diff --git "a/train/AA_wiki_23.txt" "b/train/AA_wiki_23.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_23.txt" @@ -0,0 +1,3243 @@ + +சீனிவாச இராமானுசன் + +சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் "The Ramanujan Journal" என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. + +குடந்தை சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். + +இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் "அமீனாக" வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். + +இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார். + +1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில��� ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார். + +கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன். + +மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை ம��விய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே. + +பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. + +சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. + +1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.[ எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம்]. இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. + +மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார். +ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[http://www.hinduonnet.com/fline/fl1617/16170810.htm + +சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார். + +இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில். + +1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொ���ுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம். + +ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான். + +கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக ந���ரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’. + +இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான். + +சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது. + +இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம். + +முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒர���நாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. +அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார். + +இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்: + +formula_1 + +மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்: + +formula_2 + +இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார். + +இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் மு��ிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு + +3 + 1/6 = 19/6. + +x =19, y = 6 இரண்டாவது விடை. + +formula_3 + +மூன்றாவது ஒருங்கு: + +formula_4 + +இது கொடுக்கும் விடை: x = 117, y = 37 + +இதுவும் ஒரு சரியான விடைதான். + +நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228. + +இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான். + +துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919–20 இல் செய்த ஆராய்ச்சிகள். + +ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது: + +• மூன்று நோட்புக்குகள் + +• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914) + +• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக் + +• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள் + +இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்ட�� வரும்’. + + + + + + + +போர்த்தேங்காய் + +போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில் வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் போர்த்தேங்காய் அடிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. + +போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர். அவருக்கு மாலை போட்டுக் கௌரவிப்பார்கள். + +முற்காலத்தில் இருந்து தற்காலம் வரை நடந்து ஈழப்போர்க் காலத்தில் மறைந்து போன ஒரு விளையாட்டு போர்த்தேங்காய்ப் போட்டி. குறிப்பாக வட மாகாணத்தில் வல்வெட்டித்துறையில் பங்குனி மாதம் முழுக்க நடந்து சித்திரை ஆண்டுப்பிறப்பன்று கடைசியாட்டமாக நிறைவேறும். வல்லைச் சந்தையில் இந்த ஆட்டம் நடைபெறுவது வழக்கம். + + + + + +சந்தை + +சந்தை என்பது Market என்று அழைக்கப்படுகிறது பொருள் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய இடத்தை குறிக்கும். வாங்குபவரும் விற்பவர்களும் தொடர்பு கொள்ளும் இடத்தை குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தைகள் உள்ளன. எடுத்துகாட்டாக பணச்சந்தை, பங்குச்சந்தை. ஒரு உற்பத்தியாளர், நேரடியாகச் சந்தையின் வழியே விற்பனை செய்தால், அவருக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகமாகிறது. இதில் உற்பத்தியாளர், இடைத்தரகர்களின் கருத்தை விட, நுகர்வோரின் கருத்துகள் மதிப்பு உள்ளதை உணர்வார். + +சந்தைகளின் இயல்புகள் + +வாங்குபவர்கள், விற்பவர்களிடே போட்டி காணப்படும். + +சந்தையின் பரப்பு +தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற +காரணிகள் சந்தையின் பரப்பினை விரிவடையச்செய்யும். +அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பயன் பொருட்கள், +அதிகமாக உள்ள பொருட்கள் விரிவான சந்தையை விரிவடைய உதவும் + +அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்களுக்கு +விற்கப்படும். + +சந்தைப்பகுப்புக்கள் + +பொருட்களின் இயல்பின் அடிப்படையில் + +பரப்பின் அடிப்படையில் + + + +நீரெலி + +நீரெலி என்பது ஒரு அரை-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது. + +பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது. + +உலகில் இரண்டாவது பெரிய கொறியுயிர் இதுவேயாகும். பீவர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் பீவர்கள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத ஒரு தன்மையாகும். + +ஐரோப்பிய பீவர்கள் ஒரு நிலையில் அவற்றின் உரோமத்துக்காகவும், ஒருவகை வாசனைத்த் திரவியத்துக்காகவும், வேட்டையாடப்பட்டு அழியும் நிலையிலிருந்தன. எனினும் பின்னர் மீண்டும் ஐரோப்பா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்பொழுது, எல்பே (Elbe), ரோன் (Rhone) ஆகிய இடங்களிலும், ஸ்கண்டினேவியாவின் பகுதிகளிலும், பீவர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. பவேரியா, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவை புதிய இடங்களுக்கும் பரவி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், பீவர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அழிந்துவிட்டன. + +அமெரிக்க பீவர், கனடாவின் தேசிய விலங்காகும். இது கனடாவின் ஐந்து சத நாணயத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அந் நாட்டின் முதலாவது தபால்தலையிலும் இடம் பெற்றிருந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் இது த��ல்லை கொடுக்கும் பிராணியாகக் கருதப்படுகின்றது. + + + + + +கனடாத் தமிழ்நாடு கலாச்சார சங்கம் + +கனடாத் தமிழ்நாடு கலாச்சார சங்கம் (Tamil Nadu Cultural Society of Canada - TNCSC) தமிழக பின்புலத்தை கொண்ட தமிழ் மக்களால் 1997 ஆம் ஆண்டு கனடாவில் ஏற்படுதப்பட்ட இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பு ஆகும். + +இவ்வமைப்பு பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது: + + + + + + +வேதநாயகம் பிள்ளை + +மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். + +தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.. தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார். + +இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். +மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். + +அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். + +அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார். + +கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளிட்டார் மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார். + +கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963. + + + + +தானுந்து + +தானுந்து அல்லது சீருந்து ("Car" /"automobile") என்பது தன்னை இழுத்துச் செல்லும் உந்துப்பொறியை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் சக்கரமுள்ள இயக்கூர்தி ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும். + +ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் குதிரைகளும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ கி.பி. 1890 ஆண்டு வாக்கில் எந்த விலங்கும் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டு பிடித்தனர். 1900 ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன. + +உலகளவில் 600 மில்லியன் பயணியர் தானுந்துகள் இருப்பதாக (ஏறத்தாழ பதினோரு நபர்களுக்கு ஒரு தானுந்து) மதிப்பிடப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டில் 806 மில்லியன் தானுந்துகளும் சிறு சரக்குந்துகளும் இருந்தன; இவற்றின் உந்துப்பொறிகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் க.மீ அளவிற்கும் கூடுதலான (260 பில்லியன் அமெரிக்க காலன்கள்) பெட்ரோல்/கல்நெய்யை எரித்ததாக மற்றொரு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் விரைவாக கூடி வருகின்றன. + +இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெருவளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்லது) பெட்ரோல் இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும், ஓட்டுனர் துணையில்லாமலும் என்று பற்பல ��ோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன. + +1770 ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை பிரான்சு நாட்டு காப்டன் நிக்கொலாசு சோசப்பு க்யூனொ ("Nicolas Joseph Cugnot") என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு கட்டைவண்டியிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்கூடியதாகவும், 10-15 மணித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது. +இதனை படத்தில் காணலாம். + +வாங்கத்தகு தானுந்துகளை பெரிய அளவில் தயாரிப்பதைத் தொடக்கியவர், ரன்சொம் ஓல்டுசு ஆவார். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தனது ஓல்ட்ஸ் மொபைல் தொழிற்சாலையின் தொகுப்புவரிசைப் பகுதியில் செயல்படுத்தினார். ஐக்கிய அமெரிக்காவில் தாமஸ் பிளன்சர்ட் என்பவர் 1811 ஆம் ஆண்டு, தானுந்துகளின் பெருமளவு உற்பத்தியைத் துவக்கினார். இந்தக் கோட்பாட்டினை சிறந்த முறையில் 1914 ஆண்டு விரிவுபடுத்தியவர், ஹென்றி ஃபோர்ட் ஆவார். + +ஒரு தானுந்தின் எடை எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்திறனில் செல்வாக்கு செலுத்துகிறது. அதிக எடை எரிபொருள் நுகர்வினை அதிகரிப்பதுடன் செயல்திறனை குறைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜூலியன் ஆல்வூட் நடத்திய ஒரு ஆய்வு உலக ஆற்றல் பயன்பாட்டை பெரிதும் பளுவற்ற தானுந்துகளை பயன்படுத்தி குறைக்கலாம் என்கிறது, இவ்வகையில் 500 கிலோ சராசரி எடை அடையக்கூடியதாக கூறப்படுகிறது. + +"ஷெல் எகோ மராத்தான்" போன்ற சில போட்டிகளில், 45 கிலோ சராசரி தானுந்து எடை கூட அடையப்பெற்றிருக்கின்றன. இந்த தானுந்துகள் ஒர் இருக்கை கொண்டவை (பொதுவாக நான்கு இருக்கை தானுந்துகள் இருந்தாலும் இவையும் தானுந்து என்ற வரையரையுள் அடங்கும்) இருப்பினும் இது தானுந்து எடையை பெரிய அளவில் இன்னும் குறைக்கலாம் என்பதையும் மற்றும் அதனை தொடர்ந்த குறைந்த எரிபொருள் பயன்பாட்டையும் (அதாவது 2560 km/l எரிபொருள் பாவனையை) காட்டுகிறது. + +பெரும்பாலான தானுந்துகள் நான்கு அல்லது ஐந்து இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பெரிய தானுந்து வகைகளில் ஆறு அல்லது ஏழு பேர் பயணிக்கத்தக்கதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பயன்படுத்தப்படும் தானுந்துகள் பெரும்பாலும் இரண்டு இருக்கைகளை உடையன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பொதிகளைக் கொண்டு செல்லும் வசதி என்பவற்றின் தேவைகளுக்கேற்ப தானுந்துகளின் அமைப்புகள் பலவகைப்படுகின்றன. + +தற்காலத்திலுள்ள பெரும்பாலா தானுந்துகள் உள்ளெரி எந்திரங்களில் பெட்ரோல் அல்லது டீசலை எரிவிப்பதன் மூலம் உந்தப்படுகின்றன. அவ்விரண்டு எரிபொருட்களும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அவை பருவநிலை மாற்றம் மற்றும் புவி சூடாதல் ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன. வெகு வேகமாக ஏறிவரும் எரிபொருள் விலைகள், மரபு எரிபொருட்களை சார்ந்திருத்தலால் ஏற்பட்டுள்ள கவலை, வலுவான சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும்பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்திலுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக தானுந்துகளுக்கு மரபுசாரா எரிபொருட்கள் மூலம் மாற்று திறன் வழிமுறைகளில் இயக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முயற்சிகள் (எ-கா; கலப்பு வாகனம், உட்செருகு மின் வாகனம், ஐதரசன் வாகனங்கள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தனால் பயன்படுத்தும் இணக்கமுறு-எரிபொருள் வாகனங்கள்]] மற்றும் இயற்கை வாயு வாகனங்கள் உட்பட மாற்று எரிபொருள் வாகனங்களும் மக்களின் பயன்பாட்டில் அதிகரித்து வருகின்றன. + +சாலை போக்குவரத்து காயங்கள், உலகளாவிய காயம் தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டப் போதிலும், தானுந்துகளின் பிரபலம் இந்த புள்ளிவிவரகளையெல்லாம் குறைத்து மதிப்பிடுகிறது. + +1869 இல் பார்சன்சுடவுன், அயர்லாந்தில் தானுந்து இறந்தவராக மேரி வார்டு முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்டார். + +தானுந்துகளின் பயன்பாட்டின் விலையானது தானுந்தை வாங்குவது, கோளாறு ஏற்படும்போது சீர்செய்தல், பராமரிப்பு, எரிபொருள், மதிப்பிழப்பு, விபத்துகள் ஏற்படுதல், ஒட்டுதல் நேரம், வாகனங்கள் நிறுத்துவதற்கான செலவு, மற்றும் பல செலவுகள் ஆகியவற்றை ஒன்றுகூட்டி மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் பயன்பாட்டின் ஆதாயங்கள் தேவைப்படும்போது பயணத்திற்கான வாகன ஏற்பாடு, எங்கும் எளிதில் செல்லுதல், தற்சார்பு மற்றும் வசதி ஆகியவற்றைச் சொல்லலாம். + +தானுந்துகளின் பயன்பாட்டால��� சமூகத்திற்கு ஏற்படும் செலவீனங்கள் என எடுத்துக்கொண்டால் சாலைகளின் பராமரிப்பு, இடங்களின் பயன்பாடு, சூழல் மாசுபாடு, பொதுமக்கள் நலன் குறைபாடு, சுகாதார பராமரிப்பு, தானுந்துகளின் பயன்பாட்டுக் காலம் முடியும்போது அவற்றை அப்புறப்படுத்துதல் ஆகியவற்றை குறிப்பிடலாம். சமூகத்திற்கு ஏற்படும் ஆதாயங்களும் மிக அதிகம். அவற்றுள் சில: பொருளியல் ஆதாயங்கள், எ-கா: தானுந்துகளை தயாரித்தல் மற்றும் பராமரிப்புகளால் வேலைகள் ஏற்படுதல், செல்வம் உருவாதல், போக்குவரத்து பயன்பாடு, ஓய்வுக்கால பயன்பாடு மற்றும் பயணங்களுக்கான பயன்பாடு, வரிகளால் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கூறலாம். ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்குச் செல்வதென்பது ஒரு சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். + +தொழில்மயமான நாடுகளில் தானுந்துகளே பெருமளவிலான காற்று மாசுபாட்டுக்கு காரணமாகின்றன. வழமையான பயணிகள் தானுந்துகள் பெருமளவிலான பசுமை இல்ல வாயுக்கள் (முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடு), சிறிய அளவில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் சில ஹைட்ரோகார்பன்களை வெளிவிடுகின்றன. + +தானுந்துகளின் பயன்பாட்டால், பல விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் வாழ்விடம் அழிதல் மற்றும் காற்று மாசுபாட்டால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. மேலும் பல விலங்குகள் சாலை விபத்துகளில் இறக்கின்றன. + +வாகனங்கள் மற்றும் அவற்றின் மூலம் பல இடங்களுக்கு சென்று வருவது ஆகிய வகைகளில் வாகனப் பயன்பாடு அதிகரித்து அதனால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. + +மரபுசார் எரிபொருட்களின் பயன்பாடு இருபது மற்றும் இருபத்தோறாம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கு தானுந்துகளின் பயன்பாடு அதிகரித்தது ஒரு முக்கியமான காரணமாகும். + +முழுவதும் தானியங்கு உந்துகள், அல்லது ஓட்டுநரல்லாத உந்துகள், தற்போது முன்மாதிரி வடிவங்களில் இருக்கின்றன. 2020-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வகை உந்துகள் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் ஏ. அர்த் எனும் வடிவமைப்பாளர் மற்றும் எதிர்கால நோக்காளியின் கூற்றுப்படி, இவ்வகை உந்துகள் ஒரு சில பதிகங்களில் தற்போதிருக்கும் தானுந்துகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துவிடும். + +பெட்ரோல்/மின்சார கலப்பு வாகனங்கள், உட்செலுத்து கலப்புகள், மின்கல மின்சார வாகனங்கள், ஐதரசன் தானுந்துகள், மாற்று எரிபொருட்கள் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆகியன தற்காலத்தில் விரிவான ஆராய்ச்சிகள் தானுந்து உந்த தொழில்நுட்பத்துறையில் செய்யப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் தானுந்துக்கான இயங்கு ஆற்றலைத் தரக்கூடிய பல்வேறு வழிமுறைகளும் ஆராயப்பட்டுவருகின்றன. + +டியூராலுமினியம், கண்ணாடி இழை, கார்பன் இழை, கார்பன் மீநுண் குழாய் போன்று பலவித பொருட்கள் தானுந்துகளைத் தயாரித்தலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்ற எஃகி-ற்குப் பதிலாக பயன்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. + +திறவூற்று வடிவமைப்பு அடிப்படையில் தானுந்துகளைத் தயாரிப்பதற்கென பல செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை OSCar மற்றும் Riversimple ஆகியவையாகும். ஆனாலும் இதுவரை எதுவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை, அவற்றுக்கான மென்பொருட்களாகட்டும் வன்பொருட்களாகட்டும் எதுவும் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டவில்லை. + +பொதுப் பயன்பாட்டு போக்குவரத்து வகைகளான பேருந்து, தொடர்வண்டிகள், மெட்ரோ ரயில்கள் போன்றவையும் மிதிவண்டிப் பயன்பாடு மற்றும் நடைபயணம் ஆகியவையும் தானுந்துப் பயன்பாட்டுக்கு மாற்றாக உள்ளன. சில நகரங்களில் தானுந்துப் பகிர்வுத் திட்டங்களும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பொது மிதிவண்டிப் பகிர்வுகளும் கோபன்காகென் மற்றும் ஆம்சடெர்டாம் போன்ற நகரங்களில் செயல்பாட்டில் உள்ளன. + +தானுந்துகளின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவை தானுந்துத் தொழிற்துறையின் பணிகளாகும். 2008-ஆம் ஆண்டில் 70 மில்லியனுக்கும் மேலான தானுந்துகள் உலக அளவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. உலக அளவில் உயர்ந்துவரும் எண்ணெய் விலையும், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்திசெய்வதில் பொதுப் போக்குவரத்து முறைகளின் வளர்ச்சியும் சற்று மந்தமான சூழலை உருவாக்கியுள்ளது. உலகப் பொருளாதார மந்தநிலையின் காரணத்தால் அமெரிக்காவின் தானுந்துத் தொழிற்சாலைகளில் 50% வரை அடுத்த பத்தாண்டுகளில் மூடப்படலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியால், தானுந்து தயாரிப்பதிலும் அதற்கா��� சந்தை என்ற வகையிலும் 2009-ஆம் ஆண்டுப்படி சீனா முந்நிலை வகிக்கிறது. 2000-ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் தானுந்துகளை உள்நாட்டில் விற்ற சீனா, 2009-இல் 13.6 மில்லியன் தானுந்துகளை விற்றிருக்கிறது. + + + + + + +பன்னாட்டு மன்னிப்பு அவை + +ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறும் அது போன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தவாறும் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை ("Amnesty International") ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பன்னாட்டு மன்னிப்பு அவை உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படா இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படும். மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு மக்களூடாக இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும். + +1977 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. + + + + + +சீதையின் அக்னி பிரவேசம் + +சீதையின் அக்னிப் பிரவேசம் என்பது இராமாயண காப்பியத்தில் இராமனின் மனைவி சீதை இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் தான் கற்பு நெறி வழாதவள் என்று நிறுவும் பொருட்டு நெருப்பில் இறங்கிய நிகழ்வைக் குறிக்கும். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இராமன் ஆணாதிக்க உணர்வு கொண்டவனா இல்லையா என்ற இலக்கிய விவாதங்கள் நடைபெறுவதுண்டு. + + + + + + +ச. வெ. இராமன் + +சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு ("Raman Effect") என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் + +சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். + +சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். + +சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ("Indian Association for the Cultivation of Science"), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ("Indian Institute of Science") 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் ("Raman Research Insitute") இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் ��ருந்து பிரிந்தார். + +சி. வி. இராமன் 1926ல் "இந்திய இயற்பியல் ஆய்விதழ்" (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் ("Indian Science Academy") ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் "இன்றைய அறிவியல் கழகம்" (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற "கரன்ட் சயன்ஸ்" (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். + +இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் "ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation" என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. + +இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். + +பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். + +இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + + + + +கூகிள் தேடல் + +கூகிள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. சமீபத்தில் வெளியான கூகிள் தேடுபொறி பற்றிய வீடியோ விளம்பரம் ஒன்று பிரபலங்களை கண்கலங்க வைத்துள்ளது. + +கூகிள் தேடுபொறி 25 பில்லியன் பக்கங்களையும் 1.3 பில்லியன் படங்களையும் இன்று பட்டியலிடுகின்றது. + +கூகிள் தரவு நிலையங்களிற்கும் தேடல்களிற்கு உலகெங்கும் பரந்துள்ள சேவர் ஃபார்ம் (Server Farm) இல் மிகவும் மலிவான ரெட்ஹட் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையே பயன்படுத்துகின்றது. இவை இணையப் பக்கங்களைப் பட்டியலிடவும் பயன்படுகின்றது. கூகிள்பொட்(GoogleBOT) என்னும் நிரலே இணையப் பக்கங்களைப் பட்டியலிடப் பயன் படுத்தப் படுகின்றது. இது நேரத்திற்கு நேரம் புதிய பதிப்புக்களைப் பார்வையிடும். அடிக்கடி மாற்றமடையும் இணையத்தளங்களை கூகிள்பொட்டும் அடிக்கடிப் பார்வையிடும். + +குறிப்பிட்ட தேடல் முடிவொன்றைப் பெற பக்கநிலை என்னும் தத்துவத்தைப் பாவிக்கின்றது. அதாவது ஒரே விடயத்தில் ஓர் இணையபக்கத்திற்கு 100 இணையப் பக்கங்களில் இருந்து இணைப்பும் பிறிதோர் இணையப் பக்கத்திற்கு 1000 இணைப் பக்கங்கள் அதை இணைத்து இருந்தால். 1000 பக்கங்கள் இணைப்புள்ள பக்கமே கூடுதல் பொருத்தமான பக்கமாக கூகிள் தீர்மானித்து பட்டியலிடும். கூகிள் தேடுபொறி 150 மேற்பட்ட கொள்கைகள் அடிப்படையில் இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து பக்கங்களை பட்டியலிடுகின்றது. + + + + + + +கருப்பு மாம்பா + +கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுகின்றன. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இருக்கும் (ஓராள் நீளத்திற்க்கும் அதிகமாக). உடல் சாம்பல் நிறமாக இருதாலும், வாயின் உட்புறம் கருப்பாக இருப்பதால் கருப்பு மாம்பா என பெயர் பெறுகின்றது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும். + +கீரிகளே மாம்பாக்களின் முதன்மையான கொன்றுண்ணிகளாகும். இவை பொதுவாக இளம்பாம்புகளையும் முட்டைகளையும் கொல்கின்றன. பாம்பின் நஞ்சுக்கு எதிர்ப்புத்திறனுள்ள இவை கொல்வதற்குக் கடினமாதலால் பொதுவாக இளம்பாம்புகளையே தாக்குகின்றன. + + + + + +இதழ் + +இதழ் () அல்லது சஞ்சிகை ("Magazine") என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளிவிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்று பொதுச்சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. + +இதழுக்கான முன்னைக்கால உதாரணமாக Erbauliche Monaths Unterredungen எனும் இதழை உதாரணமாக எடுக்கலாம். இது 1663 ஆம் ஆண்டில் செருமனி நாட்டில் தொடங்கப்பட்டது. அது இலக்கிய மற்றும் தத்துவ தகவல்களைக்கொண்ட ஒரு இதழ் ஆகும். ஆண்களுக்கான இதழ் (The Gentleman's Magazine) என்பது முதன் முறையாக 1731 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் வெளியிடப்பட்டது. இதுவே முதல் பொது நலன் பத்திரிகையாகக் கருதப்பட்டது. எவாட் கேவ் (Edward Cave) என்பவரே இவ்விதழின் எழுத்தாளர் ஆவார். இவர் "Harry Potter" எனும் பெயரிலேயே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். + +இதழ்களை வெளி வரும் கால அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றனர். + + +ஒவ்வொரு நாளும் செய்திகளுடன் வெளிவரும் செய்தித்தாள்கள் நாளிதழ்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இவை நாள்தோறும் வெளியாகும் நேரத்தைக் கொண்டு இரு வகையாகப் பகுக்கப்படுகிறது. அவை; + + +ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் காலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரவில் அச்சிடப்பட்டு காலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் நடைபெற்ற பல செய்திகள் அதிகம் இடம் பிடிக்கின்றன. + +ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் மாலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பகலில் அச்சிடப்பட்டு மாலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் மதியத்திற்குப் பின் நடைபெற்ற பல செய்திகள், சில காலை நேரச் செய்திகள் போன்றவை இடம் பிடிக்கின்றன. + +குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு வெளியாவன பருவ இதழ்கள் எனப்படுகின்றன. வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனும் கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் அனைத்தும் பருவ இதழ்களாகும். இவை வெளியாகும் கால அளவைப் பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தலாம், அவை; + + +ஒரு வாரத்திலுள்ள எல்லா நாள்களின் செய்திகளையும் கொண்டு ஒரு நாள் வெளிவருவது வார இதழ்கள் எனப்படுகிறது.வார இதழ்களில் ஞாயிற்று��்கிழமைகளில் வெளியிடப்படும் இதழ் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாரத்தில் நடந்த நிகழ்வுகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சிறப்புப் பகுதிகள் (பெண்கள், சிறுவர்கள்) ஒவ்வொரு துறைக்குமான சிறப்புப் பகுதிகள் (அரசியல், அறிவியல், தொழினுட்பம்) என பல் வேறு அம்சங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழில் உண்டு. + +இதழ்களில் இடம் பெற்றிருக்கும் செய்திகள், படைப்புகள் அடிப்படையில இதழ்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். + + +இதழ்கள் யாரை வாசகர்களாகக் கொண்டு வெளியிடப்படுகின்றன என்ற தன்மையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். + + + + +என 346 திங்களிதழ்களையும் பிற இதழ்களையும் பற்றி திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக, சென்னை, பழந்தமிழ் இதழ்கள் - ஒரு பார்வை என ஒரு நூல் 2001 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. + +இதழ்கள் அஞ்சல் மூலமாகவோ புத்தக விற்பனை நிலையங்கள் மூலமாகவோ விற்பனையாளர்கள் மூலமாகவோ விறனை அல்லது பங்கீடு செய்யப்படலாம். இவ்வாறு பங்க்கீடு செய்தல் மூன்றுவகைப்படும் அவை கீழே தரப்பட்டுள்ளன. + + + + + + +நிலா + +நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) ("Moon", ) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். + +நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும். +இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது. + +புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மனித சமுகத்��ின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், நாட்காட்டிகள், கலை, தெய்வங்கள் ) நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை. + +புவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் (கோள்)-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது. + +புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன. + +1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்ப��ய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம். +புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. + +ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு. + +நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது. + +இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான ந��ர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது. + +1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர். + +அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும். + +பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது. + +"கலைகள்" என்பது நிலவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை புதுநிலவு என்றும் அமாவாசை என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலவின் வெளிச்சம் தெரியும் பகுதி பெரிதாகிக் கொண்டே வரும். இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழுநிலவு என்றும் பௌர்ணமி என்றும் அழைப்பர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் புதுநிலவு நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். புதுநிலவு முதல் முழுநிலவு வரை வளர்ந்து வருவதால் வளர்பிறை என்றும், பிறகு அடுத்த புதுநிலவு நாள் வரை தேய்ந்து வருவதால் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் புவியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு புவியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது. + + + + + +கலை + +கலை () எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும். + +மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ (ஓவியங்கள், புகைப்படங்கள், கட்புல ஊடகங்கள்), காட்சிப்பொருட்களையோ (சிற்பங்கள், அச்சுகள், வார்ப்புகள்) சார்ந்த காட்சிக்கலைகளாக உள்ளன. எனவே தான் அதன் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. கட்டிடக்கலையும் காட்சிக்கலைகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி விளம்பரமும், அலங்கார வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். இசை, அரங்கு, திரைப்படம், நடனம், நாடகம், உள்ளிட்ட ஏனைய அரங்கேற்றல் கலைகள், இலக்கியம், ஊடகங்கள், போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும். + +17ஆம் நூற்றாண்டு வரையிலும் கலை, திறமைக்கும், ஆளுமைக்கும் ஒப்பான அறிவியல் நுட்பத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அழகியல் முதன்மை பெற்று கற்பனை வளம், திறன் சார்ந்து பயனுறு கலைகளாகவும், நுண்கலைகளாகவும் பகுத்தாயப்பட்டன. கலையானது நிலை, நிகழ்வின் நகலாக்கம், கதைப்புனைவு, நிகழ்வின் வெளிப்பாடு, உணர்ச்சிகளின் தொடர்பு மற்றும் இதர தரவுகளைக் கொண்டிருக்கலாம். உ���ோமாயர்களின் கலை வரலாறானது மனிதனின் மதம் மற்றும் அறிவியல் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. + +எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் இது தான் கலை என்றும், இது கலை அல்ல என்றும் எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும் ஆயப்படவேண்டிய ஒன்று. மனித திறன், ஆற்றல், கற்பனை வளத்தின்முகவாண்மையாக கலை விளங்குகிறது. +கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். +கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம். +இரு பரிணாம முறையில் நகலாகவோ, கற்பனையாகவோ காட்சிப்படுத்தப்படும் கலைகள் ஆகும். + +கல், கண்ணாடி, துணி, காகிதம், பைஞ்சுதம் போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும். உடல் ஓவியம், கேலிச் சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும். + +கல், கண்ணாடி, உலோகம் முதலியவற்றால் செதுக்கியோ, வார்த்தோ செய்யப்படும் முப்பரிமாண கலைப்பொருள் சிற்பம் ஆகும். தனிச் சிற்பம், புடைப்புச் சிற்பம், செதுக்குச் சிற்பம், இயங்கியல் சிற்பம், அடுக்கற்கலைச் சிற்பம் போன்றவை சிற்பங்களின் வகைகளாகும். உரோமானிய, கிரேக்க, எகிப்திய, இந்தியக் கலைச்சிற்பங்கள் உலகப்பிரசித்தி பெற்றன. பெரும்பாலான சிற்பங்கள் கடவுள், மதம், இனத்தலைவர்கள், மற்றும் பண்பாடு சார்ந்த கதைமாந்தர்களின் உருவங்களை உருவகிக்கின்றன. + +ஒளிப்படம், நிழற்படம் (அ) புகைப்படமானது, ஒளி எதிரொளிப்பின் மூலம் பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற (அ) அதன் மீது த���ளித்து வெளிவருகின்ற ஒளியினால் ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அதன் பிம்பத்தைப் பதிவிட்ட படத்தைக் குறிக்கும். அழகுற எடுக்கப்படும் அச்சுப்பிரதி (அ) ஒளிப்படம் பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் நிகழ்வை வரலாற்றில் பதிவிக்கின்றன.இது பொதுவாக ஒளிப்பட முறை, எண்மிய ஒளிப்பட முறை என இருவகைப்படும். இவற்றின் நிறம் மற்றும் தரத்தின் அடிப்படையிலும் ஒளிப்படங்கள் வேறுபடும். + +அரங்குகளின் மூலம் அரங்கேற்றப்படும் கலைகள் அரங்காடல் கலைகள் ஆகும். கலைகளின் சிறப்புமையைக் கொண்டு அரங்குகள் மாறுபடும். + +ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஒலிகளால் ஒருங்கிணைக்கப்படும் கூறு இசை ஆகும். ஒலி அளவு, இசைக் கருவிகளின் ஒலிப்பினம், அதிர்வுகள் போன்றவை இசையை மென்மையாக்கும் காரணிகளாகும். மேற்கத்திய, இந்திய, சீன இசைகள் தங்களின் பண்பாடடுடன் ஒன்றியமைந்தாகும். + +தாளத்துக்கும், இசைக்கும் ஒத்தசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக்காட்டும் நிகழ்கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது. + +இந்திய(பரத நாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சிபிடி, கதக்), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப்பெற்றிருக்கும். + +கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும். + +மையக்கருவான கதையுடன், நடிப்பு, ஒப்பனை, ஓவியம், திரை, மற்றும் ஒலி, ஒளி, உடன் ஒருங்கமைக்கப்பட்ட அரங்கமைப்பு, ஆகிய இயலும், இசையும் சேர்த்து ஒன்றிணைப்பால் படைக்கப்படுவது நாடகம் ஆகும். + +முத்தமிழின் மூன்றாம் தமிழான நாடகத்தமிழில், நாடகக்கலையின் இலக்கணங்கள், குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், குணநூல், கூத்தநூல், உள்ளிட்டவற்றில் இருக்கப்பெற்றதை உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். + +மொழியின் எழுத்துருக்களாலும், உர��ஞர், கவிஞரின் படைப்பாற்றலாலும், புனையப்படும் கற்பனைப்புனைவுகள், நடப்புகள், வராலாறுகள் எழுத்துக்கலைகளுள் அடங்கும். + +உரைநடை இலக்கியப் புனைவு மொழிபு (அ) கதை ஆகும். ஒரு மையக்கருவைக் கொண்டு அதனை ஒட்டிய சம்பவங்கள், நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி புனையப்படுவது கதை. திரைப்படங்களில் அதன் காட்சிப்படுத்தலுக்கேற்ப திரைக்கதைகளாக வடிவம் பெறுகின்றன. + +கதைகள் பெரும்பாலும் இயல்பான நிகழ்வை மிகைப்படுத்தி கற்பனைத்திறனை மிகுவித்து உரைப்பதாகும். கதை, சிறுகதை, தொடர்கதை, படக்கதை என அதன் தன்மை, வடிவங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படும். + +ஓசை சந்தத்துடன் கூடிய, ஒத்திசை பண்புச் சொற்களால் உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் இலக்கிய வடிவம் கவிதை ஆகும். கவிதைப்படைப்புகள் அதன் நோக்கம் கொண்டு இருந்ததைப் படைத்தல், இருப்பதைப்படைத்தல், இருக்க வேண்டியதைப் படைத்தல் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. கவிதை பண்டைய வழக்கில் பண், விருத்தம், நூற்பா என்றும் மேலும் நவீனத்துவத்தினால் புதுக்கவிதை, ஐக்கூ, எனவும், பலவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது. + +பண்டைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் மற்றும் பாட்டு நடையிலேயே இருந்தன. பிந்நாளில் அனைவரும் ஆய்ந்தறியும் வண்ணம் உரைநடையில் (அ) செம்மையான மொழி நடையில் உரைகள் கட்டமைக்கப்பட்டன. இவை எளிய மொழிநடையில் பல்வேறு தலைப்புகளைக் கொண்டும் அறிக்கைகளாக உரைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே (அ) விவாதித்து விபரிப்பதே கட்டுரை ஆகும். + +கலைகளின் அறிவியல் தாக்கம் சார்ந்த கடினமான வரையறைக்குட்பட்ட கலைகள் நுட்பக்கலைகள் ஆகும். + +தமிழில் கலை என்பதற்கு "கற்றற்கு உரியவை எல்லாம் கலை" என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். + +"உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்னும் தமிழறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. + +கலை சரியானதொரு காலக்கட்டத்தில் தோன்றியதென்று வரையறுக்கவியலா��ு. இருப்பினும் கலை சார்ந்த ஆக்கங்களைக்கொண்டு கலை இனம் காணப்படுகிறது. மேலும் கலையின் வரலாறுகள் அது தோன்றின இனம், மொழி, தேசம், பண்பாடு சார்ந்து பின்வருமாறு பகுக்கப்படுகிறது. +பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை ஒரே வகைப்பாட்டில் வகைப்படுத்துவது கடினம். +கலைவெளிப்பாடுகள் இனம், மொழி, பண்பாடு சார்ந்ததாக இருக்கும் பொழுது, + +மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம். + +இவை தவிர மெய்யியல் கலைகள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை என இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது. + + +கலை பல்வேறு நோக்கச் செயற்பாடுகளுக்காக தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டது. + +பயன்பாட்டைக் குறித்து கவனம் கொள்ளாத அறிவுசார் நுண்கலைகள் எவ்வித ஊக்கத்தையும், நோக்கத்தையும் கொள்ளாது, எல்லைகளற்ற மனித கற்பனைத்திறனின் செயற்பாடுகளைச் சார்ந்தது. இலக்கியங்கள், இசை, நடனம் முதலிய கலைகளின் செயற்பாடுகள் பெரும்பாலும் உந்துதலற்றதாகும். + + + + + + +சர்வதேச நகர்பேசி அடையாளம் + +சர்வதேச நகர்பேசி அடையாளம் ("International Mobile Equipment Identity", சுருக்கமாக IMEI) நகர்பேசிகளிற்கான தனித்துவமான ஓர் எண்ணாகும். இது பொதுவாக நகர்பேசிகளின் மின்கலத்திற்குக் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். இதனை நகர்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் காணமுடியும். + +சர்வதேச நகர்பேசி அடையாளமானது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் (GSM) உரிமையுடைய நகர்பேசிகள் மாத்திரமே பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற களவாடப்பட்ட நகர்பேசிகள் பங்குபற்றாமல் தடுப்பதற்கும் பயன்படுகின்றது. + +அநேகமான வலையமைப்புகளில் சிம் மட்டும் அன்றி எந்தச் சர்வதேச நகர்பேசி அடையாளமுள்ள நகர்பேசியிலிருந்து தொடர்பு கொள்கின்றார் என்பதையும் அறிய முடியும். + +சர்வதேச நகர்பேசி அடையாளமானது 15 இலக்க எண்ணாகும். இது எங்கே உருவாக்கப்பட்டது, மாதிரி, குறியீட்டு இலக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் மாதிரியும் உருவாக்கமும் 8 இலக்கங்களைக் கொண்டிருக்கும். இது மாதிரியமைப்புக் குறியீட்டையும் கொண்டிருக்கும். சர்வதேச நகர்பேசி அடையாளத்தின் மிகுதியானது தயாரிப்பாளரால் வழங்கப்படு��். இது ஒருபோதும் வலையமைப்பில் பரிமாறப்படாது. + +2004ஆம் ஆண்டிற்கமைய சர்வதேச நகர்பேசி அடையாளமானது AA-BBBBBB-CCCCCC-D பாணியில் அமைந்திருக்கும். +இங்கு +CCCCCC நகர்பேசியின் தொடரிலக்கம் ஆகும். + + + + +தமிழ் இலக்கணம் (நூல்) + +தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் உதவும் வண்ணம் ஆறுமுக நாவலர் அவர்களால் 1886ஆம் ஆண்டு உரைநடை வடிவில் வெளியிடப்பட்ட நூல் தமிழ் இலக்கணம் ஆகும். + + + + + +மின் வன்கடத்தி + +மின் கடத்தாப்பொருள் அல்லது மின் வன்கடத்தி (இலங்கைத் தமிழ்: காவலி) என்பது மின் ஆற்றலை கடத்தாத பொருட்களாகும். மின் ஆற்றலை நன்றாக கடத்தும் பொருள் மின்கடத்தி எனப்படுகிறது. + +மரப்பலகை, கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் (நெகிழி), பீங்கான் போன்ற பொருட்கள் மின் ஆற்றலை நன்றாக கடத்தாதவை. மின் ஆற்றலை நாம் நன்கு பாதுகாப்போடு பயன் படுத்துவதற்கு இந்த வகையான மின் கடத்தாப்பொருள்கள் மிகத் தேவையானவை. +மின் ஆற்றலை நன்றாக கடத்தும் செப்பு, அலுமினியம் போன்ற கடத்திப்பொருள்களால் செய்யப்பட கம்பி வழியே மின்னாற்றல் மின்னோட்டமாகச் செல்லும் பொழுது, நமக்கு மின் தாக்கு ஏதும் நேராமலும், அப்படி ஓடும் மின் ஆற்றல் வீணே போகும் வழிகளில் சிதறிப்போகாமலும் காப்பது மின் கம்பியைச் சுற்றி உறைபோலும் உள்ள இவ் வன்கடத்திகள் தாம். இவ்வகை வன்கடத்திகள் இல்லாவிடில் நம்மால் மின் ஆற்றலைப் பயன்படுத்துவது மிகக்கடினம். + +தொலைக்காட்சி போன்ற தொடர்பியல் கருவிகளுக்கான மின்னாற்றல் முன்னும் பின்னுமாக அலையும் மாறு மின்னோட்ட வகையைச் சேர்ந்த மின் சைகைகளால் ஆனவை. இவ்வகை மின் சைகைகள் மிகுந்த விரைவுடைய அலைவெண் கொண்டவை, எனவே இதற்கென சிறப்பான மின்வடம் உள்ளது. இவ்வகை மின்வடங்களிலும் மின்கடத்தாப்பொருள் வன்கடத்திகள் பயன்படுகின்றன. இதனையும் படத்தில் பார்க்கலாம். + + + + +மருதம் (திணை) + +மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்���ை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். + +மருத நிலத்தின் கடவுள் இந்திரன். + +"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். +இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள கூறினார்கள். + +வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர். + +தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல் + +     “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை +ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968) + +என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார். + +நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் + +     ‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23) + +என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். + +புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும், + +“களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் + +வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து + +கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் + +நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15) + +இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள்   அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது. + +கிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வெள்ளாண்மை ��ெய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு + +“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் + +           வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை) + +           கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130) + +என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு, + +          “களமர் உழவர் கடைஞர் சிலதர் + +          மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132) + +என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள் + +           “களமரே தொழுமரே மள்ளர் + +            கம்பளர் உழவரொடு + +           வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71) + +என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன. இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர். + +கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும் + + + + + +பாலை (திணை) + +பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர் +"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து +நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் +பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம் + +இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். + + + + + + +சுவாமிமலை + +சுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். +இவ்வூரின் அமைவிடம் . ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் +4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். + +திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை +அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்: +"இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ...அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே..." (வெற்பு = மலை) + +சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். + +திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999. + +அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம் + + + + +சிலி + +சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு. + +2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. + +பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை + +1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ + +1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி + +1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி + +1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி + +1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி + +1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை + +1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி + +1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி + +1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி + +1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula + +1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி + +1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி + +1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி + +1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி + +1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி + +1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி + +2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை + +2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி + +2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி + +2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி + +2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி + +2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta + +2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக + +2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி + + + + +மானசரோவர் + +மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும். மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும். + +இதன் அருகே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக ஒர��� கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது. + +மானசரோவர் ஏாி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மிக உயரத்தில் அமைந்துள்ள தூய நீர் ஏாியாகும். பொதுவாக உப்பு நீர் ஏாிகள் திபெத்திய பீடபூமிகளில் அமைந்திருக்கும். மானசரோவர் ஏாி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 88 மீட்டர் ஆகும். இதன் ஆழம் மிக அதிக அளவான 90 மீ ஆழம். இதன் அடிப்பரப்பளவு 123.6 சதுர மைல்கள். மானசரோவர் ஏாியானது, இராட்சதலம் ஏரியுடன் கங்கா கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. மானசரோவர் ஏாியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது. + +மானசரோவர் ஏாியில் உள்ள நீர் வழிந்து ராக்ஸ்டல் உப்புநீர் ஏாியில் சேருகிறது. இவ்விரு ஏாிகளும் சட்லெஜ் நதி பாயும் நிலப்பகுதியின் ஒரு பகுதியான உள்ளன. ஆனால் பாறைகள் சிதைவுற்றதால் இரு வேறு பகுதிகளாக பிாிந்து காணப்படுகிறது. + +மானசரோவர் என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகும். இது 'மானா' மற்றும் 'சரோவர்' என்ற இரு சொற்கள் சேர்ந்து மானசரோவர் என்று உருவானது. மானா என்றால் மனம் என்றும் சரோவர் என்றால் ஏாி என்றும் பொருள். இந்து மதத்தின்படி முதலில் ஏாி, படைக்கும் கடவுள் பிரம்மாவின் மனதில் தோன்றியது. பின்பு இவ்வோியானது பூமியில் தோற்றுவிக்கப்பட்டது. + +இந்து மதத்தின்படி மானசரோவர் ஏாியை தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏாியின் நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏாியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர். இவ்வோியில் நீராடினாலும், இவ்வோி நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வோியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இவ்வோி நீாில் புனித நீராடி மகிழ்கின்றனர். + +மானசரோவர் ஏாியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981- வரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் பதியத் தொடங்கின. + +இந்து மதத்தின்படி, மானசரோவர் ஏாியானது ஹம்சாவின் கோடை வாசத்தலமாக விளங்கியது. இவ்விடம் புனித இடமாகக் கருதப்படுவதால், துணைக் கண்டத்தில் மெய்யறிவு மற்றும் அழகு இவற்றின் முக்கிய அடையாளமாக ஹம்சா திகழ்கின்றது. இந்துமத இறைமை நூலின்படி, 5 புனித ஏாிகளான மானசரோவர், பிந்துசரோவர், நாராயண்சரோவர், பாம்பாசரோவர் மற்றும் பிந்துசரோவர். + +புத்தமதத்தவர்கள் மானசரோவர் ஏாியை பழமையான ஏாியான அனவதாப்தா ஏாியுடன் தொடர்பு படுத்துகின்றனர். இந்த ஏாியின் கரையில் துறவிகளின் மடங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பழமையான ஜியு மடம், இது மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மலையிலிருந்து செதுக்கப்பட்டதைப் போன்று தோற்றமளிக்கிறது. புத்தமத இலக்கியத்தில் இந்த ஏாி மிகவும் பிரபலமானது. இது பல்வேறு கதைகளுடன் தொடர்புடையது. புத்தர் பல்வேறு தருணங்களி்ல் இங்கு சென்று தங்கி தியானத்தில் ஈடுபடுவார். மானசரோவர் ஏாி திபெத்திய பாரம்பாியத்தின் அணிகலனாக திகழ்கிறது. தியானத்தைப் பற்றிய புதிய விளக்கம் இராபர்ட் தர்மன்னால் பிரபலப்படுத்தப்பட்டடது. + +ஜைன மதத்தில், மானசரோவர் ஏாி முதலாம் தீர்த்தங்கரர், ரிசபாவுடன் தொடர்புடையது. + +கடல் மட்டத்திற்கு 4941 மீ. உயரம் மற்றும் 495 சதுர கி.மீ. அளவும் அமையப்பெற்ற பொிய ஏாி இதுவாகும். அங்பா டிசோ என்ற ஏாியானது திபெத்திய பீடபூமியில் 33 டிகிாி 24 வடக்கு 90 டிகிாி 17 கிழக்கில் அமைந்துள்ளது. திபெத்திய பீடபூமியில் உள்ள பொிய சுத்தநீர் ஏாியான பூமா யும்கோ கடல் மட்டத்திலிருந்து 5000 மீ. உயரத்தில் உள்ளது. + + + + + + + +ஆனக்கொண்டா பாம்பு + +ஆனக்கொண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே காணப்ப்படுகின்றது (பெரு, கொலம்பியா, பொலிவியா, பிரேசில், வெனிசுலா). இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை. + +நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். தடிப்பு 30 செ.மீ இருக்கும். உலகிலேயே எடையில் அதிகமான இடத்தைப் பிடித்திருப்பது இப்பாம்புதான் (ஒன்று 250 கிலோ இருந்ததாக கண்டு இருக்கின்றனர்). இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றை சுற்றி வளைத்து நொறுக்கிக் கொன்று உண்ணும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை உண்ணுகின்றது, ஆனால் நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் முழுகடித்தும் கொல்லும் என்கிறார்கள். ஒரொவொருக்கால் (எப்பொழுதாவது), மாட்டிக்கொள்ளும் சிறுத்தைப் புலியையும் உண்ணும். + +ஆனக்கொண்டாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பச்சை நிறம் கொண்டது ஒன்று, மஞ்சள் நிறம் கொண்டது (மஞ்சளும் கருப்பும் கொண்டது) ஒன்று, பொலிவியாவில் 2002 ஆம் ஆண்டில் லுட்ஸ் டிர்க்ஸன் ("Lutz Dirksen") கண்டுபிடித்த பொலிவிய ஆனக்கொண்டான் ஒன்று, பிரேசிலில் வடகிழக்கே கானப்படும் கருப்பு திட்டுகள் உள்ள வகை ஒன்று. + +தமிழில் ஆனைக்கொன்றான் என்னும் பெயரின் அடிப்படையில் இப்பாம்பிற்கு இப்பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. + + + + +செயற்படு பெருக்கி + +வினை மிகைப்பி "(operational amplifier)" அல்லது செயற்படு மிகைப்பி என்பது நேரடியாகப் பிணிந்த (coupled) உயர் ஈட்ட மின்னனியல் மின்னழுத்த மிகைப்பியாகும். இதன் உள்ளீடு இருமுனைகளின் மின்னழுத்த வேறுபாட்டு உள்ளீடாகும். இதன் வெளியீடு ஒரு முனையிலேயே அமையும். இந்த உருவமைப்பில், இது தரை சார்ந்த வெளியீட்டு மின்னழுத்தத்தை, உள்ளீட்டு முனைகளில் உள்ள மின்னழுத்த வேறுபாட்டை விட நூறாயிர மடங்கு மிகுத்து தருகிறது. + +இவை முதலில் ஒப்புமைக் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டன. இதில் இவை நேரியல், நேரிலா, அலைவெண்சார் சுற்ற���ர்களில் கணித வினைகளை நிறைவேற்றின . + +வினை மிகைப்பியின் பன்முகப் பயன்பாட்டு இயல்பு, இதை ஒப்புமைச் சுற்றதர்களின் அடிப்படைக் கட்டமைப்பு உறுப்பாக்கியது. எதிர்நிலைப் பின்னூட்ட்த்தைப் பயன்படுத்தி, இதன் பான்மை, ஈட்டம், உள்ளீட்டு, வெளியீட்டு மறிப்பு, குறிகையைக் கையாளும் பட்டையகலம் ஆகியவற்றைப் புறச்சுற்றதரின் உறுப்புகளைச் சார்ந்தே கணிக்கலாம். இவை மிகைப்பியின் வெப்பநிலைக் கெழுக்களையோ தொழிலகச் செய்நுட்பங்களையோ சார்ந்தமைவதில்லை. + +நடப்பில் உள்ள வினை மிகைப்பி ஒரு குறிகையின் வீச்சைப் பல மடங்காக மிகைப்படுத்தி தரும். மேலும், வினை மிகைப்பி கூட்டல், தொகையிடல், வகையிடல் போன்ற கணிதவினைகளையும் ஏரண வினைகளையும் செய்யும். ஆகையால்தான் வினை மிகைப்பி மின்சுற்றதர் உறுப்புகளில் மிகவும் அடிப்படையான உறுப்பாகும். + +வினை மிகைப்பிகள் இன்று நுகர்வாளர் பயன்கருவிகளிலும் தொழிலக, அறிவியல் கருவிகளிலும் மிகவும் பரவலாகப் பயன்படும் மின்னனியல் சுற்றதர் உறுப்பாகும். பல செந்தரத் தொகுசுற்றதர் வினை மிகைப்பிகள் திரள்முறையாக்கத்தால் சில உரூபாய்களுக்கே விறகப்படுகின்றன; என்றாலும், சில சிறப்பு வினைகளைச் செய்யும் தரக்குறிப்பு உள்ள தொகு அல்லது கலப்புவகை வினை மிகைப்பிகள் நூறு அமெரிக்க டாலர் விலையில் விற்கின்றன. ஆனால், இவை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தேவைப்படுவனவாகும். இவை தனி உறுப்பாகவோ சிக்கலான தொகு சுற்றதர்களின் அடிப்படைக் கூறுகளாகவோ வணிகமுறையில் பொட்டணம் கட்டிப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. + +வினை மிகைப்பி ஒருவகை வேறுபாட்டு மிகைப்பி மட்டுமே ஆகும். பிறவகை வேறுபாட்டு மிகைப்பிகளில் முழு வேறுபாட்டு மிகைப்பி (இது வினை மிகைப்பியை ஒத்ததே என்றாலும் இதில் இருவேறு வெளியீடுகள் அமைகின்றன), கருவி மிகைப்பி (வழக்கமாக இது மூன்று வினை மிகைப்பிகளாஇ ஆனதாகும்), தனிப்படுத்தும் மிகைப்பி (இது கருவி மிகைப்பியை ஒத்ததே என்றாலும் இயல்பு வினை மிகைப்பி இயக்கத்தை அழிக்கும் பொது மின்னழுத்தக் குறிகைகளை ஏற்கும் பொறுதி கொண்டதாகும்), எதிர்நிலைப் பின்னூட்ட மிகைப்பி (வழக்கமாக இதுஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வினை மிகைப்பிகளாலும் தடைசார் பின்னூட்ட வலையாலும் ஆனதாகும்) ஆகியவற்றை உள்ளடக்கும். + +திரிதடையம் ஒரு மிகைப்பிய���க செயல்பட முடியும். இன்றைய அரைக்கடத்தி திரிதடையத்துக்கு இணையாக அதற்கு முன் இருந்தது வெற்றிடக்குழல் (vacume tube) ஆகும். வெற்றிடக்குழலை கண்டுபிடித்தவர் டிபாரசுட்டு (DeForest) ஆவார், அவரே பின்னூட்ட மிகைப்பியையும் கண்டுபிடித்தார் என்பர். எனினும் பின்னூட்ட மிகைப்பி ஆர்ம்சுட்டிராங்கின் கண்டுபிடிப்பு என்ற கருதலும் உண்டு. + +இன்று வினை மிகைப்பி தொகுசுற்றமைப்புச் சில்லாகவும் கிடைக்கின்றது. வினை மிகைப்பியின் சில்லுகள் 1960 களில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. இச்சில்லுகளுக்கு தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பு உண்டு. + +மிகைப்பியின் வேறுபாட்டு உள்ளீடுகளில் "V" மின்னழுத்தமுள்ள நே மி உள்ளீடும் "V" எதிர்மின்னழுத்தமுள்ள அலையாக்க உள்ளீடும் அமையும்; கருத்தியலாக வினை மிகைப்பி இந்த இருமின்னழுத்தங்களுக்கு இடையி அமையும் வேறுபாட்டு மின்னழுத்தத்தையே மிகுக்கிறது. இது "உள்ளீட்டு வேறுபாட்டு மின்னழுத்தம்" எனப்படுகிறது. வினை மிகைப்பியின் வெளிய்யீட்டு மின்னழுத்தம் "V" பின்வரும் சமன்பாட்டால் தரப்படுகிறது. + +இங்கு, "A" என்பது மிகைப்பியின் மின்னனியல் திறந்த கண்ணி ஈட்டம் ஆகும். இங்கு திறந்த கண்ணி வெளியீட்டில் இருந்து உள்ளீட்டுக்குப் பின்னூட்டம் இல்லாமையைக் குறிக்கிறது. + +"A" இன் மதிப்பு மிகவும் பேரளவாக அமைகிறது (தொகுசுற்றதர் வினை மிகைப்பிகளுக்கு இது 100,000 ஆகவோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ அமையும்); எனவே, "V", "V" ஆகிய மின்னழுத்தங்களுக்கு இடையில் உள்ள மிகவும் சிறிய மின்னழுத்த வேறுபாடு கூட மிகைப்பியின் வெளியீட்டு மின்னழுத்தத்தை மின்னழுத்த வழங்கல் மதிப்பளவுக்கு மிகுக்கிறது. வழங்கல் மின்னழுத்த்த்துக்குச் சமமான அல்லது கூடுதலான நிலைமை மிகைப்பியின் "தெவிட்டல் நிலை" அல்லது "நிறைவு நிலை" எனப்படும். "A" மதிப்பளவு தொழிலகச் செயல்முறைகளால் கட்டுபடுத்தப்பாடுவதில்லை என்பதால் திறந்த க்ண்ணி மிகைப்பியை தனித்த வேறுபாட்டு மிகைப்பியாகப் பயன்படுத்தமுடியாது. + +எதிர்நிலைப் பின்னூட்டமோ (வேறுபாட்டு வினை மிகைப்பி) நேர்நிலைப் பின்னூட்டமோ (மீளாக்க மிகைப்பி) இல்லாதபோது வினை மிகைப்பி ஒப்பிடுவானாகச் செயல்படுகிறது. நேரடியாகவோ "R" எனும் தரை தடையாலோ அலையாக்க உள்ளீட்டை தரையின் மதிப்பில்(0 V) இறுத்தும்போது, நே மி உள்ளீட்டு மீனழுத்தம் "V" நேர்மதிப்புடன் அ���ையும். வெளியீட்டு மின்னழுத்தமும் பெரும நேர்மதிப்பில் இருக்கும்; "V" மதிப்பு எதிர்மதிப்பில் இருந்தால், வெளியீட்டு மின்னழுத்தம் பெரும எதிர்மதிப்பில் இருக்கும். வெளியீட்டில் இருந்து எந்தவொரு உள்ளீட்டுக்கும் பின்னூட்டம் இல்லாததால், இது திறந்த கண்ணி சுற்ரதர் ஆகும். இது ஒப்பிடுவானாகச் செயல்படும். + +முன்கணித்த இயக்கம் வேண்டியபோது, எதிர்நிலைப் பின்னூட்டம் வெளிய்யீட்டு மின்னழுத்தத்தின் ஒரு பகுதி அலையாக்க உள்ளீட்டுக்குத் தரப்படுகிறது. "இணைந்த கண்னிப்" பின்னூட்டம் சுற்றதரின் ஈட்டத்தைப் பெரிதும் குறைக்கிறது. எதிர்ப்பின்னூட்டம் ப்யன்படும்போது, சுற்றதரின் ஒட்டுமொத்த ஈட்டம் பின்னூட்ட வலையால் தீர்மானிக்கப்படுகிறது. இது மிகைப்பியின் இயக்கப் பான்மையைச் சர்ந்த்ருப்பதில்லை. பின்னூட்டவலையின் உறுப்புகள் மிகைப்பியின் உள்ளீட்டு மறிப்போடு ஒப்பிடும்போது மிகச் சிறியனவாக அமைகின்றன.வினை மிகைப்பியின் திறந்த கண்னி துலங்கல் மதிப்பாகிய "A" சுற்றதர்ச் செயல்திறத்தை பெரிதும் தாக்குவதில்லை. + + + + + + + +பௌலிங் + +பௌலிங் ("Bowling", பந்துருட்டு) என்பது ஒருவகை விளையாட்டு ஆகும். இவ் விளையாட்டில் மட்டமான ஒடுங்கிய தளமொன்றின் ஒரு முனையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள "பின்" (pin) என அழைக்கப்படும் பொருள்களை நோக்கி மறு முனையில் இருந்து, விளையாடுபவர் இதற்கான பந்து ஒன்றை உருட்டி அப் "பின்"களை விழுத்த வேண்டும். பௌலிங் விளையாட்டுப் பலவகை வேறுபாடுகளுடன் விளையாடப்பட்டு வருகிறது. இவற்றுள், அமெரிக்காவில் விளையாடப்பட்டுவரும் பத்துப்பின் பௌலிங் (Ten-pin bowling) உலகின் பல இடங்களிலும் பரவலாக விளையாடப்படுகிறது. இதில் ஒரு வகை, 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே பண்டைய எகிப்து நாட்டில் விளையாடப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகச் சிலர் கூறுகிறார்கள். + +மிகப் பழங்காலத்திலேயே இவ்விளையாட்டின் ஒரு வகை எகிப்தில் விளையாடப்பட்டதற்கான தடயங்கள் வரலாற்றாய்வில் வெளிப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வந்தாலும், இது கி.பி. 300 ஆம் ஆண்டளவில் ஜெர்மனியிலேயே உருவானதாக வேறு சிலர் கூறுகிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு மன்னர், தன்னுடைய படைகள் இவ்விளையாட்டை விளையாடக்கூடாது என்று விதித்த தடை தொடர்பான குற��ப்பொன்று உள்ளது. இதுவே பௌலின் பற்றிக் கிடைத்துள்ள முதல் எழுத்துமூல ஆவணம் எனப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் குடியேறவாத ஆட்சி நிலவியபோது, ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் மூலமாக இது அமெரிக்காவுக்கும் பரவியது. + +அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பு (American Bowling Congress) தொடங்கப்பட்ட 1895 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி, நியூ யார்க் நகரத்தில், இவ்விளையாட்டுக்கான ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டன. + +ஆரம்ப காலங்களில், "பின்கள்" இதற்கென அமர்த்தப்பட்டவர்களால் கையால் அடுக்கப்பட்டன. 1952 ல், முதன் முதலாகத் தானியங்கிப் பின் அடுக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விளையாட்டைத் துரிதமாக விளையாட உதவியது. இதன் பின்னர் இவ்விளையாட்டு வேகமாகப் பிரபலமானது. + +பௌலிங் பல வகைகளாக உள்ளது. இவற்றை முக்கியமாக, உள்ளக விளையாட்டு, வெளிக்கள விளையாட்டு என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உள்ளக பௌலிங், மரம் அல்லது அதனைப் போன்ற வேறு செயற்கைப் பொருட்களினால் அமைக்கப்பட்ட தளங்களில் விளையாடப்படுகின்றது. இதனை "லேன்" (lane) என்பர். உள்ளக பௌலிங் விளையாட்டுக்களில் பின்வரும் வகைகள் முக்கியமானவை. + + + + + +பத்துப்பின் பௌலிங் + +பத்துப்பின் பௌலிங் (Ten-pin bowling) என்பது போட்டியிட்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். இதிலே, பந்து உருள்வதற்குரிய ஒடுங்கிய, நீளமான தளம் ஒன்றின் ஒரு முனையில் அடுக்கப்பட்டுள்ள பத்துப் "பின்"களில், முடிந்த அளவு கூடிய "பின்"களைப் பந்தை உருட்டி விழுத்துவதற்கு, விளையாடுபவர்கள் முயற்சிப்பர். விளையாடுபவர்கள், ஒவ்வொரு தடவை விளையாடும்போதும், பத்துப் பின்களையும் ஒரே உருட்டலில் விழுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். எனினும் ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையில் இரண்டு உருட்டல்களுக்கு அனுமதி உண்டு. + +இவ்விளையாட்டு, ஐக்கிய இராச்சியத்திலும், ஐக்கிய அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமானது. இவ்விளையாட்டுக்கு உதவியான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன், இவ்விளையாட்டுக்கான மக்கள் ஆதரவும் பெருகி வந்தது. இதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளிலும், வேறெந்த விளையாட்டையும் விட பங்குபெறல் வீதம் (participation rate) கூடுதலாக உள்ள விளையாட்டு இதுவேயாகும். இவ்விரு நாடுகளிலும், பௌலிங் விளையாட்டுக்கான தேசிய கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. இவை இவ்விளையாட்டுக்குரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றன. + +பத்துப்பின் பௌலிங்கின் ஒரு விளையாட்டு, பத்துச் சுற்றுக்களைக் கொண்டது. இந்த ஒவ்வொரு சுற்றும், சட்டகம் (frame) என அழைக்கப்படுகின்றது. அடுக்கப்பட்டுள்ள பத்துப் பின்களையும் அடித்து வீழ்த்துவதற்கு ஒவ்வொரு சட்டகத்திலும் இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஒரே உருட்டலில் பத்துப் பின்களையும் வீழ்த்தினால், அது "அடி" (strike) எனப்படும். அவ்வாறன்றிச் சில பின்களோ அல்லது முழுவதுமோ எஞ்சியிருப்பின் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அவற்றை முழுமையாக வீழ்த்த முயலலாம். அவ்வாறு இரண்டாவது சந்தர்ப்பத்தில் முழுவதும் வீழ்த்தப்பட்டால், அது "ஸ்பெயர்" (spare) எனப்படும். இவ்வாறு எல்லாப் பின்களையும் வீழ்த்தினால், ஊக்கப் புள்ளிகள் (bonuses) வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாடும்போது, ஒவ்வொரு சட்டகத்தையும் ஒருவர் பின் ஒருவராக விளையாடுவர். பத்தாவது சட்டகத்தில் விளையாடுபவர் புள்ளி பெறும் விதத்தைப் பொறுத்து மேலதிகமான ஒரு சந்தர்ப்பத்துடன் மூன்று உருட்டல்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். +தற்காலத்தில் பெரும்பாலும், ஒவ்வொரு உருட்டலின் முன்னும், பின்கள் தன்னியக்கமாகவே பொறிகள் மூலம் அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு சட்டகமும் தொடங்கும்போது பத்துப் பின்களும் முழுமையாக அடுக்கப்பட்டிருக்கும். அடுக்கும் முறையும், அவற்றை எண்களினால் குறிக்கும் முறையும் அருகிலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன. + + + + +பின் (பௌலிங்) + +பௌலிங் விளையாட்டில் பின் ("Bowling pin") என்பது, பௌலிங் பந்தினால் அடித்து வீழ்த்தப்படுவதற்கு உரிய குறியாக அமையும் பொருளாகும். பல்வேறு வகையான பௌலிங் விளையாட்டுகளில், பல்வேறு அளவுகளிலும், எண்ணிக்கைகளிலும் பின்கள் பயன்படுத்தப்படுகின்றன. + +பத்துப்பின் பௌலிங் விளையாட்டில் பயன்படுகின்ற பின்களுக்குரிய அளவுகள் அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பினால் ("American Bowling Congress") தரப்படுத்தப் பட்டுள்ளன. கூடிய அகலம் கொண்ட பகுதியில் பின்கள் 4.75 அங்குலங்கள் அகலம் கொண்டவையாகவும், 15 அங்குலங்கள் உயரமானவையாகவும் உள்ளன. நிறை 3 இறாத்தல், 6 அவுன்ஸ் ஆகும். + + + + +அறிவியல் கணிமை + +உலக, நுட்ப அமைப்புக்களின் "(systems)" இயல்புகளைக் கணித மாதிரியாக விபரித்து கணினி மூலம் பாவனை "(simulation)" செய்து பகுப்பாயும் துறையே அறிவியல் கணிமை "(scientific computing)" அல்லது கணினிசார் அறிவியல் எனலாம். இது, கணித மாதிரிகளின் உருவாக்கம், கணியப் பகுப்பாய்வு நுட்பங்கள், கணினிகளைப் பயன்படுத்தி அறிவியல் பிரச்சினைகளைப் பகுத்தாய்ந்து தீர்வு காணுதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. பல்வேறு அறிவியல் துறைகள் சார்ந்த பிரச்சினைகளில் கணினிப் பாவனையாக்கத்துடன் எண்சார் பகுப்பாய்வு, கோட்பாட்டுக் கணினி அறிவியல் போன்றவை சார்ந்த கணித்தல் முறைகளின் பயன்பாடே இதன் நடைமுறைப் பயன் ஆகும். + +மரபார்ந்த அறிவியல், பொறியியல் என்பவற்றோடு தொடர்புடைய கோட்பாடு, ஆய்வுகூடச் சோதனை ஆகியவற்றில் இருந்து இத்துறையின் அணுகுமுறை வேறுபட்டது. கணினிகளில் செயற்படுத்தப்படும் கணித மாதிரிகளின் மூலம் விளக்கம் பெறுவதே அறிவியல் கணிமையின் அணுகுமுறையாகும். + + + + + +அனைத்துலக விண்வெளி நிலையம் + +அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம். இதனை ஆங்கிலத்திலே International Space Station (ISS) என்பர். இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் (முதலெழுத்துச் சுருக்கமாக தமிழில் "அ.வி.நி."), நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது. நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையிலுமே சுமார் 37,500 தடவைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது. + +இந்த அவநியை உருவாக்கியது ஒரு பெரும் பொறியியல் வெற்றி. இந்நிலையத்தை 2011ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டிமுடிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர் இருப்பர். நவம்பர் 2, 2000ல் இருந்து யாரேனும் 2 பேர் இருந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டும���னப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும். இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்றால், அமெரிக்காவின் நாசா (NASA), உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்,சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகும். இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன. + +இந்த அவநியில் பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள். + +அமெரிக்க நாட்டின் நாசா அமைப்புக்கும் ரோசவியகாசுமோசு அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அனைத்துலக விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வகமாகவும், விண்ணியல் நோக்ககமாகவும் மற்றும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது. மேலும் இது நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு அணுகு தலமாகவும், அவற்றை பேணுமிடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. 2010ஆம் ஆண்டின் அமெரிக்க விண் கொள்கையில் இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை பொருளாதார, அரசியல் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. + +பூமியில் மனிதர்களால் அடைய முடியாத ஈர்ப்பு விசையில்லா நிலையை அ.வி.நி. அமைத்துத் தருகிறது. அத்தகைய நிலையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளுக்கு இது பெருந்துணையாக உள்ளது. அ.வி.நி. இல்லையெனில் இந்த ஆய்வுகளை ஆளில்லா விண்கலங்கள் மூலமே செய்திருக்க முடியும். அதற்கு செலவு அதிகமாவதுடன் மனிதர்களால் அருகில் இருந்து கண்காணிக்க இயலாது. ஒவ்வொரு ஆய்வுக்கும் வெவ்வேறு வானூர்திகளையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பும் முறையை இது மாற்றியுள்ளது. அறிஞர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தே ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவைப்படும் மாற்றங்களையும் இங்கிருந்தே செய்வதற்கு அ.வி.நி. வாய்ப்பளிக்கிறது. இங்கு செய்யப்படும் ஆய்வுகள் பொதுவாக விண்-உயிரியல், வானியல், வான்-மருந்தியல் மற்றும் உயிர்-அறிவியலை சார்ந்தே இருக்கின்றன. +இந்த சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் பங்கு கொள்ளப் போவதில்லையெனெ ரஷ்யா அறிவித்துள்ளது. + + + + + +யாப்பிலக்கணம் + +யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். "யாத்தல்" என்னும் சொல் "கட்டுதல்" என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே "செய்யுள் யாத்தல்" என்கிறார்கள். எனவே, இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். + +யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. + +மேலும் உறுப்பியலுக்குப் புறனடையாக உள்ளவை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. + +சங்க நூல்களிலும் இச்சொல் "கட்டுதல் என்ற அடிப்படைப்" பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார். + +பாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும். + +தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரப் பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன. + +நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது, செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு மட்டுமே. இவ்விரண்டும் + +செய்யுள் இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும். + + + + + + +சப்பானிய மொழி + +ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது "நிஹோங்கோ" என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர். + +இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் ("pitch accent") கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன. + +இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன. + +இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள��� உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. + + + + + +உருகுவை + +உருகுவை அல்லது உருகுவே ("Uruguay") தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா ("Rio de la Plata") என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. மக்கட்டொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு சுரினாம்). உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது. + +உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான "குரானி" என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' ("river of the painted birds") என்று பொருள். + +16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' ("Buenos Aires") வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன. + +பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. "Provincia Cisplatina" என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. + +பழங்குடி இனமான 'சருவா' காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்("Salsipuedes") என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்ப��்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் - செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர். + +பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது. + +இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். + + + + + +சுடோக்கு + +சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு +எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டு. இது சப்பான் நாட்டில் 1986 ஆம் வருடத்தில் தொடங்கியது. என்றாலும் 2005 ஆம் ஆண்டளவில்தான் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும், பின்னர் அனைத்துலக நாட்டினரிடத்திலும் வெகுவாகப் பரவியது. தற்போது உலகெங்கும் மிகவும் விரும்பி விளையாடும் ஓர் எண் விளையாட்டாக உள்ளது. + +சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில் "எண்-இடம்" என்று பொருள். மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக ஒரு பெரிய சதுரத்துள் அமைக்க வேண்டும். இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு "சட்டகம்" எனப்படும். இந்த சட்டகத்திலே ஒவ்வொரு (கிடை) வரிசையிலும், அதே போல நிரலிலும், 9 சிறு கட்டங்கள் இருக்கும் (இவை 3 வெவ்வேறு அறைகளைச்சேர்ந்த கட்டங்கள்). இப்படியாக ஒன்றன் கீழ் ஒன்றாக 9 வரிசைகள் இருக்கும் இந்த சட்டகத்திலே, படுக்கை வாட்டில், கிடையாக கட்டங்கள் அமைக்கப்பட்ட வரிசையைக் "கிடை" என்றும், மேலிருந்து கீழாக ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுள்ள கட்டங்களை "நெடை" என்றும் அழைக்கலாம். இந்தப் புதிர்க் கணக்கு வகையான சுடோக்குவில் ஒவ்வொரு சிறு கட்டத்திலும் 1 முதல் 9 வரையுள்ள ஒன்பது எண்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும் (வந்த எண் மீண்டும் வரலாகாது). இந்தப் புதிர்க் கணக்கான சுடோக்கு விளையாட்டு தொடங்கும் முன், சில கட்டங்களில் மட்டும் ஏற்கனவே சில எண்கள் கொடுத்திருப்பார்கள். இவை "கொடுக்கப்பட்ட எண்கள்" எனப்படும். இவை சுருக்கமாகக் "கொடை" (Givens) என்றழைக்கப்படும். மீதம் உள்ள சிறு கட்டங்களில் கீழ்க்கண்ட விதிகளின் படி எண்களைப் பதிக்க வேண்டும், அதுதான் இவ்விளையாட்டு + + +இவ்விளையாட்டு முதலில் எளிதாகத் தோன்றினாலும், சில வகையான கொடைகளுக்கு +("கொடுக்கப் பட்ட எண்கள்") தீர்வு கடினமாக இருக்கும். எண்களை ஒவ்வொரு சிறு கட்டங்களிலே +இடும் முன், முறைப்படி ஓரொழுக்கமாக, ஏரண (லாஜிக்) முறைப்படி எண்ண வேண்டும் +அப்பொழுதுதான் இவ்விளைட்டில் வெற்றி பெற முடியும். + +சரியான விதிமுறைப்படி அமைந்த சரியான தீர்வுகள் கொண்ட சட்டகங்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று அண்டம் முழுவதிலும் பரந்து உள்ளதாக கருதப்படும் மொத்த விண்மீண்களின் எண்ணிக்கையைவிட கூடுதலானது. மொத்தம் 6,670.903,752,021,072,936,960 தீர்வுகள் உள்ளன என்று கணித்துள்ளனர். ஈடாகச் சொல்லமுடியாத தனிவேறான தீர்வுகள் என்று கருதினாலும் கூட 5,472,730,538 தீர்வுகள் உள்ளன எனக் கூறுகின்றனர். + +இவ்விளையாட்டு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு புதிர்கள் இதழில் 1979ல் வெளியிடப்பட்டது (டெலாக்கோர்ட் என்பவரால் 1921ல் நிறுவப்பட்ட "டெல் மாகசீன்"ல் 1979ல்). ஆனால் சப்பானில் 1986 முதல் வெகுவாகப் பரவி, 2005 ஆண்டு வாக்கில் தொடங்கி அமெரிக்காவில் மிகப் பரவலாக விளையாடப்படுகிறது. + +சுடோக்கு என்னும் சொல் சப்பானிய மொழியில் உள்ள ஒரு தொடரின் +சுருக்கமாகும். சப்பானிய சொற்றொடர் - "சூ வா டொக்குஷின் நி ககீரு" ( "Suuji wa dokushin ni kagiru" (数字は独身に限る) என்பதன் பொருள் - "எண்கள் ஓரிலக்க எண்களாய் இருத்தல் வேண்டும்". +19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உள்ள செய்தித்தாள்களில் எண் புதிர்க்கணக்குகளைப் பதிப்பித்து வந்தனர். அக்காலத்தில் பிரான்சியப் புதிர்க் கணக்கமைப்பாளர்கள், மாயக் கட்டம் என்பதில் சில எண்களை நீக்கி அமைத்தனர். பாரிசைச் சேர்ந்த "Le Siècle" என்னும் நாளிதழ் அரைகுறையாக நிரப்பப்பட்ட 9×9 மாயக் கட்டத்தையும் அவற்றுள் 3×3 உட்கட்டங்களையும் அமைத்து, நவம்பர் 19, 1892 இல் ஒன்றை வெளியிட்டது. இது தற்கால சுடோக்கு புதிர்க்கணக்கு அல்ல, ஏனெனில் இதில் ஈரிலக்க எண்கள் இருந்தன, இதன் அமைப்பு கூட்டல் போன்ற எண்கணக்கு அமைப்பைக் கொண்டிருந்தது, சுடோக்கு போல ஏரணம் (logic) அடிப்படையில் ஒற���றை எண் கொண்டதும் அல்ல. ஆனால் கிடை வரிசை, நிரல் வரிசை எண்களின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும் என்பதில் சுடோக்கை ஒத்து இருந்தது (சுடோக்கில் கூட்டல் முக்கியம் இல்லை என்றாலும், 1 முதல் 9 எண்கள் மட்டும் ஒரு முறை மட்டுமே வருமாறு இருக்க வேண்டும், இதனால் இதன் கூட்டல் தொகையும் ஒன்றே). + +சூலை 6, 1895 இல், "Le Siècle's" நாளிதழின் போட்டி நாளிதழாகிய, "La France" என்னும் இதழ், இதனை மேம்படுத்தி ஏறத்தாழ தற்கால சுடோக்கு போலவே வெளியிட்டது. இதில் 9×9 மேச்சிக் கட்டத்தில் ஒவ்வொரு வரிசையும், ஒவ்வொரு நிரலும் (நெடுக்கு வரிசையும்), கோணல் வரிசையும் 1-9 எண்கள் மட்டுமே கொண்டிருந்தன, ஆனால் உள் கட்டங்கள் அடையாளப் படுத்தப்படவில்லை. அடையாளப் படுத்தப்படாவிடினும், ஒவ்வொரு 3×3 உள் கட்டமும், 1-9 எண்களே கொண்டிருந்தன. கோண வரிசயையும் சேர்த்த விதியால் ஒரே ஒரு தீர்வே இருந்தது. + +கிழமைதோறும் (வாரந்தோறும்) வரும் இந்தப் புதிர்க்கணக்குகள், "L'Echo de Paris" போன்ற பிரான்சிய மொழி செய்தித்தாள்களில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் வந்தன, ஆனால் இரண்டாம் உலகப்போர் வந்தபொழுது நின்றுவிட்டன + +வில் சோர்ட்ஃசு (Will Shortz) என்பாரின் கருத்தின்படி, தற்கால சுடோக்குவைப் பெரும்பாலும் +74 அகவை நிறைந்த, இந்தியானாவைச் சேர்ந்த, தன்னார்வல, புதிர்க்கணக்கு அமைப்பாளர் ஓவார்டு கார்ன்சு (Howard Garns) என்பார் தானொரு பெயரிலியாய் அமைத்திருப்பார். 1979 இல் வெளியான டெல் மாகசீனில் (Dell Magazine) "Number Place" என்னும் பெயரில் இது வெளியானது. இதுவே மிக முன்னதாக அறியப்படும் தற்கால சுடோக்கு. இவருடைய விளையாட்டு உலகம் முழுவதும் பரவுவதைப் பார்க்கும் முன்னரே இவர் 1989 இல் இறந்துவிட்டார். புதிர்க்கணக்கு அமைப்பாளர் கார்ன்சுக்கு மேலே குறிப்பிட்ட பிரான்சிய செய்தித்தாள்கள் பற்றி ஏதும் தெரிந்திருந்ததா என்று உறுதியாகத் தெரியவில்லை. + +சுடோக்குப் புதிர்க்கணக்கு சப்பானில் நிக்கோலியால் மாத நிக்கோலி ("monthly Nikolist) என்னும் தாளில் ஏப்பிரல் 1984 இல் அறிமுகப்படுத்தப் பட்டது. இது , என அழைக்கப்பட்டது. இத்தொடரை, "ஒற்றை இலக்க எண்களாக இருக்க வேண்டும்" என்று மொழி பெயர்க்கின்றார்கள். (சப்பானிய மொழியில் ,"dokushin" டொக்குசின் என்றால் "திருமணம் ஆகாதவர்") . பின்னர் இது சுடோக்கு "Sudoku(數獨)" எனச் சுருக்கப்பட்டது. 1986 இல், நிக்கோலி இரண்டு புதுமைகளைப் புகுத்தினார்: (1) "கொடை" (கொடுக்கப்பட்ட எண்கள்) 32 உக்கு மிகாமல் இருக்க வேண்டும், (2) கொடைகள் சுழற்சி ஒப்புமை உடையதாக இருக்கும். சுடோக்கு சப்பானில் அசாஃகி சிம்பூன் (Asahi Shimbu) போன்ற முன்னணி இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது. + +தற்போது பல சுடோக்கு போட்டிகளும் நடைபெறுகின்றன. சுடோக்கு பற்றிய செய்திகள் இணைந்த காட்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. + +தற்போது இந்த சுடோக்கு விளையாட்டை புத்தகம், கணினி, கைத்தொலைபேசி, வலைத்தளம் என பல வடிவங்களிலும் விளையாட முடிகின்றது. + +சுடோக்கு தற்போது ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது மாணவர்களின் காரண காரியங்களை விளக்கும் திறமை, மனத்தை ஒருமைப்படுத்தல் என்பவற்றில் முன்னேற்றத்தைத் தரும் ஒரு புதிர் விளையாட்டு எனக் கருதப்படுகின்றது. இதனை பாடசாலை வகுப்பறைகளில், வீடுகளில் மாணவர்களுக்கு ஒரு மூளைப் பயிற்சியாக அறிமுகப்படுத்துகிறார்கள். இதனை செய்வதற்கு கணித அறிவு தேவை இல்லை (அதாவது அடிப்படை கூட்டல், கழித்தல் முதலான திறன்களும் வேண்டியதில்லை). எண்களை இனங்காணத் தெரிந்தாலே போதுமானதாகும். குழந்தைகளுக்கு ஒரு சுடோக்கு புதிரை விடுவித்ததும், மனதில் பெரிய நிறைவு ஏற்படுகின்றது. தவிரவும் இது குழந்தைகளைப் பொறுத்த அளவில் மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் ஒரு வேடிக்கை விளையாட்டாகவும் இருக்கின்றது. சுடோக்கு புதிர்கள் பல இணையத்தளங்களிலும் பெறக்கூடியதாக இருப்பதுடன் புத்தக வடிவங்களிலும் கிடைக்கின்றன. + +கணினி கணக்கியலில் ஏரியாடின் தேடு முறை (Ariadne's thread) என்ற முறையில் சுடோக்கு புதிர் கணக்குக் கட்டத்திற்கு தீர்வு காணலாம் அல்லது தீர்வை சரி பார்க்கலாம். ஆனால் இக்கணிணி கணக்கியல் முறை திறன் குன்றியது, சுற்றி வளைத்துத் தீர்வு காண்பது. எனவே இவ்வகை சுடோக்குகளின் தீர்வைக் காண மனிதர்கள் கையளும் முறைகளைப் போலவே உள்ள கணிணி-கணக்கியல் தீரொழுக்க முறைகள் (algorithm) பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். + +9x9 என அமைந்த சுடோக்குவே பொதுவானதாக இருப்பினும், அதிலிருந்து வேறுபட்ட பல அமைப்புக்கள் தற்போது உள்ளன. + +ஒரு அறையில் மூன்றுக்கு மூன்றாக (3x3) சிறு கட்டங்கள் அமையாமல், நான்குக்கு நான்காக (4x4) ஓரறைக்கு 16 சிறு கட்டங்காளகவும், டியோன் சர்ச்சு என்பார் 2005ல் ஆக்கிய முப்பரிமாண (முத்திரட்சி) சுடோக்குகளும், வை-ஃஉவா-ஃகுவாங்கு ��ன்பார் ஆக்கிய 5×5 அறைகொண்ட சற்று வேறான விதிகள் உடைய ஆட்டமும் இவ்விளையாட்டில் ஏற்பட்டுள்ளன. மேலும் கட்டங்கள் 7x7 என அமைந்த சுடோக்குகளும் உள்ளன. + +தவிர சிறு சுடோக்கு என அறியப்படும், சிறு கட்டங்கள் (2x2) ஆக இருக்கும் வண்ணம் 4x4 என அமைந்த சுடோக்குகளும், சிறு கட்டங்கள் (2x3) ஆக இருக்கும் வண்ணம் 6x6 என அமைந்த சுடோக்குகளும் கூட உள்ளன. + +இவற்றை விடப் பெரிய சுடோக்கு எனப்படும் அதிக எண்ணிக்கையிலான கட்டங்களை உடைய சுடோக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறு கட்டங்கள் (4x3) ஆக இருக்கும் வண்ணம் 12x12 என அமைந்த சுடோக்கு, 16x16 கட்டங்களுடைய சுடோக்கு, 25x25 கட்டங்கள் கொண்ட சுடோக்கு என்பவற்றுடன் "Sudoku-zilla" எனப்படும் 100x100 கட்டங்களுடைய சுடோக்கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. + +சிலசமயம் சிறுகட்டங்கள் சதுரமாக அமையாமல், ஜிக்சோ (Jigsaw) வடிவில் அமைந்திருப்பதுமுண்டு. இவை நொமினோ அல்லது ஜிக்சோ சுடோக்கு எனப்படும். + +இவை தவிர குறுக்கெண் கூட்டல் என்றழைக்கப்படும் கணக்குப் புதிருடன் இணைத்து, குறுக்குக் கூட்டல் சுடோக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டங்களில் வரும் எண்களைக் கூட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வரவேண்டும் என்ற விதி இருக்கும். குறிப்பிட்ட கட்டங்கள் நிறங்களால் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு வரவேண்டிய கூட்டெண்கள் ஒரு கட்டத்தின் ஒரு மூலையில் கொடுக்கப்பட்டிருக்கும். + +சிலசமயம் எண்களுக்குப் பதில் குறிப்பிட்ட சில எழுத்துக்களைக் கொண்டு இந்த சுடோக்கு அமைக்கப்படும். அந்த எழுத்துக்கள் குறுக்காக ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கும். இது எழுத்து சுடோக்கு எனப்படும். + +படங்களைக் கொண்டு அமைக்கப்படும் சுடோக்கு பட சுடோக்கு எனப்படும். இதில் எண்களுக்குப் பதிலாக குறிப்பிட்ட சில படங்கள் பயன்படுத்தப்படும். + +மிகைசுடோக்கு (hypersudoku) என்னும் புதிரானது சுடோக்கு போலவே இருப்பினும், ஏற்கனவே உள்ள சிறு கட்டங்களுடன், மேலதிகமாக வரையறுக்கப்படும் 9 உள்ளாக உள்ள கட்டங்களிலும், அதே 1-9 வரையான எண்கள் ஒவ்வொன்றும் ஒருமுறை மட்டுமே வரவேண்டும் என்ற விதி இருக்கும். இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட சிறு கட்டங்களில் ஒன்றின் ஒரு பகுதியானது, இன்னொன்றின் ஒரு பகுதியின் மேல் படிந்திருக்க நேரிடும். + +இவை தவிர மேலும் சிக்கலான, முப்பரிமாணச் சுடோக்கு, ரூபி கன��துரச் சுடோக்கு போன்றனவும் உள்ளன. + + Garns, H. "Number Place." "Dell Pencil Puzzles & Word Games". No. 16, May p. 6, 1979. + + + + +ஆப்பிரிக்க ஒன்றியம் + +ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும். + +ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். + + + +2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது. + +ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்து���்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன. + +2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை "ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம்" எனப் பிரகடனப்படுத்தியது. + +
