diff --git "a/train/AA_wiki_15.txt" "b/train/AA_wiki_15.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_15.txt" @@ -0,0 +1,3513 @@ + +புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை + +புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை என்பது ஏற்கனவே இருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறைக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்குறிமுறையாகும். + +தற்போது பாவனையிலிருக்கும் குறிமுறையின் போதாமைகள் மீதான தொடர்ச்சியான விவாதங்களின் விளைவாக இக்குறிமுறை தமிழ் நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. + +தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறையின் சர்ச்சைக்குரிய அம்சம், அதில் தமிழ் எழுத்துக்கள் அத்தனைக்கும் இடம் ஒதுக்கப்படாது, விசிறி, கொம்பு, புள்ளி போன்றவற்றுக்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டு, முழுமையான உயிர்மெய் எழுத்துக்கள், இத்தகைய குறியீடுகளின் தொகுக்கப்பட்ட வடிவமாகவே வெளியீடு செய்யப்படுகிறது என்பதாகும். + +கீழ்க்காணும் படம் தற்போது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோடு குறிமுறை அட்டவணையை காண்பிக்கிறது. +பொதுவாகவே தமிழ் யுனிகோடு இனை பயன்படுத்தத்தக்க மென்பொருட்கள் மிகக்குறைவு. +சில மென்பொருட்கள் யுனிகோடுக்கு ஆதரவு வழங்கியிருந்தபோதும் தமிழ் யுனிகோடினை சரியாக கையாள்வதில்லை. + +இதற்கான முக்கியக் காரணம், முதல் நிலை யுனிகோடு ஆதரவு வழங்கப்பட்டிருந்தும், விசிறி கொம்பு போன்றவற்றை தொகுத்து எழுத்துக்களை காண்பிக்கும், சிக்கலான மொழிகளை கையாளும் இரண்டாம் நிலை யுனிகோடு ஆதரவு வழங்கப்படாமையாகும். + +கருத்தறிகைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய தமிழ் யுனிகோடு குறிமுறையானது இந்த போதாமையை போக்கி, தமிழ் மொழியின் எல்லா எழுத்துக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்கிறது. + +இக்குறிமுறை, முதனிலை யுனிகோடு ஆதரவுள்ள எல்லா செயலிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கையாளப்படக்கூடியதாக உள்ளது. + +புதிய தமிழ் யுனிகோட் குறிமுறையின் வைப்பு அட்டவணை இதனை விளக்குகிறது + +இவ்வாறான புதிய குறிமுறை நியமம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தீவிர மாற்றுக்கருத்துக்களும் உண்டு. + + + + +இவ்வாறு கணிசமான அளவுள்ள பக்கங்களையும், உள்ளடக்கங்களையும் புதிய குறிமுறைக்கு மாற்றுவதென்பது +சாத்தியமற்றதெனவும் கருத்துக்களை சிலர் தெரிவிக்கின்றனர். + + + + + + +திண்ட��க்கல் + +திண்டுக்கல் ("Dindigul") இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 48 மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது. + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 19,23,014 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 12,49,762 மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 6,73,252 வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 9,68,137 ஆண்களும் 9,54,877 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6266.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 306 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு உடையவர்கள் 11,81,746 ஆகவும், அதில் ஆண்கள் 6,81,698 ஆகவும்; பெண்கள் 5,00,048 ஆகவும் உள்ளனர். + +தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் மொழியுடன்,கன்னட மொழி தெலுங்கு, சௌராஷ்டிரம், உருது மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன. + + +திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று . + +ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில் தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோ��்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். கி.பி.1788ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன.மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790ல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம்தான் இது. + +திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. + +திண்டுக்கல் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. + +திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் க���வில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர் . இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது. + +பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும். + +பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது. + +1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. + +திண்டுக்கல் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது பூட்டு. யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது. + +திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமி���்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. + +திண்டுக்கல் நகரில் பேகம்பூர்,நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன.திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பின், சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.. + +திண்டுக்கல் நகரில் உள்ள பத்மகிரீசர் மீது பலபட்டடை சொக்கநாதர் எனும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது" எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியுள்ளார். + +திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார். + +திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது.இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது.கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும் கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன் படுகிறது.அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும். + +ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது.அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் பேகம்பூர் , அரண்மனை குளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்தின் இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. + +ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலு நாச்சியார்க்கும், ஊமைத்துரைக��கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் -பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது . + +திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா உள்ளது. சுமார் 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கடந்த 1952–ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நுழைவுவாயில்,பறவை,விலங்கு கூடங்கள், சிற்றுண்டி உணவகம் உள்ளிட்டவை உள்ளன. + +ஆகியவை திண்டுக்கல் வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும் + +திண்டுக்கல் இரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. வாராந்திர இரயில்கள் உட்பட 86 இரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. பெங்களூர், கொல்கத்தா, புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல ரயில் வசதி உள்ளது. + + + + + + + +கரூர் + +கரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும் உள்ளது. + +கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது. + +கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 60 கி.மீ தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. + +2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. + +கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. + +ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது. + +கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. + +பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. +கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர். +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 233000 மக்கள் வசிக்கின்றார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் +குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது. + +கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 கரூர் வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது. + +கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும். + + + + + +கிருஷ்ணகிரி மாவட்டம் + +கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும். +இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. + +கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது. + +கிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை எண்.44) மற்றும் கிருஷ்ணகிாி - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை எண்.46, கிருஷ்ணகிாி-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை எண். 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், சோலையாா் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது. + +கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. + +சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது. + +இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் ப��ஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. + +முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன. + +" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது. + + +இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சாா்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும் அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் நகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், பிாிமியா் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலா்ச் சாகுபடி செய்வதில் ஒசூா் நகராட்சி சிறந்து விளங்குகிறது. + +இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. + + + +இம்மாவட்டம் 2 நகராட்சிகளையும், 6 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. + + +5,129 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர். + +இம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர். + +இம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது. + +இம்மாவட்டம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மற்றும், 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. + +வடக்கே 11012’ மற்றும் 12049’ தீர்க்கரேகை முதல் கிழக்கே 77027’ மற்றும் 78038’ அட்சரேகை வரை பரவியுள்ளது. + +(1) சமவெளியில் + +அ. அதிகபட்சம் 37.20 C + +ஆ. குறைந்தபட்சம் 16.40 C + +(2) மலைப்பகுதிகள் + +அ. அதிகபட்சம் இல்லை + +ஆ. குறைந்தபட்சம் இல்லை + +9. மழையளவு (மீ.மீட்டரில்) + +(1) சாதாரணமாக + +அ. தென்மேற்கு பருவமழை 399.0 + +ஆ. வடகிழக்கு பருவமழை 289.4 + +(2) உண்மையாக + +அ. தென்மேற்கு பருவமழை 359.1 + +ஆ. வடகிழக்கு பருவமழை 442.5 + +அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (ஹெக்டேரில்) 2,13, 748 + +ஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு 1,72,884 + +இ. ஒன்றுக்கு மேற்பட்ட பியிரிடப்பட்ட பரப்பு 40,86 + +பரப்பு (ஹெக்டேரில்) பரப்பு (கி.கி) + +(i) நெல் 22806 4884 + +(ii) கம்பு மற்றும் இதர தானியங்கள் 50529 + +(iii) பருப்பு வகைகள் 47645 + +(iஎ) கரும்பு (வெல்லம் அடிப்படையில்) 656 95 + +(எ) நிலக்கடலை 12587 2104 + +(எi) எள் 905 416 + +(எii) பருத்தி (ஒவ்வொரு 170கிலோ சாக்கு மூட்டைகள்) 2413 502 + +(எiii) புளி 1362 -- + +(iஒ) மாங்காய் 30,017 -- + +(ஒ) தென்னை 13,192 -- + +அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) 281392 + +ஆ. பரப்பு ஹெக்டேரில் 2,25,410 + +இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (ஹெக்டேரில்) 0.80 + +நெல், ராகி, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைகோஸ், வாழை, தக்காளி, நிலக்கடலை + +மலர் சாகுபடி (ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி) , பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டை கோஸ், முள்ளங்கி, வாழை, பீன்ஸ், தக்காளி, கத்தாி) + +அ. நிகர பாசனப்பகுதிகள் (ஹெக்டேரில்) + +(i) அர���ு கால்வாய்கள் 858 + +(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள் -- + +(iii) ஏரிகள் 8192 + +(iஎ) ஆழ்துழை கிணறுகள் 17674 + +(எ) இதர கிணறுகள் 41452 + +மொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் 57268 ஹெக்டேர் + +ஆ. மொத்த பரப்பு (ஹெக்டேரில்) 68301 + +இ. ஆறுகளின் பெயர் பெண்ணையாறு, பாம்பாறு + +ஈ. ஏரியின் பெயர் பாரூர்ரா பெரிய ஏரி + +அ. கால்நடை நிறுவனங்கள் + +(i) கால்நடை மருத்துவமனைகள் 2 + +(ii) கால்நடை மருந்தகங்கள் 67 + +(iii) மருத்துவர் மையங்கள் 1 + +(iஎ) துணை மையங்கள் 22 + +(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் 10 + +அ. காடுகள் பரப்பு (ஹெக்டேரில்) + +1. காப்பு காடுகள் 141622.2663 + +2. காப்பு நிலங்கள் 8345.37 + +3. இனம் பிரிக்கப்படாத காடுகள் 54310 + +1. கிருஷ்ணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம் + +2.சூளகிரி-சின்னாறு நீர்த்தேக்கம் + +3. தங்கரை நீர்த்தேக்கம் + +4. பாம்பாறு நீர்த்தேக்கம் + +5. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் + +6. பாரூர் ஏரி நீர்த்தேக்கம் + +இதன் மூலம் 18,965 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. + +(i) நவீன மருத்துவம் + +அ. மருத்துவமனைகள் 6 + +ஆ. மருந்தகங்கள் (நுளுஐ) 4 + +இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 56 + +ஈ. சுகாதார துணை நிலையங்கள் 239 + +உ. இதர மருத்துவ நிறுவனங்கள் Pர்-Nர்ளு 41 + +ஊ. படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் துனுர் (277) ூ னுனுர் (510) ஸ்ரீ 787 + +எ. மருத்துவர்கள் துனுர் (125) ூ னுனுர் (183) ஸ்ரீ 308 + +ஏ. செவிலியர்கள் துனுர் (142) ூ னுனுர் (279) ஸ்ரீ 421 + +(ii) இந்திய மருத்துவம் + +அ. மருத்துவமனைகள் - + +ஆ. மருந்தகங்கள் - + +இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்) 23 + +ஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் -- + +உ. சித்தா மருத்துவர்கள் துனுர் 21 + +ஊ. செவிலியர்கள் -- + +எ. சித்தா + +(iii) ஹோமியோபதி + +அ. மருத்துவமனைகள் -- + +ஆ. மருந்தகங்கள் -- + +இ. ஆரம்ப சுகதார மையங்கள் 2 + +ஈ. மருத்துவர்கள் 2 + +உ. செவிலியர்கள் -- + + +இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது. + +1. தேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காஷ்மீர்) + +2. தேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்) + +3. தேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - பெங்களூர்) + +4. தேசிய நெடுஞ்சாலை-207(சர்ஜாபூர் -பாகலூர் - ஓசூர்) + +5. தேசிய நெடுஞ்சாலை-219 (கிருஷ்ணகிரி - குப்பம்) + +(i) சாலையின் நீ���ம் (கி.மீட்டரில்) + +(ய) தேசிய நெடுஞ்சாலைகள் (ளுஅகயஉநன டீவு) 191 + +(டி) மாநில நெடுஞ்சாலைகள் 1648.818 + +(உ) நகர்ப்புற சாலைகள் 385.17 + +(ன) பஞ்சாயத்து யூனியன் சாலைகள் 519.26 + +(ந) நகர பஞ்சாயத்து சாலைகள் 167.34 + +(க) இதர சாலைகள்(வனம் வழி சாலைகள்) 3.8 + +(ப) மாநில தேசிய நெடுஞ்சாலைகள் 335.553 + +(h) அதிகபட்ச மாவட்ட சாலைகள் 262.755 + +(i) இதர மாவட்ட சாலைகள் 1050.71 + +(த) கிராம பஞ்சாயத்து சாலைகள் 3844.75 + +(ம) சாலையின் மொத்த நீளம் 1635.26 + +(ii) பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 1455 + +ய. வணிக ரீதியானது 1455 + +டி. வணிக ர்Pதயற்றறது 40404 + +ய. பாதையின் நீளம் + +(1) அகண்ட வழிப்பாதை 106 + +(2) மீட்டர் வழிப்பாதை -- + +டி. இருப்புப்பாதையின் நீளம் + +(1) அகண்ட வழிப்பாதை 50 + +(2) மீட்டர் வழிப்பாதை -- + +இரயில்வே நிலையங்களின் எண்ணிக்கை 7 + +i. தலைமை தபால் நிலையங்கள் 1 + +2. சார் அஞ்சல் நிலையங்கள் 38 + +3. கிளை அஞ்சல் நிலையங்கள் 263 + +i. முதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் 3 + +ii. கோ-ஆப்ரேடிவ் ஐ.டி.ஐ. பர்கூர் 1 + +iii.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 21 + +iஎ. முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 120 + +எ. நகர்புற கூட்டுறவு வங்கிகள் 2 + +எi. ஊழியர்கள் சங்கங்கள் 120 + +எii. உயர் பாசன கூட்டுறவு சங்கங்கள் 1 + +எiii. ஊழியர்கள் கடைகள் 3 + +iஒ. வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் 4 + +ஒ. ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் 3 + +1. உள்ளுர் 957 + +2. ஆயுதப்படை 279 + +3 காவல் நிலையங்கள் (ஆண்) 30 + +அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 4 + +சிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட) 19 + +மாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 ஹெக்டேரிலும், கேழ்வரகு 48,944 ஹெக்டேரிலும், பயறுவகைகள் 48,749 ஹெக்டேரிலும், கரும்பு 4,078 ஹெக்டேரிலும், மாங்கனி 30,017 ஹெக்டேரிலும், தேங்காய் 13,192 ஹெக்டேரிலும், புளி 1,362 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன. + +கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. + +தளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது "குட்டி இங்கிலாந்து" என பெயர்ப்பெற்றது. + + + + + +தார்ப் பாலைவனம் + +பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் "தார்ப் பாலைவனம்" இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கித்தான் நாட்டிலும் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது. + +இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் பாக்கித்தான் பகுதியை சோலிஸ்தான் பாலைவனம் என்பர். + + + + + +இணைகரம் + +இணைகரம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு தள வடிவமாகும். இதன் இரண்டு சோடி எதிர்ப் பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையாகவும் (சமாந்தரமாகவும்), சம நீளம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். ஒவ்வொரு இணைகரமும் ஒரு பல்கோணமாகும். மேலும் குறிப்பாக ஒரு நாற்கரம் ஆகும். + +வேறு வடிவில் சொல்வதானால் சம நீளமான, இரட்டை சமாந்தரக் கோடுகளால் அடைக்கப் பெற்ற வடிவம் இணைகரம் ஆகும், கோணங்கள் செங்கோணம் என்று வரும்போது அவ்விணைகரம் செவ்வகம் என்றும், கோணங்கள் செங்கோணங்களாகவும் அத்துடன், அயற்பக்கங்களும் சமனாக வரும்போது அவ்விணைகரம் சதுரம் என்றும் அழைக்கப்படும். + += இயல்புகள் = + + += வகைகள் = += இணைகரத்தின் பரப்பளவு = +இணைகரத்தின் பரப்பளவானது அடிப்பக்கத்தை செங்குத்துயரத்தால் பெருக்கி வரும் பெறுமானமாகும். +A = B X H + + + + +எனியாக் + +எனியாக் (Electronic Numerical Intergrator Analizer and Computer -"ENIAC") என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கப் படைத்துறையினரால் (ராணுவத்தினால்) உருவாக்கப்பட்ட ஒரு மின்னணுவியல் கணினி ஆகும். இராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் சார்ந்த தேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டது. + +இதுவே உலகின் முதல் முழுமையான மின்னணுவியல் கணினியாக கருதப்படுகிறது. இக்கணினியின் எடை 30 டன் (தொன்), நீளம் 100 அடி, உயரம் 8 அடி. + +இதில் 17,468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இதனை இயக்க 200 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. அத்தோடு மிக அதிகளவான வெப்பத்தையும் வெளியிட்டது. இவ்வெப்பம் கா��ணமாக இதன் பகுதிகள் பழுதடைந்து விடுவதால் இது அடிக்கடி செயலிழந்தமை அக்காலத்தில் எனியாக்கின் முக்கிய போதாமைகளுள் ஒன்றாக இருந்தது. + +இக்கணினி 1943 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. + +எனியாக் இன் பெறுமதி அக்காலத்தில் 500,000 அமெரிக்க டாலர்களாகும். + +எனியாக் கணினியின் முக்கிய பாகங்கள் வருமாறு, + + +இவைதவிர மேலும் சில பாகங்களையும் இக்கணினி கொண்டிருந்தது. + + + + + +பல்கோணம் + +பல்கோணம் அல்லது பல்கோணி ("Polygon") என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர்கோட்டுப் பகுதிகள் "பக்கங்கள்" அல்லது "விளிம்புகள்" எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் "உச்சிகள்" என அழைக்கப்படும். குறிப்பிட்ட பல்கோணம் ஒரு எளிய பல்கோணமாயிருப்பின், அதன் பக்கங்கள் ஒரு "பல்கோணப் பகுதியின்" எல்லையைக் குறிக்கும். அத்துடன் பல்கோணம் என்பது சில சமயம் பல்கோணப் பகுதியின் உட்பகுதியையோ அல்லது பகுதியையும் எல்லையையும் சேர்த்தோ குறிப்பதுண்டு. + +பல்கோணங்கள் அவற்றின் பக்கங்களின் (கோணங்களினதும்) எண்ணிக்கையைக் கொண்டு பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக எட்டுப் பக்கங்களைக் கொண்ட பல்கோணம் எண்கோணம் ஆகும். + +பல்கோணங்களின் பெயரிடல் வகைப்பாடு ("Taxonomic Classification") கீழேயுள்ள படத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது:- + +codice_1 + + +ஒழுங்கான பல்கோணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: + +ஒரு பல்கோணம், அது ஒழுங்கானதாயினும், ஒழுங்கற்றதாயினும், சிக்கலானதாயினும், எளிமையானதாயினும், அதன் பக்கங்களின் எண்ணிக்கையளவு கோணங்களைக் கொண்டிருக்கும். "n" பக்கங்களைக் கொண்ட ஒரு பல்கோணத்தின் உட்கோணங்களின் கூட்டுத்தொகை ("n"−2)π ஆரையன்கள் (அல்லது ("n"−2)180°), அத்துடன் ஒரு ஒழுங்கான பல்கோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு ("n"−2)π/"n" ஆரையன்கள் (அல்லது ("n"−2)180°/"n", அல்லது ("n"−2)/(2"n"). + +ஒரு சமகோண முக்கோணியானது சமபக்க முக்கோணியாகும்.. + + + + + +திருக்கோணமலை + +திருக்கோணமலை அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது. + +இலங்கையின் கீழ் கரையில் அதாவ���ு கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. + +2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டம் 379,541 மக்களைக் கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். + +இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது. + +இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. + +திருக்கோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன. +திருக்கோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருக்கோணமலை நகரப்பகுதி + +1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. + +திருக்கோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருக்கோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திருக்கோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது. + +குறியீடு: 026 (வேறு மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ள). + +இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பியிணைப்புக்களை வழங்கி வருகினறது. + +திருக்கோணமலையில் கம்பியற்ற இணைபுக்கள் தற்போதுள்ள யுத்த சூழ்நிலையாலால் அடிக்கடித் துண்டிக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் கம்பி இணைப்புக்களே அநேகமாகத் துண்டிக்கபடுவது குறைவாகவுள்ளது. + +திருக்கோணமலையில் இருந்து கொழும்பிற்கு காலை 10.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் புகையிரதங்கள் புறப்படுகின்றன. மட்டக்களப்பு, பகுதிகளிற்குச் செல்பவர்கள் கல் ஓயா சந்தியில் பிரிந்து கொள்ளலாம் (வவுனியா செல்பவர்கள் மாஹோ பகுதியூடாகப் பிரிந்து கொள்ளலாம் எனினும் பெரும்பாலும் இது சாத்தியமாவதில்லை). அதாவது அங்கு புகையிரதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து காலை புகையிரதம் காலை 6.05 இற்குப் புறப்படும் திருக்கோணமலை புகையிரதத்திலேயே ,மட்டக்களப்பு பெட்டியும் இணைக்கப்படுவதால் திருக்கோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று. தொடரூர்தியின் பிற்பகுதியில் உள்ள மூன்று பெட்டிகள் மட்டக்களப்பிற்கும் ஏனைய முற்பகுதியில் திருக்கோணமலைக்கும் ஆனவை. மட்டக்களப்பு நோக்கி பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் புகையிர பெட்டிகளில் மாறவேண்டியதில்லை. + +கொழும்பிலிருந்து இரவு 7:15 இற்குப் புறப்படும் மட்டக்களப்பு கடுகதி புகையிரதத்தில் திருக்கோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் ஏறிக்கொள்வதன் மூலம் மட்டக்களப்புக்கு செல்ல முடியும். + +திருக்கோணமலையில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் நேரடியாக பேருந்து சேவையானது .ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் உண்டு திருக்கோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து எடுப்பது சிரமமாக இருந்தால் திருக்கோணமலையில் இருந்து குருநாகலிற்கோ அல்���து தம்புள்ளவிற்கோ பேருந்து எடுத்து அங்கிருந்து கொழும்பிற்குச் செல்லலாம். திருக்கோணமலையில் இருந்து நேரடியாக் கொழும்பு செல்லும் பேருந்து இலக்கம் 49 ஆகும். + + + + + + +மலாவி + +மலாவி ("Malawi") தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது. + +2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன. + +இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது. +மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும், உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும்இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. +இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது. + + + + + +துடிப்பு அகல குறிப்பேற்றம் + +நிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவும். +துடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது. + + + + + +வைகாசி + +தமிழர் காலக் கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம் மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேட இராசியை விட்டு, இடப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் இடப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். வைகாசி மாதம் 31 நாள் 24 நாடி 12 விநாடிகளைக் () கொண்டது. + + + + + + +எடிசன் விளைவு + +தொமஸ் அல்வா எடிசன்("Edison effect") மின் விளக்குக்கு ஏற்ற கடத்தி பற்றி ஆராய்ச்சியில் இருந்தபொழுது, மின்குமிழ் சுற்றுடன் தொடர்பில்லாத ஒரு கம்பி அருகில் இருந்தது. எடிசன் நேர் மின்னழுத்தத்தை பிரயோகித்தபொழுது ஒரு மின் பொறி அருகிலிருந்த கம்பிநோக்கி பாய்ந்தது. ஆனால், எதிர்ம மின்னழுத்ததை பிரயோகித்தபொழுது அப்படி நிகழவில்லை. இவ் முக்கிய விளைவை எடிசன் அவதானித்து காப்புரிமை பெற்றதால், இவ் விளைவு எடிசன் விளைவு என கூறப்படுகின்றது. இதுவே இருமுனையம், திரிதடையம் ஆகியவறுக்கு பின்னர் அடிப்படையாக அமைந்தது. + +வெப்ப அயனிகள் ("Thermions") உலோகங்களில் ஏராளமான தனித்த அயனிலுள்ளன. இந்த உலோகங்களை சூடாக்கும் போது,எலக்ட்ரான்கள் அதிக ஆற்றலை வெப்பத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இவ்வாற்றல் ஒரு திட்ட அளவைவிட அதிகமாக உள்ளபோது, எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவ்வகை அயனிகள் வெப்ப அயனிகள் எனப்படுகின்றன. இவ்வகை அயனிகளின் சீரான ஓட்டமே வெப்ப அயனி மின்னோட்டத்திற்குக் காரணமாகும். எக்சு கதிர் குழாய்களில் வெப்ப அயனிகளே , இலக்கில் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன. + + + + +ஆனி + +சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 32 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். + + + + + + + + +ஆடி (மாதம்) + +தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி () ஆகும். சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ் வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன. + +இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: + +ஆடி மாதம் தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். காலைவேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு தென்கிழக்கு திசை ஏகுவான். இந்து தொன்மவியலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக குறிப்பிடப்படுகிறது. + +ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது. + + + + + + +ஆவணி + +காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி () ஆகும். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். + + + + + +ஆடி (நிற��வனம்) + +ஆடி ஏஜி ("Audi AG") என்பது ஆடி அல்லது அவுடி என்ற வணிகப்பெயரில் கார்களைத் தயாரிக்கும் ஒரு செர்மானிய நிறுவனமாகும். இது வாக்ஸ்வேகன் குழுவில் ஒரு அங்கமாகும். "ஆடி" என்ற பெயர் இதன் நிறுவனரான ஆகஸ்ட் ஹார்ச்சின் குடும்பப்பெயரின் லத்தீன் மொழியாக்கத்தின் அடிப்படையில் வந்ததாகும். ஆடி என்ற வார்த்தைக்கு ஜெர்மன் மொழியில் “கவனி!” என்ற அர்த்தமாகும். + +ஆடியின் தலைமை அலுவலகம் இன்கோல்ஸ்டாட், பவேரியா, ஜெர்மனியில் உள்ளது. + +இது 1964 ஆம் ஆண்டு முதல் வாக்ஸ்வேகன் குழுவின் (வாக்ஸ்வேகன் AG ) ஒரு முழுவதும் உரிமையாக்கப்பட்ட (99.55%) துணை நிறுவனமாகும். வாக்ஸ்வேகன் குழு ஆடி 60/72/75/80/சூப்பர் 90 தொடரின் (ஒரு சில ஏற்றுமதி சந்தைகளில் வெறும் “ஆடி” என்றே விற்கப்படுவது) அறிமுகத்துடன் 1965 ஆம் ஆண்டில் ஆடி என்ற வணிகப்பெயரை மறுமுறை சந்தையில் புகுத்தினார்கள். இந்த பெயரை முந்தைய உரிமையாளரான டெய்மளர்-பென்ஸிடமிருந்து ஆட்டொ யூனியன் சொத்துகளை வாங்கியபோது இது செய்யப்பட்டது. + +இந்த நிறுவனத்தின் உருவாக்கம் 1899 ஆம் ஆண்டு மற்றும் ஆகஸ்ட் ஹார்ச்சுக்கும் பின்னே செல்கிறது. முதல் ஹார்ச் வாகனம் 1901 ஆம் ஆண்டில் ஸ்விக்காவ்வில் தயாரிக்கப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய நிறுவனத்திலிருந்து ஹார்ச் வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு ஹார்ச் ஸ்விக்காவ்வில் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து, ஹார்ச் என்ற வணிகப்பெயரை தொடர்ந்து பயன்படுத்தினார். + +அவருடைய முன்னால் பங்காளர்கள் வர்த்தகச்சின்னம் சட்டமீறலுக்காக அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள். ஒரு ஜெர்மன் நீதிமன்றம் ஹார்ச் என்ற வணிகப்பெயர் முன்னால் நிறுவனத்திற்குதான் சொந்தமானதென்று தீர்மானித்தது. ஆகஸ்ட் ஹார்ச் தன்னுடைய சொந்த கார் வணிகத்தில் தன்னுடைய சொந்த குடும்பப் பெயரையே பயன்படுத்தமுடியாமற்போனது. இதனால் அவர் ஃபிரான்ஸ் ஃபிக்கெண்ட்ஷெருடைய அபார்ட்மென்டில் தன்னுடைய நிறுவனத்திற்கான ஒரு புதிய பெயரை பிறப்பிக்க ஒரு கூடுகையை அமர்த்தினார். இந்த கூடுகையின் போது ஃபிரான்ஸின் மகன் அறையின் ஒரு மூலையில் அமைதியாக இலத்தீன் படித்துக் கொண்டிருந்தார். பலமுறை அவர் ஏதோ சொல்ல முயன்று தன்னுடைய வார்த்தைகளை விழுங்கிக்கொள்வார். ஆனால் இறுதியில் “அப்பா, "audiatur et altera pars" ... "ஹார்ச்" என்றழைப்பதற்கு பதிலாக "ஆடி" என்றழைத்தால் நன்��ாயிருக்காதா?” என்று உளறிக் கொட்டிவிட்டார். "ஹார்ச்!" ஜெர்மன் மொழியில் “ஹார்க்!” என்றால் “கவனி!” அல்லது ‘கேள்” என்று அர்த்தம். இது இலத்தீனில் “ஆடி” (கேட்கக் கூடிய என்ற ஆங்கில வார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்கவும்) என்று மொழிபெயர்க்கப்படலாம். கூடுகையில் கலந்துக் கொண்ட அனைவரும் இந்த யோசனையை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். சில நேரங்களின் ஆடி என்பது “ஆட்டோ யூனியன் டாய்ச்சலாண்ட் இங்கோல்ஸ்டாட்” என்பதின் சுருக்கப்பெயரென்று தவறாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது சொற்களை திறமையாக பின்வாட்டில் பொருத்தி அமைக்கப்பட்ட நிகழ்வாகும். உண்மையில் இந்த நிறுவனத்தின் பெயருக்கான பிறப்பிடம் அது கிடையாது. + +ஆடி 2612 cc (2.6 லிட்டர்) நான்கு கலன் வடிவத்திலும், அதைத் தொடர்ந்து 3564 (3.6லி) வடிவம், மற்றும் 4680 cc (4.7லி) மற்றும் 5720 cc (5.7லி) வடிவங்களுடனும் துவங்கியது. இவை விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றிகரமாக காணப்பட்டன. முதலாவது ஆறு கலன் வடிவம் 4655 cc (4.7 L) 1924 ஆம் ஆண்டில் தோன்றியது. + +ஆகஸ்ட் ஹார்ச் 1920 ஆம் ஆண்டில் ஆடி நிறுவனத்தை விட்டு, போக்குவரத்து துறையில் ஒரு உயர்ப்பதவிக்குச் சென்றார். ஆனால் தொடர்ந்து ஆடியின் பொறுப்புரிமையாளர்கள் குழுவில் ஒரு அங்கத்தினராக இருந்தார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆடி நிறுவனம் இடது-கை ஓட்டுதல் உடைய தயாரிப்பு கார், ஆடி வகை K வைச் செய்து வழங்கி முதல் ஜெர்மன் கார் தயாரிப்பாளராக இருந்தது. 1920களில் இடது-கை ஓட்டுவது பிரபலமானது. ஏனென்றால் அப்படி ஓட்டுவதால் முன்னே வரும் வாகனங்கள் தெளிவாக தெரிந்ததால், முந்தி செல்வது இன்னும் பாதுகாப்பானது. + +1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் DKW ன் உரிமையாளரான யோர்கன் ராஸ்முஸன், ஆடிவெர்க் AGன் பெரும்பாலான பங்குகளை வாங்கினார். அதே வருடத்தில், ராஸ்முஸன் US வாகன தயாரிப்பாளர் ரிக்கன்பேக்கரின் எட்டு கலன் இயந்திரங்களை செய்வதற்கான உற்பத்திக் கருவி உட்பட, ரிக்கன்பேக்கரில் மீதமுள்ளவைகளை வாங்கிக்கொண்டார். இந்த இயந்திரங்கள் 1929 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட "ஆடி ஸ்விக்காவ்" மற்றும் "ஆடி டிரெஸ்டன்" வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் ஆறு கலன் மற்றும் நான்கு கலன் (பூஜோவிடமிருந்து உரிமம் பெறப்பட்டது) வடிவங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த காலக்கட்டத்திலான ஆடி கார்கள் அதி சொகுசானவைகளாகவும் சிறப்பு வேலைப்பாடுகள் உள்ளவைகளாகவும் இருந்தன. + +1932 ஆம் ஆண்டில் ஆடி ஹார்ச், DKW , வாண்டரர் ஆகியவற்றுடன் ஒன்றாக இணைந்து ஆட்டோ யூனியன் உருவானது. இந்த காலக்கட்டத்தின் போது தான் அந்த நிறுவனம் ஆடி ஃப்ரண்ட் என்ற காரை அளித்தது. முன்-சக்கரம் ஓட்டுதலுடன் ஒரு ஆறு கலன் இயந்திரத்தை சேர்த்த முதல் ஐரோப்பிய கார் இது தான். இதில் வாண்டர்ருடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட ஒரு உடல் அமைப்பு, ஆனால் செலுத்தற் தண்டு முன்னோக்கிப் பார்க்கும் வண்ணம் 180 பாகைகள் திரும்பியது. + +இரண்டாம் உலகப் போருக்கு முன் இந்த நான்கு வணிகப்பெயர்களை குறிக்கும் வண்ணம், இன்றைய ஆடி சின்னத்தைக் குறிக்கும் நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளையங்களை ஆட்டோ யூனியன் பயன்படுத்தியது. இந்த சின்னம் அந்த காலகட்டத்தில் ஆட்டோ யூனியன் பந்தயக் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதில் அங்கமாயிருந்த நிறுவனங்கள் தத்தம் சொந்த பெயர்களையும் முத்திரைகளையும் பயன்படுத்தினர். தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அதிகமதிகமாக செறிவுற்று சில ஆடி வடிவங்கள் ஹார்ச் அல்லது வாண்டரரால் செய்யப்பட்ட இயந்திரங்களால் செலுத்தப்பட்டன. + +அந்த கால கட்டத்துடைய பொருளாதார சிக்கல்களை பிரதிபலிக்கும் வகையில் 1930களில் ஆட்டோ யூனியன் சற்று சிறிய கார்களில் கவனம் செலுத்தியாது. இதனால் 1938 ஆம் ஆண்டு வாக்கில் அந்த நிறுவனத்துடைய DKW வணிகம் ஜெர்மானிய கார் சந்தையில் 17.9% பங்கை கைப்பற்றியது ஆனால் ஆடி 0.1% மட்டுமே கைக்கொள்ள முடிந்தது. + +பெரும்பாலான ஜெர்மன் உற்பத்தி இயக்கங்களைப் போல, இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது ஆட்டோ யூனியன் தொழிற்சாலைகள் இராணுவ உற்பத்திக்காக மாற்றியமைக்கப்பட்டன. மேலும் உடனே மீதமுள்ள போர் முழுவதிலும் பலத்த குண்டு வீச்சினால் அவை பாதிக்கப்பட்டு கடுமையான சேதமடைந்தன. + +ரஷிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு 1945 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் இராணுவ நிர்வாகத்தின் ஆணைகளுக்கிணங்க அவை போர் இழப்புகளுக்காகத் தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த சொத்துகளும் எந்த நஷ்ட ஈடும் இல்லாமல் சொத்துப்பறிப்பு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 17 1948 அன்று செம்னிட்ஸின் ஆட்டோ யூனியன் AG, வர்த்தக பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இந்த செயல்களால் ஜெர்மனியின் ஆட்டோ யூனியன் AG முடிவை எட்��ும் நிலையை அடைந்தது. ஸ்விக்வா ஆடி தொழிற்சாலையின் எஞ்சிய ஆலை VEB (“மக்கள் சொந்தமாக்கப்பட்ட நிறுவனம்” என்பதற்கான ஜெர்மன்) ஆட்டோமொபில்வர்க் ஸ்விக்வா, சுருக்கமாக AWZ (ஆங்கில மொழிபெயர்ப்பு வாகன தொழிற்சாலை ஸ்விக்வா) ஆனது. + +1949 ஆம் ஆண்டில் ஸ்விக்வாவின் ஆடி தொழிற்சாலை போருக்கு-முந்தைய வடிவங்களை மறுபடியும் கட்டியமைக்கத் துவங்கியது. இந்த DKW வடிவங்கள் IFA F8 மற்றும் IFA F9 என்று மறுபெயரிடப்பட்டு மேற்கு ஜெர்மனிய வடிவங்களைப் போல காணப்பட்டன. மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மன் வடிவங்கள் பாரம்பரியமான, புகழ்ப்பெற்ற DKW இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு பொருத்தப்பட்டன. + +மேற்கு ஜெர்மனியில் ஒரு புதிய தலைமை அலுவலகம் கொண்ட ஆட்டோ யூனியன் இங்கோல்ஸ்டாட், பவேரியாவில் துவங்கப்பட்டது. இதற்கு பவேரியா மாநில அரசாங்கமும் மார்ஷல் பிளான் எய்டும் கடன்கள் வழங்கியிருந்தன. மறுமுறை உருவாக்கப்பட்ட நிறுவனம் செப்டம்பர் 3 1949 அன்று துவங்கப்பட்டு, முன் -சக்கரம் ஓட்டப்படும் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களையுடைய DKW பாரம்பரியத்தைத் தொடர்ந்தது. இதில் ஒரு சிறிய ஆனால் உறுதியான 125 cc மோட்டர்சைக்கிள் மற்றும் DKW F 89 L என்ற ஒரு DKW டெலிவரி வேனுடைய உற்பத்தியும் அடங்கியது. + +டெய்ம்லர்-பென்ஸின் கீழ் சற்று காலம் சொந்தம் கொண்டாடபட்டபின் 1964 ஆம் ஆண்டில் வாக்ஸ்வேகன் குழு இங்கோல்ஸ்டாடிலுள்ள தொழிற்சாலையையும் ஆட்டோ யூனியனின் வணிகக் குறி உரிமைகளையும் வாங்கினது. 1960களின் மத்தியில் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்கள் வரவேற்பை இழந்தன. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் சௌகரியமான நான்கு-ஸ்டிரோக் இயந்திரங்களின் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டனர். 1965 செப்டம்பரில் DKW F102ல் ஒரு நான்கு-ஸ்டிரோக் இயந்திரம் பொருத்தப்பட்டது மற்றும் சில முன்பக்க மற்றும் பின்பக்க தோற்ற மாற்றங்களையும் அடைந்தது. வாக்ஸ்வேகன் DKW என்ற வணிகப்பெயர் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டதால், அதை கைவிட்டனர். இந்த வடிவமும் நிறுவனத்திற்கு உள்ளே F103 என்று அழைக்கப்பட்டது, ஆனால் வெறும் “ஆடி” என்றே விற்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த வடிவங்கள், அதனுடைய குதிரைத் திறனின் தரத்தை அடிப்படையாக கொண்டு பெயரிடப்பட்டது மற்றும் 1972 ஆம் ஆண்டு வரை, ஆடி 60, 75, 80 மற்றும் சூப்பர் 90 என்ற பெயர்களில் விற்கப்பட்டது. + +1969 ஆம் ஆண்டு NSUவுடன் ஆட்டோ யூனியன் இணைந்தது. இது ஸ்டட்கார்ட்டுக்கு அருகில் உள்ள நெக்கர்சும்மில் அமைந்துள்ளது. 1950களில் மோட்டார் சைக்கிள் தயாரித்தலில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக NSU இருந்துவந்தது. ஆனால் அதற்கு பிறகு NSU பிரின்ஸ், TT மற்றும் TTS ரகம் போன்ற சிறிய கார்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த கார்கள் தொன்மையான பந்தய கார்களில், இன்னும் பிரபலமாகத்தான் உள்ளன. ஃபெலிக்ஸ் வாங்கிலின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சுழலும் இயந்திரங்களைத் தயாரிப்பதில் NSU தன்னுடைய கவனைத்தைத் திருப்பியது. 1967 ஆம் ஆண்டில் புதிய NSU Ro 80 என்பது விண்வெளி-யுக காராக இருந்தது. அக்காலத்தில், காற்றியக்கம் சார்ந்தவைகள், லேசான எடை மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப விவரங்களில் முன்னோடியாக இருந்தது. சுழலும் இயந்திரங்களில் ஏற்பட்ட ஆரம்பக்கால பிரச்சனையின் காரணத்தினால் NSU தன்னிச்சையாக இயங்க முடியாமல் போய்விட்டது. இப்போது, A6 மற்றும் A8 ஆடி வடிவங்கள், மிகவும் பெரியளவில் தயாரிக்கப்படுவதற்கு நெக்கர்சும் ஆலை பயன்படுத்தப்படுகிறது. குவாட்ரோ நிறுவனம் கூட நெக்கர்சும் தொழிற்சாலையில்தான் அமைந்துள்ளது. ஆடியின் அதிகமான திறனுடைய கார்களான R8 மற்றும் "RS" போன்ற வடிவங்களை தயாரிப்பதும், உருவாக்குவதும் இந்த நிறுவனத்தின் வேலையாக இருக்கிறது. + +நடுநிலை அளவுடைய கார்களை உருவாக்குவதில், NSU கவனம் செலுத்தி வருகிறது. பின்பக்க இயந்திரமுடைய ப்ரின்ஸ் வடிவங்கள் மற்றும் வருங்காலத்தை பிரதிபலிக்கும் NSU Ro 80 ஆகியவைற்றிற்கு இடையே, ஒரு பிளவை ஏற்படுத்தும் வகையில் K70 உருவாக்கப்படுகிறது. எனினும், வாக்ஸ்வேகன் K70 யை தன்னுடைய தயாரிப்புத் தொடரில் ஏற்றுக் கொண்டதால், NSU என்ற தனியான வணிகத் தயாரிப்பு அற்றுப்போனது. + +புதிதாக இணைந்த நிறுவனம், ஆடி NSU ஆட்டோ யூனியன் AG என்று அழைக்கப்படுகிறது. போருக்கு முந்தைய காலத்திலிருந்து, முதல் முறையாக, ஆடியின் வெளிப்பாடு, ஒரு தனி வணிக சின்னமாக பார்க்கப்பட்டது. 