diff --git "a/train/AA_wiki_39.txt" "b/train/AA_wiki_39.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_39.txt" @@ -0,0 +1,3907 @@ + +வெண்ணந்தூர் + +வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கே சனிக்கிழமை சந்தையில் பொருள் வாங்க மற்றும் விற்க அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்தை வெண்ணந்தூரின் மையத்தில் அமைந்துள்ளது. + + +வெண்ணந்தூர் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் (726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர் ஏரி வெண்ணந்தூர்க்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் கிழக்கில் அலவாய்மலை உள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு ஆறு வெண்ணந்தூர் அருகில் உள்ள ஆறு. இது சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. வெண்ணந்தூருக்கு வடக்கே பொன்சொரிமலையும் கஞ்சமலையும் அமைந்துள்ளது மற்றும் தெற்கே மதியம்பட்டி ஏரி அமைந்துள்ளது.தெற்கே மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. + +இங்குள்ள மக்கள் பேசும் மொழி தமிழ் மொழியாகும்.முக்கிய தொழில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் ஆகும்.இங்கு வாழும் பெருவாரியான மக்கள் இந்துக்கள் + + + + + + + + + + + + + + + + + + + + + +ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-1 + +ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-2 + +தில்லையாடி வள்ளியம்மை உயர்நிலை பள்ளி + +அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி + +அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி + +ஸ்ரீ வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி + +ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி + + +வெண்ணந்தூரின் முக்கிய தொழில் விவசாயமும், நெசவுமாகும். +சில பூர்வீக மக்கள் ஏற்றுக்கொண்ட தொழில் விவசாயம் ஆகும். வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியை சுற்றி மலைகளும், மேற்கே திருமணிமுத்தாறும், பல ஏரிகளும் உள்ளடக்கியது. + +ஆறு, ஏரிகளை ஓட்டிய பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிரடப்படுகிறது. தென்னை மரங்கள் வளர்க்கப்படுகிறத. + +மற்றபகுதியில் தக்காளி, வெண்டை, கத்திரி, கீரைவகைகள், புதினா, கொத்தமல்லி பயிரடப்படுகிறது. + +வெண்ணந்தூரின் பெரும்பகுதி செம்மண் பூமி ஆகும். எனவே மரவள்ளி கிழங்கு ��கைகள், வேர்கடலை, பருத்தி ஏராளமாக பயிரிடப்படுகிறதது. + +வெண்ணந்தூரின் பூர்வீக மக்களில் ஒரு பிரிவினர் நெசவு தொழிலை வழிவழியாக செய்து வருகின்றனர். + +இங்குள்ள மக்கள் ஆரம்பகாலத்தில் கைதரி மூலம் நெசவு செய்தனர். தற்பொழுது இயக்குதரி, விசைத்தரி, தானியங்கு தரி என வளர்ச்சியடைந்துள்ளது. + +இம்மக்கள் பருத்தி ஆடைகளை நெய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். துண்டு, சட்டை துணி, கால் சட்டை துணி, உள்ளாடை துணி, மேலாடை துணி, பாவாடை துணி, வேட்டி துணி, சீலை துணி முதலியனவாகும். + +இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருள் மற்றும் விவசாய பொருட்கள் துணி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகும் + +இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் சவ்வரிசி உற்பத்தி நடைபெறுகிறது. + +தற்பொழுது இங்கே வணிகம் சிறு குறு தொழில்கள் உணவகங்கள் அமைக்கப்படுகின்றது. + + + +சேலம் மற்றும் கோவை விமானநிலையம் +பிரதான கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும்.இவ்வூர் இராசிபுரம் சட்டசபை மற்றும் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியாகும். திரு.சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக +நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். திருமதி.சரோஜா அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திரு.சொ.நா.க.ப.செல்வம் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆவார். + + + + + +வேப்பத்தூர் + +விராலி மலை(ஆங்கிலம்:), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்காேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,410மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள்.viralimalai மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.viralimalai மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வேர்க்கிளம்பி + +வேர்க்கிளம்பி (Verkilambi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்���ெடுப்பின்படி 17,982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வேர்க்கிளம்பி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேர்க்கிளம்பி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வேட்டைக்காரன்புதூர் + +வேட்டைக்காரன்புதூர் (ஆங்கிலம்:Vettaikaranpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,594 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வேட்டைக்காரன்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 60%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. வேட்டைக்காரன்புதூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வேட்டவலம் + +வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,506 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வேட்டவலம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேட்டவலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விஜயபுரி + +விஜயபுரி (ஆங்கிலம்:Vijayapuri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் உள்ளது. +பல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பாண்டவர்களின் வனவாசத்தில் கடைசி பதிமூன்றாம் வருடத்தில் அன்யாத வாசத்தின் பொழுது அனைவரும் மறைந்து இருந்து வாழ வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகத் தற்பொழுது தாராபுரம் என்று அழைக்கப்படும் விராடபுரத்திற்கு வந்தனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான விஜயன் இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விஜயபுரி அம்மன் என்று தற்பொழுது அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தின் வன்னி மரத்தில் தான் தனது காண்டீபம் மற்றும் பல ஆயுதங்களையும் மறைத்து வைத்து, கோயிலில் திருநங்கையாக மாறி தாராபுரம் என்று அழைக்கப்படும் விராட தேசத்தில் மறைந்து இருந்தார். அன்யாத வாசத்தின் கடைசியில் துரியோதனன் உடன் நடந்த போரில் (விஜயன்) வெற்றி பெற்றான்.தான் பெற்ற வெற்றிக்காக அந்த தலத்தில் எழுந்தருளி இருந்த நாகேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் இந்த நாகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்து விஜயபுரி என்று அழைக்கப்படும் விஜயமங்கலம் என்ற ஊரையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்தான். விஜயன் நிர்மாணித்ததன் காரணமாக இந்த இடம் விஜயபுரி என்றும் விஜயமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. + +கொங்கு நாடு பழங்காலத்தில் வட, தென், மேல், கீழ் கொங்கு என நான்காக வகுக்கப்பட்டது. அதில் விஜயமங்கலம், வட கொங்கு பகுதியை சார்ந்தது. பழங்காலத்தில் கொங்கு நாட்டை, 24 கோட்டங்களாக பிரித்தனர். அதில் ஒரு கோட்டமாக விளங்குவது குறுப்பு நாடு என்பதாகும். 24 கோட்டங்களில் சிறந்த கோட்டமாக விளங்கியது, இக்குறுப்பு நாட்டு கோட்டம். இதன் தலைநகராக விளங்கியது விஜயமங்கலமாகும். +பெருங்கதை காப்பிய ஆசிரியர் கொங்கு வேளிர், சிலப்பதிகார பெருங்காப்பியத்தின் உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார், கொங்கு மண்டல சதகம் எனும் பிரபந்த ஆசிரியர் கார்மேகப்புலவரும் விஜயமங்கலத்தில் பிறந்தவர்கள். +நன்னூல் எனும் செந்தமிழ் இலக்கண நூல் தந்த, பவணந்தி முனிவரும், விஜயமங்கலம் அருகே உள்ள சீனாபுரத்தில் பிறந்தவரே. "ஓங்கு தமிழ்சேர் விஜயமங்கை' என்ற அடைமொழிக்கு ஏற்ப, இவ்விஜயமங்கத்தின் வடபாலும், தென்பாலும், இரண்டு புலவர் பாளையங்கள், தமிழ் கூறும் நல்லுகத்தின் நான்காவது தமிழ் சங்கம் அமைய��்பெற்று, தமிழ் மொழி வளர்க்கப்பட்டுள்ளது. + +விஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயமங்கலம் தலைநகராகவும் இருந்து வந்துள்ளது + +விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபா கோயில் உள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6455 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். விஜயபுரி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விஜயபுரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விக்கிரமசிங்கபுரம் + +விக்கிரமசிங்கபுரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +2.சிவந்தியப்பர் கோயில் +3.வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் +4.உலக்கரிசி வினாயகர் ஆலயம் + + + + + + +விக்கிரவாண்டி + +விக்கிரவாண்டி (ஆங்கிலம்:Vikravandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 44 மீட்டர் (144 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,141 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ���வார்கள். விக்கிரவாண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரவாண்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விளாங்குடி + +விளாங்குடி (ஆங்கிலம்:Vilangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் மண்டலம் எண் 1-இல், வார்டு எண் 8-இல் அமைந்துள்ளது. முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது விளாங்குடி பேரூராட்சி, மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,073 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாங்குடி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விளாங்குறிச்சி + +விளாங்குறிச்சி (ஆங்கிலம்:Vilankurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விளாங்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாங்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விளாப்பாக்கம் + +விளப்பாக்கம் (ஆங்கிலம்:Vilapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8053 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளப்பாக்கம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விளாத்திகுளம் + +விளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +விளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கிமீ; மேற்கே எட்டயபுரம் 19 கிமீ; வடக்கே புதூர் 19 கிமீ; தெற்கே தூத்துக்குடி 45 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது. + +17.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் + + + + +விளவூர் + +விளவூர் (ஆங்கிலம்:Vilavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,373 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். விளவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளவூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வில்லுக்குறி + +வில்லுக்குறி (Villukuri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,397 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வில்லுக்குறி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வில்லுக்குறி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு மேம்பால பாசனவாய்கால் உள்ளது.அருகில் மாம்பழத்துறை ஆறு அணைகட��டுள்ளது. + +அருகில் மாம்பழத்துறை ஆறு அணைக்கட்டு உள்ளது.வில்லுக்குறியில் மேம்பால பாசனவாய்கல் உள்ளது. + + + +விருத்தாச்சலம் + +விருத்தாசலம் (ஆங்கிலம்:"Vriddhachalam" அல்லது "Virudhachalam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். +கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. + +"விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது. + +இந்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்நகரம் -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது. + + + + +விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் கடலூர் தொகுதியின் கீழ் வருகிறது. 2006ல் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார்.தற்போது ஆதிமுகா வை சேர்ந்த வி.டி.கலைச்செல்வன் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். + + +விருத்தாச்சலம் வட்டம் + + + + +விருப்பாச்சிபுரம் + +விருப்பாச்சிபுரம் (ஆங்கிலம்:Virupakshipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,431 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருப்பாச்சிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருப்பாச்சிபுரம் மக்கள் தொகையி���் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +விஸ்வநாதம் + +விஸ்வநாதம் (ஆங்கிலம்:Viswanatham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,121 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விஸ்வநாதம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விஸ்வநாதம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வாலாஜாபாத் + +வாலாஜாபாத் (ஆங்கிலம்:Walajabad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016-17 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கையில் இந்திய நாடாளுமன்றத்தில் 25 பிப்ரவரி 2016 அன்று மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்தார். இதில், நாட்டின் முதல் 'வாகன மையம்' அமைக்க தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 65 மீட்டர் (213 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,859 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாலாஜாபாத் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாலாஜாபாத் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வாலாசாபேட்டை + +வாலாசாபேட்டை (வாலாஜாபேட்டை) (ஆங்கிலம்:Walajapet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 160 மீட்டர் (524 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாலாஜாபேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்க��ின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாலாஜாபேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஜமீன் ஊத்துக்குளி + +ஜமீன் ஊத்துக்குளி (ஆங்கிலம்:Zamin Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,871 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஜமீன் ஊத்துக்குளி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜமீன் ஊத்துக்குளி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +மிஷேல் ஃபூக்கோ + +மிஷேல் பூக்கோ (Michel Foucault அக்டோபர் 15, 1926 – ஜூன் 25, 1984) இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவர். இவரது சிந்தனைகளும் கருத்துக்களும் மெய்யியல், அரசியல், உளவியல், மொழியியல், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்துகின்றன. பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் ஃபூக்கோ குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் ஒழுங்கமைப்பு, அதிகாரம், அறிவு, பாலியல் முதலியவை குறித்த நுண் அரசியல் ஆய்வுகளின் வாயிலாகப் பெரிதும் அறியப்படுகிறார். குறிப்பாக அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்ந்தார். + +பின்நவீனத்துவராகப் ஃபூக்கோ அறியப்படுகின்ற போதிலும் ஆரம்பத்தில் பின்-அமைப்பியலாளராகவே அறியப்பட்டார். + +அரசியல் ரீதியாக இவர் ஈரானியப் புரட்சியையும் ஆதரித்தார். இதே வேளை ஃபூக்கோ பாலசுத்தீனப் போராட்டம் தொடர்பாக மௌனம் காத்ததாக எட்வேர்ட் சைட் குறிப்பிடுகின்றார். + + + + + +பெப்ரவரி 2007 + +பெப்ரவரி 2007 2007 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக் கிழமை ஆரம்பமாகி 28 நாட்களின் பின்னர் ஒரு புதன் கிழமை முடிவடையும். + + + + + + + +திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் + +திருக்கடையூர் அமி���்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை + +இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர்,இறைவி அபிராமி. + +அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். +மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன. + +மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது. + + + + + + + +அல் ஐன் + +அல் எயின், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நகரமாகும். நாட்டின் பெரிய அமீரகமான அபுதாபியில் அமைந்துள்ள இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி இதன் மக்கள் தொகை 421,948 ஆகும். இது ஓமான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ளது. நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களைப் போல அல் எயின், ஒரு கரையோர நகரம் அல்ல. கடற்கரையிலிருந்து இது தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரையோர நகரங்களான அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து ஏறத்தாழ ஒரேயளவு தொலைவில் (150 கிமீ) அமைந்துள்ள அல் எயின், அவ்விரு நகரங்களுடனும் ஒரு சமபக்க முக்கோணத்தை ஆக்குகின்றது. + +பாலைவனச் சோலையான இப்பகுதி, முற்காலத்தில் "புரெய்மி" (Buraimi) என அழைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 4000 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வாழ்ந்த இடமாக இருந்து வந்திருப்பதாகக் கூறப்படும் இது, நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் மையமாகவும் கருதப்படுகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது ஜனாதிபதியான ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பிறப்பிடமும் இதுவே. இன்று, அல் எயின் நகரத்தோடு சேர்ந்து, ஓமானின் எல்லைக்குள் அமைந்திருக்கும் நகரப்பகுதியே "புரெய்மி" என்று அழைக்கப்பட்டு வருகின்றது. + +அல் எயினில் பல நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. இதனால்தான், முற்காலத்திலும் மக்கள் வாழ்வதற்குரிய இடமாக இது திகழ்ந்தது. + + + + +கிளிநொச்சித் தாக்குதல், 1998 + +கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998 என்பது இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருக்கும் கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டிருந்த சிறி லங்கா இராணுவத்திடமிருந்து அந்நகரைக் கைப்பற்றவென விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட ஓர் இராணுவ நடவடிக்கையாகும். + + +பெப்ரவரி 1, 1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள். + +சமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன. + +இவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் சாவடைந்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு: + +கிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை. அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் சாவடைந்தனர். + +எதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்டம்பரில் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றினர் புலிகள். + + + + + +யாழ்ப்பாண மாநகரசபை + +யாழ்ப்பாண மாநகரசபை ("The Jaffna Municipal Council") என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. + +இது "வட்டாரம்" என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகர முதல்வர் (Mayor), துணை நகர முதல்வர் ஆகியோரைத் தெரிவு செய்வர். புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரபிதா, துணைநகரபிதா ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர். + +1861 ஆம் ஆண்டில் "வீதிக் குழு" (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் மற்றும் 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது. + +குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், ��கரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை. + +யாழ் மாநகரசபையில் தற்போது (2018) 27 தனி வட்டாரங்கள் உள்ளன. வட்டாரம் ஒவ்வொன்றும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிப்பிடப்படுகின்றன. விபரங்கள் பின்வருமாறு: + +யாழ்ப்பாணம் 1949ல் மாநகர சபையாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பதவியில் இருந்த முதல்வர்களின் விபரங்கள்: + +2009 ஆகத்து 8 ஆம் நாள் நடந்த யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் முடிவுகள்: + + + + + + +தீர்வை + +பொருளியல் தொடர்பில், தீர்வை என்பது, வருமானம் ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். இது பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர். தீர்வை வருமானம் ஈட்டுவதற்காக விதிக்கப்படுவது ஆயினும், வேறு சில இலக்குகளை அடைவதற்காகவும் தீர்வையைப் பயன்படுத்துவது உண்டு. குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியையோ இறக்குமதியையோ கட்டுப்படுத்தல், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கம் கொடுத்தல், நாட்டின் கல்வி, தொழில்துறை போன்ற துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அவசியமான பொருட்களின் இறக்குமதியை ஊக்குவித்தல் போன்ற தேவைகளுக்காகத் குறிப்பிட்ட சில பொருட்கள் மீதான தீர்வைகளைப் குறைப்பதும், கூட்டுவதும் உண்டு. பல வளர்முக நாடுகள் ஆடம்பரப் பொருட்கள் மீது கூடிய தீர்வைகளை விதிப்பதன் மூலம் நாட்டுக்கு மிகத் தேவையான அந்நியச் செலவாணி விரயத்தைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. + +பன்னாட்டு வணிகத்தில், ஏற்றிமதி, இறக்குமதி என்பன தொடர்பில் விதிக்கப்படுகின்ற மறைமுக வரியே "சுங்கத்தீர்வை". பொருளியல் அடிப்படையில், சுங்கவரியும் ஒரு நுகர்வு வரி ஆகும். பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை இறக்குமதித் தீவை எனப்படும். அதேபோல, வெளிநாட்���ுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான தீர்வை ஏற்றுமதித் தீர்வை ஆகும். துறைமுகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும் அமைந்துள்ள சுங்க அலுவலகங்களில் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சோதனை செய்து தீர்வை அறவிடப்படுகிறது. + +பெறுமானத்தின் அடிப்படையில் தீர்வை விதிக்கப்படும் பொருள்களுக்கான தீர்வை மதிப்பிடத்தக்க பெறுமானத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சில வேளைகளில், ஒத்திசைந்த சுங்கத் தீர்வை முறையின் அடிப்படையில் தீர்வை கணிக்கப்படுவது உண்டு. இல்லாவிட்டால், தீர்வை கணிப்பதற்குப் பொருட்களின் பரிமாற்றத்துக்குரிய பெறுமானம் அடிப்படையாக அமைகிறது. + + + + +கட்டற்ற வணிகம் + +கட்டற்ற வணிகம் அல்லது சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு "சந்தை மாதிரி" (market model) ஆகும். இது, நாடுகளிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வணிகம், வரி மற்றும் வரியற்ற வேறு தடைகள் போன்ற அரசாங்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல் நடைபெறுவதைக் குறிக்கும். ஒரு பகுதி பொருளியல் பகுப்பாவாய்வாளர்கள், கட்டற்ற வணிகம், சம்பந்தப்படுகின்ற இரு பகுதியினருக்கும் இலாபகரமானது என்றும், இதன் சாதக விளைவுகள், பாதக விளைவுகளிலும் அதிகம் என்றும் வாதிடுகிறார்கள். உலகமயமாக்கத்துக்கு எதிரானவர்களும், தொழிலாளர் நலன் குறித்த பரப்புரையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக்காட்டி இதனை எதிர்க்கின்றனர். + +கட்டற்ற வணிகம் என்பது பொருளியல், அரசாங்கம் ஆகியவை தொடர்பான ஒரு கருத்துருவாகும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது: +இத்துடன் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட கருத்துருக்கள்: + +கட்டற்ற வணிகத்தின் வரலாறு, திறந்த சந்தை (open market) வாய்ப்புக்களை நோக்காகக் கொண்ட அனைத்துலக வணிகத்தின் வரலாறு ஆகும். + +வரலாற்றில், வளம் பெற்றுச் செழித்திருந்த பல்வேறு பண்பாடுகளும், வணிகத்தில் ஈடுபட்டிருந்தது அறிந்ததே. இந்த வரலாறுகளின் அடிப்படையில், காலப்போக்கில் கட்டற்ற வணிகத்தின் நன்மைகள் பற்றிய கொள்கைகள் வளர்ச்சியடைய ஆரம்பித்தன. இக் கொள்கைகள், தற்காலத்தின் நவீன கல்விசார்ந்த நோக்கில் வளர்ந்தது, இங்கிலாந்தினதும், பரந்த அடிப்படையில் முழு ஐரோப்பாவினதும் வணிகப் பண்பாட்டின் கடந்த அடிப்படையி���ேயே ஆகும். கட்டற்ற வணிகக் கொள்கைகளுக்கு எதிரான வணிகவாதக் (mercantilism) கொள்கைகள், 1500 களில், ஐரோப்பாவில் உருவாகிப் பல உருவங்களில் இன்றுவரை நிலைத்து உள்ளன. வணிகவாத்தத்துக்கு எதிரான தொடக்ககாலக் கட்டற்ற வணிகக் கொள்கைகள், டேவிட் ரிக்கார்டோ, ஆடம் சிமித் என்பவர்களால் முன்வைக்கப்பட்டன. சில பண்பாடுகள் வளம் மிக்கவையாக இருந்ததற்குக் காரணம் வணிகமே என்னும் வாதத்தைக் கட்டற்ற வணிகக் கொள்கையாளர்கள் முவைத்தனர். எடுத்துக்காட்டாக, மத்தியதரைக் கடல் பண்பாடுகளான எகிப்து, கிரீஸ், ரோம் என்பன மட்டுமன்றி, வங்காளமும், சீனாவும் கூடச் செழிப்புப் பெற்றிருந்ததற்குக் காரணம் வணிகமே என்று ஆடம் சிமித் எடுத்துக் காட்டினார். + +கட்டற்ற வணிகத்தை பிரெஞ்சு சொல்லான Laissez faire எனவும் அழைப்பர். பிரெஞ்சு மன்னன் 14ம் லூயி காலத்தில், அவன் பிரதமர் வாணிகர்களை 'உஙளை எப்படி கட்டுக்குள் வைப்பது' என கேட்டாராம்; அதற்க்கு வாணிகர்கள் 'எங்களை சும்மா விடுங்கள்' - பிரெஞ்சில் Laissez faire - என சொன்னார்களாம். அதனால் Laissez faire என்ற பெயரும் நிலைத்துவிட்டது. + +கடந்த நூற்றாண்டுகளில், கட்டற்ற வணிகக் கொள்கைகள், வணிகவாதம், பொதுவுடைமைவாதம் (communism) மற்றும் பலவிதமான கொள்கைகளுடன் கொள்கைப் போராட்டம் நடத்தின. அபினிப் போர்கள் (Opium Wars), பல குடியேற்றவாதப் போர்கள் உட்பட ஏராளமான போர்கள், முக்கியமாக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. + +எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் பாதுகாப்புவாதக் கொள்கைகளைக் கைக்கொண்டிருந்தன எனினும், செல்வப் பெருகியபோது இக் கொள்கைகளைப் பெரும்பாலும் தளர்த்திக்கொண்டன. + + + + + +அபினிப் போர்கள் + +சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணம��க, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மகாணத்தில் பணிப்புரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன. + +முதலாம் அபின் போர் 1839 முதல் 1842 வரை நடந்தது. இந்த போரிலேயே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பிரித்தானியா ஹொங்கொங்கை பிரித்தானியாவின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டது. + +அதன் பிறகு மீண்டும் அபின் வணிகம் தொடர்பான, இரண்டாம் அபின் போர் 1856 முதல் 1860 வரை நடந்தது. இந்த போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் மேலும் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது. + +இந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் குயிங் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகின. + +ஒல்லாந்தரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரித்தானியரும், அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்தே (1556-1605) இந்தியாவிலிருந்து அபினியை வாங்கிவந்தனர். 1757 இல், வங்காளத்தைக் கைப்பற்றிய பின்னர், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அபினியின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தனியுரிமையை நிலைநாட்டியிருந்தது. வேறு பயிர்களுக்கு இல்லாதவகையில், முன்பணம் கொடுத்து அபினி உற்பத்தியாளர்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த உற்பத்தி, கொல்கத்தாவில், பொதுவாக 400 விழுக்காடு இலாபத்துடன், ஏலத்தில் விற்கப்பட்டது. + +1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, பாட்னாவிலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக ���ாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது. 1797 ஆம் ஆண்டில், வங்காளத்துத்து அபினித் முகவர்களின் பங்கை இல்லாமல் செய்து, அபினிப் பயிர்ச் செய்கையாளர் நேரடியாகவே கம்பனிக்கு அபினியை விற்கும்படி ஏற்பாடு செய்து கொண்டது. + +சீனாவுக்கான பிரித்தானியரின் அபினி ஏற்றுமதி, 1730 ஆம் ஆண்டில் 15 தொன் (ton) அளவாக இருந்தது, 1773 ஆம் ஆண்டில் 75 தொன்களாக உயர்ந்தது. ஒவ்வொன்றும் 64 கிலோகிராம் நிறையுள்ள அபினியைக்கொண்ட 2000 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. + +1799 இல், சீனப் பேரரசு அபினி இறக்குமதி மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது: + +இந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் பெய்ஜிங்கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது. + + + + +அபினி + +அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. (paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் "கம்புகம்" என்னும் பெயராலும் அறியப்படுகிறது. + +அபின் வலிமையான போதையூட்டும் இயல்பு கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது. + + + + + + +கட்டற்ற வணிக வலயம் + +கட்டற்ற வணிக வலயம் அல்லது சுதந்திர வர்த்தக வலயம் என்பது ஒரு நாட்டில், தீர்வைகள், கோட்டாக்கள் முதலியவை இல்லாததாகவும், அதிகார நடைமுறைச் சிக்கல்கள் குறைவானதாகவும் இருக்கும்படி குறித்து ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இத்தகைய ஒழுங்குகள் அங்கே வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அவர்களைக் கவர்வதற்கான வழிமுறைகளாகும். கட்டற்ற வணிக வலயம் என்பதை மூலப்பொருட்களையும், கூறுகளையும் இறக்குமதி செய்து, உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற உழைப்புச் செறிவுள்ள உற்பத்தி மையங்கள் என வரையறுக்கலாம். + +பெரும்பாலான கட்டற்ற வணிக வலயங்கள் வளர்ந்துவரும் நாடுகளிலேயே அமைந்துள்ளன. இவை, அந் நாடுகளின் வழக்கமான வணிகத் தடைகள் நடைமுறையில் இல்லாததும், அங்கே வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களைக் கவர ஊக்கச் சலுகைகளை வழங்குவதுமான சிறப்பு வலயங்களாக இருக்கின்றன. அதிகார நடைமுறைகளை இலகுவாக்கும் பொருட்டு இவ் வலயங்கள், தனியான நிர்வாக அமைப்புக்களைக் கொண்டிருப்பது வழக்கம். இத்தகைய வலயங்கள் பொதுவாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு அருகிலேயே அமைகின்றன. இவற்றை குறிப்பிட்ட நாட்டின் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அமைப்பதும் உண்டு. மக்களைக் கவர்ந்திழுத்து அப்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நோக்கிலேயே இவ்வாறான அமைவிடங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே இவ் வலயங்களில் தொழிற்சாலைகளை நிறுவிப் பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. + +2002 ஆம் ஆண்டில், 116 நாடுகளிலுள்ள, சுமார் 3000 கட்டற்ற வணிக வலயங்களில் அமைந்த, உடுபுடவைகள், காலணிகள், மின்னணுச் சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 430 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கட்டற்ற வணிக வலயங்களின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு நாணயமாற்றுச் சம்பாத்தியத்தை மேம்படுத்துவதும், ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தொழில்களை வளர்ப்பதும், உள்நாட்டவருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் ஆகும். + + + + + +வணிகவாதம் + +வணிகவாதம் அல்லது வாணிபவாதம் என்பது, ஒரு நாட்டின் வளம் அதன் மூலதன வழ���்கலில் (supply) தங்கியுள்ளது என்றும், உலகம் தழுவிய வணிகத்தின் மொத்த அளவு "மாற்றப்பட முடியாதது" என்றும் கூறுகின்ற ஒரு பொருளியல் கோட்பாடு ஆகும். நாடுகள் சேமித்து வைத்துள்ள விலைமதிப்புள்ள உலோகப் பாளங்களினால் குறிக்கப்படும் மூலதனத்தை, மற்ற நாடுகளினுடனான வணிகச் சமநிலையை சாதகமானதாக வைத்திருப்பதன்மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். அரசு, இந்த நோக்கங்களை அடைவதற்காக, வரி முதலியவை மூலம், ஏற்றுமதியை ஊக்குவித்தும், இறக்குமதியை குறையச் செய்தும், பங்களிப்புச் செய்யவேண்டும் என வணிகவாதம் பரிந்துரைக்கின்றது. இத்தகைய எண்ணக்கருவின் அடிப்படையில் உருவான பொருளியல் கொள்கை "வணிக முறைமை" (mercantile system) எனப்படுகின்றது. +தேசிய அரசுகளின் உருவாக்கத்தோடு ஏறத்தாளப் பொருந்தி வந்த நவீனகாலத் தொடக்கத்தின் (16 - 18 ஆம் நூற்றாண்டுகள்) முதன்மையான பொருளியல் சிந்தனைப் போக்காக வணிகவாதம் விளங்கியது. நாடுகள் மட்டத்தில், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அரசாங்கத் தலையீட்டுக்கும், கட்டுப்பாட்டுக்கும் இது வழிவகுத்தது. இக்காலத்திலேயே பெரும்பாலான நவீன முதலாளித்துவ முறைமைகள் நிலைபெற்றன. அனைத்துலக மட்டத்தில், வணிகவாதம், பல ஐரோப்பியப் போர்களை ஊக்கப்படுத்தியதுடன், கிடைக்கக்கூடிய சந்தை வாய்ப்புக்களுக்காக ஐரோப்பிய வல்லரசுகளைப் போட்டியிட வைத்ததன்மூலம் பேரரசுவாதத்துக்கும் தூபமிட்டது. ஆடம் சிமித் மற்றும் பிற செந்நெறிப் பொருளியலாளர்களின் வாதங்கள், பிரித்தானியப் பேரரசில் சாதகமான தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாக, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வணிகவாதத்தின் மீதிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. இன்று அதன் முழுமையான வடிவில் வணிகவாதம் பல பொருளியலாளர்களால் கைவிடப்பட்டுவிட்டது. எனினும், இதன் சில கூறுகளைச் சாதகமாக நோக்குகின்ற பொருளியலாளர்கள் இன்றும் இருக்கவே செய்கின்றனர். இவர்களில் ரவி பத்ரா, ஈம்மொன் ஃபிங்லெட்டன், மைக்கேல் லிண்ட் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். + +1500 க்கும் 1750 க்கும் இடையில் இருந்த பொருளியலாளர் அனைவரும் இன்று பொதுவாக வணிகவாதிகள் என்றே கருதப்படுகின்றார்கள். ஆனாலும், இவர்கள் அனைவரும் தாங்கள் ஒரே குறிப்பிட்ட பொருளியல் கோட்பாட்டுக்குப் பங்களிக்கிறோம் என்று கருதவில்லை. 1763 இல் இதற்குப் பெ��ர் கொடுத்தவர், மார்க்கிஸ் டி மிராபெயோ (Marquis de Mirabeau) என்பவராவார். 1776 இல் ஆடம் சிமித் இதனைப் பிரபலமாக்கினார். உண்மையில், "நாடுகளின் செல்வம்" (The Wealth of Nations) என்னும் தனது நூலில், வணிகவாதிகளுடைய பெரும்பாலான பங்களிப்புக்களை முதன்முதலில் ஒழுங்குபடுத்தியவர் ஆடம் சிமித்தே ஆவார். + +முழுமையாக நோக்கும்போது வணிகவாதம், ஒரு ஒருங்கிணைவான பொருளியல் கோட்பாடு எனக் கொள்ளமுடியாது. ஆடம் சிமித் செந்நெறிப் பொருளியலுக்குச் செய்ததுபோல, வணிகவாதிகள் எவரும் ஒர் நாட்டின் இலட்சியப் பொருளாதாரம் பற்றிய முழுமையான வணிகவாதக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. ஆனால், வணிகவாத எழுத்தாளர்கள் பொருளியலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மீதே கருத்துச் செலுத்தினர். பிற்காலத்தில் வணிகவாதிகள் அல்லாதவர்களே இவர்களது பல்வேறுபட்ட கருத்துக்களைத் தொகுத்து வணிகவாதம் என அழைத்தனர். இதனால், சில அறிஞர்கள் வணிகவாதம் என்னும் கருத்தையே முற்றாக நிராகரிக்கிறார்கள். இது வேறுவேறான விடயங்களுக்குப் போலியான ஒற்றுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது என்பது இவர்களது கருத்து. + + + + +பேரரசுவாதம் + +ஏகாதிபத்தியம் அல்லது பேரரசுவாதம் (Imperialism) என்பது, பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும். + +இது ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துதன் மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது. + +இச் சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விபரிக்கவே பயன்படுகின்றது. + +"ஏகாதிபத்திய காலம்" ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. பேரரசுவாதம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆப்பிரிக்கா, அமெரிக்காவை நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது. ஆங்கிலேயப் பொருளாதாரவாதி ஜே.ஏ.ஹாப்சன் 1902ல் ‘ஏகாதிபத்தியம்‘ எனும் நூலை வெளியிட்டபின் இச்சொல் பிரபலமானது. + +முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் ஏகாதிபத்தியத்தை தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் வாதித்தார். தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ரோசா லக்சம்பர்க்கும் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (Hannah Arendt) ஏற்றுக்கொண்டனர். + +உலகப்போர் சம்பந்தமான அணுகுமுறையைப் பற்றி சோஷலிஸ்ட்டுகள் மத்தியில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில் லெனின் ஏகாதிபத்தியம் என்ற நூலை எழுதினார் . அவர் ஏகாதிபத்தியம் என்ற சொல்லைப் பின்வருமாறு வரையறுத்தார்: +... ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டம் என்று சுருக்கமாகக் கூறலாம். அது பின்வரும் ஐந்து அம்சங்களைக் கொண்டிருக்கிறது. + + +ஜப்பான், கொரியா, இந்தியா, சீனா, அசிரியா, பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம், உரோமைப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, ஒட்டோமான் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு மற்றும் பல பேரரசுகளின் வரலாற்றில் பேரரசுவாதம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தின் போது செங்கிஸ் கானின் வெற்றிக்கும் மற்றும் பல பேரரசர்களின் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பேரரசுவாதம் இருந்துள்ளது. வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிம் பேரரசுகளும். துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவ சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்லும் பன்னிரெண்டுக்கும் அதிகமான பேரரசுகள் இடம்பெற்றன. உதாரணமாக எத்தியோப்பியன் பேரரசு, ஓயோ பேரரசு, அசாந்த் யூனியன், லுபா சாம்ராஜ்ஜியம், லுண்டா சாம்ராஜ்ஜியம், மற்றும் முடாப்பிய பேரரசு ஆகியனவாகும். பண்டைய கொலம்பிய யுகத்தில் அமெரிக்கர்கள் ஆஸ்டெக் பேரரசு மற்றும் இன்க் பேரரசு போன்ற பெரிய பேரரசுகளைக் கொண்டிருந்தனர். + +ஒரு நாட்டில் வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை கட்டாயமாக சுமத்தப்பட்ட அல்லது பொதுவாக ஒரு ஒன்றிப்பு அரசாங்கம் இல்லாத பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக “பேரரசுவா���ம்” என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் வலுவான அல்லது மறைமுக அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கை விரிவாக்க பலவீனமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் செயல்முறையை குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. + +கலாச்சார பேரரசுவாதம் என்பது மிகவும் தெளிவற்ற கருதுகோளாகும். அதில் ஒரு நாட்டின் பண்பாட்டு கலாச்சாரமானது அடுத்த நாட்டு கலாச்சாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதையே பண்பாட்டு பேரரசுவாதம் என்றழைக்கப்படுகிறது. மென்மையான அதிகார வடிவமாக கருதப்படும் இது ஒரு நாட்டின் நகர்புறங்களில் தார்மீக, கலாச்சார மற்றும் சமூகத்தின் உலக கண்ணோட்டத்தை மாற்றுகிறது. +இத்தகைய செயல்கள் ஏதோவொரு விதத்தில், பேரரசுவாதத்தின் கருத்தாக்கத்தை அர்த்தமற்றதாக கருதுவது போன்றதாகும்.வெளிநாட்டு இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளந்தலைமுறையிர் இடையே பண்பாட்டு ரீதியிலான உள்நாட்டு கொள்கைகளுக்கு மாறான பழக்கவழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்துவதும் இதற்குச் சான்றாகக் கூறலாம். உதாரணமாக, பனிப்போர் காலத்தில் ஓபரா டல்லாஸ் சோப்பின் ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கைப் பாணியின் சித்திரங்கள் ருமேனியர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றின. மிக சமீபத்திய உதாரணம் வட கொரிய மக்களிடைளே மிகவும் செல்வாக்கு ஏற்படுத்திய கடத்தப்பட்ட தென்கொரிய நாடகத் தொடரினைப் குறிப்பிடலாம். ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், அரங்குகளையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந் நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்துபோகச் செய்தனர். பொதுக் கிரேக்க மொழியின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. + +பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய ஆர்வம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காணலாம். 1599 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டு அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. > இந்தியாவில் வணிகப் மையங்களை நிறுவுவதன் மூலம், இந்தியாவில் ஏற்கனெவே வர்த்தக தளங்களை நிறுவியிருந்த +போர்த்துகீசியர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள இங்கிலாந்தால் முடிந்தது. 1767 ஆம் ஆண்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக உள்ள��ர் பொருளாதாரம் சூறையாடப்பட்டதுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியில் நிகழ்ந்த சுரண்டல்கள் காரணமாக கம்பெனி திவாலாகியது. வெர்ஜீனியா, மாசசூசெட்ஸ், பெர்முடா, ஹொண்டுராஸ், அன்டிகுவா, பார்படோஸ், ஜமைக்கா மற்றும் நோவா ஸ்கொச்சியா ஆகியவற்றில் காலனிகளைக் கொண்டிருந்ததால் 1670 ஆம் ஆண்டளவில் பிரிட்டனின் பேரரசுவாத ஆர்வங்கள் அதிகரித்தன. +1814 ஆம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான முதலாம் காலனித்துவ பேரரசானது முடிவுக்கு வந்திருத்தது. இரண்டாவது காலனியாதிக்க பேரரசு ஆல்ஜீரியவை 1830 ஆம் ஆண்டு வென்றதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டவுடன் பெரும்பாலான காலனியாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரான்சின் வரலாறு பெரியதும் சிறியதுமான பல போர்கள் மற்றும் உலகப் போர்களின் போது காலனித்துவ நாடுகளிலிருந்து பிரான்சிற்கு குறிப்பிடத்தக்க உதவிகள் கிடைத்தன. + +16 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸின் காலனித்துவத்தை அமெரிக்காவின் புதிய குடியேற்றம் மூலம் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டது + +19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு காலனியாதிக்க பேரரசானது பிரித்தானியப் பேரரசிசிற்கு அடுத்த படியாக இருந்தது. 12,347,000 கிமீ 2 (4,767,000 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்திருந்த பிரெஞ்சு காலனியாதிக்கம் உலக மக்கட்தொகையில் பத்தில் ஒரு பங்கினையும் இரண்டாம் உலகப்போரின் போது இது 110 மில்லியன் மக்கள் என்றளவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ( இது உலக மக்கள் தொகையில் 5%). + +1894 ஆம் ஆண்டில் முதல் சினோ-ஜப்பானியப் போரில் தைவான் உள்ளிட்ட நாடுகள் கைபற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் ரஷ்ய-ஜப்பானியப் போரை வென்றதன் விளைவாக, ஜப்பான் ரஷ்யாவின் சாகலின் தீவில் பங்கு பெற்றது. 1910 ஆம் ஆண்டில் கொரியா இணைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜப்பான், சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலும், மரினா, கரோலின், மார்ஷல் தீவுகள் ஆகியவற்றிலும் ஜேர்மனியின் குத்தகைக்குட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், பல்வேறு தீவுகளையும் நாடுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்க அழுத்தங்கள் காரணமாக சப்பான் ஷாங்டோங் பகுதியை சப்பான் திரும்ப ஒப்படைத்தது. 