+
+
+
+
+
+
+
+ + + + + +
+ +ரோகண விஜயவீர + +பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர ("Patabendi Don Nandasiri Wijeweera", , ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) ஒரு மார்க்சியப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின் புரட்சியாளரான சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை (1971 புரட்சி, 1987-1989 புரட்சி) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது. இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். + +இலங்கையின் தென் மாகாணத்தில் கோட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமத்தில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தோழராக இருந்தவர். + +பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர்கல்வி பெற மொஸ்கோ சென்றார். அங்கு மருத்துவத்துடன் மார்க்சியக் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் 1964 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். + + + + +இலங்கை சுதந்திரக் கட்சி + +இலங்கை சுதந்திரக் கட்சி ("Sri Lanka Freedom Party"; ) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது. + +ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். + +இ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்ற என்னம் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு பதில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.கவுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டது. 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி யென்ற பெயர் இடப்பட்டது. + + + + +அரசன் + +அரசன் () என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும்.ராஜா, மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் "ராஜ்" என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் தேவநேயப் பாவணர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து. + + + + + +கசப்பு + +கசப்பு () மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பப்படாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்தச் சுவை பொதுவாக வெறுக்கப்படுவதால், "கசப்பு" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. + + + + +ஈயோரா பழங்குடி + +ஈயோரா அல்லது லோரா அல்லது லியோரா என்பது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களில் ஒரு குடியின் பெயர். தாங்கள் பழங்குடிகள் என்பதை அவர்கள் தங்கள் மொழியில் கூரி என்று அழைப்பர். இம்மக்கள் இன்று சிட்னி மாநகரில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து ஜனவரி 1788 இல் சுமார் 1300 குற்றவாளிகளும் அவர்களுடைய காப்பாளர்களும் கப்பலில் வந்து இறங்கிய பொழுது, இந்த ஈயோரா மக்களில் 1500 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் வந்திறங்கியோர்கள் கொண்டு வந்த வைசூரி அல்லது பெரியம்மை போன்ற நோயாலும், பிற காரணங்களினாலும், சுமார் 19ஆம் நூற்றாண்டுக்குள் இவ்வினம் முற்றிலுமாக அற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. ஈயோரா இன மக்களின் மொழியில் இருந்து இன்று ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்கும் சொற்களில் சில: டிங்கோ நாய் (dingo), வூமெரா ஈட்டி ("woomera"), வாலபி ("wallaby"), வாம்பட்டு என்னும் பேரெலிவகை ("wombat"), வரட்டாச் செடி ("waratah"), பழுப்பு நிற மோபோக்கு ஆந்தை boobook (owl), கங்காருவிற்கும் வாலபியிற்கும் இடைப்பட்ட அளவுடைய வால்லரு என்னும் விலங்கு (wallaroo) ஆகியன. + +"பென்னெலாங்கு" என்னும் பெயருடைய ஈயோரா இனத்தில் இருந்த ஒருவரர் ஆங்கிலேயர்களுக்கும் ஈயோரா இன மக்களுக்கும் இடையே தொடர்பாளராக இருந்துள்ளார். இவருடைய படம் இணைக்கப்பட்டுள்ளது. இவர் மே 24, 1793 இல் இங்கிலாந்து அரசர் 3ஆம் ஜோர்ஜை ("King George III") சந்தித்து இருக்கிறார். + + + + +டிங்கோ நாய் + +ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டு நாய் டிங்கோ என்னும் நாய். இந்தச் சொல் ஈயோரா மக்கள் மொழியில் இருந்து பெறப்பட்டது. இந்நாயின் அறிவியல் பெயர் "கேனிஸ் லூபஸ் டிங்கோ" ("Canis lupus dingo") என்பதாகும். + +இந்த டிங்கோ நாய்கள் பார்ப்பதற்கு பெரும்பாலும் தமிழ் நாட்டுக் கோம்பை நாய்கள் போல தோற்றம் அளித்தாலும் இவை நாய்க்கும், ஓநாய்க்கும் இடைப்பட்ட ஓர் உருவம் கொண்டவை. பெரும்பாலும் பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருப்பன. இதன் எடை 10 முதல் 24 கிகி இருக்கும்; உயரம் ஏறத்தாழ 44 செ.மீ முதல் 63 செ.மீ வரை இருக்கும்; உடல் நீளம் 86 முதல் 122 செ.மீ இருக்கும். பெரும்பாலும், இவை குரைப்பதில்லை (குலைப்பதில்லை). மரத்திலும் ஏறவல்லவை. ஆண்டிற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்கின்றன. + + + + +வால்லரு + +வால்லரு ("Wallaroo") என்னும் ஆஸ்திரேலிய விலங்கு பார்ப்பதற்கு கங்காரு போன்றே இருக்கும், ஆனால் இது அதனினும் சற்று சிறியது. கங்காரு இனத்தில் உள்ள 65 வகைகளில் இது ஒரு வகை விலங்கு. கங்காருவைப் போலவே இதுவும் பைப்பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்குகளுக்கும் பின்னங்கால்களைக் காட்டிலும் முன்னிரு கால்கள் குட்டையாக இருக்கும். இவ்வால்லருக்களில் நான்கு உள் வகைகள் உள்ளன. + + + + + + +நூனவுட் + +நூனவுட் (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது. + +நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது. + + + + +சுமோ மற்போர் + +சுமோ மற்போர் (相撲 "Sumō") என்பது இருவர் ஒருவரோடு ஒருவர், முறைப்படி விதிகளுடன் +மோதிப் பொருது எதிராளியைக் கீழே தள்ளி மண்ணைத்தொடசெய்து வெற்றி நாட்டும் +ஒரு போட்டாபோட்டி ஆகும். இப்போட்டி சப்பான் நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. இதில் பங்கு கொள்வோர்கள் எதிராளி தங்களை எளிதில் பிடித்துத் தள்ளிவிட இயலாதவாறு இருக்க மிகவும் பருமனாக இருப்பர். திறமை இல்லாமல் பருமனாய் மட்டும் இருந்தால் போதாது. தமிழில் மல் என்றால் திறண்ட, பருமனான என்னும் பொருள் உண்டு என்பது இங்கு நினைக்கத் தக்கது. இப்போரில் பங்குகொள்வோரை சுமோ மல்லர்கள் என்று தமிழில் அழைக்கிறோம். சப்பானியர் தங்கள் மொழியில் ��ுமோ மல்லர்களை "ரிக்கிசி" என்றழைக்கின்றனர். இப்போரில் தோறவர்களை செத்த பிணம் என்னும் பொருள் படும் சினி-தை (shini-tai) என்பர். இவ்விளையாட்டுப் போர் தொடங்கும் முன் சப்பானியர் பல சடங்குகளைச் செய்வர். அவற்றுள் சில அவர்களுடைய பழைய மதம் (சமயம்) ஆகிய சிண்டோ மதத் தொடர்பு உடையவை. +சுமோ மற்போர் ஒரு வட்ட வடிவ களத்தினுள் புரிவார்கள். இந்தக் களத்தை களிமண்ணாலும் மணலாலும் பரப்பி தரை மட்டத்தில் இருந்து சுமார் 34-60 செ.மீ உயர்த்தில் அமைப்பர். இந்த வட்ட களத்தின் விட்டம் 4.55 மீ. இந்த வட்டக் களத்திற்கு சப்பானிய மொழியில் தோஃயோ ((土俵)) என்று பெயர். களத்தின் சுற்றுவட்டத்தை ஒட்டி வைக்கோலால் ஆன திட்டுக்கள் இருக்கும். இவைகளுக்கு சப்பனிய மொழியில் தவார ("tawara" (俵)) என்று பெயர். வட்டத்தின் நடுவே இரு வெள்ளைக் கோடுகள் இருக்கும். அக்கோடுக்களுக்குப் பின்னே தான் சுமோ மல்லர்கள் முதலில் நிற்க வேண்டும். இந்த இரு நடுக்கோடுகளுக்குப் பெயர் "சிக்கிரி-சென்." ("shikiri-sen" (仕切り線)) + +இப்போடியில் வெற்றி பெற + + +இப்போட்டியை நடத்தவும், வென்றவரை அறிவிப்பவரும் ஆகிய நடுவர் ஒருவர் இருப்பர். +இப்போட்டிகள் சில நேரங்களில் சில நொடிகளிலேயே முடிந்துவிடும். + + + + +நிலைமொழியீற்றசை + +நிலைமொழியீற்றசை என்பது செய்யுள் வடிப்பதற்கான யாப்பிலக்கண நெறிகளில் தளையின் அடிப்படை உறுப்புக்களில் ஒன்றாகும். தளை என்பது அடுத்தடுத்து வரும் சீர்களினிடையேயான தொடர்பை நெறிப்படுத்தும். இவ்வாறு வரும் சீர்களில் ஒரு சீரின் இறுதி அசையும் அடுத்து வரும் சீரின் முதலசையும் தளை நெறிக்குட்பட வேண்டும். முன்னர் நிற்கும் சீரை நிலைமொழி எனவும் பின்னர் வரும் சீரை வருமொழி எனவும் குறிப்பிடுவர். நிலைமொழியின் இறுதி அசையே நிலைமொழியீற்றசை எனப்படுகின்றது. இவ்வசைக்கும் வருமொழியின் முதலசைக்கும் இடையேயான ஒலிப்பியல் தொடர்பே தளை ஆகும். + + + + +தாமரை + +தாமரை ("lotus"), ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் "நெலும்போ நூசிபேரா" ("Nelumbo nucifera") என்பதாகும். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் இடம் பிடித்துள்ளது. + +தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம். ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார். + +தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும். வெண்தாமரை ஆயுர்வேதத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். + + + + +மௌடம் + +மௌடம் (Mau tam) என்பது "மூங்கிற் சாவு" எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும். + +இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. + +"மௌ டம்" நிகழ்வின்போது "மெலொகன்னா பாக்கிஃபெரா" ("Melocanna baccifera") என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக பிளேக் நோய் பரவ வாய்ப்புண்டாகிறது. + +சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அந்நேரங்களில் சில விதைகளே உருவாவதால் அவற்றில் பெரும்பாலானவை பெருச்சாளிகளுக்குத் தீனியாகிவிடுகின்றன. இதனால் அவற்றின் மரபுவழித்தோன்றல் முற்றுப் பெறுகிறது. நெடுங்காலம் இவ்வாறு நடைபெறுவதால் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின்படி மூங்கில்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கத் துவங்குகின்றன. இம்முறையிலான உய்வு முறையை ("survival strategy") கோண்மா தெவிட்டும் மலிவு ("predator satiation") என்று அழைப்பர். இதே உத்தியை குறிஞ்சி செடிகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை பூப்பதின் மூலம் பயன்படுத்துகின்றன. சில நேரங்களில், இவ்வுத்தியைக் கையாளும் உயிரினங்களுக்கு எதிரான கொன்றுண்ணிகளின் இனப்பெருக்க சுழற்சியும் இரையின் இனப்பெருக்க சுழற்சியின் ஒரு பகுப்பாக அமையக் கூடும். இவ்வாறான கொன்றுண்ணிகளிடமிருந்து மீளும்விதமாக சில உயிரினங்கள் 11, 13 போன்ற பகா எண் ("prime number") ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன! + +மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன. மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள் உண்கின்றன. இவ்விளைச்சலை எதிர்நோக்கியே மூங்கில் பூப்பின்போது பெருச்சாளிகள் இனப்பெருக்கத்திற்கான கூடுதல் உந்துதல் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மூங்கில் விதைகளை மட்டுமல்லாமல் இவை பிற பயிர்களையும் அழிக்கத் துவங்குகின்றன. இதன் விளைவாக பஞ்சம் ஏற்படுகிறது. + +இவ்வகையிலான மூங்கில் மிகுபூப்பு தரையில் விதைகளைப் பரப்பி மற்ற செடிகளை வளர விடாமல் செய்யும் உய்வுமுறையின் ஒரு பகுதி என்று ஒரு தரப்பும் மிகுதியான காய்ந்த மூங்கில்கள் நெருப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்துவதால் பிற தாவரங்களின் போட்டி குறைகின்றது என மற்றொரு தரப்பும் கருதுகின்றனர். + +ஆங்கிலேயர் ஆட்சியின் பதிவுகளின்படி தற்போதைய மிசோரம் மாநிலம் உள்ள பகுதிகளில் இதேபோல் மூங்கில் மிகுபூப்பை அடுத்து பெரும் பஞ்சம் ஏற்பட்டதெனத் தெரிகிறது. இதே போல் 1958-ல் "மௌ டம்" நிகழ்வின்போது இதனால் பஞ்சம் ஏற்பட்டது என வயதுமுதிர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது இப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தின்கீழ் இருந்தது. மக்களின் முன்னெச்சரிக்கையை மதிக்காத அரசை எதிர்த்து "மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி" என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, பின்னர், மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணியிலிருந்த லால்தெங்கா மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த சோரம்தெங்கா தற்போது அம்மாநில முதலமைச்சராக உள்ளார். இந்த அளவிற்கு மிசோரம் மக்கள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இந்நிகழ்வை எதிர்நோக்கி 2006-2007 ஆண்டில் இந்திய இராணுவம் எல���களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முனைந்தது. + +சோரம்தெங்கா அரசு 2007-இன் "மௌ டம்" நிகழ்வை எதிர்நோக்கி இரு ஆண்டுகளாகத் தயார்நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தின் துணையை நாட வேண்டியிருந்தது. இராணுவமும் மாநில நிர்வாகமும் இணைந்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளை மக்களுக்குத் தெரிவித்து வந்தன. எலிகளைக் கொன்று அவற்றின் வாலைக் கொண்டு வருபவர்களுக்கு இரண்டு ரூபாய் பணமும் 2007-ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள், இஞ்சி போன்ற செடிகளைப் பயிரிடுமாறு மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இவற்றைப் பயிரிடுவதால் மக்களின் வாங்கு திறன் பாதிக்கப்படுவது குறையும் என்றும், வாசனைப் பயிர்களின் விளைவாக கொறிணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பப்படுகிறது. + +இதேபோன்ற ஒருமித்த மூங்கில் பூப்பை ஒட்டிய எலிகளின் அளவுக்கதிகமான இனப்பெருக்கம் அண்டை மாநிலங்களான அருணாசல பிரதேசம், மணிப்பூர், மற்றும் நாகாலாந்து, ஆகிய இடங்களிலும், லாவோஸ், மடகாஸ்கர், ஜப்பான் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் ஏற்படுகின்றது. + +இதே போன்று 1980களில் சீனாவில் "பசானியா பாங்கியானா" ("Bashania fangiana") என்ற மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால் அங்குள்ள பாண்டா ("Giant Panda") விலங்குகள் பாதிக்கப்பட்டன. + + + + + +தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி + +தியாகராஜர் பல்தொழில்நுட்பக்கூடம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் நகரில் அமைந்துள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும். இது 1958-ஆம் ஆண்டு கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று டிப்ளோமா கற்கைநெறிகளைக் கொண்டிருந்தது. + + + + + +2006 உலகக்கோப்பை காற்பந்து + +2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 "பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து" போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது. + +ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்ட���ற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன. + +மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன. +இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. + +உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது, + + + + + + +யாப்பருங்கலம் + +தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் யாப்பருங்கலம் என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் அமுதசாகரம். + +இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது. + + + + +ஆல் + +ஆல் அல்லது ஆலமரம் ("Ficus benghalensis") விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. + +மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. + + +இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது. + +சென்னை அடையாற்றில் 450 வயதை கடந்த பழமையான ஆலமரம் பாதுகாக்கபட்டு வருகின்றது. + + + + + +அல்லி + +அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும். + +அல்லி வையையில் மிதந்து வந்தது. பரிபாடல் 12-78 + + + + +கனடா பழமைவாதக் கட்சி + +கனடா பழமைவாதக் கட்சி (Conservative Party of Canada) கனடாவின் ஒரு இடதுசாரி கட்சி ஆகும். இக்கட்சியை கனடா மரபுகாப்புக் கட்சி என்றும் தமிழில் குறிப்பிடுவர். இதன் பெரும்பான்மை ஆதரவு மேற்கு கனடாவில் இருக்கின்றது. + + + + + +வோல்ட்டா + +அலெசான்றோ வோல்ட்டா அல்லது அலிசாண்ட்ரோ வோல்ட்டா(Alessandro Volta: 1745-1827)இத்தாலிய இயற்பியலாளர். மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். 1800 களில் முதல் மின்கலத்தை உருவாக்கியவர். மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18, 1745ல் பிறந்தார். மின் ஆற்றல் மற்றும் மின் விசையைப்பற்றி ஆய்வு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இவ்வார்வத்தின் காரணமாகவே இவர் இலத்தீன் மொழியில் தம் மின் கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். இன்று அன்றாடம் பேச்சு வழக்கில் கூறப்படும் 110 வோல்ட்டு மின் அழுத்தம், 230 வோல்ட்டு மின் அழுத்தம், என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும், நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி("Voltmeter") என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும். + +இவர் 1774ல் அரச கல்விக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். 1775ல் மின் ஏற்பை உருவாக்கும் எலெக்டெரோஃவோரசு ("electrophorus") என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776-77களில் வளிமங்களின் (வாயுக்களின்) வேதியல் பண்புகளை ஆய்ந்துகொண்டு இருந்தபோது, மெத்தேன் என்னும் ஒரு வளிமத்தைக் கண்டுபிடித்தார். இது எரியக்கூடிய வளிமம். இவ்வளிமம் கரிமமும் நான்கு ஐதிரசன் அணுக்களும் சேர்ந்த கூட்டணுக்களாலான ஓர் அடிப்படையான ஒரு வளிமம். + +1800ல் இவருக்கும் லூயிகி கால்வானி என்னும் இன்னுமொரு பெரிய மின் அறிஞருக்கும் இடையே அறிவியல் சார்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. கால்வானி அவர்களின் கருத்துக்கு மாறாக, இவர் மின்கல அடுக்கு ஒன்றை செய்து காட்டினார். இதன் வழி தொடர்ந்து மின்னோட்டம் இருப்பதைக் காட்டினார். + + + + +கனடா புதிய ஜனநாயகக் கட்சி + +கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு பொதுவாக 20% ஆதரவு இருக்கின்றது. எனினும் கொள்கைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கள் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். + + + + + +கனடா லிபரல் கட்சி + +கனடா லிபிரல் கட்சி (Liberal Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய கட்சி ஆகும். இது திறந்த பொருளாதாரக் கொள்கையையும் அதேவேளை சமூக நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு கட்சி ஆகும். 13 ஆண்டுகளாக கனடாவை ஆட்சிசெய்த கட்சி, 2006ஆம் ஆண்டு நடந்த கனடா மத்திய அரச தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறி ஆட்சியிழந்தது. + + + + + +சுழல் மின்னோட்டம் + +சுழல் மின்னோட்டம் (swirls or eddies) அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். இதனை 1855ல் ஃபோகால்ட் என்பவர் கண்டறிந்தார். இது ஃபோகால்ட் மின்னோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. + +மாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ��ரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை "சுழல் மின்னோட்டம்" என அழைப்பர். சுழல் மின்னோட்டத்தின் திசையை லென்ஸ் விதியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். + +உலோகத்தட்டின் முழு இயக்கச் சக்தியும், தட்டு காந்தப்புலத்தினூடு நகரும் போது தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தினால் மின்சக்தியாக மாற்றப்பட்டு தட்டின் வேகத்தைக் குறைக்கிறது. பின்னர் இது வெப்பச்சக்தியாக வெளியேற்றப்படுகிறது. அதாவது சுழல் மின்னோட்ட விளைவினால், வெப்பம் உருவாவதன் மூலம் சக்தி அல்லது ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. + +சுழல் மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது. ஆனால், உலோகக் கடத்தியை மெல்லிய நன்கு காப்பிடப்பட்ட தகடுகளாகச் செய்து பயன்படுத்தும் போது, சுழல் மின்னோட்ட விளைவைக் குறைக்க முடியும். காப்பிடப்பட்ட மென் தகடுகளிடையே மின்தடை அதிகம் இருப்பதால், சுழல் மின்னோட்டங்கள் வெகுவாகக் குறைக்கப்படும். இவ்வாறாக, ஆற்றல் இழப்பு வீதம் குறைக்கப்படுகிறது. இதனாலேயே மின்னாக்கி, மின்மாற்றி போன்றவற்றின் உள்ளகம் காப்பிடப்பட்ட மென்தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளன. + +ஒரு கல்வனோமானியில் சீரான மின்னோட்டத்தைச் செலுத்தும் போது, மீட்டரின் கம்பிச்சுருள் சிறிது கோண அளவு விலகி இறுதி சம நிலையை அடையும். ஆனால், வழக்கத்தில் கம்பிச்சுருள் உடனே இறுதிச் சமநிலைக்கு வராமல், சிறிது நேரம் அலைவுகளின் பின்னரே அது சமநிலைக்குச் செல்லும். அதை உடனே சமநிலைக்குக் கொண்டுவர கம்பிச்சுருள் சுற்றப்படும் உள்ளகம் பித்தளை அல்லது தாமிர உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். காந்தப்புலத்தில் கம்பிச்சுருளும் உள்ளகமும் சுழலும் போது உள்ளகத்தில் சுழல் மின்னோட்டங்கள் உருவாகிறது. இந்த சுழல் மின்னோட்டமானது மின்கடத்தும் உலோகத்தட்டின் இயக்கத்தை எதிர்க்கும் விசையை உருவாக்குகிறது. (பார்க்க: லென்சின் விதி). காந்தப் புலத்தில் அலைவுறும் தட்டிற்கு இது ஒரு வேகத்தடை போல செயல்படுகிறது. இவ்வாறாக தட்டு சம நிலைக்கு விரைவில் வந்துவிடுகிறது (damping). + +ஒரு உலோகத் திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல் மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும். வெப்பப்படுத்தவேண்டிய பொருள் அதிக அதிர்வெண் கொண்ட, மாறும் இயல்புள்ள காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது, அப்பொருளில் சுழல் மின்னோட்டங்கள் உண்டாகின்றன. இந்த உயர் வெப்பத்தில் உலோகங்கள் உருகிவிடும். ஒரு உலோகத்தை அதன் கனிமத்திலிருந்து பிரிக்கவும், உலோகக் கலவைகளைத் தயாரிப்பதற்கும் தூண்டல் உலையை (Induction Furnace) பயன்படுத்துகிறார்கள். + +வேகம் காட்டும் கருவியில் (Speedometer) காந்தம் ஒன்று உந்து வண்டியின் வேகத்தைப் பொறுத்துச் சுழல்கிறது. இக்காந்தம் ஒரு அலுமீனியப் பெட்டியில் வைக்கப்பட்டு, பாதுகாப்போடு ஒரு கத்தி முனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு மெல்லிழைக் கம்பிச சுருள் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. காந்தம் தன்னைத் தானே சுற்றி வரும் போது, உள்ளகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படுகிறது. உந்து வண்டியின் வேகத்துக்கு ஏறப, சுழல் மின்னோட்டம் அவ்வுள்ளகத்தில் பாய்ந்து, அதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தடுத்து நிறுத்தி வேகத்தைக் காட்டுகிறது. +சுழல் மின்னோட்டம் மின்சார இரயில்களை நிறுத்துவதற்குப் பயன்படுகிறது. சுழலும் உலோகத்தட்டு ஒன்றின் மீது காந்தப் புலத்தைச் செலுத்தும் போது சுழல் மின்னோட்டங்கள் அத்தட்டில் ஏற்பட்டு, தட்டின் மீது ஒரு திருப்பு விசையை ஏற்படுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தி விடும். + + + + + +புறணி விளைவு + +ஒரு மின் கடத்தியில், நேர்மின்னோட்டம் நடக்கும் பொழுது, அக்கடத்தியின் உள்ளே, அதன் குறுக்கு வெட்டுப் பரப்பில், எல்லா இடங்களிலும், ஒரே சீராக ஒரே அளவு மின்னோட்டம் தான் இருக்கும். ஆனால், மின்னோட்டம் மாறு மின்னோட்டமாக இருந்தால், மிக அதிக அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் நிகழும் பொழுது, மின்னோட்டம் பெரும்பாலும் அந்த மின் கடத்தியின் மேற்புறத்திலேயே நிகழும்; கடத்தியின் அச்சு போன்ற உட்பகுதியில், அதிக மின்னோட்டம் இராது. இப்படி ஒரு கடத்தியின் (அச்சு போன்ற) உட்பகுதியிலே +மின்னோட்டம் நிகழாது, புறப்பகுதியில் அதிகமாக மின்னொட்டம் நிகழ்வதை புறணி விளைவு (skin effect) என அழைக்கிறார்கள். + + + + +பூர்ஜ் அல் அராப் + +பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது. + +இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. + + + + + + +பாரசீக வளைகுடா + +பாரசீக வளைகுடா அல்ல‌து அரேபிய வளைகுடா, தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு வளைகுடா ஆகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் (பாரசீகம்) அராபியத் தீவக்குறைக்கும் இடையே அமைந்துள்ளது. + +பாரசீக வளைகுடாவின் இயற்கைச் சூழல், மிகவும் வளம் பொருந்தியது. சிறந்த மீன்பிடிப் பகுதிகள், விரிந்து பரந்த பவளப் பாறைகள், பெருமளவு முத்துச்சிப்பிகள் என்பவற்றைக் கொண்டு விளங்கும் இது, அளவுக்கதிகமான தொழில்மயமாக்கம் மற்றும் அண்மைக்காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த போர்களினால் ஏற்பட்ட எண்ணைக் கசிவுகளினாலும் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. + +ஈரான் – ஈராக் போர், பாரசீக வளைகுடாப் போர் போன்ற போர்க் காலங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இக்குடாக்கடல் இருந்தது. + +ஏறத்தாழ 233,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஓமான் வளைகுடாவுடன் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில், டைகிரிஸ், இயூபிரட்டீஸ் ஆகிய ஆறுகளின் கழிமுகம் உள்ளது. முக்கியமாக ஈரானையும், சவூதி அரேபியாவையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா ஆழம் குறைந்தது. ஆதி கூடிய அளவாக 50 மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது. + + + + +மத்திய கிழக்கு நாடுகள் + +மத்திய கிழக்குப்பகுதி, வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு. + +மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அராபியர், ஆர்மீனியர், அசிரியர், அசெரிகள், பேர்பெர்கள், கிரேக்கர், யூதர், மரோனைட்டுகள், பாரசீகர், துருக்கியர் முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர். + + + + +பாம் தீவுகள் + +தற்போது, துபாய், அமீரகத்தின் கடற்கரையை அண்டி, கடலுக்குள், பேரீச்ச மரங்களின் வடிவில் அமைக்கப்பட்டு வரும் மூன்று பெரிய தீவுகள் பாம் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை அல் நக்கீல் புரொப்பர்ட்டீஸ் (Al Nakheel Properties) என்னும் நிறுவனத்தினர் அமைத்து வருகிறார்கள். இத் தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு பேரீச்ச மர வடிவத்தையும் அதன் தலைப் பகுதியைச் சூழ ஒரு பிறை வடிவத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. துபாய் கடற்கரையின் அகலமான கண்டத் திட்டும், ஆழம் குறைவான பாரசீக வளைகுடாவும் இத் தீவுகள் கட்டப்படுவதைச் சாத்தியமாக்கி உள்ளன. + +பாம் தீவுகள் மூன்றும், அவை அமைந்துள்ள இடங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. + + + + + + + +கண்டத் திட்டு + +கண்டங்களின் கரையோரங்களை அண்டி அமைந்துள்ள திட்டான பகுதி கண்டத் திட்டு எனப்படுகின்றது. இது ஆழம் குறைந்த கடற்பரப்பினால் மூடியிருக்கும். கண்டத்திட்டு முடியும் இடத்தில் பெரும்பாலும் சடுதியான சரிவு காணப்படும். இது திட்டுமுடிவு ("shelf break") ஆகும். திட்டு முடிவுக்குக் கீழ்க் கண்டச் சரிவு ("continental slope") என அழைக்கப்படும் பகுதியும் அதற்கும் கீழே கண்ட எழுச்சியும் ("continental rise") காணப்படும். இக் கண்ட எழுச்சி இறுதியில் கடல் மிக ஆழமான கடலடித்தளத்துடன் ("abyssal plain") சேரும். + +கண்டத் திட்டுப் பொதுவாக உட்கண்டத் திட்டு, இடைக்கண்டத் திட்டு, வெளிக்கண்டத் திட்டு என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவது உண்டு. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய நில உருவாக்கவியல் மற்றும் கடல்சார் உயிரியல் தன்மைகளைக் கொண்டுள்ளன. கண்டத்திட்டின் இயல்பு திட்டுமுடிவில் சடுதியாக மாறுகின்றது. இங்கே கண்டச் சரிவு தொடங்குகின்றது. சில இடங்களைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் கண்ட முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவு சீரான ஆழத்தில் காணப்படுகின்றன. இது அண்ணளவாக 140 மீட்டர் ஆக உள்ளது. கடல் மட்டம் தற்போது உள்ளதிலும் குறைவாக இருந்த பனிக்கட்டிக் காலத்துக்கு உரிய அடையாளமாக இது இருக்கக்கூடும். + +கண்டச் சரிவு, கண்டத் திட்டிலும் கூடிய சரிவுடன் அமைந்துள்ளது. சராசரியாக 3 பாகையாக இருக்கும் இச் சரிவு, குறைந்த அளவாக 1 பாகையும், கூடிய அளவாக 10 பாகையும் இருக்கக்கூடும். இச் சரிவுகளில் ஆழ்கடல் குடைவுகள் (submarine canyons) காணப்படுவது உண்டு. இவை தோன்றிய விதம் நீண்டகாலம் புரியாத புதிராகவே இருந்து வந்தது. + +கண்டச் சரிவுக்கு அப்பால், கண்ட எழுச்சி தொடங்குகிறது. இதன் சரிவின் அளவு, கண்டத்திட்டுச் சரிவின் அளவுக்கும், கண்டச்சரிவுச் சரிவின் அளவுக்கும் இடையில் 0.5 முதல் 1 பாகை வரையில் இருக்கும். கண்டச் சரிவில் இருந்து 500 கிமீ வரை பரந்து இருக்கும் இதில், கண்டத்திட்டு, கண்டச் சரிவு ஆகியவற்றிலிருந்து கலக்கல் நீரோட்டம் (turbidity currents) காரணமாக எடுத்துவரப்பட்டுப் படிந்துள்ள தடிப்பான படிவுகள் காணப்படுகின்றன. + +கண்டமேடைகள் ஆழம் குறைந்த கடல் படுக்கைகளாகக் காணப்படுவதால் மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கனிப்பொருள் படிவுகளை அ���ழ்தல் என்பவற்றிலும் முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது. + + + + +கழுகு + +கழுகு ("eagle") என்பது அக்சிபிட்ரிடே ("accipitridae") என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். + +யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன. + +கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும். + +கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும். + +இப்பறவைகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன. + +கீழேதரப்பட்டுள்ளவை உடல் திணிவு, உடலின் நீளம் மற்றும் இறக்கையி��் குறுக்களவின் சராசரியின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் கழுகுகள் ஆகும். + +இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய்க் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் ("birds of prey") என்று சொல்வதுண்டு. + +இவை உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டுகின்றன. ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும் குஞ்சானது பொதுவாகப் பெண்ணாக இருக்கும். ஏனெனில் பெண் குஞ்சு ஆண் குஞ்சிலும் பார்க்கப் பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. + +உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது. சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் சில நாடுகளில் கழுகுகளைத் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். 1940 க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது. காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதை தடுக்க முடியாதுள்ளது. + +இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையைத் தேடுகின்றன. இவற்றின் கண் மிகவும் க��ர்மையானது. இதனால், தனது இரையைத் தொலைவிலிருந்தே கண்டுகொள்ளும். மேலிருந்து இரையைக் கண்டால் மிகவும் வேகமாகக் கீழிறங்கி இரையைத் தூக்கிச்சென்று உண்ணும். + +இவற்றின் கண் பார்வை மிகவும் கூர்மையானது. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் "ஏறு" என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப் பெறும் ["பருந்தின் ஏறுகுறித் தொரீஇ (புறநானூறு 43, 5)"]. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் "பருந்தின் கவர்ச்சி" என்றும் பெயர். + + + + + +பொன்னாங் கழுகு + +பொன்னாங் கழுகு ("Golden Eagle") என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு. + +இப்பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் அருகி இருந்தன. இவை ஒரு காலத்தில் ஐரோப்பாவிலும், வட ஆசியப் பகுதிகளிலும் வட ஆப்பிரிக்க, சப்பான் நாடுகளிலும் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலேயே கூடு கட்டி வழ்ந்து வருகின்றன. இப்பறவைகளை கசக்ஸ்தான் போன்ற நாடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கழுகுகளைப் பழக்குவதற்கு, கழுகுப்பயிற்சி என்று பெயர். + +சனவரி, மே ஆகிய மாதங்களுக்கு நடுவே, பெட்டைக் கழுகுகள் பெரும்பாலும் 2 முட்டைகள் இடுகின்றன. சுமார் 45 நாட்கள் கழித்து, முட்டையில் இருந்து கழுகுக்குஞ்சுகள் பிறக்கின்றன. பிறந்தவுடன் அவை வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்னர் சுமார் 50 நாட்களுக்கு தீனி ஊட்டிய பின் மெள்ள பறக்கத் துவங்குகின்றன. + +பொன்னாங் கழுகுகள் குறு முயல்கள், எலி, மான் குட்டிகள் (மான் மறி), சிறு நரிகள், ஆட்டுக் குட்டிகள் பேன்றவற்றைக் கொன்று தின்னும். இப்படி ஆட்டுக் குட்டிகளை தின்னுவதால், ஆடு வளர்ப்பவர்களுக்கு இப்பறவை எதிரியாய்த் தென்படுகிறது. + + + + + +வெண்தலைக் கழுகு + +வெண்தலைக் கழுகு ("Haliaeetus leucocephalus"), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினங்களில் ஒன்று (மற்றையது பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். + +இக்கழுகை "அமெரிக்கக் கழுகு" என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் கனடாவிலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருந்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த அலாஸ்காவில் வாழ்கின்றன. + +இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. கொன்றுண்ணிப் பறவைகளான இவை மீன், சிறு பறவைகள், எலி முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை. + +இது மற்ற வட அமெரிக்க பறவைகளை விடவும் மிகப் பெரிய கூடு கட்டுகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மர கூடுகள், குறிப்பாக பறவைகள் கட்டும் மர கூடுகளிலேயே மிகப்பெரிய கூடு இவ்வினப் பறவைகள் கட்டியது தான். இக்கூடுகள் 4 மீ (13 அடி) ஆழமான, 2.5 மீ (8.2 அடி) அகலம் வரை, மற்றும் 1 மெட்ரிக் டன் (எடை 1.1 டன்கள்) எடையுள்ளது. + +வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இக்கழுகுகள் ஆங்கிலத்தில் "பால்ட் ஈகிள் அல்லது பால்ட் கழுகு" என அழைக்கபடுகிறது. தற்போதய ஆங்கிலத்தில் "பால்ட்" என்றால் வழுக்கை என அர்த்தம். ஆனால் இக் கழுகுகளுக்கு உண்மையில் வழுக்கை இல்லை. அதனால் இவற்றின் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்" எனும் வார்த்தைக்கு வெண்ணிற தலை என்ற அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்த்இல் உள்ளதால் இப்பெயரை இக்கழுகுகள் பெற்றன. + +பல்வேறு அமெரிக்க இனக் கலாச்சாரங்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமானது. இது அமெரிக்காவின் தேசிய பறவையாகும். முத்திரைகள், சின்னங்கள், நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய அர��ாங்கத்துடன் தொடர்புடைய பிற பொருட்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இக் கழுகு அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது. + +அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது. + +கனடாவின் பெரும்பகுதி, அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் வடக்கு மெக்ஸிகோ உட்பட வட அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வெண்தலைக் கழுகு வாழ்கிறது. வெண்தலைக் கழுகுகள் கடல்கள், ஆறுகள், பெரிய ஏரிகள், சமுத்திரங்கள் மற்றும் பிற பெரிய தண்ணீர் நிறைந்த இடங்கள் மற்றும் மீன் நிறைய உள்ள இடங்களின் அருகில் வாழ்கின்றன. + +வெண்தலைக் கழுகுகளுக்கு வாழ, தூங்க, கூடுகள் கட்ட என பழைய மற்றும் கடுமையான மரங்களை நாடும். வெண்தலைக் கழுகுகள் துளைகள் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக உள்ள இடங்களை அதிகம் விரும்பும். + + + + +பொருள் இலக்கணம் + +வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்றுஎடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். + +பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும். + +ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணை தலைவன் என்றும் பெண்ணை தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன், தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்க���ம் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மையைக் கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் உரையாடுவது போன்ற பாடல்களும் கலித்தொகையில் உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பிற்காலத்தில் திணை, துறை வகுத்துக் காட்டியுள்ளனர். + + +இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை, + +பொழுது: +கார்காலம் :ஆவணி புரட்டாசி +கூதிர் காலம் :ஐப்பசி கார்த்திகை + +ஆகியன ஆகும். + +புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள்அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே. + +பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான். + +பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான். +பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்தநாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான். +படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித்திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான். +பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித்திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச்செல்வான். +பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத்திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான். +பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத்திணை எனப்படும்.தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான். + +இந்தத் திணைகளுடன் வாகைத்திணை, பாடாண்திணை, பொதுவியல்திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன. இவற்றையும் சேர்த்து, பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து, பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர். + +போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்துபாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள். + +இதுவரை சொன்ன புறத்திணைகள் போர்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண்திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவைஇடம்பெறும். + +போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும். + +தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத்திணை எனப்படும். இதை ஒருதலைக் காதல் என்று கூறுவர். + +தன்னை விட வயதில் மிகவும் இளைய பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும்.இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர். + +கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர். + + + + + +குறில் + +உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என வழங்கப்படுகின்றன. + + + + + +நெடில் + +உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன. + + + + + +நிலத்தோற்றம் + +ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் நிலத்தோற்றம் எனப்படுகின்றது. இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இவற்றுடன் ஒளி, காலநிலை முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான கட்டிடச் சூழல் போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன. + +இச்சிறப்புகளுட் பெரும்பாலானவை தம்முள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. நில அமைப்பு, அமைவிடம் போன்றன காலநிலையில் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் எத்தகைய உயிரினங்கள் வாழமுடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஒரேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் கூடிய நிலத்தோற்றம் அமைகின்றன. கடல் சார்ந்த நிலப்பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றிலும் வேறுபட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒரே இடத்திலும்கூட காலத்துக்குக் காலம் நிலத்தோற்றம் மாறுபடுவதையும் காணமுடியும். மாரி காலத்தில், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதும், நீர்நிலைகள் நிரம்பி வழிவதும், தாவரங்கள் பச்சைப்பசேலெனக் காட்சி தருவதும், கோடை காலத்தின் போது மாறிவிடும். + +பரந்த பகுதிகளில் இயற்கையின் செல்வாக்குக்கு எதிராக நிலத்தோற்ரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மனிதனால் முடியக்கூடிய விடயம் அல்லவெனினும், பரந்து விரிந்த நகரங்கள், பெரும் நீர்த்தேக்கத் திட்டங்கள், போன்றவை நேரடியாகவும்,சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமாகவும் இயற்கை நிலத்தோற்றத்தில் பெருமளவில் மாறுபாடுகள் ஏற்படவே செய்கின்றது. + +சிறிய அளவில் கட்டிடங்களைச் ���ூழவும், நகரங்களில் பொது இடங்களிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிலத்தோற்றங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். இதற்கான துறையை நிலத்தோற்றக் கலை எனப்படுகின்றது. + + + + +இன்னிசை வெண்பா + +இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. எனவே வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன. + +இரண்டாவது அடியில் "தனிச்சொல்" அமைவதும், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகளுடன் அமைவதும் நேரிசை வெண்பாவுக்கான இலக்கணம். எனவே இன்னிசை வெண்பாவில் இவ்விலக்கணங்கள் அமைந்திரா. + + +மேலேயுள்ள பாடலில் இரண்டாம் அடியில் " சீரேயும்" என்னும் தனிச்சொல் வருகிறது. எனினும், முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாகிறது. இரண்டாம் அடியில் தனிச்சொல் இருந்தபோதும், இரண்டுக்கு மேற்பட்ட விகற்பங்கள் அமைவதால் இது இன்னிசை வெண்பா ஆகிறது. + +கீழே காணும் பாடலில் நான்கு வரிகளிலும் ஒரேவகை எதுகைத் தொடை அமைந்து ஒரு விகற்பம் கொண்டதாக இருப்பினும், இரண்டாம் அடியில் தனிச்சொல் எதுவும் இல்லாததால் இதுவும் ஒரு இன்னிசை வெண்பாவாகிறது. + + + + +பஃறொடை வெண்பா + +நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படும் என்பதும் சிலரது கருத்து. + +நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்னும் வேறுபாடுகள் இருப்பதுபோல், பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள். + +கீழேயுள்ளது ஆசாரக்கோவை என்னும் நூலில் வருகின்ற ஒரு பஃறொடை வெண்பாவாகும். இது ஐந்து அடிகளால் அமைந்துள்ளது. + + + + + +புரூக்ளின் பாலம் + +புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். + +இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர். + + + + +தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்) + +தமிழில் பிழைகள் தவிர்ப்போம் எளிய நடையில் தமிழ் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூல். குறிப்பாக எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழில் எழும் பல ஐயப்பாடுகளுக்குத் தகுந்த திருத்தங்களும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. + +வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ள உதாரணங்கள் இந்நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. + + + + +நாய் + +நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர். + +நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது. +நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள். + +அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல "ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல்" என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.) +நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன. + +நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது. + +உயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த "நான்கு கால்கள்" கொண்டவை ("quadruped") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய "canis" என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை "Canis vulpes" என்றும், ஓநாய் என்பதை "Canis lupus" என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை "Canis canis" என்று குறிப்பிட்டிருந்தார். + +பின் வந்த ��திப்புகளில் இலின்னேயசு இந்த "Canis canis" என்பதை நீக்கிவிட்டார், ஆனால் "நான்குகால்கள்" ("quadruped") விலங்குகளின் குழுவில் "Canis" என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத "aegyptius" (தோல்நாய்கள்), "aquaticus" எனப்படும் "நீர்மீட்பு நாய்கள்", "mustelinus" எனப்படும் "குட்டைக்கால் நாய்கள்" அல்லது "பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் "Canis domesticus" என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், "Canis familiaris", நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர். + +வீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, "Canis lupus familiaris" (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு ("Canis familiaris") என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது + +இந்திய நாய்கள் மிக முக்கியதுவம் வாய்ந்தவை(ராஜபாளையம்/கன்னி/கோம்பை/அலங்கு) + +ஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் . மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும் . நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள் . + +தொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது . கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும். நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும். பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது. கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது. + +இந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு. + +நாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. + +இலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது. + + + + + + +நாய்க் குடும்பம் + +நாய்க் குடும்பம் ("Canidae") என்பது நாய், நரி குள்ள நரி, ஓநாய், அமெரிக்க கோயோட்டி போன்ற இன விலங்குகளையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் தொகை சொல். இதனை ஆங்கிலத்தில் Canidae என்று அழைக்கிறார்கள். "Canine" என்றால் நாய் என்று பொருள், நாயின் இனம் எனபதை "Canidae" என்று குறிக்கிறார்கள். + +நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் முகம் நீளமாக இருக்கும். நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும். இவை நன்றாக ஓட வல்லவை. இவ்வினத்தைச் சேர்ந்த விலங்குகளின் மோப்பத்திறனும் அதிகம். + + + + +அமெரிக்கக் குள்ளநரி + +அமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது "நாய்" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது. + +பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. +கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை. + + + + + +வல்லூறு + +வல்லூறு ("Falcon") என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ. + + + + + +கரும்பருந்து + +கரும்பருந்து ("black kite", "Milvus migrans") அல்லது கள்ளப் பருந்து என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன��றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும். ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன் விற்குமிடங்கள் பேன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். இறைச்சித் துண்டுகளை திருடிக்கொண்டு அலையும். தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளைத் திருடிச் செல்லும். + + + + +கொன்றுண்ணிப் பறவை + +கொன்றுண்ணிப் பறவை அல்லது ஊனுண்ணிப் பறவை ("birds of prey" அல்லது "raptors") என்பது எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு, ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. + +பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முழுதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் பூச்சி புழுக்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும். பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய அலகுகளையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன. பல கொன்றுண்ணிப் பறவைகள், இரையைப் பிடிப்பதற்கும் கொல்வதற்கும் இயலக்கூடிய வகையில், வலுவானதும், வளைந்ததுமான கூரிய நகங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.. + +பகல்நேரக் கொன்றுண்ணிப் பறவைகள் பல்கனிபோர்மசு வரிசையின் கீழ் ஐந்து குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவற்றுட் பல பொதுவான கூர்ப்பு வழியைச் சாராமல் இருப்பதால் இவ்வகைப்பாடு சர்ச்சைக்கு உரியதாக உள்��து. + +இரவுநேரக் கொன்றுண்ணிப் பறவைகள் இசுட்ரிகிபோர்மசு வரிசையின் கீழ் இரண்டு குடும்பங்களாக வகுக்கப்பட்டுள்ளன. + + + + + +ஒட்டகம் + +ஒட்டகம் () என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. + +ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன. + +ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது . மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆசுமாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை) +ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உ��லமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது. + +ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன் சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 °செல்சியசிலிருந்து 41.7 °செ வரை (93°F-107°F.) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கமுடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியசு என்று வெப்பநிலை உள்ள போது, வெப்பம் கடத்தாத தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது. ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது. சிறுதொலைவு ஓட்டம் ஒன்றை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி முடிக்கக் கூடியது. ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றன.குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. +அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. +குட்டி போட்டு பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.பாலைவன���்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளுதல் சிறப்பம்சமாகும். + +ஒற்றைத் திமில் ஒட்டகம்,  முதல் 2,500 கி.மு. 3,000 கி.மு., மத்திய ஆசியாவில் இரட்டைத்திமில் ஒட்டகம் சுற்றி, சோமாலியா மற்றும் தெற்கு அரேபியா மனிதர்கள் வீட்டு கூடும். + +சுமார் கி.மு 1200ல் முதல் ஒட்டக சேணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அன்று முதல் இரட்டை திமில் ஒட்டகங்கள் மீது பயணிக்க முடிந்தது. + +போர்களில் ஒட்டகப்படை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளாலும் எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய எல்லை பாதுகாப்பு படையிலும் (ஜூலை 2012 வரை) பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் இராணுவத்தில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளுக்கு பதிலாக பளு தூக்கவும் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. + +ஒட்டக பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது. + +ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக சாப்பிடப்பட்டு வருகிறது. ஒட்டக இறைச்சி இன்னும் , சோமாலியா, சீபூத்தீ, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், எதியோப்பியா, கசக்ஸ்தான் போன்ற பகுதிகளில் உண்ணப்படுகிறது. + +2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 14 மில்லியன் ஒட்டகங்கள் உயிர் வாழ்வதாக நம்பப்படுகிறது. இவற்றில் 90% அராபிய ஒட்டகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று உயிரோடிருக்கும் அராபிய ஒட்டகங்கள் வீட்டு விலங்குகளாக உள்ளன. சாகெல், மக்ரிபு, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா போன்ற ஆப்பிரிக்காவின் வெளிப்புற நீட்சிகளில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. இந்த கொம்பு போன்ற நீட்சிப் பகுதியில் உலகத்தில் உள்ள ஒட்டகங்களில் பெரும்பாலானவை காணப்படுகின்றன. இதில் அராபிய ஒட்டகங்கள் உள்ளூர் நாடோடிகளின் ���ாழ்க்கையில் முக்கிய அங்கமாக திகழ்கின்றன. சோமாலியா நாட்டில் மிகப்பெரிய ஒட்டக மந்தைகள் உள்ளன.பால், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்காக எத்தியோப்பியாவிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன + +பாக்டிரியன் எனப்படும் இரட்டைத் திமிங்கில ஒட்டகங்கள் 2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சுமார் 1.4 மில்லியன் ஒட்டகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை வீட்டு விலங்குகளாக உள்ளன. காட்டு இரட்டைத்திமிங்கில ஒட்டகங்கள் மட்டுமே வேட்டையாடும் விலங்காக இருக்கின்றன. + +மிக அதிக அளவிலான காடுவாழ் ஒட்டகங்களின் எண்ணிக்கை ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. ஆத்திரேலியாவின் மத்திய பகுதிகளில் ஏறக்குறைய 700,000 பழங்கால அராபிய ஒட்டகங்கள் உள்ளன, அவை 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போக்குவரத்துக்காக முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. . ஆண்டுதோறும் இவ்வொட்டகங்களின் எண்ணிக்கை 8% அளவுக்கு அதிகரித்தது. ஆத்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், இந்த ஒட்டகங்களில் 100,000 க்கும் அதிகமான ஒட்டகங்களை, ஆடுகளுக்கான வளங்களை குறைக்கின்றன என்ற காரணத்தினால் சேதப்படுத்தியுள்ளனர். + +அமெரிக்க ஒட்டகப் படை பரிசோதனையின் ஒரு பகுதியாக 19 ஆம் நூற்றாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அராபிய ஒட்டகங்களும், இரட்டைத்திமிங்கில ஒட்டகங்களும் தென்மேற்கு அமெரிக்காவில் அலைந்து திரிந்தன. +திட்டம் முடிவுற்றவுடன் அவை சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டன. கரீபூ கோல்ட் ரச்சு காலத்தில் இருபத்தைந்து அமெரிக்க ஒட்டகங்கள் கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. + + + + + +மே 2006 + + + + + +ஈழத்தமிழர் படுகொலைகள், 2006 + +இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்புறுதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பெரும்பாலும் இலங்கை இராணுவமும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் இராணுவ துணைக்குழுக்களுமே இந்த வன்செயல்களில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. இதுவரையில் சர்வதேச நாடுகள் (இந்தியா உட்பட) இவ்வன்செயல்களை நோக்கி இலங்கை அரசுக்கு எவ்வித பாரிய கண்டிப்போ நெருக்கடியோ செய்யாதது குறிப்பி��த்தக்கது. + + + + + + +நெருப்பு + +நெருப்பு அல்லது தீ அல்லது அக்கினி ("Fire") என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.. துருப்பிடித்தல் (Rusting), சமிபாடு போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை. +நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான். +நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. + +சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும். + +நெருப்பின் சுடரில் மேற்பரப்பில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். +நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள், விலங்குகள், மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பானது, சூழல் மண்டலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது]].. + +பொதுவாக நெருப்பு என்பது பின்வரும் நிலைகளில் தோன்றுகின்றது. +1. கட்டுப்பாடான எரித்தல் - ஓர் எரிபொருள் எரிக்கப்படும்போது தோன்றும் நெருப்ப���. எ.கா.: சமையலுக்கு, அல்லது வெப்பத்தை உருவாக்க விறகுகளையோ, அல்லது வேறு எரிபொருளையோ எரித்தல். + +2. கட்டுப்பாடற்ற எரிதல் +நெருப்பு என்பது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தீச்சுடர் அல்லது தீச்சுவாலையையே குறிக்கின்றது. சுடர் என்பது புலப்படும் ஒளிக்கற்றை , அகச்சிவப்புக் கதிர், மற்றும் சில நேரங்களில் புற ஊதாக் கதிர் என்பவற்றையும் உமிழும். இது அதிர்வெண் நிறமாலை உமிழ்கின்ற வாயுக்கள் மற்றும் திட பொருளைக்கொண்ட ஒரு கலவையாகும். + +நெருப்பு அனைத்து பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. எனவே சுற்றுசூழல் மாசுபடுகின்றது. +நெருப்ப்பு என்பது தீமையை அழித்து புனிதம் சேர்ப்பத்தாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அதனால் திருமணம் உட்பட பல சுப நிகழ்வுகளில் இந்தியர்கள் அக்னியை பயன் படுத்துகின்றனர். + +வேத காலத்திலிருந்தே நெருப்பு புனிதமாக கருதப்படுகிறது. சொவ்ராஸ்டிரர்கள் எனும் இந்தியர்கள் நெருப்பை மட்டுமே தெய்வமாக வழிபடுவார்கள். + +நெருப்பு பல காரணங்களால் உருவாக்கப்படுகின்றன. +உராய்வதால் உருவாகும் நெருப்பே அனைத்திற்கும் பிரதானம் ஆகும். +காட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.சூரியன் இயற்கை நெருப்பிற்கு உதாரணம் ஆகும். +தீக்குச்சினால் உருவாகும் நெருப்பு போன்றவை செயற்கை நெருப்பு ஆகும். + +காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும்போது உண்டாகும் உராய்வினால் நெருப்பு பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ (WILD FIRE) என்றழைக்கப்படும் நெருப்பு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சில வேளைகளில் காற்றின் வேகம் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீயானது, ஒரு நெருப்புப் பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாக உருமாறும். காற்றின் வேகச் சுழற்சி காரணமாக, செங்குத்தாய் உருவாகும் இத்தகைய நெருப்புப் கோளங்கள் சில பொழுதுகளில் முப்பது அடி முதல் இருநூறு அடி உயரமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட வெப்பச் சூறாவளியாக மாறிவிடும். காற்று வீசும் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து இந்நெருப்புச் சூறாவளி நீண்ட நேரம் நீடிக்கும். இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பநிலையானது மிக அதிகளவில் காணப்படும். இத���் காரணமாக இது கடந்து செல்லும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகி மடியும். இந்த நெருப்புச் சூறாவளி, +மிகவும் குறுகிய காலத்தில் இயற்கைப் பேரழிவை உண்டாக்கி விடும் தன்மையுடையது. மரங்கள் செடிகள் உள்ளிட்ட தாவரங்கள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் முதலானவையும் அகப்பட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக மாண்டு போகும். + +காட்டில் திடீரென உருவாகும் காட்டுத் தீயானது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைக்காது அழித்துவிடும். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் நெருங்க விடாமல் காத்துக்கொள்ளும் தகவமைப்பைத் தன்னகத்தே கொண்ட மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன. + +இமயமலை ரொடோடென்றன் ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் காட்டுப் பூவரசு என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை பில்லி என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை,போரஸ் என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் ��யரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன. + +அறிவியல் அறிஞர்கள் சிலர் நிகழ்த்திய நெருப்புச் சுழற்காற்று ஆய்வு ஒன்றில், இதற்கு முன்பு யாரும் கண்டிடாத, இன்னும் அமைதியான மற்றும் துல்லியமான முறையில் எரியும் நெருப்புச் சுழலில் சுழன்றுகொண்டிருக்கும் நீல மற்றும் ஊதா நிற தீப்பிழம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு விஞ்ஞானிகள் தொன்மையான மஞ்சள் நெருப்பை விட தூய்மையாக எரிகிற நீலப் புயல் சுடர் ஒன்றை உருவாக்கிக் காட்டினர். இந்த நெருப்பின் மூலம் திறன் மிகு சூழலிய எண்ணெய்க் கசிவுச் சுத்திகரிப்பு முறை மேற்கொள்ள வாய்ப்புண்டு. +Read more at: http://tamil.gizbot.com/scitech/scientists-discover-the-blue-whirl-beautiful-new-kind-fire-tamil-011837.html + +Read more at: http://tamil.gizbot.com/scitech/scientists-discover-the-blue-whirl-beautiful-new-kind-fire-tamil-011837.html +http://tamil.gizbot.com/img/2016/08/ssssss-10-1470822344.jpg + + + + +ஓநாய் + +ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்ப் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒநாய்கள் இல்லை. +ஓநாய்களில் இரண்டே வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது "சாம்பல்நிற ஓநாய்" (Gray wolf), இரண்டாவது வகை "செந்நாய் ("Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் ���ாட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது. + +முழுதும் வளர்ந்த ஓநாய்கள் 35 முதல் 55 கிகி எடை இருக்கும். மூக்கில் இருந்து வால் நுனி வரை ஏறத்தாழ 1.5-2 மீ நீளம் இருக்கும். 75 செ.மீ உயரம் இருக்கும். பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும். + + + + +அரச மரம் + +அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை தொடர்புடைய மரங்கள் ஆகும். இம்மரம் பாலைக் கொண்டுள்ளது.மிகுதியான ஆக்ஸிஜனை வெளியிடும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும் (சமஸ்கிருதத்தில்-போதி). இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. இந்திய அரசால் வழங்கப்படும் பொதுப் பட்டங்களில் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் அரச இலையைக் கொண்டுள்ளது. + + + + + + + +மெத்தேன் + +மீத்தேன் "(Methane)" என்பது CH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இதை மெத்தேன், கொள்ளிவாய் பிசாசு, சாணவாயு போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். கார்பன் அணு ஒன்றும் நான்கு ஐதரசன் அணுக்களும் சேர்ந்து மீத்தேன் வாயு உருவாகிறது. இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும். தனிம வரிசை அட்டவனையின் 14 ஆவது குழுவைச் சேர்ந்த ஓர் ஐதரைடாகவும் ஓர் எளிய ஆல்கேனாகவும் மீத்தேன் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மீத்தேன் பூமியில் அதிகமாகக் காணப்படுவதால் ஓர் எரிபொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இருப்பினும் வாயுவாக இருப்பதால் அதை சாதாரண வெப்ப மற்றும் அழுத்த நிபந்தனைகளில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. +பூமிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் இயற்கை மீத்தேன் கிடைக்கிறது. இந்த இயற்கை மீத்தேன் தரைப்பகுதியை அல்லது வளி மண்டலத்தை அடையும்போது வளிமண்டல மீத��தேன் என்ற பெயரைப் பெறுகிறது. சூரிய மண்டலத்தின் அனைத்து கிரகங்களிலும் மற்றும் பெரிய நிலவுகள் பெரும்பாலானவற்றிலும் மீத்தேன் இருப்பதாக நம்பப்படுகிறது. + +1776 ஆம் ஆண்டு மீத்தேன் அறிவியல் பூர்வமாக முதன் முதலில் கண்டறியப்பட்டது. இத்தாலிய இயற்பியலாளர் அலிசேண்ட்ரோ வோல்ட்டா இதைக் கண்டுபிடித்தார். பெஞ்சமின் பிராங்களின் எழுதிய தீப்பற்றும் காற்று என்ற கட்டுரையை படித்த காரணத்தினாலேயே வோல்டாவிற்கு இதை ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் தோன்றியதாகக் கூறப்படுகிறது . சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறிய வாயுவைச் சேகரித்த வோல்ட்டா அதிலிருந்து தூய்மையான மீத்தேன் வாயுவை தனித்துப் பிரித்தார் . வாயு தீப்பற்றுவதை செயல் விளக்கமாகவும் மின்பொறியைப் பயன்படுத்தி செய்து காட்டினார் . + +1866 இல் செருமானிய வேதியியலாளர் ஆகசுட்டு வில்லெம் வோன் ஆப்மான் இவ்வாயுவிற்கான பெயரை மெத்தனாலில் இருந்து தருவித்து மீத்தேன் என்று சூட்டினார். + +மீத்தேன் என்பது நான்கு சமமான C-H பிணைப்புகள் கொண்ட ஒரு நான்முகி மூலக்கூறு ஆகும். கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் மீது இணைதிறன் ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் நான்கு பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன என மீத்தேனின் மின்னணு கட்டமைப்பு விவரிக்கப்படுகிறது. கார்பன் அணுவின் மீது 2s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துவதால் குறைவு ஆற்றல் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் தோன்றுகின்றன. இந்த ஆற்றல் மட்டத்திற்கு மேல் கார்பன் அணுவின் மீது 2p ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துகின்றன. மூன்றுக்கு மேல் ஒன்று பினையும் திட்டம் நான்முகி மூலக்கூறு எனப்படுகிறது.பல்வேறு நேரியல் ஒளிஎலக்ட்ரான் நிறமாலையியல் அளவீடுகளுக்கு இது சீரானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. +அறை வெப்பநிலை மற்றும் திட்ட அழுத்தத்தில் மீத்தேன் வாயு நிறமற்ற நெடியற்ற வாயுவாக உள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவின் வாசனைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கூடுதலாக டெர்ட்-பியூட்டைல் தயால் சேர்க்கப்படுகிறது. ஓரலகு வளிமண்டல அழுத்தத்தில் மீத்தேனின் கொதிநிலை−164 °செல்சியசு வெப்பநிலையாகும் . . சாதாரண அழுத்தத்தில் ஒரு வாயுவாக இது காற்றில் 5.4-17 சதவீதம் வரை வெவ்வேறு அடர்த்திகளில் தீப்பிடித்து எரிகிறது. + +சில வேறுபாடுகளுடன் திண்மநிலை மீத்தேன் அறியப்படுகிறது. தற்பொழுது ஒன்பது வகையான திண்ம மீத்தேன்கள் அறியப்படுகின்றன.திண்ம மீத்தேனை சாதாரண அழுத்தத்தில் குளிர்ச்சியடையச் செய்தால் நீர்ம்நிலை மீத்தேன் கிடைக்கிறது. இது கனசதுரமாக Fm3m இடக்குழுவுடன் படிகமாகிறது. நீர்மநிலை மீத்தேனில் ஐதரசனின் இருப்பிடம் நிலையானதல்ல. மீத்தேன் மூலக்கூறுகள் சுதந்திரமாகச் சுழலும் என்பதால் நெகிழ்ச்சியான படிகங்கள் உருவாகின்றன . + +எரிதல், ஆலசனேற்றம், செயற்கை எரிவாயு உருவாக்கம். ஆலசனேற்றம் உள்ளிட்ட வினைகள் மீத்தேனின் முக்கியமான வேதி வினைகளாகும். பொதுவாக மெத்தனாலாக ஆக்சிசனேற்றம் அடையும் வினைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏனெனில் வினைக்காக குறைவான ஆக்சிசன் வழங்கப்பட்டாலும் கூட கார்பன் டை ஆக்சைடும் நீரும் உருவாதல் நிகழ்கிறது. மீத்தேன் மோனோ ஆக்சிசனேசு நொதி மீத்தேனிலிருந்து மெத்தனாலை உருவாக்குகிறது. ஆனால் தொழிற்சாலைகள் போல பெருமளவு தயாரிக்க இம்முறை உதவாது . + +மீத்தேனின் எரிதல் வெப்பம் 55.5 மெ.யூ/கி.கி. மீத்தேனின் எரிதல் வினை பல படிகளைக் கொண்டது. இவற்றை தொகுத்து பின் வரும் ஒரே சமன்பாட்டில் கொடுக்கலாம். +CH4 + 2 O2 → CO2 + 2 H2O (ΔH = −891 கியூJ/மோல் தர நிபந்தனைகளில் +மீத்தேன் ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. + +உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீத்தேன் ஆலசன்களுடன் வினைபுரிகிறது. +X2 + UV → 2 X• + +X• + CH4 → HX + CH3• + +CH3• + X2 → CH3X + X• + +இங்கு X என்பது ஒரு ஆலசனைக் குறிக்கும். புளோரின் (F), குளோரின் (Cl), புரோமின் (Br), அ;ல்லது அயோடின் (I) என்பவை அந்த ஆலசன்களாகும்.இச்செயல்முறையின் வழிமுறை இயங்குறுப்பு ஆலசனேற்றம் எனப்படுகிறது. புற ஊதா ஒளி மூலம் இவ்வினை தூண்டப்படுகிறது. + + + + +புளி (மரம்) + +புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். + +பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் "ஓடும் புளியம் பழமும் போல" என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை + + + + + + +வளிமம் + +வளிமம் (அல்லது வாயு) என்பது பொருட்களின் நான்கு இ��ற்பியல் நிலைகளுள் ஒன்று. திண்மம், நீர்மம், பிளாஸ்மா என்பனவே ஏனைய மூன்று நிலைகளும் ஆகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாக இருக்கும் பொருள் ஒன்று வெப்பநிலையை கூட்டும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர்மமாக மாறும். மேலும் வெப்பநிலையைக் கூட்டினால் இன்னும் கூடிய ஒரு வெப்பநிலையில் அது வளிம நிலைக்கு மாறும். + +மாந்தர்களும் பிற பல விலங்குகளும் உயிர்வாழ அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு வகை வளிமம் ஆக்சிசன் (ஒட்சிசன்) எனப்படும். இதை உயிர்வளி என குறிக்கிறார்கள். ஐதரசன் (ஹைடிரஜன்) என்னும் வளிமத்தைத் தமிழில் நீரதை என்றும் வழங்குவதும் உண்டு. எனவே ஆக்சிசன், நைட்ரஜன், ஆர்கான், நியான், ஐதரசன் போன்ற பல பொருட்கள் வளிம நிலையில் உள்ளன. + +வாயு அல்லது வளிம நிலை என்பது பருப்பொருளின் நீா்ம மற்றும் பிளாசுமா நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும். . + +நாம் வாழும் நில உலகில் உள்ள வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய 78% நைட்டிரசன் (நைதரசன்) என்னும் வளிமமும், 21% உயிர்வளியும் எஞ்சியுள்ள 1% மட்டும் தான் கார்பனீரொட்சைட்டு போன்ற பிற வளிமங்கள். +ஐதரசன் (H), நைட்ரசன் (N) ஆக்சிசன் (O) ஹாலஜன்களில் புளோரின் (F) மற்றும் குளோரின் (Cl) ஆகியவை மட்டுமே திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஓரினக் கருவுள்ள பல அணு மூலக்கூறுகளான நிலைப்புத் தன்மையுள்ள தனிம நிலையிலுள்ள வாயுக்கள் ஆகும். இவை தவிர ஒற்றை அணுவைக் கொண்ட மந்த வாயுக்களான ஹீலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்டான் (Kr), செனான் (Xe) மற்றும் ரேடான் (Rn) ஆகியவற்றையும் சேர்த்து தனிம நிலையிலுள்ள வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவை மூலக்கூறு வாயுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. + +பெரும்பான்மையான வாயுக்கள் நேரடியாக உற்றுநோக்க சிரமமானவையாக இருப்பதால், நான்கு பேரியலான அல்லது கட்புலனாகத்தக்க பண்புகளான அழுத்தம், கன அளவு, துகள்களின் எண்ணிக்கை(மோல்) மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் வழியாக வாயுக்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த நான்கு இயல்புகளும் வெவ்வேறு வேதியியலாளா்களால் இராபர்ட் பாயில், ஜாக்குஸ் சார்லஸ், ஜான் டால்டன், ஜோசப் கே லுாசாக் மற்றும் அமெடியோ அவாகாட்ரோ ஆகியோரால் பலவிதமான வாயுக்களுக்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் மீண்டும், மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவா்களின் விரிவான ஆய்வுகள�� இறுதியாக நல்லியல்பு வாயுக்களுக்கான வாயுச் சமன்பாடாக, மேற்கூறிய நான்கு பண்புகளுக்குமான கணிதவியல் தொடர்பாக வருவிக்கப்பட்டது. + +வாயு மூலக்கூறுகளானவை ஒன்றிலிருந்து மற்றொன்று அதிக இடைவெளியில் இருப்பதால் அவற்றுக்கிடையோன மூலக்கூறுகளுக்கிடையேயான கவா்ச்சி விசை அல்லது பிணைப்பானது திரவங்கள் மற்றும் திண்மங்களை விடவும் வலிமை குறைந்தவையாக காணப்படுகின்றது. மூலக்கூறுகளுக்கிடையேயான கவா்ச்சி விசையானது வாயு மூலக்கூறுகளுக்கிடையேயான நிலை மின்னியல் கவா்ச்சி விசையின் காரணமாக விளைகிறது. ஒத்த மின்சுமையைக் கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கியும், எதிரெதிர் மின்சுமை கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் செய்கின்றன. சகப்பிணைப்புத் தன்மையுள்ள வளிமச் சேர்மங்களில் நிகர மின்சுமையானது சுழியாக இருப்பினும் இச்சேர்மங்களில் காணப்படும் நிலையான, சமச்சீரற்ற மின்சுமை பரவலின் காரணமாக அவை வலிமையான மூலக்கூறுகளுக்கிடை கவர்ச்சி விசைக்கு ஆட்படுகின்றன. நிலையற்ற, ஒழுங்கற்ற முறையில் துாண்டப்பட்ட மின்சுமைகளானது மூலக்கூறுகளில் மின் முனைவற்ற சகப்பிணைப்புகளில் காணப்படுகிறது. இத்தகைய துாண்டப்பட்ட மின்சுமைகளால் உருவாக்கப்டும் நிலை மின்னியல் கவா்ச்சி விசையானது வாண்டா்வால்சு விசை என அழைக்கப்படுகிறது. வளிமங்களின் இயற்பியல் பண்புகள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவர்ச்சி விசையானது இடைவினையாற்றுவதைப் பொறுத்து ஒரு பொருளுக்குள்ளேயே மாறுபடுகிறது.ஒவ்வொரு வளிமத்தக்குமான தனித்தன்மை வாய்ந்த இயற்பியல் பண்புகள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவா்ச்சி விசை இடைவினை புரிவதைப் பொறுத்தே அமைகிறது. இந்த முடிவு, அயனிப்பிணைப்பு மற்றும் சகப்பிணைப்பால் உருவாக்கப்பட்ட சேர்மங்களின் கொதிநிலையானது ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டதால் கிடைத்ததாகும். + +பருப்பொருட்களின் இதர நிலைகளை ஒப்பிடும் போது வளிமமானது குறைவான அடா்த்தி மற்றும் பாகுநிலையைக் கொண்டுள்ளது. அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட கன அளவு வரை மூலக்கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. + +ஒரு வாயு நிலையை விளக்குவதற்கு தேவைப்படும் நான்கு காரணிகள், அளவிடக்கூடிய பண்புகள் எனப்படும். கன அளவு V, அழுத்தம் P, வெப்பநிலை T மற்றும் மோல்களின் எண்ணிக்கை n ஆகியவை அளவிடக்கூடிய பண்புகளாகும். + +வாயு அல்லது வளிம நிலையில் மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வாயு மூலக்கூறுகள் ஒழுங்கின்றி இயங்கக்கூடிய தன்மை கொண்டவை. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள மோதல்களை விட கொள்கலனில் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. மோதலானது மீட்சித்தன்மை கொண்டிருப்பதால் இத்தகைய மோதல்களால் ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும். கொள்கலனில் சுவரில் ஓரலகு பரப்பில் ஒரு விநாடியில் நிகழும் மோதலில் ஏற்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொருத்ததாகும். அதிக எண்ணிக்கையில் மூலக்கூறுகள் சுவரின் ஓரலகு பரப்பில் ஒரு விநாடியில் மோதலை நிகழ்த்தும் போது வாயுவின் அழுத்தமானது அதிகரிக்கும். + +வாயுவின் இயக்க ஆற்றலுக்கான சமன்பாடு ½mv ஆகும். m என்பது மூலக்கூறின் நிறை, v என்பது திசைவேகம். வாயுவை வெப்பப்படுத்தும் போது, வெப்பநிலை உயர்வின் காரணமாக மூலக்கூறுகளின் திசைவேகம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக வாயுவின் இயக்க ஆற்றலும் அதிகரிக்கும். இயக்க ஆற்றல் அதிகரிப்பின் காரணமாக மூலக்கூறுகள் கொள்கலனின் சுவரில் ஏற்படும் மோதல் அதிகரிக்கிறது. அதன் காரணமாக, குறிப்பிட்ட கன அளவுள்ள நிலையில் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும். + +ஒரு வாயுவின் கன அளவு அதைக்கொண்டுள்ள கொள்கலனின் கன அளவிற்குச் சமமாகும். வாயுக்களின் இயக்கவியற் கொள்கைகள் இதனைத் தெளிவுபடுத்துகிறது. கொள்கலத்தின் கன அளவுடன் ஒப்பிடும் போது வாயு மூலக்கூறுகளின் கன அளவு புறக்கணிக்கத்தக்கதாகும். வாயுவின் கன அளவை அதன் அழுத்தம், வெப்பநிலை மற்றும் மோல்களின் எண்ணிக்கை ஆகியவற்றிலிருந்து நிா்ணயிக்கலாம். + +வாயுவின் மீதான அழுத்தம் மற்றும் கன அளவின் விளைவுகள் மோல்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்பில் இருக்கும். மோல்களின் எண்ணிக்கை “n' உயரும் போது கொள்கலத்தின் சுவரில் மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வாயுவின் அழுத்தம் உயா்கிறது. வாயுவின் மோல்களின் எண்ணிக்கை உயரும் போது அதன் கன அளவும் அதிகரிக்கும். + +அடர்த்தியை குறிக்கப்பயன்படும் குறியீடு ρ (rho) ஆகும். இதன் SI அலகு கிலோகிராம்/கன மீட்டர் ஆகும். வாயு மூலக்கூறுகளானது ஒரு கொள்கலனில் கட்டற்ற முறையில் இய���்குவதால் அதன் நிறையானது அடர்த்தியாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு கன அளவுள்ள பொருளின் நிறை எனப்படுகிறது. வாயுக்களைப் பொறுத்தமட்டும் அடர்த்தியானது பரந்துபட்ட அளவெல்லைக்குள் மாறக்கூடியது. ஏனென்றால், வாயு மூலக்கூறுகளானது அழுத்தம் மற்றும் கன அளவு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இயங்கும் வாய்ப்புள்ளது. அடர்த்தியில் ஏற்படும் இந்த மாறுபாடானது அமுக்கப்படும் தன்மை (compressibility) என அழைக்கப்படுகிறது. அழுத்தம் மற்றும வெப்பநிலையைப் போன்று அடர்த்தியும் ஒரு நிலையமைவு மாறியாகும். + +ஒரு சக்தி வாய்ந்த நுண்ணோக்கியால் வாயுவை ஒருவா் உற்றுநோக்கினால் (மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அல்லது அயனிகள்) போன்ற துகள்களின் தொகுப்பைக் காண முடியும். இவை குறிப்பிட்ட வடிவம் மற்றும் கன அளவுக்குட்படாது தாறுமாறான இயக்கத்தில் இருப்பதைக் காணலாம். வாயுவின் துகள்களானது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போதும் கொள்கலனின் பக்கங்களோடு மோதும் போதும் தங்களது திசையை மாற்றிக்கொள்கின்றன. நல்லியல்பு வாயுவைப் பொறுத்தவரை, இந்த மோதல்கள் முற்றிலும் மீட்சித்தன்மை உடையவை. வாயுவின் அடிப்பைடைத் துகள்களைப் பற்றிய இந்த கருத்தியலானது மூலக்கூறுகளின் இயக்கவியல் கொள்கை எனப்படுகிறது. இந்தக் கொள்கையின் எடுகோள்களை இயக்கவியல் கொள்கை என்ற பகுதியில் காணலாம். +இயக்கவிற் கொள்கை யானது வாயுக்களின் அளவிடத்தக்க அல்லது பேரியல் பண்புகளை அவற்றின் மூலக்கூறுகளின் இயைபு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் வழியாக உள்ளார்ந்து பார்க்கிறது. உந்தம் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிவற்றின் வரையறையிலிருந்து தொடங்கி, கோண உந்த அழிவின்மை விதி மற்றும் கன சதுரத்தின் வடிவவியல் தொடர்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை மூலக்கூறு ஒன்றின் இயக்க ஆற்றலேர்ட தொடர்புபடுத்துகிறது. இந்தக் கொள்கையானது இந்த இரு பண்புகளின் சராசரி மதிப்புகளை வழங்குகிறது. மேலும், இந்தக் கொள்கையானது, ஒரு அமைப்பில் உள்ள வாயுவானது எவ்வாறு மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, தனிச்சுழி வெப்பநிலையில் உள்ள ஒரு வாயுவானது வெப்பப்படுத்தும் போது அதன் அக ஆற்றலானது உயா்த்தப���படுகிறது. ஒரு வாயுவானது வெப்பப்படுத்தப்படும் போது, அதன் துகள்களின் வேகமானது வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மோதல்களின் எண்ணிக்கையானது(மூலக்கூறுகளுக்கிடையேயும், கொள்கலத்தில் சுவா்களோடும்) அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஏற்படும் மோதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கப்படுகிறது. + +பிரௌணியன் இயக்கமானது ஒரு பாய்பொருளின் துகள்களில் ஏற்படும் கட்டற்ற இயக்கத்தை விளக்க முற்படும் கணிதவியல் கோட்பாடாகும். படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற வாயுத்துகள்களின் நகர்படம் வாயுக்களின் விரவல் மற்றும் எண்ட்ரோபி மாற்றத்தை விளக்குகிறது. இந்த நிகழ்வுகளானது துகள் கொள்கையின்படியும் விளக்கப்படுகிறது. + +மூலக்கூறுகளின் துகள்களுக்கிடையேயான அந்தந்த நேரங்களிலான கவா்ச்சி விசை மற்றும் விலக்க விசைகள் வாயுக்களின் இயக்கவியலில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை விளைவிக்கின்றன. இயற்பிய வேதியியலில் இந்த விசையானது வாண்டர்வால்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விசையானது பாகியல் தன்மை, இயக்க வீதம் ஆகிய இயற்பியல் பண்புகளை தீா்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சில குறிப்பிட்ட நிலைகளில் இந்த விசைகளை புறக்கணிக்கும் போது ஒரு இயல்பு வாயுவானது நல்லியல்பு வாயுவைப் போன்று கருதப்படுவதை அனுமதிக்கிறது. இந்த அனுமானமானது நல்லியல்பு வாயு விதிகளைப் பயன்படுத்தி பல கணக்கீடுகளை எளிமையாக்க உதவுகிறது. + +இந்த விதிகளின் முறையான பயன்பாடானது இயக்கவியல் மூலக்கூறு கொள்கை அவசியமாகிறது. வாயுவின் துகள்களானவை காந்த விசை அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான விசையைக் கொண்டிருக்கும் போது அவை தங்களுக்கிடையேயான தொலைவு குறைவதன் காரணமாக ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறின் மீது படிப்படியாக தாக்கத்தை உண்டாக்குகிறது. + +1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்பவர் வாயுக்களின் கன அளவிற்கும், அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு கூறினாா். பாயில் விதியானது சில நேரங்களில் பாயில்-மாியோட்டே விதி எனவும் அழைக்கப்படுகிறது. “மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாாயுவின் அழுதத்தமும் (P), அதன் கன அளவும் (V) ஒன்றுக்கொன்று எதிர்விகிதத் தொடர்���ைப் பெற்றுள்ளன. +பாயில் விதியானது கணிதவியலின்படி பின்வருமாறு குறிப்பிடப்படலாம். + +அல்லது + +"P" என்பது அழுத்தம், "V" என்பது கன அளவு , மற்றும் "k" ஒரு மாறிலி + +இந்த சமன்பாட்டிலிருந்து வாயுவின் கன அளவு அதிகரிக்கும் போது வாயுவின் அழுத்தமானது குறைகிறது. இதைப்போன்றே கன அளவு குறையும் போது அழுத்தம் அதிகரிக்கிறது. + +மாறாத அழுத்தத்தில், வெப்ப நிலையைப் பொறுத்து வாயுவின் கன அளவு மாறுபடுவதை சார்லசு விதி விளக்குகிறது + +இவ்விதிப்படி, மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலைக்கு நேர் விகிதத்திலிருக்கும். + +இந்தத் தொடர்பானது கணிதவியல் சமன்பாடாக பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. +or +where: + +இந்த விதியானது வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒரு வாயு எவ்வாறு விாிவடைகிளது என்பதை விளக்குகிறது. மாறாக, வெப்பநிலையில் ஏற்படும் குறைவானது கன அளவில் குறைவை ஏற்படுத்துகிறது. இரண்டு வேறுபட்ட நிலைகளில் ஒரு பொருளின் நிலைகளை ஒப்பிட இந்த விதியானது பின்வருமாறு எழுதப்படலாம். + +இந்த சமன்பாடானது, தனி வெப்பநிலையானது அதிகரிக்கப்படும் போது வாயுவின் கன அளவு அதிகரிக்கிறது. + + + + +நரி + +நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு. உருவில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சுடுநிலமாகிய சகாராப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர். + +நரி பெரும்பாலும் 2 - 3 ஆண்டுகள் வாழ்கிறது. ஆனால் பிடித்து வளர்க்கப்படும் நரிகள் பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்வதுண்டு. நரிகள் பெரும்பாலும் சுமார் 9 கிலோ.கி எடை இருக்கும். கருவில் வளரும் நாட்கள் 60-63 நாட்கள். ஆனால் ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் வாழும் பெருஞ்செவி நரிகளின் குட்டிகள் கருவில் வளரும் நாட்கள் சுமார் 50 நாட்கள் ஆகும். + +நாய்ப்பேரினத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் மிகச் சிறியது. + + + + +குள்ள நரி + +குள்ள நரி (குறுநரி) நாய்க் குடும்பத்தில் உள்ள நரி இனத்தில் ஒரு வகை ஆகும்.இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது அனைத்துண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும். + +இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி ( குறுநரி ) என்று பெயர். தியடோர் பாசுக்கரன் தனது சோலை என்னும் வாழிடம் என்னும் நூலில் இதன் மூலப்பெயர் குழி நரி எனவும் இவை வங்கு எனப்படும் வளைகளில் வசித்ததால் குழி நரி எனப்பட்டு பின்னர் மருவி குள்ள நரி என்றாகி விட்டது என்றும் குறிப்பிடுகிறார். + +இவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும். + + + + +எத்தேன் + +ஈத்தேன் "(Ethane)" என்பது CH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இதை எத்தேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சாதாரணமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்ற மணமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. பிற ஐதரோ கார்பன்கள் போல ஈத்தேனும் இயற்கை வாயுவிலிருந்து பேரளவில் தொழிற்சாலைகளில் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. பெட்ரோலியத்தை சுத்திகரிப்பு செய்யும் போது பெட்ரோ வேதிப்பொருள்களுடன் உடன் விளைபொருளாகவும் கிடைக்கிறது. எத்திலீன் உற்பத்திக்குப் பயன்படுத்துவது ஈத்தேனின் முதன்மையான பயனாகக் கருதப்படுகிறது. + +கட்டமைப்பில் உள்ள ஓர் ஐதரசன் அணுவை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு அதற்குப் பதிலாக வேரு வேதி வினைக்குழுவை மாற்றீடு செய்து ஈத்தேனுடன் தொடர்புடைய பிற சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈத்தேன் சேர்மத்தின் ஒரு பகுதிக் கூறு எத்தில் குழு என்ற வேதி வினைக்குழுவாக கருதப்படுகிறது. உதாரணமாக ஓர் எத்தில் குழுவுடன் ஐதராக்சில் குழு இனைக்கப்பட்டால் அச்சேர்மத்தை எத்தனால் என்கிறோம். இது மதுபானங்களில் உள்ள ஆல்ககால் ஆகும். + +1834 ஆம் ஆண்டில் மைக்கேல் பாரடே என்பவரால் ஈத்தேன் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. பொட்டாசியம் அசிட்டேட் கரைசலை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி இவர் ஈத்தேனைத் தயாரித்தார். இந்த வினையில் உருவான ஐதரோகார்பன் விளைபொருள் மீத்தேன் என்று இவர் தவறாகப் புரிந்து கொண்டா��். இதனால் மேலும் இந்த சேர்மத்தை தொடர்ந்து ஆராயாமல் கைவிட்டார் . 1847-1849 காலப்பகுதியில் கரிம வேதியியலின் இயங்குறுப்புத் தத்துவத்தை நிரூபிப்பதற்காக எர்மான் கோல்ப் மற்றும் எட்வர்ட்டு பிராங்க்லேண்டு ஆகியோர் எத்தில் சயனைடு மற்றும் எத்தில் அயோடைடுடன் பொட்டாசியம் தனிமத்தைச் சேர்த்து ஒடுக்கமடையச் செய்து ஈத்தேனை உருவாக்கினர். இதற்கு அவர்கள் பாரடே செய்ததைப் போல நீரிய அசிட்டேட்டுகளை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தினர். இவர்களும் இவ்வினையில் விளைந்தது மீத்தேனின் இருபடியான ஈத்தேன் என்பதற்குப் பதிலாக மீத்தேன் என்றே தவறாகப் புரிந்து கொண்டனர். இப்பிஒழை 1864 இல் காரல் சிகோர்லெமர் என்பவரால் சரிசெய்யப்பட்டது. இவ்வினைகளில் வழியாக உருவானது ஈத்தேன் என்பதை இவர் எடுத்துக்காட்டினார் . + +கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இருந்து ஈத்தேன் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. குடிக்கத்தக்க ஆல்ககால் (எத்தனால்) என்ற பொருள் கொண்ட செருமன் மொழிச் சொல்லிலிருந்து ’ஈத்’ பெறப்பட்டு, அதனுடன் கார்பன் அணுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றைப் பிணைப்பைக் குறிப்பிடும் ஏன் என்ற சொல்லையும் சேர்த்து ஈத்தேன் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. + +சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்று மணமற்று காணப்படுகிறது. இதனுடைய கொதிநிலை −88.