கு வரையறுத்த தற்போக்கியலான செய்முறைகளை ஆயும்போது, நிகழ்தகவுகளை தேவைப்படும் அல்லது விரும்பும் விளைவுகளின் எண்ணிக்கையை மொத்த விளைவுகளின் எண்ணிக்கையால் வகுத்துவரும் எண்களால் குறிப்பிடலாம். எடுத்துகாட்டாக, ஒரு நாணயத்தை இருமுறை சுண்டிவிடும்போது "தலை-தலை", "தலை-பூ", "பூ-தலை", "பூ-பூ" விளைவுகள் ஏற்படலாம். "தலை-தலை" விளைவைப் பெறும் நிகழ்தகவு 4 விளைவுகளில் 1 ஆக அல்லது ¼ ஆக அல்லது 0.25ஆக (அல்லது 25% ஆக) அமையும். என்றாலும் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரும்போது, நிகழ்தகவு விளக்கங்களில் இரண்டு சம முதன்மையான கருத்தினங்கள் அமையும். இந்தக் கீழுள்ள இருவகைக் கருத்தினங்களைச் சார்ந்தவர்கள் நிகழ்தகவின் அடிப்படைத் தன்மையைப் பற்றி வேறுபட்ட இருவேறு கண்ணோட்டங்களைப் பெற்றிருப்பர்: + + + +நிகழ்தகவைக் குறிக்கும் "probability" எனும்சொல் இலத்தீன "probabilitas" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு "probity" என்ற பொருளும் உண்டு. ஐரோப்பாவில் இச்சொல்லுக்குச் சட்டத்துறை வழக்கில் "சாட்சியத்துக்கான சான்றாண்மை அளவு" என்று பொருள்படும்; இது சாட்சி சொல்லுபவரின் சமூகநிலையைக் (நேர்மைத்திறத்தைக்) குறிக்கும். என்றாலும் இப்பொருள் இன்றைய நிகழ்தகவு எனும் பொருளில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. மாறாக, நிகழ்தகவு என்பது விரிநிலை ஏரண வழியிலும் புள்ளியியல்சார் உய்த்தறிதல் வாயிலாகவும் பெறும் புலன்சார் சான்றின் நீர்மை அளவைக் குறிக்கும். + +பல முடிவுகளைத் தரும் ஒருசெய்முறையைக் கருதுக. அனைத்து வாய்ப்புள்ள முடிவுகளின் தொகுப்பு செய்முறையின் பத்க்கூற்று வெளி எனப்படுகிறது. பதக்கூற்று வெளியின் அடுக்குக் கணம், வாய்ப்புள்ள முடிவுகளின் அனைத்து வேறுபாட்ட தொகுப்புகளையும் கருதிப் பார்த்து உருவாக்கப்படுகிறது. எடுத்துகாட்டாக, ஓர் ஆறுபக்கத் தாயத்தை உருட்டினால், ஆறு வாய்ப்புள்ள முடிவுகள் கிடைக்கும். வாய்ப்புள்ள முடிவுகலின் ஒரு தொகுப்பு தாயத்தில் உள்ள ஒற்றைப்படை எண்களைத் தருகிறது. எனவே, {1,3,5} எனும் உட்கணம் தாயம் உருட்டல்கள் சார்ந்த பதக்கூற்று வெளியின் அடுக்குக் கணத்தில் ஓர் உறுப்பாகும். இத்தொகுப்புகள் "நிகழ்ச்சிகள்" எனப்படுகின்றன. இந்த நேர்வில், {1,3,5} என்பது தாயம் ஒற்றைப்படை எண்ணில் விழும்நிகழ்ச்சி ஆகும். முடிவுகள் உண்மையில் தரப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நேர்ந்தால், அப்போது அந்நிகழ்ச்சி நேர்ந்ததாகச் சொல்லப்படும். + +நிகழ்தகவு என்பது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சுழியில் இருந்து ஒன்று வரையில் அமையும் மதிப்பினை ஒதுக்கித்தரும் வழிமுறையாகும்; இதற்கு அந்த நிகழ்ச்சி அனைத்து வாய்ப்புள்ள முடிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கவேண்டும். நமது எடுத்துகாட்டில், {1,2,3,4,5,6} எனும் நிகழ்ச்சிக்கு 1 எனும் மதிப்பு தரப்படும். நிகழ்தகவு எனும் தகுதியைப் பெற, தரப்படும் மதிப்புகள் ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவு செய்யவேண்டும் நாம் தம்முள் விலகிய நிகழ்ச்சிகளின் (பொது முடிவுகள் தம்முள் அமை���ாத நிகழ்ச்சிகள். எ.கா: {1,6}, {3}, {2,4} ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்துமே தம்முள் விலகியவை) தொகுப்பைக் கருதினால் , இந்த நிகழ்ச்சிகளில் ஏதாவதொன்று நேரக்கூடிய நிகழ்தகவு, அனைத்து தனித்தனி நிகழ்ச்சி சார்ந்த நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாக அமையும். + +"A" எனும் நிகழ்ச்சியின் நிகழ்தகவு formula_1, formula_2, அல்லது formula_3 என எழுதப்படும். நிகழ்தகவுக்கான இந்தக் கணித வரையறை ஈறிலிப் (முடிவிலிப்) பதக்கூற்று வெளிகளுக்கும் எண்ணமுடியாத பதக்கூற்று வெளிகளுக்கும், ஓர் அளவு அல்லது கணியம் சார்ந்த கருத்துப்படிமத்தைப் பயன்படுத்தி, விரிவுபடுத்தலாம். + +ஒரு செய்முறையின் ஒரு செயல்பாட்டில் "A" , "B" ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பட்டால், இது "A" , "B" ஆகியவற்றின் இடைவெட்டு அல்லது கூட்டு நிகழ்தகவு எனப்படும்; இது formula_4 எனக் குறிக்கப்படும். + +இரு நிகழ்ச்சிகள் "A" , "B" ஆகியவை தற்சார்பினவாக அமைந்தால், அப்போது அவற்றின் கூட்டு நிகழ்தகவு பின்வருமாறு. + +எடுத்துகாட்டாக, இரு நாணயங்கள் சுண்டிவிடப்பட்டால், இரண்டுமே தலையாக விழும் வாய்ப்பு, formula_6 ஆகும். + +ஒரு செய்முறையின் ஒற்றை செயல்பாட்டில் நிகழ்ச்சி "A" அல்லது நிகழ்ச்சி "B" ஏற்பட்டால், அது நிகழ்ச்சிகள் "A", "B" ஆகிய இரண்டன் ஒன்றல் அல்லது ஒருங்கல் எனப்படுகிறது; இது formula_7 எனக் குறிப்பிடப்படுகிறது. + +இரு நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று தம்முள் விலகி அமைந்தால். அப்போது அவற்றில் ஏதாவது ஒன்று நிகழும் நிகழ்தகவு பின்வருமாறு அமையும். + +எடுத்துகாட்டாக, ஆறுபக்க தாயத்தில் 1 அல்லது 2 உருளும் வாய்ப்பு, formula_9 + +நிகழ்ச்சிகள் தம்முள் ஒன்றையொன்று விலக்கிகொள்ளாதனவாக அமைந்தால், அப்போது + +"கட்டுத்தளையுள்ள நிகழ்தகவு (Conditional probability)" என்பது "B" எனும் நிகழ்ச்சியின் நிகழ்ந்த எண்ணிக்கை/நிகழ்வு தரப்பட்டநிலையில், வேறொரு நிகழ்ச்சி "A"வின் நிகழ்தகவாகும். +கட்டுத்தளையுள்ள நிகழ்தகவு formula_11 என எழுதப்பட்டு, " "B" தரப்பட்டநிலையில் "A" வின் நிகழ்தவு" எனப் படிக்கப்படுகிறது. இது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது + +formula_13 எனில், அப்போது formula_11 மேலுள்ள கோவையால் வரையறுக்க இயலாததாகிறது. என்றாலும், சில சுழி நிகழ்தகவு நிகழ்ச்சிகளுக்கு (தொடர்ச்சியான தற்போக்கு மாறிகளில் இருந்து உருவாகும் நிகழ்ச்சிகளுக்கு), அத்தகைய நிகழ்ச்சிகளின் σ-இயற்கணித முறையைப் பயன்படுத்திக் கட்டுத்தளையுள்ள நிகழ்தகவ��� வரையறுக்க முடியும். + +எடுத்துகாட்டாக, ஒரு பையில் 2 சிவப்பு பந்துகளும் 2 நீலப் பந்துகளும் (மொத்தம் 4 பந்துகளும்) இருந்தால், சிவப்புப் பந்தை எடுக்கும் நிகழ்தகவு formula_15 ஆகும்; என்றாலும், இரண்டாவது பந்தை எடுக்கும்போது, அது சிவப்புப் பந்தாகவோ நீலப் பந்தாகவோ அமையும் நிகழ்தகவு முன்பு எடுத்த பந்தைச் சார்ந்து அமையும்; ஏற்கெனவே சிவப்புப் பந்து எடுக்கப்பட்டிருந்தால், மறுபடியும் சிவப்புப் பந்தை எடுக்கும் நிகழ்தகவு formula_16 ஆகும்; ஏனெனில், ஒரு சிவப்புப் பந்தும் இரண்டு நீலப் பந்தும் மட்டுமே எஞ்சியுள்ளதால் என்க. + +நிகழ்தகவுக் கோட்பாட்டிலும் அதன் பயன்பாடுகளிலும், பாயெசு விதி formula_17 எனும் நிகழ்ச்சியோடு, formula_18 எனும் நிகழ்ச்சியின் ஒற்றைப்படைகளை, formula_19 எனும் மற்றொரு நிகழ்ச்சியின் முன்பும் பின்பும் அமையும் கட்டுத்தளையுள்ள நிகழ்தகவோடு உறவுபடுத்துகிறது. formula_17 எனும் நிகழ்ச்சிக்கான formula_18 எனும் நிகழ்ச்சியின் ஒற்றைப் படைகள் என்பது இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகளின் விகிதமே ஆகும். formula_22 என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல தற்போக்கான நிகழ்ச்சிகளாக அமைந்தால், அப்போது இவ்விதியை பின்பானதன் வாய்ப்பு, முன்பானதன் வாய்ப்புகளின் மடங்கு விகிதத்தில் அமைவதாக, அதாவது formula_23 ஆக அமைவதாக மாற்றி உரைக்கலாம்; இங்கு, விகிதக் குறியீடு இடது பக்கம் வலதுபக்கத்துக்கு விகிதச் சார்பில் உள்ளதையும் (அதாவது, ஒரு மாறிலி மடங்குக்குச் சமமாக உள்ளதையும்) நிலையான அல்லது தரப்பட்ட formula_19 க்கு, formula_22 மாறுவதையும் குறிக்கிறது. (Lee, 2012; Bertsch McGrayne, 2012). இந்த வடிவில், இது இலாட்லாசு வடிவத்துக்கும் (1774) கவுர்னாட்டு வடிவத்துக்கும் (1843) பின்னோக்கி நம்மை இட்டுசெல்கிறது; காண்க, ஃபியென்பர்கு (2005). + + + + + + +நியூட்டனின் மூன்றாம் விதி + +நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காஎன்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்: + +இலத்தீனில்: "Lex III: Actioni contrariam semper et æqualem esse reactionem: sive corporum duorum actiones in se mutuo semper esse æquales et in partes contrarias dirigi." + +தமிழில்: "எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், தி���ையில் எதிரெதிராகவும் இருக்கும்." + +மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும். + +உரை : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. + + + + + + + +மூன்றாம் இராசசிம்மன் + +மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான். + + + + + + + + + +வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது. + +சோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது. + + + + +பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்) + +பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா ("Principia Mathematica") எனவும் பிரின்சிப்பியா ("Principia") எனவும் சுருக்கமாக அழைக்கப்படும் நூலானது ஐசாக் நியூட்டன் ஜூலை 5, 1687ல் வெளியிட்ட ஃவிலாசஃவி நாட்டுராலிஸ் பிரின்சிப்பியா மாத்த்டமாட்டிக்கா ("Philosophiae Naturalis Principia Mathematica") என்னும் நூலாகும். இது மூன்று தொகுதிகளாக வெளிவந்தது. இதில் ஐசாக் நியூட்டனின் நகர்ச்சி பற்றிய விதிகளையும், அண்டம் எங்கும் இருக்கும் பொருள்களின் ஈர்ப்பு விசை பற்றியும், கோள்களின் பாதை நகர்ச்சி பற்றிய கெப்ளரின் விதிகளை கணித முறைப்படி இவர் தருவிக்கிறார். + +நுண்கணிதம் என்னும் முறையை இவர் வகுத்து இருந்தாலும், இவருடைய இந்த பிரின்சிப்பியா என்னும் நூலில் பெரும்பாலும் வடிவவியல் கணித முறைப்படியே கருத்துக்களை நிறுவியுள்ளார். + +நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் நில உலகமானது அண்டத்தின் நடுவாக இல்லாமல், கதிரவன் நடுவாக இருக்கும் கொள்கையை முன்வைத்தார். அதற்கு உறுதுணையான செய்திகளையும் கருத்துக்களையும் தன்னுடைய 1543ல் வெளியிட்ட "டி ரெவலூசியோனிபஸ் ஆர்பியம் கோலேஸ்டியம்" , De revolutionibus orbium coelestium, (விண்ணின் உருண்டைகள் சுழலுவது பற்றி) என்னும் நூலில் வெளியிட்டு இருந்தார். பின்னர் ஜோஹானஸ் கெப்ளர் +Astronomia nova அஸ்ட்ரோனோமியா நோவா (புதிய வானியல்) என்னும் நூலை 1609ல் வெளியிட்டு இருந்தார். கெப்பளரின் செய்திகளின் படி கதிரவனைச் சுற்றிவரும் கோள்களானவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன எனவும், அதில் கதிரவன் ஒரு குவியத்தில் உள்ளது என்றும் கண்டுபிடித்து எழுதி இருந்தார். + + + + +சயங்கொண்ட சோழ சீவல்லபன் + +சயங்கொண்ட சோழ சீவல்லபன் குலசேகரன் ஆட்சியில் அரசியல் அதிகாரியாக இருந்தவன்.களவழி நாட்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியதனால் களவழி நாடாழ்வான் எனப் பட்டம் பெற்றான்.இவனைப் பற்றிய தகவல்கள் இராமநாதபுரம் கல்வெட்டுக்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. + + + + +குருகுலத்தரையன் + +குருகுலத்தரையன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சர் பதவியில் இருந்தவனாவான்.தடங்கண்ணிச் சிற்றூரில் பிறந்த இவன் இராமநாதபுரம் தித்தங்காலிலுள்ள திருமால் கோயிலைக் கட்டினான். சிவன் கோயிலையும் கட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது. 1232 ஆம் ஆண்டளவில் கற்கோயில்களாகச் செய்து நாளும் வழிபாடு செய்ய சந்தி என்ற சடங்கினை ஏற்படுத்தினான்.தென்னவன் சிற்றூர் என்ற ஊரை இறையிலியாக அளித்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.இவனது பெயரானது அரசன் வழங்கிய சிறப்புப் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. + + + + +கண்டன் காங்கேயன் + +கண்டன் காங்கேயன் சுந்தர பாண்டியனின் அரசியல் அதிகாரியாக் இருந்தவனாவான். நியமத்தில் பிறந்தவனான கண்டன் காங்கேயன் சிறுபெருச்சியூர் ஆதிச்ச தேவன் என்ற புலவனால் 'காங்கேயன் பிள்ளைத்தமிழ்' என்ற பாடலினைப் பாடப்பெற்றான்.சாத்தனேரி என்ற ஊரினைப் சுந்தர பாண்டியன் கண்டன் காங்கேயனிற்குப் பரிசாக அளித்தான். + + + + +திருக்கானப்பேருடையான் + +திருக்கானப்பேருடையான் என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த சுந்தர பாண்டியனின் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றியவனாவான்.மழவச்சக்ரவர்த்தி என்ற பட்டப்பெயரினைக் கொண்ட இவனிற்கு குருவாக ஈசுவர சிவ உடையார் திகழ்ந்தார். தனது குருவிற்கு நிலத்தினைக் காணிக்கையாக அளித்த பெருமையினையும் உடையவன் இவன். திருக்கானப்பேர் நகரில் காளையார் கோயில் என்ற ஊரில் வளர்ந்த இவன் மழவர் மாணிக்கம் என மக்களால் அழைக்கவும் பெற்றான். + + + + +இணுவில் இளந்தாரி கோயில் + +இணுவில் இளந்தாரி கோயில் யாழ்ப்பாணத்தில் வீரர் வணக்கத்தின் அடியாகத் தோன்றி வளர்ந்த கோயில்களில் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ நான்கரை மைல்கள் தொலைவில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரை ஊடறுத்துச் செல்லும் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியிலிருந்து, இணுவில் மக்லியொட் மருத்துவமனைக்கு அருகில், கிழக்குப் புறமாகச் செல்லும் ஒழுங்கையில் கால் மைல் தூரத்தில் இக் கோயில் உள்ளது. + +இணுவில் சின்னத்தம்பி புலவர் இயற்றிய 'கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூல்' கூறியதின்படி, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் மகனே இந்நூலின் பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன் ஆவான். இவனுக்கு 'இளந்தாரி' என்றொரு பெயரும் உண்டு. உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். காலிங்கராயனுக்குப் பின் கைலாயநாதன் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கினான். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் +சிறப்புகளையும் இத்தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது. + +இளந்தாரி, தாம் உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி +அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் மேலும் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப் புளியமரத்தடியில் ஆரம்பித்த 'நடுகல் வழிபாடு', இன்றைக்கு இணுவில் மக்களின் இதயம் நிறைந்த வழிபட்டுத் தலமாக "இளந்தாரி கோவில்" என்ற பெயருடன் பிரசித்தி பெற்று +விளங்குகின்றது. + + + + +சாக்கடல் + +சாக்கடல் அல்லது இறந்த கடல் ("Dead Sea, எபிரேயம்: ים המלח‎ (உப்புக் கடல்); அரபு: البحر الميت‎") என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது "சாக்கடல்" அல்லது "இறந்தகடல்" என அழைக்கப்படுகிறது. + +முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377 மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது. + +உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன. + +1960 ஆம் ஆண்டு வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது. நீர���ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பட்டதாலும் மழை குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975 ஆம் ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர் குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ் பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக்கடலுமே ஒரே வெப்பநிலையுடையதாக மாறியுள்ளது. +இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன: + +1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள கனிம உப்புக்கள்) +2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல் + +மக்னீசியம் குளோரைட் 53%, பொட்டாசியம் குளோரைட் 37%, சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8%, பல்வேறு உப்புக்கள் 2%. + +இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் அண்ணளவாக 31.5%. அதிகளவு உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட நன்னீர்/கடல்நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம் அதிகமாயிருத்தல், அதிஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்கின்றது. + +அதிகளவு உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் உப்புத்தன்மை சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும். 1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில் காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக் கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர் கண்டறிந்தனர். + +சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள் இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன. + +ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன. + +உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கண்மையில் அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது தொடக்க நூல் 19:1-9). சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில் அமைந்துள்ளது. + +எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக் கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. 'வாடி கெல்ட்'ல் உள்ள 'புனித ஜோர்ஜ்' மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள 'மர் சாபா' ஆகிய தங்குமிடங்கள் இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன. + +கலிலேயக் கடல் போன்று சாக்கடல் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம் இல்லை. பாலஸ்தீன நாட்டின் தென்கிழக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு விவிலியத்தில் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு தடவை மட்டுமே இன்றைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கே "பாலைநிலக்கடல் என்னும் சாக்கடல்" என்னும் சொற்றொடர் உள்ளது (காண்க: யோசுவா 3:14-16): +செப்துவசிந்தா என்னும் விவிலியக் கிரேக்க மொழிபெயர்ப்பில் "சமவெளிக் கடல் என்னும் உப்புக் கடல்" என்னும் விளக்கம் உள்ளது. யோவேல் நூல் 2:20) சாக்கடலை "கீழைக் கடல்" என்றும் கலிலேயக் கடலை "மேலைக் கடல் என்றும் குறிப்பிடுகிறது: + +சாக்கடல் "உப்புக் கடல்" என்று தொடக்க நூல் 19:1-3 பிரிவில் உள்ளது: + +எசேக்கியேல் நூல் எருச���ேம் கோவிலின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்தோடி, பாலைநிலத்தைச் சோலைவனமாக மாற்றி, உப்புக் கடலினை நன்னீரால் நிரப்பி வளமை கொணர்ந்ததைக் காட்சியாக விவரிக்கிறது: + +இசுலாமிய நம்பிக்கையில் சாக்கடற் பகுதி "லூத்" (கிறிஸ்தவ விவிலியத்திலும் காணப்படும் லோத்து), இவர் நபியுடனும் சம்பந்தப் படுத்தப்படுகிறார். பெடுயின் இஸ்லாமிய குழுவினரும் நீண்டகாலமாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அண்மித்த குகையொன்றிலிருந்து ஓலைச் சுருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவை சாக்கடல் ஓலைச் சுருள்கள் (Dead Sea Scrolls) என அறியப்படுகின்றன. அண்மையிலிருந்து அறிவியலாளரும் சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்லுமிடமாக மாறியுள்ளது. + + + + +வ. உ. சிதம்பரம்பிள்ளை + +வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ("V. O. Chidambaram Pillai", செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. + +வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். + +தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் க��ரப்பட்டு திலகரின் சீடரானார். + +இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார். + +வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், வண்டானம் ஒட்டப்பிடாரம் அருகில் தூத்துக்குடிமாவட்டம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். + +ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியாரிடம் சிவபுராணக்கதைகளையும் பாட்டனாரிடமிருந்து இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார். + +அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார். + +வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார். + +காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானத��ல் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார். + +வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது. + +வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள். + +தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை வ.உ.சி. சென்னை ஐஸ் ஹவுஸில் தான் சந்தித்திருக்க வேண்டும். +’சசி மகராஜ் என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’ +என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை’யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி + +வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார். + +ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்���ிய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். + +வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார். + +ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்திய��விற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர். + +இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார். + +ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை. + +சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். +தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். + +தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: +1. கூலி உயர்வு +2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை +3. மற்ற விடுமுறை நாட்கள் + +மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டம் ஒரு தனியாரின் இடத்தில் நடைப���ற்றது. நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார். + +நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களிடையே தினமும் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசினார். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள். + +இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். வ.உ.சி.தொழிலாளர்கள் 50 பேருடன் நூற்பாலை நிருவாக இயக்குனரைச் சந்தித்தார். அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அது தொழிற்சங்கங்கள் இல்லாத ஒரு காலம். இந்தியாவில் மு��ல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். வ.உ.சி. எல்லோருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்த வேலை நிறுத்தத்தின் பயனாக மற்ற ஆங்கில நிறுவனங்களின் தொழிலாளர்களும் பயன் பெற்றனர். அவர்கள் கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீ அரவிந்தர் இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதினார். + +சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள். + +வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.மக்களும் புறக்கணித்தார்கள்.அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்றனர். மக்கள் வ.உ.சி.யை அவ்வளவு மதித்தனர். அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் இருந்தனர்.சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். வ.உ.சி. யின் செல்வாக்கு அளப்பரியது. . + +வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர���கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார். + +வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார்.அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமண்ய சிவாவுடன் சென்றார். + +சுப்பிரமணிய சிவா, மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது. + +இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். + +வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள��� இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெஸ்ட் அண்ட் க்ம்பெனி" தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வை திருநெல்வேலி எழுச்சி என்று கூறுகிறார்கள். + +வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம். + +காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். + + +வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். + +நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு: + + +40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. +ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான். + +இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, "அமிர்த பஜார்", "சுதேசமித்திரன்" "இந்தியா", "ஸ்வராஜ்யா" மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தன. ஆங்கில இதழான "ஸ்டேட்ஸ் மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்று��் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்குரூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில்(பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது. + +கப்பலோட்டிய தமிழனர் வ.உ.சிதம்பரனாருக்குத் சிறைத்தண்டனை தரக் காரணமாக இருந்ததால் ஆட்சியர் ஆசு என்பாரை வாஞ்சி சுட்டுக் கொன்றதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. + +வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர். + +செக்கிழுத்த செம்மல் + +சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது. + +ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார். அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார். வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான���. வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமையாக அடித்தும் கைதிகளைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார். + +சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான். + +வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்? + +1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும். ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம் + +வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்க��ில் வசித்தார். + +வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணைக் கடை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? +1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்திஜி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்திஜியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார். + +வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார். + +கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார். + +கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கேயும் அவர் வசதியற்றவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். 1927-ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் மீண்��ும் இணைந்தார். சேலத்தில் நடந்த மூன்றாவது கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கட்சி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆனால் சேலம் மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் ஒதுங்கியே இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவர் கடைசி வரை திலகரின் சீடராகவே இருந்தார். கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார். + +1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். +வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார். + +வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை + +மெய்யறம்-1914 + +மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. +முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். + +மெய்யறிவு-1915 + +வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் போது மற்ற கைதிகளுக்கு நீதி, நெறிகளை விளக்குவார். அக்கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்கும் என்று வ.உ.சி. யிடம் கூறினார்கள். அவ்வாறு இயற்றப்பட்ட செய்யுள்களே மெய்யறிவு என்ற நூலாகும். அது 10 அதிகாரங்கள் உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுள்கள் உடையது. ஒவ்வொருசெய்யுளும் 4 வரிகள் உடையது. +இந்த நூலில் வ.உ.சி தன்னை அறிந்து கொள்வது எப்படி, நம் விதியைத் தீர்மானிப்பது எவ்வாறு, ஆரோக்கியத்தைப் பேணும் முறைகள், மனதை ஆளுவது எங்ஙனம், நம் மனத்தில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது எப்படி, உண்மை நிலையை என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார். + +பாடல் திரட்டு-1915 + +இந்நூல் பல சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இது அவரது தலை சிறந்த படைப்பாகும். + +சுயசரிதை-1946 + +இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது. + +வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். + +இன்னிலை-1917 + +வ.உ.சி. ரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்த நூலைப் படிக்கும் போது அவரது இலக்கணப் புலமையை நாம் அறிந்து கொள்ளலாம். + +சிவஞான போதம்-1935 + +சிவஞான போதம் ஒரு பக்தி நூலாகும். வ.உ.சி. இந்நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்ததில் தத்துவம் மற்றும் பக்தியில் சிறந்தவர் ஆனார். மத வேற்றுமை காண்பவர்கள் "யான், எனது" என்னும் மத வெறி பிடித்தவர்களென்றும் நாடு இருக்கும் ஒற்றுமையற்ற நிலையில் மதவேற்றுமை காண்பது நாட்டு ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்றும் வ.உ.சி. இந்நூலில் கூறுகிறார். அவர் இந்நூலில் மதங்களின் பொய்யான உயர்வு, தாழ்வு குறித்து ஒன்றும் எழுதவில்லை. + +திருக்குறள்-1935 + +பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றின் மீது வ.உ.சி.க்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரது உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. அவர் பொருள் கூறும் விதம், பல் வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் இவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என நாம் அறியலாம். + +வ.உ.சி. யால் பதிப்பி��்கப்பட்ட நூல்கள் + + +வ.உ.சி பல்வேறு விஷயங்களைப் பற்றி வெவ்வேறு பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். வ.உ.சி. எழுதிய நூல்கள் பல போதிய நிதி வசதி இல்லாததால் பதிப்பிக்கபடவில்லை. ஆனால் இப்பொழுது அக்கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. அவை காணாமல் போய்விட்டன. அவற்றுள் சில நமக்குக் கிடைத்துள்ளன. + + +வ.உ.சி.யின் அரசியல் சொற்பொழிவு + +வ.உ.சி.தலை சிறந்த மேடைப் பேச்சாளர்.சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. + +பத்திரிக்கை ஆசிரியராக வ.உ.சி. + +வ.உ.சி. விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். + +வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைச் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.கூறுகிறார். வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும். + +மனம் போல் வாழ்வு-1909 + +ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை வ.உ.சி. "மனம் போல் வாழ்வு" என்று மொழி பெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது. +வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615. + +அகமே புறம்- 1914 + +ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை வ.உ.சி. "அகமே புறம்" என்று மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவ��டையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். +வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 602. + +வலிமைக்கு மார்க்கம்- 1916 + +ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" ஆகும். அதனை வ.உ.சி. "வலிமைக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். +ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். +வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615; பக்க எண் 652-653. + +சாந்திக்கு மார்க்கம்- 1934 + +ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" ஆகும். அதனை வ.உ.சி. "சாந்திக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். +ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள் தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது. +வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 715; 740; 760; 766. + +"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" + +வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் எழுதிய பாடல் + +சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்: + + +1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். + + +இன்னும் பல இடங்களில் வ.உ.சி. சிலைகள் உள்ளன. தெருக்கள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டுள்ளது. + + +தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. + + +வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் வெளியிடப்பட்டது. + +வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார். + +கோயம்புத்தூர் மத்தியசிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. + +தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. + +தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது. + + + + + + +நெல்லியடி + +நெல்லியடி (Nelliady) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். கரவெட்டி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் (பரு��்தித்துறை, கொடிகாமம், திக்கம், யாழ்ப்பாணம் செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் ஆழிப்பேரலை அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது ஜூலை 5, 1987 இல் கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான். + + + + + + + + +கந்தையா குமாரசாமி + +கந்தையா குமாரசாமி என்ற இயற்பெயர் கொண்ட நல்லைக்குமரன் குறிப்பிடத்தக்க கவிஞர் ஆவார். இவர் அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் "EDITOR´S CHOICE AWARD" பெற்றவர். + +இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப் (1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். + +தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர்.அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார். + + + + +கோவாலா + +கோவாலா ("Koala", அறிவியல் பெயர்: "Phascolarctos cinereus") என்பது அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது அவுஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. + +கோவாலா என்பது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு சொல் ஆகும். தாருக் மொழியில் "கூலா" ("gula") என அழைக்கப்பட்ட்ட்து. "தண்ணீர் (தேவை) இல்லை" என்பது இதன் பொருள். அதாவது, கோவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்ரஸ் ("eucalyptus") மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன. + +முதலில் ஆங்கிலக் குடியேறிகள் இவற்றைக் "கோவாலாக் கரடி" எனவே அழைத்தனர். "குரங்குக் கரடி", "மரக் கரடி" என்ற பல்வேறு பெயர்களிலும் இவை அழைக்கப்பட்டன. + +அறிவியல் பெயரான "பாஸ்கொலார்க்டஸ்" ("Phascolarctos") கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ("phaskolos" "அடைப்பம்", "arktos" "கரடி"). கோவாலாக்களின் வகை இலத்தீன் மொழியில் "cinereus", அதாவது "சாம்பல்-நிறம்". + +இவை அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து, வடக்கு நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா, தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களில் பெருமளவு காணப்படுகின்றன. + +இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப்பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது. + +கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன. கோவாலா இந்த இலைகளையும் தெரிவு செய்தே சாப்பிடுகிறது. அவுஸ்திரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்ரஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோவாலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் (சர்க்கரை) உண்டு. இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன. + +உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை, பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோவாலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் இவற்றின் தொகை குறைந்து வருகிறது. + + + + + +ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் + +ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும். +இத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி. + +பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. + + + + + +திருத்த���்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் + +திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை. + +அகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர் + + + + + +திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் + +திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை. + +உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம். + +பிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர் + + + + + +திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் + +திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. +சுந்தரர் இத்தலத்திற்கு வந்த போது, இறைவனார் அம்பிகையுடன் உழவனாக நாற்று நட மறைந்து சென்றுவிட, விநாயகப் பெருமான் சுந்தரருக்கு இறைவனார் இருக்கும் திசை காட்டி உதவ, சுந்தரரும் அங்கு சென்று பாடல் பாடி இறைவனை அழைத்தார். + + +"நட்ட நடாக்குறை நாளை நடலாம் +நாளை நடாக்குறை சேறுதங்கிடவே +நட்டது போதும் கரையேறி வாரும் +நாட்டியத்தான்குடி நம்பி." + + +கோட்புலி நாயனாரின் அவதாரத் தலம். அவரின் இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரர் தம் புதல்விகளாக ஏற்ற தலம். அதனால்தான் சுந்தரர் தன் தேவாரப் பாடல்களில் தன்னை சிங்கடி அப்பன், வனப்பகை அப்ர் என்று குறிப்பிடுகிறார். சுந்தரரின் உற்ற நண்பராக இருந்த கோட்புலி நாயனாருக்கு அவர் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் உருவச்சிலை அமைத்து சோழர்கள் போற்றியுள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அவருக்கு எடுக்கப்பட்ட அந்த உருவச்சிலை 2003இல் கண்டெடுக்கப்பட்டது. நின்ற கோலத்தில் உள்ளகோட்புலியார் தோளில் உள்ள ஒன்றியை அணைத்த வண்ணம் இறைவணங்கும் கோலத்தில் அச்சிலை உள்ளது. + +இக்கோயிலின் அருகே புத்தர் சிலை ஒன்று 2003இல் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அச்சிலை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளுக்குரிய கூறுகள் அனைத்தும் இச்சிலையில் காணப்படுகின்றன. + + + + + +இராமானுசர் + +இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு "ஸ்ரீபாஷ்யம்" என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர். + +ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரி���மிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர். + +• "சித்தித்ரயம்": இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது. + +• "ஆகம ப்ராமாண்யம்": இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம். + +• "மஹாபுருஷ நிர்ணயம்": இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது. + +• "கீதார்த்த சங்கிரகம்": இது கீதைக்கு பொருளுரை. + +யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர். + +யமுனாச்சாரியாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடி வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அந்த பிரமாணங்களாவன: + +• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது; + +• விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது; + +• வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது. + +இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100 ம் ஆண்டு முடித்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிற��ு. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார். + +யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடம் என்றதற்கு இராமானுசர் எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார். + +இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தார். + +இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார். + +வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை: + +• "வேதாந்த சங்கிரகம்". இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது. + +• "வேதாந்த சாரம்", மற்றும், "வேதாந்த தீபம்" : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள். + +• "கீதா பாஷ்யம்". இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை. + +• "நித்யக்கிரந்தங்கள்". அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும். + +• "கத்யத்ரயம்". இவை மூன்று உரைநடை நூல்கள். "சரணாகதி கத்யம்" பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. "ஸ்ரீரங்க" "கத்யம்" ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. "வைகுண்ட கத்யம்" மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது. + +இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. + +இராமானுசருக்குப் பின் ஆச்சாரியராக வந்தவர் கூரத்தாழ்வாரின் மகனாகிய பராசர பட்டர். இராமானுசர் தன்னுடைய வடமொழிப் புலமையையும், வேதாந்தக்கடலில் தான் கடைந்தெடுத்த முத்துக்களையும் ஆழ்வார்களின் பக்திவெள்ளப் பெருக்குடன் இணைத்து விசிஷ்டாத்வைதத்தை அமைத்தார். ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் வடமொழி நூல்கள், ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்கள் இவையிரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்���து என்ற கொள்கையில் வேறுபாடுகள் ஏற்பட்டு வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. தத்துவத்திலும் சில வேறுபாடுகள் தலைப்பட்டன. ஆனால் இரு சாராரும் இராமானுசர் என்ற பெயருக்கும் அவருடைய நூல்களுக்கும் உயர்ந்த மதிப்பு தருவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவர். ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் இராமானுசரின் கைகூப்பிய சிலை ஆண்டவன் சன்னிதியில் இருப்பதை இன்றும் காணலாம். வைணவத்தின் உட்பிரிவுகள் மட்டுமல்ல, இந்து சமய உலகத்தின் எந்தப்பிரிவிலும், ஆண்டவனைத் தொழும்போது ‘கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவன், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளியிலும் துளி’ என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு இராமானுசர் இட்டுச்சென்ற அழியாத முத்திரையே. + +"இராமானுசரின்" விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-2015) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார். +"இராமானுஜர்" பற்றிய தொலைக்காட்சித்தொடருக்கு நாத்திகவாதியாக தன்னை அடையாளப்படுத்தி வருபவரும் முன்னாள் தமிழ் நாடு முதல்வருமாகிய மு. கருணாநிதி வசனம் எழுதுவதை பலரும் விமர்சித்துள்ளனர். + + + + + +ஒலிபரப்பு + +ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம். வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது. ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கல்லாகும். + + + + +தமிழ் ஒலிபரப்புத்துறை + +தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்த���யும், வரலாற்றையும் குறிக்கின்றது. மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன. 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது. தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது. + + + + + +குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) + +குடியரசுக் கட்சி ("The Republican Party") ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" ("Grand Old Party" அல்லது GOP) என அழைக்கப்படுகிறது. + +1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். + + + + +மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) + +டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி என்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்று. மற்றது ரிப்பப்ளிக்கன் கட்சி. + +ஐக்கிய அமெரிக்காவில் தற்பொழுது (2007ல்) உள்ள 110 ஆவது காங்கிரசு என்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் டெமாக்ரட்டிக் கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையராக உள்ளனர். + +வரலாற்று நோக்கில், இன்றுள்ள டெமாக்ரட்டிக் கட்சியானது 1792ல் தாமஸ் ஜெஃவ்வர்சன் அவர்கள் துவக்கிய டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் கட்சியில் இருந்து தோன்றியதாகும். இதுவே உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளினும் தொன்மையானது. டெமாக்ரட்டிக் கட்சி என்னும் பெயர் 1830களின் நடுவில் இருந்தே பெற்றுள்ளது. + +1912ல் ரிப்பப்ளிக்கன் கட்சி அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களினத்தைப் போற்றும் கொள்கைகளைக் கொண்ட ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட் அவர்களுடைய முற்போக்கு இசைவுடைய கொள்கைகள் இக் கட்சியின் செயற்பாடுகளை 1932 முதல் தாக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது. 1960களில் அடிமை முறைகளை எதிர்த்து பொது சம உரிமை இயக்கத்தை வலுவாகப் போற்றி முன்னுந்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரவலாக பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் கொள்கைகள் உடையதாக இக் கட்சி இருந்து வந்துள்ளது. + + + + +ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் + +ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் அல்லது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் ("United States Congress") என்பது மேலவை (செனட்) மற்றும் கீழவை (ஹவுஸ்) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் "காங்கிரசு" எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும். + +மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். + + + + +சென் மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை + +சென் மேரிஸ் மத்திய கல்லூரி இலங்கை, நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ளது. இதில் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பி��் படி 47 ஆசிரியர்களும் 1800 மாணவர்களும் உள்ளனர். + +சென் மேரிஸ் மத்திய கல்லூரி இலங்கை அரசின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இரண்டு பாடசாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பிரிவு சென் மேரிஸ் ஆரம்ப பிரிவு என்றும் இடைநிலை முதல் உயர்தரம் வரை சென் மேரிஸ் மத்திய கல்லூரி என்றும் தனித்தனியாக இயங்குகின்றன. சென் மேரிஸ் மத்திய கல்லூரியினர் இந்நாள் அதிபர் ஆ. வேலுசாமி ஆவார். 2019ஆம் ஆண்டு இப்பாடசாலை நூற்றாண்டை கொண்டாடுகிறது. + + + + +கண்டி கலைமகள் தமிழ் வித்தியாலயம் + +கண்டி மகியாவை மக்களின் முயற்சியால் 1920 ஆம் ஆண்டில் ஓர் பாலர் பாடசாலையாக ஆரம்பமாகியது. 1926 இல் இரட்சண்யசேனை என்னும் கிறீஸ்தவ அமைப்பு இப்பாடசாலைக்கு ஓர் நிதந்தரக் கட்டம் ஒன்றை வழங்கியது. இப்பாடசாலை 1962 இல் அரச பாடசாலையாகப் பட்டது. 2000 ஆம் ஆண்டில் உயர்தரக் கலைப்பிரிவு ஆரம்பிக்கப் படது. 2006 ஆம் ஆண்டில் கணினி ஆய்வுகூடம் உருவாக்கப்பட்டது. 2007 இல் இதன் அதிபராக அழகைய்யா பணியாற்றுகின்றார். + + + + + +வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு + +வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு இன்றும் கைக்கொள்ளப்படும் நாட்டாரியல் மரபுகளில் ஒன்றாகும். அண்ணமார், வட இலங்கையில் " வெள்ளாளர் " சாதிக்குரிய கடவுளாகவே கருதப்பட்டு வருகிறார். நீண்டகாலமாகவே இருந்து வருகின்ற இவ் வழிபாடு, வலுவான சமஸ்கிருதமயமாக்க அலைகளுக்கு மத்தியிலும், இன்றும் நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ் வழிபாடு நடைபெற்றுவரும் சில இடங்களிலுள்ள உள்ளூர்க் கதைகளும், யாழ்ப்பாணத்துப் பழைய நூல்கள் சிலவும், இவ்வழிபாடு கடவுள் தன்மை பெற்ற முன்னோர் வணக்கத்திலிருந்து தோன்றியதாகக் காட்டுகின்றன. ஆனாலும். அண்ணமார் வழிபாட்டைப் புராணங்களுடன் தொடர்புபடுத்தும் கதைகளும் வழங்கி வருகின்றன. + +"வையா என்னும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம்" என்னும் நூலில் உள்ள கதையொன்றில் அண்னமார் வழிபாடுபற்றிய கதையொன்று உள்ளது. +இக் கதை ஒட்டு மொத்தமாக அறுபது போர்களை அண்ணமாராக்கியது. ஆனால், அண்ணமார் வழிபாடு நிலவும் பல்வேறிடங்களில், உள்ளூர்த் தொடர்புள்ள தனித்தனிக் கதைகள் அண்ணமார் வழிபாட்டுத் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. இணுவில் கிழக்கிலுள்ள அண்ணமார் தோற்றம் பற்றிய கதை இத்தகைய ஒன்றாகும். +அவன் ஏறியதாகக் கருதப்படும் பனையின் அடியிலேயே இந்த அண்ணமார் கோயில் அமைந்துள்ளது. இப்பனையின் அடிப்பகுதி இதைச் சுற்றி வளர்ந்த ஆலமரம் ஒன்றினால், இப்பொழுது மூடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே இளந்தாரி கோயிலும் புளிய மரமும் உள்ளன." இவ்வூரைச் சேர்ந்த சின்னத்தம்பிப் புலவர் என்பவரால் பாடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சவன்னத் தூது என்னும் நூல், இந்த இளந்தாரி கோயிலை, இவ்வூரை ஆண்ட காலிங்கராயன், கைலாசநாதன் என்பவர்கள் பேரில் அமைந்ததாகக் கூறுகிறது. + + + +அண்ணமா மஹேஸ்வரர் திருக்கோயில் சிறுப்பிட்டி + + + +மிதிவண்டி + +"'மிதிவண்டி"ஈருருளி' (தமிழகப் பேச்சு வழக்கு:"சைக்கிள்") மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை . போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன. + +பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது + +கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான். + +லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார். கார்ல் வோன் ட்ரைஸின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றது. + +உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மித��இயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார். + +இதில் பின்புறச்சக்கரம் முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. தையல் இயந்திரத்தில் உள்ள மிதி இயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதிவண்டி இயங்கியது. அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். + +முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த இயக்கியைச் மிதித்துச் சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைக் கண்டு 1868-ஆம் ஆண்டு மிசாக்ஸ் கம்பெனி என்ற பெயரில் மிதிவண்டி நிறுவனம் ஒன்றை துவக்கினார். இது உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் ஆகும். + +மிதிவண்டியின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் சக்கரத்தையும் உலோகத்தில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவர்களது முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களான சக்கரத்தின் ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள் தயாரிப்பதில் வெற்றிகண்டனர். