diff --git "a/train/AA_wiki_20.txt" "b/train/AA_wiki_20.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_20.txt" @@ -0,0 +1,3171 @@ + +அக்டோபர் புரட்சி + +அக்டோபர் புரட்சி "(October Revolution)" () அல்லது சோவியத் இலக்கியத்தில் மாபெரும் அக்டோபர் சமவுடைமைப் புரட்சி "(Great October Socialist Revolution)" எனப்படும் (, ' அல்லது பொதுவாக சிவப்பு அக்டோபர் அல்லது அக்டோபர் எழுச்சி அல்லது போல்செவிக் புரட்சி, எனப்படும் போல்செவிக் முறியடிப்பு"' "(Bolshevik Coup)" என்பது விளாதிமிர் லெனினாலும் போல்செவிக் கட்சியாலும் தலைமை தாங்கிய மாபெரும் உருசியப் புரட்சியாகும். இது புனித பீட்டர்சுபர்கில் 1917 அக்தோபர் 25 (7 நவம்பர், 7 புதுமுறையில்) ஆம் நாளன்று நிகழ்ந்த ஆயுதந் தாங்கிய எழுச்சியால் நிறைவேற்றப்பட்டது. + +இது அதே ஆண்டில் நடந்த பிப்ரவரி புரட்சியைப் பயன்படுத்தியே அக்டோபர் புரட்சி வெற்றி கண்டது. பிப்ரவரி புரட்சி சார்மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டித் தற்காலிக உருசிய அரசை உருவாக்கியது. இதே வேளையில், நகரத் தொழிலாளர்கள் சோவியத்துகளாக அணிதிரண்டனர்: இவற்றில் பங்கேற்ற புரட்சியாளர்கள் தற்காலிக உருசிய அரசையும் அதன் செயல்பாடுகளையும் தாக்கிப் பேசினர். அனைத்து உருசிய சோவியத்துகளின் பேராயம் உருவாகியதும் அது ஆட்சியமைப்பாகி, தனது இரண்டாம் கருத்தரங்கப் பிரிவை நடத்தியது. இது புதிய நிலைமைகளின் கீழ் போல்செவிக்குகளையும் இடதுசாரி சமவுடைமைப் புரட்சியாளர்கள் போன்ற பிற இடதுசாரிக் குழுக்களையும் முதன்மைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தது. இது உடனே உருசிய சமவுடைமை கூட்டாட்சி சோவியத் குடியரசை நிறுவும் முயற்சியைத் தொடங்கியது; இதுவே உலகின் முதல் சமவுடைமை அரசினைத் தானே அறிவித்த சமவுடைமை அரசாகும். சாரும் அவரது குடும்பமும் 1918 ஜூலை 17 இல் தூக்கில் இடப்பட்டனர். + +புரட்சியைப் போல்செவிக்குகள் தலைமை தாங்கி நடத்தினர்.அவர்கள் பெத்ரோபகிராது சோவியத்துகளுக்கு ஆர்வம் ஊட்டி ஆயுதந் தாங்கிப் போராடவைத்தனர். படைசார்ந்து புரட்சிக் குழுவின் கீழ் போல்செவிக் செம்படைகள் 1917 நவம்பர் 7 இல் அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் தம் கைவசமாக்கினர். அவர்கள் மறுநாளே உருசியத் தலைநகராகிய பெத்ரோகிராதில் மாரி அரண்மனையில் இருந்த தற்காலிக அரசையும் கைப்பற்றினர். + +நெடுநாளாக தள்ளிபோட்ட உருசிய அரசமைப்பு சட்டமன்றத் தேர்தல் (1917 தேர்தல்) 1917 நவம்பர் 12 இல் நடத்தப்பட்டது. போல்செவிக்க���கள் சோவியத்துகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அவர்கள் மொத்தம் 715 இடங்களுக்கு 175 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சமவுடைமைப் புரட்சிக் கட்சி 370 இடங்களைப் பிடித்தனர், எனவே, இரண்டாம் இடத்தில் வந்தனர். என்றாலும், சமவுடைமைப் புரட்சிக் கட்சி முழுக்கட்சியாக அப்போது செயல்படவில்லை என்பதே உண்மை நிலைமை. இவர்கள் போல்செவிக்குகளுடன் 1917 அக்டோபர் முதல் 1918 ஏப்பிரல் வரை தேர்தல் உடன்பாட்டில் இருந்தனர். முதல் அரசமைப்பு சட்ட மன்றம் 1917 நவம்பர் 28 இல் கூடியது. ஆனால், அதன் ஆணையேற்பை 1918 ஜனவரி 5 வரை போல்செவிக்குகள் காலந்தாழ்த்தினர். அது கூடிய முதல் நாளிலேயே சோவியத்துகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இது சோவியத்துகளின் அமைதி, நிலம் சார்ந்த தீர்மானங்களை நீக்கியது. எனவே, மறுநாளே சோவியத்துகளின் பேராயம், தன் ஆணையால் அரசமைப்பு சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டது. + +புரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. + +முதலில் இந்நிகழ்வு " அக்டோபர் படைப்புரட்சி" (Октябрьский переворот) அல்லது "மூன்றாம் எழுச்சி" என்றே வழங்கியுள்ளது. லெனின் முழுநூல்கள் தொகுப்பின் முதல் பதிப்புகளில் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால், "переворот" எனும் உருசியச் சொல்லின் பொருள் "புரட்சி" அல்லது "எழுச்சி" அல்லது "கவிழ்த்தல்" என்பனவாகும். எனவே, முறியடிப்பு அல்லது படைப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு ("coup") என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. நாளடைவில், "அக்டோபர் புரட்சி" (Октябрьская революция) எனும் சொல் பயன்பாட்டில் வந்தது. புதிய கிரிகொரிய நாட்காட்டியின்படி, நவம்பரில் நடந்ததால் இது "நவம்பர் புரட்சி" எனவும் வழங்கப்படுகிறது. 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. + + + + + +சோவியத் ஒன்றியம் + +சோவியத் ஒன்றியம் ("Soviet Union", இரசியம்: Сове́тский Сою́з - "சவியெத்ஸ்கி சயூஸ்") எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - "Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]") என்ப��ு 1922 இல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது. + +இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை. + +சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின. + +முதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: அர்மீனிய சோ.சோ.கு, அசர்பைஜான் சோசோகு, பியாலோரசியன் சோசோகு, எஸ்டோனியன் சோசோகு, ஜார்ஜிய சோசோகு, கசாக் சோசோகு, கிர்கிசிய சோசோகு,லாட்விய சோசோகு, லிதுவேனிய சோசோகு, மோல்டாவிய சோசோகு, ரஷ்ய சோசோகு, டாஜிக் சோசோகு, துருக்மான் சோசோகு, உக்ரெயின் சோசோகு, மற்றும் உஸ்பெக் சோசோகு. + += வரலாறு = + +சோவியத் ஒன்றியம் ரஷ்யப் பேரரசின் மற்றும், அதன் அற்பாயுசு சந்ததியான கெரென்ஸ்கி தலைமையிலான தற்காலிக அரசின் சந்ததி என கருதப்படுகிறது. கடைசி ரஷ்ய சார் மன்னன், இரண்டாவது நிக்கோலாஸ், மார்ச் 1917 வரை ஆண்டான், அப்போது சாம்ராச்சியம் தூக்கி எறியப்பட்டு, ரஷ்ய தற்காலிக அரசு பதவி ஏற்றது. அது நவம்பர் 1917ல் விளாடிமீர் லெனினால் கவிழ்க்கப்பட்டது. 1917ல் இருந்து 1922 வரை, சோசோகுயூ (சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம்)வின் முன்னோடி, "ரஷ்ய சோவியத் சோசலிஸ்ட் கூட்டாட்சி குடியரசு" என்ற சுதந்திர நாடு, மற்ற சோவியத் குடியரசுகளும் சுதந்திர நாடுகளாயிருந்தன. அதிகார பூர்வமாக டிசம்பர் 1922ல், சோவியத் யூனியன், ரஷ்ய, யுக்ரைனிய, பெலாருசிய, காகசஸ்-கடந்த குடியரசுகளின் சங்கமம் ஆயிற்று. + +நவீன புரட்சி செயல்கள் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தில் 1825 டிசம்பரிஸ்டு கலகத்தி��ிருந்து தொடங்குகின்றன. 1861 இல் நில அடிமைத்தனம் முடிக்கப்பட்டாலும், அதன் முடிப்பு விவசாயிகளுக்கு உபாதகமான வரையணைகளில் இருந்து, புரட்சிக்கு மேலும் உதவேகத்தை கொடுத்தது. 1905 ரஷ்ய புரட்சிக்கு பிறகு, 1906ச், நாடு டூமா என்ற மக்கள் பிரதிநிதி மன்றம் நிறுவப்பட்டது. ஆனாலும் ஜார் மன்னன், வரையற்ற அரச அதிகாரத்திலிருந்து சட்டத்துக்குள் அரச அதிகாரம் மாறுவதற்கு தடைகள் கொடுத்தார். சமுதாய கொந்தளிப்பு முதல் உலகப் போரினால் ஏற்பட்ட ராணுவ தோல்விகளாலும், உணவு தட்டுபாடுகளாலும் ஏறியது. + +தலைநகர் பெட்ரோகிர்ரடில் தன்னார்வத்தில் ஒரு மக்கள் எழுச்சி, யுத்தகால சீரழிவுகளால் ஏற்பட்டு, கடைசியில் ஜாரின் அரசின் வீழ்ச்சியில் முடிந்தது. ஜாரின் அதிகாரம் தாற்காலிக அரசால் மாறுபடுத்தப்பட்டது. அதன் தலைவர்கள் ரஷ்ய மக்களவைக்கு தேர்தல் நடத்துவதற்கும், , ஒப்பந்த நாடுகள் பக்கம் போரை நடத்துவதற்கும் யத்தனித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்கும் தொழிலாளர் சங்கங்கள் அல்லது சோவியத்துகள் எழுந்தன. லெனின் தலைமையிலான போல்ஷெவிக்குகள், சமுதாய புரட்சிக்கு சோவியத்துகள் இடையிலும், மக்கள் இடையிலும் செயல்புரிந்தனர்.அவர்கள் தாற்காலிக அரசிலிருந்து, நவம்பர் 1917 இல் புரட்சிசெய்து பதவியை கைப்பற்றினர். நீண்ட நாள் குரூரமாக நடந்த, வெளிநாட்டு தலையீட்டான, 1918-1921 [ரஷ்ய உள்நாட்டு போர்] பின்புதான் புதிய சோவியத் அதிகாரம் நிலை ஆயிற்று.. சமகால போலந்து கூட ஏற்பட்ட சச்சரவு, பிணக்கு கொடுத்த நிலங்களை போலந்து, ரஷ்யாவிற்கு இடையில் பிளந்த ரீகா சமாதான உடன்படிக்கை பின் முடிந்தது. + +டிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, காகசஸ், உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் அங்கீகரிக்கப் பட்டது. + +1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்���ப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது.. +. அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று.. + +சோவியத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு என்பது கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. +கட்சி விதிகளின் படி, மத்திய குழு அரசாங்க நடவடிக்கைகளை இயக்கியது‍. மத்தியக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சி மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். +1918 இல் சோவியத்து ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத்து மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன. விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. + +பின்பு 1918 ஜுலை 10 இல் ஐந்தாவது அனைத்து ரஷ்யா சோவியத் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. + +சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி-அரசு கொள்கைக்கு உட்பட்டிருந்தது. உள்நாட்டு போர்கந்த்தில் `போர் கம்யூனிச பொருளாதார கொள்கைக்கு பின், சோவியத் அரச்சங்கம் தனியார் தொழிலை ஓரளவு தேசீய மயமாக்கப்பட்ட தொழிலுடன் 1920ல் இருக்க அனுமதி கொடுத்திருந்தது. கிராமப்புரங்களில் உணவு கைப்பற்றுதலை விட்டு உணவு வரி விதிக்கப்பட்டது. சோவியத் தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சி திரும்பி வராமல் இருக்க ஒரு கட்சி-அரசு அவசியம் என்பது‍ அவசியம் என்று கூறினர். . லெனினின் 1924 மரணத்திற்கு சில வருடங்கள் வரை, நாட்டி���் பொருளாதாரத்தின் எதிர்காலம் சோவியத் தலைவர்களின் எதிர்தரப்பு பூசல்களுக்கு வழக்காக இருந்தது. 1920 முடிவுகளில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். + +1928ல் ஸ்டாலின் உலகிலேயே முதன் முதலில் ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஐந்து‍ ஆண்டுத் திட்டத்தை நான்கரை ஆண்டுகளிலேயே எட்டி உலகை வியப்பில் ஆழ்த்தினார் மக்களின் ஒத்துழைப்போடு. லெனினின் சர்வதேசீயத்தை கடைப்பிடித்தாலும், ஸ்டாலின் சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டுவதற்கு எத்தனித்தார். தொழில் துறையில் அரசு எல்லா தொழிற்சாலைகளின் மீது கட்டுப்பாட்டை கையெடுத்து, பரந்த தொழில் வளர்சியை ஊக்குவித்தது. விவசாயத்தில் கூட்டு பண்ணைகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. அதற்கு குலக் என்றழைக்கப்பட்ட தனியார் பண்ணை முதலாளிகளும், செல்வமிக்க பண்ணையாட்களும் எருமை கொடுத்தனர், அதனால் பண்ணை உற்பத்திகளை அரசிடம் கொடுக்காமல், பதுக்கினர். இது பண்ணை முதலாளிகள் ஒரு பக்கமும், அரசு மற்றும் சிறிய உழவர்கள் மற்றொரு பக்கமும் வெறுப்புமிக்க இழுபறிக்கு ஏதாயிற்று.. பல லட்சக்கணக்கன மக்கள் மடிந்த பஞ்சங்கள் ஏற்பட்டன, மேலும் பண்ணை எசமானர்கள் குலக் எனப்படும் கட்டாய பணி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி இறந்தவர் தொகை 600 லட்சம் என்று அலெக்சாண்டர் சோல்செனிட்சினால் மேல் பக்கத்திலும் அந்த கால சோவியத் அறிவிக்கைபடி 7 லட்சம் என கீழ் பக்கத்திலும் கணக்கிடப் படுகிறது. பரவலாக 200 லட்சம் மக்கள் இறந்தனர் என நம்பப்படுகிறது .. இந்த சமூக கொந்தளிப்புகளும், எழுச்சிகளும் 1930ல் நடு வரை நடந்தன. ஸ்டாலினின் செயல்களினால் பல `பழைய போல்ஷவிக்குகள்` என சொல்லப்படும் லெனின் கால , 1917 புரட்சி நடத்தியவர்களும் ”பெரும் கழிப்பு” எனப்படும் அரசு தீர்மானங்களிலும், நிர்வாக செயல்களிலும் மாண்டனர். அப்படிப்பட்ட கொந்தளிப்புகள் நடுவே, சோவியத் யூனியன் ஆற்ற்றல் மிக்க தொழில் துறையை வளர்த்தது. + +1930-களில், சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது. 1933 இல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து, தூதுவர்களை அனுப்பித்தன. 4 வருடம் தள்ளீ, சோவியத் யூனியன் ஸ்பானிய உள்நாட்டுப்போரில், தேசீய கலகக் காரர்களுக்கு எதிராக குடியரசுவாதி சக்திகளூக்கு உதவி செய்��து. தேசீயவாதிகளுக்கு நாஜி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் உதவினர். அப்படியிருந்தும், மியூனிச் ஒப்பந்தம் பிறகு, ஜெர்மனியுடன் ஜெர்மனி-சோவியத் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தை செய்தது. இதனால் சோவியத் யூனியன் போலந்தை 1939ல் ஆக்கிரமிது, பால்டீய நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா இவற்றை கைப்பற்றியது. நவம்பர் 1939ல், ராஜதந்திர முறைகளில் ஃபின்லாந்தை, அதன் எல்லையை 25 கிமீ பின்போகும் படி செய்ய முடியாதலால், ஸ்டாலின், ஃபின்லாந்து மீது படை எடுக்க உததரவு இட்டார். ஜெர்மனி ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தை புறம்தள்ளி, சோவியத் யூனியன் மீது படை எடுத்தது. செஞ்சேனை ஜெர்மனியின் படை எடுப்பை மாஸ்கோவின் முன் நிறுத்தியது. ஸ்டாலின்கிராட் போர் யுத்ததின் திருப்புமினை ஆயிற்று. அதன்பின், சோனியத் ராணுவம் ஜெர்மானியர்களை கிழக்கு ஐரோப்ப வழியாக துரத்தி அனுப்பி, பெர்னிலை அடைந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. போரினால் சீர்ழிவு ஏற்பட்டாலும், சோவியத் யூனியன் அதிப்பேரரசு ஆக வெளிவந்தது. + +போரின் முடிவுக்குள் சில வருடங்களில், சோவியத் யூனியன் முதலில் தன் பொருளாதரத்தை நடுவண் கட்டுப்பாடு மூலமாக மறு ஆக்கம் செய்தது. சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பா நாடுகளின் உதவிக்கு சென்று பொருளாதார மறு ஆக்கத்தை ஊக்குவித்தாலும், அங்கு அடியாள் அரசாங்கங்களை நிறுவியது. முதலில் வார்சா உடன்பாடு ஏற்பட்டது, பின்பு கம்யூனிஸ்டு சீனத்தை உதவுவதற்கு கோம்கான் (COMCON) `பரஸ்பர பொருளாதார உதவி சங்கம் ` என்பதையும் அமைத்தது. + +ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிப் பூசல்கள் நடந்தது. நிக்கிட்டா குருசேவ் , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், அங்கேரியிலும், போலந்திலும் தேசிய எழுச்சிகளை அடக்க பயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; ஸ்புட்னிக் என்ற முதல் செயற்கை கோள் விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைக்கா என்ற நாயும், பின்பு யூரி ககாரின் என்ற மனிதனும் முதல் தடவை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்கள். வலெண்டீனா டெரெஷ்கோவ் விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், அலெக்சி லியனாவ் விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருசேவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் சீன-சோவியத் பிளவு ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார். + +அதன் பிறகு கூட்டுத் தலைமை நடந்தது, லியோனிட் பிரெஷ்னேவ் 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் டிடாண்ட் அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவ பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் சோவியத் படையெடுப்பு டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகனின் முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை அதிகரித்தது. + +இக்கால கட்டத்தில், சோவியத் யூனியன் அமெரிக்காவுடன் ராணுவ சம பலம் அல்லது ஒரு படி அதிக பலம் வைத்திருந்தது; அன்னல் இது பொருளாதாரம் மேல் பெரும் பாரத்தை போட்டது. சோவியத் யூனியன் உதித்த போது இருந்த புரட்சி மனப்பான்மைக் கெதிராக இருந்தது பிரெஷ்னேவ் காலத்தில் சோவியத் தலைமையின் மாற்றங்களுக்கு சுளுக்கம் தெரிவிக்கும் மனப்பான்மை. பிரெஷ்னேவின் தலைமைக் காலம் 'அசைவற்றது (застой), என வயதான , மாறுதல் இல்லாத தலைவர்களால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்பட்டது. + +நடு 1960 இல் சிறிது பொருளாதார நிர்வாக பரிசோதனைகளுக்குப் பின், சோவியத் யூனியன் பழைய நிர்வாக முறைகளுக்குச் சென்றது. விவசாய உற்பத்தி பெருகினாலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடாகவில்லை. அதனால் சோவியத் யூனினன் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. நுகர் பொருள் உற்பத்தியில், சிறிய அளவே முதல் ஈடு செய்யப்பட்டிருந்ததால், சோவியத் யூனியன் கச்சா பொருள்களை ஏற்றுமதிதான் செய்ய முடிந்தது. சோவியத் குடிமகன்கள் மேற்கு அல்லது மத்திய ஐரோப்பிய மக்களை விட ஆரோக்கியத்தில் குறைந்தா���்கள் . இறவு வீதம் 1964ல் 1000ல் 6.9 ஆக இருந்தது; 1980ல் 1000 ற்கு 10.3 ஆக ஏறிற்று.. + +பிரெஷ்னேவ் மரணத்தை அடுத்து, இரு தலைவர்கள் துரிதமாக வந்து போனார்; அவர்கள் யூரி அண்ட்ரோபாவ், கான்ஸ்டாண்டின் செர்நென்கோ, அவர்கள் இருவரும் பிரெஷ்னேவ் கருத்தாக்கத்தில் செயல்பட்டவர்கள். 1985 இல், பதவிக்கு வந்த மிகயில் கொர்பச்சாவ் பொருளாதாரத்திற்கும், கட்சி தலைமைக்கும் கணிசமான மாறுதல்கள் செய்தார். அவருடைய கிளாஸ்நோஸ்ட் கொள்கை பொது ஜனத்திற்கு தகவல் கிடைப்பதை 70 வருடங்களுக்கு பின் தளர்த்தியது. சோவியத் யூனியனும், அதன் அடியாள் அரசுகளும் பொருளாதார ரீதியில் மோசமடையும் நேரத்தில், கொர்பச்சாவ் மேற்குடன் பனிப்போரை முடிக்க தீர்மானித்தார்1988ல், சோவியத் யூனியன் 9 வருட அஃப்கானிஸ்தான் யுத்தத்தை கைவிட்டு, தன் துருப்புகளை திருப்பி அழைத்தது. 1980 கடை வருடங்களில் கோர்பச்சாவ் தன் அடியாள் அரசுகளுக்கு ராணுவ ஆதரவை முடித்தார். அதனால் அந்த நாடுகளின் கம்யூனிஸ்டுகள் பதவியில் இருந்து தள்ளப் பட்டனர். பெர்லின் சுவர் உடைத்தெரிக்கப் பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் ஐக்கியமானதில், இரும்புத் திரை வீழ்ந்தது. + +மேலும் , அப்பொழுது, சோவியத் யூனியனின் அங்க குடியரசுகள் சுதந்திரத்தை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. சோவியத் சட்டத்தின் 72 ஆவது சட்டப் பிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று. ஏப்ரல் 7., 1990 இல் ஏற்கப்பட்ட புது சட்டம் படி, எந்த குடியசும் மூன்றில் இரண்டு நபர்கள் சுதந்திரம் வேண்டும் என ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தால், அதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் .பல குடியரசுகள் முதல் தடவை தங்கள் மக்கள் அவைக்கு நேர்நடத்தையில் தேர்தல்கள் நடத்தின. 1989 இல், சோசோகுயு வில் மிகப் பெரிய அங்கத்தினரான ரஷ்ய சோசோகு போரிஸ் எல்ட்சின்னை தலைவராக தேர்ந்து எடுத்தது. ஜூன் 12, 1990 இல், ரஷ்ய அவை தன் நிலப் பரப்பின் மேல் தன் இறையாண்மையை அறிவித்தது. இப்படிப்பட்ட செயல்களினால் சோவியத் யூனியன் பலவீனம் அடைந்து குடியரசுகள் யதார்தத்தில் விடுதலை ஆயின. + +சோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17, 1991 இல் நடத்தப்பட்டது. 15 குடியரசுகளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர், யூனியனை வைக்க சம்மதித்தனர். அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு, குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஆகஸ்தில், ஒரு அரசு கவிழ்பு யத்தனிப்பு நடந்தது. அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும், உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளிர்ந்தார்; கொர்பச்சேவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது. 1991 இல், லாட்விய, லித்வேனியா, எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன. டிசம்பர் 8, 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் ”சுதந்திர நாடுகள் காமென்வெல்த்~ என்ற அமைப்பு தொடங்கியது. டிசம்பர் 25, 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி. + += மேற்கோள்கள் = += வெளி இணைப்புகள் = + + + + +கட்டுப்பாட்டு கட்டமைப்பு + +ஒரு நிரலின் கட்டளைகளை நெறிப்படுத்த கட்டுப்பாட்டு கட்டமைப்பு (Control Structure) தேவை. கட்டுப்பாட்டு கட்டமைப்பில் தெரிவுகளும் (Choices), மடக்குசெயல்பாடும் (Repetions) அடிப்படையானவை. + +தெரிவுகள் இரு வகைப்படும்: + + "condition" + + case someChar of switch (someChar) { + +ஒன்றை ஒரு செயல்பாட்டுக்குள் மடக்கி விடுவதை மடக்கி குறிப்பிடுகின்றது எனலாம். திரும்ப திரும்ப ஒரு குறிப்பிட்ட செயல்ப்பாட்டை செய்வதை மடக்கி என்று நிரலாக பின்புலத்தில் எடுத்துகொள்ளப்படுகின்றது. வளையம், கண்ணி, சுழல் செய்கை போன்ற சொற்களையும் இதற்கு தமிழில் பயன்படுத்தப்படுவதுண்டு. + +மடக்கி கட்டமைப்பில் இரு விடயங்கள் கவனிக்க தக்கன, அவை: + + FOR I = 1 TO N for I := 1 to N do begin + + DO WHILE (test) repeat + +A few programming languages (e.g. Smalltalk, Perl, Java, C#, Visual Basic) have special constructs which allow you to implicitly loop through all elements of an array, or all members of a set or collection. + + + + +தலைகீழ் ஜென்னி + +தலைகீழ் ஜென்னி என்பது 1918 இல் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்ட ஒரு தபால்தலை ஆகும். இதில் இதன் வடிவமைப்பின் நடுவில் உள்ள ஆகாய விமானம், தவறுதலாகத் தலைகீழாக அச்சிடப்பட்டுவிட்டது. இந்தத் தபால்தலை உலகம் முழுவதிலும் 100 மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இது உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த தபால்தலைகளுள் ஒன்றாக விளங்குகின்றது. 2003 ஆம் ஆண்டின் மதிப்புப்படி இதன் பெறுமதி 150,000 அமெரிக்க டாலர்களாகும். + + + + + +நினைவுத் தபால்தலை + +நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை என்பது ஏதாவதொரு இடத்தை, நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால்தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின்போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டுக் குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக விற்கப்படும். + +உலகின் முதலாவது ஞாபகார்த்த தபால்தலை என்ற பெருமைக்கு உரியனவாகப் பல தபால்தலைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1865 இல் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு 1866 இல் அவருடைய உருவம் பதித்து ஒரு தபால்தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. எனினும் இது அவரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 1876 இல் நூற்றாண்டுக் கண்காட்சியை ஒட்டி வெளியிடப்பட்ட தபால்தலையிடப்பட்ட கடித உறை, அது தபால்தலை என்ற வகையில் அல்லாமல் தபால் காகிதாதிகள் வகையிலேயே சேரும் என்று சொல்லப்படுவதால் அதையும் உலகின் முதலாவது தபால்தலை என்று கூற முடியாது, 1887 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் ஜுபிலி வெளியீடு ஒரு 50 ஆண்டு நிறைவு ஞாபகார்த்தத் தபால்தலையாகக் கொள்ளப்படலாம் எனினும், இத்தபால்தலையில் இது குறித்த பொறிப்பு எதுவும் இல்லை. + +எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி ஞாபகார்த்த தபால்தலை என்று சொல்லக்கூடிய முதல் தபால்தலை, 1888 இல் நியூ சவுத் வேல்ஸினால், அதன் 100 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட தபால்தலையாகும். இந்நிகழ்வின்போது ஆறு வகையான தபால்தலைகள் வெளியிடப்பட்டன அனைத்திலும் "ONE HUNDRED YEARS" (நூறு ஆண்டுகள்) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 1891 இல் ஹாங்காங், ருமேனியா ஆகிய நாடுகளில் ஞாபகார்த்த தபால��தலைகள் வெளியிடப்பட்டன. 1892 இலும் 1893 இலும் பல அமெரிக்க நாடுகள், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாகத் தபால்தலைகளை வெளியிட்டன. + +ஞாபகார்த்த தபால்தலைகள் பொதுவாகக் குறைந்த காலத்துக்கே விற்பனைக்கு விடப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்படும் இந்தத் தபால்தலைகள் ஆண்டு முடிவில் ஆண்டுப்பொதிகளாக விற்கப்படுகின்றன. ஞாபகார்த்த தபால்தலைகள் வெளியிடப்பட்ட ஆரம்பகாலங்களில் தபால்தலை சேகரிப்பாளர்களிடையே இதற்கு எதிர்ப்புக் காணப்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பகாலத் தபால்தலை சேகரிப்பாளர்கள் உலகம் முழுதும் வெளியிடப்படும் முழுவதையும் சேகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். ஞாபகார்த்த தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர். ஒவ்வொரு நாட்டிலும் கூடிய எண்ணிக்கையில் தபால்தலைகள் வெளியிடப்பட்டதால் அவ்வளவு தபால்தலைகளையும் வாங்கிச் சேகரிப்பது செலவு கூடியதாகவும், கடினமானதாகவும் இருந்ததோடு, சில நாடுகள் சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை தபால் சேவைத் தேவைகளுக்கு மேலதிகமாகவே ஏராளமாக வெளியிடத் தொடங்கின. பல நாடுகளில் வெளியிடப்பட்ட இத்தகைய தபால்தலைகள் சேகரிப்பாளர் மத்தியில் குறைவான மதிப்பையே பெற்றன. + +எனினும் ஞாபகார்த்த தபால்தலைகளில் அறிமுகம், தபால்தலை சேகரிப்பில் புதிய அணுகுமுறைகள் உருவாகக் காரணமாகியது. விடயம்சார் தபால்தலை சேகரிப்புப் பிரபலமாகியது. + + + + +இணைப்பு நிஜமாக்கம் + +நிஜத்தில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் புனையும் நுட்ப அமைப்பை 'புனை மெய்ம்மை', 'புனை மெய்யாக்கம்' அல்லது இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality) எனலாம். இந்த நுட்ப அமைப்புக்கு கணினியியல் தொழில் நுட்பங்களே அடிப்படை. இணைப்பு நிஜமாக்க அமைப்புக்கு மூன்று அம்சங்கள் அவசியமாக கருதப்படுகின்றது, அவை: + + + + + + + +முதலை + +முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் ���ெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. + +முதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன. ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாகமுதலை என்றும் அழைத்து வந்துள்ளனர். + +ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன. மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன. + +முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது. + +முதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருத்து பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை ���டைத்துள்ளது. + +Most species are grouped into the genus "Crocodylus". The other extant genus, "Osteolaemus", is monotypic (as is "Mecistops", if recognized). + +பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர். + +அதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன. + + + + + +ஆமை + +ஆமை("Turtle") என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. + + + + +வீமன் + +பீமன் மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பர்பரிகன் இவரது பேரன். + + + + + +அலகாபாத் + +அலகாபாத் அல்லது பிரயாக்ராஜ் (ஆங்கிலம்:Allahabad), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும். அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது. +இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் இங்கேயே அமைந்துள்ளது. ஆனந்த பவன் எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. + +12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். 2019-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா விழா 15 சனவரி 2019 (மகர சங்கராந்தி) தொடங்கி 4 மார்ச் 2019 (சிவராத்திரி) முடிய நடைபெறுகிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது. + +2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பிரயாக்ராஜ் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 11,12,544 ஆகும். அதில் ஆண்கள் 6,00,386, பெண்கள் 5,12,158 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,14,439 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.76% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 8,88,314 (73.03%), இசுலாமியர்கள் 2,56,402 (21.94%), மற்றவர்கள் 20.% ஆகவுள்ளனர். + + +ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014 + + + + +நகுலன் (மகாபாரதம்) + +நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் +அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்கள் ஆவர். +பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது, நகுலன், கிரந்திகன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் போர்க்குதிரைகளை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார். + + + + + +சகாதேவன் + +சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர். + +பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர�� ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார். + +இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார். + +சகாதேவன், பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது தந்திரிபாலன் என்ற மாற்றுப் பெயருடன் +விராடமன்னனின் நூறாயிரம் பசுக்களை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார். + + + + + +சிகாகோ + +சிகாகோ ("Chicago", :ʃɪˈkɑːgoʊ) என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். + +இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர், 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலக்கட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர். + +சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. சிகாகோ மாநகர் 1960-1970களில் இரயில்வே சார்ந்த கருவிகள் தயாரிக்கும் தொழிலில் முதன்மைபெற்று விளங்கியது. + +சிகாகோ என்ற பதம் "சீக்காக்கா" என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து, "காட்டு வெங்காயம்" எனப் பொருள்படும். முதலில் இப்பகுதியில் குடியேறிய பிரான்சு நாட்டவர் பிரென்சு மொழியில் “சீக்காக்கா” என்ற சொல்லை திரித்து "சிகாகோ" கூறியதாக அறியப்படுகிறது. "சிகாகோ" என்ற சொல் முதலில் இந்நகரில் நடுவே பாயும் ஆற்றை குறிக்கவே பயன்பட்டது. பின் அப்பெயரே அந்நகரின் பெயராகவும் ஆக்கப்பட்டது. + +18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, போடோவாட்டமி இன பழங்குடியின்ரே இப்பகுதியில் வசித்து வந்தனர். இம்மக்கள், இப்பகுதியை மயாமி இன மக்களிடத்திலிருந்தும், மெசுவாக்கி இன மக்களிடத்திலிருந்தும் கைப்பற்றியிருந்தனர். சிகாகோ மாநகரில் முதன்முதலாக குடியேறிய பெருமை எயிட்டி நாட்டினரான ஜீன் பேப்டைஸ் போன்றி சாபில் என்ற ஆப்பிரிக்க-பிரெஞ்சு இனத்தவரை சாரும். இவர் 1770 ஆம் ஆண்டு, அந்நகருக்கு குடியேறி, பின், ஒரு போடோவாட்டமி இனப் பெண்ணை மணந்து, இப்பகுதியில் முதலாவது வாணிப சாலையை நிறுவினார். + +1803 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் தனது டியர்பான் கோட்டையை கட்டியது. 1812 ஆம் ஆண்டு நடந்த டியர்பான் கோட்டை படுகொலையின்போது நடந்த போரின் முடிவில் டியர்பான் கோட்டை தகர்க்கப்பட்டது. பின் 1816 இல் அமெரிக்க அரசுக்கும், ஒட்டாவா, ஒச்பாவா, போடோவாட்டமி இன மக்களுக்குமிடையான செயின்ட் லூயிஸ் ஒப்பந்தத்தின் படி சிக்காகோ நிலப்பகுதி அமெரிக்க அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தது. 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது. + +சிகாகோ அமெரிக்காவின் கிழக்கு பகுதிக்கும் மேற்கு பகுதிக்கும் இடையான முக்கிய போக்குவரத்து மையமாக வளர்ந்தது. 1836 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகரின் முதலாவது தொடருந்து பாதையான சிகாகோ ஐக்கிய தொடருந்து பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1848 ஆம் ஆண்டு முதல் உபயோகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு, இலினொய் - மிச்சிகன் கால்வாய் அமைப்புகளும் உபயோகத்திற்கு வந்தன. இக்கால்வாய் அமைப்பின் மூலம், அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள வழி பிறந்தது. நகரப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தமையால், நகர மக்கள்தொகை உயர்ந்தது. இந்நகரில் சிறந்து விளங்கிய தொழிற்சாலைகளாலும், சில்லறை வணிக த���றையாலும் இநநகர அமெரிக்காவின் மத்திய-மேற்கு நகரங்களில் தலைசிறந்த நகரமாக வளர்ந்து, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கு வகித்தது. + +முதல் நூறு ஆண்டுகளில் சிகாகோ மாநகர் அடைந்த வளர்ச்சி உலக நாடுகளை பிரமிப்பூட்டுவதாக இருந்தது. 1890 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாற்பது ஆண்டு காலத்தில், இந்நகரின் மக்கள்தொகை சுமார் 30,000 இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமானது. 19ம் நூற்றாண்டின் முடிவில், சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது. + +பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக இருந்தாலும், பல பெருநகர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் கழிவுநீர் வடிகால் வசதி சிக்காகோ நகரையும் பாதித்தது. சிக்காகோ நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும், மிச்சிகன் ஏரியிலேயே அந்நகரின் கழிவு நீரும் பாய்ந்தமையால், நகர மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதானது. இப்பிரச்சனை நிவிர்த்தி செய்யும் பொருட்டு, 1856 ஆம் ஆண்டு, சிக்காகோ நகரின் குடிநீர் குழாய்கள் ஏரியினுள் 3 மைல் தொலைவு கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம், நகரின் கழிவுநீர் கலக்காத குடிநீர் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ககப்பட்டது. இத்தீர்வு சிலகாலம் பயன் தந்தாலும், சிக்காகோ ஆற்றின் வெள்ள காலங்களில் பயன்தரவில்லை. சிக்காகோ ஆற்றின் பெருவெள்ளங்கள், கரைக்கு அருகாமையில் படிந்திருந்த சாக்கடையை குடிநீர் மொண்டு வரும் குழாய்களின் அருகே கொண்டு சென்றமையால் மீண்டும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு, இப்பிரச்சனையின் நிரந்தர தீர்வாக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிக்காகோ நகரின் கழிவுநீரை மிச்சிகன் ஏரிக்கு கொண்டு செல்லும் இலினொய் ஆற்றின் திசையை எதிர்புறமாக திருப்பி, கழிவுநீரை பல கால்வாய்களின் மூலம், மிசிசிப்பி ஆற்றில் கலக்கப்பட்டது. ஆற்றின் போக்கை முழுவதுமாக எதிர்புறம் திருப்பும் இத்திட்டம், அந்நாள்களில் பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக குறிப்பிடபட்டது. +1871 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிகாகோ மாநகர தீயின் விளைவாக நகரின் மூன்றில் ஒரு பகுதி தீக்கிரையானது. கிட்டத்தட்ட அனைத்து வணிகக் கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின. நகரை மீண்டும் நிறுவும் பணி துரிதமாக செயல் படுத்தப்பட்டது. உலகின் முதலாவதாக எஃகு தூண்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல வானளாவிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. + +1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநகரில் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக கொலம்பிய கண்காட்சி நிகழ்ந்தது. இன்றைய ஜாக்சன் பூங்காவில் நடந்த இக்கண்காட்சியை உலகம் முழுவதும் இருந்து வந்த சுமார் 27.5 மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர். + +1892 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகம் நகரின் தெற்கு பகுதியில் நிறுவப்பட்டது. சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் தொழில்வளம் பெருகியதால், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க–அமெரிக்கர் தெற்கு மாநிலங்களிலிருந்து குடியேறினர். இக்குடியேற்றத்தினால் பல்வேறு கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜாஸ் இசையின் மையமாக சிக்காகோ நகர் கருதப்பட்டது. + +1933 ஆம் ஆண்டு சிக்காகோ மாநகர முதன்மையர் ஆன்டனி செர்மாக் மயாமி நகரில் படுகொலை செய்யப்பட்டார். + +இரண்டாம் உலகப்போரின் போது யப்பான் நாட்டில் வீசப்பட்ட அணுகுண்டின் தொடக்கநிலை ஆராய்ச்சி நிலையமாக விளங்கிய சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் என்றிக்கோ பெர்மி தலைமையில் முதலாவது கட்டுப்படுத்தப்பட்ட அணுகரு விளைவு நிகழ்த்தப்பட்டது. + +1955 ஆம் ஆண்டு மாநகர முதன்மையராக ரிச்சர்ட் ஜே. டாலெ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் எற்பட்ட பல பொருளாதார மற்றும் சமுதாய மாற்றங்களினால், பெரும்பான்மையான நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் நகரத்தை விட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இவரது ஆட்சிகாலத்தில், பல முன்னேற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சியேர்ஸ் கோபுரம், மெக்கொர்மிக் இடம், ஓ ஹார் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டன. ரிச்சர்ட் ஜே. டாலெயின் மறைவுக்குபின் மைக்கேல் அந்தோனி பிலான்டிக் மாநகர முதன்மையராக பொறுப்பேற்றார். + +தற்போது சிகாகோ மாநகர முதன்மையராக மறைந்த ரிச்சர்ட் ஜே. டாலெயின் மகனான ரிச்சர்ட் எம். டாலெ பணியாற்றுகிறார். நகரில் ஏழை மக்களை கட்டாயத்தின் பெயரில் நகரை விட்டு இடம் பெயர்த்த மாநகர முதன்மையர், சில நல்ல முன்னேற்ற பணிகளையும் செய்து வருகிறார். + +சிகாகோ மாநகர், இலி���ொய் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள மிச்சிகன் ஏரி யின், தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரினூடே சிகாகோ ஆறு மற்றும் காலுமட் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. சிக்காகோ நகரின் தூய்மைபடுத்தப்பட்ட கழிவுநீரைக் கொண்டு செல்லும் சிகாகோ சுகாதார மற்றும் கப்பல் கால்வாய் சிகாகோ ஆற்றின் வழியே டேஸ் பிளையன்ஸ் ஆற்றைக் கலக்கிறது. + +சிகாகோ மாநகரின் வரலாறும் பொருளாதாரமும் மிச்சிகன் ஏரியை மையமாக கொண்டே இயைந்தது. முற்காலத்தில் சிகாகோ ஆறு சரக்கு கப்பல் போக்குவரத்துதளமாக உபயோகப்படுத்தப்பட்டாலும், இந்நாட்களில், சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு நகரின் தெற்கே அமைந்துள்ள சிகாகோ துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது. ஏரியின் அருகாமையில் அமைந்திருப்பதால், நகரின் காலநிலை, குளிர்காலத்தில் மிகக்குளிராகவும், கோடைகாலம் மிகவெப்பமாகவும் அமைகிறது. + +சிகாகோ மாநகரின், ஏரிக்கரை சாலை மிச்சிகன் ஏரியையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் அருகே ஏரிகரையில் பல அழகிய பூங்காகள் அமைந்துள்ளன. அவையாவன லிங்கன் பூங்கா, கிராண்ட் பூங்கா, பர்ன்காம் பூங்கா மற்றும் ஜாக்சன் பூங்கா. சுமார் 29 பொது மணல்வெளிகள் ஏரிகரைகளில் காணப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிக்கு அருகே செயற்கையாக நீட்டப்பட்டுள்ள நிலப்பரப்பில், ஜோர்டைன் நீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுலா இடமான கப்பல் திண்டு, அருங்காட்சியக வளாகம், விளையாட்டு மைதானமான சோல்சர் ல்ட்டு, ஆகியவை அமைந்துள்ளன. + +கோடைகாலம் மித வெப்பமாகவும், ஈரப்பதத்தை கொண்டதாகவும் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை சுமார் 65 °F (18 °C) இருந்து 83 °F (28 °C) வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் மிகக் குளிரானதாகவும், பனி விழும் காலமாகவும், பெரும்பான்மையான நீர்நிலைகள் உறையத் தக்கதாகவும் இருக்கிறது. வசந்த காலமும், இலையுதிர் காலமும் மிக இதமான காலநிலையை கொண்டுள்ளது. +சிகாகோ மாநகரின் ஆண்டு மழையளவு சராசரியாக சுமார் 34 அங்குலம் ஆகும். கோடைகாலமே பெரும்பான்மையான மழை பெறுகிறது. குளிர்காலத்தில் மழைக்கு பதிலாக பனி மூலம் நீர் கிடைக்கிறது. சிகாகோ மாநகர் மிகக்குளிரான ஆண்டாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள 1929-20 ஆண்டில், பனி வீழ்ச்சி சுமார் 114 அங்குலமாக இருந்தது. +1871 ஆம் ஆண்டில் நடந்த சிகாகோ மாநகர பெருந்தீ விபத்தின் காரணமாக நடைபெற்ற மறுகட்டமைப்பின் மூலம் கட்டடக்கலையில் சிக்காகோ நகர் மாபெரும் வளர்ச்சி கண்டது. இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்நகருக்கு இடம்பெயர்ந்த அமெரிக்காவின் தலைசிறந்த கட்டடகலை வல்லுனர்களே. + +1885 ஆம் ஆண்டு, முதலாவதாக எஃகு கொண்டு கட்டப்பட்ட வானளாவிய கட்டிடம் சிகாகோ மாநகரில் கட்டப்பட்டது. இன்று, சிகாகோ மாநகரின் வானளாவிய கட்டிடங்களின் தொகுதி உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறது. தற்காலத்தில் சியேர்ஸ் கோபுரம், Aon மையம் மற்றும் சான் ஃகன்காக் மையம் ஆகியவை உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன. இந்நகரின் ஏரிக்கரையின் அருகாமையில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் நவின கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. நகரின் தெற்கு பகுதியில் பெரும்பான்மையான தொழில் துறை நிறுவனங்கள் தம் ஆலைகளை அமைத்துள்ளன. +சிக்காகோ நகரில் பல புதிய வானளாவிய கட்டிடங்களை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவைகளாக கருதப்படுவன: வாட்டர்வியூ கோபுரம், சிகாகோ ஸ்பயர், டிரம்ப் சர்வதேச விடுதி மற்றும் கோபுரம். + +1837 ஆம் ஆண்டு சிகாகோ மாநகர் நிறுவப்பட்டபோது அதன் இலக்கு வாசகமாக அமைக்கப்பட்ட "Urbs in Horto" என்ற இலத்தின் மொழி வாக்கியம் “பூங்கா நகரம்” என்ற பொருள் தரும். இவ்வாக்கியத்தை மெய்பிக்கும் வகையில் சிக்காகோ மாநகரில் 552 பூங்காக்கள், சுமார் 7300 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 33 ஏரி மணல்வெளிகள், ஒன்பது அருங்காட்சியகங்கள், 16 சரித்திர புகழ்பெற்ற ஏரிக்காயல்கள், 10 பறவை மற்றும் வனவிலங்கு காப்பகங்கள் ஆகியவை சிக்காகோ நகருக்கு பெருமை சேர்கின்றன. சிக்காகோவின் மிகப்பெரிய பூங்காவான லிங்கன் பூங்கா, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்களை கவர்திழுக்கிறது. நகரின், பூங்கா மறுவடிமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் திட்டத்தின் மூலம் பூங்காக்கள் புது மெருகுடன் விளங்குவதுடன், பல புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய பூங்காக்களான பிங் டாம் நினைவு பூங்கா, டூசாபில் பூங்கா, மில்லியேனியம் பூங்கா ஆகியவை கண்டுகளிக்க கூடியவை. + +ஆண்டுதோறும் சிகாகோ மாநகர் சுமார் 44.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பல உயர் தர வணிக மையங்கள், ஆயிரக்கணக்கான உணவகங்கள், கட்டடக்கலையின் சிறப்பை உ���ர்த்தும் வகையில் அமைந்துள்ள கட்டிடங்கள் ஆகியன சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் அமசங்களாக அமைகின்றன. சிக்காகோ நகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. + +செயற்கையாக சுமார் 3,000 அடி நீளத்தில் ஏரியினருகே கட்டப்பட்ட கப்பல் திண்டு (Navy Pier) பகுதியில் பல வணிக மையங்கள், உணவகங்கள், அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. மேலும், கப்பல் திண்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள 150 அடி உயரமுள்ள ராட்டினம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சம் ஆகும். கப்பல் திண்டு பகுதிக்கு வருடம்தோறும் 8 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். + +புதிய நூற்றாண்டை வரவேற்க்கும் குறிக்கோளுடன் கட்டப்பட்ட மில்லியேனியம் பூங்கா, பல அழகிய, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீருற்றுகளை கொண்டுள்ளது. இங்கு குளிர்காலத்தில் பனி சரிக்கி வளையம் (ice ring) அமைக்கப்படுகிறது. + +1998 ஆம் ஆண்டு இந்நகரின் அருங்காட்சியக வளாகம், 10 ஏக்கர் பரப்பில் ஏரிக்கரையில் திறந்து வைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் செயல்படும் ஆட்லர் கோளரங்கம், ஃபியில்டு அருங்காட்சியகம், மற்றும் ஷெட் மீன் காட்சியகம் ஆகியவை உலகப்புகழ் பெற்றவை. அருங்காட்சியகம வளாகம் தெற்கு பகுதியில் கிராண்ட் பூங்காவை இணைக்கிறது. இப்பூங்காவில் சிகாகோ கலை நிறுவனமும், பக்கிங்காம் வண்ண நீருற்றும் அமைக்கப்பட்டுள்ளன. + +சிகாகோ பல்கலைக்கழகத்தின், ஒரியன்டல் நிலையத்தில் எகிப்திய நாகரிகத்தின் புராதன சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சிகாகோ வரலாற்று அருங்காட்சியகம், டுசெபில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் வரலாற்று அருங்காட்சியகம், சமகால கலை அருங்காட்சியகம், பெக்கி நோட்பேயட் இயற்கை அருங்காட்சியகம், போலந்திய அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் தொழில் அருங்காட்சியகம். ஆகிய பல்வேறு துறை சார்ந்த அருங்காட்சியகங்கள் சிக்காகோ நகரை ஒரு சிறந்த சுற்றுலா இடமாக ஆக்குகின்றன. + +சிகாகோ மாநகர் பல இனங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக வாழும் இடமாக திகழ்கிறது. என்வே, இந்நகரில் பல தலைசிறந்த இனஞ்சார்ந்த உணவகங்களை எங்கும் காணலாம். சிக்காகோ நகருக்கே உரிதான முறையில் உருவாக்கப்படும் பீஸா (Deep-Dish Pizza) என்ற உணவுப்பண்டம் அமெரிக்கா முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொர�� சிறப்பான உணவாக கருதப்படும் சிக்காகோ – hot dog என்ற உணவுப்பண்டமும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது. இவை போன்ற தெரு பண்டங்கள் மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற பல சமையல் கலைஞர்கள் பணியாற்றும் பல உயர்நிலை உணவகங்களும் இந்நகரில் உள்ளன. தற்போதய காலக்கட்டத்தில், சிக்காகோ நகர் அமெரிக்காவின் மிகச் சிறந்த உணவகங்கள் நிறைந்த நகராக உருவெடுத்துள்ளது. + +பலவகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்து மகிழும் வண்ணம் வருடம்தோறும் இந்நகரில் உள்ள கிராண்ட் பூங்காவில் சிக்காகோ சுவை விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில், சிக்காகோ நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், தம் உணவகத்தின் சிறப்பு உணவுகளை பார்வையாளர்கள் மிகக்குறைந்த விலையில் சுவைத்து மகிழுமாறு சாலைகளை அமைக்கின்றனர். இவ்விழா அமெரிக்க சுதந்திர விழாவை ஒட்டி நடைபெறுவதால், பார்வையாளகள், வகைவகையான உணவுடன், மாலைநேர வானவேடிக்கை நிகழ்ச்சியையும், பல்வேறு இசைநிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர். + +2006 ஆம் ஆண்டு, சிகாகோ மாநகர் அமெரிக்காவின் “சிறந்த விளையாட்டு நகரம்” என்று, ‘’’தி ஸ்போர்டிங் நியுஸ்’’’ (The Sporting News) என்ற பத்திரிகையால் பாராட்டப்பட்டது. + +அமெரிக்காவில் மிகப்புகழ் பெற்ற அடிபந்தாட்ட அணிகளான சிக்காகோ கப்ஸ் (Chicago Cubs) மற்றும் சிக்காகோ வைட் சாக்ஸ் (Chicago White Sox) ஆகிய அணிகள் சிக்காகோ நகரை சார்ந்தவை. சிக்காகோ கப்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் வட பகுதியில் உள்ள ரிக்லி ஃபீல்ட் (Wrigley Field) என்னும் மைதானம் ஆகும். சிக்காகோ வைட் சாக்ஸ் அணி கடந்த 2005 ஆம் ஆண்டு உலக அடிபந்தாட்ட தொடரை வென்றது. சிகாகோ பேர்ஸ் அணி சிக்காகோ நகரை சார்ந்த அமெரிக்கக் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணி ஒன்பது முறை என்.எஃப்.எல் போட்டிகளில் சூப்பர் போல் என்ற பட்டத்தை வென்றுள்ளது. சிகாகோ பேர்ஸ் அணியின் சொந்த ஆடுகளம் நகரின் ஏரிக்கரையில் உள்ள சோல்ஜர் ஃபீல்ட் (Soldier Field) என்னும் மைதானம் ஆகும். + +அமெரிக்காவின் மற்றொரு முக்கிய விளையாட்டாக போற்றப்படும் கூடைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் சிகாகோ புல்ஸ் அணி இந்நகருக்கு பெருமை சேர்க்கிறது. உலகப்புகழ் பெற்ற கூடைபந்தாட்ட வீரரான மைக்கல் ஜார்டன் இவ்வணியை சார்ந்தவர். மைக்கல் ஜார்டன் இக்குழுவின் தலைவராக இருந்தபோது, ஆறு முறை இவ்வணியினர் பதக்கதை கைப்பற்றினர். சிக��காகோவின் பனி வளைதடிப் பந்தாட்ட அணியான சிகாகோ பிளாக்காக் (Chicago Blackhawks) மூன்று முறை ஸ்டான்லி கோப்பையை வென்று உள்ளது. + +சிகாகோ மாநகர் மாராத்தான் போட்டிகள் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உலக அளவில் நடத்தப்பெறும் மிகப்பெரிய ஐந்து மாராத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்று. + +சிகாகோ மாநகர் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அனைத்துலக ஒலிம்பிக் குழுவால் 2016-ஒலிம்பிக் போட்டி நடத்த தகுதியுள்ள நகரங்களாக அறிவிக்கப்பட்ட நான்கு உலக நகரங்களில் சிக்காகோ நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு சிக்காகோ நகரை பார்வையிட்டது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெகுவாக அலங்கரிக்கப்பட்டது. + +சிகாகோ மாநகர பகுதி அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஊடக வசதிகளை கொண்ட நகரமாக விளங்குகிறது. அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய ஊடக தொழில் நிறுவனங்களாக கருதப்படும் சி.