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். உருகுநிலை −182.8° செல்சியசு வெப்பநிலை ஆகும். திண்ம நிலை ஈத்தேன் பல்வேறு மாறுபாடுகளுடன் காணப்படுகிறது. சாதாரண அழுத்தத்தில் குளிரூட்டும்போது முதலாவது மாறுபாடு நெகிழிப் படிகமாக கனசதுரத் திட்டத்தில் படிகமாகி தோன்றுகிறது. இவ்வடிவில் ஐதரசனின் இருப்பிடங்கள் நிலையானதல்ல. நீண்ட அச்சில் அவை சுதந்திரமாக சுழல்கின்றன. ஈத்தேன் தண்ணீரில் மிகச் சிறிதளவே கரைகின்றன. + +ஈத்தேன் இரண்டு மெத்தில் குழுக்களால் ஆனது ஆகும். அதாவது, மெத்தில் குழுக்களின் இருபடியே ஈத்தேன் ஆகும். ஆய்வகத்தில் ஈத்தேன் கோல்ப் தொகுப்பு வினையினால் தயாரிக்கப்படுகிறது. இந்த நுட்ப வினையில் அசிட்டேட்டு உப்பின் நீரிய கரைசல் மின்னாற்பகுப்பு செய்யப்படுகிறது. எதிர்மின் முனையில் அசிட்டேட்டு ஆக்சிசனேற்றமடைந்து கார்பன் டை ஆக்சைடும் மெத்தில் இயங்குறுப்புகளும் உருவாகின்��ன. மேலும் அதிகமான வினைத்திறன் கொண்ட இயங்குறுப்புகள் இணைந்து ஈத்தேன் உருவாகிறது. + + + + + +அமெரிக்க வேதியியல் குமுகம் + +அமெரிக்க வேதியியல் குமுகம் ("American Chemical Society") என்பது அமெரிக்க வேதியியல் அறிஞர்களின் குழுமம். இக் குமுகம் 1876ல் அமெரிக்கவில் உள்ள நியூ யார்க் பல்கலைகழகத்தில் தொடங்கபெற்றது. 2011ல் 161,000 உறுப்பினர்கள் இருந்தனர். வேதியியல், வேதிப் பொறியியல் என்பவற்றுடன் வேதியியலோடு தொடர்புடைய பிற துறைகளிலும் பல்வேறு மட்டங்களிலான பட்டங்களைப் பெற்றவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது உலகின் மிகப் பெரிய அறிவியல் சங்கமாக இருப்பதுடன், அதிகாரம் பெற்ற அறிவியல் தகவல்களுக்கான முன்னணி மூலமாகவும் இது உள்ளது. அமெரிக்க வேதியியல் குமுகம் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. இவ்வமைப்பு ஆண்டுக்கு இருமுறை வேதியியல் துறை முழுவதையும் தழுவிய கூட்டங்களையும், வேதியியலின் குறிப்பிட்ட துறைகளுக்காகப் பல தனித்தனிக் ஆய்வரங்குகளையும் நடத்துகின்றது, மற்றும் 20க்கும் மேற்பட்ட பயன்மிகு முதல்தரமான ஆய்விதழ்களை வெளியிடுகின்றது. இதனால் வெளியிடப்பட்ட முதல் ஆய்விதழின் தொடக்கம் 1879. + +இக் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி ("Chemical Abstracts Service (CAS)") ஒன்றை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தனியொரு அடையாள எண் தருகின்றது. இதற்கு CAS எண் என்று பெயர். இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன. + + +ஒரு வேதியியல் பொருளின் CAS எண் என்ன என்று கண்டுபிடிக்க கீழ்க் காணும் இலவச இணைப்புகளை பயன் படுத்தலாம். + + + + + +சிற்றெழால் + +சிற்றெழால் ("Common kestrel", "Falco tinnunculus") என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப் பறவைகள் என்று பெயர். தமிழ் நாட்டில் வாழும் ��ிற்றெழால் சுமார் 15 கிலோ எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் காடை முதலிய பறவைகளையும், எலி போன்ற சிறு பாலூட்டிகளையும், தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றையும் தின்னும். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'ப்பால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர். + +தமிழ் இலக்கியத்தில் திணைமொழி ஐம்பது பாடல் 51ல் + +சிற்றெழாலை மலையாள மொழியில் "சிறு புள்ளு" என்று அழைக்கிறார்கள். + + + + + +கொறிணி + +கொறிணி ("Rodent") அல்லது கொறிப்பி உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். மேலும், கொறிப்பி "(Rodent)" (from Latin "rodere", "கொறி") என்பது கொறிப்பன "வரிசையில்" அமைந்த பாலூட்டி உயிரியாகும்; இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. பாலூட்டிகளில் 40% கொறிப்பிகளே; இவை பரவலாக பேரெண்ணிக்கையில் அண்டார்ட்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் பரவியுள்ளன. இவை, மாந்தர் வாழிடம் உட்பட, அனைத்து தரைவாழிடங்களிலும் வாழும் பன்முகப்பட்டு பெருகிய பாலூட்டி வரிசையாகும். நீரெலி என்னும் பீவர் பெரிய மரத்தையும் முன்னம்பற்களால் கொறித்தே கீழே விழச்செய்து நீரில் பாலம் அமைக்கும் திறம் படைத்தது. உலகில் ஏறத்தாழ 2000 வகை கொறிப்பிகள் இருப்பதாகக் கூறுவர். தென் அமெரிக்காவில் உள்ள காப்பிபரா என்னும் பேரெலி வகை சற்றேறத்தாழ 1.2 மீ (4 அடி) நீளம் கொண்டுள்ளது. + +கொறிப்பி இனங்கள் மரத்திலோ புதரிலோ நீர்ச்சதுப்பிலோ வாழவல்லன. நன்கறிந்த கொறிப்பிகளில் வீட்டெலி, வயலெலி, அணில்கள், பிரெய்ரி நாய்கள் முள்ளம்பன்றிகள், நீரெலிகள், கினியா பன்றிகள். மூங்கில் அணத்தான்கள், காபிபராக்கள், ஆம்சுட்டர்கள் (hamsters), கெருபிகள் (gerbils) ஆகியன அடங்கும். முன்பு, இவற்றில் முன்வெட்டுப் பற்கள் வளரும் முயல்களும் மான்களும் பிக்காக்களும் சேர்க்கப்பட்டிருந்தன; ஆனால் இவை இப்போது இலாகொமார்ப்பா எனும் தனி வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், இவை ஒரு பொதுமூதாதையில் இருந்து தோன்றிய உடன்பிறப்புக் குழுக்களே. இவை கிளிரேசு கவையில் அடங்குகின்றன. + +பெரும்பாலான கொறிப்பிகள் நீண்ட வாலும் குறுங்கால்களும் பேருடலும் வாய்ந்த சிறிய விலங்குகளே.இவை உணவைக் கொறிக்கவும் புற்றுகளைத் தோண்���வும் தற்காப்புக்கும் முன்வெட்டுப் பற்களைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை கொட்டைகளையும் மரப்பொருட்களையும் தின்னுகின்றன என்றாலும் சில பலவகை உணவுகளை ஏற்கின்றன. இவை சமூக விலங்குகளாகும். பல கொறிப்பி இனங்கள் தம் சமூகக் குழுக்களில் சிக்கலான பலவழிமுறைகளில் தொடர்பு கொள்கின்றன. கொறிப்பன தனி இணை முயக்கமுறை, பலவிணை முயக்கமுறை, குழுஇணை முயக்கமுறை ஆகிய பல முறைகளில் புணர்கின்றன. இவற்றின் பிறப்பில் வளராத குட்டிகளும் முதிர்நிலை முற்றுயிரிகளும் இணையாக உடனமைகின்றன. + +தொல்லுயிரிக் காலத்தில் இருந்தே மீப்பெருங்கண்டமாகிய இலாரேசியாவிலேயே புதைபடிவங்களாக கிடைத்துள்ளன. புத்துயிரிக் காலத்தில் இவை பன்முகப்பட்டு அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியது மட்டுமன்றி, கடல்களையும் தாண்டி ஓசியானாவிலும் புகுந்துள்ளன. இவை ஆப்பிரிக்காவில் மடகாசுகரில் இருந்து, தென் அமெரிக்காவுக்கும் சென்று பரவியுள்ளன. ஆத்திரேலியாவில் தரைவாழிகளாகப் பரவிய ஒரே தொப்புள்கொடி பாலூட்டி இனமாக கொறிப்பிகள் மட்டுமே அமைகின்றன. + +கொறிப்பிகள் உணவுக்கும் உடைக்கும் செல்ல வளர்ப்புக்கும் ஆராய்சிக்கு ஆயவக விலங்குகளாகவு பயன்படுகின்றன. பழுப்பெலி, கருப்பெலி, வீட்டெலி போன்ற சில இனங்கள் மாந்தர் திரட்டிவைத்த உணவை உண்டு அழிக்கின்றன; நோய்களைப் பரப்புகின்றன. தற்செயலாக புது வாழிடங்களில் அறிமுகப்படுத்தப்படும் கொறிப்பி இனங்ங்கள் முற்றுகை இனங்களாக்க் கருதப்படுகின்றன. இவை நிலத்துக் கொன்றுண்னிகளிடம் இருந்து தனித்து வாழ்ந்த தீவுப் பறவைகள் போன்ற பல உயிரினங்களை அழித்துள்ளன. + +கொறிப்பிகளின் தெளிவான கூறுபாடு தொடரந்ண்டு வளரும் உளிக்கூர்மை வாய்ந்த இணைவெட்டுப் பற்களாகும்.. இந்த வெட்டுப்பற்களின் முகப்புப் பரப்பு தடித்த அடுக்குக் காறையாலும் பின்பரப்பு மெல்லடுக்குக் காறையாலும் ஆனவையாக உள்ளன. + +மிக நெருக்கமான இனங்களிலும் கொறிப்பிகளின் பான்மை வேறுபாடுகள் பன்முகமானவையாக அமைகின்றன. பல கொறிப்பிகளின் பான்மைகள் கீழே பட்டியலில் தரப்படுகின்றன. + +பாலூட்டிகளில் பெருங்குழுவாகவும் மிகப் பரவலாகவும் அமையும் கொறிப்பிகள், அண்டார்ட்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. மாந்தரின் குறுக்கீடின்றி, இவை ஆத்திரேலியாவிலும் நியூகினியாவிலும் தரையில் வாழும் ஒரேயொரு தொப்புள்கொடி பாலூட்டிகளாகும்.மாந்தரும் இவ்வகை விலங்குகள் நெடுந்தொலைவு ஓசியானிக தீவுகளில் பரவக் காரணமாக இருந்துள்ளனர் (எ.கா., பாலினேசிய எலிகள்.) கொறிப்பிகள் பனிவெளிகளில் இருந்து உயர்வெப்ப பாலைவெளிகள் வரை அனைத்து தரை வாழிடங்களிலும் தகவமைந்து வாழ்கின்றன. + +பேபரின் ஆய்வுவழி கொறிப்பிகளின் குடும்பங்கள் (2012). + +சில கொறிப்பிகள் வேளான்பொருள்களை அழிக்கின்றன; மேலும் பேரளவில் திரட்டிவைத்த விளைபொருள்களையும் தின்றே தீர்க்கின்றன. எடுத்துகாட்டாக, 2003 இல் ஆசியாவில் உள்ள எலிகளும் சுண்டெலிகளும் 200 மில்லியன் மக்களுக்கான உணவைத் தீர்த்துள்ளன. பெரும்பாலான உணவு அழிப்புகள் ஒப்பீட்டலவில் மிக் குறைந்த எண்ணிக்கை உயிரினங்களாலேயே, குறிப்பாக எலிகளாலும் சுண்டெலிகளாலுமே ஏற்படுகிறது.இந்தோனேசியாவிலும் தான்சானியாவிலும், கொறிப்பிகள் 15% பயிர்விளைச்சலைக் குறைக்கின்றன; தென் அமெரிக்காவில் இவை 90% பயிர்விளைச்சலைத் தின்றே தீர்க்கின்றன. ஆப்பிரிக்காவில்மாசுட்டோமீசு, ஆர்விகாந்தீசு உள்ளடங்கிய கொறிப்பிகள் கூலங்கள், வேர்க்கடலை, காய்கறிகள், தேங்காய்கள் ஆகியவற்றை அழிக்கின்றன. ஆசியாவில், எலிகளும் சுண்டெலிகளும் ஒத்த பிறவும் சேர்ந்து, நெற்பயிர், சோளம், கிழங்குகள், காய்கறிகள், கொட்டைகள் ஆகியவற்றை அழிக்கின்றன. இப்பணியில் மைக்கிரோதசு பிராந்தித், இயோசுபலாக்சு பைலேயி, மெரியோனசு உங்குவிலேட்டசு, ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. ஐரோப்பாவில், மைக்கிரோட்டசு, அப்போடெமசு உயிரினங்களும் எலிகளும் சுண்டெலிகளும், சிலவேளைகளில் ஆர்விக்கோலா டெரசுட்டிரிசு ஆகியவை பூஞ்செடிகள், காய்கறிகள், புல்வெளிகள், கூலங்கள் ஆகிவற்றை அழிக்கின்றன. தென் அமெரிக்காவில், பல் கொறிப்பி இனங்கள், குறிப்பாக 'ஓலோச்சிலசு (Holochilus)", "அக்கோடான்", "கலோமிசு", "ஒலிகோரிசோமிசு", "பைலாட்டிசு", "சிகுமோடான்" , "சிஅகோடோண்டோமிசு" போன்ற உயிரினங்கள் கரும்பு, பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் ஆகியவற்றை அழிக்கின்றன. +கொறிப்பிகள் நோய்பரப்பலில் கணிசமான பங்கு வகிக்கின்றன. கருப்பெலிகள் தம்முடன் கொண்டுசெல்லும் வட எலியுண்ணிகள் வழியாக "யெர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis)" எனும் குச்சுயிரியைப் பரப்பி ஒருவகைப் பிளேக் நோயை பரப்புவதோடு, டைப்பசு, வைல் நோய், டக்சோபிளாச���மாசிசு, டிரைக்கினாசிசு போன்ற நோய்களை உருவாக்கவல்ல உயிரிகளையும் தம்முடன் கொண்டுசெல்கின்றன.பல கொறிப்பிகள் பூமாலை உள்ளடங்கிய அண்டாநச்சுயிரிகள், தோபிரவா நச்சுயிரிகள், சாரேமா நச்சுயிரிகள், ஆகிய தொற்றுதரும் நச்சுயிரிகளைக் கொண்டுசெல்கின்றன. கொறிப்பிகள், பாபேசியாசிசு, தோல்சார் இலெழ்சுமசியாசிசு, மாந்தக் குறுணை அனாபிளாசுமாசிசு, இலைம் நோய், ஓம்சுக் மூளைக்காய்ச்சல், போவாசான் நச்சுயிரி, என்புருக்கியம்மை, தளர்த்து காய்ச்சல், கன்மலைப் பொட்டுக் காய்ச்சல், மேற்கு நைல் நச்சுயிரி ஆகிய நோய்களையும் உருவாக்குகின்றன. + + + + + + + +மேற்கு இந்தியா + +மேற்கு இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் முன்னர் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன. + +இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன. + + + + + +இந்தியாவின் தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் + +இந்தியா ஒரு பெரிய நாடு மட்டுமன்றி, பல்வேறுபட்ட இயற்கைச் சூழல்களையும், பெருமளவிலான உயிரின வளங்களையும் கொண்டது. பனிபடர்ந்த மலைப்பகுதிகளும், பசுமையான காடுகளும், சுட்டெரிக்கும் பாலைவனப் பகுதிகளும் இந்தியாவின் பகுதிகளாக இருக்கின்றன. காட்டு வகைகளில், பதினாறு பெருவகைகள் இந்தியாவில் உள்ளன. இப்பெரு வகைகளுள் 200க்கு மேற்பட்ட வகையான காடுகள் அடங்கியுள்ளன. இக்காடுகளும் ஏனைய இயற்கைச் சூழல்களும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடங்கள். இவ்வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டனவே இந்தியாவின் தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் ஆகும். + +இந்தியாவில் ஏறத்தாழ 65000 உயிரின வகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள், + + +என்பன அடங்குகின்றன. இவற்றைவிட சுமார் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட பூக்கும் தாவர வகைகளும் இங்கே காணப்படுகின்றன. + +இந்தியாவில் 450 தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் உள்ளத���கக் கூறப்படுகின்றது. இவற்றுட் சிலவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. + + + + + +டாச்சிகம் தேசியப் பூங்கா + +டாச்சிகம் தேசியப் பூங்கா (Dachigam National Park) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற "டால் ஏரியின்" நீர்தாங்கு பகுதியின் அரைப்பங்கைத் தன்னுள் அடக்கியுள்ள இப்பூங்கா ஸ்ரீநகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இமயமலைப் பகுதிக்கேயுரிய பல தனித்துவமான தாவர, விலங்கின வகைகளை இங்கே காணலாம். அழியும் நிலையிலிருக்கும் விலங்கினமான "சிவப்பு மான்" இங்கே வாழ்கின்றது. + + + + +துத்வா தேசியப் பூங்கா + +துத்வா தேசியப் பூங்கா ("Dhudwa National Park") இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், "கேரி" மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய-நேபாள எல்லையை அண்டி அமைந்துள்ள இது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம் என்பன இங்கே அதிகமாகக் காணப்படுகின்றன. + +மலைப்பாம்புகள் இங்கே பொதுவாகக் காணப்படும் ஊர்வனவாகும். இப் பூங்கா பறவைகள் அவதானிப்பவர்களைக் கவரும் ஒரு இடமாகும். + + + + +கேவலாதேவ் தேசியப் பூங்கா + +கேவலாதேவ் தேசியப் பூங்கா (Keoladeo National Park) இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. + +இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 300 க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும். + +1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. + + + + +சைபீரியக் கொக���கு + +குருஸ் லெய்கோகெரானஸ் (Grus leucogeranus) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சைபீரியக் கொக்கு, குரூய்டே (Gruidae) என்னும் கொக்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை சைபீரிய வெள்ளைக் கொக்கு அல்லது பனிக்கொக்கு என்றும் அழைப்பதுண்டு. + +இவ் இனங்கள் ஆர்க்டிக் ரஷ்யாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கோடைகாலத்தைக் கழிப்பதற்காக நீண்டதூரம் புலம்பெயரும் போக்குக் (வலசை) கொண்டவை. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கொக்குகள், கோடையில் சீனாவில் உள்ள யாங்க்சே நதிக் கரைக்கு வருகின்றன. மத்திய பகுதியைச் சேர்ந்தவை, இந்தியாவிலுள்ள பரத்பூர் தேசியப் பூங்காவிற்கும், மேற்கத்திய கொக்குகள் ஈரானுக்கும் செல்கின்றன. + + + + + +மின் தன்மை + +மின் தன்மை என்பது மின் இயல்பு கொண்ட தன்மை. மின்னூட்டம் அல்லது மின் ஏற்பு பெற்ற பொருளின் இயல்பு. மின் தன்மையில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை நேர்மின்னூட்டம் அல்லது நேர்மின்னேற்பு என்றும் மற்றையது எதிர்மின்னூட்டம் அல்லது எதிர்மின்னேற்பு என்றும் அழைக்கப்படுகின்றது. + +ஓரணுவி்ன் உள்ளே கருவில் உள்ள துகள்களில் சில நேர்மின்னூட்டம் உடையவை, இவைகளை நேர்மின்னிகள் என்றும் புரோத்தன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால் அணுவின் கருவைச் சுற்றி அலைந்து வரும் மிக நுண்ணிய துகள்கள் எதிர்மின்னூட்டம் உடையவை. இவை எதிர்மின்னிகள் அல்லது இலத்திரன்கள் என அழைக்கப்படுகின்றன. + + + + +தம்புள்ளை பொற்கோவில் + +தம்புள்ளை பொற்கோவில் (தம்புள்ளை குகையோவியங்கள்), (சிங்களம்: தம்̆பூலூ லெந் விஹாரய) இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். இது 1991 இல் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. + +கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் சிறு மலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. + +முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சி��ைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்பொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை. + + + + +சுற்றிழுப்பசைவு + +சுற்றிழுப்பசைவு அல்லது சுற்றுச்சுருங்கல் அசைவு (இலங்கை வழக்கு) ("peristalsis") என்பது அடுத்தடுத்து நிகழும் தசைச்சுருக்கங்களால் ஒரு குழாய் வழியாக ஏற்படும் பொருட்களின் நகர்ச்சியைக் குறிக்கும். விலங்குகளின் உணவுக்குழாய் வழியே உணவு நகர்தல் இம்முறையின் பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். முட்டைக் குழாய் ("oviduct") வழியே கருவுறு முட்டைகள் நகர்தல், சிறுநீரக நாளம் ("ureter") வழியாக சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை சிறுநீர் நகர்தல், புணர்ச்சிப் பரவசநிலையின் போது விந்து தள்ளப்படுதல் முதலியவை இவ்வசைவினால் தான். + +இவ்வசைவு ஒரு அலை போன்ற தோற்றம் தரும். ஓரிடத்தில் ஏற்படும் சுருக்கத்தின் விளைவாக குழாயுள் இருக்கும் பொருள் சற்று முன்னே நகர்கிறது. இதன் பின், அந்த நகர்ந்த இடத்தில் குழாய் சுருங்குவதால், அது மேலும் நகர்த்தப்படுகிறது. இப்படியாக ஓரொழுங்குட்டன் ஏற்படும் சுருங்கி விரிதலினால் உணவு முதலிய பொருட்களை நகர்த்த முடிகிறது. இந்நகர்வு அதன் இயல்பு காரணமாக புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகக் கூட செயல்பட முடியும். இதே அடிப்படையில் இயங்கும் எக்கி அல்லது இறைப்பியை சுற்றிழுப்பசைவு எக்கி எனக் குறிப்பிடுவர். + + + + + +முதுகெலும்பி + +முதுகெலும்பிகள் ("Vertebrate") அல்லது முள்ளந்தண்டுளிகள் எனப்படுவை "முதுகெலும்பு" அல்லது "தண்டு வடத்தினைக்" கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும். + + + + +ஈரோ சாரினென் + +ஈரோ சாரினென் (ஆகஸ்ட் 20, 1910 - செப்டெம்பர் 1, 1961) ஒரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரும், உற்��த்திப்பொருள் வடிவமைப்பாளரும் ஆவார். இவர் ஒரு பின்லாந்திய அமெரிக்கர். + +இவர் பின்லாந்திலுள்ள கேர்க்கோனும்மி (Kirkkonummi) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற பின்லாந்தியக் கட்டிடக்கலைஞரான ஏலியல் சாரினென் என்பாரின் மகன். இவர் மிச்சிகனில் உள்ள கலைகளுக்கான கிரான்புரூக் அக்கடமியில் (Cranbrook Academy of Art) பயின்றார். 1934 ல் யேல் பல்கலைக் கழகத்தில் கட்டிடக்கலையில் இளமாணி (B.Arch) பட்டத்தைப் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். + +1948 இல் நடைபெற்ற, ஜெபர்சன் தேசிய விரிவாக்க நினைவகத்துக்கான போட்டியொன்றில் பரிசு பெற்றதன் மூலம், இவர் முன்னணிக்கு வந்தார். "ஜெனரல் மோட்டோர்" தொழில்நுட்ப மையம், TWA விமானநிலையம் போன்ற புகழ் பெற்ற பல கட்டிடங்களை இவர் வடிவமைத்தார். உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சிட்னி ஒப்பேரா மண்டபத்தின் வடிவமைப்புக்காக நடத்தப்பட்ட போட்டியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார். + + + + +உள் எரி பொறி + +உள் எரி பொறி "(internal combustion engine)" என்பது ஒரு வெப்பப் பொறியாகும். இதில் எரிபொருள் காற்றுடன் கலந்து ஓர் உருளை வடிவ எரியறைக்குள் எரிந்து பொறி இயங்கும் ஆற்றலைத் தருகிறது. இதில் உயர் வெப்பநிலை, உயரழுத்த வளிமங்கள் எரிவதால் விரிவடைந்து ஏற்படும் விசையை பொறியின் ஓர் உறுப்புக்கு அளிக்கும். வழக்கமாக இவ்விசை உலக்கை அல்லது சுழலி அலகுகள் அல்லது சுற்றகம் அல்லது முற்செலுத்த கூம்பு குழலுக்கு தரப்படுகிறது. இந்த விசை அந்த உறுப்பை சிறிது தொலைவுக்கு நகர்த்தும். எனவே இதில் வேதி ஆற்றல் பயனுள்ள இயக்க ஆற்றலாக மாறுகிறது. + +முதல் வணிகவியலாக வெற்றிகண்ட உள் எரி பொறி 1859 இல் ஏட்டியென் இலினோவா அவர்களால் உருவாக்கப்பட்டது. முதல் புத்தியல் கால உள் எரி பொறி 1876இல் நிகோலசு ஆட்டோவால் புனையப்பட்டது, + +"உள் எரி பொறி"வழக்கமாக இடைவிட்ட எரிதல் நிகழும் நான்கு வீச்சு, இருவீச்சு உலக்கைப் பொறிகளையும் ஆறு வீச்சு உலக்கைப் பொறிகளையும் [[Wankel engine|வேங்கல் சுழற்பொறியையும் சுட்டும். இதன் இரண்டாம் வகையான தொடர்ந்த எரிதல் நிகழும் பொறிகள் [[வளிமச் சுழலி]]கள், [[தாரைப் பொறி]]கள், பெரும்பாலான ஏவூர்திப் பொறிகள் ஆகியவற்றைச் சுட்டும். [[துப்பாக்கி]]களும் உள் எரி பொறியின் வடிவங்களே. + +இவை [[நீராவிப் பொறி]], [[சுட���டிர்லிங் பொறி]] போன்ற வெளி எரி பொறிகளில் இருந்து வேறுபாவையாகும். பின்னவற்றில் எரியும்போது உருவாகும் கழிவுப் பொருள்கள் ஆற்றல் வழங்கும் வினைபுரி பாய்மத்தோடு கலப்பதில்லை. இவற்றில் வேலை செய்யும் பாய்மமாகக் காற்றோ, வெந்நீரோ, அழுந்திய நீரோ நீர்ம உவர்மமோ அமையும். இவை ஒரு கொதிகலனில் சூடேற்றப்படும். ஆனால், உள் எரி பொறிகள் எப்போதும் ஆற்றல் அடர்ந்த பெட்ரோல், டீசல், [[புதை படிவ எரிமம்]] வழி கிடைத்த நீர்மம் போன்ற எரிமங்களைப் பயன்படுத்தும். இவை இயக்கமில்லாத பயன்பாடுகளைப் பெற்றிருந்தாலும் வழக்கமாக இயங்கு அமைப்புகளிலேயே பெரிதும் பயன்படுகின்றன. சீருந்த், வானூர்தி, விசைப்படகுகள் போன்ற ஊர்திகளுக்கு இவை மிகவும் தேவைப்படுகின்றன. + +உள் எரி பொறிகள் வழக்கமாக [[இயற்கை வளிமம்]] அல்லது [[பாறை எண்ணெய்]]ப் பொருட்களாகிய [[பெட்ரோல்]], [[டீசல் எரிமம்]] [[எரிம எண்ணெய்]] போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. அமுக்கம் வழி எரிதல் நிகழும் பொறிகளில் உயிரிடீசலின் பயன்பாடும் வளர்ந்து வருகிறது தீமுளைவழி எரிதல் மூட்டப்படும் பொறிகளில் உயிரி எத்தனால், மெத்தனால், போன்ற புதுப்பிக்க முடிந்த எரிமங்கள் பயன்பாட்டில் வந்துள்ளன. புதைபடிவ எரிமத்தில் இருந்த்o அல்லது புதுப்பிக்க முடிந்த ஆற்றலில் இருந்தோ உர்வாக்கப்படும் நீரக வளிமமும் சிலவேளைகளில் பயன்படுவதுண்டு. + +இந்த இயந்திரத்தில் ஓர் உருளை வடிவக் கொள்கலம் உள்ளது. இதற்கு உந்தறை என்று பெயர். இந்த உந்தறையின் உள்ளே அதன் உள் விட்டத்தில் மிகவும் நெருக்கமாகப் பொருந்தி மேலும் கீழுமாக நகரக் கூடிய வட்டத் தட்டு ஒன்று உண்டு இதற்கு உந்துத் தட்டு என்று பெயர். இந்த உந்துத் தட்டோடு இணைக்கப்பட்ட தண்டு ஒன்று நடுவே உண்டு. இந்த தண்டை, "[[உந்து தண்டு]]," அல்லது மேலும் கீழுமாக உலவி வருவதால் "உலக்கை" என வழங்குவதுண்டு. இத்தண்டு பொருத்திய வட்டத் தட்டும் நடுத்தண்டும் சேர்ந்து உந்துலக்கை என்று பெயர் பெறுகின்றது. + +உள்ளே வளிமமும் சிறிது காற்றும் கலந்து பாய்வதற்கு வழி ஒன்று உள்ளது. உந்தி நகர்ந்து உந்தறையில் இடம் பெரியதாகி விரிவடையும்போது, வளிமமும், காற்றும் உந்தறைக்குள்ளே இழுக்கப்பட்டு உள்நுழையும். இதற்கு உட்கொள் வீச்சு என்று பெயர். + +அடுத்ததாக, உந்தி உந்தறைக்குள் நகர்ந்து வளிமம் உள்ள இடத்தைச் சுருக்குவதால், உள்ளிருக்கும் வளி மம் வெகுவாக அமுக்கப்பட்டு அழுத்தம் கூடுகின்றது. எனவே இதற்கு அமுக்க வீச்சு என்று பெயர். +இவ்வாறு எரிவளிமம் அழுத்தப்படும் பொழுது, ஓரளவுக்கு மேல் அழுத்தம் மீறினால், இவ்வளிமம் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கும். அப்படி எரியத்தொடங்கும் வளிமம் விரிவடையத் தொடங்குகிறது. அப்பொழுது உந்தியை வலுவாய் தள்ளி தன் இடத்தை விரிவடையச் செய்யும். இதுதான் திறன் தரும் வீச்சு. + +வளிமம் எரிந்தவுடன், அதிலுள்ள ஆற்றல் ஒடுங்கிவிடும், எனவே, எரிந்து மீதமுள்ள கழிவு வளிமங்களை (இவை இன்னமும் சூடாக இருக்கும்) உந்தி நகர்ந்து அமுக்கி உந்தறையோடு இணைக்கப்பட்ட ஒரு கழிவாய் குழாயின் வழியாக வெளியேற்றிவிடும். இதுதான் கழிவகற்றும் வீச்சு அல்லது வெளியேற்றும் வீச்சு ஆகும். + +இப்படியாக இந்த நான்கு வீச்சுகளில், உந்தி ஒன்று உந்தறையில் மேலும் கீழுமாக ஊடாடச் செய்து, இந்த உந்தியின் மேலும் கீழுமான ஊடாட்டத்தை சுழல் நகர்ச்சியாக மாற்றி, இப்பொறியை வண்டிகளில் பொருத்தி அவற்றை இயக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். + +மேற்கண்ட நான்கு இயங்கு நிலைகளில் திறன் தரும் வீச்சில் எரிபொருளைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் ஆற்றலை வைத்தே மற்றைய மூன்று இயங்கு நிலைகளும் நடைபெறுகின்றன. + +இதன் இயக்கத்தைப் வலப்பக்க படத்தில் காணலாம். +[[படிமம்:4-Stroke-Engine.gif|thumb|200px| வீச்சு உள் எரி பொறி இயக்கம். வளிமம் அமுக்கியதும், எரிவதையும், விரிவடைவதையும் காணலாம். மேலும் வளிமம் உள்ளே இழுக்கப்படுவதும், எரிந்தபின் வெளியே உந்தித் தள்ளப்படுவதும் காணலாம்]] + +[[படிமம்:Two-Stroke Engine.gif|thumb|left|2-வீச்சு எந்திரம்]] + +முதல் முதலாக ஆக்கப்பட்ட உள்ளெரி பொறிகளில், வளிமத்தை அமுக்கி எரியச் செய்யவில்லை. இதுதான் தற்கால உள்ளெரி பொறிக்கும், முன்னர் இருந்த பொறிகளுக்கும் உள்ள தலையாய வேறுபாடு. உள் எரி பொறியின் வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சிகள் கீழே தரப்படுகின்றன. +பல்வேறு அறிவியலாளர்களும் பொறியாளர்களும் உள் எரி பொறியினை உருவாக்க பங்களிப்புகள் செய்துள்ளனர். +In 1854 in the UK, the Italian inventors [[Eugenio Barsanti]] and [[Felice Matteucci]] tried to patent "Obtaining motive power by the explosion of gases", although the application did not progress to the granted stage. + +[[File:Wankel Cycle anim en.gif|thumb|upright|வான்கேல் சுழல் வட்டிப்பு. சுற்றகத்தின் ஒவ்வொரு சுழல்வுக்கும் இடையில் அச்சுத்தண்டு புடை இதழைச் சுற்றி மும்முறையும் மையம்பிற���் அச்சுத்தண்டின் ஒவ்வொரு வட்டணைச் சுழல்வுக்கும் ஒருமுறையும் சுழல்கிறது.]] + + + +[[பகுப்பு:வெப்ப இயந்திரவியல் பாகங்கள்]] +[[பகுப்பு:வெப்ப இயக்கவியல்]] +[[பகுப்பு:பொறிகள்]] +[[பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்]] + + + +திருச்சிராப்பள்ளி குடைவரை + +பல்லவர் குடைவரை கோவிலும், பாண்டியர் குடைவரை கோவிலும் அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும். + +மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக கருதப்படுகிறது. + +மலையின் இடைச்சுற்றில், யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே சிறிது தொலைவில் பாண்டியர் குடைவரை அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையைவிடப் பெரியது. + + + + +நார்த்தாமலை குடைவரை + +புதுக்கோட்டைக்கு அருகே உள்ள நார்த்தாமலையில் சோழர் காலத்து கற்கோவிலும், நார்த்தாமலை குடைவரை கோவிலும் உள்ளன. மிக அழகான கட்டமைப்பும் வேலைப்பாடுகளும் அமைந்ததாக உள்ளது இக்கற்கோவில். இக்கோவிலின் உட்சுற்று (பிரகாரம்) வட்ட வடிவில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். கற்கோவிலின் எதிரே குடைவரை கோவில் அமைந்துள்ளது. + + + + +சாடி கார்னோ + +"பிரெஞ்சு அரசுத் தலைவர் (1887-1894) பற்றி அறிய மரீ பிரான்சுவா சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும்." + +நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோ ("Nicolas Léonard Sadi Carnot"; ஜூன் 1 1796 – ஆகஸ்ட் 24 1832) என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வெப்ப இயக்கவியல் துறையில் முன்னோடியாக பெரும் புகழ் நாட்டிய அறிவியல் அறிஞர். இவருடைய முழுப்பெயர் "நிக்கொலா லியோனார் சாடி கார்னோ". இவரின் தந்தையார் லசாரெ கார்னோ ஒரு பிரெஞ்சுப் புரட்சிக்காரர். அவர் தமக்கு ஈரானில் இருக்கும் சிராசில் உள்ள சாடி என்னும் பெர்சியக் கவிஞரின் மேல் இருந்த மதிப்பால் தம் மகனுக்கு சாடி என்னும் பெயரைத் தந்தார். சாடி கார்னோ பிறந்த சிறிது காலத்துக்குள்ளேயே, லாசரெ கார்னோ அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது, ஆனால் பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்த பின் இவர் நெப்போலியனின் அரசில் போர்த்துறைக்கு அமைச்சராய் வந்து சேர்ந்தார். ���னினும், அவ்வேலையில் அவர் நிலைக்காமல், விலகி விட்டார். இதனால் தன் மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வசதியாக இருந்தது. + +சாடி கார்னோ 1812-ல் "ஈக்கோலே பாலிடெக்னிக்" என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றார். 1814-ல் கல்வியை முடித்துவிட்டு வந்த பின், பிரெஞ்சுப் படையில் சேர்ந்து பெரும்பாலும் அதிலேயே இருந்தார். இவருக்கு போதிய பதவி உயர்வுகள் தாராவிட்டாலும், இவர் பல அறிவியற் சொற்பொழிவுகளுக்குச் சென்றும், புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களோடு ஆழ உரையாடியும் தம் அறிவை செழுமைப்படுத்தி வந்தார். அக்காலத்தில், சாடி கார்னோவிற்கு முதன்மையான கேள்வி, எப்படி நீராவி எந்திரத்தை திறன் மிகுந்ததாகச் செய்வது என்பதுதான். அக்காலத்தில், ஆங்கிலேயர்கள் இந்த நீராவி எந்திரத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தனர். பிரான்சு நாட்டில் அவ்வாறு இல்லாமலும், நீராவி எந்திரங்களை இறக்குமதி செய்து கொண்டும் இருந்தனர். எனவே இவர் ஆய்வுகள் செய்து 1824-ல் "தீயின் இயக்கு விசையைப் பற்றிய எண்ணங்கள்" (Réflexions sur la puissance motrice du feu et sur les machines propres à développer cette puissance) என்னும் ஒரு சிறு நூலை வெளியிட்டார். அது இன்றளவும் போற்றப்படுகின்றது. + +இவருடைய பெரும் புகழ் வாய்ந்த கார்னோவின் நான்கு-நிலை-சுழற்சி என்பது வெப்பத்தால் இயங்கும் எந்திரங்களுக்கு ஒரு கருத்தியல் அடிப்படையாக உள்ளது. + + + + + +வெப்ப எந்திரம் + +வெப்ப எந்திரம் என்பது வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாய் மாற்றும் ஓர் எந்திரம். வெப்பநிலை வேறுபாடுகளைப் பயன்படுத்தி, உயர் வெப்பநிலையில் இருந்து தாழ் வெப்பநிலைக்கு மாறும்பொழுது வெப்ப ஆற்றலை (நகர்ச்சி போன்ற) இயங்கு ஆற்றலாக மாற்ற இயலும். பெரும்பாலும் ஒரு நீர்மம் (திரவம்) அல்லது வளிமம் (வாயு) விரிவடைவதன் மூலம் வேலை நிகழ்கின்றது. நீராவி எந்திரம், உள் எரி பொறியால் இயங்கும் தானுந்து, 'டீசல் எந்திரம் எவையெல்லாம் இந்த வெப்ப எந்திரத்தின் அடைப்படையிலேயே, வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாக மாற்றுகிறது. இதனை விளக்கும் துறை வெப்ப இயக்கவியல் என்பதாகும். + +குளிர்ப்பதனப் பெட்டி ("Refrigerator") அல்லது குளிர்வி என்பது வெப்ப எந்திரத்திற்கு நேர் எதிரான முறையில் இயங்குகிறது. இதை இயக்க வேலை செய்து (ஆற்றல் செலவழித்து), வெப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திகிறது. வெ��்ப எந்திரம் வெப்ப வேறுபாடுகளைப் பயன்படுத்தி வேலை செய்விக்கிறது. + + + + + +குடுமியான்மலை குடைவரை + +புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலும், அதன் பின்புறம் உள்ள குடைவரையும், அதன் அருகிலுள்ள இசைக்கல்வெட்டும் மிகச்சிறப்பு வாய்ந்தவை. குடுமிநாதர் கோவில் சிற்பங்கள் மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. மாலிக் காபூரின்படையெடுப்பில் சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன. + +குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டத்தில், குளத்தூர் வட்டத்திலே உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். கிழக்கே 10 கி.மீ தொலைவில் ஓவியக்கலைக்கு புகழ் வாய்ந்த சித்தன்னவாசலும், மேற்கே 25 கி.மீ தொல்வில் கலை மிக்க கொடும்பாளூர் உள்ளது. இக் குடுமியான்மலை தன் வரலாற்றில் வேறு பெயர்களும் கொண்டு இருந்தன. அவற்றுல் திருநிலக்குன்றம் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) , திருநலக் குன்றம் (கி.பி. 8ஆம் நூ) , சிங்கா நல்லூர் (இரண்டாம் இராசராசன் காலம், 12 ஆம் நூற்றாண்டு) என்பன சில. + +குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் அறிஞர். +திருமெய்யம், மலையடிபட்டி என்னும் ஊர்களிலும், இக்குடுமியான்மலையில் உள்ளதைப்போல் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டில் உள்ள இசை நுணக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை. இவை தமிழிசையே என்பார் யாழ்நூல் என்னும் இசை நூல் எழுதிய விபுலானந்த அடிகள் . கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுத்ததாகக் கருதப்படும் பரத முனிவரின் இசை நூலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சங்கீத ரத்தினாகரத்திற்கும் இடைப்பட்ட காலத்திய இசைச் செய்தி என்பதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. + + + + + +அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி + +அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ("Alagappa Chettiar College of Engineering and Technology") தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. + + + + + + + + + + + + + + +சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் + +சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. +இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. + +சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை. + +இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. + +சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது. + +இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன. + +சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதிய��ல் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார். + +தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். +நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர். + +சித்தன்னவாசலில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதால் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம். முதலில் இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் என கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625-640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640-670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது. + +இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையது என்றும் சைன சமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆசீவகத்துறவிகளுடையது எனச்சொல்லும் க. நெடுஞ்செழியன் ஓவியங்களில் காணப்படும் மூன்று ஆண்கள் குளத்தில் நீராடுவது போல் இருப்பதாலும் தலைமுடியை நன்கு வளர்த்திருப்பதாலும் இது சைன துறவுநெறிக்கு முரண்பட்டிருப்பதால் இது ஆசீவக ஓவியங்கள் என்கிறார். + +பாறை ஓவியங்கள் மலையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. + + + + + + +திருமயம் + +'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. + +மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,350 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 4,165 ஆண்கள், 4,185 பெண்கள் ஆவார்கள். திருமயம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.36% ஆகும். திருமயம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். +திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை, +என பாடியுள்ளார். + +இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887ல் பிறந்தார். + +திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன. + + + + + + +நோயறிதல் + +நோயறிதல் என்பது பொதுவாக ஒரு நோயை அதன் அறிகுறிகள் ("signs"), உற்றவரின் உணர்குறிகள் ("symptoms"), மற்றும் மருத்துவ ஆய்வகப் பரிசோதனைகள் முதலியவற்றின் துணைகொண்டு அடையாளம் காண்பதாகும். மருத்துவத் துறை அல்லாமல் பொதுப் பயன்பாட்டில் அறுதியிடல் எனுஞ்சொல் எந்த ஒரு சிக்கலையும் முறைப்படி ஆய்ந்து அடிப்படைக் காரணத்தைக் காணும் முறையைக் குறிக்கும். + +பொதுவாக, நோயுற்றவர் அல்லது நோயுற்ற விலங்கின் காப்பாளர் சில உணர்குறிகள் அல்லது அறிகுறிகளின் பேரில் மருத்துவரை அணுகுவர். மருத்துவர் நோயின் வரலாறு, தன்மை, அறிகுறிகள் ஆகியவற்றைக் கண்டு சில கருதுகோள்களை மனதில் கொள்வார். பின், தேவைக்கேற்ப ஆய்வகப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அவை, மலம், சிறுநீர், குருதி, உமிழ்நீர் ஆகியவற்றின் உயிர்வேதியியல் ஆய்வாகவோ, அல்லது சில நேரங்களில் உள்ளுறுப்புக்களை ஆய்ந்தறியும் கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம், மீயொலி வரிக் கண்ணோட்டம் போன்றவையாகவோ இருக்கலாம். இதன் முடிவில் அவரது கருதுகோளிற்கு ஆதரவாகவோ எதிராகவோ உள்ள கூறுகளை மனதில் கொண்டு உற்றிருப்பது இன்ன நோய் என அறுதியிடுவார். + +ஹிப்பொக்ரட்டிஸ், பித்தாகரஸ் முதலிய கிரேக்க அறிஞர்களும், இந்தியாவைச் சேர்ந்த திருமூலர், சுஸ்ருதர் போன்றவர்களும், பின்னாளில் கனேடிய அறிஞர் வில்லியம் ஓஸ்லர், ஆங்கிலேய வல்லுநர் கெர்ராடு போன்றோரும் இதுபற்றி ஆய்ந்துள்ளனர். இலக்கியத்திலும் இதுபற்றி பலர் எழுதியுள்ளனர். எடுத்துக்காட்டாக, திருவள்ளுவரின் பின்வரும் திருக்குறளைக் காண்க: + + + + +சிம்ரன் + +சிம்ரன் (, பிறப்பு:ஏப்ரல் 4, 1976) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். + +சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் "சூப்பர் ஹிட் முகாபுலா" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் "சனம் ஹர்ஜாய்" தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான "தேரே மேரே சப்னே" இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் "இந்திரபிரஸ்தம்", கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் "சிம்ஹடா மாரி" படத்திலும் "அப்பாய் காரி பெல்லி" என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு "ஒன்ஸ்மோர்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். + +தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த "கோவில்பட்டி வீரலட்சுமி" (2003) மற்றும் "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார். + + + + + +ஜோதிகா + +ஜோதிகா (பிறப்பு - அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் "ஜோதிகா சாதனா". தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். + + + + + + + +மாதவன் + +ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது. +மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்: + + + + +நாளந்தா பல்கலைக்கழகம் + +நாளந்தா பல்கலைக்கழகம்- "நாளாந்தா" என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது. பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது மகாயான புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது . + +இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் . + +இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. +மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது. + +இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார். + +அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 3,000 மாணவர்களும் 5,41 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இப்பல்கலைக்கழக்த்தின் புகழ் பெற��ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 முதல் 200 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன. + +தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.. + +தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. + + + + + + +மெக்சிக்கோ + +மெக்சிக்கோ (எசுப்பானியம்: México, "மெஹிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்) பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது. + +கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இ��் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார். + +மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர். + +2006 ஆம் ஆண்டிலிருந்து, மெ��்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர். + +புதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை. + +"மெஹிகோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது. + +அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது "மெக்சிக்கப் பேரரசு" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் "மெக்சிக்கோக் குடியரசு" எனக் குறிப்பிடப்பட்டது. + +மெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர். புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது. + +1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும். + +மெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது. + +மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது. + +எனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன. + +"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ��கும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர். + +கூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன. மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது. + + + + +தேக்கு + +தேக்கு மரம் வெப்பமண்டல வன்மரச் சாதிகளுள் ஒன்றான வேர்பெனேசியேயைச் சேர்ந்தது. இது தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காடுகளின் ஒரு கூறாக இத்தாவரங்கள் காணப்படுகின்றன. தேக்கு பெரிய மரமாகும். 30 தொடக்கம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. + +மூன்று வகையான தேக்கு மரங்கள் உள்ளன. + + +இம் மரம், தளபாட உற்பத்தி, கப்பல் தளம் கட்டுதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது. + + + + +வெப்ப வலயம் + +வெப்ப வலயம் அல்லது அயன வலயம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. + +இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது. + +பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும். இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் மழைக்காலம், மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது மாரிகாலம் எனவும் உலர்காலமானது கோடைகாலம் எனவும் அழைக்கப்படும். மிதவெப்பமண்டலத்தில் போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை இலையுதிர்காலம் எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை இளவேனிற்காலம் எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை குளிர்காலம் என்றும் அழைப்பார்கள். + +தெர்மோ என்ற கிரேக்கச் சொல்லினை இந்த அடுக்கினைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள். பூமியிருந்து 80 கி.