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள். +இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறsசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறsசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந��த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவன்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இதனை முதன் முதலாக பெண்களும் பயன்படுத்தத்தொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட மிதிவன்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. + +மிதிவண்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். + +1888-ஆம் அண்டு சான் பாய்டு தன்லப்பு (John Boyd Dunlop) என்ற இசுகாட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான மெத்துப்பட்டையாகிய இரப்பருடன் மேற்புறமும் (டயர்) மற்றும் தூம்பு (குழாய்) ஆகியவற்றைச் செய்யும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், +கிர்க்பாட்ரிக்கு மேக்மில்லன் வடிவமைத்த மிதிவண்டியைத் தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த மிதிவண்டிகள் அனைத்தும் முன்புறச்சக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் மிதிவன்டி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி மிதிவண்டியை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து 'இன்றைய நவீன சைக்கிளின் தந்தை' என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் என்றி இலாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய மிதிவண்டி ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார். + +இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது மிதிவண்டியில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த மிதியியக்கி, இயக்குசங்கிலி மூலம் பின்புறச்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகை மிதிவன்டிதான் இன்று நாம் பயன்படுத்தும் மிதிவண்டியாகும் + +இதனை தொடர்ந்து சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர் சான் கெம்பு இசுட்டேர்லியுடனும் சான் பாய்டு தன்லப்புடனும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆசுடன் (Aston) நகரில் எர்க்குலீசு 9Hercules) என்ற மிதிவண்டி நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் மிதிவண்டி தனது காலடிச் சுவடுகளை பதியச்செய்யத் தொடங்கிவிட்டது. + + + + + + + +ஜனசக்தி + +ஜனசக்தி (சிங்களத்தில் ஜனசவிய) திட்டமானது இலங்கையின் அடிமட்டமக்களின் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்கம் உள்ளடங்கலான சமூக நல நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஓர் வளர்ச்சித் திட்டமாகும். + +1991ம் ஆண்டின் 31ம் இலக்க நிதிச்சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் திறைசேரியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் இத்திட்டம் தொடக்கப்பட்டது. +இத்திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டது. + + +இத்திட்டத்தின் செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்பட்டபோதும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே இதிற் கணிசமான பங்களிப்பை நல்கின. + +இத்திட்டத்தின் மூலம் சமூகத்தின் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1000 பெறுமதியான உணவுப்பொருட்பங்கீடும் அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக செயற்படுவதற்கு வசதியாக சேமிப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொருகுடும்பமும் ரூபா 458 ஐ கூட்டுறவுக் கிராமிய வங்கிகளில் வைப்பாக இடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. + +இவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை எதிர்காலத்தில் அவர்கள் சிறிய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. + + + + +தூண்டம் + +ஃப்ரடே விதிக்கமைய ஒரு கடத்தியில் இருக்கும் மாறுமின்னோட்டம் காந்த பாயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு காந்த பாயம் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டத்தினால் தோற்றிவிக்கப்படும் என்பதின் அளவே தூண்டம் ஆகும். + +The inductance has the following relationship: +where + +இதை தன் தூண்டம் என்று பிறதின் தூண்டத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவர். அதாவது காந்த புலம் காந்த புலம் கடத்தியில் இருக்கும் மாறு மின்னோட்டத்தினால் மட்டும் தோன்றுகின்றது. + +ஒரு கடத்தி ஒரே அச்சில் N தடவைகள் சுற்றப்பட்டால், ஒரே அளவு காந்த பாயத்தை அல்லது புலத்தை தோற்றுவிக்க தேவைப்படும் மாறுமின்னோட்டத்தின் அளவு N பெருக்கலால் குறையும். அதாவது, ஒரு சுற்றுடன் ஒப்புடுகையில். + +where + +ஒரு கடத்தியில் இருக்கும் மாறுமின்னோட்டத்தினால் காந்த பாயம் தோன்றுகின்றது. அந்த காந்த பாய அல்லது புலத்தில் வேறு ஒரு கடத்தியை அல்லது தூண்டியை கொண்டுவந்தால் அந்த தூண்டியில் மின்னழுத்தம் உருவாகும். இதை பிறதின் தூண்டம் என்பர். + + + + +பனிச்சரிவு + +பனியடுக்குச் சரிவு "(avalanche)" அல்லது பனிச்சரிவு "(snowslide)") என்பது சரிவான மேற்பரப்பில் விரைந்த பனியின் பாய்வு ஆகும். இவை தொடங்கும் இடத்தில் பனிப்பாளத்தின் வலிமை வேறுபாட்டால் அதாவது பனிப்பாளத்தின் மூதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது ஏற்படுகின்றன.இது பனிப்பாளச் சரிவாகும். சிலவேளைகளில், இது படிப்படியாக மெல்லத் தளர்ந்து அகலமாகிப் பாய்கிறது. இது தளர்பனிச் சரிவு எனப்படுகிறது. பனிச்சரிவு தொடங்கிய பிறகு, கூடுதல் பனியால் பொருண்மையிலும் பருமனிலும் வளர்ந்து முடுக்கப்படுகின்றன. வேகமாகப் பனிச்சரிவு பாயும்போது. பனிக்கட்டி காற்றூடே கலந்து பனித்தூவியாகி பனித்தூவிச் சரிவை ஏற்படுத்துகிறது. இது ஓர் ஈர்ப்பியக்க ஓட்டமாகும். + +இது உயர்ந்த மலைப் பகுதிகளில் பனித்தூவி விழுந்து ஏராளமாய்ச் சேர்ந்திருக்கும் பொழுது ஏதேனும் வானிலை காரணமாக, சாய்வும் சரிவுமாக உள்ள மலைப் பகுதிகளில் திரண்டிருக்கும் பனி சரியத் தொடங்கினால் மாவு போன்ற பனியானது திரளாக காட்டுவெள்ளம் போல் சரிந்து விரைவாக கீழே பாயும். அப்படிப் பாயும் பொழுது மேலும் மேலும் மாவு போன்ற பனி திரண்டு வழியில் இருக்கும் மாந்தர்கள் உட்பட எல்லாவற்றையும் மூடிப் புதைய செய்து விடும். இதனால் ஆண்டுதோறும் பனிமலைப் பகுதிகளில் பனிச் சறுக்காட்டங்கள் ஆடுவோர் பலர் இறக்க நேரிடுகின்றது. இந்நிகழ்வு திடீர் என நிகழ்ந்தாலும் ஓரளவிற்கு முன்கூட்டியே அறியவும், சிறிதளவு தடுக்கவும் இயலுகின்றது. + +பனிச்சரிவைப் போலவே பாயும் பாறை அல்லது பாறைச் சிதிலங்கள் அல்லது மட்குவை ஆகியவை பாறைச் சரிவு அல்லது மண்சரிவு எனப்படுகின்றன.). + +பனிப்பாள மீதான சுமை ஈர்ப்பால் மட்டுமே அமைந்தால், பாள மெலிவுகளாலோ தொடர் பனிப்பொழிவுச் சுமையாலோ பனிச்சரிவுகல் ஏற்படலாம். இந்நிகழ்வால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் தன்னியல்புப் பனிச்சரிவுகள் எனப்படுகின்றன. மாந்த, உயிரியல் செயல்பாடுகளால் உருவாகும் சுமைகளாலும் பனிச்சரிவுகள் ஏற்படலாம். நிலநடுக்கச் செயல்பாட்டாலும் கூட பனிப்பாளங்கள் பிளந்து பனிச்சரிவுகள் ஏற்படலாம். + +முதன்மையாக, இவை பனி, காற்று இரன்டன் கலவையால் அமைந்தாலும், மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி, பாறைகள், மரங்கள் போன்ற பொருள்களையும் உள்ளடக்கலாம். என்றாலும் இவை பாய்மை மிகுத மண்சரிவினும் பனிக்கலபில்லாத பாறைச் சரிவினும் பனிப்பொழிவின்போது பனிஆற்று பனிக்குன்றுக் கவிழ்வில் இருந்தும் வெறுபட்டவை.ஈவை அருகியனவோ தற்செயல் நிகழ்ச்சிகளோ அல்ல. மாறாக, பனிபொழிவால் பனிதிரளும் எந்தவொரு மலையிலும் எப்போது வேளண்டுமானாலும் நிகழத் தகுந்த பேரிடர் நிகழ்வாகும்மிவை மழைக் காலத்திலும் இளவேனிற் காலத்திலும் பொதுவாக நிகழக்கூடியவை. மலைகளில்பனியாற்று இயக்கத்தாலும் இவை எப்போதும் ஏற்பட வாய்ப்புண்டு. இவை மாந்தருக்கும் சொத்துகளுக்கும் பேரழிவை நிகழ்த்தும் இயற்கைப் பேரிடர்களாகும். இதன் அழிவுத் திறமை பெருவேகத்தில் பாயும் பெரும்பொருண்மைப் பனியால் ஏற்படுகிறது. + +பனிச்சரிவுகளின் வடிவங்களை வகைபடுத்த பொதுவாக ஏற்கப்பட்ட வகைபாடேதும் வழக்கில் இல்லை. இவற்றை அவற்றின் உருவளவு, அழிப்புத்திறம், தொடங்கிவைக்கும் நிகழ்வு, இயங்கியல் தன்மை ஆகியவற்றால் விவரிக்கலாம். +பனிச்சரிவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில் உலர்ந்த நுண்மணல் போன்ற வெண்பனி சரியத் தொடங்கிக் கடும்விரைவில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். கூடவே கடுங்குளிர்க் காற்றும் வீசும். இரண்டாவது வகையில் ஈரமான தூவிப் பனி சற்று உருகி சரியத் தொடங்கும் ஆனால் இது சற்று மெதுவாகவே நகரும். மூன்றாவது வகையில் மிகப் பெரும் பனிப் பாளம் திடீரென்று புவி ஈர்ப்பு விசையால் சாய்வான பகுதியில் சரியும். +பனிச்சரிவு அல்லது பனி அடுக்குச்சரிவு பல கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து வழியில் உள்ளவற்றை மூடிப் புதைக்கும். பிரான்ஸ் நாட்டில் உள்ள மோன்ட்றாக் என்னும் மலையில் 1999ல் 300,000 பருமீட்டர் தூவிப்பனி 30 பாகை சரிவில் சரிந்து மணிக்கு 100 கி.மீ விரைவில் ப��ய்ந்தது. அதில் 12 பேர் 100,000 டன் பனித்தூவியின் அடியில் புதையுண்டு இறந்தனர். இதே போல முதல் உலகப் போரில் 50,000 அரசப் படையாட்கள் பனிச்சரிவில் மாண்டனர். + +பெரும்பாலான பனிச்சரிவுகள் புயல் இருக்கும்போது, பனிப்பொழிவால் ஏற்படும் சுமையால் தன்னியல்பாக ஏற்படுகின்றன. இயல்பான பனிச்சரிவுக்கான பாரிய இரண்டாம் காரணியாகச் சூரியக் கதிர்வீச்சால் ஏற்படும் பனிப்பாளத்தின் உருமாற்றங்கள் அமைகின்றன. இதற்கான மற்றவகை இயற்கைக் காரணிகளாக, மழை, நிலநடுக்கம், பாறைச் சரிவு பனிப்பொழிவு ஆகியவை அமையலாம். இதற்கான செயற்கைத் தூண்டலாக பனிச்சறுக்காட்டம், பனிப்பாள இயக்கம், கட்டுபாடான வெடிப்புப் பணிகள் ஆகியன அமைகின்றன. பேரிரைச்சலால் இவை தூண்டப்படுவதில்லை. ஒலி தரும் அழுத்தம் பனிச்சரிவை ஏற்படுத்தும் அளவுக்கு அமைவதில்லை. + +அதன் மீதுள்ள சுமை வலிமையை விடக் கூடும்போது பனிப்பாளம் இற்றுப்போகும். இங்கு சுமை என்பது மீது அமையும் பனியின் எடைதான் என்றாலும், பனிப்பாள வலிமையைத் தீர்மானித்தல் மிகவும் அரிது. இது பன்முகக் காரணிகளால் ஆனது. இது பனிக் குறுணை, உருவளவு, அடர்த்தி, புறவடிவம், வெப்பநிலை, நீரடக்கம், குறுணைகளுக்கு இடையில் அமையும் பிணைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தமையும். + +பனிச்சரிவு உருவளவு: +கனடியப் பனிச்சரிவளவு வகைபாடு அதன் விளைவைப் பொறுத்தது.பொதுவாக அரைமடங்குகள் பயனில் உள்ளன. + +பனிச்சரிவுப் பாள இடர் பகுப்பாய்வு சரிவுப் பாள ஓர்வால் கண்ட்றியலாம். பனிச்சரிவில் இருந்து ஓர் அகன்ற பனிப்பாளத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் மீது படிப்படியாக சுமையேற்றப்படுகிறது. இது சரிவு நிலைப்பின் தரத்தைஏழு படிநிலை அளவுகோலில் மதிப்பிட உதவுகிறது. + + + + + +கிளிமஞ்சாரோ மலை + +கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் "கிபோ, மாவென்சி, இழ்சிரா" ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் ��ேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும். + +இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய" உகுரு" "கிபோ" எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிளிமஞ்சாரோவின் உகரு முகட்டிற்கு முதன்முதலாக அக்டோபர் 6, 1889 அன்று, மராங்கு (Marangu ) படைத்துறையைச் சேர்ந்த " யோகானஸ் கின்யாலா லௌவோ" (Yohanas Kinyala Lauwo) என்பவரின் துணையோடு டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மேயர் (Hans Meyer), ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller) ஆக மூவரும் ஏறி வரலாறு படைத்தனர். +கிபோவைத் தவிர மற்ற இரு பெரும் எரிமலை முகடுகளாகிய "மாவென்சி" (5,149 மீ, 16,890 அடி)," சிரா" (3,962 மீ, 13,000 அடி) ஆகியனவும் அடங்கிவிட்ட எரிமலைகள்தாம். மாவென்சி ஆப்பிரிக்காவிலேயே மூன்றாவது உயரமான மலை (கென்யா மலை இரண்டாவது உயரமான மலை). + +இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்பொழுது யாரால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஐரோபியர் இப்பெயரை 1860 ஆம் ஆண்டளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சுவாகிலி மொழியில் "கிளிமா" (Kilima ) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள் என்றும் "ஞ்சாரோ" (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் வெள்ளை" "பளபளப்பான" என்று பொருள் என்றும் கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ (jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர். சிறுமலை அல்லது குன்று என்று பொருள்படும் கிளிமா என்னும் பெயர் எப்படி இப்பெரிய மலைக்கு முன்னொட்டாக வந்தது என்று இவ்விளக்கங்கள் தெளிவு படுத்துவதில்லை. கிச்சகா மொழியில் கிளிமஞ்சாரே அல்லது கிளிமஜ்யாரோ (kilemanjaare or kilemajyaro) என்னும் சொற்கள் "பறவையை, சிறுத்தையை, பயணத்தொடர் வரிசையைத் தோற்கடிக்கும்" ("which defeats the bird/leopard/caravan") என்று பொருள்படும் என்கிறார்கள், ஆனால் ஐரோப்பியர்கள் 1850களில் இங்கு வரும் முன்னர், கிச்சகா மொழியினர் அப்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள் + +1880களில் இம்மலை டாய்ட்ச் மொழியில் கிலிமண்ட்ஷாரோ (Kilimandscharo) என்று அழைக்கப்பட்டது. கார்ல் பீட்டர்ஸ் என்னும் டாய்ட்ச் நாட்டவர் இப்பகுதி மக்களின் தலைவர்களிடம் பேசி இம்மலையை டாய்ட்ச் நாட்டினரின் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியாட்சியின் (காலனியின்) பகுதியாக ஆவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார். 1889இல் கிபோ மலையில் உள்ள உகுரு முகட்டை "கெய்சர் வில்ஹெல்ம் ஸ்பிட்ஸெ" (Kaiser-Wilhelm-Spitze) என்று பெயரிட்டு டாய்ட்ச் பேரரசின் ஆவணங்களில் 1918 ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தனர். 1918 இல் பிரித்தானியர் இப்பகுதியை டாய்ட்ச்சு நாட்டினரிடம் இருந்து வென்று கைமாறிய பின் அப்பெயர் கைவிடப்பட்டது. + +இம்மலையின் உட் புறத்தில் எரிமலை அடங்கிப் போனாலும், இதன் மேற்பரப்பில் நிகழ்வன உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இம்மலையின் உச்சியில் இருந்த அண்மைக்காலப் பனியாறுகள் பின்வாங்கியுள்ளன. மலையுச்சிப் பனிக்கட்டிகளின் கனவளவு 80% க்கு மேல் குறைந்துவிட்டது. இப் பனிக்கட்டிகள் உருகி எப்போது முற்றாகவே இல்லாமல் போகும் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 2002 ஆம் ஆண்டில் ஓஹியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்தட்பவெப்பவியலாளர் லோனீ தாம்சன் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இம்மலையின் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2015க்கும் 2020க்கும் இடையில் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. 2007 இல் ஆய்வு நடத்திய ஆஸ்திரிய அறிவியலாளர் குழுவொன்று உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2040 ஆம் ஆண்டளவிலேயே மறையும் என்கின்றனர். சில பகுதிகளிலுள்ள வானிலை காரணமாக மலைச் சரிவின் சில பகுதிகளில் பனிக்கட்டிகள் மேலும் சில காலத்துக்கு இருக்கும் என அவர்கள் மதிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா அறிவியல் அக்கடமியின் ஆய்வுகள் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2050 ஆம் ஆண்டிலேயே இல்லாமல் போகும் என்கின்றன. + +இது செயற்பாடற்றதாக இருப்பினும் கிளிமஞ்சாரோவின் முதன்மைக் கொடுமுடியான கிபோவில் வளிமங்களை வெளிவிடும் புகைத்துளைகள் (fumaroles) காணப்படுகின்றன. கொடுமுடியில் அமைந்துள்ள எரிமலைவாய்ப் பகுதியில் 400 மீட்டர்களுக்குக் கீழ் பாறைக்குழம்பு உள்ளதாக 2003ல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ம���ற்காலத்தில் பல நிலச்சரிவுகளும், உடைவுகளும் கிபோவில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. + +கிளிமஞ்சாரோவின் முந்திய நிலப்படம் 1963 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசின் கடல்கடந்த நில அளவை இயக்ககத்தினால் வெளியிடப்பட்டது. இவை 1958 ஆம் ஆண்டளவில் அரச வான் படையினால் எடுக்கப்பட்ட வான்படங்களை (air photography) அடியொற்றியவை. 1:50,000 அளவுத்திட்டத்துக்கு வரையப்பட்ட இப்படங்கள் 100 அடி வேறுபாட்டுடனான உயரக்கோடுகளைக் (contours) கொண்டுள்ளன. இந்த நிலப்படங்கள் தற்போது கிடைப்பதில்லை. சுற்றுலாத்துறைக்கான நிலப்படம் முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. 1990ல் இன்னொரு நிலப்படம் சுற்றுலாத்துறைத் தகவல்களுடன் வெளியிடப்பட்டது, இது 1:75,000 அளவுத்திட்டத்தில், 100 மீட்டர் வேறுபாட்டுடனான உயரக்கோடுகளுடன் அமைந்திருந்தது. இதில் முறையே 1:20,000, 1:30,000 ஆகிய அளவுத்திட்டங்களில் உள்ளீடாக கிபோ, மாவேன்சி ஆகியவற்றின் நிலப்படங்கள் இருந்தன. இந்த நிலப்படம் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது. + +கிளிமஞ்சாரோ மலை உலகின் மிக]பெரிய பல்லடுக்கு எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இது எரிமலைக் குழம்பு, எரிமலைத் தூசிப் படிவு, எரிமலைச் சாம்பல் ஆகியவற்றின் பல படைகளால் அமைந்தது. எரிமலைத் தூசிப் படிவுகள் எரிமலை வெடிப்பின்போது வளிமண்டலத்தில் கலந்து பின்னர் படிவுற்றவை. எனவே இது காணப்படுவது ஒருகாலத்தில் கிளிமஞ்சாரோவில் எரிமலை இயக்கமுள்ளதாக இருந்ததைக் காட்டுகிறது. இருந்தாலும், அறியக்கூடிய அண்மைக் காலத்தில் எரிமலை வெடிப்பு ஏற்படவில்லை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக இம்மலை செயலற்ற நிலையிலேயே இருப்பதாகக் கருதலாம். + +கிளிமஞ்சாரோ மலை கூம்பு எரிமலை வடிவம் கொண்டது. இது எரிமலைவாயூடாக எறியப்பட்ட பொருள்களினால் உருவானது. இவ்வாறான வெளிப்படு பொருட்கள் எரிமலை வாயைச் சுற்றிக் கூம்பு வடிவில் குவிந்ததன. + +கிளிமஞ்சாரோ மலைமீது ஏற ஏற்புபெற்ற பல மலைவழிகள் உள்ளன. அவையாவன: +There are several routes officially sanctioned for climbing Kilimanjaro. These are: + +இவற்றுள் "மச்சாமே" சிறந்த காட்சியமைப்புக் கொண்டதும் சரிவு கூடியதுமான பாதையாகும். "ரோங்கை", "மராங்கு" ஆகியவை இலகுவான பாதைகள். ஆனால் இப்பாதைகளில் தங்குமிட வசதிகள் குடிசைகளாகும். ஏறுவது இலகுவானதால் ��ப் பாதைகள் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளன. இங்கே ஏறுவதும் இறங்குவதும் ஒரே வழியே. + +கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இது பற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். நுட்ப நோக்கில் ஏறுவது இலகுவானாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவது கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும். எனினும் பலர் நோய்வாய்ப்படுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந் நோயால் மலையேறுவோர் 10 பேர்வரை இறக்கிறார்கள். இவர்களுடன் உதவிக்குச் செல்லும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 10-20 பேர் வரை இறப்பதாகச் சொல்லப்படுகிறது. மலையேறும் எல்லோருமே ஓரளவு வசதிக்குறைவு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" கொடுமுடியை அடைகிறார்கள். குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள். + +மலையேறுவோர் கிளிமஞ்சாரோ மலையில் செலவுசெய்யும் ஒவ்வொரு நாளுக்கும் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பாக தான்சானிய அதிகார அமைப்புக்களை உயர் மலைகளில் ஏறுவோர் சங்கங்கள் விமர்சித்துள்ளன. இப்போக்கு, செலவுகளைக் குறைப்பதற்காக மலையேறுவோர், புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொள்ளத் தூண்டுவதாக அவர்கள் கூறுகின்றனர். + +கிளிமஞ்சாரோவில் ஏறுவது இலகு என எண்ணிக்கொண்டு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையிட்டு அங்குள்ள தான்சானிய மருத்துவ சேவை அலுவலர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு வரும் பலருக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள், தான்சானியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மலையேறும் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளத் தூண்டப்படுவதாகவும், அதற்குத் தேவையான உடற்தகுதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கின்றன. + +கிளிமஞ்சாரோவில் நீரைத் தேக்கும் முட்டைக்கோசு வகைத் தாவரங்களை உட்படுத்திய, பல தனித்துவமான தாவர வகைகளை டுசொக் புல்வெள���ப் பகுதிகளில் காணலாம். இவையனைத்தும் ஆல்ப்ஸ் காலநிலைக்குப் பழக்கப்பட்டவை. கிளிமஞ்சாரோ பலவிதமான காட்டுவகைகளை 3000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் கொண்டுள்ளது. இக் காடுகளில் 1200க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த vascular தாவரங்கள் காணப்படுகின்றன. +கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில் பல்வேறு பறவைகளையும் விலங்குகளையும் காணலாம். இவற்றுள் கட்டைவிரலற்ற கொலோபசுக் குரங்கு, நால்வரி எலி, குங்குரு எனப்படும் வெண்கழுத்துக் காக்கை, எலும்புண்ணிக் கழுகு, பல்வகை மலைக்குருவிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். + + + + + + +முடிவிலி + +முடிவிலி ("Infinity", குறியீடு: ) என்பது ”வரம்பற்ற” என்பதைக் குறிக்கும் ஒரு நுண் கருத்தினமாகும். முடிவிலியின் தன்மை குறிது பல மெய்யியலாளர்கள் முன்னுணர்ந்துள்ளனர். எலியாவின் சீனோ முடிவிலி தொடர்பான பல முரண்புதிர்களை முன்மொழிந்துள்ளார். நீடியோசின் யூடாக்சசு தனது அறுதித் தீர்வில் முடிவிலாத சிற்றெண்கள் பற்ரிக் கூறுகிறார்.இக்கருத்தினம், பல துறைகளின் நடைமுறையிலும் கோட்பாட்டிலும் பயன்பட்டாலும், கணிதத்திலும் இயற்பியலிலும் முதன்மையான பயன்பா ட்டைக் கொண்டுள்ளது. முடிவிலி, கணிதத்தில் ஓர் எண்ணைப் போன்றே கையாளப்பட்டாலும், உண்மையில் அது இயல் எண்கள், மெய்யெண்கள் போன்றதோர் எண்ணன்று. + +19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், முடிவிலி, முடிவிலி கணம் தொடர்பான கருத்துக்களைக் கணிதவியலாளர் கியார்கு காண்ட்டர் முறைப்படுத்தியுள்ளார். அவரால் மேம்படுத்தப்பட்ட கோட்பாடுகள், வேறுபட்ட எண்ணளவைகள் கொண்ட முடிவிலி கணங்களைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, முழு எண்களின் கணங்கள், எண்ணவியன்ற முடிவிலிகணம்; மெய்யெண்களின் கணம் எண்ணவியலா முடிவிலி கணம் ஆகியவற்றைக் கூறலாம். + +பண்டைய பண்பாடுகள் முடிவிலி குற்றித்து பல்வேறு எண்னக்கருக்களைக் கொண்டிருந்தன. பண்டைய இந்தியர்களும் கிரேக்கர்களும் புத்தியல் கணிதத்தைப் போல துல்லியமான முறைவழி வறையறுக்கவில்லை. ஆனால் மெய்யியல் கருத்தினமாக அதை விளக்கின. + +முடிவிலி பற்றிய மிகப் பழைய எண்ணக்கரு மிலேத்தெசில் வாழ்ந்த முது சாக்கிரட்டிய மெய்யியலாளராகிய [[அனாக்சிமாந்தர்|அனாக்சிமாந்தரால் பதிவாகியுள்ளத��. முடிவிலா அல்லது வரம்பிலா எனும் பொருள்கொண்ட [[அப்பெய்ரான் (அண்டவியல்)|அப்பெய்ரான்]] எனும் சொல்லை இக்கருத்தினத்தைக் குறிக்க பயன்படுத்தியுள்ளார். என்றாலும், மிகப் பழைய கணிதவியலான விளக்கம் கி.மு 490 இல் பிறந்த [[எலியாவின் சீனோ]] அவர்களால் தரப்பட்டுள்ளது. இவரும் தென் இத்தாலியைச் சார்ந்த முந்து சாக்கிரட்டிய மெய்யியலாளர் ஆவார். இவர் பர்மெனிடெசு நிறுவிய [[எலியாட்டியம்|எலியாட்டிய]] மெய்யியல் பள்ளியின் உறுப்பினர் ஆவார். [[அரிசுடாட்டில்]] இவரை இணைமுரணியலின் நிறுவனராகக் கூறுகிறார். இவர் தனதுபெயரில் நிலவும் சீனொ முரண்புதிர்களுக்குப் பெயர் போனவர். இவற்றைப் பெர்டிட்ரேண்டு இரசல் s "அள்விலாத நுட்பமும் தெளிவும் வாய்ந்தவை" எனக் கூறுகிறார். + +அரிசுடாட்டிலின் மரபுவழிக் கண்ணோட்டத்தில், எலனியக் காலக் கிரேக்கர்கள் பொதுவாக உண்மை முடிவிலியில் இருந்து வாய்ப்புறு முடிவிலியை வேறுபடுத்திப் பார்க்க விரும்பினர்; எடுத்துகாட்டாக, முடிவில்லாத முதன்மை எண்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட முதன்மை எண்களின் தொகுப்பில் உள்ளதைவிட உண்மையில் மேலும் கூடுதலானமுதன்மை எண்கள் நிலவுகின்றன என யூக்கிளிடு கூற விரும்புகிறார். + +என்றாலும் அன்மைய ஆர்க்கிமெடீசு பாலிம்ப்செட்டின் வாசிப்பின்படி, இவர் உண்மை முடிவிலி அளவுகளின் புரிதலைப் பற்றிய தெளிவைப் பெற்றிருந்துள்ளார். "Nonlinear Dynamic Systems and Controls"எனும் நூலின்படி, இவர்தான் முதன்முதலில் துல்லியமான கணித நிறுவல்களைக் கொண்டு முடிவிலாத பெரிய கணங்களுடன் முடிவிலியின் அறிவியலை நுட்பமாக ஆய்வு செய்தவர் ஆவார்."." + +இந்திய சைனக் கணிதப் பாடநூலாகிய சூரியப்பிரசாப்தி (கி.மு 4ஆம்-3 ஆம் நூற்றாண்டு) அனைத்து எண்களையும் மூன்று கணங்களாகப் பின்வருமாறு வகைபடுத்துகிறது: [[எண்ணவியன்றன]], எண்ணவியலாதன, முடிவிலி. இவற்ரில் ஒவ்வொன்றும் மேலும் மூன்று வரிசைகளாக பிரிக்கப்படுகின்றன: + + + + +இந்நூலில் இரு தெளிவான முடிவிலி வகைகள் கூறப்பட்டுள்ளன. இவை புறநிலையாகவும் இருப்பியலாகவும் (மெய்யியல்) "அசங்கியதா" ("asaṃkhyāta") ("எண்ணமுடியா எண்ணவியலாதவை") "அனந்தா" ( "Ananta" )("முடிவிலா முடிவிலி") என விளக்கப்படுகின்றன. இவை முறையே கருக்கான வரம்புள்ள முடிவிலியையும் சற்றே தளர்வான வரம்புள்ள முடிவிலியையும் குறிக்கின்றன. + +முடிவிலி என்ற கருத்தினம், ���ணிதத்தில் formula_1 ஆல் குறிக்கப்படுகிறது. +இக்குறி 1655 இல், ஜான் வாலிசால் அறிமுகப்படுத்தப்பட்டது.. கணிதத்தில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் இக்குறியே முடிவிலிக்குப் பயன்படுத்தப்படுகிறது. + +[[நுண்கணிதம்|நுண்கணிதக்]]கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்|லைபினிட்சு]], முடிவிலி எண்களின் கணிதப் பயன்பாடுகள் குறித்த ஊகங்களை அளித்துள்ளார். லைபினிட்சின் கருத்துப்படி நுண்ணளவுகளும் முடிவிலி அளவுகளும் ஒரேயியல்பானவை அல்ல; எனினும் அவை தொடர்ச்சி விதிக்கேற்ற, ஒத்த பண்புகளைக் கொண்டவையாகும். + +மெய்ப் பகுப்பியலில், முடிவிலி என அழைக்கப்படும் formula_1 குறியீடு, வரம்பற்ற [[சார்பு எல்லை|எல்லையைக்]] குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. formula_3என்பது "x" இன் மதிப்பு வரம்பில்லாமல் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதையும் formula_4 என்பது "x" இன் மதிப்பு வரம்பில்லாமல் குறைந்து கொண்டே போகிறது என்பதையும் குறிக்கும். + +"t" இன் எல்லா மதிப்புகளுக்கும் "f"("t") ≥ 0 ஆக இருக்கும்பொழுது: + +[[தொடர் (கணிதம்)|தொடர்களை]] விவரிப்பதற்கும் முடிவிலி பயன்படுத்தப்படுகிறது: + +[[தொடர்வு]] (Sequence)களை [[முடிவுறு தொடர்வு]] என்றும் [[முடிவுறாத் தொடர்வு]] என்றும் இருவகைப்படுத்தலாம்.