பி.எஸ் (CBS), ஏ. பி. சி (ABC), என். பி. சி (NBC) , மற்றும் பாக்ஸ் (FOX) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை சிக்காகோ நகரில் அமைத்துள்ளன. இதை தவிர நூற்றுகும் அதிகமான தொலைக்காட்சி சார்ந்த நிறுவனங்கள் இந்நகரில் செயல்படுகின்றன. + +“சிகாகோ டிரிபியுன்” (Chicago Tribune) மற்றும் "சிகாகோ சன் டைம்ஸ்" (Chicago Sun-Times) ஆகிய புகழ்பெற்ற நாளிதழ்கள் சிக்காகோ நகரில் இருந்து வெளிவருபவை. இவை தவிர பல இணைய நாளிதழ்களும் சிக்காகோ நகரில் வெளியிடப்படுகின்றன. + +புகழ் பெற்ற பல ஹாலிவுட் திரைபடங்கள் சிக்காகோ நகரில் படமாக்கப்பட்டவை. ஸ்பைடர் மேன்-2 (spdeman-2) , பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) ஆகிய பிரபல திரைபடங்களின் பெரும் பகுதி சிக்காகோ நகரில் படம் பிடிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிபடமான டார்க் நைட் (The Dark Knight) திரைப்படமும் இந்நகரிலேயே படம் பிடிக்கப்பட்டது. + +சிகாகோ மாநகர் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நகராகும். இந்நகரின் 2007ஆம் ஆண்டு மொத்த உற்பத்தி சுமார் 442 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் மற்ற அமெரிக்க நகரங்களை போலல்லாது இந்நகரில் பலதரபட்ட தொழிகளும் சிறந்து விளங்குவதால், சமன்செய்யப்பட்ட பொருளாதாரமாக கருதப்படுகிறது. மாஸ்டர்கார்ட் உலக வணிக குறியீட���டு எண்ணில் சிகாகோ மாநகர் நான்காவது முக்கிய வர்த்தக மையம் என வர்ணிக்கப்படுகிறது + +நாட்டின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான ஆல்ஸ்டேட் காப்புறுதி நிறுவனம் இந்நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் புறநகர் பகுதிகளில் சுமார் 4.25 மில்லியன் பல்துறை தொழிலாளர் வசிப்பதால், அமெரிக்காவின் பெரிய தொழிலாளர் குடியிருப்பு பகுதியாக கருதப்படுகிறது Chicago has the largest high-technology and information-technology industry employment in the United States. சிகாகோ மாநகர் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களிலும், தகவல் தொழில்நுட்ப சார்ந்த தொழில்களிலும் முதன்மை பெற்று விளங்குகிறது. + +பல மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்கள் சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. உதாரணமாக பாக்ஸ்டர் இன்டர்நேசனல் நிறுவனம் (Baxter International), அப்பாட் லேப் (Abbott Laboratories) ஆகியவை சிக்காகோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை. தோசிபா மெடிக்கல் ரிசர்ச் (Toshiba medical research) , சிமன்ஸ் மெடிக்கல் (Siemens )), ஜெனரல் எலக்ரிக் மெடிக்கல் (GE medical) ஆகிய உலகப்பகழ் பெற்ற நிறுவனங்களும் தம் கிளைகளை சிக்காகோ நகரில் நிறுவியுள்ளன. + +2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி சிக்காகோ நகரின் மக்கள்தொகை சுமார் 2,873,790. 2000ஆம் ஆண்டு அமெரிக்க கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 2,896,016 ஆகவும், வீடுகளின் எண்ணிக்கை 1,061,928 ஆகவும் இருந்தது. இலினொய் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மக்கள் சிக்காகோ நகரிலேயே வாழ்வதாக அறிய முடிகிறது. நாட்டின் மிக அதிகமான மக்களடர்த்தி கொண்ட நகரங்களில் ஒன்றான சிகாகோ மாநகரின் மக்களடர்த்தி சுமார் 12,750.3 மக்கள்/ சதுர கிலோமீட்டர். நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 41.97 விழுக்காடு வெள்ளையர்களும், 36.77 விழுக்காடு ஆப்பிரிக்க –அமெரிக்கரும், 4.35 விழுக்காடு ஆசியரும், 0.06 விழுக்காடு பசிபிக் தீவுகளை சார்ந்தோரும், 0.36 விழுக்காடு அமெரிக்க பழங்குடியினரும், 13.58 விழுக்காடு மற்ற இனங்களை சார்ந்தோரும் வாழ்கின்றனர். சுமார் 21.72 விழுக்காடு மக்கள் பிற நாட்டில் பிறந்து இந்நாட்டில் குடியேறியவர்கள். இவர்களில், சுமார் 56.29 விழுக்காட்டினர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். மொத்த 1,061,928 வீடுகளில் சுமார் 28.9 விழுக்காடு வீடுகளில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியர் இருப்பதாகவும், 35.1 விழுக்காடு வீடுகளில் திருமணமான தம்பதியர் வாழ்வதாகவும், , 18.9 விழுக்காடு வீடுகளில் ஆண் துணை ��ல்லாத வாழ்வதாகவும், 40.4 விழுக்காடு மக்கள் குடும்ப உறவின்றி தனிமையில் வாழ்வதாகவும், கணகெடுப்பில் தெரிய வந்துள்ளது. +மக்களின் இடைநிலை வயது 32 ஆகவும், ஆண்-பெண் விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 94.2 ஆண்கள் என்ற அளவிலும் இருந்து வருகிறது. மக்களின் குடும்ப இடைநிலை வருமானம் சுமார் $46,748 அமெரிக்க டாலர்கள். இந்நகர ஆண்களின் இடைநிலை வருமானம் சுமார் $35,907 ஆகவும், பெண்களின் வருமானம் சுமார் $30,536 ஆகவும் காணப்படுகிறது. மக்களின் தனிநபர் வருமானம் $20,175 ஆக இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 19.6 விழுக்காடு மக்கள் (16.6 விழுக்காடு குடும்பங்கள்) வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். வறுமைகோட்டிற்கு கீழே வாழும் மக்களில் 28.1 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் கீழேயும், 15.5 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேலேயும் உள்ளனர் என்பது கவலைதரும் செய்தி. +சிகாகோ மாநகரின் பெரிய வெள்ளையர் இனக்குழுவாக கருதப்படுவது போலந்தியராகும். போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த இம்மக்கள், நகரின் பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறார்கள். மற்றுமொரு முக்கிய குடியேறிகளாக கருதப்படும் செர்மானியர், 1830–1840 ஆண்டுகளில் இந்நகரில் குடியேறினர் + +சிகாகோ மாநகரில் கணிசமான அளவில் வாழும் அயர்லாந்து-அமெரிக்கர், நகரின் தெற்கு பகுதியில் வாழ்கின்றனர். பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை இச்சமுகத்தையே சாரும். தற்போதய மாநகர முதன்மையர் ரிச்சர்ட் எம். டாலெ ஒரு அயர்லாந்து-அமெரிக்கர். இதை தவிர சுமார் 500,000 இத்தாலிய-அமெரிக்கர் இந்நகரில் வாழ்கின்றனர். . +ஐரோப்பிய இனங்கள் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு இனங்களை சார்ந்தோரும் இந்நகரில் வாழ்கின்றனர். நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்க. நியுயார்க் நகருக்கு அடுத்தபடியாக சிகாகோ மாநகரில் அதிக அளவில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. + +ஆசிய இனத்தவரில் குறிப்பாக இந்தியரும், பாக்கிஸ்தானியரும் பெருமளவில் இந்நகரில் வாழ்கின்றனர். சிகாகோ மாநகர், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இந்திய-அமெரிக்கர் வாழ்விடம் ஆகும். நகரின் வடக்கு திசையில் உள்ள திவான் அவென்யு, இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் வணிக சாலைகள் நிறைந்த உள்ள பகுதியாகும். இவ்வீதி, இந்திய நகரங்களில் உள்ள கடைவீதிகளை ஒத்துதிருப்பது வியப்பூட்டுகிறது. + +இந்நகரில் சுமார் 680 பொதுபள்ளிகளும், 394 தனியார் பள்ளிகளும், 83 கல்லூரிகளும், 88 நூலகங்களும் உள்ளன. +சிகாகோ பொது பள்ளிகள் (CPS), பல பள்ளி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, நிருவகிக்கப்படுகிறது. சுமார் 600 கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 400,000 மாணாக்கர் கல்வி பயில்கின்றனர். +பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் கிறித்தவ மதத்தை சார்ந்த அமைப்புகளினால் ஆளுகை செய்யப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையினாலும், லூத்திரன் திருச்சபையினாலும் , ஜேசுட் திருச்சபையினாலும், ஆளுகை செய்யப்படும் இப்பள்ளிகள் மக்களின் நன்மதிப்பை பெற்றவை. +இவைதவிர, மதச்சார்பற்ற பல தனியார் பள்ளிகளும் இந்நகரில் உள்ளன. அவையாவன: + +1890 ஆம் ஆண்டு முதலே சிகாகோ மாநகர் உயர் கல்வியில் ஒரு சிறப்பான நிலையை கொண்டுள்ளது. இந்நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மூன்று பல்கலைகழகங்களான வட மேற்கு பல்கலைகழகம் , டிப்பால் பல்கலைகழகம் , மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம், ஆகியவை உயர்கல்வியிலும், உயர் தொழில்நுட்ப ஆராய்ட்சியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. +உலகப்புகழ் பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர்களும், அறிவியலாளர்களும், இந்நாள் வரை 81 நோபல் பரிசுகளை வென்றுள்ளது இப்பல்கலைகழகத்தின் பெருமையை விளக்கும் சான்றாகும். + +அமெரிக்காவில் சிகாகோ மாநகர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது. அமெரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள ஆறு பெரிய இரயில் பாதைகள் இணையும் ஒரே இடமாக சிக்காகோ நகர் இருப்பதினால், இந்நகரை சரக்கு போக்குவரத்து மையம் என்று அழைத்தால் அது மிகையாகாது. +அது மட்டுமன்றி, சிகாகோ மாநகர் பயணிகள் போக்குவரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. பல தொலை தூர ஆம்டிராக்(Amtrak) இரயில்கள் சிகாகோ நகரின் யுனியன் ஸ்டேசன் இரயில் நிலையத்தில் இருந்து தினமும் புறப்படுகின்றன. + + + + + +விடயம்சார் தபால்தலை சேகரிப்பு + +விடயம்சார் தபால்தலை சேகரிப்பு (Topical or thematic stamp collecting) என்பது ஒரு குறிப்பிட்ட விடயம் அல்லது கருத்துரு தொடர்பான தபால்தலைகளைச் சேகரிப்பதாகும். இவ்வாறான சேகரிப்புக்குரிய விடயங்கள் பறவைகள், விலங்குகள் முதல், ���ோக்குவரத்து, விளையாட்டு, புகழ் பெற்ற மனிதர்கள், நாட்டு வரலாறுகள் போன்ற எதுவாகவும் இருக்கக்கூடும். +தொடக்க காலங்களில், அரசன் அரசிகளின் தலைகளையும், நாட்டின் சின்னங்களையும் தபால்தலைகளிகளில் பொறித்து வெளியிட்ட தபால்சேவை நிர்வாகங்கள் நாட்டின் பண்பாடு, இயற்கையழகு, சாதனைகள் என்பவற்றையும் தபால்தலைகளில் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர். 1845 இலேயே சென் லூயிஸில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் கரடி உருவங்களைத் தாங்கியிருந்தன. கனடா நாடும் ஆரம்ப காலங்களிலேயே விலங்குகள் பொறிக்கப்பட்ட தபால்தலைகளை வெளியிட்டது. முதல் தபால்தலை வெளியிடப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் இன்று ஏராளமான வேறுபட்ட வடிவமைப்புகளில் ஆயிரக்கணக்கான விடயங்கள் சார்ந்த தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது விடயம்சார் தபால்தலை சேகரிப்பாளர்களுக்கு நிறைந்த வாய்ப்புக்களைத் தருகின்றது. +பலகாலமாகப் பிரபலமாக இருக்கும் "கப்பல்கள்", "பறவைகள்", "விளையாட்டு" போன்ற பல சேகரிப்புக்குரிய விடயங்களில் இன்றுவரை பல ஆயிரக்கணக்கான தபால்தலைகள் வெளியிடப்பட்ட நிலையில், இவற்றில் முழுமையான சேமிப்பு என்பது இன்று இயலாத ஒன்றாகிவிட்டது. இதனால் மேற்படி விடயங்களில் ஒரு பகுதியை மட்டும் கையாளும் வகையில் தபால்தலை சேகரிப்புகள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, கப்பல் தொடர்பான விடயங்களில் போர்க் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், தட்டை அடிகளையுடைய கப்பல்கள், உலக யுத்தங்களில் பங்குபற்றிய கப்பல்கள் எனப் பலவகையானவை பிரபலமாக உள்ளன. + +தற்காலத்தில் சில குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்த தபால்தலைகளுக்காகவே தனியான விபரப்பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன. + + + + + +தபால்தலை விபரப்பட்டியல் + +தபால்தலை விபரப்பட்டியல் என்பது தபால்தலைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு பட்டியல் ஆகும். அடிப்படையில் தபால்தலைகள் பற்றிய சில தகவல்களையும், அதன் விலை போன்றவற்றையும் உள்ளடக்கிய இப் பட்டியல் தபால்தலைகள் சேகரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பெரிதும் பயன்படுகின்ற ஒன்றாக உள்ளது. + +ஆரம்பத்தில் இவ்விபரப்பட்டியல்கள் விற்பனையாளரின் விலைப் பட்டியலாகவே இருந்தன. இன்றும் சில விபரப்பட்டியல்கள் இதே நோக்கத்தையே மு���ன்மையாகக் கொண்டுள்ளன. தபால்தலை சேகரிப்பு வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் அதன் வளர்ச்சியோடு ஒட்டி, தபால்தலைகள் வெளியிடப்பட்ட திகதி, நிற வேறுபாடுகள் முதலிய சேகரிப்பாளர்களுக்குப் பயன்படக்கூடிய பல தகவல்களும் படிப்படியாக விபரப்பட்டியல்களில் சேர்க்கப்பட்டன. + +உலகம் தழுவிய அளவில் தபால்தலைகளின் தகவல்களை உள்ளடக்கிய விபரப்பட்டியல்கள் மிகச் சிலவே: + +இவ்வாறான விபரப்பட்டியல்களை வெளியிடுவது என்பது மிகப் பெரிய வேலையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் தபால்தலைகள் வெளியிடப்படுகின்றன. பழைய தபால்தலைகளின் விலைகளும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். விற்பனையாளர்கள் அல்லாத விபரப்பட்டியல் வெளியீட்டாளர்கள் விலைகளைப் பல விற்பனையாளர்களிடம் இருந்தும், தபால்தலை ஏல விற்பனைகளின் போதும் திரட்டிய தரவுகளைப் பயன்படுத்திக் கணிப்பார்கள். + +இத்தோடு விபரப்பட்டியல் வெளியீட்டாளர்கள், மேலதிக விபரங்களை உள்ளடக்கிச் சிறப்பு விபரப்பட்டியல்களையும் வெளியிடுவதுண்டு. நாடுகள் வாரியான விபரப்பட்டியல்கள் இவ்வாறானவை. "மிச்சேல்" ஜேர்மனியில் வெளியிடப்பட்ட தபால்தலைகளுக்கும், "ஸ்கொட்" ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலைகளுக்கும் சிறப்பு விபரப்பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. + +பல நாடுகள் அவற்றுக்கெனத் தேசிய விபரப்பட்டியல்களைக் கொண்டுள்ளன. இவற்றைத் தனியார் துறை வெளியிட்டாளர்களோ, சில சமயங்களில் தபால் சேவை நிறுவனங்களோகூட வெளியிடுவதுண்டு. எனினும் தபால்சேவை நிறுவனங்களால் வெளியிடப்படுபவை ஆரம்ப அல்லது அநுபவம் குறைந்த சேகரிப்பாளர்களுக்கே உகந்தவையாக இருப்பது வழக்கம். குறிப்பிடத்தக்க நாடுகள் வாரியான விபரப்பட்டியல்கள்: + + + + + + + +யுவராஜ் சிங் + +யுவராஜ் சிங் ("Yuvraj Singh", பிறப்பு: டிசம்பர் 12, 1981) புகழ்பெற்ற இந்தியத் துடுப்பாட்ட வீரராவார். இவர் ஓர் இடக்கைத் துடுப்பாளர் ஆவார். + + + + + + + +பத்மநாபபுரம் அரண்மனை + +பத்மநாபபுரம் அரண்மனை பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழியில் பத்மனாபபுரம் என்னும் ஊரில் ���மைந்துள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. + +இந்த அரண்மனையானது 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது. இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு: + + + + + + +மிச்சேல் விபரப்பட்டியல் + +மிச்சேல் விபரப்பட்டியல் (MICHEL-Briefmarken-Katalog) ஜேர்மன் மொழி வழங்கும் நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பெரியதும், பரவலாக அறியப்பட்டதுமான தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். 1910 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்ட இது, தபால்தலை சேகரிப்பாளர் விற்பனையாளர் மத்தியில் முக்கியமான உசாத்துணை நூலாக ஆகியது. இது ஆங்கில மொழி மூலமான ஸ்கொட் விபரப்பட்டியலிலும் அதிகமான தகவல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. + +ஹியூகோ மிச்சேல் என்னும் ஒரு தபால்தலை விற்பனையாளரின் விலைப்பட்டியலாக ஆரம்பமானது இது. 1920 ஆம் ஆண்டளவில் இது, ஐரோப்பா, கடல்கடந்த நாடுகள் என இரண்டு பாகங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று உலக நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய 12 பாகங்களாக ஆகியுள்ளது. இத்துடன் மேலும் பல சிறப்புப் பாகங்களையும் சேர்த்து இந் நிறுவனம் வெளியிடும் பாகங்கள் இன்று நாற்பது அளவில் உள்ளது. ஸ்கொட் விபரப்பட்டியலைப் போல் "மிச்சேல்" ஒவ்வொரு ஆண்டும் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியல்களை முழுமையாக வெளியிடுவது இல்லை. பதிலாக சில பாகங்களை மட்டுமே இற்றைப்படுத்துகின்றது. மிச்சேல் வெளியிடப்பட்ட தபால்தலைகளின் எண்ணிக்கை, தாள்களின் வடிவம் முதலிய கூடுதலான தகவல்களைத் தரும் ஒரு விபரப்பட்டியல் ஆகும். அத்துடன் அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக ஸ்கொட் விபரப்பட்டியலில் இடம்பெறாத பல நாடுகள் "மிச்சேல்" பட்டியலில் இடம்பெறுவது சில சேகரிப்பாளர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, கியூபா, வட கொரியா போன்ற ஸ்கொட் விபரப்பட்டியலில் இடம்பெறாத ���ாடுகள் மிச்சேலில் இடம்பெற்றுள்ளன. + +1960 களிலும் 70 களிலும், அரேபியத் தீபகற்பத்திலுள்ள பல அமீரகங்கள் தபால் சேவைப் பயன்பாட்டுக்குத் தேவையானவற்றிலும் மேலதிகமாக ஏராளமான தபால்தலைகளை வெளியிட்டன. பல தபால்தலை விபரப்பட்டியல்கள் இவற்றைப் பெறுமதியற்ற தபால்தலைகளாகக் கருதிப் பட்டியலிடுவதில்லை. ஆனால் "மிச்சேலில்" இவையும்கூட உள்ளடக்கப்பட்டுள்ளன. + + + + + +நீள்வட்டம் + +கணிதத்தில் நீள்வட்டம் (பிரான்சியம், ஆங்கிலம், இடாய்ச்சு:"ellipse", எசுப்பானியம், போர்த்துகீசியம்:"elipse") என்பது ஒருவகையான கூம்பு வெட்டு ஆகும். கூம்பு வடிவொன்றை, தளம் ஒன்று வெட்டும்போது (அதன் அடியை வெட்டாமல்) கிடைக்கும் வெட்டுமுகம் நீள்வட்டம் ஆகும். நீள்வட்டத்தின் ஆங்கிலப் பெயரான "ellipse" என்பது ἔλλειψις -"elleipsis" என்ற கிரேக்கச் சொல்லிருந்து உருவானது. + +ஒரு கூம்பை அதன் அச்சுக்கு செங்குத்தான தளத்தில் வெட்டினால் கிடைக்கும் வெட்டுமுகம் ஒரு நீள்வட்டத்துக் மாறாக வட்டமாக இருக்கும். ஆனால் ஓர் உருளையை அதன் முக்கிய சமச்சீர் அச்சுக்கு இணையாக இல்லாத ஒரு தளத்தால் வெட்டும்போதும் ஒரு நீள்வட்டம் கிடைக்கும். + +வட்டத்துக்கு நடு இருப்பது போலவும் எப்படி நடுவில் இருந்து வட்டத்தின் ஒவ்வொரு புள்ளியும் ஒரே தொலைவில் இருக்குமோ அப்படி நீவட்டத்துக்கு இரண்டு நிலையான புள்ளிகள் உண்டு. அந்த இரண்டு புள்ளிகளில் இருந்து நீவட்டத்தின் ஒவ்வொரு புள்ளியும் ஒரே கூட்டுத்தொகை அளவில் திலைவு இருக்கும். இது நீவட்டத்தின் ஒரு [மாறிலி]]யாக இருக்கும். இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்கள் எனப்படுகின்றன. + +இரண்டு ஊசிகளையும், ஒரு நூல் தடத்தையும், பென்சில் ஒன்றையும் பயன்படுத்தி ஒரு நீள்வட்டத்தை வரைய முடியும். + +நீள்வட்டமானது அதன் கிடைமட்ட மற்றும் நிலைக்குத்தான இரு அச்சுகளைப் பொறுத்து சமச்சீராக அமையும் ஒரு மூடிய வளைவரை. கிடைமட்ட அச்சு நீள்வட்டத்தின் நெட்டச்சு (முக்கிய அச்சு; நீளம் 2"a") எனவும், நிலைக்குத்து அச்சு நீள்வட்டத்தின் சிற்றச்சு (துணை அச்சு; நீளம் 2"b") எனவும் அழைக்கப்படுகின்றன. + +நெட்டச்சும் குற்றச்சும் சந்திக்கும் புள்ளி நீள்வட்டத்தின் மையம். + +நீள்வட்டத்தின் மையத்தை நடுப்புள்ளியாகக் கொண்டு நீள்வட்டத்தின் மீது அமை��ும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம், அவை நெட்டச்சின் முனைகளாக இருக்கும்போது மிக அதிகமானதாகவும், சிற்றச்சின் முனைகளாக இருக்கும்போது மிகச் சிறியதாகவும் இருக்கும். + +நெட்டச்சில் பாதி "அரை நெட்டச்சு" ("a") எனவும் சிற்றச்சில் பாதி "அரைச் சிற்றச்சு" ("b") எனவும் அழைக்கப்படும். + +நீள்வட்டத்துக்கு இரு "குவியங்கள்" உள்ளன. இவை நீள்வட்டத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் உள்ளவாறு நெட்டச்சின் மீது அமைந்த இரு புள்ளிகளாகும். இவை "F" மற்றும் "F" எனக் குறிக்கப்படுகின்றன. நீள்வட்டத்தின் மீதமையும் ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இவ்விரு குவியங்களுக்கும் இடைப்பட்ட தூரங்களின் கூடுதல் மாறிலியாகவும் அம்மாறிலி நெட்டச்சின் நீளத்திற்குச் சமமானதாகவும் இருக்கும். + +formula_1. +நீள்வட்டத்தின் வட்டவிலகல் "ε" அல்லது "e" எனக் குறிக்கப்படுகிறது. இதன் மதிப்பு நீள்வட்டத்தின் குவியங்களுக்கு இடையேயுள்ள தூரம் (2"f") மற்றும் நெட்டச்சின் நீளம் (2"a") இரண்டிற்குமான விகிதமாகும். + +நீள்வட்டத்தின் வட்டவிலகலின் எண்மதிப்பு 0 மற்றும் 1 -க்கு இடைப்பட்டது. (0<"e"<1). + + + + +formula_3 என்பது நீள்வட்டத்தின் ஒரு குவியத்திற்கும் மையத்திற்கும் இடைப்பட்ட தூரம். இது "நேரியல் வட்ட விலகல்" எனப்படும். +நீள்வட்டத்தின் குவியங்களின் வழியாக அதன் இயக்குவரைகளுக்கு இணையாக வரையப்பட்ட நாண் நீள்வட்டத்தின் செவ்வகலம் (latus rectum) எனப்படும். செவ்வகலத்தில் பாதி அரைச் செவ்வகலம் எனப்படும். +செவ்வகலத்தின் நீளம்: +formula_4 + +இரு நிலையான புள்ளிகளிலிருந்து உள்ள தூரங்களின் கூடுதல் எப்பொழுதும் சமமாகவே உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரை நீள்வட்டம் என்ற வரையறையைக் கொண்டு இம்முறையில் நீள்வட்டம் வரையப்படுகிறது: + +தேவையான பொருட்கள்: + +வரைதாள், வரைகோல், இரு ஊசிகள் மற்றும் நூல். + +வரைமுறை: + +வரைதாளில் ஒரு குறிப்பிட தூரத்தில் உள்ளபடி இரு ஊசிகளும் குத்தி வைக்கப்படுகின்றன. நூலின் இரு முனைகளும் இந்த ஊசிகளில் கட்டப்படுகின்றன. பின்னர் வரைகோல் இரு ஊசிகளுக்கு இடையில் ஒரு முக்கோண வடிவாக உள்ளவாறு நூலோடு கட்டப்படுகிறது. இப்பொழுது நூலைத் தொய்வில்லாமல் பிடித்துக் கொண்டு வரைகோலை நகர்த்தி வரையத் தொடங்க வேண்டும். தொடங்கிய இடத்தை மீண்டும் வந்தடையும் போது ஒரு நீள்வட்டம் முழுமையாக வரையப்பட்டிருக்கும். இம்முறை நீள்வட்ட வடிவில் மலர்ப்படுகை அமைப்பதற்கு பயன்பட்டதால் "தோட்டக்காரரின் நீள்வட்டம்" என அழைக்கப்படுகிறது. + +ஒரு அளவுகோல், மூலைமட்டம் மற்றும் வரைகோல் கொண்டு ஒரு நீள்வட்டம் வரையலாம்: + +ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம் அல்லது நீள்வட்ட வரைவி (ellipsograph) என்பது மேலே பயன்படுத்தப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட ஒரு கருவி. இக்கருவி அளவுகோலுக்குப் பதில் ஒரு முனையில் வரைகோலைப் ("C") பிடித்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பும், ஒரு உலோகத் தகட்டில் அமைந்த இரு செங்குத்தான காடிகளில் நகரக்கூடிய மாற்றியமைக்கக் கூடிய இரு ஊசிகளையும் ("A", "B") உடைய ஒரு தடியைக் கொண்டிருக்கும். + + + + +கார்ட்டிசியன் ஆய அச்சுக்களோடு ஒன்றும் நெட்டச்சு, சிற்றச்சுக்களைக் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு: +formula_5 + +நீள்வட்டத்தின் மையம் "C" -க்கும் ஏதேனும் ஒரு குவியத்துக்கும் இடைப்பட்ட தூரம்: + +நீள்வட்டத்தின் ஒவ்வொரு குவியம் "F" உடனும் சிற்றச்சுக்கு இணையான ஒரு கோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இக்கோடு நீள்வட்டத்தின் இயக்குவரை எனப்படும். நீள்வட்டத்தின் மேல் அமையும் எந்தவொரு புள்ளிக்கும் குவியம் "F" -க்கும் இடைப்பட்ட தூரம் மற்றும் அப்புள்ளியிலிருந்து இயக்குவரைக்கு உள்ள செங்குத்து தூரம் ஆகிய இரண்டின் விகிதம் மாறிலியாக இருக்கும். இம்மாறிலியானது, நீள்வட்டத்தின் வட்ட விலகல்: + +ஒரு குவியத்திலிருந்தும் மற்றொரு குவியத்தை மையமாகக் கொண்ட வட்டத்திலிருந்தும் சமதூரத்தில் உள்ள புள்ளிகளால் ஆன வளைவரையாக நீள்வட்டத்தை வரையறுக்கலாம். இதில் கூறப்படும் வட்டம் நீள்வட்டத்தின் இயக்கு வட்டம் எனப்படும். இவ்வட்டத்தின் ஆரம் வட்டத்தின் மையமான ஒரு குவியத்திற்கும் மற்றொரு குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் முழு நீள்வட்டமும் இரு குவியங்களும் இயக்கு வட்டத்துள்ளாக அமையும். + + "R" = 2"r" எனில் ஒரு உட்சில்லுரு நீள்வட்டமாகும். + +நீள்வட்டத்தின் இணை நாண்களின் நடுப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையும். + +பகுமுறை வடிவவியலில் நீள்வட்டமானது, + +formula_10 + +என்ற சமன்பாட்டை + +கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நிறைவு செய்யும் formula_12 புள்ளிகளாலான (கார்ட்டீசியன் தளம்) வளைவரையாக வரையறுக்கப்படுகிறது. + +பகுமுறை வடிவவியலில் நீள்வட்டச் சமன்பாட்டின் நியமன வடிவம்: +இந்நீள்வட்டத்தின் + + + + + + +கல்சியம் + +கால்சியம் அல்லது சுண்ணாம்பு ஆவர்த்தன அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Ca, அணுவெண் 20. இது மென் சாம்பல் நிறம் கொண்ட ஒரு காரமண் உலோகம். இது தோரியம், ஸிர்க்கோனியம், யுரேனியம் ஆகியவற்றின் பிரித்தெடுப்பில் தாழ்த்து கருவியாகப் பயன்படுகின்றது. புவி மேலோட்டில் காணப்படும் தனிமங்களில், அளவின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை வகிப்பது கல்சியமாகும். இது உயிரினங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு தனிமமாகும். உயிரினங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் உலோகமும் இதுதான். + +கல்சியம் வெண்மையான, பளபளப்புடைய ஓரளவிற்கு மிதமான கடினத் தன்மை கொண்ட உலோகமாகும். தொழில் ரீதியாக கல்சியம் ஆக்சைடை அலுமினியத்துடன் சேர்த்து உருக்கி கல்சியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கின்றார்கள். கல்சியம் ஒரு கார மண் உலோகமாகும். உலோக நிலையில் கல்சியம் தனித்துக் காணப்படவில்லை. ஆனால் அதன் கூட்டுப் பொருட்கள் பூமியில் பெருமளவு கிடைக்கின்றன. கல்சியத் தாதுக்கள், கார்போனைட், கால்சைட், அரகோனைட் ஆகவும், மார்பிள், ஐஸ்லாண்டு படிவு, சுண்ணாம்புக்கல்(lime stone), சாக்கட்டி ஆகவும் கிடைகின்றன. சல்பேட்டாக ஜிப்சமாகவும்,புளூரைடாக புளூரோ படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றன. இவை தவிர கல்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் உறைந்துள்ளது. இது ஆற்று நீரிலும்,சுனை நீரிலும், எரிமலைக் குழம்பின் வீழ்படிவுப் பாறைகளிலும் சேர்ந்துள்ளது. + +பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் கால்சியம் ஐந்தாவதாக உள்ளது. இதன் வேதிக் குறியீடு Ca ஆகும்.இதன் அணு வெண் 20; அணு நிறை 40.08; அடர்த்தி 1550 கிகி/கமீ; உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1124 K, 1713 K ஆகும். கால்சியத்தைக் காற்றில் எரிக்கும் போது சிவப்பு ஒளியுடன் எரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடு கலவையைத் தருகிறது. இது ஆக்சிஜனில் மிகப் பிரகாசமாய் எரிகிறது. இது பெரும்பாலான அலோகங்களுடன் நேரடியாகக் கூடுகின்றது. நீரில் மெதுவாகக் கரைந்தும், அமிலங்களில் விரைந்து கரைந்தும் நைட்ரஜனைத் தருகின்றது. + +இது சுண்ணம் புளோரைட்டு (calcium fluoride) என்னும் சேர்வையில் இருந்து மின்னாற்பகுப்பு (electrolysis) மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது மஞ்சள்-செம்மை நிறம் கொண்டச் ���ுடருடன் எரியும். வளியில் திறந்து வைக்கப்படும்போது அதன் மேற்பரப்பில் வெள்ளை நிற நைத்திரைட்டுப் பூச்சொன்று உண்டாகும். நீருடன் தாக்கமுற்று நீரிலுள்ள ஒரு ஐதரசனைப் பிரதியீடு செய்வதன் மூலம் சுண்ணம் ஹைட்ராக்ஸைடு (calcium hydroxide) உருவாக்குகின்றது. + +சுண்ணம் தசைகளுக்கும், உறுதியான எலும்புகள், பற்களின் உருவாக்கத்திற்கும் மிகவும் அவசியமானது. அத்துடன், இரத்தம் உறைதல், நரம்பு மண்டலங்களில் கணத்தாக்கக் கடத்துகை, இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தல், திசுள்களுக்குள் (cell) திரவச் சமநிலையைப் பேணுதல் போன்றவற்றுக்கும் சுண்ணம் இன்றியமையாதது. + +1808 ல் மின்னார் பகுப்பு மூலம் தூய கல்சியத்தைப் பிரித்தெடுத்து கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சர் ஹம்பிரி டேவி என்பாராவர். சோடியம்,பொட்டசியத்தைக் கண்டுபிடித்ததும் இவரே. கிராபைட்டினால் ஆன தொட்டியில் உருகிய கால்சியம் குளோரைடுடன் எளிதில் உருகுவதற்காக கல்சியம் புளூரைடையும் சேர்த்து,கிராபைட் தொட்டியை நேர்மின் வாயாகவும் இரும்புத் தண்டை உருகிய குழம்பில் அமிழ்த்தி எதிர்மின் வாயாகவும் கொண்டு மின்னார் பகுப்பு செய்வர். அப்போது கல்சியம் இரும்புத் தண்டில் தொடர்ந்து படிக்கிறது. இரும்புத் தண்டை மெல்ல மெல்ல மேலுயர்த்த கல்சியம் உறைந்து ஒரு படிகத் துண்டாக வளர்ச்சி பெறுகிறது. இத் தண்டை ஒட்டி அதன் புறப்பரப்பில் உறைந்துள்ள கல்சியம் குளோரைடு உட்புறத்திலுள்ள கல்சியம் ஆக்ஸிசனேற்றம் பெறுவதைத் தடுக்கிறது. நேர்மின் வாயில் வெளிப்படும் குளோரின் வளிமம் வெளியேறி காற்றோடு கலக்கிறது. இலத்தீன் மொழியில் கால்க்ஸ்(Calx)என்றால் சுண்ணாம்பு என்று பொருள். + +பெரும்பாலான குடிநீரில் கால்சியம் எதோ ஒரு உப்பாக கரைந்திருக்கிறது. இது நீருக்கு ஒரு கடினத் தன்மையை வழங்கிவிடுகிறது. நீர் கடினத் தன்மை கொண்டிருந்தால் அதில் சோப்பு நுரை தருவதில்லை. கடினத் தன்மையில் இரு வகையுண்டு. தற்காலிகக் கடினத் தன்மை, நிரந்தரக் கடினத் தன்மை. தற்காலியக் கடினத் தன்மை கால்சியம் அல்லது மக்னீசியத்தின்பை கார்பனேட்டுக்களினால் உண்டாகிறது. நீரைக் கொதிக்க வைத்தும் கால்சியம் ஹைட்ராக்சைடு எனப்படும் சுண்ணாம்பு நீரைச் சிறிதளவு சேர்த்தும் இவ்வகைக் கடினத் தன்மையை நீக்கலாம். தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்பு நீரைச் சேர்க்கு��் போது அது நீரில் கரைந்து மீண்டும் நீருக்குக் கடினத் தன்மையை அளித்து விடுகிறது. + +நிரந்தரக் கடினத் தன்மை நீரில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குளோரைடுகள்மற்றும் சல்பேட்டுகளினால் ஏற்படுகின்றது. நீரில் சோடியம் கார்பொனேட்டைச் சேர்த்து அதில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசிய உப்புக்களைக் கரைவுறா கார்பொனேட்டுகளாக மாற்றி வீழ்படியச் செய்து அகற்றி விடுவார்கள். ஜியோலைட்(zeolite) எனப்படுகின்ற அலுமினோ சிலிகேட்டுகளினாலும் இதைச் செய்ய முடியும். கடின நீர் சலவைக்கும், நீராவிக் கலன்களில் கொதிக்க வைப்பதற்கும் உகந்ததில்லை. சாயத் தொழில்,காகிதம் மற்றும் சக்கரை ஆலைகளுக்கு கடின நீர் பயன் தருவதில்லை. +கால்சியத்தின் கட்டுமானப் பொருட்களான கால்சியம் கார்போனேட் என்ற சுண்ணாம்புக்கல், கால்சியம் ஆக்சைடு என்ற சுண்ணாம்பு, (சுண்ணாம்புக் கல்லைச் சூடு படுத்தக் கிடைப்பது),கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற நீர்த்த சுண்ணாம்பு, அல்லது சுண்ணாம்பு நீர் (Slaked lime) போன்றவையும், வீடு கட்ட உதவும் காரை (Mortar) (நீர்த்த சுண்ணாம்பும் மணலும் நீரும் கலந்த கலவை), சிமெண்டு, மார்பிள், ஜிப்சம் போன்ற கட்டுமானப் பொருட்களை வழங்கியுள்ளன. மார்பிள், ஜிப்சமும் ஆகியவை கால்சியத் தாதுக்களாகும். மார்பிள் என்பது கால்சியம் கார்போனேட் ஆகும். இது அமிலங்களுக்கு மிகவும் உணர் திறன் கொண்டது . கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்டே ஜிப்சமாகும். இதை 120 டிகிரி C வரை சூடு படுத்த ஜிப்சம் நீரை இழந்து பாதி ஹைட்ரேட்டாக உருமாறுகிறது. இதையே பட்டிச் சாந்து (Plaster of Paris) என்பர். இதை நீருடன் கலக்கும் போது அது அரை மணி நேரத்தில் ஜிப்சமாகத் திடமாக உறைகிறது. சிலைகளுக்கான வார்ப்புகள், வீட்டுச் சுவர் பூச்சு, உட் கூரைகளில் தற்காலிகத் தள வரிசை, எலும்பு முறிவிற்கான மாக்கட்டு போன்றவைகளுக்கு இது பயன் தருகிறது. ஜிப்சம் படிக வடிவில் கிடைக்கும் போது அதை அலாபாஸ்டர் (alabaster)என அழைக்கின்றார்கள். இது ஒளி உட்புகும் தன்மை கொண்டது; சிலை வடிக்கப் பயன்படுகிறது; கண்ணாடியை உலோகத்துடன் இணைப்பதற்கு ஜிப்சம் பயன்படுகிறது. அமோனியம் சல்பேட் என்ற உர உற்பத்தி முறையில் ஜிப்சம் ஒரு மூலப்பொருளாகும். + +சுண்ணாம்புக் கல்லைச் சூடுபடுத்தி உயர் வெப்ப நிலையில் இருத்தி வைத்தால் அது இளம் நீல நிற ஒளியைத் தருகிறது. இதை வெப்ப ஒளிர்தல் (thermo luminescence) என்பர். முற்காலத்தில் இவ்வொளி திரைப் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது. சுண்ணாம்புடன் இரும்புத் தாதுவைக் கலந்து வெடிப்புலையில் வைத்து சூடு படுத்துவார்கள். சுண்ணாம்பு வேற்றுப் பொருட்களுடன் சேர்ந்து உருகிய கண்ணாடி போன்ற கசடை உருவாக்குகின்றது. இது உலையின் அடிப்பக்கத்தில் சேருவதால் அதைத் தனித்துப் பிரித்துவிட முடிகிறது. தெளிந்த சுண்ணாம்பு நீரை கார்பன் டை ஆக்சைடு பால் போல் வெண்மையாக்கி விடுகிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு வளிமத்தின் செழுமையைச் சோதிக்க இது பயன் தருகிறது. இது வெளுப்புக் காரம் உற்பத்தி, தோல் பதனிடுதல், சக்கரை சுத்திகரிப்பு, எரி வளிமம் சுத்திகரிப்பு, கண்ணாடி உற்பத்தி, மென்நீராக்கும் வழிமுறை, சுவர்களுக்கான வெள்ளைப் பூச்சு போன்றவைகளுக்காகப் பயன்படுகிறது. + +கால்சியம் குளோரைடு வளிமங்களை வறட்சிப் படுத்தவும், உணவுப் பண்டங்கள் கேட்டுப் போய் விடாமல் பாதுகாக்கும் ஒரு வேதிப் பொருளாகவும் பயன்படுகிறது. கால்சியம் பாஸ்பேட், கால்சியம் சல்பேட் கலவை ஒரு சிறந்த உரமாகும். இது நீரில் கரைவதில்லை. ஆனால் அடர் கந்தக அமிலத்தில் இட்டால் அது சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட்டாகி விடுகிறது. இது உடனடியாக நீரில் கரையக் கூடியதாக இருப்பதால் தாவரங்களுக்கு உடனடியாகக் கிடைகிறது. கால்சியம் நைட்ரேட் உரம், வெடிகள், தீக்குச்சி, பட்டாசுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. கால்சியம் புளூரைடு உலோகவியலில் உருக்க வேண்டிய பொருளின் உருகு நிலையைக் குறைக்கப் பயன்படுகிறது. + +கால்சிய சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவை. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாகச் சீராக இருக்கவும், இரத்தம் உறைவதைத் தூண்டி வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் வீணாக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த கால்சியம் துணை புரிகிறது. தசைகளின் விரிதல்- சுருங்குதல் இயக்கம், இவ்வியக்கங்களில் சீரான இயக்கம், இதயத் தசையின் நெகிழ்வு, நரம்பு வழிச் செய்திப் பரிமாற்றம் போன்றவற்றிற்கும் கால்சியம் இன்றியமையாததாகும். + +வளர் சிதை மாற்ற வினைகளிலும் கால்சியம் பங்கேற்றுள்ளது. கால்சியம் உட்கவர்தல் எனபது கால்சியத்தின் செரிமானத்தைப் ப���றுத்தது . உணவு செரிக்கப் படும்போது ஊடகத்தின் தன்மை அமில நிலையா அல்லது கார நிலையா என்பதைப் பொறுத்தது. உணவாக உட்கொள்ளப்படும் கூடுதல் பாஸ்பேட்டுகள், கார நிலையில் கரைவுறா டிரை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும், அமில நிலையில் கரைவுறு கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும் கால்சியம் செரிமானத்திற்கு அமில நிலையே உகந்தது. எனவே கார நிலையில் குறைந்த அளவு கால்சியம் கூட உடலால் உட்கிரகித்துக் கொள்ளப்படாமல் உபரியாகி விடுகிறது. இவை வெளியேற்றப்படும் போது சிறு நீரகப் பகுதிகளில் கல்லாகப் படியும் வாய்ப்பைப் பெறுகின்றது. சிறு நீரகக் கல்லில் தாழ்ந்த மூலக்கூறு எடையுடன் கூடிய கால்சியம், ஆக்சிலேட், பாஸ்பேட்டுகள், கார்போனேட்டுகள், யுரேட்டுகள் போன்றவையுள்ளன. உடலில் உபரியான கால்சியத்தை உறிஞ்ச உயிர்ச்சத்து டி தேவை. சிறு நீரகக் கல்லை அறுவைச் சிகிச்சை, சிறு நீரக அகநோக்கி (endoscope) கேளா ஒலி (ultrasonic) போன்றவற்றால் அகற்றிக் கொள்ள முடியும். + + + + + + +பொட்டாசியம் + +பொட்டாசியம் (இலங்கை வழக்கு: பொற்றாசியம், "Potassium") ஆவர்த்தன அட்டவணையில் உள்ள வேதியியல் தனிமங்களுள் ஒன்று. இதன் குறியீடு K (L. "kalium"), இதன் அணுவெண் 19. முற்காலத்தில் பொட்டாசியம் காபனேட்டின் தூய்மையற்ற வடிவமான பொட்டாஷ் என்னும் கனிமத்திலிருந்தே பொட்டாசியம் பிரித்து எடுக்கப்பட்டது இதனாலேயே பொட்டாசியம் என்ற பெயரும் உண்டானது. பொட்டாசியம் ஒரு வெள்ளிபோன்ற வெண்ணிற உலோகமாகும். இது வேறு தனிமங்களுடன் சேர்ந்து கடல் நீரிலும், பல கனிமப் பொருட்களிலும் காணப்படுகின்றது. இது வளிமண்டலத்தில் விரைவாக ஒட்சியேற்றப்படக் கூடியது (oxidizes). சிறப்பாக நீருடன் மிகவும் தாக்கமுறக்கூடிய பொட்டாசியம் ஓரளவுக்கு சோடியத்தை ஒத்தது. பொட்டாசியம் எரிமலைப் பாறைகளில் சிலிகேட்டாக எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. பூமியில் மேலோட்டுப் பகுதியில் இதுவும் சோடியமும் ஏறக்குறைய ஒரே செழுமையைப் பெற்றுள்ளன. பொட்டாசியத்தின் செழுமை எடையில் 2 .35 விழுக்காடு இது செழுமை வரிசையில் ஏழாவதாகும். கிரானைட் கற்களில் பொட்டாசியம் ஓரளவு சேர்ந்திருக்கிறது. கடல் நீரில் சிறிதளவு பொட்டாசியம் இருக்கிறது.) + +சோடியம் மற்றும் பொட்டாசியச் சேர்மங்களை மக்கள் தனிமங்களை அறிவதற்கு முன்ப���ருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றின் கார்போனேட்டுக்கள் பழங்காலத்தில் சலவைத் தொழிலில் பயன்படுத்தப்பட்டன. இந்த கார்போனேட்டுக்களைப் பொதுவாக காரங்கள் (alkali) என அழைத்தனர். சோடியம் காபோனேட்டை சோடா என்றும் பொட்டாசியம் கார்போனேட்டை பொட்டாஷ் என்றும் பெயரிட்டனர். 1807 ல் சர் ஹம்ப்ரி டேவி என்ற இங்கிலாந்து நாட்டு வேதியலாளர் பொட்டாஷ்ஷை உருக்கி நீர்மமாக்கி அதை மின்னாற் பகுத்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தெடுத்தார். பொட்டாசியம் எதிர் மின் வாயில் படிந்திருந்தது.மின்பகுப்பு மூலம் பிரித்தெடுக்கப்பட்ட முதல் உலோகம் பொட்டாசியம்.இது கடல் பாசியின் சாம்பலிலிருந்து பெறப்பட்டதால் பொட்டாசியம் என்ற பெயரைப் பெற்றது. லத்தீன் மொழியில் 'காலியம் ' என்று பெயர். இதன் முதல் எழுத்தான K என்பதே பொட்டாசியத்திற்கு வேதிக் குறியீடாக அமைந்தது.காலியம் என்றால் பொட்டாஷ் என்று அர்த்தம். + +பொட்டாசியம் இலேசான, மென்மையான வெள்ளி போன்று வெண்ணிறத்துடன் ஆனால் சற்று நீலம் பாய்ந்த பொலிவுடன் கூடிய உலோகமாகும். காற்று வெளியில் சட்டென மங்கி விடுகிறது. அறை வெப்ப நிலையில் மெழுகு போன்றிருக்கும். இதைக் கம்பியாக நீட்டவும், தகடாக அடிக்கவும் முடியும். இது நேர் மின் வாய் நாட்டமிக்கது. நீரை வெடிச் சத்தத்துடன் பகுத்து ஹைட்ரஜனை வெளியேற்றி பொட்டாசியம் ஹைட்ராக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த வினையில் மிகுந்த அளவு வெப்பம் வெளிப்படுவதால் ஹைட்ரஜன் எரிகிறது. பொட்டாசியம் தீச்சுவாலையுடன் வெடிக்கிறது. + +வேதி வினைகளின் அடிப்படையில் இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதைவிட வினைதிறமிக்கது. பொட்டாசியம் கிளர்ச்சியுடன் ஹாலஜன்கள், கந்தகம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைகிறது. சூடுபடுத்தப்பட்ட பொட்டாசியம், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ள எல்லா வளிமங்களையும் பகுக்கின்றது. நிலையான போரான், சிலிகான் ஆக்சைடுகள் மற்றும் மக்னீசியம், அலுமினியத்தின் குளோரைடுகள்கூட விதி விலக்கில்லை. சோடியம் போல பொட்டாசியமும் மண்ணெண்னைக்குள் முக்கி பாதுகாக்கப்படுகிறது. நீரில் உடனடியாகத் தீப்பற்றி எரிகிறது. பொட்டசியத்தின் அணு எண் 19, அணு எடை 39.10. இதன் அடர்த்தி 860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 336.53 K(63.38 °C),1033 K(759 °C)ஆகும். +பொட்டசியத்தின் உப்புக்களான லாங்பினைட்,பாலிஹா���ைட் மற்றும் சில்வைட் போன்றவை பண்டைய ஏரி மற்றும் கடல் படுகைகளில் பரவலாக காணப்படுவதால் வணிக ரீதியில் இதிலிருந்து பொட்டாசியம் உப்புக்கள் பிரித்தெடுக்கபடுகின்றன.பொட்டாசியமானது கனடா, ரஷ்யா, பெலாரஸ், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, ஜோர்டான், மற்றும் உலகின் மற்ற இடங்களில் வெட்டியெடுக்கப்படுகிறது.மேலும் கனடாவின் சாஸ்கட்சுவான் மாகாணத்தின் தரைக்கு கீழே 1000 மீட்டர் (3000 அடி) பொட்டசியம் அதிக அளவில் காணப்படுகின்றன.மேலும் சாக்கடல் நீரில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுவதால் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகள் அதிலுருந்து பொட்டசியத்தை தயாரிக்கின்றது. +கார்னலைட்டு, லேங்பெய்னைட்டு, பாலி ஆலைட்டு சில்வைட்டு போன்ற பொட்டாசியம் உப்புகள் பண்டைய ஏரிகளின் அடிப்பகுதி மற்றும் ஆழ்கடல் கடல் கடல் பரப்புகளில் உப்புப்படர் பாறைப்படிவுகளாக உருவாகின்றன. இப்படிவுகள் பொட்டாசியம் உப்புகளை வர்த்தக முறையாக பிரித்தெடுத்து பயன்படுத்துவதை சாத்தியமாக்குகின்றன. பொட்டாசியம் கிடைப்பதற்கான முதன்மையான மூலமாக பொட்டாசு என்ற கனிமம் உதவுகிறது. இது கனடா, உருசியா, பெலாரசு, கசகிசுத்தான், செருமனி, இசுரேல், அமெரிக்கா, யோர்டான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இது காணப்படுகிறது. செருமனி நாட்டுக்கு அருகில் முதலாவது பொட்டாசியம் சுரங்கங்க்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த படிவுகள் இங்கிலாந்தில் தோற்றம் பெற்று செருமனி வழியாக போலந்து வரை அமைந்திருந்தன. சாசுகாட்செவான் என்ற கனடிய மாகாணத்தில் மிகப்பெரிய பொட்டாசு படிவுகள் பூமியில் 1000 மீட்டர்களுக்கு கீழே காணப்பட்டன. இந்த படிவுகள் புவியியல் காலமான மத்திய டெபோனியனில் இருந்த எல்க் பாயின்ட் குழுவில் அமைந்திருந்தன. 1960 களில் தொடங்கி பல பெரிய சுரங்கங்கள் இயங்கிய மேற்கு கனடாவின் சாசுகாட்செவான் மாகாணம் சுரங்கவாய் குழிகள் மூலம் அவற்றை இயக்குவதற்கு உதவும் ஈரமான மணலை உறைய வைக்கும் தொழில் நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தது. சாசுகாட்செவான் மாகாணத்தின் பிரதானமான சுரங்கமாக சாசுகாட்செவான் பொட்டாசு நிறுவனம் திகழ்ந்தது. +சாக்கடலின் நீரை இசுரேலும் யோர்டானும் பொட்டாசுக்கான ஆதார மூலமாகப் பயன்படுத்தின. அதே சமயம் சாதாரண கடலிலுள்ள பொட்டாசின் செறிவு தற்போதைய விலை நிலவரங்களின்படி வர்த்தக உற்பத்திக்காக இலாபம் தரும் அளவுக்கு போதுமானதாக இல்லை. + +சோடியம் மற்றும் மக்னீசியம் சேர்மங்க்களில் இருந்து பொட்டாசியத்தை தனித்துப் பிரித்தெடுக்க பல செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு வெப்ப நிலை வேறுபாடுகளில் அவ்வுப்புகளின் கரைதிறன் வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பகுதி விழ்படிவாக்கல் முறை மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில சுரங்கங்க்களில் நிலப்பகுதியில் கிடைக்கும் உப்புக் கலவையிலிருந்து தயாரிக்கும் முறையான நிலைமின்னியல் பிரிப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றன. கசடாக உருவாகும் சோடியம் மற்றும் மக்னீசியம் கழிவுகள் பூமிக்கு அடியில் சேமிக்கப்படுகின்றன அல்லது கழிவுக் குவியலாக குவிக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டியெடுக்கப்படும் பொட்டாசியம் கனிமம் இறுதியாக செயல்முறைகளின் முடிவில் பொட்டாசியம் குளோரைடாக மாற்றப்பட்டு முடிவடைகிறது. தொழிற்துறையில் இப்பொட்டாசியம் குளோரைடு கனிமத்தை பொட்டாசு என்றும் பொட்டாசியத்தின் முறியேட்டு என்று அழைக்கிறார்கள். + +தூய்மையான பொட்டாசியம் உலோகத்தை மின்னாற்பகுப்பு முறையில் பிரித்தெடுக்க முடியும். 1807 ஆம் ஆண்டில் சர் அம்பரிடேவி பயன்படுத்திய அதே மின்னாற்பகுப்பு முறையே சிற்சில மாற்றங்களுடன் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. 1920 களில் இம்மின்னாற்பகுப்பு முறை பொட்டாசியத்தை பெருமளவில் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. பொட்டாசியம் குளோரைடுடன் சோடியத்தை வினைபுரியச் செய்யும் இவ்வெப்பவியல் தொடர்புடைய வினை 1950 களில் பிரபலமாகியது +இவ்வினையின் நேரத்தை மாற்றியமைப்பதன் மூலமும், பயன்படுத்தும் சோடியத்தின் அளவை மாற்றிக் கொள்வதன் மூலமும் சோடியம் பொட்டாசியம் உலோகக் கலவைகள் தயாரிக்கும் வினையும் உடன் நிகழ்கிறது. கிரைசீமெர் செயல்முறையும் பொட்டாசியம் தயரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் பொட்டாசியம் புளோரைடுடன் கால்சியம் கார்பைடு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. + +மின்னணுவியல் துறையில் எலெக்ட்ரான் வால்வுகளை உண்டாக்கும் போது விளக்கினுள் சிறிதளவு பொட்டாசியத்தை இடுவார்கள். விளக்கை மூடிய பின் இது ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால் உயரளவு வெற்றிடம் உள்ளே ஏற்படுகிறது.இதன் காரணமாகவே வால்வு வெள்ளிப் பூச்சிட்டது போலத் தோன்றுகிறது. +பொட்டாசியம் ஐதராக்சைடு என்பது பொட்டாசு. பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுக்கும் போதும் அல்லது பொட்டாசியம் கார்போனேட் மற்றும் சுண்ணாம்பு நீரிலிருந்தும் இதைத் தயாரிக்கலாம். இது மென்மையான சோப்பு தயாரிக்கவும், இதோடு வினை புரியாத வளிமங்களை வறட்சியூட்டவும் பயன்படுகிறது. + +விவசாயத்திற்குத் தேவையான உரங்களின் உற்பத்தி முறையில் பொட்டாஷ் முக்கியப் பங்கு வகிக்கிறது. +இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டிப் பொருளாகும். பொட்டசியம் குளோரேட்டும், பாஸ்பரசும் கலந்த கலவை பலத்த ஓசையுடன் வெடிக்கிறது. குளோரேட்டை கந்தகத்துடன் கலக்க மோதும் போது வெடிக்கிறது. அடர் மிகு கந்தக அமிலத்துடன் வினை புரிந்து வெடிக்கக் கூடிய குளோரின் பெராக்சைடை விளைவிக்கின்றது. பொட்டசியம் குளோரேட், ஆக்சிஜன் உற்பத்தி முறையில் பயன் படுகின்றது. இது வான வேடிக்கைக்கான வெடிகள், தீக்குச்சிகள், ஒளிப் படத்திற்கான மின்னல் விளக்குகளுக்கான பொடிகள் போன்றவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. தொண்டைக்கு இதமளிக்கும் மருந்துகளில் சிறிதளவு குளோரேட் இருக்கும். பொட்டாசியம் கார்போனேட் கண்ணாடி, மென் சோப்பு தயாரிக்கவும், பொட்டாசியம் நைட்ரேட் துப்பாக்கிக்கான வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன + + + + + +சிம்பாப்வே + +சிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். மேலும், "பெரும் சிம்பாப்வே" என்றழைக்கப்டும் நாட்டின் முன்னைய இராச்சியம் ஒன்றின் இடிப்பாடுகளின் பெயர் இப்பெயர் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது அவ்விடிபாடுகளுக்கு காட்டும் மரியாதையாக கருதப்படுகிறது. + +தொல்பொருள் ஆய்வாளர்கள் கற்கால ஆயுதங்களை சிம்பாப்வேயின் பல இடங்களிலும் அகழ்ந்தெடுத்துள்ளார்கள், இது மனிதன் பல நூற்றாண்டுகளாக இப்பிரதேசங்களில் வசித்து வந்துள்ளமை��்கு சான்றாகும். "பெரும் சிம்பாப்வே" இடிபாடுகளானது முன்னைய நாகரிகம் ஒன்றை நன்கு விளக்குகின்றது. இங்கு காணப்படும் கட்டிடங்கள் கிபி 9 மற்றும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்குமிடையில், ஆப்பிரிக்கர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்க வணிக மையங்களுடன் வணிக தொடர்புகளையும் கொண்டிருந்தனர். இவற்றையும் விட பல நாகரிகங்கள் இங்கு காணப்பட்டன. + +பண்டு மொழி பேசிய கொகொமெரே மக்கள் முன்பிருந்த கொயிசா மக்களை புறந்தள்ளிவிட்டு கிபி 500 அளவில் இப்பிரதேசங்களில் குடியேறினார்கள். 1000 ஆண்டிலிருந்து கோட்டைகள் உருப்பெறத்தொடங்கி 15 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை கண்டது. இவர்கள் இன்று சிம்பாப்வேயில் 80% மக்களான சோனா மக்களின் முன்னோர்களாவர். +கிபி 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் வருகையுடன் பல யுத்தங்கள் வெடித்தன. வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் இந்நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 1690 ஆம் ஆண்டில் சில சிற்றரசுகள் சேர்ந்து ரொசுவி என்ற ஆட்சியை அமைத்து போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்து அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இவ்வாட்சி செழித்தோங்கியது, இறுதியில் 19-ஆம் நூற்றாண்டின் போது ரொசுவி ஆட்சியும் வீழ்ச்சியடைந்தது. + +ந்டெபெலே மக்கள் 1834 ஆம் ஆண்டில் தெற்கிலிருந்து வந்து இப்பகுதியை ஆக்கிரமித்து மடபெலேலாந்து என்ற ஆட்சியை நிறுவினார்கள். + +1890 ஆம் ஆண்டுகளில் சிசிலி ரொடெஃச் என்பவரின் தலைமையின் கீழ் பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்தது. இவரது பெயரை வைத்து இப்பிரதேசம் ரொடிசியா எனப் பெயரிடப்பட்டது. 