diff --git "a/train/AA_wiki_34.txt" "b/train/AA_wiki_34.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_34.txt" @@ -0,0 +1,3739 @@ + +சீவக சிந்தாமணி + +சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் , மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது. + +சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது. + +மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான். + + + + + + + +நவம்பர் 4 + + + + + + + +இப்போக்கிரட்டீசு + +இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் (கிரேக்கம்: Ἱπποκράτης ; ஆங்கிலம்:Hippocrates) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். கி. மு. 460 முதல் கி. மு. 377 வரை வாழ்ந்த இவர் மருத்துவத்துறையின் தந்தை என்று மேற்குலகிலும் பொதுவாகவும் போற்றப்படுகிறார். + +ஹிப்போகிரட்டீஸ் எ���்பவர் ஆகியன கடலில் காஸ் என்னும் ஒரு தீவில் கி.மு 406 இல் பிறந்தார். மருத்துவக் கலை பயின்று மருத்துவராகத் தொழில் நடத்த முனைவோர் ஹிப்போகிரட்டீசின் சத்தியப் பிரமாணங்களை உறுதி மொழியாகச் சொல்கிறார்கள். நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்பு நலன்கள் கொண்டவர்களாக மருத்துவர்கள் சேவை புரிய வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே உந்துணர்வையும் வழிகாட்டுதலையும் கூறியவர். + +ஹிப்போகிரட்டீசுக்கு முன்னால் கிரேக்க மருத்துவம் மந்திரங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மனிதர்கள் மீது சினம் கொண்டு கடவுள் வழங்கும் தண்டனையே நோய்கள் ஏற்படக் காரணம். ஹிப்போக்கிரட்டீஸ் இவற்றைக் கடுமையாக மறுத்தார். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் இயற்கையாக வருபவை என்று கூறினார். + +ஹிப்போகிரட்டீசின் மருத்துவ முறைகளும் ஆலோசனைகளும் இன்றளவும் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.ஒருவருக்கு நோய் ஏற்பட்டு அவா் மருத்துவாிடம் வந்தால் அவருக்கு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சையை பின்வருமாறு விளக்கினாா். +முதலில் அவருக்கு தைாியமூட்டி, அவரை நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பின்பு அவரை நன்றாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறுபவாிடம் அன்பாகப் பேசி அவா் உடலில் உள்ள உபாதை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும். பின்பு, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அது இன்ன நோய் தான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னா், இவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பதை நிா்ணயிக்க வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இன்றியமையாதது.ஆரோக்யமான நிலையில் இருப்பவா்கள் மருந்து உட்கொண்டால் அதனால் எப்பலனும் விளையாது. அதிக வீாியம் உள்ள மருந்துகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவை இல்லை. ஏனெனில் மனித உடலை நோய்கள் தாக்கும் போது தன்னை அவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எதிா்த்து நிற்கவும் மனித உடல் கடும் போராட்டம் நிகழ்த்தும். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள மனித உடல் பெரும் முயற்சி மேற்கொள்ளும். இந்நிலையில் உடலுக்கு அதன் செயற்பாடட்டுக்கு ஊறு விளையாத விதத்தில் மருந்துகள் இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல உடலுக்கு ஒத்ததாக உள்ள அதன் ���ழந்த ஆரோக்யத்தை மீட்டுத் தரும் ஆகார வகைகளையே நோயாளி உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்தும் இசைவான ஆகாரமும் சோ்ந்து வேலை செய்து நோயை முறியடித்து ஆரோக்யத்தை மீட்டுத் தரும் என்றாா் அவா்.இந்த மருத்துவக் கோட்பாட்டைத்தான் இந்திய நாட்டு மருத்துவ முறையான ஆயுா்வேதமும் கூறுவது குறிப்பிடத்தக்கது. + +தொன்மைக் கால கிரேக்கத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தினார். +நோய்களின் மூலக் காரணங்களை அறிய முற்பட்ட முதல் மருத்துவர் இவரே. எளிமையான மிகச் சில மருந்துகளையே தமது சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினார். உணவு, தூய காற்று உடல் பயிற்சி ஆகியனவே போதுமானது, இதுவே இயற்கை மருத்துவம் என்று கூறினார். ஹிப்போக்கிரட்டீஸ் வெறும் மருத்துவர் மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தவராக இருந்தார். +எலும்பு முறிவு மூட்டு நழுவல் போன்றவற்றிற்கு அறுவை மருத்துவம் செய்தார். அறுவை சிகிச்சை செய்யும்போது அதைச் செய்பவருடைய கை விரல்களின் நகங்கள் மிக நீளமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் குட்டையாகவும் இருத்தல் கூடாது. +திருத்தமாகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் தூய்மையாகவும் சிகிச்சையை முடிக்கவேண்டும். இத்தகைய அறிவுரைகள் ஹிப்போக்கி ரட்டீசின் கட்டளைகள் என்று மருத்துவ உலகில் வழங்கப் படுகிறது. + +எகிப்தில் உள்ள அலேக்சாந்திரியாவில் இவரது மருத்துவ நுால்கள் சேகாித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ தொழில் செய்வோா் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தமது நுால்களில் விவாித்துள்ளாா். +1. நோயாளிகளிடம் அன்பும் பாிவும் காட்ட வேண்டும். +2. சாதாரண நோய்களுக்கு எளிய மருந்துகளே போதும். +3. கூடுமான வரை மனித உடல் தான் நோயிலிருந்து மீள எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு சாதகமாக மருந்துகள் அமைய வேண்டும். +4. தீவிர சிகிச்சையை மருத்துவா் கடும் நோய்கள் விஷயத்தில் ஆராய்ந்து கொடுக்க வேண்டும். +5. மருத்துவா்கள் எப்போதும் சுத்தமானவா்களாகவும், ஆரோக்யவான்களாகவும் இருக்க வேண்டும்.தேவையில்லாமல் முடியையும் நகங்களையும் வளா்க்கலாகாது. +6. நோயாளியை முரட்டுத்தனமாகக் கையாளலாகாது. மருத்துவா் தனது கரங்களை மென்மையாகப் பயன்படுத்துவது இன்றியமையாதது. கிரேக்க நாட்டின் மு��்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது. + + + + +இடி அமீன் + +இடி அமீன் ("Idi Amin Dada", 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார். + +உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது. + +4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டாவின் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர். வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கும், 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகழிடம் அடைந்தனர். + + + + +யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச் செய்கை + +யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலைப் பயிர்ச்செய்கை சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது எப்பொழுது யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுபற்றிய சரியான தகவல்கள் இல்லை. எனினும் சுதந்திர யாழ்ப்பாண அரசுக் காலத்தின் இறுதிக் கட்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போத்துக்கீசர் ���ாலத்திலேயே உறுதியாக வேரூன்றியிருக்கக் கூடும். எப்படியாயினும், இது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்துடன் சுமார் 400 ஆண்டுகாலம் இணைந்துள்ளது எனலாம். பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, உருளைக்கிழங்கு உற்பத்தி, திராட்சை உற்பத்தி போன்ற பெருமளவு வருமானம் அளித்த, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கு உள்ளாகவே கைவிடப்படவேண்டி ஏற்பட்ட போதிலும், புகையிலைச் செய்கை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும். + +புகையிலைப் பயிர்ச் செய்கையின் அறிமுகம், யாழ்ப்பாணப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒரு விரும்பத்தக்க அம்சமாக விளங்கியது எனலாம். யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசுகளுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயை அளித்து வந்த நடவடிக்கைகளான, முத்துக்குளிப்பு, யானை ஏற்றுமதி, சாயவேர் ஏற்றுமதி போலன்றி புகையிலைச் செய்கையானது, மக்கள் மட்டத்தில் பரவலான பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. புகையிலை ஒரு விவசாய உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி, உள்ளூரிலேயே உருவாக்கப் படக்கூடியதாக இருந்த சுருட்டுக் கைத்தொழில்களுக்கு மூலப்பொருளாகவும் அமைந்தது. இது தொடர்பான வணிக முயற்சிகளிலும் மக்களில் ஒரு பகுதியினர் வருமானம் பெறக்கூடியதாக இருந்தது. + +யாழ்ப்பாணத்துக்கு வெளியே இலங்கையின் தென் பகுதிகளுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் கேரளப் பகுதிகளுக்கும், இந்தோனீசியாவில் இன்று ஜக்கார்த்தா என்று அழைக்கப்படும் பத்தேவியாவுக்கும், புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. மக்களின் பொருளாதார நிலையைப் பரவலாக உயர்த்தியது மட்டுமன்றி, அரசாங்கமும் வரிகள் மூலம் குறிப்பிடத்தக்க வருமானம் பெற்றது. + + + + +ஜாக்கி சான் + +ஜாக்கி சான் () (சில்வர் பஹூனியா ஸ்டார்), MBE (மோஸ்ட் எக்சலண்ட் ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பெரர்) (சான் காங் சாங் , ; 7 ஏப்ரல், 1954) ஹாங் காங் நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் ஆவார். + +அவரது திரைப்படங்களில் அவரது அக்ரோபாட்டிக் (கழைக்கூத்தாட்டம் போன்ற) சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை ��ண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலம். ஜாக்கி சான் 1970களிலிருந்து நடித்துவருகிறார். அவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜாக்கி சான் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸிலும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமிலும் நட்சத்திரங்களைப் பெற்றுள்ளார். ஜாக்கி சான் ஒரு கலாச்சார பிரதிநிதியாக பல்வேறு பாப் பாடல்கள், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளார். ஜாக்கி ஒரு கேண்ட்டூபாப் மற்றும் மேண்டூபாப் நட்சத்திரமும் ஆவார், இவர் பல ஆல்பங்களை வெளியிட்டதோடல்லாமல் இவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பல தீம் பாடல்களை இவரே பாடியுள்ளார். + +ஜாக்கி சான் 1954 இல் ஹாங் காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் (Victoria Peak) பிறந்தார், அவரது இயற்பெயர் சான் காங் சாங் ("ஹாங்காங்கில் பிறந்தவர்" என்பது இதன் பொருளாகும்) ஆகும். இவர் சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீலீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார். அவர் 12 பவுண்டு அல்லது 5,400 கிராம்கள் எடையுள்ள குழந்தையாக இருந்ததால், அவருக்கு "பாவ் பாவ்" ( சாதரணமாக "பீரங்கிக் குண்டு" என்று பொருள்) என்ற செல்லப் பெயர் இருந்தது. அவருக்கு சூ-சங் சான் (Soo-Sung Chan) என்னும் ஒரு சகோதரரும் தாய் சான் (Tai Chan) என்றொரு சகோதரியும் இருக்கிறார்கள். அவருடைய பெற்றோர் ஹாங்காங்குக்கான பிரெஞ்சு தூதருக்காக பணிபுரிந்து கொண்டிருந்ததால், ஜாக்கி தனது வளரும் பருவத்தை விக்டோரியா பீக் மாவட்டத்திலிருந்த தூதரகப் பகுதிகளிலேயே கழித்தார். + +ஜாக்கி நா-ஹ்வா ஹாங் காங்கின் ஐலாண்ட் (Hong Kong Island) மழலையர் பள்ளியில் படித்தார், அங்கு அவரது முதலாம் ஆண்டு படிப்பில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவருடைய பெற்றோர் அவரை பள்ளியை விட்டு நிறுத்திவிட்டனர். மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம். நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். 1960 ஆம் ஆண்டு அவரது தந்தை அமெரிக்க தூதரகத்திற்கு தலைமை சமையல்காரராக பணிபுரிய ஆஸ்திரேலியாவின் கேன்பெராவுக்கு (Canberra) குடிபெயர்ந்தார். பின்னர் ஜாக்கி சீனா ட்ராமா அகாடமிக்கு அனுப்பப்பட்டார், அது பெக்கிங் ஓபெரா ஸ்கூல் ஆகும். அதை மாஸ்டர் யூ ஜிம் யுவேன் என்பவர் நடத்திவந்தார். +சான் அடுத்த பத்தாண்டுகளில் அங்கு தற்காப்புக் கலைக���ிலும் அக்ரோபாட்டிக்ஸிலும் கடுமையான பயிற்சி பெற்றார். அதனையடுத்து அவர் செவன் லிட்டில் ஃபார்ச்சுன்ஸ் என்னும் நாடகக் குழுவில் சேர்ந்தார். அது பள்ளியின் சிறந்த மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும், அது அவருடைய குருவுக்கு நாட்டில் யுவேன் லோ என்னும் திரைப் பெயரையும் வழங்கிய குழுவாகும். ஜாக்கி தனது சக குழு உறுப்பினர்களான சாம்மோ ஹங் மற்றும் யுவேன் பியோ ஆகியோருடன் நெருங்கிய நண்பரானார். அந்த மூவரும் பிற்காலத்தில் "மூன்று சகோதரர்கள்" அல்லது "மூன்று ட்ரேகன்கள்" என அறியப்பட்டனர். + +ஜாக்கி தனது 8 வயதில், அவர்களின் "லிட்டில் ஃபார்ச்சுன்ஸ்" சகாக்கள் சிலருடன் "பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார்" (1962) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அந்தப் படத்தில் லி லி ஹுவா அவரது தாயாக நடித்தார். அதற்கடுத்த ஆண்டு லி யுடன் "த லவ் எட்டெர்னே" (1963) என்ற படத்திலும் ஜாக்கி நடித்தார். பின்னர் கிங் ஹூவின் 1966 ஆம் ஆண்டு திரைப்படமான "கம் ட்ரிங்க் வித் மி" என்னும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டு "அ டச் ஆஃப் ஜென்" எனும் மற்றொரு குங் ஃபூ திரைப்படம் ஒன்றில், ஜாக்கி கூடுதல் நடிகராக நடித்து ஓர் இளைஞஞாக திரைப்படத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், முதலில் சூ மூவின் க்ரேட் எர்த் ஃபில்ம் கம்பெனிக்காக பாடல் பாடினார். 17 வயதில், புரூஸ் லீயின் "ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி" மற்றும் "எண்ட்டெர் த ட்ரேகன்" ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றினார், அப்போது அவரது திரைப்பெயர் சென் யுவேன் லாங் ஆகும். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு "லிட்டில் டைகர் ஆஃப் காண்டூன்" என்னும் திரைப்படத்தில் நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது, அது 1973 இல் ஹாங் காங்கில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டது. அவரது தொடக்க முயற்சிகளில் கண்ட வணிக ரீதியான தோல்வியினாலும் சிக்கல் நிறைந்த ஸ்டண்ட் பணியினாலும், 1975 ஆம் ஆண்டு ஜாக்கி "ஆல் இன் த ஃபேமிலி" என்னும் வயது வந்தோருக்கான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதுவரையில் அவர் நடித்து ஒரு சண்டைக்காட்சியோ ஸ்டண்ட் காட்சியோ ஒன்று கூட இல்லாத ஒரே திரைப்படம் அது மட்டுமே ஆகும். + +1976 ஆம் ஆண்டில் ஜாக்கி கேன்பெராவில் தனது பெற்றோருடன் சேர்ந்தார், அங்கு சிறிது காலம் டிக்சன் கல்லூரியில் பயின்றார். அப்போது கட்டுமானப் பணியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அவரை ஜேக் என்னும் அவரது சக பணியாளர் தனது பிரிவில் சேர்த்துக்கொண்டார் அப்போது ஜாக்கிக்கு "லிட்டில் ஜாக்" என்று செல்லப் பெயர் கிடைத்தது. அதையே பின்னர் அவர் "ஜாக்கி" என்று சுருக்கி பின்னாளில் அவரது பெயரை ஜாக்கி சான் என்று மாற்றிக்கொண்டார், இன்றுவரை அதுவே நிலைத்திருக்கிறது. மேலும், அவரது தந்தையின் உண்மையான குடும்பப் பெயர் ஃபோங் என்பதால், 90களின் இறுதியில், ஜாக்கி தனது சீனப் பெயரை ஃபோங் சீ லுங் என மாற்றிக்கொண்டார். + +1976 ஆம் ஆண்டு ஜாக்கி சானுக்கு ஹாங் காங்கைச் சேர்ந்த வில்லி சான் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அவர் ஜாக்கி சானின் ஸ்டன்ட் பணிகளால் மிகவும் கவரப்பட்டிருந்தார். லோ வேய் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஜாக்கி சானுக்கு வில்லி சான் வழங்கினார். ஜாக்கி சானின் திறமைப் பணியை ஜான் ஹூ திரைப்படமான "ஹேண்ட் ஆஃப் டெத்தில்" (1976) லோ பார்த்திருந்தார். அவர் புரூஸ்லிக்கு பிறகு இவரை ஒரு மாதிரியாக்க திட்டமிட்டார். அதை "நியூ ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி" என்னும் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். புரூஸ்லியைப் போன்ற ஒருவர் என்ற ஓர் பிம்பத்தை ஏற்படுத்த அவரது திரைப்பெயர் சிங் லூங் (சீனம்: 成龍, அதாவது "ட்ரேகனாக மாறு" என்று பொருள்படும்) என மாற்றப்பட்டது, புரூஸ்லியின் திரைப்பெயர் லீ சுங் லேங் (சீனம்: 李小龍, "லிட்டில் ட்ரேகன்" என்று பொருள்). புரூஸ்லியின் தற்காப்புக் கலைகள் பாணி சானுக்கு பழகாத காரணத்தால் அந்தப் படம் வெற்றியடையவில்லை. அந்தப் படம் தோல்வியடைந்த போதும், லோ வீ அதே போன்ற கருப்பொருள்களுடன் கூடிய பல திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தார். அவை வசூலில் ஓரளவு முன்னேற்றத்தையும் கண்டன. + +1978 ஆம் ஆண்டு வெளிவந்த "ஸ்னேக் இன் த ஈகிள்'ஸ் ஷேடோ" என்ற திரைப்படமே அவருக்கு ஒரு சிறப்பான தொடக்கமாக இருந்தது, அதற்கு அடுத்து உடனடியாக ஓர் இரண்டு திரைப்பட ஒப்பந்தத்தின் கீழ் சீசனல் ஃபில்ம் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இயக்குநர் யுவேன் வூ பிங்குடன் பணிபுரியும் போது ஜாக்கிக்கு சண்டைகளில் பணிபுரிவதற்கான பரிபூரண சுந்தந்திரம் கிடைத்தது. இந்தப்படம் நகைச்சுவை குங் ஃபூ திரைப்படம் என்னும் ஒரு வகையை உருவாக்கியது, மேலும் அது ஹாங் காங் ரசிகர்களு��்கு புதிய வகை ஒரு திரைப்படமாக இருந்தது. பின்னர் ஜாக்கி "ட்ரங்கென் மாஸ்டர்" என்னும் படத்தில் நடித்தார், அதன் பிறகே அவர் வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடத் தொடங்கினார். + +மீண்டும் ஜாக்கி லோ வீயின் ஸ்டுடியோவிற்குத் திரும்பியதும், லோ "ட்ரங்கென் மாஸ்டர்" திரைப்படத்திலிருந்த நகைச்சுவை அம்சத்தை மீண்டும் பயன்படுத்த நினைத்து "ஹாஃப் அ லோஃப் ஆஃப் குங் ஃபூ" மற்றும் "ஸ்பிரிச்சுவல் குங் ஃபூ" ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். அவர் "த ஃபியர்லெஸ் ஹயானா" என்னும் படத்தை இயக்கிய கென்னீத் சேங்குடன் இணைந்து இணை இயக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பையும் வழங்கினார். வில்லி சான் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது, லோ வேயுடன் இருப்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கச் சொல்லிச் சென்றார். ஃபியர்லெஸ் ஹயானா பார்ட் II படப்பிடிப்பின் போது ஜாக்கி தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இது தனது நடிகர் வில்லியாலேயே தன் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என்று லோ பழிக்கவும், ட்ரையட்ஸ் என்னும் குற்றக்குழுவைப் பயன்படுத்தி சானை பயமுறுத்தியதற்கும் காரணமானது. சக நடிகரும் இயக்குநருமான ஜிம்மி வாங் யூவின் தலையீட்டால் இந்தச் சிக்கல் தீர்ந்தது. அதன் பின்னர் ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டில் தொடர்ந்திருக்க வழிவகை ஏற்பட்டது. + +வில்லி சான் ஜாக்கியின் சொந்த மேலாளராகவும் நண்பராகவும் ஆனார். அவர் 30 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஜாக்கியுடன் இருந்தார். 1980களின் பிற்பகுதியில் ஜாக்கி அமெரிக்க திரைப்படத் துறையில் நுழைந்ததிலிருந்து தொடங்கிய சானின் சர்வதேச தொழில் வாழ்க்கைக்கு காரணமாக இருந்தவர் வில்லி சானே ஆவார். 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த "பேட்டில் க்ரீக் ப்ராவ்ல்" என்ற திரைப்படமே அவரது முதல் ஹாலிவுட் திரைப்படமாகும். பின்னர் ஜாக்கி 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த "த கேன்னன்பால் ரன்" என்னும் திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். அப்படம் உலகளவில் 100 மில்லியன் டாலர்களை வசூலித்தது. பர்ட் ரெனால்ட்ஸ் போன்ற பெரிய அமெரிக்க நடிகர்களின் ரசிகர்கள் இவர் பக்கம் கவரப்படாதபோதும், ஜாக்கி அவரது திரைப்படங்களின் நன்றி நவிலல் காட்சிகளில் காண்பித்த திரைப்படப் படப்பிடிப்பின் காட்சிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் ��தை அவர் தனது எதிர்காலத் திரைப்படங்கள் அனைத்திற்கும் பின்பற்றினார். + +1985 ஆம் ஆண்டு வெளிவந்த "த ப்ரொடெக்டர்" திரைப்படத்தின் வணிக ரீதியான தோல்விக்குப் பிறகு ஜாக்கி தற்காலிகமாக அமெரிக்க சந்தையில் நுழையும் தனது முயற்சிகளை நிறுத்தி வைத்து தனது கவனத்தை ஹாங் காங் படங்களில் செலுத்தினார். + +ஹாங்க் காங்கிற்குத் திரும்பிய ஜாக்கியின் படங்கள் மிகப் பெரிய அளவிலான கிழக்காசிய ரசிகர்களைப் பெற்றன. அதில் பணம் கொழிக்கும் ஜப்பானிய சந்தையில் அவர் பெற்ற முந்தைய வெற்றிகளில் "த யங் மாஸ்டர்" (1980) மற்றும் "ட்ரேகன் லார்டு" (1982) ஆகிய படங்கள் அடங்கும். "த யங் மாஸ்டர்" திரைப்படமானது, புரூஸ் லீயின் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இதனால் ஜாக்கி ஹாங் காங் திரைப்படத் துறையின் டாப் ஸ்டாரானார். + +தனது ஓபெரா ஸ்கூல் நண்பர்களான சாம்மே ஹங் மற்றும் யுவேன் பையோ ஆகியோருடன் இணைந்து ஜாக்கி பல ஆக்ஷன் காமெடி திரைப்படங்களைத் தயாரித்தார். அவர்கள் மூவரும் ஒன்றாக 1983 ஆம் ஆண்டு "ப்ராஜெக்ட் ஏ" என்னும் திரைப்படத்தில் நடித்தனர், அப்படம் மூன்றாம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் டிசைன் விருதை வென்றது. அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில், இந்த "மூன்று சகோதரர்கள்" "வீல்ஸ் ஆன் மீல்ஸ்" மற்றும் முதலில் வந்த "லக்கி ஸ்டார்ஸ்" முப்படைப்புத் திரைப்படங்களிலும் நடித்தனர். 1985 ஆம் ஆண்டில், ஜாக்கி தனது முதல் "போலிஸ் ஸ்டோரி" திரைப்படத்தைத் தயாரித்தார், அது அமெரிக்க பாதிப்பு நிறைந்த ஆக்ஷன் காமெடித் திரைப்படம் ஆகும். அதில் ஜாக்கி தனது சொந்த ஸ்டண்ட் பணிகளைச் செய்திருந்தார். 1986 ஆம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் அது "சிறந்த திரைப்படம்" என்ற பெயரைப் பெற்றது. +1987 ஆம் ஆண்டில், "ஆர்மர் ஆஃப் காட்" என்னும் திரைப்படத்தில் "ஏஷியன் ஹாக்" என்னும் இண்டியானா ஜோன்ஸ்-போன்ற பாத்திரத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் இன்று வரையிலான உள்நாட்டு வசூல் சாதனை புரிந்த படமாக உள்ளது. அது 35 மில்லியன் ஹாங் காங் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது. + +1988 ஆம் ஆண்டு சாம்மோ ஹங்குடன் இணைந்து ஜாக்கி "ட்ரேகன்ஸ் ஃபாரெவர்" என்ற திரைப்படத்தில் நடித்தார், அதுவே இன்று வரை அவருடன் ஜாக்கி நடித்த கடைசித் திரைப்படமாகும். அது ஹங் கோரே யூன் என்பவருடன் இணைந்து இயக்கிய திரை��்படமாகும், அதில் யுவேன் வா வில்லனாக நடித்திருந்தார், இவர்கள் இருவருமே சீனா ட்ராமா அகாடமியின் பட்டதாரிகளாவர். + +1980களின் பிற்பகுதிகள் மற்றும் 90களின் முற்பகுதியில் ஜாக்கி "போலிஸ் ஸ்டோரி 2" திரைப்படத்தில் தொடங்கி அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்தார், அந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டின் ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான விருதைப் பெற்றது. அதைத் தொடர்ந்து "ஆர்மர் ஆஃப் காட் II: ஆப்பரேஷன் கோண்டர்" மற்றும் "போலிஸ் ஸ்டோரி 3" ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. போலிஸ் ஸ்டோரி 3 திரைப்படத்தின் மூலம் 1993 கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விழாவில் ஜாக்கி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 1994 ஆம் ஆண்டு "ட்ரங்கன் மாஸ்டர் II" திரைப்படத்தில் வோன் ஃபேய் ஹங் பாத்திரத்தில் தனது திறமையைக் காட்டினார், அப்படம் "டைம் மேகஸினில்" எப்போதும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது. அடுத்த மற்றொரு தொடர்த் திரைப்படமான "", ஜாக்கிக்கு பல விருதுகளையும் சிறந்த உள்நாட்டு வசூலையும் பெற்றுத் தந்தது, ஆனால் வெளிநாட்டு சந்தைகளில் அது அவ்வளவாக வெற்றிபெறவில்லை. +ஜாக்கி சான் 1990களில் தனது ஹாலிவுட் குறிக்கோள்களுடன் மீண்டும் எழுந்தார், ஆனால் எதிர்கால பாத்திரங்களில் வகைத் திரும்பல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முதலில் கிடைத்த சில வில்லன் பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை நிராகரித்தார். எடுத்துக்காட்டுக்கு, சில்வெஸ்டர் ஸ்டாலன் தனது "டெமாலிஷன் மேன்" என்னும் எதிர்காலம் சார்ந்த திரைப்படத்தில் சைமன் ஃபோனிக்ஸ் என்னும் வில்லன் பாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஜாக்கி மறுத்துவிட்டார். பின்னர் வெஸ்லி ஸ்னிப்ஸ் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். + +ஜாக்கி இறுதியாக 1995 ஆம் ஆண்டு வட அமெரிக்க சந்தையில் காலடி வைப்பதில் வெற்றிபெற்றார், அதற்கு "ரம்பிள் இன் த ப்ரான்க்ஸ்" என்னும் உலகளவில் வெளியிடப்பட்ட திரைப்படமே காரணமாக இருந்தது. அது அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது, ஆனால் அமெரிக்காவில் ஹாங் காங் திரைப்பட நட்சத்திரங்களுக்கு அது அபூர்வமாகும். +"ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்" திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக 1996 ஆம் ஆண்டில் "போலிஸ் ஸ்டோரி 3" அமெரிக்காவில் "சூப்பர்காப்" எ��்ற பெயரில் வெளியிடப்பட்டு, மொத்தம் 16,270,600 அமெரிக்க டாலர் வசூலை சாதித்தது. ஜாக்கி 1998 ஆம் ஆண்டு பட்டி காப்பின் ஆக்ஷன் காமெடித் திரைப்படமான "ரஷ் ஹவரில்" கிரிஸ் டக்கருடன் இணைந்து நடித்தார். அது அவரது முதல் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆனது, அப்படம் அமெரிக்காவில் மட்டும் 130 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை புரிந்தது. இதுவே ஹாலிவுட்டில் ஜாக்கி சானை நட்சத்திரமாக ஆக்கிய படமாகும். பிரபல ஸ்டன்ட் கலைஞராக, ஜாக்கி சான் ஜெஃப் யேங்குடன் சேர்ந்து, "ஐ ஆம் ஜாக்கி சான்" என்ற தனது சுயசரிதையை எழுதினார். + +1998 ஆம் ஆண்டு ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டுக்கான அவரது கடைசி திரைப்படமான "ஹூ ஆம் ஐ?" படத்தை வெளியிட்டார். 1999 ஆம் ஆண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் "கார்ஜியஸ்" என்னும் சொந்த உறவுகளை மையமாக வைத்து அமைந்த ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படத்தைத் தயாரித்தார். பின்னர் சான் 2000 ஆவது ஆண்டில் "ஜாக்கி சான் ஸ்டண்ட் மாஸ்டர்" என்னும் ஒரு ப்ளேஸ்டேஷன் கேமை உருவாக்குவதில் உதவியாக இருந்தார். அதற்கு அவர் தனது குரல் பதிவுக்கும் மோஷன் கேப்ச்சர் என்னும் உடலசைவு தொழில்ட்பத்திற்கும் உதவியுள்ளார். +2000 ஆவது ஆண்டில் "ஷாங்காய் நூன்" , 2001 ஆம் ஆண்டில் "ரஷ் ஹவர் 2" மற்றும் 2003 ஆம் ஆண்டில் "ஷாங்காய் நைட்ஸ்" ஆகிய படங்கள் வெற்றியடைந்த போதும், ஹாலிவுட் திரைப்பத் துறையில் கிடைத்த குறைவான வகைப் பாத்திரங்கள் மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் குறைவான சுதந்திரம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் அதை வெறுத்துவிட்டார். 2003 ஆம் ஆண்டில் கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததற்கு பதில்வினையாக, ஜாக்கி சான் எம்பெரர் மல்டிமீடியா க்ரூப் (EMG) நிறுவனத்துடன் இணைந்து JCE மூவிஸ் லிமிட்டட் (ஜாக்கி சான் எம்பெரர் மூவிஸ் லிமிட்டெட்) என்னும் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது முதல் திரைப்படங்கள் சிறந்த நாடகத்தன்மை கொண்ட காட்சிகள் நிறைந்திருந்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. அதற்கான எடுத்துக்காட்டுகளாக "நியூ போலிஸ் ஸ்டோரி" (2004), "த மித்" (2005) மற்றும் ஹிட் திரைப்படமான "ராப்-பி-ஹுட்" (2006) ஆகியவற்றைக் கூறலாம். + +ஜாக்கி அடுத்ததாக "ரஷ் ஹவர் 3" திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்டார். அப்படம் 255 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இருப்பினும், ஹாங் காங்கில் அது சரியாக வெற்றிபெறவில்லை, தொடக்க வாரங்களில் அதன் வசூல் 3.5 மில்லியன் ஹாங் காங் டாலர்களாகவே இருந்தது. "த ஃபர்பிடன் கிங்டம்" எனும் திரைப்படமே ஜாக்கி தனது சக சீன நடிகர் ஜெட் லீயுடன் சேர்ந்து பணிபுரிந்த முதல் படமாகும். அது +2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று நிறைவடைந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியானது. ட்ரீம் வொர்க்ஸின் அனிமேஷன் திரைப்படமான, "குங் ஃபூ ஃபேண்டாவில்" மாஸ்டர் மங்க்கி கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அப்படம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது, அதில் ஜாக் ப்ளாக், டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் ஏஞ்சலீனா ஜோலி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், வர இருந்த திரைப்படமான "வூஷூ"வின் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்டனி ஸீட்டொவின் அறிவுரை உதவிக் குழுவில் உதவியாக இருப்பதற்காக கையெழுத்திட்டார். அப்போது அந்தப் படத்தின் முன் தயரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் சாம்மோ ஹங் மற்றும் வாங் வெஞ்சீ ஆகியோர் தந்தை மகனாக நடிப்பதாக இருந்தது. + +2007 ஆம் ஆண்டு நவம்பரில் ஜாக்கி "ஷிஞ்சுகு இன்சிடெண்ட்" திரைப்படத்தில் இயக்குநர் டெராக் யீயுடன் பணிபுரிந்தார், அதில் ஜாக்கி ஜப்பானுக்கு புலம் பெயர்ந்த சீனராக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று வெளியானது. அவரது வலைப்பதின்படி, "ஷிஞ்சுகு இன்சிடெண்ட்" திரைப்படம் முடிந்த பின்னர் ஜாக்கி ஒரு படத்தை இயக்க விரும்பினார், அவர் பல ஆண்டுகளாக திரைப்பட இயக்கத்தில் ஈடுபடாமலே இருந்தார். அந்தப் படம் ஆர்மர் ஆஃப் காட் திரைப்பட வரிசையின் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு "ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக்" என்று பணி ரீதியான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்றுபடப்பிடிப்பைத் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், ஆனால் அந்த தேதி கடந்துவிட்டது. ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கிரிட் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால், ஜாக்கி "த ஸ்பை நெக்ஸ்ட் டோர்" என்னும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நியூ மெக்ஸிகோவில் அக்டோபர் இறுதியில் தொடங்கினார், இதன் மூலம் "ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக்" படத்தின் நிலையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். "த ஸ்பை நெக்ஸ்ட் டோர்" படத்தில், மறைந்திருக்கும் நபராக நடித்தார். அந்தப் படத்தில் அவரது காதலியின் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் அவரது கவர் பெரிதாகிவிடும். + +பெய்ஜிங் திரைப்படத்தின் மறுதயாரிப்பான "த கராட்டே கிட்" திரைப்படத்தின் படமாக்கத்தைத் தொடங்குவதற்காக, ஜாக்கி 2009 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். + +ஜாக்கி சான் பெரும்பாலும் தனது சொந்த ஸ்டண்ட்டுகளையே பயன்படுத்துவார், அதை ஜாக்கி சான் ஸ்டண்ட் குழு இயக்கும். தனது சொந்த ஸ்டண்ட் திறமையைப் பயன்படுத்தும் பஸ்டர் கீட்டன் அவர்கள் இயக்கிய "த ஜெனெரல்" போன்ற படங்களே அவரது நகைச்சுவை சண்டைக் காட்சிகளுக்கு அதிக தூண்டுதலாக அமைந்தது என அவரது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். 1983 ஆம் ஆண்டு அது நன்றாக உருப்பெற்றதை அடுத்து, ஜாக்கி தனது அடுத்த படங்கள் அனைத்திலும் தனது குழுவின் பணியையே பயன்படுத்தினார், இதனால் அவரது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உள்ள திறமையை அவரால் எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது. ஜாக்கியும் அவரது குழுவினரும் அவரது திரைப்படங்களின் பிற பாத்திரங்களாக நடித்துள்ளனர், அப்போதெல்லாம் அவர்களது முகங்கள் தெளிவாக தெரியாதபடி படம்பிடிக்கப்படும். + +அவரது ஆபத்தான சண்டைக் காட்சிகளின் காரணமாக,குறிப்பாக அமெரிக்காவில் அவரது சண்டைப் பணிகளுக்காக காப்பீடு பெறுவது கடினமாக இருந்தது. அங்கு அவரது சண்டைக் காட்சிப் பணிகள் ஒப்பந்தத்தினால் கட்டுப்படுத்தப்பட்டன. "அதிக சண்டைக் காட்சிப் பணிகளை நிகழ்த்திய, வாழும் ஒரு நடிகர்" என்னும் கின்னஸ் உலக சாதனையை ஜாக்கி நிகழ்த்தியுள்ளார். அதாவது "ஜாக்கி தானாகவே முழு ஸ்டண்டுகளை செய்யும் அவரது தயாரிப்புகளுக்கு எந்த காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு உத்தரவாதம் வழங்கவில்லை" என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும், ஒரே படத்தில் அதிக ஷாட்கள் எடுத்த ஓர் அங்கீகரிக்கப்படாத சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். "ட்ரேகன் லார்டு" திரைப்படத்தின் ஒரு சிக்கலான பேட்மிண்டன் காட்சிக்காக 2900 க்கும் மேற்பட்ட டேக் எடுத்துள்ளார். + +ஜாக்கி தனது சண்டை முயற்சிகளின் போது பல முறை காயமடைந்துள்ளார். அவற்றில் பல காட்சிகள் படப்பிடிப்பின் படக்காட்சிகளிலோ அல்லது நன்றிக் காட்சிகளின் போது காண்பிக்கப்படும் பிழைகளாகவோ காண்பிக்கப்படும். "ஆர்மர் ஆஃப் காட்" திரைப்படத்தில் செத்துப் பிழைத்தார் எனக் கூறலாம். அப்போது அவர் ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து அவரது மண்டையில் எலும்புகள் முறிந்தன. பல ஆண்டுகளில், அவரது இடுப்பு இடமாற்றம் அடையும் பாதிப்புகள் அடைந்துள்ளார், விரல்கள், கால்விரல்கள், மூக்கு, மார்பெலும்பு, கன்னத்தின் எலும்புகள், இடுப்பு, கழுத்து, மூட்டு விலா ஆகிய உடலின் பல பகுதிகளை பல முறை உடைத்துக்கொண்டிருக்கிறார். "ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்" படத்திற்கான பிரச்சார படைப்புகளில், ஜாக்கி அந்தப் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் அவராகவே செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் ஜாக்கி அதிக காயங்களுடன் காணப்படும் படமும் இடம்பெற்றிருந்தது. + +ஜாக்கி சான் தனது திரைப்படப் பாத்திரத்தை புரூஸ் லீக்கு பதிலாக உருவாக்கினார், அதோடு மட்டுமல்லாமல் அது புரூஸ் லீயின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் வந்த எண்ணற்ற மாற்று நடிகர்களுக்கு பதிலாகவும் அமைந்தார். விறைப்பான, தர்மத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களான மனிதர்கள் போன்ற வழக்கமான லீயின் பாத்திரங்களுக்கு மாறாக, ஜாக்கி பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். சிறிதளவு முட்டாள்தனமான சாதரண மனிதனாக (பெரும்பாலும் அவரது காதலி அல்லது நண்பர்கள் அல்லது குடும்பத்தின் மேலுள்ள இரக்கத்தினால்) இருந்து, அப்படி இருந்தாலும் இறுதியில் வென்றுவிடும் நாயகனாக விளங்குவார். மேலும், ஜாக்கி அவரது அசைவுகளின் பாணியானது லீயின் அசைவுகளுக்கு "எதிராக" இருக்க வேண்டும் என குறிப்பாகக் கூறியுள்ளார்: லீ தனது கைகளை நன்கு விரித்து அகலமாக வைத்திருப்பார், ஆனால் ஜாக்கி தனது கைகளை உடலுடன் சேர்த்து இறுக்கமாகவே வைத்திருப்பார்; லீ தளர்வாகவும் உடல் வளைந்துகொடுக்கும் தன்மையுடனும் காணப்படுவார், ஆனால் ஜாக்கி இறுக்கமாகவும் கிடுகிடுவென்று குதிக்கும் பரபரப்பான இயல்புடனும் காணப்படுவார். "ரஷ் ஹவர்" வரிசை வெற்றிபெற்ற போதும், அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் எதனையும் பாராட்டவும் இல்லை, அமெரிக்க நகைச்சுவை உணர்வைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேர்காணலில், அமெரிக்காவில் அவர் ஈடுபட்டிருந்த படங்கள் இல்லாத சமயங்களில், எங்கே சீ�� மக்கள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதோ எனப் பயந்து, பெரிய பட்ஜெட் அமெரிக்கத் திரைப்படங்களில் நடிப்பதை அவ்வப்போது தவிர்த்துவந்தார். அவர் அது போன்ற அதிக சம்பள படங்களிலிருந்து கிடைக்கும் பணத்தை அவருக்கு ஆர்வமுள்ள சீனப் பணித்திட்டங்களுக்காகவே பயன்படுத்தினார். + +வயதான ஜாக்கி சான் ஆக்ஷன் நாயகனாக நடித்து சோர்ந்துவிட்டதால், சமீபத்திய படங்களில் உணர்ச்சிமயமான பாத்திரங்களில் நடித்துவருகிறார். "நியூ போலிஸ் ஸ்டோரியில்", குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒரு மனிதனாக நடித்துள்ளார், அதில் அவர் கொலை செய்யப்பட்ட தனது சக பணியாளர்களை நினைத்து முனுமுனுப்பார். மிஸ்டர். நைஸ் கை படத்தின் கதாப்பாத்திரம் உருவாக்கிய பாதிப்பை மாற்ற, அவர் ஒருபோதும் செய்யாத ஆண்டி-ஹீரோ பாத்திரத்தை "ராப்-பி-ஹுட்" திரைப்படத்தில் செய்தார், அதில் அவர் சூதாட்ட சிக்கல்கள் கொண்ட தாங்க்ஸ் என்னும் கொள்ளையனாக நடித்தார். + +2000 ஆம் ஆண்டு தனது கதையின் நாவல் வடிவமாக்கப்பட்ட அனிமேஷன் தொடரான "ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ்", என்பதை வழங்கினார், அது 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. + +2008 ஆம் ஆண்டு ஜூலையில் BTV ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான "த டிசைப்பில்" (, எழுத்தியலாக "டிசைப்பில் ஆஃப் த ட்ரேகன்ஸ்") என்ற நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் தொடரை ஜாக்கி சான் தயாரித்து அதில் அவரே நடித்தார். திரைப்படத்துறையில் ஜாக்கிக்கு "அடுத்தவராகவும்" மாணவராகவும் இருக்கக்கூடிய நடிப்பு மற்றும் தற்காப்புக் கலைகளில் திறம்படப் பயிற்சி பெற்ற ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பதே அந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். போட்டியாளர்களுக்கு ஜாக்கி சான் சண்டைக் குழு உறுப்பினர்களான ஆலன் வூ மற்றும் ஹீ ஜுன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் அவர்கள் வெடிவிபத்துக் காட்சிகள், உயரமான கயிறுகளில் ஏறுதல், துப்பாக்கி சண்டை, கார் ஸ்டண்ட்டுகள், டைவிங், தடை ஸ்டண்டுகள் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றனர். +அந்த நிகழ்ச்சியில் ஹீ பிங், வூ யூ மற்றும் செங் பெய் பெய் ஆகியோர் வழக்கமான நீதிபதிகளாக இருந்தனர். கௌரவ நீதிபதிகளாக ஸ்டேன்லி டாங், சாம்மோ ஹுங் மற்றும் யுவேன் பையோ ஆகியோர் இடம்பெற்றனர். அதன் "இறுதி" பகுதி மீதமிருந்த 16 போட்டியாளர்களைக் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று தொடங்க��, 2008 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று முடிந்தது. அதில் பங்குபெற்றவர்களில் ட்சூ ஹார்க், ஜான் வூ, ங் சீ யுவேன் மற்றும் யூ ராங் குவாங் ஆகியோர் அடங்குவர். + +ஜாக் டூ (டூ ஷெங் செங்) அந்த நிகழ்ச்சித் தொடரின் வெற்றியாளரானார். யாங் ஜெங் மற்றும் ஜெர்ரி லியாயூ ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தவர்களாவர், டூ இப்போது மூன்று தற்கால சீன திரைப்படங்களில் பணிபுரிந்துவருகிறார். அதில் ஒரு படத்திற்கு ஜாக்கி திரைக்கதையாசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த மூன்றும் ஜாக்கி அல்லது அவரது JCE மூவிஸ் லிமிட்டட் நிறுவனத்தால் இணைத் தயாரிப்புப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் பெயர்கள் "ஸ்பீட்போஸ்ட் 206", "வோன்'ட் டெல் யூ" மற்றும் "ட்ராப்பிகல் டொர்னேடோ" ஆகியவையாகும். மேலும் அவை க்ஸீ டாங், ஜயாங் டாவோ மற்றும் சாய் ராங் ஹூய் ஆகியோரால் இயக்கப்படும். அதில் வென்ற 16 இறுதிப்போட்டியாளர்கள் அனைவருக்கும் படங்களில் பணிபுரிவதற்கு அல்லது ஜாக்கி சான் ஸ்டண்ட் குழுவில் சேர்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் திரைப்படத்தின் தயாரிப்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வர இருந்த BTV ஆக்ஷன் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பும் அந்த இறுதியாளர்களுக்கு வழங்கப்பட்டது. + +ஜாக்கி சான் அவரது குழந்தைப் பருவத்தில் பெக்கிங் ஓப்பெரா ஸ்கூலில் குரல் இசைப் பயிற்சி பெற்றிருந்தார். 1980களில் தொழில்முறையாக ரெக்கார்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினார். ஹாங் காங் மற்றும் ஆசியாவில் வெற்றிகரமான பாடகராவதாகத் தெரிந்தது. 1984 ஆம் ஆண்டிலிருந்து அவர் 20 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் கேண்டூனிஸ், மாண்டரின், ஜாப்பனீஸ், தைவானீஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். அவரது படங்களில் பெரும்பாலும் தீம் பாடல்களை அவரே பாடுவார், அவை நன்றிக் காட்சிகளில் இடம்பெறும். "குங் ஃபூ ஃபைட்டிங் மேன்" என்பதே அவரது முதலில் பதிவு செய்யப்பட்ட பாடலாகும், அது த யங் மாஸ்டர் (1980) படத்தின் நன்றிக் காடசிகளில் இடம்பெறும் தீம் பாடலாகும். இந்த பதிவுகளில் குறைந்தபட்சம் 10 திரைப்படங்களுக்கான சவுண்ட் ட்ராக் ஆல்பங்களாக வெளியிடப்பட்டுள்ளன. "ஸ்டோரி ஆஃப் அ ஹீரோ" (英雄故事) என்னும் அவரது கேண்டுனீஸ் பாடல் (போலிஸ் ஸ்டோரி படத்தின் தீம் பாடல்) ராயல் ஹாங் காங் போலிஸ் துறை��ால் 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆள் சேர்ப்பு விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது. + +சீனாவில் வெளியான வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படைப்பான "முலான்" (1998) படத்தில் ஜாக்கி, ஷாங் என்னும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் பாடலுக்காக "ஐ'ல் மேக் அ மேன் அவுட் ஆஃப் யூ" என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் அமெரிக்க வெளியீட்டுக்கு பேச்சுக் குரல் பீ.டி. வோங் என்பவர் வழங்கினார், பாடல் டோனி ஆஸ்மண்டால் பாடப்பட்டது. + +2007 ஆம் ஆண்டு, "வீ ஆர் ரெடி" என்ற பாடலைப் பாடி பதிவு செய்தார், அது 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஓராண்டு கவுண்ட்-டௌன் பாடலாகத் திகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டின் உடல் ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி விழாவில் ஓராண்டு கவுண்ட்-டௌனைக் குறிக்கும் விதமாக ஜாக்கி அந்தப் பாடலைப் பாடினார். + +பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன் நாள், இரண்டு அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆல்பங்களில் ஒன்றை வெளியிட்டார். அது "அஃபீஷியல் ஆல்பம் ஃபார் த பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் கேம்ஸ் - ஜாக்கி சான்'ஸ் வெர்ஷன்" என்பதாகும், அதில் பலர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். ஜாக்கி ஆண்டி லா, லியூ ஹுவான் மற்றும் வாக்கிங் (எமில்) சாவ் ஆகியோருடன் இணைந்து 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் "ஹார்ட் டு சே குட்பை" என்னும் பாடலைப் பாடினார். + +ஜாக்கி சான் அவரது நடிப்பிற்காக உலகளவிலான நன்மதிப்பைப் பெற்றவராவார். அவர் அமெரிக்கன் கொரியகிராஃபி அவார்ட்ஸிலிருந்து இன்னோவேட்டர் விருதையும் டாரஸ் வோர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட்ஸின் வாழ்நாள் சாதனை விருதையும் பெற்றுள்ளார். ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் மற்றும் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸ் ஆகிய இரண்டிலும் நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். வடக்கு தெற்குப் பகுதிகளில் இவர் வசூல் ரீதியான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ஆக்ஷன் கொரியகிராஃபியைப் பொறுத்த வரை ஜாக்கியின் அமெரிக்கத் திரைப்படங்கள் விமர்சனத்துக்குள்ளாயின. "ரஷ் ஹவர் 2", "த டெக்ஸூடோ" மற்றும் "ஷாங்காய் நைட்ஸ்" ஆகிய திரைப்படங்களின் விமர்சகர்கள், சானின் சண்டைக் காட்சிகளில் காணப்படும் சிறப்புக் குறைதலைக் குறிப்பிட்டனர், அவை அவரது முந்தைய படங்களினதைவிட செறிவு குறைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அவரது திரைப்படங்களின் நகைச்சுவை மதிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சில நேரங்களில் அது சிறுபிள்ளைத் தனமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். + +ஜாக்கி ஒரு கலாச்சாரச் சின்னமாவார், ஆஷின் பாடலான "குங் ஃபூ", "ஜாக்கி சான் இஸ் அ பங்க் ராக்க்ர்" ஆகிய ஹெவி வெஜிட்டபில் பாடல்கள் மற்றும் ஃப்ரேங்க் சிக்கென்ஸின் "ஜாக்கி சான்" மற்றும் "செலிப்ரிட்டி டெத்மேட்ச்" மற்றும் "ஃபேமிலி கை" ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். ("ஜாக்கி சன்" என்னும் மாற்றுப் பெயர் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தைக் கொண்டுள்ள) "ட்ரேகன் பால்" போன்ற மங்கா படைப்புகள், "டெக்கென்" படைப்பில் இடம்பெறும் லீ வோங் பாத்திரம் மற்றும் போக்மேன் ஹிட்மோன்ச்சேன் ஆகிய சண்டை வகைகள் போன்றவற்றுக்கு அவர் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறார். +மேலும், மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் கீழும் உள்ளார். இதன் விளைவாக ஜாக்கி சானின் பல படங்களில் மிட்சுபிஷி கார்கள் அதிகமாக இடம்பெறுவதைக் காணலாம். மேலும், மிட்சுபிஷி நிறுவனமும் சானுக்காக தனிப்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட எவால்யூஷன் என்னும் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே தயாரிக்கப்பட்ட கார் மாடல் உருவாக்கி அவரை கௌரவித்தது. + +எண்ணற்ற வீடியோ கேம்களில் ஜாக்கி சான் இடம்பெற்றுள்ளார். "ஸ்டண்ட் மாஸ்டராக" இருப்பதற்கு முன்பு, அவருக்கென "ஜாக்கி சான்'ஸ் ஆக்ஷன் குங் ஃபூ" என்னும் ஒரு தனிப்பட்ட விளையாட்டைக் கொண்டிருந்தார். அதை தனிநபர் கணினி மற்றும் NES ஆகியவற்றுக்காக 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1995 ஆம் ஆண்டில் "ஜாக்கி சான் த குங் ஃபூ மாஸ்டர்" என்னும் ஆர்கேட் சண்டை விளையாட்டில் இடம்பெற்றார். மேலும் அவரது பல படங்களின் ("ப்ராஜெக்ட் A", "ப்ராஜெக்ட் A 2", "போலிஸ் ஸ்டோரி", "த ப்ரொடெக்டர்" மற்றும் "வீல்ஸ் ஆன் மீல்ஸ்") அடிப்படையிலமைந்த ஜாப்பனீஸ் ஜாக்கி சான் விளையாட்டுக்களை MSX இல் போனி நிறுவனம் வெளியிட்டது. + +ஜாக்கி குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே விரும்பினார். மேலும் தனது நல்ல விதமான நடிப்பினால் அவர் மிகவும் பிரபலமாகவும் இருந்தார். அவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்ததில்லை. "கிட்டத்தட்ட" "ஃபக்" என்னும் வார்த்தையை அவர் பயன்படுத்தியதே இல்லை (அதை "த ப்ரொடெக்டர்" மற்றும் "பர்ன், ஹாலிவுட், பர்ன்" ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்) ஆனால் ரஷ் ஹவர் படத்தின் போது அவரது கூட்டாளியான கார்ட்டெரைப் போலப் பேசுவதற்காக அவர் அதிகமான நபர்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு முறை கூறிய "வாட்ஸ் அப் மை நிகர்" என்ற வசனத்தை, கார்ட்டெர் மற்றொரு அறையில் இருக்கும் போது திரும்பக் கூறி வேடிக்கையாக இருக்க முயற்சித்த போது அங்கிருந்த அனைவரும் அவரை அடிக்க வந்து விட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க ஜாக்கி தனது சண்டைப் பயிற்சி திறமைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. வாழ்க்கையில் சரியாகக் கல்வி கற்க முடியாமல் போனதே ஜாக்கி சானின் மிகப் பெரிய வருத்தமாகும். இதனால் அவர் உலகளவில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கிவருகிறார். ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில் உள்ள ஜாக்கி சான் சயின்ஸ் செண்ட்டருக்கும் சீனாவின் ஏழ்மையான பகுதிகளில் சில பள்ளிகளை நிறுவுவதற்கும் நிதி அளித்துள்ளார். + +ஹாங் காங் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் ஜாக்கி சான் விளங்குகிறார். மக்களிடம் அரசாங்கத்தின் சார்பாக பொது மக்கள் சேவைகள் பற்றிய ஏதேனும் அறிவிப்புகளை வழங்க அவர் பேசுவார். "க்ளீன் ஹாங் காங்" எனும் விளம்பரத்தில் அவர் பல ஆண்டுகளாக ஹாங் காங்கில் பரவியிருந்த குடிப்பழக்கத்தை விட்டொழிக்க மக்களை வற்புறுத்தினார். மேலும் தேசியவாதப் பிரச்சாரம் ஒன்றில் ஜாக்கி சீனாவின் தேசிய கீதமான "மார்ச் ஆஃப் த வாலண்டியர்ஸ்" பாடலுக்கான சுருக்கமான விளக்கத்தை வழங்கினார். 2005 ஆம் ஆண்டில் ஹாங் காங் டிஸ்னி லேண்ட் திறக்கப்பட்ட போது அந்தத் திறப்பு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்றார். அமெரிக்காவில் பதிப்புரிமை மீறலுக்கு எதிராகப் போராடத் தூண்டும் அரசாங்க விளம்பரத்தில் அர்னால்டு சுவார்சனேகருடன் இணைந்து பணிபுரிந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் பொதுப் பணித் துறை ஷெரிஃப்ஃபான லீ பாக்காவுடன் மக்களை, குறிப்பாக ஆசியர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் கண்ட்ரி ஷெரிஃப் துறையில் சேர ஊக்குவிக்கும் ஒரு அறிவிப்பில் பங்கேற்றார். + +ஷாங்காயில் ஜாக்கி சான் மியூசியத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தப் பணி 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதும் 2008 ஆம் ஆண்டு ஜூலையிலேயே தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் கிடைத்த தகவலின் படி அது இன்னும் கட்டுமானப் பணியின் தொடர்ச்சியிலேயே உள்ளது. + +2004 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று தைவானில் ஒரு நேர்காணலில், சமீபத்தில் முடிவு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டின் சீனக் குடியரசின் அதிபர் தேர்தல் பற்றி ஜாக்கி பேசினார். அப்போது அவர் "ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்களான சென் ஷூயி பியான் மற்றும் அன்னெட் லூ ஆகியோர் அதிபர் மற்றும் துணை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உலகின் மிகப் பெரிய ஜோக்" என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது. தைவான் சட்டசபை உறுப்பினர் மற்றும் DPP இன் மூத்த உறுப்பினரான பேரிஸ் சாங் ஜாக்கி சானின் கருத்துகளை விமர்சித்து, அவரைக் கண்டிக்கும் விதமாக தைவானில் அவருடைய படங்களையும் அவர் தைவானுக்கு வருவதற்கான உரிமையையும் தடைசெய்ய அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தார். TVBS என்னும் கேபிள் தொலைக்காட்சி சேனலால் வழங்கப்பட்ட தர்மஸ்தாபனத்திற்கு வருகை தருவதற்காக 2008 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று தாய்பேய் விமான நிலையத்தில் ஜாக்கி சான் வந்திறங்கியபோது போராட்டக்காரர்களை அவரை விட்டு விலக்க சுமார் 50 காவலர்கள் தேவைப்பட்டனர். தனது கருத்துகளை தைவான் மக்களை அவமதிக்கும் நோக்கில் தான் வெளிப்படுத்தவில்லை என சான் வலியுறுத்தினார். + +பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர் அணிவகுப்பைப் பற்றி பேசிய போது, சில டெமான்ஸ்ட்ரேட்டர்கள் சீன மனித உரிமைகள் பதிவு மற்றும் தைவானின் அரசியல் அந்தஸ்து ஆகியவை உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு எதிரான பல விவகாரங்களை கவனத்தில் கொண்டுவருவதற்காக அணிவரிசையை பல முறை குறுக்கிட்டனர் என அவர்களுக்கு எதிராக ஜாக்கி சான் பேசினார். "டெமான்ஸ்ரேட்டர்கள் என்னருகில் வராமல் இருப்பதே நல்லது" என்று கூறியதன் மூலம் தான் ஒலிம்பிக் சுடரைக் கொண்டு செல்வதைத் தடுக்கத் திட்டமிடும் எவரையும் தாக்கிவிடுவதாக எச்சரித்தார். + +2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று "டேப்பிங் இண்டு ஆஷியா'ஸ் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரி பொட்டென்ஷியல்" என்னும் தலைப்பில் ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்திர குழும கலந்துரையாடலில் பேசிய ஜாக்கி சான், ஹாங் காங் சீன ஆட்சிக்குத் திரும்பிய 10 ஆண்டுகளில், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது நல்லதா கெட்டதா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை" எனக் கூறினார். அவர் தொடர்ந்து "நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தால் ஹாங் காங் இப்போது இருப்பது போலத் தான் நீங்களும் இருப்பீர்கள்". இது ஒரு முறையான அமைப்பாக இல்லை. தைவானும் அப்படித்தான் உள்ளது" என்றும் கூறினார். மேலும் அவர் "சீனர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றுகிறது". நாம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாம் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்துவிடுவோம்" என்றும் கூறினார். இருப்பினும், சீனப் பொருள்களின் தரம் பற்றிக் குறை கூறுகையில் "ஒரு சீனத் தொலைக்காட்சி வெடிக்கக்கூடும்" எனக்கூறினார். ஆனால் அவரது "ஷிங்ஜுக்கு இன்சிடெண்ட்" திரைப்படத்தைத் தடைசெய்ததற்காக அவர் சீன அரசாங்கத்தை விமர்சிக்க தைரியம் கொண்டிருக்கவில்லை. தைவான் மற்றும் ஹாங் காங்கின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாக்கி சானின் இந்தக் கருத்துகளால் சூடான பதில்களைத் தெரிவித்தனர். ஹாங் காங் சட்டமன்ற உறுப்பினர் லியூவங் க்வோக்-ஹங், "சான் சீன மக்களை அவமதித்துவிட்டார்". சீன மக்கள் செல்லப் பிராணிகள் அல்ல" எனக் கூறினார். ஜாக்கி சானின் கருத்துகளுக்கு எதிராக ஹாங் காங் சுற்றுலாத் துறை ஆணையம் பொதுமக்களிடமிருந்து 164 கருத்துகள் அல்லது புகார்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜாக்கி சானின் ஒரு செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "சான் பொழுதுபோக்குத் தொழிற்துறையில் உள்ள சுதந்திரம் பற்றியே குறிப்பிட்டாரே தவிர பெருவாரியான சீன மக்கள் சமூகத்தைப் பற்றியல்ல. மேலும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலர் உள்நோக்கத்துடன் அவரது கருத்துகளைத் தவறாகப் பரப்புகின்றனர்" என்று தெரிவித்தார். + +2004 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் தனது சொந்த ஆடைகளை அறிமுகப்படுத்தினார். அந்த ஆடைகளில் சீன ட்ரேகன் சின்னமும் ஜாக்கி என்ற பெயர் அல்லது JC என்ற சுருக்கமும் இடம்பெற்றிருந்தன. ஜாக்கி சானுக்கு எண்ணற்ற பல ப்ராண்டு வணிகங்களும் உள்ளன. ஜாக்கி கிச்சன் என்னும் அவரது சூஷி ரெஸ்டாரண்ட்டுகள் பல ஹாங் காங் முழுவதும் உள்ளன. அதே போன்று தென் கொரியாவில் ஏழும் ஹவாயில் ஒன்றும் உள்ளது. மேலும் லாஸ் வேகாஸில் மேலும் மற்றொன்றைத் திறக்கும் திட்டமும் உள்ளது. ஜாகி சான்'ஸ் கேஃப் கிளைகள் பெய்ஜிங், சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பல இடங்களில் உள்ளன. ஜாக்கி சான் சிக்னேச்சர் கிளப் ஜிம்கள் (கலிஃபோர்னியா ஃபிட்னெஸ் அமைப்புடன் கூட்டு வணிக முயற்சி), பல சாக்லேட் வகைகள், குக்கிகள் மற்றும் ஊட்டச்சத்து ஓட் கேக்குகள் போன்ற தயாரிப்புகள் ஆகியவை அவரது தொழில் முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் அடங்கும். அவர் தனது வணிகத்தை விரிவாக்கி மரச்சாமான்கள் சமயலறைப் பொருள்கள் ஆகிய தயாரிப்புகள் நோக்கிச் செல்ல இருப்பதாக நம்புகிறார். மேலும் விரைவில் ஒரு பிராண்டடட் சூப்பர் மார்க்கெட்டைக் கட்டுவதற்கான திட்டமும் உள்ளதாகக் கூறுகிறார். அவரது ஒவ்வொரு வணிகத்திலும் அவருக்கு கிடைக்கும் இலாபத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பல்வேறு தர்ம ஸ்தாபனங்களுக்குச் செல்கிறது, அதில் ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனும் அடங்கும். + +மிகச் சிறந்த கொடையாளியும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நன்மதிப்புத் தூதரும் ஆவார், அவர் தொண்டுப் பணிகள் மற்றும் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் விலங்குகள் பாதிப்புக்குட்படுத்தப்படுதலுக்கு எதிராக அழியாமல் காப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் மெயின்லேண்ட் சீனா வெள்ளப் பேரழிவு மற்றும் 2004 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் சுனாமி ஆகிய நிகழ்வுகளின் போது பேரழிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். தான் இறந்த பின், தனது சொத்தின் பாதியைத் தேவைப்படுபவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்போவதாக 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜாக்கி சான் அறிவித்தார், மேலும் வாரென் பஃபே மற்றும் பில்கேட்ஸ் ஆகியோரின் உதவிகளைப் பாராட்டினார். 2008 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, ஜான் கர்ட்டின் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்ச், கேன்பெராவிலுள்ள ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில், "ஜாக்கி சான் சயின்ஸ் செண்டரின்" தொடங்கி வைப்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டுடன் மரியாதை நிமித்த மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஜாக்கி சான் சேவ் சீனா'ஸ் டைகர்ஸ் பணித்திட்டத்தின் ஆதரவாளரும் ஆவார். அது தென் சீனப் புலிகளின் அழி���ைத் தடுப்பதைக் குறிக்கோளாக் கொண்ட பணித்திட்டமாகும். அதற்காக அத்திட்டம் புலிகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றைக் காட்டில் சென்று விட்டுவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, இந்த அழியாமல் காக்கும் பணித்திட்டத்திற்கான பிரதிநிதியாக ஜாக்கி சான் உள்ளார். பண்டைய கலை நயம் மிக்க பழம்பொருள்கள் பலவற்றை ஜாக்கி சான் வைத்திருக்கிறார், அதில் 2000 ஆண்டு பழமையான கதவு போன்றவை அடங்கும். அவர் சிங்கப்பூரில் உள்ள ஜின்ரிக்ஷா ஸ்டேஷனையும் கொண்டுள்ளார். + +2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சென்னையில் நடைபெற்ற "தசாவதாரம்" (2008) என்ற இந்தியத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் அழைக்கப்பட்டார். அதில் பங்கேற்ற போது, அவர் தனது கலைக் கருத்துகளை இந்திய பிரபலங்களான அமித்தாப் பச்சன் மம்மூட்டி மற்றும் கமலஹாசன் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜாக்கி சானுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியாது என்றாலும், அவரிடமும் அவரது படங்களின் மீதும் இந்திய ரசிகர்களுக்கு இருந்த நேசத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். "தசாவதாரம்" திரைப்படத்தைப் பார்த்து மிகவும் கவரப்பட்ட அவர் அந்தப் படத்தின் நாயகனான கமலஹாசனுடன் பணிபுரிய விரும்புவதாகக் குறிப்பிட்டார். கமலஹாசனும் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் பணிபுரிய தான் விரும்புவதாக பதிலுக்கு தெரிவித்தார். இதனால் ஜாக்கி சாத்தியமுள்ள பணித்திட்டத்தில் இருவரும் இணைந்து பணிபுரியலாம் என உறுதியளித்துள்ளார். + +2008 ஆம் ஆண்டின் செச்ச்வான் பூகம்பத்தை அடுத்து RMB ¥10 மில்லியன் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜாக்கி சான் வழங்கினார். மேலும், சீன பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டுவதற்காக அதைப் பற்றி ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். + +1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷன் நிறுவனம், பல்வேறு வகையான மதிப்புள்ள சேவை வழிகளைப் பயன்படுத்தி ஹாங் காங் இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் செயல்மிகு உதவி ஆகியவற்றை வழங்கிவருகிறது. இந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனமானது தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளது, அதன் மூலம் மருத்துவ சேவைகள் வழங்குதல், இயற்கையன பேரழிவுகள் அல்லது உடல்நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுத��ி வழங்குதல் ஆகிய பணிகளையும் தங்கள் பணித்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற முடிந்தது. இதன் பணித்திட்டங்களால் பெரிதும் பயனடைபவர்கள் ஹாங் காங் மக்கள் அல்லது நிறுவனங்களே. +ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனின் முக்கியத் பணித்திட்டங்கள்: + + +டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அது சீனாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறாரின் முக்கிய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலிருந்து ட்ரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷனானது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கட்டியுள்ளது. புத்தகங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும் ஏழைகளுக்கான மிகவும் அவசியமான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மில்லியன் கணக்கிலான நன்கொடை நிதியைத் திரட்டியுள்ளது. மேலும் டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் முதியவர்களுக்கான கதகதப்பான ஆடைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பிற முக்கியப் பொருள்களை வழங்கியுள்ளது. புதிய திட்டங்கள் அல்லது பள்ளி திறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்காக ஜாக்கி சான் சீனாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அடிக்கடி செல்வது வழக்கம், அதன் மூலம் அவர் தனது ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவார். + +ஹாங் காங் திரைப்பட விருதுகள் + + +1982 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் லின் ஃபெங்-ஜியாவோ (ஜோன் லின் எனவும் அழைக்கப்படுவார்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார், அவர் ஒரு தைவான் நடிகையாவார். அதே ஆண்டு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், அவரே பாடகரும் நடிகருமான ஜாயஸ் சான் ஆவார். + +"1999 ஆம் ஆண்டின் ஒரு சர்ச்சையில், 1990 ஆம் ஆண்டின் மிஸ் ஏஷியா பீகெண்ட் வெற்றியாளரான எலைன் இங்கின் பெண் குழந்தைக்கான தந்தைமையைத் தவிர்த்து பிற எல்லாவற்றையும் அவர் ஒப்புக்கொண்டார்" இருப்பினும் சிறப்பு நிருபர்கள் ஜாக்கிக்கு, இறந்த தைவான் பாடகர் டெரேசா டெங்கிலிருந்து கவர்ச்சி பாப் பாடகி மற்றும் நடிகை அனிதா முயி வரையிலான அனைவருடனும் தொடர்பு இருந்ததாகக் கூறுகின்றனர். + +அவர் காண்டூனிஸ் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவார், அவருக்கு ஓரளவு கொரியன் மற்றும் ஜாப்பனீஸும் சிறிதளவு ஸ்பனிஷும் தெரியும். + + + + + + +��ோன் ஆஃப் ஆர்க் + +ஜோன் ஆஃப் ஆர்க் ("Saint Joan of Arc") கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. + +ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில், ஜோன் ஆப் ஆர்க் பிரன்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803ம் ஆண்டில், நெப்போலியன் போனபர்ட் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவரை பிரான்சு நாட்டின் சின்னம் என்று கூறினார். + +பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும். + +ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும். . + +ஜோனுக்கு தமது 12 வயதிலிருந்தே, செவிவழி அருளும் அவ்வப்போது தெஉவீக தரிசணங்களும் கிட்டியதாக கூறப்படுகிறது. சிறுவயதில் தோன்றிய தரிசணங்களில் இறை பக்தி கொள்ளுமாரு அறிவுருத்தியதாகவும், இந்த தரிசணங்களில், புனித மைக்கேல், புனித கேத்தரீன், மற்றும் புனித மார்கரட் உருவங்கள், ஜோனுக்கு காட்சியளித்தாகவும் கூறப்படுகிறது. இதை அரசாங்க நூல்களும் உறுதி செய்கின்றன. பின்னர் ஒரு நாள், பிரான்சை காப்பாற்ற ஜோனின் உதவி தேவை என்றும், 'அரசர் சாலர்ஸுக்குதான் பிரான்சை ஆட்சி செய்ய உரிமையுள்ளது' என்று தமக்கு அருள் கிட்டியதாக, அவரது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். + +இதன் பொருட்டு, ஜோனின் உறவினரான 'டியூரான்ட் லாஸ்ஸோஸிடம்', தம்மை சார்லஸின் ஆதரவாளாரான கோமான் ராபர்ட் தி பாட்ரிகோர்டிம் அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். ராபர்டிம் தான் அரசர் சார்லஸை சந்திக்க உதவுமாறு கேட்டாள். ஆனால் அவர் அதுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜோனின் விடா முயற்சியால், இறுதியில் ஒப்புக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் போர் நடந்துக் கொண்டிருந்ததால், அந்த கோமான் ஜோனை ஆண் போல வேடமிட்டு, ஆயுதமேந்திய துணைகளுடன் சினானுக்கு அனுப்பி வைத்தார். + +11 நாட்கள் பயனத்திற்கு பிறகு, ஜோன் ஆப் ஆர்க், 'சினான்' மார்ச் 4ம் தேதி வந்தடைந்தார். அரசவையில் ஜோனின் கட்டுக்கடங்கா உணர்ச்சியைக் கண்ட சார்லஸின் முகம் பிரகாசமடைந்தது. பல வேதாந்த ஆய்வுகளுக்குப் பிறகு, + +மார்ச் 1429 அன்று, ஜோனின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசர் சார்லஸ், ஜோனுக்க��� ஒரு படை அளித்து, அதன் படைத்தளபதியாகவும் நியமித்தார். ஜோன் வெள்ளை போர் கவசமும், ஒரு வெள்ளை குதிரையிலும் போருக்குச் சென்றார். ஒரு விவசாயி மகளாக இருந்த போதிலும், 17ம் வயதில் ஒரு அரசாங்கத்தின் படைத் தளபதியானது குறிப்பிடத்தக்கது. படைத்தளைபதியானப் பின், படை வீரர்களிடையே பல சீர் திருத்தங்கள் செய்தார். பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் போர் தொடுத்தார். அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த, பிரான்சின் சார்லசு மன்னர் ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாயமுற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இந்த வெற்றியால் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு, அரச குல உயர்குடி நிலை அளிக்கப்பட்டது. + +ஆங்கிலேயர்கள் பின்வாங்கி ஓடும் தருணத்தை பயன்படுத்தி, அரசர் சார்லஸை படைகளை முன்னோக்கி பாரிஸ் நகரத்தைக் கைப்பற்ற, ஜோன் வேண்டினார். ஜோன் ஒர்லியன்சைக் கோட்டையை கைப்பற்றிய போதிலும், அரசவையிலுள்ள மற்ற அமைச்சர்களுக்கு ஜோனின் மீது நம்பிக்கை வரவில்லை. ஆகையால் பாரிஸை நோக்கி படை எடுக்க வேண்டாம் என்று அரசருக்கு, அவர்கள் அறிவுறித்தினர். + +ஓர்லியன்ஸ் போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளபதிகளான ஜான் போயர், ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிட்டனர். + +அரசர் சார்லஸின் கட்டளையின் படி 'கோம்பைன்' நோக்கி அவரது தம்பி 'பியர்ரே'வுடன், ஆங்கிலேயர்களையும் புர்கண்டியேர்களையும் எதிர்க்கும் மக்களுக்கு உதவி செய்ய சென்றார். ஜோன் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு 'கோம்பைன்' மற்றும் சில தளங்களைப் பிடித்தார். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைஞ் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆப் ஆர்க் தன் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு புர்கண்டியேர்கள் ஜோனைக் கடத்திச் சென்று சிறையிட்டனர். + +ஜோன் புர்கண்டி கோட்டையிலிருந்து தப்பிக்க பல முறை முயற்சி செய்தார். ஒரு சமயம், 70 அடி கோபுரத்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார். . இதனை அடுத்து, புர்கண்டியேர்கள் ஜோனை ஆங்கிலேயர்களிடம் 10000 காசுக்களுக்கு பரிமாற்றம் செய்தனர். ஆங்கிலேயர்கள் ஜோனை பாரீஸ் நகரத்துக்கு கொண்டு சென்றனர். + +உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டார். ஜோன் ஆப் ஆர்க்கை, போர் குற்றவாளியாக கருதாமல், கிருத்துவ மதத்திற்கு எதிரானவர் மற்றும் சூனியக்காரி போன்ற குற்றங்களைக் கொண்டு அவரது வழக்கை, இறையியல் நீதிமன்றத்தில் விசாரத்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர். முதலில் ஜோனின் வழக்கை பொது மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். ஆனால் ஜோன் அளித்த சாமார்த்திய பதில்க்ளைக் கண்டப் பின்னர், ரகசிய விசாரணைகள் நடந்தது. ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது பாடமாக இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர். + +ஆண்கள் உடையை அணிந்தது போன்ற ஏறத்தாழ 70 குற்றங்களைக் கொண்டு, இறையியல் நீதிமன்றம் ஜோனுக்கு மரணதண்டனை விதித்தது. அதன்படி தனது 19ம் வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க், சுமார் 10000 மக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். + +ஜோனின் சாவிற்கு பிறகு, சுமார் 22 ஆண்டுகள், பிரன்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது. அதன் பின்னர், சார்லஸ் பிரன்சு நாட்டின் மகுடம் சூடினார். அரசர் சார்லஸ், ஒரு விசாரணை குழு வைத்து, ஜோன் நிரபராதி என தீர்ப்பு வழங்கினார். ஜோனுக்கு புனித பட்டம் மே 16, 1920ல் வழங்கப்பட்டது. + + + + + + + +பெருங்கதை + +குணாட்டியர் என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட "பிரகத்கதா" என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் கொங்குவேளிர் என்பவராவார். இவர் ஒரு சமணர். கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான உதயணன் என்பவனின் கதையே இது. + +உதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, "சரபம்" என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் துறவு பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக்காப்ப���யம். + +இதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ‌ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது. + +அகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன. +பெருங்கதைப் பெயரடைவு + + + + + +ஈசாப் + +ஈசாப் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். கி. மு. 600 அளவில் வாழ்ந்தார். இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. + + + + + +பேடன் பவல் + +ராபர்ட் பேடன் பவல் பிரபு ("Robert Baden-Powell") (பெப்ரவரி 22, 1857 - ஜனவரி 8, 1941) சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். + +ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது. + +புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் காலமானார். + +"இளைஞர்களுக்கான சாரணியம்" ("Scouting for Boys") என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான "எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங்" ("Aids to Scouting") வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது. + + + + + +லூயி பிரெயில் + +லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர். + +லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது. + +இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. + + + + +அகதா கிறிஸ்டி + +அகதா கிறிஸ்டி ("Agatha Christie", செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார். + +இவரது மேடை நாடகமான "த மௌஸ்ட்றப்" (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது. + +ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை. + + + + + +கன்பூசியஸ் + +கான்பூசியஸ் ((, or ), நேரடி அர்த்தமாக "" காங் குரு"",செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479) ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்��னைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது. + +அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட() பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் () என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ். +சீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: "பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர். +ஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது. ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார். இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல், பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ என்ற மகனும் பிறந்தான். + +இவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் என அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. +கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது. + +இவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று. + +廄焚。子退朝,曰:“傷人乎?” 不問馬。 + +ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏஎதேனும் காயம் ஏற்பட்டதா? அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார். + +己所不欲,勿施於人。 + +உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம். + +கன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர். + +இவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான்("Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்." + +இச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது நல்லது, எது கெட்ட��ு, கல்வியின் முக்கியத்துவம், கடவுள் வழிபாடு, சட்டம், அரசியல், ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார். இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார். ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3௦௦௦ சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார். ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர். அது மக்களுக்குச் செல்லவில்லை. இதனால் கன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன: +இவரின் ஐம்பத்தோராம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். பின் அரசனின் கெட்ட பழக்கம் காரணமாக 13 வருடங்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார். 3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள். + +கி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: "நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. +1. நல்ல பண்புகள். +2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள் +3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள் +4. மென்மையான குணங்கள் எவை? +5. கெட்ட குணங்கள் +6. படிப்பு +7. தலைவர் +8. வெறும் சில + + + + +டானியல் டீஃபோ + +டானியல் டீஃபோ (Daniel Defoe, 1660-1731) ஆங்கில எழுத்தாளர். இவர் எழுதிய 'ராபின்சன் குரூசோ' உலகப் புகழ்பெற்ற நாவலாகும். இது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + + + + + +சார்லஸ் டிக்கின்ஸ் + +சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் ("Charles Dickens", 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது "டேவிட் காப்பர்ஃபீல்டு", "ஆலிவர் டுவிஸ்ட்" போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை. + +திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர். + +டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது. + +ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர் + +சார்லஸ் ஜான் ஹூஃபாம் டிக்கின்ஸ், பிப்ரவரி 7, 1812 அன்று, 1 மைல் எண்ட் டெரேஸ் (இப்போது 393 வணிகச் சாலை), போர்ட்ஸியா தீவில் (போர்ட்ஸ்மவுத்), ஜான் டிக்கன்ஸ் (1785-1851) மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் (née பாரோ, 1789-1863) ஆகியயோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக இருந்தார் மற்றும் தற்காலிகமாக அந்த மாவட்டத்தில் இருந்தார். சார்லஸ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட அவரது கடற்படை தலைவர் அவர்களைக் கிறிஸ்டோபர் ஹூஃபாம் கேட்டுக் கொண்டார். கடற்படை தலைவர் பன்முகம் கொண்டவராக மேலாளராகவும் மற்றும் ஒரு நிறுவனத் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஹூஃபாம் பவுல் டொம்பாய்க்கு உத்வேகம் அளித்தாக கருதப்படுகிறது, இவர் டிக்கின்ஸின் பெயர்பெற்ற டொம்பாபே அண்ட் சன் (1848) இல் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர். + +1815 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜான் டிக்கின்ஸ் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், மேலும் அவரது குடும்பம் நோட்ஃபோக் தெரு, பிட்ஸ்ரோவியாவிற்கு மாற்றப்பட்டது. சார்லஸ்க்கு நான்கு வயது இருந்தபோது, அவரது குடும்பம் ஷெர்னெஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து சாத்தம், கென்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். சார்லஸ் அங்கு 11 வயது வரை கழித்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையானது "மிகவும் சிறியதாகவும், எளிமையானதாகவும், குறிப்பாக ஒரு விசயத்தை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் பையனாக" இருந்திருக்கிறார். + +சார்லஸ் வெளிப்புறங்களிலும் தனது நேரத்தை செலவழித்தார் ஆனாலும் உற்சாகத்துடன் வாசித்தார், குறிப்பாக போக்கிரிகளின் துணிகர செயல்கள் அடங்கிய நாவல்களான டோபியாஸ் ஸ்மோல்ட் மற்றும் ஹென்றி ஃபீல்டிங், ராபின்சன் க்ரூஸோ மற்றும் கில் பிளஸ் ஆகியோரின் நாவல்களை வாசித்தார். அரேபிய நைட்ஸ் மற்றும் எலிசபெத் இன்ச்பால்ட்ஸின் சேகரிக்கப்பட்ட பெர்சஸ் ஆகியவற்றை அவர் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தார். அவர் குழந்தை பருவத்தின் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டார், மக்களிடமும் சம்பவங்களிடமிருந்தும் ஒரு சிறந்த நினைவூட்டல் அவர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தினார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணிபுரிந்த ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட கல்வியும், பிறகு வயதான பெண் நடத்திய பள்ளியில் பின்னர் சாத்தம்மில் வில்லியம் கில்ஸ் நடத்திய ஒரு பள்ளியில் பயின்றார். + +1832 ஆம் ஆண்டில், 20 வயதில், டிக்கின்ஸ் ஆற்றல் மிக்கவராகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார். அவர் பலகுரல் வித்தைகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழிந்தார், அவர் தான் எதிர்காலத்தில் எ��்படி வரவேண்டும் என்ற் ஒரு தெளிவான, குறிப்பிட்ட உணர்வைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவருக்கு புகழ் வேண்டுமென்றும் அறிந்திருந்தார். அவரது ஆர்வம் நாடகத்துறைக்குள் அவரை இழுத்தது- அவர் கேரிக் நாடகக் குழுவில் ஒரு ஆரம்ப உறுப்பினராக ஆனார் - அவர் கோவென்ட் கார்டனில் ஒரு நடிப்புத் தேர்வுக்கு சென்றார், மேலாளர் ஜார்ஜ் பார்ட்லி மற்றும் நடிகர் சார்லஸ் கெம்பல் ஆகியோர் அவரது நடிப்பை பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது. இந்தத் தேர்விற்காக டிக்கின்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லஸ் மேத்யூஸைப் கவனித்து பின்பற்ற முடிவு செய்திருந்தார், ஆனால் இறுதியில் அவர் உடல் நல்க்குறைவின் காரணத்தால் இந்தத் தேர்வை தவறவிட்டார். அவருக்கு வேறொரு சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் இந்த வாய்ப்புக்கு முன்னால், எழுத்தாளர் என்று அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் மாதாந்திர பத்திரிகைக்கு அவரது முதல் கதை "(A Dinner at Poplar Walk) ஒரு பிரபல நடைபாதை கடையில் இரவு விருந்து" சமர்ப்பித்திருந்தார். அவரது தாயாரின் சகோதரர் வில்லியம் பாரோ, அவரை பாராளுமன்றத்தின் கண்ணாடி (The Mirror of Parliament) இதழில் பணியமர்த்தினார், 1832 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஃபர்னைவல்ஸ் இன்னில் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசியல் பத்திரிகையாளராக பணிபுரிந்தார், பாராளுமன்ற விவாதங்கள் குறித்த செய்திகளை அளித்தார், மற்றும் அவர் மார்னிங் க்ரோனிக்காக தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பிரிட்டன் முழுவதும் பயணித்தார். அவருடைய பத்திரிகை அனுபவங்களை, பருவ இதழ்களில் ஓவியங்கள் வடிவில், 1836 இல் (Boz) போஸ் என்ற புனைப்பெயரில் அவரது முதல் தொகுப்பை உருவாக்கி வெளியிடப்பட்டது: போஸ்- ஒரு குடும்பப் புனைப்பெயராக இருந்ததால், அவர் சில ஆண்டுகளுக்கு அதே பெயரை தனது புனைப்பெயராக பயன்படுத்தினார். டிக்கின்ஸ், "மோசே" என்ற புனைப்பெயரிடமிருந்து வெளிப்படையாகத் போஸ் பெயரை தத்தெடுத்தார், இது அவருடைய இளைய சகோதரர் ஆகஸ்டஸ் டிக்கன்ஸ் கொடுத்தது, இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் இன் தி விகார் ஆஃப் வேக்ஃபீல்ட் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். தலை ஓசையிலிருந்து உச்சரிக்கும்போது, "மோசே" போஸ் என அழைக்கப்படும் "போஸ்" ஆனார். அவரது இலக்கிய வாழ்க்கை முழுவதும் பத்திரிகைகளுக்காக அவர் பங்களித்து இருந்தார். சனவரி 1835 இல் மார்னிங் குரோனிக்கல் இதழில் இசை விமர்சகர் ஜார்ஜ் ஹோகார்ட் தலைமையின் கீழ் ஒரு மாலை பதிப்பை வெளியிட்டது. தெரு ஓவியங்கள் வரைவதில் பங்களிப்பதற்க்காக டிக்கின்ஸ்சை ஹோகார்ட் அழைத்தார் மற்றும் டிக்கின்ஸ் தனது புல்ஹாம் வீட்டிற்கு ஒரு வழக்கமான பார்வையாளராக ஆனார். டிக்கின்ஸ்சின் தனது கதாநாயகனான வால்டர் ஸ்காட்டுடன் ஹோகார்ட் கொண்ட நட்பால் உற்சாகமடைந்தார், மேலும் ஹோகார்தின் மூன்று மகள்கள் - ஜோர்ஜினா, மேரி, மற்றும் பத்தொன்பது வயது கேத்தரின் ஆகியோரின் நட்பையும் பெற்று மகிழ்ந்தார். + +ஒரு இளைஞனாக டிக்கின்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் சில அம்சங்களுக்கு ஒரு விரக்தியை வெளிப்படுத்தினார். 1836 ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தலைவர்கள் என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுகளை தடை செய்வதற்கான ஒரு திட்டத்தை எதிர்த்து, மகிழ்ச்சிக்கான மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடினார். + +"உங்கள் தேவாலயங்களை பாருங்கள்- குறைந்த சபை மற்றும் குறைவான வருகை. மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள். மக்கள் தேவாலயங்களுக்கு வெளியே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மேலும் தேவாலயங்களை தவிர்க்கவும் செய்கிறார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை தெருக்களுக்கு வாருங்கள், மேலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல்படும் கடுமையான மனச்சோர்வைக் கவனியுங்கள்" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தார். + +1870 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி, எட்வின் ட்ரோட் மீதான ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பு ஏற்பட்டது. அவர் ஒருபோதும் சுயஉணர்வைப் பெறவில்லை, அடுத்த நாள் அவர் உயிர் பிரிந்தது, அவர் மரணம் மடைந்தார். டிக்கின்ஸ் உண்மையிலேயே பெக்காமில் இருப்பதாக சுயசரிதை எழுத்தாளரான கிளாரி டோமலின் பரிந்துரைத்தார். டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மனைவி எல்லென் டெர்னானும�� அவளது வேலைக்காரிகளும் அவரை காட்ஸ் ஹில்லுக்கு அழைத்துச் சென்றனர், அதனால் அவர்களது உறவு பற்றிய உண்மையை பொது மக்களுக்கு தெரியாது. ரோச்செஸ்டர் தேவாலயத்தில் "மலிவான, அசையாத, தனிப்பட்ட முறையில்" இரகசியமாக புதைக்கப்பட வேண்டும் என்ற டிக்கின்ஸ் விருப்பதிற்கு மாறாக, அவரை வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் பொயட்ஸ் கார்னரில் அடக்கம் செயதனர். இறுதி சடங்கில் அச்சிடப்பட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு வாசகம் உள்ளது: "சார்லஸ் டிக்கின்ஸ் நினைவாக, தனது 58 வது அகவையில் 9 சூன் 1870 அன்று, ராச்செஸ்டர், கென்ட் அருகிலுள்ள தனது இல்லத்தில் டிக்கின்ஸ் (இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்) இறந்தார். அவர் ஏழைகள், துன்பங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு அனுதாபியாக இருந்தார் மற்றும் அவருடைய இறப்பு மூலம், இங்கிலாந்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் உலகில் இழக்கப்படுகிறார்." அவருடைய கடைசிச் சொற்கள்: "நிலத்தின் மேல்", அவரது அண்ணியார் ஜோர்ஜினாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. + +ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 1870, டிக்கின்ஸ் நல்லடக்கம் முடிந்த ஐந்து நாட்களுக்கு பின்னர், டீன் ஆர்தர் பென்ரின் ஸ்டான்லி ஒரு நினைவறிக்கையை வெளியிட்டார். "இருண்ட காட்சிகளை கையாள்வதிலும் மற்றும் மிகவும் இழிந்த பாத்திரங்களை கையாள்வதிலும், மேதையாக மற்றும் தூய்மையாக இருக்க முடியும் என்பதற்கு டிக்கின்ஸ் ஒரு உதாரணமாக இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை என்று துக்க நாள் நினைவு கூறப்பட்டது. + +டி. கொராகேசன் போய்ல், ஃபியோடர் டொஸ்தோவ்ஸ்கி, ஜார்ஜ் கிஸ்ஸிங், தாமஸ் ஹார்டி, ஜான் இர்விங், எட்கார் அலன் போ, டாம் வோல்ஃப், ஜி. கே. செஸ்டர்ட்டன், ஜார்ஜ் ஆர்வெல், ரே பிராட்பரி + + + + +வால்ட் டிஸ்னி + +வால்ட் டிஸ்னி (; டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். +வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். + +இருபதாவது நூற்றாண்டின் க���ளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைவுப்படம் அமைப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மவுஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் ஐம்பத்து ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றவர். ஏழு எம்மி விருதுகள் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்) மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி (ஜப்பான்) மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா (ஹாங்காங்) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார். + +புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார். + +வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி சிக்காகோவில் உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.. 1906 ஆம் ஆண்டு , வால்ட் டிஸ்னிக்கு நான்கு வயதாக இருந்தபோது அவர்களுடைய குடும்பம் மிசோரிக்கு சென்றது. ஏனெனில் அங்குதான் அவர்களுடைய மாமா நிலம் வாங்கியிருந்தார். அங்கு அவருடைய படம் வரையும் திறனை வளர்த்தார். இவர் முதன் முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார். +டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரேயான்ஸ் கொண்டு தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டார். 1909 ஆம் ஆண்டில் இவரும் , அவருடைய சகோதரியும் மர்சலின் என்ற பள்ளியில் படித்தனர். +1911 ஆம் ஆண்டில் கன்சாஸ் நகரத்திற்கு சென்றனர். பின்பு கிரென்டன் இலக்கண பள்ளியில் வால்ட்டர் ஃபெஃப்பியர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னுடைய வீட்டில் இருந்த நேரத்தை விட இவருடன் இருந்த நேரம் தான் அதிகம் செலவ���ட்டார். வால்ட் டிஸ்னி தினமும் 4.30 மணிக்கு எழுந்து தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அதனால் பள்ளிகளில் போதிய நேரம் செலவிட இயலாத காரணத்தினால் மோசமான தரங்களையே (grades) பெற்றார். ஆனாலும் தன்னுடைய தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்வதனை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும் சனிக்கிழமை தோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார். +1917 ஆம் ஆண்டில் எலியாஸ் ஓ ஷெல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். எனவே அவர்கள் மறுபடியும் தங்களுடைய இடங்களுக்கு சென்றனர். வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார். + +1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அவர்கள் தொடங்கிய தொழிலில் வாடிக்கையாளர்களை கவர இயலவில்லை. எனவே அதனை தற்காலிகமாக விட்டுவிடலாம் என முடிவு செய்து விளம்பர நிறுவனம் ஒன்றினை தொடங்கினர். அதனை ஏ.வி.குகர் எனவரின் தலைமையில் மேற்கொண்டனர். பின் அவர்களுடன் ஐவெர்கஸ் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது. மேலும் அவர் மட் அண்ட் ஜெஃப் ("Mutt and Jeff") மற்றும் கோகோ தெ க்ளொவ்ன் ("Koko the Clown".) போன்ற அசைவுப்படங்களை வரையத் தொடங்கினார். கல அசைவூட்டம் என்பது இன்னும் சிறப்பான முறையில் இருந்தது. ஆனால் குகரால் இந்த முறையினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் டிஸ்னி தன்னுடைய சக பணியாளருடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றினைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெரும் பகுதி நியூமேன் திரையரங்கிற்கு செய்து தந்தனர். +எனவே அந்த வெற்றியின் காரணமாக லாஃப் ஓ கிராம் (Laugh-O-Gram Studio) என்ற ஓவிய அறையினை வாங்கினார். அந்த நிறுவனத்தில் பல அசைவுப்பட நிபுணர்களை வேலைக்கு அமர்த்தினார். அதில் ருடால்ஃப் மற்றும் ஐவெர்க்ஸ் போன்ற நிபுணர்களும் அடங்குவர். ஆனால் இந்த நிறுவனமும் போதிய அளவு லாபத்தினை ஈட்டவில்லை. என��ே டிஸ்னி அலைஸின் அற்புத உலகம் ("Alice's Wonderland"‍) என்பதனை நிறுவினார். அந்நிறுவனமானது அலைஸின் சாகசத்தின் அற்புத உலகம் ("Alice's Adventures in Wonderland"‍) என்பதனை அடிப்ப்டையாகக் கொண்டது ஆகும். அவற்றில் விர்ஜீனியா, டேவிஸ் போன்ற கதா பாத்திரங்களை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். 1923 ல் டிஸ்னி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் அப்பொழுது அமெரிக்காவில் கேலிச்சித்திரத்திற்கான நிறுவனங்கள் அங்கு அதிகமாக இருந்தன. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தினை தேர்வு செய்தார். ஏனெனில் அவருடைய தம்பிக்கு காசநோய்க்கான சிகிச்சையினை அங்குதான் எடுத்துக் கொண்டிருந்தனர். +அதன் பிறகு அவரும் அவருடைய தம்பியும் இணைந்து தெ வால்ட் டிஸ்னி என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே அவர்கள் படங்களைத் தயாரித்தனர். + +ஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். ஆனால் அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய தெளிவான வரலாறு தெரியவில்லை. அதற்கு முதலில் மோர்ட்டிமர் எலி (Mortimer Mouse) +அல்லது மிக்கி மவுஸ் என்றும் பெயர் வைக்க நினைத்தனர். ஐவெர்க்ஸ் இதற்கான உருவத்தினை சற்று மேம்படுத்தினார். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலிவடிவம் கொடுத்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார், யுபி (Ub) மிக்கிகு உருவம் கொடுத்தார் ஆனால் டிஸ்னி இதற்கு உயிர் கொடுத்தார். + +மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது. + + + +[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்] + + + +ஹென்றி டியூனாண்ட் + +ஜீன் ஹென்றி டூனாந் (Jean Henri Dunant, மே 8,1828- அக்டோபர் 30, 1910) செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து பெற்றார். +ஜெனிவாவில் பிறந்தவரான ஹென்றி டுனாந் வேலை காரணமாக 1859 இல் இத்தாலி நாட்டில் உள்ள சால்ஃபரீனோ என்ற நகருக்குச் சென்றார���. அங்கு அப்போதுதான் போர் நடந்து முடிந்திருந்தது. போரின் காரணமாக ஏறக்குறைய நாற்பதாயிரம் பேருக்கும் மேல் மிக மோசமாக காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய யாரும் இல்லாமலும், உணவு அளிக்க யாருமில்லாமலும் அவதிப்பட்டனர். இதைப்பார்த்து பார்த்து மனம் வருந்திய ஹென்றி, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் திரட்டி, காயமுற்ற போர்வீரர்களுக்கு முதலுதவி செய்தார். இந்தப் பணியை மூன்று நாட்கள் சோர்வின்றி செய்தார். + +ஹென்றி தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, போரும் அதனால் காயமுற்றவர்களின் துண்பமும் இவர் மனதை விட்டு நீங்கவில்லை. அதன் பாதிப்பின் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார். இந்தூலில் ‘போரில் காயமுறுவர்களுக்கு உதவுவதற்காக எந்தச் சார்பும் இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். + +புத்தகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு ஹென்றியின் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜெனீவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர் என்பவருக்கு ஹென்றியின் இந்தக் கருத்துப் பிடித்துப்போனது. போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார். இந்தப் பரிந்துரைகள் 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம். 