முடிவுறு தொடர்வு என்பது முடிவு தெரிந்த (அல்லது தெரியப்படுத்தப்பட்ட) தொடர்வு என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, + + +என்ற தொடர்வில் 10 உறுப்புகள் உள்ளன. + + +என்ற தொடர்வில் 100 உறுப்புகள் உள்ளன. + +இவை முடிவுறு தொடர்கள் எனப்படும். மாறாக, + + +என்று முடிவே இல்லாமல் இருக்கும் தொடர்வு முடிவுறாத்தொடர்வு. இத்தொடர் முடிவிலா உறுப்புக்கள் உள்ளன என்பதே சரியான கூற்று. மாறாக இத்தொடரிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை formula_15 என்பது சரியாகாது. ஒரு முடிவிலா கணத்தில் எவ்வளவு உறுப்புக்கள் உள்ளன என்பதை அலசுவதற்குத்தான் எண்ணுமை (Countability) எண்ணவியலாமை (Uncountability) என்ற கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. + +ஆக இந்த மூன்று தொடர்வுகளும் ஒரே "எண்ணளவை" யுள்ள கணங்கள் என்ற கருத்து ஒரு நுண்புலக் கணிதக் கருத்து. இதனுடைய விவரங்களை [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்]] கட்டுரையில் காணலாம் + + +[[பகுப்பு:முடிவிலி| ]] +[[பகுப்பு:ஏரணவியல் கருத்தினங்கள்]] +[[பகுப்பு:கணிதவியல்சார் மெய்யியல்]] +[[பகுப்பு:மெய்யியல் கருத்தினங்கள்]] +[[பகுப்பு:கணித உறுப்படிகள்]] +[[பகுப்பு:எண்கள்]] +[[பகுப்பு:இயற்கணிதம்]] +[[பகுப்பு:பகுவியல்]] + + + +பனித்தூவி + +பனித்தூவல் "(Snow/Snowflake)" அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் காணலாம்..> தகுந்த சூழல்களில் வளிமண்டலத்தில் படிகமுற்று உருவாகியதும் அதன் சுழற்சி முழுவதும் இது பனிப்படிகமாகவே அமைகிறது. இது வலிமண்டலத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் பெரியதாகி, பொழிந்து டரை மேற்பரப்பில் படி ந்து திரள்கிறது. பின்னர், அங்கேயே உருமாற்ரம் அடைகிறது. உருமாற்ரத்தின்போது உருகலாம்; நழுவலாம்; பதங்கமாகலாம். வளிமண்டலௌ ஈரமும் தண்ணிய காற்ரையும் பயன்படுத்திப் பனிபுயல்கள் உருவாகி வளரலாம். பனித்தூவல்கள் வளிமண்டலத் தூசி சுற்றி கருவாகி ஈர்ப்புற்ரு மேலும் மேலும் குளிர்ந்து நீர்த்துளியாகலாம்; இது பின் அறுகோணப் படிகங்களாக உறைகிறது. பனித்தூவல்கள் பல வடிவங்களில் அமையலாம். இவற்றில அடிப்படையானவை, தூவல்கள், ஊசிகள், தூண்கள், [[வன்குறுணைகள்|குறுணைகள் போன்றனவாகும். இவ்வாறு திரளும் பனி பாளங்களாகலாகி, நகரலாம். கால அடைவில், திரண்ட பனி கெட்டியாகிடலாம்; பதங்கமாகலாம்; உறைபாறையாக உருமாற்றம் உறலாம். களக் காலநிலை போதுமான அளவு குளிர்வாக அமைந்தால், ஒவ்வோராண்டும் திரளும் பனி, பனியாறாகவும் உருவெடுக்கலாம். அப்படி நேராதபோது பருவந்தோறும் உருகி, சிற்றோடைகளாகவோ ஆறாகவோ ஓடலாம்; நிலத்தடி நீராகத் தேங்கலாம். +உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட [[வெப்பநிலை]] தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். [[நிலநடுக் கோடு]] இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். [[ஆப்பிரிக்கா]]வில் [[தான்சானியா]]வில் இருக்கும் [[கிளிமஞ்சாரோ]] தனிமலையில் வெண்பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். இம்மலையில் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். [[இமயமலை]]த் தொடரில் எப்பொழுதும் வெண்பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் கூடுதல் உயரம் உள்�� மலைகள் பலவுண்டு. நிலவுலகின் [[வடமுனை]]யிலும் (ஆர்ட்டிக்), [[தென்முனை]]யிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை (குளிர்ந்த காற்று ஈரப்பதத்தை மேகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை). அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது. +பேரளவு பனி சூழ்ந்த வெளிகளாக புவிமுனைப் பகுதிகள் அமைகின்றன; வட அரைக்கோள மேற்பாதியிலும் தென் அரைக்கோள முன்னையிலும் ஈரமும் தண்ணிய வெப்பநிலையும் நிலவும் அண்டார்ட்டிகா தவிர்த்த உலகின் அனைத்து மலைப்பகுதிகளிலும் பனிவெளி பரவியுள்ளது. + +பனி போக்குவரத்து போன்ற மக்கள் செயல்பாடுகளைத் தாக்குவதால், சாலைகளையும் சாளரங்களையும் பனிபடராமல் காத்திட வேண்டும்; "[[வேளான்மை]]" க்கான நீர்ப்பாசனம், கால்நடை பேணல், விளையாட்டுகள் பனிச்சறுக்கல், பனி எந்திரப்பயணம் "[[போரிடல்]]" போன்ற செயல்பாடுகள் பனிவழி தாக்குறாவண்ணம் காப்பாற்றவேண்டும். பனி நாம் நினைக்கும் இலக்கை அடையவொண்ணாமல் தடுக்கும்; பொருள்களின் தரத்தைக் குறைக்கும். போட்டியின்போது வீரர்களின் வலைமையைக் குன்றச்செய்யும்; நம் நகர்வுகளைக் குலைக்கும். பனி "[[சூழல் அமைப்பு]]களைத்" தாக்குவதோடு, சிலவேளைகளில் பனியடௌக்கால் நிலைத்திணைகளையும் விலங்குகளையும் குளிரில் இருந்து காப்பதும் உண்டு. + +[[File:Neige 20150124 120130.ogv|thumb|பனிப்பொழிவு]] + +பெரிய அமைப்பாகிய வானிலையின் ஒரு கூறான முகில்களில் பனி உருவாகிறது. பனிப்படக உருவாக்கத்தின் இயற்பியலில் ஈர உள்ளடக்கம், வெப்பநிலை உள்ளிட்ட பல மாறிகளின் சிக்கல் வாய்ந்த கணம் பங்கு வகிக்கிறது. இதனால் விளையும் பொழியும்/பொழிந்த பனிப்படிகங்களின் உருவடிவங்கள் பல அடிப்படை வடிவங்களாகவும் அவற்றின் சேர்மானங்களாகவும் பிரித்து வகைபடுத்தப்படுகின்றன. சிலவேளைகளில் இவை தட்டுபோன்றும் மரம் போன்றும் உடுவடிவத்திலும் பனித்தூவல்கள் தன் வெப்பநிலைத் தலைகீழாக்கம் உள்ள தெளிந்த வானத்திலும் உருவாகின்றன. + +பனித்தூவி பல நேரங்களில் பல வகையாக அமையும். சில சமயம் வெண்நுரை போல் இருப்பதால் "நுரைபனி" என்றும், குறுமணல் போல் உருண்டோடுவதால், "மணல் பனி" என்றும், அள்ளி அமுக்கினால் இறுகுவதால் "இறுகுபனி" அல்லது "சொருகுபனி" என்றும் பனித்தூவலுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகிறது. +பெரிய வானிலை அமைப்���ில் வழக்கமாக உருவாகும் பனிமுகில்களில் முதன்மையானது தாழ் அழுத்தப் பகுதியாகும். இதன் சுற்றோட்டத்தில் வெதுப்பான வளிமுகப்புகளும் தண்ணிய வளிமுகப்புகளும் அமைந்திருக்கின்றன. முனைப்பாக பனியைத் தோற்றுவிக்கும் இரண்டு கூடுதல் கள வாயில்களாக, ஏரி/கடல் விளைவுப் புயல்களும் மலைகளில் அமையும் குத்துயர விளைவும் அமைகின்றன. + +[[File:Feb242007 blizzard.gif|thumb|right|புற வெப்ப மண்டலச் சூறைப் பனிப்புயல், பிப்ரவரி 24, 2007]] + +நடு அகலாங்கு சூறாவளிகள் தாழ்வழுத்தப் பகுதிகளாக அமைகின்றன. இவை முகில் தேக்கத்தில் இருந்து மென்பனிப் புயல்களையோ வன்மை வாய்ந்த பனிச்சூறைகளையோ உருவாக்கலாம். ஒவ்வொரு அரைக்கோளத்தின் இலையுதிர்காலத்திலும் மழைக்காலத்திலும் இளவேனிற் காலத்திலும் கண்டத்தின் மேலமைந்த வளிமண்டலம் போதுமான அளவுக்குத் தண்ணியநிலையில் இருக்கும்போது, ஆழ்ந்த வெப்ப மண்டல அடுக்குக் கோளத்தூடாக பனிப்பொழிவை தரலாம். வட அரைக்கோளத்தில்,தாழ்வழுத்தப் பகுதியின் வடக்குப் பக்கம் பெருபாலான பனிப்பொழிவை விளைவிக்கிறது. தென் அரைக்கோள நடு அகலாங்குகளில், சூறாவளியின் தெற்குப் பக்கம் பெரும்பாலான பனிப்பொழிவைத் தருகிறது. + +[[Image:Snowsquall line-Bourrasque neige frontal NOAA.png|thumb|right| [[போசுட்டன், மசாசூசட்]] நோக்கி நகரும் பனித்தண் வளிமுகப்பு, ஐக்கிய அமெரிக்கா]] + +தண்ணிய காற்றுத் திரளின் முன்னேறும் விளிம்பைக் கொண்ட பனித் தண்வளி முகப்பு, மழைச் சுழல்வட்டைப் போன்ற செறிந்த முகப்பு வெப்பச் சுழற்சித் தொடரமைந்த பனிச்சூறையை, தரை மேற்பரப்பு வெப்பநிலை உறைபதத்தில் அமையும்போது, உருவாக்கலாம். இதில் உருவாகும் வலிய வெப்பச் சுழற்சி போதுமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கிறது. எனவே இது தான் கடக்கும் இடங்களில் எல்லாம் செறிவான பனிவீச்சால் தாக்குவதால் பேரளவுப் பனியைப் பொழிந்து நிரப்பும்.இந்தவகை பனிச்சூறை தான் கடந்துபோகும் தடத்தில் ஒரு புள்ளியில் அரைமணி நேரத்துக்கு மேல் நிலைக்காது.ஆனால், பனிச்சூறைத் தொடரின் இயக்கம் நெடுந்தொலவிற்குப் பரவி அமையலாம். இந்தவகை பனிச்சூறை தான் கடந்துபோகும் தடத்தில் ஒரு புள்ளியில் அரைமணி நேரத்துக்கு மேல் நிலைக்காது.ஆனால், பனிச்சூறைத் தொடரின் இயக்கம் நெடுந்தொலவிற்குப் பரவி அமையலாம். முகப்புச் சூறைகள் தண்வளி முகப்புக்கு முன்னோ பின்னோ சிறுதொலைவுக்கு ஆழ்ந்த தாழ்வழுத்தப் பகுதியை உருவாக்கலாம் அல்லது தாழ்வகட்டுத் தொடரை உருவாக்கலாம். இது மரபான தண்வளி முகப்பு கட்த்தலைப் போலவே செயல்படும். பின்னை முகப்பில் சூறைகள் உருவாகும்போது, வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நேரியல் சூறைப் பட்டைகள் தொடர்ச்சியாகவும் விரைவாகவும் கடந்து செல்லலாம். இவை ஒவ்வொன்றும் 25 கற்கள் அல்லது 45 கிமீ தொலைவில் அரைமணி நேரக் கால இடைவெளியில் கடக்கலாம். பேரளவு குத்துநிலை வளர்ச்சியும் கலத்தலும் அமையும் நேர்வுகளில், சூறை தன்னுள் திரள்கரு முகில்களை உருவாக்கலாம். இது பனியிடிப் புயல் எனப்படுகிறது. + +உறைந்த காற்றுக்குக் கீழாக வெதுப்பான ஈரக் காற்று செல்லும்போது சிறிது நேரம், வெதுப்பான முகப்பு கூட, பனிப்பொழிவை உருவாக்கலாம். அடிக்கடி, முகப்பின் பின்னமைந்த வெதுப்பான பகுதியில் பனிப்பொழிவு, மழைப்பொழிவாகவும் மாறுவதுண்டு. + +[[File:Lake Effect Snow on Earth.jpg|thumb|ஏரி விளைவுப் பனிப்பொழிவை உண்டாக்கும் மிச்சிகான், சுப்பீரியர் ஏரிகள் மீதூரும் தண்ணிய வடமேற்குக் காற்று.]] + +குளிர்ச்சியான வளிமண்டலச் சூழல்களில், தண்காற்றுத் திரள் வெதுவெதுப்பான ஏரி நீர்ப்பரப்பைக் கடந்து செல்லும்போது காற்றின் அடிப்பகுதி சூடாகிப் பேரளவு ஏரி நீரை ஈரப்பதமாக உட்கவர்ந்து மேலமைந்த தண்வளி முகப்பைக் கடந்து மேலெழும்போது உறைந்து மறுமழி மறைவுப் பக்க்க் கரையில்/கடற்கரையில் கீழிறங்கும்போது பனியாகப் பொழியும். + +உவர்நீர்நிலைகளிலும் இதே விளைவு நிகழும்போது பெருங்கடல் விளைவு எனப்படுகிறது. இந்த விளைவு மலையால் காற்றுத் திரள் மேலே தூக்கப்படும்போது உயர்குத்துயரத்தால் செறிவடைந்து இறங்குமுக கடற்கரைகளில் பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. இந்த மேலெழுச்சி குறுகலான ஆனால் செரிவானபொழிவுப் பட்டையை உருவாக்கும். இதனால், ஒரு மணியளவில் பல அங்குல பனியை வீழ்படியச் செய்து பேரளவு பனிப்பொழிவை உண்டாக்கும். + +ஏரி விளைவுப் பனிபொழிவுப் பகுதிகள் பனிப்பட்டைகள் என வழங்குகின்றன. இவற்றில், பேரேரியின் கிழக்குப் பகுதியும் வடக்கு யப்பானின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளும் உருசியாவின் கம்சாத்கா தீவகமும் பேருப்பு ஏரி, கருங்கடல், காசுபியக் கடல், பால்டிக் கடல், வட அத்திலாந்திக் பெருங்கடலின் பகுதிகள் ஆகியன அடங்கும். + +மலைசார் அல்லது மலைவீழ் பனிப்பொழிவு, காற்றுவீச்சால் உந���தித் தள்ளப்படும் காற்றுத் திரள் விசைமிக மலையின் மேல்நிலப் பகுதிகளுக்கு மேலெழும்புவதால் நிகழ்கிறது. இவ்வாறு மலைமேல் அல்லது மலைத்தொடர்களில் எழும்பும் காற்று நிலைவெப்ப இழப்புக் குளிர்வால் செறிந்து பனியாகப் பொழிகிறது. ம்லையில் எழும்போது ஈரம் நீக்கப்படுவதால் பொழிவு மறைப்பக்கத்தில் வீசும் காற்று உலர்வாக அமைகிறது. இது போயென் காற்று எனப்படுகிறது. இதனால் பனிப்பொழிவின் ஆக்கத்திறன் கூடுதலாவதோடு. குத்துயரம் கூடுகையில் வெப்பநிலை குறைவதாலும் பனிவீழ் பகுதிகளின் குத்துயரம் கூடும்போது, பனி அடுக்கு ஆழமும் பருவமுறைப் பனிப்படர்வும் தொடர்ந்து நீடித்து நிலைக்கும். + + +[[பகுப்பு:வானிலை]] +[[பகுப்பு:பனி]] +[[பகுப்பு:நீரின் வடிவங்கள்]] + + + +புதிய கற்காலக் கட்டிடக்கலை + +புதிய கற்காலக் கட்டிடக்கலை என்பது, புதிய கற்காலச் சமுதாயத்தில் உருவான கட்டிடக்கலையாகும். புதியகற்காலப் பண்பாடு உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலப் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தென்மேற்கு ஆசியாவில், இது கி.மு 10,000 ஆண்டுகளுக்குச் சற்றுப் பின்னர் உருவானது. இங்கிருந்து இப் பண்பாடு கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் பரவியதாகக் கருதப்படுகின்றது. கி.மு 8000 அளவில், தொடக்கப் புதிய கற்காலப் பண்பாடு, தென்கிழக்கு அனதோலியா, சிரியா, ஈராக் ஆகிய பகுதிகளில் நிலவியது. உணவு உற்பத்திச் சமூகங்கள் தென்கிழக்கு ஐரோப்பாவில் கி. மு. 7000 அளவிலும், மத்திய ஐரோப்பாவில் கி.மு. 5500 அளவிலும் காணப்பட்டன. அமெரிக்கப் பகுதிகள், ஐரோப்பியத் தொடர்புகள் ஏற்படும்வரை புதிய கற்காலத் தொழில்நுட்ப மட்டத்திலேயே இருந்து வந்தன. +லேவண்ட் (Levant), அனதோலியா, சிரியா, வட மெசொப்பொத்தேமியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் கட்டிடம் அமைப்பதில் சிறந்து விளங்கினர். இவர்கள் சேற்றுமண் செங்கற்களைப் பயன்படுத்தி வீடுகளையும், ஊர்களையும் அமைத்தனர். தெற்கு அனதோலியாவில் இருந்த புதிய கற்காலக் குடியிருப்பான கட்டல் ஹூயுக் (Çatalhöyük) என்னுமிடத்தில், வீடுகள் சாந்து பூசப்பட்டு, மனித மற்றும் விலங்குகளின் ஓவியங்களால் அழகூட்டப்பட்டு இருந்தன. ஐரோப்பாவில், நீள வீடுகள் (long houses), மரக்கொம்புகள், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்ததுடன், இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் கட்டப்பட்டன. அயர்லாந்தில் பெருமளவில் கட்டப்பட்ட இத்தகைய சின்னங்கள் இன்னும் பெருமளவில் காணப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகளிலும், நீள அகழ், "ஹெஞ்"கள் போன்ற பல இறந்தோர் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. + +மேற்கு ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பெருங்கல் அமைப்புக்கள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையே. இவ்வகையான பெருங்கல் அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பரந்து காணப்பட்டாலும், இங்கிலாந்திலுள்ள ஸ்டோன் ஹெஞ் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இத் தகைய கட்டிடச்சின்னங்கள், பெரும்பாலும், இறந்தோர் நினைவுச் சின்னங்கள், கோயில்கள், சமய மற்றும் வானியல் தொடர்புள்ளவையாகக் கருதப்படும் வேறு பல கட்டிடங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இன்று அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானதாகக் கருதப்படும் கோயில், "கோசோ"த் தீவிலுள்ள "கன்டிஜா" எனப்படும் கோயிலாகும். + +புதிய கற்காலப் கால் வீடுகள் (pile dwellings), அல்லது பரண் வீடுகள் (stilt houses) சுவீடன் நாட்டிலும், வேறிடங்களிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேல் ஆஸ்திரியாவிலுள்ள மொண்ட்சீ (Mondsee) மற்றும் அட்டர்சீ (Attersee) ஏரிப் பகுதிகளிலும் இத்தகைய வீடுகளின் தடயங்கள் காணப்பட்டுள்ளன. மீளுருவாக்கம் செய்யப்பட்ட பரண்வீடுகள், சூரிச், உண்டெருஹுள்டிங்கென் (Unteruhldingen) ஆகிய இடங்களிலுள்ள திறந்த வெளி அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. + +பின்வருவன உலகிலுள்ள முக்கியமான புதிய கற்காலக் குடியேற்றங்கள் ஆகும். + + + + + + +மார்ட்டின் வான் பியூரன் + +மார்ட்டின் வான் பியூரன் ("Martin Van Buren"; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க அரசியல்வாதியும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும் (1837–41) ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார். + + + + +வில்லியம் ஹென்றி ஹாரிசன் + +வில்லியம் ஹென்றி ஹாரிசன் ("William Henry Harrison Sr."; (பெப்ருவரி 9, 1773 – ஏப்ரல் 4, 1841) ஒன்பதாவது ஐக்கிய அமெரி��்காவின் குடியரசுத் தலைவர் (1841) ஆவார். அத்துடன் அவர் ஒரு படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். அலுவகத்தில் இருக்கும்போது இறந்த முதலாவது அதிபராவார். இவர் அதிபரான 32 வது நாளில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் பணியாற்றியவரானார். + + + + +79ஆம் அகாதமி விருதுகள் + +79 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 24, 2007 அன்று நடைபெற்றன. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (வில் ஸ்மித், பாரஸ்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். + +மேலும் த டிபார்ட்டட், லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா, லிட்டில் மிஸ் சன்ஷைன், பாபெல், த குயீன் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்விருதினை லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த த டிபார்ட்டட் படம் வென்றது. + +வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. + +விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர். + + + + + +மெஹெர்கர் + +மெஹெர்கர் (கிமு 7000 - 2500/2000 ) , இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. + +பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் ("Jarrige") மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன. + +மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது. + + + + + +புதிய கற்காலம் + +புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. + +புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், லெவண்ட் (சிரியா, லெபனான், ஜோர்டான்]], பாலஸ்தீனம்) போன்ற பகுதியில் இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் ("Natufian") பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் ("proto-Neolithic") பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லெவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆபிரிக்கா, வட மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது. + +புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்த��. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது. அண்மைக் கிழக்குப் பகுதிகளின் வேளாண்மைச் சமூகங்களில், மட்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில், புதிய கற்கால முற்பகுதியில், எந்த அளவுக்குப் பயிர் செய்தார்கள் என்றோ, நிலையான குடியிருப்புக்களுடன் கூடிய சமுதாயங்கள் இருந்தனவென்றோ நிச்சயமாகக் கூறமுடியாதுள்ளது. ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில், உள்ளூர் நிலைமைகளையொட்டியும், ஐரோப்பியப் பண்பாடுகளுடனோ அல்லது தென்மேற்கு ஆசியப் பண்பாடுகளுடனோ சம்பந்தப்படாமலும் புதிய கற்காலப் பண்பாடுகள் நிலவின. பண்டைய ஜப்பானியச் சமூகங்களில் மட்பாண்டப் பயன்பாடு இடைக் கற்காலத்திலேயே காணப்படுகின்றது. + + + + + +கற்காலம் + +கற்காலம் () என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன. + +இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்க���லம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது. + +கற்காலம் என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும். + +கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய "வரலாற்றுக்கு முந்திய காலங்கள்" "(Pre-historic Times)" என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. + +இக் காலப் பகுதியின் எல்லைகள் தெளிவற்றவையும், சர்ச்சைக்கு உரியவையும், பிரதேசங்களைப் பொறுத்து மாறக்கூடியவையும் ஆகும். முழு மனித குலத்தையும் கணக்கில் எடுத்துக் கற்காலம் என்பது பற்றிப் பேச முடியும். சில குழுக்கள் உலோகக் காலத்துக்கு எப்போதுமே வளர்ச்சி அடைந்ததில்லை. தொழில்நுட்ப அடிப்படையில் வளர்ச்சி பெற்ற சமுதாயங்களோடு தொடர்பு ஏற்படும்வரை அவை கற்காலத்திலேயே இருந்து வந்தன. இருந்தாலும் இக்காலம் பொதுவாக மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் ஹோமினிட்டுகள் கருவிகளைச் செய்தபோது தொடங்கியதாக நம்பப்படுகிறது. + +கல்லாலான தொல்பொருட்களே பல சமயங்களில் ஒரே எச்சங்களாக இன்றுவரை காணப்படுவதால் அக்காலங்களுக்கான தொல்லியல் ஆய்வில் கற்பகுப்பாய்வு முக்கியமானதும் சிறப்பானதுமாக அமைகின்றது. இது, கற்கருவிகளை அளப்பதன்மூலம் அவற்றின் வகை, தொழிற்பாடு, தொடர்பான தொழில்நுட்பம் என்பவற்றை முடிவு செய்வதை உள்ளடக்குகிறது. + +இச் சொல் தொடர்பான முக்கியமான ஒரு பிரச்சினை, வரலாற்றுக்கு முந்திய கால மனித முன்னேற்றமும், காலப் ப��ுதியும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளைச் செய்யப் பயன்பட்ட பொருட்களைக் கொண்டே அளக்கப்படுகின்றன என்பதாகும். சமூக அமைப்பின் வகை, பயன்படுத்திய உணவு மூலங்கள், கடுமையான தட்பவெப்பச் சூழலுக்குத் தம்மை இசைவாக்கிக் கொண்டமை போன்றவை கருத்தில் எடுக்கப்படவில்லை. இது 19 ஆம் நூற்றாண்டில், மூன்று கால முறை உருவாக்கப்பட்ட போது இருந்த அறிவுநிலையின் விளைவு ஆகும். அக்காலத்தில் தொல்பொருட்களைக் கண்டுபிடிப்பதே தொல்லியல் அகழ்வாய்வுகளின் முக்கியமான நோக்கமாக இருந்தது. தற்காலத் தொல்லியல் நுட்பங்கள் பரந்த அளவிலான தகவல்களைப் பெறுவதை முதன்மைப் படுத்துகின்றன. இதனால், வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பான நமது அறிவு விரிவடைந்துள்ளதுடன், காலங்களுக்கு இடையேயான பிரிவுகள் நல்லமுறையில் உருவாகின்றன. இதனால், கற்காலம் போன்ற சொற்கள் பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. மனித சமுதாயத்தில் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மாற்றங்கள் சிக்கலானவை என்பதையும்; அவை வேளாண்மையைக் கைக்கொண்டது, குடியேற்றங்களை அமைத்து நிலைத்து வாழப் பழகியமை, சமயம் போன்ற பல காரணிகளோடு தொடர்புபட்டவை என்பதையும் இப்போது நாம் அறிவோம். கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே. + +இச் சொல் குறித்த இன்னொரு பிரச்சினை இது ஐரோப்பாவின் தொல்லியல் நாகரிகங்களை விளக்க எழுந்தது என்பதாகும். அமெரிக்கா, ஓசானியா போன்ற சில பகுதிகள் தொடர்பில், இச் சொற்களைப் பயன்படுத்துவது வசதிக் குறைவானது. இப் பகுதிகளில், வேளாண் மக்களும், வேடுவர் உணவு சேகரிப்போர் போன்றோரும் ஐரோப்பியரின் தொடர்பு ஏற்பட்ட காலம் வரை கருவிகள் செய்வதற்குக் கற்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலோக வேலை, இப்பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் குறைவான ஒன்று. இதனால் இப் பகுதிகளின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வதற்கு வேறு வகையான பிரிவுகள் பயனுள்ளவை. + +கற்காலத்தைத் தொடர்ந்து வருவது வழக்கமாக வெண்கலக்காலம் ஆகும். இக் காலத்தில் கருவிகள் செய்வதற்கு வெண்கலம் என்னும் உலோகம் பயன்பட்டது. வட ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான சமுதாயங்கள் கற்காலத்துக்கு வெளியே வரத்தொடங்கிய காலம் கிமு 6000 தொடக்கம் கிமு 2500 வரையான காலப்பகுதியாகும். கீழ்சகாராப் பகுதி ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கற்காலத்தைத் தொடர்ந்து நேரடியாகவே இரும்புக்காலம் உருவாகிவிட்டது. மையக் கிழக்குப் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் சிலவற்றிலும் கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதியில் கற்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொதுவாக நம்பப்படுகின்றது. ஐரோப்பாவிலும், ஆசியாவின் எஞ்சிய பகுதிகளிலும் கற்காலம் முடிவுக்கு வந்தது ஏறத்தாழ கிமு 4000 ஆண்டுக் காலப் பகுதியிலாகும். தென்னமெரிக்காவைச் சேர்ந்த முன்-இன்காப் பண்பாடுகள் கிமு 2000 ஆண்டுகள் வரை கற்காலத்திலேயே இருந்தன. இதன் பின்னரே செப்பு, பொன் போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. ஆஸ்திரேலியாவில் கற்காலம் 17 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது. + +கற்காலம் மூன்று பகுதிகளாக வகுக்கப்படுகின்றது. இவை: + + +என்பனவாகும். புதிய தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றபோது புதிய காலப்பகுதிகளும், துணைக் காலப்பகுதிகளும் சேர்க்கப்பட்டன. வெவ்வேறு இடங்களில் நிலைமைகளை விளக்குவதற்காகப் புதிய முறைகளும் உருவாக்கப்பட்டன. கூடிய நவீனமான காலப்பகுப்பு ஒன்று பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை பின்வருமாறு அமைகின்றது. + +பழைய கற்காலம் கற்கருவிகளின் உருவாக்கத்தோடு தொடர்புள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இது மனிதர் இப்புவியில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்குகிறது (ஏறத்தாழ மனித வரலாற்றின் 99%). இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக் காலம் தொடங்குகிறது. இது ஹோமோ ஹபிலிசுகள் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிமு 10,000 ஆண்டளவில் வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது வரை நீடித்தது. பழையகற்காலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கியது. இக் காலத்தில் மனிதனுடைய கூர்ப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்திய பல பெரிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கற்காலத்தின் தொடக்கத்துடன் பழையகற்காலம் முடிவுற்றது. + +குலக்குழுக்கள் எனப்படும் சிறு குழுக்களாக இயங்கிய பழையகற்கால மனிதர் தமது உணவை தாவரங்களைச் சேகரிப்பதன் மூலமும், விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும் பெற்றனர். பழையகற்காலத்தில், மரம், எலும்பு முதலியவற்றாலான க���ுவிகளும் பயன்பட்டுவந்த போதிலும் அக்காலத்தின் சிறப்பியல்பாக உள்ளது கற்கருவிகளே. இவற்றுடன், தோல், தாவர இழைகள், போன்றனவும் பயன்பட்டன ஆயினும் அவை விரைவில் அழிந்துவிடக்கூடியன ஆதலால் அவை போதிய அளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று கிடைக்கவில்லை. மனித இனம், "ஹோமோ ஹபிலிஸ்" போன்ற ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த பழைய இனங்களில் இருந்து படிப்படியாகக் கூர்ப்பு அடைந்து நடத்தைகளிலும், உடலமைப்பிலும் தற்கால மனிதனாக மாறியது பழையகற்காலத்திலேயே. பழையகற்காலத்தில் இறுதிப் பகுதியில், சிறப்பாக இடைப் பழையகற்காலத்திலும், மேல் பழையகற்காலத்திலும் மனிதர்கள் தொடக்ககால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். + +ஆப்பிரிக்காவில், பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக, நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான "ஹோமோ ஹபிலிசுகள்" உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை. இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும், காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடவில்லை. சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த "ஹோமோ இரெக்டசு" என்னும் மனித இனம் தோன்றியது. ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன், சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர். அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர். சீனாவிலுள்ள சூக்கோடியன் (Zhoukoudian) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது. + +நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300,000 இருந்து 30,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்து, மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும். + +35,000 தொடக்கம் 10,000 ஆண்டுக் காலத்துக்கு ம��ன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட இஅனித இனங்களில், குரோ-மக்னன்களதும், நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன. சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின. + +கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர். இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். 13,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும், வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது. + +இறுதியான உறைபனிக் கால முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதி, கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை போன்றவற்றை உடையதாக இருந்தது. இந்த நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கில் நுண்கற்கருவிகளின் வளர்ச்சி ஏற்பட்டது. இவை முன்னைய பழங்கற்காலக் கற்கருவிகளிலிருந்தே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவுக்கு, இக் கருவிகளும், அதோடுகூடிய வாழ்க்கை முறைகளும் அண்மைக் கிழக்குப் பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டன. இங்கே, நுண்கற்கருவிகள், கூடிய செயற்திறன் உள்ள வகையில் வேட்டையாட வழிவகுத்ததுடன், சிக்கலான குடியிருப்புக்கள் தோன்றுவதையும் ஊக்கப்படுத்தின. + +புதிய கற்காலத்தில், வேளாண்மை, மட்பாண்டங்களின் வளர்ச்சி, கட்டல் ஹூயுக் (Çatal Hüyük ), ஜெரிக்கோ போன்ற பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. முதலாவது புதிய கற்காலப் பண்பாடுகள் கி.மு 7000 ஐ அண்டித் தோற்றம் பெற்றன. தொடர்ந்து மத்தியதரைக் கடல் பகுதி, சிந்துச் சமவெளி, சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளிலும் புதிய கற்காலப் பண்பாடு பரவியது. + +கூடிய அளவில் பயிர்களை அறுவடை செய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன் முதலாக பெரும் அளவிலாக கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. இது, இத்தகைய வேலைகளில் பெருமளவில் ஆட்களை ஈடுபடுத்துவதற்கான வளங்கள் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. எந்த அளவுக்கு இந் நிகழ்வுகள், உயர்குடியினரும், சமூகப் படிநிலை அமைப்பும் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன என்பது இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பொலினீசிய சமுதாயங்களைப் போலச் சில சிக்கலான படிமுறை அமைப்புக்கொண்ட சமுதாயங்கள் பிந்திய புதியகற்காலத்தில் உருவாகியிருந்தாலும், பெரும்பாலான புதியகற்காலச் சமுதாயங்கள் எளிமையானவை ஆகவும் சமத்துவச் சமுதாயங்களாகவுமே இருந்தன. எனினும், இவை தமக்கு முந்திய பழையகற்காலச் சமுதாயங்களைவிடக் கூடிய படிமுறை அமைப்புக் கொண்டவையாகவே இருந்தன. நிலையாக வாழத்தொடங்கிய சமுதாயங்கள் தமக்குத் தேவையான பொருட்களைப் பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் புதியகற்காலத்தில் வணிக நடவடிக்கைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஸ்காட்லாந்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆர்க்னித் தீவில் உள்ள ஸ்காரா பிரே, புதியகற்கால ஊருக்கு ஐரோப்பாவில் உள்ள எடுத்துக்காட்டு ஆகும். இச் சமுதாயத்தினர் கல்லாலான படுக்கைகளையும், பொருட்கள் வைக்கும் தட்டுக்களையும், உள்ளகக் கழிவறைகளையும் கூட அமைத்திருந்தனர். + + + + + +இடைக் கற்காலம் + +இடைக் கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட கால கட்டத்தைக் குறிக்கிறது. + +இக் காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. + +பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன. + + + + +செப்பு��் காலம் + +செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். கி.மு. 4300 க்கும், 3200 க்கும் இடைப்பட்ட செப்புக் காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைத்த "செராமிக்" பொருட்கள், தெற்கு துருக்மெனிஸ்தான், வடக்கு ஈரான் ஆகிய பகுதிகளில் கிடைத்த செராமிக் பொருட்களுடன் ஒத்திருக்கின்றன. இது, இக்காலத்தில் இப்பகுதிகளிடையே குறிப்பிடத்தக்க போக்குவரத்துக்களும், வணிகமும் நடைபெற்றிருப்பதைக் காட்டுகிறது . +ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, மத்திய கிழக்குப் பகுதிகளில் செப்புக்காலம் மிக முன்னதாகவே தொடங்கிவிட்டது. எனினும், செப்புக் காலத்திலிருந்து, முழுமையான வெண்கலக் காலத்துக்கான மாற்றம் ஐரோப்பாவில் மிக விரைவாக இடம்பெற்றது. செப்புக் காலம், மரபுவழியான முக்கால முறைக்கு (three-age system) உள்ளேயே ஒரு மாறும் காலமாக, புதிய கற்காலத்துக்கும், வெண்கலக் காலத்துக்கும் இடையே நிலவியது. செப்பு முதலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும், தகரம் (tin) மற்றும் வேறு உலோகங்களுடன் சேர்த்துக் கலப்புலோகம் ஆக்குவது விரைவாகவே தொடங்கிவிட்டது. இதனால், செப்புக் காலத்தையும் அக்காலத்துக்குரிய பண்பாட்டையும் பிரித்து அறிவது கடினமானது. +இதனால், இப் பாகுபாட்டை, தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா போன்ற உலகின் சில பகுதிகளில் மட்டுமே தொல்லியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இப் பகுதிகளில் செப்புக் காலம் கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டுகளை அண்டி நிலவியது. சில சமயங்களில், அமெரிக்க நாகரிகங்கள் தொடர்பிலும் இப் பாகுபாடு பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதிகளில், செப்பும், அதன் கலப்புலோகங்களும், ஐரோப்பியரின் வருகைக்கு முன்னமே பயன்படுத்தப்பட்டு வந்தது. மிகப் பழைய செப்பு அகழிடங்கள் இன்றைய மிச்சிகன் மற்றும் விஸ்கோசின் பகுதிகளில் உள்ளன. இவை, புதிய உலகில் காலத்தால் முந்தியவையாக இருப்பதுடன், உலகின் மிகப் பழையனவற்றுள்ளும் அடங்குகின்றன. இப்பகுதிகளில் செப்பு, கருவிகள் மற்றும் வேறு சாதனங்கள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்கே கிடைத்த இத்தகைய பொருட்களுடைய காலம் கி.மு 6000 தொடக்கம் கி.மு. 3000 வரை என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. + + + + +காஸ்பேக்ஸி + +காஸ்பேக்ஸி ஒரு கணினி பாதுகாப்பு நிறுவனம் ஆகும். காஸ்பேக்ஸியினால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஆண்டிவைரஸ் (கணினி வைரஸ் எதிர்ப்பு) நிரல்கள், ஒற்றுமென்பொருட்களுக்கெதிரான ஆண்டிஸ்பைவேர், ஆண்டிஸ்பாம் போன்ற மென்பொருட்களை உருவாக்கிவருகின்றது. ஆகஸ்ட் 2003 முதல் Virus Bulletin Board இன் 100% மிக ஆபத்தான கணினி வைரஸ் மென்பொருட்களைக் கண்டறியும் சோதனையில் வெற்றிகரமாக வென்றுள்ளது. + +இந்த அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகமானது ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. இது பிராந்திய அலுவலங்களை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாண்ட், ரோமானியா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. + +இந்த நிறுவனமே அமெரிக்கா ஆண்லைன் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இலவச ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் பின்னர் இடைநிறுத்தப்பட்டது. + +அவிரா + + + + + +வெண்கலக் காலம் + +வெண்கலக் காலம் ("Bronze Age") மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. + +தொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து தகரத்தை பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர். + +சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடன் இரும்புக் காலம் எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது. + +பண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்து இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிரவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது. + +பண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்து முதலாம் நூற்றாண்டு முதல் இருபத்து ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது. + +பண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்து ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்றக் காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன + + +ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. அதனால் இதை வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள் எனக் கூறலாம். + +ஜப்பான் பகுதிகளில் சோமான் காலம் வழக்கிழந்த பிறகு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் வெண்கலமும் இரும்பும் ஒன்றாகவே அறிமுகமானது. இந்த இரண்டு உலோகமும் கொரிய தீபகற்பத்திலிருந்து இங்கு சென்றதால் ஜப்பானுக்கு வெண்கலக் காலம் என்று தனியாக இல்லை. ஜப்பானின் முந்தைய குடிகளை விரட்டிய சோமான்களின் வழியாக பரவிய உலோகக் காலத்தில் இரும்பே வேளாண்மைக்கும் மற்ற கருவிகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. வெண்கலம் கலைப்பொருள்களுக்கும் மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களை வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டன. + +மற்ற இடங்களில் வெண்கலக் காலம் வழக்கில் இருந்த போது ஆப்பிரிக்காவில் எகிப்தியப் பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் புதிய கற்காலமே வழக்கில் இருந்தது. வெண்கலம் ஆப்ரிக்கப் பகுதிகளில் அதிகம் காணப்படாவிட்டாலும் செப்பை மட்டும் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க ஆப்ரிக்கர்கள் அறிந்தே இருந்தனர். எனினும் இந்த செப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் இப்பகுதி முதிர்ச்சி அடைந்து காணப்படவில்லை. + +தென் இந்தியாவில் வெண்கலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்தே அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு உதாரணமாக கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவு பழமை என்று கருதத்தக்க வட இந்தியாவின் வெண்கலப் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் வட பகுதிகள் புதிய கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் தென் தமிழகம் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் மாறின. + +இலங்கையிலும் வெண்கலக் காலம் என்று தனிச்சிறப்பாக ஏதுமில்லாவிடினும் அங்கு செம்பு மட்டும் தாதுப்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறிதளவு பயன்பாடில் இருந்துள்ளன. + +வானவியல் ஆராய்ச்சியாளர்கள் 1999 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி மூலமாகப் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கல���் தட்டை கொண்டு சோதனையில் ஈடுபட்டு முடிவுகளை அறிவித்தனர். இந்த நெப்ரா ஸ்கை டிஸ்க் எனப்படுவது, தோராயமாக கி.மு.1600 இல் மத்திய வெண்கல காலத்தில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடுமென கருதப்படுகிறது. மேலும், இது முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஸ்கை மேப் என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வெண்கலத் தட்டு, சுமார் 32 செ.மீ. விட்டம் கொண்டதாக உள்ளது. சந்திரன், சூரியன் மற்றும் சில நட்சத்திரங்கள் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும் வகையில் தங்கத் திரவம் கொண்டு பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது. வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகியவற்றில் விவசாயம் சார்ந்த விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்றவற்றினைச் சிறந்த முறையில் கணிக்க உதவும் காலக் கணிப்பானாக இந்தக் விண் தட்டு (Sky Disc) பயன்பட்டிருக்க வேண்டுமென்பது இக்கண்டுபிடிப்பாளர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. + +பிளீயட்ஸ் காலமான குளிர்காலத்தில் அமாவாசை (No Moon Day) அன்று இரவுப் பொழுதில் விண்ணில் நட்சத்திரங்கள் நிறைய தோன்றினால் அது வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியென நம்பி விதைகளை எடுத்துக் கொண்டு விளைச்சல் நிலங்களில் விதைக்கத் தொடங்கி விடுவர். அதேபோல், முழு நிலவு தோன்றும் பௌர்ணமிக்குப் (Full Moon Day) பிறகான காலக் கட்டத்தில் வானில் நட்சத்திரங்கள் நிரம்பக் காணப்பட்டால், அது சாகுபடிப் பணிகள் மேற்கொள்வதற்கான உகந்த காலம் என்றெண்ணி அறுவடையினை மேற்கொள்வர். இவ்வாறாக, வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், காலநிலைக் காட்டும் வான் தட்டைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலைச் செய்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண் தட்டில் இரண்டு வெண்கல வாள், இரண்டு சிறிய அச்சுகள், ஒரு உளி மற்றும் சுழல் போன்று வளையங்கள் உடைய பிளவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. + +ஆதி மனிதன் மொழியைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கிய காலக் கட்டமாக வெண்கலக் காலம் அறியப்படுகிறது. மெசபடோமியா, ஈஜிப்ட் ஆகியவற்றில் பேச���சு மொழியும் எழுத்து முறையும் முதன் முதலாகத தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் கி.மு. 3200 இலிருந்து கி.மு. 600 வரையிலான காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது. இத்தகைய வெண்கலக் காலம் அழிந்ததற்கான காரணத்தைப் பிற்காலத்தில் +வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இஸ்ரேல் நாட்டிலுள்ள கலிலீ எனும் கடலுக்கடியில் கிடைக்கப்பெற்ற மகரந்தத்தின் தொல்படிவங்களின் காணப்பட்ட கடுமையான வறட்சி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வறிஞரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, ஃபிங்கல்ஸ்டீன் மற்றும் அவருடைய சக ஊழியர்களான டாஃப்னா லங்குட் மற்றும் தாமஸ் லிட் ஆகியோர், கி. மு. 1250 முதல் கி. மு. 1100 வரை காணப்பட்ட நீண்ட தொடர் வறட்சிக் காரணமாக வெண்கலக் காலம் அழிவுற்று முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். கி.மு. 1250 க்கு பின்னர், மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் கருங்காலி, தேவதாரு, ஆலிவ் மற்றும் காரப் வகை மரங்களின் எண்ணிக்கையானது வெகுவாகக் குறைந்து போனது.அதேசமயம், வறண்ட நிலங்களில் மிகுதியாகக் காணப்படும் செடிகளும் மரங்களும் அங்கு அதிகரித்துக் காணப்படுவதைச சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். + + + + +தனித்தமிழ் + +பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுவதை இலக்காகக் கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம். + + + + + + +நற்றமிழ் + +இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படு��் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைக் கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்குப் பயன்படும் சொற்கள்), அனைத்துலகக் கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவிர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம். + + + + +நல்லூர் சட்டநாதர் கோயில் + +நல்லூர் சட்டநாதர் கோயில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. இதன் தோற்றம் சட்டநாதர் என்னும் ஒரு சித்தரின் சமாதியுடன் தொடர்புடையது என்று சிலர் கூறுகின்றனர். இச்சித்தர் 10, 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் குருவாவர். பாம்பாட்டிச் சித்தர் இந்த ஆலயம் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். எனினும், யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி நல்லூர் நகரை அமைத்தபோது அதற்குக் காவலாக அதன் வட திசைக்குச் சட்டநாதேசுவரர் கோயிலை அமைப்பித்ததாகக் கூறுகிறது. இதுவே இன்றைய சட்டநாதர் கோயில் என்பது பல வரலாற்றாளர்களது கருத்து. யாழ்ப்பாண இராச்சியக் காலத் தொடர்பு கொண்ட மந்திரி மனை, சங்கிலித் தோப்பு, பண்டாரக் குளம் ஆகியவற்றுக்கு மிக அண்மையில் இக் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். + +1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தமது நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் அவர்கள் இடித்து விட்டனர். அப்போது, சட்டநாதர் கோயிலும் அழிந்து போய்விட்டது. தற்போதுள்ள கோயில் பிற���காலத்தில் முன்னைய கோயில் இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. + + + + + +செந்தமிழ் + +சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளை தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகின்றது. இது ஒரு வழக்கே தவிர, அரச நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட சீர்தரம் அல்ல. சீனம் போன்ற பிறமொழிகளைப் போலன்றி வட்டார மொழிக்களுக்கும் செந்தமிழுக்கும் இருக்கும் இடைவெளி சிறியதே, ஆகையால் செந்தமிழை தமிழர்கள் இயல்பாகவே பயன்படுத்துகின்றார்கள். +"மதுரையை மையமாக கொண்டு, இந்தப் மிகப் பழங்காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது. இந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு, மற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக இருந்தது. இதன் கட்டுத் திட்டங்களை, இடைக்கால உரையாசிரியர்களின் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட, (கூட்டம், அவை, மதச் சங்கம், கல்லூரி என்ற பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட) ஒரு இலக்கிய, கலாச்சார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன. இது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய செய்தி. ஏனெனில், மதுரையின் செப்பமான இலக்கிய மொழியிலிருந்து தற்கால தமிழ் வரை ஒரு நேரடியான வளர்ச்சி முறையை நாம் படிப்படியாக காட்டுதல் கூடும்." + +"இந்த செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட வட்டார மொழி பிற்காலத்தில் செந்தமிழ் என்று குறிப்பிடப்பட்டது; அதன் வளர்ச்சிக் காலத்தில் அது வாய்ப் பேச்சுக்கள் பெறும் வளர்ச்சியைப் பெற்றது; அது நிலைத்து "இலக்கிய" மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை அடைந்த பிறகு மக்களால் பேசப்பட வில்லை; அது இலக்கியத்திற்கே உரிய மொழியாகிவிட்டது..." + + + + + +சங்கர நாராயண சிவலிங்கேசுவரர் ஆலயம் + +சங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம் கிளிநொச்சி முரசுமோட்டை பிரதேசசபைப் பிரிவில் பரந்தன் முல்லைத்தீவு (A30) வீதியில் அமைந்துள்ளது. பல்நெடுங்காலமாக புற்றில் தோன்றிய இறைவனை பின்னர் சூலம் ஒன்று அமைத்து ஆலயம் அமைத்துப் பூசித்து வந்தனர். இது 1998 இல் இடம்பெற்ற உள்ளூர்ப் பிரச்சினைகளால் ச���தமடைந்ததுடன் மக்களும் அப்பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். மீண்டும் 13 ஜூலை 2005 இல் அடிக்கல் நாட்டி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. இந்த ஆலயத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மடம் ஆத்மகாந்தஜீ சுவாமிகள் பூசை செய்த விக்கிரகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. + + + + + +திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் + +திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் (திருக்காறாயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 119ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் கபால முனிவருக்குக் காட்சி தந்தார் என்பதும் பதஞ்சலிக்கு எழுவகைத் தாண்டவங்களையும் காட்டினார் என்பதும் தொன்நம்பிக்கைகள். + +மேலும் இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வர கண் சம்மந்தமான நோய்கள் நீங்கும். + +இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. + +பக்தி இலக்கியங்களில் 'காறை' எனக் குறிப்பிடப்படுவது இவ்வூரே ஆகும். + +சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலம் ஆதிவிடங்கத் தலம். + +தினமலர் கோயில்கள் தளம் - அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில் + + + + + +தமிழகத்தில் பெருங்கற்கால கட்டிடக்கலை + +தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை என்பது, தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய காலத்தில் புழக்கத்திலிருந்த தமிழர் கட்டிடக்கலை பற்றியதாகும். இயற்கையாகக் கிடைக்கும், அளவிற் பெரிய கற்களை அடுக்கி அமைப்புக்களை உருவாக்குவது பெருங்கற்காலத்துக்குரிய சிறப்பியல்பாகும். இந்த இயல்பே இக்காலப் பகுதிக்கு இப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட பெருங்கற்கால அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுக்காக அமைக்கப்படும் ஈமச்சின்னங்கள் ஆகும். + +தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு புதிய கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து நிலவியது. தமிழரின் புதிய கற்காலத்துக்குரிய பண்பாடு கி.மு. 2800 தொடக்கம் கி.மு. 500 வரை நிலவியதா���வும், பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் கி.மு 500 தொடக்கம் கி.பி. 100 வரை என்றும் கருதப்படுகிறது. சங்ககால நூல்களில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்பதுக்கை, கல்திட்டை முதலிய ஈமச்சின்னங்கள் பற்றிப் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பெருங் கற்காலப் பண்பாடு, சங்ககாலப் பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. + + +என்பன தமிழ் நாட்டில் காணப்படும் பெருங் கற்கால அமைப்புக்களாகும் . + +பொதுவாகப் பெருங் கற்காலப் பண்பாடு, கட்டிடங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கியமானதொரு மைல்கல் எனலாம். தமிழ் நாட்டில் இக் காலத்தில் பெரிய கற்களைப் பயன்படுத்தி நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை நோக்குவதன் மூலம் இக்காலக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட சில வளர்ச்சிப் போக்குகளை அறிந்துகொள்ள முடியும். + + +போன்ற அம்சங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கியமான அடிப்படைகளாகத் திகழ்ந்தன எனலாம். இது போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஒருபுறமிருக்க, வடிவமைப்பிலும், இத்தகைய அமைப்புக்களின் பயன்பாடு தொடர்பான தமிழர்களில் உலக நோக்கிலும் முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டன. + +குழிகளை வெட்டுவதன்மூலமோ, சுற்றிலும் சுவர்களை அல்லது வேலிகளை அமைப்பதன் மூலமோ பரந்த வெளியிலிருந்து தனிப்பட்ட தேவைக்கான இடத்தைப் பிரித்தெடுத்துக் கொள்வதற்கான அறிவு இருந்தது. இது, இக் காலத்துக்கு முற்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம். எனினும், மேற்குறிப்பிட்ட கருத்துருக்களுக்கு இலகுவாகக் கையாளக்கூடிய மண், மரக்கிளைகள், இலை, குழை போன்ற கட்டிடப் பொருட்களாலேயே புதிய கற்காலத்தில் வடிவம் கொடுத்தனர். பழங் கற்காலத்தில், நிலைத்திருக்கக்கூடிய ஆனால், கையாளுவதற்குக் கடினமான பெரிய கற்கள் இக் கருத்துருக்களுக்கு வடிவம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தேவைகளுக்கேற்ப அறைகளாகப் பிரித்துக்கொள்வதற்கான வடிவமைப்பு உத்திகளைத் தெரிந்து வைத்திருந்ததற்கான சான்றுகள், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ளன. கொடுமணல் அகழாய்வுகளின் போது அறியப்பட்ட பெருங் கற்காலக் கட்டுமானங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். + + + + + +கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் + +கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். + +தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 120ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தினின் கோயில் கண்ணாப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் நடுதறியப்பர், தாயார் மாதுமைநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக கல்பனை மரமும், தீர்த்தமாக கங்காமிர்தம், சிவகங்கை , ஞானாமிர்த்தம் மற்றும் ஞானகுபம் ஆகியவை உள்ளன. + +இத்தலத்தில் வைணவனுக்கு மனைவியான சைவப்பெண் ஒருவர் சிவலிங்க வழிபாடு செய்வது கண்டு அதனைக் கிணற்றில் எறிந்த பின்னர் அந்த சைவ பக்தை, பசுவின் கன்றைக் கட்டப் பயன்படும் முளையை (ஆப்பு) சிவலிங்கமாக வழிபட, கணவன் சினம் கொண்டுகோடரியால் அந்த முளையை வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தலவரலாறு. வெட்டப்பட்ட தழும்பு சுவாமி மீது உள்ளது. + +இடும்பம் வழிபட்ட தலம். + +அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + +வலிவலம் மனத்துணைநாதர் கோயில் + +வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் +121ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது தொன்நம்பிக்கை. + +காரணமாமுனிவர் வழிபட்ட திருத்தலம் + +அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + + +கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் + +கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்��ு வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். +இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன் + +இத்தலம் அகத்தியருக்கு பிரமகத்தி தோஷமும், இந்திரனுக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபமும் நீங்கிய திருத்தலமாகும். அர்த்தநாரீசுவரர் சந்நிதி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இத்தலத்தில் உள்ளன. + + + + + + +திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில் + +திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 124ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய திருத்தலம்.இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம். + +இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன. + +இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள். + +பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார். + + + + + +முத்தமிழ் + +இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம். + +இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என���பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ். + + + + +மதுரை திருவாப்புடையார் கோயில் + +திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம். இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை. + +சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை(சுயம்புலிங்கத்தை)க் கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அவனே குரவங்குமழ் குழலம்மையைப் பிரதிஷ்டை செய்தவன். +அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் கட்டுவித்துள்ளான். + +இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார். + +ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. + +சங்க காலத்திலே ஒருமுறை பிரளயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. +பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்ற மலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையையும் திருப்பரங்குன்ற மலையையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது. + +மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காக���் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமி உருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது. + +தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும். அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம். இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம். + +இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன. + +இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது. + +இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும் பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம். இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம். + +ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. ��ப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று. + +இத்திருத்தலத்திற்கு கந்தசாமிப் புலவர் இயற்றிய தலபுராணம் உள்ளது. + + + + + +திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் + +திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. +திருப்பரங்குன்றம் நக்கீரர் வாழ்ந்திருந்த தலம் + +கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகன் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகனும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. + +முருகன் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவனும், முருகனும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகன் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். + +இந்நிலையில் சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் - பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. + + + + +பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோ���ில் + +பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் (கொடுங்குன்றம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. + +இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது, 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது. + + + + + +திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் + +திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் +, அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 62 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இத்தலத்தில் பெருமான் ஆடியருளிய கௌரி தாண்டவத்தைக் கண்டு இலட்சுமி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. + +திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்துள்ளது. தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்துள்ளனர். முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவது பல புற்றுகள் காணப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. + +இக்கோயில் ராஜகோபுரம், பிரகாரங்கள், முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர், யோகநாராயணர், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நடராஜர்-சிவகாமி, சந்திரசேகரர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. + +முன்மண்டபத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லான் சன்னதியின் தூண்கள் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளன. + +உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரானி, சாமுண்டி, விநாயகர், சேஷ்டாதேவி, பிரகார விநாயகர், வர்ணலிங்கம் ஆகியவை உள்ளன. அப்பிரகாரத்தில் கருவறைக்குப் பின்னர் சரக்கொன்றை மரம் உள்ளது. அருகே வால்மீகி தவமிருந்ததாக ஒரு இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர். + +வெளிப்பிரகாரத்தில் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும், வன்னிமர விநாயகர் சன்னதியும் உள்ளன. அதே பிரகாரத்தில் யோக பைரவர் சன்னதியும், திருநாகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. அதற்கடுத்து சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது. + +இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார். + +திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. +இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். + +என்று தொழுதேத்தி, தமது திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் புகழ்ந்து பாடியுள்ளார். + +கிரக தோஷம் போக்கும் ஸ்ரீயோக பைரவர் (ஆதிபைரவர்)பை��வர் + +திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். +இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். +பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். +பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. +மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். +பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! +கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார். + +இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அ��விற்கு உக்கிரமானவர். + +தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன. + +ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்! + +2015ஆம் ஆண்டு வைகாசி விகாசத் தேரோட்டம் 31.5.2015 மாலை சிறப்பாக நடைபெற்றது. :மூன்று தேர்களில் முறையே விநாயகரும், சிவபெருமானும், அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். + + + + + +திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் + +திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வேதங்கள் வழிபட்டன என்பது தொன்நம்பிக்கை. கோயிலினுள் பதினான்கு சிவலிங்கங்கள் உள்ளன. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். + +பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை. +விருத்தம் என்றால் பழமை என்று பொருள், மேலும் இந்த ஈசன் பழம்பதிநாதர்என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இரண்டாம் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டுக் கட்டிடக் கலையையும், சோழநாட்டுக் கட்டிடக் கலையையும் இணைத்து இராசகோபுரமும், விமானமும் மிக உயரமாகக் கட்டப்பட்டது. கருவறையில் (தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, இதை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது)உள்ள சிவலிங்கம் சுற்றளவில் மிகப்பெரியது.(சுற்றளவு 82.5அடி) + +இந்த கோவிலில் நான்கு தல விருட்சங்கள் உள்ளது,ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,கிருதா யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுரக்கள்ளியும்,திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக இருந்ததால், இந்த நான்கும் நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகிறது. +இக்கோவிலுக்கு தெற்கே பாம்பாறும்,கோவிலுக்கு எதிரே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கடலும் உள்ளது.கடல் மற்றும் ஆற்றுப்புனலில் (வாசலில்) ஊர் அமைந்ததால் திருப்புனவாசல் எனப் பெயர் பெற்றது.. + + + + + +இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் + +இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. + +மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. + +ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர். + +காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக���கு அபிசேகம் செய்ய வேண்டும். + +இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், "சேதுபீடம்" ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். + +அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். + +முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது. + +பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். + +இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது. + +கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி முடிய பாலாபிசேகம் செய்யப்படுகிறது. + +இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத்தை 1740–1770 முடிய உள்ள காலத்தில கட்டி முடித்தார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டது. + + +தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில��� மட்டும் 1200 தூண்கள் உள்ளன. + +இராமேஸ்வரம் கோயிலின் முதல் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) 1948இல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது குடமுழுக்கு 1975இலும், மூன்றாவது குடமுழுக்கு 2001இலும் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த குடமுழுக்கான நான்காவது குடமுழுக்கு மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிஷேகம்20.01.2016அன்று நடைபெற்றது. + +விவேகானந்தர் 27 சனவரி 1897இல் சுவாமி நாகநாதரை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில், "அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உடல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்" என்றார். + + + + + + +திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் + +திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர். + +இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளன. + +இத்தலத்தில் வருணன் மகன் வாருணி துருவாச முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும் ஆட்டுத்தலையுமாய் இருந்து வழிபட்டு விமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை. + +இக்கோயிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. + + + + + +காளையார்கோயில் (நகரம்) + +காளையார்கோயில் (ஆங்கிலம்:KalayarKovil) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். + +இங்கு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. + +திருக்கானப்பேரூர் காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை. + +கோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும். + +மதுரை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து கிழக்கே 18 கி.மீ + +திருச்சி-பரமக்குடி சாலையில் காரைக்குடிக்கு தெற்கே 35கி.மீ உள்ளது + +காளையார்கோயிலில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் சார்நிலை கருவூலகம்,ஊட்டச்சத்து அலுவலகம், தாலுகா மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் நிலையம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை, துணை அஞ்சலகம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன. + +விவசாயம் பிரதான தொழில், நெல், நிலக்கடலை இங்கு விளையும் முக்கிய பயிர்கள். +கடலை உடைப்பு ஆலைகள், காளீஸ்வரர் நூற்பாலை(தேசிய பஞ்சாலைக் கழகம்) ஆகியன இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். + +காளையார்கோவிலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சிதம்பரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கும்பகோணம், திருச்செந்துர், இராமநாதபுரம், கொடைக்கானல் போன்ற நெடுந்தூர பேருந்துகளும், காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, தொண்டி, முதுகளத்தூர், மானாமதுரை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கும் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. + + + + + + +யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி பொன்னம்பலவாணேசுவரர் கோவில் + +யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில், யாழ்ப்பாணம் இலக்கம் 264 ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கோவில் ஆகும். இங்கு காசியில் உள்ளது போன்று விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வேல், சூலம் ஆகிய மூர்த்திகள் ஒரே சபையில் உளர். நித்திய பூசை இங்கு நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ரேவதி நட்சத்திரத்தன்று மணவாளக் கோல வி���ா நடைபெற்று வருகின்றது. + + + + + +வண்ணார்பண்ணை நடேசர் கோவில் + +நீராவியடி கடைச்சாமி ஒழுங்கை வண்ணார்பண்ணை ஸ்ரீ நடேசர் கோவில் ஈழத்தில் ஞான குருபரம்பரையை ஏற்படுத்திய கடையிற் சுவாமியாரால் "இது சிதம்பரமடா" என்று முன்மொழிந்த இடத்தில் உள்ள ஒரு கோயில். சிதம்பரத்துப் பாணியில் 1920 இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. + +ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களால் பூசித்த விநாயகரும் இக்கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலமூர்த்தி சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமாள். பரிவார மூர்த்திகள் - விநாயகர், வைரவர் ஆகியோர். தினமும் இருகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. நடேசப் பெருமானிற்கு ஆறு அபிஷேகங்களும் விசேடமாக நடைபெற்று வருவதுடன். சிவராத்திரி நாயன்மார் குருபூசை என்பனவும் விசேட வழிபாட்டுக்குரிய தினங்களாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. + + + + + +நடராஜகுரு + +நடராஜகுரு (நடராஜன்) கேரளவின் ஒரு முக்கிய தத்துவ அறிஞர். இவர் கேரள சமூகசீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயண குருவின் மாணவர். உலகமெங்கும் நாராயணகுருவின் போதனைகளை கொண்டு சென்றவர். + +ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (எஸ் என் டி பி) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன், பிற்காலத்தில் அவர் நடராஜ குரு எனஅறியப்படலானார். 1895ல் பிறந்தார். இலங்கையில் கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலை பட்டம் பெற்றார். + +இக்காலகட்டத்தில் நடராஜ குரு நாராயணகுருவை சந்தித்தார். அவருடன் வர்க்கலை ஆசிரமத்தில் தங்கியிருந்தார். வர்க்கலை நாராயண உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார். + +இக்காலகட்டத்தில் அவருக்கும் நாராயணகுருவின் அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ் என் டி பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து 1921 ல் அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார். + +பல இடங்களில் அலைந்து திரிந்த நடராஜ குரு ஊட்டிக்கு வந்துச்சேர்ந்தார். ஃபெர்ன் ஹில் என்ற இடத்தில் நாராயணகுருகுலம் ஒன்றை 1923ல் நிறுவினார். அங்கே அனாதைக்குழந்தைகளுக்கான ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் அதை முன்னெடுக்க முடியவில்லை. அந்நிலையில் நாராயணகுருவின் உடல்நிலை மோசமானது. நடராஜகுரு மீண்டும் வர்க்கலைக்குச் சென்று நாராயணகுருவுடன் தங்கினார். + +அப்போது மேற்கத்திய தத்துவம் கற்க பிரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். லண்டனுக்குச் செல்வதற்காக கப்பலில் ஏரிய நடராஜ குரு கப்பலில் ஒருவர் சொல்லிய ஆலோசனையின்படி ஜெனிவா சென்றார். அங்கே கிளாண்ட் என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கே இயற்பியல் கற்பித்தார். அப்போது பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார். + +நடராஜகுரு பாரீஸில் உள்ள சார்போன் பல்கலையில் முனைவர் படிப்புக்கு பதிவு செய்துகொண்டார்.உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார."Le Facteur Personnel dans le Processus Educatif (Personal factor in Education)" என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வை சமர்ப்பித்தார். குருசீட உறவைப்பற்றியது அந்த ஆய்வேடு. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் அவர் காந்தியையும் தாகூரையும் சந்தித்திருக்கிறார் +1933ல் நடராஜகுரு இந்தியா திரும்பினார். இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தபின் மீண்டும் ஊட்டிக்கே திரும்பிவந்து ஊட்டி நாராயணகுருகுலத்தை மீண்டும் ஆரம்பித்தார். அங்கே கிட்டத்தட்ட 15 வருடங்கள் தங்கியிருந்தார். ஸ்காட்லாந்துகாரரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜகுருவின் முதல் மாணவரானார். + +ஊட்டி ஃபெர்ஹில் குருகுலத்தில் தங்கியிருந்து நடராஜ குரு அவரது புகழ்பெற்ற நூல்களை எழுதினார். THe Word Of Guru' பகவதிகீதை உரை போன்றவை முக்கியமானவை. 1950ல் நடராஜகுரு உலகக் குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட காரி டேவிஸை சந்தித்தார். எந்த நாட்டுக்கும் குடியுரிமை கொள்ளாத ஒரு கலாச்சாரத்துக்காக அவர் போராடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடராஜ குரு பணியாற்றினார். ஓர் உலக அரசுக்கான முன்வரைவை அவர்கள் உருவாக்கினார்கள். + +அந்த செயல்பாட்டின் நீட்சியாக உலகசிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பயிலும் நோக்குடன் ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார். +இக்காலகட்டத்தில் நடராஜ குரு அவரது மகத்தான படைப்பாகிய 'An Integrated Science of the Absolute' என்ற நூலை இரு தொகுதிகளாக எழுதி முடித்தார். கிட்டத்தட்ட ஐம்பதண்டுக்கால தத்துவ ஆராய்ச்சி இதற்கு உதவியது. + +1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன், டி கெ மாதவன் போன்ற பலர் எஸ் என் டி பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது. + +ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரனதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். + +நாராயணகுருகுலம் நடராஜகுருவுக்குப் பின்னர் அவரது மாணவரான நித்ய சைதன்ய யதியால் தலைமைதாங்கப்பட்டது. அதன் தலைமையிடம் கேரளத்தில் வர்க்கலையில் உள்ளது. நித்ய சைதன்ய யதியின் மறைவுக்குப் பின்னர் அதன் தலைவராக முனி நாராயணபிரசாத் உள்ளார். + +நடராஜகுருவின் மாணவர்களில் ஜான் ஸ்பியர்ஸ், மங்கலானந்தா, சிதம்பர தீர்த்தா, வினய சைதன்யா, குரு ஃப்ரெடி, நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் முக்கியமானவர்கள். + +நடராஜ குரு 1973ல் மரணமடைந்தார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் அமைந்துள்ளது + +நடராஜகுரு ஆங்கிலத்தில் மட்டுமே அவரது நூல்களை எழுதியிருக்கிறார். தமிழில் அவரது நூல்கள் எவையும் வெளிவரவில்லை. + + +நடராஜகுருவைப்பற்றிய ஒரே ஒரு நூல் தமிழில் உள்ளது. நித்ய சைதன்யயதியுடன் நடராஜ குரு நிகழ்த்திய பயணத்தைப்பற்றி நித்ய சைதன்ய யதி எழுதிய நூல். ;குருவும் சீடனும்’ இந்நூல் ப.சாந்தி மொழிபெயர்ப்பில் வந்துள்ளது + + + + + +மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன் + +கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். + +பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். +வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். +அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை. + +பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம். +பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம். + +குறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது. + +"சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார். + +"வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!" + +என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார். + + + + +மாறன் வழுதி + +மாறன் வழுதி சங்ககால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான். + +பாண்டியன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன். இவனது பாடல்கள் இரண்டு உள்ளன. இவன் அரசனாகவும் புலவனாகவும் விளங்கியவன். +ஆறாமல் இருக்கும் புண்ணில் வேல் பாய்ந்தது போல ஆற்றங்கரையில் ஆண்குயிலும் பெண்குயிலும் மாறி மாறிக் கூவுவதுதான் கொட���து என்று எண்ணிக்கொண்டிருந்தேன். “குருக்கத்திப் பூவும், பித்திகைப் பூவும் விரவித் தொடுத்த பூ வாங்குகிறீர்களா” (பூவோ பூ) என்று தெருவில் திரிந்து கூவுவாள் குரல் அதனினும் கொடிதாக உள்ளது. (என் நெஞ்சில் பேசிக்கொண்டே இருக்கிறது) – பூக்காரி மேல் காதல் கொண்ட அவன் இவ்வாறு பாங்கனிடம் சொல்கிறான். +குறிஞ்சிப் பூ போன்ற மேனி, கருங்குவளை மலர் போன்ற கண், மயில் போன்ற சாயல், கிளி போன்ற மொழி, பாவை போன்ற வனப்பு, இப்படியெல்லாம் அவளது தாயும், அவளது தேயமும் அவளைப் பாராட்டுகின்றன. எனக்கோ அவள் கூந்தல் மணம் நெஞ்சில் மணந்துகொண்டே இருக்கிறது. அவளோடு கிடந்தவன் இப்படிப் பேசுகிறான். + + + + +மின்னெதிர்ப்பு + +மின்னெதிர்ப்பு ("Electrical impedance") என்பது ஒரு மின்சுற்றில் மாறுமின்னோட்டத்தை மறுத்துத் தோன்றும் தடை மற்றும் மறுப்பின் தொகுபயன் எதிர்ப்பின் அளவு ஆகும். "தடங்கல்" என்றும் சுருக்கமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஓம் விதியின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இதன் அளவை குறிக்க நேரமும் (அலையெண்) திசையும் (அலைமுகம்) மேலதிகமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும். + +இம்பிடான்ஸ் ஒரு சிக்கலான எண் எனவே, ஒரு உண்மையான கூறு மற்றும் ஒரு கற்பனை கூறு உள்ளது, +a + jb. ஒரு ஒரு அளவு மற்றும் கோணத்தில், துருவ வடிவில் மின்மறுப்பு எழுத முடியும் | Z | ∠θ. கட்ட +தற்போதைய வழிவகுக்கும் அல்லது மின்னழுத்த பின்தங்கி விடும் என்றால் கோணத்தில் காட்டுகிறது. +ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தை ஆளாகும்போது, மின்மறுப்பு தற்போதைய காரணமாக ஓமின் பாயும் ஏற்படுத்தும் +சட்டம். மின்மறுப்பு ஒரு சிக்கலான எண்ணாக இருப்பதால், ஒரு அளவு மற்றும் கட்ட மாற்றம் இருக்கும் +மின்னழுத்தம் ஒப்பிடும்போது. எதிர்ப்பவர்களின் எந்த கட்டமாக கோணத்தில் கொண்டு மாறுமின் மறுப்பு நினைத்தேன், அதனால் +தற்போதைய மின்னழுத்தம் கட்டத்தில் இருக்கும். மின்தூண்டிகள் கட்ட 90˚ தயாரிக்கின்றன மற்றும் மின்தேக்கிகளில் உற்பத்தி +90˚. +பின்தங்கிய மற்றும் முறையே, மின்னழுத்த வழிவகுக்கும் தற்போதைய பொருள் கட்ட ˚. +மாறுமின் தடங்கல் frequency domain வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இது ஒரு விழுக்காடாக இருந்தாலும், frequency domain என்னும் பொழுது இதன் கணிதம் பொது விழுக்காடுகளில் இர���ந்து வேறுபட்டது. + +மாறுமின்னோட்டம் ஒரு மின்தூண்டியின் ஊடாக செல்லும் பொழுது காந்தப்பாயம் அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்டியின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் மின்னழுத்தம் ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும். + +மின்தூண்டி ஒன்றிற்கு: + + + + + +நல்வழுதி + +நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப் பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில் + +"தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. + +இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். + + + + +இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் + +இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். +நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து + +"நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!" எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர். + +மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து + +"நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்று அண்ணல் பிறைநுதல் பெருமான் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! கொல்களிறும்,கவிமாவும்,கொடித்தேரும்,புகல் மறவரும் என நான்குடன் மாண்ட சிறப்புடையோய்! அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்" +என புறம்-55 இல் பாடியுள்ளார் மருதன் இளநாகனார். + + + + +நம்பி நெடுஞ்செழியன் + +நம்பி நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார். + +அதில் "செய்தக்க எல்லாம் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. + +நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார், +இவனைப் பற்றிய குறிப்புகள் + + + + +கற்குவை + +கற்குவை என்பது, மனிதரால் செயற்கையாக உருவாக்கப்படும் கற்குவியலைக் குறிக்கும். இவை மேட்டு நிலங்களிலும், பற்றைக் காட்டுப் பகுதிகளிலும், மலை உச்சிகளிலும், நீர்வழிகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன. + +இவை பல்வேறு காரணங்களுக்காகக் கட்டப்படுகின்றன. + + +இவற்றுடன், கற்குவைகள் குறிப்பிட்ட இடங்களில் நடந்த பல்வேறு வகையான நிகழ்வுகளை நினைவு கூர்வதற்காகவும் அமைக்கப்படுகின்றன. இவை ஒரு போர் நிகழ்ந்த இடமாகவோ அல்லது ஒரு வண்டி கவிழ்ந்த இடமாகவோ இருக்கலாம். சில வெறுமனே ஒரு விவசாயி தனது வயலிலிருந்த கற்களை எடுத்துப் போட்ட இடமாகக்கூட இருக்கலாம். + +இவை தளர்வான, சிறிய குவைகளிலிருந்து, விரிவான, வியக்கத்தக்க பொறியியல் அமைப்பாகவும் இருக்கக்கூடும். + + + + + +குறுவழுதி + +அண்டர் மகன் குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி +செய்த மன்னனாவான். பெரும் பெயர் வழுதியின் இளவல் ஆகலாம். + +இவரது பெயர் குறுவழுதியார் என்றும் என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் என்றும், அண்டர் மகன் குறுவழுதி என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் 'ஆர்' விகுதி ���ல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன. + +பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை. + + +அகநானூறு 150 நெய்தல் +அகநானூறு 228 குறிஞ்சி +குறுந்தொகை 345 நெய்தல் +புறநானூறு 346 காஞ்சி, மகட்பாற் காஞ்சி +இவரது பாடல்களில் சில பழந்தமிழ்ச் சொற்கள் பொருள் உணரும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன. + + + + +பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன் + +பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். + +இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன் +பாடப்பட்டுள்ளான். + + + + +மு. க. ஸ்டாலின் + +முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். + +இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. + +ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார். + +தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார். + +இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது . 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. + +ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். + +திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். + +ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின். + +இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர். + +ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். + +2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் . ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின். + +மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, "ஐந்தாவது" முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். + +சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி "வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்" என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து "இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர்" என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின். + +அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, திமுகவுக்குள்ளேயே வைகோவை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது. + +2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. + +ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். மீது ஆர்வம் கொண்டவர். + + + + + +முதலாம் வீரபாண்டியன் + +வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவனாவான். மூன்றாம் இராசசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான். சோழாந்தகன், பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை இவன் பெற்றிருந்தான் என திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம், திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம். வீரபாண்டியனின் 9 மற்றும் 10 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் குறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திருமங்கலம் வட்டம், கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் காணலாம். + +இவன் தன் தந்தை மூன்றாம் இராசசிம்மன் இழந்த பாண்டிய நாட்டைச் சோழரிடமிருந்து மீட்டான். சோழ நாட்டை ஆண்டு வந்த சுந்தரசோழன் தன் மைந்தன் ஆதித்த கரிகாலனுடன் படையெடுத்துச் சென்று வீரபாண்டியனோடு சேவூர் என்னும் இடத்தில் போரிட்டான். கி.பி. 966இல் நடைபெற்ற அப்போரில் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். இப்போர் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் மதுரை சோழர்களின் கைவசம் வந்தது. + +சோழ மன்னர்களிற்குக் கப்பம் கட்டாமல் தன்னுரிமை ஆட்சியினை நடத்திய வீரபாண்டியனின் தகவல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. சேவூர்ப் போரில் வீரபாண்டியன் தோற்றான் என சுந்தரசோழனின் கல்வெட்டொன்றில் "மதுரை கொண்டகோ இராச கேசரிவர்மன்" எனவும் 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ மன்னனுக்குத் துணையாக கொடுப்பாலூர் மன்னன் பூதவிக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் போர் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.'சோழன் தலைக்கொண்டான் கோவீரபாண்டியன்' என தன்னைக் குறித்துக் கொண்ட வீரபாண்டியன் கொங்கு நாட்டினை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். இவன் பெயரால் வீரபாண்டி என்ற ஊர் ஒன்று உள்ளது. கொல்லிமலையில் பாண்டியாறு என்னும் ஆறு இவன் பெயரில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. வீரபாண்டியனின் 20 ஆண்டு ஆட்சிக் காலக் கல்வெட்டுக்களே இன்றளவும் உள்ளன. இப்பாண்டிய மன்னனின் ஆட்சியின் பின்னர் சோழப் பேரரசினால் பாண்டிய நாடு ஆட்சி செய்யப்பட்டது. இத்துடன் முற்காலப் பாண்டியர் வரலாறு முடிவுற்றது. + + + + +இரும்புக் காலம் + +இரும்புக் காலம் ("Iron age") என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். ச��ல சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை. +வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது. + +இரும்புக்காலத்தை பின்வருமாறு வகை பிரிப்பர். அவை, + + +இரும்புக்காலத்தின் போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகே பயன்படுத்தப்பட்டது. இவை இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன. கரிமத்தின் அளவு கருவியின் எடையில் 0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டது. எஃகை விட குறைந்த கரிம அளவு கொண்ட தேனிரும்புக் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு கடினத்தன்மையுள்ள கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எஃகை கடினப்படுத்தும் முறை மத்திய தரைகடல் பகுதிகளிலும் ஆப்ரிக்கப் பகுதிகளிலும் பெரிதளவு மாறுபட்டிருந்தன. சில பகுதிகளில் ஆயுதங்கள் மொத்தமாக கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஆய���தங்களின் வெளிப்பகுதியோ அல்லது கூர்மையான பகுதியோ மட்டுமே தேவைக்கேற்ப கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது. + +அண்மைய கிழக்குப் பகுதிகளான மத்திய கிழக்காசியாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் இரும்பின் பயன்பாடுகள் வழக்கமான இரும்பின் பயன்பாட்டுக்காலமான கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முற்பட்டும் காணப்படுகின்றன. அவற்றில் சாலடியா மற்றும் அசிரியா பகுதிகளில் கிமு. 4000 ஆண்டுகளிலும் அனட்டோலியப் பகுதிகளில் கி.மு. 2500களிலும் இரும்பின் பயன்பாடு அரிதாக காணப்படுகின்றது. ஆனால் பரவலான இரும்பின் பயன்பாடு கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டின் பிற்பகுதியிலேயே காணப்படுகின்றது. +  + +வட இந்தியாவிலும் தக்காணத்திலும் உலோகவியல் கி.மு. இரண்டாயிரமாது ஆண்டுகளிலேயே தோன்றிவிட்டது. மல்ஹர், தாதாபூர், உத்திர பிரதேசத்தின் லாகூர்தேவா போன்ற இடங்களில் இரும்புக்காலம் கி.மு. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. பதிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆரம்பமாகிரது. ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் காணப்படும் இரும்புகளின் காலம் கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு அளவுக்கு பழமையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. + +பொதுவாக தமிழகத்திலும் இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை கி.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது. + +தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. அனுராதபுரத்திலும் சிகிரியா மலையிலும் கிடைத்த தொல்பொருட்கள் கரிம எண் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதோடு அல்லாமல் இவற்றின் காலம் அதிகபட்சமாக கி.மு. எட்டாம் நூற்றாண்டு பழமை வரை எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றை ஒத்த பழமையான தளங்கள் கந்தரோடை, மாதோட்டம், திசமகரமை போன்ற இடங்களிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. + +பண்டைய கிழக்காசிய நாடுகளில் இரும்புக்காலம் சீனம், கொரியா, ஜப்பான் என்ற வழியில் பயணிக்கிறது. சீனாவின் இரும்புக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றான்டிலேயே தொடங்குகிறது. இங்கு காணப்படும் பெரும் முத்திரையின் எழுத்துக்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டினதாகவும் யாங்கு சீ பகுதியில் காணப்படும் இரும்புப் பொருட்கள் கி.மு. ஆறாம் நூற்ற்றாண்டு அளவில் பழமையானதாகவும் கணிக்கப்படுகின்றன. + +கொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டிலும், ஜப்பானில் யாயோய் ஆட்சிக்காலத்தின் போதும் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) இரும்புக்காலம் ஆரம்பமானது. + +தமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது. புதிய கற்காலத்தில், மட்பாண்டங்கள் செய்வதற்காக மக்கள் மண்ணைத் தோண்டி, அவற்றில் உருவாக்கிய மட்பாண்டங்களைச் சூளையில் சுட்டபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இரும்புக் காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தவிர, சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூரில் மனித உடம்பின் முழு எலும்புக்கூடுகள், நேர்த்தியும் வழவழப்பும் மிக்க மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், அரிசி, உமி முதலான பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. +இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்கு ஈம அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய ஈம அடையாளங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆனால், பெருங்கற்படைச் சின்னங்கள், இரும்புக் காலத்திற்குப் பிறகு வரலாற்றுத் தொட்க்கக் காலத்திலும் எழுப்பப்பட்டதாகக் கூறப்ப���ுகிறது. இரும்புக்கால ஈம அடையாளங்கள் வரலாற்றுத் தொடக்கக் கால ஈமச் சின்னங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கொடுமணல் ஒரு வரலாற்றுத் தொடக்கக்கால ஈம அடையாள இடமாகும். வரலாற்றுத் தொடக்கக் கால ஈம அடையாளங்களில் உரோமானிய அல்லது பிற இந்திய நாணயங்களும், இரசக் கலவை பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்ட பானை வகைகளும் காணப்படுகின்றன. +மக்கள் நிலையான வாழ்க்கையைத் தொடக்கி, வேளாண் தொழிலை மேற்கொண்ட பின்னரே பெரும் கற்புதைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். மலைச் சரிவுகளிலும் மேட்டு நிலங்களிலும் காணப்படும் புதைகுழிகள் மனித உடலை வைப்பதற்காக மட்டுமின்றி இறந்தவர்களின் ஈம அடையாளமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இக்காலத்து மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு இரும்புக் கருவிகளைக் கையாண்டிருந்தனர். +செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலம் எனப்படுகிறது. வேத இலக்கியத்தில் இரும்பு குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கற் காலமும் சமகாலம் எனக் கருதப்பட்டு வருகிறது. பெருங்கல் எனப்படுவது கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்படும் கற்களைக் குறிப்பிடுகின்றது. அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் பெருமளவில் காணப்படுகின்றன. கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி, ஆந்திரத்திலுள்ள நாகார்ஜுனக் கொண்டா போன்ற இடங்களில் கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு நிறப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி, அரிவாள், வேறுசில சிறிய ஆயுதங்கள் ஆகியன கிடைக்கப்பெற்றன. + +கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர். இக்காலக் கட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகள் உபயோகப்படுகின்றன. அவை: (1) தொல்லியல் பொருட்கள் (2) செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் (3) பழந்தமிழ்க் கல்வெட்டுகள். இவற்றோடு பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் கொள்ளப்படும். இவ்வகைச் சான்றுகளை உருவாக்குவதற்கு இரும்புக்கருவிகள் பெரிதும் உதவியிருக்கக்கூடும். அக்காலத்து மக்கள் பானையோட்டுக் கீறல்களை இரும்புக்கருவியைக் கொண்டே உருவாக்கியிருப்பர். அதே போன்று, இரும்பினாலான எழுத்தாணியைக் கொண்டே செம்மொழியிலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப் படிப்பறிவுகொண்ட சிலர் செய்திருக்க வேண்டும். இது ஒருவகையான தொழில்நுட்பமாகும். வரலாற்றில் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். எப்போதும் தொழில்நுட்பம் மக்களிடையே ஒரு பிளவினைத் தோற்றுவிக்கும். அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில்நுட்பத்தினைக் கையாண்டு வரலாற்றில் நிலையான சான்றுகளை உருவாக்க விரும்புவர். மேற்குறிப்பிடப்பெறும் சான்றுகள் அவ்வாறு தோன்றியிருக்ககூடும். இச்சான்றுகளிடையே தொடர்பும், தொடர்ச்சியும் இருப்பதை அறியமுடிகிறது. காட்டாக, செம்மொழியிலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்கள் மற்றும் பெயர்கள் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுள்ளன. + + + + +திருச்சுழி திருமேனிநாதர் கோயில் + +திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும். + + + + + +அவிநாசி அவிநாசியப்பர் கோயில் + +அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தொன்நம்பிக்கை. + +அம்பாளின் கோயில் அவினாசியப்பருக்கு வலது புறம் உள்ளது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காக பெயர் பெற்றது. + +நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிராத்தனை செய்தார். அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்கு கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்பு பெற்று இருக்கிறது. + +இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது. + +இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர். + +இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். இவர் சுயம்பு லிங்கமாவார்.அம்பிகை கருணாம்பிகையின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.இதனால் விச ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விச ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது. + +ராஜ கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன. மண்டபத் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. உள்பிரகாரத்தில் கன்னி கணபதியும், வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வட கிழக்கில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் உள்ளன.இவற்றோடு 63 நாயன்மார் சிற்பம், காலபைரவர் சன்னதி ஆகியவையும் உள்ளன. காலபைரவர் சன்னதியில் அதிக மக்கள் வழிபடுகின்றனர். + +நடராசர் மண்டபத்தில் ஐம்பொன்லால் ஆன நடராசர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். + +இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது இருப்பது அதிசயமாகும். + + + + + +காலணி + +காலணி அல்லது மிதியடி அல்லது செருப்பு என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால் ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும். + +முதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மாந்தர்கள் அணியத் தொடங்கினர் என அறிவது கடினம். ஆனால் எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. அண்மையில் (2010இல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர் பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும் , ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளைப் பயன்படுத்தினர். இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர். + +மிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒருசில மரத்தாலும் ஆனவை. பனையோலையாலும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலத்தில் தோல் மட்டுமன்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும் பல முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழி, ரப்பர் போன்றவைகளாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ்வோருக்குக் காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும். அமெரிக்காவில் 1980களில் ஆண்டொன்றுக்கு 350 மில்லியன் காலணிகள் உற்பத்தி செய்தனர். இது தவிர ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டால் உலகில் பில்லியன் கணக்கில் காலணிகள் செய்து விற்கப்படுகின்றன. உலகப் பொருளியலில் (பொருள்முதலியலில்) பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய தொழிலாகும். + + + + + + + + +அந்தோனியோ சாலியரி + +அந்தோனியோ சாலியரி (Antonio Salieri) (ஆகஸ்ட் 18, 1750 – மே 7, 1825) அவர்கள் 18 ஆம் நூறாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற இசையறிஞரும் இசையமைப்பாளரும், இசைமேதையும் ஆவார். இவர் இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகரில் வாழ்ந்த மோட்சார்ட், லூட்விக் பேத்தோவன், ஜோசப் ஹேடன் ஆகியோர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். இவர் இத்தாலியில் "லென்யாகோ" (Legnago) என்னும் ஊரில் பிறந்தார். ஆஸ்ட்றியாவை ஆண்ட பேரரசர் இரண்டாவது ஜோசப்பு அவர்களின் அரசவையில் அரசவை இசையமைப்பாளரும் இயக்குனராகவும் (ஹோஃவ் கப்பல்மைஸ்ட்டர், Hofkapellmeister ஆக) சுமார் 36 ஆண்டுகள் இருந்தார். ஐரோப்பா முழுவதும் இவர் பெரும்புகழ் நாட்டி இருந்தார். இவருடைய 1787 ஆம் ஆண்டுப் படைப்பாகிய பிரெஞ்ச் மொழி ஓப்பரா "தரேர்" (Tarare) மிகவும் புகழ்பெற்றது. இதன் இத்தாலிய மொழிபெயர்ப்பாகிய அக்சூரே டோர்மஸ் (Auxurre d'Ormus) ன்பதை ஆஸ்ட்றிய மக்கள் பெரிதும் விருப்பினர். + +அந்தோனியோ சாலியரிக்கும் இசை மேதை மோட்சார்ட்டுக்கும் இடையே பெரும் போட்டியும் பொறாமையும் இருந்ததாகவும், சாலியரி மோட்சார்ட்டை நஞ்சு வைத்துக் கொன்றார் என்றும் ஒரு கதை நெடு நாட்களாக இருந்து வருகின்றது. இதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. அமெடியாஸ் என்னும் கற்பனை திரைக் கதையும் இவர்களுடைய போட்டியை காட்டுகிறது. சாலியரி மோட்சார்ட்டின் த மாஜிக் ஃவுளூ��் (The Majic Flute) என்னும் இசைப் படைப்பைப் பாராட்டி எழுதியதைப் பற்றி மோட்சார்ட் அவர்களே தெரிவித்து இருக்கின்றார். தம் வாழ்நாள் முழுவதும் சாலியரி அவர்கள் புகழ் பெற்ற இசைமேதைகளாகிய பேத்தோவன், ஹேடன் அவரகளுன் நட்பாய் இருந்தார். தம் 16 ஆம் அகவை (வயது) முதலே இசைநகரமாம் வியன்னாவில் வாழ்ந்து வந்துள்ளார். + + + + +அகத்தியத்தாபனம் + +அகத்தியத்தாபனம் என்பது ஈழத்தின் திருகோணமலையில் கரசையம்பதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். + +இத்தலத்தில் அகத்தியர் தாபித்த சிவலிங்கம் அமைந்த கோயில் ஒன்றின் வரலாறு திருக்கரசைப் புராணம் என்னும் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. அகத்தியத்தாபனத்தில் அமைந்த சிவாலயம் தலபுராணம் பெற்ற சிறப்புடையதாதலால் ஒரு காலத்தில் இத்தலம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. + +புராணம் பெற்ற சிவாலயம் அமைந்த இடத்திலே பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட புனிதச் சின்னங்களான லிங்கம், கோமுகை, நந்தி, பலிபீடம், வாயிற்கற்கள், தூண்கள் முதலானவற்றை ஒன்று சேர்த்து சிறிய கோயில் ஒன்று கட்டி இவ்வூரார் போற்றி வருகின்றனர். + + + + + +ஜோசப் ஹேடன் + +ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732 – மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார். + + + + +வியன்னா + +வியன்னா ("Vienna") நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இங்கு 1.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது ஆஸ்திரியாவின் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்காகும். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நகரங்களில் அதிக சனத்தொகை கொண்ட ஏழாவது நகரம் இதுவாகும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் உலகிலேயே செருமன் மொழி பேசும் மக்கள் இங்கேயே அத��கமாகக் காணப்பட்டனர். இன்று, அம்மொழியை அதிகம் பேசும் மக்கள் வாழும் பேர்லினின் பின் இரண்டாவது நகரமாக இது காணப்படுகின்றது. வியன்னாவில் ஐக்கிய நாடுகள், ஒபெக் போன்ற பாரிய உலக அமைப்புகள் காணப்படுகின்றன. + +இது ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதுடன், +செக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது "இசை நகரம்" என சிறப்பிக்கப்படுகின்றது. இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன. அத்துடன் "கனவுகளின் நகரம்" எனவும் இது குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில், உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய சிக்மண்ட் பிராய்ட் இந்நகரைச் சேர்ந்தவராவார். + +2005இல் இடம்பெற்ற கணிப்பின்படி, 127 நகரங்களிலும் பொருளாதாரப் புத்திச் சுட்டி கூடிய முதலாவது நகரம் இதுவே ஆகும். இதனால் இது நன்றாக வாழக்கூடிய உலக நகரங்கள் பட்டியலில் முன்னிலை வகித்தது. 2011க்கும் 2015க்கும் இடையில் மெல்பேர்ண் நகரத்தை அடுத்து இரண்டாம் இடம் வகித்தது. 2009 தொடக்கம் 2016 வரையிலும், மனித வள-ஆலோசனை நிறுவனமான மெர்சர் அதன் வருடாந்த கருத்துக்கணிப்பூடாக, வழ்கைத் தரம் நிறைந்த உலகின் முதன்மையான 100 நகரங்களில் வியன்னாவை முதலாவதகாக் குறிப்பிட்டது. + +வியன்னா தரமான வாழ்க்கைக்கான நகரமாக அறியப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் வியன்னாவை 2012 மற்றும் 2013 இல் மிகவும் செழிப்பான நகரமாக வகைப்படுத்தியது. கலாசாரம், உட்கட்டமைப்பு, சந்தைகள் எனும் மூன்று காரணிகள் மூலமும் கணிக்கப்பட்ட 256 நகரங்களில் கலாசார புத்தக்கம் மிக்க நகராக முதல் இடத்தை இது 2007 இலும் 2008 இலும் வகித்ததுடன் 2014 6 ஆம் இடம் வகித்தது. வியன்னா தொடர்ந்து நகர்ப்புற திட்டமிடல் மாநாட்டை நடத்துகிறது மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்களால் இது ஒரு வழக்குக் கல்வியாகப் பயன்படுத்தப்படுகிறது. + +2005 க்கும் 2010 க்கும் இடையில், சர்வதேச மாநாடுகள் மற்றும் மாநாடுகளுக்கான உலகின் முதலிடமாக வியன்னா இருந்தது. அத்துடன் வருடத்திற்கு 6.8 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. + +"வியன்னா", இத்தாலி மற்றும் ஜெர்மனிய சொல்லான இபபெயர், செல்திக் மொழியின் "வேதுனியா" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. மேலும் இப்பெயர், வேனியா, வேனியே, வியன் அவ்வாறு திரிந்து வந்ததாகவும் கருதப்படுகின்றது. "வியன்னா" என்ற சொல்லிற்கு, அடர்ந்த காடுகள் என்று அர்த்தம். வேறு சில மக்களின் கூற்றுப்படி, ரோமாபுரியிலிருந்து இங்கு குடிபெயர்ந்த செல்திக் இன மக்களின் வழக்குச் சொல்லான "விந்தோபோனா" என்பதிலிருந்து திரிந்து, விந்தோவினா, விதன், வியன் என திரிந்து வியன்னா என்ற பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். விந்தோபோனா என்பதற்கு, வெண்நிலம் என்று பொருள். + +ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தின் கிழக்குத் திசை விரிவாக்கப்பகுதியான ஆஸ்திரியாவின் வடகிழக்கில் "வியன்னா" அமைந்துள்ளது. முற்காலத்தில், இங்கிருக்கும் "தனுபே" எனும் ஆற்றின் கரையில் ஒருசில இன மக்கள் குடிபெயர்ந்து வந்தனர். பிற்காலத்தில், இந்த ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம் விரிவடைந்தது. இந்நகர், கடல் மட்டத்திலிருந்து தொலைவில் உள்ளது. ஆஸ்திரியாவிலுள்ள நகரங்கலில், பரப்பளவின் அடிப்படையில் பெரிய நகரமான வியன்னாவின் பரப்பளவு 414.65 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். + +வியன்னாவானது, கடல்சார் காலநிலை மற்றும் ஈரப்பத தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பநிலையானது அதிகபட்சமாக மாகவும், குறைந்தபட்சமாகவும் உள்ளது. சித்திரை முதல் கார்த்திகை வரையிலான மாதங்களில், பனிப்பொழிவு ஏற்படும். வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்களில், மிதமான தட்பவெப்பநிலை நிலவும். + +வியன்னாவில் ரோமானிய கத்தோலிக்கர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர். 2001 உலக மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 49.2 விழுக்காடு மக்கள் ரோமானிய கத்தோலிக்கர்களாகவும், 25.7 விழுக்காடு மககள் எம்மதத்தையும் சாராதவர்களாகவும், 7.8 விழுக்காடு மக்கள் இசுலாமிய இனத்தவராகவும், 0.5 விழுக்காடு மக்கள் யூத இனத்தவராகவும் எஞ்சியுள்ளோர் பிற இனத்தைச் சார்ந்தவர்களாகவும் உள்ளனர். ரோமானிய கத்தோலிக்கை பின்பற்றுவோரின் சராசரி எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறைந்து வருகின்றது. 