மீக்கு மேல் இருப்பதால் இங்கு வாயுக்களின் மூலக்கூறு நிறை குறைவாக இருக்கிறது. ஆக்சிஜன் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. மேலும் இங்கு சூர்ய கதிரியக்கம் உறிஞ்சப்படுகிறது. இதனால் இங்கு வெப்பநிலை 1500 டிகிரி வரை உயருகிறது. + + + + +வெப்ப மண்டலச் சூறாவளி + +சுழலும் தாழ்வளியழுத்தப் பகுதியை நடுவில் கொண்ட வெப்பமண்டலத்தில் உருவாகும் ஒரு புயலின் வகையே வெப்ப மண்டலச் சூறாவளி "(Tropical Cyclone )"ஆகும். இதில் தாழ்மட்ட வளிமண்டலச் சுழற்சியே நிலவும். இது பொதுவாக உயர் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்த பெருங்கடல்களில் தோன்றும். இதில் வலிவான காற்றும் சுருள் வடிவிலான பெருமழை பொழியக்கூடிய இடிபுயல்களும் அமைந்திருக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்று வலிமையையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம். அவை, விசைச்சூறை (), கடுஞ்சூறை (), வெப்ப மண்டலப் புயல், சூறைப்புயல், வெப்ப மண்டலத் தாழ் அழுத்தம், அல்லது வெறுமனே சூறாவளி என்பனவாகும். விசைச்சூறை என்பது அத்திலாந்திக் பெருங்கடலிலும் வடகிழக்கு அமைதிப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும். கடுஞ்சூறை என்பது வடகிழக்கு அமைதிப் பெருங்கடலில் தோன்றுவதாகும். சூறாவளி தென் அமைதிப் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும். + +வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஒப்பீட்டளவில் வெதுவெதுப்பான மாபெரும் நீர்நிலைகள் மீதே தோன்றுகின்றன. இவை தம் ஆற்றலை பெருங்கடல்களின் மேற்பரப்பு நீரின் ஆவியாதலில் இருந்து பெறுகின்றன, இந்த ஆவியாதல், ஈரக்காற்று மேலெழும்போது, குளிர்தலால் தெவிட்டலுற்று, மீள்சுருங்கலால் முகில்களாகவும் பின்னர் மழையாகவும் உருமாறுகின்றன. இவற்றின் ஆற்றல் வாயில் நடு அகலாங்கு சூறாவளிகளான வடகீழைப் புயல்களில் இருந்தும் ஐரோப்பிய காற்றுப்புயல்களில் இருந்தும் வேறுபடுகிறது. பின்னவை தம் ஆற்றலை முதன்மையாக கிடைநிலை வெப்பநிலை வேறுபாட்டில் இருந்து பெறுகின்றன. வெப்ப மண்டலச் சூறாவளியின் வலிமையான சுழற்காற்று, சுழலச்சுக்கு உள்முகமாக காற்று பாயும்போது அதற்கு புவியின் சுழற்சி தரும் கோண உந்த அழியாமை இயல்பால் ஏற்படுகிறது. இந்த விளைவால், இவை நிலநடுவரைக்கு 5 பாகை வடக்கிலும் தெற்கிலும் அமைந்த அமைதி மண்டலத்தில் உருவாதல் இல்லை. வெப்ப மண்டலச் சூறாவளிகளின் விட்டம் ஏறத்தாழ 100 முதல் 2,000 கிமீ வரையில் அமைகிறது. ஆப்பிரிக்க கீழைத்தாரை விளைவால் இவை தென் அரைக்கோளத்தில் அருகியே அமைகின்றன. அத்திலாந்திக் பெருங்கடலிலும் அமெரிக்காசிலும் வெதுப்பான நீரால் உருவாகும் இப்புயல்கள் வட அரைக்கோளத்தில் தோன்றுகின்றன. மேலும் நிலநடுவரைக்குத் தெற்காக அமையும் குத்துநிலைக் காற்றுத் துணிப்பு விசை அங்கு, வெப்ப மண்டலத் தாழ்வழுத்தமும் புயல்களும் வெப்ப மண்டலச் சூறாவளிகளாக உருவாதலைத் தவிர்க்கின்றன. + +"வெப்பமண்டலம்" என்பது இச் சூறாவளி தோன்றும் புவிக்கோளப் பகுதியைக் குறிக்கும். பெரும்பாலும் இவை வெப்ப மண்டலப் பெருங்கடல்களிலேயே தோன்றுகின்றன. "சூறாவளி" இதன் சுழற்சித் தன்மையைக் குறிக்கிறது. இவற்றில் வடக்கு அரைக்கோளத்தில் காற்று இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் காற்று வலஞ்சுழியாகவும் சுழலும். காற்றுச் சுற்றோட்டத்தின் எதிர்திசை கொரியாலிசு விளைவால் ஏற்படுகிறது. + +வெப்ப மண்டலச் சூறாவளி அச்சமூட்டும் மழையையும் கடற்கொந்தளிப்பையும், அச்சமூட்டும் காற்றையும் உருவாக்கும். கடலை அண்மித்த பகுதிகளையே பொதுவாக இது தாக்கினாலும், சிலவேளைகளில் கடலிலிருந்து சேய்மையில் அமைந்த பகுதிகளையும் தாக்குவதுண்டு. + +உள்நாட்டுப் பகுதிகளைவிட கடற்கரைப் பகுதிகள் வெப்ப மண்டலச் சூறாவளிகளால் பெரிதும் தாக்கப்படுகின்றன. இந்தப் புயல்களுக்கான முதன்மையான ஆற்றல் வாயிலாக வெம்மையான பெருங்கடல் நீர் ��மைகிறது. எனவே இவை கடற்கரையருகில் வலிமை மிக்கனவாகவும் உள்ளே நிலம் நோக்கி நகர நகர விரைந்து தம் வலிமையில் குன்றுகின்றன. கடற்கரைச் சிதைவு கடுங்காற்று, மழியாலும் பேரலைகளாலும் புயல் உருவாக்கும் கடும் அழுத்த மாற்றங்களால் தோன்றும் அலையெழுச்சிகளாலும் கடும் புயல்களின் விளைவாலும் நிகழ்கிறது. வெப்ப மண்டலச் சூறாவளிகள் மிகப்பெரும் பரப்பில் இருந்து காற்றை தன்னுள் இழுக்கிறது. கடும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு இது மாபெரும் பரப்பாக அமையும். அந்தக் காற்றில் உள்ள நீரைச் (இதில் வளிமண்டல ஈரமும் கடல்நீர் ஆவியாக்க ஈரமும் அடங்கும்) செறிவாக மிகவும் சிறிய பரப்பில் மழையாகப் பொழிகிறது.மழை பொழிந்ததும், ஈரம் பொதிந்த காற்று தொடர்ந்து பதிலீடு செய்யப்படுவதால், மிக்க் கடும் மழை பொழிந்து, கடற்கரையில் இருந்து 40 கிமீ வரை ஆற்றில் உள்நோக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். இது அவ்வட்டார வளிமண்டலம் தாங்கும் நீரளவினும் பன்மடங்கானதாகும். + +இவை மக்கள்தொகைக்குப் பேரழிவை ஏற்படுத்தினாலும் வறட்சிநிலையைத் தவிர்க்க உதவுகின்றன. இவை வெப்ப ஆற்றலை வெப்ப மண்டலத்தில் இருந்து மிதவெப்ப அகலாங்குகளுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதால், வட்டார, புவிக் கோளக் காலநிலையைச் சமனப்படுத்துகின்றன. + +வெப்ப மண்டலச் சூறாவளிகள் வளிமண்டலத்தின் வெப்ப அடுக்குக் கோளத்தில்அமையும் ஒப்பீட்டளவில் தாழ்வான அழுத்த பகுதிகளாகும். அதேநேரத்தில் கடல்மேற்பரப்பிலும் தாழ் குத்துயரங்களிலும் மிக உயரழுத்த அலைவுகள் நிலவும். நம் புவியில், வெப்ப மண்டலச் சூறாவலிகளின் மையத்தில் அளக்கப்பட்ட அழுத்தம், கடல்மட்டத்தில் நோக்கப்பட்ட அழுத்த அளவீடுகளைவிட குறைவாகவே அமைகிறது. வெப்ப மண்டலச் சூறாவளி மையத்திற்கு அண்மையில் உள்ள சுற்றுச்சூழல் அனைத்துக் குத்துயரங்களிலும் வெளிச் சூழலைவிட வெம்மையாக அமைகிறது. எனவே இப்புயல்கள் "வெம்மையான அகட்டுப்" பான்மையைப் பெற்றுள்ள அமைப்புகளாக விளங்குகின்றன. + +வெப்ப மண்டலச் சூறாவளியின் மேற்பரப்பு அருகில் அமையும் காற்றுப் புலம் கண்ணைச் சுற்றிலும் வேகமாகச் சுழன்றபடி அதன் உள்நோக்கிப் பாயும் பான்மையைக் கொண்டுள்ளது. புயலின் வெளிவிளிம்பில், காற்று ஏறக்குறைய அமைதியாக அமையும்; என்றாலும், புவியின் சுழற்சியால், காற்ரு அங்கே சுழியா��ாத தனிக்கோண உந்த்த்தைப் பெற்றுள்ளது. காற்று ஆரநிலையில் உள்நோக்கிப் பாய்வதால், தன் கோண உந்தத்தைப் அழியாமல் பேண, அது சுழலும் புயலாக, குறிப்பாக வட அரைக்கோளத்தில் இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் வலஞ்சுழியாகவும் சுழலத் தொடங்குகிறது. அதன் உள்ளாரப் பகுதியில், காற்று வெப்ப அடுக்குக் கடப்புவெளி வரை மேலெழுகிறது. இந்த ஆரம் கண்சுவரின் உள்ளாரத்தோடு பொருந்திவிடுகிறது. இவ்வாரத்துக்குள் புயலின் வலிமையான மேற்பரப்பருகு காற்று வீசுகிறது; எனவே, இவ்வாரம் "பெருமக் காற்றாரம்" என வழங்கப்படுகிறது. மேலே சென்றதும், காற்று புயலின் மையத்தை விட்டு வெளியே பாயத் தொடங்குகிறது. அப்போது அடுக்குமுகில் அரணை உருவாக்குகிறது. + +இந்நிகழ்வுகள் அச்சுச் சீரொருமை வாய்ந்த காற்றுப் புலத்தை உருவாக்குகின்றன: மையத்தில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். பெருமக் காற்றாரம் நோக்கி வெளியே செல்ல செல்ல காற்றின் வேகம் விரைவாக உயர்ந்துகொண்டே போகும். பின்னர் படிப்படியாக குறைந்தபடி மிகப்பெரிய ஆரத்தில் அருகிவிடும். என்றாலும், காற்ருப் புலத்தில் வெளிசார்ந்தும் கால அடைவிலும் வேறுபாடுகலைப் பெற்றமையும். இவ்வேறுபாடுகளுக்கான காரணிகளாக, கள நிகழ்வுகளான வளிமண்டல வெப்பச் சுழற்சியும் (இடிப்புயல் செயல்பாடு), கிடைநிலைப் பாய்வின் நிலைப்பின்மைகளும் அமைகின்றன. குத்துநிலைத் திசையில் மேற்பரப்பு அருகில் வலியதாகவும் உயரம் செல்ல செல்ல குறைந்தபடி வெப்ப அடுக்கின் உச்சியில் அருகிவிடும். + +முதிர்ந்த வெப்ப மண்டலச் சூறாவளியின் மையத்தில், காற்று அதில் அமிழுமே தவிர எழாது. பிகப் போதுமான வலிமையுள்ள புயலில், முகிலாக்கத்தையும் தடுக்கும் அளவுக்கு ஆழ அடுக்கில் பாயும். இதனால் தெளிவாகத் தெரியும் "கண்" அப்போது உருவாகும்". கடல் மிகவும் கொந்தளிப்பில் இருந்தாலும் கண்ணின் வானிலை முகிலின்றி அமைதியாகவே இருக்கும். இந்தக் கண் வட்ட வடிவில் இருக்கும். இதன் விட்டம் 30 முதல் 65 கிமீ வரை அமையும். என்றாலும், 3 கிமீ விட்டமுள்ள சிறிய கண்களும் 370 கிமீ விட்டமுள்ள பெரிய கண்களும் கூட நோக்கப்பட்டுள்ளன. + +கண்ணின் வெளிவிளிம்பு "கண்சுவர் ஆகும். இந்தக் கண்சுவர் உயரத்தினைப் பொறுத்து விளையாட்டரங்க மேடையைப் போல விரிந்துகொண்டே செல்லும்; இந்நிகழ்வு சிலவேளைகளில் "விளையாட்டரங்க விளைவு" என வழங்கப்படுகிறது. கண்சுவயின் அருகே பெருமக் காற்று வேகங்களும் விரைந்த காற்று மேலெழுச்சியும் உயர் குத்துயர முகில்களும் பெருங்கன மழைபொழிவும் அமையும். வெப்ப மண்டலச் சூறாவளியின் கண்சுவர் நிலத்தைக் கடக்கும்போது பேரளவுக் காற்று அழிபாடு ஏற்படும். + +உலகத்தில் உள்ள ஏழு பெரும் புயல் உண்டாகும் தளங்களாவன: +உலகம் முழுவதிலும் ஓராண்டில் ஏறத்தாழ 80 புயற்காற்றுகள் ஏற்படுகின்றன. + + + + +மின்னல் + +மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுது, எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது. ஒளிக்கீற்று போல் ஒளி இழையாய் தெரியும் பகுதியில் காற்று மின் மயமாக்கப் படுகின்றது. + +சில பொழுதுகளில் மின்னல் ஒரு மரத்தையோ நிலத்தையோ தாக்க வல்லது (இவ்வழியாக மேகங்களில் சேர்ந்திருந்த மின்னூட்டம் நிலத்திற்கு பாய்ந்து விடும்). இம்மின்னல் நிலத்தில் உள்ள விலங்குகளையும், ஆட்களையும் கூட தாக்கும். இதனால் பலர் உயிரிழந்து உள்ளனர் (தொடர்ந்து ஆண்டுதோறும் உயிரிழந்தும் வருகின்றனர்). +வானில் வானூர்தியில் பறந்து செல்லும் பொழுதும் இவ்வாறு தாக்குதல் நிகழும், ஆனால் தரைக்கு இவ்வாற்றல் இறங்க அதிக வாய்ப்பில்லாததால், அதிக சேதம் ஏதும் விளைவிப்பதில்லை. + +சிறந்த ஆய்வு மற்றும் புரிந்துணர்வு மூலம் மின்னல் பொதுவாக மூன்று வகைப்படும். மின்னல் முகில்களிலிருந்து புவியில் முடிவடைதல் "புவி மின்னல்" எனப்படு���்.இதில் மிகவும் பொதுவானது,ஒரு முகிலினுள்/முகில் தொகுதியினுள் நிகழும் மின்னல் "முகில் மின்னல்"எனப்படும். முகில்கள் இரண்டிற்கும் இடையே ஏற்படும் மின்னலும் "முகில் மின்னல்"எனப்படும்.மேலும், மிக குறைந்த அளவில் ஏற்படும் மின்னல் வகை உண்டு அது முகிலில் இருந்து வளிக்கு வெளிவிடப்பட்டு முடிவடையும் மின்னல் இது "வளி மின்னல்" எனப்படும். இவற்றை ஆராய்வது மிகவும் கடினமானது. இவற்றை ஆராய்வதற்கு மின்னலை அவதானிக்க வேண்டும் ஆனால் மின்னல் தாக்கும் இடத்தை முன்னரே அறிய முடியாது என்பதால் இவற்றை அவதானிப்பது மிகவும் கடினமானது. + + + + + +புச்சியித்தா தெத்துசுயா + +புச்சியித்தா தெத்துசுயா (அக்டோபர் 23, 1920 - நவம்பர் 19, 1998), (யப்பானிய மொழி:藤田哲也 Fujita Tetsuya) என்பவர் புயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல் காற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து புகழ் படைத்த யப்பானிய வானிலை அறிஞர். + +இவர் யப்பானில் புக்குவோக்கா மாகாணத்தில் கிட்டாகியூழ்சூ என்னும் ஊரில் பிறந்தார். இவர் கியூழ்சூ தொழில்நுட்பக்கல்லூரியில் படித்துப் பின்னர் அங்கேயே இணைப்பேராசிரியராக 1953 வரை இருந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டு அங்குப் பேராசிரியராக இருந்தார். + +இவரின் புகழுக்கு முக்கியக் காரணம் இவர் பெயரால் கொடுங்குழல் காற்றின் ("tornado") வலிமையை அளக்கும் ஒரு அளவீடு புச்சியித்தா அளவீடு என வழங்கப்படுகின்றது. ஒளியின் துணையால் அளக்கப்படும் முறைகளைக்கொண்டு கொடுங்குழற் காற்றில் வெவ்வேறு உயரங்களில் உள்ள காற்றின் வேகத்தை அளக்கும் முறைகளை இவர் வகுத்து 1971 இல் அறிமுகப்படுத்தினார். கொடுங்குழற் காற்றில் மணிக்கு 500 கி.மீ வேகம் உடைய சுழலிக் காற்றும் உண்டு. இவருடைய பெயரால் வழங்கும் புச்சியித்தா அளவீட்டில் F0,F1 என F5 வரை உள்ளன. இவர் பெயரால் 2007 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட புச்சியித்தா அளவுகோலும் அறிமுகப்படுத்தப்பட்டது. + + + + + +ஹனமி + +ஹனமி (花見, "Hanami") என்பது ஒரு ஜப்பானிய பண்பாட்டில் இயற்கையைப் போற்றும் கலைநயம் மிக்க ஒரு நிகழ்ச்சி. ஹனமி என்பது பூக்கோலம் காணல் எனப் பொருள்படும். ஹனமியின் போது ஜப்பானியர்கள் கொத்துக் கொத்தாய் எங்கும் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை விரும்பி போற்றிக் காணும் விழா போன்ற நிகழ்வாகும். மார்ச் மாதப் பிந்தியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ (ஹொக்கைதோ மே மாதம்) பூக்கத்தொடங்கும்.ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய வானிலை தகவல் திணைக்களத்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் திகதி அறிவிக்கப்படும். இவ்வறிக்கையானது ஹனமி மேற்கொள்ளவுள்ளவர்களால் தொடர்ந்து கவனிக்கப்படும். ஹனமியின் போது செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர் விருந்துபசாரம் செய்வார்கள். ஹொக்கைதோவில் பார்பேக் (barbeque) எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து பிரசித்தமானது. இரவிலும் ஹனமி நடத்தப்படும் இது யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும். + + + + +இந்தியாவின் தட்பவெப்ப நிலை + +இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ("Climate of India") (இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண் முறை, உணவு, உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் பூமியில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. காற்று, நீர், மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான வெப்பநிலை, காற்று அழுத்தம், காற்று வீச்சு, ஈரப்பதம் மற்றும் மழையானது (இது நீராகவோ, உறைந்த தூவிப்பனி வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது. + +இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைப்பு அதாவது அதன் நிலப்பரப்பின் அமைப்பு வேறுபாடுகளாலும், வடக்கில், காஷ்மீரின் காலநிலைக்கும் தெற்கே கன்னியாகுமரியின் காலநிலைக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உண்டு. வடக்கு - வடகிழக்காகப் பரவியுள்ள இமயமலை நடு ஆசியாவிலிருந்து கடுங்குளிருடன் வீசும் பனிமுனைக் காற்றினை தடுத்து நிறுத்துகின்றது. வடமேற்க���யுள்ள தார் பாலைவனத்தில் ஏற்பாடும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தெற்கிலிருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசும் காற்றினை இந்திய மூவலந்தீவை ( தீபகற்பத்தை) முக்கோண அமைப்பானதும் மற்றும் அதனுள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, ஷில்லாங் பீடபூமி திசையை மாற்றி இந்தியாவின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மலைவிளைவு மழை (Orographic Rainfall) பொழியச்செய்கிறது. மேலும் வடக்கே நோக்கி செல்லும் இக்காற்றினை இமயமலை தடுத்து நிறுத்துகிறது. இந்தியத் தீபகற்பத்தை சுற்றியுள்ள அரபிக் கடல், இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கடலோரப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது; மேலும் மழைக்காலங்களில் குளிரின் தாக்கத்தை குறைத்து இந்தியாவின் காலநிலையில் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியாவில் பலதரப்பட்ட கலநிலைகள் மற்றும் சிற்றிடத் தட்பவெப்பம் (Micro Climate) உள்ளதால் இங்குள்ள காலநிலைகளின் ஆய்வு என்பது ஒரு சிக்கலான தலைப்பே. + +கடக்க ரேகை (Tropic of Cancer) இந்தியாவை இரண்டு காலநிளைப்பகுதிகளாக அதாவது வெப்பமண்டலம் (Tropical) மற்றும் கீழ்வெப்பமண்டலம் (Sub-Tropical) என்று பிரித்தாளும், இமய மலையின் தாக்கத்தால் இந்தியாவை ஒரு வெப்பமண்டலம் (Tropical) பகுதியாக கருத வேண்டும்.மேலும் இந்தியா முழுவதும் மான்சூன் மாதிரி தட்பவெப்பநிலை உள்ளது. ஆனால் வானிலையிலுள்ள மூலகங்களின் பிணைப்புகளால் இந்தியாவின் காலநிலையில் பல பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் மான்சூன் தட்பவெப்பநிலையின் உப மாதிரிகளாக பிரதிநிதிகிக்கின்றது. இதை அடிப்படையாகக்கொண்டே காலநிலை மண்டலங்கள் அடையாளங்கண்டுபிடிக்கப்படுகிறது. + +காலநிலைகளை வகைப்படுத்துவது ஒரு சிக்கலான காரியம். ஆனாலும் பல காலநிலை வள்ளுனர்களால் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுரைகளை நமக்கு தந்துள்ளனர் அதிலொன்று கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறை. கொப்பெனின் திட்டமுறை மாதாந்திர தட்பவெப்பம் மற்றும் மழையளவை அடிப்படையாக கொண்டு காலநிலை மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது (Köppen climate classification system). கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறைப்படி இந்தியாவில் ஐந்து முக்கிய காலநிலை மண்டலங்கள் உள்ளன. அவை, + +ஒரு வருடத்திற்கு இந்தியாவில் நான்கு காலநிலைப் பருவங்களை வளி மண்டல ஆராய்ச்சியாளர்���ள் அடையாளம் கண்டுகொள்ளபட்டுள்ளது. அவை: + + +General overview +Maps, imagery, and statistics +Forecasts + + + + +நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து + +நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இந்தியாவிலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை தொடருந்து பாதைகளுள் ஒன்றாகும். (சிம்லா மலைப்பாதை, டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, மாதேரன் மலைப்பாதை ஆகியவை மற்ற மூன்றாகும்). + +இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. +இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை - மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக ("World Heritage Site") ஆக அறிவிக்கப்பட்டது. + + + + + + +மடகாசுகர் + +மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு ("Republic of Madagascar"). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. குறிப்பாக பாவோபாப் மரங்களும், மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படும். உலகில் உள்ள 5% உயிரின, நிலைத்திணை இன வகைகள் இங்கு இருக்கின்றன. இங்கே பேசப்படும் மொழி மலகாசி ("mal-gazh") என்பதாகும். + +மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது. + + + + +கனடிய அரசியல் + +கனடிய அரசியல் வலுவான மக்களாட்சி வழமைக்களுடைய நாடாளுமன்ற முறைமையையும் கூட்டாட்சி அமைப்பிலான நாடாளுமன்ற அரசையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கனடா பின்பற்றும் அரசியல்சட்ட முடியாட்சியில் மன்னரே நாட்டுத் தலைவர் ஆவார். நாட்டில் பல கட்சிகள் இயங்குகின்றன; கனடாவின் சட்டமன்ற நடைமுறைகள் வெசுட்டுமின்சுட்டர் நாடாளுமன்றத்தின் முன்மாதிரிகளையையும் வழமைகளையும் பின்பற்றியவை. இருப்பினும் கனடாவில் கட்சிக் கட்டுப்பாடு ஐக்கிய இராச்சியத்தினுடையதை விட வலுவானது. அமைச்சரவையில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறைவாக உள்ளது. இருப்பினும் இவர்கள் நாடாளுமன்ற குழுக்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவியலும். கனடாவின் வரலாற்றில் இரு முக்கிய அரசியல் கட்சிகளாக கனடா லிபரல் கட்சியும் கனடா பழமைவாதக் கட்சியும் (அல்லது அதன் முன்னோர்களும்) விளங்குகின்றன. இருப்பினும், 2011 தேர்தலில் சமூக-சனநாயக புதிய சனநாயகக் கட்சி முதன்மை பெற்றது. இந்த முன்னேற்றம் லிபரல் கட்சியின் பரவல் குறைந்து வருவதைக் காட்டுகிறது. கியூபெக்வா கட்சி, கனடா பசுமைக் கட்சி போன்ற சிறு கட்சிகளும் கனடிய அரசியலில் தங்கள் தாக்கத்தை பதித்து வருகின்றன. + + + + + +முதனி + +முதனி (Primate) ( ) (இலத்தீன்: "prime, முதன்மை") என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்கள் ஆகும். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மிதவெப்பமண்டலக் காடுகளிலுள்ள மரங்களில் தொங்கி தாவி வாழ்ந்த ஆதி விலங்கினங்களிலிருந்தும், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றியும் கிளைத்த இனங்கள்தாம் குரங��குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின முதனி வகைகள். முதனிகள் மரங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னமும் சில முதனிகள் இம்முப்பரிமாண வாழ்விடங்களுக்கேற்ப தங்கள் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முதனிகள் மரத்தில் தொங்கி வாழ்பவையாகவே உள்ளன. உயிரின வகைப்பாட்டியலில் முதனிகள் ஈரமூக்கு கொண்டவை, ஸ்டெப்சிரினீ, வறண்டமூக்கு கொண்டவை ஹேப்லோரினீ இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. + +முதனிகளில் மனிதன் நீங்கலாக,அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் ஆகவும் இருக்கும். படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "டெயில்ஹர்டினா" பேரினம் கொள்ளப்படுகிறது. பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் "பிலெசியாடாப்சிஸ்" c. ஆகும். கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74  மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது. + +வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்ளது. + +மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன. + +முதனிகளை ஆதிக்குரங்கினம் (புரோசிமியன்), மனிதக்குரங்கினம் (சிமியன்) என இரு வரிசையில் வகைப்படுத்தலாம். ஆதிக்குரங்கினங்களின் (புரோசிமியன்கள்) பண்புகள் என வகைப்படுத்தப்படுபவை ஆதி முதனிகளான மடகாஸ்கரில் வாழும் லெமூர்கள், தேவாங்குகள், பெருவிழிகளுடைய சிறு தேவாங்குகள் போன்றவற்றை ஒத்து காணப்படுகின்றன. அதே போன்று, குரங்குகள், மனிதக்குரங்குகள், மனிதர் போன்றவை மனிதக்குரங்கினத்திற்குள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், அண்மைய ஆய்வின்படி, வகைப்பாட்டியலறிஞர்கள் மேலும் முதனிகளை ஈரமூக்கு முதனிகள் (ஸ்ட்ரெப்சிரினீ), வறண்டமூக்கு முதனிகள் (ஹேப்ரிலோரினீ) என இரு துணைவரிசைகளில் வகைப்படுத்துகின்றனர். முதனிகளின் பரிணாமப் பரவல் வாலுள்ள தேவாங்குகளிலிருந்து வாலற்ற மனிதக்குரங்குகள், மனிதன் வரை விரிவடைந்துள்ளது. + +முதனிகள் ஒரே மூதாதையரை ஒத்த பல பிரிவுகளாக பரிணமித்துள்ளன. இதனை "ஓரினபரிணாமக்கிளை" (மோனோபைலடிக்) என்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டுக்கிளையில் அதன் அறிவியற் பெயரும் (இடப்புறம்), பொதுப்பெயரும் (வலதுபுறம்) குறிப்பிடப்பட்டுள்ளது + + +முதனிகளின் பாலியலில் பால் ஈருருமையைக் கொண்டுள்ளன. அதாவது ஒரே இனத்தில் ஆண், பெண் பால் வேறுபாட்டுடன், சில உடற் சார்ந்த மாற்றங்களையும் கொண்டிருப்பதாகும். சான்றாக, அவற்றின் தோலின் நிறம், உடற் பருமன், மற்றும் கனைன் பற்களின் அளவு முதலியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. + +முதனிகள் நாற்காலிகளாகவோ, இருகாலில் இடம்பெயர்பவையாகவோ, மரங்களில் தொங்கி, தாவி வாழ்பவையாகவோ, தவழ்பவையாகவோ, நடப்பவையாகவோ மற்றும் ஓடுபவையாகவோ ஓரிடத்திலிருந்து பாலூட்டிகளின் சிறப்பு உறுப்புகளான கை, கால்களின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. +மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவமே, அவற்றின் சமூகப் பண்புகள் தாம், + + + + +டயேன் ஃபாசி + +டயான் ஃவாசி கலிபோர்னியாவில் ஃவேர்ஃவாக்சு (Fairfax) என்னும் இடத்தில் பிறந்து கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வளர்ந்தார். 1954ல் இளநிலை பட்டமும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1974ல் உயிரின அறிவியலில் (Zoology) முனைவர் (Ph.D.) பட்டமும் பெற்றார். 1963 ஆம் ஆண்டுக்குள் கொரில்லாவைப்பற்றி ஆய்வு செய்ய போதிய ஆய்வுப்பணம் திரட்டிய பின் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு முனைவர் லீக்கி அவர்களையும் சந்தித்தார். காட்டு விலங்காகிய கொரில்லாக்களிடம் எப்படியோ இவர் போதிய நம்பிக்கையைப் பெற்று அவைகளோடு நெருங்கி இருந்து ஆய்வு செய்யப் பழகினார். 1967ல் இவர் ருவாண்டாவிலே ருஃகெங்கேரி என்னும் மாநிலத்தில், விருங்கா மலைப்பகுதிகளில் "கரிசோக் ஆய்வு நடுவணகம்" நிறுவினார். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேசனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின. + +டயான் வாசி அவர்கள் எதிர்பாராத விதமாக தன் இருப்பிடத்தில் டிசம்பர் 26, 1985ல் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவருடைய ஆய்வுகளால் தம்முடைய தொழில் கெடுவதாக நினைத்த சில கொள்ளைக்காரர்களோ, கொரில்லாக்களைக் கடத்துபவர்களுக்கு எதிராக போராடியதாலோ இக்கொலையைச் செய்ததாகக் கருதப்படுகிறது. பரவலாக அறியப்பட்ட வார்லி மொவாட் என்னும் எழுத்தாளர், இந்நிலங்களைச் சுற்றுலாவுக்காகப் பயன்படுத்த ஆவலாய் இருந்த யாரோ சிலர் இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறார். + + + + +குட்டால் + +டேம் ஜேன் குட்டால் ("Jane Goodall", பிறப்பு: ஏப்ரல் 3, 1934) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் ("Gombe Stream National Park") இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக்கான தூதரும் ஆவார். + +புகழ் பெற்ற தொல்லுயிரியல் ஆய்வாளர் முனைவர் லீக்கி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை 1964ல் அளித்தது. + +சேன் குட்டால் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 1934 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தார். இந்த பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினார். இந்நாள் வரை இப்பொம்மையை இவர் பாதுகாத்து வைத்திருக்கிறார். + + + + + + +கொரில்லா + +கொரில்லா ("Gorilla gorilla"), மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும். + +பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால் இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள். + + + + + +சிம்பன்சி + +சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன. + +இதனை பொதுவாக சாதாரண சிம்பன்சி என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்பன்சிக்கு நெருங்கிய இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்பன்சி என பெயரிடுவர். இவ்விரு இனங்களும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன. + +சிம்பன்சிகள் மாமிசங்களை சிறிய கற்கருவிகளால் வெட்டி உண்ணத்தொடங்கியதால், அதன் பற்கள் கடித்து மெல்ல குறைவான அழுத்தமே தேவைப்பட்டது. அதன் பின் சந்ததியினர் இதனாலேயே அதன் வாய் பரிணாமம் அடைந்து பேசுவதற்கு ஏற்ற உடலமைப்பாக மாறியது என காட்டுவேர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம ஆய்வாளர் டேனியல் லைபர்மேன் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார். + + + + +ஒராங்குட்டான் + +ஒராங்குட்டான் அல்லது ஓராங் ஊத்தான் ("Orangutan") என்பது மனிதக் குரங்குகளில் உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும். இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும். இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினமாகும். இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை. இவற்றின் உடல்சார்ந்த தோற்றம், நடத்தை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக, இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன. + +இந்த இனம் தோன்றிய இடம் இந்தோனேசியா, மலேசியாவாக இருந்த போதிலும், இதன் தற்போதைய வாழிடம் சுமாத்திரா, போர்ணியோப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகள் ஆகும். ஆனாலும், ஜாவா, தீபகற்ப மலேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. + +ஓராங் ஊத்தான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும் . ஒராங் ("Orang") என்றால் மனிதன். ஊத்தான் ("hutan") என்றால் காடு எனவும் பொருள் தரும். + +மலேசியாவில், இவற்றை ஓராங் ஊத்தான் என்றுதான் அழைக்கிறார்கள். அது ஒரு வழக்குச் சொல் ஆகும். "Orang utan" எனும் இரு சொற்களும் சேர்க்கப்படுவதால் "Orangutan" என மாறிவிடுகிறது. +"ஒராங்குட்டான்" வகை குரங்குகள் தன் சத்தத்தை உயர்த்துவதற்காக தன் கைகளை உபயோகித்துக்கொள்கின்றன என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். போர்னியோ காடுகளில் வசிக்கும் இவற்றின் நடவடிக்கை ஒவ்வோரு முறைக்கும் வேறு வேறு விதமாக சத்தத்தை மாற்றுகின்றன. + + + + +லெமூர் + +லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெம���ர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் "(simian, apes)" என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் "(prosmian)" என்றும் வகைப்படுத்துகிறார்கள். + + + + + + +கிப்பன் + +கிப்பன் ஒருவகை சிறிய மனிதக் குரங்கு இனம் (Gibbons; lesser apes). இவை கிளைக்கு கிளை தாவுவதில் மிக வல்லமை படைத்தவை. இதன் கைகள் நீளமாக மரக்கிளைகள் இடையே தாவுவதற்கு ஏற்றார்போல உள்ளன. பெரும்பாலும், இந்தியா, இந்தோனேசியா, தென் சீனா ஆகிய பகுதிகளில் மழைவளம் நிறந்த செழிப்பான காடுகளில் வாழ்கின்றன. சாவா, சுமத்திரா, போர்னியோ ஆகிய இந்தோனேசியத் தீவுகளிலும் வாழ்கின்றன. இந்த கிப்பன் இனத்தில் குரோமோசோம்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு உள் இனங்கள் இருப்பதாகக் கூறுவர். "ஃஐலோபேட்" (44), "ஃஊலாக்" (38), "நோமாஸ்கஸ்" (52), and "சிம்வலாங்கஸ்" (50). . + + + + +அபிதான சிந்தாமணி + +அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி "ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்" இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. 2001 ஆம் ஆண்டு தில்லி "ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்", 11 ஆம் பதிப்பினை வெளியிட்டுள்ளது. + +ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் "அபிதான சிந்தாமணி". அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார் + +தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாக���ும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான அபிதான கோசம் நூலைவிட இதில் அதிகமான பெயர்களுக்கு மிகுதியான விளக்கம் தரப்பட்டுள்ளது. + +இதனோடு வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் தொகுத்து வழங்குகிறது. + + + + + +கணிய அளவையியல் + +கணிய அளவையியல் (quantity surveying) என்பது, கட்டுமானத்துறை தொடர்பான ஒரு உயர் தொழில் துறைகளுள் ஒன்று. கட்டிடங்கள் மற்றும் கட்டுமான அமைப்புக்களுக்கான செலவுத் திட்டம், செலவின மதிப்பீடு, அளவைப் பட்டியல் தயாரிப்பு, கேள்விப்பத்திர ஆவணத் தயாரிப்பில் உதவுதல், கேள்விப்பத்திரப் பகுப்பாய்வு, செலவினப் பகுப்பாய்வு, செலவின மேலாண்மை போன்ற பல அம்சங்கள் கணிய அளவையியல் துறையின் எல்லைக்கு உட்பட்டவை. கட்டுமானங்களின் பொருளியல் தொடர்பான விடயங்களைக் கையாளுவதனால் இத் துறை கட்டுமானப் பொருளியல் துறைக்கு மிகவும் நெருங்கியது. + +இத்துறை ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலேயே உருவானது. 18 ஆம் நூற்றாண்டு நிறைவுறும் தறுவாயிலேயே பிரித்தானியாவில் கணிய அளவையியல் ஒரு தனித் தொழில் துறையாக உருப்பெற்றது. ஆரம்ப காலங்களில், கட்டிடக் கலைஞர்களினால் வரையப்படுகின்ற வரைபடங்களில் இருந்து அளவைப் பட்டியல் தயாரிப்பதும், செலவின மதிப்பீடுமே இத்துறையின் முக்கிய பங்களிப்புகளாக இருந்தன. இதன் காரணமாகவே இத் துறை கணிய அளவையியல் எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், கட்டுமானத் தொழில்துறையின் சிக்கல்தன்மை அதிகரிப்பும், பொருளியல் வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டிய தேவைகளும், கணிய அளவைத் துறையை அதிக அளவில் வேண்டப்படும் ஒரு துறையாக மாற்றியுள்ளது. + +கணிய அளவையியல் அதன் தொழில் ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், பல்���ேறு உயர் தொழில் துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இவற்றுள், + + +என்பனவும் உள்ளடங்குகின்றன. + +கணிய அளவியல் துறை வல்லுனர்கள் கணிய அளவையாளர் எனப்படுகின்றனர். + + + + +வானூர்தி தாங்கிக் கப்பல் + +வானூர்தி தாங்கிக் கப்பல் அல்லது விமானம் தாங்கிக் கப்பல் ("Aircraft Carrier") என்பது, வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக்கப்பல் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், ஒரு கடற்படை தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு,எதிரி நாட்டு கடற்படையை இடைமறிக்கவும் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களை நம்பியிராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு வழி அமைத்துக் கொடுத்துள்ளன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன. + +பலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் நிலைத்த இறக்கை வானூர்திகள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. "பிர்மிங்காம்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் கடல் வானூர்தி பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் வேந்திய சப்பானியக் கடற்படையின் "வாகாமியா" என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து பாரந்தூக்கி மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வா���ும். + +தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் எச். எம். எசு "ஆர்கசு", மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, எச். எம். எசு "ஏர்மசு", "ஓசோ", லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய வாஷிங்க்டன் கடல் உடன்பாடு வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன. +இரண்டாம் உலகப் போரின் போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் ("escort carriers"), இலகு ரக வானூர்தி தாங்கிகள் ("light carriers") போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் ("Merchant carriers") என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி ("Battle carrier") என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்பட்டன. + +இரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் வான் ஆளுமை பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் ("Supercarriers") இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் ("Helicopter carriers"), நீர்நில தாக்கு கப்பல்கள் ("amphibious assault ships") போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன. + +போர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே ("Carrier group") செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன. + +வானூர்தி தாங்கிகள் பயன்பாடு, அளவு, வானூர்தி மேலுழும்பும் விதம், உந்துபொறி வகை ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. + +வானூர்தி தாங்கிகளின் உந்துபொறிகள் டீசல் அல்லது அணு ஆற்றலால் இயங்குகின்றன. பொதுவாக சிறிய வானூர்தி தாங்கிகள் டீசல் பொறிகளாலும், மீதாங்க���கள் அணு ஆற்றலாலும் இயக்கப்படுகின்றன. தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கடற்படையிடம் மட்டும் அணு ஆற்றலால் இயங்கும் வானூர்தி தாங்கிகள் உள்ளன. + +பயன்படும் காரியத்தைப் பொறுத்து பின்வருமாறு வானூர்தி தாங்கிகள் வகைப்படுத்தப்படுகின்றன: + + +தற்கால கடற்படைகளில் எடையும் அளவுமே வானூர்திகளை வகைப்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. அளவு / எடை அடிப்படையில் வானூர்தி தாங்கிகளின் வகைகள்: + + +வானூர்திகள் மேலெழும்பும் முறையைப் பொறுத்து வானூர்தி தாங்கிகளின் வகைகள்: + + +ஒரு வானூர்தி தாங்கிக் கப்பலின் மிக முக்கியமான பகுதி தன் வானூர்தி தளம் (flight deck). இதுவே வானூர்திகளின் புறப்பாட்டிற்கும் தரையிறங்கலுக்கும் பயன்படுகிறது. தற்கால வானூர்தி தாங்கிகள் அனைத்தும் தட்டையான மேற்தள வடிவமைப்பை உடையனவாக உள்ளன. தரை ஓடு தளங்களுடன் ஒப்பிடுகையில், வானூர்தி தாங்கிகளின் ஓடுதளங்கள் குறைவான நீளத்தையே கொண்டுள்ளன. இதனால் இவற்றிலிருந்து புறப்படவும், தரையிறங்கவும் பல புதிய உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. வானூர்திகள் தளத்திலிருந்து கப்பல் செல்லும் திசையில் புறப்படுகின்றன. இதற்கு உதவி செய்யும் வகையில் வானூர்திகள் புறப்படும் போது வானூர்தி தாங்கி அதிகமான வேகத்தில் காற்றடிக்கும் திசையில் செலுத்தப்படும். இதனால் மேற்தளத்திலிருந்து புறப்படும் வானூர்தியின் பின்காற்று அதனை மெலெழும்ப உதவுகின்றது. அதே போல வானூர்தி தரையிறங்க வரும் போதும் இம்முறைமை வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையேயான சார்பு வேக வேறுபாட்டைக் குறைத்து வானூர்தி பத்திரமாகத் தரையிறங்க பயன்படுகிறது. + +வானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் நீராவி ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை ("ski-jump ramp") நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும���பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை + +வானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை. + +தற்போது உலகில் ஒன்பது நாடுகளின் கடற்படைகளில் மொத்தம் 22 வானூர்தி தாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு: + +பல நாடுகளின் கடற்படைகள் தற்போது பல புதிய வானூர்தி தாங்கிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு: + + + + + +தேவாங்கு + +தேவாங்கு ("Slender loris") என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும். இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ் ( 7-10 அங்குலம்) நீளமும் 85-350 கி எடையுமே உள்ள சிறு விலங்கு. பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1-2 குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டி வளர்க்கின்றன. +[வளரும்] +தேவாங்குகள் ஒரு பூச்சியுண்ணியாகும். + +இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்கின்றன. மேலும் பிளவுபடாமல் இருக்கும் காடுகளின் மேற்பரப்பில் வாழ்வதையே இவ்விலங்குகள் விரும்புகின்றன. + +"லோரிஸ் டார்டிகிராடஸ்" "Loris tardigradus" (லின்னேயஸ், 1758) + +தேவாங்கில் இரண்டு கிளை இனங்கள் உள்ளன. + + +உயிரியலாளர்களின் கருத்துப்படி தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அருகி வருகின்றன. தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தேவாங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதற்கு மேலதிகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதமான செல்லப்பிராணிகளின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் இவை அழிந்து வருகின்றன. + + + + + + +அனோ டொமினி + +அனொ டொமினி (இலத்தீன்: "Anno Domini") என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும், 'நமது கடவுளின் ஆண்டு' என்றும் பொருள்பட வழங்கப்பட்டது. + +இதன் தமிழாக்கம் "கிறிஸ்த்துவுக்கு பின்" என்பதனால், கி.பி. அல்லது "கிபி" என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது. + +இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். +இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் "கிறிஸ்த்துவுக்கு முன்" என்பதை சுருக்கி கி.மு. அல்லது "கிமு" எனத் தமிழில் வழங்கப்படுகிறது. + +அனொ டொமினி முறை கிபி 525 இல் பகுக்கப்பட்டாலும், கி.பி.8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை. + + + + +கியோட்டோ பரிசு + +கியோட்டோ பரிசு (京都賞) என்பது இனாமோரி அறக்கட்டளை 1984 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் ஒரு பெரும் பரிசு. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மெய்பொருளியல் ஆகிய துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவருக்கு அளிக்கப்படுகின்றது. இப் பரிசை சப்பான் பரிசு என்றும் சொல்வதுண்டு. நோபல் பரிசு போலவே பெரும் மதிப்பான பரிசு. நோபல் நிறுவனம் பரிசளிக்காத பல தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவர்களுக்கும் கியோட்டொ பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் இப் பரிசின் மதிப்பு மிக உயர்ந்து வருகிறது. இப் பரிசுத் தொகை கசுவொ இனாமோரி நிறுவிய அறக்கட்டளையில் இருந்து அளிக்கப்படுகிறது. கசுவொ இனாமோரி சுட்டாங்கல் (செராமிக்ஸ்) தொழில் நுட்பத்தால் ஈட்டிக் குவித்த பெரும் பணத்தால் 50 மில்லியன் சப்பானிய யென் மற்றும் கியொசெரா என்னும் கும்பினியின் பங்கு இவற்றைக் கொண்டு இந்த பரிசளிக்கும் அறக்கட்டளையை நிறுவினார். + + + + + +கியொசெரா + +கியொசெரா (Kyocera) என்பது சப்பானில் தொடங்கி இயங்கும் ஓர் உலகளாவிய தொழில் நிறுவனம். இந்நிறுவனம் ஒளிப்படக் கருவிகள், அச்சுப் பொறிகள் செய்வதிலும் சுட்டாங்கல் (ceramics) உற்பத்தி செய்வதிலும் தொழிலாற்றி வந்தது. இந்நிறுவனத்தை கசுவொ இனாமோரி 1959ல் நிறுவினார். இவர் கியோட்டோ பரிசு அறக்கட்டளையை நிறுவினார். + +2003 ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள் செய்ய ஒரு துணை நிறுவனம் தொடக்கப்பட்டுளது. இதன் பெயர் கியொசெரா வயர்லெஸ் இந்தியா (Kyocera Wireless India ). + + + + + +சொரேசு ஆல்ஃபியோரொவ் + +சொரேசு இவானோவிச் ஆல்ஃபியோரொவ் ("Zhores Ivanovich Alferov", , பிறப்பு: மார்ச் 15 1930) புகழ் பெற்ற ஓர் உருசிய இயற்பியலாளர். இவர் 2000 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் அமெரிக்காவின் பேராசிரியர் எர்பெர்ட் குரோமர், மற்றும் சாக் கில்பி ஆகியோர். இம்மூவரும் மின்னணுவியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை எவ்வாறு இணைத்து சீரொளி தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை. + +ஆல்ஃபியோரொவ் பெலருசு நாட்டில் உள்ள விட்டெபஸ்க் என்னும் ஊரில் பிறந்தார். 1952ல் லெனின்கிராதில் உள்ள வி.ஐ. உலியானோவ் மின்நுட்பக் கல்விக்கழகத்தில் முதல் பட்டம் பெற்றர். பின்னர் 1953 முதலாகவே புகழ் மிக்க உருசிய அறிவியல் உயர்கல்விக் கழகத்தைச் சேர்ந்த இயோஃபி இயற்பியல் நுட்பக்கழத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்தார் (1970), பிறகு அங்கேயே ஆய்வும் செய்து வந்தார், அதன் பின்னர் அங்கேயே இயக்குநராக 1987ல் இருந்து பணியாற்றி வந்தார். + + + + + + +உகாண்டா + +உகாண்டா என்றழைக்கப்படும் "உகாண்டாக் குடியரசு" கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்��ில் கென்யாவும் வடக்கில் சூடானும் மேற்கில் காங்கோவும் தென்மேற்கில் ருவாண்டாவும் தெற்கில் தான்சானியாவும் உள்ளன. இதனுடைய தலைநகரம் கம்பாலா ஆகும். இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. எல்கான் மலை இதன் உயர்ந்த மலையாகும். விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. + +1800 களில் பண்டு மற்றும் நிலோட்டிக் மொழிகளை பேசும் மக்கள் விக்டோரியா ஏரியை எல்லையாக கொண்டு சிறு சிறு மண்டலங்களாக ஆண்டனர். 1840 வாக்கில் அரேபிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்தனர். 1862 இல் ஐரோப்பியர்களும் 1870இல் கிருத்துவ மதப்போதகர்களும் தங்கள் மதங்களைப் பரப்ப வந்தனர். இதனால் குழப்பங்களும் சச்சரவுகளும் ஏற்பட்டன. 1894 முதல் உகாண்டா பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 1962இல் விடுதலைப் பெற்று சுதந்திர நாடானது. 1963இல் குடியரசானது. சர் எட்வர்டு முதிசா முதல் குடியரசு தலைவரானார். 1966 மில்டன் குடியரசுத் தலைவரானார். 1971இல் இடிஅமின் தலைமையில் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. 1978இல் தான்சானியா படையெடுப்புக் காரணமாக இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு, மீண்டும் 1985இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. 1986இல் இராணுவ ஆட்சி தூக்கி எரியப்பட்டது. 1986 முதல் யோவேரி முசெவேனி அதிபராகப் பதவி வகித்து வருகிறார். 1995இல் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. +2006 ஜூலை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை: 2,81,95,75 பேர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.37 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் 33 சதவிகிதம் ரோமன் கத்தோலிக்க சமயத்தையும் 33 விழுக்காட்டினர் பிராட்டஸ்டண்ட் சமயத்தையும் 16 விழுக் காட்டினர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர். ஆங்கிலம் அலுவலக மொழியாக உள்ளது. மக்களில் 69.9 சதவிகிதம் கல்வியறிவுப் பெற்றுள்ளனர். + +இந்நாட்டு நாணயம் உகாண்டா ஷில்லிங் என அழைக்கப்படுகிறது. காப்பி, மீன் மற்றும் மீன் தயாரிப்புகள், தங்கம், பருத்தி, பூக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாகனங்களும், மருத்துவப் பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. + +உகாண்டாவின் தலைநகர் கம்பாலா ஆகும். இந்நாடு இங்கிலாந்திடமிருந்து 1962 அக்டோபர் 9 அன்று சுதந்திரம் பெற்றது. இது ஒரு ஒற்றை பாராளுமன்ற குடியரசு ஆகும். குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராவார். அவரே அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். + +இந்நாட்டில் மொத்த இரயில் பாதைகளின் நீளம் 1,241 கி.