1864-ம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன. அடுத்து வந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன. +ஜான் ஹென்றிக்கு செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தகாரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட ஆரம்பித்த முதல் ஆண்டான 1901-லேயே அமைதிக்கான நோபல் பரிசை முதன்முதலில் பெற்றார். ஹென்றியின் பிறந்தநாளான மே எட்டாம் நாள், ஒவ்வொரு ஆண்டும் செஞ்சிலுவை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. + + + + +அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் + +அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈ���ல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை. + + + + +இயான் பிளெமிங் + +இயான் பிளெமிங் (மே 28, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. + + + + +கரிபால்டி + +கரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படை புகழ் பெற்றது. + + + + + + +ஓ ஹென்றி + +ஓ ஹென்றி (செப்டம்பர் 11, 1862 - ஜூன் 5 , 1910) ஆங்கில எழுத்தாளர். இவரது உண்மையான பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பதாகும். சிறு திருட்டுக் குற்றத்துக்காக மூன்றாண்டு சிறையிலிருந்தார். அக்காலத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அதுவே பின்னர் அவரது வாழ்க்கைத் தொழிலாயிற்று. + +போர்ட்டர் 1862 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் டாக்டர் அல்கர்மன் சிட்னி போர்ட்டர் ஆவார். தாயார் பெயர் மேரி ஜேன் வெர்ஜீனியா சுவைன் போர்ட்டர் என்பதாகும். வில்லியத்துக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவனது தாயார் காசநோய் ஏற்பட்டு இறந்தார். இதைத் தொடர்ந்து வில்லியமும் அவனது தந்தையும் அவனது தந்தைவழிப் பாட்டி வீட்டுக்கு இடம் மாறினர். + +வில்லியம் சிறுவனாக இருந்தபோது நல்ல வாசிப்புப் பழக்கம் உள்ளவனாக இருந்தான். செந்நெறி இலக்கியங்கள் முதல் மலிவான புதினங்கள் வரை கிடைத்தவற்றை எல்லாம் வாசித்தான். "ஆயிரத்தொரு இரவுகள்" கதை அவனுக்கு மிக விருப்பமான கதையாக இருந்தது. + +1876 ஆம் ஆண்டில் போர்ட்டர் தனது தொடக்கக் கல்வியை முடித்துக் கொண்டு, லிண்ட்சே தெரு உயர் பாடசாலையில் (Lindsey Street High School) சேர்ந்தான். 1881 ஆம் ஆண்டில் அவன் தனது உறவினர் ஒருவரின் மருந்துக் கடையில் கணக்கு எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்தான். 19 ஆவது வயதில் மருந்தாளராக அனுமதிப் ப���்திரம் கிடைத்தது. + +தனக்கு இருந்த தொடர்ச்சியான இருமல் குணமாவதற்கு, இடமாற்றம் உதவும் என்ற நம்பிக்கையில், போர்ட்டர், 1882 ஆம் ஆண்டில் டாக்டர் ஜேம்ஸ் கே. ஹால் என்பவரோடு டெக்சாசுக்குப் பயணமானான். அவன் அங்கே ஜேம்ஸ் ஹாலின் மகனான ரிச்சார்ட் ஹாலுக்குச் சொந்தமான செம்மறி ஆட்டுப் பண்ணையில் தங்கி ஆடு மேய்த்தல், பண்ணையில் உதவி செய்தல், சமைத்தல், பிள்ளைகளைக் கவனித்தல் முதலிய பல வேலைகளையும் செய்தான். பண்ணையில் இருக்கும்போது அங்கிருந்த வேலையாட்கள் மூலம் ஓரளவு எசுப்பானிய மொழியையும், ஜெர்மானிய மொழியையும் கற்றுக்கொண்டான். இலக்கியங்களைப் படிப்பதற்கும் அவனுக்கு அங்கே வாய்ப்புக் கிடைத்தது. + +போர்ட்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. 1884 ஆம் ஆண்டில் வில்லியம், ரிச்சார்டுடன் ஆஸ்டினுக்குப் பயணமானான். அங்கே இருக்க விரும்பிய வில்லியம், ரிச்சார்டின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினான். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அவன், மருந்தாளன், படவரைவாளன், வங்கிக் காசாளன், பத்திரிகையாளன் எனப் பல தொழில்களில் ஈடுபட்டான். வில்லியம் இசையிலும் வல்லவனாக இருந்தான். கிட்டாரும், மெண்டலினும் வாசிக்க அவனுக்குத் தெரிந்திருந்தது. எனவே ஆஸ்டினில் இசை மற்றும் நாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றினான். +அங்கே வசதி படைத்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஆதல் எஸ்தெஸ் (Athol Estes) என்பவளைக் காதலித்தான். பெண்ணின் தாயார் இதனை விரும்பாததால், தாங்களாகவே இருவரும், 1887 ஆம் ஆண்டில் மணம் செய்து கொண்டனர். இருவரும் தொடர்ந்தும் இசை, நாடகத் துறையில் ஆர்வம் காட்டி வந்தனர். இவர்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தை உடனேயே இறந்துவிட்டது. பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. + +போர்ட்டரின் நண்பரான ரிச்சார்ட் ஹாலுக்கு டெக்சாசின் நில ஆணையாளராகப் பதவி கிடைத்தது. அவர் போர்ட்டருக்குத் தனது அலுவலகத்தில் படவரைவாளராக வேலை கொடுத்தார். அந்த வருமானம் அவனுக்குப் போதுமானதாக இருந்தும், தொடர்ந்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் அவன் எழுதிவந்தான். + +போர்ட்டர் எழுதிய கதைகளின் கருக்களும், கதை மாந்தர்களும் நில அலுவலகத்திலிருந்தே உருவாயினர். இந்த அலுவலகத்தில் போர்ட்டருக்குக் கிடைத்த வேலை ஒரு அரசியல் நியமனம் ஆகும். இதனால், ரிச்சார்ட் 1890 ஆம் ஆண்டின் ஆ���ுனர் தேர்தலில் நின்று தோற்றபோது, போர்ட்டரும் தனது வேலையிலிருந்து விலகிக் கொண்டார். + + + + +ஹென்ரிக் இப்சன் + +ஹென்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது. + + + + +மைக்கல் ஜாக்சன் + +மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ("Michael Joseph Jackson", ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். "கிங் அஃப் பாப்" (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார். + +பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்தார். + +1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன. + +பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார். + +மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.இவர் Illimination group என்னும் குடும்பத்திலிருந்து பிறந்தவர்.இந்த குடும்பம் 1567லில் இருந்தே மிகவும் வசதியான குடும்பம் + +1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர். + +"திரில்லர்" என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும். + +நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு அளித்ததில்லை. + +1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது. + +2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார். ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. + + + + + +சாமுவேல் ஜோன்சன் + +சாமுவேல் ஜோன்சன் ("Samuel Johnson",  – 13 திசம்பர் 1784) என்பவர் ஆங்கிலேய இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்��ை வரலாற்றாளரும், இதழாசிரியரும், அகராதியியலாளரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது. + +இங்கிலாந்தின் லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்த ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆனாலும், பண உதவி கிடைக்காமையால், ஓராண்டில் படிப்பை இடைநிறுத்தி, பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றினார். அங்கு அவர் "Gentleman's Magazine" என்ற இதழை வெளியிட்டார். 1755 ஆம் ஆண்டில் ஜோன்சனின் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இவ்வகராதி பெரும் வரவேற்பைப் பெற்றது. 150 ஆண்டுகளின் பின்னர் "ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி" வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது. + + + + + +காளிதாசன் + +காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை. ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், "மாளவிகாக்கினிமித்திரம்", விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. + +காளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன. + + +காளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர். + +மேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உ���்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன. + +காசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான "லட்சுமி தார் கல்லா" ("1891 - 1953") என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது. + +நாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது. + +மகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார். +கானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான். + +காலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோபங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க சபிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும். + +அபிக்ஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் (அபிக்ஞ்யானம்) இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது. + +இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது. + +குபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள "தூது" வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார். + +சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம். + +புரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான். + +மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்ப���ண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகாக்கினிமித்திரம் ஆகும். + + + + + + + +பெர்டினென்ட் மகலன் + +பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு: Fernão de Magalhães, ; எசுப்பானியம் Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார். +போர்ச்சுக்கல்லின் வடக்குப் பகுதியிலுள்ள பொன்ரே டே பாரா எனும் பகுதியில் மகலன் பிறந்தார். இவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போதே 1492 இல் அவனது அப்பா இரண்டாம் ஜோன் மன்னனின் அரசிக்கு எடுபிடி வேலை செய்ய அரண்மனைக்கு அனுப்பினார். இருப்பினும் அவனது படிப்பு தடைப்படவில்லை. அவனது படிப்புச் செலவினை இரண்டாம் ஜோன் மன்னன் ஏற்றுக் கொண்டார். மகலனின் அண்ணாவின் பெயர் டியோகோ. அவனும் இரண்டாம் ஜோன் மன்னனின் ராணியான லியொனாராவிடம் பணி செய்து கொண்டிருந்தான். எதையும் ஆர்வத்துடன் செய்யும் மகலனை ஜோன்னுக்குப் பிடித்திருந்தது. அதனால் அவர் மகலனுக்கு இசை, நடனம், வேட்டையாடுதல் ,குதிரையேற்றம், குதிரைச்சண்டை, வாள்பயிற்சி, வானவியல், வரைபடம் தயாரித்தல் ஆகியவற்றையும் கற்றுக்கொடுத்தார். மகலன் படித்துக்கொண்டிருக்கும்போதே கொலம்பஸ் அதாவது 1492 ஆக்டோபர் 12 அன்று அமெரிக்காவில் கால்பதித்தார். இதனைக் கேட்ட மகலன் தானும் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வங்காட்டினான். மகலனின் கடல் ஆர்வத்தைத் தூண்டும் முன்னோடி நபராக வாஸ்கோ ட காமா விளங்கினார். + +குடியேற்ற வாதம் எனப்படுவது, மேற்குலக நாடுகள் பூமியிலுள்ள பல்வேறு நாடுகளைக் கைப்பற்றி உரிமைக் கொண்டாடுவதும், அந் நாடுகளைத் தம் நாட்டின் ஒரு பகுதியாக எண்ணி தம் குடிமக்களை ஆங்கே குடியமர்த்தி வாழச் செய்வதும், நிர்வகிக்க முனைவதும், தம்முடைய பண்பாடு, சமூக உணர்வு ஆகியவற்றை வேறூன்றச் செய்து, சமூக,அரசியல்,பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் தம் இயல்புகளைப் புகுத்துவதும், கைப்பற்றப்பட்ட நாடுகளின் தனித்தன்மைகளைச் சிதைத்து மாற்றியமைப்பதும் ஆகும். + +மேற்கத்திய வாதத்தின் (Westernization) தலையாயக் குறிக்கோளாக விளங்கும் குடியேற்றம் உருவாவதற்கு மூன்று அடிப்படைக் காரணிகள் உள்ளன.அவையாவன: + +மேற்கத்திய நாடுகளிடையே தோன்றிய கல்வி மறுமலர்ச்சியினால் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளும், கலை, இலக்கியப் படைப்புகளும் உருவாகின. புதிய சிந்தனைகள் பல மக்களிடையே விதைக்கப்பட்டன. பழைமை வாதங்கள் புறந்தள்ளப்பட்டன. புதுமைகள் புகுத்தப்பட்டன. இது அனைத்திலும் நிகழ்ந்தது. மகலன் காலத்தில், பூமி தட்டையானது என்றும், ஓரிடத்திலிருந்து கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டு சுற்றிவர இயலாது என்றும் எடுத்துரைக்கப்பட்டு வந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் புவி கோள வடிவமுடையது என்னும் கருத்துப் பரப்பப்பட்டது. கி.பி.1492 இல் முதலாவது புவிக்கோளம் அமைக்கப்பட்டது. +இக் காலக்கட்டத்தில் தோன்றிய பூமி பற்றிய புதிய கருத்துகளும், புதிய கடல்வழிப் பாதைகளின் தேவைகளும், புதிய குடியேற்ற நாடுகளின் மீதான வேட்கைகளும் கடலோடிகளிடத்தில் பெரும் விருப்பத்தை உண்டுபண்ணியிருந்தன. தவிர, சில முன்னோடிக் கடலோடிகளின் உந்துதல்களும் கடல் பயணத்தின் மீதான உள்ளார்ந்த விருப்பங்களும் மகலனின் கடல்வழிப் பயணத்திற்கு தூண்டுகோல்களாக அமைந்தன. + +1505 இல் வாஸ்கோடகாமா கீழைத்தேசம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டார். இதில் இருபத்தொரு பயணக்கப்பல்கள் பயணித்தன. ஒரு கப்பலின் தளபதியாக மகலனும் திகழ்ந்தார். இதுவே மகலனின் முதல் கடல் பயணம் ஆகும். இதன்போது மொரோக்கோவின் பழங்குடியினரான மூர்ஸ் இன மக்களுடன் போர்புரிந்தபோது மகலனின் இடதுகளில் படுகாயம் ஏற்பட்டது. மகலனின் முதல் வரைபடம் போர்ச்சுக்கல்லில் இருந்து ஸ்பைஸ் தீவுகளுக்குச் செல்லும் வழி. மகலனை மன்னர் மானுவேல் அவமானப்படுத்தியாதல் மனமுடைந்து ஸ்பானியாவில் இருந்து வெளியேறி போல்டோர்க்குச் சென்றார். இவரை ஸ்பெயினுக்குச் செல்லும்படி வானவியல் நிபுணரான டை டி பிலேரியா, கப்பலோட்டி ஜான், அரசசவை அதிகாரியான பார்போசா கூறினர். இவர்கள் கூறியது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தார் மகலன். இந்நிலையில் இந்தியாவின் மேற்குத திசையில் குறுகிய கடல்வழிப் பாதையைக் கண்டுபிடிப்பது ஸ்பெயின் அரசனின் விருப்பமாக இருந்தது. பின் ஸ்பெயின் நாட்டு மன்னர் மகலனிடம் ஸ்பைஸ் தீவுக்கான வழி உள்ளது எனத் தெரிந்ததும் ஸ்பெயின்னுக்குக் கூப்பிட்டார். மகலன் மன்னர் மானுவேலைப் பழிவாங்கும் நோக்கில் 1512 ஆக்டோபர் 12 அன்று போர்ச்சுக்கல்லை விட்டு வெளியேறினார். மகலன் 1519 செப்டெம்பர் 21 அன்று ஹான்செப்சன், சாண்டியாகோ, சான் அந்தோனியா, டிரினியாட், விக்டோரியா எனும் ஐந்து கப்பல்கள் உட்பட 241 மாலுமிகளுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தேவையான உணவுகளும், ஆயுதங்களும், விற்கும் பண்டங்களும் ஏற்றிக் கொண்டு செவல்லே துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். + +5 கப்பல்களும் அவற்றின் தளபதிகளும் + +ஸ்பெயின் மன்னனின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மகலன் சிறிய பாய்மரக் கப்பல்களில் தம் கடல்வழிப் பயணத்தைத் தொடங்கினார். இப்பாய்மரக் கப்பல்கள் காற்றின் திசை வேகத்திற்கேற்ப பயணிப்பவையாகும். மகலன் தன் கடற்பயணக் குழுவினருடன் இரண்டு மாதங்களாகப் பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார். அதன்பின், இக்குழு தென் அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள கரையினை வந்தடைந்தது. இப் பயணத்திற்கிடையில், மகலன் குழுவினர் பயணித்துவந்த ஐந்து பாய்மரக் கப்பல்களில் ஒன்று தென் அமெரிக்கக் கரையில் காணப்பட்ட ஒரு பெரும்பாறையில் மோதிச் சேதமுற்றது. அதன்பின்னர், மகலன் பெயர்பெற்ற மகலன் தொடுகடல் (Magellan's Strait) வழியாக இவருடைய கப்பல்கள் பசிபிக் பெருங்கடலைக் கடக்கத் தொடங்கின. + +1519 டிசம்பர் 13 அன்று, மகலனின் விசுவாசமான வேலைக்காரனான ஹென்றி ஒரு தீவை மகலனிடம் காட்டினான். அதற்கு, ஜான் அதுதான் டியோ டி ஜெனரோ என்றார். இதன் அடிப்படையில் மகலனும் மகலனின் மற்றக் கப்பல்களும் கால் பதித்த முதல் இடம் டியோ டி ஜெனரோ. இத்தீவின் பழங்குடி மக்களான கொரானி மகலனையும் மற்றவர்களையும் சுற்றி நின்று கடவுளாக வழிபடத்தொடங்கினர். மகலனின் குழுவில் அத்தீவுக்கு முதலில் வந்தது ஜான் மட்டுமே. 1519 டிசம்பர் 25 அதாவது கிறிஸ்மஸ் அன்று இத்தீவை விட்டு வெளியேறினர். மகலனின் கப்பல்கள் சராசரியாகத் தினமும் 16 கி.மீ. வீதம் பயணித்தன. 1520 சனவரி 10 அன்று இரண்டாவதாக டியோ டி பிளாட்டா எனும் இடத்தில் நங்கூரம் இட்டனர். மூன்றவதாக 1520 மார்ச்சு இறுதியில் பாட்டகொனியா அதாவது இன்றைய தெற்கு ஆர்ஜென்டினா பகுதியிலுள்ள செயின்ட் ஜுலியன் துறைமுகத்தை அடைந்தனர். ஒருமுறை மகலன் 600 கி.மீ. நீளம் கொண்ட கால்வாயை 1520 நவம்பர் 1 அன்று கடந்து முடித்தார். அது ஆல் செயின்ட்ஸ் டே (ALL SAINTS' DAY) என்றழைக்கப்படும் புனிதர்கள் தினம் ஆகும். அதனால���, மகலன் அக்கால்வாய்க்கு ஆல் செயன்ட்ஸ் டே (ALL SAINTS' CHANNEL) எனப் பெயர் சூட்டினார். பின், அது மகலன் தொடுகடல் ஆனது. 1520 நவம்பர் 28 அன்று மகலனின் மூன்று கப்பல்களும் பசுபிக் பெருங்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மகலன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது. மகலன் நான்காவதாக 1521 சனவரி 25 அன்று செயின்ட் பால் தீவுகளில் இறங்கினான். அதன் இன்றைய பெயர் புகாபுகா ஆகும். இது பசுபிகின் தென்முனையில் உள்ளது. மகலன் ஐந்தாவதாக செப்டம்பர் 06, 1521 அன்று மரியனாத்தீவின் பழங்குடியினரான சமோரா போராடி அத்தீவில் கால் பதித்தனர். மகலன் ஆறாவதாக 1522 மார்ச்சு 16 அன்று கிட்டத்தட்ட 150 பேருடன் பிலிப்பைன்ஸின் ஹோமொன்ஹான் தீவை அடைந்தனர். இதன்மூலம் பிலிப்பைன்ஸில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை மகலனுக்குக் கிடைத்தது. மகலன் 1522 ஏப்ரல் 02 அன்று பிலிப்பைன்ஸின் இன்னொரு தீவான செர்பூவுக்கும் சென்று அதனை ஸ்பெயினின் அதிகாரத்துக்குள் கொண்டுவர நினைத்து கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினார். + +மகலனின் கடல்வழிப் பயணத்தின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளிடையே புதிய கடல்வழிப் பாதைகளும் நாடுகள் கைப்பற்றும் நடவடிக்கைகளும் புதுக் குடியேற்றங்களும் விரைவாக நிகழத் தொடங்கின. காலனித்துவ தத்துவமும் ஆட்சி அதிகார மேலாண்மை நடவடிக்கையும் தீவிரமாகின. இந்த அரிய சாதனையினைப் பெர்டினென்ட் மகலன் நிகழ்த்திட, ஐந்து சிறிய பாய்மரக் கப்பல்கள், இருநூற்று நாற்பத்தொன்று மாலுமிகள், 69,800 கி.மீ. பயணத் தொலைவுகள், மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, தம் உயிரையும் பணயமாக்கிக் கொண்டார். + +மகலன் பிலிப்பைன்ஸின் மக்டன் பகுதியின�� தலைவனான லாபுலாபுவிடம் 6 பேர் கொண்டு போர் செய்யச் சென்றபோது அப்போரில் மகலன் இறந்துவிட்டார். இவர் இறந்தபின் அவரது கூட்டத்தில் ஒருவரான கார்வால்ஹோ என்பவன் அவர்களது கப்பல்களில் ஒன்றான ஹான்செப்சனுக்குத் தீ வைத்தான். மகலனின் விசுவாசியான ஹென்றி புதிதாகத் தலைமைதாங்கிய சிலரைக் கொன்றான். பின் எல்போன்சா என்பவர் தலைமை என்பவர் ஸ்பைஸ் தீவுக்குக் கிளம்பினார்.கடைசிக்கப்பலான விக்டோரியா 6 பேருடன் 1522 மே 06 அன்று ஆபிரிக்காக் கண்டத்தின் தென்முனையிலுள்ள கேப் குட் ஹோப்பையும், யூலை 09 இல் கேப் வேர்டேவையும்,செப்டெம்பர் 06 இல் ஸ்பெயினையும் அடைந்தது. மொத்தப் பயணத்தூரம் 69800 கி.மீ. ஸ்பெயினுக்குத் திரும்பியவர்கள் செபெச்டியன் உட்பட பதினெட்டுப்பேர். மகலனின் கனவு அவரையும் பலிகொடுத்து நிறைவுக்கு வந்தது. + +மானிடர் வாழும் சூரியக் குடும்பம் இருக்கும் பால் வழி பேரடையின் துணைப்பேரடைகளுக்கு சூரியக் குடும்பம் மெகல்லானிய மேகங்கள் என கி. பி. 1800க்கு பிறகு பெயர் வைக்கப்பட்டது. நிலவில் உள்ள இரண்டு முகடுகளுக்கும் செவ்வாய் கோளில் இருக்கும் ஒரு முகடுக்கும் இவரின் பெயரை நினைவுருத்தும் வண்ணம் மகல்கியன்சு என ஒட்டுப்பெயருடன் பெயர் சூட்டப்பட்டன. + + + + + +சேக் முஜிபுர் ரகுமான் + +சேக் முஜிபுர் ரகுமான் (வங்காள மொழி: শেখ মুজিবর রহমান "Shekh Mujibur Rôhman") (மார்ச் 17, 1920 – ஆகஸ்ட் 15, 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய சேக் ஹசீனா 1996–2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார். + +ஷேக் முஜிப்புர் ரஹ்மான் – (Sheik Mujibur Rahman) – மார்ச் 17 +பிரிட்டிஷ் இந்தியாவின் கிழக்கு வங்கப் பகுதியின் ஃபரீத்புர் மாவட்டத்தில் டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தவர் (1920). கோபால்கஞ்ச் அரசுப் பள்ளியிலும் மாத்ரிபூர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். அனைவரிடமும் நன்கு பழகும், விளையாட்டில் விருப்பம் க���ண்ட இளைஞராக இருந்தார். படிப்பில் கெட்டிக்கார மாணவன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ஆசிரியர்களாலும் நண்பர்களாலும் மிகவும் விரும்பப்பட்டார். + +இவர்களுக்கு சொந்தமான கொஞ்சம் நிலம் இருந்தது. தனது பகுதியில் இருந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரிசியை விநியோகம் செய்தார். இது எதிர்காலத் தலைவராக பொறுப்பேற்க இருந்த இவரது தலைமைப்பண்புக்கு அடையாளமான இருந்தது. 1940-ல் அகில இந்திய முஸ்லீம் மாணவர் அமைப்பில் சேர்ந்த பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இஸ்லாமியா கல்லூரியில் (தற்போதைய மவுலானா ஆஜாத் கல்லூரி) சட்டம் பயின்றார். 1943-ல் பெங்காலி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தனி நாட்டுக்காக உழைத்தார். 1946-ல் இஸ்லாமியா கல்லூரி மாணவ யூனியனின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ல் பட்டம் பெற்றார். பிரிவினைக்குப் பிறகு இவர் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானில் இருக்கவே விரும்பினார். கிழக்கு பாகிஸ்தான் டாக்கா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் சேர்ந்தார். அந்தப் பகுதியின் முக்கியமான மாணவர் அரசியல் தலைவராக உயர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பரவலாக நிலவிய வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றிற்கான தீர்வாக சோஷலிஸம் இருக்கும் என்று இவர் உறுதியாக நம்பினார். இவர் தான் ஒரு பெங்காலி என்பதில் ஆழ்ந்த பெருமை கொண்டிருந்தார். + +கிழக்கு பாகிஸ்தானில் பேசப்படும் பெரும்பான்மையானவர்களின் மொழி பெங்காலியாக இருந்தாலும் +1949-ல் பாகிஸ்தானில் உருது மட்டுமே ஒரே அதிகாரபூர்வ தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. முகம்மது அலி ஜின்னா கிழக்கு வங்கத்தில் இருக்கும் மக்களும் உருதுவையே தங்கள் தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மக்கள் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மாணவர் தலைவராக இருந்த இவர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினர். கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தவாறே 13 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிகளும் நடத்தப்பட்டதால், இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து விலகி அவாமி லீக் கட்சியில் இணைந்தார். இதன் கிழக்கு வங்கப் பிரிவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது பாகிஸ்தான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 1955 முதல் 1958 வரை பணியாற்றினார். 1956-ல் கிழக்கு வங்கம், கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இவர் வங்க மக்களின் பாரம்பர்ய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வங்க மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார். 1958-ல் ஜெனரல் அயுப் கான் அரசியல் அமைப்பை ரத்து செய்துவிட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டு 1961வரை சிறையில் அடைக்கப்பட்டார். +சிறையிலிருந்து வெளிவந்த இவர், மாணவத் தலைவர்களைக் கொண்ட ஸ்வாதீன் பெங்காலி பிபோபி பரிஷத் (சுதந்தர வங்க புரட்சி கவுன்சில்) என்ற தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். வங்க மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்காகவும் இவர்கள் பாடுபட்டனர். தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்ததால், 1966-ல் அவர் கார்டர் ஆஃப் சர்வைவல் என்ற 6 கோரிக்கைகள் அடங்கிய ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். இதில் சுயாட்சி, குறிப்பிடத்தக்க அளவு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சுதந்தரம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இவருக்கு இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து வங்காளிகளின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. பல முறை கைது செய்யப்பட்டார். இவர் வங்காளிகளால் வங்கபந்து (வங்காளிகளின் நண்பர்) என்று குறிப்பிடப்பட்டார். 1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல்களில் முஜிபுர் ரஹ்மானின் தலைமையிலான அவாமி லீக் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று வென்றது. ஆனால் பெரும்பான்மை பாகிஸ்தான் ராணுவமும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் இவர் பாகிஸ்தான் பிரதமராக வருவதை எதிர்த்தனர். பூட்டோவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. பூட்டோ ஜனாதிபதியாகவும் முஜிபுர் பிரதமராகவும் பதவி ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய ஜனாதிபதி யாஹியா கான் அரசு அமைவதைத் தள்ளிப்போட்டார். அதோடு ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அவாமி லீக் கட்சியை தடைசெய்தார். வங்காள தலைவர்களையும் முஜிபுரையும் கைது செய்ய உத்தவிட்டார். +மாபெரும் புரட்சி வெடித்தது. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டார். முக்தி வாஹினி படை உருவானது. ஏராளமானவர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவ முன்வந்தது. இந்திய ராணுவத்துடன் உதவியுடன் முக்தி வாஹினி படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர். இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. வங்க தேசம் உருவானது. அதன் முதல் பிரதமரானார். ஆனால், ராணுவத்தினர் சதியினால் 1975-ல் வெளியூரில் படித்துக்கொண்டிருந்த இரு மகள்கள் தவிர அவரும் இவரது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். வங்கத்தின் தந்தை என்று போற்றப்பட்ட இவர், 1975-ல் 55-வது வயதில் கொல்லப்பட்டார். + + + + + +மார்கரெட் தாட்சர் + +மார்கரெட் ஹில்டா தாட்சர் ("Margaret Hilda Thatcher", "Baroness Thatcher," 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013) பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார். 1975 முதல் 1990 வரை தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். சோவியத் இதழாளர் ஒருவரால் தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பிரித்தானியாவின் "இரும்புப் பெண்மணி" என அழைக்கப்பட்டார்; அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக பிரித்தானிய வலதுசாரிகளாலும் அழைக்கப்படலாயிற்று. இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் "தாட்சரிசம்" என அழைக்கப்படலாயிற்று. + +வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். 1959ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக பின்ச்லே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையேற்ற அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரித்தானிய எதிர்கட்சித் தலைவரானார். 1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். + +1970-களில் உலகின் பல்வேறு முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன் உட்பட கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தாட்சர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பல அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். +பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில் தனது கொள்கைகள் என்னவென்பதை பிரகடனப்படுத்தினார். +அவரது அரசியல் கொள்கையும் பொருளியல் கொள்கைகளும் விதி களைவு (முக்கியமாக நிதித்துறையில்), நெகிழ்வான தொழிலாளர் சந்தைகள், அரசுத்துறையைத் தனியார்மயமாக்கல், தொழிற்சங்கங்களின் வலிமை மற்றும் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்துவனவாக இருந்தன. துவக்கத்தில் இவரது கொள்கைகளால் மிகவும் புகழ் பெற்றார்; பின்னர் நாட்டின் பொருளியல் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் புகழ் மங்கியது. 1982இல் இவர் பாக்லாந்து போரில் பெற்ற வெற்றி மற்றும் பொருளாதார மீட்சி இவருக்கு மீண்டும் ஆதரவைப் பெருக்கியது. இதனால் 1983ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். + +பணக்காரர்களை பலவீனப்படுத்தி தொழிலாளர்களை வாழ வைக்க முடியாது என்பது அதில் ஒன்று. பலமானவர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் பலவீனர்களை பலப்படுத்திவிட முடியாது என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார். 1979ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி எனப்படும் பழமைவாதக் கட்சியின் சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்கள் நலத்திட்டங்களுக்கு வேட்டு வைத்ததுதான் அவர் செய்த முதல் சாதனையாகும். + +ஓய்வூதியம் உட்பட தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளை அவர் பறித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் முனைப்பு காட்டினார். அவர் பொறுப்புக்கு வந்த பொழுது பிரிட்டனின் பணவீக்க விகிதம் 27 சதவிகிதமாக இருந்தது. இதைச் சமாளிக்க அவர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பாதையைப் பின்பற்றினார். பிரிட்டனில் 130 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டியுசி எனும் தொழிற்சங்கத்தை முடக்கினார். தொழிற்சங்க உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் மூலம் சந்தா பிடித்து தரப்படாது என்று திருத்தம் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டனின் வரலாறு காணாத சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. + +சுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஆர்தர் ஸ்கர்ட்கல் என்பவரை கைது செய்து சிறையிலடைத் தார். அவர் சோவியத் ஏஜெண்ட் என்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தினார். பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவிலிருந்து மலிவு விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என்று அவர் முதலாளிகளுக்கு வழிகாட்டினார். தாட்சர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் என்பது பொதுவாக நவீன தாராளமயமாக்கல் பாதைக்கு வழிவகுத்தது. + +1987இல் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் அவர் விதித்த "கம்யூனிட்டி சார்ஜ்" என்ற வரி மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அமைச்சரவையில் அவரது ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்துக்களும் ஏற்கப்பட வில்லை. இதனையடுத்து 1990இல் நவம்பர் மாதம் தமது பதவியிலிருந்து விலகினார். இவருக்கு வாழ்நாள் முழுமையும் பிரபுக்கள் அவையில் அங்கத்தினாராக செயல்பட ஏதுவாக லின்கன்சையர் கவுன்டியின் கெஸ்டவென் தொகுதியின் பரோனசாக அரசப்பதவி வழங்கப்பட்டது. + +பொதுத்துறையை தனியார்மயமாக்குவது தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது சமூக நலத்திட்டங்களை வெட்டுவது என்பது‍ தான் தாட்சர் பின்பற்றிய கொள்கை... + + + + + +அபூர்வ ராகங்கள் + +அபூர்வ ராகங்கள் (1975) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ரஜினிகாந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். + +1976 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + +பாடல்கள் கவியரசு கண்ணதாசன் . இப்படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் . + +படத்தில் இடம் பெற்ற பாடல்கள் +1. ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் - வாணி ஜெயராம் +2. அதிசய ராகம் - கே.ஜே.ஜேசுதாஸ் +3 .கை கொட்டி சிரிப்பார்கள் - ஷேக் +4. கேள்வியின் நாயகனே - வாணி ஜெயராம், சசிரேகா + + + + + +படையப்பா + +படையப்பா (1999) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரை��்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + + + + +சிறப்புப் பொருளாதார மண்டலம் + +வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economiz Zone (SEZ)) ஆகும். இதைத் தமிழில் சிறப்புப் பொருண்மிய வலயம் என்றும் குறிப்பிடுவர். + +இது வரையறுக்கப்பட்ட புவியியல் பிரதேசத்தில் மதில்கள் சிறப்புப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றது. இதில் முதலீடு செய்யும் வர்த்தகங்களால் ஏற்படும் பொருளாதார விருத்தியும் வேலைவாய்ப்புக்களும் இத்தகைய அரசின் கொள்கையை நியாயப்படுத்துகின்றது. எனினும் இது சமனற்ற பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்வதாக அனைத்துலக நாணய நிதியம் கருத்துத் தெரிவித்துள்ளது. + +இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நாட்டின் பொது நிலைமையிலிருந்து விலகி தமது வர்த்தகத்தை மேற்கொள்ள உதவுகின்றன. + + + + +"இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், ஒப்பந்தக் கூலி என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எஸ்.ஐ., மருத்துவம், பணிப் பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் செல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன." + + + + + +ஈ. வி. சரோஜா + +ஈ. வி. சரோஜா (1935 – நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர். + +என் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருந்தார். + +எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈ.வி சரோஜா. இயக்குநர் டி. ஆர். ராமண்ணா இவரின் கணவர் ஆவார். + + + +நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். + + + + + +மூன்று நிறங்கள்: நீலம் + +நீலம் (English: Three Colors: Blue, French: Trois couleurs: Bleu) புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் கிரைஸ்டாப்ஃ கெய்ஸ்லாவ்ஸ்கி (Krzysztof Kieślowski) அவர்களின் மூன்று நிறங்கள் திரைப்பட வரிசையில் முதலாவது படமாகும். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களில் விடுதலையை (Liberty) உட்கருவாகக் கொண்டது. மற்றும் அகியவை இப்படத்தைத் தொடர்ந்து வெளிவந்தன. + +ஜூலியட் பினோஷ் (Juliette Binoche) : ஜூலி. + +சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுத்த ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. அவள் மனித வாழ்வின் இன்ப துன்பங்கள், பாசப் பிணைப்புகளிலிருந்து 'விடுதலை' அடைந்து 'மனக்கொலை' (Spiritual Suicide) செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன. + +வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகள். + +சுஹாசினி அவர்கள் இயக்கிய இந்திரா திரைப்படத்தில் நாயகி தன் பின்கரத்தை சுவற்றோடு உராசிச்சென்று சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி இப்படத்தில் வரும் காட்சியைப் போன்று அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. + + + + + +இணைய வானொலி + +இணையம் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளை இணைய வானொலி எனலாம். அலைக்கம்பங்கள் துணையுடன் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளே இணையம் ஊடாகவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இணையத்தின் ஊடாக மாத்திரம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் இன்று பரவலாகி வருகின்றன. + + + + + +ஆரக்கிள் லினக்சு + +அக்டோபர் 25, 2006 அன்று ஆரக்கிள் நிறுவனம் "உடைக்கமுடியாத" என்று பொருள்படும் ரெட்ஹேட் எண்டபிறைஸ் லினக்ஸை ஐச் சார்ந்து ஆரக்கிள் லினக்சு ஐ வெளியிட்டது. ஆரக்கிள் லினக்சுக்கு ஆரக்கிள் நிறுவனமே ஆதரவளிக்கும். ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஓர் தீர்வை வழங்குவதற்காகவே இதை உருவாக்கியது. தற்சமயம் இணையத்தில் இதற்காக பதிவு செய்து, இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். + + + + + +நொப்பிக்சு + +நொப்பிக்ஸ் அல்லது நாப்பிக்ஸ் என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் ஆலோசகரான கார்லஸ் நோப்பரினால் உருவாக்கப்பட்டது. + +ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான வரைகலைச் சூழல் கிடைக்கின்றது. + +கநோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது CD/DVD இலேயே ஆரம்பிப்பது வழக்கம் எனினும் இது கணினியில் நிறுவியும் பாவிக்கக்கூடியது. யுஎஸ்பியூடாக (USB) கணினிகளை ஆரம்பிக்ககூடிய இடங்களில் கணினியானது யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க் மற்றும் மெமரிகாட்கள் ஊடாகவும் ஆரம்பிக்கக்கூடியது. + +இருவேறு பதிப்புக்களில் கெனோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது கிடைக்கின்றது. 700MB அளவுள்ள இறுவட்டுப் பதிப்பு மற்றது 4.7 GB அளவுள்ள டிவிடி (DVD) மக்ஸி (Maxi) பதிப்பு. இந்த இரண்டு பதிப்புக்களும் ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. + +இதை ஆரம்பிக்கும்போது இதன் உள்ளடக்கமானது ராமிற்கு (நினைவகத்திற்கு) இடமாற்றப்படுகின்றது. நோப்பிக்ஸ் பெரும்பாலும் இலவச மென்பொருட்களைக் கொண்டுள்ளபோதிலும் அவ்வாறல்லாத சில மென்பொருட்களையும் கொண்டுள்ளது.கணினி பிணையங்கள் சம்பத்தப்பட்ட பல ஆய்வுகள் செய்ய இந்த லினக்ஸ் பயன்படுத்துகின்றனர் + +நோப்பிக்ஸ் லினக்ஸில் பல பயன்பாடுகள் உண்டு + +1000 இற்கு மேறபட்ட மென்பொருட்கள் CD பதிப்பிலும் 2600 இற்கு மேற்பட்ட மென்பொருட்கள் DVD பதிப்பிலும் உள்ளன. 9ஜிபி அளவானது ஓர் DVD இல் சுருக்கிச் சேமிக்கலாம். இதிலுள்ள முக்கியமான மென்பொருட்கள் + + +நோப்பிக்ஸ் மிகவும் பிரபலமான CD இல் இருந்து இயங்கும் லினக்ஸாக விளங்குகின்றது. இதற்கான காரணங்களாவன + +சிலகுறைகளும் இதில் காணப்படுகின்றது. + +4ஆம் பதிப்பிலிருந்து இரண்டு CD மற்றும் DVD பதிப்புக்களாக இவை வெளிவந்தன. DVD பதிப்பானது 9 ஜிகாபைட்டிற்கும் மேலான மென்பொருட்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஜேர்மனினியில் CEbit இல் இது வெளியிடப்பட்டது இமக்களிற்குப் பொதுவாகக் கிடைக்கின்றது. இதன் சாதாரண இறுவட்டுப் பதிப்பும் (CD) 5.1.1 உடன் இடைநிறுத்தபப்ட்டுள்ளது. தற்போதைய பதிப்புக்கள் டீவிடி இலேயே கிடைக்கின்றது. + + + + + +சில்லு + +சக்கரம் "(wheel)" அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம். +சக்கரங்களுக்கான பொதுவான பயன்பாடுகள் போக்குவரத்தில் அமைகின்றன. இறுசில் உருண்டு இயங்கி சக்கரம் உராய்வைப் பெரிதும் குறைக்கிறது. சக்கரங்கள் சுழல, அதற்கு திருப்புமையை அதன் இறுசில் ஈர்ப்பாலோ புற விசை அல்லது திருக்கத்தாலோ தரவேண்டும். + +பிந்தைய புதிய கற்காலத்தில் சக்கரங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டன. தொடக்க வெண்கலக் காலத்தின் பிற தொழில்நுட்பப் பெருவளர்ச்சியோடு இவை பின்னிப்பிணைந்து அமைகின்றன. புதிய கற்காலப் புரட்சியில் வேளாண்மையும் மட்பாண்டங்களும் உருவாகிய பின்பும் சில ஆயிரம் ஆண்டுகள் சக்கரமின்றியே கழிந்துள்ளன. புதிய கற்காலப் புரட்சி (கி.மு 9500–6500). +ஆலாப் பண்பாடு (கி.மு 6500–5100) மிகப்பழைய சக்கர வண்டியின் உருவத்தை வரைந்த்தாகக் கூறப்பட்டாலும், அலாபியர்கள் சக்கரவண்டியை ஏன், குயவர் சக்கரத்திக் கூட பயன்படுத்தியதற்கான சான்றேதும் கிடைக்கவில்லை. + +கி.மு ஐந்தாயிரம் ஆண்டளவில் நடுவண் கிழக்குப் பகுதியில் "உருட்டிகள்" எனும் "மெதுசக்கரங்கள்" சக்கரங்கள் உருவாவதற்கு முன்பே வழக்கில் இருந்துள்ளன. இதற்கான மிகப்பழைய எடுத்துகாட்டு ஈரானில் உள்ள தெப்பே பார்திசுவில்கி.மு5200–4700 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.இவை கல்லாலோ களிமண்ணாலோ செய்யப்பட்டு மையத்தில் ஒரு முளையால் தரையில் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சுழற்ற முயற்சி தேவைப்பட்டுள்ளது. உண்மையான கட்டற்று சுழலும் குயவர் சக்கரம் மெசபடோமியாவில் கி.மு 3500 ஆண்டளவில் ஏன், கி.மு 4000 ஆண்டளவில் இருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. இதன் மிகப்பழைய எச்சம் ஈராக்கில் உள்ள ஊர் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 3100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது . + +3500 கி.மு நான்காம் ஆயிரப் பிந்திய அரைப்பகுதியில், சக்கரம் பூட்டிய வண்டியின் தோன்றியதற்கான முதல் சான்று, மெசபடோமியாவிலும் (சுமேரிய நாகரிகம்) வட காக்காசசிலும் (மைகோப்பியப் பண்பாடு) நடுவண் ஐரோப்பாவிலும் (குக்குதேனி-திரிப்பில்லியப் பண்பாடு) கிடைத்துள்லது. எனவே சக்கரம் எங்கே எந்தப் பண்பாட்டில் முதலில் தோன்றியது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலே உள்ளது. + +தெற்கு போலந்து குடியிருப்பொன்றில் (பன்னல்பீக்கர் பண்பாடு) அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழைய களிமட்பானையில் நான்கு சக்கரங்களும் இரண்டு இருசுகளும் உள்ள தேர்வண்டியின் படம் தெட்டத் தெளிவாக நன்கு வரையப்பட்டுள்ளது. + +சுலோவேனியாவைச் சேர்ந்த இலியூபிலியானா அருகில் அமைந்த சுதேர் கமாய்னேவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழைய இருசு பூட்டிய சக்கரம் (மார்ழ்செசு மரச் சக்கரம்) இப்போது 2σ-வரம்புகள் முறைவழியாக கி.மு 3340–3030 ஆண்டளவினதாகவும் அதனுடைய இருசு கி.மு 3360–3045 கால அளவினதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. + +தொடக்கநிலைப் புதிய கற்கால ஆரைபூட்டிய ஐரோப்பியச் சக்கரங்களின் இருவகைகள் இருந்துள்ளன. இவற்றில் ஒன்று, ஆல்ப்சு மலையின் முந்துவரலாற்றுக் குடியிருப்பில் கண்டெடுத்த தேர்க்கட்டுமானப் பருதிவகையாகும் (இதில் இலியூபிலியான மார்ழ்செசு சக்கரம் போல ஆரையும் சக்கரமும் ஒன்றாகச் சுற்றுகின்றன). மற்றொன்று, அங்கேரியின் பாதேன் பண்பாட்டுவகை ஆகும் (இதில் ஆரை சுற்றுவதில்லை). இவை இரண்டுமேகி.மு 3200–3000 கால அளவைச் சார்ந்தவை. + +சீனாவில் தேரைப் பயன்படுத்த தொடங்கியதும் கி.மு 1200 அளவில் சக்கரம் பயனில் உள்ளது என்பது உறுதி. என்றாலும், பார்பியேரி -லோ கி.மு 2000 ஆண்டளவிலேயே சீனச் சக்கர வண்டிகள் இருந்ததாக வாதிடுகிறார். + +பிரித்தானியாவில் கிழக்கு ஆங்கிலியாவைச் சேர்ந்த மசுட்டுப் பண்ணையில் ஒரு மீட��டர் விட்டமுள்ள பெரிய மரச்சக்கரம் 2016 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு1,100–800 ஆண்டுகலைச் சார்ந்த்தாகு. மேலும் இது பிரித்தானியவின் மிக முழுமையான தொடக்கநிலைவகைச் சக்கரமாகும். இச்சக்கரத்தில் குடமும் அமைந்துள்ளது. அதன் அருகில் குதிரை முதுகெலும்பு கிடைத்துள்ளதால் இது குதிரை இழுத்த வண்டிச் சக்கரமாகலாம் எனக் கருதப்படுகிறது. நீருள்ள நஞ்சையின் சரிவான பரப்பின் குடியிருப்பில் இது கிடைத்ததால் குடியிருப்புக்கும் அருகாமை கொல்லிகளுக்கும் இருந்த உறவு தெரிய வந்துள்ளது. + +ஆல்மெக்கியர் முறையான சக்கரத்தை உருவாக்கா விட்டாலும், அவர்களும் சில அமெரிக்கப் பண்பாடுகளும் அதை நெருங்கியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கி.மு 1500 கால அளவிலான சிறுவரின் பொம்மைகளில் சக்கரம் போன்ற பணிக்கற்கள் அமைந்துள்ளதால் இந்நிலை டெரிய வந்துள்ளது.அமெரிக்கப் பண்பாடுகளில் பேரளவில் சக்கரம் உருவாகாமைக்கான காரணம் சக்கர வண்டியை இழுக்கவல்ல பெரிய விலங்குகள் கால்நடையாக வளர்க்க்ப்படாமையே ஆகும் எனக் கருதப்படுகிறது. முந்து கொலம்பிய அமெரிக்கப் பண்பாடுகளில் அமைந்த கால்நடையாக அமெரிக்கக் காட்டெருமையை வளர்ப்பது மிக அரிய பணியாகும்; 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பல குதிரை வகைகள் அங்கே வாழ்ந்தன என்றாலும் பின்னர் அவை அழிந்தொழிந்தன. கொலம்பசு வருகையின் போது ஆந்தெசு மலைக்கு அப்பால் மேற்கு அரைக்கோள மிகப்பெரிய விலங்கான இலாமா கால்நடையாகப் பரவவில்லை (வளர்த்தெடுக்கப்படவில்லை). + +நூபியர்கள்கி.மு 400 ஆண்டளவில் மட்பாண்டம் செய்யவும் நீராழிகளிலும் சக்கரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் இவர்கள் எகுபதியில் இருந்து ஏற்றுமதி செய்த புரவி பூட்டிய தேர்களைப் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. + +எத்தியோப்பியா, சோமாலியாவைத் தவிர சகாரா உட்பகுதி ஆப்பிரிக்காவில் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை சக்கரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஐரோபியர் அங்கு குடியேறியதுமே நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. + +தொடக்கநிலைச் சக்கரங்கள் இருசுபூட்டும் துளையுள்ள மரவட்டுகளாகவே இருந்தன. மிகப்பழைய சக்கரங்களில் சில மரத்திம்மையாலான கிடைப்பலகைகளால் அமைந்துள்ளன. சீரற்ர மரக் கட்டமைப்பால் மரத்திம்மையின் கிடைப்பலகைகளால் ஆகிய சக்கரம் நெடுக்குப்பலகையின் ���ட்ட்த் துண்டௌகளால் ஆகிய சக்கரத்தை விட தரங்குறைந்ததாக இருந்தது. + +ஆரைச் சக்கரங்கள் அண்மையில் தான் புனையப்பட்டன. இதனால் வண்டிகளின் எடை குறைந்தது. எனவே, வண்டிகளை வேகமாக ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன, இந்த வரிகள் பொறுக்காகவோ வண்ணத்தால் தீட்டப்பட்டோ அமைந்துள்ளன. இவை ஆரைகளைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது.மேலும் எழுத்து இலச்சினையிலும் ஆரையொத்த வடிவக் குறியீடு உள்ளது இது கி.மு மூன்றாம் ஆயிரத்தைச் சேர்ந்ததாகும். கி.மு 2000 அளவில் மிகப்பழைய ஆரை மரச்சக்கரங்கள் ஆந்திரனோவோ பண்பாட்டில் கிடைத்துள்ளன. விரைவில் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குக் காக்காசசு வட்டாரக் குதிரைப் பண்பாடுகளில் ஆரைச் சக்கரம் பூட்டிய போர்த்தேர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.இவர்கள் நடுவண் தரை நாடுகளுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்தனர். மினோவன் நாகரிகத்தின் ஓங்கல் அங்கே குன்றியதும் ஏதென்சும் சுபார்ட்டாவும் எழுச்சி பெற்று முந்து செவ்வியல் பண்பாட்டை உட்கவர்ந்து செவ்வியல் கிரேக்கப் பண்பாடு எழவும் இவர்கள் காரணமகியுள்ளனர். கெல்டிக் தேர்களில் அவர்கள் சக்கரத்தின் பருதியில் இரும்பு விளிம்பை கி.மு முதல் ஆயிரத்தில் அறிமுகப்படுத்தினர். + +ஆரைச் சக்கரங்கள், 1870 களில் கம்பிவகை ஆரைகளும் வளிம வட்டைகளும் புனையப்படும் வரையில், பெரிதும் மாற்றம் ஏதும் இன்றியே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன. கம்பி ஆரைகள் இழுப்பில் இருப்பதால் சக்கரங்கள் விறைப்பாகவும் இலேசாகவும் அமைந்தன.முதலில் ஆரப்போக்கில் அமைந்த ஆரைகள் நாளடைவில் தொடுகோட்டுப் போக்கில் அமையலாயின. இவை சீருந்துகளில் பிந்தைய 20 ஆம் நூற்றாண்டில் பரவலாகின. இப்போது வார்ப்புப் பொன்மக் கலவைச் சக்கரங்கள் பெருவழக்கில் உள்ளன; எடை சிறப்புக் கூறாகும்போது வடித்த பொன்மக் கலவைச் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + + + + + +புளோரன்ஸ் நைட்டிங்கேல் + +புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("Florence Nightingale", மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை ("The Lady with the Lamp") என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார். + +பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794–1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் )அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். +கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது. + +புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது. + +1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன. + +தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். + +1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது. + +ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார். + +கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர். நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை. + +புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது. +அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி ("cholera"), வயிற்றோட்டம் ("dysentery") ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது. + +மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. + +பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த "மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள்" "(Notes on Hospitals)", அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட "தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள்" "(Notes on Nursing)", "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" "(Notes on Matters Affecting the Health)", "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும்" "(Efficiency and Hospital Administration of the British Army)" என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில. + +போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது. + +விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business". மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. + +துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது. + +தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார். + +குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் ("Chronic Fatigue Sydnrome")(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார். Park Lane. இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. + +சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார். + +தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் த���வுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார். + +இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். + +1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். + +மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார். + +1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் ("The Cause") எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது. + +கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காக அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்பவள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. + +பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். + +தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார். + +நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன. + +உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது. + +கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது. + +இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன. + +ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' ("bedside Florence") எனப் பெயரிட்டுள்ளது. + +புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் ("Chronic Fatigue Sydnrome") பற்றி ஆராய்கிறது. + + + + + + +டெம்பிள்டன் பரிசு + +டெம்பிள்டன் பரிசு ("Templeton Prize") என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஆன்மீக உண்மைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சிக்கான டெம்பிள்டன் பரிசு, ஆன்மிக விடயங்களை முன்னெடுத்துச் செல்லப் பாடுபடுபவர்களைக் கௌரவிக்குமுகமாகவும், ஊக்குவிப்பதற்காகவும் வழங்கப்படும் பரிசாகும். இது ஜோன் டெம்பிள்டன் பவுண்டேஷன் என்னும் அமைப்பினால், 1972 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. + + + + + + +அலாஸ்கா + +அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. + + + + + +மான் புக்கர் பரிசு + +புக்கர் பரிசு ("Booker Prize") அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு ("Man Booker Prize for Fiction"), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்���டும் பரிசுகளில் உலகிலேயே பலரும் அறிந்த பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது. + +அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் ("Jonathan Cape") என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் ("Tom Maschler") என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த "புக்கர் பிரதர்ஸ்" என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது "புக்கர்-மக்கொன்னெல்" பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, "மான் குரூப்" என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், "புக்கர்" என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை "புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு" என மாற்றினர். + +முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது. + + + + + + +கிரேனிச்சு + +கிரேனிச்சு என்பது இலண்டன் பெருநகரத்தில் தென் கிழக்குப் பகுதியில் தேம்சு ஆறு அருகே அமைந்துள்ள சிறு நகரமாகும். இந்ண்ஹகரத்தின் வழியாகச் செல்லும் புவிநெடுங்க்கோட்டை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் (கிரீன்விச்சு சீர்நடு நேரம்) கணிக்கப்படுகிறது. + + + + +அடோல்ப் சக்ஸ் + +அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார். + +அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்றிருப்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இhjhgjgjgjgjgjgjgjvfhgfவருவருமே இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார். + +சக்சபோனைத் தவிர இவர் உருவாக்கிய பிற இசைக்கருவிகள், + + + + + +கிரண் தேசாய் + +கிரண் தேசாய் ("Kiran Desai", பிறப்பு: செப்டம்பர் 3, 1971) இந்தியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய "த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்" (The Inheritance of Loss) என்னும் ஆங்கில நாவலுக்கு 2006 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ள இவர், புகழ் பெற்ற பெண் எழுத்தாளரான அனிதா தேசாயின் மகளாவார். அனிதா தேசாய் புக்கர் பரிசுக்காக மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், அவருக்கு இப்பரிசு கிடைக்கவில்லை. + +கிரண் தேசாய் 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் பிறந்தார். இவருக்கு 14 வயதானபோது, இவரது குடும்பம் ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தது. அடுத்த ஆண்டே இவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினர். + +கிரண் தேசாய் தனது பாடசாலைக் கல்வியை மசச்சூசெட்ஸ் இல் பெற்றுக்கொண்டார். பின்னர், ஹொலின்ஸ் பல்கலைக் கழகத்தின், பென்னிங்டன் கல்லூரியிலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். + +இவரது எழுத்தில் இவரது தாயார் அனிதா தேசாய் தாக்கம் உண்டு. + +இவரது முதல் நாவலான "Hullabaloo in the Guava Orchard" 1998ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் (Betty Trask Award) பெற்றுள்ளது + +இரண்டாவது நாவலான "The Inheritance of Loss"(2006) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளதுடன் 2006 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. + + + + + + +வீரப்பன் + +வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) "சந்தனக்கடத்தல் வீரப்பன்" என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார். + +மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன. + +இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உய��் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார். + +US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு. + +இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. + +வீரப்பன் 18 சனவரி, 1952 ஆம் ஆண்டு தமிழ் வன்னியர் சமுதாயத்தில், கருநாடக மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும். + +வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். + +சந்தனமர கடத்தல் செய்த தனது உறவினர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன். 1972 ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார். + +சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர். + +1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது. 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார். + +வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, காவல்துறையினரின் வாகனத்தில் பயணித்த தனது கிராமவாசியை கொன்றானர். யாரையேனும் காவல்த்துறை உளவாளி என சந்தேகித்தால் கொன்று விடுவது வீரப்பனுடைய வழக்கம். அரசியல் களேபரங்கள் காரணமாக, வீரப்பன்னால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்ட முடிந்தது. + + + + + + + + +முகேசு அம்பானி + +முகேசு அம்பானி (19 ஆம் தேதி,ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்) ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இவர் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகிப்பவரும் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல் அதன் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 44.7% பங்கை கொண்டுள்ளார் மேலும் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறை உரிமையாளர் ஆவார். முகேசுவின் இளைய சகோதரரான அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமதின் தலைவர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும் மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிறுக்கிறார், இவர்கள் தங்கள் செல்வத்தை ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான திருபாய் அம்பானி அவர்களிடமிருந்து வாரிசாக பெற்றனர். + +2010 ல் ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான "68 நபர்கள்" பட்டியலில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்,மேலும் 2012 ல் இவர் ஆசியாவில் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார். + +இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார், மற்றும் சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார். + +2012 ல் உலகின் 2 வது பணக்கார விளையாட்டு உரிமையாளராக முகேசு அம்பானியை ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் பட்டியலிட்டது. பணக்கார விளையாட்டு உரிமையாளர்களின் பட்டியலின் படி இவர் செல்சீ மற்றும் ஏசி மிலனை காட்டிலும் பணக்காரராக அறியப்படுகிறார். அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார். + +முகேசு அம்பானி, திருபாய் அம்பானியின் மூத்த மகனாவார், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிற்பகுதியில் நிறுவுனராவார். இவருக்கு அனில் என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். + +அம்பானியின் குடும்பம் 1970 வரை மும்பை புலீஸ்வரில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தது. திருபாய் அம்பானி பின்னர் கொலாபா உள்ள 'ஸீ வின்ட்' என்றழைக்கப்படும் 14-மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார் சமீப காலம் வரை முகேசு மற்றும் அனில் அவர்கள், அவர்களின் குடும்பங்களுடன் இங்கு வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர். + +முகேசு அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும் தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை தற்பொழுது இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடிததார். இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார். முகேசு பின்னர் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனப்படும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார் ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980இல் படிப்பைக் கைவிட்டார். இந்திரா காந்தியி்ன் நிர்வாகம் 1980 இன் முற்பகுதியில் PFY (பாலியஸ்டர் இழை நூல்) உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. திருபாய் அம்பானி அவர்கள் பாலியஸ்டர் இழை நூல்( PFY) உற்பத்தி செய���ும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். டாடா, பிர்லா மற்றும் 43 இதர போட்டியளர்களுக்கு மத்தியில் திருபாய் அம்பானி அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி (PFY) ஆலையின் உருவாக்கத்தில் உதவுவதற்காக திருபாய், அவரது மூத்த மகன் முகேசுவை இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துவந்தார். முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காகவும் ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981 இல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார். + +இவர் 1981இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார். இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் இன் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது. + +அம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். + +உலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் ஜாம்நகரில் உள்ளது. இதன் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் (வருடத்திற்கு 33 மில்லியன் டன்கள்) மேலும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் அம்பானி உள்ளார். + + + +இவரது மனைவி நீதா அம்பானி ஆவார் மேலும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் மும்பையில் அண்டிலியா (கட்டிடம்) என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் வசித்துவருகின்றனர்.இவ்வீட்டின் மதிப்பு அமெரிக்க ஐக்கிய டாலரில்($) 2 பில்லியன்கள் ஆகும்,இது வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடாகும். + + + + +வில்லியம் ஷாக்லி + +வில்லியம் சொக்லி ("William Bradford Shockley", பெப்ரவரி 13, 1910 – ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. + +தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார். + +ஷாக்லி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில், அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தார். அகவை மூன்றினினிருந்து, அவரது சொந்த ஊரான கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வளர்ந்தார். அவரது தந்தை வில்லியம் ஹில்மன் ஷாக்லி, சுரங்கங்களைக் கணிக்கும் சுரங்கப் பொறியாளராகப் பணி புரிந்து வந்தார். + + +எண்ணற்ற தவறுகள் செய்தாலும் பரவாயில்லை அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் நாம் என்று தன் குழுவை ஊக்குவித்து அதிலிருந்து சரியான முடிவுகளை கண்டறிய செய்தார் . கச்சிதமான ட்ரான்ஸ்சிஸ்டர் பெல் ஆய்வகத்தில் உருவானது. உலகின் போக்கையே மாற்றிப்போடுகிற சாதனையை இக்கண்டுபிடிப்பு செய்தது என்றால் அது மிகையில்லை . + +மிகப்பெரிய அளவில் இருந்த பல்வேறு கருவிகள் அளவில் குட்டியானது;துல்லியம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரித்தது .குறைக்கடத்திகள் எனப்படும் ஜெர்மானியம் சிலிகான் முதலியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்டர்கள் டிவி ரேடியோ கால்குலேட்டர் ஆகியவற்றின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்தது ; மின்சார +செலவும் குறைந்து அவற்றின் பயன்பாடு அதிகரித்தது ட்ரான்ஸ்பர் ரெசிஸ்டர் என்பதே ட்ரான்சிஸ்டர் என ஆனது . + + + + + +நவம்பர் 5 + + + + + + + +செயங்கொண்டார் + +செயங்கொண்டார் என்னும் புலவர் சோழர் கால இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். இவர் ��ீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். இந்நூலின் கப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம் முதன் முதலில் பரணி பாடியவர் இவரே. இவரது வரலாறு அறியப்படவில்லை. இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது. + +பிற்காலப் புலவரான "பலபட்டடைச் சொக்கநாதர்" "பரணிக்கோர் செயங்கொண்டான்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார். + +புகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து "இசை ஆயிரம்" என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் "உலாமடல்" என்னும் நூலையும் பாடியுள்ளார். + + + + +சமூக அறிவியல் + +சமூக அறிவியல் (Social sciences) என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும். + +இதனுள் பின்வருவன அடங்குகின்றன. + + + + +இணையத் தமிழ் வானொலிகள் பட்டியல் + +உலகளாவிய ரீதியில் தமிழில் ஒலிபரப்பப்படும் இணைய வானொலிகளின் பட்டியல் இங்கு இடப்படுகிறது: + + + + + + + + + + + + + + + + +தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல் + + + + +சக்கரம் + +சக்கரம் என்ற தலைப்பினை தொடர்புடைய கட்டுரைகள்: + + + + + +நகைச்சுவை + +சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை ("comedy"; கிரேக்கம்: κωμῳδία, kōmōidía -பொருள்: கிராமிய கேளிக்கை) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர். + +"இடுக்கண் வருங்கால் நகுக" (குறள் 621), எனும் குறள் துன்பங்களைக் களையும் மருந்தாக நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருத்தலை உணர்த்தும். மற்றெம் மொழிகட்குமில்லாத சொல்லாடல் நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பாகும். + +போற்றுவார் போல் தூற்றல் வஞ்சப் புகழ்ச்சியாகும். தமிழரின் சொல்லாடல் ���ான்றாக, + +ஒளவையார் தொண்டைமானின் ஆயுதக்கிடங்கிற்கு போய், + +"அதியமானிடம் எல்லாம் முனைமழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய்” எனக் கூறி, + +அதியமான் அடிக்கடி போரில் ஈடுபடுவன், தொண்டைமான் போருக்கு போவதில்லை என்ற உண்மையை வஞ்சப்புகழ்ச்சியில் உணர்த்தினார். + +சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்களை, எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட கவிதை நூல் இருண்ட வீடு, + +சான்றாக, + +"பிட்டுக் காரி தட்டினாள் கதவையே +திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன் +பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான் +பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான் +ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான் +நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது +வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான் +வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது +கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான். +மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான் +வில்லம்பு போல மிக விரை வாக +நடுவிற் கிடந்த நாயை மிதித்துப் +படபட வென்று பானையைத் தள்ளிக் +கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று +நின்ற பசுவின் நெற்றியில் மோதி +இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப் +புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் + +கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஒரு சமயம் சிரங்கு தொல்லையால் வேதனையுற்றார். பல மருந்துகள் போட்டும் சிரங்கு ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் அவதிப்படும் சமயத்தில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் பாடிய நகைச்சுவைப் பாடல்களில் ஒன்று: + + +முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம் +பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன் +சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் +தரங்கண்டு தந்த தனம். + + +சொற்பொழிவுகளில் சில சொற்பொழிவாளர்கள் நகைச்சுவையான செய்திகளைச் சொல்வதுண்டு. நகைச்சுவை சொற்பொழிவாளர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் முக்கியமானவர் ஆவார். அவருடைய சொற்பொழிவுகள் ஆன்மீகச் சொற்பொழிவுகளாக இருப்பினும் அதையும் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் அவரிடம் அதிகமாக இருந்தது. + +சிலேடைச் சொற்களில் நகைச்சுவையாகப் பேசுவது ஒரு தனித்திறன் ஆகும். சொற்பொழிவாளர் கி. வா. ஜகன்னாதன் சிலேடையாகப் பேசுவதில் மிகவும் வல்லவர் ஆவார். இவருடைய சிலேடைப் பேச்சுக்களில் அத��கமாக நகைச்சுவை கலந்திருக்கும். + +துணுக்குகள் தமிழ் இதழ்களில் பிரபலமானவை. பொதுவாக இரண்டு பேருக்கிடையே இடம்பெறும் சிறு உரையாடலாக, நையாண்டித்தனமான ஓவியத்துடன் இருக்கும். + +எ.கா. + +அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? +அரசர்: இல்லை அமைச்சரே! அரியாசனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண் +... அதனால் 'விழுப்புண்' என்றேன். (நன்றி ஆனந்த விகடன், 7-3-82). + +வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்... +"ஹலோ வணக்கம்!" +"வணக்கம்! சொல்லுங்க..." +"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?" +"அதில்லைங்க" +"எது இல்லை?" +"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" +"போன்ல இருந்துதான் பேசறேன்" +"சரி என்ன பாட்டு வேணும்?" +"சினிமா பாட்டுதான்" +"சரி எந்த படத்துல இருந்து?" +"சினிமா படத்துல இருந்துதான்" +"அய்யோ!" +என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் +அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். + +வன்மையாக நகையுணர்வைத் தூண்டல், +எ.கா. + + + + + + + + + + + +தமிழ் திரைப்படங்கள் தொடக்க காலத்திலிருந்தே ஒரு சுயமான, வளமான நகைச்சுவை பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றன. தமிழ்த் திரைத்துரையில் நகைச்சுவை தமிழ் மரபுகளை பெரும்பாலும் பிரதிபலித்திருக்கிறது. + + + + + + + +கிராமப்படம் + +கிராமப்படம் எனப்படுவது திரைப்பட வகையாகும். கிராமம் அதனைச் சார்ந்த பகுதிகளில் வரும் திரைக்கதை அமைப்புகள் கிராமத்திய இசை, பண்பாடு, பேச்சு, நடைகள் போன்றவற்றினால் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் கலைப்படங்களின் சிறிய அளவிலான தாக்கங்கள் இவ்வாறான பல வடிவங்களினையும் பெற்று திரையிடப்படும் திரைப்படங்கள் கிராமப்படம் எனலாம். + + + + + + +நாடகத் திரைப்படம் + +நாடகத் திரைப்படம் எனப்படுவது ஒரு திரைப்பட வகையாகும். மேடை நாடகங்களின் தாக்கம், இலக்கிய மற்றும் காப்பியங்களின் தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் இயக்குநர் ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத���துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன. + + + + + + +இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல் + +கவனிக்க: தயவுசெய்து இணையத் தமிழ் இதழ்களை மட்டும் இப்பட்டியலில் சேர்க்க. மற்றையவையை அவற்றுக்கு பொருத்தமான வேறு பட்டியல்களில் சேர்க்கலாம். + +அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ + +க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன + + + + + + + + + + + + + +இணையத் தமிழ் இதழ்களின் துறைசார் பட்டியல் + +கவனத்துக்கு: இப்பக்கம் மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக துறைகள் தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டியுள்ளன. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் பதியுங்கள். + + + + + + + + + + + + + +ஈராக் மீதான படையெடுப்பு, 2003 + +ஈராக் மீதான படையெடுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெற்றன. + + + + +ஆர். மகாதேவன் + +தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) ;; பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் "தேவன்" என்ற புனைபெயரில் எழுதியவர். "துப்பறியும் சாம்பு" இவரது பிரபலமான படைப்பாகும். + +தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக���குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். + +சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். + +"துப்பறியும் சாம்பு" இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய "மிஸ் ஜானகி", "மிஸ்டர் வேதாந்தம்", "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்", "கல்யாணி", "மைதிலி", "துப்பறியும் சாம்பு" முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. "மிஸ்டர் வேதாந்தம்", "ஸ்ரீமான் சுதர்சனம்" இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாள்" புத்தகமாக வெளியாகியுள்ளது. "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்" புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. + +தேவன் "சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்" தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார். + + + + + + +அல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது. + + + + + + +நவம்பர் 6 + + + + + + + +மாண்டரின் மொழி + +மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும். + +நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம் +சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம் + + + + + + +எசுப்பானியம் + +எசுப்பானிய மொழி (Español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது. + +எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது. + +எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம். + +எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன: + +a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z. + +அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன. + +இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன. + +அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ). + +எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு. + +மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு. + +அவையாவன: + + + + +எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம். + +பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. + +ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் . எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம். + + + + + +போர்த்துக்கேய மொழி + +போர்த்துக்கேய மொழி ("Portuguese language") உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும். கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர். இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் மட்டக்களப்பில்; இந்தோனேசிய தீவான புளோரஸ் மலேசியாவின் மலாக்கா பிராந்தியத்திம் மற்றும் பப்பியாமெந்தோ பேசப்படும் கரீபியன் பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம். + +போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும். + +கி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக���காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன. + +கி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது. + +போர்த்துக்கேயம் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். and 85% are more or less fluent. அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன��� போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர். + +பல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) பெர்முடா, கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), பிரான்ஸ் (500,000 பேர்), ஜப்பான் (400,000 மக்கள்), ஜெர்சி, நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), வெனிசுலா (254,000). மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). + +இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா மற்றும் டமன் மற்றும் டையூவில் போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. + +த வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்) + +இதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர். + + + + +உருசிய மொழி + +உருசிய மொழி (, , உச்சரிப்பு ) என்பது ரசியக் கூட்டமைப்பு, பெலாரசு, உக்ரேன், கசக்சுதான் மற்றும் கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும். மோல்டோவா, லத்வியா, லிதுவேனியா, எசுதோனியா ஆகிய நாடுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், முன்னைய சோவியத�� ஒன்றிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சிறியளவில் பேசப்படுகிறது. ரசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். மேலும், இது இன்று காணப்படும் மூன்று கிழக்கு சிலாவிய மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. பண்டைய கிழக்கு சிலாவிய மொழியின் எழுத்துச் சான்றுகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன. + +ரசிய மொழி, யூரேசியப் பிரதேசத்திலேயே பாரிய புவியியற் பரம்பலைக் கொண்ட மொழியும், சிலாவிய மொழிகளிலேயே பரந்தளவில் பேசப்படும் மொழியுமாகும். மேலும், ரசியா, உக்ரேன் மற்றும் பெலாரசு ஆகிய நாடுகளிலுள்ள 144 மில்லியன் மக்களை உள்ளடக்கி, ஐரோப்பாவின் பெரிய சுதேச மொழியாகவும் விளங்குகின்றது. சுதேச மொழியாகப் பேசப்படும் மொழிகளில் இது 8ம் இடத்திலும், மொத்த மக்கள்தொகை அடிப்படையில் 5ம் இடத்திலும் காணப்படுகிறது. ரசிய மொழி ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. + +ரசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலுள்ள சிலாவிய மொழியாகும். இது கீவிய ருசில் பேசப்பட்ட மொழியின் நேரடி வழித்தோன்றலாகும். பேச்சு மொழி என்ற ரீதியில் சிலாவியப் பிரிவிலுள்ள ஏனைய இரு மொழிகளான உக்ரேனிய மற்றும் பெலாரசிய மொழிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனின் சில பகுதிகளிலும், பெலாரசிலும் இம்மொழிகள் தமக்குள் பிரதியீட்டு மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சில பகுதிகளில் மரபியல் ரீதியில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை காரணமாக மொழிக்கலப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு உக்ரேனிலுள்ள சுர்சிக் மற்றும் பெலாரசிலுள்ள திராசியாங்கா போன்ற பகுதிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். 15ம் அல்லது 16ம் நூற்றாண்டில் அழிவடைந்த மொழியாகக் கருதப்படும் கிழக்கு சிலாவிய பண்டைய நோவ்கோகிரட் மொழிவழக்கு, நவீன ரசிய மொழியின் உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் சிலாவோனிய தேவாலயத்தின் தாக்கம் மற்றும் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக, ரசியமொழி பல்கேரிய மொழியுடன் சொல்லியல் ரீதியிலான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பல்கேரிய இலக்கணம் ரசிய இலக்கணத்திலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகள���க் கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டில், பெலாரசிய மொழியிலிருந்து வேறுபடுத்தி அறியும் வகையில் இது "பெரிய ரசிய மொழி" என அழைக்கப்பட்டது. பின்னர் இது "வெள்ளை ரசிய மொழி" எனவும், "சிறிய ரசிய மொழி" எனவும் அழைக்கப்பட்டது. + +ரசிய மொழியின் சொல்வளம் (பெரும்பாலும் சுருக்கச் சொற்கள் மற்றும் இலக்கியச் சொற்கள்), சொல்லுருவாக்க அடிப்படைகள் போன்றன தேவாலய சிலாவோனிய மொழியின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. இது ரசிய மரபுவழித் தேவாலயத்தினால் பயன்படுத்தப்பட்ட தென் சிலாவிய பண்டைய தேவாலய சிலாவோனிய மொழியின் ரசிய மொழித் தாக்கம் பெற்ற வடிவமாகும். மேலும், உச்சரிப்பு மற்றும் மொழிநடை ஆகியனவும் ஓரளவு இதன் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கிழக்குச் சிலாவிய வடிவங்கள் தற்காலத்தில் வழக்கொழிந்து செல்லும் பல்வேறு மொழி வழக்குகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.சில சந்தர்ப்பங்களில், கிழக்குச் சிலாவிய மற்றும் தேவாலய சிலாவோனிய வடிவங்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டாலும், அவை வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டுள்ளன. + +பல நூற்றாண்டுகளாக, ரசிய மொழியின் சொல்வளமும், மொழிநடையும் கிரேக்கம், லத்தீன், போலிசு, டச்சு, செருமன், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் போன்ற மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்துக்குட்பட்டுள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மொழிகளான, யூரல்லிக், துருக்கிய மொழி, பாரசீக மொழி, அரபு மொழி போன்றனவும் சிறிதளவு தாக்கம் செலுத்தியுள்ளன. + +கலிபோர்னியாவின் மொன்டரேயில் அமைந்துள்ள பாதுகாப்பு மொழிகள் நிறுவனம், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர் கற்பதற்குச் சிரமப்படும் மொழிகளில் ரசிய மொழியை மூன்றாம் நிலையில் வகைப்படுத்தியுள்ளது. மேலும், ரசிய மொழியில் ஓரளவு புலமை பெற 780 மணித்தியால கற்றல் நடவடிக்கை தேவை எனவும் கணித்துள்ளது. ஆங்கில மொழிப் பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் அமெரிக்காவின் அரசியல் கொள்கைகள் காரணமாக, ஐக்கிய அமெரிக்க உளவுச் சமூகம் இம்மொழியை கடின இலக்குடைய மொழியாகக் குறிப்பிடுகிறது. + +சோவியத் காலப்பகுதியில், பல்வேறு இனக்குழுக்களின் மொழிகள் பற்றிய கொள்கை தளம்பலடைந்தே காணப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்குட்பட்ட ஒவ்வொரு குடியரசும், தனக்கேயுரிய உத்தியோகபூர்வ ��ொழியைக் கொண்டிருந்தாலும், ஒன்றிணைக்கும் பண்பும் உயர் நிலையும் ரசிய மொழிக்கே வழங்கப்பட்டது. எனினும், 1990ம் ஆண்டிலேயே ரசிய மொழி உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின், சுதந்திர நாடுகள் அவற்றின் தாய்மொழியை ஊக்குவித்தன. இதனால் ரசிய மொழியின் சிறப்பு நிலை மாறியது. எனினும், இவ் வலயத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கான மொழியாக ரசிய மொழியே தொடர்ந்தது. + +லத்வியாவில் இம்மொழியின் உத்தியோகபூர்வ நிலையும், கல்வி மொழியாகப் பயன்படும் நிலையும் வாதத்துக்குரியதாக உள்ளது. லத்விய மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகமானோர் ரசிய மொழி பேசுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், எசுத்தோனியாவில், ரசிய மக்கள் மொத்த மக்கள் தொகையில் 25.5% வீதமாக உள்ளதோடு 58.6% வீதமான எசுத்தோனியர் ரசிய மொழியைப் பேச வல்லோராவர். மொத்தமாக 67.8% வீதமான எசுத்தோனிய நாட்டினர் ரசிய மொழி பேச வல்லோராவர். எவ்வாறாயினும் எசுத்தோனிய இளைஞர்களிடம் ரசிய மொழிச் செல்வாக்கு வேகமாகக் குறைந்து வருகிறது. (தற்போது ஆங்கில மொழிப் பாவனை அதிகரித்து வருகிறது.) உதாரணமாக, 15-19வயதுக்கிடைப்பட்ட எசுத்தோனியரில் 53%மானோர் ரசிய மொழி பேசக்கூடியோராக விளங்குகையில், 10-14வயதுக்கிடைப்பட்ட எசுத்தோனியரில் 19%மானோரே ரசிய மொழி பேசவல்லோராக உள்ளனர். (இத்தொகை இதே வயதுப் பிரிவினரில் ஆங்கில மொழி பேச வல்லோராயுள்ள தொகையினரின் மூன்றிலொரு பங்காகும்.) + +கசாக்குசுத்தானிலும் கிர்கிசுத்தானிலும், முறையே கசாக்கு மொழி மற்றும் கிர்கிசு மொழியுடன் இணைந்த உத்தியோகபூர்வ மொழியாக விளங்குகிறது. பாரிய ரசிய மொழிபேசும் சமூகம் வடக்கு கசாக்குசுத்தானில் தற்போதும் காணப்படுவதோடு, கசாக்குசுத்தானின் மொத்த மக்கள் தொகையில் 25.6%மானோர் ரசியர்களாவர். + +லிதுவேனிய மக்கள்தொகையில் அண்ணளவாக 60%மானோர் ரசிய மொழியைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். மேலும், பால்டிக் நாடுகளின் மக்கள் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ரசிய மொழியை வெளிநாட்டு மொழியாகவோ அல்லது தாய்மொழியாகவோ பேசுகின்றனர். 1809இலிருந்து 1918 வரை பின்லாந்து பெரும் டச்சி ரசியப் பேரரசின் பாகமாக இருந்ததோடு, ரசிய மொழி பேசுவோர் குறிப்பிடத்தக்களவில் பின்லாந்தில் காணப்பட்ட���ர். ரசிய மொழி பேசும் பின்னியர் எண்ணிக்கை 33,400ஆகக் காணப்படுவதோடு, மொத்த மக்கள்தொகையில் 0.6%மாக உள்ளனர். இவர்களில் ஐயாயிரம் பேர் (0.1%) 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டில் குடியேறியோர் அல்லது அவர்களது வழிவந்தோராவர். ஏனையோர்1990கள் மற்றும் பிற்பகுதியில் குடியேறியோராவர். + +20ம் நூற்றாண்டில், வார்சோ ஒப்பந்த நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துக்குட்பட்ட நாடுகளின் பாடசாலைகளில் ரசிய மொழி பரந்தளவில் கற்பிக்கப்பட்டது. இவற்றுள், போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, சிலோவாக்கியா, அங்கேரி, அல்பேனியா, முன்னாள் கிழக்கு செருமனி மற்றும் கியூபா என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும், தற்போது ரசிய மொழி இந்நாட்டுப் பாடசாலைகளில் கட்டாயப் பாடமாக இல்லாததால், இளைஞர்கள் மத்தியில் இம்மொழித் தேர்ச்சி குறைவாக உள்ளது. யூரோபரோமீற்றர் 2005 கணக்கெடுப்பின் படி, சில நாடுகளில் ரசியமொழித் தேர்ச்சி சிறிது உயர்வாகக் (20–40%) காணப்பட்டாலும், சிலாவிய மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடுகளிலேயே ரசிய மொழிப் பயன்பாடு அதிகமாக உள்ளது (போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா மற்றும் பல்கேரியா என்பன அந்நாடுகளாகும்.2005ல், மங்கோலியாவில் வெளிநாட்டு மொழியாக அதிகளவில் போதிக்கப்பட்ட மொழியாக ரசிய மொழி விளங்கியதோடு, 2006ல், 7ம் தரத்திலிருந்து இரண்டாம் வெளிநாட்டு மொழி எனும் வகையில் கட்டாய பாடமாக்கப்பட்டது. + +முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இசுரேலில் வசிக்கும் சுமார் 750,000 யூதர்கள் ரசிய மொழியைப் பேசுகின்றனர் (1999 கணக்கெடுப்பு). இசுரேலிய ஊடகங்களும் இணையத் தளங்களும் ரசிய மொழியிலான வெளியீடுகளை சீராக வெளியிடுகின்றன. ஆப்கானிசுத்தானில் சிறுதொகையினர் ரசிய மொழியை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். (அவ்தே மற்றும் சர்வான், 2003). + +1700களில் ரசிய கடலோடிகள் அலாசுகாவை அடைந்து அதனை ரசியாவின் உரிமையாக்கியபோது ரசிய மொழி முதன்முதலில் வட அமெரிக்காவில் அறிமுகமானது. 1867ல், ஐக்கிய அமெரிக்கா இதனை வாங்கிய பின் பெரும்பாலான குடியேற்றக்காரர்கள் வெளியேறிவிட்டாலும் கூட, குறிப்பிடத்தக்க தொகையினர் இப்பிரதேசத்திலேயே தங்கி ரசிய மொழியைப் பாதுகாத்து வந்தனர். இன்று ஒரு சில முதியோர் மாத்திரமே இம்மொழியைப் பேசுகின்றனர். ர்சிய மொழி பேச���ம் சமூகம் குறிப்பிடத்தக்களவில் வட அமெரிக்காவெங்கிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மற்றும் கனடிய நகர்ப்பகுதிகளான நியூ யோர்க், பிலதெல்பியா, பொசுத்தன், லொசு ஏஞ்சல்சு, நாசுவில், சான் பிரான்சிசுக்கோ, சியாட்டில், இசுபோகனே, டொரன்றோ, பால்டிமோர், மியாமி, சிகாகோ, டென்வர் மற்றும் கிளீவ்லாந்து போன்ற இடங்களில் காணப்படுகின்றது. சில இடங்களில் இவர்கள் தங்களுக்கான பத்திரிகைகளை வெளியிடுவதோடு, சமூகக் குழுப்பகுதிகளில் வாழ்கின்றனர் (குறிப்பாக அறுபதுகளின் ஆரம்ப காலத்தில் குடியேறியோரின் வழித்தோன்றல்களாவர்). எனினும், அவர்களில் பூர்வீக ரசியர்கள் காற்பங்கினர் மாத்திரமே. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு முன்னர், வட அமெரிக்காவில் ரசிய மொழி பேசும் பெரும்பான்மையினராக இருந்தோர் யூதர்களாவர். பின்னர், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் மக்களது உள்வருகையினால் இந்நிலை மாற்றமுற்றது. இதன்போது பூர்வீக ரசியர்கள் மற்றும் உக்ரேனியர்கள் குடியேறியதோடு, சிறியளவில் ரசிய யூதர்களும் குடியேறினர். ஐக்கிய அமெரிக்க சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி, 2007ல் ஐக்கிய அமெரிக்காவில் 850,000க்கும் அதிகமானோர் ரசிய மொழியை முதன்மை மொழியாகப் பேசுகின்றனர். + +குறிப்பிடத்தக்க ரசிய மொழி பேசும் குழுக்கள் மேற்கைரோப்பாவில் காணப்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து வந்த குடியேறிகளே இவர்களது முன்னோர்களாவர். ஐக்கிய இராச்சியம், இசுப்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, பெல்சியம், கிரேக்கம், பிரேசில், நோர்வே மற்றும் ஒசுத்திரியா எனும் நாடுகளில் குறிப்பிடத்தக்க ரசிய மொழி பேசும் சமூகங்கள் ன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தவிர்ந்த அதிக ரசிய மொழி பேசுவோரைக் கொண்ட நாடு செருமனியாகும். இங்கு கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் ரசிய மொழி பேசுவோராவர். இவர்கள் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இறங்குவரிசையில், ரசிய மொழி பேசும் பூர்வீக செருமானியர், பூர்வீக ரசியர் மற்றும் யூதர்கள் என்போராவர். அவுசுத்திரேலிய நரங்களான மெல்போர்ன் மற்றும் சிட்னியில் ரசிய மொழி பேசுவோர் உள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் தென்கிழக்கு மெல்போர்னில் வாழ்வதோடு, குறிப்பாக புறநகர்ப் பகுதிகளான கார்னகீ மற்றும் கோல்பீல்ட் ஆகியவற்றில் உள���ளனர். இவர்களுள் மூன்றில் இரு பகுதியினர் ரசிய மொழி பேசும் செருமானியர், கிரேக்கர், யூதர், அசர்பைசானியர், ஆர்மீனியர் மற்றும் உக்ரேனியர் ஆகியோரின் வழிவந்தோராவர். இவர்கள் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின் தமது தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். ஒரு சிலர் தற்காலிக வேலை நிமித்தம் சென்றுள்ளனர். + +2011 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, அயர்லாந்தில் 21,639 பேர் ரசிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எனினும், இவர்களில் 13%மானோர் மாத்திரமே ரசிய நாட்டினராவர். 20%மானோர் ஐரியக் குடியுரிமையைக் கொண்டுள்ளதோடு, மேலும் 27%மானோர் லத்வியக் கடவுச்சீட்டையும், 14%மானோர் லிதுவேனியக் கடவுச்சீட்டையும் கொண்டுள்ளனர். மேலும் சிலர் லத்வியா மற்றும் லிதுவேனியாவிலிருந்து வந்த ரசிய மொழி பேசுவோராவர். இவர்கள் லத்விய அல்லது லிதுவேனியக் குடியுரிமை பெற முடியாதோராக உள்ளனர். 