diff --git "a/train/AA_wiki_28.txt" "b/train/AA_wiki_28.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_28.txt" @@ -0,0 +1,4498 @@ + +சுமேரியா + +சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய தென் ஈராக்) அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும். இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பாபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது. + +சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது. "சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது. யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசொப்பொத்தேமியா என அழைக்கப்படுகிறது. + +இங்கு தோன்றிய நாகரிகம்தான் சுமேரிய நாகரிகம் அல்லது மெசொப்பொத்தேமிய நாகரிகம். செம்புக்காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசொப்பொத்தேமியா, நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது "நாகரீக அரசர்களின் நிலம்" அல்லது "சொந்த நிலம்" என்றும் அழைக்கப்பட்டது. சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது. இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. கி.மு 4000 முதல் கி.மு. 3000 வரை இந்த நாகரிகம் எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. + +இந்த இரண்டு ஆறுகளையும் ஆண்டு முழுவதும் நீர்பாசனத்திற்காக பயன்படுத்தினர். வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மெசபடோமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது. முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும். சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும்,செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே. சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்நாடு யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக் ஆகும். + +சுமேரியர் என்ற சொல் அக்காதிய மக்களால் முதலில் வழங்கப்பட்டது. அக்காதிய மொழியில் இதன் பொருள் "கருந்தலை மக்கள்" என்பதாகும். தங்களின் பிரதேசத்தை "நாகரிக பிரபுக்களின் நாடு" என அழைத்தனர். இவர்களின் ம��ழி இந்நிலப்பகுதி மொழிகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனாலும் தொல்பொருள் சான்றுகள் சுமேரியர் இந்நிலப்பகுதிகளில் உபைதியன்கள் காலப்பகுதி (கி.மு. 5200-4500 அல்லது கி.மு. 6090-5429) தொடக்கம் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் இருந்ததை சுட்டுகிறது. இவர்கள் யூபிரிடிஸ் - டைகிரிடிஸ் ஆறுகளால் படிந்த செழுமையான வண்டல் நிலங்களில் உழவுத்தொழில் மேற்கொண்டனர். + +இந்நிலப்பகுதி ஆண்டுக்கு ஏறக்குறைய 130 மி.மீ. மழைவீழ்ச்சியே பெறுகின்றது. எனவே யூபிரிடிஸ், டைகிரிஸ் ஆறுகளை ஆண்டு முழுவதுக்குமான நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்துவது முக்கியமாகும். சுமேரிய மொழியில் நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய பல சொற்கள் காணப்படுகின்றன. இதன் மூலம், வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மொசொப்பொத்தேமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது என்பது தெளிவாகிறது. + +ஆதி சுமேரிய நாகரிகம் தோன்றிய வரலாறு இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஏறக்குறைய கி.மு 5000 ஆண்டளவிலிருந்து கி.மு 3000 ஆண்டுவரை அங்கே ஒரு கலாச்சாரம் இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பண்டைய நாகரிங்களில் மிகவும் பழைமையான நாகரிகம் மெசொப்பத்தாமியாவில் தோன்றிய சுமேரிய நாகரீகமாகும். அக்காடிய மொழியில் சுமர் என்றால் 'காலச்சார நாடு' என்று பொருள். சுமேரியாவிலிருந்து தான் நாகரீகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்களின் கருத்து. + +மத்திய கிழக்கில் தற்போதைய ஈராக் பகுதி அந்த காலத்தில் "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர். கிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, எனவே வேட்டை சமூகம் உழவுத்தொழில் சார்ந்த சமூகமாக மாற வேண்டியதாயிற்று. இப்பகுதியில் கி. மு 4500 வாக்கில் பாரசீக வளைகுடாவில் கலக்கும் டைகரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிக்கரையோர நகரங்களில் வாழ்ந்த மக்கள் உபைதியன் எனத் தொல்பொருள் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றனர். உபைதியன்களுக்குப் பிறகு உர்க் இன மக்கள் இப்பகுதியை ஆண்டனர். அவர்கள் சதுப்பு நிலங்களை சீர்திருத்தி விவசாயம் மேற்கொண்டார்கள். சில காலங்களுக்குப் பிறகு கிமு 23 ஆம் நூற்றாண்டில��� இப்பகுதி அக்காதியர்களால் வெல்லப்பட்டது. அதன் பிறகு கி. மு. 21 ஆம் நூற்றாண்டில் குடியன் எனப்படும் இனக்குழுவால் வெல்லப்பட்ட பின் இப்பகுதில் பெரும் சுமேரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை மிகக் குறுகிய காலத்திலேயே அதாவது கி. மு 20 ஆம் நூற்றாண்டில் செமிட்டிக் இனமக்கள் இங்கு படையெடுத்தனர். அவர்களுக்குப் பின் இப்பகுதி முழுவதும் பாபிலோனியர்களால் ஆளப்பட்டது. இவர்களின் நாகரீகங்களும் அக்காடிய நாகரீகத்துடன் கலந்து ஏற்பட்டதே சுமேரிய நாகரீகமாகும். + +சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (சுமேரியா) ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும். + +முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் ஆப்பெழுத்துகள் அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள். + +சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன���றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன + + + +சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது. + + +ஊர் மிகவும் முக்கியம் வாய்ந்த சுமேரிய நகரம். இந்தப்பட்டணம் ஈராக்கின் தென் பகுதியில் அமைந்திருந்தது. ஆபிரகாமும் இந்தப்பட்டணத்தை சேரந்தவன். அக்காடிய இராச்சியத்திற்கு பின்பு ஊர்- நம்மு (கி. மு 2100) எனும் மன்னனால் சந்திரக்கடவுளுக்கு பெரிய சிகுரத் கோவில் ஊர் பட்டணத்திலே கட்டப்பட்டது. + +“மெஸப்பட்டேமியா” என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். "சுமர்" திரிந்து சுமேரியாவாயிற்று. "எரக்" பின்னர் ஈராக் ஆனது. எரிது, லகாஷ், ஊர் சுமேரிய நகரங்கள். மெஸப்பட்டேமியா என்பது கிரேக்கச்சொல். “மெசொ” என்றால் நடுவே என்று பொருள்.“பட்டோமே” என்றால் ஆறுகள். ஆறுகளின் நடுவே தோன்றிய நாகரிகங்களில் சுமேரியா, பாபிலோனியா, ஹீனரத்தியா, ஹிட்டைட்டியா ஆகியவை பழைமைச் சிறப்புள்ளவை. காவியச் சிறப்புள்ள புராணக்கதைகளும் இந்த நான்கில் உண்டு. யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா ஆகும். மேற்படி நான்கு நாகரிகங்களின் புராணக்கதைகள், வழிபாடுகள், மெஸப்பட்டேமியாவின் உற்பத்தித்தானமாயுள்ள அனடோலியா என்ற இன்றைய துருக்கி, கீழே செமிட்டிக் இன அடையாளமான இன்றைய பாலஸ்தீனமான உகரித், எகிப்த், பின்னர் பாரசீகம், புராதன ஆசிரியா, ஆகிய எல்லை தாண்டிய பகுதிகளிலும் பரவியிருந்தது. கி. மு 4000 த்தில் சுமேரியாவில் 12க்கும் மேற்பட்ட சுதந்திர நகரங்கள் இருந்தன. இவை கால்வாய்களாலும் நன்கு கட்டப்பட்ட கற்சுவர்களினாலும் பிரிக்கப்பட்டிருந்தன ஒவ்வொரு நகரத்தின் மையத்திலும் ஒரு தனித்துவமான தெய்வக் கோவிலும் ஆண் அல்லது பெண் தெய்வ வழிபாடும் இருந்தது. நகரத்தின் தலைவனாக இத்தெய்வங்களே இருந்தன. இதன் பிரதிநிதியாக அரசன் கருதப்பட்டான். ஆரம்ப காலங்களில் அதாப், எரிது, இசின், கிஷ், குலாப், லகாஷ், லார்சாம், நிப்பூர் அத்���ுடன் ஊர் ஆகிய பட்டணங்கள் இருந்தன. இவை ஏறக்குறைய கி.மு 2800 ஆம் ஆண்டுகளில் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் இருந்தன. சுமேரியாவின் முதலாவது மன்னன் எத்தனா. இவன் கிஷ் பட்டணத்தின் மன்னன். + +சுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான "உர்"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர். சுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன.அவற்றில் "உர்" "உருக்""கிஷ்" மற்றும் "லகாஷ்" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட "உர்" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது "நன்னா" என்றழைக்கபட்ட சந்திரன். 70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன. மெஸோபொடோமையாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய “உருக்”கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன. பொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர். நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன. + + +மெசபடோமியா முழுவதும் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைதியன்களே விளங்கினர். இவர்களது மண்பாண்டக் கலை தெற்கு மெசபடோமியா மற்றும் பாரசீக வளைகுடா முழுதும் பரவியிருந்தது இக்கால கட்டத்தில் கி. மு. 5300 களில் உழவுத் தொழில் செய்பபர்கள் எரிது என்ற நகரத்தில் நிலைத்து வாழத் தலைப்பட்டனர். 'எரிது' நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது. இவர்களே முதலில் சிறந்த முறையில் நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்தவர்கள் ஆவர். யூப்ரடிஸ் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள். இவர்களது முக்கிய நகரம் உருக் ஆகும். உருக் நகரம் இவர்களது வழிபாட்டின் முக்கிய நகரமாக விளங்கியது. முதன்மை படைப்புக் கடவுளாகிய இனன்னா என்ற ஆண்தெய்வத்திற்கும் போர் மற்றும் அன்பின் கடவுளான உருக்கின் பெண் தெய்வத்திற்கும், என்கி என்ற அறிவுக் கடவுளுக்கும் வழிபாடு நடைபெற்றது. அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் அமைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும் எரிது நகரத்தில் காணப்பட்டன. + +உரூக் காலத்தில் வண்ணமேற்றப்பட்ட மட்பாண்டங்களைச் செய்ய வேகமாகச் சுழலும் குயவன் சக்கரம் கண்டறியப்பட்டன. இதனால் ஏராளமான மட்பாண்டங்களை இவர்கள் உற்பத்தி செய்தனர். நிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாகப் படகுகள் வடிவைமைதார்கள். பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள். ஏர் கலப்பைகள் கண்டுபிடிப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். சக்கரத்தின் உதவியால் 3000 ஆண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது. கோயிலை மையமாகக் கொண்ட நகரங்கள் தோற்றுவிக்கபப்ட்டன. இங்கு சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தது. உரூக் நாகரிகத்தில் தான் முதன் முதலாக அடிமைகளை வைத்து வேலை வாங்கும் வழக்கம் தொடங்கியது. அருகிலிலுள்ள மலைப் பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்களாக அடிமைகளாக அழைத்து வந்ததாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த உருக் நாகரிகம் தற்போதை��� துருக்கிப் பிரதேசத்தில் உள்ள டாரசு மலையின் பெரும் பகுதியிலும் மேற்கே மத்தியத் தரைக்கடல் வரையிலும் தூரக் கிழக்கான ஈரானை மையமாகவும்கொண்டு பரவியிருந்தது. + +உரூக் நாகரிகம் தனக்கென ஒரு சிறந்த பொருளாதாரத்தைப் பெற்ற நாகரிகமாக விளங்கியது. தூரத்தில் உள்ள உருக் இராச்சியத்திற்குட்பட்ட குடியேற்ற நாடுகள் சிறப்பு இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டன. உருக் நகரம் 'என்சி' என்ற மன்னன் தலைமையில் நிர்வாகம் செய்யபப்ட்டது. நிர்வாகக் குழுவில் சிறந்த பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் வல்லுநர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தக்க ஆலோச்னைகளை மன்னனுக்கு வழங்கினார்கள். இக்காலக் கட்டத்தில் உருக் நாகரிகம் 50,000 குடியேற்றங்களைக் கொண்ட பெரிய நகரமாக உலகில் சிறந்து விளங்கியது. இந்நாகரிகம் கி. மு. 3200- 2900 களில் ஏற்பட்ட ஒரு மோசமான காலநிலையால் அழிவுற்றது. + +புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமேஷ் வாழ்ந்த நகரமாக “உரூக்” கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான நூலே கில்கமெஷ் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. புரதான நகரமாகிய உருக்கை அராபியர்கள் "வர்க்கா" என்று அழைத்தனர். வேதாகமத்தில் "எரேக்" என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. சுமேரியாவின் தலைநகராக உரூக் விளங்கியது. யூப்பிரடீஸ் நதியருகில் இந்த பட்டணம் அமைந்திருந்தது. உருக் எனும் வார்த்தையே ஈராக் ஆக திரிபு பெற்றது. உருக் மக்கள் பெண் தெய்வத்தை வழிபட்டனர். + +இக்கால அரார்களாக "என்மெர்க்கர்", கில்கமெஷ் ஆகிய மன்னர்களைப் பற்றி கில்கமெஷ் காப்பியம் குறிப்பிடுகின்றன. இவ்வரசுகள் விரைவில் தங்கள் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு பரந்தன. தென் மெசபடோமியாவிலிருந்து வந்த செமிட்டிக் மக்கள் சுமேரிய நாகரிகத்தின் பல்வேறு கூறுகளை இணைத்து புதிய சுமேரிய நாகரிகத்தை உருவாக்கினர். இக்காலத்தைய முதல் அரசராக ’எதனா’ அறியப்படுகிறார். இவ்வமிசத்தின், உருக் அரசரும் 13 ஆவது அரசருமான கிஷ் என்பவரைப் பற்றி கில்கமேஷ் காப்பியம் குறித்துள்ளது. இவ்வாட்சியில் அரசுகள் பல சுவர்களால் பிரிக்கப்பட்டும் பல்வேறு கலகங்களால் கூடியதுமாக இருந்தது. + +தென் மெசொப்பத்தாமியாவின் பகுதியில் லாகாஷ் நகரம் அமைந்திருந்தது. லாகாஷ் சுமேரியாவின் ஒரு பகுதி. இதன் முதல் மன்னனாக "என்னாட்டம்" என்பவன் அறியப்படுகிறான். இ���ன் குறுகிய காலத்திலெயே கிஷ், உரூக், ஊர், லார்சா ஆகிய பகுதிகளை வென்று உம்மா என்ற நகரத்துடன் இணைத்தான் இவன் ஆட்சி ஈலாம் மற்றும் பாரசீக வளைகுடா வரை பரவியது. இவன் தனது எதிரிகளை அடக்க பயிற்சி பெற்ற வல்லூறுப் படையைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறான். பின்பு அக்காடிய மக்களால் சுமேரியா முழுவதும் கைப்பற்றப்பட்டு, அக்காடியாவின் ஆட்சிக்குட்பட்டது. சிறிது காலங்களின் பின்னர் சுமேரியர்கள் அக்காடிய மக்களை வென்றனர். + +ஆதி மெசொப்பத்தாமியாவின் தென்பகுதியில் சுமேரியாவும், வடபகுதியில் பிற்கால பாபிலோனும் அமைந்திருந்தது. இந்த இரண்டு பட்டணங்களும் அல்லது சாடுகளும் கி.மு 2500 நூற்றாண்டளவில் ஆரம்பமாகியது. அக்காதியம் எனும் மொழி பேசப்பட்டது. இது ஒரு செமித்திய மொழி. கி.மு 2340 ஆம் ஆண்டளவில் "சார்கோன்" மன்னனால் அக்காடிய இராச்சியம் விரிவடைந்தது. அதன் பின்பு அக்காடியா தேசம் மிகவும் புகழ்பெற்றது. அக்காடிய இராச்சியத்தின் வீழ்ச்சி நேரம் சுமேரிய முழுவதும் லகாஷை தவிர ஒரே போர்க்களமாக இருந்தது. + +கி. மு 2083–கி.மு 2050 வரை லகாஷ் பகுதியை குடியன்கள் ஆண்டனர். லகாஷ் பகுதியை "குதேயா" என்பவன் ஆட்சி செய்தான். இவன் நல்லுறவை விரும்பி, நல்ல முறையில் ஆட்சி செய்தான். நல்லவன் மட்டுமல்ல, பலமான அரசைத் தோற்றுவித்தவனுமாவான். இவன் சுமேரியாவிலே பல கோவில்களை கட்டினான். லாகாஷ் மக்கள் அநேக கடவுள்கள் இருப்பதாக நம்பினார்கள். குதேயா தனக்கென்று ஒரு கடவுளை வைத்திருந்தான். கடவுளின் பெயர்: நின்கித்சிதா. இவனுடைய மரணத்தின் பின் இவனுடைய மகன் லகாசை ஆட்சி செய்தான். + +"செமித்தியர்" என்றால் பல சாதிகள் என்று பொருள்படும். இவர்கள் சேமுடைய சந்ததியினர். இவர்கள் அராபியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகிய இடங்களில் வாழ்ந்தனர். இவர்களிலிருந்து பல ஜாதிகள் பிரிந்தது. இவர்கள் வம்சத்தில் தான் கிறிஸ்துவும், முகமது நபியும் பிறந்தனர். ஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின. உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது. இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர். பலவீனமான சுமேரியர்களை "செமித்திக் இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர். செமித்திக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் "நிப்பூர்" நகர மன்னனை தோற்கடித்து நிப்பூர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய "என்லில்" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினான். பின்னாளில் அம்மன்னன் "எல்லாம் வல்ல சார்கன்" என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர். + +ஈலாம் எனப்படுவது தற்கால ஈரான் நாட்டின் மேற்கு பகுதியாகும். இது சுமேரியாக்கு கிழக்கில் யூப்ரடிஸ் நதியின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்தது. சுமேரிய மக்களின் நாகரிக காலத்திலே இவர்களது நாகரிகமும் ஆரம்பித்தது. இவர்கள் நான்கு பெரிய பட்டணங்களில் வாழ்ந்தார்கள், அவான், அன்ஷான், சிமாஷ் அத்துடன் தலைநகர் சூசா. கலாச்சார ரீதியில் ஏலாம் பின்தங்கியிருந்தது. அநேக காரியங்கள் அவர்கள் மற்றக்கலாச்சாரங்களிலிருந்து பின்பற்றினார்கள். எழுத்து வடிவம் சுமேரிய மக்களிடத்திலிருந்தும் கட்டடக்கலையை பாபிலோனியர்களிடமிருந்தும் பின்பற்றினர். இவர்களுக்கென்று தனிப்பட்ட இலக்கியங்களோ, கடவுள்களோ இருந்ததாக தெரியவில்லை. எலாமியருடைய மொழி வேறு மொழிகளுடன் தொடர்பாயிருக்கவில்லை. இவர்களுடைய மொழியிலிருந்து வேறு மொழிகளும் உருவாகவில்லை. கி.மு 2200 அளவில் எலாம் ஊர் என்ற அரசின் கீழ் வந்தது. கி.மு 2000 அளவில் எலாம் வலுப்பெற்று, ஊர் இராச்சியத்தை கைப்பற்றியது. ஏறக்குறைய கி.மு 1600 அளவில் காசிட்டு இராச்சியம் எலாமை கைப்பற்றியது. கி. மு 1160 எலாம் மீண்டும் வலுப்பெற்றது. காசிட்டு மக்கள் பாபிலோனியாவையும் கைப்பற்ரும் அளவிற்கு வலுப்பெற்றது. ஆனால் முதலாவது நேபுகாத் நேச்சரால் கி.மு 1120 ஆண்டளவில் எலாம் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் எலாம் கிமு 750 அளவில் வளர்ந்தது. ஆனால் அசீரியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது அதன் பின்பு மேதிய அரசர்கள் இதனை ஆண்டனர். + +இவர்களுடைய தொடக்கம் எதுவென்று அறியப்படவில்லை. என்றாலும், இவர்களுடைய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிகளை சார்ந்தது. இவர்களை "ஹத்துசாஸ்" என்றும் அழைப்பர். கி.மு 1595 அளவில் இவர்களினால் ப��பிலோனிய இராச்சியம் கைப்பற்றப்பட்டது. + +இவர்களும் இந்தோ- ஐரோப்பிய மொழிகளைப்பேசிய மக்கள். இவர்களும் ஹைத்திஸ் மக்களைப்போலவே மெசொப்பத்தாமியாவுக்குள் உட்புகுந்தனர், கி.மு 1590 ஆம் ஆண்டளவில் இவர்கள் பாபிலோனியாவை கைப்பற்றினர். + + + + + + + + + +அக்காத் + +அக்காத் ("Akkad") என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த அக்காடியப் பேரரசின் தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந்நகர இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கிமீ தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று, + +நகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் கிமு 23வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியிருந்தது. + +பிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் "அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற சொல் பாவிக்கப்பட்டது" + +விவிலியத்தில் ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10) + +ஆகேத் என்ற பெயர் அக்காத் என்ற பெயரின் சுமேரிய மருவலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் "தீயின் முடி" என பொருள்பட்டிருக்கலாம்". + + + + + + +கிமு 3ஆம் ஆயிரமாண்டு + + + + + +பால்வினை நோய்கள் + +பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். இவ்வாறான நோய்களில் சில பாலுறவு மூலமன்றி குருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம். இந்நோய்கள் ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல் இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கடத்தப்படக்கூடும்.. யோனியிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களில் எரிவு, பாலுறுப்புக்களில் புண், வயிற்றுவலி என்பன பொதுவாக ஏற்படக்கூடிய அறிகுறிகளாகும் +பெரும்பாலான பால்வினை நோய்கள் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. இதுவே நோய்கள் வெகுவாக பரவுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. + +முப்பதிற்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள், வைரசுகள், மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை பால்வினை நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. பாக்டீரிய பால்வினை நோய்களான சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற நோய்கள் எய்ட்ஸினால் ஏற்படும் ஆபத்தினை அதிகரிக்கவல்லன. வைரசினால் + +கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. முறையற்ற புணர்ச்சி, பால்வினைத் தொழிலாளியுடனான உறவு, பலதுணை மணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. + +1990 வரையிலும் இப்பால்வினை நோய்கள் வெனிரல் நோய்கள் (அ) மேகநோய்கள் என வழங்கப்பட்டன. வெனிரல் என்ற பெயர் பாலினத்தொடர்பைக் குறிப்பதாகும். மேலும் உரோம பெண் காதல் தெய்வமாகிய "வீனஸ்" என்பதிலிருந்து மருவியதாகும். இப்பால்வினை நோய்கள் "சமூக வியாதிகள்" என்று மங்கல வழக்காக வழங்கப்பட்டு வந்தது. +பால்வினை நோய்கள் (Sexual Transmitted Disease) என்பது பரவலாக அறியப்படும் சொல்லாக இருப்பினும், 1999ல் உலக சுகாதார அமைப்பு இவற்றை பால்வினை நோய்கள் என்றழைப்பதைவிட, பால்வினை நோய்த்தொற்று (Sexual Transmitted Infection) என்று அழைப்பதே பொருத்தமானது என்று அறிவித்தது. ஒருவர் பால்வினை நோய்த்தொற்றைக் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட நோய்க்காரணியின் தொற்றுக்கு உட்பட்டு இருந்தாலும், எந்த அறிகுறிக்கும் உள்ளாகாமல், நோயை வெளிப்படுத்தாமலே, அவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய்க்காரணியைக் கடத்த முடிவதால், அடுத்தவருக்கு இந்த நோய் வெளிப்படக் கூடும். நோய்த் தொற்றை ஏற்படுத்தி, நோய்ப் பரவலுக்கு வழி செய்யக் கூடிய, நோயை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கக்கூடும் என்பதாலும், அவர்கள் மூலம் ஏனையோருக்கு நோய் வரக் கூடும் என்பதனாலும், இதனை பால்வினை நோய்த்தொற்று என்று அழைப்பதே பொருத்தமாகும் எனக் கூறப்பட்டது + +பால்வினை நோய் இருக்கிறதா என்பதைக் கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். + +பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களில் பெரும்பாலானவை அவர்களின் உள்ளடங்கிய இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கின்றன. அதனால் பால்வினைத் தொற்று ஆண்களுக்கு வெளியே தெரிவது போல பெண்களுக்குத் தெரிவதில்லை. +சிகிச்சை அளிக்கப்படாத பால்வினை நோய்கள் மலட்டுத்தன்மை, தீவிர வலி, போன்றவற்றையும் சில சமயங்களில் மரணத்தயும் ஏற்படுத்த வல்லவை. + +உடலுறுப்புகள், பாலுறவு முறை போன்றவற்றைக் கொண்டு நோய்க்கடத்தப்படுதல் மாறுபடுகிறது. மேலும் அறிய கீழ்க்காணும் அட்டவணையைச் சரிபார்க்கவும், + + + + + + +டைசன் சுரப்பி அழற்சி என்பது பொதுவாக வெட்டை நோய் என்று அறியப்பெறுகிறது. இது சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை ஆகியவற்றில் கிருமி தாக்குதல் நடைபெற்று சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. ஆண்குறியின் நுனிப்பகுதியிலுள்ள டைசன் சுரப்பி பாதிக்கப்படுவதால் டைசன் சுரப்பி அழற்சி என்று அழைக்கப்பெறுகிறது. + +வெட்டை நோய் கோனக்கால் கிருமிகளால் "ம்யூக்கஸ்" என்ற சவ்வுப் பகுதி தாக்கப்படுவதால், சிறுநீர் வரும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது. + +இந்நோய் ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். இந்நோயானது தாயிலிருந்து குழந்தைக்கு கடத்தப்பெறும் அபாயமும் உள்ளது. + +பாலுறுப்பு ஹேர்பீஸ் என்பது வைரசினால் ஏற்படும் அக்கி நோயாகும். + +ரெட்ரோவைரசு எனும் வைரசின் தாக்குதலினால் மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனில் குறைபாடு ஏற்பட்டுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி பெருநோய்கள் தாக்குதல் ஏற்படுவதால் மரணம் ஏற்படுகிறது. + + + +பெரும்பாலான பால்வினை நோய்கள் முறையான சிகிச்சைகளால் குணப்படுத்தக்கூடியவை. நோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற துவங்கினால், எளிமையாகவும் முழுமையாகவும் குணம் செய்யலாம். முறையற்ற சிகிச்சைகளும், முழுமையற்ற சிகிச்சைகளும் மலட்டுத்தன்மை உண்டாக்கவும், இதயம் மூளை போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. + +வைரசினால் ஏற்படும் பால்வின ���ோய்களைத்தடுக்க வைரசு தடுப்பூசிகள் பயன்படுகின்றன. + +ஒரே வகையான பால்வினைத் தொகுப்பிற்கு பல நோய்க் கிருமிகளும் காரணமாக இருக்கலாம். பால்வினை நோயிற்கு காரணமாயிருக்கும் அனைத்து நோய்க் கிருமிகளுக்கும் மருந்துகள் ஒருசேர தரப்படுகின்றன. இது “தொகுப்பு சிகிச்சை முறை” (Syndromic Management) என்று அழைக்கப்படுகின்றது. + +கருவிலிருக்கும் போதோ அல்லது குழந்தை பிறக்கும் போதோ தாயின் பிறப்புறுப்புப் பாதையில் உள்ள பால்வினை நோய்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்புண்டு. + +கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் மருத்துவம் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் பால்வினை நோய்த் தொற்று உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். பால்வினை நோய்க்கான அறிகுறிகள் சிறிது காலத்தில் தானாகவோ அல்லது சிகிச்சை காலம் முடியும் முன்போ மறைவதற்கு வாய்ப்புண்டு. இது போன்ற நேரங்களில் குணமடைந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது. முழுமையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். + +தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொகுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையான பால்வினை நோய்கள் குணமாகி விடும். இரத்தம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுடன் சிகிச்சை பெற, அரசு வட்ட மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றை அணுகலாம். + +பால்வினை நோய்த் தொற்றுள்ளவர் மட்டும் சிகிச்சை பெற்றால் போதாது. அவருடைய உறவுத் துணையோடு சேர்ந்து ஒரே சமயத்தில் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சிகிச்சை பெறாவிடில் சிகிச்சை பெறாத துணையின் மூலம் பால்வினை நோய் திரும்பவும் வரும் வாய்ப்பு உள்ளது. + +எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் என்பதும் ஒரு வகையான பால்வினை நோய்தான். பால்வினை நோய் உள்ளவர்களை எச்.ஐ.வி. எனும் எய்ட்ஸ் தாக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட ஒன்பது மடங்கு அதிகம். மேலும் பால்வினை நோய் எச்.ஐ.வி தொற்று வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. + +பால்வினை நோய்களும் ஒரு வகையான இனப்பெருக்க உறுப்பு நோய் ஆகும். இனப்பெருக்க உறுப்பு நோய்த் தொற்று உடலுறவு மூலம் மட்டுமில்லாமல் பிற வழிகளிலும் பரவலாம். திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழித்தல், அசுத்தமான கழிவறையைப் பயன்படுத்தல் போன்றவற்றாலும் வரக்கூடும். மாதவிடாய் காலங்களில் தன் சுத்தத்தைக் கடைப்பிடிக்காத பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு வழி நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதற்காகப் பயன்படுத்தும் துணிகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவருமே சிறுநீர், மலம் கழித்த பின்பும், உடலுறவுக்குப் பின்பும் இனப்பெருக்க உறுப்புகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக சுத்தமான கழிப்பறை, சுத்தமான தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் போன்றவை மிகமிக அவசியம். + + + + + + +சிபிலிசு + +கிரந்தி அல்லது சிபிலிசு என்பது பரவலாகக் காணப்படும் ஒரு பாலியல் நோயாகும். சிபிலிஸ் நோய் என்பது நீள் சுருள் பாக்டீரியா டிரீபோனிமா பல்லிடம் ஏற்படுத்தும் பால்வினை நோய் ஆகும். இந்த நோயானது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது. சில நேரங்களில் கருவில் உள்ள சிசு பிறக்கும் போது குழந்தைக்கு தாயிடம் இருந்து தொற்றடைந்த குருதியினாலும் தொற்றலாம், அதற்கு பிறவி சிபிலிஸ் என்று பெயர். +சிபிலிஸ் அறிகுறிகளை நான்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கலாம்: முதன்மை, உயர்நிலை, உள்ளுறை, மற்றும் மூன்றாம் நிலை ஆகும். + +முதன்மை சிபிலிஸ் பொதுவாக மற்றொரு நபரின் தொற்று புண்களிடமிருந்து நேரடி பாலியல் தொடர்பு மூலம் பரவும்.ஆரம்ப வெளிப்பாடாக (சராசரியாக 21 நாட்கள்) பாலுறுப்பில் மேகப்பிளவை (Chancre) என்னும் வலியற்ற, அரிக்கும் தன்மை அல்லாத தோல் புண்கள் உண்டாகும். +இரண்டாம் நிலை சிபிலிஸ் சுமார் நான்கு முதல் பத்து வாரங்கள் முதன்மை தொற்றுக்கு பின்னர் ஏற்படுகிறது. இரண்டாம் நோய் வெளிப்படையான பல வழிகளில் அறியப்படுகிறது, அறிகுறிகள் பொதுவாக தோல், சீத சவ்வுகளில் மற்றும் நிணநீர் உள்ளடக்கியது. உடல் முழுவதும் சமச்சீர், சிவப்பு இளஞ்சிவப்பு நிற அரிக்கும் தன்மையால்லா தடிப்புகள் இருக்கலாம். + +உள்ளுறை சிபிலிஸ் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் இரத்தத்தில் நோய் எதிர் பொருள் (antibody) இல்லாமல் இருக்கும். +ஆரம்பகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் மூன்றாம் நிலையாக மாறலாம் அல்லது இறுதிகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் ஆக மாறலாம். + +மூன்றாம் நிலை சிபிலிஸ் சுமார் 3 முதல் 15 ஆண்டுகள் ஆரம்ப தொற்றுக்கு பின்னர் ஏற்படலாம், இதை மூன்று வெவ்வேறு வடிவங்களில் பிரிக்கலாம்: கம்மடௌஸ் சிபிலிஸ் (15%), நியுரோசிபிலிஸ் (மூளைசிபிலிஸ்)(6.5%), மற்றும் இருதய சிபிலிஸ் (10%). சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம் சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம். + + + + +கொணோறியா + +கொணோறியா ("Gonorrhea") ஒருவகைப் பாக்டீரியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் கண்கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும். + + + + + + +கிளமிடியா + +கிளமிடியா ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது.தொற்றுக்குள்ளான பெரும்பாலானவர்களில் நோய அறிகுறிகள் தென்படுவதில்லை. பெண்களில், பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும். ஆண்களில் ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழித்ததன் பின் எரிவு என்பன காணப்படும். தோற்று பெண்களின் யோனி குழாயின் மேற்பகுதிக்கு பரவுவதால் பூப்பென்பின் எரிவு, மலட்டுத்தன்மை முதலான நோய்கள் ஏற்படும். பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். +கிளமிடியா யோனிவழி பாலியல் தொடர்பு, குதவழிப் பாலியல் தொடர்பு அல்லது வாய் வழி பாலியல் தொடர்பு ஆகியவற்றால் தொற்றுவதுடன் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து குழந்தை பிறப்பின் போது குழந்தைக்கும் பரவக்கூடியது.கண் வழித் தொற்றுகள் நேரடித்தொடர்பு, ஈ, தொற்றுப்பொருள் முதலானவற்றால் பரவலாம். " கிளமிடியா ட்ரகோமடிஸ்" பாக்டீரியா மனிதரில் மாத்திரம் தொற்றக்கூடியது. + +கிளமிடியா தொற்றுக்குள்ளான பெண்களின் கருப்பைக் கழுத்து தொற்றுக்களைக் கடத்தக்ககூடியது, இவர்களில் 50–70% ஆன பெண்களில் எந்தவொரு நோய் அறிகுறிகளும் வெளித்தெரியாது. இத்தகைய அறிகுறிகள் வெளிக்காட்டாத ஆனால் தொற்றுடையவர்களுடனும் பெண் குறி, குதவழி, வாய்வழிப் பாலியல் தொடர்புகளை வைப்பவர்களுக்கு நோய் தொற்றும். ஏறக்குறைய அரைவாசிப் பேர்களில் கருப்பை கழுத்து அழற்சி (PID) அதாவது, கருப்பை,பலோப்பியன் குழாய், சூலகம் ஆகியவற்றில் அழற்சி காணப்படும். இது கருப்பை கழுத்தில் தொடர்ச்சியான வலி, கருத்தரித்தலில் சிக்கல், கருப்பைக்கு வெளியில் கருத்தரித்தல் முதலான சிக்கலான பாதிப்புகளைத் தரவல்லது. + +கிளமிடியா 70-80%மானவர்களில் அறிகுறிகளை வெளிக்காட்டாத காரணத்தால் இது அமைதியான கொள்ளை நோய் என சொல்லப்படுகின்றது. அத்துடன் மாதக்கணக்கில் அல்லது வருட காலத்துக்கு அறிகுறிகளை வெளிக்காட்டாதிருக்கும். இதன் அறிகுறிகளாக,பெண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், வயிற்றில் நோ, உடலுறவின் போது நோ, காய்ச்சல்,சிறிநீர் கழிக்கையில் நோ, அடிக்கடி சிறுநீர் கழிதல் ஆகியன காணப்படும். + +ஆண்களில், கிளமிடியா தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர்க் குழாய் அழற்சி 50% ஆனவர்களில் காணப்படும். மேலும் அறிகுறிகளாக; சிறுநீர் வழியில் எரிதல் உணர்வு, ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், விதைகளில் நோ,காய்ச்சல், என்பன காணப்படும் மருத்துவம் செய்யாவிடில் நோய் தொற்று பரவலாவதுடன் மலட்டுத்தன்மை ஏற்படலாம். கிளமிடியா ஆண்களில் முன்னிற்கும் சுரப்பியில் அழற்சியை ஏற்படுத்த காரணமாகும். + +கிளமிடியா வெள்ளை படர்தல் எனப்படும் கண் குருடாவதற்கு ஏதுவான நோயை ஏற்படுத்தும்.1995 இல் ஏறகுறைய 15% குருடு மற்றும் 3.6% 2002 இல் பதிவாகியுள்ளன. இதன் தொற்று கண்ணில் ஏற்படும் தொடுகைகளால் தொற்றக்கூடியது, தொற்று ஏற்பட்ட ஆடைகளைப் பயன் படுத்துதல், கண்ணில் மொய்க்கும் ஒருவகை ஈ முதலானவற்றால் தொற்றும். புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் கண் மூலம் இத் தொற்று ஏற்படும். + +கிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்திலேயே ஆரம்பிக்கும். சரியாகவும் உடனடியாகவும் சிகிச்சை செய்தால் குணமாக்கலாம். தொற்று பாலோப்பியன் குழாய்களைச் சென்றடைந்தால் பாலோப்பியன் குழாய்கள் தடைப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படலாம். பாலோப்பியன் குழாயில் கரு உருவாகவும் கூடும். கருவுற்றவர்களுக்கு இது ஏற்பட்டால் குழந்தைக்குக் கடத்தப்பட்டு அதற்கு க��்ணோய் அல்லது நுரையீரல் ஒவ்வாமை ஏற்படக் கூடும். + +பாலுறவு கொள்வதில் இருந்து விலகுதல், ஆணுறை பாவித்தல், தொற்றுக்குள்ளகாத நம்பகமான ஒருவருடன் மட்டும் உடலுறவு வைத்தல். + + + + +பாலுறுப்பு உண்ணிகள் + +பாலுறுப்பு உண்ணிகள், ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். அதனைத் தோற்றுவிக்கும் வைரஸ் பாலுறவினால அல்லது பாலுறுப்புக்களின் தொடுகையினால் பரவுகிறது. + + +இந்நோய்க்கு நிரந்தர சிகிச்சை கிடையாது. சில பூசும் மருந்துகள் மூலமோ வாயு மூலமோ சத்திர சிகிச்சை மூலமோ அகற்றலாம். ஆனால் சிகிச்சையின் பின்பும் மீண்டும் மீண்டும் தோன்றும். இந்நோயுள்ள பெண்கள் "PAP SMEAR" எனும் சிகிச்சையை ஆண்டுதோறும் செய்து கருப்பைக் கழுத்து ஆரோக்கியமாக உள்ளதா என்பதைச் சோதிக்க வேண்டும். + + + + +பாலுறுப்பு ஹேர்பீஸ் + +பாலுறுப்பு ஹேர்பீஸ் "Herpes Simplex" எனும் வைரசினால் ஏற்படும் பாலியல் நோயாகும். இந்த வைரஸ் உடலினுள் புகுந்தபின் நிரந்தரமாகத் தங்கி மீண்டும் மீண்டும் உயிர்ப்படைந்து நோயை ஏற்படுத்தும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இது பரவுகிறது. + + + + + + +1990 + +1990 (MCMXC) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +விசுவல் பேசிக் + +விசுவல் பேசிக் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் நிரலாக்கல் மொழியாகும். இதன் முன்மாதிரியானது றூபித் திட்டத்திற்காக ஆலன் கூப்பரினால் வடிவமைக்கப்பட்டது. இதைப் பின்னர் மைக்ரோசாப்ட் வாங்கி மேம்படுத்திக் கொண்டது. விசுவல் பேசிக்கானது புதிய விசுவல் பேசிக் நெட் ஊடாக மாற்றப்பட்டுள்ளது. பழைய விசுவல் பேசிக்கானது பேசிக் மொழியிலமைந்த துரிதமாகப் பிரயோகங்களை விருத்திசெய்யும் வரைகலை பயனர் இடைமுகத்துடன் தகவற் தளங்களை அணுகுவதற்கு DAO, RDO, ADO மற்றும் ஆக்டிவ் எக்ஸ் பிரயோகங்களும். + +ஓர் நிரலாக்கரானவர் விசுவல் பேசிக்குடன் தரப்பட்ட பாகங்களை (Components) ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்க முடியும். இத்துடன் விண்டோஸ் பிரயோகங்களுக்கான நிரலாக்கல் இடைமுகத்தினூடக முடியுமெனினும் வெளிப் பங்சன்ஸ் (function) வெளிப��படுத்தல் வேண்டும். + +வர்தகரீதியான நிரலாக்கலில் ஓர் மிகக் கூடுதலான பயனர்களைக் கொண்டதாக விளங்குகின்றது. + +மைக்ரோசாப்ட் பேஸிக் மொழியினூடாகப் பிரயோகங்களிற்கு ஸ்கிரிப்டிங் ஊடாக ஆரம்பத்தில் விசுவல் பேசிக்கூடாகவும் பின்னர் .நெட் ஊடாக மாற்றீடு செய்யப் பட்டுள்ளது. + + +பலர் பயனார்கள் கருத்துப்படி தானியங்கி (Automated) முறையில் விசுவல் பேசிக்கில் இருந்து விசுவல் பேசிக்.நெட் இற்கு மாறுதல் நடைமுறையில் சாத்தியமில்லை ஆதனால் பெரும்பாலும் மனித முயற்சியைப் பாவித்தே மாற்றப்படுகின்றது. தவிர விசுவல் பேசிக் நிரலை விசுவல் பேசிக்.நெட் முறையில் மாற்றுவதானால் நீண்ட சோதனைகளுக்கு உட்படவேண்டும் என்பதால் அநேகமாக ஜாவா நிரலாக்கல் மொழி C# மற்றும் டெல்பியிலிருந்தே மாற்றங்கள் நிகழ்ந்தன. + +விசுவல் பேசிக்கானது இலகுவாகக் கற்றுப் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்நிரலானது இலகுவாக வரைகலை இடைமுகங்களைப் பயனருக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சிக்கலான விண்டோஸ் நிரல்களையும் ஆக்க முடிகின்றது. இலகுவான நிரல்கள் பல வரிகளை எழுதாமல் உருவாக்கமுடியும். நிரல்கள் வினைத்திறனாது ஓர் பிரச்சினையாகவே ஆரம்பத்தில் இருந்தபோதிலும் வினைத்திறனான கணினிகளைப் பயன்படுத்தி வேகமாக பிரயோகங்களை உருவாக்கமுடியும் + + +இதன் நிரலாகம் கீழே தரப்படுகின்றது. இதில் முதாவது வரியும் கடைசி வரியும் மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் தானே உருவாக்கியதாகும். இரண்டாவது வரி திரையில் காட்டப்படவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது. மூன்றாவது வரி சி நிரலாக்கல் மொழி போன்று இங்கும் print பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். (அங்கு printf() பாவிக்கபடுகின்றது. இதன் நிரலாகம் கீழே தரப்படுகின்றது. +Private Sub Form_Load() +End Sub +இபோது F5 (function key) அழுத்துவதன் மூலம் நிரலை இயக்கலாம். + + + + + +ஆகத்து 9 + + + + + + + +கிமு 2ஆம் ஆயிரமாண்டு + + + + + +தமிழ்த் திரைப்பட வரலாறு + +தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்லாது கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் வரவேற்பைப்பெற்ற ஓர் ஊடகமாகும். + +19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. 1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, 'மவுண்ட் தெரு'வில் "வார்விக் மேஜர்" என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் 'எலெக்ட்ரிக்' திரையரங்காகும். மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. + +1905 இல் திருச்சி புகையிரதத்தில் வேலை பார்த்து வந்த "சுவாமிக்கண்ணு வின்சென்ட்" என்பவர், 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது."சுவாமிக்கண்ணு வின்சென்ட்" பல ஊர்களுக்குச் சென்று "இயேசுவின் வாழ்க்கை" என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் "வெரைட்டி ஹால்" என்ற அரங்கை அமைத்து, "வள்ளி திருமணம்" போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார். + +நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறா��். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். + +1914 ஆம் ஆண்டு சென்னையில் "வெங்கையா" என்பவரால் கட்டப்பட்ட "கெயிட்டி" அரங்கே இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இத்திரையரங்கு இன்றளவும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது). + +இத்திரையரங்கையடுத்து சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல் "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். + +1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் "ஏ.நாராயணன்". "ஜெனரல் பிக்சர்ஸ்" கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்கு முக்கியமான பங்கு வகிப்பவராவார். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விபரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான "மார்த்தாண்டவர்மன்" என்ற ஒரு படம் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டதாகும். திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரித்தானிய அரசு இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய ஒளிப்பதிவு சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பில்ம் லீக்" நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. + +தமிழில் பேசும்படம் ���யாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள "சாகர் மூவிடோன்" என்ற நிறுவனத்தால் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. "குறத்திப் பாட்டும் டான்ஸூம்" என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம். அதே வருடம் "எச். எம். ரெட்டி' இயக்கத்தில் முழுநீள தமிழ்ப் படமான "காளிதாஸ்" வெளிவந்தது. + +முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் அற்ற அவ்வாண்டுகளில் 1934 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பேசும் பட தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டது.ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) திரைப்படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அத்திரைப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. + +முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழ்த் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளினை மையமாக வைத்து வெளிவந்தன. அதிலும், நிறுவன நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமத்துவக் கதையொன்று தயாரிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு சமத்துவக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திகில் படமும் இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி போன்றவை திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன.பின்னர் சமத்துவத் திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் சில புராணக்கதைகளும் நாடகப்படங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. + +1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாஹினி, ஜெமினி நிறுவனங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். + +ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்,தணிக்கை வாரியம் காவல்துறை ஆணையாளர்களினால் செயல்பட்டது. 1918 ஆம் ஆண்டு ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானதாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவி��ப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே , புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர். + +சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி,மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. இத்திரைப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் ஆங்கிலேயனௌக்குத் தெரியாவண்ணம் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனைகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டாம் உலகப் போரில்,ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது ஆங்கிலேய அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது. போர்க்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தன. + +திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. 1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான இதழ். (பின்னர் இதன் பெயர் "அம்யூஸ்மென்ட் வீக்லி" என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935 இல் தான் முதல் தமிழ் திரைப்பட இதழ் சினிமா உலகம் பி. எஸ். செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் "சில்வர் ஸ்கிரீன்" என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின. + +அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது. பி. யு. சின்னப்பா, எம். கே. தியாகராஜ பாகவதர்,டி. ஆர். மகாலிங்கம் என அன்று புகழ்பெற்ற நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீதம் நன்���ு பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இசை வல்லுநர்களான எம். எம். தண்டபாணி தேசிகர்,ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். + +இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னணி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னணி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது. + +திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் திரைப்படம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. + +இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணப் படம் ஏ. கே. செட்டியார் தயாரித்து 1940 இல் வெளிவந்த மகாத்மா காந்தி ஏ.கே.செட்டியார் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட 1953 இல் ஹாலிவூட்டில் எடுக்கப்பட்ட இதன் ஆங்கிலப் படியானது டாக்டர் வெங்கடாசலபதி என்பவரால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது. + +தமிழ்நாட்டில் விவரணப் படம் எடுப்பது, சலனப்படக் காலத்திலேயே தோன்றியிருந்தாலும், அதன் வளர்ச்சி குன்றியேயிருந்தது. விவரணப் படங்களுக���கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரொஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீரிய விவரணப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்டன. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், விவரணப்படங்களைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான. ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவகுமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம். + +உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ். எஸ். வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி. என். அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு. கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. + +மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பிப்பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது. + +1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே. பி. சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. + +1918 இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் "சினிமாட்டோகிராப்" சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் ��ிரைப்படமான "காடு" சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் திரைப்படக் குழுமம் "தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி", திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது. + +1959 ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே. ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது). + +ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம். ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார். + +1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான "மாடர்ன்" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. + +1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் ஏ.பீம்சிங் கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன. நிறுவனநாடகங்களில் வளர்ந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே. பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனரானார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம். அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் போட்டோடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ். சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி. நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் போட்டோடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என். எஸ். கிருஷ்ணன்,கே. ஆர். ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் போட்டோடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது. + +1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். ம���ப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. + +தென்னிந்தியாவின் முதல் "சினிமாஸ்கோப்" படமான ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். நாடக நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். + +ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்��� சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது). +புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோர் வரவால் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது.ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து புகழ் வாங்கினார் . இவரது தனித்துவம் ஆடம்பர திரையமைப்பு, அடுக்கு மொழி வசனங்கள் இவையே. +எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தர்இன் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும் அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான். +அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்னம், பல்லவி அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா (திரைப்படம்), பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு. + +1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனமான ஜி.வெங்கடேஸ்வரன் "ஜி.வி.பிலிம்ஸ்" என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது +1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் புரியாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் கிராமப்படங்களை தயாரிக்க விருப்பமும் தெரிவித்தனர்.இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் ரொறன்ரோவில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்ப்பெற்றது.ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. +1996 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.தமிழ்த் திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்றன.சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விர��து போன்ற பல்வேறு விருதுகளைத் தமிழ்த் திரை 1996 ஆம் ஆண்டில் பெற்றது குறிப்பிடத்தக்கது. + + + + + +1991 + +1991 (MCMXCI) செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +மைசூர் வாசுதேவாச்சாரியார் + +மைசூர் வாசுதேவாச்சாரியார் ("Mysore Vasudevachar", ; மே 28, 1865 – மே 17, 1961) கருநாடக இசையின் ஒரு சிறந்த பாடலாசிரியர். + +வாசுதேவாச்சாரியார், சுப்பிரமணியாச்சாரியாரின் மகனாக கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள "செவ்வூர்" எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் முதலில் சமஸ்கிருதம் கற்றார். அதன் பின் இசையைக் கற்க முற்பட்டார். பட்டினம் சுப்பிரமணி ஐயரின் சிஷ்யராக இருந்து ஒரு சிறந்த சங்கீத வித்துவானாகவும், வாக்கேயகாரராகவும் விளங்கினார். இவரது சாரீரமானது அனுமந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து தாரஸ்தாயி கந்தாரம் வரை சுலபமாக பாடும் திறனுடையது. + +இவரது உருப்படிகளாலேயே இவரின் புகழ் பிரசித்தமாயுள்ளன. அவற்றிற்கு உதாரணமாக "ப்ரோச்சேவ ரெவருரா" என்ற கமாஸ் ராக உருப்படியைக் கூறலாம். இவரது இறுதிக் காலத்தை அடையாரில் உள்ள கலாகக்ஷேத்ராவில் கழித்தார். இந்த ஸ்தாபனத்தின் உபதலைவராக இருந்து "சீதா கல்யாணம்" என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்தார். இவர் கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகள், இராகமாலிகைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார். இவர் தமது காலத்தில் வாழ்ந்த ஏனைய இசைப்பாடகர்களை எல்லாம் தமது இசை வன்மையால் வச்சுரித்து நேயத்துடன் வாழச்செய்தார். 60 ஆண்டு காலமாக தென்னாட்டிலே இவரின் இசை பிரகாசித்ததுடன் பல அரசர்களாலும், மடாதிபதிகளாலும் போற்றப்பட்டார். பலர் இவரிடம் சிஷ்யராக சேர்ந்து இசை பயின்றனர். இவரது முத்திரை "வாசுதேவ" என்பதாகும். + + + + + + +அரராத் மலை + +அரராத் மலை ("Mount Ararat") துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது. + +அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது. + +ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன. + + + + + +யாழ் + +யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது. + +குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது. + +யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. + +பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன. + +வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டனர். யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது. + +அந்நூல்களில், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. + +தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ், செங்கோட்டுயாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது. + +சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் படிவளர்ச்சியான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ்', 'வீணை முரலக்கண்டேன்', 'பண்ணோடியைந்த வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. ஆனா���் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் "வீணை என்ற யாழையும் பாட்டையும்" என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், "வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்" என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் கந்தருவதத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார். எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. + +சிலப்பதிகாரத்தில் "நாரதன் வீணைநயந்தெரி பாடலும்" என்று வருகிறது. அதற்கு அடியார்க்கு நல்லார் யாழ் என்று பொருள் தருகிறார்.சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே வீணை என்ற பெயர் தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இளங்கோவடிகள், ‘நாடக உருப்பசி நல்காளாகி மங்கலமிழப்ப வீணை மண்மிசை‘ என்ற வரிகளைக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் வீணை என்னும் சொல் உடலைக் குறிக்கிறது. எனவே வீணை என்னும் சொல் பல பொருளைக் குறிக்கும் வகையில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். இறுதியில் சிறப்பு கருதி இசைக்கருவிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. + +அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். + +1947 இல் ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் "யாழ் நூல்" என்னும் தமது இ��ைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார். + +யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் "இசையொலி பெருக்கி" (resonator) "தணக்கு" எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் "போர்வைத்தோல்" என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் "மாடகம்" அல்லது "முறுக்காணிகள்" இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர். +சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக; +ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. + +யாழுக்குக் குடுக்கை என்ற ஓர் உறுப்பு உண்டு. அது இருபுறமும் தாழ்ந்து நடுப்பாகம் உயர்ந்து, மானின் கால் குளம்பு பதித்த சுவடு போன்ற அமைப்பினைப் பெற்றிருந்ததது. யாழின் நிறம் அழல் போன்ற சிவப்பு நிறம். யாழைப் போர்த்திய உறைத்துணியில் அழகாகத் தைக்கப்பட்ட (நூல்) தையல் வரிசை காணப்பட்டது. அந்த நூல்வரிசை கருவுற்ற இளம் பெண்ணின் சிறிது பருத்த வயிற்றில் காணப்படும் மெல்லிய ரோம ஒழுங்கு போல் அமைந்திருந்தது. நண்டின் கண்கள் போன்ற துளைகளில் ஆணி பொருத்தப்பட்ட அந்த யாழின் வடிவம் எட்டாம் நாள் நிலவின் வடிவினைப் போன்றிருந்தது. யாழின் தண்டு பாம்பு தலை நீட்டினாற்போல் அமைய, வார்க்கட்டு பெண்ணின் கையில் நெருங்கிக் காணும் வளைகளைப் போலவும், யாழ் நரம்புகள் தினையரிசியை ஒத்தும் தோன்றின. முழு அளவில் அந்த யாழ் தெய்வீகத் தோற்றத்துடன் அலங்காரம் செய்யப்பட வடிவுடைய மணப்பெண் போல் காட்சி அளித்தது. ஆறலைக் கள்வர் மறம் நீங்கி அன்பு கொள்ளத் தூண்டும் ஆற்றலுடையது. + +"பாதிரிப் பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற செந்நிறம் கொண்ட தோலால் ஆன யாழ். பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற இரண்டு துளைகளை இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள்ளே இருண்டிருப்பது போன்ற வாயினைக் கொண்டது.கையில் ஏந்தும் யாழின் கடைப்பாகம் பிறைநிலவு போன்றது. வளைசோர்ந்த பெண்களின் கைவலையல்களைப் போன்ற வார்க்கட்டு உடையது. நீலமலை போலும் நீண்ட பெரிய தண்டு கொண்டது. பொன்னுருக்கிச் செய்தது போன்ற முறுக்கிய நரம்புகள் கொண்ட யாழ்" என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது. + +மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் கையால் எட்டுச் சாண் உயரம் இருப்பர். பெருங்கலம் என்னும் பேரியாழின் உயரமோ பன்னிரண்டு சாண். இதன் கோட்டினது ஒருசாண். ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் என 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். + +கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது. + +இவற்றைவிட நாரதயாழ் (1000 நரம்புகளை உடையது), நாரத பெரியாழ், ஆதிகால பெரியாழ் (100 நரம்புகளை உடையது), தும்புருயாழ், மருத்துவயாழ் (தேவ யாழ்), ஆதியாழ் (1000 நரம்புகளை உடையது), கிளி யாழ், வல்லகியாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாத்தான் குளம் அ.இராகவன் என்பவர் தனது நூலில் 24 வகையான யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். + +யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்: + +கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 ஆண்டுகள் பழைமையான சில யாழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவை: + +யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்தசுரங்களே அதில் வாசிக்கமுடியும். யாழைச் சுத்த மேளமாகிய "செம்பாலை" அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி, பின்னர் வேறு இராகங்களைக் கிரகபேதம் செய்து வாசித்தனர். + +யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். யாழ் பல நூற்றாண்டுகள் உருவத்தில் முன்னேற்றம் அடைந்து வீணையாக மாறியது என்ற கருத்தையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். நுட்ப சுருதிகளை வாசிக்கக்கூடியது வீணை. அத்துடன் உலோகத் தந்திகளோடு கூடிய மெட்டுக்கள் உள்ளது வீணை. யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால���, வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது. + + + + + +கிமு 1-ஆம் ஆயிரமாண்டு + +கிமு 1ம் ஆயிரமாண்டு ("1st millennium BC") கிமு 1000 ஆம் ஆண்டு முதல் கிமு 1 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். இரும்புக்காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. உலக மக்கள் தொகை இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 மில்லியன் வரை எட்டியது. + +இந்த ஆயிரமாண்டின் இறுதியில் உரோமைப் பேரரசு எழுச்சி கண்டது. தெற்காசியாவில் வேதப் பண்பாடு மௌரியப் பேரரசில் வேரூன்றியது. ஆரம்பகால கெல்ட்டியர் நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. சீனாவில் கன்பூசியம் தலைதூக்கியது. 1ம் ஆயிரத்தின் இறுதியில் ஆன் அரசமரபு நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் மாயா நாகரிகம் எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் பண்டைய எகிப்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. யூதம், சரத்துஸ்திர சமயம், இந்து சமயம், வேதாந்தம்), ஜைனம், பௌத்தம் வளர்ச்சியடைந்தது. + + + + + + +1-ஆம் ஆயிரமாண்டு + +முதலாம் ஆயிரமாண்டு ("1st millennium") என்பது யூலியன் நாட்காட்டியின் படி கிபி 1 ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, கிபி 1000 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஓர் ஆயிரமாண்டாகும். + +இதற்கு முந்தைய ஆயிரமாண்டில் மும்மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை இந்த ஆயிரமாண்டுகளில் மிக மெதுவாகவே வளர்ந்தது. 170-மில்லியன்களில் இருந்து 300-ஆக அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400-லிருந்து 250-க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது. + +கிழக்காசியாவில் பௌத்தம் பரவியது. சீனாவில், ஆன் அரசமரபு வீழ்ச்சியடைந்து யின் அரசமரபும் பின்னர் தாங் அரசமரபும் ஆட்சியில் அமர்ந்தன. சப்பானில் மக்கள்தொகையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. விவசாயிகள் இரும்பினாலான கருவிகளைப் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தியத் துணைக்கண்டம் பல இராச்சியங்களாகப் பிளவடைந்தது. + + + + + + +16-ஆம் நூற்றாண்டு + +கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது. + + + + + +பாபிலோன் + +பாபிலோன் (Babylon) அரமேயம்: בבל, "Babel"; , "Bābil"; , "Bavel"; , "Bāwēl") தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியா பகுதியில் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில் கிமு 1800 முதல் கிமு 6ம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும். + +பபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது. + +கிமு 19ம் நூற்றாண்டில் முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. + +பாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. + +பாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது. + +கிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 ஹெக்டேர் பரப்பளவுடன் விளங்கியது. + +பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், ஹில்லா எனும் பகுதியில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் - செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது. + +பாபிலோன் தொல்லியல் களத்தில், கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து. + +பண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே ஈராக் நாட்டின், பபில் ஆளுநகரத��தில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கு 85 கிமீ தொலைவில் ஹில்லா எனும் ஊரின் டெல் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. + +பண்டைய பாபிலோன் நகரத்தின் வரலாற்றுக் குறிப்புகள், ஈராக் நாட்டின் உரூக், நிப்பூர் மற்றும் ஹரதும் தொல்லியல் களங்களில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. + +புது பாபிலோனிய நகரம் தொடர்பான செய்திகள் தொல்லியல் அகழாய்வுகள் மூலமும், எரோடோட்டசு, இசுட்ராபோ போன்ற பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞர்கர்கள் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது. + +கிமு மூவாரயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அக்காதியம் மற்றும் சுமேரிய இலக்கியங்களில் பாபிலோன் நகரம் குறித்தான குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது. + +அக்காடியப் பேரரசர் சார் - காளி - சர்ரி (Šar-kali-šarri) காலத்திய ஆப்பெழுத்துகளில் வடிக்கப்பட்ட சுடுமண் பலகைகளில், பாபிலோன் நகரத்தில் அன்னுநிதம் மற்றும் இலபா தெய்வங்களுக்கு எழுப்பட்ட கோயில்களின் அடிக்கல் குறித்தான குறிப்புகள் உள்ளது. + +கிமு 19ம் நூற்றாண்டில் தெற்கு மெசோபத்தோமியாவை, கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய வடக்கு லெவண்ட் நாடோடி மக்களான அமோரைட்டு மக்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி, பாபிலோன் நகர அரசை நிறுவினர். + +கிமு 21 – 20ம் நூற்றாண்டுகளில் வடக்கு லெவண்ட் பகுதியிலிருந்து தெற்கு மெசபத்தோமியாவின் பாபிலோன் பகுதிக்கு எலமைட்டு மக்களுடன் குடியேறிய, அமோரிட்டு மக்களை, பழைய அசிரியப் பேரரசு ஆட்சியினர் தடுத்து நிறுத்தினர். + +அசிரியர்கள் ஆசியா மைனரை கைப்பற்றுவதற்கு தங்கள் கவனத்தை திருப்பிய வேளையில், அமோரிட்டு மக்கள் பாபிலோனில் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர். + +துவக்க காலத்தில் பாபிலோன் ஒரு நகர அரசாக இருந்தது. அம்முராபி (கிமு 1792–1750) பாபிலோன் நகர அரசாக ஆவதற்கு முன்னர், அசிரியா, ஈலாம், லார்சா மற்றும் இசின் ஆட்சியாளர்களின் கீழ் பாபிலோன் நகரம் இருந்தது. பாபிலோன் மன்னர் அம்முராபி ஈலாம், மாரி, எல்பா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோன் நகர அரசு மன்னராக அம்முராபி பபிலோனியா இராச்சியத்தை நிறுவினார். பின்னர் பாபிலோன் பழைய அசிரியப் பேரரசின் கீழ் வந்ததது. + +கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்ட்டைட்டுக்களால் வெல்லப்பட்டது. பண்டைய பாரசீக காசிட்டு மக்களின் கீழ் பாபிலோன் நகரம், கிமு 1160 வரை, 435 ஆண்டுகள் இர���ந்தது. பின்னர் காசிட்டு மக்களின் பாபிலோன், பழைய அசிரியப் பேரரசில் (கிமு 1365–1053) வரை இருந்தது. அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா கிமு 1235ல் பாபிலோனில் முடிசூட்டிக் கொண்டார். + +கிமு 1155ல் அசிரியர்களும், ஈலாமிரியர்களும் பாபிலோன் நகரத்தின் மீது நடத்திய தொடர்தாக்குதல்களால், பாபிலோனை விட்டு காசிட்டு மக்கள் வெளியேறினர். + +பின்னர் அக்காடியப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக பாபிலோன் சென்றது. பின்னர் மீண்டும் அசிரியர்கள் ஆட்சியில் பாபிலோன் ஒரு சிற்றரசாக விளங்கியது. + +கிமு 11ம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியிலிருந்து வந்த மேற்கு செமிடிக் மொழி பேசிய ஆர்மீனியர்களும், கிமு 9ம் நூற்றாண்டில் சால்டியர்களும் பாபிலோன் நகரைக் கைப்பற்றியாண்டனர். + +புது அசிரியப் பேரரசர் சென்னாசெரிப் ஆட்சிக் காலத்தில் (கிமு 705 – 681), ஈலமைட்டுகள் உதவியுடன் உள்ளூர் தலைவன் இரண்டாம் மர்துக்-அப்லா-இதின்னா (Marduk-apla-iddina II) நடத்திய கலவரங்களில் பாபிலோன் நகரம் முற்றாக அழிக்கப்பட்டது. கிமு 689ல் பாபிலோன் நகரக் கோட்டைச் சுவர்களும், கோயில்களும், அரண்மனைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது. + +ஈசர்ஹத்தோன் (கிமு 681–669) ஆட்சியில் பாபிலோன் நகரம், மீண்டும் எழுப்பட்டது. பாபிலோனை ஆண்ட அசூர்பனிபால் ஆட்சிக்கு எதிராக, நினிவே நகரத்தின் ஆளுநரும், அவரது தம்பியுமான சாமாஸ்-சும்- உகின், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த ஈலமைட்டுகள், சால்டியர்கள், பாரசீகர்கள், யூதர்கள், மற்றும் அரபு மக்கள் உதவியுடன் கிமு 625ல் உள்நாட்டுப் போரை நடத்தி பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார்கள். + +அசிரியர்கள் பெரும்படையுடன் பாபிலோன் நகரத்தை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டு, மீண்டும் பாபிலோனை புது அசிரியப் பேரரசில் இணைத்தனர். பாபிலோன் நகர ஆளுநராக கந்தாலுனு என்பவரை, புது அசிரியப் பேரரசால் நியமிக்கப்பட்டார். + +அசூர்-பனிபால் ஆட்சிக்கு பின்னர் வந்த புது அசிரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாபிலோனில் ஏற்பட்ட தொடர் உள்நாட்டுப் போரால் கிமு 608 பாபிலோனை ஆண்ட புது அசிரியப் பேரரசு முடிவிற்கு வந்தது. + +புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த பிறகு, கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். பாபிலோன் நகரம் புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரமாகயிற்று. + +புது பாபிலோனியப் பேரரசில் கிமு 629 முதல் பாபிலோன் நகரம் தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின்படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டனர். இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் தொங்கு தோட்டம் அமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் யூதர்களை பாபிலோனை விட்டு வெளியேற்றினார். + +87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது. + +ஹெலனியக் காலத்தில் கிமு 331ல் அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசரை, பேரரசர் அலெக்சாந்தர் வெற்றி கொண்டு பாபிலோன் நகரை கைப்பற்றினார். + +கிமு 323ல் அலெக்சாந்தர் பாபிலோன் அரண்மனையில் இறந்த பிறகு, ஹெலனியக் காலத்தில் அலெக்சாந்தர் கைப்பற்றிய இராச்சியங்களை அவரது படைத்தலைவர்கள் செலுக்கஸ் நிக்கோடர் உள்ளிட்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். மேற்காசியா, நடு ஆசியா உள்ளிட்ட பகுதிகள் செலுக்கஸ் நிக்கோத்தரின் செலுக்கியப் பேரரசில் வந்ததது. + +பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளின் ஆட்சியில் ஒன்பது நூற்றாண்டுகளாக, கிபி 650 வரை பாபிலோன் மற்றும் அசிரியா ஒரு மாகாணாக விளங்கியது. பாபிலோன் நகரத்தினர் தமது பண்பாடு மற்றும் அரமேய மொழியை போற்றி காத்தனர். கிபி 1 – 2ம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் கிறித்தவம் அறிமுகமாகியது. + +கிபி 7ம் நூற்றாண்டின் இறுதியில் மெசொப்பொத்தேமியாவையும், பாபிலோனையும் இசுலாமியர்களின் உதுமானியப் பேரரசு கைப்பற்றி, பெரும்பாலான பாபிலோனிய மக்களை இசுலாமிற்கு சமய மாற்றம் செய்தனர். இசுலாமுக்கு மதம் மாற மறுத்த பாபிலோனிய யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது ஜசியா வரி செ��ுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினர். + +கிபி 10ம் நூற்றாண்டில் பபிலோனியாவின் பாபிலோன் நகரத்தில் யூதர்களின் சிதிலமடைந்த கோயில் மட்டும் இருந்தது. + +மத்தியகால அரபு இலக்கியங்களில் பாபிலோன் நகரத்தைப் பற்றிய குறிப்புகளில், பாக்தாத் நகரத்திலிருந்து பாஸ்ரா நகரத்திற்கு செல்லும் வழியில் பாபிலோன் நகரம் இருந்ததாக கூறப்படுகிறது. + +கிபி 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டவர்கள் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் அறிஞர்கள் பபிலோனியா மற்றும் மொசபத்தோமியாவின் பாக்தாத் மற்றும் பஸ்ரா நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் பெர்லின் போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தனர். + +1920ல் நவீன ஈராக் அரசு அமைந்ததிலிருந்து பாபிலோனின் தொல்பொருட்களின் உருவங்களை அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலட்டைகளில் பொறித்தனர். 1960ல் இஷ்தர் கோயிலின் நுழைவுவாயிலினை பிரதி எடுத்து மக்களின் காட்சிக்கு வைத்தனர். + +14 பிப்ரவரி 1978ல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு ஆட்சி அமைத்த பிறகு பாபிலோன், நினிவே, ஊர், நிம்ருத் நகர சிதிலமடைந்த தொல்லியல் களங்களை சீரமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய சிதிலமடைந்த அரண்மனைகளை சீரமைத்தார். + +பாபேல் என்பது பாபிலோனிய நகரத்திற்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். + +ஆதியாகமம் 10:10 இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9 இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது. பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது. + + + + + + + + +1992 + +1992 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும் (லீப் ஆண்டு) + + + + + + + +1993 + +1993 (MCMXCIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். அனோ டொமினியின், அல்லது பொது ஊழியின், 1993வது ஆண்டாகும்; இரண்டாம் ஆயிரமாண்டின் 993வது ஆண்டாகும்; இருபதாம் நூற்றாண்டின் 93வது ஆண்டாகும்; 1990களின் நான்காவது ஆண்டாகும். + + + + + + + + +1994 + +1994 சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +1995 + +1995 ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +1996 + +1996 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு) + + + + + + + +1997 + +1997 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + +1998 + +1998 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + +1999 + +1999 (MCMXCIX) வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +2000 + +ஆண்டு 2000 (MM) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். + + + + + + + + +மாதோட்டம் + +மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை "மாதொட்ட" அல்லது "மகாதித்த" என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் "மாந்தை" என்றும் "மாதோட்டம்" என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். + +இது இலங்கைத் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்தது. மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான அனுரதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே திருக்கேதீச்சரம் எனப்படும் புகழ் பெற்ற சிவன்கோயில் இருந்தது. + +இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவிஜய இராச்சியம், கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், அரபிக் கடல் பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த பொலநறுவைக்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. + +ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டன எனலாம். + +இலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு. அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன. + +சம்பந்தர் பாடிய "வி���ுது குன்றமா மேருவில் நாணற" என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் கடற்கரை அமைவிடச் சிறப்புப் பற்றியும், அங்கு அமைந்திருந்த, பூஞ்செடிகளையும், பயன்தரு பழ மரங்களையும் கொண்ட சோலைகள் பற்றியும், அதன் பொருள் வளம் குறித்தும், கற்றோரும், படைவீரரும் நிறைந்திருந்தமை பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. + +சுந்தரமூர்த்தி நாயனாருடைய "நத்தார்படை ஞானன்" என்று தொடங்கும் பதிகத்திலும், இதே போன்ற குறிப்புக்கள் வருகின்றன. அத்துடன், அங்கே கப்பல்கள் வந்து குவிவதையும் அவர் குறிப்பிடுகின்றார். + + + + + +செர்மானியத் தமிழியல் + +செர்மன் மொழி, செர்மனி, செர்மனியர்களுக்கும் தமிழ், தமிழர்களுக்கும் இருக்கும் 300 ஆண்டுகளுக்கு மேலான செர்மன் தமிழியல் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஜெர்மன் தமிழியல் (German Tamil Studies) எனலாம். + + + + + + + + + + +யேர்மன் தமிழர் + +தமிழ்ப் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை யேர்மன் தமிழர்கள் (German Tamils) எனலாம். யேர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிக் கொள்ளலாம். + +ஏறக்குறைய 60,000 தமிழர்கள் யேர்மனியில் வசிக்கின்றார்கள்.. பெரும்பாலானவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். + + +தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களாக யேர்மனியத் தமிழர்கள் விளங்குகிறார்கள். தமிழர்கள் அதிகமாகப் புலம்பெயரத் தொடங்கிய 1980 காலப் பகுதியிலேயே தமிழ் ஆர்வலர்களால் இதையொட்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப் பெற்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத காரணத்தால், குறித்த இலக்கை அடைய முடியாமலே இருந்தன. காலப்போக்கில் யேர்மன் வாழ் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்மொழியின் அவசியம் பற்றிய சிந்தனை பல தமிழ் ஆர்வலர்களிடையே அலசப்பெற்றும், ஆராயப்பெற்றும் ஓர் ஆக்கபூர்வமான தீர்மானம் எடுக்கப்பெற்றது. இதன் பலனாக அனைத்துலக, யேர்மனியப் பொறுப்பாளர்கள���ன் ஆலோசனைகளுடன் 1990இல் உலகத் தமிழர் இயக்கம் போன் நகரில் தொடங்கப் பெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் முக்கிய அங்கமாக தமிழ்க்கல்விப் பணி தொடங்கியது. + +அன்றைய காலப்பகுதியில் அமைப்பின் யேர்மனியப் பொறுப்பாளராகத் திகழ்ந்த மாவீரர் மேஜர் சுரேந்திரகுமார் அவர்களின் ஆலோசனைப்படி யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது. யூச்சன் நகரில் தமிழாலயம் ஆரம்பிக்கப் பெற்றதைத் தொடர்ந்து யேர்மனியின் பல நகரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு பல தமிழ்ப்பாடசாலைகள், தமிழாலயம் என்ற பெயரில் உருவாகின. 10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன. 15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது. ஒவ்வொரு தமிழாலயமும் நிர்வாகி, உதவி நிர்வாகி, பெற்றோர் பிரதிநிதி (சார்பாளர்) என்ற கட்டமைப்புடன், ஓர் ஒழுங்குமுறையுடனேயே நடாத்தப்பெறுகிறது. தமிழாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரையான பிரிவுகளில் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப தமிழ்மொழியும், சமூக/சுற்றாடற் கல்வியும், தமிழர்களின் கலை, பண்பாடுகளும் கற்பிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளும் நடத்தப்பெற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இதனோடு தமிழ்த்திறன் போட்டியும் ஆண்டுதோறும் நடாத்தப்பெற்று சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பெறுகின்றன. தமிழ்த்திறன் போட்டியில் கட்டுரை எழுதுதல், மேடைப்பேச்சு என்பன நடைபெறுகின்றன. + +தமிழாலயங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காமலேயே இந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளும் உலகத் தமிழர் இயக்கக் கல்விப்பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பெற்று முறைக்கு முறை பயிற்சிகள் கொடுக்கப்பெறுகின்றன. + +யேர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழ்க்கோயில் தொடங்கப் பெற்றது. தற்சமயம் யேர்மனியில் 133 தமிழ்க்கோயில்கள் இயங்குகின்றன. + + +1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஸ்ருட்கார்ட் தமிழாலயத்தினால் நடத்தப்பெற்ற கலைநிகழ்வுகளில் சில + +யேர்மன் தமிழர்களில் ஏறக்குறைய 45,000 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால் 1983இல் யேர்மனியில் ஒரு பலமான இந்துக்கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. யேர்மன் வாழ் ��மிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இவர்களால் இதுவரையில் 24 இந்துக்கோயில்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் அனேகமான கோயில்கள் கெலர் எனப்படும் நிலக்கீழ் அறைகளிலும், வீடுகளின் ஏதோ ஒரு பகுதியில், ஒரு அறையிலும் என்றே ஆரம்பிக்கப் பட்டன. இவைகளில் சில சிலகாலங்கள் செல்ல வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பெரிதாகப் புனரமைக்கப்பெற்றும் உள்ளன. அவைகளில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது. + +தமிழர்களின் இந்துக் கோயில்கள் + + +ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hamm) + + + + + + + + +சுமேரிய மொழி + +சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும். + +சுமேரிய மொழியின் காலவோட்டத்தை 4 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். அவையாவன: + + + + + + +கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு + +கருநாடக இசைக்கும் மேலைத்தேச இசைக்கும் இடையான வேறுபாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. + + + + +இந்துஸ்தானி இசை + +இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். + +வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். + +13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மார்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும். + +வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள். + +இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர். + +வட இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளாகிய இந்துஸ்தானிய இசையும் அரேபியா, மொசப்பத்தேமியா, சின்ன ஆசியா, திபெத் இசைகளின் செல்வாக்கு காணப்படுகின்றது. மீராபாய், சூர்தாஸ், கபீர்தாஸ், துளசீதாஸ் போன்றோர் இந்துஸ்தானிய இசைக்கு பெரும் தொண்டாற்றினார்கள். 17ம் நூற்றாண்டில் மேள, தாட் போன்ற பதங்கள் இந்துஸ்தானிய இசையில் வழக்கத்திற்கு வந்தன. வேங்கடமகி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 72 மேளகர்த்தாப் பத்ததி இந்துஸ்தானி இசையில் 10 தாட்கள் வகுக்க உதவியது. + +18ம் நூற்றாண்டில் தப்பா என்னும் உருப்படி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் தும்ரி, தரானா, தாதரா போன்ற இலகு செவ்வியல் இசை உருப்படி வகைகள் தோன்றத்தொடங்கின. + +பலர் இந்துஸ்தானிய இசை சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்துஸ்தானி இசை���ை போற்றிப் பாதுகாக்க யாரும் இல்லாத சமயத்தில் விஷ்ணு திகம்பர பலுஸ்கர், பண்டிட் V.N. பாத்கண்டே ஆகிய அறிஞர்கள் பல நூல்களை எழுதினார்கள். இவர்கள் இருவரும் சங்கீத லிபி முறையை அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் கல்லூரிகளையும் நிறுவி இசை பயிற்றுவித்தார்கள். + +இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசாங்கம் இந்துஸ்தானி இசையை வளர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள சங்கீத நாடக அகடமி பல இசை விழாக்களையும் இசைப்போட்டிகளையும் நடத்தி இசை உலகில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் அரிய சேவையை ஆற்றி வருகின்றன. இந்திய வானொலி, தூரதர்ஷன் போன்றவையும் இசை வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகின்றன. வெளிநாட்டவர்களும் இந்தியாவுக்கு வந்து இந்திய இசையை கற்றுச் செல்கிறனர். மும்பாய், பூனா, பெங்களூர், ஸாஹூர், குவாலியர், பரோடா, தஞ்சாவூர், மைசூர், திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களிலெல்லாம் இசைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்பொழுது அகில இந்தியாவிலும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. + +இந்துத்தானி இசை வகைகள் : + + + + + + + +கோட்டு வாத்தியம் + +கோட்டு வாத்தியம் (மற்ற பெயர்கள்: சித்திரவீணை அல்லது மகாநாடகவீணை) என்னும் இசைக்கருவி வீணையைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு மகாநாடக வீணை என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. + + + + + +தம்புரா + +தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது "தம்பூரா", "தம்பூரி", "தம்பூரு", "தம்பூர்" என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது. + + + + +வயலின் + +வயலின் (பிடில்) () என்ற இசைக்கருவி, ��ில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் ("fiddle") என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம். + +இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் +கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. +நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்பட��கிறது . + +தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு +வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic +instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion +instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) +இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், +நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். +மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் +கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. +தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் +கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான +தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர +இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். +வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). +மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து +கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக +உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் +இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் +(solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க +இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத +இடத்தைப் பெற்றுள்ளது . + +வயலின் பல அளவுகளில் formula_1 உற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு. + +கருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் ஒருகால் மேல் மறு கால் போட்டு வாசிக்கின்றனர். வாசிக்கும் போது வலது காலை முன்னிறுத்தி அதனில் வயலினைத் தாங்குவர். இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும். மேலைத்தேய சங்கீதத்தில் நின்று கொண்டும், இருந்துகொண்டும் வயலின் வாசிக்கப்படும். வயலினின் மேல் இடது பக்கத்தை நாடியினால் அழுத்திப் பிடித்தபடி வயலின் மேலைத்தேய சங்கீதத்தில் வாசிக்கப்படுகின்றது. + +தமிழிசை , நாட்டுப்புற இசை , கர்நாடக இசை , மெல்லிசை , திரையிசை , தமிழ் ராப் இசை , தமிழ் பாப் இசை , துள்ளிசை , தமிழ் ராக் இசை , தமிழ் கலப்பிசை போன்றவை இசை வடிவத்தின் வகைகளாக உள்ளன . + +இது ஒரு மேல்நாட்டு நரம்பிசைக்கருவி. மிடற்றிசையைப் பிடில் கருவியில் இசைக்கலாம் . மேல்நாட்டு இசைக்கருவியாக இருந்தாலும் , இசை இயக்க���் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அமைக்கமுடியும். + +தற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வயலின்கள் உள்ளன . இதன் மூலம் வாசிக்கும் பொழுது , இசையின் ஒலியை பெருக்குவதற்கு ஆம்ப்ளிபயர்ஸ் [amplifier] பொருத்தப்பட்டு இருக்கும் . இதனால் வயலின் ஒலியை கூட்டவோ குறைக்கவோ முடியும். இது இசை கச்சேரியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . இது உறுதியான வடிவமைப்புடன் வருவதால் எளிதில் உடையாது . + +எம். எஸ். கோபாலகிருஷ்ணன் , கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது. + +குன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 - செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. + +டி. என். கிருஷ்ணன் தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார் +எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார். +லால்குடி ஜெயராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர். இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார். ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார். இவர், +அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், +செம்பை வைத்தியநாத பாகவதர், +செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், +ஜி. என். பாலசுப்பிரமணியம், +மதுரை மணி ஐயர், +ஆலத்தூர் சகோதரர்கள், +கே. வீ. நாராயணசுவாமி, +மகாராஜபுரம் சந்தானம், +டி. கே. ஜெயராமன், +மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, +டி. வீ. சங்கரநாராயணன், +டி. என். சேஷகோபாலன், போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கும் புல்லாங்குழல் கலைஞர் மாலி போன்றோருக்கும் பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார். + +கேரளத்தைச் சேர்ந்த வி. இலக்சுமிநாராயண ஐயர் எனும் வயலின் இசைக் கலைஞரின் மூன்று மகன்களில் ஒருவர் எல். சுப்பிரமணியம். சுப்பிரமணியம் தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் வயலின் இசைக் கலைஞர்களாவர். தந்தை இலக்சுமிநாராயண ஐயர் யாழ்ப்பாணம் இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தது. பிறகு சென்னையில் நிலையாக குடியேறிவிட்டனர். சுப்ரமணியம் எம். பி. பி. எஸ். எனும் மருத்துவப் படிப்பு தேறியவர். எனினும் அவர் இசையினை தனது தொழிலாகக் கொண்டார். + +நாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார். + + + + + + +இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் + +இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது + + + + +ஆகத்து 10 + + + + + + + +இடாய்ச்சு மொழ��� + +இடாய்ச்சு மொழி (ஜெர்மன், "") 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவையாகும். பல சொற்கள் இலத்தீன், கிரேக்கத்திலிருந்தும், சில சொற்கள் பிரெஞ்சு, ஆங்கிலத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இடாய்ச்சு மொழியைப் போலவே உள்ள மொழிகள் இலுகுசெம்பூர்கிய மொழி, டச்சு, பிரிசியன், ஆங்கிலம் மற்றும் இசுகாண்டிநேவிய மொழிகளாகும். + +இடாய்ச்சு இலத்தீன் அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது. + +ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது. + +இடாய்ச்சு மொழி ஜெர்மனி, ஆசுதிரியா, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளில் அலுவல்மொழியாகவும் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இத்தாலி, சுலோவீனியா, அங்கேரி, நமீபியா, போலந்து போன்ற பல நாடுகளில் சிறுபான்மை மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மிகவும் பயன்படுத்தப்படும் மொழியாக அறிவியலில் இரண்டாவதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் மூன்றாவதாகவும் உள்ளது; வணிகம் மற்றும் பண்பாட்டில் முதன்மையான மொழியாக விளங்குகின்றது. உலகளவில், புதிய நூல்கள் வெளியிடுவதில் இடாய்ச்சு மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகின் அனைத்து நூல்களிலும் (மின்னூல்கள் உட்பட) பத்தில் ஒன்று இடாய்ச்சில் உள்ளது. இணையதளங்களில் உள்ளுரைக்காக மிகவும் பயன்படுத்தப்படும் மொழிகளில் மூன்றாவதாக உள்ளது. + +இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு மொழியில் சொற்கள் பால், இடம்,காலம் போன்றவற்றைப் பொறுத்து மாறும்; இம்மொழியில் ஆண், பெண், அஃறிணை என மூன்று பாலினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பல சொற்கள் வந்துள்ளன. + +இடாய்ச்சு இலக்கணத்தில் இடம் பெறும் சுட்டிடைச் சொற்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ உள்ளவை போல சரியான வரையறைக்குள் அடங்காதவை. + +யேர்மனிய ��ொழி "der", "die", "das" என்ற மூன்று "Artikels" ஐ அடிப்படையாகக் கொண்டே பேசப்படுகின்றது. வேற்றுமை உருபுகள் Artikels இன் மாற்றங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான Artikel தெரியாவிடின் வேற்றுமைகளைக் கற்பதோ, சரியான முறையில் ஜேர்மன் மொழியைப் பேசுவதோ முடியாத விடயம் என்றே சொல்லலாம். + +செருமனியின் குடிமைப்படுத்திய நமீபியாவிலும் செருமானியர்கள் புலம் பெயர்ந்த ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, டொமினிக்கன் குடியரசு, பிரேசில், அர்கெந்தீனா, பரகுவை, உருகுவை, சிலி, பெரு, வெனிசுவேலா, ஜோர்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் இடாய்ச்சு மொழி பேசப்படுகின்றது. நமீபியாவில் செருமானிய நமீபியர்கள் இடாய்ச்சு கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர். + +ஐரோப்பாவுக்கு வெளியே இடாய்ச்சு மொழியை பேசுவோரின் தொகையை உள்ளடக்கியப் பட்டியல்: +நடுக்காலம் தொட்டே இடாய்ச்சு மொழி செருமானிய இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தியக் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக வால்தர் பொன் டெர் வொகெல்வீடு, வொல்பிரம் பொன் சென்பேக் போன்றோரைக் குறிப்பிடலாம். + +யாரெழுதியது என அறியப்படாத "நிபெலுங்கென்லீடு" இக்காலத்தின் முதன்மை படைப்பாக உள்ளது. 19வது நூற்றாண்டில் யேகப் வில்கெம் கிரிம் தொகுத்து வெளியிட்ட தேவதைக் கதைகள் உலகெங்கும் பிரபலமாயிற்று. + +இறைமையியலாளர் லூதர் விவிலியத்தை இடாய்ச்சில் மொழிபெயர்த்தார். இவரே தற்கால "உயர் இடாய்ச்சு" மொழிக்கு வித்திட்டதாக பலராலும் கருதப்படுகின்றார். லெசிங், கேத்தா, சில்லர், கிளெய்ஸ்ட், ஹாஃப்மேன், பிரெக்ட், ஹைய்ன், சுமிட் மிகவும் அறியப்பட்ட இடாய்ச்சுக் கவிஞர்களும் எழுத்தாளர்களுமாக உள்ளனர். பதின்மூன்று இடாய்ச்சுக் கலைஞர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்: மொம்சன், ருடோல்ஃப் கிறிஸ்டோப் யூக்கென், பவுல் பொன் எய்சு, கெர்கார்ட் ஆப்ட்மான், கார்ல் இசுப்பிட்லெர், தாமசு மாண், நெல்லி சாக்ஸ், ஹேர்மன் ஹெசே, போல், கனெட்டி, குந்தர் கிராசு, எல்பிரீடு யெலைனெக் மற்றும் கெர்ட்டா முல்லர். + + + + + + + +அக்காதியம் + +அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழி���ாகும். +பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு மூவாயிரத்திலிருந்து, கிமு 1000 முடிய பேசப்பட்டது. + +அக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது. + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) + +உலகின் பல நாடுகளில் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்ப +ட்டியல். + + + + + + +அல்பட்ரோசு + +அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ், "Albatross"), தென்முனைப் பெருங்கடலிலும் (அண்ட்டார்டிக் பெருங்கடலிலும்) வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிகள் ("கொய்யடிகள்") கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் "டியோமெடைடிடே" (Diomedeidae) என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது. + +அல்பட்ரொஸ் என்பது, அல்பட்ரொஸ் குடும்பத்தைச் சார்ந்தப் பெரிய கடற்பறவைகளுக்கு வழங்கப்படும் பொதுப் பெயர் ஆகும். இவற்றின் பாதங்கள் வாத்தின் பாதங்கள் போல் தோற்றமளித்தாலும் அவை வலிமையானவை. இவற்றின் சிறகுகள் ஒல்லியாகவும், நீளமாகவும் இருக்கும். இதுவரை பதிமூன்று வகையான பறவைகள் அல்பட்ரொஸ் குடும்பத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. + +இவை நீரில் வாழும் கணவாய் (squid), மீன், குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. கடலில் வாழும் சிறிய மிருகங்களையும், ஹட்டில் மீன் போன்ற மீன்களையும் கப்பல்களிருந்து கொட்டப்படும் உணவுப் பொருட்களையும் உண்ணும். இவை தனது இனபெருக்கக் காலத்தில் தனது கூடுகளை கடற்கரையில் அமைத்துக் கொள்ளும். + +ஆல்பட்ரோஸ் பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக ("தொழுதியாக") வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் இணையாக வாணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன. + +அல்பட்ரொஸ்கள் கடலின் மீது அங்கும் இங்குமாக பறந்துக் கொண்டியிருக்கும், தண்ணீரில் மிதந்து கொண்டே உறங்கவும் செய்யும். இவை மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இராணுவ முகாம்களுக்கு அருகில் கூடுகட்டினால், வானூர்திகளுக்கு இடையே பறந்து செல்லும். இவை கப்பல்களை பின்தொடர்ந்து, கப்பல் மாலுமிகளிடையே அல்பட்ரொஸ்களை கொன்றால் கெட்டவை நேரிடும் என்றோர் மூடநம்பிக்கை உள்ளது. + + + + + +டைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்கள் + +2005 ஆம் ஆண்டு டைம் இதழின் திரைப்பட விமர்சகர்களான Richard Corliss மற்றும் Richard Schickel ஆகியோர் இணைந்து வரலாற்றின் சிறந்த 100 திரைப்படங்களைத் தெரிவு செய்தனர். அவர்களுடைய பட்டியலில் வெளிநாட்டுப் படங்களும் சில சலனப் படங்களும் உள்ளடங்கியிருந்தன. கமல்ஹாசன் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படமும் அடங்கும். + + + + + + +மருதநாயகம் + +முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த +பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசூப் கான���. + +சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் பிறந்தார். பனையூரில் இருந்த பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார். அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தார். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தார். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார். + +1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் 1751 இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும், சந்தா சாஹிப்பிற்கும் இடையே போட்டியும், போரும் மூண்டன. முகமது அலி வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். சந்தா சாஹிப்பிற்கு ஆதரவாக பிரஞ்சுப் படைத் தளபதி டியூப்ளே இருந்தார். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினார். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தார். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தா சாஹிப்பின் படை தோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லையிலும், வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார் நவாபு. யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், தனது படையுடன் அவனை இணைத்தார். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார். + +1752இல் கான்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு கான் சாஹிப் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்குத் தளபதி ஆக்கி கான் சாஹிப் எனும் பட்டமும் தங்கப் பதக்கம் பரிசும் வழங்கினார். அது முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார் . + +1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டார். கட்டாலங்குளத்தின் மன்னராக இருந்த வீர அழகுமுத்துக்கோனையும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டூரில் முகமது யூசுப்கான் பீரங்கியால் சுட்டுக்கொன்றார். இவரது வீரமரணம் பாளையக்காரர்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. மறவர் பாளையத்தை தாக்கி வெற்றி கொண்டார். பாளையக்காரர் பூலித்தேவனை தோற்கடித்தார். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றார். தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேருதவி புரிந்தார். + +1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார். + +இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டார். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது. + +கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியது. யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தார். யூசுப்கான் சென்னையில் இருந்தபொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உரிய நிலங்கள் எல்லாம் சூறையாடப்பட்ட��. யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினார். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். + +மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினார். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தார். நிதித்துறை, வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினார். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். + +இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி, முகமது யூசுப்கானின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சித்தான். கான் சாஹிப் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும், மற்றவர்களும் தன் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் எனவும் நவாபு புதிய உத்தரவைப் பிறப்பித்தான். கம்பெனியரிடம் வாதாடி அனுமதியும் பெற்றான். + +கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தியது. நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7 லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட யூசூப்கான் முன்வந்தார். ஆனாலும் நவாபும், கம்பெனியும் ஏற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. + +தெற்குச் சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், "யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளார்" என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும் நவாபும் யூசுப்கானைக் கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினார் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தார். அவருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர். + +1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர். தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கம்பெனியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கம்பெனியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது. மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர். + +முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் சாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படையினருக்கும் மக்களுக்கும் சோர்வும் குழப்பமும் ஏற்பட்டன. + +யூசுப்கானின் தப்பிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. சரணடைய யூசுப்கானிடம் வேலை பார்த்த பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தார். இந்த அவமானத்திற்குப் பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட். யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினார். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், ஆகியோருடன் தளபதி மார்சன்ட் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமிட்டான். + +1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன்ட், இன்னும் சிலர் யூசுப்கானை அவரது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும் வஞ்சகர்களிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.15-10-1764ல் மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவரது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. + + + + + + + + +தாயுமானவன் (நூல்) + +தாயுமானவன், எழுத்தாளர் பாலகுமாரனின் ஒரு புகழ்பெற்ற புதினமாகும். இப்புதினத்தை பாலகுமாரன் தன் வாழ்க்கை அனுபவத்தை தழுவி எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்புதினம் முதலில் ஆனந்த விகடன் கிழமை இதழில் ஒரு தொடர் கதையாக வெளிவந்தது. பின்னர் இதை விகடன் பதிப்பகம் நூல் வடிவில் வெளியிட்டது. + +வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராகவும், தலைமை தொழிலாளியாகவும் பணிபுரியும் பரமசிவத்தையும் மனைவி சரஸ்வதியையும் மையமாக கொண்டது இப்புதினம். தொழிற்சாலை அரசியல் காரணமாக ஏற்படும் ஒரு சூழ்நிலையில் தனது தன்மானத்தை காப்பற்றுவதற்காக பரமு வேலையை ராஜினாமா செய்கிறான். வீட்டின் பொருளாதார நிலையை காப்பதற்காக சரசு வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், சண்டை சச்சரவுகள், மற்றும் மாறுகிற பந்தங்களை விவரிக்கும் கதை இது. + + + + +ஆகத்து 11 + + + + + + + +எபிரேயம் + +எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, "இவ்ரித்") (; , "" (அ) ) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 9 மில்லியனுக்கும் அதிகம��னவர்களால் பேசப்படுகிறது. கி.மு. 10ஆம் நூற்றாண்டில் பண்டைய எபிரேயம் பற்றிய குறிப்புகள் அறியப்படுகின்றன. எபிரேயம் இசுரேல் நாட்டின் அரபுடன் சேர்த்து ஆட்சி மொழியாக விளங்குகிறது. + +இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் எபிரேயம் பேசப்படுகிறது. இவர்கள் ஆதியாகமத்தின்படி (32:28) யாக்கோபின் வழிவந்த இசுரயேலர்கள் எனப்படுகின்றனர். ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு ("Haskalah") இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடாவின் ("Eliezer Ben-Yehuda") பெருமுயற்சியால் மொழி வழக்கத்திற்கு வந்துள்ளது. + +பார் கோக்பா கிளர்ச்சிக்குப் பின்னர், கி.பி. 100-200 வரையிலான காலக்கட்டங்களில் எபிரேயம் தினசரி வழக்கு மொழியாக வழங்கப்பட்டது. ஆயினும் அராமியமும், கிரேக்கமும் உயர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரால் அதிகம் பேசப்பட்டது. + +தோராவும் "(யூத விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்)" ஏனைய யூத விவிலிய நூல்களும் விவிலிய எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன. + +எபிரேய மொழியானது கனானிய மொழி இனத்தைச் சேர்ந்தது. கனானிய மொழிகள் யாவும் வடமேற்கு செமிட்டிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆப்ரஹாம் பென்-யூசூஃபின் கூற்றுப்படி, "இசுரேலியப் பேரரசின் காலமான கி.மு.1200-586 ஆண்டுகளில் எபிரேயத்தின் மொழிப்பயன்பாடு தழைத்தோங்கி இருந்தது". ஆனால், மொழியியல் அறிஞர்களைப் பொருத்தவரை, பண்டைய அராமிக் மொழியே பெரும்பாலும் வழக்கத்திலிருந்ததாகவும், பாபிலோனிய நாடுகடத்தல் வரையிலும் எபிரேயம் வட்டார மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கருதப்படுகிறது. + +பழமைச்சின்னமாக பேச்சு வழக்கொழிந்த மொழியாகக் கருதப்பட்ட எபிரேயம் யூத மதத்தின் புனித மொழியாக மதவழிபாட்டில் இன்றளவும் தொடருகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் எபிரேய மீட்பு நடவடிக்கைகளால் உயிர்ப்பெற்றுள்ளது. நவீன எபிரேயம் 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பாலஸ்தீனத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலில் அரபு மொழியுடன் சேர்த்து எபிரேயம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. எபிரேயம் யூத விவிலியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அதன் மொழி வழக்கிற்கேற்ப வரலாற்றைக்கொண்டுள்ளது. + +இதன் காலம் எருசலேமின் முடியாட்சிக்கும், பாபிலோனிய நாடுகடத்தப்பட்டதற்குமான இடைப்பட்ட காலமான கி.மு. 10 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைய விவிலிய எபிரேயமானது தனாக் எனும் (யூத) விவிலியத்திலுள்ள வரிகள் இதனைக் குறிக்கின்றன. பண்டைய விவிலிய எபிரேயத்தில் (பாலியோ எபிரேயம்) சாமாரியர்களின் எழுத்துருக்கள் பெரும்பாலாக பயன்படுத்தப்பட்டுள்ளன. + +விவிலிய எபிரேயத்தின் காலம் சுமார் கி.மு. 8 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். இது பாபிலோனிய நாடுகடத்தப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. யூத விவிலியம் பெரும்பாலாக இவ்வெபிரேய மொழிநடையிலேயே இயற்றப்பட்டதாலும், இம்மொழிச்சான்றுகள் யூத விவிலியத்தை ஒத்திருப்பதினாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. + +இதன் காலம் கி.மு. 5 – 3 ஆம் நூற்றாண்டு ஆகும். கடை விவிலிய எபிரேயம் பாரசீகர்களின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடையது. மேலும் பாரசீக எழுத்துருக்கள் எஸ்ரா, நெகேமியா போன்ற யூத விவிலிய நூல்களில் காணப்பட்டன. பண்டைய விவிலியத்தை ஒத்திருந்த போதிலும் அராமை எழுத்து வடிவங்களும், சில அரசு சார்ந்த பயன்பாட்டு சொற்களும் கலந்து பயன்படுத்தப்பட்டன. + +இதன் காலம் கி.மு. 3 ஆம் - கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகும். ஜெருசலேமில் இருந்த யூத கோயில் அழிப்பு, கிரேக்க, உரோமானிய பேரரசுகளின் தழைத்தோங்கிய காலத்துடன் தொடர்புடையது. சாக்கடல் ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வெபிரேயம் பேசப்பட்டது. + +இதன் காலம் கி.பி. 1 முதல் 3 (அ) 4 ஆம் நூற்றாண்டு ஆகும். உரோமானியப்பேரரசின் கடைக்காலமாக இருந்தது. மேலும் இக்காலக் கட்டத்திலேயே யூத நூல்களான மிஸ்னா, தோசெஃப்தா, தால்மூத் ஆகியவை இயற்றப்பட்டன. + +2008 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின்படி எபிரேய மொழி சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். + +எபிரேய மொழியின் இலக்கணம் சற்றெ மாறுபட்டு பகுத்தாய்வு செய்து அறியப்படுவதாக உள்ளது. மேலும், வேற்றுமை உருபுகள், முன்-ஒட்டு, சொற்பிணைப்பு, பொருளறிதல் முறைமையில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் வினைச்சொல், பெயர்ச்சொல் முதலியன ஒவ்வொரு முறைமையிலும் மாற்றம் கொண்டதாகவே உள்ளது. சான்றாக, "சுமிகுட்" எனப்படும் சொற்றொடர் சார்ந்த நிலையானது பெயர்ச்சொல் வேறுபாட்டில் உட்பிணைப்பு நிலை மொழியின் மரபு சார்ந்ததாகவே உள்ளது. "சுமிகுட்"டில் சுட்டப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் இணைப்புக் குறி ��ொண்டைவாயாகவே குறிப்பிடப்படுகின்றன. + + + + + + + +ஐ.எசு.ஓ 639-1 + +ஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. + +எடுத்துக்காட்டாக: + +ஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே +ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை. + +2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்: + + + + + + +ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல் + +ஐ.எசு.ஓ 639 மூன்று குறியீட்டு பட்டியல்களை கொண்டுள்ளது. பின்வரும் பட்டியல் ஐஎஸ்ஓ 639-1 மொழிக் குறியீடுகளை தருகிறது. மேலும் இம்மொழிகளுக்கு ஐஎஸ்ஓ 639-2, ஐஎஸ்ஓ 639-3 என்ற குறியீடுகள் காணப்படும் போது அவையும் தரப்பட்டுள்ளன. + + + + + +அரமேயம் + +அரமேயம் (Aramaic; אַרָמָיָא "Arāmāyā", , ) என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய மொழி ஆகும். குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம் பொனீசியம் போன்றவை அடங்கிய வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும் அரமேய எழுத்துமுறை பரலாக பல மொழிகளிலும் எபிரேயம் சிரிக் அரேபிய எழுத்து முறைகளில் எடுத்தாளப்படுகிறது. 3000 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்ட செமித்திய மொழியான அரமேயம் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கில் இருந்த செமித்திய மக்களின் பேச்சு மொழியாகவும் அரமேயம் இருந்தது. வரலாற்றுரீதியாக அரமேயம் சிரியாவிலும் புறாத்து ஆற்றின் வடபகுதி பள்ளத்தாக்குகளிலும் இருந்த அரமேய பழங்குடிகளின் மொழி. கிமு 1000 ஆண்டுவாக்கில் அரமேயர்கள் தற்போதய மேற்கு சிரியா பகுதியில் பல அரசுக்களை கொண்டிருந்தனர். புது அசிரியன்கள் பேரரசின் (கிபி 911-615) தலைமையில் அரமேயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெசபடோமியா, சிரியா முழுவதும் வளர்ந்தது. அரமேயத்தின் புகழ் அதிகளவில் இருந்த போது இது தற்கால ஈராக், சிரியா, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டது. + +தானியே, எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அரமேயம் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது. புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியாவில் வாழ்ந்த அசிரியர்களால் பேசப்பட்டது. புது அசிரியன் அதிகாரிளின் எழுத்தர்கள் அரமேயத்தை பயன்படுத்தினார்கள், அதனாலும் சில நிருவாக பயன்களாலும் அவர்களுக்கு பின் வந்த புது பாபிலோன்யன்களும் (கிபி 605-539) அகாமனிசியர்களும் (கிபி 539-323) அரமேயத்தை நிருவாகத்திலும் வணிகத்திலும் பயன்படுத்தினார்கள். + +தரப்படுத்தப்பட்ட அரேமியத்தை (இது அகாமனிசியர் பேரரசின் அரேமியம் என்றும் அழைக்கப்படுகிறது) அகாமனிசியர்கள் வணிகத்தில் பயன்படுத்தினார்கள். அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் அனைவராலும் அகாமனிசியர் பகுதிகளில் வணிகத்துக்கு பயன்படுத்தும் மொழியாக அரேமியம் +இருந்தது. அரேமயத்தின் நெடிய வரலாறும் பன்முகமும் பரவலாக பேசப்பட்டதும் பல வட்டார வழக்குகள் தோன்ற காரணமாயின. இந்த வட்டார வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன அவற்றில் பல தனி மொழியாக வளர்ச்சி கண்டன. எனவே அரமேயம் என்பது தனி ஒரு மொழியை மட்டும் குறிக்காது. எந்த இடத்தில் எவ்வளவு காலம் பேசப்படுகிறது என்பதை பொருத்து அதில் மாற்றம் இருக்கும். அதிகமான மக்களால் பேசப்படும் கிழக்கு அரமேயமும் மான்டய்க்கம் தற்காலத்தைய வட ஈராக், வட கிழக்கு சிரியா, வடமேற்கு ஈரான், தென் கிழக்கு துருக்கி என்று குர்துகள் வசிக்கும் பகுதியிலேயே பேசப்படுகின்றன. அழியும் தருவாயிலுள்ள வட அரமேயம் சிறு குழுக்கலால் வட சிரியாவிலும் இசுரேலிலும் பேசப்படுகின்றது. + +சில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. மான்டய்க் அப்படிப்பட்ட மொழி ஆகும். வாழும் அரேமிய மொழியான இது மாண்டேயிசம் எனப்படும் இனக்குழுவின் மொழியாகவும் ���ள்ளது. சிரிஅக் என்பது சிரியக் +கிறுத்துவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன் +திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தாமசின் கிறுத்துவ திருச்சபை போன்றவை திகமாக சிரியக் என்ற +அரேமய மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன. + +அரமேயம் ஆபிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாக்கும். இக்குடும்பத்துட் காணப்படும் பல தரப்பட்ட மொழிகளில் அரமேயம் செமித்திய மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும். அரமேய மொழி வடமேற்கு செமித்திய மொழிகள் கூட்டத்தை சேர்ந்தது. + +இம்மொழியின் வரலாறு, மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + + + + + + + +2001 + +2001 திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். இது 21ம் நூற்றாண்டினதும் மூன்றாவது ஆயிரவாண்டினதும் முதலாவது ஆண்டு ஆகும். + + + + + + + + +2002 + +2002 (MMII) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். மூன்றாம் மிலேனியத்தின் 2ம் ஆண்டு. + + + + + + + + +2004 + +2004 (MMIV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு) + + + + + + + + +2005 + +2005 (MMV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டு அல்ல. + + + + + + + +நீர்யானை + +நீர்யானை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும். இது ஒரு தாவர உண்ணி ஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவ���ரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன. + + + + +லூமியேர் சகோதரர்கள் + +லூமியேர் ("Lumière", ) சகோதரர்கள், ஆகுஸ்த் மரீ லூயி நிக்கொலாசு ("Auguste Marie Louis Nicolas", , 19 அக்டோபர் 1862 – 10 ஏப்ரல் 1954), லூயி சான் ("Louis Jean", 5 அக்டோபர் 1864 – 6 சூன் 1948 முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். 1895 டிசம்பர் 28 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர். + + + + +கல்கி (அவதாரம்) + +கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். + +கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம் + +"சம்பலகிராம"த்தின் முக்கியஸ்தரான '"விஷ்ணுயஶஸ்'" என்பவருக்கும் அவரது மனைவி '"சுமதி"' என்பவருக்கும் பிறப்பார் என "பாகவத புராண"த்தில் அறிவிக்கபட்டுள்ளது. இங்கு "சம்பல" என்பதன் பொருள் "அமைதி" மற்றும் "பாதுகாப்பு" என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள். + +மேலும் விஷ்ணுயஶஸ் என்பதன் பொருள் + +விஷ்ணு - இறைவன் + +யஶஸ் - அடிமை அல்லது அடியவர் அல்லது பக்தன் என்று தமிழில் பொருள்படும் + +அதாவது விஷ்ணுவின் அடியவர் அல்லது விஷ்ணு பக்தன் என்பது பொருள் + +மேலும் சுமதி என்பது அமைதியை குறிக்கும் தமிழில் சுமதி என்பதற்கு சு -நல்ல, மதி- அறிவு என்று அர்த்தப்படும் + + + + +பதேர் பாஞ்சாலி + +பதேர் பாஞ்சாலி 1955ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கனு பானெர்ஜீ,கருனா பானர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 1955 ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. + +கலைப்படம் + +சிறுமி ஒருத்தி பழங்களைத் திருடுவதைப் பார்த்த அப்பழமரவீட்��ிற்குச் சொந்தக்கார அம்மா அவளைத் திட்டுகின்றார்.இதனைச் சற்றும் கவனிக்காது அச்சிறுமியும் அப்பழங்களைக் கொண்டு சென்று காட்டிற்கு நடிவிலே அமைந்துள்ள தனது வீட்டில் உள்ள வயதுபோன பாட்டிக்குக் கொடுக்கின்றார்.அப்பாட்டியும் அச்சிறுமிக்குத் தான் சமைக்கும் உணவுகளினை கொடுக்கும்.சில சமயங்களில் பாட்டுகள் பாடி அச்சிறுமியை மகிழ்விக்கும்.பிராமணரான அச்சிறுமியின் தந்தையும் கதைகள் எழுதுபவராவார்.தான் எழுதும் கதைகளினை நம்பி குடும்ப வாழ்க்கையினை சமாளிப்பவராகவும் விளங்குகின்றார்.அச்சமயம் அவர் மனைவியும் இரண்டாம் குழந்தையாக அப்புவைப் பெற்றெடுக்கின்றார்.அப்புவும் வளர்கின்றான்.சகோதரியினால் உணவுகளை அன்பாக ஊட்டப்பெற்றுப் பின்னர் தாயின் அரவணைப்பில் வாழும் அப்பு சகோதரியுடன் வீட்டிற்கு வெளியில் செல்லவும் ஆசை கொள்கின்றான்.இருவரும் வீட்டிற்கு வெளியில் அமைந்திருக்கும் புகையிரதப் பாதை வழியே ஓடுகின்றனர் அச்சமயம் அங்கு பலத்த மழையும் கொட்டுகின்றது.மழைச் சாரலில் பலமாக நனைந்து கொண்ட அப்புவின் சகோதரி வீட்டிற்குச் சென்ற பின்னர் கடும் நோயால் வாட்டப்படுகின்றாள்.அச்சமயம் வெளியூர் சென்றிருந்த அவள் தந்தையும் திரும்பி வருகையில் மகள் இறந்துவிட்டாள் என்பதனைத் தனது மனைவி கூறக்கேட்டு ஓவெனக் கதறி அழுகின்றார்.பெருமழையினால் இடிந்து விழும் நிலையிலிருந்த அவர்களின் மண்வீட்டைப் பார்த்து பயந்து போய் அக்குடும்பம் வேறூரை நோக்கி மாட்டுவண்டியில் புறப்படுகின்றது. + + + + + +யோனி + +யோனி (புணர்புழை) என்பது பாலூட்டிகளின் சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது கன்னிச்சவ்வு எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும். யோனியானது பாலுறவுவையும், பிறப்பையும் அனுமதிக்கிறது. மனிதர்களுக்கும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய முதனிகளுக்கும் மாதவிடாய் வெளியேற்றத்துக்கு வழியாக இருக்கிறது. +பல்வேறு விலங்கினங்கள் இல்லாத(குறைந்துவரும்) நிலையிலும் யோனி பற்றிய ஆய்வுகளில், யோனி அமைந்துள்ள இடம், அமைப்பு, அளவு ஆகியவை இனத்திற்கு இனம் மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாலூட்டிகளில் வழக்கமாக சிறுநீருக்கான திறப்பு ஒன்றும் பிறப்பிற்கான பாதையாக ஒன்றுமாகப் பெண்குறியில் இரண்டு திறப்புகள் உள்ளன. இது ஆண் பாலூட்டிகளுக்கு வேறுபடுகிறது. இனப்பெருக்கத்திற்கும், சிறுநீருக்கும் ஒரே திறப்புதான் உள்ளது. பெண் பாலூட்டிகளில் யோனித் திறப்பானது சிறுநீர்த் திறப்பினைவிட மிகவும் பெரிதாக உள்ளது. இவை இரண்டும் இதழ்போன்ற யோனியிதழால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நிலநீர் வாழிகள், ஊர்வன, பறவைகள், மோனோட்ரெம் எனப்படும் பாலூட்டிகள் ஆகியவற்றுக்கு சிறுநீர் வெளியேற்றம், இனப்பெருக்கம், இரைப்பைக்குடல் வழி ஆகிய அனைத்துக்கும் ஒரே எச்சத் துவாரமே காணப்படுகிறது. +மனிதப் பெண்கள், பிற பெண் பாலூட்டிகளில், பாலுறவுப் புணர்ச்சியின் போது அல்லது பிற பாலியல் செயல்பாடுகளின் போது, மென்மையாக ஊடுருவ இடமளிப்பதற்காக பாலுணர்வுத் தூண்டலின் காரணமாக யோனில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இது யோனியின் உயவுத்தன்மையை அதிகரித்து உராய்வைக் குறைக்கிறது. யோனிச் சுவர் அமைப்பானது ஆண்குறிக்கு உராய்வை ஏற்படுத்தும்படி அமைந்துள்ளது. இந்த உராய்வானது கருத்தரித்தலுக்குத் தேவையான விந்து வெளியேற்றத்துக்கான தூண்டலை ஆண்குறிக்குத் தருகிறது. மகிழ்ச்சிக்காகவோ, பிணைப்பினாலோ பிறரோடு அதாவது எதிர்பால்சேர்க்கை அல்லது ஒத்த பாலினத்தவருடனும் பாலுறவு கொள்ளும் ஒரு பெண்ணின் பாலியல் நடத்தையானது பாலுறவு மூலம் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கிறது. பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான பாலுறவு இதன் ஆபத்தைக் குறைக்கும். பாலியல் நோய்களல்லாத நோய்கள், நோய்த்தொற்றுகள் ஆகியவற்றாலும் யோனி பாதிக்கப்படலாம். + +யோனியும் பென்குறியும் வழிவழியாகச் சமூகத்தில் வலுவான எதிர்வினைக் கருத்தைத் தூண்டியுள்ளது. மொழியில் தவறாகப் பயன்படுத்துதல், கலாச்சார அடக்குமுறை, பாலியல் விருப்பக் குறியீடு, +ஆன்மிகம், மறுவாழ்வு போன்றவற்றுக்கான சின்னமாகப் இவைகளைப் பயன்படுத்தினர்.பொதுவாக நடைமுறையில் யோனி எனும் சொல்லானது யோனியிதழ் அல்லது பெண்குறியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அகராதி மற்றும் உடற்கூற்றியல் வரையறைகளில் யோனி என்பது பிரத்யேகமாக பிறாப்புறுப்பின் உள் அமைப்பையேக் குறிக்கிறது. பெண் பிறப்புறுப்பினைப் பற்றிய இந்த வேறுபாட்டினை அறிவது சுகாதார மேம்பாட்டிற்கு உதவியாக அமையும். + +மனித யோனியானது பெண்குறிமுதல் கருப்பை வாய் வரை நீடித்துள்ள மீள்தன்மையுள்ள தசை வழியாகும். யோனியின் திறப்பானது பிறப்புறுப்பு முக்கோண்ப்பகுதியில் அமைந்துள்ளது. பிறப்புறுப்பு முக்கோணம் என்பது மலவாய்க்கும் பெண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுநீரகத்திறப்புடன் பிறப்புறுப்பின் வெளிப்புரப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். +யோனி வழியானது சிறுநீர்த் திறப்புக்குப் பின்னும் பெருங்குடல் கீழ்வாய்ப் பகுதிக்கு முன்னும் மேலும் கீழுமாய்ப் பின்னோக்கி அமைந்துள்ளது மேற்புற யோனிக்கருகில் சுமார் 90 பாகைக் கோணத்தில், கருப்பை வாய்ப்பகுதியானது சற்று புடைத்தபடி காணப்படுகிறது. +யோனி மற்றும் பெண்குறி இரண்டும் இதழ்களால் பாதுகாக்கப்படுகிறது. +பாலியல் தூண்டுதல்கள் இல்லாத போது யோனியானது அதன் முன்சுவரும் பின் சுவரும் ஒட்டிய ஒரு சரிந்த குழாய் போலக் காணப்படுகிறது. அதன் பக்கவாட்டுச் சுவர்கள் குறிப்பாக பக்கவாட்டுச் சுவர்கள் மற்றெல்லாவற்றையும் விட கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக சரிந்த யோனியானது குறுக்குவாட்டில் ஆங்கில எழுத்தான வடிவில் காணப்படும். இதன் பின்னால் உள்யோனியானது கருப்பையினால் தனியாகப் பிரிக்கப்படுகிறது. நடுயோனியானது தளர்வான இணைக்கப்பட்ட திசுவாலும், கீழ்யோனியானது பெரியனியம் எனப்படும் பகுதியாலும் பிரிக்கப்படுகிறது. + +கருப்பையின் கருப்பைவாய்ப்பகுதியைச் சுற்றியுள்ள யோனிக்குழாய்ப் பகுதியானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம்.பின்புறம், இடப்புறம் வலப்புறம் என நான்காக பிரிக்கப்படுகிறது. முன்பகுதியை விட பின்பகுதியானது ஆழமானதாகும். + + + + + +மாதவிடாய் + +மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். +இடக்கரடக்கலாக "வீட்டில் இல்லை", "வீட்டிற்கு வெளியே", "வீட்டுக்குத் தூரம்", "வீட்டு விலக்கு" என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும். + +மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது. + +மாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது. + +கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப்போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது. சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம். + +பெண் பூப்பெய்துவதற்கு ஒரு வருடம் முன்பே அவளது யோனியில் இருந்து கலங்கிய வெள்ளைத் திரவம் வெளியேறத் தொடங்கும். அது மர வண்ணமாக மாறும்போது அடிக்கடி வெளியேறும். அவள் பூப்பெய்தும் நேரம், இந்த நிகழ்வு 3-5 நாட்கள் என வெளியேற்றம் சீராகும். உடல் சமநிலைப்படும்போது 2-7 என இது நிலைப்படும். + +பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர். +கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும். +இந்த நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். + +நோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும். +மாதவிடாய் நிறுத்தம் என்பது, 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணில் மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான "எஸ்ட்ரோஜன்" எனும் நொதி சுரப்பது குறைகிறது. காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்கள், அதன் பின்னர் இனப்பெருக்கத்தில் பங்கேற்க இயலாது. + +அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவல���, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரபமான அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்தக்காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் இயக்குநீர்களாலும், உள உணர்வுகள் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இது மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome or PMS) என அழைக்கப்படுகிறது. இயக்குநீர்களின் செயலால் புணர்ச்சிவேட்கை அதிகமாகலாம். பிடிவாதம் அதிகரிக்கலாம்; தற்கொலை கூட முயற்சிக்கலாம். மனத்தகைவு அல்லது உளச்சோர்வு நோயால் பாதிக்கப்படலாம். இதே உணர்வுகள் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படுகிறது. + +மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும். + +மாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிட தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக "வீட்டில் இல்லை", "வீட்டிற்கு வெளியே", "வீட்டுக்குத் தூரம்", "வீட்டு விலக்கு" என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது "தள்ளிப்போயிற்று" எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும். ஆனால் இது மட்டுமே கருத்தங்கலை உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும். கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு. மாதவிடாயினாலான உதிரப்போக்கு நின்ற பிறகு (3-7 நாட்களில்) தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் "குளிக்காமல் இருக்கிறாயா" என்பது "கருத்தரித்திருக்கிறாயா" என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும். + +பல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் சில உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம், இந்து மற்றும் இசுலாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்தக் காலம் முடியும் வரை தனிக் குடிலில் தங்க வைக்கிறார்கள். தமிழக சமூகங்களிலும் அண்மைக் காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். இந்த நாட்களில் அவர்கள் சமையலறை, சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பல இடங்களில் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... என்பதான நம்பிக்கைகள் உள்ளன. கிராமப்புறங்களில் மாதவிலக்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு. ஐரோப்பியாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் வரை உணவகங்களில் வேலை செய்யும் பெண்கள் அந்த நாட்களில் உணவைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கை பட்ட உணவுகள் பழுதடைந்து விடுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்தது. 