மீ. ஆகும். மற்றும் சாலைகளின் மொத்த நீளம் 70,746 கி.மீ. தொலைபேசி பயன்படுத்துபவர்கள் 90,400 பேர் (2006 கணக்கெடுப்பு) பயன்படுத்தப்படும் செல்போன்கள் 2 மில்லியனுக்கு மேல் எனக் கணக்கெடுப்பு கூறுகிறது. + + + + + +பொடா-பொடா + +பொடா-பொடா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் வாடகை மிதிவண்டிகளைக் குறிக்கும். மிதிவண்டி ஓட்டுபவர்களும் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. + +பொடா-பொடா வண்டிகள் 1960, 1970களில் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் பயன்பாடு கென்ய-உகாண்டா எல்லைப் பகுதியில் துவங்கியது. எல்லையைக் கடப்பதற்காக இது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஈருருளி (மிதிவண்டி) ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை நோக்கி எல்லை விட்டு எல்லை எனப் பொருள் தரும் ஆங்கிலச் சொல்லான "பார்டர்" என்பதை "பார்டர்-பார்டர்" ("Border-to-Border") என்று அழைப்பர். பின்னர் இது மருவி "பொடா-பொடா" ஆனது. + +பொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்ல இங்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மிதிவண்டிகளின் இருக்கைகளும் பின்னிருக்கைகளும் நன்கு பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். விலைகுறைவான இம்மிதிவண்டிகள் ஆசியாவில் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளைக் காட்டிலும் விலை குறைந்தவை. ஓட்டுவதற்கும் எளிதானவை. 2004ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 200,000 ஆண்கள் மிதிவண்டி பொடா-பொடாவில் வேலை செய்வதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. + +தற்காலத்தில் மோட்டார் வண்டிகள் இச்சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் பொடா பொடா என்றே அழைக்கப்படுகிறது. எனினும் உகாண்டாவின் பெரும்பாலான பகுதிகளில் மோட்டார் வண்டி எனப்பொருள் தரும் பிக்கி-பிக்கி என்ற சுவாகிலி மொழிச்சொல்லே பயன்படுத்தப் படுகிறது. இவை நைசீரியாவில் ஒக்காடா அல்லது அச்சாபா என்று அழைக்கப்படுகின்றன. + + + + +ஹொக்கைடோ + +ஹொக்கைடோ ( ஹன் எழுத்தில்:北海道) என���பது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகும். மேலும், இது இந்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமுமாகும். ஹொக்கைடோ என்ற சொல் வடகடல்வழி எனப் பொருள்படும். முன்னர், இது எசொ("Ezo") என அழைக்கப்பட்டது. இது (இ)ற்சுகரு ("Tsugaru") கடல்நீரேரியால் ஹொன்ஷூ தீவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது செய்கன் ("Seikan") என அழைக்கப்படும் செயற்கைக் கடலடி குகைவழியால் ஹொன்ஷூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சப்போரோ ("Sapporo") இதன் தலைநகராகும். இதுவே இத்தீவின் பெரிய நகரமுமாகும். + +ஹொக்கைடோ பல்கலைக்கழகம் + + + + +சப்போரோ + +சப்போரோ ( ஹன் எழுத்தில்:札幌市) ஜப்பானின் சனத்தொகைப்படி, ஐந்தாவது பெரிய நகரமும் பரப்பளவின் படி மூன்றாவது பெரிய நகரமுமாகும். இது ஹொக்கைடோ மாவட்டத்தின் தலைநகரமுமாகும். + +1972ஆம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி புகழ் பெற்ற பெற்றது. மேலும், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பனிக் கொண்டாட்டம் இரண்டு மில்லியனுக்கதிகமான பார்வையாளர்களை ஈர்த்துவருகிறது. மேலும், உலகப் புகழ் பெற்ற சப்போரோ மதுபான தொழிற்சாலையும் (Sapporo Breweries) இங்கே அமைந்துள்ளது. + + + + + +கொதிநிலை + +கொதி நிலை (Boiling point) என்பது ஒரு நீர்மம் (திரவம்) வெப்பத்தால் சூடேறி ஆவியாகும் நிலையில் உள்ள வெப்பநிலை ஆகும். ஒரு நீர்மத்தில் இருந்து அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மேற்பரப்பில் இருந்து வெளியேறுவது எல்லா வெப்பநிலைகளிலும் ஓரளவிற்கு நிகழ்வதுதான், ஆனால் நீர்மம் முழுவதும் ஆவியாகும் நிலையில் சூடேறி, நீர்மக்குமிழிகள் உண்டாகிக் கொதிநிலைக்கு வருவதற்குத்தான் கொதிநிலை என்று பெயர். இன்னொரு வகையாகச் சொல்வதென்றால், ஒரு நீர்மத்தின் ஆவி அழுத்தத்தை அதன் சூழ் அழுத்தத்திற்கு இணையாக்கும் வெப்பநிலையே கொதிநிலை எனப்படும். + +இந்த வெப்பநிலை அந்த நீர்மத்தின் சூழல் காற்றழுத்தத்தைப் பொருத்து மாறுபடக்கூடியது. எடுத்துக்காட்டாக நீரானது கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்ததில் 100 °C வெப்பநிலையில் ஆவியாகும். ஆனால் மலை போன்ற உயரமான இடங்களில் காற்றழுத்தம் குறைவதால், கொதிநிலை (ஆவியாகும் வெப்பநிலை) குறையும். எவரெஸ்ட் மலை உச்சியில் நீரானது 69 °C வெப்பநிலையிலேயே கொதி நிலைக்கு வந்துவிடும். கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 101.325 kPa (கிலோ பாஸ்கல்), ஆனால் எவரஸ்ட் மலையின் உச்சியில் காற்றின் அழுத்தம் 26 kPa (கிலோ பாஸ்கல்)தான், எனவே கொதிநிலை குறைகின்றது. சூழ்ந்துள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால், நீர்மத்தில் உள்ள அணுக்களோ, மூலக்கூறுகளோ எளிதாக வெளியேற முடியும், எனவே குறைவான வெப்பநிலையே போதும். + +கடல் மட்டத்தில் (அதாவது 101.325 கிலோ பாஸ்கல் அழுத்தத்தில்) நீர்மத்தின் கொதிநிலைக்குச் சிறப்பான ஒரு பெயர் உண்டு. அது இயல்நிலைக் கொதிநிலை அல்லது சூழ் அழுத்தக் கொதிநிலை என்று வழங்கப்படும். இயல்நிலைக் கொதிநிலையில் நீர்மத்தின் ஆவி அழுத்தமும் 101.325 கிலோ பாஸ்கல் அளவில் இருக்கும். + +தனிமங்கள் யாவற்றிலும் ஹீலியம் (ஃஈலியம்)தான் மிகக்குறைந்த கொதிநிலை கொண்டது. இத்தனிமம் 4.22 K (அல்லது -268.92 °C) வெப்பநிலையில் கொதிநிலை அடைகின்றது. யாவற்றினும் மிக அதிக கொதிநிலை கொண்ட தனிமங்கள் தங்குதன் (W) மற்றும் இரேனியம் (Re) ஆகும். இவை 5000 K (5300 °C) வெப்பநிலையையும் மீறியவையாகும். + +கொதிநிலை என்பது திரவங்கள் ஆவியாகும் வெப்பநிலை ஆகும். திரவங்கள் வெப்பமாகும்போது குறித்த ஒரு வெப்பநிலையை அடைந்தவுடன் திரவம் கொதித்து ஆவியாகத் தொடங்கும். நியம அமுக்கத்தில் திரவம் ஆவியாகும் வெப்பநிலை குறித்த திரவத்தின் கொதிநிலை ஆகும். + + + + +விலை + +பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலிலும், விற்பனையிலும் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது. + + + + +வி. சிவசாமி + +பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி (செப்டம்பர் 16, 1933 - நவம்பர் 8, 2014) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். புங்குடுதீவில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் எனப் பரந்த அளவில் ஈடுபாடு கொண்டவர். + +பேராசிரியர் சிவசாமி 1933 செப்டம்பர் 16 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றார். + +யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார். + +பேராசிரியர் சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 இல் இருந்து பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இதுவாகும். பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார். + + + + + +அளவைப் பட்டியல் + +ஒரு கட்டிடத்தையோ, வேறு அமைப்புக்களையோ கட்டுவதென்பது பல்வேறு சிறிய வேலைகளின் ஒரு தொகுதி எனலாம். இவ்வாறான சிறிய வேலைகள் பல, அவற்றுக்குப் பயன்படும் கட்டிடப்பொருட்கள், தொழில்நுட்பம், தேவைப்படும் வேலையாட்கள், அவர்களுக்கு இருக்கவேண்டிய தகைமைகள் போன்றவை தொடர்பில், வேறு பலவற்றைக் காட்டிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஒரு கட்டுமான வேலையைப் பல கூறுகளாக அல்லது உருப்படிகளாகப் பிரித்துத் தனித்தனியே அவற்றின் கணிய அளவைக் கணித்து அவற்றுடன் பட்டியலிடுவதனால் கிடைக்கும் ஆவணமே, அளவைப் பட்டியல் (Bill of Quantities) எனப்படுகின்றது. + + + + +பவானி ஆறு + +பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரு��்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது. + +தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை மேல் பவானி அணைக்கட்டு மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. + +மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது. + +கீழ் பவானி திட்ட கால்வாய் பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது. + +இது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது. + +அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இந்த ஆறு சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மாசடைந்து உள்ளது. + + + + + +பூக்கும் தாவரம் + +பூக்கும் தாவரம் ("angiosperms") நிலத் தாவரங்களின் முக்கிய வகைகளுள் ஒன்றாகும். இரு வகையான வித்துத் தாவரங்களுள் ஒன்று. விதைகளை, மெய்ப் பழத்தினுள் மூடி வைத்திருக்கும் சிறப்பியல்பு கொண்டது. இவை தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை, பூக்கள் எனப்படும் அமைப்புகளுள் கொண்டிருக்கின்றன. இவற்றின் சூல்வித்துக்கள் (ovule), சூல்வித்திலைகள் (carpel) என்னும் அமைப்புகளுள் மூடிவைக்கப் பட்டுள்ளன. + +உயிரியல் வகைப்பாட்டின்படி, பூக்கும் தாவரங்களை முன்னர் ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர். எனினும் தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரத் தொகுதித் தோற்றக் குழு III முறைப்படி (APG III system – Angiosperm Phylogeny Group III system), இவை எட்டு குழுக்களாகக் குறிக்கப்படுகின்றன. அவையாவன: + + +தமிழகத்தில் 5640 சிற்றினங்கள் உள்ளன. இது இந்திய நாட்டின் மொத்த பூக்கும் தாவரங்களில் 32% ஆகும். இவற்றுள் 533 சிற்றினங்கள் அகணிய உயிரிகளாகும். 230 சி���்றினங்கள் செம்பட்டியலில் உள்ளவை ஆகும். 1559 சிற்றினங்கள் மூலிகைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 260 சிற்றினங்கள் பயிரிடப்படும் பயிர்களின் மூதாதையத் தாவரங்களாகும். இந்தியாவின் இருநடுவக்குழல் தாவரங்களில்(Pteridophytes) (1022 சிற்றினங்கள்),184 சிற்றினங்கள்(18%) தமிழகத்தைச் சார்ந்தவை ஆகும். அவற்றில் கலன் தாவரங்கள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. + + + + +வித்துத் தாவரங்கள் + +விதைகளை உற்பத்தி செய்யும் தாவரங்கள் வித்துத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவை நிலத் தாவரங்களில் ஒரு வகையாகும். தற்காலத்தில் வாழுகின்ற சைக்காட்டுகள், Ginkgo, ஊசியிலைத் தாவரங்கள் (conifers), பூக்கும் தாவரங்கள் என்பன இவ்வகையுள் அடங்குகின்றன. + +வித்துத் தாவரங்கள் வழக்கமாக பூக்கும் தாவரங்கள் (Angiosperms), வித்துமூடியிலிகள் (gymnosperms) என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில், பூக்கும் தாவரங்கள், வித்துமூடியிலித் தாவர வகையிலிருந்து கூர்ப்பு (பரிணாமம்) அடைந்ததாகக் கருதப்படுகின்றது. + + + + +ஐசுலாந்து + +ஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு ("Iceland", ஐசுலாந்தம்: "Ísland" அல்லது "Lýðveldið Ísland") வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். + + + + + +தீபவம்சம் + +தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது. + + + + +சூளவம்சம் + +சூளவம்சம் அல்லது சூலவம்சம் ("Cūḷavaṃsa") என்பது இலங்கையின் வரலாற்று நூலாகும். இது பாளி மொழியில��� எழுதப்பட்டது. கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. + +சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். + + + + +மிகயில் ஷோலகவ் + +மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + + + + +ஏர்னெஸ்ட் ஹெமிங்வே + +ஏர்னெஸ்ட் ஹெமிங்வே ("Ernest Hemingway") (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவரது தனித்துவமான எழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிந்து 1950-களின் மத்திவரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். அவரது பெரும்பாலான எழுத்துகள் அமெரிக்க இலக்கியப்பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு புதினங்களும்(நாவல்கள்), ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூனறு புதினங்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் ("The Old Man and the Sea") நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டன. இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1961 இல் தற்கொலை செய்து கொண்டார். + + + + +பள்ளிவாசல் + +பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் "பள்ளி" என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான "மஸ்ஜித்" என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன. + +முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன. + + + + + +மரூஉ + +மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது. + +மரூஉ என்றால் உயிர் அளபெடை. + +எடுத்துக்காட்டுகள் + +மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்: + +வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக: + +போலி மரூஉ: +இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக: + + + + +வினைத்தொகை + +தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டப்படும் சொல் "ஊறுகாய்" என்பது. இச்சொல் "ஊறுகின்ற" காய், "ஊறின" காய், "ஊறும்" ��ாய் என முக்கால வினைகளையும் குறிக்கும். இதே போல "வீசுதென்றல்" என்னும் பொழுது வீசுகின்ற தென்றல் (தெற்கு நோக்கி மென்மையாக வீசும் காற்று), வீசிய தென்றல் , வீசும் தென்றல் என்று முக்கால வினையையும் குறிக்கும். + +வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் ஆகும். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும். + + + + + +பண்புத்தொகை + +பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக, + +எடுத்துக்காட்டுக்கள் (முறையே): + +பண்புப் பெயர் புணரும்போது எத்தகைய மாற்றங்களைப் பெறும் என்பதை நன்னூல் விளக்குகிறது. + + + + +மினார் + +மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும். + +மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன. அழைப்பவர் பெரும்பாலும் தொழுகை மண்டபத்திலிருந்தபடியே அழைப்பு விடுப்பார். இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன. + +ஆரம்பகாலப் பள்ளிவாசல்கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இசுலாத்தின் முதல் தொழுகைகள் முகம்மது நபி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே துனீசியப் பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. துனீசியாவின் கைருவான் நகரில், உக்பா மசூதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மினாரே இன்றும் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது. + +மினார்களில், அடி, நடுப்பகுதி, மாடம் என மூன்று பகுதிகள் உண்டு. பல வடிவங்களில் உள்ளன. சதுரம், வட்டம், எண்கோணம் ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. ஈராக்கின் சாமரா (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் கூம்பு வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது. + + + + +நாட்டுப்புறவியல் + +நாட்டுப்புறவியல் (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே. லூர்து, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். + +நாட்டுப்புறவியலின் இன்றைய ஆய்வுகள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புற மருத்துவம், கட்டடக்கலை போன்றனவும் இவற்றுள் அடக்கம். + + + + +மொத்த தேசிய உற்பத்தி + +மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி போல ஒரு எல்லைக்குள் உள்ளவர்களை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை, மாறாக எங்கிருந்தாலும் அந்நாட்டினரின்(வசிப்பவர் ��ற்றும் புலம்பெயர்ந்தவர்) உற்பத்தியைக் கணக்கில் எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் ஈட்டிய லாபமும் சேர்க்கப்படும். + +ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கணைக்கில் கொள்ளப்படும், பழையப் பொருட்கள் விற்பனையை கணக்கில் கொள்ளாது. ஒரு பொருள் நுகர்வோரை அடையும் முன் சந்தையில் பெறப்படும் இறுதி விலையை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சில்லரை விற்பனை விலை, இடைத்தரகர் விற்பனை விலை கொள்முதல் விலை முதலிய விலைகளை எடுத்துக்கொள்ளாது + +மொத்த தேசிய உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) + (வெளிநாட்டு வரவு - வெளிநாட்டு செலவு) + + +மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட (பண்டம்/பணி) மதிப்பாகும். மொத்த தேசிய உற்பத்தி என்பது அந்நாட்டினர் உற்பத்தி செய்யப்பட்ட(பண்டம்/பணி) மதிப்பாகும். முன்னவை அந்நாட்டில் வெளிநட்டினார் செய்த உற்பத்தியை சேர்க்கும். பின்னவை வெளிநாட்டில் அந்நாட்டினர் செய்த வருமானத்தையும் சேர்க்கும். + +நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படும் ஒரு அளவீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணக்கிடுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்கா இதனைப் பயன்படுத்திவந்தது. + + + + + +கரிமம் + +கரிமம் (கார்பன், "Carbon", வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள். நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வழக்கம் இல்லாத காலத்திற்கும் முன்பிருந்தே கரிமத்தின் பயன்பாடு இருந்து வந்ததால் அது எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியாதிருக்கிறது. கரிமம் இயற்கையில் தனித்தும் கூட்டுப்பொருளாகவும் கிடைக்கிறது. தனிமமாகக் கரிமம் வைரமாகவும் ("diamond") காரீயப் படிவுகளாகவும், நிலக்கரியாகவும் கிடைக்கின்றது. கரிமத்தின் கூட்டுப்பொருள்கள் பல உள்ளன. வளிம நிலையில் இருக்கும் காபனீரொட்சைட்டானது கரிமம், ஒட்சிசன் என்பவற்றின் சேர்க்கையாலானதாகும். நாம் மூச்சுவிடும்போது காபனீரொட்சைட்டைக் கழிவாக வெளியேற்றினாலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு இது இன்றியமையாததாகும். ஐதரோக்கார்பன்களாக இது எரிவளிமத்திலும் ("natural gas") பெற்றோலியத்திலும் உள்ளது. சுண்ணாம்புக்கல், சலவைக்கல் போன்றவற்றில் காபனேற்றுகளாகக் காணப்படுகிறது. விலங்கினங்களின் உடலாகட்டும், தாவரங்களின் இழையங்களாகட்டும், கரிமத்தின் கலப்பு இல்லாதது எதுவும் இல்லை. அதனால் எப்பொருளைக் காற்றில் எரித்தாலும் காபனீரொட்சைட்டு உண்டாவதும், முழுமையாக எரியாத நிலையில் கரியாவதும் காபனோரொட்சைட்டாவதும் இயல்பாகின்றது. வைரத்தில் ஒவ்வோர் அணுவும் மற்ற நான்கு அணுக்களுடன் உறுதியாகப் பிணைந்துள்ளது. இந்த நான்கில் ஒவ்வொன்றும் வேறு நான்கு அணுக்களுடன் இணைந்துள்ளது. ஆகவே, கரிம அணுக்களைப் பிரிப்பது கடினம். +கரியின் பலவகைகள் கரிமத்தையே குறிக்கின்றன. கரிமத்தில் படிக வடிவம் கொண்டவை, படிக வடிவம் இல்லாதவை என இரு வகைகள் உள்ளன. வைரமும் காரீயமும் படிக வடிவம் கொண்டவை. கரிமமானது, மற்ற தனிமங்கள், சேர்மங்களுடன் எளிதில் சேராது. எனினும் மிக உயர்ந்த வெப்பநிலையில் மற்றத் தனிமங்களுடன் வினை புரியும். அங்கக வேதியியல் என்ற ஒரு பிரிவு உண்டாகக் காரணமே கரிமம் தான். விண்ணிலும் கரிம உடுக்கள் என்று தனியுடுக்களே உள்ளன. எல்லா உயிரினங்களிலும், எல்லாப் பொருள்களிலும் குறைந்தது ஒரு விழுக்காடாவது இத்தனிமம் உள்ளது. வைரம், காரீயம், கரி ஆகிய யாவும் கரிமத்தின் வடிவங்களே. ஒட்சிசனுக்கு அடுத்தபடியாக, உயிரினங்கள் வாழக் கரிமம் இன்றியமையாதது. கரிமமோ அதன் சேர்மங்களோ இல்லாத பொருள்களே இல்லை. + +1985ஆம் ஆண்டு பந்து போன்ற ஒரு கூண்டு வடிவில் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு பெருவிந்தையான வடிவிலும் கரிமம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பக்மினிஸ்டர் ஃவுல்லரீன் என்று பெயர் (சுருக்கமாகப் பக்கிப் பந்து என்றும் அழைப்பர்). எனவே, கரிமம் பல மாற்றுவடிவங்களில் இருப்பதை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கரிமம் உயிர்வாழ்வன எல்லாவற்றிலும் (மரஞ்செடிகொடிகள், புழு பூச்சிகள் எல்லாம்) உள்ள ஒரு பொருளாகும். இப்படிப் பரவலாக இருந்தபொழுதிலும் நில உலகில் 0.03% மட்டுமே கரிம அணுக்களால் ஆனது. 1 மில்லியனுக்கும் அதிகமான கரிமங்களினாலான வெவ்வேறு மூலக்கூறுகளை வேதியியல் துறையினர் அறிவர். நாம் மூச்சு வெளிவிடும் பொழுது அதில் காபனீரொட்சைட்டு என்னும் வளிமம் உள்ளது. இது ஒரு கரிம அணு இரு ஒட்சிசன் அணுக்களுடன் சேர்ந்த ஒரு மூலக்கூறு (CO). கரிம அணுக்கள் நீரிய ("hydrogen") அணுக்களுடன் வெவ்வேறு விகிதத்தில் இணைந்து க���ிம-நீரதை (ஐதரோக்காபன்) கூட்டணுப் பொருள்கள் உண்டாக்குகின்றன. இவை எரிபொருள்களாகப் பயன்பட்டு நமக்குப் பல வடிவங்களில் ஆற்றல் தருகின்றது. + +கார்பன் ஓர் அலோகமாகும். இயற்கையில் காணப்படும் கார்பனில் படிக உருவமற்ற ("amorphous") கரி, கிராபைட், வைரம் என மூன்று வேற்றுருக்கள் உள்ளன.வெள்ளைக் கார்பன் ("White Carbon") என்று நான்காவது வேற்றுரு இருக்கலாம் என்று அறிந்துள்ளனர். இது சிறிய கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் உடல் கட்டமைக்கப் பயன்படுகிறது 1969 ல் கார்பனின் இந்த நான்காவது வேற்றுரு இனமறியப்பட்டது. ஆவியாக்கப்பட்ட கிராபைட்டை, தாழ்ந்த வெப்ப நிலையில் திண்மமாக உறையச் செய்யும் போது இது காணப்பட்டது. வெள்ளைக் கார்பன் வழிச் செலுத்தப் படும் ஒளி இரு கூறாகத் தளவாகம் ("Polarization") செய்யப்பட்டு உடுருவிச் செல்கிறது. கிராபைட் மிகவும் மென்மையான பொருட்களில் ஒன்று ஆனால் வைரம் மிகவும் கடினமான பொருள். எல்லாப் பொருட்களிலும் வைரமே கடினத் தன்மை ("hardness") மிக்கது, கிராபைட்டும் ஆல்பா, பீட்டா என இரு வகைப்படுகிறது. இவை ஒத்த இயற்பியல் பண்புகளைப் பெற்றிருந்தாலும் இவற்றின் படிகக் கட்டமைப்பு மாறுபட்டிருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் கிராப்பைட்டில் ஆறு செவ்வகப் புறத் தளமுடைய ("rhombohedral") பீட்டா வடிவம் 30 % க்கு மேல் உள்ளது. ஆனால் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கிராபைட்டில் ஆறுமுக புறத்தளமுடைய ("hexagonal") ஆல்பா வடிவம் மட்டுமே உள்ளது. இயந்திரப் பண்டுவத்தினால் ஆல்பா கிராபைட்டை பீட்டா கிராபைட்டாக்க முடியும். 1000 டிகிரி C மேல் சூடு படுத்தும் போது பீட்டா கிராபைட் ஆல்பா கிராபைட்டாக உருமாறுகிறது. + +1985 ஆம் ஆண்டுகுரோடோ ("kroto") மற்றும் ஸ்மாலே ("smalley") என்ற விஞ்ஞானிகள் நீள் வட்டப் பந்து வடிவ C 60, C 70 என்று குறிப்பிடப் படும் 60, 70 கார்பன் அணுக்களால் ஆன புல்லரின் ("Fullerene") என்ற குடும்பம் சார்ந்த மூலக்கூறைக் கண்டறிந்தனர். கார்பன் அணுக்களால் மட் டுமே கட்டமைக்கப்பட்ட எந்த மூலக்கூறும் புல்லரின் எனப்படும் இது கோள வடிவில் இருந்தால் அதைப் பந்து வடிவ மூலக் கூறு ("bucky ball") என்றும் நீள் உருளை வடிவில் இருந்தால் அதை கார்பன் நானோ குழல் (Carbon nano tube) அல்லது குழல் வடிவ மூலக்கூறு(Bucky tube) என்றும் கூறுவர். C60 , C70 மட்டுமின்றி C 72, C76 , C82 , C84 C100 போன்ற புல்லரின்களையும் அறிந்துள்ளனர். மிகச் சிறிய புல்லரின் ஆக C 20 உள்ளது 6500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒரு விண்மீனைச் சுற்றி யுள்ள தூசி மண்டலத் தாலான நெபுலாவில் 2010ல் C 60 என்ற புல்லரினை கண்டறிந்தனர். + +பின்னர் இதைப் போல கிராபீன் ("Graphene") என்றொரு பொருளையும் உருவாக்கினார்கள் பென்சீன் கட்டமைப்பைப் போல உள்ள இதில் கார்பன் அணுக்கள் எல்லாம் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். கிராபீன் ,தேன் கூடு போன்ற படிக அணித் தளத்தில், ஒன்றை அணு தடிப்புடன் வெறும் கார்பன் அணுக்களின் பிணைப்பால் கட்டமைக்கப்பட்டது இதில் கார்பன் - கார்பன் பிணைப்பின் நீளம் ௦.142 நானோ மீட்டராகும். கிராபீன் தளங்களை அடுக்கி கிராபைட்டை உருவாக்கினால் அணித்தள இடைவெளி ௦.35 நானோ மீட்டராக இருக்கும்.இதன் வலிமையும் நிலைப்புத் தன்மையும் மிகவும் அதிகம் . மெல்லியதாக இருந்தாலும் எஃகைக் காட்டிலும் உறுதியானதாக இருக்கின்றது. இதைக் கண்டுபிடித்து அதன் பண்புகளைத் தெரியப் படுத்தியதற்காக 2010 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கிம் ("Andre Geim") மற்றும் கோன்ஸ்டன்டின் நோவோசெலோவ் ("Konstantin Novoselov", Константин Новоселов) ஆகியோருக்கு வழங்கப்பட்டது + +C என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்ற கரிமத்தின் அணு எண் 6. எனவே இதனுள் ஆறு நேர்மின்னியும் (புரோட்டானும்), ஆறு எதிர்மின்னியும் (மின்னணு, எலக்ட்ரான்) உள்ளன. இதன் அணு எடை 12. அணுக்கருவுள், 6 நொதுமின்னியும் (நியூட்ரான்) உண்டு. கரிமம் தன் கெட்டியான திண்ம நிலையில் இருந்து உருகுவதில்லை, ஆனால் 3500 C வெப்ப நிலையில், நேரடியாய் வளிம நிலையை அடைகின்றது. இவ்வகையாக உருகாமல் நேரடியாய் வளிமமாக மாறுவதற்கு பொசுங்குதல் என்று பெயர். கரிமத்தின் அடர்த்தி 2.25 கி/கன செ. மீ. கொதி நிலை 4173 K. C-14 என்பது இக்கரிம அணுவின் சமதானி (அணுவெண் மாறாமல், அணுவெடை மட்டும் மாறி உள்ள வடிவம்). அணுவின் நிறையை அணுத்திணிவு அலகால் ("automic mass unit") குறிப்பிடுவார்கள். இதற்கு கார்பன் படித்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது கார்பன் சில உலோகங்களுடன் கூடி கார்பைடுகளை ஏற்படுத்துகின்றது. இவை உலோகப் பண்பில் சிறிதளவும்,அலோகப் பண்பில் சிறிதளவும் கொண்டுள்ளன.கால்சியம், அலுமினியம்,சிலிகான் கார்பைடுகள் பெரிதும் அறியப்பட்டுள்ளன. இவை உறுதி மிக்கதாகவும், உயர் உருகு நிலை கொண்டதாகவும் இருப்பதால் உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. + +கார்பன் மந்தமாக வினை புரியக் கூடிய ஒரு தனிமமாகும். காற்றில் எரிக்கும் போது ஆக்சிஜனுடன் கூடி கார்பன் டை ஆக்சைடை உண்டாக்குகின்றது. கந்தக ஆவியில் இது கார்பன் டை சல்பைடாக மாறுகிறது. புளோரினுடன் நேரடியாகக் கூடுகிறது. ஆனால் பிற ஹாலஜன்களுடனும், நைட்ரஜனுடனும் வினை +புரிவதில்லை. ஹைட்ரஜனுடன் கூடி பல ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்களை உண்டாக்கி இருக்கிறது. உயிரியல் மூலக் கூறுகள் பெரும்பாலும் இவ்வகையின. இதனால் கரிம வேதியியல் ("Organic Chemistry") என்ற தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டது. + +கார்பனின் ஒரு வடிவம் வைரமாகும். இது மிகவும் உறுதியானது. வைரத்தின் ஒளி விலகல் எண் ணும் ("refractive index"), பிரிகைத் திறனும் ("dispersive power") மிகவும் அதிகம். அதனால் அது பிரகாசமாய் ஒளியைச் சிந்துகிறது. வைரம், அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனூட்டிகளால் பாதிக்கப் படுவதில்லை. 800 டிகிரி C வரை சூடுபடுத்தும் போது கார்பன்டை ஆக்சைடாக மாறி விடுகிறது. இது அணிகலண் தயாரிப்பிலும் கண்ணாடிகளை அறுக்கவும் பயன்படுகிறது. + +கிராபைட் ஒரு மெண்மையான கரிமப் பொருளாகும். கரியையும் மணலையும் மின் உலையில் வைத்து தொடர்ந்து சூடு படுத்த கார்பன் சிலிகேட் உண்டாகி சிலிகான் ஆவியாக்கப் பட்டு கிராபைட் உண்டாகிறது. கிராபைட் செறிவூட்டப் பட்ட நைட்ரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகின்றது. மின்சாரத்தைக் கடத்தினாலும் வெப்பத்தைச் சிறிதும் கடத்தாத கிராபைட் தீச்செங்கல், உலோகங்களை உருக்க உதவும் மண் குப்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. கிரபைட்டுடன் களிமண் கலந்து பென்சில் தயாரிக்கின்றாகள். இதில் சிறிதளவு ஈயமும் கலக்கப்படும். கிராபைட் ஒரு மசகுப்பொருளாகவும் பயன்தருகிறது. வர்ணங்களின் தயாரிப்பு முறையிலும் மின் சாதனங்கள் மற்றும் மின்கலங்களில் மின்வாயாகவும் (electrode) பயன்படுகிறது. + +மரக்கரி சில வளிமங்களை உட்கவர்ந்து கொள்கிறது. இப்படி உட்கவரப்படும் வளிமம் இயல்பான நிலையில் இருக்கும் போது இருப்பதை விட கூடுதல் தீவிரமிக்கதாய் இருக்கிறது. இப் பண்பு உயர் வெற்றிட வெளியை உண்டாக்கவும் உட்கவரப்படாத நீயான், ஹீலியம் வளிமத்திலிருந்து எளிதில் உட்கவரப்படும் வளிமங்களை பிரித்தெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் சேர்ந்துள்ள வளிமத்தை அகற்ற கரி சேர்க்கப்பட��ட ரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் கை வைத்திய முறையில் இன்றைக்கும் பின்பற்றப்படுகிறது. குடிநீரை மணம் அகற்றி கிருமிகளை நீக்கி கழிவு நீரைச் சுத்தப்படுத்தும் முறையிலும் கரி பயன்படுத்தப்படுகிறது. உலோகங்களின் ஆக்சைடு கனிமத்திலிருந்து ஆக்சிஜனிறக்கம் செய்து உலோகத்தைத் தனித்துப் பிரிக்கக் கரி பெரிதும் உதவுகிறது. கரிப்புகைப் படிவு, இசைத்தட்டுகள், கார்பன்தாள், தார்ப்பாய்கள் போன்றவற்றின் தயாரிப்பு முறையில் பயன்படுகிறது. எலும்புக்கரி கரைசலின் நிறமிப் பொருளைக் கவர்ந்து வெண்மையூட்டுவதால் சக்கரைக் கரைசலிலிருந்து சீனி (சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. + +நிலக்கரி என்பது முழுமையான கார்பன் இல்லை. அதில் கார்பன் தவிர்த்து எப்போதும் நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் போன்றவைகளும் மேலும் சிலிகா, அலுமினா மற்றும் பெரிக் ஆக்சைடு போன்றவைகளும் சேர்ந்திருக்கும். தொல்படிவு படிப்படியாகப் பெற்ற சிதைவுகளைப் பொறுத்து அதில் கார்பனின் அளவு இருக்கும். மரத்தில் 40 விழுக்காடும், அடுப்புக் கரியில் 60விழுக்காடும், பழுப்பு நிலக்கரியில் 70 விழுக்காடும் கருப்பு நிலக்கரியில் 78 விழுக்காடும், ஆந்திரசைட் நிலக்கரியில் 90 விழுக்காடும் கார்பன் உள்ளது. நிலக்கரி தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன்படுகிறது. அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஆதரவாய் உள்ளது. + +தார் சாலைகள் போடப்பயன்படுகிறது. தாரிலிருந்து பல வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றைக் கொண்டு வண்ணமூட்டிகள், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், வெடிபொருட்கள், நறுமணப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள். + +கார்பனின் மற்றொரு பயன்பாடு கார்பன் கால மதிப்பீட்டு முறை ("Carbon dating") ஆகும். உயிர் வாழும் மரத்தில் நிலைத்த கார்பன்- 12 உடன் கார்பன் -14 என்ற கதிரியக்க அணுவும் உட்கவரப்பட்டு நிலைப்படுகின்றன. இவை இரண்டும் ஒரு சம நிலையில் இருக்கும். ஆனால் மரம் வெட்டப்பட்டவுடன், கார்பன் உட்கவருதல் இல்லாததால் கார்பன் - 14 சிதைவுற்று அதன் செழுமை குறையும் இதன் செழுமையை அளவிட்டறிந்து மரத்தின் காலத்தை மதிப்பிட முடியும். + + + + +லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் + +லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ("Lester James Peries", , 5 ��ப்ரல் 1919 – 29 ஏப்ரல் 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார். 1949 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், 20 முழுநீளத் திரைப்படங்களையும், 11 ஆவணப் படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். "ரேக்காவ", "கம்பரெலிய", "நிதானய" போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவரது திரைப்படங்கள் பொதுவாக இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்ப வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டிருக்கும். + +1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது மூழுநீளத் திரைப்படம் "ரேகாவ" (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. + + + + + + +சிஏஎசு எண் + +சி.ஏ.எசு எண் ("CAS registry number") என்பது அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. சனவரி 2008 அன்றுவரை 33,565,050 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன (செப்டம்பர் 11, 2007 அன்று வரை 32,449,591 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு இருந்தன). இது தவிர 59,584,048 தொடர்கள் (sequences) பதிவு செய்யப்பட்டுளன.ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) ஏறத்தாழ 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன. சூன் 17, 2013 வரை 71 மில்லியன் வேதியியல் பொருளுக்கான தரவுகள் எண் குறிப்பிடப்பெற்று தொகுக்கப்பெற்றுள்ளன. + + + + + +சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல் + +சமார்ராவின் பெரிய பள்ளிவாசல் மத்திய ஈராக்கிலுள்ள சாமரா என்னும் நகரில் அமைந்துள்ளது. இந்நகரம் அப்பாசிட் வம்ச ஆட்சியின் போது தலைநகரம��க விளங்கியது. கி.பி 847 க்கும், 861 க்கும் இடையில் ஆட்சி புரிந்த அப்பாசிட் கலீபாவான அல் முத்தவாக்கில் என்பவரால் இம் பள்ளிவாசல் கட்டுவிக்கப்பட்டது. + +240 மீட்டர் நீளத்தையும், 160 மீட்டர் அகலத்தையும் கொண்ட இது அக்காலத்தில் உலகிலேயே பெரிய மசூதியாக விளங்கியது. இதன் மினார் அதிகம் வழக்கத்தில் இல்லாத வடிவ அமைப்பைக் கொண்டது. பெரிய கூம்பு வடிவ அமைப்புடன் விளங்கும் இதன் வெளிப்புறத்தைச் சுற்றி சுருள் வடிவிலான சாய்தள அமைப்பு உள்ளது. 52 மீட்டர் உயரமும், அடிப் பகுதியில் 32 மீட்டர் அகலத்தையும் கொண்ட இக் கோபுர அமைப்பு சுட்ட செங்கற்களால் ஆனது. + + + + + +இலித்தியம் + +இலித்தியம் ("Lithium") என்பது Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன், வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்). இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3. இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். மாழைகள் (உலோகங்கள்) யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதியளவு தான். இலித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது. + +இலித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), இலித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை. தூய இலித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது. இதன் பெறுமானம் 3582 J Kg K ஆகும். அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 யூல் (Joule) ஆற்றல் தரவேண்டும். + +இலித்தியம் புவியி���் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) என்ற அளவில் உள்ளது. + +பீட்டாலைட்டு என்ற கனிமத்தைப் பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin) என்பார் அதில் அலுமினா (அலுமினியம் ஆக்ஃசைடு), சிலிகா தவிர்த்து காரமாழை (கார உலோகம்) இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து இலித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் சுவீடன் நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (Arfwedson) என்பாராவர். பீட்டாலைட்டு கனிமத்தில் 80 % சிலிகான் ஆக்சைடும், 17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரமாழையும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது. இதற்கு இலித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப் வெட்சன். இது பாறை என்று பொருள்படும் 'இலித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது. 1855 ல் இடாய்ச்சுலாந்து (செருமன் நாட்டு) வேதியியல் அறிஞர் புன்செனும், இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட இலித்தியம் குளோரைடை மின்னாற் பகுப்பிற்கு உட்படுத்தி வணிக அளவில் இலித்தியத்தைப் பிரித்தெடுத்தனர். +தனிம அட்டவணையில் ஐதரசன், ஈலியத்திற்கு அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக இலேசான மாழை (உலோகம்) இலித்தியம். பூமியில் இலித்தியத்தின் கனிமங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை சோடியம், பொட்டாசியத்தை விட மிகவும் குறைவு. இலித்தியம் இயற்கையில் தங்கம், வெள்ளி போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான வெள்ளி போன்று பளபளக்கின்ற மாழையாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட இலேசான உலோகம் வேறெதுவும் இல்லை. இலித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது. ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது. +அறை வெப்ப நிலையில் இலித்தியம் காற்றில் உள்ள நைதரசன், ஆக்சிசனுடன் வினை புரிகின்றது. ஒரு கண்ணாடிக் குப்பியில் ச��றிதளவு இலித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால் அதிலுள்ள காற்றையெல்லாம் இலித்தியம் உள்வாங்கிக் கொண்டுவிடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது. சோடியத்தை மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிவதைப் போல இலித்தியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடிவதில்லை. எனவே இலித்தியத்தை குச்சிகளாக்கி வாசிலின் (Vaseline) அல்லது பாரபின் மெழுகில் புதைத்து வைக்கின்றார்கள். + +இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் அணு எண் 3, அணு நிறை 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும். + +இலித்தியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் ஐதரசன் வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இது இலிதியம் ஐதரொக்சைட்(LiOH + LiOH.HO), இலிதியம் நைட்ரைட் (LiN), இலிதியம் கார்பனேட்(LiCO) (இலிதியம் ஐதரொக்சைட்டும் காபனீரொக்சைட்டும் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும். + +இலித்தியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும். + +சாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும் மக்னீசியம் உலோகமும் மூலைவிட்டத் தொடர்பு கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (LiO) பரஒக்சைட்டையும்(LiO) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன. + +உயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் தாக்கமடைந்து இலிதியம் ஹைட்ரைட்ஐ (LiH) உருவாக்கும். + +இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ண��டி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள் +தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது. + +இலித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை மிகைப் படுத்துகின்றது. புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில் இது பயன்தருகிறது. இதயத் துடிப்புச் சீராக்கி (Pace Maker) போன்ற +பல சாதனங்களுக்கு இலித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக இலித்தியமும் மின்னாற் பகுபொருளாக இலித்தியக் கூட்டுப் பொருளான இலித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.0 வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 பாகை செல்சியசுக்கு மேலும் - 20 பாகை செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை. + +இலித்தியம் ஐதராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த இலித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணெயின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. இசுட்டியரேட்டு (stearate), பால்மிட்டேட்டு (Palmitate) போன்ற சில கரிம இலித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன. + +மாழை அல்லது உலோகப் பரப்புகளை மெருகூட்டுவதற்கும், வண்ணப்பூச்சிடுவதற்கும், எனாமல் மற்றும் உயர் வகை பீங்கான் பொருட்களைத் தயாரிப்பதற்கும் நெசவுத் தொழிலில் துணிகளுக்கு வெண்மை யூட்டுவதற்கும், சாயங்களைக் கெட்டிப்படுத்துவதற்கும் இலித்தியக் கூட்டுப் பொருட்கள் பயன் படுகின்றன. அலுமினிய -இலித்தியக் கலப்பு மாழை தாழ்ந்த அடர்த்தியும் மிகுந்த உறுதியும் கொண்டது. இலேசாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டிய விண்கலம், வானவூர்தி, விண்ணூர்தி போன்றவற்றை வடிவமைக்க இது பயன்தருகிறது. 50 % மக்னீசியத்துடன் இலித்தியம் சேர்ந்த ஒரு கலப்பு உலோகம் நீரில் மிதக்கின்றது அனால் இது காற்றிலுள்ள ஆக்சிசனைக் கவர்ந்து அரிக்கப்படுகின்றது. எனினும் ஒரு ���ுறிப்பிட்ட நெடுக்கைக்கு உட்பட்ட விகிதத்தில் மக்னீசியத்தைச் சேர்க்கும் போது அது பழுதுறாமல் நீண்ட காலப்பணிக்கு உகந்ததாக இருக்கின்றது. + +அலுமினிய உற்பத்தி முறையில் இலித்தியம் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது. மின்னாற்பகுப்புத் தொட்டியில் சிறிதளவு இலித்தியம் கூட்டுப் பொருளைச் சேர்க்கும் போது,அது அலுமினிய உற்பத்தியைக் குறிப்பிடும்படியாக அதிகரிக்கின்றது. தொட்டியின் வெப்ப நிலையைத்தாழ்வாக வைத்திருப்பதுடன், மின்சாரத்தையும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்கிறது. + +இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல், மன நோய், மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய இலித்தியம் கார்போனேட் டு மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் இலித்தியம் கார்போனேட்டு பயன்படுகின்றது + +ஒளிப்பொறிச் சிதறல் எண்ணி(Scintillation counter) களில் உடன் ஒளிர்வுப் பொருட்கள் (Phosphor) பயன்படுகின்றன. இதில் துத்தநாக சல்பைடு,பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருட்களின் பூச்சுகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கதிரியக்கக் கதிர்களுள் ஒன்றான ஆல்பா கதிர்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், பீட்டா மற்றும் காமாக் கதிர்களுக்குப் பயனுறு திறன் குறைவாகப் பெற்றுள்ளன. தாலியம் கூடிய இலித்தியம் அயோடைடுப் படிகம் இக் குறைபாட்டை நீக்கியுள்ளது. இலித்தியம் -6 என்ற அணு எண்மம்(Isotope) ஐதரசன் குண்டு தயாரிப்பில் முக்கியப் பங்கேற்றுள்ளது இது நொதுமியை (நியூட்ரானை) உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டதால், அதன் நிலைப்புத்தன்மைமை அணுக்கருவிற்குள் ஓரிரண்டு நொதுமிகளை (நியூட்ரான்கள) உட்புகுத்தி மாற்ற முடியும். நிலையற்ற தன்மையால் அது சிதைந்து ஈலியம் -4 ஆகவும் ஐதரசனின் கதிரியக்க அணு எண்மமான திரைட்டானாகவும் (triton) உருமாறுகின்றது. இது வெப்ப அணுக்கரு வினையில் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது. + +அணுக் கருப் பிளப்பு (Nuclear fission ) முறையை விட அணுக்கருப்பிணைவு முறை (Nuclear fusion) அனுகூலமிக்கது என்றாலும் அணுக்கள் தானாகப் பிணைந்து கொள்வதற்கான வெப்ப நிலை ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் என்ற நெடுக்கையில் உள்ளது. ஐதரசன் குண்டு தயாரிக்கும் வ���ி முறையில் எட்வர்டு டெல்லர் என்ற அறிவியலாளர் ஒரு புதுமையைப் புகுத்தினார். அவர் இலித்தியம் தியூட்ரைடு என்ற கூட்டுப் பொருளைப் பயன்படுத்தினார். அது குறைந்த வெளியில் அதிக அளவு தியூட்ரியத்தைப் பெற்றிருக்கின்றது. அத்திண்மத்தை நொதுமியின் (நியூட்ரானின்) வீச்சுக்கு உட்படுத்த, அதிலுள்ள இலித்தியம் நொதுமியை உட்கவர்ந்து அணுக்கரு வினையால் திரைட்டானை உருவாக்குகின்றது. அருகருகே உள்ள தியூட்ரானையும் திரைட்டானையும் பிணைக்கத் தேவையான வெப்பத்தை ஒரு வழக்கமான யுரேனிய அணு குண்டால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். யுரேனிய அணு குண்டில் நொதுமியின் (நியூட்ரானின்) செறிவை அதிகரிக்கும் போது அது பெருக்கமுற்று ஒரு கட்டத்தில் தானாக வெடிக்கின்றது. யுரேனிய அணு குண்டைச் சுற்றி இலித்தியம் தியூட்ரைடு படலத்தை ஏற்படுத்திக் கொண்டால், யுரேனியக் குண்டு வெடிக்கும் போது திரைட்டான் உற்பத்திக்குத் தேவையான நியூட்ரானை இலித்தியம்-6 க்கு வழங்குவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட திரைட்ரானும், தியூட்ரானும் பிணையத் தேவையான உயர் வெப்ப நிலையையும் தருகிறது. + +அணு உலைகளில் நியூட்ரானின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த காட்மியம் பயன் படுத்துகின்றார்கள். இதற்கு இலித்தியம்-6 ஒரு மாற்றுப் பொருளாகும். ஏவூர்திகளில் இலித்தியம் திண்ம எரிபொருளாகப் பயன்படுகிறது. இதன் எரிப்புறல்(Combustion ) ஒரு கிலோ கிராமுக்கு 10270 கிலோ காலரி. இதை விட பெரிலியம் மட்டுமே கூடுதலான எரிப்புறுமையைப் பெற்றுள்ளது . + +விண்மீன்களின் வயதை மதிப்பிடும் ஒரு புதிய வழிமுறைக்கு இலித்தியம் கொடுத்துள்ளது. விண்மீன்களில் தொடக்க எரிபொருளாக இருப்பது ஐதரசன். ஐதரசனின் சேமிப்பு முழுவதும் தீர்ந்து போன நிலையில் அடுத்தடுத்த உயர் அணுவெண் அணுக்களும் வினையில் ஈடுபடுகின்றன. ஐதரசன் எரிதல் நிறை எல்லையில் இருக்கும் விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமையை அறிய நிறமாலையில் 6708 ஆம்ஸ்ட்ராம் (10^8m) அலை நீளத்தில் ஆராய்கின்றார்கள். இதன் ஒப்புச்செறிவிலிருந்து இலித்தியத்தின் செழுமையை மதிப்பிட முடியும். அதிலிருந்து விண்மீனின் வயதைக் கணக்கிட முடிகின்றது . + +இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் இலித்���ியம் உற்பத்தியின் அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் உண்டான மற்ற தனிமங்களில் இருந்து இலித்தியம் உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. 