1970 ஆம் வடிவ ஆண்டில், வால்ஸ்வாகன் ஆடியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி வைத்தது. + +இந்த நிர்வாகத்தில் 1968 ஆம் ஆண்டில் ஆடி 100 தான் முதலாவதாக வந்த புதிய காராகும். 1972 ஆம் ஆண்டில் ஆடி 80/ஃபாக்ஸுடன் (1973 வால்ஸ்வாகன் பாசட் உருவாக்கப்படுவதற்கு இது அடித்தளமாக இருந்தது) இது இணைந்துக்கொண்டது. 1974 ��ம் ஆண்டில் ஆடி 50துடன் (அதற்கு பின்பு, வால்ஸ்வாகன் போலோ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது) இணைந்துக்கொண்டது. பல வழிகளில், ஆடி 50 ஒர் வித்து வடிவமாக இருந்து வந்தது. ஏனெனில் கல்ஃப்/போலோ கருத்துப்படிவம் உருவாவதற்கு இது காரணமாக இருந்தது. இது உலகத்திலேயே மிகவும் வெற்றிகரமான கார் உருவாவதற்கு வழிவகுத்தது. +இந்த நேரத்தில் ஆடியின் பேர், மாறாத ஒன்றாக இருந்தது. அதனால், அடித்தட்டு பொறியாளரான ஜோர்க் பென்சிங்கரிடமிருந்து வந்த செயற்குறிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது என்னவெனில், ஆடி செயற்திறன் கார் மற்றும் நெடுந்தூர பந்தய காருக்காக, வால்ஸ்வாகனின் இல்டிஸ் இராணுவ வாகனத்தில், நான்கு சக்கர இயக்க தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகும். "ஆடி குவார்ட்ரோ" என்று பெயரிடப்பட்ட செயற்திறன் கார், 1980 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது இரண்டு கதவுகளையுடைய சுழலி ஊட்டப்பட்ட காராகும். இது ஜெர்மனில், முதல் முறையாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாகும். இந்த வாகனம், மைய வகையீட்டின் மூலம் எல்லா சக்கரங்களும் இயங்கும் நிரந்தரத் தன்மையை கொண்டதாக உள்ளது. இது பொதுவாக "Ur-Quattro" என்று தான் அழைக்கப்படுகிறது (இந்த வார்த்தையின் முற்பகுதியான "Ur-" என்பது, ஜெர்மன்னில் மிகைப்படுத்தல் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் "ஒரிஜினல்" (அசல்) என்று அர்த்தமாகும் மற்றும் இது ஆடியின் S4 மற்றும் S6 ஸ்போர்ட் செடனின் முதல் சந்ததியை குறிப்பதாகவும் உள்ளது. இதில் "UrS4" மற்றும் "UrS6"ம் அடங்கும். இதில் ஒரு சில வாகனங்களே (இவை அனைத்தும் ஒரே ஒரு குழுவின் மூலம் கைகளினாலேயே செய்யப்பட்டவையாகும்) தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த வாகனம், நெடுந்தூர கார் பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பந்தய கார்களின் அனைத்து-சக்கரமும் இயங்கும் மாறும்தன்மை, மிகவும் பிரபலமான வெற்றியை நிரூபித்துவிட்டது. ஆடியின் பெயர், தானியங்கி தொழில்நுட்பத்தில் உள்ள நவீனத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. + +1985 ஆம் ஆண்டில் ஆட்டோ யூனியன் மற்றும் NSU தரவகையும் செயலற்று போனது. ஆடி AG ஐ எளிதாக்குவதற்காக இப்போது இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பெயர் சுருக்கப்பட்டுவிட்டது. + +1986 ஆம் ஆண்டில் பேசட் வகை ஆடி 80, ஒரு "வயதான கார்" வகையாக உருவாக்க ஆரம்பிக்கும் போது, "���கை 89" என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. முழுமையான இந்த புதிய உருவாக்கம், மிகவும் நன்றாகவே விற்கப்பட்டது. எனினும், அதன் வெளிப்புறத்தோற்றம் நவநாகரிகமாகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இருந்து, அதன் அடித்தள இயந்திரத்தின் குறைந்த செயல்திறனை மழுப்பக்கூடிதாகவே இருந்தது. அதனுடைய அடித்தள அமைப்பு மிகவும் எளிமையாகவே இருந்தது (பயணி-பக்க கண்ணாடிக் கூட ஒரு விருப்பத்தேர்வாகவே அளிக்கப்பட்டது). 1987 ஆம் ஆண்டில் ஆடி ஒரு புதிய மற்றும் வெகு நளினமான ஆடி 90யை அறிமுகப்படுத்தினார்கள். அதில் நிலையான அம்சங்களின் அதி உயரிய அமைப்பிருந்தது. 1990 ஆம் ஆண்டின் ஆரம்பக்காலங்களில், ஆடி 80 தொடரின் விற்பனை சரிய ஆரம்பித்து சில அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகள் மேலெழும்பின. + +தங்களது கார்களை மோதிய பிறகு ஆடி மீது வழக்கு தொடர்ந்த ஆறு பேரின் உணர்ச்சி பூர்வமான நேர்காணல்கள் மற்றும் ஆடி 5000ல் தடுப்பு மிதியை மிதித்தவுடன் “எதிர்பாராத முடுக்கம்” ஏற்படுவதாக காட்டப்பட்ட போலியான படம் ஆகியவை ஒரு "60 நிமி" ஆவணமாக காட்டப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவில் ஆடி விற்பனையில் இருந்த சரிவை மேலும் அதிகமாக்கியது. தனிப்பட்ட சோதனையாளர்கள் எந்த வித இயந்திரக் கோளாறும் இல்லை என முடிவுக்கு வந்தனர். சில அமெரிக்க கார்களை விட வேகம் அதிகரிக்கும் சாதனமும் தடுப்பு மிதியும் அருகாமையில் இருப்பதை ஓட்டுனர்கள் சரியாக கவனிக்காதது ஓரளவு காரணமாக இருக்கலாம் எனக் கருதினர். இந்த வேறுபாடு, ஐரோப்பிய ஓட்டுனர்கள் மிருதுவான குதிகால் மற்றும் முன்கால் ஓட்டும் முறைகளை விரும்புவதனால் இருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய பிரச்சனையாக ஆகாததற்கு, ஐரோப்பிய ஓட்டுனர்களின் மத்தியில் மனித ஆற்றலுடன் கூடிய அதிகப்படியான அனுபவமும் கூட காரணமாக இருக்கலாம். + +இந்த அறிக்கை உடனடியாக ஆடி விற்பனையைக் குறைத்தது மற்றும் பாதிக்கப்பட்ட மாதிரி வடிவத்தின் பெயரை மாற்றினர் (மற்ற இடங்களில் உள்ளதைப் போல 1989 ஆம் ஆண்டில் 5000 100/200 ஆக மாறியது). 1990களின் இடையில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதற்கு முன் ஆடி அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறுவதைப் பற்றி கூட யோசித்தது. 1996 ஆம் ஆண்டில் A4ன் விற்பனை மற்றும் A4/A6/A8 வரிசைகளின் வெளியீடு ஆகியவை ஆடிக்கு திருப்புமுனனயாக அமைந்தது. இவை VW மற்றும் மற்ற கூட்டு நிறுவன��்களோடு இணைந்து தயாரிக்கப்பட்டது (“பிளாட்ஃபார்ம்” என அழைக்கப்படுவது). +21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆடி ஜெர்மன் பந்தய களத்தில் கலந்து கொண்டு அதி வேக தாங்காற்றல் போன்ற பல உலக சாதனைகளை நிகழ்த்தி அவற்றை தக்கவைத்துக்கொண்டது. இந்த முயற்சி, 1930களின் ‘சில்வர் ஏரோஸ்’ பந்தயங்களில் இருந்து வந்த நிறுவனத்தின் பாரம்பரியத்தை ஒட்டி அமைந்தது. + +தற்போது, ஐரோப்பாவில் ஆடியின் விற்பனை அதிகப்படியாக வளர்ந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் தொடர்ந்து 11வது முறையாக விற்பனை அதிகரித்தது, உலகெங்கும் 779,441 கார்கள் விற்பனையானது. 50 முக்கியமான விற்பனை சந்தைகளில் 21ல் சாதனை எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. மிக அதிகமான விற்பனை அதிகரிப்பு கிழக்கு ஐரோப்பா (+19.3%), ஆப்பிரிக்கா (+17.2%) மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (+58.5%) ஆகிய இடங்களிலிருந்தது. இந்தியாவில் விற்பனை அதிகப்படியாக வளர்நததால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆடி தனது முதல் இரண்டு விற்பனை மையங்களை அமைத்தது. + +இந்த தரவகையின் மற்றொரு சாதனையாக 2007 ஆம் ஆண்டின் இதன் உலகளாவிய விற்பனை 964, 151 ஆக வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் தொடர்ந்து 13வது சாதனை வருடமாக, 1,003,400 கார்கள் விற்பனை செய்து 1 மில்லியன் எல்லையை தாண்டியது. + +அரித்தலை தவிர்க்க 100% வெள்ளியம் பூசப்பட்ட கார்களை ஆடி தயாரிக்கிறது. இந்த முறையை போர்ஷே நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய பிறகு முதன் முதலில் அதனை செய்த பெரிய சந்தை வாகனம் இது தான். மற்ற தடுப்பு நடவடிக்கைகளுடன் முழு மேற்பரப்பில் உள்ள துத்தநாக மேற்பூச்சு துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாப்பதில் மிக பயனுள்ளதாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நிலைப்பு தன்மை ஆடியின் எதிர்பார்ப்பையே மிஞ்சியதால், முதலில் அளிக்கப்பட்ட 10 வருட துருப்பிடித்தலில் இருந்து உத்தரவாதத்தை தற்போது 12 வருடமாக நீடித்துள்ளது (துருப்பிடிக்காத அலுமினியம் மேற்பரப்புகளுக்குத் தவிர). + +முழுவதுமாக அலுமினியத்தால் ஆன காரை ஆடி நிறுவனம் கொண்டுவந்தது. 1994 ஆம் ஆண்டில் அலுமினிய இடைவெளி சட்டக தொழிநுட்பத்தை (ஆடி ஸ்பேஸ் ஃபிரேம் என அழைக்கப்படுகிறது) கொண்ட ஆடி A8ஐ அறிமுகப்படுத்தியது. தொண்ணூறுகளின் நடுவில் ஆடி பல புதிய வரிசை வாகனங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் தொடர்ந்து முதன்மையான தொழில்நுட்பம் ம��்றும் உயரிய செயல்திறனை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இந்த முயற்சிக்கு முன், இந்த தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்ய ஆடி வகை 44ஐ சேர்ந்த அலுமினியத்தால் மேற்பூச்சு செய்யப்பட்ட அடிச்சட்டங்களை உதாரணங்களாக உபயோகித்தது. + +வாக்ஸ்வேகன் யுக மாதிரிகளுக்குப் பின்னர் தனது இரண்டு நீண்ட-நாள் போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMW ஆகியவை விரும்பும் பாரம்பரிய பின்சக்கர ஓட்டு முறையை உபயோகிக்க திட்டவட்டமாக மறுத்தது. இதற்கு பதிலாக முன் சக்கர ஓட்டு முறை அல்லது நான்கு சக்கர ஓட்டு முறையை விரும்பியது. இதை அடைவதற்காக, ஆடி தனது கார்களை, அச்சாணிக்கு முன்னால், முன் சக்கரங்களில் மேல், “மேல்தொங்கும்” முறையில், நீளவாக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்ட இயந்திரம் இருப்பது போல வடிவமைத்தது. இதனால் நான்கு சக்கர ஓட்டு முறையை எளிதாக பின்பற்ற முடிந்தாலும், சரியான 50:50 எடை விநியோகம் (அனைத்து முன் சக்கர ஓட்டு முறை உள்ள கார்களில் இருப்பதுபோல) இல்லாமல் போகின்றது. + +A3 மற்றும் TT போன்ற மாதிரிகளுக்கு "குவாட்ரோ" பேட்ஜை ஆடி அண்மையில் பயன்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகள் முந்தைய ஆண்டுகளில், இயந்திரம் சார்ந்த மைய வகையீடுகளை பயன்படுத்தியது போன்று டார்சன் அடிப்படையிலான கருவியை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, சுவீடன் நாட்டு ஹால்டெக்ஸ் இழுவை மின் இயந்திர கிளட்ச் 4WD கருவியை பயன்படுத்துகிறது. + +1980களில் பாரம்பரியமான 6 கலன் இயந்திரங்களுக்கு பதிலாக, அதிகமாக உழைக்கும் உட்வரிசை 5 கலன் 2.1/2.2L இயந்தியங்களை உபயோகிப்பதில் ஆடி வோல்வோவுடன் இணைந்து தலைசிறந்த நிறுவனங்களாக விளங்கின. இந்த இயந்திரம் அவர்களது பொது கார்களில் மட்டும் இல்லாமல் பந்தய கார்களிலும் பொருத்தப்பட்டது. 1980களில் இந்த 2.1 L உட்வரிசை 5 கலன்கள் கொண்ட இயந்திரங்கள் பந்தய கார்களுக்கு அடிப்படையாக உபயோகப்படுத்தப்பட்டது. இது மாற்றங்களுக்குப் பிறகு 400 குதிரைத் திறன் (298 KW) வரை அளித்தது. 1990 ஆம் ஆண்டுக்கு முன் 2.0L மற்றும் 2.3L இடையே இடப்பெயர்ச்சி உடைய இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த வகையிலான இயந்திர சக்தி, எரிபொருள் சிக்கனம் (1980களில் இருந்த அனைத்து வாகன ஓட்டிகளின் மனதிலும் இருந்தது) மற்றும் அதிக வலிமையைக் கொடுக்கும் நல்ல இணைப்பாக இருந்தது. + +1990களின் தொடக்கத்தில் ஆடி நிறுவனம், உலக��ாவிய சொகுசு கார் நிறுவனங்களில் முதன்மையாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMWக்கு சரியான போட்டியாளராக சந்தையில் உருவெடுத்தது. இந்த நிலை 1990 ஆம் ஆண்டில் ஆடி V8 வெளியிட்ட பிறகு உருவானது. இது ஆடி 100/200ன் மேற்பரப்பில் சில வேறுபாடுகளைச் செய்து ஒரு புது இயந்திரத்தைப் பொருத்தப்பட்டதாகும். மிகத் தெளிவான மாறுதல் முன் பகுதியில் பொருத்தப்பட்ட ஒரு புதிய கம்பிக் கதவாகும். + +1991 ஆம் ஆண்டில் ஆடியிடம் 4 கலன்கள் கொண்ட ஆடி 80, 5 கலன்கள் கொண்ட ஆடி 90 மற்றும் ஆடி 100, சுழலி ஊட்டப்பட்ட ஆடி 200 மற்றும் ஆடி V8 ஆகியவை இருந்தன. 4 மற்றும் 5 கலன் இயந்திரம் பொருத்தப்பட்ட இரண்டு கதவுகள் கொண்ட சிறிய காரும் இருந்தது. + +ஐந்து கலன்கள் கொண்ட இயந்திரம் மிக வெற்றிகரமான மற்றும் திடமான வலிமை உடையதாக இருந்தாலும் அது இலக்கு சந்தையில் சற்று வித்தியாசமாகவே இருந்தது. 1992 ஆம் ஆண்டில் முற்றிலும் புதிய ஆடி 100 அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு 2.8L V6 இயந்திரத்தையும் ஆடி அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரம் முன் புறம் சற்று தூக்கப்பட்ட ஆடி 80லும் பொருத்தப்பட்டு (அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் தற்போது 80 என்று பெயர் அளிக்கப்பட்ட அனைத்து 80 மற்றும் 90 மாதிரிகள்), 4,5 மற்றும் 6 கலன் இயந்திரத் தேர்வுகளும், சலூன்/செடான், இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் காபிரியோலே பாணிகளும் இந்த மாதிரிகள் கிடைக்கப்பெறுவதாக இருந்தன. + +விரைவில் இந்த 5 கலனும் முக்கிய இயந்திரத் தேர்வாக இல்லாமல் கைவிடப்பட்டது: ஆயினும், சுழலி ஊட்டப்பட்ட 230 குதிரைச் சக்தி வடிவம் நிலைத்திருந்தது. 1991ன் 200 குவாட்ரோ 20 Vல் முதலில் பொருத்தப்பட்ட இயந்திரம் விளையாட்டு குவாட்ரோவில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் ஒரு வழிப்பொருளாகும். இது ஆடியின் இரு கதவு கொண்ட சிறிய காரில் பொருத்தப்பட்டு அது S2 என்றும் ஆடி 100 மேற்பரப்பில் பொருத்தப்பட்டு அது S4 என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு மாதிரிகளும் அதிகப்படியாக தயாரிக்கப்பட்ட S வரிசை செயல்திறன் கார்களுக்கான தொடக்கமாக அமைந்தது. + +1994 ஆம் ஆண்டில் எடையைக் குறைப்பதற்காக “ஆடி இடைவெளி சட்டகம்” என அழைக்கப்படும் அலுமினிய இடைவெளி சட்டகத்தோடு வந்த ஆடி A8, V8க்கு பதிலாக கொண்டு வரப்பட்டது. குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டு முறை இந்த எடை குறைப்பை ஈடு செய்தது. இதன் காரணமாக இந்த கார் தனது ப��ட்டியாளர்களைப் போன்ற செயல்திறன் கொண்டிருந்தது. ஆனால் அவர்களை விட அதிகப்படியான சாலை பிடிமானத்தைக் கொண்டிருந்தது. ஆடி A2 மற்றும் ஆடி R8 ஆகிய வாகனங்களும் ஆடி இடைவெளி சட்டக வடிவங்களை உபயோகித்தன. + +ஆடி A2 என்பது A12 கருத்திலிருந்து பிறந்த, வருங்காலத்தின் மிகத் திறமையான சிறிய வடிவத்தை கொண்டதாக உள்ளது. பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தை இதில் உள்ள பல புதிய சிறப்பம்சங்கள் ஆடிக்கு வழங்கியது. உதாரணமாக கார் வடிவ தயாரிப்புக்களிலேயே முதன் முறையாக அலுமினியம் இடைவெளி சட்டகம் உபயோகிக்கப்பட்டது. ஆடி A2வில் விலைக் குறைவான மூன்று கலன் இயந்திரத்தை உபயோகித்து, ஆடி மேலும் தனது TDI தொழில்நுட்பத்தை விரிவாக்கியது. A2 மிகுந்த காற்றியக்க கட்டுப்பாடுடையது மற்றும் ஒரு காற்றுப்புழையை சுற்றி உருவாக்கப்பட்டது. அதிக விலையின் காரணத்தினால், ஆடி A2 குறைகூறப்பட்டது. விற்பனையின் அடிப்படையில் வெற்றியடையவில்லை, ஆனால் இது ஆடியை ஒரு சிறந்த தயாரிப்பாளராக நிலைநிறுத்தியது. + +ஆடி 80க்கு பதிலாக ஆடி A4 கொண்டு வரப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அடுத்த முக்கியமான வடிவ மாற்றமாகும். புதிய பெயரிடும் முறை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆடி 100, ஆடி A6 ஆக மாறியது (ஒரு சிறிய மாற்றத்துடன்). இதனால் S4, S6 ஆனது மற்றும் A4ன் மேற்பரப்பில் புதிய S4 அறிமுகப்படுத்தப்பட்டது. S2 நிறுத்தப்பட்டது. இயந்திர வளர்ச்சிகளோடு 1999 ஆம் ஆண்டு வரை ஆடி காப்ரியோலே (ஆடி 80இன் களத்தின் அடிப்படையில்) தொடரப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் ஒரு புதிய A3 பின்புற உயர்த்துக் கதவுமாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது (வாக்ஸ்வேகன் கோல்ஃப் MK4 களத்தின் அடிப்படையில்) மற்றும் இதே கீழ்ச்செருகல்களின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் ஆடி TT இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் ரோட்ஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் A-பிரிவுக்கு போட்டியாக மற்றொரு சுவாரஸ்யமான மாதிரியான ஆடி A2 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை, ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையானது. ஆயினும், 2005 ஆம் ஆண்டில் இது நிறுத்தப்பட்டது மற்றும் ஆடி உடனடியாக ஒரு மாற்று வடிவத்தை தயாரிப்பதில்லை என முடிவெடுத்தது. + +தற்போது கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும் இயந்திரங்களாவன: 1.4L, 1.6L மற்றும் 1.8L 4 கலன்கள், 1.8L 4-சுழலூட்டப்பட்ட கலன், 2.6L ம��்றும் 2.8L V6, 2.2L சுழலூட்டப்பட்ட 5 கலன்கள் மற்றும் 4.2L V8 இயந்திரம் 1998 ஆம் ஆண்டில் வலிமை, முறுக்குத் திறன் மற்றும் மென்மை ஆகியவை அதிகரிக்கப்பட்ட 2.4L மற்றும் புதிய 2.8L 30V V6 ஆகியவை V6க்கு பதிலாக கொண்டுவரப்பட்டது. 3.7L V8 மற்றும் A8க்கான 6.0L W12 இயந்திரமாகும். மேலும் பல இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தன. + +நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு வகையான இரட்டை கிளட்சு வெளியீடுடைய நேரடி மாற்று பல்சக்கரப்பெட்டியை (DSG) வாக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது. இது ஒரு வழக்கமான தானியங்கி வெளியீடு போல ஓட்டக்கூடிய தானியங்கு ஓர் அரை-தானியங்கி வெளியீடாகும் குழு B S1ல் இருக்கும் பல்சக்கரப் பெட்டியின் அடிப்படையில், இந்த முறையில் முறுக்குத்திறன் மாற்று கருவிக்கு பதிலாக இரண்டு மின்திரவாற்றலால் கட்டுப்படுத்தப்பட்ட கிளட்சுகள் அடங்கும். இது, DSG S-டிரோனிக் என்று அழைக்கப்படும் சில VW கோல்ஃப்கள், ஆடி A3 மற்றும் TT மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. + +பழைய 1.8லிட்டர் இயந்திரங்களுக்கு பதிலாக தற்போது புதிய எரிபொருள் படுகை உட்செலுத்து (FSI) இயந்திரங்கள் வந்த பின்னர், புதிய A3, A4, A6 மற்றும் A8 மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கீழே குறிப்பிடப்பட்டவை உள்ளிட்ட இந்த வகைக்குள் அடங்கும் அனைத்து பெட்ரோல் இயந்திர மாதிரிகள், இந்த எரிபொருள் சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது: +கேஸோலின் இயந்திரங்கள்: + +ஆடி தரவகையின் தயாரிப்புகளில், விற்பனையில் உள்ள மற்ற இயந்திரங்களாவன: + +(எல்லா TDI மாதிரிகளும் சுழலி ஊட்டப்பட்ட டீசல் இயந்திரங்களை உடையதாக உள்ளது.) + +ஆடி ஜெப்பானின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான சான்யோவுடன் வாக்ஸ்வேகன் குழுமத்திற்காக ஒரு முன்னோடியான கலப்பின மின் திட்டத்தில் கூட்டமைப்பை திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பினால் வருங்கால வாக்ஸ்வேகன் குழுமத்தின் மாதிரிகளில் சான்யோ மின்கலங்கள் (பாட்டரிகள்) மற்றும் மற்ற மின் உபகரணங்கள் பயன்படுத்தப்படக் கூடும். + +பின்வருவன கலப்பின மின் வாகனங்களில் உட்படும்: + + +முழு-மின் வாகனங்கள்: + + +2006 ஆம் ஆண்டு துவக்கி, ஆடி பகல் நேரங்களில் எரியும் விளக்குகளை தங்களுடைய வாகனங்களில் கொண்டு வந்தார்கள். இதில் ஆடி வெள்ளை LED தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். DRLகளின் தனித்தன்மைவாய்ந்த வடிவம் ஆடிக்கு ஒரு வணிகத்தனித்��ன்மையை அளித்திருக்கிறது. இந்த பாணி முதல் முறையாக R8ல் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிலிருந்து அதனுடைய அனைத்து மாதிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. + +ஆடி அண்மையில் அதனுடைய கார்களுக்கு ஒரு கணிணி வழி கட்டுப்படுத்தும் அமைப்பை அளிக்கத் துவங்கியுள்ளது. இது பல்லூடக இடை இணைப்பு (MMI) என்றழைக்கப்படுகிறது. BMWவின் ஐடிரைவ் கட்டுப்படுத்தும் அமைப்பு மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் இது வந்தது. இது உண்மையில் ஒரு சுழலும் கட்டுப்படுத்தும் திருகியும் ‘பகுதிப்படுத்தப்பட்ட’ பொத்தான்களுள்ள ஒரு அமைப்பு அவ்வளவு தான். இந்த அமைப்பு அனைத்து உள்-கார் பொழுதுபோக்கு கருவிகளை (வானொலி, CD சேஞ்சர், ஐபாட், TV ட்யூனர்) செயற்கைக்கோள் வழிநடத்துதல், சூடாக்குதல் மற்றும் காற்றோட்டத்தை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. BMWவின் ஐடிரைவை விட கணிசமாக மேம்படுத்தப்பட்டதாக பரவலாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிலிருந்து BMW தன்னுடைய ஐடிரைவில் பயன்படுத்துவர் விருப்பத்திற்கேற்ற அதிக முன்னேற்றங்களைச் செய்துள்ளது. + +MMIயில் நடுவில் உள்ள திருகியைச் சுற்றி பகுதிப்படுத்தப்பட்ட பொத்தான்கள் இருப்பதால் மென்யுவில் (முக்கிய பட்டியலில்) அதிக நேரம் தேடவேண்டிய அவசியம் குறைகிறது. மேலும், இதில் ‘முக்கிய செயற்பாட்டிற்கு’ நேரடியாக செல்லக்கூடிய பொத்தான்களும் வானொலி அல்லது தொலைபேசி இயக்கங்களுக்கு குறுக்குவழிகளும் இருக்கிறது. இத்தகைய அம்சங்கள் இருப்பதால், MMI பொதுவாக நன்றாகவே வரவேற்கப்பட்டிருக்கிறது. திரையானது பல வண்ணத்திலோ ஒரு வண்ணத்திலோ எந்த வகையாக இருந்தாலும் செங்குத்தான டேஷ்போர்டில் (கட்டுப்பாட்டகம்) நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் A4 (புதிய), A5, A6, A8, மற்றும் Q7 மாதிரிகளில் இந்த கட்டுப்பாட்டு பொத்தான்கள் கிடை மட்ட வாக்கில் உள்ளன. + +கேட்டல் வழிநடத்துதல் அமைப்பு (ஆடியோ நேவிகேஷன் ஸிஸ்டம்) (RNS-E) உடன் செயற்கைக்கோள் வழிநடத்தும் அமைப்பிருக்கும்போது A3, TT, A4 (B7), மற்றும் R8 மாதிரிகளிலும் ஒரு “MMI-போன்ற” அமைப்பு காணப்படுகிறது. + +குறிப்பு: இது தொடரப்படாத மாதிரிகளைச் சேர்க்கவில்லை + +ஆடி, பல வகையான மோட்டார் விளையாட்டுகளில் கலந்துகொண்டுள்ளது. மோட்டார் விளையாட்டில் ஆடியின் உயரிய பாரம்பரியம், அதன் முந்தைய நிறுவனமான ஆட்டோ யூனியனிலிருந்து 1930களில் தொடங்கியது. 1990களில், வட அமெரிக்காவின் சுற்று பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆடி மோட்டார் பந்தயத்தின் டூரிங் மற்றும் சூப்பர் டூரிங் வகைகளில் ஆதிக்கம் செலுத்தியது. + +1980 ஆம் ஆண்டில் ஆடி ஒரு சுழலூட்டப்பட்ட நான்கு சக்கர ஓட்டு முறை கொண்ட குவாட்ரோவை வெளியிட்டு அதன் மூலம் பல உலக அளவில் திரளணிகள் மற்றும் பந்தயங்களை வென்றது. போட்டிப் பந்தயங்களில் நான்கு சக்கர ஓட்டு முறையை உபயோகிக்கலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்ட பின்னர் அதனை முதலில் உபயோகித்த காரணத்தினால் இது அனைத்து காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பந்தயக் காராகக் கருதப்படுகிறது. இவை எடை மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் இருப்பதால் பல திறனாய்வாளர்கள் நான்கு சக்கர ஓட்டு முறை பந்தய ஓட்டுனர்களின் நிலைக்கும் தன்மையை சந்தேகித்தனர் ஆயினும் குவாட்ரோ வெற்றி பெற்ற காரானது. முதல் திரளணியில் முதன்மை பெற்று இருக்கும் சாலையை விட்டு வெளியேறினாலும், பந்தய உலகுக்கு 4WD தான் வருங்காலத்தில் இருக்கப் போகிறது என்பதை பறைசாற்றியது. உலக திரளணி வகையகத்தில் குவாட்ரோ மேலும் வெற்றிகளை ஈட்டியது. 1983 (ஹானு மிக்கோலா) மற்றும் 1984 (ஸ்டிக் புலோம்க்விஸ்ட்) ஆகிய ஓட்டுனர் பட்டங்களை வென்றது. 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் இதன் மூலம் ஆடி சிறந்த தயாரிப்பாளருக்கான பட்டத்தையும் வென்றது. +1984 ஆம் ஆண்டில் மோண்டே கார்லோ மற்றும் ஸ்வீடன் நாட்டின் திரளணி பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்திய சிறிய சக்கர அடித்தளமுடைய விளையாட்டு குவாட்ரோவை அறிமுகப்படுத்தி இந்த பந்தயங்களில் அனைத்து இடங்களையும் பிடித்தது. ஆனால் தொடர்ந்து WRCல் கலந்துக்கொள்ளும் போது பிரச்சனைகளுக்கு உள்ளானது. 1985 ஆம் ஆண்டில், பல சுமாரான முடிவுகளுக்குப் பின்னர் வால்டர் ரோல் தனது விளையாட்டு வகை குவாட்ரோ S1ல் பருவத்தை முடித்து, ஆடியை தயாரிப்பாளர் புள்ளிகளில் இரண்டாம் இடத்திற்குச் செல்ல உதவினார். ஆடிக்கு திரளணி பாராட்டுகள் அதே வருடத்தில் ஹாங்காங்கில் இருந்து பீஜிங் செல்லும் திரளணியிலும் கிடைத்தது. ஆடியும் ஓட்டுனரும், உலக திரளணி பந்தயத்தில் ஒரு சுற்றை வென்ற ஒரே பெண் ஓட்டுனரனுமான மிஷேல் மௌடன், தற்போது வெறும் S1 என்று அழைக்கப்பட்ட விளையாட்டு வகை குவாட்ரோ S1 காரில் பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் பந்தயத்தில் பங்கு பெற்றார். இந்த மலை ஏற���ம் பந்தயத்தில் கொலரேடோவில் உள்ள 4,302 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏற வேண்டும். 1985 ஆம் ஆண்டில் மிஷேல் மௌடன் ஒரு புதிய உலக சாதனையான 11:25.39 ஐ நிகழ்த்தி, இதன் மூலம் பைக்ஸ் பீக் சாதனை புரிந்த முதல் பெண்மணியானார். 1986 ஆம் ஆண்டில் போர்சுகலில், ஓட்டுநரான ஜோகுவிம் சாண்டோஸ், தனது ஃபோர்டு RS200 தொடர்புடைய விபத்தைத் தொடர்ந்து ஆடி சர்வதேச திரளணி பந்தயங்களில் இருந்து விலகியது. சாண்டோஸ் சாலையில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது பந்தய வழியை விட்டு விலகி பார்வையாளர் பக்கத்தில் புகுந்ததனால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். பாபி அன்சர் அதே வருடத்தில் ஒரு ஆடியை உபயோகித்து பைக்ஸ் பீக் மலை ஏற்றத்தில் ஒரு புதிய உலக சாதனையான 11:09.22ஐ நிகழ்த்தினார். + +1987 ஆம் ஆண்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பே WRCல் இருந்து ஓய்வு பெற்ற தனது ஆடி S1ல் வால்டர் ரோரல் ஒரு புதிய பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் சாதனையான 10:47.85ஐ நிகழ்த்தி ஆடிக்கு பட்டத்தை வென்றார். தனது கடைசி மாதிரியில் கால சோதனை செய்யப்பட்ட, சுழலூட்டப்பட்ட உள்வரிசை ஐந்து கலன்கள் கொண்ட ஆடி இயந்திரத்தை ஆடி S1ல் உபயோகிக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஆறு வேக முறைகள் கொண்ட பல் சக்கரப் பெட்டியுடன் பிரபலமான ஆடியின் நான்கு சக்கர ஓட்டு முறையையும் கொண்டிருந்தது. இந்த காரை ஓட்டிய, ஆடியின் அனைத்து சிறந்த ஓட்டுனர்கள்: ஹானு மிக்கோலா, ஸ்டிக் புலோம்க்விஸ்ட், வால்டர் ரோல் மற்றும் மிஷேல் மௌடன். இந்த ஆடி S1 ஆடியின் 'S' கார்களுக்கு தொடக்கமாக அமைந்து தற்போது இது முக்கிய வரிசை ஆடி மாதிரி வகைகளோடு அதிகமான விளையாட்டு செயல்திறனுடைய கருவிகளுக்கான சான்றாகவும் அமைகிறது. + +ஆடி நெடுந்தூர பந்தயத்திலிருந்து சுற்றோட்ட பந்தயத்திற்கு வந்த போது, அவர்கள் முதலில் அமெரிக்காவில் டிரான்ஸ்-ஆம் உடன் 1988 ஆம் ஆண்டு நுழைய முடிவு செய்தார்கள். + +1989 ஆம் ஆண்டு, ஆடி 90 என்ற மாதிரியுடன் ஆடி நிறுவனம் சர்வதேசிய மோட்டார் விளையாட்டு நிறுவனத்தின் (IMSA) GTOவிற்கு வந்தது. தொடர்ந்து வெற்றிப் பெற்றும், இரண்டு நீடித்து உழைக்கும் திறம் நிகழ்ச்சிகளை (டேடோனா மற்றும் செப்ரிங்க்) தவிர்த்ததால் அவர்கள் வெற்றிவாகையை இழந்தார்கள். + +1990 ஆம் ஆண்டில், வட அமெரிக்காவில் தங்களுடைய கார்களை சந்தைப்படுத்த வேண்டுமென்��� குறிக்கோளை அடைந்துவிட்டு, ஆடி ஐரோப்பாவிற்குத் திரும்பினார்கள். இந்த முறை முதலாக ஆடி V8 உடன் Deutsche Tourenwagen Meisterschaft (DTM) தொடருக்கு திரும்பினார்கள். புதிய தேவைகளுக்கேற்ப கார்களை தயாரிக்க முடியாமல், 1993 ஆம் ஆண்டில் தொடர் தேசிய போட்டிகளை உள்ளடக்கிய அதிவேகமாக வளர்ந்து வரும் சூப்பர் டூரிங்க் தொடரின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். ஆடி முதலில் ஃப்ரென்ச் சூப்பர்டூரிஸம் மற்றும் இத்தாலியன் சூப்பர்டுரிஸ்மோவில் நுழைந்தார்கள். அடுத்த வருடம், ஆடி ஜெர்மன் சூப்பர் டூரன்வேகன் கோப்பைக்கு (STW என்றழைக்கப்படுவது) சென்றது. அதனையடுத்து பிரிட்டிஷ் டூரிங்க் கார் போட்டிக்கு (BTCC) சென்றது. + +Fédération Internationale de l'Automobile (FIA) குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டும் அமைப்பை முறைப்படுத்துவதிலும், போட்டியாளர்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் எதிர்க்கொண்டதால், 1998 ஆம் ஆண்டில் அனைத்து நான்கு சக்கர ஓட்டும் அமைப்பு கார்களையும் போட்டியிடுவதிலிருந்து விலக்கியது. ஆனால் அதற்குள் ஆடி தங்களுடைய அனைத்து வேலைப் பணிகளையும் விளையாட்டு கார் பந்தயத்திற்கு நேர்முகப்படுத்திவிட்டார்கள். + +2000 ஆம் ஆண்டு வரும்போது, ஆடி தொடர்ந்து அமெரிக்காவில் தன்னுடைய RS4ஐக் கொண்டு SCCA ஸ்பீட் வர்ல்ட் GT சேலஞ்சில் பங்கேற்றது. டீலர்/ அணி சேம்பியன் ரேசிங்க் மூலமாக போட்டியிடுவதால் கோர்வே, வைப்பர் மற்றும் சிறிய BMWகளுடன் (இந்த தொடர் மட்டுமே 4WD கார்களை அனுமதிக்கிறது) போட்டியிட்டது. 2003 ஆம் ஆண்டில், சேம்பியன் ரேசிங்க் ஒரு RS6ஐ அறிமுகப்படுத்தியது. மறுபடியும் குவாட்ரோ நான்கு சக்கரம் ஓட்டுதல் அதிக திறனுள்ளதாக இருந்து, சேம்பியன் போட்டியை ஆடி வென்றது. 2004 ஆம் ஆண்டு திரும்பவும் வந்து தங்களுடைய வெற்றிவாகையை தக்கவைத்துக்கொள்ள திரும்பி வந்தனர். ஆனால் காடிலாக் தங்களுடைய புதிய ஒமேகா சாஸிஸ் CTS-Vஐ அறிமுகப்படுத்தி ஆடிக்கு பலமான போட்டியை அளித்தது. நான்கு முறை தொடர்ந்து வெற்றிவாகை சூடினபின்பு, ஆடியில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் காருடைய செயற்திறனில் தாக்கம் ஏற்படுத்தின. கூடுதல் சரளை எடைகள் மற்றும் வித்தியாசமான டையர்கள் மற்றும் சுழல் ஊட்டலின் உந்து அழுத்தத்தை குறைத்தல் போன்ற மாற்றங்களை சேம்பியன் ஆடி செய்தத���. + +உயிரூட்டப்பட்ட DTM தொடரில் TT-Rஉடன் பல வருடங்கள் தனியார் அணியான ஏப்ட் ரேசிங்குடன்/கிறிஸ்டியான் அபட் 2002கோப்பையை வென்றார் (லாரண்ட் எயிலோவுடன் போட்டியிட்டப்பின் ஆடி 2004 ஆம் ஆண்டில் இரண்டு தொழிற்சாலை ஆதரவுபெற்ற ஜோஎஸ்ட் ரேஸிங்க் A4 DTM கார்களை நுழைத்து ஒரு முழு தொழிற்சாலை முனைப்பாக திரும்ப வந்தது. + +1999ம் ஆண்டு தொடங்கி, ஆடி விளையாட்டு கார் பந்தயத்தில் போட்டியிடுவதற்காக ஆடி R8Rஐயும் (ஓட்டுநர் இடம்-திறந்தவெளி ‘சாலை’ மாதிரி) ஆடி R8Cஐயும் (ஓட்டுநர் இடம்-மூடப்பட்ட 'coupé' GT-மாதிரி) அறிமுகப்படுத்தினார்கள். இதில் 24 மணி நேர லெமான்ஸ் போட்டியில் கலந்துக்கொள்வதற்கான லெமான்ஸ் முன்மாதிரி LMP900ம் அடங்கும். 2000ம் ஆண்டின் பந்தய காலத்தின் போது, ஓட்டுநர் இடம்-திறந்தவெளி மாதிரிகளுக்கான சாதகமான விதிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஆடி தன்னுடைய புதிய ஆடி R8 மாதிரியில் கவனம் செலுத்தியது. தொழிற்சாலை-ஆதரிக்கப்பட்ட ஜோஎஸ்ட் ரேஸிங்க் அணி ஆடி R8ஐக் கொண்டு லெமான்ஸ்சில் மூன்று முறை (2000 — 2002) தொடர்ந்து வெற்றிப்பெற்றது. அதனோடு அதன் முதல் வருடத்தில் அமெரிக்க லெமான்ஸ் தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வென்றது. ஆடி அந்த காரை சேம்பியன் ரேஸிங்க் போன்ற வாடிக்கையாளர் அணிகளிடமும் விற்றது. + +2003 ஆம் ஆண்டில் ஆடியால் வடிவமைக்கப்பட்ட இயந்திரப் பொறிகளையுடைய இரண்டு பெண்ட்லி ஸ்பீட் 8 கார்கள், உடன் பணியாற்றும் வாக்ஸ்வேகன் குழுமம் நிறுவனத்திற்கு "கடனாக அளிக்கப்பட்ட" ஜோஎஸ்ட் ஓட்டுநர்களால் ஓட்டப்பட்டு, GTP வகுப்பில் போட்டியிட்டு முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. சேம்பியன் ரேஸிங்க் R8 ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது, LMP900 பிரிவில் முதலிடத்தில் வந்தது. 2004 ஆம் ஆண்டின் பந்தயத்தில் ஆடி வெற்றிமேடையின் மூன்று இடங்களையும் கைப்பற்றியது: ஆடி ஸ்போர்ட் ஜப்பான் டீம் கொ முதலிடம், ஆடி ஸ்போர்ட் UK வெலாக்ஸ் இரண்டாவது இடம் மற்றும் சேம்பியன் ரேஸிங்க் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. + +2005 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்ஸ்சில், சேம்பியன் ரேஸிங்க் இரண்டு R8களை போட்டியில் நிறுத்தியது. அதோடு ஆடி பிளேஸ்டேஷன் அணி ஒரேகாவிலிருந்து ஒரு R8ஐயும் நிறுத்தியது. இந்த R8களில் (பழைய LMP900 கட்டுப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட இவை) ஒரு நெருக்கமான காற்று உள்வழி தடுப்பு இருந்தது. மேலும் இதன் சக்தி குறைக்கப்பட்டு, அதன் புதிய LMP1 அடித்தட்டோடு ஒப்பிடும்போது கூடுதல் எடையுடையதாயிருந்தது. சராசரியாக, R8கள் பெஸ்காரலோ-ஜட்டுடன் ஒப்பிடப்படும் போது 2 - 3 நோடிகள் பின் தங்கியிருந்தன. ஆனால் அனுபவமும் திறமையுமுள்ள ஓட்டுனர்களுள்ள அணியின் துணையால், சேம்பியன் R8ன் இரண்டு கார்களும் முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றின. ORECA அணி நான்காவது இடத்தை பிடித்தது. 1967 ஆம் ஆண்டில் கல்ஃப் ஃபோர்டின் GTக்கு பிறகு சேம்பியன் டீம் தான் லெமான்ஸ்சில் வெற்றிப்பெறுவதற்கான முதல் அமெரிக்க அணியாகும். இது R8ன் நீண்ட சகாப்தத்தையும் முடிக்கிறது; எனினும், 2006 ஆம் ஆண்டின் அதின் மாற்றாக, ஆடி R10 TDI என்றழைக்கப்பட்ட கார், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி வெளிக்கொண்டுவரப்பட்டது. + +R10 TDIல் பல புதிய அம்சங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது, இரட்டை-சுழலூட்டப்பட்ட நேரடி உட்செலுத்துதல் டீசல் இயந்திரப் பொறியாகும். அதன் முதல் பந்தயம் 2006 ஆம் ஆண்டின் 12 மணி நேர செப்ரிங்காகும். இது 2006 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்சிற்கு சோதனைக்களமாக இருந்தது. இந்த லெமான்ஸ்சையும் இந்த கார் வென்றது. ஆடி, விளையாட்டு கார் பந்தயத்தின் முன்னணியில் இருந்திருக்கிறது. செப்ரிங்கில் 12 மணி நேர போட்டியை வென்ற முதல் டீசல் விளையாட்டு கார் என்ற வரலாற்றுப் பெருமையையும் சம்பாதித்தது. 2006ம் ஆண்டில் R10 TDI சரித்திரம் படைத்து, அதன் ஆற்றல்களை வெளிப்படுத்தி, 24 மணி நேர லெமான்ஸ்சை வெல்வதோடு பூஜோவை 908 HDi FAPவையும் தோற்கடித்தது. 2008ம் ஆண்டில் பூஜோவை மறுபடியும் தோற்கடித்தது. + +ஆட்டோ யூனியனின் நான்கு வணிகச்சின்னங்களைக் குறிக்கும் நான்கு பிணைந்த வளையங்களை ஆடியின் வணிகச் சின்னம் கொண்டிருக்கிறது. ஆடியின் வணிகச்சின்னம் DKW, ஹார்ச் மற்றும் வாண்டரருடன் ஆடி சேர்ந்ததைக் குறிக்கிறது: முதல் வளையம் ஆடியை, இரண்டாவது, DKWஐ, மூன்றாவது ஹார்சையும் நான்காவது இறுதி வளையம் வாண்டரரையும் குறிக்கின்றது. +ஒலிம்பிக் வளையங்களுடன் அது ஒப்பிடக்கூடியதால், 1995 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கமிட்டி ஆடியின் மீது ரோஷெஸ்டர், MN சிறிய கோரிக்கைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. + +ஆடியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் தன்னுடைய சின்னத்தை புதுமைப்படுத்தியது. எழுத்து��ுவை இடது-பக்கம் சாய்ந்த ஆடி வகை ஆக்கியது. பிணைந்த வளையங்களின் நிழல் வளைவை மாற்றியது. + +ஆடியின் வணிக கோஷம் "Vorsprung durch Technik" ஆகும். இதன் அர்த்தம் "“தொழில்நுட்பத்தின் மூலம் முன்னேற்றம்”" என்பதாகும். ஜெர்மன் மொழியிலான இந்த கோஷம், இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா மற்றும் ஜப்பான் உட்பட ஆசியாவின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வட அமெரிக்காவில் "“தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிப்பு”" என்ற வணிக கோஷம் இருந்தது. ஆனால் கனடாவில் விளம்பரங்களில் "Vorsprung durch Technik" என்றே பயன்படுத்தப்பட்டது. இன்னும் அன்மையில், ஆடி அமெரிக்காவில் “பொறியியலில் உண்மை” என்ற வணிக கோஷமாக புதுமைப்படுத்தியிருக்கிறது. + +ஆடி பலவிதமான விளையாட்டுகளை வலுவாக ஆதரிக்கிறது. கால்பந்தாட்டத்தில், ஆடிக்கும் FC பேயர்ன் ம்யூனிக், ரியால் மாட்ரி CF, FC பார்சிலோனா, AC மிலான் மற்றும் அயாக்ஸ் ஆம்ஸ்டெர்டாம் போன்ற கிளப்புகளும் நெடுங்கால கூட்டாளிகளாக இருக்கின்றனர். ஆடி பனி விளையாட்டுகளையும் ஆதரிக்கிறது: ஆடி FIS ஆல்பைன் (ஆல்ப்ஸ் மலை சார்ந்த) பனிச்சறுக்கு உலகக் கோப்பை இந்த நிறுவனத்தின் பேரில் பெயரிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆடி ஜெர்மன் பனிச்சறுக்கு அமைப்பு (DSV) மற்றும் ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், லீஷ்டென்ஸ்டைன், இத்தாலி, ஆஸ்த்ரியா மற்றும் அமெரிக்காவின் ஆல்பைன் பனிச்சறுக்கு அணிகளையும் ஆதரித்துவருகிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஆடி கால்ஃப் விளையாட்டை ஆதரித்துவருகிறது: உதாரணத்திற்கு ஆடி குவாட்ரோ கோப்பையும், ஹைப்போவெரியின்ஸ்பாங்க் மகளிர் ஜெர்மன் ஓப்பனும் ஆடியின் மூலம் வழங்கப்படுகிறது. பாய்மரப்படகோட்டுதலில் (செய்லிங்க்), ஆடி மெட்கப் படகுப்போட்டியில் (ரெகாட்டா) ஈடுபட்டுள்ளது. அதோடு லூயி வியுட்டன் பசிபிக் தொடரில் லூனா ரோஸா அணியையும் ஆதரிப்பதுடன், மெல்ஜஸ் 20 பாய்மரப் படகில் முதனிலை நிதியளிப்பவராகவும் இருக்கிறது. மேலும், ஆடி ERC இன்கோல்ஸ்டாட் (ஹாக்கி) மற்றும் FC இன்கோல்ஸ்டாட் (கால்பந்து) ஆகிய உள்ளூர் அணிகளையும் ஆதரிக்கிறது. +2009 ஆம் ஆண்டில், ஆடியின் 100வது ஆண்டில், முதல் முறையாக, ஆடி நிறுவனம் ஆடி கோப்பையை நடத்துகிறது. FC பேயர்ன் ம்யுனிக், AC மிலான், மான்சஸ்டர் யுனைடட் FC மற்றும் CA போக்கா ஜூனியர்ஸ் ஆகிய கிளப்புகள் இரண்டு-நாள் போட்டியில் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள். + +மெடாடிசைனுக்காக ஒலெ சாஃபர் 1997 ஆம் ஆண்டில் முதலில் ஆடி சான்ஸை (யுனிவெர்ஸ் எக்ஸ்டண்டடின் அடிப்படையில்) உருவாக்கினார். + +பிற்பாடு போல்ட் மண்டேயின் பால் வான் டெர் லான் மற்றும் பீட்டர் வான் ரோஸ்மாலென் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஆடி டைப் என்ற ஒரு புதிய வணிக அச்சுமுகத்தை அமுல்படுத்த மெடாடிசைன் அமர்த்தப்பட்டனர். இந்த எழுத்துரு ஆடியின் 2009 ஆம் ஆண்டின் தயாரிப்புப் பொருட்களிலும் சந்தைப்படுத்தும் பொருட்களிலும் தோன்றத் துவங்கியது. + +பிளேஸ்டேஷன் 3ன் இணையத்தள சமூக-அடிப்படையிலான சேவையான, பிளேஸ்டேஷன் ஹோமில், ஆடி ஹோமிற்கு அதன் தியேட்டர் வடிவத்தில் நிகழ்ச்சி உருவாக்கலுக்காக உதவிபுரியும். பிற்பாடு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஹோம்ஸ்பேஸ் உண்டாக்க உதவி செய்யும். ஹோமுக்கு ஒரு ஸ்பேஸ் உண்டாக்கிய முதல் கார் வடிமைப்பாளர் ஆடியாகும். இந்த ஸ்பேஸ் “ஆடி ஸ்பேஸ்” என்றழைக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டின் பிந்தையப் பகுதியில் வெளியிடப்படும். முதலில் ஒரு ஆடி TV சேனல் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்குவதாக வெளியிடப்படும். 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆடியுடைய ஈ-டிரான் கருத்தாக்கத்தை முக்கியப்படுத்தும் ஒரு எதிர்க்கால சிறு-விளையாட்டான, சிறு-விளையாட்டு வெர்ட்டிக்கல் ரன் சேர்க்கப்படுவதற்கென விரிவாக்கப்படும். விளையாடுபவர்கள் மிக உயர்ந்த வேகம் எட்டும்போது சக்தி சேகரிக்கிறார்கள். மிகவும் வேகமான ஆட்டக்கார்ர்கள் ஆடி ஸ்பேஸின் மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் அமைந்திருக்கும் ஆடி அபார்ட்மெண்ட்ஸில் ஒரு இடத்தைப் பெறுகிறார்கள். கூடுதல் நிகழ்ச்சிகள் 2010 சேர்க்கப்படுமென்று ஆடி கூறியிருக்கிறது. + +ஆடியின் இணையத்தள விற்பனையில் வீடியோ விளையாட்டுகளுக்கும் மெய்நிகர் உலகங்களையும் உருவாக்கும் பொறுப்பையும் கொண்ட காய் மென்சிங்க், “பெரும்பாலான இளையோர் தங்களுடைய முதல் ஓட்டும் அனுபவத்தை வீடியோ விளையாட்டுகளிலிருந்து பெறுகிறார்கள்” என்றார். “இந்த சாராரான மக்களுக்கு எங்களுடைய அதி உணர்ச்சி-ததும்பும், ஊடாடும் சூழலில், எங்களுடைய 'Vorsprung durch Technik' ஐ வெளிக்காட்டவும், எங்களுடைய மெய்நிகர் ஈ-ட்ரான் பந்தயத்துடன் தொடர்பில் கொண்டுவரவும் எங���களுடைய வணிகப்பெயருடன் அறிமுகப்படுத்தவும் ஆடி ஸ்பேஸ் உதவுகிறது.” + +2009 ஆம் ஆண்டில் ஆடி தன்னுடைய டீசல் தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஆடி மைலேஜ் நீண்டத் தூர ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கியது. இந்த ஓட்டும் நெடும் பயணத்தின் போது 4 மாதிரிகளிலிருந்து (ஆடி Q7 3.0 TDI, ஆடி Q5 3.0 TDI, ஆடி A4 3.0 TDI, S ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுடன் ஆடி A3 ஸ்போர்ட்பேக் 2.0 TDI) 23 ஆடி TDI வாகனங்கள் நியுயார்க் முதல் லாஸ் ஏஞ்சலிஸ் வரை அமெரிக்க கண்டத்தின் குறுக்கே சென்றன. இந்த 13 தினசரி கட்டங்களின் போது சிகாகோ, டல்லாஸ் மற்றும் லாஸ் வேகஸ் ஆகிய நகரங்களினூடாக இந்த கார்கள் சென்றதோடு இயற்கை அதிசயங்களான ராக்கி மலைகள், டெத் வேலி மற்றும் த கிராண்ட் கான்யன் ஆகியவற்றினூடாகவும் சென்றன. + + + + + +அங்கெலா மேர்க்கெல் + +அங்கெலா டொரோதெயா மேர்கெல் (Angela Dorothea Merkel) (பிறப்பு சூலை 17, 1954) இடாய்ச்சுலாந்து நாட்டின் ஓர் அரசியல்வாதி. கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் (Christian Democratic Union) உறுப்பினரான இவர், அக்கட்சியின் சார்பாக 2005 இடாய்ச்சுலாந்து கூட்டமைப்பு தேர்தல்களில் வேந்தர் (Chancellor) பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும் தேர்தல் முடிவுகள் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை தராத நிலையில், ஜெர்மன் சமூகக் குடியரசுக் கட்சியுடன் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்த அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், மேர்க்கெலை இடாய்ச்சுலாந்தின் அடுத்த வேந்தராக பதவியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மேர்க்கெல் இடாய்ச்சுலாந்தின் முதல் பெண் வேந்தராகவும் இடாய்ச்சுலாந்து தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணாகவும் ஆகிறார்.