1931 ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சூரியன் ��குதியை சப்பான் கைப்பற்றியது.1937 ஆம் ஆண்டு சீன- ஜப்பானியப் போரின் போது ஜப்பானின் இராணுவம் மத்திய சீனாவை ஆக்கிரமித்ததுடன், பசிபிக் போரின் முடிவில் ஜப்பான், ஹாங்காங், வியட்நாம், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தோனேசியா, நியூ கினி மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில தீவுகளையும் கைப்பற்றியது. "கிழக்காசிய ஒத்துழைப்பு கோளத்தை" உருவாக்கும் லட்சியத்தை சப்பான் பொண்டிருந்தது. இருப்பினும் 1945 ஆம் ஆண்டு வாக்கில் சப்பானின் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது. + +ஒரு முன்னாள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடாக பேரரசுவாத எதிர்ப்பி்னை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா காலப்போக்கில் தனது கொள்கைகளிலிருந்து வலகி இன்று முக்கிய பேரரசுவாத சக்தியாக விளங்கி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், தியோடோர் ரூஸ்வெல்ட் மத்திய அமெரிக்காவில் செயல்படுத்திய தலையீட்டுக் கொள்கைகள் மற்றும் உட்ரோ வில்சன் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டத்தில் "ஜனநாயகத்திற்காக உலகத்தை பாதுகாப்போம்" என்று முழங்கியது அமெரிக்காவின் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அமெரிக்கா பெரும்பாலும் இராணுவப் படைகளால் ஆதரவளிக்கப்பட்டு அவை திரைக்குப் பின்னால் இருந்து பெரும்பாலும் இயக்கப்பட்டன. வரலாற்று பேரரசுகளின் ஆதிக்கம் மற்றும் மேலாதிக்கத்தின் பொதுவான கருத்துடன் இது ஒத்திருக்கிறது. 1898 இல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அமெரிக்கர்கள் பிலிப்பைன்ஸிலும் கியூபாவிலும் பேரரசுவாத எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கினர். ் +2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 800 இராணுவ தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. + + + + +அஸ்லெப்பியசின் தடி + +அஸ்லெப்பியசின் தடி ("Rod of Asclepius") (⚕) என்பது சோதிடத்துடனும், அஸ்லெப்பியஸ் என்ற கிரேக்க கடவுளுடனும், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுடனும் தொடர்புடைய பண்டைய கிரேக்கச் சின்னம் ஆகும். இந்தச் சின்னத்தில் ஒரு பாம்பானது தடியொன்றில் படர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும். குறித்த சின்னத்தின் பெயருக்கான துவக்கம், கிரேக்கப் பழங்கதைகளில் வரும் வைத்தியரும் அப்போலோவின் மகனுமான அஸ���லெப்பியஸ் என்பவரோடு அதிகளவில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது. அத்தோடு ஹிப்போகிரட்டீஸ், அஸலெப்பியஸை வணங்குபவராக இருந்தார். + +பாம்பு தனது தோலை உரித்து வளரும் பண்பானது வளர்ச்சி, மறுபிறவி போன்றவற்றைக் குறிப்பதால் அஸ்லெப்பியசின் தடியில் பயன்படுத்தப்படுகிறது. இச்சின்னம், உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க மருத்துவ அமைப்பு, கனேடிய மருத்துவ அமைப்பு, மற்றும் அமெரிக்க கால்நடை மருத்துவ அமைப்பு ஆகியவற்றின் சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றது. +இச்சின்னத்தில் இருக்கும் பாம்பு உண்மையில் பாம்பு அன்று. தமிழில் நரம்புச் சிலந்தி என அழைக்கப்படும் டிராகன்குலஸ் புழுவே ஆகும். முற்காலத்தில் இப்புழுவை குச்சியைக் கொண்டு எடுப்பர். இதுவே மருத்துவத் துறையைக் குறிக்கும் சின்னம் என்றும் கூறப்படுகிறது. + + + + +வடகொரிய வரலாறு + +வடகொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரக்கின்றது. + +5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது. + +1950இல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வடகொரியா. தென்கொரியத் துருப்புகளாலும் ஜப்பானியத் தளங்களிலிருந்து விரைந்த அமெரிக்கத் துருப்புகளாலும் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தது அமெரிக்கா. அப்போது பாதுகாப்பு மன்றத்தில் சீனாவின் இடத்தைத் தைவான் வகித்துவந்தது. இதை எதிர்த்து சோவியத் யூனியன் மன்றத்தைப் புறக்கணித்துவந்தது. அமெரிக்காவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 லட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் பன்னாட்டுப் படை உருவானது. இதில் 2.60 லட்சம் பேர் அமெரிக்கர்கள்தாம். இந்தப் படை 1950 செப்டம்பரில்தான் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. செப்டம்பர் இறுதியிலேயே தென்கொரியப் பகுதிகள் மீட்கப்பட்டன. + +போர் இங்கே முடிந்திருந்தால், ஒருவேளை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபகற்பம் முழுவதையும் மேற்குலகின் செல்வாக்குப் பகுதியாக மாற்ற விரும்பினார். ஐ.நா.வின் படை 38ஆம் அட்சக் கோட்டைக் கடந்து, வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. சீன-வடகொரிய எல்லையில் நீண்டு கிடக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கி முன்னேறியது. அப்போது, மலைகளுக்குப் பின்னாலிருந்து வெளியேறிய சீனாவின் 'தொண்டர் படை'யை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ட்ரூமன் எதிர்பார்க்கவில்லை. 1950இன் டிசம்பர்க் கடுங்குளிரில் ஐ.நா.வின் படை பின்வாங்க நேர்ந்தது. போர் மேலும் இரண்டாண்டுகள் நீண்டது. வரலாற்றாளர்களின் கணிப்பில் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல். 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. எனினும் இதுவரை சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை. அமெரிக்க-தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை ராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது. + +வடகொரியாவில் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை 'பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க ���கைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18% நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர். + +வடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது. + +1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார். + +1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. + +2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன. + +அக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை 'வெற்றிகரமாக' நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம். ஆனால் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசத்தை மேலும் நெருக்குவது மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்கும். இந்தத் தடைகள் வடக��ரியா எதிர்பாராதவை அல்ல. இவை அதிக காலம் நீடிக்காது என்பது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம். முன்நிபந்தனையின்றி ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அது எதிர்பார்த்திருக்கலாம். இனி ஊக்கச் சலுகைகள் தாமே வரும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாக இருக்கலாம். + + + + + + +தமிழ் சீனம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை + + + + +மூவாற்றுப்புழை + +மூவாற்றுப்புழை ("Muvattupuzha") கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற ஒரு பட்டணமாகும். இது எரணாகுளம் மாநகருக்கு 40 கிலோ மீட்டர் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது. இங்கு சிரிய கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் வசிக்கின்றனர். + +இங்குள்ள மூவாற்றுப் புழை ஆற்றின் காரணமாக மூவாற்றுப்புழை என்ற பெயர் ஏற்பட்டது. மூன்று ஆறுகள் இணைவதால் மூவாறு என்ற பெயர் ஏற்பட்டது. வடக்கு கேரளத்தில் ஆற்றை புழை எனக் கூறுவர். கோதையாறு, காளியாறு, தொடுபுழை ஆறு உள்ளிட்ட ஆறுகள் இப்பகுதியில் இணைகின்றன. + +இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுகின்றனர். + + +கிறித்தவர்களின் கலையான மார்க்கங்களி சிறப்பு பெற்றது. + + + + + +இலங்கையில் வீதியமைப்பு + +இலங்கை ஒரு சிறிய நாடு. இதன் எல்லாப் பகுதிகளும் இன்று வீதிகளினால் இணைக்கப்பட்டுள்ளன. 1800 களுக்கு முன்பு இந்த நிலைமை கிடையாது. நகரங்களை அண்டி வீதிகள் இருந்தவனாயினும், அவற்றுக்கு வெளியேயோ அல்லது நாட்டின் பல பகுதிகளையும் ஒன்றிணைப்பதற்கோ முறையான வீதிகள் இருக்கவில்லை. பிரித்தானியர் 1815 இல் நாட்டை முற்றாகக் கைப்பற்றிய பின்னரே இலங்கையில் வீதியமைப்பு முயற்சிகள் தீவிரமாகின எனலாம். + +இலங்கையில் அனுராதபுரம் தலைநகரமாக இருந்த காலத்திலேயே நாட்டில் வீதிகள் அல்லது தெருக்கள் இருந்தமை பற்றிய குறிப்புக்கள் இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் ஏனைய நூல்களிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு பாதையொன்று தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன. தவிரவும் துறைமுகப் பட்டினமான மாந்தைக்கும் அனுராதபுரத்துக்கும் இடையேயும் பாதைத் தொடர்பு இருந்தது. இவ்வாறே நாட்டின் பல்���ேறு பகுதிகளுக்கும் பாதை இருந்தன. எனினும் இவைகள், பாதுகாப்பான, நம்பத்தகுந்த, எல்லாக்காலங்களிலும் போக்குவரத்துக்கு உகந்த வீதிகளாக இருந்தனவா என்பது சந்தேகத்துக்கு உரியதே. காலப்போக்கில் இத்தகைய சில பாதைகளும் கூடக் கைவிடப்பட்டு அழிந்து விட்டன. அனுராதபுரம் - யாழ்ப்பாணப் பாதையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அனுராதபுரம் நாட்டின் தலைநகர நிலையை இழந்து, தலைநகரம் தெற்கு நோக்கி நகர்ந்த பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் தென்னிலங்கையுடனான முறையான வீதித் தொடர்பு அழிந்து போய்விட்டது. + +போத்துக்கீசர் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் வீதியமைப்பு வேலைகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஒல்லாந்தர் அவர்கள் வசம் இருந்த நாட்டின் கரையோரப் பகுதியில் கரையோரமாகக் காடுகளை வெட்டிப் பாதையொன்றை அமைத்தனர். இப் பாதையில் ஆறுகளுக்குக் குறுக்கே பாலங்களோ, மதகுகளோ அமைக்கப்பட்டிருக்கவில்லை. + +ஒல்லாந்தரிடம் இருந்த இலங்கையின் பகுதிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியர் வசம் வந்தன. தீவின் மத்திய பகுதியில் நீடித்திருந்த கண்டி அரசும் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியர், திருகோணமலையைத் தங்கள் முக்கிய தளமாக வைத்திருந்தனர். இதனால் கொழும்பையும், திருகோணமலையையும் இணைக்கும் பெருந்தெருவொன்றை அமைக்கத் திட்டம் இருந்தது. கண்டிப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்கள் இதன் வேலைகள் தொடங்குவதற்குத் தடையாக இருந்தன. 1815 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருகோணமலை முக்கியத்துவம் குறையத் தொடங்கவே இத் திட்டம் கைவிடப்பட்டது. + +ஆரம்பத்தில் கண்டிப்பகுதிகளில் பிரித்தானியருக்கு எதிரான கலவரங்கள் பல நிகழ்ந்தன. இவற்றை அடக்கிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆங்காங்கே கோட்டைகளை அமைத்துப் படைகளையும் நிறுத்தியிருந்தனர். ஆனால் இவ்வாறான கோட்டைகளையும் படைகளையும் பேணுவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்தகைய கோட்டைகளைக் கைவிட்டுவிட்டு, விரைவான படை நகர்வுகளுக்கு வசதியாக வீதிகளை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. 1820 ஆம் ஆண்டில் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையே முதலாவது வீதியமைப்பு தொடங்கப்பட்டது. இது அடுத்த ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு விடப்பட்டதாயினும் 1832 ஆம் ஆண்டிலேயே முழுமையாக நிறைவு செய்யப்பட்டது. + +இதே சமயம் 1821 ஆம் ஆண்டில் கண்டியும் குருநாகலும், கலகெதரை பள்ளத்தாக்கு வழியாக இணைக்கப்பட்டன. 1825 ஆம் ஆண்டில், கொழும்பு - கண்டி பெருந்தெருவில் உள்ள அம்பேபுசை என்னுமிடத்திலிருந்து குருநாகலுக்கு இன்னொரு வீதி அமைக்கப்பட்டது. 1827 ல் இந்த வீதி மேலும் வடக்கு நோக்கித் தம்புள்ளை வரை நீட்டப்பட்டது. 1831 ல் கண்டியில் இருந்து வடக்கிலுள்ள மாத்தளைக்கு அமைக்கப்பட்ட இன்னொரு பெருந்தெருவும், 1832 ஆம் ஆண்டில் தம்புள்ளை வரை நீளமாக்கப்பட்டது. இப்பெருந்தெருக்களின் வலைப்பின்னல், நாட்டின் மத்திய பகுதியைக் கொழும்புடன் திறமையாக இணைத்து அரசாங்கத்துக்கு அப்பகுதிகள் மீதிருந்த கட்டுப்பாட்டை அதிகரித்தது. எனினும் இவ் பெருந்தெருக்களில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவற்றில் முறையான பாலங்கள், மதகுகள் முதலியன அமைக்கப்படவில்லை. + + + + + + +மணிவாழை + +மணிவாழை அல்லது கல்வாழை எனத் தமிழில் அழைக்கப்படும் ("canna lily") "கன்னா" வாழை இனத்தில் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. "கன்னா", "கன்னாசியே" தாவரக் குடும்பத்திலுள்ள ஒரே சாதியாகும். மணிவாழைகளுக்கு நெருக்கமான வேறு தாவரங்கள், ஸிங்கிபெரேல்ஸ் வரிசையைச் சேர்ந்த இஞ்சிகள், வாழைகள், மராந்தாக்கள், ஹெலிகோனியாக்கள், ஸ்ட்ரெலிட்சியாக்கள் என்பனவாகும். + +இந்த வகைச் செடிகள் பெரிய கவர்ச்சியான இலைகளைக் கொண்டன. தோட்டக் கலைஞர்கள் பிரகாசமான நிறங்களுடன் கூடிய இவற்றை அலங்காரத் தாவரமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இவை உலகின் முக்கியமான மாப்பொருள் மூலமாகவுள்ள வேளாண்மைப் பயிரும் ஆகும். + + + + + +இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து + +இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. + +இலங்க���யின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும் 5அடி 6அங்குலத்தில் அமைந்தவை. தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது. இவை, வடக்கில் காங்கேசன்துறை, தலைமன்னார் ஆகிய இடங்களிலும், கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும், மலையகப் பகுதியில், மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும், தெற்கில் மாத்தறையிலும் மேற்கில் அவிசாவளை, புத்தளத்திலும் முடிவடைகின்றன. + +இவற்றில் வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் பாதை பொல்காவலை வரை வடகிழக்கு நோக்கிச் செல்கின்றது. பொல்காவலை ஒரு சந்தி ஆகும். இங்கிருந்து ஒருபாதை கிழக்கு நோக்கி மத்திய மலை நாட்டுக்கும், இன்னொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. மலைநாடு நோக்கிச் செல்லும் பாதை கண்டிக்கு அருகில் உள்ள பேராதனைச்சந்தியில் இரண்டாகப் பிரிந்து ஒன்று மாத்தளைக்கும் மற்றது பதுளைக்கும் செல்கின்றன. + +பொல்காவலையில் இருந்து வடக்கே செல்லும் பாதை மாகோ சந்தியிலிருந்து இரண்டு பாதைகளாகப் பிரிந்து ஒன்று கிழக்கு மாகாணத்துக்கும் அடுத்தது வடமாகாணம் நோக்கியும் செல்கின்றன. கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை, கல்லோயாச்சந்தியில் பிரிந்து, வடக்கு நோக்கித் திருகோணமலைக்கும், தெற்கு நோக்கி மட்டக்களப்புக்கும் செல்கின்றன. வட மாகாணம் நோக்கிய பாதையில் மதவாச்சி என்னும் இடத்திலுள்ள சந்தியில் ஒரு பாதை மேற்குப் பகுதியை நோக்கித் தலைமன்னார்பாலம் (தலைமன்னார் பியர்) வரை செல்கிறது. மதவாச்சியிலிருந்து வடக்கே செல்லும் பாதை வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாகக் காங்கேசன்துறையை அடைகின்றது. இந்த வடக்கு நோக்கிய பாதை உள்நாட்டுப் போரின் விளைவாக வவுனியாவுக்கு அப்பால் அகற்றப்பட்டுவிட்டது.தலைமன்னாருக்கான பாதையும் உள்நாட்டுப் போரின் விளைவாக மதவாச்சிக்கு மேற்காக அகற்றப்பட்டுள்ளது. + +கொழும்பிலிருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும் கரையோரப் பாதை இந்து சமுத்திரக் கரையோரமாகச் சென்று காலியூடாக மாத்தறையை அடைகின்றது. மேற்குக் கரையோர நகரமான புத்தளம் நோக்கிச் செல்லும் பாதை, வடக்கே செல்லும் பாதையில் உள்ள இராகமை என்னும் இடத்திலிருந்து நீர்கொழும்பு, சிலாபம் ஊடாகப் புத்தளத்தை அடைகின்றது. + +இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் ஆளுனராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.2 அடி 6 அங்குலம் அகலமான இப்பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட இலகுரக புகையிரதங்களே செல்லும். இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது + +முதலாவது குறுகிய ரயில் பாதை(களனிப்பள்ளத்தக்குப் பாதை) 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை,எட்டியாந்தோட்டை வரை அமைக்கப்பட்டது. இந்தப் புகையிரதப் பாதை பின்னர் சப்ரகமூவாப் பாதையாக 1912 இல் இரத்தினபுரிவரையும் 1919 ல் ஒப்பநாயக்க வரையும் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 1970ல் இரத்தினபுரிக்கான சேவை அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்பட்டது. பாதை அகற்றப்பட்டு 1997இல் இப்பாதை அகலமக்கப்பட்டது. அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை, நானு ஓயாவிலிருந்து நுவரெலியா ஊடாக இராகலை வரையான குறுகிய பாதைகள் கைவிடப்பட்டு விட்டன. + +மாத்தறையிலிருந்து தங்காலை,அம்பாந்தோட்டை ஊடக திச்சமஹாராமை , பண்டாரவளையிலிருந்து பசறை, தெஹிவளையிலிருந்து ஹொரனை வரைக்குமான பாதைகள் திட்டமிடப்பட்டாலும் கட்டுமான வேலைகள் நிதிப் பற்றாக்குறையால் கைவிடப்பட்டன. + + + + + +இலங்கையின் உள்ளூராட்சி சபைகள் + +இலங்கையின் உள்ளூராட்சி சபை ("Local government in Sri Lanka") என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை: + +சனவரி 2011 இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள், +இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும். + +இலங்கையில் உள்ளூராட்சி நீண்ட வரலாற்றையுடையது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் "நாகர குட்டிக" (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர "கம்சபா" என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. + +1818 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் கிராமசபை முறையை இல்லாதொழித்தது. எனினும் 1856 ஆம் ஆண்டில் அவ்வரசு நிறைவேற்றிய நீர்ப்பாசனச் சட்டவிதிகளின் கீழ் பயிர்ச் செய்கை மற்றும் பாசனம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளூர் மக்களுக்குக் கிடைத்தது. + +பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1885 மற்றும் 86 ஆம் ஆண்டுகளில், கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டில் கிராமக் குழுக்கள் சட்டவிதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்பட்டது. 1892 ல், சிறிய நகரங்களில் சுகாதாரக் குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன. 1939 இலும், 1946 இலும் முறையே நகர சபைகளும், பட்டின சபைகளும் உருவாகின. + +1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் போனது. பின்னர் புதிய சீர்திருத்தங்களின் கீழ், பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. இன்றைய உள்ளூராட்சி முறைமையில், மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பன அடங்கியுள்ளன. 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில், 14 மாநகரசபைகளும், 37 நகரசபைகளும், 258 பிரதேச சபைகளுமாக மொத்தம் 309 உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன. + +இலங்கையில் காணப்படும் உள்��ூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவு செய்யப்படுவர். + +இலங்கையின் உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர். + +1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும். + +நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும். + + +"மேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும், +உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்." + +விருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமான��ல்ல) + +வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். + + +ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். + +ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து '2' ஐக் கழித்து செல்லுபடியான மொத்த வாக்குகளை வகுக்கும் போது பெறப்படுவதே முடிவான எண்ணாகும். + + +2011 இல் உள்ளூராட்சி சபைகள்: + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1981 + +1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1982 + +1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1983 + +1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +நுகர்வு + +பொருளியலில் நுகர்வு ("consumption") என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும். + +கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும். + +ஜான் மேனார்ட் கேனெஸ் (ஆங்கிலம்:John Maynard Keynes) என்பவர் நுகர்வுச் செயற்பாடு என்னும் எண்ணக்கருவை உருவாக்கினார். இதன்படி நுகர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது: + + +நுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, நுகர்வோர் சமூகம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, உற்பத்தி, அதனைச் சூழவுள்ள அரசியல், பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்���து. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், சந்தைப்படுத்தல், விளம்பரம் செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த சமூகவியல், வெப்லென் (Veblen) என்பாரின் "கவனத்தை ஈர்க்கும்" நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக நுகர்வோரை நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன. + + + + +தமிழ் பாப் இசை + +இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவிலும் பின்னர் உலகளாவிய ரீதியிலும் பிரபலாமன இசை வடிவமே பாப் இசை ஆகும். பாட்டுக்கள் தமிழில் அமையும் பொழுதும், தமிழ்ச் சூழலில் அல்லது தமிழ் இசைக்கலைஞர்களால் இசைக்கப்படும் பொழுதும் அதை தமிழ் பாப் இசை எனலாம். இந்த இசை வடிவம் இலங்கை, மலேசியா, ஐரோப்பிய வாழ் தமிழர்களிடம் பிரபலமானது. இந்த இசை வடிவம் தமிழ்ச் சினிமாவிலும் 70 ? களில் பிரபலமாக இருந்தது. + + + + + + + + +நூலகவியல் + +நூலகவியல் என்பது, நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களின் ஒழுங்கமைப்பு, மேலாண்மை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். நூலக வளங்கள் பயன்படுத்தப்படும் விதம், நூலக முறைமைகளுடன் மக்கள் தொடர்பாடுகின்ற விதம் போன்றவை தொடர்பான கல்விசார் ஆய்வுகளையும், நடைமுறைசார்ந்த நூலகத் தகவல் முறைமைகளின் இயக்கம் முதலியன தொடர்பான ஆய்வுகளையும் இது உள்ளடக்குகின்றது. பொருத்தமான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அறிவை ஒழுங்குபடுத்துவது என்பது, ஆய்வு நோக்கிலும், நடைமுறை தொடர்பிலும், முக்கிய விடயமாக அமைகின்றது. நூலகவியலில் முக்கியமான விடயங்களாக, பெற்றுக்கொள்ளல் (acquisition), விபரப்பட்டியலாக்கம் (cataloging), வகைப்படுத்தல், நூல்களைப் பேணிக்காத்தல் என்பன உள்ளன. +வரலாற்று ரீதியாக நூலகவியலானது ஆவணப்படுத்தல் அறிவியலையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. நூலகவியலில் பெருமளவான செயற்பாடுகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. அவற்றுட் சில தகவல் மூலங்கள் ஒழுங்கமைப்பு, பயனர்களின் தேவைக்கான தகவல் மூலங்களின் உபயோகம், பகுப்பாக்கத் தொகுதிகள், தொழினுட்பங்கள் என்பவற்றுடன் மக்களின் இடைத்தொடர்பு, நூலகங்கட்கு உள்ளும் வெளியும் தகவல் பெறப்படுதலும் செயற்படுத்தப்படுதலும், நூலகத் தொழிலிற்கான பயிற்சி, கல்வி என்பன, நூலகச் சேவைகளும் அமைப்பு ரீதியான நெறிமுறைகளும், நூலக சேவையில் கணினி மயமாக்கல் முதலியன. + +நூலகவியல் என்னும் துறை இன்று நூலகமும் தகவல் விஞ்ஞானமும் என்று அழைக்கப்படுகின்றது. இது, நூலகவியலானது தகவல்களைத் திரட்டாக கொண்ட ஆவணங்களுடன் தொடர்புபட்டது என்பதையும் தகவல் மூலங்கள், தகவல் ஒழுங்கமைப்பு, பரிமாற்றம் என்பவற்றுடன் தொடர்புபட்டது என்பதையும் விளக்குவதாக அமைகின்றது. + +1627 ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த கபிரியேல் நோடே (Gabriel Naudé) என்பவர் நூலக அறிவியல் தொடர்பான முதல் பாடநூலான "நூலகம் அமைப்பதற்கான ஆலோசனைகள்" "(Advice on Establishing a Library)" என்னும் நூலை எழுதினார். ஒரு நூலகரும் அறிஞருமான இவர் அரசியல், சமயம், வரலாறு, மீவியற்கை போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். கார்தினல் யூல்சு மாசரின் நூலகத்தை அமைத்து நடத்துவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது, தனது நூலில் உள்ளடக்கிய எண்ணங்களைச் செயல்படுத்தினார். + +19 ஆம் நூற்றாண்டில் 1808 - 1829 காலப்பகுதியில், மார்ட்டின் சிரெட்டிங்கர் (Martin Schrettinger) என்பவர் எழுதிய, இத்துறை சார்ந்த இரண்டாவது பாடநூல் வெளியானது. இதே நூற்றாண்டில், தாமசு செபர்சன் (Thomas Jefferson) ஆயிரக் கணக்கான நூல்களைக் கொண்டிருந்த தனது நூலகத்துக்காகப் புதிய வகைப்பாட்டு முறை ஒன்றை உருவாக்கினார். இது, துறைவாரி ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட பேக்கோனிய முறையைத் தழுவியது. இதற்கு முன்னர் அகர வரிசை அடிப்படையிலேயே நூல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. செபர்சனின் சேகரிப்புக்களே தற்போது காங்கிரசு நூலகம் எனப்படுவதன் தொடக்கம் ஆகும். 1887 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அமெரிக்காவின் முதல் நூலகவியலுக்கான கல்வி நிறுவனம், "நூலகப் பொருளியலுக்கான பள்ளி" என்னும் பெயரில் தொடக்கப்பட்டது. + +20 ஆம் நூற்றாண்டில், 1930 ஆம் ஆண்டு எஸ். ஆர். ரங்கநாதன் எழுதிய "நூலக அறிவியலின் ஐந்து விதிகள்" என்னும் நூலுக்கான தலைப்பில் "நூலக அறிவியல்" என்ற பெயர் பயன்பட்டது. பின்னர், 1933 ஆம் ஆண்டில் லீ பியரே பட்லர் எழுதிய "நூலக அறிவியல் ஓர் அறிமுகம்" என்ற நூலிலும் இப்பெயர் பயன்பட்டது. பட்லரின், புதிய அணுகுமுறை, நூலகவியலை சமூகத்தின் தகவல் தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் நோக்கத்துடன், கணிய முறைகளையும், சமூக அறிவியலின் எண்ணக்கருக்களையும் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதை வலியுறுத்தியது. இது, பெரும்பாலும் நூலக நிர்வாகத்தில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்த நூலகப் பொருளியலின், வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைக்கு எதிரானதாக அமைந்திருந்தது. + + + + +மெல்லிசை + +"இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி" இசைக்கப்படும் இசையை மெல்லிசை எனலாம் . + +தமிழ் மெல்லிசையில் விஸ்வநாதன், இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புற்று விளங்கினர். + + + + + +தமிழ் வட்டார மொழி வழக்குகள் + +தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும். + +தமிழ் நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும் "கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் சென்னை" வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவை. + +தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் தமிழில் "22" வட்டார வழக்குகள் இருப்பதாக "எத்னொலோக்" ("Ethnologue") என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராசி, பரிகலா, பாட்டு மொழி, இலங்கை தமிழ், மலேசியா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிசன், சங்கேதி, கெப்பார், திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள். + +இவ்வட்டார வழக்குகளில் சமூகம், தொழில், பண்பாடு, சாதி, மதம், அந்நிய மொழி சார்ந்து வட்டார வழக்குகள் வேறுபடுகின்றன. +தொலைக்காட்சி இணையம் தொடர்பான முன்னேற்றம் காரணமாக புதிய வழக்குகளாக இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த சொற்கள் வட்டார புழக்கத்துக்கு விடப்பட்டுள���ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. + + + +தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் "இங்கை" என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது. + +பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது. + +தமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள் + +இப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. + + + +சாதிசார் அல்லது சமயம் சார் சமூகங்கள் வகையாகவும் சில இடங்களில் பேச்சுத் தமிழ் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது. + + + + + + + + +வட்டாரமொழி வழக்குகள் + +வட்டாரமொழி வழக்குகள் என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளைக் கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருவும். தமிழிலிருந்து மலையாளம் இப்படி மருவிய மொழியாகும். + +இந்த வரையறை பொதுவானது அன்று. சீனாவில் வட்டார மொழிகளாகக் கருதப்படுவை சில பேச்சு வழக்கில் ஒன்றுக்கொன்றை புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், சீன எழுத்து முறையால் ஒன்றுபட்டவை. + + + + + +திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில் + +திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில் (கோயிற்பத்து) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 50ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது என்பது தொன்நம்பிக்கை. தவம் செய்வதற்கு உகந்த இடம் எனப்படுகிறது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் பார்வதீசுவரர்,இறைவி பார்வதியம்மை. இங்குள்ள மூலவர் லிங்கம், பிரமலிங்கம், மகாலிங்கம், ராஜலிங்கம், பாஸ்கர லிங்கம் என்று பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறது. + +ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் பலி பீடம் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் இரு புறமும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறைக்குச் செல்வதற்கு முன்பாக உள்ள வாயிலின் வலது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறத்தில் விநாயகரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, நடன கணபதி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் பைரவர் சூரியன், நவக்கிரகம், அம்பாள் பூசை வேட ரூபம், பிடாரியம்மன், கிராதமூர்த்தி அம்பாள், 63 நாயன்மார் ஆகியோர் உள்ளனர். இச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. + + + + + +தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் + +தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தி���் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும். + +இக்கோயிலில் உள்ள இறைவன் தருமபுரீசுவரர்,இறைவி மதுரமின்னம்மை. + +இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் இடது புறம் தேனாமிர்தவல்லி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்துள்ள வாயிலைக் கடந்து செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. கருவறையில் மூலவர் யாழ்முரிநாதர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அடிமுடிகாணா அண்ணல், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் மடப்பள்ளி உள்ளது. தொடர்ந்து விநாயகர், நால்வர், சந்தானாசார்யார், 63 நாயன்மார்கள் உள்ளனர். அடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், காசி விசுவநாதர், சந்திரசேகர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்திருச்சுற்றில் சூரியன், சந்திரன், பைரவர், நவக்கிரகம் ஆகியோர் உள்ளனர். நடராசர் சன்னதியும் உள்ளது. + +திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலம். + +இக்கோயிலின் குடமுழுக்கு 9 பிப்ரவரி 2017 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1984 + +1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1985 + +1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +நகரசபை (இலங்கை) + +இலங்கையில், நகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பு ஆகும். தரநிலை வரிசையில் மாநகரசபைக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் உள்ளது. இலங்கையில், நகரசபைச�� சட்டத்தின் அடிப்படையில் நகரசபைகள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. பிரித்தானியர் ஆட்சியின்போது, 1939 ஆம் ஆண்டில் முதன்முதலில் நகரசபைகள் உருவாக்கப்பட்டன. தற்போது இலங்கையில் உள்ள நகரசபைகளின் எண்ணிக்கை 37 ஆகும். + +நகரசபைகளின், அதிகாரம், கடமைகள் தொடர்பாக நகரசபைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரசபையொன்றின் எல்லைக்கு உட்பட்ட, பூங்காக்கள், திறந்த வெளிகள், தோட்டங்கள், கால்வாய்கள், பொதுச் சந்தைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன நகரசபைக்குச் சொந்தமானவை. + +நகரசபையின் அதிகாரத்தின் கீழ்வருகின்ற தெருக்கள், ஒழுங்கைகள் முதலியவற்றைத் துப்புரவு செய்து பேணுதல், திட்டமிடல், தெருக்களை அகலமாக்கல், திறந்த வெளிகளுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளின்மூலம் நகரின் வளர்ச்சியை ஊக்குவித்தல், பொது வசதிகளை நிறுவிப் பேணுதல், பொதுச் சுகாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்தல் முதலியவை நகரசபையின் கடமைகளாக இருக்கின்றன. + +நகரசபைகளுக்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நகரசபைகளில் தலைமை நிறைவேற்று அதிகாரி, அதன் "தலைவர்" எனப்படுகிறார். இவரும் துணைத் தலைவரும்கூட நேரடியாக மக்களாலேயே இன்று தெரிவு செய்யப்படுகின்றனர். + + + + + + +திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் + +திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். + +இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். + +இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. + +மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திர���மால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். + +கோயிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் பசுக்களை கோயில்களுக்கு தானம் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்தனர். அதன்படி இடையன் அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோயிலுக்குத் தர வேண்டிய பங்கினை தர வேண்டும். இதனால் இடையனின் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் இடையர் ஒருவர் இப்பொறுப்பில் இருந்தார். கணக்கர் அப்பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோயிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்தார். அதனால் இறைவன் கணக்கரை சூலம் எய்தி கொன்றார். அத்துடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது, + +கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது. + +சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனி பகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும். +சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றான தலம். + +தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். + +மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம், பிரதோசம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடத்தப்பெறுகின்ற விழாக்களாகும். + +இக்கோயிலின் குடமுழுக்கு 11 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்றது. + +இவ்வூரின�� அருகிலுள்ள தக்களூரில் தேவார வைப்புத் தலம் அமைந்துள்ளது. இங்கு மூலவர் திருலோகநாதர், அம்பிகை தர்ம சம்வர்த்தினி. + + + + + +திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் + +திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேரந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கிமீ சென்று இவ்வூரை அடையலாம்.பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கிமீ சென்றும் இவ்வூரை அடையலாம். இத்தலத்தில் வெள்ளை யானை வழிபட்டது என்பது தொன்நம்பிக்கை. + +ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது. + +சுபமகிரிஷி என்பவர் நாள்தோறும் மூலவரை தரிசித்து வந்ததாகவும், ஒரு நாள் அவர் வருவதற்கு நேரமானதால் கதவு சாத்தப்பட்டதாகவும், அதைக் கண்ட மகரிஷி தேனி வடிவம் கொண்டு உள்ளே பெருமானை வழிபட்டதாகவும் கூறுகின்றனர். அப்போது முதல் அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். அது முதல் மூலவர் சன்னதியில் தேன் கூடு இருந்ததாகவும் தற்போது அந்த தேன்கூடு இல்லை என்றும் கூறினர். முன்பு தேன் கூடு இருந்ததை சிறப்பாகக் கூறுகின்றனர்.தல மரம் பாரிஜாதம், தீர்த்தம் சூரிய தீர்த்தம் மற்றும் வாஞ்சியாறு ஆகும். + +இக்கோயிலில் உள்ள இறைவன் ஐராவதீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை. + +வெள்ளை யானை, குமார புவனேசுவரர், அகத்தியர் முதலானோர். + +1937, 1987, 2009 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றது. + +தினமலர் கோயில்கள் தளம் + + + + +மாநகரசபை (இலங்கை) + +இலங்கையில் மாநகரசபை ("Municipality") என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 23 மாநகரசபைகள் உள்ளன. + +1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளூராட்சி அமைச்சர் எந்தவொரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகரசபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம். + + + +மாநகரசபைக்கு மேயரே தலைவராவார். + + + + + + +யாழ்ப்பாணத்தில் குடியேற்றவாத ஆட்சி + +யாழ்ப்பாணத்தில் குடியேற்றவாத ஆட்சி என்பது, போத்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய இனத்தவருடைய ஆட்சி ஆகும். இது 1620 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டுவரையான 328 ஆண்டுகளை அடக்கிய காலப்பகுதியாகும். இதில், முதல் 38 ஆண்டுகாலம் போத்துக்கீசரும், அடுத்துவந்த 138 ஆண்டுக்காலம் ஒல்லாந்தரும் மிகுதியான காலப்பகுதியாகிய 152 ஆண்டுகள் பிரித்தானியரும் ஆண்டனர். + +போத்துக்கீசரின் நேரடி ஆட்சி 1620 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் தொடங்கியது எனினும், இதற்குச் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரேயே யாழ்ப்பாண அரசில் போத்து���்கீசர் தலையிடத் தொடங்கிவிட்டனர் எனலாம். 1560 ஆம் ஆண்டு வாக்கில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய தாக்குதல் முழு வெற்றி பெறாவிட்டாலும், மன்னார்த் தீவைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் 1590 ஆம் ஆண்டளவில் நடத்திய தாக்குதல் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டுத் தாங்கள் விரும்பிய ஒரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அடுத்து மீண்டும் 1620 ல், படையெடுத்த போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியை யாழ்ப்பாணத்தில் நிறுவினர். + +யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்று கத்தோலிக்க மதத்தின் அறிமுகமாகும். போத்துக்கீசரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாண அரசுக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவில் இருந்துவந்த, கத்தோலிக்க மதப் பிரசார முயற்சிகள், 1590 ஆம் ஆண்டின் படையெடுப்புக்குப் பின்னர் அதிகரித்தது. யாழ்ப்பாணம் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் இது மிகவும் தீவிரம் அடைந்ததுடன், எல்லா இந்துக் கோயில்களும் இடிக்கப்பட்டதுடன், இந்து சமயத்தைக் கைக்கொள்வதும் தடை செய்யப்பட்டது. பெருந்தொகையில் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். 1624 க்கும், 1626 க்கும் இடையில், பிரான்சிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் யாழ்ப்பாணத்தில் 52,000 மக்களை மதம் மாற்றியதாகத் தெரிகின்றது. + +போத்துக்கீசரின் வரிக் கொள்கை முதல் சில ஆண்டுகளுக்கு, யாழ்ப்பாணத்து அரசர் கால முறைகளைப் பின்பற்றுவதாகவே அமைந்திருந்தது. குடியேற்ற நாடொன்றில் செலவுகளுக்குரிய வருமானத்தை அந்தந்த நாடுகளிலேயே உருவாக்கிக் கொள்வதென்ற, லிஸ்பனில் இருந்த போத்துக்கீச அரசின் கொள்கையோடு பொருந்தி வந்த காரணத்தாலேயே இவ்வாறு செய்யப்பட்டது. ஆனால், 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள்மீது அதிக வரிச்சுமை ஏற்றப்பட்டது. மேலதிக வருமானம், திருகோணமலை, கொழும்பு, கொச்சின் முதலிய, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள இடங்களின் தேவைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. + +இந்த மத நிறுவனங்களின் நடவடிக்கைகளினாலும், வரிச்சுமையாலும் பெருமளவில் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்ததாகத் தெரிகிறது. இவர்களில் பலர் போத்துக்கீசரின் கெடுபிடிகள் குறைவாக இருந்த வன்னிக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் சென்றனர். இதனால் யாழ்ப்பாணத்தின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. முழுமையாக நோக்கும்போது போத்துக்கீசர் ஆட்சிக்காலம் யாழ்ப்பாணத்தவரின், பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை தொடர்பிலேற்பட்ட மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும். + +1658 ஆம் ஆண்டில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தரிடம் இழந்தனர். + + + + + + +அனைத்துலக கருவிகள் கோப்பு + +அனைத்துலக கருவிகள் கோப்பு ("Whole Earth Catalog") 1968–1972 காலப்பகுதிகளிலும், அதற்கு பின்னர் அவ்வப்பொழுதும் வெளியிடப்பட்ட கருவிகள் பற்றிய தகவல் கோவையாகும். கட்டற்ற மனப்பாங்கில் இது வெளியிடப்பட்டது. இது அமெரிக்க நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக அமைந்தது. + + + + + +குடியேற்ற நாடு + +அரசியலிலும், வரலாற்றிலும் குடியேற்ற நாடு (colony) என்பது, தொலைவில் உள்ள நாடொன்றின் அரசியல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு நாடு ஆகும். ஒரு குடியேற்ற நாட்டுக்குத் தனியான அனைத்துலகப் பிரதிநிதித்துவம் கிடையாது. குடியேற்ற நாடொன்றின் அதி உயர் நிர்வாகம், அதனை அடக்கி வைத்திருக்கும் நாட்டின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கும். + + + + + +அம்பல் பிரமபுரீசுவரர் கோயில் + +அம்பல் பிரமபுரீசுவரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும். சோமாசிமாற நாயனார் வசித்த தலம் எனப்படுகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. + +இது ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது. திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகம், நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியம், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்ம���், சனி, முருகன், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி உள்ளது. தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வலம் முடித்து, படிகளேறி மேலே சென்றால் மாடக்கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். + +இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை. + +இத்தலத்தில் பிரமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருமீயச்சூர் மேகநாதர் கோயில் + +திருமீயச்சூர் மேகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டான் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார்.கிருத யுகத்திலிருந்து உள்ள திருக்கோயில் இது. + +இக்கோயிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் அமைந்துள்ளது.