diff --git "a/train/AA_wiki_25.txt" "b/train/AA_wiki_25.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_25.txt" @@ -0,0 +1,3418 @@ + +யூக்ளிடு + +கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த யூக்ளிடு அல்லது யூக்கிளிடீசு (Euclid, Εὐκλείδης) என்பார் கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவியல் நூலாகிய யூக்ளிட்டின் எலிமென்ட்சு (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன. இவருடைய வடிவவியல் நூலின் வழி முதற்கோளாக (axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய "எலிமென்ட்சு" என்னும் நூலில் வடிவவியல் மட்டும் இன்றி எண்கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10 இல் 20ஆவது முன் வைப்பில் பகா எண்கள், எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார். வடிவயியலில் ஒரு பிரிவு யூக்ளீட் வடிவியல் என்று வழங்கப்படுகிறது. +யூக்ளிடைப் பற்றி மிகக் குறைவான அசல் குறிப்புகளே கிடைத்துள்ளன, அவரின் வாழ்க்கை பற்றி மிகவும் குறைவாக அறியப்படுகிறது. அவரது பிறந்த மற்றும் இறப்பு தேதி, இடம் மற்றும் சூழ்நிலைகள் தெரியவில்லை. யூக்ளிடின் பிறப்பு பற்றி இரண்டு விதமான செய்திகள் உள்ளன அரேபிய எழுத்தாளர் ஒருவர் யூக்ளிட் நௌகிரேட்சின் மகன் என்றும் இவர் டயர் என்னுமிடத்தில் பிறந்தார் என்றும் கூறினார் இரண்டாவது செய்தி இவர் மெகாராவில் (Megare) பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. இவருடைய காலமானது இவருடன் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களின் காலத்திலிருந்தே தோராயமாக மதிப்பிடப்பட வேண்டியுள்ளது. ஆர்க்கிமிடிசு (c. 287 BC – c. 212 BC) முதலான மற்ற கிரேக்க கணிதவியலாளர்கள் இவரின் பெயரை மிக அரிதாகவே குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பெரும்பாலும் "ὁ στοιχειώτης" ("the author of Elements") என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். யூக்ளிட் குறித்த சில வரலாற்றுக் குறிப்புகள் புரோகுலசு c. 320 AD. மற்றும் அலெக்சாண்டிரியாவின் பாப்பசு c.320 AD ஆகியோரால் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து பல நுாற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்டது. + +புரோக்லசு எலிமெண்ட்சு நுாலைப் பற்றிய மதிப்புரையில் யூக்ளிடைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளார். புரோக்லசின் கூற்றின்படி பிளாட்டோவின் தொடர் வலி��ுறுத்தலின் காரணமாக பிளாட்டோவின் பல மாணவர்களின் தொகுப்பான (குறிப்பாக தியெட்டெட்டஸ் மற்றும் பிலிப் ஆஃப் ஓபஸ் ஆகியோரின் யூடோக்சசு ஆஃப் க்னீடஸ்) என்ற படைப்பினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். யூக்ளிட் இவர்களை விட இளையவராவார் என்றும், தாலமி 1 என்பவரின் சமகாலத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம் என்று புரோக்லசு நம்பினார். ஏனெனில் ஆர்க்கிமிடிசு (287-212 & nbsp; கி.மு.) யூக்ளிடைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். யூக்ளிடைப் பற்றிய ஆர்க்கிமிடிசின் வெளிப்படையான மேற்கோள்கள் அவரது படைப்புகளில் பிற்கால ஆசிரியர்களால் செய்யப்பட்ட ஒரு இடைச்செருகல் என்று தீர்மானிக்கப்பட்டாலும், யூக்ளிடு அவரது படைப்புகளை ஆர்க்கிமிடீசிற்கு முன் எழுதினார் என்று நம்பப்படுகிறது. + +தாலெமி I வடிவியலைப் படிக்க யூக்ளிடின் எலிமெண்ட்சு அல்லாத வேறு ஏதேனும் எளிய வழிகள் உள்ளதா? எனக் கேட்டதாகவும், யூக்ளிட் அதற்கு வடிவியலைப் படிக்க சொகுசான பாதை ஏதும் இல்லை எனத் தெரிவித்ததாகவும் ஒரு கதையை புரோக்லசு பின்னர் கூறியுள்ளார். இந்த வாழ்க்கைக் குறிப்பானது பேரரசர் அலெக்சாந்தருக்கும் மெனேச்மசுக்கும் இடையே நடந்த உரையாடலைப் போன்ற கதையாக இருப்பதால் நம்பத்தகுந்ததாய் இல்லை. +யூக்ளிடு குறித்த முக்கிய குறிப்பில் நான்காம் நுாற்றாண்டில் அப்போலோநியசு அலெக்சாந்திரியாவில் யூக்ளிடின் மாணவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டதாகவும் இதன் காரணமாகவே தனக்கு அறிவியல் மனப்பான்மையையோடு சிந்திக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாக பாப்பசு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். + +அந்த காலகட்டத்திற்கான வரலாற்றோடு ஒப்பிடும் போது யூக்ளிடு குறித்த வாழ்க்கை வரலாறு மிகவும் குறைவான அளவிலேயே கிடைத்துள்ள காரணத்தால்,(யூக்ளிடுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நுாற்றாண்டுகளில் வசித்த குறிப்பிடத்தக்க கிரேக்க கணிதவியலாளர்களின் வரலாறுகளெல்லாம் பரந்துபட்ட அளவில் கிடைத்துள்ளன) சில் ஆய்வாளர்கள் யூக்ளிடு ஒரு வரலாற்று நாயகன் அல்ல எனவும், அவரது பணிகள் கணிதவியலாளர்களின் குழு ஒன்றினால் யூக்ளிடின் பெயரால் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்ற பார்வையையும் முன்வைக்கின்றனர். இருந்தபோதிலும், இந்தக் கருதுகோளானது மிகக் குறைவான சான்றுகளையே கொண்டுள்ளதால், கல்விமான்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. + +எலிமென்ட்சு எனும் நுால் பழைய கிரேக்கத்திலிருந்து கிடைக்கப் பெற்ற கணிதம் தொடர்பான மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரையாகும். இந்த ஆய்வுக்கட்டுரையானது 13 தொகுதிகளைக் கொண்டதாகும். வரையறைகள், எடுகோள்கள், ஆய்வுக்கருத்துரைகள், கோட்பாடுகள், கருத்துரைகளுக்கான கணிதவியல் நிரூபணங்கள் போன்றவற்றின் தொகுப்பாகும். இந்த நூலானது, யூக்ளிட் வடிவியல், எண் கணிதம் மற்றும் பொதுஅளவில்லாத கோடுகள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இது தர்க்க மற்றும் நவீன அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் தர்க்கரீதியான கடுமை 19 ஆம் நூற்றாண்டு வரை விஞ்சப்படவில்லை. யூக்ளிடின் எலிமென்ட்சானது இதுவரை எழுதப்பட்டவற்றில் மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு வாய்ந்த பாடப்புத்தகம் என்று குறிப்பிடப்படுகின்றது. + +எலிமென்ட்சு நுாலின் முதல் 6 பிரிவுகள் வடிவியல் குறித்தது. அதாவது, முதல் 3 பிரிவுகள் முக்கோணம், இணைகரம், செவ்வகம், சதுரம் ஆகியவற்றின் அடிப்படைப் பண்புகளையும், 4ஆவது பிரிவு வட்டத்தின் பண்புகள், வட்டத்தை ஒட்டிய கணக்குகளையும், 5 ஆவது பிரிவு விகிதம் பற்றியும், ஆறாவது பிரிவு வடிவியல் பயன்பாடு பற்றியும், 7ஆவது பிரிவு மீப்பெரு பொதுவகுத்திகளைப் பற்றியும், எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவுகள் பெருக்கல் தொடர் பற்றியும், பத்தாவது பிரிவு விகிதமுறா எண்களைப் பற்றியும், 11, 12 ஆவது பிரிவுகள் முப்பரிமாண வடிவியல் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. + + +யூக்ளிடு தனது அணுகுமுறையை 10 மெய்ம்மைகள், அதாவது, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, வகுத்துக் கொண்டார். அவர் இந்த மெய்ம்மைகளை எடுகோள்கள் என அழைத்தார். அவற்றை ஐந்து மெய்ம்மைகளைக் கொண்ட இரண்டு குழுக்களாக பிரித்தார், அனைத்து கணிதவியலுக்கும் பொதுவான மெய்ம்மைகளை முதல் தொகுப்பாகவும், வடிவவியலுக்கு மட்டுமே தொடர்புடைய மெய்ம்மைகளை இரண்டாவது தொகுப்பாகவும் வகைப்படுத்தினார். இந்த மெய்ம்மைகள் அல்லது எடுகோள்கள் சில தானே விளங்கிக்கொள்ளும் வகையில் உள்ளன. ஆனால், யூக்ளிடு ஒவ்வொரு எடுகோள் அல்லது மெய்ம்மைக்கும் ஆதாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொள்கையைக் கொண்டு செயல்பட���டுள்ளார். + + + +வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்ளக்கூடிய எவருமே அவரது கருத்துக்களையும், எடுகோள்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதை யூக்ளிடு உணர்ந்திருந்தாலும், ஆனால் எதனையும் சொற்பொருள் பிழையில்லாது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, 'புள்ளி' மற்றும் 'கோடு' போன்ற பொதுவான சொற்களின் 23 வரையறைளை உருவாக்கினார். இந்த அடிப்படையிலிருந்தே, பல நூற்றாண்டுகளாக கணிதம், விஞ்ஞானம் மற்றும் தத்துவம் ஆகியவற்றை ஒழுங்குக்குக் கொண்டு வரும் தள வடிவவியலின் முழு கோட்பாட்டையும் அவர் உருவாக்கியுள்ளார். மிகப்பெரிய பகா எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி சாத்தியமற்றது என்று நிரூபித்தார், + + + + + +மாற்கு நற்செய்தி + +மாற்கு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள இரண்டாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மாற்கு எழுதிய நற்செய்தி, κατὰ Μᾶρκον εὐαγγέλιον (Kata Markon Euangelion = The Gospel according to Mark) என்பதாகும். + +மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels) என்று அழைக்கப்படுவதும் உண்டு. + +மாற்கு நற்செய்தி என இந்நூல் அறியப்பட்டாலும், இதை எழுதியவர் மாற்கு என்பது மரபு. ஆயினும் அவர் யார், அவரைப் பற்றிய பிற தகவல்கள் உளவா என்னும் கேள்விகளுக்கு உறுதியான பதில் இல்லை என்பதே பெரும்பான்மை அறிஞரின் கருத்து. + +மாற்குவின் பெயரால் வழங்கப்படும் இந்நற்செய்தி நூலுக்கும் திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் குறிப்பிடப்படுகின்ற யோவான் மாற்கு என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் (காண்க: திப 12:12, 25) என்று பலர் கருதுகின்றனர். அதுபோலவே உரோமையில் பேதுருவுக்குத் துணையாக இருந்த மாற்கு என்பவருக்கும் மாற்குவின் பெயரைக் கொண்டுள்ள நற்செய்தி நூலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். + +எவ்வாறாயினும், கிறித்தவ மரபுப்படி, இன்று மாற்கு நற்செய்தி என அழைக்கப்படும் நூலின் ஆசிரியர் மாற்கு ஆகும். அப்பெயர் எந்த மாற்குவைக் குறிக்கிறது என நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் மாற்கு நற்செய்தி என்பதே இந்நூலின் பெயராக நிலைத்துள்ளது. + +மாற்கு நற்செய்திக்கும் உரோமைக்கும் தொடர்பு உண்டு என்பது பண்டைய மரபிலிருந்து அறியக்கிடக்கின்றது. அது இந்த நற்செய்தியின் உள்ளடக்கத்திலிருந்தும் தெரியவருகிறது. அந்நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட சமூகம் இடர்பாடுக்கு உள்ளாகி இருந்தது எனவும், வெளியிலிருந்து துன்புறுத்தப்பட்டது எனவும் தெரிகிறது. பிற வரலாற்று ஆதாரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முதல் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த கிறித்தவ சமூகம் நீரோ மன்னனாலும் அவனுக்குப் பின் வந்தோராலும் துன்புறுத்தப்பட்டது. + +யூதரல்லாத பிற இனத்தவர், கிறித்தவர்களாக மாறி ஒரு சமூகமாக உருவாகியிருந்த நிலையில், இந்நற்செய்தி அவர்களுக்கு எழுதப்பட்டது எனத் தெரிகிறது. எனவே, நற்செய்தியாளர், யூத பழக்க வழக்கங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் ஆங்காங்கே தருகிறார். எடுத்துகாட்டாக, மாற்கு 7:3-4ஐக் கூறலாம். அங்கு, யூதர்கள் உணவருந்துவதற்கு முன் தங்கள் மூதாதையரின் மரபைப் பின்பற்றித் தம் கைகளைக் கழுவினர் என்பதற்கு விளக்கம் தருகிறார். இதுவும் மாற்கு நற்செய்திக்கும் உரோமைக்கும் உள்ள தொடர்புக்குச் சான்றாகிறது. + +மாற்கு நற்செய்தி ஒருவேளை கலிலேயாவில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும், கி.பி. 70ஆம் ஆண்டில், உரோமைத் தளபதி (பின்னாள் பேரரசன்) தீத்துவின் காலத்தில் எருசலேம் திருக்கோவில் உரோமையரால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சியோடு தொடர்புடையதாகலாம் எனவும் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். + +எவ்வாறாயினும் மாற்கு நற்செய்தி கி.பி. சுமார் 70ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர் பெரும்பான்மையோர் முடிவுசெய்துள்ளனர். + +மாற்கு என்று அழைக்கப்படுபவர் முதல் நற்செய்தியை எழுதினார் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் பொதுப்பணி பற்றியும் பாடுகள் சாவு பற்றியும் அமைந்திருந்த பல கூற்றுத்தொடர்களை இணைத்து ஒருங்குவித்துக் கோவையான ஒரு பெரும் கூற்றுத்தொடராக இந்நூலை மாற்கு வடிவமைத்தார் என்பதே பொருள். ஏற்கனவே வழக்கிலிருந்த வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மூலங்களைப் பயன்படுத்தி ��ாற்கு இந்நூலை வடித்தார். நாசரேத்து இயேசு பற்றி வழக்கிலிருந்த பல கூற்றுத்தொடர்களைத் தொகுத்து, ஒரு மையக் கருவும் அமைப்பு வரைவும் அளித்து, இசைவான விதத்தில் ஒழுங்குபடுத்தியவர் அவரே. + +மேற்கூறியது இலக்கிய வகை சார்ந்த செயல் என்றால், மாற்கு தமது நூலைப் பெறவிருந்த கிறிஸ்தவ சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும் நற்செய்தி நூலைத் தொகுத்தார். ஏனென்றால், உரோமையில் வாழ்ந்த அந்தப் பிற இன-கிறிஸ்தவ சமூகம் துன்பத்துக்கு ஆளாகியிருந்தது; அந்த இக்கட்டான சூழமைவில் அச்சமூகத்துக்கு இயேசுவை முன்னுதாரணமாக இந்நற்செய்தி காட்டுகிறது. எவ்வாறு இயேசு இறுதிவரை நிலைத்துநின்றாரோ, அதுபோல மாற்குவின் கிறிஸ்தவ சமூகமும் துன்பச் சூழலில் துவண்டுவிடாமல் நிலைநிற்க வேண்டும்; ஏனென்றால் தம் சிலுவைச் சாவின் வழியாக இயேசு மக்களுக்கு மீட்புக் கொணர்ந்துவிட்டார். + +மாற்கு நற்செய்தி உருவாவதற்கு முன்னரே இயேசு பற்றிய வலுவான ஒரு மரபு வழக்கு இருந்தது. அந்த மரபிலிருந்து மாற்கு பல கருத்துத் தொடர்களைப் பெற்றார். இயேசு மக்களுக்கு ஞானம் போதித்த ஆசிரியர், வல்லமையோடு புதுமைகள் பல செய்த செயல்வீரர், இயேசுவின் சிறப்புப் பெயர்கள் மானிட மகன், தாவீதின் மகன், கடவுளின்; மகன், மெசியா, ஆண்டவர் போன்றவை - இவை மாற்குவுக்கு மரபிலிருந்து கிடைத்தவை ஆகும். + +அதுபோலவே, இயேசுவின் பாடுகள், சாவு பற்றியும் ஒரு கூற்றுத்தொடர் மாற்குவுக்குக் கிடைத்திருக்க வேண்டும். அதில் இயேசு நீதிக்காகத் துன்புறும் ஊழியன் எனவும் அவ்விதத்தில் பழைய ஏற்பாட்டுப் பின்னணியில், குறிப்பாக 22ஆம் திருப்பாடலின் பின்னணியில் இயேசுவின் சாவைப் புரியவேண்டும் என்பதும் மாற்குவுக்கு முன்னைய மரபிலிருந்து கிடைத்திருக்கலாம். + +இத்தகைய கூற்றுத்தொடர்களையும் கருத்துத் கோவைகளையும் இணைத்து இயேசுவின் பொதுப்பணி பற்றி ஒரு விரிவான கூற்றுத்தொடரை மாற்கு கட்டமைத்தார். சுவைமிகுந்த ஒரு கதைபோல அவர் இயேசு பற்றி எடுத்துரைக்கிறார். + +நூலின் தொடக்கத்திலேயே இயேசு பற்றிய மையச் செய்தியை மாற்கு வாசகர்களுக்குத் தருகிறார் (காண்க மாற் 1:1-13). இப்பகுதியில், இயேசு திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எனவும், இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் எனவும், அவர் சாத்தானின் சோதனையை முறியடித்து வெற்றிவாகை சூடினார�� எனவும் மாற்கு தெளிவுபடுத்துகிறார். + +நற்செய்தியின் கதைக் கருவையும் அமைப்பையும் கதையின் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஓர் உச்சக்கட்டத்தை எட்டுவதையும் படிப்படியாக மாற்கு புவியியல் மற்றும் இறையியல் அடிப்படையில் விளக்குகிறார். + +கீழே மாற்கு நற்செய்தியின் இரு பெரும் பிரிவுகள் விளக்கப்படுகின்றன. + +மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவில் (மாற் 1:14-8:21) இயேசுவின் வாழ்வோடு இணைந்து கலிலேயாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இப்பிரிவின் முதல் அலகு மாற்கு 1:14-3:6 ஆகும். அங்கே இயேசு முதல் சீடர்களை அழைக்கிறார் (மாற் 1:16-20); வலிமை வாய்ந்த விதத்தில் மக்களுக்குக் குணமளிக்கிறார்; ஞானத்தோடு மக்களுக்குப் போதிக்கிறார்; எதிரிகள் விரிக்கும் வலையில் விழாமல் அவர்களை முறியடிக்கிறார் (மாற் 1:21-3:6). + +ஆனால், இரண்டாம் அலகு வேறுவிதமாகப் போகிறது (மாற் 3:7-6:6). இங்கே இயேசு மக்களால் புறக்கணிக்கப்படுவது காட்டப்படுகிறது. அவருடைய போதனையையும் குணமளிக்கும் செயல்களையும் பார்த்து மக்களில் சிலர் சாதகமாகவும் சிலர் எதிர்ப்பாகவும் மறுமொழி தருவதை மாற்கு விவரிக்கிறார் (மாற் 3:7-35). இவ்வாறு மக்கள் செயல்பட்டதால் இயேசு உவமைகள் வழி கடவுளின் அரசு பற்றி அறிவித்து, அந்த சாதகமான அல்லது எதிர்ப்பான மறுமொழி பற்றிக் கதைகள் வழி போதிக்கிறார் (மாற் 4:1-34). சீறிட்டெழுந்த புயலை அடக்கியும், பேய்களை விரட்டியும், நோய்களைப் போக்கியும், சாவை முறியடித்தும் இயேசு தம் வல்லமையைக் காட்டியபோதிலும் (மாற் 4:35-5:43), அவரது சொந்த ஊர் மக்களே அவரைப் புறக்கணிக்கின்றனர் (மாற் 6:1-6). + +மூன்றாம் அலகு (6:7-8:21) இயேசு சீடர்களை அனுப்புவதை விவரிக்கிறது. அவர்கள் இயேசுவின் பணியில் பங்கேற்று அவரது பணிக்குத் தயாரிப்பு செய்ய அனுப்பப்படுகின்றனர் (மாற் 6:7-13). ஆனால் சீடரோ இயேசு யார் என்பதை அறியத் தவறுகிறார்கள்; அவரது போதனையையும் சரியாகப் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள் (மாற் 8:14-21). திருமுழுக்கு யோவானின் சாவு இயேசுவின் சாவுக்கு முன்மாதிரியாகிறது (மாற் 6:14-29). இயேசு பல வல்ல செயல்களை ஆற்றுகின்றார்: ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக உணவளிக்கிறார் (6:30-44); தண்ணீர் மீது நடக்கின்றார் (மாற் 6:45-52); வேறு பல புதுமைகள் நிகழ்த்துகின்றார் (மாற் 6:53-56). சடங்குமுறையான தீட்டுப் பற்றியும் தூய்மை பற்றியும் தம் எதிரிகளோடு விவாதம் செய்கிறார் (மாற் 7:1-23). அதன்பின், இன்னும் பல அதிசய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. தூய்மையற்ற பகுதியாகக் கருதப்பட்ட கனானிய நாட்டிலிருந்து வந்த பெண்ணின் மகளைக் குணப்படுத்துகின்றார் (மாற் 7:24-30); காது கேளாத ஒருவருக்கு நலமளிக்கிறார் (மாற் 7:31-37); நாலாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு தருகின்றார் (மாற் 8:1-10). இதைத் தொடர்ந்து வானத்திலிருந்து அடையாளம் கேட்ட பரிசேயரோடு இயேசு வாதத்தில் ஈடுபடுகிறார் (மாற் 8:11-13). ஆனால், இறுதியில் இயேசுவோடு நெருக்கமாகப் பழகிய அவரது சீடர்களே அவரைப் புரிந்துகொள்ளவில்லை. இதனால் இயேசு மன வருத்தமுறுகிறார் (மாற் 8:14-21). + +மாற்கு விவரிக்கும் இயேசு கதையின் இரண்டாம் பெரும் பிரிவு 8:22இலிருந்து தொடங்கி 16:8ல் முடிகிறது. இப்பிரிவின் முதல் அலகு (மாற் 8:22-10:52) இயேசு தம் சீடரோடு எருசலேமை நோக்கிப் பயணம் செல்வதை விவரிக்கிறது. அப்போது இயேசு சீடர்களுக்குத் தாம் யார் என்பது பற்றி அறிவுறுத்துகிறார். அவரைப் பின் செல்வதற்கான நிபந்தனைகளை விளக்குகிறார். இந்த அலகின் தொடக்கத்திலும் (மாற் 8:22-26) இறுதியிலும் (10:46-52) இயேசு பார்வையற்றோருக்குப் பார்வையளிக்கும் செயல் விவரிக்கப்படுகிறது. இதில் நிச்சயமாக ஓர் உட்பொருள் இருக்கிறது. அதாவது, இயேசுவின் சீடர்கள் பார்வையற்றோர்போல இருந்தார்கள்; இயேசு யார் என்பதை அவர்களது அகக் கண்கள் காணத் தவறிவிட்டிருந்தன. இயேசு படிப்படியாக அவர்களுடைய கண்களைத் திறக்கின்றார். + +இயேசு பார்வையளிக்கும் இரு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று சிறு பிரிவுகள் உள்ளன (மாற் 8:27-9:29; 9:30-10:31; 10:32-45). இங்கு இயேசு தாம் பாடுபட்டு இறக்கப்போவதை முன்னறிவிக்கிறார்; ஆனால், சீடர்களோ இயேசுவின் சொற்களைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு, தாம் யார் என்பதையும், தம்மைப் பின்செல்ல விரும்புவோர் துன்பப்படத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் சீடருக்கு விளக்கிச் சொல்கின்றார். + +இரண்டாம் பிரிவின் இரண்டாம் அலகு (11:1-16:8) இயேசு எருசலேமில் பாடுகள் பட்ட நிகழ்ச்சியையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. அந்த ஒரு வார காலத்தில் நிகழ்ந்ததை மாற்கு படிப்படியாக எடுத்துரைக்கிறார். முதல் நாட்களில் நடந்த நிகழ்வுகள் இவை (11:1-13:37): இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகிறார்; எருசலேம் திருக்கோவிலுக்குப் போகிறார் (மாற் 11:1-11); அங்கு ஓர் இறைவாக்கினரைப் போலப் போதிக்கிறார் (11:12-19); அவருடைய எதிரிகளோடு வாதத்தில் ஈடுபடுகிறார் (11:20-12:44); எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (மாற் 13:1-37). + +இயேசுவின் பாடுகள் பற்றிய கூற்றுத்தொடர் மாற்கு 14:1-16:8 பகுதியில் உள்ளது. அதில் இயேசுவின் சாவுக்கு முன் ஒரு பெண் இயேசுவின் மேல் நறுமண எண்ணெய் பூசிய நிகழ்ச்சியோடு, இயேசுவின் இறுதி இரா உணவும் விளக்கப்படுகிறது (மாற் 14:1-31); பின் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டலில் ஈடுபடுகிறார்; அதைத் தொடர்ந்து இயேசு கைதுசெய்யப்படுகிறார் (மாற் 14:32-52); தலைமைக் குருவின் முன்னிலையிலும், தலைமைச் சங்கத்தின் முன்னிலையிலும், உரோமை ஆளுநராகிய பிலாத்துவின் முன்னிலையிலும் இயேசு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் (மாற் 14:53-15:15); இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விடுகிறார்; கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார் (மாற் 15:16-47)ஃ வாரத்தின் முதல் நாள் இயேசுவின் கல்லறை வெறுமையாயிருப்பதைச் சீடர்கள் காண்கிறார்கள் (மாற் 16:1-8). + +மாற்கு நற்செய்தியின் இறுதிப் பகுதி (மாற் 16:9-20) உயிர்ப்புக்குப் பின் இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளின் சுருக்கமாக அமைந்துள்ளது. இப்பகுதி கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது விவிலிய அறிஞர் கருத்து. + +மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம். + +இந்த நற்செய்தியின் முக்கிய கதாபாத்திரம் இயேசு கிறித்து என்பதில் ஐயமில்லை. நூலின் தொடக்கத்திலேயே "இயேசு கடவுளின் மகன்" என மாற்கு அடையாளம் காட்டுகிறார் (மாற் 1:1). இயேசு ஞானத்தைப் போதித்த ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், நோய்களிலிருந்து மக்களை விடுவித்த மாபெரும் நலமளிப்பவராகவும் காட்டப்படுகிறார் எனினும், இயேசு உண்மையிலேயே யார் என்பது அவரது சாவின்போதுதான் முழுமையாக வெளிப்படுகிறது. இதை விவிலிய அறிஞர் மெசியா இரகசியம் (Messianic Secret) என அழைப்பர். அதாவது, மெசியா என்றால் வலிமைமிக்க ஓர் அரசனைப் போல இவ்வுலகில் வந்து உரோமையரின் ஆட்சியைக் கவிழ்த்து, இசுரயேலை விடுவிப்பார் என்று மக்கள் நினைத்திருந்த பின்னணியில் இயேசு தம்மை மெசியா என்று அடையாளம் காட்டவில்லை. + +இயேசு இவ்வுலகப் பாணியில் மாட்சியோடும் மகிமையோடும் வரும் மெசியா அல்ல, மாறாக, துன்புற்ற���, சிலுவையில் குற்றவாளிபோல் அறையப்பட்டு உயிர்துறக்கும் மெசியா. அவ்வாறு உயிர்துறக்கும்போது அவர் மெசியா என்பது உலகறிய அறிவிக்கப்படுகிறது. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டு உயிர்துறந்த வேளையில், நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்று அறிக்கையிடுகிறார் (மாற் 15:39). மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட நிலையில், பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த பணியை நிறைவேற்றுவதிலேயே முனைந்து நிற்கின்றார். அவரது பணி நோக்கு என்னவென்பதை அவரே அறிவித்திருந்தார்: "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்காகவும் வந்தார்" (மாற் 10:45). இவ்விதம் அவர் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார் (மாற் 14:36). + +இயேசுவை உயிரோட்டத்தோடு சித்தரிக்கும் மாற்கு இயேசுவின் சீடர்களது குணநலன்களையும் கருத்தாக விவரிக்கிறார். தொடக்கத்தில் சீடர்கள் மிகுந்த உற்சாகத்தோடுதான் இயேசுவின் அழைப்பை ஏற்றனர்; அவரைப் பின்செல்லத் தொடங்கினர் (மாற் 1:16-20). இயேசுவோடு இருக்கவும் அவரது பணியில் பங்கேற்றுக் கடவுளின் ஆட்சி பற்றிப் போதிக்கவும், நோயாளரைக் குணப்படுத்தவும் ஆர்வத்தோடுதான் முன்வந்தனர் (மாற் 3:14-15). அந்தத் தொடக்கக் கட்டத்தில் இயேசுவின் சீடர் நல்ல எடுத்துக்காட்டாகவே இருந்தனர். ஆனால் நிகழ்வுகள் தொடரத் தொடர, அச்சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். இது எவ்வளவு தூரம் போய்விட்டதென்றால், இயேசு கலிலேயப் பணியை முடிவுக்குக் கொணரும் வேளையில் சீடரைப் பார்த்து, "உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?...இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கூட கேட்கவேண்டியதாயிற்று (மாற் 8:17, 21). + +பின்னர், இயேசுவும் சீடரும் எருசலேம் நோக்கிப் பயணமான போது, இயேசு தாம் பாடுபடப் போவதாக மூன்று முறை கூறிய பிறகும் ஒவ்வொரு வேளையிலும் அவரது கூற்றைச் சீடர் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள் (மாற் 8:31;9:31; 10:33-34). இயேசு அவர்களது தவறான கருத்தைத் திருத்தவேண்டியதாகிறது. மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அறிவுபுகட்ட வேண்டிய தேவை எழுகிறது. இயேசு பாடுபட வேண்டிய வேளை வந்ததும், சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு ஓடிப் ப���கிறார்கள். "அப்போது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்" என மாற்கு வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் (மாற் 14:50). இத்தனைக்கும், தம்மைக் கைதுசெய்து துன்புறுத்துவார்கள் என இயேசு பலதடவை சீடருக்கு அறிவுறுத்தியிருந்தார். + +இதற்கும் மேலாக, சீடர்கள் நடுவே தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த பேதுரு தம் குருவாகிய இயேசுவை ஒருமுறை அல்ல, மூன்று முறை மறுதலிக்கிறார் (மாற் 14: 66-72). இவ்வாறு, படிப்படியாக சீடர்கள் நலமான முன்மாதிரியிலிருந்து நலமற்ற முன்மாதிரியாகி;விடுகிறார்கள்; அறிவு மழுங்கியவர்களாக, கோழைகளாக மாறிவிடுகிறார்கள்; ஆனால் இயேசுவோ துன்பங்கள் நடுவேயும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நிலைத்துநின்று நலமான முன்மாதிரியாகத் திகழ்கின்றார். + +இயேசுவின் எதிரிகளையும் மாற்கு திறம்படச் சித்தரித்துள்ளார். கலிலேயாவில் பொதுப்பணி ஆற்றியபோதும், எருசலேம் நோக்கிப் பயணம் மேற்கொண்ட போதும், எருசலேம் நதரிலும் இயேசு பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். முதல் கட்டத்தில் இயேசுவின் போதனையையும் அவரது குணமளிக்கும் செயலையும் ஏற்க மறுத்தவர்கள் பரிசேயரும் ஏரோதியரும் ஆவர் (மாற் 3:6). தொடர்ந்து, இயேசுவின் போதனையையும் நலமளிக்கும் அதிசய செயல்களையும் ஏற்க மறுத்து, ஐயுற்றவர்கள் அவரது சொந்த ஊரைச் சார்ந்த மக்கள். இது இயேசுவுக்கே பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. "அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்" (மாற் 6:6). இயேசுவின் கலிலேயப் பணியின் இறுதிக் கட்டத்தில் அவரை நெருங்கிப் பின்பற்றி, அவரோடு இருந்து பழகிய அவரது சீடரே அவரைத் தவறாகப் புரியும் அளவுக்கு நிலைமை போய்விட்டிருந்தது (மாற் 8:14-21). + +எருசலேமுக்கு வந்ததும் இயேசு யூதேய தலைமை அதிகாரிகளின் வெவ்வேறு பிரிவினரோடு விவாதத்தில் ஈடுபடுகிறார். இவர்கள் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், பரிசேயர்கள், ஏரோதியர், சதுசேயர் போன்றோர் ஆகும் (மாற் 11:27-12:44). + +இயேசுவின் பாடுகள் பற்றிய காட்சி தொடங்கவிருக்கிறது. இந்தக் காட்சிக்குத் தயாரிப்பாக மாற்கு இயேசுவின் எதிரிகள் செய்யும் சூழ்ச்சியை விவரிக்கிறார். தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞரும், இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து என்பவரோடு இணைந்து சதித்திட்டம் தீட்டுவதில் ஈடுப���ுகிறார்கள் (மாற் 14:1-2, 10-11). இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லும் நிகழ்ச்சிக்கு முன்நிகழ்வாக தலைமைக் குருக்கள், மூப்பர்கள், யூதர்களின் தலைமைச் சங்கம் ஆகியோரை உள்ளடக்கிய யூத அதிகாரிகளும், உரோமை ஆளுநராகிய பொந்தியு பிலாத்துவும் அவருக்குக் கீழிருந்த போர்வீரர்களும் இணைந்து செயல்படுவதாக மாற்கு காட்டுகிறார். + +இயேசுவுக்கு எதிரிகளாக இருந்த இவர்கள் எல்லாரும் இயேசு வழங்கிய செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை; மாறாக, அவருக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இதை மாற்கு மிகத் தத்ரூபமாக எடுத்துரைக்கிறார். + +மேலே, மாற்கு நற்செய்தியில் வரும் கதாபாத்திரங்களை அவர் சித்தரிக்கும் முறையும் கதைக் கருவை அவர் நளினமாகக் கட்டவிழ்ப்பதும் சிறிது விளக்கப்பட்டது. இந்த இலக்கியப் பாணியை நாம் புரிந்துகொண்டால் மாற்கு நற்செய்தியில் காணும் இறையியல் பார்வையையும் சிறிது ஆழமாக அறிந்திட இயலும். + +"யார் இந்த இயேசு?" - இந்தக் கேள்வி மாற்குவுக்கு முக்கியமானது. இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் நற்செய்தி முழுவதுமே அமைந்துள்ளது என்றுகூடச் சொல்லலாம். இயேசுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புப் பெயர்கள் மாற்குவின் சமூகத்திற்கு ஏற்கனவே தெரிந்திருந்தன. அவை மானிடமகன், தாவீதின் மகன், இறைமகன், மெசியா, ஆண்டவர் போன்றவை ஆகும். எனவே இயேசு கடவுளின் ஆட்சியை அறிவிக்க வந்தார் என்பதை எடுத்துக் கூறுவதில் மாற்கு கவனத்தைச் செலுத்துகிறார். "யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்" (மாற் 1:14-15). + +இயேசுவின் பொதுப் பணிக் காலம் முழுவதும் அவர் அதிகாரத்தோடு போதிப்பதைப் பார்க்கிறோம். வல்லமையோடு புதுமைகள் பல நிகழ்த்துவதையும் காண்கின்றோம். என்றாலும், இயேசுவின் பணியை வரையறுக்கும் இந்த அம்சங்களை நாம் அவரது சிலுவைச் சாவின் ஒளியில்தான் சரிவரப் புரிந்துகொள்ள முடியும். இயேசு "மெசியா" என்பது அவரது பாடுகள், மரணம் ஆகியவற்றின் ஒளியில்தான் தெளிவுபெறுகிறது. இந்த விதத்தில் மெசியா உண்மையில் யார் என்பதை மாற்கு கூறும் இயேசுவின் வரலாற்றுக் கதை நமக்கு ஐயமற விளக்குகிறது. + +இயேசுவைப் பின்செல்வது என்பதன் பொருள் என்ன? இதை இயேசுவின் பன்னிரு சீடர் நடந்துகொண்ட பின்னணியில் மாற்கு விளக்குகிறார். சீடர்களை இயேசு அழைத்ததும் அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு, மிகுந்த உற்சாகத்தோடு அவர் பின்னே சென்றனர் (மாற் 1:16-20). + +சீடர் இயேசுவோடு இருந்தனர்; இயேசுவின் பணியில் பங்கேற்று, அப்பணியைத் தொடர அவரால் அனுப்பப்பட்டனர் (மாற் 3:14-15). ஆனால் இயேசுவின் சீடர் இயேசுவைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது பார்வை மழுங்கியதுபோல் ஆயிற்று. எனவே, நலமான ஒரு முன்மாதிரியாக இல்லாமல் அவர்கள் நலமற்ற, தவிர்க்க வேண்டிய, பின்பற்றத் தகாத வழிகாட்டிகளாக மாறுகின்றனர். இதனால் நற்செய்தி வாசகர்களுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இருக்கும் இடைவெளி வெகுவாக அதிகரிக்கிறது. + +நற்செய்தி நூலின் முதல் பகுதியில் வாசகர் தம்மைச் சீடரோடு எளிதில் ஒன்றுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், கதை தொடரத் தொடர, சீடரை விட்டு விலகிப்போய், இயேசுவையே நமது நல்ல முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள மாற்கு இட்டுச்செல்கிறார். + +பன்னிரு சீடரும் அளிக்கின்ற பின்பற்றத் தகாத முன்மாதிரிக்கு நேர் எதிராக உள்ளது நற்செய்தியில் வரும் பெண்களின் ஆக்கப்பூர்வமான முன்மாதிரி. பெயர் அறியப்படாத பெண் ஒருவர் இயேசுவை விலை உயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசுகிறார் (மாற் 14:3-9). இவ்வாறு, இயேசுவே மெசியா என்னும் உண்மை வெளிப்படுகிறது. ஏனென்றால், "மெசியா" என்னும் சொல்லுக்குப் பொருளே "திருப்பொழிவு பெற்றவர்" என்பதே. ஆகவே, நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றிய பெண் இயேசுவை மெசியா என அறிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசுவின் அடக்கத்திற்கு ஒரு முன்னறிவிப்பாக இப்பூசுதல் அமைந்தது என இயேசுவே கூறி அப்பெண்ணின் செயலைப் பாராட்டுகிறார் (மாற் 14:8-9). + +கலிலேயாவில் இயேசுவைப் பல பெண் சீடர்கள் பின்சென்றனர் எனவும், அவர்கள் இயேசுவோடு எருசலேமுக்கு வந்தனர் எனவும் மாற்கு நற்செய்தி பின்னரே கூறுகிறது (மாற் 15:40-41). இயேசு கைதுசெய்யப்பட்டதை அறிந்ததும் கோழைகளைப் போலத் தப்பி ஓடிவிட்டனர் பன்னிரு சீடர்கள் (மாற் 14:50); ஆனால், இயேசுவைப் பின்சென்ற பெண்களோ, அவர் சிலுவையில் அறையப்பட்டுத் துன்புற்ற வேளையிலும் அவரோடு கூட இருந்தனர். அவர் இறப்பதை அவர்கள் கண்ணால் ��ண்டனர்; அவரைச் சிலுவையிலிருந்து இறக்கியபோதும் அவரோடு இருந்தனர்; அவரை அடக்கம் செய்த இடத்தையுடம் பார்த்தனர். இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறை வாரத்தின் முதல் நாளன்று வெறுமையாய் இருந்ததையும் பெண்கள் கண்டனர். + +இப்பெண் சீடருள் புகழ்பெற்றவர் மகதலா நாட்டு மரியா. இறந்த இயேசு உயிர்பெற்று எழுந்துவிட்டார் என்ற உண்மைக்கு இவரே முதல் சான்று. நாம் இயேசுவின் உயிர்த்தெழுதலில் இன்று நம்பிக்கை கொள்வதற்கும் இந்த மரியாவின் சாட்சியே ஆதாரமாகிறது. + +மாற்கு நற்செய்தியில் கிறித்தவ வாழ்வு என்பது இயேசுவின் சிலுவையோடு நெருங்கிப் பிணைந்துள்ளது. இயேசு விடுக்கும் அழைப்புக்கு ஆள்முறையில் பதில் தருவதும், அவரோடு உறவுப் பிணைப்பில் இணைவதும், அவரது பணியில் பங்கேற்பதும், கிறிததவ வாழ்வின் கூறுகளாகும். பன்னிரு சீடரும் தொடக்கத்தில் இவ்வாறே இயேசுவை ஆர்வத்தோடு பின்சென்றனர் என மாற்கு நற்செய்தி வலியுறுத்துகிறது. + +கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இயேசுவே துன்பங்களுக்கு ஆளானார். அவர் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்த வேளையில், துன்பக் கிண்ணத்திலிருந்து பருகுவது தந்தையின் விருப்பம் என்றால் அவ்விருப்பம் நிறைவேறுக என்று தன்னைக் கையளித்தார். + +கிறித்தவ வாழ்வு என்பது மன உறுதியோடு பணிசெய்தலையும் உள்ளடக்கும். இயேசு இதற்கு சீரிய முன் உதாரணம் ஆனார். அவர் "பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45). அதுபோலவே இயேசுவைப் பின்சென்ற பெண் சீடர்களும் துன்பங்களுக்கு நடுவிலும் இறுதிவரை நிலைத்துநின்றனர். + +இறுதியாக, கிறிஸ்தவ வாழ்வு என்பது கடவுளின் ஆட்சி முழுமையாக வரும் என்னும் எதிர்பார்ப்போடு நாம் விழித்திருந்து செயல்படுவதையும் உள்ளடக்கும். கடவுளின் இறுதித் தீர்ப்பு எந்தக் கணத்திலும் நிகழக் கூடும் என்னும் உணர்வோடு என்றும் தயாரிப்பு நிலையில் இருப்பதுவே கிறிஸ்தவப் பண்பு. "இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்" (மாற் 13:13). + + + + + +நல்ல சமாரியன் உவமை + +நல்ல சமாரியன் கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு உவமையாகும். இயேசு கூறிய உவமையாக அறியப்படும் இந்த உவமை நான்கு நற்செய்திகளில் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மட்டுமே காணப்படுகிறது. கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும். + +இயேசு இவ்வுவமையை கூறுவதற்கான பின்னணி இவ்வாறு கூறப்பட்டுள்ளது: +இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். +அதற்கு இயேசு, "சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்?" என்று அவரிடம் கேட்டார். +அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார். + +இயேசு, "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் நீவிர் வாழ்வீர்" என்றார். +அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். +அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும். + +ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். தற்செயலாய் அவ்வழியே வந்த சமயகுரு ஒருவர் குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். + +ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். விழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்ற��ர். + +பரிவு, அன்பு என்பனவேயன்றி ஒருவனது சட்ட அறிவோ பதவியோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரைத் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. இன்று பண்பாடுகளுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் பலவாறாக உருவகப்படுத்தப்படுகின்றது. + + + + + + + +கனடாவின் சமூக அமைப்பு + +கனடாவின் சமூக அமைப்பு கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள். +கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களை போலன்றி இங்கிலாந்துக்கு சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்து சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர். +தனியார் கல்விக்கூடங்கள், அரசு, வர்த்தகங்கள் மற்றும் ஊடகங்களை தங்கள் ஆளுமைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தை கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. +பொதுவாக, கனடாவிற்கு புதிதாக குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு. +கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நி���ையிலேயே இருக்கின்றார்கள். + + + + + +லூக்கா நற்செய்தி + +லூக்கா நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் மூன்றாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் லூக்கா எழுதிய நற்செய்தி, Κατὰ Λουκᾶν εὐαγγέλιον(Kata Loukan Euangelion = The Gospel according to Luke), என்பதாகும். + +மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு நற்செய்தி,மாற்கு நற்செய்தி என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels) என்று அழைக்கப்படுவதும் உண்டு. + +லூக்கா நற்செய்தி இயேசுவைப் பற்றித் தகவல் தருகின்ற நான்கு நற்செய்திகளிலும் அழகும் சிறப்பும் பொருந்தியது என அறிஞர் கூறுவர். ஏன், உலக இலக்கியத்திலேயே லூக்கா நற்செய்தி ஒரு சிறப்பிடம் பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பிற இன-கிறிஸ்தவர் என்றும், அவர் யூத சமய மரபுகள் பற்றி நன்கு புலமை பெற்றிருந்தார் எனவும் தெரிகிறது. இயேசுவை யூத சமயத்தில் வேரூன்றியவராக லூக்கா காட்டுகின்றார். அதே சமயத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையானது எருசலேமிலிருந்து, மத்திய தரைக் கடல் பகுதிகளைத் தாண்டிஉரோமை நகர் வரை பரவியதையும் அவர் உயிரோட்டமான விதத்தில் விவரிக்கின்றார். + +லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்று்ப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது. + +இந்நற்செய்தியின் ஆசிரியர் "கடவுள் பயமுள்ள" ஒரு பிற இனத்தவராக இருந்திருக்க வேண்டும். அதாவது, அவர் யூத சமயத்தால் கவரப்பட்டார்; யூதரின் தொழுகைக் கூடங்களுக்கு அவர் சென்றிருப்பார்; யூத சமயத்தை முழுமையாகத் தழுவாவிட்டாலும் அம்மரபோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும். + +கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கிறிஸ்தவ மரபு, இந்நூலின் ஆசிரியர் "லூக்கா" எனவும், இவர் தூய பவுலின் உடன் பணியாளராக இருந்தார் எனவும் நிலைநாட்டியுள்ளது. கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் பவுல் "அன்பார்ந்த மருத்துவர் லூக்கா...உங்களை வாழ்த்துகின்றார்" எனக் குறிப்பிடுகிறார் (கொலோ 4:14). பவுல் பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில் லூக்காவைக் குறிப்பிடுகிறார் (வசனம் 24). அதுபோலவே, 2 திமொத்தேயு 4:11இலும் பவுல், "என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்" என்று குறிப்பிடுகிறார். + +லூக்கா நற்செய்தியும் புதிய ஏற்பாட்டு நூலான திருத்தூதர் பணிகளும் ஒரே ஆசிரியரின் எழுதுகோலிலிருந்து பிறந்தனவே என்பது அறிஞர்களின் ஒருமனதான முடிவு. திருத்தூதர் பணிகள் நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாம் நேரடியாகக் கண்டதும் பங்கேற்றதுமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். "நாங்கள் பயணம் செய்தோம்", "நாங்கள் தங்கியிருந்தோம்", "நாங்கள் போதித்தோம்"(காண்க திப 16:10-17; 20:5-15; 21:1-28:16; 27-28) திருத்தூதர் பணிகள் என்னும் கூற்றுகள் நூலின் ஆசிரியர் தூய பவுலோடு பயணம் செய்த உடன்பணியாளர் என்பதைக் காட்டுகின்றன. + +வேறு சில அறிஞர்கள் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கின்றனர். "நாங்கள்" என நூலாசிரியர் கூறும்போது தன்னையும் கூடவே இணைத்துச் சொல்கிறார் எனப் பொருள்கொள்ள வேண்டிய தேவை இல்லை; ஏனென்றால், கடல் பயணத்தை விவரிக்கும்போது நூலாசிரியர் தன்னையும் பயணிகளோடு இணைத்துப் பேசுவது கிரேக்க-உரோமைய இலக்கிய மரபு. அம்மரபையே லூக்காவும் பின்பற்றியிருக்கிறார் என்பது இந்த அறிஞர் கூற்று. + +எனினும், திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர் லூக்கா என்றால், அந்த ஆசிரியரே மூன்றாம் நற்செய்தியின் ஆசிரியரும் ஆவார் என்றால், லூக்கா நற்செய்தி என வழங்கப்படும் நூலின் ஆசிரியரும் அவரே எனத் திருச்சபை மரபு கொள்கிறது. + +லூக்கா நற்செய்தி கி.பி. 85-90 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பான்மை அறிஞரின் கருத்து. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக கி.பி. 70இல் எருசலேம் நகர் தீத்துவின் தலைமையில் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்ட செய்தியை லூக்கா வழங்கியிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எருசலேம் அழிந்துபோகும் என இயேசு முன்னறிவிக்கிறார் (லூக் 19:41-44; 21:20-24). இந்த "முன்னறிவிப்பு" உண்மையிலே ஏற்கனவே நடந்து முடிந்த அழிவைப் பின்னோக்கிப் பார்ப்பதாக உள்ளது என்பது அறிஞர் கருத்து. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5,20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70க்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். + +லூக்கா நற்செய்தி எந்த நகரில் எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்க நாட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. வேறு சிலர் அந்தியோக்கியா, அல்லது உரோமை நகரிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்பர். + +லூக்கா நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பகுப்பாய்வு செய்து தொகுக்கலாம்: + +1. பாயிரம் + +இந்த நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ள "பாயிரம்" ("அர்ப்பணம்") என்ற பகுதியில் லூக்கா ஏன் இந்த நூலை எழுதினார் என்பதை விளக்குகிறார்: + +எனவே, "நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை... ஒழுங்குபடுத்தி எழுத" லூக்கா முன்வருகிறார். அவர் குறிப்பிடும் "நிகழ்ச்சிகள்" இயேசு பற்றிக் கிறித்தவ சமூகம் அறிவித்துவந்த மரபைக் குறிக்கும். நூல் "தியோபில்" என்பவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கிரேக்க மொழியிலுள்ள இச்சொல் "கடவுளின் அன்பர்" எனப் பொருள்படும். இது லூக்காவை ஆதரித்த ஒரு புரவலராக இருக்கலாம் அல்லது பொதுவான பெயராக நின்று, கிறித்தவ நம்பிக்கை கொண்ட எவரையும் குறிக்கலாம். லூக்கா தம் நூலை எழுதுவதற்குப் பிற மூல ஆதாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அவற்றுள் நிச்சயமாக மாற்கு நற்செய்தியும், “Q” என்று அறியப்படும் ஊக ஏடும் உள்ளடங்கும். இங்கே குறிப்பிடப்படுகின்ற “Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்று பொருள் . நூல் எழுதப்பட்டதன் நோக்கமும் தரப்படுகிறது. அதாவது, தியோபில் "கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு" லூக்கா நூலை எழுதினார். + +லூக்கா கூறுகின்ற "முறையான வரலாறு" மாற்கு நற்செய்தியில் தரப்படுகின்ற பொது உருவமைப்பைத் தழுவி அமைகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக் காலத்துக்குப் பின் (லூக் 1:5-4:13), இயேசு கலிலேயாவில் பொதுப் பணி நிகழ்த்துகிறார் (4:14-9:50); பின் எருசலேம் நகரை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார் (9:51-19:44); எருசலேமில் பணியில் ஈடுபடுகிறார் (19:45-21-38); எருசலேமில் பல துன்பங்கள் அனுபவித்து அங்கேயே சாவை எதிர்கொள்கிறார் (அதிகாரங்கள் 22-23); சாவிலிருந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்து, எருசலேமிலும் சுற்றுப்புறங்களிலும் சீடர்களுக்குத் தோன்றுகிறார் (அதிகாரம் 24). + +இயேசுவின் வரலாறு எந்த நிலவியல் எல்லைகளுக்குள் நிகழ்ந்தது என மாற்கு உருவமைத்தாரோ, அதே போன்று லூக்காவும் உருவமைத்தார். அந்த வடிவமைப்பின் எல்லைக்குள் நின்று “Q” என்று அறியப்படும் ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் செய்திகளைத் தேர்ந்து தம் நூலில் இணைத்துள்ளார். + +2. நூலின் முதல் பகுதி: இயேசுவின் தயாரிப்புக் காலம் + +லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்படுகின்ற "இயேசுவின் தயாரிப்புக் காலம்" (1:5-4:13) "குழந்தைப் பருவ நிகழ்ச்சிக"ளில் தொடங்குகிறது (அதி. 1-2). அதில், திருமுழுக்கு யோவானின் பெருமை சாற்றப்படுகிறது என்றாலும் அவரைவிடவும் இயேசு மேலானவர் என்ற உண்மையானது அவ்விருவரது பிறப்புப் பற்றிய முன்னறிவிப்பு நிகழ்வுகள் வழியாகவும், இயேசுவின் பிறப்பு மற்றும் யோவானின் பிறப்பு ஆகியவற்றின் வரலாறு கூறுவது வழியாகவும் தரப்படுகிறது. + +லூக்கா நற்செய்திப்படி, மீட்பு வரலாறு எருசலேம் திருக்கோவிலில் தொடங்குகிறது (1:5). செக்கரியா, எலிசபெத்து, மரியா, சிமியோன், அன்னா ஆகியோர் யூத சமய மரபில் மிகுந்த இறைப்பற்றுடைய மனிதராக எண்பிக்கப்படுகின்றனர். + +வளர்ந்த திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி இயேசுவின் வருகையை ஆயத்தப்படுத்துகிறார்; அக்கால ஆட்சியாளர்களின் நெறிதவறிய வாழ்க்கையைக் கண்டித்ததால் சிறைத் தண்டனை பெறுகிறார் (3:1-20). இந்நிகழ்ச்சி இயேசு யோவானைச் சந்திக்கும் முன்பே நிகழ்வதாக லூக்கா கூறுவது கவனிக்கத்தக்கது. இதை எவ்வாறு விளக்குவது? லூக்காவின் இறையியல் பார்வையில், திருமுழுக்கு யோவான் மீட்பு வரலாற்றின் பழைய படிநிலையைச் சேர்ந்தவர், அதாவது இசுரயேலின் காலமாகிய பழைய ஏற்பாட்டுக் காலத்தவர் (காண்க 16:16). ஆனால் இயேசு ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்கிறார். எனவேதான் இயேசுவுக்கு யோவானே திருமுழுக்கு அளித்தார் என்ற செய்தி லூக்கா நற்செய்தியில் வெளிப்படையாகத் தரப்படவில்லை. + +லூக்கா, இயேசுவைக் "கடவுளின் மகன்" என இயேசு ���ிருமுழுக்குப் பெற்ற வேளையில் காட்டுகிறார் (3:21-22). இயேசுவின் குலவழிப் பட்டியலைப் பின்னிருந்து முன்னேறும் வரிசையில் அமைத்துள்ளார். ஆபிரகாமுக்கும் அப்பால் சென்று முதல் மனிதராகிய ஆதாம் வரையிலும் லூக்கா இயேசுவின் மூதாதையரை வரிசைப்படுத்துகிறார். ஆதாமும் "கடவுளின் மகன்" என அழைக்கப்படுகிறார் (3:23-38). ஆனால் ஆதாம் அலகையின் சோதனையை முறியடிக்கவில்லை. மாறாக, இயேசு அலகையால் சோதிக்கப்பட்டபோது, உண்மையாகவே கடவுளின் மகன் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை நடைமுறையாக எண்பிக்கிறார் (4:1-13). இயேசு அலகையை முறியடிக்கிறார் எனக் காட்டுகிறார் லூக்கா. + +3. இயேசுவின் கலிலேயப் பணி + +இயேசுவின் வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் அவர் கலிலேயாவில் ஆற்றிய பணி (4:14-9:50). இப்பகுதியை வடிவமைப்பதில் லூக்காவில் சில தனிப் பண்புகள் உள்ளன. கலிலேயப் பணிக்கு முன் இயேசு நாசரேத்து தொழுகைக் கூடத்துக்குப் போன நிகழ்ச்சியை லூக்கா விவரிக்கிறார் (4:16-30). இந்த நிகழ்ச்சியில் லூக்காவுக்குப் பெருவிருப்பான பல கருப்பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை: இயேசு திருநூல் கூற்றுகளை நிறைவுசெய்கிறார்; பண்டு புகழ்பெற்றிருந்த இறைவாக்கினராகிய எலியா மற்றும் எலிசா போன்று இயேவும் பிற இனத்தாருக்குப் பொருள்செறிந்த விதத்தில் வல்லமை மிகுந்த இறைவாக்கினாராக வருகிறார்; இயேசு தம் சொந்த ஊரில் இருந்த தொழுகைக் கூடத்திலேயே புறக்கணிக்கப்படுகிறார். + +இப்பகுதியில் இயேசு சமவெளியில் வழங்கிய பேருரை முக்கிய கூறாக உள்ளது (6:20-49). இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில், இயேசுவைப் பின்சென்றோரில் பெண்சீடரும் இருந்தனர் என்பதை லூக்கா மாற்குவைப்போல் அல்லாமல் நூலின் தொடக்கத்திலே கோடிட்டுக் காட்டுகிறார் (8:1-3). + +4. இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாகிறார் + +லூக்கா நற்செய்தியின் அமைப்பைப் பார்த்தால், இயேசு எருசலேமுக்குப் பயணமாகப் போவது பற்றிய கூற்றுத்தொடர் முதன்மைப்படுத்திக் காட்டப்படுகிறது (9:51-19:44). இத்தொடர் உண்மையிலேயே மிக நீண்டதுதான்: இது 10 அதிகாரங்களில் விவரிக்கப்படுகிறது. மாற்குவோ இயேசுவின் எருசலேம் பயணத்தை சுமார் 3 அதிகாரங்களுக்குள் அடக்கிவிட்டார். லூக்கா நற்செய்தியின் மூன்றில் ஒரு பகுதி இயேசுவின் எருசலேம் பயணம் பற்றியதுவே. + +இயேசுவின் எருசலேம் பயணம் தொடர்வதை அவ்வப்போது லூக்க��� வாசகர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக, 9:51; 13:22, 33; 17:11; 18:31 ஆகிய இடங்களைக் காண்க. பயணம் செல்லும் வேளையில் இயேசு தம் சீடருக்குப் போதனை வழங்கிக்கொண்டே செல்கிறார்; இயேசுவின் சீடராக மாறுவது எதில் அடங்கியிருக்கிறது ("சீடத்துவம்") என விளக்கிச் சொல்கின்றார். இப்போதனைப் பகுதியில் லூக்கா “Q” ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பலவற்றைச் சேர்த்துள்ளார். எருசலேமுக்குச் செல்லும் இயேசு வெளிக்கட்டாயத்தினால் அங்குப் போகவில்லை, மாறாக, தாமாகவே விரும்பிச் செல்கிறார்; தம்மைப் பின்செல்ல விரும்புவோரும் தம்மோடு இணைந்து பயணத்தில் சேர்ந்துகொள்ளக் கேட்கிறார் (காண்க 9:51-62). + +பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் இயேசு எளிதில் மறக்கமுடியாத பல செறிவுமிக்க உவமைகளைக் கூறிச் செல்கிறார். நல்ல சமாரியர் உவமை (10:29-37), பெரிய விருந்து உவமை (14:7-24), காணாமற்போன மகன் உவமை (15:11-32), செல்வரும் இலாசரும் பற்றிய உவமை (16:19-31) ஆகியவை இப்பகுதியில் உள்ளத்தைக் கவரும் அழகிய கதைகள் ஆகும். + +மேலும், பயணத்தின்போது இயேசு மார்த்தாவையும் மரியாவையும் சந்திக்கிறார் (10:38-42); சக்கேயுவின் விருப்பத்திற்கிணங்க அவர் வீட்டில் விருந்துக்குச் செல்கிறார் (19:1-10). இது தவிர, இறைவேண்டுதல் பற்றி செறிவுமிக்க போதனை வழங்குகிறார் (11:1-13; 18:1-14). + +5. எருசலேமில் இயேசுவின் பணி + +நெடிய பயணத்துக்குப் பிறகு எருசலேம் வந்து சேர்கிறார் இயேசு (19:28-41). அந்தப் புகழ்மிகு நகரத்தில் இயேசு ஆற்றிய பணியாக லூக்கா குறிப்பிடுவது (19:45-21:38) மாற்கு நற்செய்தியைப் பெரிதும் ஒத்திருக்கிறது. எனினும், சில அழுத்தங்கள் வேறுபடுகின்றன. எருசலேம் திருக்கோவிலைத் தமது "இல்லமாக"க் காண்கிறார் இயேசு (19:46; காண்க 2:49). மேலும், "இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்" என லூக்கா குறிப்பிடுகிறார். + +6. இயேசு துன்பங்கள் அனுபவித்து, இறக்கிறார் + +இயேசுவின் பாடுகள் பற்றிய கூற்றுத்தொடரை மாற்கு வடித்துள்ளது போலவே லூக்காவும் செய்திருந்தாலும், சில வேறுபாடுகளும் உள்ளன (லூக் அதி. 