அவருடைய செல்லிடத்தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக கூறப்படுகிறது. நான்காவது முறையாக இடாய்ச்சுலாந்தின் வேந்தராக அங்கெலா மேர்க்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். + +மேர்க்கெல், டெம்ப்லின் என்னும் இடத்திலும் லைப்ஃசிக் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1973 முதல் 1978 வரை இயற்பியல் படித்தார். பின்னர் 1978 முதல் 1990 வரை இடாய்ச்சுலாந்தின் இயற்பியல் வேதியியலுக்கான நடுவகத்தில் (Zentralinstitut für physikalische Chemie (ZIPC)) மேர்க்கெல் வேதியியல் (இயற்பியல் வேதியியல்) படிப்பையும் பணிய��யும் தொடர்ந்தார். உருசிய மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டு குவாண்டம் வேதியியல் தலைப்பில் முனைவர் பட்டம் ("Dr. rer. nat.") பெற்றார். + + + + +ஒலி 96.8 + +ஒலி 96.8 என்பது பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும், சிங்கப்பூரின் ஒரே 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவையாகும். + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +தெற்கு + +தெற்கு("South") என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். + +ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்.. இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும். + + + + + +கிழக்கு + +கிழக்கு("EAST") என்பது ஒரு திசையைக் குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது.. + +ஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குத் திசை வடக்குத் திசையிலிருந்து 90° திசைவில் அமைந்து இருக்கும். + + + + + +வடக்கு + +வடக்கு("North") என்பது நான்கு திசைகளில் ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையான கிழக்குத் திசையை நோக்கி நிற்பவருக்கு இடது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். + +வழக்கமாக, எப்போதும் நிலப்படங்களை வரையும்போது அதன் மேற்பகுதியானது வடக்குத் திசையாக இருக்கும்படி வரைவதே வழக்கம். குறிப்பாக வடக்குத் திசையானது, மேற்கத்தைய கலாச்சாரத்தின் படி அடிப்படை அல்லது நியம திசையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்குத் திசையானது (வெளிப்படையாக அல்லது மறைமுகமாக) மற்றைய அனைத்துத் திசைகளையும் வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. + +சரியாகச் செயற்படும் காந்தத் திசையறி கருவி காட்டும் வடக்குத் திசையே காந்த வடக்கு ஆகும். காந்த வடக்கு உண்மை வடக்கில் இருந்து சற்று விலகியுள்ளது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு காந்த விலக்கம் எனப்படுகிறது. பெரும்பாலான நடைமுறைத் தேவைகளுக்கு இந்த வேறுபாடு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், துல்லியமான திசை தேவைப்படும் இடங்களில் இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். + + + + +மேற்கு + +மேற்கு("West") என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் மறையும் திசையைக் குறிக்கும். + +காலையில் கதிரவன் எழும் திசையை நோக்கி நின்று நம் கைகள் இரண்டையும் தோளுயரத்திற்கு உயர்த்தி நின்றால், நம் வலக்கை காட்டும் திசை தெற்கு, இடக்கை காட்டும் திசை வடக்கு, நம் முதுகுப்புறம் மேற்கு. திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது + +மரபுப்படி ஒரு வரைபடத்தின் இடது பக்கம் மேற்கு ஆகும். + +ஒரு வரைபடத்தில் இடது புறம் இருப்பது மேற்கு திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். மேற்கு திசை வடக்கு திசையிலிருந்து 270° திசைவில் அமைந்து இருக்கும். + + + + + +லினக்சு வழங்கல்கள் + +லினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பா���ும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம். + +வின்டோஸ் இயங்குதளத்துக்கு பழக்கப்பட்டவர்கள் இத்தகைய வழங்கல்களை, 98, 2000, xp போன்று வெவ்வேறு பதிப்புகள் என நினைத்துவிடுகின்றனர். இது தவறாகும். உண்மையில் ஒரே நேரத்தில் பல வழங்கல்கள் ஒன்றாக வெளிவருகின்றன. ஒவ்வொரு வழங்கல்களும் தமக்கென பதிப்பு எண்களை கொண்டிருக்கின்றன. அதன்படி தமது வெளியீடுகளின் பிந்தைய பதிப்புக்களை குறித்த காலத்துக்கொருமுறை வெளியிடுகின்றன. ("எ.கா Fedora core 3, Fedora core 4, Fedora Core 5, பெடோரா கோர் 6") + +திறந்த ஆணைமூல மென்பொருள் உற்பத்தியானது உலகெங்கும் பரந்திருக்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்களால் வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு வலைத்தளங்கள் மூலம் இடம்பெற்றவண்ணமுள்ளது. + +மேலே கூறப்பட்ட கரு, x server, பணிச்சூழல், செயலிகள் போன்றன இத்தகைய வெவ்வேறான மென்பொருள் விருத்தி திட்டங்களாகும். + +க்னூ/லினக்ஸ் இயங்குதளம் என்பது இவ்வாறான மென்பொருட்களின் தொகுப்பாகும். இவ்வாறான கோடிக்கணக்கான மென்பொருட்களுள் பயனர் தனது தெரிவுகளை உரிய முறைப்படி தனித்தனியாக காம்பைல் செய்து நிறுவிக்கொண்டால்தான் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும். +இது கடைகோடிப் பயனருக்கு மிகவும் சிரமமானது என்பதால், மேற்குறித்த வழங்கல்களை வழங்குவோர் தமக்கு பிடித்த தெரிவுகளை கொண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளம் ஒன்றினை உருவாக்கி அதனை இறுவட்டுக்களில் எழுதி வெளியிடுகிறார்கள். இவ்வாறான இறுவட்டுக்களை பெறும் பயனர், மிக இலகுவாக தனது கணினியில் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ள முடியும். + +பலலட்சக்கணக்கான திறந்த ஆணைமூல மென்பொருட்களுள் எவற்றை தொகுத்து இயங்குதளம் உருவக்கப்படுகிறது என்பதுதான் ஒவ்வொரு வழங்கல்களிடையேயும் உள்ள பிரதான வேறுபாடாகும். +ஒவ்வொரு நிறுவனமும், தனது சிறப்பான தேவைகளுக்கும், ரசனைக்கும் ஏற்றபடி வெவ்வேறான மென்பொருட்களை தொகுத்து வெவ்வேறு வழங்கல்களை உருவாக்குகின்றன. + +சில வழங்கல்களை இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். சில வழங்கல்களை பொதி வடிவத்தில் நிறுவன ஆதரவுடன் பெற்றுக்கொள்ள சில வேளைகளில் பணம் கொடுக்கவேண்டியிருக்கும். உபுண்டு போன்றவழங்கல்கள் தபால் செலவைக்கூட செலுத்தாது இலவசமாக பெறப்படக்கூடியனவாகும். + +திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இலவசமாகவே பெரும்பாலும் கிடைத்தபோதும் வழங்கல்களை விலைக்கு விற்பது சாத்தியமானதே. பொது மக்கள் உரிம ஒப்பந்தம் இவ்வாறு விற்பதற்கு இடமளிக்கிறது. + +வழங்கல்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில் சாதாரண லினக்ஸ் பயனாளர் ஒருவர் லினக்சை பயன்படுத்துவதற்கு யுனிக்ஸ் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் , கோப்புக்களை எங்கே வைப்பது, என்னென்ன நிரல்கள் தேவைப்படும், என்னென்ன மென்பொருட்களை எப்படி நிறுவிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டிய நிலைஇருந்தது. லினக்சை கணினியில் ஆரம்பிக்கக்கூட சிறப்பு தேர்ச்சி தேவையாயிருந்தது. + +லினக்ஸ் உருவாக்குனர்களை தவிர்ந்த பிறர் லினக்சினை பயன்படுத்த ஆரம்பித்தபோதுதான் வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது. செயலிகளையும் மென்பொருள்களையும் உருவாக்குவதை விட, அவற்றை பொதிசெய்தல், இறுவட்டுக்களில் வழங்கல், பயனர் எளிமை மிக்கதாக்கல், வசதியான ஆரம்பத்தில் உருவான வழங்கல்களாவன,தி முகாமைத்துவக்கட்டமைப்பினை உருவாக்கல் போன்றவற்றிற்கு அதிக் முக்கியத்துவம் தரப்பட்டது. + +ஆரம்பகலங்களில் உருவான வழங்கல்களாவன, + + +இதில் எந்த வழங்கலும் ஒழுங்காக பராமரிக்கப்படாதுபோகவே, Patrick Volkerding என்பவர் SLS இனை அடிப்படையாகக்கொண்டு Slackware என்ற பெயருடைய லினக்ஸ் வழங்கலை உருவாக்கியளித்தார். இதுவே இன்றுவரை பராமரிக்கப்பட்டுவரும் மூத்தல் லினக்ஸ் வழங்கலாகும். + +இப்பட்டியலானது லினக்ஸ் வழங்கல்களை கிளைவழங்கல்கள், அடிப்படை வழங்கல்கள் எனும் அடிப்படையில் காண்பிக்கிறது. + +அடிப்படை வழங்கல்கள் ஆரம்பத்தில் உருவானவை என்பதோடு, தமக்கென தனியான பொதி முகாமைத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளன. தம்மளவில் தனித்துவமானவை. அவற்றினை அடிப்படையாக கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கிளை வழங்கல்கள் உருவாகின்றன. + + + + + + +புரட்டாசி + +புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். + +இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. + + + + + + +ஐப்பசி + +தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 54 நாடி, 07 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். + + + + + + +கார்த்திகை (தமிழ் மாதம்) + +பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது. + + + + + + +தை + +தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும். இது தைசிய என்றும் பௌஷ என்றும் வடமொழியில் குறிப்பிடப் படுகிறது. சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது. + + + + + + +மாசி + +சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 ���ாட்களை உடையதாகக் கொள்ளப்படும். + + + + + + +தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் + +விசைப்பலகை ஒன்றின்மூலம் தமிழ் எழுத்தொன்றை உள்ளிடுவதற்கு/அச்சிடுவதற்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் வைப்புமுறையும் தமிழ் விசைப்பலகை தளக்கோலம் என்ப்படுகிறது. + +தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன. + +இவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம். + +இம்முறையில். ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி ("எ.கா. கொம்பு, புள்ளி") அச்சிட/ உள்ளிடப்படுகிறது. + +கீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன. + +குறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். ("எ.கா. கு = க் + உ") + +இத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. +இவ்வாறான தளக்கோலங்கள் சில.. + +பார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99 + +இதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும். + +தமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது. +தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும். + +இம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம். + + + + +மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் + +தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன. + + + + + + +புதுநிலவு + +புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும். + +நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும். +புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும். + +சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. + +இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று. + + + + + +முதலாம் சங்கிலி + +சங்கிலி பண்டாரம் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகி��்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன. + +முதலாம் சங்கிலி 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட அவனது மகனான பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இதே நூலின்படி, பரராசசேகரனுக்கு இராசலட்சுமியம்மாள், வள்ளியம்மை என இரண்டு மனைவிகளும் மங்கத்தம்மாள் என ஒரு வைப்புப் பெண்ணும் இருந்தனர். இராசலட்சுமியம்மாளுக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரண்டு ஆண் மக்களும், வள்ளியம்மைக்கு பரநிருபசிங்கம் உட்பட நான்கு பிள்ளைகளும் பிறந்தனர். சங்கிலி மங்கத்தம்மாளுக்குப் பிறந்தவன். எனினும் யாழ்ப்பாணத்தை நீண்டகாலம் ஆண்ட சங்கிலி வைப்பு பெண்ணின் மகன் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. + +பரராசசேகரனின் பட்டத்தரசியின் மூத்தமகன் சடுதியாக இறந்தான். பின்னர் இளவரசுப் பட்டம் சூட்டிக்கொண்ட இரண்டாவது மகனும் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இருவரையும் சங்கிலியே கொன்றான் என்றும், இரண்டாவது மனைவியின் மூத்த மகனான பரநிருபசிங்கத்தை ஏமாற்றி அரசுரிமையைச் சங்கிலி கைப்பற்றிக் கொண்டான் எனவும் வைபவமாலை கூறுகிறது. + +போத்துக்கீசருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரின் சங்கிலியைப் பற்றிய குறிப்பு ஒன்றில் அவனைச் "சியங்கேரி" என்னும் பெயரால் குறித்துள்ளனர். இக்குறிப்பில் இவ்வரசன் 42 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும், பின்னர் போத்துக்கீசர் அவனது அரசாட்சியை அழித்துவிட்டு 97 ஆண்டுகள் ஆண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சுவாமி ஞானப்பிரகாசர் சங்கிலி ஆட்சி 1519 ஆண்டிலிருந்து 1561 வரை இருந்ததாகக் கணித்துள்ளார். + +சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசர் இந்தியாவிலும், இலங்கையிலும் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் படை பலத்தை மட்டுமன்றிக் கத்தோலிக்க சமயத்தையும், வணிகத்தையும் கூட ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்த சங்கிலி, போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளையுமே கடுமையாக எதிர்த்து வந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். இதன் காரணமாகவே போத்துக்கீசர், முக்கியமாகப் போத்துக்கீச மத போதகர்கள் இவனை வெறுத்தனர். இதன் பின்னணியிலேயே சங்கிலியைப் பற்றிப் போத்துக்கீசர் எழுதிவைத்திருக்கும் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற நாட்டவரான போத்துக்கீசர் மிக மோசமாகச் சங்கிலி மன்னனைத் தூற்றி எழுதியதானது சங்கிலி நாட்டுப்பற்று மிக்கவனாகவும், அந்நியர் ஆதிக்கத்தை வெறுப்பவனாகவும் இருந்தான் என்பதையே காட்டுவதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இவன் மிகவும் தைரியமுள்ள, கடும்போக்கான மன்னன் என்பது அவர்களது கருத்து. + +சங்கிலி மன்னன் காலத்தின் முற்பகுதியிலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு கடலில் குறிப்பிடத்தக்க பலம் கொண்டதாக இருந்ததுடன், கடல் கடந்த வணிகத்தின் மூலமும் பெருமளவு வருமானம் பெற்று வந்தது. இப்பகுதியில் போத்துக்கீசரின் வணிக முயற்சிகள் யாழ்ப்பாண நாட்டின் நலனுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்திருந்த சங்கிலி, 1940 களில், போத்துக்கீச வணிகக் கப்பல்கள் முதன் முதலாக யாழ்ப்பாணத் துறைமுகங்களுக்கு வர முயன்றபோது தனது படைகளை அனுப்பிக் கப்பல்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தான். + +தான் போத்துக்கீசருக்கு எதிராகச் செயற்பட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள மன்னர்களுடனும் சங்கிலி சேர்ந்து செயற்பட்டான். போத்துக்கீசருக்கு எதிராகப் போராடிய தென்னிலங்கை சீதாவாக்கை இராச்சியத்தின் மன்னன் மாயாதுன்னை தென்னிந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தபோது, அப்படைகள் யாழ்ப்பாண நாட்டினூடாகச் செல்ல சங்கிலியன் உதவினான். அக்காலத்தில் கோட்டே அரசனான புவனேகபாகு போத்துக்கீசருடன் உறவு கொண்டு அவர்களுக்குத் தனது நாட்டில் பல வசதிகளையும் அளித்திருந்தான். அத்தோடு யாழ்ப்பாண அரசையும் தனதாக்கித் தந்தால் மேலும் பல சலுகைகளை அளிப்பதாகவும் உறுதி அளித்தான். இதனால் கோட்டே அரசனின் உடன்பிறந்தானும், அவனுக்கு எதிரியுமாயிருந்த சீதாவாக்கை இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்து, சங்கிலி புவனேகபாகுவை எதிர்க்க முற்பட்டான். கண்டி அரசனான விக்கிரமபாகுவையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு 1545 ஆம் ஆண்டில் கோட்டே மீது இவர்கள் படையெடுத்தனர். ஆயினும் வெற்றி கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் நாயக்க மன்னனிடம் இருந்து பெற்ற படை உதவியுடன் மாயாதுன்னையையும் சேர்த்துக்கொண்டு சங்கிலி மன்னன் கோட்டேயைத் தாக்கினான். தொடக்கத்தில் போர் நிலை யாழ்ப்பாண-சீதாவாக்கைக் கூட்டுப் படைகளுக்குச் சாதகமாக இருந்தது எனினும், இறுதி வெற்றி கிடைக்கவில்லை. + +1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தான் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. + +தாம் கைப்பற்ற எண்ணியிருக்கும் நாடுகளில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான மக்களை உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் உத்தியை போர்த்துகீசர் கொண்டிருந்தனர். தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தனர்; உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் தீவிரம் காட்டினர். இதை முன்னரே உணர���ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான். + +தமது மதமாற்ற முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சங்கிலியைப் பழி வாங்கவேண்டும் என்பதில் போத்துக்கீசக் குருவான புனித சவேரியார் மிகவும் தீவிரமாக இருந்தார். கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநரைக் கண்டு தனது வேண்டுகோளை அவர் முன்வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர், அதை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் நேரடியாகவே லிசுப்பனில் இருந்த போத்துக்கலின் அரசனுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கான அனுமதி லிசுப்பனில் இருந்து கோவாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சவேரியாரின் விருப்பம் எளிதில் கைகூடிவிடவில்லை. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்குச் சவேரியார் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றி குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் விபரமாகக் குறித்துள்ளார். + +1543 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எதிரான முதலாவது போர்த்துகீசப் படையெடுப்பு முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. மார்ட்டின் அல்போன்சோ தே சோசா என்னும் போத்துக்கீசப் படைத்தலைவனின் தலைமையில் வந்த கப்பல்கள் காற்றினால் திசைமாறி நெடுந்தீவை அடைந்தன. அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, அதையறிந்த சங்கிலியால் ஏமாற்றப்பட்டதாகக் கருதப்படும் அவனது தமையனான பரநிருபசிங்கன், அங்கு சென்று சங்கிலியைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை அரசனாக்கினால் அவர்களுடைய வணிக விருத்திக்கும், மத வளர்ச்சிக்கும் உதவுவதாக வாக்களித்து அவர்களது உதவியைக் கோரினான். அவ்வாறு செய்வதாக வாக்களித்து அவனிடம் இருந்து பெறுமதியான முத்துக்களைப் பெற்றுக்கொண்ட தளபதி, சங்கிலியுடனும் உடன்பாடு செய்துகொண்டு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான். + +தென்னிலங்கையில் அரசுரிமைப் போட்டிகள் காரணமாக எதிரெதிராகப் போரிட்டுக்கொண்டவர்கள் தமது நலனுக்காக போத்துக்கீசரின் உதவியை நாடினர். இந்த நிலைமையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசர், நாட்டிலே தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகளால் தூண்டப் பெற்ற சிலர் யாழ்ப்பாண இராச்சியத்திலும் போத்துக்கீசரின் தலையீட்டைக் கொண்டுவர முயற்சி செய்தனர். முக்கியமாக, அவனது தமையனான பரநிருபசிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமையைத் தான் பெறுவதற்காகப் போத்துக்கீசரின் துணையை நாடினான். அத்துடன், மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். எனினும், இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போத்துக்கீசரால் இயலவில்லை. + +1751 ஆம் ஆண்டில் திருகோணமலையை ஆண்டு வந்த வன்னியன் இறந்தான். அவனுடைய வாரிசான இளவரசன் எட்டு வயதே நிரம்பிய சிறுவனாக இருந்ததால், இன்னொரு வன்னியர் தலைவன் ஆட்சியை நடத்தலானான். திருகோணமலை வன்னிமை யாழ்ப்பாண அரசுக்குக் கட்டுப்பட்டது என்பதால் சங்கிலி இப்பிரச்சினையில் தலையிட்டான். ஆனால், வன்னியர் தலைவன் இளவரசனையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே கத்தோலிக்கராக மாறிய பரதவர்களின் உதவியால் போத்துக்கீசருடன் தொடர்பு கொண்டு தானும் கத்தோலிக்கனாக மாறிப் போத்துக்கீசரின் உதவியைக் கோரினான். தொடர்ந்து 1000 பரதவர்களைக் கொண்ட படையுடன் திருகோணமலையில் இறங்கினான். ஆனால், சங்கிலி இந்த நடவடிக்கைகளை முறியடித்தான். இளவரசன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினான். சங்கிலியை யாழ்ப்பாண ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டுத் திருகோணமலை இளவரசனையே யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னனாக்கவும் போத்துக்கீசர் எண்ணியிருந்ததாகத் தெரிகிறது. + +1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக ("Viceroy") இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா ("Constantino de Braganca") என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பத���்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை. + +இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந்நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர், அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக ஒரே சமயத்தில் மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர். + +சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கலகம் செய்து சங்கிலியை அகற்றிவிட்டு அவனது மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் என்றும், புவிராசன் ஆண்மையற்றவனாய் இருந்தமையால் சங்கிலியே ஆட்சியை நடத்தி வந்தான் எனவும் செ. இராசநாயகம் கூறுகிறார். இவரது கூற்றுப்படி சங்கிலி 1565 ஆம் ஆண்டு காலமானான். + + + + + + + +கனகசூரிய சிங்கையாரியன் + +கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இரு���்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த "சண்பகப் பெருமாள்" என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான். + +சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். + + + + + +ஆதிப் பொதுவுடைமை + +ஆதிப் பொதுவுடைமை என்பது மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட ஒரு சமுதாய ஒழுங்கமைப்பு ஆகும். + +இந்த ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் மனிதர் குழுக்களாகவும் குலங்களாகவும் வாழ்ந்துவந்தனர். +மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இச்சமுதாய ஒழுங்கமைப்பில் பெண்ணே குலங்குழுக்களுக்கு தலைமை தாங்குபவளாகவும், தேடிப்பெறப்படும் பண்டங்கள் யாவும் குழுக்களிடையே சமமாக பகிரப்பட்டு நுகரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குழுக்களின் கருவிகள், உணவு, உடை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தன. + + + + +மார்க்சியப் பொருள்முதல் வாதம் + +பொருள்முதல்வாதக் கொள்கை மீதான கார்ல் மார்க்சின் விரிவான விளக்கமே மார்க்சியப் பொருண்முதல் வாதம் ("Historical materialism") எனப்படுகிறது. + +மரபான பொருண்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருண்முதல் வாதத்தினை இயக்கவியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியற் பொருண்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார். + +இயக்கவியற் பொருண்முதல் வாதமும் வரலாற்றுப் பொருண்முதல் வாதமும் மார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படை பகுதிகள் ஆகும். சமூகத்தின் வாழ்க்கையை ஆராய்கின்ற பகுதி வரலாற்றுப் பொருள் முதல் வாதமாகும். + +18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காண்ட் முதலான தத்துவஞானிகள் பொருள் முதல்வாதத்தை இயக்க மறுப்பியலுடன் பயன்படுத்தி வந்தார்கள். பொருள் முதல்வா���த்தை இயங்கியலுடன் இணைத்து இயக்கவியல் பொருள் முதல் வாத தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார். + +மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம் படியானது எனும் கருத்து முதல் வாதிகளின் முடிவினை முற்றாக கழித்ததாக பொருண்முதல் வாதத் தத்துவம் அமைகிறது. + +கடவுள், மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித எண்ணம் ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது எனக் கருதுவதே பொருண்முதல் வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விலக்குகிறது. + +மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது. + + + + + +உறவுமுறைச் சொற்கள் + +ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனிக்குடும்பத்திலிருந்து தொடங்கித் தலைமுறை தலைமுறையாகவும், கிளைவழியாகவும் பரந்து விரிந்து செல்கின்ற பலவகையான உறவுகள் உருவாகின்றன. இவ்வாறான உறவுமுறைகளைக் குறிக்கும் சொற்களே உறவுமுறைச் சொற்கள் எனப்படுகின்றன. + +பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு, உடன் பிறந்தோருக்கு இடையிலான தொடர்பு, உடன்பிறந்தோர் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு என ஏராளமான உறவுமுறைத் தொடர்புகள் மனிதருக்கிடையே ஏற்படுகின்றன. இவ்வாறான தொடர்புகளின் தன்மை மனித சமுதாயங்கள் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வெவ்வேறு சமுதாயங்களின் உலக நோக்கு, பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வாறான தொடர்புகளின் முக்கியத்துவங்கள் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபடுகின்ற உறவுமுறைத் தொடர்புகளின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு உறவுமுறைச் சொற்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன. + +உறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடுகின்ற காரணத்தால் குறிப்பிட்ட உறவுகளைக் குறிக்கின்ற சொற்களும் பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகின்றன. பொதுவாக உறவுமுறைச் சொற்களின் ஆய்வில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன. + + +பயன்பாட்டு அடிப்பட��யில் நோக்கும்போது, இருவகையான உறவுமுறைச் சொற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் "அம்மா" என்ற சொல்லைத் தனது தாயை அழைப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் நடைமுறையில் "தாய்" என்ற சொல் அவ்வாறு பயன்படுத்தப் படுவதில்லை. தாய் என்ற சொல் உறவுமுறையைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே உறவினரை விளிக்கப் பயன்படும் சொற்கள், உறவுமுறையைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் என இரண்டு வகை உறவுச் சொற்களை அடையாளம் காண முடியும். முதல் வகை " விளிச் சொற்கள் " எனவும், இரண்டாம் வகை "குறிக்கும் சொற்கள்" எனவும் அழைக்கப்படும். + +தமிழ் மொழியில் "தாய்", "தந்தை", "அண்ணன்", "தம்பி" போன்ற உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் வேறெந்த உறவுமுறைச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்படாத தனித்துவமான சொற்களாகும். இவ்வகையான சொற்களைத் "தனிமச் சொற்கள்" அல்லது "ஆரம்பநிலைச் சொற்கள்" எனக் கூறலாம். பொதுவாக மிக நெருக்கமான உறவுமுறைகளைக் குறிக்கவே தனிமச் சொற்கள் உள்ளன. வேறு சில உறவுமுறைச் சொற்கள் தனிமச் சொற்களுடன் பொருள் வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமான உறவுமுறை சாராத முன்னொட்டுக்களையோ, பின்னொட்டுக்களையோ சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. இத்தகைய ஒட்டுக்கள் பொதுவாக வயது வேறுபாடு, தலைமுறை வேறுபாடு முதலியவற்றைத் தனிமச் சொற்களுக்கு அளிப்பதன் மூலம் வெவ்வேறு உறவுகளைக் குறித்து நிற்கின்றன. பெரிய, சிறிய, மூத்த, இளைய போன்ற பண்புச் சொற்கள் தனிமச் சொற்களுடன் சேர்ந்து பெரிய தந்தை, சிறிய தாய், மூத்த அம்மான், இளைய தம்பி போன்ற வயது வேறுபாடு குறிக்கும் உறவுச் சொற்களை உருவாக்குகின்றன. அதேபோல, "கொள்ளு" போன்ற முன்னொட்டுக்கள் "பாட்டன்", "கொள்ளுப் பாட்டன்" என்னும் உறவுச் சொற்களிடையேயான தலைமுறை வேறுபாட்டைக் குறிக்கின்றன. சிலசமயங்களில் ஒரேவகையான உறவுகளிடையே வேறுபாடு காண்பிப்பதற்காக முன்னொட்டுச் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாகத் தமிழர் வழக்கப்படி, சொந்த மகனையும், உடன்பிறந்த ஒத்த பாலினர் மகன்களையும், "மகன்" என்ற உறவுச் சொல்லே குறிக்கின்றது. எனினும் தேவை ஏற்படும்போது "பெறா மகன்" என்ற முன்னொட்டுடன் கூடிய தனிமச் சொல் பயன்படுத்தப் படுகின்றது. இது போலவே ஒன்றுவிட்ட அண்ணன், ஒன்றுவிட்ட தங்கை ��ோன்ற சொல் வழக்குகளையும் குறிப்பிடலாம். + +சிலவேளைகளில் இரண்டு உறவுமுறைச் சொற்களைச் சேர்த்துப் புதிய உறவுமுறைச் சொல் உருவாக்கப்படுவதுண்டு. பெற்றோருடைய பெற்றோரைத் தாய்வழி தந்தைவழி வேறுபாடின்றிக் குறிக்கும் "பாட்டன்", "பாட்டி" போன்ற சொற்களுக்குப் பதிலாக இக்காலத்தில், தாயின் பெற்றோரை "அம்மம்மா", "அம்மப்பா" என்றும், தந்தையின் பெற்றோரை "அப்பம்மா", "அப்பப்பா" என்றும் அழைப்பதைக் காணமுடிகின்றது. + +சில உறவுமுறைச் சொற்கள் ஒருவகை உறவினரை மட்டுமே குறிக்க, வேறு சில சொற்கள் வெவ்வேறு வகையில் உறவினராவோரைச் சேர்த்துக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உறவுமுறைச் சொல் உள்ளடக்கும் வெவ்வேறு வகை உறவு முறைகளின் தொகுதி அச் சொல்லின் வீச்சு எனலாம். தனியொரு வகை உறவினரை மட்டுமே குறிக்கும் சொற்கள் "குறித்துக் காட்டும் சொற்கள்" (Denotative Terms) எனவும், பல வகை உறவுகளை உள்ளடக்கும் சொற்கள் வகைப்பாட்டுச் சொற்கள் (Classificatory Terms) எனவும் குறிப்பிடப்படுகின்றன. தமிழிலுள்ள தாய், கணவன் போன்ற சொற்கள் குறித்துக்காட்டும் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். "மச்சான்" அல்லது "மைத்துனன்" என்னும் சொல், தாய்மாமனுடைய மகன், தந்தையின் சகோதரியுடைய மகன், மனைவியுடைய சகோதரன் என்னும் உறவுமுறைகள் அனைத்தையும் குறிப்பிடுகின்றது. இதனால் இச்சொல் ஒரு வகைப்பாட்டுச் சொல் ஆகும். + + + + + + + +உறவுமுறைப் பெயரிடல் வகைகள் + +உலகம் முழுவதிலும் பரந்து வாழும் சமுதாயங்கள் உறவுமுறைகளுக்குப் பெயரிடுவதில் எவ்வித நியமங்களும் கிடையாது. உண்மையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுமுறைப் பெயரிடும் முறைமைகள் கட்டுப்பாடற்ற முறையில் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் மானிடவியலாளரின் ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் காணப்படும் ஆயிரக்கணக்கான உறவுமுறைப் பெயரிடல் முறைமைகள் ஆறு வகைகளுக்குள் அடங்கி விடக் கூடியன என அறிந்தார்கள். இந்த ஆறு வகைகளும் இவ்வகைகளுக்குள் அடங்கும் முதலில் ஆய்வு செய்யப்பட்ட சமுதாயங்களின் பெயர்களினால் வழங்கப்படுகின்றன. + + + + + +கிழக்கு கோதாவரி மாவட்டம் + +கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின�� வடகிழக்க்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் காக்கிநாடா ஆகும். இது மாநிலத் தலைநகரான ஹைதராபாத் நகரிலிருந்து 564 கி. மீ. தொலைவிலுள்ளது. +இதன் வடக்கில் விசாகப்பட்டிணம் மாவட்டமும் ஒரிசா மாவட்டமும் கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடாவும் மேற்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. + +இந்த மாவட்டத்தில் காக்கிநாடா, பெத்தாபுரம், அமலாபுரம், ராஜமண்ட்ரி, ரம்பசோடவரம், ராமசந்திரபுரம் ஆகிய வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. + +இந்த மாவட்டத்தை மொத்தமாக 60 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தமாக 1379 ஊர்கள் உள்ளன. . + + + + +மேற்கு கோதாவரி மாவட்டம் + +மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். + +இதன் தலைநகரம் ஏலூரு ஆகும். பீமவரம் இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கிய ஊராகும். இம்மாவட்டத்தை 46 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகள் ஏலூர், நரசாபுரம், ராஜமுந்திரி ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ளன. +16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை: + +ஆங்கிலேயர்கள், சென்னை ராஜதானியில் மசுலீபட்டணத்தை மையமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டனர். 1794-ல் காகினாடவிலும் ராஜமுந்திரியிலும் இரண்டு ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1859-ல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 1925 ஏப்ரல் 15 அன்று கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்தும், புதிதாக மேற்கு கோதாவரி மாவட்டத்தை அமைத்தும் சென்னை அரசு முடிவெடுத்தது. முந்தைய கோதாவரி மாவட்டத்தின் பெயர் கிழக்கு கோதாவரி மாவட்டம் என பெயர் மற்றப்பட்டது. + +இம்மாவட்டத்தை 48 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். + + + + + +நாற்கரம் + +நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பல்கோணம் நாற்கரம் அல்லது நாற்பக்கல் எனப்படும். மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட நாற்கோணம் நான்கு சமனற்ற பக்கங்களைக் கொண்டது. + +நாற்கரங்கள் எளிமையானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாதவை) அல்லது சிக்கலானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்கிற) இருக்கலாம். எளிமையான நாற்கரங்கள், குவிந்த (convex) நாற்கரங்களாகவோ அல்லது குழிந்த (concave) நாற்கரங்களாகவோ இருக்கக் கூடும���. குவிந்த நாற்கரங்கள் பின்வரும் வகைகளாக மேலும் பிரிக்கப்படலாம்: + + + + + + + + + + + +நாற்கரங்களின் பெயரிடல் வகைப்பாட்டைக் (taxonomic classification) கீழேயுள்ள வரைபு காட்டுகின்றது. கீழுள்ள வடிவங்கள் மேலுள்ள வடிவங்களின் சிறப்பு நிலைகளாகும். + + + + + +விஜயரகுநாத தொண்டைமான் + +இராஜா விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை 1789 முதல் 1807 பெப்ரவரி முதல்தேதி வரை வரை ஆண்ட மன்னர் ஆவார். + +விஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டைமான் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார். +இராயரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு "ராஜா பகதூர்" என்ற பட்டத்தை வழங்கினார். பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார். இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர். + +தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர���. + +விஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார். விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர். +விஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளைய ராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் உடன் கட்டை ஏறினார். + + + + +சரிவகம் + +இயூக்கிளீடு வடிவியலில், ஒரு சரிவகம் ("trapezoid" அல்லது "trapezium") என்பது ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக அமைந்துள்ள ஒரு குவிவு நாற்கரம் ஆகும். இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையாக உள்ள சரிவகம் இணைகரம் என்று அழைக்கப்படும். + + + + +சாய்சதுரம் + +இயூக்ளீட் வடிவியலில், சாய்சதுரம் ("rhombus") என்பது எளிய பல்கோணம் (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாது). அதன் நான்கு பக்கமும் சம அளவில் கொண்டுள்ளது. இதனை சமபக்க நாற்கரம் என்றும் அழைப்பார்கள். இதனைச் சிலர் வைரம் என்று அழைப்பார்கள் ஏனெனில், இது சீட்டுக்கட்டிலுள்ள டயமண்ட் போன்று இருப்பதால் அவ்வாறு அழைப்பார்கள். இந்த வடிவம் எண்முக முக்கோணகத்தின் அல்லது லோஜெங்கேயின் முன்னிருத்தலைப் போன்றுள்ளது. எண்முக முக்கோணகத்தின் 60°யிலும் லோஜெங்கேயின் 45° யிலும், ஒரு சாய்சதுரத்தையும் காணலாம். + +அனைத்து சாய்சதுரமும் இணைகரம் மற்றும் பட்டமே. எல்லா கோணங்களையும் செங்கோணமாகக் கொண்ட சாய்சதுரம் சதுரம் ஆகும். . + +சரிவகம்(ஆங்கிலத்தில் ரொம்பஸ்) என்னும் சொல் ரோம்போஸ் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ரோம்போஸ் என்ற சொல்லுக்கு மீண்டும் மீண்டும் சுற்றுதல் (கிரேக்கத்தில் ரெம்போ) என்று பொருள். , யூக்ளிடு, ஆர்க்கிமிடீஸ் என்ற இரு அறிஞர்களும் இந்த சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரே அடிப்பாகத்தைக் கொண்ட இரு செங்கோண வட்டக் கூம்பினை “திடமான சரிவகம்” என்று அழைக்கின்றனர். + +சாய்சதுரம் என்ற இந்த வடிவம், திடமான சாய்சதுரத்தில் இரு கூம்பின் உச்சியில் குறுக்காக வெட்டும் பொது ஏற்படுகிறது. + +ஒரு எளிய பல்கோணம்(தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாது) கீழ்க்கண்ட நிபந்தங்களை���் சந்திக்கும் பட்சத்தில் மட்டுமே அது ஒரு சாய்சதுரம் என்று அழைக்கப்படும்: + + +எல்லா சாய்சதுரமும் எதிர் எதிர் உச்சிகளை இணைக்கும் மூலைவிட்டத்தைகயும், இரு சோடி இணை கோடுகளையும் கொண்டுள்ளது. சர்வசமமான முக்கோணத்தைக் கொண்டு, சாய்சதுரம் மூலைவிட்டத்தின் இருபக்கமும் சர்வசமமாக உள்ளது என்று நிரூபிக்கலாம். கீழ்க்கண்டவை சாய்சதுரத்தின் இயல்புகள் ஆகும். + +முதல் இயல்பிலிருந்து எல்லா சரிவகமும் ஒரு இணைகரம் என்று புரிகிறது. ஒரு சாய்சதுரம் இணைகரத்தின் எல்லா இயல்புகளையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, எதிர் எதிர் பக்கங்கள் இணைகோடுகள்;அருகிலிருக்கும் கோணங்கள் துணைக் கோணங்கள் ஆகும். இரு மூலைவிட்டங்களும் ஒன்றை ஒன்று இருசமக்கூறாக்குகின்றது. நடுப்புள்ளியின் வழியாகச் செல்லும் எந்த கோட்டுத்துண்டும் பரப்பளவை இரண்டாகப் பிரிக்கிறது. நான்கு பக்கங்களின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் இரண்டு மூலைவிட்டத்தின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் ஒன்றே. (இணைவக விதி). ஒவ்வொரு பக்கத்தையும் ‘a’ என்ற எழுத்தாலும், இரு மூலைவிட்டங்களை ‘p’, ‘q’ என்ற எழுத்தாலும் குறிக்கலாம். + +எல்லா இணைகரங்களும் சாய்சதுரம் ஆகாது. செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரம்(இரண்டாவது குணம்) சாய்சதுரம் ஆகும். பொதுவாக, எந்த சரிவாகத்தில் செங்குத்தான மூலைவிட்டங்கள் உள்ளதோ, அதில் ஒன்று, சமச்சீரான நேர்கோட்டாக இருந்தால் அது பட்டம் என்று அழைக்கப்படும். எல்லா சாய்சதுரமும் ஒரு பட்டமே. எந்த சாய்சதுரம் பட்டமாகவும் இணைகரமாகவும் உள்ளதோ அது சாய்சதுரம் ஆகும் + +ஒரு சாய்சதுரம் தொடுகோட்டு நாற்கரம் ஆகும். இந்த இந்த வடிவம் சாய்சதுரத்தின் நான்கு பக்கங்களுக்கும் தொடுகோடாக ஒரு உள்தொடு வட்டத்தைக் கொண்டுள்ளது. + +இணைவகத்தைப் பொறுத்த வரைக்கும், சாய்சதுரத்தின் பரப்பளவு "K", அதன் அடிக்கும் உயரத்திற்குமான( "h") பெருக்கலின் அளவு. அடி என்பது பக்கத்தின் நீலம் "a": + +மாறாக, பரப்பளவு அடியின் சதுக்கத்திற்கும் கோணத்தின் சைனிற்குமான பெருக்கலின் மதிப்பு. : + +அல்லது உயரம் மற்றும் உச்சி கோணத்தின் அடிப்படையில்: + +அல்லது இரு மூளைவிட்டங்களைப் பெருக்கி, அதில் பாதியைக் கண்டுபிடித்தால் பரப்பளவு கிடைக்கும்: + +அல்லது, சாய்சதுரத்தின் உள்தொடு வட்டத்தின் ஆரத்தையும், சாய்சதுரத்த��ன் அரைச்சுற்றளவையும் பெருக்குவதால் பரப்பளவு கிடைக்கும். : + +உள்ஆரம்(உள்தொடுவட்டத்தின் ஆரம்) r, மூலைவிட்டம் p, q யின் அடிப்படையில் : + +சாய்சதுரத்தின் இரட்டை பலகோணம் செவ்வகம் ஆகும் : + +சாய்சதுரத்திண்மம் என்பது கனசதுரத்தைப் போன்ற மூன்று பரிமாண உருவம். அதன் ஆறு பக்கங்களும் சாய்சதுரம் ஆகும். +சாய்சதுர பன்னிரண்டுமுக ஐங்கோணகம் என்பது ஒரு குவி பல்கோணத்திண்மம் ஆகும்; அதன் 12 பக்கங்களும் சர்வசமமான சாய்சதுரம் ஆகும். + + + + + +தொடுகோட்டு நாற்கரம் + +நாற்கரம் அல்லது நாற்கோணம் ஒன்றின் நான்கு பக்கங்களும், அந்த நாற்கரத்தின் உள்ளே வரையப்பட்ட வட்டம் ஒன்றுக்குத் தொடுகோடுகளாக அமையும் என்றால் அந்த நாற்கரம் தொடுகோட்டு நாற்கரம் அல்லது தொடு நாற்கரம் (Tangential quadrilateral) எனப்படும். + + + + + +பட்டம் (வடிவவியல்) + +யூக்ளிடின் வடிவவியலில் பட்டம் ("kite") என்பது ஒருவகை நாற்கரம். இதன் நான்கு பக்கங்களில் அடுத்துள்ள இரண்டிரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும். இணைகரத்திலும் ஒரு சோடி பக்கங்கள் சமமாக இருக்கும். ஆனால் அவை அடுத்துள்ள பக்க சோடி அல்ல, அவை எதிரெதிர் பக்கங்கள் கொண்ட சோடிகளாகும். இந்த வடிவில் அமைவதால்தான் காற்றில் பறக்கும் பட்டங்கள், இப்பெயரைப் பெற்றுள்ளன. மேலும் இதிலிருந்துதான் வேகமாக பறக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையும் "கைட்" என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இக்கட்டுரையில் இனிவரும் பகுதிகளில் இச்சிறப்பு வகை நாற்கரங்கள், அவற்றின் வடிவமைப்பின் காரணத்தால் பட்டவடிவ நாற்கரங்கள் என அழைக்கப்படும். பட்டவடிவ நாற்கரங்கள், குவிவு அல்லது குழிவாக அமையலாம். ஆனால் பட்டவடிவ நாற்கரம் என்பது பெரும்பாலும் குவிவு பட்டவடிவ நாற்கரங்களையே குறிக்கும். + +ஒரு பட்டவடிவ நாற்கரத்தின் நான்கு பக்கங்களும் சமமாக இருந்தால் அது ஒரு சாய்சதுரமாகும். + +நான்கு கோணங்களும் சமமாக இருந்தால் அதன் பக்கங்களும் சமமாகவே இருக்கும் எனவே அது ஒரு சதுரமாகும். + +அனைத்து நாற்கரங்களிலும் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் இடையேயான விகிதம் மிகப்பெரிய அளவாக இருப்பது π/3, 5π/12, 5π/6, 5π/12 கோணங்கள் கொண்ட பட்டவடிவ நாற்கரத்தில்தான். + +வட்ட நாற்கரமாக அமையும் ஒரு பட்டவடிவ நாற்கரம், (���ரு வட்டத்துக்குள் வரையக் கூடியது). இரு சர்வசம செங்கோண முக்கோணங்கள் சேர்ந்து உருவானதாக இருக்கும். இவ்வகையான பட்டவடிவ நாற்கரத்தின் சமச்சீர் அச்சின் எதிர்ப்புறங்களில் அமையும் இரு சமகோணங்கள் ஒவ்வொன்றும் 90° ஆக இருக்கும். இவை "செங்கோண பட்டவடிவ நாற்கரங்கள்" என அழைக்கப்படும். + +பின்வரும் கூற்றுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்: +இரு மூலைவிட்டங்களில் ஒன்று: + +பட்டவடிவ நாற்கரத்தில் ஒரு சோடி எதிர்க் கோணங்கள் சர்வசமமாக இருக்கும். ஒரு மூலைவிட்டம் ஒரு சோடி எதிர்க்கோணங்களை இருசமக்கூறிடும். + +பட்டவடிவ நாற்கரங்கள் ஒரு மூலைவிட்டத்தைப் பொறுத்து சுழற்சி சமச்சீர் கொண்டவை. + +தனக்குத்தானே வெட்டிக்கொள்ளாத எந்தவொரு நாற்கரமும்: + +தன்னைத்தானே வெட்டிக்கொள்ளும் நாற்கரங்களையும் சேர்த்துக் கொண்டால் சமச்சீர் அச்சுகளுடைய நாற்கரங்களின் பட்டியலில் எதிர் இணைகரகமும் இடம்பெறும். பட்டவடிவ நாற்கரங்களும் இருசமபக்க சரிவகங்களும் ஒன்றுக்கொன்று இருமமாக (dual) அமையும். பட்டவடிவ நாற்கரத்தின் போலார் வடிவம் (polar figure) இருசமபக்க சரிவகம், இருசமபக்க சரிவகத்தின் போலார் வடிவம் பட்டவடிவ நாற்கரம். + +பட்டவடிவ நாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமையும். மேலும் ஒரு மூலைவிட்டம் (சமச்சீர் அச்சு) மற்றதன் நடுக்குத்துக் கோடாகவும், அது சந்திக்கும் இரு கோணங்களின் கோண இருசமவெட்டியாகவும் அமையும். + +மூலைவிட்டங்களின் நீளங்கள் "p", "q" எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு: + +மாறாக இரு சமமில்லா பக்கங்கள் "a" மற்றும் "b" , அவற்றுக்கு இடையேயுள்ள கோணம் "θ" எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு: + +பட்டவடிவ நாற்கரத்தை, சமச்சீர் அச்சாக அமையும் மூலைவிட்டம் இரண்டு சர்வசம முக்கோணங்களாகவும் மற்றொரு மூலைவிட்டம் இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகவும் பிரிக்கின்றன. சமச்சீர் அச்சின் எதிர்ப்பக்கங்களில் அமையும் உட்கோணங்கள் இரண்டும் சமமாக இருக்கும். + +ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரத்துக்கும் அதன் உட்புறம் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வட்டம் ஒன்று வரைய முடியும். எனவே ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு தொடு நாற்கரமாக அமையும் கூடுதலாக சாய்சதுரமல்லாத ஒரு குவிவுப் பட்ட நாற்கரதிற்கு வெளியே அதன் பக்கங்களின் நீட்சிக்கோடுகளைத் தொடும் வட்டம் ஒன்று வரையலாம். அதாவது சாய்சதுரமல்லாத ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு வெளி-தொடு நாற்கரமாக அமையும். + +ஒவ்வொரு குழிவுப் பட்டவடிவ நாற்கரத்திற்கும் அதன் பக்கங்களைத் (அல்லது பக்க நீட்டிப்புகள்) தொடும் வட்டங்கள் இரண்டு உள்ளன. ஒரு வட்டம், நாற்கரத்துக்குள் குழிவு கோணத்திற்கு எதிராக அமையும் இரு பக்கங்களைத் தொட்டுக் கொண்டு அமையும். மற்றொன்று வட்டத்திற்கு வெளியே குழிவு கோணத்தைத் தாங்கும் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அமையும். + +பின்வரும் கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு தொடு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்: + +எனவே செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாகவும் தொடுநாற்கரமாகவும் ஒரு பட்டவடிவ நாற்கரம் அமையும். + + + + + +எஸ்கிமோ உறவுமுறை + +இம்முறை, எஸ்கிமோ இனத்தவரைத் தழுவிப் பெயரிடப்பட்டிருப்பினும், ஆங்கிலேயர் உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், அமெரிக்கர்களிடமும் புழக்கத்தில் உள்ளது எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் வகையே ஆகும். + +இம்முறையில் பேசுபவரின் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர். ஏனைய உறவினர்களைக் குறிக்க வகைச்சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தமுறையில் உறவுச் சொற்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. + + + + + +ஹவாய் உறவுமுறை + +ஹவாய் உறவுமுறைப் பெயரிடல் குடும்பத்தின் உறவுமுறைகளைப் பெயரிடும் ஓர் முறையாகும். இது 1871ல் ஹென்றி லூயிஸ் மார்கன் என்பவரால் கண்டறியப்பட்டது. உள்ள உறவுமுறைகளில் இதுவே மிகவும் எளிய முறையாகும். + +ஹவாய் பெயரிடல் முறையில் பேசுபவரின் தந்தையும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் ஒரே பெயராலும் தாயும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர். இதே போல் பேசுவரின் சகோதரனும் அவரது தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் சகோதரியும் அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர். + + + + + +இரோகுவாயிஸ் உறவுமுறை + +ஆறு ��கைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இராகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான "இரோகுவோய்ஸ்" மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது. + +இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, தந்தையின் சகோதரர்களை, "சிறிய தந்தை, பெரிய தந்தை, சித்தப்பா, பெரியப்பா" எனத் தந்தை உறவு நிலையிலும், தாயின் சகோதரிகளை, "சின்னம்மா, பெரியம்மா, சிற்றன்னை, பெரியன்னை" எனத் தாய் உறவுநிலையிலும் வைத்துப் பார்க்கும் இம்முறை, தந்தையின் சகோதரிகளையும், தாயின் சகோதரர்களையும், "அத்தை, மாமி, அம்மான், மாமா" போன்ற உறவுப் பெயர்களினால் குறிப்பிடுகின்றது. + +பெற்றோருடன் பிறந்த ஒத்த பாலாரின் மக்களையும், எதிர்ப் பாலாரின் பிள்ளைகளையும் வேறாகப் பிரித்துக் காண்பதும் இம்முறைமையின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றாகும். அதவது, இம்முறையில், தந்தையின் சகோதரனின் பிள்ளைகளும், அவர் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுப் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இதேபோல, தாயின் சகோதரனின் பிள்ளைகளும், தாயின் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுமுறைப் பெயர்களினால் குறிக்கப்படுகின்றனர். அதே சமயம், தாயின் சகோதரியினதும், தகப்பனின் சகோதரனதும் பிள்ளைகளும், பேசுனரின் சொந்தச் சகோதரர்களும் ஒரே உறவுப்பெயரால் ("அண்ணன், தம்பி, அக்கா, தங்கை") குறிக்கப்பட, தாயின் சகோதரனினதும், தந்தையின் சகோதரியினதும் பிள்ளைகள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரே உறவுமுறைப் பெயரைக் ("மச்சான், மச்சாள்") கொண்டுள்ளனர். + +பெற்றோரின் எதிர்ப் பால் உடன்பிறந்தோரின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இம்முறையைக் கைக்கொள்ளும் இனத்தினர் மத்தியில் காணப்படுவதாலேயே இவ்வேறுபாடு காட்டப்படுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். + +தமிழர் உறவுமுறையும், ஏனைய திராவிட இனத்���வர் உறவு முறைகளும், இரோகுவோயிஸ் முறையைச் சேர்ந்தவையே. இம்முறை, தென்னிந்தியா, [இலங்கை], பிஜித்தீவுகள், அமெரிக்காவின் சில பகுதிகள், ஆப்பிரிக்காவின் பகுதிகள் முதலிய பல பகுதிகளில் காணப்படுகின்றது. + +தனிக்கட்டுரை: தமிழர் உறவுமுறை + +தமிழர் உறவுமுறையில் உள்ள பின்வரும் அம்சங்கள் அதனை இரோகுவோயிஸ் உறவுமுறையில் வகைப்படுத்தியுள்ளது. + +கீழே தரப்பட்டுள்ள தமிழர் உறவுப் பெயர் அட்டவணை இதனை விளக்குகிறது. + + + + + +இருசமபக்க சரிவகம் + +இருசமபக்கச் சரிவகம் என்பது நாற்பக்க சரிவகத்தில் இணையாகா பக்கங்கள் இரண்டும் சமமாகவும் ஒரே கோணத்தில் இணையான பக்கங்களோடும் சேரும் ஒரு முற்றுப்பெறும் வரிவடிவம். பரவலாக அறியப்படும் செவ்வகமும் (நீள்சதுரம்), சதுரமும் குறிப்பிட்ட சிறப்பான இருசமபக்கச் சரிவகம் ஆகும் ஆனால் சரியும் பக்கங்கள் இணையான பக்கங்களுக்குச் செங்குத்தான கோணத்தில் அமைந்துள்ளன. + +படத்தில் காட்டப்பட்டுள்ள இருசமபக்க சரிவகத்தில் ABD, ACD என்னும் இரு முக்கோணங்களும் முற்றீடான (congruent) முக்கோணங்கள். BAD என்னும் கோணமும், CDA என்னும் கோணமும் இணையானது. எனவே இது இருசமபக்கச் சரிவகத்தில், இணையான இரு பக்கங்களிலும் சேரும் மற்ற இரு பக்கங்களும் இணையான கோணங்கள் கொண்டிருக்கும். + + + + +திறந்த பாடத்திட்டங்கள் + +பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை திறந்த பாடத்திட்டங்கள் எனப்படும். அறிவியல் அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம் ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி யப்பான், சீனா, மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன. + +திறந்த பாடத்திட்டங்கள் மூலம் பாடங்களுக்குரிய தகவல்கள், பயிற்சிகள் தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன. ஆசிரியர்களின் உரைகளும் ("lectures") தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. + +பயனர்க��் தங்களுக்கு ஏற்ற முறையில் தரப்பட்ட வசதிகளை பயன்படுத்தலாம், ஆனால் பரீட்சையோ, சான்றிதழ்களோ, ஆசிரியர் பயனர் தொடர்பாடலோ தற்சமயம் திறந்த பாடத்திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதில்லை. + + + + +தொடர்பியல் + +தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும். இயற்பியல், கணிதம், இலத்திரனியல், கணினியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இயல்களுடன் நெருங்கிய தொடர்புடையது. + +மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றம். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுகின்றன. + +1948 ஆண்டு பெல் ஆய்வு கூட விஞ்ஞானியான கிளாட் ஈ. ஷானான் அவர்களின் தொடர்பியலின் கணிதவியல் கோட்பாடுகள் என்ற ஆய்வுக்கட்டுரை இவ் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. + + + + +சூடானிய உறவுமுறை + +சூடானிய உறவுமுறைப் பெயரிடல் வகை தற்காலத்தில் சூடானை அண்டியுள்ள ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் காணப்படுகின்றது. இம்முறையைக் கடைப்பிடிக்கின்ற சமுதாயங்கள் பொதுவாகத் தந்தைவழி மரபுமுறைச் சமுதாயங்களாகவும், பெருமளவு படிமுறையமைப்பைக் கொண்டனவாகவும் உள்ளன. பண்டைய ஐரோப்பாவிலும் இன்று வேறு முறைகளைக் கடைப்பிடிக்கும் பல சமுதாயங்களில் சூடானிய முறை பயன்படுத்தப்பட்டு வந்ததையும் அறிய முடிகின்றது. இன்று இறந்த மொழியாக உள்ள இலத்தீன், பழைய ஆங்கிலம் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். + +பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்த தந்தை, தாய், தந்தையின் சகோதரர்கள், தாயின் சகோதரர்கள், தந்தையின் சகோதரிகள், தாயின் சகோதரிகள் ஆகிய ஆறு வகை உறவுமுறைகளும், பேசுனரின் தலைமுறையைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தந்தையின் சகோதரரின் பெண்கள், தந்தையின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தந்தையின் சகோதரியின் பெண்கள், தாயின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தாயின் சகோதரரின் பெண்கள், தாயின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தாயின் சகோதரியின் பெண்கள் ஆகிய 10 வகை உறவுமுறைகளும் சேர்ந��த 16 வித உறவுமுறைகளுக்கும் தனித்தனி உறவுப்பெயர்கள் இருப்பதே சூடானிய முறையின் சிறப்பு அம்சமாகும். + + + + + +ஒமஹா உறவுமுறை + +ஒமஹா உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, ஒமஹா இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், ஒமஹா என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார். + +செயற்பாட்டுத் தன்மையில் இது, குரோ உறவுமுறைக்கு மிகவும் நெருங்கியது. எனினும், குரோ உறவுமுறை தாய்க்கால்வழியைச் சார்ந்தது. ஒமஹா முறை தந்தைக்கால்வழியோடு ஒட்டியது. இம்முறையில், பேசுனரின் தந்தையும், அவர் சகோதரர்களும் ஒரே உறவுமுறைப் பெயரால் குறிக்கப்படுகின்றார்கள். அதேபோல, தாயும், தாயின் சகோதரிகளும் ஒரே உறவுப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். + +எனைய பல உறவுமுறை முறைமைகளைப் போலவே ஒமஹா முறையிலும், பெற்றோரின், ஒத்த பால், எதிர்ப் பால் உடன்பிறந்தாரின் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆனால், இங்கே தாயின் சகோதரனின் பெண் பிள்ளைகள், தாய், தாயின் சகோதரிகள் ஆகியோரைக் குறிப்பிடப் பயன்படும் பெயர் கொண்டே குறிப்பிடப்படுகின்றார்கள். அதேவேளை தாயின் சகோதரனின் ஆண்பிள்ளைகள், தாயின் சகோதரனின் உறவுப் பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றார்கள். இதன்படி இரண்டு பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே உறவுப் பெயர்கள் பயன்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் தாயின் பக்கத்தில் உறவு முறையில் பால் வேறுபாடுகள் கட்டப்படுகின்றது, ஆனால் தலைமுறை வேறுபாடு காட்டப்படவில்லை. + +தந்தையின் பக்கத்தில், தந்தையின் சகோதரியின் பிள்ளைகள் வேறு பெயர்கள் கொண்டே குறிக்கப்படுகிறார்கள். ஆகவே தந்தையின் பக்கத்தில் பால் வேறுபாடும், தலைமுறை வேறுபாடும் காட்டப்படுகின்றது. இது தந்தைவழி உறவினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஒமஹா முறை, குரோ முறையின் ஒரு கண்ணாடி விம்பத்தைப் போன்றது. + + + + + +கணினியியல் + +கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பய���்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம். + +கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான எண்சட்டம் போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின. + +பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார். . இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு சார்லச்சு சேவியர் தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக பயண்பாட்டிற்க்கான நம்பத்தகுந்த அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார். + +சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் வித்தியாசப் பொறியின் கண்டுபிடிப்பு அவருக்கு பகுப்புப் பொறி எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது. . 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி. மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது. + +1843 ஆம் ஆண்டு அடா லவ்லேஸ் வித்தியாசப் பொறியை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது பெர்னோளி என்கள் கணக்கீடு செய்வதற்க்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது. + +1885 ஆம் ஆண்டு வாக்கில் ஹெர்மன் ஹோலரித் என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார். 1924ல் இவருடைய நிறுவணம் ஐபிஎம் நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து அவார்டு அயிக்கன் என்பவர் ஆர்வர்டு மார்க் I பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்க்கு வ‍டிவமைத்து காட்டினார். இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர். + +1940களி்ல் ப��� வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது. . கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது. உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. + +கணினியியல் ஓரு படிப்பிற்க்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்ப்பை பெற்றது. + +ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை அறிவியல் மற்றும் சமூகத்திற்க்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி (1750-1850 CE) மற்றும் விவசாய புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம். + + +கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள். கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது. . + +"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஓரு கட்டுரையில் வெளிவந்த்து. இதில் லூயிஸ் பெயின் 1921 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி போன்று கணினி அறிவியலுக்கென ஒரு பட்டதாரி பள்ளி உருவாக்க வாதிடுகிறார். + + +கருத்தியல் கணினி அறிவியலின் பரந்த துறையில் கணிமையில் பாரம்பரிய கோட்பாடு மற்றும் கணினியில் சுருக்கத்தற்கான தருக்கம், மற்றும் கணித அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளடக்கப்பட்டுள்ளது. + +பீட்டர் ஜே டென்னிங் படி அடிப்படை கணினியியல் "எதனை (திறமையாக) தானியங்கிப்படுத்த முடியும்?" என்பதற்கான பதிலை தரவேண்டும். + +"Computer Software Engineer." U.S. Bureau of Labor Statistics. U.S. Bureau of Labor Statistics, n.d. Web. 05 Feb. 2013. + + + + + +கணினி கட்டுமானம் + +கணினி���் செயலகக் கூறுகள் (மையச் செயலகம், நினைவகம், கடிகாரம், பாட்டை), புறக்கருவிகள் (காட்சித் திரை, விசைப் பலகை, சுட்டி, இயக்க அமைப்புகள்), மென்பொருள்கள் ஆகியவற்றின் கட்டமைப்பும் அவற்றின் இணைந்த செயல்பாட்டையும் ஆயும் துறை கணினிக் கட்டமைப்பு "(Computer Architecture)" ஆகும். கணினிக் கட்டமைப்பு கணிமை நோக்கிய அடிப்படை கோட்பாடுகளை அல்லது கருத்துப் படிமங்களை ஆய்ந்து, விவரித்து அதற்கு ஏற்ற வன்பொருள், மென்பொருள் கட்டுமானங்களைத் தேர்வு செய்ய உதவுகின்றது. + + + + + +செல்வராகவன் + +செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்: + + + + + +அமீர் + +அமீர் சுல்தான் அல்லது அமீர் (பிறப்பு: ஏப்ரல் 2, 1966), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். + +தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். "Teamwork Production House" என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். + + + + + + +விக்ரமன் + +விக்ரமன் () தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன. இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார். + +இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். + +புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். + +இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்விக்ரமன் இயக்குநர் + + + + +லிங்குசாமி + +லிங்குசாமி , தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு "ஆனந்தம்" திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். "திருப்பதி புரொடக்ஷன்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். + +இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி இணையருக்கு மகனாக 1969 ஆண்டில் லிங்குசாமி பிறந்தார். இராதாகிருட்டிணன், கேசவன், சுபாசுசந்திரபோசு ஆகியோர் இவருக்கு உடன்பிறந்தவர்கள். + +லிங்குசாமி தனது தொடக்கக் கல்வியை (முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இலட்சுமிபுரத்தில் உள்ள எசு. ஆர். வி. எசு. நடுநிலைப் பள்ளியில் பெற்றார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் லிங்குசாமியின் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தனர். எனவே, லிங்குசாமி தனது நடுநிலைப் பள்ளிக் கல்வியை (6, 7, 8ஆம் வகுப்புகள்) மூலங்குடியில் உள்ள தூய வளனார் பள்ளியில் பெற்றார். பின்னர் மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை (9, 10 வகுப்புகள்), மேல்நிலை (11, 12 வகுப்புகள்) கல்வியைப் பெற்றார். பின்னர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று கலை இளவர் பட்டம் பெற்றார். + + + + +தரணி + +தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். + + + + +ஞான ராஜசேகரன் + +ஞான ராஜசேகரன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இந்திய நிர்வாக சேவையில் ஓர் உயர் அதிகாரியாக கேரளத்தில் பணியாற்றும் இவர் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர். + +இளம் வயதிலிருந்தே திரைப்படத்துறை மேல் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்த இவர் குறும்படம் ஒன்றுடன் தான் இத்துறையில் பிரவேசித்தார். எழுதப்பட்ட காலத்தில் சற்று சர்ச்சைகளைத் தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை இவர் முதலில் திரைப்படமாக்கியதும் குறிப்பிடற்குரியது. இத்திரைப்படம் இந்திராகாந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது. அடுத்து வில்லன் நடிகராக அறியப்பட்ட சிறந்த நடிகர் நாஸர் மேல் நம்பிக்கை வைத்து அவரை கதாநாயகனாக "முகம்" படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். அத்தோடு விடவில்லை. மகாகவி பாரத���யின் வரலாற்றை திரைப்படமாக்கப் போகிறோம் என்று இயக்குனர் பாலச்சந்தர், நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பலர் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதைச் சாதித்தவ்ர் இவர்தான். தமிழின் மகாகவியான பாரதி பாத்திரத்தில் ஷாயாஜி ஷிண்டே என்ற ஒரு மராத்தி நாடக நடிகரை நடிக்க வைத்தார். அண்மையில் தந்தை பெரியாரின் வரலாற்றை நடிகர் சத்தியராஜ்(பெரியார்), குஷ்பூ(மணியம்மையாக) ஆகியோரை வைத்து திரைப்படமாக்கியிருக்கிறார். + +'வயிறு-1978, மரபு-1979, பாடலிபுத்திரம்-1980’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர். இம்மூன்று நாடகப் பிரதிகளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது + + + + + + + +தங்கர் பச்சான் + +தங்கர் பச்சான் ("Thangar Bachan") தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார். + +தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர். + +தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன.  + + + + + + + + + + +இராதாகிருஷ்ணன் பார்த்திபன் + +இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ("R. Parthiepan" பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். + + + + + + + +குரோ உறவுமுறை + +குரோ உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, அமெரிக்காவில் வாழும் குரோ (Crow) இந்திய இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், குரோ என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார். + +குரோ உறவுமுறை தாய்க் கால்வழியைத் தழுவியது. இதனால், தாய்வழியைச் சார்ந்த உறவினர்கள் இம்முறையில் முக்கியத்துவம் பெறுகின்றனர். பேசுனர் தாயின் உறவினர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்றனர். இது தாய்வழி உறவினரின் உறவுமுறைப் பெயர்களிலும் வெளிப்படுகின்றது. தாயின் சகோதரனும், அவன் ஆண், பெண் மக்களும் தனித்தனி உறவுப் பெயர்களினால் குறிப்பிடப் படும் அதேவேளை, தந்தையின் சகோதரியின் மக்களில் ஆண்கள், தந்தையோடும், அவர் ஆண் சகோதரர்களோடும் பொதுவான உறவுமுறைப் பெயர்களையும், பெண் மக்கள் அவர்களுடைய தாய்மாருடன் ஒரே உறவுப் பெயரையும் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கே, ஆண், பெண் வேறுபாடுகள் மட்டுமே காட்டப்படுகின்றன. தலைமுறை வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. + +பெரும்பாலான உறவுமுறை முறைமைகளைப் போலவே குரோ முறையிலும், தாயின் சகோதரிகளும், தாயும் ஒரே உறவுப் பெயரால் குறிக்கப்பட, தந்தையின் ஆண் சகோதரரும், தந்தையும் ஒரே பெயரால் குறிக்கப்படுகின்றனர். + +கீழேயுள்ள அட்டவணை குரோ முறைக்கு எடுத்துக்காட்டான "அக்கான்" இன உறவுமுறைப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது. + + + + + +நல்லெண்ணெய் + +நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் "நெய்"யாகும். உண்மையில் எண்ணெய் என்பது "எள்", "நெய்" ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், "எண்ணெய்" என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க "நல்லெண்ணை" என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர். + +நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது. + + + + +கர்நாடக இசைக் கச்சேரி + +மக்கள் ரசிப்பதற்காக வழங்கப்படும் கர்நாடக இசை நிகழ்ச்சி கர்நாடக இசைக் கச்சேரி என அழைக்கப்படும். இசைக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு ஆகவோ அல்லது தனி வாத்தியக் கச்சேரியாகவோ இருக்கக் கூடும். வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் தற்காலத்தில் தனி வாத்தியக் கச்சேரிகளில் இடம் பெறக்கூடிய இசைக் கருவிகளாக உள்ளன. நாதஸ்வரம் மற்றும் தவில் கச்சேரிகள் நீண்ட காலமாகவே தனிக் கச்சேரியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. + +கர்நாடக இசைக் கச்சேரிகள் பொதுவாக நிலத்தில் இருந்த நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. + +தற்காலத்தில், கர்நாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகள் வயலினும், மிருதங்கமுமாகும். கடம், கஞ்சிரா, மோர்சிங், வீணை போன்ற பல இசைக் கருவிகளும் கச்சேரிகளில் பயன்படுவது உண்டு. + + + + +பார்த்திபன் + + + + + +பிராங்க் லாய்டு ரைட் + +பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:"Frank Lloyd Wright") (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார். + +இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார். +பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.] + + + + +யோகான்னசு கெப்லர் + +யோகான்னசு கெப்லர் ("Johannes Kepler", ஜோகான்னஸ் கெப்லர், டிசம்பர் 27, 1571 – நவம்பர் 15, 1630), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய "Astronomia nova" ("ஆசுட்ரோனோமியா நோவா") மற்றும் "Harmonice Mundi" ("ஆர்மோனிசெ முண்டி") ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். + +கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார். + +இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார். + +யோகான்னசு கெப்லர் திசம்பர் 27, 1571 -இல் வைல் தெர் இசுடாட்டு (Weil der Stadt) என்னு இடத்தில் பிரைய இரைசிட்டாட்டு (Freie Reichsstadt) (விடுதலைப் பேரரசின் நகரம் எனப்பொருள் கொண்டது; இது இப்போது செருமனிய மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் இசுட்டட்கார்ட்டுப் பகுதியில் அமைந்துள்ளது) பிறந்தார். கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். எனினும் கெப்லருடன் பிறந்த இரண்டு உடன்பிறந்தான்களும் ஒரு உடன்பிறந்தாளும் சேர்ந்து அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான என்றிக்குக் கெப்லர் ஒரு வணிகராவார். யோகான்னசு கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் நெதர்லாந்தில் நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. யோகான்னசு கெப்லர் பிறந்தபோது அவர் ஒரு உடல்வலுக் குறைந்த குழந்தையாக இருந்தார். + +சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறித�� சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். + +1589ல், இலக்கணப் பாடசாலை, லியோன்பெர்கில் இலத்தீன் பாடசாலை மற்றும் மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, விட்டஸ் முல்லரின் கீழ் தத்துவமும், யாக்கோபு ஈபிரான்டின் (Jacob Heerbrand) கீழ் இறையியலையும் கற்றார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிலைநாட்டினார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583 -இலிருந்து 1631வரை கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின் முறைமையையும், கோப்பர்நிக்கசின் முறைமையையும் கற்றார். மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும், சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும், அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக, கிராசிலுள்ள (பின்னர் கிராசு பல்கலைக்கழகம்) கிறித்துவ சீர்திருத்தப் பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில், ஏப்ரல் 1594ல் அவ்வேலையில் சேர்ந்தார். + +யோகான்னசு கெப்லரின் முதல் பெரிய வானியல் புத்தகம் "மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம்" (அகிலத்தின் புதிர்) என்பதாகும். இதுவே கொப்பர்நிகசின் முறைமையை எதிர்த்த முதல் புத்தகமாகும். கெப்லர் சூலை 19, 1595ல் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைப் பெற்றார். கிராசில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, இராசி வட்டத்தில் சனிக் கோளினதும், வியாழக் கோளினதும் ஆவர்த்தனப் பொருந்துகையை விளக்கும் போது, ஒழுங்கான பல்கோணியொன்று குறித்த விகிதத்தில் வெளி வட்டமொன்றையும், உள்வட்டமொன்றையும் கொண்டிருக்கும் என அவர் உணர்ந்தார். இதற்கு அகிலத்தின் அமைப்பை அவர் காரணங் காட்டினார். அறியப்பட்ட வானியல் அவதானிப்புக்களைக் கொண்டு ஒரு சீரான பல்கோணிகளின் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பிறகு, கெப்லர் முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டார். ���தன்போது, ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே {கோளம்|கோளத்தினால்]] சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒரு கோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும்போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார். இவ் ஆறு அடுக்குகளும், அப்போது அறியப்பட்டிருந்த ஆறு கோள்களான, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்திருந்தது. பிளாட்டோனியத் திண்மங்களான எண்முகி, இருபதுமுகி, பன்னிருமுகி, நான்முகி, சதுரமுகி ஆகியவற்றைச் சரியான ஒழுங்கில் வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் மாதிரியுருவில், அத் திண்மங்களைச் சூழ்ந்துள்ள கோளங்களுக்கிடையிலான இடைவெளிகள் அண்ணளவாக, கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதும் போது அக்கோள்களின் பாதைகளுக்கிடையிலான தூரங்களுக்கு விகிதசமனாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கோளினதும் சுற்றுப்பதையின் நீளத்துக்கும் அதன் சுற்றுக்காலத்துக்கும் இடையில் தொடர்பொன்றைக் கண்டுபிடிக்க கெப்லருக்கு இயலுமாயிருந்தது. உட்கோள்களிலிருந்து புறக்கோள்கள் நோக்கிச் செல்லும்போது, சுற்றுக்காலங்களின் விகிதத்தின் அதிகரிப்பானது, சுற்றுப் பாதையின் நீளங்களுக்கிடையிலான வித்தியாசத்தின் இருமடங்காகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், இச் சூத்திரம் திருத்தம் குறைவானதாக இருந்தமையால், பிற்காலத்தில் கெப்லர் இச் சூத்திரத்தை நிராகரித்தார். + +தலைப்பில் குறிப்பிட்டவாறு, கடவுளின் அகிலத்துக்கான கேத்திரகணித திட்டத்தைத் தான் வெளிப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். கொப்பர்நீசிய முறைமை மீதான கெப்லரின் ஆர்வத்துக்குக் காரணம் பௌதிக மற்றும் ஆன்மிகக் கொள்கைகளுக்கிடையிலான அவரது இறையியல் நம்பிக்கையாகும். அதன்படி, இந்த அகிலமே கடவுளின் பிரதி பிம்பம் எனவும், சூரியன் பிதாவைக் குறிப்பதாகவும், வான்கோளம் சுதனை(மகன்) குறிப்பதாகவும், இடையிலுள்ள வெளி பரிசுத்த ஆவியைக் குறிப்பதாகவும் அவர் கருதினார். அவரது முதல் கையெழுத்துப் பிரதியான "மைஸ்டிரியம்", சூரியமையக் கொள்கை பற்றி விளக்கும் பைபிள் வாசகங்களைக் கொண்டிருந்தது. + +தனது வழிகா��்டியான மைக்கல் மீசுடிலினின் துணையுடன், கெப்லர் தனது ஆக்கத்தை வெளியிடுவதற்கு, துபிங்கென் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொண்டார். எனினும் அதில் காணப்பட்ட பைபிளைப் பற்றிய விமர்சனங்களை நீக்கவும், கொப்பர்நிகசின் முறைமை மற்றும் கெப்லரின் புதிய சிந்தனைகள் பற்றி இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கங்களைச் சேர்க்கவும் நிர்வாகம் உத்தரவிட்டது. "மைஸ்டிரியம்", 1596ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. 1597ல் முற்பகுதியில் அதன் பிரதிகளை தனது ஆதரவாளர்களுக்கும், பிரபல வானியலாளர்களுக்கும் அவர் அனுப்பினார். இந்நூல் பெரியளவில் பிரபலமாகாவிட்டாலும், கெப்லரை ஒரு திறமையான வானியலாளராகக் காட்டுவதில் அது வெற்றி பெற்றது. + +கோள்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை கெப்லர் கண்டுபிடித்தார். + + + + + + + + + +செய்நிரல் + +செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம். + + + + + +மனித மூளை + +மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. + +மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் ("cerebral cortex") பகுதியாகும். நரம்பிழையத்தால் ("neural tissue") உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு ��ெயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. + +மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை "மூளைப் பருமனாக்கம்" ("encephalisation") என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (10), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (10) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (10) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன. + +மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் ("cerebrospinal fluid") என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி ("blood-brain barrier") என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. + +பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் ("closed head injuries") எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் ("stroke"), நரம்பு நச்சுகள் ("neurotoxin") எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி ("antibodies") மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் ("multiple sclerosis") ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. + +மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும், 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது. மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் ("myelinated fibre") வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர். +மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் ("cerebral hemispheres") என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை ("cerebellum") என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். எலி, சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் ("dolphin") மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன. + +மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க ("coma") நிலைக்கு உட்படுவான். + +பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் ("frontal lobe"), சுவர் மடல் ("parietal lobe"), பக்க மடல் ("temporal lobe"), மற்றும் பிடரி மடல் ("occipital lobe"). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. +பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும். உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் ("sulcus") எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு ("gyrus") எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும். +பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு ("magnetic resonance imaging") நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு ("functional magnetic resonance imaging" அல்லது "fMRI") மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிர்த்துள்ளனர்). + +முதன்மை இயக்கப் புறணி ("primary motor cortex") என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் ("central sulcus") முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி ("motor cortex") ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகள��� வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது. + +மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் ("retina") அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் ("visual cortex") விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் ("retinotopic maps") உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்ப���்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி ("primary visual cortex") (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை ("thalamus") வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை ("visual feature") எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன. + +கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் ("tonotopic maps") கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் ("combination") ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் ("visual system") போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் ("tonotopic cortical maps") உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன. + +வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் ���டையே உள்ள இயக்க இணைப்புகளும் ("motor connections"), புலன் இணைப்புகளும் ("sensory connections"), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன. + +உடல் உறுப்புக்கள் + +மனித மண்டையோடு + +முள்ளந்தண்டு + + + + + +உயிரணு + +உயிரணு (இலங்கை வழக்கு: கலம், ஆங்கிலம்:Cell) என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம். தமிழில் உயிரணுவை "செல், கலம், கண்ணறை, திசுள்" என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது. உயிரணுக்கள் குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது + +தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சை இனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து, தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண், பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது. + +மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது. + +19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரணுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கத்தின் போதும் கூட அதன் வடிவத்தை ஆராயும் நுண்நோக்கி இருக்கவில்லை. மேலும் பல்லாயிரம் மடங்கு பெரிதாக்க��க்காட்டும் திறம் கொண்ட நுண்ணோக்கிகள் வந்த தற்காலத்திலும் பல்வேறு வேதிப்பொருள்களின் துணையுடனும், கணிப்பீட்டுக் கணிதவியல் துறைகளின் உதவியுடனுமே உயிரணுவின் கட்டமைப்பு மாந்தர் கண் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக உயிரணுக்கள் மனிதக்கண்ணின் பார்வைப்புலத்தினை விடவும் ஐந்து மடங்கு சிறியளவான 10 முதல் 20 மைக்ரோமீட்டர் (1000 μm= 1mm) விட்டம் கொண்டதாக காணப்படுவதையும், ஒளியூடுமை (ஒளியை ஊடுபுக விடும் தன்மை) கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம். + +உயிரணுக்கொள்கையானது அதன் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, கூடிய தகவல்களை ஏற்றுக்கொண்டு, மாறி வந்திருக்கின்றது. நவீன கொள்கையின்படி: + +உயிரணு இரண்டு வகைப்படும்: மெய்க்கருவுயிரி, இது கருவை கொண்டிருக்கும். மற்றையது நிலைக் கருவிலி, இது கருவைக் கொண்டிருக்காது. நிலைக் கருவிலிகள் ஒற்றை உயிரணு கொண்ட உயிரிகளாகும். அதேவேளை மெய்க்கருவுயிரிகள் ஒற்றைக் கலம் முதல் பல்கல அங்கிகள் வரைக் கொண்டிருக்கும். + +நிலைக் கருவிலிகள் உயிரின் மூன்று பெரும் ஆட்களங்களில் இரண்டு ஆட்களங்களான பாக்டீரியா மற்றும்ஆர்க்கீயாவை அடக்கும். நிலை கருவிலிகளே புவியில் முதலில் தோன்றிய உயிரினமாகும். இவை மெய்க்கருவுயிரிகளை விட எளிமையானவையாகவும் சிறியவையாகவும் காணப்படும்.மென்சவ்வுகளால் மூடப்பட்ட புன்னங்கங்கள் காணப்படாது. நிலைக் கருவிலிக் கலங்கள் குழியவுருவில் நேரடியாகக் காணப்படும் தனி டி.என்.ஏயைக் கொண்டிருக்கும்.குழியவுருவில் கருவுக்குரிய பகுதி உட்கருவகம் எனப்படும். பெரும்பாலான நிலைக் கருவிலிகள் மிகச் சிறியவைகளாக 0.5 முதல் 2.0 µm விட்டம் கொண்டதாயிருக்கும். + +தாவரங்கள், விலங்குகள், பூஞ்சை, கோழைப்பூசணம் , மூத்தவிலங்கு, மற்றும் அல்காக்கள் எல்லாம் மெய்க் கருவுயிரிகளில் அடங்கும். இவை நிலைக்கருவிலிக் கலங்களைப் போல் பதினைந்து மடங்கு அகன்றதாகவும் ஆயிரம் மடங்கு கனவளவில் அதிகரித்ததாகவும் காணப்படும்.முதன்மையான வெறுபாடாகக் கூறக்கூடியது மெய்க்கருவுயிரிகளில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப் புன்னங்கங்கள் காணப்படுவது அதிலும் முக்கியமாக கரு காணப்படுகின்றமை ஆகும். இதுவே டி,என்.க்களைக் கொண்டிருக்கும் கலப்புன்னங்கமாகும். இந்தக் கருதான் இதற்கு மெய்க்கருவுயிரிகள் எனப் பெயர் வரக் காரணமாகும். +ஏனைய வேறுபாடுகள்: + +ஒவ்வொரு உயிரணுவும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளன. + + +என மூன்று பெரும் பிரிவுகளும் அதற்குள் ஏராளமான சிறு சிறு மேடுகள், பள்ளங்கள், துளைகள் என்பவைகளையும், உட்பகுதிக்குள் வளைந்து நெளிந்தும், சுருண்டும் செல்லும் அமைப்புகள், மற்றும் வெளிப்புறமாக நீண்டு செல்லும் பகுதிகள் என மிக மிக சிக்கலான அமைப்புகளை இத்தலைப்புகளை ஆழ ஆராயும் போது உப தலைப்புகளாக கொண்டு வரலாம். பிரபலமான டி.என்.