சோழர் கால கோயில்களான இந்த இரு கோயில்களும் இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. + +இது சோழ நாட்டு காவி தென்கரையின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 56 வது கோவிலாகவும், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 119 வது தேவாரத்தலமாகவும் அமைந்துள்ளது. + +ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது. + +சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது, சூரியனால் உடல் குறைபாடு சுட���டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியன் ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது. + +கிழக்கு நோக்கிய அமைந்துள்ள கோயிலின் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து மற்றொரு கோபுரம் உள்ளது. எதிரே உள்ள திருச்சுற்றில் விசுவநாதர் சன்னதி உள்ளது. கோயிலின் இடது புறம் லலிதாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அங்கே பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் மேகநாதசாமி முயற்சிநாதர் உள்ளார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சேத்திர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாரூடர் ஆகியோர் உள்ளனர். விமானம் கஜபிரஷ்ட அமைப்பை உடையது. திருச்சுற்றில் தேயுலிங்கம், விநாயகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யம லிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வருணலிங்கம், நிருத்வி லிங்கம், அகத்திய லிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம், சித்தி விநாயகர், மகாலட்சுமி, பிரித்வி லிங்கம், உள்ளிட்டோர் உள்ளனர். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். + +திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது. + +மூலவர் கருவறை கோஷ்டத்தில் அம்பிகை சமேத க்ஷேத்ரபுராணேஸ்வரர் சிற்பம், அம்பிகையை சிவன் சமாதானப்படுத்தும் முறையில் அழகாக அமைந்துள்ளது. இச்சிற்பம் மிகவும் புகழ் பெற்ற சிற்பமாகக் கருதப்படுகிறது. + + + +கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. +இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு பரிகாரமாக உண்பர். + +1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது. + +திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. +மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. + +இக்கோயிலின் குடமுழுக்கு 8.2.2015 அன்று நடைபெற்றது. காலை 8ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காலை 10.00 மணிக்கு மேகநாதசுவாமி, லலிதாம்பாள், சகலபுவனேஷ்வரர், மின்னும் மேகலாம்பாள், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது. மாலை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. +147 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலில் தேரோட்டம் 23 சனவரி 2018இல் நடைபெற்றது. + + + + + +திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் + +திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். + +திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் இளங்கோயில், திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலின் உள்ளே அமைந்து உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 57ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 120 வது தேவாரத்தலமாகும். + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது. + +மேகநாதர் சன்னதியின் இடது புறமாக, சகலபுவனேஸ்வரர் சன்னதி உள்ளது. அச்சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர், மின்னும் மேகலை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. சகலபுவனேஸ்வரருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. நடராஜர், பைரவர், சூரியன், ஆகாசலிங்கம், வாயுலிங்கம் ஆகியோர் உள்ளனர். + +காளி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருமாகாளம் மகாகாளநாதர் கோயில் + +திருமாகாளம் மாகாளேசுவரர் கோயில் (அம்பர் மாகாளம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 55ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சோமாசிமாற நாயனார் சோம யாகஞ் செய்தார் எனப்படுகிறது. + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் காளகண்டேசுவரர்,இறைவி பட்சநாயகி. + +அசுரர்களாகிய அம்பன், அம்பாசுரன் ஆகியோரைக் கொன்ற பாவம் தீர காளி தேவி வழிபட்ட திருத்தலம். + + + + + +சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் + +சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார். + +இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது. + +திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்) + + வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது. + +சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர் + +இக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர். + +ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் : + +அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத் +துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி +பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும் +புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி + + +திருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது. + + + + + +யோசாய் பெங்கிலர் + +யோசாய் பெங்க்லர் (Yochai Benkler) ஐக்கிய அமெரிக்காவின் ஹாவர்ட் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். 1996-2003 காலத்தில் நியூ யோர்க் பல்கலைக்கழகத்திலும் 2003-2007 காலத்தில் யேல் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றினார். "வெல்த் ஒவ் நெற்வேக்ஸ்" நூலின் ஆசிரியர். + + + + + +நாவல் குறூப்வைஸ் + +நாவல் குறூப்வைஸ் நாவல் நிறுவனத்தில் பல் இயங்குதள மின்னஞ்சல், நாட்காட்டி, நிகழ்நிலைத்தூதுவன் மற்றும் ஆவணங்களைக் கையாளக் கூடிய கூட்டிணைந்து செயற்படும் மென்பொருளாகும். + +குறூப்வைஸ் பல சேவர் (வழங்கி) மற்றும் கிளையண்ட் (வாங்கி) பல இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. சேவரின் இயங்குதளங்கள் நாவல் நெட்வேர், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் கிளையண்ட் விண்டோஸ் இயங்குதளத்திலும் மற்றும் சற்றே வசதி குறைவான ஜாவா இயங்குதளத்தினூடக இயங்கக் கூடிய லினக்ஸ் மற்றும் மாக்ஓஸ் X இயங்கக்கூடியது. 2007 ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் போன்சாய் என்கின்ற பதிப்பில் பாரியமாற்றங்கள் எதிர்பார்க்கபடுகின்றன . மைக்ரோசாப்ட் அவுட்லுக் மென்பொருளுடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய + +குறூப் வைஸ் வெப்பக்ஸஸ் உலாவிகளைப் போன்றே இணையத்தை அணுக முடிகின்றது. இவை கணினி உலாவிகள் மாத்திரம் அன்றி கையடக்கக் கருவிகள்(Handheld/PDA) மூலமாகவும் மின்னஞ்சலை அணுகலாம். + +குறூப்வைஸ் இதன் 6.5 ஆவது பதிப்பில் இருந்து நிகழ்நிலைத் தூவனை உள்ளடக்கியுள்ளது. + +இதன் 7 வது பதிப்பானது சுசேலினக்ஸ் எண்டபிரைஸ் சர்வர் பதிப்புடன் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பானது குறூப்வைஸ் மென்பொருளை மேலதிக செலவு ஏதும் இன்றி இயக்கப்பயன்படுத்தலாம். + +குறூப்வைஸ் 1986 இல் வேர்ட் பேபெக்ட் இன் ஓர் நீட்சியாகவே அறிமுகம் ஆனது. அச்சமயத்தில் இது வேர்ட் பேபெக்ட் லைபரரி 1.0 என்றழைக்கப்பட்ட இது டேட்ட ஜெனரல் மற்றும் அமிகா இயங்குதளங்களில் இயங்கியது. + +மைக்ரோசாப்ட் இன் எக்ஸ்சேஞ் சர்வருடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாவல் பல வருடங்களாகத் தொடர்ச்சியாக நாவல் குறூப்வைஸ் மென்பொருளை விருத்திசெய்ய உள்ளது. + + + + +நூலகம் + +நூலகம் ("library") என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது கள ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழி��்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். + +நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது. + +அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது. + +சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கள் களி மண் தகடுகளில் எழுதினர். அதனை சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும். + +எகிப்தியர்கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில் ஏழு இலட்சம் பாப்பிரசு உருளைகளைக் கொண்ட கருகூலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது இன்றைய நவீன நூலகங்களின் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கது. +உருமானியர்களின் காலத்தில் யூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. + +அதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நிறுவிய போட்லியின் எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும். + +பொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் 1850 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின. + + + + +நுண்படிவம் + +நுண்படிவம் என்பது ஆவணங்களின் படிமங்கள் பதிக்கப்பட்ட ஒளிபுகு தகடுகளாகும். இவை, ஆவணங்களைக் கொண்டுசெல்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், வாசிப்பதற்கும், அச்சிடுவதற்கும் வசதியானவை. நுண்படிவப் படிமங்கள் பொதுவாக மூல ஆவணங்களிலும் 25 மடங்கு சிறிதாக்கப்பட்டவை. சிறப்புத் தேவைகளுக்காக இதனிலும் கூடிய அளவுக்குச் சிறிதாக்கமுடியும். + +ஒரு நுண்படிவப் படிமம், நேர் (positive) அல்லது எதிர்ப் (negative) படிமமாக இருக்கலாம். வாசிக்கும் கருவிகளிலும், அச்சிடும் இயந்திரங்களிலும் எதிர்ப் படிமங்கள் விரும்பப்படுகின்றன. நுண்படிவங்களில், நுண்சுருள்தகடுகள் (microfilm), நுண்படலங்கள் (microfiche) என இரண்டு வடிவங்கள் உள்ளன. + + + + +இலங்கை வானொலி நாடகத்துறை + +1925 ஆம் ஆண்டளவிலே இலங்கை வானொலியிலே தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பப்படலாயின என்பதைக் கலையரசு க. சொர்ணலிங்கத்தின் நூல் வாயிலாக அறியலாம். எனினும் வானொலியை நாடக அரங்கேற்ற சாதனமாக முழுமையாய்ப் பயன்படுத்திய காலம் 1940 ஆம் ஆண்டின் பின்னரேயாகும். + +1950ல் இலங்கை வானொலி நாடக தயாரிப்பாளராக சானா (சண்முகநாதன்) அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தான் வானொலி நாடகத்துறை சீர்பெற்றது. அக்காலத்தில் வானொலி நாடகங்கள் எழுதும் திறமை பெற்ற ஒரு சில எழுத்தாளருள் இலங்கையர்கோன் குறிப்பிடத்தக்கவர். இவர் வானொலிக்கு எழுதிய "மிஸ்டர் குகதாசன்", "மாதவி மடந்தை" "விதானையார் வீட்டில்", "லண்டன் கந்தையா" ஆகியன புகழ் பெற்றன. ஆரம்ப காலத்தில் வானொலி நாடகங்கள் ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன. + +தமிழ்ச்சேவை ஒன்று அதாவது தேசிய சேவையில் சனிக்கிழமைகளில் இரவு ஒன்பதரை மணிக்கு ஒலிபரப்பாகும் அரைமணித்தியால நாடகங்கள், ஒரு மணித்தியால நாடகங்கள் அக்காலத்தில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளாக கருதப்பட்டன. (மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் ஒரு மணி நேர நாடகங்கள் ஒலிபரப்பாயின.) புதன் கிழமைகளில் 15 நிமிட நாடகங்களும் ஒலிபரப்பாகின. சானா தயாரித்தளித்த மற்றொரு அரை மணி நிகழ்ச்சியில் மூன்று ஏழு - நிமிட குறுநாடகங்கள் ஒலிபரப்பாகின. இவை பெரும்பாலும் சமூகத்தில் நிலவிய குறைபாடுகளை நகைச்சுவையாக எடுத்துக் கூறுபவையாக இருந்தன. + +சானா அவர்களின் பின்னர், கே. எம். வாசகர், அங்கையன் கைலாசநாதன், பி. விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோர் நாடக தயாரிப்பாளர்களாக பணியாற்றினார்கள். + +ஆரம்பத்தில், தேசிய சேவை நாடகங்களில் தூயதமிழில் அல்லது இந்தியப் பேச்சுவழக்கில் வசனங்கள் அமைந்தன. அக்காலத்தில், ரி. வி. பிச்சையப்பா, ரொசாரியோ பீரிஸ், அப்துல் ஜப்பார், ராஜேஸ்வரி சண்முகம், பிலோமினா சொலமன், விசாலாட்சி ஹமீட் (குகதாசன்) போன்றவர்கள் நடித்து வந்தார்கள். காலப்போக்கில் யாழ்ப்பாணத்தமிழில் நாடகங்கள் தயாரிக்கப்படத் தொடங்க, கே. மார்க்கண்டன், சுப்புலட்சுமி காசிநாதன், எஸ். எஸ். கணேசபிள்ளை, எஸ். கே. தர்மலிங்கம், ரி. ராஜேஸ்வரன் முதலானோர் புகழ்பெறத் தொடங்கினார்கள். கே. எம். வாசகர், பி. விக்னேஸ்வரன் காலத்தில் புதியவர்களான கே. எஸ். பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், கமலினி செல்வராஜன், ஷாமினி ஜெயசிங்கம், சசி பரம், அருணா செல்லத்துரை முதலானோர் நிறைய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பிரபல எழுத்தாளர்களான இளங்கீரன், செங்கை ஆழியான், இந்து மகேஷ், நிலக்கிளி அ. பாலமனோகரன் முதலியோர் இக்காலத்தில் வானொலி நாடகங்களை எழுதினார்கள். + +1985 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக நேயர்களிடையே ஒரு நாடகப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பாமா இராஜேந்திரன் என்ற நேயர் முதல் பரிசு வென்றார். + +தேசிய சேவையைப் போலவே வர்த்தகசேவையிலும் நாடகங்கள் ஒலிபரப்பாகின. வர்த்தக நிறுவனங்கள் சார்பாக ஒலிபரப்பான இந்த நாடகங்களில் நடிக்க குறிப்பிட்ட கலைஞர்கள் இருந்த காலமும் உண்டு. எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், எஸ். சந்திரசேகரன், அமீனா பேகம், ஜோக்கிம் பெர்னாண்டோ போன்றவர்கள் நிறைய நாடகங்களில் நடித்தவர்கள். த்மிழ்ச் சேவை இரண்டில் ஒலிபரப்பான நாடகங்களில் சில்லையூர் செல்வராஜனின் "தணியாத தாகம்", வரணியூரானின் "இரை���ேடும் பறவைகள்". ராம்தாஸின் "கோமாளிகள் கும்மாளம்", கே. எஸ். பாலச்சந்திரனின் "கிராமத்துக் கனவுகள்" போன்றவை புகழ் பெற்றன. + +இஸ்லாமிய சேவையில் ஒலிபரப்பான தமிழ் நாடகங்களை மர்ஹூம் எம். எச். குத்தூஸ் தயாரித்து வழங்கினார். பாவிக்கப்பட்ட பின்னணி இசையினாலும், தயாரிப்பு திறமையினாலும் இந்நாடகங்கள் யாவரையும் கவர்ந்தன. இந்நாடகங்களில் ஏ. எஸ். எம். ஏ. ஜப்பார், பி. எச். அப்துல் ஹமீட், கே. ஏ. ஜவாஹர், கலைச்செல்வன், அமினா பேகம், நெய் றஹீம் சஹீட் போன்றோர் நடித்து புகழ் பெற்றவர்கள். + +கிராமிய நாடகங்கள் இச்சேவையில் பொருத்தமாக ஒலிபரப்பட்டன. வி. என். பாலசுப்பிரமணியம், சு. வேலுப்பிள்ளை (சு. வே)., எஸ். ஜேசுரட்னம் முதலானோர் தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுத, வீ. ஏ. சிவஞானம் முதலானோர் தயாரித்து வழங்கினார்கள். + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1986 + +1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் + +செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 60ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. + +ராஜகோபுரத்தை அடுத்து பலி பீடம், நந்திமண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறத்தில் மங்களாம்பிகை சன்னதியும், நவக்கிரகங்கள் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மங்கள விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்காரகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. + +இத்தலத்தில் தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலி புகழ்ந்து கூறப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது. இத்தல மூலவருக்கு அபிஷேகம் இல்லை. சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது. + +இக்கோயிலில் 4 சூலை 1976 (நள வருடம் ஆனி 21), 15 சூலை 2002 (சித்ரபானு வருடம் ஆனி 31), 22 மே 2013 (���ிஜய வருடம் வைகாசி 8 புதன்) ஆகிய நாள்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன. + + + + +திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் + +திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. + +இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. + +கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் +இறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது. + +பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது. + +விழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று. + +திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். + +சங்ககா���த்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான். + +மிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. + +சங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல். + +பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்). + +திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு + +2013 ஆம் ஆண்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. + +அப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. + + + + + + +கௌரவக் கொலை + +கௌரவக் கொலை என்பது பல நாடுகளில் தங்கள் குடும்பத்திற்க்கு மானமிழப்பு வகையில் நடந்து கொண்ட பெண்ணை கொலை செய்யும் வழக்கம் ஆகும். பெண்கள் குடும்பமோ அல்லது சமுதாயமோ தடை செய்யப்பட்ட மனிதனுடன் ஆசையோ, நட்போ, காமமோ கொண்டால் அப்பெண்ணை பயங்கர தண்டனைக்கு உள்ளாக்கி, கொலை செய்யத் தூண்டுகிறது இவ்வழக்கம். பொதுவாக அக்குடும்பத்தார் அப்பெண்ணிடம் உறவு கொண்ட ஆணையும் அவ்வாறே தண்டனைக்கு உள்ளாக்குவர். மனித உரிமை காப்பு கௌரவக் கொலையை இவ்வாறு வறையருக்கிறது.கௌரவக்கொலை பொதுவாக ஒரு குடும்பத்தினரால் அக்குடும்பத்தின் பெண்ணின் மீது, குடும்ப மானபங்கம் ஆனது என்ற காரணத்தால், கொலை ஆகும் அளவு தாக்குதல் செய்வதாகும். இக்காரணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை மறுப்பதிலிருந்து, கற்பழிப்பு முயற்சிக்கு ஆளாகுவதற்கும், கொடுங்கோல் கணவனிடமிருந்து திருமண ரத்து கோரியதும், மற்ற ஆண்களிடம் நட்போ, காம இச்சையோ நாடுவது வரை ஆகும். பொதுவாக அப்பெண்ணின் செய்கை மானபங்கம் ஏற்பட காரணம் என்ற உணர்வு தாக்குதலுக்கு சாக்காக போதும். + +கௌரவக்கொலை குடும்பத்தின் தனி விவகாரம் என கருதப்பட்டு, காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதோ, நீதிமன்றங்களுக்கு முன் வருவதோ இல்லை. பல நாடுகளில் நீதி முறைகளும் இக்கொலைகாரகர்களுக்கு சாதகமாக உள்ளன. இந்த முறை மனித உரிமைகள் ஆணையத்தின் கடும் கண்டனத்திற்க்கு உள்ளாகியுள்ளது. இவை பெண்களின் சுதந்திரத்தையை பாதித்து, அவர்களை பயமுறுத்தி கட்டுக்குள் வைத்துள்ளன. மனிதயியலாளர் பேரா.ஷரீப் கனான படி "கௌரவக்கொலை தந்தைவழி, பிதாமாக சமூகங்களில் குடும்ப அதிகாரங்களை கறாராக அமைத்து, பெண்களை அடக்குவதற்க்கு உதித்தன. தந்தைவழி சமூகங்களில் குடும்பம், கூட்டம், ஜாதி முதலியவற்றில் ஆண்கள் சந்ததி உற்ப்பத்தியை கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இச்சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு மகவு பெரும் தொழிற்ச்சாலைகளே. கௌரவக்கொலை காமசெய்கைகளை கட்டுப்படுத்துவதில்லை. (கௌரவக்கொலைக்கு) பின்னணி பெண் மகவள சக்தியையும், சந்ததி உற்ப்பத்தியையும் கட்டடக்குவதே" + +இது பொதுவாக மத்திய ஆசிய , வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் , அல்பேனியா, பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற முஸ்லிம் நாடுகளிலும், நடப்பதாக தெரிகிறது. + +சட்டமுறைகள் கௌரவக்கொலைக்கு சாதகமாக உள்ள நாடுகள்: +ஜார்டன்: தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்." +சிரியா: ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்ப்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்" +மொராக்கொ: தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்" +ஹைடி: தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடி��்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு" +துருக்கி: துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும் +இந்நாடுகளில் கௌரவக்கொலை சட்டத்திற்க்கு புரம்பானது ஆனால் மிகப்பரவல் + +பாகிஸ்தான்: கௌரவக்கொலை பாகிஸ்தானில் காரி-காரோ என்றழைக்கப் படுகிறது. இந்தக் குற்றம் சாதாரனமான கொலையாக கருதப்படுகிரது; ஆனால் நடத்துமுறையில் போலீஸும், நீதிமன்றங்களும் இக்கொலையை புரக்கணித்து, எடுத்துக் கொள்வதில்லை. சர்வதேச வேண்டுகோள்களுக்கு இணங்க பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலையை தடுக்கும்படி சட்டம் ஏற்றியது; அது கொலையாளர் கொலை செய்யப் பட்ட பெண்ணின் குடும்பத்திற்ற்க்கு 'தண்டனைப் பணம்' கொடுக்க ஏற்ப்பாடு செய்கிரது. பாகிஸ்தானிய மாது சங்கங்கள் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்று ஏளனம் செய்கிறனர் ஏனென்றால் வழக்கமாக ஒரு பெண்ணின் குடும்பத்தினரே அவலை கொலை செய்கிறனர். பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக்கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்க்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்ப்பழிப்பி'ற்க்கு ஆளானார். . +பாலஸ்தின்: பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்க்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிரது + +தமிழர் நாட்டாறியல் கதைப் பாடல்களில் எண்ணற்ற கதைகள் சாதியின் கட்டுப்பாட்டினை மீறியமைக்காக கொல்லப்பட்டவர்களைப் பற்றி விவரிக்கிறது. + +காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன், சின்ன நாடன், கௌதல நாடன் ஆகியோர் சாதியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக காதல் செய்தமையால் இறந்து போனவர்கள். இவர்களை இந்து சமயம் சிறு தெய்வங்களாக வணங்குகிறது. இவர்களுக்கு தனித்த வழிபாடுகளும், விழாக்களும் உள்ளன. + + + + + + +அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் + +திருவன்னியூர் அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 62ஆவது சிவத்தலமாகும். காத்யாயணி மகளாக அம்பாள் தோன்றி இறைவனை மணக்கத் தவம் புரிந்து அவ்வெண்ண���் ஈடேறப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. +இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அன்னியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் இத்தலம் காவிரி தென்கரைத் தலம் மற்றொன்று காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் பொன்னூர். + + கும்பகோணம் காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் வந்துஅங்கிருந்து தெற்கில் திரும்பி வட மட்டம் சென்று அதே பாதையில் மேலும் சென்றால் கோயிலை அடையலாம். +ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. பலி பீடம், நந்தியை அடுத்து மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலி பீடமும், நந்தியும் உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் கணபதி, பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் 21 ஆகஸ்டு 2002 சித்ரபானு ஆவணி 5ஆம் நாள் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. + +இச்சிவாலயத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர். இறைவி கவுரி பார்வதி. + + + + + + + +கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் + +கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது. + +கோவில் பெயர் கொட்டிடை. ஊர் பெயர் கருவிலி. இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை என்கிற வரம் கிடைக்கும். இப்படி பிறப்பை அறுத்து மோட்சத்தை அருளும் தலம் என்பதால் இந்தத்தலத்தை கருவிலி என்பார்கள். கோவில்கள் நிறைந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்தபலன் இந்த ஒரு கோயிலை தரிசித்தாலே கிடைத்துவிடுமாம். சற்குணன் என்ற மன்னன் இக்கோயிலில் வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்று மோட்சமும் பெற்றார். எனவே இக்கோயிலை அவர் கட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. +தட்சனின் யாக நிகழ்வின் பொது நடந்��� கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப்பிடித்த மாதிரி ஈசன்(பித்தன்) ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.அப்போது ஈசனுடன் சேர்வதற்க்கு அன்னை பார்வதி அழகே உருவாக மிண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்சித்த இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது. முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார் எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிவிற்றிருக்கும் சர்வாங்கசுந்தரியின் அழகை வர்ணிக்க வார்தைகள் இல்லை. அதி அற்புதமாக விளங்குகிறாள். ஈசனுடன் இனைந்தத்தலமாத்லால் திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. +திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்குப் பாசக் கயிற்றை வீச, சிவபெருமான் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எனவே எமன் இங்கு வந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப்பெற்றான். இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும். + +அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். + +வாயிலைக் கடந்து செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. அடுத்து உள்ளே பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். அதற்கடுத்து பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராஜர், சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகி���ோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் திருச்சுற்றின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியின் இடது புறத்தில் சிம்மவாஹினி உள்ளார். கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளமான எம தீர்த்தம் உள்ளது. இக்கோயிலில் 27 மார்ச் 1997 மற்றும் 14 சூலை 2008இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. + +இத்தலத்தில் இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. + + + + +திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் + +திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் பிரமன், தேவி, முருகன் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன் நம்பிக்கை. மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருபெருந்துறையில் இருந்து இந்தத் தலத்தை வேறுபடுத்த திருப்பேணுபெருந்துறை என வழங்கப்பட்டுவந்தது. + + வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. இடது புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. கொடி மரம், நந்தியை அடுத்து மூலவர் கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகர் உள்ளார். மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சற்றில் விநாயகர், முருகன், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிகோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். + +பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியதாம். இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டாரம். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார் என ஒரு வரலாறு இத்தலத்திற்கு உண்டு என்பது தொன் நம்பிக்கை. ஸ்வாமி சந்நதிக்கு அருகிலேயே வடதிசை நோக்கி சின்முத்திரையோடு தியானம் செய்யும் நிலையில் தண்டபாணியின் வடிவம் இருக்கிறது. இன்றும் இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகள் ஊமையாகப் பிறப்பதில்லை. முருகப்பெருமானே இங்கு பேசும் பாக்கியம் பெற்றதால் பேச்சு சரியாக வராத குழந்தைகளை பெற்றோர்கள் இங்கு கூட்டி வந்து போவதை இன்றும் பார்க்கலாம். கோயிலில் உள்ள பிட்சாடனர் சிறப்பான மூர்த்தியாவார், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு அமுது படையல் திருவிழா நடக்கிறது. இங்குள்ள மங்கள தீர்த்தக்கரையில் குக விநாயகர், சாட்சி விநாயகர் என்னும் இரட்டை விநாயகர் சன்னதிகள் காணப்படுகின்றன. + +விநாயகர், முருகப்பெருமான், உமையம்மை, பிரம்ம தேவர் ஆகியேர் வணங்கிப் பேறு பெற்ற தலம். + +தினமலர்க் கோயில்கள் + + + + +திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் + +திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் (திருநறையூர்ச்சித்தீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 65ஆவது சிவத்தலமாகும். + +சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருவமாகமாறி, சாபம் பெற்ற நரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. மிகப் பழமையான லிங்கம். மாசி மாதத்தில் முன்று நாட்களும், ஆவணி மாதத்தில் முன்று நாட்களும் சூரிய கிரணம் மூலவர் மீது படுகின்றது. இத்தலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியே மகரிஷி ஒருவருக்கு மகளாக பிறந்தாள். பின் பரமேஸ்வரனும் பார்வதியும் ஸ்ரீநிவாசபெருமானுக்கு மணம் முடித்துவைத்தனர். இங்குள்ள விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். + +கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோயில் சாலையில் வந்து நாச்சியார் கோயிலின் முற்பகுதியான திருநறையூரில் இறங்கி கோயிலை அடையலாம். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருநரையூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் துருவாச முனிவரால் பறவை உருவச் சாபம் பெற்ற நரன��� வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. அதனால் நரபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. + + ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது கொடி மரம், பலி பீடம் நந்தி ஆகியவை உள்ளன. கோயிலின் வலப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. +திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், காசி விசுவநாதர், துவார கணபதி, ஆண்ட விநாயகர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து கால பைரவர், வீர பைரவர், சூரியன், விநாயகர், நாகம்மாள் ஆகியோர் உள்ளனர். அடுத்து சித்தலிங்கம், ரினலிங்கம், வாயுலிங்கம், தேஜஸ்லிங்கம், ஜோதிலிங்கம் ஆகியவை உள்ளன. ரினலிங்கத்திற்கும், தேஜஸ்லிங்கத்திற்கும் அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர், பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி வராகி, சாமுண்டா, வலம்புரி விநாயகர் ஆகியோர் உள்ளனர். +மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, மேதா மகரிஷி, நடராஜர், வரசித்தி விநாயகர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் தனிச் சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் 3 சூன் 1956 மற்றும் 13 டிசம்பர் 1999இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. + +பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம். கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம். + +நாச்சியார் கோயில் எனும் வைணவக் கோயில் இத்தலத்திற்கு அருகிலுள்ள கோயிலாகும். + + + + + +அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில் + +அழகாபுத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில் (அரிசிற்கரைப்புத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புகழ்த்துணை நாயனார் அவதரித்ததும் முத்தி பெற்றதும் இத்தலத்திலேயே என்பது என்பது தொன்நம்பிக்கை. + + கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியும், கஜலட்சுமி சன்னதியும் உள்ளன. விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும் பலி பீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலி பீடமும் உள்ளன. முருகன் இங்கு சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடமும் நந்தியும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விசாலாட்சி, விநாயகர், காசி விசுவநாதர், சுப்ரமணியர், புகழ்த்துணை நாயனார், லட்சுமி, மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றின் பின்புறத்தில் சொர்ண பைரவர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். +இக்கோயிலில் 5 செப்டம்பர் 1982 மற்றும் 27 ஏப்ரல் 2001இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. + + +முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. + +அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் + + + + + +சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில் + +சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 67ஆவது சிவத்தலமாகும். + +சாக்கோட்டைக்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்தில் திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்தார் என்பதும் குபேரன் இராவணன் ஆகியோர் பூசித்தனர் என்பதும் என்பது தொன்நம்பிக்கைகள். இவ்வூரில் பூமிக்கடியில் சிவலிங்கம் இருப்பதால் சம்பந்தர் அங்கப் பிரதட்சணம் செய்து இறைவனை வழ��பட்டார் எனப்படுகிறது. + +இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.. இறைவன் சிவகுருநாதசுவாமி, இறைவி ஆர்யாம்பாள். + +ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி உள்ளன. இந்த திருச்சுற்றில் கால பைரவர் சன்னதி உள்ளது. கால பைரவர் தெற்கு நோக்கி உள்ளார். அடுத்த கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகர் உள்ளார். இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. உள் திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் தேயுலிங்கம், வாயுலிக்ம், பிரிதிவிலிங்கம், அக்னி, இந்திராணி, இந்திரன், குபேரன், பாலமுருகன், பைரவர், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் எதிரில் கோயில் குளம் உள்ளது. + + + + + +ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் + +ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் என்பது, ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவையினால் உருவாக்கப்பட்ட பசுமைக் கட்டிடம் தொடர்பான தரவரிசைப்படுத்தல் முறைமை (Green Building Rating System) ஆகும். இதன் ஆங்கிலப் பெயரான "Leadership in Energy and Environmental Design" என்பதன் சுருக்கமான LEED (லீட்) என்ற பெயரில் இது பரவலாக அழைக்கப்படுகின்றது. இது, சூழல்சார்ந்த பேண்தகு தன்மை (environmentally-sustainable) கொண்ட கட்டுமானத்துக்கான தரப் பட்டியலொன்றை உருவாக்கியுள்ளது. + +லீட் பின்வருவனவற்றை அடைவதற்காக உருவாக்கப்பட்டது: + + +கட்டிடத் தொழில்துறையின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள், லீட் முறைமையை உருவாக்கி அதனைத் தொடர்ந்து செப்பனிட்டு வருகிறார்கள். இதன் கீழான தரப்படுத்தல் முறைமை ஆறு முக்கியமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறது. சான்றிதழ் கொடுப்பதற்காக ஒவ்வொரு அம்சங்கள் தொடர்பிலும் வழங்கப்படக்கூடிய புள்ளிகளின் அளவுகள் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளன: + + +வெவ்வ���று லீட் பதிப்புக்கள் சிறிதளவு வேறுபட்ட புள்ளி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளன. லீட் சிஎஸ் (LEED CS) முறையில் சான்றுப்படுத்தலுக்காக (Certification) 69 புள்ளிகள் கொடுக்கப்படுகின்றன. கட்டிடங்கள் நான்கு மட்டங்களிலான சான்றுப்படுத்தலுக்கான தகைமைகளைப் பெற முடியும். + + +பசுமைக்கட்டிடத் தொழில் வல்லுனர்கள், LEED சான்றளிக்கப்பட்ட தொழில்வல்லுனர் பரீட்சை யில் சித்தியடைவதன் மூலம் சான்றளிக்கப்பட்ட தொழில் வல்லுனர் ஆக முடியும். இது மேற்படி வல்லுனர்கள் பல்வேறு LEED முறைமைகளூடாகக் கட்டிடங்களைச் சான்றுப்படுத்த உதவ வசதி செய்கிறது. தொழில்சார் சான்றளிப்பு பசுமைக் கட்டிடச் சான்றளிப்பு நிறுவனத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது. + + + + +சாரணர் சங்கம் + +சாரணர் சங்கம் ("The Scout Association") என்பது ஐக்கிய இராச்சியத்தின் சாரணர் அமைப்பு ஆகும். ஐரோப்பிய சாரணர் பிராந்தியத்தின் பிரதான அமைப்பு இதுவாகும். இது 1907இல் ஆரம்பமானது. + + + + +நடுகல் + +நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. + +இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம் தொடக்கம் தெற்கில் கேரள மாநிலம் வரை காணப்படுகின்றன. வடக்கில் இமாச்சலப் பிரதேசம், குசராத், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 202 கற்களும், ஆந்திராவில் 126 கற்களும், கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன. + +தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. செங்கம், தருமபுரி ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான்கள் போன்ற அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது. தமிழ் நாட்டில் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்திலும், கங்கர், பாணர், இராட்டிரகூடர் போன்ற அரச மரபினர் காலத்திலும், பிற்காலத்தில் ஒய்சாள, விஜயநகர, நாயக்க மரபினர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீரச்சாவு அடைந்த மனிர்தர்களுக்கு மட்டுமல்லாமல், போர்ச் சேவலுக்கு அந்த சேவலின் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. + +கோவலர்களாகிய மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டுவருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன. + +நம் பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நட���்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே " என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும் + +நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை புறநானூறு,சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். + + +இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர் . நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. ‘நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது. + +‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார். ஆநிரைகளையுடைய கோவலர் உயர்ந்த வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமாலை சூட்டி நடுகல்லை வணங்கினர் என்று புறநானூறு கூறுகிறது. + + +என்பது அது குறித்தபாடற் பகுதியாகும். + +வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக நடைபெற்ற கரந்தைப் போரில் உயிர்நீத்த வீரனுக்கு ஊரவர் கல்நட்டனர். மரல் நாரில் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியையும் அழகிய மயிலினது பீலியையும் சூட்டிப் பெயரும் பீடும் எழுதிப் பெருமை செய்து வழிபட்டனர் + + +நடுகற்களுக்கு நாள்தோறும் வழிபடும் காரியங்களைப் பெண்கள் செய்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணகிக்கு செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் பூசை செய்ய அவள் தோழியான தேவந்தி என்பாளை அம்மன்னன் நியமித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. + +நடுகல்லை நாள் தோறும் வணங்கினால் விருந்தினர் எதிர்ப்படுவர் ’ என்றும் போரில் கணவனுக்கும் அரசனுக்கும் வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே நம்பிக்கையும் "நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும்; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும்" என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. இதனை + +பாணர்களும் கூட, வீரர்களின் நடுகற்களைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு ஆற்றுப்படுத்திய நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. + +பெரிய யானையின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினையுடைய பெரிய பறையினையுடைய இரவலனே, நீ போகின்றாயாயின் பகைவரது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புகள் மிகுதியாகத் தைக்கவும் எதிர்நின்று விலக்கியவனது கல்லைத் தொழாமல் போவதைத் தவிர்ப்பாயாக என்று, பாணர்கள் நடுகல்லை வணங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டதைப் புறநானூற்றின் வாயிலாக அறியலாம். + +வழிச் செல்லும் பாணர்கள் வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து செல்லுமாறு வழிப்ப்படுத்தப்பட்டனர். + +ஏவல் பொருந்தாத பகைவர் புற முதுகிட்ட அளவிலே தமது வெற்றி தோன்ற வீரர்கள் ஆரவாரித்தாராக, அது பொறாமல் இவ்விடத்தே உயிர் கொடுத்தற்கு நல்லகாலம் என்று மீண்டும் உயிரைக் கொடுத்த பெயர்களை எழுதி நட்ட கற்கள் மிகுதியாக உள்ளன. இன்பம் மிகுகின்ற தாளத்தையுடைய உங்கள் பாட்டு, அந்நடுகல்லின் தெய்வத்திற்கு விருப்பம் உடையதாதலின் நீங்கள் உங்களுடைய யாழை வாசித்து விரைந்து செல்வீர் என்று, பாணர்கள் நடுகல்லைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு கூறப்பட்டனர். + +போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம். அந்தப் பொம்மை மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் செயத அதன் அழகு அழிந்துபோகுமாம். இது���ான் வினையழி பாவை. (கல்லில் பெரும் பீடும் எழுதி வைத்தால் அது நடுகல் எனப்படும். மண்ணில் உருவாரம் செய்து வைத்தால் அது பாவை எனப்படும்.) - (வேம்பற்றூர்க் குமரனார் அகநானூறு 157) + +தற்காலத்திலும் பொது மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு இறப்போருக்காக நடுகற்களைப் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுவது உண்டு. இவை கற்களினால் அல்லது காங்கிறீட்டினால் கட்டப்படுகின்றன. எனினும் இவற்றைத் தற்போது நடுகற்கள் என்று குறிப்பிடுவது இல்லை. + +தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கியதாக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். விடுதலைப் புலிகளின் நிலப் பகுதிகளைக் கட்டுப் பாட்டுக் கொண்டிருந்த காலத்தில் இவை சிறப்பாக பேணப்பட்டன. 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்துதொழிக்கப்பட்டுள்ளன. போர் வீரர்களைப் புதைக்கும் இயக்க மரபு தமிழர்களின் நடுக்கல் மரபில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. + + + + + +காற்றுக் கோபுரம் + +காற்றுக் கோபுரம் என்பது, கட்டிடங்களுக்குள் இயற்கையான காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ஒரு உயரமான அமைப்பாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரசீகக் கட்டிடக்கலையில் அம்சங்களில் ஒன்றாகத் திகழும் இது இன்று மத்திய கிழக்கின் பல நாடுகளின் பாரம்பரியமான கட்டிடங்களில் காணப்படுகின்றது. + +வெப்பம் மிகுந்த பாலைவன நாடுகளில் நிலமட்டத்துக்கு அருகில் காற்றோட்டம் மிகவும் குறைவாக இருப்பதுடன், காற்று மிகவும் சூடாகவும் காணப்படும். இதனால், நிலமட்டத்திலிருந்து ஓரளவு உயரத்தில் வீசுகின்ற வெப்பம் குறைந்த காற்றைக் கட்டிடங்களின் உட்பகுதிகளை நோக்கித் திருப்பிவிடுவதே காற்றுக் கோபுரங்களின் நோக்கமாகும். + + + + +துபாய் தேசிய அருங்காட்சியகம் + +துபாய் தேசிய அருங்காட்சியகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் நகரின் "பார்துபாய்" பகுதியில் அமைந்துள்ளது. இது 1971 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி துபாய் ஆளுனரால் திறந்து வைக்கப்பட்டது. துபாயின் மிகப் பழைய வரலாற்றுக் கட்டிடம் எனக் கருதப்படும், 1787 ஆம் ஆண்டைச் சேர்ந்த அல் ஃபாஹிதி கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. உள்ளூர் அரும்பொருட்களோடு துபாயுடன் வணிகம் செய்யப்பட்ட ஆசிய, ஆபிரிக்கப் பொருட்களையும் கொண்டுள்ளது. + + + + +இலங்கை வரலாற்றுக் காலக்கோடு + +இலங்கையின் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வரலாறுகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + + +இத்தேர்தலில் தமிழர் தரப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே அணியில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என போட்டியிட்டு 90 சதவீதமான வாக்குகளைப் பெற்று விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நிரூபித்தது. தமிழ்த் தேசியக் கட்டமைப்பில் 22 தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர். + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இதேகாலத்தில் வன்னிய சிற்றரசுகள் சில சுயாதீன அரசுகளாக இருந்தன. + + +- கோட்டை அரசின் யாழ்ப்பாணப் படையெடுப்பு - (கி.பி. 1450 - 1467) சாப்புமல் குமரயாவின் படையினைக் கொண்டு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய கோட்டை அரசு பின்னர் சிங்க நகரினை அழித்து நல்லூர் தலைநகராக்கப்பெற்றது. கோட்டை அரசிற்கு அடிமைப்பட்டு இருந்தது யாழ்ப்பாண அரசு. + + + + + + + + + + + + + + + + + + + + + +தக்கலை + +இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை (Thuckalay ,തക്കല). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47 ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. +தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள் + +இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள். + + + + +திருக்கரசைப் புராணம் + +திருக்கரசைப் புராணம் இலங்கையின் திருக்கோணமலையில் மகாவலி கங்கைக் கரையில் அமைந்திருந்த அகத்தியத்தாபனம் என்னும் கரசைச் சிவன் கோயில் மீது பாடப்பட்ட தல புராணமாகும். இதன் நூலாசிரியர் பெயர் சரியாகத் தெரியவில்லை; ஆயினும் நூற் பெயரால் கரசைப் புலவர் எனப்படுகிறார். + +இப்புராணம் சூதமுனி அருளிச் செய்த வடமொழிப் புராணத்தினைத் தழுவிச் செய்யப்பட்டதாக இப்புராண வரலாறு கூறும் பகுதியிற் சொல்லப்பட்ட போதும் தழுவப்பட்ட முதனூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடவுள் வாழ்த்து, குரு வணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப் பகுதியும் இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. + + + + + + + +கோணமலை அந்தாதி + +திரிகோணமலை அந்தாதி திருக்கோணேசர் மேல் பாடப்பட்ட அந்தாதி நூலாகும். திருக்கோணமலை சிதம்பரநாதர் சுப்பிரமணீயனார் என்னும் புலவரின் புதல்வரும் ஆறுமுக முதலியார் என்று அழைக்கப்பட்டவருமான புலவர் சு. ஆறுமுகம் என்பவரால் 1886 ஆம் ஆண்டளவில் பாடி முடிக்கப்பட்டது. இந்நூல் 1990 இல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. + + + + +தமிழர் ஓவியம் + +ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தை சித்திரம் என்றும் தமிழில் குறிப்பிடுவர். + +"தமிழகத்தில் கற்கால குகைகளிலே மிருகங்களை வேட்டையாடுவதையும் வேறுசில குறியீடுகளையும் காணக்கிடைக்கின்றன. சங்க காலத்திலேயே தமிழர்களிடையே ஓவியக் கலை வளர்ச்சி நிலையில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழர் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது சுவரில் எழுதப்பட்ட ஓவியங்கள். மிகச்சில மரப்பலைகளிலும், கிழி (துணிச்சீலை) களிலும் எழுதப்பட்டன." + +"இன்றைய பழந்தமிழரின் ஓவியக் கலைக்குப் பேர் சொல்லும் ஓவியங்கள் பனைமலை ஓவியத்தில், காஞ்சி கோயி���ில், திருமலைப்புரக் கோயிலில், சித்தண்வாசல் குகையில், தஞ்சை பெரியகோயிலில், மதுரை நாயக்கர் கால மண்டபங்களில் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன" + + + + + + + +தமிழகக் கோவில்கள் + +இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. + + + + + +ஜாமா பள்ளி, தில்லி + +மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது. + +இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. + + + + + +இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல் + +இலக்கினத்திற்கேற்ப வீட்டு வாசல் என்பது, இந்துக்களின் பண்பாட்டில், வீடுகளை அமைக்கும்போது வீட்டுத் தலைவரின் இலக்கினத்துக்கு ஏற்ப வீட்டின் வாசலைக் குறிப்பிட்ட திசைகளை நோக்கி அமைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. உலகம் முழுவதிலும் காணப்படும் பல பண்பாட்டுக் கூறுகளைப் போலவே, இந்த நடைமுறையும் நம்பிக்கையின் அடிப்படையிலானது, இந்துக்களின் உலக நோக்கின் பாற்பட்டது. இது தற்கால அறிவியல் கோட்பாடுகளுக்கு அமைவானதாக ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை எனினும், தற்காலத்திலும் இம்முறைகளைக் கைக்கொள்பவர்கள் பெருமளவில் உள்ளனர். + +வாஸ்து சாஸ்திரம், சிற்ப நூல், மனையடி சாஸ்திரம் என்று பலவாறாக அறியப்படும், கட்டிடங்களை அமைக்கும் மரபுவழி நடைமுறைகள் பற்றி விளக்கும் நூல்கள் வீடுகளின் வாசல் அமைய வேண்டிய திசையைத் தெரிவது பற்றிச் சிறப்பாகப் பேசுகின்றன. இந்நூல்களின்படி வாசல் திசையைத் தெரிவு செய்வது என்பது, வீடு அமைத்தலில் முதலில் செய்யவேண்டிய முக்கியமான பணிகளுள் ஒன்று. இந்த நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றியவை என்பதால், அவ்வக்காலச் சமூக பண்பாட்டுப் பின்னணிகளுக்கு ஏற்ப இவற்றில் வேறுபாடான கருத்துக்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசல் திசை தெரிவுக்கு வீடு கட்டும் மாதம், வீட்டில் வாழவுள்ளோர் சார்ந்த வருணம், போன்ற பல்வேறு தேர்வு வரன்முறைகளையும் பழைய நூல்களில் பயன்படுத்தியுளனர். இவற்றுட் சில இக்காலச் சமூகப் பின்னணியில் பொருத்தம் இல்லாமல் போனதாலும் (எகா: வருணம்) வேறு சில நடைமுறைக்கு வசதிக் குறைவாக இருப்பதாலும் வழக்கற்றுப் போயின. எனினும், தற்கால நம்பிக்கைகளின்படி வாசல் திசையைத் தெரிவு செய்வதில் வீட்டுத் தலைவரின் பிறந்த இலக்கினம் முக்கிய பங்கு வகிக்கிறது. + +பூமியைச் சூழவுள்ள வெளி பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை அளவு கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றுக்கு மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், புவியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தைக் குறித்து இந்த ஒவ்வொரு இராசியும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கு அடிவானத்தில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இதுபோல, ஒருவர் பிறக்கும் நேரத்துக்குரிய இலக்கினம் அவரது இலக்கினம் எனப்படும். ஒருவருடைய பிறப்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சாதகக் குறிப்பின் கோள்நிலை வரைபடத்தில் குறித்த இராசிக்குரிய கட்டத்தில் "ல" அல்லது "இல" என்று அவரது இலக்கினம் குறிக்கப்பட்டிருக்கும். + +வீட்டு வாசல் என்பது வீட்டுக்குள் நுழைவதற்கான வாசல் என்பது தெளிவு. ஆனாலும், நடைமுறையில் இது தொடர்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. எடுத்துக்கொண்ட தேவைக்காக வீடு என்று கொள்ளப்படுவது எது என்பதில் உள்ள வேறுபாட்டினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. வீட்டுக்குரிய எல்லா அறைகளையும் உட்படுத்திய கட்டிடத்தை வீடு எனக்கொண்டு அதற்கு��் நுழைவதற்கான வாயிலை வீட்டு வாயில் எனக் கொள்வது ஒன்று. சில பகுதிகளில் வீட்டில் பெரிய அறைக்குச் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இங்கே அந்த அறையையே வீடு எனக் கொண்டு அதன் வாயிலையே வீட்டு வாசல் என்பர். யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கில் உள்ள நடைமுறை இதற்கு எடுத்துக்காட்டு. + +வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நான்கு திசைகளை நோக்கியதாக மட்டுமே வீட்டு வாசல்களை அமைக்கலாம் என்று மரபுவழிச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இதனால், வீடு கட்ட எண்ணுபவர்கள் அவர்களது பிறந்த இலக்கினத்தின் அடிப்படையில் இந்த நான்கு திசைகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவை பரிந்துரைக்கின்றன. மக்கள்தொகை பெருகிவந்த சூழலில், குறிப்பாக நகரப் பகுதிகளில் வீடுகள் பல்வேறு திசைகளிலும் செல்லும் சாலைகளை ஒட்டி அமையவேண்டி உள்ளதாலும், வீடுகட்டுவதற்கான நிலத்தின் அளவு சிறிதாக இருப்பதாலும், வாயில் திசை குறித்த மேற்படி விதிகளைப் பின்பற்றுவது கடினமாகியது. இதன் காரணமாகவோ என்னவோ, சில நூல்கள் ஒரு இலக்கணத்துக்கு ஒரு திசையையே பரிந்துரைக்க வேறு சில இவ்விதிக்கு நெகிழ்வுத்தன்மை கொடுத்து ஒவ்வொரு இலக்கினத்துக்கும் இன்னொரு திசையையும் பரிந்துரைக்கின்றன. +பின்வரும் இலக்னத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசைகளினை நோக்கி வீடுகளை அமைத்துக் கொண்டால் அவர்களது வாழ்வு சிறப்பாக விளங்கும் என்பது நம்பிக்கை. + + + + + + +மூலிகைகள் பட்டியல் + + + + + + + + + + + + + + + + + + + + + + +1. சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. (2003). "நெடுந்தீவு மக்களும் வரலாறும்". +2. தமிழ்நாட்டுத் தாவரங்கள் பாகம் இரண்டு கே.கே. ராமமூர்த்தி தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பதிப்பு 2000 +3. குணபாடம் முதல் பாகம் க.ச. முருகேச முதலியார் இந்திய மருத்துவம் - ஓமியோபதித்துறை சென்னை 600 106 + + +[[பகுப்பு:மூலிகைகள்]] + + + +திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் + +திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளத���. + +"காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம். + +இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம்; இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும். + +திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம். + +வாஞ்சியம் திருக்கோயிலில், சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் (8.4.2009) திருக்குடமுழக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. + +இயமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். +இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு. + +ராஜகோபுரத்தை அடுத்து கோயிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்ட நாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.திருச்சுற்றில் குளம் உள்ளது. + + +மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம். + + + + + + +நன்னிலம் மதுவனேசுவரர் கோயில் + +நன்னிலம் மதுவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 71ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் விருத்திராசுரனின் துன்புறுத்தல் தாங்காத தேவர்கள் தேனீக்களாக மாறியிருந்து வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. + +சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. +வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து பலிபீடம் உள்ளது. அடுத்தடுத்து பிரம்மபுரீஸ்வரர் சன்னதியும், அகஸ்தீஸ்வரர் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், மதுவனநாயகி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து பைரவர், சூரியன், சனீஸ்வரன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் படிகளில் ஏறி மேலே செல்லும்போது உயர்ந்த தளத்தில் உள்ள கருவறையில் மூலவர் மதுவனேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராஜர் சன்னதிகள்.சர்வதாரி வருடம் ஆவணி 29, 14 செப்டம்பர் 2008இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது. + +அகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது. + +அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + + + +கிரந்த எழுத்துமுறை + +கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை "பல்லவ கிரந்தம்" என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன. + +கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம். + +கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நாகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர். + +பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான் கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி, முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுத ஆரம்பிக்கப்பட்டது. + +தமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் "ஹலந்த்" பயன்படுத்தப்படுகிறது + +கிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் + +கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள் + +கிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள் + +கிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன + +சிறப்பு வடிவங்கள்: + +மாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து + +अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः। + +पूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥ + +இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்�� வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது. + +மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. + + + + + + +தாராவி + +மும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு "(slum)" அல்லது சேரிப்பகுதி ஆகும். இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் கிழக்குப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானா ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும். + +தாராவியில் அங்குள்ள சேரிவாழ் மக்களைக் கொண்டு பல குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், துணி வகைகள் முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் வணிகத்தின் அளவு 1 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டள்ளது. + +18-ஆம் நூற்றாண்டில் தாராவி பெரும்பாலும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட ஒரு தீவாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்காங்கே கோலி இன மீனவ மக்கள் வாழ்ந்து வந்தனர். + + + + + +ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல் + +ஈழத்து வரலாற்றுப் பதிவுகள் இடம்பெற்ற நூல்களின் பட்டியல். + + + + + +முதலாம் விஜயபாகு + +முதலாம் விஜயபாகு ("Vijayabahu I") என்பவன் இலங்கை வரலாற்றின் (கி.பி. 1055 - 1110) இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன் என சூள வம்சம் நூல் குறிப்பிடுகிறது. + +தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் சோழருக்கெதிராகப் போர் தொடுத்த இவன��ல் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான். + + + + + +இரண்டாம் விஜயபாகு + +பண்டித விஜயபாகு (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற இரண்டாம் விஜயபாகு பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தவன். பராக்கிரமபாகு மன்னனின் இறப்பைத் தொடர்ந்து, அவனது சகோதரியின் மைந்தனும் அறிவு மிக்க புலவனுமான இரண்டாம் விசயபாகு ஆட்சியிலமர்ந்தான். + +கலிங்க மாகனின் படையெடுப்பின் பின்னர் புத்தரின் தந்த தாதுக்கள் மத்திய மலை நாட்டின் கொத்மலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இவன் அவற்றை பெலிகலை மலையுச்சியில் ஒரு கட்டிடத்திற் பாதுகாப்பாக வைத்தான். இவன் தனது தாய் மாமனான மகா பராக்கிரமபாகுவினால் பர்மாவின் ராமஞ்ஞ மன்னனுக்கெதிராகப் போர் தொடுக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய பகைமையை மாற்றி, நல்லுறவை ஏற்படுத்தினான். + +இரண்டாம் விசயபாகு மன்னன் பர்மாவின் அரிமத்தானா மன்னனுக்கு மகத மொழியில், அஃதாவது பாளி மொழியில் ஒரு கடிதமெழுதியதாகக் கூறப்படுகிறது. இவன் ஏராளமான சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தான். ஓராண்டு காலம் மட்டுமே ஆட்சியிலிருந்த இம்மன்னன் மிகிந்து என்பவனின் சதியினாற் கொல்லப்பட்டான். + + + + + +வங்கி + +வங்கி () (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது. + +வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன + +வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன + + + + + +மூன்றாம் விஜயபாகு + +மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதேனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான். + +மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது. + + + + + +உருசிய உள்நாட்டுப் போர் + +உருசிய உள்நாட்டுப் போர் ("Russian Civil War") எனப்படுவது நவம்பர் 7 (அக்டோபர் 25) 1917 முதல் அக்டோபர் 1922 வரை முன்னாள் உருசியப் பேரரசில் போல்சேவிக் செஞ்சேனைக்கும் வெண்சேனைக்கும் இடையே நிகழ்ந்த பலகட்சிப் போரை குறிப்பதாகும். பல வெளிநாட்டு படைகள், குறிப்பாக கூட்டணி படைகளும் செருமனிசார் படைகளும் செஞ்சேனையுடன் போரிட்டன. +செஞ்சேனை வெண்சேனையை உக்ரைனிலும் அலெக்சாண்டர் கோல்செக் தலைமையில் அமைந்த அணியை சைபீரியாவிலும் 1919இல் வென்றது. மிஞ்சிய வெண்சேனையை பியோடர் நிகோலயெவிச் ராங்கெல் வழிநடத்தினார்; 1920 குளிர்காலத்தில் இந்த அணியையும் கிரீமியாவில் செஞ்சேனை வென்றது. உருசியப் பேரரசு உடைந்தநிலையில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகின; இவையும் இப்போரில் பங்கேற்றன. இவற்றில் பல – பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து – இறைமையுள்ள நாடுகளாக நிறுவப்பட்டன. உருசியப் பேரரசின் மிஞ்சியப் பகுதிகள் சோவியத் ஒன்றியமாக ஒன்றிணைக்கப்பட்டன. + +1905 ஆம் ஆண்டில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஜார் மன்னனின் அரண்மனைக்கு ஒரு மனு கொடுக்கச் சென்றபோது, அவர்கள் கோசாக் குதிரைவீரர்களால் சுடப்பட்டு, புரட்சி வெடித்தது. அது கடைசியில் நசுக்கப்பட்டு ஜாரின் சர்வாதிகாரம் அதிகமாயிற்று. 1905 ஆம் ஆண்டில் உருசிய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் தலைமையிலான முடியாட்சி அரசான ரஷ்யப் பேரரசுக்கு எதிராக உருசியா முழுவதும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சி மற்றும் மக்கள் கிளர்ச்சிகளைக் குறிக்கும். ரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அமைதிப் பேரணி பெரும்புரட்சியாக வெடித்தது. இருந்தபோதிலும் ரஷ்ய பேரரசு அரசாங்க நடவடிக்கைகளால் இந்த புரட்சி நசுக்கப்பட்டதுடன் ஜார் மன்னரின் சர்வாதிகாரம் அதிகமாக வழிவகுத்தது. டூமாவின் அதிகாரங்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. 1832 ஆம் ஆண்டு அடிப்படை விதிகள் பெரும்பகுதி திருத்தம் செய்யப்பட்டு "அரசியல் சாசனம் 1906" என்னும் பெயரில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. + +ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் தமது சார் மணி மகுடத்தைத் துறந்தபிறகு 1917 பெப்ரவரிப் புரட்சியின்போது உருசிய இடைக்கால அரசு நிறுவப்பட்டது. + +1917, பெப்ரவரியில், முதல் உலகப் போரின் ஆள் அழிவுகளாலும், தோல்விகளாலும், முடக்கங்களினாலும் புரட்சி வெடித்தது. இதனால் சார் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. இப்புரட்சி தன்னிச்சையான மக்கள் புரட்சியாகும். இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. நடந்த குழப்பத்தில், டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். ஸாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டதால் கடைசி ஸார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்டபோதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரினர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது. இந்தக் குழப்பமான நிலையில் ரஷ்யா சண்டையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர். + +சோவியத்துகளின் தலைவராக முதலில் கெரன்சுகி பதவியேற்றார். அவர் போல்சுவிக்கு கட்சித் தலைவர்களை கைது செய்ய முயன்றதால் லெனின் தலைமையில் போல்சுவிக்குகள் போராட்டம் செய்து உருசிய ஆட்சியைக் கைப்பற்றினர். + +அக்டோபர் புரட்சியை அடுத்து பழைய உருசிய அரச படைத்துறை செயலிழக்கப்பட்டது. தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்ட போல்செவிக��� சிவப்புக் காவலர் படையே முதன்மை இராணுவப் படையாக இருந்தது. இதற்கு துணையாக அரசு பாதுகாப்புப் பிரிவான ஆயுதமேந்திய செக்கா இராணுவப்பிரிவு இருந்தது. சனவரியில் போரில் குறிப்பிடத்தக்க இழப்புகளுக்குப் பிறகு போர்த் தளபதி லியோன் டிராவ்சுகி தலைமையில் சிவப்புப் பாதுகாவலர் படை தொழில்சிறப்பு மிக்க போர்ப்படையாக பாட்டாளி மற்றும் விவசாயிகளது செஞ்சேனை உருவாக்கப்பட்டது. + +பெப்ரவரி புரட்சியினால் கட்டுடைந்த சமூக சக்திகள், புதிய இடைக்கால அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டார்கள். இந்த வெறுப்புகளை பயன்படுத்தி, உருசிய சமூக ஜனநாயக கட்சியில் "பெரும்பான்மையினர்", (உருசிய மொழியில் பெரும்பான்மையினர் போல்செவிக்குகள் எனப்பட்டனர்) விளாடிமீர் லெனின் தலைமையில் 1917 அக்டோபரில் ஆட்சியை திடீரென்று கைப்பற்றினர். போல்செவிக் கட்சி ஆயுதமேந்திய பாட்டாளிகள் மற்றும் படைத்துறையிலிருந்து வெளியேறிய இராணுவத்தினரைக் கொண்டு அமைக்கப்பெற்ற செஞ்சேனை மூலம் "பெட்ரோகிராட்" எனப்படும் செயின்ட் பீட்டர்சுபெர்கை கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து பிற நகரங்களையும் சிற்றூர்களையும் கைப்பற்றறினர். இது அக்டோபர் புரட்சி என்றழைக்கப்படுகிறது. சனவரி 1918இல் போல்செவிக்குகள் உருசிய அரசியலமைப்பு மன்றத்தைக் கலைத்தனர். தொழிலாளர் சங்கங்களை (சோவியத்=தொழிலாளர்) புதிய அரசு சட்டவாக்க மன்றங்களாக அறிவித்தனர். + +1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரன்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது. + +இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக பொறிய���யல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நீருவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து. + + + + + + + +நான்காம் விஜயபாகு + +போசத் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) என அழைக்கப்பெற்ற நான்காம் விஜயபாகு தம்பதெனியாவிலிருந்து ஆண்ட மன்னன். இவன் அனுராதபுரத்திற்குச் சென்றபோது, வன்னியர் இவனுக்குப் பணிந்து திறை செலுத்தியதாக, "சூளவம்சம்" கூறுகின்றது. இவன் மூன்று ஆண்டுகள் ஆண்டான் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + +பள்ளிப்படை + +பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் படைத் தளபதிகள், புலவர்கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள். கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் காணப்பட்ட கோயில்கள் இறந்த வீரர்களுக்குரிய சமாதிக் கோயில்களாகவே இருந்ததாகத் தெரிகிறது. இதற்குப் பின்னரே இவைகள் பள்ளிப்படைகள் என அழைக்கப்பட்டன. + +இறந்துபோன முன்னோர்களையும், வீரர்களையும் வணங்கும் வழக்கத்தில் இருந்தே கோயில்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகின்றது. இவ்வளர்ச்சியில் பள்ளிப்படைக் கோயில்கள் ஒரு கட்டமாகும். ஆண்களுக்குப் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டது போலவே அரசகுலப் பெண்கள் சிலருக்கும் பள்ளிப்படைகள் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளரது கூற்று ஆகும். ஆண்களது பள்ளிப்படைகளில் லிங்கம் வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பிற்காலத்தில் இவை சிவன் கோயில்களாக மாறிவிட்டன. + +உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட வேண்டும். அதன் மீது மரணித்தவரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட வேண்டும். இம்முறையை பள்ளிப்படை முறை என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் உப்பு, மிளகு போடுவதால் மரணித்தவரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது. + + + + + +ஐந்தாம் விஜயபாகு + +சவுலு விஜயபாகு (கி.பி. 1335 - 1347) என்றழைக்கப்பட்ட ஜந்தாம் விஜயபாகு கம்பளையில் இருந்து ஆட்சி புரிந்தவனாவான். +13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனது ஆட்சிக்காலம் மாகோன் காலத்திற்குப் பின் தங்கியதாகும். + + + + + + +திருக்கண்டீச்சரம் பசுபதீசுவரர் கோயில் + +திருக்கண்டீச்சரம் பசுபதீசுவரர் கோயில் (கொண்டீச்சரம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனு வழிபட்ட தலம் எனப்படுகிறது. இத்தலத்தில் உமை பசு வடிவில் தன் கொம்பால் பூமியைக் கிளறி இறைவனைத் தேடியபோது குருதி பெருகி இறைவன் வெளிப்பட பசு தன் பாலையே அவர் மீது பொழிந்து புண்ணை ஆற்றியது என்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் + +திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் (திருப்பனையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும். + +சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை. + +ராஜகோபுரம் இல்லை. கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. அந்த வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு வாயில் உள்ளது. இரு வாயில்களுக்கிடையே பெரியநாயகி அம்மன் ச��்னதி உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர் உள்ளார். இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அருகே தல மரமான பனை மரம் உள்ளது. அடுத்து உள்ள கருவறையில் மூலவர் சௌந்தரேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மாற்றுரைத்த விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதியும், தாலவனேஸ்வரர் சன்னதியும் உள்ளன. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. +சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம். + +தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்(அரசி), அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது. + +காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேறொரு ஊரும் பனையூர் என்ற பெயரில் உள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த ஊர் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. சென்னையிலிருந்து 25 கி மீ. தொலைவிலும் திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் பொதுவாக நால்வகை நிலங்களில் வாழ்ந்து வந்தாலும் மருதநிலமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்தது. பனையூர் என்பதில் ஊர் என்பது மருதநிலம் என்பதைத்தான் குறிக்கும். மறப்பெயர், மாப்பெயர் என்று எல்லாவகைப் பெயர்களிலும் ஊர் என்பது சேர்ந்து கூறுவது தமிழகத்தில் வழக்கமாயிற்று. மருத மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் மருதூர், நாவல் மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் நாவலூர். அதேப்போல பனை மரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊர் பனையூர் என்று அழைக்கப்பட்டது. + + + + + +குளக்கோட்டன் + +சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொ���்டிருந்த குளக்கோட்டன் இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். இவனைப் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டிலும் வருகிறது. + +இவனது மனைவி பெயர் ஆடக சவுந்தரி ஆகும். அவளது கட்டளையில் இருந்த பூதங்களை கொண்டே மன்னவன் கந்தளாய் குளம் கட்டினான் என்பது சரித்திரம். + + + + + +குமரிக்கண்டம் + +குமரிக்கண்டம் "(kumari Kandam)" என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது . இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. +19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். ஆபிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் மடகாசுகர் நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர். + +பண்டைய தமிழர் நாகரிகம் இலெமுரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற ’குமரிக் கண்டம்’ என்ற பெயரை பயன்படுத்தினர். இலெமூரியா கண்டக் கோட்பாடானது பின்னர் கண்டறியப்பட்ட புவித்தட்டுகள் சீரமைப்புக் கோட்பாட்டால் வழக்கற்றுப் போனது. இருப்பினும் இந்த கருத்தாக்கம் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சியாளர்களிடையே பிரபலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வறிஞர்களின் கருத்துப்படி இலெமூரியாவில் ஆட்சிசெய்த பாண்டியர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவும் குமரி கண்டம் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என அவர்கள் கூறுகின்றனர். + +1890 களில் லெமுரியா என்ற கருத்துரு தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமான பிறகு அவர்கள் அக்கண்டத்தின் பெயரை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப இலெமூரியா எனத் தமிழ்ப்படுத்தினர். 1900 களின் தொடக்கத்தில் அவர்கள் பண்டைய தமிழ் நாகரீகமான இலெமுரியாவின் இருப்பை ஆதரிப்பதற்காக கண்டத்தின் தமிழ் பெயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1903 இல் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூர்யநாராயண சாசுதிரி தமிழ் மொழியின் வரலாறு என்ற தன்னுடைய நூலில் முதன்முதலில் குமரி நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1930 களில் இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரிப்பதற்கு குமரிக்கண்டம் என்ற சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்கள் . + +சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம். உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும் அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை. + +கடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன. பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை "பொன் தோண்டி எறும்புகள்" என இலக்கியம் கூறுகிறது. "மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம்" என்ற பழமொழியுமுண்டு. +1350 - 1420 காலப்பகுதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், சிகந்த புராணம் என்ற வடமொழி காவியத்தை தமிழில் கந்த புராணம் என்ற பெயரில் எழுதினார். இக்காவியத்தில் குமரிக் கண்டம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. +முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம். + +கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப்படலத்தில் பிரபஞ்சம் என்பது பின்வரும் அண்டவியல் மாதிரியாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது. குமரிக் கண்ட கோட்பாடு டன் பிராமணிய-எதிர்ப்பும் சமசுகிருத எதிர்ப்பும் தமிழ் தேசியவாதிகளிடையே பிரபலமாகியிருந்தது. கந்த புராணம் உண்மையில் குமரிக் கண்டத்தை பிராமணர்கள் வசிக்கும் இடமாக விவரிக்கிறது, அங்கிருந்தவர்கள் சிவனை வழிபாடு செய்ததாகவும், வேதங்களை ஓதியதாகவும் கூறுகிறது. மீதமிருந்த பேரரசுகள் அனைத்தும் மிலேச்சர்கள் பிரதேசமாக விவரிக்கப்பட்டுள்ளது. . +மேலும் கந்தபுராணத்தின் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் "'குமரி" என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் தெரிகிறது. +இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த) அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா (20 மில்லியன் ஆணடுளுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்ற பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று ஆகும். + +குமரிக் கண்டம் அல்லது குமரி நாடு என்ற சொற்களை விளக்க 20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு கோட்பாடுகளுடன் வந்தனர். தமிழ் தாயகத்தில் பாலினச் சமநிலை கொள்கை நிலவியதை மையப்படுத்தும் தொகுப்பு கூற்றுகள் அவற்றுள் ஒரு கோட்பாடாகும். உதாரணமாக 1944 ஆம் ஆண்டில் எம். அருணாசலம் என்ற எழுத்தாளர் அந்த நிலப்பகுதி குமரிகள் எனப்படும் பெண் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். தங்களுக்குரிய கணவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழக்கமும், சொத்துகள் அனைத்திற்கும் அவர்களே அதிபதிகள் என்ற உரிமையும் இந்நிலப்பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு இருந்தது. எனவே தான் இப்பகுதிக்கு குமரி நாடு என்ற பெயர் வந்தது என்று டி சவரிராயன் பிள்ளை என்ற எழுத்தாளர் கூறியுள்ளார். +இந்துக்களின் தெய்வமான கன்யா குமாரியை மையமாகக் கொண்டு குமரிக் கண்டத்தை விளக்கும் கோட்பாடும் அப்போது முன்னிலை பெற்றது. கந்தையா பிள்ளை என்பவர் குழந்தைகளுக்கான தன்னுடைய ஒரு புத்தகத்தில் கன்யா குமரி தேவிக்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார், குமரிக் கண்ட நிலப்பகுதிக்கு அத்தெய்வத்தின் பெயரே பெயராக இடப்பட்டது என்று கூறினார். குமரிக் கண்டம் வெள்ளத்தில் மூழ்கியபோது தப்பிப்பிழைத்தவர்களால் கன்னியாகுமரி கோவில் நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். இந்திய ஆரியர்கள் போன்ற இனக்குழுக்களின் தொடர்புக்கு முன்னர் இருந்த நாகரிகத்தினர் மற்றும் மொழியின் தூய்மையை கன்னி என்ற பொருள் கொண்ட குமரி என்ற சொல் குறிக்கிறது என கலாச்சார வரலாற்றாசிரியரான எழுத்தாளர் சுமதி ராமசாமி கூறுகிறார் . + +தமிழ் எழுத்தாளர்கள் தொலைந்த கண்டத்தை குறிப்பிட பல பெயர்களைப் பயன்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், சோமசுந்தரா பாரதி முதன்முதலில் லெமுரியியாவின் கருப்பொருளாகக் கொண்ட தமிழகம் என்ற ஒரு பெயரைப் பயன்படுத்தினார், பாண்டியர்கள் தொன்மை வாய்ந்தவர்கள் என்பதால் அப்பண்டைய நாகரிகத்தைக் குறிப்பிட பாண்டிய நாடு என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டது. சில எழுத்தாளர்கள் சம்புத் தீவென்ற பொருள் கொண்ட நாவலந்தீவு என்ற பெயரையும் பயன்படுத்தினர். + +முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென பண்டைய நூற்தகவல்கள் குறிக்கின்றன. குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. இவ்��ிலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிலவற்றையும் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்பையும் கீழே காணலாம். + +தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து ஆகும். + +பண்டைய மற்றும் இடைக்கால தமிழ் மற்றும் சமசுகிருத படைப்புகள் பலவற்றில் இருந்த தென்னிந்தியாவின் நிலப்பகுதி பற்றிய புராண ஆவணங்கள் கடலில் மூழ்கி மறைந்தன. பாண்டிய பேரரசு கடல்கோளால் அழந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. ஆரம்பகால தமிழ் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென் மதுரையில் 4400 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்தது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் அச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்ந்தனர் என்றும் கடவுளர்களான சிவன், முருகன் குபேரன் ஆகியோர் தலைமையில் அச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன. +அதன் பிறகு 3700 ஆண்டுகள் கால அளவில் இரண்டாம் தமிழ்சங்கம் கபாடபுரத்தில் மலர்ந்ததாகவும்அகத்தியர் உள்ளிட்ட 59 புலவர்கள் அங்கிருந்து மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இவ்விரு சங்கங்களிலும் இயற்றப்பட்ட நூல்கள் அனைத்தும் கடல் கோளால் அழிந்துபட்டன என்றும் இதன்வழி அறியலாகிறது. உத்தர மதுரையில் தோன்றிய மூன்றாவது சங்கமான கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. + + + +இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. + +கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் நக்கீரரின் உரையில் குறிப்பிடப்படவில்லை. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில் இக்கண்டத்தின் பரப்பளவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கில் பற்றுளி நதியில் இருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் சுமார் 700 கவட்டம் அளவுக்கு இக்கண்ட நிலப்பகுதி இருந்ததாக அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். + +இக்கண்டம் 49 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டது என்றும் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ ���ென்றா ரென்றுணர்க." + +உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் உரைகளை முன் வைக்கின்றனர். + +1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது. + +"அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர்" என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை மெய்ப்பிக்கச் சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மனித இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாகக் குறிப்பிடுகிறார். அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும். + +அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் நூலில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது. + + +தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது . இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான வாய்ப்புகள் மேலும். + +சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் ���ில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள், + +குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன. + +மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது. + +வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது. +1. "மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்." + +2. மொழி அடர்த்திதமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம். இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார். + +3. ஞாலவியல் அட்டவணை +அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும். + +4. காலவணை(ஸ்காட் எலியட்) +இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும். + +"மூலம்:" ANCIENT INDIA + +அதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” நூலில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன. + + + + +
+ +தலைச்சங்கம் + +தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு "விரிசடைக் கடவுள்" ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. + +தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள். + + +பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. கடல் கோள் (கிமு 2387) நிகழ்ந்தது என்பர். + +இக்கருத்துகளின் உண்மையை உறுதி செய்ய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர்த்து வேறு தொல்லியல் உறுபகரும் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. + + + + + +சியாம் செல்வதுரை + +சியாம் செல்வதுரை (பி. 1965) கனேடிய எழுத்தாளர். இவருடைய "ஃபன்னி போய்" (Funny Boy, 1994) நாவலுக்கு கனேடிய விருதான "Books in Canada First Novel Award" கிடைத்தது. இவரது அடுத்த நாவல் "சினமன் கார்டன்ஸ்" (Cinnamon Gardens, 1998). + +இவர் கொழும்பு, இலங்கையில் பிறந்தவர். தமிழ் மற்றும் சிங்கள குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். சமபால் உறவுக்காரர். + +1983-இல் கொழும்பில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து குடும்பத்தோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் B.F.A. பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தற்போது டொராண்டோவில் வசித்து வருகிறார். + + + + + +இட ஒதுக்கீடு + +இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனமுற்றவர் போன்ற முறைகளில் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புர மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது எனக் கருதப் படுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும��� இட ஒதுக்கீடு ஏற்படலாம். + +இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும். + +இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். . பல சமூகத்தினர் நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றவர்களும் தற்போது இடஒதுக்கீடுவேண்டும் வேண்டும் என்று போராடும் மனநிலையில் உள்ளார்கள். ஆறுமுகம்கண்ணன் கடப்பாக்கம் + +அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : இங்கு 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.