1960 இல் இருந்து சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர். + +""மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்"" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். + + + + + + +சூல் முட்டை + +கரு முட்டை (Ovum) அல்லது சூல் முட்டை என்பது பெண்ணின் இனப்பெருக்க உயிரணு ஆகும். இது ஆண், பெண் வேறுபாடுள்ள இனங்களில், பெண் உயிரினங்களில் இருக்கும் பால் உயிரணுவாக இருப்பதனால், பெண் பாலணு எனவும் அழைக்கப்படும். சூல் முட்டையானது ஆணின் பாலணுவுடன் இணைந்து கருவணு வை உருவாக்கும். + +மனிதரில் பெண்ணின் சூலகத்தில் இந்த சூல் முட்டைகள் உருவாகும். குழந்தைப் பிறப்பின்போதே ஒரு பெண்ணிற்கு வாழ்நாள் முழுமைக்குமான முட்டை மூலங்கள் (primordial follicles) உண்டாகின்றன; பெண் பூப்படைந்த காலத்திலிருந்து அனைத்து முட்டை மூலங்களும் தீரும் வரை மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிரவைத்து வெளியிடுகிறாள். இது முட்டைப் பிறப்பு எனப்படுகிறது. + +பின்னர் இவை ஆணின் விந்தோடு சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் கருப்பையில் பதிந்து வளரும். கருவணுவானது முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து சூல்வித்தகம் மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் முதிர்கருவாகி, குறிப்பிட்ட கருத்தரிப்பு காலம் நிறைவடைந்ததும், குழந்தையாக பிறக்கும். + +மனித உடலில் உள்ள உயிரணுக்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை நுண்ணோக்கியின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன, பறப்பனவினதை விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது. + +பிற பாலூட்டிகளில் பாலிவினைச் சுழற்சி முற்றிலும் வேறுபட்டது; 'சூடாக' இருக்கும்போது மட்டுமே இவற்றின் பெண் இனங்களால் விந்துக்களை ஏற்றுக்கொள்ள இயலும். எனவே இந்தக் காலத்தில் மட்டுமே சூலகத்திலிருந்து முட்டை வெளிவருவது தூண்டப்படுகிறது; அடுத்த சில நாட்களுக்கு பால்வினை செயல்பாடு நிகழ்கிறது. பின்னர் அடுத்த 'சூடு' காலம் வரை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. + +பல தாவரங்களில் தாவர பெண் உறுப்புக்களில் ஒடுக்கற்பிரிவு மூலம் சூல் முட்டைகள் உருவாகின்றன. இந்த உறுப்புகள் முட்டை உயிரணுக்களை நீண்ட 'கழுத்து'ப் பகுதியில் கொண்டுள்ளன. முட்டை முதிர்வடையும்போது இந்தக் கழுத்து திறந்து கொள்ள விந்தணு நீந்தி கருக்கட்டலை நிகழ்த்துகிறது. + +மலரும் தாவரங்களில் பெண் பாலணுக்கள் எட்டு உயிரணுக்களைக் கொண்டு சூல் வித்தில் உருவாகின்றன. இவை முளையப் பை எனப்படுகின்றன. முளையப்பையின் திறப்பிற்கு அண்மையிலுள்ள உயிரணு முட்டை அணுவாகிறது. மகரந்தச் சேர்க்கையின்போது விந்தணு முளையப் பைக்குள் நீந்தி முட்டையை கருக்கட்டுகிறது. உருவாகும் கருவணு பின்னர் முளையமாக சூல் வித்தில் வளர்கிறது. + + + + + +சூலகம் + +சூலகம் ("Ovary") கருமுட்டையை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். இது இனப்பெருக்கத்தில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு உறுப்பாகும். + +கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. பருவமானபின்பு சூலகங்கள் மா���ம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை பாலோப்பியன் குழாய் ஊடாக கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது. + +பூக்கும் தாவரங்கள் என்ற பிரிவினுள் வரும் தாவரங்களில், பழங்களை உருவாக்கும் பகுதியாக இந்த சூலகம் காணப்படுகின்றது. + + + + + +பாலோப்பியன் குழாய் + +பாலோப்பியன் குழாய்கள் அல்லது கரு குழாய்கள் எனப்படுபவை பாலூட்டிகளில் பெண்ணின் சூலகங்களையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழாய்களாகும். இதனைக் கண்டறிந்தவர் பதினாறாம் நூற்றாண்டின் இத்தாலிய உடற்கூற்றியல் அறிஞரான காபரியேல் பாலோப்பியோ என்பவராவார். + + + + +பிரான்சியத் தமிழர் + +தமிழ்ப் பின்புலம் உடைய பிரான்ஸ் வாழ் மக்களை பிரான்சியத் தமிழர் அல்லது பிரெஞ்சுத் தமிழர் எனலாம். பிரான்சில் 80,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது. + +பிரான்ஸ் நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு. + + + +பிரான்சின் தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றிபெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 பாண்டிச்சேர்த் தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் அடங்குவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒருங்கிணைந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. + +வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு: + + + + + + +பிரெஞ்சுத் தமிழியல் + +பிரெஞ்சு தமிழியல் ("French Tamil Studies") என்பது பிரெஞ்சு மொழி, பிரான்ஸ், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். +பிரான்ஸ் நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு. +மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பேராசிரியர் ஜீன் பிலியோசா தலைமையில் 1970இ���் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட திராவிட மொழி பேசியவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். + + + + + + + + +கெருடாவில் + +கெருடாவில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். இது வல்வெட்டித்துறையின் அயலில் உள்ளது. தென்மராட்சியிலும் சாவகச்சேரிக்கு அண்மையில் கெருடாவில் என அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள கெருடாவில் தொண்டமனாற்றுப்பகுதியில் உள்ள கெருடாவில் ஆகும். + + + + + +துரைராஜா (மறைவு) +இவர் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சங்கீத வித்துவானாக அறியப்பட்டவர். பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். + +இ. ஆழ்வாப்பிள்ளை +இளையவன் ஆழ்வாப்பிள்ளை. கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். நாடகக் கலைஞராக அறியப்பட்டவர். நடிப்பு, பேச்சு, சமூகச்செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். + +சோமசுந்தரம் +இவரும் ஒரு நாடகக்கலைஞர். கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையம், கெருடாவில் அண்ணா சனசமூகம் என்பன இவரது கலையாற்றலை வளர்க்க களமாக இருந்துள்ளன. சமூக நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். ஆரம்பத்தில் இவர் நாடக நடிகராகவே அறியப்பட்டவர். + + + + + +செமித்திய மொழிகள் + +செமிட்டிக் மொழிகள் ("Semitic languages") என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் பண்டைய அண்மை கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன. + +இம்மொழி கிழக்கு செமிடிக் மொழிகள் மற்றும் மேற்கு செமிடிக் மொழிகள் என இரு வகைப்படும். + +இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செ��ிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும். + + + + +கிழக்கு செமிடிக் மொழிகள் + +கிழக்கு செமிடிக் என்பது செமிடிக் மொழி குடும்பத்தின் இரண்டு பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய பிரிவு மேற்கு செமிடிக் ஆகும். கிழக்கு செமிடிக் மொழிக்குழு இரண்டு மொழிகளை கொண்டுள்ளது. அவையாவன அக்காத், எப்லேயிட் என்பனவாகும். இவை இரண்டுமே அழிவுகுள்ளான மொழிகளாகும். + +கிழக்கு செமிடி மொழிகள் மேற்கு செமிடிக் மொழிகளிலிருந்து பல வகையில் வேறுபடுகிறது. இது கிழக்கு செமிடிக் மொழி பேசியவர்கள் மற்ற மொழிகளை விட்டு தூர கிழக்காக இடம்பெயர்ந்தமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கிமு 3வது ஆயிரவாண்டில், அவர்களின் "மெசொப்பொத்தேமியா நுழைவு வரலாறு" எழுதப்பட்ட வரலாறுகளில் முதன்மையானதாகும். கிமு 2வது ஆயிரவாண்டின் தொடக்கத்தில் கிழக்கு செமிடிக் மொழிகள் குறிப்பாக அக்காத் மொழி அப்பிரதேசத்தில் முதன்மை பெற்றுக் காணப்பட்டது. அக்காத் மொழியானது, செமிடிக் மொழியல்லாத சுமேரிய மொழியிலிருந்து எழுத்து முறைமை பெறப்பட்டது. + + + + +மேற்கு செமிடிக் மொழிகள் + +மேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் குழுப்படுத்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள மொழிக் குழுவாகும். செமிடிக் மொழியியளலர்களான மற்றும் போன்றோர்கள், செம்டிக் மொழியை, கிழக்கு செமிடிக், மேற்கு செமிடிக் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்குகின்றனர். கிழக்கு செமிடிக் மொழிகள் அழிந்துபோன இரண்டு மொழிகளான அக்காத் மொழி, எப்லேயிட் கொண்டுள்ள அதேவேலை மீதமுள்ள செமிடிக் மொழிகள் அனைத்தும் மேற்கு செமிடிக் பிரிவில் சேர்க்கப்படுகிறது. + +மேற்கு செமிடிக் மொழிகள் பின்வரும் தெளிவான உப குழுக்களை கொண்டுள்ளது: எத்தியோப்பிய மொழிகள், தெற்கு அராபிய மொழிகள், அரபு மொழி மற்றும் வடமேற்கு செமிடிக் மொழிகள் என்பனவாகும். எத்தியோப்பிய மற்றும் தெற்கு அ���ாபிய மொழிகள் பொதுவான இயல்புகள் பலவற்றை கொண்டுள்ள படியால் அவை பொதூவாக்க தெற்கு செமிடிக் மொழிகள் என குழுப்படுத்தப்படுகின்றன. அரபு மொழியின் சரியான குழுப்படுத்தல் தர்க்கிக்கப்படுகிறது. இருப்பினும், மற்றும் என்பவர்கள் அரபு மொழியை வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் இணைத்து மாத்திய செமிடிக் என்ற உபகுழுவை முன்மொழிந்தனர். குழுப்படுத்தல் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. + + + + +மத்திய செமிடிக் மொழிகள் + +மத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும். இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி, எபிரேய மொழி, அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம். இதில் ஆடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக வடமேற்கு செமிட்டிக் குழுவை சார்ந்த மொழிகளை பற்றியதாகும். இவற்றுக்கும் அரபு மொழிக்கும் மிடையான தொடர்பு பற்றி ஆய்வாளரிடையே கருத்தொற்றுமை கிடையாது. + + + + +ஆகத்து 12 + + + + + + + +காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் + +காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது திருக்கச்சிமேற்றளி - என்றழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன. + + + + + + +ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் + +ஓணகாந்தன்தளி - ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொ���ைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சிவபெருமானாரின் திருப்பாதம் உள்ளது + + + + + +வான்புலிகள் + +வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். + + +வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம். + +முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள். இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார். + +வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது. + +தொடக்கத்தில், வான்புலிகள் ஐப்பானிய காமிகாசெ போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது. + +விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் பெப்ரவரி 20, 2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இத்தாக்குதலில் வான் புலிகளின் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்தனர். ஆனாலும் இரண்டு வானூர்திகளும் சுட்டு வீழத்தப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவின் கூற்றை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வானோடியின் உடலும் கைப்பெற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. + +வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்." + +வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார். + +இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன. + +இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம். + +கவிஞர் புதுவை இரத்தினதுரை வான்புலிகளின் முதல்தாக்குதலை முன்வைத்து எழுதிய "முகிலைத் துளைத்த தமிழனும் இறக்கை முளைத்த கவிஞனும்" என்ற கவிதை பல தமிழர்களின் மனநிலையை பிரதிபலித்தது எனலாம். +இவை மட்டுமல்லாது இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தனது குறிப்பில் 'இறக்கை கட்டிய பயங்கரவாதம்' எனவும் குறிப்பிட்டுள்ளார். + + + + + + +அகாதமி விருது + +ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும். + +முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. +மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன. + +வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன. + +2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன. + + +இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம். + + + + + +காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் + +கச்சிநெறிக்கரைக்காடு - திருக்காலிமேடு திருக்காலீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்திரனும் புதனும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் + +குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். + +வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் + +மாகறல் - திருமாகறலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +உருசியத் தமிழியல் + +உருசியத் தமிழியல் ("Russian Tamil Studies") என்பது ரஷ்ய மொழி, ரஷ்யா, மற்றும் உருசியர்களுக்கும் தமிழ், மற்றும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் எனலாம். + +பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் 1950-1990 காலப்பகுதிகளில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பல உருசிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்திற்கு கல்வி பெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் ���ரிச்சியமும் தொடர்பும் உண்டு. + +"1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது." முகம்மது செரிபு வி. எஸ். வெங்கடேசன் கா. அப்பாத்துரை, கு. பரமசிவம், எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் உருசிய நூலகளை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டோரில் உட்படுவர். + +சோவியத் யூனியன் இருந்த போது, தமிழ் மொழிக்கென மாஸ்கோ வானொலி நிலையத்தில் ஒரு தனித்துறை இருந்தது. இதில் திரு. மணிவர்மன், திரு. சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றினார்கள். தற்போது இந்த வானொலி தனித்துறை இல்லை. + + + + + + + +திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில் + +வில்வநாதேசுவரர் கோயில் (Vilwanatheswarar temple) என்பது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. + +கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனை அபிசேகம் செய்ய தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை, கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். சிவபெருமானின் வானமான நந்தி தேவன் கஞ்சனை எட்டுப் பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்று கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சனை மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார். + +ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. + +அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + +திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில் + +மணிகண்டீசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இத்தலத்தின் மூலவர் மணிகண்டீஸ்வரர், தாயார் அஞ்சனாட்சி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சக்கர தீர்த்தமும் அமைந்துள்ளன. + +இத்தலம் தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் திருமால்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் ஹரிசக்கரபும், திருமாற்பேறு என்ற பெயர்களால் அறியப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் பதினொறாவது தலமாகும். + +ஜலந்திரன் எனும் அரக்கனை கொல்ல சிவபெருமான் சக்ராயுதம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழந்து போனது. அதனால் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெறுவதற்காக திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசை செய்துவந்தார். + +ஒரு நாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்று சிவபெருமானின் அருளால் மறைந்தது. தனது பூசையை நிறைவு செய்வதற்காக திருமால் தனது கண்களில் ஒன்றை தாமரையாக மாற்றி பூசித்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலிற்கு பார்வை வழங்கியதுடன், சக்ராயுதத்தினையும் அளித்தார். + + + + + + +தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் + +திருவூறல் - தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். +இது வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. +இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்) என்று இத்தலம் பெயர் பெற்றது. +தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு இட்ட சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார். + +இறைவனார், நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்���ு தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார். + +சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார்.மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே. + +தக்கன் தலையைக் கொய்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). +குசத்தலை என்றழைக்கப்படும் கல்லாற்றுக்கரையில் அமைந்த இத்தலத்தில் சம்வர்த்த முனிவர் வழிபட்டுள்ளார். நந்தியின் வாய் வழியே கங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது. + +ராஜகோபுரம் அமைக்கப்பட்டது 1543 ஆம் ஆண்டு. ராஜகோபுரம் அமைத்தவர் விஜயநகர மன்னர் வீரப்பிரதாப சதாசிவராயர். + +திருவூறல், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. + +அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் + + + + +எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் + +இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவும் வழிமறித்த பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை. அரம்பர் முதலானோர் வழிபட்ட இடம் எனப்படுகிறது. +மகாபிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற சிவபெருமான் தங்க அமைதியான இடம் என்று தேர்வு செய்த தலம் என்பதால் மன அமைதி தரும் தலமாக வழிபடப்படுகிறது. + +சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் சிறிது சாய்ந்தது. அப்போது அவரது தலையிலிருந்த கொன்றை மலர் பூமியில் விழுந்து சுயம்பு லிங்கமாயிற்று. அதுவே இத்தலம். தேவர்க���ால் வழிபடப்பட்டதால் தெய்வநாயகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. + +தேவலோகத்துப் பேரழகிகள் அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் அழகையும் பொலிவையும் இழந்து வருந்த, தேவகுரு நாட்டியக்கலைகளுக்கு அதிபதியான ஸ்ரீதெய்வநாயகேஸ்வரரை 48 நாட்கள் வழிபட இழந்த பொலிவை மீண்டும் பெறலாம் என்று கூற அவ்வாறே வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்றனர் தேவலோக அரம்பையர். ஆதலால் அரம்பேஸ்வரர் என்ற பெயரை இத்தலத்து இறைவன் பெற்றார். இத்தலத்திற்கும் அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர் என்றும் பெயர் வந்தது.தொண்டை நாட்டில் கோட்டூர் என்று பல பகுதிகள் இருப்பதால் வேறுபாட்டிற்காக இலம்பை என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. இலம்பை என்பதற்கு நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை என்பது பொருள். + +தட்சன் சாபத்திலிருந்து மீள சந்திரன் வழிபட்டு சிவபெருமான் சிரசில் பிறையாகும் பேறு பெற்ற இடம் என்பதால் சந்திரசேகரர் என்றும் இங்குள்ள சிவபெருமான் அழைக்கப்படுகிறார். + +மன இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும் பரிகார தலமாக உள்ளது. + +ஒரு காலத்தில் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்ற "ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர் வேத சிவாகம தேவார பாடசாலை" நிதி வசதி இல்லாததால் தற்போது செயல்படுவதில்லை. + +இத்திருக்கோயிலில் மூலவர் விமானம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மதில் அமைக்கும் பணி, விநாயகர், முருகர் சந்நதிகள் சீரமைக்கும் பணி போன்ற பல திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த சுமார் 33 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு 2008 ஆம் ஆண்டுகளிலேயிருந்து திருப்பணிகள் நடந்து வருகின்றன. + +சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலுள்ள மேவளூர் குப்பம் எனும் ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்து அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் இலம்பையங்கோட்டூர் திருத்தலம் அமைந்துள்ளது. + + + + + + +கூவம் திரிபுராந்தகர் கோயில் + +கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. + +திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. +திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது. + +அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + +திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் + +திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு. + +இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். +இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை + +சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது. + +இச்சிவாலயம் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. + + + + + +பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் + +திருவெண்பாக்கம் - ஊன்றிஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்த���ள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இறைவன் சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பழைய கோயில் திருவிளம்புதூரிலுள்ளது. +சிவபெருமான் கண்ணொளி தராது ஊன்றுகோல் தந்ததால் கோபமடைந்தார் சுந்தரர். தாம் பெற்ற ஊன்றுகோலைக் கோபத்துடன் இறைவனார் நோக்கி வீசியெறிந்தார். அது நந்தியெம்பெருமான் மீது பட்டு கொம்புடைந்ததால் இத்திருக்கோயில் நந்தி கொம்புடைந்து உள்ளார். + +தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன. + + + + + +திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் + +திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். +வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்��ு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது. + +இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர். + +பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது. + + + + + + +திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் + +திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் (சிவானந்தேஸ்வரர் கோயில்) திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிவாநந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. +இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட திருத்தலம். இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +சிவபெருமான் தன்னுடைய திருமணத்தினால் வடநிலம் உயர்ந்து, தென்நிலம் தாழ்வதை தவிர்க்க அகத்தியரை தென்நிலப்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினைக் காண இயலாமல் போவது குறித்து வருந்தியமையால், விரும்பும் இடங்களிலெல்லாம் திரு��ணக் கோலத்தில் காட்சி தருவதற்கு சிவபெருமான் வரம் தந்தார். + +திருக்கண்டலம் பகுதியில் அகத்தியருக்கு திருமணக் கோலத்திலும், முருகப்பெருமான் மற்றும் உமையம்மையுடன் சோமாஸ்கந்தராகவும் காட்சியளித்தார். + + +இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. + +அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + +வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் + +வடதிருமுல்லைவாயில் - மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன், வாணன் என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முரையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர். + +அவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். திருமுல்லைவாயில் வந்த போது பொழுது சாந்துவிடவே அன்று இரவை அங்கேயே கழிக்க எண்ணி தங்கிவிட்டான். நடுநிசி வேளையில் வடகிழக்குத் திசையிலிருந்து மணிச்சத்தம் கேட்டது அது அருகில் உள்ள சிவன் கோவிலின் அர்த்தசாம பூசையின் மணி ஓசையாக இருக்கலாம் என அரசன் எண்ணினான். அது குரும்பர்களின் அரணிலிருந்து வந்தது என அமைச்சர்கள் சொல்ல பொழுது விடிந்ததும் தொண்டைமான் படையுடன் குரும்பர்களை அடக்க படையை உடன் நடத்திச் சென்றான். + +தொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குரும்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு போர்செய்தனர். தொண்டைமானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரும்பர்கள் அரணுக்குள் ஒளிந்துகொண்டனர். குரும்பர்களின் தெய்வமான வைரவனின் வரத்தால் பெற்ற பூதத்தின் உதவியால் தொண்டைமானின் படைகளை விரட்டி அடித்தனர், இனிமேல் போர் செய்ய இயலாது என்று எண்ணிய தொண்டைமான் பொரை நிறுத்திவிட்டு பாசறைக்குத் திரும்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன, யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன, அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான், தரையில் விழுந்து புரண்டான், வியர்த்துப் போனான், கண்ணில் நீர் பெருகியது. தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தில் வைத்து அருத்துக்கொள்ளும் சமயம் இறைவன் தோன்றி "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக" எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று பின் அவர்களின் அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தான். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது. + +திருமுல்லைவாயில் மாசிலா மணீசுவர பெருமானின் திருமேனியைக் கண்டு பெருமானுக்கு திருக்கோவில் அமைத்து கருவறை, மகாமண்டபம், பட்டி மண்டபம், அலங்கார மண்டபம், கலியாண மண்டபம் முதலியவற்றை அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்ரவர்த்தி. இதனை சுந்தரமூர்த்தி நாயனார் +-சுந்தரர் வட திருமுல்லைவாயில் திருப்பதிகம் + +வட திருமுல்லைவாயில் பற்றி பெரியபுராணச் செய்யுள், + +அங்கு நாதர் செய்யருள் அதுவாக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே + +பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து + +திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய + +மாசிலாமணீசுவர பெருமானின் கருவறையைச் சுற்றிலும் 23 கல் வெட்டுகள் உள்ளது. + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் + +திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார். + +இத்தலத்து அம்பிகையையும் திருவலிதாயம் பாலாம்பிகையையும் திருவொற்றியூர் வடிவுடையம்பிகையையும் ஒரே நாளில் சென்று வழிபடுவோர் இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது. + +இத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி இத்தலத்து சிவபெருமானை வழிபட நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது. + +விநாயகர், திருமால், முருகன், பிரம்மதேவர், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் + +திருவேற்காடு மூர்க்க நாயனார் அவதாரத் தலம் + +திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய விபரங்கள் + + + + + +முதலாம் நரசிம்ம பல்லவன் + +புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரண���ாக விளங்கியவன் இவன். + +இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. +அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. +நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,' என்பன. + +மகேந்த்ரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்ய அரசனான புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினர். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார். + + + + +திருவான்மியூர் + +திருவான்மியூர் என்பது சென்னை நகரின் சுற்றுப்பகுதிகளில் ஒன்று ஆகும். இங்குள்ள மருந்தீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். திருவான்மியூர் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. + + + + + +இரண்டாம் நரசிம்ம பல்லவன் + +இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவர். இவர் பல்லவ நாட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளார். சாளுக்கியர்களுடைய தொல்லைகள் குறைந்திருந்த காரணத்தால் இவருடைய ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அமைதிக் காலமாக விளங்கியது எனலாம். இதனால் சமயம், இலக்கியம், கட்டிடக்கலை முதலிய துறைகளில் ஆக்கப்பணிகள் நடைபெற்றன. +இவர் ஒரு சைவன் ஆவார். இதனால் இவர் காலத்தில் சைவசமயம் முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பல கோயில்களையும் எழுப்பியுள்ளார். சமஸ்கிருத இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் இராசசிம்மன் பெரிதும் அக்கறை காட்டியதாகத் தெரிகின்றது. சமஸ்கிருதப் புலவர்களை இவர் ஆதரித்துவந்தார். + +மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே. |காஞ்சிபுரத்திலுள்ள|right|thumb|இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கோவில், எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இவர் திருப்பணியே ஆகும். + +இவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கியரினால் மீண்டும் தொல்லைகள் ஆரம்பித்தன. அவர்களுடன் ஏற்பட்ட போரில் தனது மூத்த மகனை இழந்தார். இதன் பின் சிறிது காலத்தில் இராஜசிம்மனும் இறந்தார். + + + + +வடமேற்கு செமிடிக் மொழிகள் + +வடமேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இக்குழுவில் அடங்கும் மொழிகள் சுமார் 8 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றன. பொதுவாக இக்குழு மூன்று துணைக்குழுக்களாகப் பிரித்து நோக்கப்படுகிறது. அவையாவன: உகரிதிக், கானானிய, அறமைக் என்பனவாகும், இவற்றுள் உகரிதிக் மொழி அழிவுற்ற மொழியாகும். செமிடிக் மொழியியலாளர்கள், அரபு மொழி வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் கொண்டுள்ள தொடர்புகளை கருத்தில் கொண்டு, பொதுவாக வடமேற்கு செமிடிக் மொழிகளை அரபு மொழியுடன் சேர்த்து மத்திய செமிடிக் மொழிகள் என்ற பெருங்குழுவை அமைப்பர். +அருகிப் போன மொழியான உகரிதிக் மொழியே முதலாவதாக இக்குழுவை சேர்ந்த மொழியாகும். உகரிதிக் மொழியின் "தாத்" () என்ற எழுத்தானது "ட்சேட்" () என்ற எழுத்துக்கு மாற்றம் பெற்றது. (இதே மாற்றம் அக்காத் மொழியுலும் ஏற்பட்டது) இதே எழுத்தானது அறமைக் மொழியில் "அயின்"() என மாற்றமடைந்தது. +கானானிய மொழிகளிக்கு நல்ல உதாரணமாக எபிரேய மொழி]]யை குறிப்பிடலாம். கானானிய மொழிகள் முன்பு, இன்றைய இசுரேல், பாலஸ்தீனம், யோர்தான், லெபனான், மற்றும் சீனாய் குடா பகுதிகளில் பேசப்பட்டது. "ā" இலிருந்து "ō" க்கான மெயெழுத்து மாற்றம் கானானிய மொழிகளை உகரிதிக் மொழியிலிருந்து பிரிக்கிறது. மேலும், நாவினால��� முன்பற்களை தொட்டவாறு உச்சரிக்கப்பட்ட மெய் எழுத்துக்களான (Interdental consonant) , மற்றும் என்பன மேல் பல்லுகும் கீழ் உதட்டுக்குமிடையே காற்றை ஓடவிட்டு உச்சரிக்கப்படும் மெய் எழுத்துக்களான () z, š மற்றும் ஆக மாற்றம் பெற்றது. இதன் தாக்கங்களை பின்வரும் சொற்களை ஒப்பிட்டு காணலாம்: + + + + +திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் + +திருக்கச்சூர் - கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இதுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே சண்டேஸ்வரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். அந்தணர் வேடத்தில் வந்து இறைவன் சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இத்தலத்தில் இரண்டு சிவபெருமான் கோயில்கள் அமைந்துள்ளன. + +ஊர் நடுவிலுள்ளது கச்சபேசம் திருக்கோயில். இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர் அமிர்த தியாகேசர் என்றழைக்கப்படுகிறார்.தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்தர மலையை தாங்கும் சக்தியைப் பெற திருமால் இவ்வாலயத்தில் சிவபெருமானை வழிபட்டார் (கச்சபம் என்றால் ஆமை) என்பதால் இவ்வூர் கச்சூர் எனும் பெயர் பெற்றது. + +இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஔஷத கிரி எனும் பெயருண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இத்தல இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். +இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது. + + + + + +ஆகத்து 13 + + + + + + + +திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் + +திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்றதாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்பு இட��ச்சுரம் என்று அழைக்கப்பட்டது. + +கௌதம முனிவரும் சனற்குமாரரும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் + +திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + + +இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். +மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. + +தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.) + +அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. + +ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. + +மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. + +மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. + +திருக���கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. +திருமலையைச் சுற்றி பன்னிரு தீர்த்தங்கள் உள்ளன. அவை: 1. இந்திர தீர்த்தம், 2. சங்கு தீர்த்தம் (மார்க்கண்டேய தீர்த்தம்), 3. சம்பு தீர்த்தம், 4. நந்தி தீர்த்தம், 5. ருத்ர தீர்த்தம், 6. வஷிஷ்ட தீர்த்தம், 7. அகத்திய தீர்த்தம், 8. மெய்ஞ்ஞான தீர்த்தம், 9. கௌசிக தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பக்ஷி தீர்த்தம். + +இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விடியற்காலையில் நீராடி திருமலையை வலம் வருவோருக்கு மனநோய்கள் அகலும் என்பது இங்குள்ள மக்களின் தீவிர நம்பிக்கை. + +ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவில் பல ஊர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து வடம் பிடித்து இழுக்கும் போது தேர் அசைந்து வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். + +பத்து நாட்கள் திருவிழாவிற்கு பிறகு, பதினோராம் நாள் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் பட்டாசு, வாணவேடிக்கை என சித்திரை திருவிழாவை நிறைவு செய்து வைப்பர். + +திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) ஒரு திங்கள் கிழமையில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறும். அங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும். சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். + +புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் ��ாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். + +பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது. + + + + + +கானானிய மொழிகள் + +கானானிய மொழிகள் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் உப பிரிவாகும். இது பண்டைய கானான் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழிகளாகும். எபிரேய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் முதலாம் ஆயிரவாண்டளவில் அருகிப் போய்விட்டன. மொழியியளாலர் இம்மொழிகள் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு பரவியதாகவும் அங்கேயும் அவை நிலைக்காமல் அருகியது என கருதுகின்றனர். + + + + + +திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் + +திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. + +இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை; + +வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள் ) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை. + + + + + +ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில் + +ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும். + +சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். பிரதோச வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. இத்தலத்தில் வாமேதவ முனிவர் என்பார் வழிபட்டுப் பிரதோச நாளில் பேறுபெற்றார் என்பது தொன்வரலாறு. இங்கு இறைவன் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின்கீழ் சுயம்புலிங்க வடிவில் சிறிய மூர்த்தியாக இருப்பது சிறப்பாகும். + +இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில் அமைந்துள்ளது. + +அஞ்சல் முகவரி: + +இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்: + +மிக்க காலனை வீட்டி மெய்கடக் காமனை விழித்துப் +புக்கவூர் இடு பிச்சை உண்பது பொன்திகழ் கொன்றை +தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந்து ஆமை +அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே. + + + + + + + +இரும்பை மாகாளேசுவரர் கோயில் + +மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். + +திருஅரசிலியிலிந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றில் ஒன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது. + +மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம். + +இத் தலம் குறித்து சம்பந்தர் பாடிய பாடல்: + + +பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் +கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி +ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள் +மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே. -சம்பந்தர் + + + + + + + +எஸ்கிமோ + +எஸ்கிமோக்கள் ("Eskimo") எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் "இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள்" என்று பொருள். இவர்களில் இனுவிட்டு ("Inuit") எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யுபிக் எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் "உனாங்கா" எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள். + +எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர். + +எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள். + + + + + +பலாலி + +பலாலி ("Palaly") யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் திருச்சிக்கு விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. இங்கு 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்ரேசன் லிபரேசன் (Operation Liberation) என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி, குரும்பசிட்டி தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு பலாலி விமானத்தளம் விரிவாக்கப்பட்டது. மிகைப் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், இன்றுவரை இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களினால் மீளக் குடியேற இயலாமல் உள்ளது. + +பலாலி கிராமம், வடக்கு திசையில் பாக்குநீரினையும் அதைத்தொடர்ந்து பரந்த கடல் பரப்பான வங்காளவிரிகுடாவும், கிழக்கு திசையில் வளலாய், பத்தைமேனி, அச்சுவேலியும், தென் திசை ஒட்டகபுலம், வயாவிளான். குரும்பசிட்டியும் மேற்கு திசையில் கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் பாதுகாப்பாக அமைய அவற்றின் மத்தியில் கடல் வளமும் கொண்ட தமிழர்களின் பொருளாதார மையமாகும். வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் தென்னந்தோப்புகளும் பனையடைப்புகளும் விவசாய நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் மீன்பிடி வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம். + +ஆரம்பத்தில் பலாலி மத்தியில் சித்தி விநாயகர் ஆலயமும் அதனைத்தொடர்ந்து பலாலி கிழக்கில் கன்னார் வயல் கண்ணகி அம்மன் ஆலையமும் அமையப்பெற்று அங்குள்ள மக்களின் பிரதிநிதியால் ஒருவரை பூசகராக நியமித்து சைவ வழிபாட்டு முறைதமிழ் பாரம்பரிய முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது. + +அப்போது பூசகராக பணிவிடை செய்தவர் குருக்கள் என்ற கவுரவப்பெயருடன் தனது கடமையை செய்ததினால் தொடர்ந்தும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இப்பதவியை ஏற்று பல தலைமுறையாக வழிபாட்டு முறை தொடர்ந்து. அப்போதும் குருக்கள் முறையும் பண்டைய தமிழ் வழிபாட்டு நடைமுறையும் தொடர்ந்தும் இருந்துள்ளது. பிற்காலத்தில் மக்கள் ஆன்மீகத்தில் இருந்து சைவசமய ஆகமங்களை பின்பற்ற தொடங்கினர் அதன் பின்னரே அந்தணர்கள்மூலம் சைவசமய விதி முறைகளுக்கு அமைய வழிபாட்டுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வட மொழியான சமஸ்கிருதம் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு கண்ணகிக்கு துணையாக இராயராயேஸ்வரி அம்மன் வழிபாட்டை கொண்டுவந்தனர். + +புதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயரால் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து பதினேழாம் ஆண்டு பிற்பகுதிவரை கத்தோலிக்க மதம் வேர் ஊன்றி வளர்ச்சி பெற்றது. அந்தக் காலகட்டபகுதியில் பலாலி வடபகுதி மக்கள் பலர் சைவத்தில் இருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறி தமக்கென ஓர் தேவாலயத்தையும் அமைத்தனர். + +தற்போது வடக்கில் ஆரோக்கியமாதா தேவாலயம், அந்தோனியார் தேவாலயம், அம்மன் கோயில்லும், மேற்கே சென்.