1888 ஆம் ஆண்டு பிரித்தானிய தெற்கு ஆப்பிரிக்க கம்பனியுடன் மடபெலேலாந்து அரசு செய்த உடன்படிக்கை மூலமாக தங்கம் அகழ்வதற்கான உரிமை பிரித்தானியருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகளவான பிரித்தானியர் நாட்டுக்குள் வருவதை மன்னர் விரும்பாத காரணத்தால் 1896-97 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயருடன் யுத்தமொன்று மூண்டது. இதில் மடபெலேலாந்து அரசு வீழ்சியடைந்தது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பித்தது. + +இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் ஆங்கிலேயர் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே ஆங்கிலேயர் நிரந்தரமாக குடியேற நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், சிம்பா���ுவேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள் (வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையரின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய சனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார். + +ஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின சனாதிபதியும், சனு-பிஃப் (ZANU-PF) தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும் வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், சிம்பாப்வே விடுதலை அடைந்த பின்பும், அந்நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது. + + + + +கூம்பு வெட்டு + +கணிதத்தில் கூம்பு வெட்டு (Conic section) என்பது ஒரு செங்குத்து வட்டக் கூம்பும், ஒரு மட்டமான தளமும் ஒன்றையொன்று வெட்டும்போது உருவாகும் வளைகோடுகள் ஆகும். கூம்பு வெட்டுக்கோடுகளைப்பற்றி சுமார் கி.மு 200 இலிருந்தே ஆராயப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெர்காவைச் சேர்ந்த அப்பொலோனியஸ் என்பார் கூம்பு வெட்டுக்கோடுகளின் இயல்புகள் பற்றி முறையாக ஆராய்ந்துள்ளார். + +சிறப்பாக அறியப்பட்ட இரண்டு இத்தகைய வடிவங்கள் வட்டமும், நீள்வட்டமும் ஆகும். கூம்பினதும் தளத்தினதும் வெட்டுக்கோடுகள் மூடிய வளைகோடுகளாக இருக்கும்போது இவ்விரு வடிவங்களும் உருவாகின்றன. வட்டம், நீள்வட்டத்தின் ஒரு சிறப்பு வகையாகும். வெட்டுகின்ற தளம் கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக இருக்கும்போது வட்டம் உருவாகும். தளம் கூம்பின் உற்பத்திக் கோட்டுக்கு இணையாக அமைந்தால் உருவாகும் வடிவம் பரவளைவு (parabola) ஆகும். தளம் உற்பத்திக்கோட்டுக்கு இணையாக அமையாவிட்டால் அதிபரவளைவு (hyperbola) உருவாகின்றது. + +கூம்பு வெட்டுக்களில் ஒவ்வொரு வகையையும் ஒரு குறிப்பிட்ட இயல்பைக் கொண்ட எல்லாப் புள்ளிகளினதும் ஒழுக்கு என்று வரையறுக்க முடியும். + + + + + + +அணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல் + +இது அணுவெண் படி வரிசைப்படுத்தப்பட்டு, நிறக்குறி இடப்பட்ட வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும். ஒவ்வொரு தனிமத்தினதும் பெயர், தனிமக் குறியீடு, கூட்டம், மீள்வரிசை, அணுநிறை (அல்லது கூடிய உறுதியான ஓரிடத்தான்), அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்த ஆண்டு மற்றும் கண்டுபிடித்தவர் பெயர் ஆகியவை தரப்பட்டுள்ளன. + + + + + + + +யுரேனியம் + +யுரேனியம் (Uranium) என்னும் தனிமம் பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள். இதன் அணுவெண் 92, மற்றும் இதன் அணுக்கருவில் 146 நொதுமிகள் உண்டு. இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இதுவே இயற்கையில் கிடைக்கும் அதிக அணுநிறை கொண்ட தனிமம். இதன் அணுநிறை வெள்ளீயத்தை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். இது தனிமங்களின் அட்டவனையில் ஆக்ட்டினைடுகள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம். யுரேனியம் சிறிதளவு கதிரியக்க இயல்பு கொண்ட தனிமம். இத் தனிமம் நில உருண்டையில், மண்ணிலும் பாறைகளிலும், நீரிலும் மிகமிகச் சிறிதளவே கிடைக்கின்றது. பெரும்பாலும் யுரேனைட்டு போன்ற கனிமப்படிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. கிடைக்கும் அளவு மில்லியனுக்கு ஒரு சில பகுதிகள் என்னும் சிறிய லேயே கிடைக்கின்றது. + +இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-235 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனி���ம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ (kg/m³) ), + +யுரேனியம் கண்ணாடிகளில் நிறமூட்டியாகவும் பயன்படுகின்றது. மஞ்சள் கலந்த சிவப்பு, எலுமிச்சை நிற மஞ்சள் போன்ற நிறங்கள் தரவல்லது. + +யுரேனியம் 235 அணுக்கரு ஓரிடத்தனை உறிஞ்சும் போது இரண்டாக பிளவு படுகிறது மேலும் அதனுடம் கூடுதலாக 3 ஓரிடத்தான்களை உருவாக்கும் இவை மேலும் சில அணுகருக்களை பிரிக்கும்.இது அணுக்கரு சங்கிலி தொடர்வினை என அழைக்கப்படுகிறது. + +மேலும் இது விமானங்கின் எதிர் எடையாகவும் ஏவுகணைகளின் கவச உலோகத்திலும் பயன்படுத்தப்படுகிறது. + +கணக்கீடுகளின் படி ஒரு கிலோ யுரேனியம்-235 உருவாக்கும் ஆற்றல் சுமார் 80 டெர்ரா ஜுல்கள் ஆகும்(8×10 இது 3௦௦௦ டன் நிலக்கரியை எரிக்கும் போது உருவாகும் ஆற்றலுக்கு சமமானதாகும். +2005 ஆம் ஆண்டு வரை உலகில் பதினேழு நாடுகள் அதிக அளவில் யுரேனியத்தை செறிவுபடுத்தப்பட்ட யுரேனியம் ஆக்சைடாக தயாரிகின்றனர் அவற்றுள் கனடா(உலக உற்பத்தியில் 27.9%) மற்றும் ஆஸ்திரேலியா (22.8%) ஆகியவை பெரும்பாலான அளவிலும் கஜகஸ்தான் (10.5%), ரஷ்யா (8.0%), நமீபியா (7.5%), நைஜர் (7.4%), உஸ்பெகிஸ்தான் (5.5%), அமெரிக்கா (2.5%), அர்ஜென்டீனா (2.1%), உக்ரைன் (1.9%), சீனா (1.7%) குறிப்பிடத்தக்க அளவிலும் தயாரிக்கின்றனர். மற்றும் ஆஸ்திரேலியா, கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கஜகஸ்தான் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலகில் உள்ள யுரேனியம் குறைந்தது 85 ஆண்டுகளுக்கு போதுமானத்ஹக கருதப்படுகிறது. + +"Full reference information for multi-page works cited" + + + + + +பாம்பு + +பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் கடிக்க்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது. + +இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன. + +பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. இவ்வாறு தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது. + +பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. பாம்பிற்கு 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றது. + +பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளின் நுரையீரல்களில் வலதுபக்கம் மட்டுமே வேலை செய்கிறது. + +அனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. "கருநாகம்" என்ற பாம்பினம் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன. + +பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்���ுகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்புகள் தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டுப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. + +சில பாம்பு இனங்கள்: +மலைப்பாம்பு +நச்சற்ற பாம்புகள்: + +சில வகைப் பாம்புகள் அதித நஞ்சினை உருவாக்கும் வல்லமையுடன் இருக்கின்றன. உலகின் மிக கொடிய பாம்புகளாக கருதப்படும் பாம்பினங்கள்: + +பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது. + + + +கிறிஸ்தவ சமயத்தில் பொதுவாக பாம்பு ஒரு தீய உயிரினமாகக் கருதப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததே இதற்கு காரணம். முன்பு பாம்புகள் கால்களுடன் மிகப்பெரிய விலங்கினமாக இருந்ததாகவும் கடவுள் அளித்த காரணமாக அது கால்களை இழந்து தரையில் ஊரும் ஊர்வனமாக மாறிப்போனதாகவும் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புனித பேட்ரிக் என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பிய போது அங்கு இருந்த அனைத்து பாம்பினங்களையும் முற்றிலுமாக வெளியேற்றினார். இதுவே தற்போது அயர்லாந்தில் பாம்புகளே இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. + + +பாம்புக் கடி + + + + + +கதிரியக்கம் + +கதிரியக்கம் ("radioactivity", "radioactive decay", அல்லது "nuclear decay") என்பது சில அணுக்களிலிருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மிகும்போதுமாந்தர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், புற்று நோய் முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர். + +சில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் புரோட்டான்களும், மின்னூட்டமற்ற நியூட்டிரான்களும் இருக்கும்போது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலைப்புமை பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவுட்துகள்களை உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வு ஒரு நேர்ந்தவாறான [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட அணுவின் சிதைவு எப்பொழுது ஏற்படும் என கூற முடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு அணுக்கரு மாற்றம் எனப்படும். + +அனைத்துலக முறை அலகுகள் (SI) கதிரியக்கத்தின் அலகு பேக்குரெல் ("becquerel (Bq)") ஆகும். ஒரு கதிரியக்கப் பொருளில், ஒரு நொடியில் ஒரு சிதைவு நிகழ்வு ஏற்படுமாயின், அது ஒரு Bq கதிரியக்கம் கொண்டதெனக் கூறப்படும். இயல்பான அளவு கொண்ட மாதிரிக்கூறு ஒன்றில் பெருமளவு அணுக்கள் காணப்படுமாதாலால், ஒரு Bq அளவு என்பது ஒரு மிகமிகக் குறைவான கதிரியக்கமாகும். பொதுவாக கதிரியக்கம் கிகா பேக்குரெல் ("giga becquerel") அளவுகளிலேயே நிகழ்கின்றது. + +1896 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியலாளர் என்ரி பெக்கரல் என்பவர் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். சில யுரேனிய உப்புக்களை ஓர் ஒளிப்படத்தட்டின் மீது வைத்து, அத்தட்டு கறுப்புக் காகிதத்தினால் சுற்றி ஓர் இருட்டு அறையில் வைக்கப்பட்டது. இத்தட்டை கழுவியபோது ("develop") அது பாதிக்கப்படிருந்ததை அவதானித்தார். இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார். . +அணுவெண் 92 உம் அதற்கு மேலுமுள்ள தனிமங்கள் எந்த வித புறத் தூண்டுதலுமின்றி தாமாக கதிரியக்கத்துக்கு உட்படுகின்றன . அதிக வெப்பநிலையோ குறைந்த வெப்பநிலையோ, எப்படிப்பட்ட காந்த, மின் புலங்களாலும் கதிரியக்க நிகழ்வு பாதிக்கப்படுவதில்லை. கதிரியக்கத்தின் போது α,β,γ என மூன்று விதமான கதிர்கள் வெளிப்படுகின்றன. α கதிர்கள் கதிரவத்தின் கருக்களே என்றும் β கதிர்கள் எதிர்ம மின்னூட்டமுடைய எலட்டிரான்கள் என்றும் γ கதிர்கள் மின்னூட்டம் ஏதுமில்லா மின்காந்த அலைகள் என்றும் அறியப்பட்டுள்ளன. + +செயற்கைக் கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்று எந்த ஒரு தனிமத்தின் கதிரியக்க சமவிடத்தான்களையும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. + +மேரி க்யூரி மற்றும் பியரி க்யூரி ஆகியோரின் கதிரியக்கம் பற்றிய ஆய்வுகள் அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றியுள்ளன எனலாம். என்ரி பெக்கரல் கதிர்கள் பற்றிய இவா்களின் ஆய்வு ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது எனலாம். இவா்களே கதிரியக்கம் (radioactivity) என்ற சொல்லை உருவாக்கியவா்களும் ஆவா்.[2] இவா்களின் யுரேனியத்தின் ஊடுருவும் கதிா்கள் குறித்த ஆய்வு இரேடியத்தின் கண்டுபிடிப்பிற்கும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் இரேடியத்தின் பயன்பாட்டைக் கொண்டு வந்த ஒரு சகாப்தத்தையே உருவாக்கியது எனலாம். இரேடியத்தை இவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தியதன் மூலம் அணு ஆற்றலை அல்லது உட்கரு ஆற்றலை நவீன அணுக்கரு மருத்துவம் என்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் முயற்சி எனலாம்.[2] + +1895 ஆம் ஆண்டில் வில்கெம் இரென்கன் என்பரின் X-கதிர்களின் கண்டுபிடிப்பானது அறிவியலாளா்கள், இயற்பியலாளா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களிடம் பரந்துபட்ட ஆய்வுகளுக்கு வித்திட்டது எனலாம். 1896 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தீக்காயங்கள், முடி இழப்புகள் மற்றும் பிற தீய விைளவுகைளப்பற்றி அறவியல் இதழ்களில் எழுதத் தொடங்கினா். அதே ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வான்டர்பில்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் டேனியல் மற்றும் முனைவா். டட்லி ஆகியோர் X-கதிர்களை பேராசிரியர் டட்லி அவர்களின் தலையில் செலுத்தியதன் விளைவாக முடிகொட்டியதை சோதனை மூலம் நிரூபித்தனர். முனைவர் எச்.டி. ஹாவ்க்சு என்பவர் X-கதிர்களை செலுத்தியதன் விளைவாக, தனது கை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். இதுவே, இது போன்ற பல அறிக்கைகளின் முதலாவதாகும். +எலிகு தாம்சன் மற்றும் நிகோலா தெசுலா ஆகியோர் மேற்கொண்ட சோதைனகள் உட்பட்ட பிற சோதனைகள் காயங்கள் பற்றிய அறிக்கையைத் தந்தன. தாம்சன் வேண்டுமென்றே தனது ஒரு விரலை X-கதிர் குழாயில் ஒரு குறிப்பிட்ட நே��த்திற்கு வைத்திருந்து வீக்கம், வலி மற்றும் நுண்ணிய தீப்புண்கள் ஏற்பட்டதை நிரூபித்தார். புற ஊதாக் கதிர் வீச்சு மற்றும் ஓசோன் ஆகியவை இந்த காயங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. பல மருத்துவர்கள் இன்னமும் கூட X-கதிர்கள் மனித உடலில் படுவதால் விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்கின்றனர். + +இவ்வளவுக்கும் மேலாக, 1902 ஆம் ஆண்டில் வில்லியம் ஹெர்பார்ட் ரோலின்சு ஆல் மேற்கொள்ளப்பட்ட தீய விளைவுகள் குறித்த சில ஆரம்பகட்ட முறையான புலனாய்வுகள் X-கதிர்கள் பற்றிய அவநம்பிக்கையுடன் கவனமின்றி X-கதிர்கள் கையாள்வதன் விளைவாக ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகள் அவரது சகாக்களாலும், தொழிற்துறையினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ரோலின்சு X-கதிர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படும் மிருகங்களான கினிப் பன்றிகளைக் கொன்று விடும் என்றும், கருவுற்றிருக்கும் கினிப்பன்றிகளில் கருச்சிதைவு ஏற்படச் செய்யவும், கருவினை அழித்து விடவும் செய்யும் என்றும் நிரூபித்தார். X-கதிர்கள் விலங்குகளின் மேலே படும் போது நோய்க்கு ஆளாகும் பண்பானது விலங்குக்கு விலங்கு மாறுபடும். இந்த கருத்தானது நோயாளிகள் X-கதிர் சோதனைக்கு உட்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கூறினாா். + +கதிரியக்க பொருட்கள் காரணமாக கதிர்வீச்சினால் ஏற்படும் உயிரியல் விளைவுகள் அளந்தறிவதற்கு கடினமானதாக இருப்பினும், இது பல மருத்துவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கதிரியக்க பொருட்களை காப்புரிமை மருந்து களாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பளித்தது. உதாரணமாக ரேடியம் குடற்கழுவு மருத்துவ சிகிச்சை, மற்றும் ரேடியம் கலந்த நீர் சத்து மருந்தாக பயன்படுத்தப்பட்டது போன்றவற்றைக் கூறலாம். மேரி க்யூரி மனித உடலில் கதிர்வீச்சினால் ஏற்படும் விளைவுகள் முழுவதுமாக அறிந்து கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் இந்த வகை சிகிச்சைகளுக்கு ரேடியம் போன்ற கதிர்வீச்சுத் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தார். பின்னாளில் மேரி க்யூரி கதிர்வீச்சின் காரணமாக ஏற்பட்ட எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாடு காரணமாக குறைவான எண்ணிக்கையிலான இரத்த சிவப்பணுக்கள், இரத்தத் தட்டுகள் உருவாகக்கூடிய ஒரு வகை இரத்த சோகை நோயினால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1930 களில், எலும்பு இழை நசிவு (bone necrosis - காயங்கள், நோய் அல்லது இரத்த வழங்கலில் ஏற்படும் குறுக்கீடுகள் ஆகியவற்றின் மூலம் எலும்பு செல்கள் அல்லது திசுக்களின் அழிவு) காரணமான எண்ணற்ற மரணங்கள் மற்றும் ரேடிய சிகிச்சை ஆர்வலா்களின் எண்ணற்ற மரணங்கள் காரணமாக ரேடியத்தைக் கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் மருந்துச் சந்தையிலிருந்து நீக்கிக்கொள்ளப்பட்டன. + +எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறகு, அமெரிக்க பொறியியலாளரான வொல்ஃப்ராம் ஃப்யூச்சஸ் (1896) ஆல் வழங்கப்பட்ட ஆலோசனையே முதல் பாதுகாப்பு ஆலோசனையாக இருக்கக்கூடும். ஆனால்,1925 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாட்டிற்குப் பிறக சர்வதேச பாதுகாப்பு தரங்களை நிறுவுதல் குறித்து கருதப்பட்டது. புற்றுநோய் அபாயத்தின் விளைவு உள்ளிட்ட மரபணுக்களில் கதிர்வீச்சின் விளைவுகள் மிகவும் பின்னர் அறியப்பட்டன. 1927 ஆம் ஆண்டில், ஹெர்மன் ஜோசப் முல்லர் கதிர்வீச்சினால் ஏற்படும் மரபியல் காரணிகளில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையினை வெளியிட்டார்.1946 ஆம் ஆண்டில், தனது கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசைப் பெற்றார். + +1928 ஆம் ஆண்டில் சுடாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாட்டில் இராண்ட்ஜன் அலகுகளை உருவாக்கி கைக்கொள்ள முன்மொழிந்தது. மேலும், சர்வதேச எக்ஸ் கதிர் மற்றும் ரேடியம் பாதுகாப்பு குழு (IXRPC) உருவாக்கப்பட்டது. ரோல் சியெவெர்ட் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் ,இங்கிலாந்து தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் ஜார்ஜ் கயே தான் இந்தக்குழுவின் உந்து சக்தியாக இருந்தார். இந்தக் குழு 1931, 1934 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் கூடியது. + +இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இராணுவ மற்றும் உள்நாட்டு அணுசக்தித் திட்டங்களின் விளைவாக தொழி்ல்முறையான வேலையாட்கள் மற்றும் பொதுமக்கள் அதிக வகையான மற்றும் அளவிலான கதிரியக்கப் பொருட்களின் தீங்கு விளைவிக்கும் அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டனர். 1950 களில் லண்டனில் நடத்தப்பட்ட முதலாம் போருக்குப் பிந்தைய சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாடு கூடி முடிவெடுத்து தற்போதைய கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஆணையம் (ஐ.சி.ஆர்.பி.) உருவாகக் காரணமாக இருந்தது. ���திலிருந்து கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஆணையம் கதிர்வீச்சின் அனைத்து வகை ஆபத்துக்களையும் உள்ளடக்கி தற்போதுள்ள கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பான சர்வதேச முறையை வடிவமைத்து வளர்த்து வருகிறது. + +சர்வதேச அலகு முறையில் கதிரியக்கத்தின் திட்ட அலகு கதிரியக்கத்தை கண்டுபிடித்த ஹென்றி பெக்கொரெலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பெக்கொரெல் (Bq) என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பெக்கொரெல்(Bq) என்பது ஒரு வினாடி காலத்தில் நடைெபறும் மாறுபாடு(சிதைவு) என வரையறுக்கப்பட்டுள்ளது. + +கதிரியக்கத்திற்கான முந்தைய அலகாக கியூரி, Ci, ஆக இருந்தது. கியூரி எனப்படுவது சமநிலையில் ஒரு கிராம் ரேடியம் தனிமத்தால் வெளியிடப்படும் ரேடியத்தின் நிறை அல்லது அளவு என வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது, கியூரி எனப்படுவது ஒரு வினாடியில் நிகழக்கூடிய சிதைவுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே 1 கியூரி (Ci) = . +கதிரியக்க பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அணுக்கரு ஒழுங்கு ஆணையம் SI அலகுடன் கியூரி அலகின் பயன்பாட்டையும் அனுமதித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் ஐரோப்பிய அலகுகளின் அளவீட்டு முறை வழிகாட்டு நடைமுறைகள் பொதுமக்களின் நலன் சார்ந்த தேவைகளுக்காக இதன் பயன்பாடு தேவைப்படுகிறது என்று 31 டிசம்பர் 1985 இல் கூறியுள்ளது. +கதிரியக்கமானது இரண்டு வகைப்படும். அவை + + + + +அணு எண் + +அணு எண் "(Atomic number)" என்பது வேதியியல் மற்றும் இயற்பியலில், ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் புரோட்டான் எண் என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணு எண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது. + +ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் எண்ணிக்கை அல்லது அத்தனிமத்தின் அணு எண் Z மற்றும் அத்தனிமத்தின் உட்கருவிலுள்ள நியூட்ரான்களின் N மொத்த எண்ணிக்கை ஆகியவற்றின் கூடுதல் அணு எடை அல்லது திணிவெண் அல்லது நிறை எண் எனப்படுகிறது. அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. + +புரோட்டானின் பொருண்மையும் நியூட்ரானின் பொருண்மையும் ஏறத்தாழ சமம். ஆனால் எலக்ட்ரானின் பொருண்மை மிகமிகச் சிறியது ஆகும். புரோட்டானின் பொருண்மையுடன் ஒப்பிட்டால் எலக்ட்ரானின் பொருண்மை 1/1835 அளவு மட்டுமேயாகும். எனவே பல நிகழ்வுகளில் எலக்ட்ரானின் பொருண்மையை கணக்கில் கொள்வதில்லை. நியூக்ளியான்களின் நிறையுடன் ஒப்பிடுகையில் நியூக்ளியான்களின் பிணைத்திருக்கும் விசைகளின் நிறை விளைவும் மிகக் குறைவானதாகும். இந்நிறை விளைவானது எந்தவொரு அணுவின் நிறையையும் (A) குறிப்பிடப் பயன்படும் அணுநிறை அலகில்1% அளவுக்கும் குறைவானதாக இருக்கும். +ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் கொண்டுள்ள ஒரு தனிமத்தின் பல வகைகளே ஐசோடோப்புகள் எனப்படும். ஒரே தனிமத்தினுடைய ஐசோடோப்புகள் ஒரே அணு எண்ணையே கொண்டிருக்கும். அதனால் அணுக்கருக்களில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் ஆர்பிட்டுகள் எனப்படும் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும். எனவே நிரையில் காணப்படும் வேறுபாடு என்பது அணுக்கருவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வேறுபாட்டைக் குறிக்கிறது. பூமியின் மேலுள்ள வரையறுக்கப்பட்ட சூழலில் இயற்கையாகத் தோன்றும் தனிமங்களில் முக்கால் பாகத்திற்கும் மேற்பட்டவை அவற்றின் ஐசோடோப்புகளின் கலவையாகும். இக்கலவைகளின் சராசரி ஐசோடோப்பு நிறை தனிமங்களின் நிலையான அணு எடையை உறுதி செய்கிறது. வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் வேதியியலர்கள் ஐதரசனின் ஒப்பீட்டு அடிப்படையில் தனிமங்களின் அணு எடையை அளந்தறிந்தனர். + +வழக்கமாக அணு எண்ணைக் குறிக்கப் பயன்படும் குறியீடான் Z என்ற எழுத்து எண் என்ற பொருள் கொண்ட செருமன் சொல்லான சாகல் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும். இந்த அணு எண் என்ற குறியீடு வேதியியல் மற்றும் இயற்பியல் கருத்துக்களின் நவீன சிந்தனைக்கு முன்னர் தனிமவரிசை அட்டவணையில் ஒரு தனிமத்தின் எண்ணியல் இடத்தை மட்டுமே குறித்தது. ��னிம வரிசை அட்டவனையின் ஒழுங்கு ஏறத்தாழ, ஆனால் முழுமையாக இல்லை, அணு எடையின் அடிப்படையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. 1915 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அணு எண் என்பது வெறும் எண் மதிப்பு மட்டுமன்று அது அந்த குறிப்பிட்ட அணுவின் மின் சுமையையும் இயற்பியல் பண்புகளையும் தாங்கிய ஓர் எண் என்பது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டதால் அணு எண் அடிப்படையில் தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் அடுக்கப்பட்டன. + +தனிமங்கள் கண்டறியப்பட்டபோது அவற்றின் பண்புகள் இயல்புகள் குணங்கள், இணைதிறன் முதலானவற்ரின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தவும் அட்டவணைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படியானதொரு முயற்சியில்தான் தனிமங்களுக்கு எண்ணிடப்படும் வழக்கம் தோன்றியது. எண்களின் ஏறுவரிசையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. + +திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (; என்பவர் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்த முயன்று அணு எடைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது தனிமவரிசை அட்டவணையை உருவாக்கினார் இருப்பினும், அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்த தனிமங்களின் வேதிப் பண்புகளை கருத்திற்கொள்ள நினைத்த அவர் அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செய்தார். 127.6 அணு எடை கொண்ட தெல்லூரியத்தை 126.9 என்ற அணு எடை கொண்ட அயோடினுக்கு முன்னதாக வைத்தார் . இந்த முறையிலான வரிசைப்படுத்தும் திட்டம், பிற்காலத்தில் நவீனமாக கண்டறியப்பட்ட அணுஎண் அல்லது புரோட்டான் எண், Z அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தும் நவீன நடைமுறையுடன் ஒத்திருக்கிறது, ஆனால் அணு எண் அந்த நேரத்தில் தெரியவில்லை அல்லது அதைக் குறித்து சந்தேகிக்கப்படவில்லை. + +கால அட்டவணையின் அடிப்படையில் எளிய எண்களின் அடிப்படையில் தனினங்கள் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணை முற்றிலும் திருப்தி அளிப்பதாக இல்லை. முன்னர் கூறப்பட்ட தெல்லுரியம், அயோடின் போல ஆர்கானும் பொட்டாசியமும், கோபால்ட்டும் நிக்கலும் போன்ற மாறுபடும் பல இணை தனிமங்கள் பின்னர் கண்டறியப்பட்டன. இவை கிட்டத்தட்ட ஒத்த பண்புகள் அல்லது தலைகீழான அணுஎடைகள் கொண்டிருந்தன. எனவே இவற்றின் இருப்பிடத்தை முடிவு செய்ய வேதியியல் பண்புகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அணுஎண் 71 இலிருந்து படிப்படியாக இதைப் போன்ற தனிமங்களை அடையாளம் காண்பது அதிகரித்துவந்தது. இதனால் முரண்பாடுகளும் நித்தயமற்ற தன்மையும் தோன்ற ஆரம்பித்தன. + + + + +மிதிவெடி நடவடிக்கை + +மிதிவெடி நடவடிக்கை "(mine action)" என்பது நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் மிதிவெடி(கண்ணிவெடி)களை அகற்றுவதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மக்களை இவ்வபாயத்தைத் தவிர்ப்பது பற்றி அறிவூட்டும் நடவடிக்கையும் மிதிவெடிகள் அற்ற உலகை உருவாக்குவதும் ஆகும். + +மிதிவெடி நடவடிக்கையானது நிலக்கண்ணிவெடிகளை மாத்திரம் அன்றி பலநாடுகளில் வெடிக்காத வெடிபொருட்கள்(UXO), சூழ்ச்சிப் பொறிகள் போன்றவற்றையும் அகற்றுவதாகும். + +இன்று மிதிவெடி நடவடிக்கையானது "யுத்ததினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை" மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றுவதாகும். + + + + + + +வியட்நாம் + +வியட்நாம் (, , , ; ), அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (SRV; "" ), என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது. + +கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இ���்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது. + +வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது. 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு, 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது. இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. + +பழங்கற்காலத்திலிருந்தே வியட்நாம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான "ஹோமோ எரெக்டசு" மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் மற்றும் ஙே ஆன் மாகாணங்களிலுள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்காசியப் பகுதியிலிருந்து பெறப்பட்ட மிகமுந்திய "ஹோமோ சேப்பியன்" எச்சங்கள் நடுப் பிளைத்தோசீன் காலத்தின் ஆரம்பப் பகுதிக்குரியனவாகும். இவற்றுள் தாங் ஓம் மற்றும் ஹாங் ஹும் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற பற்சிதைவு எச்சங்களும் உள்ளடங்கும். பின் பிளைத்தோசீன் கால " ஹோமோ சேப்பியன்" பல் எச்சங்கள் டொங் கான் பகுதியிலும், முன் ஹோலோசீன் பகுதிக்குரிய பல் எச்சங்கள் மாய் தா தியூ, லாங் காஓ மற்றும் லாங் கௌம் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. + +கிமு 1000 ஆம் ஆண்டளவில், மா ஆறு, செவ்வாறு ஆகியவற்றின் படுக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட அரிசிப் பயிர்ச்செய்கையும் வெண்கல வார்ப்புத் தொழிலும் காரணமாக தொங் சோன் பண்பாடு வளர்ச்சி பெற்றது. இப்பண்பாட்டில் உருவாக்கப்பட்ட வெண்கல மேளங்கள் புகழ்பெற்றவை. இக்காலத்தில், முந்தைக்கால வியட்நாமிய அரசுகளான வான் லாங் மற்றும் ஔ லாக் என்பன தோற்றம் பெற்றன. கி.மு. முதலாயிரவாண்டில் இப்பண்பாட்டின் தாக்கம் தென்கிழக்காசியக் கடலோர அரசுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவெங்கும் பரவியது. + +1945 செப்டம்பர் 2 ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியாதிக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954 இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது. 1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர்.1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது. வியட்நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும் . + + + + + +துருக்கி + +துருக்கி என்பது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தலைநகரம் அங்காரா ஆகும். இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது. +துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாகப் பிரிக்��ப் படுகின்றது. மேற்குப் பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்குப் பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாகக் கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று.இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேயக் கலாச்சாரமும், கிழக்கத்தியக் கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களைக் காணலாம். + +இன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, ஆசியா மைனர் என்றும் அழைக்கப்பட்ட, அனத்தோலியக் குடாநாடு தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான சட்டல்ஹோயுக், சயோனு, நெவாலி கோரி, ஹசிலர், கோபெக்லி தெபே, மேர்சின் என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. திராய் குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் இந்திய-ஐரோப்பிய, செமிட்டிய, கார்ட்வெலிய மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். + +இப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு ஹிட்டைட் பேரரசு ஆகும். இது கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. பின்னர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய பிரிஜியர்கள் உயர்நிலை அடைந்தனர். இவர்களது அரசு கிமு ஏழாம் நூற்றாண்டளவில் சிமேரியர்களால் அழிக்கப்பட்டது. பிரிஜியர்களுக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசுகளை நிறுவியவர்கள் லிடியர்களும், காரியர்களும், லிசியர்களும் ஆவர். லிடியர்களும், லிசியர்களும் பேசிய மொழிகள் அடிப்படையில் இந்திய-ஐரோப்பிய மொழிகளே ஆயினும், ஹிட்டைட் மற்றும் ஹெலெனியக் காலங்களுக்கு முன்னரே இம்மொழிகள் பெருமளவு பிற மொழிக் கூறுகளைப் பெற்றுக்கொண்டன. + +கிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் எயோலியக் கிரேக்கர்களும், அயோனியக் கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர். கி.மு. ���று மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இப்பகுதி முழுவதையும் பாரசீக ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றி வைத்திருந்தது. பின்னர் கிமு 334ல் அலெக்சாண்டரிடம் வீழ்ச்சியடைந்தது. இதன் பின்னர் அனத்தோலியா பல சிறிய அரசுகளாகப் பிரிவடைந்தது. பித்தினியா (Bithynia), கப்பாடோசியா (Cappadocia), பெர்காமும் (Pergamum), பொன்டஸ் (Pontus) போன்றவை அவற்றுள் சில. இவை அனைத்துமே கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் ரோமப் பேரரசிடம் வீழ்ச்சி கண்டன. கிபி 324ல் இப்பகுதியிலிருந்த பைசன்டியத்தை "புதிய ரோம்" என்னும் பெயருடன் ரோமப் பேரரசின் தலைநகரம் ஆக்கினான். இது பின்னர் கான்ஸ்டண்டினோப்பிள் எனப்பட்டது. இதுவே இன்றைய இஸ்தான்புல் ஆகும். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது பைசன்டியப் பேரரசின் (கிழக்கத்திய ரோமப் பேரரசு) தலைநகரம் ஆனது. + +கினிக் ஓகுஸ் துருக்கியர்களின் ஒரு பிரிவினரான செல்யூக் குழுவினர், ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பியக் கடலுக்கும், ஆரல் கடலுக்கும் வடக்கே முஸ்லிம் உலகின் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் செல்யூக்குகள் தமது தாயகத்தில் இருந்து அனத்தோலியாவின் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். 1071 இல் இடம்பெற்ற மான்சிகேர்ட் போரைத் தொடர்ந்து இப் பகுதிகள் செல்யூக்குகளின் புதிய தாயகம் ஆனது. செல்யூக்குகள் பெற்ற இவ்வெற்றி, அனத்தோலிய செல்யூக் சுல்தானகங்கள் என்னும் அரசுகள் தோன்றக் காரணமாகியது. இவை, மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஈரான், அனத்தோலியா, தென்மேற்கு ஆசியா ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பெரிய பேரரசின் ஒரு தனிப்பிரிவுகளாக இருந்தன. + +1243 ஆம் ஆண்டில், செல்யூக் படைகள் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட, செல்யூக் பேரரசு மெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. இதே வேளை, முதலாம் ஒஸ்மான் என்பவரால் ஆளப்பட்ட துருக்கியப் பகுதியொன்று ஓட்டோமான் பேரரசாக வளர்ச்சியுற்றது. இது செல்யூக்குகளினதும், பைசண்டியர்களினதும் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது. + +ஓட்டோமான் பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. + +முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியைத் தழுவி��, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கெமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்தப் பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர். + +அந்த இனப்படுகொலைக்குப் பிறகு எஞ்சியிருந்தோரும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப்பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகையக் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்தப் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. + +துருக்கி-குர்து கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதப்போராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தைக் குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதி���டியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி , சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்குப் போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது. + +துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுபினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. + +ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ள துருக்கியின் ஐரோப்பிய பகுதியான அல்கலி நகரில் இருந்து ஆசியப் பகுதியான ஜெப்ஸிக்கு 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. +இந்தப் பாதையில் போஸ்போரஸ் ஜலசந்தி கடற்பகுதியில் 16.6 கி.மீட்டர் தொலைவு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப் பணியை ஜப்பான்- துருக்கி கூட்டு நிறுவனமான தைஷி மேற்கொண்டது.இதில், 1.4 கிலோ .மீட்டர் தொலைவு கடலுக்கு அடியில் சுமார் 200 அடி ஆழத்தில் டியூப் வடிவிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டியூப் வடிவ சுரங்கப் பாதை ரயில்வே கட்டுமானத் துறையில் மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடலுக்குள் 3 ரயில் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் யனிகபி ரயில் நிலையம் இத்தாலியின் வர்த்தக நகரமான இஸ்தான்புல் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. +ஐரோப்பாவில் இருந்த போதும் துருக்கி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை. இதனால் விமானப்பயணிகள் பொருட்களை இங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது சுங்கவரி முறை மாறுபாட்டால் குழப்பமுறும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. + + + + + +சூழ்ச்சிப் பொறி + +யுத்தக் களத்தில் சூழ்ச்சிப் பொறி தனிமனிதனிற்கு எதிரான கண்ணிவெடி அல்லது கைக்குண்டு ஆகும். இவை யுத்தப் பிரதேசங்களின் கதவின் பின்புறத்தில் கதவைத் தாழிடும் பகுதியில் அல்லது கவர்ச்சிகரமான ஓர் இலத்திரனியல் உபகரணம் ஒன்றில் எடுத்துக்காட்டாக தொலைக்காட்சிப் பெட்டியில் பொருத்தப் பட்ட வெடிகுண்டாகும். இவை பார்ப்பதற்கும் மிகவும் சாதுபோலவிருந்தாலும் வெடிக்கும் போது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகை உபாயங்களை இலங்கையில் பெரும்பாலும் விடுதலைப் புலிகளே நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்கின்றனர். + + + + +திமிங்கிலம் + +திமிங்கிலம் (திமிங்கலம், "Whale") நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். + +திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முல���ப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும். +இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. + +திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை நீர்-நிலம் இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும், பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது. + +உண்மையில் திமிங்கிலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலூட்டிகள் என்ற விலங்கினங்களாகும். திமிங்கிலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதில்லை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். +திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை, தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன. +திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கிலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதயத் துடிப்பு மற்றும் ஒட்சிசன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஒட்சிசன் மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது. +இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும். + +திமிங்கிலங்கள் பாலுட்டி வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன. +பொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கிலங்கள் வலசை போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இவை இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம் மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கிலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனியாக வாழ்கின்றன. திமிங்கிலங்கள் ஊனுண்ணிகளாகும். நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந���துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன. + +திமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கிலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இது ஒரு இசையைப் போல இருக்கும் இத்தகைய திமிங்கல ராகம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீரில் பயணிக்கின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்ற திமிங்கிலங்களுடன் தொடர்பு கொள்கின்றன. + +இனப்பெருக்கக் காலங்களில் ஆண் திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. +பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன. + +திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. விந்துத் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். விந்துத் திமிங்கிலங்கள் 7000 அடி ஆழம் வரை சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் வெப்பநிலை 0° சென்டிகிரேடு வரை செல்லும் போதும் கடுங்குளிரைத��� தாங்கக் கூடிய வகையில் திமிங்கிலங்கள் அடர்த்தியான கொழுப்பு படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய கொழுப்பு படிவங்கள், கடுங்குளிர் திமிங்கிலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கிலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் நுரையீரல் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக நீர் அழுத்தம் அதற்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. + + + + + + + +தன்ராஜ் பிள்ளை + +நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். + +தன்ராஜ் பிள்ளை 1989 முதல் 2004 வரை 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். + +15 ஆண்டுகாலம் ஹாக்கி களத்தில் அசத்திய அவர் 170 கோல்களை தன் பெயருக்குச் சொந்தமாக்கியுள்ளார். + +சர்வதேச ஹாக்கி போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் க்ளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். + +ஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய முக்கிய ஹாக்கி தொடர்களில் 4 முறை விளையாடியுள்ள ஒரே வீரர் தன்ராஜ் பிள்ளை. + +ஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஹாயாக இருந்துவிடவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். + +2000வது ஆண்டு தன்ராஜ் பிள்ளைக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. + + + + +கொக்கு + +கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கழுத்தை நீட்டியபடி பறக்கின்றன. சில கொக்கினங்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்விட்டு இடம் வலசை போகின்றன. + +கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இது நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. பறக்கும் பறவை இனங்களுள் கொக்கே மிகப் பெரியவை ஆகும். சாரஸ் கொக்குகள் 175 செ.மீட்டர் உயரமுடையவை. அதேபோல் செந்தலைக் கொக்குகள் அதிக எடையுடையவை. சராசரியாக 12 கிலோ வரை காணப்படுகின்றன. + +இவை தங்கள் உணவை காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து மாற்றிக்கொள்ளும். பொதுவாக மீன்கள், சிறு நீர்வாழ் பூச்சிகள், கொறித்துண்ணிகள், நிலநீர்வாழ் சிறிய விலங்குகள், தானியங்கள் மற்றும் சில தாவரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. + +மொத்தம் பதினைந்து இன கொக்குகள் உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்டிக்கா ஆகியவற்றைத் தவிர்த்து உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. + + + + + +அரைவாழ்வுக் காலம் + +அரைவாழ்வுக் காலம் ("half-life") என்பது அடுக்குச் சிதைவுக்கு ("Exponential decay") உட்பட்டிருக்கும் பொருள் அதன் தொடக்க அளவிலும் அரைப்பங்கு ஆவதற்கு எடுக்கும் காலம் ஆகும். அரைவாழ்வுக் காலம் பற்றிய கருத்துரு கதிரியக்கச் சிதைவு ("radioactive decay") தொடர்பிலேயே முதன்முதலில் உருவானது. ஆனால் இன்று இது பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. + +அருகில் தரப்பட்டுள்ள அட்டவணை ஒவ்வொரு அரைவாழ்வுக் காலத்தின் முடிவிலும் எஞ்சும் விழுக்காட்டு ("percentage") அளவு காட்டப்பட்டுள்ளது. +அடுக்குச் சிதைவொன்றில், அரைவாழ்வு காலம் formula_1 பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: +இங்கு, + +அரைவாழ்வுக் காலம் (formula_1), சராசரி ஆயுட்காலம் ("mean lifetime", formula_5) உடன் பின்வரும் சமன்பாட்டினால் தொடர்பு படுத்தப்படும்: + +யுரேனியம் போன்ற அணுக்களிலிருந்து இடைவிடாமல் துகள்களும் கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது 1890 களில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய பண்பு கதிரியக்கம் எனப்பட்டது. கதிரியக்கமுள்ள அணுக்கள் தமது கருக்களிலிருந்து துகள்களை வெளியேற்றிச் சிதைந்து கொண்டிருந்தன. ஒவ்வோர் இனக் கதிரியக்க அணுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்குமானால், ஒரே மாதிரியான அணுக்களின் கூட்டமொன்று சிறிது காலத்திற்கு இருந்து விட்டுப் பிறகு திடீரென்று சேர்ந்தாற் போல ஒன்றாகச் சிதையும். அப்போது ஏராளமான ஆற்றல் வெளிப்படுவதாக இருக்கும். ஆனால் அதுபோல் நிகழ்வதில்லை. அதற்கு மாறாக ஒரே மாதிரியான கதிரியக்க அணுக்கள் ஏராளமாக உள்ள ஒரு கூட்டத��திலிருந்து தொடர்ச்சியாகச் சிறிய அளவில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் சில அணுக்கள் சிதைந்து ஆற்றலை வெளிப்பபடுத்திக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. சில அணுக்கள் இன்று சிதையலாம். சில நாளை சிதையலாம். வேறு சில ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்துக் கூட சிதையலாம். ஒரு குறிப்பிட்ட அணு எப்போது சிதையும் என்று சொல்லவே முடியாது. எனவே ஒரு கதிரியக்க அணுவின் வாழ்நாள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். + +ஆனால் ஓரினத்தைச் சேர்ந்த ஏராளமான கதிரியக்க அணுக்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்த எண்ணிகையில் ஒரு குறிப்பிட்ட பங்கு அணுக்கள் சிதைவதற்கான நிகழ்தகவு ஒரு குறிப்பிட்ட அளவிலுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த எந்த அணுக்கள் சிதையுமென்று சொல்ல முடியாவிட்டாலும், மொத்தத்தில் ஐந்து சதவீதம் அல்லது பத்து சதவீத அணுக்கள் சிதைய எவ்வளவு நேரமாகுமென்பதைச் சொல்ல முடியும். ஏராளமான கதிரியக்க அணுக்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் 50 சதவீத அணுக்கள் சிதைய எவ்வளவு காலம் ஆகுமென்பதை ஒரு வசதியான அளவாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு அரை வாழ்வுக் காலம் என்று பெயர். யுரேனியம் 238 என்ற தனிமத்திற்கு அரை வாழ்வு காலம் 4468 மில்லியன் ஆண்டுகள். அதாவது ஒரு கிலோ யுரேனியத்தில் அரைக் கிலோ சிதைய அவ்வளவு காலமாகிறது. சில தினமங்கள் அற்ப ஆயுள் உள்ளவை. போலோனியம் 212 இன் அரை வாழ்வுக் காலம் 0.0000003 வினாடிதான். + + + + +304 சீட்டு ஆட்டம் + +தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை. + +52 சீட்டுக்கள் கொண்ட சீட்டுக் கட்டில், ஏழுக்கு கீழ்ப்பட்ட சீட்டுக்கள் விளையாட்டில் பயன்படா, அவை வெற்றி/தோல்வி காசுக்களாக பயன்படுத்தப்படும்.