{cn}} + +தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. + +இந்தியா: இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது. + +மலேசியாவில் : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங��கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக 'பூமிபுத்திரர்' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர். + +இலங்கை: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு. + +பிரித்தன்: இங்கு ஒருவருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. + +பாஸ்னியா: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு. + +பிரேசில்: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும் + + + + + + + + +அருங்காட்சியகம் + +அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. இது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும். + +தொடக்ககால அருங்காட்சியகங்கள், பழம் பொருட்களின்மேல் ஆர்வம் கொண்ட வசதி படைத்த தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களால் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின. இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. + +அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன. +பல அருங்காட்சியகங்கள், சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பங்கள், குறிப்பிட்ட தொழில்துறைகளைச் சேந்தவர்கள் எனப் பல வகைப்பட்ட பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றன. பொது மக்களுக்கான நிகழ்ச்சிகள், அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவர்களாலோ அல்லது துறைசார் நிபுணர்களாலும் நிகழ்த்தப்படும் விரிவுரைகளாகவோ, திரைப்படங்களாகவோ, கலைநிகழ்ச்சிகளாகவோ, தொழில்நுட்ப விளக்கங்களாகவ��� இருக்கலாம். பல அருங்காட்சியகங்கள் அவை அமைந்துள்ள பகுதிகளின் பண்பாடுகளின் மீது குறிப்பான கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருட்களைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பதில்லை எனினும் சில அருங்காட்சியகங்களில் சில பொருட்களைத் தொட்டுத் தொடர்பாடுதல் ஊக்குவிக்கப்படுகின்றது. + +அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும். இந்த வகைகளுக்கு உள்ளேயே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்களைக் குறிப்பிடலாம். + +தொல்லியல் அருங்காட்சியகங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கும் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகங்களிற் பல திறந்தவெளி அருங்காட்சியகங்களாக உள்ளன. திறந்தவெளி அருங்காட்சியகங்கள் பொதுவாகத் தொன்மையான கட்டிடங்கள்; சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்; தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, வரலாறு போன்றவற்றைக் காட்டும் விடயங்கள் போன்றவற்றைப் பற்றியனவாக இருக்கின்றன.. பிற தொல்லியல் அருங்காட்சியகங்கள் தொல்லியல் ஆய்வுக் களங்களில் எடுக்கப்பட்ட பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பான முறையில் கட்டிடங்களுக்குள் காட்சிக்கு வைக்கின்றன. + +கலை அருங்காட்சியகங்களைக் "கலைக் கூடங்கள்" எனவும் அழைப்பதுண்டு. இவை கலை தொடர்பான பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை காட்சிக்கலைகள் சார்ந்த, ஓவியங்கள், வரைபடங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களில், வெண்களிப்பாண்டங்கள், உலோகவேலைப் பொருட்கள், தளவாடங்கள் போன்ற பயன்படு கலைப் பொருட்களும் இடம்பெறுவதுண்டு. நிகழ்படக்கலைப் படங்கள் பொதுவாகத் திரையி��ப்படுகின்றன. + +வரலாற்று அருங்காட்சியகங்கள், வரலாறு, வரலாற்றோடு நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உள்ள பொருத்தப்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய விடயங்களைக் கையாளுகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களுட் சில வரலாறு தொடர்பான பொதுவான விடயங்களைக் கையாள, வேறு சில வரலாறு தொடர்பான சிறப்பு அம்சங்கள் அல்லது ஒரு குறித்த இடம் தொடர்பான அம்சங்கள் மீது கவனம் செலுத்துகின்றன. வரலாற்று அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், பலவகை அரும்பொருட்கள், கலைப்பொருட்கள், தொல்பொருட்கள் போன்ற பல்வகைப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. + +கடல்சார் அருங்காட்சியகங்கள் கடல், கடற்பயணம் என்பவற்றோடு தொடர்புடைய அரும்பொருட்களைக் சேகரித்துக் காட்சிக்கு வைக்கும் சிறப்பு அருங்காட்சியகங்கள் ஆகும். இவற்றில், கப்பல்கள், கடல்களிலும் ஏரிகளிலும் நடைபெறும் பயணங்கள் தொடர்பான பொருட்கள் என்பன இடம்பெறும். சில வேளைகளில் வரலாற்றுக் கப்பல்கள் அல்லது அவை போல் உருவாக்கப்பட்ட கப்பல்களையே அருங்காட்சியகமாக ஆக்குவதுண்டு. இவை அருங்காட்சியகக் கப்பல்கள் எனப்படுகின்றன. + +படைத்துறை அருங்காட்சியகங்கள் படைத்துறையின் வரலாற்றை எடுத்துக் காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஒரு நாட்டை மையப்படுத்தியே அமைவது வழக்கம். இத்தகைய அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாடு ஈடுபட்ட போர்கள் தொடர்பான காட்சிப் பொருட்கள் இடம்பெறும். இக் காட்சிப் பொருட்களில், ஆயுதங்கள், பிற படைத்துறைச் சாதனங்கள், சீருடைகள், போர்க்காலப் பரப்புரைகள், போர்க்காலங்களில் மக்களின் வாழ்க்கை என்பன தொடர்பானவை அடங்கும். படைத்துறை அருங்காட்சியகங்கள் ஒரு குறித்த இடப்பகுதியை அல்லது ஒரு குறித்த படைத்துறைப் பிரிவை மட்டும் மையப்படுத்தி அமைவதும் உண்டு. படைத்துறை வானூர்திகள், போர்த்தாங்கிகள் என்பவற்றுக்கான அருங்காட்சியகங்கள் இவற்றுள் அடங்குவன. + +இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்கள் என்பன இயற்கை உலகு தொடர்பான அம்சங்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை இயற்கை பண்பாடு என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துகின்றன. தொன்மாக்கள், பண்டைக்கால வரலாறு, மானிடவியல் போன்றவை தொடர்பான காட்சிப்பொருட்களை இத்தகைய அருங்காட்சியகங்களில் காண முடியும். கூர்ப்பு, சூழலியல் தொடர்பான விடயங்கள், உயிரிப்பல்வகைமை போன்றவை இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்களில் சிறப்பான கவனத்தைப் பெறும் விடயங்களாக இருக்கும். இத்தகைய அருங்காட்சியகங்களுக்கு இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இயற்கை வரலாற்றுக்கான ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம், சிமித்சோனிய நிறுவனத்தின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், நியூ யார்க் நகரில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம் என்பவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். + + + + +பயிர் + +வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் வேறு பொருளியல் நோக்கங்களுக்காகப் பெருமளவில் செய்கை பண்ணப்படும் தாவரத்தைக் குறிக்கும். நெல், கோதுமை, சோளம் போன்றவை உணவுக்காக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படும் பயிர்கள் ஆகும். பருத்திப் பயிர் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு மூலப் பொருளான பஞ்சை உற்பத்தி செய்வதற்காகப் பயிரிடப்படுகின்றது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை போன்ற பயிர்களும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய கவர்ச்சிகரமான வருமானம் காரணமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. + + + + +கால்நடை வளர்ப்பு + +கால்நடை வளர்ப்பு (Animal husbandry) என்பது வேளாண்மைத் துறையில், உணவு, உரோமம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு சேகரித்தலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது. + +வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே ஆசியாவில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது. + +விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. + + +பால், முட்டை மற்ரும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. +தேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்கு ஒரு நல்ல மூலமாகவும் உள்ளது. + +செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு உரோமத்தைத் தருகின்றன. இந்த உரோமங்கள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு கம்பளி உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு மூலம் பட்டிழை உற்பத்தியாகிறது. +ஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விளங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். எருது, காளை மாடு, குதிரை, யானை, கழுதை போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. + +கால்நடை உற்பத்தி அமைப்பை உணவளித்தல் அடிப்படையிலும் அதாவது புல்வெளி சார்ந்தது, கலந்தது, நிலமற்றது. என வரையறுக்கலாம். புல்வெளி சார்ந்த கால்நடை உற்பத்தியானது புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்காலநடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் எருவானது வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எருவானது ஒரு பிரதான ஊட்டச்சத்து ஆதாரமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது. + +இந்த அமைப்பு குறிப்பாக 30-40 மில்லியன் மேய்ப்பர்கள் உள்ள வெப்பநிலை அல்லது மண்ணின் காரணமாக பயிர் உற்பத்தி சாத்தியமாகாத பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. கலப்பு உற்பத்தி முறைகள் புல்வெளி, தீவன பயிர்கள் மற்றும் அசைபோடும் விலங்குகள் முக்கியமாக கோழிகளும் பன்றிகளும் கால்நடைகளுக்கு தீனியிடும் தானியப் பயி்ர்களை பயன்படுத்துகிறது. +எருவானது பயிர்களுக்கான கலப்பு அமைப்புகளில் வகை மாதிரியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. +ஏறத்தாழ 68 சதவிகித விவசாய நிலம் காலநடை உற்பத்தியில் நிலையான மேய்ச்சல் நிலமாக உள்ளன. நிலமற்ற அமைப்புகள், பண்ணைக்கு வெளியிலிருந்து வரும் உணவு முறையை நம்பியிருக்கிறது, இது பயிர்களுடன் தொடர்பற்றிருப்பதைக் குறிக்கிறது, அத்துடன் கால்நடை உற்பத்தி பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கன அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) உறுப்பு நாடுகளில் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 70 சதவிகித தானியம் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. + +ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியும், இந்தப் பிரச்சினை குறித்து விவரமளித்த ஐ.நா.அறிக்கையின் இணை ஆசிரியருமான ஹென்னிங் ஸ்டெயின்பீல்ட், "இன்றைய மிகவும் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக காலநடைகள் உள்ளன" என்று கூறியுள்ளார். கால்நடை உற்பத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் எழுபது சதவிகித நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, அல்லது பூமியின் நிலப்பரப்பில் 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது. + +கால்நடை விரிவாக்கம் காடு அழித்தலை தூண்டக்கூடிய முக்கியக் காரணியாகவும் பார்க்கப்படுகிறது, அமேசான் வடிநிலத்தில் முன்னர் 70 சதவிகிதம் காடாக இருந்த பகுதி தற்போது மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள பகுதி தீவனப்பயிர்களுக்கென்று பயன்படுத்துவதற்கென்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காடு அழிப்பு மற்றும் நில தரமிழப்பு மூலமாக கால்நடைகளும் சுற்றுச்சூழல் மாறுபாட்டுக் குறைப்பையும் தூண்டுகிறது.கலப்பு உரங்கள் பயிர் உற்பத்தியை மிக அதிகமாக நம்பியிருக்கின்றன, எரு பயன்பாடு ஒரு சவாலாகவும் மாசுபாட்டிற்கான மூலாதாரமாகவும் ஆகிவிட்டன. + +இது பசுமையில்ல வாயுக்களின் மிகப்பெரிய மூலாதாரமாகவும், கார்பன் ஆக்ஸைடிற்கு இணையாக அளவிடப்பட்டுள்ள உலகின் 18 சதவிகித பசுமையில்ல வாயுக்களின் வெளிப்பாட்டிற்கு பொறுப்பேற்றுள்ளது. ஒப்பீட்டுரீதியில் பார்த்தால், போக்குவரத்துக்கள் அனைத்தும் 13.5 சதவிகித கார்பன் ஆக்ஸைடையே வெளியிடுகின்றன. +இது மனித இனம் சார்ந்த 65 சதவிகித நைட்ரஸ் ஆக்ஸைடையும் (புவி வெப்பமாதலுக்கு 296 முறை வாய்ப்புள்ள கார்பன் ஆக்ஸைடையும் கொண்டுள்ளது) மனித இனம் தூண்டும் மீத்தேனையும் (கார்பன் ஆக்ஸைடு புவியை வெப்பமாக்குவதைப் போல 23 மடங்கு) கொண்டுள்ளது. +இது, அமிலமழையையும், சுற்றுச்சூழல் அமிலமாதலையும் வழங்கக்கூடிய அம்மோனியாவையும் 64 சதவிகிதம் உருவாக்குகிறது. + +இரசாயனமயமாதல் அதாவது நீர்சார்ந்த சூழலமைப்புகளில் மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது, அல்கல் பெருகுவதற்கும் அனோக்ஸியாவிற்கும் காரணமாகின்றதுது. மீன்கள் கொல்லப்படுதல், உயிர்மாறுபாட்டு இழப்பிற்கு வழிவகுப்பதோடு, நீர் நிலைகளை குடிப்பதற்கும் பிற தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் பயனற்றதாகச் செய்கிறது. பயிர்நிலத்தில் மிதமிஞ்சி உரமிடுதல் மற்றும் எருவைப் பயன்படுத்துவது மற்றும் அதிக அளவில் கால்நடைகள் பெருக்கம் ஆகியவை விவசாய நிலத்திலிருந்து ஊட்டச்சத்து (முக்கியமாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) அழிவதற்கும் நீர் கசிவிற்கும் காரணமாகிறது. இந்த ஊட்டச் சத்துக்கள், நீர்சார்ந்த சூழலமைப்பின் இரசாயனமயமாக்கலுக்கு மாசுபாட்டு மூலாதாரங்களாக இருக்கின்றன. + + + + +டப்பாங் கூத்து + +டப்பாங் கூத்து இசையும் ஆட்டமும் கலந்த தமிழர் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றாகும். இறப்பு வீடுகளில் இது வழங்கப்பட்டு வந்தாலும் இன்று இது ஒரு பரவலர் ஆட்டமும் இசையாகவும் மருவியுள்ளது. தமிழ் சினிமாவிலும் இது பிரபலமாக இருக்கின்றது. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) + +"உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது. " + +2007 |2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
+1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
+1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
+1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
+1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
+1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
+1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
+1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 |
+வெளி இணைப்புக்கள் + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
+ +ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் + +ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்(8° 37’ 47.6" N; 77° 52’ 34.9"E) தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்களம் கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. + +1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. + +ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ள���. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. + +இங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. + +மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். + +ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். + +ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார். + +ஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர். + +ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார். + +ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது. + +ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார். + +ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன. + + + + + + +நகர்ப்புறக் கலைகள் + +தற்காலத்தில் இடம்ப���ற்றுவரும் துரித நகரமயமாக்கலும், நகர்ச்சூழலும் பல புதிய கலைகளை தோற்றுவித்தும், பழைய கலைகளுக்கு புது வடிவங்கள் கொடுத்தும், பிற பல கலைகளை மீளுருவாக்கமும் செய்தும் வருகின்றது. இப்படி நகரத்தவர்களால் நகர்ச்சூழலில் முக்கியத்துவம் பெறும் கலைகளை நகர்ப்புறக் கலைகள் எனலாம். இவற்றை கிராமத்து சூழலோ அமைந்த கலைகளோடு ஒப்பிட்டு ஆயலாம். நகரத்தில் இருக்கும் மனிதன் அன்னியப்பட்டு இருக்கின்றான் என்ற கருத்துக்கோட்பாட்டுக்கு இந்த கலைகள் ஒரு மறுப்பாக அமைகின்றன. + + + + +நிலப்படவரைவியல் + +நிலப்படவரைவியல் என்பது, நிலப்படங்கள் தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக் குறிக்கும். முற்காலத்தில் நிலப்படங்கள் பேனாக்களையும், காகிதங்களையும் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன,ஆனால் கணினித்துறையின் வளர்ச்சியுடன் நிலப்படவரைவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்காலத்தில் வணிகத்தரம் கொண்ட நிலப்படங்கள் பெரும்பாலும் நிலப்படம்வரையும் மென்பொருட்கள் மூலமே உருவாக்கப்படுகின்றன. இவை, கணினி உதவி வரைதல் (CAD) மென்பொருள், புவியியல் தகவல் முறைமை (GIS), சிறப்பு நிலப்பட வரைதல் மென்பொருள் ஆகிய வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. +நிலப்படங்கள், இடஞ்சார் தரவுகளுக்கான கட்புலன் கருவிகளாக (visualization tools) இருக்கின்றன. இடஞ்சார் தரவுகள், அளத்தல் மூலம் பெறப்பட்டுத் தகவல்தளங்களில் சேமிக்கப்படலாம். இவற்றைப் பின்னர் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்தத் துறையின் இன்றைய போக்கு, முன்னைய "அனலாக்" முறையிலிருந்து, கூடிய இயங்கியல் தன்மைகள் கொண்டதும், ஊடுதொடர்பாடல் வசதிகளை வழங்கக்கூடியதும், "எண்ணிம" முறைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதுமான வழிமுறைகளை நோக்கிச் செல்கின்றது. +உலகம் அளக்கப்படக் கூடியது மற்றும் அதன்மூலம், நம்பத்தகுந்தவகையில் மெய்யான உலகைப் பிரதிநிதித்துவப் படுத்தலாம் என்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே நிலப்படவரைவியல் வழிமுறைகள் தங்கியுள்ளன. நிலப்பட ஆக்கம், உயர்தரத்திலான திறமைகளையும், மனப்பாங்கையும் வேண்டிநிற்கிறது. புவியியல் தோற்றப்பாடுகள் தொடர்பான குறியீடுகளின் பயன்பாட்டிலும், குறுக்கப்பட்ட அளவில், பண்பியல் அடிப்படையில் உலகைப் பார்த்துச் செயல்படுவதிலும் இவ்வாறான திறமைகள் தேவைப்படுகின்றன. + + + + +புவியியல் தகவல் முறைமை + +புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை ஆகும். உண்மையில், இது, புவியியல் ரீதியில் தொடர்பு குறிக்கத்தக்க தகவல்களை ஒருங்கிணைக்கவும், சேமிக்கவும், தொகுக்கவும், பகுத்தாயவும், பகிர்ந்து கொள்ளவும், காட்சிப்படுத்தவும் வல்லமை கொண்ட ஒரு கணினி முறைமை ஆகும். பொதுவான நோக்கில், புவியியல் தகவல் முறைமை என்பது, பயனர்கள், தாங்கள் உருவாக்கிய தேடல்கள் போன்றவை மூலம் கணினியுடன் ஊடுதொடர்பாடல்களைப் பேணவும், இடஞ்சார் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யவும், தரவுகளைத் தொகுக்கவும், இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகளைச் சமர்ப்பிக்கவும் இடந்தரக்கூடிய ஒரு சாதனமாகப் பயன்படக்கூடியது. இந்த முறைமைக்கு அடிப்படையாக உள்ளது, புவியியல்சார் தகவல் அறிவியல் (Geographic information science) என்னும் அறிவியல் துறையாகும். இது பல பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புக்கான ஒரு துறையாக உள்ளது. + +புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பத்தைப் பல்வேறு துறைகளிலே பயன்படுத்திக் கொள்ள முடியும். அறிவியல் ஆராய்ச்சி, வள மேலாண்மை, சொத்து மேலாண்மை, சூழல்சார் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment), நகர்ப்புறத் திட்டமிடல், நிலப்படவரைவியல், குற்றவியல், வரலாறு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை போன்ற துறைகளில் இது பெரிதும் பயன்படக்கூடியது. எடுத்துக்காட்டாக, இயற்கை அழிவுகளின்போது, அவசரகால உதவிகள் அணுகுவதற்கான கால அவகாசங்களை இலகுவில் கணிப்பதற்கு, அவசரகாலத் திட்டமிடுபவர்களுக்கு இது உதவும். சூழல் மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடங்களைத் தெரிவு செய்வதிலும் புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும். புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றின்மூலம் ஏற்படும் சந்தை விரிவாக்கத்தினால் ஏற்படக்கூடிய விற்பனை வளர்ச்சிகளைக் கண்டறிவதற்கும் இம் முறைமையினை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். + +குவான்டம் ஜிஸ் + + + + +புவியியல்சார் தகவல் அறிவியல் + +புவியியல்சார் தகவல் அறிவியல் என்பது, புவியியல் தகவல் முறைமையின் உருவாக்கம், பயன்பாடு போன்றவற்றுக்கு அடிப்படையாகவுள்ள கல்விசார் கோட்பாடு ஆகும். இது எவ்வாறு புவியியல் தகவல் முறைமை செயற்படுகின்றது, அதற்கான வன்பொருட்கள், மென்பொருட்கள், இடஞ்சார் தரவுகள் போன்ற விடயங்களைக் கையாளுகின்றது. + + + + +ஏப்ரல் 4 + + + + + + + +வீரமணி ஐயர் + +வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.. + +யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். + +கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார். + +தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார். + +`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும். + +72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும். + +கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமஸ்கிருத மொழியிலும் பாடல்கள் எழுதியுள்ளார். + +இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ, மகாநதி ஷோபனா]] ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன. + +கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். + +1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார். + +யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார். + + + + + + + + +பாலசரஸ்வதி + +தஞ்சாவூர் பாலசரஸ்வதி ("T. Balasaraswati", மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். + +பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை "உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்" என பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான். + +"வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது". என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார். + +பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இது தமிழிலும் வெளிவந்துள்ளது. + + + + + + +த. ஆனந்த கிருஷ்ணன் + +த. ஆனந்தகிருஷ்ணன் (பி. 1938) மலேசியா தொழிலதிபர். மலேசியத் தமிழரான இவர் கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் டவர் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்���ட்டுள்ளது. இவரது மூதாதையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். + +ஆனந்த கிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலும்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியல் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் முன்னோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். + +கோலாலும்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் பள்ளி கல்வி பெற்றார். உயர்பள்ளி படிப்பை கோலாலும்பூரில் உள்ள விக்டோரியா கல்வியகத்தில் பயின்றார். பிறகு பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் கொழும்பு திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டம் - அரசியல் அறிவியல் புலத்தில் ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் கல்வி பயின்றார். உயர்கல்வியை அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் பயின்று முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார் + +இவர் மலேசிய மேக்சிஸ் கம்யுநிகேசன் மற்றும் இந்திய ஏர்செல் நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் + + + + +அ. சிவானந்தன் + +அம்பலவாணர் சிவானந்தன் ("Ambalavaner Sivanandan", 20 டிசம்பர் 1923 – 3 சனவரி 2018) இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரும், சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இலண்டனில் இயங்கும் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையம்" ("Institute of Race Relations") என்னும் தனியார் கல்வி அறக்கட்டளையின் இயக்குநராகப் பணியாற்றியவர். இந்த அறக்கட்டளை "இனமும், வகுப்பும்" ("Race and Class") என்னும் காலாண்டிதழை வெளியிட்டு வந்தது. இவர் சில புதினங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதலாவது புதினம் "When Memory Dies" 1998 ஆம் ஆண்டின் பொதுநலவாய எழுத்தாளர்களுக்கான பரிசைப் பெற்றது. இலங்கையில் பிறந்த இவர் 1958 இனக்கலவவரத்தை அடுத்து புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தார். + +யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அஞ்சல் அலுவலர் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர் சிவானந்தன். கொழும்பு புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றார். இங்கு இவர் தமிழ் மொழியுடன் ஜே. பி. டி சில்வா என்னும் ஆங்கில ஆசிரியரிடம் ஆங்கில இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1945 இல் பொருளியலில் பட்டம் பெற்றார். பட்டப் படிப்பை முடித்து மலையகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை வங்கியில் இணைந்து வங்கி முகாமையாளரானார். + +1958 இனக்கலவவரத்தால் பாதிக்கப்பட்டு இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு மிடில்செக்சு நகர நூலகங்களில் பணியாற்றினார். இறுதியில் மத்திய லண்டன் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையத்தில்" (IRR) பிரதம நூலகராகப் பணியாற்றினார். இவரது உழைப்பால் நிறுவப்பட்ட இந்நூல் நிலையம் 2006 இல் வாரிக் பல்கலைக்கழக நூலகத்திற்கு இடம் மாற்றப்பட்டது. இது இப்போது "சிவானந்தன் சேகரிப்பு" என அழைக்கப்படுகிறது. + + + + + +பரவளைவு + +கணிதத்தில் பரவளைவு அல்லது பரவளையம் (ஆங்கிலம்:"parabola") என்பது ஓர் கூம்பு வெட்டாகும். இக்கூம்பு வெட்டின் ஆங்கிலப் பெயர், "parabola" என்பது "παραβολή" என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. ஓர் நேர்வட்டக் கூம்பின் உச்சியையும் அதன் அடிவட்டப் பரிதியில் அமையும் ஒரு புள்ளியையும் இணைக்கும் கோட்டிற்கு இணையான ஒரு தளத்தால், அக்கூம்பு வெட்டப்படும் போது கிடைக்ககூடிய வெட்டுமுக வடிவமே பரவளையமாகும். + +பரவளையத்தின் மற்றுமொரு வரையறை: + +ஒரு நிலையான புள்ளி மற்றும் ஒரு நிலையான கோடு இரண்டிலிருந்தும் எந்த நிலையிலும் சமதூரத்திலேயே உள்ளவாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகப் பரவளைவு வரையறுக்கப்படுகிறது. இவ்வரையறையில் குறிப்பிடப்படும் நிலையான புள்ளி பரவளைவின் குவியம்) எனவும் நிலையான கோடு பரவளைவின் இயக்குவரை எனவும் அழைக்கப்படுகின்றன. + +பரவளைவின் இயக்குவரைக்குச் செங்குத்தாகக் குவியத்தின் வழியே செல்லும் கோடு பரவளைவின் சமச்சீர் அச்சு என அழைக்கப்படும். இந்த அச்சும் பரவளைவின் வளைவரையும் வெட்டிக் கொள்ளும் புள்ளி பரவளைவின் உச்சி எனப்படும். பரவளைவின் உச்சிப் புள்ளியில் வளைவரையின் வளைவு மிக அதிகமாக இருக்கும். பரவளைவுகள் மேற்புறம், கீழ்ப்புறம், இடப்புறம் மற்றும் வலப்புறம் திறந்த அமைப்புகளாக அமையலாம். பரவளைவுகள் வடிவொத்தவை. + +தானுந்துகளில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகளிலிருந்து ஏவுகணைகள் வரை பரவளைவுகளின் பயன்பாடு விரிந்துள்ளது. இயற்பியல், பொறியியல் போன்ற முக்கியமான பலதுறைகளில் பரவளைவு பயன்படுகிறது. + +கூம்பு வெட்டுகளைப் பற்றி முதன்முதலாக கிமு நான்காம் நூற்றாண்டின் கிரேக்க கணிதவியலாளர் மெனக்மஸ் ஆராய்ந்துள்ளார். கவராயமும் நேர்விளிம்பும் கொண���டு தீர்க்கமுடியாத கணக்கான கனசதுரத்தை இரட்டிப்பாக்குதலுக்கு இவர் பரவளைவுகளைப் பயன்படுத்தித் தீர்வு கண்டார். (எனினும் அத்தீர்வு கவராயம் மற்றும் நேர்விளிம்பு வரைமுறை எதிர்நோக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை). கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஆர்க்கிமிடீசால், அவரது படைப்பான "The Quadrature of the Parabola" இல் பரவளையத்துண்டு என அழைக்கப்பட்ட பரவளையத்துக்கும் ஒரு கோட்டுத்துண்டுக்கும் இடைப்பட்டப் பரப்பு கணக்கிடப்பட்டது. இந்த வளைவரைக்குப் பரவளைவு என்ற பெயரிட்டது கணிதவியலாளர் அப்பலோனியசாகும். பரவளைவு மற்றும் பிற கூம்பு வெட்டிகளின் குவியம்-இயக்குவரை பண்பைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டிரியாவின் கணிதவியலாளர் பாப்பஸ். + +புவியீர்ப்பினால் ஏற்படும் சீரான முடுக்கத்தின் விளைவாக ஒரு எறிபொருளின் பாதை பரவளைவாக அமைவதைக் கலீலியோ கண்டுபிடித்தார். தெறிப்புவகைத் தொலைநோக்கிக் கண்டுபிடிக்கப்படும் முன்பே ஒரு பரவளைவுத் தெறிப்பியால் ஒரு பிம்பத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து நன்கறியப்பட்டிருந்தது. ரெனே டேக்கார்ட், "மாரின் மெர்சென்னே" மற்றும் "ஜேம்ஸ் கிரகரி" போன்ற பல கணிதவியலாளர்களால் அதற்கான வடிவமைப்புகள் முன் வைக்கப்பட்டன. 1668 இல் முதல் தெறிப்புவகைத் தொலைநோக்கி உருவாக்கிய ஐசக் நியூட்டன் அமைப்பது கடினம் என்ற காரணத்தால் பரவளைய எதிரொளிப்பிக்குப் பதில் கோளவடிவ எதிரொளிப்பியைப் பயன்படுத்தினார். பெரும்பாலான தற்காலத்தைய தெறிப்புவகைத் தொலைநோக்கிகள், செயற்கைக்கோள் தட்டுகள் மற்றும் ராடார் ஏற்பிகளில் பரவளைய ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. + +பரவளையத்தின் இயக்குவரையின் சமன்பாடு: "x" = −"p"; குவியம் ("p", 0) மற்றும் பரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளி ("x", "y") எனில்: + +பாப்பசின் பரவளைய வரையறைப்படி, புள்ளிக்கும் குவியத்திற்கும் இடையேயுள்ள தூரமும் அப்புள்ளிக்கும் இயக்குவரைக்கும் இடையேயுள்ள தூரமும் சமமாக இருக்கும். + +இருபுறமும் வர்க்கப்படுத்திச் சுருக்க: + +இதுவே பரவளையத்தின் சமன்பாடாகும். இச்சமன்பாட்டில் "x" மற்றும் "y" இரண்டையும் பரிமாற்றக் கிடைக்கும் சமன்பாடு தருவது நிலைக்குத்து அச்சினைக் கொண்ட பரவளையம். + +பரவளையத்தின் உச்சியை ஆதியாக மட்டுமல்லாமல் வேறு ஏதேனுமொரு புள்ளி ("h", "k") ஆக எடுத்துக் கொண்டால் நிலைக்குத்து அச்சு கொண்ட பரவளைவின் சமன்பாடு: + +இச்சமன்பாட்டைப் பின்வருமாறும் கொள்ளலாம்: + +எனவே "x" இல் அமைந்த இருபடிச் சார்பின் வரைபடம் நிலைக்குத்து அச்சினைக் கொண்டதொரு பரவளையமாகும். + +பொதுவாக பரவளையமானது கார்ட்டீசியன் தளத்தில் பின்வரும் சமன்பாட்டால் (தரப்பட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு) குறிக்கப்படும்: + +இச்சமன்பாடு பரவளைவைக் குறிப்பதற்குத் தேவையான கட்டுப்பாடு: + +இச்சமன்பாட்டின் கெழுக்கள் எல்லாம் மெய்யெண்கள். மேலும் "A" மற்றும் "C" இரண்டும் ஒரே சமயத்தில் பூச்சியமாக இருக்காது. + +இச்சமன்பாடு பரவளைவைக் குறிக்க, இரு நேரியல் சமன்பாடுகளாகக் காரணிப்படுத்த இயலாத ஒன்றாக இருக்க வேண்டும். பின்வரும் 3×3 அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே மேலே தரப்பட்ட சமன்பாட்டினைப் பிரிக்க முடியாது. + +அவ்வாறு பிரிக்கக் கூடியதாயின் அச்சமன்பாடு இரட்டைக் கோடுகளைக் குறிக்கும். அவ்விரண்டு கோடுகளும் இணையான, கற்பனையான அல்லது ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளாக அமையலாம். + +பரவளையத்தின் உச்சி formula_10 மற்றும் உச்சியிலிருந்து குவியத்திற்கும் இயக்குவரைக்கும் இடையேயுள்ள தூரங்கள் formula_11 எனில்: + +கார்ட்டீசியன் வடிவம்: + +இங்கு + +துணையலகு வடிவம்: + +கார்ட்டீசியன் வடிவம்: + +இங்கு + +துணையலகு வடிவம்: + +பரவளையத்தின் பொதுவடிவம்: + +கூம்புவெட்டின் பின்வரும் பொதுச்சமன்பாட்டிலிருந்து இச்சமன்பாடு பெறப்படுகிறது: + +பொதுவாக: + +குவியம் "F"("u", "v") மற்றும் இயக்குவரை formula_27 கொண்ட பரவளையத்தின் சமன்பாடு: + + +பரவளைவிற்கு ஒரேயொரு பிரதிபலிப்புச் சமச்சீர் அச்சு உண்டு. இந்த அச்சு பரவளையத்தின் குவியத்தின் வழியாக இயக்குவரைக்குச் செங்குத்தாக அமையும். இந்த அச்சும் பரவளையமும் சந்திக்கும் புள்ளி பரவளையத்தின் உச்சி என அழைக்கப்படுகிறது. பரவளையமானது இவ்வச்சைப் பொறுத்து சுழல்வதால் உருவாகும் முப்பரிமாண வடிவம் பரவளையத்திண்மம் எனப்படும். + +பரவளைய வடிவத் தோற்றங்களை நடைமுறையில் பல இடங்களில் காண முடியும். + +ஆதி (0,0) யை உச்சியாகவும் "y"-அச்சை சமச்சீர் அச்சாகவும் கொண்ட பரவளையம்: + +குவியம் "F" (0,"f") மற்றும் இயக்குவரை கோடு "L" மற்றும் "P" பரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளி எனில் பரவளையத்தின் வரையறைப்படி: + +இயக்குவரை பரவளையத்தின் சமச்சீர் அச்சிற்குச் செங்குத்தாக இருக்கும் என்பதால் இங்கு இயக்குவரை "x" அச்சுக்கு இணையாகவும் (0,-"f") புள்ளிவழியாக செல்வதாகவும் இருக்கும். எனவே பரவளையத்தின் மீதான புள்ளி "P=(x,y)" ஆனது (0,"f") மற்றும் ("x",-"f") ஆகிய இரு புள்ளிகளிலிருந்தும் சமதூரத்தில் அமையும். + +"x" மற்றும் "f-y" இரண்டையும் ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களாகக் கொண்டால் அதன் செம்பக்கம் "FP": + +மேலும் "QP": + +இரண்டையும் சமப்படுத்த: + +இருபுறமும் வர்க்கம் காண: + +"x²" ஆல் வகுக்க ("x" பூச்சியமற்றதாகக் கொள்ளப்படுகிறது): + +எனவே பரவளையம் formula_40 என்பதை formula_41 என எழுதலாம். + + + +இயக்குவரையின் சமன்பாடு: + +பரவளையத்தின் குவியத்தின் வழியாக அதன் இயக்குவரைக்கு இணையாக வரையப்பட்ட நாண் பரவளையத்தின் செவ்வகலம் (latus rectum) எனப்படும். செவ்வகலத்தில் பாதி அரைச் செவ்வகலம் எனப்படும். + + + + + + +கல்திட்டை + +கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. + +தொடக்கக் கல்திட்டைகள் ஏன், யாரால், எப்பொழுது கட்டப்பட்டன என்பது குறித்துத் தெளிவில்லை. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை யாரால் கட்டப்பட்டவை என்பதைத் தொல்லியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், இவை எதற்காகக் கட்டப்பட்டன என்று அறிவது கடினமாக உள்ளது. தெளிவான சான்றுகள் இல்லாவிட்டாலும், இவை எல்லாமே கல்லறைகளாகவோ அல்லது புதைகுழிகளாகவோ இருக்கலாம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. கதிரியக்கக்கார்பன் முறை மூலம் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்கத்தக்க மனித எச்சங்கள் இவ்வாறான கல்திட்டைகளுக்கு அருகில் காணப்படுவது உண்டு. ஆனாலும், இவ்வெச்சங்கள் கல்திட்டைகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிப்பது கடினம். + +கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. + +பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பால்ட்டிக் மறும் வட கடற்கரைப் பகுதிகளில், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்குத் தெற்கே காணப்பட்டுள்ளன. + +இது போன்ற நினைவுச் சின்னங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகில் மிகச் செறிவாக அமைந்துள்ள கல்திட்டைகள் கொரியத் தீவக்குறையில் காணப்படுகின்றன. இவை, கி.மு முதலாம் ஆயிரவாண்டில் இருந்தான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை. தென்கொரியாவிலும், வடகொரியாவிலும் உள்ள கற்திட்டைகளின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். இது உலகிலுள்ள மொத்தக் கற்திட்டைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 40% ஆகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களான கோச்சாங், இவாசுன், காங்வா( இவாசுன் – ) ஆகிய மூன்று களங்களில் மட்டும் 1000க்கு மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. வடக்கத்திய வகையைச் சேர்ந்த, கங்வா என்னும் இடத்திலுள்ள கற்திட்டைகள் மேசை போன்ற அமைப்புடையவை. இதிலே முன்னோருக்கான கிரியைகள் நடத்தப்பட்டன. தென்கொரியாவில் உள்ள இது போன்ற கற்திட்டைகளில் மிகப் பெரியது இதுவே. இது 2.6 x 7.1 x 5.5 மீட்டர் அளவுகள் கொண்டது. + +கல்திட்டைக்கான கொரிய மொழிச் சொல் "கொயின்டோல்" என்பது. "தாங்கப்பட்ட கல்" என்பது இதன் பொருள். உலகின் பிற பகுதிகளில் கல்திட்டைகள் குறித்த ஆய்வுகள் பொருமளவில் இடம்பெற்றதற்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே கொரியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள் குறித்த ஆய்வுகள் தொடங்கின. 1945க்குப் பின்னரே கொரிய அறிஞர்களால் புதிய ஆய்வுகள் தொடங்கப்பெற்றன. கொரியக் கல்திட்டைகளின் உருவவியல் வளர்ச்சி அத்திலாந்திக் ஐரோப்பியக் கல்திட்டைகளிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. + +இந்தியாவிலும் பல பகுதிகளில் கற்திட்டைகள் உண்டு. கேரளாவின், மறையூர் என்னுமிடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழிஞ்சுவாடு என்னும் சிற்றூருக்கு அண்மையில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக் கற்திட்டைகள் இரண்டு ���ுதல் ஐந்து கற்திட்டைகள் கொண்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு குடும்பத்துக்கு உரியது எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் இவ்வாறான கூட்டங்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் கனமான கருங்கற்களால் ஆனவை. இப்பகுதி பல நூற்றாண்டுகளாக ஆதி சேரர் எனப்பட்ட இனக்குழு மரபினரின் புதைகுழிகளுக்கான இடமாக இருந்துள்ளது. + +தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகளூர் வெங்கடேசன் ஆகியோருடன் கூடிய குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இது பொன்சொரி மலையில் 2,250 அடி உயரத்தில் தாமரைப்பாழி எனும் சுனையருகே உள்ளது. இதனை இறந்தவரின் வீடு என்று பொருள் படும்படி மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டு தற்போது பாண்டவர் வீடு என்று கூறுகின்றனர். இக்கற்திட்டை ஒரே பலகைக் கல்லால் அமைக்கப்படாமல் துண்டு கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. + + + + + +தமிழர் நாடகக் கலை + +தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. + +"முதன்மைக் கட்டுரை" "தமிழ் நாடக வரலாறு" + +இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம் பற்றிய குறிப்பு பின்வருமாறு: இக்குறிப்பு தமிழர் அன்றே நாடகத்தின் பல கூறுகளை கவனித்து நாடகம் போட்டதைக் குறிக்கலாம். + +"முதன்மைக் கட்டுரை: ஈழத்தமிழ் நாடகங்கள்" + +ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும். + + + + + +கா. கைலாசநாதக் குருக்கள் + +கா. கைலாசநாதக் குருக்கள் (K. Kailasanatha Kurukkal பி: ஆகத்து 15, 1921 - இ: ஆகத்து 8, 2000) இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர். +ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார்.[[ஆங்கிலம்]], [[தமிழ்]], [[இலத்தீன்]], [[பாளி]], [[வடமொழி]] ஆகியவற்றில் புலமை மிக்கவர். செருமன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர். + +இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] நிறுவப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார். அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார். +யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே. +பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு இவரே உந்துசக்தியாக விளங்கினார். + + + +ஆகத்து 8, 2000ல் ஆத்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் காலமானார். + +Professor K. Kailasanatha Kurukkal (ஆங்கிலம்) + +[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] +[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]] +[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]] +[[பகுப்பு:தமிழறிஞர்கள்]] +[[பகுப்பு:1921 பிறப்புகள்]] +[[பகுப்பு:2000 இறப்புகள்]] + + + +தமிழர் ஆடற்கலை + +தமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல் (இலக்கியம்), இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலான தொன்மையான நடன வடிவங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றன. + +நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம். + +பரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது . இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர். சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்.. இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். + +இந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது. + +பொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். + +7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும். + +மயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது. + +மேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு + + + +பார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல் + + + + + + +கல்பதுக்கை + +கல்பதுக்கை ("cist", அல்லது "kist") என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும். கற்பதுக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பல நாடுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டதுக்கான சான்றுகள் காண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, இது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான கல்லால் அமைக்கப்பட்ட சிறிய பெட்டிபோன்ற அமைப்பு எனப்படுகிறது. தென்னிந்தியாவிலும் பல கற்பதுக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியாவில் காணப்படும் பிற்காலத்துக் கற்பதுக்கைகள் கூடிய சிக்கல்தன்மை கொண்டவை. இவை நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்புக் கொண்டவை. இயற்கையாகக் காணப்படும் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்திட்டைகள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே இவ்வாறான கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன. + +மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலியில் தரப்பட்டுள்ள சொற்பொருள்களில் இருந்து, "பதுக்கை" என்னும் சொல் "மறை", "ஒளி" போன்ற பொருள் கொண்ட "பதுக்கு" என்பதில் இருந்து பிறந்ததாகத் தெரிகிறது. இப்பேரகர முதலியின்படி, "பதுக்கை" என்பது "கற்குவியல்", "இலைக்குவியல்", "மணற்குன்று" போன்ற பல்வேறு குவிந்திருக்கும் பொருட்களைக் குறிப்பதாகவும் தெரிகிறது. பண்டைக் காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்த இடங்களை மறைப்பதற்கான கற்களைக் குவியல்கள் பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. பல சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் "பதுக்கைகள்" இவ்வகையினவாக இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், அடக்கக் குழிகள் சிக்கல்தன்மை கொண்டவையாக வளர்ச்சியடைந்த பின்னரும், அவற்றின்மீது அடையாளத்துக்காகக் கற்கள் குவிக்கப்பட்டு முழு அமைப்புமே பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. "கல்பதுக்கை" அல்லது "கற்பதுக்கை" என்னும் வழக்கு சங்ககாலப் பாடல்களில் காணப்படவில்லை. பிற்காலத்திலேயே இச்சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். + +சங்கத்தமிழ் ஆக்கங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் குறித்த குறிப்புக்கள் உள்ளன. அக்காலத்தில் பாலை நிலத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொன்று பொருள் பறிக்கும் மறவர்கள், அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடிக் கற்களையும் குவித்து மேடு செய்து வைப்பர். பாலை நிலத்தினூடு செல்லும் பாதைகளின் மருங்கில் காணப்படும் இவ்வாறான பதுக்கைகளின் அச்சம் ஊட்டும் வருணனைகளைச் சங்கப் பாடல்கள் தருகின்றன. நரிகள் போன்ற காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருப்பதற்காகவும், பிணங்கள் எழுந்துவரக்கூடும் என்ற நம்பிக்கையினால், அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்குமாகவே தொடக்க காலங்களில் பிணங்களையோ, அவை புதைக்கப்பட்ட இடங்களையோ கற்கள் போட்டு மூடினர் என்கின்றனர். + +சங்ககாலத்து நினைவுக் கற்கள் பற்றி ஆராய்ந்த கிருஷ்ணமூர்த்தி, அக்காலத்தில் நினைவுக் கற்களின் வளர்ச்சியினை 4 கட்டங்களாகப் பார்க்கலாம் என்கிறார். இவற்றில் முதற்கட்டம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று���், இரண்டாம் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை என்றும், மூன்றாம் கட்டம் கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என்றும் இதற்குப் பிந்திய காலத்தை நான்காம் கட்டமாகவும் அவர் பிரித்துள்ளார். இக்கால கட்டங்களினூடாகப் பல்வேறு வகையான நினைவுச் சின்னங்களுடன் கற்பதுக்கைகளும் வளர்ச்சியடைந்து வந்தன. காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகப் பிணங்களைக் கற்களால் மூடிய ஒரு நிலையில் இருந்து, சடங்குகளோடு கூடிய நினைவுச் சின்ன அமைப்புமுறை வளர்ச்சியடைந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. நடுகல் எடுப்பது குறித்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறு நிலைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இங்கே நடுகல் என்பது தற்காலத்தில் நடுகல் என்று புரிந்து கொள்ளப்படுவதை விட, கற்பதுக்கையை உள்ளடக்கிய பிற நினைவுக் கற்களுக்கே பொருந்தும் எனப்படுகிறது. + +தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன. + +கற்பதுக்கைகள் வடிவமைப்புக்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. இதனால், கருங்கல்லைப் பயன்படுத்தாமல், செதுக்குவதற்கு இலகுவான செம்புரைக்கல்லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இவ்வகைக் கற்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் இவ்வகையான கற்பதுக்கைகள் கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறான கற்பலகைகளைச் சுவசுத்திக்க வடிவில் அமையும்படி நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு கற்கள் உட்புறமாகச் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க உதவுகிறது. இது மேலே ஒரு பலகைக் கல்லை வைத்து மூடப்படுகிறது. + +நான்கு பக்கச் சுவர்களில் ஒன்றில் துளை இடப்பட்டிருக்கும். இது இடுதுளை எனப்படுகிறது. பெரிய கற்பதுக்கைகளில் இத்துளைகள் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாக இருக்கும். இந்த இடுதுளையூடாகவே ஈமக் குழிக்குள் ஈமப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. உள்ளே தடுப்புச் சுவர்கள் இருக்கும் இடங்களில் இவற்றிலும் இடுதுளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுதுளைகள் சத���ரம், வட்டம் ஆகிய வடிவங்களிலும், வேறு சில குறியீட்டு வடிவங்களிலும் காணப்படுகின்றன.. "ம" வடிவில் அமைந்த இடுதுளைகள் தருமபுரி, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சில இடங்களில் காணப்படுகின்றன. + + + + + + +குத்துக்கல் + +குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என்பது பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும். + +தற்போது இருப்பவற்றுள் மிகப்பெரிய குத்துக்கல், பிரான்ஸ் நாட்டின் பிரிட்டனியில் உள்ள லோக்காமரியாக்கர் (Locmariaquer) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அமைக்கப்பட்டபோது 20 மீட்டர்கள் உயரமாக இருந்திருக்கக்கூடிய இது இன்று நான்கு துண்டுகளாக உடைந்து விழுந்து கிடக்கின்றது. இதனால் இது "பெரிய உடைந்த குத்துக்கல்" எனப்படுகின்றது. முழுக்கல்லாக இருந்தபோது சுமார் 330 தொன்கள் நிறை கொண்டதாக இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள இது, இயந்திர வலுவின் உதவியின்றி மனிதனால் நகர்த்தப்பட்ட, உலகிலேயே இரண்டாவது அதிக பாரமான பொருள் என்று கூறப்படுகின்றது. + +பிரிட்டனியில் உள்ள கர்னாக் கற்கள் (Carnac stones) எனப்படும் குத்துக்கல் தொகுதி மிகவும் பிரபலமானது. இங்கே 3000 க்கு மேற்பட்ட குத்துக்கற்கள் மூன்று பிரிவுகளாக ஒழுங்கு படுத்தப்பட்டுப் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. + +குத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். சேலம் நகரின் அம்மாப்பேட்டை எனுமிடத்தில் குத்துக்கல்லை கூச்சிக்கல் முனியப்பன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் எனும் ஊரில் உள்ள குத்துகல்லை குத்துக்கல் மாடசுவாமி என்று வழிபடுகின்றனர். + + + + + +கர்னாக் கற்கள் + +கர்னாக் கற்கள் (Carnac stones) என்பது, பிரான்ஸ், பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, கல்திட்டைகள், குத்துக்கற்கள் போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிரு���்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் "செல்ட்டிக்"குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும். + + + + +நேர்மின்னி + +நேர்மின்னி (proton, புரோத்தன்) என்பது அணுக்கருவின் உள்ளே இருக்கும் நேர்மின்மம் கொண்ட ஓர் அணுக்கூறான துகள் ஆகும். நேர்மின்னியின் மின்ம அளவானது 1.602 × 10 C கூலாம் ஆகும். இதுவே ஓர் அடிப்படை மின்ம அலகும் ஆகும். இதன் திணிவு (பொருண்மை) 1.672 621 71(29) × 10 கிலோ கிராம் (kg) ஆகும். இது ஓர் எதிர்மின்னியின் திணிவைக் காட்டிலும் 1836 மடங்கு அதிகம் ஆகும். நேர்மின்னி ஒரு உறுதியான அணுத்துகள் (துணிக்கை) எனக் செயல்முறை ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் அரைவாழ்வுக் காலத்தின் மிகக் குறைந்த எல்லை ஏறத்தாழ 10 ஆண்டுகள் எனக் கணித்துள்ளனர் + +எல்லா அணுக்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். ஹைட்ரஜன் அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் அணுவெண் எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது தங்க அணுவா, வெள்ளி அணுவா, கரிம அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும். + +எந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு எதிர்மின்னி இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் மின்மம் அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். உராய்வு அல்லது வேதியியல் வினை முதலிய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது மின்மமாக்கப்படும். + +நேர்மின்னி அல்லது எதிர்மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டு இயற்கையில் 94 வகையான வெவ்வேறு அணுக்கள் உள்ளனவென்று கண்டுள்ளனர். இவை தவிர, இன்று செயற்கையாகவும் மிகக் குறுகிய காலமே சேர்ந்திருக்கு���் செயற்கை அணுக்களையும் அறிவியல் அறிஞர்கள் ஆக்கியுள்ளனர். + +நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு அவர்கள் 1918ல் நேர்மின்னியைக் கண்டுபிடித்ததாகக் கொள்வர். இவர் நைட்ரஜன் வளிமத்தூடே ஆல்ஃவா கதிர்களைச் செலுத்தியபோது, வெளியேறிய கதிரில் ஹைட்ரஜன் அணுக்கான சிறப்புப் பண்புகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நைட்ரஜன் அணுவில் ஹைட்ரஜன் அணுவின் கரு இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்தார். எனவே, "ஹைட்ரஜன் அணுவின் அணுவெண்ணாகிய 1 (ஒன்று) என்பது ஹைட்ரஜன் அணுவில் உள்ள நேர்மின்னியின் எண்ணிக்கை, எனவே அது ஓர் அடிப்படைத் துகள்" என்றார். + + + + + +தமிழர் குறியீடுகள் + +ஒவ்வொரு இனமும், குமுகமும் (சமூகமும்) தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களாவோ, கருத்தாகாவோ, கருத்தோவியங்களாகவோ இருக்கலாம். இவற்றுள் சிலவோ பலவோ தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கருத இயலாது, எனினும் தமிழர்கள் அவற்றை தம் பண்பாட்டோடு ஆழமான நெருக்கம் உடையனவாகக் கருதுகிறார்கள். + + + + + + + +இந்திரன் அமிர்தநாயகம் + +இந்திரன் அமிர்தநாயகம் (பி. 