22-23; ஒப்பிடுக மாற் அதி. 14-15). இயேசு வழங்கியதாக ஒரு பிரியாவிடை உரையை லூக்கா இணைக்கிறார் (22:14-38). இந்த உரையில் இயேசு "யார் பெரியவர்?" என்ற கேள்விக்குப் பதில் தருகிறார்: பணிவிடை புரிவதே மேன்மையையும் பெருமையையும் பெற்றுத்தரும் (22:24-30). + +பொந்தியு ���ிலாத்தும் ஏரோது அந்திப்பாவும் இயேசு குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்த பிறகும் (லூக் 23:1-16), இயேசு கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, குற்றமற்ற நிலையிலும் துன்புறுத்தப்பட்டு, வீரத் தியாகியாக மரணமடைகின்றார். + +சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும், இயேசு உரைத்த கடைசி மூன்று கூற்றுகள் அவர்தம் பணிக்காலம் முழுவதும் அவர் வலியுறுத்திவந்த போதனையிலிருந்து பிறழாமல் இருப்பதை லூக்கா கோடிட்டுக் காட்டுகிறார். அதாவது, இயேசு பகைவரை மன்னிக்கிறார் (23:34); ஒதுக்கப்பட்டோருக்கு உறுதுணையாக இருக்கிறார் (23:43); கடவுளை நம்புவதில் விடாது நிலைத்திருக்கிறார் (23:46). + +7. இயேசு சீடர்களுக்குத் தோன்றுகிறார் + +லூக்கா நற்செய்தியின் கடைசி அதிகாரம் இயேசுவின் கல்லறை வெறுமையாய் இருந்தது என்னும் கூற்றோடு தொடங்குகிறது (24:1-12). தொடர்ந்து இயேசு உயிரோடு தோற்றமளிக்கும் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. முதலில் எம்மாவு வழியில் சீடருக்குத் தோன்றுகிறார் (24:13-35). பின்னர் எருசலேமில் கூடியிருந்த சீடர்களுக்குத் தோன்றுகிறார் (24:36-49). இந்த இரு நிகழ்ச்சிகளிலும் இயேசு திருநூலை விளக்கும்போதும், அப்பம் பிட்கும்போதும் சீடர் அவரை அடையாளம் காண்கின்றனர். + +இந்நற்செய்தி நூலின் இறுதிப் பகுதியில் இயேசுவின் விண்ணேற்றம் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுபற்றிய விரிவான தொடர் கூற்று லூக்கா எழுதிய இரண்டாம் நூலாகிய திருத்தூதர் பணிகளில் விளக்கப்படுகிறது (காண் திப 1:6-12). + +உலக வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவராக இயேசுவைச் சித்தரிக்கிறார் லூக்கா (காண்க 3:1-2). இயேசு மீட்பு வரலாற்றின் மையமும் ஆவார். திருமுழுக்கு யோவான் காலம் வரையிலான இஸ்ரயேல் வரலாற்றுக்கும், பெந்தக்கோஸ்து நாளிலிருந்து தொடங்கும் திருச்சபை வரலாற்றுக்கும் நடுவே மீட்பு வரலாற்றின் மையத்தில் உள்ளார் இயேசு என லூக்கா காட்டுகிறார். + +இயேவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் லூக்கா அதிகமாகப் பயன்படுத்துவது "இறைவாக்கினர்" என்பதாகும். இயேசுவை இறைவாக்கினராகக் காட்டும் இடங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, லூக் 4:16-30; 7:16, 39; 13:33-34; 24:19, 25-27 ஆகியவற்றைக் கூறலாம். தமது பணிக்காலம் முழுவதும், ஏன், சிலுவையில் தொங்கி வேதனையுற்ற துயர வேளையில் கூட, இயேசு நல்லதொரு முன்மாதிரி வழங்குகிறார்; வீரத் தி��ாகியாக உயிர்விடுகிறார். + +லூக்கா பார்வையில், இயேசுவின் சீடர்கள் இயேசு காலத்துக்கும் திருச்சபைக் காலத்துக்கும் இடையே பாலம் போல உள்ளார்கள். இயேசுவின் பாடுகளின்போது அவரது சீடர்கள் சிறப்பான விதத்தில் நடந்துகொள்ளாவிட்டாலும் கூட, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்கள் தூய ஆவியின் வல்லமையோடு துணிச்சலாக இயேசு பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றலாயினர். இதை லூக்கா திருத்தூதர் பணிகள் நூலில் விவரிக்கிறார். + +தமது இரண்டாம் நூலாகிய திருத்தூதர் பணிகளில் லூக்கா திருத்தூதர் பவுலின் வரலாற்றையும் திருப்பணியையும் விரிவாக எடுத்துரைக்கிறார். அங்கே லூக்கா பவுலை விவரிப்பதும், நற்செய்தியில் இயேசுவை விவரிப்பதும் இணையொத்த விதத்தில் இருப்பதை அறிஞர் சுட்டிக்காட்டியுள்ளனர். + +அதாவது, இயேசு, பவுல் ஆகிய இருவருமே பிற இனத்தாரின் மீட்புக்குத் துணையாவர் என்றும், இருவருமே துன்பப்பட வேண்டியிருக்கும் என்றும் லூக்கா காட்டுகிறார் (காண் லூக் 2:29-35; திப 9:15-16). இயேசு, பவுல் இருவருமே எருசலேமுக்குப் போகத் துணிவோடு முனைந்து நின்றதையும் அங்கே அவர்கள் பெருவருத்தம் தருகின்ற துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் லூக்கா எடுத்துரைக்கிறார் (காண் லூக் 9:51; திப 19:21). இயேசுவும் பவுலும் தாம் துன்புற வேண்டியிருக்கும் என்பதை முன்னறிவிக்கின்றனர் (லூக் 9:22, 44-45; திப 20:22-24; 21:10-14). + +இயேசு, பவுல் ஆகிய இருவரும் தங்கள் பணியைத் தொடங்குமுன் ஒரு விளக்க உரை ஆற்றுவதாகக் காட்டுகிறார் லூக்கா (காண் லூக் 4:16-30; தி 13:14-52). அபோலவே, இயேசுவும் பவுலும் பிரியாவிடையாக உரையாற்றுகின்றனர் (காண் லூக் 22:21-38; திப 20:18-35). இருவரும் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் (காண் லூக் 22:47-23:25; திப 21:27-26:32). சாவு அடுத்துவருகிறது என்று அறிந்த பிறகும் இயேசுவும் பவுலும் மனந் தளராது உறுதியாக இருக்கின்றனர் (காண் லூக் 22:39-46; திப 20:36-38). + +இவ்விதத்தில் இயேசு பவுலுக்கு முன் உதாரணமானார். பவுலைப் போல இயேசுவைப் பின்செல்வோர் அனைவருக்குமே இயேசு முன் உதாரணமாக என்றுமே உள்ளார். + +இயேசு பற்றி எடுத்துரைக்கும் லூக்கா நற்செய்தி இன்றைய உலகுக்கு என்ன செய்தி வழங்குகிறது? இயேசுவின் காலத்தில் ஒடுக்கப்பட்டோராக யார்யார் கருதப்பட்டார்களோ அவர்கள் மட்டில் இயேசு தனிக் கரிசனையும் அன்பும் காட்டினார் என்பது லூக்கா நற்செய்தியில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அன்று ஒடுக்கப்பட்டவர்கள் ஏழைகள், ஆதரவற்றோர், பெண்கள், வரிதண்டுவோர், பாவிகள் போன்றவர் ஆவர். இவர்களை எல்லாம் இயேசு அரவணைத்தார். கடவுளின் ஆட்சியில் அவர்களுக்கு இடம் உண்டு என்று நற்செய்தி கூறினார். + +தம் சீடர் எவ்வாறு இறைவேண்டல் செய்யவேண்டும் என இயேசு கற்பித்தார். கடவுளிடம் சீடர்கள் எதைக் கேட்க வேண்டும் என்றும் இயேசு படிப்பித்தார் (காண் லூக் 11;1-13; 18:1-14). இயேசு தம் வாழ்வின் முக்கிய கட்டங்களில் எல்லாம் இறைவேண்டலில் ஈடுபட்டார். + +மக்களோடு (குறிப்பாக, ஒடுக்கப்பட்டோரோடு) உணவருந்துவதும் விருந்துகளில் கலந்துகொள்வதும் இயேசுவுக்குப் பழக்கமான ஒன்று. இயேசுவின் பணிக்காலத்தின்போது அவர் பல முறை விருந்துகளில் கலந்துகொண்டதாக லூக்கா கூறுகிறார். இந்த பல விருந்துகளின் உச்சக் கட்டமாக அமைந்தது இயேசுவின் கடைசி இரா உணவு (லூக் 7:36-50; 9:10-17; 11:38-42; 14:7-24). இந்த விருந்துகள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அருந்திய விருந்துக்கும் (லூக் 24:13-49), பின்னர் "திருத்தூதர் திருப்பணிகள்" நூலில் பலமுறை குறிப்பிடப்படுகின்ற "அப்பம் பிட்குத"லுக்கும் முன்னறிவுப்புப் போல அமைந்தன எனலாம். + +லூக்கா இயேசுவை இறைவாக்கினராகக் காட்டுவதோடு தலைசிறந்த போதகராகவும் விளக்குகிறார். இயேசுவின் சமவெளிப் பொழிவு (6:20-49) அவரது சீடர்களின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது. இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்யும்போது, தம்மைப் பின்செல்ல விரும்பும் சீடர் எவ்வாறு வாழவேண்டும் என்பது குறித்து வழங்குகின்ற விரிவான போதனைகள் (9:51-19:44) கிறித்தவ வாழ்க்கைக்கும் அறநெறிக்கும் இன்றியமையாத கூறுகளை விளக்கிச் சொல்கின்றன. + +கடவுளின் ஆட்சியில் மனித மதிப்பீடுகள் தலைகீழாகப் புரட்டிவிடப்படும் என்ற கருத்து லூக்கா நற்செய்தியில் அழுத்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, எலிசபெத்தை சந்தித்த போது மரியா உரைத்த பாடலைக் கூறலாம் (1:46-55). அதில், மரியா இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறார். அதேசமயம் கடவுள் "வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்" (1:52) என மரியா போற்றுகின்றார். அதுபோலவே, சமவெளிப் பொழிவில் "ஐயோ! உங்களுக்குக் கேடு!" என்று வரும் பகுதியில் (6:20-26) மனித மதிப்பீடுகள் புரட்டிப்போடப்படுவதைக் காண்கின்றோம். + +இறுதியாக, பிரியாவிடை உரையில் இயேசு உண்மையான தலைமை எதில் அடங்கியிருக்கிறது எனக் காண்பிக்கிறார். "உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்" (காண் 22:24-27) என்று இயேசு வழங்கும் போதனை வெறும் சொல்லளவில் அல்ல, "நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்" (22:27) என இயேசுவே உலகத்தோர்க்கு முன் உதாரணம் தந்துள்ளார். + +லூக்கா நற்செய்தியில் எருசலேம் உலக மீட்பின் திட்டத்திற்கு மையமாகத் திகழ்கிறது. இந்நூல் எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்தார் என்னும் கருத்து முதன்மைச் செய்தியாக விளங்குகிறது (லூக் 19:10). இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாவிகள், பெண்கள், ஏழைகள், சமாரியர் ஆகியோருக்கு இந்நூலில் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. + +தூய ஆவியின் செயல்பாடு, இயேசுவின் இரக்கம், திருப்பணி, மனம் மாற்றம், பாவமன்னிப்பு, இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை வலியுறுத்தப் பெறுகின்றன. + +மேலும், லூக்கா நற்செய்தியில் இறைவேண்டல், சான்றுபகருதல், பொறுப்புடன் செல்வத்தைப் பயன்படுத்தல், அமைதி பெறுதல், சிலுவை சுமத்தல் ஆகியன இயேசுவைப் பின்செல்லும் சீடர்களின் சிறப்புத் தகுதிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. + + +நூலின் பிரிவுகள் + + + + + + +மாரிமுத்தாப் பிள்ளை + +மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) என்பார் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625). + +சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். அவற்றில் சில: + + + + + +அருணாசலக் கவிராயர் + +அருணாசலக் கவிராயர் (1711-1779) ���ன்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர். + +அருணாசலக் கவிராயர் கி.பி.1711 இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார். இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். + +சீர்காழியில் வாழ்ந்ததால் சீ காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார். +ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது. + + +அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது. + +மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்��ீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது. + +"இராம நாடகக் கீர்த்தனை" என்ற நூல் பல பதிப்புகளில் வெளிவந்தது. தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன. +அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடிச் சிறப்பு சேர்த்தனர். + + + + + + +முத்துத் தாண்டவர் + +முத்துத் தாண்டவர் (1525-1600) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர். + +தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது. + +இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். ���வை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். + +முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். + + +“காணாமல் வீணிலே காலங் கழித்தோமே” {( இராகம்)} தன்யாசி {( தாளம்)} சாபு + +“தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும், திகழ் அம்பல வாணனைத் -தெரிசனம்” {(இராகம்)} வசந்தா {(தாளம் )} ஆதி + +”கண்டபின் கண்குளிர்ந்தேன் - பிறவிக் கடலைக் கரைகடந்தேன் -கண்டபின்” {(இராகம்)} மலையமாருதம் {(தாளம்)} ரூபகம் + +“அருமருந்தொரு தனிமருந்திது, அம்பலத்தே கண்டேன்” -அருமருந்தொரு {( இராகம்)} காம்போதி {(தாளம்)} ரூபகம் + +“தெண்டனிட்டே னென்று சொல்லுவீர் - நடேசர்க்கு நான்” {( இராகம்)}யமுனாகல்யாணி {(தாளம்)} ஆதி + +இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. + +ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் ���ள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி. + +முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது. + +ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, ���ிஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. +ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். + +1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது. + +இறுதி 6 பாடல்கள் : உதவி : தமிழ்க் கீர்த்தனை ஆசிரியர் முதல் நால்வர் - ஆசிரியர் கலைமாமணி சங்கீத பூஷணம் வரகூர் ஆ.க. முத்துக்குமாரசாமி +பொருளுதவி :- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். வெளியீடு: தமிழிசை நிலையம் வரகூர், ஜே.கே.பட்டினம் அஞ்சல், அண்ணாமலைநகர்வழி +-608 002 +முதற்பதிப்பு 1990 ( முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணபாரதியார் ஆகிய கீர்த்தனை ஆசிரியர் நால்வர் வரலாறு கூறும் இந்த நூலுக்குத் “தமிழ்க்கீர்த்தனை ஆசிரியர் நால்வர்” எனப் பெயர் அமைந்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.) + + + + +கிளைவ் லொயிட் + +கிளைவ் லொயிட் (பிறப்பு ஆகஸ்ட் 31, 1944) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலைவரான இவர் 1974 - 1985 காலப் பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினைத் தலைமை தாங்கினார். மொத்தம் 110 ரெஸ்ற்களில் 19 சதங்கள் அடங்கலாக 7515 ஓட்டங்களைப் (சராசரி 46.67) பெற்றுள்ளார். + + + + +அன்ட்ரே அகாசி + +அன்ட்ரே அகாசி (Andre Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். + +இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிசு வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப்ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். + +ஜூன் 24, 2006 ல் , 2006 யூ.எசு. ஓப்பன் போட்டிகளுக்குப் பின்பு தான் டென்னிசு விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டென்னிசு விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார். + +கிராண்ட் சிலாம் என்னும் நான்கு பெரு வெற்றித் தொடர்களிலும் வென்ற ஏழு ஆண்களில் இவர் ஐந்தாவதாக அதை வென்றார். இவருக்குப்பின் அதை ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும்) பெற்றார்கள். + + + + +நிறைவுப் போட்டி (பொருளியல்) + +பொருளியலில் நிறைவுப் போட்டி ("Perfect Competition") நிலவும் பொழுது அங்காடியும், நிறுவனங்களும் குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு சமநிலை (Equilibrium) அடைகின்றன +ஒரு பொருளின் விலை அதன் தேவையையும் (Demand), அளிப்பையும் (Supply) சார்ந்துள்ளது. இவைகளே விலையை நிர்ணயிக்கின்றன. பொருள்கள் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு (market) வருபவைகளின் தொகுதி “அளிப்பு” ஆகும். ஒரே நிறுவனம் அங்காடி முழுவதற்குமாக உற்பத்தி செய்வது முற்றுரிமை என்றும் பல நிறுவனங்கள் உற்பத்தி செய்வது நிறைவுப் போட்டி என்றும் அழைக்கப்படும். செவ்வியல் பொருளாதார அறிஞர்கள் (Classical Economists) அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவுவாதகக் கருதி வந்தனர். ஆதலால் விலை நிர்ணயிக்கும் காரணிகளும் அதையொட்டியே அமையும் என்று கூறினர். நடைமுறையில் இவ்வாறு முற்றுரிமையோ அல்லது நிறைவுப் பேட்டியோ வாலாயமாகக் காண இயலாது. இதையே ஜோன் ராபின்சன் என்னும் அறிஞர் விளக்குகின்றார். அங்காடியில் அளிப்பையும் தேவையையும் பொறுத்து விலை மாறிக் கொண்டே இருக்கும். + +திருமதி ஜோன் ராபின்சன் அவர்களும், சோம்பாலின் மற்று டிரிபின் ஆகிய அறிஞர்கள் இது பற்றி விளக்குகின்றனர். அங்காடியில் ஒரு குறிப்பிட்ட விலையில் பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் முழுமையான போட்டி நிலவுவது நிறைவுப் போட்டியாகும். + + + + + + + + +அங்காடிகள், தூயபோட்டி ("Pure competition"), நிறைவுப் போட்டி என்று இரு வகையாக பிரித்துப் பேசப்படுகிறது. நிறைவுப் போட்டிக்கு பல இயல்புகள் உள்ளன. அவற்றில் எண்ணற்ற வாங்குபவர்களும், விற்பனையாளர்களும் இருத்தல், பொருட்கள் ஒரே சீரனவையாகவும் தன்மையானவையாகவும் இருத்தல், மற்றும் நிறுவனங்கள் தடையின்றி தொழிலைத் துவங்கவும் மூடவும் முடிதல் ஆகிய மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேறியிருந்தால் அதனைத் தூயபோட்டி எனவும் மற்றவைகளை நிறைவுப்போட்டி எனவும் ஒருசில அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர். + +நிறைவுப் போட்டியின் முக்கியமான நிபந்தனை அங்காடி முழுவதும் ஒரே விலை நிலவ வேண்டும் என்பாதகும். விலையை எந்த ஒரு தனி நிறுவனமும் மாற்ற இயலாது. அவ்வாறு ஒரு நிறுவனம் விலையை ஏற்றி வைக்குமானால், பொருள்கள் ஒரே தரமானவையானதாலும் வாங்குபவர்கள் அனைவரும் விபரம் அறிந்தவர்களாகவும் உள்ளதால், விலை உயர்த்தப்பட்ட பொருளை யாரும் வாங்கமாட்டார்கள். ஆதலால் தேவை முற்றிலும் நெகிழ்வுடையதாக இருக்கும். நிறுவனத்தின் தேவைக்கோடு படம் ஆ வில் காண்பது போல் கிடைமட்டமாக இருக்கும் + +அங்காடியின் தேவை எப்படி தனி நிறுவனத்தின் தேவையை நிர்ணயம் செய்கின்றது என்பதை படம் அ மற்றும் படம் ஆ காட்டுகிறது +படம் அ வில் குறிப்பிட்டடுள்ளது போல் அங்காடியில் உள்ள அனைத்து வாங்குவோரும் நிறுவனங்களும் இவர்களின் தேவையும் அளிப்பும் எங்கு சந்திக்கின்றதோ அங்கு சமநிலை அடைவர். பொருளின் விலை 50 உரூபாயில் சமனிலை அடைகின்றது. அங்காடி நிர்ணயித்த விலை, நிறுவனத்தின் தேவைக்கோடாக எதிரொளிக்கும். இது படம் ஆ வில் காண்பிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஒரு நிறுவனம் எதிர்கொள்ளும் தேவைக்கோடு (Demand curve) கிடைமட்டத்தில் ‘d’ இருக்கும். +நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருக்கும் (P = MR). அட்டவணைக்காணவும் + +எண்ணிக்கை அதிகமாகும் போது கூட இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருப்பதைக்காணலாம் +அதனால் அதன் தேவைக்கோடும் இறுதிநிலைகோடும் படுகிடையாக சமமாக இருக்கும். + +குறுகிய காலத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனம் எவ்வளவு உற்பத்தி செய்யும் என்பதைக் காணலாம். வரைபடத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் தேவைக்கோடும் இறுதிநிலை வருவாய்க்கோடும் (d, MR) சமநிலை விலையில் ரூ.50 ல் காண்பிக்கப்பட்டுள்ளது. + +இந்நிறுவனத்தின் இறுதிநிலை உற்பத்திச் செலவுக்கோடும் (MC) வரையப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமது இறுதி நிலைவருவாய் இறுதிநிலை உற்பத்திச��� செலவைவிட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி செய்யும். இறுதிநிலை வருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவை விடகுறையும் பொழுது அதற்குமேல் உற்பத்தி செய்யாது. அதிக லாபம் ஈட்டும் விதியின் படி, நிறுவனம் தமது இறுதிநிலை வருவாயும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் வரை உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கு மேல் உற்பத்தியை அதிகரிக்காது. அதிகலாபம் ஈட்டும் விதியின் படி நிறுவனம் MR = MC என்னும் அளவிற்கு உற்பத்தி செய்யும். + +குறுகிய காலத்தில் நிறுவனம் தமது சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை (Average variable cost) விட விலை அதிகமாக இருந்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்கும். சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை விட விலை குறைவாக இருந்தால் அது உற்பத்தியை நிறுத்தும். அதனால் நிறுவனத்தின் குறுகியகால அளிப்பு (Short term supply curve) வளைகோடு ("Firm's supply curve in the short run") சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவிற்கு (Average Variable Cost) அதிகமாக உள்ள இறுதிநிலை உற்பத்திச் செலவு (Marginal cost) வளைகோட்டுப் பகுதியே ஆகும் . வரைபடத்தில் இது காட்டப்பட்டுள்ளது + +ஒரு நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு ("Industry supply curve") அதன் சராசரி மாறுபடும் உற்பத்தியின் வளைகோட்டை விட அதிகமாக உள்ள இறுதிநிலை செலவு வரைகோடு என்பதனால், அனைத்து நிறுவனங்களின் அளிப்பு வளைவுகோடுகளின் கூட்டுத் தொகையை தொழிலின் மொத்த அளவின் வளைவுகோடு ஆகும். ஒரு அங்காடியில் ABC என மூன்று நிறுவனங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட விலையில் A நிறுவனம் 100 அலகுகளையும், B நிறுவனம் 80 அலகுகளையும் C நிறுவனம் 180 அலகுகளையும் உற்பத்தி செய்து வழங்குவதாக வைத்துக்கொள்ளலாம்.அங்காடி முழுவதுக்குமான அளிப்பு குறிப்பிட்ட விலியில் 360 அலகுகள் (100+80+180) ஆகும். + +நீண்ட காலத்தில் அங்காடியில் சமநிலை அமைய அங்காடியின் தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும். நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் தேவை, விலை, இறுதி நிலை வருவாய், இவைகளோடு இறுதி நிலைச் செலவு, குறுகிய கால சராசரி மொத்த செலவு, நீண்ட கால சராசரி மொத்த செலவு அனைத்தும் சமமாக இருக்கும். வரைபடத்தில் இது தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலில் அல்லது அங்காடியில் நிறுவனங்கள் எண்ணிக்கை குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் வேறுபடும். அங்காடியில் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டினால் புது நிறுவனங்கள் தொழிலுக்கு வந்து நீண்டகாலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும். அது போலவே குறுகியகாலத்தில் நிறுவனம் நட்டம் அடைந்தால், சில நிறுவனங்கள் மூடப்படும். அதனால் உற்பத்தி சுருங்கும் நீண்டகாலத்தில் அங்காடி சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். + + +அன்றாட நடைமுறையில் இதுபோன்று நிறைவுப்போட்டியைக் காண்பது மிகவும் அரிதாக இருந்தாலும் இதனைப்பற்றிய அறிவு மற்ற அங்காடிகளின் தன்மையை அறிந்து கொள்ளவும் , இந்த உன்னத நிலையிலிரிந்து ஒவ்வொரு நிபந்தனைகளாகத் தளர்த்தி உண்மை நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும்.. + + + + + +யாங்சி ஆறு + +யாங்சி ஆறு ("Yangtze River") அல்லது "சாங் சியாங்" ("Chang Jiang"), (; அதாவது: "நீண்ட ஆறு") அல்லது யாங்சி ஜியாங் () என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நைல், மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறுகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் ஆறுகளில் உலகில் மிக நீளமானது இது ஆகும். சீன மொழியில் சாங் ஜியாங் என்பது "நீளமான ஆறு" எனப்பொருள் தரும்.   இது சீன மக்கள் குடியரசின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது, மேலும் அதன் ஆற்றங்கரையில் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். யாங்சே ஆறு வெளியேற்றும் நீரின் அளவில் உலகின் ஆறாவது மிகப்பெரிய நதி ஆகும். +சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சே ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. வளமான யாங்சீ ஆற்று பள்ளத்தாக்கானது சீனாவின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% அளவைத் தருகிறது. யாங்சி ஆற்றுப் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இப்பகுதியில் வாழக்கூடிய அகணிய உயிரிகள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளன இதில் குறிப்பாக சீன முதலை, ஃபின்லஸ் கடல்பன்றி, சீன துடுப்பு மீன், யங்ட்கே ஆற்று ஓங்கில் அல்லது பைஜி மற்றும் யாங்க்தெஸ் ஸ்டர்ஜன் போன்ற பல இன உயிர்கள் ஆபத்துக்கு உள்ளான இனங்களா ஆகியுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் நீரானது, நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொழில், எல்லை- அடையாளம், போர் போன்றவற்றிற்று பயன்படுத்தபட்டு வருகிறது. இது தன் அமைவிடம் காரணமாக சீனாவை வடக்கு தெற்காக பி���ிக்கும் கோடாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றில் கட்டப்பட்ட மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது உலகின் மிகப்பெரிய நீர் மின் ஆற்றல் நிலையமாக உள்ளது. +சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது. +அண்மைய ஆண்டுகளில், இந்த ஆலை தொழில்துறை மாசுபாடுகளாலும், சதுப்புநிலம் மற்றும் ஏரிகள் அழிப்பு போன்றவற்றால் பாதிப்புற்றுள்ளது. இது பருவகால வெள்ளத்தை அதிகரிக்கிறது. ஆற்றின் சில பகுதிகள் உள்ள இயற்கை வளங்களை இப்போது பாதுகாக்கின்றனர். மேற்கு யுன்னானின் ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் யாங்சி ஆறின் நீட்சியான   யுனன் பாதுகாக்கப்பட்ட பகுதியின் மூன்று இணை ஆறுகளில் ஒரு பகுதி யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக உள்ளது. 2014 நடுப்பகுதியில் சீன அரசாங்கம்   இரயில், சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய, பல அடுக்கு போக்குவரத்து வலையமைப்பு ஒன்றை ஆற்றுப் பகுதி ஊடாக ஒரு புதிய பொருளாதாரப் பட்டையை, உருவாக்குவதாக அறிவித்தது. +இந்த ஆறு ஏறத்தாழ 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஏப்ரல் 22, 2013 "புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு" இதழில் வெளியான ஆய்வு அறிக்கையில், சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு இயாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர். +யாங்சி ஆற்றின் மூலப்பகுதியானது நவீன காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்படவில்லை, இதனால் ஆற்றின் கீழ்பகுதி மற்றும் மேல் பகுதிகளை சீனர்கள் பல்வேறு பெயர்களால் அழைத்தனர். + +இந்த ஆறு நஞ்சிங்கில் இருந்து ஆற்றின் கழிமுகப் பகுதியான ஷாங்காய்வரையிலான குறைந்த பகுதியில் "யாங்கெஸ்ஸி" (Yangtze) என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், இந்தப் பகுதியில் கிருத்துவத்தை பரப்பவந்��� மறைபணியாளர்கள் சாங் ஜியாங் என்ற இந்த பகுதியின் பெயரால் "யாங்கெஸ்ஸி ஆறு" என்ற பெயரை ஆங்கில மொழியில் சாங் ஜியாங் (Chang Jiang) என்று குறிப்பிட்டனர். + +நவீன சீன மொழியில், யாங்கெசை (Yangtze) என்ற சொல்லை இன்னமும் சாங்கி ஜியாங்கின் கீழ் பகுதியான நஞ்சிங் முதல் ஆற்றின் முகத்துவாரம் வரையிலான பகுதியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். யாங்சி என்ற பெயர் முழு ஆற்றுப் பகுதியை குறிக்கும்விதமாக ஒருபோதும் நிலைக்கவில்லை. + +சாங் ஜியாங் (長江 / 長江) என்பது நவீன சீனமொழியில் ஆற்றின் முகத்துவாரம் உள்ள ஷாங்காயில் இருந்து 2,884 கிமீ (1,792 மைல்) நீளத்துக்கு சிச்சுவான் மாகாணப்பகுதிவரை பாயும் யாங்சி ஆற்றைக் குறிப்பிடும் சொல்லாகும். சாங் ஜியாங் என்பதன் பொருள் "நீண்ட ஆறு" என்பதாகும். பழைய சீன மொழியில், யங்சி ஆற்றின் இந்த நீட்சி ஜியாங் / கியாங் , என அழைக்கப்பட்டது. +ஜின்ஷா ஆறு (金沙江, "தங்க தூசு" அல்லது "தங்க மணல் ஆறு" என்பது யாங்சி ஆறு இபின் அப்ஸ்டீமில் இருந்து, 2,308 கிமீ (1,434 மைல்) தொலைவில் கிங்ஹாய் மாகாணத்தில் யுஷு அருகில். படன்ங் ஆற்று கலக்கும் பகுதிவரை அழைக்கப்படுகிறது. +தொங்கியன் ஆறு (通天 河, பொருள் "சொர்கத்தைக் கடந்துசெல்லும் ஆறு") என்பது யூசுபுடமிருந்து 813 கிமீ (505 மைல்) நீளமுள்ள பகுதியாக டாங்க் ஆற்று வந்து கலக்கும் இடம்வரை அழைக்கப்படுகிறது. இந்த பெயரானது  மேற்கு நோக்கி பயணிக்கும் ஒரு வசீகரிக்கும் ஆறு என்பதிலிருந்து வந்தது. பழங்காலத்தில், இது யாக் ஆறு என்று அழைக்கப்பட்டது. மங்கோலிய மொழியில், இந்த பகுதி முருய்-உஸ்சு (சுருள் ஓடை) என அழைக்கப்படுகிறது. மேலும் சில நேரங்களில் அருகிலுள்ள பெய்யுயிவுடன் சேர்த்து குழப்பப்படுகிறது. +டூயோட்டோ ஆறு (沱沱河, p Tuótuó Hé, lit. "Tearful River" என்பது தென்கிழக்கு கிங்ஹாய் மாகாணத்தில் உள்ள டங்குலா மலைகளில் இருந்து தொங்குவே ஆறு ஆறும் டாங்குக் ஆறு சங்கமிக்கும் 358 கிமீ (222 மைல்) நீளம் வரையிலான பகுதியைக் குறிக்க யாங்சி ஆற்றைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ பெயராகும். ஆற்றின் இந்த பகுதி மங்கோலியாவில், உலான் மோரன் அல்லது "சிவப்பு ஆறு" என்று அழைக்கப்படுகிறது. +பல ஆறுகளில் இருந்து இந்த ஆறு உருவாகிறது, அவற்றில் இரண்டு முதன்மை ஆதாரங்களாக கூறப்படுகிறது.  கிங்ஹாய்-திபெத் பீடபூமியின் கிழக்கு பகுதியில் டாங்லா மலைத்தொடரில் உள்ள கீலாடாண்டொங் மலைக்��ு மேற்கில் உள்ள பனிப்பாறை அடிவாரத்தில் உள்ள ஆதாரத்தை PRC அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.  இருப்பினும், இதன் புவியியல் ஆதாரமானது (அதாவது, கடலில் இருந்து நீண்ட தொலைவு) கடல் மட்டத்திலிருந்து மற்றும் கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் உள்ளது. இதில் பல ஆறுகள் சேர்ந்து, பின் கிங்ஹாய் (சிங்காய்) வழியாக கிழக்கு நோக்கி செல்கிறது, அங்கிருந்து தெற்குப் பகுதியில் திரும்பி சிச்சுவான் மற்றும் திபெத் எல்லைகளில் யென்னையுன்னானை அடைவதற்கு ஆழமான பள்ளத்தாக்கில் கீழே இறங்கி வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் போது, ஆற்றின் உயரம் 5,000 மீ (16,000 அடி) உயரத்திலிருந்து 1,000 மீ (3,300 அடி) என்று குறைகிறது. + +இது சிச்சுவான் பள்ளத்தாக்கின் யினினில் நுழைகிறது.   சிச்சுவான் பள்ளத்தாக்கில் நுழைந்த பிறகு, அது பல வலிமையான கிளையாறுகளைப் பெற்று, அதன் நீர் அளவு அதிகரிக்கிறது. பின்னர் சோங் கிங்ஸைச் சுற்றியுள்ள வுஸன் மலை வழியாக சோங் கிங் மற்றும் ஹூபியோ பகுதிகளை குடைந்தபடி வருகிறது. + +அங்கிருந்து ஹூபியி பகுதியில் நுழைந்தவுடன், யாங்சே ஏராளமான ஏரிகளிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது.   இந்த ஏரிகளில் மிகப் பெரியது டோங்ரிங் ஏரி ஆகும், இது ஹுனான் மாகாணம் மற்றும் ஹுபேய் மாகாணம் ஆகியவற்றில் எல்லையில் அமைந்துள்ளது, மேலும் ஹுனானில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கு இந்த ஏரி வடிகாலாக உள்ளது.   வுகானில், அது மிகப்பெரிய கிளை ஆறான ஹான் நதியைப் பெறுகிறது, இது சென்சி மாகாணத்துக்கு அப்பால் அதன் வடக்குப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வருகின்றது. + +ஜியாங்சியின் வடக்கு முனையில், சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பாயங் ஏரி ஆற்றில் சேர்கிறது. அதன்பிறகு இந்த ஆறு அன்ஹுயி மாகாணம்  மற்றும் சியாங்சு ஆகிய மாகாணங்களில் நுழைகிறது, வழியெங்கும் ஏராளமான சிறு ஏரிகள் மற்றும் ஆறுகள் இருந்து இன்னும் தண்ணீர் பெற்று, இறுதியாக ஷாங்காயின் கிழக்கு சீனகடலை அடைகிறது. + + + + +சிக்கலெண் + +கணிதவியலில் சிக்கலெண், கலப்பெண் அல்லது செறிவெண் ("Complex Number") என்பது ஒரு மெய்யெண்ணும் ஒரு கற்பனை எண்ணும் சேர்ந்த ஒரு கூட்டெண் ஆகும். + +a, b என்பது இரு மெய்யெண்களைக் குறிப்பதாக இருந்தால் c என்னும் சிக்கலெண்ணானது கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்: + +சிக்கலெண்களை மெய���யெண்களைப் போலவே கூட்டவும், கழிக்கவும், பெருக்கவும், வகுக்கவும் இயலும். ax+ax+ax+a போன்ற பல்லடுக்குத் தொடர்களின் மூலங்களை (roots) பொதுவாக, அதாவது எல்லா நேரங்களிலும் மெய்யெண்களை மட்டுமே கொண்டு காண இயலாது. ஆனால் சிக்கலெண்களையும் சேர்த்துக்கொண்டால், இவ்வகை பல்லடுக்குகளுக்குத் தீர்வும் காண இயலும். பொறியியலிலும் அறிவியலிலும் சிக்கலெண்கள் பரவலாக பயன்படுகின்றன. + +formula_7, formula_8, என்பன இரு மெய்யெண்களைக் குறிப்பதாக இருந்தால் formula_2 என்னும் சிக்கலெண்ணானது கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்: + +இங்கு "i" என்பது கற்பனை எண்ணைக் குறிப்பிடும் அலகு. இதன் மதிப்பு "i" = −1. + +formula_2 என்னும் சிக்கலெண்ணில், formula_7 என்னும் மெய்யெண்ணை "மெய்ப் பகுதி" என்றும், formula_8 என்னும் மெய்யெண்ணைக் "கற்பனைப் பகுதி" என்றும் அழைக்கப்படும். + +மெய்ப்பகுதியின் குறியீடு: (அல்லது) , + +கற்பனைப்பகுதியின் குறியீடு: (அல்லது) . + +எடுத்துக்காட்டாக, + +கற்பனைப் பகுதி formula_8 ஆனது பூச்சியமாக இருக்குமானால் அந்த சிக்கலெண் வெறும் மெய்யெண்ணாகும்; மெய்ப்பகுதி formula_7 பூச்சியமானால் அந்தச் சிக்கலெண் வெறும் கற்பனை எண்ணாகும். +மேலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதி எதிரெண் எனில் அந்த எண்ணை என்பதற்குப் பதில் , என்று எழுதலாம். எடுத்துக்காட்டாக: + +இரு சிக்கலெண்கள் ஒன்றுக்கு ஒன்று எப்பொழுது சமம் ஆகும் என்றால், அவ்விரு சிக்கலெண்களின் மெய்ப்பகுதிகளும் சமமாக இருத்தல்வேண்டும்; அதேபோல அவற்றின் கற்பனைப்பகுதிகளும் ஒன்றுக்கொன்று சமமாக இருத்தல் வேண்டும், அப்பொழுது மட்டுமே அவ்விரு சிக்கலெண்களும் சமம் ஆகும். + +அனைத்து சிக்கலெண்களின் கணத்தின் குறியீடு: + +ஒரு சிக்கலெண் என்பதற்குப் பதில் எனவும் சில இடங்களில் குறிக்கப்படுகிறது. மின்காந்தவியல், மின்பொறியியல் போன்றவற்றில் என்பது மின்னோட்டத்தைக் குறிக்கும் என்பதால், கற்பனை அலகுக்கு க்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இப்பிரிவுகளில் ஒரு சிக்கலெண் அல்லது என எழுதப்படுகிறது. + +கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஒரு சிக்கலெண்ணை இருபரிமாணத் தளத்தில் அமைந்த ஒரு புள்ளியாக அல்லது நிலைத்திசையனாகக் கொள்ளலாம். அந்தத் தளம் "சிக்கலெண் தளம்" அல்லது "ஆர்கன் வரைபடம்" எனப்படும். சிக்கலெண்ணின் மெய்ப்பகுதியை கிடைமட்ட ஆயதொலைவாகவும், கற்பனைப் பகுதியை நெடுக்குத்து ஆயதொலைவாகவும் கொண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன. கிடைமட்ட அச்சு-மெய்யச்சு என்றும், நெடுக்குத்து அச்சு-கற்பனை அச்சு என்றும் அழைக்கப்படும். formula_20, சிக்கலெண்ணின் கார்ட்டீசிய அல்லது இயற்கணித வடிவமாகும். + +ஒரு சிக்கலெண் "z" = "a" + "ib" என்று கொண்டால் அதன் இணையியச் சிக்கலெண் "a" - "ib" என்பதாகும். எனவே மெய்ப்பகுதி சமமாகவும், கற்பனைப்பகுதி சிக்கலெண்ணில் இருப்பதற்கு எதிர்ம மெய் எண்ணாக இருப்பின் அது இணையியச் சிக்கலெண் எனப்படும். கணிதக் குறியீட்டில் சிக்கலெண்ணைக் குறிக்கும் எழுத்தின் மேலே ஒரு கோடோ, அல்லது ஒரு நாள்மீன் குறியோ அல்லது எழுத்தின் பின்னே ஓர் ஒற்றை மேற்கோள் குறியோ இட்டுக் காண்பிப்பது வழக்கம், எடுத்துக்காட்டுகள் : formula_21 அல்லது formula_22 அல்லது formula_23. ஆர்கன் வரைபடத்தில், ஒரு சிக்கலெண்ணைக் குறிக்கும் புள்ளியை மெய் அச்சில் பிரதிபலிக்கக் கிடைக்கும் எதிருருப் புள்ளி அச்சிக்கலெண்ணின் இணையியச் சிக்கலெண்ணாக இருக்கும். + +கீழே காணும் சமன்பாடுகள் சரிதான் என்பதைத் தேர்ந்து காணலாம்: + +கூடுதல் காணவேண்டிய இரு சிக்கலெண்களின் மெய்ப்பகுதிகள் இரண்டையும் கூட்டி மற்றும் அவற்றின் கற்பனைப்பகுதிகள் இரண்டையும் கூட்ட அவ்விரு சிக்கலெண்களின் கூடுதலாக மற்ற்றொரு சிக்கலெண் கிடைக்கும்: + +இதேபோல இரு சிக்கலெண்களைக் கழிக்கலாம்: + +ஆர்கன் வரைபடத்தில் இரு சிக்கலெண்களின் கூட்டல்: + +இரு சிக்கலெண்கள் "A" , "B" எனும் புள்ளிகளால் சிக்கலெண் தளத்தில் குறிக்கப்பட்டால், அவற்றின் கூடுதல் "O", "A" , "B" ஆகிய புள்ளிகளை மூன்று உச்சிகளாகக் கொண்டு வரையப்பட்ட இணைகரத்தின் நான்காவது உச்சி "X" குறிக்கும் சிக்கலெண்ணாக இருக்கும். + +இரு சிக்கலெண்களின் பெருக்கல்: + + +இரு சிக்கலெண்களின் வகுத்தல், மேலே தரப்பட்டுள்ள சிக்கலெண்களின் பெருக்கல் மற்றும் மெய்யெண்களின் வகுத்தல் மூலம் வரையறுக்கப்படுகிறது: + + +இங்கு என்பது பகுதியிலுள்ள சிக்கலெண் இன் இணையியச் சிக்கலெண். பகுதிச் சிக்கலெண்ணின் மெய்ப்பகுதி, கற்பனைப் பகுதி இரண்டும் ஒரே சமயத்தில் பூச்சியமாக இருத்தல் கூடாது. + + () சிக்கலெண்ணின் வர்க்கமூலம் formula_44 பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. + +இங்கு "sgn" என்பது குறிச் சார்பு. formula_44 ஐ வர்க்கப்படுத்தி கிடைப்பதைக் காணலாம். + +சிக்கலெண் தளத்தில் ஒரு புள்ளி "P" ��� அதன் "x" , "y"-ஆயதொலைவுகளைக் கொண்டு மட்டுமில்லாமல், ஆதிப்புள்ளியிலிருந்து ("O") அப்புள்ளியின் ("P") தொலைவு மற்றும் "OP" கோட்டிற்கும் மெய் அச்சிற்கும் நேர்த் திசைக்கும் இடைப்பட்ட கோணம் இரண்டையும் கொண்டும் குறிக்கும் முறை வாள்முனை ஆள்கூற்று முறைமை ("போலார்") வடிவமாகும். + +ஆதிப்புள்ளியிலிருந்து ("O") அப்புள்ளியின் ("P") தொலைவு, "P" குறிக்கும் சிக்கலெண்ணின் "தனிமதிப்பு" அல்லது "மட்டு மதிப்பு" அல்லது "அளவு" எனப்படும், "OP" கோட்டிற்கும் மெய் அச்சிற்கும் நேர்த் திசைக்கும் இடைப்பட்ட கோணம் "P" குறிக்கும் சிக்கலெண்ணின் "கோணவீச்சு" எனப்படும். + +சிக்கலெண் இன் மட்டு மதிப்பு: + +"z" ஒரு மெய்யெண் (i.e., ) எனில்: + +formula_50 + +சிக்கலெண் "z" இன் கோணவீச்சு: + +சிக்கலெண் "z" இன் கோணவீச்சை formula_51 இன் மதிப்பை கார்ட்டீசியன் வடிவம் formula_52 லிருந்து பெறலாம்: + +"φ" இன் மதிப்பு எப்பொழுதும் ரேடியனிலேயே தரப்பட வேண்டும். அதன் அளவுகள் "2π" இன் மடங்குகளில் மாறினாலும் கோணவீச்சின் மதிப்பு மாறாது. எனவே கோணவீச்சு பன்மதிப்புக் கொண்டதாக அமையும். (−π,π) இடைவெளியில் அமையும் "φ" இன் மதிப்பு கோணவீச்சின் "முதன்மை மதிப்பு" எனப்படும். + +"r", "φ" இரண்டும் சேர்ந்து சிக்கலெண்களைக் குறிக்கும் மாற்று முறையான "வாள்முனை ஆள்கூற்று முறைமை வடிவம்" ("போலார் வடிவம்") தருகிறது. போலார் வடிவிலிருந்து கார்டீசியன் வடிவிற்கு மாற்றித்தருவது "முக்கோணவியல் வடிவம்": + +ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இதனைப் பின்வருமாறு தரலாம்: +இதனை மேலும் சுருக்கமாக +["குறிப்பு:" formula_58 என்பது formula_59 என்பதன் சுருக்கம்] + +சிக்கலெண்களில் பெருக்கல், வகுத்தல் மற்றும் அடுக்கேற்றம் ஆகிய செயல்களைச் செய்வது கார்டீசியன் வடிவைவிட போலார் வடிவில் எளியது. தரப்பட்ட இரு சிக்கலெண்கள் , எனில்: + +அதாவது மேலேயுள்ள இரு சிக்கலெண்களைப் பெருக்குவதால் அவற்றின் மட்டு மதிப்புகள் பெருக்கப்படுகின்றன; அவற்றின் கோணவீச்சுகள் கூட்டப்படுகின்றன. + +எடுத்துக்காட்டாக, ஆல் ஒரு சிக்கலெண்ணைப் பெருக்கினால் அந்த சிக்கலெண்ணின் மட்டு மதிப்பு மாறுவதில்லை; கோணவீச்சு π/2 ரேடியன் அளவு அதிகமாகும். எனவே இப்பெருக்கலால் அந்த சிக்கலெண்ணின் ஆரைவெக்டர் கடிகார திசையில் ஒரு கால்திருப்பத்துக்குள்ளாகும். இப்பிரிவில் தரப்பட்டுள்ள படம் formula_61பெருக்கலை வரைபடம் மூலம் தருகிறது. + + +சிக்கலெண் "z" ஐ அதே எண்ணால் "n" முறை பெருக்கினால் கிடைப்பது: + +மேலும் "z" இன் "n" ஆம் படிமூலங்கள்: + +இங்கு . + + + + +கற்பனை எண் + +கணிதவியலில் கற்பனை எண் () ("Imaginary Number") என்பது சிக்கலெண்ணின் ஒரு பகுதி. இது கற்பனை அலகு ஆல் பெருக்கப்பட்ட மெய்யெண்ணாக எழுதக்கூடியதாகும். கற்பனை அலகு இன் முக்கியமான பண்பு ஆகும்.. கற்பனை எண் இன் வர்க்கம் . எடுத்துக்காட்டாக, ஒரு கற்பனை எண்; இதன் வர்க்கம் . 0 மெய்யெண் மற்றும் கற்பனை எண் இரண்டுமாகக் கொள்ளப்படுகிறது. + +கற்பனை எண்ணை ரஃவீல் பாம்பெல்லி (Rafael Bombelli) என்பார் 1572ல் வரையறை செய்தார். அக்காலத்தில் இவ்வகை எண்கள் உள்ளன என்பதை யாரும் நம்பவில்லை. கணிதவியலில் சுழி (0) என்பதை எப்படி உணர்ந்து கொள்ளவில்லையோ அப்படியே இந்த கற்பனை எண்ணும் எளிதாக எற்றுக்கொள்ளப்படவில்லை. புகழ் பெற்ற கணித அறிவியலாளரான டேக்கார்ட் போன்றவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு பல கணிதவியலாளர்களாலும் பயனற்றதாகக் கருத்தப்பட்ட இந்தக் கருத்துரு, லியோனார்டு ஆய்லர் மற்றும் கார்ல் பிரீடிரிக் காஸ் இருவரின் பங்களிப்புகளைத் தொடர்ந்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +எந்த ஒரு சிக்கலெண்ணையும் formula_1, என எழுதலாம். இதில் formula_2 யும் formula_3 யும் மெய்யெண்கள். formula_4 என்பது கீழ்க்காணும் பண்பு உள்ள கற்பனை அலகு: + +formula_2 என்பது மெய்ப்பகுதி, formula_3 என்பது கற்பனைப்பகுதி. + +கிரேக்கக் கணிதவியலாளரும் பொறியியல் வல்லுநருமான அலெக்சாண்டிரியாவின் ஏரோன் என்பவர்தான் முதன்முதலாக கற்பனை எண்களைக் கண்டுபிடித்தாலும், கணிதவியாலாளர் ரஃவீல் பாம்பெல்லி என்பவரே 1572 இல் சிக்கலெண்களின் பெருக்கல் விதிகளை வரையறுத்தவராவார். இக்கருத்துருக்கள் முன்னதாக கார்டானோவின் படைப்புகள் போன்ற அச்சுப்பதிப்புகளில் இடம்பெற்றன. ஒருகாலத்தில் பூச்சியத்தின் சிறப்பினை எவரும் உணராது இருந்தவாறு, கற்பனை எண்களும் பயனற்றவையாக ரெனே டேக்கார்ட் உட்பட்டப் பல அறிஞர்களால் கருதப்பட்டது. லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் பிரீடிரிக் காஸ் (1777–1855) இருவரின் பங்களிப்புகள் வரை கற்பனை எண்களின் பயன்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சிக்கலெண் தளத்தில் அமைந்த புள்ளிகளாகச் சிக்கலெண்களின் வடிவவியல் முக்கியத்துவத்துவத்த��, முதன்முதலில் கணிதவியலாளர் காசுப்பர் வெஸ்சல் (1745–1818) விளக்கினார். + +வடிவவியல் வரைபடங்களில், சிக்கலெண் தளத்தின் செங்குத்து அச்சில் கற்பனை எண்கள் கணப்படுகின்றன. இதனால் சிக்கலெண் தளத்தின் மெய்யச்சிற்கு செங்குத்தாக அவை அமைகின்றன. வலப்புறத்தில் எண்ணளவில் நேர்மமாக அதிகரிப்பதும், இடப்புறத்தில் எதிர்மமாக அதிகரிப்பதுமான எண் கோடு மெய் அச்சு; இந்த மெய்யச்சின் மீது (-அச்சு) 0 இல், நேர்மமாக மேற்புறமாக அதிகரிப்பதாகவும், எதிர்மமாக கீழ்ப்புறமாகவும் கொண்ட செங்குத்து அச்சு (-அச்சு) கற்பனை எண்கள் குறிக்கப்படும் கற்பனை அச்சு. இக்கற்பனை அச்சின் குறியீடு: , formula_8, அல்லது . + +இவ்வகையான உருவகிப்பில், + + + + + + +சதுரகராதி + +சதுரகராதி என்பது வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்-தமிழ் அகராதி. + +வீரமாமுனிவரின் காலத்திற்கு முன் நிகண்டுகள் என்னும் செய்யுள் வகை நூல்கள் தாம் சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். அகராதி போல் வேண்டும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக நிகண்டுகள் இருந்தன. வீரமாமுனிவருக்கு முன் ஐரோப்பியர் சிலர் தமிழ்-போர்த்துக்கீசியம், தமிழ்-இலத்தீன் போன்ற இரு மொழிகளில் அமைந்த அகராதிகளை உருவாக்கியிருந்தனர் (எடுத்துக்காட்டாக, அந்தம் தெ புரவென்சா [Antam de Provença] என்பவர் எழுதி, ஜூலை 30, 1679இல் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபை குருக்களால் பதிக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியைக் குறிப்பிடலாம். அந்நூல் புரவென்சா இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அச்சேறியது. அதற்கு முன்னரே என்றிக்கே என்றீக்கசு (1520-1600) தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி இயற்றியிருந்தார் எனத் தெரிகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை. + +வீரமாமுனிவர் 1710இல் தமிழகம் வந்தார். அதற்கு முன்பாக தமிழகராதிகள் இருந்தாலும் "தமிழ்-தமிழ்" அகராதிகள் இருக்கவில்லை. சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் முதல் தமிழ்-தமிழ் அகராதி படைத்தார். 1732 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது. பண்டைய நிகண்டு முறையைக் கடந்து, அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற வீரமாமுனிவர் காரணமானார���. + +ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுத்து, அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பது அகராதி ஆகும். சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும். + +சதுகராதி பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்லும், தொகை அகராதியில் இணைந்துவரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன. + +திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் உள்ள பொருளடக்கத்தை வீரமாமுனிவர் சதுரகராதியில் அகர வரிசைப்படுத்தியுள்ளார். சதுரகராதியை உருவாக்குவதற்குத் தாம் நிகண்டுகளைப் பயன்படுத்தியதாக வீரமாமுனிவரே நூலின் முகவுரையில் கூறுகிறார். மேலும், சதுரகராதியைப் படைக்க கடின உழைப்பு தேவைப்பட்டது எனவும் முனிவர் குறிப்பிடுகிறார். பழைய நூல்களைக் கவனமாகப் பார்வையிட்டு, படி எடுப்போரால் வந்த பிழைகளை நீக்கி, வடமொழி சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, சதுரகராதி என்னும் "கருவூலத்தை" வளம்பெறச் செய்ததாகக் கூறுகிறார். + +Thesaurus என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தி, சதுரகராதியைக் "கருவூலம்" என்று வீரமாமுனிவர் குறிப்பிடுவது கருதத்தக்கது. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது "கருவூலம்". ஆகும். சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடில், கீழெதுகை, தொடைப்பதம், அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. + +செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளிலிருந்து தமிழரை விடுவித்து, எதுகை தேடி சொற்பொருள் காணும் சிரமம் தவிர்த்து, அகர வரிசையில் எளிதாக பொருள் காண முனிவர் வழிசெய்தார். சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய எண்ணிறந்த தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது சதுரகராதி. 1732இல் முதல்முறை வெளியானதிலிருந்து சதுரகராதி பல முறை பதிக்கப்பட்டுள்ளது. + +சதுரகராதி���்கு எழுதிய இலத்தீன் முன்னுரையில் முனிவர் இவ்வாறு கூறுகிறார்: Vulgaris linguae lexicon, ubi quaslibet lectiones Latine, Gallice, ac Lusitane explico (தமிழில்: பொதுத்தமிழ் அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் இலத்தீனிலும், பிரஞ்சிலும், போர்த்துக்கீசியத்திலும் விளக்கம் தருகிறேன்). +மேலும் இந்த நூலின் அமைப்பு பற்றி அதன் முகவுடையில் முனிவர் பின்வருமாறு கூறுகிறார்,செந்தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள பெரும்பாலான எல்லாச் சொற்களையும் தொகுத்து அவற்றினுள் பொதிந்துள்ள இருமை, பன்மைப் பொருள்களை அவற்றின் ஆற்றலோடுகொடுத்துள்ளேன்.ஒரு பொருள் பல சொற்களாக உள்ள பெயர்ச் சொற்களைக் கொடுத்து அந்தச்சொற்கலைக் கையாண்டுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கொள்உம் கருத்தை அறிந்து, அவை கொள்ளும் பல்வேறு நிலைகளையும் காட்டி உள்ள்ளேன். தமிழ் மொழியின் எண் அடிப்படையில் வழங்கும் எண் மலைகள், எழு கடல்கள் அறு சுவைகள்... போன்ர எண் அடைச் சொற்களின் விரிவுகளை மூன்றாம் பிரிவில் தந்துள்ளேன்.