அவற்றில் ஆசி பெரியது +துரும்பு சொல்லும் முறை 52 சீட்டுக்களில் இருந்து முதலில் நான்கு சீட்டுகள் வழங்கப்படும் அந்த சீட்டுகளில் அதிகம் இருக்கும் சீட்டுவகை தெரிவு செய்யபடும் உ+ம் ஸ்ஸுகோப்பர் +பிறகு மீதீ சீட்டுகள் வழங்கப்படும் மோத்தம் எட்டு சீட்டுகள் விளையாடுபவர் தெரிவு செய்த சீட்டே துரும்பாகும். +தம் வசம் எதிராளி எரிந்த சீட்டு இல்லை என்றால் துரும்பை வீசி வெட்டி வெற்றிபெறலாம் விலையாடுபவர் தமக்கு எதிரே உள்ளவர் தமது அணியாவார் எனவே அவர் பெற்று கொள்ளும் சீட்டும் வெற்றியை தீர்மாணிக்கும் +5 சீட்டுகளை வெல்லும் அணி வெற்றி பெரும் +விளையாடும் முறை +விளையாடும் நால்வருக்கும் தலா ஒவ்வொருவருக்கும் எட்டு சீட்டுகள் வழங்கபட்டு விளையாட்டு ஆரம்பமாகும். +விளையாடுபவர் தனக்கு விரும்பிய சீட்டை முதலில் போடலாம். +தன்னிடம் எதிராளீ இட்ட சீட்டு இல்லாவிடில் வெட்டி எடுத்து கொள்ளலாம். +இந்த விளையாட்டு கூகுல் Play store இல் Omi என டைப் செய்து இலவசமாக பெறலாம். + +][p]p[] + + + + + + + +கனேடியத் தமிழர் + +தமிழ் பின்புலத்துடன் கனடாவில் வசிப்பவர்களை கனேடியத் தமிழர் (Canadian Tamils / Tamil Canadians) எனலாம். கனேடியத் தமிழரை குறிக்க கனடிய தமிழர், கனடாத் தமிழர், தமிழ் கனேடியர்கள் என்று வெவ்வேறு சொற்றாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு சமூக அடையாளமே, சட்ட அடையாளம் அல்ல. 2011 ஆம் ஆண்டு கனேடிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 218,000 தமிழர்கள் டொராண்டோ, ஒன்டாரியோவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தமிழர்கள் டொராண்டோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் 80களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். சனவரி மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக கனடா முழுவதும் கொண்டாடப்படுகிறது. + +பெரும்பான்மைத் தமிழர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்ததாக கியூபெக்கிலும், பிரிட்டிசு கொலம்பியாவிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் பொதுவாக பெரும் நகரங்கள், அல்லது புறநகர்ப் பகுதிகளிலேயே பெரும்பாலும் வசிக்கிறார்கள். + +ஏறக்குறைய 218,000 தமிழ் மக்களில் 164,000 பேர் வீட்டில் தமிழை முதன்மை மொழியாகவும், 45,000 கூடுதலாகப் பேசுவதாகவும் கனேடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. + +கனடியத் தமிழர்களின் அரசியலில் கனடிய உள்ளூர் அரசியல், பூர்வீகத் தாயகங்கள் தொடர்பான அரசியல் என இரு முக்கிய பகுதிகளாகப�� பார்க்கலாம். குறிப்பாக கனடிய ஈழத் தமிழர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் நகர்வுகள், எதிர்ப்புப் போராட்டங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன. + +பெரும்பாலான கனடியத் தமிழர்கள் உணவகங்கள், தொழிற்சாலைகள், வியாபார அங்காடிகள், சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகளாக வேலைச் செய்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சிறு பொருள் சேவை வியாபார தாபனங்களை தொடங்கி நடத்தி வருகின்றார்கள். பெரும்பானமையானவை தமிழ் சமூகத்துனுள்ளேயே தங்களை சந்தைப்படுத்துகின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் மருத்துவம், நீதித்துறை, பொறியியல் போன்ற உயர் தொழில் திறனும் கல்வியும் வேண்டிய துறைகளில் இயங்கி வருகின்றார்கள். + +குடிவரவுச் சூழ்நிலை, தலைமுறை சார்ந்து கனடியத் தமிழ்ச் சமூக கல்வி நிலைமை நிறைய வேறுபடுகிறது. ஈழப் போராட்டம் காரணமாக இங்கு தமது இளைய பருவத்தில் குடிபெயர்ந்தவர்கள் பலர் பொருளாதாரச் சுமை காரணமாக உயர் கல்வியைப் பெறவில்லை. இங்கு பிறந்த அடுத்த தலைமுறையினரில் பெரும்பான்மையினர் பல்கலைக்கழக அல்லது உயர்-கல்லூரிப் படிப்புக்களை மேற்கொள்கிறார்கள். + +கனடாவில் தமிழ்க் கல்வி 1980 களில் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இங்கு பல தன்னார்வல, அரச தமிழ் வகுப்புகள், தமிழ் கல்வித் திட்டங்கள் உண்டு. வசதிகள் பல இருந்தும் இங்கு பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கல்வியைப் பெறுவதில்லை. ஒரு கணிப்பின் படி 33,000 தமிழ்ச் சிறார்களில் ஏறக்குறைய 20,000 பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை. + + + + + +பெப்ரவரி 2006 + + + + +நடத்தை அறிவியல்கள் + +நடத்தை அறிவியல்கள் (Behavioural Sciences) என்பது, இயற்கையில் உயிரினங்களுக்கு உள்ளும் அவற்றுக்கு இடையிலும் உள்ள நடத்தைகள் மற்றும் உத்திகள் பற்றி ஆய்வு செய்யும் எல்லாத் துறைகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். இது தொடர்பான ஆய்வுகள், மனிதர் மற்றும் விலங்குகளின் நடத்தைகள் பற்றிக் கட்டுப்பாடான இயற்கையோடு ஒட்டிய சோதனை அவதானிப்புக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. + +நடத்தை அறிவியல், சமூக அறிவியல் என்னும் இரண்டும் சில சமயங்களில் ஒன்றுடனொன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன. இவ்விரு பரந்த துறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாகவும், இரண்டுமே நடத்தைகள் பற்றிய முறையான ஆய்வுகளில் ஈடுபடுபவையாகவும் இருந்தபோதும், நடத்தைகளின் பல்வேறுபட்ட பரிமாணங்களை ஆய்வு செய்வதிலான அறிவியல் மட்டம் வேறுபாடாக உள்ளது. நடத்தை அறிவியல்கள், சமூக முறைமையில், உயிரினங்களுக்கு உள்ளும் அவற்றுக்கு இடையிலும் இடம்பெறும் தீர்மானச் செயல்முறைகள் (decision processes) மற்றும் தொடர்பு உத்திகள் (strategies) என்பவற்றைச் சிறப்பாக ஆராய்கின்றன. இவை உளவியல், சமூக நரம்பறிவியல் (Social neuroscience) போன்ற துறைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அதேவேளை சமூக அறிவியல்கள் சமூக முறைமையின் அமைப்பு மட்டத்திலான செயல்முறைகள் பற்றியும், சமூகச் செயல்முறைகளிலும், சமூக அமைப்பிலும் அவற்றின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்கின்றன. சமூக அறிவியல்கள் சமூகவியல், பொருளியல், வரலாறு மற்றும் அரசறிவியல் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளன. + +நடத்தை அறிவியல்கள், இயற்கை அறிவியல்களும், சமூக அறிவியல்களும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது எனலாம். + + + + +கோசம்பரி + +கோசம்பரி என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் திருமணம் மற்றும் இராம நவமி போன்ற பண்டிகைகளில் மற்ற உணவு வகையுடன் உண்ணப்படுகிறது. இது போன்ற உணவு வகை மேற்கத்திய நாடுகளில் சாலட் (salad) என அழைக்கப்படுகிறது. + +உணவளவு +தேவையான பொருட்கள் + + + + + + +த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்) + +த லோட் ஒவ் த ரிங்ஸ் மூன்று பாகங்களைக் கொண்டது. இது பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்புகள் சுமார் 18 மாத காலங்கள் நியூ சிலாந்தில் நடைபெற்றது. இத் திரைப்படம் டால்கெயினின் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுடன் அதை அப்படியே பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகின்றது. + + + + + +ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி + +ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ("Eelam People Democratic Party" - EPDP) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியும், அரசு-சார்பு துணை இராணுவப் படையும் ஆகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி இலங்கை அரசில் பங்களிக்கின்றது. + +இக்கட்சி பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரண்பட்ட அல்லது மாற்று கொள்கைகளை முன்னிறுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. + +டக்ளசு தேவானந்தா ஆரம்ப ஈழ இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என அழைக்கப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். 1980 ஆம் ஆண்டில் ஈரோசில் இருந்து பத்மநாபா, அ. வரதராஜப் பெருமாள் ஆகியோர் பிரிந்து சென்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். இவர்களுடம் தேவானந்தாவும் இணைந்து கொண்டார். 1986 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் தேவானந்தாவுக்கும், பத்மநாபாவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, இக்கட்சி ரஞ்சன் குழு, தேவானந்தா குழு என மேலும் இரண்டாகப் பிரிந்தது. தேவானந்தா ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்த பரந்தன் ராஜன் என்பவருடன் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். ராஜன் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றியதை தேவானந்தா ஏற்க மறுத்தார், அத்துடன் ஈழப்போரில் இந்திய அமைதிப்படையின் ஊடுருவலையும் ஏற்க மறுத்து சென்னையில் இருக்கும் போது ஈழ மக்கள் சனநாயகக் கட்சி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.. + +ஈபிடிபி நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியது, இதனை சமாளிக்க தேவானந்தா சென்னையில் வாழும் இலங்கைத் தமிழரைக் கடத்திச் சென்று கப்பம் கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1989 இல் தேவானந்தாவும் மேலும் 25 பேரும் கீழ்ப்பாக்கத்தில் 10 வயது சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். + +1990 இல் தேவானந்தா இலங்கை திரும்பினார். இவருக்கும் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவிற்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இருந்து தமக்குப் பாதுகாப்பு தரும்படியும், பதிலாக ஈபிடிபி கட்சியை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசும் இதனை ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் ஈபிடிபி துண�� இராணுவக் குழுவாக மாறியது. + +இலங்கை, இந்தியாவில் உள்ள அனைத்து ஈபிடிபி உறுப்பினர்களும் கொழும்பில் கூடினர். இலங்கை அரசு அவர்களுக்குப் பெருமளவு நிதியுதவி வழங்கியது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியதை அடுத்து, அத்தீவுகளை ஈபிடிபி அரச இராணுவத்தின் உதவியுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அத்தீவுகளில் மக்களிடம் இருந்து வரி அறவிட ஆரம்பித்தது. கொழும்பில் வாழும் தமிழர்களிடம் இருந்தும் பணம் கப்பங்களாகப் பெறப்பட்டன. + +ஈபிடிபி வன்முறைகளைக் கைவிட்டு விட்டதாக அறிவித்திருந்தாலும், அதன் துணை இராணுவக் குழு தொடர்ந்து இயங்கி வந்தது. அல்லைப்பிட்டி படுகொலைகளில் இலங்கைக் கடற்படைக்கு துணையாக செயற்பட்டதாக ஈபிடிபி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. + +ஈபிடிபி 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோர் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், ஈபிடிபி ஒன்பது நாடாளுமன்ற இடங்களை 10,744 வாக்குகளில் (0.14%) வென்றது. இவற்றில் 9,944 வாக்குகள் ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப் பகுதிகளில் வாக்களித்தவர் ஆவர். ஈபிடிபி அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைத்தது. + +2000 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 50,890 வாக்குகள் (0.59%) பெற்று நான்கு இடங்களைக் கைப்பற்றியது. 2000 அக்டோபரில் குமாரதுங்கவின் அமைச்சரவையில் தேவானந்தா வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். + +2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 72,783 வாக்குகள் (0.81%) பெற்று இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், அரசாங்கம் மாறியதை அடுத்து தேவானந்தா அமைச்சர் பதவியை இழந்தார். + +2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 24,955 வாக்குகள் (0.27%) பெற்று,ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் அமைச்சரவையில் தேவானந்தா மீண்டும் அமைச்சரானார். + +2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 33,481 வாக்குகள் (0.30%) பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இடத்தைக் கைப்பற்றியது. + + + + + +கச்சத்தீவு + +கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்த��ய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது. + +கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு , நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார். + +1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன. + +1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. ஆயினும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்.. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008ம் ஆண்டு அதிமுக தலைவர் செயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் சூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. + +கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின���படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர். 2011ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது. + + + + + +அரண்மனை + +அரண்மனை () (palace) என்பது பொதுவாக மன்னரின் வாழ்விடம் ஆகும். சொற்பிறப்பியல் அடிப்படையில் இச்சொல் "அரண்" (பாதுகாப்பு) மற்றும் "மனை" (உறையுள்) ஆகியவற்றின் புணர்ச்சியாகும். "அரசனின் இருப்பிடம்" என்று பொருள்படும் "அரமனை" என்ற சொல்லும் உண்டு. + +அரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் கட்டப்படுவன. கோட்டைகளாலும், கண்காணிப்புக் கோபுரங்களாலும், சில நேரங்களில் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும். அரசருக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், அமைச்சர்களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும். + + + + + +அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி + +அனைத்துலகப் பாணி என்பது 1920 களிலும் 1930 களிலும் கட்டிடக்கலையில் முக்கியமானதாக இருந்த ஒரு பாணியாகும். இப் பாணியின் அடிப்படையான வடிவமைப்புக் கொள்கைகள் நவீனத்துவப் பாண��யில் கொள்கைகளோடு ஒத்தவை. எனினும், அனைத்துலகப் பாணி எனும்போது அது நவீனத்துவத்தின் ஆரம்ப காலத்தை, பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த கட்டிடங்களையும், அவற்றை உருவாக்கிய கட்டிடக்கலைஞர்களையும் குறிக்கின்றது. + +1900 ஆம் ஆண்டளவில் உலகின் பல பகுதிகளிலும் கட்டிடக்கலைஞர் பலர், மரபுவழி முன்னுதாரணங்களையும், புதிய சமூகத் தேவைகளையும், தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளையும் ஒருங்கிணைத்துப் புது முறையான கட்டிடக்கலைத் தீர்வுகளை உருவாக்கினார்கள். பிரசல்ஸ் (Brussels) நகரில் விக்டர் ஹோட்டாவினதும் (Victor Horta), பார்சிலோனாவில் அந்தோனியோ கௌடியினதும் (Antoni Gaudi), வியன்னாவில் (Vienna) ஓட்டோ வாக்னரதும் (Otto Wagner), கிளாஸ்கோவில் (Glasgow), சார்ல்ஸ் ரென்னி மக்கின்டோசினதும் ஆக்கங்கள் புதுமைக்கும் பழமைக்கும் இடையிலான பொதுப் போராட்டமாகக் கருதப்படக்கூடியவை. +அனைத்துலகப் பாணி 1920 களில் மேற்கு ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது. அனைத்துலகப் பாணியானது, ஒல்லாந்தில் உருவான டி ஸ்டைல் (de Stijl) இயக்கம், பிரபல கட்டிடக்கலைஞர் லெ கொபூசியே (Le Corbusier) அவர்களின் ஆக்கங்கள் மற்றும் "டியூச்சர் வேர்க்பண்ட்" எனப்படும் ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பு உருவாகக் காரணமாக இருந்த அந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு கைப்பணி மரபுகளைத் தொழில் மயமாக்கும் முயற்சிகள், பிராங்போர்டிலும், ஸ்ரட்கார்ட்டிலும், கட்டப்பட்ட பாரிய தொழிலாளர் வீடமைப்புத் திட்டங்கள், எல்லாவற்றிலும் மேலாக "பௌஹவ்ஸ்" (Bauhaus) இயக்கம் போன்றவற்றோடு பொது அடிப்படைகளைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1920 களில், நவீன கட்டிடக்கலையின் முக்கியமானவர்கள் தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்களுள் மிகக் கூடுதலாக அறியப்பட்டவர்கள் பிரான்சில் லெ கொபூசியேயும், ஜெர்மனியில் லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) மற்றும் வால்டர் குரோப்பியஸ் (Walter Gropius) என்போராவர். +அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணியின் பொது இயல்புகள் இலகுவாக அடையாளம் காணப்படக் கூடியவையாகும். கட்டிடங்களின் எளிமையான உருவமைப்பு, அலங்காரங்களைத் தவிர்த்தல், கண்ணாடி, உருக்கு, காங்கிறீற்று என்பவற்றின் பயன்பாடு, கட்டிடங்களின் உட்பகுதிகளைக் காட்டும் தன்மையும் அதனால் அதன் அமைப்புமுறைகளை வெளிப்படுத்தும் தன்மையும், தொழில் மயப்படுத்தப்ப���்ட பெரும்படித் தயாரிப்பு நுணுக்கங்களை ஏற்றுக்கொண்டமை, இயந்திர அழகியல், கட்டிடங்களின் செயற்பாடுகளோடு ஒட்டிய வடிவமைப்பு என்பன இத்தகைய இயல்புகளுட் சிலவாகும். + +அலங்காரம் ஒரு குற்றச்செயல் (ornament is a crime), செயற்பாடுகளைத் தொடந்தே உருவம் அமைகின்றது (form follows function) போன்ற அக்காலத்தில் பிரபலமான தொடர்களும், லெ கொபூசியேயின், வீடு என்பது "வாழ்வதற்குரிய இயந்திரம்" என்னும் விளக்கமும் இப்பாணியின் கொள்கைகளைச் சுருக்கமாக விளக்குகின்றன. + + + + + + + + +தேநீர் + +தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் (இலங்கைத் தமிழ்: சீனி) கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர். + +தேநீர், "கமெலியா சினென்சிஸ்" "(Camellia sinensis)" எனப்படும் செடியின் குருத்து இலைகளைப் பல முறைகளால் பதப்படுத்தி உருவாக்கப்படும் தேயிலை எனப்படும், பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படுவது தேநீரே என்று கூறப்படுகின்றது. பொதுவாக, கருந்தேநீர், ஊலாங்கு தேநீர், பசுந்தேநீர், வெண்தேநீர், புவார் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் கிடைக்கின்றன. இவை தவிர தேயிலைச் செடியல்லாத பிற மூலிகைச் செடிகளின் பகுதிகளிலிருந்து பெறப்படும் சிலவும் மூலிகைத் தேநீர் என அழைக்கப்படுகின்றன. + +தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக நிலநேர்க்கோடு 29°வ, நிலநீள்கோடு 98°கி யும் சந்திக்கும்; வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபேத்து ஆகியவற்றை அடக்கிய பகுதியிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது (மொண்டல், 2007. பக்.519). இந்தப் பகுதியிலிருந்து இத் தேயிலைச் செடி 52 நாடுகளுக்கு அறிமுகமானது. + +அஸ்ஸாமிய, சீன வகைகளுக்கு உடையிலான உருவ அடிப்படையிலான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தேயிலை இரண்டு தாவரவியல் மூலங்களைக் கொண்டிருக்கலாமெனப் பல காலமாக நம்பப்பட்டது. எனினும், திரள் பகுப்பாய்வு (Cluster analysis), நிறமூர்த்த எண்அல்லது நிறப்புரி எண் (chromosome number), இலகுவான கலப்புப்பிறப்பாக்கம் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது, "கமெலியா சினென்சிஸ்" "(Camellia sinensis)" ஓரிடத்தில் தோன்றியதென்றே கொள்ள முடிகிறது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அதாவது, இங்கேயே முதல் முதலில் தேயிலையை உண்பது அல்லது நீரில் ஊறவைத்துக் குடிப்பது சுவையானது என்பதை மனிதன் அறிந்து கொண்டான். + +கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம். + +"கமெலியா சினென்சிஸ்" ஒரு பசுமை மாறாச் செடியாகும். இது பொதுவாக வெப்பமண்டல அல்லது மித வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கிறது. சில வகைகள் கடல்சார்ந்த இடங்களிலும் வளரக்கூடியவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் கோர்ன்வால், அமெரிக்காவின் சீட்டில் ஆகிய பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இதற்குக் குறைந்தது 50 அங்குல ஆண்டு மழைவீழ்ச்சி தேவை என்பதுடன், அமிலத் தன்மை கொண்ட நிலங்களில் இச்செடி சிறப்பாக வளரக்கூடியது. பல தரமான தேயிலை வகைகள் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. +முதிர்ந்த தேயிலைச் செடியின் மேற்பகுதியில் 1-2 அங்குலப் பகுதியே எடுக்கப்படுகிறது. குருத்துக்களையும், இலைகளையும் கொண்டுள்ள இப்பகுதி "கொழுந்து" எனப்படுகின்றது. வளரும் பருவகாலத்தில் 7 தொடக்கம் 10 நாட்களுக்கு ஒருமுறை கொழுந்து எடுக்க முடியும். தேயிலைச் செடி இயல்பாக வளர விடும்போது ஒரு மரமாக வளரக்கூடியது. ஆனால், பயிரிடப்படும்போது, இது இடுப்பளவு உயரத்துக்கு கத்தரித்து விடப்படுகிறது. இதனால் அதிகம் குருத்துக்கள் வளர்வதுடன், கொழுந்து எடுப்பதற்கு வசதியாகவும் இருக்கும். + +பொதுவாக இரண்டு தேயிலைச் செடி வகைகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று சிறிய இலைகளைக் கொண்ட சீன வகை ("க. சினென்சிஸ் சினென்சிஸ்"). அடுத்தது பெரிய இலைகளைக் கொண்ட அசாமிய வகை ("க. சினென்சிஸ் அசாமிக்கா"). தேயிலைச் செடிகளை வகைப்படுத்துவதற்கான முக்கியமான அடிப்படை இலையின் அளவு ஆகும். இதன்படி மூன்று வகைகளை அடையாளம் காணலாம். 1. அசாம் வகை: பெரிய இலைகளைக் கொண்டது. 2. சீன வகை: சிறிய இலைகளுடையது. 3. கம்போட் வகை: நடுத்தர அளவுள்ள இலைகளைக் கொண்டது. + +தேயிலை அதனைப் பதப்படுத்தும் முறையை வைத்தே அடையாளம் காணப்படுகின்றது. உடனடியாகக் காய விடாவிட்டால், தேயிலை விரைவிலேயே வாடி ஒட்சியேற்றம் அடைந்துவிடும். பச்சையம் உடைந்து தானின் வெளிவிடப்படுவதால் நேரம் செல்லச்செல்ல இலையின் நிறம் கருமையடையும். இது நொதிய ஒட்சியேற்றம் ஆகும். தேயிலைத் தொழிலில் இதனை நொதித்தல் என்பர். ஆனால் இது உண்மையான நொதித்தல் அல்ல. கருந் தேயிலையில் உலர்த்துதலுடன் ஒரே நேரத்தில் இது நடைபெறுகின்றது. உற்பத்தியின் போது வெப்பநிலையையும், நீர்த்தன்மையையும் கவனமாகக் கட்டுப்படுத்தாவிட்டால், தேயிலையில் பூஞ்சைகள் வளரக்கூடும். இப் பூஞ்சைகள் உண்மையான நொதிப்பை ஏற்படுத்துவதால், இது தேயிலையை மாசுபடுத்தி பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றது ஆக்கிவிடும். + +பச்சை நிறம் படியாத இளந்தளிர்களில் இருந்து இவ்வகைத் தேயிலை தயாரிக்கப்படுகிறது. அதிக சூரிய வெளிச்சம் படாமல் இருக்க சில சமயம் அவ்விளந்தளிர்களை மறைத்து வைப்பதும் உண்டு. வசந்த காலத்தில் தளிர்களைப் பறித்துக் காய வைத்துப் பின் அப்படியே பெட்டிகளில் அடைத்தோ பொடி செய்து சிறிய பைகளில் அடைத்தோ விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைச் செடிகளில் இருந்து இவ்வகைத் தேயிலை சிறிய அளவிலேயே கிடைப்பதால் மற்ற வகைகளை விட இது அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வெண்தேநீர் மங்கிய மஞ்சள் நிறமும், நறுமணமும், மிகக்குறைந்த இனிப்பும் உடையதாக இருக்கும். + +வெண்தேயிலை புக்கியன் (Fukien) எனப்படும் சீன மாகாணத்தில் தான் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. வெண்தேயிலைகளை ஆண்டிற்கு ஒரு முறை வசந்த காலத்தில் இரண்டு நாட்களுக்குள் அறுவடை செய்து பின்னர் துரிதமாக நீராவியால் அவித்து காய வைக்கப்படுகிறது. இத்தேயிலை மற்ற வகைகளை விட மிகக் குறைவாக பதனிடப்படுவதால் சுவை மிகுந்ததாகவும் புதுமை குன்றாததாகவும் இருக்கும். + +பசுந்தேநீர் சீனத்தில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பலராலும் அருந்தப்படும் ஒரு பானமாகும். சப்பான், கொரியா மற்றும் பற்பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவ்வகைத் தேநீர் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. பசுந்தேயிலைகளைப் பறித்த பின்பு துரிதமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் சிறிது நேரம் நீராவியில் அவித்து அல்லது சூடான காற்றில் உலர வைத்துப் பின் பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. சில வகை பசுந்தேயிலைகளை சிறிய உருண்டைகளாக உருட்டிப் பின் விற்பதும் உண்டு. ஆனால் உயர்ந்த வகை பசுந்தேயிலைகள் மட்டுமே சீராக உருட்ட முடியும் என்பதால் இவ்வகை பசுந்தேயிலைகள் சிறிய அளவில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பசுந்தேநீரில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, புற்று நோயைக் குணப்படுத்தும் சில வகை வேதிப்பொருட்கள் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் சுட்டுவதால், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்கள் பசுந்தேநீரை ஆராய்ந்து வருகின்றனர். + +ஊலாங்கு தேயிலை பசுந்தேயிலைக்கும் கருந்தேயிலைக்கும் உள்ள இடைப்பட்ட வகையாகும். ஊலாங்கு தேநீர் சீனத்தில் உள்ள ஃபுசியன் மாகாணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மிங்கு மன்னர்குல ஆட்சியின் கீழ் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. ஊலாங்கு தயாரிப்பதற்கு தேயிலைகள், மூவிலைகளும் ஒரு மொட்டும் கொண்ட தொகுதிகளாக பறிக்கப்படுகிறது. பறித்த இலைகளை ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் (தேயிலைகள் 30% சிவப்பாகும் வரை) புளிக்க வைத்துப் பின் கரிப்புகை கொண்டு உலர வைக்கப்படுகிறது. இவ்வகைத் தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரானது தெளிந்த சிவப்பு நிறம் உடையதாகவும், மணம் மிகுந்ததாகவும், கசப்பின்றி சிறு இனிப்புச் சுவையுடனும் விளங்குகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் ஊலாங்கு தேயிலைகள் சப்பானுக்குத் தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. + +கருந்தேயிலை அல்லது செந்தேயிலை ஆசியாவில்தான் மிக அளவில் தயாரிக்கப்படுகிறது. தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் கருந்தேநீரை விரும்பி அருந்துகின்றனர். சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தயாரிக்கப்படும் கருந்தேயிலைகள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே பயன்படுகிறது. தேயி��ைகளைப் பறித்த பின்பு இரண்டு வாரங்களில் இருந்து ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பின்பு உலர வைத்து பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. கருந்தேயிலைகளின் தரத்தை நிர்ணயிக்க செம்மஞ்சள் பீகோ என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது. கருந்தேயிலையில் மற்ற வகை தேயிலைகளை விட மிக அதிக அளவில் கஃபைன் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இதனால் கருந்தேநீர் அருந்துபவர்க்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது. + +புவார் தேயிலை சீனத்தில் உள்ள யுன்னான் மாகாணத்தில்தான் பெருமளவு தயாரிக்கப்படுகிறது. கருந்தேயிலை போலவே புவார் தேயிலைகளையும் புளிக்க வைக்கப்பட்டு, அதிலும் இருமுறை புளிக்க வைக்கப்பட்டு பின் பல ஆண்டுகளுக்கு முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலைகள் இரு வகையில், பச்சையாகவோ அல்லது பக்குவப்படுத்தியோ தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான் புவார் தேயிலைகளை தயாரித்த முதல் ஆண்டுக்குள் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் சில உயர்ந்த வகை பச்சைப் புவார் தேயிலைகள் 30 முதல் 50 ஆண்டுகள் முதிர வைக்கப்படுகிறது. பக்குவப்படுத்திய புவார் தேயிலைகள் 10 முதல் 15 ஆண்டுகளே முதிர வைக்கப்படுகிறது. புவார் தேயிலையை பெட்டிகளில் உதிரியாகவோ அடர்த்தியாகவோ அடைத்து விற்கப்படுகிறது. புவார் தேநீர் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டதாக இருக்கும். இவ்வகைத் தேநீர் செரிமானத்துக்கும் இரத்தக்கொழுப்பை குறைப்பதற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. + +இவ்வகைத் தேயிலை உலகச் சந்தையில் மிக அரிதாக சிறிய அளவிலேயே கிடைக்கிறது. சீனாவில் உள்ள யுன்னான் மற்றும் அன்னூயி (Anhui) மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலைகளைப் போலவே மஞ்சள் தேயிலைகளும் தளிர்களில் இருந்தும் மொட்டுக்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. வெண்தேயிலை போலல்லாமல் தேயிலையை பறித்த பின் ஓரிரவு உலர (புளிக்க) வைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் தேநீர் சிறிது பொன்னிறம் கலந்த மஞ்சள் நிறம் பெற்றிருக்கும். மஞ்சள் தேயிலை, 'பொன்னூசிகள்' எனவும் அழைக்கப்படுகிறது. சீன மன்னர்களின் முத்திரை நிறமான தங்க நிறத்தில் இவ்வகைத் தேநீர் இருப்பதால் சீன மன்னரவையில் மிகவும் அதிமாக அருந்தப்பட்டது. + +தேயிலைச் செடிகளில் உள்ள குச்சிகளையும் முற்றிய இலைகளையும் குளிர்காலத்தில் பறித்த பிறகு காய வைத்து, நீராவியில��� அவித்து, முதிர வைத்துப் பின் நெருப்பில் வருக்கப்படுகிறது. இத்தேநீரை குச்சித் தேநீர் எனவும் அழைக்கின்றனர். குக்கிச்சா தேநீர் சப்பான் நாட்டில் பலராலும் அருந்தப்படுகிறது. உலகில் சீனாவும் இந்தியாவுமே இதை பெருமளவு தயாரிக்கின்றனர். குக்கிச்சா தேநீர் நறுமணத்துடனும், மிகக் குறைந்த அளவு கஃபைன் உடையதாகவும் இருப்பதால், இயற்கை உணவு அருந்தும் மக்களிடம் இது ஒரு முக்கியமான பானமாக விளங்குகிறது. + + + + + +ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பண்புபடுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேநீர் சடங்கு (Tea Ceremony) வழங்குகின்றது. தேநீர் சடங்கு நடத்துனர் மரபுகளுக்குமைய தேநீரை தாயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம். + + + + + +க. சட்டநாதன் + +க. சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். + + + + + + + +தி. ச. வரதராசன் + +வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்) (ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006), சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர். + +1924 இல் பொன்னாலையில் சண்முகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் வரதர். இரத்தினம்மா, அன்னம்மா, தங்கச்சியம்மா ஆகியோர் அவரது சகோதரிகள். இவரது தந்தை ஒரு வர்த்தகர். தனது ஆரம்பக் கல்வியை பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் பெற்றார். ஆறாம் வகுப்பை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், ஏழாம் வகுப்பை சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும், எட்டாம் வகுப்பை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கற்றார். சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பை மீண்டும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார். + +வரதர் தனது 27ஆவது வயதில் சுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் மகளான மகாதேவியம்மாவை 1951 நவம்பர் 7 ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களுக்குச் செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். இவர்களில் செந்தாமரை கனடாவிலும் மலர்விழி லண்டனிலும் உள்ளனர். வரதர் ஆசிரியையான தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார். + +இவரது முதற் சிறுகதையான "கல்யாணியின் காதல்" ஈழகேசரியில் வெளியானது. ஜூன் 13, 1943 இல் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய "ஓர் இரவினிலே" எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத் தொகுதியான "கயமை மயக்கம்" 1960இல் வெளியானது. + +மறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் (1952), தேன் மொழி (1955), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்கள். + +வரதர் தொழிலால் ஓர் அச்சக முகாமையாளர். "வரதர் வெளியீடு" என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் "இலக்கிய வழி"யே வரதர் வெளியீடாக வெளிவந்த முதல் நூலாகும். மஹாகவி, வித்துவான் பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், சாந்தன், க. கைலாசபதி, முருகையன், நா. சோமகாந்தன், நாவற்குழியூர் நடராஜன் போன்ற பலரது நூல்கள் வரதர் வெளியீடாக வெளிவந்துள்ளன. பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்காக வரதர் கதைமலர் தொடரில் ஐந்து நூல்களை வெளியிட்டார். "வரதரின் பல குறிப்பு" என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார். + +வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு "சாகித்திய இரத்தினம்" எனும் பட்டத்தை அளித்தது. + + + + + + + + +சோ. பத்மநாதன் + +சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. + + + + + +கோதிக் கட்டிடக்கலை + +கோத��க் கட்டிடக்கலை ("Gothic architecture") என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும். குறிப்பாக இப்பாணி, தேவாலயங்கள், பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புக்களோடு தொடர்புடையது. 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தொடர்ந்தே 15 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை உருவானது. 18 ஆம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் ஆரம்பமான கோதிக் மறுமலர்ச்சி முயற்சிகள், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் பரவியது. இது சிறப்பாகச், சமயம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்புக்கள் ஊடாக 20 ஆம் நூற்றாண்டிலும் புழக்கத்திலிருந்தது. + + + + + +எல்லைகளற்ற பொறியியலாளர்கள் + +எல்லைகளற்ற பொறியியலாளர்கள் (Engineers Without Borders) இலாப நோக்கமற்ற, உலகளாவிய முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரச சார்பற்ற அமைப்பு ஆகும். பொதுவாக இவை தன்னார்வலர் குழுக்களே ஆகும். எல்லைகளற்ற பொறியியலாளர்கள் கனடாவே இவற்றுள் பெரியதும் முன்னோடியானதும் எனலாம். + +பொதுவாக இவ்வமைப்பு பொறியியல் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அடித்தள நிலையில் (grass roots) இயங்குகின்றது. தற்சமயம் இவர்கள் பொதுவாக அடிப்படை வசதிகளை அமைக்க உதவும் தகுதொழில்நுட்பங்களிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள். + + + + +கட்டிடத் தகர்ப்பு + +கட்டிடத் தகர்ப்பு ("Demolition") என்பது பழைய அல்லது இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களைத் தகர்த்தல் ஆகும். இச்செயற்பாட்டை இடித்துத் தள்ளல், அழித்தல், வீழ்ச்சியுறச் செய்தல் என்றும் கூறலாம். கட்டிடங்கள் இருக்கும் இடத்தின் மீள்பயன்பாட்டுக்காகவும் சூழலை மேம்படுத்துவதற்காகவும் கட்டிடத் தகர்ப்பு அவசியமாகிகின்றது. + +கட்டிடத்தை வீழ்கட்டமைப்பு முறைகளைப் பின்பற்றாமல் வெறுமனே பாரிய சாதனங்கள் கொண்டு தகர்த்தால் அக்கட்டிடங்களைக் கட்டப் பயன்பட்ட பல பொருள்களை மீளவும் பயன்படுத்த முடியாமல் போகும். மேலும் இடித்துத் தள்ளப்பட்ட கழிவுகளைத் தகுந்த மாதிரி அகற்ற வேண்டிய சிக்கலும் உருவாகும். இதனால், கட்டிடத் தகர்ப்புக்குப் பதிலாக வீழ்கட்டமைப்பு முறை தற்சமயம் மேலை நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. + + + + +கேரளா மாதிரி + +இந்தியாவின் வளர்ச்சி மிக்க மாநிலங்களின் ஒன்றாக கேரளா மாநிலம் திகழ்கின்றது. கல்வியறிவு, அரசியல் பங்கெடுப்பு, சமூக நீதி, சமூக மேம்பாடு, பொருளாதாரம், சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமய புரிந்துணர்வு போன்ற பல வழிகளில் கேரளா முன் உதாரணமாக திகழ்கின்றது. கேரளாவின் முன்னேறத்துக்கு வழிகோலிய சமூக, பொருளாதார, அரசியல், சூழலிய கட்டமைப்பை அல்லது கூறுகளை கேரளா மாதிரி (Kerala Model) எனலாம். கேரளா மாதிரியை பின்பற்றி பிற சமூகங்களும் முன்னேற முடியும் என்பதுவே கேரளா மாதிரியின் முக்கியத்துவம். இம்மாதிரி சமூக முன்னேற்ற ஆர்வலர்களின் கவனத்துக்கும் ஆய்வுக்கும் பரவலாக உட்பட்டு நிற்கின்றது. + + + + + +அப்துல் ரசாக் (துடுப்பாட்ட வீரர்) + +அப்துல் ரசாக் (Abdul Razzaq, பிறப்பு - டிசம்பர் 2, 1979) பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முனாள் சகலத் துறையர் மற்றும் தலைவர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடினார். 1996 ஆம் ஆண்டில் லாகூர், கடாபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது 16 ஆவது வயதில் இவர் அறிமுகமானார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் கோப்பை வென்ற பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். மொத்தமாக இவர் 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். + +தனது 38 ஆம் வயதில் ஓய்வினை அறிவித்த பிறகு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட இருபதாக அப்துல் ரசாக் தெரிவித்தார். + +அப்துல் ரசாக் ஆயிஷா என்பவரைத் திருமணம் செய்தார். இவருக்கு முகம்மது அஃப்சால், முகம்மது ஃபைஷால், முகம்மது அஷ்ஃபாக் ஆகிய மூன்று சகோதரர்களும், சைமா ஷாகித் எனும் சகோதரியும் உள்ளனர். + +1996 ஆம் ஆண்டில் லாகூர், கடாபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் ��ன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது 16 ஆவது வயதில் இவர் அறிமுகமானார். பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1999 ஆம் ஆண்டில் பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 1999-2000 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கார்ல்டன் மற்றும் யுனைட்டட் சீரிசில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இதில் ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதே தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரன போட்டியில் கிளென் மெக்ராவின் ஒரே ஓவரில் 5 நான்குகள் அடித்து 20 ஓட்டங்களை எடுத்தார். மேலும் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் பாக்கித்தான் அணியில் நிலையான இடத்தைத் தக்கவைத்தார். + +இவர் தொடர்ச்சியாகப் பந்து வீச்சாளராகவும், மட்டையாளராகவும் சிறப்பக செயல்பட்டதனால் பாக்கித்தான் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இவரை உலகக்கிண்ணத் தொடருக்குத் தேர்வு செய்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் சகலத்துறையராக இவர் சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் அரைநூறினைப் பதிவு செய்தார். மேலும் இன்சமாம் உல் ஹக்குடன் இணைந்து அணியின் மொத்த ஓட்டத்தை 275 ஆக உயர்த்த உதவினார். இந்தப் போட்டியில் இவர் 60ஓட்டங்கள் அடித்து அணியை "சூப்பர் சிக்ஸ்க்கு" செல்ல உதவினார். பின் பிரிஸ்டலில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களை வீசி 32 ஓட்டஙகளை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். + + + + +உலக உணவுத் திட்டம் + +உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது பட்டினியைப் போக்க பாடுபடும் உலக அளவிலுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும். + +1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மி��்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது. + +ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது. + + + + + + +கிளிநொச்சி + +கிளிநொச்சி ("Kilinochchi") இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2002 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது. + +இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடு அக்கராயன், புதுமுறிப்பு, வன்னேரி, பிரமந்தனாறு, கல்மடு, புதுஐயன், கரியாலை நாகபடுவான், கனகாம்பிகை ஆகிய குளங்களில் இருந்து பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் மண்வள ஆராய்ச்சி நிலையம் இரணைமடுச்சந்தியிலும் அமைந்துள்ளன. பல்கலைக்கழக வ���வசாய பீடமும் பொறியியற் பீடங்களும் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியத் தலைமையகமும் அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்றன. வட்டக்கச்சியில் இயங்கிய விவசாயப் பயிற்சிக் கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விதை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் கரடிப்போக்கில் இயங்குகின்றது. + + +கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் +பாரதிபுரம் மகா வித்தியாலயம் +கனகபுரம் மகா வித்தியாலயம் +புனித தெரேசா பெண்கள் பாடசாலை +முருகானந்த மத்திய கல்லூரி +பளை மத்திய கல்லூரி +முழங்காவில் மத்திய கல்லூரி + + + + + +அம்பாறை + +அம்பாறை ("Ampara", சிங்களம்: "අම්පාර") இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர். + + + + +மன்னார் + +மன்னார் ("Mannar") இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன. + +மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரம் யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன. + +அதே போல் மன்னாரில் உள்ள மடு ஆலயம் மிகப் பிரபனமான திருத்தலம் ஆகும். இங்கு இலங்கையில் உள்ள மக்கள் வருகை தந்து வழிபடுகின்றார்கள். +மேலும் தலைமன்னார் கலங்கரை விளக்கம் புதியதொரு மாற்றம் கண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அத்துடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலமும் மக்கள் தமது பொழுதைக் கழிக்க செல்லும் இடமாகும். + +தலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை காணப்படுகின்றது போ��்க்காலத்தில் சேதமுற்று காணப்பட்ட இப் பாதையினை இலங்கை-இந்திய நட்புறவின் அடையாளமாக இந்திய அரசின் நிதியில் இருந்து மீள புணரமைக்கப்பட்டுள்ளது + +கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம். + + + + + + +உலக உணவுத் திட்டத்தின் வேலைக்கான உணவு + +இலக்குகள் + + + + + +மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை + +15 ஆம் நூற்றாண்டில் தோன்றி ஐரோப்பாவில் பரவிய மறுமலர்ச்சிப் பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை ("Renaissance architecture") எனப்படுகின்றது. ரோமப் பேரரசுக் காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது. + +இப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித அளவுவிகிதப்படி ("proportions") அமைந்திருந்ததோடு, ரோமக் கட்டிடக்கலையின் உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், தூண்களையும், சமச்சீரான ("symmetry") வடிவத்தையும் கொண்ட எளிமையான கட்டிடங்களை இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், வடிவவியல் ரீதியில் சிறப்பாக அமைந்த வடிவமைப்புகளும், அரைக் கோள வடிவக் குவிமாடங்களும் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும். + +இந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புளோரன்ஸிலும், மத்திய இத்தாலியிலும், மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது: + + +மறுமலர்ச்சிப் பாணியானது இத்தாலியிலிருந்து பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், காலநிலைகளையும் கவனத்திற்கு எடுத்தே கட்டிடங்களைக் கட்டவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் தெளிவாக அடையாளம் க���்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும். + + + + + +வால்ரர் ஹமொண்ட் + +வால்ரர் ஹமொண்ட் ("Walter Hammond") (ஜூன் 19, 1903 - ஜூலை 1, 1965) குளோசஸ்ரசயர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக ஆடிய இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர். + + + + + +த. ஜெயசீலன் + +த. ஜெயசீலன் (பிறப்பு - மார்ச் 5, 1973) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். தொண்ணூறுகளிற் கவிதை எழுதத் தொடங்கியோரில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவரது கவிதைகளில் மரபுக்கவிதையின் சாயலைக் காணலாம். ஜெயசீலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரி ஆகி ஈராண்டுகள் விரிவுரையாளராக கடமை ஆற்றியவர். மூன்று ஆண்டுகள் ஆசிரியராக கடமை ஆற்றிய நிலையில் 2003ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தேறி மருதங்கேணி உதவி அரச அதிபராக கடமை ஆற்றி பின் காரைநகர் உதவி அரசராக கடமையாற்றி தற்போது பருத்தித்துறை பிரதேச செயலராக கடமையாற்றுகிறார். இரு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். + + + + + + +மறுமலர்ச்சி (இதழ்) + +மறுமலர்ச்சி ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை. 1946 ஆம் ஆண்டு பங்குனியில் முதல் இதழ் வெளியானது. தி. ச. வரதராசன் (வரதர்), கா. மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சரசர்மா, க. இ. சரவணமுத்து ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின. மறுமலர்ச்சி இதழில் வெளியான சிறுகதைகள் செங்கை ஆழியானால் தொகுக்கப்பட்டு "மறுமலர்ச்சிச் சிறுகதைகள்" என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன. + + + + +மல்லிகை (இதழ்) + +மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த மாத இதழாகும். 1966 ஆகத்து மாதத்தில் இதன் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 400 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன. + + + + + + + + +��ொமினிக் ஜீவா + +டொமினிக் ஜீவா ("Dominic Jeeva", பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது "தண்ணீரும் கண்ணீரும்" சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். + + + + + + + + + +முத்து + +முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி மதிக்கப்படுகிறது. + +முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட்டு அல்லது [கல்சைட்போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது.முத்து அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று.பெர்சிய வளைகுடா,செங்கடல்,கட்ச் வளைகுடா,மன்னார் வளைகுடா,பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது.இந்தியாவில் காணப்படும் பியுஃபிகடா இனமே வணிக முக்கியத்துவம் வாய்ந்தது.முத்துபடுகைகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிப்பிகள் எடுக்கப்படுகின்றன.ஒவ்வாெரு சிப்பிக்குள்ளும் ஒரு முத்து உருவாகிறது.தூத்துக்குடி பகுதியில் முத்து உற்பத்தி மிக அதிகமாகபதிவு செய்யப்பட்டுள்ளன.பாண்டிய நாடு முத்துடைத்து என்று சாெல்லப்படுவதுண்டு.நம் நாட்டில் முத்து வளர்ப்பு பற்றிய பயிற்சியை சி.எம்.எப்.ஆர்.