2011 கணக்கெடுப்பின் படி சைப்பிரசில் 20,984 ரசிய மொழி பேசுவோர் உள்ளதோடு சனத்தொகையில் 2.50%மாகக் காணப்படுகின்றனர். + +சீனாவிலுள்ள ரசியர்கள் சீனாவினால் அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களுள் ஒருவராவர். + +2006ல் வெளியிடப்பட்ட "டெமோசுகோப் வீக்லி" எனும் சஞ்சிகையின் தரவுகளுக்கு அமைய ரசிய கல்வி மற்றும் விஞ்ஞான அமைச்சின் சமூகவியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளரான A. L அரேபீபா, உலக அரங்கிலும், ரசியாவிலும் ரசிய மொழி தனது நிலையை இழந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். 2012ல், "20ம் 21ம் நூற்றாண்டுப் பகுதியில் ரசிய மொழி" எனும் புதிய ஆராய்ச்சிக்கட்டுரையை வெளியிட்ட A. L. அரேபீபா, உலகின் எல்லாப் பாகங்களிலும் ரசிய மொழி மேலும் நலிவடைந்து வருவதாகக் குறிப்பிட்டு தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ரசிய மொழி நலிவடைந்து சுதேச மொழிகள் முதன்மை பெற்றுள்ளதோடு, ரசிய சனத்தொகை வீழ்ச்சி மற்றும் ரசிய மொழி பேசும் மக்கள்தொகை வீழ்ச்சி என்பன காரணமாக உலகளவில் ரசிய மொழிச் செல்வாக்கு குறைவடைந்துள்ளது. + + + + +வியட்நாமிய மொழி + +வியட்நாமிய மொழி வியட்நாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். + +வியட்நாமிய மொழி, ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி. + +இம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது லத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது. + + + + +பல்கேரிய மொழி + +பல்கேரிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. பல்கேரியா, உக்ரேன், மோல்டோவா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. பல்கேரியாவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உத்தியோகபூர்வ மொழியாகும். பால்கன் பிரதேசத்தின் பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மொழியைப் பேசுகின்றனர். + + + + +பாரசீக மொழி + +பாரசீக மொழி (Persian language) ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஆகும். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய உப கண்டத்தில் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆதலால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். பாரசீக மொழியானது இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்பட்டு வருகிறது. + +இம்மொழி ஆப்கானிஸ்தானில் தாரி என்றும் தாஜிகிஸ்தானில் தாஜிக் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், ஈரானிலும் ஏனைய நாடுகளிலும் இம்மொழி 'பார்சி' என்று அழைக்கப்படுகிறது. தாஜிகிஸ்தானில் இதனை உருசிய மொழி போன்று திரிபடைந்த சிரிலிய வரிவடிவத்தில் எழுதப்பட்டபோதிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஏனைய நாடுகளில் அரபு மொழி எழுத்துக்களிலிருந்து திரிபடைந்த வரிவடிவத்தைப் பயன்படுத்தி வலமிருந்து இடமாகவே பாரசீக மொழி எழுதப்படுகிறது. பாரசீகத்தை இஸ்லாமியப் படைகள் வெற்றி க���ண்டு, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரசீக மொழியானது அரபு வரிவடிவத்தில் எழுதப்பட்டது. அதற்கு முன்னர், இன்றைய ஈரானின் பண்டைய மொழிகளான 'பஹ்லவி' மற்றும் அவெசுதா ஆகிய மொழிகளின் வரிவடிவங்களிலேயே அது எழுதப்பட்டு வந்தது. + +முகலாயப் பேரரசர்களின் காலத்தில் பேரரசின் ஆட்சி மொழியாகப் பாரசீக மொழியே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தொகுத்தெழுதிய பதாவா ஆலம்கீரி என்ற, ஹனஃபி சட்டத் துறையைச் சார்ந்த இஸ்லாமிய சட்ட நூலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. + +பாரசீக மொழி என்பது மத்திய பாரசீகத்தின் ஒரு தொடர்ச்சி ஆகும். இது சாசானியப் பேரரசின், அதிகாரப்பூர்வ மத மற்றும் இலக்கிய மொழி ஆகும். இது பழைய பாரசீகத்தின், தொடர்ச்சியான அகாமனிசியப் பேரரசின் மொழி ஆகும். இதன் இலக்கணம் இம்மொழிக்கு ஒப்பான சமகாலப் பயன்பாட்டிலிருந்த பல ஐரோப்பிய மொழிகளை ஒத்திருந்தது. + +தற்போது ஃபர்ஸ் (Fars) என்றழைக்கப்படும் அகாமனிசியப் பேரரசின், பெர்ஸிஸ் (Persis) மாகாணத்தின் தலைநகரான பாரசீகத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி "பாரசீக (Farsi) மொழி" எனவும், அம்மொழியைப் பேசும் மக்கள் "பெர்சபோன்கள் (Persophones)" எனவும், ஆழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. + +மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, மற்றும் தென் ஆசியா போன்ற பகுதிகளில் வெவ்வேறு பேரரசுகளில், பல நூற்றாண்டுகளாக, பாரசீக மொழி ஒரு மதிப்புமிக்க மொழியாகவும், கலாச்சார மொழியாகவும், பரவி இருந்தது. + +ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் சுமார் 110 மில்லியன் மக்களும் பாரசீக மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும், அதிகாரப்பூர்வ மொழியாகவும் கொண்டுள்ளனர். + +மத்திய ஆசியா, காகசஸ், அனடோலியா, ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள துருக்கிய மொழிகளிலும், அண்டைய ஈரானிய மொழிகளிலும், அருமேனிய மொழிகளிலும், சியார்சிய மொழிகளிலும், இந்தோ-ஆரிய மொழிகளிலும்,  உருதுமொழியிலும், இந்துசுத்தானி மொழிகளிலும், பாரசீக மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இது அரபு மொழி, குறிப்பாக பஹரானி (Bahrani) அரபு மொழியிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் இம்மொழி அரபு மொழியிலிருந்து அதிக அளவு சொற் குவியலைக் கடனாகப் பெற்று, செல்வாக்கு மிகுந்த மொழியாக விளங்குகிறது. + +மேற்கத்திய பாரசீக மொழி, பார்ஸி (پارسی "pārsi") அல்லது ஃபார்ஸி (فارسی "fārsi)" அல்லது ஸபான்-எ-ஃபார்ஸி (زبان فارسی"zabān-e fārsi") எனும் பாரசீக மொழியானது, 20 ஆம் நூற்றாண்டின் சமீபம் வரை, பாரசீக நாட்டவரால், தாய்மொழியாகப் பேசப்பட்டு வந்ததது. பாரசீக மொழி பெருமளவில் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும், ஈரானில் பயன்படுத்தப்படும் பாரசீக மொழி ஃபார்ஸி வகையைச் சார்ந்தது என்று சில மொழியியல் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். + +கிழக்கு பாரசீக மொழி, டாரி பாரசீகம் (دری darī) அல்லது ஃபர்ஸி-ஏ-டாரி (فارسی دری fārsi-ye dari) கிழக்கு பாரசீகப் பகுதிகளிலதிக அளவுப் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு இணையான வேறு பெயர் ஃபர்ஸி (Fārsi) என்பதாகும். இருபதாம் நூற்றாண்டில் இதன் பெயர் மருவி, ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி என்றானது. அப்பொழுது இது ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் 'ஆப்கானின் பாரசீக மொழி' என்று அழைக்கப்படுகிறது. + +டஜிகி மொழி, (тоҷикӣ, تاجیکی tojikī) அல்லது (ஸபோன்-ஐ-டோஜிகி забони тоҷикӣ / فارسی تاجیکی zabon-i tojiki) என்றழைக்கப்படும் டஜிகி மொழியானது, தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்பொழுதும் பயன்பாட்டில் உள்ள பாரசீக மொழியாகும். + +அகாமனிசியப் பேரரசின் கல்வெட்டுகளில் பழைய பாரசீக எழுத்து மொழி, காணப்படுகிறது. பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், பழைய பாரசீக மொழியில் எழுதப்பட்ட உரைகள் காணப்படுகின்றன. + +ஈரான், ருமேனியா (Gherla), ஆர்மீனியா, பஹ்ரைன், ஈராக், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளில், பழைய பாரசீக மொழிப் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், பழைய பாரசீக மொழி, சான்றிடப்பட்ட பழமையான மொழியாக உள்ளது. + +நவீன ஈரானிய, பாரசீக மற்றும் தாரி உரைகளின் பெரும்பகுதி அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. தாஜிகி மொழியானது, பாரசீக மொழியின் வட்டாரப் பேச்சுமொழியாகவும், கிளைமொழியாகவும் கருதப்படுகிறது. இம்மொழி, உருஷ்ய மொழிகளையும், மத்திய ஆசியாவின் துருக்கிய மொழிகளையும், தன் வசமாக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தாஜிகிஸ்தான் நாட்டில் இம்மொழி, சிரிலிக் எழுத்துக்களால் எழுதப்படுகிறது. + + + + +செக் மொழி + +செக்க மொழி "அல்லது" செசுதீன மொழி என்��து இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது செக் குடியரசு, குரோவாசியா, செருபியா போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி சுலோவாக்கிய மொழியுடன் அதிக நெருக்கமுடையது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி செக்க எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. + + + + +இந்தோனேசிய மொழி + +இந்தோனேசிய மொழி ("Indonesian language") இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கிடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்தின் பேச்சு வழக்கினை ஒத்ததாகும். இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. மலாய் மொழியை ஒத்தது. 1945 இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது. கிட்டத்தட்ட 100% இந்தோனேசியர்களால் சரளமாகப் பேசப்படக்கூடிய இம்மொழி, உலகில் அதிகளவு மக்களால் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. + +இந்தோனேசிய மொழியில் சாவக மொழியின் செல்வாக்கு மிகுந்திருப்பதுடன் அரபு, சமஸ்கிருதம், தமிழ், சிங்களம், ஆங்கிலம், நெதர்லாந்து மொழி, சீனம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட ஏராளமான வேற்று மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. ஜகார்த்தாவிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேசப்படும் மொழி வழக்கில் பத்தாவி மொழியின் தாக்கம் அதிகம். இதன் இலக்கணவமைப்பு பெரும்பாலும் அரபு மொழியின் இலக்கணவமைப்பை ஒத்திருப்பதையும் காண முடிகின்றது. எனினும், இந்தோனேசிய மொழியில் பால், எண், இடம், காலம், ஒருமை-பன்மை போன்ற வேறுபாடுகள் காணப்படுவதில்லை. + +அவுத்திரனீசிய மொழிகளில் ஒன்றாகிய இந்தோனேசிய மொழி மலாய மொழியின் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தோனேசியாவின் அலுவல் முறை மொழியாகிய இது சிங்கப்பூர், மலேசியா, கிழக்குத் திமோர் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இந்தோனேசியாவில் சாவக மொழியைப் பேசுவோரே பெருமளவிற் காணப்பட்ட போதிலும் பல்லாயிரக் கணக்கான தீவுகளிலும் பல நூற்றுக் கணக்கான மொழிகளும் பல்லாயிரக் கணக்கான வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. +முன்னர் இம்மொழி அரபு வரிவடிவத்தைச் சேர்ந்த ஜாவி எழுத்து முறையில் எழுதப்பட்ட போதிலும் இருபத��ம் நூற்றாண்டில் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டில் இதன் பழைய எழுத்தமைப்பு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட எழுத்தமைப்புக்கள் பின்வருமாறு: + +உயிர் +உயிர்மெய் +"குறிப்புக்கள்" + +இவை தவிர sh என்பது அரபு மொழியின் ஸாத் எனும் ஒலியையும் th என்பது அரபு மொழியின் தா (இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் தோ எனப்படுகின்றது) எனும் ஒலியையும் குறிக்கப் பயன்படுகின்றன. ஆயினும் "அஸ்ஹன்தி" (Ashanti) என்பது போன்ற சில பெயர்களில் இவை சேர்ந்து வரும் போது இவற்றைப் பிரித்து வாசிக்கப்படுவதுண்டு. + +இலத்தீன் எழத்தாகிய X என்பது இந்தோனேசிய மொழிச் சொற்களில் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்குப் பதிலாக KS ஆகிய இரு எழுத்துக்களுமே பயன்படுத்தப்படுகின்றன. முன்னர் வாடகை வண்டியை Taxi எனக் குறிக்கப்பட்ட போதிலும், தற்காலத்தில் Taksi ("தக்ஸி") என்றே எழுதப்படுகிறது. + +இந்தோனேசிய மொழியில் குறில், நெடில் வேறுபாடுகள் காணப்படுவதில்லை. ஆயினும் மொழியும் போது வெவ்வேறு இடங்களில் குறிலாகவும் நெடிலாகவும் மொழியப்படுவதுண்டு. பொதுவாக மொழியின் தொடக்கத்தில் வரும் உயிர்மெய் ஓசைகள் குறிலாகவும், நெடிலாக ஒலித்த பின் தொடரும் வேறுபட்ட உயிர் மெய் குறிலாகவும் ஒலிப்பதுண்டு. ம(ச்)சம் மா(ச்)சம் (macam-macam), ஜலான் ஜாலன் (jalan-jalan) என்பது போன்று ஒரே சொல் இரட்டித்து வரும் போது முதலாவதில் குறிலாகவும் பின்னர் நெடிலாகவும் மொழியப்படும் இடங்களும் காணப்படுகின்றன. ஆயினும் இதற்குப் பொதுவான விதி என்று எதனையும் கூறுவது கடினம். + +தமிழில் காணப்படும் சில ஓசைகள் இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. சட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஒலியோ, வந்தான் என்பதில் வருவது போன்ற தகர ஒலியோ இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. அடம் என்பதில் வருவது போன்ற டகர ஒலி D எனும் எழுத்தினாலும், தரம் என்பதில் வருவது போன்ற தகர ஒலி T எனும் எழுத்தினாலும் குறிக்கப்படுகின்றன. எனவே, bukit (குன்று) என்பதை "புக்கிட்" என்று ஒலிபெயர்ப்பது போன்ற ஒலிபெயர்ப்புக்கள் பிழையாகி விடுகின்றன. அது "புக்கித்" என்று ஒலிபெயர்க்கப்பட்டாக வேண்டும். + +இந்தோனேசிய மொழியில் ஒரே எழுத்து இரு வேறு விதமாக மொழியப்படுவதும் இரு எழுத்துக்கள் ஒருங்கமைய மொழியப்படுவதுமுண்டு. அடிப்படையில் இந்தோனேசிய மொழியில் காணப்படாத F, Z போன்ற எழுத்துக்கள் வேற்றுமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்களை எழுதப் பயன்படுகின்ற. ஆயினும் இவை மொழியப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படும். எடுத்துக் காட்டுக்களாவன: + +முற்காலத்தில் V எனும் எழுத்து தமிழின் வகரத்தைப் போன்றே மொழியப்பட்டு வந்துள்ளமை பண்டைய மலாய ஆக்கங்களிலிருந்து தெளிவாகின்றது. பண்டைய கல்வெட்டுக்கள், சுவடிகள் போன்றவற்றை வாசிக்கும் போது இம்முறையே பின்பற்றப்படுகிறது. ஆயினும் வகரம் தற்காலத்தில் W எனும் எழுத்தால் எழுதப்படுகின்ற அதே வேளை, V எனும் எழுத்து F எனும் எழுத்தின் ஓசையை நெருங்கி ஒலிக்கிறது. + +E எனும் எழுத்து வருமிடங்களில் எகரமாக மொழியப்படுவதும் அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்டதாக மொழியப்படுவதும் என இரு விதங்களுண்டு. தமிழில் அகரமாக எழுதப்படும் அத்தகைய இடங்கள் இம்மொழியை அறியாத தமிழர்களுக்கு விளங்கிக் கொள்வதில் குழப்பத்தையேற்படுத்தலாம். Nasi gudeg என்பதை "நாஸி குடெக்" என்று கூறுவதில்லை. அது "நாஸி குடக்" எனப்படுகிறது. Emas, enam, enak போன்ற சொற்களில் உள்ள E என்பது அகரத்துக்கும் எகரத்துக்கும் அஃகானுக்கும் ஒரு முக்கோணமிட்டு நடுவில் ஒலிப்பது போன்று தோன்றும். இதையும் வேறு சில சொற்களின் ஒலியமைப்பையும் பழக்கத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, tahu என்ற சொல்லில் உள்ள h என்ற எழுத்தைக் குறுக்கி "தாஉ" என்பது போன்று மொழிந்தால் அறி/அறிவேன் என்றவாறு பொருளேற்படினும், அதிலுள்ள h எழுத்தை அழுத்தி "தாகு" என்று மொழிந்தால் அது ஒரு உணவுப் பண்டத்தின் பெயராகும். + +இந்தோனேசிய மொழியில் சாவக மொழியைப் போன்றே பெரும்பாலான சொற்களின் இறுதியில் வரும் K எனும் எழுத்து மொழியப்படாதிருப்பதும் சில வேளைகளில் கால் மாத்திரையளவு மொழியப்படுவதுமுண்டு. அத்தகைய சொற்கள் ஆய்த எழுத்து இறுதியில் வருவது போன்றே பெரும்பாலும் மொழியப்படுகின்றன. எடுத்துக் காட்டாக batuk (பத்துஃ), demak (டெமாஃ), perak (பெராஃ) போன்ற சொற்களைக் குறிக்கலாம். பத்துக் அல்லது பத்துகு என்றவாறோ, டெமாக் அல்லது டெமாகு அல்லது தெமாகு என்றவாறோ, பெராக், பெராகு, பேராக் என்றவாறோ மொழியும் போது இத்தகைய சொற்களின் பொருள் மாறுபடலாம். இவ்வாறான ஒலிபெயர்ப்பு “வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்ற கதையைப் போ���்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கலாம். + +இந்தோனேசிய மொழியில் சில ஓசைகள் தமிழுக்கு நெருங்கி ஒலிக்கின்ற போதிலும் அவற்றுட் சில இந்தோனேசியச் சூழலுக்குப் பழகாத வேற்று மொழிக்காரால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுவது கடினமாகும். அதனால், அது வேற்று மொழிக்காரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகம். + +இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி என்பன ஒரே மொழியின் இரு வேறு தரப்படுத்தல்களே. ஆயினும் இவற்றின் ஜாவி வரிவடிவம், இலத்தீன் வரிவடிவம் என்பன எங்கும் ஒத்திருப்பதுடன் ஒலிப்பு முறையும் ஒன்றாவே இருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படும் சொற்கள் ஒரே விதமாகவே மொழியப்படுகின்றன. + +இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த காலத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் அன்றைய மலாயாவுக்கு அரசாங்கப் பணிகளுக்காகச் சென்றிருந்தனர். ஆங்கில மொழிக் கல்வி பெற்றிருந்த அவர்களே மலாய மொழிப் பெயர்களைத் தமிழில் எழுதத் தொடங்கியிருந்தனர். எனவே அவர்கள் ஆங்கில மொழியில் ஒலிப்பதே போன்று மலாய மொழிப் பெயர்களை எழுதி விட்டனர். இதன் காரணமாக இன்று வரை சில சொற்கள் தமிழில் மலாய மூலத்துக்கு மாற்றமாகவே புழக்கத்திலுள்ளன. எடுத்துக் காட்டுக்கள் சில பின்வருமாறு: + +இத்தகைய தவறான ஒலிபெயர்ப்புக்கு மேலும் பல உதாரணங்களைக் காட்டலாம். "மலாய்சியா" (Malaysia) என்பது மலேசியா என்றெழுதப்படுவதும், "மலாயா" (Malaya) என்பது மலேயா என்றெழுதப்படுவதும், "மலாயு" (Melayu) என்பது மலே (Malay) என்றெழுதப்படுவதும், "குவாளா ளும்பூர்" (Kuala Lumpur) என்பது கோலாலம்பூர் என்றெழுதப்படுவதும் இத்தகைய ஆங்கில வழி ஒலிபெயர்ப்பின் விளைவுகளே. + +இந்தோனேசியாவில் காணப்படும் பல நூற்றுக் கணக்கான மொழிகளையும் பல்லாயிரக் கணக்கான பண்பாடுகளையும் கொண்டோர் "இந்தோனேசிய மொழி" என்ற பெயரில் தரப்படுத்தப்பட்ட ஒரு மொழியினூடாகவே இணைக்கப்படுகின்றனர். பல்வேறு மொழிக்காரரும் தத்தம் மொழியின் சொற்களைப் புகுத்திப் பேசுவதுமுண்டு. அவரவரது தாய்மொழிக்கு ஏற்றவாறு இந்தோனேசிய மொழிச் சொற்கள் மொழியப்படுவதுமுண்டு. இதன் காரணமாக சாவகம், சுண்டா, மதுரா, பாலி, பத்தா, படாங், அச்சே, கொரொன்தாளோ, மகசார், பஞ்சார் போன்ற பல்வேறு மொழிகளினதும் சொற்கள் இந்தோனேசிய மொழியை வளப்படுத்துகின்றன. + +ஆயினும் ஒரே சொல் இரு வேறு மொழிகளில் இரு வேறு பொருள் கொடுப்பதுண்டு. எடுத்துக் காட்டாக, இந்தோனேசிய மொழியில் பீரு என்றால் நீல நிறம். மதுரா மொழியில் பீரு என்றால் பச்சை நிறம். + +இந்தோனேசியாவில் சொற்றொடர்களைச் சுருக்கி மொழியும் வழக்கம் காணப்படுகிறது. பெயர்களையும் அவ்வாறே சுருக்கி மொழிவதுண்டு. எடுத்துக் காட்டாக, "நாஸி கோரெங்" (nasi goreng) என்பதை "நஸ்கோர்" (nasgor) என்று மொழிவதும் சுகர்னோ ஹத்தா (Soekarno-Hatta) என்பதை சுத்தா (Soetta) என்றும் மொழிவதும் சர்வ சாதாரணம். ஆயினும் இத்தகைய சுருக்கல் இடத்துக்கிடம் வேறுபட்ட விதத்தில் புரிந்து கொள்ளப்படுவதுமுண்டு. எடுத்துக் காட்டாக, ஜகார்த்தாவில் பனிக்கட்டியிட்ட இனிப்பான தேனீர் என்பதை "எஸ் தேஹ் மானிஸ்" (es teh manis) என்று கூறப்படுகிறது. இதுவே மேடானில் குளிர்ந்த இனிப்பான தேனீர் என்றவாறு, தேஹ் மானிஸ் டிஙின் (teh manis dingin) என்பதைச் சுருக்கி "தேஹ் மாண்டி" என்றோ (teh mandi) வெறுமனே "மாண்டி" (mandi) என்றோ கூறப்படுகிறது. உண்மையிலேயே மாண்டி என்றால் குளித்தல் என்று பொருள். இத்தகைய சொற் பயன்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. + + + + + + + +விண்ணுக்கும் மண்ணுக்கும் + +விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராஜகுமரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், தேவயானி, சரத்குமார், குஷ்பூ போன்ற பலர் நடித்துள்ளனர். + +காதல்படம் + + + + +தூள் (திரைப்படம்) + +தூள் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் போன்ற பலர் நடித்துள்ளனர். இப் படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார். + + + + + +மஜா + +மஜா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சஃபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன், வடிவேல், விஜகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார். + +மசாலாப்படம் + + + + + +சாமுராய் (திரைப்படம்) + +சாமுராய் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அனிதா, நாசர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +மசாலாப்படம் + + + + + +கிங் (திரைப்படம்) + +கிங் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாலமோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஸ்னேகா, வடிவேல், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்தார். + + + + +ஜெமினி (2002 திரைப்படம்) + +ஜெமினி 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், கிரண், மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்து உள்ளார். + +மசாலாப்படம் / காதல்படம் + + + + +அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை + +உலக நாடுகள் அமெரிக்காவின் டொலரை நம்பிக்கையின் அடிப்படையில் பணமாக பயன்படுத்துகின்றன. இந்த செயல்பாட்டை அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை ஐக்கிய அமெரிக்காவின் ஆயுத பலத்தையும், தெழில்நுட்பத் திறனையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளைச் செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதாரத் திடநிலையைப் பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை. + + + + + + +அனைத்துலக நாணய நிதியம் + +அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதரவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்பொழுதும் ஒரு ஐரோப்பியராக இருப்பதும், உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராக இருப்பதும் வழக்கம். + +அனைத்துலக நாணய நிதியம் முதலில் 1944 ல் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டம் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது.ப��ரும் மந்த நிலையின் போது, நாடுகளே தங்கள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை மேம்படுத்தும் முயற்சியில் வர்த்தகத்திற்குத் தடைகளை அதிகப்படுத்தின. இது தேசிய நாணயங்களின் பரிவர்த்தனை மற்றும் உலக வர்த்தகத்தில் சரிவுக்கு வழிவகுத்தது. + +சர்வதேச நாணய ஒத்துழைப்பின் இந்த முறிவு மேற்பார்வையின் தேவையை உருவாக்கியது. சர்வதேச அரசாங்க ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை பற்றி விவாதிக்க அமெரிக்காவின் நியூ ஹெம்சிபியரிலுள்ள ப்ரெட்டன் வூட்ஸ் நகரத்தில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 45 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் [Bretton Woods Conference] மாநாட்டில் ஐரோப்பாவை மீண்டும் எப்படி கட்டி எழுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. + +சர்வதேச நாணய நிதியம் ஒரு உலகளாவிய பொருளாதார நிறுவனமாகக் கருதப்பட வேண்டிய பங்கு பற்றி இரண்டு கருத்துக்கள் இருந்தன. அமெரிக்க பிரதிநிதி ஹாரி டெக்ஸ்டர் வைட் அனைத்துலக நாணய நிதியம் ஒரு வங்கியைப் போலவே செயல்பட்டதை முன்னறிந்து, கடன்களைப் பெறும் மாநிலங்கள் தங்கள் கடன்களை சரியான கால்த்தில் திருப்பிச் செலுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்.வெள்ளை திட்டத்தின் பெரும்பகுதி Bretton Woods இல் மேற்கொள்ளப்பட்ட இறுதி செயல்களில் இணைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் ஒரு கூட்டுறவு நிதியமாக இருக்கும் என்று பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர் ஜோன் மேனார்ட் கெயின்ஸ் கற்பனை செய்தார், அதில் உறுப்பினர்கள் மாநிலங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைகள் தற்காலிக நெருக்கடிகளால் தக்கவைக்க கூடும். இந்த கருத்து சர்வதேச நாணய நிதியத்தை முன்மொழிகிறது, இது அரசாங்கங்களுக்கு உதவியது மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு விடையிறுப்பாக புதிய உடன்படிக்கையின் போது ஐக்கிய மாகாணங்களில் செயல்பட்டது. + +மே மாதம் 2010 ல் IMF மற்றும் கிரேக்க பிணை எடுப்பு ஆகியவற்றின் மொத்த கிரேக்க பிணை எடுப்புக்கான கிரேக்க அரசாங்க கடன் நெருக்கடி # மீட்புப் பொதிகளில், 311 பில்லியன் யூரோ பங்குகளில், பொது கடன் பற்றாக்குறையால் தொடர்ந்து ஏற்படும் பொதுக் கடன். பிணை எடுப்பின் ஒரு பகுதியாக, கிரேக்க அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டது, இது பற்றாக்குறையை 2009 ல் 11% இலிருந்து 2014 ல் "3 சதவிகிதம் குறைவாக" குறைக்கும் என்று கூறியது.பிணை எடுப்பில் சுவிஸ், பிரேசிலிய, இந்திய, ரஷ்ய, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அர்ஜென்டினியர் இயக்குநர்கள், கிரேக்க அதிகாரிகள் தங்களைத் தாங்களே (Haircut) நிதி குறைப்பு போன்ற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சேர்க்கவில்லை. + +சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் இறையாண்மை மாநிலங்களாக இல்லை, ஆகையால் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து "உறுப்பு நாடுகளும்" ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் இல்லை.ஐ.நா.வின் உறுப்பு நாடுகளாக இல்லாத சர்வதேச நாணய நிதியத்தின் "உறுப்பு நாடுகளில்" குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் கீழ் அதிகாரபூர்வமான அதிகார வரம்புகள் இல்லாத நாடுகள் எ.கா. அருபா,குராக்கோ, ஹாங்காங், மற்றும் மாகோ, அதேபோல் கொசோவோ. +கார்ப்பரேட் உறுப்பினர்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ள முன்னாள் அதிகாரப்பூர்வ வாக்காளர் உறுப்பினர்களை நியமிக்கிறார்கள்.சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து உறுப்பினர்களும் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (Reconstruction and Development for International Bank) (IBRD) உறுப்பினர்களாக மற்றும் வேறுவழியின்றி இருக்கின்றனர். + +சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு உறுப்பினராக எந்த நாடும் விண்ணப்பிக்கலாம். பிந்தைய IMF அமைப்பு, போருக்கு பிந்தைய காலத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் விதிகள் ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை வழங்காதபட்சத்தில், சர்வதேச நாணய நிதிய விதிகளின் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்கவும், தேசிய பொருளாதார தகவலை வழங்கவும், நாணயக் கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். இருப்பினும், IMF க்கு நிதியளிக்கும் அரசாங்கங்களுக்கு கடுமையான விதிகளை விதித்தது. + +1945 மற்றும் 1971 க்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்த நாடுகள் தங்கள் பரிமாற்ற விகிதங்களை வைத்திருக்க ஒப்புக் கொண்டன. இது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் படி, கட்டணத்தை சமநிலையில் ஒரு "அடிப்படை சமநிலையை" சரிசெய்வதற்கு மட்டுமே சரிசெய்யப்பட்டது. + +சில உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் சிரமமான உறவு கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட அவர்கள் தங்களை கண்காணிக்க அனுமதிக்கவில்லை. உதாரணமாக அர்ஜென்டினா, சர்வதேச நாணய நிதியத்துடனான ���ரு உறுப்பபினர் ஆயினும் கட்டுரை IV ஆலோசனைக்குழுவில் பங்கேற்க மறுக்கிறது. + +சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்து உறுப்பு நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய தகவல்களுக்கு, வங்கி உறுப்பினர்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் பரிமாற்ற விவகாரங்கள் ஆகியவற்றில் பிற உறுப்பினர்களின் பொருளாதார கொள்கைகளை, கஷ்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. + +ஆளுநர்கள் குழு ஒன்று ஒரு கவர்னர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினர் நாட்டின் ஒரு மாற்று கவர்னர் கொண்டுள்ளது.ஒவ்வொரு உறுப்பினர் நாடும் அதன் இரண்டு ஆளுநர்களையும் நியமிக்கிறது.வாரியம் வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை கூடி, சபையில் நிர்வாக இயக்குநர்களைத் தேற்தெடுக்கும் அல்லது நியமனம் செய்யும். ஒதுக்கீட்டு அதிகரிப்பை அங்கீகரிப்பதற்கு ஆளுநர்களின் சபை அதிகாரப்பூர்வமாக பொறுப்பாக இருக்கும்போது, சிறப்பு வரைபட உரிமை ஒதுக்கீடு,புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உறுப்பினர்கள் கட்டாயமாக திரும்பப் பெறுதல், உடன்படிக்கை மற்றும் சட்டங்கள் ஆகியவற்றிற்கான திருத்தங்கள், நடைமுறையில், அதன் அதிகாரங்களை பெரும்பாலானவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தது. + +24 நிர்வாக இயக்குநர்கள் உள்ள குழு ஒரு நிர்வாகக் குழுவாக உள்ளது. நிர்வாக இயக்குனர்கள் புவியியல் அடிப்படையிலான பட்டியலில் உள்ள அனைத்து 189 நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.பெரிய பொருளாதார நாடுகள் தங்கள் சொந்த நிர்வாக இயக்குநரைக் கொண்டுள்ளன, ஆனால் பெரும்பாலான நாடுகள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் இனைந்து ஒரு குழுவாக தங்களின் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. + +சர்வதேச நாணய நிதியம் ஒரு நிர்வாக இயக்குநரால் தலைமை நிர்வாக அதிகாரி தலைவராகவும், நிறைவேற்று சபையின் தலைவராகவும் செயல்படுகிறது. நிர்வாக இயக்குனர் ஒரு முதல் பிரதி நிர்வாக இயக்குனரும் மற்றும் மூன்று துணை நிர்வாக இயக்குநர்களும் உதவி வருகின்றனர்.வரலாற்று ரீதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஐரோப்பியர் மற்றும் உலக வங்கியின் தலைவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர். எவ்வாறாயினும், இந்தத் தரநிலை அதிகரித்து வருகின்றது மற்றும் இந்த இரண்டு பதில்களுக்கான போட்டி உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் மற்ற தகுதியுள்ள வேட்பாளர்களை சேர்ப்பதற்கு விரைவில் திறக்கப்படலாம். + +2011 ல், உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளின், BRIC நாடுகள் கூட்டமைப்பு, பின்வரும் அறிக்கையை வெளியிட்டது. பாரம்பரியமாக ஒரு ஐரோப்பியரை நிர்வாக இயக்குனராக நியமிக்கும் முறையானது சர்வதேச நாணய நிதியத்தின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, எனவெ தகுதி அடிப்படையிலான நியமனம் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. + +அண்மைக் காலத்தில் (2006, 2007) பல நாடுகள் அனைத்துலக நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதை தவிர்த்தும், பெற்ற கடனை அடைத்தும் வருவதால், அனைத்துலக நாணய நிதியத்தின் வருமானம் குறைந்து, அதன் பலம் சற்று குறுகி வருகின்றது. + + + + + + +அப்பு + +அப்பு 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வசந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் பிரசாந்த், தேவயானி, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டாக்ஸி டிரைவர் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் பாணியில் சில காட்சியமைப்புகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. + +காதல்படம் / மசாலாப்படம் + +அப்பு (பிரசாந்த்) தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு தனது சகோதரியின் இறப்பிற்குக் காரணமாக இருந்த ஒரு பெண்ணைத் தேடி வருகின்றான். அங்கு இரவு பகலும் கண்விழித்து பணிபுரியும் அப்பு தன் குறிக்கோளை அடைவதற்காக வாழ்கின்றான். அவனுடன் வாழும் அவனது தோழர்களின் சொல்லையும் பொருட்படுத்தாது இரவு பகல் என்ப பாராது வாகன ஓட்டுனராகப் பணிபுரிகின்றான். ஒரு சமயம் மும்பையில் இருந்த பாலியற் தொழில் நடக்கும் விடுதியில் வண்டிப் பயனரை இறக்கும் சமயம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக காடையர்கள் அழைத்துச் செல்வதைப் பார்க்கின்றார். பின்னர் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னிடன் இருக்கும் பணத்தையெல்லாம் அப்பாலியற் தொழில் விடுதியை நடத்தும் மகாராணியிடம் (பிரகாஷ்ராஜ்) தருகின்றார். வெளியில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அவர் பின்னர் அப்பெண்ணைக் காதலிக்கின்றார். அவரை அங்கிருந்து கடத்திச் செல்லும் அப்பு பின்னாட்களில் மகாராணியே தன் சகோதரியின் மரணத்திற்குக் காரணமானவர் என்பதனைத�� தெரிந்து அவரைப் பழிவாங்குகின்றார். + + + + +காதலர் தினம் (திரைப்படம்) + +காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர். + + + + + +மகாநதி (திரைப்படம்) + +மகாநதி 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். + + + + + + +பாய்ஸ் (திரைப்படம்) + +பாய்ஸ் (2003) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + +பாடலாசிரியர் - கபிலன் + + + + + + +லவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்) + +லவ் பேர்ட்ஸ், (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, மனோரமா, வடிவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் நக்மாவின் தொப்புள் காட்சி பெரும் வரவேற்புப்பெற்றது. அதில் நக்மாவின் தொப்புளில் முட்டைகளை உடைத்து இட்டு முட்டை ஊற்றப்பம் செய்யப்படும் காட்சி மிக பிரபலமானது. + + + + + + +லேசா லேசா + +லேசா லேசா (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரியதர்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மலையாளத்திரைப்படமான சம்மர் இன் பெத்தலகேம் திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். + + + + +வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் + +வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தித் திரைப்படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மறு தயாரிப்பாகும். இத்திரைப்படம் 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + +சரண் இயக்கிய இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியவை. 2004 ஆவது ஆண்டில் சூலை மாதத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின. +உலகம் முழுதும் 285 திரையரங்குகளில் வெளியான இப்படம் சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்கள் இப்படத்தை பார்த்துள்ளனர். + + + + +பாபா (திரைப்படம்) + +பாபா 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். + +மசாலாப்படம் / ஆன்மீகப்படம் + + + + + +அவ்வை சண்முகி + +அவ்வை சண்முகி (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. + + + + + +ரூபி (நிரலாக்க மொழி) + +ரூபி (Ruby Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இன்றைய நாளில் இணையத்தில் மிகுந்த அங்கீகாரமும் பிரபலமும் அடைந்துவரும் மொழி இதுவே. இம்மொழியை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுகிரோ மாட்ஸுமோட்டோ என்ற நிரலாளர். + +வருக வையகமே நிரல் +வெளியீடு(Output) +வேறுபடுபவை(Variable) +வெளியீடு(Output) +இணை ஒப்படைப்பு(parallel assignment) +வெளியீடு(Output) +கூற்று(Expression) +வெளியீடு(Output) +கூற்று +வெளியீடு(Output) +சரம்(String) +வெளியீடு(Output) + + + + +கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் + +தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரத்திலுள்ள “செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி” கோயில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் 10 நாட்கள் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளன்று “தேர்த் திருவிழா” நடைபெறுவது இங்கு குறிப்பிடக்கூடியது. + +தமிழகச்சுற்றுலா + +http://www.ganapathy88.blogspot.com/view/timeslide + + + +சாமுராய் + +சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர்." புஷிடோ" என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது. + +சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் "செப்புக்கு" என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது இச் செபுக்கு செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர். + +சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று "மினமோட்டோ" இனம், மற்றொன்று "டைய்ரா" இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர். + +கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இ���ாணுவ (படையாளர்) ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். "ஷோகுன்" எனப்படும் படைத்துறையின் (இராணுவத்தின்) உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால், அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார். + +இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் மேலாண்மை (ஆதிக்கம்), அல்லது அதன் தேவை அதிகமாகயிருந்தது. போர்க் காலத்தைத் தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் வேளாண்மையும் (விவசாயமும்) செய்துவந்தனர். + +திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா எடுத்தப்படங்களில் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான். +-- 11:32, 14 மார்ச் 2011 (UTC)yuvaraj + +"டோயோடோமி ஹிடேயோஷி" ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இது பின்னர் "டோகுகவா லேயாசு" என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது வேளாண்மை செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார். + +இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் உழவர்கள் பயிற்தொழிலாளர்கள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது. + +சாமுராய்கள் அவர்களுக்கென நிலையான குடியிருப்புப் பகுதியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டார்கள்.. பின்னர் அவர்களுக்கான கூலியை தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. + +பின்னர் அவர்களின் நிலையானகுடியிருப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் "டோகுகவா"வின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவ��்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது. + +ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள். அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்ட்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது. + +சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். தொடக்கத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் "கடனா" என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளன. + +சாமுராய்கள் "கடானா" என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் . அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் தொடக்க காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது. + +இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர். + + + + + + +இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் + +இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இது இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது, இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பெயர் மாற்றம் ஏற்பட்டது. இது பொதுவாக இந்திய வம்சாவளி தழிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார். + +1900 களின் ஆரம்பத்தில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு அலைகளை எழத்தொடங்கியிருந்தன. இலங்கை, இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தியது மேலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறும் படி நிர்பந்தித்து வந்தது. இதனால் தோட்டப்புரங்களிலும் கொழும்பிலும் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மற்றும் மலையாளிகள் பல இன்னகளுக்கு முன் கொடுத்து வந்தனர். சிங்கள மகா சபை இந்திய வம்சாவளி மக்க���ுக்கு எதிரான பல போரட்டங்களை நடத்தி வந்தது. + +1939 அரசவையில் இரண்டு தீர்மானங்கள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. முதலாவது 15, 000 இந்தியர்களை நாடுகடத்தும் தீர்மானம் இரண்டாவது அரச சேவையில் இருந்த சகல இந்தியர்களையும் நாடுகடத்தல் என்பனவாகும். இதன் போது கொழும்பில் ஒன்று கூடிய இந்திய சங்கங்களின் பிரதிதிகள் இவ்விடயத்தை இந்திய தேசிய காங்கிரசிடமும் மகாத்மா காந்தியிடமும் கொண்டு செல்வதாக தீர்மானித்தது. அப்போது இலங்கை அரசவை பிரதிந்திகளாக இருந்த வைத்தியலிங்கம், பெரெய்ரா என்ற இருவரும் இந்தியா சென்று காந்தியை சந்த்தித்தனர். காந்தி தனது விசேட பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். யூலை 18 1939 இல் நேரு கொழும்பு வந்தார். அவர் அப்போதைய அரசவை தலைவர் டி. எஸ். சேனநாயக்காவையும் சில அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார் பேச்சுக்கள் பலனற்றுப் போகவே, நேரு இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை சந்தித்து அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார். + +நேரு இலங்கையில் இந்திய தேசிய காங்கிரசையொத்த "இலங்கை இந்திய காங்கிரஸ் (இ.இ.கா.)" என்ற அமைப்பை உருவாக்கி இலங்கை வாழ் சகல இந்தியர்களையும் அதன் கீழ் கொண்டுவரும்படி இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை கொழும்பில் ஒன்று கூட்டினார். யூலை 24 1939 இல் நேரு தலைமையில் ஒன்றுகூடிய, அப்போது இலங்கையில் இருந்த பிரதான இந்திய சங்களான இலங்கை இந்திய மத்திய சபை மற்றும் இலங்கை இந்திய தேசிய காங்கிரஸ் என்பவற்றின் பிரதிந்திகள் யூலை 25 1939 காலை 1.20 க்கு இலங்கை இந்திய காங்கிரசை உருவாக்கினார்கள். இவ்வதிகாலை கூட்டத்தில் உருவாக்கப்பட்ட இடைக்கால சபையில் 18 பேர் அங்கம் வகித்தனர். மேலதிக 7 பிரதிநிதிகள் வேறு சபைகளில் இருந்து உள்வாங்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டது. 18 பிரதிநிதிகளும் இலங்கை இந்திய காங்கிரசின் உருவாக்க பத்திரத்தில் கைச்சாத்திட்டனர். நேரு சாட்சியாகவும் உறுதிப்படுத்துபவராகவும் கைச்சாத்திட்டார். வீ.ஆர்.எம்.வீ.ஏ. இலக்ஷ்மனன் செட்டியார் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். எச்.எம்.தேசாய் மற்றும் ஏ.அசிஸ் என்பவர்கள் இணைச் செயளாலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டனர். அன்றே நேரு தலைமையில் இ.இ.காவின் யாப்பு எ���ுதப்பட்டது. + + + + +நவம்பர் 7 + + + + + + + +அரபு மொழி + +அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர். + +அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் ஹீப்ரு, கிரேக்கம், பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும். +செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீப கற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றுள்ளது. பாரம்பரிய அரபுி மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான நபீதான் என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நபீதான் என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கனக்கு; என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான நெடுங்கனக்கினை ஆய்வு செ���்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும் அந்த ‘நபீதான நெடுங்கனக்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றது. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு இஸ்லாம் அரபு தீப கற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும். +இஸ்லாத்தின் உதயத்துடன் பாரம்பரிய அரபு மொழியின் வரலாறே மாறியது. முகம்மது நபியின் பேச்சு மொழி அரபாக காணப்பட்டதனாலும் அரபு மொழியில் குர்ஆன் இறக்கப்பட்டதாலும் அரபு மொழிக்கான தேவை அதிகரித்தது. எனவே ரோம், பாரசீகம் போன்ற முந்தைய வல்லரசு நாடுகளும் சீனா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல், போர், வியாபாரம் போன்ற தேவைகளுக்காக வெளிநாட்டவர்கள் வர தலைப்பட்டனர். எனவே பண்மை அரபு மொழியின் இலக்கண இலக்கிய மறபுகளை கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வாய்ப்பு தேவை உலக அளவில் ஏற்பட்டது. உமைய்யா மற்றும் அப்பாஸிய கலீபாக்களின் காலம் தொட்டு ஏற்றம் தொடர்கிறது. + +அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்து செறிவு உண்மை தன்மை, பிற மொழிகளிடம் இருந்து இறவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களாகும். அரபு மொழியில் 28 எழுத்துக்கள் காணப்படுகின்றன. அரபு மொழியானது உலகில் காணப்படுகின்ற ஏனைய மொழிகளைவிட பல வகையிலும் வித்தியாசமான இலக்கண முறையினை கொண்டுள்ளது. அவற்றில் பின்வருபவன முக்கியமானதாகும். அரபு மொழியில் சொற்களில் கூட ஆண்பால் பெண்பால் மிக உன்னிப்பாக கையாளப்படுகின்றது, வாக்கியங்களில் கூட ஆண்பால், பெண்பால் வாக்கியங்கள் என்ற இரு முறைகள் காணப்படுகின்றது. மேலும் அரபு இலக்கனத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் மிக முக்கியமாகும் இந்த ஒருமை,இருமை மற்றும் பன்மை களில் கூட ஆண்பால், பெண்பால் அவதானிக்கப்படுகின்றன. அரபு மொழியில் கூறிப்பிட்ட ஒரு சொல்லினை பல பெயர்களில் அழைக்கப்படுக���ளன்றன. உதாரணத்திற்கு ‘ஒட்டகம்’ என்ற சொல்லை குறிப்பதற்கு 1000 இற்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன. +அரபு மொழியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக வளர்ந்துள்ளது. தற்போது 21 நாடுகளில் அரபு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் இருந்தும் பொதுவாக ஏனைய ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்தும் வெளியாகின்ற பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்திச் சேவைகள் போன்றவற்றிலும் மேலும் நடைபெறும் மாநாடுகள் கூட்டத் தொடர்களிலும் இந்த நவீன அரபு மொழியே பயன்படுத்தப்படுகின்றது. + +ஆரம்பகாலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இருக்கவில்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பையும் கொண்டுள்ளன. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருப்பதால், அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசி, மற்றும் குர்ஆனையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குர்ஆன் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும், இதை مثل (மஸல) அல்லது مبل (மபல) அல்லது متل (மதல) அல்லது منل (மனல) அல்லது ميل (மயல) என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இவை அனைத்தும் ஒரே வித வடிவமைப்பை கொண்டுள்ளன: புள்ளிகளை வைத்துத்தான் எழுத்துகளை இனங்காண முடிகிறது. இதை அரபியர்களால் சரியாகப் படிக்கமுடியும், அரபியர் அல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ��=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா}, அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளம் என்பது உதாரணத்திற்கும் தமிழில் (ெ)ஒற்றை கொம்பு, (ே)இரட்டை கொம்பு, (ா)துணைக்கால் போன்ற உயிர் மெய் அடையாளங்களை வைத்துத்தான் கா என்றும், கி என்றும், கே என்றும் அடையாளபடுத்தி படிக்கபடுகிறது. இல்லை என்றால் தமிழ் என்ற வார்த்தை தமழ என்று உயிர் மெய்க் குறியீடு இல்லாமல் எழுதினால், இதை தமிழ் என்றும் படிக்கலாம் அல்லது திமிழ் என்றும் படிக்கலாம் அல்லது தமழ என்றும் படிக்கலாம். உயிர் மெய் அடையாளம் இல்லாதிருந்தால் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவருக்கு எளிதாக இருக்கும், ஆனால் அரபி அல்லாதவருக்கு மிகக் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து பிற்காலத்தில் உயிர் மெய்க் குறியீடுகள் கொண்டுவரப்பட்டன. ஒரு எழுத்திற்கு மேலே கோடுப்போட்டால் (ஃபதஹா) அகரமாகவும், கீழே கோடுபோட்டால் (கஸ்ரா) இகரகமாகவும், அரபி எழுத்து (و) வாவ்வைப் போன்று மேலே சிறிய அடையாளமிட்டால் (தம்மா) உகரமாகவும் மாறும். இதைத் தவிர்த்து இன்னும் பல அடையாளங்களும் உண்டு. இன்றும் நடைமுறையில் அரபியர்கள் குர்ஆனைத் தவிர்த்து ஏனைய புத்தகங்கள், வலைத்தளங்கள், சாலையோரத் திசைகாட்டிகள் என அனைத்திலும் உயிர் மெய்க்குறியீடுகள் அடையாளமிடப்படாமலே எழுதப்படுகின்றன. எந்த நாட்டில் உள்ள குர்ஆனாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது. இது பொதுவாகக் கடைபிடிக்கின்ற விதியாகும், இதைத் தவிர்த்து, குழந்தைகளின் ஆரம்பகால கல்விப் புத்தகங்களிலும் உயிர் மெய் அடையாளங்கள் இடப்படுகின்றன. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை. + +அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்: + + +அவ்வாறே ض என்ற எழுத்து "ள" என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்: + + +தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் "ظ" ஒலிப்பிற்கும், ளகரம் அரபு மொழியின் "ض" ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனால்தான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதில் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றால் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்: + + +இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது. + + + + +கிரகாம் ஆன்கோக் + +கிரகாம் ஆன்கோக் ("Graham Hancock", பிறப்பு: 2 ஆகத்து 1950) என்பவர் பிரித்தானிய எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் தொன்ம நம்பிக்கைகள், நினைவுக் கற்கள், பண்டைய வானியல்/சோதிடத் தரவுகள் போன்ற வழமைக்கு மாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர். + +ஹான்கோக் தனது படைப்புகளின் பெரும்பாலும் பண்டைக்கால மர்மங்கள், புராணக் கதைகள், வானியல் போன்றவற்றின் பின்னணியில் அமையப் பெற்றுள்ளன. மேலும் இவரின் கூற்றுப்படி இன்றைய கண்டுபிடிப்புகளான நாகரிகங்கள் அனைத்திற்கும் முதலில் ஒரு நாகரிக அமைப்பு இவ்வுலகில் அமைந்திருத்தல் வேண்டுமெனவும் மேலும் தனது பல ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடித்த கிமு 10,500 ஆம் ஆண்டில் புவியில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருத்தல் வேண்டுமெனவும் இவர் தெரிவிக்கும் அதே வேளை ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரது கண்டுபிடிப்பான கிமு 10,500 நம்பகத்தன்மை இல்லையென்பதனையும் உணர்த்தியுள்ளனர். மேலும் எது எவ்வாறிருப்பினும் இவ்வாண்டைக் குறிக்கும்படி எகிப்திய பிரமிடுக்களும், கம்போடியாவில் அமையப் பெற்றுள்ள கோயில்களும் வானில் உள்ள விண்மீன் அமைப்புகளிற்கு ஏற்றவாறு அமைக்கப்பெற்றுள்ளது என இவர் கூறுகின்றார். அதேசமயம் இவ்வாறு அமையப்பெற்றுள்ள விண்மீன் குடும்ப அமைப்புகளினை ஆராயும் பொழுது அவை அனைத்தும் கி.மு 10,500 ஆண்டினையே அடையாளம் காட்டுகின்றன. அதனால் இவர் மனித நாகரிகங்கள் கடவுள் போன்ற சக்தியினைக் கொண்டவர்களால் உருவாக்கம் பெற்றிருக்கலாம் எனவும் கூறுகின்றார். + +இசுக்கொட்லாந்து எடின்பரோ நகரில் பிறந்த ஆன்கோக் தனது சிறுவயது முதல் இந்தியாவில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட தனது தந்தையுடன் வாழ்ந்தார். டர்காம் பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டு சமூகவியலில் முதன்மைப் பட்டம் பெற்றார். பத்திரிகையாளராக த டைம்ஸ், த சண்டே டைம்ஸ், த இண்டிபெண்டண்ட் மற்றும் த கார்டியன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். மேலும் நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் இதழில் 1976 முதல் 1979 வரையிலும், த எக்கோனோமிஸ்ட் பத்திரிகையின் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்கான கிளையில் 1981 முதல் 1983 வரையிலும் பணியாற்றினார். + + + + + +உண்மைப்படம் + +உண்மைப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல உண்மை நிகழ்வுகள், தனிமனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை நிகழ்வுகள் போன்றவற்றினை இயக்குனரின் பார்வையில் அவர் விருப்பத்திற்கேற்ற திரைப்பட வகைகளின் கலவைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் உண்மைப்படங்கள் எனலாம். மேலும் இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிகக்குறைவே.இருப்பினும் தனிமனித வாழ்வின் உண்மைப்பின்னணியில் வரும் திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும் வெற்றியினையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. + + + + + +வரலாற்றுப்படம் + +வரலாற்றுப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். வரலாற்றில் நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் இயக்குனரின் பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், திரைக்கதைகள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. + + + + + +தற்காப்புக்கலைப்படம் + +தற்காப்புக்கலைப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். தற்காப்புக்கலைகளின் வளர்ச்சிக்காகவும் மக்களின் ரசனைக்கேற்றார் போலவும் திரையிடப்படும் திரைப்படங்கள் தற்காப்புக்கலைப்படம் எனலாம். தற்காப்புக்கலைப் படங்கள் ஜப்பானிய, சீனத் திரைப்படங்களில் பெரும்பாலும் காணலாம். சீனா��ில் தோற்றம்பெற்ற இவ்வகைத் திரைப்படங்கள் புரூஸ் லீ மூலம் உலக அரங்கிலும் பிரசித்திபெற்றன. இவரது திரைப்படங்களின் வரவேற்பினால் பல நாட்டவரும் தற்காப்புக்கலைத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடவும் செய்தனர். + + + + + + + +காதல் திரைப்படம் + +காதல் திரைப்படம் திரைப்படங்களில் உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் காதல் திரைப்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பவங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், இயக்குநரின் பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றாற் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகும். + + + + + + +நிலச்சீர்திருத்தம் + +இந்தியா போன்ற பல விவசாயத்தை தமது அடிப்படை வாழ்வியலாகவும் பொருளாதார வழிமுறையாகவும் கொண்டிருக்கும் பல நாடுகளில் வறுமைக்கு ஒரு முக்கிய காரணம் சிறு விவசாயிகளுக்கு அல்லது ஏழைகளுக்கு நில உரிமை இல்லாதாகும். நாட்டு நிலங்களை தகுந்த பொறுப்பான முறையில் ஏழை நாடற்ற விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்குவதன் மூலம் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம் என்று நடைமுறையில் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் அறியப்பட்டுள்ளது. இத்தகைய அரச நடவடிக்கையையே நிலச்சீர்திருத்தம் சுட்டி நிற்கின்றது. + + + + + + + +காப்பியப்படம் + +காப்பியப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காப்பியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. + + + + + +மஹாபுருஷ் + +மஹாபுருஷ் ("The Holy Man", 1965) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான சத்யஜித் ராய் இயக்கத்தி��் இத்திரைப்படம் வெளிவந்தது. + +வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா, தான் இறப்பற்றவர் எனக் கூறிக்கொள்பவர். இவர் கடந்தகாலத்தில், காலம் பற்றி பிளேட்டோவுடன் விவாதம் செய்தது பற்றியும், ஐன்சுட்டீனுக்கு E=mc2 சமன்பாட்டைச் சொல்லிக்கொடுத்தது பற்றியும், யேசு, புத்தர் போன்றோருடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தது பற்றியும் கதைகளைக் கூறி வந்தார். பிரிஞ்சி பாபாவுக்கு ஏராளமான பணக்காரச் சீடர்கள் இருந்தனர். + +குருபாதா, பிரிஞ்சி பாபாவினால் ஈர்க்கப்பட்டு அவரது சீடராக முடிவெடுக்கிறார். அதேவேளை, மகள் புச்கி, அவளது காதலன் சத்தியாவின் சில நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்து, அவனுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தான் பாபாவின் சீடராகப்ப்போவதாக மிரட்டுகிறாள். சத்தியா தனது நண்பனான நிப்பரனிடம் உதவி கோருகிறான். பிரிஞ்சி பாபா ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை விரைவிலேயே புரிந்துகொள்ளும் நிப்பரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாபாவின் ஒண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான். பாபாவின் சீடர்கள் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்கின்றனர். + +குருபாதாவாக பிரசாத் முகர்சியும், புச்கியாக கீதாலி ராயும், பிரிஞ்சியாக குருப்பிரகாசு கோசும் வேடமேற்று நடித்துள்ளனர். + + + + + +காப்புருஷ் + +காப்புருஷ் ("The Coward", 1965) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.சத்யஜித் ராய் இயக்கிய இத்திரைப்படத்தில் சௌமித்ரா சாட்டர்ஜீ மாதபி மிகர்ஜீ போன்ற பலர் நடித்துள்ளனர். + + + + + +ஆறுமுகன் தொண்டமான் + +சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் ("Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman", பிறப்பு: 29 மே 1964) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட உறுப்பினரும் ஆவார். + +ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். + + + + + +சிங்கள மகா சபை + +சிங்கள மகா சபை இலங்கையில் நடைமுறையில் இருந்த முக்கிய கட்சியாகும். இது 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்களவர்களின் நலன் காக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இது இந்திய தமிழர் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தது. 1945 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்தது பின்னர் 1951 இல் பண்டாரநயக்கா ஐ.தே.க. இலிருந்து விலகியதும் அதிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தது. + + + + +நவம்பர் 8 + + + + + + + +சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்) + +சீத்தலைச் சாத்தனார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர் ஆவார். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். + +இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்றும் தானிய வணிகம் செய்தவர் என்றும் இலக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. + +சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருந்திருக்கக் கூடும். + +புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' (சாத்து) என்பதாலோ 'சாத்து' என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார். + +சீத்தலைச் சாத்தன் என்கிற பெயரிலேயே மேலும் ஒரு சில புலவர்கள் இருந்ததனால் அவர்களிலிருந்து அடையாளம் பிரித்து காட்டுவதற்காக இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்' என அழைக்கப்படுகிறார். + +இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். இவர் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பரப்பு நூலாகும். + +புத்த மதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் மிக விரிவாக மணிமேகலையில் இவர் கூறியுள்ளார். + +நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களிலுள்ள சில பாடல்களைப் பாடிய சீத்தலைச் சாத்தனார் என்பவர் இவருக்கு முன்பு வாழ்ந்த வேறொரு புலவர் ஆவார். + +பாட்டியல் நூல் செய்த சீத்தலையார் என்பவரும் வேறு ஒருவர் ஆவார். + +சிலப்பதிகாரம் இயற்றிய சமணத் துறவி இளங்கோவடிகள் மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது. + +சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ்ச் சாத்தன்' என்று போற்றப்படுகிறார். + + + + + +குலசேகர ஆழ்வார் + +குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் "குலசேகரப் பெருமாள்" என்றும் அழைக்கின்றனர். +இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர். நாடு:கொங்கு நாடு, ஊர்; கரூர் வஞ்சி, மலை: கொல்லிமலை + +ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமை பீடங்களான ஜீயர்கள், "ஆழ்வார்களும் வைணவமும்" என்ற புத்தகத்தில், கிருஷ்ண பக்தனான குலசேகர வர்மா என்ற திருவிதாங்கூர் கேரள வர்மாவையும் சங்க கால சேரர்களது மன்னான சர்கராம பக்தர் குலசேகர ஆழ்வாரையும் குழப்பிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர். முன்னையவர் ராமானுசருக்குப் பிற்பட்டவர். ஆழ்வாரோ மிக முற்பட்டவர். ஆழ்வார் தமிழில் மட்டுமே ஸ்ரீராமரை பாடியுள்ளார். வர்மாவோ சமஸ்கிருதத்தில் மட்டுமே "முகுந்தமாலா" என்று கிருஷ்ணரை பாடியுள்ளார். இருவரும் ஒருவரல்ல. மேலும் குலசேகர பாண்டியன், குலசேகர சோழன் என்றெல்லாம் அரசர்கள் உண்டு. குலசேகர என்றால் ’தமது குலத்தின் சிகரமான’ என்று பொருள். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இரு நபர்களை ஒன்றாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மணவாள மாமுநிகளுடைய முகுந்தமாலை உரையில் எங்கும் அவர் “இது பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார் குலசேகரர் எழுதியது” என்று குறிப்பிட்டதாக இல்லை. ஆழ்வார் சரிதம் பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. முகுந்தமாலை செய்த குலசேகர வர்மா பிறந்தது கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. அதை குலசேகர வர்மாதான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. + +கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான "திடவிரதர்" என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் "கொல்லி" நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று. + +திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார். + +பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்: + +புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே +திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய் +கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே +எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ + +கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் +தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ +கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே +எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ + +தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்���ன் +மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள் +காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே +ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ + +பாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கேயருளி +ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே +சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே +தாராலும் நீன்முடிஎன் தாசரதீ தாலேலோ + +சுற்றமெல்லாம் பின்ன்தொடராத் தொல்கான மடைந்தவனே +அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே +கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே +சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ + +ஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே +வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே +காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே +ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ + +மலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே +அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே +கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே +சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ + +தளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய் +வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே +களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே +இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ + +தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே +யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே +காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே +எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ + +கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் +தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை +கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன +பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே + +திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்: + +இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது. + +இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம். + +திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் ���ிருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!. + + + + + +அவாஸ்ட்! + +செக் நாட்டில் உள்ள அல்வில் சாப்ட்வேர் அவாஸ்ட்! நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளைத் (Anti-virus software) தயாரித்து விநியோகிக்கின்றது. இது முதலில் 1998 ஆம் ஆண்டு வெளிவிடப்பட்டது. தற்போது 27 மொழிகளில் கிடைக்கின்றது. அவாஸ்ட் 64பிட் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு எனத்தயாரிக்கபட்ட நிகழ்நிலைப் பாதுகாப்பை அளிக்கும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் ஆகும். அவாஸ்ட் 'ஹோம்' பதிப்பானது நவம்பர் 2008 இன்படி 32 மில்லியனுக்கும் மேற்பட்டபதிவிறக்கத்தையும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட பயனர்களைத் கொண்டுள்ளது. இது பொதுவாக கிரிசாப்டின் ஏவிஜி ஆண்டிவைரஸ் (ஏவிஜி நச்சுநிரல்) எதிர்ப்பு மென்பொருளுடன் பொதுவாக ஒப்பிடப்படுகின்றது. + +இது பல்வேறுபட்ட ஆபத்துக்களைகளில் இருந்து தடுப்பதற்காக உருவாக்கப்படுகின்றது. இது தொழில்நுட்பரீதியாக நச்சுநிரல், ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்கள் போன்றவற்றிலிருந்து மாத்திரம் அல்லாது பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் நச்சுநிரலில் இருந்து மீள்விக்கும் தகவற் தளத்தில் இருந்து பாதுகாக்கின்றது. இது முழுமையான சொற் மற்றும் ஒலிபெயர்புக்களைப் பதிவிறக்கம் செய்யவியலும். + + +அவாஸ்ட்! 60 நாட்களுக்குள்ளாகப் பதிசெய்யப்பட்டால் வேண்டும் அல்லது 60 நாட்களுக்குப் பின்னர் அவாஸ்ட்! நச்சுநிரல் வேலை செய்யாது. அவாஸ்ட்! பதிசெய்யதும் மின்னஞ்சல் மூலமாக உரிய அனுமதி அனுப்பப்படும். அதில் இருந்து 1 வருடத்திற்குப் பாவிக்கலாம். பின்னர் மீண்டும் பதிவு செய்தல் வேண்டும். + +இது தற்போது இதன் விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பில் 4.8 இல் உள்ளது. கீழ்வருவன பல்வேறுபட்ட இயங்குதளங்கள் மற்றும் பல்வேறு பணிச்சூழலுக்கானவை. + + + + + +இசுதான்புல் + +இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருள��தாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும். + +இந்நகரின் முதலாவது அறியப்பட்ட பெயர் "பைசாந்தியம்" (, "Byzántion") ஆகும். இது இந்நகர் நிறுவப்பட்டபோது மெகரியன் காலனியவாதிகளால் கி.மு. 660 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட பெயராகும். + + +இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாகி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானியப் பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922). + +இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்குப் பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. கருங்கடல் மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதிகளைப் பிரிக்கின்றது வளைகுடாப் பகுதியில் ஒரு தங்கக் கொம்பு இயற்கைத் துறைமுகம் அமைந்தது. மேலும் இது மற்ற பகுதியில் மலையால் சூழப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிர���ப் படைகளின் தாக்குதல்களைத் தடுத்தன. + +ரோம் நகரைப் போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனைத் தளம் உள்ளது. மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர்ப்பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலைமீது உள்ளது. இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1509-ல் நில அதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. 1999 இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தினால் இஸ்தான்புல் புறநகர்ப் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். + +புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை ("Csa") மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை ("Cfa") மற்றும் கடல்சார் காலநிலை ("Cfb") என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது. அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்�� மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும். வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் , கார்டல் + +உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதம் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது. இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது. குறிப்பிடத் தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது. இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன. + +மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது. கருங்கடலிலிருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன், உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன. வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு ஆகக் காணப்படுகின்றது. நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக உம், தாழ் வெப்பநிலையாக −16.1 °C (3 °F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாகக் காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் ஆகக் காணப்படுகின்றது. + +அதன் பெரும்பான்மையான வரலாறு முழுவதும், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இசுதான்புல் தரப்படுத்தப்பட்டது. கி.பி. 500 ஆம் ஆண்டளவில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் அதன் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய நகரமுமான உரோமைத் தவிர்த்து 400,000 இற்கும் 500,000 இற்கும் இடைப்பட்ட அளவிலான மக்களைக் கொண்டிருந்தது. கொன்ஸ்தாந்திநோபிள் நகரானது ஏனைய பாரிய வரலாற்று ரீதியான நகரங்களான பக்தாத் மற்றும் சங்கன் ஆகியவற்றுடன், 13 ஆம் நூற்றாண்டு காலம் வரை உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகர் என்ற நிலையைத் தக்கவைக்கப் போட்டியிட்டது. இது உலகின் மிகப்பாரிய நகராகத் தொடர்ந்து இருக்க முடியாது போனாலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலண்டனால் முறியடிக்கப்பட்டு, கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சி வரை ஐரோப்பாவின் பாரிய நகராக விளங்கியது. இன்று, அது இன்னும் மொஸ்கோவுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளுள் ஒன்றாக உள்ளது. + +இசுதான்புல்லின் மிகப் பாரிய சிறுபான்மை இனக்குழுமம் குருதிய சமூகமாகும். இவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு துருக்கியில் தோன்றியவர்களாவார்கள். அத்துடன் இந்தக் குருதிய மக்களின் இருப்பு ஆரம்ப ஒட்டோமன் காலத்திலிருந்து நிலவுகின்றது. இந்நகருக்குள் குருதிய மக்களின் வருகையானது குருத���ய துருக்கிய முரண்பாட்டின் ஆரம்பகட்டத்தில் குருதிசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் துரிதப்படுத்தப்பட்டது (அதாவது. 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து). கிட்டத்தட்ட இசுதான்புல்லின் இரண்டு அல்லது மூன்று மில்லியன் மக்கள் குருதிய மக்களாவார்கள், அதாவது உலகின் ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லிலேயே அதிகமான குருதிய மக்கள் உள்ளனர். + +கொள்வனவு ஆற்றல் சமநிலையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகிய 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது. 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. பொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும். துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லிலிருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது. இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்தப் பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது. + +எண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசில் உள்ள போக்குவரத்து நெரிசல் சுயஸ் கால்வாயை விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன. அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது. 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது. செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது. அத்துடன் நகருக்கான நீண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன. + +இசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது. இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உள்ளன. + +இசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாகப் பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது. இந்தப் பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும். 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம், நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும். + +இசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது. துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் "உயர் பாடசாலைகள்" இருந்தன. 1982 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்க���கமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன. இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும்பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும். + +2007 ஆம் ஆண்டில், 4,350 பாடசாலைகள் இருந்ததுடன், அவற்றுள் கிட்டத்தட்ட அரைவாசியானவை ஆரம்பப் பாடசாலைகளாகும். சராசரியாக ஒவ்வொரு பாடசாலையும் 688 மாணவர்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இசுதான்புல்லின் கல்வி முறையானது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. வகுப்பறைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கை மேலாக அதிகரித்துள்ளது. 1481 ஆம் ஆண்டு கலட்டா அரண்மனை ஏகாதிபத்திய பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கலட்டாசரய் உயர் பாடசாலையே, இசுதான்புல்லின் மிகப்பழமைவாய்ந்த உயர் பாடசாலையாகவும் இந்நகரில் இரண்டாவது மிகப்பழமைவாய்ந்த கல்வி நிறுவனமாகவும் அமைந்துள்ளது. இப்பாடசாலை பெயெடிட் II சுல்தானின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வளர்ச்சியடைந்து வரும் பேரரசை மேலும் பலப்படுத்தும் பொருட்டு பல்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மாணவர்களை ஒன்றிணைக்க முற்பட்டார். இது துருக்கியின் அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகும். படிமுறைப் பொது உயர் பாடசாலைகள் வெளிநாட்டு மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்குவதில் உறுதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, கலட்டாசரய், அறிவுறுத்தல்களை பிரெஞ்சு மொழியில் வழங்கியது, அதேவேளை ஏனைய அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகள் துருக்கிய மொழியுடன் சேர்ந்து ஆங்கிலம் அல்லது செருமன் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கற்பிக்கின்றன. இந்நகரில் லிகியோ இத்தாலியானோ போன்ற வெளிநாட��டு உயர்நிலைப் பாடசாலைகளும் உள்ளன. அவை 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டவர்களுக்குக் கற்பிப்பதற்காக நிறுவப்பட்டன. + +இசுதான்புல்லின் ஏனைய ஒருசில உயர்நிலைப் பாடசாலைகள் அவர்களின் கற்பித்தல் முறை அல்லது நுழைவுத் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. செங்கெல்கோயில் பொசுபோரஸ் கடற்கரையில் அமைந்துள்ள குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை, மற்றும் பிரின்சஸ் தீவுகளில் அமைந்துள்ள துருக்கிய கடற்படை உயர்நிலைப் பாடசாலை ஆகியவை இராணுவ உயர்நிலைப் பாடசாலைகளாகும். இவை மூன்று இராணுவப் படைகளாகிய துருக்கிய வான் படை, துருக்கிய இராணுவம், மற்றும் துருக்கிய கடற்படை ஆகிய படைகளால் முழுமைப்படுத்தப்படுகின்றன. இசுதான்புல்லில் உள்ள இன்னுமொரு முக்கியமான பாடசாலையாகத் தருச்சபக்கா உயர்நிலைப் பாடசாலை விளங்குகின்றது, இப்பாடசாலை நாடெங்கிலும் உள்ள பெற்றோர்களில் ஒருவரை இழந்த சிறுவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. தருச்சபக்கா தனது அறிவுறுத்தல்களை நான்காம் தரத்தில் ஆரம்பிப்பதுடன், அறிவுறுத்தல்களை ஆங்கில ஒழியில் வழங்குகின்றது. அத்தோடு ஆறாம் தரத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது வெளிநாட்டு மொழியாகச் செருமன் அல்லது பிரெஞ்சு மொழியில் அறிவுறுத்தலகள் வழங்கப்படுகின்றன. இந்நகரின் ஏனைய முக்கிய உயர்நிலைப் பாடசாலைகளுள் கபடாசு எர்கெக் லிசெசி (1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) மற்றும் கடிகோய் அனடோலு லிசெசி (1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) என்பன உள்ளடங்குகின்றன. + + + + + + + +பைசாந்தியப் பேரரசு + +பைசாந்தியப் பேரரசு ("Byzantine Empire") என்பது, மத்திய காலத்தில், இன்று இஸ்தான்புல் என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு கிரேக்க மொழி பேசப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது கிழக்கு ரோமப் பேரரசு என அழைக்கப்படுவதும் உண்டு. "பைசாந்தியப் பேரரசு" "கிழக்கு ரோமப் பேரரசு" போன்ற பெயர்கள் பிற்காலத்தில் வரலாற்று எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இதை அவர்கள் ரோமப் ��ேரரசு என்றோ "ரோமானியா" என்றோதான் அதன் இருப்புக் காலம் முழுதும் அழைத்து வந்தனர். இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டதுடன் அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். கிபி 5 ஆம் நூற்றாண்டில் மேற்கு ரோமப் பேரரசு துண்டு துண்டாக உடைந்து வீழ்ச்சியுற்றபோதும், அதன் கிழக்குப் பாதி, ஓட்டோமான் துருக்கியர் 1453ல் அதனைக் கைப்பற்றும்வரை, மேலும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் இருந்தது. இப்பேரரசின் இருப்புக் காலத்தின் பெரும் பகுதியிலும், ஐரோப்பாவின் பலம் மிக்க பொருளாதார, பண்பாட்டு, படைத்துறை வல்லரசாக இது விளங்கியது. + +"ரோம", "பைசாந்திய" ஆகிய அடைமொழிகள் பிற்காலத்து வழக்காக இருந்தாலும், இந்த மாற்றம் ஒரு குறித்த நாளில் நிகழ்ந்தது அல்ல. பல கட்டங்களில் இது நிழ்ந்தது எனலாம். 285 ஆம் ஆண்டில் பேரரசர் டியோகிளீசியன் (ஆட்சிக்காலம் 284-305) ரோமப் பேரரசின் நிர்வாகத்தைக் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பாதிகளாகப் பிரித்தார். 324 ஆம் ஆண்டுக்கும், 330 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பேரரசர் முதலாம் கான்சுதந்தைன் (306-337) பேரரசின் முதன்மைத் தலைநகரை ரோமில் இருந்து போசுபோரசின் ஐரோப்பியப் பக்கத்தில் இருந்த பைசாந்தியம் என்னும் இடத்துக்கு மாற்றினார். இந்த நகரின் பெயர் "கான்சந்தினோப்பிள்" (கான்சுதந்தைனின் நகரம்) அல்லது "நோவா ரோமா" (புதிய ரோம்) என மாறியது. பேரரசர் முதலாம் தியோடோசியசின் (379–395) கீழ் கிறித்தவம் பேரரசின் சமயமாக மாறியது. மாறுநிலையின் இறுதிக்கட்டம், பைசாந்தியப் பேரரசர் ஏராக்கிளியசின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் தொடங்கியது. இக்காலத்தில், நிர்வாகம், படைத்துறை ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன், இலத்தீனுக்குப் பதிலாக கிரேக்க மொழியும் நிர்வாக மொழியாக ஆகியது. இக்காலப் பகுதியில், பேரரசினுள் அடங்கியிருந்த கிரேக்க மொழி பேசாத பகுதிகளான மையக்கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்னும் பகுதிகளை முன்னேறி வந்த அரபுக் கலீபகத்திடம் பேரரசு இழந்ததுடன், அது பெரும்பாலும் கிரேக்கம் பேசுகின்ற பகுதிகளை அடக்கியதாகச் சுருங்கியது. பைசந்தியப் பேரரசு, இலத்தீன் மொழி, பண்பாடு ஆகியவற்றிலிருந்து விலகி கிரேக்க மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கைக்கொண்டத��லும், ரோம பலகடவுட் கொள்கை கொண்ட சமயத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறியதாலும், தற்காலத்தில் அது, பண்டைய ரோமப் பேரரசில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது. + +முதலாம் யசுட்டினியனின் ஆட்சிக் காலத்தில் (527-565) பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தது. இக்காலத்தில், பண்டைய ரோமப் பேரரசின் பகுதிகளாக இருந்த நடுநிலக்கடற்கரைப் பகுதிகளான இத்தாலி, வட ஆப்பிரிக்கா போன்றவை கைப்பற்றப்பட்டு பேரரசின் ஆட்சிப்பகுதிக்குள் அடங்கியிருந்தன. ரோம் நகரும் இருநூறு ஆண்டுகள் வரை இதற்குள் அடங்கியிருந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யசுட்டினியக் கொள்ளைநோய் எனப்பட்ட ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கி மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் பலியாகியதால், பெரிய அளவில் படைத்துறை, நிதிப் பிரச்சினைகளைப் பேரரசு எதிர்கொள்ள நேர்ந்தது. இருந்தாலும், பேரரசர் மாரிசின் ஆட்சிக்காலத்தில் (582–602) பேரரசின் கிழக்கு எல்லைப் பகுதிகள் விரிவடைந்ததுடன், மேற்கு எல்லையும் உறுதியாக இருந்தது. எனினும் 602 ஆன் ஆண்டில் மாரிசு கொலை செய்யப்பட்டதால், சசானியப் பாரசீகத்துடன் இரு பத்தாண்டுகள் நீடித்த போர் ஏற்பட்டது. இப்போரில் பேரரசர் ஏராகிளியசு பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், பேரரசின் மனிதவலுவும், வளங்களும் அழிந்துபோயின. இதனால், ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பைசாந்திய-அரபுப் போர்களின்போது பேரரசு பெருந் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததுடன், நிலப் பகுதிகளையும் இழந்தது. எனினும் 10 ஆம் நூற்றாண்டில், மசிடோனிய வம்சத்தின் ஆட்சியின் கீழ் ஐரோப்பா, நிலநடுக்கடல் பகுதிகள் ஆகியவற்றின் மிகப் பலம் பொருந்திய நாடாக மீண்டும் எழுச்சி பெற்றது. 1071க்குப் பின்னர், பேரரசின் முக்கிய பகுதியான சின்ன ஆசியாவின் பெரும் பகுதிகள் செல்யூக் துருக்கியரிடம் வீழ்ச்சியுற்றன. + +கொம்னெனிய மீள்விப்பினால் 12 ஆம் நூற்றாண்டில் சிறிது காலம் பேரரசின் முதன்மை நிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாம் மனுவேல் கொம்னெனோசு இறந்து, கொம்னெனோசு வம்ச ஆட்சியும் முடிவுக்கு வந்ததுடன், பேரரசு மேலும் தளர்ச்சியுற்றது. 1204ல் நிகழ்ந்த சிலுவைப் போரில், கான்சுதந்தினோப்பிள் கைப்பற்றப்பட்டதுடன் பேரரசும் கலைக்கப்பட்டுப் பல்வேறு பைசந்தியக் கிரேக்க, இலத்தீன் போட்ட��க் குழுக்களிடையே பங்கிடப்பட்டது. பலையோலோகப் பேரரசர்களால் 1261ல் கான்சுதந்தினோப்பிள் மீளக் கைப்பற்றப்பட்டு பேரரசு மீள்விக்கப்பட்டாலும், அதன் கடைசி 200 ஆண்டுக்காலப் பகுதியில், அப்பகுதியில் போட்டியிட்டுக் கொண்டிருந்த பல நாடுகளுள் ஒன்றாகவே பைசந்தியம் இருக்க முடிந்தது. ஆனாலும் இக் காலப்பகுதியும் மிகச் சிறந்த பண்பாட்டு வளம் கொழித்த ஒரு காலப் பகுதியாகவே விளங்கியது. 14 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக இடம் பெற்ற உள்நாட்டுப் போர்கள் பேரரசின் வலிமையைப் பெருமளவு குறைத்ததுடன், பைசாந்திய-ஓட்டோமான் போர்களில் அது எஞ்சிய நிலப்பகுதிகளை இழக்கவும், இறுதியில் 1453ல் கான்சுதந்தினோப்பிளின் வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. 15 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலப் பகுதியில், பேரசின் முழு நிலப் பகுதிகளும் ஓட்டோமான் பேரரசின் வசமானது. + +ஐரோப்பா, நடுநிலக்கடற் பகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பைசாந்தியப் பொருளாதாரம், பல நூற்றாண்டுகளாக மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. குறிப்பாக ஐரோப்பாவில், நடுக்காலத்தின் பிற்பகுதி வரை பைசாந்தியப் பொருளாதாரத்துக்கு இணையாக எதுவும் இருக்கவில்லை. பல்வேறு காலப் பகுதிகளில் ஏறத்தாழ முழு யூரேசியாவையும் வட ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய வணிக வலையமைப்பின் முதன்மை மையமாக கான்சுதந்தினோப்பிள் விளங்கியது. குறிப்பாகப் புகழ் பெற்ற பட்டுப் பாதையின் மேற்கு முடிவிடமாக இருந்ததன் காரணமாக இது சாத்தியமானது. சிதைவடைந்து கொண்டிருந்த மேற்கின் நிலைமைக்கு மாறாக, பைசாந்தியப் பொருளாதாரம், வளம் மிக்கதாகவும், நெகிழ்ச்சி உடையதாகவும் இருந்தது. எனினும், யசுட்டினியக் கொள்ளைநோயும், அராபியப் படையெடுப்புக்களும் பைசாந்தியப் பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தி, அதனைப் பொருளாதாரத் தேக்கத்துக்கும் தொடர்ந்து சரிவு நிலைக்கும் இட்டுச் சென்றது. நிலப்பகுதி சுருங்கி வந்தபோதும், இசாவுரியச் சீர்திருத்தங்களும், குறிப்பாக ஐந்தாம் கான்சுதந்தைனின் மீள் குடியேற்றம், பொது வேலைகள், வரி தொடர்பான நடவடிக்கைகள், போன்றன 1204 வரை தொடர்ந்த ஒரு மறுமலர்ச்சிக் காலத்துக்குக் கட்டியம் கூறின. 10 ஆம் நூற்றாண்டு முதல், 12 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பைசாந்தியப் பேரரசு ஒரு பகட்டுத் தன்மைத் தோற்றத்தைக் கொண்டதாக விளங்கிற்று. அங்கு சென்ற பயணிகள், தலைநகரில் குவிந்திருந்த செல்வ வளத்தினால் கவரப்பட்டனர். நான்காம் சிலுவைப்போர், பைசாந்திய உற்பத்தித் துறையிலும், மேற்கு ஐரோப்பியர் கிழக்கு நடுநிலக்கடற் பகுதியில் கொண்டிருந்த வணிக மேலாண்மை நிலையிலும் தடங்கல்களை ஏற்படுத்தியதுடன், ஏற்பட்ட நிகழ்வுகள் பேரரசின் பொருளாதாரப் பேரழிவாகவும் அமைந்தன. பலையோலொகோசு வம்சத்தினர் பொருளாதாரத்தை மீள்விக்க முயன்றனர். ஆனால், உள்நாட்டுப் பொருளாதாரச் சக்திகள் மீதோ, வெளிநாட்டுப் பொருளாதாரச் சக்திகள் மீதோ முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க பைசாந்தியத்தினால் முடியவில்லை. படிப்படியாக, வணிக இயக்கமுறை, விலைப் பொறிமுறை, உயர் பெறுமான உலோகங்களின் வெளிச் செல்கை ஆகியவற்றின்மீது கொண்டிருந்த செல்வாக்கையும் அது இழந்தது. நாணயங்களை அச்சிடுவதில் அது கொண்டிருந்த கட்டுப்பாட்டையும் பைசாந்தியம் இழந்துவிட்டதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். + +பைசாந்தியத்தின் பொருளாதார அடிப்படைகளுள் ஒன்று, அதன் கடல் சார்ந்த தன்மையினால் உருவான வணிகம் எனலாம். அக்காலத்தில் துணி வகைகள் மிக முக்கியமான ஏற்றுமதிப் பண்டமாக விளங்கின. பட்டு, எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, பல்கேரியாவும், மேற்கு நாடுகளும் கூட இதை இறக்குமதி செய்ததாகத் தெரிகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் அரசு இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், நாணயங்களை வெளியிடுவதிலும் தனியுரிமை கொண்டிருந்தது. வணிகத் தேவைகளுக்கு ஏற்ற, நிலையானதும், நெகிழ்வானதுமான பணமுறையை அது பேணி வந்தது. அரசு, வட்டி விகிதங்கள் மீது முறைப்படியான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததோடு, வணிகக் குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான விதி முறைகளையும் அது உருவாக்கியது. நெருக்கடிகள் ஏற்படும்போது, தலை நகருக்கான தேவைகள் வழங்கப்படுவதையும், தானியங்களின் விலைகள் குறைவாக இருப்பதையும் உறுதி செய்வதற்குப் பேரரசரும், அவரது அலுவலர்களும் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். அத்துடன் வரிகள் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியை, அரசு அலுவலருக்கான கொடுப்பனவுகள் மூலமும், பொது வேலைகளில் முதலிடுவதன் மூலமும் அரசு சுழற்சிக்கு விட்டது. + + + + + + +பரஷ் பதர் + +பரஷ் பதர் ("The Philosopher's Stone", 1958) ஆம் ஆண்டு வெ��ிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும். + + + + + +அரான்யர் டின் ராத்ரி + +அரான்யர் டின் ராத்ரி ("Days and Nights in the Forest") 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிலா தாகூர் போன்ற பலரும் நடித்துள்ளனர். + + + + + +விஷ்வதுளசி + +விஷ்வதுளசி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுமதி ராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி ,நந்திதா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். + +2005 WorldFest ஹவுஸ்டன் (அமெரிக்கா) + + + + + +ஏக் தூஜே கே லியே + +ஏக் தூஜே கே லியே (ஆங்கிலம்:Ek Duuje Ke Liye) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிஹோத்ரி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். + +காதல்படம் / நாடகப்படம் + + + + + + + + + +கிஸ்னா + +கிஸ்னா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். + +காதல்படம் + + + + + + +தேவி (1960 திரைப்படம்) + +தேவி () 1960 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிளா தாகூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். + + + + + + +வேதம் புதிது + +வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது. + +கிராமப்படம் / கலைப்படம் + + + + + +சாகர சங்கமம் + +சாகர சங்கமம் 1983ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். தமிழில் சலங்கை ஒலி என மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டது. + +காதல்படம் / நாடகப்படம் + + + + + +நவம்பர் 9 + + + + + + + +நவம்பர் 10 + + + + + + + +நவம்பர் 11 + + + + + + + +நவம்பர் 12 + + + + + + + + +நவம்பர் 13 + + + + + + +நவம்பர் 14 + + + + + + + +நவம்பர் 15 + + + + + + + +நவம்பர் 16 + + + + + + + +நவம்பர் 17 + + + + + + + +நவம்பர் 18 + + + + + + + +நவம்பர் 19 + + + + + + + +நவம்பர் 20 + + + + + + + +நவம்பர் 21 + + + + + + + +நவம்பர் 22 + + + + + + + +நவம்பர் 23 + + + + + + +நவம்பர் 24 + + + + + + + +நவம்பர் 25 + + + + + + + +நவம்பர் 27 + + + + + + + +நவம்பர் 28 + + + + + + + +நவம்பர் 29 + + + + + + +நவம்பர் 30 + + + + + + + +டெஸ்பெரேஸன் + +டெஸ்பெரேஸன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டோம் ஸ்கெரிட், ரோன் பேர்ல்மேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். + +பேய்ப்படம் + +சீனர்கள் அடிமைகளாக பணியமர்த்தப்பட்ட காலத்தின் பொழுது அமெரிக்காவில் நடைபெற்ற சுரங்கவேலைகளிலிருந்து விடுவிக்கப்படும் ஆவிஉருவம் உயிருள்ள அனைத்து விலங்கினங்களிலும் புகுந்து மனிதர்களைப் பழிவாங்கிவருகின்றது. +பாலைவனத் தோற்றம் கொண்ட பகுதியினுள் குடிகொண்டிருந்த ஆவி மனித உருவத்தினைப்பெற்று அங்குவரும் ஒவ்வொரு மனிதர்களையும் சிறையில் அடைத்து கொலைசெய்கின்றது.