செபஸ்ரியார் தேவாலயம், முலைவைப் பிள்ளையார் கோயிலும். தேற்கில் சிவன் கோயிலும், வைரவர் கோயிலும், ஒட்டகப்புலம் சென் மேரி தேவாலயமும், கிழக்கில் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், பெரியதம்பிரான், வைரவர், முதலியம், பத்திரகாளி, அண்ணமார் என பல வழிபாட்டு தலங்களின் மத்தியில் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் புகழ் பெற்ற பலாலி சித்தி விநாயகர் ஆலையமும் அமைந்து அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்கள். + +பலாலியின் வடக்கே வங்காள விரிகுடா பரந்துகிடப்பதனால் இந்நிலப்பரப்பு பலமுறை ஆழிப்பேரலையினால் தாக்கப்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தி அங்கிரு��்த வடபகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை முற்றா அழித்து அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக வாழவைத்தது. அப்போதுதான் அவர்கள் உணர்ந்தவர்கள் தாழ்நிலமான கடல் ஓரப்பகுதியில் விவசாயம் செய்து நாம் உயிர் வாழமுடியாது என்றும் தமக்கு உயிர் வாழ ஓர் மாற்று முறையை கண்டுபிடித்தார்கள். அதுதா தரையில் விதை விதைத்து அறுவடை செய்தவர்கள் கடலில் விதை விதக்காமலே அறுவடை செய்ய உயிரைப்பணயம் வைக்க துணிந்தார்கள். அன்று தரையில் சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்தவர்கள் இன்று பரந்த கடல்பரப்பையும் தமது சொந்தமாக்கியுள்ளனர். + +பலாலியின் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்திருப்பதால் அவை அழிப்பேரலையிலிருந்து தப்பி இருந்தன. இங்கிருந்தவர்கள் தொடர்ந்தும் விவசயத்தை பெற்கொண்டிருந்தனர். வடபகுதி மக்களும் ஏனைய பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் தங்களது அண்றாட வாழ்க்கைமுறையை சுமூகமாக கொண்டு செல்லும் நோக்குடன் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தினர். இம்முறையானது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவை நடைமுறையில் இருந்தது. + +இங்கு வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வுமுறைக்கு ஏப பல மாற்றங்களை தமது சமூகத்தின் மத்தியில் கொண்டுவந்தனர், இலங்கையின் வடபகுதி மக்களின் தொழில் ரீதியான சமுதாய கட்டமைப்பை பலாலி மக்களுக்கு பின்பற்றினர்... + +இலங்கையின் வடபகுதிக்கு வரும் கள்ளக்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் 1962 இல் இலங்கை அரசு ஒரு தடுப்பு முகாமை அமைக்க முன்வந்தது. அப்போது இருந்த நெல்லுசங்கத்தின் ஒரு பகுதியில் கள்ள குடியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. இது நாளடைவில் நெல்லு சங்கத்தை வெளியேற்றி கள்ளக்குடியேற தடுப்பு தலைமையகம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்விடம் பலாலி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு அதன் அருகில் இருந்த பலாலி சித்தி விநாயகர் வித்தியாசாலையை அங்கிருந்து வெளியேற்றி இன்று உள்ள இராணுவ தலைமையகம் அமைக்கப்பட்டது. இது இப்போது ஓர் உலக புகழ் பெற்ற கேந்திர மையமாக விளங்குகின்றது + +பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை மிகவும் முக்கியம் வாய்ந்த ஓர் கல்வி போதனாசாலையாகும். இது பலாலி விமானநிலையத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல விதமான கல்வி துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு இலங்கை முழுவதுக்குமான தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன்முலம் பலாலி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.  + +பலாலி மக்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினர். மிளகாய், வெங்காயம், தக்காளி, புகையிலை, கோவா, திராட்சை என பல வகையான மரக்கறி வகையையும் தானிய பெருட்களையும் உற்பத்தி செய்து தன்ணிறைவு கண்டனர். உள்ஊரிலும், யாழ்பாண  குடா நாட்டிலும் சந்தைப்படுதி கொண்டிருந்த பலாலி விவசாயிகள் நாட்டின் தென்பகுதிக்கு படையெடுத்தனர். நேராகவே கொழும்பு புறக்கோட்டையில் உள்ள நாலாம் குறுக்கு தெருவில் அமைந்த வியாபார நிலையங்களில் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்தி வெற்றியும் கண்டனர்.   + + + + + +குரும்பசிட்டி + +குரும்பசிட்டி ("Kurumbasiddy") இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பலாலிக்குத் தெற்காகவும், யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ 10 மைல் தொலைவில் வடக்கேயும் அமைந்துள்ள ஒரு கிராமம். ஏறத்தாழ 1.4 சதுரமைல் நிலப்பரப்புக் கொண்ட செம்பாட்டு மண் கிராமம். வேளாண்மையே இங்கு முக்கிய தொழிலாகும். 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக இக்கிராமத்தில் உள்ள அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இப்பிரதேசமானது இலங்கை அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மீளக் குடியமர முடியாமலுள்ளது. + +குரும்பசிட்டியின் வட எல்லையில் பலாலி விமான நிலையமும் பலாலி இராணுவத்தளமும் அமைந்துள்ளன. கிழக்கே வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. ஈழகேசரி பொன்னையா வீதி இங்குள்ள முக்கிய தெரு. இது பலாலி வீதியையும் மல்லாகம் - கட்டுவன் வீதியையும் இணைக்கிறது. + + + + + + + + +பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில் + +பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமத���னுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர் வந்தது. + +இக்கோயிலின் மூலவர் இருக்கும் கர்ப்ப கிரகம் யானையின் பின்புறம் (வடமொழில் கஜபிருஷடம்) போன்ற வடிவில் அமைந்துள்ளது. +திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது. +இத்தலத்து மூலவரை முன் வாயில் மூலம் மட்டுமல்லாமல் மற்ற மூன்று புறத்திலிருந்தும் பக்தர்கள் வணங்குவதற்காக பலகணிகள் உள்ளன. + +கலிக்கம்ப நாயனார் அவதாரத் தலம் + + + + + +திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில் + +திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் - நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் செய்து காட்டியதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில் + +திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்கள் ஒன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. + + + + + +திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் + +திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ந���ுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +இது விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. + +அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்). + +இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன. + + + + + +திருநெல்வெண்ணெய் + +திருநெல்வெண்ணெய் - இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் , அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் + +திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +தலம் + +இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி. + +அந்தாகசூரன் எனும் அசூரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடைபெறும் பொழுது அசூரனின் குருதியிலிருந்து அசூரர்கள் தோற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம். + +அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + +இடையாறு மருந்தீசர் கோயில் + +இடையாறு மருந்தீசர் கோயில் சுந்தரர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு (T. எடையார்) உள்ளது. இவ்வூர் திருஇடையாறு, திருவிடையாறு என புராண காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் இடையாறு செல்வ வளம் மிக்க ஊராகத் திகழ்ந்தது. + +இத்தலத்தின் மூலவர் மருந்தீசர் ஆவார். இவர் கிருபாபுரீஸ்வரர் என்றும், இடையாற்றீசர் என்றும் அறியப்படுகிறார். அதனால் இக்கோயில் இடையாறு கிருபாபுரீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படுகிறது. கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். தாயார் ஞானாம்பிகை என்றும் சிற்றிடைநாயகி என்றும் வழங்கப்படுகிறார். சுகர் முனிவர், அகத்திய முனிவர் வழிபட்ட தலமாகும். + +மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோயிலில் கொடிமரம் இல்லை. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயிலின் வாயிலை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து கோபுரம் உள்ளது. அடுத்து மற்றொரு பலிபீடமும், நந்தியும் உள்ளன. மண்டபத்தில் நாகம், விநாயகர், மறைஞானசம்பந்தர், நால்வர், பைரவர் ஆகியோர் உள்ளனர். அருகில் நடராசர் சபை உள்ளது. கருவறைக்கு முன்பாக இடப்புறம் சூரியன், மற்றொரு பலி பீடம், நந்தியைக் காணலாம். திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி, மருத மரம், வில்வ மரம், நவக்கிரக சன்னதி, அகத்தீசுவரர் சன்னதி, விநாயகர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, பிராமி, இந்திராணி, சாமுண்டி, சரபேஸ்வரன் ஆகியோர் உள்ளனர். அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வகையில் உள்ளது. திருச்சுற்றில் இறைவி சன்னதியின் முகப்பு வாயில் பூட்டிய நிலையில் அதற்கு முன் நந்தி, பலிபீடத்துடன் உள்ளது. + +முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் + +சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் + +பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி + +எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் + +ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் + +பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் + +எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம் + +விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய + +படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி + +இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம் + +பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் + +கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை + +இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த + +பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் + +மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த + +இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +திங்களூர் திருவா திரையான் பட்டினமூர் + +நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர் + +தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல + +எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் + +தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் + +எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி + +இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் + +பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ + +நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த + +ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர் + +தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர் + +கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல் + +ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. + +ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் + +தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே + +றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் + +கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே. + + + + + +திருத்துறையூர் + +துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. இது இக்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது.இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். + +திருத்துறையூர் - திருத்தளூர் சிஷ்ட ���ுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.நாரதர்,வசிட்டர்,அகத்தியர், சூரியன் முதலானோர் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +திருத்துறையூர் சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இவரது ஜீவசமாதியும் இங்கு அமைந்துள்ளது. .மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள் புரிந்த அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயிலும் திருத்துறையூரில் அமைந்துள்ளது. + + + + + +திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் + +திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது.விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் வழி) பேருந்து சாலையில் கோலியனூர், வளவனூரை அடுத்து புதுவை மாநில எல்லையில் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. + +எண் (அட்ட) பைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர் முண்டகன் என்னும் அசுரனைக் கொன்று பழிதீர வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +ஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். + +வடுகூர் திருத்தலத்தின் முருகப்பெருமான் அருணகிரினாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். +தனதன தனனா தனதன தனனா +தனதன தனனா ... தனதான + + +அரியய னறியா தவரெரி புரமூ + +அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ + +வரைமக ளொருகூ றுடையவர் மதனா + +மனமகிழ் குமரா எனவுன திருதாள் + +அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் + +அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல் + +வரிசையொ டொருமா தினைதரு வனமே + +மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் + + +அரியயன் அறியாதவர் ... திருமாலும் பிரமனும் அடி முடி +காணமுடியாதவர், + +எரி புரமூணதுபுக நகை ஏவியநாதர் ... நெருப்பு திரிபுரத்திலும் +புகுமாறு சிரித்தே எரித்த தலைவர், + +அ���ிர்சடை மிசையோர் வனிதையர் பதி ... விளங்கும் சடை மீது +கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் +இருப்பவர், + +சீறழலையும் மழுநேர்பிடிநாதர் ... சீறிவந்த நெருப்பையும் மழு +ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர், + +வரைமக ளொருகூ றுடையவர் ... மலைமகளாம் பார்வதியை ஒரு +பாகத்தில் உடையவர், + +மதனாகமும்விழ விழியேவியநாதர் ... மன்மதனின் உடல் சாம்பலாக +விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர், + +மனமகிழ் குமரா ... (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே, + +என உனது இருதாள் மலரடி ... என்று கூறி உன் இரண்டு தாளாகிய +மலர்ப் பாதங்களை + +தொழுமாறு அருள்வாயே ... வணங்கும்படி அருள் தருவாயாக. + +அருவரை யிருகூ றிட ... அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் +செய்து, + +ஒருமயில்மேல் அவனியை வலமாய் வருவோனே ... ஒப்பற்ற +மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே, + +அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் ... தேவர்களின் பகைவராம் பெரும் +அசுரர்களின் + +சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே ... தலைகள் மீது +வேலை வேகமாய் எறிந்தவனே, + +வரிசையொடு ஒருமா தினைதரு வனமே மருவி ... வரிசையாக +ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று, + +யொர் குறமாது அணைவேடா ... ஓர் குறப்பெண் வள்ளியை +அணைந்த வேடனே, + +மலைகளில் மகிழ்வாய் ... குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே, + +மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே. ... மனம் +பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் +பெருமாளே + + + + + +திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில் + +திருமாணிகுழி - திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவகீந்திபுரம் வழியாக பானூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவகீந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. + +திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தல��் என்பது ஐதிகம். + + + + + +திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் + +திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் புகையிரத நிலையத்தில் இருந்து 0.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது. + +இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும். + + +இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. + + + + + + +முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் + +முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +இக்கோயில் தென் பெண்ணை (மலட்டார்) கரையில் திருவெண்ணெய் நல்லூர் அருகில் 3 கி.மீ கிழக்கில் திருமுண்டீச்சரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடலூர்- திருக்கோவிலூர் திருவண்ணாமலை SH 68 நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சென்னை திருச்சிராப்பள்ளி NH 45 தேசிய நெடுஞ்சாலையில் மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள மூலவர் சிவலோகநாதசாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். + +இக்கோயிலின் தல மரம் வன்னி ஆகும். ராஜ கோபுரம���, பலி பீடம், கொடி மரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கோபுரத்தினைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறத்தில் பைரவர், சூரியன் மூன்று லிங்கங்கள், இரண்டு நந்திகள், ஒரு பாணம் ஆகியவை காணப்படுகின்றன. முன் மண்டபத்தில் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் இடப்புறம் நடராஜர் உள்ளார். கருவறைக்கு நுழையும் முன்புறம் திண்டி, முண்டி உள்ளனர். திருச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நவக்கிரகம், நாகேந்திரன், துர்க்கை, யோக குரு, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, வைஷ்ணவி, பிராமி, சாமுண்டி ஆகியோரும், கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதியும், இடப்புறம் அம்மன் சன்னதியும் உள்ளன. + + + + + +பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் + +பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம். + +இத்தலத்தின் மூலவர் பனங்காட்டீஸ்வரர், தாயார் சத்யாம்பிகை. கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார். + +கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது. + +சில ஆண்டு முன்பு, 45C தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட குறிக்கப்பட்டு, பின்னர் ஊர் மக்கள், வெளியூர் பக்தர்கள��, சிவனடியார்கள், பத்திரிக்கைகள் ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்தும், ஊர் மக்கள் சுப்பிரமணிய சுவாமியை அணுகி உதவி வேண்டியதையடுத்தும் நெடுஞ்சாலைத்துறை வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. மக்கள் எதிர்ப்பையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் மாற்று வழியை பரிந்துரைத்ததையடுத்தும் கோயில் பகுதியை இடிக்காமல் மதில் சுவரை ஒட்டி சாலையிட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. + +சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. +சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம் உள்ளது. + + + + + + +கொழும்புப் பல்கலைக்கழகம் + +கொழும்புப் பல்கலைக்கழகம் ("University of Colombo", பொதுவழக்கில், கொழும்பு கெம்பஸ் / UOC) கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பழைமைவாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். இலங்கையின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் மாத்திரமன்றி, நவீன உயர் கல்வியை இலங்கையில் வழங்கும் முன்னணிக் கல்வியகமும் இதுவே ஆகும். இயற்கை, சமூகவியல், கணிதம், கணினி விஞ்ஞானம், சட்டம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் முதலான துறைகளில் முன்னிலை வகிக்கும் இப்பல்கலை, ஆசியாவின் முதற் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. + +இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்ததாக, 1921இல் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1923இலிருந்து மாணவர்க்குப் பட்டங்களை அளித்து வந்தது. எனினும், இலங்கை மருத்துவப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1870ஆம் ஆண்டை, இப்பல்கலைக்கழகத்தின் தோற்றமாகக் கொள்ளுதலே பொருத்தம். + +இப்பல்கலைக்கழகத்திற்கான நிதி, இலங்கை அரசிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலம் பெற்றுக்கொள்கின்றது. எனவே, இதற்கான, உபவேந்தர் நியமிப்பை, இலங்கை சனாதிபதி மூலம், மானியங்கள் ஆணைக்குழுவே செய்கின்றது. "புத்தி: ஸர்வத ப்ரஜதே!" ("அறிவு எங்கும் விளங்கிடுக") என்ற குறிக்கோள் கொண்ட இப்பல்கலையில், .சுமார் பதினோராயிரம் மாணவர்களுடன் இது ஏழு பீடங்களையும் 41 துறைகளையும், 8 வேறு நிறுவகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. + +கொழும்புப் பல்கலைக்கழகமானது 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொழும்பு நகரத்தின் இதயம் என அறியப்படும் கருவாத் தோட்டம் பகுதியில், "தும்முல்லை சந்தி" எனும் பேருந்து வழித்தடத்தில், திம்பிரிகஸ்யாய எனும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் "கல்லூரி இல்லம்" (கொலிஜ் ஹவுஸ்) என அழைக்கப்படுகின்றது. + +கல்லூரி இல்லம், முதுமாணிப் பட்டப் படிப்பு பீடம் மற்றும் உயிர் இரசாயன, மூலக்கூற்று உயிரியல், மற்றும் உயிர்த் தொழிநுட்ப நிறுவகம் (IBMBB) ஆகிய வளாகங்கள், குமாரதுங்க முனிதாச மாவத்தையில் (முன்னாள் தேஸ்டன் வீதி) அமைந்துள்ளன. இவற்றின் எதிர்ப்புறம், விஞ்ஞான பீடம், கணினிக் கல்லூரி [UCSC] ஆகிய இரு பீடங்களும், புதிய கலை அரங்கம் (NAT), பல்கலைக்கழக ஆடுகளம், ஜோர்ஜ் மன்னன் மண்டபம் என்பனவும் அமைந்துள்ளன. விஞ்ஞான பீடத்தின் மறுபுறம், இராஜகீய மாவத்தையில், கலைப்பீடம், சட்டபீடம், கல்விப்பீடம், பல்கலை நூலகம், பல்கலையின் உள்ளக விளையாட்டரங்கம் என்பன அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சற்று விலகி, மருதானையில் அமைந்துள்ள கொழும்பு பொது வைத்தியசாலையின் அருகே, இலங்கையின் மிகப் பழைமையான மருத்துவ பீடம் அமைந்திருக்கின்றது. இப்பல்கலைக்குரிய சுதேச வைத்திய நிறுவகம் நாவலை பகுதியிலும், சிறிபாளி வளாகம், ஹொரணை பகுதியிலூம், விவசாயத் தொழிநுட்பமும் உள்ளூர் விஞ்ஞானமும், அம்பாந்தோட்டையிலும் அமைந்துள்ளன. + +கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாறானது, இலங்கை மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்துடன் யூன் 1870 இல் ஆரம்பிக்கின்றது தெற்காசியாவின் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசாலையான இது, 1880இல், கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன், 1889 இல் இக்கல்லூரி மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையால், பிரித்தானியாவில் பயிற்சி பெறுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார்கள். + +1906 இல் சேர்.பொன்னம்பலம் ராமநாதன் அவர்களின் தலைமையில், உருவான இலங்கைப் பல்கலைக்கழக ஒன்றியத்தின் வற்புறுத்தலின் பேரில், 1913இல், ஆங்கில அரசு, ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியை நிறுவத் தீர்மானித்தது. இன்று "கல்லூரி இல்லம்" என்றறியப்படும் "ரெஜினா வளவு" எனும் தனியார் குடியிருப்பு, அக்க்கல்லூரியின் நிர்வாகத்துக்காக ஆங்கில அரசால் வாங்கப்பட்டதுடன், 1921 யனவரியில், வேத்தியர் கல்லூரிக்குச் சொந்தமாகவி���ுந்த கட்டிடத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கலைத்துறை, விஞ்ஞானத்துறை எனும் கற்கை நெறிகளுடன், இலண்டன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்துக்கமைய, இங்கு வெளிவாரிக் கற்கைநெறிகள் நிகழ்த்தப்பட்டன. + +1942 யூலை முதலாம் திகதி, இரண்டாம் உலகப்போர், யப்பானிய ஆக்கிரமிப்பு முதலான சிக்கல்களுக்கு மத்தியில், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியும், இலங்கை மருத்துவக் கல்லூரியும் இணைக்கப்பட்டு, இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கலை, விஞ்ஞானத் துறைகள் இரண்டும், இரு பீடங்களாகத் தரமுயர்த்தப்பட்டதுடன், க்ரூடன் இல்லத்தில், கீழைத்தேயக் கற்கைப் பீடமும், இராணி வீதியிலிருந்த வில்லா வெனெசியாவில் பல்கலை நூலகமும் புதிதாக உருவாக்கப்பட்டன. + +1949இல், பேராதனையில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, சட்டம், விவசாயம், விலங்கு மருத்துவம் முதலான துறைகள் அங்கு இடமாற்றப்பட்டதுடன், 1965இல், கலை, கீ்ழைத்தேயக் கற்கை ஆகிய பீடங்களும், அருணாச்சலம், ஜெயதிலக்க ஆகிய மாணவர் விடுதி மண்டபங்களும் நூலகமும் பேராதனைக்கு மாற்றப்பட்டன.எனினும், மீண்டும் சட்டத்துறை கொழும்புக்கு 1965இல் மாற்றப்பட்டது. 1950இல் உருவாக்கப்பட்ட பொறியியற் பீடம், 1965இல் பேராதனைக்கு மாற்றப்பட்டது. இலங்கைப்பல்கலைக்கழகத்தின் இரு வளாகங்களாக, கொழும்பும் பேராதனையும் இயங்கினவெனினும், 1966இல் இவை பிரிக்கப்பட்டு, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம் என்று தனித்தனியே இயங்கலாயின. + +1967 ஒக்டோபர் 1 முதல், அரசாணைக்கேற்ப தனித்தியங்க ஆரம்பித்த கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், 300 ஆளணியினருடன், கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பன கற்கும் 5000 மாணவர்களுடன் திகழ்ந்தது. 1972இல் இலங்கையில் , பேராதனை இலங்கைப்பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப்பல்கலைக்கழகம், வித்யோதயா பல்கலைக்கழகம், வித்யாலங்காரப் பல்கலைக்கழகம் என்ற நான்கு வளாகங்கள் அமைந்திருந்ததுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்துடன், கட்டுபெத்தை தொழிநுட்பக் கல்லூரியும் இணைக்கப்பட்டிருந்தது. இவற்றின் தலைமையகமாக, செனேற் இல்லம் என்ற பெயரில் கல்லூரி இல்லமே விளங்கியது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால், 1978இல் இவை மீண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டு, கொழும்புப் பல்கலைக்கழகம் எஞ்சி��து. + +1978இல் இருந்த மருத்துவம், கலை, விஞ்ஞானம், கல்வி, சட்டம் ஆகிய பீடங்களுடன், 1980களில் முகாமைத்துவ நிதிப்பீடமும், 1987இல் பட்டதாரிக் கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டன. 1996 வர்த்தமானிக்கமைய சிறிபாளி வளாகம் தோற்றுவிக்கப்பட்டதுடன், 1978இல் மருத்துவ முதுமாணிக் கல்வியகமும், சுதேச மருத்துவ நிறுவகமும் இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டன. 1987இல் அமைக்கப்ப்பட்ட கணினித் தொழிநுட்பக் கல்வியகம், 12002இல் கணினிப் பாடசாலையாக உருவானது. + +பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிருவகிக்கப்படும் கொழும்புப் பல்கலைக்கழகம், முற்றிலும் இலவசமான இளமாணிப் பட்டப்படிப்பை வழங்குவதுடன், பழைய இலங்கைப் பல்கலைக்கழகத்தை ஒத்த இரு நிருவாகக் கட்டமைப்புக்களைக கொண்டிருக்கிறது. + +துணைவேந்தரால் அநேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வேந்தரே பட்டமளிப்பில் தலைமை தாங்குகின்றார். இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் வேந்தர் பதவியை, தற்போது, அதிவண. ஒஸ்வால்ட் கொமிஸ் அவர்கள் அலங்கரிக்கிறார். + +இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் துணைவேந்தரே, பல்கலையின் முகாமையாளராக விளங்குகிறார். கடந்த 2015 ஆகஸ்ட் 6ஆம் திகதி அன்று, புதிய துணைவேந்தராக, முதுமுறை பேரா. லக்ஷ்மன் திசாநாயக்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். + +கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 10,000 கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் வெளி வாரிப் பட்டப் படிப்பைத் தொடர்கின்றார்கள்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 க்கும் மேற்பட்ட கலாசார,கல்வி மற்றும் மதம் சார்ந்த மாணவர் சங்கங்களும் நடாத்தப்படுகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்கே சொந்ததமான மாணவர் சமூகங்களைக் கொண்டு விளங்குகின்றன. +41 கல்வித்துறைகளைக் கொண்ட ஏழு பீடங்களும் ஆறு கல்வியகங்களும், ஐந்து இணைந்த நிறுவகங்களும் இப்பல்கலையில் உண்டு.இவற்றில் கணினிக் கல்லூரியே மிக அண்மையில் இணைக்கப்பட்ட பீடம் ஆகும். + +பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்க, அதன் இரு கிளைகள், விஞ்ஞான மற்றும் மருத்துவ பீடங்களில் இயங்கி வருகின்றன. மருத்துவ பீடத்தின் நூலகமானது 1870இல் நிறுவப்பட்டது. 4 இலட்சத்துக்கும் மேலான நூல்களுடன் இலங்கையின் பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. அரிய தொகுப்பு, இலங்கைத் தொகுப்பு எனும் தலைப்புக்களின் கீழ் ஓலைச்சுவடிகள் உட்பட, பல அ��ிய நூல்கள், பிரதான நூலக்கத்தில் சேமிக்கப்படுகின்றன. + +வாடகை வீடுகளைக் கொண்ட பல்கலையின் ஏழு விடுதிகள் மூலம் 2973 மாணவர்கள் வருடாந்தம் பயன் பெறுகின்றனர். +பல்கலைக்கழகத்தில் 43 மாணவர் ஒன்றியங்களும், உள்ளக, வெளியக விளையாட்டு சங்கங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பீடத்திலும் தனித்தனியே காணப்படும் மாணவர் ஒன்றியங்களும், தமிழ் மாணவர்களுக்குரிய, தமிழ்ச் சங்கம், இந்து மன்றம் என்பனவும் இதில் அடங்கும். + + + + + +கம்பகா + +கம்பகா ("Gampaha", , "கம்பஹ"); என்பது இலங்கை, மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றான கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிற்கு வடக்கே 40 கிலேமீற்றர் தூரத்தில், கொழும்பு-கண்டி பெருந்தெருவிலிருந்து மூன்று கிலோமீற்றர் உள்ளாக அமைந்த ஒரு பெருநகராகும். முற்று முழுதும் சிங்கள மக்களே வாழும் அந்நகரில் ஏனைய இனத்தவர்களைக் காண்பது மிக அரிது. கம்பகா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கொழும்பு மாவட்டத்திலிருந்து களனி ஆற்றால் பிரிக்கப்பட்ட மாவட்டம் கம்பகா மாவட்டம் ஆகும். "கம்" அல்லது "கம" என்ற சிங்களச் சொல்லின் பொருள் கிராமம் என்பதாகும். "பஹ" என்பது சிங்களத்தில் ஐந்து எனப் பொருள்படும். எனவே "கம்பஹா" என்பதன் பொருள் "ஐந்து கிராமங்கள்" என்பதாகும். + + + + +திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் + +திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். + +பசுக்களுக்கு தாயகமான தலம்.லிங்கத்தில் பசுவின் குளம்பு வடு உள்ளது. +அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் . +இதனால் வண்ணி மரம் தல விருட்சம் ஆகியது .கொன்றை மரமும் உள்ளது. +இராமரும் பூஜித்த வரலாறு உண்டு . +நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது திருஆமாத்தூர். +சென்னைய��ல் இருந்து வரும் போது (சென்னை-திருச்சி) நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடையும் முன் விழுப்புரம்-செஞ்சி சாலை சந்திப்புக்கு அடுத்து வலப்பக்கம் வரும் சிறய +சாலையில் 2.2 கி.மீ செல்ல கோயிலை அடையலாம்.அல்லது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஆமாத்தூர் பிரிவு சாலையில் 2.5 கி.மீ செல்லவேண்டும். + + + + + +அண்ணாமலையார் கோயில் + +திருஅண்ணாமலையார் கோயில் என்றும் "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்" என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். + +பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்பு பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும், முடியையும் கண்டறிபவரே நம்மில் பெரியவரென உரைத்தனர். அதன் அடியை காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப, அன்னவடிவமெடுத்து முடியை காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புபிழம்பாக நின்ற சிவனின் முடியை கண்டுவிட்டேன் எனக்கூறும்படி கேட்டார் பிரம்மர். தன்னால் அடியை கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையை தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை என பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ருத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனி பயன்படாயெனவும் உரைத்தார். தாழம்பூ தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காக குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார். திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாக தோன்றினர். தன்னை நோக்கி தவமியற்றிய பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம். + +இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. + +பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. + +முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். + + +திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது. + +பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார். + +படைக்���ும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் தங்களில் யார் பெரியவரென பூசலெழ நடுவில் ஔிப்பிழம்பு போன்ற அந்த ஔிப்பிழம்பின் அடியையும், முடியையும் யார் கண்டு முதலில்வருகின்றனறோ அவரே நம்மில் பெரியவர் எனக்கூறினர். இதனால் திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்துச்சென்றும் அடியை கண்டறிய இயலவில்லை. அன்னவடிவமெடுத்து முடியை காணபுறப்பட்ட பிரம்மர் தாழம்பூ கீழே வருவதை கண்டதனிடம் இந்த நெருப்புபிழம்பு யாதெனவினவ அதற்கு இது சிவனாரெனவும், நான் அவரின் சடையிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் நெருப்புபிழம்பான இந்த சிவனின் முடியை நான் கண்டேனென திருமாலிடம்பொய் சொல்லும்படிகேட்க அதன்படியே தாழம்பூவும் கூறியது. தன்னால் கண்டறிய இயலவில்லையென பிரம்மரிடம் கூறிய திருமாலிடம் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக்கூறி எள்ளிநகையாட இதனால் ருத்திரமுற்ற சிவன் பிரம்மரிடம் பத்மகற்பத்தில் நீ திருமாலின் உந்திகமலத்தில் பிறப்பாயெனவும், உனக்கு புவியில் தனிஆலயம் அமையாது எனவும், பொய்சாட்சிகூறிய தாழம்பூவிடம் நீ இனி எனது வழிபாட்டில் பயன்படமாட்டாயென உரைத்தார். தன் தவறினை உணர்ந்து மன்னிப்புகேட்க தாழம்பூவிடம் நான் எனது பக்தைக்காக புவியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாயெனவும் உரைத்தார். பிரம்மர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியை கண்டறிய இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால் கருணாமூர்த்தியான சிவன் உடனே நாம்மூவரும் ஒருங்கிணைந்து சிவலிங்கமாகலாமென உரைத்தார். அதன்படியே அடிபாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும்,மேல்பாகம் சிவனாக மாறி வேதங்கள்புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும். + +திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதைய��க அமைந்துள்ளது. + +மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. + +பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. + +எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. + +இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. + +எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. + +மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்...) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. + +24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. + +அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன. + +இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன. + +சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. + + +இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும். + +குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். + +அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. + +ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. + +விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன. + +வள்ளாள ராஜாவின் மகனாக சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியை சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர். + +கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை ���ீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. + +சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். + +பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். + +பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர். + +மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். + +மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. + +இந்த மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர். + +திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும். + +த��ருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம். + +அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இங்குள்ள இறைவன் முருகன் மீது பாடல்களைப் பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள். + +இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. + + +தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் - 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும். + + +இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார். + +அண்ணாமலை சுவாமிகள்,அப்பைய தீட்சிதர்,அம்மணி அம்மாள்,அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள்,ஆதி சிவ பிரகாச சாமிகள்,இசக்கி சாமியார்,இடைக்காட்டுச் சித்தர்,இரமண மகரிசி,இறை சுவாமிகள்,ஈசான்ய ஞானதேசிகர்,கண்ணாட�� சாமியார்,காவ்யகண்ட கணபதி சாத்திரி,குகை நமச்சிவாயர்,குரு நமச்சிவாயர்,குருசாமி பண்டாரம்,சடைச் சாமிகள்,சடைச்சி அம்மாள்,சற்குரு சுவாமிகள்,சேசாத்திரி சாமிகள்,சைவ எல்லாப்ப நாவலர்,சோணாசலத் தேவர்,ஞான தேசிகர்,தட்சிணாமூர்த்தி சாமிகள்,தம்பிரான் சுவாமிகள்,தெய்வசிகாமணி சித்தர்,பத்ராச்சல சுவாமி,பழனி சுவாமிகள்,பாணி பத்தர்,மங்கையர்கரசியார்,ராதாபாய் அம்மை,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,விசிறி சாமியார்,விருபாட்சி முனிவர்,வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. + +தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள். + +இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், போளூர் வழியாகவும் செல்லலாம். + +இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், கிருட்டிணகிரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. + +இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே உலங்குவானூர்தி இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வந்துச் செல்ல முடியும். + +சேவார்த்திகளின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி உள்ளன. + +சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் என்ற எழுத்தாளர்கள் திருவண்ணாமலை கிரிவலம் எனும் நூலை எழுதியுள்ளார்கள். திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது. தங்கத் தாமர��� பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. + + + + + +திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் + +பாசுபதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும். + +இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும். + +இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். +இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது. + +சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள். + + + + + +திருக்கழிப்பாலை + +திருக்கழிப்பாலை எனும் ஊர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ளது. இந்த ஊர் புராண காலத்தில் திருக்கழிப்பாலை, காரைமேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் தேவாரம் பாடல் பெற்ற திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் என்ற சிவாலயம் அமைந்துள்ளது. + + + + +தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை + + +இவ்வட்டவணை ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையைத் தழுவி தொகுக்கப்பட்டது. + + + + + +சப்பானியத் தமிழியல் + +சப்பானியத் தமிழியல் ("Japanese Tamil Studies") என்பது சப்பானிய மொழி, சப்பான், சப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். + +இலங்கைக்கும் சப்பானுக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. அதன் காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் சப்பானுக்கு மேற் கல்விக்கு செல்கின்றார்கள். அவர்கள் சப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்று சப்பானிய தமிழியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். + + + + + + + +கேதீஸ் லோகநாதன் + +கேதீஸ் லோகநாதன் ("Kethesh Loganathan" 1952 – ஆகத்து 12, 2006) இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் இலங்கை மோதல் மற்றும் அமைதி பகுப்பாய்வுப் பிரிவின் (SCOPP) பிரதிச் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் 2006 ஆகத்து 12 இல் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது படுகொலைக்கு இவ்வியக்கம் உரிமை கோரவில்லை. + +யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த லோகநாதன் கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை செல்லையா லோகநாதன் இலங்கை வங்கி பொது முகாமையாளராகப் பணியாற்றியவர். கேதீசு லோகநாதன் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் சென்னை சென்னை லயோலா கல்லூரியிலும் கல்வி கற்றார். அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் நெதர்லாந்து டென் ஹாக்கில் சமூகக் கற்கைகளுக்கான கல்விக்கழகத்திலும் உயர்கல்வி கற்று அபிவிருத்திக் கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். + +பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய லோகநாதன் யாழ்ப்பாணம் மார்கா கல்விக்கழகத்தில் சமூக அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1983 இல் ஈழப் போர் தொடங்கியதை அடுத்து, இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற போராளிக் குழுவில் இணைந்தார். 