ஐ வழங்குகிறது. + +19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்பட்டன. ஆட்கள் நீருக்குள் இறங்கி முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள். இது முத்துக்குளிப்பு எனப்பட்டது. இயற்கை முத்துக்கள் விளையும் இடமாகப் பண்டைக்காலத்திலேயே புகழ் பெற்றிருந்த இடங்கள் பலவுள்ளன. அரேபியக் குடா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பல்வேறு பசிபிக் தீவுகள், வெனிசுலா, மத்திய அமெரிக்கா ஆகியவற்றின் கரைகளை அண்டிய கடற் பகுதிகள் இவற்றுள் அடங்குவன. + +தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது. யாழ்ப்பாணத்து அரசர்களும், தொடர்ந்து வந்த குடியேற்றவாத ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர் முதலியோரும் இதன் மூலம் நல்ல வருவாய் பெற்றுள்ளனர். + +இவ்வாறு சேகரிக்கப்படும் சிப்பிகளில் மிகச் சிலவற்றிலேயே முத்துக்கள் கிடைக்கும். இதனால் முத்து அரிதில் கிடைப்பதொன்றாகவும், விலை கூடியதாகவும் இருந்தது. + +1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும். + +சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய "எபிதீலியம்" என்னும் படலத்தால் அதை ந���்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது. + +முத்தில் காணப்படும் பிரதான மூலகங்களாவன ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்பனவாகும். முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துக்களுக்குத் தேவை அதிகம். + +கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. + +முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம். + +அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும். + +சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர். அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். + +இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். + +சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது. அதை ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர். முத்துக்களின் நிறை அதிகமாகக் காணப்படுவதற்காக சில தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத் தப்படுகின்றன. + +ஜப்பான் நாட்டில் முத்துக் குளிக்கும் பெண்கள் அதிகம். அவர்கள் விளைந்த முத்துக்களையும் விளையாத முத்துக்களையும் அள்ளிக்கொண்டு வருவர். அவற்றில் மூன்று வயது நிரம்பிய ஆரோக்கியமான முத்துக்களை எடுத்து அவற்றைச் செயற்கை முத்து வளர்க்கப் பயன்படுத்துவர். முத்துக்களை முதலில் உப்பில்லாத நன்னீரில் போட்டு அவற்றை வலிமை இழக்கச் செய்வர். பின்னர் மரக் கத்தியால் அதனைப் பிளந்து அதற்குள் முத்துக் கருவைப் போடுவர். முத்துக்கரு என்பது உயிரணு போன்றது அன்று. சிப்பிக்கு அன்னியமான ஒரு பொருள். அதாவது சிறு முத்துச்சிப்பி துரும்பு. உள்ளே நுழைந்த பொருள் தன்னைத் துன்புறுத்திவிடக் கூடாது என்பதற்காக முத்துச்சிப்பி ஒருவகை நீர்மத்தைச் சுரக்கும். இந்த நீர்மந்தான் உருண்டு திரண்டு முத்தாக மாறும். இவ்வாறு கருவூட்டப்பட்ட முத்துச்சிப்பிகளை அதற்கெனத் தயாரிக்கப்பட்ட வலைகளில் போட்டு மீண்டும் கடலில் இட்டு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வளர்ப்பர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முத்துச் ணிப்பியின் ஓட்டைச் சுரண்டி தூய்மை செய்வர். ஏழு ஆண்டுகள் வளர்ந்த முத்துக்களைத் தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்வர். + +இயற்கை முத்துக்களும், செயற்கையாக வளர்க்கப்படும் முத்துக்களும் உயிரினங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களைப்போல் ஒரே சீரான இயல்புகளைக் கொண்டிராது. கிடைக்கும் முத்துக்களின் சில இயல்புகள் விரும்பத்தக்கவை. சில விரும்பத்தகாதவை. ஒவ்வொரு முத்தும் இத்தகைய பல்வேறு விரும்பத்தக்க, விரும்பத்தகாத இயல்புகளின் கலவையாகவே காணப்படுகின்றன. இக் கூட்டு இயல்புகளைப் பொறுத்தே முத்தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. முத்துக்களின் தரம் பின்வரும் இயல்புகளில் தங்கியுள்ளது. + + +முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன: + + +சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் ��வற்றின் மதிப்பும் அதிகம். + +சிப்பியின் உட்புறம் முத்துப்போல் காணப்படும் அழகான மெல்லிய பொருள் நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது. + +ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை. + +முத்துக்களைத் தரம் பிரிப்பதற்குப் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு அவை AAA-A முறை, A-D முறை அல்லது தாகித்தியன் முறை என அழைக்கப்படுகின்றன. + +AAA-A முறையில் முத்துக்கள் அவற்றின் தரத்திற்கேற்ப AAA, AA, A என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் AAA மிகக் கூடிய தரமான முத்துக்களையும், A மிகக் குறைந்த தரத்தையும் குறிக்கும். + +A-D முறையில் முத்துக்கள் A, B, C, D எனத் தரப்படுத்தப்படுகின்றன. இங்கே A அதி கூடிய தரமும், D குறைவான தரமும் கொண்டவை. + + + + + +படிகம் + +படிகம் (crystal) என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமாகும். படிகம் என்பதைப் பளிங்கு என்றும் சொல்வதுண்டு. + +பொதுவாகத் திண்மமாதல் (solidification) செயற்பாட்டின் போதே படிகங்கள் உருவாகின்றன. ஒரு இலட்சிய நிலையில் விளைவு ஒற்றைப் படிகமாக இருக்ககூடும். இந் நிலையில் திண்மத்திலுள்ள எல்லா அணுக்களும் ஒரே படிக அணிக்கோவையில் (crystal lattice) அல்லது படிக அமைப்பில் பொருந்துகின்றன. ஆனால் பொதுவாக ஒரே நேரத்தில் பல படிகங்கள் உருவாவதால் உருவாகும் திண்மங்கள் பல்படிகத் தன்மை (polycrystalline) கொண்டவையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் உலோகங்களிற் பெரும்பாலானவை பல்படிகங்களாகும். + +திரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் திரவத்தின் வேதியியல் தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் அமு���்கத்திலும் தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் படிகமாதல் (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது. +வழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் அணுக்கள் படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. படிகத் தன்மையற்ற பதார்த்தம் ஒன்று, படிக அமைப்பு இல்லாத, கண்ணாடி, அல்லது கண்ணாடித் தன்மையான பொருள் என்று அழைக்கப்படுகின்றது. கண்ணாடிகளுக்கும், திண்மங்களுக்கும் இடையே பல சிறப்பான வேறுபாடுகள் - குறிப்பிடத்தக்கதாக கண்ணாடி உருவாகும்போது உருகல் மறைவெப்பம் வெளிவிடப்படுவதில்லை - இருந்தாலும், படிக அமைப்பு இல்லாத திண்மம் என்றும் இதனைக் குறிப்பிடுவது வழக்கம். + + + + +வெடிக்காத வெடிபொருட்கள் + +வெடிக்காத வெடிபொருட்கள் என்பவை யுத்த காலத்தில் பாவிக்கப் பட்ட பொழுதும் அவை இன்று வரை வெடித்துச் சிதறாதவை ஆகும். இவை ஓடாத பழைய மணிக்கூடுகளை குலுக்குவதன் மூலம் ஓட வைப்பதைப் போல இவையும் எந்நேரமும் அசைவினால் வெடிக்ககூடியவை. இலங்கையில் வடக்குக் கிழக்கில் பாடசாலைக்குச் செல்லும் பதின்மவயதினர் (teenagers) இவ்வகை யுத்தப்பொருட்களை ஆய்வு செய்தபோது காயங்களிற்குக் குள்ளாகியுள்ளனர். + + + + +மிதிவெடி அபாயக் கல்வி + +மிதிவெடி அபாயக் கல்வி என்பது கல்விசார் நடவடிக்கைகள் ஊடாக மிதிவெடிகள், யுத்த மீதிகளின் ஆபத்தில் இருந்து குறைக்கும் வண்ணம் அவை பற்றிய ஆபத்தை விளக்குவதுடன் நடத்தைகளின் மாற்றத்தை மேம்படுத்துவதாகும். இந்நடவடிக்கைகளின் போது தரவுகளைத்திரட்டுதல், தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பயிற்ச்சியுடனான கல்வி, சமுகத்தொடர்பாடல்கள் அங்கம் வகிக்கின்றது. + +இவ்வகை நடவடிக்கைகளை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இன் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் ஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வய��ுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை அலசி ஆராய்ந்து, அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக செவ்வனே வழங்கி வருகின்றனர். மிதிவெடிகள் அகற்றுவதற்கு காலம் எடுப்பதாலும், மிதிவெடிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி இருப்பதால் மிதிவெடி அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய மிதிவெடி அபாயக் கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும். + +மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களாற் பாதிக்கபட்ட பொதுமக்களைப் பற்றி ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் திரப்பட்ட தகவல்களின் படி 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வெடிபொருட்களைக் கையாளுதல், இரும்பு சேகரித்தல், வாழ்வாதாரத் தேவைகள், குப்பைகூழங்களை எரித்தல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை ஆராய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும். + +ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டு தமது பாடசாலைப் படிப்பை இடைநிறுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை. + +இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை குறிப்பிடப்பட்ட ஒளிப்படங்களுடன் பயிற்றுவித்து ஆபத்தான இடங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. இதைச் செவ்வனே செய்வதற்கு இதற்கு ஐக்கிய நாடுகள் ���ிறுவர் நிதியம் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வையும் செய்துவருகின்றனர். பிராந்திய மிதிவெடி நடவடிக்கைக் காரியாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் அவ்வப்போது இந்நிகழ்சிகளைப் பார்வையிட்டு அந்நிகழ்ச்சிகள் குறித்த தமதுகருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். எனினும் மிதிவெடி நடவடிக்கைச் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ் ஏதும் வழங்கப்படுவதில்லை. மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் மிதிவெடி நடவடிக்கைக் கூட்டத்திற் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விபரிப்பர். பெரும்பாலான பிரச்சினைகள் அக்கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிதிவெடி அபாயக் கல்விபற்றி தொழில்நுடப்பக் கலந்துரையாடல்கள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெறும். + +இம்முறை அநேகமான பாடசாலைகளின் சுவர்களினல் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் அபாயம் பற்றி தூரிகை கொண்டு ஓவியம் வரையப்படும். +இம்முறை அநேகமாகத் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த மிதிவெடி அபாயக் கல்வி சம்பந்தமான திரைப்படமும், மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய ஒளிப்படங்களுடன் சிலசமயம் பல்லூடகங்களும் இதில் பயன்படுத்தப்படும். +இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தால் பரிசீலிக்கப்பட்டு அனுமதியளித்த துண்டுப்பிரசுரங்களே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். +இதில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்கள் உள்ள சுவரொட்டி மிதிவெடி அபாயக் கல்வியை நடத்தும் அமைப்பின் தொலைபேசி இலக்கத்துடன் ஒட்டப்படும். +இம்முறையில் பலரை இலகுவாகச் சென்றடையலாம். + +இந்த அணுகுமுறை பன்னெடுங்காலமாக அரசு அல்லாத அமைப்பினரால் செய்யப்படுகிறது. +குளம் கரை விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்கள் மூலம் மிதிவெடி அபாயக் கல்வி வழங்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு இது பசுமரத்தாணி போல் பதிந்துவிடுவதால் இது பெரிதும் விரும்பப்படுகிறது. +இதுபெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்களுக்கு வழங்கப்படுகிறது. + +மிதிவெடி அகற்றும் அமைப்புக்களும் மக்களுக்கு இடையே தொடர்பாடல்களை வலுப்படுத்துவதே சமூகத் தொட்ர்பாடல் ஆகும். மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை மக்கள் இனம் கண்டால் மிதிவெடி அபாயக் கல்வி அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புக்களுக்கு அறித்து அவற்றை அகற்றுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இதற்கு உரிய மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விண்ணபத்தை நிரப்பி உரிய அமைப்புக்களுக்கு அனுப்பி வைப்பர் இதில் தகவல்தந்தவரின் பெயர், முகவரி, தொலைபேசி இருப்பின் தொலைபேசி இலக்கம் ஆகிய தகவலுடன் அண்ணளவான வரைபடம் ஒன்றும் மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளின் வரைபடம் அல்லது ஒளிப்படமும் இணைக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அகற்றும் அமைப்பு இல்லாதவிடத்து இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானக் மிதிவெடி அகற்றும் பிரிவிற்கு அறிவிக்கப்படும். மிதிவெடியோ வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளோ அடையாளம் காணப்பட்டால் அது அகற்றப்படும்வரை மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் மக்களை விளிப்புடன் இருக்குமாறு கூறுவதுடன் அது அகற்றும் வரை மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் இடைக்கிடையில் அப்பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் அமைப்புக்களின் அணித்தலைவர்களுடன் கலந்துரையாடு மிதிவெடி அகற்றுவதற்கு வேண்டிய ஒத்தாசைகளைப் புரிவர். + +மிதிவெடி அகற்றும் அமைப்பினருக்கு உள்ள பிரச்சினைகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மிதிவெடிகளை அடையாளம் காணும் முள்ளுக்கம்பிகளை அகற்றுதல் போன்றவற்றை அகற்றவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவர். மிதிவெடி அகற்றுபவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்கப்படுவர், எடுத்துக்காட்டக அவை புதைக்கப்பட்ட இடங்கள் தெரிந்தால் மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தருமாறு கோரப்படுவர். + +பொதுவாக மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க முன்னரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் பின்னரு���் அறிவு நடத்தை சம்பந்தமான வினாக் கொத்தொன்றை மக்களிற்குச் செய்து மக்களை பற்றிய ஓரளவு விபரங்களைப் பெற்றுகொள்வர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிலருடன் கலந்துரைடிச் செய்யப்பட்ட வினாக் கொத்தைக் கொண்டு அக்கிராம மக்களின் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்வர். நாட்டுக்கு நாடு வேறுபடும் இவ்வினாக் கொத்தானாது நாட்டு மக்களின் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் பிரச்சினை, மக்களின் அறிவு, நடத்தை போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படும். எனினும் இவ்வினாக் கொத்தானது பிரதேச ரீதியாக மாறுபடுவதில்லை. ஒரு நாட்டிற்கு ஒரு வினாக் கொத்தே பயன்படுத்தப்படும். இவ்வினாக் கொத்தானது காலத்திற்குக் காலம் மீள்பரிசீலனை செய்யப்படும். இவ்வினாக் கொத்தின் விடையைப் பொறுத்து குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அபாயக் கல்வியை நடத்துவதா இல்லையா என்பது முன்னர் தீர்மானிக்கப்பட்டாலும், இப்போது வருடாந்தம் தயாரிக்கப்படும் மிதிவெடி நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் பகுதியாகவே மிதிவெடி அபாயக் கல்வி நடத்தப்படுகின்றது. + +மிதிவெடி அபாயக் கல்வியைப் பெரும்பாலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடாகக் கண்காணிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் மிதிவெடி திட்டத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அதிகாரிகளும் இப்பணியைச் செய்து அறிக்கை ஒன்றை வழங்குவர். + +மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது. + +மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய பிரதான கட்டுரையைப் பார்க்க. + + +குறிப்பு: சர்வதேச மிதிவெடி நடவடிக்கையின் தற்போதைய நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடி ஆபத்தான பிரதேசம் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசம் என குறிக்கப்படும். இவ்வாறு வகைக்குறிப்பதற்கு பார்க்ககூடிய வகையில் மிதிவெடியோ அல்லது மிதிவெடி விபத்து இடம்பெற்றிருந்தாலோ அவை அவ்வாறு வகைப்படுத்தப்படும். இது அக்குறிப்பிட்ட பிரதேசத்தில் மண்டை ஓட்டுக் குறிகொண்டும் மிதிவெடி நடவடிக்கைக்கான தரவு முகாமைத்துவ மென்பொருளிலும் அவ்வாறு குறிக்கப்பட்டு சேமிக்கப்படும். + + + +குறிப்பு: எப்பொழுதுமே எப்போதும் வீட���டைவிட்டுப் போகும் போது எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் எனப் பெரியவர்களுகுத் தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு சிறுவர்களை வளர்க்கவேண்டும். "இளமையிற் கல் சிலையில் எழுத்து" என்பதுபோல் சிறுவயதுப் பழக்கம் தொடர்ந்து வரக்கூடியது. இது மிதிவெடி அபாயத்திற்கு மாத்திரம் அல்ல வேறு பிரச்சினைகளிற் சிறுவர்கள் சிக்குப் பட்டாலும் இப்பழக்கவழக்கங்கள் காப்பாற்றிக் கொள்ளும். + + + +"வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது போல்" ஏற்கனவே யுத்த அனர்த்தத்தால் ஊர் ஊராக இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து திரும்பியவர்கள் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் ஆபத்துக்களைச் சமாளித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்குறோம். + + + + + +புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை + +இறுதிப் போருக்காக என்ற கோரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழரிடம் கட்டாயமாக அல்லது வற்புறுத்தி பண சேகரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக பல ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தொடராக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு "இறுதி யுத்த நிதிக்காக தமிழ்ப் புலிகள் இயக்கம் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு" என்று மார்ச் 15, 2006 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனமும் செய்தி கட்டுரை ஒன்றை இங்கே வெளியிட்டுள்ளது. + + + + + + + + +மனித உரிமைகள் கண்காணிப்பகம் + +மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) மனித உரிமைகளை முன்னிறுத்தும், ஆயும் கட்சி சார்பற்ற, அரச சார்பற்ற ஓர் அமைப்பு. இவ் அமைப்பின் தலைமையகம் நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் பாரிய மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகும். + +இவ் அமைப்பில் 150 க்கும் மேற்பட்ட திறனர்கள் கடமையாற்றுகின்றார்கள். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகளை தாயாரிப்பதுவே இவ் அமைப்பின் ஒரு முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்பு உண்டு. + + + + + +நீடிய யுகம் + +அய்யாவழியின் புராண வரலாற்றின்படியான எட்டு யுகங்களில் முதல் யுகம் நீடிய யுகமாகும். இந்த யுகத்தில் உலகில் இயக்கம் நடக்கும் பொருட்டு மும்மூர்த்திகளும் கயிலையில் வேள்வி வளர்க்க, அதில் குறோணி என்ற கொடிய அசுரன் தோன்றினான். இவன் நாலு கோடி முழம் உயரமும் அண்டம் நிறையும் அகலமும் கொண்டவனாயிருந்தான். இவனின் முகம் முதுகுபுறத்தில் இருந்தது. கால், கை, கண், செவிகள், கோடிக்கணக்கில் இருந்தது. + + + + +அரிகோபாலன் சீடர் + +அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாகக் கொடுக்கப்பட்டது. + + + + +கோ. நடேசய்யர் + +கோதண்டராம நடேசய்யர் ("K. Natesa Iyer", 14 சனவரி 1887 - 7 நவம்பர் 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையத்தில் குடியேறிய தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். 1924 முதல் இலங்கை சட்டசபையிலும், பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்தவர். + +நடேசையர் 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோதண்டராம ஐயருக்கும் பகீரதம்மாளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த நடேசையர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர். திரு. வி.க. கல்லூரியில் கல்வி பயின்றவர். 1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914-இல் வணிகர்களுக்காக "வர்த்தக மித்திரன்" என்ற பத்திரிகையை மாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். "ஒற்றன்" என்ற புதினத்தையும் எழுதினார். + +தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அச்சங்கத்தின் கிளை ஒன்றைத் தோற்றுவிக்க இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் சென்றவர், அங்கே மலைநாட்டில் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாகத் தேயிலைச் செடிகளோடு சேர்ந்து நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் கொதித்து, இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கினார். + +யாருமே நுழைய முடியாத "மலையகத் தோட்டங்களில்" ஒரு புடவை வியாபாரியாக வேடமிட்டுச் சென்று, தோட்டப்புறத் தமிழர்களைச் சந்தித்தார். மலையகத் தமிழர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குக் காரணம், கல்வியறிவின்மையும், விழிப்புணர்வின்மையுமே என்பதைக் கண்கூடாக நடேசய்யர் கண்டார். தோட்டப்புறத் துரைமார்களிடமும், கங்காணிகளிடமும் சிக்குண்டு, துன்பத்தில் கிடந்த தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவும் அவர் சூளுரைத்தார். + +1921-ஆம் ஆண்டு "தேசநேசன்" என்ற நாளிதழைத் தொடங்கினார். நடேசய்யரின் "தேசநேசன்" இதழே, இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட சிறப்பு தேசநேசன் இதழுக்கு உண்டு. தோட்டப்புறத் தமிழர்களின் துன்ப வாழ்க்கையையும், அவர்களை அடிமைப்படுத்திய கரங்களையும் தேசநேசன் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டிய நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காகவே, "தி சிட்டிசன்" என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார். நடேசய்யரின் பத்திரிகை எழுத்துகளும், பேச்சுகளும் ஆங்கிலேய அரசைத் திணறடித்தன. இலங்கையில் இந்தியத் தொழிலாளர்களைக் காப்பாற்றும் விதமாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடியும் நடேசய்யரே. இறக்குமதி செய்து வைத்திருந்த அடிமைகளை, சகமனிதர்களாக மாற்றி வந்த நடேசய்யரை நாடு கடத்திவிட அரசு பலமுறை முயற்சி செய்தது. + +1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபையில் மலையகத் தமிழரின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தேர்தல் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். அன்று தொடங்கி, 1947-ஆம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் நடேசய்யரின் உரைகள் ஒலித்தன. இலங்கை இந்தியக் காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டார். 1947 நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். + +"தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடேசையர், திரு.வி.க. வழியிலேயே 1924-ஆம் ஆண்டில், இலங்கையில், "தேசபக்தன்" என்ற இதழைத் தொடங்கினார். அரசியல் உலகில் மிகச் செல்வாக்குடன் இருந்த போதும���, தேசபக்தனில் எழுத நடேசய்யர் தவறியதேயில்லை. + +தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உருவாக்குவதற்காகவே, 1930-இல் மலையகத்தின் தோட்டத்தின் அடிவாரத்தில் குடியமர்ந்தார். தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றி அம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து தட்டியெழுப்பினார். நடேசய்யரின் இப்பெரும் பணியில் தோள் கொடுத்த பெருமை, அவரின் மனைவி மீனாட்சி அம்மையையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை விழிக்கச் செய்ததோடு, தமிழையும் அவர்கள் செழிக்கச் செய்தனர். + +தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் தொழிலாளர்களின் இதயத்தில் மின்னலாகப் பதிந்து, அம்மலை முகடுகளில் எல்லாம் எதிரொலித்தன. + +"தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை எழுதி நடேசய்யர் வெளியிட்டார். மகாகவி பாரதியின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்த பெருமை நடேசையரையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் கங்காணிகளையும், துரைமார்களையும் கேள்விக்குள்ளாக்கிய நடேசய்யரின் பாடல்கள், அத்தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் தேசியகீதமாகத் திகழ்ந்தது. + + + + + +வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். "ஒற்றன்" என்ற புதினத்தையும் எழுதினார். + + +உள்ளிட்ட பதினான்கு நூல்களை எழுதியுள்ளார். தொழிலாளர் சட்டப்புத்தகம் என்னும் நூல் ஒவ்வொரு தொழிலாளியின் கைகளிலும் இருந்ததுடன், அவர்கள் பெற வேண்டிய உரிமையையும் பட்டியலிட்டது. + +1930 இல் ஹட்டன் நகரில் குடியேறிய நடேசையர் அங்கு சகோதரி அச்சகத்தை தொடங்கினார். நவம்பர் 25, 1931 இல் தானெழுதிய "நீ மயங்குவதேன்?" என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது மனைவி மீனாட்சி அம்மையார் எழுதிய பாடல்களை "இந்தியத் தொழிலாளர் துயரங்கள்" எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டார். + +1933 இல் "புபேந்திரசிங்கள்" அல்லது "நரேந்திரபதியின் நரக வாழ்க்கை" எனும் நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இந்நூல் இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா செய்த அக்கிரமங்களை ஆவணப்படுத்தியது. இந்நூலுக்கு இந்தியாவிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. + + + + + + + +குறுக்கெழுத்துப் புதிர் + +குறுக்கெழுத்துப் புதிர் என்பது குறுக்கும் நெடுக்குமாக வரையப்படும் கோடுகளைனால் உருவாகும் கட்டங்களுக்கு இலக்கங்கள் இடப்பட்டு அக்கட்டங்களைச் சொற்களைக் கொண்டு நிரப்புவதற்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்படும் புதிர் ஆகும். குறுக்கெழுத்துப் புதிர்கள் பத்திரிகைகளில் பெருமளவில் வெளிவருகின்றன. அவற்றுக்கென வெளியாகும் நூல்களும் உள்ளன. + +இக்குறுக்கெழுத்துப் புதிரினை முதன்முதலில் அறிமுகம் செய்தவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் வைன் இனங்காணப் பட்டுள்ளார். 1913ஆம் ஆண்டில் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இவர் அவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மலரில் குறுக்கெழுத்துப் புதிரினை அறிமுகம் செய்தார். + +இதனைத் தொடர்ந்து ஏனைய அமெரிக்கப் பத்திரிகைகளும் குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிடத் தொடங்கின. பின்னர் இங்கிலாந்துக்குப் பரவிய இப்புதிர் இப்பொழுது உலகெங்கும் பிரபல்யம் பெற்றுள்ளது. + + + + +பகாய் சமயம் + +பஹாய் நம்பிக்கை 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பஹாவுல்லா அவர்களினால் தொடங்கப்பட்ட சமயமாகும். உலகம் முழுவதும் 200க்குமதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். + +பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார். + +பஹாய் () என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது "இறைவனின் ஓளி" எனப் பொருள்படும் அரபு மொழிப் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். "பஹாயிசம்" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன. + +பஹாய் போதனைகளை மூன்று முக்கிய கருத்துக்களுக்குள் அடக்கலாம் அவையாவன ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனித���ுலத்தின் ஒற்றுமை என்பனவாகும். பல பஹாய் நம்பிக்கைகள் இவற்றை மையப்படுத்தியே அமைந்துள்ளனவாயினும் இவற்றை மட்டும் கருத்திற் கொள்வது பஹாய் நம்பிக்கைகளை மிகவும் சுருக்கியதாக அமைந்துவிடும். + +பஹாய் சமயத்தின் நிறுவனர் பஹாவுல்லா என்பவராவார். அவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். + +பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைவனின் ஓர் இறைத்தூதர் என்பதை மிகத்தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, ஆற்றிய காரியங்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீக அவதாரங்களின் தொடர்வரிசையில் மிகவும் சமீபமாகத் தொன்றியவர் என பஹாய்கள் கருதுகின்றனர். + +பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனுக்குலத்திற்கான இறைவனின் விருப்பம் நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களை பிரதிநிதிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனுக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சிநிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறியுள்ளார். உலக புனித சாஸ்திரங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுபோல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்,” என அவர் எழுதியுள்ளார். + +பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் சமயம் உலகின் சுதத்திரமான சமயங்களிலேயே மிகவும் இளமையான சமயமாகும். அது மற்ற சமயங்களிலிருந்து வெவ்வேறு வகைகளில் வேறுபட்டுள்ளது. 10,000 உள்ளூர் சமூகங்களில் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிமன்றங்களுடைய பஹாய் சமயம் தனிச்சிறப்புடைய உலகளாவிய ஓர் நிர்வாகமுறையை பெற்றுள்ளது. + +நடப்பு சமூக பிரச்சினைகளின்பால் மிகவும் வேறுபட்ட ஓர் அணுகுமுறையை பஹாய் சமயம் கடைப்பிடிக்கின்றது. பஹாய் சமயத்தின் பு��ிதசாஸ்திரங்களும் அதன் உறுப்பினர்களின் பலதரப்பட்ட நடவடிக்கைகளும் உலகத்தின் முக்கிய மேம்பாடுகள் அனைத்தின்பாலும் கவனம் செலுத்துகின்றன. கலாச்சார ரீதியான பல்வகைத்தன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புதிய சிந்தனைகள் உட்பட, முடிவெடுக்கும் செயல்பாட்டை பல்முனைப்படுத்துவது; குடும்ப வாழ்வு மற்றும் நெறிமுறைகளின்பால் புதிப்பிக்கப்பட்ட ஈடுபாட்டிலிருந்து, உலகளாவிய அண்டைச் சமூகமாக உருவெடுத்துள்ள இவ்வுலகில் சமூக பொருளாதார நீதிமுறையை அறைகூவுவது போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. + +பஹாய் சமயத்தின் மிகவும் தனிச்சிறப்புமிக்க நிறைவேற்றமாக அதன் ஐக்கியமே இருந்துவந்துள்ளது. சமூக அரசியல் இயக்கங்கள் உட்பட, உலகின் மற்ற சமயங்களைக் காட்டிலும் சமயப்பிரிவுகளாகவும் இனைப்பிரிவுகளாகவும் பிளவுபடுவதற்கான காலங்காலமான உந்துதல்களை பஹாய் சமூகம் மிகவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது. மற்ற புராதன சமயங்களைப்போன்றே மிகவும் கொந்தளிப்பான வரலாற்றை பெற்ற பஹாய் சமயம் அதன் ஐக்கியத்தை இதுவரை காப்பாற்றியே வந்துள்ளது. + +பஹாவுல்லா ஓர் உலககளாவிய ஐக்கியத்திற்கான செயல்பாட்டை அன்றே அறைகூவியுள்ளார். இன்று அச்செயல்பாடு பெரிதும் மேம்பாடு கண்டுள்ளது. வரலாறு குறித்த செயல்பாடுகளின் வாயிலாக, இனம், வகுப்பு, சமயம், தேசம் ஆகிய பாரம்பரியமான தடைகள் படிப்படியாக அகன்று வருகின்றன. தற்போது செயல்படும் சக்திகள் காலப்போக்கில் ஓர் அனைத்துலக நாகரிகத்தை உருவாக்கும் என பஹாவுல்லா முன்னறிவித்துள்ளார். தங்களின் ஐக்கியம் குறித்த உண்மையை ஏற்றுக்கொண்டும் இப்புதிய உலகத்தை உருவாக்கிட உதவுவதுமே உலக மக்களின் பிரதான சவாலாக இருக்கின்றது. + +உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு புதிய மற்றும் அமைதியான உலகமய நாகரிகத்தை உருவாக்கிட முயல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தனிநபர் மற்றும் சமூகத்தின் தன்மைமாற்றத்தின் வாயிலாகவே இக்குறிக்கோளை அடைந்திட செயல்படுகின்றனர். படத்தில் காணப்படும் எர்டென்புல்கான், மொங்கோலியா எனும் இடத்தில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான விவசாய முயற்சியினைப்போல் அடித்தள மக்களை உட்படுத்தும் பல சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு நல்குவதும் இதில் உள்ளடங்கும். + +ஓர் உலகமய சமுதாயம் தழைத்தோங்கிட, அது குறிப்பிட்ட சில அடிப்படைக் கோட்பாடுகளை அத்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும் என பஹாவுல்லா கூறுகின்றார். எல்லாவித முன்தப்பெண்ணங்கள்; ஆண் பெண்களுக்கிடையில் முழு சமத்துவம்; உலகத்தின் பெரும் சமயங்களுக்கிடையே உள்ள அடிப்படை ஒற்றுமையைப் புரிந்துகொள்வது; வறியநிலை பெரும்செல்வம் ஆகியவற்றுக்கிடையிலான தூரத்தை குறைப்பது; அனைத்துலகக் கல்வி; விஞ்ஞானம் சமயம் ஆகியவற்றுக்கிடையே இணக்கம்; சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இடையே தொடர்ந்து பேணப்படக்கூடிய சமநிலை; மற்றும் கூட்டு பாதுகாப்பு மற்றும் மனுக்குல ஒற்றுமையின் அடிப்படையில், ஸ்தாபிக்கப்படக்கூடிய ஓர் உலகக் கூட்டரசு முறை ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது. + +உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் இக்கோட்பாடுகளின்பால் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். அதைப் பெரும்பாலும், அடித்தள மக்கள் சமூகங்களில் சமீப காலமாக மேற்கொள்ளப்படும் பெரும் எண்ணிக்கையிலான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தனிபஹாய்கள் மற்றும் பஹாய்சமூகங்களின் தன்மைமாற்றத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். + +பஹாவுல்லாவின் விசுவாசிகள், உள்ளூர், தேசிய மற்றும் அனைத்துலக ரீதியிலாக ஆட்சிமன்றங்களின் ஒன்றுபடுத்தப்பட்ட ஒரு வலைப்பின்னலை அமைக்கும் பணியில் பரந்துவிரிந்ததும், பலதரப்பட்டதுமான ஓர் உலகசமூகத்தை உருவாக்கியுள்ளனர். இச்சமூகம் தனிச்சிறப்புமிக்க வாழ்வு மற்றும் செயல்முறைகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது மற்றும், இச்சமூகம் கூட்டுறவு, இணக்கம், சமுதாயச் செயல்பாடு ஆகியவை குறித்த உற்சாகமளிக்கும் ஓர் உருமாதிரியை வழங்குகின்றது. தனது விசுவாசத்தில் பெரிதும் பிளவுபட்டுக்கிடக்கும் ஓர் உலகத்தில், இது ஒரு தனிப்பெரும் சாதனையாக விளங்குகின்றது. + + + + + +வெல்லம் + +வெல்லம் (இலங்கை வழக்கு: சர்க்கரை, கருப்பட்டி) எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் "ஜக்கரி" என அழைக்கப்படுகிறது. + +வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். தலைமையாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் ஒன்றில் வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்ம��� உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. மேம்பட்ட மருத்துவத்தில் வெல்லத்திற்குத் தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவைத் தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. + +வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்த வண்ணம், சுமார் 200 °C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாற்றில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. + +கரும்பில் இருந்து பெறப்படும் வெல்லம் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்கள் கரும்பு வெல்லத்தில் இருந்து செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் பாயாசத்தில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் திருமண விழாக்களில் மணமக்கள் எதிரெதிரில் நின்று ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகின்றனர். + +வட இந்தியாவில் பனை வெல்லத்தை குர் என அழைக்கின்றனர். பெரும்பாலான பனை வெல்லம் பேரீச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் 'சாகோ' எனப்படும் பனையில் இருந்தும் தென்னையில் இருந்தும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனை வெல்லத்தை இலங்கை மற்றும் சில தென்கிழக்காசிய நாடுகளில் பாகு போன்ற பதத்திலும் பயன்படுத்துகின்றனர். இதனை 'பனைத் தேன்' என அழைக்கின்றனர். இலங்கையில் கற்பகக் கட்டி என்றும் அழைப்பதுண்டு. பதநீரில் உள்ள குளுக்கோஸ், கல்சியம், இரும்பு, விட்டமின் பீ என்பவை பனை வெல்லத்தில் அடங்கியுள்ளன. இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்த குழந்தைகளின் உடலை சீராக்குகின்றது. இது கருவுற்ற பெண்களுக்கும், மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கும் சிறந்த உணவு ஆகும். இது மிக எளிதில் சீரணமாகி இரத்தத்தில் கலக்கின்றது. இதயத்திற்கு வலுவையும் கொடுக்கின்றது. பனைவெல்லத்தில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி இரத்தக் கசிவையும் தடுக்கின்றது. இரும்புச்சத்து உடலின் பித்தத்தை நீக்குகின்றது. சொறி சிரங்கு, ஜலதோசம் போன்றவற்றை இது அடக்கி விடுகின்றது. பனை வெல்லத்தில் 82% வெல்லச்சத்தும் சாதாரண சீனியில் 98% வெல்லச்சத்தும் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேநீர் போன்ற பானங்களுக்குச் சீனிக்குப் பதிலாக பனை வெல்லத்தைப் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். + +பின்வரும் உணவுப் பண்டங்களில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது: + + +பின்வரும் பானங்களில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது: + + + + + +மென்பொருட் பொறியியல் + +1940களில் கணினியானது வன்பொருளை (ஹாட்வெயார்) வடிவமைப்பதே பகீரதப் பிரயத்தனமாக இருந்தது. முதலாம் சந்ததிக் கணினிகளில் எந்த ஒரு இயங்குதளமும் இருக்கவில்லை. கணினிக்குத் தரவானது சுவிச்களூடாகவும் (switch) காந்த நாடாவூடாகவுமே (Magenetic Tapes) ஊடாகவே உள்ளிடப்பட்டது. 1950 களில் இரண்டாம் சந்ததிக் கணினிகள் உருவாகத் தொடங்கின. இவை சாள்ஸ் டார்வினின் கூர்புத் தத்துவம் போன்று இவை கணினி இயங்குதளத்தைக் கொண்டிருந்ததுடன் இக்காலப் பகுதியில் மேல் தர நிரலாக மொழிகள் (High Level Programming Languages) உருவாக்கத் தொடங்கின. வன்பொருட்களின் திறனானது பலமடங்காகாக அதிகரித்ததுடன் அவற்றில் விலையானது சரமாரியாகக் குறையத் தொடங்கியது. இம்மாறுதல்களால் கணினியில் மென்பொருட்களை உருவாக்குதலில் கூடுதலாகக் கவனம் திரும்பியது. கணினிகள் பல்வேறுபட்ட பிரயோகங்களைக் கையாளும் வண்ணம் உருவாக்கப்பட்டது. + +மென்பொருட்கள் இலகுவான நிரலாக்கலில் இருந்து மிகவும் சிக்கலான பரந்து பட்ட தேவைகளுக்காக உருவாகத் தொடங்கியது. இவற்றை உருவாக்குவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. சிறிய நிரல்களை உருவாக்குவதற்கு பாவிக்கப்பட்ட உத்திகள் பெரிய மென்பொருட்களைப் உருவாக்கப் பாவிப்பதற்கு உபயோகிக்க முடியாமல் இருந்தது. இதில் முறையாக ஆவணப்படுத்தாமை, சிறப்பான திட்டமிடல் இன்மை, சீர்தரமான நிரலாக்கல் இன்மை, மென்பொருள் விருத்தியாளர்களுக்கிடையிலான கூட்டு விருத்தியாக்கம் இன்மை போன்ற பெரும் பிரச்சினையாக அமைந்தது. இதன் காரணமாக மென்பொருளின் விலை வரம்புமீறீயது, திட்டமிட்ட ��ிகதிக்குள் மென்பொருளை விருத்திசெய்ய முடியாமல் இருந்தது. இதைத் தீர்த்து வைப்பதற்காக மேலும் நிரலாக்கர்கள் திட்டங்களிற்குத் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதனால் மேலும் மென்பொருள் விருத்தியாக்கம் மேலும் பிற்போடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் திட்டத்திற்கு சேர்க்கப்பட்ட புதிதான நிரலாக்கர்களை பயிற்றுவிப்பதில் செலவிடப்பட்ட நேரவிரயமும் மென்பொருள் விருத்தியாளர்களுக்கிடையிலான கூட்டிணைவும் இல்லாமையாகும். + +மென்பொருள் ஓர் நிரலாக்கலின் சேர்கை (Collection of Programs) அன்று. நிரல் ஆனது பொதுவாக ஓர் குறிப்பிட்ட பிரச்சினையை கணினியூடாகத் தீரத்துவைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதைப் பெரும்பாலும் உருவாக்கிய நிரலாக்கரே பாவிப்பதுடன் இது பொதுவாக ஆவணப்படுத்தப் படுவதில்லை. + +மென்பொருளானது பல கணினி நிரல்களுடன், அவற்றின் செயன்முறை, விதிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த ஆவணங்களைக் குறிப்பிடுகின்றது. + +மென்பொருட் பொறியியியல் ஆனது மென் விருத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்த்துவைக்கும் முறையாகும். இது எனைய பொறியியல் நடைமுறைகளில் இருந்து மாறுபட்டதாகும் ஏனெனில் இயற்கையாக (இலங்கைத் தமிழ்: பௌதீகரீதியாக) இவை எவற்றையும் கொண்டிராமல் மென்பொருட்களை அலசி ஆராய்வதாகும். +இந்தத் தொடர்பாடல் இடைவெளியே "பகுத்தறிவுத் தூரம்" (Intellectual Distance) என்றழைக்கப்படுகின்றது. மென்பொருட்களின் தோல்வியானது பல காரணங்களால் ஏற்படுகின்றது. அவையான "திட்டமிடல் பிழைகள்", "மென்பொருட் பிழைகள்", தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றனவாகும். மென்பொருட் பொறியியலின் நோக்கமானது சிறந்த மென்பொருளை பொருளாதார ரீதியாக இலாபகரமாக உருவாக்குதல் ஆகும். + +மென்பொருட் பொறியல் ஆனது IEEE இன் வரைவிலக்கணப்படி "ஓர் ஒழுங்குமுறைப்படி மென்பொருளை +விருத்திசெய்து, இயக்கிப் பாரமரிப்பதே மென்பொருட் பொறியியல் ஆகும்" + +எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு அந்தப் பிரச்சினையை ஐயம் திரிபு அற அறிதல் வேண்டும். பின்னர் அதை திட்டமிட்டு, நிரலாக்கி இறுதியாக அதைச் சோத்திப் பார்த்தல் வேண்டும். இச்செய்கைகளுக்கிடையிலான ஓர் தெளிவான எல்லைகள் இல்லை. எந்த மென்பொருள் விருத்தியானதும் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் பெரிய மென்பொருள் விருத்தித் திட்டங்களில் இவை சம்பிரதாய பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும். ஒவ்வொரு நடவடிக்கையும் சிக்கலானதாக இருப்பின் அவற்றைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கையாளலாம். கீழ்வருவன மென்பொருள் விருத்தியின் முக்கிய படிமுறைகள் ஆகும். + +அளவு கடந்த வளங்களும் அளவு கடந்த நேரமும் இருந்தால் எல்லாத் திட்டங்களும் சாத்தியமானவையே. எனினும் நடைமுறையில் மென்பொருள் விருத்தித் திட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தையும் மட்டுப்படுத்தப்பட்ட நிரலாக்கர்களையுமே கொண்டுருப்பதால் எல்லாத் திட்டங்களும் நடைமுறையில் சாத்தியம் என்பதற்கில்லை. எனவே திட்டமொன்றின் நடைமுறைச் சாத்தியத்தியத்தை அத்திட்டத்தின் ஆரம்பத்திலேயே கண்டறிதல் அவசியம் ஆகும். மென்பொருளை விருத்திசெய்ய இயலுமா எனக் கண்டறிகையில் நான்கு முக்கிய பகுதிகள் கணக்கிற் கொள்ளப்படும். + +இந்த மென்பொருளை விருத்தி செய்ய இயலுமா எனக் கண்டறியும் அறிக்கையானது திட்ட நடைமுறைப்படுத்தல் (அமுலாக்கலில்) உள்ள அதிகாரி ஒருவரினால் மீளாய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் இருந்து மேற்கொண்டு திட்டமொன்றை முன்னெடுப்பதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். + +மென்பொருட் தேவைகளை ஐயம் திரிபற அறிதலானது மென்பொருள் விருத்தியின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய ஓர் படிமுறையாகும். + +மென்பொருட் தேவைகளைக் கண்டறியும் ஆய்வுமுறையானது "தேவைகளை ஆராய்ந்து, அவற்றை ஒழுங்கமைத்து, மாதிரிகளை உருவாக்கி மென்பொருட் தேவைகளை வரையறுப்பதாகும்". + +இந்த ஆய்வானது மென்பொருட்களின் தேவைகளைக் கண்டறிவதற்காகச் செய்யப்படுகின்றது. இச்செயன்முறையில் மென்பொருள் விருத்தியாளரும் வாடிக்கையாளும் ஒன்றாக அமர்ந்து வாடிக்கையாளரின் தேவைகளைச் சரியாகக் கண்டறியவேண்டும். இவர்களுக்கிடையில் பெரும்பாலும் பலர் தொடர்பாடற் சிக்கல்கள் இருக்கும். + +தேவைகளைக் கண்டறியும் படிமுறையானது ஓர் ஆவணத்தில் அதன் தேவைகள் பதியப்படும். இந்த ஆவணமானது மேலும் சீர் செய்யப்பட்டு "மென்பொருட் தேவைகளை வரையறுக்கும்" ஓர் ஆவணமாக மாற்றப்படும். இத்தேவைகளை நிறைவேற்றும் ஒருவர் சிஸ்டம் பகுப்பாளர் அல்லது சிஸ்டம் அனலைஸ்ட் (System Analyst) என்றவாறு அழைக்கப்படுவார். இந்நிலையில் இரண்டு முக்கிய படிமுறைகள் செய்யப்படும். + +பகுப்பாய்வு செய்தல் முற்று மு��ுதாக ஓர் சிஸ்டம் ஒன்றில் பிரச்சினைகளையும் அதன் பொருத்தாமான தன்மைகளையும் கண்டறிதல் ஆகும். அந்த மென்பொருளில் உள்ள தரவுகள் எங்கெங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும், அதன் தேவைகள், உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகள் போன்றவை இதுவரை இல்லாத ஓர் சிஸ்டத்தை (System) ஐ விளங்குவது கடிமாகத்தான் இருக்கும். சிஸ்டம் பகுப்பாளர் வாடிக்கையாளருக்கு புதிய சிஸ்டத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் அனுகூலங்களையும் அடையாளம் காண உதவுவார். + +இந்தக் கட்டமானது இதன் தேவைகளைச் வரையறுத்தது சரியாக என சரிபார்ப்பதுடன் நிறைவுறுகின்றது. இதன் நோக்கமானது வாடிக்கையாளரில் எல்லாத் தேவைகளும் சரியான முறையில் தேவைகளை வரையறுக்கும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எனக் கண்டறிவதாகும். + +வடிவமைப்பு (ஆங்கிலம்: டிசைன்) என்பது எந்தவொரு பொறியியற் செயன்முறையில் முதலாவதாகச் செய்யப்படும் ஓர் வழிமுறையாகும். இலகுவான முறையில் இக்கட்டத்தை விபரிப்பதானால் இது ஏற்கனவே "தேவைகளை வரையறுத்த ஆவணத்தின் படி" மென்பொருளை உருவாக்குதலுக்கான திட்டமிடல் நடவடிக்கையாகும். தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்கின்றோம் என்பதே இங்கு பிரதானமானதாகும். இக்கட்டத்தின் வெளியீடாக ஓர் திட்டமிடல் ஆவணம் ஒன்று தயாரிக்கப்படும். + +மென்பொருள் வடிவமைப்பு என்பது பல்வேறு பட்ட உத்திகளைக் கையாண்டு அதிலுள்ள சாதனங்கள், செய்கைகள், மற்றும் மென்பொருளின் போதுமான தகவல்களைக் கொடுத்து அது எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை வெளிக்காட்டுவதாகும். + +இந்த ஆவணம் ஆனது ஓர் தீர்வொன்றை அளிக்கும் திட்டமொன்றின் திட்டமிடலாகும். இது பின்னர் மென்பொருளை நடைமுறைப்படுத்துவதிலும், சோதிப்பதிலும், பராமரிப்பதிலும் பயன்படுத்தப்படும். இதில் இரண்டு முக்கிய வழிமுறைகள் கையாளப்படும் + +பெரிய சிஸ்டமானது சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படும். இவை தனியாக விருத்திசெய்யக் கூடியதாக மிகச்சிறியபகுதிகளப் பிரிக்கப்படும். இவ்வாறான அணுகுமுறையானது பிரச்சினைகளைப் பிரித்தாழும் (Divide and Conquer) முறையாகும். ஏனெனில் பகுதிகளானது தனித்தனியே விருத்தி செய்யப்படுவதால் ஏனைய பகுதிகளில் செய்ற்பாடுகள் பற்றிய நல்ல விளக்கம் இருத்தல் அவசியம் ஆகும். இவ்வாறு சிஸ்டத்தைப் பிரிக்கும் போது விருத்தியாளர் ஆனவர் பிரிக்கப்பட்ட பகுதியிலேயே கவனம் செலுத்த வேண்டும். + +இந்த டிசைன் ஆனது மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு சரியென உறுதிப்படுத்தப்பட்டதும் இந்தப் படிமுறையானது நிறைவடைகின்றது.. + +இந்தப்படி முறையின் நோக்கமானது மென்பொருள் வடிவமைப்பில் தரப்பட்ட ஆவணத்திற்கு அமைய பொருத்தமான நிரலாக்கல் மொழியில் சரியாகவும் வினைத்திறனானவும் நிரலாக்காப்படும். இது சோதித்தல் மற்றும் பராமரித்தற் படிமுறைகள் இப்படிமுறையிலே தங்கியுள்ளது. நன்றாக நிரலாக்கப்பட்ட மென்பொருளானது இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது. இந்தப் படிமுறையானது கவனமெடுத்துச் செய்யப்படவேண்டும் ஏனெனில் சோதித்தல் மற்றும் பராமரித்தலுடன் ஒப்பிடுகையில் இது செலவு குறைவானதாகும். நிரலாக்கத்தின் இலகுவாக வாசித்து விளங்கக் கூடியவாறு நிரல்களை ஆக்குவதாகும். நிரலாக்கம் ஆனது பிழைகள் அற்றது என மீளாய்வு செய்யப்படும். + +இப்படிமுறையானது மென்பொருட்களில் உள்ள பிழைகளைக் கண்டறியும் வகையில் மென்பொருளை இயக்குவதாகும். இது மென்பொருள் விருத்தியில் முக்கிய தரக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் செயற்படாகும். இச்செயற்பாடுகளூடாக மென்பொருளில் உள்ள சந்தேகத்திற்கிடமான அல்லது முரண்பாடான மென்பொருட் தேவைகளைக் கண்டறிவதோடு சிஸ்டம் வடிவமைப்பில் உள்ள பிழைகள் மற்றும் நிரலாக்கலில் உள்ள பிழைகள் கண்டறியப்படுகின்றன. மென்பொருளைச் சோதிப்பதன் மூலம் மென்பொருட் தேவைகளுக்கமைய மென்பொருளானது வடிவமைக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இம்மென்பொருளானது வினைத்திறனாக இயங்குகின்றதா என்பதும் கண்டறியப்படுகின்றது. சோதனையில் இல்லாத அம்சங்கள் இதன் மூலம் கண்டறிய முடியாவிட்டாலும் தற்போதுள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய உதவுகின்றது. + +மென்பொருட் சோதனைகள் இரண்டு வகைப்படும் ஒன்று வெள்ளைப் பெட்டிச் சோதனை (White Box Testing) மற்றையது கறுப்புப் பெட்டிச் சோதனை (Black Box Testing). இதில் கறுப்புப் பெட்டிச் சோதனையில் ஒவொரு பகுதியும் எவ்வாறு இயங்குகின்றது என்பதை உள்ளீடுகளைக் கோடுத்து அதில் வரும் வெளியீடுகளைச் சரிபார்பதன் மூலம் சரியாக இயங்குகின்றதா என்பது கண்டறியப்படும். வெள்ளைப் பெட்டிச் சோதனையில் நிரலாக்கம் ஆனது ஆய்வுசெய்யப்பட்டும். இது தவிர பல்வேறுபட்ட சோதனை மாதிரிகளும் பயன்படுத்தப்படும். + +சோதனையானது ஓர் திட்டமிட்ட வகையிலேயே நடத்தப்படும். அதில் எந்த விதமான சோதனைகள் செய்யப்படவேண்டும், எந்தக் காலப்பகுதியில் செய்யவேண்டும், எவ்வளவு வழங்களை ஒதுக்குதல் வேண்டும் மற்றும் சோதனைகளுக்கான வழிகாட்டல்கள் போன்றவை தீர்மானிக்கப்படும். இச் சோதனையின் முடிவில் சோதனை அறிக்கையும் வழு அறிக்கையும் சமர்பிக்கப்படும். + +இந்தக் கட்டத்தில் ஏற்கனவே சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட மென்பொருளானது வாடிக்கையாளரின் கணினியில் நிறுவதாகும். இக்கட்டத்தில் வன்பொருள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ட இம்மென்பொருட்களுக்கமைய உள்ளதா எனக் கண்டறியப்படும். ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் அவை ஆவணப்படுத்தப்பட்டு விருத்தி செய்யப்பட்ட மென்பொருளானது வாடிக்கையாளரின் எதிர்பார்பிற்கமைய உள்ளவாறு சரிசெய்யப்படும். + +மென்பொருளின் வாழ்க்கைச் சக்கரத்தில் இது ஓர் முக்கியமான படிமுறையாகும். இது மென்பொருள் நிறுவலிற்குப் பின்னர் மென்பொருளானது சரியாக இயங்குகின்றதை உறுதிப்படுத்தும் எல்லாச் செயன்முறைகளும் இதில் அடங்கும். தேவைகளில் மாற்றங்கள் ஏற்படுவதனாலும் மென்பொருளைப் பராமரிக்கவேண்டி ஏற்படுகின்றது. + +பொறியியல் வழிமுறைகளில் (Engineering Methods) ஒழுங்கி மென்பொருள்களை வடிவமைப்பதை மென்பொருள் பொறியியல் (Software Engineering) என்பர். மென்பொருட் தேவைகளைக் கண்டறிந்து மென்பொருட்களை வடிவமைத்து, மென்பொருட்களை உருவாக்கி, மென்பொருட்களைச் சோதித்து பராமரிபதற்கான வழிமுறைகளாகும். மென்பொருட் பொறியியல் ஆனது கணினிப் பொறியியல், கணினி விஞ்ஞானம், முகாமைத்துவம், கணிதம், திட்டமிடம் முகாமைத்துவம், தர முகாமைத்துவம் மற்றும் மென்பொருட் பொறியியல் போன்றவற்றில் இருந்தும் வேண்டிய அறிவினைப் பெற்றுக்கொள்ளவும். +மென்பொருள் வடிவமைப்பை மரபுசார் பொறியியல் என்று ஏற்றுக்கொள்ள பின்வரும் ஆட்சோபனைகளை சிலர் எழுப்புகின்றார்கள்: + +சில மென்பொருள் திறனர்கள், மென்பொருள் வடிவமைத்தல் ஒரு கலையெனவும், அச்செயலாக்கத்தை விபரிக்க software development என்ற சொலே பொருத்தம் என்று கூறுகின்றனர். + + + + + +மென்பொருள் உருவாக்க செயல்முறை + +மென்பொருள் உருவாக்க செயல்முறை ("Software Engineering Methodology") ஒரு ம��ன்பொருள் ஆக்குவதற்கு எடுக்கப்படவேண்டிய படிமுறைகளை அல்லது நடவடிக்கைகளை விபரிக்கின்றது. பின்வரும் செயலாக்க படிகள் மென்பொருள் பொறியியல் வழுமுறைகளுக்கு அவசியம். அவை ஒன்றின் பின் ஒன்றாக தரப்பட்டிருந்தாலும் மென்பொருள் பொறியமைப்பில் சில படிகள் சுழற்சி முறையில் மீண்டும் செய்யப்படவேண்டி வரலாம். மேலும், சில படிகள் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும். உதாரணமாக ஆவணப்படுத்தல் தொடக்கத்தில் இருந்து இடம்பெறும் ஒரு நடவடிக்கையே, எனினும் அந்த படியமைபில் ஆக்கப்படுத்தல் ஒரு பூரணத்துவம் அடையும். + +பொதுவாக மென்பொருள் பொறியியல் வழிமுறையின் அனைத்து படிகளும் மென்பொருள் உருவாக்கத்துக்கு அவசியமே. எனினும் எப்படி ஒரு மென்பொருளை உருவாக்குதென்பதற்கு பல ஆக்க மாதிரிகள் (Models) உண்டு. அவை தத்துவ, செயலாக்க, பயன்பாட்டு நிலைகளில் வேறுபட்டு நிற்கின்றன. அவற்றுள் எவை சிறந்தது என்பது மென்பொருள் பொறியியலாளர்களில் தேவை மற்றும் விருப்பு வெறுப்க்களை பொறுத்தது. + +மென்பொருள் பொறியியல் முறைமைகளில் சில எடுத்துக்காட்டுகள்: + + + + +இந்திய தேசிய லீக் + +இந்திய தேசிய லீக் (Indian National League), பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து இப்ராகிம் சுலைமான் சேட் வெளியேற்றப்பட்ட பின் அக்கட்சியில் இருந்து பிரிந்து ஏப்ரல் 23, 1993 ஆம் ஆண்டு இக்கட்சி உருவானது. + +கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் நெருங்கியத் தொடர்புகளை இக்கட்சி கொண்டுள்ளது. தமிழ்நாட்டில், 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு நான்கு இடங்களைப் பெற்றது. பின்னர் 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில், புதிய தமிழகம் கட்சித் தலைமையில் அமைந்த மூன்றாவது முன்னணியில் பங்கு கொண்டு போட்டியிட்டது. இதே தேர்தல்களில் மேற்கு வங்காளத்திலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய இளைஞர் லீக் என்றும் மாணவர் பிரிவு தேசிய மாணவர் லீக் என்றும் அழைக்கப்படுகிறது. + + + + +புலம்பெயர் ஈழத்தமிழர் + +தொழில் நோக்குக்காகவோ ஈழப் போராட்டம் காரணமாகவோ ஈழத்தில் இருந்து பிற நாடுகளுக்கு சென்று அங்கே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் எனலாம். 