இதனைத் தெரிந்து கொள்ளும் அங்கு ஆவியால் கடத்தி வரப்பட்டவர்கள் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர் என்பது திரைக்கதை முடிவாகும். + + + + +அடிலெயிட் + +அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாந��லமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. + + + + +பிரிஸ்பேன் + +பிரிஸ்பேன் அல்லது பிறிஸ்பேன் ("Brisbane", , "பிறிஸ்பன்") ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரும், அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும், ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர். மிதவெப்ப மண்டல காலநிலையுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் பிரிஸ்பேன் ஆற்றின் கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது. + +நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது. + +தற்போதுள்ள நகர வணிக மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் ஐரோப்பியக் குற்றவாளிகள் குடியேற்றம் 1824ஆம் உருவாக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு வடக்கு கீ பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றம் உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றம் மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் இருந்து குயின்சுலாந்து பிரிக்கப்பட்டு பிரிஸ்பேனைத் தலைநகராகக் கொண்டு தனிக் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. + +இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகளின் அணியில் தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் டக்ளசு மெக்கார்த்தருக்காக பிறிஸ்பேன் நகரம் பெரும் பங்காற்றியது. பிறிஸ்பேன் நகரில் 1982 பொதுநலவாய விளையாட்டுக்கள், எக்சுபோ '88 கண்காட்சி, 2001 நல்லெண்ணப் போட்டிகள், 2014 ஜி-20 உச்சிமாநாடு உட்படப் பல பன்னாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. + +ஐரோப்பியர் வருகைக்கு முன்பு பிறிஸ்பேன் பகுதியில் ஜாகிரா மற்றும் டுரூபல் இனத்தைச் சார்ந்த ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வசித்து வந்தனர். தற்போதைய மத்திய வணிகப் பகுதியை அவர்கள் ம��யான்-ஜின் (கூர்முனை வடிவ இடம் எனப் பொருள்) என அழைத்து வந்தனர். மொரிட்டோன் குடா முதலில் மேத்தியூ பிலிண்டர்சுவினால் கண்டுபிடிக்கப்பட்டது. 1799 சூலை 17 இல் பிலிண்டர்சு வூடி முனை என இன்று அழைக்கப்படும் இடத்தில் தரையிறங்கினார். குடாவில் இருந்து பார்க்கும் போது இவ்விடத்தில் சிவப்பு நிற செங்குத்துப் பாறைகள் காணப்பட்டமையினால் அவர் "ரெட் கிளிஃப் முனை" எனப் பெயரிட்டார். 1823 இல் ஆளுனர் தோமசு பிறிஸ்பேன் குற்றவாளிகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டார். + + + + +கான்பரா + +கான்பரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம் ஆகும். ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிட்னியிலிருந்து 300 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் மெல்பேர்ணில் இருந்து 650 கிலோமீட்டர் வட கிழக்காகவும் அமைந்துளது. முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். மெல்பேர்ணும் சிட்னியும் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 1908 இல் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 இல் உருவாகத் தொடங்கியது. ஆஸ்திரேலியப் பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், பிறநாடுகளின் உயர் ஸ்தானிகராலயங்கள் போன்றவை இங்கேயே அமைந்துள்ளன. + + + + +பேர்த் + +பேர்த் ஆஸ்திரேலிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய நகரம். மத்தியதரைக் கடல் காலநிலையை ஒத்த காலநிலை உடையது. சுவான் ஆறு இங்கு உள்ளது. + + + + +ஹோபார்ட் + +கோபார்ட் ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகரம். அம் மாநிலத்தின் அதிக சனத்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய நகரம் ஆகும். பன்னிரண்டாவது பெரிய நகரம். ஓசியானிக் காலநிலை உடையது. + + + + +டார்வின் (ஆஸ்திரேலியா) + +டார்வின் ("Darwin") ஆஸ்திரேலியாவின் வட ஆட்புல மாநிலத்தின் தலைநகரம். இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் திமோர் கடலில் அமைந்துள்ளது. 129,062 (2011) மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் மிகச்சிறியதும் ஆகும். வெப்�� மண்டலக் காலநிலையுடன் ஈர மற்றும் உலர் பருவகாலங்களையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூடான காலநிலையைக் கொண்டிருக்கும். + +பிரித்தானியர்களின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர், டார்வினின் பெரும் பகுதி லராக்கியா மக்கள் குடியிருந்தனர். 1839 செப்டம்பர் 9 இல் எச்.எம்.எஸ் பீகில் என்ற கப்பல் டார்வின் துறையைச் சென்றடைந்தது. ஜோன் விக்கம் என்பவர் அவருடைய முன்னைய கடற்பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த சார்லஸ் டார்வின் நினைவாக இந்நகருக்கு டார்வின் துறை ("Port Darwin") எனப் பெயரிட்டார். இக்குடியேற்றத் திட்டம் 1869 ஆம் ஆண்டில் பால்மெர்ஸ்டன் (Palmerston) எனப் பெயரிடப்பட்டு, பின்னர் 1911 ஆம் ஆண்டில் மீண்டும் டார்வின் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாம் உலகப்போரின் போது சப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகி நகரம் பெரும் சேதமடைந்து மீள உருவாக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளி டிரேசியினால் மீண்டும் நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ஆத்திரேலியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. + + + + + +மேற்கு ஆஸ்திரேலியா + +மேற்கு ஆஸ்திரேலியா ("Western Australia") பரப்பளவில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது. + +ஆஸ்திரேலியாவின் முதல் மக்கள் சுமார் 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து வந்தனர். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலப்பரப்புக்கும் பரவினர். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத்தொடங்கிய வேளையில் இவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் சிறப்பான முறையில் பரவியிருந்தனர். இன ரீதியான, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் 77.5% ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்: இவர்களுள் மிகப்பெரிய தனி இனம் ஆங்கிலேயர்களாவர். கணக்கெடுப்பின்படி,733,783 (32.7%)பேர் ஆங்கிலேயர்கள். இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலியர்கள் 624,259 (27.8%), ஐரியர்கள் 171,667 (7.6%), இத்தாலியர்கள் 96,721 (4.3%), இசுக்கொட்டியர்கள் 62,781 (2.8%), ஜெர்மானியர் 51,672 (2.3%), சீனர் 48,894 (2.2%) ஆகியோர் காணப்படுகின்றனர். 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 58.496 ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் காணப்பட்டனர். இவர்கள் மக்கள்தொகையில் 3.1%தினராவர். + + + + +தெற்கு ஆஸ்திரேலியா + +தெற்கு ஆஸ்திரேலியா ("South Australia") ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அடிலெய்ட். இதன் பரப்பளவு 984,377 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். ஆஸ்திரேலிய மாநிலங்களில் நான்காவது பெரிய மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கில் மேற்கு ஆஸ்திரேலியாவும் வடக்கில் வட பிரதேசம், குயின்ஸ்லாந்து ஆகியனவும் கிழக்கில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா ஆகியனவும் அமைந்துள்ளன. ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். சனத்தொகை அடிப்படையில் ஐந்தாமிடத்திலிருக்கும் இம்மாநிலத்தில் ஆஸ்திரேலிய மக்களில் பத்து சதவீதமானோர் வசிக்கின்றனர். விவசாயம், உற்பத்தி மற்றும் அகழ்வுத் தொழில்களே இம்மாநிலத்தின் பொருளாதாரப் பலமாகும். + + + + +வட ஆட்புலம் + +வட மண்டலம் அல்லது வட பிராந்தியம் ("Northern Territory") ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டார்வின். + + + + + +குயின்ஸ்லாந்து + +குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிரிஸ்பேன். + +ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் "'சூரிய உதய மாநிலம்" என்று அழைக்கப்படுகிற குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது. + + + + +விக்டோரியா (ஆஸ்திரேலியா) + +விக்ரோறியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மெல்போர்ன். + + + + + +தாசுமேனியா + +தாஸ்மானியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. இது ஒரு தீவு. ஆஸ்திரேலியக் ��ண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹோபார்ட். + + + + +ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் + +ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான கன்பரா இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + +தி இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (புதினம்) + +த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் ("The Inheritance of Loss") கிரண் தேசாயால் எழுதப்பட்ட ஒரு புதினம். 2006 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந் நாவலுக்கு அவ்வாண்டிற்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது இந்நாவலாசிரியரின் இரண்டாவது நாவலாகும். + +இந்நாவல், 1986-லிருந்து 1988 வரையிலும் தீவிர வன்முறை மிகுந்த நிகழ்வாக இருந்த, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்ட நேபாள மக்கள் தனி மாநிலம் கோரி நிகழ்த்திய போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதியும், விபத்தொன்றில் தனது பெற்றோரை இழந்துவிட்ட அவரது பேத்தி சாய் ஆகியோரை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. + + + + +பேய்ப்படம் + +பேய்ப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. + + + + + +இயைபுத் தொடை + +ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகின்றது. ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடை���ேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும். + + +மேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது. + + + + +புலம் (இயற்பியல்) + +புலம் என்ற கருதுகோள் (concept) இயற்பியலிலும் இலத்திரனியலிலும் முக்கியம். ஒரு இயற்பியல் எண்ணுதி (physical quantity) வெளியின் எல்லா புள்ளியிலும் இருக்கும் பொழுது அங்கு அந்த எண்ணுதியின் புலம் இருக்கின்றது. எந்த ஒரு புள்ளியிலும் இருக்கும் என்ணுதியின் அளவு வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அளவைக் எடுக்குமானல் அந்தப் புலம் நேர மாற்றத்துக்கு உட்பட்ட புலம் (time varying field) எனப்படும். + +புலத்தை பற்றி ஆயும் கணிதத் துறை புலம் இயல் ஆகும். + + + + + + +புலநிலை ஆற்றல் வேறுபாடு + +கவனிக்க: இங்கு தரப்பட்ட விளக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படவேண்டும். இது ஒரு ஆரம்பமே. + +ஒரு புலத்தின் இரு நிலைகளுக்கு இடையே இருக்கக்கூடிய ஆற்றல் (energy) அளவு வேறுபாட்டை புலநிலை ஆற்றல் வேறுபாடு (potential energy difference) குறிக்கும். மின்புலத்தில் மின்புல வேறுபாட்டையும் (electrical potential energy difference) புவியீர்ப்பு புலத்தில் புவியீர்ப்பு புல வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுக்கள் ஆகும். தமிழில் potential difference என்பதற்கு மின்னிலை என்ற சொல் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகராதியில் தரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. + +Total Mechanical Engergy (at a point) = U + K, where U is the potential energy, K is the kinetic energy + +ஒரு புவியீர்ப்பு புலத்தில், இரு நிலைகளுக்கு இடையே இருக்கும் ஆற்றலின் முழு அளவு principal of conservation of mechanical energy அமைய மாறாது. அதாவது ஆற்றலில் அளவு conserved. எனவே, U1 + K1 = U2 + K2. அதிலிருந்து புவியீர்ப்பு புல ஆற்றல் வேறுபாட்டை பின்வருமாறு வரையறை செய்யலாம்: +U2 – U1 = K1 – K2. + +மின்புலத்தில் இரு நிலைகளுக்கு இடையே இருக்கும் ஆற்றல் வேறுபாடு மின்புலநிலை ஆற்றல் வேறுபாடு ஆகும். அதாவது + +மேலே உள்ள வரையறையில் formula_3 என்பதை கவனத்தில் கொள்தல் வேண்டும். அத��வது திசை அளவை நிர்ணயக்கின்றது. + +மின்புலநிலை வேறுபாட்டை பின்வருமாறு வரையறை செய்வர்: +formula_4 + +
+ +இங்கு ஆற்றல் என்பதை Energy என்ற பதத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஆற்றல் சக்தி என்றும் தமிழில் குறிக்கப்படுவதுண்டு. + + + +
+ +இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை + +யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை இந்திய நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். + +மறைந்த நடராஜா ரவிராஜூக்கு நவம்பர் 11, 2006 அன்று தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது. + +ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். + +ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் திங்கட்கிழமை நவம்பர் 13, 2006 நடைபெற்ற பாரிய கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்பேரணியில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த அரசியல், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். + + + + + + +வாகரை குண்டுத்தாக்குதல் + +வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலைகளின் மீது நவம்பர் 8,2006 ல் இலங்கை இராணுவம் நடத்திய மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வே வாகரை குண்டுத்தாக்குதல் ஆகும். இந்நிகழ்வின் விளைவாக 50க்கும் அதிகமான அகதித்தமிழர்கள் இறந்ததுடன் 100க்கும் அதிகமானோர் காயமுற்று உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். + +வாகரைப் பகுதி, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு வடக்காக அமைந்துள்��து. தமிழர்கள் செறிந்து வாழும் இந்நகர் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. + +வாகரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவு திட்டம் அடங்கலாக பலவித நிவாரண உதவிகள் வழங்கும் வழிகளை மூன்று கிழமையாக இலங்கை அரசு, தடுத்துவருவதாகவும் " மேலும்,வாகரை குண்டுதாக்குதலில் காயமுற்றவர்களை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக கொண்டு செல்வதற்கு இராணுவ கெடுபிடியால் மூன்று மணித்தியாலம் வரை பிடித்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.. + +தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாகவும்,தவறுக்கு வருந்துவதாகவும் மேலும் எல்லாவற்றையும் விட நாட்டுப் பாதுகாப்பே முதன்மையானது எனவும் இலங்கை அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..இந்நிகழ்வின்போது தாக்குதலுக்குள்ளான அகதி முகாமும் மக்களும் மனிதக் கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டிருந்தது. இதனை தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தொடர்புடைய பாடசாலையிலும் அதனை அண்டியுள்ள பகுதியும் இராணுவத் தளமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவொரு அறிகுறிகளையும் தாம் காணவில்லை என தெரிவித்துள்ளனர் . + +வாகரை நிகழ்வு இலங்கை வாழ் தமிழர் இடையில் அரசின் மீது பரந்த வெறுப்பையும் கோபத்தினையும் உருவாக்கி உள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இலங்கைகான UNICEF தலைமை அலுவலகதின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது]].இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடாத்திய முண்ணனி தமிழ் பாராளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மறுநாளே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்நிகழ்வு பற்றி குறிப்பிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி, "எவ்வளவு காலம்தான் இந்தியா இலங்கையில் தமிழருக்கு எதிராக இராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்கொடுமை கண்ணுறாமல் பொறுமை காப்பது" என மனவேதனைப்பட்டுள்ளார் +ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடும்போது இந்நிகழ்வை காட்டமாக கண்டித்ததுடன் தாக்குதல் நடாத்தும்போது மக்கள் தொடர்பில் கரிசனமெடுக்��ுமாறு கேட்டிருக்கின்றது.மேலும் அனைத்துலக மன்னிப்புச் சபையும் தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன் உரிய விசாரணைகளை நடத்தும்படி அரசினைக் கேட்டிருக்கின்றது. + + + + + + +சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் + +சென்னையிலுள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் தேர்வுப் போட்டி நடை பெற்றது. + +இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது. + +1996ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன. + + + + + + +நடராஜா ரவிராஜ் + +நடராஜா ரவிராஜ் ("Nadaraja Raviraj", ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். + +யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். + +ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். +1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். +2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார். +2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார். + +ஒரு டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. இலங்கை படைத்துறையின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. +தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழங்கப்பட்டது. + +இவர் தென்மராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வீதி புனரமைப்பு மற்றும் மின்சார புனரமைப்பு போன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தென்மராட்சியின் பல சிறிய கிராமங்கள் வளர்ச்சி அடைய காரணமாயிருந்தன. + + + + + + +ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி + +ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ("United People's Freedom Alliance", ) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன, செயலாளர் விஸ்வா வற்ணபால + +இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது: + +கூட்டணியின் முக்கிய கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியாகும். எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன. + +2004 ஏப��ரல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது. + +ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. 2005 அரசுத்தலைவர் தேர்தலில், இக்கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராசபக்ச 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். 2010 அரசுத்தலைவர் தேர்தலிலும் மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார். + + + + + + +மலையக மக்கள் முன்னணி + +மலையக மக்கள் முன்னணி ("Up-Country People's Front") இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.விலிருந்து விலகிய பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இது வரையிலும் அவரே அதன் தலைவராகவும் காணப்படுகிறார். இக்கட்சி ஏனைய மலையகக் கட்சிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையையும் அதன் தலைமையுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது. + +1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1 ஆசனத்தையும் தேசியபட்டியலில் 1 ஆசனத்தையும் வென்றது. + + + + +3 டிஎஸ் மக்ஸ் + +3 டிஎஸ் மக்ஸ் (3ds Max) என்பது, ஒரு முப்பரிமாண வரைவியல் மென்பொருள் ஆகும். இது "ஆட்டோடெஸ்க் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட்" (Autodesk Media & Entertainment) நிறுவனத்தால் உருவாக்கி வெளியிடப்பட்டது. இது வின்32 மற்றும் வின்64 தளங்களில் இயங்குகின்றது. நவம்பர் 2006 இலுள்ள நிலைவரப்படி இதன் 9 ஆம் பதிப்பு பயன்பாட்டில் உள்ளது. + +இம் மென்பொருள் தொடக்கத்தில் 3டி ஸ்டூடியோ என்னும் பெயரில் டாஸ் (DOS) தளத்துக்காக "யோஸ்ட் குரூப்" நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு ஆட்டோடெஸ்க் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதன் இர��்டாம் பதிப்பின் வெளியீட்டின் போது இதனை ஆட்டோடெஸ்க் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 3 டி ஸ்டூடியோவின் 4 ஆம் பதிப்புக்குப் பின்னர் இது விண்டோஸ் NT தளத்துக்கு மாற்றப்பட்டு, "3டி ஸ்டூடியோ மக்ஸ்" (3D Studio MAX) எனப் பெயரிடப் பட்டது. இதையும் தொடக்கத்தில் "யோஸ்ட் குரூப்" நிறுவனமே உருவாக்கியது. இதனை "கைனெட்டிக்ஸ்" (Kinetix) என்னும் ஆட்டோடெஸ்க்கின் துணை நிறுவனம் வெளியிட்டது. பின்னர் இதன் பெயர் 3டிஎஸ் மக்ஸ் (3ds Max) எனப் பெயர் மாற்றம் பெற்றது. + +3டிஎஸ் மக்ஸ் பொது மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அசைவூட்டல் (animation) மென்பொருள்களுள் ஒன்றாகும். இது மிக வலுவான உருவமைப்புத் திறன் கொண்டது. இது பெரும்பாலும், நிகழ்பட விளையாட்டு உருவாக்குனர்கள், தொலைக் காட்சி விளம்பரத் தயாரிப்பாளர்கள், கட்டிடக்கலைஞர்கள் போன்றவர்களினால் பயன்படுத்தப்படுகின்றது. இது, காட்சிகளில் சிறப்புத் தோற்றங்களை உருவாக்கவும், திட்டமிடப்பட்ட காட்சிகளை முன்னரே உருவாக்கிப் பார்க்கவும் திரைப்படத் துறையிலும் இது பயன்படுகின்றது. + + + + +முக்கொம்பு + +முக்கொம்பு திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும். + +திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம். + +முக்கொம்புக்கு அருகாமையிலேயே புதைமணல் பகுதியும் கொள்ளிடமும் அமைந்திருக்கின்றன. + + + + + +செம்பரம்பாக்கம் ஏரி + +செம்பரபாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கின்றது. + +இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக ��தன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது. + +இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி. 85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft) ஆகும். + + + + + + + +இலங்கை அரசியல் கொலைகளின் பட்டியல் + +இலங்கை அரசியலில் ஈடுப்பட்டிருந்த பல முக்கிய நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே அரசியல் கொலைகள் ஆரம்பித்து விட்டன. 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 இல் இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரால் கொலை செய்யப்பட்டார். + +இப்பட்டியல் இலங்கையில் கொலைச் செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது எவ்வகையிலும் முழுமையான பட்டியல் இல்லை. + + + + + + + + + + + + + +பெரியசாமி சந்திரசேகரன் + +பெரியசாமி சந்திரசேகரன் (ஏப்ரல் 16, 1957 - சனவரி 1, 2010) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்கவாதியுமாவார். இவர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சமூக வளர்ச்சி மற்றும் சமத்துவ அமைச்சராகவும் இருந்தவர். + +சந்திரசேகரன் இலங்கையின் மெறயா பேடப் தோட்டத்தில் ஒரு வர்த்தக குடும்பத்தில் பிறந்தார். பெரிய சாமிக்கும் பரப்பாத்தி அம்மானுக்கும் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் நான்கு தங்கைகளும் உள்ளனர். தலவாக்கலை தமிழ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அவர் பின்னர் தலவாக்கலை புனித பெட்ரிக் பாடசாலையிலும் க.பொ.த உயர்தரத்தை அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் தொடர்ந்தார். + +எழுத்தாற்றல் கொண்ட சந்திரசேகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்த தமிழ் அரசியல் கட்டுரைகளைக் கவனித்த செளமியமூர்த்தி தொண்டமான் இவரை அழைத்து இ.தொ.கா.வில் சேரும்படி விடுத்த அழைப்பையடுத்து 1977ம் ஆண்டு இ.தொ.கா.வில் இணைந்தார். தலவாக்கல ��கரசபை உறுப்பினராகத் தெரிவான இவர் இ.தொ.கா.வின் தலவாக்கலை-அக்கரபத்தனை பகுதிக்கான அரசியல் பிரிவு உறுப்பினராகக் கடமையாற்றி வந்தார். பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு நுவரெலிய மாவட்ட சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். + +இ.தொ.கா.வுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து அதில் இருந்து விலகி 1989ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியை அமைத்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். + +பிளவர் வீதி கூட்டுப்படை நடவடிக்கைகள் தலைமையகத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து சந்தேக நபர் வரதனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான இவர், 94ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே மண் வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றார். இவரது ஆதரவையடுத்தே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அரசு அமைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலின் பிறகு வழக்கு விசாரணையில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். + +வர்த்தக வாணிப பிரதியமைச்சராகவும் தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சராகவும் பதவி வகித்த இவர், தனது பதவிக் காலத்தில் ஐம்பதாயிரம் பெருந்தோட்ட வீடுகளை அமைத்துக்கொடுத்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் இவர் காலத்திலேயே முதல் தடவையாக அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. + +பின்னர் தற்போதைய மகிந்த ராஜபக்சவின் அரசில் இணைந்து அமைச்சரானார். + +இவர் பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் உடையவராவார். நல்ல பேச்சாளரான இவர் தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பாக வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வந்ததோடு மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும் விளங்கினார். மலையக மக்கள் முன்னணியை படித்த தமிழ்த் தோட்ட இளைஞர்களின் பாசறையாக ஆரம்ப காலத்தில் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. + +குறுகிய காலமாக நோய்வாய்ப்பட்டதன் பிறகு 2010 சனவரி முதலாம் நாள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். + + + + + +அலபாமா + +அலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது. + + + + + +அரிசோனா + +அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது. + + + + + + + + +ஆர்கன்சா + +ஆர்கன்சஸ் அல்லது ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிட்டில் ராக். ஐக்கிய அமெரிக்காவில் 25 ஆவது மாநிலமாக 1836 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது. + + + + + +கொலராடோ + +கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது, + + + + +கனெடிகட் + +கனெடிகட் ("Connecticut", ) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. + + + + +டெலவெயர் + +டெலவெயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மத்திய அட்லாண்டிக் மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் டோவர். ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது மாநிலமாக 1787 இல் இணைந்தது, + + + + +புளோரிடா + +புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். + +புவியியல் அமைப்பில் இந்த மாநிலம் ஒரு குடாநாடாக இருப்பதுடன், மேற்குப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும், வடக்குப் பகுதியில் அலபாமா, மற்றும் ஜோர்ஜியாவையும் ஐயும், கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் பெருங்கடலையும் கொண்டுள்ளது. குடாநாடாக இருப்பதனால், தொடர்ந்த கடற்கரைப் பகுதிகளை சுற்றிலும் கொண்டிருப்பதுடன், அடிக்கடி வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் இடமாகவும் இருக்கின்றது. புளோரிடா மாநிலத்தில் பரந்து காணப்படும் சதுப்புநில தேசியப் பூங்காவில் (Everglades National Park), மிக அரிதான விலங்குகள் பல காணப்படுகின்றன. இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட பல அருகிய இனங்கள், இந்தப் தேசியப் பூங்காவில், இயற்கைச் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புளோரிடாவில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவானது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கின்றது. + +சுற்றுலாத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் வால்ட் டிஸ்னி உலகம் இந்த புளோரிடா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒர்லாண்டோ நகரத்தில் உள்ளது. வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சொந்தமான நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும் இங்கே அமைந்திருக்கின்றன. + + + + +ஜோர்ஜியா (மாநிலம்) + +ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அட்லான்டா. ஐக்கிய அமெரிக்காவில் 4 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது. + + + + +ஹவாய் + +ஹவாய் ("Hawaii") ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹொனலுலு. ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. + +இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டது. இது உலகி��் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும். மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் . + + + + +ஐடஹோ + +ஐடாகோ (Idaho) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பொய்சி. ஐக்கிய அமெரிக்காவில் 43 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது, + + + + + +இலினொய் + +இலினொய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட், மிகப்பெரிய நகரம் சிகாகோ. ஐக்கிய அமெரிக்காவில் 21 ஆவது மாநிலமாக 1818 இல் இணைந்தது, + + + + + +இந்தியானா + +இந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது. + + + + + +அயோவா + +அயோவா (Iowa) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது, + + + + + +கேன்சஸ் + +கன்சாஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரொபேகா. ஐக்கிய அமெரிக்காவில் 34 ஆவது மாநிலமாக 1861 இல் இணைந்தது, + + + + + +கென்டக்கி + +கென்ரக்கி("தமிழக வழக்கு:கென்டக்கி, en:Kentucky") ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிராங்போர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 15 ஆவது மாநிலமாக 1792 இல் இணைந்தது, + + + + + +லூசியானா + +லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது, + + + + +மேய்ன் + +மேய்ன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அகஸ்தா. ஐக்கிய அமெரிக்காவில் 23 ஆவது மாநிலமாக 1820 இல் இணைந்தது, + + + + +மேரிலாந்து + +மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். + + + + + +மாசச்சூசெட்ஸ் + +மசாசுசெற்ஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 6 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, + + + + +மிச்சிகன் + +மிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது, + + + + +மினசோட்டா + +மினசோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயின்ட் பால், மிகப்பெரிய நகரம் மினியாபோலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 32 ஆவது மாநிலமாக 1858 இல் இணைந்தது, + + + + +மிசிசிப்பி + +மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாக்சன். ஐக்கிய அமெரிக்காவில் 20 ஆவது மாநிலமாக 1817 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது. + + + + +மிசூரி + +மிசூரி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது, + + + + +மொன்ட்டானா + +மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது, + + + + +நெப்ராஸ்கா + +நெப்ரஸ்கா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிங்கன். ஐக்கிய அமெரிக்காவில் 37 ஆவது மாநிலமாக 1867 இல் இணைந்தது, + + + + +நெவாடா + +நிவாடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கார்சன் நகரம், மிகப்பெரிய நகரம் லாஸ் வேகஸ். ஐக்கிய அமெரிக்காவில் 36 ஆவது மாநிலமாக 1864 இல் இணைந்தது, + + + + +நியூ ஹாம்சயர் + +நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொன்கோர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, + + + + +நியூ மெக்சிகோ + +நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே. ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. + + + + + +நியூ யோர்க் மாநிலம் + +நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்��ியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன். + +இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம். + + + + +வட கரொலைனா + +வட கரோலினா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ராலீ, மிகப்பெரிய நகரம் ஷார்லட். ஐக்கிய அமெரிக்காவில் 12 ஆவது மாநிலமாக 1789 இல் இணைந்தது. + + + + +வடக்கு டகோட்டா + +வட டகோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிஸ்மார்க். ஐக்கிய அமெரிக்காவில் 39 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது, + + + + +ஒகையோ + +ஒகையோ ("Ohio") ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் வட அமெரிக்கப் பழங்குடியாகிய இராக்குவா மக்களின் மொழியில் "நல்ல ஆறு" அல்லது "நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் கொலம்பஸ் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக 1803ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைய 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 வது இடத்தை வகிக்கின்றது. + + + + + +ஓக்லகோமா + +ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவது மாநிலமாக 1907 இல் இணைந்தது, + + + + +ஓரிகன் + +ஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது, + + + + + +பென்���ில்வேனியா + +பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது, + + + + +றோட் தீவு + +ரோட் தீவு ("State of Rhode Island and Providence Plantations", பொதுவாக "Rhode Island" (), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ். +ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது. + +ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" ("The Ocean State") என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ). + + + + +தென் கரொலைனா + +தென் கரொலைனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொலம்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 8 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, + + + + +தெற்கு டகோட்டா + +தென் டகோரா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பியேர். ஐக்கிய அமெரிக்காவில் 40 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது, + + + + +டென்னிசி + +டென்னிசி அல்லது டென்னசி ("Tennessee", ˌtɛnɨˈsiː) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் நாஷ்வில், மிகப்பெரிய நகரம் மெம்ஃபிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 16 ஆவது மாநிலமாக 1796 இல் இது இணைந்தது. + +டென்னிசி மாநிலம் மற்றும் எட்டு அமெர்க்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. வடக்கே கென்டக்கி மற்றும் வர்ஜீனியா; கிழக்கே வட கரோலினா; தெற்கே ஜோர்ஜியா, அலபாமா மற்றும் மிசிசிப்பி; மேற்கே ஆர்கன்சஸ் மற்றும் மிசூரி ஆகியன மிசிசிப்பி ஆற்றுப் படுகையிலும் அமைந்துள்ளன. + + + + +டெக்சஸ் + +டெக்சஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆஸ்டின், மிகப்பெரிய நகரம் ஹியூஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது, + + + + +யூட்டா + +யூட்டா ("Utah") ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது, + + + + + +வெர்மான்ட் + +வேர்மொன்ற் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்பெலியர். ஐக்கிய அமெரிக்காவில் 14 ஆவது மாநிலமாக 1791 இல் இணைந்தது, + + + + +வர்ஜீனியா + +வர்ஜீனியா ("Virginia", வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்ட் டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் ரிச்மன்ட்; வர்ஜீனியா கடற்கரை இதன் அதிக மக்கள் தொகை உடைய நகர் மற்றும் பேர்வேக்சு கவுண்டி அதிக மக்கள் தொகை உடைய முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, + +அமெரிக்க உள்நாட்டுப்போரி���் இம்மாநிலம் கான்படரேட் மாநிலங்களில் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் கான்படரேட் அணியின் தலைநகராக விளங்கியது. + + + + +வாஷிங்டன் + +வாஷிங்டன்(English: Washington) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஒலிம்பியா, மிகப்பெரிய நகரம் சியாட்டில். ஐக்கிய அமெரிக்காவில் 42 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது, + + + + +மேற்கு வர்ஜீனியா + +மேற்கு வேர்ஜினியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவில் வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சார்ல்ஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 35 ஆவது மாநிலமாக 1863 இல் இணைந்தது, + + + + +விஸ்கொன்சின் + +விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேடிசன், மிகப்பெரிய நகரம் மில்வாகி. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆவது மாநிலமாக 1848 இல் இணைந்தது, + + + + +வயோமிங் + +வயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது. + + + + +கிராமின் வங்கி + +கிராமின் வங்கி (வங்காள மொழி: গ্রামীণ ব্যাংক) என்பது பிணை வைப்பின்றி வறியவர்களுக்கு சிறுகடன்கள் வழங்குவதற்கென வங்களாதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிதியமைப்பாகும்.இதன் தாபகர் முனைவர் முகமது யூனுஸ் ஆவார். இவ் வங்கி சிறுகடன் வழங்குவது மட்டுமின்றி வைப்புக்களை ஏற்றல், வங்கிசாரா சேவைகளை வழங்குதல், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிக அமைப்புக்களை நடாத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. ஏழைமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும்,தாபகர் யூனுஸிற்கும் 2006ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. + +கிராமின் வங்கியின் தாபகர் முகமது யூனுஸ் அமெரிக்க பல்கழைக்கழகத்தில் பொருளி���ல் முனைவர் பட்டம் பெற்றவராவார். 1976 ஆம் ஆண்டு ஜோப்ரா என்ற தன்னுடைய கிராமத்தில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண்மணியுடன் பேச நேர்ந்தபோதே யூனுசுக்கு சிறுகடன் பற்றிய எண்ணம் உருவானது.அப்பெண்மணி உள்ளூர் வட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து,விற்ற பணதில் பெரும்பாலானதை கடன் கொடுத்தவருக்கு திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்தார்.அவருக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று யோசித்திருக்கிறார். பின் அவரும், அவருடைய மாணவர்களும் அக்கிராமத்தில் சிறிய ஆய்வை மேற்கொண்டபோது அந்த பெண்மணி போலவே மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அதே பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதாக தெரியவர, அவர்கள் அனைவரும் செலுத்தவேண்டிய தொகையை அவர்கள் சார்பில் யூனுஸ் பணம் செலுத்தினார்.பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இச்சம்பவமே ஏழைகளுக்கு கடனுதவி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தது. + +கிராமின் வங்கி(தமிழில்:கிராமிய வங்கி,ஆங்கிலதில்:Bank of the Villages) முகமது யூனிஸின் எண்ணதில் உருவானதொன்றாகும்.இவ்வங்கி 1976 ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது,இவ்வங்கியின் சேவையினை சிட்டகொங் பல்கழைக்கழகத்தினை சூழவுள்ள பிரதேங்களுக்கு ஆரம்பித்தது.1983ல் வங்காளதேசதின் சட்டப்படியான வங்கி அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. 2006 நடுப்பகுதி வரையில் மட்டும் இவ்வங்கி 2100 மேலான வங்கிக்கிளைகளினை பங்களாதேசம் முழுவதுமைக்குமாகக் கொண்டுள்ளது. + +கிராமின் வங்கிக்கும் தாபகர் யூனுஸிற்கும் இணைத்து சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்குவதாக அக்டோபர் 13,2006 ல் நோபல்பரிசு குழு அறிவித்தது. + +கிராமின் வங்கிக்குழுமத்தில் உள்ள ஏனைய நிறுவனங்கள்: + + +சிறிய தொகையாக இருப்பதால் இது சிறுகடன் என்றழைக்கப்படுகிறது. இக்கடன்களைப் பெற பிணையாக எதுவும் வைக்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம். ஆனால் முதலில் ஐவர் சேர்ந்த குழுவாக சேரவேண்டும். முதலில் இருவருக்கு கடன் வழங்கப்படும். அவ்விருவரும் கடன்களை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படும். ஒருவர் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் எனையவருக்கு கடன் மறுக்கப்படும்.இச்சிறுகடன் முறையை அடியொற்றியே பல நாடுகளில் சுய உதவி��்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. + + + + + + +கியூபெக்வா கட்சி + +க்யூபெக்வா கட்சி (Bloc Québécois) கனடிய மத்தியக் கூட்டாட்சி அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. + + + + +விஜய குமாரணதுங்க + +விஜய குமாரணதுங்க (அக்டோபர் 9, 1945 - பெப்ரவரி 16, 1988, இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் கணவராவார். 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். + +குமாரதுங்கவின் முதல் திரைப்படம் "ஹந்தான கதாவ" (Hanthane Kathawa) என்பதாகும். அன்றிலிருந்த அவர் இறக்கும் வரையில் மொத்தம் 114 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1983 முதல் 1988 வரையில் அவர் இலங்கையின் மிகப் பிரபலமான நடிகர் என்ற விருதினைப் பெற்றவர். "The God King" என்ற ஆங்கிலத் திரைப்படத்திலும் "நங்கூரம்" என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். + +சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார் விஜய. ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து செயலாற்றிய குமாரதுங்க பின்னர் 1974 இல் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலின் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு குமாரதுங்கவை நக்சலைட் எனக் குற்றங்சாட்டி சிறையில் அடைத்தது. + +சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக 1984 இல் இலங்கை மக்கள் கட்சியை ("Sri Lanka Mahajana Party") ஆரம்பித்தார். இலங்கை மக்கள் கட்சி, சமூக ஜனநாயகவாத மார்க்கத்தில் பயணித்ததுடன் இலங்கையில் இனப் பிரச்சினை பல வழிகளிலும் ஏற்பட்ட காலத்தில் இன, குல, மத பேதங்களை புறந்தள்ளி நாட்டின் சகல இன மக்களையும் ஒரேயொரு அரசியல் சக்திக்குள் கொண்டு செலுத்த அரும்பாடுபட்டார் விஜய குமாரதுங்க. + +விஜய குமாரதுங்க 1985/86 காலப் பகுதிகளிலேயே இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே ஒரேயொரு இறுதித் தீர்வென அச்சமின்றி சுட்டிக்காட்டியிருந்தார். + +இவ்வாறானதொரு சூழ்நிலையில் விஜய குமாரதுங்க 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் சென்னை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் அரசியல் இணைப்பை ஏற்படுத்த முன்வந்து செயற்பட்டார். யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்க உட்பட்ட குழுவினரை அங்குள்ள சாதாரண மக்கள் வரவேற்ற முறையிலிருந்தே அவர் மீது, வட பகுதி மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை வெளிப்பட்டது. இதேநேரம் சென்னைக்கும் சென்ற விஜய குமாரதுங்கவை சந்திக்கவென அப்போது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த வடக்கின் சகல போராட்டத் தலைவர்களும் வந்திருந்தனர். + +யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்கவிற்கு அப்போது விடுதலைப் புலிகளின் பொறுப்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றையும் விடுதலை செய்ய முடிந்தது. + +விஜய குமாரதுங்க விஞ்ஞானமய சோசலிசத்தில் லெனினால் சுட்டிக்காட்டப்பட்ட, இனங்களின் சுயாட்சி உரிமையை ஏற்றுக் கொண்டு இனப் பிரச்சினை சமூக ஜனநாயகவாத சமூக முறையொன்றுக்குள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்தார். அதற்கமைய அன்றைய இடதுசாரித் தலைவர்களான கொல்வின் ஆர். டி. சில்வா, பீட்டர் கெனமன், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தனது அரசியல் மார்க்கத்திற்குள் இணைத்துக் கொள்ள அவரால் முடிந்திருந்தது. + +பெப்ரவர் 16, 1988 இல் அவரது பொல்ஹேன்கொடவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே உந்துருளியில் வந்த இருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். வழக்கு விசாரணையின் போது டார்சன் வீர்ரசிங்கே மற்றும் லயனல் ரணசிங்கே என்ற இருவருமே கொலையை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் வழக்கு முடிவுக்கு முன்னரே இறந்துவிட்டனர். மேலும் வீரரத்னே முட்தியன்சேலாகே தனபால என்ற சிங்களவரும் துறைசாமி கந்தன் என்ற தமிழரும் கொலையாளர்களுக்கு உதவினார்கள் என தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். கொலையின் நோக்கம் இன்னமும் மர்மமாகவே உள்ளது. + + + + + +இலங்கையின் நெடுஞ்சாலைகள் + +இலங்கையின் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போ���்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு "இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை"யாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்கையின் முதலாவது அதிவேக பெருந்தெரு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகும். மேலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன. + +பெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி "ஏ","பி","சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் "ஏ" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. "ஏ" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். "பி" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை "ஏ" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் "சி" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது. + + + + + +அக்டோபர் 2006 + +சீகள் சாப்ட்வேர் இலங்கையில் பல மில்லியன் ரூபாய்கள் மோசடி. இலங்கையில் காவற்துறை தீவிர ஆய்வுகள். சீகள் மோசடி + +இன்று சோகநாளாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். + +திருகோணமலை NC வீதியில் ஒரு தமிழரும் அடையாளம் காணப்படாத பிறிதொருவரும் அன்புவளிபுரத்தில் சுட்டுக்கொலை. + + + + +அடோபி போட்டோசாப் + +அடோபி போட்டோஷாப் ("Adobe Photoshop") அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் வரைகலை மென்பொரு��ானது அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியாக மிகவும் பிரபலமானது. பல இயங்குதளங்களில் ஆவணங்களை விநியோகிப்பதற்கு உதவும் அடோப் அக்ரோபட் என்னும் மென்பொருளைப் போலவே, இதுவும் மிகவும் பிரபலமான மென்பொருளாகும். இது வர்த்தக ரீதியாக நியம மென்பொருளாகக் கருதப்படுகின்றது. + +போட்டோஷாப் மென்பொருளானது மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படக்கூடியது. போட்டாஷாப் 9 வரையிலான பதிப்புக்களை "குறஸோவர்" ஆபிஸ் மென்பொருளூடாக லினக்ஸ் இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் முந்திய பதிப்புக்களானது சண் சொலாரிஸ் இயங்குதளங்களிலும் சிலிக்கன் கிராபிக்ஸ், ஐரிஸ் இயங்குதளங்களிலும் இயங்கினாலும் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவானது 3ஆம் பதிப்பிலிருந்து கைவிடப்பட்டுள்ளது. + +இது பிரதானமாக அச்சுவேலைகளிலேயே பயன்படுத்தப்பட்டாலும் உலகளாவிய வலையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் அண்மைய பதிப்புடன் அடோப் இமேஜ் ரெடி மென்பொருளும் கூட்டிணைக்கப்படுகின்றது. இது விசேடமான கருவிகளையும் கொண்டுள்ளது. அடோப் போட்டோஷாப் சேமிக்கும் *.psd கோப்பானது ஏனைய அடோப் மென்பொருட்களான அடோப் இமேஜ் ரெடி, அடோப் இலஸ்ட்ரேட்டர், அடோப் பிரிமியர், ஆப்டர் எஃபக்ட் மற்றும் நியம டிவிடிக்களை உருவாக்கும் அடோப் என்கோர் டிவிடி போன்ற மென்பொருட்களில் ஏற்றிப் பயன்படுத்த முடியும். இதன்மூலம், தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் தொலைக்காட்சி, திரைப்படத்துறை, உலகளாவிய வலையமைப்பு முதலியவற்றுக்காக உருவாக்குவதிலும் பயன்படுகின்றது. + +போட்டோஷாப்பானது பல்வேறுபட்ட நிற மாதிரிகளை ஆதரிக்கின்றது. + +மிக அண்மையில் 2009 இல் வெளியிடப்பட்ட அடோப் போட்டோஷாப் 9 போட்டோஷாப் சிஸ் 4 இதில் சிஸ் என்பது "'அடோப் கிரியேட்டிவ் சுயிட் " இருந்து வந்ததாகும். அடோப்பினால் மீள பெயரிடப்பட்ட போட்டாஷாப் -இன் இரண்டாவது பதிப்பாகையினால் 2 என்பது சேர்க்கப்பட்டது. + +போட்டோஷாப் பிரபலமான வல்லுனர்களால் பாவிக்கப்பட்டாலும் இது 600 அமெரிக்க டாலர் பெறுமதியாக இருந்தமையினால் பலரும் திருட்டு மென்பொருட்களைப் பாவிக்கத் தொடங்கினர் மற்றும் மேலும் சி��� போட்டியான மென்பொருட்களை மலிவான விலையில் விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக அடோப் நிறுவனம், பல சிறப்பு வசதிகள் நீக்கப்பட்ட போட்டோஷாப் எலிமண்ட்ஸ் என்ற மென்பொருளை 100 அமெரிக்க டாலர் பெறுமதியில் வெளியிட்டது. + +போட்டோஷாப் பாடங்கள் + +photoshop alternative + + + + +ஹரி மார்ட்டின்சன் + +ஹாரி மார்ட்டின்சன் (Harry Martinson, மே 6, 1904 – பெப்ரவரி 11, 1978) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1974 இல் இன்னொரு சுவீட எழுத்தாளரான எய்வின்ட் ஜோன்சன் என்பவருடன் இணைந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவராவார். நோபல் பரிசுக் குழுவில் இவ்விருவருமே உறுப்பினர்களாக இருந்தமையால் இது சர்ச்சைக்குள்ளானது. கவிதைகள், புதினங்கள் எழுதியவரான இவர் 1978 இல் தற்கொலை செய்து கொண்டார். + + + + + +கருணாநிதி + +கருணாநிதி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: + + + + + +ஃபெடோரா + +பெடோரா கோர் என முன்னர் அறியப்பட்ட பெடோரா RPM சார்ந்த ஒரு லினக்ஸ் வழங்கலாகும். இது ரெட் ஹட்டினால் ஆதரவளித்து சமூகத்தினால் ஆதரிவளிக்கப்பட்டு வந்ததே பெடோரா கோர் திட்டமாகும். ரெட் ஹட்டினால் நேரடியாக ஆதரவழிக்க முன்னரே பெடோரோ திட்டமானது தன்னார்வலர்களால் ரெட் ஹட்டிற்கு மேலதிக மென்பொருட்களை உருவாக்குவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். பெடோராவின் இலட்சியம் ஆனது துரிதகதியில் இலவச மற்றும் திறந்த நிரல் மென்பொருட்களை விருத்தி செய்வதாகும். + +பெடோரா முழுமையான பொதுவான தேவைகளைப் பூர்திசெய்யக் கூடிய வகையில் முற்றுமுழுதாக இலவசமானதும் திறந்த மூலநிரலிலும் ஆக்கப்பட்டதாகும். பெடோராவானது முற்றுமுழுதாக வரைகலை இடைமுகமூடான நிறுவல்களும் சிஸ்டங்களை. இது க்னூ முறையில் கிரப் முறையிலான பூட் லோடர் (Boot Loader) என்கின்ற கணினியை ஆரம்பிக்கின்ற மென்பொருளை நிறுவி மாற்று இயங்குதளங்களை நிறுவிப் பாவிக்கக்கூடியதாக் இருந்தது. மென்பொருட்களை யும் என்கின்ற யுட்டிலிட்டியூடாக பதிவிறக்கம் செய்து நிறுவ உதவுகின்றது. புதிய பெடோரா பதிப்புக்கள் 6 தொடக்கம் 8 மாதம் வரையிலான காலப்பகுதியில் புதிய பதிப்புக்களை வெளியிடப்பட்டது. பெடோரா குனோம் மற்றும் கேடியி இடைமுகங்களை வழங்கி வருகின்றது. இது 5 இறுவட்டு மூலமாகவோ(முதல் இரண்டு இறுவட்டுக்களே தேவையானவை) டிவிடியூடாக விநியோகிக்கப் படுகின்றது. வலையமைப்பூடான நிறுவல்களுக்கு 6 மெகாபைட் அளவிலான ஓர் கோப்புத் தேவைப்படுகின்றது. நிறுவல்களான Http, ftp மற்றும் NFS மற்றும் மாய வலையமைப்பூடான நிறுவல்களை ஆதரிக்கின்றது. + +பெடோரா கோர் திட்டத்திற்கான மேலதிக பெடோரா எக்ஸ்டாஸ் திட்டமானது மேலதிக மென்பொருட்களை பெடோரா திட்டத்திற்கு வழங்குவதற்கானதாகும். + +பெடோராவானது ரெட்ஹட்டின் வழிவந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது பாவனையாளரின் ரெட்ஹட்டை மாற்றீடு செய்து வீட்டுப் பாவனைக்காக உருவாக்கபட்டதாகும். இதற்கான ஆதரவானது பெடோரா சமூகக் குழுக்களிலானது எனினும் நேரடியாக ரெட்ஹட் ஆதரவினை வழங்காதெனினும் இதன் பணியாளர்களும் இத்திட்டத்திற் பணியாற்றுகின்றனர். + +பெடோரா கோரானது பெடோரா லினக்ஸ் மற்றும் பெடோரா கோர் லினக்ஸ் என்றவாறு அழைக்கபட்டாலும் அவை உத்தியோகபூர்வப் பெயர்கள் அல்ல. + + +பெடோரா கோர் விருத்திச் சக்கரமானது முன்னேறுகையில் பல சோதனை வெளியீடுகள் பயனர்களுக்கு விநியோகிக்கப்படும். இது வரவிருக்கும் மாற்றங்கள், மற்றும் வசதிகளைச் சோதித்தல் மென்பொருள் பற்றிய பின்னூட்டங்கள் போன்றவற்றைப் பெற இவை உதவும். + + + + + + +பொய்கையாழ்வார் + +பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர். + +காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார். + +சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவ கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார். + +இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண��டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். + +இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன். + +நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம். + +அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன. + + + + + +பேயாழ்வார் + +பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது. + +சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர். + +இவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். + +இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன். + +நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுப���ித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம். + +அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன. + +இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் எனக் கருதப்படுகிறார். இவர் பாடிய பாசுரங்களிலே இதற்குச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு பாசுரம்: + + + + +பூதத்தாழ்வார் + +பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது. + +மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம். + +திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது. + +இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். + +இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன். + +நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல் விளக்கு) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல் விளக்கு) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம். + +அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் ���ெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன. + + + + +திருமழிசையாழ்வார் + +திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தைம் மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். + + +பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை.இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார். + +நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும��� சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக திருமாலை உயர்வாகச்சொல்லியவை. இவருக்கு முன்தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள். + +இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம்(வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் பக்திசாரர் என பெயர் பெற்றவராவார் + +திருவெஃகா தலத்தில்(காஞ்சிபுரம்) கணிகண்ணனோடு திருமழிசையார் சிறிதுகாலம் தங்கி, திருவெஃகாவில் குடிகொண்டுள்ள இறையாகிய யதோத்காரிக்கு கைங்கரியம் செய்துவரலானார்கள். அவ்வாறிருக்கையில் அவர்களின் குடிலை தினமும் தூய்மைசெய்துவரும் கைம்மாறு கருதாத வயது முதிர்ந்த பெண்ணையழைத்து ஆசியளிக்க விரும்பினார் ஆழ்வார். வேண்டுவன கேள் என ஆழ்வார் கேட்க, வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையையும் அதனால் தன்னுடைய சேவை முழுமையடையாமல் இருப்பதையும் கூற என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார் ஆழ்வார். என்றும் யவனமும், ஈடில்லா எழிலும் பெற்ற அப்பெண்ணை கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவராயன் எனும் அரசன் விரும்பி மணம்புரிந்தான். பன்னாட்கள் கழிந்தும் மாறாத தன் மனையாளின் யவனத்தின் காரணம் வினவ, அப்பெண் ஆழ்வாரின் புகழை எடுத்துரைத்தாள். அரசன் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனிடம் தன் விருப்பத்தை சொல்ல, ஆழ்வார் ஒருநாளும் அரசனின் இவ்வற்ப ஆசைக்கு அருளமாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னை ஏற்றிக் கவிதையாவது பாடுமாறு கணிகண்ணனை வேண்ட "அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்" எனக் கூறி திருமாலைப்பாடினார். கோபமுற்ற அரசன் கணிகண்ணனை நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். யாவும் கேள்வியுற்ற அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி, + +என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி + +என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.அவ்வாறு அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் ஓர் இரவு இருக்கை என்று அழைக்கப்பட்டு இன்று மருவி ஓரிக்கை என அழைக்கப்பட்டுவருகிறது. + + + + + +மதுரகவி ஆழ்வார் + +மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். + +சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது. + +இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார். + +அயோத்தியில் தங்கியிருந்தபோது ஒரு நாளிரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்' என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி +என்று வினவினார். +என்று விடை வந்தது. +இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்���ு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை. + +மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார். + +ஒம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஒம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள். + +நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்: + + + + + +பெரியாழ்வார் + +பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார். + +வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைப்பெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு. + +இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனது. + +இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற, இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர். + +மேலும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்டே பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. + +வடமொழி வேதங்களுக்கு "ஓம்" எப்படி ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்த 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது. + +பாண்டியனின் ஐயம் தீர்த்து பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் மதுரையை அடுத்த இருந்தையூர்க் கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள இரண்டு கோலங்களைப் பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார் என அறியக்கிடக்கிறது. + +இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன. + +கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன. + + + + +தொண்டரடிப்பொடியாழ்வார் + +தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக���கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். + + +திருவரங்கத்து இறையாகிய அரங்கனுக்காக பூமாலை கைங்கர்யம் செய்வதற்குண்டான நந்தவனம் அமைத்து அன்றலர்ந்த மலர்களை பறித்து அழகான பூச்சரங்களாக தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வரும் வேளையில் தேவதேவி என்ற சோழநாட்டு கணிகையின் பால் விருப்பம் கொண்டு தன்னையே மறந்தார். கணிகையால் தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்துதவ, அதை களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து அரசன் முன் இவரை இட்டுச்சென்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டதோடு, இவரையும் ஆட்கொண்டது. மீண்டு வந்த இவர் தன் இறுதிவரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார். + +தான் எனும் ஆணவத்தை தவிர்க்கும் பொருட்டு தன்னை சிறுமைப்படுத்திக் கொள்வது ஞானிகளுக்கு இயற்கை. மேலும் பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துப்போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார். + +தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது. + +"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது. இதன் பொருள் யாதெனில் ஆழ்வார் இயற்றிய திருமாலை எனும் நூலை அறிந்திடாதவர் பரமனாகிய திருமாலையே அறிந்திடாதவர்கள் ஆவார் என்பதாம். அல்லது பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் திருமாலை எனும் நூலை படித்தால் போதுமென்பதாம். +=திருப்பள்ளியெழுச்சியின் முதல்துளி= + +காலைப்பொழுது விடிவதை வெகு இயல்பாக நம் கண்முன் காட்சிப்படுத்தும் இப்பாடல்களில் முதல்பாடல் இதோ: + +http://thirumandangudi.angelfire.com/ +Blog: http://thirumandangudithondaradipodiazhwar.blogspot.in/ + + + + +திருப்பாணாழ்வார் + +திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம். + +இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரை பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால் பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதிபெருக, அதைக்கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சிக்கொடுத்ததோடு, சாரங்கரரை, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது. + +திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. + +இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. + + + + + +திருப்பாணாழ்வாரின் "அமலனாதிபிரான்" எனப்படும் பத்துப் பாடல்களிலிருந்து, திருமாலின் மார்பைப் பற்றிப் பாடிய ஒரு பாடல்: + + + + +திருமங்கையாழ்வார் + +திருமங்கையாழ்வார் (Thirumangai Alvar) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்' ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார். + +குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார். + +இவர் 1351 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன + + + + + +நோர்டிக் நாடுகள் + +நோர்டிக் நாடுகள் ("Nordic countries") என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் (Åland), மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன��� தீவும் (Jan Mayen), சுவால்பாத் (Svalbard) தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன. + +பொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.. + +இந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. + + + + +டென்மார்க் தமிழர் + +தமிழ் பின்புலத்துடன் டென்மார்க்கில் வசிப்பவர்களை டென்மார்க் தமிழர் எனலாம். டென்மார்க்கில் ஏறத்தாழ 7000 தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக புகலிடம் புகிர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். + + + + + + +இந்தியக் குழந்தைகள் நாள் + +இந்தியாவில் குழந்தைகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை "நேரு மாமா" என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. + +உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன. + + + + + +ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா + +ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார். + +இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்��ில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா + + + + + + + +உயிர்ப்பு ஞாயிறு + +உயிர்ப்பு ஞாயிறு ("Easter"), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. + +இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். + +பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு கடந்து போதல் என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் ""நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்"" (1 கொரி 5 : 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர். + +உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறை���ப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21ம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது. அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். + + + + + +நகர அரசு + +நகர அரசு என்பது, நகரம் ஒன்றினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்படுகின்ற பகுதியொன்றைக் குறிக்கும். வரலாற்று அடிப்படையில் நகர அரசுகள், பெரும்பாலும், பெரிய பண்பாட்டுப் பகுதிகளின் கூறுகளாக இருந்து வந்தன. பண்டைய கிரேக்கம், போனீசியா, அஸ்ட்டெக்ஸ், மாயன், பட்டுப்பாதையை அண்டிய மத்திய ஆசியப் பகுதிகள், மறுமலர்ச்சிக் கால இத்தாலி போன்றவற்றின் பண்பாட்டுப் பரப்பினுள் அமைந்திருந்த நகர அரசுகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். + +பண்டைக்காலத்தில் நகர அரசுகள் பரவலாகக் காணப்பட்டன. இந் நகர அரசுகள் இறைமை உள்ளனவாக இருந்தபோதிலும், பல நகர அரசுகள், முறையாகவோ, முறைசாராமலோ வேறு நகர அரசுகளோடு இணைந்து ஒரு அரசனின் கீழ் குழுக்களாகச் செயற்பட்டு வந்தன. அக்காலத்தில் ஆக்கிரமிப்பு மூலம் பகுதிகளை அடிப்படுத்திப் பேரரசுகள் உருவானபோதும், பல சந்தர்ப்பங்களில், நகர அரசுகள், பரஸ்பர பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அமைதி வழியில் இணைந்தும் பேரரசுகள் உருவாகியுள்ளன. பெலோபொனேசியன் குழுமம் (Peloponnesian League) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். + +மத்திய காலப் பகுதியில் இன்றைய, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிவை இருக்கும் பகுதிகளில் நகர அரசு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கியது. இவற்றுட் பல ஒன்றிணைந்து, ஹன்சியாட்டிக் குழுமத்தை (Hanseatic League) உருவாக்கியிருந்தன. இக்குழுமம் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் வணிகம் தொடர்பில் முக்கிய சக்தியாக விளங்கியது. + +பண்டையக்காலத்தில் உரோமை நகரம், ஏதென்ஸ் மாற்றும் கார்தேஜ் ஆகிய பல நகர அரசுகள் இருந்தபோதிலும், இப்போது உலகில் ஐந்து நகர அரசுகளே உள்ளன. அவை மொனாக்கோ, ���ிங்கப்பூர், வத்திக்கான் நகர், சான் மரீனோ மற்றும் மால்ட்டா ஆகும். + + + + +செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 + +ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள். + +சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்துள்ளன. + +கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக 18 கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது. + +இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு,"Women's Rehabilitation and Development (CWRD)" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. + +இந்த பகுதியில் தரப்பட்ட தகவல்கள் தமிழ்நெற்றின் பின்வரும் ஆங்கில செய்திக்குறிப்பை அடிப்படையாக கொண்டவை. +கிளிநொச்சி கல்வி வலயம் (Kilinochchi Education Zone) என்பது மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும். + +இலங்கை அரச பேச்சாளர் Keheliya Rambukwella தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்த்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார். + + +பாடசாலைகள், சிறுவர் அமைப்பு இடங்கள் மீது குண்டுவீச்சு மற்றும் இராணுவ தாக்குதல்களை தவிர்க்க ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகவே தெரிகின்றது. + +இல���்கை வான்படை திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல, அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற மனித உரிமைகளை மதியா நிலைமையை +வெளிக்காட்டியுள்ளது. + + + +செஞ்சோலையில் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும், பள்ளி மாணவிகள். ஆனால் அவ்விடம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இடம் என்றால், பலியான மாணவிகளில் எத்தனை பேர் செஞ்சோலையை சார்ந்தவர்கள்? + + + + + + + + +ராம்போ III (திரைப்படம்) + +ராம்போ III 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் மக்டோனல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன்,டேவிட் மோரெல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +அதிரடித் திரைப்படம் + + + + + + + +த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (திரைப்படம்) + +த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (The People Under the Stairs) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். வெஸ் கிரேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விங் ரேம்ஸ், பிராண்டன் ஆடம்ஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +பேய்ப்படம் + + + + + +ஜல்சாகர் + +ஜல்சாகர், 1958 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாபி விஷ்வாஸ், பத்மா தேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். + + + + + +தீன் கான்யா + +தீன் கான்யா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + + + + +இரவீந்திரநாத் தாகூர் (ஆவணப்படம்) + +இரவீந்திரநாத் தாகூர் என்னும் ஆவணப் படம் பிரபல வங்காள எழுத்தாளரும் கவிஞருமான இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையையும் அவரது எழுத்துக்களையும் சித்தரிப்பதாகும். அவரது நூற்றாண்டு நினைவாக சத்யஜித் ராயின் இயக்கத்தில் 1961 இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ சாட்டர்ஜீ, சோவன்லால் கங்குலி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கஞ்சன்யங்கா + +கஞ்சன்யங்கா (), 1962 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாபி விஷ்வாஸ், கருணா பானெர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அபிஜன் + +அபிஜன் ("অভিযান") (The Expedition) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ரா சாட்டெர்ஜீ, வஹீதா ரஹ்மான் மற்றும் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + + + + + +சாருலதா (1964 திரைப்படம்) + +சாருலதா (The Lonely Wife) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கிய இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரணசிங்க பிரேமதாசா + +ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23, 1924 - மே 1, 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழில்: சனாதிபதியாவார்). இவர் அதிபராவதற்கு முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் பலர் இரகசியமான முறையில் கடத்தப்பட்டு பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு இவர் ஆருடத்தில் (சோதிடம்) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.. இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. + + + + + + +டிங்கிரி பண்டா விஜயதுங்கா + +டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர். + + + + +கவிகுஞ்சர பாரதியார் + +கவிகுஞ்சர பாரதியார் (1810 - 1896) ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார்.இவரது இயற்பெயர் கோடீசுவரன்.’கவிகுஞ்சரம்’ என்ற பட்டம் சிவகங்கை மன்னரால் இவரது இயலிசைத் திறனுக்காக வழங்கப்பட்டது + +இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை என்னும் ஊரில் சுப்பிரமணியபாரதி என்பவருக்குப் பிறந்தார். இளமையிலேயே தமிழிலும், சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார். தம் உறவினரான மதுரகவி பாரதியிடம் இளமையிலேயே இசை பயின்று பதங்கள், கீர்த்தனைகள் பாடுவதில் திறமை பெற்றார். + +இவரது 18 வது வயதில் கடும் நோய் கண்டு அல்லலுற்றபோது தமது கிராம தேவதை மீது பள் ஒன்று பாடி முடித்து சுகம் பெற்றார் என்று கூறப்படுகிறது. அதன்பின் பல நூல்களை இயற்றினார். + +1865 இல் முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரர் பொன்னுசாமித் தேவர் வேண்டுகோளுக்கு இணங்க கந்த புராணத்தை கீர்த்தனை வடிவில் பாடினார். + +திருமாலிருஞ் சோலைமலை அழகர் மீது இவர் பாடிய அழகர் குறவஞ்சி, நாடகத் தமிழின் வகையைச் சேர்ந்தது. இந்நாட்டிய நாடகத்தை இவர் சிவகெங்கை ஜமீந்தாரிணியாக இருந்த காந்தமநாச்சியார் முன்னிலையிலும் பல அறிஞர்கள் முன்னிலையிலும் அரங்கேற்றி, பல்லக்கு வரிசை முதலிய பெருஞ்சிறப்புக்களைப் பெற்றார். + +இவரது பாடல்களின் சிறப்பைக் கேள்வியுற்ற சிவகெங்கை கௌரிவல்லப மகாராஜா இவருக்கு "கவிகுஞ்சரம்" என்ற பட்டத்தையும் அளித்துத் தமது ஆஸ்தான வித்துவான்களில் ஒருவராகவும் ஆக்கிக் கொண்டார். + + + + + +அண்ணாமலை ரெட்டியார் + +அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) "காவடிச் சிந்தின் தந்தை" என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர். + +அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். , வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர். + +தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி +செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை + +வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி +வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும் + + + + + +நகரம் முத்துசாமி கவிராயர் + +நகரம் முத்துசாமி கவிராயர் (1834–1899) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகரத்தில் பிறந்தார். போடிநாயக்கனூர்ச் சமீதார் மீது அன்னம் விடு தூது, கும்ம்பிப்பதம், ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார் மீது பள்ளுப்பிரபந்தம், கருங்காலக்குடிக் காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் பாடிய கீர்த்தனைகளுள் இப்போது கிடைத்திருப்பவை 66 ஆகும். + + + + +செவற்குளம் கந்தசாமிப் புலவர் + +செவற்குளம் கந்தசாமிப் புலவர் (1849 - 1922) திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகாவில் உள்ள செவற்குளத்தில் பிறந்தார். இவர் இயற்றிய பாடல்களுள் பதினேழு மட்டுமே கிடைத்துள்ளன. முருகன் பள்ளியெழுச்சியாக இவர் இனிமையான கீர்த்தனையைப் பாடியுள்ளார். + + + + +இலட்சுமணப் பிள்ளை + +இலட்சுமணப் பிள்ளை (1865 - 1950) "தமிழ்த் தியாகராசர்" எனப்பட்டவர். இந்தியாவின் தமிழகத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். இவர் இயற்றிய பாடல்களை பக்திப்பாடல்கள், அறநெறிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், புகழுரைப் பாடல்கள் எனப் பிரிக்கலாம். சுமார் 80 இராகங்களை இவரது பாடல்களில் காணலாம். + + + + +க. பொன்னையா பிள்ளை + +க. பொன்னையா பிள்ளை (1888 - ஜூன், 30,1945) கருநாடக இசைக் கலைஞரும், இசைப் பேராசிரியரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது தொடக்கத்திலேயே இசை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +பொன்னையா பிள்ளை 1888 ஆம் ஆண்டில் பந்தணைநல்லூர் என்னும் இடத்தில் கண்ணுசாமிப் பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். தந்தையார் பரோடாவில் நடன ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தா, வடிவேல��� ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார். தனது மாமா நடன ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் 15 ஆண்டுகள் இசை, நடனம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார். இவரது இன்னும் ஒரு மாமா நல்லையப்ப பிள்ளை என்பவர் இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய கலைஞர்களின் முன்னிலையில் பாடச் செய்தார். இதன் மூலம் அவர் பிரபலமான கலைஞரானார். பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் ஆறு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றார். + +தந்தை கண்ணுசாமிப் பிள்ளை பரோடாவில் இருந்து திரும்பி வந்த போது அவருடன் பொன்னையா பிள்ளையும் தஞ்சாவூர் சென்றார். அங்கு தந்தையுடன் சேர்ந்து பல மாணவர்களுக்கு இசை, நடனம், மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். தந்தை இறந்த பின்னர், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரானார். மாணவர்களுக்கு கருநாடக இசை, மிருதங்கம் ஆகியவை கற்றுக் கொடுத்தார். பல சுவரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றி அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். + +பொன்னையா பிள்ளையின் மகன் க. பொ. கிட்டப்பா பிள்ளை ஒரு பிரபலமான நடன ஆசிரியர் ஆவார். + + + +பக்கம் எண்:633 & 634, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.) + + + + +ஒப்பந்தம் + +ஒப்பந்தம்(Contract) என்பது 'வாக்குறுதிகளைக் கொண்டு திறத்தவருக்கிடையே உருவாக்கப்படும் உடன்படிக்கைகள்' ஆகும்.(an "agreement" made of a set of promises).இவ் வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள் கடப்பாடுகள் பற்றியதாக இருக்கும்.ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு (Breach of contract) ஏற்படும் சந்தர்பங்களில் நீதிமன்றங்களை நாடி குறைதீர்ப்பினை (remedies) பெறமுடியும். + + +போன்ற விடயம் தொடர்பில் ஒப்பந்தசட்டம் தன் கவனத்தில் கொள்கின்றது. + +ஒப்பந்தம் திறத்தவர்களிடையே தெளிவான கொடைமுனைவும் நிபந்தனையற்ற ஏற்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒர் விடயபொருள் தொடர்பில் சந்திக்கும்போது உருவாகும். + +மேலும், + +போன்ற இதர காரணிகளால் ஒப்பந்தமானது வலிதான ஒப்பந்தமாக ஆக்கப்படும்.மேற்கூறிய காரணிகளின் எதேனும் விடுபாடுகள் இ���ுப்பின் +அத்தகைய ஒப்பந்தங்கள் வறிதான ஒப்பந்தமாகவோ (void),வறிதாக்கதக்க ஒப்பந்தமாகவோ(voidable),செயற்படுத்தமுடியா ஒப்பந்தமாகவோ (unenforceable) சட்டதினால் அடையாளப்படுத்தப்படும். + + + + + + + +வில்லியம் கோப்பல்லாவ + +வில்லியம் கோபல்லாவ ("William Gopallawa", , செப்டம்பர் 17, 1897 - சனவரி 30, 1981) இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார். + +இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார். + + + + +தர்மரத்தினம் சிவராம் + +தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டுள்ளார்.. + +சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். + +சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர். + +ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார். + +சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன. + +தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை "சிவராம் புகட்டும் அரசியல் - ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும்" என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் ("Mark P. Whittaker") எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை, இலண்டனில் உள்ள "Pluto Press" பதிப்பகம் வெளியிட்டுள்ளது. + + + + + +கனடாவின் வரலாறு + +கனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா 320 இலட்சம் பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும். + +கனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்: 'இன்டியன்ஸ்', இனுவிட் (Inuit), மெயிற்ரீஸ் (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள். + +'இண்டியன்ஸ்' என்ற சொல் இழிவானதாக கனடிய பழங்குடிகள் கருதியதால���, அவர்கள் தங்களை +முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இவர்கள் கனடிய செவ்விந்தியர்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப்பொருத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக்கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு: + +பழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு. + +பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் அந்த நோய்களுக்கு இரையானார்கள். + +பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும். + +பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. + +கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு வ���டுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது. + +1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது. + +உலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள். + + + + + +பகுரைன் + +பகுரைன் அல்லது பஹரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும். இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது. + +பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் . இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர். + +பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில்   பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.  மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது. + + + + +பஹ்ரேய்னில் தமிழர் + +தமிழ்ப் பின்புலத்துடன் பஹ்���ேய்னில் வசிப்பவர்களை பஹ்ரேய்ன் தமிழர் எனலாம். பஹ்ரேய்னில் ஏறத்தாழ 7000 தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து வேலை செய்ய சென்றவர்கள் ஆவர். + + + + + +களஞ்சியம் + +களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். குறிப்பாக தமிழிலில் களஞ்சியம் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைக்கும் இடத்தையே குறிக்கும். களஞ்சியப்படுத்தி வைத்தல் சேமித்து வைத்தல் என்று ஒத்த கருத்துப்படும். + +இன்று தகவல்களைக் சேமித்து வைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம். + + + + +மயில்வாகனம் நிமலராஜன் + +மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். +போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். அவற்றுள் பிபிசியின் தமிழ், சிங்கள சேவைகளும், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு என்பன முக்கியமானவையாகும். நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் இருந்து நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த வெகு சிலரில் ஒருவராவார். + +கொலையாளிகள் அவரது வீட்டின் யன்னல் ஊடாக துப்பாக்கியால் சுட்டனர். நிமலராஜன் தான் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை மேலேயே தனது உயிரை விட்டார். கொலையாளிகள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேறும் போது கைகுண்டு ஒன்றை வீட்டுக்குள் வீசி விட்டு சென்றனர். இத்தாக்குதல் யாழ்ப்பாண நகர மத்தியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் இராணுவ ஊரடங்கு சட்டம் இயங்கும் வேலையில் நடைபெற்றது. இத்தாக்குதலில் மயில்வாகனத்தின் தந்தை "சங்கரப்பிள்ளை மயில்வாகனம்" (65), தாய் "லில்லி மயில்வாகனம்" (62), மருமகன் "ஜெகதாஸ் பிரசன்னா" (11) ஆகியோரும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள். + + + + +ஐயாத்துரை நடேசன் + +ஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தம��ழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். + +யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் "நெல்லை நடேசன்" என்ற பெயரில் எழுதிவந்தார். இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். மேலும் இவர் சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும், வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும், ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார். + + + + + +கே. எஸ். ராஜா + +கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா (8 பெப்ரவரி 1942 - 3 செப்டம்பர் 1994) முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார். இவர் பொதுவாக மின்னல் வேக அறிவிப்பாளர் எனவும் அழைக்கபட்டிருந்தார். வானொலி அறிவிப்பில் முதலில் வேகத்தை கொண்டு வந்தவர் இவரே ஆகும். + +ராஜாவின் இயற்பெயர் ஸ்ரீஸ்கந்தராஜா. இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் இலங்கையின் மலையகத்தில் பதுளையில் பிறந்தார். யாழ்ப்பாணம் கொட்டடியில் வளர்ந்தார். தந்தை ஒரு மருத்துவர். தாயார் ஆசிரியை. தமக்கைமார் நால்வரும் மருத்துவர்கள். 1966 இல் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து செயற்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், வானொலி ஆர்வத்தின் காரணமாக இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார். + +இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். + +1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிக��� விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் 1994 செப்டம்பர் 3 அன்று இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. + +ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார். + + + + + + +ரேலங்கி செல்வராஜா + +ரேலங்கி செல்வராஜா (1960 – ஆகஸ்ட் 12, 2005) இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரைப்பட நடிகையாகவும் இருந்த இவர் ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். + +ரேலங்கி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார். இவரோடு சேர்த்துக் கொலை செய்யப்பட்ட சின்னதுரை செல்வராஜாவை மணந்தார். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அக்குழந்தை பெற்றோர்களின் இறப்பின் போது ஒரு வயது மட்டுமே அடைந்திருந்தது. + +1978 இல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட்ட "தெய்வம் தந்த வீடு" என்ற திரைப்படத்தில் இவர் முதன்மை வேடம் ஏற்று நடித்தார். இதற்காக இவர் சிறந்த நடிகை விருதுக்கு முன்மொழியப்பட்டார். இவர் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒலிபரப்பான மணிக்குரல் வானொலியில் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய ரேலங்கி 1983 வரை அதில் பணியாற்றினார் .1987 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்த இவர் 2000 ஆம் ஆண்டு முதல் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளாராகவும் செய்தி வாசிப்பவராகவும் இணைந்தார். இறப்பின் போது இவர் இ.ரூ.கூ.வில் கட்���ற்ற பணியாளராக இருந்தார். இவர் இ.ஒ.கூ.வில் ஒலிபரப்பாகிவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஆதரவளிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் "இதயவீணை" நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது செயல்களுக்கும் எதிரான கருத்துக்களை கொண்டதாகும். + +ரேலங்கியும் அவரது கணவரும் கணவரின் வணிக நிலையத்தில் இனந்தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட அதே நாளில் இக்கொலைகளும் நடைபெற்றன. இம்மூன்று கொலைகளுக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அவர்கள் அதை மறுத்திருந்தார்கள். + +ரேலங்கியின் கணவர் முன்னாள் ஆயுதக்குழுவும் இப்போது அரசியல் கட்சியாக விளங்கும் தமிழர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராவார். இக்கட்சி விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டது என "டெயிலி மிரர்" பத்திரிகை கொலை தொடர்பான செய்திக் குறிப்பில் வெளியிட்டிருக்கிறது. + + + + + + +இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் + +இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜனவரி 5 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும். இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்க மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபவரீதியான அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். கூட்டுத்தாபனத்தின் முதல் இயக்குனராக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டார். + +இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்நாட்டு ஒலிபரப்புக்காக ஆறு தொடர்ச்சியான பண்பலை (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன: + +இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான சிங்கள, தமிழ், ஆங்கில நேயர்களுக்காக ஒலிபரப்பப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன விசேட சேவையாகும். கடைசி இரண்டு சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்த்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாட்டுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவதும் ஒலிபரப்பப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்���ுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது. + +வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ.எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் நடத்தி வருகின்றது. இவை தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென்-மேற்கு ஆசிய பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒலிபரப்பாகின்றன. தென்னிந்தியாவுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகின்றது. + + + + +