1961ம் ஆண்டில் 90 விழுக்காடு இருந்த மக்கள், 2010 ஆண்டில் 90 விழுக்காடு மக்களே உள்ளனர். +ஆஸ்திரிய நாட்டின் பிராதான கல்வியின் தலைநகரமாக இது விளங்குகின்றது. + + +ஹாப்ஸ்பர்க் மற்றும் ஸ்கொன்ப்ருன் பேரரசு அரண்மனைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இங்கு 100 க்கும் மேற்பட்ட கலை அருங்காட்சியகங்கள் உள்ளன, இவை ஒன்றாக ஆண்டுக்கு எட்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ref name="population"> பீத்தோவானின் உறைவிடங்கள், கல்லறை ஆகியவையும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். அக்கல்லறையே வியன்னாவிலுள்ள மிகப்பெரிய கல்லறை என்பதோடு, அக்கல்லரௌ உள்ள இடத்தைச் சூழ இதர பிரபலங்களின் கல்லறைகளும் உள்ளன. புனித ச்ரீபன் பெருங்கோவில் போன்ற தேவாலயங்களும் பல மக்களை ஈர்க்கும் இடங்களாக விளங்குகின்றன. +ஹன்டர்ட்வசர்ஹவுஸ், ஐ.நா. தலைமையகம் மற்றும் டொனட்ருமிலிருந்து பார்க்கும் காட்சி ஆகியவை நவீன சுற்றுலா இடங்களில் அடங்கும். + + + + +வே. அகிலேசபிள்ளை + +வே. அகிலேசபிள்ளை (மார்ச்சு 7, 1853 - சனவரி 1, 1910, தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார். + +இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள். + + + + + + + +அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில் + +அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கணாக்கடவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகத்தில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் மாகையம்பதியில் அமைந்துள்ளது. + +இக்கோயில் ஈழத்தில் தோன்றிய கண்ணகி கோயில்களில் பழமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெறும். அந்நாட்களில் பக்தர்கள் நெடுந்தொலைவில் இருந்து இங்கு வந்து பொங்குவர். தினமும் பூசைகள் இடம்பெறும். கண்ணகி கதை படிப்பும் குளிர்த்தியும் மிகச்சிறப்பாக நடைபெறும். + + + + +சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் + +யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக 10 நாட்கள் ஆலயத்திருவிழா நடைபெறும். இங்கு திருவிழாக்காலத்தில் ஒருநாள் தெப்பத்திருவிழா என்று ஆலயக் கோவில்குளத்தில் தோணிமூலம் சுவாமி வலம் வருவது குறிப்பிடத்தக்கவொன்றாகும். இவ்விசேட நாள் அன்று கொழும்புத்துறை மக்கள் மட்டும் அன்றி பக்கத்தில் உள்ள அரியாலை மக்களும் பெருமளவில் பங்குகொள்வர். இவ்வாலயம் 2004 இல் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் அருகே சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடலும் நூலகமும் அமைந்துள்ளன. + + + + +பெரியானைக்குட்டி சுவாமிகள் + +பெரியானைக்குட்டி சுவாமிகள் (இ. 1911) ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர். + +இவர் கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர். + +இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர். + +இவரின் சீடர்களில் சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீஸ்வரத்தில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தார். + +பெரியானைக்குட்டி சுவாமிகள் 1911 இல் சமாதியடைந்தார். இவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இவரது சமாதியுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. + + + + + +இலங்கையில் தொலைத்தொடர்பு + +இலங்கையில் கம்பித் தொலைபேசி (Wired Telephone) இணைப்புக்களை ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்குகிறது. இது தற்சமயம் 2,678,739 தொலைபேசிப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சிடிஎம்ஏ(CDMA) தொழில் நுட்பம் 2005 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இப்போது சண்டெல், லங்காபெல்,டயலொக் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையமும் இச்சேவையினை வழங்குகின்றன். இச்சேவையானது இலங்கையில் போரினாலும் சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர இலங்கையின் ஏனைய எலாப் பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் இலங்கையின் தொலைத்தொடர்பில் மிகவும் பின்தங்கியுள்ளது. + +இலங்கையில் பரந்த வலையமைப்பாக 600க்கு மேற்பட்ட கோபுரங்கள் உள்ள மோபிட்டல்(ஸ்ரீ லங்கா டெலிகொம்) மற்றும் டயலாக் விளங்குகின் இது தவிர ஹட்ச் இலங்கை, எயார்டெல் இலங்கை, எடிசலட் இலங்கை சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிகாரணமாக வெளிநாடுகளிற்கான கட்டணத்தைவிட ஒர் வலையமைப்பில் இருந்து பிறிதோர் வலையமைப்பிற்குக் கூடுதலான கட்டணத்தை அறவிடுகின்றன. + +நிலையான தொலைபேசி இணைப்புகள்: 2,678,739 (டிசம்பர், 2014) + +நகரும் தொலைபேசி இணைப்புகள்: 22,123,000 (டிசம்பர் 2014) + + + + + +சித்தானைக்குட்டி சுவாமிகள் + +சித்தானைக்குட்டி சுவாமிகள் (இ. ஆகத்து 1951) ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர். + +இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். இவரை தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் என்றும் கூறுவர். தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார். + +குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேசுவரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார். + +காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது. + + + + + +இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் + +இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கை, யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக் கோயில் காங்கேசந்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி மானிப்பாய்க்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. போத்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை 1620 ஆம் ஆண்டில் கைப்பற்றுவதற்குமுன் அதை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் இந்தக் கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பழைய கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் ஒரு சிறப்பான அம்சமாகும். + +13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் இல்கோயிலுக்குப் பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கிவந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரியச் சக்கரவர்த்திகளின் மற்றச் சிம்மாசனப் பெயரைக் கொண்ட செகராசசேகரப் பிள்ளையார் கோயிலும் இணுவிலில் இருப்பது குறிப்பிடத் தக்கது. + +ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவரின் ஆட்சி 1240களில் இருந்து 1620 வரை ஏறத்தாழ 380 ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்காலப் பகுதியில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட மன்னர்கள் குறைந்தது 6 பேராவது இருந்ததாகத் தெரிகிறது. இவர்களில் எந்தப் பரராசசேகரன் காலத்தில் இக்கோயில் உருவானது என்பது தெரியவில்லை. இதனால் இது தோன்றிய காலம் பற்றி எதுவும் கூறமுடியாது. ஆரியச் சக்கரவர்த்தி வம்ச ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இணுவில் ஒரு முக்கியமான ஊராக இருந்ததுடன் அரசரின் பிரதிநிதி ஒருவரும் அங்கு இருந்ததாக யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது. இதனால், இணுவில் 13 ஆம் நூற்றாண்டிலேயே அரசத் தொடர்புள்ள ஊராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. + +யாழ்ப்பாண அரசர் காலத்தில் இக்கோயிலை அண்டி ஒரு மடம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். யாழ்ப்பாணத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றியபின்னர் இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்தனர். அவ்வேளை இக் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை ஒழித்து வைத்த மக்கள் அக்கட்டிடத்தை ஒரு மடம் எனக்கூறியதால் அக்கட்டிடத்தைப் போத்துக்கேயர் இடிக்காமல் விட்டனர். + +போத்துக்கேயருக்குப் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது 138 ஆண்டுக்கால ஆட்சியில் சைவ வழிபாட்டுக்கு இடமளிக்கவில்லை. இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டபோது ஆங்காங்கே கோயில்களும் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடுகள் தொடங்கியிருக்கக்கூடும். ஆங்கிலேயர் 1796ல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. 1800களில் பழைய கோயில் கட்டிடம் திருத்தப்பட்டுக் குடமுழுக்கும் இடம்பெற்றதாகத் தெரிகிறது. இக்காலத்தில், கருவறையுடன், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றையும் கொண்டிருந்த இக்கோயில் சிறியதாக இருந்தது. அக்காலப்பகுதியில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்ததுடன், திருவிழாக்களும் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. + +1928 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திருத்த வேலைகளும், புதிய கட்டிடவேலைகளும் இடம்பெற்றன. 1939ல் குடமுழுக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னரும் பல தடவைகள் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக் கோயில் விரிவாக்கப்பட்டது. தற்போது பல மண்டபங்கள், இராசகோபுரம், மணிமண்டபம் என்பவற்றைக் கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது. + +இக்கோயிலில் மூல மூர்த்தியான விநாயகருடன் பஞ்சமுக விநாயகர், லட்சுமி, சுப்பிரமணியர், வைரவர், சண்டேசுவரர், நவக்கிரகம் என்போர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். + +வைகாசி சதயத்தில் கொடியேறித் திருவாதிரையில் தேரும் அடுத்துத் தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றன. இங்கு மூன்று தேர்கள் பவனியில் கலந்து கொள்கின்றன. + + + + + + + +உமிழ்நீர் + +உமிழ்நீர் () என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உணவை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை "எச்சில்", "வாயூறுநீர்", "வாய்நீர்" என்றும் சொல்வர். ஒரு நாளைக்கு மாந்தர்களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர்களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிகளும் (படத்தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிகளும் உமிழ்நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந்தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல். + +உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள்களைக் கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவதாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வாயுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ்நீரில் உள்ள அமிலேசு என்னும் நொதியம் மாவுப்பொருளான கார்போஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது. + +உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளன. + +இதில் அடங்கியுள்ள உட் கூறுகளின் முக்கியமானவைகளை கீழே காணலாம் : + + + +உமிழ்நீரில் உள்ள புரதங்களால் நோய் கிருமிகளை அழிக்க முடியும். பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்ச��் போன்ற தொற்று நோய்களில் இருந்து முதியவர்களை காப்பாற்றுவதில் உமிழ்நீரில் உள்ள புரதங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. + + + + +திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் + +திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது. + +இத்தலம், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்துக்கு அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் திருப்பூர் தொடருந்து நிலையம்; வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம். + +அஞ்சல் முகவரி: +அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி - 641652 திருப்பூர் மாவட்டம். + +தொலைபேசி எண்: 91- 4296 273507 + +இத்தலம் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகநாதேசுவரரைச் சுந்தரர் பாடியுள்ளார்: + + +வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே. + +முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. + +முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்��ம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. + +பரிசில் பொருட்களுடன் கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்தார். தன் உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர். சுந்தரரரும் அவ்விடம் சென்று அங்கிருந்த சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக மரபுவரலாறு உள்ளது. + +முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. + + + + + +வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் + +வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. + +தேவேந்திரன் வழிபட்ட தலம் + + + + +கொடுமுடி மகுடேசுவரர் கோயில் + +தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும். + +இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. திருச்சி-ஈரோடு ரயில் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது. கோவில் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ் விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது. + +ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் மேருமலை சிதறிவிழுந்த துண்டுகள் மணிகளாகச் சிதறியபோது அவற்றில் ஒன்று கொடுமுடியாகவும் ஆகிற்று என்பது தொன்நம்பிக்கை. + +அகத்தியர், திருமால், பிரம்ம தேவர், பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர் + +மகுடேசுவரர் கோயில் வளாகத்துக்குள், மகுடேசுவரர் சன்னிதிக்கும் வடிவுடையநாயகி சன்னிதிக்கு நடுவில், வீரநாராயணப் பெருமாள்-மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சன்னிதியும் அமைந்துள்ளது. + + + + + +திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் + +திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில் (Thiruvanchikulam Temple) என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது. + +அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் + + + + +திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் + +திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது) + +இத்திருக்கோயில் கோகர்ணம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலம் குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. + +பிரம்ம தேவர், அகத்தி��ர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்ட திருத்தலம். + +அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் + + + + +நீலாசலநாதர் கோயில் + +நீலாசலநாதர் கோயில் (இந்திர நீலப் பருப்பதம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இமயமலைச் சாரலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. காளாத்தியிலிருந்து சம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடினார் எனப்படுகிறது. + + + + + +லைடன் + +, தென் ஹாலந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அருகில் உள்ள சிற்றூர்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள லைடன் நகராட்சியில் 2,54,00 பேர் வசிக்கின்றனர். பழைய ரைன் ஆற்றை ஒட்டியும் டென் ஹாக், ஹார்லெம் நகரங்களுக்கு அருகிலும் லைடன் அமைந்துள்ளது. லைடன் 1575 முதலே ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. இந்நகரில் உள்ள கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு: + + + + + +கைக்குட்டை + +கைக்குட்டை, சதுர வடிவிலான ஒரு துணி ஆகும். பொதுவாக, ஒருவரின் உடற் தூய்மையை பேணுவதற்காக கைக்குட்டையை சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்வர். சட்டைப் பை இல்லாத பெண்கள் இதை கையில் வைத்திருப்பதும் உண்டு. முகம், கை துடைக்கவோ சளியை வெளியேற்றவோ கைக்குட்டை பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஆண்களின் மேற்சட்டையில் அழகுக்காக வைத்துக் கொள்வதும் உண்டு. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்டு கைக்குட்டையைக் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. வரலாற்று நோக்கில், சரணடைவதையோ சண்டை நிறுத்தத்தையோ தெரிவிக்க வெள்ளைக் கொடிக்கு பதிலாக வெள்ளைக் கைக்குட்டைகள் பயன்பட்டுள்ளன. + +பல இடங்களில், முகத் தாளுக்கு (Facial tissue paper) பதிலாக கைக்குட்டையை வைத்திருப்பது பழம்போக்காகவும், குறிப்பாக வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடற் தூய்மை அற்றதாகவும் கருதப்படுகிறது. எனினும், கைக்குட்டை வைத்திருப்பது சூழல் நோக்கில் நன்மை உடையதாகவும் கருதப்படுகிறது. சப்பான், இலங்கையில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்த ஒருவரின் அடையாளமாக கருதப்படுகிறது. + + + + + +பெருங் கரடி (விண்மீன் குழாம்) + +பெருங் கரடி ("Ursa Major") என்பது, ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் "அர்சா மேஜர்" (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும். இதனை தமிழில் எழுமீன் என்றும் சப்தரிஷி மண்டலம் என்றும் அழைப்பர். + +இக் கரடி உருவின் பின்பகுதியிலும் வாலிலும் அமைந்துள்ள, ஏழு ஒளி மிகுந்த விண்மீன்கள் "பெரிய கரண்டி" எனப் பொருள்படுகின்ற, "பிக் டிப்பர்" (Big Dipper) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. இவற்றுள், "பிக் டிப்பரில்" உள்ள டுப்ஹே, அல்கைட் ஆகிய இரண்டைத் தவிர ஏனையவை அனைத்தும் தனு இராசியில் உள்ள ஒரு பொதுப் புள்ளியை நோக்கிய முறையான இயக்கங்களைக் (proper motions) கொண்டுள்ளன. இது போன்ற இயக்கங்களைக் கொண்ட வேறு சில விண்மீன்களும் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாக, அர்சா மேஜர் நகர்வுக் கூட்டம் (Ursa Major Moving Group) என அழைக்கப்படுகின்றன. + +"பிக் டிப்பர்" தவிர, இன்னொரு உருவ அமைப்பும் இங்கே காணப்படுகின்றது. இது அராபியப் பண்பாட்டிலிருந்து வந்ததாகும். இது மூன்று இணை விண்மீன்களின் தொகுதியாகும். இத் தொகுதி "மானின் பாய்ச்சல்" என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. இவ்விணைகள்: + +இவை இவ்விண்மீன் கூட்டத்தின், தென்மேற்கு எல்லையோரம் கரடியின் பாதங்கள்போல் காணப்படுகின்றன. + + + + + +வாழ்த்து அட்டை + +நட்பு, வாழ்த்து, மகிழ்ச்சி, நன்றி போன்ற உணர்வுகளை தெரிவிப்பதற்காக அனுப்பப்படும் படம் அச்சிடப்பட்ட மடல்களை வாழ்த்து அட்டைகள் என்பர். இவ்வட்டைகள் பெரும்பாலும் மடக்கப்பட்டதாயும் அழகான வாசகங்களை கொண்டதாகவும் இருக்கும். பிறந்த நாள், பொங்கல், ஆண்டுப் பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற சிறப்பு நாட்களில் வாழ்த்து அட்டைகள் பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டாலும், அன்பைத் தெரிவிக்க எந்நாளிலும் இவற்றை அனுப்பலாம். + +வாழ்த்து அட்டைகள் பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும். கூடவே, அவற்றை அனுப்பி வைப்பதற்கான பொருத்தமான வண்ணம் உடைய அஞ்சல் உறைகளும் கிடைக்கும். இவ்வாழ்த்து அட்டைகள் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களால் கையாலோ பொறிகளின் உதவியுடனோ உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, அளவு, தரம் ஆகியவற்றை பொறுத்து பத்து இந்திய ரூபாய்கள் முதற்கொண்டு நூற���றுக்கணக்கான இந்திய ரூபாய்கள் வரை விலை மதிப்புடைய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வாழ்த்து அட்டைகளை பிரிக்கும் போது இசைக்கும் வண்ணமும் ஒளிரும் வண்ணமும் சிறப்பு அட்டைகளும் கிடைக்கின்றன. + +தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், வேலன்டைன் நாள் போன்ற நாட்களில் அதிக அளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுகின்றன. மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் இவை அதிகம் அனுப்பப்படுகின்றன. ஹால்மார்க் கார்ட்ஸ், அமெரிக்கன் க்ரீட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களே உலகின் முன்னணி வாழ்த்து அட்டை விற்பனை நிறுவனங்களாகும். ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் ஓராண்டுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்டாக மதிப்பிடப்படுகிறது. + +நண்பர்கள், உறவினர்கள் தவிர நிறுவனங்களும் கூட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வணிக நோக்கத்துடன் சமயம் சாராத விழா கால மற்றும் விடுமுறைக் கால வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைப்பதுண்டு. + + + + +சு. இராசரத்தினம் + +சு. இராசரத்தினம் (ஜூலை 4, 1884 - 1970), "இந்து போர்ட் இராசரத்தினம்" எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர். சைவ சமய அபிவிருத்தியில் கவனம் செலுத்தியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி. இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஏழாண்டுகள் உறுப்பினராக இருந்தவர். சட்டவல்லுனர். + +இராசரத்தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாயில் 1884 சூலை 4 இல், சுப்பிரமணியம் என்பவருக்குப் பிறந்தார். அச்சுவேலியில் திருமணம் புரிந்தார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் (சரவணபவானந்தன், கதிரேசு, சற்குணானந்தன்), நான்கு பெண் பிள்ளைகள் (கனகாம்பிகை, யோகாம்பிகை, திலகவதி, மங்கையற்கரசி). + +சட்டம் கற்ற இராசரத்தினம், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்கலில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். + +1923 டிசம்பர் 1 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் (இந்துபோர்ட்) வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார். அதன் முகாமையாளராகவும் செயலாளராகவும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகாலம் பணியாற்றியவர். வழக்கறிஞராக விளங்க��ய அவர், தேடிவந்த உயர் பதவிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முழுநேர ஊழியராக, சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் ஒன்றித்தார். இதனால் "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், தற்காலிக அங்கீகாரத்துடனான மேலும் 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார். 1928 அக்டோபரில் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனம் இவரது முயற்சியால் உருவானது. + +இராசரத்தினம் 1924 தேர்தலில் வடமாகாண மத்திய தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழாண்டுகள் பதவியில் இருந்தார். + +அக்காலத்தில் சைவர்களுக்குத் தீமையாக நடைமுறையில் இருந்த பல சட்டங்களைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்தார். கிறித்தவப் பள்ளிகளுக்கு அருகில் சைவப்பள்ளிகள் அமைக்கவும், சைவப் பள்ளிகளுக்கு உதவி நன்கொடை பெற்றுத்தரவும் அக்காலகட்டத்தைய சட்டசபை காரணமாயமைந்தது. 1930 இல் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இரு அநாதை விடுதிகளும் கல்வி கற்பதற்கு பாடசாலை வசதிகளும் இவரது முயற்சியால் உருவாகின. + +இராசரத்தினம் 1970 மார்ச் 12 இல் காலமானார். + + + + +கே. சி. நடராஜா + +கே. சி. நடராஜா (பிறப்பு: சூன் 19, 1918 கரவெட்டி, யாழ்ப்பாணம்) இலங்கையில் பிரபல குற்றவியல் சட்டத்தரணியாக விளங்கியவர். இவர் நைஜீரியா நாட்டின் சட்டமா அதிபராகவும், பெர்முடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றியிருக்கிறார். + +இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் முதலியார் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தவர் நடராசா. தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும் பயின்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் இலண்டன் சென்று கிங்ஸ் கல்லூரியில் வரலாற்ற��த் துறையில் சிறப்புப் பட்டத்தையும், சட்டத்துறையில் பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். +இந்தியாவின் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதத்தில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். 1931 ஆம் ஆண்டில் நேரு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபொழுது, யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தின் வழியாக காரில் சென்றபொழுது, ஒரு பள்ளிகூடத்தின் ஆசிரியரும், மாணவர்களும் தன்னை மறித்து தனக்கு வரவேற்பு வார்த்தைகள் சொன்னதாகவும், பிரகாசமான முகத்துடன், கூர்ந்த கண்களுடன் ஒரு சிறுவன் முன்னே வந்து, கை குலுக்கி , ' நான் தவற மாட்டேன்' என்று சொன்னது தன் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்று எழுதியிருக்கிறார். அது கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் 13 வயது நிரம்பிய மாணவனான கே.சீ. நடராஜா தான். பின்னர் அவர் இக்கல்லூரியின் முகாமையாளராக பதவியேற்ற பொழுது இச்சம்பவம் சபையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உல்கப்புகழ்பெற்ற மகப்பேற்று மருத்துவ நிபுணரான சிவா சின்னத்தம்பி இவருடைய இளைய சகோதரியாவார். + +1952 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் இவர் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். + + + + + +நீரா + +நீரா ஒரு நோர்வே நிறுவனம். கம்பியற்ற இணைப்புக்களை மைக்ரோவேவ் (Microwave) மற்றும் செய்மதியூடாக வழங்கிவருகின்றது. இந்த நிறுவனம் உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 1500 இற்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகமானது பேர்கன், நோர்வே இல் அமைந்துள்ளது. + +இதன் சர்வதேச அழைப்புக் குறியீடானது +871, +872, +873 , +874 ஆகும் இது பூமிக்குச் சார்பான நான்கு செய்மதியூடாகத் தொலைத் தொடர்பினை வழங்கிவருகின்றது. இலங்கையில் இது இந்து மகா சமுத்திரச் செய்மதி மற்றும் அந்தாலிந் சமுத்திரச் செய்மதியூடாக இணைப்பை வழங்கிவருகின்றது. + +இது பிரத்தியேக ஒலியழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பல்வேறுபட்ட சர்வதேச ஆபத்துவி நிறுவனங்கள் இந்தத் தொலைத் தொடர்பாடலிற்காப் பாவிக்கின்றன. இந்த அமைப்புக்கள் வேலைசெய்யும் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பாடலகள் மிகவும் பின்தங்கியுள்ளதால் இவ்வாறான தொலைத்தொடர்பாடல் உபகரணங்களைப் பாவித்துவருகின்றனர். + + + +