1983 இலங்கை கலவரங்களுக்குப் பின்னர் ஏறத்தாழ எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கலாம் என்று கணிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா ஆகிய இடங்களில் வசிக்கின்றார்கள். + + + + + +அ. யேசுராசா + +அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் +தீவிரச் செயற்பாட்டாளராக இருந்தவர். + +பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர். காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர். + +இவர் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை கனகரத்தினம் மத்திய மகாவித்தி��ாலயத்திலும் கற்றவர். அஞ்சல் அதிபர், தந்தியாளர் சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். + +திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார். + +1975 இல் தொடங்கப்பட்ட "அலை" இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான "கவிதை" இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் "தெரிதல்" என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார். + +அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார். + + + + + + +அலை (இதழ்) + +அலை ஈழத்தின் இலக்கிய சிற்றிதழ்களில் முக்கியமானதொன்று. 1975 முதல் 1990 வரையான காலப்பகுதியில் 35 இதழ்கள் மட்டுமே வெளியான போதிலும் இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்ப ஆசிரியர் குழுவினரில் ஒருவரான அ. யேசுராசா கடைசி வரை தொடர்ந்து ஆசிரியராகச் செயற்பட்டார். வெளிவரத் தொடங்கிய முதல் ஆண்டில் 12 இதழ்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இந்த பன்னிரு இதழ்கள் மீண்டும் மறுபதிப்புச் செய்யப்பட்டு கெட்டி அட்டைப் பதிப்பாக வெளிவந்தன. சஞ்சிகை ஒன்று முழுமையாக மறுபிரசுரம் செய்யப்பட்டமை இதற்கு முன் தமிழில் நடைபெறாத ஒன்றாகும். + + + + + +கவிதை (இதழ்) + +கவிதை இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளியான ஒரு சஞ்சிகை. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. இது இளங்கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததுடன் அவர்களது நேர்காணல்களையும் வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கவிதைகள், கவிதை நுட்பங்கள், கவிதை நூல் அறிமுகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இச்சஞ்சிகை வெளிவந்தது. 1994 - 1995 காலப்பகுதியில் வெளியானது. 800 பிரதிகள் அச்சிடப்பட்டு, ஆண்டுச் சிறப்பிதழ் உட்பட ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. 1995 மாபெரும் இடப்பெயர்வுக்குப் பின் இச் சஞ்சிகை வெளிவரவில்லை. + + + + +தெரிதல��� (இதழ்) + +தெரிதல் இளையவர்களுக்கு காத்திரமான இலக்கியத் தகவல்களை அறிமுகப்படுத்தி வந்த ஒரு சிற்றிதழ் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. 2003 ஆம் ஆண்டு மார்கழியில் தொடங்கப்பட்ட தெரிதல் இருமாத இதழாக 2006 ஆவணி வரை வெளிவந்தது. எல்லாமாக 15 இதழ்கள் வெளிவந்தன. முதல் இதழில் 1500 பிரதிகளும் இரண்டாவது இதழில் 2000 பிரதிகளும் அச்சிடப்பட்டன. ஏ- 4 அளவில், எட்டுப்பக்கங்களில் வெளியான இதன் விலை 5 ரூபா. இவ்விதழில் கலை இலக்கிய உலகு சார்ந்த விடயங்கள் சுருங்கிய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இளைஞரைப் பாதிக்கும் ஜனரஞ்சகப் புத்தகங்களினதும், திரைப்படங்களினதும் போலித்தன்மைகள் சுட்டிக்காட்டப் பட்டன. தமிழிலும் பிறமொழிகளிலும் வந்த நல்ல திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கவிதைகள், சிறிய சிறுகதைகள், நூல் அறிமுகம், விமர்சனம் போன்ற அம்சங்களைத் தாங்கிவந்த தெரிதல் அப்பால்தமிழ் இணையத்தளத்திலும் வெளியிடப்பபட்டது. + +தெரிதல் இதழின் நான்காவது வெளியீட்டிலிருந்து ஒரு பக்கத்துக்கு 100 ரூபா, அரைப் பக்கத்துக்கு 50 ரூபா என்ற கணக்கில் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. சன்மானத்துடன் இருஇதழ்களும் இனாமாகக் கொடுக்கப்பட்டன. + + + + + +பத்மாசனம் + +பத்மாசனம் யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமாம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது. + +கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம். + +பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வீராசனம் செய்து பழகியபின் பத்மாசனம் செய்யக் கூடியதாக இருக்கும். + +இடுப்பு பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். மனம் ஓய்வடைகிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. + + + + +வீராசனம் + +வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம். + +கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை சாதாரணமாக மடித்துக் கொண்டு இடது காலை வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். இடது காலை மடித்து வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். + +பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வீராசனம் செய்து பழகியபின் பத்மாசனம் செய்யக் கூடியதாக இருக்கும். ஆரம்பத்தில் சிரமமிருந்தால் கால்களை மாற்றிப் போடலாம். + +இடுப்பு பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். + + + + +உதயதாரகை + +உதயதாரகை ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும். ஆகும். இது 1841 இல் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை உண்மையில், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. + +இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார். இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர் என்பத��� குறிப்பிடத்தக்கது. + +உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், "...உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. + + + + + +ரஞ்சகுமார் + +ரஞ்சகுமார் (பிறப்பு - டிசம்பர் 17, 1959) இலங்கையின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். 1978 அளவில் எழுதத் தொடங்கி அலை, புதுசு, திசை, சரிநிகர், வீரகேசரி ஆகிய இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதைத் தொகுதியான "மோகவாசல்" 1989 இல் வெளியானது. விமர்சனங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை. + +யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த ரஞ்சகுமார், புலம்பெயர்ந்து ஆத்திரேலியா, சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். + + + + + +கே. கணேஷ் + +கே. கணேஷ் (மார்ச் 2, 1920 - சூன் 5, 2004) இலங்கையின் மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். + +கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த கணேஷ் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார். + +நவசக்தி, லோகசக்தி ஆகிபோன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். + +கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார். + +1946 இல் 'பாரதி' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார். + +மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், ச��ந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும். + + + +கே. கணேஷ் 2004 ஆம் ஆண்டில் தனது 86வது வயதில் மலையகத்தின் தலாத்து ஓயா என்ற ஊரில் காலமானார். + + + + + + +பாரதி (இதழ்) + +பாரதி இலங்கையின் முதலாவது முற்போக்குக் கலை இலக்கிய சஞ்சிகை ஆகும். கே. கணேஷ், கே. ராமநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 1948 இல் வெளியானது. பாரதி சஞ்சிகை பொதுவுடமைச் சிந்தனைக்கு இலக்கியத்தில் முக்கியத்துவமளித்தது. + +கே.கணேஷ் தனது தோட்டத்தின் ஒரு பகுதியை விற்றே பாரதி சஞ்சிகையை வெளியிட்டதாக மூன்றாவது மனிதன் இதழுக்கான நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். + + + + +வாக்களிப்பு முறைகள் + +பல தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுவினர், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ, அவை பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்காக அல்லது அவற்றுள் விருப்பத்துக்கு உரியவற்றை அல்லது வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையே வாக்களிப்பு முறை எனப்படுகின்றது. சனநாயக வழிமுறையில் பொதுப்பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் "வாக்களிப்பு" பெரிதும் அறியப்படுகின்ற ஒன்றாகும். + +சிறப்பாக, வாக்களிப்பு முறை என்பது, குறிப்பிட்ட தொகுதி வாக்குகளிலிருந்து வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். செயல்முறை முறைப்படி வரையறுக்கப்படுவது மட்டுமன்றி, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் அது தொடர்பான விதிகள் அனைத்தும் முன்கூட்டியே அறிவிக்கப்படவும் வேண்டும். முறைப்படி வரையறுக்கப்பட்ட வாக்களிப்பு முறைகள் பற்றிய கோட்பாடு, "வாக்களிப்புக் கோட்பாடு" (voting theory) எனப்படுகின்றது. இது, அரசறிவியல், பொருளியல், கணிதம் போன்றவற்றின் துணைத்துறையாகக் கருதப்படக்கூடியது. வாக்களிப்புக் கோட்பாடு, 18 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடையத் தொடங்கியது. இதன் மூலம், வாக்களிப்புத் தொடர்பான பல் வேறுபட்ட அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. + +பெரும்பாலான வாக்களிப்பு முறைகள் பெரும்பான்மை ஆட்சியை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பான்மை ஆட்சிமுறை எளிமையான ஒரு முறையாக இருந்தாலும், பலவகையான வாக்களிப்பு முறைகள் புழக்கத்திலுள்ளன. மொத்த வாக்குகளின் அரைப்பங்குக்கு மேல் பெறுவதே தேர்ந்தெடுக்கப்படும் என்பது பெரும்பான்மை ஆட்சி முறையின் அடிப்படையாக இருந்தாலும், இரண்டுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவை மத்தியில் தேர்வு நடைபெறும்போது எவரும் அரைப்பங்குக்கு மேல் பெறும் சந்தர்ப்பம் இல்லாமற் போவதுண்டு. இவ்வாறான சமயங்களில் அரைப்பங்குக்கு மேற்பட்டவர்களின் விருப்பம் அறிவதற்கான வேறு ஒழுங்குகள் வாக்களிப்பு முறையில் சேர்க்கப்பட்டிருக்கும். சில முறைகளில் அதிக வாக்குகள் பெறும் விருப்பு தேர்ந்தெடுக்கப்படுவதும் உண்டு. + + + + + +க. குணராசா + +செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார். + +இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார் + +ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. + +இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது. + + + + + + + + + + + + +ஆணல்ட் சதாசிவம்பிள்ளை + +ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆணல்ட் ("J.R. Arnold") ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் ம்ற்றும் புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். + +ஆணல்டின் தமிழ்ப் பெயர் சதாசிவம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம் என்பவர். நவாலி, மானிப்பாயில் பிறந்த சதாசிவம்பிள்ளை 1835 இல் கிறிஸ்தவரானார். + +மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற சதாசிவம்பிள்ளை, 1832 இல் பட்டிகோட்டா செமினறியில் ("Batticotta Seminary") இணைந்து 1840 இல் பட்டதாரியாகி மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1844 இல் சாவகச்சேரி அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 1847இல் மாற்றம் பெற்றார். சதாசிவம்பிள்ளை ஜூலை 9, 1846 இல் முத்துப்பிள்ளை ("Margaret E. Nitchie") என்பாரைத் திருமணம் புரிந்தார். + +ஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை, மற்றும் Morning Star ஆகியவற்றின் ஆசிரியராகப் பணிபுரிநதது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருதூணாக இருந்தார். இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது பாவலர் சரித்திர தீபகம் ஆகும். இது தவிர கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களையும் இயற்றி வெளியிட்டார். + + + + + +கலைச்செல்வி (இதழ்) + +கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது. + + + + + +மூன்றாவது மனிதன் (இதழ்) + +மூன்றாவது மனிதன் தொண்ணூறுகளில் ஈழத்தில் வெளிவரத் தொடங்கிய மிக முக்கியமான சிற்றிதழ். இதன் ஆசிரியர் எம். பௌசர். மூன்றாவது மனிதன் பதிப்பகம் தரமான நூல்களையும் வெளியிட்டு வருகிறது. + +சுமார் மூன்றாண்டு இடைவெளியின் பின் மூன்றாவது மனிதனின் பதினேழாவது இதழ் மார்ச் - ஏப்ரல் 2006 காலப்பகுதிக்குரியதாக 24.03.2006 அன்று வெளியாகியது. இப்பொழுதும் தொடர்ந்து வெளிவருகிறது. + + + + +சண்முகம் சிவலிங்கம் + +சண்முகம் சிவலிங்கம் (டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு) ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வந்த சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். + +இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். ஒருவர் ஈழப்போராட்டத்தில் களத்தில் உயிரிழந்தவர். + +இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் "நீர்வளையங்கள்" என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. சண்முகம் சிவலிங்கம் எழுதிய "ஆக்காண்டி" கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். + + + + + + +தாமரைச்செல்வி + +தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. + +தாமரைச்செல்வியின் ‘இன்னொரு பக்கம்’ என்ற சிறுகதை, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம் 11 ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் 2015 ஆம் ஆண்டுமுதல் சேர்க்கப்பட்டுள்ளது.  + +தாமரைச்செல்வி கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனிலுள்ள குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தமது ஆரம்பக்கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்தார். + + + + + + + +விமல் குழந்தைவேல் + +விமல் குழந்தைவேல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் உள்ள கோளாவில் கிராமத்தில் பிறந்தவர். சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதுபவர். + +தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. + +இப்பொழுது இவர் தணல் நாவலை கொண்டுவர இருக்கிறார் + + + + + + + +தம்பிஐயா தேவதாஸ் + +தம்பிஐயா தேவதாஸ் (பி. ஏப்ரல் 24, 1951,புங்குடுதீவு யாழ்ப்பாணம்) மொழிபெயர்ப்பு மற்றும் திரைப்படத் துறைகளில் பங்களித்து வரும் ஈழத்து எழுத்தாளராவார். திரைப்படத்துறை, மொழிபெயர்ப்புத் துறை, ஊர் வரலாறு, கல்வித் துறை பற்றி பல நூல்களை எழுதியுள்ளார். + +புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டமும் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் ‘பிஈடி’ பட்டமும் பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் டிப்புளோமா பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். + +இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். + +ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார். + +தம்பிஐயா தேவதாஸ் எழுதி இலங்கையில் வெளியிடப்பட்ட "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் 2016 ஏப்ரல் 11-ஆம் நாள் சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடர்பான கருத்தரங்கின் போது இந்த நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. + +துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன், தம்பிஐயா தேவதாஸ் ஆகியோருடன் இலங்கை வானொலி மூத்த ஒலிபரப்பாளர் கே. எஸ். சிவகுமாரன், தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான வி. கே. டி. பாலன், மூத்த ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான அப்துல் ஜப்பார் ஆகியோர் நூலை அறிமுகம் செய்வதைப் படத்தில் காணலாம். + +தம்பிஐயா தேவதாஸ் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியின் பல்வேறு சேவைகள், இலங்கை தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றில் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டியும் அவருக்கு ஒரு நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. + +துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தம்பிஐயா தேவதாசுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் பரிசளிப்பதை இரண்டாவது படத்தில் காணலாம். + + + + +சென்னை பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீடும் உரையும் + + + + +குமரன் (சஞ்சிகை) + +குமரன் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு களமமைத்த ஈழத்தின் சிற்றிதழ்களில் ஒன்று ஆகும். செ. கணேசலிங்கனால் 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட குமரன் மாணவர் மாத இதழ் என்றே அறிமுகமானது. மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் மார்க்சியக் கருத்துக்களை விளக்கும் தீவிர மார்க்சிய சஞ்சிகையாக சில ஆண்டுகள் வெளிவந்தது. + + + + + +இ. முருகையன் + +இ. முருகையன் (ஏப்ரல் 23, 1935 - ஜூன் 27, 2009, கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர். + +1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளார். + +1964 - 1965 காலப்பகுதியில் வெளிவந்த நோக்கு என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். + +யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்���தாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. + +சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கிய முருகையன், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். + +இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார். + +தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். + + +முருகையன் தனது நூல்களுக்குப் பதிப்புரிமை கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பதிப்பகத்தாரிடம் தனது எழுத்துக்களை மக்களில் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று சொல்லிவரும் வழக்கமுடையவர். + + + + + + + + + + + +ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் + +ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் (John hansen bauer) நோர்வேயைச் சேர்ந்த சமூக மானிடவியல் (social anthropology) துறைக் கல்விமான் ஆவார். நோர்வே நாட்டின் சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சகத்திலும் நோர்வே வெளிவிவகார அமைச்சில் சமாதான ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். + +இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆகியோருக்கிடையேயான சமாதான முன்னெடுப்பில் நோர்வேயின் விசேடதூதுவராக 2002ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவந்த எரிக் சொல்ஹெய்மின் இடத்திற்கு நோர்வே அரசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து 17 மார்ச் 2006 ல் நோர்வே அரசு அறிவித்தது. + +முன்னர் இவர் 1993 இல் இடம்பெற்ற இஸ்ரேல்- பலஸ்த��ன சமாதான முன்னெடுப்புகளில் பங்குபற்றியுள்ளார். + + + + + +தா. இராமலிங்கம் + +தா. இராமலிங்கம் (ஆகஸ்ட் 16, 1933 - ஆகஸ்ட் 25, 2008) வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஓர் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் + +இராமலிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று தன் பட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார். மீசாலையைச் சேர்ந்த மகேசுவரி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு கலைச்செல்வன், அருட்செல்வன், தமிழ்ச்செல்வன், இசைச்செல்வி, கதிர்ச்செல்வன் ஆகிய ஐவர் பிள்ளைகள் ஆவர். + +பட்டப்படிப்பை முடித்த பின்னர் இலங்கையின் மலைநாட்டில் இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி அதன் அதிபரானார். + +1960களில் இருந்து கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அலை, சுவர், புதுசு, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில "மரணத்துள் வாழ்வோம்" (1985 - 1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984 - 2003) தொகுதியில் இவரது 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. + +தா. இராமலிங்கம் தனது இறுதிக்காலத்தை கிளிநொச்சியில் கழித்தார். ஞாபகமறதி நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் 2008 ஆகத்து 25 இல் காலமானார். + + + + + + +பின்லாந்து + +பின்லாந்து () வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான "கலேவலா"தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + + + + +ஓமந்தை + +ஓமந்தையானது இலங்கையில் வவுனியா மாவட்டத்தி���் அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் நாட்களிலும் காலை 9 மணியில் இருந்து மாலை 17:30 மணிவரையே திறந்திருக்கும். + +6 அக்டோபர் 2007 இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் (ஐக்கிய நாடுகள் விசேட அமைப்புக்கள், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யாவும் பன்னாட்டு அமைப்பு வாகனங்களும் வவுனியா கண்டிவீதியில் தேக்கவத்தையில் உள்ள ரம்யா இல்லத்தில் (ரம்யா ஹவுஸ்) பதிவினை மேற்கொண்டால் மாத்திரமே மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பிரவேசிக்க இயலும். இப்பதிவில் செல்பவர்களின் விவரம், அடையாள அட்டை விபரங்கள், பிரயாணத்தை மேற்கொள்ளும் திகதி மீள்திரும்பும் திகதி ஆகியவற்றும் வாகன இலக்கம் (இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் உட்பட) விபரங்களை வன்னிக் கட்டளைப் பிரிவில் உள்ள மேஜர் பண்டாரவிற்குச் சமர்பிக்கப்படவேண்டும் அல்லது 211 கட்டளைப் பிரிவின் மேஜர் ஜயத்திலகவிற்கு ஆகக்குறைந்தது ஒருநாள் முன்னராகவே மத்தியானம் 12:00 முன்னராகச் சமர்பிக்கப்படவேண்டும். இவ்வாறு விபரங்களை சமர்பித்தால் அன்றி எந்தப் பன்னாட்டு அமைப்பினரும் ஓமந்தையூடாக விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்ல இயலாது. + +இங்கு ஓமந்தை மத்திய கல்லூரி அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கபபட்டுப் பின்னர் நிக்கோட் மூலம் புனரமைக்கப்பட்டது. + +இராணுவத்தினரால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெற்றோல், டீசல், பற்றறி, இரும்பு மற்றும் வேளாண்மை உரவகைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்ல முடியாது. +இராணுவத்தினரால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து எந்தவொரு வேளாண்மை விளைபொருட்களும் ஓமந்தைச் சாவடியூடாக அனுமதிக்கப்படமாட்டாது. + +விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தொடர்பாடல் உபகரணங்களைப் எவரும் கொண்டுவர பொதுவாக அனுமதிப்பதில்லை. + +சொந்த வாகனத்தில் செல்பவர்கள் + +பேருந்து அல்லது வேறு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பிரயாணிப்பவர்கள் + +சொந்த வாகனத்தில் செல்பவர்கள் + +பேருந்து அல்லது பிற வாகனங்களில் பிரயாணிப்பவர்கள் + +குறிப்பு: நிதந்தர அனுமதியின்றிப் விடுதலைப் புலிகளின் பகுதிகளிற்குச் செல்பவர்கள் தமது குறிப்பிட்ட இடத்தில் தமது வரவை மனிதவள அலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிச்செல்லமுடியும். இந்நடைமுறையானது தற்போதைய அசம்பாவிதங்களையடுத்தே நடைமுறையிலுள்ளது. + + + + + +செ. கதிர்காமநாதன் + +செ. கதிர்காமநாதன் (1942 - 1972) ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, அறிமுகங்கள், இலக்கியக் குறிப்புக்கள் போன்றவற்றையும் எழுதிவந்தவர். + +யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேசுவராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். + +இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இப்புதினம் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. + + + + + +நான்மணிக்கடிகை + +நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன.இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும். + +இதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாருமுளர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர். இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துக்களான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்னாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர். இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர். கி. ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன. + +சங்க இலக்கியத்தை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். மேற்கணக்கில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்கள் அடங்கும். கீழ்க்கணக்கில் நாலடியார், நான்மணிக்கடிகை அன்று தொடங்கும் பட்டியலிலும் பதினெட்டு நூல்கள் உண்டு. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒரே புலவரால் இயற்றின ஒரு நீண்ட பாடல் உள்ளது.எட்டுத்தொகை நூல்களில் பலரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் பலராலோ அல்லது ஒரு சிலராலோ இயற்றின பாடல்களைக் கொண்டுள்ளன. மேற்கணக்கு நுல்களெல்லாம் ஆசிரியப்பாவிலோ, பரிபாடலிலோ அல்லது கலிப்பாவிலோ உள்ளன. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் இரண்டு முதல் ஆறடி வரையுள்ள வெண்பாக்களினால் ஆனவையாகின்றன. + +கீழ்வரும் தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிட்டு காட்டுகின்றது. கீழ்வரும் வெண்பா எளிதாக அவற்றை நினைவுகூர பயன்படுகின்றது.எழுதியவர் யாரென்று தெரியாத பாடல்களில் இதுவும் ஒன்று. + +கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனு��ின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க. இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85 வது பாடல் + +இவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துக்களும் கூற்றம் (death) என்ற சொல்லில் முடியும் போது நான்காவது கருத்து கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது. முதல் மூன்று கருத்துக்களும் ஒரு படிவத்தை (Pattern) கொண்டுள்ளபோது நான்காவது கருத்து படிவமாற்றம் (pattern variation) ஒன்றை பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பை பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக் கருத்துக்கு படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு கிடைத்திருக்கும் அழுத்தம் (emphasis) படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது. + + + + + + +இன்னா நாற்பது + +கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. + +அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆறல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும். என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது. + +நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார��� நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு. +சிறந்த வரிகள்: +1. தீமையுடையார் அயலிருத்தல் இன்னா +2. இன்னா ஈன்றாளை ஓம்பாவிடல் +3. அடைக்கலம் வவ்வுதல் இன்னா + + +இன்னா நாற்பதை உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுதி + + + + +முதுமொழிக்காஞ்சி (நூல்) + +மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குப் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு: + + + + + + + + +யாவாக்கிறிட்டு + +ஆரம்பத்தில் நெற்சுக்கேப் நிறுவனத்தால் "இலைவு கிறிட்டு"(Live Script) என அறிமுகம் செய்யப்பட்ட மொழியே யாவாக்கிறிட்டு எனப் பெயர் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்று வரை பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்பெயர் சன் மைக்ரோசிசுட்டத்தின் காப்புரிமைப் பெயராகும். பிற்காலத்தில் மைக்ரோசாப்டு யாவாக்கிறிட்டிற்குப் போட்டியாக சேகிறிட்டு என்ற நிரலாக்க மொழியை உருவாக்கியது. + +இதேவேளையில், சன் மைக்ரோ சிசுட்டம் ("Sun Micro systems") யாவா ("Java") என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. யாவா விரைவில் பிரபலமாகிப் பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெற்சுக்கேப் நிறுவனமும் தமது நெற்சுக்கேப் 2.0 பதிப்பில் யாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது "இலைவு கிறிட்டு" என்ற மொழியை யாவாக்கிறிட்டு ("Java Script") என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக யாவாக்கிறிட்டு மொழி பலரது கவனத்தில் பட்டது. இதைத்தவிர யாவாவிற்கும் யாவாக்கிறிட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதைய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. + + +யாவாக்கிறிட்டில் தமிழைப் பயன்படுத்தத் தமிழ்ச் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்துப் பின்னர் கோப்பை யு.டி.எவ்.-8 (UTF-8) முறையில் சேமிக்க வேண்டும். உலாவிகள் அவற்றைத் தமிழில் காட்டும். + +யாவாக்கிறிட்டைப் பலதரப்பட்ட தொகுப்பிகளில் தொகுக்கலாம். இணையத்தில் உடனடியாக யாவாக்கிறிட்டைப் பரிசோதிக்க சே. எசு. பின்னைப் பயன்படுத்தலாம். + +பொதுவாக யாவாக்கிறிட்டை மீப்பாடக் குறிமொழியின் தலைப்பில் இடுவர். அதாவது பின்வருமாறு: +ஆனால் பக்கம் தரவேறிய பின்னர் யாவாக்கிறிட்டு தரவேறினால் போதும் என்றால் அதை உடலில் இதே போன்று மீப்பாடக் குறிமொழியின் உடலிலும் போடலாம். + +யாவாக்கிறிட்டை ஒரு வெளிக் கோப்பாக இணைக்கலாம். தலைப்புகளை அடையாள ஒட்டுகளுக்கு இடையே +என்று இணைக்கலாம். + + + + + +வலைப் பக்கம் + +இணையப் பக்கம் அல்லது வலைப் பக்கம் எனப்படுவது, இணைய உலாவியொன்றின் மூலமாகக் கணினியொன்றின் திரையிலோ கையடக்கத் தொலைபேசியின் திரையிலோ காட்சிப்படுத்தப்படும் உலகளாவிய வலையில் காணப்படும் கோப்பு அல்லது தகவல் மூலமாகும். இந்தத் தகவல் மூலமானது, அடிப்படையில் மீப்பாடக் ���ுறிமொழி (HTML) அல்லது XHTML வடிவத்தில் உருவாக்கப்பெற்றிருக்கும். இந்தத் தகவல்களைப் பொருத்தமான வகையில் வெளியிடும் பொருட்டு, இப்பக்கங்களிடையே, இணைப்புகள், தொடர்நிலை அமைப்புகள் என்பன பயன்படுத்தப்படும். கூடவே, இணையப்பக்கங்களின் தோற்றத்தை மெருகேற்றும் பொருட்டு, விழுத்தொடர் பாணித் தாள்கள், படிமங்கள் என்பனவும் பயன்படுத்தப்படும். + +இணையப் பக்கங்கள் உள்ளகக் கணிணியொன்றிலிருந்தோ சேவையகக் கணினியொன்றிலிருந்தோ பெற்றுக் கொள்ளப்படலாம். + +இணையப் பக்கமானது கீழ்வருவனவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கும். + +இணையப் பக்கத்தை மெருகேற்ற உதவுகின்ற நிலைகள் + + + + +தமிழ் வைத்திய விசாரணி + +தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் 1898 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதில் மேலைநாட்டு, கீழைநாட்டு வைத்திய முறைகளை ஒப்பிட்டு கட்டுரைகள் வெளிவந்தன. இறந்தவரை எரிப்பதில் உள்ள சுகாதாரச் சிறப்பு, புதைப்பதில் உள்ள கேடு, கன்மக் கொள்கை, விபத்துக்கள் போன்றவை பற்றி எழுதினார். + + + + +ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் + +ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது. + +யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. +கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது. + +இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. +யுனிசெப் இந்தியா + + + + +ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் + +ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ("United Nations Development Programme"), உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண் களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், ஐரோப்பிய ஒன்றியமும் உதவி வழங்கி வருகின்றன. + + +ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளில் சரியான சிறந்த முறையில் பயன்படுத்த உதவி வருகின்றது. + + + + +மு. பொன்னம்பலம் + +மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான "அது" 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. + +மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது. + + + + + +இனியவை நாற்பது + +பூதஞ்சேந்தனார் என்பவர் ���யற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. + +எடுத்துக்காட்டு + +சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு: + +இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். + +இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார். ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும். இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. + +இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது ந��ற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர். + +கடவுள் வாழ்த்து + +நூல் + +பாட்டு: 01. + +பாட்டு: 02. + +பாட்டு:03. + +பாட்டு: 04. + +பாட்டு: 05. + +பாட்டு: 06. + +பாட்டு: 07. + +பாடல்: 08. + +பாடல்: 09. + +பாடல்: 10. + + +இனியவை நாற்பதையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுதி + + + + +யாகூ! மெசஞ்சர் + +யாகூ! மெசஞ்சர் என்பது யாகூ!வினால் உருவாக்கப்பட்ட விளம்பரதாரர்களூடாக அனுசரணை வழங்கப்படும் இலவசமான இணைய உரையாடல் சேவை மென்பொருளாகும். யாகூ! மெசஞ்சரைப் பதிவிறக்கியோ வெப்மெசஞ்சர் என்ற இணையத்தள சேவை வழியாகவோ அல்லது நேரடியாக யா! மெயிலினூடாகவோ பயன்படுத்தலாம். யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும் போது யாகூ! மெயில் வந்தால் உடனடியாகப் பயனரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். பதிவிறக்கப்பட்ட பதிப்பில் இணையத்தளப் பதிப்பை காட்டிலும் வசதிகள் அதிகமாக இருக்கும். யாகூ! மெசஞ்சர் கணக்கை பிட்கின் (கெயிம்) போன்ற மென்பொரு கொண்டும் அணுக முடியும். + +யாகூ! மெசஞ்சர் சேவையை யாகூ! பயனர் கணக்கை கொண்டே பயன்படுத்தலாம். இதனால், யாகூ! மெசஞ்சரைப் பயன்படுத்தும்போது, யாகூ! மின்னஞ்சலில் வரும் மடல்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கணினியிடை குரல்வழி அழைப்புகள், கணினி - தொலைபேசி அழைப்புகள், கோப்புப் பரிமாற்றங்கள், இணையப் படக்கருவி அணுக்கம், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை ஆகிய வசதிகளையும் தருகிறது. யாகூ! மெசஞ்சர் பட்டியலில் உள்ள நண்பர்கள் அறியாமல் அதை பயன்படுத்தும் வசதி இருந்தாலும், படி ஸ்பை (Buddy Spy) என்னும் இலவச மென்பொருள் மூலம் நண்பர்கள் உரையாடலில் ஈடுபடுவதை அறிய முடியும். + +இம்மென்பொருளில் ஏனைய உரையாடல் மென்பொருட்களிற்கு மேலதிகமாக IMVironments (உரையாடல் window வின் தோற்றத்தை மாற்றல்) மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அவதாரங்கள் என்னும் வசதிகள் உள்ளன. எனினும் இவ்வசதிகளானது விண்டோசு தவிர்ந்த ஏனை இயங்குதளங்களில் கிடையாது. யாகூவின் ஆப்பிள் கணினியிற்கான மெசஞ்சர் இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது. + +ஜூலை 13 2006 இல் இருந்து, யாகூ!, மைக்ரோசாப்ட் உடன் தனது மெசஞ்சர் வலையமைப்பை சேர்த்துக் கொண்டது. இதன் மூலம், மைக்ரோசாப்டின் .நெட் மெசன்சர் சேவையுடன் ஒத்தியங்கும் திறனை யாகூ! மெசஞ்சர் பெற்றது. இத்துடன், விண்டோசு ���ைவ் மெசஞ்சரிலிருந்து யாகூ மெசஞ்சருக்கும் யாகூ மெசஞ்சரிலிருந்து விண்டோசு லைவ் மெசஞ்சருக்கும் உரையாடல்கள் நிகழ்த்த முடியும். யாகூ! மெசஞ்சர், யாகூ! அரட்டை அறைக்குள் நுழைந்து கொள்ள அனுமதிக்கும் என்றாலும் இலவசமான சாவாவிலான மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் இயங்க மாட்டாது. + +யாகூ! மெசன்சர் ஆரம்பத்தில் யாகூ! பேசர் என்றே அறியப்பட்டது. + +தமிழ் ஆதரவும் யாகூ! மெசஞ்சரின் 7 ஆவது பதிப்பில் இருந்து தமிழ் உட்பட இந்திய மொழிகளை ஆதரிக்கத் தொடங்கியது. லினக்ஸில் இயங்கும் கெயிம் தமிழில் நேரடியாக உரையாடல்களில் ஈடுபடலாமெனினும் வின்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகின்ற கெயிம் மென்பொருளில் நேரடியாக தமிழை உள்ளீடு செய்வது சிரமான காரியம். இதற்குத் தீர்வாக +இதன் 7வது மற்றும் 8வது பதிப்பைப் பாவிப்பவர்கள் யாஹூ! மெசன்சரில் IndiChat என்கிற பொருத்தை (plugin) பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் தமிழ், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் யாஹூ! மெசஞ்சர் பயனருடனோ அல்லது விண்டோஸ் லைவ் மெசஞ்சருடனும் பயனருடனோ ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து உரையாட முடியும். +புதிதாக அறிமுகமான வெப்மெசஞ்சரிலும் தமிழை நேரடியாக உள்ளிடுவதில் சிரமங்கள் நீக்கப்பட்டு யாஹூ! மெயிலுடன் உள்ளிணைக்கப்பட்ட அரட்டையில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுள்ள இதன் 9 வது பதிப்பிலும் தமிழை நேரடியாகத் தட்டச்சுச் செய்யலாம். + +யாஹூ! மெசஞ்சர் பொருத்துக்களை விருத்தி செய்யும் மென்பொருட்களூடாக விருத்தி செய்யலாம். இம்மென்பொருட்கள் யாஹூ! மெசஞ்சர் பொருத்து SDK ஊடாகக் கிடைக்கின்றது. + +நவம்பர் 9 , 2006 முதல் யாஹூ! மெசஞ்சர் யாஹூ! மெயிலுடன் கூட்டிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. உரையாடல் மின்னஞ்சல்கள் போன்றே சேமிக்கமுடியும். பின்னர் இதை தேடவும் முடியும் எனவே எந்தக் கணினியில் இருந்து உரையாடலில் ஈடுபட்டனர் என்ற பிரச்சினை இல்லாது ஒழிக்கப்படுகின்றது. + +யாஹூ! ஒலி அஞ்சகள் மற்றும் 1 ஜிகாபைட்டிற்கும் மிகையாகாத கோப்புக்களை பகிர உதவுகின்றது. + +அக்டோபர் 13, 2005 யாஹூ! மற்றும் மைக்ரோசாப்ட் இரண்டு வலையமைப்புக்களையும் ஒருங்கிணைப்பதாக அறிவித்தனர்.இந்த ஒருங்கிணைவின் மூலம் யாஹூ! மற்றும் மைக்ரோசாப்ட் தூதூவர் வலையமைப்பே உலகின் இரண்டாவது பெரிய வலையமைப்பாக விளங்குன்றது. இதன் மூலம் ஓர் வலை���மைப்பில் உள்ளவர் பிறிதோர் வலையமைப்பில் பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்காமல் உரையாடலில் ஈடுபடமுடியும். இவ்வசதியானது ஜூலை 12, 2006 முதல் சாத்தியமான போதிலும் இன்னமும் ஒலி மூல உரையாடல்களை இரண்டு வலையமைப்புகளுக்கிடையில் நிகழ்த்த முடியாது. + +ஏனைய போட்டியாளர்களைப் போன்றல்லாது யாஹூ! பல்வேறுபட்ட அரட்டை அரங்குகள் அல்லது அரட்டை அறைக்குள் காணப்படுகின்றன. இவை பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் நுளைபவர்கள் தமது சொந்த யாஹூ! அடையாளத்தைக் கொண்டோ அல்லது புனை பெயரிலோ இணைதல் இயலும். + +யாஹூ! அரட்டை அரங்குகளில் விளம்பரப்படுத்துவதற்காக தானியங்கிகள் ஏவிவிடப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரட்டை அரங்குகளில் உண்மையான பயனர்களைவிடத் தானியங்கிப் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தத் தானியங்கிகள் பல்வேறுபட்ட பாலியல் இணையத்தளங்களுக்கு இணைப்பை வழங்குவதோடு எரிதங்களையும் அனுப்பிவருகின்றது. இதுதவிர ஒலி உரையாடலகள் அவ்வளவு நம்பகரமானதல்ல பல்வேறுபட்ட பயனர்கள் இதில் இணைவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். + +யாஹூ! மே 2006 முதல் ஜாவா முறையில் அரட்டை அரங்கில் உள் நுளைவதற்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளனர். + + + + + + + +சாதி + +சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையேயாகும். இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களைச் சகித்துக்கொண்டு மக்கள் வாழக் கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்படுகிறது. + +ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை ஆகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சம��க நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன. + +முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை. +பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர்.பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தப்பட்டார்கள் +என்று பரிந்துரைக்கப்பட்டார்கள். +சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் "மானிடவியல் கோட்பாடுகள்" என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை: + +ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார். + +சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன. +சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். + +சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன. + +பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள். + +சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது. + +உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்��� ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு. + +ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்." + +இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன. + +ஆகஸ்டு 2012 ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான “Corporate Boards in India Blocked by Caste?” என்னும் தலைப்பில் எந்தச் சமூகம் இந்திய கார்பரேட்டுகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. தேசிய பங்கு சந்தை மற்றும் பம்பாய் பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. இந்தியாவில் கடைசிப்பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப்பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர். + +தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய்த் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரி���மும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு (மனுதரும சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை. + +இலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, பாரளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்றவற்றுக்குச் சாதி சார்பான இட ஒதுக்கீடுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. எனினும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. தமிழரிடையேயான சாதியமைப்பு பிரதேச வேற்றுமையைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகள் தமக்கே உரிய சாதியமைப்பைக் கொண்டுள்ளன. + +பார்க்க: + + + + + + +சாவகச்சேரி + +சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. + +இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றப் போது சாவக்கச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைபெற்றன. 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது சாவகச்சேரியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர். + +இலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்து போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து மீண்டும் தொடரூந்து சேவை இடம்பெறுகிறது, + + + + + + + +கார் நாற்பது + +பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க���கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. + +கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது. + +கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது: + + +கார் நாற்பது அடங்கலான மூன்று நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து + + + + +களவழி நாற்பது + +பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. + +இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. + +இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம். +நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி' தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகி��து. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது. + + +சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்படுவது கீழே காணப்படும் பாடல். + + + +களவழி நாற்பது உட்பட நான்கு நூல்கள் அடங்கிய தொகுதி. மதுரைத் திட்டத்திலிருந்து + + + + +ஐந்திணை ஐம்பது + +பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது. + +முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின. + +ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன. + +பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது. + +ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்ல��. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர். + + + + + + +ஐந்திணை எழுபது + +ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. + +"ஐந்திணைகள்" என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் "ஐந்திணை எழுபது" எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர். + +அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது. + +மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், "கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் "கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என இடம்பெற்று ��ள்ளன. + +இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது. + + + + + + +மலை நாட்டுச் சிங்களவர் + +மலை நாட்டுச் சிங்களவர் எனப்படுவோர் கண்டியையும் அதை அண்டிய மலையகப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்களவர்கள். இவர்களே உயர் சாதிச் சிங்களவராகக் கணிக்கப்படுகின்றனர். மலைநாட்டுச் சிங்களவரின் கொடியாக இருந்த சிங்கக் கொடியே 1952 இல் இலங்கைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலைநாட்டுச் சிங்களவர் தொடர்புபடும் குடிவழக்குகளில் கண்டியச் சட்டம் செல்வாக்குச் செலுத்துகிறது. இவர்கள் கண்டிச்சிங்களவர் எனவும் அழைக்கப்படுகிறார்கள். + +மற்றவர்கள் களுத்துறைச் சிங்களவர் அல்லது கரையோரச் சிங்களவர் என அழைக்கப்படுகிறார்கள். + + + + +திணைமொழி ஐம்பது + +திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல். சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன் ஆவர். + +பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன. + + + + + + +திணைமாலை நூற்றைம்பது + +திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே. + +இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டு��்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன. + + + + + + +கைந்நிலை + +கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர். +சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம்.ஆகவே,ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. + +கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன.