55% இலித்தியம் குளோரைடும் 45% பொட்டாசியம் குளோரைடும் கலந்த கலவையை 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி ஈலியம் உற்பத்தி செய்யப்படுகிறது . +2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகின் இலித்தியம் உற்பத்தியில் பெரும்பகுதி தென் அமெரிக்காவில் கிடைக்கிறது. அங்கு இலித்தியத்தைக் கொண்ட உப்புக்கரைசல் குளங்களின் நிலத்தடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, மேலும் சூரிய ஆவியாக்கல் மூலம் அடர்விக்கப்படுகிறது. தரமான பிரித்தெடுத்தல் நுட்பம் வழியாக உப்பிலிருந்து நீரைப் ப்ரித்தெடுப்பது ஆகும். ஒவ்வொரு தொகுதியான தயாரிப்பு 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகும் . 1998 இல் இலித்தியத்தின் விலை கிலோவுக்கு சுமார் 95 அமெரிக்க டாலர்கள் ஆகும் . + +உலக லித்தியம் இருப்புக்களின் துல்லியமான மதிப்பீட்டைக் கணக்கிடுவது கடினமாக இருந்தாலும், அமெரிக்க புவியியல் ஆய்வு 2018 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகளவில் கண்டறியப்பட்ட இலித்தியம் இருப்பு 16 மில்லியன் டன்களாக மதிப்பிடப்படுகிறது, இதற்கு கூறப்படும் ஒரே ஒரு காரணம் என்னவெனில் மிகுந்த இலித்தியம் வகைப்பாட்டு திட்டங்கள் திண்மநிலை தாது இருப்பை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன, அதேசமயம் உப்புநீர் திரவமானது மாறுபட்ட செறிவுகள் மற்றும் உந்திசெலுத்தும் விளைவுகள் காரணமாக அதே வகைப்பாடு திட்டத்துடன் மதிப்பிடுவது சிக்கலானதாக இருக்கிறது. உலகத்தில் 15 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 65 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருக்கலாம் என்பதில் உண்மையும் இருக்கிறது. 75% இலித்தியம் இருப்பு 10 பெரிய படிவுகளாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆறு உப்புநீர் ஊற்றுகள், இரண்டு தீப்பாறை வகை படிவுகள், இரண்டு படிவுப் பாறை படிவுகள் என மொத்தம் 83% இலித்திய இருப்பு உள்ளதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. + +2016 ஆம் ஆண்டு அமெரிக்கப் புவியியல் கணக்கெடுப்பின் அடிப்படையில் உலகின் முதல் 3 லித்தியம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் ஆத்திரேரேலியா, சிலி மற்றும் அர்கெந்தினா நாடுகள் இடம் பிடிக��கின்றன . சிலி, பொலிவியா, அர்கெந்தினா நாடுகளின் குறுக்குவெட்டு சந்திப்பு மண்டலம் இலித்திய முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் கிடைக்கும் இலித்தியம் உயர் தரமானதாக இருக்கிறது. உலகில் இருப்பு இருப்பதாக நம்பப்படும் இலித்தியத்தில் 75% இம்முக்கோணத்தில்தான் இருக்கிறது. தென் அமெரிக்காவின் ஆண்டீசு மலைத் தொடர் பகுதியில் இலித்தியப் படிவுகள் காணப்படுவதாக அறியப்படுகிறது. இலித்தியம் உற்பத்தியில் சிலி முதலிடத்தையும் அதைத் தொடர்ந்து அர்கெந்தினா இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றன. இவ்விரண்டு நாடுகளுமே இலித்தியத்தை உப்பு நீர் ஊற்றுகளில் இருந்தே பிரித்தெடுக்கின்றன. பொலிவிய பாலைவனத்திலும் 5.4 மில்லியன் டன் இலித்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது . +அமெரிக்காவின் நெவிடாவில் உள்ள உப்புநீர் குளங்களில் இருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது .ஆண்டீசு மலைத் தொடரின் மத்திய கிழக்கு சாய்வில் உள்ள பொலிவியா நாட்டில் உலகின் அறியப்பட்ட இருப்புக்களில் பெரும்பகுதி காணப்படுகின்றது. உப்புநீர் குளங்களிலிருந்து இலித்தியத்தைப் பிரித்தெடுப்பது தொடர்பாக பொலிவியா 2009 ஆம் ஆண்டில் சப்பான், பிரஞ்சு மற்றும் கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது . 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட வயோமிங்சு படிவில் இலித்தியம் 228,000 டன்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அமைப்பில் கூடுதல் வைப்புத்தொகை மேலும் 18 மில்லியன் டன் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. + + + + + +கூம்பு + +கூம்பு ("cone") என்பது ஒரு வடிவவியல் (இலங்கை வழக்கு: கேத்திர கணிதம்) வடிவம் ஆகும் ஆகும். இது ஒரு தட்டையான அடிப்பக்கத்திலிருந்து உச்சி எனப்படும் புள்ளியை நோக்கி சீராக சாய்வாக அமைந்த ஒரு முப்பரிமாண வடிவமாகும். + +கூம்பானது, உச்சி எனப்படும் ஒரு பொதுப்புள்ளியை, ஒரு தளத்திலமைந்த அடிப்பக்கத்தின் அனைத்துப்புள்ளிகளையும் (உச்சிப் புள்ளி அந்த அடிப்பக்கத்தில் இருக்கக் கூடாது) இணைக்கும் கோட்டுத்துண்டுகள், அரைக்கோடுகள் மற்றும் கோடுகளால் உருவானதாகும். வட்டமாகவோ, ஒருபரிமாண இருபடிவடிவமாகவோ அல்லது ஒருபரிமாண மூடிய வடிவமாகவோ அல்லது மேற்கூறிய ஏதேனுமொன்றுடன் சுற்றுப்புள்ளிகளும் சேர்ந்ததாக அந���த அடிப்பக்கம் அமைந்திருக்கலாம். + +அடிப்பக்கத்தின் சுற்றுப்புள்ளிகளையும் சேர்த்துக் கொள்ளும்போது உருவாகும் கூம்பு ஒரு திண்மமாகவும், சுற்றுப்புள்ளிகள் விடுபடும்போது உருவாகும் கூம்பு முப்பரிமாண வெளியிலமைந்த ஒரு இருபரிமாணப் பொருளாகவும் இருக்கும். கூம்பு திண்மமாக இருக்கும்பொழுது அதனை உருவாக்கும் கோடுகள், கோட்டுத்துண்டுகள், அரைக்கோடுகள் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட பரப்பு, 'பக்கப் பரப்பு' எனப்படும். பக்கப் பரப்பு எல்லையற்றதாக அமையும்பட்சத்தில் அது ஒரு கூம்புப் பரப்பாக அமையும். +கூம்பானது கோட்டுத்துண்டுகளால் உருவானால், அது அடிப்பக்கத்தைத் தாண்டி அமையாது; அரைக்கோடுகளால் உருவானால் முடிவிலி தூரத்திற்கு நீட்சியடையும்; கோடுகளால் உருவானால் உச்சியின் இருபுறமும் முடிவிலி தொலைவிற்கு நீட்சி அமைந்து 'இரட்டைக் கூம்பு' எனவும் அழைக்கப்படும். + +அடிப்படை வடிவவியலில் கூம்புகள் நேர்வட்டக் கூம்புகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நேர்வட்டக்கூம்பு என்பது அடிப்பக்கம் வட்டமாகவும் கூம்பின் உச்சியையும் அடிவட்டமையத்தையும் இணைக்கும் கோடு (கூம்பின் அச்சு) அடித்தளத்திற்கு செங்குத்தாகவும் கொண்ட கூம்பாகும். ஒரு நேர்வட்டக்கூம்பின் பக்கப்பரப்பும் மற்றுமொரு தளமும் வெட்டிக்கொள்ளும் போது கிடைக்கும் வெட்டுமுகம் கூம்பு வெட்டு ஆகும். எனினும் பொதுவாக ஒரு கூம்பின் அடிப்பாகம் வட்டமாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை; மேலும் உச்சிப் புள்ளி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் (எனினும் பெரும்பாலும் கூம்பின் அடிப்பக்கம் வரம்புடையதாகவும் அதனால் முடிவுற்ற பரப்பளவுடையதாகவும், உச்சியானது அடிப்பக்கத் தளத்திற்கு வெளியேயுள்ள புள்ளியாகவும் கருதப்படுகிறது). + +நேர்வட்டக்கூம்பிற்கு மாறாக, சாய்கூம்புகளில் உச்சியையும் அடிப்பக்க மையத்தையும் இணைக்கும் கோடு அடிப்பக்கத்திற்கு செங்குத்தற்றதாக இருக்கும். + +கூம்பின் அடிப்பக்கத்தின் சுற்றளவு "இயக்குவரை" எனப்படும். இயக்குவரைக்கும் உச்சிக்கும் இடைப்பட்ட ஒன்னவ்வொரு கோட்டுத்துண்டும் கூம்பின் பக்கப்பரப்பின் "பிறப்பிக்கும் கோடு" என்றழைக்கப்படும். + +கூம்பின் ஆரம் என்பது அதன் அடிப்பக்கத்தின் ஆரத்தைக் குறிக்கும். கூம்பின் உச்சிக்கோணம் என்பது அதன் இரு பிறப்பிக்கும் கோடுகளுக்கு இடைப்பட்ட உச்சபட்சக் கோணத்தின் அளவாகும். கூம்பின் அச்சுக்கும் அதன் ஒரு பிறப்பிக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் "θ" எனில் அதன் உச்சிக்கோணம் 2"θ". + +ஒரு தளத்தைக் கொண்டு கூம்பினை அதன் உச்சியுடன் வெட்டக் கிடைக்கும் பகுதி "துண்டிப்புக் கூம்பு" (truncated cone) என்றும், வெட்டும் தளம் கூம்பின் அடிப்பக்கத்திற்கு இணையாக இருக்கும்போது அந்த துண்டிப்புக் கூம்பானது "அடிக்கண்டம்" (frustum) என்றும் அழைக்கப்படும். அடிப்பக்கத்தை நீள்வட்டமாகக் கொண்ட கூம்பு, நீள்வட்டக் கூம்பு எனப்படும். + +ஒரு கூம்பின் கன அளவு formula_1 ஆனது அக்கூம்பின் அடிப்பக்கப் பரப்பளவு (formula_2) மற்றும் கூம்பின் உயரத்தின் (formula_3) பெருக்கற்பலனில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும். + +நுண்கணித முறைப்படி கூம்பின் கன அளவை தொகையீடு formula_5 ஆகக் கணிக்கலாம். + +சீரான அடர்த்தியுடைய ஒரு திண்மக் கூம்பின் நிறை மையம், அக்கூம்பின் அடிப்பக்க மையத்தையும் உச்சியையும் இணைக்கும் கோட்டில் அடிப்பக்க மையத்திலிருந்து கால்வழி தூரத்தில் அமைந்திருக்கும். + +செங்கோண முக்கோணம் ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் அடி எனப்படும். இந்த அடியில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் உச்சி என அழைக்கப்படுகின்றது. + +"r" என்னும் அடித்தட்டு ஆரையையும், "h" உயரத்தையும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் கனவளவு "V": + +இது அதே அளவிகளைக் கொண்ட உருளை ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். + +கூம்பின் சாய்வு உயரம் ("l")என்பது, அதன் உச்சிக்கும் அடிப்பக்க வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்டதாக, கூம்பின் மேற்பரப்பின் அமைந்த கோட்டுத்துண்டின் நீளமாகும். + +இது பிதாகரஸ் கோட்பாட்டின்படி விளைந்தது. + +நேர்வட்டக்கூம்பின் பக்க மேற்பரப்பளவு அல்லது வளைபரப்பளவு என்பது அதன் அடிப்பக்கம் நீங்கலான பகுதியின் பரப்பளவினைக் குறிக்கும்: + +இதில் formula_9 என்பது நேர்வட்டக்கூம்பின் அடிவட்ட ஆரம்; formula_10 என்பது சாய்வு உயரம். + +நேர்வட்டக் கூம்பொன்றின் மொத்தப் பரப்பளவு formula_11: + + + + + +கூம்பினை அதன் ஒரு சாய்கோட்டுத்துண்டின் வாயிலாக விரித்தால் கிடைக்கும் வடிவம் வட்டக்கோணப்பகுதியாக இருக்கும். இந்த வட்டக்கோணப்பகுதியின் அளவுகள்: + + + + + + + +சாமர்ரா + +சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் () ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது. + +2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது. + + + + +பகுதாது + +பகுதாது (பக்தாத்) என்பது ஈராக் நாட்டின் தலைநகரமாகும். இப்பெயர், பாரசீக மொழிச் சொல்லான, பக்-தாத் அல்லது பக்-தா-து என்பதின் அடியாகப் பிறந்தது. இதன் பொருள் "இறைவனின் பூங்கா" என்பதாகும். இது தென்மேற்கு ஆசியாவில் தெஹ்ரானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5,772,000 மக்கள்தொகையைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது. டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது.உயர் இடைக்காலங்களில்(Middle Age), பாக்தாத் நகரம் 1,200,000-3,000,000 மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நகரமாகக் கருதப்பட்டது. 1258 ஆம் ஆண்டில் மங்கோலிய சாம்ராஜ்யத்தினின் பிடியில் சிக்கி இந்த நகரம் அழிக்கப்பட்டது, இதன் விளைவாக பல நூற்றாண்டுகளாக அடிக்கடி கொள்ளை நோய்கள்(plagues) மற்றும் பல தொடர்ச்சியான பேரரசுகள் காரணமாகவும் இந்நகரம் பலவீனப்படுத்தப்பட்டது. 1938 ல் ஒரு சுயாதீனமான நாடாக ஈராக் அங்கீகாரம் பெற்றபின், பாக்தாத் படிப்படியாக அதன் முந்தைய முக்கியத்துவமான அரபு கலாச்சாரத்தின் முக்கிய மையமாக மீண்டும் உயிர்பெற்றது.அண்மை காலத்தில், இந்த நகரம் அடிக்கடி கடுமையான உள்கட்டமைப்பு சேதத்தை எதிர்கொண்டது. இது 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் படையெடுப்பு மற்றும் டிசம்பர் 2011 வரை நீடித்த ஈராக் போரினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், இந்நகரம் அடிக்கடி கிளர்ச்சி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளது.2012 ஆம் ஆண்டில், பாக்தாத் நகரம் உலகில் வாழும் குறைந்த விருந்தோம்பல் இடங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. மெர்சர் தரவரிசையில் 221 பெரிய நகரங்களில் மோசமான நகரம் என இந்நகரம் மதிப்பிடப்பட்டுள்ளது. + +ஈரானின் சுவாரஸ்யமான இடம், ஈராக்கின் தேசிய அருங்காட்சியகம் ஆகும், 2003 ஆக்கிரமிப்பு சமயத்தில் கலைஞர்களின் விலையுயர்ந்த சேகரிப்புகள் சூறையாடப்பட்டன; பல ஈராக்கியக் கட்சிகள், வளைவுகள் வரலாற்று நினைவுச்சின்னங்களாகக் கருதப்பட வேண்டுமா அல்லது கலைக்கப்படுமா என்பது பற்றி கலந்துரையாடல்களில் உள்ளன. சதாம் உசேனின் கட்டளையின் கீழ் தேசிய நூலகத்தில் நூற்றுக்கணக்கான பண்டைய கையெழுத்துப் பிரதிகள் (manuscripts) அழிக்கப்பட்டன. +மூத்தானாபி தெரு பாக்தாத்தின் பழைய காலாண்டில் அமைந்துள்ளது; அல் ரஷீத் தெருவில். இது பாக்தாத் புத்தக விற்பனையின் வரலாற்று மையமாக உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டு பாரம்பரிய ஈராக்கிய கவிஞரான அல் மூத்தானாபி பெயரிலிப்பட்டது. இந்த தெருவில் புத்தக விற்பனைக்காக நிறுவப்பட்டிருக்கிறது, மேலும் பாக்தாத் எழுத்தறிவு மற்றும் அறிவார்ந்த சமூகத்தின் இதயமாகவும் ஆத்மாவாகவும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. +பாக்தாத் மிருகக்காட்சிசாலை மத்திய கிழக்கில்(Middle East) மிகப் பெரிய மிருகக்காட்சிசாலையாகும்.2003 படையெடுப்புக்குப் பிறகு எட்டு நாட்களுக்குள்ளேயே, 650 க்கும் மேற்பட்ட விலங்குகளில் 35 மட்டுமே உயிர் பிழைத்திருந்தது.தென் ஆப்பிரிக்கரான லாரன்ஸ் அந்தோனி மற்றும் சில உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு அக்கறை காட்டினர்.அவர்கள் கழுதைகளை உள்ளூரில் வாங்கி அதனை மாமிச உண்ணிகளுக்கு உண்ணக்கொடுத்தனர். +அல் காதிமியா மசூதி ஈராக்கில் உள்ள பாக்தாத்தின் காதிமையின் என்கிற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசுலாமிய புண்ணிய ஸ்தலமாகும்.இது பன்னிரெண்டு ஷையாக்களில் எழாவது ஷையாவான இமாம் மூஸா அல்-காதிம் மற்றும் ஒன்பதாவது ஷையாவான சுலைமான் ஷிஹா இமாம் முஹம்மத் அத்-திக் ஆகியோரின் கல்லறைகளைக் கொண்டுள்ளது.இந்த மசூதிக்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ள புகழ்பெற்ற வரலாற்று அறிஞர்களில் ஷைக் மூஃபிட் மற்றும் ஷைக் நசீர் அத்-டின் தூஸி ஆகியோரும் அடங்குவர். + +பாக்தாத்தின் மக்கள்தொகை 2015 ல் 7.22 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் வரலாற்று ரீதியாக சுன்னி மக்களைக் கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகரின் மக்கள்தொகையில் பாதி பேர் ஈர���க்கிய ஷியா மக்கள். 2003 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் ஷையைட்டுகள்(Shi'ites) மற்றும் சுன்னிக்கள் (Sunni) இடையே கலப்பு திருமணத்தின் விளைவாக பிறந்த "சுஷிஸ்" என்று அழைக்கப்படும் மக்கள்.ஐ.எஸ்.ஐ.எஸ் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக் உள்நாட்டுப் போர் 2014 ல் நடந்தது, ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களை நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர்.தெஹ்ரானுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய ஷியா நகரம் ஆகும். + +இங்கு பாலைவனக் கால்நிலை நிலவுகின்றது. + +நிர்வாக ரீதியாக, பாக்தாத் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நகராட்சி ரீதியாக, இந்த இடம் 9 நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை உள்ளூர் பிரச்சினைகளுக்கு பொறுப்பு. பிராந்திய சேவைகள், நகராட்சிகளை மேற்பார்வையிடுகின்ற ஒரு மேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு நகராட்சி அளவில் பாக்தாத்தை நிர்வகிக்க எந்த ஒரு நகர சபையும் இல்லை. நகரின் இந்த அதிகாரப்பூர்வ துணைப்பிரிவுகள் நகராட்சி சேவைகளுக்கான நிர்வாக மையங்களாக செயல்பட்டன, ஆனால் 2003 வரை எந்த அரசியல் செயல்பாடுகளும் இல்லை. 2003 ஏப்ரல் தொடங்கி, அமெரிக்க கட்டுப்பாட்டு கூட்டணி இடைக்கால ஆணையம் (CPA) இந்த புதிய செயல்பாடுகளை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியது.உள்ளூர் அரசாங்கத்தை விளக்கிக் கூறவும், அரசியல் கட்சியின் கூட்ட தேர்தல் நடைமுறைகளை விவரிக்கவும், பங்கேற்பாளர்கள் வார்த்தைகளை பரப்பவும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை நாடுகளை அடுத்த கூட்டங்களுக்கு அழைத்து வரவும் CPA தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது. ஒவ்வொரு அண்மைய நிகழ்வுகளும் இறுதியில் இறுதி கூட்டத்தோடு முடிவடைந்தன; புதிய அண்டைக் குழுக்களுக்கான வேட்பாளர்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டு, தங்கள் அயலவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். +பாக்தாத்தில் உள்ள மிகப்பெரிய மைதானம் அல் ஷாப் ஸ்டேடியம் ஆகும், இது 1966 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மற்றொன்று, ஆனால் இதனையும் விட மிக பெரிய அரங்கம், கட்டுமானத்தின் ஆரம்ப கட்டங்களில் உள்ளது.முதலாம் உலகப் போருக்குப் பின்னர், குதிரை பந்தயத்தின் ஒரு வலுவான பாரம்பரியமும் இந்த நகரத்தில் உள்ளது, பாக்தா���ிகளுக்கு வெறுமனே 'பந்தயம்' என்று அறியப்படுகிறது.இது சம்பந்தப்பட்ட சூதாட்டத்தின் காரணமாக இந்த பாரம்பரியத்தை நிறுத்த இஸ்லாமியவாதிகள் அழுத்தங்கள் தந்ததாக தகவல்கள் உள்ளன. ஈராக்கில் உள்ள மிக வெற்றிகரமான கால்பந்து (சாக்கர்) அணிகளில் சில பாக்தாத் நகரத்தின் அணிகளாகும். அவர்கள் அல்-ஷர்டா (போலிஸ்), அல் குவா அல் ஜாவியா (விமானப்படை வகுப்பு), அல் ஜவாரா மற்றும் தலாபா (மாணவர்கள்). +பாக்தாத் சர்வதேச விமான நிலையம் ஈராக்கின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும்.இது பாக்தாத் மாகாணத்தின் பாக்தாத் நகரத்தில் இருந்து 16 கிமீ (9.9 மை) மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.ஈராக்கின் தேசிய விமான நிறுவனமான ஈராக் ஏர்வேஸுக்கு இதுதான் அடிப்படை தளம். +பாக்தாத் எப்பொழுதும் பரந்த அரபு கலாச்சாரக் களத்தில் கணிசமான பாத்திரத்தை வகித்து, பல குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களையும், இசைக்கலைஞர்களையும் காட்சி கலைஞர்களையும் பங்களித்திருக்கிறது. நைஜர் காபானி, உம் குல்தம், ஃபேய்ரஸ், சலா அல்-ஹம்தானி, இலாம் அல்-மஃபாயி மற்றும் பிறர் போன்ற புகழ்பெற்ற அரபு கவிஞர்களும் பாடகர்களும் இந்த நகரத்தில் நிகழ்ச்சிகள் பல நிகழ்த்தினர்.பாக்தாத்தில் பேசப்படும் அரபிக் மொழியின் மாதிரி பேச்சு வழக்குகள் இன்றைய ஈராக்கின் பிற பெரிய நகர்ப்புற மையங்களிலின் பேச்சு வழக்குகளிலிருந்து வேறுபடுகிறது, இதில் நாடோடி அரபு பேச்சு வழக்குகள் (Verseegh, the Arabic language) ஆகியவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. + + + + +புரொப்பேன் + +புரோப்பேன் "(Propane)" என்பது C3H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்கேன் வகைச் சேர்மமான இது திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு வாயுவாகக் காணப்படுகிறது. ஆனால் புரோப்பேன் வாயுவை ஒரு நீர்மமாகச் சுருக்கி கொண்டு செல்லமுடியும். இயற்கை வாயுவை தயாரிக்கும் போதும் பெட்ரோலியத்தை சுத்திகரிக்கும் போதும் ஓர் உடன் விளை பொருளாக புரோப்பேன் கிடைக்கிறது. பொதுவாக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள வாயுக் குழுவில் இதுவும் ஒன்றாகும். பியூட்டேன், புரோப்பிலீன், பியூட்டாடையீன், பியூட்டைலீன், ஐசோபியூட்டைலீன் மற்று��் இவற்றின் கலவைகள் உள்ளிட்டவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள பிற வாயுக்களாகும். + +பிரெஞ்சு வேதியியலாளர் மார்செலின் பெர்த்திலாட்டு 1857 இல் புரோப்பேனைக் கண்டுபிடித்தார் . பெட்ரோல் அல்லது காசோலினில் உள்ள ஒரு ஆவியாகும் வேதிப்பொருள் என்ற அளவிலேயே வால்ட்டர் ஓ சினெல்லிங் 1910 ஆண்டு இதை அடையாளம் கண்டார். இந்தச் சேர்மம் நீண்ட காலத்திற்கு முன்பே அறியப்பட்டிருந்தாலும் சினெல்லின் வேலை அமெரிக்காவில் உள்ள புரோப்பேன் தொழிலின் தொடக்கமாக அமைந்தது. சுத்திகரிக்கப்படாத காசோலினின் உயர் ஆவியழுத்தம் காரணமாக இந்த எளிய ஐதரோகார்பன்களின் எளிதில் ஆவியாகும் தன்மை பரவலாக அறியப்பட்டிருந்தது. திரவமாக்கப்பட்ட வாயுக்கள் மீதான சினெல்லின் ஆய்வுகளால் ஒரு எஃகு புட்டியில் கொண்டு செல்லப்படும் வாயுவைக் கொண்டு சாதாரணமான ஒரு வீட்டிற்கு மூன்று வாரத்திற்கு விளக்கேற்ற முடியுமென நியூயார்க் டைம்சு இதழ் மார்ச்சு 31 இல் ஓர் அறிக்கை வெளியிட்டது . + +இந்த நேரத்தில் பிராங்க், பி. பீட்டர்சன், செசுட்டர் கெர் மற்றும் ஆர்தர் கெர் ஆகியோருடன் சினெல்லிங் ஒன்றிணைந்து கூட்டுறவாக இயற்கை பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும் போது திரவ பெட்ரோலியம் வாயுக்களை திரவமாக்குவதற்கான வழிகளை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து புரோப்பேனை வர்த்தக முரையில் விற்பனை செய்த முதலாவது நிறுவனமான அமெரிக்க கெசோல் நிறுவனத்தை நிறுவினார்கள். 1911 ஆம் ஆண்டில் சினெல்லிங் ஒப்பீட்டளவில் தூய புரோப்பேனை உற்பத்தி செய்தார். 1913 மார்ச்சு 25 இல் இவருடைய திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு தயாரித்தல் செயல்முறைக்கு காப்புரிமை # 1,056,845 என வழங்கப்பட்டது. வாயுக்களைச் சுருக்கி திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவைத் தயாரிக்கும் செயல்முறையை பிராங்க் பீட்டர்சன் உருவாக்கி சூலை 2, 1912 இல் அவரும் காப்புரிமை பெற்றார். + +1920 களில் சா நிறுவனத்தில் திரவ பெட்ரொலியம் வாயு உற்பத்தி அதிகரித்தது, முதலாவது ஆண்டான 1922 ஆம் ஆண்டில் 223,000 அமெரிக்க கேலன்கள் (840 மீ 3) மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1927 இல் 1 மில்லியன் கேலனாகவும் 1935 இல் இது 56 மில்லியன் காலன்களாகவும் உயர்ந்தது. 1930 களின் முக்கிய தொழில் வளர்ச்சிக்கு இரயில் போக்குவரத்து, எரிவாயு வடித்தல் மற்று���் உள்ளூரில் புட்டிகளை நிரப்பும் ஆலைகளை தொடங்கியது போன்றவை காரணங்களாகும். அறிமுகப்படுத்தியது.1945 இல் பில்லியன் கேலன் அளவுக்குஅமெரிக்காவின் திரவ பெட்ரோலியம் வாயு விற்பனை உயர்ந்தது. 1947 இல் அமெரிக்க வீடுகளில் 62% வீடுகள் இயற்கை எரிவாயு அல்லது புரோப்பேன் எரிபொருளை சமையலுக்காகப் பெற்று தன்னிறைவு அடைந்திருந்தன . + +1950 இல் 1,000 புரோப்பேன் எரிபொருள் பேருந்துகள் சிக்காக்கோ நகரில் இயக்கப்பட்டன. 1958 இல் ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க கேலன்கள் அளவுக்கு திரவ பெட்ரோலியம் வாயுவின் விற்பனை உயர்ந்தது. 2004 இல் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க கேலன்கள் அளவுக்கு திரவ பெட்ரோலியம் வாயுவின் விற்பனை மேலும் உயர்ந்தது . + +புரோப்பேனில் உள்ள புரோப் என்ற வேர்ச்சொல் புரோப்பியானிக் அமிலம் என்ற சேர்மத்திலிருந்து வருவிக்கப்பட்டது ஆகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட பிற சேர்மங்களுக்கும் இந்த வேர்ச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கச் சொற்ற்கலான முதல் என்ற பொருள் கொண்ட புரோட்டோசு மற்றும் கொழுப்பு என்ற பொருள் கொண்ட பியோன் என்ற கிரேக்க சொற்களிலிருந்து புரோப்பியோனிக் என்ற சொல் உருவானது. + +இரண்டு செயல்முறைகள் புரோப்பேன் உடன் விளை பொருளாகக் கிடைப்பதற்கான மூலமாக இருக்கின்றன. இயற்கை எரிவாயு தயாரிக்கும் செயல்முறை மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆகியன இவ்விரு செயல்முறைகளாகும். இயற்கை எரிவாயு தயாரித்தல் செயலாக்க முறையில் வாயுவிலிருந்து பியூட்டேன், புரோப்பேன் மற்றும் பெருமளவு ஈத்தேன் போன்ற வாயுக்கள் நீக்கப்படுகின்றன. பெட்ரோலியம் சுத்திகரிப்பு செயலாக்க முறையில் சிறிதளவு புரோப்பேன் உடன் விளைபொருளாக உருவாகிறது. + +உடன் விளைபொருளாக மட்டும் தயாரிக்கப்படும் புரோப்பேன் அளவால் தேவைப்படும் புரோப்பேனின் மொத்த அளவுக்கு ஈடுகட்ட முடியவில்லை. 90% புரோப்பேன் உற்பத்தி அமெரிக்காவில் வீட்டுத் தொழிலில் தயாரிக்கப்படுகிறது. 10% புரோப்பேனை அமெரிக்கா கனடா போன்ற நாடுகளிலிருந்து இரயில் வழியாகவும் கடல் வழியாகவும் இறக்குமதி செய்து கொள்கிறது. + +உற்பத்தி செய்யப்படும் புரோப்பேன் வட அமெரிக்காவில் உப்புக் குகைகளில் சேமித்தும் வைக்கப்படுகிறது. 1940 களில் இக்குகைகள் உருவாக்கப்பட்டு தற்போது இவைகளில் 80,000,000 பீப்பாய்களுக்க��� அதிகமான புரோப்பேனை சேமித்து வைக்க முடியும். புரோப்பேன் தேவைப்படும் நேரத்தில் இங்கிருந்து கப்பல், இரயில், லாரிகள் முதலியனவற்றின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது . + +உயிரிய எரிபொருட்களிலிருந்தும் புரோப்பேனை தயாரிக்க முடியும் . + + + + + +யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி + +யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி ("Johann Heinrich Pestalozzi", 1746 - 1827) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார். + + + + + +பிரெட்ரிக் புரோபல் + +பிரெட்ரிக் புரோபல் (Friedrich Fröbel 1783-1852) சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்தவர். பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்தில் பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின. + + + + + + +யொகான் பிரட்ரிக் கேர்பார்ட் + +யொகான் பிரட்ரிக் கேர்பார்ட் (1776 - 1841) பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார். + + + + + +கூட்டன்பர்கு திட்டம் + +குட்டன்பேர்க் திட்டம் ("Project Gutenberg") இணையத்தில் மின்னூல்களை வெளியிடும் திட்டங்களில் முதலாவதாகக் கருதப்படுகிறது. 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 1990 இலிருந்து வேகம் பெற்றுத் தொடர்ந்து செயற்படுகின்றது. இதுவரை 19,000 நூல்கள் மின்னூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. + +குட்டன்பேர்க் திட்டம், இணையவழியாக ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக விளங்குகிறது. மிக்கேல் ஹார்ட் என்பார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தளத்தி���் ஆங்கிலம், எசுப்பானியம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மின்னூல்கள் உள்ளன. இவை காப்புரிமையற்றவை என்பதால் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். + +மின்னூல்கள் மட்டுமின்றி, ஒலிக்கோப்புகளும் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான இணைய ஆர்வலர்களும் இணைந்து இத்தளத்தின் மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர். அதிகம் படிக்கப்பட்ட நூல்கள், சிறுவர்க்கானவை என்று வகைப்படுத்தப்பட்ட பலவிதமான மின்னூல்கள் கிடைப்பது இத்தளத்தின் சிறப்பு. விக்கிப்பீடியா போன்றே மின்நூல்களுக்கான களஞ்சியம் என்பதால் யாவரும் தொகுக்கலாம் என்பதும் திறந்த மூலம் என்பதும் இதன் சிறப்பு. + + + + + + +சைப்பிரசு + +சைப்பிரசு ("Cyprus", ; ; ) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும். + +சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது. + +சூரிச் இலண்டன் மாநாட்டுக்கு பின் துருக்கி சைப்ரசு குடியரசின் தோற்றத்தை ஒப்புக்கொண்டது. சைப்ரசு தீவு பிரிக்கவேண்டும் என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது. துருக்கியதும் துருக்கிய சைப்ரசு தலைவர்களின் நோக்கமும் விடுதலை பெற்ற துருக்கிய நாட்டை சைப்ரசின் வடபகுதியில் அமைப்பது என்பதாகும். + + + + +ஏரி + +ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன. + + +பூமியில் 11.7 கோடி ஏரிகள் + + + + +நிலநடுக் கோடு + +நில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு (பூமத்தியரேகை, "Equator") என்பது நில உருண்டை (பூமி) சுழலும் அச்சின் வட முனை, தென் முனை ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் கோடு ஆகும். இது "பூ மத்திய கோடு" என்றும் சில வேளைகளில் வெறுமனே "மத்திய கோடு" என்றும் அழைக்கப்படுவதுண்டு. நிலநடுக்கோடு (புவி மையக்கோடு) நில உருண்டையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி வட அரைக்கோளம் என்றும் தெற்கேயுள்ளது தென் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கோட்டின் (புவிமையக் கோட்டின்) நிலநேர்க் கோட்டு அளவு 0° வடக்கு ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாழ 40,075 கிமீ (24,901.5 மைல்கள்)ஆகும். + + + + +சே குவேரா + +சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா ("Ernesto Guevara de la Serna") (ஜூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். + +சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், "எனது" என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர். ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர். + +சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்ட��ப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. + +வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய "சாங்கோ" என்ற பட்டப்பெயரும் உண்டு. + +தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது. + +குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். + +அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். + +1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது. + +பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார். + +1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு ��ுயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். + +குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும். + +சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார். பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார். + +சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். +பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் "ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு" என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது) + +அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். +நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று. மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.) + + + + + + + + + + + + + + + + + + + +[[பகுப்பு:கூப புரட்சியாளர்கள்]] +[[பகுப்பு:இலத்தீன் அமெரிக்க புரட்சியாளர்கள்]] +[[பகுப்பு:1928 பிறப்புகள்]] +[[பகுப்பு:1967 இறப்புகள்]] + + + +வடக்கு அரைக்கோளம் + +வடக்கு அரைக்கோளம் ("Northern Hemisphere") என்பது, புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும். பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன. + +ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், இந்தோனீசியாவின் ஒரு பகுதி தவிர்ந்த ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன. + + + + + +நீல நைல் + +நீல நைல் எதியோப்பியாவின் தனா ஏரியில் தொடங்கும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு எத்தியோப்பியாவில் அபய் என்றும் சூடானில் அல்-பஹர் அல்-அசுராக் என்றும் அழைக்கப்படுகிறது. + +இது சூடான் நாட்டிலுள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் வெள்ளை நைல் ஆற்றுடன் இணைகிறது. இவ்விடத்திலிருந்து இது நைல் என்று அழைக்கப்படுகிறது. + + + + +வெள்ளை நைல் + +வெள்ளை நைல் ஆப்பிரிக்காவில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் நீல நைல் ஆறுமே நைல் ஆற்றின் முக்கியமான கிளை ஆறுகள் ஆகும். +வெள்ளை நைல் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகிறது. அங்கு இது விக்டோரியா நைல் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது முதலில் வடக்காகவும் பின்னர் மேற்கு நோக்கியும் உகாண்டா, கியோகா ஏரி, ஆல்பர்ட் ஏரி ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளிவரும் பாது இது ஆல்பர்ட் நைல் எனவும் இது சூடான் நாட்டுக்குள் பாயும் போது மலை நைல் எனவும் அழைக்கப்படுகிறது. +பின்னர் இது சூடான் சமவெளிகளில் பாய்ந்து இறுதியில் கார்த்தௌம் என்னும் இடத்தில் நீல நைல் ஆற்றுடன் இணைந்து நைல் ஆறாக உருவெடுக்கிறது. விக்டோரியா ஏரியில் இருந்து கார்த்தௌம் வரை இவ்வாற்றின் நீளம் தோராயமாக 3700 கிலோமீட்டர்கள் ஆகும். + + + + +விக்டோரியா ஏரி + +விக்டோரியா ஏரி "(Lake Victoria)" அல்லது விக்டோரியா நியான்சா என்பது ஆப்பிரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் ஒன்றாகும். கின்யருவாண்டா மொழியிலும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பண்டு மொழிகளிலும் விக்டோரியா ஏரியானது விக்டோரியா நியான்சா என்று அழைக்கப்படுகிறது . யான் ஆனிங் சிபெக் என்ற பிரிட்டனின் தேடல் ஆய்வாளர் இந்த ஏரியைக் கண்டறிந்து ஆவணப்படுத்திய பின்னர் மகாராணி விக்டோரியாவின் பெயரை இதற்கு வைத்தார். நைல் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கு ரிச்சர்ட் பிரான்சிசு பர்ட்டனுடனான ஒரு பயணத்தின் போது 1858 ஆம் ஆண்டில் சிபெக் இதை நிறைவேற்றினார் . + +விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர்கள் ஆகும் . பரப்பளவின் அடிப்படையில் இதுவே இக்கண்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். மேலும் உலகின் வெப்பமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியும் , வட அமெரிக்காவின் சுப்பிரியர் ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி விக்டோரியா ஏரியாகும். கொள்ளளவு அடிப்படையில் 2,750 கனகிலோமீட்டர்கள் கொண்ட இந்த ஏரி உலக அளவில் ஒன்பதாவது மிகப்பெரிய கண்ட ஏரியாகக் கருதப்படுகிறது. + +நேரடியான மழை மற்றும் ஆயிரக்கணக்கான சிறு நீரோடைகளிலிருந்து விக்டோரியா ஏரி அதன் தண்ணீரைப் பெறுகிறது. மிகப்பெரிய நதியான ககெரா ஆறு இந்த ஏரியின் மேற்குக் கரையில் வந்து கலக்கிறது. விக்டோரியா ஏரியின் வடக்குக் கரையில் உகாண்டாவின் யிஞ்ஞசாவுக்கு அருகில் , நைல் ஆற்றில் தண்ணீரை விடுவிக்கிறது . + +விக்டோரியா ஏரியின் அதிகபட்ச ஆழம் 84 மீட்டர்களாகவும் இதன் சராசரி ஆழம் 40 மீட்டர்கள் ஆகவும் உள்ளது . இதன் ஆழமற்ற பகுதி ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்துள்ளது. விக்டோரியா ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி மொத்தம் 184000 கிலோமீட்டர்களாகும். 7142 கிலோமீட்டர்கள் அளவுக்கு நீண்ட கடற்கரையை கொண்டுள்ள இவ்வேரி 1:25000 மட்டத்தில் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளது . இந்நீளத்தில் 3.7 சதவீதம் அளவுக்கு தீவுகளைக் கொண்டு மூன்று நாடுகளுக்காக பிரிக்கப்பட்டுள்ளது . கென்யா 6%, உகாண்டா 45 சதவீதம், தான்சானியா 49 சதவீதம் என்ற அளவுகளாக இப்பங்கீடு அமைகிறது . + +நிலவியல் ரீதியாக, விக்டோரியா ஏரி ஒப்பீட்டளவில் இளம் வயது கொண்டதாக உள்ளது. சுமார் 400,000 ஆண்டுகள் பழமையானதாகவும் உள்ளது. மேலெழுந்த புவியோட்டுத் தொகுதி மேற்கு நோக்கி ஓடும் ஆறுகள��த் தடுத்தபோது விக்டோரியா ஏரி உருவாகியதாகக் கருதப்படுகிறது . விக்டோரியா ஏரியின் புவியியல் வரலாற்றில், இது மிகச் சிறிய ஏரிகளின் தொடராக பலமாற்றங்களைக் கண்டு இதன் தற்போதைய மேலோட்டமான ஆழம் நிகழ்ந்திருக்கலாம் . ஏரியின் கீழ்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புவி உள்ளகத்தின் ஆய்வின்படி, விக்டோரியா ஏரி உருவான காலத்திலிருந்து குறைந்தபட்சம் மூன்று முறையாவது முற்றிலும் வறண்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் மழைப்பொழிவு சரிந்திருந்த பனியுகக் காலப்பகுதியில் இவ்வுலர் சுழற்சிகள் ஒருவேளை நிகழ்ந்தவையாக இருக்கலாம் . கடைசியாக கிட்டத்தட்ட 17300 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வேரி முற்றிலுமாக உலர்ந்திருக்கலாம். 14700 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் இது நிரம்பியிருக்கலாம் . + +விக்டோரியா ஏரி தனது 80 சதவீத நீருக்கு மழையையே நம்பியிருக்கிறது. ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கு ஏரி நீர் ஆவியாகிறது. இடைநிலப் பகுதிகளில் ஏற்படும் பனிப்பொழிவைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும். சியோ, நோசியா, யலா, நிண்டோ, சோன்டு மிரியு, மோகுசி, மிக்ரி போன்ற ஏழு சிறு நதிகள் விக்டோரியா ஏரிக்கு நீரை வழங்குகின்றன. மேற்கில் இருந்து கடந்து செல்லும் மிகப்பெரிய ஒற்றை நதியான ககேரா நதி வழங்கும் நீரைக்காட்டிலும் இந்த சிற்றாறுகள் இணைந்து விக்டோரியா ஏரிக்கு மிக அதிகமாக நீரை வழங்குகின்றன + +விக்டோரியா நதியிலிருந்து வெளியே செல்லும் நீர்தான் நைல் நதியின் முக்கிய மூலமாகும். ஏரியால் வழங்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட்டால் இவ்வேரியே நைல் நதிக்கான பிரதானமான மூலமாக அறியப்படுகிறது. உகாண்டாவிற்கு அருகிலுள்ள யின்சாவுக்கு அருகில் இது நைல்நதியுடன் சேர்கிறது. இருப்பினும் ககேரா நதியின் கிளை நதிகளும் இந்த ஏரிக்கு நீர் வழங்கும் மூலங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் நைல் நதி ஆல்பர்ட் ஏரியை அடையும் வரை விக்டோரியா நைல் என்றே அழைக்கப்படுகிறது. + +விக்டோரியா ஏரி பொதுவாக ஆழம் குறைந்த ஏரி என்றே கருதப்படுகிறது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 80 மீட்டராகவும் சராசரி ஆழம் 40 மீட்டராகவும் உள்ளது . 2016 ஆம் ஆண்டு எண்ணிம முறையில் 10,000 புள்ளிகளை கொண்டு விக்டோரியா ஏரியின் முதல் கடலாடி இயல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. + +விக்டோரியா ஏ���ியும் அதன் சுற்றுப்புறங்களும் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. . குறிப்பாக நீர்யானை, நீர்நாய்கள், நைல் முதலைகள், பலவகையான ஆமைகள், நன்னீர் நண்டுகள் போன்றவை அதிக அளவில் விக்டோரியா ஏரியில் வாழ்கின்றன . + +விக்டோரியா ஏரியில் மட்டுமே காணப்படும் பலவகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் பலவும் கடந்த 50 ஆண்டுகளில் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விக்டோரியா ஏரியில் 500 க்கும் மேற்பட்ட சிச்லிட் வகை மீன்கள் உள்ளன. + +விக்டோரியா ஏரி மிக அதிக அளவுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் விக்டோரியா ஏரியில் தனித்து விளங்கும் மீன்கலான சிச்லிட் போன்றவையே அதிக அளவில் பிடிக்கப்பட்டது. ஆனால் சிச்லிட் போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே அதீதமீன்பிடித்தல் காரணமாக குறைய தொடங்கிவிட்டன. மீன் எண்ணிக்கையை அதிகரிக்க விக்டோரியா ஏரிக்கு சொந்தமில்லாத சில மீன் இனங்கள் அறிமுகப்பட்டன. + +நீர் கோரைகள் விக்டோரியா ஏரியில் அதிக அளவு வளர்ந்துள்ளன. இதற்கு காரணம் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுகள், ஆலை மற்றும் விவசாய குப்பைகள் அதிகஅளவில் ஏரியில் நேரடியாக சேர்க்கப்படுவதே காரணம். ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் ஏரியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அளவை உயர்தின. இதனால் நீர் கோரைகள் விக்டோரியா ஏரியை அதிக அளவு ஆக்கிரமிக்க துவங்கின. + +நீர் கோரைகளால் மீன் பிடி தொழில் பாதித்தது. அதே போல் நீர்மின் நிலையமும், விக்டோரியா ஏரியில் நீரெடுக்கும் ஆலைகளும் பாதிக்கப்பட்டன. ஆனால் நீர் கோரைகளால் சில நன்மைகளும் விளைந்தன. குறிப்பாக அழிந்துவிட்டதாக நம்பட்ட சில மீன் இனங்கள் மீண்டும் விக்டோரியா ஏரியில் காணதொடங்கின. +அதீத நீர் கோரைகள் அதிக அளவில் மீன்பிடித்தலை தடுத்தன. கோரைகளை நீக்க பலவழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. + +விக்டோரியா நைலை உருவாக்குகின்ற உகாண்டாவில் உள்ள யின்சா மட்டுமே விக்டோரியா ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் ஒரே வழியாக உள்ளது. குறைந்தது 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்த நீர் ஒரு இயற்கையாக அமைந்த பாறை மதகு மூலம் முழுவதுமாக உலர்ந்து போனது. 1952 ஆம் ஆண்டில், பிரித்தானிய உகாண்டா அரசாங்கத்திற்காக செயல்படும் பொறியியலாளர்கள், வனத்தின் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும், பாறை மதகின் +படிப்படியான அரிப்பைக் குறைக்கவும் ஒரு செயற்கை தடையை உருவாக்கினர். ஏரியின் நீரின் அளவைப் பொறுத்து, "ஏற்றுக் கொண்ட வளைவு" என்று அழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு வினாடிக்கு 300 முதல் 1,700 கன மீட்டர் அளவிலான அதிகபட்ச ஓட்ட விகிதத்தை இவ்வமைப்பு வழங்கியது. + +2002 ஆம் ஆண்டில் உலக வங்கி உதவியுடன், கியிரா நீர்மின் மின் நிலையம் என்ற இரண்டாவது நீர்மின்சக்தி வளாகம் ஒன்றை நிறைவு செய்தது. 2006 ஆம் ஆண்டில் விக்டோரியாவின் நீர் அளவு 80 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்தது, கென்யாவிலுள்ள நைரோபியில் வசிக்கும் ஒரு சுயாதீன நீர்வாழ்வியலாளரான டேனியல் குல் உடன்படிக்கையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியிடப்படுவதைக் கணக்கிட்டார். ஏரியின் மட்டத்தில் ஏற்படும் சமீபத்திய நீர்குறைவுக்கு இதுவே முதன்மையான காரணம் என்றும் கருதப்பட்டது. + +ஏரிக்குள் கச்சா கழிவுகளை வெளியேற்றுவதும், உள்நாட்டு மற்றும் தொழில்துறை கழிவுகளை உறிஞ்சுவதும், பண்ணைகளில் இருந்து வெளியேறும் உரங்களுக்கும் இரசாயனங்களுமே விக்டோரியா ஏரி மாசடைவதற்கான முக்கிய காரணங்களாகும். + +விக்டோரியா ஏரியின் வடிநிலத்தில் பொதுவாக கிராமப்புற மக்கள் நிரம்பியுள்ளார்கள். குறிப்பாக ஏரியின் கரையோரங்களில் முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. கியுமு, கிசி, மற்றும் கென்யாவின் ஓமா பே , உகாண்டாவின் கம்பாலா, யின்சா மற்றும் எண்டெப்; மற்றும் தான்சானியாவின் புக்கோபா, முவான்சா முசோமா உள்ளிட்ட நகரங்கள் இதில் அடங்கும். இந்த நகரங்கள் மற்றும் நகரங்கள் உள்ள தொழிற்சாலைகள் நேரடியாக விக்டோரியா ஏரியில் அல்லது அதன் கிளை ஆறுகளில் கழிவுகளை நேரடியாக்ச் சேர்க்கின்றன . + +2016 ஆம் ஆண்டில் விக்டோரியா ஏரிக்கு ஒரு சுற்றுச்சூழல் தரவு தொகுப்பிடம் உருவானது. இந்த தரவில் கடற்கரை, கடலடியியல், மாசு, வெப்பநிலை, காற்று திசையன், மற்றும் ஏரி மற்றும் பரந்த வடிநிலங்கள் தொடர்பான தரவுகள் இடம்பெற்றுள்ளன. + + +