1960, கொழும்பு, இலங்கை). இவர் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர். "கை அமிர்தநாயகத்தின்"(Guy Amirthanagam) மகன். அமெரிக்க அரசின் தூதுவரக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். + +இந்திரன் அமிர்தநாயகத்தின் "The Elephants of Reckoning" 1994-இல் பற்றர்சன் கவிதைப் பரிசை ("Paterson Poetry Prize")வென்றிருக்கிறது. "E; Infierno De los Pajaros" என்ற தலைப்பில் இவருடைய இஸ்பானியக் கவிதைத்தொகுப்பு வெளியாகியிருக்கிறது. "Ceylon R.I.P.", இவருடைய இன்னுமொரு கவிதைத்தொகுப்பு. இவருடைய "So Beautiful" கவிதை PBS-இன் "The United States of Poetry" என்னும் தொடரில் இடம்பெற்றிருக்கிறது. ஆகஸ்ட், 1999-இல் யூனிவி்ஷன், ஒரு செய்தித்தொகுப்பில் இவருடைய ஸ்பானிஷ் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. + +இவைபோக, The United States of Poetry, ALOUD: Voices from the Nuyorican Cafe, The Open Boat: Poems from Asian America, The Nuyorasian Anthology, Black Lightning, Living in America, The Four Way Reader #1 ஆகிய தொகுப்புகளிலும் இவருடைய கவிதைகள் இடம்பெற்றிர���க்கின்றன. + + + + + +கரவெட்டி + +கரவெட்டி ("Karaveddy") இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி, கரணவாய், நெல்லியடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. + + + + + + + + + + +முல்லைத் தமிழர் + +முல்லைத் தமிழர் எனப்படுவோர் முல்லைச் சூழமைவில் வசிக்கும் தமிழர்களைக் குறிக்கும். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். "காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கிய தமிழ் மக்கள், காடுகளைக் குறிக்கும் பலவகைச் சொற்களால் ஆன பெயர்களையே பல முல்லைநிலச் சிற்றூர்களுக்கு இட்டு வழங்கினர்." + + + + +ஜி. நாகராஜன் + +ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். + +ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராக��் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். + +இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். + +1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார். + +அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார். + +இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்ட���ருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார் + + + + +கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார். + + + + +நகுலன் (எழுத்தாளர்) + +நகுலன் (இ. மே 17, 2007) தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். + +இவருடைய ஆங்கில படைப்புகளை இயற்பெயரிலும், தமிழ் படைப்புகள் புனைப் பெயரிலும் எழுதி வந்தார். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள் அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படித்தியுள்ளார். + +இவர் ஒரு இந்திய கவிஞராகவும், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளராகவும் போன்ற பல பரினாமங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிளும் கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை எழுதுவதிலும், புகைப்படம் வரைவதிலும் சிறந்தவர் மேலும் அவர் வரையும் புகைப்படங்கள் அவரது அடிமனதில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவரது கவிதைகளை இயல்பு நடையில் எழுதுவதில் புகழ்பெற்றவர். + +இவர் 'எழுத்து' என்னும் இதழில் சி. எஸ். செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்ட இதழில் தனது நாற்பது வயதில் எழுதத் துவங்கினார். அவர் 'ஒரு கதை' மற்றும் 'ஆறு கவிதை' புத்தகங்கள் ஆங்கிலத்திலும், 'ஒன்பது கதை' மற்றும் 'ஐந்து கவிதை' புத்தகங்கள் தமிழ் மொழி��ிலும் எழுதியுள்ளார். அவர் எஸ். நாயர் என்ற புனை பெயரிலும் சில கதை மற்றும் கவிதை படைப்புகள் எழுதியுள்ளார். + + +இதுவரை வெளியாகிவுள்ள நகுலனின் கவிதை நூல்கள்: + + +1972ஆம் ஆண்டு எழுதிய நினைவுப் பட்டை நீலக்கல் என்னும் நாவல் அவரது தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய மயில்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும் அவரை சிறந்த எழுத்தாளராகவும் பெயர் பெற்றுத்தந்தது. அவருக்கு ஆசான் நினைவு விருது தமிழ் கவிதைக்காக 1983ஆம் ஆண்டு பெற்றார். + +அவர் 1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார், மேலும் தன்னுடைய பதினான்கு வயதில் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். அதன் பிறகு தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் கேரளப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். வெர்ஜினா உள்ஃப் பற்றி ஆய்வு செய்து அதில் முதுநிலை பட்டம் பெற்றார். + +அவருடைய வீடு கோல்ஃப் லிங்ஸ் கௌடியர் என்னும் இடத்தில் உள்ளது. அங்கு பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் வந்து இவருடன் கலந்துரையாடல் செய்து பின்பு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அவர்களும் எழுதத் தொடங்கினார்கள். இவர் கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும், பாடல் திரட்டுபவராகவும், நாவல் ஆசிரியராகவும், குறுகிய கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். + +அவர் 1960களில் இருந்துதான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். அவருடைய மாணவர்கள் பலர் தமிழ் இலக்கியத்தில் எழுதுவதற்கு இவரே தூண்டுதலாக இருந்தார். அவரது நண்பர் கானா சுப்பிரமணியம் என்பவரின் தூண்டுதலின் பெயரில் தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கினார். இவரது ஆல்டர்-ஈகோ என்னும் நாவலில் வரும் கதாப்பாத்திரம் நவீன எதிர்மறை நாயகனாக அறிமுகப்படுத்தியது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய முயற்ச்சி ஆகும். தனது மனதில் தோன்றும் கதாப்பத்திரம் மற்றும் எண்ணங்களை வெளிப்படையாக எழுதும் ஆற்றலை முதன் முதலாக வெளிப்படுதியதில் இவரும் ஒருவர். 1973ஆம் ஆண்டு "வெட்ஸ் ஃபார் தி விண்டு" என்னும் ஆங்கில நாவலை எழுதியுள்ளார். + +இவருடைய படைப்புகளிள் இராஜா வெம்பலா என்னும் ஆங்கில கவிதை மீக நீண்ட கவிதை ஆகும். "பிதேஸ் நந்தி" என்னும் வார இதழில் இவருடைய சிறுகதைகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. சுப்���ிரமணிய பாரதி பற்றி எழுதிய லிட்டில் ஸ்பேரோ என்ற புத்தகம்தான் இவர் மொழிபெயர்ததில் சிறந்ததாகக் கருதபடுகிறது. நவீன எழுத்தாளராக தொடங்கி பின்நவீன எழுத்தாளராக மாறினார். + +சிமோன் வில் மற்றும் அனேஸ் நின் இருவர்கள் இருபதாம் நூற்றாண்டில் எழுதிய ஆன்மீகம், இறையியல், மற்றும் தத்துவம் போன்ற படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நகுலன் தனது "நவீனன்ஸ் டைரீ ஜோடிங்ஸ்" என்னும் நாவல் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஜாய்சி, டி.எஸ். எலியட் மற்றும் கே. ஐய்யப்பன் பனிகர் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஜேம்ஸ் ஜாய்சியை அடிப்படையாக கொண்டிருந்தாலும் டி. எஸ். எலியட்டின் மதநம்பிக்கை மற்றும் மனோதத்துவம் சாமுவேல் பேக்கட் போன்றவர்களின் பாணியிலும் எழுதியுள்ளார். + +திருவனந்தபுரம் மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது ஆண்டு காலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி பின்பு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தனது வீட்டில் இருந்தே எழுதும் பணியை முழுநேரமாக தொடங்கினார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. மே 17,2007 இல் திருவனந்தபுரத்தில் தனது 86 வயதில் இயற்கை எய்தினார். + + +நகுலன் பற்றிய கட்டுரைகள் + + + + +கோணங்கி + +கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ. + +1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். +அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர்.கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர். + +1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய "மீட்சி" இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்ற தமிழ் எழுத்தாளர்களை வாசிப்பவர். தமக்கென்று தனித்த நடையை உருவாக்கியிருப்பவர். "கல்குதிரை" என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோ���ுக்கு "கல்குதிரை" சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர்; இலக்கியவாதிகளின் நண்பர். "பாழி", "பிதிரா","த" என்ற இவருடைய மூன்று நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன. + + +இவரது எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத விதத்தில் மாறுபட்ட பொருண்மையில் இருக்கும். + + + + +தாண்டோட்டம் (பர்க்கூர்) + +தாண்டோட்டம் ("Parkour") என்பது வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி தாவி ஓடுதல் ஆகும். எந்த உதவி உபகரணங்களும் பயன்படுத்தக்கூடாது. இது பாரிசில் ஒரு நகரப்புறக் விளையாட்டாக அறிமுகமாகி பல்வேறு நகரங்களில் பரவி வருகின்றது. இது "Le Parkour" (பர்க்கூர்) என பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்றது. இது இளையவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது. + + + + + +கே. எஸ். பாலச்சந்திரன் + +கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014) ஈழத்தின் +அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், , எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். + +யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பாலச்சந்திரன் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார். + +பாலச்சந்திரன் பல ஆண்டுகள் இலங்கை உள்நாட்டு வருமான வரித்திணைகளத்தில் பணி புரிந்தவர். + +1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். + +பாலச்சந்திரன் இலங்கையில் அறியப்பட்ட வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, "தணியாத தாகம்" என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் "சோமு" என்ற பாத்திரத்தில் நடித்தவர். + +இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான "நிஜங்களின் தரிசனம்", "உதயத்தில் அஸ்தமனம்", "திருப்பங்கள்" போன்றவற்றில் நடித்ததோடு "காதம்பரி" நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். + +இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், "Blendings" (ஆங்கிலம்) "அஞ்சானா" (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். + +1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர். + +இலங்கை வானொலியில், 'கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சியையும், 'விவேகச் சக்கரம்' என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். + +1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் இரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணே றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும். + +அண்ணே றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன. + +இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் "கிராமத்துக் கனவுகள்" இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், "வாத்தியார் வீட்டில்" இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும். இந்த நாடகத்தின் ஒலிப்பதிவைக் கேட்டே கமலஹாசன் தெனாலி படத்தில் சோமன் பாத்திரத்தில் இலங்கைத் தமிழ் பேசி நடித்தார். இப்படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கமலஹாசனே இந்தத் தகவலைத் தெரிவித்தார். + +கனடாவில் சி.எம்.ஆர் வானொலியில் "மனமே மனமே" என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கின்றார். + +இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவில் TVI க்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களில் "திருப்பங்கள்" குறிப்பிடத்தக்கது. 2003ல் இருந்து TVI, 125 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய் 'Wonderful Y.T.Lingam Show' இவரது படைப்பே. எம்மிடையே முதலாவது TV Show நிகழ்ச்சி இதுவேயாகும். TVI யில் முதலாவது தமிழ் Sitcom நாடகம் என்ற வகையில் "நாதன், நீதன்,நேதன்" என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்பச் செய்தார். + +இவர் 20 மேற்பட்ட நாடங்களை எழுதி இயக்கி உள்ளார். அவற்றுள் பின்வருவன அடங்கும்: + +பல்வேறு வகையான மேகை நிகழ்ச்சிகளை இவர் வழங்கி உள்ளார். "பாரதியுடன் ஒரு மாலைப் பொழுது", "மனமே, மனமே", "கே. எஸ். பாலச்சந்திரனுடன் ஒரு மாலைப் பொழுது"' ஆகியன குறிப்பிடத்தக்கன. + +தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் 'மலர் மணாளன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல 'சிரிகதை'களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் 'ஒரு பேப்பர்' என்ற பத்திரிகையில் 'கடந்தது..நடந்தது' எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் "தாய் வீடு" பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், "தமிழ் ரைம்" சஞ்சிகையில் "என் கலைவாழ்வில்" என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். தாய்வீடு பத்திரிகையில் , "வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை" என்ற தொடரையும், "தூறல்" என்ற காலாண்டு சஞ்சிகையில் "என் மனவானில்" என்ற தொடரையும் எழுதி வந்தார். + + +இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின�� இயக்குனராகவும் செயற்பட்டார். + + +வானொலி, மேடை, தொலைக்காட்சி, எழுத்து என இவரது எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் நகைச்சுவையை வெளிப்படுத்தினார். +"தனி நடிப்பு என்ற நகைச்சுவை மேடை நிகழ்வை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்". + +கே. எஸ். பாலச்சந்திரன் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு பயனராக பங்குபெற்று, 136 கட்டுரைகளை எழுதியுள்ளார். + +எட்னா கனகேஸ்வரி இவரது மனைவி ஆவார். இவர்களுக்கு சுபாஷினி, வசீகரன் என ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். + + + + + + +பனங்காய்ப் பணியாரம் + +பனங்காய்ப் பணியாரம் அல்லது பனங்காய்ப் பணிகாரம் என அழைக்கப்படுவது, பனம்பழத்தின் களியில் இருந்து செய்யப்படும் ஒருவகை உணவுப் பண்டம் ஆகும். பனம்பழத்தின் களியை அடுப்பில் இட்டுக் காய்ச்சி, அதனுடன் அரிசி மா, சர்க்கரை போன்றவைகளையும் நீருடன் சேர்த்துப் பிசைந்த கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக எண்ணெயில் பொரிப்பதன் மூலம் இது ஆக்கப்படுகின்றது. + +பெருமளவில் பனைகள் காணப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் ஒரு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றது. + + + + +வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி + +வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard Frank Libby, டிசம்பர் 17, 1908 – செப்டெம்பர் 8, 1980) ஒரு அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் ஆவார். தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் புகழ் பெற்றார். + +இவர் கொலராடோவிலுள்ள "கிராண்ட் வலி" (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார். + +1960 இல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். + + + + +ஓரிடத்தான் + +ஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட ஒரே மூலக அணுக்கள் ஓரிடத்தான் அல்லது சமதானி ("isotope") எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான ப���ரோத்தன்களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், நியூத்திரன்களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன. + +மருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன. + +மேலும் சில சமதானிகள்: + +காபன் - C C C + +குளோரின் - Cl Cl + +கந்தகம் - S S + +ஒட்சிசன் - O O O + + + + +திணிவெண் + +திணிவெண் அல்லது அணுத்திணிவெண் அல்லது நிறை எண் (Mass Number) எனப்படுவது, அணுக்கருவில் உள்ள புரோத்தன் (புரோட்டான்), நியூத்திரன் (நியூட்ரான்) ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும். திணிவெண், ஒரு தனிமத்தின் ஒவ்வொரு ஓரிடத்தானுக்கும் தனித்துவமானதாகும். இந்த ஓரிடத்தான்களைக் குறிக்கக் குறிப்பிட்ட தனிமத்தின் பெயருக்கு அடுத்ததாக அல்லது குறியீட்டுக்கு இடதுபுறம் மேலெழுத்தாக இத் திணிவெண் எழுதப்படுகின்றது. எடுத்துக்காடாக, கரிமம்-12 (C) எனக் குறிப்பிடப்படும் கரிமத்தின் ஓரிடத்தான், 6 புரோத்தன்களையும், 6 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது. + + + + +கரிமம்-14 + +கரிமம்-14, C அல்லது றேடியோகாபன் என்பது கரிமத்தின் கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். இது 1940 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் நாள், மாட்டின் காமென், சாம் ரூபென் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கரு 6 புரோத்திரன்களையும் 8 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது. உலகில் உள்ள காபன் அளவில் கரிமம்-14 0.0000000001% அளவே ஆகும். இதன் அரைவாழ்வுக்காலம் 5730±40 ஆண்டுகளாகும். + + + + +எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு + +எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு ("Ernest Rutherford", ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மை��ை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப் போற்றுவர். + +1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஜேம்ஸ் ரதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, 12 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவரதுகுடும்பத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும் பிறந்தனர். ரதர்ஃபோர்டுஅவர்கள் நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் (தற்பொழுது பிரைட்வாட்டர் என அழைக்கப்படுகின்றது) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது. + +கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது. ரதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சாரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். + +பின்னர் 1887 இல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது. நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை கிரைஸ் மாதாகோவில் உள்ள நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். இவர் கல்லூரி மானவராக இருந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். மாணவருக்கான விவாத அரங்குகளில் பங்கேற்றர். அதன் செயல்களில் பங்கு கொண்டார். இடையில் 1892 இல் கணிதம், இலத்தீன், இயற்பியல��, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பொஆடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ. தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது. + +1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை. 1894 இல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ. ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார். 1897 இல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் 'இயற்பியலின் மெக்டொனால்டு' என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது. 1898 இல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900 இல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இத்தம்பதியினருடைய ஒரேமகள் எய்லீன் என்பவராவார். + +1907 இல் இங்கிலாந்த்து திரும்பிய ரதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து 'மேக்னடிக் விஸ்கோசிட்டி' என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார். வாயுக்களில் உள்ள ��யனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார். அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார். + +மாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை 'ரேடான்' என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான 'தோரான்' என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த 'ஆட்டோ ஹான்' என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார். + +இந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார். இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது. + +இவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின�� பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார். + + +இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் ரதர்ஃபோர்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது. + + + + + + +கடுங்கோன் (இடைக்காலம்) + +கடுங்கோன், களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான். இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது. இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:- + +இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான், கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும், கதிர்வேல் தென்னன் என்றும், செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான். வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான். + + + + +அவனி சூளாமணி + +அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான். தமிழகத்தின் வட பகுதியில் அப்போது பல்லவ மன்னனாகச் சிம்மவிஷ்ணு ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்��ாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள். + +பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. +"குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை அழித்தவன், செங்கோல் ஓச்சியவன், உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன், மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன், ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன், வீரமும், ஈரமும் புகழும் உடையவன்". இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +இலத்தீன் + +இலத்தீன் ("Latin") என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இது முதலில் இத்தாலி தீபகற்பத்தில் உள்ள ரோம் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது. + +ரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறிஸ்தவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், டைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன்(Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெல்டிக்மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. + +சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன. + +இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. + +இலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய லத்தீன் ஆகும். இது ரோம சாம்ராஜ்யம் முதல் மத்திய ரோமன் குடியரசுகாலம் வரை வழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸும் (Plautus) டெரன்ஸும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாஃப்டான் (boustrophedon) எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது. + +குடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பக்காலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு ப���ாமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன. + +ஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல, இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற்குவியலில் 59% ஆங்கில வார்த்தைகளும் 20% ஜெர்மானிய வார்த்தைகளும் மேலும் 14% டச்சு வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இலத்தீன மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும். + +இலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றங்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரிகள், வழிமுறைத் தொடரமைப்புகள், சொற்றொடரியல்கள், சொற்தொகுதிகள், ஒலிவேறுபாடுகள், ஒலியழுத்தங்கள் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்: +இந்த ஆய்வு இலத்தீன் மொழியை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. எனவே, பிற மொழிகள் இலத்தீனிலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்டுள்ளது என்பதை அறிய முடியும். இம்முடிவுகளில், சதவிகித அளவு அதிகமாக இருப்பின் அது இலத்தீனிலிருந்து அதிக அளவு பயன்பாட்டு விலக்கம் கொண்டுள்ளது என்று பொருள். + +பாரம்பரிய இலத்தீன் மெய்யெழுத்துகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன: + +இலத்தீன்மொழியில், அசையழுத்தம் மிக்க உச்சரிப்புகளை எங்கு அதிக அளவு வலியுறுத்தப்பட வேண்டுமோ, அந்த இடங்கள் உள்ளீடற்ற சொற்றொடர்களால் குறிக்கப்படுகின்றன. இலத்தீன் மொழியில், பெரும்பாலான வார்த்தைகளில் இறுதி அசைக்கு முந்தைய அசை ஒலியழுத்தம் கொடுத்து அழுத்திக் கூறக்கூடிய அசையாக இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது - paenultima) அல்லது சில்லபா பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது அசை - syllaba paenultima)] என்று அழைக்கப்படும். இம்மொழியில் ஒரு சில வார்���்தைகளில் இறுதி அசையிலிருந்து மூன்றாவது அசையானது அழுத்தக் குறியுடன் உறுத்திக் கூற வேண்டி இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது - antepaenultima) அல்லது சில்லபா ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது அசை - syllaba antepaenultima)] என்று அழைக்கப்படும். + +- வணக்கம் + +- வாழ்த்துக்கள் + +- சென்றுவருகிறேன் + +- கவனமாக இரு / எச்சரிக்கையாக இரு + + + + +- நல்வரவு + +- எப்படி இருக்கிறீர்கள்? + +- நல்லது / நன்று + +- தயவு செய்து + +- நான் நலமாக இருக்கிறேன் + +- தீய / கெட்ட / பழுதுள்ள + +- நான் நன்றாக இல்லை + +- மகிழ்வி / விருப்பம் போல் + +- ஆம் / ஆமாம் / சரி + +- இல்லை / கிடையாது + +- தங்களுக்கு நன்றி + +- தங்களுக்கு மிகவும் நன்றி + +- தங்களுக்கு மிக்க நன்றி + +- நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் + +- உங்கள் வயது என்ன? + +- 25 வயது ஆகிறது + +- நீங்கள் பேசுவீர்களா ... + +- இலத்தீன்? + +- கிரேக்கம்? + +- ஆங்கிலம்? + +- இத்தாலிய மொழி? + +- பிரெஞ்சு மொழி? + +- எசுப்பானிய மொழி? + +- போர்த்துகீசிய மொழி? + +- ஜெர்மன் நாட்டு மொழி? + +- சீன நாட்டு மொழி? + +- ஜப்பானிய மொழி? + +- கொரிய மொழி? + +- அரபி மொழி? + +- பெர்சிய மொழி? + +- இந்தி? + +- ருசியநாட்டு மொழி ? + +- இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதி மொழி? + +- கழிப்பறை எங்கே உள்ளது? + +- நான் உன்னை காதலிக்கிறேன் + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1992 + +1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1991 + +1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1990 + +1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1989 + +1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1988 + +1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1987 + +1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + +உரோம் + +உரோம் ("Rome", , ) இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். பரப்பளவுள்ள இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனால் இந்நகரமே நாட்டின் மிகவும் மக்களடர்த்தி மிக்க நகரமாக விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப்பகுதியாக விளங்குகின்றது. பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 3.8 மில்லியனாக உள்ளது. + +இத்தாலிய மூவலந்தீவில் நடு-மேற்குப் பகுதியில் லாசியோ மாகாணத்தில் "அனியென்" ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில், டைபர் ஆற்றங்கரையில் உரோம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் எல்லைகளுக்குள் தன்னாட்சியுள்ள நாடான வத்திக்கான் நகர் அமைந்துள்ளது; இவ்வாறு ஓர் நகரத்தினுள்ளே நாடொன்று அமைந்திருப்பது தனித்துவமானதாகும். சில நேரங்களில் உரோம், இக்காரணங்களால், இரு நாடுகளின் தலைநகரமாகவும் வரையறுக்கப்படுகின்றது. + +இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது இத்தாலிய மொழியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும். + +உரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது; பழங்கதைகளின்படி கிமு 753இல் உரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் உரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் "முடிவுறா நகரம்" () என்றும் "உலகத்தின் தலைநகர்" "()" ���ன்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் உரோம் அடுத்தடுத்த உரோமை இராச்சியம், உரோமைக் குடியரசு உரோமைப் பேரரசுகளின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில் எனவும் உரோம் விவரிக்கப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து திருத்தந்தையின் இருப்பிடமாக விளங்குகின்றது. 8ஆவது நூற்றாண்டில் திருத்தந்தை நாடுகளின் தலைநகராக ஏற்றம் பெற்று 1870 வரையில் இத்தகுதியைப் பெற்றிருந்தது. 1871இல் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகரமாகவும் 1946 முதல் இத்தாலியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. + +நடுக்காலத்திற்குப் பின்னர் அனைத்து திருத்தந்தைகளும் உரோம் நகரத்தை உலகின் சிறந்த கலைநயம் மிக்க பாண்பாட்டு மையமான நகரமாக்கத் திட்டங்கள் வகுத்துள்ளனர். இதனால் இத்தாலிய மறுமலர்ச்சியின் முதன்மை மையமாக உரோம் விளங்கியது. இங்குதான் பரோக்கு கலைவடிவம் பிறந்தது. பிரமாண்டே, மைக்கலாஞ்சலோ, ராபியேல் சான்சியோ, பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், இராபியேல் ரூம்சு, புனித பேதுரு சதுக்கம் போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர். + +உரோமிற்கு உலகளாவிய நகரம் என்ற தகுதி உள்ளது. 2011ஆம் ஆண்டில் மிகவும் வருகை புரிந்த நகரமாக உலகில் 18ஆவதாகவும் ஐரோப்பாவில் மூன்றாவதாகவும் விளங்கியது; இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாவிடமாகத் திகழ்ந்தது. இதன் வரலாற்று மையங்கள் யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. வத்திக்கான் அருங்காட்சியகங்கள், கொலோசியம் போன்ற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் உலகின் மிகவும் பார்க்கப்பட்ட சுற்றுலா இடங்களாக உள்ளன; ஓராண்டில் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களையும் காண்கின்றனர். 1960 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகம் இங்குள்ளது. + +ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்ராய் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது அங்கிருந்து ஓடிவந்த மன்னன், லிதியம் என்கிற ஆற்றின் கரையிலிருந்த வேறொரு மன்னனிடம் தஞ்சமடைந்தான். பிறகு, அம்மன்னனின் மகளையே மண��் செய்து கொண்டான். அந்த வம்சாவழியில் வந்த ஒரு பெண் ரியா சில்வியா, அவள் செவ்வாய் கிரகத்தால் கருவுற்று இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றாள். ஆனால், அந்த நேரத்தில் அவளின் மாமன் அந்த நகரத்தை கைப்பற்றியதால், தன் குழந்தைகளை காக்க ஒரு கூடையில் அவர்களை வைத்து டைபர் ஆற்றில் வி்ட்டுவிட்டாள். ஆற்றில் சென்ற குழந்தைகளை ஓநாய் ஒன்று இழுத்து வந்து, தன் பாலை சொரிந்து அவர்களைக் காத்தது. ஓநாயிடம் இருந்த குழந்தைகளை, அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவன் காப்பாற்றி வளர்த்து வந்தான். அவர்களே ரோமுலசு மற்றும் ரேமசு. இதன் அடையாளமாக ஓநாய் பாலூட்டும் இரட்டையர் சிலை ரோமானியா முழுவதும் இடம் பெற்றிருக்கும். + +இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர். +உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த காலக் கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடிக் காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாகக் குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. + +ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது. + +தனித்தனியாக இருந்த இத்தாலியை ஒன்றிணைத்து ஆட்சி செய்தவர் விக்டர் இம்மானுவேல். தனது ஆட்சி காலத்தில் ஆறு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். அவரை கவுரவிக்க கட்டப்பட்ட கட்டிடமே விக்டர் இம்மானுவேல் நினைவகம். இதை 1885-ல் ஆரம்பித்து 1911 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள். இது முழுவதும் சலவைக் கற்களால் கட்டப்பட்டது ஆகும். இக்கட்டிடத்தின் முன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் இம்மானுவேலின் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. + +ரோம் நகரின் மிகப்பெரிய ஃபவுண்டைன்,ட்ரிவி ஃபவுண்டைன் ஆகும்.ட்ரிவி என்றால் 'மூன்று சாலை கூடுமிடம்' என்று பொருள்.இந்த ஃபவுண்டைனில் மூன்று சாலைகள் கூடுகின்றன அதனால் இப் பெயர் ஏற்பட்டது.இந் நீரூற்றுக்கு சலோன் என்னும் நீரூற்றிலிருந்து நீர் வருகிறது. +இதை 1732-ல் ஆரம்பித்து 1762 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள்.இதில் சமுத்திரக் கடவுளான ஓசியானஸின் சிலை உள்ளது.அவரின் இரு பக்கமும் இரு சிலை உள்ளது.ஒன்று செல்வம் அளிக்கும் கடவுளின் சிலை மற்றொன்று நோயை குணப்படுத்தும் கடவுளின் சிலை. + +ரோமானியர்கள் சண்டையை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர்.அதற்காக கட்டப்பட்டதே கொலோசியம்.இங்கு சண்டை இடும் வீரர்களை கிளாடியேட்டர் என்றே அழைப்பர். கிளாடி என்றால்'கத்தி' என்று பொருள்.கி.பி.முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.இதன் உயரம் 150 அடியாகும்,மொத்தம் நான்கு கேலரியை உள்ளடுக்கியது ஆகும்,ஒரே சமயத்தில் இங்கு 8000 பேர் அமர்ந்து வீரர்களின் சண்டைகளை காணலாம். + +கரகலா என்ற மன்னன் கட்டிய ஒரு பொது குளியல் தொட்டியே தி பாத்ஸ் ஆப் கரகலா ஆகும். + + + + + + +டைபர் + +டைபர் ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது. + + + + +பொன். கந்தையா + +பொன்னம்பலம் கந்தையா (சூலை 1, 1914 - 1960) ஈழத்துத் தமிழ் அரசியல்வாதி. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர். தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரியவேளை 60களில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்காவின் உதவியினால் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா "நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு" என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார். + +வடமராச்சியில் கரவெட்டியில் பிறந்த பொன். கந்தையா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். இரண்டு ஆண்டுகளில் பொருளியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டாண்டுகள் கல்வி கற்று இலங்கை திரும்பினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய கந்தையா பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பதவியேற்றார். கொழும்பு மாநகர சபையின் வேண்டுகோளின்படி, கொழும்பு பொது நூல்நிலையத்தை சீர்திருத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்கினார். பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். + +பொன்னம்பலம் கந்தையா இங்கிலாந்தில் கல்வி கற்ற போது இடதுசாரி மாணவர்களாக இருந்த பீட்டர் கெனமன், எஸ். ஏ. விக்கிரமசிங்க ஆகியோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். இலங்கை திரும்பிய பொழுது இடதுசாரி சிந்தனையுடன் வந்தார். இலங்கையில் கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்குவதில் முதன்மைப் பங்கு வகித்தார். + +பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 1947, 1952 தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். ஆனாலும் 1956 தேர்தலில் 6,317 மேலதிக வாக்குகளினால் வெற்றியீட்டினார். பொன். கந்தையா 14,381 வாக்குகளும், மு. சிவசிதம்பரம் (சுயேட்��ை) 8,064 வாக்குகளும், கே. துரைரத்தினம் (சமஷ்டிக் கட்சி) 5,859 வாக்குகளும் பெற்றனர். பின்னர் 1960 மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். + + + + + +நியண்டர்தால் மனிதன் + +நியண்டர்தால் ("Neanderthal", "Homo neanderthalensis"), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது. முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. +நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான். + +தென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த "பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I)" தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. + + + + + +சாவக மனிதன் + +ஜாவா மனிதன் என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின், கிழக்கு சாவகத்தில் உள்ள பெஙாவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஓமோ எரெக்துசு (Homo erectus) என்னும் உயிரியற் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபொய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு "பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus)" என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது. + +டுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன ���டங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதிற் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன. + + + + +பீக்கிங் மனிதன் + +பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. + +பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறிந்திருந்தனர். +சீனாவின் தலைநகரம் பெய்ஜிங் (பழைய பெயர் பீகிங்) அருகில் உள்ள சொவ்கொவ்தியான் என்ற பள்ளத்தாக்கில் 1921இல் சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்டர்சன் என்பவர் அகழ்வாராய்ச்சி நடத்தினார். 1923இல் ஆண்டர்சனின் உதவியாளரான ஓட்டோ ஸ்டேன்ஸ்கி, பண்டைய மனிதனின் கடைவாய்ப்பற்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். 