ஏ எனும் சொற்பதமும் உயிரணுவின் கருவை (Nucleus) ஆழமாக ஆராயும் போதே அறிமுகமாகிறது. இதனூடாகவே மரபுத் தகவல்களும் கடத்தப்படுகிறது. + +உயிரணுக்களின் கட்டமைப்பு உயிரினங்களின் வகைக்கு அமைய பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகளின் கலங்களுக்கிடையே காணப்படும் வித்தியாசங்களின் சுருக்கம் பின்வருமாறு + +தொடர்ந்தும் கலங்களை மீளமைத்தல், புரதங்களை உருவாக்கல், உயிர்ச்சத்துக்களை பிரித்தெடுத்தல் , தூண்டற்பேற்றை காட்டல் என ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான இன்னுமின்னும் முக்கியப்பணிகளும் இவ்வுயிரணுவின் உள்ளேயே இடம் பெறுகின்றன. ஒருவரின் பரம்பரை நோய்கள், குணங்கள் மற்றும் தோற்றங்கள் என்பதை குழந்தைகளுக்கு கடத்திச்செல்லவும் இக்கலத்தின் கருவே பயன்படுகிறது. + +இது குறித்த ஆய்வுகள் உயிரணுவியல் (Cell Biology) என அழைக்கப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே "உயிரியலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உயிரணுவியல் பற்றிய ஆய்வு தீர்வு தரும்" என நம்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்று வரை "உயிரணுவியல்" உயிரியலின் பெரும் பகுதியாகவும் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதியாகவும் உள்ளது. 2008ம் ஆண்டு முற்பகுதியில் சர்வதேச விஞ்ஞானிகள் கழகம் சமர்ப்பித்த இரண்டாவது கட்ட DNA மரபணு அட்டவணையில் மனிதர்களின் மரபணு ஒன்றில் 99 வீதமானவை மனிதர்களிடையே பொதுவாகவே காணப்படுவதாகவும் மீதி ஒரு வீதமே ஆளாளுக்கு வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெரும் பகுதி உயிரணு ஆய்வில் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது. + +இக்கலங்களின் சிக்கலான அமைப்பு குறித்து விளக்கும் ப்லோபெல் +இவ்வாறே அனைத்து உயிரியல் பேராசிரியர்களினால் மதிக்கப்படுபவரும், "DNA யின் அமைப்பு இரட��டைச் சங்கிலியுருவுடையது" என்பதை எடுத்துக்காட்டியாவருமான (James Dewey Watson) கூறும் போது + +இவ்வாறான சிக்கல் வாய்ந்த இக்கல அமைப்பினையும் அதனுள் இடம் பெறும் பரிமாற்றங்களை ஆராயும் நோக்குடனும் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களையும் உள்ளடக்கி 2000 ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே AfCS (The Alliance for Cellular Signaling) ஆகும். அடுத்தடுத்த கட்டங்களில் இவ்வமைப்பு கலத்தின் தகவல் வங்கிகள், களஞ்சிய சாலைகள் அடுக்கடுக்கான பாதைகள் இலட்சக்கணக்கான தொழில்களை செய்யும் தனித்தனி பகுதிகள் என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது. + +ஒரு உயிர்க்கலத்தை வளர்ப்பூடகங்களில் (Growth media or Cell culture media) வளர்ப்பதன் மூலம் அக்கலத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இழைய வளர்ப்பு (Tissue Culture) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து மேலும் நவீன உத்திகளையும் கொண்டு உயிரணு வளர்ப்பு (Cell Culture) முறை சாத்தியமாகி வெற்றியடைந்தது. இவ்வெற்றியே அடுத்த படியெடுப்பு (Cloning) என்ற கிளை வளர்ச்சிக்கு வித்திட்டது. படியெடுப்பு பற்றிய ஆய்வின் அடுத்தப்படியாகவே இன்றைய குருத்தணு ஆய்வு (Stem Cell Research) நோக்கப்படுகிறது + + +- ஆண்டு 12 தமிழ்நாடு பாடநூல் - + + + + +தமிழ் அகரமுதலி + +அகரமுதலி அல்லது அகராதி என்பது அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் "அகரம்", "ஆதி" என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கப்படும். + +இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும். + +தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள�� அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. + +16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே "அகராதி" என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின . + + + + + +நிகண்டு + +நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் "உரிச்சொற்பனுவல்" என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது. + +நிகண்டு என்னும் சொல் "தொகை", "தொகுப்பு", "கூட்டம்" என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல். +நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் அண்டிக��� கிடப்பவை. +நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. +சங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை +நிகர் + அண்டவாதி = நிகண்டவாதி + +இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது. + +நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்: + +நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன. + +பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா: தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன. + +நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன. + +நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏந்தாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். + + + + + + + +வீரமாமுனிவர் + +வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - "கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி" ("Constantine Joseph Beschi"). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். + +இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. + +இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார். + +சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார். + +1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட "வித்துவான் முத்துசாமி பிள்ளை", இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். + +முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார். + +வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை "வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்" என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் . முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் "தத்துவ போதகர்" என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் "தத்துவ போதகர்" என்ற பெயர் இருந்தது. + +வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்: + +மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை "தைரியநாதசாமி" என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் "வீரமாமுனிவர்" என மாற்றிக் கொண்டார். + +இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். + +இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. + +தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். + +தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். + +சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். + +அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமல��� எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர். + +தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர். + + + + + + + +வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்: +வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார். + + + + + + +இலங்கைத் தமிழர் பட்டியல் + +இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இத் தீவின் வரலாற்றின் ஆரம்பகாலம் முதலே தமிழர்கள் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியும். இலங்கையின் முழு வரலாற்றுக் காலத்திலுமே அரசர்களாகவும், அரச அவைகளிலே உயர்பதவி வகித்தோராயும், கல்விமான்களாகவும், புலவர்களாகவும் பல தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாண அரசு உருவாகி நிலை பெற்றதன் பின்னரும், குடியேற்றவாத அரசுகளின் காலத்திலும் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள். + + + + + + + + +புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தவர் + +யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணமும், யாழ்ப்பாணத்தவரும் இலங்கை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றனர் எனலாம். அக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தவர் பலர் உள்ளூரிலும், வேறு சிலர் இலங்கை முழுவதிலும் புகழுடன் வாழ்ந்தார்கள். இன்னும் சிலர் நாட்டுக்கு வெளியிலும் புகழ் பெற்றார்கள். இவ்வாறு புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. + + + + + + + + + + + + + + +கு. வன்னியசிங்கம் + +குமாரசாமி வன்னியசிங்கம் ("Coomaraswamy Vanniasingam", 13 அக்டோபர் 1911 - 17 செப்டம்பர் 1959), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1947 முதல் இறக்கும் வரை கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். + +வன்னியசிங்கம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழறிஞருமான வி. குமாரசாமி என்பவருக்குப் பிறந்தவர். வன்னியசிங்கத்தின் சகோதரர் சி. பாலசிங்கம் திறைசேரிச் செயலாளராக இருந்தவர். வன்னியசிங்கம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று லண்டன் பல்கலைக்கழகப் பட்டத்தை 1933 ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் சட்டத்துறையில் நுழைந்து வழக்கறிஞராகி, யாழ்ப்பாணத்தில் சட்டப்பணியைத் தொடர்ந்தார். + +மரு. சிறிநிவாசனின் மகள் கோமதியை மணம் முடிந்த வன்னியசிங்கத்திற்கு ஐந்து பெண் பிள்ளைகள்: மரு. ஹேமாவதி பாலசுப்பிரமணியம், சத்தியவதி நல்லலிங்கம், ரேணுகாதேவி சிவராஜன், பகீரதி வன்னியசிங்கம், ரஞ்சினி சாந்தகுமார். + +ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் தொடங்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். 1947 தேர்தல்ல் கோப்பாய்த் தொகுதி வேட்பாளர் பி. ஜி. தம்பியப்பா தேர்தல் பரப்புரை நேரத்தில் காலமானதை அடுத்து வன்னியசிங்கம் அவருக்குப் பதிலாக தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். + +1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைய தமிழ்க் காங்கிரஸ் முடிவெடுத்த போது கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைச் சா. ஜே. வே. செல்வநாயகம் தொடங்கிய போது அக்கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18 இல் தொடங்கப்பட்டது. + +1952 தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கோப்பாய்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வநாயகம் இத்தேர்தலில் தோல்வியடையவே வன்னியசிங்கம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைவரானார். இவர் மீண்டும் 1956 தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் தெரி��ானார். + + + + +முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை + +முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை (1820 - 1889) "வில்லியம் நெவின்ஸ்" அல்லது "நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை" எனப் பரவலாக அறியப்பட்டவர். இவர் 19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். பிற்காலத்தில் இந்துக் கல்லூரிகள் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிளை பரப்பி வெற்றிகரமாக இயங்கிவந்த, இன்னும் முன்னணிக் கல்வி நிறுவனங்களாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு வித்தாக அமைந்த உள்ளூர்ப் பாடசாலையை (The Native Town High School) உருவாக்கியவர் இவரே. + +இவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சங்குவேலி என்னும் கிராமத்தில் 1820 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 12ம் வயதில் அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனால் வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவந்த செமினரியில் (Seminary) சேர்ந்து கல்வி கற்றார். ஒரு இந்துவான இவர் இக்காலத்திலேயே செமினரி நிபந்தனைகளுக்கு அமைய வில்லியம் நெவின்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர வடமொழியையும் கற்றார். அக்காலத்தில் கணிதத்தில் இவர் சிறந்த திறமைசாலியாக இருந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றிய நெவின்ஸ் செல்வதுரை இவரது மகனாவார். + +1840 இல் கல்வியை நிறைவு செய்துகொண்ட இவர் செமினரியிலேயே பணியில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அங்கே மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1855 இல் புகழ் பெற்ற பலரை உருவாக்கிய வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர் தமிழ் நாட்டுக்குச் சென்றார். அங்கே, பின்னர் வின்ஸ்லோ அகராதி எனப் பெயர்பெற்ற தமிழ் அகராதி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வின்ஸ்லோ என்பவருக்கு உதவியாக இருந்தார். அவருடன் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர். 1860 இல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினார். + +1850 இல் நியாய இலக்கணம் - Elements of Logic என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். + +1860 ஆம் ஆண்டில் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்ததும், யாழ்ப்பாணத்தின் முதல் பாடசாலையுமான ஆங்கிலப் பாடசாலையான மத்திய கல்லூரியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 26 ஆண்டுகாலப் பணிக்குப் பின் 1886 இல் அக் கல்லூரியை விட்டு விலகினார். நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டிலேயே மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்த கட்டிடமொன்றில் சுதேச நகர உயர் பாடசாலை (The Native Town High School) என்ற பெயரில் பாடசாலையொன்றை உருவாக்கினார். 1889 இல் இப் பாடசாலையை வழக்கறிஞராக இருந்த நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்றபின்னர் அதே ஆண்டில் சிதம்பரப்பிள்ளை காலமானார். + +சிதம்பரப்பிள்ளையவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை 1890 இல் அக்காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வந்த சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பாடசாலை பின்னர் பொருத்தமான வேறிடத்துக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எனப் பெயர் பெற்றது. + +முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல தன்னிலைச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். + + + + +தமிழ்ப் புத்தாண்டு + +தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். + +ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே. + +நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது. + +தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. + +தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய "அகத்தியர் பன்னீராயிரம்", பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த "புட்பவிதி" முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள். + +இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்��ட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம். + +புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். + +இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் "கைவிசேடம்" அல்லது "கைமுழுத்தம்" பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும். + +சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் "வைகாசி அனுடம்" என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் தேதிக்கு ம��ற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. + +தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன. + +சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல��ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின. + + + + + +யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி + +யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1816 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825 தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். + + + + + +வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் + +வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும். + +யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது. + +நாவல��் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. + +சைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என "இலங்கையில் கல்வி வரலாறு" பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார். + +பிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர். + + + + + + +வேம்படி மகளிர் கல்லூரி + +வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ("Vembadi Girls’ High School") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. + + + + + +ஆறுமுக நாவலர் + +ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். + +ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார். + +ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். + +யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். + +சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. + +வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும�� செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். + +சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். + +தமது இல்லத்தில் "வித்தியானுபாலனயந்திரசாலை" என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார். + +இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் "வித்தியானுபாலன இயந்திரசாலை" என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார். + +1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். + +குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்க��ழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். + +1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். + +இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் நிந்தித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது. + +சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். + +1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் "ஜோன் கில்னர்" என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது. + +1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு "யாழ்ப்பாணச் சமய நிலை" எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, த��ிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். + +நீதி வெண்பா உரையில், + + +“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, +ஒருநாள் இரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை, தான்இருக்க இடம்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக் கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக் கொண்டு அம்மலையில் ஏறிக் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான்”. + +ஆறுமுக நாவலர் ஆங்கிலப் புலமையும் வாய்ந்தவர்.வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க வேண்டியிருந்த போது நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் ஆறுமுக நாவலர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் முணுமுணுத்தபடி தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட, ஆறுமுக நாவலர் உடனே, ’எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட நாவலர் மறுத்து தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மொழிபெயர்த்தார். +’சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்கு அர்த்தம். +(எல்லி,ஆழிவரம்பு,கால் ஏற்று,காலோட்டம்,புக்குழி எனும் வார்த்தைகளுக்கு முறையே சூரியன்,கடற்கரை ஓரம்,காற்று வாங்க,சிறுநடை,புறப்பட்டபோது என்று பொருள்) + +சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூ���ில் வலியுறுத்தியுள்ளார். + +எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், "சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம்" என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர். + +போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். + +நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார். + + + + + + + + +மகபூப்நகர் + +மகபூப்நகர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு உள்ளோர் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இது பலமூர் எனவும் அழைக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,513,934 ஆகும். இம்மாவட்டம் முன்பு நிஜாம்களின் ஆட்சியில் இருந்தது. நிஜாம் ஆட்சியின்போது இது ஹைதராபாத் மாநிலத்தின் தென்மாவட்டமாக இருந்தது. தெற்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. நல்கொண்டா, ஹைதராபாத், கர்நூல், ராய்ச்சூர், குல்பர்கா ஆகியவை இதன் அண்டை மாவட்டங்கள் ஆகும். + +முற்காலத்தில் இப்பகுதியானது "ருக்மம்மாபேட்டை" எனவும் "பலமூரு" எனவும் அழைக்கப்பட்டது. இதன் பெயர் ஆனது 1890 டிசம்பர் 4-இல் அப்போது நிஜாமாக இருந்த மகபூப் அலி கான் என்பவரின் நினைவாக மகபூப் நகர் என்று பெயரிடப்பட்டது. முன்பொரு காலத்தில் இது சோழர்களின் நிலம் எனப்பொருள்படும் "சோழவாடி" என அழைக்கப்பட்டது. + +File:Office of District Educational Officer, Mahabubnagar.jpg|மகபூப்நகர், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் +File:Govt. College of Teacher Education, Mahabubnagar.jpg|மகபூப்நகர், அரசு ஆரிரியக் கல்வி கல்லூரி + + + + + +கம்மம் + +கம்மம் இந்தியாவின் தெலுங்கானா| மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இங்குள்ள "கம்ப மலை" என்ற மலையின் காரணமாக கம்மம் என்று பெயரிடப்பட்டது. + + + + +காக்கிநாடா + +காக்கிநாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் "உர நகரம்" என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு "சிறப்பு பொருளாதார மண்டல" தகுதி வழங்கப்பட்டது. + +காக்கிநாடாவை காக்கிநாடா மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இந்த நகரத்தை ஐம்பது வார்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிற்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தமக்குள் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர். + +தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாநில நெடுஞ்சாலை வழியாகவும் சாலைப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். ராஜமுந்திரியில் உள்ள வானூர்தி நிலையத்தை அடைய 65 கி.மீ செல்ல வேண்டும். இந்த நகரில் மூன்று தொடருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஐதராபாத்து, செகந்திராபாத்து, மும்பை, பெங்களூர், சென்னை, திருப்பதி, சீரடி, பவநகர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. + + + + +பிட்டுக்குழல் + +பிட்டுக்குழல் என்பது பிட்டுத் தயாரிப்பதற்கான ஒரு சாதனமாகும். சாதாரணமாக இது மூங்கில் குழாயைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. தற்காலத்தில் அலுமீனியம் முதலிய உலோகங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஏறத்தாள 3 அங்குலம் விட்டமுடைய மூங்கில் குழாய்களே பிட்டுக்குழல் செய்வதற்குப் பயன்படுகின்றன. நீளம் சுமார் ஒரு அடியாகும். இக் குழாயின் ஒரு முனையிலிருந்து குழாய் நீளத்தின் மூன்றிலொரு பங்கு அளவில் துணியைச் சுற்றி அவ்விடம் பருமனாக்கப்படும். இவ்விடத்தில் விட்டம் சுமார் 6 அங்குலம் இருக்கும். + + + + + +பிட்டு + +பிட்டு அல்லது புட்டு என்ப���ு ஒருவகை உணவுப் பண்டம். இதை அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு செய்கின்றனர். அரிசி மாவைக் கொதித்த நீரில் குழைத்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிய பின்னர் அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நீராவியில் இட்டுப் பிட்டு அவிக்கின்றனர். அரிசி மாவு தவிர, சிறு தானிய வகைகளில் ஒன்றான குரக்கன் மாவும் பிட்டு சமைப்பதற்குப் பயன்படுகின்றது. ஒடியல் பிட்டு என்னும் ஒருவகைப் பிட்டு, பனங்கிழங்கைக் காயவிட்டுப் பெறப்படும் ஒடியலின் மாவினால் செய்யப்படுகின்றது. தற்காலத்தில் பிட்டு மென்மையாக இருப்பதற்காக அரிசி மாவுடன் கோதுமை மாவையும் கலந்து பிட்டு அவிக்கும் வழக்கம் உண்டு. தமிழ் நாட்டில் கூடுதலாக பிட்டு சமைப்பதில்லை என்றாலும், இலங்கையிலும், கேரளாவிலும் இதைச் சமைத்து மிகவும் விரும்பி உண்கின்றனர். இலங்கைத் தமிழர்கள், பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் காலை, இரவு உணவுகளுக்கு விரும்பி உண்ணும் உணவுகளில் பிட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன. தென்கிழக்காசிய நாடுகளிலும் "புட்டு" உணவு காணக் கிடைக்கிறது. இந்தோனேசியாவில் இதனைப் புத்து என்கின்றனர். + +மரபு வழியாகப் பிட்டு அவிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன. ஒரு முறையில் பிட்டுக் கலவையைப் பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் இட்டு அவிக்கின்றனர். மற்ற முறையில் பிட்டு அவிப்பதற்கு மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழல்கள் பயன்படுகின்றன. இம் முறையில் அவிக்கப்படும் பிட்டு "குழற்பிட்டு" எனப்படுகின்றது. குழற்பிட்டுச் செய்யும்போது மாவுத் துண்டுகளும் தேங்காய்த் துருவலும் ஒன்றாகக் கலக்கப்படுவது இல்லை. முதலில் சிறிதளவு தேங்காய்த் துருவலைக் குழலில் இட்டுப் பின்னர் அதன்மேல் ஏறத்தாழ 2 தொடக்கம் 3 அங்குல அளவுக்கு மாவுத் துண்டுகளை இடுவர். இவ்வாறு மாறிமாறிக் குழல் நீளத்துக்கு நிரப்பி அவிப்பது வழக்கம். இவ்வகைப் பிட்டு ஏறத்தாழ 2 அங்குல விட்டம் கொண்ட சிறிய உருளை வடிவத் துண்டுகளாக அமையும். தற்காலத்தில், பிட்டுக் கலவையை பருத்தித் துணியில் இட்டு இட்டிலிச் சட்டியிலோ, அவிக்கும் பாத்திரத்திலோ இட்டு���் அவிக்கும் வழக்கம் உள்ளது. + + +இடுபொருட்களைப் பொறுத்து புட்டின் ஊட்டச்சத்து வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில் குரக்கன், ஒடியல் மா புட்டுக்கள் வெள்ளைப் புட்டை விட ஊட்டச்சத்து மிக்கவை. பொதுவாக எல்லா வகைப் புட்டுக்களும் புட்டு மாசத்து நிறைந்த உணவு ஆகும். எனவே நிறைய ஆற்றலை வழங்கக் கூடியவை. + + + + + + +திருகை + +திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. + +திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம். இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். + +கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். + +திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும். + + + + + +ஊர்கா��ற்றுறை + +ஊர்காவற்றுறை ("Kayts") என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. + +புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார். + + + + + + +வேதியியல் + +வேதியியல் "(Chemistry)" எனப்படுவது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மங்களைப் பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். பொதுவாக அணுக்களின் இணைப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அனைத்து செய்திகளும் இத்துறையில் ஆராயப்படும். அணுக்களும் மூலக்கூறுகளும் வேதிப்பிணைப்புகளின் வழியாக தங்களுக்குள் எவ்வாறு வினைபுரிந்து புதிய சேர்மங்கள் உருவாகின்றன என்பது இங்கு விவரிக்கப்படுகிறது . வேதியலில் நான்கு வகையான பிணைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும். இவ்வகைப் பிணைப்பில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் இவ்வகைப் பிணைப்பில் பகிரப்படுகின்றன. ஒரு சேர்மம் மற்றொரு சேர்மத்திற்கு எலக்ட்ரான்களை கொடையளிப்பது அயனிப் பிணைப்பாகும். இவை தவிர ஐதரசன் பிணைப்பு, வாண்டர்வால்ஸ் பிணைப்பு என்ற பிணைப்புகள் மேலும் இரண்டு வகைப் பிணைப்புகளாகும். அடிப்படையான மூன்று அறிவியல் புலங்களில் வேதியியல் ஒன்றாகும். உயிரியல், இயற்பியல் என்பன மற்ற இரண்டு புலங்கள் ஆகும். மேலும் பின்வருவனவற்றை வேதியியலின் மூன்று பெரும்பிரிவுகளாகக் கருதலாம். + + +வேதியியல் அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுக்குப் பிற அணுக்களுடனான இடைவினைகள் பற்றியும், சிறப்பாக வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செல��த்துகிறது. + +நிலவியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளை இயற்பியலுடன் இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்பதுண்டு. வேதியியல் இயற்பிய அறிவியலின் ஒரு பகுதியாக இருப்பினும், இது இயற்பியலில் இருந்தும் வேறானது. + +மரபுவழி வேதியியலானது, அடிப்படைத் துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சாரப்பொருட்கள், உலோகங்கள், பளிங்குகள், பிற பொருட் சேர்க்கைகள் என்பன பற்றி ஆய்வு செய்கிறது. இவ்வாய்வு அப் பொருட்களின் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம். வேதியியலில் ஆராயப்படும் இடைவினைகள், தாக்கங்கள், மாற்றங்கள் என்பன வேதிப்பொருட்களிடையே இடம்பெறும் இடைவினைகளின் விளைவாக அல்லது பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையேயான இடைவினைகளின் விளைவாக ஏற்படுபவை. வேதிப் பொருட்களின் இவ்வாறான நடத்தைகள் பற்றிய ஆய்வுகள், வேதியியல் ஆய்வு கூடங்களில் நடைபெறுகின்றன. + +"வேதியியல் தாக்கம்" அல்லது "வேதிவினை" என்பது சில சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல சாரப்பொருட்களாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு வேதிச் சமன்பாட்டினால் குறியீடாக வெளிப்படுத்த முடியும். இச் சமன்பாடுகளின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கும். ஒரு சாரப்பொருள் உட்படும் வேதிவினைகளின் இயல்புகளும், அதனோடு ஆற்றல் மாற்றங்களும், வேதியியல் விதிகள் எனப்படும் சில அடிப்படை விதிகளுக்கு அடங்குவனவாக உள்ளன. + +ஆற்றல், மாற்றீட்டு வெப்பம் ஆகியவற்றைக் கருத்துக்கு எடுத்தல் ஏறத்தாழ எல்லா வேதியியல் ஆய்வுகளிலுமே முக்கியமாக உள்ளது. வேதிச் சாரப்பொருட்களை, அவற்றின் கட்டமைப்பு, நிலை, வேதியியல் சேர்க்கை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர். இவற்றை வேதியியல் பகுப்பாய்வுகளுக்கான கருவிகளின் துணையுடன் பகுத்தாய்வு செய்ய முடியும். வேதியியல் ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் வேதியியலாளர் எனப் பெயர் பெறுவர். வேதியியலாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதியியலின் துணைப் பிரிவுகளில் சிறப்புத் தகைமைகளைக் கொண்டிருப்பது உண்டு. + +பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்ன��டிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும். +வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "இரசவாதக்கல்"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது. + +கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான லூக்கிரட்டியசு என்பவர் எழுதிய "பொருட்களின் இயல்பு" ("De Rerum Natura") என்னும் நூலில் கண்டபடி,கிரேக்கர்களின் அணுவியக் கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. தூய்மையாக்க வழிமுறைகளின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பாலானவை குறித்து மூத்த பிளினி என்பவர் தனது "இயற்கைசார் வரலாறு" ("Naturalis Historia") என்னும் தனது நூலில் விளக்கியுள்ளார். வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப் பருமட்டாகப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்: + + +தற்கால வேதியியலின் முன்னோடிகளும், தற்கால அறிவியல் வழிமுறைகளைக் கண்டுபிடித்தவர்களும் நடுக் காலத்தைச் சேர்ந்த அராபிய, பாரசீக அறிஞர்கள் ஆவர். இவர்கள் துல்லியமான க��னிப்புக்களையும், கட்டுப்பாடுள்ள பரிசோதனை முறைகளையும் அறிமுகப் படுத்தியதுடன், புதிய பல வேதிப் பொருட்களையும் கண்டறிந்தனர். + +மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த முசுலிம் வேதியியலாளர்களுள் சாபிர் இபின் ஐய்யான், அல்-கின்டி, அல்-ராசி, அல்-பிரூனி, அல்-அசென் என்போர் அடங்குவர். சாபிரின் ஆக்கங்கள், 14 ஆம் நூற்றாண்டின் எசுப்பானியாவைச் சேர்ந்த சியுடோ-கெபெர் என்பவரின் இலத்தீன் மொழிபெயர்ப்புக்கள் ஊடாக ஐரோப்பாவுக்கு அறிமுகமாகின. சியுடோ-கெபெர், கெபெர் என்னும் புனை பெயரில் தானாகவும் சில நூல்களை எழுதியுள்ளார். வேதியியலின் வளர்ச்சியில் இந்திய இரசவாதிகளினதும், உலோகவியலாளர்களினதும் பங்களிப்புகளும் குறிப்பிடத் தக்கவை. +ஐரோப்பாவில் வேதியியலின் எழுச்சி, இருண்ட காலம் என அழைக்கப்படும் காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட கொள்ளை நோயின் காரணமாகவே ஏற்பட்டது. இது மருந்துகளுக்கான தேவையைக் கூட்டியது. அக்காலத்தில் எல்லா நோயையும் குணப்படுத்தவல்ல "காயகல்பம்" என ஒன்று இருப்பதாகக் கருதினர். ஆனால், இரசவாதக்கல் என்பதைப் போலவே இதையும் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. + +இரசவாதத்தைக் கைக்கொண்ட சிலர் அதை ஒரு அறிவார்ந்த செயற்பாடாகவே கருதி வந்தனர். அவர்களிற் சிலர் காலப் போக்கில் முன்னேற்றமான கருத்துக்களையும் முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக பராசெல்சசு (1493–1541) என்பார், வேதியியல் பொருட்களையும் மருந்துகளையும் குறித்துத் தனக்கு இருந்த தெளிவற்ற புரிதலை வைத்துக்கொண்டு, நான்கு மூலக் கொள்கையை மறுத்து இரசவாதமும் அறிவியலும் கலந்த கலப்புக் கொள்கையொன்றை உருவாக்கினார். இதுபோலவே, கணிதத் துறையில் கூடுதலான கட்டுப்பாடுகளையும், அறிவியல் கவனிப்புக்களில் பக்கச் சார்பை நீக்குவதையும் வலியுறுத்திய மெய்யியலாளர்களான சர் பிரான்சிசு பேக்கன் (1561–1626), ரெனே டேக்கார்ட் (1596–1650) போன்றோரின் செல்வாக்கு அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. வேதியியலில், இது ராபர்ட் போயில் (1627–1691) என்பவருடன் தொடங்கியது. இவர் வளிம நிலையின் இயல்புகள் தொடர்பான விதி ஒன்றை வெளிப்படுத்தினார். இது போயில்சின் விதி என அழைக்கப்படுகிறது. + +அந்துவான் இலவாசியே என்பவர் 1783 ஆம் ஆண்டில் திணிவுக் காப்புக் கோட்பாட்டையும், 1800ல் ஜான் டால்ட்டன் அணுக் கோட்பாட்டையும் வெளியிட்டனர். உண்மையில் இதன் பின்னரே வேதியியல் முதிர்ச்சியடைந்தது எனலாம். திணிவுக் காப்பு விதியினதும், லவோய்சியரின் முயற்சிகளையே பெரிதும் அடிப்படையாகக் கொண்ட எரிதலுக்கான ஒட்சிசன் கோட்பாடினதும் விளைவாக வேதியியலை மீளுருவாக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. எல்லாச் சோதனைகளையும், ஒரே கோட்பாட்டுச் சட்டகத்துள் பொருத்துவதற்கான முயற்சியே இலவோசியே வேதியியலுக்கு அளித்த அடிப்படையான பங்களிப்பு ஆகும். + +இலவோசியே வேதியியல் சமநிலையின் தொடர்ச்சியான பயன்பாட்டை நிலை நிறுத்தினார், ஒட்சிசனைப் பயன்படுத்தி பிளாசித்தன் கோட்பாட்டைத் தூக்கியெறிந்தார், புதிய வேதியியல் பெயரிடல் முறை ஒன்றை உருவாக்கியதுடன் நவீன மீட்டர் அளவு முறைக்கும் பங்களிப்புச் செய்துள்ளார். பழைய, வழக்கொழிந்த வேதியியல் சார்ந்த சொற்களையும் தொழில்நுட்ப மொழியையும் பெரும்பாலும் கல்வியறிவு அற்ற பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பதிலும் இலவோசியே ஈடுபட்டார். இதனால் வீதியியல் குறித்த மக்களின் ஈடுபாடு கூடியது. வேதியியலில் ஏற்பட்ட இத்தகைய முன்னேற்றங்கள் "வேதியியல் புரட்சி" என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை ஏற்படக் காரணமாயின. இலவோசியேயின் பங்களிப்புக்கள், உலகம் முழுதும் இன்று கல்வி நிலையங்களில் கற்கப்படும் நவீன வேதியியல் உருவாக வழிசமைத்தன. இதனாலும், அவரது பிற பங்களிப்புக்களினாலும் இலவோசியே நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். + +வேதியியலில் பல்வேறு அடிப்படையான கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட் சில கீழே விளக்கப்படுகின்றன. +அணுவே வேதியியலின் அடிப்படையான அலகு. இது நேரேற்றம் கொண்ட மையப் பகுதியையும், அதைச் சுற்றிலும் இலத்திரன்களையும் (எலெக்ட்ரான்) கொண்டிருக்கும். அணுக்கரு என்று அழைக்கப்படும் மையப்பகுதி புரோத்தன் (புரோட்டான்), நியூத்திரன் (நியூட்ரான்) என்னும் துகள்களால் ஆனது. சூழ இருக்கும் இலத்திரன்கள் எதிரேற்றம் கொண்டவை. அதனால், அணுக்கருவின் நேரேற்றத்தைச் சமநிலைப் படுத்துகின்றன. ஒரு தனிமத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கக்கூடிய மிகச் சிறிய துணிக்கையும் அணுவே. + +வேதியியல் தனிமம் என்னும் கருத்துரு வேதியியல் பொருட்கள் என்பதோடு தொடர்புடையது. ஒரு வேதியியல் தனிமம் என்பது அடிப்படையில் ஒரே வகையான அணுக்களைக் கொண்ட ஒரு பொருள். ஒரு குறிப்பிட்ட தனிமம் ஒரு குறித்த எண்ணிக்கை புரோத்தன்களை அதன் அணுக்கருவில் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அணுவெண் எனப்படும். எடுத்துக் காட்டாக 6 புரோத்தன்களைத் தமது அணுக்கருவில் கொண்ட அணுக்கள் அனைத்தும் கரிமம் என்னும் தனிமத்தில் அணுக்கள். அதேபோல், 62 புரோத்தன்களைக் கொண்ட அணுக்கள் யுரேனியம் என்னும் தனிமத்துக்கு உரியவை. + +குறித்த தனிமத்துக்கு உரிய அணுக்கள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களைக் கொண்டிருக்கும் எனினும், அவற்றில் உள்ள நியூத்திரன்கள் ஒரே எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதில்லை. இவ்வாறு ஒரேயளவு புரோத்தன்களையும், வெவ்வேறு எண்ணிக்கையான நியூத்திரன்களையும் கொண்ட அணுக்களையுடைய தனிமங்கள் ஓரிடத்தான்கள் அல்லது சமதானிகள் எனப்படுகின்றன. உண்மையில் ஒரு தனிமத்துக்குப் பல ஓரிடத்தான்கள் இருக்க முடியும். புரோத்தன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 94 வேதியியல் தனிமங்கள் அல்லது அணுவகைகள் இயற்கையில் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும் 18 வகையான தனிமங்கள் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. + +வேதியியல் தனிமங்களைப் பொதுவாக ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கமைக்கின்றனர். இதில் தனிமங்கள் அணுவெண்களின் அடிப்படையிலும், இலத்திரன் அமைப்பின் அடிப்படையில் கூட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள நிரல்கள் கூட்டங்களையும், கிடை வரிசைகள் ஆவர்த்தனங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட கூட்டங்களில் அல்லது ஆவர்த்தனங்களில் இருக்கும் தனிமங்கள் அணு ஆரை, இலத்திரன் இழுதிறன் போன்ற சில பொது இயல்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன. + +சேர்மம் என்பது, குறிப்பிட்ட சில வேதியியல் தனிமங்களின் அணுக்களைக் குறிப்பிட்ட விகிதத்திலும், குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிலும் கொண்டுள்ள ஒரு வேதிப்பொருள். இது கொண்டுள்ள தனிமங்கள் அதன் சேர்க்கையையும், ஒழுங்கமைப்பு சேர்மத்தின் வேதியியல் இயல்புகளையும் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, "நீர்" என்பது ஐதரசன் (ஹைட்ரஜன்), ஒட்சிசன் (ஆக்சிஜன்) ஆகிய தனிமங்களின் அணுக்களை இரண்டுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் கொண்டுள்ள ஒரு சேர்மம். இதில், ஒட்சிசன் இரண்டு ஐதரசன் அணுக்களுக்கு நடுவே தம்மிடையே 104.5° கோணத்தை உருவாக்கும்படி பிணைக்கப்பட்டு உள்ளது. சேர்மங்கள் உருவாவதும், அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதும் வேதிவினைகளின் காரணமாக நடைபெறுகின்றன. + +வேதிப்பொருள் என்பது குறித்த சேர்க்கைப் பொருள்களையும், இயல்புகளையும் கொண்ட ஒரு பொருள். இது சேர்வைகள், தனிமங்கள் அல்லது சேர்வைகள் தனிமங்கள் இரண்டினதும் கலவை ஆகும். அன்றாட வாழ்க்கையில் காணும் பெரும்பலான வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக் கலவைகளே. வளி, கலப்புலோகம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். + +வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. கரிமச் சேர்மங்களுக்கு கரிமப் பெயரிடல் முறையும், கனிமச் சேர்மங்களுக்குப் பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன. + + +வேதிவினைகள் சில விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறுகின்றன. இவை வேதியியலின் அடிப்படைக் கருத்துருக்களாக உள்ளன. அவற்றுட் சில வருமாறு: + + +மற்றொரு பொருள் அல்லது சக்தியுடன் ஒரு வேதிப்பொருள் இடைவினை புரிவதன் காரணமாக வேறு ஒரு பொருளாக மாறுகிறது என்றால் அந்த இடைவினையை ஒரு வேதிவினை என்று அழைக்கலாம். எனவே, வேதிவினை என்பது ஒரு பொருளின் வினை தொடர்புடைய கோட்பாடாகக் கருதப்படுகிறது. தொடர்புடைய அவ்வேதிப்பொருள் ஒரு கலவையாகவோ அல்லது கரைசலாகவோ மற்றொரு வேதிப்பொருளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அல்லது ஏதாவது ஒரு சக்திக்கு ஆட்படுவது அல்லது இவ்விரண்டு செயல்களுக்கும் உட்படுவது என்பது வேதிவினை என்ற இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இச்செயல்பாட்டின் விளைவாக வினையில் பங்கேற்கும் பொருள்களுக்கு இடையிலும் வினைகலனுக்கு வெ��ியே உள்ள சுற்றுப்புறத்திலும் ஆற்றல் பரிமாற்றம் நிகழலாம். வினைகலன்கள் என்பவை பெரும்பாலும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கருவிகளாக இருக்கும். + +வேதிவினைகளின் விளைவாக மூலக்கூறுகள் பிரிகை அடையும் செயல் நிகழ்கின்றது. பெரிய மூலக்கூறுகள் உடைந்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றமடைகின்றன. அல்லது மூலக்கூறுக்குள்ளேயே அவற்றிலுள்ள அணுக்கள் மறுசீரமைப்பு அடைகின்றன. பொதுவாக வேதிவினைகளில் வேதிப் பிணைப்புகள் உடைக்கப்படுகின்றன அல்லது புதிய வேதிப் பிணைப்புகள் உருவாகின்றன. ஆக்சிசனேற்றம், ஒடுக்கம், பிரிகையடைதல், அமிலக் கார நடுனிலையாக்கல், மூலக்கூற்று மறுசீரமைப்பு போன்றவை வேதிவினைகளின் சில வகைகளாகும். + +வேதிவினைகள் பொதுவாக வேதிசமன்பாடுகளில் குறியீடுகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. அணுக்கரு வினைகள் அல்லாத வேதிவினைகளைக் குறிக்கும் சமன்பாடுகளில் இருபுறமும் ஒரே எண்ணிக்கை மற்றும் ஒரே வகையான அணுக்கள் சமமாக இருக்கும். அணுக்கரு வினைகளைப் பொருத்தவரை அணுக்கருவின் உட்புறத்தில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு மட்டுமே இது பொருந்தும். + +ஒரு வேதிவினையில் வேதிப்பிணைப்புகள் எவ்வாறு படிப்படியாக மறுசீரமைக்கப்படுகின்றன என்பதை ஓர் ஒழுங்குமுறையில் படிப்படியாக எடுத்துக்கூறுவது வினைவழிமுறையாகும். ஒரு வேதிவினையில் பல்வேறு விதமான படினிலைகள் காணப்படலாம். ஒவ்வொரு படினிலையும் வெவ்வேறு வினை வேகத்திலும் நிகழலாம். வினை நிகழும்போது பல்வேறுபட்ட வினை இடைநிலைகள் மாறுபடும் நிலைப்புத்தன்மை கொண்டவையாகவும் இருக்கலாம். வினைவழிமுறைகள் இத்தகைய வினை இயக்கவியலையும், வினையின் இறுதியில் கலப்பாக உருவாகும் வினைவிளை பொருள்களைப் பற்றியும் விளக்க முற்படுகின்றன. பல இயற்பியல் வேதியியலாளர்கள் இத்தகைய பல்வேறு வேதிவினைகளின் வினைவழிமுறைகளை விளக்கிக் கூறுவதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். பல அனுபவ விதிகள் இதற்காக உருவாக்கப்பட்டன. வேதிவினைகளின் வினைவழிமுறையை முன்மொழிய உட்வார்டு-ஆப்மான் விதிகள் நடைமுறைக்கு வந்தன. + +ஒருவகை வேதிப்பொருள் மற்றொரு வகை வேதிப்பொருளாக மாறும் செயல்முறையே வேதிவினை என்று ஐயுபிஏசி முறை வரையறுக்கிறது. இதன்படி வேதிவினை என்பது ஒரு தனிவினையாக நிகழலாம் அல்லது படிப்படியாக நிகழும் வினைகளாக இருக்கலாம். இவ்வரையறையுடன் கூடுதலாக மற்றொரு கருத்தும் சேர்க்கப்படுகிறது. அதாவது வினையின் விளைவாக நிகழும் இடைவினை மாற்றங்கள் சோதனை மூலம் உணரப்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற கருத்து வரையறையுடன் சேர்க்கப்பட்டது.