diff --git "a/train/AA_wiki_26.txt" "b/train/AA_wiki_26.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_26.txt" @@ -0,0 +1,3108 @@ + +இசுரேல் + +இசுரேல் ("Israel", ; ; , , அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; , ) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது. இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது. + +29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின் செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது. அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன. அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது. இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது. இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. + +இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட, எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடம��கவும் தலைநகராகவும் உள்ளது. இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள், ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது. + +இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு. இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும். 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர். + +1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" ("மெதிநாத் யிஸ்ராஎல்") என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் இசுரேல் தேசம், சீயோன், யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன. இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது. + +இசுரேல் தேசம், இசுரயேலின் பிள்ளைகள் ஆகிய பெயர்கள் விவிலிய இசுரயேல் அரசு பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது. இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய யாக்கோபுவை ( ', '; "இஸ்ராயல்"; "கடவுளுடன் போரிட்டவர்") குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்க��� கிடைத்தது. யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் "இசுரேலின் பனிரெண்டு குலங்கள்" அல்லது "இசுரயேலின் பிள்ளைகள்" எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர். மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது. + +இது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது. + +தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள் நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர். விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது. முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். + +வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. பபிலோனியா வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது. + +பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் ச��றிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. + +இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர். + +தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு") என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார். + +சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது. + +முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள். + +1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாக���ும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர். + +1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது. + +பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர். + +பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின. + +1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், ப��ரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது. + +இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது. + +பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது. + +இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது. + +போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன�� , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன. + +பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது) + +யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர் + +1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது. + +1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார். + +1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர். + +மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடம���ருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது. + +1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது. + +1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார். + +1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. +1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது. + +அக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது. + +1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது. + +1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்த்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. + +சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது. + +1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது. + +1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார். + +வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர். + +1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு ம��்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்.. + +தேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது. + +முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கர வாதத்தை புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார். + +ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார். + +இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன. + +1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்���ுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை. + +1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்). + +2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன. ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. . + +இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு. + +இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார். + +இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்.. யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்ப��ரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர். + + + + + + + + +நேர்மையான பணியாள் உவமை + +நேர்மையான பணியாள் இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இது விவிலிய நூல் அல்லாத தோமஸ் நற்செய்தியிலும் காணப்படுகிறது. , , மற்றும் தோமஸ் 21 இலும் இவ்வுவமையை வாசிக்கலாம். + +ஒருவர் நெடு பயணம் ஒன்று செல்லும் போது தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறப் பணியாள் ஒருவரை அமர்த்திச் சென்றார். தலைவர் திரும்பி வரும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அறிவாளியாவான். அவன் பேறு பெற்றவன். ஏனெனில் தலைவர் அவனை தம் சொத்துக்கெல்லாம் அதிகாரியாக பணிப்பார். + +அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் எண்ணி தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். + +இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. இயேசு கூறியவற்றை அவர் திரும்ப வரும் போது செய்துகொண்டிருபோரே அறிவாளிகளாவார்கள் என்பது பொருளாகும். இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம். மனித குமாரன் (இயேசு) வரும் நேரத்தை அறியாத படியால் விழித்திருங்கள் (அவது போதனைப் படி நடவுங்கள்) என்பது இவ்வுவமையின் அடிப்படையாகும். + + + + + + +செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை + +செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார். இது இல் காணப்படுகிறது. +ஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார். +செம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். வலை உவமையுடன் ஒத்த பொருளைக் கொண்டுள்ளது. தெளிவான பொருள் பின்னுரையில் காண்க. +உவமையோடு தொடர்ந்து இயேசு உலக முடிவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகின்றார். இதனை பின்வருமாறு சுருக்கலாம். + +பின்பு இயேசு தம் வலப்பக்கத்தில் (நீதிமான்கள்) உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, நீங்கள் என்னோடு வாருங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் . நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். அதற்கு நேர்மையாளர்கள்"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு,"மிகச் எழியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார். + +பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார். + +அதற்���ு அவர்கள்,"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். + + + +தமிழ் கிறிஸ்தவ சபை + + + + +வே. தில்லைநாயகம் + +"வேதி" என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர். + +தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார். + +சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 - 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார். + +மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர்.. 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்ற�� பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் (1949 சூலை 18 - 1962 திசம்பர் 12 பிற்பகல்) ஆனார். 1962 திசம்பர் 12 பிற்பகலில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 சூலை 31ஆம் நாள் பிற்பகலில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆகத்து 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். + +நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர். + +ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாகத் தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும். + +"இந்திய நூலக இயக்கம்" என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. + +வேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரவுகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை."இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. "இந்திய அரசமைப்பு" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது. + +இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும். + +முதியோர் கல்வி மடல்: + + +நூலகவியல்: + +இந்தியத் தொகை வரிசை: + +அரங்கநாதன் வரிசை: + +வாழ்க்கை வரலாறு: + +அறிவியல்: + +நிலவரைவியல்: + +தமிழியல்: + +ஆண்டு நூல் (Year Book) + +நூற்பட்டியல்கள் + + + +வே. தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தேனி மாவட்டம் கம்பம் நகரில் மரணமடைந்தார். + +வே. தில்லைநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை "வேதி: வாழ்வும் சிந்தனையும்" என்னும் தலைப்பில் கனக அரிஅரவேலன், நிரஞ்சனா அருள்வேலன் ஆகியோர் நூலக எழுதி 2017 ஆகத்து 6ஆம் நாள் சின்னமனூரில் வெளியிட்டனர். + +தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறையின் சின்னமனூர் கிளையில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வே. தில்லைநாயகத்தின் படத்தை விருபா.காம் நிறுவுநர் து. குமரேசன் திறந்து வைத்தார். + + + + + +கோதுமையும் களைகளும் உவமை + +கோதுமையும் களைகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது இல் காணப்படுகிறது. இது பூமியில் உள்ள பாவ வழியில் செல்வோர் மீது கடவுள் காட்டும் பொருமையை விளக்குகிறது. + +பண்ணையாளர் ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய பணியாள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. பண்ணையாளரின் பணியாளர்கள் அவரிடம் வந்து," ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர்," இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம்," நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?"என்று கேட்டார்கள். அவர்,"வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம்," முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார். + +இங்கு பண்ணையாளர் இயேசுவாகும் பணியாளர் தேவதூதர் ஆவர். கோதுமை நீதிமான்கள் களைகள் பாவிகளையும் குறிக்கிறது. இது உலகின் முடிவில் நடக்க இருக்கும் நீதிமான்களை பாவிகளிடமிருந்து பிரிக்கும் நிகழ்வை விளக்க��கிறது. இங்கு களைகளும் இறுதி நாள் வரை விடப்படுகிறது இதன் மூலம் கடவுள் பாவிகளுக்கு இறுதிநாள் வரை மனம் மாற சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்துள்ளார் என்பதை குறிக்கிறது. + +மேலும் இது தனி மனித நோக்கில் பண்ணை ஒரு மனிதனின் இதயத்துக்கும் கோதுமை நல்லெண்ணங்களுக்கும் களைகளை தீய எண்ணத்துக்கும் ஒப்பிடலாம். மேலும் இங் பகைவன் எனப்படுவது அலகையை குறிக்கும். + + + +தமிழ் கிறிஸ்தவ சபை + + + + +அகப்பேய்ச் சித்தர் + +அகப்பேய்ச் சித்தர் தமிழ் நாட்டுச் சித்தர்களில் ஒருவர். பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்படுபவர். இவரது வரலாறோ அன்றிக் காலமோ இதுவரை துணியப்படவில்லை. + +அகப்பேய்ச் சித்தர் பாடல் என இவர் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தத்துவஞானத்தை உருவகத்தில் பாடியவர். "அகப்பேய்" என்ற விளி பாடல் தோறும் காணப்பெறுவதால் "அகப்பேய்ச் சித்தர்" என இவர் பெயர் பெற்றிருக்கலாம். மனதைப் பேயாக உருவகம் செய்து பல பாடல்களில் அறிவுரையும் உபதேசமும் செய்கிறார். ஆதலால் இவர் அப்பெயரைப் பெற்றதாகவும் கூறுவர். + + + + +அகப்பேய்ச் சித்தர் பாடல் + +அகப்பேய்ச் சித்தர் பாடல் அகப்பேய்ச் சித்தர் என்பவரால் பாடப்பெற்றது. அகப்பேய் எனும் விளியுடன் தொண்ணூறு பாடல்களையுடையது. தத்துவக் கருத்துகளைக் குறிப்புப் பொருளாக அமைத்துப் பாடிய பாங்கினை அகப்பேய்ச் சித்தர் பாடல் காட்டுகின்றது. + +கருத்து: + + + + + +மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் + +1991 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கமைக்கும் அலுவலகமானது ஆரம்பிக்கப் பட்டது. ஐக்கிய நாடுகளின் உதவியை சிக்கலான அவசரமான நேரங்களிலும் மற்றும் இயற்கை அநர்த்தங்களிலும் மனிதாபிமானப் பணிகளிற்கான பகுதியொன்றைத் உருவாக்கி 1972 இல் உருவாக்கப் பட்ட ஐக்கிய நாடுகளின் அநர்த்தன உதவி ஒருங்கமைப்பாளரை மாற்றியமைத்தது. மனிதாபிமானப் பணிகளை ஒருங்கமைக்கும் அலுவலகமானது 1988 இல் மனிதாபிமானத்திற்கான பணிகள் பிரிவை மீளமைத்தபோது பெரும்பாலான அநர்த்தங்களில் இதன் பணிகள் முக்கியமாகியது. + +இலங��கையில் சுனாமி அநர்த்தத்தைத் தொடர்ந்து இவ்வமைப்பானது அலுவலகங்களை கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் திறந்துள்ளது. யாழ்ப்பாணத்திலும் இவ்வமைப்பானது அலுவலகம் ஒன்றைத் திறக்க உள்ளது. ஏனைய ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுக்கு உதவியாக மனிதாபினப் பணிகளிற்குதவும் தேசப்படங்கள் போன்றவற்றைத் தயாரித்து இலவசமான விநியோகித்து வருகின்றனர். + + + + + +முடத்திருமாறன் + +முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை. + +இவனது பாடல்கள் சொல்லும் செய்தி +இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான். +குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை. + +பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்து இடைவழியில் தன் காதலி தன் பிரிவால் படும் முன்பத்தை எண்ணுகிறான். கலங்குகிறான். +இலவமரத்து முள்ளைப் பற்றி ஏறிய கொடி, உலர்ந்து போனதை, கொடிய காற்று வீசி அதிரச் செய்யுமாம். அந்த வழி மூங்கில் காடுகள் நிறைந்ததாம். விரைந்து நடக்கும் யானைக் கூட்டமே இந்த வழியில் நடக்கும்போது துன்புறுமாம். நீரோ, நிழலோ இல்லையாம். (இப்படிப்பட்ட வழியில் இன்னலுறும்போது தலைவன் தன் தலைவியை நினைக்கிறான்) + +தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவன் காதில் விழுமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள். +அவன் தன் இன்பத்தை மட்டுமே நினைக்கிறான். நம்மீது அவனுக்கு அருள் இல்லை. இருந்தால் அவன் நம்மைத் துன்புறச் செய்வானா? + +அவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை நினைக்கும்போது நமக்குத் துன்பம். மழை கொட்டித் தீர்த்த நள்ளிரவில் வருகிறான். கண்ணே தூர்ந்துபோகும் நள்ளிருளில் வருகிறான். + +கானவன் எய்த அம்பு பட்டு வெறிகோண்ட யானை எழுப்பும் ஒலி காதில் விழாதபடி அருவி ஒலிக்கும் நாட்டை உடையவன் அவன். (நம் சொல் அவன் காதில் விழுமா? என்பது தோழி சொல்லும் உள்ளுறை|உட்கருத்து). + + + + +வடிம்பலம்ப நின்ற பாண்டியன் + +வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். + +பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. + +மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது. காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. +வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. +கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 +கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 +எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 +என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம். + + + + +மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள் + +மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள் மைக்ரோசாப்டினால் இணையமூடாக நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். + +மைக்ரோசாப்டினால் சான்ற��தழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள் (MCP) ஆவதற்கு ஆகக் குறைந்தது மைக்ரோசாப்டின் ஓர் பரீட்சையிலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். + +MCP பல்வேறு பட்ட பல்வேறு துறைகளில் சான்றிதழ் அளித்து வருகின்றது. இவ்வாறு சான்றிதழ்களைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக பல பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும். பிரபலான சான்றிதழ்களாவன MCP, மைக்ரோசாப்ட் சான்றிதழ் அளிக்கப் பட்ட சிஸ்டம் பொறியியலாளர்கள் (எஞ்ஜினியர்ஸ்), மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப் பட்ட தகவற் தள நிர்வாகிகள் போன்றவையாகும். இதுபற்றிய விபரங்களை மைக்ரோசாப்டின் உத்தியோகபூர்வ கல்விகற்கும் இணையத்தளத்தில் பார்வையிடலாம். + +சிலவேலைகளிற்குப் பெரும்பாலும் இயங்குதளம் தொடர்பாக அறிவதற்கு MCP சான்றிதழ்களை விரும்புகின்றார்கள். இதனைப் போன்றே பிரபலமான நிறுவனங்களான சண்மைக்ரோ சிஸ்டம், ரெட்ஹட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன. + +அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரீட்சைக் கட்டணமானது 125 அமெரிக்க டாலர்கள் ஆகும். இலங்கையில் இதன் பரீட்சைக் கட்டணமானது 50 டாலர்கள் ஆகும். இப்பரீட்சையானது 2-3 மணித்தியாலங்கள் நீடிக்கும் இதில் 50 முதல் 90 வரையான கேள்விகளிற்கு விடையளிக்க வேண்டும். இதில் பல்தேர்வு வினாக்கள், இழுத்துக் கொண்டு போடுதல் (drag and drop), தீர்வுகளை உருவாக்கும் வினாகள் அடங்கியிருக்கும். + +மைக்ரோசாப்ட் அக்டோபர் 2005 இல் அதன் பரீட்சைகளை மீள் புனருதாரணம் செய்து மூன்று படிகளூடான பரீட்சையாக மாற்றியமைத்தது. + +மைக்ரோசாப்ட்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட சிஸ்டம் பொறியியலாளர்கள் (MCSE) இதுவே மைக்ரோசாப்டின் நன்கு பிரபலான தேர்வாகும். இத் தேர்வானது வர்தகத் தேவைகளைக் கண்டறிந்து அலசி ஆராய்ந்து, தீர்வுகளை வடிவமைத்து நடைமுறைப் படுத்துவதாகும். 2006 ஆம் ஆண்டுப் படி MCSE பரீட்சைகள் விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இரண்டு பாதைகளூடாக இருவேறு பட்ட பரீட்சைகள் மூலம் அடையலாம். + +MCSE 2003 இல் 6 முக்கியமான பரீட்சைகளுடன் (4 வலையமைப்புத் தொடர்பான, ஓர் கிளையண்ட் இயங்குதளம் மற்றும் ஓர் வடிவமைப்புத் தேர்வு) அத்துடன் ஓர் விருப்பத்திற்குரிய தேர்வு. MCSE 2000 இல் 5 முக்கியமான தேர்வுகளுடன் (4 இயங்கு தளம் தொடர்பான பரீட்சைகளுடன் 1 வடிவமைபுப் பரீட்சை) மற்றும் 2 விருப்பத்திற்குரிய தேர்வுக���ில் சித்தியடைய வேண்டும். + +மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பிரயோகங்களை விருத்தி செய்பவர் (MCAD) ஓர் ஆரம்பகட்ட நிரல்லாக்கரின் சான்றிதழாகும். பெரும்பாலானவை மைக்ரோசாப்டின் .நெட் (Microsoft .NET) அபிவிருத்தி தொடர்பானதாகும். + +மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தீர்வுகளை விருத்தி செய்பவர் (MCSD) சான்றிதழே மைக்ரோசப்டின் நிரலாக்கலில் வழங்கப் படும் அதியுயர் சான்றிதழாகும். + +சிஸ்கோ தொழில்நுட்ப தேர்வுகள் + + + + +புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு + +சர்வதேசக் குடியேற்ற அமைப்பு (International Organization for Migration (IOM) 1951 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரினால் குடிபெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குகளானது விரிவுபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பல்லவெனினும் பல்வேறு நாடுகள் இவ்வமைப்புடன் சேர்ந்தியங்கி வருகிறது. + +1990 களில் இலங்கை இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95,000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் கொழும்பில் மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. சுனாமியை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது. + + + + + +இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) + +இம்சை அரசன் 23ம் புலிகேசி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன் முதலாக நடித்த இத்திரைப்படத்தினை சிம்புதேவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நாசர், ஸ்ரீமன், இளவரசு, மோனிக்கா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். + +18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியாபார நோக்கில் இந்தியாவிற்கு வந்த பிரித்தானியர்கள் பிறகு முழு இந்தியாவையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர். இதன் போது கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை போன்றோர் பிரித்தானியருக்கெதிராக போரிட்டு வந்தனர். சிலர் சாவையும் எய்தினர். எனினும் சில பாளையக்காரர��கள் என்றழைக்கப் பட்ட குறுநில மன்னர்கள் பிரித்தானியருக்கு உதவி வந்தனர். அவ்வாறு பிரித்தானியருக்குச் சார்பாகச் செயற்படும் ஒரு குறு நில மன்னனை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது. + + +1771ஆம் ஆண்டில் சோளபுரத்தில் இத்திரைக்கதை தொடங்குகிறது. சோளபுரத்தின் மொக்கையப்பர் மன்னருக்கும் (நாகேஷ்), அரசிக்கும் (மனோரமா) 22 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. அதற்கு பின்னர் 23 வது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் அரசியின் சகோதரனான மாயன் (நாசர்) குழந்தைகளின் சோதிடத்தைக் கணித்து சொற்புத்தியுடையதாகக் கணிக்கப்பட்ட முதலாவது குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டு சுயபுத்தியுடையதாகக் கணிக்கப்பட்ட இரண்டாவது குழந்தையை, அதன் பெற்றோருக்குத் தெரியாமல் நாட்டின் எல்லையில் உள்ள வைகை ஆற்றில் விட்டுவிட கட்டளையிடுகிறார். + +ஆற்றில் விடப்பட்ட குழந்தையை பிள்ளைகள் இல்லாத மருத்துவரின் மனைவி கண்டெடுத்து உக்கிரபுத்திரன் எனப் பெயரிடப்பட்டு வளர்கின்றார். மற்றொரு குழந்தை அரண்மனையில் 22 குழந்தைகளுக்குப் பின்னர் 23 ஆவதாக உயிருடன் பிறந்ததாலும் ஹைதர் அலியைச் சந்திக்கச் சென்றபோது புலிகேசிநாதனை வேண்டித் தவமிருந்து பெற்றதால் 23ஆம் புலிகேசி எனப் பெயர் சூட்டப்படுகிறது. தந்தையின் இறப்பிற்குப் பிறகு புலிகேசி அரசனாகிறார். தனது மாமன் பேச்சுக்கிணங்க பிரித்தானியரிடம் கூட்டு வைத்துக்கொள்கிறார். உக்கிரபுத்தன் வட இந்தியா சென்று கல்வி கற்று பின்னர் பிரித்தானியருக்கும் அவர்களுக்கு துணைச்செய்யும் அரசருக்கும் எதிராக தேசப்பற்று படையொன்றை அமைக்கிறார். + +தளபதி அகண்டமுத்து வெள்ளையருக்கு மன்னர் இவ்வாறு உதவி செய்வதனை விரும்பாமல் வீரத்தமிழர்கள் குட்டக் குட்டக் குனியக் கூடாது என்ற பொருள்படப் பேசுகிறார். மன்னரோ எவற்றையும் பொருட்படுத்தாது எடுத்தெறிந்து பேசுகிறார். +நிக்ஸன் துரையைத் தாக்கியவன் அசல் புலிகேசி போன்றே இருப்பதாகவும் குறிபார்த்துக் தாக்கியதாகவும் மன்னனுக்குச் செய்தி கிடைக்கிறது. மன்னனின் பக்கத்தில் இருப்பவரோ குறிபார்ப்பதற்கும் மன்னருக்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை உளறுகிறார். இந்நிலையில் ஜாதிப்பிரச்சினை அரண்மைக்கு வருகின்றது. இரு குழுக்க��் ஓர் குழு நாகபதினி ஜாதியையும் இன்னோர் குழு நாகப்பதினி ஜாதியையும் சேர்ந்தாகவும் தாங்களே மூத்தகுடிமக்கள் என்று இரு குழுக்களும் மோதுகின்றன. நிறுத்துமாறு கோரிய மன்னர் புதிதாக ஓர் மைதானம் ஒன்றை இரவோடிரவாக ஆரம்பித்து முடிக்குமாறு ஆணையிடுகிறார். அங்கேதான் ஜாதிச் சண்டைகள் நடைபெறும் என்று அறிவிப்புகள் விடுகிறார். + +மைதானத்தைத் திறந்து ஆரம்பிக்கையில் ரிபனை இக்காலக் கத்திரிக்கோல் கொண்டு திறப்பது சற்றே முரணாகவே இருந்தாலும் கதை தொடர்ச்சியாக சுவாரசியமாகவே செல்கின்றது. உக்கரபுத்திரன் வழிப்பறி நடைபெறுவதைத் தூரத்தில் இருந்து அவதானிக்கின்றார். இவ்வழிப்பறியில் தன்னைப் போன்றே இருந்த மன்னரே ஆதரவு வழங்குவதைப் பார்க்கிறார். உக்கிரபுத்தரன் வீட்டில் இதைச் சொல்ல அதன்பிறகு அவரின் தந்தை உக்கிரபுத்திரனின் உண்மைக் கதையைக் கூறுகிறார். + +படையெடுத்து வரும் மன்னரிடம் வெள்ளைக் கொடிகாட்டி 23ஆம் புலிகேசி தப்பிக்கின்றார். பின்னர் இந்த ஊரில் புரட்சிப் படை ஒன்று உருவாகியுள்ளதாகக் கேள்விப் படுகிறார். சிறுவன் கொணர்ந்த போதைப் பொருள் கலந்த இளநீரை மன்னர் கேட்காமல் அருந்தி விடுகிறார். தளபதியோ மன்னரைத் தீர்த்துக் கட்டும் எண்ணத்துடன் போதைப் பொருள் கலந்த இளநீரை குதிரைகளுக்கு வழங்கியிருந்தார். குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடி உக்கிரபுத்திரன் வசிக்கும் இடத்தில் 23ஆம் புலி கேசி வீழ்கிறார். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய உக்கிரபுத்திரன் ஆள் மாறாட்டம் செய்கிறார். வழியில் தளபதி அனுப்பிய ஆட்களைப் பந்தாடிவிட்டு யார் அனுப்பியது என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார். + +மன்னர் அரண்மனைக்கு வந்ததும் கட்டியம் கூறுபவனை எளிமையாக மன்னர் வருகிறார் என்று மட்டும் கூறினால் போதும் என்றார். அதன் பின்னர் அக்காமாலா கப்சி பானங்களை விற்கும் வெள்ளையர்கள் இலாப பங்கினைக் கொண்டுவந்தபோது அதன் தயாரிப்பு விலை 2 சதம் என்றும் விற்பனை விலை 10 சதம் என்றும் கூறுகிறார். + +தளபதி சந்தர்பத்தை தவறவிட்டதாக விட்டதாக வருந்திபோது உக்கிரபுத்திரன் வருகிறார். தளபதி மன்னனின் போரியற் கலைகளைக் கண்டு வியக்கிறார் அப்போது தான் புலிகேசியல்ல என்றும் தான் உக்கிரபுத்திரன் என்றும் இயம்புகிறார். தனது அண்ணாவை பாதாளச் சிறையில் அடைத்துவிட்டதாவ��ம் இந்த இரகசியத்தை வெளியில் விடவேண்டாம் என்று மன்னர் வேண்டுகிறார். + +நிக்ஸன் துரை அரண்மனைக்கு வரிப்பணம் வாங்க வந்தபோது அவரை அடித்துக் கலைத்து விட்டுகிறார். சோதிடரோ அரண்மனையில் உண்மையை உளற புலிகேசியும் உண்மையை ஒட்டுக் கேட்கின்றார். உண்மையை உணர்ந்து இருவரும் இணைகின்றனர். சோதிடரும் ஆருடம் கணித்தபோது இருவரும் பின்னாளில் இணைவர் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கிறார் + +பின்னர் இருவரும் இணைந்து நாட்டை மீளமைக்கின்றனர். திருமணப்பந்தத்தில் 23ஆம் புலிகேசி மற்றும் உக்கிரபுத்திரன் ஆகியோர் 10 புதிய கட்டளைகளுடன் முடிவடைகின்றது. + + + + + +அடோனிஸ் + +அலி அஹமது செயித் (ஆங்கிலம்:Ali Ahmed Said, பிறப்பு:1930) அல்லது பிரபலமாக பேனைப் பெயர் அடோனிஸ் ஒரு சிரிய கவிஞர் ஆவார். + +1950 இல் டமஸ்க்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1956 இல் லெபனானுக்கு நாடுகடத்தப்பட்டார். 1957 இல் லெபனியக் கவிஞர் யூஸுஃவ் அல்-க்ஹால் (Yusuf al-Khal) என்பவருடன் இணைந்து ஒரு பதிப்பகத்தை நிறுவினார். 1968 இல் மௌஃவிகிஃவ் (Mawfiqif) என்னும் அரபுக் கவிதைச் சஞ்சிகையத் தொடங்கினார். + +மஹ்மூட் தர்வீஷ், அடோனிஸ், சமிஹ் அல் காசிம் (Samih al Qusim) ஆகிய மூவரது கவிதைகளையுங் கொண்ட தொகுதியின்று 'ஒரு தேசப்படத்திற்குப் பலியானோர்' (Victims of a Map) என்ற தலைப்பில் 1984 இல் வெளியானது. அடோனிஸின் கவிதைகளிற் சில சி. சிவசேகரத்தால் மொழிபெயர்க்கப்பட்டு பாலை என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக 1999 இல் வெளிவந்தது. + + + + +கண்டராதித்தர் + +கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை. + +கண்டராதித்த��ின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார். + +கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார். + + + + + +அமர்ந்தியங்கும் வாழ்முறை + +அமர்ந்தியங்கும் வாழ்முறை என்பது வழமையான உடற்பயிற்தி தரும் செயற்பாடுகள் அல்லாத வாழ்முறையைக் குறிக்கின்றது. இந்த வாழ்முறைக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு தொழில் புரிவது, பொழுது போக்குவது, மற்றும் வாழ்வின் பிற கடமைகளைச் செய்கின்றார்கள். கணினி, தொலைக்காட்சி, தொலைதொடர்பு போன்ற புதிய அல்லது புதுவரவுத் தொழில்நுட்ப வசதிகள் உட்கார் வாழ்முறையை ஏதுவாக்கின்றன. மேற்கத்தைய நாடுகளிலேயே இவ்வாழ்முறை மிகவும் ஆழமாக பரவிவருகின்றது. + +மேலும், இவ்வாழ்வுமுறையில் இருப்போர் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் தகுந்த முக்கியத்துவம் அல்லது அக்கறை தர வேண்டும் எனவும் இல்லாவிடில் உடல்நலம் குன்றும் அளவுக்கும் உடல் பருமன் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.. +அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு நடுவணகம் அண்மையில் வெளியிட்ட செய்தியின் படி 44 மில்லியன் அமெரிக்கவாழ் மக்கள் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றார்கள் என்றும், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் வரையிலும் ஆன கால இடைவெளியில் கணக்கிட்ட புள்ளிவிவரத்தின் படி உடல்பருமானவர்கள் எண்ணிக்கை 74% உயர்ந்துள்ளது . +. ஒருவருடைய உயர எடைக் குறியெண் 30க்கும் அதிகமாக இருந்தால் அவர் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர் எனக்கொள்ளப்படும். + + + + +சுந்தர சோழன் + +இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் ப���ரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான். + +கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான். +சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான். + +காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது. + +தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது. + +சுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் இராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான். +வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இம்மன்னனின் புகழைக் கூறும்போது, அபிபெருமன்னன் பழையாறைத் திருக்கோயிலில் இருந்த இந்திரன், சூரியதேவன் ஆகிய திருமேனிகளுக்கு யானையையும், 7 குதிரைகளையும் (வாகனங்களை) அளித்ததோடு சிவபெருமான் திருவுலாக் காண்பதற்காக பல்லக்கினையும் அளித்தான் என்று கூறுகிறது. + + + + + +அறிவு + +அறிவு "(Knowledge)" அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல். + +அறிவு என்பது ஒரு பொருள் சார்ந்த கோட்பாட்டு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கலாம். இது மறைமுகமானதாகவோ (செயலாக்கத் திறன் அல்லது நிபுணத்துவம் போன்றது) அல்லது வெளிப்படையானதாகவோ (ஒரு கருத்தின் கோட்பாட்டைப் புரிதலைப் போல) இருக்கலாம். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது மரபுசார்ந்த்தாகவ�� அல்லது திட்டமிட்ட முறைப்படியானயானதாகவோ இருக்கலாம். + +தத்துவத்தில், அறிவைப் பற்றிய ஆய்வு என்பது ஒளிர்வுக் கோட்பாடு (epistemology) என்று அழைக்கப்படுகிறது. மெய்யியலாளர் பிளேட்டோ (Plato), அறிவை "நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை" என்று வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார். கெட்டியர் (Gettier) பிரச்சினைகள் சிக்கலாக இருப்பதால், இப்போது சில தத்துவவாதிகள், பகுப்பாய்வுக் கருத்துகளின் அடிப்படையில், பிளாட்டோனிக் வரையறையை எதிர்க்கின்றனர். இருப்பினும் சிலர் இதை ஏற்றுக்கொள்கின்றனர். + +அறிவைப் பெறுதல் நிகழ்வானது பின்வரும் சிக்கலான அறிவாற்றல் செயல்முறைகளை உள்ளடக்கியது: + +மெய்யியல் துறையில் ஒளிர்வுக் கோட்பாடு பற்றி தத்துவவாதிகளிடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம் சார்ந்த ஒரு விஷயமே அறிவின் வரையறை ஆகும். இந்த மரபார்ந்த  வரையறை பிளாட்டோவால் ஆதரிக்கப்படவில்லை + +அதே சமயத்தில் அறிவு என்பது மனிதர்களிடமிருந்து பெறும் ஒப்புதலுக்கான திறனுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. + +ஒரு அறிக்கையினை பின்வரும் மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ஆய்ந்து, "அறிவுக் கருத்தை" உறுதி செய்ய வேண்டும். என்று குறிப்பிடுகிறது: +கெட்டியர் ஆய்வுக் கூறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்தி, சிலர், இந்த நிலைமைகள் மற்றும் சீர் கட்டுவரம்புகள்  போதாதென்று கூறுகின்றனர், + +இதைச் சார்ந்து முன்மொழியப்பட்ட பல மாற்றுகள் உள்ளன. + + ராபர்ட் நோஸிக்(Robert Nozick) வாதங்கள்: 'அறிவு என்பது உண்மையைக் கண்காணிக்கும்' + +சைமன் பிளாக்பர்னின் (Simon Blackburn): நிறைவுறா நிலை, பழுது தொழில், தோல்வி.பொன்றவற்றில் ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை எட்டியவர்கள் அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது தவறு. + +ரிச்சர்ட் கிர்கம் (Richard Kirkham) வழங்கிய அறிவு பற்றிய வரையறை: சான்றுகளை உறுதிப்படுத்தி, நம்பிக்கை பெறுவதற்கு அதன் உண்மை அவசியமாகிறது. + +மூரின்(Moore) ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும், முரண்படாத உண்மைகள் பற்றி லுட்விக் விட்கன்ஸ்டைன் (Ludwig Wittgenstein) கருத்து, ஒருவர் சொல்லக்கூடிய வாக்கியங்கள்: +இவை முற்றாக மாறுபட்டுள்ள தெளிவாகத் தோன்றுகிற மனநிலைகள் பொது மனநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக தண்டனைக்குத் தீர்வு காண்பதற்கான வேறுபட்ட வழிகளாகும் என்று அவர் வாதிடுகிறார். இங்கே வித்தியாசமாக இருப்பது பேச்சாளரின் மனநிலை அல்ல. ஆனால் அவர்கள் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளில் தான் மாறுபாடுகள் உள்ளன. + +"அறிவு" என்பது "கருத்துகளின் தொகுப்பு" என மீண்டும் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது எந்த வரையறையிலும் போதுமான அளவு பதிவதாகவோ அல்லது பொருந்துவதாகவோ இல்லை. + +அறிவு சார்ந்த, ஆரம்பகால மற்றும் நவீன கோட்பாடுகள், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக்ஸின் (John Locke) செல்வாக்குள்ள பட்டறிவுடன் கூடிய துய்ப்பறிவுக் கொள்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவர்கள், அறிவு, விரும்பிய எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ, ஒப்புருவாக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள். + +ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது தருணம் அல்லது நிலைமையைப் பற்றி கொண்ட அறிவு சூழ்நிலை அறவு எனப்படுகிறது. + +சன்ட்ரா ஹார்டிங் (Sandra Harding) பரிந்துரைத்த, "பின்வருநர் எனப்படும் பின்னவரின் அறிவியல்" என்ற தொகுப்பில் வழங்கப்பட்ட பெண்ணிய அணுகுமுறைகளின் நீட்டிப்பாக டோனா ஹாராவே(Donna Haraway)வால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவுக்கூறு ஆகும். இது உலகில், போதுமானநிலை உடைய, வளம் மிகுந்த, மேம்பட்ட கோட்பாடு ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நுண்ணாய்வுடைய அறிவுடன், நன்றாக வாழ வழி செய்கிறது. + +எல்லாநிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தன்வயப்பட்ட, நம் உறவுகள், பிற உறவுகள், மற்றவர்கள் நம் மீது செலுத்தும் மேம்பட்ட செல்வாக்குடன் கூடிய ஆதிக்க நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள், பொறுத்தமற்ற சமமற்ற சிறப்புரிமை சலுகைக் கோரல்கள், கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றை சரி செய்து முன்னேறுவது குறித்து விரித்துரைக்கப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றது. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகை���ளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது. + +இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம். + +தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான Knowledge என்ற வார்த்தை கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்தாம் புலன் (Five Sense), ஆறாம் புலன் (Sixth Sense) என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த புலன் "sense" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம். + +ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும், ஒரே அளவினதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம். + +எழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் முறைப்படி கற்றுக்கொள்பவர்களும், பெற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உள்ளனர். + +ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவு ஆகும். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும். + +பட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு + +அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். + +இந்த அறிவைப் பெறும் வழிகள்: + +நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ, அறிவைப் பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும். + +ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). + +ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது. + +ஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி, அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை + +பட்டறிவு + + + + +காந்தப்பாயம் + +இயற்பியலில், குறிப்பாக மின்காந்தவியலில்,மேற்பரப்பொன்றினூடாகப் பாயும் காந்தப்பாயம் (பொதுவாக அல்லது எனக் குறிக்கப்படும்.) என்பது அம்மேற்பரப்பினூடாகச் செல்லும் காந்தப் புலம் B யின் செங்குத்துக் கூறின் மேற்பரப்புத் தொகையீடாகும். காந்தப்பாயத்தின் SI அலகு வெபர் (Wb) ஆகும். (வழிக்கணியங்களில், வோல்ற்று-செக்கன் ஆகும்.) CGS முறையில் இதன் அலகு மக்சுவெல் ஆகும்.காந்தப்பாயம் வழமையாக பாயமானியினால் அளக்கப்படும். இது அளவிடும் கம்பிச்சுருளொன்றைக் கொண்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்ட இலத்திரனியல் உபகரணம், கம்பிச்சுருளில் ஏற்படும் அழுத்த வித்தியாச மாற்றத்தைக் கணிப்பிடுவதன் மூலம் காந்தப்பாயத்தின் அளவைக் கணிக்கிறது. + +காந்த இடைத் தொடர்பு ஒரு காவிப் புலத்தினால் விவரிக்கப்படும். இங்கு வெளியில் (மற்றும் நேரத்தில்) உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு காவிப் பெறுமானத்தைக் கொண்டிருக்கும். இப்பெறுமானம் ஒரு அசையும் ஏற்றம் அப்புள்ளியில் உணரும் விசையைத் தீர்மானிப்பதாக அ���ையும் (லோரன்சு விசையைப் பார்க்க). எனினும், காவிப் புலமானது காட்சி விவரிப்புக்கு கடினமாக அமைவதால் ஆரம்ப பௌதிகவியலில் காவிப்புலமானது புலக்கோடுகள் மூலம் விளக்கப்படுகிறது. படத்தில் காட்டியவாறு மேற்பரப்பொன்றினூடான காந்தப் புலமானது அம்மேற்பரப்பைக் கடக்கும் புலக்கோடுகளின் எண்ணிக்கைக்கு விகிதசமனானது. (சில சந்தர்ப்பங்களில் மேற்பரப்பொன்றினூடான பாயமானது அதனூடான புலக்கோடுகளின் எண்ணிக்கையினால் தரப்படுகிறது. இது தர்க்கரீதியில் தவறாக இருப்பினும் பெரிதாக கருத்திலெடுத்துக்கொள்ளத் தேவையில்லை). காந்தப்பாயமானது மேற்பரப்பொன்றினூடான "நிகர" காந்தப்பாயக் கோடுகளின் எண்ணிக்கையாகும். அதாவது, ஒரு திசையின் வழியே பாயும் கோடுகளின் எண்ணிக்கைக்கும் அதற்கு எதிர்த் திசையில் பாயும் கோடுகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான வித்தியாசமாகும். (குறிவழக்கைப் பயன்படுத்த கீழே பார்க்கவும்.) + +உயர்நிலைப் பௌதிகவியலில், புலக்கோட்டுக் கொள்கை தவிர்க்கப்பட்டு, காந்தப்பாயம் என்பது குறித்த மேற்பரப்பொன்றினூடாகப் பாயும் காந்தப் புலத்தின் செங்குத்துக் கூறின் மேற்பரப்புத் தொகையீடு என வரையறுக்கப்படும். காந்தப் புலமானது மாறிலியாக இருப்பின், காவிப் பரப்பு "S" ஐக் கொண்ட மேற்பரப்பொன்றினூடாகப் பாயும் காந்தப் பாயமானது பின்வருமாறு தரப்படும். +இங்கு "B" யானது காந்தப்புலத்தின் பருமன் (காந்தப் பாய அடர்த்தி) (அலகு: Wb/m (T)), "S" ஆனது மேற்பரப்பின் பரப்பளவு, "θ" ஆனது மேற்பரப்பின் செவ்வனுக்கும், காந்தப்புலக்கோடுகளுக்கும் இடையிலான கோணமும் ஆகும். மாறும் காந்தப்புலமொன்றுக்கு, முதலில் நுண்ணிய மேற்பரப்பு dS ஊடான காந்தப்பாயம் கருத்திலெடுக்கப்படும். இது மாறிலி எனக் கருதலாம். +ஒரு பொதுவான மேற்பரப்பு, S ஆனது, நுண்ணிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, அம்மேற்பரப்பினூடான மொத்தக் காந்தப் பாயமானது பரப்புத் தொகையீடால் தரப்படும். +காந்தக் காவி அழுத்தம் A மற்றும் தோக்கின் விதியின் வரையறைகள் மூலம் காந்தப்பாயமானது பின்வருமாறு வரையறுக்கப்படும். +இங்கு கோட்டுத் தொகையீடானது மேற்பரப்பு "S" இன் எல்லைகள் வழியே பெறப்படும். இது ∂"S"இனால் குறிக்கப்படும். + +மக்சுவெல்லின் சமன்பாடுகளில் ஒன்றான காந்தவியலுக்கான கவுசின் விதியின்படி, மூடிய மேற்பரப்பொன்றினூடான மொத்தக் காந்தப் பாயமானது பூச்சியமாகும். ("மூடிய மேற்பரப்பு" எனப்படுவது குறித்த கனவளவை துளைகள் ஏதுமின்றி முழுமையாக மூடக்கூடிய ஒரு மேற்பரப்பாகும்.) இவ்விதியானது பரிசோதனை ரீதியான அவதானிப்புகளின் படி காந்த ஒருமுனைவுகளை கண்டுபிடிக்க முடியாததன் விளைவாக உருவானதாகும். + +வேறு வரைவிலக்கணத்தின் படி, காந்தவியலுக்கான கவுசின் விதியானது பின்வருமாறு, + +இங்கு "S" யாதேனுமொரு மூடிய மேற்பரப்பாகும். +மூடிய மேற்பரப்பொன்றினூடான காந்தப்பாயம் பூச்சியமாக இருக்கும் அதேவேளை, திறந்த மேற்பரப்பொன்றினூடான காந்தப்பாயம் பூச்சியமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் மின்காந்தவியலில் இது ஒரு முக்கிய கணியமாகும். + + + + +செயற்கைக்கோள் + +விண் கலங்கள் வரிசையில் பார்க்கும் பொழுது மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகசெயற்கைக்கோள் ("Satellite")(ஈழ வழக்கு: செய்மதி) இருக்கிறது. இது நிலா போன்ற இயற்கைக் கோள்கள் போல் விண்வெளியில் உலா வருவதினால் இதற்கு செயற்கைக் கோள் என்ற பெயர் வந்தது. + +1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் பூமியை சுற்றி இருக்கும் கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. 