இறுதியாக செய்யுட்கள் இயற்றப் பயன்படும் முதலெழுத்து வேறுபட்ட ஒரே அசை கொண்ட ஒலி ஒர்றுமை உள்ள சொர்றொகுதியைத் தொகுத்துள்ளேன் + + + + + +தேம்பாவணி + +தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் (1680 - 1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். + +இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி "மறைபொருளான இறைநகரம்" (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார். அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர். + +தேம்பா + அணி எனப் பிரித்து "வாடாத மாலை" என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் "தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை" என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார். + +'தேம்பாவணி' கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள். + +"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்து சிறப்பித்தது. + +தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி. + +தேம்பாவணி ஆசிரியர், வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம். + +பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார். + +மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது. + +வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார். + +எடுத்துக்காட்டாக, கபிரியேல் வானதூதன் கடவுளின் நற்செய்தியை மரியாவிடம் உரைத்தபோது, மரியா கலக்கமுற்றதையும் அக்கலக்கத்தை வானதூதர் உணர்ந்தறிந்தார் என்பதையும் விளக்கவந்த வீர்மாமுனிவர் + + +"பளிங்கு அடுத்தவற்றைக் காட்டும் பான்மையால் இவள் முகத்தில்" +"உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்..." (பாடல்: 535) + +என்ற வரிகளில் திருவள்ளுவரின் + +"அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம்" +"கடுத்தது காட்டும் முகம்" + +என்னும் குறட்பா அமைவதைக் காணலாம். + +எருசலேம் நகரை வருணிக்கும் வீரமாமுனிவர் இவ்வாறு பாடுகிறார்: + +"நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்" +"போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்" +"கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்" +"சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே" (பாடல்: 162) + +(பொருள்): "எருசலேம் என்னும் திரு மாநகரில் நீரே அலைபடுவதல்லாமல், வேறு அலைச்சல் இல்லை; நிறைந்த சிறந்த பொருளை இரவலர்க்கு இடுவாரிடையே எழும் போட்டிப் போரேயல்லாமல், பகையால் எழும் போர் இல்லை; தாரையாக வானத்தினின்று மழை பொழியும் கருமேகமே கறை கொண்டுள்ளதல்லாமல், மக்களிடையே எவ்விதக் கறையும் இல்லை. குற்றங்களைக் கடிவதற்கான காவலும் அறவுணர்வினால் சீர் பெறுவதேயல்லாமல், சிறைக்காவல் என்பது இல்லை." + +இப்பாடல் சேக்கிழார் வருணிக்கும் + +"ஓங்குவன மாடநிரை ஒழுகுவன வழுவில் அறம்" +"நீங்குவன தீங்குநெறி நெருங்குவன பெருங்குடிகள்..." + +என்னும் பாடல் வரிகளை ஒத்திருப்பதைக் காணலாம். + +அவலச் சுவையை வெளிப்படுத்துவதில் தமிழுக்கு இணையான வேறொரு மொழி காணல் அரிது. காணாமற்போன தம் திருமகன் இயேசுவைத் தேடி அலையும் யோசேப்பு புலம்புவதை வீரமாமுனிவர் பாடுகிறார்: + + +"பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள்குலமே," +"என் ஆர் உயிரே, என் நெஞ்சத்து ஆள் அரசே," +"ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி," +"அன்னான் நாட, அறையீரோ எனக்கு?" என்றான்." (பாடல்: 3143) + + +(பொருள்): "பொன் போன்ற அழகிய சிறகுகளால் வானம் சேரும் திறம் கொண்ட பறவை இனங்களே, எனக்கு அரிய உயிர்போன்றவனும் என் உள்ளத்தில் அமர்ந்து ஆளும் அரசனுமாகிய திருமகன், பகைவர் மனம்போல் இருண்ட வனத்தை அடையச் சென்ற வழியை, அவனை நான் தேடிக் காணும் பொருட்டு, எனக்குச் சொல்ல மாட்டீரோ?" என்றான். + + +"அறக் கடல் நீயே; அருள் கடல் நீயே; அருங் கருணாகரன் நீயே;" +"திறக் கடல் நீயே; திருக் கடல் நீயே; திருந்து உளம் ஒளிபட ஞான" +"நிறக் கடல் நீயே; நிகர் கடந்து, உலகின் நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்" +"பெறக் கடல் நீயே; தாயும் நீ எனக்கு; பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ?" (பாடல்: 487) + + +(பொருள்): "அறத்தின் கடலாய் இருப்பவனும் நீயே; அருளின் கடலாய் இருப்பவனும் நீயே; அரிய கருணைக்கு இருப்பிடமானவனும் நீயே; வல்லமையின் கடலாய் இருப்பவனும் நீயே; செல்வக் கடலாய் இருப்பவனும் நீயே; திருந்திய மக்களின் உள்ளம் ஒளி பெறுமாறு ஞான அழகின் கடலாய் இருப்பவனும் நீயே; ஒப்புமையெல்லாம் கடந்து நின்று, இவ்வுலகின் நிலைக்களனாய் இருப்பவனும் நீயே; அதன் உயிராய் இருப்பவனும் நீயே; நான் நிலைபெறக் கடல்போல் நின்று தாங்குபவனும் நீ எனக்குத் தாயாய் இருப்பவனும் நீ; தந்தையாய் இருப்பவனும் நீயே; அனைத்தும் நீயே அல்லவா?" + +தேம்பாவணியின் இப்பாடலில் திருவாசக மணம் கமழ்கிறது. + +தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. + +தேம்பாவணியில் உள்ள கடவுள் வாழ்த்தில் உள்ள சில வரிகள்: + +கார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக் +நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி +போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே +சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத் + + +வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி கிறித்தவ விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. அவை 150க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. + +அதே நேரத்தில் விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளையும் தேம்பாவணி கொண்டுள்ளது. அச்செய்திகள் பலவற்றையும் வீரமாமுனிவர் ஆகிர்த மரியாவின் நூலிலிருந்து பெற்றார். எடுத்துக்காட்டாக, யோசேப்பு துறவறம் புகச் சென்றபோது கடவுளருளால் மனம் மாறி, இல்லறத்திலேயே துறவியாக வாழ முடிவுசெய்து எருசலேம் கோவில் செல்வதும், அங்கு ஏற்கனவே கன்னியாக அர்ப்பணிக்கப்பட்டு வாழ்ந்த மரியா திருமணம் செய்ய முன்வந்தபோது அங்கே வரிசையாக நின்றுகொண்டிருந்த ஆடவர்களுள் யோசேப்பு கையில் பிடித்திருந்த கோல் அதிசயமாகத் தளிர்விட்டு, பூக்களால் நிறைந்ததும் அதையே கடவுள் தாம் யாரை மணக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் என்று மரியா விளக்கம் பெற்று யோசேப்பை மணப்பதையும் குறிப்பிடலாம். + + +"திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியைப்" +"பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ" +"துறவாய் மணம் நீக்குப சொல்லிய பின்" +"உறல் ஆம் மணமோ என உள்ளினன் ஆல்." (பாடல் எண் 397) + + + +"உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்" +"கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்" +"விள்ளும் செழு வெண்மலர் பூத்தமையால்" +"மள்ளும் விரை ஆலயம் மல்கியதே." (பாடல் எண் 398) + + +(பொருள்: "துறவறம் கடைப்பிடிக்க எண்ணிய யோசேப்பு, கடவுளின் திட்டப்படி மரியாவை மணக்க வேண்டிய நிலை பற்றி எண்ணத்தில் ஆழ்ந்திருந்த பொழுதே அவர் உயர்த்திப்பிடித்திருந்த கோலில் தேனும் மணமும் பொழியும் அழகிய இதழ் விரியும் செழுமையான வெண்ணிற லீலி மலர்கள் பூத்தமையால் பரவுகின்ற வாசனை எருசலேம் கோவில் முழுவதும் நிறைந்தது.") + + +"காம்பா அணிகாட்டிய கன்னி நலத்து" +"ஓம்பா அணி இவ்அணி ஓர்ந்த பிரான்" +"நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர்" +"தேம்பா அணிஆம் கொடி சேர்த்தன் என்றார்." (பாடல் எண் 399) + + +தேம்பாவணியின் காப்பியத் தலைவனாக யோசேப்பு (சூசை, வளன்) இருந்த போதிலும், அங்கே அன்னை மரியா மற்றும் இயேசுவின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது. + +மரியாவை மணந்த பின்னரும் திருமண உறவில் ஈடுபடவில்லை யோசேப்பு. மரியா கடவுளின் துணையால் கருத்தாங்கி ஒரு மகவை பெற்றெடுத்து அவருக்கு "இயேசு" என்று பெயரிடுகிறார். கன்னியும் தாயுமாகவும் விளங்குகின்ற மரியாவின் பெருமையை வீரமாமுனிவர் தேம்பாவணியில் இவ்வாறு பாடுகிறார்: + + +"உலகம் மூன்றினும் உவமை நீக்கிய," +"இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்," +"அலகு இல் மூன்றினுள் நடுவ மைந்தனை," +"நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்." (பாடல் எண் 946) + + +(பொருள்): "மூன்று உலகங்களிலும் இதற்கு ஓர் ஒப்புமை இல்லாத தன்மையாய், முக்காலங்களிலும் பழுதில்லாக் கன்னியாய்த் தான் இருந்தே, அளவில்லாத தெய்வ மூன்றாட்களுள் நடுப்பட்டு நிற்கும். மகனாம் ஆண்டவனை, முச்சுடர்களினும் சிறந்து விளங்க மரியாள் பெற்றெடுத்தாள்"). + +"இலயை மூன்றினும்" என்னும் சொற்றொடர் மரியா மகனைப் பெறு முன்னும் பெற்ற போதும் பெற்ற பின்னுமாக முப்பொழுதும் கன்னியாகவே விளங்கினர் என்று பொருள்படும். + + +"வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர்" +"போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய்" +"நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது," +"ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான்." (பாடல் எண் 947) + + +(பொருள்): "கண்ணாடியிடத்து வாயில் இல்லாமல் நுழையும் பகலவனின் கதிர் உள்ளே போய்க் கெடாத ஒளியைப் பரப்புதல் போன்று, எக்குற்றமுமற்ற ஆண்டவன் ஆராய்ச்சிக்கு எட்டாத வல்லமையோடு, தன் தாய் பேறுகால நோவு அடையாமலும், அவளது அரிய கன்னிமைக்கு அழிவில்லாமலும் மகனாய்ப் பிறந்து தோன்றினான்". + +இயேசுவின் பிறப்புக்குப் பின்னர் யோசேப்பும் மரியாவும் தம் குழந்தையோடு நாசரேத்து வந்து அங்கு சில ஆண்டுகள் வாழ்கின்றனர். பின்னர், பாட்டுடைத் தலைவராகிய யோசேப்பைப் பிணிசேர்கின்றது. அவர் அதனைப் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறார். பின்னர் யோசேப்பு உயிர்துறக்கிறார். + +இறந்த யோசேப்பு மண்ணுலகோராலும் விண்ணுலகோராலும் முடிசூட்டப் பெறுகிறார். + +இந்நிகழ்வுகளைத் தேம்பாவணி கலைநயம் இலக்கிய நயம் பொருந்த பாடுகின்றது. + +தேம்பாவணிக் காப்பியம் இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறம் ஆகியவற்றின் மாட்சி, உழைப்பின் மேன்மை, வறுமையில் செழுமை, கற்பின் பெருமை, கடவுளின் இலக்கணம், வானோர் உயர்வு, நரகோர் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் மேன்மை, காதலின் பெருமை, காமத்தின் தீமை ஆகியவற்றை விளக்கும் நீதி நூலாகவும் விளங்குகிறது. + +தேம்பாவணியில் வீரமாமுனிவர் கிறித்தவ மறை உண்மைகளைத் துல்லியமாக எடுத்துரைக்கிறார். மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய மகன் இவ்வுலகில் இயேசு கிறித்துவாக வந்து அவதரிக்கும் நிகழ்ச்சி, அவருடைய தாய் அன்னை மரியா அவரைக் கன்னியாகக் கருத்தரித்து, தம் கன்னிமை கெடாமலே அவரை ஈன்றளித்த செய்தி, இயேசு மனித குலத்தின் பாவத்திலிருந்து மக்களை மீட்டு விண்ணகப் பேற்றினை ஈந்திட தம் உயிரைச் சிலுவையில் கையளித்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த செய்தி போன்றவை தேம்பாவணியில் விளக்கம் பெறுகின்றன. + +புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள தேம்பாவணியில் அவருடைய மாட்சி பல இடங்களில் பாடப்படுகிறது. யோசேப்பு இவ்வுலகில் மரியாவையும் இயேசுவையும் அன்போடு பாதுகாத்து வளர்த்து, கடவுளின் திட்டத்தை விருப்புடன் நிறைவேற்றினார் என்பதுவே அவருக்கு இறைவன் மாட்சி அளித்ததற்கு அடிப்படை ஆகும். + + +"உன் உயிர் தன்னினும் ஓம்பி, தாய் மகன்" +"இன் உயிர் காத்தனை, இனி, பயன் கொளீஇ," +"மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ," +"நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ" (பாடல்: 3344) + + +(பொருள்): "கன்னித் தாயும் திருமகனுமாகிய இருவர் தம் இனிய உயிரை, நீ உன் உயிரைக் காட்டிலும் பேணிப் பாதுகாத்தாய்; இனி, அதன் பயனை நீ பெறக்கொண்டு, நிலையான மனித உயிர்கள் பெறுதற்குரிய கதியாகிய வான் வீட்டில் வந்தடைந்து, உன் உயிர் என்றும் நிலையாக வாழ்தலே நீதியாகும்." + +இவ்வாறு, யோசேப்பின் புகழை இறைவனே எடுத்துரைப்பதாக வீரமாமுனிவர் பாடுகிறார். + +பிணிவாய்ப்பட்டு யோசேப்பு இறக்கும் நிலையில் உள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்து அவர்தம் மனைவி மரியாவும் அன்புக் குழந்தை இயேசுவும் நிற்கின்றனர். அவர்களது அன்பை உணர்கிறார் யோசேப்பு. அவருடைய உள்ளத்திலும் அன்பு ததும்புகிறது. அந்த அன்பின் வலிமை அவருடைய உயிர் உடலை விட்டுப் பிரிய விடாமல் பிடித்துவைக்கிறது என தேம்பாவணியில் பாடுகிறார் வீரமாமுனிவர். + + +"மூ உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒருபால், ஓர் பால்" +"தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவதாய் தாங்க, சூசை" +"மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர்தனை அன்பு ஒன்றே" +"பூ உலகு இருத்தினாற் போல் பூங் கரம் கூப்பி நின்றான்." + + +(பொருள்): "வி்ண் மண் பாதலமென்னும் மூன்று உலகங்கள் முழுவதையும் தாங்கி நடத்தும் ஆண்டவனாகிய திருமகன் ஒரு பக்கமும், தெய்வ உலகம் முழுவதும் போற்றும் தேவ தாயாகிய மரியா மற்றொரு பக்கமும் தன்னைத் தாங்கிக் கொண்டிருக்க, மேலுலகத்தை நினைந்து உடலைவிட்டுப் பிரியவிருந்த தன் உயிரை, அவ்விருவர் மீது கொண்டஅன்பு ஒன்றே இம்மண்ணுலகில் பிடித்து வைத்து இருத்தினாற்போல், சூசை தனது மலர்போன்ற கைகளைக் குவித்த வண்ணம் நின்றான்." + + +"இருவரும் இரு பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற," +"உரு வரும் வானோர் சூழ, ஒலிக் குழல் இசையின் பாடி," +"மரு வரு மலரைச் சிந்தி, வயவையில் விளித்து முன்ன," +"திரு வரும் ஆக்கை நீக்கி, தெள் உயிர் போயிற்று, அம்மா!" (பாடல்: 3355) + + +(பொருள்): "மரியாவும் திருமகனுமாகிய இருவரும் இரு பக்கமும் தம் நல்லாசி கூறி, அருள் கொண்ட சொல்லால் தேற்றவும், உருவத்தோடு வந்து தோன்றிய வானவர் சூழ்ந்து நின்று, ஒலிக்கும் குழலிசையோடு தாமும் வாயாற் பாடி, மணம் பிறக்கும் மலர்களைத் தூவி, வழி காட்டி அழைத்துத் தாம் முன்னே செல்லவும், சூசையின் புண்ணியத் தெளிவு கொண்ட உயிர் அத் திருவுடலை விட்டு நீங்கிப் போயிற்று, அம்மா!" + +தேம்பாவணியில் பாட்டுடைத் தலைவன் யோசேப்பு என்பதால் அந்நூலில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, அவரது சிலுவைச் சாவு, உயிர்த்தெழுதல் போன்றவற்றை நேரடியாக எடுத்துரைக்கும் வாய்ப்பு இல்லை. இயேசு தமது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன்னரே யோசேப்பு இறந்துவிட்டார். எனவே, வீரமாமுனிவர் மற்றொரு உத்தியைக் கையாளுகின்றார். அதாவது, இயேசு வருங்காலத்தில் என்னென்ன போதனைகளை அறிவிப்பார், எவ்வாறு இறப்பார் என்ற செய்திகள் யோசேப்புக்குக் கடவுளால் முன்னரே அறிவிக்கப்படுவதாகவும், அச்செய்தியை யோசேப்பு தம் இறப்பிற்குப் பிறகு இறந்தோர் உலகம் சென்று அங்குள்ளோருக்கு எடுத்துக் கூறுவதாகவும் வீரமாமுனிவர் எடுத்துக் கோக்கின்றார்: + +இயேசுவின் பணியை விவரிக்கும்போது யோசேப்பு கூறுவது: + + +"நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்;" +"தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்;" +"வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும்;" +"தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும், அத் திருவோன்." (பாடல் 3376) + + +(பொருள்): "அத் திருமைந்தனாம் இயேசு நோய்வாய்ப்பட்டவர்க்கு இன்பம் கூர்ந்த உயிர் தரும் மருந்துக்கு ஒப்பாவான்; நெ��ுப்பைப் போன்ற பாவங்களைக் கொண்டுள்ளவர்க்குக் குளிர்ச்சி பொருந்திய மழைக்கு ஒப்பாவான்; தன் உள்ளத்தின் அமைப்பால் மலருக்கு ஒப்பாவான்; பரந்த இரக்கத்தால் கடலுக்கு ஒப்பாவான்; உலகத்தார் அனைவருக்கும் தாய் போல்வான்; தந்தையும் போல்வான்." + +இயேசுவின் கண்கள், வாய், சொல்திறம், முகம் ஆகியவற்றின் எழிலை யோசேப்பு இறந்தோர் உலகில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்கும் விதம்: + + +"மீன் ஒக்க, பாவ இருள் விலக, மிளிர் விழி கொண்டான்;" +"கான் ஒக்க மறை உமிழ, கமழ் கமல வாய் கொண்டான்;" +"தேன் ஒக்க, துயர்க் கைப்புச் சிதைப்ப, இனிது உரை கொண்டான்;" +"வான் ஒக்க, கவின் காட்ட, மலர் வதன நலம் கொண்டான்." (பாடல்: 3377) + + +(பொருள்): "அத்திரு மகன் இயேசு, பாவமாகிய இருள் விலகுமாறு, விண்மீனைப் போன்று இலங்கும் கண்களைக் கொண்டவன்; வேதத்தை மணம் பொருந்த எடுத்துக் கூறும் வண்ணம், மணம் கமழும் தாமரை மலர் போன்ற வாயைக் கொண்டவன்; துயரத்தின் கசப்பை ஒழிக்கும் வண்ணம், தேனைப் போன்று இனிதான சொல்லைக் கொண்டவன்; தன் அழகை எடுத்துக் காட்ட, வானம் +போல் மலர்ந்த முகம் கொண்டவன்." + +இயேசு வழங்கிய போதனைகள் மற்றும் கொடைகள் பல. அவற்றுள் சிலவற்றை யோசேப்பு எடுத்துரைப்பதாக தேம்பாவணி புனைகிறது: + + +"மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது," +"அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே" +"பொருள் வரும் வழி என, புயலின் வான் கொடை," +"தெருள் வரும் அறிவு உளார், திருத்துவார்" என்பான்." (பாடல்: 3404) + + +(பொருள்):"பிறர் பொருளின்மீது மயக்கத்தைத் தரும் ஆசை வையாமல், கருணை பொருந்திய முகத்தோடு தன் பொருளைப் பிறருக்கு ஈதலே தனக்குப் பொருள் சேரும் வழியாகுமென்று கொண்டு, தெளிவு பொருந்தி, அறிவு படைத்தோர், மேகம் போன்று சிறந்த கொடையைத் திருந்தச் செய்வர் என்றும் இயேசு போதிப்பார்." + + +"கண் தரும்; கரம் தரும்; செல்லக் கால் தரும்;" +"உண் தரும்; களி தரும்; உயிர் தரும்; தகும்" +"பண்டு அருந் துயர்கள் நோய் பலவை தீர் தரும்;" +"மண்டு அருந் தயை நலம் வழங்கத் தந்து உளான்." (பாடல்: 3410) + +(பொருள்): "கண்ணைத் தருவான்; கையைத் தருவான்; நடந்து செல்லக் காலைத் தருவான்; உணவு தருவான்; மகிழ்ச்சி தருவான்; உயிர் தருவான்; மதிக்கத்தக்க பழமை வாய்ந்த அரிய துயர்கள் நோய்கள் பலவற்றையும் தீர்த்துத் தருவான்; இவ்வாறு, தன்னிடம் செறிந்து கிடந்த அரிய தயை நலத்தை ��க்களுக்கு வழங்கும் ஆற்றலைச் சீடருக்குக் கொடுத்துள்ளான்." + +இவ்வாறு இயேசு தம் சீடர்களுக்கு எண்ணிறந்த நற்கொடைகளை வரையின்றி வாரி வழங்கியுள்ளார். + +யோசேப்பு தம் வளர்ப்பு மகன் இயேசு அனுபவித்த துன்பங்களை எடுத்துரைக்கிறார்: + + +"கண் கிழித்து ஒழுகச் செந் தீக் கதத்தினர் அடித்த பாலால்," +"விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என, எந்தை யாக்கை" +"புண் கிழித்து ஒழுகும் செந்நீர், புரை வினை மலங்கள் தீர்ப்ப," +"மண் கிழித்து ஒழுகு வெள்ளம், மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ." (பாடல்: 3419) + +(பொருள்): "செந்நிற நெருப்பு தம் கண்களைக் கிழித்துக் கொண்டு பாய்வது போன்ற சினங்கொண்ட பகைவர் அடித்த தன்மையால், மேகத்தைக் கிழித்துக் கொண்டு பாயும் மழையினும் மிகுதியென்று கொள்ளுமாறு, நம் தந்தையாகிய ஆண்டவனின் உடலைப் புண்படக் கிழித்துப் பாயும் குருதி, நம் பாவ வினைகளாகிய அழுக்கையெல்லாம் போக்குமாறு, பூமியைக் கிழித்துக் கொண்டு பாயும் வெள்ளத்தின் மிகுதியோடு அங்கே பாய்ந்தோடியது." + +இயேசு அறையுண்டு இறந்த சிலுவை மரம், பண்டைய நாள்களில் முதற்பெற்றோர் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் உண்ட கனியைத் தின்ற மரத்தினால் விளைந்த பாவம் என்னும் தீநிலையை மனித குலத்திலிருந்து போக்கிடும் மருந்தாயிற்று என்பது கிறித்தவக் கொள்கை. அதை யோசேபு எடுத்துக் கூறுகிறார்: + + +"கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையைக் காக்க," +"நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன," +"வடு மரக் கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை, எந்தை," +"கொடு மரத்து அறைவுண்டு, எம்மைக் குணித்து, இறந்து ஒருங்கு தீர்த்தான்." (பாடல்: 3420) + + +(பொருள்): "நச்சு மரத்தினின்று இறங்கிய நஞ்சு உள்ளே போய் மிகுந்து கொல்லும் செயலைத் தடுத்துக் காக்க, மற்றொரு நெடிய மரத்தினின்று இறங்கிய தெய்வத் தன்மை கொண்ட மருந்து தகுந்ததாய் அமைவது போல, குற்றமுள்ளதென்று விலக்கப்பட்ட மரத்தின்கனியால் மக்களுக்கு ஆதிப் பெற்றோரால் உண்டான பழைய பாவப் பழியை, நம் தந்தையாகிய ஆண்டவன், நம்மைக் கருதி, ஒரு கொடிய சிலுவை மரத்தில் அறையுண்டு இறந்து ஒருங்கே தீர்த்துக் காத்தான்." + +இயேசு சிலுவையில் இறந்து மனிதர்க்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார்: + + +"துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்," +"என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்," +"உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை" +"மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்!" (பாடல்: 3429) + + +(பொருள்): "எங்கும் செறிந்த உயிர்களையெல்லாம் பேணும் அருளோடு இவ்வுலகில்வந்து தோன்றி என்னை ஆள்பவனும், என் உயிரைக் காட்டிலும் எனக்கு இனிய உயிர் என்னத் தக்கவனுமாகிய தயை மிக்க நல்லவனே, உன் உயிரையே வழங்கி எம்மையெல்லாம் மீட்டுக் காக்கவும், நிலைபெற்ற மனித உயிர்களெல்லாம் உயர்ந்த வான் வீட்டை அடையவும், நீ துன்பங்களை அனுபவித்து இறந்துள்ளாய்." + +இறப்புக்குப் பின் தம் பாவக் கறைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறும் வண்ணம் உத்தரிப்பு இடத்திற்கு இறந்தோர் செல்வர் என்பது கத்தோலிக்க கிறித்தவ போதனை. அவ்வாறு உத்தரிப்பு இடத்தில் இருந்தோரைச் சேர்ந்தடைந்த இயேசு தம் துன்பங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்: + + +"தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனைச் சேர்த்து, ஓர் ஐ-" +"யாயிரத்து ஒரு நூற்று ஐம் மூன்று அடி அடித்து, இடம் ஒன்று இன்றி," +"வாய் இரக்கமும் அற்று, ஆய வடு அடித்து, என்பும் தோன்ற," +"பாய் இரத்தமும் ஆறு ஓட, பழி உரு உடலை நோக்கீர்!" (பாடல்: 3443) + + +(பொருள்): "தூய இரக்கத்தை நெஞ்சினின்று அறவே ஒழித்த கொடியோர், ஒரு கற்றூணோடு என்னைச் சேர்த்துக் கட்டி, ஐயாயிரத்து நூற்றுப் பதினைந்து அடிகள் அடித்து, மேலும் அடிக்க இடம் ஒன்றும் இல்லாமையால், எலும்பும் வெளியே தோன்றுமாறு, முன் ஏற்பட்ட காயத்தின் மீதே மேலும் அடித்து, இரக்கச் சொல்லும் அற்று, பாய்ந்த இரத்தமும் ஆறு போல் ஓடவே, பழிக்கத்தக்க உருவம் கொண்டுள்ள உடலையும் பாருங்கள்!" + +வீரமாமுனிவர் தமிழ் இலக்கியம் தவிர இசையிலும் தேர்ந்தவர் என்பதை பல பாடல்கள் காட்டுகின்றன. யோசேப்பு விண்ணில் ஏற்கப்பட்டபோது வானவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எழுந்த ஒலியைத் தேம்பாவணியில் கேட்கலாம்: + + +"மொடமொட என, இனமுரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும் முழங்கி அதிர" +"நெடநெட எனஉள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய," +"படபட என மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மடிய," +"விடவிட என வெளி உலகு அலை உலகிடை வீரிய ஓதை மயங்கி எழும் ஆல்." (பாடல்: 3470) + + +(பொருள்): "மொடமொடவென்று, பலவகை முரசுகளின் ஒலியும் பறைகளின் ஒலியுமாக, அடிக்கப்பட்ட வாச்சியங்கள் யாவும் அதிர்ந்து முழங்கவும், நெடநெடவென்று, க���களிற் கொண்டுள்ள குழல்களின் பாடலும் வீணைகளின் பாடலுமாக, நல்லியல்பு வாய்ந்த இசைக் கருவிகளின் ஓசை கலந்து இனிமையூட்டவுமாக, படபடவென்று மேகத்திற் பிறக்கும் இடியொலியும் கடல் அலையொலியும் தம் பெருமை இவற்றின் நேரே ஒழிந்து மடியுமாறு, விடவிடவென்று, வெளி சூழ்ந்த வானுலகிலும் கடல் சூழ்ந்த மண்ணுலகிலும் வீரம் சிறந்த ஓசையாக மயங்கி எழும்." + +இசை நயம் ஒலிக்கின்ற இப்பாடலில் 'விடவிட' என்பது உருக் குறிப்பும் 'மொடமொட' போன்றவை ஒலிக் குறிப்பும் ஆகும். + +தன்னை வளர்த்து ஆளாக்கிய யோசேப்பு மண்ணுலகில் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்து சிறப்புற்றமையால் அவருக்கு விண்ணக மகிழ்ச்சியில் பங்களித்து அவரை மாட்சிப்படுத்த வேண்டும் என்று இயேசு தந்தையாம் இறைவனிடம் கேட்கின்றார். முழுமுதல் இறைவனாகிய தந்தை அவ்வாறே யோசேப்புக்கு மணிமுடி சூட்டுகின்றார். பின்னர் மகனாம் இறைவன் இயேசு யோசேப்புக்கு மகுடம் சூட்ட, இறுதியில் தூய ஆவி இறைவன் யோசேப்பைப் பெருமைப்படுத்துகிறார். + +இதை வீரமாமுனிவர் தேம்பாவணியில் எழிலுற எடுத்துப் பாடுகிறார். + + +"வான் புறத்து இலகும் செஞ்சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம்," +"தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்க," +"மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி, அம்முடியை," +"கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலைமேல் களிப்பு எழ, முதலவன், புனைந்தான்." (பாடல்: 3510) + + +(பொருள்): "வானத்தில் விளங்கும் பகலவன் அக்காட்சியைக் காண வந்தது போல் அமைத்த ஒளியுள்ள மகுடம்; தன் புறத்தே சுற்றிலும் வேறு ஏழு பகலவரைப் பூண்ட தன்மையாக ஏழு மணிகள் ஒளி பரப்பியிருக்க, விண்மீன்களை ஒளியற்றனவென்று புறத்தே போக்கும் செல்வச் சிறப்புள்ள மோட்ச வீட்டில் மகிழ்ச்சி அளவின்றிப் பொங்க, தெய்வ மூன்றாட்களுள் முதலவனாகிய தந்தையாங் கடவுள், மணத்தைப் புறத்தெல்லாம் பரப்பி மலர்ந்த மலர்க்கோலைத் தாங்கிய சூசையின் தலைமேல் மகிழ்ச்சியோடு அம்முடியைச் சூட்டினான்." + + +"ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம்; ஆர்த்தன தொடர் துதித்துழனி;" +"ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை; ஆர்த்தன இனியபாசைகள்;" +"ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி, ஆர்த்தன அதிசய குமுதம்;" +"ஆர்த்தன உவப்பில், ஆர் ஒளி மகுடம் அருந்தவற்கு, அருட் சுதன், புனைந்தான்." (பாடல்: 3511) + + +(பொருள்): "தெய்வீ�� மகிழ்ச்சி ஒலியின் ஓசைகள் முழங்கின; தொடர்ந்த துதியின் ஓசைகள் முழங்கின; தெய்வீக வீணையினின்று வரும் ஓசைகள் முழங்கின; இனிய பாடலின் இசைகள் முழங்கின; பொலிந்த வாழ்த்தின் ஓசைகள் முழங்கின; வியப்புக் கொண்டவரின் ஓசைகள் முழங்கின; அவ்வாறு முழங்கிய மகிழ்ச்சியினிடையே, மூவருள் இரண்டாமவனாகிய திருமகன், ஒளி நிறைந்த மற்றொரு முடியை அரிய தவத்தோனாகிய சூசைக்குச் சூட்டினான்." + +இப்பாடலில், அரவம், துழனி, அமலை, இசை, வகுளி, குமுதம் என்ற பல சொற்கள் ஓசை என்ற ஒரே பொருளில் வந்தது, பொருட் பின்வரு நிலை என்னும் அணியாகும். + + +"ஆர்த்தன பல்லாண்டு; ஆர்ந்தன உவகை; ஆறு அறுநூற்று மூ ஐம் பூ," +"சீர்த்தன மதுவின் பூத்தன, சூசை சேர்த்த கைக் கொடியில். அம் மலரால்" +"கோர்த்தன ஆறாறு அணிகளே. கடவுட் குளுஞ் சுடர்ப் பதத்து அவை, வானோர்," +"நீர்த்தன இன்பத்து அணிய, மா தவற்கே, நேயனும் ஒளிமுடி புனைந்தான்." (பாடல்: 3512) + + +(பொருள்): "'பல்லாண்டு வாழ்க!' என்னும் வாழ்த்தொலிகள் முழங்கின; மகிழ்ச்சிகள் நிறைந்தன; சூசை தன்கையில் தாங்கியிருந்த மலர்க் கொடியில் சிறந்த தேனோடு பூத்த மலர்கள் மூவாயிரத் தறுநூற்றுப் பதினைந்து. அம் மலர்களால் தொடுத்த மாலைகள் முப்பத்தாறு. வானவர் அவற்றைக் கடவுளின் குளிர்ந்த ஒளியுள்ள அடியில் சிறந்த இன்பத்தோடு அணிந்தனர். அப்பொழுது, மூவருள் மூன்றா மவனாகிய நேயன் எனப்படும் தூய ஆவியும் பெருந்தவத்தோனாகிய சூசைக்கு ஒளி முடி சூட்டினான்." + +இங்கு, 'கோத்தன' என்பது, எதுகைப் பொருட்டு, 'கோர்த்தன' என நின்றது. மேலும், "பிதா சுதன் இஸ்பிரீத்துச் சாந்து என்னும் மூவரும் வேறுபாடின்றி ஒரு மெய்க்கடவுளாகையில், செய்யுந் தொழில் ஒன்றாயினும், இங்கே நாம் உணருந்தன்மையைப் பற்றி, பொருளும் தெளிவது வேண்டி, வேறுபட விரித்துரைத்தான் என்க" என்பது பழைய உரை அடிக்குறிப்பு. + +வீரமாமுனிவர் யாத்த தேம்பாவணி என்னும் நூலின் பெயரை வெவ்வேறு முறைகளில் பிரித்துப் பொருளுரைப்பது உண்டு. நூலிலேயே பெயர் விளக்கம் தருகின்ற பாக்கள் சில உள. அவை: + + +""வான் மேல் மகுடம் புனை நாளில், வர மா தவன், தன் கொடி பூத்த," +"தேன் மேல் தளம்பு, ஆறு அறு நூறு சேர்ந்த மூ ஐந் திரு மணிப் பூ," +"நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு ஆறு இது" என மீன்" +"மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பிச் சாத்தி, மீண்டு உரைத்தார்" + + +(ப���ருள்): "வரங்கொண்ட பெருந் தவத்தோனாகிய சூசை, வானுலகத்தில் முடி புனைந்து கொண்ட நாளில், திருமணத்தின்போது தன் கைக் கொடியில் பூத்தனவும், தேன் நிறைந்து மேலே தளம்புவனவுமான ஆறு அறுநூறோடு சேர்ந்த மூவைந்துமாக மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து அழகிய மணிப்பூக்களைக் கொண்டு, நூல் முறை வழுவாமல் தொடுத்து அணிந்த ஆறாறு முப்பத்தாறென்று அமைந்த மாலைத் தொகுப்பு இது" என்று கூறி, விண்மீனினும் சிறந்து விளங்கும் சூசையின் அடியில் விரும்பிச் சாத்தி, மீண்டும் பின்வருமாறு கூறினர் : + +ஆறறு நூறு சேர்ந்த மூவைந்து : (6x600) + (3x5) = 3600 + 15 = 3615. ஆறாறு 6x6 = 36. முன் இப்படலத்தும் திருமணப் படலத்தும் +குறித்த செய்திகளை நினைவிற் கொண்டு, வேண்டிய சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. + + +""நாம்பா அணிப் பூங் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்" +"காம்பா அணி வில் வீசிய தன் கன்னித் துணைவி, களித்து இசைத்த" +"தேம்பா அணி இஃது; இதை அணிவார் திரு வீட்டு உயர்வார்! அவ் இருவர்," +"சாம்பா அணித் தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார்!" என மறைந்தார்." + + +(பொருள்): "கெடாத கற்பென்னும் அணி ஒளி வீசிய தன் கன்னித் துணைவி, தன் இளைக்காத அணியாகிய மலர்க்கொடியில் பூத்த மணமுள்ள மலர் போன்ற சொல்லாகிய மலரால் களிப்புடன் இணைத்துக் கட்டிய வாடாத மாலை இது : இதனை அணிவார் வானுலக வீட்டில் உயர்வு பெறுவார்! அக்கன்னியும் சூசையுமாகிய இருவரும், ஒடுங்காத அணி போன்ற தம் மகனோடு சேர்ந்து, நிறைந்த தயவோடு அவரைக் காப்பார்!" என்று கூறி மறைந்தனர். +"ஆகையால், வானரசாளாகிய மரியென்பாள் வான்மேல் வழங்கு மொழியால் தேம்பாவணி என்னும் சூசைதன் சரிதை முன் சொன்ன அளவு முப்பத்தாறு படலமாக மூவாயிரத்து அறுநூற்று ஒருபத்தைந்து பாட்டென்று அறிக" என்பது, பழையவுரை அடிக்குறிப்பு. "தேம்பாவணி' என்பதனை, பூங்கொடி பூத்தநறும்பூவால் தொடுத்ந 'வாடாத மாலை' எனவும், நறும்பூ அனைய சொல் மலரால் இசைத்த 'தேம்பாவணிக் காப்பியம்' எனவும் கொள்க. + + +"திருவாய் மணித்தேன் மலர் சேர்த்த தேம்பாவணியைத் தொழுது ஏந்தி," +"மருவாய் மணிப்பூ வயல்நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்," +"உருவாய் வேய்ந்த என் இறையோனுடன் மூவரின் பொற் பதத்து அணிய," +"வெருவாய்ப் புன்சொல் அஞ்சிய பின், விருப்பம் தூண்ட, தொழுது அணிந்தேன்." + + +(பொருள்): அக் கன்னிமரியாள்தன் திரு வாயினின்று பிறந்த அழகிய சொல் மலரால் சேர்த்துத் தொடுத்த தேம்பாவணி என்னும் சூசையின் வரலாற்றைத் தொழுது ஏந்திக் கொண்டு, மணம் பொருந்திய அழகிய பூக்கள் நிறைந்த வயல்களைக் கொண்ட இத்தமிழ் நாடு பாவ வடுவினின்று நீங்கி வாழும்படி இங்கு வந்தடைந்த நான், மனித உருவாய் வந்து தோன்றிய என் ஆண்டவனாகிய திருமகனுடன், கன்னி மரியாளும் சூசையுமாகக் கூடிய அம்மூவரின் பொன்னடிகளில் ஒரு காப்பியமாக அணியுமாறு எண்ணி, எனது புன்சொல்லைக் கருதி நடுக்கத்தோடு அஞ்சி வாளாவிருந்தபின், அவ்விருப்பம் மேன்மேலும் என்னைத் தூண்டவே, இதனை இயற்றி +அம்மூவர் அடியைத் தொழுது சூடினேன். + +"ஆகையால், தேவதாய் முன் வாய்மொழியாற் சொன்ன தேம்பாவணியைப் பொருளும் பிறழாது அளவும் மாறாது தானும் தமிழ் +மொழியாற் சொன்னது என்பதாயிற்று என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு. + + + + + +இராபர்ட்டு கால்டுவெல் + +கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் இராபர்ட்டு கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும். + +இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது "இலண்டன் மிசனரி சொசைட்டி" என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் "நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)" எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார். + +1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் த��்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே." + +திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)" என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார். + + + + + + + +விசுவநாதன் ஆனந்த் + +விஸ்வநாதன் ஆனந்த் ("Viswanathan Anand", பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். + +இந்திய சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி "மின்னல் பையன்" (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. +விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார். + +இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். + +பல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்க வெற்றிவீரர் +வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார். + +ஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார். + +ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோவை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது. + +உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை ("Boris Gelfand") சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் . + +இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார். + +அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சது���ங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார். + + + + + + + +யோவான் நற்செய்தி + +யோவான் நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் நான்காவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்காவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் யோவான் எழுதிய நற்செய்தி, Κατά Ιωαννην εὐαγγέλιον (Kata Iōannēn Euangelion = The Gospel according to John) என்பதாகும். + +மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு நற்செய்தி,மாற்கு நற்செய்தி லூக்கா நற்செய்தி ஆகிய மூன்றிலிருந்தும் (Synoptic Gospels) இந்நற்செய்தி நூல் நடையிலும் அமைப்பிலும் வேறுபடுகிறது. + +யோவான் நற்செய்திக்கு நான்காம் நற்செய்தி என்னும் பெயரும் உண்டு + +நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறித்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச்சீடர் (21:24) இவராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனிவடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறித்தவச் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்க வேண்டும். + +எவ்வாறாயினும், ஓரு யூத-கிறிஸ்தவர் இந்நூலை எழுதியிருக்கவேண்டும். ஏற்கனவே உருவாகியிருந்த ஒரு சிறப்பு மரபுக்கு இவர் எழுத்துவடிவம் கொடுத்திருக்க வேண்டும். இந்தச் சிறப்பு மரபுக்கு "யோவான் தனிமுறை மரபுக்குழு" அல்லது "யோவான் குழு" (Johannine School) என அறிஞர் பெயரளித்துள்ளனர். இந்த யோவான் குழுவுக்கும் செபதேயுவின் மகன் யோவானுக்கும் அல்லது அன்புச் சீடருக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும். + +இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35:39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மார் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இரா உணவின்போது இயேசுவின் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்தி���ுந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27). + +நற்செய்தியாளர் எந்த சமூகத்துக்கு இந்நூலை எழுதினாரோ அச்சமூகத்துக்கும் யூத சமய மரபு அமைப்புக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டிருந்தது என்றால், யோவானின் கிறித்தவ சமூகம் யூத தொழுகைக் கூடத்திலிருந்தே வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்படலாயிற்று. இந்தப் பின்னணியில்தான் நான்காம் நற்செய்தி எழுதப்பட்டது. யூத சமய மரபு அமைப்புக்கும் யோவானின் கிறித்தவ சமூகத்துக்குமிடையே நிகழ்ந்த மோதல் பற்றிக் காண்க, யோவா 9:22; 12:42; 16:2. அக்கிறித்தவ சமூகம் யூத-கிறித்தவரை உள்ளடக்கியிருந்தது. இயேசு யார் என்ற கேள்விக்கு இக்கிறித்தவ சமூகம் அளித்த பதில் யூத சமய மரபிலிருந்து வந்தோருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனவே இரு சமூகங்களுக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது. + +யூத கிறித்தவர்களை மரபுவழி யூத சமய மக்கள் தம்மவராக ஏற்க மறுத்தனர். அவர்களை யூத சமய மரபின் எல்லைக்கு அப்பாற்பட்டவராகக் கருதினர். நான்காம் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் எதிரிகள் ஒரேயடியாக "யூதர்கள்" எனவே அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் யோவானின் சமூகத்தின் உட்பட்ட யூத மரபுசார் எதிர்ப்பாரளருக்கும் இடையே தொடர்பு எடுத்துக்காட்டப்பட்டது. + +யோவானின் சமூகம் எங்கே வாழ்ந்தது என்பதற்கு அறிஞர் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதி என்று பதில் தருகின்றனர். அப்பகுதியில் சிரியா, பாலசுத்தீனம் அல்லது யோர்தானின் அப்பாற்பகுதி (Transjordan) ஆகிய ஒன்றில் அச்சமூகம் வாழ்ந்திருக்கக் கூடும். நற்செய்திக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது கி.பி. 90-100ஆக இருக்கலாம். மத்தேயு நற்செய்தியில் யூத-கிறித்தவர்கள் யூத சமய மரபினரோடு இழுபறியில் வாழ்ந்தனர் என்ற செய்தி முன்னூகமாக இருப்பதுபோலவே, யோவானின் சமூகத்திய யூத-கிறித்தவர்களுக்கும் பிற யூத சமய மரபினருக்குமிடையே உறவுகள் கசப்படையத் தொடங்கியிருந்தன. + +"இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறித்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. + +இந்நோக்கம் நூலின் தொடக்கத்திலேயே தெளிவாக்கப்படுகிறது. அதாவது, "கடவுளின் மகனாகிய இயேசு தந்தையை வெளிப்படுத்துகிறார்". கடவுளை அறியவேண்டுமா? கடவுளின் விருப்பம் யாதெனத் தெரியவேண்டுமா? இயேசுவுக்குச் செவிமடுங்கள்; அவர் கடவுள் பற்றிச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். - இதுவே யோவான் நற்செய்தி வாசகர்களிடம் கேட்பது. + +மேலும் கிறித்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறித்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறித்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளைத் திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. அக்காலத்தில் தோன்றிய தப்பறைக் கொள்கைகளுள் "திருமுழுக்கு யோவானே மெசியா", மற்றும் "இயேசு மனிதர்போலத் தோற்றமளித்தாரே தவிர. உண்மையிலே மனிதர் அல்ல" போன்றவற்றைக் குறிப்பிடலாம். + +மேலே கூறப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறித்தவ மரபு. + +மனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரக்கிறார் நூலாசிரியர். அவரது இயல்பை ஒளி, வாழ்வு, வழி, உண்மை, உணவு போன்ற உருவகங்களால் விளக்கி, இயேசு யார் என்பதை எல்லாக் கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கும் எளிதில் புரிய வைக்கிறார். + +அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறித்தவக் கருத்துகளின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும் அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி, அவர் பெற்ற ஏற்பையும் எதிர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறார். + +மகனுக்கும் தந்தைக்கும், தந்தைக்கும் சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார். இயேசு துன்பங்கள் பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். + +இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள். அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம் ஆகிய் அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன. + +நான்காம் நற்செய்தியாகிய யோவான் நற்செய்தி முந்தைய மூன்று நற்செய்தி நூல்களாகிய ஒத்தமை நற்செய்திகளிலிருந்து மாறுபட்டது. யோவான் இயேசுவின் பொதுப் பணிகாலத்தை மூன்று ஆண்டுக் கால வரையறைக்குள் எடுத்துரைக்கிறார். ஆனால், ஒத்தமை நற்செய்திகளோ இயேசு ஓர் ஆண்டுக் காலமே பொதுப்பணி செய்ததாகக் காட்டுவதுபோலத் தெரிகிறது. யோவான் காட்டும் இயேசு பல தடவை எருசலேமுக்குப் பயணமாகச் செல்கிறார். ஆனால் ஒத்தமை நற்செய்திகளோ, இயேசு ஒரே முறை எருசலேம் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியில் மற்ற மூன்று நற்செய்திகளிலும் வராத கதாபாத்திரங்கள் வருகின்றனர். எடுத்துக்காட்டாக, நிக்கதேம், சமாரியப் பெண், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர், இலாசர், மற்றும் "இயேசுவின் அன்புச் சீடர்" ஆகியோரைக் கூறலாம். + +ஒத்தமை நற்செய்திகளில் வரும் இயேசு "கடவுளின் ஆட்சி"யைத் தம் போதனையின் மையப் பொருளாக அளிக்கிறார். ஆனால், யோவான் நற்செய்தியிலோ, கடவுள் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதை இயேசு மையப்படுத்துகிறார்; இயேசுவே கடவுளை வெளிப்படுத்துபவராகக் காட்டப்படுகிறார். ஒத்தமை நற்செய்திகள் முன்வைக்கின்ற கிறித்தவ கருத்துப்போக்கும் யோவான் சித்தரிக்கின்ற கிறித்தவ சிந்தனைப் போக்கும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. + +யோவான் குழுவினரிடையே உருவாகிப் புழக்கத்தில் இருந்த மரபுகளை நூலாசிரியர் பயன்படுத்தினார். அம்மூல ஆதாரங்களிலிருந்து யோவான் 1:1-18 பாயிரப் பகுதியை உருவாக்கினார் (யோவா 1:1-18) அது ஒரு முன்னுரைப் பாடலாக உள்ளது. இயேசுவைக் கடவுளின் வாக்கு எனப் பாடும் பாடல் அது. அதுபோல, இயேசு புரிந்த "அரும் அடையாளங்களா"க (signs) யோவான் ஏழு வியப்புறு செய்திகளாகிய புதுமைகளைப் பதிவுசெய்துள்ளார். இவையும் ஒரு சமயத்தில் ஒரு தனித்தொகுப்பாக இருந்திருக்க வேண்டும். + +அதுபோலவே, அதிகாரங்கள் 13-17இல் காணப்படுகின்ற பிரியாவிடை உரைகளில் காணப்படும் சில கருத்துத் தொடர்கள் ஏற்கனவே இருந்த உரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். அதிகாரங்கள் 18-19 இயே���ுவின் பாடுகளைப் பற்றிய கூற்றுத்தொடர்களைக் கொண்டிருக்கின்றன. இப்பகுதிக்கும் ஒத்தமை நற்செய்திகள் தருகின்ற பாடுகள் பகுதிக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. யோவான் சில வரலாற்றுத் தகவல்களையும் தருகிறார். நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் ஒத்தமை நற்செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாரா, அவற்றைப் பயன்படுத்தினாரா என்பது பற்றி உறுதியாக ஒன்றும் கூற இயலவில்லை என்பர் விவிலிய அறிஞர். + +யோவான் நற்செய்தி நூலை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிப்பர். அதிகாரங்கள் 1-12 அடங்கிய பகுதி "அரும் அடையாளப் பகுதி" (Book of Signs) எனவும், அதிகாரங்கள் 13-20 (21) அடங்கிய பகுதி "புகழ்மாட்சிப் பகுதி" (Book of Glory) எனவும் அழைக்கப்படுவதுமுண்டு. + +முதல் பகுதியில் முதல் அதிகாரம் அரங்குத் தொடக்க நிகழ்ச்சி அல்லது பாயிரம் போல் உள்ளது. அதில் இயேசு யார் என்பது அவரது வெவ்வேறு சிறப்புப் பெயர்களின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பாயிரப் பாடலில் இயேசு கடவுளின் வாக்கு எனவும் கடவுளின் ஞானம் எனவும் போற்றப்பெறுகிறார் (1:1-18). மேலும் அதே பாயிரத்தில் இயேசு மெசியா (அருள் பொழிவு பெற்றவர்) எனவும் எலியா எனவும், இறைவாக்கினர் எனவும் அழைக்கப்படுகிறார் (1:19-34); கடவுளின் ஆட்டுக்குட்டி எனவும் கடவுளின் மகன் எனவும் குறிப்பிடப்படுகிறார் (1:35-42); ரபி (போதகர்) எனவும் இறைமகன் எனவும் இஸ்ரயேலின் அரசர் எனவும் அடையாளம் காட்டப்படுகிறார் (1:43-51). யோவான் நற்செய்தி இயேசுவை மானிட மகன் என அழைக்கும்போது அப்பெயரைக் கடவுளுக்கும் மனிதருக்கும் இடைநிலையாளராக இருப்பவர் இயேசு என்னும் உயரிய பொருளில் பயன்படுத்துகிறது. + + +இயேசுவின் பொதுப்பணி பற்றி யோவான் தொகுத்துள்ள கூற்றுத்தொடரில் இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த அரும் அடையாளங்கள் யோவான் நூலின் முதல் பகுதி ஒரு தொடர்உரைப் பாணியில் படிப்படியாக மொட்டவிழ உதவுகின்றன. ஊடே இயேசுவின் ஒரு சில உருவக வடிவான செயல்கள் தரப்படுகின்றன (எ.டு. கோவிலைத் தூய்மைப்படுத்துதல், யோவா 2:13-25). கேள்வி-பதில் பாணியில் இயேசு வழங்கிய நெடுமொழிகள் உள்ளன (எ.டு. இயேசுவும் நிக்கதேமும், யோவா 3:1-21); இயேசுவும் இன்னொருவரும் நிகழ்த்தும் உரையாடல்கள் அடங்கியுள்ளன (எ.டு. சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும், யோவா 4:1-42). + +இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் இவை: +1) கானாவில் திருமணம் (2:1-11); +2) அரச அலுவலர் மகன் குணமாதல (4:46-54); +3) உடல் நலமற்றவர் ஓய்வுநாளில் நலமடைதல் (5:1-9); +4) ஐயாயிரம் பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்தல் (6:1-15); +5) இயேசு கடலைக் கடந்து செல்லுதல் (6:16-21); +6) பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் (9:1-12); +7) இறந்த இலாசர் உயிர்பெறுதல் (11:1-44). + +இந்தக் கடைசி அரும் அடையாளம் அனைத்தையும் விட உயர்சிறப்பான ஓர் "அடையாள"த்துக்கு முன்குறியாக, முன்னறிவிப்பாக மாறிற்று. அந்தத் தனியுயர் அடையாளம்தான் இயேசுவின் உயிர்த்தெழுதல். + +யோவான் நற்செய்தியின் இரண்டாம் பெரும் பகுதி அதிகாரங்கள் 13-20(21)ஐ உள்ளடக்கும். இப்பகுதியைப் புகழ்மாட்சிப் பகுதி என்பர். அதாவது, யோவான் பார்வையில் இயேசுவின் பாடுகளும், சாவும், உயிர்ப்பும், விண்ணேற்றமும் இயேசு மாட்சிமை பெற்ற நிகழ்வைச் சேர்ந்தவையாகும்; அதையே இயேசு "எனது நேரம்" என்று குறிப்பிட்டார் (காண்க 2:4; 7:6,30; 13:1 போன்ற இடங்கள்). ஆகவே, இயேசுவின் "நேரம்" தோல்வியின் காலம் அல்ல, மாறாக மாட்சியுடன் வெற்றிவாகை சூடும் காலம். + +யோவான் பயன்படுத்தும் "மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்" (3:14-15; காண்க 8:28; 12:32) என்னும் சொற்றொடர் அவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதையும் மாட்சிமையோடு உயர்நிலையில் ஏற்றிவைக்கப்பட்டதையும் குறிக்கும் விதத்தில் யோவான் அழகுற வடிக்கிறார். + + +இயேசு தம் சீடர்களுக்குப் பிரியாவிடை உரைகள் வழங்குவதற்கு முன் அவர்களுடைய காலடிகளைக் கழுவுகிறார் (13:1-17:27). இந்தக் குறியீடான செயல்வழியாக இயேசு இரு ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கிறார். ஒன்று, இயேசு மனித மீட்புக்காக இறப்பது கடவுளின் கொடை (13:8). இரண்டு, பிறருக்குப் பணிசெய்வதன் வழியாகவே நாம் உயர்வடைவோம் (13:15). + + +இயேசு வழங்கிய வெவ்வேறு பிரியாவிடை உரைகள் இயேசு ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த திருச்சபை என்னும் இயக்கம் அவரது மண்ணக வாழ்வுக்குப் பின் எவ்வாறு தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதை விவரிப்பனவாக அமைந்துள்ளன. கடவுள் மீது நம்பிக்கை வைத்தல், அக்கடவுளை வெளிப்படுத்துபவர் என்ற விதத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தல், இயேசு தந்தையையும் மனிதராகிய நம்மையும் அன்புசெய்ததுபோல நாமும் ஒருவரை ஒருவர் அன்புசெய்தல், துணையாளராகிய தூய ஆவியிடமிருந்து வரும் ஆறுதலும் வழிகாட்டுதலும் ஆகிய இவையே திருச்சபை என்னும் இயக்கம் நிலைபெற்று முன்னேறிட வழிகளாகும் (காண்க யோவா 14:15-17,25-26; 15:26-27; 16:7-11,12-15). + +பிரியாவிடை உரைகளின் உச்சக் கட்டமாய் அமைவது இயேசுவின் மாபெரும் வேண்டல் (17:1-26) ஆகும். இந்தச் சிறப்புமிகு இறைவேண்டலில் இயேசு கடவுளின் மகனாக நிற்கின்றார். தந்தையிடம் தம்மை மாட்சிப்படுத்தக் கேட்கிறார் (17:5); தம் சீடர்கள் ஒன்றாய் இருக்கவேண்டும் என வேண்டுகிறார் (17:11); சீடர்களின் வார்த்தை வழியாகத் தம்மிடம் நம்பிக்கை கொள்வோரையும் அவர் மறக்கவில்லை: அவர்களும் இயேசு தந்தையோடு ஒன்றித்திருப்பதுபோல தமக்குள் ஒன்றாய் இருக்கும்படி இயேசு வேண்டிக்கொள்கின்றார் (17:20-22) + +இயேசுவு அனுபவித்த துன்பங்கள் (பாடுகள்) பற்றி யோவான் அதிகாரங்கள் 18-19இல் பேசுகிறார். இப்பகுதியின் பொது அமைப்பு ஒத்தமை நற்செய்திகளில் இருப்பதுபோலவே உள்ளது: இயேசு கைதுசெய்யப்படுகிறார்; தலைமைக் குருமுன் கொண்டுவரப்படுகிறார்; பேதுரு மறுதலிக்கிறார்; பிலாத்து இயேசுவை விசாரிக்கிறார்; இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்; இயேசுவின் சாவு; இயேசு அடக்கம் செய்யப்படுகிறார். + +ஆனால், இயேசுவின் துன்பங்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவதில் யோவான் பயன்படுத்தும் சொல்வழக்கும் பார்வைக் கோணமும் ஒத்தமை நற்செய்திகளில் காணப்படும் பாடுகளின் வரலாற்றிலிருந்து மிகப் பெரும் அளவில் மாறுபடுகின்றன. யோவான் இந்த வரலாற்றை எடுத்துக் கூறுவதில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து கடன் பெறவில்லை எனவே தெரிகிறது. + +இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய கூற்றுத்தொடர்களைப் பார்ப்போம். ஒன்று பிலாத்துமுன் இயேசு விசாரணைக்கு வருதல் (18:28-19:16).; மற்றது இயேசு சிலுவையில் அறையப்படுதல் (19:17-42). + +இந்த இரு கூற்றுத்தொடர்களையும் அலசிப் பார்த்தால் அவை பல்கூட்டுத்தொகுதியான அமைப்பு கொண்டவை எனவும் அவற்றின் உச்சக்கட்டமாக வெளிப்படுபவை இயேசு இன்னார் என்பதை உரத்தகுரலில் பறைசாற்றுவனவாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் நாம் அறிந்துணரலாம். முதல் தொடரின் உச்சக்கட்டம் போர்வீரர்கள் இயேசுவை அணுகி, யூதரின் அரசே வாழ்க! என்று கூறியதில் வெளிப்படுகிறது. அவர்கள் இயேசுவை ஏளனம் செய்து நகையாடினாலும், அதே நேரத்தில் இயேசு பற்றிய ஆழ்ந்த உண்மையையும் பறைசாற்றினர். மற்ற கூற்றுத்தொடரின் உச்சக் கட்டம் இயேசு சிலுவையில் தொங்கும்போது அன்புச் சீடரைச் காட்டித் தம் தாயிடம், அம்மா, இவரே உம் மகன் எனவும், தம் தாயைக் காட்டி அன்புச் சீடரிடம், இவரே உம் தாய்! எனவும் கூறிய உருக்கமிகு காட்சியாகும். + + +உயிர்த்தெழுந்த இயேசு நான்கு தடவை சீடருக்குத் தோன்றியதாக யோவான் கூறுகிறார் (20:1-29). இயேசுவின் தோற்றக் காட்சிகளை அலசிப்பார்த்தால் ஓர் உண்மை தெளிவாகும். அதாவது, அவை ஒவ்வொன்றிலும் முதல் கட்டத்தில் இயேசுவைக் காண்போர் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் எழுகின்றன. பின் படிப்படியாகத் தெளிவு பிறக்கிறது. காட்சியின் இறுதியில் நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! என அவர்கள் அறிக்கையிடுகின்றனர். + + +யோவான் அதிகாரம் 21 ஒரு பிற்சேர்க்கையாக அமைந்துள்ளது. அதில் இயேசு கலிலேயாவில் தோன்றியது குறிப்பிடப்படுகிறது. பேதுருவும் அன்புச் சீடரும் எவ்வித எதிர்காலத்தைச் சந்திப்பர் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் ஆடுகளை மேய்த்து, பேணி வளர்க்கும் பொறுப்பு சீடரிடம் கொடுக்கப்படுகிறது. அன்புச் சீடருக்கும் நற்செய்தியை வடித்த நூலாசிரியருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரிவிக்கப்படுகிறது. + +யோவான் நற்செய்தியின் இலக்கிய நடையும் பாணியும் தனித்தன்மை கொண்டவை. இயேசுவின் வாழ்வையும் பணியையும் விவரிப்பதில் அது வடிவமைக்கும் கால-இட பொது அமைப்பும் கட்டுமானமும் தனிப்பண்புடையதே. இதை மேலே விளக்கப்பட்டது. இனி, யோவான் காட்டும் இறையியல் சுருக்கமாகத் தரப்படுகிறது. + + +யோவான் காட்டும் இயேசு கடவுளைத் தம் தந்தையாக நமக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு காலங்களுக்கெல்லாம் முன்னே இருக்கின்ற "கடவுளின் வாக்கு" (1:1-2); "விண்ணுலகிலிருந்து வருபவர்"; மாட்சிமை மிகுந்த "மானிட மகன்" (1:51); "என் ஆண்டவர்...