இவ்வாறு உணரக்கூடிய வகையில் நிகழும் வேதிவினைகள் பொதுவாக வரையறையில் குறிப்பிட்டுள்ளவாறு மூலக்கூறுகளின் தொகுதிகள் வினையில் பங்கேற்பதை மட்டும் உறுதி செய்கின்றன. ஆனால் வேதிவினை என்ற சொல் நுண்ணோக்கியளவில் உணரக்கூடிய வேதிவினைகளுக்கும் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். + + + + + +விகிதவியல் + +வினைபடுபொருளுக்கும் விளைபொருளுக்கும் இருக்கும் அளவறி விகித பகுப்பாய்வு விகிதவியல் (Stoichiometry) ஆகும். விகிதவியல் அறுதி விகிதசம விதி, மடங்கு விகிதசம விதி ஆகிவற்றை அடிப்படையாக கொண்டது. + + + + +அறுதி விகிதசம விதி + +வேதியியலில், அறுதி விகிதசம விதி (Law of definite proportions), ஒரு வேதியியல் சேர்வையில் அடங்கியுள்ள தனிமங்களின் திணிவு விகிதம் எப்போதும் ஒரேயளவான விகிதத்தையே கொண்டிருக்கும் என்கிறது. இதையே மாறா விகிதசம விதி அல்லது புரூசுட்டின் விதி (Proust's Law) எனவும் அழைப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, நீர் என்பது ஒட்சிசனும், ஐதரசனும் சேர்ந்த ஒரு சேர்வை. திணிவின் அடிப்படையில் நீரில் உள்ள ஒட்சிசனின் பங்கு 8/9ம், ஐதரசனின் பங்கு 1/9ம் ஆகும். இவ்விதியின் படி நீரின் எந்தவொரு மாதிரியை எடுத்துக்கொண்டாலும், இந்தவிகிதம் எப்போதும் மாறாமல் இருக்கும். இவ்விதியும், பல் விகிதசம விதியும் சேர்ந்து "விகிதவியல்" (stoichiometry) என்னும் துறைக்கு அடிப்படையாக அமைகின்றன. + +1798 ஆம் ஆண்டுக்கும், 1804 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், பிரெஞ்சு வேதியியலாளரான யோசேப் புரூசுட்டு என்பவர் இதை முதன் முதலாகக் கவனித்தார். இக்கவனிப்பை அடிப்படையாகக் கொண்டு 1806 ஆம் ஆண்டில் இவ்விதியை உலகுக்கு வெளிப்படுத்தினார். + +தற்கால வேதியியலாளர்களுக்கு அறுதி விகிதசம விதி வேதியியற் சேர்வை என்பதன் வரைவிலக்கணத்தில் இயல்பாகவே பொதிந்திருக்கும் ஐயத்துக்கு இடமற்ற ஒன்றாகத் தோன்றும். ஆனால், வேதியியற் சேர்வை குறித்து முழுமையான விளக்கம் இல்லாதிருந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்விதி புதுமையானதாகவே இருந்தது. முன்மொழியப்பட்ட காலத்தில், இந்த விதி சர்ச்சைக்கு உரியதாக இருந்ததுடன், பல வேதியியலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, புரூசுட்டின் நாட்டுக்காரரான குளோட் லூயிசு பர்தோலே இவ்விதியை ஏற்றுக்கொள்ளாமல், தனிமங்கள் எந்த விகிதத்திலும் சேர முடியும் என்று கூறினார். இந்த விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில், தூய வேதியியல் சேர்வைகளுக்கும், கலவைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து அதிகம் தெளிவு இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. + +அறுதி விகிதசம விதி, 1803 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் முன்மொழியப்பட்ட அணுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்ததுடன், அணுக் கோட்பாட்டில் இருந்து தனக்கான உறுதியான கோட்பாட்டு அடிப்படையையும் பெற்றுக்கொண்டது. அணுக் கோட்பாடு, ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான அணுக்களால் ஆனவை என்றும், பல வகையான அணுக்கள் நிலையான நிலையான விகிதத்தில் சேர்ந்து சேர்வைகள் உருவாகின்றன என்றும் விளக்கியது. + +நவீன வேதியியலின் உருவாக்கத்தில் மிகப் பயனுள்ளதாக இருந்த போதிலும், அறுதி விகிதசம விதி, எல்லா வேளைகளிலும் உண்மையாக அமைவதில்லை. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் என்ற வகைச் சேர்வைகளில் தனிமங்கள் நிலையான விகிதங்களில் சேராமல், வேறுபட்ட விகிதங்களில் சேர்வதைக் காணலாம். எடுத்துக்கட்டாக, வூசுட்டைட்டு இரும்பு ஒட்சைட்டில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுடனும் 0.83 முதல் 0.95 வரையிலான விகிதங்களில் இரும்பு அணுக்கள் சேர்வதைக் காணலாம். இதன்படி, சேர்வையில் 23%க்கும் 25%க்கும் இடைப்பட்ட திணிவு விகிதங்களில் ஒட்சிசன் அளவு வேறுபடுகிறது. இரும்பு ஒட்சைட்டின் முறையான சூத்திரம் FeO, ஆனால், படிகவியல் வெற்றிடங்கள் இருப்பதனால், இது FeO என அமைகின்றது. இத்தகைய வேறுபாடுகளைக் கண்டறியக்கூடிய வகையில், புரூசுட்டின் அளத்தல் முறைகள் போதிய அளவு துல்லியமானவையாக இருக்கவில்லை. + +இத்துடன், எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைப் பொறுத்து, தனிமங்களில் சமதானிகளின் அளவு வேறுபடக்கூடும். இதனால், தூய விகிதவியல் சேர்வைகளிலும்கூடக் குறித்த தனிமங்களின் திணிவு விகிதங்கள் மாறுபடக்கூடும். + + + + + +கரிம வேதியியல் + +கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம் ("Organic Chemistry"), என்பது வேதியியலின் ஒரு துணைப் பகுதியாகும். இது கரிம ("Carbon") அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயல் ஆகும். நன்கு அறியப்பட்ட கரிமப் பொருள் மரக்கரி ஆகும். அச்சொல்லில் இருந்து கரிம வேதியியல் என்ற சொல் பாவனைக்கு (பயன்பாட்டிற்கு) வந்துள்ளது. + +கரிம வேதிப்பொருட்களின் அமைப்பு பற்றிய கல்வியானது நிறமாலையியலை பயன்படுத்தி இயற்பியல் மற்றும் வேதியியல் வழிமுறைகள் மூலம் கரிம சேர்மங்கள் மற்றும் கரிம வேதிப்பொருட்களின் கூட்டமைவு மற்றும் ஆக்க அமைவு ஆகியனவற்றை கண்டறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் இயல்புகள் பற்றிய கல்வியானது தூய்மையான நிலை, திரவ நிலை, கலவை நிலை மற்றும் தோற்ற நிலைகளிலுள்ள கரிம வேதிப்பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை கண்டறிதலோடு அதே முறைகளைப் பயன்படுத்தி அவை ஈடுபடும் வேதிவினைகளின் வலுவறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் வேதிவினைகள் பற்றிய கல்வியானது கோட்பாடுகளின் வழிநின்றும் ஆய்வகங்களில் செயற்கை முறைகளிலும் கரிம வேதிப்பொருட்களை தயாரிக்கும் முறைகள் பற்றியதாகும். + +கரிம வேதியியல் ஆய்வின் பரப்பு ஐதரோகார்பன்கள் தொடங்கி கார்பனை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அமைப்பில் பங்கேற்கும் பிற தனிமங்களைப் பற்றிய ஆய்வாகவும் நீள்கிறது. மேலும் கரிம வேதியியலானது மருத்துவ வேதியியல், உயிர் வேதியியல், கரிம உலோக வேதியியல், பல்படிமமீச்சேர்ம வேதியியல் மற்றும் பரந்துபட்ட பொருளறிவியலின் பல்வேறு பண்புக்கூறுகள் வரை விரிந்திருக்கிறது. + +கரிம கலவைகள் அனைத்தும் புவி வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகின்றன. அவை கட்டமைப்புரீதியில் பல்வேறு வகைப்பட்டனவாக மாறுபட்டு கிடக்கின்றன. கரிம கலவைகளின் பயன்பாடு மகத்தான வரம்புகளை கொண்டுள்ளது. அவை நெகிழி, மருந்து, கச்சா எண்ணெய், உணவு, வெடிபொருள், மற்றும் வண்ணப்பூச்சுகள் உட்பட பல முக்கியமான பொருட்களின் பகுதிப்பொருட்களாகவும் உள்ளன. + +பொதுவாக உயிர்விசைக் கொள்கையின் அடிப்படையில் உயிரினங்களில் இருந்து கொடையாகப் பெறப்பட்ட சேர்மங்கள் கனிம சேர்மங்களி��ிருந்து வேறுபட்டு நிற்கின்றன என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு வேதியியல் அறிஞர்களால் நம்பப்பட்டது. அதாவது உயிர்விசைக் கருத்துப்படி கரிமப் பொருள்கள் யாவும் உயிர்விசையின் கொடைகளாகும். பெர்சிலியஸ் என்ற விஞ்ஞானி கரிம சேர்மங்களைப் பற்றி விளக்க உயிர் செயல்முறை சார்ந்த இன்றியமையா உயிர்விசைக் கொள்கையை வெளியிட்டார். + +பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், கரிம சேர்மங்கள் தொடர்பான திட்டமிட்ட ஆய்வுகள் பற்றிய சில தகவல்கள் முதல் முறையாக வெளிவந்தன. சுமார் 1816 ஆம் ஆண்டில் மைக்கேல் செவ்ரியுல் என்ற விஞ்ஞானி பல்வேறு கொழுப்புகள் மற்றும் காரங்களால் செய்யப்பட்ட சோப்புகள் பற்றிய ஒரு ஆய்வைத் தொடங்கினார். காரங்கள் பல்வேறு வகையான அமிலங்களுடன் சேர்ந்து பல்வேறு வகையான சோப்புகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறிய அவர், உயிர்விசையின்றி கொழுப்புகளில் வேதிமாற்றத்தை ஏற்படுத்தி புதிய சேர்மங்களை உருவாக்க முடியும் என்று விளக்கமளித்தார். + +கரிமவேதியியல் என்ற சொல், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களிடமிருந்து பெறப்பட்ட சேர்மங்களையே குறிப்பதாக இருந்தது. தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சேர்மங்கள் கார்பன், ஐதரசன், ஆக்சிசன் – ஐயும் விலங்கினங்களிடமிருந்து பெறப்பட்ட சேர்மங்கள் கார்பன், ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன், கந்தகம், பாசுபரசு போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளன என்பதை வேதியியலின் தந்தை என்றழைக்கப்பட்ட லவாய்சியர் என்ற விஞ்ஞானி நிருபித்துக் காட்டினார். + +கி.பி 1828 ஆம் ஆண்டு ஹோலர் என்றழைக்கப்பட்ட விஞ்ஞானி, அம்மோனியம் சயனேட்டு எனும் கரிம சேர்மத்திலிருந்து முதன்முதலில் யூரியா எனும் கரிம சேர்மத்தை சோதனைச் சாலையிலேயே தயாரித்துக் காட்டினார். இக்கண்டுபிடிப்பு இன்றியமையா விசைக்கொள்கையை அர்த்தமற்றதாக்கி விட்டது. + +2KCNO + (NH)SO → 2NHCNO + KSO (அல்லது) + +Pb(NCO) + 2NHOH → Pb(OH) + 2NH(NCO) + +NH(NCO) → NHCONH + +1845 ஆம் ஆண்டு கோல்ப் என்றழைக்கப்பட்ட விஞ்ஞானி, சோதனைச்சாலையில் தனிமங்களிலிருந்தே அசிட்டிக் அமிலத்தை முதன் முதலாக தயாரித்தார். இக்கண்டுபிடிப்பு இன்றியமையா விசைக்கொள்கையை மேலும் அர்த்தமற்றதாக்கி விட்டது. + +கி.பி 1856 ஆம் ஆண்டில் வில்லியம் என்றி பெர்கின் என்பவர் குயினைன் உற்பத்தி செய்ய முயற்சிக்கும் போது, தற்செயலாக இப்போது பெர்கினின் மெல��லிய ஊதாநிறச்சாயம் என்று அழைக்கப்படும் கரிம சாயம் உற்பத்தியானது. இச்சாயம் தந்த பொருளாதார வெற்றியினால் கரிம வேதியியல் துறை கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகரித்தது. + +கி.பி.1858 ல் பிரெடெரிக் ஆகஸ்ட் கெக்கூலே மற்றும் ஆர்ச்சிபால்ட் ஸ்காட் கூப்பர் இருவரும் தனித்தனியாக ஆனால் ஒரே நேரத்தில் உருவாக்கிய இரசாயன அமைப்பு கருத்துதான் கரிம வேதியியலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. + +கரிம அணுவின் இணைதிறன் நான்காக இருப்பதால் ஒரு கரிம அணு மற்ற கரிம அணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி சங்கிலித்தொடர் கரிம அணுக்கோவையாக உருவாகிறது. மற்றும் பொருத்தமான இரசாயண வேதிவினைகளை நுணுகி விளக்க முற்படுவதன் மூலமாக அணுப்பிணைப்பு பற்றிய விரிவான வடிவங்களையும் உய்த்துணர முடியும் என்று இருவருமே பரிந்துரைத்தனர். + +ஜெர்மனியில், அசெடைல் சாலிசிலிக் அமிலம் (தற்பொழுது ஆஸ்பிரின் என்றழைக்கப்படுகிறது). உற்பத்தி பேயர் என்பவரால் தொடங்கப்பட்டு 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் மருந்து தொழில் தொடங்கியது. முதன் முதலாக கொடிய மேகநோய்க்கான ஆர்ச்பினாமின் என்ற மருந்து (வணிக பெயர் – சல்வார்சன்) திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. + +இதற்காக பால் எர்லிச் அவருடைய குழுவினருடன் இணைந்து அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் அமிலத்தின் (ஆடாக்சில்) எண்ணற்ற கிளைப்பொருட்களை ஆய்வு செய்தபோதிலும் சிறந்த செயல்திறன் மற்றும் நச்சுத்தன்மை பண்புகளைக் கொண்ட சேர்மத்தையே உற்பத்திக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டார். + +கரிம வினைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த ஆரம்பகால உதாரணங்கள் பெரும்பாலும் தற்செயல்களாகவே இருந்தன. கரிம சேர்மங்கள் தொடர்பான முறையான ஆய்வுகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கப்பட்டு இண்டிகோ (CHNO) என்ற நீலநிறச் சாயம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பின்னர் வளர்ச்சி கண்டது. 1897ல் தாவர மூலங்களிடமிருந்து பெறப்பட்ட இண்டிகோவின் அளவு 19000 டன்களிலிருந்து 1914-ல் 1000 டன்களாக குறைந்தது. இவ்வளர்ச்சி செயற்கை முறையில் இண்டிகோ தயாரித்த அடோல்ப் வோன் பேயரையே சார்ந்ததாகும். 2002 ஆம் ஆண்டில் சுமார் 17000 டன்கள் செயற்கை இண்டிகோ பெட்ரோ வேதிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. + +20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீச்சேர்மங்களும் உய���ர் வினையூக்கிகளும் மிகப்பெரிய கரிம மூலக்கூறுகளாக அறியப்பட்டன. பெட்ரோலியம் உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட கரிம சேர்மமாக கருதப்பட்டது. + +சிக்கலான கரிம சேர்மங்களை பலகட்ட இணைப்புகள் தொகுக்கும் செயற்கை முறையில் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்ற முறை மொத்த கூட்டிணைப்பு வினை என அழைக்கப்படுகிறது. சிக்கலான கரிம சேர்மங்களான குளுக்கோசு மற்றும் டெர்பினால் போன்ற சேர்மங்களைத் தொகுக்கும் மொத்த கூட்டிணைப்பு வினை கூடுதல் சிக்கலான கரிமச்சேர்மங்களை அடையாளம் காட்டியது. எடுத்துக்காட்டாக, கொழுப்பு சார்ந்த சேர்மங்களை மொத்த கூட்டிணைப்பு வினைக்கு உட்படுத்தும்போது மேலும் சிக்கல் நிறைந்த மனித ஹார்மோன்கள் மற்றும் அவற்றின் கிளைப்பொருட்களை தயாரிக்கும் செயற்கை உற்பத்தி முறைக்கான வழிகளைத் திறந்துவிட்டது. 20 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்த கூட்டிணைப்பு வினையின் தாக்கம் சிக்கலான லைசெரிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற உயர் சிக்கல் மூலக்கூறுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. + +மொத்த கூட்டிணைப்பு வினை மூலமாக வைட்டமின் பி12 ஐ தயாரித்தது கரிம வேதியியலின் மிகச் சிறந்த சாதனையாகும். + +பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதியியல் தொழில் வளர்ச்சியின் கண்டுபிடிப்பால் கரிம வேதியியல் துறை பெரிதும் வளர்ச்சி கண்டது. பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட கரிம சேர்மங்களை பல்வேறு ரசாயன முறைகள் மூலம் பிற வகையான கரிம சேர்மங்களாக மாற்றும்போதுதான் பெட்ரோலிய வேதியியல் தொழில் பிறந்தது. இத்தொழிற்சாலைகள் மூலமாக செயற்கை ரப்பர்கள், பல்வேறு கரிம பசைகள், பெட்ரோலியக் கூட்டுப் பொருள்கள், நெகிழிகள் முதலியன வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டன. + +உயிரினங்களிடமிருந்து கிடைக்கும் பெரும்பான்மையான வேதிப்பொருட்கள் உண்மையில் கரிமத்தின் கூட்டுப் பொருள்களேயாகும். ஆகவே கரிமவேதியியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமானவையாக உள்ளன. உயிர்வேதியியலின் சாரம்சம் கரிம வேதியியலின் ஒரு பிரிவாக கருதப்படுகிறது. + +சில நான்கு நூற்றாண்டுகள் உயிர் வேதியியியலின் வரலாறு வெளிச்சத்திற்கு வராமல் இருந்தபோதிலும் உயிர் வேதியியல் துறையின் அடிப்படை புரிதல்கள் மட்டுமே 19 ஆம் நூற்றாண்டின் பி��்பகுதியில் உருவாகத் தொடங்கியது. உயிர்வேதியியலின் உண்மையான கால வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் உயிர் வேதியியல் ஆய்வுகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. எந்தவிதமான் அறிகுறியும் இல்லாமல் தளர்வின்றி நிகழ்ந்த இந்த ஆய்வுகள் வேறுபடுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் சேவை செய்துகொண்டிருந்த அமைப்புகளால் சரி பார்க்கப்பட்டன. வாழ்க்கை அறிவியல் சார்ந்த தகவல் களஞ்சியம் ("BIOSIS Previews") என்ற அமைப்பும் வாழ்க்கை அறிவியல் சார்ந்த ஆதார நூற் பட்டியல் ("Biological abstracts") என்ற அமைப்பும் 1920 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டவையாகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தினசரி பயனர்கள் பயன் படுத்துமளவிற்கு நேரிடை மின்னணு தகவல் களஞ்சியமாக உயிர் வேதியியல் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. + +கரிம சேர்மங்கள் பெரும்பாலும் கலவைகளாகவே காணப்படுவதால் அவற்றின் தூய்மையை மதிப்பிட பல்வேறு வகையான பிரிகை நுட்பங்களும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக நிறவியல், உயர் செயல்திறன் திரவ நிறவியல் மற்றும் வாயு நிறவியல் ஆகியன முக்கியத்துவம் பெற்றிருந்தன. வடித்தல், படிகமாக்கல், வீழ்படிவாக்குதல், கரைப்பானில் இருந்து பிரித்தெடுத்தல் ஆகிய முறைகள் கரிமசேர்மங்களின் தூய்மையை மதிப்பிட உதவும் பாரம்பரிய முறைகளாக இருந்தன. + +கரிம சேர்மங்கள் பாரம்பரிய முறைகளின்படி பல்வேறு வகையான இரசாயண சோதனைகள் மூலம் பண்பாய்வு செய்யப்பட்டு வந்தாலும் அம்முறைகள் நாளடைவில் நிறமாலையியல் மற்றும் செறிவான கணிப்பொறி வழி ஆய்வு போன்ற முறைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தோராயமான பயன்பாட்டு ஒழுங்கின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள முதன்மையான ஆய்வு முறைகள் சில கீழே தரப்பட்டுள்ளன. + +பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமுறை இதுவாகும். அடிக்கடி உடன்தொடர்பு நிறமாலையியலைப் பயன்படுத்தி அணு இணைப்பு மற்றும் முப்பரிமாண வேதியியலை முழுமையாக வகுத்தளிப்பது இம்முறையின் நுட்பமாகும். இயல்பாகவே கரிம வேதியியல் உள்ளடக்கிய முக்கிய அணுக்களான ஐட்ரசன் மற்றும் கார்பன் அணுக்கள் அணுக்கரு காந்த ஒத்திசைவில் இயல்பாகவே H மற்றும் C ஐசோடோப்புகளுக்கு பதிலளிக்கின்றன. + +ஒரு மூலக்கூறின் அடிப்படை அமைப்பை தீர்மானிக்க பயன்படுத்தப்படுத்தப்படும் ஒரு அழித்தல் முறையாகும். உதாரணமாக தாதுப்பொருட்கள், இராசாயனக் கலவைகள் போன்றவற்றை அடிப்படை பகுப்பாய்வு செய்து அவற்றின் மூலங்கள் மற்றும் ஐசோடோப்புகளை கண்டறிய முயல்வது இம்முறையாகும். + +நிறை நிறமாலையியலானது ஒரு சேர்மத்தின் மூலக்கூறு எடையை அதன் மூலக்கூறு அமைப்பு அது துண்டாகும் வடிவங்கள் இவற்றின் அடிப்படையில் கூறுகிறது. உயர் தீர்மான நிறமாலையியல் பொதுவாக ஒரு சேர்மத்தின் சரியான சூத்திரத்தை அடையாளம் காட்டுகிறது. இம்முறை அடிப்படை பகுப்பாய்வு முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. முற்காலங்களில் நிறை நிறமாலையியலானது பெரும்பாலும் நடுநிலையான மூலக்கூறுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் மேம்பட்ட அயனி நுட்பங்கள் எந்த கரிம கலவையாக இருந்தாலும் பகுப்பாய்வு பெற அனுமதிக்கின்றன. + +படிகவியல் மூலக்கூறு வடிவியல் என்பது மூலக்கூறு வடிவியலை வேறுபாடு ஏதுமின்றி உறுதிபடுத்தும் ஒரு தெளிவான முறையாகும். பொருளின் ஒற்றை படிகமாவது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதும், அந்த படிகம் உறுதிப்படுத்த வேண்டிய பொருளுக்கு உருமாதியாகவும் இருக்கவேண்டும் என்பதே இதற்குத் தேவையான ஒரே நிபந்தனையாகும். மிகை தானியங்கி மென்பொருள் பொருத்தமான படிகத்தின் வடிவத்தை ஒருமணி நேரத்திற்குள் தீர்மானிக்கிறது. + +அகச்சிவப்பு நிறமாலை, ஒளியியல் சுழற்சி, புறஊதாக் கதிர் காட்சி நிறமாலை போன்ற பாரம்பரிய நிறமாலையியல் முறைகள் ஒப்பீட்டளவில் குறிப்பிடப்படாத கட்டமைப்பு தகவல்களை வழங்குகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட வகுப்பு சேர்மங்களுக்கான முறையாக பயன்பாட்டில் உள்ளது. + +பொதுவாக கரிம சேர்மங்களின் இயற்பியற் பண்புகள் அவற்றின் அளவு மற்றும் பண்பியல் அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கியிருக்கும். உருகுநிலை, கொதிநிலை, மற்றும் ஒளிவிலகல் எண் ஆகிய கூறுகள் அளவு சார்ந்த பண்புகளிலும் நிறம், மணம், கரைதிறன் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கூறுகள் பண்பியல் சார்ந்த பண்புகளிலும் அடங்கும். + +பெரும்பாலான கனிம சேர்மங்களுக்கு மாறாக கரிம சேர்மங்கள் பல உருகுகின்றவையாகவும் பல கொதிக்கின்றவையாகவும் உள்ளன. முந்தைய காலங்களில், உருகுநிலை (MP) மற்றும் கொதிநிலை (BP) ஆகிய பண்புகள் கரிம சேர்மங்களின் தூய்மை மற்றும் அடையாளம் குறித்த முக்��ியமான தகவல்களை வழங்கின. உருகுநிலையும் கொதிநிலையும் மூலக்கூறு எடை மற்றும் காந்தசக்தியுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்தன. ஒத்த பரிமாணமுள்ள சில் கரிம சேர்மங்கள் பதங்கமாகின்றன. அதாவது அவை உருகாமல் நேரடியாக வாயு நிலைக்குச் சென்று விடுகின்ற்ன. துர்நாற்றம் வீசக்கூடிய பாரா டைகுளோரோ பென்சீன் பதங்கமாதலுக்கு சரியான ஓர் உதாரணமாகும். பொதுவாக சில கரிம சேர்மங்கள் தவிர மற்றவை 300 பாகை செல்சியசுக்கு மேல் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. + +நடுநிலைமையான கரிம சேர்மங்கள் கரிம கரைப்பான்களை விட தண்ணீரில் குறைவாகக் கரையக்கூடியனவாக உள்ளன. அயனியாகும் தொகுதிகளைக் கொண்ட கரிம சேர்மங்கள மற்றும் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஆல்ககால்கள், அமைன்கள், நீரகப் பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய கார்பாக்சிலிக் அமிலங்கள் போன்றவை விதிவிலக்குகளாகும். கரிம சேர்மங்கள் கரிம கரைப்பான்களில் நன்றாக கரைகின்றன. தூய்மையான ஈதர் அல்லது ஈத்தைல் ஆல்ககால் அல்லது பெட்ரோலியம் ஈதர் மற்றும் வெள்ளைச்சாராயம் போன்ற மெழுகு வகை கலவை கரைப்பான்கள் அல்லது தூய அல்லது கலப்பட நறுமண கரைப்பான்கள் போன்றவை அக்கரைப்பான்களுக்கு உதாரணங்களாகும். கரிம சேர்மங்களின் கரைதிறன் அவை கரையக்கூடிய கரைப்பான்களின் தன்மையைப் பொருத்தும் அசிசேர்மத்துடன் இணைந்துள்ள செயல்படும் தொகுதிகளைப் பொருத்தும் அமைகிறது. + +படிக மூலக்கூறுகள் மற்றும் கரிம பாலிமர்கள் போன்ற இணைக்கப்பட்ட அணுக்கூட்டுகளின் பயன்பாட்டில் பல்வேறு சிறப்புப் பண்புகள் கரிம சேர்மங்களிடம் காணப்படுகின்றன. உதாரணமாக நீர்ம இயந்திரவியல் மற்றும் மின்னணு இயந்திரவியலில் அமுக்க மின்சாரம், மின் கடத்தல் மற்றும் மின்னணு ஒளியியல் போன்ற பண்புகள் சிறப்புப் பண்புகளாக உள்ளன. வரலாற்று காரணங்களுக்காக பிரதானமாக பாலிமர் விஞ்ஞானம் மற்றும் பொருளியல் விஞ்ஞானம் போன்ற பகுதிகளில் இப்பண்புகள் காணப்பட்டன. + +இக்காலங்களில், கரிம வேதியியல் என்பது கார்பன் சேர்மங்களின் வேதியியல் என்றும் ஐதரோகார்பன்களும் அவற்றின் வழி பெறுதிகளுடைய வேதியியல் என்றும் வரையறுக்கப்படுகிறது. கரிம சேர்மங்கள், கனிம சேர்மங்களைப் போன்றே, வேதியியலின் அடிப்படை விதிகளுக்கு ஒத்துப் போகின்றன. எனினும் கரிம வேதியியல் ஒர�� தனி வேதியியல் பகுதியாகக் கருதப்படுவதற்குக் காரணம்: + +காபனின் (கரிமம்) வலுவளவு நான்கு ஆகும். எனவே காபன் ஏனைய மூலகங்களிலும் (தனிமங்கள்) பார்க்க அதிக பிணைப்புக்களை உருவாக்க முடியும். மேலும் காபன் ஏனைய மூலகங்களுடன் சேர்ந்து உருவாக்கும் பிணைப்புக்களின் பிணைப்புச் சக்தியும் குறைவாகும். இதன் காரணமாக காபன் இயற்கையில் அதிக சேர்வைகளை உருவாக்குகிறது. + +கரிம சேர்மங்கள் சில விதிகளின் அடிப்படையிலோ அல்லது பாரம்பரியமாக அழைக்கப்படும் பல்வேறு மரபுகளை பின்பற்றி புழக்கத்தில் உள்ள பெயர்களால் பெயரிடப்படுகின்றன. அடிப்படை மற்றும் ப்யன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் (IUPAC) கரிம சேர்மங்களை பெயரிடுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. முறையான அபவேபச – தின் (அடிப்படை மற்றும் ப்யன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் பெயரிடுதல் தெளிவாகக் காணப்படும் மூலக்கூறுகளின் அமைப்பியல் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. இந்த அடிப்படை சொல் பின்னர் பின்னொட்டு, முன்னொட்டு மற்றும் எண்களால் திருத்தம் செய்யப்பட்டு ஐயத்திற்கிடமின்றி சேர்மத்தின் மூலக்கூறு அமைப்பை விளக்குகிறது. அபவேபச – தின் கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் பல இலட்சக்கணக்கான எளிய கரிம சேர்மங்களின் பெயர்கள் அறியப்படுகின்றன. சிக்கலான கரிம சேர்மங்களின் அபவேபச – தின் பெயரிடுதல் சிக்கலாகவே உள்ளது. முறையான பெயரிடும் முறையை உப்யோகித்து ஒரு சேர்மத்திற்கு பெயரிட ஒருவர் அச்சேர்மத்தின் மரபுசார் கட்டமைப்பின் பெயர், மூலக்கூறு அமைப்பு ஆகியனவற்றை அறிந்து கொள்ளவேண்டும். மரபுசார் கட்டமைப்பு என்பது பதிலிடப்படாத ஐதரோ கார்பன்கள், பல்லின வளைய சேர்மங்கள், ஒற்றை செயல்படு தொகுதிகள் அமைந்த சேர்மங்கள் ஆகியன்வற்றை உள்ளடக்கியதாகும். +மரபுசர்ந்த புழக்கத்தில் உள்ள பெயர்கள் எளிமையானதாகவும் திரிபுகளின்றியும் குறைந்த பட்சமாக வேதியியலார்க்கு மட்டும் பயன்படுவதாக இருந்தது. இப்பெயர்கள் சேர்மங்களின் மூலக்கூறு அமைப்பை சுட்டிக்காட்டவில்லை. மேலும் இப்பெயர்கள் சிக்கலான கூட்டமைப்பு சேர்மங்களுக்கு பொதுப் பெயர்களையே வழங்கின. நாளடைவில் கணிப்பொறிகளின் தாக்கத்தால் புதிய பெயரிடும் முறைகள் பழக்கத்திற்கு வந்தன. + +கரிம மூலக்கூறுகள் பொதுவாக வரைபடங்கள் அல��லது வேதியியல் குறியீடுகளின் இணைப்பிலான கட்டமைப்பு வாய்ப்பாடுகள் மூலம் விவரிக்கப்படுகின்றன.குறிப்பாக வரி கோண வாய்ப்பாடுகள் எளிமையாகவும் அய்யமின்றி தெளிவாகவும் காணப்படுகின்றன. இம்முறையில் ஒவ்வொரு வரிசையின் இறுதி மற்றும் வரிசை சந்திப்புகளில் ஒரு கார்பன் மற்றும் ஒரு நீரகம் அணுக்கள் வெளிப்படையாக அல்லது கார்பனின் நான்கு இணைதிறனை நிறைவு செய்யும் விதத்தில் மறைமுகமாக காணப்படுகின்றன. மூலக்கூறு வரைபடங்கள் கொண்டு கரிம சேர்மங்களை விவரிப்பது மிகவும் எளிமையாகும். கிட்டத்தட்ட அனைத்து கரிம சேர்மங்களிலும் கார்பன் நான்கு பிணைப்புகள், நைட்ரஜன் மூன்று பிணைப்புகள், ஆக்சிஜன், இரண்டு பிணைப்புகள் மற்றும் ஹைட்ரஜன் ஒரு பிணைப்பையும் பெற்றுள்ளது என்ற உண்மையை எளிதாக உணரலாம். + +கரிம வேதியியலில் மூலக்கூறு கட்டமைப்புகளை வடிவமைப்பதும் சேர்மத்தின் பண்புகளை முன்கூட்டியே கணிக்கவும் உதவுவது அச்சேர்மத்துடன் இணைந்துள்ள செயல்படு தொகுதிகளேயாகும். ஒரு செயல்படு தொகுதி என்பது ஒரு சிறிய கட்டமைப்பு அலகு ஆகும். இந்த சிறிய அலகின் வேதிவினை பல்வேறு வகயான சேர்மங்களிலும் மாறாமல் இருக்கும் என சில வரையறைக்குட்பட்டு முன்கூட்டியே அனுமானிக்கலாம். இச்செயல்படு தொகுதிகள் கரிம சேர்மங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மூலக்கூறுகள் செயல்படு தொகுதிகளின் அடிப்படையிலேயே வகைப் படுத்தப்படுகின்றன. உதாரணமாக எல்லா ஆல்ககால்களும் C – O – H என்ற கிளை அலகைப் பெற்றுள்ளன. இச்செயல்படு தொகுதியின் மூலம் எல்லா ஆல்ககால்களும் கிட்டத்தட்ட நீர்மைத்தன்மை கொண்டிருக்கும். எல்லா ஆல்ககால்களும் எஸ்டர்களை உருவாக்கும். எல்லா ஆல்ககால்களிலிருந்தும் அதேவரிசை ஆலைடுகளை உருவாக்கலாம். பெரும்பாலான செயல்படு தொகுதிகள் கார்பன், ஐதரசன் தவிர்த்த பல அணுக்களால் ஆகியுள்ளன. கரிம வேதியியலில் கரிம சேர்மங்கள், செயல்படு தொகுதிகளின் அடிப்படையிலேயே வகைபடுத்தப்படுகின்றன. கீழே செயல்படு தொகுதிகளின் வாய்பாடுகளும் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. + +1. ஆல்கைல் ஆலைடு – X + +2. ஆல்ககால் – OH + +3. ஈதர் – O – + +4. ஆல்டிகைடு – CHO + +5. நைட்ரோ சேர்மம் – NO2 + +6. கீட்டோன் – C = O + +7. கார்பாக்சிலிக் அமிலம் – COOH + +8. எச்டர் – COOR + +9. அமைடு O = C-NH2 + +11. அமில நீரிலி O = C – O – C = O + +12. அமீன் – NH2 + +கரிம சேர்மங்கள் அல்லது சேதனச் சேர்வைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். அவையாவன: + +இவ்வகை சேர்மங்களில் கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ அல்லது கிளை சங்கிலித்தொடர் அமைப்பிலோ நீண்ட சங்கிலியைக் கொண்டிருக்கும்.இவை மூடிய அமைப்பில்லாத திறந்த அமைப்பைக் கொண்டுள்ள கரிம சேர்மங்களாகும். கிரேக்க மொழியில் அலிபாட் என்றால் கொழுப்பு என்பது பொருளாகும். அலிபாட்டிக் சேர்மங்கள் மேலும் நிறைவுற்றவை (ஆல்கேன்கள்)என்றும்,நிறைவுறாதவை (ஆல்கீன்கள்,ஆல்கைன்கள்) எனவும் அலிசைக்ளிக் (வளைய ஆல்கேனகள்), எனவும் பகுக்கப்பட்டுள்ளன. + +கார்பன் அணுக்களுக்கிடையில் ஒற்றைப் பிணைப்பை மாத்திரம் கொண்ட சேர்வைகள் அல்கேன்களாகும். + +காபன் அணுக்களிடையே இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கீன்களாகும். + +காபன் அணுக்களிடையே மும்மைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கைன்களாகும். + +பென்சீன் வளையத்தைக் கொண்ட சேதனச் சேர்வைகளாகும் + +சேதனச் சேர்வையொன்றின் விஷேட இயல்புகள் மற்றும் தாக்கங்களுக்குப் பொறுப்பான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் தொழிற்பாட்டுக் கூட்டங்கள் எனப்படும். + +பின்வரும் அட்டவணை சில பிரதான சேதனச் சேர்வைகளின் விபரங்களைத் தருகிறது. + + + + +மரபியல் தலைப்புகள் பட்டியல் + + + + + + + + + + + + + + + + + + + +அக்டோபர் 2005 + + + + +படியெடுப்பு + +உயிரியலில் படியெடுப்பு (Cloning) என்பது மரபியல் ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் (இழையங்கள்), உயிரினங்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறையாகும். இயற்கையில் பாக்டீரியாக்களிலும், சில பூச்சிகள், தாவரங்களில், கலவியற்ற இனப்பெருக்கம் நிகழும்போதும் இவ்வகையான இனப்பெருக்கமே நிகழ்கின்றது. உயிரித் தொழில்நுட்பத்தில் படியெடுப்பு என்பது மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்படலாம். + +கலவிமுறை இனப்பெருக்கத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கலவியின் போது இணைவதால் உருவாகும் தனிக்கலமே பின்னர் பிரிவடைந்து செல்வதனால் பெருக்கமடைந்து முழு உயிராக பிரசவமாகிறது. இது விலங்குகளின் பொதுவான இயற்கை கருத்தரிப்பு ஆகும். இவ்வாறான கருத்தரிப்பின் போது தாயினதும் தந்தையினதும் இணைந்த குணங்களும் தோற்றங்களும் மரபு வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறது. + +படியெடுப்பு இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும். + +கருப்பையில் உருவாகும் முதல் நுகக்கலமே பின்னர் ஒன்றையொன்று முற்றிலும் ஒத்த இயல்புடைய உயிர்க்கலங்களை இனப்பெருக்கம் செய்கிறது. இச்செயற்பாடு கருப்பை, பிரசவம் என தொடங்கி மரணம் வரையும் பயணிக்கிறது. உதாரணத்திற்கு கிள்ளி எடுக்கப்படும் நுண்ணிய சதையில் உள்ள ஆயிரக்கணக்கான உயிர்க்கலங்களில் ஒன்றை ஆராய்ச்சிக்குட்படுத்தும் போது அது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்து உருவான முதல் நுகக்கலத்தை முற்றிலும் ஒத்திருப்பதை காணலாம். இவ்வாறு ஒவ்வொரு உயிர்க்கலமும் நுகக்கலத்தின் அனைத்து இயல்புகளையும் கொண்டிருந்தாலும் அவைகள் வெவ்வேறு தொழில்களை செய்யுமாறே இசைவாக்கமடைந்துள்ளன. மாற்றமாக ஒரு தொகுதியிலுள்ள உயிர்க்கலம் அடுத்த தொகுதியிலுள்ள வேலைகளை செய்வதில்லை. (குடற்கலங்கள் நாவுக்கலங்களின் வேலைகளை செய்வதில்லை) + +உடலின் ஏதேனுமோர் பகுதியில் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் உயிர்க்கலமொன்றை தூண்டலுக்குள்ளாக்கி மீண்டும் நுகக்கலமாக மாற்ற முடியும் என்பதுவே படியமுறை இனப்பெருக்கத்தின் அடிப்படை. அதாவது "X என்ற நபரின் ஏதேனும் பகுதியிலிருந்து பெறும் நுண்ணிய சதையிலிருந்து (கலத்திலிருந்து) இன்னுமொரு X என்ற நபரை உருவாக்கலாம்" என்ற கருதுகோளிலேயே ஆராய்ச்சிகளை விஞ்ஞானம் மேற்கொண்டு வந்தாலும் இன்னுமும் இந்த அடிப்படை முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. + +படியமுறை இனப்பெருக்கத்தின் வெற்றியாக தற்போது அறியப்படுவது,ஒரு உயிரினத்தின் உடலிலிருந்து நுகக்கலத்தின் தொழில்களை செய்வதற்கு இசைவாக்கமடந்த உயிர்க்கலமொன்றை சிறப்பாக தேட���ப்பெற்று அதன் கருவை (பரம்பரை தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள இடம்.) நீக்கி சாதாரண உயிர்க்கலமொன்றின் கருவை அதனுள் செலுத்தி கருவறையினுள் வளரச்செயும் முறையே ஆகும்.(தொடரும் காலங்களில் அடிப்படை அனுமானத்தில் வெற்றி ஏற்படலாம்.) + +பெண் செம்மறியாடொன்றின் நுகக்கலத்தை ஒத்த கலமொன்று அதன் சினை முட்டைக் கூட்டத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அதன் கரு நீக்கப்பட்டு உடலின் வேறோர் பகுதியிலிருந்து பெறப்பட்ட உயிர்க்கலமொன்றின் கரு அதனுள் செலுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நுகக்கலம் அதே செம்மறியாட்டின் கருவறைக்குள்ளேயே வளர்க்கப்பட்டது. இதனால் ஆணின் துணை இல்லாமல் 100 வீதமும் தாயை ஒத்த உயிரின் உருவாக்கம் சாத்தியமானதை விஞ்ஞான உலகம் நிரூபித்துக்காட்டியது. + +படியெடு உயிரித்தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது. + + + + + + +நீர்கொழும்பு + +நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது "மீகமுவ" என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமாண நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. + +நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்கள் இதற்கு அடுத்தாக பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர். + + + + +ஆத்திசூடி + +ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி. + +தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல��, இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திச் சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். + + +ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
+ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. + +1.அறம் செய விரும்பு +2. ஆறுவது சினம் +3. இயல்வது கரவேல் +4. ஈவது விலக்கேல் +5.உடையது விளம்பேல் +6. ஊக்கமது கைவிடேல் +7. எண் எழுத்து இகழேல் +8. ஏற்பது இகழ்ச்சி +9. ஐயம் இட்டு உண் +10. ஒப்புரவு ஒழுகு +11. ஓதுவது ஒழியேல் +12. ஔவியம் பேசேல் +13.அஃகஞ் சுருக்கேல் + +14.கண்டொன்று சொல்லேல். + +15.ஙப் போல் வளை. +16.சனி நீராடு. +17.ஞயம்பட உரை. + +18.இடம்பட வீடு எடேல். + +19.இணக்கம் அறிந்து இணங்கு. + +20.தந்தை தாய்ப் பேண். + +21.நன்றி மறவேல். + +22.பருவத்தே பயிர் செய். + +23.மண் பறித்து உண்ணேல். + +24.இயல்பு அலாதன செய்யேல். + +25.அரவம் ஆட்டேல். + +26.இலவம் பஞ்சில் துயில். + +27.வஞ்சகம் பேசேல். + +28.அழகு அலாதன செய்யேல். + +29.இளமையில் கல். + +30.அறனை மறவேல். + +31.அனந்தல் ஆடேல். + +32.கடிவது மற + +33.காப்பது விரதம் + +34.கிழமை பட வாழ் + +35. கீழ்மை யகற்று + +36. குணமது கைவிடேல் + +37. கூடிப் பிரியேல் + +38. கெடுப்ப தொழி + +39. கேள்வி முயல் + +40. கைவினை கரவேல் + +41. கொள்ளை விரும்பேல் + +42. கோதாட் டொழி + +43.கௌவை அகற்று + +44. சக்கர நெறி நில் + +45.சான்றோ ரினத்திரு + +46. சித்திரம் பேசேல் + +47. சீர்மை மறவேல் + +48. சுளிக்கச் சொல்லேல் + +49. சூது விரும்பேல் + +50. செய்வன திருந்தச் செய் + +51.சேரிடமறிந்து சேர் + +52. சையெனத் திரியேல் + +53. சொற்சோர்வு படேல் + +54. சோம்பித் திரியேல் + +55. தக்கோ னெனத்திரி + +56. தானமது விரும்பு + +57. திருமாலுக்கு அடிமை செய் + +58. தீவினை யகற்று + +59.துன்பத்திற் கிடங்கொடேல் + +60. தூக்கி வினைசெய் + +61. தெய்வ மிகழேல் + +62. தேசத்தோ டொத்துவாழ் + +63. தையல்சொல் கேளேல் + +64. தொன்மை மறவேல் + +65. தோற்பன தொடரேல் + +66. நன்மை கடைப்பிடி + +67. நாடொப் பனசெய் + +68. நிலையிற் பிரியேல் + +69. நீர்விளை யாடேல் + +70. நுண்மை நுகரேல் + +71. நூல்பல கல் + +72.நெற்பயிர் விளை + +73. நேர்பட வொழுகு + +74. நைவினை நணுகேல் + +75. நொய்ய வுரையேல் + +76. நோய்க்கிடங் கொடேல் + +77. பழிப்பன பகரேல் + +78. பாம்பொடு பழகேல் + +79. பிழைபடச் சொல்லேல் + +80. பீடு பெறநில் + +81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் + +82. பூமி திருத்தியுண் + +83. பெரியாரைத் துணைக்கொள் + +84. பேதைமை யகற்று + +85. பையலோ டிணங்கேல் + +86. பொருடனைப் போற்றிவாழ் + +87. போர்��்தொழில் புரியேல் + +88. மனந்தடு மாறேல் + +89. மாற்றானுக் கிடங்கொடேல் + +90. மிகைபடச் சொல்லேல் + +91. மீதூண் விரும்பேல் + +92. முனைமுகத்து நில்லேல் + +93. மூர்க்கரோ டிணங்கேல் + +94. மெல்லினல்லாள் தோள்சேர் + +95. மேன்மக்கள் சொற்கேள் + +96. மைவிழியார் மனையகல் + +97. மொழிவ தறமொழி + +98.மோகத்தை முனி + +99. வல்லமை பேசேல் + +100. வாதுமுற் கூறேல் + +101. வித்தை விரும்பு + +102. வீடு பெறநில் + +103. உத்தமனாய் இரு + +104. ஊருடன் கூடிவாழ் + +105. வெட்டெனப் பேசேல் + +106. வேண்டி வினைசெயேல் + +107. வைகறை துயிலெழு + +108. ஒன்னாரைத் தேறேல் + +109. ஓரஞ் சொல்லேல் + + + + +