50 நாடுகளின் செயற்கைக்கோள்கள் இதுவரை விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை வானில் செலுத்தும் ஆற்றல் பத்து நாடுகளுக்கு மட்டுமே இதுவரை உள்ளது. ஒரு சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மற்றவை, முழுதான செயற்கைக்கோள்களாகவோ, அல்லது ஆயிரக்கணக்கான சிறு சிறு துண்டங்களாகவோ உபயோகமே இல்லாமல் விண்வெளியில் பூமியின் கோளப்பாதையை சுற்றி வருகின்றன. இவற்றுக்கு விண்வெளிக் குப்பை என்ற பெயரும் உண்டு. மற்றப் பொருள் திணிவுகளுக்கு அருகில் கோளப்பாதையில் செலுத்தப்படுகின்ற விண்வெளி ஊடுருவிகள், நிலா, செவ்வாய் கிரகம்,வெள்ளி கிரகம், சனி கிரகம் மற்றும் வியாழன் கிரகத்திற்கு செயற்கைக் கோளாக மாறுகின்றன. +செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியை ��ண்காணிக்கும் வேலைகள், வானியல், பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் செல்லுதல் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோளப்பாதையில் இருக்கும் விண்வெளி நிலையங்களும் செயற்கைக்கோள்கள் ஆகும். + +செயற்கைக் கோள்கள் எப்படியான நோக்கங்களுக்காக ஏவப்படுகின்றன என்பவற்றைப் பொறுத்து, செயற்கைக்கோள்களின் கோளப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. செயற்கைக்கோளின் பாதைகள் ஏராளமான வகைகளாக உள்ளன. நன்கு அறியப்படும் பெரும் வகைகள்: +1. பூமியின் அடி கோளப் பாதை; +2. துருவ கோளப் பாதை; +3. புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேலாக எப்போதும் இருக்கும் கோளப் பாதை. + + +செயற்கைக்கோள்கள் கணினியின் உதவியை கொண்டு, பெரும்பாலும் தாமாகவே சுதந்திரமாகச் செயல்படுகின்றன. செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின்சார உற்பத்தி, வெப்ப கட்டுப்பாடு, தொலைக்கணிப்பு , கோளப்பாதை கட்டுப்பாடு, நடத்தை கட்டுப்பாடு போன்ற சிறு சிறு பணிகளைத் தன்னியக்கமாகச் செய்து விடுகின்றன. + +முதன் முதலாக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது என்னும் செய்தி> எட்வர்ட் எவெரெட் ஹேல் எழுதிய "தி பிரிக் மூன்" என்னும் கற்பனை சிறுகதையில் தான் வெளிவந்தது. 1869 ஆம் ஆண்டு துவங்கி இந்த கதை தொடராக "தி அட்லாண்டிக் மன்த்லி" , என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய "தி பேகம்'ஸ் பார்ச்யூன்" என்ற நூலில் இந்த கற்பனை மீண்டும் எழுந்தது. (1879) + +1903 ஆம் ஆண்டு, கோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கை (1857–1935), "தி எக்ச்ப்லோறேஷன் ஆப் காஸ்மிக் ஸ்பேஸ் பை மீன்ஸ் ஆப் ரியாக்க்ஷன் டிவைசஸ்" என்ற ஆய்வறிக்கை நூலை ரஷ்ய மொழியில்: "Исследование мировых пространств реактивными приборами" ) பதிப்பித்தார். இது ஏவுகணையைக்கொண்டு எவ்வாறு விண்கலங்களை ஏவலாம் என்பதைப்பற்றி வெளிவந்த முதல் புத்தகமாகும்.இந்நூல் விண்வெளிக்கு மனிதன் செல்லவும் அங்கு அவனது செயல்கள் உணரப்படவும் ஒரு திட்டமாக விளங்கியது. அவர் ஒரு விண்வெளி நிலையத்தை கற்பனையாக மிக விவரமாக உண்டாக்கி அதனது நிலையான புவி கோளப் பாதையையும் கணக்கிட்டுள்ளார். அவர் கோளப்பாதையில் சுற்றிவரும் விண்கலங்களின் இராணுவ மற்றும் அமைதித்துவ முக்கியத்துவங்களை விளக்கியுள்ளார். அவர் விண்வெளி எவ்வாறு அறிவியல் பரிசோதனைகளுக்கு உதவி புரிகிறது என்பதைப்பற்றியும் விளக்கியுள்ளார். இந்த நூல் ட்சியோல்கோவ்ஸ்கை குறிப்பிட்ட ஒரே இடத்தில் புவியை சார்ந்து இருக்கும் செயற்கைக்கோள்களைப்பற்றி விவரிப்பதுடன், பூமியுடன் அவை எப்படி தகவல்களை பரிமாறுகின்றன என்பதைப்பற்றியும் குறிப்பிடுகின்றது. "இவை பெரியளவில் தொலைத்தொடர்பு கருவிகளாக பயன்படுத்தப்படலாம்" என்றும் இந்த நூல் குறிப்பிடுகின்றது. + +1945 ஆம் ஆண்டு,"கம்பியில்லா உலகம் " என்ற ஆங்கில கட்டுரையில், அறிவியல் புதின ஆசிரியர் எழுத்தாளர் சி. கிளார்க் (1917-2008) பெருமளவு தொடர்பு கொள்ளுதலுக்கு தேவையான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பற்றி விவரிக்கிறார். கிளார்க் செயற்கைக்கோளை ஏவுதல், செயற்கைக்கோள்கள் சுற்றிவரக்கூடிய கோளப்பாதைகள், பூமியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் பின்னல் வலையமைப்பு உருவகம் மற்றும் மிக வேகமான தகவல் தொடர்பு கொள்ளுதலைப்பற்றி விவரிக்கிறார். புவியை முழுவதுமாக கண்காணிக்க மூன்று புவிநிலைச் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் போதுமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். + +சோவியத் ஒன்றியம் அக்டோபர் 4, 1957 அன்று ஏவிய ஸ்புட்னிக் 1 தான் உலகின் முதல் செயற்கைக்கோளாகும். இந்த சோவியத் ஸ்புட்னிக் செயல்பாட்டு குழுவுக்கு தலைவராக இருந்தவர் செர்கே கொரோலெவ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கெரிம் கெரிமோவ். இதனால் சோவியத் ஒன்றியத்துக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் மத்தியில் விண்வெளி போட்டி மூண்டது. + +உயரிய காற்று மண்டலங்களின் அடர்த்தியை கண்டறிய ஸ்புட்னிக் 1 உதவியாக இருந்தது. இது கோளப்பாதை மாற்றத்தின் வழியே கணக்கிடுதலை செய்தது. மேலும் அயன மண்டலத்தில் நிகழக்கூடிய ரேடியோ சைகைகளைக் கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்புகின்றது. செயற்கைக்கோளில் அதிக அழுத்தம் கொண்ட நைட்ரஜன் இருந்ததால், "ஸ்புட்னிக் 1" முதன் முதலில் எரிமீன்களை கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது. வெளி மேல்பரப்பில் எரிமீன்கள் நுழைவதினால் உள்ளுக்குள்ளே ஏற்படும் காற்றழுத்தக் குறைவினால் புவிக்கு அனுப்பப்படுகின்ற தட்பவெப்ப தகவல்களை அறியவும் உதவியாக இருந்தது. எதிர்பாராத "ஸ்புட்னிக் 1-இன் வெற்றியைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஸ்புட்னிக் சர்ச்சை மூண��டது. இதனால் பனிப்போரின் போது விண்வெளி போட்டியும் தொடங்கியது." + +"ஸ்புட்னிக் 2" நவம்பர் 3, 1957 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இது உயிருடன் இருக்கும் ஒரு ஜீவனை அதாவது லைகா என்ற நாயை விண்வெளிக்கு முதன் முதலில் எடுத்துச் சென்றது. + +மே, 1946 இல் ப்ராஜெக்ட் RAND வெளியிட்ட முதனிலை ஆய்வு விண்கல வடிவமைப்பு , "எல்லா வசதிகளையும் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் இருபதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கருவியாகும்," என்ற செய்தியை வெளிக்கொண்டு வந்தது. +அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பற்படையின் பியூரோ ஆப் ஏரோனாடிக்ஸ் மூலம் 1945 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கோளப்பாதை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படையின் ப்ராஜெக்ட் RAND இந்த அறிக்கையை வெளியிட்டாலும், அது இராணுவ ஆயுதமாக செயற்கைக்கோளை பயன்படுத்தலாம் என்பதை நம்பவில்லை. செயற்கைகோளை அறிவியல்,அரசியல் மற்றும் செய்தி பரப்புதலுக்கு உதவி புரியும் ஒரு நல்ல கருவியாக கருதியது. இதற்கிடையில் 1954-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர், "எனக்கு அமெரிக்காவின் செயற்கைக்கோள் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது",என்று கூறினார். + +ஜூலை 29, 1955 அன்று அமெரிக்கா 1958-ம் ஆண்டு வசந்த காலத்தில் செயற்கைக்கோளை ஏவப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இதனை ப்ராஜெக்ட் வான்கார்ட் என்று அழைத்தனர். ஜூலை 31 அன்று சோவியத் நாட்டினர் 1957-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்கு முன்பாக செயற்கைக்கோளை ஏவப்போவதாக அறிக்கை விடுத்தனர். + +அமெரிக்க ஏவுகணை கழகம், தேசிய அறிவியல் நிறுவனம், மற்றும் உலகப் புவிப்பௌதிக ஆராய்வாண்டு ஆகிவற்றின் வற்புறுத்தலினால் இராணுவ ஆர்வம் அதிகரித்தது. 1955-ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் விமான மற்றும் கப்பல் படைகள் ப்ராஜெக்ட் ஆர்பிட்டரில் செயல்பட துவங்கின. இது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஜூபிடர் சி ராக்கெட்டை பயன்படுத்தியது. இந்த செயல்பாடு வெற்றியடைந்ததை தொடர்ந்து 1958 ஆமாண்டு ஜனவரி மாதம் 31-ம் நாள் அன்று விண்ணில் ஏவப்பட்ட எக்ஸ்ப்ளோரர் 1 அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளாக அறிவிக்கப்பட்டது. + +விண்ணில் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் 1961 இல் அமெரிக்க ஐக்கிய நாடு விண்வெளி கண்காணிப்பு வலையமைப்புடன் இணைந்து பூமியை சுற்றிவரும் 115 செயற்கைக்கோள்களை ஐக்கிய நாட்டு விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு +பட்டியல் இட்டுள்ளது. + +இன்று விண்ணில் வலம் வரும் மிகப்பெரிய செயற்கைக்கோள் "சர்வதேச விண்வெளி" நிலையம்மாகும். + +யுனைடட் ஸ்டேட்ஸ் ஸ்பேஸ் சர்வெயிலன்ஸ் நெட்வொர்க் (எஸ்எஸ்என்) 1957 ஆம் ஆண்டு முதல் விண்ணில் இருக்கின்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை கண்காணிக்க அமைக்கப்பட்டது. சோவியத் நாட்டினர் விண்வெளி காலத்தை ஸ்புட்னிக்கை ஏவியதன் மூலம் துவக்கினர். அன்று முதல் எஸ்எஸ்என் பூமியை சுற்றி 26,000 க்கும் மேற்பட்ட விண்தட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளது. தற்சமயம், எஸ்எஸ்என் மனிதனால் உண்டாக்கப்பட்ட 8,000 க்கும் மேற்பட்ட கோளப்பாதை சுற்றும் விண்தட்டுக்களை கண்டுபிடித்துள்ளது. மீதமுள்ள செயற்கைக்கோள்கள் புவியின் காற்றுமண்டலத்தின் வாயிலாக நுழையும் பொழுது உருக்குலைந்து போயுள்ளன அல்லது நுழையும் பொழுது தாக்கம் இன்றி உள்ளே வந்து பூமியின் மீது தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளன. பூமியைச் சுற்றிவரும் விண்வெளி பொருட்களில் அதிக எடைகொண்டுள்ள செயற்கைக் கோள்கள் மற்றும் 10 பவுண்ட் எடையை கொண்டுள்ள ராக்கெட்களும் சேரும். விண்வெளியில் இருக்கின்ற செயற்கைக்கோள்களில் ஏழு சதவீதம் வேலை செய்யும் நிலையில் இருக்கின்றன.(i.e. ~560 செயற்கைக்கோள்கள்), மீதி இருப்பன விண்வெளி குப்பையாகும். USSTRATCOM செயல்பாட்டில் இருக்கின்ற செயற்கைக்கோள்களை கண்காணிப்பதுடன் அது விண்வெளி குப்பையையும் கண்காணிக்கிறது. இல்லையேல், இந்த குப்பை பூமிக்கு திரும்ப வரும்போது ஏவுகணை என்று தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம். எஸ்எஸ்என் பத்து சென்டிமீட்டர் வட்டக் குறுக்களவு கொண்ட விண்வெளி பொருட்களையும் (பேஸ் பால் அளவு) அல்லது அதை விட பெரிதாக இருக்கும் பொருட்களையும் கண்காணிக்க உதவுகிறது. + +இராணுவத்துடன் தொடர்பில்லாமல் இருக்கின்ற செயற்கைக்கோள் சேவைகள் மூன்று வகைப்படுகின்றன. அவை: + +ஒரே இடத்தில் பொருத்தப்படுகின்ற செயற்கைக்கோள் சேவைகள் பல்லாயிரக்கணக்கான ஒலி, ஒளி மற்றும் தகவல் பரிமாற்றங்களில் ஈடுப்பட்டிருக்கின்றன. இவை உலகின் ஒரு சில குறிப்பிட்ட இடங்களுக்கு மத்தியில் நடந்தாலும் இந்த சேவை மூலம் உலகத்தின் கண்டங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே ஒலி, ஒளி மற்றும் தகவல்கள் எடுத்துச��� செல்கின்றன. + +தனித்து விடப்பட்டிருக்கும் பகுதிகள், வாகனங்கள், கப்பல்கள், மக்கள் மற்றும் வான ஊர்திகளை தொடர்பு எல்லைக்கு உட்படுத்துவதுடன் மற்ற தகவல் நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன இந்த நகர்நிலைச் செயற்கைக்கோள் அமைப்புகள். + +எரிமீன்கள் பற்றிய தகவல்கள், நிலம் கண்காணிப்புத் தகவல்கள் போன்றவற்றை அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக்கோள்கள் தருகின்றன.(எ.கா., தொலை உணர்வு அறிதல்). மேலும் அமசூர் (ஹெச்ஏம்) ரேடியோ, புவி அறிவியல், கடல் அறிவியல், காற்றுமண்டல ஆராய்ச்சிகள் போன்ற மற்ற அறிவியல் ஆராய்ச்சி நுட்பங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. + + +Block quote + +முதல் செயற்கைக்கோளான, ஸ்புட்னிக் 1, பூமியைச் சுற்றி இருக்கும் கோளப் பாதையில் செலுத்தப் பட்டிருந்தது. அந்த கோளப்பாதை ஜியோசென்ரிக் ஆர்பிட் என்று அழைக்கப்படுகிறது. பூமியை சுற்றி இருக்கும் இந்த கோளப்பதையில் கிட்ட தட்ட 2456 செயற்கைக்கோள்கள் வலம் வருகின்றன . மேலும் இந்த ஜியோசென்ட்ரிக் ஆர்பிட்கள் அவற்றின் உயரம், சாயளவு மற்றும் உருவகத்தைப் பொருத்து வகைப்படுத்தலாம். + +உயரத்தை வைத்து இவற்றை புவியின் கீழ் இருக்கும் கோளப் பாதை (LEO), மத்தியப் புவி கோளப்பாதை (எம்இஒ ) , உயரிய புவி கோளப் பாதை (ஹெச்இஒ) என்று வகைப்படுத்தப்படுகின்றன. 2000 கி.மீ.குறைவாக இருப்பது எதுவாக இருந்தாலும் அது கீழ்நிலை கோளப் பாதையாகும், மத்திய நிலை கோளப் பாதை என்பது அதைவிட உயரத்தில் இருப்பது ஆனால் 35786 கி.மீ. உயரத்தில் இருக்கும் ஜியோ சின்க்ரோனஸ் கோளப் பாதையை விடக் குறைவாக உள்ளது. உயரிய கோளப்பாதை என்பது, ஜியோ சின்க்ரோனஸ் கோளப் பாதையை விட உயர்ந்து இருக்கும் எந்தவொரு கோளப்பாதையும் ஆகும். + + + + + + + +செயற்கைக்கோளின் செயலாக்கம் அதன் நுட்பமான பகுதிகள் மீதும் அதன் செயல்பாட்டு பண்புகள் மீதும் பலமான அடித்தளம் கொண்டு வருகின்றது. செயற்கைக்கோளின் உறுப்புகளை கொண்டு பார்க்கையில் அதனை இரண்டு வகைப்படுத்தலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் புதிதாக கட்டிட கலையை கொண்டு தோன்றியிருக்கும் பிராக்ஸ்னேடட் ஸ்பேஸ்கிராப்ட் போன்ற கோட்பாடுகள் இந்த கருத்தை பொய் என்று சொல்கின்றன. + +இந்த ஓட வகை கீழ் கூறப்பட்டுள்ள உள்ளமைப்புகளைக் கொண்டுள்ளன: + +இவ்வகை உள்ளமைப்புகள் செயற்கைக்கோளின் எந்திர அடிப்படை அமைப்புகளை விவரிப்பத��டன், செயற்கைக்கோளைப் பாதிக்கும் தட்ப வெப்ப நிலையில் இருந்தும் காக்கின்றன. மேலும் செயற்கைக்கோள்கள் சுழலுவதை மேற்பார்வை இடுவதுடன் இந்த வகை சிறு அளவில் எரி நட்சத்திரங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்கின்றன. + +செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சிறு சிறு எந்திரங்களைக் கண்காணிப்பது, அங்கு வேலை செய்கின்ற எந்திரங்களில் இருந்து பெரும் தகவல்களை பூமிக்கு அனுப்புதல் பூமியில் இருக்கும் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் புவியில் இருக்கும் நிலையத்தில் இருந்து தகவல் பெறுதல், அதைக்கொண்டு அங்கிருக்கும் எந்திரங்களை இயக்குதல் போன்ற வேலைகளை இந்த அமைப்பு செய்கின்றது. + +பூமியின் நிழலில் வலம் வரும்பொழுது சூரிய வெளிச்சத்தை உள்ளிழுக்கும் பானல்கள் மற்றும் ஆபத்துக்காலத்தில் உதவும் மின்கல அடுக்குகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் இந்த அமைப்புகள் இயங்குகின்றன. அணு மின்சார மூலங்களை (ரேடியோ ஐசோடாப் தெர்மோஎலெக்ட்ரிக் ஐசோடாப் ) கொண்டு பல வெற்றிகரமான செயற்கைக்கோள்கள் உண்டாக்கப்பட்டுள்ளன.அதில் நிம்பஸ் திட்டமும் ஒன்று (1964-1978). + +செயற்கைக்கோள்களில் இருக்கும் மின்சார எந்திரங்களை அதிகபடியான தட்ப வெப்ப நிலைகளில் இருந்தும் அதிகமான சூரிய வெளிச்சத்தில் வெளிபடுவதில் இருந்தும் பாதுகாப்பதில் தெர்மல் கட்டுப்பாட்டு உள்ளமைப்புகள் உதவுகின்றன.(எ.கா. ஆப்டிகல் சோலார் ரிப்லேக்டார்) + + +இவற்றில் சிறிய ராக்கெட் புச்டேர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் செயற்கைக்கோள்களை சரியான இடத்தில் நிலையாக வைத்துக்கொள்ள உதவுவதிலும் சரியான திசையில் நகரவும் உதவி புரிகின்றன. + +ட்ரான்ஸ்போண்டர்களை கொண்டு தகவல் தொடர்பு விண்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ட்ரான்ஸ்போன்டர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் : + + +செயற்கைக்கோள்கள் தங்கள் இலக்குகளை அடையும் பொழுது அவற்றை விண்ணில் செலுத்தியவர்கள் கோளப்பாதையில் இருந்து நீக்கவும் செய்யலாம் அல்லது சுடுகாட்டு கோளப் பாதைக்கு நகர்த்தவும் செய்யலாம். ஆரம்ப காலங்களில் போதிய பொருளாதார வசிதிகள் இல்லாததினால் செயற்கைக்கோள்கள் தங்கள் பாதைகளில் இருந்து நீக்கப்படவில்லை. அவ்வாறு கூறப்படுகின்ற எடுத்துகாட்டு:வான்கார்ட் 1. 1958 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட வான்கார்ட் 1, மனிதனால் தயாரி���்கப்பட்ட நான்காவது செயற்கைக்கோளாகும். இது புவியை மையமாக கொண்ட கோளப்பாதையில் வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 2009 வரை இந்த செயற்கைக்கோள் அங்கு தான் இருந்தது. + +இந்த செயற்கைக்கோள்கள் முழுவதுமாக நீக்கப்படாமல் தங்களது கோளப்பாதையிலேயே விட்டுவிடப்படுகின்றன. சமயங்களில் இவை சுடுகாட்டு கோளப் பாதைக்கு நகர்த்தப்படுகின்றன. 2002 வருடம் எப்சிசி , எல்லா புவிசார்ந்த செயற்கைக்கோள்களும் தமது இலக்கை அடைந்தவுடன் தாமாகவே சுடுகாட்டுக் கோளப் பாதைக்கு நகர்ந்துவிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. + +விண்வெளியில் ஏவுகணை செலுத்த மற்றும் அவற்றை தயாரிக்கும் ஆற்றலை கொண்ட நாடுகளின் அட்டவணை. குறிப்பு: செயற்கைக்கோளை தயாரிக்கும் ஆற்றல் இப்பொழுது நிறைய நாடுகளுக்கு இருக்கிறது. இதற்கு ஏராளமான பொருளாதார, அறிவியல் மற்றும் தொழிற்முறை வசதிகள் தேவையில்லை. ஆயினும் இவை வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதினால் இவற்றால் செயற்கைக்கோள்களை ஏவ முடிவதில்லை. கீழ் உள்ள அட்டவணையில் ஆற்றல் இல்லாத நாடுகள் குறிப்பிடப்படவில்லை. ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ள நாடுகளின் பெயர்கள் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த நாளில் செலுத்தப்பட்டன போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கொன்சொர்டியம் செயற்கைக்கோள்கள் மற்றும் பல நாட்டு செயற்கைக்கோள்களின் பட்டியல் இது அல்ல. + + +செப்டம்பர் 28, 2008 அன்று ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி விண்கல நிறுவனம் விண்ணில் பாலகன் 1 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது. முதல் முறையாக தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட நீரியலான எரிபொருளை கொண்டு இயங்கிய பூஸ்டர்கள் வானில் செலுத்தப்பட்டன. இந்த ஏவுகணை 1.5 m (5 ft) அளவிலான முக்கோண வடிவில் இருந்த ஒரு நீளமான மாதிரி செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்து சென்றது. ராட்சாட் என்ற இந்த மாதிரி செயற்கைக்கோள் விண்வெளியில் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு இருக்கும், அதன் பிறகு அது காற்றுமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். + +செயற்கைக் கோள்களை ஏவுவதில் கனடா மூன்றாவது நாடாகும் யு.எஸ். விண்வெளி நிலையத்தில் இருந்து யு.எஸ். ஏவுகணையை கொண்டு செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவும் இதே போல் தனக்கு தானம் அளிக்கப்பட ரெட்ஸ்டோன் ஏவுகணையில் இருந்து தான் செலுத்தியுள்ளது இத்தாலியர்கள் செலுத்திய முதல் செயற்கைக்கோள் சான் மார்கோ 1, இது டிசம்பர் 15, 1964 அன்று யு.எஸ். ஸ்கவுட் ஏவுகணையில் வாலப்ஸ் தீவில் இருந்து (விஎ,யுஎஸ்ஏ) செலுத்தப்பட்டது. இதனை ஏவியது ஒரு இத்தாலிய குழுவாக இருந்தாலும் அதற்கு பயிற்சி அளித்தது நாசா. யுஎஸ் ஏவுகணை, யுஎஸ் ஆதரவு குழு மற்றும் யு.கே ஏவுதல் குழுவின் உதவியோடு (WRESAT)ஐ ஆஸ்திரேலியா ஏவியுள்ளது. + +தற்காலத்தில் தீவிரவாத கும்பல்களினால் செயற்கைக்கோள்கள் ஊடுருவப்படுகின்றன. தீவிரவாதிகளின் கொள்கைகளைப்பரப்புவதற்கு இது எளிய முறையாக இருக்கிறது. ராணுவத்தில் இருந்து முக்கியமான தகவல்களை ரகசியமாக பெறவும் தீவிரவாதிகள் இதனை பயன்படுத்துகிறார்கள். + +பூமியில் இருந்து செலுத்தப்படுகின்ற ஏவுகணைகள் கீழ் புவி கோளப்பாதைகளில் இருக்கும் செயற்கைக்கோள்களை தாக்கியுள்ளன. ருசியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா போன்ற நாடுகள் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளன. 2007 ஆம் ஆண்டு சீன இராணுவம் பழைய வானிலை செயற்கைக்கோளை தகர்த்துள்ளது. இதனை தொடர்ந்து யுஎஸ் கப்பல் படை, செயல் இழந்த உளவு செயற்கைக்கோளை 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகர்த்துள்ளது. + +பூமியில் இருந்து அடையாள அலைகளை அனுப்புகின்ற டிரான்ஸ்மிட்டர்களால் செயற்கைக்கோள் குறைவான அலைவரிசைகளை பெறுகின்றன . இதனால் நெரிசல்கள் உண்டாகின்றன. இப்படிப்பட்ட நெரிசல்கள் டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தி வைக்கப்பட்டுள்ள அதற்குட்பட்டிருக்கும் குறிப்பிட்ட புவி பகுதிகளில் மற்றும் தான் நடைபெறுகின்றன. ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் நெரிசல்கள் ஏற்படலாம், சில நேரங்களில் செயற்கைக் கோள் தொலைபேசிகள் மற்றும் தொலைகாட்சிகளின் அலைவரிசைகளும் நெரிசல்களுக்கு உள்ளாகலாம். +செயற்கைக் கோளுக்கு கேரியரை (சுமந்த செல்லும் கருவி) அனுப்புவதினால், ட்ரான்ஸ்போண்டர்களை பயன்படுத்தும் மற்றவைக்கு இடையூறு ஏற்படுவது உண்டு. வணிக ரீதியான செயற்கைக் கோள் விண்வெளியில் இருக்கும் புவி நிலையங்களுக்கு தவறான நேரத்தில் தவறான அலைவரிசைகள் அனுப்பப்படலாம். இதனால் ட்ரான்ஸ்போன்டர்கள் தருகின்ற அலைவரிசைகளை நம்மால் பயன்படுத்த முடியாமல் போகிறது. செயற்கைக்கோள்களை கையாளுபவர்கள் இப்பொழுது அதனை கண்காணிக்க ஏராளமான நுட்பமான கருவிகளை கொண்டிருப்பதினால் அவர்களால் கேரியர்களின் மூலத்தை கொண்டு ட்ரான்ஸ்போண்டர்களை நன்றாகவே மேலாள முடிகிறது. + +அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட ’டெல்டா 4’ ராக்கெட்டை யுனைட்டட் ஏலியன்ஸ் அமெரிக்க நிறுவனம் லாக்கீட் அண்ட் போயிங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. இந்த ராக்கெட்டில் இரண்டு செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. மற்ற நாடுகளின் விண்வெளிக்கலங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றையும் அவற்றின் செயல்பாடுகளையும் துல்லியமாக உளவு பார்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. + + + +ஜெ-ட்ராக் 3D] பூமியை சுற்றி வரும் வேலை செய்கின்ற நிலையில் இருக்கின்ற அனைத்து செயற்கைக் கோள்களின் முப்பரிமாணங்களை கொண்ட படங்கள் + + + + +விண்மீன் பேரடை + +பால்வெளி/விண்மீன் பேரடை என்றும் உடுக்கண வெளி என்றும் விண்மீன் கொத்து ("Galaxy") என்றும் குறிக்கப்பெறுவது ஈர்ப்பால் கட்டுண்ட பெருந்திரளான விண்மீன் கூட்டமும் உடுக்கண எச்சங்களும் உடுக்கணவெளி வளிமத் தூசும் கரும்பொருண்ம்மும் அடங்கிய வான்பொருள் தொகுதியாகும். ஒரு பால்வெளியில் நிரலாக, ஒரு பில்லியன் (குறும்பால்வெளி) முதல் 100 டிரில்லியன் (பெரும்பால்வெளி) (10 முதல் 10) வரையிலான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். ஒவ்வொரு பால்வெளியும் அதன் பொருண்மையத்தில் வட்டணையில் சுற்றிவரும்.இவை கண்ணுக்குப் புலப்படும் வடிவத்தில் நீள்வட்டவகை, சுருளிவகை, ஒழுங்கற்றவகை எனப் பிரிக்கப்படுகிறது. பல பால்வெளிகளில் அவற்றின் செயலார்ந்த பால்வெளி மையத்தில் கருந்துளைகளைக் கொன்டமைகின்றன. நமது பால்வெளியாகிய பால் வழியில் உள்ள சகித்தாரியசு A* எனும் கருந்துளையின் பொருண்மை சூரியனைப் போல நான்கு மில்லியன் மடங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது. 2016 மார்ச்சு நிலவரப்படி, GN-z11 எனும் பால்வெளி தான் மிகப்ப பழைய பால்வெளியாகும். இது புவியில் இருந்து மிகத்தொலைவில் அமைந்த்து ஆகும். இது 32 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பெரு வெடிப்புக்குப் பின்னர் 400 மில்லியன் ஆன்டுகளுக்குப் பிறகு தோன்றியதாகும். + +இன்று கட்புலப் புடவியில் பால்வெளிகள் 200 பில்லியனுக்கும் () முதல் 2 டிரில்லியனுக்கும் () மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளனஇவை புவியில் நிலவும் மணல்மணியினும் கூடுதலாகும் எனக் கருதப்படுகிறது. பெரும்பாலான பால்வெளிகள் 1,000 முதல் 100,000 புடைநொடிகள் விட்டம் கொண்டுள்ளன, இவை ஒவ்வொன்றும் பல மில்லியன் புடைநொடிகள் இடைவெளியில் அமைகின்றன. பால்வெளிகளுக்கு இடையில் உள்ள ஊடகத்தில் தளர்வான வளிமம் ஒரு பருமீட்டரில் ஓரணு வீதத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான பால்வெளிகள் ஈர்ப்பால் பால்வெளிக் குழுக்களாகவும் பால்வெளிக் கொத்துகளாகவும் பால்வெளி மீக்கொத்துகளாகவும் கட்டுண்டு இயங்குகின்றன. புடவியின் பெருங்கட்டமைப்பு நிலையில், இக்கூட்டமைவுகள் பொதுவாகச் செறிந்த வெற்றிடம் சூழ்ந்த படலங்களாசமைகின்றன. இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு பால்வெளி மீக்கொத்துகளின் கொத்து ஆகும். இது இலானியாக்கியா எனப்படுகிறது. + +பால்வெளி "(galaxy)" எனும் சொல், பால்வழியைக் குறிக்கும் கிரேக்க மொழி சொல்லாகிய ' (', "பால் தன்மையது"), அல்லது "" ("பால் வட்டம்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும்.இப்பெயர் பால் வழி அமைப்பு வானில் பால்போன்ற வெண்ணிறப்பட்டையாக அமைந்ததாலேயே ஏற்பட்டது. கிரேக்கத் தொமன்மவியலில், சியுசு தன் மகனாகிய எராக்கிளெசை இறப்புவாய்ந்த பெண்ணின் மார்பகத்தில் இருந்து, அவளை அறியாமல் பால் குடிப்பதற்காக, அவள் தூங்கும்போது பிறப்பிக்கிறார். எனவே எராக்கிளெசுவும் இறப்புவாய்ந்தவனாகப் பிறக்கிறான். அவள் விழித்தபோது தன் மார்பகத்தில் அறியாத குழந்தை பால்குடிப்பதைப் பார்த்து குழந்தையைத் தூக்கி எறிகிறாள். அப்போது சிதறும் பால்துளிகள் பால்வழி என்ற மங்கலான ஒளிப்பட்டையை உருவாக்குகின்றன. +வானியலில் ஆங்கிலத்தில் "Galaxy" என்ற சொல், புடவியில் அமைந்த பால்வெளிகளில் இருந்து வேறுபடுத்த, நம் பால்வெளியாகிய பால்வழியைக் குறிக்கலானது. இது சாசரின் காலத்தில் (1380) இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் இருந்துவருகிறது. +முன்பு சுருளி ஒண்முகில் எனப்பட்ட ஆந்திரமேடா பால்வெளி (M31), அவற்றில் உள்ள வான்பொருள்களின் தொலைவுகள் கண்டறியப்பட்டதும் விண்மீன்களின் திரளாகும் என அறியப்பட்டதால் இத்தகையவை புடவித்திட்டுகள் எனப்பட்டன. என்றாலும் "புடவி" எனும் சொல் புடைசூழ்ந்து நிலவும் அனைத்து இருப்பையும் குறிக்கப் பயன்படுத்தியதும், இவ்வழக்கு தேய்ந்தருகிப் பால்வெளிகள் எனும் சொல் வழக்கில் வந���தது. + +பால் வழி பற்றியும் பிற ஒண்முகில்கள் பற்றியுமான பல கண்டுபிடிப்புகள், நாம் பல பால்வெளிகளில் ஒன்றாகிய பால் வழியில் வாழ்கிறோம் என்பதை உணரவைத்தது. + +கிரெக்க மெய்யியலாளராகிய தெமாக்கிரிட்டசு (கி. மு 450–370 ) இரவு வானிலே கண்ணுறும் வெண்பட்டை எனும் பால் வழி, தொலைவில் அமைந்த விண்மீன்களின் தொகுப்பாகலாம் என முன்மொழிந்தார். +என்றாலும் அரிசுட்டாட்டில் (கி. மு 384–322), பால்வழி என்பது "நெருங்கியுள்ள எண்ணற்ற பெரிய விண்மீன்களின் மூச்சுவிடுதலால் மூண்ட நெருப்பால் ஆனதாகும்" என நம்பினார்". மேலும் "இந்த நெருப்பு மூளுதல் விண்ணியக்கங்களின் தொடர்ச்சியாக அமைந்த புவிசார் வளிமண்டல மேற்கோளப் பகுதியில் நிலாவுக்கும் கீழாக நிகழ்வதாகவும்" கருதினார். புதுப்பிளாட்டோனிய மெய்யியலாளரான இளவல் ஒலிம்பியோதோரசு (கி.பி 495–570) இதை ஐயத்துடன் பார்த்தார். பால்வழி நிலாக் கீழ் நிகழ்வாக இருந்தால், அதாவது, புவிக்கும் நிலாவுக்கும் இடையில் நிகழ்வதாக இருந்தால், புவியிடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப வேறுபாட்டோடு தோன்றவேண்டும். மேலும் இடமாறு தோற்றப்பிழையோடு அமையவேண்டும். ஆனால் அப்படி பால்வழி அமையவில்லை. எனவே, இவரது கண்ணோட்டத்தின்படி, பால் வழி விண்கோளம் சார்ந்ததாகும். + +மொகானி முகம்மது கூறுகிறபடி, அரேபிய வானியலாளராகிய அல்காசன் (கி. பி 965–1037) தான் முதலில் பால் வழியை நோக்கி அதன் இடமாறு தோற்றப்பிழையை அளக்க முயன்றார், இவர் "பால் வழி இடமாறு தோற்றப்பிழையுடன் அமையாததால், இது புவியில் இருந்து நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும். இது வளிமண்டலம் சார்ந்ததல்ல" எனத் தீர்மானித்தார். " பாரசீக வானியலாளராகிய அல்-புரூனி (கி. பி 973–1048) "பால் வழிப் பால்வெளி எண்ணற்ற வளிம முகில் விண்மீன்களின் தொகுப்பே" என முன்மொழிந்தார். " அண்டாலூசிய வானியலாளராகிய இபின் பாட்சா ("Avempace", 1138)பால் வழி பால் வழி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுள்ள நிலாவடிப் பொருளின் ஒளிவிலகலால் தொடர்ச்சியானதாகத் தோன்றும் எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பேயாகும் என முன்மொழிந்தார். இத்தொடர்ச்சியை மேலும் அவர் வியாழன், செவ்வாய் கூட்டிணைவு நோக்கீட்டுடன் ஒப்பிட்டு இருவான்பொருள்கள் அருகருகே நிலவும்போது தொடர்ச்சியாகத் தோன்றுவதை விளக்கினார். In the 14th century, the Syrian-born Ibn Qayyim proposed the Milky Way galaxy to be "a myriad of tiny stars packed together in the sphere of the fixed stars." +பால் வழி எண்ணற்ற விண்மீன்களால் ஆனது எனும் நிறுவல், 1610 இல் கலீலியோ தொலைநோக்கி வழியாக பால் வழியாக ஆய்ந்தபோது மெய்ப்பிக்கப்பட்டது, இவர் தன் ஆய்வினால் பால் வழி ஏராளமான மங்கலான விண்மீன்களால் ஆகியது என்பதைக் கண்டறிந்தார். + + ==நூல்தொகை == + + + + + +மின்கருவி + +மின்கருவி என்பது மின்னாற்றலால் இயங்கும் கருவி. மின்னாற்றலை பலவாறாக மிக நுணுக்கமாக பயன்படுத்தும் துறை எதிர்மின்னியியல் (எலக்ட்ரானிக்ஸ் அல்லது இலத்திரனியல்) துறை. இத்துறையின் தொழில்நுட்பத்தால் தொலைபேசி, தொலைக்காட்சி, ஒலிமிகைப்பி, வானூர்திக் கட்டுப்பாட்டுக் கருவிகள், குறுந்தட்டு இயக்கிகள், ஒலி, ஒளிப் பதிவிகள், ஒளிப்படக் கருவிகள், காலங்காட்டுங் கருவிகள், பல்வேறு வகையான அளவீட்டுக்கருவிகள் என்று ஏராளமான கருவிகள் இயங்குகின்றன. இவையன்றி அதிக மின்னாற்றலைப் பயன்படுத்தும் மின்_விசிறிகள், மின்மாற்றிகள், மின்னாக்கிகள், தொழிலக மின்வெப்ப உலைகள் போன்றவையும் மின்கருவிகள்தாம். + + + + +இரண்டு கடன்காரர் உவமை + +இரண்டு கடன்காரர் கதை, இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது மனந்திருந்துதல் பற்றி கூறப்பட்ட உவமையாகும். இந்த உவமையை இயேசு சீமோன் என்ற பரிசேயர் வீட்டில் உண்பதற்காக சென்றிருந்தபோது கூறினார். இது சீமோனை பார்த்துக் கேட்ட கேள்வியாகும். இது விவிலியத்தில் இல் காணப்படுகிறது. +இயேவை சீமோன் என்ற பரிசேயர் தம்மோடு உண்பதற்கு அவருடைய வீட்டுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார் அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். சீமோன் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார் இவள் பாவியாயிற்றே" ��ன்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவர் தமக்குள் சொல்லிக்கொள்வதை அறிந்த இயேசு சீமோனை நோக்கி கேள்வியாக ஒரு உவமையை கூறினார். +கடன் கொடுப்பவர் ஒருவிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? +சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என் நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். + +இவ்வுவமையின் பொருள் பின்னுரையிலிருந்து தெளிவாகிறது. கடவுளை அதிகமாக அன்பு செய்தால் அவர் கூடுதலான பாவங்களை மன்னிக்கிறார் என்பது இதன் பொருளாகும். + + + +தமிழ் கிறிஸ்தவ சபை + + + + +நீர்மம் + +நீர்மம் "(Lliquid)" என்பது கிட்டத்தட்ட அமுக்கவியலாத ஒரு பாய்பொருள் ஆகும். பாயம், திரவம் என்ற பெயர்களாலும் நீர்மம் அழைக்கப்படுகிறது. நீர்மம் தான் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. நீர்மத்தின் கன அளவு அதன் அழுத்தத்தைப் பொறுத்து மாறாமல் நிலையாய் இருக்கும். நீர், எண்ணெய், உருகிய மாழை (உலோகம்), பழச்சாறு போன்றவை நீர்மப் பொருள்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் நான்கு பருப்பொருள்களில் நீர்மமும் ஒன்றாகும். திண்மம், வளிமம், பிளாசுமா என்பன மற்ற மூன்று பருப்பொருள்களாகும். இவற்றுள், உறுதியாய்ச் சொல்லக்கூடிய கன அளவு இருப்பினும் நிலையான வடிவம் இல்லாதது நீர்மம் மட்டுமே. ���ூலக்கூற்று இடைவிசையால் பிணைக்கப்பட்ட, அணுக்கள் போன்ற, பருப்பொருளின் சிறிய அதிர்வுறும் துகள்களால் ஆனது நீர்மம். தண்ணீர் மட்டுமே பூமியில் கிடைக்கக்கூடிய பொதுவான நீர்மம் ஆகும். ஒரு வளிமத்தைப் போல நீர்மத்தால் பாயமுடியும். ஆனால், கொள்கலத்தின் வடிவத்தை மட்டுமே இதனால் ஏற்க முடியும். பெரும்பாலான நீர்மங்கள் அமுக்கப்படுவதை எதிர்க்கின்றன என்றாலும் சிலவற்றை அமுக்க முடியும். வாயுவைப் போல நீர்மம் கொள்கலத்திலுள்ள இடம் முழுக்க விரவாமல் இருக்கும். அதோடு, நிலையான அடர்த்தியையும் பெற்றிருக்கும். பரப்பு இழுவிசை என்ற தனித்துவப் பங்கு நீர்ம நிலைக்கே உரியதாகும். ஈரமாக்கும் பண்பும் நீர்மங்களுக்கு மட்டுமே உண்டு. + +ஒரு நீர்மத்தின் அடர்த்தியானது பொதுவாகத் திண்மத்தின் அடர்த்திக்கு நெருக்கமாகவும், வாயுவின் அடர்த்தியைவிட அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே நீர்மம், திண்மம் இரண்டும் சுருங்கிய பொருளாகக் கருதப்படுகிறது. மறுபுறம் நீர்மங்களும் வாயுக்களும் பாயும் திறன் கொண்டிருப்பதால் இவ்விரண்டையும் பாய்மங்கள் என்கிறோம். புவியில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது என்றாலும், பிரபஞ்சத்தில் அறியப்பட்டுள்ளவரை பருப்பொருளின் இந்தநிலை உண்மையில் குறைந்ததாக உள்ளது. ஏனெனில், நீர்மங்களாக இருப்பதற்கு ஒப்பீட்டளவில் குறுகிய வெப்பநிலையும் / அழுத்த அளவீடும் தேவைப்படுகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமான பருப்பொருளாக வளிமம் சிறிதளவு திண்மங்களின் சுவடுகளுடன் காணப்படுகிறது. நட்சத்திரங்கள் உள்ளேயும் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களிலும் அல்லது பிளாசுமா வடிவத்தில் பருப்பொருளின் இவ்வாயு வடிவம் நிரம்பியுள்ளது. + +திடப் பொருள், நீர்மப் பொருள், வாயுப் பொருள், பிளாசுமாப் பொருள் என்பன இயற்கையில் காணப்படும் முதன்மையான அடிப்படைப் பருப்பொருட்களாகும். நீர்மம் ஒரு பாய்பொருளாகும் திடப்பொருள்களைப் போலில்லாமல் நீர்மத்தில் உள்ள மூலக்கூறுகள் சுதந்திரத்துடன் நகரும் வல்லமை பெற்றுள்ளன. திண்மத்திலுள்ள மூலக்கூறுகள் வலிமையாகப் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல் நீர்மத்தில் பிணைக்கப்படவில்லை. நீர்மத்தில் உள்ள பிணைப்பு தற்காலிகமானதேயாகும். இதனால்தான் திண்மம் அசைவற்று திண்மையுடனும் நீர்மம் பாயும் தன்மையும் பெற்றுள���ளன. + +ஒரு நீர்மம், வாயுவைப் போலவே பாய்மத்தின் பண்புகளைக் காட்டுகிறது. பாயும் பண்பை பெற்றுள்ள ஒரு நீர்மம் அது இருக்கும் கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. ஒரு மூடப்பட்ட கொள்கலனில் நீர்மம் வைக்கப்பட்டால் கொள்கலனின் சுவர்கள் மீது அனைத்து திசைகளிலும் சமமாக அழுத்தத்தைச் செலுத்துகிறது. ஓர் உறைக்குள் வைக்கப்படும் நீர்மத்தை எந்த வடிவத்திற்கு வேண்டுமானாலும் அமுக்க முடியும். வாயுக்களைப் போல ஒரு நீர்மம் மற்றொரு நீர்மத்துடன் உடனடியாக எப்பொழுதும் ஒன்றாகக் கலப்பதில்லை. கொள்கலனில் உள்ள வெற்றிடத்தில் நிரம்புவதுமில்லை. தனக்காக ஒரு மேற்பரப்பை உருவாக்கிக் கொள்ளும் அதிக அழுத்த நிலை தவிர நீர்மம் அமுக்கத்திற்கு உட்படுவதில்லை. இத்தகைய பண்புகள் நீர்மங்களை நீரியல் கருவிகளில் பயன்படுத்த பொருத்தமாக உள்ளன. +நீர்மத்தின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உறுதியாக ஆனால் திண்மையின்றி கட்டுண்டுள்ளன. இவை சுதந்திரமாக ஒன்றைச் சுற்றி ஒன்று நகர்வதால் கட்டுப்படுத்தப்பட்ட துகள் இயக்கத்தைப் பெறுகின்றன. நீர்மத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதன் மூலக்கூறுகளின் அதிர்வுகளும் அதிகரிக்கின்றன இதனால் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள தூரமும், அதிகரிக்கிறது. நீர்மத்தின் வெப்பநிலை அதன் கொதிநிலைப் புள்ளியை அடையும் போது, +மூலக்கூறுகளை நெருக்கமாகப் பிணைத்துள்ள ஓரினக்கவர்ச்சி விசை உடைகிறது. மேலும் அதிகமாக வெப்பப்படுத்துகையில் நீர்மப்பொருள் தன் நீர்ம நிலையை மாற்றிக் கொண்டு வளிம நிலைக்குச் செல்கிறது. வெப்பநிலை குறையும்போது மூலக்கூறுகளுக்கு இடையிலான இடைவெளியும் குறைகிறது. நீர்மத்தின் வெப்பநிலை அதன் உறைநிலைக்குச் செல்லும்போது மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட சிறப்பு அமைப்பில் நெருக்கப்படுகின்றன. மேலும் குளிரூட்டும்போது ஏற்படும் படிகமாதல் எனப்படும் இந்நிகழ்வால் மூலக்கூறுகள் அதிகத் திண்மையை அடைகின்றன. நீர்மம் தன்னுடைய திண்ம நிலையிலிருந்து மாற்றமடைந்து திண்ம நிலைக்கு மாறுகிறது. + +பாதரசம் மற்றும் புரோமின் தனிமங்கள் மட்டுமே சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்த சூழ்நிலையில் நிலையான நீர்மங்களாக உள்ளன. பிரான்சியம், சீசியம், காலியம், ருபீடியம் போன்ற மேலும் நான்கு தனிமங்கள் அறை வெப்பநிலைக்கு சற்று அதிகமான உருகுநில��யைக் கொண்டுள்ளன சோடியம்பொட்டாசியம் உலோகக்கலவை (NaK), காலின்சுடன் எனப்படும் உருகும் உலோகக்கலவை மற்றும் சில பாதரச உலோகக்கலவைகள் உள்ளிட்டவை அறைவெப்பநிலையில் நீர்மங்களாக உள்ள சில உலோகக்கலவைகளாகும். + +தண்ணீர், எத்தனால் மற்றும் பல கரிமக் கரைப்பான்கள் போன்ற தூய்மையான பொருட்கள் சாதாரண சூழ்நிலையில் நீர்மங்களாக உள்ளன. நீர்மநிலையில் உள்ள நீர், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிரது. மேலும் உயிர் வாழ்கைக்கு தண்ணீர் ஓர் அத்தியாவசியத் தேவை என்றும் நம்பப்படுகிறது. + +தண்ணிர், பாறைகுழம்பு, கனிமவேதியல் கரைப்பான்கள், பல அமிலங்கள் உள்ளிட்டவை கனிம நீர்மங்களாகக் கருதப்படுகின்றன. + +சாயங்கள், பால், பல வேறுபட்ட பொருட்களின் கலவையான கனிமங்கள், வெளுக்கும் நீர்மங்கள், எண்ணெய்கள், பெட்ரோல், கூழ்மங்கள், தொங்கல்கள், இரத்தம் போன்ற அன்றாட பயன்பாட்டிலுள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் நீர்மங்களாகக் கருதப்படுகின்றன. + +பல வாயுக்களை குளிர்விப்பதன் மூலமாக அவற்றை நீர்மங்களாக மாற்றமுடியும். நீர்ம ஆக்சிசன், நீர்ம நைட்ரசன், நீர்ம ஐதரசன், நீர்ம ஈலியம் போன்றவை இதற்குச் சில உதாரணங்களாகும். வளிமண்டல சூழலில் எல்லா வளிமங்களையும் நீர்மமாக்கமுடியாது. 5.1 வளிமண்டல அழுத்தத்தில் மட்டுமே கார்பனீராக்சைடு வளிமத்தை நீர்மமாக்க முடியும். + +சில பொருட்களை பாரம்பரிய அடிப்படை பருப்பொருட்கள் வகையில் பாகுபடுத்த இயலா நிலையில் உள்ளன. அவை திண்மத்தைப் போல, நீர்மத்தைப் போல பண்புகளைப் பெற்றுள்ளன. நீர்மப்படிகங்கள், உயிரியல் சவ்வுகள் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். + +உயவுப் பொருட்கள், கரைப்பான்கள், குளிரூட்டிகள், என்று பலவகையான பயன்களை நீர்மங்கள் வழங்குகின்றன. நீரியல் அமைப்புகளில், ஆற்றல் பரிமாற்றத்திற்கும் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்மங்களை உயவுப்பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளில் உராய்வியல் கவனம் செலுத்துகிறது. +நீர்மக் கூறுகளின் பாகுத்தன்மை மற்றும் பாய்மப் பண்புகளை வெப்ப இயக்க எல்லை வரையிலும் ஆய்வு செய்ய பொருத்தமான உயவுப்பொருளாக எண்ணெய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இயந்திரங்கள் பற்சக்கரங்கள், உலோக வேலைகள், நீரியல் கருவிக��் போன்றவற்றில் எண்ணெய்கள் சிறந்த உயவுப் பொருட்களாகப் பயன்படுகின்றன . + +பிற நீர்மங்களை அல்லது திண்மங்களைக் கரைக்கும் கரைப்பானாகப் பல நீர்மங்கள் பயன்படுகின்றன. வர்ணங்கள், மேற்பூச்சுகள், மற்றும் பசைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்பாடுகளை கரைசல்கள் வழங்குகின்றன. எண்ணெய்ப் பசை, மசகு, இயந்திர பாகங்களில் வடியும் கரி எண்ணெய் முதலியவற்றை தூய்மைப்படுத்த தொழிற்சாலைகளில் நாப்தா மற்றும் அசிட்டோன் போன்ற நீர்மங்கள் பயன்படுகின்றன. உயிரினங்களின் உள்ளே உருவாகும் அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் உடல் நீர்மங்களும் நீர்மங்களேயாகும். + +சோப்புகளிலும் அழுக்குநீக்கிகளிலும் பொதுவாக பரப்பியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆல்ககால் போன்ற கரைப்பான்கள் பெரும்பாலும் நுண்ணுயிர்க் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அழகுசாதனப் பொருட்கள், மைகள், சீரொளி ஊடகத்தில் நீர்மச்சாயம் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. தாவர எண்ணெய்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன . + +நீர்மங்கள் வாயுக்களைக்காட்டிலும் அதிக வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளன, நீர்மங்களின் பாய்மப்பண்பு திறனால், இயந்திர பாகங்களின் அதீத வெப்பத்தை நீக்குவதற்கு உதவும் பொருத்தமான ஒரு பொருளாக நீர்மம் பயன்படுகிறது. கதிர்வீசுக் கருவி போன்ற வெப்ப பரிமாற்றக் கருவியினால் வெப்பத்தை நீக்கலாம் அல்லது ஆவியாக்கலின் போதும் வெப்பத்தை வெளியேற்றலாம் . இயந்திரங்கள் மிகையாக சூடாவதைத் தடுக்க தண்ணீர் அல்லது கிளைக்கால் குளிரூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அணு உலைகளில் தண்ணீர் அல்லது சோடியம் அல்லது பிசுமத் போன்ற நீர்ம உலோகங்கள் குளிரூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன .இராக்கெட்டுகளின் உந்துதல் அறைகளைக் குளிர்விக்க நீர்ம உந்தி படலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்களின் உபரி வெப்பத்தை நீக்க தண்ணீர் மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரத்தையும் கருவியையும் அழிவிலிருந்து காப்பாற்றவும் நீர்மங்கள் யன்படுத்தப்படுகின்றன. + +வியர்த்தலின் போது வியர்வை ஆவியாக்குவதன் மூலம் மனித உடலில் இருந்து வெப்பம் வெளியேறுகிறது. வெப்பமூட்டும், காற்றோட்டம், மற்றும் காற்று சீரமைப்புத் தொழி��்சாலைகளில் தண்ணிர் போன்ற நீர்மங்கள் வெப்பத்தை ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு பரிமாற்ற பயன்படுத்தப்படுகின்றன . + +நீரியல் அமைப்புகளின் பிரதான அங்கமாக நீர்மங்கள் பயன்படுகின்றன. பாசுகல் விதி வழங்கும் நீர்மசக்தியை இவை அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பண்டைய காலந்தொட்டே குழாய்கள் மற்றும் தண்ணீர் சக்கரங்கள் போன்ற கருவிகள் நீர்மங்களின் இயக்கத்தை இயந்திர வேலையாக மாற்றிக் கொள்வது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரியல் குழாய்களின் வழியாக எண்ணெய்கள் உந்தப்படுகின்றன. இவை இந்த சக்தியை நீரியல் உருளைகளுக்கு மாற்றித் தருகின்றன. மோட்டார் வாகனத் தடைகள் மற்றும் இயந்திரவியல் சக்தி பரிமாற்றங்கள், கனரக கருவிகள், மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற பல பயன்பாடுகளில் நீரியல் கருவிகள் பயன்படுகின்றன. பாரங்களைத் தூக்கவும் பஞ்சு போன்றவற்றை அழுத்தவும் பல்வேறு நீரியல் அழுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. +அளவியல் கருவிகளிலும் சில சமயங்களில் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாதரசம் போன்ற நீர்மங்களின் வெப்ப விரிவுப் பண்பை வெப்பநிலைமானிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அழுத்த அளவிகள் நீர்மங்களின் எடையைப் பயன்படுத்தி காற்றழுத்தத்தை அளவிடுகின்றன. + +நீர்மங்களின் அளவுகள் பொதுவாக கன அளவின் அலகுகளாலேயே அளவிடப்படுகின்றன. அனைத்துலக முறை அலகுகள் முறையில் பயன்படுத்தப்படும் கனமீட்டர் (மீ3) மற்றும் இதன் பிரிவுகளான லிட்டர், கன சென்டி மீட்டர், மில்லி லிட்டர் உள்ளிட்ட அலகுகள் இதில் அடங்கும். +நீர்மத்தின் கன அளவு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. வெப்பப்படுத்தும்போது நீர்மங்கள் பொதுவாக விரிவடைகின்றன. குளிர்விக்கும்போது அவை சுருங்குகின்றன. 0 °செல்சியசு மற்றும் 4 °செல்சியசு வெப்பநிலைகளில் தண்ணீர் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். +வெப்பஇயக்கவியல் மற்றும் பாய்மவிசையியலில், அமுங்குமை என்பது அழுத்த மாற்றத்தால் பாய்மம் அல்லது திண்மத்தின் பருமனளவில் ஏற்படுகின்ற மாற்றத்தின் அளவீடாகும். நீர்மங்கள் சிறிய அளவு அமுங்குமையைக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு தண்ணீர் ஓர் அலகு வளிமண்டல அழுத்த அதிகரிப்புக்கு மில்லியனுக்கு 46.4 பகுதிகள் அளவுக்கு அமுங்குமை ���டைகிறது . 