என் கடவுள்" (20:28); "கடவுளுக்கு இணையானவர்". வெளியுலகத்தின் கண்களுக்குப் பழிப்புக்கிடமான அவரின் சிலுவைச் சாவு உண்மையிலேயே மகத்தான ஒரு வெற்றிக் கொண்டாட்டம், ஏனென்றால் இயேசு மகிமை பெற்று, +"உயர்த்தப் பெற்று" தம் வானகத் தந்தையிடம் ஏகினார். + + +மத்தேயு, மாற்கு, லூக்கா போலவே, யோவான் நற்செய்தியிலும் இயேசுவின் சீடர்கள் தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு இயேசுவைப் பின்தொடர்கின்றனர்; ஆனால் பலவேளைகளில் இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யோவான் நற்செய்தி சீடரின் புரிந்துகொள்ளாத் தன்மையை ஒரு தனிப்பட்ட இலக்கிய உபாயமாகவே பயன்படுத்தி, இயேசு அந்த வேளைகளில் தாம் யார் என்பதை விளக்கிக் கூறவும், தம்மைப் பின்செல்வதற்குச் சீடர் என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்கவும் பொருத்தமான தருணங்களாக, உத்திகளாக எடுத்து முன்வைக்கிறது. + + +யோவான் நற்செய்தியில் வரும் இயேசுவின் பிரியாவிடை உரைகள் (யோவா அதி. 13-17) சீடர்களுக்கும், இன்று இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் அனைவருக்கும் அரிய கருவூலமாக உள்ளன. ஏனென்றால், அந்த உரைகளின் வழியாக நாம் இயேசு தொடங்கிய திருச்சபை என்னும் இயக்கம் அந்த இயேசுவின் மண்ணக வாழ்க்கைக்குப் பின்னரும் தொடர்ந்து முன்னேறுவதற்கான வழிவகைகள் யாவை எனத் தெரிந்துகொள்கிறோம். இந்த வழிவகைகளை யோவான் நற்செய்தி நம்பிக்கை, அன்பு, தூய ஆவி என அழகுற எடுத்துக் கூறுகிறது. + + +இயேசுவின் சீடர் இருவர் யோவான் நற்செய்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடருமாவர். இயேசு சிலுவையில் தொங்கும்போது மரியாவும் அன்புச் சீடரும் சிலுவையின்கீழ் நிற்கின்றனர். அவ்வமயம் இயேசு அவர்கள் இருவரையும் ஒருவர் ஒருவர் பொறுப்பில் ஒப்படைக்கின்றார். இதுவே யோவான் நற்செய்தியின் உச்சக்கட்டமாக அமைகிறது எனக் கூறலாம். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பொறுப்புள்ளவர்களாக, அன்பும் கரிசனையும் காட்டுபவர்களாக வேண்டும் என்றும், இத்தகைய அக்கறைமிகு செயல்பாங்கு கிறித்தவ சமூகத்தில் இன்றும் என்றும் மிளிர வேண்டும் என்பதே இயேசுவின் இறுதி விருப்பமாக யோவான் நற்செய்தியில் வெளிப்படுகிறது. + + +சாவை வெல்லுகின்ற "நிறை வாழ்வு" என்ற கருத்தை யோவான் நற்செய்தி பிற நற்செய்திகளைவிட அதிகமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிறை வாழ்வு சாவுக்குப் பின் வரும் ஒன்றல்ல, அது ஏற்கனவே தொடங்கிவிட்டது; இயேசுவிலும் இயேசுவின் வழியாகவும் அது நமக்கு ஏற்கனவே வழங்கப்படுகிறது என்பதை யோவான் அழுத்திக் கூறுகின்றார்: + +"என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவா 5:24). + +எதிர்காலத்தில் வ��ழ்வின் நிறைவு மலரும் என்பதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம் (5:25). என்றாலும், நிறைவாழ்வு இம்மையிலேயே எதார்த்தமாகிறது என்பது அங்கு வலியுறுத்தப்படுகிறது. கிறித்தவ வாழ்வின் இயக்காற்றலை விவிரிக்கும் அழகிய ஒரு பகுதி "இயேசுவே உண்மையான திராட்சைச் செடி" என்பதாகும் (யோவா 15:1-10). இயேசு, + +"நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவழிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" (யோவா 15:5) + +என்று கூறுகிறார். இயேசுவோடு "தங்கியிருத்தல்", அவரோடு "இணைந்திருத்தல்", அவரில் "உறைதல்", "நிலைத்திருத்தல்" போன்ற உருவகங்கள் யோவான் நற்செய்தியில் அடிக்கடி காணக்கிடக்கின்றன. + + +இயேசுவால் தொடங்கப்பட்ட திருச்சபை என்னும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றால் சீடர்கள் இயேசுவின் "கட்டளைகளைக் கடைப்பிடித்து" "அன்பில் நிலைத்திருக்க வேண்டும்" (யோவா 15:10). இக்கட்டளைகள் மரபுவழி வரும் பத்துக் கட்டளைகளைவிட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். ஏனென்றால், இவை இயேசுவை நம்புவதையும் இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பதையும் உள்ளடக்குவனவாகும். யோவான் நற்செய்தியில் "நம்பிக்கை" என்பது இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொள்வதைக் குறிக்கும்; இயேசு தந்தையாம் கடவுளை அறுதியான விதத்தில் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என ஏற்று அவருக்கு நம்மை முழுநிறைவாகக் கையளித்தலையும் உள்ளடக்கும். + +கடவுளாகிய தந்தைக்கும் அவரது மகனாம் இயேசுவுக்கும் இடையே உள்ள அன்பு எத்துணை மாண்புடையதோ, அதே அன்பைப் பின்பற்றி இயேசுவின் ஒருவர் ஒருவர் மட்டில் அன்புடையவராய் வாழ்வது அன்புக் கட்டளையின் உள்ளடக்கம் ஆகும் என யோவான் நற்செய்தி காட்டுகிறது. + +இயேசு தொடங்கிய பணியை அவருடைய சீடர்கள் துணையாளராகிய தூய ஆவியின் ஆறுதலோடும் வழிநடத்தலோடும் தொடர்ந்து செய்ய அழைக்கப்படுகிறார்கள். இயேசு தந்தையோடு தனிப்பட்ட விதத்தில் ஒன்றுபட்டிருக்கிறார். இந்த ஒன்றிப்பில் இயேசுவின் சீடருக்கும் பங்குண்டு. ஏனென்றால் அதே இயேசுவின் பணியிலும் வாழ்விலும் அவர்கள் பங்கேற்கின்றார்கள். + +இவ்வாறு, யோவான் நற்செய்தி கிறித்தவ வாழ்வுக்கும் திருச்சபையின் பணிக்கும் அடித்தளமாக உள்ள இறையியல் கருத்துக��களை அழகுற வழங்குகின்றது. + +நூலின் பிரிவுகள் + + + + + + +அரசதனியுரிமை + +ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவை தொடர்பில் சந்தையானது +போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின், அத்தகைய நிலைமை +பொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை (government monopoly) எனப்படும். இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப்படும், இதன் காரணமாக +சந்தையில் வேறு நிறுவனங்கள் காணப்படாது. இந் நிலையிலிருந்து அரசால் கொடுக்கப்பட்ட தனியுரிமை (government-granted monopoly) வேறுபடும். +இங்கும் பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் தனியுரிமை காணப்படும். இத் தனியுரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டக் கட்டுப்பாடுகளுடன் அரசால் வழங்கப்படும். +இலங்கையில் சிக‌‌ரட் உற்பத்தி அரச தனியுரிமையானது. இது அரசாங்கத்தின் எந்த ஒரு மட்டத்தினாலும் (தேசிய, மாகாண, மாவட்ட.) நடத்தப்படலாம். + +பல நாடுகளில் காணப்படும் அஞ்சல் சேவைகள், சமூகநல சேவைகள், தொடர் வண்டி சேவைகள் +போன்றவை அரச தனியுரிமையின் எடுத்துக்காட்டுகளாகும். + +இக் காலகட்டத்திலே சந்தையில் அரச தனியுரிமை, இல்லாது அழிக்கப்படுவதும் (தனியார்மயமாக்கல்) துரிதப்படுத்தப்படும் போக்கும் காணப்படுகின்றது. + + + + + +நேர மேலாண்மை + +நேர முகாமைத்துவம் என்பது நேரப் பயன்பாட்டைத் திட்டமிடும் முறைகள் மற்றும் நுட்பங்களைக் குறிக்கிறது. வினைத்திறன் மிக்கதான நேரப் பயன்பாட்டுக்கு நேர முகாமைத்துவம் அவசியமாகிறது. + + + + + +எல்டன் மேயோ + +எல்டன் மேயோ ("George Elton John Mayo", டிசம்பர் 26, 1880 - செப்டம்பர் 7, 1949) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு உளவியலாளர் மற்றும் மெய்யியலாளர். இவர் தொழிற்துறை அமைப்பில் உழைக்கும் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு ஹாதோர்ன் ஆய்வுகள் என்று பெயர். இந்த ஆய்வு முடிவானது மேலாண்மையியலில் மனித உறவுகள் கொள்கை "(Human Relations Theory)" எனும் புதிய பிரிவுக்கு வழி வகுத்தது. இதனால் இவர் மனித உறவுகள் கொள்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார். + +குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் 1919 - 1923 காலத்தில் பணியாற்றிய இவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1926 முதல் 1947 வரை ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். + + + + + +காங்கோ ஆறு + +காங்கோ ஆறு "(Congo River)" ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் பாயும் ஒரு பெரிய ஆறு ஆகும். இதை முன்னர் சயர் ஆறு (Zaire River) என்றும் அழைத்தனர். ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகளில் நைல் ஆற்றுக்கு அடுத்த மிக நீளமான ஆறு காங்கோ ஆறாகும். இதேபோல அதிகமான கன அளவு நீரை கொண்டு செல்லும் ஆறுகளில் அமேசான் ஆற்றுக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஆறு என்ற பெருமையும், உலகிலேயே அதிக ஆழம் கொண்ட ஆறு (720 அடி) என்ற பெருமைகளும் இந்த ஆற்றுக்கு உண்டு. காங்கோ-சாம்பேசி நதியின் மொத்த நீளம் 4,700 கிமீ (2,920 மைல்) ஆகும். வெளியேற்றும் நீரின் அடிப்படையில் இது ஒன்பதாவது நீளமான ஆறு என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. சாம்பேசி லுவாலாபா ஆற்றின் ஒரு துணையாறாகக் கருதப்படுகிறது. லுவாலாபா ஆறு1,800 கிமீ நீளத்துடன் போயோமா அருவியின் நீரோட்டத்திற்கு எதிராக பாய்கிறது. காங்கோ ஆறு மொத்தமாக 4370 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக அமைந்து, பூமத்திய ரேகையை இரண்டு இடங்களில் சந்திக்கிறது . காங்கோ வடிநிலத்தின் பரப்பு 4மில்லியன் கிலோமீட்டர்2 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பில் இந்த அளவு 13% ஆகும். + +காங்கோ ஆறு என்ற பெயர் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்திருந்த காங்கோ பேரரசு என்ற பெயரில் இருந்து தோன்றியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பேரரசு எசிகோங்கோ எனப் பெயரிடப்பட்டிருந்தது. காங்கோ இனக்குழுவைச் சேர்ந்த பாண்டு இன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. +காங்கோ பேரரசுக்குத் தெற்கே 1535 ஆம் ஆண்டில் காகாங்கோ என்று பெயரிடப்பட்ட ஒரு பேரரசும் இருந்துள்ளது. ஆபிரகாம் ஒர்டெலியசு தனது 1564 ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு நகரத்தை மணிகாங்கோ என்று பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளார் . +காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரான சயர் என்ற பெயர் கிகோங்கோ என்ற போர்த்துகீசிய தழுவலில் இருந்து வந்தது ஆகும். நதியை விழுங்கும் ஆறு என்ற பொருள் கொண்ட nzadi o nzere என்ற சொற்றொடரின் ஒரு பகுதியான nzere என்ற சொல் நதியைக் குறிக்கிறது . +16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நதி சயர் நதி என்று அறியப்பட்டது. கொங்கோ என்ற பெயர்18 ஆம் நூற்றாண்டில் ஆ���்கில மொழிப் பயன்பாட்டில் படிப்படியாக சயர் என மாற்றப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டு புத்தகங்களில் காங்கோ என்ற பெயர் விரும்பப்பட்ட ஆங்கில பெயராக இருந்தது, இருப்பினும் சயர் அல்லது சயரியசு என்ற பெயர் மக்களால் பயன்படுத்தப்பட்ட பெயராகப் பொதுவாகக் காணப்படுகிறது . +காங்கோ சனநாயகக் குடியரசு மற்றும் காங்கோ குடியரசு ஆகிய பெயர்கள் இதன் அடிப்படையிலேயே உருவாகின. பெல்சிய காங்கோவிடமிருந்து 1960 களில் காங்கோ சுதந்திரம் பெற்றது. +1971-1997 இல் உருவாக்கப்பட்ட சயர் என்ற மாநிலத்தின் பெயரும் இந்நதியின் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய பெயரே அடிப்படையாக அமைந்தது. + +காங்கோ வடிநிலம் 4,014,500 சதுர கிலோமீட்டர் (1,550,000 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. காங்கோ நதி முகத்துவாரத்தின் வழியாக வினாடிக்கு 23,000 முதல் 75,000 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 41000 கனமீட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. + +தென் ஆப்பிரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு அடுத்த இரண்டாவது பெரிய மழைக்காடாக உள்ள காங்கோ வனப்பகுதியில் காங்கோ ஆறும் அதன் துணை ஆறுகளும் பாய்கின்றன. அமேசானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீரோட்டமும், அமேசான், பிளேட்டு நதிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய வடிநிலப் பகுதியையும் காங்கோ ஆறு பெற்றுள்ளது. மேலும், உலகின் மிக ஆழமான நதிகளில் காங்கோ நதியும் ஒன்றாகத் திகழ்கிறது . ஏனெனில் இவ்வடிநிலப்பகுதி பூமத்தியரேகைக்கு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. காங்கோ ஆற்றின் ஏதாவது ஒரு பகுதி எப்போதும் மழைக் காலத்தைச் சந்தித்துக் கொண்டே இருப்பதால் ஆற்றின் வெள்ளம் எப்போதும் நிலையாகவே உள்ளது . + +கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் மற்றும் மேட்டுநிலங்கள், டாங்கனிக்கா ஏரி, மவேறு ஏரி போன்றவை காங்கோ ஆற்றுக்கான நீர் ஆதாரங்களாக உள்ளன. சாம்பியாவில் பாயும் சாம்பேசி ஆறு பொதுவாக காங்கோவின் நீர் ஆதாரமாகக் கருதப்படுகிறது, பெரிய மத்திய-ஆப்பிரிக்க மாகாணத்தின் தனித்துவமான நிலக்கூறியல் பிரிவுகளில் ஒன்றான காங்கோ ஆற்று வடிநிலம், ஆப்பிரிக்காவின் அமைந்துள்ள ஒரு பேரளவு நிலக்கூற்றுப் பகுதியாகும். + + + +காங்கோவின் கீழ்பகுதியிலிருந்து மே���்பகுதியை நோக்கி துணை ஆறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. +காங்கோவின் மையப்பகுதியுடன் தொடர்புடைய துணையாறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. +கசாய் ஆற்றுடன் குவாமவித்தில் கலக்கும் பிமி ஆறு*. + +மேற்புற காங்கோ +கிசன்கானிக்கு அருகிலுள்ள போயோமா அருவியின் எதிர்நீரோட்டத்தை லுவாலாபா ஆறு என்கின்றனர். + +லிவிங்சுடன் நீர்வீழ்ச்சி கடலில் இருந்து உள்நுழைவதை தடுக்கிறது என்றாலும் காங்கோவிற்கு மேலே உள்ள பகுதி முழுவதிலும் குறிப்பாக கின்சாசா மற்றும் கிசங்கனி இடையே பகுதி பகுதியாக நடைபெறுகிறது. சமீபகாலம் வரை சில சாலைகள் அல்லது இரயில் பாதைகளுடன் காங்கோ ஆறும் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக விளங்குகிறது. + +ஆப்பிரிக்காவில் காங்கோ ஆறு மிகவும் சக்திவாய்ந்த ஆறு ஆகும். மழைக்காலத்தின் போது காங்கோ ஆற்றிலிருந்து வினாடிக்கு 50,000 கன மீட்டர் (1,800,000 கன அடி) தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது. காங்கோ மற்றும் அதன் துணை ஆறுகளில் இருந்து நீர்மின்சாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. உலகளாவிய நீர்வள ஆற்றலில் 13 சதவிகித மின்சாரத்தை மொத்த காங்கோ வடிநிலப்பகுதி அளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதனால் அனைத்து துணை-சகாரா ஆப்பிரிக்க மின்சக்தி தேவைகளுக்காக போதுமான சக்தியை அளிக்கமுடியும் . + +தற்சமயம் காங்கோ வடிநிலப்பகுதியில் சுமார் நாற்பது நீர்மின்திட்டங்கள் செயற்படுகின்றன. கின்சாகாசாவிற்கு தென்மேற்கில் உள்ள இன்கா நீர்ழ்ச்சி அணை இவற்றுள் மிகப்பெரியதாகும். முதல் அணை கட்டி முடிக்கப்பட்ட 1970 களின் ஆரம்பத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 34,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும் ஐந்து அணைகள் கட்டுமானத்திற்காக முதலில் திட்டமிடப்பட்டது. இன்று வரை இரண்டு அணைக்கட்டுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக பதினான்கு விசையாழிகள் இங்கா I மற்றும் இங்கா II என்ற இவ்விரு திட்டங்களில் உள்ளன . + +பிப்ரவரி 2005 இல், தென் ஆப்பிரிக்கா அரசுக்கு சொந்தமான ஆற்றல் நிறுவனம் எசுகோம், இங்காவின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தது. புதிய அணைகள் கட்டுவது மற்றும் மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்தன. இத்திட்டத்தின் மூலமாக அதிகபட்ச வெளியீடாக 40 கிகாவாட் மின்சாரத்தை அளிக்கும் எனக் கருதப்பட்டது. இது சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் மின்னுற்பத்தியைக் காட்டிலும் இரு மடங்கு ஆகும். + +இத்தகைய புதிய நீர்மின் திட்டங்களால் ஆறுகளில் காணக்கூடிய பல மீன் இனங்களின் அழிந்து போகும் எனக் கருதப்பட்டது. + + + + + +அய்யா பெற்ற விஞ்சை + +அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையின் படி கலியை அழிக்க இறைவன் எடுத்த அவதாரமே அய்யா வைகுண்டர் ஆவார். கலியை அழிப்பதற்காக திருமால் கடலுக்குள் வைத்து வைகுண்டக் குழந்தையை பிறவி செய்து அக்குழந்தைக்கு அக்கலியை அழிப்பதற்கான வழிமுறைகளை அளிப்பதே அகிலத்திரட்டில் விஞ்சை எனப்படுகிறது. இவ்வாறான விஞ்சை மூன்று தடவை வைகுண்டருக்கு வழங்கப்படுகிறது. + +அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஏகப்பரம்பொருளே வைகுண்டராக அவதாரம் எடுக்கின்ற போதும், சிவனிடம், குறோணியை வதம் செய்யும் போது செய்யப்பட்ட வாக்குறுதியின் காரணமாக திருமாலே குறோணியின் ஒவ்வொரு துண்டுகளையும் அழிக்கும் கடமையுடையவராவார். அதனால் தான் கலியை அழிக்கும் பொருட்டு, தனக்கும் மேலான ஏகப்பரம்பொருளுக்கு திருமால் வைகுண்டர் என்னும் பிறவியளிக்கின்ற போதும் அவருக்கும் கலியை அழிப்பதற்கான வரங்களையும், சட்டங்களையும், வழிமுறைகளையும், செயல்முறைகளையும் திருமாலே உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது என்பது மும்மைக் கோட்பாட்டை வலியுறுத்துவோரின் வாதமாகும். + +சிவ ஒளியாகிய பரம்பொருளே வைகுண்டக் குழந்தைக்கு ஆதாரமாகவும் ஆதேயமாகவும் இருப்பதால் தந்தை மகன் என்னும் உறவு வந்தது. ஜீவாத்துமாவின் ஸ்தானத்திலிருக்கும் மகனாகிய வைகுண்டருக்கு பரமாத்துமாவின் ஸ்தானத்திலிருக்கும் நாராயணர் தகப்பனாக இருந்து உபதேசிப்பதே விஞ்சை என்பது சில தத்துவ ஆய்வலர்களின் முற்பாடு. கலியாகிய மாயையை மனிதன் எவ்வாறு வெற்றிகொண்டு பரகதி அடைவது என்பதை விளக்குவதே இவ்விஞ்சை என்பது அத்துவித முதன்மைவாதிகள் துணிபு. + +எது எவ்வாறாயினும் வைகுண்டர் கலியை அழிக்க எதை, எப்போது, எவ்வாறு, செய்ய வேண்டும் என்பது இவ்விஞ்சை மூலம் நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறது. + +சம்பூரணத்தேவனின் ஆன்மாவைத் தாங்கி நின்ற திருமாலின் உபாய மாயக் கூட்டிலிருந்து, நாராயணரின் உத்தரவின்படி ��ம்போரணத்தேவனின் ஆன்மாவுக்கு முக்தி கொடுக்கப்பட்டு அச்சடத்தில் திருமாலின் உள்ளம் சேர்க்கப்பட்டு இரண்டு முனிவர்களால் கடலினுள் எடுத்து செல்லப்படுகிறது. இச்சடலத்தை எடுத்து நாராயணர் அதில் ஏகாபரமான வைகுண்டக் குழந்தையை பிறவி செய்கிறார். பின்னர் அக்குழந்தையை சிறுவனாகவும், பதினாறு வயது வாலிபனாகவும், பின்னர் சம்போரணத்தேவனைத் தாங்கி நின்ற மனித உடலின் வயதாகிய 24 வயதை எட்டெச்செய்கிறார். பின்னர் அப்பாலனுக்கு கலியை அழிப்பதற்கான வழிமுறைகளையும், சட்டங்களையும், வரங்களையும் அருளுகிறார். இவ்விஞ்சையே திருச்செந்தூர் விஞ்சை ஆகும். + +அய்யா வைகுண்டரின் அவதாரத்தைத் தொடர்ந்து வரும் முதல் விஞ்சையான திருச்செந்தூர் விஞ்சையே முக்கிய விஞ்சை என்கின்ற போதும், கலியரசன் வைகுண்டரை சிறை பிடிக்க வரும்போதும், பின்னர் சான்றோரை துவையல் தவசுக்கு அனுப்பிய பிறகும் இரு தடவை கடலுக்குள் தந்தையாகிய நாராயணரை சந்தித்து வைகுண்டர் விஞ்சை பெறுகிறார். இவ்விரண்டு விஞ்சைகளும் அருளப்படுவது முட்டப்பதி கடலுக்குள் வைத்தாகும். + +இது வரை எந்த ஞானிகளாலும், பிரம்ம தேவராலும், தேவர்களாலும், முனிவர்களாலும், ரிஷிகளாலும் அறிந்துகொள்ளப்படாததான விஞ்சையை நாராயணர் வைகுண்டருக்கு அருளுவதாக கூறுகிறார். மேலும் தான் கூறப்போகும் விஞ்சையை அணுவளவும் பிசகாமல் பின்பற்றும் படியும், அப்படி நடத்தி கலி யுகத்தை முடித்து பின்வரும் தர்ம யுகத்தில் வந்தால் அனைவரும் புகழும்படியாக நாம் அனைவரும் சிறப்பாக இருந்து வாழலாம் என்கிறார். + + + + + +அளிப்புரிமை + +அளிப்புரிமை (Copyleft) என்ற சொல், காப்புரிமை (Copyright) என்ற சொல்லிற்கு தத்துவரீதியாக செய்யப்பட்ட மாற்றமாகும். +இது காப்புரிமைச் சட்டத்தையே பயன்படுத்தி ஆக்கமொன்றின் நகல்களை விநியோகிப்பதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறது. + +ஆக்கமொன்றினை, அதன் நகல்களை, அவ்வாக்கத்தின் மாற்றம் செய்யப்பட்ட நகல்களை விநியோகிப்பதற்கான சுதந்திரத்தையும், அவ்வாறு விநியோகிக்கப்பட்ட நகல்களும் அதேமாதிரியான சுதந்திரத்தை கொண்டிருப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. + + + + + +சில்லாலை + +சில்லாலை இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கே இந்தியப் பெருங்க்கடலின் கரையில் சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஊர். சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வூரின் எல்லைகளாக மாதகல், பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, சுழிபுரம் என்ற ஊர்கள் அமைந்துள்ளன. + +சில்லையூர் மக்கள் கிறிஸ்தவ மதம் (கத்தோலிக்க திருச்சபை), இந்து மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். பனை, தென்னை, சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, வாழை, கமுகு, மா, பலா, கனிதருமரங்கள், வெங்காயம், மிளகாய், மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது. + +1687 ஆண்டு பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த முத்திப்பேறு பெற்ற யோசப் வாஸ் அடிகளாருக்கு சில்லையூர் மக்கள் புகலிடம் வழங்கி அவரின் வழிநடத்தலுடன் ஆன்மீகப்பணியை தொடர்ந்தார்கள். இக்கிராமம் 34க்கு மேற்பட்ட குருமார்களையும் 40க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிமார்களையும் 10க்கு மேற்பட்ட இல்லறத்தொண்டர்களையும் இறைபணிக்கு அளித்துள்ளது. + +சில்லையூரின் மத்தியில் வானுயர்ந்த கோபுரங்களுடன் காட்சியளிப்பது சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைச்செல்வியின் ஆலயம். இவ்வாலய விழாவை சில்லையூர் மக்கள் மரியன்னையின் விண்ணேர்ப்பு விழாவாக ஆவணி 15ந் திகதி மிக சிறப்பாகக் கொண்டாடுவார்கள். மணியோசையுடன் கூடிய கொடியேற்றம், திரைப்பாடல், விருத்தங்களுடன் நவநாள் வழிபாடுகள், நற்கருணைப்பவனிப் பெருவிழா, கூட்டுத்திருப்பலி, கரோலைப்பாடல்களுடன் திருச்சுருப ஊர்வலம் என்பன நடைபெற்ற பின், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள், கலை கலாச்சார போட்டிகளின் இறுதியில் நாட்டியம், நாடகம், சில்லையூரின் பழமையும் பெருமையும் வாய்ந்து இன்றும் புதுமையுடனும், புகழுடனும் விளங்கும் நாட்டுக்கூத்து சில்லையூர் கலைஞர்களால் அரங்கேற்றப்படும். + +"எல்லோரும் கைவிட்டால் சில்லாலை வைத்தியம்" என்று ஒரு பழமொழி உண்டு. சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைத்தாயை "மருந்து மாதா" என்றும் அழைப்பார்கள். அதற்கமைய அநேக பரம்பரை வைத்தியர்கள் இங்கு உள்ளனர். நாடி பார்த்து வருத்தத்தைக் கண்டறிந்து வாகடம் ஏடு பார்த்து மருந்தறிந்து மூலிகைகள், தாவரஇலை, பட்டை, வேர் போன்றவற்றைக் கொண்டு வர���த்தத்தை மாற்றும் சித்த ஆயுள்வேத வைத்தியர் பலர் உள்ளனர். + +குழந்தைப்பிள்ளை வைத்தியத்துக்கு தலைசிறந்த வைத்தியர்கள் இங்கு உள்ளனர். பத்துத் தலைமுறை தாண்டிய எஸ்.பி. இன்னாசித்தம்பி பரம்பரை, எஸ்.பி. அத்தனாசியார் வழித்தோன்றல்கள், இலங்கையின் புகழ்மிக்க வைத்தியர்களாக இருந்து இன்று உலகளாவிய ரீதியில் வைத்திய துறையில் பெருமையுடன் விளங்குகின்றனர். + + + + + + +ஆ. கந்தையா + +ஆ. கந்தையா (மார்ச் 19, 1928 - அக்டோபர் 3, 2011) ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர். + +கந்தையா யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மறவன்புலவு என்ற ஊரில் ஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், நுணாவில் மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் (1948-49) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். 1953 முதல் 1955 வரை கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். + +1956 இல் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் மு. வரதராசன் போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் "தந்தையின் பரிசு" என்னும் நூலை எழுதியிருக்கிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார். + +1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரா��� எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். + +தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது. + +மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியவர். + +மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய சிறப்பு ஒலிபரப்புச் சேவைக்காக கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார். + + + + + + + + +என்றி ஃபயோல் + +ஹென்றி ஃபயோல் ("Henri Fayol", 1841 - 1925) ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். உலோகக் கம்பனி ஒன்றின் பொறியியலாளராகக் கடமையாற்றியவராவார். மரபுவழிப் பாடசாலையினைத் தொடக்கி வைத்தவர்களுள் இவரும் ஒருவராகக் காணப்படுகின்றார்.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் மிகுந்த தாக்கமுடையவனாக இருந்தன. 1917 இல் Administration industrielle et générale என்ற நூலை வெளியிட்டார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1949 இல் General and Industrial Management என்ற தலைப்பில் வெளிவந்தது. + +நிறுவனம்மொன்றின் முகாமைத்துவம் சரிவர இயங்க சில தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என ஹென்றி ஃபயோல் கோடிட்டுக்காட்டுகின்றார். அவையாவன: + +பயோல், அனைத்து முகாமைத்துவ நிறுவனங்களிலும் பயன்படுத்தும் வண்ணம் தனது முகாமைத்துவம் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். + +பயோலின் கருத்தின்படி நிருவாகத் தத்துவங்கள் உலகளாவிய தன்மை கொண்டவை அவை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரயோகிக்கக் கூடியவை. இதில் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்துதல், கட்டளை பிறப்பித்தல் போன்ற விடயங்கள், அனைத்து முகாமைத்துவத்திற்கும் பொதுவான விடயங்களாகும். + +நிறுவனமொன்றின் நடவடிக்கைப் பிரிப்பு (Division of Industrial Activities) - தொழில் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளை ஆறு வகைகளாகப் பிரித்து விளக்கமளிக்கின்றார். தொழில்நுட்பம், வாணிபம், நிதிநிலைமை, பாதுகாப்பு, கணக்குவைப்பு, முகாமைத்துவம் என்பனவே அவையாகும். + +வினைத்திறனுள்ள முகாமையாளர் தரம் (Qualities of An Effective Manager) - ஆற்றல் மிக்க முகாமையாளர் ஒருவருக்கு ஆரோக்கியம், ஒழுக்கம், பொதுக்கல்வி, தனித்துவமிக்க அறிவு, அனுபவம் ஆகிய பண்புகளும் அதனுடன் இணைந்த பயிற்சிகளும் அவசியமாவை என பயோல் குறிப்பிடுகின்றார் + +முகாமைத்துவச் செயற்பாடுகள் (Functions of Management) - திட்டமிடல், ஒழுங்கமைத்தல், அதிகாரம் செய்தல்,ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் என முகாமைத்துவத்தின் கூறுகளை ஐந்து பிரிவுகளில் பயோல் விளக்குகின்றார். + +முகாமைத்துவ மூலதத்துவம் (Principals of Management) – பயோல் அனைத்துவித நிறுவனங்களிலும், முகாமையாளர்களாலும் பின்பற்றக் கூடிய 14 முகாமைத்துவத் தத்துவங்களைக் குறிப்பிடுகின்றார். தொழில் பகுப்பு, அதிகாரபலம், ஒழுக்கநெறி, ஒழுங்கமைந்த கட்டளை, ஒருங்கிணைந்த வழிநடத்தல், கீழ்ப்பணியாளர் அக்கறை, ஊதியம், பன்முகப்படுத்தல், அதிகார ஒழுங்கு, ஒழுங்கு, சமதன்மை, நிலையான பதவிக்காலம், தொடக்கம், ஒற்றுமையே பலம் பேன்ற அவருடைய தத்துவங்கள் தொழிலுக்கு மட்டுமல்லாமல் அரசியல், மதம், இராணுவம் மற்றும் பிற அமைப்புக்களுக்கும் கூட பொருந்தும் என அவர் கருதுகின்றார். + + + + +ஐம்பத்தைந்து ரிஷிகள் + +ஐம்பத்தைந்து ரிஷிகள் என்பவர்கள் அய்யாவழி புராண வரலாற்றின் படி பிரம்ம லோகத்திலிருந்து பூலோகத்தில் பிறவி செய்யப்பட்ட காப்பிய பாத்திரங்கள் ஆவார்கள். இவர்களை பொதுவாக "ஐம்பத்தைது பிரம்மலோக ரிஷிகள்" எனவும் அழைப்பர். + +அய்யாவழி புராண வரலாற்றின் மூல நூலாகிய அகிலத்திரட்டின் படி நாராயணர் பூலோகத்தில் வைகுண்ட அவதாரம் எடுப்பதற்கு முன் ஏழு லோகத்தாரையும் பூலோகத்தில் சான்றோர் குலத்தில் பிறவி செய்கிறார். அப்போது முன்பு செய்த ஒரு குற்றத்தால் ஏற்பட்ட ஒரு சாபத்தினால் பிரம்ம லோகத்திலுள்ள ஐம்பத்தைந்து ரிஷிகள் பூலோகத்தில் ஏற்கனவே பிறவி செய்யப்பட்டதைப் பிரம்ம லோகத்தார்கள் சுட்டிக் காட்டி, அவர்கள் பூலோகத்தில் ஒவ்வொரு தேசத்திலும் அலைந்து திரிவதைபோல் நாங்களும் அங்கு பிறக்க வேண்டுமே என வேதனையுடன் தெரிவித்தனர். + +அவர்களைத் தேற்றிய திருமால், அவர்களுக்கு அந்த ரிஷிகளின் பூலோக வாழ்க்கை முறைகளை விளக்குகிறார். பின்னர் சோழ நாடு என்னும் ஒரு சிறந்த நாட்டில், எனது பாலகனான் வைகுண்டர் இவர்களின் செயல்களுக்கு பிரதி பலனளிக்கத் தோன்றுவார் எனவும் கூறுகிறார். மேலும் அவர் இ���ர்களது வரங்களை ஒப்படைக்கச் சொல்லி அவர்களின் தவறுகளுக்கு தகுந்த தண்டனை கொடுப்பர் எனவும் கூறுகிறார். மேலும் அப்பாலனின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார். + +மேலும் அந்த ரிஷிகள் பல வித விந்தைகளை செய்தும் கலியில் உழன்று தவித்து உலக இன்பத்தோடு கொஞ்சி விளையாடி சில நாட்கள் உலகில் வாழ்ந்து பின் பிரம்மலோகம் வந்து சேர்வார்கள். அவர்களை நான் வதைத்து பின்னர் வரங்கொடுத்து உங்கள் இனத்தோடு வாழ வைப்பேன், என கூறிய திருமால் அந்த ஐம்பத்தைந்து ரிஷிகளின் வாழ்க்கை முறையை கூறினார். பின்னர் அவர்களின் அற்புத அடையாளங்களையும் விளக்கி, இவ்வடையாளங்களால் அவர்களை இனங்கண்டுகொள்ளுங்கள் எனவும் கூறுகிறார். + +
+ + + முப்பத்தொன்ட்ரான்சன்னாசி - கூர்மையுள்ள காது கொஞமும் கெஅலது ஊமையெனவெ திரிவான்/ + +
+ +றிச்சர்ட் பிரான்சன் + +றிச்சர்ட் பிரான்சன் ( பிறப்பு ஜூலை 18, 1950) உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆங்கிலேயரான இவர் வேர்ஜின் குழுமத்தின் தலைவர். இந்த வேர்ஜின் குழுமத்தின் கீழ் 400 நிறுவனங்கள் உள்ளன. இவருக்கு 1999 இல் சேர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது 16 ஆம் வயதில் தனது முதல் தொழிலாக "ஸ்டுடண்ட்" ("Student") எனும் பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் மதிப்பீட்டின் படி 2012 ஆம் ஆண்டில் இவரது சொத்தின் மதிப்பு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் பணக்காரர்கள் வரிசையில் இவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார். + + + + +போர்த்துகல் + +போர்த்துகல் (), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு ("Portuguese Republic", ) ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், "போர்ட்டசு கேல்" என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான "போர்ட்டோ" என்பதில் இருந்து பெறப்பட்டது. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும். + +தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், விசிகோதியர், சுவேபியர் ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் ஐபீரியத் தீவக்குறை முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் உலகப் பேரரசை நிறுவியதுடன், உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் செயுட்டாவைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் மாக்கூவுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது. + +போர்த்துகல் மிகவும் கூடிய மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது. இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒ���்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது. + +போர்த்துகலின் முந்திய வரலாறு, ஐபீரியத் தீவக்குறையின் பிற பகுதிகளின் வரலாற்றுடன் சேர்ந்தே இருந்தது. இப்பகுதியில் குடியேறியிருந்த முன்-செல்ட்டுகள், செல்ட்டுகள் ஆகியோரிலிருந்து, கலீசிகள், லுசித்தானியர், செல்ட்டிசிகள், சைனெட்டுகள் போன்ற இனத்தினர் தோன்றினர். போனீசியரும், கார்த்தசினியரும் இப்பகுதிக்கு வந்தனர். இசுப்பானியாவின் பகுதிகளான லுசித்தானியாவும், கலீசியாவின் ஒரு பகுதியும் உரோமக் குடியரசினுள் அடங்கியிருந்தன. கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் சுவெபி, புரி, விசிகோத் ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர். பின்னர் இப்பகுதிகளை முசுலிம்கள் கைப்பற்றிக்கொண்டனர். + +தொல்பழங்காலத்தில் இன்றைய போர்த்துகல் இருக்கும் பகுதியில் நீன்டர்தால்கள் வாழ்ந்துவந்தன. பின்னர் ஓமோ சப்பியன்கள், எல்லைகள் இல்லாதிருந்த வடக்கு ஐபீரியத் தீவக்குறைப் பகுதிகளில் அலைந்து திரிந்தனர். இச் சமூகம் ஒரு வாழ்வாதாரச் சமூகமாகவே இருந்தது. இவர்கள் வளமான குடியேற்றங்களை உருவாக்காவிட்டாலும், ஒழுங்கமைந்த சமூகமாக இருந்தனர். புதிய கற்காலப் போர்த்துகலில், மந்தை விலங்கு வளர்ப்பு, தானியப் பயிர்ச்செய்கை, மழைநீர் ஏரி அல்லது கடல் மீன்பிடித்தல் போன்றவற்றில் முயற்சிகள் செய்யப்பட்டன. + +கிமு முதலாவது ஆயிரவாண்டின் தொடக்க காலத்தில், மைய ஐரோப்பாவில் இருந்து பல அலைகளாக போர்த்துகலுக்குள் வந்த செல்ட்டுகள் உள்ளூர் மக்களுடன் மணம் கலந்ததால் பல பழங்குடிகளை உள்ளடக்கிய பல்வேறு இனக்குழுக்கள் உருவாயின. இவற்றுள் முக்கியமானவை, வடக்கு போர்த்துகலைச் சேர்ந்த கலைசியர் அல்லது கலீசி, மையப் போர்த்துகலைச் சேர்ந்த லுசித்தானியர், அலென்டசோவைச் சேர்ந்த செல்ட்டிசி, அல்கார்வேயைச் சேர்ந்த சைனெட்டுகள் அல்லது கோனீ எனப்படும் இனக்குழுக்கள் ஆகும். + +ஐபீரியத் தீவக்குறையினுள் உரோமரின் முதல் ஆக்கிரமிப்பு கிமு 219ல் இடம்பெற்றது. 200 ஆண்டுகளுக்குள் முழுத் தீவக்குறையுமே உரோமக் குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது. உரோமரின் எதிரிகளான க��ர்த்தசினியர் கரையோரக் குடியேற்றங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். +இன்று போர்த்துகலாக இருக்கும் பகுதிகளை உரோமர் கைப்பற்றுவதற்கு ஏறத்தாழ 200 ஆண்டுகள் பிடித்ததுடன், பல இளம் போர்வீரர்களும் தமது உயிர்களை இழந்தனர். அத்துடன் கைதிகளாகப் பிடிபட்டவர்களுள் பேரரசின் பிற பகுதிகளில் விற்கப்படாதவர்கள், சுரங்கங்களில் அடிமைகளாக விரைவான சாவைத் தழுவினர். கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது. லுசித்தானியரும், பிற தாயகப் பழங்குடிகளும் விரியாத்தசுவின் தலைமையில் மேற்கு ஐபீரியாவைக் கைப்பற்றிக்கொண்டனர். + +உரோம், ஏராளமான படைகளையும், மிகச் சிறந்த தளபதிகளையும் கலகத்தை அடக்குவதற்காக அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர். உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர். விரியாத்தசுவைக் கொல்வதற்காக அவனது கூட்டாளிகளுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். கிமு 139ல் விரியாத்தசு கொல்லப்பட்டான். தௌலாத்தசு என்பவன் தலைவனானான். + +ரோம் ஒரு குடியேற்றவாத ஆட்சியை அங்கே நிறுவியது. விசிகோத்தியக் காலத்திலேயே லுசித்தானியாவின் உரோமமயமாக்கம் முழுமை பெற்றது. கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. லுசித்தானியர் தமது சுதந்திரத்தை இழந்து அடக்கப்படுபவர்கள் ஆயினர். பின்னர், கலீசியா என்று அழைக்கப்பட்ட, லுசித்தானியாவின் வடக்கு மாகாணம் உருவானது. இன்று பிராகா என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது. இன்றும் காசுட்ரோ என அழைக்கப்படும் மலைக் கோட்டைகளின் அழிபாடுகளும் பிற காசுட்ரோ பண்பாட்டு எச்சங்களும் தற்காலப் போர்த்துகல் முழுவதும் காணப்படுகின்றன. ஏராளமான உரோமர் காலக் களங்கள் இன்றைய போர்த்துகலில் பரவலாக உள்ளன. சில நகர் சார்ந்த எச்சங்கள் மிகவும் பெரியவை. கொனிம்பிரிகா, மிரோபிரிகா என்பன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். + +கிபி 712ல் உமயாட் கலீபகம் ஐபீரியத் தீவக்குறையைக் கைப்பற்றியதில் இருந்து 1249ல் போத்துகலின் மூன்றாம் அபோன்சோ திரும்பக் கைப்பற்றும் வரை ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகள் போர்த்துகல் கலீபகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. + +விசிகோத்துகளை சில மாதங்களிலேயே முறியடித்த ���மயாட் கலீபகம் தீவக் குறையினுள் விரைவாகத் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. கிபி 711ல் தொடங்கி இன்றைய போர்த்துகலுக்குள் அடங்கும் நிலப்பகுதிகள், இந்தியாவின் சிந்து நதி முதல் பிரான்சுக்குத் தெற்கேயுள்ள பகுதிகள் வரை பரந்திருந்ததும் டமாசுக்கசைத் தளமாக கொண்டிருந்ததுமான உமயாட் கலீபகத்தின் பேரரசின் பகுதியாயின. 750ல் பேரரசின் மேற்குப் பகுதி தன்னைக் கலீபகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு முதலாம் அப்த்-அர்-ரகுமான் தலைமையில் கோர்தோபா அமீரகமாக உருவாகியது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 929 ஆம் ஆண்டில், இந்த அமீரகம் கோர்தோபா கலீபகமாக மாறியது. 1031 ஆம் ஆண்டில் இது தைபா இராச்சியங்கள் எனப்பட்ட 23க்கும் அதிகமான சிறிய இராச்சியங்களாகப் பிரிந்தது. + +தைபாக்களின் ஆளுனர்கள் தம்மைத் தமது மாகாணங்களுக்கு எமிர்களாக அறிவித்துக்கொண்டு வடக்கே இருந்த கிறித்தவ இராச்சியங்களுடன் அரசுமுறை உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். போர்த்துகலின் பெரும்பாலான பகுதிகள் அப்தாசிட் வம்சத்தின் படாயோசு தைபாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. + +அலன்டாலசு குரா எனப்படும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கர்ப் அல் அன்டாலசு மிகவும் பெரிதாக இருந்தபோது 10 குராசுகளை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு குராவுக்கும் தனியான தலைநகரம் இருந்தது ஆளுனரும் இருந்தார். அக்காலத்தில் இருந்த முக்கியமான நகரங்கள் பேசா, சில்வெசு, அல்காசர் டோ சல், சாந்தாரெம், லிசுபன், கொயிம்பிரா என்பன. + + + + + +புவெனஸ் ஐரிஸ் + +புவெனஸ் ஐரிஸ் ("Buenos Aires") அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.தென் அமெரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ரியோ டே பிலாட்டா முகத்துவாரத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.புவெனஸ் ஐரிஸ் "நிதானமான காற்று" அல்லது "நல்ல காற்றுகள்" என மொழிபெயர்க்கப்படலாம்.புவெனஸ் ஐரிஸ் நகரம் புவெனஸ் ஐரிஸ் மாகாணத்தின் பகுதியோ அல்லது மாகாணத்தின் தலைநகரமோ அல்ல; மாறாக, அது ஒரு தன்னாட்சி மாவட்டமாகும்.1880 ஆம் ஆண்டில், பல தசாப்தங்களாக்கு நடந்த அரசியல் மோதல்களுக்குப் பின்னர், புவெனஸ் ஐரிஸ் கூட்டாட்சி புவெனஸ் ஐரிஸ் மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டது.பெல்கிரானோ மற்றும் ப்லோரெஸ் நகரங்களை உள்ளடக்கிய நகர எல்லைகளை கொண்டுள்ளது;இப்போது இரு நகரங்களும் புவெனஸ் ஐரிஸ் நகரின் சுற்றுப்புறங்களாக உள்ளது.1994 அரசியலமைப்பு திருத்தம் புவெனஸ் ஐரிஸ் நகரத்திற்கு சுயாட்சியை வழங்கியது, அதன் உத்தியோகபூர்வ பெயர்: சியுடாட் ஆட்டோனோமா டி புவெனஸ் எயர்ஸ் (புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்). புவெனஸ் ஐரிஸ் ஒரு 'ஆல்பா நகரம்' என்று அழைக்கப்படுகிறது. 'வாழ்க்கை தரத்தில் உலக நகரங்களில் 81 வது இடத்தை புவெனஸ் ஐரிஸ் பெற்றது.புவெனஸ் ஐரிஸ் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் பாதுகாக்கப்பட்ட ஸ்பானிஷ் / ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார வாழ்க்கைக்கு பெயர்போன ஊர் புவெனஸ் ஐரிஸ். புவெனஸ் ஐரிஸ் 1951 ஆம் ஆண்டில் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டையும், 1978 FIFA உலகக் கோப்பையில் இரண்டு இடங்களையும் வழங்கியது. 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2018 G20 உச்சிமாநாடு ஆகியவை புவெனஸ் ஐரிஸ் நகரத்தில் நடக்கவுள்ளது. +2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,891,082 பேர் இந்நகரத்தில் வசிக்கின்றனர். 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் மட்டும் மக்கள் தொகை 13,147,638 ஆகும்.இந்நகரின் முக்கிய பகுதிகளில் சதுர கிலோமீட்டருக்கு 13,680 மக்கள் (சதுர மைல்களுக்கு 34,800) மக்கள்தொகை அடர்த்தி உள்ளது. ஆனால் புறநகர்ப்பகுதிகளில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 2,400 (சதுர மைலுக்கு 6,100) மட்டுமாகவே உள்ளது.புவெனஸ் ஐரிஸின் மக்கள்தொகை 1947 ஆம் ஆண்டிலிருந்து 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளுக்கு மெதுவாக இடம்பெயர்வு ஆகியவையே காரணங்களாக பாவிக்கப்படுகிறது.நகரின் குடியிருப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 30% ஒற்றை குடும்ப வீடுகளில் வாழ்கின்றனர். +அர்ஜென்டினாவின் நிதி, தொழில்துறை மற்றும் வர்த்தக மையமாக புவெனஸ் ஐரிஸ் நகரம் உள்ளது. மெட்ரோ புவெனஸ் ஐரிஸ், ஒரு நன்கு அறியப்பட்ட ஆய்வின் படி, உலக நகரங்களில் 13 வது பெரிய பொருளாதார நகரமாக உள்ளது. +புவெனஸ் ஐரிஸ் துறைமுகம் தென் அமெரிக்காவில் உள்ள பரபரப்பான துறைமுகத்தில் ஒன்றாகும்; ரியோ டி லா ப்ளாடாவின் வழியே செல்லும் ஆறுகள் வடகிழக்கு அர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே மற்றும் பராகுவே ஆகியவையுடன் இத்துறைமுகத்தை இணைக்கின்றன.புவனோஸ் ஏரிஸ் துறைமுகம் ஆண்டுதோறும் 11 மில்லியன் வருவாய் டன்களை கையாள்கிறது, நகரத்தின் தெற்கே தென்பகுதியிலுள்ள டோக் சூடு மற்றொரு 17 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கையாள்கிறது. துறைமுகத்துடன் தொடர்புடைய வரி கடந்த காலத்தில் பல அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது, இதில் மோதல் 2008 அன்று, ஏற்றுமதி வரிகளை உயர்த்தியபின், விவசாயத் துறையில் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது. +நகரின் சேவைத் துறை சர்வதேச தரத்தினால் பல்வகைப்படுத்தப்பட்டு நன்கு வளர்ந்திருக்கிறது மற்றும் அதன் பொருளாதாரம் 76% (அர்ஜென்டினாவின் 59% உடன் ஒப்பிடுகையில்).விளம்பரம், குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் சேவைகளின் ஏற்றுமதிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள் துறை மிகப்பெரியதாகும், மேலும் நகரத்தின் பொருளாதாரத்தில் 31% பங்களிப்பு இதனுடையதே ஆகும். + +மினிஸ்ட்ரோ பிஸ்டரினி சர்வதேச விமான நிலையம், ஈஜீசா சர்வதேச விமான நிலையம் எனவும் அறியப்படுகிறது. இது உயரிய புவெனஸ் ஐரிஸ் பகுதியில் உள்ள ஈஜீசா பர்டிடோவில் அமைந்துள்ளது இந்த சர்வதேச விமான நிலையம்.இது 22 கிலோமீட்டர் (14 மைல்) அர்ஜென்டீனாவின் தலைநகரான புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும், இது அர்ஜென்டினாவில் 85% சர்வதேச போக்குவரத்தை கையாளுகிறது. 2007 ஆம் ஆண்டில் ஸ்கைட்ராக்ஸால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மினெஸ்ட்ரோ பிஸ்டினரினி விமான நிலையம் "இப்பகுதியில் உள்ள 2007ன் சிறந்த விமான நிலையம்" என வாக்களித்தது.இது 2010 ஆம் ஆண்டில் கோமொடோரோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தாலும் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது. +கால்பந்து அர்ஜென்டீனாவின் மக்களுக்கான ஒரு உற்சாகமான விளையாட்டா��ும்.உலகத்தின் எந்த நகரத்தினையும் விட அதிகமான கால்பந்து அணிகளைக் கொன்டது (24 தொழில்முறை கால்பந்து அணிகள் மேலே) புவெனஸ் ஐரிஸ், இதன் பல அணிகளும் முக்கிய லீக்கில் விளையாடி வருகின்றன. போகா ஜூனியர்ஸ் அணி மற்றும் ரிவர் ப்ளேட் அணி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி இங்கு மிகவும் சிறப்புவாய்ந்த போட்டியாக அர்ஜென்டீனியர்கள் கருதுகின்றனர், இந்த போட்டியை "சூப்பர் கிளாசிகோ" என்று அழைக்கப்படுகிறது. தி ஒப்சேவர் எனும் ஆங்கில செய்தி தாள் வெளியிட்ட ஓர் செய்தி: "நீங்கள் இறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 50 விளையாட்டு பற்றிய விஷயங்களில் ஒன்று" இந்த இரு அணிகளுக்கிடையில் நடக்கும் ஒரு போட்டியைக் காண்பது. +கால்பந்ந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, புவெனஸ் ஐரிஸின் தெற்கில் அமைந்துள்ள லானுஸ் பார்டிடோவில் பிறந்தார், எல்லா காலத்திலும் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக பரவலாக புகழப்படுகிறார் மரடோனா.அர்ஜென்டினா தொழில்முறை குத்துச்சண்டைகளில் பல புகழ்பெற்ற உலக சாம்பியன்களுக்கான சொந்த நாடு.இந்நாட்டில் இந்நகரில் பிறந்த கார்லோஸ் மோன்ஸன் உலக புகழ்பெற்ற மிடில்வெயிட் சாம்பியனாக இருந்தார்.தற்போதைய உலக மிடில்வெயிட் சாம்பியன் செர்ஜியோ மார்டினெஸ் அர்ஜென்டினாவில் இருந்து வந்தவ்ர் ஆவார். செர்கியோ மார்டினெஸ், ஒமர் நார்வாஸ், லூகாஸ் மத்தீஸ், கரோலினா டூர், மற்றும் மார்கோஸ் மெய்டனா ஆகிய ஐந்து நவீன-உலகத்தின் குத்துச்சண்டை சாம்பியன்களும் அர்ஜென்டினாவை சொந்த நாடாக கொண்டவர்கள்.புவெனஸ் ஐரிஸ் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டுக்களை (1951) நடத்தியது மற்றும் பல உலக சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அவை:1950 மற்றும் 1990 கூடைப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப், 1982 மற்றும் 2002 ஆண்கள் கைப்பந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் மறக்கமுடியாத 1978 ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டி எஸ்டடியோ மோனூமண்டல் அரங்கில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 25 ஜூன் 1978 இல் நடைப்பெற்றது. அர்ஜென்டினா நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஃபிஃபா உலக கோப்பையை வெண்றது.இந்நாட்டைச் சார்ந்த ஜுவான் மானுவல் ஃபாங்கியோ ஐந்து ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அர்ஜெண்டினாவில் முதல் ரக்பி யூனியன் போட்டியானது 1873 ஆம் ஆண்டில் புவ���னஸ் ஐரிஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் விளையாடப்பட்டது. ரகுபி புவெனஸ் ஐரிஸில் பரவலாக புகழ் பெற்றுள்ளது, குறிப்பாக நகரத்தின் வடக்கில். இந்த பகுதிக்கு சொந்தமான எண்பதுக்கும் மேற்பட்ட ரக்பி கிளப்கள் உள்ளன. + +ப்யூனோஸ் எயர்ஸில் 280 க்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்டுள்ளது. இது உலகில் மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு திரையரங்குகளைக் கொண்டுள்ளதால் உலக திரையரங்குகளின் தலைநகரென வர்ணிக்கப்படுகிறது.