+குறிஞ்சி 12
+பாலை 7
+முல்லை 3
+மருதம் 11
+நெய்தல் 12
+ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன. + + +
+ +ஆசாரக்கோவை + +மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். + +பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்: + +இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் விக்கிப்புத்தகத்தில் காணலாம். + + + + + + +உயிர்மை + +உயிர்மை 2003 ஆகத்து மாதத்திலிருந்து மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு இலக்கிய மாத இதழாக வெளிவருகிறது. அரசியல், சமூகவியல், அறிவியல், சூழலியல், சினிமா, பழந்தமிழ் இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல் விமர்சனம் என்பனவற்றிற்கு முக்கியத்துவமளித்து வருகின்றது. நாடகம் தொடர்பிலும் உயிர்மை கவனம் செலுத்துகின்றது. நல்ல, வித்தியாசமான நிழற்படங்களுக்கும், உருக்களுக்கும் இவ்விதழ் இடமளிக்கிறது. உயிர்மை பதிப்பகம் மூலம் பெருமளவு தரமான நூல்கள் வெளியிடப்படுகின்றன. + + + + + +காலச்சுவடு (இதழ்) + +காலச்சுவடு 1988-ன் நடுப்பகுதியில் சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு காலாண்டிதழாக வெளிவரத் தொடங்கியது. சிறிதுகாலத்தில் நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் 1994 இல் கண்ணனையும் மனுஷ்யபுத்திரனையும் ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்தது. இப்போது, எஸ். ஆர். சுந்தரம் எனும் கண்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. தொடக்க காலத்தில் காலாண்டிதழாகவும், பின்னர் இருமாத இதழாகவும் வெளிவந்து தற்போது மாத இதழாக வெளிவருகிறது. சிறுகதை, கவிதை, மற்றும் அரசியல், சினிமா, கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் என்பவற்றுக்கு இடமளித்து வருவதுடன், பல்வேறு துறைசார்ந்தோரின் நேர்காணல்களையும் பதிவுசெய்து வருகின்றது. காலச்சுவடு பதிப்பகம் பெருமளவு நூல்களையும் வெளியிட்டுள்ளது. + + + + + +குமுதம் தீராநதி (இதழ்) + + + + +நிழல் (இதழ்) + +நிழல் நவீன சினிமாவுக்கான களமாக 2002 ஒக்ரோபர் மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு. திரைக்கதைகள், சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் அவ்விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள், குறுந்திரைப்படங்கள் தொடர்பான செய்திகள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன. + + + + +பார்த்திபன் கனவு (புதினம்) + +பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். + +ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்ட��ம் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான். + +பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது. + +இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன. + +சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார். + +வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம். + +இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் இது சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பின்வரும் பாத்திரங்கள் உண்மையாகவே வரலாற்றில் வாழ்ந்தோராகும். + + + + + + +சிவகாமியின் சபதம் (புதினம்) + +சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. + +முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். + +கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்த���ரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். + +இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையா ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. +இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது +பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தை பற்றியும் நாம் அறியலாம். சமயக் குறவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்து காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரிசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் தான் அவருக்கு காஞ்சியை நோக்கி சாளுக்ய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகல் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார். + +ஒரு சுரங்கத்தின் வழியாக கோட்டை சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயநாரை பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாக சேர்ந்து சிற்பக்கலையை கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நகந்தியிடம் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களை பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்தய மலைத்தொடருக்கு பரஞ்சோதியார் ���னுப்பப்படுகிறார். + +பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் இதற்கு சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்கு செல்லும் நேரத்தில் காஞ்சியை காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் பல்லவ மன்னர். + +விந்தய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதியார், வஜ்ரபாஹு என்ற போர் வீரனை தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்ஜோதியாரிடம் இருந்த கடிதத்தின் விஷயத்தை அவர் அறியா வண்ணம் வஜ்ரபாஹு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிருந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு விசாரிக்கப்பட்டார். மொழிப் பிரச்சனையின் காரணமாக பரஞ்சோதியார் வஜ்ரபாஹுவினால் விசாரிக்கப்பட்டு குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வஜ்ரபாஹு கொடுத்த சமிக்யயுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தை தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வஜ்ரபாஹு, பரஞ்சோதியாரை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்து பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வஜ்ரபாஹு வேறொருவர் அன்றி மன்னர் மகேந்திரவர்மரே என்று அறிந்தார். + +ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்ஜோதியார் மகேந்திரவர்மரின் நற்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியை சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்கு, பரஞ்ஜோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும் படி மகேந்திர பல்லவரின் அரசானை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கி தருவதாக கூறிய நாகநந்தி அவள் நல்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம�� நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களை புத்த விஹாரம் ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதை கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகனந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார். + +காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்து தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாக காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாக சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது. + +தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்து காத்திருந்தான். இதை சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரை தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டு பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார். ராஜஉபசரிப்பையும், விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தால். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வஜ்ரபாஹுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கரங்களை துண்டிக்கவும் ஆணையிட்டான். + +நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாக காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியை போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான் (இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டை சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறார்கள்). புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியை புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார். + +சிவகாமி, மற்ற கைதிகளுடன் வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான். பின்பு புலிகேசி சிவகாமியை பார்த்துகொள்வேன் என்று வாக்களித்த பின்பு போர்முனையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி புறப்பட்டான். வாதாபியில் பல்லவரை வென்று வாகை சூடியதாகக் கூறி வெற்றி முழக்கமிட்டான். தன் சபையில் வீற்றிருக்கும் பாரசீக தூதுவர்முன் ஆட மறுத்த சிவகாமியை ஆட வைப்பதற்காக தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரை சிவகாமியின் முன் கொடுமைப் படுத்தினான். இம்முறையை தினமும் பின்பற்றி அவளை ஆடச்செய்தான். இதனால் மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு சினத்துடன் ஓர் சபதம் கொண்டாள். தன் காதலர் நரசிம்ம பல்லவர் இவ்வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தாள். பின்பு ஒருமுறை தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுத்தாள்-- + +காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கி படையெடுப்பில், அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பை பற்றி தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குலப்பத்திர்க்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும். + +புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதை சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர் நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனை சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்க கட்டளையிட்டார். + +இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததை எண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது. + +மகேந்திரவர்மன் : +கல்கி இவரை ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் உள்ளார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் அழகுற்றது. முன்பு சமண சமயத்தை பின்பற்றிய இவர் பிற்காலத்தில் சைவ சமயத்தை பின்பற்றினார். சமய ஒற்றுமையை விரும்பினார். + + + + + +தமிழீழ காவல்துறை + +தமிழீழ காவல்துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட காவல்துறை ஆகும். + +1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது. மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் ��ாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர். +காவல் துறையின் பிரிவுகள். குற்றபிரிவு / விசேட குற்றபிரிவு /போக்குவரத்து பிரிவு /புலனாய்வுபிரிவு /தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு /ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு /விசேட தாக்குதல் பிரிவு /மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்றன இயங்கின தமிழீழ காவல் துறை தேசிய தலைவர் பிரபாகரன் நேரடி வழிகாட்டலில் இயங்கியது இதற்கு பொறுப்பாளர்களாக +பா.நடேசனும்.பின்னர் இளங்கோ என்ற ரமேசும். இயங்கினர். + +2009, மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து தமிழீழ காவல்துறை செயலிழந்தது. + + + + + +மு. தளையசிங்கம் + +மு. தளையசிங்கம் (பிறப்பு 1935. இறப்பு: ஏப்ரல் 2, 1973) இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தரமான இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளார். தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளர். மானுடகுலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். + +இலங்கையின் புங்குடு தீவு பகுதியில் பிறந்த தளையசிங்கம் இளம் வயதிலேயே சிந்தனையாளராகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆரம்பத்தில் புனைகதைகளையும் இலக்கியவிமர்சனங்களையும் எழுதினார். பின்னர் மெய்யியல் ஆய்வுகளை நோக்கி சென்றார் + +மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் பின்னர் சர்வோதய இயக்கத்து போராளியானார். 1966ல் மு.தளையசிங்கம் தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். அது அவரை அரவிந்தரை நோக்கி கொண்டுசென்றது. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலானார். + +1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் ���ொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார் + +தளையசிங்கம் தன் காலகட்டத்தை இவ்வாறு வகைப்படுத்துகிறார் + +‘தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது” அதற்கேற்ப உருவாக்கிய தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்று சொன்னார் + +தளையசிங்கத்தின் பங்களிப்பை இலக்கியவிமர்சகரான எம். வேதசகாயகுமார் இவ்வாறு இனம்காண்கிறார் ’பூரண இலக்கியம் என்னும் கோட்பாட்டை விளக்க முயல்கிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இவை இரண்டிற்கும் அப்பாலான மெய்முதல் வாதத்தை முன்வைக்கிறார். மெய்யுள் என்னும் புதிய இலக்கிய வடிவையும் சமகாலத்திற்கான வடிவமாகக் காண்கிறார். ஈழத் தமிழ் இலக்கிய விமர்சகர்களுள் தளையசிங்கத்தையே பெரும் சிந்தனையாளராக இனம் காணவேண்டும்’. + +புதுயுகத்துக்கான இலக்கியத்தை தளையசிங்கம் ‘மெய்யுள்’ என அழைத்தார். அதை ஒரு மாதிரி வடிவில் தானே எழுதியும் பார்த்தார். + + + + + + +அ. முத்துலிங்கம் + +அ. முத்துலிங்கம் (பிறப்பு: சனவரி 19, 1937) குறிப்பிடத்தக்க ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். + +1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா. + +அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் ("Tamil Literary Garden") என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார் + +. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது + +நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. + + + + + + + + + + +சோலைக்கிளி + +சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். 1980களிலே எழுதத் தொடங்கியவர். இருப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர். + +இதுவரையில் ஏழு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில: + + + + +எம். ஏ. நுஃமான் + +எம். ஏ. நுஃமான் (பிறப்பு:10 ஆகத்து 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். + + + + + + +கி. பி. அரவிந்தன் + +கி. பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர். + +அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. + + +கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார். 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். + + + + + +நிலாந்தன் + +நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். + + + + + +ஏலாதி + +பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டை���் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன. + +இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட "ஏலாதி" என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது. + +இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது: + + + + + + +தமிழ் நீதி நூல்கள் + +அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. + +நீதம் என்னும் வடசொல் வெண்ணெய்யைக் குறிக்கும். பாலில் வெண்ணெய் எடுப்பது போல வாழ்க்கைப் பாங்கில் திரட்டப்பட்ட நல்லாறு நீதி + +மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும். + + + + + + + +சிரித்திரன் + +சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. மகுடி பதில்கள் என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. + +சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த "மாத்திரைக் கதைகள்" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில. + +அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகியன புகழ் பெற்றவை. + + + + +டெனிஸ் அகதிகள் பேரவை + +டனிஸ் அகதிகள் பேரவை 1956இல் ஆரம்பிக்கப் பட்ட டென்மார்க் நாட்டின் மனிதாபிமான அமைப்பாகும். இவ்வமைப்பானது புலம்பெயர்ந்தவர்கள், அகதிகளின் உரிமைகளைப் பற்றி அறிவுரைகளை வழங்கும் அமைப்பாகும் + +இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப் பட்ட இடங்களில் மலசலகூடங்களை அமைத்தல் சமுதாய மேம்பட்டிற்காக உழைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கில் இதன் திட்டங்கள் வவுனியாவை மையமாக�� கொண்டே நடைபெற்று வருகின்றது. இதன் +கிளைகள் + + + + + +கணினி நச்சுநிரல் + +கணினி நச்சுநிரல் ("computer virus", கணினி வைரஸ்) கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே நகலெடுக்கும் இயங்கிகளையும் ஏனைய கோப்புக்களையும் பாதிக்கும் ஒரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அகக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடிய சேமிப்பு ஊடகங்கள் போன்றவற்றாலும் பரவுகின்றது. + +பெரும்பாலான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் நச்சுநிரல்களைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய நச்சுநிரல்கள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன. + +கணினி வைரஸ் ஆனது இயற்கையான நச்சு நிரல் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். நச்சுநிரலானது பலவாறு பரப்பப்படும். இவ்வகைச் செயற்பாடானது தீப்பொருள் என்றும் அழைக்கப்படலாம். பொதுவான பயன்பாட்டில் "கணினி வைரஸ்", கணினிப் புழுக்கள் ("Computer worm"), நல்ல நிரல்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் ("Trojan horse") எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப்படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபட்டவை. இவை நச்சுநிரல்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் நச்சுநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன. அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில நேரங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தமது முதலாளிக்கு இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன. + +சில நச்சுநிரல்கள் நிரல்களில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ மாற்றுதல்) போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை பயன்படுத்துவதால் பயனர் இயல்பாகப் பயன்படத்தும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு ப��்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம். + +கணினி நச்சுநிரல்கள் கணினியில் அழித்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை. சில நச்சுநிரல்கள் கணினியின் தொடக்க செயல்பாட்டை நேரந்தாழ்த்தவோ கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கவோ செய்யும். சில நச்சுநிரல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகள் போன்று குறிப்பிட்ட நாளில் மட்டும் செயற்படும். பொதுவாக விண்டோஸ் கணினிகள் 30 வினாடிகளில் தொடங்கும். ஆனால் நச்சுநிரலினால் கணினி இயக்கம் நேரந்தாழ்த்தப்படலாம். மாறாக ஒரு கணினி விண்டோஸ் இயங்குதளத்தை தொடங்க 1 நிமிடமளவில் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம். + +நச்சுநிரல் தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கோள்ளும். உங்கள் கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும் கோப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. பிறர் உடைமைகளுக்கு அழிவை ஏற்படுத்த வேண்டும் என்கிற தூண்டுதல் உள்ள, திறன்மிக்க மாபெரும் நிரலாக்கத் திறன்கொண்ட நிரலர்கள் எழுதுகின்ற நிரல்களே இவை. அறியப்பட்ட நச்சுநிரல்கள் 5,700 இக்கும் அதிகமானவை. ஒவ்வொரு நாளும் 6 புதிய நச்சுநிரல்கள் கண்டறியப்படுகின்றன. + +கணினியை செயலிழ்க்க செய்யும் நச்சு நிரல்கள் முதன் முதலில் 2004-ஆம் ஆண்டிலேயே பரப்பப்பட்டன.’காபிர் ஏ’ என்பதே முதல் நச்சு நிரலாகும். + +மேலும் இத்தகைய நச்சுநிரல்களை அழிக்க அல்லது தடை செய்வதற்கு என்று நச்சுநிரல்தடுப்பி கிடைக்கின்றன. இந்த நச்சுநிரல்தடுப்பியை நாம் நமது கணினியில் பதிந்து வைத்து அவற்றை பயன்படுத்தலாம். ஆனாலும் இங்கு பல விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன + +ஒரு நச்சுநிரல்தடுப்பி அனைத்து நச்சுநிரல்களையும் அழித்துவிடுவதில்லை, காரணம் ஏற்கனவே வந்த ஒரு கிருமி நிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமி நிரல்களுக்கு நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரணம் ஒவ்வொரு நச்சுநிரல்தடுப்பி எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளை நன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு ���ழிப்பான்கள் எழுதப்படுகின்றன. ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லை. எனவே அடிக்கடி உங்களது நச்சுநிரல்தடுப்பி மென்பொருளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். + + + + + +நச்சுநிரல் தடுப்பி + +ஆண்டிவரைஸ் (இலங்கை வழக்கு: அன்ரிவைரஸ்) பொதுவாக அறியப்படும் நச்சுநிரல் தடுப்பி (வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்) கணினி நச்சுநிரல் (கணினி வைரஸ்) மற்றும் ஏனைய கெட்ட மென்பொருட்களைக் கண்டறிந்து அகற்றும் மென்பொருளாகும். + +நச்சுநிரல்தடுப்பிகள் பொதுவாக இரண்டு முக்கியமான நடைமுறைகளைக் கையாள்கின்றன. + + +பெரும்பாலான நச்சுநிரல்தடுப்பிகள இன்று இவ்விரண்டு யுக்திகளையும் கையாள்கின்றன. + +நீங்கள் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதனைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி உண்மையிலேயே கணினி நச்சுநிரல்களைக் கண்டுபிடிக்கின்றதா என்பதையும் பரீட்சித்தல் வேண்டும். இவ்வாறு பரீட்சிப்பதற்கு ஐரோப்பிய கணினி வைரஸ் ஆய்வுகூடம் ஒர் ஐகார் சோதனை வைரஸ் கோப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர் இத்தளத்தைப் பார்வையிட்டு இதனைப் ஐகார் சோதனை நச்சுநிரல் ஐப் பதிவிறக்கம் செய்யமுயலவும். முடிந்தால் உங்கள் பாதுகாப்புச் சுவரானது அநேகமாக வேலைசெய்யவில்லை அல்லது உங்கள் பாதுகாப்புச் சுவரில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இல்லை அல்லது உங்கள் நச்சுநிரல்தடுப்பியிடம் நிகழ்நிலைப் பாதுகாப்பு இல்லை. பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை உங்களிடம் உள்ள நச்சுநிரல்தடுப்பி கொண்டு பரீட்சிக்கவும். இப்போதும் அதனைக் கண்டுபிடிக்கவில்லை எனில் உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் வேலை செய்யவில்லை. இவ்வாறெனின் அந்த வைரஸ் எதிர்ப்பு நிரலை அகற்றிவிட்டுப் பிறிதோர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிக் கொள்ளவும். அல்லது கணினியில் கோப்புக்களைப் பாதுகாப்பான ஓரிடத்திற் சேமித்துவிட்டு இயங்குதளத்தையும் நச்சுநிரல்தடுப்பியையும் மீள நிறுவிக்கொள்ளவும். + +ஓர் கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட நச்சுநிரற்தடுப்பிகளை நிறுவவேண்டாம் இதனால் இரட்டைப் பாதுகாப்பு எதுவும் கிடையாது மாறாக கணினியின் வேகம் வெகுவாகக் குறைவடையும். அநேகமாக "மக் அபீ" "நோர்ட்டன்" பொன்றவை நிறுவாது எனினும் வேறுசில நச்சிநிரற்தடுப்பிகளை நிறுவக் கூடியதாகவுள்ளது. சிலசமயங்களில் இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்டட வைரஸ் எதிர்ப்பு நிரல்கள் நிறுவப்பட்ட கணினியில் வேகக் குறைவினால் கணினியின் இயங்குதளத்தை மீள் நிறுவவேண்டியும் ஏற்படலாம். + +நீங்கள் எந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி வரவேண்டும் அத்துடன் கிழமைக்கு ஒரு தரமேனும் உங்கள் கணினி நச்சுநிரல்கள் அற்றது என்பதை உறுதிசெய்ய Scan செய்து வரவும் + + + + + + + +பரராசசேகரன் உலா + +பரராசசேகரன் உலா என்னும் நூல் பழைய பத்திய ரூபமான (செய்யுள் வடிவில் அமைந்த) யாழ்ப்பாணச் சரித்திர நூலாகும். செய்தார் பெயர் நிச்சயமாகத் தெரியவில்லை. மனப்புலி முதலியார் செய்ததென்பர். இது அகப்படவில்லை. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதிய மயில்வாகனப் புலவர், தனது நூலுக்கான முதல் நூல்களிலொன்றாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். + + + + +இராசமுறை + +இராசமுறை என்பது பழைய யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தைக் கூறும் ஒரு நூலாகும். இது பறங்கிக்காரர் காலத்துக்கு சிறிது முந்திச் செய்யப்பட்டது. செய்தார் யாரெனத் தெரியவில்லை. நூலும் அகப்படவில்லை. கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே யாழ்ப்பாண வைபவமாலையை மயில்வாகனப் புலவர் இயற்றினாரென்று கூறுவர். + + + + +டைகர் வுட்ஸ் + +டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார். + +1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார். + + + + +இலங்கையர்கோன் + +இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம், செப்டம்பர் 6, 1915 - அக்டோபர் 14, 1961) ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். + +இலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், திருகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார். சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார். + +பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1938 ஆம் ஆண்டில் கலைமகள் இதழில் வெளியாகிற்று. இயேசுவின் விவிலிய நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதினார். ஆரம்ப காலத்தில் இவர் புராண இதிகாசம், இலங்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைக் கதைகளாக எழுதினார். கடற்கோட்டை, சிகிரியா, அனுலா, மணப்பரிசு, யாழ்பாடி ஆகிய கதைகளை கலைமகளில் எழுதினார். மேனகை என்ற பெயரில் புராண வரலாற்றுக் கதை ஒன்றை மறுமலர்ச்சி இதழில் எழுதினார். கலைமகள் தவிர கிராம ஊழியன், சூறாவளி, பாரததேவி, கலாமோகினி ஆகிய தமிழக இதழ்களிலும் எழுதினார். + +1944 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியான "வெள்ளிப்பாதரசம்" என்ற சிறுகதை இலங்கையர்கோனை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து ஈழகேசரியில் துறவியின் துறவு, ஒரு நாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல், ஆகிய சிறுகதைகளும், பாரத தேவி இதழில் முதற் சம்பளம், வஞ்சம் போன்ற பல கதைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். + +முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய 'வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் வெளியாகி உள்ளன. + +பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் 'முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது. + +சேக்சுப்பியரின் எழுத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றன. 'பச்சோந்திகள்', 'லண்டன் கந்தையா', 'விதான��யார் வீட்டில்' 'மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன. + +'மாதவி மடந்தை', ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன. + +இலங்கையர்கோன் 1961 அக்டோபர் 14 இல் தனது 46வது அகவையில் அகால மரணம் அடைந்தார். அவரது இறப்பின் பின்னர் இலங்கையர்கோனின் 15 சிறுகதைகள் கொண்ட வெள்ளிப்ப்பாதரசம் தொகுதி 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. + + + + + + +ஈழகேசரி + +ஈழகேசரி ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிக முக்கியமானது. 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். + +அடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே ஈழகேசரியின் நோக்கமாக அமைந்தது. இது, அதன் முதழ் இதழில் வெளிவந்த கட்டுரையில் இருந்து தெளிவாகிறது. + +மேலும் தன்னலமற்ற தேசத் தொண்டு புரியும் அவாவும் இப் பத்திரிகை வெளிவரக் காரணமாக அமைந்ததாக இக் கட்டுரையில் கூறப்படுகிறது. + +ஈழகேசரியின் தோற்றப் பின்னணி பற்றி ஆராய்ந்த கா. சிவத்தம்பி, அக் காலத்தின் சமூக அரசியற் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் அரசியல் மயப்படுத்தப்பட்ட காலத்திலேயே இப் பத்திரிகை தொடங்கப்பட்டதென எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் 1841 இல் தொடங்கிய யாழ்ப்பாணப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஏறத்தாழத் தொண்ணூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் ஈழகேசரியே முதலாவது மதச் சார்பற்ற செய்திப் பத்திரிகை என்பது அவர் கூற்று. + + + + + + + +சோ. சிவபாதசுந்தரம் + +சோ. சிவபாதசுந்தரம் (ஆகத்து 12, 1912 - நவம்பர் 8, 2000) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார். + +ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக���கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். குரும்பசிட்டி நா. பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் 1938 ஆம் ஆண்டில் ஆசிரியரானார். 1942 வரை ஈழகேசரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் "ஈழகேசரி இளைஞர் கழகம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து 200 இற்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்தார்.. 1942 இல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார். + +1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இலண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப் பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார். + +இலங்கை திரும்பிய பின்னர் சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்.. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார். + +பிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார். இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.. + +சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமா���போது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது. சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர். + +சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார். + +சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுபாஷிணி ஒரு மருத்துவர். தமிழோசையில் பணியாற்றி பல தகவல்களை அளித்து வந்தார். பிரசன்னவதனி கலாக்ஷேத்திராவில் பரத நாட்டியம் பயின்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியக் கலைகளைச் சித்தரிக்கும் தொடர் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அதில் பரத நாட்டியம் ஆடுபவராக பிரசன்னவதனியின் படம் இடம் பெற்றிருந்தது. + + +சிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார். + + + + +தினகரன் (இந்தியா) + +தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழ் என்று கூறப்படுகிறது. ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் "ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்" என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது. + +தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் மருமகனுமான கே. பி. கந்தசாமியால் தொடங்கப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து திமுக வின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொல�� மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது. + + + + + +அராலி முத்துமாரியம்மன் கோயில் + +அராலி முத்துமாரியம்மன் கோயில் என அழைக்கப்படும் அராலி ஆவரம்பிட்டி அம்மன் கோவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே அராலிப் பாலத்திலிருந்து தெற்கு நோக்கிக் கால் மைல் தூரத்தில், மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ளது. இவ்வம்மன் மலையாள தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம். இக்கோயிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப் பழமை வாய்ந்தது. அடுத்த வெள்ளி, சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும். 9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்தது. பின் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வெள்ளைச்சீலையும் , நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வெளி அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும். 8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும். அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும். இதற்குப் பின் சங்காபிஷேகமும் நடந்தேறும். அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். + + + + + +தனுஷ் (நடிகர்) + +தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் "ஆடுகளம்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய "வொய் திஸ் கொலவெறி டி" என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார். + +தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். + + + + +மின்டோ சிவன் கோயில் + +மின்டோ சிவன் கோயில் ("Minto Shiva temple") அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரத்திலிருந்து சுமார் 55 கிமீ தென்மேற்காக அமைந்துள்ள மின்டோ என்னும் புறநகரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் தினமும் காலை, மாலை இரு வேளையும் முறைப்படி பூசைகள் நடைபெற்று வருகின்றது. சிவனுக்கு என்று தனிச் சிறப்புப்பெற்ற சிவராத்திரி நாள் இஙகு ஆண்டுதோறும் நான்கு சாமம் கொண்டாடப்பட்டு வருகின்றது. + +இக்கோயிலில் பிள்ளைகள் மூன்று வயது முதல் கேள்வி ஞானத்தில் கூட்டு வழிபாடு செய்வது சிறப்பம்சம். மேலும் சமய விரிவுரைகள், பரதநாட்டிய வகுப்பு, தமிழ், இந்தி, ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. + + + + + + +வ. ஐ. ச. ஜெயபாலன் + +வ. ஐ. ச. ஜெயபாலன் (பிறப்பு: சூலை 13, 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். + + + + + + + +பன்முகம் + +புதுப்புனலினால் வெளியிடப்படும் பன்முகம் ஒரு காலாண்டு இலக்கிய இதழ். இதன் ஆசிரியர் எம். ஜி. சுரேஷ். இதன் முதல் இதழ் 2003 ஜூலை - செப்டம்பர் காலப் பகுதிக்குரியதாக வெளிவந்தது. நவீன இலக்கியக் கோட்பாடுகள் தொடர்பான கட்டுரைகள், அறிமுகக் குறிப்புக்கள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் என்பனவற்றைத் தாங்கி பன்முகம் வெளிவருகிறது. + + + + +இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய, நியூசிலாந்து சுற்றுப்பயணம் 1876–77 + +இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 1876-77 இல் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டது. இதன் போது வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடப்பட்டது. ஆங்கிலேய அணி சில வேளைகளில் ஜேம்ஸ் லிலீவைட்டின் XI அணி என அழைக்கப்பட்டது. மொத்தமாக 23 ஆட்டங்கள் விளையாடிய போதும், இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் உட்பட மூன்று போட்டிகளே முதல்-தர ஆட்டங்களாகக் கணிக்கப்பட்டன. முதலாவது போட்டி அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் 1876 நவம்பர் 16 இலும், கடைசிப் போட்டி அதே அரங்கில் 1877 ஏப்ரல் 14 இலும் நடைபெற்றன. 15 ஆட்டங்கள் ஆத்திரேலியாவிலும், எட்டு நியூசிலாந்திலும் விளையாடப்பட்டன. +பில்லி முர்டாக் குச்சக்காப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆத்திரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பிரெட் ஸ்பொட்ஃபோர்த் முதலாவது போட்டியில் சேர்க்கப்படவில்லை. 1877 மார்ச் 15 முதல் இரண்டு அணிகளும் இரண்டு ஆட்டங்களில் விளையாடின. இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. + +கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டி 1877 மார்ச் 15 ஆம் திகதி தொடங்கியது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேண் நகரில் தொடங்கிய இப்போட்டியில் நாணயச் சுண்டில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. சார்லசு பான்னர்மன் ஆட்டமிழக்காமல் பெற்ற 165 ஓட்டங்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 245 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 196 ஆட்டங்களைப் பெற்றது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் (இனிங்ஸில்) பான்னர்மன் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணி 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 154 என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது பகுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. + + + + + +சி. வி. வேலுப்பிள்ளை + +சி. வி. வேலுப்பிள்ளை (செப்டம்பர் 14, 1914 - 1984) இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர���, அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். + +வேலுப்பிள்ளை இலங்கையின் மலையகத்தில் மடக்கொம்பரையில் பெரிய கங்காணிக்கு மகனாக பிறந்தார். அவர் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார். சேக்ஸ்பியர் முதலியோரின் ஆக்கங்களை இவர் படித்துத் தேறினார். ஆசிரியராகப் பணியாற்றினார். + +இலங்கை வானொலியான வொயிஸ் ஒஃப் லங்கா ("Voice of Lanka") அவரது "Tea Pluckers" என்ற ஆங்கிலக் கவிதையை அறிமுகம் செய்தது. அவரது திறமையை வியந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் தனது "காங்கிரஸ் நியூஸ்" என்ற ஏட்டின் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். + +கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார். அந்நாளில் தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி மலையகப் படைப்பாளிகளை ஊக்குவித்து மலையக இலக்கியங்களை வெளியிட்டு வந்தார். அவர் சி. வி. வேலுப்பிள்ளையின் நிறைய படைப்புகளை வெளிக்கொணர்ந்தார். பொன். கிருஷ்ணசாமி இவரது ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து தினகரனில் வெளியிட்டார். + +1934 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இலங்கை வந்­தி­ருந்த போது அவரை 1934 மே 14 இல் கொழும்பில் சந்தித்து தன்னுடைய விஸ்மாஜினி என்ற இசை நாடக நூலை வழங்கி ஆசி பெற்றார். + +1961 இல் வீரகேசரியில் "காலம் பதில் சொல்லட்டும்", "சாக்குக்காரன்" என்ற இரு சிறுகதைகளை இவர் எழுதினார். + +வேலுப்பிள்ளை சிங்களப் பெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் சில கவிதைகளை எழுதியுள்ளார். + +1947 இல் சோல்பரி அரசியல் சாசனப்படி இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்திலிருந்து சென்ற 7 பேரில் ஒருவராக தலவாக்கலை பிரதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு நிறைவேற்றிய பிரசா உரிமைச் சட்டத்தால் அவர்கள் உறுப்புரிமை இழந்தனர். என்றாலும் மேற்படி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர். + +பின்னாளில் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி வி. கே. வெள்ளையன் தலைமையில் 1965 இல் அமைந்த தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். + + + + + + + +சுதந்திரன் + +சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 - 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்பட்டது. + + + + +ச. பொன்னுத்துரை + +எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (சூன் 4, 1932 - நவம்பர் 26, 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். + +யாழ்ப்பாணம், நல்லூரில் சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். + +தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார். + +இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உரு��ாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார். புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார். + +இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர். + +சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். + +ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். + +கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் "தீதும் நன்றும் பிறர்தர வரா" என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது. + +இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய "இனி ஒரு விதி செய்வோம்" என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் "வரலாற்றில் வாழ்தல்" என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார். + +இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது. + + +எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார். இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் ���ோராளி ஆவார். + + + + + +எஸ். டி. சிவநாயகம் + +எஸ். டி. சிவநாயகம் (இறப்பு: ஏப்ரல் 22, 2000) இலங்கையின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவ இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர். + +எஸ். டி. சிவநாயகம், 1948 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், சுதந்திரன் வார இதழிலும், வீரகேசரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு தினபதி, சிந்தாமணி முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் 1974 ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் மாணிக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். + +எஸ். டி. சிவநாயகம், சமய, சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கொழும்பு சத்திய சாயி பாபா மத்திய நிலைத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவில் புட்டபர்த்தி நகரில் நடைபெற்ற, உலக சாயி நிறுவனங்களின் இரண்டாவது மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 1979 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய கே. டபிள்யூ. தேவநாயகத்தின் உதவியுடன் ‘சத்ய சாயிபாபா அறக்கட்டளையகம்’ எனும் சாயி அமைப்பையும் உருவாக்கினார். + + + + + +சில்லையூர் செல்வராசன் + +சில்லையூர் செல்வராசன் (25 சனவரி 1933 - 14 அக்டோபர் 1995) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த சில்லாலை ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை "சில்லையூர் செல்வராசன்" எனச் சூடிக்கொண்டார். + +"தான்தோன்றிக் கவிராயர்" என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அங்கதப் பாணிக் கவிதைகள் எழுதிய இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரு வரவேற்பு பெற்றன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக��கிய பெருமையும் அவரைச் சாரும். 'உப்பு' என்ற கவிதை, பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்றது. சில்லையூராரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகு பெறுகிறது. ("சில்லையூரின் கவிதைச் சிமிழ்") + +20 ஆம் நூற்றாண்டின் பெரும் கவிஞராகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் "தணியாத தாகம்" என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கிச் சாதனை படைத்தார். ஏராளமான நேயர்கள் வாரம் தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள். + +கே. எஸ். பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், கமலினி செல்வராசன், கே. மார்க்கண்டன், செல்வநாயகி தியாகராசா, வாசுதேவன், ஷாமினி ஜெயசிங்கம், எஸ். கே. தர்மலிங்கம், எஸ். ஜேசுரட்னம் , பி. என். ஆர்.அமிர்தவாசகம், எஸ். எழில்வேந்தன் போன்றோர் இத்தொடரில் குரல் தந்து / குரலொலிக் கலைஞர்களாகப் புகழ் பெற்றார்கள். + +சேக்சுபியர் கவிதைகளை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். சூலியஸ் சீசர் நாடகத்திலிருந்து இவர் மொழிபெயர்த்த பகுதி சிறப்பானதாகும். 1959ல் பம்பாயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்குபற்றியவர். 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார். + +Ordinary Magic (1993), The Further Adventures of Tennessee Buck (1988) போன்ற ஆங்கிலப்படங்களிலும், "கோமாளிகள்" என்ற இலங்கைப்படத்திலும் நடித்துள்ளார். மறைந்த ஈழத்து எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்திலே முக்கிய பாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றவர். பூந்தான் சோசப் அண்ணவியாரின் இயக்கத்தில் நாட்டுக்கூத்திலும் நடித்த பெருமைக்குரியவர் + +முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். 1950 இல் பொதுவுடைமைவாதியாக காலடி வைத்த சில்லையூர் செல்வராசன் அதைப் பற்றுறுதியுடன் கடைசி மூச்சுவரை பற்றிக் கொண்டார். பண்டித வர்க்கத்தினரால் இழிசனர் வழக்கு என்று கொச்சைப்படுத்தியவர்களுக்கு எதிராக தன் கவித் திறமையால் சாடி கவிதைகளைப் படைத்தார். இழிசனர் மரபு வாதத்தில் ஊறிநின்று ஓரங்க நாடகத்தைச் செய்து காட்டி அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தார். + +ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார். பண்டித பரம்பரையினரைச் சாடி புதுக்கவிதைப் பரம்பரையைச் செல்வராசன் முன்வைத்தார். + +யாழ்ப்பாணச் சாதி முறைக்கு எதிராக புதிய வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க அங்கத மொழியில் செல்வராஜன் சங்கநாதத்துடன் கவிதையால் எடுத்தியம்பியுள்ளார். சமுதாய அடக்குமுறைக்கு, அநியாயங்களுக்கு, மூடக் கொள்கைகளுக்கு எதிராக அவற்றை ஒழித்துக்கட்ட கவிதையால் சாடினார். அங்கதக் கவிதைகள் புதுமைக் கருத்தை இலக்கியத்தில் புகுத்தின. "தலைவர்கள் வாழ்க மாதோ" என்ற அங்கதக் கவிதை மூலம் அரசியல் தலைவர்களை சில்லையூரான் சாடினார். + +பரந்த கலைப் பரப்பை கொண்டிருந்த செல்வராசன் பத்திரிகைத் துறையிலும் தடம் பதித்திருந்தார். சுதந்திரன், அடுத்து வீரகேசரி ஞாயிறு பதிப்பில் சிலகாலம் பொறுப்பாசிரியராக இருந்து இலங்கை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தார். + + + + + + +கே. டானியல் + +கே. டானியல் (பிறப்பு: 25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். + + + + + + + + +செ. சிவஞானசுந்தரம் + +நந்தி என்கிற செ. சிவஞானசுந்தரம் (இறப்பு: சூன் 4, 2005) சிறுகதை மற்றும் நாவல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஈழத்து எழுத்தாளர் ஆவார். வைத்திய கலாநிதியான இவர் வைத்தியம்சார் நூல்களையும் எழுதியுள்ளார். + +பேராசிரியர் சிவஞானசுந்தரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நோய்த்தடுப்பு மருத்துவருக்கான பட்டப்படிப்பையும் பின்பு 1971 இல் கலாநிதிக்கான (இந்தியத் தமிழ்: முனைவர்) பட்டப்படிப்பையும் முடித்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்துக் கௌரவித்தது. + +அரசாங்கத்திற்குரிய சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறுமட்டங்களில் 1966 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினார். + +1978 ஆம் ஆண்டு யாழ் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமுகநல மருத்துவப் பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்பதவியிலேயே கடமையாற்றினார். + +1984 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பீடத்தின் தலைவராக திகழ்ந்ததுடன் யாழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை சபையின் அங்கத்தினராகவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். + +1981 ஆம் ஆண்டு ஜோர்டான் மாநகரத்தின் சுகாதார மந்திரி சபையில் மருத்துவ உதவியாளர்களுக்கு அறிவுரையாளராக பணிபுரிந்தார். அத்துடன் மருத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டிப் புத்தகமொன்றையும் தயார் செய்து அராபிய மொழியில் மொழிபெயர்த்தார். + +உலக சுகாதார நிறுவனத்திற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டுவரை மலேசியா, பங்களாதேஷ், மொங்கோலியா, இந்தியா, மியன்மார், சிம்பாப்வே, வட கொரியா ஆகிய நாடுகளில் சுகாதார ஆராய்ச்சிக்கூடங்களில் சர்வதேச அறிவுரையாளராக பணிபுரிந்தார். இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்து பலவற்றை தலைமைதாங்கியும் நடாத்தினார். + +தனது 13 வயதிலே தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கினார். அவர் தனது 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் “சஞ்சலம் சந்தோசம்” என்ற முதல் குறுங்கதையை எழுதினார். 1979 இல் தினகரனில் தொடராக வெளிவந்த இவரது நம்பிக்கைகள் என்ற புதினம் 1989 இல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய மூன்று கதைகளுக்கு இலங்கையின் சாகித்திய சபை விருதும் இன்னொரு கதைக்கு இராஜ விருதும் கிடைத்தது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சாய் மார்க்கத்தின் பதிப்பாசிரியராக இருந்தார். + +இவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய “ஆராய்ச்சிகள்” என்ற நூல் இரு பதிவுகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. இத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தேச, சர்வதேசரீதியில் வெளியிட்டுள்ளார். 16 நூல்களை தமிழிலும், 4 நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2 புத்தகங்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2 புத்தகங்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும், 1 புத்தகத்தை ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற சத்திய சாயி கல்வி நூலையும் வெளியிட்டார். + +கிரிபிட்டியா என்ற இடத்தில் வேலை செய்த போது அங்கிருந்த மருத்துவச்சியை கதாபாத்திரமாக வைத்து “சிங்களத்து மருத்துவச்சி” என்ற நூலை எழுதினார். அத்துடன் கொலரா நோயை கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து “தங்கச்சியம்மா” என்ற நாவலை எழுதினார். நாவலப்பிட்டியில் வேலை செய்த போது அங்குள்ள தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை வைத்து “மலைக்கொழுந்து” என்ற நாவலை எழுதினார். + +தலைசிறந்த கல்விமான் என்பதுடன் திறமைமிக்க சிருஸ்டிகர்த்தா என்றும் கூறக்கூடியதாக விளங்கினார். பல வருடங்களாக இலங்கை வானொலியில் வானொலி வைத்தியராக சேவையாற்றினார். + +80 மேடை நாடகங்களிலும் கூடுதலாக நடித்தார். 