4000 பார் (அளவை) அழுத்தத்தில் அறை வெப்பநிலையில் தண்ணீர் தன் கன அளவில் 11% அளவுக்கு குறைகிறது . + +நீர்மங்கள் அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன மற்றும் அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆராய்கின்ற .பாய்ம இயக்கவியல் ஆய்வில் நீர்மங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதிலும் குறிப்பாக நீர்மங்களின் அமுக்கவியலா பாய்வைப் பற்றிப் படிக்கும் போது இவை முக்கியத்துவம் பெறுகின்றன. + +இந்த அமுக்கவியலா இயல்பு, ஒரு நீர்மத்தை நீரியல் ஆற்றலை கடத்துவதற்கு பொருத்தமானதாக்குகிறது. ஏனெனில் அமுக்கமையால் மிகக் குறைந்த அளவு ஆற்றல் இழப்பே ஏற்படுகிறது. எனினும், மிக சிறிய அமுக்குமையானது வேறு ஒரு நீரியல் நிகழ்வுக்கு வழிவகுக்கும். தடுக்கிதழ் திடீரென மூடப்படும்போது குழாய்களை அடித்தல் எனப்படும் நீரதிர்வு தோன்றுகிறது. இதனால் தடுக்கிதழில் அழுத்தமிகுதி ஏற்பட்டு ஒலியின் வேகத்திற்கு கீழான வேகத்தில் பின்னோக்கி நகர்கிறது. நீர்மங்களின் அமுக்கவியலா இயல்பினால் வெற்றிடமாதல் என்ற மற்றொரு நிகழ்வு உண்டாகிறது. ஏனெனில் நீர்மங்களிடம் உள்ள சிறிய நெகிழ்வுத்தன்மை காரணமாக அவை உயர் கொந்தளிப்பு ஓட்ட திசையை நோக்கி இழுக்கப்படுகின்றன. +குறைந்த அழுத்தப் பகுதியில் உள்ள ஒரு நீர்மம் ஆவியாகி குமிழ்களாக உருவாகிறது. இவை உயர் அழுத்த பகுதிகளில் நுழையும்போது உடைந்து சிதைகின்றன. உடைந்த குமிழிகள் இருந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப அதிக வேகத்தில் நீர்மம் பாய்கின்றது . + +ஒரு புவியீர்ப்புத் தளத்தில் நீர்மங்கள் அவை இடம்பெற்றுள்ள கலனின் சுவர்கள் மீதும் அந்நீர்மத்தில் உள்ள பொருளின் மீதும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன. இவ்வழுத்தம் எல்லா திசைகளிலும் கடத்தப்படுகிறது. மேலும் ஆழத்திற்குச் செல்லசெல்ல இவ்வழுத்தம் அதிகரிக்கிறது. சீரான புவியீர்ப்புத் தளத்தில் ஒரு நீர்மம் அமைதி நிலையில் உள்ளபோது அது செலுத்தும் அழுத்தம், p ஆகவும் ஆழம் z ஆகவும் உள்ளபோது + +இங்கு, + +இவ்வாய்ப்பாட்டில் பாய்ம இடைப்பரப்பின் அழுத்தம் சுழியமாகக் கருதப்படுகிறது. பரப்பு இழுவிசை விளைவுகள் புறக்கணிக்கப்படுகின்றன. + +நீர்மங்களில் மூழ்கியுள்ள பொருட்கள் ���ிதத்தலுக்கு உட்படுகின்றன. பிற பாய்மங்களிலும் மிதத்தல் நிகழ்கிறது என்றாலும் அதிக அடர்த்தி உள்ள நீர்மங்களில் வலிமையாக உள்ளது. + +நீர்மத்தின் கன அளவு கொள்கலனின் கன அளவோடு சரியாகப் பொருந்தவில்லை எனில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மேற்பரப்புகளைக் காணமுடியும். நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு மீள் சவ்வு போல செயல்படுகிறது. பரப்பு இழுவிசை தோன்றும் இடங்களில் சொட்டுகள் மற்றும் குமிழ்கள் உருவாவதை அனுமதிக்கிறது. மேற்பரப்பு அலைகள், மயிர்த்துளைத்தாக்கம், ஈரமாக்கும், மற்றும் இயல்பு மேற்பரப்பில் பதற்றம் மற்ற விளைவுகளாகும். மேற்பரப்பு அலைகள், நுண்குழாய் நுழைவு, ஈரமாக்குதல், சிற்றலைகள் போன்றவை பரப்பு இழுவிசையின் காரணத்தால் உருவாகும் பிற விளைவுகளாகும். ஒரு வரையறுக்கப்பட்ட நீர்மத்தின் வடிவவியல் புறத்தடைகள் மீநுண்ணிய அளவுகளால் வரையறுக்கப்பட்டுகின்றன. பெரும்பாலான மூலக்கூறுகள் மேற்பரப்பு விளைவுகளால் சிறிதளவு பாதிக்கப்படுகின்றன. இதனால், பேரளவு நீர்மத்தின் மொத்தமான இயற்பியல் பண்புகளிலிருந்து விலகியிருக்கின்றன. + +கட்டற்ற மேற்பரப்பு என்பது ஒரு பாய்மத்தின் மேற்பரப்பு இணைத் தகைவு நறுக்கம், சாதாரண பூச்சிய நேர்குத்து நறுக்கம் இடைப்பட்ட எல்லையாகும். உதாரணம்:புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீர்ம நீர் மற்றும் காற்று போன்றவை. + +நீரின் மட்டம் என்பது போல் நீர்ம மட்டம் என்பது கட்டற்ற மேற்பரப்பில் நீர்மத்தின் உயரம் என்பதுடன் தொடர்புடையது ஆகும். குறிப்பாக இதன் அதிகபட்ச உயரமாகும். மட்ட உணரிகளைக் கொண்டு இவ்வுயரம் அளவிடப்படுகிறது. + +ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். + +காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். + +அடர்த்தி, பிசுக்குமை ஆகிய இவை இரண்டும் ஒரு பாய்மம் பாயும் விதத்தை நிர்ணயிக்கும் பண்புகள் ஆகும். +இவ்விரு பண்புகளையும் உள்ளடக்கி இயக்கவியல் பிசுக்குமையை சான்றோர்கள் வரையறுத்துள்ளனர். பிசுக்குமையை அடர்த்தியினை கொண்டு வகுத்தால் கிடைப்பது இயக்கவியல் பிசுக்குமை ஆகும். ஒரு பாய்ம ஓட்டத்தினை நிர்ணயிப்பதில் இயக்கவியல் பிசுக்குமை பெரும் பங்காற்றும். ஓரிடத்தில் ��ரே விசைக்கொண்டு ஓடும் இருவேறு பாய்ம ஓட்டத்திற்கு வேற்றுமையை தருவது இப்பண்பே ஆகும். + +ஒரு குழாயில் இருந்து வெளிப்படுகின்ற இருவெவ்வேறு இயக்கவியல் பிசுக்குமையினை கொண்ட பாய்ம ஓட்டத்தினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இயக்கியவியல் பிசுக்குமை கூடுதலாக உள்ள பாய்மம் சீராக வெளிப்பட்டு ஓடுவதையும், பிசுக்குமை குறைந்த பாய்மம் சீரற்று ஓடுவதையும் படத்தில் காணலாம். இப்படிப்பட்ட ஓட்டங்களை நாம் அன்றாட வாழ்விலும் காண முடியும். தேங்காய் எண்ணெய்யை (இயக்கவியல் பிசுக்குமை = 30 x 10 மீ நொ) குழாயிலிருந்து வெளிப்படுவதை நாம் எண்ணெய் வாங்கும் கடையில் பார்த்திருக்க கூடும். அந்த ஓட்டம் படத்தில் பச்சை நிற பாய்மம் வெளிப்படுவதைப் போல சீராக இருக்கும். அதே இடத்தில் இயக்கவியல் பிசுக்குமை குறைந்த பாய்மம் (எடுத்து காட்டாக நீரினை எடுத்துக் கொள்ளலாம், நீரின் இயக்கவியல் பிசுக்குமை = 0.55 x 10 மீ நொ) படத்தில் வலப்பக்கம் உள்ள வெண்ணிற பாய்மத்தைப் போல் சீரற்று ஓடியிருக்கும். + +பாய்மத்தில் ஒலியின் திசைவேகம் என்ற formula_4 வாய்ப்பாட்டால் கண்டறியப்படுகிறது. +இங்கு K என்பது பாய்மத்தின் பருமக் குணகத்தையும் , ρ பாய்மத்தின் அடர்த்தியையும் குறிக்கிறது. தூய நீரில் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் அளவு சி=1497 மீ/வினாடி +கொதிநிலைக்கு கீழாகவுள்ள வெப்பநிலையில் நீர்மநிலையில் உள்ள எந்தவொரு பருப்பொருளும் வாயுச்சுருங்குதலின் சமநிலையை எட்டும்வரை தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். இந்நிலையில் வாயுவின் ஆவி ஒடுக்கமும். நீர்மத்தின் ஆவியாதலும் ஒரே விகிதத்தில் இருக்கும். ஆவியாகும் நீர்மம் தொடர்ந்து நீக்கப்பட்டால் நீர்மம் நிலையாக இருக்கமுடியாது. கொதிநிலையில் ஒரு நீர்மம் வாயுவின் ஆவி ஒடுக்கத்தைக் காட்டிலும் மிக விரைவாக ஆவியாகிறது. மீவெப்பப்படுத்தலும் சில சூழ்நிலைகளில் இதை தடுக்க முடியும் என்றாலும் கொதிநிலைக்கு மேலே செல்லும்போது ஒரு நீர்மம் பொதுவாக கொதிக்கிறது. + +உறைநிலைக்கு கீழான வெப்பநிலையில் ஒரு நீர்மம் திண்ம நிலையிலுள்ள படிகமாக மாற முயல்கிறது. வாயுநிலை மாற்றம் போலில்லாமல் நிலையான அழுத்தத்தில் இங்கு மீகுளிரூட்டல் இல்லாமல் நீர்மம் முழுமையாக படிகமாவதில்லை. உதாரணம்: கொள்கலனில் உள்ள தண்ணீர் மற்றும் பனிக்கட்டி சமநிலையை ��டைந்து இரு நிலைகளிலும் காணப்படுகிறது. இவ்வாறே எதிர் மாற்றமான திண்மத்திலிருந்து நீர்மத்திற்கு உதாரணமாக உருகுதல் வினை கருதப்படுகிறது. + +விண்வெளியில் அல்லது வெற்றிடத்தில் நீர்மங்கள் ஏன் இல்லை என்பதை நிலை விளக்க வரைபடம் விளக்குகிறது. கோள்களின் மேற்பரப்பு மற்றும் நிலவுகளின் உட்புறங்கள் போன்ற இடங்கள் தவிர்த்து மற்றெங்கும் அழுத்தம் பூச்சியமாக இருப்பதால் அங்கெல்லாம் திவரவம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. தண்ணீர் மற்றும் வேறு நீர்மங்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவை அங்குள்ள வெப்பநிலையைப் பொருத்து உடனடியாக கொதிக்க அல்லது உறையத் தொடங்குகின்றன. பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியிலும் சூரிய ஒளி படாத இடங்களில் தண்ணிர் உறைந்து விடுகிறது. சூரிய ஒளி இதன்மீது படும்போது ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. +சந்திரனில் தண்ணீர் பனிக்கட்டியாகவே காணப்படுகிறது. சூரிய ஒளியே படாத நிழல்படர்ந்த துளைகளிலும் சூடேற்றமே அடையாத பாறை குவியல்களுக்கு மத்தியில் உள்ள சில பாறைகளில் மட்டுமே தண்ணீர் தண்ணிராகவே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. + +சனி கோளின் சுற்றுப்பாதையில் அருகே இருக்கும் சில இடங்களில் சூரிய ஒளி அதிக மயக்கமூட்டும் ஒளியாக உள்ளபோது பனிக்கட்டி நேரடியாக நீராவியாக பதங்கமாகிறது. சனி கோளின் வளையங்கள், நீண்ட வாழ்நாள் கொண்ட பனிக்கட்டிகளால் உருவாகியிருக்கலாம் என்பதற்கான சான்றாக இது திகழ்கிறது. + +வேதியியலில், கரைசல் என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவையே கரைசல் ஆகும். அல்லது கரைபொருள் ஒன்று [கரைப்பான்|கரைப்பானுடன்]] கலந்து உருவாகின்ற ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம். +நீர்மங்கள் யாவும் கலத்தல் என்ற சிறப்புப் பண்பைப் பெற்றுள்ளன. தினசரி வாழ்க்கையில் கலவா நீர்மங்களுக்கு எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் தண்ணிரைக் குறிப்பிடுவார்கள். இதே போல கலக்கும் நீர்மங்களுக்கு எடுத்துக்காட்டாக தண்ணீர் மற்றும் ஆல்ககாலைக் குறிப்பிடுவார்கள். ஒன்றாகக் கலந்த கலக்கும் நீர்மங்களை பின்னக் காய்ச்சிவடித்தல் முறையில் பிரிக்கமுடியும். + +நீர்மம் ஒன்றில் அணுக்கள் படிக அணுக்கோவையாக உருவாவதில்லை அல்லது அவை நீண்டகால சீரொழுங்க�� எதையும் காட்டுவதில்லை. எக்சுகதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவுகளில் பிராக் உச்சிகள் இல்லாமலிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. சாதாரண சூழ்நிலைகளில் வட்ட சமச்சீர் விளிம்பு விளைவு முறையில் நீர்ம திசைச்சீர்மையை வெளிப்படுகிறது. ஆரத்திசையில் விளிம்பு விளைவின் செறிவில் சிறிதளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிலையான கட்டமைப்புக் காரணியால் S(q) இந்த ஏற்ற இறக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. நியூட்ரான் அல்லது போட்டான் வழங்கிய அலை எண் q=(4π/λ)sinθ மற்றும் பிராக் கோணம் θ முதலியன இக்கட்டமைப்புக் காரணியுடன் தொடர்பு கொண்டவையாகும். இந்த ஊசலாட்டங்கள் S(q) நீர்மத்தின் அருகாமையிலுள்ள சீரொழுங்கை வெளியிடுகின்றன. அதாவது ஓர் அணுவுக்கும் அருகாமையிலுள்ள சில ஓடுகளுக்கும் உள்ள ஒப்புமைத் தொடரை அவை வெளியிடுகின்றன. + +மேலே கூறப்பட்ட ஒலியின் திசைவேக வாய்ப்பாடு formula_4 பருமக் குணகம் "K" வைக் கொண்டுள்ளது. K இன் மதிப்பு தற்சார்பு அதிர்வெண் எனில் அந்நீர்மமானது நேர்கோட்டு ஊடகமாகச் செயல்படும். எனவே சிதறுதல் இல்லாமலும் பிணைப்பு முறையின்றியும் ஒலி பரவுதல் நிகழ்கிறது. ஆனால் நடைமுறையில் எந்த நீர்மமும் சிறிதளவாவது அதிகரிக்கும் அலைவரிசையுடன் சிதறுதலை வெளிப்படுத்துகிறது. குறைவு அலைவரிசை formula_6 யிலிருந்து அதிக அலை வரிசை formula_7 எல்லைக்கு K கடந்துபோகிறது. சாதாரணமான நீர்மங்களில் கிகா எர்ட்சுக்கும் டெரா எர்ட்சுக்கும் இடைப்பட்ட அலைவரிசைகளில் இக்கடத்தல் நிகழ்கிறது. +துணை-கிகா எர்ட்சு அலைவரிசைகளில் ஒரு சாதாரண நீர்மம் நறுக்க அலைகளை நீடிக்கச் செய்வதில்லை. நறுக்க குணகத்தின் பூச்சிய அலைவரிசை formula_8 ஆகும். சில சமயங்களில் இப்பண்பு நீர்மங்களின் வரையறுக்கப்பட்ட பண்பாக கருதப்படுகிறது . எனினும் பருமக் குணகம் K போன்றே நறுக்கக் குணகம் G யும் அலைவரிசையைச் சார்ந்தது ஆகும். மீயொலி அலைவரிசைகளில் நீர்மம் போன்ற formula_9 வில் இருந்து திண்மம் போன்ற பூச்சியமல்லாத formula_10 எல்லைக்கு கடத்தல் நிகழ்கிறது. + +கிரேமர்சு-குரோனிக் தொடர்புக் கொள்கையின்படி ஒலியின் திசைவேகச் சிதறல் (உண்மைப் பகுதி K அல்லதுr G அளிப்பது) அதிகபட்ச அலைக் குறைப்புடன் (கற்பனைப் பகுதி K அல்லது G அளிப்பது) கடந்து போகிறது. நேர்கோட்டு துலங்கல் கோட்பாட்டின்படி K அல்லது G வெளிக் குழப்பத்தி���்குப் பின்னரான சமநிலையை விவரிக்கிறது. இந்த காரணத்தினாலேயே சிதறல் படிநிலைகளான கிகா எர்ட்சு, டெரா எர்ட்சு போன்றவை நிகழ்கின்றன. இதைக் கட்டமைப்புத் தளர்வு என்றும் அழைக்கிறார்கள். ஏற்ற இறக்க-சிதறல் கோட்பாட்டின்படி, சமநிலை நோக்கிய தளர்வானது சமநிலையில் உள்ள ஏற்ற இறக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஒலி அலைகளுடன் தொடர்புடைய அடர்த்தி ஏற்ற இறக்கங்கள் பிரிலுவான் சிதறல் மூலம் பரிசோதனைமுறையாக கண்காணிக்க. முடியும். + + + + + +இரண்டு மகன்கள் உவமை + +இரண்டு மகன்கள் இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமான கதையாகும். இது இல் கூறப்பட்டுள்ளது. இவ்வுவமையை இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார். + +ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் முத்தவரிடம் போய்,"மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார். அவர் மறுமொழியாக,"நான் போக விரும்பவில்லை" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக,"நான் போகிறேன் ஐயா." என்றார் ஆனால் போகவில்லை. + +முதலில் போகமறுத்து பின் சென்ற புதல்வர் பாவிகளாக இருந்து மனம் மாறியவரை குறிக்கிறது. இவர்கள் முதலில் கடவுளின் சொல்கேளாமல் நடந்தனர் ஆனால் பின்னர் மனம் மாறி கடவுள் சொற்படி நடந்தனர். முதலில் போகிறேன் எனச்சொல்லி பின் போகமலிருந்த புதல்வர், கடவுள் கூறியவற்றை செய்வதாக கூறி வெளிவேடமிட்டவர்களாகும். இவர்கள் விண்ணரசில் இடம் பிடிக்க மாட்டார்கள் எனப்து இவ்வுவமையின் பொருளாகும். + + + +தமிழ் கிறிஸ்தவ சபை + + + + +நேர்மையற்ற நடுவர் உவமை + +நேர்மையற்ற நடுவர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனபதை விளக்குவதற்காக கூறிய உவமையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் ��ல் காணப்படுகிறது. + +ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டு விதவைக்கு நீதி வழங்கினார். + +இது இடைவிடாமல் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்பது உணர்த்தப்படுகிறது. + + + +தமிழ் கிறிஸ்தவ சபை + + + + +நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை + +நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா16:1-9 இல் காணப்படுகிறது. இதன் பொருள் சற்றுக் குழப்பத்துக்குரியதாகும். + +செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால் இயல்லாது, பிச்சை எடுத்துண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்" என்று அவர் தமக்குள்ளே சொல்லி. பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்" என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார். பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூடை கோதுமை" என்றார். அவர், "இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று எழுதும்" என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். + +இவ்வுவமையின் அடிக்கருத்தாக பணத்தை ஊடகமாக பயன்படுத்தவேண்டும் என்பதைக் கொள்ளலாம். + +இங்கு செல்வந்தன் பணத்தை சேகரிக்க பாடுபடும் உலக நடப்பை குறிக்கிறான். நீதியற்ற வீட்டுப்பொறுப்பாளர் கிறிஸ்தவரைக் குறிக்கிறது. இவ்வுலக நடைமுறைக்கு ஏற்ப இக் கிறிஸ்தவன் நீதியற்றவனாகும். ஏனெனில் கிறிஸ்தவன் வாழும் உலகத்தின் நடப்பை (பணம்) சேவிக்காமல் இயேசுவை சேவிக்கிறான். அதாவது அவன் இவ்வுலக நடப்பு (பணம்) விரும்பியதுப் போல பணத்தை சேமிக்கவில்லை. மாறாக வேலை முடிந்தபின்னர் (மரணத்தின் பின்) தனக்கு வேண்டிய பாதுகாப்பை பெற பணத்தை பயண்படுத்தினான். ஆனால் இவ்வுவமையில் நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் மற்றவரின் பயன்படுத்தி தனது விடுதலையை தேடிக்கொண்டான். இது பணம்,செல்வம் என்ன கிறிஸ்தவனது அல்ல என்பது பொருளாகும் (அது அவனே உழைத்தது எனினும்). + + + + + + + +இரக்கமற்ற பணியாளன் உவமை + +இரக்கமற்ற பணியாளன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாணக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா17:3-4 இலும் மத்தேயு18:21-35 இலும் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக கூறிய உவமையாகும். இது பாவ மன்னிப்பு பற்றியது. + +அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்த��ன். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குறிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து," என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். + +ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனரியம் (denarius) கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு," நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசனிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து," பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லாவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். + +ஒருவன் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் கடவுளும் அவனை மன்னிக்க மாட்டார் என்பது கருத்தாகும். + + + + + + +உமர் தம்பி + +உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார். + +இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார். + + +தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் +படித்தார்கள். + +அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் +முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார். + +மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார். + +இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள "Al Futtaim Group of Companies" ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான "National Panasonic" பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார். + +கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். + +முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். + +துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார். + +ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி +உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார். + +தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது +மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள். + +மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்���ுறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள். + +கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள். + + +சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள். + + + + + + + + + + + + + + + + +திராட்சை செடி உவமை + +திராட்சைச் செடி. + +இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானமாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் யோவான் 15:1-6 இல் காணப்படுகிறது. இது கதை வடிவில் அமையவில்லை. மாறாக, இயேசு தன்னைத் திராட்சைச் செடிக்கும், கடவுளைத் தோட்டக்காரருக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறார். + +நான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கின்ற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சைச்செடி; நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர���ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். + + + + + + + +பொல்லாத குத்தகையாளர் உவமை + +பொல்லாத குத்தகையாளர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாண கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் மத்தேயு 21:33-46, மாற்கு 12:1-12, லூக்கா 20:9-19 என்ற வசனங்களில் காணப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கடைசி கிழமையில் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது. + +ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் செய்து தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நெடு பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் குத்தைகையை அறவிடும் பொருட்டு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், "நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என எண்ணி. மகனை தோட்டத்துக்கு அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், "இவன்தான் சொத்துக்கு உரியவன் நாம் இவனைக் கொலை செய்வோம். அப்போது சொத்து நமதாகும் என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்போது திராட்சைத் தோட்ட உரிமையாளர் ந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு மனிதரிடம் குத்தகைக்கு விட்டார். + +தோட்டக்காரர் கடவுளாகவும், அவர் தோட்டத்துக்கு அனுப்பிய பணியாளர் இறைவாக்கினர் ஆகவும், தோட்டக்காரரின் மகன் இயேசு ஆகவும் உவமானப்படுத்தப் பட்டுள்ளது. கடவுள் பூமிக்கு பல இறைவாக்கினரை அனுப்பினார் ஆனால் மக்கள் அவர்களை புரக்கனித்தார்கள். கடவுள் இறுதியாக தமது மகனை அனுப்பினார் அனால் மக்களோ அவரை பிடித்து கொன்றனர். இதனால் கடவுள் அம்மக்களது அதிகாரத்தை பறித்து வேறு மனிதரிடம் கொடுப்பார் என்பது இதன் பொருளாகும். + + + + + + + +புளித்த மா உவமை + +புளித்த மா இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமைக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் மத்தேயு 13:33, லூக்கா 13:20-21 இல் காணப்படுகிறது. இது ஒரு வசனம் மட்டும் கொண்ட சிறிய‌‌ெ உவமையாகும். இதில் இயேசு விண்ணரசை புளிப்பு மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார். + +பெண் ஒருத்தி புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும் + +இது விண்ணரசின் பரம்பலைக் குறிக்கிறது. அதாவது புளிப்பு மா சிறிய அளவாகும் ஆனால் அது மூன்று மரக்கால் மாவையுமே புளிக்கச் செய்கிறது. இதுபோல உலகில் கிறிஸ்தவமும் (விண்ணரசு) சிறிய ஆரம்பத்திலிருந்து பெரிய அளவிற்கு பரவும் என்பது இதன் பொருளாகும். மேலும் இயேசு அலகையின் புளிப்பு மா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க கூறுகின்றார். ஒருவர் தனக்குள் அல்கையில் சிறிய அளவு புளிப்பு மாவை உள்ளெடுத்தால் முழுவதும் புளிப்பாய் மாறுகின்றது. + + + + + + + +ஆதாம் + +ஆதாம் ஆபிரகாமிய சமயங்களின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆவான். ஆதாம் இஸ்லாம், பஹாய், ஆகிய மதங்களில் இறைவாக்கினராகக் கருதப்படுகிறார். ஆதாம் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன. + +விவிலியத்தில் ஆதாம் என்ற சொல், கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதனின் பெயராக, தனிப்பட்ட ஒரு நபரின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் எபிரேய மொழியில், ஆதாமா என்றால் மண் என்றும், ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் பொருள். எனவே, ஆதாம் என்பது ஒரு காரணப்பெயர் என்பர் சிலர். ஏவாள் அவன் மனைவி; ஏவாள் என்பதற்கு மக்கள் அனைவரின் தாய் என்பது பொருள். + +ஆதாமைப் பற்றியக் கதையைப் பைபிளில், பழைய ஏற்பாட்டின் முதல் நூலான தொடக்க நூலில் காணலாம். இந்த எழுத்துகள் கிறிஸ்தவ மற்றும் யூத மத நம்பிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதன்படி, கடவுள் ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு கடவுளால் அனுமதிக்கப்பட்டான். பின்பு கடவுள் அவனது விலா எலு��்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என்று பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் எனப் பெயரிட்டான். அவர்கள் கடவுளின் கட்டளையை மீறி, அவரால் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் பறித்து உண்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள். + +ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின், ஆபேல், சேத் என்ற மகன்கள் பிறந்ததாகத் தொடக்க நூல் (ஆதியாகமம்) கூறுகிறது. ஆதாம் மேலும் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் விவிலியம் கூறுகின்றது. ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது. + +தேவன் (எலோஹீம்) மனிதனைப் படைத்தாரென்று ஆதியாகமப் புத்தகம்- முதல் அதிகாரம் கூறுகிறது. "அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் (எபிரேய மூல மொழியில் "ஆதாம்") என்று பேரிட்டார்..." (ஆதி 5:2). "ஆதாம்" என்பது "மனிதன்" என்ற சொல்லைப் போல் ஒரு பொதுவான பொருளைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். முழு மனித வர்க்கத்தையும் இந்த சொல் குறிக்கலாம். தேவன் அவர்களைப் "பலுகிப் பெருகும்படி" ஆசீர்வதித்து,"அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்" என்று கட்டளையிட்டார். (ஆதி 1:26, 27). +ஆதியாகமம் 2வது அதிகாரம் கூறுகிறபடி, தேவனாகிய கர்த்தர் ஆதாமை "பூமியின் மண்ணினாலே உருவாக்கி", ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதி", அவனை ஜீவாத்துமாவாக ஆக்கினார். (ஆதி 2:7). பின் தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலே வைத்து "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டார்.(ஆதி 2:16,17). +பின்பு தேவன் "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" என்று கண்டார். பின்பு தேவனாகிய கர்த்தர் "வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும்", ஆதாம் அவைகளுக்குப் பேரிடும்படியாக அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அனால் அந்த மிருகங்களில் ஒன்றாகிலும் ஆதாமுக்கு "ஏற்றத் துணையாக" காணப்படவில்லை. ஆதலால் தேவன் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, விலா எலும்பை மனுஷியாக உருவாக்கினார். அவளுக்கு ஆதாம் "ஏவாள்" என்ற பெயரிட்டான். + +அதன் தொடர்ச்சியாக ஆதாமும் ஏவாளும் "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்" என்ற தேவனுடையக் கட்டளையை உடைத்தப் படியினால், தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்; சாவாமையை இழந்தார்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களின் வெளியேற்றத்திற்குப் பின், தன் உணவிற்குக் கடினமாக உழைக்க வேண்டியக் கட்டாயம் முதன்முறையாக ஆதாமிற்கு வந்தது. அவனும் ஏவாளும் அனேக பிள்ளைகளைப் பெற்றாலும், ஆபேல், காயின் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே ஆதியாகாமம் குறிப்பிடுகிறது. + +இஸ்ரயேல் மக்களின் கடவுளே, நாம் வாழும் பிரபஞ்சத்தையும் மனிதரையும் படைத்தவர் என்பதை வலியுறுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். சிலர், ஆதாம் உண்மையில் வாழ்ந்த நபர் என்று கருதினாலும் அதில் உண்மை இல்லை. இக்கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள்மீது எழும் சந்தேகக் கேள்விகளே இதற்கு ஆதாரம். மேலும், இக்கதை பாபிலோனியப் படைப்புக் கதையை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இக்கதையில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டமும் பாபிலோனையேக் குறிக்கிறது; திக்ரீசு, யூப்பிரத்தீசு ஆறுகள் அங்கேயே ஓடின. மனிதர்கள் உலகில் கடவுளின் பிரதிநிதிகள், அவர்கள் தங்களுக்குக் கடவுளால் தரப்பட்டுள்ள சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும், உலகப் பொருட்களால் மயங்கி உண்மைக் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யக்கூடாது என்னும் கருத்துகளையும் இக்கதை எடுத்துரைக்கிறது. + +திருக்குர்ஆன் ஆதாமை முதல் மனிதனாகவும், முதல் நபியாகவும், அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடுகிறது. இறைவன் தன் அற்புதம் என்னும் கரங்களால் முதல் மனிதர் ஆதமைப் படைத்தான். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். மற்ற அனைத்துப் படைப்புகளையும் அவருக்குச் சிரம்பணியுமாறு கட்டளை இட்டான். அதன்படியே வானவர்கள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஆதமுக்குச் சிரம் ��ணிந்தன. ஆனால் சைத்தான் (சாத்தான்) என்று கூறப்படுகின்ற இப்லீஸ் ஆதமுக்குச் சிரம் தாழ்த்தவில்லை. தவிர, நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய். என்னையோ நெருப்பிலிருந்து படைத்தாய். நான் அவருக்குச் சிரம் பணிவதா என்றும், நான்தான் பெரியவன் என்றும் ஆணவம் கொண்டான். +அதனால் இறைவனின் வெறுப்பால் பூமிக்கு விரட்டியடிக்கப்பட்டான். பிறகு இறைவன் ஆதமுடைய விலா எலும்பிலிருந்து அவருக்கு ஹவ்வாவைப் படைத்தான். ஆதமே இந்த சுவர்க்கத்தில் எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள். ஆனால் அந்த மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் பழத்தைச் சைத்தானின் அறிவுறுத்தலுக்கிணங்கிச் சுவைத்து இறைவனின் கட்டளையை மீறினர். அதனால் அவர்கள் இருவரும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்களுக்கு ஹாபில், காபில் என்ற இரு மகன்களும் அவர்களின் இரட்டைச் சகோதரிகளும் இருந்தனர். + + + + +ஜாக் கில்பி + +ஜாக் செயின்ட் கிளேர் கில்பி (Jack St. Clair Kilby) (நவம்பர் 8, 1923 - ஜூன் 20, 2005) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மின்னியல் பொறியாளர் ஆவார். நுண்ணிய மின்சுற்றுக்களில் பயன்படும் மின்னுறுப்புக்களாகிய தடையம் (resistor), கொண்மி அல்லது சேர்மி (capacitor), இருமுனையம் (diode), திரிதடையம் (transistor) போன்றவற்றை ஒரே அடிமனையில் அமைத்து மின் தொகுசுற்றுகளை உருவாக்க முன்னோடியாக இருந்தவர். இவர் பொறியியலாளராக இருந்தும், முதன்முதலாக புதிதாக உருவாக்கி, தொகுசுற்றின் அடிப்படையில் விளைந்த பயனால் இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை 2000-ஆம் ஆண்டு பெற்றார். இவர் 1958-ல் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த போது தொகுசுற்றைக் உருவாக்கினார். இவரைப்பற்றி சொல்லும் பொழுது இதே துறைக்கு இணையான பங்களித்த ராபர்ட் நாய்சு அவர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். ராபர்ட் நாய்சு 1990ல் மறைந்து விட்டார்; இல்லாவிடில், இவரும் இப்பரிசை ஜாக் கில்பியுடன் பெற்றிருப்பார் என்பது பல்லோருடைய கணிப்பு. + + + + +சிவசங்கரி + +சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. + +இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். +இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். + +தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது. + + + + + + + + + +ராபர்ட் நாய்சு + +ராபர்ட் நாய்சு. (ரொபர்ட் நொய்ஸ், "Robert Noyce", டிசம்பர் 12, 1927 – ஜூன் 3, 1990), என்பவர் ஒரு புகழ் பெற்ற பொறியியலாளர். இவர் 1957ல் ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் நுண் மின்கருவிகள் செய்யும் நிறுவனத்தை துணைநிறுவனராக இருந்து நிறுவினார். இதே போல 1968ல் இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தையும் தொடக்கினார். நோபல் பரிசு பெற்ற ஜாக் கில்பி அவர்களைப் போலவே நுண் தொகுசுற்றுகள் ஆக்கத்திற்கு ஆழ்பங்களித்த முன்னோடி இவர். ஜாக் கில்பியுடைய புத்தாக்கம், புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் 6 மாதம் முந்தியது ஆனால், நாய்சு அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்தது, உற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட. + + + + + +அட்டுறு (கணக்கீடு) + +அட்டுதல் (சேர்த்தல்,கூட்டுதல்) என்ற சொல்���ிலிருந்து பெறப்பட்டதே அட்டுறு ஆகும் (ஆங்கிலத்தில் Accrual). கணக்கீட்டில் அட்டுறுவானது அட்டுறு வருமானம், அட்டுறு செலவு என இரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. அட்டுறு செலவு (accrued expense) என்பது ஒரு பொறுப்பாகும்; இது நடப்பாண்டில் வியாபார ஊடுசெயலின் போது ஏற்பட்ட செலவுகளில் பணம் கொடுத்து தீர்க்கப்படாத செலவுகளைக் குறிக்கும். இதே போல் அட்டுறு வருமானம் (accrued revenue) ஒர் சொத்தாகும்; இது நடப்பாண்டில் வியாபார ஊடுசெயலின் போது ஏற்பட்ட வருமானங்களில் பணமாக வந்து சேராத வருமானங்களைக் குறிக்கும். + +ஓர் நிறுவனம் திசம்பரின் இறுதியில் கணக்கினை முடிக்கின்றது. அவ்வாறு முடிக்கும்போது திசம்பரில் செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை என உணர்கின்றனர். வழமையாக அது மாத இறுதிக்குப் பின்னர் பல நாட்கள் கழித்தே வருவதுண்டு. ஆனால் பட்டியலில் எதிர்பார்க்கக்கூடிய கட்டத்தொகை குறித்து அவர்களால் தீர்மானிக்க இயலும். அந்த உரையாடல்கள் அந்த ஆண்டில் செய்யப்பட்டமையால், திசம்பர் இறுதியில் அவற்றிற்கான பொறுப்புகள் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் அந்த நிறுவனம் அட்டுறு செலவாக அதனைப் பதிவு செய்ய வேண்டும்; அதிகாரமுறை ஆவணம் இல்லாத நிலையில் உள்ள பொறுப்புகள். + + + + +ஆண்டுத்தொகை + +ஆண்டுத்தொகை (Annuity) என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும் அல்லது பெறப்படும் சமனான கட்டணத்தினைக் குறிக்கும். சேமிப்புக் கணக்குகளில் செலுத்தும் மாதாந்த வைப்புத்தொகை, வீட்டின் மீது பெற்றுக்கொண்ட பணத்துக்கான மாதாந்த ஈட்டுத் தொகை, மாதாந்தக் காப்புறுதிக் கட்டணம் என்பன ஆண்டுத்தொகைக்கு எடுத்துக் காட்டுகள். ஆண்டுத்தொகைகள் அவை செலுத்தப்படும் கால இடைவெளிகளின்படி வகைப்படுத்தப்படுகின்றன. இது கிழமை, மாதம், காலாண்டு, ஆண்டு அல்லது வேறு கால இடைவெளிகளில் செலுத்தப்படலாம். + +ஆண்டுத்தொகை மதிப்பீடு அன்றைய பணமதிப்பு, வட்டி வீதம், எதிர்கால மதிப்பு ஆகிய கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டது. + +செலுத்த வேண்டிய கட்டணங்களின் எண்ணிக்கை முன்னரே தெரியுமானால் அது "ஆண்டுத்தொகை உறுதி" எனப்படும். வட்டி சேர்ந்த பின்னர் தவணையின் இறுதியில் கட்டணம் செலுத்தப்படுவதாயின், அந்த ஆண்டுத்தொகையை, "உடனடி ஆண்டுத்தொகை" அல்லது "சாதாரண ஆண்டுத்தொகை" என்பர். + + + + +பங்குடைமை ஒப்பந்தம் + +பங்குடமை ஓப்பந்தம் (Partnership agreement) எனப்படுவது, ஒத்த தொழில் ஒன்றைக் கொண்டு நடாத்துவதற்காக (பங்குடமை வணிகத்தில்) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே மனமுவந்து ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு ஆகும். அந்தந்த நாடுகளிலுள்ள பங்குடமைச் சட்டங்களை பின்பற்ற விரும்பாதவர்கள் இவ்வாறான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுவர். இவ்வொப்பந்தத்தில் பங்காளர்களின் மூலதனம், இலாப நட்ட பிரிப்பு, தொழிலில் பங்குபற்றுவது தொடர்பிலான விடயங்கள் அடங்கியிருக்கும். ஒப்பந்தத்திலிருந்து ஒரு பங்காளர் விலகுவாராயின் ஒப்பந்தம் கலைக்கப்படும், பின் புதிதாக எழுதப்படும். + + + + +பேர்ச்சைல்டு செமிகண்டக்டர் + +பேர்ச்சைல்டு செமிகண்டக்டர் ("Fairchild Semiconductor") என்னும் தொழிலகம் (கும்பினி) முதன் முதலாக நுண் மின் தொகுசுற்றுகளை (Integrated Circuits) ஊற்பத்திச் செய்த பெருமை உடையது. இந்நிகழ்வுக்குப் பின் சிறிது காலத்திலேயே "டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்" நிறுவனமும் மின் நுண் தொகுசுற்றுக்கள் செய்து விற்கத்தொடங்கியது. ஃபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கிலே 1960களில் தொடங்கப்பட்டது. + + + + +அழுகணிச் சித்தர் + +அழுகணிச் சித்தர் என்பவர் தமிழ் நாட்டுச் சித்தர்களில் ஒருவர். தத்துவப் பொருளை உருவகமாகப் பாடியவர். துன்பச் சுவை மிகைப்படப் பாடுவதால் அழுகணிச் சித்தர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறுவர். இவரது பாடல்கள் அழுகணிச் சித்தர் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன. + +இவரது வரலாறோ அன்றிக் காலமோ துணிய முடியாதனவாக உள்ளது. +திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகிலுள்ள அருள்மிகு திருமலை நம்பி திருக்கோவில் முன்புறம் உள்ள புளிய மரத்துக்கு அடியில் அவர் வசிப்பதாக கருதப்படுகிறது. + + + + +அழுகணிச் சித்தர் பாடல் + +அழுகணிச் சித்தர் பாடல் அழுகணிச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. அழுகின்ற இசையின் பாணியில் பாடல���கள் உள்ளன. 32 கலித்தாழிசைப் பாடல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. + +"கண்ணம்மா என விளித்துச் சித்தர் பாடும் பாடல்களிலே துன்பச் சுவை மிகுந்து காணப்படுகின்றது. உலகியல்பையும் தத்துவ அறிவையும் புலப்படுத்தும் பாடல்களிலே உருவகமாக அமையும் செய்திகள் அதிகமாக உள்ளன." + +பொருள்: + + + + + +கிப்பன் பண்டம் + +ஒரு பொருளின் விற்பனை விலை ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு மாறாக அதன் நுகர்வளவும் கூடுமானால் அப்பண்டத்தைக் கிப்பன் பண்டம் ("Giffen good") என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போது மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு மாற்றுப் பண்டத்தை வாங்கத் தொடங்குவர். அவ்வாறில்லாமல், மக்களின் நுகர்திறன் குன்றும்போது கிப்பன் பண்டங்களின் விலை ஏறிக்கொண்டிருந்தாலும்கூட இருப்பதில் மலிவானவையாக இருப்பதால் அவர்களின் வரும்படியில் அவற்றையே வாங்க முடிகிறது. + +பொதுவாக, விலை நெகிழ்திறன் ("price elasticity") நுகர்தேவையுடன் ("demand") எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர் விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர் இராபர்ட்டு கிப்பன் என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது "பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ்" ("பொருளியல் கோட்பாடுகள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார். கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. + +வறுமைச் சூழலில் அன்றாட உணவில் பயன்படும் மலிவான தானியங்களைக் கொண்டு மார்சல் இவ்விளைவை விளக்குகிறார். இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் வாங்குதிறன் குன்றுகிறது. ஏற்கனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் வாங்குதிறன் குன்றிய சூழலில் வேறு நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் நுகர்வு குறைகிறது. இதனால் ஏற்படும் ஊட்டக்குறைவை ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக உட்கொள்கின்றன. இதனால் ஒரு பொருளின் நுகர்வு வழக்கத்திற்கு மாறாக விலை ஏறும்போதும் ஏறுகிறது. + +ஒரு பண்டத்தின்மீது கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்தி���ுக்க வேண்டும். + +""மாற்றுப் பண்டங்களின் போட்டியினால் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயினால் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்பும் தரமும் இழிநிலையில் இருத்தல்"" என்று முதலாவது கூறை மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும். + +இந்நிலையை அருகே தரப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. முதலில் நுகர்பவருக்கு தமது வருவாயை Y என்ற பண்டத்தின்மீதோ X என்ற பண்டத்தின்மீதோ செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இத்தெரிவுநிலையில் விலைக்கேற்ப நுகர்தேவை மாறுவதை MN என்ற கோட்டில் காட்டலாம். அந்தக்கோட்டை நுகர்பவரின் வரவு-செலவுக் கட்டுப்பாடு எனலாம். படத்தில் I என்று பெயரிட்டுள்ள இணைபயன் வளையீ நுகர்வோரின் முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அவ்வளைவில் சிறப்பான, உகப்பான கொள்முதல் கலவையை A என்ற புள்ளி குறிக்கிறது. + +X என்ற பண்டத்தின் விலை இறங்கும்போது, இரு விளைவுகள் ஏற்படுகின்றன. ஒப்பீடு விலை குறைந்த விலையையுடைய X பண்டத்திற்கு சார்பாக நிற்கிறது. இவ்விளைவை பிரதியீட்டு விளைவு என்பர். வரைபடத்தில் A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு இணைபயன் வளையீ நகர்வதில் இவ்விளைவு காட்டப்படுகிறது. B என்ற புள்ளி முந்தைய வளைவின் ஒரு சுழற்சி மையமாகும். + +அதே நேரத்தில், விலைக்குறைப்பு நுகர்பவரின் வாங்குதிறனைக் கூட்டுகிறது. வரவு-செலவுக் கட்டுப்பாடு இவ்வாறு வெளிநோக்கி நகர்வதை வருவாய் விளைவு என்பர். வரைபடத்தில் MP என்று பெயரிடப்பட்டுள்ள புள்ளிகளாலான கோடு இதைக் காட்டுகிறது. P என்பது புதிய விலையினால் வகுக்கப்பட்ட வருவாயாகும். + +முதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தின் நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. மொத்த விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வருவாய் விளைவு இருக்கும் பண்டம் கிப்பன் பண்டம் ஆகும். + +1845-ஆம் ஆண்டு முதல் 1849-ஆம் ஆண்டு வரை நிலவிய அயர்லாந்துப் பஞ்சத்தின்போது உருளைக் கிழங்கின் விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் இறக்கத்துக்கு மாற்றாக ஏற்றமிருந்ததை வெகுநாட்களாக கிப்பன் விளைவுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டி வந்தனர். ஆனால், 1999-ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது "முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள்" ("Potato paradoxes") என்ற தலைப்பிலான கட்டுரையில் இது தவறு என நிறுவினார். அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவின் உணான் மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு வறுமையில் வாடிய குடும்பங்களில் அரிசி ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின. இதுவே நிகழ்வாழ்வில் ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது கிப்பன் பண்டமாகும். நுகர்தேவையின் நெகிழ்வும், உணவுக் கலோரித் தேவையின் நெகிழ்வும் ஏழ்மையின் கடுமையைச் சார்ந்து நிகழ்வதால் இவ்விளைவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் அரசுகளின் ஏழைகளுக்கான சிறப்பு நல்கைகளைத் (மானியங்களைத்) தக்கவாறு திட்டமிட வேண்டும் என்பது புலனானது. + +2005-ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தது. அப்போது கிப்பன் விளைவாக இருக்கலாம் என "த நேசன்" ("The Nation") என்ற இதழில் பணிபுரிந்த சாசா அபிரம்சுக்கி என்பவர் கருதினார். விலையேற்றத்தால் பெட்ரோலுக்குத் தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்புக்கும், பழுது நீக்கத்துக்கும் தேவையான அளவு செலவு செய்ய முடியாது. அதனால் அவ்வண்டிகளின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு இழிவுப் பண்டமாகவும், பராமரிப்பு ஒரு மாற்றுப் பண்டமாகவும் அமையுமென அவர் கூறினார். ஆனால் அவரது கருத்துக்குச் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை. + + +