நகரின் திரையரங்குகளில் இசை, பாலே நடனம், நகைச்சுவை மற்றும் சர்க்கஸ்கள் ஆகியவற்றிலிருந்து எல்லாவற்றையும் காட்டுகின்றன. + + + + +உரத்துப்பேச (நூல்) + +உரத்துப் பேச ஆழியாள் என்னும் புனை பெயரில் எழுதிவரும் ஆசுத்திரேலியாவில் வாழும் ஈழத்துப் பெண் எழுத்தாளர் மதுபாஷினி ரகுபதியின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இந்நூல் 2000 ஆவது ஆண்டில் ஆசுத்திரேலியாவில் வெளியிடப்பட்டது. + + + + +வோல்ட்டு + +வோல்ட்டு என்பது மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் ஒரு மின் அலகு. இதன் குறியீடு (V). ஓர் (Ω) ஓம் (மின்னியல்) மின்தடையுள்ள ஒன்றில் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் பாயத் தேவையான மின்னழுத்தம் என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு கூலம் மின்மம் (மின்னேற்பு), நகர்ந்து ஒரு ஜூல் அளவு வேலை (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு வாட் அளவு மின்திறன் செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ வோல்ட்டா அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் மின்கலங்கள் ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது. + +சில பழக்கமான வோல்ட்டு அழுத்தம் தரும் மின்வாய்கள்: + +மின்னழுத்தத்தைத் மிகத் துல்லியமாக வரையறை செய்ய ஜோசப்சன் விளைவு என்னும் குவாண்ட்டம் நுண் இயற்பியலின் அடிப்படையில் வரையறை செய்துள்ளார்கள். இந்த ஜோசப்ப்சன் விளைவு (Josephson Effect) என்பது இரு மின் மீ்கடத்திகளின் (superconductors) இடையே ஒரு மிக மெல்லிய வன்கடத்தி (கடத��தாப்பொருள்) இருந்தால், அவ் வன்கடத்தியை ஊடுருவிப் பாயும் புழைமின்னோட்டம் (tunneling current) பற்றியதாகும். வோல்ட்டு அலகைத் துல்லியமாக நிறுவ அமெரிக்காவிலுள்ள NIST என்னும் நிறுவனம் ஜோசப்சன் விளைவு நிகழும் ஒரு நுண் ஒருங்கிணைப்புச் சுற்றுச் சில்லு செய்துள்ளது. NIST (National Institute of Standards and Technology) என்னும் நிறுவனம் தரம் நிறுவவும், தேறவும், அவைகளுக்குமான தொழில் நுட்பங்களை ஆயவும் நிறுவியதாகும். + + + + +அனைத்துலக முறை அலகுகள் + +அனைத்துலக முறை அலகுகள் ("International System of Units") என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய "Système International d'Unités" என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன. + +இந்த SI முறை அலகுகள் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அடிப்படையில் ஆன மெட்ரிக் முறையிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை. + +மெட்ரிக் அளவுகள் 1790 பிரெஞ்சுப் புரட்சியின் போது கொண்டுவரப்பட்டது ஆகும். 1830 ஆம் ஆண்டில் காஸ் என்பவர் ஒத்திசைவு அமைப்பு என்பதனை உருவாக்கினார். அதற்கு அடிப்படைகளாக இருந்தவையாவன + +அனைத்துலக முறை அலகுகள் பலவும் முன்னொட்டுகள் கொண்டவை. அலகுகள் இரு பிரிவாக உள்ளன. முதலில் அடிப்படையான ஏழு அலகுகள் உள்ளன. இவை தவிர SI அலகுகள் அல்லாதன சிலவும் SI அலகுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடியவை உள்ளன, இவை வழிநிலை அளவுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடிப்படை அலகுகளைக்கொண்டு பிற அலகுகள் வருவிக்கப்படுகின்றன. அடிப்படையான ஏழு அலகுகளில், ஆம்பியரும் கெல்வினும் அறிவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது தலைப்பு அல்லது பெரிய (Captial) எழுத்துக்களில் குறிப்பிடப்படும். ஏனையவை ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களால் குறி���்பிடப்படுகின்றன. ஏழு அடிப்படை அளவுகளில் இருந்து 22 வழிநிலை அளவுகள் தருவிக்கப் படுகின்றன. + +அடிப்படை அனைத்துலக முறைகள் என்பது ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போன்றது. மற்ற அனைத்து அலகுகளும் இதிலிருந்து பெறப்பட்டவை ஆகும். மேக்ஸ்வெல் என்பவர் முதன்முதலாக ஒத்திசைவு அமைப்பினை விவரிக்கும்  போது மூன்று அளவுகள் அடிப்படை அலகுகளாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார். + +அவையாவன, + +ஆரையன் மற்றும் திண்ணாரையன் ஆகியவை 1995ஆம் ஆண்டு வரை துணை அளவுகளாக இருந்தன, அதன் பிறகு அவை வழிநிலை அளவுகளாக மாற்றப்பட்டுள்ளன. + +சில அடிப்படை அலகுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் மதிப்புகளால் வழிநிலை அளவுகள் பெறப்படுகின்றன. இங்கு சில வழிநிலை அளவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. +அனைத்துலக முறை அலகுகளின் (SI) தரம் செய்யப்பட்ட முன்னொட்டுகள் + + +அலகுகளை ஆங்கிலத்தில் குறியீடுகளாகவோ முழுமையாகவோ பயன்படுத்தும் போது சில மரபுகளும் விதிகளும் பின்பற்றப்படுகின்றன. அவை, + + + + + + + + + + + + + + +புதிய ஏற்பாடு + +புதிய ஏற்பாடு ("New Testament") அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும். முதல் பகுதி "பழைய ஏற்பாடு" என்று அழைக்கப்படுகிறது. "ஏற்பாடு" என்னும் சொல் உடன்படிக்கை, "ஒப்பந்தம்" என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர். + +இந்த ஒப்பந்தத்தைக் கிறித்தவர்கள் "பழைய" உடன்படிக்கை என்று அழைக்கின்றனர். ஏனென்றால் கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு "புதிய" உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. + +எனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ள���்பட்டதும், கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்பர். கிறிஸ்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது. + +பழைய ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாடும் பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன . + +புதிய ஏற்பாட்டின் மூல பாடம் (செப்துவசிந்தா) என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது. + +பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறித்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பித்து, அவருடைய போதனைகளையும் அவர் புரிந்த அதிசய செயல்களையும் எடுத்துரைப்பதோடு, அவருடைய சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் விளக்குகிறது. தமது போதனையை எல்லா மக்களுக்கும் அறிவிக்க இயேசு தம் சீடர்களை திருத்தூதர்களை அனுப்பினார். + +பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய திருவிவிலியம் என்னும் நூல் தொகுதி கிறித்தவ இறையியல் படிப்பின் ஆதாரமாகத் திகழ்கிறது. வெவ்வேறு கிறித்தவ சபைகளின் வழிபாட்டில் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. விவிலியத்தின் தாக்கம் சமயம், தத்துவம், மற்றும் அரசியல், இசை, ஓவியக் கலை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் வெளிப்படுகின்றது. + +புதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறித்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் ஆகியோர் கிறித்தவ நற்செய்தியைப் பரப்பிய வரலாற்றை எடுத்துரைக்கிற திருத்தூதர் பணிகள் என்னும் ஒரு நூலும், படிப்பினை வழங்கும் இருபத்தொரு மடல்களும், மற்றும் ஒரு வெளிப்பாட்டு நூலும் அடங்கியுள்ளன. கி.பி. 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. + +ஒவ்வொரு நற்செய்தி நூலும் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையை கூறுகின்றது. அவற்றில் இயேசுவின் போதனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சபையால் ஏற்கப்பட்டுள்ள நான்கு நற்செய்தி நூல்கள் யாரால், எப்போது எழுதப்பட்டன என்பது பற்றித் துல்லியமாக அறிய இயலவில்லை. ஆயினும், கிறித்தவ மரபுப்படி, + + +இவற்றில் முதல் மூன்று நூல்களும் தமக்குள் உள்ளடக்கம், நடை போன்றவற்றில் மிகவும் ஒத்தவையாகும். எனவே அவை "ஒத்தமை நற்செய்திகள்" (Synoptic Gospels) என அழைக்கப்படுகின்றன. நான்காவது நூல் அவற்றிலிருந்து வேறுபட்ட பாணியில் உள்ளது. + +திருத்தூதர் பணிகள் என்னும் பெயரால் வழங்கும் நூல் இயேசுவின் மரணத்துக்கு பின்னரான தொடக்க காலக் கிறித்தவரின் வாழ்வைச் சித்தரிக்கிறது. பேதுரு, பவுல் ஆகிய திருத்தூதர்கள் அறிவித்த படிப்பினையையும், பவுல் மேற்கொண்ட பயணங்களையும் இந்நூல் விரிவாகத் தருகிறது. இந்நூல் லூக்கா நற்செய்தியை எழுதியவராலேயே எழுதப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். பவுல் கூறியவற்றை லூக்கா எழுதினார் என்பது மரபு. + + + +யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு + + + + + + + + +திருத்தூதர் பணிகள் + +திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் பணி ("Acts of the Apostles") என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஐந்தாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Práxeis tōn Apostólōn (Πράξεις των Αποστόλων) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Acta Apostolorum எனவும் உள்ளது . இந்நூல் 28 அதிகாரங்களை உள்ளடக்கியது. வாழ்க்கை வரலாறு, புனைவு, அரும்செயல்கள் போன்றவை விரவியுள்ள இந்நூலில் ���ொடக்க காலத்தில் கிறித்தவம் பரவிய கதை உயிரோட்டத்தோடு எடுத்துரைக்கப்படுகிறது. + +திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே, மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. + +இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். "நாங்கள் பயணம் செய்தோம்", "நாங்கள் தங்கியிருந்தோம்", "நாங்கள் போதித்தோம்"' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் தூய பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இப்பகுதிகள் கீழ்வருமாறு: + +திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர் பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூலின் முன்னுரையில் காண்க. + +இயேசு கிறித்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கம் அளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட புனித பவுல் யூதருக்கு எதிராகப் பெருந் தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை லூக்கா எழுதுகிறார். + +இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. தூய ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே திருத்தூதர் பணிகள் நூலின் முடிவுரையாக அமைகின்றது. + +பெரும்பான்மை விவிலிய அறிஞர் கருத்துப்படி, இந்நூல் கி.பி. முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கி.பி. 60-64 அளவில் இந்நூல் எழுந்தது என்று கூறுவர். இந்நூலில் எருசலேம் அழிந்த செய்தி (கி.பி. 70) இல்லை. அதுபோலவே தூய பவுலின் இறப்புப் பற்றிய குறிப்பும் இல்லை. பவுல் கி.பி. 67 அளவில் உரோமையில் இறந்தார் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர் கருத்து. + +திருத்தூதர் பணிகள் நூலின் அமைப்புமுறையும் லூக்கா நற்செய்தி நூலின் அமைப்புமுறையும். ஒரே பாணியில் அமைந்துள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள���ர். லூக்கா நற்செய்தியில் 24 அதிகாரங்களும் திருத்தூதர் பணிகள் நூலில் 28 அதிகாரங்களும் உள்ளன. இரு நூல்களும் ஒரு குறிப்பிட்ட புவியியல் பின்னணியில் அமைந்துள்ளன. இதைச் சற்று விரிவாக நோக்கலாம். + +1) லூக்கா நற்செய்தி முதலில் பாரளாவிய பின்னணியிலிருந்து தொடங்குகிறது; பின், இயேசு கலிலேயாவில் பணியாற்றுவதைக் காட்டுகிறது; அதைத் தொடர்ந்து இயேசு சமாரியாவிலும் யூதேயாவிலும் பணிசெய்ததைக் குறிப்பிடுகிறது; இறுதியில், இயேசு எருசலேம் சென்று, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில்.உயிர்துறந்து, சாவினினின்று உயிர்பெற்றெழுந்து, விண்ணகம் சென்றதை விவரிக்கின்றது. + + +2) திருத்தூதர் பணிகள் நூல் மேற்கூறிய பாணிக்கு நேர்மாறாக, இறுதிக் கட்டத்திலிருந்து தொடங்கி முதல் கட்டத்திற்குத் திரும்புகிறது. முதல் காட்சி எருசலேம். அங்கே திருத்தூதர்கள் கூடியிருக்கின்றனர். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்செய்தியை எருசலேமில் அறிவிக்கின்றனர். இரண்டாம் கட்டமாக சமாரியாவுக்கும் யூதேயாவுக்கும் சென்று நற்செய்திப் பணி புரிகின்றனர். அதன் பிறகு, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக நற்செய்தி உரோமையை வந்தடைகிறது; பாரளாவிய செய்தியாக மாறுகிறது. + + +மேலே காட்டிய விதத்தில் லூக்கா நற்செய்தி நூலையும் திருத்தூதர் பணிகள் நூலையும் அவற்றின் அமைப்புமுறை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்விரு நூல்களின் ஆசிரியர் எருசலேம் நகருக்கு எத்துணை முதன்மை அளிக்கிறார் என்பது புலப்படும். இயேசுவின் வாழ்வும் பணியும் (சாவு, உயிர்த்தெழுதல் உட்பட) எருசலேமில் உச்சக்கட்டத்தை எய்துகின்றன; அதுபோல, திருத்தூதர்களின் பணியும் எருசலேமை மையமாகக் கொண்டு, படிப்படியாக (கலிலேயா, சமாரியா, யூதேயா, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக) உலகின் மையத்திற்கே சென்று எல்லா மனிதருக்கும் அறிவிக்கப்படுகின்ற நற்செய்தியாக மாறுகிறது. + +இத்தகைய கட்டமைப்பு திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படுகிறது. திப 1:8 இவ்வாறு கூறுகிறது: + +"இயேசு திருத்தூதர்களை நோக்கி, "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் (அதிகாரங்கள் 1-5) யூதேயா, சமாரியா முழுவதிலும் (அதிகாரங்கள் 6-9) உலகின் கடையெல்லை வரைக்கும் (அதிகாரங்கள் 10-28) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்". + +மேற்கூறிய கட்டமைப்புத் தவிர திருத்தூதர் பணிகள் நூலைத் திருத்தூதர் பேதுரு ஆற்றிய பணிகள் என்றும் திருத்தூதர் பவுல் ஆற்றிய பணிகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகவும் பிரித்துப் பார்க்கலாம். + + +"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (1:8) என்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கூறியிருந்தார். அக்கூற்றே திருத்தூதர் பணிகள் நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது. + +யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் கிறித்தவ சபைகளாகிய திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் தூய ஆவியின் பணிகள் எனவும் அழைக்கலாம். + +இந்நூலில் பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின்.அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறித்தியல் விளக்கங்களை அளிக்கின்றன. + +பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன. + +கிறித்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம் பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதோ அப்பகுதிகள்: + + + + + + + + + +அ. முத்துலிங்கம் கதைகள் (நூல்) + +அ. முத்துலிங்கம் 2003 வரை எழுதிய எல்லாக் கதைகளினதும் தொகுப்பு நூல் இதுவாகும். + + + + + +ஜோர்ஜ் ஈஸ்ற்மன் + +ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) ("George Eastman", ஜூலை 12, 1854 - மார்ச் 14, 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் ("Eastman Kodak Co") நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது. + +ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) அவர்கள் 1854 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்�� யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார். + +தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை தாராளமாக வழங்கினார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக்கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழகத்திற்கும் அளித்தார். + +ஈஸ்ட்மென் 1932 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" ("My work is done. Why wait?") என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும். + + + + +செயற்றிட்டம் + +செயற்றிட்டம் (project) என்பது குறித்த இலக்குகளை அடைந்து கொள்ளும் முகமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குறித்த பாதீட்டுத் தொகைக்குள்ளும், வரையறுக்கப்பட்ட கால நேரத்துக்குள்ளும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள்ளும் அடைந்து கொள்ளும் முகமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு முயற்சிகளும் அல்லது செயற்பாடுகளும் செயற்திட்டம் என வரையரை செய்யலாம். இங்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் வழமை அல்லாத மீண்டும் மீண்டும் தொடர் தன்மை அல்லாதவையாகவோ மற்றும் குறித்த காலம் முடிவடையும் போது முடிவுறுத்தப்படுபவையாகவோ இருக்கும். இதனால் ஒரு நிருவனத்தின் வழமையான செயற்பாடுகளை விட்டு முற்று முழுதாக வேறுபட்டவையாகக் காணப்படும். +செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் மேலாண்மையானது, செயற்திட்ட மேலாண்மை என அழைக்கப்படும். (செயற்திட்ட முகாமைத்துவம் - ஈழ வழக்கு) + + + + + + +யோகான்னசு கூட்டன்பர்கு + +யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும��� அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. இவர் கண்டறிந்த அச்சு இயந்திரம் மறுமலர்ச்சிக்கும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் பரவலுக்கும், அறிவொளிக் காலம் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும், இயந்திரம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், பேரளவில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பரவவும் உதவியது. அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அச்சிடப்படும் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும். + +நகரும் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிட்ட முதல் ஐரோப்பியர் கூட்டன்பர்க் ஆவார். மேலும் அச்சுத்துறையில் இவர் பல்வேறு பங்களிப்புகளையும் செய்துள்ளார். பேரளவில் அச்சிடக்கூடிய நகரும் எழுத்துரு, எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட அச்சு மை, மர அச்சுக்கூடம் ஆகியன இவரின் கண்டுபிடிப்புகளாகும். இவருடைய எழுத்துரு உலோகக்கலவையாலான பற்றவைப்பு முறையில் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களாகும். இவருடைய இக்கண்டுபிடிப்புகள் அணைத்தும் நவீன அச்சுக்க்கலையில் மிக அதிக முறையில் வேகமாகவும் எளிதாகவும், குறைந்த செலவில் புத்தகங்கள் அச்சிட பெரிதும் உதவியது. கூட்டன்பர்க் முதன் முதலில் விவிலியத்தை அச்சிட்டு அதனை பலரும் பயன்படுத்த காரணமானார். + +கூட்டன்பர்க் ஜெர்மனியில் மைன்ஸ் (Mainz) என்னுமிடத்தில் ஃபிரிலீ லேடன் என்பவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவியான எல்சு வைரிச் என்பவருக்கும் கடைசி மகனாக 1398 அல்லது 1399 இல் பிறந்தார்.(கூட்டன்பர்க்கினுடைய சரியான பிறப்பு வருடம் தெரியவில்லை. 1938 எனக் கருதப்படுகிறது.) இவருடைய தந்தை ஒரு செல்வந்தராகவும் வணிகராகவும் விளங்கினார். மேலும் மைன்சின் ஆயருக்கு பொற்கொல்லராகவும் பணியாற்றினார். எனினும் இவர் அதிகளவில் துணி வியாபாரமும் செய்து வந்தார். + +ஜான் லீனார்டு என்ற வரலாற்றாசிரியர் கூட்டன்பர்க்கின் இளமையானது பெரும்பாலும் மர்மம் நி���ைந்ததாகவே இருந்தது எனக் குறிப்பிடுகிறார். கத்தோலிக்க ஆலயங்களுக்கு தேவைப்படுபவைகளை செய்யும் பட்டறையில் அவருடைய தந்தை வேலை செய்துகொண்டிருந்தார் எனவே கூட்டன்பர்க் வளரும்போதே பொற்கொல்லருக்கான நுணுக்க்கங்களைத் தெரிந்தே வளர்ந்தார்." வரலாற்றாசிரியர், என்ரிச் வாலவ் என்பவர் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் கூட்டன்பர்க்கினுடைய வழித்தோன்றல்கள்ன் நாணயச் சாலையில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தனர். அவர்கள் கணிசமான அளவு உலோகத் தொழில்நுட்ப அறிவுபெற்றிருந்தமையால் பல்வேறு நாணயங்களுக்கான உலோக அச்சுகளை அந்நாணயச் சாலைக்கு உருவாக்கித் தந்தனர். இதன் காரணமாக மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றங்களில் இவர்களுக்கென்று ஓர் இருக்கை வழங்கப்பட்டிருந்தது." கூட்டன்பர்க்கினுடைய தந்தைக்குச் சொந்தமான மாளிகை மைன்சில் செல்வாக்கு பெற்ற ஓர் இடமாக விளங்கியது." 1411 இல் ஜெர்மானியப் பிரிவினைக்கு எதிரான எழிச்சியின் காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டது. அதில் கூட்டன்பர்க்கின் குடும்பமும் ஒன்றாகும். கூட்டன்பர்க்கின் குடும்பமும் அல்டவில்லா என்ற இடத்தில் அவரது தாயாருக்குச் சொந்தமான இடத்தில் குடியேற நேரிட்டது. எனவே இளமையிலேயே அதாவது 1430களிலேயே கூட்டன்பர்க் மைன்சு எனுமிடத்தை விட்டு அரசியல் காரணமாக ஸ்ட்ராஸ்பர்க் என்ற இடத்திற்குக் குடியேறினதாகக் கூறப்படுகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்த குட்டன்பெர்க்கிற்கு தொடக்கம் முதலே வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட கையெழுத்துப் பிரதிகள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை." கூட்டன்பர்க் எர்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் தனது கல்வியைத் தொடந்தார். + +அடுத்த பதினைந்தாண்டுகளில் கூட்டன்பர்க்கினுடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 1434 இல் கூட்டன்பர்க் எழுதிய ஒரு கடித்தத்தில் அவர் ஸ்டிராஸ்பர்க்கில் இருப்பதாகவும் அங்கு தனது தாயாருடைய உறவினர்கள் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிபிட்டிருந்தார். மேலும் அங்கு தான் பொற்கொல்லர் சங்கத்தில் ஓர் உறுப்பினராகப் பதிவுசெய்யப்ப��்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. 1437 இல் இரத்தினக் கற்கள் மெருகேற்றும் வணிகத்தில் அவர் ஒரு செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். மேலும் 1436/37 களில் இவர் ஸ்டிராஸ்பர்க்கில் என்னெலின் எனுமிடத்தில் இவருடைய திருமண முறிவு வழக்கு ஒன்று நடைபெற்றதாக செய்தி வெளியானது. 1419 இல் இவருடைய தந்தை இறந்து போனார். + +கூட்டன்பர்க் வளர்ந்து வந்த சமயத்தில் அச்சுப்பால் அச்சுமுறை என்ற புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் என ஒரு பலகை தேவை. மேலும் அதைத் தயாரிக்க அதிக நேரமும் தேவைப்பட்டது. அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானது. புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றை செல்வந்தர்களால் மட்டுமே வைத்துக்கொள்ள முடிந்தது. அனைவருக்கும் பயன்படும்படியும், படிக்கும்படியும் புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான ஜோஹனச் ஃபஸ்ட் என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ஃபஸ்ட் குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு நகரும் எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார். +1450 களில் இவருடைய அச்சுக்கூடம் செயல்படத் துவங்கியது. ஜெர்மானிய மொழ���க் கவிதை ஒன்று முதன்முதலாக இவருடைய அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இதுவே முதன் முதலில் அச்சில் வந்த பதிப்பாகும். தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு இலத்தீன் மொழியில் விவிலியத்தை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. இலத்தீன் மொழியில் இரண்டு பதிப்புகளில் விவிலியம் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் கொண்டது. குட்டன்பெர்க் கண்டுபிடித்த இயங்கக்கூடிய அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 180 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. + +1455-ஆம் ஆண்டில் பாம்பெர்க் புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை குட்டன்பெர்க் விற்பனை செய்தார். ஆனால் புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் ஃபஸ்டிடம் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த ஃபஸ்ட் ஆர்ச்பிஷப் நீதிமன்றத்தை அனுகினார். பைபிள் புத்தகங்களை வெளியிடுவதில் ஃபஸ்டுக்கு பங்குத்தொகை தரவேண்டியிருந்தது. எனவே ஃபஸ்ட் குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சுக் கூடத்தையும் பாதி விவிலிய நூல்களையும் அப்படியே பெற்றுக்கொண்டார். + +வழக்கில் தொல்வியடைந்தாலும் மனம் தளராமல் கூட்டன்பர்க் 1459 இல் பாம்பர்க்கில் ஒரு சிறிய அச்சுக்கூடத்தை நிறுவி விவிலியத்தை அச்சிட்டு வழங்கலானார். ஆனால் அந்நூலில் கூட்டன்பர்க்கின் பெயரோ நாளோ குறிக்கப்படவில்லை. மேலும் இவருடைய அச்சுக்கூடத்தில்ல் 754 பக்கங்கள் கொண்ட கத்தோலிய அகராதியையும் வெளியிட்டார். இதே நேரத்தில் 1457, ஆகஸ்டில் தனது மைனஸ் புத்தகக்கடையில் முதன்முதலில் பெயர் மற்றும் நாள் குறிக்கப்பெற்ற ஐரோப்பாவின் முதல் புத்தகங்களை ஃபஸ்ட் வெளியிட்டார். கூட்டன்பர்க்கின் தொழில்நுட்பமுறையில் அச்சிடப்பட்ட அந்நூல்களில் எங்கும் கூட்டன்பர்க்கின் பெயர் குறிப்பிடப்படவில்லை. + +உலகின் அற���வு வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்குமான உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க். 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு பிரான்சிக்கன் தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. 1504 இல் பேராசிரியர் இவோ விட்டிங்க் என்பவரே தனது நூலில் கூட்டன்பர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார். 1567 ஹென்ரிச் பாண்டலியன் என்பவரது புகழ்பெற்ற ஜெர்மானியர்கள் என்ற புத்தகத்தில்தான் முதன் முதலில் கூட்டன்பர்க்கினுடைய படம் கற்பனையாக வரையப்பட்டது. + + + + + + + +மார்க்கோனி + +மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி ("Guglielmo Marconi"; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். + +மார்க்கோனி 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர்.இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ,புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது. +இளமைப் பருவத்தில் இவர்க்குப் ப்டிப்பில் ஆர்வம் மிகிதி. வீட்டிலேயே இருந்த நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். ��வ்விணையருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர். + +இவருடைய காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் வெளியிட்டிருந்தார். அவற்றைப் பற்றி மேலும் ஆராய்ந்து ஹென்ரிச் ருடால்ப் ஹெர்ட்சு என்ற அறிஞர் ஆய்வுகளின் மூலம் அவற்றை உறுதிப் படுத்தினார். மின்காந்த அலைகளின் கொள்கைகளானது ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறாப்பட்டிருந்தன. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்க்கோடுகளில் பயணிக்கின்றன என்பதையும், அவற்றை சோதனைக் கருவிகள் மூலமாக பெற முடியும் என்பதையும் ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார். சோதனைகள் ஹெர்ட்ஸ் அவர்களால் பின்தொடரப்படவில்லை. +பிந்தைய கண்டுபிடிப்பாளர்களால் கம்பியற்ற தகவல்தொடர்பு மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் செயலாக்கப்பட்டன. + +மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். 'எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்' என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு 'கம்பியில்லாத் தந்தி முறை'யை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ஆம் ஆண்டு ஏறத்தாழஃ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய 'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. + +எனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் 'வில்லியம் ஃப்ரீஸ்' என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ஆம் ஆண்டு மார்ச் ம���தம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13 ந் தேதி நீரின் வழியாக 'நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார். இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை(Telegraph without wire) என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896-ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897-ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.1897 இல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 இல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். + +இவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898-ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார். அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர்.1905 இல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன் பட்டன. + +1899- ல் அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் பெரியதொரு படகுப் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற மார்க்கோனி கப்பலில் தன் கருவிகளைப்பொருத்தி போட்டியின் முடிவுகளை செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்தார், இதன் மூலம் அமெரிக்கா வானொலியின் அவசியத்தை உணர்ந்தது. +வானொலி பரப்புவதைக் கணிதக் கலை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவிலை. உலகம் உருண்டை வடிவமானது என்பதால் வானொலி பரப்பும் செய்தியும் நேராக நூறுமைல் வரைதான் செல்லும். உலக உருண்டையின் வளைவு காரணமாக அதற்கு மேல் பரவாது என்று கூறி மார்க்கோனியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முற்பட்டனர். ஆனால் மார்க்கோனி அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தார். + +1900-ல் நெடுந்தூர செய்தி அனுப்பும் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான்கம்பியை இணைத்தார். இயற்கை காரணமாக சூறாவளி வீசி கம்பத்தைச் சாய்தது. மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பை தன் வானொலியால் இணைத்துக் காட்டினார். 12-12-1901-ல் 2100 மைல்களுக்கு அட்லாண்டிக்கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பிப்பெற்றார். இச்செய்தியை உலகெங்கும் அறிவித்தார். இவர் பெருமை உலகெங்கும் பரவியது. 1907 இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லாண்டிக் தொலைத்தொடர்பு வழி எல்லோரது பொதுப் புழக்கத்திற்கும் பயன்பட்டது. + +மேலும் பல ஆய்வுகள் செய்த மார்க்கோனி தொடர் அலைகள் உற்பத்திச் செய்யும் கருவியைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தினார். அதன் பயனாகப் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்ப இயலும் என்பதை மெய்ப்பித்தார். + + +முசோலினியை இவர் ஆதரித்து இத்தாலிய பாசிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். + + + + + +அங்க இப்ப என்ன நேரம்? (நூல்) + +அ. முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இதுவாகும். இதுவே இவரது முதற் கட்டுரைத் தொகுப்பாகும். + + + + + +மனோரமா இயர்புக் + +மனோரமா இயர்புக் என்பது ஆண்டுக்கொரு முறை வெளியாகும் பொதுப்பயன் வெளியீடாகும். ஆண்டுக்கொரு முறை பல்துறையிலும் நிகழும் உலக நடப்புகள் யாவையும் அறிவார்ந்த ஒரு தொகுப்பாகத் தரும் ஒரு வெளியீ��ு. இது உலகளாவிய அறிவியல், அரசியல், மருத்துவம், விளையாட்டுக்கள், மக்கள் வாழ்வியல், மாணவர்களுக்குத் தேவையான பொது அறிவுச் செய்திகள், பன்னாட்டுப் புள்ளிவிவரங்கள் என பல பயனுடைய கருத்துக்களையும் செய்தி, மற்றும் குறிப்பக்களையும் தாங்கி வரும் ஒரு வெளியீடு. 1990 இல் இருந்து தொடர்ந்து வெளியிடப்படுகின்றது. இந்த ஆண்டுநூலை மலையாள மனோரமா பதிப்பகம், கோட்டயம், சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் வெளியிடுகின்றது. மலையாள மனோரமா பதிப்பகம், தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் மலையாளம், இந்தி, வங்காளி மொழிகளிலும் அவ்வவ் மொழிகளுக்கான சிறப்புப் பகுதிகளுடன் வெளியிடுகின்றது. + + + + +செந்தமிழ்ச் செல்வி (இதழ்) + +செந்தமிழ்ச் செல்வி என்னும் இலக்கியத் திங்களிதழ் அல்லது மாதிகை [1925] ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் (2006) இரா. முத்துகுமாரசுவாமி. இவருக்கும் முன்னால் இவ்விதழை நிறுவியவரும் பல்லாண்டு ஆசிரியராகவும் இருந்தவர் வ. சுப்பையாப் பிள்ள அவர்கள். தேவநேயப் பாவாணர், மதுரை இரா. இளங்குமரன், க.ப. அறவாணன், இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், பி.எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர். + + + + +கல்கி + +கல்கி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. + + + + + +தமிழ்ப்பணி (இதழ்) + +தமிழ்ப்பணி என்னும் திங்களிதழ் 1967ல் இருந்து வெளிவருகின்றது. இது கவிதை, கட்டுரைகள் அடங்கிய படைப்புகளைத் தாங்கி வருகின்றது. இவ்விதழில் பெரும்பாலும், தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு, இலங்கை மற்றும் தமிழர் பெருமளவில் வாழும் நிலப்பகுதிகளில் நிலவும் அரசியல் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றது. இதன் நிறுவனரும் சிறப்பாசிரியரும் வா.மு.சேதுராமன் அவர்கள். இவரை பெருங்கவிக்கோ என்றும் அழைப்பார்கள். 2006 ஆம் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2037) வரை "தமிழ்ப்பணி"யின் 39 தொகுதிகள் வெளிவந்துள்ளன. + + + + +ஊழியன் (இதழ்) + +ஊழியன் என்பது 1930களில் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிக்கை. இதன் ஆசிரியர் ராய. சொக்கலிங்கம் என்பார். புகழ் பெற்ற தமிழ் ��ழுத்தாளர் புதுமைப்பித்தன் இப்பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் துணையாசிரியராகப் பணியாற்றிய ஈ. சிவம் என்பாரிடம் பணி புரிய விருப்பம் இல்லாமல் இவ்விதழை விட்டு விலகி சென்னைக்குச் சென்றார். இப்படி விலகிச்சென்ற புதுமைப்பித்தன் பிறருடன் சேர்ந்து மணிக்கொடி என்னும் புகழ் பெற்ற சிற்றிதழில் பங்களிக்க நேர்ந்தது. + + + + +மணிக்கொடி (இதழ்) + +மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்கதொரு தமிழ் இதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது 1935ல் நின்று போனது. பி. எஸ். ராமையா அவர்களின் முயற்சியால் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து மேலும் சில ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்து 1939 ஆம் ஆண்டில் முற்றாக நின்று விட்டது. + +சுடாலின் சீனிவாசன் என்பவர், திரைப்படத் தணிக்கைத் துறையில் யாருக்கும் விட்டுக்கொடுக்காத அதிகாரியாகவும், அவரது தொழிலில் இரும்பு மனிதராகத் திகழ்ந்தவர். பாரதியாரின் படைப்புகளின் மீது மிகுந்த பற்று கொண்டவர் ஆவார். அதனால் பாரதியின் சீடர்கள் பரலி சு. நெல்லையப்பர், வ.ரா. பாரதிதாசன் போன்றோரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவர். காங்கிரஸ் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர். சிறை வாழ்க்கையின் போது வ. ரா.வும், டி. ஸ். சொக்கலிங்கமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். + +சிறையிலிருந்து வெளிவந்த சீனிவாசன், இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார். திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த சுயராஜ்ய பத்திரிகையில் பணியாற்றிய வ.ராமசாமியையும் அவர் மூலம் வரதராஜுலு நடத்தி வநத தமிழ் நாடு பத்திரிகையில் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் அழைத்துவந்தார். “மணிக்கொடி” தொடங்கியது. “டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ரா. நான் மூவருமாக எங்கள் லட்சியப் பத்திரிகைக்குத் திட்டமிட்டோம். என்ன பெயரிடுவது என்று வெகுவாக விவாதித்தோம். ஒருநாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டியபோது அவன் மிதிலையில் மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனதை நெருடிக் கொண்டிருந்தது. அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். கோட்டைக் கொடி மரத்தில் பறந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழு��்தது.‘விழுந்தது ஆங்கிலக்கொடி, இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி’ என்றேன், அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயரா கட்டும் என்று குதூகலத்துடன் முடிவு செய்தோம். மூவரும் கையெழுத்திட்டு “மணிக்கொடி”யைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்தோம். இவர்கள் மூவரும் தீர்மானித்தபடியே , இலண்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த 'சண்டேஅப்சர்வர்' என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு மணிக்கொடி சிற்றிதழை செப்டெம்பர் 17 , 1933 இல் தொடங்கினார்கள். + +இந்த இதழின் காலத்தை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம். அவை பின்வருமாறு விவிரிக்கப்படுகிறது. + +கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி. எஸ். சொக்கலிங்கம் ஆகிய மூவரும் இணைந்துபணியாற்றிய காலம், மணிக்கொடி இதழின் முதல் நிலை ஆகும். மணிக்கொடியின் முதல் கட்டம் 1933 செப்டம்பரில் தொடங்கி , 1935 சனவரியில் முடிவுபெற்றது. + +மணிக்கொடிதோன்றிய ஆறுமாதத்திற்குள், பொருளாதார நெருக்கடி தோன்றியது. அதனைச் சமாளிக்கும் பொருட்டு கு.ஸ்ரீனிவாசன் , பம்பாய்க்குச் சென்று, ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மணிக்கொடிக்கும் , தனது குடும்பத்திற்கும் அனுப்பி வந்தார். +இச்சூழலில் சொக்கலிங்கத்திற்கும் , வ.ராவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது .மணிக்கொடியிலிருந்து விலகிய வ.ரா, கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழுக்குப் பணியாற்றச் சென்றுவிட்டார். செப்டம்பர் 1934 இல், சொக்கலிங்கம் மணிக்கொடியிலிருந்து விலகி தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியரானார். சனவரி 1935 இல், ஸ்ரீனிவாசனின் தந்தை சென்னையில் காலமானார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீனிவாசன் மணிக்கொடியை மேற்கொண்டு நடத்த இயலவில்லை. + + + +பி. எஸ். ராமையா என்பவர் 1935 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மணிக்கொடியை நடத்த முன்வந்தார். அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம்தரப்பட்டது. இவர் காலத்தில் , கி. ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார். வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி, இருவார இதழாக வெளிவரத்தொடங்கியது. இராமையாவின் காலத்து மணிக்கொடி, சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனம் நிறுவப்பட்டு, அதன் மூலம் புத்தகங்கள் வெளிவந்தன. + +மாகாண சுயாட்சி (ஏ. என். சிவராமன்), தேய்ந்த கனவு (கி. ராமசந்திரன்) , இரட்டை ம���ிதன் (கு. பா. ரா) , கப்சிப்தர்பார் (புதுமைப்பித்தனும் ,ந.ராமநத்னமும் இணைந்து எழுதிய ஹிட்லர் வரலாறு ) , பாஸிஸ்ட ஜடாமுனி (புதுமைப்பித்தன் , முசோலினி வரலாறு ஆகிய புத்தகங்களை நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது. 1938 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் ஏற்பட்ட கருத்து பேதம் காரணமாக, பி.எஸ் .ராமையா மணிக்கொடியை விட்டு விலகி, சினிமாத் துறைக்குள் நுழைந்தார். + + +மணிக்கொடியின் வாமனானாக வந்த ராமையா, +திருவிக்ரமனாக வளர்ந்துவிட்டார்; +மாயையினால் அல்ல சேவையினால் - கு.சீனிவாசன் + + +இச்சிற்றிதழானது, 1938 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில், ப. இராமஸ்வாமியிடம் தரப்பட்டது. மணிக்கொடி இதழைப் பற்றிய அக்கறையை விட புத்தகம் வெளியிடுவதிலேயே அக்கறைச் செலுத்தப்பட்டதால், நவயுகப்பிரசுராலயம் மட்டுமே வளர்ந்தது. இந்த நவயுகப் பிரசுரலாயமும், நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் விற்கப்பட்டது. அவர்களும் பிறகு, வேறொருவருக்கு விற்றனர். இவ்வாறாக கைமாறியதால், நான்கைந்து இதழுக்குப் பிறகு மணிக்கொடி இதழ், வெளிவராமல் நிறுத்தப்பட்டது. + +மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி. ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இருந்தனர். மணிக்கொடியின் சிறப்பான புகழுக்கு அதில் பங்கு கொண்டு இலக்கிய வரலாறு படைத்த எழுத்தாளர்களே காரணம். புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி", சி. சு. செல்லப்பாவின் "ஸரசாவின் பொம்மை" போன்ற படைப்புகள் இவ்விதழில் தான் வெளியாயின. புகழ்பெற்ற எழுத்தாளர்களாகிய ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். இராமையா, ந.சிதம்பரசுப்பிரமணியன், சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்), சி. சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், க. நா. சுப்பிரமணியம், லா. ச. ராமாமிர்தம், மெளனி ஆர். சண்முகசுந்தரம், எம். வி. வெங்கட்ராம் ஆகியோரின் படைப்புகள் மணிக்கொடியின் புகழுக்குக் காரணம். இவ்விதழ் வெளியான காலத்தையும், அதனால் ஏற்பட்ட இலக்கிய விழிப்புணர்வையும் குறிக்கும் விதமாக மணிக்கொடிக் காலம் என்னும் தொடர் சிற்றிதழ் இலக்கிய வட்டாரங்களில் பயிலப்படுகின்றது. மணிக்கொடிக்குப் பிறகு பல சிற்றிதழ்கள் தோன்றின. + + +தமிழில் இல்லாதன இல்லை இளங்குமரா என்ற +கிழட்டுத் தத்துவம் ஒழிய வேண்டும். +இப்பொழுது இலக்கியத்தின் பெயரில் நடக்கும் ஆராய்ச்சிகள் , முதல் +குரங்கு தமிழனாய்த்தான் மாறியதா என்பது முதல் +கம்பன் சைவனா , வைஷ்ணவனா ? தமிழ் எழுத்துக்கள் +ஓம் என்ற முட்டையை உடைத்துக்கொண்டு +வெளிவந்துள்ள வரலாறுவரையுள்ள இலக்கியத்திற்குப் +புறம்பான தொண்டுகளையெல்லாம் அப்படியே கட்டி +வைத்துவிட்டு இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை +உணர்த்த முன்வரவேண்டும். ( புதுமைப்பித்தன் - மணிக்கொடி 01/சூலை/1934) + + +"மணிக்கொடி பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தஅந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காகநானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும்மூலதனமாகக் கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் .அது இரண்டு மூன்று வருஷம் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம் , அவர் அவளை ஒருவருக்கு விற்றார் .விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது , இதுதான் மணிக்கொடியின் கதை" - + + + + + + +சூறாவளி (இதழ்) + +சூறாவளி என்பது க. நா. சுப்ரமண்யம் ஏப்ரல்’ 1939 இல் தொடங்கிய சிற்றிதழ். மணிக்கொடியில் எழுதி வந்த படைப்பாளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்காகத் தொடக்கப்பட்ட இதழ். இவ்விதழில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் போன்றோர் எழுதினர். பாரதிதாசனின் கவிதைகள் வெளிவந்தன. வசன கவிதையைப் பற்றிய விவாதங்கள் இந்த இதழில் தான் முதன்முதல் வெளிவந்தன. வணிக நோக்கில் இவ்விதழ் வெற்றி பெறவில்லை. கிழமை தோறும் வந்து கொண்டிருந்த இவ்விதழ் 20 இதழ்கள் வந்த பின் செப்டம்பர்’ 1939 இல் நின்றுவிட்டது. + + + + +குழந்தை இயேசு + +குழந்தை இயேசு என்பது இயேசுவின் பிறப்பு முதல் அகவை 12 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இயேசுவின் காலத்தில் யூத வழக்கத்தின்படியும், கிறிஸ்தவ கலாச்சாரத்தின் சில அண்மித்த நூற்றாண்டுகள் வரையும் 13 அகவையின் பின் ஒருவர் வளர்ந்தவராக கருதப்பட்டார். + +இயேசுவின் "குழந்தை பருவ நற்செய்திகள்" (Infancy Gospels) என்னும் பெயரில் பல நூல்கள் இப்பருவத்தில் இயேசுவின் வாழ்வை சித்தரிப்பதாக கூறுகின்றன. + +3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டிலிருந்து இயேசுவின் குழந்தை பருவம் கலையில் சித்தரிக்கப்படலாயிற்று. இதில் குறிப்பாக அவரின் பிறப்பு சித்தரிப்பு அடங்கும். இயேசுவின் தாய் மரியாவை சித்தரிக்கும் போது இயேசுவை குழந்தையாக அவை கையில் ஏந்தியவாறு சித்தரிப்பது வழக்கம். இச்சித்தரிப்புகளில் இயேசுவின் விருத்த சேதனம், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல், ஞானிகள் வருகை, எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் ஆகியனவும் பொதுவாக சித்தரிக்கப்படுவது வழக்கம். நற்செய்திகள். + +லியொனார்டோ டா வின்சி போன்ற வல்லுனர்களின் படைப்புகளின் திருக்குடும்பம் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் குழந்தை யேசுவை சித்தரிப்பது வழக்கமானதொன்றாக இருந்தது. + +திருமுறை நற்செய்திகளில் இப்பருவத்தினைப்பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இயேசுவின் பிறப்பிலிருந்து 12ஆம் அகவையில் கோவிலில் சிறுவன் இயேசு அறிஞரோடு விவாதிப்பது வரை எத்தகவலும் இல்லை. + + + + + +அடோல்ஃப் ஃபிக் + +அடோல்ஃவ் ஃவிக் ("Adolf Eugen Fick", பிறப்பு: செப்டம்பர் 3, 1829, காசல், யேர்மனி - ஆகஸ்ட் 21, 1901, பிலன்கன்பெயார்க், பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் ("contact lense") கண்டுபிடித்தவர்.