+ +கிண்டி + +கிண்டி தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் "ராஜ்பவன்" உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம் - சென்னை கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது + + + + + + +காந்தி நகர் (திருவண்ணாமலை) + +காந்திநகர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். + + + + +சண்டிகர் + +"சண்டிகர்" இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது. + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சண்டிகரின் மொத்த மக்கள் தொகை 1,055,450 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.75% மக்களும், நகரப்புறங்களில் 97.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 580,663 ஆண்களும் மற்றும் 474,787 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 818 வீதம் உள்ளனர். 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சண்டிகரில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 9,258 மக்கள் வாழ்கின்றனர். சண்டிகரின் சராசரி படிப்பறிவு 86.05 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.99 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.19 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 119,434 ஆக உள்ளது. +சண்டிகரில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 852,574 (80.78 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 51,447 (4.87 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 8,720 (0.83 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 138,329 (13.11 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 1,960 (0.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,160 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 246 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,014 (0.10 %) ஆகவும் உள்ளது. + +சண்டிகரின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. + +1465 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 2 சண்டிகர் நகரத்தை புதுதில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களுடன் இணைக்கிறது. 323 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 21 சண்டிகர் நகரை இமாச்சலப் பிரதேசத்தின் மலைவாழிட நகரான மணாலியை, சிம்லா வழியாக இணைக்கிறது. 225 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 95 பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் நகரத்துடன் இணைக்கிறது. + +சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து புதுதில்லி, சென்னை, மதுரை , கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சிம்லா, அமிர்தசரஸ், ஜம்மு போன்ற அனைத்து முக்கிய நகரங்களை சண்டிகர் நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. +சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும், பன்னாட்டு நகரங்களுடனும் வானூர்திகள் மூலம் வான் வழியாக இணைக்கிறது. + +பாறைச் சிற்பத் தோட்டம், சாகீர் உசேன் ரோசாத் தோட்டம் மற்றும் +காந்தி பவன் + +அமிர்தசரஸ், வாகா, வாகா எல்லைச் சடங்கு மற்றும் பிஞ்சூர் தோட்டம் + + + + +ஒன்றியப் பகுதி (இந்தியா) + +ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் ("Union Territory") என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன. + +அவையாவன: + +இவற்றில் புதுச்சேரி மற்றும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிகள் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசுத் தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுள் சில சட்டம் இயற்றுவதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. + + + + +குறியியல் + +குறியியல் (Semiotics) என்பது குறிகள் பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது குறிகளின் பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது (transmit) என்றும், எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பது பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். உலகிலுள்ள சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் எவ்வாறு தமக்கேயுரிய குறியீடுகள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றுக்குத் தம்மை இசைவாக்கம் செய்து கொள்கின்றன என்பது பற்றியும் சில சமயம் குறியியலாளர்கள் அறிந்துகொள்ள முயல்கிறார்கள். + +குறியியலாளர்கள், குறிகளையும் (signs), குறி முறைமைகளையும் (sign systems), அவை தொடர்பான பொருள் (meaning) எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து வகைப்படுத்துகிறார்கள். இந்தக் குறிகளின் பொருள் காவிச்செல்லப்படும் வழிமுறையானது, தனிச் சத்தங்கள், அல்லது சொற்களை உருவாக்கப் பயன்படும் எழுத்துக்கள், உணர்வுகளை அல்லது மனப்போக்கை வெளிப்படுத்தும் உடலசைவுகள், சிலசமயங்களில் உடுக்கும் உடை என்பவை போன்ற குறியீடுகளில் (codes) தங்கியுள்ளது. ஏதாவது "ஒன்றை"க் குறிக்கும் ஒரு சொல்லை உருவாக்குவதற்கு, ஒரு [[சமுதாயம்] தங்கள் மொழியிலுள்ள அதன் எளிமையான பொ���ுள் விளக்கம் தொடர்பாகப் பொதுவான கருத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான சொல், குறிப்பிட்ட மொழியின் [[இலக்கணம்|இலக்கண]] அமைப்பு மற்றும் குறியீட்டு வரம்புகளுக்கு உட்பட்டே பொருள் விளக்கத்தைக் கொடுக்கின்றன. குறியீடுகள் (codes), பண்பாடொன்றின் விழுமியங்களை குறித்து நிற்பதுடன், வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும், பல வகையான உட்பொருள்களையும் கொடுக்க வல்லவையான உள்ளன. +குறியியலும், [[தகவல் தொடர்பு]]தொடர்புத் துறையும் (communication) பல அடிப்படைக் கருத்துருக்களைப் பொதுவாகக் கொண்டுள்ளதுடன் அவற்றின் ஆய்வுப் பரப்பும் பல இடங்களில் ஒன்றுடனொன்று பொருந்தி வரையறுக்கப்படாமல் உள்ளது. எனினும், குறியியல், "தொடர்பு" என்ற அம்சத்தைவிட குறிகளின் தனிச்சிறப்பாக்கம் என்பதற்குக் கூடிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொடர்புத் துறையிலிருந்து வேறுபடுகின்றது. + +குறியியலானது [[மொழியியல்|மொழியியலுடன்]] எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு துறைகளும் ஒரேயிடத்திலிருந்தே ஆரம்பிக்கின்ற போதும், குறியியல், அனுபவம் சார்ந்த முறையில் ஆய்வை விரிவாகக் கையாண்டு, மொழியியல் சார்ந்த அம்சங்களையும், மொழியியல் சாராத அம்சங்களையும் இணைத்துப் பார்க்க முயல்கிறது. மனிதர்கள் மொழியைச் சமுதாயச் சூழலில் மட்டுமே விளங்கிக் கொள்வதனால், இம்முறையில் ஆய்வு முடிவுகள் கூடிய அளவு பொருத்தமாக அமையும். தூய மொழியியலில் ஆய்வாளர்கள், மொழியைக் கூறுகளாகப் பிரித்து அதன் பயன்பாடு பற்றி ஆராய்கிறார்கள். ஆனால் உலக நடப்பில், மனிதர்களுக்கிடையேயான தொடர்பு நடவடிக்கைகளில், [[மொழி] மற்றும் குறி அடைப்படையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்பில் குழப்பமான தெளிவின்மை காணப்படுகிறது. இது பற்றியும் குறியியலாளர்கள் பகுப்பாய்வு செய்து அவை தொடர்பான விதிகளைக் காணவும் முயல்கிறார்கள். + ++ அ. பழனிசாமி (தமிழ்த்திரைப்படங்களில் குறியியல்:1998) +முனைவர் அ.பழனிசாமி - தமிழ்த்திரைப் படங்களில் குறியியல், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு + + +[[பகுப்பு:மொழியியல்]] + + + +நாவாந்துறை + +நாவாந்துறை என்பது இலங்கையின், யாழ்ப்பாண நகருக்குள் அடங்கிய ஒரு இடமாகும். இது யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசையில் கடற்கர��� ஓரமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும் உள்ளது. "நாவாந்துறை" என்ற பெயர் நாவாய், துறை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையில் தோன்றியது. நாவாய் என்பது ஒரு வகைக் கடற் கலம். நாவாய்கள் கரைக்கு வந்து செல்லும் சிறிய துறைமுகமாக இருந்த காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் பலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். + + + + +பனங்கூடல் + +ஒரு நிலப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் கூட்டமாக அமைந்திருக்கும்போது அந்த இடம் பனங்கூடல் எனப்படுகிறது. இச் சொல் "பனை", "கூடல்" என்னும் இரண்டு சொற்களின் கூட்டுச் சொல். பனைகள், தென்னை மற்றும் பழ மரங்களைப் போல் நட்டு, நீரூற்றி வளர்க்கப்படுவதில்லை. பனைகள் மரத்திலிருந்து விழும் பனம்பழங்களின் விதைகளில் இருந்து தானாகவே முளைத்து வளர்கின்றன. எனவே பனங்கூடல்கள் தானாகவே உருவானவையாகும். + + + + + +தாவரம் + +தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை "நிலைத்திணை" என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் ("ferns"), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள். + +இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. +இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. + +மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்சிசன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்றத் துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம். + +உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன. + + +தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன: + + +தாவரங்களுக்கான பெயரிடல், கீழ்கண்ட அமைப்புகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. + + +தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன. கலச்சுவர், பச்சையவுருமணி, பெரிய புன்வெற்றிடம் ஆகியன தாவரக்கலங்களின் சிறப்பம்சங்களாகும். + + + + + +உண்மையான இயேசு தேவாலயம் + +உண்மையான இயேசு தேவாலயம் ஒரு "சுதந்திர புரட்சி கிறிஸ்தவ திருசபை" ஆகும். இச்சபையில் கிறிஸ்துமஸ், உயிர்த்த ஞாயிறு போன்றவை கொண்டாடப்படுவதில்லை. திரித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக ஒரேகடவுள் என்பதை பின்பற்றுகின்றன. இச்சபை சீனாவில் உள்ள பீஜிங்கில் 1917ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இத்தேவாலயமானது இந்தியாவில் முதன் முதலாக 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் கிளைகள் தமிழ்நாட்டின் அம்பத்தூர், செங்கல்பட்டு, பம்மல், திருவொற்றியூர், திருநெல்வேலி, திருநீலை, ஓட்டேரி மற்றும் பண்டுவன்சேரி போன்ற இடங்களில் அமைந்துள்ளன. + +நாபட உரைத்து பரிசுத்த ஆவியை ஏற்போமாயின், அதுவே ந���ம் தேவ இராச்சியத்தின் முழு அருளினை பெறுவதற்கான வழிசெய்யும். + +திருமுழுக்கு எனும் சடங்கு, பாவங்களை கழுவி மறுபிறவியளிப்பதாகும். இயற்கையாக அமைந்த நீர்நிலையான ஆறு, கடல் அல்லது ஏரி போன்ற ஒன்றில் திருமுழுக்கு கொடுக்கப்படும். + +ஏற்கனவே நீரினாலும் படிசுத்த ஆவியாலும் திருமுழுக்கு பெற்ற ஒருவர், இயேசுவின் பெயரால் திருமுழுக்கு கொடுக்க வேண்டும். திருமுழுக்கு பெறுபவர் தலை குனிநத நிலையில் முகம் கீழாக இருக்க முழுமையாக நீரில் அமிழ்த்தப்பட வேண்டும். + +"பாதம் கழுவும் திருவருட்சாதம் இயேசுவுடன் பங்குதாரியாக மாற்றுகின்றது. இது தொடர்ந்து அன்பு செய்தலையும், புனிதத்தையும் பணிவையும், மன்னிப்பையும் கடைப்பிடிக்க நினைவூட்டுகிறது. + +திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் இயேசுவின் பெயரால் பாதங்கள் கழுவப்படும். ஒருவரினொருவர் பாதங்களை கழுவுதல் பொருத்தமான எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படும்". + +திவ்விய நற்கருணை இயேசுவின் இறப்பை நினைவுகூறும் திருவருட்சாதானமாகும். இது இயேசுவின் இரத்தத்டிலுன் உடலிலும் எம்மை பங்குகொள்ளச் செய்து இயேசுவுடன் இணைக்கிறது. இதன்மூலம் நிலையான வாழ்வை ஈட்ட வழிசெய்கிறது. இச்சடங்கின் போது புளிக்காத மாவினால் செய்த அப்பமும் திராட்சை இரசமும் பாவிக்கப்படுகிறது. + +"முதன்மைக் கட்டுரை:" ஓய்வு நாள் + +"ஓய்வு நாள் அல்லது சபத் நாள்,கிழமையின் 7 வது நாள்(சனிக்கிழமை), புனித நாளாகும். அது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும். கடவுளின் உலக படைப்பையும், வரவிருக்கும் நிலைவாழ்வில் கிடைகும் ஓய்வையும் நினைவு கூறும் வகையில் ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகிறது". + +"வார்த்தையாய் இருந்து மாம்சமான, இயேசு கிறிஸ்து பாவிகளின் விடுதலைக்காக சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றார்.அவரே மனுகுலத்தின் ஒரே மீட்பரும், வானங்களையும் பூமியையும் படைத்தவரும் ஒரே உண்மைக் கடவுளுமாவார்." + +"பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் கொண்ட புனித விவிலியம் கடவுளின் வார்த்தையாகும், அதுவே உண்மை வேதமும், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையுமாகும்." + +"மீட்பு விசுவாசத்தினூடாக கடவுளின் கருணையால் வழங்கப்படுவதாகும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியில் தேவனை மகிமைப் படுத்துவதோடு மனிதத்தை அன்பு செய்ய வேண்டும்". + +"உண்மையான இயேசு தேவாலயம், இயேசுக்கிறிஸ்துவால் பரிசுத்த ஆவி மூலமாக 'latter rain' காலத்தில் தொடக்கப்பட்டதாகும். இது அப்போஸ்தலர் காலத்துல் இருந்த சபைக்கு ஒத்ததாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது." + +கர்த்தர் இயேசுவின் இரண்டாம் வருகை உலகின் கடைசிநாளில் நடைபெறும். அவர் சகல ஆத்துமாக்களையும் நடுத்தீர்க்க விண்ணகத்திலிருந்து இறங்கிவருவார். நீதிமான்களுக்கு நித்திய சீவனையும், பாவிகளுக்கு நித்திய நரகத்தையும் தீர்ப்பளிப்பார். + + + + +பிரமிள் + +பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். + +சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார். + +தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது. +புதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். +ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்ச���க்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர். + +ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு. + +"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது. + +தொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக்கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன. + +புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. + + + + + + +1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்). +2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா). +3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்). +4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்). +5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்). +6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி). +7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்). +8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்) +9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை). +10. யாழ் கதைகள். 2009. (லயம்). +11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை). +12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி). +13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி). +14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது) +15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது) +16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (ந���்றிணை) +17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை) +18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி +19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி +18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம் +19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம் +20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம் +21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம் +22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம் +23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம் + +நியூயார்க் விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் "புதுமைப்பித்தன் வீறு" வழங்கியது. + +உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். + + + + + +சி. சு. செல்லப்பா + +சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. + +பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். + +தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். + +மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விட���தலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். + +"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. + +1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். + +1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார். + +சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் "எழுத்து" நிறுத்தப்பட்டது. + +காந்தி, வ. ராமசாமி + +பிரமிள் + +சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். + + + + + + +2000வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல் எழுத்து ஏட்டின் 114ஆவது இதழில் வெளிவந்தது. + + +சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார். + +இவரது "சுதந்திர தாகம்" புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. + + + + + + +பள்ளிக்கூடம் + +பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை ("School") என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். + +தமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை தொ. பரமசிவன் விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண, புத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் "நாங்கள் பள்ளிக்குப்போகிறோம்" : அதாவது, சமண, புத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர். + +இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி, 6 முதல் 8 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, 9 முதல் 10 வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளி, 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி என 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. + +இலங்கையில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது. + + + + +கோதாவரி + +கோதாவரி இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும். + +கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். +இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை. + +புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது. + + + + +ந. பிச்சமூர்த்தி + +ந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக��� கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. + +கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர். + +பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார். + +பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. + +இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன. + + + + + + + + + +வெதுப்பி + +வெதுப்பி "(Bread)" அல்லது உரொட்டி என்பது மாவும் தண்ணீரும் கலந்து பிசைந்த குழைவில் இருந்து வேண்டிய வடிவத்தில் உருமாற்றி பின்னர் அட்டு (சுட்டு) செய்யப்படும் ஊட்டமிகு உணவாகும். வெதுப்பி வேளாண்மை தொடங்கிய காலமுதல் வரலாறு முழுவதும் உலகெங்கும் நயந்து உட்கொண்ட முதன்மையான மிகப் பழைய செயற்கை உணவாகும். + +மாவும் பிற உட்கூறுகளின் விகிதமும் செய்யும் வழிமுறைகளும் தணலில் அடுதல் (சுடுதல்) முறைகளும் பேரளவில் வேறுபடும். இதனால், உரொட்டிகளின் வகையும் வடிவமும் உருவளவும் உட்கட்டமைப்பும் உலகெங்கும் வேறுபடுகின்றன. உரொட்டி இயற்கையான நுண்ணுயிரிகளாலோ வேதிமங்களாலோ தொழிலகச் செயல்முறை நொதிகளாலோ உயரழுத்தக் காற்றூட்டத்தாலோ நொதுப்பிக்க அல்லது பதப்படுத்தப்படுகின்றன. சிலவகை உரொட்டிகள் பதப்படுத்துவதற்கு முன்பே மரபாக அல்லது சமயச் சடங்காக சமைக்கப்படுவதும் உண்டு. உரொட்டியில் கூலமல்லாத உட்கூறுகளாகிய பழங்களும் கொட்டைகளும் கொழுப்புகளும் உட்கூறுகளாக அமைவது உண்டு. வணிக உரொட்டிகளில், சில கூடுதல் சேர்க்கைப்பொருள்களைச் செய்தலை எளிதாக்கவும் மணம், வண்னம், வாணாள், உட்கட்டமைபு ஆகியவற்றை மாற்றவும் சேர்ப்பர். + +பகல் உணவுடன் பல வடிவங்களில் உரொட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இது நொறுக்காகவும் உண்ணப்படுவதோடு, கலப்படைகள் செய்யும்போது உட்பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. வறுப்பு உணவுகல் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, உரொட்டிச் சிதைவுகள் கலக்கப்படுவதுண்டு. இது உரொட்டிப் புட்டுகளிலும் உரொட்டி பலகாரங்களில் சாறுகளைத் தேக்கிவைக்க துளைநிரப்பும் அடைபொருள்களாகவும் முதன்மையான உட்கூறாகவும் பயன்படுகின்றது. + +உரொட்டி ஊட்டப் பொருளாக மட்டுமன்றி, சமூகவய, உணர்ச்சிவயச் சிறப்பையும் பெற்றுள்ளது. இது சமயச் சடங்குகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. சமய நீக்கப் பண்பாட்டிலும் அன்றாட வாழ்விலும் தவிர்க்க முடியாத பங்கேற்கிறது. இந்நிலை, மொழியிலும் பழமொழிகளிலும் கொச்சையான சொற் பரிமாற்றங்களிலும் வெளிப்படுகின்றது. பேச்சு வழக்கான ("He stole the bread from my mouth")என்பதும் வழிபாட்டில் பயன்படும் ("Give us this day our daily bread") என்பதும் சிறந்த எடுத்துகாட்டுகளாகும். + +உரொட்டிக்கான பழைய ஆங்கிலச் சொல் "கிலாப் (half)" என்பதாகும். கோதிக் மொழிச் சொல் ("கிளைப்சு (hlaifs)") ஆகும். புத்தாங்கிலத்தில் "[[உலோஃப் (loaf)") என்பதாகும். இது தான் செருமானிய மொழிகளில் அமைந்த உரொட்டிக்கான மிகப் பழைய சொல்லாகும். பழைய உயர்செருமனி மொழியில் உரொட்டி "கிளேய்ப் (hleib)" எனப்பட்டது. புது செருமனி மொழியில் "இலைபு (Laib) " எனப்படுகிறது. இதில் இருந்து போலிழ்சிய மொழிச் சொல்லாகிய "சிலெபு (chleb) " என்பதும் உருசிய மொழிச் சொல்லாகிய "கிளெபு (khleb)" என்பதும் பின்னிய மொழிச் சொல்லாகிய "இலெய்பா (leipä)" என்பதும் எசுதோனிய மொழிச் சொல்லாகிய "இலெய்பு (leib)" என்பதும் வந்துள்ளன. + +இடைக்கால ஆங்கிலத்திலும் புத்தாங்கிலத்திலும் வழங்கும் பிரெட் (bread) எனும் சொல் செருமானிய மொழிகளில் ஒன்றான பிரிசிய மொழியில் "பிரே (brea)" டச்சு மொழியில் "புரூடு (brood)" எனவும் செருமனி மொழியில் "புரோத் (Brot)" எனவும் சுவீடிய மொழியில் "புரோது (bröd)"எனவும் நார்வேய டேனிய மொழிகளில் "புரோது (brød)" எனவும் வழங்கியுள்ளது; இது பிரூ (brew) என்பதில் இருந்தோ ஒருவேளை உடைந்த துண்டு எனும் பொருளில் "பிரேக் (break)" என்பதில் இருந்தோ வந்திருக்கலாம். + +[[File:7-alimenti, pane, Taccuino Sanitatis, Casanatense 4182.jpg|thumb|வெதுப்பிக் கடை, வடக்கு இத்தாலி, 15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்]] + +உரொட்டி மிகப் பழைய செய்முறை உணவாகும். 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் பாறைகளில் அரைத்த மாவின் எச்சம் கிடைக்கிறது.இதே நேரத்தில், பெரணி போன்ற தாவர வேர்களில் இருந்து பெறப்பட்ட மாவுப் பொருள், தட்டையான பாறைகளில் ஊற்று நிரவி தீயால் சுட்டு முதனிலை வடிவத் தட்டைரொட்டி செய்யப்பட்டுள்ளது. கிமு 10,000 ஆண்டுகள் அளவில் புதிய கற்காலம் தொன்றி, வேளாண்மை தொடங்கிப் பரவியபோது, உரொட்டி செய்யும் கூலமணிகள் முதன்மை உணவாகியது. அந்த மணிகளின் மீது படர்ந்த ஈச்ட்டு தற்செயலாகவே நொதுப்பியாகச் செயல்பட்டுள்ளது; எனவே இயற்கையாக விடப்பட்ட மாவுஇக் குழைவை இயல்பாக நொதிப்படைகிறது. + +தொடக்கநிலை உரொட்டி மாவை நொதிப்பிக்கும் பலவகை வாயில்கள் அமைந்துள்ளன. சமைப்பதற்கு முன்பு மாவுக் குழைவையை காற்ரில் வைத்தால் காற்றில் வாழும் ஈச்ட்டுகள் மாவை நொதிப்பிக்கின்றன. பிளின், முதுவர் காலியர்களும் இபேரியர்களும் பீரில் இருந்து கடைந்தெடுத்த நுரை வெண்ணெயை மற்றவரைவிட மென்மையான உரொட்டி செய்யப் பயன்படுத்தியதை அறிவித்துள்ளார். கொடிமுந்திரித் தேறலை அருந்திய மக்கள் அதில் இருந்து செய்த சாறும் மாவும் கலந்து பிசைந்து நொதிக்கத் தொடங்கிய பசையை அல்லது அத்தேறலில் கோதுமை மாவைக் கலந்து பிசைந்த குழைவையை உரொட்டி செய்ய பயன்படுத்தியுள்ளனர். நொதிப்பிக்க பயன்படுத்திய பொது வாயிலாக, முன்னாள் பயன்படுத்திய மாவுப்பகுதியை, அதாவது நொதித்த மாவுக்குழைவையை பயன்படுத்தியதையும் பிளினி அறிவித்துள்ளார். + +சார்லிவுட் உரொட்டி செயல்முறை 1961 இல் உருவாக்கப்பட்டது; இது நொதிப்புக் காலத்தைக் குறைக்கவும் உரொட்டி செய்யும் நேரத்தைக் குறைக்கவும், மாவுக்குழைவைச் செறிந்த இயக்கத்தால் குழைவிக்கப்பட்டது. இச்செயல்முறையில் உயராற்றல் கலப்புவழியால் தாழ்புரத கூலமணிகளைப் பயன்படுத்த முடிகிறது. இப்போது இம்முறையே உலகெங்கும் உரொட்டித் தொழிலகங்களில் பயன்படுகிறது. எனவே, உரொட்டி வேகமாகவும் குறைந்த விலையிலும் செய்யமுடிகிறது. என்றாலும், இதன் ஊட்டமதிப்பின் மீதான விளைவு ஐயத்தோடு நோக்கப்படுகிறது. + +[[File:Breadindia.jpg|thumb|பழுப்பு உரொட்டி (left), முழுக்குறுணை உரொட்டி]] + +உரொட்டி நடுவண் கிழக்குப் பகுதி வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் முதனமை உணவாகும். ஐரோப்பியப் பண்பாடு பரவிய தஎன் அமெரிக்கா, ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது முதன்மையான உணவாக விளங்குகிறது; ஆனால், கிழக்கு ஆசியாவில் அரிசியே முதன்மையான உணவாக விளங்குகிறது. உரொட்டி வழக்கமாக நொதிவழி புளித்த கோதுமை மாவுக் குழைவையில் இருந்து செய்யப்படுகிறது; பிறகு அடுமனை அடுப்பில் சுடப்படுகிறது. உரொட்டியில் உள்ள காற்றுப் புரைகள் ஈச்ட்டு சேர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.மாவுக்கு பஞ்சுத்தன்மையையும் மீள்திறத்தையும் தரும் இதன் உயராற்றல் மட்ட மாப்பிசின் (gluten) காரணத்தால், கோதுமை உரொட்டி செய்யப் பரவலாகப் பயன்படுகிறது; மேலும் கோதுமையே தான் மட்டும் தனியாக உலகின் உணவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்கிறது. + +பிற கோதுமை இனங்களாகிய இசுபெல்டு, எம்மர், எய்ன்கார்ன் காமுத் ஆகியவற்றின் மாவில் இருந்தும் உரொட்டி செய்யப்படுகிறது. கோதுமையல்லாத கூலங்களாகிய புல்லரிசி, பார்லி, மக்கச்சோளம், காடைக்கண்ணி, சோளம் தினை, அரிசி ஆகிய கூலமணிகளில் இருந்தும் உரொட்டிஎனும் தட்டடை செய்யப்படுகிறது. என்றாலும், புல்லரிசி தவிர, மற்றவற்றோடு, அவை குறைந்த மாப்பிசின்மை பெற்றுள்ளதால், கோதுமை மாவும் உடன்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது. +மாப்பிசின் இல்லாத உரொட்டிகளும் மாப்பிசின் சார்ந்த நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மாப்பிசின் சார்ந்த நோய்களாக உடற்குழி நோயும் மாப்பிசின் கூருணர்மையும் அமைகின்றன. மாப்பிசினற்ற உரொட்டிகள் வாதுமை, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பீன்சு போன்ற பருப்புகளில் இருந்து செய்யப்படுகின்றன; இவற்றின் மாவுகளில் மாப்பிசின் இல்லாத்தால், இவற்றின் வடிவம் செ���்யும்போது மாறுவதோடு, காற்றூட்டமின்றி கரடாக அமையும். இவற்றில் மாப்பிசின் இன்மையை ஈடுகட்ட முட்டையோ அல்லது சாந்தம் பிசின், குவார் பிசின், போன்றவை சேர்க்கைப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. +கோதுமையில், பீனாலிக் சேர்மங்கள் அதன் உமியில் கரையாத ஃபெரூலிக் அமிலமாக அமைந்து பூஞ்சை நோய்களின் தாக்குதலில் இருந்து கோதுமையைக் காக்கிறது. +புல்லரிசி உரொட்டியில் பீனாலிக் அமிலங்களும் ஃபெரூலிக் அமில டீகைரோடிமர்களும் உள்ளன. + +சணல்விதையமைந்த வணிக உரொட்டியில் மூன்று இயற்கை பீனாலிக் குளூக்கோசைடுகளாகிய செக்கோயிசோலாரிசிரெசினால் டைகுளூக்கோசைடு, பி-கௌமாரிக் அமில குளூக்கோசைடு, ஃபெரூலிக் அமில குளூக்கொசைடு ஆகியன அமைகின்றன. + +குளூட்டெனின், கிளியாடின் ஆகிய செயல்பாட்டுப் புரதங்கள் கோதுமை உரொட்டியின் புறநிலைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. குளூட்டெனின் டைசல்பைடு இடைப்பிணைப்புகளால் ஒருங்கிணைந்த பிசின் வலையமைப்பை உரொட்டிக்குள் அமைக்கிறது. Gliadin binds weakly to the gluten network established by glutenin via intrachain disulfide bonds. கட்டமைப்பைப் பொறுத்தவரையில், உரொட்டியை மீளியல்பு நெகிழ்திற நுரையாக வரையறுக்கலாம். குளூட்டெனின் புரதம், உருமாற்றத்துக்குப் பின் தன் உருவடிவை மீளப்பெறும் தன்மையால், உரொட்டியின் மீளியல்புக்குப் பங்களிக்கிறது. கிளியாடின் புரதம், விசைக்காட்பட்ட பின் தன் கட்டமைப்பைத் திரும்பப் பெற இயலாமையால், உரொட்டியின் நெகிழ்திறத்துக்கு உதவுகிறது. நொதிப்பின்போது மாப்பிசின் வலையமைப்புக்குள் உருவாகும் கரியிரு தீயகி வளிமத்தால் உரொட்டியின் காற்றுப்புரைகள் ஏற்படுகின்றன, எனவே, உரொட்டியை நுரை அல்லது திண்மக் கரைசலில்அடங்கிய வளிமம் என வரையறுக்கலாம். + +[[File:Rew13c05-745a Bread Pudding.JPG|thumb|வெதுப்பிப் புட்டு]] + +[[File:Tortillas de rescoldo.jpg|thumb|நொதுபிக்காத சிலி உரொட்டிவகையைச் செய்யும் படிநிலைகள்]] + +[[File:Brot - Outubro 2013 - Covalima.jpg|thumb|கிழக்குத் திமோரில் உரொட்டி சுடுதல் அல்லது அடுதல்]] + + + +[[பகுப்பு:வெதுப்பிகள்| ]] +[[பகுப்பு:ஊட்ட உணவுகள்]] +[[பகுப்பு:உலக உணவுகள்]] +[[பகுப்பு:தொல்பலகாரங்கள்]] +[[பகுப்பு:கோதுமை பலகாரங்கள்]] + + + +பாலாடைக்கட்டி + +பாலாடைக்கட்டி, சீஸ் (லத்தீன்) பாலிலிருந்து உருவாக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கட்டிப்பாலாலான ஒரு திட உணவாகும். இது மென்மைய��கவோ கடினமாகவோ (அ) திடக் கூழ்ம நிலையில் இருக்கும். இது பாலிலிருந்து நீரை வெளியேற்றி கேசின் புரதம் தொய்த்தலால் உருவாகிறது. பாலிலுள்ள புரதமும், கொழுப்பும் இதில் அதிகளவில் அடங்கியுள்ளது. மேலும் இதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. பொதுவாக, பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய விலங்கினங்களிலிருந்து பெறப்படும் பாலானது பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தயாரிப்பின் போது அமிலமாக்கப்பட்ட பால் ரென்னட் எனும் நொதியுடன் வினைபுரிந்து உறைந்து கட்டிப்படுகிறது. இத்திடக்கூழ்ம நிலை அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டு தேவையான அமைப்புடைய பாலாடைக்கட்டியாக மாற்றப்படுகிறது. + +பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் உரகுமஞ்சள் (அன்னட்டோ) சிவப்பு நிற பாலாடைக்கட்டி (லெய்செஸ்டர்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுவைக் கூட்டுப் பொருட்களான கருமிளகு, பூண்டு, இனப்பூண்டு, குருதிநெல்லி (க்ரேன் பெர்ரி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. + +அதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைப் பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி துளையுள்ள நெகிழிகளாலும், மேற்பகுதி மெழுகினாலும் ஆக்கப்பட்டிருக்கும். இக்காகிதம் பாலாடைக்கட்டி சுருங்கி நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகிறது. + +சிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் சீஸ் மோங்கர் என அழைக்கப்படுகின்றனர். இதற்காக தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகள் வகைமுறைப்பட்டியல், தேர்வு, மூலப்பொருட்கள் வாங்குதல், தயரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை இச்சீஸ் மோங்கர்கள் திறம்பட செய்கின்றனர். + +பாலடைக்கட்டியின் தோற்��ம் பற்றிய சரியான வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும் அதன் பயன்பாடு பற்றி அறியப்பட்டதினால் அதன் காலக்கோடு வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. +பாலின் பயன்பாடு தொடங்கிய பொழுதே பாலாடைக்கட்டியின் பயன்களும், வகைகளும் அறியப்பட்டிருக்க வேண்டும், ஆயினும் அதன் தோற்றம் பற்றிய முழு வரலாற்று ஆய்வுகள் முழுமைப்பெறவில்லை. சில ஆய்வுகள், கற்பனை நிகழ்வுகள் இதன் தோற்றம் பற்றி சில குறிப்புகளைச் சுட்டுகின்றன, அவை + + + +பாலாடைக்கட்டி அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்திற்காக வெவ்வேறான சுவையுடன் பலதரப்பட்ட வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நேரடியான உணவாகவோ, உணவில் கலந்த சுவைக் கூட்டாகவோ பாலாடைக்கட்டிகள் பயன்படுகின்றன. +போன்றவை குறிப்பிட்ட சில உணவு வகைகளாகும். + +பாலடைக்கட்டி தயாரித்தல் வகைக்கு வகை மாறுபடும். பொதுவான தயாரிப்பு முறையினடிப்படையில் அதன் உற்பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. +தரமான பாலாடைக்கட்டி தயாரிக்க பாலானது புரத, கொழுப்பு அளவுகளின் தரம் சரிபார்க்கப்பட்டு, சரியான விகித அளவில் மேம்படுத்தப்படுகிறது. + + + + +ரென்னட் எனும் நொதி பாலிலுள்ள கேசின் புரதத்தை நொதிக்கச் செய்து கட்டிப்படுத்தி தயிராக மாற்றுகிறது. + +கட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வெட்டி எடுக்கப்பட்டு வெப்பபடுத்தப்படுகிறது. + +தயிரிலுள்ள ஈரப்பதம் வெப்பப்படுத்துவதினால் நீக்கப்படுகிறது. + +ஈரப்பதம் நீக்கப்படுவதால் இருகி மேலும் திடத்தன்மையை அடைகிறது. + +உவர்ப்புச் சுவைக்காக உப்பு அல்லது உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது. + +நன்கு முறைப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டிகள் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மேலும் இவை சிற்சிறு வட்ட உருளைகளாக ஆக்கப்படுகின்றன. + +சிலவற்றில் துளையிடப்படுகின்றன. துளையில்லா பாலாடைக்கட்டிகள் குருட்டுப்பாலாடைக்கட்டிகள் (அ) ப்ளைன்ட் சீஸ் எனப்படுகின்றன. (எ.கா. சுவிஸ் பாலாடைக்கட்டி) + +பாலாடைக்கட்டிகளை சந்தைப்படுத்தும் விதமாக வெவ்வேறு வகையான சிப்பமிடல் முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் வெப்பநிலை 4°C யில் நிலைப்படுத்தப்படுகிறது. + +பாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கேற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காட்டேஜ் வகை 4% கொழுப்புச் சத்தும், 11% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் முக்குளம்பு பாலாடைக்கட்டியானது 36% கொழுப்புச்சத்தும், 7% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. பொதுவாக இப்பாலாடைக்கட்டிகள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளன. + +100கி பாலாடைக்கட்டியிலுள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் (கிராம்) +100கி பாலாடைக்கட்டியிலுள்ள உயிர்ச்சத்துக்கள் (கிராம்) +100கி பாலாடைக்கட்டியிலுள்ள தாது உப்புக்கள் (கிராம்) + +சுமார் 500க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள், உலக பால்பொருள் உற்பத்தி ஆணையத்தால் (International Dairy Federation) வகைப்படுத்தப்பட்டுள்ளது. + + + + + + + +நாரந்தனை + +நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள ஊர்காவற்றுறை தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஊர்காவற்றுறைத் தீவானது லைடன் தீவு என்ற பெயராலும் அறியப்படுகின்றது. + +நாரந்தனை என்பது நாரம்,தனை என்ற இரண்டு சொற்களால் ஆனதாகும்.நாரம்,நரந்தம்,நாரங்கம்,நாரத்தை என்பன தோடைமர வகைகளுள் ஒன்றாகும்.தனை,தானை என்பன இலங்கைத் தமிழ் வழக்காற்றில் இடத்தைக் குறிக்கும்.இது தமிழகத்தில் தானம் என்று வழங்கப்படுகின்றது.இதற்கு எடுத்துக்காட்டு தமிழகத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவாலயமான திருநெய்த்தானம் ஆகும்.ஸ்தான என்பது சமஸ்கிருதத்தில் நிலையைக் குறிப்பதாகும்.தான என்பது பாளியில் இடத்தைக் குறிப்பதாகும்.எனவே தனை,தானை என்பன இவற்றில் இருந்து மருவியிருக்கலாம். + +எனவே நாரந்தனை என்பது பண்டைய காலத்தில் நாரம் மரம் இருந்த நிலையை அடையாளமாகக் காட்டப் பயன்பட்டு காலப்போக்கில் அதனைச் சூழ்ந்து அமைந்த குடியிருப்புகளுக்கான பெயராக மாறி பின்னர் கிராமத்தின் பெயராக உருவாகியிருக்கின்றது எனக் கருதலாம். + +தான்தோன்றி மனோன்மணி அம்மன் ஆலயம் இன்று அமைந்துள்ள இடத்தில் கிடைத்த சோழர் காலத்து சிலையும் நாணயங்களும் இந்த ஊர் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது பழமையானது என்பதைக் காட்டுகின்றன.நாரந்தனை என்ற பெயரானது சமஸ்கிருதச் சொல்லான ஸ்தான என்பதைவிட பாளி மொழிச் சொல்லான தான என்பதில் இருந்தே மருவியிருப்பதுபோன்று தென்படுவதால் பண்டைக் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம் என்று ஊகிப்பதற்கும் இடமிருக்கின்றது.எனவே தமிழர்களிடம் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த காலமான பக்திக் காலகட்டத்துக்கு முற்பட்ட காலத்திற்கு இப்பெயரின் பழமையானது இட்டுச்செல்கின்றது.முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படுமானால் தெளிவான ஆதாரங்கள் கிட்டக்கூடும். + +நாரந்தனை நூறு விழுக்காடு தமிழ் மக்கள் வாழும் கிராமமாகும்.இந்த ஊர் விவசாயம்,மீன்பிடி,பனைசார் தொழில் போன்ற மரபான தொழில்களை அடிப்படையாகக்கொண்டதாகும்.சைவர்களும்,கத்தோலிக்கர்களும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர்.உள்நாட்டுப் போரினாலான இடப் பெயர்வுகளால் மக்கள் தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.ஆகஸ்ட் 22,1990 இல் காரைநகர் கடற்படை முகாமில் இருந்து ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்க் கோட்டையை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நாரந்தனையில் ஏறத்தாழ 1800 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன.தற்போது ஏறத்தாழ 1000 குடும்பங்கள் வாழ்கின்றன. + +நாரந்தனையானது தீவகம் வடக்கு,ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்டதாகும். ஊர்காவற்றுறைப்பட்டினம்,பருத்தியடைப்பு,கரம்பன்,புளியங்கூடல்,சுருவில் போன்ற ஊர்காவற்றுறைத் தீவைச் சேர்ந்த பகுதிகளும் அனலை தீவு,எழுவை தீவு போன்ற தீவுகளும் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏனைய இடங்களாகும். + +நாரந்தனை வடக்கு,நாரந்தனை வடமேற்கு,நாரந்தனை,நாரந்தனை தெற்கு ஆகிய நான்கு கிராம மேலாளர் பிரிவுகளாக கிராமமானது நிர்வாக வசதிக்காகப் பகுக்கப்பட்டுள்ளது. + +புவிநடுக்கோட்டுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் பருவமழை வீழ்ச்சிக்குரிய காலநிலைக்குரியது.இந்தியப் பெருநிலப்பரப்புக்கு அண்மையில் அமைந்திருப்பதன் காரணமாக பொதுவாக இலங்கையின் வடபகுதியில் நிலவும் அதிகவெப்பநிலையே இங்கும் நிலவுகின்றது.ஆண்டுச் சராசரி வெப்பநிலை 28 °C இலிருந்து 30 °C வரையிலானதாகும். + +பெப்ரவரியில் இருந்து செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெம்மையானதும் வறட்சியானதுமான கால நிலையும் ஒக்டோபரில் இருந்து ஜனவரி வரை மிதமான குளிரும்,ஈரலிப்பானதுமான காலநிலையும் காணப்படுகின்றது. + +நவம்பரில் இருந்து பெப்ரவரிக்கு இடையில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சியால் அதிக மழையும்,மே இலிருந்து ஆகஸ்ட்டுக்கு இடையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையால் சிறிதளவு மழையும் கிடைக்கின்றது. + + + + + + + +சாக்கலேட் + +சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும். + +மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் ("Theobroma cacao") கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை. + +இக்கொட்டைப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறாக அழைக்கப்பட்டாலும் அமெரிக்க சாக்கொலேட் தொழில் நிறுவனங்களில் கீழ்வருமாறு அழைக்கப்படுகின்றன. + + +சாக்கொலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது. + +சாக்கொலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன. + +சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன. + +பாகுபாட்டு முறை + +சாக்கொலேட் ஒரு மிகப் பிரபலமான இடுபொருளானதால் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. தயாரிப்பின்போது உட்பொருட்களின் விகிதத்தை மாற்றுவதன் மூலம் பல நிலை மற்றும் சுவைமணம் கொன்ட சாக்கொலேடுகள் கிடைக்கும். மேலும், அதிக வகை சுவைமணங்களை, கொட்டைகளை வறுக்கும் நேரம் மற்றும் வறு��்கப்படும் வெப்ப நிலைகளை மாற்றுவதால் உருவாக்க முடியும். + + +புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவைமணங்கள் சாக்கொலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கொலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கொலேட்டுடன் கடலை, அரிசிப்பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கொலேட் தயாரிக்கப்படுகிறது. + +வரையறை + +முறைப்படிப் பார்த்தால், 100% கொக்கோ திடப்பொருள் மற்றுமல்லது கொக்கோ கொழுப்பினை அடிப்படையாகக் கொண்ட எதுவுமே சாக்கொலேட் ஆகும். எத்தனையோ வகையான பொருட்கள் சாக்கொலேட் கொண்டு தயாரிக்கப் படுவதால், சாக்கலேட்டின் விலை இத்தொழில்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு இடுபொருட்களை சேர்த்து சுவையை மாற்றலாம். அதே சமயம், கொக்கோ திடப்பொருள் விகிதத்தைக் குறைப்பதன் மூலமும், கொக்கோ கொழுப்புக்கு பதிலாக வேறு கொழுப்பை சேர்ப்பதன் மூலமும் சாக்கலேட் பொருட்களின் விலையை கணிசமாகக் குறைக்கலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சாக்கொலேட்டின் வரையறை பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. + + +சாக்கொலேட் என்ற சொல் மத்திய மெக்சிகோவில் தோன்றிய சிவப்பிந்தியர்களின் நவாட்ல் மொழிச்சொல்லாகும். மாயன் இன மக்கள் காலத்திய பானைகளில் காணப்படும் கொக்கோ படிமங்கள், சுமார் கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கொக்கோ பருகப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அஸ்டெக்குகள் சாக்கொலேட்டை தமது இனவிருத்திக் கடவுளான ஸொசிக்வெட்சலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர். புதிய உலகத்தில், சாக்கொலேட் வனிலா, மிளகாய் மற்றும் அச்சியோட் சேர்த்து ஸொக்கொட்ல் என்ற பெயருடைய பானமாக பருகப்பட்டு வந்தது. ஸொக்கொட்ல் ஒரு களைப்பு நீக்கி உற்சாக பானமாக கருதப்பட்டது (பெரும்பாலும், அதிலுள்ள தியொப்ரொமினால்). கொலம்பியாவிற்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்கொலேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு, பண்ட மாற்றுக்குக்கூட பயன்படுத்தப்பட்டது. பிற சாக்கொலேட் பானங்கள் சோளக்கூழ் மற்றும் தேனுடன் பருகப்பட்டு வந்தன. + +ஸொகொட்ல்-இன் சுவை ஒரு பழகி அறியப்பட்ட சுவையாகக் கருதப்படுகிறது. ஹோஸே டி அகொஸ்டா எனும் ஸ்பெயினைச் சேர்ந்த பாதிரியார் 16 ஆம் நூற்றாண்டில் எழுதியதன் தமிழாக்கம் கீழ் வருமாறு: + +அமெரிக்கா���ை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். + +பழம் உலகதிற்கான முதல் சாக்கொலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து +செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து மிளகாய் நீக்கி பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கொலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது. + +18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கொலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணை தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கொலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது. + +டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்து முதல் பால் சாக்கொலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத் தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, தடித்த பால் உருவாக்க உதவினார். இது பூஞ்சைத் தொல்லையிலிருந்து சாக்கொலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கொலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் கான்ச்சிங் எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார். + +குதிரைகள், நாய்கள், கிளிகள், சிற்றெலிகள், பூனைகள் (குறிப்பாக பூனைக்குட்டிகள்), பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு அதிகமான அளவு சாக்கொலேட் உயிர் நீக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாகும். இவற்றால் சாக்கொலேட்டில் காணப்படும் தியொப்ரொமின் எனப்படும் வேதிப்பொருளை நன்றாக வளர்சிதைமாற்றம் செய்ய இயலா. இவற்றின் இரத்தத்தில் தியொப்ரொமின் 20 மணிநேரம் வரை தங்குவதால் இவ்விலங்குகளுக்கு வலிப்பு, இதயச் செயலிழப்பு, உட்புற இ��த்த இழப்பு ஆகியவற்றால் மரணம் நிகழலாம். + +மெர்க் கால்நடை மருத்துவ இணையக் கையேடு எட்டாம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, நாய் ஒன்று அதன் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 1.3 கிராம் பேக்கர்ஸ் சாக்கொலேட் உட்கொண்டால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தென்படத் துவங்கும். எடுத்துக்காட்டாக 25 கிலோ எடையுள்ள நாய் ஒரு 25 கிராம் எடையுள்ள பேக்கர்ஸ் சாக்கொலேட் கட்டியை உட்கொண்டால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தென்படத் துவங்கும். கால்நடை மருத்துவரை அணுகுவதோ இரண்டு மணி நேரத்திற்குள் வாந்தி எடுக்கத் தூண்டுவதோ சரியான மருத்துவ முறையாகும். + +நாய்களைப் பொறுத்த வரை தியொப்ரொமினின் எல்.