1926இல் அதுகுறித்த செய்திகளை, ஆய்வு அறிக்கைகளை ஓட்டோ வெளியிட்டார். அதற்குப் பிறகு அதே பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கீழ்தாடையுடன் கூடிய சில பற்கள், மண்டை ஓட்டின் சில துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பிறகு சீனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலரது தலைமையிலும், சார்டின் என்ற பிரெஞ்சு ஆய்வாளரது முயற்சியிலும் அங்கே தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. அடுத்த சில வருடங்களில் ஆதிமனிதனின் ஆறு முழுமையான மண்டை ஓடுகள் கிடைத்தன. தவிர, மண்டை ஓட்டின் பகுதிகள், பற்கள், தாடை எலும்புகள் என மொத்தம் 200 படிமங்கள் கிடைத்தன. அந்த மண்டை ஓடுகளுக்குச் சொந்தமான மனிதர்களுக்கு ‘பீகிங் மனிதன்’ என்று பெயரிடப்பட்டது. + +இதன் பிறகு ஆய்வாளர்கள் இந்த மண்டையோடுகள் குறித்து தங்கள் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். பீகிங் மனிதனுக்கு முன்பாகவே கண்டெடுக்கப்பட்டவன் ஜாவா மனிதன். நீளமான கைகளையுடைய ஜாவா மனிதனை முழுமையான வளர்ச்சியடைந்த மனிதர்களாக ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. + +இந்த ஆய்வுகளின்படி பீகிங் மனிதன் ஜாவா மனிதனைவிட வளர்ச்சியடைந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்திருக்கிறான். கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். நெருப்பின் பயனை அறிந்திருக்கிறான். எனவே, அவனிடம் மனித குலத்தின் பண்பாடு இருந்திருக்கிறது. இன்றைய நாகரிக மனிதனின் மூதாதையன் பீகிங் மனிதனே என்று சார்டின் தனது ஆய்வுகள் மூலம் விளக்கினார். பீகிங் மனிதன், சுமார் 2,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று சார்டினின் ஆய்வுகள் தெரிவித்தன. மனித இனத்தின் வரலாற்றை விளக்குவதில் பீகிங் மனிதனின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த மண்டையோடுகள் காணாமல் போயின. + + + + + + +விசுவநாத நாயக்கர் + +விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவர் ஆவார். இவரது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதிகள் உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. இவர் 72 பாளையங்களை உருவாக்கினார் . அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன. + + + + +முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் + +முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1564 முதல் 1572 வரை ஆகும். விசுவநாத நாயக்கரின் மகன் பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவர். + + + + + + +வீரப்ப நாயக்கர் + +வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1572 முதல் 1595 வரை ஆகும். முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவரது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தார். + + + + + + +இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் + +இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1595 முதல் 1601 வரை ஆகும். இவர் விஜயநகர மன்னன் முதலாம் வேங்கடவனுகுக் கப்பம் கட்டுவதை நிறுத்தியதாக ஹீராஸ் என்ற பாதிரியார் குறிப்பிட்ட���ள்ளார். + + + + + + +முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் + +முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. +இவரின் மகன்கள் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர். + + + + + + +முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் + +முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1609 முதல் 1623 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார் . + + + + +இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் + +இரண்டாம்ம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது. + + + + + +சொக்கநாத நாயக்கர் + +சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இவருடைய மகன் ஆவார் . + +மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. +அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார். + + + + + + +அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் + +அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (மூன்றாம் முத்துவீரப்ப ���ாயக்கர்) நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவர் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதினனாக இருந்ததால் இவரது தாய் மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினார். + + + + + + +விஜயரங்க சொக்கநாத நாயக்கர் + +விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவர் இராணிமங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தார். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தார். ஆதலால் இவருக்குப்பின் இவனது மனைவி இராணி மீனாட்சி ஆட்சிக்கு வந்தார். + + + + + + +இராணி மீனாட்சி + +இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவராவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி. அவருக்கு குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தார். + +அம்மையநாயக்கனூர் போரில் தோற்ற ராணி மீனாட்சியை, சந்தா சாகிப்பின் படைவீரர்கள் கைது செய்ததால், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவருடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது. + + + + + + + +முதலாம் சடையவர்மன் குலசேகரன் + +முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான். + + + + +சார்ல்ஸ் பாபேஜ் + +சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் ("Charles Babbage", டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். +கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். டிபரன்ஸ் இயந்திரம் 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்��ிரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர். 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது. + + + + + + +அங்கோலா + +அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது. + +அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டஸ் ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும். + +அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. + +அவற்ருள் 18 மாகாணங்களாவன: +அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது + +நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 481,321 சதுர மைல் (1,246,700 சதுர கிலோ.மீ), + + + + + +அல்சீரியா + +அல்சீரியா ( ""; "ட்சயர், "; ), உத்தியோகபூர்வமாக அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அல்ஜீயர்ஸ் ஆகும், இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. 2,381,741 சதுர கிலோமீட்டர் (919,595 சதுர மைல்) பரப்பளவில், அல்ஜீரியா உலகிலேயே பத்தாவது பெரிய நாடாகவும், ஆபிரிக்காவில் மிகப்பெரியதாகவும் உள்ளது. இதல் வடகிழக்கு எல்லையில் துனீசியாவும், கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. வடக்கில்  மத்தியதரைக் கடலும், தென்மேற்கில் மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் கொண்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 48 மாகாணங்கள் மற்றும் 1,541 கம்யூன்கள் (மாவட்டங்கள்) கொண்ட ஒரு அரை ஜனாதிபதி குடியரசு ஆகும்.  1999 முதல் அப்தலசீஸ் போதேலிபிகா ஜனாதிபதியாக உள்ளார். + +பண்டைய அல்ஜீரியாவானது பண்டைய ந்யூமியன்ஸ், போனீசியா, கார்தீனியர்கள், ரோமர், வாண்டால்ஸ், பைசாந்தியப் பேரரசு, உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், இத்ரிஸ்ஸிட், அக்லபீத், ரஸ்டாமைட், பாத்திம கலீபகம், ஸிரிட், ஹமாடிட்ஸ், அல்மோரவிட்ஸ், அல்மோஹட்ஸ், ஸ்பானிநார்ட்ஸ், ஒட்டமன்ஸ் மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது.   அல்ஜீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள். + +அல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணை இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம்,   அரபு லீக், ஓப்பெக், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது. +நாட்டின் பெயர் அல்ஜியர்ஸ் நகரத்தின் பெயரில் இருந்து உருவானது. நகரின் பெயரானது அரபுச் சொல்லான அ���்-ஜஸாரி (الجزائر, "தீவுகள்"), என்ற சொல்லில் இருந்து உருவானது. + +கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக தாசிலி தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர். + +புகழ்பெற்ற கணிதவியலாளர் ஃபிபொனாச்சி (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார். + +1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை எசுப்பானியப் பேரரசு ஆண்டது. 1517இல் உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்தது. + +அல்சீரியாவின் பார்பரிக் கடலோரத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர். + +1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான "தேசிய விடுதலை முன்னணி" (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார். + +அல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது. + +அல்ஜீரியா ஆப்பிரிக்கா, அரபு உலம், மத்திய தரைக்கடல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நாடாகும். தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி சகாராப் பாலைவனம் ஆகும். வடக்கில் அவுரெசு, நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது. அவுஸ் மற்றும் நெமெம்பாவின் பரந்த மலைத்தொடர்கள் வடகிழக்கு அல்ஜீரியா முழுவதும் பரவியுள்ளது, இது துனிசியாவின் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் பெரும்பாலான பகுதி மலைப்பகுதியாகும், நாட்டில் ஒரு சில இயற்கை துறைமுகங்கள் உள்ளன. கடற்கரையிலிருந்து டெல் அட்லஸ் வரையிலான பகுதி வளமானது. டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும்; இதற்கும்  தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம�� உள்ளது. + +அஹாகர் மலைகள் (அரபு: جبال هقار), அல்லது ஹாக்கர் என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதியானது, நடு சகாரா, தெற்கு அல்ஜீரியாவின் உயர் நிலப்பகுதியாகும். இப்பகுதி தலைநகரான அல்ஜியர்ஸ் மற்றும் தெமன்கசெட் ஆகியவற்றுக்கு மேற்கே சுமார் 1,500 கிமீ (932 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.   அல்ஜீயர்ஸ், ஆரான், கான்ஸ்டன்டைன் மற்றும் அனாபா ஆகியவை அல்ஜீரியாவின் பிரதான நகரங்களாகும். +இந்தப் பகுதியில்,  நடுப் பாலைவன வெப்பநிலையாக ஆண்டுமுழுவதும் வெப்பம் மிகுந்த காலநிலை இருக்கும். சூரியனின் மறைவுக்குப் பிறகு, உலர் காற்று வெப்பத்தை விரைவாக இழக்கவைவைக்கிறது, மேலும் இரவு நேரம் மிகுந்த குளிராக இருக்கும். + +டெல் அட்லஸ் கரையோரப் பகுதிகள் மழைப்பொழிவு மிகுந்ததாக உள்ளது, ஆண்டுக்கு 400 முதல் 670 மிமீ வரை (15.7 அங்குலம் முதல் 26.4 வரை) என மேற்கில் இருந்து கிழக்கு வரை மிகுதியான மழை அளவு நிலவுவுகிறது. கிழக்கு அல்ஜீரியாவின் வட பகுதியிலும் மழை அதிகமாக உள்ளது, அங்கு சில ஆண்டுகளில் 1,000 மிமீ (39.4 அங்குலம்) வரை பொழியும். + +பிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 ° C (110 ° F) வரை இருக்கும். +அல்ஜீரியாவின் கடலோரம், மலைப்பகுதி, புல்வெளி, பாலைவனம்-போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பல்வேறு தாவரங்கள் வனவிலங்குகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவில் பல வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்கின்றன. மிகவும் பொதுவாக காணப்படும் விலங்குகள் காட்டுப்பன்றி, குள்ள நரி, வனப்புமிக்க சிறுமான் போன்ற ஆகும். இவை அல்லாது ஃபென்னேக்குகள் (நரிகள்) மற்றும் ஜெர்பாக்கள் போன்றவையும் ஓரளவுக்கு காணலாம். அல்ஜீரியாவில் ஆப்பிரிக்க சிறிய சிறுத்தை, மற்றும் சகாரா சிவிங்கிப்புலி போன்றவை அரிதாக காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பார்பரி ஸ்டாக் என்னும் ஒருவகை மான்கள் வாழ்கிறன. + +அலுவல் மொழியாக அரபும் பெர்பெரும் உள்ளன. பரவலாக பிரெஞ்சும் பேசப்படுகின்றது. + +அல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன. +யுனெசுக்கோவின் பல உலகப் பாரம்பரியக் களங்கள் அல்சீரியாவில் உள்ளன.இவற்றில் அம்மதிது பேரரசின் முதல் தலைநகரம் பெனி அம்மதின் அல் கல்'ஆ , பீனிசிய மற்றும் உரோமை நகரமான திபாசா, உரோம இடிபாடுகளான இயெமிலாவும் டிம்காடும், பெரிய நகரிய பாலைவனச்சோலை அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான எம்'சப் பள்ளத்தாக்கு ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை உலகப் பாரம்பரியக் களமாக மலைத்தொடர் தாசிலி விளங்குகின்றது. + + + + + +கானா + +கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும். + + + + +செழியன் சேந்தன் + +செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான். அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான். சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். + +இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது. இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும். இவன் காலத்தில் சீனநாட்டு யாத்ரீகனான யுவான் சுவாங் தமிழகத்திற்கு வந்து காஞ்சி சென்று, பின் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தான். செழியன் சேந்தனைப் பற்றி +"பாண்டியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது' என்று தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். + +வேள்விக்குடிச் செப்பேடு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: + + + + +அதிபரவளைவு + +கணிதவியலில் அதிபரவளைவு ("Hyperbola") என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது ஒரு இரட்டை நேர்வட்டக் கூம்பின் இரு பாதிகளையும் ஒரு தளம் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகமாகும். பரவளையம் மற்றும் நீள்வட்டம் காண்பதற்கு ஓர் தளத்தால் இரட்டைக் கூம்பின் ஒரு பாதியை மட்டும் வெட்டினால் போதும். + +நிலையான இரண்டு புள்ளிகளிலிருந்து உள்ள தூரங்களின் வித்தியாசத்தின் தனிமதிப்பு மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் ஒழுக்கு அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு வரைவிலக்கணம் கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் குவியங்கள் எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் மையத்துக்கும், அதன் உச்சியொன்றுக்கும் இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும். + +தளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையானக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் மாறிலியாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விட அதிகமானதாகவும் உள்ளவாறு நகரும் புள்ளியின் இயங்குவரையாகவும் அதிபரவளைவு வரையறுக்கப்படுகிறது. + +அதிபரவளைவின் ஆங்கிலப் பெயரான "hyperbola" மிகுதியான என்ற பொருள் கொண்ட -கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கிரேக்க கணிதவியலாளர் "அப்பலோனியசால்" (கிமு 262 - கிமு 190) கூம்பு வெட்டுக்களைப் பற்றிய அவரது படைப்பான ("Conics") இல் இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருத்து நிலவுகிறது. + +அதிபரவளையம் காட்டீசியன் தளத்தில் + +என்னும் சமன்பாட்டினால் குறிக்கப்படும் ஒரு வளைவரை ஆகும். +இங்கே formula_2 ஆக உள்ளதுடன் எல்லாக் குணகங்களும் மெய்யெண்களாகும். + +பரவளைவைப் போன்று அதிபரவளையமும் திறந்த வளைவரையாகும். அதிபரவளைவின் வளைவரை பிரிக்கப்பட்ட சமச்சீரான இரு கிளைப்பகுதிகள் உடையது. + +உச்சி + +இரு கிளைப் பகுதிகளின் மீது ஒன்றுக்கொன்று மிகக்குறைந்த தூரத்தில் உள்ள புள்ளிகள் இரண்டு அதிபரவளைவின் உச்சிகள் எனப்படும். இரு உச்சிகளுக்கும் இடையே உள்ள தூரம் 2a எனக் குறிப்பிடப்படுதல் வழமை. + +மையம் + +இரு உச்சிகளின் நடுப்புள்ளி அதிபரவளையத்தின் மையம். இது அதிபரவளையத்தின் இரு அச்சுகளும் சந்திக்கும் புள்ளியாக அமையும். + +அச்சு + +அதிபரவளைவிற்கு "குறுக்கு அச்சு", "துணை அச்சு" என இரு அச்சுகள் உள்ளன. அதிபரவளைவின் உச்சிகள் இரண்டையும் இணைக்கும் கோட்டுத்துண்டு குறுக்கச்சாகும். குறுக்கச்சுக்குச் செங்குத்தாக அதிபரவளையத்தின் மையத்தின் வழிச் செல்லும் கோட்டுத்துண்டு துணையச்சாகும். குறுக்கச்சின் நீளம் 2a மற்றும் துணையச்சின் நீளம் 2b (b = a(e - 1) எனவும் கொள்ளப்படுகிறது. அதிபரவளையத்தின் வளைவரை குறுக்கச்சு மற்றும் துணையச்சு இரண்டைப் பொறுத்தும் பிரதிபலிப்புச் சமச்சீருடன் அமையும். + +குவியம் +தளத்தில் அமையும் ஒரு நிலையான புள்ளியிலிருந்து உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையான கோட்டிலிருந்து அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் எப்பொழுதும் மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக அதிபரவளையம் வரையறுக்கப்படுவதில், + +இந்த நிலையான புள்ளி அதிபரவளையத்தின் குவியம் எனப்படும். சமச்சீர்த்தன்மையால் அதிபரவளையத்திற்கு இரு "குவியங்கள்" உள்ளன. இவை அதிபரவளைவின் மையத்திலிருந்து சமதூரத்தில், குறுக்கச்சின் மீது, உச்சிகளின் மறுபக்கங்களில் அமைந்த இரு புள்ளிகளாகும். இவை "F" மற்றும் "F" எனக் குறிக்கப்படுகின்றன. + +அதிபரவளைவின் மீதமையும் ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இவ்விரு குவியங்களுக்கும் இடைப்பட்ட தூரங்களின் வித்தியாசம் மாறிலியாகவும் அம்மாறிலி குறுக்கச்சின் நீளத்திற்குச் சமமானதாகவும் இருக்கும். + +formula_3. + +இயக்குவரை + +மேலே குவியத்தில் கூறப்பட்டுள்ள வரையறையின் நிலையான கோடு அதிபரவளையத்தின் இயக்குவரை எனப்படும். அதிபரவளையத்தின் சமச்சீர்ப் பண்பால் அதற்கு இரண்டு இயக்குவரைகள் உள்ளன. இவை இரண்டும் அதிபரவளையத்தின் துணை அச்சுக்குக்கு இணையாக இருபுறமும் மையத்திலிருந்து சமதூரத்தில் அமைகின்றன. அதிபரவளையத்தின் மையத்திற்கும் இயக்குவரைக்கும் இடைப்பட்ட தூரம் a/e. + +வட்ட விலகல் + +மேலே குவியத்தில் கூறப்பட்டுள்ள வரையறையின் மாறிலி அதிபரவளையத்தின் வட்டவிலகல் எனப்படும். இதன் மதிப்பு எப்பொழுதும் ஒன்றைவிட அதிகமானதாக இருக்கும். + +வட்ட விலகலின் குறியீடு: +"e" அல்லது formula_4 + +செவ்வகலம் + +அதிபரவளையத்தின் குவியங்களின் வழியாக அதன் இயக்குவரைகளுக்கு இணையாக வரையப்பட்ட நாண் அதிபரவளையத்தின் செவ்வகலம் (latus rectum) எனப்படும். செவ்வகலத்தில் பாதி அரைச் செவ்வகலம் எனப்படும். + +அணுகுகோடுகள் + +மையத்திலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல அதிபரவளையமானது அதன் மையத்தில் வெட்டிக்கொள்ளும் இரு கோடுகளை நோக்கி அணுகிக் கொண்டே செல்கிறது. அக்கோடுகள் அதிபரவளையத்தின் அணுகுகோடுகள் என அழைக்கப்படுகின்றன. மையத்திலிருந்து தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதிபரவளையத்திற்கும் அணுகுகோடுகளுக்கும் இடையேயுள்ள தூரம் கணிசமாகக் குறைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அதிபரவளையம் அணுகுகோடுகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. + +அதிபரவளையத்தின் குறுக்கச்சை கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் "x"-அச்சின் மீது எடுத்துக் கொண்டால் அணுகுகோடுகளின் சாய்வுகள் அளவில் சமமாகவும் குறியில் எதிரானதாகவும் இருக்கும்: +formula_6 + +குறுக்கச்சுக்கும் அணுகுகோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ எனில்: + +("x", "y") இல் அமைந்த பொதுவடிவ இருபடிச் சமன்பாடு கீழ்க்கண்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு ஒரு அதிபரவளையத்தைக் குறிக்கும். + +கட்டுப்பாடு: + +ஆதியை மையமாகவும் x மற்றும் y அச்சுகளை முறையே குறுக்கு அச்சு மற்றும் துணை அச்சாகக் கொண்ட அதிபரவளையத்தின் கார்ட்டீசியன் ச்மன்பாடு: + +இந்த அதிபரவளையத்தின் + + +குறுக்கச்சு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் "x"-அச்சுடனும் மையம் ஆதிப்புள்ளியுடனும் பொருந்தும் அதிபரவளைவின் சமன்பாடு: + +இந்த அதிபரவளையம் "கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்" என அழைக்கப்படும். + +குறுக்கச்சு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் "y"-அச்சுடனும் மையம் ஆதிப்புள்ளியுடனும் பொருந்தும் அதிபரவளைவின் சமன்பாடு: + +இந்த அதிபரவளையம் "வடக்கு-தெற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்" என அழைக்கப்படும். + +கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த, ஆதியை மையமாக உடைய அதிபரவளையத்திற்குச் சர்வசமமாக, அதே வட்டவிலகல்கள் கொண்டு அமையும் அதிபரவளையங்கள் வடக்கு-தெற்கு நோக்கித் திறந்த ஆதியை மையமாக உடைய அதிபரவளையத்திற்கும் சர்வசமமாக அமையும் (இங்கும் வட்டவிலகல்கள் சமமாக இருக்கும்). தேவையான சுழற்சியால் திறப்பு திசையை மாற்றக் கொள்ளலாம், மேலும் இடப்பெயர்ச்சியால் மையங்களை ஆதிக்கு நகர்த்தலாம் என்பதால் இது சாத்தியமாகிறது. வழக்கமாக கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையங்களே ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. + +ஒவ்வொரு அதிபரவளையத்துக்கும் ஒரு துணை அதிபரவளையம் உண்டு. ஒரு அதிபரவளையத்தின் குறுக்கச்சு மற்றும் துணையச்சு இரண்டையும் பரிமாற்றம் செய்யக் கிடைக்கும் புது அதிபரவளையம் எடுத்துக்கொண்ட அதிபரவளையத்தின் "துணை அதிபரவளையம்" எனப்படும். + +அதிபரவளையத்தின் சமன்பாடு: + +துணை அதிபரவளையத்தின் சமன்பாடு: + +துணை அதிபரவளையத்தின் வரைபடத்தை 90° சுழற்றினால் கிடைக்கக்கூடிய புது அதிபரவளையத்தின் சமன்பாடு, "a" மற��றும் "b" இரண்டும் இடம் மாறியிருக்கும் மாற்றத்தைத் தவிர, எடுத்துக் கொண்ட அதிபரவளையத்தின் சமன்பாட்டினைப் போலவே அமையும். அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையத்தின் கோணங்கள் நிரப்புக் கோணங்களாக அமையும். அதனால் அதிபரவளையத்தின் கோணம் θ = 45° (செவ்வக அதிபரவளையம்) கொண்ட அதிபரவளையத்துக்கு மட்டும் அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையம் இரண்டின் வட்டவிலகலும் சமமாக இருக்கும். பிற அதிபரவளையங்களுக்கு அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையம் இரண்டின் வட்டவிலகல்கள் வெவ்வேறாக இருக்கும். எனவே 90° சுழற்சியால் துணை அதிபரவளையத்தை மூல அதிபரவளையத்தோடு பொருத்த முடியாது. + +ஒரு அதிபரவளையத்தின் குறுக்கச்சின் நீளமும் துணையச்சின் நீளமும் சமம் (b = a) எனில், அதன் அணுகு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் 2θ = 90°. இத்தகைய அதிபரவளையம் செவ்வக அதிபரவளையம் எனப்படும். + +ஆதியை மையமாகவும் ஆய அச்சுக்களை அணுகுகோடுகளாகவும் கொண்ட செவ்வக அதிபரவளையத்தின் கார்ட்டீசியன் சமன்பாடு: + + + + + + + + + +அரிகேசரி + +அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றான். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். + +அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும். சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான் அரிகேசரி. மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள். தனைத்தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேட�� கூறுவது குறிப்பிடத்தக்கது. + +அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவனாவான். இவன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் இவனது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர். இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர். அரிகேசரியும் சிவனின்றி கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. +சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும், புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி, மங்கையர்க்கரசி, குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. + +சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில் +என்ற பாடல் வரியின் மூலம் நெல்வேலிப் போரில் இம்மன்னன் வென்றவனெனவும்,சேரனும், பிற குறு நில மன்னர்களும் இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார். அரிகேசரி துலாபாரமும், இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. +சீனப் பயணியான 'யுவான்சுவாங்' அரிகேசரியின் தந்தை காலத்தில் வரமுடியாமல் இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் மேலும் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது: +"பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு வேறு விளை பொருள் இல்லை! வெப்பம் மிக்க நாடு இது.இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது. செல்வத்தால் சிறந்துள்ளது" எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். + + + + + +கெப்லரின் கோள் இயக்க விதிகள் + +வானியலுக்கு, யொகானசு கெப்லரின் முதன்மையான பங்களிப்பு கெப்லரின் கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளாகும். கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், மிகவும் திறமையுள்ளவராக விளங்கிய ஜெர்மானியக் கணிதவியலாளரான ���ெப்லரின் விதிகளின் உருவாக்கத்துக்கு டென்மார்க்கைச் சேர்ந்த வானியலாளரான டைக்கோ பிரா (Tycho Brahe) என்பவரது துல்லிய வானியல் குறிப்புகள் (அவதானிப்புகள்) மிகவும் துணை புரிந்தன. + +ஐசாக் நியூட்டனுடைய பின்னாளைய கண்டுபிடிப்புகளான, நியூட்டனின் இயக்கவிதி மற்றும் புவியீர்ப்பு தொடர்பான விதிகள் என்பவற்றின் உருவாக்கத்துக்குக் கெப்லரின் கண்டுபிடிப்பு அடிக்களமாக (ஆதாரமாக) அமைந்தது எனலாம். தற்கால நோக்கில், கெப்லரின் விதிகள், நியூட்டனின் விதிகளின் விளைவுகளாக இருந்தாலும், வரலாற்றின்படி, கெப்லரின் விதிகளே முதலில் வெளியானவை. + +"ஒரு கோளின் சுற்றுப்பாதை, கதிரவன் ஒரு குவியத்தில் அமைந்திருக்கும் ஒரு நீள்வட்டமாகும்," என்பதே கெப்லரின் முதலாவது விதியாகும். + +கெப்லரின் இரண்டாவது விதி, "கோளையும், கதிரவனையும் இணைக்கும் நேர்கோடு, கோளின் சமகால இடைவெளி நகர்வில் சம பரப்பைத் தடவிச்செல்லும்," என்கிறது. + +"கோள்களின் ஒரு முழுசுற்றுக்கால அளவின் இருபடி, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) முப்படிக்கு நேர் சார்புடையது (நேர் விகித சமனாகும்). மேலும் நேர்சார்புக் கெழு (மாறிலி) எல்லாக் கோளுக்கும் ஒரே மதிப்பு கொண்டதாகும்." என்பது கெப்லரின் மூன்றாவது விதியாகும். + +ஒரு கோளின் முழுச்சுற்றுகாலம் T என்றும், நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியை r என்றும், கொண்டால் இம் மூன்றாம் விதியைக் கீழ்க்காணும் ஈடுகோளால் காட்டலாம்: + +மேலுள்ளவற்றில் M என்பது கதிரவனின் நிறை, G என்பது நியூட்டனின் பொருளீர்ப்பு நிலையெண் (மாறிலி). + +மேலுள்ள ஈடுகோளைக் கீழ்க்காணுமாறு சுருக்கி எழுதலாம்: +இதில் a என்பது formula_3 என்னும் நேர்சார்புத் தொடர்பை ஈடுகோளாக்கும் கெழு (மாறிலி), அல்லது நேர்சார்புக் கெழு. + +இரு வேறு கோள்களின் சுற்றுக்கால அளவுகள் T, T என்றும், அவற்றின் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் அளவுகள் r, r ஆக முறையே இருந்தால், சுற்றுக்காலங்களின் விகிதமும், பெரிய அச்சின் பாதிகளின் விகிதமும் கீழ்க்காணுமாறு அமையும். + + + + +ரணதீரன் + +ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான். ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். + +ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. + +ரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. +(பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11). + +ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான். + + + + +ஓலை + +ஓலை என்பது ஒருவித்திலைத் தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகள் ஆகும். ஓலைகள் பல இலை நரம்புகளைக் கொண்டுள்ளன. இவை ஈர்க்கு என அழைக்கப்படும். + + + + + + +கெல்வின் + +கெல்வின் ("Kelvin") என்பது எசுஐ ("SI") முறையின் ஒரு வெப்ப அலகு. இவ்வளவீட்டின் பாகைக் குறியீடு K ஆகும். எசுஐ (SI) அலகு முறையில் உள்ள ஏழு அடிப்படையான அலகுகளில் இதுவும் ஒன்று. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் அளவீட்டு முறைகளில், இந்த கெல்வின் அளவீட்டை தனிமுழு (absolute) அளவீட்டு முறை என்பர். ஏனெனில், இந்த அளவீட்ட���ன் படி சுழி கெல்வின் வெப்பநிலையானது (0 K) வெப்பவியக்கவியல் (Thermodynamics) கொள்கைகள் மற்றும் கருத்துக்களின் படியும் யாவற்றினும் கீழான அடி வெப்பநிலையாகும். எப்பொருளும் எக்காலத்திலும், இந்த சுழி கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே செல்லலாகாது. வெப்பநிலையின் முற்றான அடிக் கீழ் எல்லை ஆகும். இக் கெல்வின் வெப்ப அளவீட்டின்படி, நீரானது நீராகவும், நீராவியாகவும், உறைபனியாகவும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் முக்கூடல் புள்ளி எனப்ப்படும், சீர்சம நிலையில் (அல்லது சீரிணை இயக்கநிலையில்) இருக்கும் பொழுது, அவ் வெப்பநிலையானது 273.16 K என கணித்துள்ளனர். இதன் செல்சியசு வெப்பநிலையனது 0.01 C ஆகும். இவ்வளவீட்டு முறையானது லார்டு (அல்லது பாரன்) கெல்வின் எனப் பெயர் பெற்ற அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்சன் (1824-1907) என்னும் இயற்பியல் அறிஞரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெப்ப இயக்கவியல் அடிப்படையில் ஒரு தனிமுழு வெப்ப அளவீட்டு முறையின் தேவை பற்றி இவர் எழுதியுள்ளார். + +வெப்பநிலை "இடைவெளி"களில் ஒரு பாகை கெல்வின் என்பது ஒரு பாகை செல்சியசுக்குச் சமம். "இடைவெளி" 1 K = "இடைவெளி" 1 °C. பொதுவாக கெல்வின் பாகைகளைப் "பாகை" எனக் குறிப்பிடத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக 6 கெல்வின் என்றால் 6 பாகை கெல்வின் என அறியப்படும். + + + + +பராங்குசன் + +பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் துணையாவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான். + +கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர், நெடுவயல், பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன். பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய இரண்டாம் நந்திவர்மனும் படையுடன் வந்தான். இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. + +வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான். + +கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் கங்க அரசனானசிறீபுருசனை வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் கப்பம் கட்டினார்கள் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. + +கொங்கு நாட்டிற்குப் படையெடுத்து போரில் வென்ற பராங்குசன் காவிரி ஆற்றில் அமைந்திருந்த கொடுமுடிக்கு வருகை புரிந்தான்.சிவபெருமானை வணங்கி பொன்னும,பொருளும் காணிக்கையாக அளித்தான்.இக்குறிப்பானது வேள்விக்குடிச் செப்பேட்டில் கொடுமுடி மகுடி ஈசனை வணங்கினான்.சைவ சமயத்தைப் போற்றியவன் கோயில் பணிகள் செய்தான்.கொடுமுடி ஈசனுக்குப் பொன்னும்,பொருளும் ஈந்தான்.மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான்.கொடுமுடியும் இவனது ஆட்சியில் இருந்தது அதனால்தான் இத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி எனப்பெயர் பெற்றது என பராங்குசனின் சிவபக்தியினைப் பற்றி வேள்விக்குடி செப்பேட்டிலும்,கொடுமுடிக் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பராங்குசன் தன பாட்டனைப்போலவே இரணியகர்ப்பததானங்களும்,துலாபாரதாங்களும் செய்தான்.இறையனார் களவியல் மேற்கோள் பாடல்கள் இவனைப் புகழ்ந்து பாடின! வீரமும்,பெருமையும்,புகழும் உடையவனாகத் திகழ்ந்தான் பராங்குச பாண்டியன். + + + + +வில்லியம் தாம்சன் + +வில்லியம் தாம்சன் (சூன் 26 1824 - திசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த கணிதவிய இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரி��்துரைத்து அது குரித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய இசுக்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் "கெல்வின்" என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு "இலார்டு கெல்வின்" எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையில், இவர் நினைவாகக் கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது. + +வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேத்தியக் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler) ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித்து பரிசை (Smith Prize) வென்றார். +அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். + +ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. + +வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும். + +வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போலத் திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது. + +அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம் 7-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக்கு நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது. + +முனைவர் ப.ஐயம்பெருமாள். "வானவியல் முன்னோடிகள்", அறிவியல் ஒளி, சனவரி- 2009 இதழ். + + + + + +பராந்தகன் + +பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள். கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை, திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. + +கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் செய்து வெற்றி பெற்றுப் பின் பொதிகைமலைத் தலைவன் ஆய்வேளையும், தகடூர் அதிகமானையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர���களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும், காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி, பயிரூர், புகழியூர் போன்ற இடங்களில் அதியமான் மரபினன் அதியமானைப் போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும், அதியமானுக்கு உதவியாக சேர மன்னன் ஒருவனும், பல்லவ மன்னன் ஒருவன் வந்ததாகவும் இவர்களைத் துரத்திய பராந்தகன் கொங்கர் கோமானை வென்று புலவரைச் சிறையில் அடைத்து கொங்கு நாட்டு ஆட்சியைப் பெற்று விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்து அவன் நாட்டிலிருந்து யானைகள், குதிரைகள், மற்றும் செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து வந்து வெள்ளூரில் பகைவரை அடக்கி தென்னாடு முழுவதனையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான் எனவும் அச்செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. + +வெற்றி பெற்ற நாடுகளையெல்லாம் பாதுகாத்தும், குறுநில மன்னர்களைக் கண்காணித்தும் வந்திருந்தான் பராந்தகன். கரவபுரம் என்ற நகரில் அகழியும், மதிலும், கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்தான் பராந்தகன். மேலும் அப்பகுதி திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை என அழைக்கப்பெற்றது என களக்குடி நாட்டுக் கவந்தபுரம் என்ற கல்வெட்டுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. + +பாண்டிய மன்னர் பெரும்பாலானோரும் சைவர்களாக இருந்தாலும் பராந்தகன் திருமாலை வணங்கியவனாவான். "பரம வைஷ்ணவன்தானாகி நின்றியங்கு மணிநீள் முடிநில மன்னவன்" என பராந்தகன் வைணவ சமயத்தில் வைத்திருந்த பற்றினைப் பற்றி சீவரமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டி நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த பராந்தகன் அவரிடம் அடியவராகவிருந்தான். கொங்கு நாட்டு ஆட்சியில் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோயில் எடுத்தவன் பராந்தகனே. மேலும் இவனைப் பற்றிய செப்பேடுகள் பலவும் வைணவத் தர்ம சுலோகங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. + +போன்ற சிறப்புப் பெயர்களையும் பட்டங்களினையும் பெற்றிருந்த பராந்தகனே அதிக சிறப்புப் பெயர்களைப் பெற்ற அரசன் என வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றான். இவன் காலத்தில் வடமொழி ஆளுமையில் இருந்தது இதனாலேயே இவனது பெயர்கள்பல வடமொழிப்பெயர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. + +பராந்தகன் ஆட்சிக் காலத்தில் + +போன்ற அரசியல் தலைவர்கள் பலர் இருந்தனர் என கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் பலவற்றுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன. + + + + +மதிவாணன் + +மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான். + + + + +பொற்கைப் பாண்டியன் + +பொற்கைப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். + +பழமொழி நானூறு பாடல் ஒன்று பொற்கைப் பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. +102. + +மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில��� பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன். + +மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. + +குணநாற்பது என்னும் நூலிலுள்ள பாடல் ஒன்று பொற்கைப்பாண்டியன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. + + + + +இரகுவம்சம் + +இரகுவம்சம் என்னும் காவியம் சங்கத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும். + +இரகுவின் மரபினைப் பாடுவது இரகுவம்சம் ஆகும். இரகுவின் தந்தை திலீபன் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இக்காவியம் திலீபன், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் என்போரின் வரலாறுகள் விரிவாகக் கூறப்படுகின்றன. அத்துடன் குசன் பின் வந்த அதிதி முதல் அக்கினி, வருணன் வரையான இருபத்து மூவர் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. +நூலில் இறைவணக்கமாக சிவனைப்பற்றி பாடியிள்ளார். இரகுவசம்சத்தில் முதல் சுலோகத்தில் சிவனும் பார்வதியும் சொல்லும் பொருளும்போல் சேர்ந்திருக்கிறார்கள் என்ற உவமையோடு அவர்களைக் குறிப்பிடுகிறார். + +இரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 - 17 நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவராவார். இது 1887 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது. + +புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் முதற் பதினாறு படலங்களுக்கு எழுதிய உரை 1915 இலும் 1932 இலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. + +சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் எழுதிய இரகுவம்ச சரிதாமிர்தம் 1930 இல் வெளிவந்தது. + +வ��த்துவான் ரா. இராகவையங்கார் (1870-1946) சில சருக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். + +புலோலியூர் வ. கணபதிப்பிள்ளை (இ. 1895) வசன நடையில் எழுதினார். முதலைந்து சருக்கத்தின் மொழிபெயர்ப்பு சென்னையில் 1874 இலே வெளிவந்தது. + + + + + +அறிவுடை நம்பி + +அறிவுடை நம்பி பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி.இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,குறுந்தொகை-230, நற்றிணை-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன. +"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". +அறிவுடை நம்பி பாடியது +தலைவன் வீட்டுப் பக்கத்தில் காத்திருக்கிறான். தினைப்புனம் காக்கச் செல்வோம் என்று தோழி தலைவியை அழைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. + +'நாம் செல்லாவிட்டால் அன்னை நம்மைக் கிளியோட்டத் தெரியாதவர் என்று வீட்டிலேயே வைத்துவிடுவாள். உன்னைத் தழுவிய அவர் மார்பு வேறொருத்திக்கு ஆகிவிடக் கூடும்' என்கிறாள். + +அறிவுடை நம்பி பாடியது +நான் என் பேதைமையால் அவனை நோகச் செய்துவிட்டேனோ? அவன் திருமணத்தைப் பற்றி நினைக்காமலேயே இருக்கிறானே! - என்கிறாள் தலைவி. + +அறிவுடை நம்பி பாடியது + +இதில் உள்ள அரிய உவமைகள் + +அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார். +இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் "அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு செய்து ���ட்டால் பலநாட்கு உணவாகும். யானையை நெல்வயலில் விட்டால் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார். + + + + +பல்படிகத் திண்மம் + +ஒரு திண்மத்தின் சிறுசிறு பகுதிகள் மட்டும் குறும்படிகங்களாய் இருந்து, இக்குறுபடிகங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வெவ்வேறான கோணங்களில் இணைந்திருந்தால் அவ்வகை திண்மத்தை பல்படிகத் திண்மம் ("polycrystalline", "multicrystalline materials", அல்லது "polycrystals") என்பர். இதிலும் குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து, மில்லி மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், மைக்ரோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், நானோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம் என்று குறிக்கப்படும். குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து அத்திண்மத்தின் இயல்பியல் பண்புகள் பெருமளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக, மின் கடத்துமை பல்லாயிரம் மடங்கு வேறுபடும். அதே போல திண்மத்தின் காந்தப் பண்புகள், ஒளிப்பண்புகள், வேதியியல் பண்புகள் எல்லாம் மிக மிக மாறுபடும். + + + + +மைக்ரோமீட்டர் + +ஒரு மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் (Micrometer) ஆகும். +ஒரு மில்லி மீட்டரின் ஓர் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் ஆகும். +மாந்தர்களின் தலை முடியானது சற்றேறக் குறைய 80 மைக்ரோ மீட்டர் இருக்கும். பட்டுநூல் சுமார் 15 மைக்ரோ மீட்டர் இருக்கும். ஒரு மாந்தப் பெண்ணின் கருவுறும் முட்டை சுமார் 500 மைக்ரோ மீட்டர் இருக்கும். நுண்ணுயிர்கள் 1-10 மைக்ரோ மீட்டர் பருமன் இருக்கும். மாந்தர்களின் சிவப்பணு சுமார் 6-8 மைக்ரோ மீட்டர் இருக்கும். + +கிரேக்க எழுத்தாகிய µ (= மியூ) என்பதை மைக்ரோ என்னும் சொல்லைக்குறிக்கும் முன்னொட்டாக இடுவர். எடுத்துக்காட்டாக மைக்ரோ மீட்டர் என்பதை µm எனக் குறிப்பர். µ என்பதை யூனிக்கோடில் U+00B5 என்றும் மீசுட்டு மொழியில் (HTML) codice_1 என்றும் குறிப்பர். "மைக்ரோ மீட்டர்" என்பதை "மைக்ரான்" என்று 1879 ஆம் ஆண்டுமுதல் 1967 ஆண்டுவரை அழைத்து வந்தனர் ஆனால் இன்று இது செல்லாத(அறிவியல் ஏற்பு அற்றப்) பெயராகக் கருதப்படுகின்றது. + +சுருக்கமாக: + + + + + +காசுப்பாய்ச்சல் கூற்று + +காசுப்பாய்ச்சல் கூற்று (cash flow statement )என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் (காலாண்டிற்கு அல்லது ஒருவருடத்திற்கு) நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் தீர் இயலளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும். + +கணக்கியலில் காசு எனும் பதமானது பணத்தினைதவிர குறுங்காலத்தில் இழப்பின்றி காசாக மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்(Preference shere),தொகுதிகடன்(Debenture),திறைசேரி உண்டியல்(Treasury Bill),அழைப்பு வைப்பு(Call deposit) என்பனவற்றையும் குறிக்கும். + +நிறுவனமொன்றில் இடம்பெறும் காசுப்பாய்ச்சல்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின்படி (இலங்கை கணக்கீட்டு நியமம் 09) 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: + +பொதுக்கம்பனிகள் நிதியறிக்கை வெளியிடும் போது காசுப்பாய்ச்சல் கூற்றினையும் வெளியிடவேண்டும் என இலங்கையில் கம்பனிச்சட்டம் கூறுகின்றது. + +செயற்பாட்டு நடவடிக்கைகள் நிறுவனதில் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளினையும் இதன்போது ஏற்படும் காசுப்பாய்ச்சல்களை உள்ளடக்கும்.