+ + + + +பயர் பாக்சு + +மொசிலா பயர் பாக்சு உலாவி இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.. இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். டிசம்பர் 2013 இன்படி உலகின் 18.35% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது. + +இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். + +பயர்பாக்ஸ் தத்தல் முறையிலான இணைய உலாவல், எழுத்துப் பிழைதிருத்தி வசதிகளுடன் கூடிய பொப்பகளைத் தடுத்தல் (pop up blocker), திறந்த நியமமுறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திற்ந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் வசதிகளுடன் பதிவிறக்க மேலாளர் (Download Manager) வசதிகளுடன் ஒருங்கிணைந்த விரும்பியடி மாற்றக்குடிய தேடுபொறியைத் தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் உலாவியாகும். இதன் வசதிகளானது பொருத்துக்கள் (addons) மூலம் மென்பொருள் விருத்தியாளர்களூடாக விரிவாக்கப்படக்கூடியவை. பயர்பாக்ஸ் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது. + +பயர்பாக்ஸ் பல்வேறுபட்ட விண்டோஸ் இயங்குதளங்கள், ஆப்பிள் மாக் ஓஎஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. + +ஆரம்பத்தில் ஃபயர்ஃபாக்ஸ் ஓர் சோதனைப் பதிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. +ஆரம்பத்தில் பீனிக்ஸ் (வீனிக்ஸ், "Phoenix") என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது பெப்ரவரி 9, 2004 இல் இருந்து மொஸிலா ஃபயர்ஃபாக்ஸ் அல்லது சுருக்கமாக ஃபயர்ஃபாக்ஸ் என மாற்றப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான ஃபயர்ஃபாக்ஸ் 2.0 ஐ வெளியிட முன்னர் ஃபயர்ஃபாக்ஸ் 1.0 நவம்பர் 9, 2004 உம், ஃபயர்ஃபாக்ஸ் 1.5 நவம்பர் 29, 2004 இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. + +ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு பசிபிக் நேரப்படி அக்டோபர் 24 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்னரே பீட்டாநியூஸ் இணையத்தளமூடாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது. + +பொன் எக்கோ (Bon Echo) எனச் செல்லப் பெயரிடப்பட்ட இத் திட்டமானது இதம் முதலாவது பீட்டாப் பதிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஃபயர்ஃபாக்ஸ் 2.0 என்றே அறியப்பட்டது. + +இதிலுள்ள வசதிகள் + +பயர் பாக்ஸ் 3.0 ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. மைன்ஸ்பீட்" என்று செல்லப்பெயரால் அறியப்படும் இதன் மூன்றாவது பதிப்பானது விண்டோஸ் 95, 98 மற்றும் மில்லேனியம் மற்றும் NT ஆகிய இயங்குதளங்க்ளை ஆதரிக்காது. ஜூன் 2008 கணக்கின் படி பயர் பாக்ஸ் 3.0 உலாவி 2.31% உலாவி சந்தையை கொண்டுள்ளது. வெளியிடப்பட்ட அன்று 8 மில்லியன் தனிப்பட்ட தரவிரக்கம் செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. + +பயர் பாக்ஸ் 4.0 மார்ச் 22 2011 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. + +பயர்பாக்சு 41.0.2 பதிப்பு தற்போது பயன்பாட்டில் உள்ளது. + +பயர்பாக்ஸ் உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்ஸ் உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது. + +பயர்பாக்ஸ் பல மென்பொருள் நியமங்களை ஆதரிக்கின்றது. இதில் HTML, XML, xHTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், DOM, MathML, DTD, XSL, XVG, XPath மற்றும் PNG முறையிலான பட கோப்பு வடிவங்களை ஆதரிக்கின்றது. + +மொஸிலா பயர்பாக்ஸ் ஓர் பல் இயங்குதள உலாவியாகும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் விண்டோஸ் 98, 98 இரண்டாம் பதிப்பு, மில்லேனியம், NT, 2000, XP மற்றும் சேவர் 2003 இயங்குவதோடு, ஆப்பிள் மாக் ஓஸ் X மற்றும் லினக்ஸ் எக்ஸ்விண்டோ முறையில் இயங்கும். இதன் இலவசமான திறந்த மூலநிரலைக் கொண்டு FreeBSD, OS/2, சொலாரிஸ், ஸ்கைஓஎஸ் (SkyOS), பீஈஓஎஸ் (BeOS) மற்றும் விண்டோஸ் XP 64 பிட் பதிப்பிலும் இயங்கும். + +இணையவிருத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்குகின்றது. இதில் ஜாவாஸ்கிரிப்ட் கன்சோல், DOM ஐ மேற்பார்வையிடுதல் மற்றும் வெங்காமான் ஸ்கிரிப்ட் டீபகர் ஆகியவற்றை வழங்குகின்றது. + +பயர்பாக்ஸ் உலாவியானது பல மொழிகளில் கிடைக்கின்றது. தமிழ் பயர்பாக்ஸ் முயற்சிகள் தமிழா இணையத்தளமூடாக ஆரம்பிக்கப்பட்டு அதன் 1.5.0.1 பதிப்பானது தமிழ் மொழியில் உள்ளீடு செய்யக் கூடிய வகையில் கிடைக்கின்றது. + + +ஐரோப்பாவில் 20% மானவர்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. + + + + + +அல்பேர்ட் காம்யு + +அல்பேர்ட் காம்யு (Albert Camus) (நவம்பர் 7, 1913 - ஜனவரி 4, 1960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1960 இல் கார் விபத்தில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதிய காம்யுவின் L'Étranger (The Stranger) நாவல் தமிழில் "அந்நியன்" என்ற பெயரில் வெ. ஸ்ரீராமால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +அல்பேர்ட் காம்யு 1913-ம் ஆண்டு, நவம்பர் 7 ஆம் தேதி அல்ஜீரியாவின் மோன்தோவி என்ற ஊரில் தன் பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை வைன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியர். 1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்டு வடக்கு பிரான்ஸில் தன்னுடைய 29 ஆவது வயதில் இறந்தார். ஐந்து முதல் பத்து வயது வரை நகராட்சி தொடக்கப் பள்ளியில் இலவசக் கல்வி. இவருடைய ஆசிரியர் லூயி ழெர்மென் முதல் உலகப் போரில் ராணுவ சேவை செய்தவர். சிறுவன் காம்யுவின் அறிவாற்றலையும் நற்பண்புகளையும் இனம் கண்டுகொண்டு, ஊக்கமும் உதவியும் அளித்து அவனை முன்னேறச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. நோபல் பரிசு கிடைத்தவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்காகத் தன்னுடைய தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து, ஆல்பெர் காம்யு எழுதிய கடிதம் இன்று வரலாற்றுப் புகழ் பெற்றுது. + + +1957 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காம்யுவுக்குக் கிடைத்தது. + +1960 ஜனவரி 4 ஆம் தேதி சாலை விபத்தில் இறந்தார். + + + + +பிரம்ம சூத்திரம் + +பிரம்ம சூத்திரம் :- சூத்திரம் என்றாலே சுருங்கக்கூறுவது. மிகப்பெரிய உண்மைகளை மிகச் சில சொற்களால் சொல்கிறது பிரம்ம சூத்திரம். எது உபநிடதங்களில் உள்ளதோ, எதுவெல்லாம் கீதையில் பேசப்பட்டதோ அதுவெல்லாம் பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். அண்டத்தில் உள்ளதை அணுவாக்கி���் தந்திருக்கிறார் வியாசர். உபநிடதங்களில் சொல்லப்படுபவற்றை ஒழுங்கமைத்துச் சுருக்கி விளங்கவைக்கும் முயற்சியில் இயற்றப்பட்ட நூல். இதன் ஆசிரியர் வியாசர் எனும் பாதராயணர் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. பகவத்கீதையில் பிரம்ம சூத்திரம் தொடர்பான குறிப்புகள் வருவதால் இது கீதைக்கும் முற்பட்டதெனத் தெளிவாகிறது. + +இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களில், பிரம்ம சூத்திரமும் ஒன்றாகும். + +இந்து தத்துவங்களின்படி பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்நூலுக்குப் பிரம்ம சூத்திரம் என்னும் பெயர் உண்டாயிற்று. வேதத்தின் இறுதிப் பகுதியாக அதாவது வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிடதங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது "வேதாந்த சூத்திரம்" எனவும், பிரம்ம மீமாம்சை, வேதாந்த தர்சனம், என்கிற பெயர்களால் இது அறியப்படுகிறது. மீமாம்சம் என்றால் ஆழமாக சிந்திப்பது, ஆராய்வது, விவாதிப்பது என்று பொருள். வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவு பகுதியான, உத்தர மீமாம்சை என்று அழைக்கப்படும் உபநிடதங்கள். வேதாந்த தரிசனம் என்பதில் தரிசனம் என்ற சொல்லுக்கு ‘பார்த்து அறிதல்’ என்று பொருள். பார்த்ததை மட்டும் அறிவதல்ல, பார்த்ததின் உட்பொருளையும் அறிவதாகும். + +555 சூத்திரங்களை கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள், ஒவ்வொரு பாதத்திலும் அதிகரணங்கள் (தலைப்புகள்) என்று சூத்திரங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 1.1.1 என்றால் முதல் அத்தியாயம், முதல் பாதம், முதல் சூத்திரம் ஆகும். முதலாவது சமன்வய அத்தியாயம், இது சமன்படுத்துகிறது. இரண்டாவதான அவிரோதா அத்தியாயம், முரண்பாடுகளை களைகிறது. மூன்றாவதான சாதனா அத்தியாயம், வீடுபேறுக்கான வழிகளைப் பயில்வது. நான்காவது பலன் அத்தியாயம் வீடுபேற்றை விவரிப்பது. + +இவை வேதாந்த தத்துவத்தை விளக்குபவையாக கருதப்படுகின்றன. “வேதங்கள் என்கிற மரத்தில் பூத்திருக்கிற உபநிடதப்பூக்களைத் தொடுத்திருக்கிற ஞானமாலையே பிரம்ம சூத்திரம்” என்கிறார் ஆதிசங்கரர். ”நாம், இந்த உலகம், இதற்கு காரணமான மூலப்பொருளான ஈஸ்வரன்” ஆகிய மூன்று தத்துவங்களை விவாதிக்கிறது. அண்டத்தில் உள்ளதை அணுவாக்கி தந்திருக்கிறார் வியாசர். பிரம்ம சூத்திரம் கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல். உலக உயிர்கள் அனைத்தும் பிரம்மத்துடன் தொடர்புடையவைதாம். அந்தத் தொடர்பை அறிய பிரம்மத்தை அறிய ஆத்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்மத் தியானம் தேவை என்கிறார் ஆதிசங்கரர். + +பணம், புகழ், பதவி, உலகியல் இன்பம் ஆகியவைகளைத் தாண்டி ஆராய்பவர்களுக்கு பிரம்ம சூத்திரம் ஒருவழிகாட்டி. மேலும் பிரம்ம சூத்திரம் மதசார்பற்றது. எந்தக் கடவுளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்பதுதான். மிகப்பெரிய உண்மைகளை சூத்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளது. சூத்திரம் என்றாலே விதி, இரகசியம், தீர்ப்பு, உபாயம் என்ற பல பொருள்களும் பிரம்ம சூத்திரத்திற்கு பொருந்தும். + +இது பிரபஞ்சத்தின் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், வீடுபேறு பற்றி விவரிக்கிறது. பிரம்ம சூத்திரம் தர்க்க நூல் வகையைச் சார்ந்த்து. பிரம்ம சூத்திரம் ஆராய்ச்சி பூர்வமான சிந்த்தனையைத் +தூண்டுவது. இது வேத உபநிடதங்களை ஆராய்கிறது. விசயங்களை விவாதிக்கிறது. முரண்பாடானவைகளை மறுத்து, தகுதியானவற்றை உறுதிப்படுத்துகிறது. + +இந்து சமயத்துக்கு அடிப்படையாக விளங்குவன வேதங்கள். வேதங்களின் இறுதிப்பகுதியாகவும், அவற்றின் சாரமாகவும் கருதப்படுபவை உபநிடதங்களாகும். நூற்றுக்கு மேற்பட்டனவாக உள்ள இந்த உபநிடதங்கள் பல்வேறு காலப்பகுதிகளில் உருவானதாலும், பலரால் இயற்றப்பட்டதாலும் இவற்றிலுள்ள தகவல்கள் ஒழுங்கின்றியும், சிதறிய நிலையிலும், பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தோன்றுவதால், இவற்றை வாசித்து விளங்கிக் கொள்வது மிகக் கடினமானது. ஆகவே பிரம்ம சூத்திரங்கள் இயற்றப்பட்டது + +உபநிடதங்களுக்கு விளக்கங்கள் இந்தநூலும், அதன் சுருக்கம் காரணமாக அதன் உள்ளடக்கத்தைப் பல்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு விளக்கமாக விரிவுரைகளை எழுதிய சங்கரர், இராமானுஜர், மத்வர், ஸ்ரீகண்டர், போன்றோர் இந்நூலின் உள்ளடக்கங்களுக்குத் தாங்கள் உணர்ந்துகொண்டபடி, வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்ததன் மூலம், வேதாந்தம் - அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்று மூன்று பிரபல பிரிவுகள் அடைந்தன. + + + + + + + +சிலிக்கான் பள்ளத்தாக்கு + +சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் சான் பிரான்சிசுக்கோவின் தென் பகுதியை குறிக்கும். இங்கே சிலிக்கான் சில்லு பற்றிய ஆய்வும், புதிய கண்டுபிடிப்பும் புத்தியற்றுதலும் (invention), சிலிக்கான் சில்லு உற்பத்தியும் இங்கே அதிகம் நிகழ்வதால் இப்பெயரை இப்பகுதி சிறப்புப் பெயராகப் பெற்றது. 1971ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொடரை டான் எவ்லர (Don Hoefler) என்னும் செய்தியாளர், எலெக்டிரானிக்ஸ் நியூஸ் என்னும் செய்தித்தாளில், கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பில் முதன்முதலாகப் பயன்படுத்தினார். இன்று உயர்நுட்பம், உயர்நுட்பக்கலை என்பதைக் குறிக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் புகழ்ப்பெயர். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது புவியியல் பெயர் அல்ல. + + + + +லாஸ் ஏஞ்சலஸ் + +லாஸ் ஏஞ்சலஸ் ("Los Angeles", , அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் (, "வானதூதர்கள்"), அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ("City of Los Angeles"), சுருக்கமாக எல்லே ("L.A."), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும், ஐக்கிய அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்த படியாக இரண்டாவது அதி கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 469 சதுர மீட்டர்கள் (1,215 கிமீ) ஆகும். + +"லாஸ் ஏஞ்சலஸ்" என்னும் பெயர் எசுப்பானிய மொழிப் பெயர் ஆகும். இப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்ப வந்த எசுப்பானியர்கள் புனித அசிசியின் பிரான்சிசு என்பவர் தொடங்கிய "பிரான்சிஸ்கு சபையை" சார்ந்தவர்கள். புனித பிரான்சிசு பிறந்து வளர்ந்து இறந்த இடமான அசிசி நகரருகில் அமைந்திருக்கும் ஒரு கோவிலின் பெயர் "சிறுநிலத்தில் அமைந்த வானதூதர்களின் ஆண்டவளாம் மரியா கோவில்" ("Our Lady of the Angels of Portiuncula") என்பதாகும். இதுவே இன்றைய அமெரிக்க நகரின் பெயராக இடப்பட்டது. Town of Our Lady of the Angels of Portiuncula என்னும் பொருள்கொண்ட மூல எசுப்பானிய பெயர் "El Pueblo de Nuestra Señora de los Angeles de Porciuncula" என்று கூறப்படும். இது பின்னர் சுருக்கமாக "Los Angeles" என்னும் வடிவம் பெற்றது. தமிழில் இதை "வானதூதர்கள் நகரம்" எனலாம். +இந்நகரத்தில், தொழில், பொழுதுபோக்கு, சர்வதேச வணிகம், கலாச்சாரம், ஊடகம், ஆடை வடிவமைப்பு, அறிவியல், விளையாட்டு, நுட்பியல், கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி என பல் துறையில் விளங்குவதால், சர்வதேச நகரங்களுக்கான குறியீட்டில் ஆறாம் இடத்திலும், சர்வதேச பொருளாதார வலு குறியீட்டில் ஒன்பதாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முண்ணனி திரைப்படத் தயாரிப்புக் கேந்திரமான "ஹாலிவுட்" இந்நகரினுள் அமைந்துள்ளது. + +இவ்வூர் 1781ல் இசுபானிய ஆளுநர் பெலிப்பே தே நெவே என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1821ல் தொடங்கிய மெக்சிகோ விடுதலைப் போர் முன்னிட்டு அந்நாட்டின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிறகு "குவாதலூப்பே ஹிடால்கோ" உடன்படிக்கை மூலம் 1848ல் முடிவுக்கு வந்த போருக்குப்பின் இந்நகரம் ஐக்கிய அமெரிக்க மாகாணத்தால் வாங்கப்பட்டு கலிபோர்னிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது. + +இங்கு இரண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன. "எல்.ஏ.லேக்கர்ஸ்" என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்டக் குழு இந்நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது. + +லாஸ் ஏஞ்சலஸ் கடற்கரையோரம் தொங்வா மற்றும் சுமாஷ் பூர்வகுடியினர் சில ஆயிரம் வருடங்களாக வசித்து வந்தனர். + +ஹுவான் ரோட்ரிகேஸ் கப்ரியோ என்ற போர்த்துகேயப் பயணி 1542ல் தென் கலிபோர்னியப் பகுதியை இசுபெயினுக்காக உரிமை கோரினார். கஸ்பர் தெ போர்ட்டோலா என்பவரும் கிறித்தவப் பாதிரியான ஹுவான் கிரெஸ்பி எனபவரும் ஆகத்து 2, 1769ல் லாஸ் ஏஞ்சலஸ் அமைந்துள்ள இடத்தை வந்தடைந்தனர் +செப்டம்பர் 4 1781ல் 'லாஸ் பொப்ளதோரெஸ்' என்றழைக்கப்பட்ட பல்வேறு இனத்தைச் சேர்ந்த 44 ஆட்களுடன் நகரின் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது. மேய்ச்சல் பகுதியாக இருந்த இவ்வூரின் மக்கள் தொகை படிப்படியாக 1825ல் 650ஐ அடைந்தது. இசுபெயின் 1821ல் விடுதலை அளித்தாலும் இவ்வூர் தொடர்ந்து மெக்சிகோவின் ஆளுகையே தொடர்ந்தது. ஆல்டா கலிபோர்னியா என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாகாணத்தைக் கைப்பற்றும் பொருட்டு, அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே தொடர்ச்சியான போர்கள் நடைபெற்றன. முடிவில் "கஹுவேங்கா உடன்படிக்கை" மூலம் அமெரிக்கா சனவரி 13 1847 அன்று கலிபோர்னியா அமெரிக்காவிற்கு கையளிக்கப்பட்டத���. + +"தென் பசிபிக் தடம்" என்றழைக்கப்பட்ட புகைவண்டி போக்குவரத்து 1876ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பெட்ரோல் 1892ல் கண்டுபிடிக்கப்பட்ட பின் வெகு விரைவிலேயே அமெரிக்காவின் முண்ணனி துரப்பண மாநிலமாகவும், உலக உற்பத்தியில் 25 சத பங்குடன் கலிபோர்னியா விளங்கியது. + +தொடர்ந்து பெருகிய மக்கள்தொகை 1900களில் 1 லட்சத்தைக் கடந்தது. பத்து திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிய பகுதியான ஹாலிவுட் 1910ல் ஏஞ்சலஸ் நகரத்துடன் இணைக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பின் மூலம் கிடைத்த வருவாய், பெரும் பொருளாதார நெருக்கடியான 1920களில் இந்நகரைக் காத்தது. நகரின் மக்கள் தொகை 1930ல் பத்து லட்சத்தைத் தாண்டியது. கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன்முறையாக 1932ல் இந்நகரில் நடைபெற்றது. + +இரண்டாம் உலகப்போருக்குப் பின் வேகமாக வளர்ந்த இந்நகரம் சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்குடன் இணைந்தது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1969ல் அமைக்கப்பட்ட "ஆர்ப்பாநெட்" என்ற கணிணி வலையின் மூலம் மென்லோ பார்க் நகரின் ஸ்டாண்போர்ட் ஆராய்ச்சி மையத்துடன் மின்னித் தகவல் பறிமாற்றம் நடைபெறத் துவங்கி இணையத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. + +கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இரண்டாம் முறையாக 1984ல் நடைபெற்றது. + +ஏப்ரல் 29, 1992 அன்று ராட்னி கிங் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில் நகரக் காவல் அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து நகரில் பெருமளவிலான இனக்கலவரங்கள் நடைபெற்றது. + +ரிக்டர் அலகில் 6.7 உள்ள நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம் 1994ல் நகரைத் தாக்கியதில் 72 உயிரிழப்புகளும், 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சேதாரமும் நிகழ்ந்தது. + +லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214 கி.மீ² (468.7 ச.மை.) ஆகும். நகரின் கிழக்கு மேற்கான தொலைவு 44 மைல்கள் (71 கி.மீ). மேலும் தென்வடக்காக 29 மைல்கள் (47 கி.மீ) தொலைவு நீளமுடையது. + +சமதளமும், குன்றுப்பகுதிகளும் இணைந்திருக்கும் இந்நகரின் உயரமான இடம், சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 5074 அடி உயரமுடைய மவுண்ட் "லூக்கென்ஸ்" என்ற இடமாகும். ஏஞ்சலஸ் கணவாயை சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கிடமிருந்து பிரிக்கும் சான்டா மோனிகா மலைத்தொடர் டவுன்டவுன் முதல் பசிபிக் கடல் வரைப் பரவியுள்ளது. மேலும் மவுண்ட் வாஷிங்டன், பாயில் உச்சி, பால்ட்வின் மலைகள் போன்றவை நகரைச் சூழ்ந்துள்ளன. + +லாஸ் ஏ��்சலஸ் ஆறு கனோகா பார்க் பகுதியில் தொடங்கி, சான்டா மோனிகா மலையின் வடக்குப்புறமாக, சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு ஊடாக கிழக்கு திசையில் ஓடி, சிட்டி சென்டர் அருகே தெற்காகத் திரும்பி லாங் பீச் துறைமுகம் அருகே பசிபிக் கடலில் கலக்கிறது. + +பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கும் ஏஞ்சலஸ் நகரம் அடிக்கடி நில நடுக்கத்தை எதிர் கொள்கிறது. வட அமெரிக்க மற்றும் பசிபிக் தட்டுகளின் உராய்வினால் உண்டான "சான் ஆண்ட்ரியஸ் பிளவு" தென் கலிபோர்னியா ஊடாகச் செல்கிறது. இப்பிளவு உண்டாக்கிய புவிச் சமன்பாடின்மை காரணமாக இப்பகுதி ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 நில அதிர்வுகளைச் சந்திக்கிறது. இந்நகரைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் முக்கியமானவை 1994 நார்த்ரிட்ஜ் அதிர்வு, 1987 விட்டியர் நேரோஸ் அதிர்வு, 1971 சான் பெர்ணான்டோ அதிர்வு மற்றும் 1933 லாங் பீச் அதிர்வுகள் ஆகும். + +லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தட்பவெப்பம் மத்திய தரைகடல் பகுதியினை ஒத்திருக்கிறது. அநேக நாட்களில் தெளிந்த வானத்துடன் அதிக சூரிய ஒளியைப் பெறும் இந்நகரம் ஆண்டில் சுமார் 35 நாட்களுக்கே பருவ மழையைப் பெறுகிறது. நகரின் சராசரி தட்பவெப்பம் 66 ° பாரன்ஹீட்(19 °செல்சியஸ்), பகலில் 75 °பாரன்ஹீட் (24 °செல்சியஸ்) என்ற அளவிலும் இரவு நேரத்தில் 57 °பாரன்ஹீட் (14 °செல்சியஸ்) என்றும் உள்ளது. நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட குளிர்காலத்தில் சராசரியாக 15 முதல் 20 இன்ச் மழை பெய்கிறது. நகருக்கு அருகிலுள்ள மலைகளில் சிறிதளவு பனிப்பொழிவு இருக்கும். + +டவுன்ட்டவுன் லாஸ் ஏஞ்சலஸ், கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், வடகிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், தெற்கு லாஸ் ஏஞ்சலஸ், துறைமுகப்பகுதி, ஹாலிவுட், வில்ஷைர், வெஸ்ட்சைட், சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கு மற்றும் கிரசென்டா பள்ளத்தாக்கு என பிரிக்கப்படும் இந்நகரம் 80 வட்டங்களை கொண்டது. + +நகரின் முக்கிய இடங்களாகக் குறிப்பிடப்படுபவை வால்ட் டிஸ்னி இசை அரங்கம், கிரிஃப்பித் கோளரங்கம், கெட்டி மையம், ஹாலிவுட் இலச்சினை, ஹாலிவுட் புலேவார்ட், ஸ்டேபிள்ஸ் அரங்கம், சாண்டா மோனிகா துறைக்கிட்டு, வெனிஸ் பீச், மலிபு பீச், பெவர்லி ஹில்ஸ் ஆகும். + +மொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆறில் ஒருவர் படைப்பூக்கம் தொடர்பான துறையில் பணியாற்றும் இந்நகர் உலகின் முதன்மை படைப்பூக்க நகரம் எனக�� கருதப்படுகிறது. திரைப்படத் துறையில் முக்கிய இடம் பிடித்துள்ள ஹாலிவுட் இந்நகரத்தினுள் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற "ஆஸ்கர் விருதுகள்" என்று அறியப்படும் வருடாந்திர அகாடெமி விருதுகள் வழங்கும் விழா இங்குதான் நடத்தப்பெறுகிறது. அமெரிக்காவின் பழமையான திரைப்படக் கல்லூரியான தென்கலிபோர்னிய பல்கலைக்கழக திரைக்கலைப் பள்ளி இங்கு அமைந்திருக்கிறது. + +நாடகம் மற்றும் இசைத் உள்ளிட்ட மேடை நிகழச்சிகள் பெருமளவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறுகிறது. லாஸ் ஏஞ்சலஸ் பில்ஹார்மொனிக் இசைக்குழு நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது. + +சுமார் 840 அருங்காட்சியகங்களும், கண்காட்சிகளும் உள்ளன. அவற்றுள் முதன்மையானவை லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி கலை அருங்காட்சியகம், கெட்டி மையம், சமகாலக் கலைக்கான அருங்காட்சியகம் போன்றவை ஆகும். + +"லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்" நகரின் முதன்மையான ஆங்கிலச் செய்தித்தாள் ஆகும். லாட்டினோக்கள் அதிகமுள்ள இந்நகரில் "லா ஒப்பீனியன்" என்ற இசுபானிய மொழி செய்தித்தாளும் முதன்மையான இடத்தில் உள்ளது. சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு "டெய்லி நியூஸ்" செய்தித்தாள் இயங்குகிறது. மேலும் பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக ஆர்மீனியன், கொரியன், பாரசீகம், ரஷ்யன், மாண்டரின், ஜப்பானிய, ஹீப்ரு மற்றும் அரபு மொழிப் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது. + +மேலும் திரைப்படத் துறை சார்ந்து "தி ஹாலிவுட் ரிப்போர்டர்" மற்றும் "வெரைட்டி" எனும் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது. பல்வேறு உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களும், பண்பலை வானொலி நிலையங்களும் இங்கு உள்ளது. + +சர்வதேச வணிகம், பொழுதுபோக்கு (திரைப்படம், தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள், இசைவட்டுகள்), விமானவியல், தொழில்நுட்பம், பெட்ரோல், ஆடை வடிவமைப்பு, சுற்றுலா போன்ற துறைகள் இந்நகரினுடைய பொருளாதாரத்திற்கு தூண்களாக விளங்குகின்றன. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களின் முதன்மையான உற்பத்திக் கேந்திரமாக லாஸ் ஏஞ்சலஸ் விளங்குகிறது. நகரின் உற்பத்தி மதிப்பை உள்நாட்டு உற்பத்தி குறியீட்டெண் கொண்டு வகைப்படுத்தினால் உலக நாடுகளுள் 15 ஆம் இடத்தைப் பெறும். + +பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 6 நிறுவனங்கள் இந்நகரைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. நகரின் பாரிய தனியார் துறை நிறுவனம���க விளங்கும் தென் கலிபோர்னிய பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. + +2010 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள் தொகை 3,844,828 ஆகும். மக்கள் நெருக்கம் சதுர மைல் ஒன்றுக்கு 7,544.6 பேர் என்று உள்ளது. நகரில் ஒவ்வொரு 100 மகளிருக்கும் 99.2 ஆடவர் உள்ளனர். + +மேலும் வெள்ளை இனத்தவர்(49.8%), ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர்(9.6%), தொல்குடி அமெரிக்கர்(0.7%), ஆசிய இனத்தவர்(11.3%), பசிபிக் தீவு இனத்தவர் (0.1%), பிற இனத்தவர்(23.8%), 2 அல்லது மேலதிக இனக் கலப்பினர் (4.6%) நகரில் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இசுபானியர்கள் அல்லது லட்டீனோ இனத்தவர் சதவிகிதம் (48.5%) ஆகும். + +நகரில் பெரும்பாண்மையினரான இசுபானிய மொழி பேசும் மக்களில் மெக்சிகோ நாட்டினர் 31.9% சால்வடோர் நாட்டினர் (6.0%) மற்றும் கவுதமாலா நாட்டினர் (3.6%) உள்ளனர். லட்டீனோ இனத்தவர் கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தெற்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும் மிகுதியாக வசிக்கின்றனர். + +லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 140 நாடுகளைச் சேர்ந்த 224 மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கின்றனர். நகரில் சைனாடவுன், பிலிப்பினோடவுன், கொரியாடவுன், லிட்டில் ஆர்மீனியா, லிட்டில் எத்தியோப்பியா, டெஹ்ராங்கலஸ், லிட்டில் டோக்கியோ, தாய்டவுன் என பல்வேறு இனக்குழுக்குழுவினர் மிகுதியாக வசிக்கும், வணிக வளாகங்கள் நடத்தும் பகுதிகள் உள்ளன. இந்தியர்களின் வணிகவளாகங்கள் ஆர்டீசியா பகுதியில் பயனீர் புலவார்ட் சாலையின் இருமருங்கிலும் அமைந்துள்ளன. + +லாஸ் ஏஞ்சலஸ் நகர வீடற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2015இல் சுமார் 26,000 பேர் நகரின் தெருவோரங்களில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க 100 மிலியன் டாலர்கள் ஒதுக்குவதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர். + +லாஸ் ஏஞ்சலஸில் பல பெரிய கல்லூரிகள் உள்ளன. அவைகளுள் அரசு ஆதரவில் இயங்குபவை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA), கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (CSULA) மற்றும் கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (நார்த்ரிட்ஜ்)(CSUN) ஆகும். + +ஏல்லயன்ட் சர்வதேசப் பல்கலைக்கழகம், சிராக்யூஸ் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), அமெரிக்கன் இன்டர்காண்டினென்டல் பல்கலைக்கழகம், அமெரிக்க இசை மற்றும் நாடக அகாடெமி – லாஸ் ஏஞ்சலஸ் வளாகம், ஆண்டியோக் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), பயோலா பல்கலைக்கழகம், சார்ல்ஸ் ஆர். ட்ரூ மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ் நடிப்புப் பள்ளி, லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகம், மேரிமவுண்ட் கல்லூரி, மவுண்ட் செய்ன்ட் மேரிஸ் கல்லூரி, கலிபோர்னிய தேசியப் பல்கலைக்கழகம், ஓக்சிடெண்டல் கல்லூரி, ஓடிஸ் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, தென் கலிபோர்னியா கட்டடக்கலை நிறுவனம், தென்மேற்கு சட்டப்பள்ளி, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு தனியார் கல்லூரிகள் நகரில் உள்ளன. + +"கால்டெக்" என்றழைக்கப்படும் புகழ்பெற்ற கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரி பாசடீனா பகுதியில் அமைந்துள்ளது. நாசா அமைப்பின் "ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தை" இக்கல்லூரி நிர்வகிக்கிறது. + +லாஸ் ஏஞ்சலஸ் நகரையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் பல்வேறு தனிவழிச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. 2005 ஆண்டு தேசிய நகரிய சாலைப் பயன்பாட்டு அறிக்கையின்படி இந்நகரமே நாட்டின் நெரிசலான போக்குவரத்தைக் கொண்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரச் சாலைகளில் பயணம் செய்பவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 72 மணி நேரத்தை அடைசலான போக்குவரத்தில் இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நகரினூடாகச் செல்லும் I5 நெடுஞ்சாலை தெற்கில் மெக்சிகோவின் எல்லை நகரான டிஹுவானாவையும், வடக்கில் சாக்ரமென்டோ, போர்டலேண்ட், சியாட்டில் கடந்து கனேடிய எல்லையைத் தொடுகிறது. + +சான்டா மோனிகாவில் பசிபிக் கடலையொட்டித் துவங்கும் I10 தனிவழிச்சாலை கிழக்காக பல்வேறு மாகாணங்களைக் கடந்து பிளோரிடாவின் ஜாக்ஸன்வில் நகரில் அட்லாண்டிக் கடலைத் தொட்டு முடிகிறது. பசிபிக் நெடுஞ்சாலை என்றழைக்கப்பெறும் வழித்தடம் 101 நெடுஞ்சாலை நகரில் துவங்கி கலிபோர்னியாவின் கரையோரமாக வடக்கே சென்று ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களின் கரையோரமாகச் செல்கிறது. + +லாஸ் ஏஞ்சலஸ் நகர் பேருந்து மற்றும் ரயில் சேவையைக் கொண்ட வலுவான போக்குவரத்துப் பின்னலைப் பெற்றுள்ளது. மெட்ரோலிங்க் ரயில்சேவை புறநகர்ப்பகுதிகளை இணைக்கிறது. நகரின் முக்கியமான ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன் டவுன்டவுனுக்கே வடக்கே அமைந்துள்ளது. + +லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையம் (LAX) முனைப்பான சேவையில் அமெரிக்காவில் மூன���றாவது இடத்திலும், உலகளவில் ஆறாவது இடத்திலும் உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சலஸ் நகரை நிலையாகக் கொண்டு இயங்குகிறது. மேலும் ஒண்டாரியோ, பர்பேங்க், லாங்பீச், வான் நய்ஸ் மற்றும் ஆரஞ்சு கவுண்டி போன்ற இடங்களில் சிறு விமான நிலையங்கள் அமைந்துள்ளன. + +நகரில் சான் பெட்ரோ மற்றும் லாங்பீச் ஆகிய இடங்களில் இரு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவை சரக்குப் போக்குவரத்தைக் கையாளுவதில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளன. மேலும் சான் பெட்ரோவிலிருந்து கேட்டலீனா தீவில் உள்ள அவலான் நகருக்கு படகுச் சேவையும் நடைபெறுகிறது. + +மேஜர் லீக் பேஸ்பாலில் விளையாடும் டாட்ஜர்ஸ், தேசிய ஹாக்கி லீகில் விளையாடும் கிங்ஸ் மற்றும் தேசிய பேஸ்கட்பால் சங்கப் போட்டிகளில் ஆடும் லேக்கர்ஸ் & கிளிப்பர்ஸ் அணிகள் நகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தேசிய புட்பால் கூட்டமைப்பின் அணிகள் எதுவும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இயங்கவில்லை. + +இந்நகரம் 1932 மற்றும் 1984 ஆண்டுகளில் கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தியுள்ளது. 1994 ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. நகரில் டாட்ஜர்ஸ் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலஸ் கொலீசியம், தி போரம், ஸ்டேப்பிள்ஸ் சென்டர் என பல பெரும் விளையாட்டு அரங்குகள் அமைந்துள்ளன. + +மலிபு கோவில் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வெங்கடேசுவரர் ஆலயம் கலபசஸ் நகரில், லாஸ் விர்ஜினஸ் சாலையில் அமைந்துள்ளது. ஹாலிவுட் நகரத்தில் சுவாமிநாராயண் இயக்கத்தினரின் ஆலயம் அமைந்துள்ளது. மலையாள மொழியில் நடத்தப்படும் செயின்ட் அல்போன்ஸா சைரோ மலபார் கத்தோலிக்க ஆலயம் சான் பெர்ணான்டோ நகரில் அமைந்துள்ளது. + + + + +போரான் + +போரான் அல்லது கார்மம் (Boron) என்னும் தனிமம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வேதியியல் தனிமமாகும். இது பெரும்பாலும் போராக்சு (Borax) என்னும் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. இத்தனிமத்தை ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் அதிக அளவில் அகழ்ந்தெடுத்துப் பிரிக்கின்றன. இத்தனிமத்தின் அணு எண் 5. இதன் அணுக்கருவில் ஐந்து நேர்மின்னிகள் உள்ளன. அணுக்கருவைச் சுற்றி ஐந்து எதிர்மின்னிகள் சுழன்று வருகின்றன. இந்த ஐந்து எதிர்மின்னிகளில், இ���ண்டு உட்சுற்றுப்பாதையில் சுழன்று வருகின்றன. எஞ்சியுள்ள மூன்று எதிர்மின்னிகளும் வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும் திறம் கொண்டவை. கார்மத் தனிமம் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. படிகமாகவும், படிகமல்லாமலும் திண்ம வடிவம் கொண்டுள்ளது. படிக வடிவிலும் பல்வேறு படிக உருவங்களில் இது இருக்கின்றது. போரான் நைட்டிரைடு (BN) என்னும் பொருள் மிகவும் உறுதியானது. ஏறத்தாழ வைரம் போலும் உறுதியானது. போரான் சிலிக்கான் சில்லு உற்பத்தியில் சிறப்பான பங்கு கொள்கின்றது. இருமுனையம், திரிதடையம் போன்ற நுண்மின்கருவிகள் செய்யப் பயன்படும் குறைகடத்தி சிலிக்கானை பி-வகை (புரைமின்னி அதிகம் உள்ளது) குறைகடத்தியாக மாற்ற போரான் அணுக்கள் சிலிக்கனுக்குள் தேவைப்படும் அளவு புகுத்தப்படுகின்றன. + +கார்மம் தனிமமாகக் கண்டு பிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே போரான் சேர்மங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. கார்மம் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை. சில எரிமலைப் பகுதிகளில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் ஆர்த்தோ போரிக் அமிலமாகவும் ,சில ஏரிகளில் போராக்ஸ் என்றழைக்கப்படுகின்ற சோடியம் போரேட்டாகவும் காலமெனைட் என்ற கால்சியம் போரேட்டாகவும் கிடைக்கின்றது. இது இயற்கை ஒளி இழை(Optical fibre)போலச் செயல்பட்டு இழப்பின்றி ஒளியை ஒரு முனையிலிருந்து மறு முனைக்குக் கடத்திச்செல்கிறது. இயற்கையில் கிடைக்கும் போரானில் 19 .78 % நிறை எண் 10 கொண்ட அணு எண்மங்களாகவும் 80 .22 விழுக்காடு நிறையெண் 11 கொண்ட அணு எண்மங்களாகவும் உள்ளன. போரிக் ஆக்ஸைடுடன் மக்னீசியம் பொடியைக் கலந்து பழுக்கச் சூடுபடுத்த, மக்னீசியாவும் (மக்னீசியம் ஆக்சைடு) போரானும் விளைகின்றன. இதை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க மக்னீசியா மட்டும் கரைந்து படிக உருவமற்ற (amorphous)கார்மம் கறுப்புப் பொடியாக வீழ்படிகிறது. + +15௦௦ o C வெப்ப நிலையில் அலுமினியத்துடன் சூடுபடுத்தி படிகப் போரானைப் பெறலாம்.குளிர்ந்த பிறகு அலுமினியத்தை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க படிகக் கார்மம் எஞ்சுகிறது . 1808 ல் சர் ஹம்ப்ரி டேவி பொட்டாசியத்தையும் போரிக் அமிலத்தையும் ஒரு குழலிலிட்டு சூடுபடுத்தி தூய்மையற்ற போரானை முதன் முதலாகப் பெற்ற போது அது ஒரு புதிய உலோகம் என்றெண்ணி அதற்கு போராசியம் (Boracium) எனப் பெயரிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அது ஓர் அலோகம் (Non-metal) என உறுதி செய்த பின்னர் கார்பனுக்கு இணையாக போரான் எனப் பெயரிட்டனர். + +அணு எண் 5 ஆக உள்ள போரானின் அணு நிறை 10 .81. இதன் அடர்த்தி 3120 கிகி /கமீ. உருகு நிலை 2573 K,கொதி நிலை 3973 K என உள்ளது சாதாரண வெப்ப நிலைகளில் இது காற்று வெளியில் பாதிக்கப் படுவதில்லை. ஒரளவு உயர் வெப்ப நிலைகளில் இது எரிந்து ஆக்சைடு, நைட்ரைடு கலவையைத் தருகிறது .7000 C வெப்ப நிலையில் ஆக்சிஜனில் எரிந்து ட்ரை ஆக்சைடை உண்டாக்குகின்றது .வெகு சில தனிமங்களுள் ஒன்றாக போரான் நைட்ரஜனுடன் நேரடியாக இணைகிறது. நைட்ரிக் அமிலமும் கடிய கந்தக அமிலமும் போரானை ஆக்சிஜனேற்றம் செய்கின்றன. சூடு படுத்தும் போது போரான்,சிலிகான் மற்றும் கார்பனை அவற்றின் ஆக்சைடுகளிலிருந்து இடம் பெயரச் செய்கிறது படிக நிலையில் உள்ள போரான் கடினமாகவும் உறுதிமிக்கதாகவும் இருக்கிறது. வெப்பத்தினாலும் அமிலங்களாலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் மென் காரங்களில் கரைகிறது. போரான் தனிமத்தின் ஆற்றல் பட்டையின் இடைவெளி 1.50 - 1.56 எலெக்ட்ரான் வோல்ட்(electron volt).இது சிலிகான் ஜெர்மானியத்தைவிடச் சிறிது அதிகம். இது சில சிறப்பான ஒளியியல் பண்புகளைப் பெற்றுள்ளது. அகச்சிவப்புக் கதிர்களின் ஒரு பகுதியை இது கடத்திச் செல்கிறது. இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் பற்றிய ஆய்வுக்கான சாதனங்களில் இது இடம் பெறுகிறது. அறை வெப்ப நிலையில் ஏறக்குறைய மின்சாரத்தை அரிதில் கடத்திகள் போலக் கடத்தும் போரான் உயர் வெப்ப நிலையில் எளிதில் கடத்தியாகச் செயல்படுகிறது. வெப்ப நிலைக்கு ஏற்ப அதன் படிக நிலையில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணமாகின்றது + +போரான் பொடியை வான வேடிக்கைக்கான வெடிபொருட்களில் பச்சை நிறம் பெறப் பயன்படுத்துகிறார்கள். ஏவூர்திகளில் தீப்பற்றவைக்க போரான் நுண்பொடி பயன்தருகிறது. தனிம போரானை விட போரான் சேர்மங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. எஃகை உறுதியூட்டவும், பளபளப்பான வண்ணப் பூச்சுகள், சிறப்பு வகைக் கண்ணாடிகளை உற்பத்தி செய்யவும் போரான் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது. போரான் வேகங் குறைந்த நியூட்ரான்களை உட்கவருவதால், இதன் எஃகு கலப்பு உலோகங்கள் அணு உலைகளில் காட்மியத்திற்குப் பதிலாக நியூட்ரான்களின் பாயத்தைக் கட்டுப்படுத்தும் தண்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. போரிக் அமிலம் அல்லது போராசிக் அமிலம் போராக்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதைப் பல்வேறு தொழிற்சாலைகளில் ஒரு மென்மையான கிருமி நாசினியாகப் பயன்படுத்துகிறார்கள். போராக்ஸ் என்பது சோடியம் டெட்ரா போரேட்டாகும். இயற்கையில் இது டின்கால்(tincal)என்ற கனிமமாகக் கிடைக்கிறது. இதைச் சூடுபடுத்த நீர் நீக்கப் பெற்று களிம்பு போன்ற பாகு கிடைக்கிறது. இதைக் கிருமி நாசினியாகவும் , தீக்காப்புப் பொருளாகவும் ,கண்ணாடி மற்றும் பீங்கான் உற்பத்தியில் ஒரு மூலப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். பற்றவைப்பு முறையில் தூய்மையூட்டியாகவும் சலவைச் சோப்புத்தூள் தயாரிப்பில் நீரை மென்மைப் படுத்தவும் பயன்படுகிறது. சாயத்தைக் கெட்டிப் படுத்தவும்,அட்டை,சோப்பு, கண்ணாடி போன்ற பொருட்களின் புறப் பரப்பை வளவளப்பூட்டவும் ,மெருகூட்டவும் பயன்படுகிறது. குளிர் சாதனப் பெட்டி ,சலவை இயந்திரம் போன்றவற்றின் எஃகுப் பகுதிகளை பூச்சிட்டுப் பாதுகாக்க சில போரான் கூட்டுப் பொருட்கள் நன்மை அளிக்கின்றன. போரான் நைட்ரைடு ,போரான் கார்பைடு போன்றவை வைரம் போன்று மிகவும் கடின மிக்க பொருட்களாகும். போரான் நைட்ரைடு மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ஆனால் வெப்பத்தைக் கடத்துகிறது. மேலும் இது கிராபைட்டு போல மசகுத் தன்மையை வேறு கொண்டுள்ளது.போரான் கார்பைடு 2450 டிகிரி சென்டி கிரேடு வெப்ப நிலையில் உருகுகின்றது. இதைத் தேய்ப்புப் பொருளாகவும் அணு உலைகளில் வேக மட்டுப் படுத்தியாகவும் (Moderator) பயன்படுத்துகிறார்கள். போரானின் ஹைட்ரைடுகள் குறிப்பிடும்படியான அளவில் ஆற்றலை வெளியேற்றி மிக எளிதில் ஆக்ஸிஜனேற்றம் பெறுவதால் அவற்றை ஏவூர்திகளில் திண்ம எரி பொருளாகப் பயன்படுத்த முடிகிறது. + +போரான் மந்த வேக நியூட்ரான்களை உட்கவருவதால் அதன் சில கூட்டுப் பொருட்கள் அணு ஆய்வுக் கருவிகளில் பயன்படுத்தப் படுகிறது. BF3 எண்ணி (Counter) என்பது போரான் ட்ரை புளூரைடு பூச்சிட்ட கெய்கர் முல்லர் எண்ணியாகும். நியூட்ரான் மின்னூட்டமற்ற துகளாக இருப்பதால் அதை இனமறிவது எளிதல்ல.நேரிடையாக அதை அறிய முடியாததால் BF3 எண்ணி மூலம் ஆராய்கின்றனர். நியூட்ரான்களை உட்கவர்ந்த போரான் நிலையற்று இருப்பதால் ஆல்பாக் கதிரை உமிழ அதை இனமறிந்து நியூட்ரான் பாய்மத்தை மதிப்பிடுகின்றார்கள். போரான் தனிமம் நச்சுத��� தன்மை கொண்டதில்லை. எனினும் அதன் கூட்டுப் பொருட்கள் ஜீரனிக்கப்படும் போது படிப்படியான நச்சுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. + +மக்னீசியம் டை போரைடு (MgB2) 2001 ல் ஜப்பான் நாட்டில் மீக்கடத்தியாகக் கண்டறியப்பட்டது . இது வெறும் இரு தனிமங்களால் ஆனதாக இருப்பதாலும், இதை எளிதாக உற்பத்தி செய்ய முடிவதாலும் இதன் பெயர்ச்சி வெப்பநிலை 39 K ஆக இருப்பினும், பல உயர் வெப்ப நிலை மீக் கடத்திகளுக்கு உகந்த மாற்றுப் பொருளாக விளங்குகிறது. + + + + +சைவ சித்தாந்தம் + +சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. "சித்தாந்தம்" என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம். + +சைவ சித்தாத்தினை வேதாந்தம் எனும் மரத்தில் காய்த்த பழுத்த கனி என்கிறார் குமர குருபரர். சைவ சித்தாந்தம் திராவிட அறிவின் சிறந்த வெளிப்பாடு என்று ஜி.யு.போப் குறிப்பிடுகின்றார். + +சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர். + +இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே "சைவ சித்தாந்தம்" என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. + +இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வ���ணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன. + +சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன. + +சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை, + +என்பனவாகும். + + +ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது. + + +"உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பெளத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்." + +சைவ சித்தாந்தம் சாதியமைப்பைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுபவர்களாகவும் இருக்கின்றார்கள். + + + + + + +நாவலப்பிட்டி + +நாவலப்பிட்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நாவப்பிட்டி நகரம் நகரசபையாளும் நகரைச்சூழவுள்ள பகுதிகள் பஸ்பாகே கோரளை பிரதேச சபையால் ஆட்சி செய்யப்படுகிறது. நகரசபையும் பிரதேச சபையும் கூட்டாக பஸ்பாகே கோரளை பிரதேச செயளர் நிர்வாக பிரிவில் அடங்குகின்றன. நாவலப்பிட்டி மாவட்ட தலைநகரான கண்டியிலிருந்து 38 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. பாரிய தேயிலைத் தோட்டங்கள் இந்நகரைச் சூழ காணப்படுகின்றது.இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இந்நகரின் உடாக பாய்கிறது. மாகலியின் பிரதான கிளையாறான கொத்மலை ஒயா நகருக்கு தெற்கில் பிரதான ஆற்றோடு சங்கமிக்கிறது. + +நகரம் இலங்கையின் மத்திய மலைநாட்டின் தென் மேல் சாய்வில் அமைந்துள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 602 மீற்றர்களாகும். இப்பகுதி மிக சாய்வான மலைகளைக் கொண்டுள்ளது குறைந்த தூரத்தில் பாரிய உயர வேற்றுமகளைக் காணலாம். 930 மீற்றர் உயரமான தொலொஸ்பாகை மலைத்தொடர்கள் நகருக்கு அண்மையில் காணப்படுகின்றன. இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி கங்கை இந்நகரின் ஊடாகப் பாய்கிறது. நகரின் வருடாந்த மழை வீழ்ச்சி சுமார் 2500 மி.மீ. ஆகும். இது மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையான காலப்பகுதியில் வீசும் தென்மேற்கு பருவக் காற்றினால் கிடைக்கிறது. சராசரி வெப்பநிலை 28 பாகை செல்சியஸ் ஆகும். மிக குறைந்த வெப்பநிலையான 15 பாகை செல்சியஸ் ஜனவரி மாதத்தில் உணரப்படும். + +நாவலப்பிட்டியை பெருந்தெரு மற்றும் தொடருந்து வழியாக அனுகலாம். கண்டி நகரில் இருந்து ஏஏ-1 பெருந்தெருவில் பேராதனை வரை பயணம் செய்து அங்கிருந்து ஏஏ-5 பெருந்தெருவில் கம்பளை வரை சென்று அங்கிருந்து ஏபி-13 பெருந்தெருவூடாக நாவலப்பிட்டியை அடையலாம். மாற்றாக இலங்கை தொடருந்து திணைக்களத்தின் மலையக பாதையின் மூலமாகவும் அடையலாம். நாவப்பிட்டியை திம்புளைக்கு பி-317, தொலொஸ்பாகைக்கு பி-318, கினிகத்தனைக்கு பி-319 மற்றும் அரங்கலைக்கு பி-506 என்ற பி தர பெருந்தெருக்கள் இணைக்கின்றன. + +நாவலப்பிட்டி ஒரு பல்கலாச்சார பல்சமய நகரமாகும். இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +பிரித்தானியர் வருகையின் போது இந்நகர் ஒரு சிறிய கிராமமாகவே காணப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போது நகரைச்சூழவுள்ள பிரதேசத்தில் இரப்பர், கோப்பித் தோட்டங்கள் செய்யப்பட்டன. அவை ஒருவித நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்��ு தேயிலை இப்பிரதேசத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்காக இந்தியாவின் அப்போதைய மெட்றாஸ் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டனர். இன்றும் இவர்களது சந்ததியினர் குறிப்பிடத்தக்களவு பெரும்பான்மையுடன் நாவலப்பிட்டியில் வசிக்கின்றனர். 1874 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கொழும்புக்கு தேயிலையை கொண்டுச் செல்வதை இலகுவாக்கும் நோக்கில் நாவலப்பிட்டிக்கு தொடருந்து பாதையை அமைத்தார்கள். இந்நகரைச்சுற்றி வேறு இயற்கை வளங்கள் காணப்படாத நிலையில் நகரின் வளர்ச்சி இரயிலையும் அதனுடன் தொடர்புடைய சேவைகளையும் அண்டியே நடைப்பெற்றது. காலப்போக்கில் இரயிலின் முக்கியத்துவம் குன்றிப்போனாலும் நகரின் வளர்ச்சி பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை. + +நகரசபை 9 ஆசங்களையும் பிரதேச சபை 11 ஆசங்களையும் கொண்டதாகும். +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நாவலப்பிட்டி நகரசபை + +மூலம்: + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பஸ்பாகே கோரளை பிரதேசசபை + +மூலம்: + +நகரில் அவ்வப்போது ஏற்பட்ட இனக்கலவரங்களும், அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படும் இயற்கை அழிவுகளும் இந்நகரம் எதிநோக்கும் பிரச்சினைகளாகும். + + + + + + + + + + +.நெட் வரைவுரு + +.நெட் வரைவுரு (".NET Framework", .நெட் பிரேம்வொர்க்),(டொட் நெட், "dot net" என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோசில் இயங்குகிறது. + +இந்த வரைவுரு பல உலக மொழிகளை சப்போர்ட் செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன. + +இந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது. + +பயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது. + +. நெட் மென்பொருள்கள் பெரும்பால��ம் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவன IDE மூலம் உருவாக்கப்படுகின்றது. + +மைக்ரோசாப்ட் நிறுவனம் .நெட் பிரேம்வொர்க்- ஐ 1990 இன் இறுதிகளில் "அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் .நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா பதிப்பை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் .நெட் பிரேம்வொர்க் 4.0 பதிப்பை விசுவல் ஸ்டூடியோ 2010- உடன் வெளியிடப்பட்டது. + +நெட் கட்டமைப்பின் 3.0 பதிப்பு விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா உடன் சேர்க்கப்பட்டுள்ளது. பதிப்பு 3.5 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 R2 உடன் சேர்க்கப்பட்டுள்ளது. + + + + + +வழங்குகின்றது. + + + + + +நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி + +எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் (Consumer) கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் (Model) கொள்ளலாம். இதையே நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி எனக் கூறுகின்றோம். + + +இந்தப் படிமுறைகளிற்கூடாக செல்வதற்கு தேவையான நேரம் பொருள் அல்லது சேவையின் (Goods or services) பெறுமதியின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக இரண்டு ரூபாயிற்கு ஒரு சாக்லட் வாங்குவதற்கு ஒரு நுகர்வோன் எடுக்கும் நேரம் சில வினாடிகளே. ஆனால் அதேவேளை 2 கோடி பெறுமதியான ஒரு வீட்டை வாங்குவதானால் அந்த நுகர்வோன் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட மேற்கூறிய பொறிமுறையினூடு செல்வதற்கு செலவழிக்கலாம். + +பொதுவாக நுகர்வோனின் கொள்வனவு அவனிற்கு இருக்கும் பிரைச்சனைகளைத் தீர்க்கும் முகமாகவே இருக்கும். பிரைச்சனைகளிற்கான தீர்வுகளையே மக்கள் வாங்குகின்றார்களே தவிர பொருட்களை வாங்குவதில்லை. ஆகவே சந்தைப்படுத்தலில் (Marketing) மக்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களிற்கு பொருத்தமான தீர்வைத் தருவதன் மூலமே சந்தைப் படுத்தலை அதிகரிக்கலாம். + + + + +விழுதுகள் (சஞ்சிகை) + +விழுதுகள் சஞ்சிகை (இதழ்) சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பற்றி சமூகத்திற்கு எடுத்துக்காட்டி அவர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சஞ்சிகையாகும் (இதழாகும்). இது இலங்கையின் மட்டக்களப்பு நகரிலிருந்து இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகின்றது. + +தனிச்சிறப்பான தேவையுடையவர்கள் நம்மிடையே வாழுகின்ற ஒரு தனி வாழ்இயல்புகளை உடைய சமூக அமைப்பினராவார். அவர்களுக்கென ஒரு பண்பாடு உள்ளது. தனிக் கலாச்சாரம் உண்டு. சைகைமொழி என்று ஒன்று உண்டு. இவைகளைக் கொண்டு சமுதாயத்தில் அவர்கள் தங்கி வாழவேண்டியவர்கள் எனும் மனித நிலைப்பாடு நம்மத்தியில் (நம்மிடையே) உண்டு. ஆனால் அவர்கள் வெறுமனே தங்கி வாழவேண்டியவர்களும் அல்ல. அவர்கள் சமூகத்திற்கு சுமையானவர்களும் அல்ல எனத் தங்களை அடையாளப்படுத்தும் அளவிற்கு, சிறப்புத் தேவையுள்ளவர்கள் விழித்தெழுந்திருக்கிறார்கள். இவ்வாறு சிறப்புத் தேவையுடையோர் பற்றிய விடயங்களைத் தாங்கி வெளிவருகிறது விழுதுகள் சஞ்சிகை (இதழ்). + +விழுதுகள் சஞ்சிகையின் ஆசிரியர் கு. குணறுபேஸ். இவர் ஒரு பத்திரிகையாளர் என்பதுடன் கலை இலக்கியவாதியும் கூட. அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வசித்து வருகின்றார். மட்டக்களப்பு செவிடர் பணிமனையினர் இதனை வெளியிட்டு வருகின்றனர். + + + + +பூளை + +பூளை அல்லது பீளை என்பது கண்ணில் இருந்து வெளிப்படும் வெண்மஞ்சள் நிறத்தில் வெண்ணெய் போன்ற பிசுக்குமை கொண்ட கண்ணழுக்கு. சளி போன்ற பிசுக்குமை மிகுந்த இந் நீர்மம் நீண்ட தூக்கத்திற்கு பின் கண்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும். + + + + +மெய்கண்ட சாத்திரங்கள் + +மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன. + +சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும். + +என்பன அவையாகும். இந்தப் 14 நூல்களுள்ளும் தலை சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுட் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் "மெய்கண்ட சாத்திரம்" என்கின்றனர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய இரு நூல்களையும் இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியார். திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் என்பவராலும், திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் என்பவராலும் எழுதப்பட்டவை. உண்மை விளக்கம் என்ற நூல் திருவதிகை மனவாசகங் கடந்தார் என்பவரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள எட்டு நூல்களையும் இயற்றியவர் உமாபதி சிவாசாரியார் ஆவார். + + + + +வேதாந்தம் + +வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே. + +வேதாந்தம் என்ற சொல்லுக்கு ’வேதங்களின் முடிவு’ என்று பொருள். வேதாந்தம் சுருதி என்ற தனிப்பெயராலும் சுட்டப்படுகின்றது. உலகின் மிகப்புராதனமான மதம் வேதாந்தம். + +வேதாந்தத் தத்துவத்தின் தனிப்பண்பு, இது மனிதச் சார்பற்றது என்பது. எந்த ஒரு தனிமனிதனோ, மகானோ இதனை நிறுவவில்லை. மேலும் எந்த தனி மனிதனை மையமாக வைத்தும் பின்னப்படவில்லை. எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. +தனிநபர் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேதாந்தம் மிகவும் தயங்குகிறது. + +வேதாந்தம் கூறும் அடிப்படை உண்மை மனிதன் தெய்வீகமானவன் என்பது. + +வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன. + +ஜாதிமுறை வேதாந்தத்திற்கு முரணான ஒன்று. ஜாதிமுறை என்பது சமுதாயப் பழக்கம். + +வேதாந்தம் ஒப்புக்கொள்ளும் ஒரே பாவம் , தன்னையோ, பிறரையோ பாவி,பலவீனர் என்று நினைப்பதே. தவறுகள் கருத்து உண்டு. ஆனால் பாவம் என்ற கருத்து இல்லை. + +ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிய-நான் என்பது சார்ந்தது அல்ல. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள். + + + + + + +நா. க. பத்மநாதன் + +என். கே. பத்மநாதன் (1931 - ஜூலை 15, 2003, அளவெட்டி, யாழ்ப்பாணம்) ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தின் நாதசுர இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர். + +பத்மநாதனின் தந்தையார் நா. கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார். + +இவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை முதலானோருக்கும், ஈழத்தில் எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை, பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை முதலான வித்துவான்களுக்கும் தாளக் காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார். + +தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நாதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமிப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். + +இவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் வி. தெட்சணாமூர்த்தியும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான த���ருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதசுவரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் அம்பல் இராமச்சந்திரனுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார். + +தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார். + +பத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரனும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார். + +நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களாக ஆஸ்தான வித்துவானாக இருந்திருக்கிறார். திருவிழாக்கள் நடைபெறுகின்ற 25 நாளும் அவரது நாதஸ்வரக் கச்சேரியினைப் பார்ப்பதற்கென்று பெருங்கூட்டம் கூடும். + + + + + +கியோம் அப்போலினேர் + +கியோம் அப்போலினேர் (Guillaume Apollinaire, ஆகஸ்ட் 26, 1880 - நவம்பர் 9, 1918) பிரெஞ்சு நாட்டு எழுத்தாளர் ஆவார்; கவிதைத் துறைக்கும் கவிதை குறித்த சிந்தனைகளுக்கும் ஒரு புதிய பார்வையையும் பரந்த வீச்சையும் அளித்தவராகக் கருதப்படுபவர். 38 ஆண்டுகளே வாழ்ந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் மரபு சாரா பிரெஞ்சு கவிதை இயக்கத்தின் முன்னோடி எனப் பாராட்டப்பட்டார். இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஜாக்குலின் என்ற பெண்ணை மணந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் "கவிஞர்களும் நவீன மனப்பாங்கும்" என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை பின்னர் நூலாக்கப்பட்டது. + + + + +சில்லறைக்காசு + +வணிகத்திற்கென அடிக்கடி தேவைப்படும் சிறிய தொகை பணம் சில்லறைக்காசு (Petty cash) எனப்படும். இவை காசோலையாக செலுத்தப்படாது காசாக செலுத்தப்படும். வணிக நிறுவனத்தில் அடிக்கடி ஏற்படும் சிறு செலவுகளான அஞ்சல் செலவுகள், எழுதுபொருட் செலவுகள் (stationery), பயணச்செலவுகள் போன்றவைகளுக்காக இப்பணம் பயன்படுத்தப்படும். இத்தகைய கணக்குகளை பதிவதற்கு சில்லறை காசேடு எனும் பேரேடு உபயோகிக்கப்படும். தொடக்க கட்டுநிதியாக (initial fund) ஒரு குறிப்பிட்ட பணத்தொகை வழங்கப்படும் (ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டுநிதிகள் மாறுபடலாம்). பின்னர், ஒரு குறிப��பிட்ட கால இடைவெளிக்கிடையே வசக்கட்டு முறை (imprest system) மூலம் நிதி மீள்நிரப்பப்படும். + + + + +தாராசுரம் + +தாராசுரம் (ஆங்கிலம்:Darasuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். + +இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். + +இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது. + +இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது. + +பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. + + + + + +அழியாத சோழர் பெருங்கோயில்கள் + +அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும். அக்கோயில்களாவன: தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் குறிக்கும். + +இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. + + + + + +க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி + +க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கான அகராதியாகும். 1985 அளவில் தொடங்கப்பட்டு சனவரி 1992 இல் முதற் பதிப்பு வெளியானது. அகராதிக் குழுத் தலைவராக முனைவர் இ. அண்ணாமலையும் முதன்மை ஆசிரியராக முனைவர் பா. ரா. சுப்பிரமணியனும் நிர்வாக ஆசிரியராக க்ரியா எஸ். ராமகிருஷ்ணனும் அகராதிக் குழுவில் முக்கிய பணியாற்றினர். இலங்கைத் தமிழுக்கே சிறப்பான சொற்களை கலாநிதி எம். ஏ. நுஃமான் தொகுத்துள்ளார். + +பல புதிய ச��ற்கள் கொண்ட, விரிவாக்கித் திருத்திய புதிய இரண்டாம் பதிப்பு, 2008 சூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. + +இவ்வகராதியை உருவாக்கி வெளியிட்ட க்ரியா பதிப்பகம் 1974 இல் துவங்கப்பட்டது. இப்பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம், பிற மொழிகளிலிருந்தான மொழிபெயர்ப்பு நூல்கள், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல்,தொழில்நுட்பம் போன்ற துறைகள் சார்ந்த நூல்கள் போன்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட அநுபவங்களே தற்காலத் தமிழ் மொழிக்கான அகராதி ஒன்றின் தேவையை உணர்த்தின. இக்காலகட்டத்தில்தான் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பாத்திரப் படைப்புக்களும், அவர்களது மொழி வழக்குகளும் படைப்புக்களில் இடம்பெற்றுத் தமிழ்ப் படைப்புலகிலும், மொழியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. க்ரியா பதிப்பகத்தின் வெளியீட்டுக்காக வரும் படைப்புக்களில் இடம்பெற்ற இவ்வாறான பயன்பாடுகளுக்குப் பொருள் காணும் முயற்சியின்போது உருவானதுதான் தற்காலத் தமிழ் அகராதி என்ற எண்ணம். இச்சூழலில், தனி ஒரு மனிதரின் சிந்தையில் உருவான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரோடு ஒத்த சிந்தனை கொண்ட பல்துறை சார்ந்த வல்லுனர்கள் குழு கூட்டாகச் செயல்பட்டதன் விளைவாகவே "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி" வேலைகள் 1985ல் தொடங்கி இன்றுவரை நடைபெறுகின்றன. + +தமிழ் அகராதி வரலாற்றிலே மொத்தம் 4000 பக்கங்களையும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொற்களையும் கொண்டு, 1912 முதல் 1936 வரை பகுதி பகுதியாக வெளியாகிய சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிடத்தக்கது. எனினும் இது அன்றைய பொதுத் தமிழை, பேச்சுத் தமிழைத் தமிழாகக் கொள்ளாததினால், அவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. அத்துடன் இதன் கடைசித்தொகுதி வெளிவந்து பல பத்தாண்டுகள் கடந்தும் அது விரிவாக்கப்படவில்லை. ஆனாலும் இக்காலகட்டத்தில் தமிழ் மொழியில் பெரும் வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. புதிய சொற்கள் தோன்றியும், பழைய சொற்கள் வழக்கிழந்தும் உள்ளன. பழைய சொற்களுக்குப் புதிய பொருள்கள் ஏற்பட்டுள்ளன. பேச்சுத் தமிழ்ச் சொற்களும், வட்டார வழக்குச் சொற்களும் எழுத்துத் தமிழில் பெருமளவில் புழங்கத் தொடங்கிவிட்டன. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு அகரமுதலி தேவைப்பட்ட ஒரு சூழலில் "க்ரியாவின் தற்காலத் தமிழ் அ���ராதி" வெளியானதுடன், அதன் முதற்பதிப்பு வெளிவந்து 16 ஆண்டுகளிலேயே விரிவாக்கிய இரண்டாவது பதிப்பு வெளியானதும் தமிழ் அகரமுதலித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. + +அத்துடன், இந்த அகராதி, ஒரு சொல்லின் பொருளை மட்டும் தருவதோடு நில்லாமல், அதன் இலக்கண வகை, வினைச்சொல் பெயர்ச்சொல், துணைவினை, இடை வினை என்றவாறு பல்வேறு இலக்கணக் கூறுகளாக, பயன்பாட்டில் அதன் பொருள் வேறுபடுவது போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன. அத்துடன், இலங்கை வழக்குச் சொற்களையும், சொற்பொருளையும் தனியாகச் சுட்டிக்காட்டிய அகராதிகள் இரண்டு மட்டுமே. அவற்றுள் "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி"யும் ஒன்று. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள 21,000 சொற்களுள், 1700க்கு மேற்பட்ட இலங்கை வழக்குச் சொற்கள் உள்ளன. இலங்கை வழக்குச் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், இலங்கையில் தமிழ் கற்கும் வெளிநாட்டவரும், இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்கும் சிங்களவர்களும் இவ்வகராதியை விரும்பிப் பயன்படுத்துவதாக சுசீந்திரராஜா குறிப்பிடுகிறார். + + + + + + + +நியாயம் (இந்து தத்துவம்) + +நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. + +நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின. + +நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுற��களைக் கைக்கொள்கிறார்கள். அவை: + + + + + + + +வியர்வை + +வியர்வை என்பது, வியர்த்தல் என்னும் தொழிற்பாட்டின் மூலம் உடலிலிருந்து தோலினூடாக வெளியேற்றப்படும் ஒரு திரவம் ஆகும். இது முக்கியமாக நீரையும், சிறிய அளவில் சோடியம் குளோரைடையும் கொண்டது. வியர்வையில் 2-மீதைல்பீனோல், 4-மீதைல்பீனோல் போன்ற வேதியியற் சேர்வைகளும் காணப்படுகின்றன. வியர்வை பாலூட்டிகளின் உடற் தோலில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளினால் வெளியேற்றப்படுகிறது. + +ஆண்களின் வியர்வையின் சில கூறுகள் பாலுணர்வு தொடர்பான ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டவை எனக் கூறப்படினும்., மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் ஒரு வெப்பச் சீராக்கத் தொழிற்பாடு ஆகும். உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான மறை வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன்மூலம் உடற் தசைகள் சூடேறும் போது உடல் வெப்பநிலை உயராமல் தடுப்பதற்காகக் கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. பயம் போன்ற உணர்வுகள் இருக்கும்போதும், குமட்டல் இருக்கும்போதும் வியர்த்தல் கூடுதலாகக் காணப்படுவதுடன், குளிரின் போது இது குறைந்தும் காணப்படும். + +இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உண்டு. இவற்றினால் சுரக்கப்படும் வியர்வையின் தன்மையும், நோக்கமும் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. + + + + + + +சிறுநீர் + +சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது. + +உடலின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதைமாற்றங்களின்போது கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும். உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போ��்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. + +உடலில் நிகழும் சில மாற்றங்களையும், பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது. + + + + + +குருதி + +குருதி என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு உடல் திரவம் ஆகும். குருதியானது தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக குருதிச் சுற்றோட்டத்தொகுதி என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். + +குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும். + +குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, குருதிச் சிறுதட்டுக்கள்) 1%. + +மனிதரின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதிப்பெருக்கினால் குருதியிழப்பு ஏற்படும்போது அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும். + +குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புக்களும் துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது. + +குருதி நீர்மம் என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. +குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுப்பொருட்கள் சிலவாகும். + +குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin), நாரீனி (புரதம்) (fibrinogen), குளோபுலின் (globulin), என்பவை சில. ஆல்புமின் என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் சவ்வூடு பரவல் அழுத்தத்தைச் சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ள இழையங்களினுள் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் புரதம் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி குருதி உறைந்து, மேலதிக குருதிப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் குருதி உறையாமை ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது பிறபொருளெதிரியாகும். இது [[நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, [[நோய்த்தொற்று]]க்களுக்கு எதிராகத் தொழிற்படும். + +[[File:Red White Blood cells.jpg|thumb|right|[[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]] ஒன்றின் ஊடாகத் தெரியும், இடமிருந்து வலம், சாதாரண [[செங்குருதியணு]], [[குருதிச் சிறுதட்டுக்கள்|குருதிச் சிறுதட்டு]], [[வெண்குருதியணு]] ஆகியவற்றின் தோற்றம்]] + +குருதியிலுள்ள [[திண்மம்|திண்ம]] நிலையில் காணப்படும் [[உயிரணு]]க்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன. +குருதிக்குச் செந்நிறம் தருவது [[செங்குருதியணு]]க்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). [[வெண்குருதியணு]]க்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும். [[குருதிச் சிறுதட்டுக்கள்]] குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும். +அனைத்து [[பாலூட்டி|பாலூட்டிகளினதும்]] குருதியின் பொதுவான மாதிரியை ஒத்தே [[மனிதர்|மனித]] குருதி இருக்கின்றது. இருப்பினும் உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு, [[புரதம்|புரதத்தின்]] வடிவம் போன்றவற்றின் துல்லியமான விபரங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. [[இனம் (உயிரியல்)|இனங்களிடையே]] குருதி அமைப்பில் வேறுபாடு இருக்கின்றது. பாலூட்டி அல்லாத [[முதுகெலும்பி]]களின் குருதியில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. + +உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குருதிக்குழாய்கள் ஊடாக குருதியோட்டம் நிகழ்கின்றது. இதயம் ஒரு பாய்வு எக்கியாகச் செயற்படுவது குருதியின் சுற்றோட்டத்திற்கு இன்றியமையாதது ஆகும். மனிதரில் இடது இதயக் கீழறையில் இருந்து நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் ஆக்சிசனும் நிறைந்த குருதி எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னர் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் விநியோகம் நடந்த பின்னர் ஒட்சிசன் அகற்றப்பட்ட காபனீர் ஒட்சைட்டு செறிந்த குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இதயத்தைத் தவிர உடலின் அசைவின் போது தசைகள் நாளத்தை அழுத்துவதும் வலது இதய மேலறையை குருதி அடைவதற்குத் தேவையானதொன்றாகும். இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இக்குருதி தொடர்ந்து வலது இதயக் கீழறையில் இருந்து நுரையீரலை அடைந்து உட்சுவாசம் மூலம் உள்ளெடுக்கப்படும் ஒட்சிசன் கலக்கப்பட்டு இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது. + +1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வே என்பவரால் சுற்றோட்டத் தொகுதி விவரிக்கப்பட்டது. + +குருதிக் கலங்கள் பிரதானமாக செவ்வென்பு மச்சையிலேயே உருவாக்கப்படுகின்றன. அங்குள்ள தண்டுக் கலங்கள் படிப்படியாக பல்வேறு வகை குருதிக் கலங்களாக வியத்தமடைகின்றன. சிறு வயதில் உடலிலுள்ள அனேக செவ்வென்பு மச்சைப் பகுதிகள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டாலும், வளர்ந்தோரில் பெரிய என்புகள், முள்ளென்பு உடல்கள், மார்புப் பட்டை, விலா என்புகள் போன்ற சில என்புகளின் செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் குழியங்களின் உற்பத்தி நடைபெறும். பாலர் பருவத்தில் நிணநீர்க் குழியங்கள் கீழ்க் கழுத்துச் சுரப்பியில் T-நிணநீர்க் குழியங்களாக வியத்தமடைகின்றன. முதிர் மூலவுருவாகக் கருப்பையில் இருந்த போது, ஈரலில் செங்குழியங்கள் உருவாக்கப்பட்டன. 120 நாட்கள் கொண்ட செங்குழியங்களின் வாழ்நாளின் பின் இவ்வாறு முதிர்ந்த செங்குழியங்களும், சேதமுற்ற செங்குழியங்களும் மண்ணீரலாலும், ஈரலின் கூப்பரின் கலங்களாலும் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும் போது கலங்களின் கூறுகளாக உள்ள புரதம், இரும்பு, இலிப்பிட்டு போன்ற போசணைப் பொருட்கள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றன. + +குருதியில் ஆக்சிசன் கொண்டு செல்லப்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமானது ஹீமோகுளோபின் அல்லது [[குருதிவளிக்காவி]] எனப்படும் ஒரு உலோகப் புரதம் ஆகும். ஏறத்தாழ 97 தொடக்கம் 98 வரையிலான விழுக்காடுகள் ஆக்சிசன் குருதிவளிக்காவியுடன் பிணைப்பில் ஈடுபட்டு எடுத்துச்செல்லப்படுகின்றது. மிகுதி விழுக்காடுகள் குருதி நீர்மத்துடன் கரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றது. + +குருதியில் பல [[குருதி வகை|வகைகள்]] உள்ளன. அவையாவன: + + + +[[பகுப்பு:குருதி]] +[[பகுப்பு:இணைப்பிழையம்]] + + + +நற்செய்திகள் + +நற்செய்திகள் அல்லது நற்செய்தி நூல்கள் ("Gospels") என்பவை இயேசுவின் வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் படையல்கள் ஆகும். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் 4 நற்செய்திகள் உள்ளன. அவை முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரால் கி.பி 65 முதல் 110க்கு உள்ளாக எழுதப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை (Orthodox) போன்ற எல்லா கிறித்தவ திருச்சபைகளும் இந்த நான்கு நூல்களையும் "திருமுறை" (Canon) சார்ந்தவையாக ஏற்றுக் கொண்டுள்ளன. + +விவிலியத் தொகுப்பில் சேர்க்கப்படாத பல நற்செய்தி நூல்களும் உண்டு. அவற்றுள் "தோம��� நற்செய்தி" (Gospel of Thomas) குறிப்பிடத்தக்கது. + +புதிய ஏற்பாட்டின் பகுதியாய் இருக்கின்ற நான்கு நற்செய்தி நூல்களும் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் வரிசையில்தான் தொன்றுதொட்டே அமைக்கப்பட்டன. ஆயினும், விவிலிய அறிஞர்கள் மிகப்பலர் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலில் உருவானது என்று கருதுகின்றனர். மேலும், மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூன்றும் தமக்குள்ளே மிகவும் ஒத்திருப்பதால் "ஒத்தமை நற்செய்தி நூல்கள்"" (Synoptic Gospels) எனவும் அழைக்கப்படுகின்றன. அவை ஒரு "பொதுப்பார்வை" கொண்டுள்ளன எனலாம். யோவான் நற்செய்தி முன்னைய மூன்றிலுமிருந்து பல விதங்களில் வேறுபடுகிறது. + +நற்செய்தி நூல்கள் எழுந்த வரலாற்றை ஆய்ந்த அறிஞர்கள் மாற்கு நற்செய்தியில் ஓர் அடிப்படை அமைப்பு உள்ளதைக் கண்டுபித்தனர். அந்த அமைப்பு மாற்குவிடமிருந்து வந்தது என்றாலும், மாற்கு கி.பி. 70இல் தம் நற்செய்தி நூலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்னரே கி.பி. 30 அளவில் வழக்கிலிருந்த பல செய்தித் தொகுப்புகளைப் பயன்படுத்தினார். இத்தொகுப்புகளில் இயேசுவி்ன் போதனைகள் உள்ளடங்கியிருந்தன. இயேசு புரிந்த செயல்களை உள்ளடக்கிய கூற்றுத் தொடர்களும் இருந்தன. இவற்றை மாற்கு (அல்லது அவரது பெயரால் இன்னொருவர்) பயன்படுத்திக் கொண்டு, தொகுத்து அமைத்து இறுதி வடிவம் கொடுத்தார். + +மத்தேயுவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை எழுதுவதற்கு மாற்கு எழுதிய ஏட்டைப் பயன்படுத்தியிருப்பர். அதோடு மற்றொரு பொது மூல ஆதார ஏடு ஒன்றிலிருந்தும் அவர்கள் செய்திகள் பெற்றிருப்பர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கணிப்பு. அந்த ஊக ஏடு "Q" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. "Q" என்பது "Quelle" (க்வெல்லே) என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு "மூலம்", "ஆதாரம்", "ஊற்று" ("Source") என்பது பொருள். வேறு சில ஆய்வாளர்கள், மத்தேயு முதலில் எழுதப்பட்டது என்றும் அதில் சில மாற்றங்கள் செய்து மாற்குவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை வடித்தனர் என்றும் கருதுகின்றனர். + +ஒத்தமை நற்செய்தி நூல்கள் மூன்றும் இயேசு "கடவுளாட்சி" ("விண்ணரசு") இந்த உலகில் வந்துகொண்டிருக்கிறது என்றும், அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் மனம் மாறி, ஒரு புதிய வாழ்வு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதித்ததைப் ப���ிவுசெய்துள்ளன. + +நான்காம் நற்செய்தியாக அமைந்தது "யோவான் நற்செய்தி நூல்" ஆகும். இது மாற்கு, மத்தேயு, லூக்கா என்னும் முதல் மூன்று நற்செய்தி நூல்களுக்கும் காலத்தால் பிற்பட்டது என்பது அறிஞர் கருத்து. கி.பி. 90ஆம் ஆண்டளவில், அல்லது அதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம். +நூல் எழுதப்பட்டதன் நோக்கம் இறுதியில் தரப்படுகிறது: + +"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன" (யோவான் 20:31). + +கடவுளை அறிய வேண்டுமா? கடவுளின் விருப்பம் யாதெனத் தெரியவேண்டுமா? இயேசுவுக்குச் செவிமடுஙள்; அவர் கடவுள் பற்றிச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். - இதுவே யோவான் நற்செய்தி வாசகர்களிடம் கேட்பது. + +இயேசுவின் வாழ்வு, போதனை ஆகியவை பற்றி அறிய உதவும் அடிப்படை ஏடுகள் "நற்செய்தி நூல்கள்"தாம். அவற்றை நாம் கவனமாக ஆய்ந்தால் இயேசுவின் வாழ்விலும் பணிக்காலத்திலும் நடந்த முதன்மை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு பொதுத் தொகுப்பை வரிசைப்படுத்த முடியும். அவரது போதனைகளின் முக்கிய கருத்துக் கோவைகளையும் அடையாளம் காண முடியும். + +இவ்வாறு நாம் பெறக்கூடுமான இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: + +கிபி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு பாலத்தீனாவைச் சேர்ந்த ஒரு யூத மனிதர். அவர் கலிலேயாப் பகுதியிலுள்ள நாசரேத்தில் வளர்ந்தார். திருமுழுக்கு யோவான் என்பவரைத் தலைமையாகக் கொண்டு உருவாகியிருந்த ஓர் இயக்கத்தில் இயேசுவும் பங்கேற்று, யோவான் கைகளில் திருமுழுக்குப் பெற்றார். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இயேசு யோவானை விட்டுப் பிரிந்து சென்று, தமக்கெனச் சீடர்களைச் சேர்த்தார். கப்பர்நகூமை மையமாகக் கொண்டிருந்த கலிலேயாப் பகுதியிலும், எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதேயா பகுதியிலும் இயேசு போதனை வழங்குவதிலும் மக்களுக்குக் குணமளிப்பதிலும் ஈடுபட்டுப் பொதுப்பணி ஆற்றினார். + +கி.பி. 30 அளவில் இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கே அவர் உரோமை ஆளுநராகிய பொந்தியு பிலாத்து (ஆட்சிக்காலம்: கி.பி. 26-36) என்பவரது ஆட்சியின் கீழ் கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். சாவுக்குப் பின் இயேசு உயிர்பெற்றெழுந்தார் என அவருடைய சீடர்களும் வேறு சில தொண்டர்களும் ஆணித்தரமாக உரைத்ததோடு, அந்த அனுபவத்துக்கு அடிப்படையாகத் தாங்கள் இயேசுவை உயிரோடு பார்த்ததாகப் பறைசாற்றினார்கள். + +இவ்வாறு இயேசுவைக் குறித்துச் சான்று பகர்ந்த அவருடைய சீடர்கள் பாலசுதீனாவிலும் அதற்கு வெளியிலும் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்கள். முதலில் யூத மக்கள் சிலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். பின்னர், யூத மக்களால் "புற இனத்தார்" என்று கருதப்பட்ட கிரேக்க மற்றும் உரோமை மக்கள் நடுவே கிறித்தவ சமயம் பரவியது. அக்காலக் கட்டத்தில்தான் "நற்செய்தி நூல்கள்" உருவாயின. + +நற்செய்தி நூல்களை ஆய்ந்து பார்க்குமிடத்து, இயேசு அறிவித்த போதனையின் சுருக்கத்தைக் கீழ்வருமாறு எடுத்துரைக்கலாம்: + +கடவுளின் ஆட்சி வந்துகொண்டிருக்கிறது என்றும், அது முழுமையாக வெளிப்படும் நாள் தொலையில் இல்லை என்றும் கூறி இயேசு தம் போதனையைத் தொடங்கினார். கடவுளாட்சியின் தொடக்கமும் முன்னறிவிப்பும் தம் சொந்த வாழ்விலும் பணியிலும் காணக்கிடக்கிறது என்று இயேசு அறிவித்தார். இசுராயேல் வழிபட்டுவந்த கடவுளோடு இயேசு ஒரு தனிப்பட்ட, நெருக்கமான உறவுகொண்டிருந்தார். இந்தக் கடவுளை இயேசு, படைப்பின் தலைவராகவும் ஆண்டவராகவும் மட்டுமே பார்க்காமல், தம் தந்தையாகவும் போற்றினார். + +கடவுளோடு தனிப்பட்ட, நெருக்கமான உறவு நன்மனம் கொண்ட எல்லா மனிதர்க்கும் உரிய ஒன்றே என இயேசு அறிவித்தார். பாவங்களுக்கு மன்னிப்பும், கடவுளோடு ஒப்புரவாகும் நிலையும் மனிதருக்குக் கிடைக்கும் என்று படிப்பித்தார். கடவுளாட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காலத்தில், கருத்தாக வாழ்வது எவ்வாறு என்பதை இயேசு மக்களுக்கு விளக்கிக் கூற முயன்றார். பகைவருக்கும் அன்பு காட்ட வேண்டும் என்பது இயேசுவின் போதனையில் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த அம்சம். அது கடினமானதும் கூட. + +இயேசுவின் வாழ்வும் போதனையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டில் அவர் காட்டிய தனிக் கரிசனைக்குச் சான்று பகர்கின்றன. தொழுநோயாளர், நோயுற்றோர், ஊனமுற்றோர், ஏழைகள், பெண்கள், தாழ்ந்தவராகக் கருதப்பட்ட வரிதண்டுவோர் மற்றும் பாவிகள் அனைவருமே அவருடைய தனிக் கவனத்துக்கு உரியவர் ஆயினர். + +யூத சமய வழக்கங்களைப் பொறுத்த மட்டிலும், யூதரின் வழிபாட்டு மையமாகிய எருசலேம் திருக்கோவிலைப் பொறுத்த மட்டிலும் இயேசு பழைமைவாதிகளோடு ஒத்துப் போகவில்லை. மாறாக, அவர் அறிவித்த கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவையே யூத சமயமும் கோவிலும் என்று போதித்தார் இயேசு. + +27 தனி நூல்களை உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் தனிச்சிறப்புடைத்தனவாக வரலாற்றில் போற்றப்பட்டு வந்துள்ளன. அதற்கு முதன்மைக் காரணம் அவை நான்கும் நாசரேத்து இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றன என்பதே. + +கிறிஸ்துவின் சிலுவைச் சாவு மனிதருக்கு விடுதலை வழங்கியது; மனிதரை மீண்டும் கடவுளோடு உறவாடச் செய்தது. இந்த விடுதலையையும் உறவையும் எல்லா மனிதரும் இயேசுவில் அனுபவிக்கும் வழி பிறந்துவிட்டது என்பதே ”நற்செய்தி". + +நற்செய்தி நூல்களில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கி.பி. 30ஆம் ஆண்டளவில் நிகழ்ந்தன. ஆனால் இன்று நாம் அறியும் நற்செய்தி நூல்கள் நான்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில்தான் வடிவமைக்கப்பட்டன. மாற்கு நற்செய்தி கி.பி. 70இலும், மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல்கள் கி.பி. 85-90 அளவிலும், யோவான் நற்செய்தி கி.பி. சுமார் 90-100 அளவிலும் வடிவம் பெற்றன என அறிஞர் கூறுகின்றனர். + +ஆக, நற்செய்தி நூல்களில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்துக்கும், அவை எழுத்து வடிவம் பெற்ற காலத்துக்கும் இடையே நாற்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை கட்ந்துவிட்டிருந்தன. அந்த இடைப்பட்ட காலத்தில் இயேசுவின் போதனை மற்றும் செயல்பாடுகள் குறித்த மரபுகள் பாதுகாக்கப்பட்டன. அவற்றைத் தொடக்க காலத் திருச்சபை தன் வாழ்வில் சந்தித்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் சிக்கல்களுக்கும் பொருத்தமான பதில் காணப் பயன்படுத்திக் கொண்டது. + +இன்றும் கூட, கிறித்தவர்கள் தம் அன்றாட வாழ்க்கைக்கு ஆன்ம உணவாக நற்செய்தி நூல்களை வாசித்துத் தியானிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கிறித்தவர்கள் வழிபாட்டுக்குக் கூடி வரும்போது நற்செய்தி நூல்களிலிருந்து சில பகுதிகளை வாசிப்பதும் அவற்றின் அடிப்படையில் மறையுரை நிகழ்த்துவதும் இறைவேண்டல் செய்வதும் உலகனைத்திலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்ந்து வருகிறது. + + + + + +டொம் ஹாங்க்ஸ் + +தாமஸ் ஜெஃப்ரி ஹாங்க்ஸ் (Thomas Jeffrey Hanks) (பிறப்பு: சூலை 9, 1956) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். ஹாங்க்ஸ் அப்பல்லோ 13 (திரைப்படம்) , சேவிங் பிறைவேட் றையன் , காஸ்ட் அவே,ஸ்பிளாஷ், பிக், டர்னர் மற்றும் ஹூச், ஸ்லீப்ப்லெஸ் இன் சேட்டில், யூ ஹேவ் காட் மெயில் (உங்களுகு மின்னஞ்சல் வந்துள்ளது) , டாய் ஸ்டோரி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். + +ஹாங்க்ஸ் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் உடன் இணைந்து ஐந்துத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சேவிங் பிறைவேட் றையன் (1998),  2004 இல் தெ டெர்மினல், 2015 இல் பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ், 2017 இல் தி போஸ்ட் . 2001 ஆம் ஆண்டில் பேண்ட் ஆஃப் பிரதர்ஸ் எனும் குறுந் தொடரின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராகவும் உருவானார். 2010 இல் எச் பி ஒ தொலைக்காட்சியில் வெளியான தெ பசிபிக் குறுந் தொடரை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் ஹாங்க்ஸ் ஆகிய இருவரும் நிருவாகத் தயாரிப்பாளாராகப் பணியாற்றினர். + +அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவில்  ஹாங்கிசினுடைய திரைப்படங்கள் $4.5 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுத் தந்தது. உலகம் முழுவதும் சுமார் $9.0 பில்லியன் வசூலைப் பெற்றுத் தந்தது. வட அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றுத் தந்த நடிகர்களில் ஹான்ங்க்ஸ் மூன்றாவது இடம் பிடித்தார். + +இவரின் வாழ்க்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார். மேலும் 1993 ஆம் ஆண்டில் ஜொனாதன் டெம்மி இயக்கத்தில் வெளிவந்த பிலடெல்ஃபியா எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது பெற்றார். 1994 இல் வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மக்களின் தேர்வு விருது பெற்றார். அகாதமி விருதை தொடர்ச்சியாக இருமுறை பெற்ற இரண்டு நபர்களில் இவரும் ஒருவர். + +தாமஸ் ஜெஃப்ரி ஹான்ங்க்ஸ் சூலை 9, 1956 இல் கொன்கோட் , கலிபோர்னியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜனத் மார்லின் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தவர். இவரின் தாய் இதினரண்ட் குக் அமோஸ் மெஃபோர்டு ஹாங்க்ஸ். இவர் போர்த்துக்கீசியர் மரபைச் சார்ந்தவ��். இவரின் தந்தை இங்கிலாந்து மரபினர். ஹாங்க்சினுடைய பெற்றோர் 1960 இல் மணமுறிவு பெற்றனர். இவர்களுக்கு சாண்ட்ரா, லேரி, மற்றும் டொம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். டொம் தனது தந்தையுடன் சென்றார். ஹாங்க்சினுடைய குடும்பம் கத்தோலிக்க திருச்சபை மற்றும் மொர்மனியம் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். 1965 இல் இவரின் தந்தை பிரான்சஸ் வூங் என்பவரைத் திருமணம் புரிந்தார். வூங் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். இந்தத் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இதில் இரண்டு குழந்தைகள் ஹாங்க்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை அவருடன் இருந்தனர். ஹாங்க்ஸ் ஓக்லாந்து , கலிபோர்னியாவில் உள்ள ஸ்கை லைன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது சவுத் பசிபிக் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். + + + + + +மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் + +மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது. + +பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன. + +மாமல்லபுரத்தில் காணப்படும் சி��்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும். + + + + + +சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்) + +சேவிங் பிரைவேட் ரியான் (ஆங்கிலம்: Saving Private Ryan) ஹாலிவுட் திரைப்பட உலகின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இரண்டாம் உலக யுத்தத்தை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதையே இது. இதில் நாயகனாக டொம் ஹாங்ஸும் முக்கிய வேடத்தில் மாட் டேமனும் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க். + +போர்ப்படம் / நாடகப்படம் + +இரண்டாம் உலகப் போரின் போது, நான்கு ஆண் பிள்ளைகளின் தாயார் ஒருவர் தன் மூன்று புதல்வர்களையும் கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுது தற்செயலாக இந்த தகவலை இராணுவ மேலிடம் கண்டறிகின்றது. ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (ரியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது. + +இந்தப் பணிக்கு கேப்டன் மில்லர் (டாம் ஹாங்) தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கேப்டன் மில்லர் தலைமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கேப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது. + +ரியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தனை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை. + +இத��திரைப்படம் 1998-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்குனர்' உட்பட 5 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. இதைத் தவிர வேறு 52 விருதுகளையும் வென்றுள்ளது. + + + + + +அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம் + +அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. + +சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது. + +இச் சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை "அருச்சுனன் தபசு" என அழைக்கின்றனர். வேறு சிலர் இது "பகீரதன் தவம்" என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய வி���ும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால் கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே இச் சிற்பத்தின் கருப்பொருள் என்பது அவர்கள் கருத்து. + + + + + +புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் + +புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் பல காணப்படுகின்றன. இயேசு யூதேயா மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களில் போதனை செய்யும் போதும் அவர் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபின்பும் அவரது சீடர்களால் அவரைக் குறிக்க பலபெயர்களை பயன்படுத்தினார்கள். இவற்றுள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பெயர்கள் இன்றும் கிறிஸ்தவரால் பயன்படுத்தப் படுகிறது. + +பல எழுத்தாளர்கள் இயேசு என்ற பெயரின் தொடக்கம் பற்றியும் அதன் பொருள் பற்றியும் பல விளக்க கட்டுரைகளை எழுதியுள்ளனர். உறுதியான தகவல்களின்படி இயேசு என்ற பெயர் எபிரேய மொழிப்பெயரான יהושוע (யெஷுஹா) இது விவிலியத்தில் முதலாவதாக யாத்திராகம் 17:8 இல் காணப்படுகிறது. மோசேக்கு அடுத்ததாக இஸ்ரவேல் மக்களின் தலைவரின் பெயராகும். இப்பெயரில் கடவுளின் பெயரும் அவரது செயலும் உள்ளடக்கப்பட்ட பெயர் வடிவமாகும். +இப்பெயர் இரண்டு பகுதிகளை உடையது அவயாவன: יהו (யாஹூ), இது யா(வ்)வே கடவுளின் பெயரின் மறுவிய வடிவாகும், மற்றைய மூன்றழுத்து பகுதியான שוע என்பனவாகும். שוע ஐ பயன்பாடு வேறுபாட்டால் இப்பெயருக்கு பல கருத்துகள் பெறப்படுகிறது. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிப்பெயர்ப்புகளாவன + +யூத மக்கள் பபிலோனில் அடிமைகளாக இருந்தபோது அவர்களது தாய்மொழி அபிரேய மொழியிலிருந்து அறமைக் மொழிக்கு மாற்றம் பெற்றது இதுவே இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது. יהושוע (யெஷுஹா)என்ற பெயரும், ישוע (இயேஷுஹா)என மறுவிற்று. இப்பெயரின் இரண்டாக பிரித்து அதன் முதல் பகுதியை நோக்கும் போது அது அரமைக் மொழியின் உச்சரிப்பு வேறுபாடுகள் காரணமாக יה (யா) அல்லது יהו (யாஹூ), அல்லது יא [ய] அல்லது י (யி) என்று வழங்கப்பட்டது. இச்சுறுக்கம் பெயரின் முதல் பகுதியின் மறுவலானது, שוא (ஷுஹா)(காத்தல்) என்பதன் படர்கை குறில் வடிவமாக ישוע ஐக் கொள்ள வைத்தது. இதனால் "அவர் காப்பார்" என பொருள் பட பாவிக்கப்பட்டது. இது மத்தேயு நற்செய்தியில் இறைத்தூதர் "அவர் எல்லோரையும் காப்பார் அதனால் இயேசு என்று பெயரிடு" என்று மரியாளுக்கு கூறியதை அமோதிக்கிறது. + +புதிய ஏற்பாடு ஒன்றினைக்கப் பட்டப்போது, ישוע (இயேஷுஹா) கொய்னே கிரேக்க மொழி எழுத்துப்பெயர்ப்பின் போது இயேசுஸ் என மாற்றப்பட்டது. கிரேக்கத்தில், ש (ஷீன்), என்ற எபிரேய எழுத்துக்கு சமனனான் உச்சர்ப்புள்ள எழுத்து இல்லாதபடியால் அது σ (சிக்மா) ஆல் மாற்றீடு செய்யப்பட்டு, பெயரின் இறுதியில் ஒருமை ஆன்பாலை குறிக்கும் விகுதி சேர்க்கப்பட்டது. இப்படி எழுத்துப்பெயர்க்கப்பட்டபெயர் முதலாவதாக அலெக்சாந்தரியாவைச் சேர்ந்த பிளோ என்பவரால் முத்லில் பயன்படுத்தப்பட்டது. + +ஆங்லிலத்திலும் 16 ஆம் நூற்றாண்டுவரை இப்படியே வழங்கப்பட்டது. இது பின்னர் ஆங்கிலத்தில் ஏற்பட்ட எழுத்து மாற்றங்கள் காரணமாக (I-J). 17 ஆம் நூற்றாண்டில் ஜேசுஸ் என மாறியது.16 ஆம் நூற்றாண்டில் தமிழர் பகுதிகளுக்கு முதலில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இயேசுஸ் என்ற பெயரே போர்த்துக்கேயரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் "ஸ்" என்ற வடமொழி எழுத்து பாவனையை தவிர்ப்பதற்க்காக இயேசு என்று பயன்படுத்தப் பட்டது + +கிறிஸ்த்து என்பது ஒரு பெயர் அல்ல மாறாக அது ஒரு பட்டமாகும். இது கிரேக்க மொழியில் ஆசிர்வதிக்கப்பட்டவர் என பொருளுள்ள "கிறிஸ்தோஸ்" என்ப்திலிருந்து தமிழுக்கு மறுவியதாகும். கிறிஸ்தோஸ், மசியக் (משיח) என்ற எபிரேய பதத்தின் அல்லது ம்சிகா (משיחא) என்ற அரமைக் பதத்தின் கிரேக்க மொழிப்பெயர்பாகும். இது மெசியா +என்ற தமிழ் பதத்தின் மூலமாகும். மெசியா என்பது கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்ட தீர்கதரிசி, அரசர், அல்லது தலைமைக் குரு வை குறிக்கும். + +புதிய ஏற்பாட்டில் இயேசு வேறு பல பெயர்களால் அழக்கப்பட்டார். அவற்றில் சில: தேவன், தீர்க்கதரிசி, ஆன்டவர், மனித குமாரன், இறைவனின் ஆட்டுக்குட்டி, யூதரின் அரசன், ராபீ, எம்மானுயேல் என்பனவாகும். கிறிஸ்தவர் இவை இயேசுவின் இறைமையைகுறிக்கும் பெயர்களாக கருது அதேவேலை வரலாற்றாய்வாளர் இப்பெயர்கள் வேறு பொருளுடன் பயன்படுத்தப்பட்டதாக கருதுகின்றனர். + +கிரேக்க புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இயே��ு தியெஸ் (Θεός) என குறிப்பிடப்பட்டுள்ளார். இது கொன்யே கிரேக்க மொழியில் இறைமையை குறிக்கும் சொல்லாகும். ஜேம்ஸ் மன்னனின் தமிழ் விவிலியம் இதனை "தேவன்" என மொழிப்பெயர்க்கிறது + +புதிய ஏற்பாட்டின் படி பல யூதர் இயேசுவை ஒரு தீர்க்கதரிசி என நினைத்தனர். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி என குறிப்பிட்ட இடங்களும் உண்டு. பழைய ஏற்பாட்டில் கடவுளின் வார்த்தைகளையும்,எதிர்காலத்தில் நடைப்பெறப்போகிறவற்றையும் மக்களுக்கு எடுத்து கூறியவர்களே தீர்க்கதரிசிகள் எனப்பட்டனர். + +நற்செய்திளும் பணிகளும் இயேசுவை ஆண்டவர் என பல இடங்களில் குறிப்பிடுகின்றன். யோவான் நற்செய்தியில் உள்ளபடி இயேசு தான் ஆண்டவர் என ஏற்றுக்கொண்டார். + +பெரும்பாலான கிறிஸ்தவருக்கு இது இயேசுவி இறைத்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. ஒரு வசனத்தில் இயேசு என் ஆண்டவரே என் தேவனே என அழைக்கப்படுகிறார். ஆய்வாளர் இப்பட்டதின் பயன்பாட்டை வெவ்வேறு விதங்களில் விளக்குகின்றனர்: சிலர் இயேசுவின் சீடர் அவரை ஆண்டவர் என அழைத்தது அவரின் இறைமையை குறிக்கவன்றி மரியாதையின் நிமித்தமும் போதகர் என்றவகையிலுமாகும். ஆண்டவர் என்பத்த்ற்கு பதிலாக "ஐயா", "குருவே" போன்ற சொற்களை பாவிக்களாம் என்பது இவர்களின் கருத்தாகும். ஆனால் இப்பதிலீடுகல் சில இடங்களில் அர்த்தமற்றைவையாக தென்படுகின்றன. +வேறுசிலரின் கருத்துப்படி ஆண்டவர் என்று புதிய ஏற்பாட்டில் குறிப்பிடுவது இயேசுவின் இறைமையை குறிதாலும் அது இயேசு உயித்தெழலுக்கு பின்பு கிறிஸ்தவர்களால் கொடுக்கப்பட்ட பட்டதாகும். இயேசுவின் உயிர்த்தெழுத்லக்குறிக்க பயன்படுதப்படும் பழைய ஏற்பாடு வசனம் சங்கீதம் 110:1 ஆகும். இங்கு ஆண்டவர் என்பது மெசியாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது பணி 2:34. + +நற்செய்திகளுக்கு புற்ம்பாக, இயேசு மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மனித குமாரன் என அழைக்கப்பட்டார்.(அறமைக்:בר נשא "பர் நஷா") முதல் மூன்று நற்செய்திகளில் இயேசு பேசும் போது தன்னைக் குறிக்க பயன்படுத்தினார். இது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு பழமொழி என்பது ஆய்வாளர் கருத்தாகும்.. + +புதிய ஏற்பாட்டில் இயேசு கடவுளின் மகன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இயேசு தன்னை கடவுளின் மகன் என சில வேலைகளில் மட்டுமே குறிப்பிடுகிறார், பல சந்தர்ப்பங்களில் இயேசு கடவுளை தந்தை என அழைத்தார். கிறிஸ்தவர் இதனை இயேசு கடவுளின் மகன் என்பதற்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். நைசின் விசுவாச அறிக்கையின் படி இயேசு "கடவுளோடு உட்பவித்தவர்" (யோவான் 3:16). + +யூதரின் அரசன் என்ற பட்டம், இயேசு பிறந்த போது அவரை வணங்க கிழக்கிழிருந்து வந்த ஞானிகளால் பாவிக்கப்பட்டது. அவர்கள் எரோது அரசனிடம் "யூதருக்கு அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்" என்றார்கள்.. அப்போது திருச்சட்ட அறிஞ்ஞர்கள் யூதரின் அரசன் பெத்லகேமில் பிறப்பார் என மீகா தீர்கதரிசி எழுதியதை கூறினார்கள். + +இது மீண்டு இயேசு கைது செய்யப்பட்டு விச்சாரிக்கப்படும் போது பாவிக்கப்பட்டது. நான்கு நற்செய்திகளில் குறிப்பிட்டுள்ளப்படி, போன்சியோ பிலாத்து இயேசுவை பார்த்து நீர் யூதரின் அரசனா? என வினவினார் அதற்கு இயேசு நீரே அவ்வாறு கூறினீர் என்றார். பின்பு பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும் படி கொடுக்கும் போது குற்றப்பாதாகையில் "நசரேயனாகிய இயேசு, யூதருடைய ராஜா" என எழுதுவித்தான். இப்பாதாகை சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக திங்கவிடப்பட்டது. இது அறமைக் மொழி, இலத்தீன் மொழி, கிரேக்க மொழிஆகியவற்றில் எழுதப்பட்டது. இலத்தின் மொழியில் இது "Iesus Nazarenus Rex Iudaeorum" என மொழிபெயர்க்கப்படும். இதன் சுறுக்கமான "INRI" என்பது இயேசுவின் சிலுவை காட்சிகளில் பாவிக்கப்படுகிறது. + +இது யோவான் மட்டுமே பயன்படுத்திய பெயராகும். புனித பவுல் இயேசுவை பாஸ்கா பண்டிகையின் போது பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுகிறார். அனால் Geza Vermes இன் கருத்துப்படி அறமைக் மொழியில் ஆட்டுகுட்டியை குறித்த "தல்ய" என்ற சொல் ஆன்பிள்ளையை குறிக்க பயன்படுத்தப்பட்டது. எனவே இது இறைவனின் மகன் என பொருள்படும்படி அன்றைய சமூகத்தில் பயன்பட்ட்டிருக்கலாம். + +மர்தலேன் மரியாள் இயேசுவை றபோனி என அழத்தார். இது என் றாபி என பொருள்படும் (என் குருவே) இப்பெயர் இயேசுவுக்கு மற்ற வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டது. ராபீ என்பது யூதமத போதகர்களை குறிக்க பயன்பட்ட சொல்லாகும். + +எபிரெயருக்கு எழுதிய நிருபத்தில் இயேசு அப்போஸ்தலர் என அழைக்க்கப்படுகிறார். அப்போஸ்தலர் எனப்பது ஒரு பணியின் பொருட்டு அனுப்ப பட்டவர் என ப���ருள்படும். இது யோவன் நற்செய்தியில் இயேசு அனுப்பபட்டவர் என எழுதப்பட்டுள்ளதுடன் ஆமோதிக்கிறது. + + + + + + +மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் + +திருத்தலங் களில் 63–வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலை கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. + +பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங் களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. + +வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இங்குள்ள பெருமாளை பூதத்தாழ்வார் போற்றி, ‘அன்பே தகலியாய்.. ஆர்வமே நெய்யாக.. இன்புருகி சிந்தனை, இடுதிரியாய் நன்புருகி.. ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன். நாரனர்க்கு ஞானத்தழிழ் புரிந்த நான்ஞ்’ என்று போற்றி புகழ்ந்து பாடியுள்ளார். + +புண்டரீக புஷ்கரணி குளம் + +மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7–வது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர். இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்’ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் ம��தலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகின்றனர். + +பின்னர் அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார். இந்த நிலையில் குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர், ‘நீ! மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்து கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்து கொண்டிருந்த தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார். + +அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும். மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். + +பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. + +இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது. + +கோவில் சிறப்பு + +இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக் கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும். + +கோவில் அமைப்பு + +படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957–ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு 1997–ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேரும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர். + +இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்ல புரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன +மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோயில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோயிலாகும். + +முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார். + +இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார்.திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது. + +இக் கோயிலிலுள்ள இறைவர் "உலகுய்ய நின்ற பெருமாள்" எனவும் இறைவி "நிலமங்கை நாச்சியார்" எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் தி��ுமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள்(தமிழில் தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது. +இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். + +திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து. + + +இந்தத் திருக்கோயிலை நடுவண் அரசின் தொல்லியல் துறை கையகப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. + + + + +பறைமேளக் கூத்து + +பறைமேளக் கூத்து பறையர் சமூகத்தினரால் மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும். இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இடுப்பில் பறையைக் கட்டி இசைத்தபடியே ஆடுவதே இக்கூத்து ஆகும். + +பறைமேளக் கூத்து பறையர் சமூகத்திற்குரியதாக விளங்கியதற்குக் காரணம் அது அந்தச் சமூகத்தினரின் பிழைப்பூதியத் தொழில் முயற்சியின் ஒரு பகுதியாக இணைந்திருந்தமையாகும். ஈழத்தின் சமூக அமைப்பில் பறையர் சமூகம் இணையாக ஏற்கப்படாத (அங்கீகாரம் அற்ற) சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பறையடித்தல் இவர்களின் குலத் தொழிலாகும். பறையடித்தல் மூலமே தங்களுக்கான பிழைப்பூதியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். + +பறையடித்தலை ஆலய நிகழச்சிகள், பிற மங்கல நிகழ்வுகள், மரண வீடுகள் என்பனவற்றில் அளிக்கை செய்தனர். ஆலய முன்றல், பிண (பிரேத) ஊர்வலம் என்பனவற்றின் போதும் பறைமேளக் கூத்தினை அளிக்கை செய்வது வழக்கம். சிறப்பு நாட்களில் ஊரின் பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு முன்னாலும் இக்கூத்தை ஆடிக் கொடை பெற்றுச் செல்வது உண்டு. கிராமிய தெய்வ வழிபாடுகளில் பறைமேளக் கூத்து முக்கிய இடம் வகிக்கின்றது. அதிலும் பெண் தெய்வ வழிபாடுகளிலே அதிகமாக இந்த பறைமேளக் கூத்துக்கள் இடம்பெறுகின்றன. பிண (பிரேத) ஊர்வலத்தின் போது பறைமேளக் கூத்தின் சில பகுதிகள் ""சந்தி மறித்து ஆடுதல்"" என்னும் பெயரில் இடம்பெறும். + +மட்டக்களப்பில் அளிக்கை செய்யப்படும் பாரம்பரிய கலை வடிவங்களில் மத்தளம், சல்லரி என்னும் இசைக்கருவிகளே (வாத்தியங்களே) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பறைமேளக் கூத்தில் பயன்படுத்தப்படும் பறை, சொர்ணாலி என்பன பாரம்பரிய அரங்க வடிவங்கள் எவற்றிலும் பாவிக்கப்படுவதில்லை. இவை பறைமேளக் கூத்திற்கே தனிச்சிறப்புடைய இசைக்கருவிகளாகக் (வாத்தியங்களாகக்) கொள்ளப்படுகின்றன. + +இக்கூத்தை ஆடுபவர்கள் பறையை இடுப்பில் கட்டிக்குண்டு அதை சைத்தபடியே அந்த இசைக்கு ஏற்ப ஆடுவர். பறைமேளக் கூத்தில் 18 வகை தாளக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. தாளக்கட்டுகளுக்கு ஏற்ப கூத்தில் பங்குபெறுவோர் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தி பறையை இசைப்பர். கலைஞர்கள் வட்டமாக சுற்றி நின்று இசைப்பதுடன், மாறிமாறிப் போட்டியாக இசைப்பது, முகபாவனையுடன் இசைப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இக்கூத்தில் இடம்பெறுகின்றன. + +மேற்படி தாளக்கட்டுகள் ஆடும் சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. கோயில், இறப்புவீடு, மங்கல நிகழ்வுகள் என்னும் மூன்று சூழல்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு தாளக்கட்டுகளாக மொத்தம் 18 தாளக்கட்டுகள் உள்ளன. இவை பின்வருமாறு அமைகின்றன. + + + + + + +யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு + +இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது. + +மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது. + +யாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், பள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன. +இப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, "பரதேசிகள் (பிறதேசத்தவர்)", "பறங்கி அடிமைகள்" என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன. + +இதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை. + +முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் ���மைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் "சான்றார்" என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் "நளவர்" எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. + +யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு: +யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன. + +வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்: + +மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன: +யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு: + +கட்டுள்ள சாதிகள் (bound castes) +கட்டற்ற சாதிகள் (unbound castes) +பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள் +பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள் + +கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது "குடிமை முறை" என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் "சிறைகுடிகள்" எனப்பட்டன. + + + + + +சாரு நிவேதிதா + +சாரு நிவேதிதா ("Charu Nivedita", பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து. + +இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு. + +புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகளுள் முக்கியமானவை. + + + + +23. பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3 + + + + + + + + + +கிறிஸ்து + +கிறிஸ்து அல்லது கிறிஸ்த்து என்ற தமிழ்ப் பதம் கிரேக்க மொழி சொல்லான "Χριστός" (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் எபிரேய மொழிப் பதமான "מָשִׁיחַ" (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது. இது இயேசுவுக்கு புதிய ஏற்பாட்டில் வழங்கிய ஒரு புனைப்பெயராகும். + +இயேசு கிறிஸ்த்து என பல முறைகள் விவிலியத்தில் இயேசுவின் பெயர் குறிக்கப்படுவதால்,இது சிலவேலைகளில் இயேசுவின் குடும்பப் பெயராக பிழையாக கருதப்படுவதும் உண்டு. ஆகவே இப்பெயர் "கிறிஸ்து இயேசு" என மாற்றிய வடிவிலும் பாவணையில் உள்ளது. இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசுவை கிறிஸ்த்து என நம்புகிறபடியாலேயே அவர்களுக்கு கிறிஸ்த்தவர் என்ற பெயர் உண்டாயிற்று. யூதர்கள் கிறிஸ்த்து இன்னமும் உலகிற்கு வரவில்லை என நம்புகின்றனர் மேலும் அவர்கள் கிறிஸ்த்துவின் முதலாவது வருகைக்காக காத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ மாறாக கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர். + +கிறிஸ்து என்ற பதம் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது விவிலியங்களில் ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும். + + + + +தமனும் தியூவும் + +தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். + +இங்குள்ள மக்கள் தமனியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குஜராத்தி மொழியில் பேசுகின்றனர். அருகிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் மொழியான மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு கொங்கணி மொழியும் பேசுவோரும் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர போர்த்துக்கேய மொழி பேசுபவர்களும் உள்ளனர். இந்த மொழியின் பயன்பாடு நாள்தோறும் குறைந்துவருகின்றது. அரசுப் பள்ளிகளிலும், ஊடகத்திலும் இந்த மொழி பயன்படுத்தப்படுவதில்லை. இந்த மொழியை கிட்டத்தட்ட 10,000–12,000 பேர் பேசக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. + +தமன் தியு ஒன்றியப் பகுதிகளில் தமன் மற்றும் தியூ என இரண்டு முக்கிய நகரங்கள் கொண்டுள்ளது. +தமன் தியூ மக்களவைத் தொகுதி என்ற ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. தமன் நகரத்தில் தமன் கங்கா ஆறு பாய்கிறது. தியூ நகரத்தில் தொன்மையான உரோமைக் கிறித்தவ சமயத்தின் புனித பவுல் தேவாலயம் அமைந்துள்ளது. + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமன் மற்றும் தியு ஒன்றியப் பகுதிகளின் மொத்த மக்கள் தொகை 2,43,247 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 24.83% மக்களும், நகரப்புறங்களில் 75.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 53.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 150,301 ஆண்களும் மற்றும் 92,946 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 618 வீதம் உள்ளனர். 111 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,191 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.54 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,934 ஆக உள்ளது. +இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 220,150 (90.50 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 19,277 (7.92 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,820 (1.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 287 (0.12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 217 (0.09 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 172 ஆகவும் (0.07 %) பிற சமயத்து மக்கள் தொகை 79 (0.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 245 (0.10 %) ஆகவும் உள்ளது. + +இந்த பகுதியில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளை சென்றடைய சாலை வசதி உண்டு. தமன் & தியூ ஒன்றியப் பகுதி வாப்பியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், சூரத்தில் இருந்து 125 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வாப்பி தொடர்வண்டி நிலையத்தை அடைந்து,அங்கிருந்து தொடர்வண்டிகளில் பயணித்து நாட்டின் மற்ற நகரங்களை அடையலாம். தியூவில் தியூ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மற்ற நகரங்களுக்கு பயணிக்க விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமன் விமான நிலையத்தில் இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. + + + + + + +மூலதனப் பண்டம் + +பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும். உற்பத்திச் செயற்பாட்டுக்குப் பயன்படும் மூன்று வகைப் பண்டங்களி���் இதுவும் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டும் ஆகும். இம்மூன்றையும் ஒருங்கே முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும் குறிப்பிடுவது உண்டு. இந்த வகைபிரிப்பு முறை செந்நெறிப் பொருளியற் காலத்தில் உருவாகி இன்றுவரை முக்கியமான வகைப்பாடாக இருந்து வருகிறது. + +ஒரு சமூகத்தில், உற்பத்திச் சாதனங்களில் முதலீடு செய்யக்கூடிய வகையில் செல்வத்தைச் சேமிப்பதன் மூலம் மூலதனப் பண்டங்கள் பெறப்படுகின்றன. பொருளியலில், மூலதனப் பண்டங்களை தொடுபுலனாகுபவை (tangible) எனக் கருதலாம். இவை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பிற பண்டங்களையும், சேவைகளையும் உருவாக்கப் பயன்படுகின்றன. விற்பனைக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள், கணினிகள் போன்றவை மூலதனப் பண்டங்கள். தனிப்பட்டவர்களோ, குடும்பத்தினரோ, நிறுவனங்களோ, அரசுகளோ மூலதனப் பண்டங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம். + + + + +யாழ்ப்பாண வைபவ கௌமுதி (நூல்) + +யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களினால் எழுதி 1918இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூலாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் முன்னோர் பற்றியும் யாழ்ப்பாணச் சாதிகளின் பின்னணி பற்றியும் தெளிவு படுத்தும் செறிவு மிக்க நூலாகும். யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை வேலுப்பிள்ளை விளக்கும் பாங்கு, அவரின் ஆழ்ந்த அறிவு நுட்பத்தை எடுத்தியம்புகிறது. + +அந்தக் கால கட்டத்தில், யாழ்ப்பாணத்துச் சட்ட நிபுணர்களுள் பெரும் புகழ் பெற்றிருந்த சட்ட மேதை ஐசக் தம்பையா, இந்நூலைப் பிரசுரித்து வெளிவரப் பேருதவி புரிந்திருக்கிறார். எனவே ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, அப் பெருநூலை மிகுந்த நன்றிப் பெருக்குடன் ஐசக் தம்பையாவிற்கு அர்ப்பணம் செய்துள்ளார். +"யாழ்ப்பாண வைபவ கௌமுதி" நூல் மறுபதிப்பாக தில்லியில் அமைந்துள்ள ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ் ("Asian Educational Services"), நிறுவனத்தினரால் 2002 இல் வெளியிடப்பட்டது. + +இந்நூல், புராதன காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம், பறங்கியர் காலம், ஒல்லாந்தர் காலம், இலங்கையில் ஆங்கிலேயர் என்னும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வடமாகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வரலாறு என்னும் தலைப்பில் 136 பக்கங்களைக் கொண்ட ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. + +ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலப் பிரிவுகளுக்குள் அக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் புகழ் பெற்றவர்களாகவும், ஆதிக்கம் கொண்டவர்களாகவும் இருந்த பலர் குறித்த தகவல்கள் உள்ளன. நூலின் பெரும்பகுதி இந்த நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இந்நூலில் சேர்த்திருக்கவேண்டிய பலரது குறிப்புக்கள் தகவல்கள் கிடைப்பதற்குக் காலதாமதமானதால் சேர்க்கமுடியாமல் போனதாகவும், இங்கு சேக்கப் பட்டிருப்பவர்களினதும் முழுமையான லகவல்கள் இடவசதி இல்லாமை காரணமாகச் சேர்க்க முடியாமற் போனதாகவும் தனது முகவுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் எழுதப்பட்டதனால் நூலாசிரியர் பிரித்தானியர் ஆட்சியை மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளதுடன் "இந்த நாட்டை அரசாளும் பிரித்தானிய இராச்சியமும் நீடூழி வாழும்" என வாழ்த்தியுள்ளார். + +யாழ்ப்பாணத்து வரலாறு கூறவென எழுந்த நூல்களுள் அப்பகுதியின் இடப்பெயர் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த முன்னோடி நூல்களுள் இந்நூல் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ள நூலாசிரியர், முதற் பகுதியை, +என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். ஏனைய இரண்டு பகுதிகளையும் முறையே சிங்களப் பெயருள்ள தானங்கள், புதுப்பெயர் பெற்ற தானங்கள் என்பவற்றை ஆராய ஒதுக்கியுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் சிங்களப் பெயர் மூலங்களைக் கொண்டவை எனக் கருதும் இந்நூலாசிரியர், இடப்பெயர் ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட 136 பக்கங்களுள் 107 பக்கங்களைச் "சிங்களப் பெயருள்ள தானங்கள்" பற்றி விளக்குவதற்கு ஒதுக்கியுள்ளார். + + + + + +கல்லடி வேலுப்பிள்ளை + +கல்லடி வேலுப்பிள்ளை (மார்ச் 7, 1860 - 1944) 'ஆசுகவி' என ஈழத்தமிழர்களால் அன்புடன் போற்றப் பெற்ற ஈழத்துக் கவிஞர். + +யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஒரு சிற்றூரான வயாவிளான் என்னும் ஊரில் கந்தப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதிக்கு 1860 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிறந்தார். வசாவிளான் கிராமத்தில் வேலுப்பிள்ளை பிறந்த வீட்டினருகே ஒரு பெரிய கல் மலை இருந்தது. கல் ���லைக்கு அருகேயிருந்த வீட்டில் தோன்றிய வேலுப்பிள்ளை, இளமைக் காலத்திலிருந்தே "கல்லடி வேலுப்பிள்ளை" எனக் குறிப்பிடப் பெற்றார். + +அகஸ்டீன் என்பவரிடம் தொடக்கக் கல்வி பயின்ற வேலுப்பிள்ளை, பின்னர் பெரும்புலவர் நமசிவாயம், அறிஞர் நெவின்சன் சிதம்பரப்பிள்ளை, புன்னாலைக்கட்டுவன் வித்துவான் கதிர்காம ஐயர் ஆகிய தமிழ்ச் சான்றோர்களிடம் தமிழ் மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். வடமொழி ஆர்வத்தால், அம்மொழியைப் பண்டிதர் ஒருவரிடம் கற்றுக் கொண்டார். + +வேலுப்பிள்ளை உரும்பிராயைச் சேர்ந்த ஆச்சிக்குட்டி என்பாரைத் திருமணம் புரிந்தார். சில ஆண்டுகளில் ஆச்சிக்குட்டி காலமாகி விடவே, அவரது உடன் பிறந்த சகோதரியான ஆச்சிமுத்து என்பவரை மனம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இவர்களில் மூத்தவர் க. வே. சுப்பிரமணியம் (கல்லடி மணியம்). இவர் யாழ்ப்பானத்தில் பிரபல சமூக சேவகராக விளங்கியவர். இரண்டாவது புதல்வர் க. வே. நடராசா ஒரு சட்ட மேதை. இவர் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் பண்டாரவளை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மூன்றாமவர் எழுத்தாளர் க. வே. சாரங்கபாணி. நான்காமவர் நயினார் க. வே. இரத்தினசபாபதி. இவர் இலங்கை இராணுவத்தில் பணி புரிந்தவர். ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து வன்மை கொண்டவர். + +பல்வேறு பணிகளில் ஆசுகவி வேலுப்பிள்ளை, தமது நாற்பதாம் வயது வரை கவனமும் கருத்தும் செலுத்திவரினும், இளமைக் காலம் முதலாகவே, ஓர் இதழினைத் தொடங்கி நடத்த வேண்டுமென்ற அவரது கனவு நாற்பது வயதிற்குப் பின்னரே நனவானது. ஒரு சில அன்பர்களின் உதவியுடன் தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, சென்னையில், ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கிச் சென்று, யாழ்ப்பாணத்தில் "சுதேச நாட்டியம்" இதழைத் தோற்றம் பெறச் செய்தார் வேலுப்பிள்ளை. + +தமிழ் மொழியில் வசன நடையை வளம் கொழிக்கச் செய்த சான்ரோர்களில் ஆசுகவியும் ஒருவரென்பதை 'சுதேச நாட்டிய'த்தில் அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது. 'சுதேச நாட்டியம்' பன்னெடுங்காலம், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்தும் அரியதோர் இதழாகத் திகழ்ந்து, அவரது பன்முகத் தமிழ்த் திருப்பணிகளைத் தமிழுலகம் உணர்ந்து போற்றுமாறு செய்வித்தது. + +நினைக்கின்ற நேரமெல்லாம், அருவி��ாய்க் கவிதையைக் கொட்டும் ஆற்றலை இளமைக்காலத்திலிருந்தே பெற்றிருந்த வேலுப்பிள்ளையை, மக்கள் "ஆசுகவி" என அழைத்தனர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை, ஆசுகவி வேலுப்பிள்ளை பாடி வழங்கியிருப்பினும், அவரது கவிதை நூல்களுள் "கதிர மலைப் பேரின்பக் காதல்", "மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி", "உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை" ஆகியன பெரும் பெயர் பெற்றன. + +கவியாற்றலில் வல்லமை கொண்டிருந்த வேலுப்பிள்ளை, உரைநடை எழுதுவதில், இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திறமும் உரமும் பெற்றுத் திகழ்ந்தார். ஈழத்தில் ஆறுமுக நாவலருடைய காலத்திற்குப் பின்னர், அப்பெருமானின் வழி நடந்து, தமிழ் வசன நடைக்குச் செழுமையூட்டச் செழிக்கச் செய்தவர் கல்லடி வேலுப்பிள்ளை ஆவார். + +ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டன நூல்கள் சில எழுதினார். கடவுள் துதி நூல்கள் சில உருவாக்கினார். வரலாற்று ஆய்வு நூல்களும் படைத்தளித்தார். ஏறத்தாழ இருபது நூல்கள் படைத்த அப்பெருந்தகை, தமது நூல்களில் கையாண்டுள்ள வசன நடை, தமிழின் உரைநடைச் செல்வத்தை ஒளிபெறச் செய்தது. அவரது திறமிக்க ஆய்வுப் புலமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது யாழ்ப்பாண வைபவ கௌமுதி. + + + + + + +இரத்தினசிறி விக்கிரமநாயக்க + +இரத்னசிறி விக்கிரமநாயக்க (மே 5, 1933 - திசம்பர் 27, 2016) இலங்கையின் 14 ஆவது பிரதம மந்திரி. இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர். + + + + + +ஆடிவேல் விழா + +ஆடிவேல் விழா கதிர்காம முருகனின் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் மூன்றாம் திருவிழாவின் இறுதியிலே கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமானது என்று கருதப்படுகிறது. +கதிர்காம முருகனைத் திருவிழாவின் போது தரிசிக்க முருக பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் காவடி ஏந்தியும் வேல் ஏந்தியும் செல்வது மரபாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருசமயம் இலங்கையின் தெற்குப் பகுதியில் நேர்ந்த அநர்த்தத்தினால் யாத்திரைகள் தடைப்பட்டதால் பக்தர்கள் தமது யாத்திரையைத் தொடர முடியவில்லை. இந்நிலையை அநுபவித்த கொழும்பு நகரத்தார் கதிர்காமத் திருவிழாவின் அந்தத்��ிலே கொழும்பிலே வேல்விழாவினைக் கொண்டாடத் தொடங்கினர் என நம்பப்படுகிறது. + + + + +ஆடிப்பூரம் + +ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். + +மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. + +இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது. + + + + +ஆடி அமாவாசை + +ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது. + +வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். + +சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர். + +ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. + +பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீ��ிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்கள் திருக்கோவிலில் வங்கக் கடலிலும், மாமாங்கத்து அமிர்தகழி தீர்த்தத்திலும், தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது. + + + + +வெ. ஸ்ரீராம் + +வெ. ஸ்ரீராம் (பிறப்பு - 1944), செவாலியே விருது பெற்ற தமிழக மொழிபெயர்ப்பாளர் ஆவார். ஈரோட்டில் பிறந்து கரூரில் பள்ளிப்படிப்பும் திருச்சியில் பட்டப்படிப்பும் முடித்தார். 1965 - 2001 காலத்தில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். + +பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு முக்கியமான சில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு திரையுலகம் தொடர்பான கட்டுரைகளை பல இதழ்களிலும் எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அலியன்ஸ் பிரான்சேயின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தமிழ்நாட்டில் பரப்பும் பணியில் பல ஆண்டுகளாக இவர் அளித்துவரும் பங்கைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு ஷெவாலியெ (Chevalier, Ordre des Palmes Académiques) விருதும், அதே ஆண்டில் ஷெவாலியெ (Chevalier, Ordre des Arts et des Lettres) விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தது. + + + + + + +வாஸந்தி + +வாஸந்தி (பிறப்பு: சூலை 26, 1941) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. + +கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். +பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. + +நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ""வாஸந்தி சிறுகதைகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. + +பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது. + + + + + +ஆத்திரேலியத் தமிழர் + +ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர், தமிழ் அவுஸ்திரேலியர்கள், "Tamil Australian") எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். + +இதன்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன. + +2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. + +இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர். முக்கியமாக சீனாவிலிருந்து 191,000 பேரும் இந்தியாவிலிருந்து 163,000 பேரும் இங்கு குடியேறியுள்ளனர். + +மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளியேறியவர்களைக் கழித்தால், தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2011 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் 870,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் நால்வரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் ஆவார். + +மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று 23.4 மில்லியன் பேர் எண்ணப்பட்டுள்ளநிலையில் இது 2011 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 வீத அதிகரிப்பாகும். + +இவர்களில் 80 வீதமானவர்கள் விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, ACT ஆகிய பகுதிகளிலேயே வசிக்கின்றனர். + +சென்சஸ் தரவுகளின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் தாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 440,300 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த சனத்தொகையின் 1.9 வீதமாகும். + +அதேநேரம் தமக்கு மதமில்லை-No Religion என பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 22 வீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரித்துள்ளது. + +ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 28,055 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். 27,352 பேர் இலங்கையில் பிறந்தவர்கள். 9,979 பேர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் ஆவர். + +2016 ஆம் ஆண்டில்  நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,180 பேரில் அதிகளவானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கிறார்கள். + +இதில் அதிகளவு தமிழ்பேசுவோரைக் கொண்ட suburb-ஆக Westmead காணப்படுகின்றது. இங்கே 1425 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இரண்டாமிடத்தில் 1404 பேருடன் Toongabbie-உம், மூன்றாமிடத்தில் 1307 பேருடன் Wentworthville-உம் காணப்படுகின்றது. + +அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் Dandenong-இல் 1389 பேரும் Glenwaverly-இல் 1127 பேரும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். + +தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. + +அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்: + +நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்: + +அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன: +1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. + +கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். + + + + +அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன. + +அவுஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர். + +உதயம், ஈழமுரசு என்ற இரண்டு செய்திப் பத்திரிகைகள் வெளிவந்தன. இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன. + + +தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர். + + + + + + +திண்மம் + +திண்மம் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள்: + + + + + +திண்மம் (வடிவவியல்) + +திண்மம் என்பது மூன்று செங்குத்தான திசைகளிலே விரிவடைந்து, திரண்ட, முத்திரட்சி உடைய வடிவம். பொதுவாக திண்ம வடிவங்களுக்கு நீளம், அகலம், உயரம் (ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் அளக்கப்படுவது) ஆகியவை உண்டு. பரவலாக அறியப்பட்ட சில திண்ம வடிவங்கள்: + +இவையன்றி, குடுவை, கோப்பை, முறம் போன்றவையும் திண்ம வடிவங்கள்தாம். + + + + +நீள்வட்டத்திண்மம் + +நீள்வட்டத்திண்மம் என்பது நீள்வட்டத்தை அதன் நீள அச்சுப்பற்றிச் சுழற்றும்போது உண்டாகும் வடிவம் ஆகும். நீள்வட்டத்தின் திரண்ட வடிவம். +a, b, c ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சின் நீளங்களானால், கணிதவழி நீள்வட்டத்திண்ம வடிவத்தை சமன்பாடுகள் கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம். + +x, y, z என்பன கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் மாறிகள். + +மூன்று அச்சு நீளங்களும் (a, b, c ) ஒன்றுகொன்று சமமாக (ஈடாக) இருக்குமானால் கிடைக்கும் வடிவம் உருண்டை வடிவம் ஆகும்.. ஏதேனும் இரண்டு அச்சு நீளங்கள் ஈடாக இருந்து மற்றது வேறாக இருந்தால் கிடைக்கும் வடிவம் கோளவுரு ஆகும். நடுவே பருத்த உருண்டை (பூசணிக்காய் போல) அல்லது முனைப்பகுதி பருத்த வடிவம் (வெள்ளரிக்காய் வடிவம்) கிடைக்கும். + + + + +நாள்மீன் பட்டகம் + +நாள்மீன் பட்டகம் (Prismatoid Polyhedr) என்பது நாள்மீன் பல்கோணிக் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட பட்டகம். இது குவிவில் பல்கோணிப் பட்டக வகையைச் சார்ந்தது. இது இரு முனைகளிலும் நாள்மீன் பல்கோணி முகங்களையும், செவ்வக வடிவப் பக்கங்களையும் கொண்ட முப்பரிமாண வடிவம் ஆகும். நாள்மீன் பட்டகங்கள், ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து போன்ற எண்ணிக்கையான கூர்களோடு கூடிய பல்கோணிகளைக் கொண்டவையாக அமையலாம். + +கீழேயுள்ள படங்கள், ஒழுங்கான நாள்மீன் பல்கோணிகளுடன் கூடிய நாள்மீன் பட்டகங்கள். முதலாவது ஐங்கூர் நாள்மீன் பட்டகம். மற்ற இரண்டும் இருவகையான எழுகூர் நாள்மீன் பட்டகங்கள். + + + + + +தனியார்மயமாக்கல் + +தனியார்மயமாக���கல் (Privatization) என்பது அரசதுறையின் கட்டுபாட்டிலுள்ள நிறுவனங்களின் உடைமைகள் அல்லது முகாமையினை தனியார்துறையிடம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யும் நடவடிக்கையினைக் குறிக்கும். + +தேசியமயமாக்கல் (nationalization), municipalization என்பன இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும். + +1948 ம் ஆண்டு காலப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந் நடவடிக்கை 1980 இன் பின்னர் ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகப் பொருளியளாலர்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய வைப்பகம் (சர்வதேச நாணய நிதியம்) என்பவற்றால் பரவலாக முன்நிறுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. + + + + +பாமா (எழுத்தாளர்) + +பாமா (பிறப்பு - 1958), தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய "கருக்கு" என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியராகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றிருக்கிரார். + +தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரின் கருக்கு(1992), சங்கதி (1994) ஆகிய இரு நாவல்களும் மிகச் சிறந்த தலித்திய நாவல்களாகும். இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஒரு பெண்ணாக, கிறித்தவப் பெண் துறவியாகத் தென்மாவட்ட கிராமம் ஒன்றில் தான் பட்ட அனுபவங்களே இவர் எழுதிய தன்வரலாற்று நாவலான கருக்கு ஆகும். கருக்கு நாவலின் முன்னுரையிலேயே பாமா கூறுகிறார்: + +‘வாழ்க்கையின் பல நிலைகளில் பனங்கருக்குப் போல என்னை அறுத்து ரணமாக்கிய நிகழ்வுகள், என்னை அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப் பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச் சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இப்புத்தகத்தின் கரு.’ + +தலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் கருக்கு. தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் வழி பதிவு செய்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு. + +ஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன. + +சுயவரலாறு அல்லது தன்கதை கூறுதல் என்பது நாவலின் ஒரு வடிவம். தலித் மக்களின் வாழ்வை சொல்லவும் அல்லது ஒடுக்கப்படுபவர் தன் வாழ்வைச் சொல்லவும் ஏற்ற தொணி சுயவரலாற்று முறையே என கருதுகிறேன். சுயவரலாறு நிஜத்தை முகத்துக்கு நேர் நின்று பேசுகிறது. வாசகன் மனதில் இது உண்மை...உண்மை என சதா உள்ளுக்குள் முணகும் வண்ணம் செய்கிறது. அந்தக்குரலில் பாசாங்கு இருப்பதில்லை. 'இது புனைவாக இருக்கலாம்... இப்படியெல்லாம் நடக்காது' என்ற நம்பிக்கையின்மை வாசகனுக்கு எழுவதே இல்லை. அதன் மூலம் ஒரு சமூகம் தங்களுக்கு ஏற்படும் சுரண்டல்களை அதன் வெறுப்போடு முன்வைக்க முடிகிறது. அங்கு மொழியின் குழைவோ கவித்துவ அழகோ முக்கியமில்லை. தகக்கும் உண்மையின் உஷ்ணத்தின் நின்றே அப்படைப்பு தனக்கான இடத்தைப் பிடித்துவிடுகிறது. + + + + + +ஆ. இரா. வேங்கடாசலபதி + +ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாற்றைப் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த "30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்".தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். + + + + + +சுசந்திகா ஜயசிங்க + +சுசந்திகா ஜயசிங்க (பிறப்பு டிசம்பர் 17, 1975), இலங்கையைச் சேர்ந்த ஓர் ஓட்ட வீராங்கனை ஆவார். 100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார், ஆரம்பத்தில் இவரிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது எனினும் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து சேதனையில் சிக்கியமையால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது இதையடுத்து சுசந்திகாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 1948 இன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் இவராவார். + +டோகாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம், 200மீ பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றார். + +இவர் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 22.63 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். + + + + +திண்மம் (இயற்பியல்) + +திண்மம் என்பது இயற்பியலின்படி பொருள்களின் இயல்பான நான்கு நிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. அதாவது ஓரணுவுக்குப் பக்கத்தில் உள்ள வேறு ஓர் அணு அதன் பக்கத்திலேயே இருக்கும். சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும். ஆனால் ஒரு நீர்மத்திலோ அல்லது ஒரு வளிமத்திலோ அணுக்களுக்கு இடையேயான இடைவெளி அணுவின் விட்டத்தைப் போல பல மடங்காக (பன்னூறு அல்லது பல்லாயிரம் மடங்காக) இருக்கும். ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் பலவாறு பகுக்கப்படுகின்றன. + +திண்மங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் வெப்பநிலையில் உருகி நீர்ம நிலையை அடையும். அதே போல நீர்ம நிலையில் உள்ள ஒரு பொருளும் வெப்ப நிலை குறையக் குறைய ஒரு வெப்பநிலையில் திண்மமாய் உறையத்தொடங்கும். + +திண்ம நிலையில் உள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளை முறைப்படி அறியும் துறை 1946 வாக்கில் தான் வளர்ச்சியடையத் துவங்கியது. இயற்பியலில் ஏற்பட்ட புரட்சிகரமான குவாண்டம் (குவிண்டம்) கருத்துருக்களை திண்ம நிலையில் உள்ள பொருட்களுக்கு பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாய் புது நுண்மின்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன, பொருட்களின் காந்ததன்மை பற்றிய அடிப்படையான பண்புக்ளை அறியத்தொடங்கினர். லேசர் என்னும் சீரொளிக் கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. +குவிண்டம் (குவாண்டம்) கருத்துக்களின் உதவியால் அணுக்களின் அமைப்புகள் எவ்வாறு இயற்பியல் பண்புகளை உருவாக்குகின்றன என்று அறிய முடிந்தது. திண்ம நிலை பற்றிய ஆய்வுகள் மிக விரைவாய் இன்றும் நடந்து வருகின்றன. புதிதாக ஆய்வு செய்யப்பட்டு வரும் நானோ மீட்டர் அளவுத் திண்மங்களும், நானோ மீட்டர் அளவுப் பல்படிகங்களும் மிக விரைவாய் வளர்ந்து வருகின்றது. + +திண்மப் பொருளை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள் அல்லது அயனிகள் ஒழுங்கான திரும்பத் திரும்ப வரக்கூடிய அமைப்பில் (அல்லது) ஒழுங்கற்ற முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாம். திண்மப்பொருள்களின் ஆக்கக்கூறுகள் (அணுக்கள் (அ) மூலக்கூறுகள் (அ) அயனிகள்) ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டுள்ள பொருள்கள் படிகங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நேர்வுகளில், இந்த ஒழுங்கான வரிசையமைப்பு அறுபடாமல் மிகப்பெரிய அளவிற்குத் தொடர முடியும். உதாரணமாக, வைரத்தில் இத்தகைய அமைப்பு காணப்படுவதால் வைரமானது ஒற்றைப் படிகமாக உள்ளது. பார்ப்பதற்கும், கையாள்வதற்கும் எளிதான பெரிய அளவில் இருக்கும் திண்மப் பொருட்கள், அரிதாக ஒற்றைப் படிகத்தால் ஆக்கப்பட்டவையாக இருக்கலாம். அதற்குப் பதிலாக, அதிக எண்ணிக்கையிலான ஒற்றைப் படிகங்களால் உருவாக்கப்பட்டவையே நுண்படிகங்களாக உள்ளன. இவற்றின் அளவு ஒரு சில நானோமீட்டர்களிலிருந்து பல மீட்டர்கள் அளவிற்கு மாறுபடலாம். இத்தகைய பொருட்கள் பல்படிகங்களாக (polycrystals) உள்ளன. ஏறத்தாழ அனைத்து பொதுவான உலோகங்களும் மற்றும் பல பீங்கான் பொருட்களும் பல்படிகங்களாகவே காணப்படுகின்றன. + +மற்ற பொருட்களில், அணுக்களின் அமைவிடத்தில் இத்தகைய ஒழுங்கான நீண்ட தொடரமைப்பு காணப்படாது. அத்தகைய திண்மங்கள் சீருறாத் திண்மங்கள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக பாலிஸ்டைரீன் மற்றும் கண்ணாடி இத்தகைய படிக வடிவமற்ற திண்மங்களே. ஒரு திண்மமானது படிக வடித்தைப் பெற்றுள்ளதா அல்லது படிக வடிமற்று உள்ளதா என்பது அத்திண்மத்தின் உருவாக்கத்தில் பங்குபெறும் பொருளின் தன்மையையும் அது உருவான சூழ்நிலையையும் பொறுத்ததாகும். படிப்படியான குளிர்வித்தலின் வழியாக உருவான திண்மங்கள் படிக உருவத்தைப்பெற விழைபவையாகவும், அதிவிரைவாக உறையச் செய்யப்பட்டவை படிக வடிவமற்றவையாக மாறக்கூடியவையாகவும் உள்ளன. இதேபோன்று, படிகத் திண்மத்தால் ஏற்கப்படும் குறிப்பிட்ட படிக அமைப்பானது அந்தப் பொருளைப் பொறுத்தும் அது உருவான விதத்தைப் பொறுத்தும் அமைகிறது.ஒரு பனிக்கட்டி அல்லது ஒரு நாணயம் போன்ற பல பொதுவான பொருட்களில் அந்தப் பொருள் முழுமையும் வேதியியல் தன்மையில் ஒரே சீரானதாக இருக்கும் பொழுது மற்றும் பல பொதுவான பொருட்கள் பலவிதமான வெவ்வேறு பொருட்கள் ஒன்றாக கலந்த கலவையாக உள்ளன. உதாரணமாக, ஒரு பாறையானது எந்த ஒரு குறிப்பிட்ட வேதி இயைபையும் கொண்டிராத பல்வேறு கனிமங்கள் மற்றும் கனிமக்கலவைகள் போன்றவற்றின் தொகுப்பாகவோ அல்லது திரட்டாகவோ இருக்கிறது. மரமானது கரிம லிக்னினின் தளத்தில் செல்லுலோசு இழைகள் முதன்மையாகப் பொதிந்த இயற்கையான கரிமப் பொருளாக உள்ளது. + +திண்மங்களில் அணுக்களுக்கிடையிலான விசையானது பலவிதமான வடிவங்களைப் பெறுகிறது. உதாரணமாக, ஒரு சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) படிகமானது அயனிப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட சோடியம் மற்றும் குளோரின் அயனிகளால் ஆக்கப்பட்டதாகும். வைரத்தில் அல்லது சிலிக்கானில், அணுக்கள் எதிர்மின்னிகளைப் பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன. உலோகங்களில், உலோகப்பிணைப்புகளில் எதிர்மின்னிகள் பங்கிடப்படுகின்றன. சில திண்மங்��ள், குறிப்பாக பெரும்பாலான கரிமச் சேர்மங்கள், ஒவ்வொரு மூலக்கூறின் மீதும் உள்ள எதிர்மின்னியின் மின்சுமை முகிலின் முனைவுறு தன்மையால் உருவான வான் டெர் வால்ஸ் விசையினால் பிணைக்கப்பட்டுள்ளன. திண்மங்களின் வகைகளுக்கிடையேயான வேறுபாடுகள் அவற்றின் பிணைப்புகளின் வேறுபாடிகளின் காரணமாக விளைபவையேயாகும். +திண்மங்களை பின்வருமாறும் வகைப்படுத்தலாம். அவை, + +உலோகங்கள் கடினமானவையாகவும், அடர்த்தியானவையாகவும், நல்ல மின் கடத்திகளாகவும், வெப்பங்கடத்திகளாகவும் உள்ளன. +தனிம வரிசை அட்டவணையில் உள்ள போரான் முதல் பொலோனியம் வரை உள்ள மூலைவிட்டத்திற்கு இடதுபுறமாக உள்ள ஏராளமான தனிமங்கள் உலோகங்களாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவை உலோகக் கலவை எனப்படும். + +கனிமங்கள் பல்வேறு நிலவியல் நடைமுறைகளின்படி அதிக அழுத்தத்தின் காரணமாக உருவான இயற்கையில் காணப்படும் மூலப்பொருட்களாகும். ஒரு பொருள் உண்மையான கனிமமாக வகைப்படுத்தப்பட வேண்டுமானால் அது படிக அமைப்பையும், முழுவதும் ஒரே சீரான இயற்பியல் பண்புகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.. கனிமங்கள் துாய்மையான தனிமங்கள், எளிய உப்புக்கள் மற்றும் சிக்கலான சிலிகேட்டுகள் என பலவிதமான வகைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறியப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன.புவியோட்டுப் பாறைகளில் பெரும்பான்மையாகக் காணப்படும் கனிமங்களாக குவார்ட்சு (படிக வடிவ SiO), பெல்ட்சுபார், மைகா, குளோரைட்டு, காவோலின், கால்சைட்டு, எபிடோட்டு, ஒலிவைன், ஆகைட்டு, ஆர்ன்ப்ளெண்ட், மாக்னடைட், ஹேமடைட், லிமோனைட் மற்றும் இன்னும் சில அமைகின்றன. + +சுட்டாங்கல் திண்மங்கள் பொதுவாக தனிமங்களின் ஆக்சைடுகளாலான கனிமச் சேர்மங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை, வேதியியல் பண்புகளினடிப்படையில் மந்தத்தன்மை பெற்றனவாகவும், அமில மற்றும் காரத்தன்மையுள்ள சூழல்களில் வேதியியல் அரிமானங்களை எதிர்த்து நிற்பனவாகவும் காணப்படுகின்றன. மேலும் இவை 1000 முதல் 1600 °C வரையிலான உயர் வெப்பநிலைகளைத் தாங்கி நிற்பனவாகவும் காணப்படுகின்றன. ஆக்சைடுகள் அல்லாத நைட்ரைடுகள், போரைடுகள் மற்றும் கார்பைடுகள் போன்ற கனிமப் பொருட்கள் விதிவிலக்குகளில் உள்ளடங்கும். + + + + +பட்டையகலம் + +ஒப்புமைக் குரல் சமிக்ஞை, ஒரு தனிப்பட்ட அதிர்வெண் மட்டும் கொண்டு திகழ்வதில்லை; தொடர்பாடல் தடத்தில் உள்ள பலவேறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட அலைவடிவத்தால் ஆனது. அதிர்வெண்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டுக் கலவைதான் ஒருவருடைய குரலை நிர்ணயிக்கின்றது. இயற்கையின் பல படைப்புகளும் நிகழ்வுகளும் பலதரப்பட்ட அதிர்வெண்களின் கூட்டுக் கலவைகளாக வெளிப்படுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் பல்வேறு ஒளி அதிர்வெண்களின் சேர்க்கையே; இசையொலியும் பல்வேறு கேட்பொலி அதிர்வெண்களாலானதே. சமிக்ஞைகளில் உள்ள அதிர்வெண்களின் அளவெல்லையைக் குறிப்பது, தொடர்பாடல் களத்தில் உள்ள வழக்கம். இதை அலைவரிசைப் பட்டை அகலம் என்று வழங்குவர். + +எ-டு: தொலைபேசியில் பேச்சுச் சமிக்ஞையின் அலைப்பட்டை, 200 Hz-3500 Hz வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. + + + + +முப்பட்டகம் + +முப்பட்டகம் அல்லது முக்கோண அரியம் ("Triangular Prism") என்பது குறுக்கு வெட்டு முக்கோணமாக உள்ள பட்டகம். பட்டகத்தின் ஒவ்வொரு முகமும் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும். படத்தில் முப்பட்டகம் காட்டப்பட்டுள்ளது. + + + + +பழைய ஏற்பாடு + +பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும். + +"ஏற்பாடு" என்னும் சொல் "உடன்படிக்கை", "ஒப்பந்தம்" என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் "பழைய" உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து மனிதரோடு கடவுள் செய்த "புதிய" உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறிஸ்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும். + +யூத சமயத்தவர்கள் இயேசு கிறிஸ்துவை "மெசியா" என்றோ "உலக மீட்பர்" என்றோ ஏற்பதில்லை. எனவே கிறித்தவர்கள் "பழைய" ஏற்பாடு என்று கருதுவதை யூதர்கள் "விவிலியம்" என்றே அழைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டை "எபிரேய விவிலியம்" (Hebrew Bible) எனவும் அவர்கள் கூறுவர். + +யூதர்கள் பழைய ஏற்பாட்டின் (எபிரேய விவிலியம்) 39 நூல்களையும் "TaNaKh" ("தானாக்") என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்: +1) "தோரா" (Torah) ("Ta") +2) "நெவீம்" (Nevi'm) ("Na") +3) "கெதுவிம்" (Ketuvim) ("Kh") + +தோரா என்னும் எபிரேயச் சொல் "படிப்பினை", "போதனை", "திருச்சட்டம்", "நெறிமுறை" என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை "மோசே எழுதிய நூல்கள்" எனவும் "ஐந்நூல்கள்" (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன: + + +இச்சொல் "நவி" என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது ("נְבִיא " - navi). அதன் பொருள் "இறைவாக்கினர்" (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 21 உள்ளன. அவை "முன்னைய இறைவாக்கினர்" (6 நூல்கள்), "பின்னைய இறைவாக்கினர்" (15 நூல்கள்) கொண்டன. + +1) யோசுவா (ஆங்.: Joshua; எபிரேயம்: Sefer Y'hoshua) +2) நீதித் தலைவர்கள் (ஆங்.: Judges; எபிரேயம்: Shoftim) +3) 1 சாமுவேல் (1 Samuel) +4) 2 சாமுவேல் (2 Samuel) +5) 1 அரசர்கள் (1 Kings) +6) 2 அரசர்கள் (2 Kings) + +இப்பிரிவில் 3 பெரிய இறைவாக்கினர் நூல்களும் 12 சிறிய இறைவாக்கினர் நூல்களும் முறையே அடங்கும். அவை: +1) எசாயா (Isaiah) +2) எரேமியா (Jeremiah) +3) எசேக்கியேல் (Ezekiel) +4) ஓசேயா (Hosea) +5) யோவேல் (Joel) +6) ஆமோஸ் (Amos) +7) ஒபதியா (Obadiah) +8) யோனா (Jonah) +9) மீக்கா (Micah) +10) நாகூம் (Nahum) +11) அபக்கூக்கு (Habakkuk) +12) செப்பனியா (Zephaniah) +13) ஆகாய் (Haggai) +14) செக்கரியா (Zechariah) +15) மலாக்கி (Malachi) + +கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் "எழுத்துப் படையல்" "நூல் தொகுப்பு" என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன. + +1) திருப்பாடல்கள் (Psalms) +2) நீதிமொழிகள் (Proverbs) +3) யோபு (Job) +4) இனிமைமிகு பாடல் (Song of Songs) +5) ரூத்து (Ruth) +6) புலம்பல் (Lamentations) +7) சபை உரையாளர் (Ecclesiastes) +8) எஸ்தர் (Esther) +9) தானியேல் (Daniel) +10) எஸ்ரா (Ezra) +12) நெகேமியா (Nehemiah) +13அ) 1 குறிப்பேடு (1 Chronicles) +13ஆ) 2 குறிப்பேடு (2 Chronicles) + +இவ்வாறு, பழைய ஏற���பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு. +இந்நூல்கள் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் எபிரேய வடிவம் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும். + +எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறிஸ்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை "விவிலியப் புற நூல்கள்" (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர். + +கத்தோலிக்க திருச்சபை ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை, + +1) திருச்சட்ட நூல்கள் (5): +தொடக்க நூல்; விடுதலைப் பயணம்; லேவியர்; எண்ணிக்கை; இணைச் சட்டம். + +2) வரலாற்று நூல்கள் (16): +யோசுவா; நீதித் தலைவர்கள்; ரூத்து; 1 சாமுவேல்; 2 சாமுவேல்; 1 அரசர்கள்; 2 அரசர்கள்; 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு; எஸ்ரா; நெகேமியா; தோபித்து; யூதித்து; எஸ்தர்; 1 மக்கபேயர்; 2 மக்கபேயர். + +3) ஞான நூல்கள் (7): +யோபு; திருப்பாடல்கள்; நீதிமொழிகள்; சபை உரையாளர்; இனிமைமிகு பாடல்; சாலமோனின் ஞானம்; சீராக்கின் ஞானம். + +4) இறைவாக்கு நூல்கள் (4[+2] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்): +பெரிய இறைவாக்கினர்: எசாயா; எரேமியா; [ பாரூக்கு; புலம்பல்; ] எசேக்கியேல்; தானியேல். +சிறிய இறைவாக்கினர்: ஓசேயா; யோவேல்; ஆமோஸ்; ஒபதியா; யோனா; மீக்கா; நாகூம்; அபக்கூக்கு; செப்பனியா; ஆகாய்; செக்கரியா; மலாக்கி. + +மரபு வழிக் கிறித்தவ சபைகள் (Orthodox Churches) பழைய ஏற்பாட்டில் 51 நூல்கள் உள்ளதாகக் கருதுகின்றன. + + + + + + +நீர்வை பொன்னையன் + +நீர்வை பொன்னையன் (பிறப்பு: 1930) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். + +யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி]] தொடக்கக் கல்வி கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார். + + + + + +சினாய் மலை + +சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீற்றர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது. + +மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடம் கானப்படுகிறது. மலை உச்சியில் மசூதி ஒன்றும் கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது. +சில ஆய்வாளரின் கருத்துப்படி இது விவிலிய சீனாய் மலையாகும் ஆனால் இது நிருபிக்கப்படவில்லை. + + + + + +விவிலிய சீனாய் மலை + +விவிலிய சீனாய் மலை விவிலியத்தின் யாத்திராகமம் 19 மற்றும் 20 ஆம் அதிகாரங்களில் கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளைகளை கொடுத்த மலையாகும். இதன் அமைவிடம் பற்றி பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. + + + + + +ஆர். முத்தையா + +ஆர். முத்தையா (24 பெப்ரவரி 1886 - ) தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். + +முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் 1886 பெப்ரவரி 24 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கத்திற்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார். + +சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்ணியோவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வணிக நிறுவனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம எழுத்தராக உயர்ந்து, 1930 வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். + +இவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். + +முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக் கையின் சிறு விரலால் இயக்குவர். + +முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். + +முதலாம் உலகப் போர் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை செருமனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வணிக நிறுவனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ்", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின. + +முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாமணி ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு உழைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் அச்சாவதற்கு முன்னரே அவர் காலமாகிவிட்டார் + + + + + +அட்டன், இலங்கை + +அட்டன் ("Hatton", ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும். + +"Source:" + +1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். +இது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். +இது பெண்களுக்கான பாடசாலையாகும். +இது ஆண்களுக்கான பாடசாலையாகும். + + + + +இலங்கையின் மாகாணங்கள் + +இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன. + +பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின், நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில + + +1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகாணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. + +மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். + + +2012 கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மாகாண ரீதியாக மக்கள்தொகை தரவுகள்: + + + + +சதுர மீட்டர் + +சதுர மீட்டர் பரப்பளவை அளவிடும் ஓர் அலகாகும். இது ஒரு மீட்டர் நீள அகலமுள்ள பிரதேசத்தின் பரப்பளவாகும். + +ஒரு சதுர மீற்றருக்குச் சமனானவை: + + + + +குப்பிழான் ஐ. சண்முகம் + +ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் ��ெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். + + + + + +உமா வரதராஜன் + +உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கை ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து "உமா வரதராஜன்" ஆனவர். + +சிங்கர் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியவர். + +உமா வரதராஜன் ஈழத்துச் சிற்றிதழ்கள் சிலவற்றின் ஆசிரியர். தனது 17வது வயதிலேயே காலரதம் என்ற என்ற சிற்றிதழை மீலாத்கீரன் உடன் இணைந்து நடாத்தியவர். அன்டனி பால்ராஜ் என்ற புனைபெயரில் "களம்" என்ற சிற்றிதழின் இணை ஆசிரியராக இருந்தவர். "வியூகம்" என்ற இதழைத் தொடங்கியவர். "வியூகம்" நான்கு இதழ்கள் வெளி வந்தன. திரைப்படங்கள் தொடர்பில் பத்தி எழுத்துக்களையும் எழுதி வருகிறார். 'மூன்றாம் சிலுவை' இவரது முதல் நாவல். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்கள மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. + +ரூபவாஹினி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றார். + + + + + + + +திருக்கோவில் கவியுவன் + +திருக்கோவில் கவியுவன் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது பல சிறுகதைகள் சரிநிகரில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் "வாழ்தல் என்பது" என்ற சிறுகதைத் தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளன. + + + + +தேசிய கலை இலக்கியப் பேரவை + +தேசிய கலை இலக்கியப் பேரவை ஈழத்தில் செயற்படும் ஒரு முக்கியமான கலை இலக்கிய நிறுவனமாகும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு, அறிவியல், நாடகம் எனப் பலதரப்பட்ட நூல்கள் அவற்றுள் அடங்கும். தாயகம் சஞ்சிகையும் முப்பதாண்டுகளுக்கு மேலாக இவர்களால் வெளியிடப்படுகிறது. + + + + + +புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் + +புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் (டிசம்பர் 25, 1958 யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புட்டளை, புலோலி, இலங்கை).ஈழத்து எழுத்தாளர். ஈழத்துப் பதிப்பாளர். கொழும்பு மீரா பதிப்பகத்தின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதழ்களில் நூல் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நூல் அறிமுகக் கட்டுரைகளும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இப்பொழுது தினக்குரலில் பணியாற்றுகிறார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான "புரளும் அத்தியாயம்" எனும் முதல் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். + + + + + + +நெல்லை க. பேரன் + +நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 - ஜூலை 15, 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர். + +யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். + +பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். + +இவரது சிறுகதைகள் "ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்" மற்றும் "சத்தியங்கள்" ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. "விமானங்கள் மீண்டும் வரும்" என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது. + +1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது. + + + + + +சரிநிகர் + +சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்��� ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது. + +சரிநிகர் ஒரு மாத இதழாக மீண்டும் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. 2007 மார்ச் - ஏப்ரல் இதழ் புதிய அளவையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. + + + + +ஒருங்குறியும் மின்னஞ்சலும் + +அநேகமாக எல்லா மின்னஞ்சல்களுமே ஒருங்குறியை (அதாவது யுனிக்கோட் முறையை ஆதரிக்கின்றன). எனினும் அவை வழமையாக ஒருங்குறியில் மின்னஞ்சலகளை அநுப்புவதில்லை இதில் சிலவற்றில் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒருங்குறியிலைமைந்த மின்னஞ்சல்க்ளைப் படிக்க இயலும். + +View > Character Encoding > Unicode +Tools > Options… > Fonts > Outgoing Mail / Incoming Mail (change to Unicode) + +மைக்ரோசாப்ட் அவுட்லுக் UTF-7, UTF-8 முறைகளை ஆதரித்தாலும் வழமையாக அவை அவ்வாறு மின்னஞ்சல்களை அநுப்புவதில்லை. என்னினும் பதிலளிக்கும் போது அவை எந்த முறையில் encode பண்ணப் பட்டதோ அதே முறயிலேயே பதிலனுப்புகின்றன. எல்லா ஒருங்குறி எழுத்துக்களும் இம்மின்னஞ்சலில் தட்டச்சுச் செய்ய இயலுமெனினும் சரியான encoding இல்லை எனின் அவை ? ஆல் மாற்றீடு செய்யப் படும். + +லோட்டஸ் நோட்ஸ்ஸில் மின்னஞ்சல் ஒருங்குறியில் மின்னஞ்சல் அநுப்ப +மெனியூவில் இருந்து , + + + + +சிறுகதை + +சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும். + += அறிமுகம் = +முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள். + +தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதிய��ரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும். + +தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். + +தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். + += தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள் = + + + + + +குருதிக் கூறுகள் + +குருதியில் உள்ள பல்வேறு பொருட்களின் பட்டியல். + + + + +வெண்ணி (புரதம்) + +வெண்ணி (ஆல்புமின், Albumin) என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை. வெப்ப ஆற்றலால், இப்பொருள் திரிபடைந்து திரளத்தொடங்கும். இப்பொருளின் வெண் நிறம் பற்றி வெண்ணி என்று பெயர் பெற்றது. இவ்வகைப் பொருட்கள் கோழி முட்டை போன்ற முட்டைகளில் உள்ள வெள்ளைக்கருவிலும் உள்ளன. ஆனால் இவற்றை வெள்ளைக்கரு அல்லது வெண்ணிக்கரு என்னும் பெயரால் அழைக்கப்படும். வெண்ணிகளில் மிகவும் பரவலாக அறியப்படுவது குருதியில் உள்ள வெண்ணிதான் என்றாலும் இவற்றில் சில வகை ஆற்றலை சேமித்து வைக்கும் பொருளாகவும் உள்ளன, சில செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. குருதியில் உள்ள வெண்ணியானது மஞ்சள் நிறக் குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் 60% ஆகும். இந்த வெண்ணிப் பொருட்கள் கல்லீ��லில் உருவாகின்றன. + + + + +நாரீனி (புரதம்) + +நாரீனி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் ("platelets") வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்று. + +நாரீனி என்னும் புரதப்பொருள் கல்லீரலில் உருவாக்கப்படுகின்றது. + + + + + +பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி + +குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. + +வேள்விக்குடிச் செப்பேட்டில். +எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. +மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில் +இவனைப் பற்றிப் புறநானூற்றில் +"முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64) + +காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில் +நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில் +மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு +"விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது. + +நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். +இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள். + +இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்: + +பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன், + +இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது. + +வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். +அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை. + +‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறான். இவனது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவனுக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன. + +போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன் +போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம். +இப்படிப்பட்ட அறயெறியாளன் கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க. + +நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?) +அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா? +யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார். + +குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன். + +நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள். + + + + + +பூதப் பாண்டியன் + +பூதப்பாண்டியன் என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது. இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ "ஒல்லையூர் தந்த" என்னும் அடைமொழி கொண்டவன். இவனுடைய மனைவி "கோப்பெருங்கோப்பெண்டு" என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர். + + + + +அரிசில் கிழார் + +அரிசில் என்பது ஓர் ஆறு. அது கும்பகோணம் எனப்படும் குடந்தை அருகே ஓடுகிறது. இங்கு வாழ்ந்த புலவர் அரிசில் கிழார். திருஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறை 19 திரு அம்பர்த் திருப்பெருங்கோயில் பதிகத்தின் முதல் பாடலில் வரும் 'அரிசில் அம் பெருந்துறை அம்பர் மாநகர்' என வரும் பாடலால் உணரலாம். இந்த அரிசிலாற்றங்கரையில் உள்ள அம்பர் நகரில் ஒருந்துகொண்டு ஆண்ட சங்க கால மன்னன் 'அம்பர் கிழான் அருவந்தை' + +அரிசில் கிழார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். புறநானூற்றில் 146, 230, 281, 285, 300, 304, 342 எண்ணுள்ள ஏழு பாடல்களும் குறுந்தொகையில் 193 எண்ணுள்ள ஒரு பாடலும் அரிசில் கிழார் பாடியவை ஆகும். பதிற்றுப்பத்து 8ஆம் பத்திலுள்ள 10 பாடல்களுங்கூட இவரால் பாடப்பட்டவையே.அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்ந்த வையாவிக் கோப்பெரும் பேகன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆகிய அரசர்கள் இப் புலவரால் பாடப்பட்டுள்ளனர். + + + + + +உக்கிரப் பெருவழுதி + +பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். +ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார். கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உறிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம். +இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். +இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான். +அ +வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் பலர். +அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்: + +உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கைமார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்: +என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது. + +புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்: +இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது என்று செவிவழிமரபு. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன. + +கானப்பேரெயில் கோட்டை + + + + +நொடி + +நொடி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள்: + + + + + +கி. வி. வி. கன்னங்கரா + +சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என அழைக்கப்படும் கிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கரா ("C. W. W. Kannangara", , அக்டோபர் 13, 1884 - செப்டம்பர் 29, 1969) என்பவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பமான, இலங்கையின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இவர், இலங்கை அரசாங்க சபையின் முதல் கல்வி அமைச்சரானார். மேலும், நாட்டின் கல்வித் துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார். இவரது சீர்திருத்தங்களால் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்த சிறுவர்கள் கல்வி பெறக்கூடியதாய் இருந்தது. + +இலங்கையின் தெற்கேயுள்ள அம்பலாங்கொடையில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர், கல்வியில் சிறப்பாகக் காட்டிய திறமை மூலம், அக்காலத்தில் சிறந்து விளங்கிய காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர் ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இலங்கையில் அக்காலத்தில் வலுப்பெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். 1923ல் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் தெரிவான கன்னங்கர, பின்னர் அரசாங்க சபைக்கும் தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கைத் தேசியக் காங்கிரசின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். + +1940களில் அரசாங்க சபையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய கன்னங்கர, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கல்வியை இலவசமாக்கியதன் மூலம், நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள வறிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார். மத்திய மகா வித்தியாலயங்கள் எனும் திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், நாட்டின் கிராமப் புறங்களில் தரம் வாய்ந்த இரண்டாம் நிலைப் பாடசாலைகளை நிறுவினார். கல்வித்துறையில் கன்னங்கர ஏற்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவாக, இவர் "இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். + +கிறிஸ்தோபர் வில்லியம��� விஜயக்கோன் கன்னங்கர, அக்டோபர் 13, 1884ல், இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள ரன்தொம்பே எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் உதவிப் பிசுக்கால் அலுவலராகப் பணியாற்றிய ஜோன் டானியல் விஜயக்கோன் கன்னங்கர ஆவார். இவரது தாயார் எமிலி விஜயசிங்க ஆவார். கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை ரன்தொம்பேயிலுள்ள வெஸ்லிக் கல்லூரியில் பயின்றார். + +இளமையில் கன்னங்கர அவர்கள் கல்வியில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிப்படுத்தினார். ஒருமுறை வெஸ்லிக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்த காலி ரிச்மண்ட் கல்லூரியின் அதிபரான வண. J.H. டரெல் அவர்கள், பரிசளிப்பு விழாவில் அதிகமான பரிசுகளை கன்னங்கரவே பெற்றுக்கொண்டமையை அறிந்து கன்னங்கரவிடம், “"தம்பி, நீ பரிசளிப்பு விழாவில் பெற்ற பரிசுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டு வண்டியொன்று வேண்டும்"” என்று கூறினார். மேலும் டரெல், கன்னங்கரவுக்கு, ரிச்மண்ட் கல்லூரி நிதியத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்கும் வாய்ப்பளித்தார். பரீட்சையில், கணித பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கன்னங்கர புலமைப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் ரிச்மண்ட் கல்லூரியின் மாணவர் விடுதியில் இலவசமாகத் தங்கவும் வாய்ப்புப் பெற்றார். இங்கு அவர் தனது கிராமப் பாடசாலையிலும் பார்க்க சிறந்த முறையில் கல்வி வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார். + +ரிச்மண்ட் கல்லூரியின் மாணவராக அவர் பல்துறைத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1903ல் நடைபெற்ற கேம்பிரிட்ச் சீனியர் பரீட்சையில் கணிதப் பாடத்தில் பிரித்தானியப் பேரரசின் பட்டியலிலும், இலங்கைப் பட்டியலிலும் முதல் நிலையில் சித்தியடைந்தார். 1903ல் ரிச்மண்ட் கல்லூரி விளையாடிய முதல் பதினொரு துடுப்பாட்டப் போட்டிகளிலும் அணித்தலைவராகச் செயற்பட்டார். மேலும் அதே வருடத்தில் கல்லூரியின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றார். இவற்றில் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுதல்களும் பெற்றார். மேலும் இவர் ஒரு சிறந்த நடிகராகவும் விவாதத் திறமை கொண்டவராயும் விளங்கினார். பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர், ரிச்மண்ட் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்தார். பின்பு மொரட்���ுவயிலுள்ள பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியிலும், கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியிலும் கற்பித்தார். ஆசிரியராகப் பணியாற்றும் வேளையில் சட்டக் கல்வியை மேற்கொண்டார். 1910ல் ஒரு சட்டத்தரணியாக வெளியேறினார். அதேவருடத்தில் காலியில் சட்டத்துறையில் பணியாற்றினார். 1922ல், எடித் டி அல்விஸ் எதிரிசிங்க என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். + + + + +நானோ தொழில்நுட்பம் + +நானோ தொழில்நுட்பம் "(Nanotechnology)" அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். பரவலாக இன்று அறியப்படும் தொடக்கநிலை மீநுண் தொழில்நுட்பம் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்குகளை ஒட்டியது. இதன்படி, பெரிய அளவிலான பொருள்களையோ கருவிகளையோ செய்ய, துல்லியமாக அணு அளவிலும், மூலக்கூறு அளவிலும் பொருள்களைக் கையாண்டு செய்யும் முறையே மீநுண் தொழில்நுட்பம் ஆகும். இது இப்போது மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் எனப்படுகிறது. பிறகு, மிகவும் பொதுவான விளக்கம் ஒன்றை அமெரிக்கத் தேசிய மீநுண் தொழில்நுட்ப முன்முயற்சியகம் தந்தது. இதன்படி, மீநுண் தொழில்நுட்பம் என்பது குறைந்தது ஒரு பருமானத்தில் 1 முதல் 100 நானோமீட்டர்களில் ஒன்றைக் கையாளும் திறம் கொண்ட நுட்பமாக வரையறுக்கப்பட்டது. இந்த வரையறையின்படி பொருளின் பரும அளவு மிகக்குறைவாக இருப்பதால் குவைய இயக்கவியல் (குவாண்டம் இயக்கவியல்) விளைவுகள் மிகவும் வினைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே வரையறை குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்கில் இருந்து பெயர்ந்து ஆய்வு வகைக்கு மாறிவிட்ட்தைக் கண்ணுறலாம். இதன்படி, இன்று இது குறிப்பிட்ட பரும அளவுக்குக் கீழே அமைந்த பொருளின் சிறப்பு இயல்புகளை விவரிக்கும் அனைத்து ஆராய்ச்சிகளையும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்குகிறது.எனவே இது இப்போது மீநுண் தொழில்நுட்பங்கள் அல்லது மீநுண்ணளவுத் தொழில்நுட்பங்கள் என பன்மையில் அழைக்கப்படுகிறது. இதன் பொதுப்பான்மையாக அளவு மட்டுமே கருதப்படுகிறது. இதற்குப் பல பயன்பாடுகள் தொழில்துறையிலும் படைத்துறையிலும் வாய்த்துள்ளதால், உலக வல்லரசுகள் பல பில்லியன் வெள்ளிகள் (தாலர்கள்) செலவிட்டு வருகின்றன. அமெரிக்கா தன் தேசிய மீநுண் தொழ��லுட்ப முன்முயற்சியகத்தின் வழி 3.7 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை முதலீடு செய்துள்ளது; ஐரோப்பிய ஒன்றியம் 1.2 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் நிப்பான் எனும் யப்பான் 750 மில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் முதலீடு செய்துள்ளன. + +பரு அளவால் வரையறுக்கப்படும் மீநுண் தொழில்நுட்பம், அறிவியலில் மேற்பரப்பு அறிவியல், [[கரிம வேதியியல், [[மூலக்கூற்று உயிரியல், [[குறைகடத்தி]] இயற்பியல், நுண்புனைவியல், மூலக்கூற்றுப் பொறியியல் போன்ற பல புலங்களை உள்ளடக்குகிறது. எனவே இத்துறை சார்ந்த ஆராய்ச்சியும் பயன்பாடுகளும் பல்திறத்தனவாக, மரபியலான குறைகடத்திக் கருவி இயற்பியலில் இருந்து முற்றிலும் புதிய அணுகுமுறைகள் வாய்ந்த மூலக்கூற்றுமுறைத் தன்பூட்டுதல் முதல் மீநுண் பொருள்களை உருவாக்கல், நுண் தொழில்நுட்பம், மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் என, நேரடி அணுவியல் மட்டக் கட்டுபாடுள்ள புலங்கள் அனைத்திலும் பரந்து விரிந்தமைகிறது. +அறிவியலாளர்கள் அன்மையில் மீநுண் தொழில்நுட்பத்தின் தொடர்ந்த எதிர்கால பின்விளைவுகள் பற்ரி விவாதித்து வருகின்றனர். இது மீநுண் மருத்துவம், மிநுண் மின்னணுவியல், உயிரிப்பொருள்வழி ஆற்றலாக்கம், நுகர்பொருட்கள் போன்ற அகன்ற விரிவான மீநுண் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான பல புதிய பொருள்களையும் கருவிகளையும் உருவாக்க வல்லதாகும். இன்னொருவகையில் பார்த்தால், புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அத்தனைச் சிக்கல்களையும் மீநுண் தொழில்நுட்பமும் எதிர்கொள்கிறது. இது மீநுண் நச்சியல் விளைவுகளையும் மீநுண் பொருள்களால் ஆகிய சுற்றுச்சூழல் தாக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் தாக்கம் உலகப்பொருளியல் மீதும் அமைவதோடு பல அழிவுநாள் வரம்புநிலைகளையும் உருவாக்க வல்லதாக உள்ளது. இந்த அக்கறைகள், மீநுண் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைப்போருக்கும் உலக அரசுகளுக்கும் இடையில் சிறப்பு மீநுண் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் தேவையா எனும் விவாதத்தைக் கிளப்பிவருகின்றன. + +மீநுண் தொழில்நுட்பத்துக்கான எண்ணக்கரு விதைந்த விவாதம் 1959 இல் பெயர்பெற்ற இயற்பியலாளரான இரிச்சர்டு பீய்ன்மனால் அவரது "[[There's Plenty of Room at the Bottom]]" எனும் உரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இவர் அணுக்களை நேரடியாகக் கட்டுபடுத்தி உருவாக்கும் பொருள்தொகுப்பின் வாய்ப்புகள் பற்றி விவரிக்கிறார். மீநுண் தொழில்நுட்பம் எனும் சொல்லை முதலில் 1974 இல் நோரியோ தானிகுச்சி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இச்சொல் மிகவும் பரவலாக வழங்கப்படவில்லை. +பெயின்மன் கருத்துகளால் கவரப்பட்டு, கே. எரிக் டிரெக்சிலர் என்பார் தான் 1986 ஆம் ஆண்டு வெளியிட்ட "[[Engines of creation|Engines of Creation: The Coming Era of Nanotechnology]]" எனும் நூலில் "மீநுண் தொழில்நுட்பம்" எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இதில் மீநுண் அளவு புனைவி எனும் எண்ணக்கருவை முன்மொழிந்தார். இது அணுக் கட்டுபாட்டின் வழி சிக்கலான கட்டமைப்புடைய தன்னையே புனைவதோடு பிறவற்றையும் புனையும் ஆற்றல் கொண்டதாகும். இவர் 1986 இல் முன்னோக்கு நிறுவனம் அமைப்பை இனையாக நிறுவினார்.