1952 ஆம் 1953 ஆம் ஆண்டுகளில் 25 தமிழ் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். தர்மசேன பதிராஜாவால் இயக்கப்பட்ட பொன்மணி என்ற ஆரம்ப காலத்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார். + + + + + + + + + +தமிழீழ தேசிய தொலைக்காட்சி + +தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். 2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பானது. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது. + + + + +வானவில் + +வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. +நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. + +வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். சிவப்பு: . ஆரஞ்சு: . மஞ்சள்: . பச்சை: . நீலம்: . கருநீலம்: . ஊதா: என்பதே இந்த வண்ணங்கள். + +பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும். + + + + + +நேர வலயம் + +நேர வலயம் "(time zone)" என்பது சட்டம், வாணிகம், சமூகம் சார்ந்த நோக்கங்களுக்காக ஒரே சீரான செந்தர நேரம் நடைமுறைப்படுத்தப்படும் புவிக்கோளத்தின் ஒரு பகுதியாகும். நேர வலயம் நாடு/நாடுகளின் எல்லைகளையும் அதன் உட்பிரிவுகளையும் பின்பற்ற முனைகிறது. ஏனெனில், அப்போதுதான் நெருக்கமாக அமைந்த வணிக, தொடர்பாடல் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தல் ஏந்தாக அமையும். + +நேர வலயம் என்பதை எளிமையாக, புவிக்கோளத்தில் வடக்கு-தெற்காக பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் செந்தர நேரமாகக் கொள்ளும் திட்டம் எனலாம். புவிக்கோளம் தன் தென்வடலான (தெற்கு-வடக்கான) சுழல் அச்சை நடுவாகக்கொண்டு சுழலுவதால் ஒரிடத்தில் கதிரவன் உச்சியின் இருக்கும் பொழுது புவிக் கோளத்தின் மறுபுறம் இருளாக இருக்கும். எனவே புவிக் கோளத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்கள் அமைவது இயற்கை. இதனைச் செந்தரப்படுத்தி உலகம் முழுவதற்குமாக நேரத்தை வரையறை செய்தது நேர வலயத் திட்டம் ஆகும். கனடா நாட்டினராகிய சர். சுட்டான்வோர்டு விளெமிங் (Stanford Fleming) என்பவர் முதன் முதலாக உலகம் முழுவதற்குமான நேர வலயத் திட்டத்தை 1876 இல் அறிவித்தார். புவிக் கோளத்தில் தென்வடலாகச் செல்லும் நில நெடுவரைக் கோடுகளில் 15 பாகைக்கு (15°), ஒரு நேரமாகக் கொண்டு, ஒவ்வொரு 15° நிலப்பகுதிக்கும் ஒரு மணி நேரம் வேறுபாடு என்று நிறுவி உலகம் முழுவதற்குமாக மொத்தம் 24 நேர வலயங்களாக 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும��� அதனுடைய அண்மை வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடும். நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன. + +பெரும்பாலான நேர வலயங்கள் ஒருங்கிணைந்த பொது நேரத்தில் இருந்து முழு மணிகளால் ஆகிய குறிப்பிட்ட இடைவெளி அமைந்த புவிக்கோளப் பகுதிகளாகும். இந்நேர இடைவெளிகள் ஒபொநே−12 முதல் ஒபொநே+14 வரையில் அமைகின்றன. என்றாலும் சில வலயங்கள் 30 அல்லது 45 மணித்துளிகள், முழு மணியில் இருந்து கூடுதல் அல்லது குறைவான இடைவெளி கொண்டதாக அமைதல் உண்டு. எடுத்துகாட்டாக, நியூசிலாந்து நேர வலயம் அல்லது செந்தர நேரம் ஒபொநே+05:45 ஆகும். அதேபோல, நேபாளத்தின் செந்தர நேரம் ஒபொநே=03:30 ஆகும். இந்தியச் செந்தர நேரம் ஒபொநே+05:30 ஆகும். + +சில மிதவெப்ப மண்டல, உயர் அகலாங்கு நாடுகள் ஆண்டின் ஒரு பகுதியில், கள நேரத்தை ஒருமணி நேரம் மாற்றிவைத்து பகல் ஒளி காப்பு நேரத்தைப் பயன்படுத்துகின்றன. பல நேர வலயங்கள் தம் இயல்நேர வலயங்களில் இருந்து மேற்கு நோக்கிச் சரித்தபடி பின்பற்றுகின்றன. இம்முறையும் நிலையான பகல் ஒளி காப்பு நேர விளைவைத் தருகிறது. + +கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு,தோற்ற சூரிய நேரத்தை (இது உண்மைச் சூரிய நேரம் எனவும் வழங்கும்) வைத்து பகல் நேரம் கூறுவது பொது வழக்கமாக இருந்தது – எடுத்துகாட்டாக. சூரியக் கடிகையில் இருந்தும் நேரம் அறிதலைக் கூறலாம். இந்நேரம் ஒவ்வொரு இடத்திலும் அவ்விடம் அமைந்துள்ள அகலாங்கைப் பொறுத்து மாறும். +நன்கு ஒழுங்குபடுத்திய எந்திரக் கடிக்காரங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டதும், ஒவ்வொரு நகரமும் களச் சூரிய நிரல் (சராசரி) நேரத்தைப் பயன்படுத்த தொடங்கியது. தோற்ற சூரிய நேரமும் நிரல் சூரிய நேரமும் ஏறத்தாழ 15 மணித்துளிகள் அளவுக்கு வேறுபடலாம். இந்நிலை சூரியனைப் புவி சுற்றிவரும் வட்டணையின் நீள்வட்ட வடிவத்தாலும் புவிக்கோள அச்சு சாய்வாலும் ஏற்படுகிறது. நிரல் சூரிய நேரம் சம நீளமுள்ள (பொழுதுள்ள) நாட்களைக் கருதுகிறது. இரண்டு கூட்டுத்தொகைகளுக்கும் இடையில் அமையும் வேறுபாடு ஓராண்டில் சுழியாகிறது. +கிரீன்விச் நிரல் நேரம், 1675 இல் கிரீன்விச்சில் அரசு வான்காணகம் கட்டப்பட்டதும் கடலில் கப்பலோட்டிகள் அகலாங்கை தீர்மானிக்க உருவாக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் ஒவ்வொரு நகரமும் ஒரு களச் சூரிய நிரல் நேரத்தைப் பின்பற்றியதால், இது செந்தர மேற்கோள் நேரமாக அமைந்தது. +தொடர்வண்டி போக்குவரத்தும் தொலைதொடர்பும் வளர்ச்சிபெற்றதும், களச் சூரிய நேரங்கள், களத்தின் அகலாங்குகளின் வேறுபாட்டைப் பொறுத்து மாறியதால், அவை பெரிதும் குழப்பத்தை விளைவித்தன. இவ்வகைக் கள நேரங்கள் ஒவ்வொரு பாகை அகலாங்கு வேறுபாட்டுக்கும் 4 மணிதுளிகள் அளவுக்கு வேறுபட்டன. எடுத்துகாட்டாக, பிரிசுட்டல் நகரம் கிரீன்விச்சில் இருந்து 2.5 பாகை மேற்கில் தள்ளியமைவதால், பிரிசுட்டலில் மதியம் ஆகும்போது கிரீன்விச்சில் மதியத்தைத் தாண்டி 10 மணித்துளிகள் கூடுதலாக இருக்கும். நேர வலயங்களின் பயன்பாடு, இந்தச் சிறுசிறு நேர வேறுபாடுகளைக் கூட்டி மேலும் பெரிய நேர அலகுகளாக, அதாவது, மணியளவு வேறுபாடுகளாக, மாற்றுகிறது. இதனால் அருகருகே உள்ள இடங்கள் பொது செந்தர நேரத்தைப் பின்பற்றலாம். + +பெரும்பிரித்தானியாவில் அந்நாட்டு தொடர்வண்டிக் குழுமங்களால் 1847 திசம்பர் 1 இல் முதன்முதலாக கிரீன்விச்சின் நேரத்தைப் பயன்படுத்திய கப்பற் காலமானிகளின் உதவியால் பின்பற்றப்பட்டது. இவ்வாறு முதலில் 18840 நவம்பரில் செந்தர நேரத்தைப் பின்பற்றிய குழுமமாக மேற்குப் பெருந்தொடர்வண்டிக் குழுமம் அமைந்தது. இது உடனே தொடர்வண்டி நேரம் என வழங்கப்பட்டது. 1852 ஆகத்து 23 இல் கிரீன்விச் அரசு வான்காணகத்தில் இருந்து, தொலவரி வழி காலக் குறிகைகள் (சைகைகள்) அனுப்பப்பட்டன.1855 அளவில் பெரும்பிரித்தானியாவின் 98% பொது கடிகாரங்கள் கிரீன்விச் நிரல் நேரத்தையே பின்பற்றினாலும், 1880 ஆகத்து 2 வரை அது சட்டப்படியான நேரமாக ஏற்கப்படவில்லை. இந்தக் காலத்தின் சில பிரித்தானியக் கடிகாரங்கள் இரண்டு மனித்துளிக்கான முட்கலைக் கொண்டிருந்தன. இவற்ரில் ஒன்று கள நேரத்தையும் மற்றொன்று கிரீன்விச் நிரல் நேரத்தையும் காட்டின. + +உலகளாவிய தொலைத்தொடர்பு வளர்ச்சி, தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரிடையே அனைவரும் பகிரமுடிந்த மேற்கோள் நேரத்தைப் பரிமாறிக் கொள்ளவேண்டிய தேவையை உருவாக்கியது. பேரளவு பகுதிகளில் உள்ள கடிகாரங்களை உலக முழுவதிலும் ஒருங்கியங்கவைத்து வேறுபடும் கள நேரங்களின் சிக்கல் ஓரளவு தீர்க்க முடிந்த்து, ஆனால், பல இடங்களில் இவ்வறு பின்பற்றிய செந்தர நேரம் மக்கள் பழக்கப்பட்ட சூரிய நேரத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. + +1868 நவம்பர் 2 இல் அப்போதைய பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நியூசிலாந்து அந்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட செந்தர நேரத்தைப் பின்பற்றலானது. இதுபோல முதன்முதலாக உலகில் பின்பற்றிய நாடு இதுவேயாகும். இது கிரீன்விச்சுக்குக் கிழக்கே உள்ள 172°30′ நெட்டாங்கைச் சார்ந்தமைந்தது. எனவே, இது கிரீன்விச் நிரல் நேரத்தில் இருந்து 11மணியும் 30 மணித்துளிகள் முன்பாக அமைந்தது. இச்செந்தர நேரம், நியூசிலாந்து நிரல் நேரம் எனப்பட்டது. + +அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களில் நேரங்கணிப்பது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓரளவு குழப்பமாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு தொடர்வண்டித் தடமும் ஒரு தனியான செந்தர நேரத்தைப் பின்பற்றியது. இது அதன் தலைமையகத்தின் கள நேரத்தையோ அல்லது மிக முதன்மையான நிலையத்தின் கள நேரத்தையோ செந்தர நேரமாக பின்பற்றியது. ஒவ்வொரு குழுமமும் தனது தொடர்வண்டி நேர அட்டவணையைத் தனது பொது நேரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டது. சில தொடர்வண்டிச் சந்திப்புகள் பல தடங்களுக்கு பொதுவாய் அமைந்ததால், அங்கு ஒவ்வொரு குழுமத் தடத்துக்கும் ஒரு தனி கடிகாரம் வைக்கப்பட்டிருந்தது. இவை ஒவ்வொன்றும் வேறு வேறு நேரத்தைக் காட்டின. + +சார்லசு எஃப். தவுடு 1963 இல் அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களுக்கான ஒரு மணி நேர இடைவெளி அமைந்த செந்தர நேர வலயங்களின் அமைப்பை முன்மொழிந்தார். ஆனால், அவர் இந்த அமைப்பு பற்றி எங்கும் வெளியிடவில்லை. மேலும், 1969 வரை இதைப் பற்றி எந்த தொடர்வண்டிக் குழுமத்துடனுங்கூட கலந்துகொள்ளவும் இல்லை. பிறகு, இவரே 1870 இல் வடக்கு-தெற்கு எல்லைகள் அமைந்த நான்கு கருத்தியலான நேர வலயங்களை முன்மொழிந்தார். இதில் முதலாம் அமைப்பு வாழ்சிங்டனை மையமாக கொண்டதாகும். பிறகு 1972 ஆம் ஆண்டளவில் இது 75 ஆம் பாகை மேற்கு நெட்டாங்கை மையமாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன் புவிப்பரப்பு எல்லைகளாக அப்பல்லாச்சிய மலையின் பகுதிகள் அமைந்தன. ஆனால், இவரது முறையை அமெரிக்கத் தொடர்வண்டிக் குழுமங்களேதும் ஏற்கவில்லை. மாறாக, அமெரிக்க, கனடியத் தொடர்வண்டித் தடங்கள், பயணரின் அலுவல்முறை தொடர்வண்டி வழிகாட்டி எனும் அட்டவணையின் ஆசிரியரான வில்லியம் எஃப். ஆலனால் முன்மொழியப்பட்ட முறை��ைப் பின்பற்றலாயின. இந்த நேர வலயத்தின் எல்லைகளாக, பெருநகரங்களின் ஊடான தொடர்வண்டி நிலையங்கள் அமைந்தன. எடுத்துகாட்டாக, கிழக்கு, மைய நேர வலயங்களின் இடையிலான எல்லை, தெத்ராயித்து, பப்பெல்லோ, பிட்சுபர்கு, அத்லாந்தா, சார்லசுடன் ஆகிய நகரங்களின் ஊடாக அமைந்தது. இது 1883 நவம்பர் 18 ஞாயிறன்று தொடங்கப்பட்டது. இந்நாள் இருமதியங்களின் நாள் எனப்பட்ட நாளாகும். ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்தின் கடிகாரமும் ஒவ்வொரு நேர வலயத்திலும் உள்ள செந்தர மதிய நேரத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த நேர வலயங்கள் இடைக்குடியேற்ற வலயம், கிழக்கு வலயம், நடுவண் வலயம், மலை வலயம், பசிபிக் வலயம் எனப் பெயரிடப்பட்டன. ஓராண்டுக்குள் 10,000 மக்கள் அளவுக்கு மேல் வாழும் 85% நகரங்கள், அதாவது 200 நகரங்கள் செந்தர நேரத்தைப் பயன்படுத்தலாயின. விதிவிலக்காக, கிழக்கு, நடுவண் வலயங்களின் நெட்டாங்குகளுக்கு நடுவே இருந்த தெத்ராயித்து மட்டும் 1900 வரையில் கள நேரமுறையைப் பின்பற்றியது. பிறகு, இது நடுவண் செந்தர நேரத்தைப் பின்பற்றியது. 1915 ஆண்டுக்குள் கிழக்கு நேர வலய முறையைப் பின்பற்றலானது. அப்போது தான் கிழக்கு செந்தர நேரத்துக்கான சட்டமுன் ஆணை வழங்கப்பட்டு, அது 1916 ஆகத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவுவழி பின்னேற்பைப் பெற்றது. செந்தர நேரங்கள் சார்ந்த அனைத்துக் குழப்பங்களும், அமெரிக்கப் பேராயம் 1918 மார்ச்சு 19 இல் செந்தர நேரச் சட்டத்தை நிறைவேற்றியதும், முடிவுக்கு வந்தன. + +இத்தாலியக் கணிதவியலாளராகிய குவிரிகோ பிலோபந்தி தான் முதன்முதலாக நெட்டாங்குகளைச் சார்ந்து 24 மணிநேரத்துக்கான நேர வலயங்களின் அமைப்பை 1858 இல் தனது மிராண்டா எனும் நூலில் வெளியிட்டார். என்றாலும் இவரது எண்ணக்கரு நூலைவிட்டு இவர் இறக்கும் வரையில் வெளியுலகம் அறிய முடியாமலே இருந்தது. எனவே இவரது முறை 19 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்படவில்லை. இவரது நேர வலய நாட்கள் நெட்டாங்கு நாட்கள் எனப்பட்டன. முதலில் இவை உரோம் நகரை மையமாகக் கொண்டிருந்தன. வானியலிலும் தொலைவரைவியலிலும் பயன்படுத்துவற்கான பொது நேரத்தையும் இவர் முன்மொழிந்துள்ளார். + + + + + +ஜிமெயில் + +கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. சுமார் 3 ஆண்டுகளாகச��� சோதனையில் இருந்த இந்த மென்பொருள், தற்போது சோதனைகள் முடிந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. இது யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006 இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23 , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5, 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 முதல் இணையமுடியும். உலகின் அனைவருக்கும் காதலர் தினமான 14 பெப்ரவரி 2007 முதல் அனைவரும் ஜிமெயிலை அழைப்பின்றிப் பெற்றுக் கொள்ளலாம் ஜிமெயில் பயனர்கள் அனைவரும் மே 29 2008 முதல் ஜிமெயிலை தமிழ் உட்பட இந்திய மொழி இடைமுகத்துடன் பெற்றுக் கொள்ளலாம் + +ஜிமெயில், ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப்பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பதித்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாகவும் வழங்கப்படுகின்றது. சிலர், இச்சோதனை நிலை முடிவடைந்தாலும் கூட, எரிதங்களை (Spam mail) இல்லாதொழிக்க அழைப்பிதழ்கள் மூலமாக மட்டுமே இச்சேவையில் இணைய முடிவதை தொடர வேண்டும் என நம்பினார்கள் + +ஜிமெயில் இன்னும் முழுதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராதபோதும் பெரும்பாலான ஜிமெயில் பயனர்கள் தேவைக்கு மேலதிகமான அழைப்பிதழ்களை வைத்துள்ளனர். ஜிமெயில் பயனர்களுக்கு 0-100 இற்கும் இடையிலான அழைப்புக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜப்பான், எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் நேரடியாக இச்சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துருக்கி, பிலிப்பைன்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நகர்பேசியூடாகவும் அல்லது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் ".edu" என்று முடிகின்றவர்களும் ஜிமெயிலில் இணைந்து கொள்ளமுடியும். ஜிமெயில் +அழைப்புக்களை பல்வேறு இணையத்தளங்களில் காணமுடியுமெனினும் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை விற்பது சட்டப்படி பிழையானது. + +தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கும் இச்சேவை, மின்னஞ்சல்களைச் சேமித்து வைக்க 6.7 GB 11 மே 2008 அன்றைய நில���ரப்படி) இடத்தை தற்போது வழங்குகிறது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் முட்டாள்கள் நாளான ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2 GB ஆக கூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வளர்ச்சிவீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகாபைட் ஆகும். + +ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பாவிக்கின்றது (பயன்படுத்துகின்றது). தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்கு இன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, உலாவிகள் அவசியம். பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும். ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது. + +ஏப்ரல் 12, 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டது. + +ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை (Privacy policy) குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பேணப்படும். இது மட்டுமன்றி பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூடக் கொடுக்கப்படும்.. + +ஏனைய மின்னஞ்சல்கள் போன்றல்லாது ஜிமெயில், மறுமொழிகளை உரையாடற் பார்வையில் வைத்திருக்கும் இப்புதிய புரட்சிகரமான சிந்தனையானது மின்னஞ்சல்களுக்கு ஓர் ஒழுங்குடன் விடையளிப்பதை இலகுவாக்கியுள்ளது. இதை கூகிள் செயற்படுத்தும் விதம் முற்றும் சரியெனக் கூறமுடியாதெனினும் இது சிறந்ததொரு முறையாகும். சிலசமயங்களில் மின்னஞ்சல் தலைப்பை மாற்றும் போது உரையாடல்கள் பிரிந்துவிடுகின்றன. சில சமயங்களில் தொடர்பில்லாத உரையாடல்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அண்ணளவாக 100க்கு மேற்பட்ட உரையாடல்கள் இருப்பின் அவை இரண்டாக்கப்படும்; சில சமயங்களில் பல துண்டுகளுமாக்கப்படும். இச்சேவை தொடங்கப்பட்டபோது, ஓர் உரையாடலின் ஒரு மின்னஞ்சலை அழித்தபோது முழு உரையாடலும் அழிந்துவிடும் எனினும், "Trash This Message" எனும் பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இக்குறை சரிசெய்யப்பட்டுவிட்டது. + +அடைவுகளினுள் மின்னஞ்சல்களை வைத்தல் என்னும் நடவடிக்கையில் ஒரு படி மேலே போய் மேலொட்டு. (label) ��டுதல் என்னும் நடவடிக்கையை ஜிமெயில் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஒரு மின்னஞ்சல் பல மேலொட்டுக்களை கொண்டிருக்கலாம்; ஆனால், அடைவுகளுள் போட்டால் ஒரு மின்னஞ்சலை ஒரு அடைவில் மட்டும் தான் போடமுடியும். ஜிமெயிலில் குறித்த ஒரு மேலொட்டு உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் ஓரே நேரத்தில் பார்வையிடமுடியும். அத்துடன் இந்த மேலொட்டை கொண்டு மின்னஞ்சல்களைத் தேடவும் முடியும். ஜிமெயில் பயனர்கள், பிற மின்னஞ்சல் சேவைகளில் அடைவுகளில் போடும் முறையைப் போலவே இங்கும் மேலொட்டுகளை கையாளலாம். ஏனைய மின்னசல்களைப் போலவே இதுவும் மின்னஞ்சல்களை வடிகட்ட (filter) உதவும். + +உலாவிகளின் பிழை அல்லது மின்சாரத் தடை போன்றவற்றில் இருந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பாதுகாக்க நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே சேமித்துக் கொள்ளும். மின்னஞ்சலில் இணைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றையும் தானாகவே சேமித்துக் கொள்ளும். ஜிமெயில் நிமிடத்திற்கு ஒருமுறை சேமிக்க முயலுமெனினும் மின்னஞ்சலின் அளவைப் பொறுத்து சேமிக்கும் நேரமானது மாற்றமடையும்.Ctrl+S (ஆப்பிள் கணினிகளில் Cmd+S) மூலமும் சேமிக்கலாம். + +சொடுக்கி (mouse) வழியாக அன்றி விசைப்பலகை வழியாகவும் ஜிமெயிலை பயன்படுத்தமுடியும். இந்தவசதிகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் விசைப்பலகைக் குறுக்குவழிகளைப் பார்க்கவும் + +ஜிமெயில் பயனர் பெயர்கள் யாவும் ஆறில் இருந்து முப்பது வரை (ஆறும் முப்பதும் உட்பட) எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் புள்ளிகளால் மாத்திதிரமேயானவை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புள்ளிகளையிட்டுக் கொள்ளலாம். அதாவது ஜிமெயில் புள்ளிகளைக் கணக்கில் கொள்ளாது. அதாவது நீங்கள் விரும்பிய வண்ணம் புள்ளிகளைச் சேர்க்கவே இல்லாமற் பண்ணவோ இயலும். உதாரணமாக google@gmail.com எனும் மின்னஞ்சலானது goo.gle@gmail.com, g.o.o.g.l.e@gmail.com போன்ற எல்லாக் கணக்குகளிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ளும். எனினும் பயனர் கணக்கொன்றைப் புள்ளிகளுடன் உருவாக்க விரும்பினால் கணக்கை தொடங்கும் போதே புள்ளியை தர வேண்டும். + +எனவே புள்ளிகளால் மாத்திரம் மாறுபடும் பயனர் கணக்கை தொடங்க அனுமதிக்காது. எடுத்துக்காட்டுக்கு, john.doe@gmail.com, johndoe@gmail.com எனும் இரண்டு பயனர்களை எடுத்துக் கொண்டால் இரண்டு பயனர்களும் மற்ற பயனருக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொள்வர். (இப்பி���ச்சினை ஜிமெயிலின் தொடக்கத்திலேயே ஏற்பட்டது.) + +ஜிமெயில் + முகவரிகளை ஆதரிக்கும். அதாவது மின்னஞ்சல்கள் "ஜிமெயில்பயனர்+மேலதிகசொற்கள்@gmail.com" இங்கே "மேலதிகசொற்கள்" எதுவாகவும் இருக்கலாம். + +கூகிள் டாக் ஜபர் வலையமைப்பூடாக ஏனைய இணைப்பிலுள்ளவர்களுடன் நிகழ்நிலையில் உரையாட முடியும். கூகிள் டாக் உட்பட ஜபர் தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் வலையமைப்புக்களுடன் தொடர்பிலிருக்கமுடியும் (ஜிஸ்மோ திட்டம், Psi, Miranda IM மற்றும் iChat). வார்தைகளூடான நிகழ்நிலை உரையாட்களையே நிகழ்த்தமுடிவதோடு ஆக்கக்க்கூடியது 4 பேருடன் மாத்திரமே ஒரே நேரத்தில் உரையாடலை நிகழ்த்த முடியும். ஒலியூடான அழைப்புக்கள் கூகிள் டாக்கின் ஓர் குறிப்பிடத்தக்க வசதியாகும். + +2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஒலியஞ்சல் வசதியானது சேர்க்கப்பட்டது. இணைய இனைப்பொன்றை நிகழ்நிலையில் இல்லாத பயனர் ஒருவரிற்கு மின்னஞ்சல் ஊடாக ஒலியஞ்சலை அனுப்ப இயலும். கிடைக்கின்ற ஒலியழைப்புக்களை ஜிமெயிலில் சுட்டியிட்டுச் சேமித்துக் கொள்ளும். இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவாத பயனர்களுக்கு உதவுவதற்காகும். இன்னுமோர் வசதியானது கூகிள் டாக்கை கணினியில் நிறுவிய பயனர்கள் ஜிமெயிலில் இருந்தவாறே ஒலியழைப்புக்களை மேற்கொள்ளலாம். ஆயினும் இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவி அழைப்பை இணையமூடாக மேற்கொண்ட பயனருக்கே உதவும். + +ஜிமெயில் உரையாடல்களை ஜிமெயிலில் ஆவணப்படுத்த முடியும். + +ஜிமெயில் தொடர்புப் படங்கள் மற்றும் ஜிமெயிலில் ஒலியோசைகளைச் சேர்துக் கொண்டு உரையாடல்களில் ஈடுபடலாம். + +ஜிமெயில் உரையாடல் இல்லாத சாதாரண பார்வையொன்றையும் வழங்கும். இதுவே சாதாரணமாக உரையாடல் இன்றிய சாதாரண பார்வையாகும். + +ஏப்ரல் 13, 2006 கூகிள் காலண்டர் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. இது பயனர்களுக்கு பல நாட்காட்டிகளை (காலண்டர்களை) உருவாக்கப் பயன்பட்டது. அதில் appointments போன்றவற்றைச் சேமித்து பிரத்தியேகப் பாவனைக்கோ அல்லது குறிபிட்டவர்களுடன் பகிரவோ அல்லது முற்றுமுழுதாக எல்லாரும் பார்கக்கூடியதாக இணையத்திலோ வைக்கலாம். + +இது முற்று முழுதாக ஜிமெயிலுடன் சேமிக்கப்படக்கூடியதுடன் மின்னஞ்சலை எழுதும்போதே நிகழ்வுகளைச் சேமித்துக் கொள்ளலாம். ஜிமெயிலைப் பாவிப்பவர்கள் இதற்கான அழைப்பைப் பெற்றுக் கொள்வார்கள் அதை அவர்கள் ��ற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இயலும். மேலும் ஜிமெயில் மின்னஞ்சலிலுள்ள முகவரிகள் மற்றும் திகதி போன்ற விடயங்களைப் அறியமுயன்று பயனர்களுக்கு காலண்டரில் அந்நிகழ்வைச் சேமிப்பதற்கு உதவும். + +ஏனைய மின்னஞ்சல் சேவைகளைப் போலவே வருகின்ற மின்னஞ்சல்களை அவை யாரிடமிருந்து வருகின்றன, யாருக்கு வருகின்றது, என்ன விடயமாக வருகின்றன, ஏதாவது இணைக்கப்பட்ட கோப்புக்கள் உள்ளனவா என்பவற்றை வைத்து ஜிமெயிலானது வடிகட்டும். ஜிமெயில், ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு இதை நிறைவேற்றும். ஆவணப்படுத்தல், மேலொட்டிடுதல், குப்பைத் தொட்டிக்குள் அனுப்புதல், மற்றோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளையும் செய்யலாம். + +ஜிமெயிலை கீழ் வரும் அடிப்படைகளைக் கொண்டு தேடலாம். + + +ஜிமெயில், ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போதே அனுப்பப்படும் முகவரியைத் தானாகவே சேமித்துவிடும். ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது பெயரில் ஏதேனும் மாற்றங்களிருப்பின் அதனையும் தானாகவே செய்து கொள்ளும். + +ஜிமெயில், பயனர் அனுப்பும் முகவரி, நகல் சென்று சேரும் முகவரி, மறை நகல் அனுப்பப்படும் முகவரி போன்றவற்றில் தட்டச்சிட தொடங்கும் போது அதனுடன் தொடர்புடைய முகவரிகளைக் காட்டும். சிறிய கூகிளின் தேடலானது மிகவும் திறன் வாய்ந்ததன்று எனினும் பெயர் மற்றும் பிரதான மின்னஞ்சல் முகவரிக்ளைத் தேட உதவும். எனினும் இது சிறந்த இலகுவான இடைமுகத்தையே தருகின்றது. + +ஜிமெயிலின் தானாகவே சேமிக்கும் வழக்கத்தினால் ஒவ்வோர் மின்னஞ்சலிற்கும் உரியவர் யார் எனக் கண்டுபிடிக்காது ஒவ்வோர் பயனரை உருவாக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் உடையவர்களிற்கு இது ஜிமெயில் தொடர்புகளைத் தேவையற்ற விதத்தில் அதிகரிக்கும். ஜிமெயில் பயனர்கள் தொடர்புகளுக்குப் போய்த் தொடர்புகளை மேம்படுத்தவும் முடியும். யாகூ மெயில், ஹொட்மெயில், யூடோறா, அவுட்லுக் மேலும் பல மின்னஞ்சற் சேவைகளில் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளைச் சேமிக்ககூடிய எல்லா மின்னஞ்சல்களிலிருந்தும் தொடர்புகளை இங்கே பெற்றுக் கொள்ளலாம். ஜிமெயிலில் இருந்தும் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளை ஏற்ற முடியும். + +அண்மையில் குழுத்தொடர்புகள் என்னும் வசதியானது அறிமுகப் படுத்தப்பட்டது. இம்முறையில் மேலொட்டுக்கள் மூலமாக ஒரு குழுவிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும். + +ஜிமெயில் தற்போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு, பல்கேரிய, கற்றலன், குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு, எஸ்தோனிய, பினிஷ், பிரெஞ்சு, ஜேர்மன், கிரேக்கம், ஹீபுறு, ஹிந்தி, ஹங்கேரியன், ஐஸ்லாந்திக், இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, லத்விய, லித்துவேனிய, போலிஷ், போத்துக்கீசிய, உரோமானிய, ரஷ்ய, சேர்பிய, இலகுவாக்கப் பட்ட சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிய, ஸ்சுவீடிஸ், ராகாலொக், தாய், சம்பிரதாய சீனம், துருக்கி, பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது. எனினும் புதுப்புது வசதிகள் ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்படுவதால அமெரிக்க ஆங்கிலத்திற்கு இணையாக உடனடியாக ஏனைய மொழிகளில் அறிமுகப் படுத்தப்படுவதில்லை. இம்மொழிபெயர்ப்புக்கள் யாவும் தன்னார்வலர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி கூகிள் உங்கள் மொழியில் (Google in your language) என்றழைக்கப்படுகின்றது. + +ஜிமெயின் தமிழாக்கப் பணிகள் டிசெம்பர் 2005 அளவில் முடிவடைந்தன. பின்னர் கூகிள் அவ்வப்போது சொற்களைச் சேர்த்ததாலும் தமிழாக்கத்தில் ஈடுபடுவோரின் ஒருங்கிணைவு இன்மையாலும் அதாவது சொற்களைத் தமிழாக்கியவர்களின் விபரங்களை ஜிமெயில் வெளிவிடாததாலும் மைக்ரோசாப்ட் கலைச் சொல்லாக்தில் ஈடுபட்டோரை இணையமூடாகக் கௌரவித்தது போன்று கூகிள் நடந்து கொள்ளாமையினாலும் ஜிமெயில் தமிழில் இன்னமும் வெளிவரவில்லை. + +ஜிமெயிலின் ஓராண்டு நிறைவை அடுத்து, பக்கத்தின் மேல் ஒரு வரியில் செய்தியோடைகளினூடு பெறப்படும் தகவல்களை காண்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் திறந்து பார்வையிடும் மின்னஞ்சலில் காணப்படும் சொற்களுக்கு பொருத்தமான செய்தியோடைத்தகவல் எழுந்தமானமாக காண்பிக்கப்படும். இந்தத் தேர்வானது இப்போது எல்லா ஜிமெயில் கணக்குகளில் காணப்படுகின்றது, இது வலைத்துண்டு (web clip) என்று அழைக்கப் படுகின்றது. + +ஆரம்பத்தில் 10 MB அளவிலான இணைப்பு (Attachment) வசட்தியினை வழங்கிய ஜிமெயில் ஆதரிக்கின்றது 22 மே, 2007 முதல் 20 மெகாபைட் இடவசதியாக இணைப்பு அளவை இருமடங்காக்கிக் கொண்டது. எனினும�� பல மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் இன்றளவும் 10 மெகாபடை அளவிலான இணைப்பளவையே ஆதரிப்பதால் வேறுசேவை வழங்குனர்களிற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் 10 மெகாபைட் வரையிலான இணைப்புக்களை இணைப்பதே பொருத்தமானது. 20 மெகாபைட் இணைப்பு அளவெனினும் பிரச்சினைகள் ஏதுமின்றி உரியவரிடம் சேர்பதற்காக 17மெகாபைட் வரையிலான இணைப்பைச் சேர்ப்பதே உசிதமானது என கூகிள் குறிப்பிட்டுள்ளது. விண்டோஸில் இயங்கும் .exe கோப்புக்களை ஆதரிக்காது. இக்கோப்பானது சுருக்கப்பட்ட zip, .tar, .tgz, .taz, .z, .gz கோப்புக்களில் இருந்தால் கூட அனுமதிக்காதெனினும் கோப்பின் நீட்சிப்பெயரை மேற்குறிப்பிட்ட நீட்சிகள் அல்லாமல் எடுத்துக்காட்டாக .book என மாற்றினால் அனுமதிக்கும். + +ஆரம்பத்தில் இவ்வசதி வழங்கப்படாத போதும் பாதுகாப்பான POP3 (over SSL) முறையில் மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளவும் இலகுவான மின்னஞ்சலைப் பரிமாறும் முறையில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும். சில பயனர்கள் ஜிமெயிலை மேற்கண்ட முறையில் அணுக முயன்று முடியாமற் போனபோது கூகிளைக் குற்றம் சாட்டியபோதும் உண்மையிலேயே பெரும்பாலும் விருப்பத் தேர்வொன்றைத் தேர்ந்தெடுக்காமையினாலேயே இப்பிரச்சினை நிகழ்ந்தது. + +POP3 தேர்வுகள் +ஜிமெயிலானது SSL (Secured Socket Layer) என்கின்ற ஓர் பாதுகாப்பான முறையிலேயே மின்னஞ்சல்களைப் பரிமாறும் +
pop server: pop.gmail.com +
port: 995 +
smtp server: smtp.gmail.com +
port: 465 + +இம்முறைமூலம் அநேகமான மின்னஞ்சல் மென்பொருட்களினூடக ஜிமெயிலைப் பெறமுடியும். + +இதுவரை காலமும் ஏனையவர்களின் மின்னஞ்சல்களை pop3 முறையில் பிறிதோர் இணையமூடான மின்னஞ்சலுக்குப் பெறுவதற்கு யாகூ! மெயிலிலேயே மாத்திரமே சாத்தியமாக இருந்ததெனினும் டிசம்பர் 5, 2006 முதல் ஜிமெயிலிலும் இந்த வசதி யாகூவைப் பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. + +ஜிமெயில் நீங்கள் விரும்பிய முகவரியூடாக மின்னஞ்சல் அனுப்புவதை ஆதரிக்கும். இதற்கு உங்களின் மின்னஞ்சல்தான என்பதை உறுதிப்படுத்த ஓர் மின்னஞ்சலை அனுப்பும் இதை உறுதிப்படுத்தியதும் நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஜிமெயிலூடாக மின்னஞ்சல் அனுப்பலாம். + +பெப்ரவரி 10, 2006 இல் இருந்து டொமைன்களுக்கான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜிமெயிலின் சேவையை அவர்களின் டொமைனூடகப் (Domain) பெற்றுப் பாவிக்கும் முறையானது ஜிமெயிலைப்போலவே இதும் ஓர் சோதனையிலேயே இருக்கின்றது. இது விண்டோஸ் மெயில் கஸ்டம் டொமைன்ஸ் (http://domains.live.com/) உடன் போட்டியிடுகின்றது. + + +ஜிமெயில் சேவையானாது அறிமுகப் படுத்தப் பட்டதும் பல வேறுபட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்குபவர்கள் தமது வாடிக்கையாளர்கள்த் தம்முடனேயே வைத்துக் கொள்ள சேமிப்பு அளவினைக் கூட்டிக் கொண்டர். எடுத்துக் காட்டாக ஹொட்மெயில் பாவனையாளர்கள் 2 மெகாபைட் அளவிலான இடவசதியில் இருந்து 25 மேகாபைட் இடவசதிக்கும் பின்னர் 250 மெகாபைட் இடவசதியையும் அளித்தனர். விண்டோஸ் லைவ் மெயில் தற்போது 5 ஜிகாபைட் அளவிலான இடவசதியை அளிக்கின்றது. இதற்கு ஹெட்மெயிலைவிட்டு ஜிமெயிலிற்குப் பயனர்கள் மாறுவதே காரணமாகும். யாஹூ!வும் யாஹூ! மெயிலை 4 மெகாபைட்டில் (இந்தியாவில் 6 மெகாபைட்டில்) இருந்து 100 மெகாபைட்டிற்கும் பின்னர் 250 மெகாபைட்டிற்கும் அதிலிந்து 1 ஜிகாபைட்டிற்கும் சேமிப்பு அளவைக் கூட்டிக் கொண்டனர். அத்துடன் யாஹூ!மெயில் 2007 மே முதல் எல்லையற்ற செமிப்பளவைத் தருவதாகவும் அறிவித்து அதை வெற்றிகரமாகச் செயற்படுத்தியும் உள்ளனர். இடைமுகத்தைப் பொறுத்தவரை யாஹூ!மெயிலே சிறந்த ஏஜாக்ஸ் இலான கவர்ச்சிகரமான இடைமுகத்தை தனது பீட்டாப் பயனர்களுக்கு வழங்குகின்றது. + +ஜிமெயில் பயனர்கள் 6 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத கணக்குகள் மூடப்படும் அதன் பின்னர் 3 மாதத்தின் பின்னர் இவை மீளப்பாவிக்கப்படும். அதிலுள்ள மின்னஞ்சல்கள் யாவும் அழிக்கப்படும். போட்டியாளர்களான யாகூ! மெயில் இதனிலும் பயன்படுத்தாத கணக்குகளை மூடுவதற்கு இதனிலும் குறைவான காலத்தையே கொண்டுள்ளன. யாகூ! 4 மாதம் பாவிக்காத கணக்குகளையும் ஹெட்மெயில் 1 மாதம் பயன்படுத்தாத கணக்கையும் மூடிக் கொள்ளும். + +இடவசதியைத் தவிர இதன் போட்டியாளர்களான யாகூ! மெயில், விண்டோஸ் லைவ் மெயில் போன்றவற்றின் இடைமுகத்திலும் ஜிமெயிலின் வருகையை அடுத்துப் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜிமெயிலின் இணைப்பு அளவான 10 மெகாபைட் அளவினை யாகூ! மெயில் ஹொட்மெயில் ஆகியனவும் பின்பற்றின. ஏஜாக்ஸ் இடைமுகத்தில் யாகூ! மெயில் பீட்டா மற்றும் விண்டோஸ் லைவ் மெயில் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. + +இன்றளவும் உலகில் கூடுதலான பயனர்கள் பாவிக்கும் மின்னஞ்சலாக யாஹூ!மெயிலே விளங்குகின்றது. இதில் தற்சமயம் 2007 ஆம் ஆண்டின்படி 250 மில்லியன் பயனர் கணக்குக��் உண்டு. இது தவிர விண்டோஸ் லைவ் மெயிலைப் 226 மில்லியன் பயனர்கள் பாவிக்கின்றனர். ஜிமெயில் 51 மில்லியன் பயனர் கணக்குகள் உண்டு. யாஹூ!வே இன்னளவும் அதிகூடிய நெரிசலான இணையத்தளமகவுள்ளது + +PC World இதழின் 2005 ஆம் ஆண்டில் 100 சிறந்த மென்பொருட்களில் இது இரண்டாவதாக பயர்பாக்சுக்கு அடுத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இடைமுகத்திற்கான பெருமைக்குரிய விருதும் வழங்கப் பட்டது. இதிலுள்ள மிகையான இடவசதியினால் பயனர்களிடம் இருந்து சார்பான கருத்துக்கள் கிடைத்தது. + + + +
+ +பால்டிக் கடல் + +பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில், குறுக்குக்கோடுகள் 53°வ, 66°வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 10°கி, 30°கி என்பவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுக்கன்டினேவியத் தீவக்குறையின் சுவீடியப் பகுதி, ஐரோப்பியத் தலைநிலம், டேனியத் தீவுகள் என்பன இக்கடலின் எல்லைகளாக உள்ளன. இது கட்டெகாட் என்னும் கடற்பகுதி, இசுக்காகெராக் கடற்பகுதி என்பவற்றினூடாக அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது. பால்டிக் கடல் வெண்கடற் கால்வாய் என்னும் செயற்கை நீர்வழியூடாக வெண் கடலுடனும், கியெல் கால்வாய் எனப்படும் இன்னொரு செயற்கை நீர்வழியூடாக வட கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் போத்னியக் குடாவும், வடகிழக்குப் பகுதியில் பின்லாந்துக் குடாவும், கிழக்கில் ரீகா குடாவும் எல்லைகளாக இருப்பதாகக் கொள்ளலாம். அதேவேளை, இக்குடாக்கள் பால்டிக் கடலில் பகுதிகளாகவும் கொள்ளப்படலாம். டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்கடலைத் தொட்டுக்கொண்டுள்ளன. + +ரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியில், பால்டிக் கடலை மேரே சுபிக்கம் அல்லது மேரே சர்மட்டிக்கம் என்று அழைக்கப்பட்டது. டேக்டீஸ் கி.மு. 95 இல் அக்கிரிகோலா மற்றும் ஜெர்மானியா பகுதிகளை சேர்ந்தவர்கள் சூபி பழங்குடியினத்தவரை மேரே சுபிக்கம் என்றழைத்தனர் ஏனென்றால் வசந்தகாலங்களில் உறைந்துபோன பால்டிக் கடல் பனிக்கட்டி துண்டுகளாக உடைந்து மிதக்கத் தொடங்கும் அப்போது சூபி இனத்தவர் தென்மேற்கு பக்கமாக உள்ள இப்போதுள்ள ஜெர்மனியில் குடிபெயரத் தொடங்குவர். அங்கு ரெனிலென்டு எ��்ற பகுதியில் சிறிது காலம் தங்கியிருப்பர். இந்த வரலாற்று சிற்ப்புமிக்கப் பகுதியில் இன்றும் இவர்களை ஸ்வாபியா என்ற பெயரில் அழைக்கின்றனர். ஜோர்டான் நாட்டினர் ஜெடிக்கா என்றழைக்கின்றனர். + +ஆரம்ப கால மத்திய காலத்தில், நோர்சியன் (ஸ்காண்டிநேவியன்) வணிகர்கள் பால்டிக் சுற்றுவட்டாரத்தில் வர்த்தக பேரரசை உருவாக்கினார்கள். பின்னர், நோர்ஸ் பால்டிக் கடலை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர தெற்கு கடற்கரைப் பகுதியில் வென்டிஷ் பழங்குடியினருக்கு எதிராக போராடினர். நோர்ஸ் ரஷ்யாவின் ஆறுகளை வர்த்தக வழிகளாக பயன்படுத்தியது, இறுதியில் கறுப்பு கடல் மற்றும் தெற்கு ரஷ்யாவிற்கு தங்கள் வழியைக் கண்டறிந்தது. இந்த நோர்ஸ்-ஆதிக்கம் நிறைந்த காலம் வைகிங் காலம் என குறிப்பிடப்படுகிறது. + +வைகிங் காலத்தில், ஸ்காண்டிநேவியர்கள் பால்டிக் கடலை Austmarr ("கிழக்கு ஏரி") என்று குறிப்பிட்டுள்ளனர். "கிழக்கு கடல்" என்று ஹெர்ம்ஸ்ரிங்கலாவில் தோன்றுகிறது மற்றும் ஈஸ்ட்ரா உப்பு என்று சோற்லா பாட்றாவில் தோன்றுகிறது. + +இந்தக் கடலில் மீன் தவிர கூடுதலாக ஆம்பர் கிடைக்கிறது, குறிப்பாக போலந்து, ரஷ்யா மற்றும் லித்துவேனியா நாடுகள் இதன் எல்லைகளுக்குள் அதன் தெற்கு கரையில் இருக்கிறது. பால்டிக் கடலின் தென் கரையோரத்தில் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள அம்பர் படிமங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. எல்லைக்குட்பட்ட நாடுகள் மரபுவழியாக பால்டிக் முழுவதும் மரத்தண்டு, மரம் தார், ஆளிவிதை, சணல் மற்றும் ஃபர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. ஆரம்பகால மத்திய காலப் பகுதிகளில், சுவீடன் இரும்பு மற்றும் வெள்ளி ஏற்றுமதி செய்யப்பட்டது. போலந்து நாட்டின் இன்றலவும் உப்புச் சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இவ்வாறு பால்டிக் கடல் நீண்ட நெடிய வணிக கப்பல் போக்குவரத்து மிகுந்த பகுதியாக பயன்பட்டது. + +8 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொமரெனியா மற்றும் பிரசியா ஆகிய பகுதிகளிலிருந்த பால்டிக் கடல் பகுதிகளில் கடல் கொல்லைகள் (திருட்டு) மிகுந்த இருந்தது. + +11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பால்டிக் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப்பகுதி முக்கியமாக ஜெர்மனியில் இருந்து குடியேறியவர்களால் குடியேற்றப்பட்டது, இது (Ostsiedlung) "கிழக்கில் குடியேறல்" ���ன்று அழைக்கப்படும் ஒரு இயக்கம். மற்ற குடியேறிகள் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள். போலப்பியன் அடிமைகள் படிப்படியாக ஜெர்மனியர்களுடன் இணைக்கப்பட்டனர். டென்மார்க் படிப்படியாக பால்டிக் கரையோரத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, இந்த நிலை 1227 போரானோவ்வெல் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தனது கட்டுப்பாட்டை இழக்கும் வரை தொடர்ந்தது. + +13 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில், வடக்கு ஐரோப்பாவில் வலுவான பொருளாதார சக்தியாக ஹன்சியடிக் கூட்டமைப்பு இருந்தது, இது பால்டிக் கடல் மற்றும் வட கடற்பகுதி முழுவதும் உள்ள வணிக நகரங்களின் கூட்டமைப்பு ஆகும். பதினாறாவது மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில், போலந்து, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவை டொமினியம் மரிஸ் பால்கிடிக் ("பால்டிக் கடல் மீது ஆதிக்கம் செலுத்துதல்") என்று அழைக்கப்படும் பல போர்கள் அவர்களுக்குள் போரிட்டன. இறுதியில், சுவீடன் நாடுதான் பால்டிக் கடல் முழுவதையும் சுற்றியிருந்த நாடாகும். சுவீடனில் பால்டிக் கடல் மரே நாஸ்டெம் பால்டிக் ("நம் பால்டிக் கடல்") என்று குறிப்பிடப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் சுவீடனின் போர் நோக்கம் பால்டிக் கடல் முழுவதையும் சுவீடன் கடலாக மாற்றுவதாக இருந்தது ஆனால் இதில் வெற்றிப் பெற முடியவில்லை. எவ்வாறாயினும், பதினேழாம் நூற்றாண்டில் பால்டிக் வர்த்தகத்தை ஆதிக்கம் செலுத்திய நாடு டச்சு நாடாகும். + +பதினெட்டாம் நூற்றாண்டில், ரஷ்யா மற்றும் பிருசியா பால்டிக் கடல் மீது ஆதிக்கம் செலுத்தும் முன்னணி சக்திகள் ஆனது. பெரிய வடக்குப் போரில் சுவீடன் ரஷ்யாவிடம் தோற்றதால் ரஷ்யா கிழக்கு கரையோரம் முழுவதும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. பால்டிக் கடல் முழுவதும் ரஷ்யா ஒரு மேலாதிக்க சக்தியாக மாறியது. ரஷ்யாவின் பீட்டர் பேர்ரசர் பால்டிக் கடலின் முக்கியத்துவத்தைக் உண்ர்ந்து, பின்லாந்து வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் நெவா நதியின் வாயிலில் தனது புதிய தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை உருவாக்கினார். பால்டிக் பிராந்தியத்தில் உள்ள வர்த்தகம் மட்டுமல்லாமல், வட கடல் பகுதி, குறிப்பாக கிழக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடனும் மரம், தார், ஆளி மற்றும் சணல் வர்த்��கத்தில் ஈடுபட, பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் கடற்படைகள் தேவைப்பட்டன. + +கிரிமியப் போரின் போது, ஒரு கூட்டு பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு படைகள் பால்டிக் ரஷ்ய படைகளின் கோட்டைகளை தாக்கின. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் பாதுகாப்பு அரனாக விளங்கிய ஹெல்சின்கி மற்றும் கெரோடட் நகரங்களை தாக்கியது; மற்றும் அவர்கள் ஆலாண்ட் தீவுகளில் போமர்குண்டத்தையும் அழித்தனர். 1871 இல் ஒன்றுபட்ட ஐக்கிய ஜெர்மனி, முழு தென் கடற்கரையும் ஜெர்மனியாக மாறியது. முதலாம் உலகப் போரின் ஒரு பகுதியாக பால்டிக் கடலிலும் போர் நடந்தது. + +இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, சோவியத் யூனியன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், பால்டிக் கடலில் இரசாயன ஆயுதங்களை கலந்து, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட காரணமாக இருந்தனர். இப்போதும் கூட மீனவர்களின் வலைகளில் தற்செயலாக இந்த இராசாயன ஆயுதங்கள் சிக்கி சிலவற்றை மீட்டெடுக்கின்றனர்: ஹெல்சிங்கி ஆணைக்குழுவின் மிக சமீபத்தில் கிடைத்த அறிக்கையானது 2005 ஆம் ஆண்டில் சுமார் 105 கிலோ (231 பவுண்டு) பொருட்களைச் சேதப்படுத்தும் நான்கு சிறிய அளவிலான இரசாயன ஆயுதங்களைப் கிடைக்கப்பட்டுள்ளது. இது 2003 ஆம் ஆண்டிலிருந்து 1,110 கிலோ (2,450 எல்பி) இரசாயன பொருட்களுக்கான 25 சம்பவங்களின் ஒன்றாகும். இதுவரை, அமெரிக்காஅரசு எவ்வளவு இரசாயன பொருட்களை கடலில் கலந்தது என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டது. இதனால் இரசாயன பாட்டில்களில் ஏற்படும் கசிவால் வாழும் சுழலில் இழப்பு மற்றும் பிற பொருட்கள், பால்டிக் கடலின் கணிசமான பகுதிகளை மெதுவாக விஷமாக மாற்றி வருகிறது. + +1945 க்குப் பின்னர், ஜெர்மன் மக்கள் கிழ்க்கிலிருந்து வரிசையாக அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர், இது இடம்பெயர்ந்த போலந்துகாரர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடமளித்தது. போலந்து மிகப்பெரிய தெற்குக் கரையோரப் பகுதிகளை பெற்றது. சோவியத் ஒன்றியம் பால்டிக் மற்றொரு பகுதியாக கலினின்கிராட் ஒப்லாஸ்து பெற்றது. கிழக்கு கரையில் பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்தால் இணைக்கப்பட்டன. நேட்டோ மற்றும் வார்சா உடன்பாடு: பால்டிக் பின்னர் இராணுவ முகாங்களை எதிர்த்துப் பிரிக்கப்பட்டிருந்தது. போர் உன்டாகும் சூழல் இருந்ததால், போலந்து கடற்படை டேனிஷ் தீவு���ளுக்கு படையெடுக்க தயாராக இருந்தது. இந்த எல்லை நிலை வணிகம் மற்றும் பயணத்தை தடைசெய்தது. 1980 களின் பிற்பகுதியில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சிகளின் சரிவிற்குப் பின் இது முடிவடைந்தது. + +நீரின் அளவு சாதாரண அளவிற்கு மேல் ஒரு மீட்டருக்கு மேல் இருக்கும் போது புயல் வெள்ளப்பெருக்கு பொதுவாக ஏற்படும். வார்னேமுண்டில் 1950 ஆம் ஆண்டு முதல் 2000 வரையான காலத்தில் 110 வெள்ளங்கள் ஏற்பட்டன, சராசரியாக வருடத்திற்கு இரண்டு வெள்ளங்கள் என்ற கண்க்கில் உண்டானது. + +1320, 1449, 1625, 1694, 1784 மற்றும் 1825 ஆகிய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்தது. வெள்ளப்பெருக்க நிகழ்வுகள் 1304 ஆம் ஆண்டின் அனைத்து புனிதர்களின் வெள்ளப்பெருக்கு என்றழைக்கப்படுகிறது. + +1872 ஆம் ஆண்டு முதல், பால்டிக் கடலில் நீர் நிலைகளின் வழக்கமான மற்றும் நம்பகமான பதிவுகள் உள்ளன. 1872 ஆம் ஆண்டின் வெள்ளப்பெருக்கு அதிகபட்சமாக கடல் மட்டத்திலிருந்து வார்னேமுண்டில் . கடைசி வெள்ளப்பெருக்கில், நீரின் சராசரி அளவு 1904 இல் கடல் மட்டத்திற்கு மேல் , 1913 இல் , 1995 ஆம் ஆண்டு 2-4 நவம்பர் மற்றும் 21 பிப்ரவரி 2002 இல் . + + + + + +இளைய பத்மநாதன் + +அண்ணாவியார் இளைய பத்மநாதன் அரங்கில் தமிழின அடையாளம் தேடும் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராவர். + +1960களின் இறுதியில் இலங்கையின் வட பகுதியில் இடதுசாரி இயக்கம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு போன்ற வெகுசன இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு வடபகுதிக் கிராமங்கள் தோறும் நாட்டுக்கூத்துக் கலைவடிவத்தினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலப்பகுதியில் 'அம்பலத்தாடிகள்' என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகிய கந்தன் கருணை நாடகத்தில் இளைய பத்மநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். + +யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கந்தன் கருணை (1970) நாடகம் பின்னர் கொழும்பில் ஆட்டக்கூத்தாக அறிமுகமானது. அத்துடன் இவரின் 'ஏகலைவன்' என்ற கூத்து நாடகம் கொழும்பில் மண்டபம் நிறைந்த காட்சியாக அரங்கேறியதுடன் இலங்கையின் தேசிய ஒளிபரப்புச் சேவையான ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது. + +இவ்வாறு படிப்படியாக நாடறிந்த கூத்துக் கலைஞராக பரவலாக அறிமுகமான இளைய பத்மநாதன் கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞராகப் பணியாற்றியவர். + +1983 இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர், அங்கே பல்கலை அரங்கக் குழுவுடன் இணைந்து Bertolt Brecht என்பவரின் The Exception and the Rule என்ற நாடகத்தின் தமிழ் வடிவமான "ஒரு பயணத்தின் கதை", மற்றும் தீனிப்போர், ஏகலைவன் முதலானவற்றை எழுதி அரங்கேற்றினார். 'ஒரு பயணத்தின் கதை' பின்னர் அவுஸ்திரேலியாவில் சிட்னியிலும் மெல்பேர்னிலும் அரங்காக்கினார். + +Skin in Deep என்ற தனிநபர் நாடகத்தை அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியுள்ளார். பாஞ்சாலி சபதம் உட்பட பல நாடகப்பாடல் பிரதிகளை இவர் எழுதியுள்ளார். காத்தவராயன் கூத்தை முறையாக கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் பயின்றுள்ள இளைய பத்மநாதன் சிட்னியில் இதனை அரங்கேற்றினார். + +மெல்பேர்ன் விக்டோரியா பல்கலக்கழகத்தில் அரங்கக் கலைகளில் (Performance Studies) சிறப்புப் பட்டம் பெற்ற இளைய பத்மநாதன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். + + + + + + +பேராதனைப் பல்கலைக்கழகம் + +பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கையின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இலங்கையின் கடைசி இராசதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையில், பேராதனை என்னும் இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் பல்கலைக்கழகத்தின் இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) வழங்கப்படுகின்றது. + +இப்பல்கலைக்கழகம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை இயற்கை அழகு நிறைந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது ஹந்தானை மலையை அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு இருக்கின்றது. இலங்கையின் மத்திய மலைநாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சிறந்த எழுத்தாளரான பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர போன���றவர்களின் நினைவுகளைத் தாங்கிய நினைவுச் சின்னமாகவும் இது விளங்குகின்றது. + +இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Ceylon) என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1952 ஆகஸ்ட் 6 ஆம் நாள், இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது. அன்றிலிருந்து 1972 வரை இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டு வந்தது. 1972 இல், இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டபோது, இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka – Peradeniya Campus) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக்கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெற்றது. + +இங்கே விவசாய பீடம், கலைப் பீடம், பல்மருத்துவப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவப் பீடம், விஞ்ஞான பீடம், என்பவற்றுடன் கால்நடை மருத்துவமும், கால்நடை அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன . + + + + + +பேராதனை தாவரவியற் பூங்கா + +பேராதனை தாவரவியற் பூங்கா ("Royal Botanical Gardens, Peradeniya") இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது. + +மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பலவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. + +14ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. 1371 இல் மூன்றாம் விக்கிரமபாகு மன்னன் இவ்விடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டான். 1747–1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜசிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர். இப்பகுதி அவர்கள் கைக்கு மாறியது. + +1810 இல் கொழும்புக்கு அண்மையிலுள்ள கொம்பனித் தெரு என இன்று அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியர் ஒரு தோட்டத்தை அமைத்திருந்தனர். பின்னர் 1813 இல், இது களுத்துறை என்னும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இது பொருளாதாரத் தாவரங்களான கோப்பி, இறப்பர் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவேயிருந்தது. 1814 இல் இதைப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் மூன் என்பவரின் முயற்சியால் இது 1821 இல் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கோப்பி, இறப்பர் போன்ற தாவரங்களே இங்கு காணப்பட்டன. பிற்காலங்களில் இதனைப் பொறுப்பேற்று நடத்திய அதிகாரிகள் பலரது முயற்சியால் எராளமான தாவர வகைகள் சேர்க்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. 1912 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களம் இந்தப் பூங்காவைப் பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. + +இப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது. இங்குள்ள வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து செல்லும் தொங்கு பாலமும் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாகும். பூங்காவின் அனேகமான ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில், பூங்காவின் எல்லைபோல் மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்காவில் அமைந்துள்ளது. + + + +