1994 இல் இக்குழுவில் இருந்து விலகினார். இவர் ஊடகவியலாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். இவர் பாக்கியசோதி சரவணமுத்துவுடன் இணைந்து மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற பெயரில் மதியுரையகம் ஒன்றை ஆரம்பித்து 2006 வரை அதன் இயக்குநர் சபையில் இருந்து பணியாற்றினார். + +மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். 2006 மார்ச் மாதத்தில் இலங்கை அரசின் அமைதிக்கான செயலகத்தின் பிரதிச் செயலாளராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார். + +லோகநாதன் 2006 ஆகத்து 12 அன்று அவரது வீட்டுக்கு வெளியே புலனாய்வுத்துறை அதிகாரி என அடையாளம் காட்டிய ஒருவரால் சுடப்பட்ட நிலையில், களுபோவிலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம், யாழ்ப��பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு போன்ற மனித உரிமை அமைப்புகள் விடுதலைப் புலிகளை இக்கொலைக்கு குற்றம் சாட்டின. + + + + + +தெற்கு செமிடிக் மொழிகள் + +தெற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் இடைநிலை வகைப்படுத்தலாகும். இது மேற்கு செமிடிக் மொழிகள் பெருங்குழுவின் உபபிரிவாக, செமிடிக் மொழியியளலர்களான மற்றும் போன்றோர்கள் நோக்குகின்றனர். ஆனால் இது மேற்கு செமிடிக் மொழிகளிகளின் உபபிரிவன்று என்ற வாதமும் உண்டு. யோசேப்பு கிறீன்பேக் போன்றோர் தெற்கு செமிடிக் மொழிகளை கிழக்கு செமிடிக் மொழிகள், மேற்கு செமிடிக் மொழிகளுடன் சேர்த்து செம்டிக் மொழிகளின் மூன்றாவது பிரிவாக கொள்வர். + +தெற்கு செமிடிக் மொழிகள் இரண்டு பிரதான உப பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது அவையாவன: அராபிய வலைக்குடாவின் தென்மூலையில் காணப்பட்ட, தெற்கு அராபிய மொழிகள் மற்றும் ஆபிரிக்காவின் கொம்பு, செங்கடல்,போன்ற பகுதிகளை அண்டி காணப்பட்ட எத்தியோப்பிய செமிடிக் மொழிகள் என்பவாகும். எத்தியோபிய செமிடிக் மொழிகள் இன்று எத்தியோப்ப்பியா மற்றும் எரித்திரியா நாடுகளில் பேசப்படும் பிரதான மொழிகளாகும். தெற்கு அராபிய மொழிகள் அரபு மொழியின் தாக்கம் காரணமக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அருகிவிட்டன. + +இம்மொழிகள் பேசப்பட்ட பிரதேசங்கள் குறித்து பல சர்சைகள் நிலவுகின்றது. பொதுவாக எத்தியோப்பியா, எரித்திரியா, மற்றும் அரபு வலைகுடாவின் தென்மேற்கு மூலைப்பகுதிகள் இம்மொழி பேசியவர்களின் பிரதேசமாக கருத்தப்படுகிறது. + + + + + +ஒலியன்களின் அகரவரிசை + +ஒலியன்களின் அகரவரிசை என்பது அனைத்துலக மற்றும் ஐக்கியநாடுகளின் வானொலித் தொலைத் தொடர்பாடலில் ஐயந்திரிபு அறத் தெளிவாக விடயங்களைப் பரிமாறுவதற்கு எழுத்தொலிகளைக் குறிக்கப் பயன்படும் ஒலியன் வரிசை ஆகும். + + + + +வறுமைக்கு எதிரான அமைப்பு + +வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Against Hunger) என்பது மாந்த நலன்சார்ந்த சர்வதேச அமைப்பாகும். பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பானது வறுமை இல்லாத உலகம் எனும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. மேலும�� இந்த அமைப்பானது ஊட்டச் சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உதவி புரிவதும், தூய்மையான நீரை வழங்க வழி செய்யவும்,பசிக்கு நாட்டக்கூடிய தீர்வினை வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. + +2014 இல் வறுமை ஒழிப்பிற்கு எதிராக நாற்பத்தி ஒன்பது நாடுகளில் உலகம் முழுவதிலும் உள்ள ஆறாயிரம் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 13.6 மில்லியன் உதவி தேவைப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர். + +இவ்வமைப்பானது 1979 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிரஞ்சு மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மற்றும் எழுத்தாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட்டு காஸ்ட்லர் இந்த அமைப்பின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். + +இந்த அமைப்பு பாக்கித்தானில் இருந்த ஆப்கானித்தான் ஏதிலிகளுக்கு உதவிசெய்தது. பின் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட உகாண்டா மக்களுக்கும் , தாய்லாந்து நாட்டில் இருந்த கம்போடியா ஏதிலிகளுக்கும் உதவி செய்தனர். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மேலும் துணை அமைப்புக்களை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள், போன்ற நாடுகளில் ஏற்படுத்தினர். வறுமை ஒழிப்பு அறிவியல் குழுவானது தீவிர ஊட்டச்சத்துக் குறைவிற்கு நோய்தீர்க்கும் பால் சூத்திரமான எஃப்100 (F100) என்பதனைக் கண்டறிந்தது. இதனைப் பயன்படுத்தியதன் விளைவாக ஐந்து வயதிற்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் இறக்கும் இறப்பு விகிதமானது இருபத்தி ஐந்து சவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைந்தது. + +இந்த சர்வதேச அமைப்பிற்கு தற்போது ஐந்து நாடுகளில் தலைமையிடங்கள் உள்ளன. பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐக்கிய இராச்சியம். இந்த அமைப்பானது ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, மற்றும் பரிந்துரை செய்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் பணியினை மேற்கொள்கின்றன. + +உணவு நிறுவனங்கள் மற்றும் பான நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பிற்கு எதிரான உணவு விடுதி உணவை நேசிப்போம், உணவை வழங்குவோம் எனும் பெயரில் பரப்புரை இயக்கம் நடத்தப்படுகிறது. + +இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல், பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றது. இலங்கையில் அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற சண்டையின் போது மீட்கும் பணியில் இருந்த வறுமைக்கு எதிரான அமைப்பைச்சார்ந்த பதினாறு உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டனர். + +2017 ஆம் ஆண்டு வரையில் 51 நாடுகளில் வறுமைக்கு எதிரான அமைப்பானது செயல்பட்டு வருகிறது. + +வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மங்கோலியா,நேபாளம், பாக்கித்தான், பிலிப்பீன்சு + +துருக்கி, உக்ரைன், தெற்கு காக்கேசியா + +எயிட்டி + +1995 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்கு எதிரான அமைப்பானது உலகம் முழுவதும் அதன் கட்டமைப்பினை ஏற்படுத்தியது. + +இந்த சர்வதேச அமைப்பிற்கு தற்போது ஐந்து நாடுகளில் தலைமையிடங்கள் உள்ளன. பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐக்கிய இராச்சியம். மேலுமிதன் பயிற்சி மையங்கள் நைரோபியிலும் ஐந்து இடப்பெயர்வு மேலாண்மை தளங்கள் லியோன், பாரிஸ், பார்செலோனா, துபாய், பனாமா ஆகிய இடங்களில் உள்ளது. + +பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் உள்ள தலைமையிடங்கள் வறுமை எதிப்பு மையத்தின் செயல்படும் தலைமையிடங்கள் அதாவது களத்தில் நேரடியாகப் பங்குபெறுவது ஆகும். + +ஐக்கிய இராச்சியம் வறுமை எதிப்பு மையத்தின் ஆராய்ச்சி, மேற்பார்வை, மடிப்பீட்டு தலைமையிடம் எனப்படுகிறது + +கனடா வறுமை எதிப்பு மையத்தின் நிதி திரட்டும் தலைமையிடமாக விளங்குகிறது. பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிதியினைப் பெறுகிறது. + + + + + +கிழக்கு ஆபிரிக்கா + +கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும். ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது. + + +புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது. + +கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை. முக்கியமாக யானைகள், நீர் யானைகள், சிங்கங்கள், ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்து பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை. + +புவியியல் அமைப்பானது மிக கவர்ச்சியானதாகும். இங்கு ஆபிரிக்காவின் உயரமான மலைகள் இரண்டான கிளிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது. + +இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும். இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இன்று கென்யா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்துறை முக்கிய வருவாயை கொடுக்கிறது. + +இப்பிரதேசமானது, அண்மைக் காலம் வரை பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. ஆட்சி கைப்பற்றல்கள், இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. காலனித்துவ ஆட்சிக்குப்பின் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்: + + +கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து. + + + + +ஆகத்து 14 + + + + + + + +ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில் + +திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில் + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும். + +சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் + +திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது சிவத்தலமாகும். + +இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வ��ிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. + +இந்திரன், மயேந்திரன், சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +தினமலர்க் கோயில்கள் + + + + +திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் + +திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7வது தலம் ஆகும். + +கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம். + +சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை. + + + + + +அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் + +திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இது நாகப்பட்டி���ம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 8 வது தேவாரத்தலம் ஆகும். + +"கலி" (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. + +இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன. + + + + + +சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் + +திருச்சாய்க்காடு - சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். + +இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக," என அருள்புரிந்தார். + +இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தின் எல்லை வரை அழைத்துவந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்), அத்துடன் இயற்பகை நாயனாரின் அவதாரத்தலம் இதுவாகும். + + + + + +பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் + +திருப்பல்லவனீச்சுரம் - காவரிப்பூம்பட்டினம் - பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். +காலவ முனிவர் வழிபட்ட தலம்.பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது. இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ தொலைவில் கடல் உள்ளது. + +பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த தலம். + + + + + +திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் + +திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற வெண்ணாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் வெண்ணாற்று கரையில் அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும். + +ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது. + +திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. + + +காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் ஐந்து அவை:- +என்பனவாம். இத்தலம் ஐந்தில் ஒன்றான முல்லைவனமாகும். + +கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன. + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே" + +"மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்" + +"கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்" + +"அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே." + +"போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்" + +"தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்" + +"கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்" + +"ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்" + +"பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்" + +"ஒருகா லுமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங்" + +"கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.." + +"பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற" + +"கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி" + +"ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று" + +"காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.". + +இக்கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள் 29 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது. + + + + +சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் + +சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். + +தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்��ு தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர். + +இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் பிரமபுரீசன். இறைவி திருநிலை நாயகி. + +மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது. + + + + + + +திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் கோயில் + +திருக்கோலக்கா - சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும். + +சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறார். இவற்றுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளனர். மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது. + + + + + +குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் + +குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும். + +சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 12 கி.மி. தெற்கே அமைந்துள்ளது. பாகசாலை எனுமிடத்திலிருந்து இடப்புறமாக மூன்று கி.மீ தொலைவ��லுள்ளது. + +இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை. + +திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம். + + + + + +கீழையூர் கடைமுடிநாதர் கோயில் + +கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். + +இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. + +செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. + +பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் + +திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் பாடியுள்ளனர்.மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. சிவபெருமானாரின் லிங்க வடிவின் உச்சியில் குழியுள்ளது. + +அகத்தியர், பரசுராமர் மற்றும் திருமகள் வழிபட்ட திருத்தலம். இக்கோயில் தருமையாதீனக் கோயில். +இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது. +மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ தொலைவிலுள்ளது + + + + + +திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் + +திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மைய��ல் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும். + +வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும். + + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் " + +" அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே." + +"மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்" + +"ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே." +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் " + +"துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத் " + +"திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை" + +"நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.". +சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம் + +"அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக " + +"வந்த காலன்தன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் " + +"எந்தை நீஎனை நமன்றமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும் " + +"சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.". + + + + + +திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் + +சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும். + +இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்தின் இறைவன் சோமநாதர், இறைவி வேயுறுதோளியம்மை. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. தலவிருட்டமாக மகிழம் மரமும், தீர்த்தமாக நவ தீர்த்தங்களும் உள்ளன. + +முனையடுவார் நாயனார் அவதாரத்தலமிது. + +நுழைவ��யிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆலாலசுந்தரர், மாணிக்கவாசகர், சூரியன், சிவலோக கணபதி, சந்திரன், கால பைரவர் உள்ளனர். ஆண்ட கணபதி, சிவகுருமூர்த்தி, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி, சின்யமாயனந்த கணபதி, முருகன், சிவலோக நாதர், கைலாசநாதர், காசிவிசுவநாதர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். + +30 சூன் 1947, 4 சூலை 1985, 5 ஏப்ரல் 2007 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. + +அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + +பொன்னூர் ஆபத்சகாயேசுவரர் கோயில் + +திருஅன்னியூர் - பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது. இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 22ஆவது சிவத்தலமாகும். + +இத்தலத்திலுள்ள இறைவன் ஆபத்சகாயேசுரர், இறைவி பெரிய நாயகியம்மை. + +நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாகவும், அம்மன் சன்னதிக்கு முன்பாகவும் தனித்தனியாக பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் புனுகீஸ்வரர், விநாயகர், முருகன், பெரியநாயகி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து நவக்கிரக சன்னதி உள்ளது. கோயிலின் முன்பு குளம் காணப்படுகிறது. + +இக்கோயில் பற்றிய பதிகத்தில் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த 11 திருவிருக்குக்குறள் பாடல்கள் உள்ளன. +இக்காலத்தில் இது பொன்னூர் என வழங்கப்படுகிறது. + + + + + +திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் + +திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ஆகும். + +இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். + +நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வரசித்திவிநாயகர் உள்ளார். கொடிமரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஈசானமூர்த்தி, பரிமளசுகந்தநாயகி, ஆடல்வல்லான், கல்யாணசுந்தரர் கல்யாணசுந்தரி, வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ராமர் சீதை லட்சுமணர் அனுமார், கஜலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், விநாயகர், நாவுக்கரசர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் முன்புறம் குளம் உள்ளது. + +சிவனின் திருமண வேள்வி நடைபெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் + +எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும். + +சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. +நடைமுறையில் "மேலக் கோயில்" என்றே வழங்கப்படுகின்றது. + +நுழைவாயில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. கோயில் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. உள்ளே செல்லும்போது அடுத்தடுத்து ஒரே நேர்கோட்டில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாலசரஸ்வதி சன்னதிகள் அமைந்துள்ளன. உள்ளே கோயிலின் வலப்புறம் மலர்குழல்நாயகி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி கோஷ்டத்தில் ஜெயதுர்க்கை, குருபகவான் எனப்படுகின்ற தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறை திருச்சுற்றில் சொர்ண பைரவர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. அதை அடுத்து இரு பானங்களும், ஒரு லிங்கத்திருமேனியும் காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் நடராஜர் சன்னதி உள்ளது. அருகே ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். + +ஐராவதம் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. + +இக்கோயில் 20 ஆகஸ்டு 1962, 22 ஆகஸ்டு 2004 மற்றும் 3 மார்ச் 2016 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. + + + + + +திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் + +திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. + +தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும். + +இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. + + +அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் -தினமலர் கோயில்கள் தளம் + + + + +கொருக்கை வீரட்டேசுவரர் கோயில் + +திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும். + +இத்தலத்து இறைவன் வீரட்டே���்வரர், இறைவி ஞானாம்பிகை. + +கோயிலுக்கு முன்பு குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தியைக் காணலாம். வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் வலப்புறம் சுக்கிரவார அம்மனைக் காணலாம். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அம்மன் சன்னதியை அடுத்து தட்சிணாமூர்த்தி சன்னதி, வாகனங்கள், நடராஜர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து திருச்சுற்றில் குறுங்கை விநாயகர் சன்னதி உள்ளது. அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளனர். அதற்கடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சோகஹரேஸ்வரர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. அடுத்து காணப்படும் உற்சவமூர்த்திகள் அறை உள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், பிரம்மா, அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி ஆகியோர் உள்ளனர். + +திருமால், பிரம்ம தேவர், லட்சுமி முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் + +தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். + +இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. +இக்கோயிலுள்ள இறைவன் குற்றபொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி. இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது. + +இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில் + +திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள���ளது. + +அநுமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இக்கோயிலிலுள்ள இறைவன் குந்தளேஸ்வரர், இறைவி குந்தலாம்பிகை. + + + + + +இந்து சமயப் பிரிவுகள் + +பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு. இவை அனைத்தும் வடமொழி மரபு வழியான பிரிவுகள். தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. தமிழ் மரபில், இந்தியப் பழங்குடிகள் மரபில் உள்ள இறைக்கொள்கைகள் ஆய்வாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரவலாக அறியப்படாமல் உள்ளன.. + + +இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்: + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +மோவாபிய மொழி + +மோவாபிய மொழி அல்லது மோவாப் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். இது தற்போதைய யோர்தான் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் (அன்றைய மோவாப்) கிமு 1வது ஆயிரவாண்டின் முதல் பகுதியில் பேசப்பட்ட மொழியாகும். மோவாபிய மொழி பற்றிய ஆய்வுகள் மோவப் கல்வெட்டு மற்றும் எல்-கர்க் எழுத்துக்கள் என்பவற்றை கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இவை இம்மொழியானது விவிலிய எபிரேய மொழியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த்தை காட்டுகிறது. சில சிறிய வேறுபாடுகளை மட்டுமே ஆய்வாளகள் சுட்டிக் காட்டுகின்றனர். + + + + +ஆகத்து 15 + + + + + + + +மோவாப் + +மோவாப் (מוֹאָב, எபிரேய மொழி) என்பது வரலாற்றில், யோர்டன் நாட்டில் சாக் கடலின் கிழக்கு கரையில் காணப்படும் மலைச்சார்ந்த பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட பெயராகும். முன்பு இப்பிரதேசத்தில் மாவோபிய இராச்சியம் அமைந்திருந்த்தது. இவர்கள் தமக்கு மேற்கில் வசித்த இசுரவேலருடன் அடிக்கடி போர் செய்தனர். இவர்களின் வரலாற்று உண்மை, தொல்பொருள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக மோவாப் கல்வெட்டில், மோவாபியர், இசுரவேல் இராச்சியத்தின் ஒம்ரி அரசனின் மகனை போரில் வெற்றிக் கொண்டது எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரான தீபொன் என்பது இன்றைய யோர்தானிய நகரான தீபனுக்கு அருகில் காணப்படுகிறது. + +பெயரின் தோற்றம் பற்றிய தெளிவான கருத்துக்கள் இல்லை. விவிலியத்தின் ஆதியாகமத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. இங்கு மோவாபியரின் ஆரம்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி "தந்தயின் வித்து" என்பதன் மறுவலாகும். வேறு கருத்துப்படி, மோவாப் என்பது "விரும்பத் தக்க பிரதேசம்" என பொருள்படும். பிரிட்ஸ் ஓமேல் இன் கருத்துப்படி மோவாப் என்பது "இமோ-அப்" = அவன் தாயே அவனது தகப்பன் என்பதன் மறுவலாகும். + +மோவாப் மத்திய தரைக்கடலுக்கு மேல் 3000 அடி உயரத்தில் அமைன்ந்துள்ள மேட்டு நிலத்தில் காணப்பட்டது. இது சாக்கடலுக்கு மேல் 4300 அடி உயரமானதாகும். இது வடக்கிலிருந்து தெற்காக சீராக உயர்ந்து செல்கிறது. மோவாப், மேற்கில் சாக் கடல் மற்றும் யோர்தான் நதியாலும், கிழக்கில் அம்மோன் மற்றும் அரபிய பாலைவனத்தாலும், தெற்கே எதோமாலும் எல்லைப்படுத்தப்பட்டது. வடக்கு எல்லை காலத்துக்கு காலம் வேறுப்பட்டு காணப்பட்டது. ஆனாலும் சாக்கடலின் வடமுனைக்கு சில மைல்கள் வடக்கே காணப்பட்டது என பொதுவாக கூறலாம். விவிலியத்தின் பல இடங்களில் மோவாபின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளது, இவை ஊர் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகின்றன சரியான எல்லை குறிப்பிடப்படவில்லை. வடக்கே பல ஆழமான பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு மோசே மரித்த இடமான நேபோ மலையும் காணப்படுகிறது. இங்கு சூழவுள்ள பிதேசங்களுடன் ஒப்பிடும் போது கூடுதலான மழை வீழ்ச்சி கிடைக்கிறது. வெப்பமான கோடை காணப்பட்டபோதும், மாரியில் பனி விழும் அளவுக்கு குளிரான காலநிலை நிலவும். + +மோவாப் இராச்சியத்தை மூன்று புயியல் பிரிவுகளாக பிரித்து நோக்க முடியும். தெற்கு பகுதி அல்லது "மோவாபின் வெளிகள்" மலை சார்ந்த பிரதேசமான "மோவபின் நிலங்கள்" மற்றும் கடல் மட்டத்துகு கீழான யோர்தான பள்ளத்தாக்கு என்பனவாகும். + +யோர்தானிய மேட்டு நிலங்களில் முதலில் குடியேரிய மோவாபியர் மேய்பர்களாக இருந்திருக்கலாம். அமர்னா கடிதங்களில் "அப்பிரு" என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களில் சிலராகவும் இருந்திருக்கலாம். எகிப்திய பார்வோன் ரமிசி II ஆல் லக்சோரில் கட்டப்பட்ட பெரிய சிலைகளும் அவற்றில் இரண்டாவது சிலையில் அடிவாரத்தில் "முவாப்" (மோவப் எகிப்திய மொழியில்) அவ்ரால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறமையானது,இஸ்ரவேலர்களில் எழுச்சிக்கு முன்னரே மோவாப் காணப்பட்டதை உறுதி படுத்துகிறது. +இஸ்ரவேலருக்கும் மோவாபியருக்கும் இடையான முறன்பாடுகள் காணப்பட்டது இதனை விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மோவாபியரின் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட தாகாத உறவின் மூலம் விளங்களலாம். இதன் படி, மோவாப் லோத்துக்கு அவரது மூத்தமகள் மூலம் பிறந்த மகனாகும். மோவாப் என்ற பதத்தை "தந்தை மூலம்" என விவிலியம் கூறுகின்றது. இருப்பினும் இவ்விரு மக்கள் கூட்டத்தாரிடையே பல கலப்புகள் இருந்தன. விவிலியத்தில் தாவீது அரசனின் வம்சம், மோவாபிய பெண்ணான ரூத் வழி வருவதாக கூறுகின்றது. + +ஆதியாகமம் 19:30-38 இன் படி, மோவாபியரின் ஆரம்ப நபரான மோவாப் அபிரகாமின் சகோதரனான லோத்துக்கு அவரது மூத்த மகள் மூலம் பிறந்தவனாகும். இவ்வாறே அவரது இளைய மகளுக்கு பிறந்த பென்னமி என்பவர் அம்மோனியரின் ஆரம்ப நபராகும். எனவே இவ்விரு இனமக்களும் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர். + +மோவாபியர்கள் ஆரம்பத்தில் சாக்கடலின் கிழக்கு கரையோரமான வளமிக்க மேட்டு நிலத்தில் குடியேறினர், பிறகு தமது குடியிருப்புகளை வடக்கில் கிலாத் மலை வரை விரிவாக்க்கினார்கள். வடக்கில் குடியேறும் பொருட்டாக அங்கிருந்த பூர்வீக குடிகளான எமிம் மக்களை வெளியேற்றினார்கள், அனால் சில காலத்துக்குப் பின், மோவாபியர்கள் சீயோன் மன்னனால் வழிநடத்தப்பட்ட ஆமோரியர்களால் தெற்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். இதனால் மோவாபியர் தெற்கு பிறதேசத்துக்கு மட்டுப் படுத்தப்பட்டனர். + +எகிப்திலிருந்து விடுதலையாகிய இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் பிரவேசிக்கும் போது அவர்கள் மோவாப் நாட்டினூடாக செல்லாமல், சியோன் இராச்சியத்தை வெற்றிக்கொண்டு அதனூடாக சென்றார்கள். கானான் வெற்றிக் கொள்ளப்பட்டப் பின்பு, மோவாபியருக்கும் இஸ்ரவேலருக்குமான தொடர்புகள் பண்முகப் பட்டதாக இருந்தது. சமாதானமும் போரும் ம��றிமாறி +வந்தன. இஸ்ரவேலின் 12 கோத்திடங்களில் ஒன்றான பெஞ்சமின் கோத்திரத்தோடு ஆக குறைந்த்து ஒரு பாரிய முறுகளை கொண்டிருந்தனர். பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த கேராவின் மகனான ஏகூத் எக்லோன் என்ற மோவாபிய அரசனை கொலை செய்து பின்னர் மோவாபியருக்கு எதிராக போர் செய்து அவர்களில் பலரை கொலை செய்தான். +ரூத்தின் கதையானது இவ்விரு மக்களிடயே நட்பான சூழல் காணப்பட்டதை காட்டுகிறது. ரூத்தின் வம்சத்தில் பின்னர் தாவீது அரசன் பிறப்பதனால் தாவீது மோவாபிய இரத்தை தன்னுள் கொண்டிருந்தார் என கூறமுடியும். தாவீது சவுல் அரசனால் கொலை செய்ய தேடப்பட்டப் போது தனது பெற்றேரை கவனித்துக் கொள்ளூம் பொறுப்பை ஒரு மோவாபிய அரசனிடன் கொடுத்தார். ஆனால் நட்பு அத்துடன் முடிவடைகிறது, அடுத்த முறை மோவாபியரை பற்றி விவிலியத்தில் குறிப்பிடும் போது தாவீது மோவாபிய பிரதேசத்துக்குள் யுத்ததுக் போகிறார். பபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து எருசலேமுக்கு வந்த இஸ்ரவேலரிடையே பாகாத் மோவாப் என்பருடைய சந்த்தியினரும் காணப்பட்டார்கள் இப்பெயர் "மோவாபின் ஆளுனர்" என பொருள் படும், எனவே பபிலோனிய அடிமைத்தந்த்துக்கு முன்னர் மோவாப் இஸ்ரவேலின் ஒரொ பிரதேச அரசாக ஆளுனர் மூலம் ஆட்சி செய்யப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும். + +மோவாபின் தலைந்கரம் கிர்-அசேத் என்பது இன்றைய கெராக் நகரமாகும். + +ரெகொபெயாம் ஆசியின் போது இஸ்ரவேல் இராச்சியம் இரண்டாக பிரிந்த்தபோது, மோவாப் வடக்கு இராச்சியத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்ந்து இஸ்ரவேல் இராச்சியத்தின் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. அனால் ஆகாப் என்ற இஸ்ரவேலின் அரசன் மரித்த பின்பு மோவாப் கப்பம் கட்டுடத்தல் நிறுத்தி யூதா இராச்சியம் மீது படையெடுத்தது. + +ஆகாப் அரசனின் மரணத்துகுப் பிறகு, மேசா என்பவரின் தலைமையில் மோவாபியர், யெரொபெயாம் அரனுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள். இதன் போது யெரொபயாம் யூதா இராச்சியத்தின் அரசனையும் ஏதோம் இராச்சியத்தின் அரசனையும் சேர்த்துக் கொண்டு மோவாபியருடன் யுத்தத்துக்கு தயாராக சிஸ் என்ற இடத்தில் காத்திருந்த்தார்கள். அப்போது விவிலியத்தின் படி, எலிசா என்ற தீர்க்கதரிசியின் கட்டளைப்படி அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே பல வாய்காள்களை வெட்டினார்கள். இரவில் அற்ப��தமாக அவை நீரால் நிரம்பின. காலை செங்கதிர் அதன் மீது பட்டுத்தெறித்தபோது அதை இரத்தம் என் மோவாபியர் நினைத்தனர். மேலும் கூட்டு சேர்ந்து வந்தவர்கள் தங்கலுக்குள் யுத்தம் செய்து மடிந்து விட்டார்கல் என முடிவு செய்து யுத்ததுக்கு ஆயத்த மற்றவராஉ முன்னோக்கி நகர்ந்தனர். பின்பு கூட்டுப் படைகளின் திடிர்தாக்குதல்களில் சிக்கி தோல்வியை கண்டனர். ஆனால் மேசாவின் கல்வெட்டு இப்போரில் மோவாபியர் இஸ்ரவேலை வெற்றிகொண்டு இஸ்ரவேலர் மோவாபிடமிருந்து ஆக்கிரமித்த சகல பிரதேசங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றது. + +சிஸ் யுத்தமானது மோவாபியர் பற்றிய முக்கியமான விவிய குறிப்புகளில் கடைசியாகும். அதன் பின்னர் சில இடங்களில் மோவாப் பற்றி கூறப்பட்டுள்ளத்து. ஆனால் இவை மோவாப்பை பற்றிய செறிவான தகவல்களை கூறவில்லை. +பாரசீக இராசியதின் காலத்தில் மோவாப் பற்றிய சகல தகவல்களில்லாது போகின்றது. பல போர்களின் மூலம் மோவாப் வட அரபியாவில் இருந்து வந்த மக்களால் கைப்பற்றப்படுகிறது. மேலும் அதன் பிறகு இஸ்ரவேல் மீதான படியெடுப்பின் போது அம்மோனியரின் கூட்டாளியாக மோவாபிரை குறிப்பிடாமல் அரபியர் என விவிலியம் குறிப்பிடுகிறது. மோவாபியர் அழிந்தாலும் அதன் பின் நீண்ட காலத்துக்கு மோவாப் என்ற இடப்பெயர் விவிலியத்திம் மூலம் அழியாது காணப்பட்டது. + +மோவாப் பல இயற்கை வள்ங்களை கொண்டிருந்த்து. முக்கியமக சலவைகல், உப்பு, போன்றவை சாக்கடல் பிரதேசத்தில் கிடைத்தன. மேலும் மோவாப் அன்றைய எகிப்து, சிறியா, மெசொப்பொத்தேமியா, அனடோலியா என்பற்றை இணைத்த முக்கிய வணிக பாதையில் அமைந்திருன்ந்த்து. இப்பாதை மோவாபுக்கு பெருமளவு வரிகளை கொடுத்தது. + +மோவாபிய சமயம் பற்றிய தகவால்கள் அறிது. அவர்கள் பல்-கடவுள்களை வழிபட்டிருக்கலாம் அவகள் பல வேலைகளில் இஸ்ரவேலரை தங்களது பலிகளில் சேரும் படி தூண்டீயிருக்கின்றனர். அவர்கள்து தலைமை கடவுள் "கோமோசு" ஆவார் இதனால் இஸ்ரவேல சிலவேலைகளில் மோவாபியரை "கேமோசின் மக்கள்" என அழைத்தனர். சில நேரங்களில் மனித பலிகளும் கொடுக்கப்பட்டன. மேசா தனது மகனை பலியிட்டார். மேசா கல்வெட்டின் 17 ஆவது வரியில் கோமோசு கடவுளின் பெண் துணைக் கடவுள் பற்றி கூறப்பட்டுள்ளது. + + + + +செஞ்சோலை + +செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சி��ையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். இவ்வில்லத்தில் 2005 வாக்கில் 242 பெண் பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர் + + + + + +திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் + +திருவாழ் கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. + +இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை. + +அருச்சுனனின் நீர் வேட்கையைத் தீர்த்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + +இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் + +திருமண்ணிப்படிக்கரை - இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும். + +இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. + +இத்தலத்திலுள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி அமிர்தகரவல்லி. + +இறைவன் விடமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் + +ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். + +பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் போகலாம். + +இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). +இத்தலத்திலுள்ள இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்றழைக்கப்படுகிறார். இத்தலத் தீர்த்தம் +கொள்ளிடம் மற்றும் கௌரி தீர்த்தமாகும். இத்தலத்தின் மரம் வதரி (இலந்தை) ஆகும். + +வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர் + +புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது. இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது. (சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர். + +மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகிறார். சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. + +புலியூர் என்ற பெயரில் உள்ள ஐந்து ஊர்கள் பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்க��்தம்புலியூர் என்பனவாகும். + + + + +கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் + +கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும். + +இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது. மிகப் பழைய கோயிலான இது பாழடைந்துள்ளது. + +இங்குள்ள இறைவன் பதஞ்சலிநாதர், இறைவி கானார்குழலி. + + + + + + +திருநாரையூர் சௌந்தரநாதர் கோயில் + +திருநாரையூர் சௌந்தரநாத கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 33வது தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் ஸ்ரீ சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார். + +இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 33ஆவது தலமாகும். + +இங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் துணைகொண்டே நம்பியாண்டார் நம்பி தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தார் எனப்படுகிறது.நம்பியாண்டார் நம்பி பிறந்த தலமும் இதுவே ஆகும். + +துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். +சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். + +அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை ��ீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன. + +சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது. + +1984 ஆம் வருட கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் 23 வருடங்களுக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. போதிய நிதி வசதி இல்லாக் காரணத்தால் திருப்பணிகள் மெதுவே நடைபெற்றன.