இதன்வழி மக்களின் விழிப்புணர்வை மீநுண் தொழில்நுட்பத்தின்பால் ஈர்த்து அத்தொழில்நுட்பத்தின் கருத்துப்படிமங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள வழிவகுத்தார். + +இதனால், 1980 களில் இவரது கோட்பாட்டுப் பணிகளாலும் பொதுப்பணிகளாலும் மீநுண் தொழில்நுட்பம் தனிப்புலமாக எழுச்சிகண்டு வளரலானது. பல நுண்ணோக்கான உயர்நிலைச் செய்முறைகள் மேற்கோள்ளப்பட்டன. பொருண்மத்தின் அணுக்கட்டுபாட்டின்பால் ஆய்வாளர்களின் கவனத்தைக் குவித்தது. 1980 களில் ஏற்பாட்ட இரு புதுமைக் கண்டுபிடிப்புகள் இத்துறைyai உரமூட்டி வளர்த்தன. + +முதலாவது கண்டுபிடிப்பு, ஊடுருவும் அலகீட்டு நுண்ணோக்கி 1981இல் புதிதாகப் புனைந்தமையாகும். இது வரலாறுகாணாத வகையில் தனித்தனி அணுக்களையும் அவற்றுக்கிடையில் அமைந்த பிணைப்பையும் தெளிவாக்க் காண வழிவகுத்தது. இதனால் 1989 ஆண்டளவுக்குள் தனி அணுக்களை வெற்றியோடு கையாள இந்நுண்ணோக்கியை பயன்படுத்த முடிந்தது. இதை உருவாக்கியதற்காக ஐ பி எம் சூரிச் ஆய்வகத்தைச் சேர்ந்த ஜெர்டு பின்னிகுவும் என்றிச் உரோகிரரும் 1986 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். அதே ஆண்டில் பின்னிகுவும், குவேட்டும் கெர்பெரும் இதையொத்த அணுவிசை நுண்ணோக்கியைப் புத்திதாக புனைந்தனர். +[[File:C60a.png|thumb|175px|left|பக்மினிசுட்டர் புல்லெரீன் C. இது நெளிகட்டு பந்து எனவும் வழங்கும். இது கரிமத் தனிமக் கட்டமைப்புகளைச் சார்ந்த புல்லெரீன்கள் எனும் வகைசார் உறுப்பினராகும். புல்லெரீன் குடும்ப உறுப்பினர்கள் மீநுண் தொழில்நுட்ப ஆராய்ச்சிய��ன் கீழ்வரும் பெரும்பாடப் பகுதியாகும்.]] +இரண்டாவது கண்டுபிடிப்பு, 1985 இல் நெளிபந்துகள் எனப்படும் பெருங்கரிம மூலக்கூறுகளாகிய புல்லெரீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமையாகும். இக்கண்டுபிடிப்புக்காக ஆரி குரோட்டொ, இரிச்சர்டு சுமால்லேஇராபர்ட் கர்ல் ஆகிய மூவரும் 1996 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசைப் பெற்றனர். C இவை முதலில் மீநுண் தொழில்நுட்பத்துக்குள் அடக்கப்படவில்லை ஆனால், பின்னர் கரிம மீநுண் குழல்கள் அல்லது நெளிகுழல்கள் எனப்படும் கிராபீன் குழல்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னரே மீநுண் தொழில்நுட்ப வரையறைக்குள் வந்தது. இவற்றின். பயன்பாடுகள் மீநுண்ணளவு மின்னணுவியலிலும் மின்னணுவியல் கருவிகளிலும் பேரளவாக அமையும் வாய்ப்புகளும் புலனாகின. + +இப்புலம் 2000 களின் தொடக்கத்தில், வளர்நிலை அறிவியல், அரசியல், வணிகவியல் கவனத்துக்கு ஆட்படலானது. பல எதிர்ப்புகளையும் தொடர்ந்த முண்ணேற்ரத்தையும் சந்தித்தது. அரசு கழகத்தின் மீநுண் தொழில்நுட்ப அறிக்கைக்குப் பிறகு, வரையறைகள் குறித்தும் இத்தொழில்நுட்பத்தின் பின்விளைவுகள் குறித்தும் கருத்து மோதல்கள் தோன்றின. மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்ப விரும்பிகளால் விவரிக்கப்படும் பயன்பாடுகள் குறித்து பல அறைகூவல்கள் எழுந்தன. இது பொதுமக்களிடையே பெருவிவாத்த்தைக் கிளப்பியது. இவ்விவாத்த்தில் 2001 இலும் 2003 இலும் டிரெக்சிலரும் சுமால்லேவும் ஈடுபட்டனர். +இதற்கிடையில் மீநுண்ணளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உருவாகிய பொருள்கள் வணிகவீயலாக வெற்ரிகாணத் தொடங்கிவிட்டன. இப்பொருள்கள் மீநுண்பொருள்களின் பேரளவு பயன்பாட்டால் உருவாகியவையே தவிர இவற்றில் பொருண்மத்தின் அணுமட்டக் கட்டுபாடேதும் கைக்கொள்ளப்படவில்லை. எடுத்துகாட்டுகளாக்க் குச்சுயிரித் தொற்றெதிர்ப்புள்ல வெள்ளி மீநுண்துகள்களைப் பயன்படுத்திய சூரியத் தடுப்புத்திரை அமைந்த வெள்ளி மீநுண்தட்டமைவையும் மீநுண் துகள்களால் ஆகியஒளி ஊடுருவும் சூரியத் தடுப்புத்திரையையும் அனலக மீநுண் துகள்களைப் பயன்படுத்தி வலுவூட்டிய கரிமநாரையும் துகிலியலில் உருவாகிய கறையெதிர்ப்பு மீநுண் குழல்களையும் கூறலாம். + +இந்தத் தொழில்நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்கிறது. எடுத்துகாட்டாக, [[���ாந்தவியல்]], [[மின்னியல்]] அல்லது [[ஒளியியல்]] பண்புகள் வாய்ந்த துகள்களைக் குறிப்பிடலாம். மீநுண் துகள்களைத் தொகுக்கும்போது அவை தமது [[பொறியியல்]]வலிமையைக் கூட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மரபான பலபடிவங்கள் மீநுண் தொழில்நுட்பத்தால் வலிவூட்டப்படலாம். இவற்றை நாம் மாழைகளுக்கு (உலோகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக எடையற்ற வலிவூட்டிய உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன. + +உலக அரசுகள், குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீநுண் தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்தன. அமெரிக்கா மீநுண் தொழில்நுட்பத்துக்கான வரையறையை உருவாக்கி, மீநுண் தொழில்நுட்ப முயல்வகத்தைத் தோற்றுவித்தது. இதன்வழி இத்தொழில்நுட்பத்துக்கான நிதியைப் பகிர்ந்தளித்த்து. ஐரோப்பா, ஐரோப்பியா ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டங்களால் மீநுண் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது. + +இதில் 2000 இன் இடைப்பகுதியில் சீரிய அறிவியல் கவனம் செழிக்கத் தொடங்கியது. மீநுண் தொழில்நுட்ப நெடுஞ்சாலையைத் திட்டமிடும் பல புதிய திட்டங்கள் எழுச்சி கண்டன இது அணுவியல் நிலையில் பொருண்மத்தைக் துல்லியமாகக் கட்டுபடுத்துவதில் மையங்கொண்டு நடப்பு, எதிர்கால வளவாய்ப்புகளையும் இலக்குகளையும் பயன்பாடுகளையும் விவாதத்துக்கு உட்படுத்தியது. + +[[இந்தியா]] உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன. + +மீநுண் தொழில்நுட்பம் என்பது மூலக்கூற்று உலகின் செயல்பாட்டு அமைப்புகள் சார்ந்த பொறியியலாகும். இது நடப்பு ஆய்வுகளையும் மேலும் உயராய்வுக் கருத்துப்படிமங்களையும் உள்ளடக்குகிறது. அதன் உண்மைப் பொருளில், மீநுண் தொழில்நுட்பம் கீழிருந்து மேலாகப் பொருள்களைக் கட்டியமைக்கும் விரிவாக்கத் திறமையைச் சுட்டுகிறது. இன்று உருவாகியுள்ள நுட்பங்களும் கருவிகளும் இத்தகைய முழுமை வாய்ந்த உயர்செயல்திறப் பொருள்களைச் செய்ய உதவுகின்றன. + +நானோ தொழினுட்பவியலில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் [[காபன்|காபனாகும்]]. [[கடுங்கரி]], [[வைரம்]] என்பன காபனின் பிறதிருப்பங்களாகும். [[புளோரின்]] செயற்க���யாக உற்பத்தி செய்யப்பட்ட காபனின் மூன்றாவது பிறதிருப்பமாகும். காபன் பக்கி பந்து, காபன் நானோ குழாய், காபன் நானோ ஊதுகுழாய் என்பன புளோரின் மூலம் உற்பத்தியாக்கப்பட்ட சில பொருட்களாகும். + + + +[[பகுப்பு:நானோதொழினுட்பம்| ]] +[[பகுப்பு:வேதியியல்]] +[[பகுப்பு:பயன்பாட்டு அறிவியல்]] + + + +பிடல் காஸ்ட்ரோ + +பிடல் காஸ்ட்ரோ ("Fidel Alejandro Castro Ruz", (, ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். + +அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார். + +1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார். காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ ஆவார். இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் ஒரு பண்ணையார் ஆவார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ, ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார��. மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். + +1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார். ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது உடன்பிறந்தவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர். ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் தங்கைகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி பள்ளிப் படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார். பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக வளர்ச்சி பெற்றார். + +காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு தலைமைக் கட்சிகள் மாணவர்கள் நடுவில் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக ஆசிரியராக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் ஆண்டே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார். + +கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்க���ும் செய்தார். பேச்சுத் திறமையால் பிடல் மக்களைக் கவர்ந்தார். 1952 ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் இதழை துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார். + +காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம் செய்தது ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் ஒன்று விட்ட உடன்பிறந்தவர் எமிலியோவிற்காக. அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார், எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது பிடலின் பொறுப்பு. வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார். கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும் தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டிலிருந்தே கடுமையாக பிரச்சாரம் செய்தார். அத்தேர்தலில் வெற்றியும் கண்டார். + +ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் இராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது. காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் பிடெல் நிகழ்த்திய இந்த உரையே, + + + + +பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார். + +மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும் போதுதான் அவருக்கு நாட்டு எல்லைகடந்த மனிதநேயப் போராளியான சேகுவேரா அறிமுகம் ஆனார். அவர் கியூப விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காஸ்ட்ரோவும் சேகுவெராவும் க்ரான்மா எனும் கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர��. அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர். + +காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா வந்ததும் அமெரிக்கா அவரைத் தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள் கியூப மக்களுக்கே சொந்தம்' என்று கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தாலும் காஸ்ட்ரோ அதனைச் சமாளித்தார். அமெரிக்கா தனது சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் திட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை. + +கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேறின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக இருந்த நாடாகும். + +தன் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த, அரசை அகற்றியவுடன், முதல் பணியாய், ஓர் எழுத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் தாரகமந்திரமாக பின்வரும் வாக்கியங்களைக் கூறினான். +தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள் + +தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள் +சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும், மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு, நூலை மடியில் வைத்துக் கொண்டார்கள். +பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள். ஒரே ஆண்டில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம், ~30என்பதிலிருந்து, 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும், கட்டணமாக ஒரு பைசாவைக் கூட, அவரின் அரசாங்கம் வசூலிக்கமால், அனைவருக்கும் இலவசக் கல்வியை அளித்தது. + +உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார். + + + + + + + + +நானோமீட்டர் + +நானோமீட்டர் ("Nanometer"; SI குறியீடு: nm) என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் ( m) நீள அலகு ஆகும். + +நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்: + + + + + +புரை ஊடுருவு மின்னோட்டம் + +புரை ஊடுருவல் ("Quantum Tunneling") முறையில் எதிர்மின்னியோ பிற மின்மப் பொருளோ ஆற்றல் தடையைக் கடந்து செல்லுவதால் ஏற்படும் மின்னோட்டம், புரை ஊடுருவு மின்னோட்டம் என்பதாகும். இந்நிகழ்வு குவிண்டம் (குவாண்டம்) இயற்பியலின் தனிச்சிறப்பான இயற்கை நிகழ்வாகும். நியூட்டன் காலத்து இயற்பியலின் அறிவுப்படி, ஒரு துகள் அது எதிர் கொள்ளும் ஆற்றல் தடையின் (ஆற்றல் மலை என்றும் அழைக்கலாம்) அளவைக்காட்டிலும் குறைந்த அளவு ஆற்றல் கொண்டிருந்தால், அந்தத் துகள் அந்த ஆற்றல் தடையை மீறவே இயலாது என்பதுதான். ஆனால் குவிண்டம் இயற்பியலில் அந்தத் துகள் ஆற்றல் தடையைக் காட்டிலும் குறைந்த அளவு ஆற்றல் பெற்றிருப்பினும், ஆற்றல் தடையின் அகலம் குறைவாய் இருந்தால் அத்துகள் ஆற்றல் தடையைக் ஊடுருவிக் கடந்து செல்ல ஒரு ஒரு குறிப்பிட்ட வாய்ப்பளவு உள்ளது என்று கூறுகின்றது. செயல்முறைகளிலும் இவை நிறுவப்பட்டுள்ளன. இப்படி ஆற்றல் தடை ஊடே ஊடுருவிப் போவதை புரை ஊடுருவல் என்றும் குவிண்டம் புரை ஊடுருவல் என்றும் கூறப்படுகின்றது. மின்மப் பொருள் புரை ஊடுருவிச் சென்றால் மின்னோட்டம் நிகழும். இதன் அடிப்படையிலேயே ஒரு பொருளின் மேற்பரப்பில் உள்ள அணு அடுக்கங்களை மிகத் துல்லியமாகவும் மிக நுட்பமாகவும் கண்டறியும் அணுப்புற விசை நுண்ணோக்கிகளும், வாருதல்வகை புரை ஊடுருவல் நுண்ணோக்கிகளும் அறிவியல்-பொறியாளர்கள் ஆக்கி உள்ளனர். விரைந்து வளர்ந்து வரும் நானோ தொழில்நுட்பத்திற்கு இவ்வடிப்படையில் அமைந்த கருவிகள் மிகத்தேவையானது. + +தமிழில் புரை, புழை = துளை. ஏதோ துல்லியமாய் அறியா வகையில் ஆற்றல்தடையை ஊடுருவிக் கடக்கும் இந்நிகழ்வு புரை ஊடுருவல், அல்லது புழை ஊடுருவல் என்று அழைக்கபடுகின்றது. + +[சமன்பாடுகள் விளக்க விரிவாக்கம், படம் பின்ன���் வரும்] + + + + +குறமகள் + +குறமகள் என்ற பெயரில் எழுதி வந்த வள்ளிநாயகி இராமலிங்கம் (சனவரி 9, 1933 - செப்டம்பர் 15, 2016) ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர். + +இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வள்ளிநாயகி இராமலிங்கம், காங்கேசன்துறையில் பிறந்தவர். காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார். 27 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். + +1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' ஈழகேசரியில் பிரசுரமானது. இவரது கதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன. + +பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர். இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வந்துள்ளன. சிறுகதைகள் மட்டுமன்றி கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றிலும் தம் ஆளுமையைக் காட்டியுள்ளார். ஐவருடன் சேர்ந்து "மத்தாப்பு" என்ற குறுநாவலில் மஞ்சள் வர்ணத்தை வைத்து ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார். மாணிக்கம் இதழில் பிரபல எழுத்தாளர்கள் சிலருடன் சேர்ந்து "கடல் தாரகை" என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இவர் சிறந்த சொற்பொழிவாளர். பல இலக்கிய வெளியீடுகளில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். + +1954-ம் ஆண்டிலிருந்து சிறுகதை, கட்டுரை, கவிதை என இவரின் ஆக்கங்கள் தொடங்கின. இவர் எழுதிய சிறுகதைகளுள் பிரபலமான சில: + + + + + + + +செல்சியசு + +பாகை செல்சியசு (°C) வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகாகும். 1742 ஆம் ஆண்டு செல்சியசு முறைக்கு ஒத்த முறையை முன்மொழிந்த, சுவீடன் வானியலாளர் ஆந்திரே செல்சியசு ஐ (1701-1744), (Anders Celsius) நினைவுகூரும் வகையில் இப்பெயர் இடப்பட்டுள்ளது. 1750 தொடக்கத்தில் "செண்டிகிரேட்" அல்லது "சென்றிகிரேட்" (நூ��்றன் பாகை என்னும் பொருளது) என்ற பெயர் பாவனையிலிருந்தது, 1948 ஆம் ஆண்டு இது இவ்வலகு செல்சியசு என மாற்றம் செய்யப்பட்டது. + +1954 ஆம் ஆண்டு வரை இருந்த வரையறையின் படி, கடல் மட்டத்தில் உள்ள, தரம் சீர்செய்யப்பட்ட, சூழ் அழுத்த (101.325 கிலோ பாஸ்க்கல்) நிலையில் நீரானது் பனியாய் உறையும் வெப்பநிலையில் இருந்து நீரின் கொதிநிலை வரை உள்ள வெப்ப நிலை வேறுபாட்டை 100 சம பாகைகளாகக் கொண்டது இந்த செல்சியசு வெப்பநிலை அளவீடு. இன்றும் இந்த அளவீடு துல்லியமானதே, எனினும், தற்காலத்தில் தரம் செய்யப்பட்ட செல்சியசு அளவீட்டின் படி நீரின் "முந்நிலைக் கூடற்புள்ளி" அல்லது முக்கூடற் புள்ளி (நீரானது ஒரே சமையத்தில் திண்ம, நீர்ம, வளிமம் ஆகிய முன்னிலைகளிலும் இணைந்திருக்கும் நிலை) என்பது 0.01 °C என்று கொள்ளப்படுகின்றது. + + + + +கறுப்பு யூலை + +கறுப்பு யூலை ("Black July", ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். + +இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. + + + + + + +ஈழத்து எழுத்தாளர்கள் + +ஈழத்து எழுத்தாளர்கள் எனப்படுவோர் பொதுவாக இலங்கையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்களாவார். இவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும் சிலர் புகலிடங்களிலிருந்தும் எழுதி வருகின்றனர். புகலிடங்களில் இருப்போர் தம்மை "புகலிட எழுத்தாளர்கள்" என அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு. + + + + +ஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல் + +இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெ���ியிடப்பட்ட ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +ஆண்டு 2011 + +வெள்ளிவிரல்- தீரன் ஆர்.எம்.நவ்ஷாத்--காலச்சுவடு வெளியீடு- 2011இற்கான அரச தேசிய சாஹித்திய விருதும்- கிழக்குமாகாண சாஹித்திய விருதும் பெற்றது ISBN 978-93-80240-59-6 + +ஆண்டு குறிப்பிடப்படாதவை + + + + + +மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல் + +2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீட்டின் படி மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல். வடக்கு கிழக்கு மாகாணங்களின் நகரங்கள் கணிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க. + +இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபர திணக்களம் + + + + + +விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளும் + +விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளும் (Windows Live QnA) மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் சேவைகளில் ஒன்றாகும். கூகிள் விடைகள் உடன் ஒப்பிடக்கூடியதெனினும் அதனில் இருந்து மாறுபட்டது. இதன் பிரதான போட்டியாளராக யாகூ விடைகளே இருக்குமேன எதிர்பார்க்கப் படுகின்றது. + +சமூகத்தில் எவருமே வினாக்களை எழுப்பலாம் இவ்வினாக்கள் தனி ஒரு ஆராய்ச்சியாளரிடம் இல்லாமல் ஒரு சமூகத்திடம் விடப்படுகின்றது அதில் தன்னார்வலர்கள் விடைகளை அளிப்பார்கள். +கூகிள் விடைகளைப் போன்றல்லாது இங்கே பணரீதியாக தொடர்பு எதுவும் கிடையாது. இங்கே அளிக்கப்படும் விடைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பார்கள். நன்றாக விடையளிப்பவர்களிற்குப் பரிசளிக்கும் சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. + +விண்டோஸ் லைவ் தேடலுடன் ஒன்றிணைக்கப் படும் சாத்தியக்கூறுகள் இருப்பினும் இவ்விரண்டு சேவைகளிற்கும் இறுதித்திகதி இன்னமும் அறிவிக்கப் படவில்லை. + +இச்சேவையானது தற்போது வெள்ளேட்டத்திலேயே உள்ளது (பீட்டா - beta). + + + + + +கனக செந்திநாதன் + +இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977) ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். "கரவைக்கவி கந்தப்பனார்" என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். + +கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார். + +சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. + +குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார். + + + + + + + +என். கே. ரகுநாதன் + +என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் "நிலவிலே பேசுவோம்" என்ற தலைப்பில் வெளிவந்தது. + + + + + + +மகிடாசுரமர்த்தினி சிற்பம், மாமல்லபுரம் + +மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் மகிடாசுரமர்த்தினி சிற்பம் முதன்மையானது. அங்குள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் என அழைக்கப்படும் குடைவரையில் இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள்ள இந்தச் சிற்பம் நேர்த்தியாக அமைந்துள்ளது. மகிடாசுரனை வதம் செய்ய வரும் மகிடாசுரமர்த்தினி என அழைக்கப்படும் சக்தி, பத்துக் கைகள் உடையவளாய் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தியின் பத்துக் கைகளிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தியபடி பூதகணங்களும் காணப்படுகின்றன. எருமைத் தலை கொண்ட மகிடாசுரன், கதாயுதத்துடன் சத்தியை எதிர்ப்பதும், இரண்டு படைகளும் மோதுகின்ற காட்சியும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன. + + + + + +காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் + +காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். + +திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம் + +இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. + +மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. + +இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் ம��தன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. + +இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. + +ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது. +இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது. + +இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது. + +திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும். + +1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது. + +2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன. + +3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. + +4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது. + +5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது. + +6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது. + +7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது. + +இக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்தாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார். தற்போது அச்சிலை அங்கு காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. + + +சென்னைக்கு அருகில் உள்ள சிவன் தலம். மேலும் திருமாலின் திவ்வியதேசங்களின் ஒன்றாகும். + + + + +ஹிஸ்புல்லா + +ஹெஸ்புல்லா ("Hezbollah") என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். " ஹெஸ்புல்லா" என்பதற்கு அரபு மொழியில் "கடவுளின் கட்சி" என்று அர்த்தம். + +இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது. + +ஹெச்புல்லாவின் செயலதிபர், செய்யத் ஹசன் நஸ்ரல்லா (Sayyed Hassan Nasrallah) என்பவராவார் + +அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரித்தானியாவும் ஹெஸ்புல்லாவை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன. + +1980 களில் லெபனானில் உருவாகி வளர்ந்த இவ்வியக்கம் சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் பொருளாதார, ஆயுத விநியோக ஆதரவினைப் பெற்றதன் பிற்பாடு மிக வேகமாக வளர்ச்சிகண்டது. + +1990 களின் இறுதிப்பகுதியில் ஹெஸ்புல்லா ஓர் அரசியல் கட்சியை உருவாக்கியதோடு லெபனான் மக்கள் மத்தியிலும் கிராம மட்டத்திலும் பல சமூக நல செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. இலவச வைத்தியசாலைகள், இலவச பாடசாலைகள் போன்றவற்றை இவ்வியக்கம் நடத்திவருகிறது. + +மே 2000 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து இவ்வெளியேற்றத்திற்கான காரணமாக பரந்தளவில் கருதப்பட்டது ஹெஸ்புல்லாவின் போராட்டமேயாகும். இஸ்ரேல��� படையை தோற்கடித்த முதல் அரபுப்படையாக ஹெஸ்புல்லா இனங்காணப்பட்டது. அடிப்படையில் ஷியா முஸ்லிம்களிடையே உருவான அமைப்பாக ஹெஸ்புல்லா கருதப்பட்டாலும், சுன்னி முஸ்லிம்கள், லெபனான் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இவ்வியக்கம் ஆதரவினையும் புகழினையும் பெற்றுக்கொண்டது. + +இஸ்ரேல் படை வெளியேறியபின்னர் உலக வல்லரசுகள் சில ஹெஸ்புல்லா ஆயுதங்களை கைவிட்டு சனனாயக அரசியலில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தின. 2000ம் ஆண்டின் இறுதிப்பகுதில் ஆயுதக்களைவுக்கான தீவிர வெளிநாட்டு அழுத்தங்களை இவ்வியக்கம் எதிர்கொண்டது. + +ஹெஸ்புல்லாவின் சமூக சேவைப்பிரிவு ஏராளமான சமூக சேவைகளை லெபனானில் புரிந்துவருகிறது. கழிவகற்றல் தொடக்கம் வைத்தியசாலைகள், கல்விக்கூடங்கள் வரை ஒரு அரசு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இது செய்துவருகிறது. + +மே 2006 இல் ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பணிமனை வெளியிட்ட அறிக்கையின்படி, ஹெஸ்புல்லா இயக்கத்தின் சமூகசேவைப்பிரிவு 4 பெரும் வைத்தியசாலைகள், 12 சிறு வைத்திய கூடங்கள், 12 பாடசாலைகள், 2 விவசாய நிலையங்களை நடத்திவருகிறது. விவசாய கூடங்கள் வழியாக விவசாயிகளுக்கு தொழிநுட்ப ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சூழலியல் திணைக்களம் ஒன்றையும் இவ்வமைப்பு கொண்டிருக்கிறது. வைத்திய உதவிகள், லெபனானில் இயங்கும் மற்றைய தனியார் வைத்தியசாலைகளைவிடவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதோடு, ஹெஸ்புல்லா அங்கத்துவர்களுக்கு இலவச சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. +தற்போது ஹெஸ்புல்லா வறிய விவசாயிகளுக்கான கல்விக்கூட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. + +ஜூலை 2006 இல் இஸ்ரேலிய தாக்குதலின் காரணமாக தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்பட்டுள்ள நிலையில் ஹெஸ்புல்லா நகரமெங்கும் நீர்வினியோகத்தையும் மேற்கொள்கிறது. + + + + + + +ஐ. சாந்தன் + +ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். + +யாழ்ப்பாண மாவ��்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில இலக்கிய முதுகலைமாணி, சூழல் முகாமைத்துவ முதுவிஞ்ஞானமாணி. சிறந்த தொழில் நுட்பவியல் விரிவுரையாளர் மற்றும்,ஆங்கில ஆசிரியர். + +இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார். + + + + + + + + +தி. ஞானசேகரன் + +தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார். + +நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம். + +1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த அவரது "புதிய சுவடுகள்" என்னும் புதினம் விதந்தோதத்தக்கது. அவரது "குருதிமலை" என்னும் நாவலும் "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்" என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பா���்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. + + + + + + +ஆளி (செடி) + +ஆளி ("Flax"), Linum என்ற இனத்தில் Linaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பயிர். + +நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள், 5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய். + +ஆளிச் செடியின் நார், சணல் என்று தமிழில் வழங்கப்படுகின்றது. + +விதைக்காகவும் நாருக்காவும் ஆளி வளர்க்கப்படுகின்றது. செடியின் பல்வேறு பகுதிகள் நார், சாயம், மருந்துகள், மீன்வலை மற்றும் சவர்க்காரம் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பூங்காக்களில் ஒரு அலங்காரச் செடியாகவும் கருதப்படும் ஆளியின் முழு நீல நிறம் அதன் தனித்தன்மை; ஒரு சில பூக்களே +முழு நீல நிறம் உடையன; பெரும்பாலான நீல நிறப் பூக்களில் கருஞ்சிவப்பு இழையோடும். + +ஆளி விதை ஈட்டும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக வண்ணச் சாயங்களில் +மெருகெண்ணெய்களிலும் (varnish) உலரவைக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. +விதைகளை உணவாகவும், விதைகளிலிருந்து குளிர்நிலையில் ஆட்டி எடுக்கப்பட்ட சணலெண்ணெய் ("Linseed Oil") உணவுப் பொருள்களில் சேர்த்துகொள்ளலாம். + +இருவகை ஆளி விதைகள் உள்ளன; ஒன்று, மஞ்சள் மற்றொன்று காவி நிறம். காவி. ஆளி ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வந்தாலும் அது சாயம், கால்நடை தீவனம் மற்றும் சாயத்தில், ஓர் உள்ளடங்கு பொருளாகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒத்த ஊட்டச் சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் +கொண்டதாகவும் திகழ்கின்றன. இதற்கு விதிவிலக்கு, சாலின்("solin") என்று அழைக்கப்படும் மஞ்சள் +ஆளி; இதில் ஒமெகா-3 குறைவு, முற்றிலும் வேறுபட்ட எண்ணெயின் உயிரியல் +கட்டமைப்பு உருவரை படிமம் ("organic structural profile") கொண்டது. +மீன் உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் ஒமேகா-3 கொழுப்புச் சத்தைப் பெறுவதற்கு ஆளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையின் மாவுடன் 3 தேக்கரண்டி நீர் சேர்த்தால், அது கேக் மற்றும் ரொட்டி ���ுடுவதற்கு, முட்டைக்கு பதிலான இறுகு பொருளாகும். ஆளிவிதையின் எண்ணெய், பால் சுரப்பதைக் கூட்டும் பொருளாகப் பரிந்துரைக்கப்படுகின்றது ("galactagogue"). + +இதய நோய்க்கு காரணமான கொலஸ்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதோடு இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் பேண ஒமேகா-3 உதவுகின்றது. + + + + +யாகூ! விடைகள் + +யாகூ விடைகள் சமூகத்தினால் முன்னெடுன்னெடுத்துவரப்படும் வேறு பயனர்களால கேட்கப் படும் கேள்விகளிற்குப் பதிலளிக்கவும் கேள்விகளைக் கேட்கவும் உதவும் சேவையாகும். இதன் போட்டியாளர்களாக கூகிள் விடைகள் விளங்கினாலும் இவை கூகிள் விடைகள் போன்று பணரீதியாக சம்பந்தப் பட்டதல்ல. இதன் பிரதான போட்டியாளராக மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளுமே இருக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது. கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெறுவதற்கு இருக்கவேண்டியது யாகூ பயனர் கணக்கு மாத்திரமே. + +யாகூப் பாவனையாளர்கள்(பயன்படுத்துபவர்கள்) இச்சேவையினால் மிகவும் கவரப்பட்டுள்ளனர். யாகூ அங்கத்தவர்கள் யாகூவின் சமுதாய வழிகாட்டல்களை மீறாத எந்தக் கேள்வினையும் கேட்கமுடியும். நல்ல விடைகளைத் தொடர்ச்சியாக அளிக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கிழமையும் அல்லது ஒன்று விட்டொரு கிழமை யாகூ 360 வலைப்பதிவில் பங்களிப்பார்கள். + +இத்தளம் புள்ளிகளை வழங்குகின்றது. ஒவ்வொரு விடைகளும் 1 புள்ளியைப் பெறுகின்றன நல்ல விடைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை 10 புள்ளிகளைப் பெறுகின்றன. கேள்விகளைக் கேட்கும் போது 5 புள்ளிகள் கழிக்கப் படும். பெறும் புள்ளிகள் அடிப்படையில் பல்வேறு நிலைகளைப் பயனர்கள் அடைவர். ஒவ்வொரு நிலையும் கூடுதலான வசதிகளை அளிக்கும். + +புள்ளித்திட்டமானது கூடுதல் விடைகளை அளிக்கத் தூண்டுவதோடு கருதாழம் மிக்க விடைகளை அளிக்காது என்று குறைகூறப்படுகின்றது. சிலகேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன. + +சில பயனர்கள் விடையளிக்கும் போது விக்கிப்பீடியா பக்கங்களில் இருந்து விடைகளை எடுத்துவிட்டு அப்பக்கத்திற்கான இணைப்பை விடைகளில் கொடுக்காமல் தங்களது விடைபோல் விடையளிக்கின்றார்கள். இவ்வாறா நகல் எடுப்பவர்கள் பெரும்பாலும் சிறந்த விடைகளைகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதோடு உண்மையாகக் கேள்விகளை அலசி ஆராய்ந்து விடையளிப்பவர்கள் சிறந்த விடைகளாகத் தீர்மானிக்கப் படுவது குறைவாகவே உள்ளது. + +கூடுதலாக கேள்விகள் ஏறத்தாழ 20 வினாக்கள் 1 நிமிடத்திற்குத் இவ்விணையத்தில் தோன்றுவது அரட்டை அரங்கள் போன்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன. இக்கேள்விகள் அண்மையில் கேட்கப்பட்ட கேள்விகள் பகுதியில் தோன்றினால் அவை ஒரு சில நிமிடங்களில் விடையளிக்கப் படுகின்றது. + + + + + +கம்பளை இராசதானி + +கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேலை அவனது சகோதரனும் 5 ஆம் பாராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள். + + + + + +கே. எஸ். ஆனந்தன் + +கார்த்திகேசு சச்சிதானந்தம் அவர்கள் கே. எஸ். ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் நுழைந்தார் (பிறப்பு: இணுவில், யாழ்ப்பாணம்)சிறுகதைகள், புதினங்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் ஆவார். + +எழுத்தாளர் கே. எஸ். ஆனந்தன் + + + + +ஈழத்துச் சிறுகதை வரலாறு (நூல்) + +ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. + +ஈழத்தின் சிறுகதை வரலாற்றை + + +என்னும் காலப் பகுப்புக்களாக வகுத்து இந்நூல் அமைந்துள்ளது. + + + + +கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு + +கண்ணாடியிழை நெகிழி அல்லது கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக் (Glass fibre-reinforced plastic) என்பது கண்ண��டி இழையைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட நெகிழி ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள் (composite material) என்பதுடன், இழைவலுவூட்டிய பிளாஸ்ட்டிக்கு (fibre-reinforced plastic) வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொதுவாக பொலியெஸ்தர் அல்லது வைனைலெஸ்தர் ஆகும். இபொக்சி (epoxy) போன்ற பிளாஸ்ட்டிக்குகளும் இதற்குப் பயன்படுவதுண்டு. பயன்படுத்தப்படும் கண்ணாடி இழை, பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டிய இழைகளிலாலான ஒரு பாய் வடிவில் இருக்கும். சில சமயங்களில் பின்னப்பட்ட துணி உருவிலும் இருப்பதுண்டு. + +கண்ணாடியிழை நெகிழி பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பொருளாகும். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஒட்டுப்பலகைக்கு மாற்றீடாக வானூர்திகளில் பயன்படுத்தப்படுவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தேவைக்கான முதலாவது பயன்பாடாக படகுகள் கட்டுவதற்குப் பயன்படலாயிற்று. 1950 களில் இத்துறையில் பெரிதும் விரும்பப்படும் ஒரு பொருளாக ஆனது. தற்காலத்தில் படகு உற்பத்தியில் ஒரு முன்னணி மூலப்பொருளாக இது இருந்து வருகிறது. மோட்டார் வண்டி உற்பத்தி, விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் இது பெரும்பங்கு வகிக்கின்றது. கட்டிடத்துறையிலும் இதன் பயன்பாடு விரிவடைந்து வருகின்றது. பல வகையான கட்டிடக் கூறுகள், நீர்த்தாங்கி, குடிநீர், கழிவுநீர் போன்றவற்றைக் கடத்தும் குழாய்கள் என்பன இதனால் செய்யப்படுகின்றன. + + + + +கண்ணாடியிழைக் காங்கிறீற்று + +கண்ணாடியிழைக் காங்கிறீற்று (Glass Fibre Reinforced Concrete) என்பது கண்ணாடி இழைகளால் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள். இழை வலுவூட்டிய காங்கிறீற்று (Fibre-Reinforced Concrete) வகையைச் சேர்ந்தது. + +கண்ணாடியிழைக் காங்கிறீற்று, பலவகையான முன்வார்ப்புக் (precast) கட்டிடப் பொருட்களையும், குடிசார் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகின்றது. தடிப்புக் குறைந்த வார்ப்புக்களாக உருவாக்கப்படக்கூடியதால், நிறை குறைவாக இருக்கும் பொருட்களைச் செய்வதற்கு கண்ணாடியிழைக் காங்கிறீற்று பெரிதும் விரும்பப்படுகின்றது. இது விரும்பப்படுவதற்கான மேலும் சில காரணிகள் பின்வருமாறு: + +கண்ணாடியிழைக் காங்கிறீற்று வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிகம் பயன்படுத்தப்படும் முறைகள்: + + + + + +அசிமோ + +அசிமோ என்பது ஹோண்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனிதனைப்போன்ற தானியங்கிப் பொறி (Robot) ஆகும். இது 130 சென்டிமீட்டர் உயரமும் 54 கிலோகிராம் எடையும் கொண்டது. முதுகில் ஒரு பெட்டியுடன் விண்வெளி வீரரைப் போன்ற தோற்றம் கொண்டது. இது மனிதனைப்போலவே இரண்டு கால்களாலும் நடக்க வல்லது. இதன் வேகம் மணிக்கு ஆறு கிலோமீட்டர்கள் ஆகும். இது ஹோண்டாவின் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உருவாக்கப்பட்டது. + +ஹோண்டா 1980 களில் மனித உருக்கொண்ட தானியங்கிப் பொறிகளை உருவாக்கத் தொடங்கியது. + +ஹோண்டாவின் வேலை +அசிமோவின் 10 வது ஆண்டு நினைவாக நவம்பர் 2010 இல், ஹோண்டா "Run with ASIMO" என்ற ஒரு செயலியை ஐ-போன், ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்காக உருவாக்கப்பட்டது. அசிமோவுடன் தோற்ற நிலையில் ஒரு பந்தையம் போன்று நடந்து சென்று பயனர்கள் அதன் வளர்ச்சியைப் பற்றி கற்றுணர்ந்து கொள்வர். பின்னர் தங்களின் பந்தைய நேரத்தை ட்விட்டரிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்வர். + + + + +போரிக் அமிலம் + +போரிக் அமிலம் "(Boric acid)" என்பது என்ற H3BO3 மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட போரானின் ஒற்றைக்கார இலூயிசு அமிலம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாட்டை சில சமயங்களில் B(OH)3) என்றும் எழுதுகிறார்கள். ஐதரசன் போரேட்டு, போராசிக் அமிலம், ஆர்தோபோரிக் அமிலம், அசிடம் போரிகம் என்ற பெயர்களாலும் போரிக் அமிலம் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது கிருமி நாசினி, பூச்சிக் கொல்லி, தீத்தடுப்பான், நியூட்ரான் உறிஞ்சி, மற்ற வேதிச்சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடி எனப் பயன்படுத்தப்படுகிறது. போரிக் அமிலம் நிற்மற்ற படிகங்கள் அல்லது வெண்ணிறத் தூளாகக் கிடைக்கிறது. போரிக் அமிலம் நீரில் கரையும். கனிமமாகக் கிடைக்கும் போது இது சாசோலைட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. + +போரிக் அமிலம், அல்லது சாசோலைட்டு எரிமலை இருக்கும் சில மாவட்டங்களில் காணப்படுகிறது, எடுத்துக்காட்டாக இத்தாலியப் பகுதியில் டசுக்கனி, லிபரி தீவுகள் மற்றும் அமெரிக்க மாநில நெவாடா ஆகிய இடங்களில் முக்கியமாக அதன் தனித்த நிலையில் காணப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் பல கனிமங்களின் ஒரு பகுதிப்பொருளாகவும் போரிக் அமிலம் காணப்படுகிறது. போராக்சு, போராசைட்டு, உலெக்சைட்டு, கோலிமானைட்டு என்பன போரான் காணப்படும் தனிமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். போரிக் அமிலம் மற்றும் அதனுடைய உப்புக்கள் கடல் நீரில் காணப்படுகின்றன. இது கிட்டத்தட்ட அனைத்து பழங்களிலும் உள்ளடங்கி தாவரங்களிலும் காணப்படுகிறது . +போரிக் அமிலம் முதன்முதலில் வில்லெம் ஓம்பெர்க்கு என்பவர் போராக்சு கனிமத்துடன் கனிம அமிலங்களைச் சேர்த்து தயாரித்தார் + +சோடியம் டெட்ராபொரேட்டு டெக்கா ஐதரேட்டு என்ற போராக்சுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து போரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. + +போரான் டிரை ஆலைடுகள் மற்றும் டைபோரேன் ஆகியவற்றை நீராற்பகுப்புக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கிறார்கள் : + +கொதி நீரில் போரிக் அமிலம் கரைகிறது. இதை 170 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் மெட்டா போரிக் அமிலம் உருவாகிறது (HBO): + +மெட்டா போரிக் அமிலம் வெண்மை நிறங் கொண்ட கனசதுர படிகவடிவம் கொண்ட ஒரு திண்மமாகும். தண்ணீரில் மிகச் சிறிதளவே கரையும். 236 பாகை செல்சியசு வெப்பநிலையில் மெட்டா போரிக் அமிலம் உருகும். 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஒருவேளை சூடுபடுத்தப்பட்டால் நீர் மூலக்கூறை இழக்கிறது. டெட்ராபோரிக் அமிலம் அல்லது பைரோபோரிக் அமிலம் உருவாகிறது. (HBO): + +போரிக் அமிலம் என்ற சொல் சில சமயங்களில் HBOO. + + + + +கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை + +கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை (Building Energy Management Systems) கட்டிடத் தன்னியக்க முறைமை என்பது கட்டிட முறைமைகளையும், கட்டிடத்தில் சக்திப் பயன்பாட்டையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கணினியை அடிப்படையாகக் கொண்ட முறைமையாகும். இவை செயல் திறனிலும், செயல் முறைகளிலும் பல்வேறுபட்டவையாக இருந்தபோதிலும், பெரும்பாலான முறைமைகள் வளிப் பதன அமைப்பு, ஒளியமைப்பு போன்ற சேவைகளைக் கண்காணிக்கவும், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. இம் முறைமைகள், தீத்தடுப்பு மற்றும் உயிர் காப்பு, பாதுகாப்பு, உயர்த்திகள் போன்ற வேறு பல தன்னியக்கக் கட்டிடச் செயற்பாட்டு முறைமைகளுடனும் ஒன்றிணைந்து இயங்க முடியும். பல கட்டிடங்களை ஒரு இடத்திலிருந்து கட்டுப் படுத்தக்கூடிய முறைமைகளும் உள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று தொலைவில் அமைந்திருக்ககூடிய பல கட்டிடங்களை இணையம் வழியாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை கொண்ட முறைமைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. புவியியல் அடிப்படையில் பரந்து அமைந்திருக்ககூடிய செயற்பாடுகளின் மேலாண்மை தொடர்பில் இத்தகைய முறைமைகள் முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடியன. + + + + +நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் + +நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஏழு வயதிலேயே பாடல்கள் இயற்ற ஆரம்பித்தவர். 18-19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் வில்வராய முதலியார், ஒல்லாந்தர் அரசினால் “தேச வழமை” நூலை திருத்தி அமைக்க பணிக்கப்பட்ட அறிஞர். + +சின்னத்தம்பிப் புலவரின் தந்தை வில்லவராய முதலியார் நல்லூரில் அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கியர். கூழங்கைத் தம்பிரான் இவரது வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். சின்னத்தம்பிப் புலவர், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர். ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து, + +என்று கூறினர். அதுகேட்ட புலவர் அவரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமென ஆசி கூறிச் சென்றார். + +சின்னத்தம்பிப் புலவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே "மறைசையந்தாதி" பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய பின்வரும் கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது: + + + + + + + + + +இணுவில் சின்னத்தம்பிப் புலவர் + +இணுவில் சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் இணுவிலில் கி.பி. 18 ஆம் நூற்றண்டில் வா��்ந்தவர். இலக்கியத்திற் பல புதுமைகளைப் புகுத்தி "பஞ்சவன்னத் தூது" என்னும் தூது சிற்றிலக்கிய வடிவத்தை ஆக்கியவர். இது தவிர 'இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்', 'இளந்தாரி புராணம்', 'சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்', 'நொண்டி நாடகம்', 'கோவலன் நாடகம்', அனிருத்த நாடகம்' ஆகியவற்றையும் பாடியுள்ளார். + + + +