ஜெர்மானியரான ஃவிக் 1851 இல் மருத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1887 இல் தொடுகை வில்லையை அறிமுகம் செய்த ஃவிக் முதலில் முயலிலும் பின்னர் தன்னிலும் இறுதியாக சில தன்னார்வலர்களிலும் அதனைச் சோதித்தார். + + + + +ஊதாரி மைந்தன் உவமை + +ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் (யூத கோயிலில் மதகுருகள்) தமக்குள், இவர்(இயேசு) பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவ���்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு,காணாமல் போன காசு உவமைகளை தொடர்ந்து இவ்வுவமையை இயேசு கூறினார். இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. + +ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. + +அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். +அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். மகனானவன் தகப்பனிடத்தில்: தந்தையே , இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் காலணிகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் இன்பமாயிருக்க தொடங்கினார்கள். + +அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் விருந்து செய்கிறார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார். + + + + + + + +விதைப்பவனும் விதையும் உவமை + +விதைப்பவனும் விதையும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமையாகும். இவ்வுவமைக்கு பொருளும் இயேசுவே கூறினார். இயேசு தனது உவமையொன்றுக்கு பொருள் கூறிய வேறு ஒரு சம்பவம் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வுவமையை இயேசு, பல பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் அவரிடத்தில் வந்து கூடியபோது, அவர் மக்களுக்கு உவமையாகச் சொன்னார். இது விவிலியத்தில் மூன்று நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுள்ளது. மத்தேயு 13:3-8;மாற்கு 4:3-8; லூக்கா 8:5-8 + +விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டத��, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். + +விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்பவர்களாயிருக்கிறார்கள் அவர்கள் விசுவாசித்து(நம்பி உட்கொண்டு) காக்கப்படாதபடிக்குப் அலகையானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இதயத்திலிருந்து அகற்றிவிடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது மகிழ்ச்சியுடனே வசனத்தை ஏற்கிறார்கள், ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாத படியினாலே, சிறி்து காலம் மட்டும் விசுவாசித்து (நம்பி உட்கொண்டு), சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேடபவர்களாயிருக்கிறார்கள் கேட்டு வெளியே போன வுடனே, உலகத்துக்குரிய கவலைகளினாலும் உலகப்பொருட்களினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதனுடைய உண்மையும் நன்மையுமான இதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுப்பவர்களாயிருக்கிறார்கள். + + + + + + + +பத்து கன்னியர் உவமை + +பத்து கன்னியர் உவமை இயேசு கூறிய உவமையாகும். இதில் இயேசு தன்னை மணவாளனாகவும் கிறிஸ்தவரை கன்னிகையாராகவும், பரலோக இராச்சியத்தை கல்யாண வீடாகவும் உவமானப்படுத்துகிறார். மத்தேயு 25:1-12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. + +பரலோக இராச்சியம் தங்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். +அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தி இல்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் விளக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகள��டு தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுஇரவில்: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் கேட்டது. +அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். + +புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் சென்றபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு கூடக் கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு மணவாளன்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். + +இது இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும். அவர் வரும் போது அவரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது பிரதான கருத்தாகும். இங்கு மணவாளன் இயேசுவாகும் கல்யாணவீடு பரலோக இராச்சியமாகும். மேலும் விளக்கு மனிதரது ஆத்துமாவையும் எண்ணெய் தயார் நிலையையும் குறிக்கிறது. + + + + + + + +விண்டோஸ் மெயில் + +விண்டோஸ் மெயில் (Windows Mail) மைக்ரோசாப்டினால் விண்டோஸ் விஸ்டா இயங்கு தளத்திற்காக உருவாக்கப்பட்டு சோதனையிலிருக்கும் ஒரு மென்பொருளாகும். இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் வழிவந்த மென்பொருளாகும். +எனினும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றல்லாது இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியில் ஓர் அங்கமாகக் கருதப்படவில்லை. இது வரவிருக்கும் விண்டோஸ் வழங்கி இயங்கு தளமான லாங்ஹாண் (Long Horn) உள்ளடக்கப்படவில்லை. +விண்டோஸ் லைவ்மெயில் டெஸ்க்டாப் ஐ (Windows LiveMail Desktop) உருவாக்கிய அதே குழுவே இதையும் உருவாக்கியது. இது மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸை மேம்படுத்திய பதிப்பாகவும் மாற்றீடு செய��யவும் பயன்படும். + +மைக்ரோசாப்ட் அவுட்லுக் 2003இலிருந்து சில இடைமுக மாற்றங்களை மாத்திரமே இப்பதிப்புக் கொண்டுள்ளது. + + + + +லோட்டஸ் நோட்ஸ் + +லோட்டஸ் நோட்ஸ் வாங்கி - வழங்கி (கிளையண்ட் சேவர் : Client Server) மற்றும் மின்னஞ்சல் கூட்டு முறையில் அமைந்த ஓர் மென்பொருளாகும். இதன் விருத்தியாளர்களான ஐபிஎம் லோட்டஸ் நோட்ஸை டெக்ஸ்டாபுடன் இணைக்கப்பட்ட வணிகரீதியிலான மின்னஞ்சல், நாட்காட்டி (காலண்டர்), மற்றும் லோட்டஸ் டொமினோவில் (formerly Lotus Domino) உள்ள தகவல்களை ஓர் மென்பொருளாக வரையறுக்கின்றனர். + +லோட்டஸ் நோட்ஸ் சம்பிரதாய பூர்வமான மின்னஞ்சல் மென்பொருட்களைத் தாண்டி நிகழ்நிலைத் தூதுவன் வசதி (லோட்ஸ் சேம்ரைம் - lotus sametime), உலாவி, குறிப்புப் புத்தகம், நாட்காட்டி மற்றும் வழங்களை ஒதுக்கும் கிளையண்ட் மற்றும் கூட்டிணைந்த மென்பொருட்களிற்கு ஓர் தளமாகவும் அமைகின்றது. லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் இம்மென்பொருளானது வர்தக அமைப்புக்களில் விரும்பப் படுகின்றது. இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பான உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் போன்றவை பாவித்து வருகின்றன. இதன் ஆரம்பகாலத்தில் பொதுவான பிரயோகங்களாக குழுவிவாதங்கள், மற்றும் எளிமையான தொடர்புத் தகவற் தளம் ஆகியவையே இருந்தன. ஆனால் இன்று லோட்டஸ் நோட்ஸ் பிளாக் (வலைப்பதிவு), விக்கி, RSS திரட்டிகள், முழுமையான வாடிக்களையாளர் சேவை, உதவி வழங்கும் சேவைகள் மாத்திரம் இன்றி லோட்ட்ஸ் நோட்ஸ்ஸில் டொமினோ டிசைனர் மூலமாக பொருத்தமான பிரயோக மென்பொருட்களையும் ஆக்கிக்கொள்ளலாம். + +நோட்ஸ் டொமினோ சேவர் அல்லாது மைக்ரோசாப்டின் IMAP மற்றும் POP முறையிலான சேவருடனும் இயங்கவல்லது. மின்னஞ்சலைப் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை LDAP முறையில் பெற்றுக் கொள்ளும் இது மைக்ரோசாப்டின் அக்ரிக் டைக்ரைக்றி உட்பட. லோட்டஸ் நோட்ஸ் இணையத்தில் உலாவும் வசதிகள் இருப்பினும் பெரும்பாலானவர்கள் தமக்கு பிடித்த உலாவியினையே பயன்படுத்தி வருகின்றனர். + +பெரிய அமைப்புக்களில் இது பிரதான மென்பொருளாகப் பயன் படுகின்றது. IBM இன் தற்போதைய கணக்குப் படி 120 மில்லியன் பாவனையாளர்கள் இம் மென்பொருளைப் பாவித்து வருக்கின்றனர். + +பொதுவாக நிறுவனங்கள் லோட்டஸ் நோட்ஸ் சேவரை (அதாவ��ு லோட்ட்ஸ் டொமினோ சேவர்) நிறுவும் போது பொதுவாக கிளையண்ட்களாக லோட்டஸ் நோட்ஸ் இருக்கும். எனினும் இதற்கு மேலதிகமாக டொமைனோ சேவர் POP3 மற்றும் மைக்ரோசாப்ட்டின் IMAP முறையிலமைந்த நீட்சிகள் ஊடாக ஆதரிக்கின்றது. உதாரணமாக DAMO - (Domino Access for Microsoft Outlook) என்ற நீட்சி மைக்ரோசாப்ட் அவுட்லுக் மின்னஞ்சல் மென்பொருளை லோட்ஸ் டொமினோ சேவருடன் இணைக்க உதவுகின்றது. இத்துடன் இணையமூடாக மின்னஞ்சல் நாட்காட்டிவசதிகளை பயர்பாக்ஸ், இண்டநெட் எக்ஸ்புளோறர் உலாவிகளூடாக வழங்கி வருகின்றது. + +எரிதங்களை வடிகட்டும் மென்பொருட்கள் பல இருக்கின்றன. இவை லோட்டஸ் டொமினோ சேவரிலேயே தொழிற்படும். அவை பொதுவாக மின்னஞ்சலின் விடயத்தில் (subject) இல் [SPAM] என்பதைச் சேர்த்துவிடும் பின்னர் லோட்ஸ் நோட்ஸ் கிளையண்டில் மின்னஞ்சல் விதிகளைப் பாவித்து எரிதங்களை வடிகட்டலாம். + + + + +தாலந்துகள் உவமை + +தாலந்துகள் உவமை ("Parable of the Talents") என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது. + +இங்கு தாலந்துகள் என்பது "talanton" என்ற கிரேக்கச் சொல்லின் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம், உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அலகாகும். இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் "talente" என மருவி இன்று "Talents" எனவும் மருவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உருவான விவிலியத் தமிழ் மொழிபெயர்ப்புகள் இச்சொல்லை தாலந்து என மொழிபெயர்த்தன. இது தமிழ் பேசும் கிறித்தவரிடையே "கடவுளின் கொடைகள்" என்ற பொருள்பட வ���ரூன்றி விடவே பின்னர் வந்த தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளும் தாலந்து என்ற இதே சொல்லையே கையாள்கின்றன. + +நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து ஒவ்வொரு பணியாளரின் திறமைக்கு ஏற்ப, ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் ஐந்து தாலந்து ஈட்டினார். அதே போன்று, இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஆனால், ஒரு தாலந்தைப் பெற்றவரோ அதை நிலத்தில் புதைத்து வைத்தார். + +நீண்ட நட்களுக்கு பிறகு அந்த எசமானர் திரும்பிவந்து, பணியாளர்களிடத்தில் தான் அவர்களுக்கு கொடுத்த தாலந்துகளுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து தாலந்தை பெற்றவர், மேலும் ஐந்து தாலந்துகளைக் கொண்டுவந்து: “ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்" என்றார். எசமானர் அவரை நோக்கி: “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்” என்றார். இரண்டு தாலந்துகளைப் பெற்றவரும் வந்து: ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாருங்கள், மேலும் இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் என்றார். எசமானர் அவரை நோக்கி: "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார். + +ஒரு தாலந்தைப் பெற்றவரோ வந்து: “ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார். + +அவனுடைய எசமான் மறுமொழியாக: "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெ��ிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார். எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் வெளியே தள்ளுங்கள் என்றார். + +தாலந்துகள் உவமை சொல்லும் கருத்து : கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் கொடுத்துள்ள திறமையை மென்மேலும் வளர்க்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால் கடவுள் மேலும் திறமைகளைக் கொடுப்பார். திறமையை வளர்க்காது இருந்தால் கொடுக்கப்பட்ட சிறிய திறமையும் மங்கி மறைந்து விடும். + + + + + + +என்ன செப்பங்கா நீ (நூல்) + +என்ன செப்பங்கா நீ... சோலைக்கிளியின் ஏழாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். + + + + + +இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (நூல்) + +மைதிலியின் முதற் கவிதைத் தொகுப்பு இதுவாகும். + + + + + +குறுஞ்செய்திச் சேவை + +குறுஞ்செய்திச் சேவை (Short Message Service") பொதுவாக நகர்பேசிகளூடாக அனுப்பபடும் குறுகிய செய்திகளாகும். இவை நகர்பேசிகள் மாத்திரம் அன்றி சில நிலையான தொலைபேசிகளிலும் பயன்படுகின்றது. + +தமிழில் யுனிக்கோட் முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை செல்லினம் மென்பொருளூடாகத் தமிழர்களின் தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தவிர இலங்கையில் சண்ரெல் மடிக்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசிகளில் தமிழை எ-கலப்பை போன்ற மென்பொருட்களூடாக நேரடியாகத் தட்டச்சுச் செய்து அனுப்பமுடியும். Nokia PC Suite மென்பொருட்களும் இவ்வாறே நேரடியாகத் தமிழில் செய்திகளைத் தயாரிக்க உதவுகின்றன எனினும் பெறுபவர்களின் நகர்பேசியில் ஒருங்குறி வசதியிருக்கவேண்டும். +உலகின் முதல் குறுஞ்செய்தியானது 1992 திசம்பர் 3 அன்று கணிணியில் இருந்து அனுப்பப்பட்டது. அப்போது வோடபோன் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விஸுக்கு உலகின் முதல் குறுச்செய்தியை, ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு சொற்களுடன் கிறித்துமசு வாழ்தாக அனுப்பினார். ஜார்விஸ் வைத்திருந்த ஆர்பிட் நகர்பேசியில் அதைப் பெற்றுக்கொண்டார். அப்போது நகர்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் அந்த வசதி இல்லை, குறுஞ்செய்திகளை பெறமட்டுமே முடிந்தது. + +நகர்பேசி வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பிவைப்பதற்கான கருத்தாக்கத்தை 1984 இல் முதன்முதலில் முன்வைத்தவர் பின்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் என்பவர். ஆனால் அவர் அளித்த ஒரு பேட்டியில் இது ஒரு கூட்டுக் கண்டுபிடிப்பு என்றார். குறுஞ்செய்திகளில் 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் ஆவர். + +1993 இல் நோக்கியா நிறுவனம் நகர்பேசியில் குறுஞ்செயதி அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அதன் பிறகு குறுஞ்செய்தி பிரபலமானது. 1999 இல் தான் பல்வேறு நகர்பேசி சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை பரவலானது. + + + + + +மு. புஷ்பராஜன் + +மு. புஷ்பராஜன் யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் 1947இல் பிறந்தவர். இலங்கை போக்குவரத்துச் சபையில் பேருந்து நடத்துனராகவும் பின்னர் சாலைப் பரிசோதகராகவும் பணிபுரிந்தவர். இப்பொழுது லண்டனில் வாழ்கிறார். + +கலை, இலக்கியம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடைய இவர் எழுபதுகளில் எழுதத் தொடங்கினார். இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். + + + + + +பென்டகன் + +பென்டகன், (பென்ரகன், "The Pentagon") ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இராணுவத் தலைமையகமாகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. இது பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். + + + + + +மன்னர் மகனின் திருமணம் உவமை + +மன்னர் மகனின் திருமண���் இயேசு விண்ணரசை விளக்குவதற்கு பயண்படுத்திய உவமையாகும். இது விவிலியத்தில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இயேசு இதில் விண்ணரசைப் இளவரசனின் திருமணத்துக்கு ஒப்பிட்டுகிறார். இவ்வுவமை மேலும் பல படிப்பிணைகளையும் கொண்டுள்ளது. இதன் மூலகருத்தாக "அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்" என்ற வசனத்தை குறிப்பிடலாம். + +அரசன் ஒருவன் தனது மகனுக்கு திருமணம் செய்ய ஆயத்தப்படுத்தினான். திருமணத்திற்கு தன் தகுதிகேற்ற பலருக்கு அழைப்பு விடுத்தான். விருந்திற்கான ஏற்பாடுகள் முடிந்தது. அரசன் அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். ஆனால் அழைப்பு பெற்றவர்களோ விருந்துக்கு வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம்,"நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனாலும், அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார் வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அரசனுடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். +பின்னர் தம் பணியாளர்களிடம்,"திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து,"தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம்,"அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்���ும்" என்றார். + +இங்கு கடவுளை அரசராகவும் இயேசு தன்னை இளவரசனாகவும் விண்ணரசை திருமண வீடாகவும் ஒப்பிட்டு இந்த உவமைய இயேசு கூறினார். விண்ணரசிற்கு வருமாறு கடவுளின் மக்களுக்கு (யூதர்) அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள அவ்வழைப்பை புறக்கனிக்கவே கடவுள் அவ்வரசை யூதரல்லாதோருக்கு கொடுத்தார். இருப்பினும் யூதரல்லதவரும் ஆயத்த மற்றிருந்தால் (திருமண ஆடை) திருமணத்தில் பங்கேற்க முடியாது. + + + + + + + +இயேசுவின் உவமைகள் + +இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனைகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன. + +விவிலியத்தின் நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு ஐந்து உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் இரண்டு உவமைகளையும் குறிப்பிட்டுள்ளனர். சில உவமைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தியாளரும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியதில் மொத்தம் 42 இயேசுவின் உவமைகள் உள்ளன. ஊதாரி மைந்தன் உவமை மற்றும் நல்ல சமாரியன் என்ற இரு உவமைகள் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன. யோவான் நற்செய்தியில் உள்ள இரண்டு உவமைகளும் மற்றைய நற்செய்திகளில் காணப்படவில்லை. + +இயேசுவின் உவமைகளை பொதுவாக மூன்று தலைப்புகளின் கீழ் அடக்கலாம். அவையாவன: + +என்பனவாகும். சில உவமைகளை இத்தலைப்புகளில் ஒன்றுக்கு கீழ் வகைப்படுத்தலாம். அதேவேளை மற்றும் சில உவமைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளுக்கு பொருத்தமானவையாகும். + + + + + + + +ரிச்சர்ட் ஸ்டால்மன் + +ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman, பி. மார்ச் 16, 1953) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation), நிரலா���்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார். + +இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன. + +க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே. + +தொண்ணூறுகளிலிருந்து தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளிலும், கட்டற்ற மென்பொருள் தத்துவ ஆக்கம், பரவலாக்கம் , ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களிலும் தன்னுடைய பெரும்பகுதி நேரத்தினைச் செலவிட்டு வருகிறார். +இவர் உரையாற்றுவதற்காக வழங்கப்படும் பணமே இவரது சொந்த வருமானமாக இருக்கிறது. + +ஸ்டால்மன் நியூயோர்க் நகரில் பிறந்தார். முதன்முதலாகத் தனது முதுநிலை உயர்பாடசாலையில் கற்கும்போது 1969-ம் ஆண்டளவில் கணினி ஒன்றினைப் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றார். உயர்பாடசாலை பட்டமளிப்புக்குப் பின் ஒரு கோடைகாலத்தில் தனது முதல் நிரலாக்கமான PL/I கணி மொழிக்கான Preprocessor ஒன்றினை IBM 360 கணினியில் எழுதி முடித்தார்.அதேவேளை, ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின்(Rockefeller University) உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தன்னார்வ ஆய்வுகூட உதவியாளராகப் பணியாற்றினார்.ஜூன் 1971 அளவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவனாக இருந்த சமயம் MIT செயற்கை அறிவு ஆய்வுக்கூடத்தில் நிரலாளரானார். ஃப்ரி ஆஸ் இன் ஃப்ரிடம்(Free as in Freedom) எனும் ஆங்கில நூல் இவரின் வாழ்க்கை வரலாறை அறிய உதவும் முக்கிய நூலாகும். + + + + + +தா. பாலகணேசன் + +தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963) பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் ஆவார். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர். + + + + + + +பிட்டொரென்ட் + +பிட்டொரென்ட் (bittorrent) பீர்-பீர் (peer to peer) முறையில் கோப்புக்க்ளைப் பரிமாறும் ஏற்றுக் கொள்ளபபட்ட ஓர் வழிமுறையாகும் இது பிரான் ஹொகீனின் (Bran Cohean) உருவாக்கம் ஆகும். பிட்டொரென்ட் ஆனது விலையுயர்ந்த சேவர்கள் மற்றும் அதிவேக இணைப்பு வசதிகளிற்கான கூடுதற் கட்டணங்களை எதிர்பார்க்காது இம்முறையில் மிகப்பெரும் கோப்புக்களை பரிமாறப் பயன்படுகின்றது. காஷ்லாஜிக்கின் கருத்துப் படி 35% வீதமான நெரிசல்கள் இவ்வகையான கோப்புப் பரிமாற்றத்தினாலேயே ஏற்படுகின்றது. + +பிட்டொரென்ட் மென்பொருளானது பைத்தொன் (Phyton) கணினி நிரலாக்கல் மொழியில் எழுதப்பட்டது. இதன் 4.0 ஆம் பதிப்பிற்கமைய இதன் மூல நிரலானது பிட்ரொரண்ட் திறந்த மூல நிரல் அனுமதி (ஜபர் திறந்த மூலநிரலின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட அனுமதி). இதனுடன் ஒத்தியங்கும் பல கிளையண்டகள் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு இயங்கு தளங்களிற்கும் அமைக்கப்பட்டுள்ளன. + +பிட்டொரென்ட் கிளையண்ட்கள் யாவும் பிட்ரொறண்டின் அனுமதிபெற்ற கோப்புப் பரிமாற்றல் முறையை ஆதரிக்கின்றன. + += டொரண்ட்ட்களை (ரொரண்ட்களை) உருவாகுதலும் வெளியிடுதலும் = +கோப்பு ஒன்றினையோ அல்லது பல்வேறு கோபுக்களையோ பரிமாறுவதற்கு முதலில் கிளையண்டானது முதலில் ரொரண்ட் கோப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். ஒவ்வொரு ரொரண்டும் மெற்றா தகவலைக் கொண்டிருக்கும். அதில் பகிரப்படும் கோப்புபற்றிய விவரம் மற்றும் முதலாவது நகலைத் தரும் கணினியின் விவரம் ஆகியவற்றை சேகரிக்கும். + +இணைய்த்தளத்தில் இருந்து உலாவியூடாக பதிவிறக்கம் செய்து பின்னர் பிட்டொரெண்ட் (பிட்ரொரண்ட்) வருகையர் (கிளையண்ட், client) மூலம் திறக்கலாம். திறக்கப்பட்டவுடன் பிட்டொரண்ட் (பிட்ரொரண்ட்) கிளையண்ட் ஆனது தொடர்வி (தொடரொட்டி?) (டிராக்கர், tracker) உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். + +சொந்தக் கோப்புக்களை பிட்ரொரண்ட் ஊடாக விநியோகிப்போர் கூடிவருகின்றது. + +அநேகமாக திறந்த மூல மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் பிட்டொரண்ட் ("பிட்ரொரண்ட்"') ஊடாக விநியோகிக்கப் படுகின்றன. இதனால் இம் மென்பொருட்கள் கிடைகும் சாத்தியக் கூற்றினை அதிகரிப்பதோடு கணினி வன்பொருட்கள் மற்றும் இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைவடைகின்றன. உதாரணமாக சண் மைக்ரோ சிஸ்டத்தின் ஓப்பன் ஆபீஸ் (ஓப்பிண் ஆபீஸ்), மற்றும் லினக்ஸ் விநியோகங்களான பெடோரா, உபுண்டு மாதிரமன்றி இக் கிளையண்ட்களையும் (வருகையர்களையும்) இதேமுறையில் வழங்கி (விநியோகித்து) வருகின்றனர். + +http://www.gameupdates.org சில பிட்ரொரண்ட் முறையில் கிடைக்கின்றது. + +Warner Brothers Entertainment தமது திரைப்படங்களை பிட்ரொரண்ட் முறையில் விநியோகிக்த் திட்டமிட்டுள்ளனர். + + + + + +கனகலதா கிருஷ்ணசாமி + +லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய "நான் கொலை செய்த பெண்கள்" என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. + +இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1983 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார். 20 ஆண்டுகளாக தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். + +சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய சாகித்திய அகாதமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார். + +கனகலதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், மற்றும் சரிநிகர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது ஆக்கங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. + +2008 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது கனகலதாவுக்கு "நான் கொலை செய்த பெண்கள்" என்ற நூலுக்காக வழங்கப்பட்டது. இவ்விருதோடு $10,000 வரை ரொக்கமும் இவருக்குக் கிடைத்தது. சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் 2008 டிசம்பர் 3 ஆம் நாள் நடந்த விழாவில் விருதை வழங்கினார். + + + + + + +கொழும்பு மாவட்டம் + +கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலைநகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது. + +கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர். + +கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது. + + + + +ஸ்டீவ் ஜொப்ஸ் + +ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) ("Steve Jobs", பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். + +ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். +ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்தார். + +ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் ஸ்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக���க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஸ்ட் (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார். + +ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ (Joanne Schieble), சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள். + +1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவக் காரணமாக இருந்தது. + +கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. +"அந்த உரையின் தொகுப்பு:" +நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். + +புள்ளிகளை இணைப்பது: +நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்ட���ம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது. + +லவ் அண்ட் லாஸ்: +நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன். + +இறப்பு: +சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். " உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். +தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார். + + + + +மீண்டும் கடலுக்கு (நூல்) + +மீண்டும் கடலுக்கு, சேரன் 2000 - 2004 காலப்பகுதியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஆகும். + + + + + +11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள் + +11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள் என்பது, 11 ஜூலை 2006 அன்று மும்பை புறநகர் இரயில்வேயில் அடுத்தடுத்து 11 நிமிடங்களில், நிகழ்ந்த ஏழு குண்டுவெடிப்புகளைக் குறிக்கும். இக்குண்டுகள் மும்பை மேற்கு புறநகர் இரயில் நிலையங்களிலும் அவற்றுக்கு அருகே உள்ள சாலைகளிலும் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகள் மாலை 6:24 முதல் 6:35 மணிக்குள் நிகழ்ந்தன. இந்நிகழ்வில் குறைந்தது 200 பேர் இறந்தனர். மேலும், குறைந்தது 700 பேர் காயமுற்றனர். + +முதலாவதாக கால் இரயில் நிலையத்திலும், அதனைத் தொடர்ந்து மாகிம், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை இரயில் நிலையங்களிலும் குண்டு வெடித்தது. + +இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு இரயில்வேயின் அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. மும்பையில் நகர்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. + +இந்த சம்பவத்தை தொடர்ந்து தில்லி, பெங்களூர், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. முக்கிய நகரங்களில் காவல் துறையினர் ரோந்து வந்தனர். விமான நிலையங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். + +11 ஜூலை 2006 அன்று பகலில் காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிர் இழந்தனர். மாலையில் மும்பையில் குண்டு வெடித்தது. + +மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பளித்தது. + + + + +முதல் இந்திய விடுதலைப் போர் + +இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன: + +ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. திப்பு சுல்தான் 1799 iல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 வெளியிட்டுள்ளது. + +ஜனவரி-மே, 1857 இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் "இந்திய சிப்பாய் கலகம்" எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806 இல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை. + + + + + +மீண்டும் வரும் நாட்கள் (நூல்) + +எழுபதுகளில் எழுதத் தொடங்கிய புஷ்பராஜனின் முதற் கவிதைத் தொகுப்பு இதுவாகும். + + + + + +தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்) + +தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற வல்லிக்கண்ணன் எழுதிய சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70க்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய வரலாறுகள் உள்ளன. 51ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளியான, வெளியாகிவரும் இதழ்களைப் பற்றியும் எழுதியுள்ளார். + + + + +வலை உவமை + +வலை உவமை விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமையாகும். விண்ணரசை பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என உவமையை ஆரம்பித்துள்ளார். இதில் கிறிஸ்தவரின் மூல நம்பிக்கைகளில் ஒன்றான உலக முடிவு அல்லது "இறுதி தீர்வின் நாள்" (நியாய தீர்ப்பின் நாள்) பற்றி கூறப்பட்டுள்ளது. உலக முடிவில் 'நீதிமான்களை' 'தீயவரிடமிருந்து' பிரிக்கும் நிகழ்ச்சியை விளக்குகிறார். இது மத்தேயு 13:47-53 இல் கூறப்பட்டுள்ள���ு. இதில் வலை உவமை இரண்டு வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னிணைப்பாக இன்னுமொரு ஒரு வசனமே மட்டுமேயுள்ள உவமையையும் கூறுகின்றார். +மீனவன் ஒருவன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசுகின்றான். வலையில் மீன்கள் சேர்ந்தவுடன் எல்லா வகையான மீன்களையும் சேர்த்து வாரிக் கப்பலில் இட்டுக் கரைக்கு கொண்டு வருகின்றான். கரைக்கு வந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பான். கெட்டவற்றை வெளியே எறிவர். +இயேசு இவ்வுவமையின் பொருளை இவ்வாறு கூறுகிறார்: மீன் பிடிக்கும் நிகழ்ச்சி உலக முடிவு நாளாகும். மீனவர் வான தூதராவார்கள். அவர்கள் உலக முடிவில் உலகம் முழுவதும் சென்று நீதிமான்களிடமிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் தீயோரை தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். + +இவற்றைக் கூறிய பின்னர் இயேசு மக்களை நோக்கி "இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?" என்று கேட்கிறார். இது அவரது போதனைகள் கல்ந்துரையாடல் வடிவிலிருந்தது என்பதைத் தெளிவாக்குகிறது. பின்னர் அவர் மேலுள்ள கருத்தை வலியுறுத்தும் நோக்கில் இன்னுமொரு கதையை கூறுகின்றார். அது பின்வருமாறு தொடர்கிறது; + +ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்" என்று அவர்களிடம் கூறினார். இவ்வாறே உலக முடிவிலும் வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர். + + + + + + + +செல்வந்தனும் இலாசரசும் உவமை + +செல்வந்தனும் இலாசரசும் இயேசு கூறிய ஒர் உவமானக் கதையாகும். இது லூக்கா நற்செய்தியில் (16:19-31) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. செல்வந்தனது பெயர் தைவிஸ் என்பது மரபு. இது பெருஞ்செல்வந்தன் என்பதற்கான இலத்தீன் மொழிப்பதமான "Dives" என்பதன் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரசும் இக்கதையில் வரும் இலாசரசும் ஒருவரல்ல. இவர்கள் இருவரும் வெவ்வேறு மனிதர்கள். இக்கதை இயேசுவின் பிரபல உவமைகளில் ஒன்றாகும். முக்கியமாக பல ஓவியரது கவனத்தையும் ஈர்த்த உவமை இது. + +செல்வர் ஒருவர் இ���ுந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். கடைசியில் ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் ஒருநாள் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவரோ நரகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். + +அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் வெந்து, வறண்டு நான் மிகுந்த வேதனையை அடைகிறேன்" என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் அதே வேளையில் வேதனைப்படுபவனை உன் கண்கள் பார்க்கவில்லை. ஆனால் இலாசர் இன்னல்களையே அடைந்தார், அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும், கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார். + +அதற்கு செல்வந்தன், "அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே" என்றார். அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. +இறைவாக்கினருக்கு அவர்கள் செவிசாய்க்கட்டும்" என்றார். செல்வந்தரோ, "அப்படியல்ல! தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்" என்றார். ஆபிரகாம் அவருக்கு மறுமொழியாக, "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவ���ட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்" என்றார். + +மற்றைய உவமைகளைப் போலல்லாது இவ்வுவமையில் தெளிவான உட்கருத்து காணப்படுவதாகத் தெரியவில்லை. இதில் இலாசரசு ஏழை என்பதைவிட அவர் உத்தமராக வாழ்ந்தாரா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேலும் செல்வந்தன் நரகத்துக்குச் செல்வதற்கு அவன் செய்த பாவம் என்ன என்பதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்வுவமை பல ஆய்வாளரின் கவனத்தை ஈர்த்தது. ஆகவே இது உவமை என்ற வகைக்குள் அடங்காது என்பது சிலரின் வாதமாகும். ஆனாலும் இது இப்போது புறக்கணிக்கப்படுள்ளது. புதிய கருத்துகளின் படி இயேசு இக்கதையின் முன்பகுதியை (லூக்கா 16:19-26) உவமையாகவும் மிகுதியைத் தன்னை (இயேசுவை) ஆபிரகாம் மற்றும் மோசேயின் சாட்சியாக விசுவாசிக்காத யூதரைக் கண்டிக்கும் வகையில் கூறிய வாய்மொழியாகவும் கருதுகின்றனர். + +இக்கதையிலிருந்து இறப்பின் பிறகு ஒருவரது ஆத்துமா மோட்சம் அல்லது நரகம் செல்லும் முன்னர் இடைநிலை ஒன்றில் உலக முடிவுவரை தங்குகிறது என்ற கருத்தை இயேசு கூறியதாக கத்தோலிக்கர் நம்புகின்றனர். + + + + + + + +சுதாராஜ் + +சுதாராஜ் (பிறப்பு: ) சிவசாமி இராஜசிங்கம் இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளாருமாவார். 1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாவல், சிறுகதை,சிறுவர் இலக்கியம், இலக்கியத்தில் பல ஆக்கங்களை எழுதி வருகிறார். +சுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூர்யைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன். யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுப் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலும் பணிபுரிந்து தற்போது புத்தளத்தில் பணியாற்றுகிறார். அங்கு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார். இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். + +சுதாராஜின் முதற் சிறுகதைத் தொகுதி "பலாத்காரம்" (1977) வெளி வந்தது. இது பின்னர் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. 2002 முதல் தன்னை வ��ர்த்த சிரித்திரனைக் கௌரவிப்பதற்காக "சிரித்திரன் சுந்தர் விருதினை", ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார். + + + + + + + +பரிசேயனும் பாவியும் உவமை + +பரிசேயனும் பாவியும் அல்லது பரிசேயனும் வரிவசூலிப்பவனும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமானக் கதையாகும். இது இயேசு தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து கூறினார். எப்படி கடவுளை தொழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இக்கதை தற்காலத்தில் கொள்ளப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் 18:9-14 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்பது இவ்வுவமையின் மைய கருத்தாகும். + +இயேசு இக்கதையை கூறும் பின்னனிய அறிவது இவ்வுவமையின் பொருளை விளங்குவதற்கு முக்கியமாகும். இயேசுவின் பல உவமைகளை அன்றைய யூதா நாட்டின் கலாச்சார பின்னனியோடு நோக்கும் போது கதையின் பொருள் வெளிப்படையாகும். +பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர்.ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர். +வரிவசூலிப்பவர்களோ அப்போது யூதா நாட்டை ஆன்ட உரோமை அரசுக்கு பணியாற்றினார்கள். இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர். + +இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர்(வரிதண்டுபவர்). பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்"கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிரு���்கிறேன். என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்." + +ஆனால் வரிவசூலிப்பவரோ தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். + +பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். + +இங்கு பரிசேயன் கடவுள் சட்டத்தில் கூறிய அனைத்தையும் செய்த்தாக மற்றவர் முன் பரைசாற்றுவதில் கவனமிருந்த்தே தவிர கடவுளிடம் தன்னை தாழ்த்தவில்லை. அவன கடவுளிடம் தன் சுயத்தை மறைக்க என்னினான். இதனால் அவனது வேண்டுதலை கடவுள் புறக்கனித்தார். + +ஆனால் வரிவசூலிப்பவரோ கடவுள் முன்னதாக தன்னை தாழ்த்தினார். தன் பாவங்களை கூறினார். வெளிவேடமின்றி கடவுளிடம் சென்றார் இதனால் அவது வேண்டுதல் ஏற்கப்பட்டது. வெளிவேடமாக செபம் செய்வதை கடவுள் விரும்புவதில்லை. மேலும் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். + + + + + + + +தஞ்சை சரசுவதிமகால் நூலகம் + +தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. + + + + +1. ஆ. குணசேகரன், "தஞ்சை சரசுவதிமகால் நூலகம்", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி,டி.கே சாலை, சென்னை-18, ஆண்டு குறிப்பிடபடவில்லை ஆனால் சான்றுரை ஒன்றில் 10.8.2004 என்னும் நாள் குறிப்பிட்டுள்ளது. பக்கங்கள் 262. + + + + + +சிவவாக்கியர் + +சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. + +அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்��தாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர். + +அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம். + +சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார். + +"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா +
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே +
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே +
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே." + +பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் +
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் +
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ +
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! + +ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ +பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ +தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ +வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. + +"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். + +இரா.இளங்குமரன், "சித்தர் பாடல்கள்: சிவவாக்கியர்", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984, பக்கங்கள் 1 - 126. + + +
+ +தில்லைச் சிவன் + +"தி. சிவசாமி (பிறப்பு: சனவரி 5, 1928) என்பவர் தில்லைச் சிவன்"' என்ற புனைபெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணை என்ற ஊரில் ஆறுமுகம் தில்லையம்பலம், பொன்னம்மை ஆகியோருக்குப் பிறந்தவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் எனப் பரவலாக எழுதியவர். இதழாசிரியராகவும் செயற்பட்டவர். + + + + + + + + +சித்தரியல் + +சித்தர்கள், சித்தர் கலைகள், சித்தர் மரபுகள் போன்றவற்றை ஆயும் இயலை சித்தரியல் எனலாம். இது தமிழர் பற்றிய ஆய்வின் ஒரு முக்கிய முனையாகும். + +மலேசிய அகத்தியர் ஞான பீடம் ஏற்பாட்டில் கோலம்பூரில் 25-27 மே 2007 இல் முதலாவது உலகச் சித்தர்நெறி மாநாடு நடாத்தப்பட்டது. இங்கு சித்தர் மருந்துக்களின் கண்காட்சியும், மூலிகைச் செடிக்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. + + + + +என். கே. மகாலிங்கம் + +என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் "Things Fall Apart" நாவலை மொழிபெயர்த்தவர். + + + + + + +நல்ல ஆயன் உவமை + +நல்ல ஆயன் ("The Good Shepherd") இயேசு கூறிய உவமானக் கதையாகும். இது யோவான் நற்செய்தியில் ( ) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் "நல்ல ஆயன் நானே" என கூறுகின்றார். மற்றைய நற்செய்தி நூல்களிலும் இயேசு "நான் எனது ஆடுகளை தவறவிடமாட்டேன்" என பல முறை கூறியிருக்கிறார். இக்கதை சிறிய உவமை எனினும் இக்கதையை கேட்டுக் கொண்டிருந்த யூதரிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இக்கதையின் மூலம் இயேசு தன்னை கடவுள் என தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். இக்கதையை கேட்ட யூதருக்கும் இயேசுவின் இந்த கருத்து விளங்கியிருக்க வேண்டும். + +இக்கருத்தில் யூதர்கள் பிளவுபட்டு தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். பலர் இயேசுவை "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ "பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள். இறுதியில் இயேசு மீது கல்லெரிய பார்த்தனர் அவர்களால் அது கூடாமல் போயிற்று அவரை கைது செய்ய பார்த்தனர் இயேசு அவர்களிடமிருந்து மீண்டு வெளியேறினார். + +நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. + +உவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார். "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்." + +இப்பின்னுரையில் இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆயன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார். + + + + + + +பெரிலியம் + +பெரிலியம் (ஆங்கிலம்: "Beryllium" IPA: /bəˈrɪliəm/ bə-RIL-ee-əm) என்பது எடையில் மிகவும் குறைவான ஒரு தனிமம். வேதியியலில் இதன் குறியீடு Be என்பதாகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமம் ஆகும். செப்பு போன்ற மாழைகளுக்கு (உலோகங்களுக்கு) உறுதியூட்ட சிறிதளவு பெரிலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் (புதிர்-கதிர்கள்) இம்மாழையினூடு கடந்து செல்லவல்லன. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதுமற்றது. நைட்டிரிக் காடியால் (புளிமம், அமிலம்) (nitric acid) தாக்குண்டும் கரையாத பொருள். + +1798 ல் பெரைல் என்று அழைக்கப்பட்ட பெரிலியம் அலுமினியம் சிலிகேட் என்ற கனிமத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்று அதன் ஆக்சைடை மட்டும் பிரித்தெடுத்தவர் பிரஞ்சு நாட்டு வேதியியல் அறிஞரான நிக்கோலஸ் லூயிஸ் வாக்குலின் இதைக் குளுசினியம்(Glucinium)என அழைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இச் சொல் இனிப்பு என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான கிளைகைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது. இன்றைக்கு இப்பெயர் பிரான்சு நாட்டில் மட்டும் புழக்கத்தில் உள்ளது. பிற நாடுகளில் கலாப்ரோத் என்ற வேதியியலார் சூட்டிய பெரிலியம் என்ற பெயரே நிலைபெற்றது . இது பெரைல் என்ற சொல்லிலிருந்து வந்தது. என்றாலும் இதன் மூலச்சொல் மரகதம் என்று பொருள்படும் பெரைலோஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லாகும். + +பெரிலியத்திற்கு 100 க்கும் மேற்பட்ட கனிமங்கள் அறியப்பட்டிருந்தாலும் இவற்றுள் பெரைல், பினாசைட், கிரைசோ பெரைல் மற்றும் பெர்ட்ரான்டைட் போன்றவை முக்கியமானவை ஆகும். பெரைலில் 11 லிருந்து 13 விழுக்காடு பெர்லியம் ஆக்சைடு உள்ளது. இந்த உலோகம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் பரவலாக 2 முதல் 6 விழுக்காடு செழிப்புடன் காணப்படுகின்றது. +இந்தியா, பிரேசில் அர்ஜென்டினா, கனடா, அமெரிக்கா, காங்கோ, தென்ஆப்ரிக்கா, உகண்டா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெரைல் கனிமம் மிகுதியாகக் கிடைக்கின்றது. 1928 ல் வோலர் (F.Wohler) மற்றும் புஸ்சி(A.A.Bussy) ஆகியோர் பெர்லியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கும் வழிமுறையைக் கண்டறிந்தனர். எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு லிபியூ(P.Lebeau) என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானியே தூய பெர்லியத்தை உப்பூட்டிய மின்னாற் பகு நீர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் வழி முறையைக் கண்டறிந்தார். இன்றைக்கு வர்த்தக அடிப்படையில் பெர்லியம் புளுரைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு மக்னீசியத்தால் உட்படுத்தி பெர்லியத்தைப் பெறுகின்றார்கள். + +பெரிலியம் அதன் சேர்மங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உயர் வெப்பநிலைகளில் பெரிலியத்திற்கு ஆக்சிசன் மேலுள்ள நாட்டமும், ஆக்சைடு படலம் நீக்கப்பட்டவுடன் அதன் உயர் ஒடுங்கும் அணுகுமுறையும் இதற்கு காரணங்களாகும். அமெரிக்கா, சீனா மற்றும் கஜகசுத்தான் நாடுகள் மட்டுமே பெரிலியத்தை பேரளவில் தொழில்துறையாக பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள மூன்று நாடுகளாகும் . 20 வருட இடைவெளிக்கு பின்னர் உருசியாவில் பெரிலியம் உற்பத்தி தொழில்நுட்பம் ஆரம்பகால கட்டங்களில் உள்ளது . + +பெரிலியம் மிகவும் பொதுவாக பெரைல் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, ஒரு பிரித்தெடுத்தல் முகவரைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தல் அல்லது ஒரு கரையக்கூடிய கலவையாக உருக்கிப் பிரித்தல் என்ற இரண்டு முறைகளில் இத்தயாரிப்பு நிகழ்கிறது. பெரைல் கனிமத்துடன் சோடியம் புளோரோசிலிக்கேட்டும் சோடியம் கார்பனேட்டும் கலக்கப்பட்டு 770 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. சோடியம் புளோரோபெரைலேட்டு, அலுமினியம் ஆக்சைடு, சிலிக்கன் டை ஆக்சைடு முதலியவை உருவாகின்றன. சோடியம் புளோரோபெரைலேட்டுடன் நீர் கலந்த சோடியம் ஐதராக்சைடு கலந்து பெரிலியம் ஐதராக்சைடு வீழ்படிவாக்கப்படுகிறது. உருக்குதல் முறையில் தயாரிக்க பெரைல் கனிமம் நன்கு தூளாக்கப்பட்டு 1650 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. உருகலை விரைவாக குளிர்வித்து மீண்டும் 250 முதல் 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு அடர் கந்தக அமிலம் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பெரும்பாலும் பெரிலியம் சல்பேட்டும் அலும்னியம் சல்பேட்டும் உருவாகும். நீரிய அமோனியாவை இதனுடன் சேர்த்து அலுமினியம் மற்றும் கந்தகம் நீக்கப்படுகின்றன. பெரிலியம் ஐதராக்சைடு எஞ்சுகிறது. +வெப்பப்படுத்துதல் முறை அல்லது உருக்குதல் முறைகளில் தயாரிக்கப்பட்ட பெரிலியம் ஐதராக்சைடு பெரிலியம் புளோரைடாக அல்லது பெரிலியம் குளோரைடாக மாற்றப்படுகிறது. நீரிய அமோனியம் ஐதரசன் புளோரைடுடன் பெரிலியம் ஐதராக்சைடைச் சேர்த்தால் அமோனியம் டெட்ராபுளோரோபெரிலேட்டு உருவாகும். அதை 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தினால் பெரிலியம் புளோரைடு உருவாகிறது. இதனுடன் மக்னீசியத்தைச் சேர்த்து 900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் பெரிலியம் கிடைக்கிறது. இதையே 1300 பாகை வரை சூடாக்கும்போது கச்சிதமான உலோகம் கிடைக்கிறது. பெரிலியம் ஐதராக்சைடை சூடுபடுத்தும் போது பெரிலியம் ஆக்சைடு தோன்றும். இதை கார்பன் மற்றும் குளொரினுடன் சேர்க்கும் போது பெரிலியம் குளோரைடு உருவாகிறது. இதை மின்னாற் பகுத்��ும் பெரிலியம் உலோகம் தயாரிக்கலாம். +இதன் வேதிக் குறியீடு Be. இதன் அணு எண் 4, அணு நிறை 9.012, அடர்த்தி 1850 கிகி /கமீ.உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1553 K, 2773 K ஆகும். இது எஃகைப் போன்று சாம்பல் நிறத்தில் பளபளப்பாய் இருக்கும். இது லித்தியத்திற்கு அடுத்து லேசான உலோகம் என்றாலும் அதன் உருகு நிலை வேறு பல லேசான உலோகங்களை ஒப்பிட மிகவும் அதிகம். பெரிலியத்தை உருக்கி வார்ப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனினும் இப்படி வார்க்கப்பட்ட பெரிலியம் அறை வெப்ப நிலையில் தகடாக அடிப்பதற்கும், கம்பியாக இழுப்பதற்கும் இணக்கமாக இருப்பதில்லை. இதனால் பொடித்துகள் உலோகவியல் (Powder mettalurgy) வழிமுறைகளைப் பின் பற்றி ஒருபடித்தான துகள் படிவுப் பொருளைப் பெற்றுச் சிக்கலை எதிர் கொள்கின்றார்கள். இதன் மீள் திறன் எஃகை விட 33 விழுக்காடு கூடுதலாகப் பெற்றுள்ளது. இது காந்தப் பண்பைக் கொண்டிருக்கவில்லை, இதன் வெப்பங் கடத்தும் திறன் மிகவும் அதிகம். பெரிலியம் அடர் நைட்ரிக் அமிலத்தின் தாக்கத்தால் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. எக்ஸ் கதிர்களை உட்புக அனுமதிக்கிறது. இதன் மீது ஆல்பா கதிர்கள் விழுமாறு செய்தால், நியூட்ரானை உமிழ்கிறது. ஒரு மில்லியன் ஆல்பாத் துகள்கள் விழும் போது 30 நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன என்றாலும் இதுவே நியூட்ரானுக்கு வலுவான மூலமாகும். + +பெரிலியத்தின் வேதிப் பண்புகள் பெரும்பாலும் அலுமினியத்தை ஒத்திருக்கின்றன. அலுமினியத்தைப் போல பெர்லியமும் ஆக்சைடு கவசப் படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்கிறது. இது ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் அரிமானத்தைத் தடுக்கிறது. எனினும் படலத்தால் கவரப்பட்ட பெரிலியம் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம், கந்தக அமிலங்களோடு வினை புரிகின்றது எனவே இந்த ஆக்சைடு மேற்படலம் அமில அரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு அப்பால் நைட்ரஜன் பெர்லியத்தோடு வினை புரிந்து பெர்லியன் நைட்ரைடை உண்டாக்குகின்றது. காரக் கரைசல்கள் பெர்லியத்துடன் வினை புரிந்து ஹைட்ரஜன் வளிமத்தை வெளியேற்றுகின்றன. + +பெரிலியத்தின் வேதியியல் பண்புகள் பெரும்பாலும் அதன் சிறிய அணு மற்றும் அயனி ஆரத்தின் விளைவு ஆகும். மற்ற அணுக்களுடன் சேரும் போது இதன் அயனியாகும் ஆற்றல���ம் வலிமையான முனைவாகும் தன்மையும் அதிக அளவில் இருக்கின்றன. இதனால்தான் பெரிலியத்தின் அனைத்துச் சேர்மங்களும் சகப்பிணைப்பில் உள்ளன. தனிம வரிசை அட்டவணையில் பெரிலியத்திற்கு வெகு அருகில் உள்ள தனிமங்களைக் காட்டிலும் அலுமினியத்தின் வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது. 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் தவிர பெரிலியத்தின் மீது ஆக்சைடு படலம் உருவாகி மேற்கொண்டு வினையேதும் நடக்காமல் தடுக்கிறது .. எனினும் படலத்தால் கவரப்பட்ட பெரிலியம் நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், கந்தக அமிலங்களோடு வினை புரிகின்றது . ஆனால் நைட்ரிக் அமிலத்தோடு வினை புரிவதில்லை. ஒரு முறை பெரிலியத்தை பற்றவைத்தவுடன் அது பிரகாசமாக எரிந்து பெரிலியம் ஆக்சைடு, பெரிலியம் நைட்ரைடுகளாக உருவாகிறது. 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு அப்பால் நைட்ரசன் பெரிலியத்தோடு வினை புரிந்து பெர்லியன் நைட்ரைடை உண்டாக்குகின்றது. காரக் கரைசல்கள் பெர்லியத்துடன் வினை புரிந்து ஐதரசன் வளிமத்தை வெளியேற்றுகின்றன . காரங்களில் பெரிலியம் நன்றாகக் கரைகிறது. + +பெரிலியம் சல்பேட்டு மற்றும் பெரிலியம் நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத் தன்மை வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில் [Be(H2O)4]2+ அயனி நீராற்பகுப்பு அடைகிறது. + +பெரிலியம் அலோகங்களுடன் சேர்ந்து வினைபுரிந்து இருபடிச் சேர்மங்களை உருவாக்குகிறது. + +பெரிலியம் பெரும்பாலும் இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுகிறது. +பெரிலியம் உயரளவு உருகுநிலையும் எக்கை விட உறுதியாகவும் இருப்பதால் வானவூர்தி, விண்ணூர்தி, ஏவூர்தி போன்றவைகளின் கட்டமைப்பிற்கு பயன்படுகிறது. பீய்ச்சு வழி, பற்சக்கரத் தொகுதி, வேகத் தடையூட்டி போன்றவைகளில் பெரிலியத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக ஆக்சிஜனில் எரிந்து மிகஅதிக வெப்பம் வெளியிடும் தனிமம் பெரிலியமாகும். ஒரு கிராம் பெரிலியம் 17.2 கிலோ காலரி வெப்பத்தை வெளியிடுகின்றது. இது அலுமினியத்தைக் காட்டிலும் அதிகமாகும். இதனால் ஏவூர்திக்கான திண்ம எரிபொருளாக பெரிலிய உலோகப் பொடியைப் பயன்படுத்த முடிகிறது. + +பெரிலியம் ஆற்றல் மிக்க எரிபொருளாயினும் இதன் எரி விளைமங்கள் நச்சுத்தன்மை உடையன. பெரிலியோசிஸ் என்ற பாதிப்பைத் தூண்டுகின்ற���. +இதனை அடுக்கு எவூர்திகளில் மேனிலை அடுக்குகளில் மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்துவது உகந்தது. பெர்லியத்தின் நியூட்ரான் உட்கவர் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால், நியூட்ரான்களை அணு உலைக்குள்ளேயே வைத்திருக்கச் சரியான நியூட்ரான் எதிரொளிப்பானாக பெர்லியம் பயனபடுகிறது. பெர்லியத்தை விட பெரிலியம்-செம்பு கலந்த கலப்பு உலோகம் நற்பயனளிக்கிறது. + +அணு உலையைச் சுற்றி பெரிலியத்தாலான மெல்லிய சுவர் நியூட்ரான் கசிவைத் தடுக்கிறது.