இந்து அறநிலையத்துறையின் 'நிதி வசதியற்ற திருக்கோயில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின்' கீழே ரூபாய் 7.75 லட்சம் அளிக்கப்பட்டது. மீத தொகை பக்தர்கள் மூலம் திரட்டப்பட்டு சுமார் 40 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2009 ஞாயிற்றுக்கிழமையன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. + + + + + + + +மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் + +திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும். + +கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம். + +தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும். + +திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ���ாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்ட தலம். இத்திருக்கடம்பூரின் ஞானசம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், நாவுக்கரசரின் பதிகங்கள் 5-ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானை கயிலை மலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண் குலமலை தேவர்களும் அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் கடம்பூர் கோயிலும் கயிலை ஒத்தது என இங்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள் அந்தந்தச் சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. + +ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்தின் பின்னரே அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது. + +மேலக்கடம்பூர் திருக்கோயில் சிற்பக் கலைக்கோயிலாகவும் உள்ளது. கர்ப்பகிரக வெளிசுவற்றில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. + +முதலாம் குலோத்துங்கனால் கட்டபெற்றக் கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. தெற்கில் மங்கைபங்கனும் (அர்த்தநாரீச்வரர்) ஆலமர்செல்வனும், மேற்குக் கோட்டத்தில் திருமாலும், வடக்கில் நான்முகனும், அணைத்தெழுந்த நாதரும் (ஆலிங்கனமூர்த்தி) கொற்றவையும் (துர்க்கை) உள்ளனர். + +ஒவ்வொரு தேவகோட்டமும் இரண்டு சிம்மத் தூண்கள் தாங்கிய முகப்பு மண்டபமாக உள்ளது. மண்டபத்தின் மேல் வரந்தையோடு கூடிய கொடுங்கையும், நடுவிமான முதற்தளம் எண்கோண வடிவிலும் உள்ளது. அதனை யாளிகள் தாங்குகின்றன. முதல் தளத்தின் எண்கோண வடிவு கட்டுமானத்தினைச் சுற்றி நான்கு சிகரங்கள் உள்ளன. நடுச் சிகரத்தின் விமான பாகத்தில் எட்டுதிக்கு பாலகர் வீற்றிருக்க தேவகோட்டத்தில் மூர்த்திகள் உள்ளனர். + +கர்ப்பக்கிரக தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும், முறையே திருமால் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும், முதல் தளத்தில் பாம்பணையில் சாய்ந்த கோலமும் நான்முகன் சிவலிங்க வழிபாடு செய்பவராகவும் முதல் தளத்தில் யோக நிலையிலும் காட்சிதருகிறார். கருவறை புறச்சுவர் முழுவதும் நாயன்மார் புராண சிற்பமும், நாட்டிய கரணங்களும், மகேஷ்வர வடிவங்கள், முக்கோடி தேவர் வழிபடும் காட்சி, ராமாயண கிருட்டின லீலைகள் என சைவ வைணவ சிறப்புக்கள் அடங்கிய சிற்பத் தொகுப்புகள் பலவற்றினைக் காணலாம். + +இக்கோயிலின் அதிட்டானம் பத்மபந்தமாகவும், உபபீடமானது மஞ்சபத்ரமாகவும் உள்ளது. +என்னும் 18 அதிட்டான அங்கங்களுடன் திகழ்கிறது. + +திருக்கோயிலின் நந்தவன வாயிலைக் கடந்து நந்தவனமும், அதில் இடதுபுறம் கடம்ப மரத்தினடியில் கடம்ப நாதரும், வலது புறத்தில் மாரியும் சர்ப்பமும் உள்ளன. மூன்றுநிலை கோபுரவாயில் கடந்து வலப்புறம், கோயில் மூலட்டானத்தின் பின்பகுதியில் மேற்கு திருமாலப்பத்தி உள்ளது. இதில் ஆரவார விநாயகர் சன்னதி உள்ளது, அடுத்து வள்ளி தெய்வானை சகிதமாய் மயில் மீதமர்ந்த ஆறுமுகன் சன்னதி, அடுத்த சன்னதியில் சமய குரவர் நால்வர், அதனையொட்டி தேவர்தலைவனின் குற்றம் (பாபம்) போக்கிய குற்றம்போக்கிய நாதர் (பாபஹரேசுவரர்) மீனாக்ஷி சகிதராய் காட்சியளிக்கிறார். அதன் இருபுறமும் கலைமகள், நிலமகள் (வனதுர்க்கை) வீற்றிருக்க, திருமகள் தனிச் சன்னதியில் உள்ளார். திருமஞ்சன கிணற்றின் அருகே மேற்கு நோக்கிய வைரவர் மண்டபம். யோகபட்ட அமர்வில் பெருஞ்சாத்தன்(சப்தமாதர் காவலன்), நின்ற கோலத்தில் கால வைரவர் மற்றும் வைரவர் சிலை அடுத்து கதிரவன், திங்களவன் சிலைகள். அடுத்து இடபவாகனர், தேவர் தலைவன் இத்தல இறைவனைப் பெயர்த்து செல்லும் காட்சியின் சிலைவடிவம். அதனையொட்டி மேற்கு நோக்கிய சனி பகவான், காக்கைக்கு பதில் கழுகு வாகனத்தில். அருகிலேயே கரண்ட மகுடம் தரித்து இறைவனை வணங்கியபடி வைரவி சிலை உள்ளது. அடுத்து மகாமண்டபத்தில் அதிகார நந்தியும் பலிபீடமும் உள்ளது. வலப்புறம் ஜோதிமின்னம்மையும், இடதுபுறம் ஆடல்வல்லான்–சிவகாமசுந்தரியும் கற்சிலாரூபமாய் உள்ளனர். அ���்மையின் எதிரில் மால்விடையும் (நந்தி) இடதுபுறம் ஒன்பதுகோள்களும் பள்ளியறையும் உள்ளன. உள் வாயிலில் திண்டி, முண்டி காவலர்களைத் தாண்டி சென்றால் உற்சவ மூர்த்திகளும் அதனைத் தாண்டி குபேர வாயில் கடந்தால் யுகம் கடந்து நிற்கும் அமிர்தகடேசுவரரைக் காணலாம். ஊரின் நான்கு எல்லைகளில் ஈசானியத்தில் விநாயகரும், தெற்கில் காளிசன்னதியும், தென்மேற்கில் திரௌபதியும், முருகன் கோயிலும், வடமேற்க்கில் அய்யனாரும், வடக்கில் வேளாளர் குலதெய்வம் வீரபத்திரரும் உள்ளனர். + +இந்த காசில் இரண்டு மீன்களும்,ஒரு புலி அமர்ந்திருப்பதும்,ஒரு வில்லும், இரண்டு விளக்குகளும் உள்ளன தனது முப்பத்து ஆறாம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்காசில் மலைநாடு கொண்ட சோழன் என பொறிக்கப்பட்டுள்ளது மலபார் பகுதிகளை வென்ற போது வெளியிடப்பட்டதாகும் காசின் மறுபக்கம் தட்டையாகஉள்ளது. + +இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது “புகழ் மாது விளங்க” எனத்தொடங்கும் முதலாம் குலோத்துங்கனுடையது, இக்கோயிலை கட்டுவித்து இறையிலி நிலங்கள் வழங்கியமை குறித்தும், மற்றொன்று கடம்பூர் கோயிலை சேர்ந்த மகேசுவரர்கள் ஆறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு நந்தா விளக்கெரியவிட ஒப்புக்கொண்டமை குறித்தும், மேலும் கடம்பூரினை உத்தம சதுர்வேதி மங்கலம் என சிறப்பு பெயர் பெற்ற தகவலை காணலாம். + +மொகலாய படையெடுப்பிற்கு பிறகு கவனிப்பாரற்று சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தேவகோட்டையினைச் சேர்ந்த அரு. அருணாசலம் செட்டியார் முழுவதுமாய் பிரித்து எண்களிட்டு புதிதாய் கற்கள் சேர்த்து இன்று நாம் காணும் வடிவில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், வெளிப்பிரகாரத்தில் இருந்த அம்மன் சன்னதியை உட்பிரகாரத்தில் மாற்றியது, பிரகார மதில் சுவர் என பெரிய அளவில் திருப்பணி செய்தார். + +பின்னர் அவர் வழிவந்த சோமசுந்தரம் செட்டியார் திருக்கோயிலை 1897–ம் ஆண்டில் குட முழுக்கு செய்தார். அதன் பின்னர் அவர் வழி வந்த மற்றொரு அருணாசலம் செட்டியார் 1920–ம் ஆண்டில் குடமுழுக்கு செய்தார். 1942 –ல் ஒன்பது கோள் (நவக்கிரகம்) அமைக்கும் பணி நடைபெற்று குடமுழுக்கு செய்யப்பட்டது. பின் 03.04.1980–ல் குடமுழுக்கு நடைபெற்றது. 21.06.2002 –ல் குடமுழுக்கு தரும ஆதினம் முன்னிலையில் நடைபெற்றது. + +செவ்வக பீடத்தில் மையமாக உள���ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர்சூலமாட. வைரவர். கணங்கள். விநாயகர், பார்வதி.,பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைபடைப்பு திருவாசியில் அக்கினிக்கு பதிலாக இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்கு பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இச்சிற்பம் போல (புடைப்பு சிற்பங்களாக) கல்லில் வடிக்கப்பட்ட மூன்று சிலைகள் வங்கதேசம் டாக்கா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. + +முதலாம் குலோத்துங்கன் அவையில் ராஜகுருவாக இருந்தவர் உத்திரலாட (வங்காள) தேசத்து ஸ்ரீ கண்டசிவன், இவர் சிதம்பரம் ஆடல்வல்லானை தரிசிக்க வந்திருந்த போது தன் வழிபடு தெய்வமாக வைத்திருந்த ரிஷப தாண்டவரை கொண்டு வந்தார் எனவும், இக்கோயில் ஸ்ரீ கண்ட சிவன் மேற்பார்வையில் கட்டப்பெற்றதால் பணி முடிந்து செல்லுங்கால் தனது மூர்த்தியினை இக்கோயிலில் வைத்து சென்றதாகக் கூறுவர். + +முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டு படையெடுப்பின் போது பாலர் தேசத்து மகிபாலரை வென்று அங்கிருந்த இம்முர்த்தியினை வெற்றிசின்னமாக கொண்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். + +தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர். +பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்க லாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது. இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தே���ில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான் தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது. + +பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான். ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் “கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” என போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது. + +கடம்பூர் இக்கோயிலின் தல மரமாகும். மேலும் இம்மரத்தின் பெயராலேயே இவ்வூர் கடம்பூர் என வழங்கலாயிற்று. கடம்பமரம் இந்திய தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற மரமாகும், எனவே பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது, எனினும் மேற்கு கடற்கரை ஓரங்களிலும் கர்நாடகத்திலும், இமயமலை சாரலிலும் அதிகமாக காணப்படுகிறது. இது 2 மீட்டர் சுற்றளவுடன் 18 மீட்டர் +உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றப்படுகிறது. வடக்கே மதுராவில் கிருஷ்ணர் கடம்ப வனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பகவத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றப்படுகிறாள். கடம்ப பூமாலைகள் கிருட்டிணன், முருகன் இருவருக்கு மட்டுமன்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுபடையில் இதனை உருள் பூ என்று நக்கீரர் +எடுத்தியம்புகிறார். பனவாசியை தலை நகர��க கொண்ட கடம்பர்கள் பேரரசில் வழங்கிய “முண்டா” மொழியில் ”கரம்” என்றால் கடம்பு என பொருள் எனவே கரம்+கோயில் = கரக்கோயில்,கடம்பமரத்தினை தல மரமாக கொண்ட கோயில் என கொள்ளலாம்.கடம்ப மரத்தின் இலை, பட்டை, பழம், விதை, பூ எனஅனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. + +“உடம்பை முறித்து கடம்பில் போடு” என்ற சொலவடை மூலம் அறியலாம் + + + + + + + +இராசி + +பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி () என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. இக் கோட்டிலிருந்து அளக்கப்படும் முதல் 30 பாகை கோண அளவு மேட இராசியாகும். + +இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு ராசிகள் பின்வருமாறு: + +சீன சோதிடம் குறிப்பிடும் ராசிகள் பின்வருமாறு. + + + + +பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயில் + +பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் காம்பணையதோளி. இத்தலத்தின் தலவிருட்சமாக சரக்கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் அமைந்துள்ளன. + +இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது பழங்காலத்தில் பந்தணைநல்லூர் என்று அழைக்கப்பெற்று வந்தது. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 35வது சிவத்தலமாகும். + +கையிலையில் சிவபெருமானிடம் பார்வதி தான் பந்து விளையாட வேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கிறார். அதனால் சிவபெருமான் நான்கு வேதங்களையும் நான்கு பந்துகளாக மாற்றித் தருகிறார். இறைவி பந்து விளையாட ஏதுவாக சூரியன் மாலை நேரம் வந்தும் மறையாமல் இருக்கிறார். இதனால் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் முனிவர்கள் வாடுகிறார்கள். + +சூரியனிடம் முறையிட்டு, அவர�� ஆலோசனைப் படி சிவனிடம் விண்ணப்பம் செய்கிறார்கள். பார்வதியிடம் எடுத்துறைக்க வரும் சிவபெருமானை விளையாட்டின் ஆர்வமிகுதியால் பார்வதி கவனிக்க தவறுகிறார். இதனால் பசுவாக பூமியில் பிறக்கும் படி சிவபெருமான் பார்வதியை சபித்து விடுகிறார். சாப விமோசனம் பெற சரக்கொன்றை மரத்தின் கீழ் இருக்கும் சிவலிங்கத்தில் பால்சொறிந்து வரும்படி கூறுகிறார். + +தங்கை பார்வதியை சாபத்திலிருந்து காக்க திருமால் இடையனாக சென்று கன்வ மகரிஷி ஆசிரமத்தில் தங்குகிறார். பசுவானது புற்றில் பால் சொறிவதைக் கண்ட இடையனாக இருந்த திருமால், பசுவினை அடிக்க அது துள்ளிக் குதித்து புற்றினை உடைத்து அதிலிருந்த லிங்கத்தினை வெளிப்படுத்துகிறது. பின்னர் இருவரும் தெய்வ உருவிற்கு மாறுகிறார்கள். + +இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. க்ம்ம்பீலி மன்னன் மகன் குருடு நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் + + + + + +கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் + +கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும். + +கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது. + +இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். + +சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை. + +இக்கோயிலில் இருக்கும் முக்தி மண��டபம் என்றழைக்கப் படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில் ,இது சுக்கிரனுடைய தலமாகும். + + +இத்தலத்து தலவிருட்சத்தை ஒரு மண்டல காலம் பதினாறு முறை சுற்றி வந்து வழிபட கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும். + + +திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், +திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். + + + + + +திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் + +திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை. + +பிராணநாதேசுவரர் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை சாலையில் திருமங்கலக்குடி உள்ளதால் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம். ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5 கிமீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. + +இக்கோவிலின் அஞ்சல் முகவரி: +ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயில், திருமங்கலக்குடி-612102. + +தொலைபேசி எண்: 91-435-2470480. + +இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக லிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. அம்மன் பெயர் மங்களாம்பிகை (அ) மங்களநாயகி. அம்மன் தனிச�� சன்னிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார். பிரகாரத்தில் சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. + +நவகிரகங்கள் சிவனை வழிபட்ட தலமென்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சன்னிதி இல்லை. இக்கோவிலில் வழிப்பட்ட பின்னரே இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள சூரியன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது. + +கோயிலின் வாயிற்கோபுரத்தின் இருபுறமும் விநாயகர், சண்முகர் உள்ளனர். கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் மங்களாம்பிகை சன்னதி. மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி, ஈசானமூர்த்தி, சூரியன், பைரவர், விசாலாட்சி, சந்திரன் உள்ளனர். உள் சுற்றில் மகாதேவலிங்கம், சிவலிங்கம், ருத்ரலிங்கம், சங்கரலிங்கம், நீலலோஹிதலிங்கம், ஈசான லிங்கம், விஜயலிங்கம், பீமலிங்கம், தேவதேவலிங்கம், பவோத்பவலிங்கம், கபாலீச லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து விநாயகர், மெய்கண்டார், அரதத்தர், சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர், வெள்ளிதெய்வானையுடன் சண்முகர், விநாயகர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். சோமாஸ்கந்தருக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், விஷ்ணு துர்க்கை, காவேரியம்மன் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. + +முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர், அரசனுக்குத் தெரியாமல் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். செய்தியறிந்து வெகுண்ட அரசன் அமைச்சரைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அலைவாணர் தனது மரணத்துக்குப் பின் தனது உடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவரது ஆட்கள் அவ்வண்ணமே எடுத்துச் சென்றனர். அமைச்சரின் மனைவி, மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள். அம்மன் அருளால் திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் அவர் உயிர் பெற்று எழுந்தார். இந்நிகழ்வின் காரணமாகவே கோவிலின் சுவாமி பிராணநாதேசுவரர் என்றும் அம்மன் மங்கல பாக்கியமளித்ததால் மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர் என்பது தொன் நம்பிக்கை. + +திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். + + + + + +திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில் + +திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். +இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். இவ்வாலயம் திருமணத்தடை குழந்தை இன்மைக்கு பரிகார தலமாக விளங்குகிறது. தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோரும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குணிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதய மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் +பலன் தரவில்லை. திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனாரி இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தடாகைக்காக தலை +சாய்ந்ததும் குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது. ஸ்ரீகுமரகுருசாமிகள் நிறுவிய காசிமடம் இங்குதான் உள்ளது. பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், +அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்ட தலம். +இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும். + +தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ இறைவன் தனது திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றர��ளினார் என்பதுவும் பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அந்நிலைய மாற்றினார் என்பதுவும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + +தினமலர்க் கோயில்கள் + + + + +திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் + +கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் உள்ளது. + +திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். தற்போது இத்தலம் திருவாய்பாடி என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தல ஈசன் ஆப்பாடி உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மிகப்பழமையான கோவில். கம்பீரமான நடராஜர் திருமேனி இங்கு உள்ளது. +தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 40வது சிவத்தலமாகும். + +இத்தலத்திலுள்ள இறைவன் பாலுகந்தநாதர், இறைவி பெரியநாயகி. + + + + +கமகம் + +கமகம் என்பது கருநாடக இசையில் இசையொலிகளுக்கு அழகூட்டும் "ஒலி அசைவுகள்" அல்லது "அலைவுகள்" ஆகும். இதனை பழந்தமிழில் உள்ளோசைகள் என அழைத்தனர். சுரங்களைப் பாடும்போது அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும்போது இனிமையும் அழகுணர்வும் கூடுவதற்குச் சில குறிப்பிட்ட இடங்களில் தக்க ஒலி அசைவுகள் உண்டாக்குதலைக் கமகம் என்பர். இராகங்களின் சிறப்பு இயல்புகளைக் காட்ட இக் கமக அசைவுகள் மிகவும் இன்றியமையாதது. + +கமகங்களில் பல வகைகள் உள்ளன. பழந்தமிழில் சிலப்பதிகாரத்தில் கூறியபடி இவை எட்டு வகையாகும். அவையாவன "வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை" என்பன. + +பிங்கல நிகண்டு உள்ளோசைகள் ஆறு என்று கூறுகின்றது. அவையாவன: + +பிங்கல நிகண்டில் கூறிய "ஞெளிர்" என்பது ஏங்குதல் இரங்குதல் போன்று ஒலிப்பது ஆகும். "தெளிர்" என்பது தற்காலத்தில் ரவை என்று அழைக்கப்படுகின்றது. + +கமகம் என்பது 15 வகைப்படும் என்றும் அவைகளுக்கு மாத்திரை அளவு உண்டு என்றும் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூலில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த "சாரங்கதேவர்" குறிப்பிடுகிறார். அனுபவத்தில் பார்த்தால் எந்த கமகத்தையும் 1/4, 1/2 மாத்திரைக்���ு உபயோகிப்பது சாத்தியமில்லை. வாய்ப்பாட்டில் குரல் வளத்திற்கும், இசைத் திறமைக்கும ஏற்றவாறு கமக அழகுகளைக் கூட்டிப் பாட முடியும். வீணை, வயலின் முதலிய இசைககருவிகளில் கமகங்களை (உள்ளோசைகளை)ப் பயன்படுத்தி இசைப்பதைப் பார்க்க முடியும். + +பிற்காலத்தில் 10 வகையான கமகங்களே பயன்படுத்தப் படுகின்றன. சென்னையில் இருந்த சின்னசாமி முதலியார் அவர்கள் ஊக்குவித்தபடி முத்துசுவாமி தீட்சதரின் தம்பி பாலுசாமி அவர்களின் பெயரரான சுப்பராம தீட்சதர் அவர்கள் 10 வகையான கமகங்களை (உள்ளோசைகளை) சீரமைத்து 1904 இல் புத்தகமாக வெளியிட்டார். அக் கமகங்களாவன: "கம்பிதம், ஸ்புரிதம், பிரத்யாகதம், நொக்கு, ரவை, கண்டிப்பு, வலி, ஏற்றஜாரு, இறக்கஜாரு ஒடுக்கல், ஒரிகை" என்பனவாகும். இவையன்றியும் பிற பெயர்களும் வழங்குகின்றன. கம்பிதம் என்பதைத் தமிழில் கம்பலை (நடுக்கம்) என்பர் (பிங்கல நிகண்டு 1441). + + + + + +சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் + +கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ளது. + +திருச்சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப் பெருமான், சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 41வது தலம் ஆகும். + +இப்போது சேங்கனுர் என்று அழைக்கப்படும் இவ்வூர் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்தபோது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும், மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும் இந்த தலத்தை +வழிபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ சண்டிகேஸ்வரர் அவதர��த்த தலம் இதுவாகும். எச்சதத்தன் என்கிற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசருமர்(சண்டிகேஸ்வரர்). இவர் மாடுமேய்க்கும் தொழிலை செய்துவந்தார். பசுக்கள் மேய்ச்சலின் போது பால் மிகுதி காரணமாக தானாக பாலை கிழே சொரிய ஆரம்பித்தன. பால் வீணாவதை விரும்பாத விசாரசருமர், அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து பால் அபிசஷேகம் செய்துவந்தார். இதை பார்த்த ஊர்மக்களும், தந்தையும் கண்டித்தும் மீண்டும் மீண்டும் பால் வீணாவதை கண்டித்த தந்தையை பக்தி மயக்கத்தால் செய்வதறியாது அருகில் இருந்த கோலால் அடிக்க +தந்தை இறந்தார். விசாரசருமர் முன் தோன்றிய தேவியும், பரமேஸ்வரரும் சிவபூசை தடைபட கூடாது என்பதற்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்கு தந்தையாய் இருப்பேன் எனக்கூறி கொன்றை மாலை ஒன்றை அனிவித்து நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்கே உரித்தானவை. என்னை வழிபட்டவர்கள் உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீசண்டிகேசர் +என்ற பட்டமும் அளித்தார். சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் அங்கு குருவாக இருக்க நேர்ந்ததால் சிவத்துரோக தோஷம் பற்றியது. அது இங்கு நீங்கியதாக கூறுவர். சூரனை அழிப்பதற்க்கு இங்கு தங்கி ஈசனை வழிபட்டு சர்வசங்காரபடையை பெற்று போருக்கு சென்றார். சேய் என்றால் முருகன் எனவே இவ்வூர் திருசேய்ஞலூர் ஆயிற்று. இங்குள்ள சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பிறை, ஜடை, குண்டலம், கங்கை ஆகியவற்றை கொண்ட சண்டிகேஸ்வரர் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. வைணவப் பெரியவராகிய பெரியவாச்சான் பிள்ளை அவதரித்ததலம். + +இங்குள்ள இறைவன் சத்தியகிரீசுவரர் இறைவி சகிதேவியம்மை. + +சண்டேசுவர நாயனார் அவதரித்த தலம். +சேங்கனூரில் சிவலோக நாதர் எனும் மற்றொரு சிவன் கோயிலும் வைணவக் கோயிலும் அமைந்துள்ளது. +கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சண்டேச நாயனார் அவதரித்த தலம். + + + + + +திருந்துதேவன்குடி கற்கடகேசுவரர் கோயில் + +திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும். + +கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். தற்பாேது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தார். தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை கோமுகம் இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதை கண்காணித்த பொழுது நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வதுகண்டு வியந்தபோது உன்னால் நண்டாக சாபம் பெற்ற கந்தர்வனே மலர் கொண்டு பூசித்தான். உன்னை கண்டு பயந்து ஒளிந்து கொண்டுள்ளான் என ஈசனிடம் இருந்து அசரீரி கேட்டது. ஆடி அமாவாசை பூர நட்சத்திரத்தன்று காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது. 6-2-2003-ல் கும்பாபிஷேக முதல் நாள் யாகபூசையின் போது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்ததை கண்டதாக கூறப்படுகிறது.மன்னர் ஒருவர் கடும்நோயால் பாதிக்கப்பட்டு இவ்வாலய ஈசனை வேண்டி குணம் அடைந்தார். அம்மன்னன் பிரதிஷ்டை செய்த அம்மனே அருமருந்தம்மை ஆகும். இது நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. கோவில் வெளிப்புர சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. + +இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. + +நண்டு பூசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இக்கோயில் பற்றிய பதிகத்தில் கொல்லிப் பண்ணில் அமைந்த 11 பாடல்கள் உள்ளன. இத்தலம் சுற்றிலும் வீடுகள் ஒன்றுமின்றி வயல் மத்தியில் தனிக் கோயிலாக உள்ளது என்னும் குறிப்பு ஒன்று உள்ளது. +வேதம் எங்கே திருந்துகிறது? +உணவு தரும் வயல்வெளியில்தானே! + + + + +இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் + +இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. + +திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சூரியன் மேலும் ஆற்றல் பெற வழிபட்ட தலம் (இனன் என்றால் சூரியன்). துர்வாசரின் சாபத்தால் மதம்கொண்ட காட்டு யானையாகி ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. இங்கு உள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் உள்ளது. அகத்தியமுனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. +சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் இக்கோவிலின் கணக்கு வழக்குகளை துள்ளியமாக ஒப்படைத்து வந்தார். நேர்மையான தன் மீது சந்தேகம் அடைந்த மன்னனுக்கு விளக்க இயலாமால் இவ்வாலய இறைவனிடம் முறையிட்டார். மறு நாள் இறைவனே சுதன்மன் வடிவில் மன்னனிடம் சென்று முறையாக கணக்குகளை தெளிவுப் படுத்தினார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். மகிழ்ந்த சுதன்மன் இறைவனை போற்றித் தொழுதார். விரித்த ஜடாமுடியும், இடபக்கம் கங்காதேவியும், வலப் பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்கிரகம் சிறப்பு வாய்ந்தது. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்ய சிறப்பான இடம். + +சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் என்பது தொன்நம்பிக்கை. + +இக்கோயிலிலுள்ள இறைவன் எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீசுவரர், தாந்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர். இறைவி பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி + +கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நர்த்தன விநாயகர், சூரியன், பைரவர், கால பைரவர், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறங்களிலும் டிண்டியும், முண்டியும் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாண்டவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் நால்வர், கன்னிமூல கணபதி, பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. சிவலிங்கம், கைலாயலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், மகாலட்சுமி, விஷ்ணுதுர்க்கை, நடராஜர் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர். + +21.6.2000இல் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு காணப்படுகிறது.16/09/2013 ல் குடமுழுக்கு நடைபெற்றது. + + + + + +திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் + +திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது. செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். + +பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகர் சிறப்பானவர். சிவபெருமான் கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொருப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்று ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். திருக்குளத்தின் கிழக்கே இந்த ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது. இத்தலத்தை காத்த விநாயகபெருமானை வருணபகவான் கடல் பொருட்களான சங்கம், நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். பிரளயம் காத்த விநாயகருக்கு எப்போதும் தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பெருந்திறளான ம���்கள் கூடுவர். மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்னும் வணிகன் இவ்வாலய வன்னி மரத்தின் கீழ் பாம்பு தீண்டி இறந்தான். இவருடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இவ்வாலய ஈசனிடம் அழுது புலம்பினாள். ஈசன் காட்சி அளித்து வணிகனை உயிர்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு, ஆகியவற்றை சாட்சியாக வைத்து திருமணம் நடத்தி வைத்தார். மதுரை சென்ற வணிகனின் மூத்த மனைவி இவளை ஏற்காத நிலையில் இறைவன் சாட்சிகளுடன் அவர் முன் தோன்றி உண்மை உரைத்தார். மதுரை சுந்தரேசர் ஆலயத்தில், சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன இன்றும் உள்ளது. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், சிலப்பதிகாரத்திலும் வருகிறது. இக்கதையை ஒட்டியே புன்னைவனநாதர், +சாட்சிநாதர் என அழைக்கப்படுகிறார். அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர் ஆகியோர் வழிபட்ட லிங்கத்திருமேனிகள் இருக்கின்றன. ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும் ஸ்ரீகுகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். இது திருமண பரிகாரத் தலமாகும். நால்வர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் இங்கு விசேஷம். + +பிரம்மதீர்த்தம்(திருக்குளம்), ஸப்தசாகரகூபம்(ஏழு கடல் கிணறு). + +இங்குள்ள இறைவன் சாட்சிநாதர், சாட்சிநாதேசுவரர், புன்னைவனநாதர். இறைவி கடும்படுசொல்லியம்மை, இட்சுவாணி. + +கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. உள்ளே மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இரு புறமும் விநாயகர், முருகன் உள்ளனர். மண்டபத்தின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது. அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இடப்புறம் சூரியன், சந்திரன் உள்ளனர். நடராஜர் மண்டபமும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகியவை உள்ளன. தொடர்ந்து லிங்க பானம், லிங்கங்கள், மூன்று நந்திகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கரு��றை கோஷ்டத்தில் புள்ளமங்கை கோயிலில் உள்ளது போன்று மிகச் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. + +சம்பந்தர் 2ஆம் திருமுறையில் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.
+‘மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
+நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
+திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
+கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்‘ + +இங்கு தேனபிஷேகப்பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி தினத்தன்று இரவு மட்டுமே தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேம் செய்யப்படும் தேன் முழுவதும் இந்த விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் வேறு எங்கும் காணமுடியாதது. + +1972க்குப் பின் இக்கோயிலின் குடமுழுக்கு 18 மார்ச் 2016இல் நடைபெற்றது. + + +
+ +உரும்பிராய் + +உரும்பிராய் ("Urumpirai") இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஓர் ஊராகும். இது, யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மானிப்பாய்-கைதடி வீதியும், இவ்வூரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பிராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பிராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன. + +அக்காலத்தில் வழிபோக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. நிழல் தரு மரங்களுள் ஒன்றான பிராய் (அல்லது பராய்) என்ற பால் மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருந்தன. நன்றாகச் செழித்துப் படர்ந்து வளரக்கூடிய இம்மரத்துக்குப் பெருஞ்சூலி மரம் என்று இன்னொரு பெயருமுண்டு. பெரிய, உயரமான என்பதற்கு உரு என்றும் சொல்வர். இதனை விட வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரி��ையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே இக்கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். இருபத்தைந்தாம் பிராய் என்பதனை உ- 2, ரு - 5 – 25ம் பிராய் - உரும்பிராய் என வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. + +கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும் மேற்கே இணுவில் உடுவிலும் வடக்கே ஊரெழுவும், நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கொண்ட இக்கிராமத்தில் 3753 குடும்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள். + +அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ்பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம் கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம், என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகளுட் சில. + +ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கிருந்தன. பின்னர் உரும்பிராய், ஊரெழு ஆகிய கிராமங்கள் 1967 ஆம் ஆண்டில் பட்டினசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உபபிரிவாக இயங்கி வருகின்றது. + +செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஓர் இடமாகும். உரும்பிராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்குப் புதிய பயிர்களான திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 1970 தொடக்கம் 1980 ம் ஆண்டு வரை வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன. அதை தொடர்ந்து இன்று (2012) வரை இப் பிரதேசத்தில் இது போன்ற மேலும் பல பயிர்கள் வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன. + +உரும்பிராயில் பல்வேறு இந்துக் கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில் என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கே தான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை இலங்கை நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்ததனால் இவ்வழக்கம் 2012 ம் ஆண்டு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. + +இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பிராய் இந்துக் கல்லூரியாகும். இது பலாலி வீதியில் உரும்பிராய்ச் சந்தியிலிருந்து ஊரெழுவிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஆகிய பாடசாலைகளும் ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலைகளாகக் காணப்படுகின்றன. + +பெரும்பான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவர்கள் பிற்காலத்திற் சைவசமயத்தினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸதாந்து சமயத்தையும் (அங்கிலிக்கன் சபை) தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது. + + + + + +பலாலி வீதி + +பலாலி வீதி அல்லது யாழ்ப்பாணம் - பலாலி வீதி என்பது, 1850களை அண்டிய காலப்பகுதியில் பிரித்தானிய குடியேற்றவாத அரசினால் புதிதாக அமைக்கப்பட்ட வீதியாகும். யாழ்ப்பாணம் நகரில் இருந்து, குடாநாட்டின் வடக்கு நோக்கி பலாலி சந்தி (வடக்கு எல்லை) வரை செல்லும் வீதியாகும். பல கிராமங்களை ஊடறுத்துச் செல்வதனால் வீதியின் இருமருங்கிலும் அதிகமான குடியிருப்புக்கள் காணப்படுவதனாலும் அந்தந்த கிராம மக்களினால் இவ்வீதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வீதியோரத்தே வணிக மையங்களும், வழிபாட்டுத் தலங்களும் அதிகமாக அமைந்திருப்பதும் அதிகரித்த வீதிப் பயன���பாட்டிற்கு காரணமாகிறது. + +இவ்வீதி ஏறத்தாள 18 கி.மீ. நீளமும், AB18 வீதி இலக்கமும் கொண்ட பிரதான பாதையாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பிரதான வீதிகளில் (காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி) பலாலி வீதி அமைவிடத்தின் தன்மையினால் குறிப்பிட்டு நோக்கப்படுகிறது. அத்துடன் வழைவுகள், முடக்குகள் அதிகம் இன்றி நேராக உள்ளது. 2011ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தார் வீதியாகக் காணப்பட்ட இவ்வீதி அதற்கு பிற்பட்ட காலத்தில் காபெட் இடப்பட்ட வீதியாக மாற்றப்பட்டதன் காரணமாக இவ்வீதியின் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இவ்வீதியில் முழுமையான வாகனப் பிரயாணத்திற்கு எடுக்கும் கால அளவு அரை மணி நேரமாகக் கொள்ளலாம். + +பலாலி வீதி ஆரியகுளத்தில் ஆரம்பித்து இலுப்பையடி, கந்தர்மடம், பரமேஸ்வரா, திருநெல்வேலி, கோண்டாவில், உருப்பிராய், ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், வயாவிளான், பலாலி ஆகிய கிராமங்களை ஊடறுத்து பலாலி சந்தியில் முடிவடைகிறது. +பலாலி விமான நிலையம், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை என்பன இவ் வீதியுடன் தொடர்புபட்டு உள்ளது. அத்துடன் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லுாரி, யாழ்.