எடுத்துக்காட்டாக, விற்பனை,பொருட்கொள்வனவு போன்றவையாகும். + +இவைதவிர: + +மூதலீட்டு நடவடிக்கைகள் நிறுவனத்தில் இடம்பெறும் நீண்டகாலச் சொத்துக்களின் கொள்வனவினையும் அதன் விற்பனையின்போதும் நிகழும் காசுப்பாய்ச்சலினை உள்ளடக்கும். + +நிதியிடல் நடவடிக்கைகள் நிறுவனத்தில் முதலீட்டாளர்,பங்குதாரர்,வங்கிளிடமிருந்து நிதி பெறப்படுதல்,மீள செலுத்தப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் காசுப்பாய்வினையும் உள்ளடக்கும். + +The cash flow for this example is +$40.00. + + + + + + +சத்திரம் + +அகரமுதலிகளில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்காலத்தில் சத்திரம் (Choultry) என்பது வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு இடத்தைக் குறிக்கும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, சத்திரம் என்பதற்கு "அன்னசாலை" என்று பொருள் கொடுத்துள்ளது. இதன்படி சத்திரம் என்பது தங்கிச் செல்வதற்கான இட வசதியுடன் வழிப்போக்கர்களுக்கு உணவும் அளித்துப் பசி தீர்க்கும் இடமாகவும் அமைந்தது தெரிகிறது. + +முற்காலத்தில் போக்குவரத்து மிக மெதுவாகவே நடைபெற்றது. விலங்குகளால் இழுத்துச் செல்லப்படும் மாட்டு வண்டிகள் போன்றவை பயன்பாட்டில் இருந்தன. பெருமளவில் கால்நடையாகவும் போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டன. ஊர்களுக்கு இடைப்பட்ட சாலைகள் பொதுவாக இரவில் பாதுகாப்பு அற்றவையாகவே இருந்தன. இதனால் தொலை தூரப் பயணிகள் இரவில் தங்கிச் செல்வதற்குப் பாதுகாப்பான இடங்கள் தேவைப்பட்டன. கோடை காலங்களில், பகல் நேரங்களிலும் கூட வழிப்போக்கர்களான மனிதர்கள் மட்டுமன்றி, அவர்கள் பயணம் செய்யும் வண்டிகளை இழுத்துச் செல்லும் விலங்குகளும், இளைப்பாறவும், உணவு, தண்ணீர் முதலியன பெற்றுக்கொள்வதற்கும் வேண்டிய தேவையும் இருந்தது. + +மிகப் பழைய காலத்தில் இருந்தே மன்னர்களும், செல்வர்களும், வேறுபலரும் சத்திரங்கள் அமைப்பதை ஒரு சிறந்த அறப்பணியாகக் கருதி முக்கியமான இடங்களில் சத்திரங்களை அமைத்து வந்தனர். + + + + +பொன்பரிப்பு தொல்லியற் களம் + +பொன்பரிப்பு தொல்லியல்களம் இலங்கையின் தற்போதைய புத்தளம் மாவட்டத்திலுள்ள பொன்பரிப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது புத்தளம் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வடக்கில், கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. + +1923 - 1924 ஆம் ஆண்டுகளில் ஏ. எம். ஹோக்கார்ட் ("A.M. Hocart") என்பார் புத்தளம் - மன்னார் கரையோரப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது பொன்பரிப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றைக் கண்டுபிடித்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ராஜா டி சில்வா, பல தாழி அடக்கமுறை சார்ந்த பல ஈமத்தாழிகளை அகழ்ந்து எடுத்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஆய்வு நடத்திய விமலா பேர்க்லே ("Vimala Begley"), பெனட் புரொன்சன் ("Bennet Bronson"), முஹம்மது மௌரூப் ("Mohamed Mauroof") ஆகியோரைக் கொண்ட பென்சில்வேனியப் பல்கலைக் கழகக் குழு ஒன்று இப் பகுதியிலிருந்து மேலும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்தது. + + + + +ரேனால்டு ஜான்சன் + +ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும், கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை "வன்தட்டு இயக்கியின் தந்தை" எனப் போற்றுவர். + +ரேனால்டு ஜான்சன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா என்னும் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் நெடுங்காலம் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் 1930களில் பென்சிலால் (கரிக்குச்சி எழுதுகோலால்) கீறப்பட்ட இடத்தை உணரும் வகையான ஒரு புதிய எந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையிலேயே ஐபிஎம் நிறுவனமானது "ஐபிஎம் 805 தேர்வு செய்யும் எந்திரம்" (IBM 805 Test Scoring Machine) என்னும் ஓர் எந்திரத்தை 1937 முதல் விற்கத் தொடங்கியது். ஒளிப்பதிவு நாடா செய்வதிலும் இவர் புத்தாக்கங்கள் செய்துள்ளார். இவர் 1971ல் ஐபிஎம் இல் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 90 க்கும் அதிகமான புத்தாக்க உரிமங்களை (பேட்டண்ட் Patent) பெற்றுள்ளார். நிலைசேமிப்பகம் உருவாக்கி 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய தொழிவளர்ச்சி ஏற்படுதிய முன்னோடி என்பதால் இவருக்கு ஐக்கிய அமெரிக்கத் முதல்வர் (பிரெசிடெண்ட்) ரோனால்டு ரேகன் அவர்கள் 1986ல் நாட்டின் தொழிநுட்பப் பதக்கம் என்னும் தலையாய பரிசை அளித்து பெருமை செய்தார். + + + + + +ரானல்ட் ரேகன் + +ரானல்ட் வில்சன் ரேகன் (அல்லது ரொனால்ட் ரீகன்) (பிப்ரவரி 6, 1911 - ஜூன் 5, 2004) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர். + +இவர் இலினாய்சின் டம்பிக்கோ நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜாக் ரேகன், நெல்லே ரேகன் ஆவர். இவரது தந்தை விற்பனையாளராகப் பணியாற்றியவர். இளவயதில், இலினாய்சின் பல நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் வாழ்ந்தார். இவர் இனவேறுபாட்டை வெறுத்தார். +டிக்சன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே கதைகூறுதல், நடித்தல், விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆறு ஆண்டு காலம் உயிர்காப்பாளாராக இருந்தார். யுரேகா கல்லூரியில் படித்தார். பொருளாதாரம், சமூகவியலில் மேற்படிப்பை படித்தார். கல்லூரியின் கால்பந்தாட்ட குழுவில் இணைந்தார். கல்லூரி அரசியலில், விளையாட்டில் , நாடகத்தில் என பல்வேறு துறைகளில் பங்கு கொண்டார். + +யுரேகாவில் கல்வி கற்ற பின்னர், ஐயோவா மாகாணத்திற்கு நகர்ந்தார். வானொலி நிலையங்களில் வேலை கிடைத்தது. ஐயோவா பல்கலைக்கழகத்தின் வானொலிச் சேவையிலும் பணிபுரிந்தார். +வானொலிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். + +கலிபோர்னியாவுக்குச் சென்று, வார்னர் புரோஸ் நிறுவனத்தில் ஏழாண்டுகள் வேலைக்குச் சேர்ந்தார். இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. +1939 ஆண்டிஏகுள் 19 திரைப்படங்களில் நடித்திருந்தார். இவற்றில் டார்க் விக்டரி குறிப்பிடத்தக்க திரைப்படம்.. சாண்டா ஃபே டிரையல் என்ற திரைப்படத்தில் கிப்பர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பெயராலேயே நீண்ட காலம் அழைக்கப்பட்டார். 1941இல் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கத் திரைப்படத்துறையில் முன்னணி நாயகர்களுள் ஒருவர் எனத் தெரிய வந்தது. கிங்ஸ் ரோ என்ற வெற்றித் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அமெரிக்க இராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். எனவே, திரைத்துறையில் நட்சத்திர நாயகனாக வாய்ப்பிருக்கவில்லை, +தி வாய்ஸ் ஆஃப் தி டர்ட்டில், ஜான் லவ்ஸ் மேரி, தி ஹாஸ்டி ஹார்ட், பெட்டைம் ஃபார் போன்சோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். + +பதினான்கு இராணுவப் படிப்புகளை படித்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். செகண்ட் லியூடனண்ட் என்ற பதவியை அடைந்தார். இவரது கிட்டப் பார்வையினால், குறைந்தகால சேவையை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றினார். சிறிதுகாலத்திற்குப் பின்னர், முதல்நிலை லியூடனண்ட் ஆக உயர்ந்தார். +மேஜர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். போர் முடியும் வரையில் அமெரிக்காவிலேயே இருந்தார். + +ஜேன் வைமன் என்ற நடிகையுடன் இணைந்து பிரதர் ரேட் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். இவரின் அரசியல் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் மனைவி மணமுறிவு கோரினார். மணமுறிவு பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் இவரே. +நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். குறுகிய கால பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. +இவருக்கு அல்சீமர் நோய் தாக்கியபோது, இவர் மனைவி இவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார். + +1945 இல் அரசியல்வாதியானார். தொடக்கத்தில் இருந்தே அணு ஆயுதங்களுக்கு எதிராக முழக்கமிட்டார். +தொடக்கத்தில் மக்கள் கட்சியில் இருந்தவர், 1962இல் குடியரசுக் கட்சிக்கு மாறினார். +தனி மனித உரிமைகளை பறிக்கும் சட்டங்களை எதிர்த்தார். + +கலிபோர்னியா பகுதியில் வாழ்ந்த கட்சியினர் மத்தியில் இவரது கருத்துகள் பிரபலமாயின. +கலிபோர்னியா ஆளுநராகும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இரு முறை ஆளுநர் பதவியில் நீடித்தார். இது அவருக்கு அரசியலை நன்கு புரியச் செய்தது. பின்னாளில் அதிபராகவும் உதவியது. + +இவர் அதிபரான காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வந்தார். இராணுவத்தை விரிவாக்கினார். குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதுவரையிலும் அதிபராக இருந்தவர்களில் அதிக வயதில் பதவியேற்றவர் இவரே. பனிப்போரிலும் முக்கிய பங்கு வகித்தார். +அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் அமெரிக்க அதிபர் இவரே. +ஈரானியப் போர், லிபியாவில் குண்டுவெடிப்பு, போதைமருந்துகளுக்கு எதிரான போர் ஆகியவற்றிலும் பங்குகொண்டார். + +இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் என்ற அமைப்பில் வாழ்நாள் சிறப்பு உறுப்பினராக ஏற்கபட்டார். அமெரிக்க அரசின் இராணுவத்தினால் வழங்கப்படும் தாயர் விருது பெற்றுள்ளார். +பிரெசிடென்சியல் மெடல் ஆஃப் பிரீடம் எனப்படும் விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். வாசிங்டன் விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை கப்பலுக்கும், வான்படை விமானத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. +இவரது வெண்கல உருவச் சிலை தேசிய சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் இறந்த பின்னர், இவரை போற்றும் வகையில் அரசு அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. +இருபதாம் நூற்றாண்டின் நூறு முக்கிய நபர்கள் என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. +பிப்பிரவரி ஆறாம் நாளை இவரின் நினைவாக ரீகன் நாளாகக் கொண்டாடுகின்றனர் கலிபோர்னிய மக்கள். +போலந்து நாட்டின் உயரிய பட்டமான “தி ஆர்டர் ஆஃப் ஒயிட் ஈகிள்” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. + + + + +காற்றுமெத்தை உந்து + +காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. + +1716ல் முதல் முதலாக வரலாற்றில் பதிவான ஓரளவிற்கு காற்றுமெத்தை உந்துபோல் ஒன்றை ஆக்கியவர் இம்மானுவேல் ஸ்வீடன்பர்கு (manuel Swedenborg) என்னும் ஸ்வீடன் நாட்டவர் ஆவார். இவர் ஒரு பொறி சமைப்பாளரும், மெய்யியல் அறிஞரும், கடவுள்கொள்கை அறிஞரும் ஆவார். படகு ஒன்றை தலைகீழாக கவிழ்த்தது போல இருக்கும் ஓர் ஊர்தியில், கையால் துடுப்பு போன்ற ஒன்றால் காற்றை உந்தித்தள்ளுவது போன்று மைந்த ஒரு ஊர்தியை அறிவித்திருந்தார். + +1870களின் நடுவில் பிரித்தானியப் பொறியியலாளர் சர் ஜான் ஐசாக் தார்ணிகிராப்ட் அவர்கள் படகின் அடிப்பகுதியில் உராய்வைக் குறைக்க காற்றை செலுத்துமாறு ஒரு முறையை முன்வைத்தார். காற்றை உயவுப் பொருளாக (உராய்வைத் தடுக்கும் பொருளாக) பயன்படுத்தும் பல புதிய ஆக்கங்களுக்கான காப்புரிமங்களை 1877ல் பதிவு செய்தார் எனினும், செயல்முறையில் பயன்படத்தக்க ஆக்கங்கள் ஏதும் உருவாகவில்லை. +பின்லாந்து பொறியாளர் டோய்வோ காரியோ என்பார் வால்டியொன் லெண்டோகோனெட்டேடாஸ் (Valtion Lentokonetehdas (VL) ) என்னும் வானூர்தி இயந்திரம் செய்யும் தொழிற்கூடத்தின் தலைவராய் இருந்தார்(. இவர் 1931ல் தரையின் மேல் பரப்பில் காற்றழுத்தத்தால் மிதக்கும் ஊர்தி ஒன்றை செய்து ஓட்டிக் காட்டினார். எனினும், போதிய பொருள் ஊக்கம் பெறாததினால் அம்முயற்சி மேலும் வளர்ச்சி அட���யவில்லை. பின்லாந்தின் காப்புரிமம் எண்கள் 18630, 26122. ஆகியவை இவருடைய புதிய ஆக்கங்களை விரிக்கின்றது. +காற்றுமெத்தை உந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைப்பொறியைக் கொண்டுள்ளது. பல விசைப்பொறிகள் உள்ள காற்றுமெத்தை உந்துகளில் ஒரு விசைப்பொறி விசிறியை இயக்கப்பயன்படுகிறது. இந்த விசிறியானது காற்றுமெத்தை உந்துவை அதிக அழுத்தத்துடன் தள்ள பயன்படுகிறது. கூடுதலான விசைப்பொறி உந்து சக்தியை கொடுக்கிறது. + + + + +வெற்றிவேற் செழியன் + +வெற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் என்பதனை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) போன்றன கூறுவது குறிப்பிடத்தக்கது. + +இவன் காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாமல் இருந்தது. குடிமக்கள் ஆடு,மாடுகளினை வளர்க்க முடியாமல் துன்புற்றனர். வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. இதனைப் பார்த்த நன்மாறனும் கண்ணகியின் சாபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என உணர்ந்து கண்ணகிக்கு விழா எடுத்தான். அவ்விழாவிற்குப் பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. வற்கடம் நீங்கியது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர். பாண்டியன் சித்திர மாடத்து உயிர் துறந்தான். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புகழப்பட்டான். + +நன்மாறனின் சிறப்பைப் பற்றி மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவ்வாறு பாடுகின்றார். +பாடாண் திணைப் பாட்டாக விளங்கும் இப்பாடலில் "அழகான கண்டோர் மயங்கும் மார்பை உடையவன். வெற்றி மாலை அணிந்தவன். நீண்ட கைகளை உடையவன். கை நீண்டிருப்பது ஆண்மைக்குரிய அங்க இலக்கணம்! தகுதியான நல்ல குணங்களை எல்லாம் பெற்றவன். வலிமையானவன். விரும்பி பிறர்க்களிப்பான். பொய் உரையாதவன். பகைவரிடம் கோபம் உடையவன். பகைவர்களுக்குச் சூரியன் போன்றவன். எங்களுக்குத் திங்கள் போன்றவன்" எனப் புகழ்ந்து பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார். + + + + +ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் + + + + +கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் + +கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்(University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது. + +31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது. + +கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது. + +கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இங்கிலாந்து கிங் ஹென்றி IIIஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து போப் கிரிகோரி IXயால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார். + +இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று போப் நிக்கோலஸ் IV 1290ல் அறிவித்த பிறகும் போப் ஜான் XXII மூலம் 1318ல் உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர். + +கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன. + +ஹக் டி பால்ஷாம்,எலி ஆயர் 1284ல் பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற சிட்னி சுச்செக்ஸ் கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற டௌனிங் கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது. + +இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்க்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் மடாலயங்களின் கலைத்தலுக்கு பின்பு மாறியது. + + + + + + + +சாத்தஞ்சாத்தன் + +ஏனாதி சாத்தஞ்சாத்தன் என அழைக்கப்பட்ட இவன் சாத்தன் கணபதியின் தம்பியாவான்.ஏனாதி என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தவனும் ஆவான்.வேள்விக்குடிச் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதிகளினைப் பற்றிப் பாடியவனான இவன் புலமை மிக்கவனாகவும், படைத் தலைவனாகவும் இருந்தான்.பாண்டிய மன்னர்களின் வரலாறுகளினைச் செப்பேடுகளில் பாடியவன் இவனே என்ற பெருமையினையும் உடையவன். + + + + +சாத்தன் கணபதி + +சாத்தன் கணபதி என்றழைக்கப்பட்ட கணபதி கரவந்த புரத்தில் வாழ்ந்த மருத்துவனாவான். சாத்தன் என்பவனின் மகனான காரணத்தினால் சாத்தன் கணபதி என்ற பெயரைப் பெற்றவன்.பராந்தகன் ஆட்சிக் காலத்தில் படைக்குத் தலைமைத் தளபதியாக இருந்தவன் இவன் பராந்தகனால் அமிர்தலிங்க வரையன் என்ற பட்டத்தினை பெற்றான். திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்கு அறப்பணி ��ெய்து அங்குள்ள திருக்குளத்தையும் அமைக்கக்காரணமானவனும் +ஆவான். இப்பணியினைப் பற்றி பராந்தகனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மனைவியான +நக்கன் கொற்றியாரும் கோயில் திருப்பணிகளைச் செய்தவளாவாள். துர்க்கையம்மனுக்கும், சேட்டைக்கும் தனித்தனியே கோயில் அமைத்தவள் என அக்கோயில் கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது. + + + + +எயினன் + +மாறன் எயினன் என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.எயினன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் பராந்தகன் அரசவையில் முதல் அமைச்சனாக இருந்தான்.இவனது அண்ணன் கட்டிய திருமால் கோவிலுக்கு முகப்பு மண்டபம் கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு கடவுள் மங்கலம் செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் பாண்டி மங்கல விசையரையன் என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு. + + + + +காரி + + + + + +மதிவாணர் நாடகத் தமிழர் + +கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் மதிவாணனால் எழுதப்பட்ட இந்நூல் மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மதிவாணர் நாடகத் தமிழர் எனவும் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் அகற்பாவாலும்,வெண்பாவாலும் இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஜந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. +‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார் பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். + +இதனால் கூத்த��ூல் என்பதும், மதிவாணனார் நாடகத்தமிழ் என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். + + + + +புறநானூற்றுப் புலவர்கள் + +சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான புறநானூறு பல புலவர்களால் பாடப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். இப்புலவர்களின் பட்டியல் புறநானூற்றுப் புலவர்கள் என்னும் தலைப்பில் கீழே தரப்பட்டுள்ளது. + + + + +ஆலங்குடி வங்கனார் + +ஆலங்குடி வங்கனார் என்பவர் பண்டைக்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் தமிழ்ச் சங்கங்களில், கடைச் சங்கத்தைச் சேர்ந்த 49 புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஆலங்குடி என்னும் இடத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது என்பர். இத் தகவல்களைத் தவிர இவர் வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. "வங்கம்" என்பது "கப்பல்" எனப் பொருள் தரும். எனவே இவர் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த குடியைச் சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். + +இவர் பாடிய பாடல்கள் சங்கத் தமிழ் நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. இவை மொத்தம் ஏழு ஆகும். குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், நற்றிணையில் மூன்று பாடல்களும், அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் தலா ஒவ்வொன்றும் இவர் பாடியவையாகக் குறிப்பிடப்படுகின்றன. + +ஆலங்குடி இருப்பிடம் காண்க \ ஆலங்குடி + + +இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களாக உள்ளன. தலைவி ஊடலும், அவள் ஊடலுக்குக் காரணமான நிகழ்ச்சிகளும் மருதத்திணை. + + + + +இடைக்காடனார் + +இடைக்காடனார் (அல்லது இடைக்காடர்), சங்கத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இடைக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பர். இதனாலேயே இவர் இடைக்காடனார் என்று அழைக்கப்படுகிறார் எனக் கருதலாம். முல்லைத் திணைச் செய்யுள்களைக் கூடுதலாகப் பாடியிருப்பதனால், இவர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். + +சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன. அவை: +அகநானூறு 139, 194, 274, 284, 304, 374 +குறுந்தொகை 351 +நற்றிணை 142, 316 +புறநானூறு 42 +இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9-ல் 7 முல்லைத்திணைப் பாடல்களும், 2 பாலைத்திணைப் பாடல்களும் உள்ளன. +புறப்பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாராட்டியுள்ளார். +==பாடல் தரும் செய்திகள்= + + + + +தீரகரன் மூர்த்தி எயினன் + +தீரகரன் மூர்த்தி எயினன் பாண்டிய மன்னன் பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் 17 ஆம் ஆண்டளவில் பாண்டியப் படைக்கு தலைமைத் தளபதியாக இருந்தவன்.சீவரமங்கலச் செப்பேடுகளில் ஆணத்தியாக இருந்தான் எனக் குறிக்கப்பட்டுள்ளது.பராந்தகன் இவனது பணிகளைப் பாராட்டி வீரமங்கலப்பேர் அரையன் என்ற பட்டத்தினை அழித்தான் என்பது வரலாறு. + + + + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்சுபோர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே கடும் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். + +இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி +22,640 மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 15,495 மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 7,145 மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது. + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே ஐக்கிய இராச்சியத���தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரிட்டிஷ் நூலகத்திற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நூலகம் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது. + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய பல திறந்த அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் பராமரிக்கின்றது. இவற்றுள் ஒன்றான அஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகமே ஐக்கிய இராச்சியத்தின் பழமையான அருங்காட்சியகமும் உலகின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழக அருங்காட்சியகமும் ஆகும். அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, பாப்லோ பிக்காசோ போன்றோரின் படைப்புக்கள் உள்ளடங்கலாகக் கலை மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பல குறிப்பிடத்தக்க திரட்டுகள் காணப்படுகின்றன. + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. + +ஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது. + +ஆக்சுபோர்டு பல்கலைக்கழக உறுப்பினராவதற்கு, அனைத்து மாணவர்கள், மற்றும் பெரும்பாலான கல்வித்துறை ஊழியர்கள் மேலும் ஒரு கல்லூரி அல்லது மண்டபம் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகளும் ஆறு நிரந்தர தனியார் மண்டபங்களும் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடப் படிப்புக்களும் கற்பிக்கப்படாவிட்டாலும் ஒரு பரந்த அளவிலான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. + +அந்தக் கல்லூரிகள் பின்வருமாறு: + + + + + + + +இரண்டாம் இராசசிம்மன் + +இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான். இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள், பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை. + + + + +வரகுணன் + +வரகுணன் கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த "முதலாம் வரகுண பாண்டியன்". இரண்டாம் இராசசிம்மனின் மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன். மாறன் சடையன் என்னும் வேறு பெயரும் உண்டு. வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் போர் செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன. + +பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு திருவியலூர்,திருநெய்த்தானம் ஆகிய ஊர்களிலும். இவனின் ஆறாம் மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் ஆடுதுறை, கும்பகோணம், செந்தலை ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் திருச்சிராப்பள்ளி, திருக்கோடிகா ஆகிய ஊர்களிலும் மேலும் திருச்சோற்றுத்துறையில் சில கல்வெட்டுக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் சோழ நாடு முழுவதும் இவன் ஆட்ச��யில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது. மேலும் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை மண்டலத்தினையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். + +நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் வைத்து, 125 கழஞ்சு பொன் கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான். திருநெல்வேலி அம்பாசமுத்திரக் கோயிலுக்கு 240 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. + +திருவாதவூரடிகளாகிய மணிவாசகர் வரகுண பாண்டியனோடு இருந்த சமயம் இவனைப் பற்றித் திருச்சிற்றம்பலக் கோவையில் இரு பாடல்களைப் பாடினார். அவையாவன: + +இப்பாடல் மூலம் "பாண்டியன் வரகுணன் போர் மேற்சென்றால் பகைவர் தேர்கள் புறம் செல்ல இயலாது! இவன் சிற்றம்பலத்து இறைவனை அன்றி பிற தெய்வம் வணங்காதவன். அதனால் இவனே மற்றொரு தெய்வம் ஆவான். புயலன்ன சடை உடையவன் சிற்றம்பலத்து இறைவன்.அவனை வணங்கும் வரகுணன் யானைப்படை கொண்டு பகைவர் மதிலை எரித்தான்"என மணிவாசகர் புகழ்கின்றார். + +பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் வரகுணன் ஆற்றிய தொண்டுகள் அனைத்தினையும் பாடலாகக் கூறியுள்ளார் அப்பாடலில்- +வரகுணன் வெந்நீறு பூசியிருப்பான். ஈசனையே ஏத்தி இருப்பான்.ஈசனைப் பாடியவர்களுக்கு காசும், பொன்னும் கொடுத்தான். வேம்பு பழத்தை சிவலிங்கம் என்று விதானம் அமைத்தான். மனைவியைக் கோயில் பணி செய்ய வைத்தான். பார்க்கும் இடமெல்லாம் ஈசனையே கண்டு வணங்கினான்" எனப் பாடியுள்ளார் பட்டினத்தடிகள். + +பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள் கோயில் திருப்பண்ணியர் என்ற விருத்தம் பாடினார். அதில் அவர் வரகுணனைப் பற்றிப் பாடுகையில் +என வரகுணன் சிவன் மீது கொண்டிருந்த அன்பினைப் பாடியுள்ளார். + +வரகுணனின் ஆட்சி பற்றி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தளபதி சமுத்திரம், கழுகுமலை, ஏர்வாடி ஆகிய ஊர்களில் 39.41,42,43 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. 43 ஆண்டுகள் ஆட்சி புரிந்த வரகுணன் கி.பி.835 ஆம் ஆண்டு இறந்தான். + + + + +சங்கரன் சீதரன் + +சங்கரன் சீதரன் பாண்டிய நாட்டு மன்னன் பராந்தகனின் யானைப் படை��ளுக்குத் தலைவனாக இருந்தவன். பாண்டிய நாட்டில் அமையப்பெற்றிருந்த கொழுவூரில் பிறந்த சங்கரன் சீதரன் பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் என்ற பட்டத்தினைப் பெற்று அரசனால் பெரிதும் மதிக்கப்பட்டவனாகத் திகழ்ந்தான். + + + + +சியார்ச் வாசிங்டன் + +சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை "ஐக்கிய அமெரிக்காவின் தந்தை" எனப் போற்றுவர். + +சியார்ச் வாசிங்டனின் தந்தை அகஸ்டின் வாஷிங்டன் நிறைய நிலங்களையும் அடிமைகளையும் பெற்றிருந்த ஒரு செல்வந்தராகவும், இலட்சியமிக்க மனிதராகவும் இருந்தார். இவர் நிறைய ஆலைகளைக் கட்டினார். புகையிலை விவசாயம் செய்தாார். ஒரு காலத்தில், அவர் இரும்பு சுரங்கங்களைத் திறக்கும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவர் ஜேன் பட்லரை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். 1729 ஆம் ஆண்டில் ஜேன் இறந்தார். பின்னர் 1731 ஆம் ஆண்டில் ஆகஸ்டின் மேரி பாலை மணந்தார். அகஸ்டின் மற்றும் மேரி ஆகியோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் சியார்ச்சு வாசிங்டன் மூத்தவராக இருந்தார். சியார்ச் வாஷிங்டனின் தந்தை 11 வயதில் இறந்துவிட்டார், அவர் தனது அண்ணன் லாரன்ஸின் கவனிப்பில் வளர ஆரம்பித்தார். அண்ணன் லாரன்சு அவருக்கு நல்ல வளர்ப்பை அளித்தார். +1748 ஆம் ஆண்டில், அவர் 16 வயதாக இருந்தபோது, வர்ஜீனியாவின் மேற்குப் பகுதியிலுள்ள நிலப்பகுதியை ஆய்ந்து நில அளவை மேற்கொள்ளும் குழுவுடன் பயணித்தார். அடுத்த வருடம், லார்டு ஃபேர்ஃபாக்சின் உதவியுடன் வாஷிங்டன் கல்பெபர் கவுண்டியின் அதிகாரப்பூர்வ நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கல்பெபர், பிரெட்ரிக் மற்றும் அகஸ்டா மாவட்டங்களில் நில அளவை ��ற்றும் ஆய்வில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். இந்த அனுபவம் அவரை வளமிக்க மனிதராகவும், அவரது உடல் மற்றும் மனதை வலிமை மிக்கதாகவும் மாற்றியது எனலாம். +மெக்சிக்கோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க கண்டத்தின் கட்டுப்பாட்டிற்கான போட்டியின் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகியவை ஓஹியோ நதி பள்ளத்தாக்கின் மீது சச்சரவுகளைக் கொண்டிருந்தன. பிரஞ்சு கனடாவில் இருந்து அந்த பிராந்தியத்தில் நுழைந்து பூர்வீக அமெரிக்கர்களுடன் கூட்டுக்களை உருவாக்கியது. வர்ஜீனியாவில் உள்ள ஆங்கிலேய விசுவாச அரசாங்கம் இந்த ஊடுருவல்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. பிரித்தானிய இராணுவ தூதுவராக பணிபுரிந்த வாசிங்டன், தொலைதூரப் பகுதிக்கு தன் விருப்பத் தொண்டர்கள் குழுவை வழிநடத்திச் சென்று, எதிரி துருப்புக்களின் பலம் பற்றிய தகல்வகளை சேகரித்தார். பிரஞ்சு நாட்டினர் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். வாசிங்டன் திரும்பியபோது, மேலும் பிரெஞ்சு விரிவாக்கத்தை நிறுத்துவதற்காக ஓகியோ ஆற்றின் மீது கோட்டை கட்டப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். 1754 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், மிகவும் சிறப்பாக பயிற்சியளிக்கப்படாத, ஆயுதம் தாங்கிய 150 நபர்களைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். ஓகியோ ஆற்றின் கரையில் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு ஒன்றை அமைக்கக் கிளம்பினார். இம்மரக்கட்டைத் தடுப்பினை அவசியமான கோட்டை என்று அழைத்தார். வழியில், அவர் ஒரு சிறிய பிரெஞ்சு படையை எதிர்கொண்டு உடனடியாக அதைத் தாக்கி, பத்து பிரெஞ்சு வீரர்களைக் கொலை செய்தார். இந்த மோதலின் போது வர்ஜீனியாவில் இருந்து வந்த அறியப்படாத இளம்போராளியும் துப்பாக்கியால் சுடப்பட்டார். பிரிட்டிஷ் தூதருக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக துாதுவராக வந்த ஒரு பிரெஞ்சுப் படைவீரர் கொல்லப்பட்டதால், சர்வதேச நெறிமுறைகளின்படி வாசிங்டன் துாதரைக் கொன்ற கடுமையான விதிமீறலில் ஈடுபட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதுவே பிரெஞ்சு-செவ்விந்தியப்படைகளுக்கும் அமெரிக்கர்களுக்குமான போருக்கான முதல் காரணமாயிற்று. இந்த இடையூறுகளின் விளைவுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை மற்றும் வெர்சா��்ஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றன. இப்பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்கர்கள், பிரஞ்சு-அமெரிக்க முரண்பாட்டை உணர்ந்து, பிரஞ்சுக்கு ஆதரவளித்தனர். இந்த பிரெஞ்சு மற்றும் பூர்வீக அமெரிக்க கூட்டுப்படையானது, வாசிங்டன் மற்றும் அவரது படைப்பிரிவை திணறடித்தனர். அவரால் உருவாக்கப்பட்ட மரத்தடுப்புகளை சிதறடித்தனர். வாசிங்டன் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு சரணடையும் பத்திரத்தில் கையொப்பமிட்டு விட்டு அந்த இடத்தை விட்டுச் செல்ல பணிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் வாசிங்டன் இராணுவ நெறிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பிரான்சு தன் மக்களிடம் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது. பிரித்தானிய படையில் வாசிங்டனுக்கான பதவி உயர்வின் போது புறக்கணிக்கப்பட்டார். பிரிட்டிஷார் தன்னை அவமதித்து விட்டதாக உணர்ந்து வாசிங்டன் இராணுவத்திலிருந்து பதவி விலகினார். + +ஓகியோ ஆற்றின் பள்ளத்தாக்கில் இருந்து பிரஞ்சுப்படையை ஓட்ட சிறந்த வழி இராயல் இராணுவத்திலிருந்து துருப்புகளில் அனுப்பப்பட வேண்டும் என்று இங்கிலாந்து முடிவு செய்தது. அவர்களுடைய தளபதி ஜெனரல் எட்வர்ட் பிராடோக் மோதலில் அனுபவமுள்ள ஒரு உதவியாளர் தேவை என்பதால் பதவியை வாசிங்டனுக்கு வழங்கினார். ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து சாதகத்தைப் பெறுவதற்காக வாசிங்டன் இந்தப் பொறுப்பை ஆர்வமாக ஏற்றுக்கொண்டார். 1755 ஜூலையில், பிரித்தானியப்படை டுக்கென் கோட்டையில் (Fort Duquesne) பிரெஞ்சுப் படையை அணுகியது. பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியத் துருப்புக்கள் ஐரோப்பாவின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளை விட மிகவும் வித்தியாசமாகப் போராடினார்கள் என்று வாசிங்டன் பிராடோக்கை எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, பிரித்தானிய படையை பூர்வீக அமெரிக்கப் படையினர் தாக்கி முற்றிலும் முறியடிக்கப்பட்டனர். வாசிங்டன் அமர்ந்து போரிட்ட இரு சுடப்பட்டிருந்த போதிலும், தைரியமாக போராடினார். பிராட்டோக் கொல்லப்பட்டார், அவரது பிரிட்டிஷ் துருப்புக்கள் மிரட்சியடைந்து காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர்.விட்டனர். வாசிங்டனின் மேலங்கி வரை நான்கு தோட்டாக்கள் உரசிச்சென்றன. உயிரோடு தப்பியது பெரிய செயலாயிற்று. 1755 ஆம் ஆண்டு ஆகஸ்டி���், தனது 23 ஆம் வயதில் விர்ஜினாவினுடைய படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 400 மைல் நீளமுடைய எல்லைப்புறத்தைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் அவருக்கு ஒத்துழைப்பளிக்க விருப்பமில்லாத 700 ஒழுக்கக்கேடான காலணிய படைகளுடன் அனுப்பப்பட்டார். இது சலிப்பூட்டக்கூடிய பணியாக இருந்தது. 1757 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அவர் உடல்நலம் குறைந்து பேதியுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து கடுமையாகப் பாடுபட்டும் ஆங்கிலேய இராணுவத்தில் உரிய பதவியளிக்கப்படாததால், 1758 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர் தனது பதவியிலிருந்து விலகினார். 1753 முதல் 1758 வரையிலும் இவர் இராணுவத்தில் பணிபுரிந்த போது பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியப் போர்களில் தீவிரமாகப் பங்குபெற்றது இவருக்கு இராணுவ அனுபவத்தையும், புகழையும் தந்தது. + +பிரெஞ்சு,செவ்விந்தியப் போருக்குப் பின்னர், வாசிங்டன் விதவையான மார்தா டான்ட்ரிட்ஜ் கஸ்டிஸை மணந்தார். தனது சகோதரர் லாரன்சு இறப்புக்குப் பின் மவுண்ட் வெர்னான் தோட்டத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டார். மார்த்தாவின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் பார்த்துக் கொண்டார். வாசிங்டனுக்கும் மார்த்தாவிற்குமான திருமண வாழ்வில் குழந்தைகள் ஏதும் இல்லை. தனது பண்ணையை மிக அதிக அளவில் கவனித்து தனது சொத்துக்களை அதிகப்படுத்தினார். அவர் தனது வாழ்வு முழுவதுமே, விவசாயத்தை தனது மதிப்புமிக்க தொழிலாகக் கருதினார். சிறிது சிறிதாக தனது நிலப்பரப்பை 8000 ஏக்கர் அளவிற்கு அதிகப்படுத்தினார். சியார்ச் வாசிங்கடன் விர்ஜீனியாவின் மிகப்பெரிய நில உரிமையாளராகி விர்ஜீனியா பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே, வாசிங்டன் மற்றும் அவரோடு இணையாக இருந்த நில உரிமையாளர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அணுகுமுறையைக் குறித்து அதிருப்தியடைந்திருந்தார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக விவாதிக்கவும், போராடவும் தொடங்கியிருந்தார்கள். இதற்கு ஆங்கிலேய அரசு மறுத்த போது ஒரு புரட்சியில் ஈடுபடவும் தயாராயினர். + +• போஸ்டன் முற்றுகையின் போது 1775 ஜூலையில் வாசிங்டன் பெருநிலப்பகுதியின் இராணுவத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். எட்டு ஆண்டுகளுக்கு நீடித்திருந்த போரின் போக்கின்போது, அவர் நல்ல முறையில் பயிற்சி பெறாத, போதுமான அளவ��� படைக்கலன்கள் வழங்கப்படாத படைகளை வைத்துக்கொண்டு, அவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து சிறந்த தளபதியாக முன்னணியில் இருந்தார். + +• தொடக்கத்தில், அவர் வென்றதை விட அதிக போர்களில் இழந்தார்; ஆனால் அவரது நிலைப்பாட்டைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார். அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய படைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவது, பெரிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது போன்றவை அவரது உத்தியாக இருந்தது. பின்னர் அவர் தனது இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதன் மூலமாகவும் படைத்தளவாடங்களை வழங்குவதன் மூலமாகவும், ஒழுங்கமைக்கத் தொடங்கியதால் நிலைமை முன்னேற்றமடையத் தொடங்கியது. + +• 1781 ஆம் ஆண்டு அக்டோபரில் பெருநிலப்பகுதியின் (கான்டினென்டல்) படைகள் யார்க் டவுனில் நிறுத்தப்பட்ட பிரித்தானிய துருப்புக்களை கைப்பற்றிய போது யுத்தம் முடிவுக்கு வந்தது. அக்டோபர் 19, 1781 அன்று சரணடைதல் நிகழ்ந்தது. வாசிங்டன் தேசிய அளவிலான நாயகன் ஆனார். + +• 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பாரிசு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை தலைமை படைத்தளபதியாக வாசிங்டன் தொடர்ந்தார். குறைவாக ஊதியம் அளிக்கப்பட்ட பெருநிலப்பகுதியின் இராணுவத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு முறையான இழப்பீடு கேட்டு அப்பகுதியின் காங்கிரஸிற்கு ஒரு மனுவை கையெழுத்திட்டனுப்பினார். அதன் பிறகு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார். + +போருக்குப் பிறகு, வாசிங்டன் தனது தோட்டத் தொழிலில் ஈடுபடுவதையே விரும்பினார். தனது விவசாயப் பண்ணையில் நீண்ட காலம் பணியாற்றாமல் போனதால் உண்டான பாதிப்புகளையெல்லாம் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் கூட தேசிய அரசியலைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்தார். 1785 ஆம் ஆண்டில் மவுண்ட் வெர்னான் மாநாட்டை தனது பண்ணைத் தோட்டத்தில் வைத்து நடத்தினார். 1786 ஆம் ஆண்டில் அன்னபோலியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், 1787 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசியலமைப்புப் பேரவையில் தலைமை தாங்க ஒத்துக்கொண்டார். அவரது ஆளுமையின் தாக்கம் நிறைந்த தலைமைப்பண்பு வந்திருந்த பெருமைமிகு பிரதிநிதிகளைக் கவர்ந்தது. அவரே அமெரிக்காவின் முதல் குடியரசுத்தலைவராக மிகப் பொருத்தமானவர் என்று அவர்கள் கருதினர். + +1789 ஆம் ஆண்டு சனவரி மா��த்தில் நடைபெற்ற முதல் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாசிங்டன் அனைத்து வாக்குகளையும் வென்றார். அவர், 1789 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் அலுவல் உறுதிமொழியை நியூயார்க் நகரத்தின் ஃபெடரல் அரங்கத்தின் மேல்மாடத்தில் எடுத்துக்கொண்டார். கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது தொலைநோக்கு கொண்ட நிர்வாகத்திறமையை நிரூபித்தார். அவரது முடிவுகள் பல முன் உதாரணங்களாய் அமைந்தன. ஆரம்பத்தில் $ 25,000 வருடாந்திர சம்பளத்தை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய அவர், தன்னுடைய முடிவு பணக்காரர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாதே என்பதற்காக, ஊதியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய அரசியலமைப்பை ஒரு செயல்படும் கருவியாக மாற்றியமைத்தார். அதே நேரத்தில் ஒருமைப்பாடு மற்றும் விவேகத்திற்கான எடுத்துக்காட்டாக விளங்கினார். குடியரசுத் தலைவரின் பட்டங்கள் மற்றும் விழாக்கள் குடியரசு நாட்டின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றனவா என்பதை கண்காணிப்பதில் உறுதியாய் இருந்தார். குடியரசுத் தலைவரை அழைப்பதற்கு பேரவை உறுப்பினர்கள் மிகவும் மேன்மைதங்கிய பல அடைமொழிகளை உருவாக்கிக் கொடுத்தபோதும், திருவாளர். குடியரசுத்தலைவர் என்றழைப்பதையே விரும்பினார். 1792 ஆம் ஆண்டில், முதல் பதவிக்கால முடிவில், வாசிங்டன் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1796-ல் அது முடிவடைந்தபோது, மீண்டும் அப்பதவியில் தொடர்வதை அவர் உறுதியாய் மறுத்து, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார். இதன் மூலம் இன்றளவும் ஒரு குடியரசுத் தலைவர் இரண்டு முறைகள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற மற்றுமொரு முன்னுதாரணத்தை வாசிங்டன் உருவாக்கிச் சென்றுள்ளார். + +1799 ஆம் ஆண்டின் ஒரு டிசம்பர் மாதத்தில், வாசிங்டன் பனிப்பொழிவின் நடுவே, குதிரையின் மீதமர்ந்தவாறு தனது பண்ணைத் தோட்டத்தினை ஆய்விடுவதில் அதிக நேரம் செலவிட்டார். தனது நனைந்த உடைகளுடன் வீடு திரும்பி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். அடுத்த நாள் டிசம்பர் 13 ஆம் நாள் காலை கடுமையான தொண்டைப்புண்ணுடன் கண் விழித்தார். அந்த நாளின் நேரம் செல்லச்செல்ல மிகவும் நிலைமை மோசமடைந்தது. பல மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி, டிசம்பர் 14 ஆம் நாள் மாலை அவர் இறந்தார். + + + + +ஜான் ஆடம்ஸ் + +ஜான் ஆடம்ஸ் (ஜோன் அடம்ஸ், John Adams) (அக்டோபர் 30, 1735 - ஜூலை 4, 1826) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார். + + + + +தாமஸ் ஜெஃவ்வர்சன் + +தாமஸ் ஜெஃவ்வர்சன் (தோமஸ் ஜெபர்சன், Thomas Jefferson) (ஏப்ரல் 13, 1743- ஜூலை 4, 1826 அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1776ன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின் முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூயிசியானா என்னும் பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும். + + + + +ஜேம்ஸ் மாடிசன் + +ஜார்ஜ் மாடிசன் (George Madison) (மார்ச் 16, 1751 - ஜூன் 28, 1836) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787-1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவத��்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர். + + + + +என். டி. ராஜ்குமார் + +என். டி. ராஜ்குமார் (நாகர்கோவில், தமிழ்நாடு) தமிழ் நவீன கவிதையில் தலித் கவிதைகளை முன்னெடுத்துச்செல்லும் கவிஞராக அறியப்படுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் செயல்படுபவர். 'வந்தனம்' என்னும் நாடகக்குழுவை நடத்தி வந்தார். இந்திய கம்யூணிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கிளையின் கலை இலக்கிய அமைப்பாக இருக்கும் ‘தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்’ நடத்திவரும் கலை இரவுகள், தெருமுனை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வந்தனம் கலைக்குழு நாடகங்களை நடத்தி வந்தது. இதனால் இந்தக்குழு தமிழ்நாடு முழுவதும் பிரபலமான மாற்று நாடக் குழுவாக இயங்கி வந்தது. ஆனல் தற்போது இந்தக் குழு கலைக்கப்பட்டு விட்டது. என்றாலும் நிகழ்த்துக் கலையில் அதிக நம்பிக்கை கொண்டவரான என்.டி.ராஜ்குமார், தனது கவிதைகளை இலக்கிய மேடைகளில் வாசிக்காமல் அவற்றை “ ராக தொனியில்” நிகழ்த்திக் காட்டுகிறார். இப்படி கவிதையை நிகழ்த்திக் காட்டும்போது, ஒவ்வொரு வரிக்கு இடையிலும், அவர் கொடுக்கும் மௌன இடைவெளி, அவர் கவிதை நிகழ்த்துதலை கேட்கும் பார்வையாளர்களுக்கு கவிதை அனுபவத்தை கடத்துகிறது. மேலும் கவிதையின் உள்ளடக்கமாக இருக்கும் காட்சியையும் கேட்போர் மனதில் விரிக்கும் அற்புதத்தை நிகழ்த்துகிறது! ராஜ்குமார் தனது கவிதைகளை மட்டும் இப்படி நிகழ்த்தாமல் பிற முக்கிய கவிஞர்களின் கவிதைகளில் தாள நயத்துடன் இருக்கும் வலிமிக்க, கவிதைகளையும் இவர் நிகழ்த்திக் காட்டுகிறார். + +இவரது கவிதைகள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தலித் விடுதலைக்கான கோபமும் போராட்ட குணத்தின் வெளிப்பாடாகவும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்புக���ில் காணப்படும் மாந்திரீக மொழியின் உக்கிரம் நிரம்பிய எண்ணற்ற கவிதைகளால் தற்போது எழுதும் கவிஞர்களில் தனக்கென தனியான எழுத்துப் பாணியும் நவீன கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிராத மாந்திரீக மொழியும் கைவரப்பெற்ற கவிஞராக அறியப்படுகிறார் என். டி. ராஜ்குமார். இவரது 'தெறி' என்ற கவிதைத் தொகுப்பு, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் உள்ள “ புனித சவேரியார் கல்லூரியில் இயங்கிவரும் ‘ நாட்டாற் வழக்காற்றியல்’ துறையால் நாடகமாக்கம் செய்யப்பட்டு அரங்கேற்றபட்டது! + +ராஜ்குமாரின் கவிதைகளை 5 மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழ்திரைப்படத்துறையில் ’ ஒரு பாடலாசிரியர், பாடகர், நடிகர் ஆகிய ஆடையாளங்களை ‘மதுபானக்கடை’ என்ற மாற்று சினிமா மூலம் பெற்றிருக்கிறார் என்.டி. ராஜ்குமார். இந்தப்படத்தில் இவர் எழுதிய எல்லா பாடல்களிலும் வெகுஜன மொழியை பயன்படுத்தாமல், தனது கவிதையின் நவீன மொழியையே பயன்படுத்தியிருக்கிறார். + + + + +