பெரிலியத்தின் பரப்பைத் தேய்த்து வளவளப்பூட்டமுடியும். இதனால்தான் அதை ஓர் உலோக எதிரொளிப்பானாகப் பயன்படுத்த முடிகிறது. விண்கலம் தொடர்பான கட்டமைப்புகளில் பெரிலியத்தைப் பயன்படுத்துவதினால் 30-60 விழுக்காடு மூலப் பொருள் மிச்சமாகிறது. நியூட்ரான் கற்றைக்கு உகந்த மூலமாக பெரிலியம் விளங்குகிறது. அணு உலையில் செயல்பாட்டைத் தொடங்கி வைப்பதற்கு இது பயன் தருகிறது. + +பெர்லியம் எக்ஸ் கதிர்களுக்கு ஊடுருவும் பொருளாக இருக்கிறது. அலுமினியத்தை விட 17 மடங்கு எக்ஸ் கதிர்களை உட்செல்ல அனுமதிக்கிறது. இதனால் எக்ஸ் கதிர் உபகரணங்களில் சன்னல்களை அமைத்து எக்ஸ் கதிர்களை ஒரு திசையில் செலுத்த பெர்லியம் பயனளிக்கிறது. + +பெர்லியம் ஆக்சைடு ஒரு வெப்பங்கடத்தாப் பொருள். மின் சாதனங்களுக்கான துணைக் கூறுகளை உற்பத்தி செய்ய இது ஒரு மூலப் பொருளாக உள்ளது. மின் காப்புப் பொருட்கள், மின் பொறித் தக்கைகள்,(spark plug ) உயர் அதிர் வெண் இராடாருக்கான சாதனங்கள், பீங்கான் போன்றவைகள் பெர்லியம் ஆக்சைடால் உற்பத்தி செய்யப்படுகின்றன. + +பெர்லியமும் செம்பும் கலந்த கலப்பு உலோகமான பெரிலிய வெண்கலம் பெற்றிருக்கும் உயர் திண்ம உரவு, முறிவு மற்றும் அரிமானத்திற்கு எதிர்ப்பு நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் மீள் திறன், உயர் மின் மற்றும் வெப்பங்கடத்தும் திறன் போன்ற பண்புகளினால் இது பல இயந்திர உதிரி உருப்புக்களைச் செய்வதற்குப் பயன்படுகிறது. தேய்மானம் குறைவாக இருப்பதால் நீண்ட நாள் பயனுக்கு வருகிறது. உயர் மீள் திறனால் இது சுருள் வில்களை உருவாக்கப் பயன்தருகிறது. அதனால் இதை சுருள் வில் உலோகம் என்பர். கைக் கடிகாரங்களிலும், கன இரக வண்டிகளிலும், இரயில் வண்டிகளிலும் தேவைப்படுகின்ற வலுவான முறிவிலாத சுருள் வில்களுக்கு இது பயனளிக்கிறது. + +பெரிலிய வெண்கலம் உறையும் போது ஏற்படும் வெப்பத்தால் தீப் பொறியை ஏற்படுத்துவதில்லை. இதனால் எண்ணெய் கிடங்குகள் எரிபொருள் மற்றும் எரி வளிம சுத்திகரிப்பு ஆலைகள், எரி வளிமப் பொதிகலன், வெடி மருந்துக் கலன் போன்றவைகளுக்கு பெரிலியம் உதவுகிறது. + +கார்பன் எஃகுடன் சிறிதளவு பெரிலியத்தைச் சேர்க்க அதன் முறிவு எதிர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கின்றது. எக்குப் பரப்புக்களை பெர்லியனேற்றம் செய்வதால் அதன் வலிமை, கடினத்தன்மை, தேய்மானமின்மை போன்ற தன்மைகள் அதிகரிக்கின்றன. மக்னீசியம் காற்று வெளியில் எரிந்து சாம்பலாகக் கூடியது. மக்னீசியக் கலப்பு உலோகங்களில் 0.01 விழுக்காடு பெரிலியம் கலந்தாலே உலோகப் பற்றவைப்புப் பயனின் போது அது எரிந்து சாம்பலாகி விடுவதில்லை. + +பெரிலியமும் லித்தியமும் கலந்த கலப்பு உலோகம் நீரில் மூழ்குவதில்லை. இதன் பயன் கடல் சார்ந்த ஆய்வுகளிலும், படகு, கப்பல் கட்டுமானத் துறைகளிலும், மிதவை உடைகள் தயாரிப்பதிலும் பெரிதும் பயன்படுகிறது. + + + + + +மாவன் அத்தப்பத்து + +மாவன் அத்தப்பத்து (பிறப்பு நவம்பர் 22, 1970) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் அணியின் சிறப்பு மட்டையாளருமாவார். தேர்வுப் போட்டிகளில் ஆடிய முதல் ஆறு சுற்றுகளில் ஐந்து தடவைகள் ஓட்டமேதுமில்லாமலும் ஒரு சுற்றில் ஓர் ஓட்டமும் பெற்ற மாவன் அத்தப்பத்து பின்னர் படிப்படியாகத் திறமையை வெளிக்காட்டினார். இதுவரை ஆறு இரட்டைச்சதங்களைப் பெற்றுள்ளார். காயங்கள் காரணமாக போடிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வுக் கொடுக்கப்பட்டுள்ளார். தலைமைத்துவம் இவருக்குப் பிறகு மகெல ஜயவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது. + + + + +யூரி ககாரின் + +யூரி அலெக்சியேவிச் ககாரின் ("Yuri Alekseyevich Gagarin", ; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். + +யூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகர���ன் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள். யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள "மூர்மன்ஸ்க்" பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது. + +1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். + +ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்: + +எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். +ககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். + +ககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்: + +ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[10] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[10] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது. + +ககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும். + +ககாரின் பலத்த பாதுகாப்புடன் மாஸ்கோ நகரத் தெருக்கள் வழியாக கிரம்ளின் சதுக்கத்தில் நடைபெற்ற மிக்ப்பெரிய விழாவில் அழைத்து வரப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் நாயகன் என்ற் பட்டம் நிகிதா குரோசேவ் அவர்களால் கொடுக்கப்பட்டு கெளவரவிக்கப்பட்டார். + +பின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்���ும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார். + +27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது. + +ககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. + +2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. + +2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது. + +பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது. + +ககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை க���ண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர். + +1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் "மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை" தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார். + +ககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் "யூரி ககாரின் சிலை" நிறுவப்பட்டுள்ளது. + +2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. +இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர். + + + + + + +நீல் ஆம்ஸ்ட்றோங் + +நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் ("Neil Armstrong", நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்ற���ு. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார். + +1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார். + +ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார். +ஆம்ஸ்ட்ராங் ஆகத்து 5, 1930 ஆண்டில் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஜெர்மன், ஐரிஷ், மற்றும் ஸ்காட்டிஷ் மூதாதையர்களில் வந்தவராக இருக்கிறார். அவருக்கு ஜூன் என்ற ஒரு இளைய சகோதரி, மற்றும் டீன் என்ற ஒரு இளைய சகோதரர் ஆகியோர் இருக்கிறார்கள். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக பணிபுரிந்தார் அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, சூலை 20, 1936 ஆண்டில் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் "டின் கூஸ்" என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர். + +அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார், ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் ஆண் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக இருந்தார் அதனால் அவருக்கு கழுகு சாரணர் என்ற பட்டம் கிடைத்தது. அமெரிக்காவின் பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆப் அமெரிக்கா அதன் புகழ்பெற்ற ஈகிள் ஸ்கவுட் விருது மற்றும் சில்வர் பஃபேலா விருது ஆகியவற்றால் அவரை அங்கீகரித்தது. + +1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை. + +1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அவரது 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று அந்த அழைப்பு வந்திருந்தது. இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது. அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 16, 1950 அன்று, அவரது 20 வது பிறந்தநாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கடற்படை (ஏவியேட்டருக்கான) விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. + +தனது முதல் பணியாக கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7 இல், NAS சான் டியாகோவில் (இப்போது NAS வட தீவு என அழைக்கப்படுகிறது) ஆரம்பித்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார், சனவரி 5, 1951 அன்று ஒரு F9F-2B பாந்தர் விமானத்தில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். சூன் மாதம், அவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார், அதே வாரத்தில் Midshipman இலிருந்து Ensign மாற்றப்பட்டார். அந்த மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது. + +ஆகத்து 29, 1951 இல் சோஞின் மீது ஒரு புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் ஆம்ஸ்ட்ராங் முதலில் பணி செயதார். ஐந்து நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 3 ம் திகதி, வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானதுடன் அவ���் பறந்தார். சுமார் 350 mph (560 km/h) வேகத்தில் சென்று சிறிய குண்டு வீசும் போது, ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகனையால் தாக்கப்பட்டது. கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றபோது, அவரின் பாந்தர் விமானத்தின் வலது இறக்கை மூன்று அடி (1 m) துண்டிக்கப்பட்ட சுமார் 20 அடி (6 m) உயரத்தில் ஒரு முனையில் மோதியது. ஆம்ஸ்ட்ராங் விமானத்தை நட்பு பிரதேசத்திற்கு பறந்து சென்று அவர் தண்ணீரில் விமானத்தை இறக்க திட்டமிட்டார் ஏனென்றால் கடற்படை ஹெலிகாப்டர்களால் காப்பாற்றப்படுவார் என்று நினைத்தார். இதுவே அவரின் ஒரே பாதுகாப்பான விருப்பமாக இருந்தது. அதனால் போஹங்கிற்கு அருகே ஒரு விமானநிலையத்திற்கு பறந்தார், அவர் ஆபத்துக் கால தப்பிக்கும் வழிமுறையை பயன்படுத்தி வெளியேற முயன்று மீண்டும் நிலத்தில் இருக்கையுடன் தூக்கி வீசிப்பட்டார். அவரது விமான பள்ளியில் இருந்து அறைத்தோழ்ர் ஒருவர் ஒரு ஜீப்பில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்றினார். 125122 F9F-2 என்ற விமான அழிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. + +ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார் மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார், அதில் பெரும்பாலானவை சனவரி மாதத்தில் 1952 ஆண்டில் நடந்தது. அவர் முடித்த 20 போர் முயற்சிகளுக்கான விமானப் பதக்கம், அடுத்த புதிய 20 முயற்சிகளுக்கான தங்க நட்சத்திரம் மற்றும் கொரிய சேவை பதக்கம் மற்றும் என்கேஜ்மன்ட் நட்சத்திரம் ஆகியவற்றைப் பெற்றார். 1952 ஆகத்து 23 ஆம் தேதி 22 ஆம் வயதில் ஆம்ஸ்ட்ராங் கடற்படை சேவையில் இருந்து ராஜினாமா செய்தார். + +கடற்படை சேவைக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் பர்டீ திரும்பினார், கொரியாவில் இருந்து திரும்பிய பிறகு வந்த நான்கு +பருவ தேர்வுகளில் அவர் சிறந்த மதிப்பெண்களை பெற்றார். அவர் முன்பு சராசரி மதிப்பெண்கள் பெற்றார், ஆனால் அவரது இறுதி ஜி.பி.ஏ 6.0 இல் 4.8 ஆகும். அவர் திரும்பிய பிறகு ஃபை டெல்டா தீட்டா சகோதரத்துவம் பங்களிக்க உறுதியளித்தார், மேலும் அனைத்து மாணவர்களின் எழுச்சியின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பாக ஒரு சக இசை இயக்குனராக இசை அமைத்தார்; அவர் கப்பா கப்பா சை தேசிய விருது பெற்ற பேண்ட் சகோதரத்துவத்தின் உறுப்பினராகவும், பர்டீ அனைத்து அமெரிக்க அணிவகுப்புப் பேண்டில் ஒரு பாரிடோன் வீரராகவும் இருந்தார். +ஆம்ஸ்ட்ராங் 1955 ஆம் ஆண்டில�� வானூர்தி பொறியியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். + +ஆம்ஸ்ட்ராங் அப்போலோ 8 விண்வெளித் திட்டத்தில் ஒரு மாற்றுத் தளபதியாக செயல்பட்ட பின்னர் டிசம்பர் 23, 1968 அன்று அப்போலோ 11 விண்வெளித் திட்டத்தில் செயல்படும் தளபதியாக பதவி ஏற்றார் அப்போது அப்போலோ 8 சந்திரன் சுற்றுப்பாதையில் இருந்தது. 2005 ஆம் ஆண்டில் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரிதையை வெளியிடும் வரை இந்தச் சந்திப்பைப் பற்றி வெளியிடப்படவில்லை. செலேடன், திட்டமிடப்பட்ட குழுத் தளபதியாக ஆம்ஸ்ட்ராங் இருந்த போதிலும், சந்திரப் பயணத் திட்டத்தில் விமானியாக பஸ் அல்டரினும் மற்றும் செயல்படுத்தும் விமானியாக மைக்கேல் காலின்ஸ்னும் தான் இருந்தனர், அவர் ஆல்ட்ரினை மாற்றுவதற்கான வாய்ப்பை ஜிம் லோவெல்க்கு வாய்ப்பை கொடுத்தார். ஒரு முழு நாள் சிந்தனைக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினுக்கு மாற்றாக செயல் பட ஒப்புக்கொண்டார் ஏனென்றால் லோவெல் ஏற்கனவே ஜெமினி 12 திட்டத்தில் செயல்படும் விமானியாக இருந்தார். + +2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இருதயத்தின் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரிசெய்ய அவருக்கு மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25, அன்று சின்சினாட்டி, ஓஹியோவில் இறந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் - அவருடைய காலத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லா காலத்திலும்" என்ற அறிக்கை வெளியிட்டு கெளரவப் படுத்தியது. + + + + +தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் + +தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என்பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்ம���, கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துல ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) ஏற்றுக்கொண்ட வேதியியல் குறியெழுத்துக்களையும், வரலாற்று வழக்கான குறியெழுத்துக்களையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. + + + + + + + + +முத்து உவமை + +முத்து உவமை, இயேசு விண்ணரசின் பெருமதியையும் அதை எப்படி அடைய முயற்சிக்க வேண்டு என்பதையும் விளக்குவதற்காக கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 13:45-46 இல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வசனம் மட்டுமே கொண்ட சிறிய உவமையாகும். + +விவிலியத்தில் முத்து உவமை இவ்வாறு கூறப்பட்டுள்ளது. + +வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். + +இதில் முத்து விண்ணரசை குறிக்கிறது. வியாபாரி தனது சொத்தனைத்தையும் விற்று முத்தை விலைக்கு வாங்குகிறான். அனால் முத்து அவன் வசம் வந்துவிட்ட படியால் அவன் முதல் இருந்ததைவிட செல்வந்தனாகிறான். இதில் கூறப்பட்டுள்ள உட்கருத்து யாதெனில் கிறிஸ்தவர்கள் இவ்வுலக சொத்துக்களை இழந்தாவது அல்லது செலவளித்தாவது மிகப்பெருமதியான விண்ணரசை தேடிக்கொள்ள வேண்டும் என்பதே. அழிந்து போகும் இவ்வுலக சொத்துக்களை பயன்படுத்தி அழியாத விண்ணரசை தேடுபவன் புத்திமான் என்பது கருத்தாகும். + + + + + + +வீடுகட்டிய இருவரின் உவமை + +வீடுகட்டிய இருவரின் உவமை இயேசு புதிய ஏற்பாட்டில் கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையை பின்பற்றுபவர்கள் அறிவாளிகள் என பொருள்படும்படி கூறினார். + +இருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் அறிவாளி தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது ஆனால் பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஏனெனில் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்டிருந்ததால் "பாறை மேல் வீடு" விழவில்லை. ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த்து. + +இந்த உவம்மையின் பொருளானது ; இயேசு சொன்ன இவ் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்தளத்தை இடுகிறான். ஆனால், அறிவிலியோ அவர் சொற் கேளாமல் போவதால் மணல் மீது தன் அடித்தளத்தை இடுகிறான். + +இறை சொல் கேட்கும் அறிவாளிகள், உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. + +ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் பாவ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை. + + + + + + +வின்டோசு லைவ் மெசஞ்சர் + +முன்னாளில் MSN மெசன்ஜரின் வழிவந்ததே இலவசமான இணைய உரையாடல் மென்பொருளே விண்டோஸ் லைவ் மெசன்ஜர் ஆகும் இது இன்றளவும் பெரும்பாலனவர்களால் பழைய எம் எஸ் என் மெசன்ஜர் என்றே அழைக்கப்படுகின்றது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003 சேவர், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் மொபைல் இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் முதற் பதிப்பானது மைக்ரோசாப்டினால் 15 டிசெம்பர், 2005 இல் வெளிவிடப்பட்டது (எம் எஸ் என் மெசன்ஜரின் முதற்பதிப்பு 22 ஜூலை 1999 வெளிவிடப்பட்டது). விண்டோஸ் லைவ் இணைய சேவைகளில் ஒன்றான இதன் தற்போதயை பதிப்பானது 19 ஜூன் 2006 வெளிவிடப்பட்டது. பெரும்பாலான பாவனையாளர்களினால் இன்றும் இது MSN மெசன்ஜர் என்றழைக்கப் படுகின்றது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டின் சில பாகங்களில் இவை மெசன்ஜர் என்றழைக்கப்படுகின்றது. + +12 ஜூலை 2006 முதல் யாகூ! மெசன்ஜர் வலையமைப்புடன் கூட்டிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளது. + +கோபுறைகளைப் பகிரும்போது பாதுகாக்கத் தனியான இலவசமான வைரஸ் எதிர்ப்பு நிரல் ஒன்றும் இணைக்கபட்டுள்ளது. கோப்புறைகளைப் பகிர்வதற்கு விண்டோஸ் 2000/xp/விஸ்டா இயங்கு தளங்களுடன் கணிகளின் வன்வட்டானது (ஹாட்டிஸ்க் - harddisk) NTFS கோப்புமுறையில் format பண்ணப் பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் FAT 32 முறையிலுள்ளவற்றிற்கு NTFS முறைக்கு மாற்றுவதற்கு + +கணினியில் இருந்து கணினிக்கான தொலைபேசி அழைப்புகளை மாத்திரமன்றி தொலை பேசி அழைப்புகளை நிமிடத்திற்கு இலங்கை ரூபா 2-3 அளவில் (அமெரிக்க டாலர் 0.02 - 0.03) அளவில் ஓர் நிமிடத்திற்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு மேற்கொள்ள இயலும். + +13 ஜூலை 2006 அன்றிலிந்து இரு பெரும் தூதுவர் வலையமைப்பானது ஒன்றாக இயங்க ஆரம்பித்துள்ளன. அதாவது விண்டோஸ் லைவ் மெசன்ஜர் ஆனது யாகூ! மெசன்ஜரின் பதிப்பு 8 இன் வெள்ளோட்டப் பதிப்பில் (பீட்டா -Beta) இலிருந்து சாத்தியமாகுமெனினும் இறுதிப்பதிப்பே விரும்பப்படுகின்றது. இதற்கு http://www.ideas.live.com/ சென்று உங்கள் MSN/விண்டோஸ் மெசன்ஜர் id ஊடாக உட்புகுந்து பின்னர் அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் யாகூ! மெசன்ஜரூடாக வருவதானால் http://messenger.yahoo.com/ சென்று பதிப்பு அங்கு யாகூவின் உரிம ஒப்பந்த்தை வாசித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஓர் மெசன்ஜரில் இருந்து இருவலையமைப்பில் உள்ளவ்ர்களுடன் உரையாடமுடியும். யாகூ! மெசன்ஜரில் தமிழில் ஒருங்குறியில் நேரடியாக தட்டச்சுச் செய்ய யாகூ! தமிழ்ப் பொருத்து மூலமாக யாகூ! மெசன்ஜரிலிருந்து யாகூ! மற்றும் மற்றும் மைக்ரோசாப்ட் வலையமைப்புகளுடன் ஒருங்குறியில் உரையாடமுடியும். + + +அமெரிக்கா ஆன்லைன் மெசன்ஜர் (AIM) மற்றும் ஜபர் தொழில் நுட்பத்தில் அமைந்த தூதுவர் வலையமைப்புகளே பெரும் போட்டியாக அமைகின்றன. யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய தூதுவர் வலையமைக் கொண்டுள்ளன. + +விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பாவனையாளர்கள் கெயிம் ஊடாக பல்வேறு பட்ட தூதுவர் வலையமைப்புகளுடன் உரையாடலை நிகழ்த்த இயலும். + +கூகிள் நிறுவனமானது கூகிள் டாக் எனும் திறந்த தூதுவர் வலையமைக் கொண்டுள்ளதுடன் கூகிள் தனது சொந்த உரையாடல் மென்பொருளை மாத்திரம் அல்லாது ஏனைய மென்பொருட்களும் இணைவதையே கூகிள் விரும்புகின்றது. + +கெயிம் போன்றல்லாது விண்டோஸ் லைவ் மெசன்ஜர் விளம்பரங்களைக் காட்டுகினறது. + + + + + + +மோசே + +மோசே அல்லது மோயீசன் "(எபிரேயம்: מֹשֶׁה‎, Modern Moshe Tiberian Mōšéh ISO 259-3 Moše ; அரபு மொழி: موسى Mūsā )" என்பவர் என்பவர் எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி, இவர் ஓர் இறைவாக்கினர் சமயத்தலைவர் மற்றும் சட்டம் அளித்தவர் என்று அறியப்படுகிறார். யூத ���ரபுப்படி இம்மதத்தின் படிப்பினைகள் அனைத்தையும் தொகுத்து இவரே தோராவை எழுதினார். யூத சமயத்தின் முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக மோசே கருதப்படுகிறார். கிறித்துவத்திலும் ஆபிரகாமிய சமயங்களிலும் இவர் மிகவும் குறிக்கத்தக்கவராவாகவும் விளங்குகிறார். +தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத் தன்மைக் குறித்தும் ஒத்தக்கருத்தில்லை. பலர் இதனை வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் கானான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாகக் கருதுகின்றனர். + +விடுதலைப் பயண நூலின் படி இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இவர் பிறந்தார் எனக்கூறப்படுகிறது. அடிமைகளாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது; இதனால் எகிப்திய அரசர் தங்களை எகிப்திய எதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினார் . இதன் தொடர்ச்சியாக எகிப்தில் பெருகிவரும் இசுரேலியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக புதியதாகப் பிறந்த ஆண்குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் ஆணையிட்டார். குழந்தையினைக்கொல்ல மனம்வராத மோசேயின் தாயார் குழந்தை மோசேவை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட்டார். கூடை எகிப்தின் இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு ஓர் அரசக் குடும்பத்தின் தத்துப்பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த போது இவருக்கு கடவுள் அருள் கிடைத்ததாக நம்பப்படுகிறது. + +அடிமைத்தனத்திலிருந்து இசுரவேலரை விடுதலை செய்விக்கும்படி கூறி கடவுள் மோசேயை எகிப்துக்கு திருப்பி அனுப்பினார். பேச்சாற்றலுடன் தன்னால் பேச இயலாது என்று மோசே உறுதியுடன் கூறியதைத் தொடர்ந்து, ஆரோன் இவருடைய செய்தித் தொடர்பாளாராக இருக்க அனுமதிக்கப்பட்டார். மேலும் எகிப்தியரை விடுவித்து வரும் வழியில் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கடவுளிடமிருந்து பெற்று இசுரயேலர்களுக்கு இவர் அளித்தார் எனவும் பாலைவனத்தில் அலைந்து திரிந்த 40 வருடங்களுக்குப் பிறகு, வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையாமலேயே இவர் இறந்தார் எனவும் விவிலியம் விவரிக்கின்றது. + +பாரம்பரிய யூதமதத்தின் படி மோசேயின் காலம் கி.மு 1391–1271 வரை உள்ளதாக நம்பப்படுகின்றது; 4ஆம் நூற��றாண்டினைச்சேர்ந்த புனித ஜெரோம் கி.மு 1592. என்றும் 17ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த உஷ்சர் கி.மு 1619 என்றும் இவரின் பிறப்பு ஆண்டினைக் கணிக்கின்றனர். + +கிறிஸ்தவ விவிலியத்தின் யாத்திராகமம் நூலில் மோசேயின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதன் படி மோசேயின் தந்தை அம்ராம் ஆவார் அவரது தாய் யோகெபேத் ஆவார். மோசே இஸ்ரவேலின் லேவி எனப்பட்ட குருத்துவ குலத்தில் பிறந்தார். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து விடுவித்து பாலைவனமூடாக இஸ்ரவேல் மக்களை கானான் நாடு நோக்கி (தற்போதைய இஸ்ரவேல் பலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம்) வழிநடத்தி சென்றார். மேலும் வழியில் கடவுள் சீனாய் மலை மீது இறைவனது திருச்சட்டத்தை கொடுத்தார். இச்சட்டமே இயேசு வரும் வரைக்கும் மாற்றமின்றி பயன்படுத்தப்பட்ட சட்டமாகும். மோசே வாழ்ந்த காலம் பற்றிய கணக்கீடுகளின் படி மோசே கி.மு. 13-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது. + +மோசே ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை முதன் முதலாக எடுத்து கூறியவராவார். இது கடவுள் மோசே மூலமாகக் கொடுத்த பத்து கட்டளைகளில் முதலாவதாகும். மோசே கிறிஸ்தவ,இஸ்லாம்,யூத,மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார். + +மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார். அச்சமயம் இஸ்ரவேலரின் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பார்வோன் எகிப்தில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்திருந்தான். அதன்படி இஸ்ரவேலருக்குப் பிறந்த சகல ஆண் குழந்தைகளும் நைல் நதியில் வீசி கொலை செய்யப்பட வேண்டும். விவிலியத்தில் இந்த பாராவோ யார் என குறிப்பிடப்படவில்லை. அனால் ஆய்வாளரின் கருத்துப்படி மூன்றாவது துட்டுமோஸ் (Thutmose III) அல்லது இரண்டாம் ரம்சீஸ் (Ramses II) என கருதப்படுகிறது. + +மோசே பிறந்தவுடன் அவரது தாய், குழந்தை அழகுள்ளது எனக்கண்டு, குழந்தையை நதியில் எறிய மனதில்லாது ஆறுமாதம் வரை குழந்தையை வீட்டில் ஒளித்து வைத்தார். மேலும் குழந்தையை ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையைக் கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத���திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் நீராட வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் இருந்தார்கள். இளவரசி நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேல் பிள்ளைகளில் ஒன்று என ஊகித்துக்கொண்டாள். + +அப்பொழுது இதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தமக்கை பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி இஸ்ரவேல் பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா? என்றாள். அதற்கு இளவரசி இணங்கவே அவள் போய் குழந்தையின் தாயையே அழைத்துக் கொண்டுவந்தாள். பின்னர் இளவரசி குழந்தயை அவளிடம் கொடுத்து குழந்தை பால் மறக்கும் வரை வளர்க்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்காகச் சம்பளமும் கொடுத்தாள்.அப்படியே குழந்தை தன் சுய தயிடமே வளர்ந்தது. பிள்ளை பெரியவனானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடத்தில் கொண்டுபோய் விட்டாள். + +மோசே பிறப்பின் விவிலியப் பதிவு, அவருடைய பெயருக்கான குறிப்பிடத்தக்க விளக்கத்தை ஒரு நாட்டுப்புற சொற்பிறப்பியல் விளக்கமாக வழங்குகிறது . அரசருடைய மகளான இளவரசிக்கு இவர் மகனாகிய போது மோசே என்ற பெயரை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. செங்கடல் தண்ணிரில் இருந்து வெளியே எடுத்த காரணத்தால் அவனை நீரிலிருந்து எடுத்தேன் என்று பொருள்படும்படி, குழந்தைக்கு மோசே என்று பெயரிட்டாள். + +விடுதலைப்பயணம் விடுத்து பிற பழைய ஏற்பாடு நூல்கள் அனைத்தயும் விட மோசே புதிய ஏற்பாடு நூல்களில் அதிகம் குறிக்கப்படுகின்றார். கிறித்தவத்தில், இவர் இறை சட்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றார். இது இயேசு கிறித்துவின் போதனைகளில் வெளிப்படுகின்றது. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் இயேசுவின் நற்செய்தியினை விளக்க இயேசுவின் செயல்களையும் மோசேயின் வார்த்தைகளையும் அடிக்கடி ஒப்புமை படுத்தியுள்ளனர். திருத்தூதர் பணிகள் 7:39–43, 51–53,இல் இசுரயேலரின் மூதாதையர் மோசேவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளியதும் கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தியதும் இயேசுவின் நற்செய��தியினை ஏற்க மறுப்பவரோடு ஒப்பிடப்படுகின்றது. + +இயேசுவின் போதனைகள் பலவற்றிலும் மோசே இடம்பெற்றுள்ளார். யோவான் நற்செய்தி 3ஆம் அதிகாரத்தில், பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமோடு உரையாடுகையில் ""பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்." என்று குறிப்பிடுகின்றார். + +மத்தேயு நற்செய்தி 17, மாற்கு நற்செய்தி 9, மற்றும் லூக்கா நற்செய்தி 9, ஆகிய புதிய ஏற்ப்பாட்டு நூல்களில் இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் எலியாவுடன் மோசேவும் இயேசுவோடு பேசுவதாக அமைந்துள்ளது. பிற்கால கிறித்தவர்கள் மோசேயின் வாழ்வோடும், இயேசுவின் வாழ்வோடும் பல ஒப்புமைகளைக்கண்டனர். இயேசுவின் பிறப்பின் போது நடந்த மாசில்லா குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து இயேசு தப்பித்ததும், மோசேயின் பிறப்பின் போது குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து மோசே தப்பித்ததும் ஒரு எடுத்துக்காட்டாகும். +கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை மற்றும் லூதரனியத்தில் இவரின் விழா நாள் செப்டம்பர் 4 ஆகும். அர்மேனிய திருத்தூதர் திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூலை 30 ஆகும். + +மற்ற கிறித்தவப் பிரிவுகளைவிடவும் பின்னாள் புனிதர் இயக்க மரபினைச் சேர்ந்த மொர்மனியத்தில் பல கூடுதல் நம்பிக்கைகள் உள்ளன. இவர்கள் விவிலிய விவரிப்பினை ஏற்றாலும், அதோடு, மோசே இறக்காமல் விண்ணகம் சென்றதாகவும் நம்புகின்றனர். மோசேயின் புத்தகங்கள் என்னும் நூலையும் தங்களின் புனித நூலாகக்கருதுகின்றனர். இந்த நூலை பிற கிறித்தவ பிரிவினர் திருமுறையாக ஏற்பதில்லை. + +இரண்டாம் யோசப்பு இசுமித்து மற்றும் ஆலிவர் கௌடரி ஏப்ரல் 3, 1836 அன்று மோசே மகிமையில் அவர்களுக்குக் காட்சியளித்ததாகவும் அவர்களிடம் பூமியின் நான்கு பாகங்களில் உள்ள இசுரயேலரினை கூட்டிச்சேர்க்கவும், மற்றும் வடக்கு நிலத்தில் வாழும் பத்து பழங்குடியினரை வழிநடத்தவும் சாவிகளை அவர்களிடம் அளித்ததாகக் கூறியுள்ளனர். + +திருக்குர்ஆன் அதிகமுறை குறிப்பிடப்பட்டுள்ள நபர் மோசே ஆவார். நபிமார்கள் அனைவரிலும் இவரின் வாழ்வே அதிகம் சித்தரிக்கப்படுள்ளது. மோசேவின் பெயர் குர்ஆனில் 502 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. 49-61, 7.103-160, 10.75-93, 17.101-104, 20.9-97, 26.10-66, 27.7-14, 28.3-46, 40.23-30, 43.46-55, 44.17-31, மற்றும் 79.15 -25 பத்திகளில் மோசே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். . மோசேயுடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் பெரும்பாலானவை பைபிளில் இடம்பெற்றுள்ளன. +பகாய் சமயத்தில் மோசே கடவுளின் தூராக கருதப்படுகின்றார். மோசேக்கு இச்சமயத்தாரால் கொடுக்கப்படும் ஒரு அடைமொழி "கடவுளோடு உரையாடுபவர்" என்பது ஆகும். பகாவுல்லாவின் வெளிப்படுத்துதலுக்கு மோசே வழிவகுத்தார் என இவர்கள் நம்புகின்றனர். +அப்துல்பகா போன்ற பகாய் சமயத்தின் முக்கிய நபர்கள் ஆபிரகாமைப் போலவே மோசேவும் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கவில்லை என்கின்றனர். ஆனால் கடவுளுடைய உதவியால் மோசே பல அரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்பதை ஏற்கின்றனர். வனாந்தரத்திலே ஒரு மேய்ப்பனாக இருப்பதாக மோசே விவரிக்கப்படுகிறார். பகாவுல்லாவிற்கும் அவரது இறுதி வெளிப்பாட்டிற்கும் வழிகாட்டியாகவும், சத்தியத்தின் ஆசிரியராகவும் மோசே விளங்கினார். இவருடைய போதனைகள் அவருடைய காலத்தின் பழக்கவழக்கத்திற்கு இசைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. + +மோசே மரணமடைந்தபோது 120 வயதுடையவராக இருந்தார்" இன்றுவரை அவரது எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இறக்கும் வரை இவருடைய கண் மங்கிப்போகவில்லை, அவருடைய பலமும் குறைவுபடவில்லை. 120 வயதுவரை நீங்கள் வாழலாம்" என்ற சொற்றொடர் யூதர்களிடையே பொதுவான ஆசீர்வாதமாக மாறியுள்ளது, + + + + +சுப்பிரமணியம் + +சுப்பிரமணியம் அல்லது சுப்பிரமணியன் என்னும் பெயர்களில் உள்ள கட்டுரைகள்: + + + + + + + + +இரவில் வந்த நண்பன் உவமை + +இரவில் வந்த நண்பன் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா நற்செய்தி லூக்கா 11:5-13இல் எழுதப்பட்டுள்ளது. மத்தேயு 7:9–11 இல் இக்கதையோடு ஒப்பிடக்கூடிய ஒரு வசனம் காணப்படுகிறது. + +ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்றான். அதற்கு உள்ளே இருப்பவர், "எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திர��க்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது" என்றார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்ததால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார். + +பின்னர் இயேசு இவ்வுவமையுடன் கூட இன்னுமொரு சிறிய உவமையைக் கூறி மேலுள்ள உவமையை தெளிவாக்குகிறார். இயேசு மக்களை நோக்கி: "பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி" என்றார். + +இயேசுவின் காலத்தில் யூதாவில் காணப்பட்ட வீடுகளில் இரவில் உறங்கும்போது முன்கதவை மூடி அதன் பின்னால் உறங்குவது வழக்கமாகும். ஆகவே இரவில் யாரும் கதவைத் திறக்க வேண்டுமாயின் எல்லோரும் தூக்கம் விட்டு எழ வேண்டும். இது இந்த கதையை விளங்குவதற்கு முக்கியமான ஒரு பின்னணியாகும். + +இவ்வுவமை இடைவிடாத செபத்தை வலியுறுத்துகிறது. இதன் பின்னுரை உவமையின் பொருளை விளக்குகிறது. இதன் மைய நோக்காக பின்வரும் இயேசுவின் வாய்மொழியைக் குறிப்பிடலாம். + +"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்." + + + + + + + +கனிகொடா அத்திமரம் உவமை + +கனிகொடா அத்திமரம் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 13:6-9 இல் எழுதப்பட்டுள்ளது. இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. + +ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியை��் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன், எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் வீணாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்றார். தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். + +இதில் தோட்டக்காரர் கடவுளாகும். தொழிலாளர் பரிசுத்த ஆவியாகும். ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டு திரும்ப பல சந்தர்ப்பங்களை கொடுப்பார். ஆனால் பலன் இல்லாது போனால் கனிகொடா அத்திமரம் வெட்டப்பட்டு தீயில் போடப்படுவது போல நரகத்தில் தள்ளப்படுவார்கள். + + + + + + +வளரும் விதை உவமை + +வளரும் விதை இயேசு கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது விவிலியத்தில் மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விண்ணரசைப் பற்றியதாகும். இவ்வுவமையின் கருத்துப்பற்றி பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. + +சரியான காலத்தில் ஒருவர் தனது தோட்டதில் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது. + + + + + + + +சானியா மிர்சா + +சானியா மிர்சா (உருது:ثانیہ مرزا , தெலுங்கு: సానియా మీర్జా , இந்தி:सानिया मिर्ज़ा , பிறப்பு நவம்பர் 15,1986,மும்பை ) ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. + +ஏப்பிரல் 2015இல் பேமிலி கோப்பை டென்னிசு போட்டியில் மார்ட்டினா கிஞ்சிசுடன் இணைத்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார். டென்னிசு போட்டி தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் முதல் இந்தியப் பெண் இவராவார். + +விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஐதராபாத்தில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார். அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையா ட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஐதராபாத்தில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். + +2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிப் பட்டம் பெற்றார். + +மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார். அதற்கு முன்பு சனியா கிராண்ட் ஸ்லாம் தொடரில்2005ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளிப் போட்டியில் மஷோன வாஷிங்க்டன், மரியா எலேனா கமேரின் மற்றும் மரியான் பார்டோலி ஆகிய மூவரையும் வென்று நான்காம் சுற்றை அடைந்த முதல் இந்திய பெண்மணியாவார். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாவார். + +மிர்சா 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி போட்டியின் சாம்பியனான செரீனா வில்லியம்சிடம் தோற்று மூன்றாவது சுற்றில் வெளியேறினார். 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் நாள் ஹைதராபாத் திறந்தவெளி இறுதிப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த அல்யோன போண்டறேங்கோவை தோற்கடித்து டபிள்யு டி எ வின் ஒற்றையர் பட்டதை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெரு���ையைப் பெற்றார். செப்டம்பர் 2006ம் ஆண்டு வரை மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பின்வரும் வீராங்கனைகளான, ச்வேத்லேன குச்நேத்சொவ, நாடிய பெட்ரோவா மற்றும் மாற்றின ஹிங்கிசை எதிர்த்துப் பெற்றார். 2006ம் ஆண்டு நடந்த தோஹா ஆசிய விளையாட்டுகளில் மிர்சா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியையும் மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவில் லியாண்டர் பெயசிடம் ஜோடி சேர்ந்து தங்கத்தையும் வென்றார். இவர் அதில் அணி சார்ந்த போட்டியில் வெள்ளிக் கோப்பை பெற்ற இந்திய மகளிர் அணியின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார். + +2006ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயர்ந்த சமூகம் சார்ந்த கௌரவ விருதான பத்மஸ்ரீ பட்டம், டென்னிஸ் துறையில் மிர்சாவின் பங்கிற்கு வழங்கப்பட்டது. + +மிர்சாவிற்கு 2007ம் ஆண்டு கடினமிக்க கோடை பருவத்தில் நடந்த யு.எஸ் திறந்த வெளி தொடர் நிலை போட்டியில் எட்டாம் இடத்தைப் பெற்று தனது டென்னிஸ் துறையில் மிகச் சிறந்த போட்டி முடிவை அடைந்தார். இவர் பாங்க் ஆப் தி வெஸ்ட் கிளாசிக் இறுதி சுற்றை அடைந்து ஷகார் பீருடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்று டயர் 1 அகூரா க்ளாசிக் கால் இறுதி போட்டியை அடைந்தார். + +2007ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த வெளி போட்டியில் கடந்த சில வாரங்களில் மூன்றாவது முறையாக அண்ணா சக்வேத்சிடம் தோற்று மூன்றாம் சுற்றை அடைந்தார். இவர் சற்று சிறப்பாக கலப்பு இரட்டையர் போட்டியில் தனது கூட்டாளியாகிய மகேஷ் பூபதியுடன் கால் இறுதிக்கும் மகலியா இரட்டையர் போட்டியில் பெதனீ மட்டேக்குடன் ஜோடி சேர்ந்து இரண்டாம் நிலையிலுள்ள லிசா ரய்மொந்து மற்றும் சமந்தா ச்டோசூர் இருவரையும் வெற்றி கொண்டதையும் சேர்த்து மகளிர் இரட்டையர் கால் இறுதி போட்டியை அடைந்தார். + +இவர் பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடந்த கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் விளையாடினார். இங்கு செக் குடியரசை சேர்ந்த இவேட பெநேசொவிடம் 1-6, 1-2 என்ற நிலையில் தோற்கும் தருவாயில் ஒற்றையர் பிரிவில் தனது 64வது சுற்றில் ஒய்வு பெற்றார். அதில் இரட்டையர் பிரிவில் சுனிதா ராவுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் 32ம் சுற்றில் சுலபமாக அடைந்தாலும் ரஷ்யாவை சேர்ந்த ஜோடிகளான ச்வேத்லேன குழ்னேடசொவ மற்றும் டிநர சபினா இவர்களிடம் 4-6, 4-6 என்ற நிலையில�� 16ம் சுற்றில் தோற்றனர். + +சென்னையை சேர்ந்த எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் எழுத்துகளுக்கான கௌரவ மருத்துவர் பட்டத்தை 2008-12-11 தேதி பெற்றார். அங்கு அவளது உடன் பிறந்தவரின் மகளாகிய சோனியா பைய்க் மிர்சா படிக்கின்றாள். + +மிர்சா ஒபர்டில் பிலாவயா பென்னேட்டவிடம் மூன்று கட்டங்களில் தோற்று 6ம் நிலையில் கால் இறுதியை அடைந்தார். இவர் ஆஸ்த்ரேலியா திறந்த வெளி போட்டிகளில் 31ம் நிலையில் மூன்றாவது சுற்றிற்கு 8ம் நிலையில் உள்ள வீனஸ் வில்லியம்சுடன் முதல் கட்டத்தில் 5-3 என்றிந்தாலும் பின்பு நடந்த கட்டங்களில் 7-6(0) , 6-4 என்ற புள்ளிகளில் தோல்வியுற்றார். இவர் ஆஸ்த்ரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர்]] பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து இரண்டாம் வெற்றி நிலையை எட்டினார். இந்த போட்டியில் சன் டிஆன்டன் மற்றும் நேனாத் ஜிமொஞ்சிக் 7-6(4). 6-4 என்ற புள்ளிகளில் இறுதி சுற்றை வென்றனர். + +பட்டாயா நகர போட்டியிலிருந்து இடது தோள்பட்டையின் வலி காரணமாக விலகினார். + +மிர்சா இந்தியன் வேல்சில் 21ம் நிலையில் 9ம் நிலையிலுள்ள ஸ்ஹஹார் பெயரை வென்றார்.ஆனால் 5ம் நிலையிலுள்ள டேனியல் ஹன்டுசோவாவிடம் தோற்று 4ஆர நிலையை அடைந்தார். + +2008 ஆண்டு விம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் சனியா 32ம் நிலையில் மிகப் பல விளையாட்டு புள்ளிகளை பெற்றிருந்தும் போட்டிக்கு தகுதி நிலையிலுள்ள மரியா ஜோஸ் மர்டிநேஸ் சந்செசிடம் 6-0, 4-6, 9-7 என்ற புள்ளிகளில் தோற்கடிக்கப்பட்டார். +2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மிர்சா இவேட பெநேசொவவிற்கு எதிரான போட்டியில் தனது வலது மணிக்கட்டு காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார், 2008ம் ஆண்டு முழுவதும் தனது மணிகட்டில் தொடர்ந்து வந்த தொந்தரவுகளை அனுபவித்து அதன் காரணமாக ரோலாந்து காரோஸ், யு.எஸ்.திறந்தவெளி, கிராண்ட் சலாம் மற்றும் பல போட்டிகளிலிருந்து விலக நேர்ந்தது. + +சானியா 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்தவெளி போட்டியில் தனது முதல் கிராண்ட் சலாம் பட்டத்தை வென்றார். மேல்பௌர்நில் நடந்த இறுதி போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து 6-3, 6-1 என்ற புள்ளிகளில் பிரான்சை சேர்ந்த நதலயே தேசி மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அண்டி ராம் ஜோடியை வென்று பட்டத்தை பெற்றார். பின்னர் இவர் பாங்காக்கில் நடந்த பட்டையா மகளிர் திறந்தவெளி தொடர் போட்டியில் வரிசையாக நல்ல முறையில் விளையாடி இறுதி போட்டியை அடைந்தார். இவர் இறுதி போட்டியில் வேற வோனறேவாவிடம் 7-5, 6-1 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை இழந்தார்.அதே தொடரில் சானியா இரட்டையர் பிரிவில் அரை இறுதியை அடைந்தார். + +சனியா மிர்சா பி என் பி பரிபாஸ் திறந்த வெளிப்போட்டியில் கலந்து கொண்டு தனது இரண்டாவது சுற்றில் பிலவியா பென்னேட்டவிடம் தோற்றார். ப்லவியா பென்னேட்ட பின்னர் இவர் மியாமி மாஸ்டர் போட்டியில் பங்கு கொண்டு +பிரான்சை சேர்ந்த மதில்டே ஜோதன்ச்சொனிடம் முதல் சுற்றிலேயே தோற்றார். இங்கு மிர்சா தனது இரட்டையர் ஜோடியான சீனா தைபெயை சேர்ந்த சயா ஜங் சாங்குடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை விளையாடினார்.இவர் எம் பி எஸ் குழு சம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் முதல் சுற்றிலேயே சுருண்டு வீழ்ந்து ஆனால் அதே போட்டியில் சுஅங்கியுடன் விளையாடி இரட்டையர் பட்டத்தை வென்றார்.ரோலாந்து காரோஸ் போட்டியிலும் முதல் சுற்றிலேயே கசகச்தானை சேர்ந்த கலீனா வோச்கொபோவாவிடம் தோற்றார்.மீண்டும் அதே போட்டியில் இரட்டையர் பிரிவில் சாங்குடன் விளையாடியும் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் விளையாடி இரண்டிலுமே தோற்றார். +இவர் 2009ம் ஆண்டு நடைபெற்ற ஏகன் க்ளாசிக் போட்டியில் பங்கு கொண்டு அரை இறுதி வரை விளையாடினார். இதில் இவர் ச்லோவ்வகியாவை சேர்ந்த இறுதி சுற்றில் பட்டம் வென்ற மக்தலேனா ரய்பரிகொவாவிடம் 3-6 , 6-0, 6-3 என்ற புள்ளிகளில் அரை இறுதி வரை விளையாடி தோற்றார். + +மிர்சா 2009 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் சுற்றிலேயே அண்ணா லேனா க்ரோன்பில்டை தோற்கடித்தார். பிறகு சொரானா சிர்சடேயிடம் விளையாடி தோற்றதின் மூலம் 28ம் நிலைக்கு தள்ளப்பட்டார். + +இவர் மூன்று முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வாகையர் பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆசுத்திரேலிய ஓப்பன் & 2012 பிரெஞ்சு ஓப்பனில் மகேசு பூபதியுடன் இணைந்தும். 2014ம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரேசிலின் புருனோ சோரெசுடன் இணைந்தும் வெற்றி பெற்றார். +2005 ஹைதரபாத் திறந்தவெளிப் போட்டியில் 4 இறுதி போட்டிகளை அடைந்து 1 போட்டியில் வென்றார். + +2015ம் ஆண்டின் விம்பிள்டன் தொடரில் மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து முதல் இரட்டையர் கிரான்���்ஸ்லாம் பட்டத்தை வென்றார் + +"குழப்பங்களையும் இரட்டை எண்ணிக்கையையும் தவிர்க்க இந்த அட்டவணையில் வீரர்களின் பங்கோ அல்லது தொடர் முடிந்தாலே மட்டுமே அந்த தகவல்கள் தற்போதிய நிலையில் வழங்கப்பட்டுள்ளது. " "இந்த அட்டவணை பி என் பி பரிபாஸ் போட்டி 2009ம் ஆண்டு இந்தியன் வெல்ல்ஸில் நடந்து 2009 ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி முடியும் வரை நிலுவையில் இருக்கும்." + +வெற்றிக்கு அடையாளமாக பச்சை வர்ண பின்னலங்காரம் மஞ்சள் பின்னலங்காரம் முதல் 8 எண்ணிக்கையில் உள்ளவர்கள் ( கால் இறுதி முதல் இறுதி போட்டி வரை ) + +சானியா ஒரு முஸ்லிம் பெண்ணாகையால் அவர் விளையாட்டின்போது உடுத்தும் உடை, இஸ்லாமிய உடை உடுத்தும் முறைக்கு பொருந்தவில்லை என்று சில தீவிர இஸ்லாமிய குழுக்களால் குற்றம் சுமத்தபட்டார். செப்டம்பர் 8, 2005 வெளியிடப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஒரு இஸ்லாமிய பகுத்தறிவாளர் இவரது உடை உடுப்பு இஸ்லாமிய உடை கட்டுபாட்டிற்கு எதிரானது என்று கூறியுள்ளார் . ஆனால் இந்த கேலிக்கும் குற்றச்சாட்டிற்கும் மிர்சா கலங்கவில்லை என்ற செய்தியை மறுநாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு விளக்கியது. இவரது டென்னிஸ் போட்டிகளை இடையுறு செய்யப்போவதாக ஜமைத் உலேமா இ ஹிந்த் மிரட்டியாதாகவும் புரளிகள் இருந்தன. ஆனால் இந்த புரளிகளை அந்த அமைப்பு மறுத்தது, அவர்கள் சானியாவின் உடை இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு சற்று எதிராக இருந்தாலும் யாருடைய விளையாட்டையும் தடுப்பதாக இல்லை என்றும் அறிவித்தது. எனினும் இவருடைய பாதுகாப்பை கொல்கொத்தா காவல்துறை மிகவும் பலப்படுத்தியது. + +2005 நவம்பர் மாதம் நடந்த ஒரு மாநாட்டில் பாதுகாப்பான உடலுறவைப் பற்றி பேசியதை வைத்து, இஸ்லாமிய குழுக்கள் சானியா இஸ்லாமிலிருந்து பிரிந்து விட்டதாகவும் அவர் இளைய தலைமுறையினரை நேர் வழியிலிருந்து கெடுப்பதாகவும் உரிமை கொண்டாடினர். ஆனால் மிர்சா தான் திருமணத்திற்கு முன் வைத்துகொள்ளும் உடலுறவை எதிர்ப்பதாக தனது நிலையை தெளிவு படுத்தினார். + +2006 ஆண்டு சில செய்தித் தாள்களில் இஸ்ரேல் சேர்ந்த வீரரான சாஹர் பீ'ர் உடன் சேர்ந்து விளையாட மறுப்பதாக செய்திகள் வந்தன. இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் தீவிர எதிர்ப்பின் காரணமாக விளையாட மறுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அடுத்த வருடமே (i.e, 2007 ) , இவருடன் இணைந்து WTA ஸ்தாந்பொர்ட், கலிபொர்நியா விளையாட்டில் கலந்து கொண்டார். + +2008 ஹாப்மன் கோப்பை போது நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய கொடியை தன் காலடிக்கு அருகாமையில் வைத்துகொண்டிருக்கும் நிலையில் படம் எடுக்கப் பட்டார். இதனால், ஒரு தனி குடிமகனின் புகாரின் பேரில் தேசிய கௌரவ சட்டத்திற்கு அவமரியாதை தடுக்கும் சட்டத்தின் கீழ் உரிய தண்டனையும் பெற்றார். ஆனால் மிர்சா அதை எதிர்த்து, தான் தன் நாட்டை நேசிப்பதாகவும் இல்லையெனில் ஹாப்மன் கோப்பை போட்டியில் பங்கு கொண்டிருக்க மாட்டேன் என்றும் தான் எந்த அவமரியாதையையும் உணர்த்தவில்லை என்றும் வாதாடினார். 2008 பிப்ரவரி 4 தேதி அன்று மிர்சா தான் அடுத்த மாதம் பெங்களூரில் தொடங்கும் பெங்களூர் 2008 போட்டிமுதல் இந்தியாவில் நிகழும் எல்லா டென்னிஸ் விளையாட்டு தொடர்களிலும், மிகப்பல முரண்பாடுகளையொட்டி தனது நிர்வாகியின் ஆலோசனைப்படி, பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். + +சானியா மிர்சாவிற்கு அவரது குழந்தை பருவ நண்பரான ஹைதராபாதை சேர்ந்த ஸொஹ்ரப் மிர்சாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்கள் திருமண நிச்சயம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை. இந்தப் பிரிதலுக்குப் பின்னர் சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து மணம் புரிவதாகக் கூறினார். இதனையடுத்து சொயப் மாலிக் முன்பே திருமணமானவர், விவாகரத்துப் பெறாதவர் என்ற சர்ச்சைகளும் அரங்கேறின. அவரது முன்னாள் மனைவி என்று கூறப்படும் ஆயிஷா மாலிக், சொயப் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்து ஐதராபாத் காவலர்கள் அவரது கடவுச்சீட்டை பறித்த நிகழ்வுகளும் அரங்கேறின. உள்ளூர் சமயத்தலைவர்களின் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்ந்து ஏப்ரல் 12,2010 அன்று இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் திருமண நிகழ்வு ஹைதராபாத்திலுள்ள டெக்கானிலும், வரவேற்பு சியால்கோட்டிலும் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் அவர்கள் துபாயில் தங்களது வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டு இருக்கின்றனர். + + + + + + +பல்கோணக் கூம்பு + +பல்கோணக் கூம்பு அல்லது கூம்பகம் ("Prismatoid") என்பது ஒரு திண்ம வடிவம். வடிவவியலில் அடிப்புறம் ஒரு பல்கோணமாக இருந்து அதன் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் எழுப்பும் முக்கோணங்கள் ஒரு முனையில் கூடினால் உண்டாகும் திண்ம வடிவமாகும். அடிப்புறம் கட்டமாக (சதுரமாக) இருந்தால், இதனை கட்டகக் கூம்பு அல்லது சதுரக்கூம்பு என்று அழைப்பர். இதனைப் படத்தில் காணலாம். 