பல்கலைக்கழகம், திருநெல்வேலி அரசினர் விவசாயப் பண்ணை, அதனோடு ஒத்த அரசினர் விவசாயப் பாடசாலை, கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணிமனை, மற்றும் பிரபல்யமான அரச பாடசாலைகள் பலாலி வீதியில் அல்லது அண்மித்து இருப்பதனால் இவ்வீதி முக்கியத்தும் பெறுகிறது. + +யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வரையான பலாலி வீதியின் குறுக்காக (கிழக்கு - மேற்காக) ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் பலாலி வீதியை ஊடறுத்துச் செல்லுவதனால் உண்டாகின்ற சந்திகள் பிரபல்யமான சந்தியாக செயல்படுவதனால் அந்தந்த கிராமங்களின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகிறது. + +ஈழப்போர் காரணமாக 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்டாய இடப்பெயர்வுக்கு முன்னர் பலாலி வீதியில் இலங்கை +போக்குவரத்து சபை பேரூந்துகளே பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்தன. ‌ + + +இதே பொது போக்குவரத்து சேவையில் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபையுடன் தனியார் சேவையினரும் இணைந்து சேவையில் ஈடுபட்டுவருகின்றனர். பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரி வரைக்கும் பேரூந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இயக்கப்படுகின்றது. எனினும் தேவைகருதி இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் குறுஞ்சேவைகளையும் மேற்கொள்வதுண்டு. + + + +திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் + +திருவிசயமங்கை - திருவிஜயமங்கை வியநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். + +பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்(விஜயன்) வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது. விஜயமங்கை என்பது கோவில் பெயரே ஊரின் பெயர் கோவந்தபுத்தூர்(கோ கறந்த புத்தூர்). சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனை காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியை கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார் முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகபெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம். + +இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 47வது சிவத்தலமாகும். + +நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். தொடர்ந்து உள்ளே செல்லும்போது மண்டபத்தில் வலப்புறம் நால்வர் சன்னதியும், இடப்புறம் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து மங்கைநாயகி சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக விநாயகர், முருகன் இரு புறங்களிலும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. + +அர்ச்சுனன் (விஜயன்) வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +தினமலர்க்கோயில்கள் + + + + +திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் + +திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும். + +கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. + +தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது. மிகப் பழமையான இக்கோயில் இப்போதும் பார்வைக்குப் பழசாகவே காட்சியளிக்கிறது. இக் கோயிலின் ஒரு வேளைப் பூசைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. + +இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடுகிறது. அதாவது மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகா சிவராத்திரியன்று பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள். மூன்று நாள்கள் கோயிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டி விடுகிறது. + +வில்வநாத சுவாமி என்பது இங்கு உறையும் இறைவனின் பெயர். இறைவி மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர். தல விருட்சமாக வில்வமரம். + +சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள�� நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று. உயர்ந்து நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம். + +முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது. + +அதற்கொரு கதையும் சொல்லப்படுகிறது. எமன் ஒரு முறை சிவபெருமானோடு மோதி, விரட்டிக் கொண்டு வர, அதனால் கோபமுற்ற நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்து சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது. எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. + +பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை. + +இக் கோயிலில் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் கண்விழித்து உபன்யாசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிவராத்திரியின் சிறப்பைக் குறிக்கும் விதமாகவும் மற்றொரு கதையும் வழக்கில் உண்டு. + +ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மதியம் வந்தது, மாலையும் வந்தது. இருள் சூழ, இரவும் வந்தது. புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாயில்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம். தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம். + +பிறகுதான் அவனுக்கு விள���்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது எனும் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரியன்றும் வேடனுக்கு மோட்சமளித்த புராணக் கதை சொல்லப்படுகிறது. கோயிலின் கோபுர வாசலில் சிறிய சிற்பமாகவும், பழைய பாணி ஓவியமாகவும் இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. + +மற்ற சிவாலயங்களைப் போலவே, விநாயகர், முருகன், துர்க்கை, சன்னிதிகளும் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. முருகன், துர்க்கை சன்னதிகளை ஒட்டியும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. + +திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. + +கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால் +ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந் +தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி +வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே + +அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார் +விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம் +புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம் +வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. + +ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார் +ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம் +ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார் +வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. + +இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந் +தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம் +முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர் +மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. + +வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம் +ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம் +மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான் +மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. + +நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன் +செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம் +அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய் +மைஞ்சரொடு ���ாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. + +நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற் +தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம் +நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர +வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. + +கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன் +ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங் +கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம் +வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. + +அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள் +எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ் +சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள் +வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. + +ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே +பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந் +தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன் +வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. + +முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச் +செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய் +உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப் +பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. + +அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ). + +அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம். + + + + + +வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் + +வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் குலை வணங்கிநாதர் என்றும் அம்பிகை அழகு சடைமுடியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவரை வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், தயாநிதீசுவரர் என்றும் முன்பு அழைத்துள்ளனர். + + சிவபெருமானின் பக்தர்களான தம்பதியர் வடகுரங்காடுதுறை தலத்திற்கு வந்தனர். அவள் கருவுற்றிருந்தாள். நெ���ிய பயணத்தில் அவர்களுக்கு நாவறட்சி ஏற்பட்டிருந்தது. அவள் கணவன் தண்ணீரை தேடிச் சென்றான். நேரம் ஆகியதால் அவள் மேலும் சோர்வுற்றாள். எனவே கோயிலின் தென்னைமரம் வளைந்து குலையைச் சாய்த்து. இறைவன் பணியாள் போல வந்து அவளுக்கு இளநீரை சீவித் தந்தான். அவள் அயர்ந்து உறங்கினாள். தண்ணீருடன் வந்த கணவனிடம் நடந்ததை எடுத்துரைத்தாள். நம்ப மறுத்த கணவனுக்கு இறைவன் இறைவியோடு தரிசனம் தந்து உண்மையை உரைத்தார். + +இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார். அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார். + +இத்தலத்தல் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார். + +சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார். + +கிழக்கு பிரகாரத்தில் சனீசுவரன், கால பைரவர், சூரியன், சம்பந்தர், நாவுக்கரர் ஆகியோர் சந்நிதிகளும், தலபுராணத்தில் வருகின்ற சிவபக்தையின் சிலையும் உள்ளன. பிள்ளையார், சண்டிகேசுவரர், வள்ளி தெய்வானை முருகன், கயிலை லிங்கம், கஜலட்சுமி போன்றோரின் சன்னதிகள் உள்ளன. + +இச்சிவாலயம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 49வது தலம் ஆகும். + +தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். + + +அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + +திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் + +திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு ��ாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. + +அந்தணச் சிறுவன் ஒருவனை எம தருமன் துரத்தி வந்தபோது சிறுவன் இத்தலத்தின் இறைவனிடம் தஞ்சம் புகுந்தான். அதன் பொருட்டு ஆபத்தில் இருந்த சிறுவனை இறைவன் காப்பாற்றியதால் "ஆப்த" சகாயேஸ்வரர் எனும் பெயர் இறைவனுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. + + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + +-திருநாவுக்கரசர் + +அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் + + + + +திருவையாறு + +திருவையாறு ("Thiruvaiyaru"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 13 கி.மி. தொலைவில் பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226ல் திருவையாறு அமைந்துள்ளது. + +திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. + +இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும். + +கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், "தியாகராஜ ஆராதனை விழா" என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் "சென்னையில் திருவையாறு" என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது. + +சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும். இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது. + +திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. + + + + + + + +தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் + +திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 52வது சிவத்தலமாகும். + +இத்தலத்து இறைவன�� நெய்யாடியப்பர். இறைவி பாலாம்பிகை. + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + + + + +திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் + +பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். + +திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும். + +இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீசுவரர் அல்லது பிரியநாதர்; இறைவி சௌந்தரநாயகி. + +புலிகால் முனிவர் (வியாக்கிரபாதர்) வழிபட்ட தலமெனப்படுகிறது. + + + + + +திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் + +திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும். + +திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 56வது தலம் ஆகும். + +அக்கினி வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + + + +அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் + +அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை) அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. + +இக்கோயியில் உள்ள இறைவன் சத்தியவாகீஸ்வரர், இறைவி சவுந்திரநாயகி. இத்தலத்தில் காயத்திரி தீர்த்தம் என்ற தீர்த்தமும், தலமரமாக ஆலமரமும் உள்ளது. + +பிரமன், வாசீக முனிவர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. + + + + + +திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் + +திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். + +இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். + +சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + + + + + +திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் + +திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61வது சிவத்தலமாகும். + + +ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார். + +முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். கைலாய தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவை + + +என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் என வழங்கப்படுகிறது. + + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: +"தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன்" + +"பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை" + +"தோளி பாகமா ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ". + +"காரு லாவிய நஞ்சை யுண்டிருள்" + +"கண்டர் வெண்டலை யோடுகொண்" + +"டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி" + +"ஓரி டத்திலே கொள்ளும் நீர்" + +"பாரெ லாம்பணிந் தும்மை யேபர" + +"விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்" + +"ஆர மாவது நாக மோசொலும்" + +"ஆர ணீய விடங்கரே". + +"கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி " + +"வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்" + +"கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று" + +"அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்" +Block quote + + + + + +திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் + +மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். + +சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது. + +இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. +சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு ப��ைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார். + +மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது. + +அர்த்தஜாம பூசையின் பொழுது முதலில் அம்பாளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்பு இறைவனுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. + +ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பௌர்ணமி தொடங்கி 11 நாட்கள் தினந்தோறும் முத்துப்பல்லக்கில் இறைவன் வீதிஉலா நடைபெறுகிறது. + +இச்சிவாலயத்தின் மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில் இலுப்ப நெய்யூற்றி தீபம் ஏற்றினால் பொருளாதார சுபீட்சம் அடைவர் +பாலதோசம் அல்லது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான தோசம் பற்றியவர்கள் தொடர்ந்து மூன்று ஞாயிறுகளில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அத்துடன் அபிசேக தீர்த்தை பருகினாள் மூன்று நாளில் இந்த பாலதோசம் குழந்தைகளிடமிருந்து விலகும். +திருமணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி அம்பிகைக்கு அர்ச்சனை அபிசேகம் செய்தால் திருமணம் விரைவில் நிச்சயமாகும். +வலிப்பு, வயிற்றுவலி, வாதம் முதலிய நோய்கள் பாதித்தவர்கள் தொடர்ந்து ஒரு மண்டலத்திற்கு நரடாஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்தால் நோயில் கடுமை குறைந்து பூரண குணமாகும். + +திருஞான சம்மந்த மூர்த்தி - திருப்பாச்சிலாச்சிராமத் திருப்பதிகம் +சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாச்சிலாச்சிரமத் திருப்பதிகம் - 12 பாடல்கள் +ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர திருவெண்பா - 1 பாடல் +தனிப்பாடல்கள் 3 + + + + + +அவிசாவளை + +அவிசாவளை இலங்கையின் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந��துள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத் தலைநகரான கொழும்புக்கு மேற்குத் திசையில் 52 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மேல் மாகாணத்தின் கிழக்கு மூலையில், சபரகமுவா மாகாணத்துடனான எல்லையில் காணப்படுகிறது. இந்நகரம் இலங்கையின் முக்கிய நதிகளில் ஒன்றான களனி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 52 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. இங்கிருந்து, அவிசாவளையை , அட்டன் வழியாக, மத்திய மாகாணத்தின் முக்கிய நகரமான நுவரெலியாவுடன் இணைக்கும் ஏ7 பெருந்தெரு ஆரம்பிக்கிறது. + +இந்நகரத்தின் நகரசபையின் உத்தியோகபூர்வப் பெயர் சீதாவாகை நகரசபையாகும். நகரைச் சூழவுள்ள கிராமிய பிரதேசங்கள் சீதாவாக்கைப் பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பெயர், இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டளவில் இப்பிரதேசத்தில் காணப்பட்ட சீதாவாக்கை இராச்சியத்தின் காராணமான வழங்கு பெயராகும். நகரத்துக்கு அருகில் பழைய இராச்சியத்தின் இடிபாடுகளை இப்போதும் காணலாம். + +இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 134 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். அவிசாவளை இலங்கையின் ஈரவலயத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் தென்மேற்கில் காணப்படும் ஏனைய பிரதேசங்களைப் போலவே, பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் பெருகின்றது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைச் சுற்றிக் காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். + +இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு: + +சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு: + + + + +ஆகத்து 16 + + + + + + + +ஏதோமிய மொழி + +ஏதோமிய மொழி அல்லது ஏதோம் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இது இன்றைய யோர்தான் நாட்டின் தென்மேற்கு பகுதி���ில் கிமு 1வது ஆயிரவாண்டுகளில் காணப்பட்ட ஒரு இராச்சியமாகும். இம்மொழியை பற்றிய தகவல்கள் பெரிதாக தெரியாது. இது கானானிய மொழிகளின் எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். கிமு 6வது நூற்றாண்டில் அறமைக் அகரவரிசைக்கு மாற்றமடைந்த்து. அரபு மொழியிலிருந்தும் பல விடயங்களை உள்வாங்கியது. + +விவிலியத்தின் படி ஏதோம் என்பது, ஈசாக்குக்கு அவர்மனைவி ரெபேக்காள் மூலம் பிறந்த இரட்டை குழந்தகளில் ஒருவரான ஏசாவின் மறுபெயாராகும். ஏதோமியர் ஏசாவின் சந்த்தியர் என்பதால் அவர்களும் எபிரேய மக்கள் என கொள்ளப்பட்டனர். இதன் காரணமாக மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நான்கு தெற்கு கானாகிய மொழிகளாகிய மோவாபிய மொழி, எபிரேய மொழி, அம்மோனிய மொழி, ஏதோமியா மொழி என்பன கூட்டாக சேர்த்து எபிரேய மொழிகள் என ஆய்வாளர்களால் அழைக்கப்படுவதுண்டு. + + + + + +இலங்கை வான்படை + +இலங்கை பாதுகாப்புப் படையின் ஒரு முக்கிய பிரிவு இலங்கை வான்படை ஆகும். இது 1951 ம் ஆண்டு பிரித்தானிய விமானப்படையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் இலங்கை வான்படையின் பங்கு முக்கியமானதாகும். + +இன்றைய இலங்கை வான்படையானது புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலிருந்தும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி குண்டுவீச்சில் பயன்படுத்தப்படுகின்றது. + +இலங்கை வான்படை10, 000 இற்கு மேற்பட்ட சிப்பாய்களைக் கொண்டுள்ளது. வானில் இருந்து நிலத்திற்குத்தாக்கும் இஸ்ரேலிய கிபீர் ரக விமானங்களுடன் ரஷ்ய எம் ஐ 29 ரக ஏனைய விமானங்களுடன் சண்டையிடும் விமானத்தையும் கொண்டுள்ளது. இது தவிர இந்தியாவில் இருந்து எம் ஐ 17 ரக உலங்குவானூர்திகள் (ஹெலிகாப்டர்) இந்தியாவில் இருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது. + + + + + +அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில் + +அய்யர்மலை இரத்தினகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. + +இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது. + + +ஓம் நமச்சிவாய ஓம் பகவான் ரத்தினகிரி திரு தலம் ஆகிய சுரும்பார்குழலி அம்மன் ஆலயம்ஆகிய இந்த ஐவர் மலை(என்ற)அய்யர் மலை ஓம் நமச்சிவாய எங்கும் சிலசமயம் +ராஜாங்கம். பெரியகுளம். தேனி மாவட்டம் + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: +"கால பாசம் பிடித்தெழு தூதுவர்" + +"பால கர்விருத் தர்பழை யாரெனார் " + +"ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் ". + +"சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. ". + +"விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்" + +"படுத்த போது பயனிலை பாவிகாள்" + +"அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை" + +"எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே" + +"நாடி வந்து நமன்தமர் நல்லிருள்" + +"கூடி வந்து குமைப்பதன் முன்னமே" + +"ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை " + +"வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.". + +"இரக்க முன்னறி யாதெழு தூதுவர் " + +"பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே " + +"அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் " + +"கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே" + + + + + + + +குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில் + +கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். +தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். + + +அரக்கன் தூம்ரலோசனன் என்பவனை அழிக்க அம்பாள் துர்க்கையம்மன் வடிவில் சென்றாள். அரக்கன் துர்க்கையுடன் கடுமையாக போர் செய்தான். அரக்கனிடமிருந்த வரத்தால் துர்க்கையின் பலம் குறைந்தது. அவள் சப்தகன்னியர்களை துணைக்கு அழைத்து போரிடச் செய்தாள். அரக்கன் அங்கிலிருந்து ஓட, அவனை துரத்தி சென்ற சப்த கன்னியர்கள் முனிவரை அரக்கன் என்று எண்ணி அழித்தனர். அதனால் கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. அத்த��சத்தினை நீக்க இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை வழிபட்டனர் சப்த கன்னியர். + +இத்தலத்தின் வரலாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார். + + + +பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்|திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது. + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +அப்பர் பாடிய தேவாரப் பதிகம் + + + + + + + + + +திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் + +திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும். + + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை" + +"கூறுசேர்வதொர் கோலமாய்ப்" + +"பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை" + +"ஆறுசேர்சடை அண்ணலே". + +"வேதர்வேதமெல் லாமுறையால்விரித்" + +"தோதநின்ற ஒருவனார்" + +"பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை" + +"ஆதியாய அடிகளே" + +"தோலுந்தம்மரை யாடைசுடர்விடு" + +"நூலுந்தாமணி மார்பினர்" + +"பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை" + +"ஆலநீழல் அடிகளே.". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"கரப்பர் கால மடைந்தவர் தம்வினை " + +"சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்" + +"பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்" + +"திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே" + +"பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்" + +"நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்" + +"சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்" + +"இட்ட மாயிருப் பாரை அறிவரே.". +Block quote + + + + + +உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் + +உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும். + + + +கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக அறியப்படுகிறது. + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்" + +"தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்" + +"இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்" + +"கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி " + +"முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்" + +"றார்த்தவனை அக்கரவம் ஆர மாக " + +"அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ" + +"தோலுந்தம்மரை யாடைசுடர்விடு" + +"டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்" + +"கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்" + +"காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் " + +"கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. " +சுந்தரர் பாடிய பதிகம் +"விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய் " + +"படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே" + +"கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற" + +"அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே." + +"சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே " + +"மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே " + +"கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற " + +"அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.". +Block quote + + + + +உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் + +உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும். + +உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. + + +சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான். + +உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த���த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. + +உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும். + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை" + +"உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்" + +"செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த" + +"பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே". + +"விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே" + +"நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்" + +"வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்" + +"அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே". + + + + + +திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் + +திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும். + +இத்திருதலம் தற்போது இப்பகுதி மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது. + + +வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு. + + +காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடி��ில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார். + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே" + +"றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்" + +"சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்" + +"குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே". + +"கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. " + +"சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்" + +"கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்" + +"பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.". + +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"மட்டு வார்குழ லாளொடு மால்விடை " + +"இட்ட மாவுகந் தேறும் இறைவனார் " + +"கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்" + +"சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே" + +"அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு" + +"சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்" + +"கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்" + +"திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை " + +"நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. " +இக்கோயிலின் குடமுழுக்கினை எதிர்நோக்கி புதிதாக 33 அடி உயர கொடி மரம் அமைக்கப்பட்டது. குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது. + + + + + +திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் + +திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள எட்டாவது சிவத்தலமாகும். + + +வந்தியச் சோழன் எனும் மன்னனுக்கு சிவபெருமான் அருள் பாலித்த திருத்தலம். + +இத்திருத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத்தலைவர்கள் முதலானோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளது அறியப்படுகின்றது. + + +திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் சன்னதி அமைந்துள்ளது + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்" + +"பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்" + +"குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த" + +"நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே". + +"மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்" + +"அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா" + +"தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்" + +"நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.". +பழைமையான ராஜகோபுரம் பகைவர்களால் இடிக்கப்பட்டுவிட்டதால் உழவாரப்பணிக் குழு அமைத்து பக்தர்களால் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. + + + + + +திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் + +திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும். + +இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது. + + + +மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.) + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் +"வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்" + +"ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை" + +"காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி" + +"நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் " + +"கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது " + +"ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் " + +"காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே" + + + + +திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் + +திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 10வது சிவத்தலமாகும். + +இத்தலத்தின் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. + +இக்கோயிலில் 4 சூன் 2017 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை பூசைகள் ஆரம்பிக்கப்பட்டன. + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்" + +"கமலத்தோன் றலையரிந்த கபா லியை" + +"உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை" + +"உணர்வெலா மானானை ஓசை யாகி" + +"வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை" + +"மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய" + +"திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய" + +"திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே". + + + + +சுதுமலை சிவன் கோயில் + +ஸ்ரீ விசாலாஷி அம்பாள் ஸமேத விசுவநாத ஸ்வாமி ஆலயம் இலங்கை, யாழ்ப்பாணம் மானிப்பாயிற்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் ஏழத்தாழ 300 ஆண்டுகாலமாகவுள்ள ஆலயமே இதுவாகும். ஆரம்பத்தில் விநாயகர் ஆலயமாக இருந்த இவ்வாலயம் பின்னர் விஷாலாட்சி ஆலயமாக மாற்றமடைந்தது. தற்போது இந்த ஆலயத்தில் மூன்று நேரப் பூசைகள் நடைபெற்று வருகின்றது. + + + + + +மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் + +மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், ப��ய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். + +இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தினை அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோரும் பாடியுள்ளனர். + +அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற சம்பந்தருக்கு நந்தியை விலகி நிற்குமாறு இறைவன் அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அப்பர் சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த தலமெனப்படுகிறது. + +பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை. + + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + +காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக் " + +"கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்" + +"பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர் " + +"அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே" + +"தோலுந்தம்மரை யாடைசுடர்விடு" + +"மாலினை மாலுற நின்றான் " + +"மலைமகள் தன்னுடைய" + +"பாலனைப் பான்மதி சூடியைப் " + +"பண்புண ரார்மதின்மேற் " + +"போலனைப் போர்விடை யேறியைப் " + +"பூந்துருத் திமகிழும்" + +"ஆலனை ஆதிபு ராணனை " + +"நானடி போற்றுவதே. " + + + + + +திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் + +திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரமன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது சிவத்தலமாகும். + +பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு. + +சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. + + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்" + +"கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்" + +"தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்" + +"வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே" + +"அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன்அரன் செய்கையைப்" + +"படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்" + +"முடிவுமாய்முத லாயிவ்வைய முழுதுமாயழ காயதோர்" + +"பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்" + +"தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்" + +"ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த" + +"கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே" + +"முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்" + +"கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்" + +"கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்" + +"அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே.". + + + + +திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில் + +திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. கௌதமர், இந்திரன் தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 13வது சிவத்தலமாகும். + +வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.) அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்சய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று. + + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்க���ள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + +தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் உள்ளது. +இத்தலம் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது. + +திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணத்திலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாற்றுக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். + + +திருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் : தஞ்சாவூர் + +திருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் : திருச்சிராப்பள்ளி + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்" + +"துப்ப னென்னா தருளே துணையாக" + +"ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்" + +"றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே." + +"பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து" + +"மறையும் ஓதி மயானம் இடமாக" + +"உறையுஞ் செல்வம் உடையார் காவிரி" + +"அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி" + +"மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா" + +"ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்" + +"செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே." + +"கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்" + +"இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்" + +"பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்" + +"துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.". +சுந்தரர் பாடிய பதிகம் +"அழல்நீர் ஒழுகி அனைய சடையும் " + +"உழையீர் உரியும் உடையான் இடமாம்" + +"கழைநீர் முத்துங் கனகக் குவையும்" + +"சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே." + +"ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட" + +"பேதைப் பெருமான் பேணும் பதியாம்" + +"சீதப் புனலுண் டெரியைக் காலும் " + +"சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.". + + + + +திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் + +திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமனும் வேதமும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 14வது சிவத்தலமாகும். + + + +திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்" + +"ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்" + +"தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்" + +"வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே." + +"செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்" + +"தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்" + +"வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்" + +"வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.". +திருநாவுக்கரசர் பாடிய பதிகம் +"கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது" + +"வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்" + +"செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி" + +"ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே." + +"பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான்" + +"முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன்னுயர்த்தான்" + +"கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி" + +"அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.". + + + + + +தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் + +தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை. + +இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறுப் பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்கலால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும். + +தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. + +திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). + +இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக "சுயம்பு" லிங்கமாக +காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 +ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற ��ிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது. + + +தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் இக்கோயிலின் நிர்வாகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் தினந்தோறும் காலை 7:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்" + +"தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்" + +"மன்னுமா காவிரி வந்தடி வருடநற்" + +"செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே." + +"ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்" + +"கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்" + +"ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்" + +"தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.". + + + + +புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் + +புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 16ஆவது சிவத்தலமாகும். + +சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஏழாவது தலமான இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும். + + + + + +இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்துமகாதேவர். இறைவி ஸ்ரீஅல்லியங்கோதை, சௌந்தரநாயகி. + + + + + + + + + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்" + +"போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்" + +"காலன்திற லறச்சாடிய கடவ��ள்ளிடங் கருதில்" + +"ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே." + +"பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை" + +"அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்" + +"கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்" + +"சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.". + + + + + +சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் + +சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும். + + +நுழைந்தவுடன் மரத்தாலான கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கருறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். சன்னதியில் நால்வர், சூரியன், பைரவர், சந்திரன், நாகங்கள், லிங்க பானம் ஆகியவை காணப்படுகின்றன. கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சன்னதி தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இடப்புறம் தேவநாயகி அம்மன் சன்னதி உள்ளது. + + +இத்தலத்திலுள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச் சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன. + +இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: + +திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் +"படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை" + +"உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்" + +"விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்" + +"சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே." + +"வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்" + +"அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்" + +"கந்தமார் மலரொடு காரகில் பன்மணி" + +"சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.". + + +