5000 ஆண்டுகளுக்கும் முன்னர் எகிப்தியர் எழுப்பிய பிரமிடு என்னும் கட்டடடங்கள் இவ் வகையானவைதான். அடிப்புறம், ஐங்கோணமாக, அறுகோணமாக என்று ஏதாவதொரு பல்கோணமாக இருக்கலாம். அடிப்புறம் வட்டமாக இருந்தால் இதனை அடைமொழி இல்லாமல் கூம்பு என்று கூறப்படும். + + + + +நகர வேளாண்மை + +நகரத்து எல்லைக்குள்ளோ அதன் எல்லையை சூழவுள்ள பகுதிகளிலோ வேளாண்மை செய்வதை நகர வேளாண்மை (Urban Agriculture) எனலாம். இச்செயல்பாடு உணவு உற்பத்தியை பெருக்கவும் தரமான உணவை நகர மக்கள் பெறவும், உணவுத் தன்னிறைவை காணவும் உதவுகின்றது. +கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண்காடு வளர்ப்பு, நகர தேனீ வளர்ப்பு (Urban beekeeping), தோட்டக்கலை (horticulture) போன்றவையும் நகர வேளாண்மையுள் அடங்குகின்றன. இதே செயற்பாடுகள் நகரத்தை ஒட்டியுள்ள இடங்களிலும் இடம்பெறுகின்றன. நகர வேளாண்மை பொருளாதார, சமூக வளர்ச்சியில் பல மட்டங்களைக் கொண்டுள்ளது. + + + + + +பன்னிரண்டுமுக ஐங்கோணகம் + +பன்னிரண்டுமுக ஐங்கோணகம் அல்லது பன்னிருமுகி ("Dodecahedron") என்பது 12 தட்டையான சீர் ஐங்கோணங்களைக் கொண்டு அடைக்கவல்ல ஒரு திண்மவடிவம். இது புகழ் பெற்ற பிளேட்டோவின் ஐந்து சீர்திண்மங்களில் ஒன்று. மூன்று ஐங்கோணங்கள் ஒரு முனையில் முட்டுமாறு அமைந்துள்ள வடிவம். + +ஒரு சீரான பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தில் உள்ள ஐங்கோணத்தின் நீளம் formula_1 அதன் மேற்பரப்பளவு formula_2 யும், கன அளவு (பரும அளவு) formula_3 யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் கணக்கிடலாம். + + + + +இருபதுமுக முக்கோணகம் + +இருபதுமுக முக்கோணகம் அல்லது இருபதுமுகி ("Icosahedron") என்பது தட்டையான இருபது சமபக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. இது பிளேட்டோவின் ஐந்து சீர்திண்ம வடிவுகளில் ஒன்றாகும். இது முக்கோணங்களால் ஆன குவிந்த வடிவுடைய திண்ம வடிவம். ஐந்து சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் சேருமாறு மொத்தம் 12 முனைகளும் (உச்சிகளும்) 30 ஒரங்களும் கொண்ட வடிவம். + +ஒரு சீரான இருபதுமுக முக்கோணகத்தில் உள்ள முக்கோணம் ஒன்றின் நீளம் formula_1 ஆனால், இந்த திண்மத்தின் 12 முனைகளையும் தொட்டுக்கொண்டு மூடும் உருண்டையின் ஆரத்தைக் கீழ்க்காணும் சமன்பாடால் (ஈடுகோளால்) அறியலாம். + +அதே போல, இருபது முக்கோண முகங்களையும் தொட்டுக்கொண்டு இத் திண்மத்தின் உள்ளே அமையும் உருண்டையின் ஆரத்தைக் கீழ்க்காணும் சமன்பாடால் (ஈடுகோளால்) அறியலாம். + +மேலே குறிப்படதில் formula_4 என்பது பொன் விகிதம் ஆகும் (சுமார் 1.6) ஆகும். + +மேற்பரப்பு "A" என்றும் கன அளவு (பரும அளவு) "V" என்றும் கொண்டால், முக்கோணத்தின் நீளம் "a" என்று கொண்டு கீழ்க்காணும் சமன்பாட்டால் பரப்பளவும் கன அளவும் அறியலாம்.: + + + + +எண்முகி + +எண்முக முக்கோணகம் அல்லது எண்முகி என்பது எட்டு சம்பக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இரு முக்கோணங்கள் கூடிய ஓரங்கள் மொத்தம் 12. + +முக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை formula_1 என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு formula_2 வும், கன அளவு (பரும அளவு) formula_3யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்: + + + + +நான்முக முக்கோணகம் + +நான்முக முக்கோணகம் (இலங்கை வழக்கு: நான்முகி) என்பது நான்கு சமபக்க முக்கோணங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவு. ஒரு சீரான பல்கோண வடிவத்தால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தி ஒரு திண்ம வடிவம் பெறுவது இதுவே. எப்படி ஒரு சமதள பரப்பை அடைக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையாக மூன்றே மூன்று நேர்க்கோடுகள்தாம் தேவையோ, அதே போல ஒரு முப்பரிமாண (முத்திரட்சியான) திண்ம வடிவை அடைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையாக நான்கே நான்கு முக்கோணங்களே போதும். + +ஒரு அட்டைத்தாளில் கீழ்க்கண்டவாறு படம் வரைந்து முக்கோணப் பக்கங்களின் ஓரத்தில் மடித்து நான்முக முக்கோணகத்தைச் செய்யலாம். +நான்முக முக்கோணகத்தில் உள்ள ஒரு முக்கோணத்தின் நீளம் formula_1 என்று கொண்டால், இத் திண்மத்தின் மேற்பரப்பளவு formula_2 ஆகவும் , கன அளவு (பரும அளவு) formula_3 ஆகவும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்: + + + + +அரவிந்தர் + +ஸ்ரீ அரவிந்தர் ("Sri Aurobindo", அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்��ு 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர். + +ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். "தாமரையும் குத்து வாளும்" என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். பெப்ரவரி 1893 இல் இந்தியா மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார். + +1906 இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார். அங்கு வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வரானார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907 இலும் 1908 இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார். + +1904 இலேயே பிரணாயாமம் பயிலத் தொடங்கிய போதும் சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. "ஸ்வராஜ்" (விடுதலை) என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர். + +1909இலே சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிர��ன கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார். + +ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை "ஆர்யா" என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார். + +அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார். + + + + + +பிளேட்டோவின் சீர்திண்மங்கள் + +வடிவவியலில் பிளேட்டோவின் சீர்திண்மங்கள் என்பவை ஐந்து இயல்பான திண்ம வடிவங்கள் ஆகும். எல்லா பக்கங்களும் ஒரே அளவாயும் எல்லா கோணங்களும் ஒரே அளவாயும் உள்ள தட்டையான (இரு பரிமாண) சீர் பல்கோண வடிவங்களைக் கொண்டு அமைக்கப்படும் குவிந்த அடைபட்ட திண்ம வடிவங்கள் ஐந்தே ஐந்து என்று நிறுவியுள்ளார்கள். இவைகளுக்கு பிளேட்டோவின் சீர்திண்மங்கள் என்று பெயர். அவையாவன நான்முக முக்கோணகம், அறுமுக கட்டகம், எண்முக முக்கோணகம், பன்னிரண்டுமுக ஐங்கோணகம், இருபதுமுக முக்கோணகம் ஆகும். + + + + +ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு + +இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு மற்றும் விசாய அமைப்பென அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை (போஷாக்கை) அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை (விவசாய) மற்றும் உணவுப் பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றை தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள "fiat panis" என்பதன் பொருளானது "ரொட்டி (இலங்கைத் தமிழ்: பாண்) ஆவது இருக்கவேண்டும்" என்பதாகும். + +1945 இல் இவ்வமைப்பானது கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. 11 ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது (189 அங்கத்துவ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும்). இந்த அமைப்பு துவங்குவதற்க்கான முதல் விதை 1971ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த ஐரோபிய வேளாண் +மாநாட்டில் (European Confederation of Agricultire) கலந்துகொண்ட அறிஞர்களால் ஊன்றப்பட்டது. + +கரிபியன் கடற்கரையோரமாகக் காணப்பட்ட பழ ஈயினைக் கட்டுப்படுத்தியது. அத்துடன் இப்பகுதியில் காணப்பட்ட கால்நடைகளில் நோயை உருவாக்கிய ஒட்டிண்ணிகளை (Tick) அகற்றியது. + + + + + + +புதையல் உவமை + +புதையல் அல்லது மறந்துள்ள புதையல் இயேசு தனது போதனைகளின் போது விண்ணரசை விளக்குவதற்காக கூறிய உவமானக் கதையாகும். இது மத்தேயு 13:44 இல் எழுதப்பட்டுள்ளது. இது முத்து உவமைக்கு முன்னதாக கூறப்பட்டது. இது ஒருவசனம் மட்டுமேயுள்ள சிறிய உவமையாகும். +ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். + +இயேசு விண்ணரசை மறைந்திருக்கும் புதையலுக்கு ஒப்பிடுகிறார். அதை கண்ட மனிதன் போய் தனக்குள்ளதெல்லாவற்றையும் விற்று அந்நிலத்தை விலைக்கு வாங்கி புதியலை அடைகிறான். அதனால் அவன் முன்னரை விட செல்வந்தனாகிறான். அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு அழியாத விண்ணக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் பொருளாகும். + +விவிலியத்தின் ஏனைய நற்செய்தி நூல்களில் இவ்வுவமை காணப்படுவதில்லை. ஆனாலும் விவிலிய நூலாக ஏற்கப்படாத தோமையாரின் நற்செய்தி நூலில் இதனை ஒத்த உவமை ஒன்று காணப்படுகிறது. இது 109 வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பின்வரும் தோமையாரின் நற்செய்தியின் வசனம் பற்றசன்-மேயர் (Patterson-Meyer) ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கமாகும். + +109. இயேசு கூறியதாவது."(தந்தையின்) அரசு பின���ரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்; தனது நிலத்தில் ஒரு புதையல் மறைந்திருந்தும் அதை அம்மனிதன் அறியாமல் இருந்தான். அவன் மரித்தபோது அந்நிலத்தை மகனுக்கு விட்டுச்சென்றான். மகனும் புதையல் பற்றி அறியாது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறான். நிலத்தை வாங்கியவனோ நிலத்தை உழும்போது புதையலை கண்டுபிடித்தான். பின்பு அவன் எல்லோருக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் பெருஞ்செல்வந்தனானான். + + + + + + + +திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை + +திராட்சை தோட்ட வேலையாட்கள் இயேசு விண்ணரசின் தன்மையை விளக்குவதற்காக தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமான கதையாகும். இது விவிலியத்தின் இல் காணப்படுகிறது. + +தெனரியம் (denarius) எனப்து பழைய உரோமை இராச்சியத்தின் ஒரு வெள்ளிக்காசு ஆகும். 25 வெள்ளி காசுகள் ஒரு பொற்காசுக்கு சமனாகும். இங்கே குறிப்பிடப்ப்பட்டுள்ள மணித்தியாலங்கள் அக்காலத்தில் யூதா நாட்டில் வழக்கில் இருந்த நேர முறையின் படியானவையாகும். இவை சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப் பட்டவையாகும். + +நிலக்கிழார் (பண்ணையாளர்) ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். பின்பு மூன்றம் மணிவேலையில் அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம்,"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஒன்பதாம் மணிவேலையிலும் வெளியே சென்று அப்படியே செய்தார். பதினோராம் மணிவேளையிலும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம்,"நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து," எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம்,"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார். + +மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்���ி முதலில் வந்தவர்வரை அவர்களுக்கிய கூலி கொடும்" என்றார். எனவே பதினோராம் மணிவேளையில் வந்தவர்கள் ஒரு தெனரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து,"தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய் உமக்குப் பொறாமையா?" என்றார். + +இதில் திராட்சைத்தோட்டம் விண்ணரசாகவும்,பண்ணையாளர் கடவுளாகவும் கிறிஸ்தவர் பணியள்களாகவும் உவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் பொருள் விண்ணரசிற்கு வேலை செய்பவர்கள் யாவரும் இறுதிய்ல் பெறப்போகும் ஊதியம் சமன் என்பதே. இவ்வுலகில் கடவுளுக்கு சிறிய அளவில் வேலை செய்தவனும் பாரிய வேலைகளை செய்தவனும் விண்ணரசில் ஒரே மாதிரியாகத்தான் நோக்கப்படுவார்கள். அதாவது விண்ணரசில் தலைவர் சீடர் சிறியவர் பெரியவர் என்ற பேதம் கிடையாது. + + + + + + + +உரோமையருக்கு எழுதிய திருமுகம் + +உரோமையர் அல்லது பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Romans) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஆறாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Romaious (Επιστολή προς Ρωμαίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Romanos எனவும் உள்ளது . இம்மடல் தூய பவுல் எழுதிய பிற எல்லா மடல்களை விடவும் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது . + +விவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல் எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலி���் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையி்ன் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன. + +இதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார். + +தூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலை நகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமை சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28). + +மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகிளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவர் கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும். + +பவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். + +தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்கும்முன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது. + +எருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அ���ர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. + +இத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன. + +1:17இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார். + +தொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்புதேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொள்வதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை. + +தொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர். + +9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல், யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். + +12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார். + +16ஆம் அதிகாரம்: சில கையெழுத்துப்படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27 இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16 ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பினும் 15ஆம் அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன் ஒத்துப்போகிறது. + +16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும். + +உரோமையர் 12:9-20 +"உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! +தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். +உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; +பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். +விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். +எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; +துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; +இறைவேண்டலில் நிலைத்திருங்கள். +வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; +விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். +உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; +ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். +மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். +நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; +உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். +நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம். +தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள். +இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள். +அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; +அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். +ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, +"பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன" என்கிறார் ஆண்டவர். +நீயோ, "உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; +அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. +இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்." +தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" + + + + + + +காணாமல் போன காசு உவமை + +காணாமல் போன காசு இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்க��றார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது. + +ஒரு பெண்ணிடம் இருந்த பத்துத் வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பாள். + +காணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை. + + + + + + + +கிறிஸ்தோபர் கொக்கரல் + +கிறிஸ்தோபர் கொக்கரல் (ஜூன் 4, 1910 – ஜூன் 1, 1999) அவர்கள் நிலம் நீர் ஆகிய இரண்டின் மீதும் செலுத்தவல்ல "காற்று மெத்தை உந்தாகிய" ஹோவர்கிராஃவ்ட்டை கண்டுபிடித்தவராவார். ஆங்கிலேயரான இவர் 1969 இல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். + +இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்த கொக்கரல் கிரசாம்ஸ் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் பீற்றர்ஹவுஸில் எந்திரவியல் கற்றார். 1935 இல் மார்க்கோனி நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார். + + + + +டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் + +டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (பிறப்பு பெப்ரவரி 15, 1956) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். இவரும் கோர்டன் கிரீனிட்சும் மேற்கிந்தியத் தீவுகளின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாளர்களாக விளங்கினர். + +5 நாள் ஆட்டங்கள் - 116, ஓட்டங்கள் - 7487, சராசரி - 42.29, சதங்கள் - 18 + +ஒருநாள் போட்டிகள் - 238, ஓட்டங்கள், 8648, சராசரி - 41.37, சதங்கள் - 17 + +விருதுகள் : 1991 விஸ்டன் கிரிக்கட்டர். + + + + +கோர்டன் கிரீனிட்ச் + +கோர்டன் கிரீனிட்ச் (பிறப்பு மே 1, 1951) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். இவரும் டெஸ்மண்ட் ஹெய்ன்சும் மேற்கிந்தியத் தீவுகளின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாளர்களாக விளங்கினர். + + + + + +சித்திரலேகா மௌனகுரு + +சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான "சொல்லாத சேதிகள்" நூலின் பதிப்பாசிரியரும் ஆவார். + + + + + + +சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் + +தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் காலக் குடைவரைகளுள் ஒன்றான சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் சாலைக்கு அண்மையில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அண்மையில் காணப்படும் பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலைப் பார்த்தபடி உள்ளது. + +இங்கே காணப்படும் கிரந்தம் மற்றும் நாகரி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் இக்கோயிலை "அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம்" எனக் குறிப்பிடுகின்றன. அதிரணசண்டன் என்னும் விருதுப் பெயர் கொண்ட இராஜசிம்ம பல்லவன் காலத்திலேயே இக் குடைவரை அமைக்கப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர் கருத்து. + +நீள்சதுரத் தள அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் பின்புறச் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. முகப்பில் இரண்டு பக்கச் சுவர்களுடனும் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும், நடுவில் இரண்டு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. + + + + + +சாளுவன்குப்பம் புலிக்குடைவரை + +சாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. + +புலிக்குடைவரை அல்லது புலிக்குகை என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டாலும், இங்கே புலிச் சிற்பங்கள் எதுவும் கிடையாது. இங்குள்ள சிற்பங்களைக் கருத்தில் எடுக்கும்போது இதை "யாளிக்குகை" அல்லது "சிம்மக��குகை" என்பதே பொருத்தமாக இருக்கும். + +கடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்ற அமைப்பில் உள்ளது. இங்கே கருவறைகள் எதுவும் இல்லை. இதன் தளம் நிலத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது இத்தளத்தை அடைவதற்கு அதன் முன்புறத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் அதிட்டானம், தூண்கள், கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. எனினும் இவற்றுட் சில அம்சங்கள் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. + +தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் "திருவெழுச்சில்" என்னும் சொல் காணப்படுவதால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. + + + + + +கலியன் கேட்ட வரங்கள் + +அய்யாவழி புராண வரலாற்றின் அடிப்படையில் கலியன் எனப்படுபவன் குறோணியின் ஆறாவது துண்டின் பூலோகப் பிறப்பு ஆவான். + +இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான். + + + + + + +இந்திரா பார்த்தசாரதி + +இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். + +இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார். + +தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். + +இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். 'மழை' நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய "நந்தன் கதை" , "ராமானுஜர்", "ஔரங்கசீப்" என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. + + +இந்திரா பார்த்தசாரதி படைப்புகளில் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களின் மனக்குழப்பங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் முதலானவை இவரது நாடகங்களில் முக்கியக் கருத்தாக இடம் பெறுகின்றன. உள்மன உறுத்தல்கள், தன்முனைப்புப் போராட்டம், தளைகளிலிருந்து விடுபட விரும்பும் விடுதலை மனநிலை ஆகியவை இவருடைய நாடகங்களில் வெளிப்படுகின்றன. விரக்தி, தற்கொலை, மரணம், தோல்வி, தனிமை, நோய், துன்பம், மனஉளைச்சல் என்னும் கூறுகள் மிகுதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. பசி நாடகத்தில் தற்கொலை, மழை நாடகத்தில் பொருந்தாக் காதல், மரணம், விரக்தி, காலயந்திரம் நாடகத்தில் புற்றுநோய், தற்கொலை முயற்சி, தோல்வி, நந்தன் கதையில் அடிமைத்தனம், சாதியை அழிக்கமுடியாது என்ற விரக்தி, கோயில் நாடகத்தில் அறியாமை, ஏமாற்று, போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் விபச்சாரம், பெண்ணடிமை, மரணம், ஒளரங்கசீப் நாடகத்தில் கதைத் தலைவனின் தனிமை என்று திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் ஓடும் உளவியல் அசைவுகளை இவர் நாடகங்கள் சித்திரிக்கின்றன. இவர் எழுத்துகளில் பொதுவாகக் காணப்படும் பண்பு நிறைவின்மை. + +1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார். + + + + + + +ஆனந்த விகடன் + +ஆனந்த விகடன் () என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. வாரந்தோறும் நூறாயிரத்திற்கும் மேலான படிகள் அச்சாகி விற்பனையாகும் இதழ். இது இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் இதழ்களின் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது + +விகடன் பத்திரிகை தமிழகத்தின் இரண்டாவது பத்திரிகையும் பொதுமக்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிக்கையும் ஆகும். (56 லட்சம் வாசகர்கள்) +இலக்கியம், அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, வாணிகம் எனப் பலதுறைகளிலும் தனது கருத்தாக்கங்களை ஆனந்த விகடன் வெளிப்படுத்தி வருகிறது. +இதனுடைய வளர்ச்சியாகவே இக்காலத்தில் அவற்றுக்கெனத் தனி இதழ்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. +ஆனந்த விகடன் என்னும் தனி நிறுவனம் தற்போது விகடன் குழுமமாகச் செயல்பட்டு வருகிறது. + +இவை தவிரவும் இணைய தளத்திலும் விகடனின் பங்கு குறிப்பிடத்தக்கது. யூத்புல் விகடன், மின்னிதழ் விகடன் போன்ற வெளியீடுகள் இணையதள வாசகர்களுக்கானவை. அவ்வப்போது இணைப்பு இதழ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளுக்காகத் தற்போது 'என் விகடன்' என்னும் புதிய இணைப்பும் வெளிவருகிறது. + +புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலரையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை ஆனந்த விகடனுக்கு உண்டு. குறிப்பாக ஆனந்த விக��னில் வெளியிடப் பெற்ற முத்திரைக் கதைகள் பல கதாசிரியர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வித்தன. கார்ட்டூன் எனப்படும் கருத்தோவியச் சித்திரங்களும் ஆனந்தவிகடனில் பெயர் பெற்றவை. + +ஆண்பால் பெண்பால் அன்பால்,உயிர் மெய்,பிளஸ் மைனஸ் ப்ளீஸ்,சொல் அல்ல செயல் முதலிய தொடர்கள் தற்பொழுது வெளிவருகின்றன. + +பிரபலங்கள் விகடனுடனான தங்களின் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் பக்கம். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய பிரபலங்கள் பங்கெடுக்கின்ற தொடர். + +வட்டியும் முதலும் தொடர் எழுத்தாளர் ராஜு முருகனால் எழுதப்படுகிறது. இத்தொடரில் தன் வாழ்வில் பல்வேறு சம்பவங்களையும், சமூக நல கருத்துகளையும் எழுத்தாளர் பதிவு செய்கிறார். + +சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்ட நகைச்சுவைகள், தகவல்கள் நடப்பு செய்திகள் இப்பகுதியில் எழுத்தாளர் பதிவு செய்கிறார். + + + + + +மாதிகை + +மாதிகை (அல்லது "மாசிகை") என்பது மாதம் ஒருமுறை வெளியாகும் இதழ் (சஞ்சிகை). பல தமிழ் இலக்கிய இதழ்கள் மாதிகையாகவே வெளியாகின்றன. மாதிகை, திங்களிதழ், மாத இதழ் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உலகெங்கிலும், பல மொழிகளிலும், மாதிகைகள் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில்தான் வெளிவரத்தொடங்கின. தமிழில் பழைய மாதிகைகள் 1860ல் வெளிவந்த தேசோபகாரி, 1864ல் வெளிவந்த தத்துவ போதினி, 1870ல் வெளிவந்த சத்திய வர்த்தினி, 1870ல் வெளிவந்த நற்போதம், 1880ல் வெளிவந்த கோயமுத்தூர் கலாநிதி முதலியன ஆகும். சுமார் 1860ல் தொடங்கி 1957 ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 346 தமிழ் மாதிகைகள் பற்றிய குறிப்புகள் இன்று அறியப்படுவன + + + + +வெள்ளி + +வெள்ளி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள்: + + + + + + +வெள்ளி (கிழமை) + +வெள்ளிக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். வியாழக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து சனிக் கிழமை வரும். வெள்ளி என்னும் கோள்மீனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வெள்ளிக்கிழமையை ஒரு நன்னாளாகக் (புனித நாளாகக்) கருதுகின்றனர். + +வெள்ளிக் கிழமை இஸ்லாமியர்களுக்குப் புனித நாளாகையால் பல. இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இதனால் அந் நாடுகளில் வெள்ளிக் கிழமை வார இறுதி நாட்களில் ஒன்றாக அமைகிறது. + + + + +வியாழன் + +வியாழன் என்னும் தலைப்புகளில் உள்ள கட்டுரைகள்: + + +வியா என்ரால் பெரிய niraintha ena porulpadum.vaanil periya collaga valam varuvathanalaeyae viyazhan engindranar. + +tamilnadu padanool kazhagam 8m vaguppu,10m pakkam ulladhu. + + + +வியாழன் (கிழமை) + +வியாழக்கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். புதன்கிழமைக்கு அடுத்து வரும் நாள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக் கிழமை வரும். மிகப் பெரிய கோளாகிய வியாழனுக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள். + + + + +சனி + +சனி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள்: + + + + + +சனி (கிழமை) + +சனிக் கிழமை என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் நாள். சனிக்கிழமைக்கு அடுத்து ஞாயிற்றுக் கிழமை வரும். பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள். + + + + +திவாகர நிகண்டு + +திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் கிபி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது. இந்நூல் "ஆதி திவாகரம்" என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது. + +இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்த��்பட்டுள்ளன. தமிழில் இன்றுள்ள நிகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தியது. + +இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. கே. எஸ். ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை. + +இந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது "History of Tamil Language and Literature" என்ற நூலின் பக்கம் - 164இல் "The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice" எனக் கூறியுள்ளார். + +‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு மூலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. + + + + + + + +சேந்தன் + +சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர். +சேந்தன் என்னும் சொல் 'சேயோன்' என்னும் முருகனைக் குறிக்கும். + +அவர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் நிரலடைவை இங்குக் காணலாம். + + + + +பிங்கல நிகண்டு + +பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர். இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன. + +அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலைப் பெற்றத��� போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல். காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல். + +நிகண்டு நூல்களில் பழமையதான திவாகர நிகண்டு சொற்களை இக்கால அகராதி போல அகர வரிசையில் அடுக்கிக்கொண்டு பொருள் கூறுகிறது. இந்த நிகண்டு ஒன்றுவிட்ட அடுத்த எழுத்தான எதுகை அடிப்படையில் சொற்களை அடுக்கிக்கொண்டு சொல்லின் பொருளை விளக்குகிறது. + + + + +சூடாமணி நிகண்டு + +சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள் வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + +சூடாமணி நிகண்டு + + + + +உரிச்சொல் நிகண்டு + +தமிழில் உள்ள சொற்களுக்கு நிகராக அண்டி நிற்கும் சொற்களைத் தொகுத்துக் கூறுவது நிகண்டு. +நிகர்+அண்டு = நிகரண்டு > நிகண்டு. + +உரிச்சொல் நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூலை கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கேயர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் இயற்றினார். வெண்பாவால் இயற்றப் பட்ட இந் நிகண்டு 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 287 சூத்திரங்களினால் 3200 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. +சங்க காலத்தில் சோழநாட்டு அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் ‘அம்பர் கிழான் அருவந்தை’. இவன் மகன் சேந்தன். + + + + + + +கயாதர நிகண்டு + +கயாதர நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதர முனிவர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்டது. கட்டளைக் கலித்துறையால் இயற்றப் பட்ட இந் நிகண்டு 11 பிரிவுகளைக் கொண்டது. இதில் 566 சூத்திரங்களினால் 10,500 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. இது காலத்தால் நான்காவதாக அறியப்���டும் நிகண்டு நூல். இதில் புதிய சொற்களோ விளக்கங்களோ இல்லை, ஆனால் நூல் கட்டளைக் கலித்துறையில் இயற்றபட்டுள்ளது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +காணாமல் போன ஆடு உவமை + +காணாமல் போன ஆடு இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் முதலாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது. இது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. . + +ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார். + +காணாமல் போன ஆடு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை. + + + + + + + +கடுகு விதையின் உவமை + +கடுகுவிதையின் உவமை இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது , , இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார��. இதன் கருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும். + +விண்ணரசு ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின. + + + + + + + +மூட செல்வந்தன் உவமை + +மூட செல்வந்தன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக்கதையாகும். இது இல் எழுதப்பட்டுள்ளது. இவ்வுவமை, இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது சொத்து பிரச்சினை ஒன்றை தீர்த்துக்கொள்ள வந்த இரு சகோதரரை பார்த்து கூறிய உவமையாகும். அவர்களுக்கும் போதனையை கேட்க குழுமியிருந்தா மக்களையும் நோக்கி இவ்வுலக செல்வங்களை சேர்ப்பது வீணானது என்பதை விளக்க கூறப்பட்ட உவமையாகும். + +ஒரு செல்வந்தனின் நிலம் நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே." என்று எண்ணினான். "ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்". பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. + +இதன் பொருள் தெளிவானது. அதாவது இவ்வுலக செல்வங்கள் ஒருவனது மரணத்தை தடைசெய்யாது. மரணம் அறியாத நேரத்தில் வரும், அதற்கு மனிதர் தயாரக இருக்க வேண்டும். மனிதனின் திட்டங்கள் கடவுள் முன்னதாக அறிவிலியின் உளறல் போன்றது. + + + + + + + +ஆசிரிய நிகண்டு + +ஆசிரிய நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் ஆண்டிப் புலவரால் இயற்றப்பட்டது. நூலாசிரியர் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் பிறந்தவர். இவர் பாவாடை வாத்தியார் என்பவரின் மகன். இந்த நிகண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமி���் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +அகராதி நிகண்டு + +அகராதி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர். + +இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூற்பாவால் இயற்றப்பட்ட 3334 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. இதில் சொற்கள் அகரவரிசையில் அமைந்திருப்பது சிறப்பு. இதுவே "அகரவரிசையில்" அமைந்த "முதல்" அகராதி. வீரமாமுனிவர் 18 ஆம் நூற்றாண்டில் அமைத்த சதுரகராதிக்கும் 200 ஆண்டுகள் முந்தியது, ஆனால் செய்யுள் வடிவில் உள்ளது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +அகம்பொருள் விளக்க நிகண்டு + +அகம்பொருள் விளக்க நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருமந்தைய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. + +இந்நூல் 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 700 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +பொதிகை நிகண்டு + +பொதிகை நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாத கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. + +இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 500 சூத்திரங்களும், நூற்பாவால் இயற்றப்பட்ட 2228 சூத்திரங்களும் கொண்டு 14,500 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +பொருள் தொகை நிகண்டு + +பொருள் தொகை நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட��டது. + +இந்நூல் நூற்பாவால் இயற்றப்பட்ட 1000 சூத்திரங்களில், 1000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +நாமதீப நிகண்டு + +நாமதீப நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. + +இந்நூல் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெண்பாவால் இயற்றப்பட்ட 800 சூத்திரங்களில் 1,200 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +நானார்த்த தீபிகை + +நானார்த்த தீபிகை என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. + +இந்நூல் 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 1,110 சூத்திரங்களில் 5432 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. + +சோ.இலக்குவன், "கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, + + + + +அகரவரிசை + +அகரவரிசை ("alphabetical order") என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துகளை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துகளின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துகளாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் நெடுங்கணக்கு என்று சொல்வர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துகளில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துகளும் அகர வரிசைப்படி அமைக்கப்படும். + +தமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துகள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து, (3) 18 மெய்யெழுத்துகள் கொண்ட வரிசை, (4) ���யிரோடு சேர்ந்த மெய்யெழுத்துகளாகிய 216 உயிர்மெய் எழுத்துகள். எனவே மொத்த எழுத்துகள் 247. + +உயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ +ஆய்த எழுத்து: ஃ +மெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன். + +உயிர்மெய் எழுத்துகள் வரிசை: +ஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துகள் வரிசைபடுத்தப்ப்படுகின்றன. இவற்றுள் A E I O U ஆகிய ஐந்து எழுத்துகளும் உயிர் எழுத்துகள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில் மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன. + +A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z + + + + + +விக்கிரகம் + +விக்கிரகம் எனப்படுவது கல்லிலோ செப்பு முதலிய உலோகங்களிலோ (மாழைகளிலோ) செய்யப்பட்ட கடவுள் மற்றும் அருளாளர்களின் உருவச் சிலை ஆகும். முதலில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் கல்லிலேயே செய்யப்பட்டன. இன்றும் கோயில்களுக்குள் கருவறைக்குள் இருக்கும் மூல மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் பெரும்பாலும் கற்சிலைகளாகவே இருப்பதைக் காணமுடியும். உலோகங்களில் விக்கிரகங்களை உருவாக்கும் கலை பிற்காலத்திலேயே உருவானது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்தில் உலோகத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தன. இன்றைய கோயில்களில் திருவிழாக் காலங்களில் உலாக் கொண்டுசெல்வதற்காக உள்ள உற்சவ மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் உலோகத்தாலேயே செய்யப்படுவது வழக்கம். + +விக்கிரகங்களைச் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. பல்வேறு கடவுளர்க்கான விக்கிரகங்களுக்குரிய இயல்புகளும், அளவு முறைகளும் சிற்பநூல்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. சிற்பிகள் இவ்வாறு சொல்லப்பட்ட முறைகளில் இருந்து வழுவாது விக்கிரகங்களைச் செய்கிறார்கள். + + + + +மகாராஜாவின் ரயில் வண்டி (நூல்) + +அ. முத்துலிங்கம் எழுதிய சில சிறுகதைகளின் தொகுப்பு நூல் இதுவாகும். + + + + + +தனியுடைமை + +தனியுரிமைத் தொழில் (Sole proprietorship)'(தனியார் சொத்து, தனிவியாபாரம்) என்பது ஒரு தொழில் தோற்றுவித்து நடத்தும் முறைமை ஆகும். +இங்கு தனிஒருவரினால் மூலதனம் இடப்பட்டு இலாப நட்டங்கள் போன்ற விளைவுகளை அவரே ஏற்கவேண்டி இ��ுப்பதுடன் வியாபாரத்தின் முகாமைக்கும் ( தொழில் நடத்துதலின் மேலாண்மைக்கும்) அவரே பொறுப்பாளியாகவும் காணப்படுவார். இவ் வியாபார (தொழில்) அமைப்பில் உரிமையாளரை நிறுவனத்திலிருந்து வேறாக பிரிக்கமுடியாது. நிறுவனத்தின் பெயரில் காணப்படும் கடன்கள் உரிமையாளரின் கடனாகக் கருதப்படும்.இலங்கை, இந்தியா போன்ற +வளர்நிலை நாடுகளில் இத்தகைய தனியுடைமை வியாபார (தொழில்) நிறுவன அமைப்பே அதிகளவில் காணப்படுகின்றது. + + +தனியுடைமை வியாபாரத்தினை (தொழிலை) ஆரம்பிக்க, தொடர்ந்து நடாத்த, கலைக்க சட்டவிதிகள் எதனையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. +எனினும் இவ் நிறுவன அமைப்பு முழுமையான சட்ட விலக்குள்ள அமைப்பு என கூறப்படமுடியாது. சில பொதுவான சட்டங்களான +நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம், அளவை நிறுவை சட்டம், விலைக்கட்டுப்பாட்டுச்சட்டம், தொழிலாளர்கள் தொடர்பிலான சட்டங்கள், சுற்றுச் சூழல் தொடர்பான சட்டங்கள் +என்பன பின்பற்றவேண்டும். + +தனியுடமையில் வியாபாரத்தின் தன்மையினைப்() பொறுத்து இலகுவாக ஆரம்பிக்கமுடியாது.அவற்றிக்கு அனுமதி +பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக, +ஆங்கில மருந்துப் பொருட்கள், நாணயமாற்று வியாபாரம், வானொலி தொலைக்காட்சி சேவை, மதுபானசாலை, உணவுவிடுதி, +வெடிமருந்து தயாரிப்பு,போன்ற தொழில்கள் (வியாபாரங்கள்) நிறுவுவதற்கு அரசநிறுவனங்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறுதல் கட்டாயமாகும். + + + + + + +ஜெயமோகன் + +ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். + +ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. + +அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. + +ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார். + +பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார். + +1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார். + +இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார். + +அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன்,இலக்கிய வாசகியான அவர் மூலம் வாச��ப்பு ஆர்வம் வந்தது , 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார். + +1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார். ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் "நதி" அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் "படுகை", "போதி" முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. + +1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது. + +1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். + +நாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார். + +ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக "நெடும்பாதையோரம்" என்ற பேரில் வெளியாகியுள்ளன. + +தமிழில் நூறுநாற்காலிகள் என்ற பெயரில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு நூறு சிம்ஹாசனங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது + +ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. விருதுவிழா இலக்கியக்கூடலாக கோவையில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது + +குருநித்யா ஆய்வரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சந்திப்புகளை ஊட்டியில் நிகழ்த்திவருகிறார்கள் ஜெயமோகனின் வாச��ர்கள். + +திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 2006இல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம். + + + +மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு + + + + + + + + + + + + + + + + + + +ஜெயமோகன் சிறுகதைகள் + +ஜெயமோகன் குறுநாவல்கள் + +வெண்முரசு மகாபாரதம் நாவல் முழுவதும் + + + + + +திருப்புகழ் (அருணகிரிநாதர்) + +திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை. + + 1. விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி) + +திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. + +"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!" + + + + + +சுரதா + +சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக "சுரதா" என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். + +சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். + +1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது. + +சுரதாவின் "சொல்லடா" என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. + +பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார். + +நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த "தலைவன்" இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் "சிவாஜி" இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. + +சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ���க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். + +சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். + +1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார். + +1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு "சுவரும் சுண்ணாம்பும்" என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974). + +பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார். + +தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு. + +பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். + + +இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். +சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர். + + + + + + +பாரதிதாசன் + +பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரம��ிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். + +புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். + +இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். + +இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார். + +நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. + +தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. + +புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். + +தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். +பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். + +1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். + +பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன. +பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார். + +"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே" + +புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் + +தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் + +எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! + +பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில: + +இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார். + +பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்: +திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார். + +அவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்: + +இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். + +பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு: + + + + + +
+ +குயில் + +குயில் என்பது பொதுவாக பறவைகளைக் குறிக்கும் சொல். பின்வரும் சொற்கள் குயில் என்பதைக் குறிக்கும்: + + + + + + +குயில் (இதழ்) + +குயில் கவிதை இலக்கியதிற்காக வெளிவந்த ஒரு திங்களிதழ் (மாதிகை) ஆகும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் துவக்கப்பட்டு வெளிவந்தது. 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1948 இல் அப்போதைய சென்னை அரசு குயிலுக்குத் தடைவிதித்தமையால் சிலகாலம் வெளியீடு தடைப்பட்டது. பின்னர் மீண்டும் வார இதழாக வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குயில் இதழில் சிலகாலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். + + + + + +லெபனான் + +லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. + +இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும். + + +