டி 50 மதிப்பு ஒரு கிலோ உடல் எடைக்கு 250 - 500 மி.கி ஆகும். இருப்பினும் 115 மி.கி அளவிலேயே மரணம் நிகழ்ந்தது அறியப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள நாய் ஒன்று சுமார் 240 கிராம் பால் சாக்கொலேட் சாப்பிட்டால் குடல் உபாதைகள் தொடங்கி விடும். 500 கிராமுக்கு மேல் உட்கொண்டால் சீரற்ற இதயத்துடிப்போ குறைவான இதயத்துடிப்போ இருக்கும். 5 கிலோ பால் சாக்கொலேட் சாப்பிட்ட நாய் அதிலுள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்கரையால் அதனை வாந்தி எடுக்காவிடில் அது உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50% தான். கரும் சாக்கொலேட்டில் சுமார் 50% அதிக தியொப்ரொமின் உள்ளதால் அது நாய்களுக்கு மிக ஆபத்தானதாகும். + +அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு நன்மை மிக்க உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவு���ளை ஏற்படுத்தாது. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல. + +அண்மைய ஆய்வுகளின்படி, சாக்கொலேட் தியொப்ரொமின் கொண்டுள்ளதால் ஒரு மிதமான தூண்டும் பொருளாக இருக்கக்கூடும். இருப்பினும், சாக்கொலேட்டிலுள்ள தியொப்ரொமின் அளவு மனிதர்களில் எவ்வித பெரும் விளைவையும் ஏற்படுத்துமளவு அதிகமில்லை; ஒரு காஃபி குடித்த விளைவையே ஏற்படுத்தும். மருந்தியலாளர் ரையன் ஜே ஹக்ஸ்டேபிளின் கூற்றுப்படி "[சாக்கொலேட்] உணவை விட அதிகமாகவும் காஃபியை விட குறைவாகவும் [விளைவேற்படுத்தும்]". இருப்பினும் முன்கூறியவாறு நாய்களிலும், குதிரைகளிலும், சாக்கொலேட் அதிக தூண்டும் விளைவுகளேற்படுத்தும். இதனாலேயே குதிரை ஓட்டத்தில் சாக்கொலேட் தடை செய்யப்பட்டுள்ளது. சில சாக்கொலேட் பொருட்கள் செயற்கையாக சேர்க்கப்பட்ட கஃபீன் கொண்டவை. + +சாக்கொலேட்டில் சிறிதளவு இயற்கையான ஆனந்தமீன் எனப்படும் கானபினாய்ட் பொருளும், கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுக்கும் N-ஓலியோல்-எத்தனாலமீன் (N-oleolethanolamine) மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் (N-linoleolethanolamine) எனப்படும் பொருளும் உள்ளன. ஆனந்தமீன்கள் நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றின் செயல் நேரம் மற்றும் செயல்படும் இடம் தெளிவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிசோதனைகளின் மூலம், N-ஓலியோல்-எத்தனாலமீன் மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் ஆகியவை நம் உடலின் கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுப்பதால் கானபினாய்டுகள் அதிக நேரம் செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் சாக்கொலேடின் நேரடித்தாக்கம் இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. + +சாக்கொலேட்டின் உருகுநிலை நமது உடல் வெப்பநிலையை விட குறைவாக இருப்பதால், அது நம் வாயில் உருகுகிறது. இத்தன்மை சாக்கொலேட்டின் சுவையை மேலும் கூட்டுவதாகக் கருதப்படுகிறது. மேலும், சாக்கொலேட் நம் மூளையில் செரோடோனினைச் சுரக்கச் செய்கிறது. செரோடோனின் மிதமான வெயிலைப்போல ஓர் இனிய உணர்வு தரும் பொருளாகும். இருப்பினும், முன்கூறியவாறு சாக்கொலேட் நம் செயல்பாடுகளை மோசமாக பாதிப்பதில்லை. + +காதல் உணர்வு கொண்டோர் பொதுவாக சாக்கொலேட்டை ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுகின்றனர். சாக்கொலேட்டின் இத்தன்மை அதன் இனிய சுவை உணர்வால் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சாக்கொலேட்டின் செரொட்டொனின் அல்லது ஃபினைல்-இத்தைலமீன் (phenylethylamine)ஆகியவை கூட கிளர்ச்சியைத் தூண்டக்கூடியவை தான். ஆதாரம் உள்ளதோ இல்லையோ தம் காதலர் அல்லது காதலிக்கு சாக்கொலேட் பரிசளிப்பது மரபாகும் (குறைந்தது மேலை நாடுகளில்). + +சாக்கொலேட் உண்பது முகப்பருக்களை (acne) உண்டாக்கும் என பரவலாகக் கருதப்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒரு கருத்தாகும். + +சாக்கொலேட் ஈயம் அதிகம் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். நைஜீரியா போன்ற வளரும் நாடுகளில் வளர்க்கப்படும் கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ கொட்டைகள் அதிக அளவு ஈயத்தைக் கொண்டுள்ளன. இந்நாடுகளில் ஈயம் சேர்த்த பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் இங்கு காற்றில் ஈய மாசுக்கலப்பு அதிகம் உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆளுநரகம் (FDA), சாக்கோலேட்டில் உள்ள ஈய அளவு, பெரும் விளைவுகளேற்படுத்தாது என்றே தெரிவிக்கிறது. + +மூன்று முக்கியமான கொக்கோ இரகங்கள் சாக்கோலேட் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன. இவற்றில் மிக விலையுயர்ந்ததும், அரிதானதுமானது கிரியொல்லோ எனப்படும் வட மத்திய அமெரிக்க இரகமாகும். கிரியொல்லோ கொட்டைகள் குறைவான கசப்புத்தன்மை கொண்டதோடல்லாமல் சிறிதளவு வறுத்தாலே நல்ல மணம் தரவல்லது. ஃபொரெஸ்டிரோ என்ற இரகம் இயற்கையாகவும், பயிரிடும் இடங்களிலும் அதிகமாக காணப்படுவதாகும். ட்ரினிடாரியோ என்ற இரகம் மேற்கூறிய இரு இரகங்களின் இயற்கையான கலப்பினமாகும். இது ட்ரினிடாட் நாட்டில் கிரியொல்லோ பயிரில் ஃபொரெஸ்டிரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது உண்டானது. கடந்த 50 ஆன்டுகளாக பெரும்பாலும் ஃபொரெஸ்டிரோ அல்லது குறைந்த தரமுள்ள ட்ரினிடாரியோ இரக கொக்கோ விளைவிக்கப்படுகிறது. நல்ல தரமுள்ள சுவைமணக் கொக்கோ வெறும் 5 சதவீதமே விளைவிக்கப்படுகிறது. + +முதலில் கொக்கோ கொட்டைகளைக் கொண்டுள்ள கொக்கோ காய்கள் பறிக்கப்படுகின்றன. பின்னர், அவை நசுக்கப்பட்டு, சுமார் ஆறு நாட்கள் வரை நுண்ணுயிர்ப் பகுப்படைய விடப்படுகின்றன. பின்னர், அவற்றிலிருந்து கொட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. சுமார் ஏழு நாட்கள் உலர்த்துவதன் மூலம் தரமான சாக்கொலேட் தயாரிக்க முடியும். விரைவுபடுத்தப்ப���்டோ செயற்கையாகவோ உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படும் சாக்கொலேட் தரம் குறைந்ததாய் இருக்கும். உலர்ந்த கொட்டைகள் வறுத்து, தரம் பிரித்து, அரைக்கப்படுகின்றன. இந்தக் கலவையிலிருந்து அழுத்தத்தின் மூலமோ புரோமோ முறை மூலமோ கொக்கோ வெண்ணை பிரித்தெடுக்கப்படுகின்றது. கொக்கோ வெண்ணை பிரித்த பின் கிடைக்கும் தூளே கொக்கோ தூளாகும். + +பல தரப்பட்ட சாக்கொலேட்டுகளோ கூவெர்சர்களோ தயாரிக்க சாக்கொலேட் கூழ் பல்வேறு அளவுகளில் கொக்கோ வெண்ணையுடன் கலக்கப்படுகிறது. அமெரிக்க சாக்கொலேட் தயாரிப்பில் ஒவ்வொரு வகை சாக்கொலேட்டிற்கும் கலக்கப்படும் இடுபொருட்கள் பின்வருமாறு (சேர்க்கப்படும் அளவைப் பொருத்து இடு பொருட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன): + +1. கலப்பிலா கரும் சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணை, கொக்கோ கூழ், வனிலா + +2. பால் சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணை, கொக்கோ கூழ், பால் அல்லது பால் தூள், வனிலா + +3. வெள்ளை சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணை, பால் அல்லது பால் தூள், வனிலா + +பொதுவாக சோயா லெசித்தின் போன்றதொரு கலப்பான் (emulsifier) சேர்க்கப்படுகிறது. சில தயாரிப்பு நிறுவனங்கள் தூய சாக்கொலேட் பெறவும், மரபணு மாற்றப்பட்ட உணவைத் தவிர்க்கவும் (அமெரிக்காவில் பெரும்பாலான சோயா பயிர் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகும்) இதை சேர்ப்பதில்லை. ஆனால், இச்சாக்கொலேட்டுகள் சிலநேரம் சீராக கலக்கப்படாதிருக்கும். சாக்கொலேட்டின் சீரானத்தன்மை தயாரிப்பு முறையாலும் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கலப்பான் சேர்க்காமலேயே, அதிக நேரம் பதன் செய்வதன் மூலம் நல்ல சீரான சாக்கொலேட் தயாரிக்கலாம். + +ஒவ்வொரு தயரிப்பாளரும் தமக்கேயுரிய வகையில் மேற்கூறிய இடுபொருட்களின் கலப்பு விகிதத்தை உருவாக்குகின்றனர். சிறந்த கரும் சாக்கொலேட்டுகள் குறைந்தது 70% கொக்கோ கொண்டிருக்கும். பால் சாக்கொலேட்டுகளில் சுமார் 50% வரை கொக்கோ உள்ளது. உயர்தர வெள்ளை சாக்கொலேட்டில் வெறும் 33% கொக்கோவே உள்ளது. தரம் குறைந்த மிக அதிக அளவில் தயாராகும் சாக்கொலேட்டுகளில் மிகக்குறைவான கொக்கோவே (பலநேரம் 7%) உள்ளது. இவ்வாறு குறைந்த கொக்கோ உள்ள சாக்கொலேட்டுகளை சாக்கொலேட் என்றே கருத இயலாது என சில சாக்கொலேட் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். + +தேவையான இடுபொருட்கள் கலக்கப்பட்டதும�� இக்கலவை "கொன்ச்" எனப்படும் சங்கு வடிவ, உலோக மணிகள் நிறைந்த கொள்கலனில் இட்டு கலந்து அரைக்கப்படுகின்றது. இதன் மூலம் கொக்கோவும் சர்க்கரையும் நாவால் இனம் பிரிக்க முடியாத அளவு சிறு துகள்களாக அரைக்கபடுகின்றன. எவ்வளவுகெவ்வளவு இம்முறை மூலம் அரைக்கப்படுகிறதோ அவ்வளவு தரமிகுந்த சாக்கொலேட் கிடைக்கும். உயர்தர சாக்கொலேட்டுகள் சுமார் 72 மணி நேரமும், குறைந்த தரமுள்ள சாக்கொலேட்டுகள் சுமார் 4 - 6 மணி நேரமும் அரைக்கப்படுகின்றன. பின்னர், இக்கலவை 45 - 50 டிகிரி C வெப்பநிலையுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. + +கொக்கோ வெண்ணை பல்வெறு உருவிலான படிகங்களை கொண்டதால், மேற்கூறிய கலவை மிக கவனமாக குளிர்விக்கப்பட வேண்டும். அப்போது தான் மென்மையாக கடிபடும், மிருதுவாக உருகும், பளபளப்பான வடிவுள்ள சாக்கொலேட் கிடைக்கும். முதலில் கலவை 45 டிகிரி C இலிருந்து சுமார் 27 டிகிரி C க்கு குளிர்விக்கப்படுகிறது. பின் மீண்டும் 37 டிகிரி C க்கு சூடு செய்யப்பட்டு மீண்டும் திடமாகும் வரை குளிர்விக்கப்படுகிறது. இந்த சாக்கொலேட் பின்னர் வார்ப்புருக்கியோ அல்லது பிற வகைகளிலோ விற்பனைக்குத் தயாராகிறது. + +இருப்பு வைத்திருக்கும் வெப்பநிலையும், ஈரப்பதமும் சாக்கொலேட்டின் தரத்தை பாதிக்கும்; 15 - 17 டிகிரி C வெப்பநிலையில், 50% க்கும் குறைவான ஈரப்பதமே சிறந்ததாகும். சாக்கோலேட் உடன் வைக்கப்படும் பொருட்களின் மணத்தை தன்பால் சிறிது ஈர்த்துக்கொள்ளுமாகையால், அதனை தனியாகவோ நன்றாக உறையில் சுற்றியோ வைத்திருப்பது நல்லது. + +வேகன் எனப்படும் விலங்கு சாரா உணவு முறையை பின் பற்றுவோர் தகுந்த சாக்கொலேட்டை காண்பது அரிது. பல்வேறு கரும் சாக்கொலேட்டுகளிலும் சிறிதளவு பால் அல்லது பால் பொருட்கள் உள்ளன. குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, அதனை வேகன் சாக்கொலேட் என்று கொள்ள முடியாது. மேலும் சாக்கொலேட்டில் கலக்கும் சர்க்கரை, விலங்கு எலும்புச்சாம்பல் மூலம் பதன் செய்யப்பட்டதாக இருக்கலாம். + + + + +உருவாக்க செயல்கூடங்கள் + +உருவாக்க செயல்கூடங்கள் (Fab Labs) எதையும் எங்கேயும் உருவாக்குவதற்கும், தன்னை தானே உருவாக்குவதற்கும் என உருவகிக்கப்பட்ட ஒரு நுட்ப அமைப்பு. தமிழில் புனைந்தியற்று கூடங்கள், வனைதல் கூடங்கள் என்றும் கூறலாம். + +மேசைக் கணினி தகவல் புரட்சியின் ஒரு உந்து. அதன் பரவல் பல கோடி மக்கள் தகவல்களை ஆக்கவும், திருத்தவும், பகிரவும் உந்தியது. + +அதே போல், பொருள் உற்பத்தியில் ஒரு புரட்சியை உந்துவிக்கக் கூடிய ஒரு கருவியாக FAB Labs பார்க்கப்படுகின்றது. + + + + +தில்லி + +தில்லி அல்லது டெல்லி ("Delhi", இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. + +வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. + +18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற பு���ிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. + +இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. + +தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த "டில்லு" அல்லது "டிலு" எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் "தாவா" என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் "தளர்வு" என்னும் பொருள்படும் "டிலி" என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து "தில்லி" என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் "தெஹ்லிவால்" எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் "வாயிற்படி" என்னும் பொருள் கொண்ட "தெஹ்லீஸ்" அல்லது "தெஹாலி" என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் "தில்லிக்கா" என்பது வேறு சிலருடைய கருத்து. + +இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கி�� நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை "கிலா ராய் பித்தோரா" எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப்-உத்-தீன் ஐபாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப்-உத்-தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின. + +முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக��� கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. + +1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். + +இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. + +இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர். + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தில்லி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது. + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது. + +இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது. + +தில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மாநிலங்குகளவை தொகுதிகளையும் கொண்டுள்ளது. + +தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ ���ல்லது 17 ச.மை) என்பனவாகும். + +தில்லி வட இந்தியாவில் அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு. + +தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச – 32 °ச (56 °ப – 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது. + +இங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர். + +தில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன. + +இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் புது தில்லி, தில்லி சந்திப்பு, ஹசரத் நிசாமுதீன், ஆனந்து விகார் முனையம், தில்லி சராய் ரோகில்லா ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. +தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், பரிதாபாது, குர்கான், நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம். + + + + + +பருத்தி + +பருத்தி (Cotton) அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. + +பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும். + +நில நடுக்கோட்டுப் பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. பருத்தி, சிந்துவெளிப் பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106). + +கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகத் திறமையாகப் பருத்தியிலிருந்து துணிகளை நெய்வதற்கு அறிந்திருந்தனர். இப் பருத்தித் துணிகளின் பயன்பாடு இங்கிருந்து நடுநிலக்கடல் பகுதிகளுக்குப் பரவியது. முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின், கலிக்கோ வகைத் துணிகளை இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். ஃபுஸ்தியன் (Fustian), டிமிட்டி (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிஸ், மிலான் ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்துக்கு இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பனி அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது. + +தாயக அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக் காலத்துக்கு முந்தியவை. + +கிரேக்க காலத்தில் பருத்தி ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளாகவே அறியப்பட்டது. அம்மக்கள் செம்மறியாட்டுக் கம்பளி தவிர வேறெந்த இழையும் அறிந்திருக்கவில்லையாதலால், பருத்தி மரம் சிறு செம்மறியாடுகளைக் கொண்டதாகவே கற்பனை செய்து கொண்டனர். 1350 இல் ஜான் மான்டவில் என்பவர் எழுதியதாவது "இந்தியாவில் வளரும் இந்த அற்புதமான செடி அதன் கிளை நுனிகளில் சிறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்தது. இக்கிளைகள் ஆடுகளுக்குப் பசித்த போது கீழ் நோக்கி வளைந்து அவற்றை மேய விட்டன". (பார்க்க படம்). இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பருத்தியை குறிக்கும் சொல் இதனை நினைவு படுத்தும் விதமாகவே உள்ளது (எ.கா. ஜெர்மனியில் பருத்தி "மரக்கம்பளி இழை" என்ற பொருளில் "பொம்வுல்" என்று அழைக்கப்படுகிறது). + +அமெரிக்காக் கண்டத்தில் மிக முந்திய பருத்திப் பயிருடுதல் மெக்சிக்கோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்றதாகத் தெரிகிறது. "கொசிப்பியம் ஹிர்சுட்டம்" "(Gossypium hirsutum)" என்னும் பருத்தியினமே அங்கு பயிரானது. இவ்வினமே இன்று உலகில் அதிகம் பயிராகும் பருத்தி வகையாகும். இது உலகப் பருத்தி உற்பத்தியின் 90% ஆக உள்ளது. மெக்சிக்கோவிலேயே உலகில் மிகுந்க அளவு காட்டுப் பருத்தி இனங்கள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கூடிய அளவு பருத்தி இனங்கள் உள்ளன. பெரு நாட்டில், தாயகப் பருத்தி இனமான "கொசிப்பியம் பார்படென்சு" "(Gossypium barbadense)" என்னும் இனமே அங்கு நோர்ட்டே சிக்கோ, மோச்சே, நாஸ்க்கா போன்ற கரையோரப் பண்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. ஆற்றின் மேற்பகுதிகளில் உற்பத்தியான பருத்தியிலிருந்து வலைகள் பின்னிக் கரையோர மீனவர்களுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து பெருமளவு மீன்களை வாங்கினர். 1500 களின் தொடக்கத்தில் அங்கு சென்ற எசுபானியர்கள் அப்பகுதி மக்கள் பருத்தி பயிரிடுவதையும், அதிலிருந்து ஆடைகள் செய்து அணிவதையும் கண்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்கா, யூரேசியா மற்றும் அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது. + +18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கத்தையும், குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதையும் தொடர்ந்து இந்தியாவின் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை உற்பத்தி நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப் பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டுவந்து இந்தியாவில் விற்றுப் பொருளீட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்திய பருத்தி தொழில் நசிவடைந்ததற்கான காரணமாகும். + +தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் (Lewis Paul), ஜான் வியாட் (John Wyatt) ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட "நூற்பு ஜெனி" (spinning jenny), 1769ல் ரிச்சார்ட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டம் (spinning frame) என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செஸ்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு "காட்டனோபோலிஸ்" "(cottonopolis)" என்னும் பட்டப்பெயர் வழங்கியது. அத்துடன் மான்செஸ்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கும் "பருத்தி ஜின்" (cotton gin) என்னும் இயந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டுவந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்கப் பிரித்தானியருக்கு உதவியது. குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று லங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர். + +1840களில், இயந்திரமயமான இங்கில���ந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய "கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம்", "கொசிப்பியம் பார்படென்சு" ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ,புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர். + +19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன. பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இஸ்மாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகை கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது. + +இக்காலத்தில் பிரித்தானிய பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்தது. இது அமெரிக்காவின் தென்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்தது. வரிகளை விதிப்பதன் மூலமும் பிற கட்டுப்பாடுகளாலும் இந்தியாவில் துணி உற்பத்தி செய்வதைக் குடியேற்றவாத அரசு தடுத்துவந்ததுடன், பருத்தியை மூலப் பொருளாகவே இங்கிலாந்துக்கு அனுப்பியது. இது குறித்து மகாத்மா காந்தி பின்வருமாறு விவரித்தார்: + +1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால் தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். + +தற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் 2015 ஆண்டின் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா "பருத்தி" உற்பத்தியில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிடிக்க வாய்ப்பு அதிக அளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டது. + +பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முக்கியமான அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா ("Spodoptera exigua") புழுக்கள் அதிக அளவில் சேதம் விளைவிக்கின்றன. + +மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ ���ல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல போகங்கள் தொடர்ந்து வளரக்கூடியது. + +பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது. + +பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணை ஆட்டப்படுகிறது. சுத்தகரிக்கபட்ட பின், இது மனிதர்களால் மற்ற சமையல் எண்ணைகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. எண்ணை பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது. + +பருத்தி உலகெங்கிலும் ஒரு முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி வேளாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம், இலாபம் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் வேளாளர்களுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது. + + + + + +மின்சார இயக்கி + +மின்சார இயக்கி ("Electric Motor") அல்லது மின் சுழற்பொறி என்பது மின்காந்த ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு இயக்கி ஆகும் . + +மின்காந்தப் புலம், மின்னோட்டம், இயந்திர அசைவு ஆகியவற்றுக்கு செங்கோணத் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம். + +மின்னியற்றி + + + + +கட்டுப்பாட்டியல் + +ஓர் அமைப்பின் ("System") இயக்கத்தை சரிவர இயங்க ஏற்றவாறு சமிக்ஞைகளை அல்லது உத்தரவுகளை வழங்கும் பிரிவை கட்டுபாட்டு அமைப்பு என்றும், எவ்வாறு அக்கட்டுபாட்டு அமைப்பை கணித ரீதியாக விபரித்து, இலத்திரனியல் சுற்று அல்லது இயந்திர அமைப்பு கொண்டு செயல்படுத்தலாம் என்பதை ஆயும் துறையை கட்டுப்பாட்டியல் (Control theory) என்றும் குறிப்பிடலாம். + +ஒரு செயல்பாட்டை அல்லது அமைப்பை நிர்வாகிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்ட்டிய தேவை என்றும் இருந்து வருகின்றது. உதாரணத்துக்கு வயல்களுக்கு நீர் பாய்ச்சுதலை கட்டுப்படுத்தல் பயிர்களுக்கு தேவைக்கேற்ற நீரை பகிர உதவுகின்றது. வாய்க்கால்கள், வரம்புகள் துணை கொண்டு வயல்களுக்கு நீர் பகிர்தலை நிர்வாகிக்க முடியும். பாரிய நிறுவன வயல்களில் விமானம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட நீர் பகிர்தலும் இடம்பெறுகின்றது. + +மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, கடலில் பாய்மரக்கப்பலில் பயணம் செய்யும் பொழுது வேக விகிதத்தை, திசையை கட்டுப்படித்தல் அவசியமாகின்றது. பாய்மரக்கப்பலின் பாய்களை கட்டுவது இறக்குவது, துலாவது போன்ற நடவடிக்க்கைகளின் ஊடாக அதை கட்டுப்படுத்தலாம். + +இப்படியாக ஆரம்ப காலம் தொட்டு கட்டுப்படுத்தல் என்பது மனிதனின் அனேக செயல்பாடுகளின் ஒரு அடிப்படை அம்சமாக இருந்து வருகின்றது. + + + + + +பவானி + +பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை. + +இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. + +இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள குமாரபாளையத்தை இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் ���ுடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து +வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. + + + + +பழம் + +பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. + +விதைகள் மற்றும் கனிகள் என்று நாம் அழைக்கும் பொதுவான சொற்கள் தாவரவியல் வகைப்பாடுகளுடன் பொருந்தவில்லை. சமையல் சொற்களில் கனி என்பது தாவரத்தின் இனிப்பான பகுதியாக குறிப்பிடப்படுகிறது. தாவரவியலில் கொட்டை என்பது கடினமான, எண்ணெய் தன்மையுடைய ஓடுடைய உருவாக்கத்தைக் குறிக்கிறது. இதே போல காய்கறி என்பது குறைந்த இனிப்புத் தன்மையுடைய மனமுடைய தாவர பாகங்களைக் குறிக்கிறது. இருப்பினும் தாவரவியலில் கனி என்பது முற்றிய விதைகளுடைய சூற்பையை குறிக்கிறது. கொட்டை உண்மையில் விதைகள் அல்ல. அது முற்றிய சூற்பையுடைய கனியாவே கருதப்படுகிறது. . சமையலில் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் என்று அழைக்கப்படுபவை தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது, சோளம், குக்கர்பிட்டே (உ.ம். வெள்ளரி, பூசனி, மற்றும் பரங்கிக்காய் ) , கத்தரி, பயறு வகை தாவரங்கள் (பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி) , இனிப்பு மிளகு மற்றும் தக்காளி. கூடுதலாக மிளகாய், சில மசாலாக்கள் போன்றவைகளும் தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது. + +கனியின் பெரும்பாலான உண்ணத்தக்க பகுதி சுற்றுக்கனியம் ("pericarp") ஆகும். இது சூலகத்திலிருந்து உருவாகி விதைகளை மூடிக் காணப்படும். இருந்த போதிலும் சில சிற்றினங்களில் வேறு சில தசை பகுதிகளும் உண்ணத்தக்கதாக உள்ளன. சுற்றுக்கனியம் வெளிப்புறம் முதல் உட்பகுதி வரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. வெளிப்பகுதி வெளியுறை (epicarp) அல்லது தோல் என்றும் நடுப்பகுதி இடைக்கனியம் (mesocarp) என்றும் உட்பகுதி உட்கனியம் (endocarp) எனவும் அழைக்கப்படுகிறது. + +ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மலர்களின் முதிர்ச்சியே கனி உருவாதலுக்கு காரணமாகின்றன. மலர்(கள்) இன் பெண் பகுதியான சூலக���் கனியின் அனைத்துப் பகுதிகளையும் உருவாக்குகிறது. + +சூலகத்தினுள் உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட சூலகப் பாலணுக்கள் கரு முட்டையைக் கொண்டுள்ளன. இரட்டைக் கருவுறுதலுக்குப் பின் சூல்கள் விதையாக வளர்கின்றன. இச்சூல்களின் கருவுருதலானது மகரந்தச்சேர்க்கை எனும் செயல்முறையோடு துவங்குகிறது.மலரின் ஆண் இனப்பெருக்க பாகமான மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் பெண் இனப்பெருக்கப் பகுதியான சூலகத்தின் சூல்முடியை வந்தடைகிறது (மகரந்தச்சேர்க்கை). பின்னர் மகரந்தத் தூள் முளைக்கத்தொடங்கி அதிலிருந்து குழல் ஒன்று வளரத்தொடங்குகிறது. மகரந்தக் குழல் மூலம் கீழாக சூழ்தண்டினுள் சூற்ப்பையை நோக்கி வளர்ந்து செல்கிறது. பின்னர் மகரந்த குழலின் நுனியானது சூலகத்தை அடைந்தவுடன் சூழ் துளையைத் ("micropyle") துளைத்துக்கொண்டு சூற்பைக்குள் நுழைகிறது.அங்கு மகரந்தக்குழலானது வெடித்து தான் சுமந்து சென்ற இரண்டு ஆண் பாலணுக்களை தனித்து விடுகின்றது. தனித்து விடப்பட்ட இரண்டு ஆண் பாலணுக்களில் ஒன்று பெண் பாலணுவுடன் இணைத்து கருவினை உருவாக்குகிறது. மற்றொரு ஆண் இனச்செல்லானது சூற்ப்பையின் மையத்திலுள்ள இரண்டு துருவ உயிரணுக்களுடன் இணைகிறது. இவ்வாறு இரண்டு ஆண் இனச்செல்களில் ஒன்று கருமுட்டையுடனும் (அண்டம்) மற்றொன்று துருவ உயிரணுக்களுடன் ("Polar Nuclei") இணையும் மொத்த நிகழ்வும் இரட்டைக் கருவுறுதல் ("Double Fertilization") என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது ஆண் பாலணு மேலும் நகர்ந்து இரண்டு துருவ உயிரணுக்கள் அல்லது இரண்டாம் நிலை உயிரணுக்களுடன் இணைந்து முதல்நிலைக் கருவூண் உயிரணுவை தோற்றுவிக்கிறது. இவ்வாறு இந்த மூன்று உயிரணுக்களை உள்ளடக்கிய இணைதல் நிகழ்ச்சிக்கு மூவிணைவு ("Triple Fusion") என்று பெயர்.இந்நிகழ்விற்கு உடல் கருவுருதல் எனவும் அழைக்கப்படுகிறது. சில தாவரங்களில் இந்த உயிரணு பண்மயத்தன்மையுடன் காணப்படலாம்..இவ்வாறு உருவான கருவூண் உயிரணு ஊட்டத்திசுவாக வளர்ந்து முளை சூழ்தசையை ("Endosperm") தோற்றுவிக்கிறது.இந்த ஊட்டச்சத்துள்ள திசுவானது வளரும் கருவுக்கு உணவூட்டத்தை அளிக்கிறது.கருவுற்ற பெண் முட்டையைச் (சூழ்) சூழ்ந்துள்ள சூற்ப்பை கனியாக மாறி விதையை (சூல்) பாதுகாக்கிறது + +இவ்வாறு சூல் விதையாக மாறிய பின்னர் முற்றிய நிலையில் சூலின் வெளிப்பகுதியான சுற்���ுக்கனியம், தசைக்கனி (தக்காளி) அல்லது உள்ஓட்டுத் தசைக்கனி (மா) போல சதைப்பற்றுள்ளதாகவோ கொட்டைகளைப் போல கடினமானதாகவோ இருக்கக்கூடும். பல விதைகள் கொண்ட கனிகளில் சதை வளர்ச்சியானது கருவுற்ற சூல்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத் தொடர்புடையது. சுற்றுக்கனியமானது வேறுபடுத்தி இறியக்கூடிய வகையில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அது முன்பு குறிப்பிட்டதைப் போல வெளிப்பகுதி வெளியுறை (வெளி அடுக்கு) (epicarp) அல்லது தோல் என்றும் நடுப்பகுதி இடைக்கனியம் (நடு அடுக்கு) (mesocarp) என்றும் உட்பகுதி உட்கனியம் (உள் அடுக்கு) (endocarp) எனவும் அழைக்கப்படுகிறது. சில கனிகளில் குறிப்பாக தனிக் கனிகள் கீழ் மட்டச் சூற்ப்பையிலிருந்து உருவாகின்றன. மேலும் அவற்றில் பூவின் துணை இனப்பெருக்க உறுப்புகளான அல்லி புல்லி சூல் முடி போன்றவை கனியுடன் இணைந்தே காணப்படுகின்றன. மற்ற ஏனைய கனிகளில் அவை கருவுறுதலுக்குப் பின்னர் உதிர்ந்து விழுந்து விடுகின்றன. இத்தகைய பிற மலர் பாகங்கள் கனியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும் போது, அது ஒரு துணைக் கனி என்று அழைக்கப்படுகிறது. மலரின் மற்ற பகுதிகளானது பழத்தின் கட்டமைப்பிற்கு காரணமாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட பழ வடிவங்களை புரிந்துகொள்ள அப்பகுதிகள் உதவியாக உள்ளன. + + +மேலும் தாவர அறிவியலாளர்கள் கனிகளை +என மூன்று முக்கியக் குழுக்களாகப் பிரித்துள்ளனர். இக்குழுக்களில் உள்ள தாவரங்கள் பரிணாம ரீதியாக தொடர்புடையவை கிடையாது. பல்வேறு பரந்து பட்ட வேறுபாடுகளைக் கொண்ட வகைப்பாட்டியலின் கீழுள்ள தாவரங்கள் ஒரே குழுவில் காணப்படக்கூடும். ஆயினும் மலரின் பாகங்கள் மற்றும் கனியின் தோற்றம் உருவாக்கங்களில் ஒற்றுமைகள் காணப்படும். + +ஒரு தனித்த மலரின் சூலகத்திலிருந்து உருவாகும் கனிகள் தனிக்கனிகள் ஆகும். தனிக்கனிகள் சதைப்பற்றுள்ளதாகவோ உலர்ந்த நிலையிலோ காணப்படக்கூடும். மேலும் இவ்வகைக் கனிகள் முற்றியவுடன் வெடித்து விதைகளை வெளியேற்றும் விதமாகவோ அல்லது வெடிக்காமல் சதைப்பகுதி மூடிய நிலையிலோ காணப்படும். + + +தனிக்கனிகளாக இருக்கும் சதைக்கனிகள் பழுக்கும் போது அவற்றின் சுற்றுக்கனியம் ("pericarp") என்றழைக்கப்படும் கனித்தோல் முழுவதுமாகவோ அல்லது அதன் ஒரு பகுதியோ சதைப்பற்று கொண்டதாகவும் சாறு நிறைந்���ும் காணப்படும். + +ஒரு மலரின் பல இணையாத சூலிலைகளில் இருந்து உருவாகும் கனிகள் திரள் கனிகள் ஆகும். இத்தகைய தனித்த சூலிலைகள் இணைந்திருக்காமல் மேல் மட்டச்சூற்பையில் இருந்து ஒவ்வொன்றும் ஒரே காம்பில் தனித்தனி கனிகளாக உருவாகின்றன. உதாரணம்: நெட்டிலிங்க மரத்தின் கனிகள். + +ஒரு மஞ்சரியின் ("Inflorescence") பல மலர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கனியாக வளர்வதை கூட்டுக்கனி என்கிறோம். இவ்வகைக் கனியில் மலர்கள் சேர்ந்து ஒரு பெரிய கனியாக வளர்ச்சியடைகிறது. எனவே இக்கனிகள் ஒரு பொய்க்கனிகள் ஆகும். பலாக்கனி கூட்டுக்கனிக்கான உதாரணங்களில் ஒன்று. + + + + + + + +ஆப்பிள் + +ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். + +மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் "Malus sp". + +ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. + +ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5 – 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது. + +தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் "Malus domestica" என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான "Malus sieversii" இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் "Malus baccata" மற்றும் "Malus sylvestris" ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. + +அனேகமாக, தோடை வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும் எனலாம். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது. + +ஆப்பிள் என்ற சொல், பழைய ஆங்கிலச் சொல்லான "aeppel" (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. + +பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்கக் குளிர் அவசியம் என்பதால், பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்கா. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப் படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் இல்லாமை, அதிகநாள் கெடாதிருத்தல், அதிக விளைச்சல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் சுவை, மணம். + +முந்தைய இரகங்கள் பெரும்பாலும் வித்தியாசமான வடிவமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல, நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும், குறைந்த விளைச்சல், நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமல் இருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் விவசாயிகள் மிகச்சிலரால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பற்பல வேறுபட்ட சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன. + +பெரும்பாலான ஆப்பிள்கள் பழமாகச் சாப்பிட உகந்தவை; சில சமைத்துச் சாப்பிடவும், சிடர் பானம் தயாரிக்கவும் உகந்தவை. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை உள்ளவை; ஆனால், இவை சிடர் பானத்திற்கு நல்ல சுவைமணம் தருகின்றன. + +பொதுவாகப் பயிரிடப்படும் ஆப்பிள் வகைகளும், பயிரிடப்படும் இடங்களும் கீழ்வருமாறு: + + + +அடிப்பாகக் கன்று இரகத்தைத் தேர்ந்தெடுப்பது சற்றே கடினமான செயலாகும். வீரிய இரகங்கள் நன்றாக வளர்ந்தாலும், சரியாகக் கிளை கழிக்காவிட்டால் அறுவடை செய்வது மிகக் கடினம். குட்டையான இரகங்கள், அறுவடை செய்ய எளிது; ஆனால், குறைவான ஆயுள் கொண்டனவாய் இருக்கும். கீழுள்ள இரகங்களில் 'M' வகைகள் 'கிழக்கு மாலிங் ஆராய்ச்சி நிலையத்தில்' உருவாக்கப்பட்டவை. + +ஆப்பிள் இரகங்களின் பெரிய பட்டியல் (ஆங்கிலம்) + +இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விடக் கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன. + +ஆப்பிளின் சுவையும், மணமும் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் 'ரெட் டெலிசியஸ்' என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்துப் புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விடக் குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர். + +பெரும்பாலான பழ மரங்களைப் போல, ஆப்பிள் மரங்களும் ஒட்டுப் போடுவதன் மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் கன்றுகள், தம் தாய் மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். பல புதிய ஆப்பிள் வகைகள் தானாக ஏற்படும் மாற்றங்களாலோ, செயற்கையான கலப்பு மூலமோ கன்று வடிவிலேயே தோன்றுகின்றன. ஓர் ஆப்பிள் இரகத்தின் பெயரில் "சீட்லிங்" ("seedling"), "பிப்பின்" ("pippin"), "கெர்னெல்" ("kernel") போன்ற சொற்கள் இருப்பின், அது கன்று மூலம் உருவானது என அறியலாம். சில இரகங்கள் முளை மொட்டு மூலமும் உருவாகின்றன. இயற்கையாக ஏற்படும் மரபணு மாற்றம் மூலம் சில கிளை மொட்டுக்கள் விரும்பத்தகுந்த குணங்களைக் கொண்டிருக்கும். சில நேரங்களில், இவை தாய் மரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். + +சில கலப்பினவியலாளர்கள் ஆப்பிள்களைக் கடின ஆப்பிள் வகைகளுடன் கலப்பு்ச் செய்து சற்றே கடினமான ஆப்பிள்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் எக்செல்சியர் ஆராய்ச்சி மையத்தில், பல கடின வகை ஆப்பிள் இரகங்கள் உருவாக்கப்பட்டு மின்னசோட்டா, விஸ்கான்சின் மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஹரால்சன், வெல்த்தி, ஹனி கோல்ட், ஹனிகிரிஸ்ப் ஆகியவை இங்கு உருவாக்கப்பட்டவை. ஹனிகிரிஸ்ப், மின்னசோட்டா மக்களால் பெரிதும் விரும்பப் பட்டதால் ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டு இவ்வகைக் கன்றுகளைப் பயிரிட்டது இன்று வரை கேட்டறியாததாகும். + +ஆப்பிள் தோட்டங்கள் இரண்டு அல்லது மூன்று வருடக்கன்றுகளை நடுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இக்கன்றுகள் இவற்றுக்கான நாற்றங்கால்களில் ஒட்டு மூலமோ, கிளைமொட்டு மூலமோ உருவாக்கப்படுகின்றன. முதலில் விதை மூலமோ அல்லது திசு வளர்ப்பு மூலமோ, ஓர் ஆப்பிள் கன்று உருவாக்கப்பட்டு ஒரு வருடம் வளர்க்கப்படுகிறது. பின்னர், இதன் மேற்பாகம் வெட்டப்பட்டு, வேறொரு கன்றின் மேற்பாகம் ஒட்டப்படுகிறது. சில நாட்களில் இரு பாகங்களும் இணைந்து மரக்கன்றாகின்றன. + +இந்த அடிப்பாகக் கன்றுகள் மரத்தின் அளவை நிர்ணயம் செய்கின்றன. விவசாயிகள் பல்வேறு வகை அடிப்பாகக் கன்றுகளை விரும்பினாலும் வீட்டுத்தோட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் பெரும்பாலும் முழு அளவிளான மரத்தையோ, மத்திய குள்ள வகை மரங்களையோ தான் விரும்புகின்றனர். குள்ள வகை மரங்கள் பெரும்பாலும் காற்றினாலும், அதிகக் குளிராலும் சேதமடைகின்றன. எனவே, இவை கழிகள் மூலம் தாங்கப்பட்டு, உயர் அடர்த்தித் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் பயிரிட எளிதாகவும், அதிக விளைச்சல் தருவனவாகவும் இருக்கும். சில குள்ள இரகங்கள், மேல்பாகத்திற்கும் அடிப்பாகத்திற்கும் இடையே, குள்ள வகை மரத்தை ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு ஒட்டுக்கள் தேவை. + +மரக்கன்று நடப்பட்டு 3- 5 (மத்திய குள்ள இரகங்கள்) அல்லது 4 – 10 (சாதாரண இரகங்கள்) ஆண்டுகள் கழித்து, அதிக அளவிலான பழங்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் சரியான முறையில் கிளைகளையும், கிளைமொட்டுக்களையும் கழித்து விடுதல் மிக அவசியமாகும். அப்போது தான், பழங்களைத் தாங்கக்கூடிய உறுதியான கிளைகள் உருவாகும். + +குளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது. வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாப்பும், வசந்த காலத்தின் போது உறைபனி இல்லாத இடமாகவும் இருத்தலும் அவசியம். மேலும் நல்ல வடிகால் வசதி தேவைப்படுவதால், நிலத்தை நன்கு உழுது வேர்கள் நீர் நிறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். + +ஆப்பிள் மரங்கள் சுயமலட்டுத்தன்மை உள்ளவை, எனவே அவை செயற்கையாகக் கலப்பினம் செய்யப்பட வேண்டும். மகரந்தச் சேர்க்கை மேம்பாடு, ஆப்பிள் வளர்ப்பில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கன்றுகளை நடும்போதே, மகரந்தக் கொடை மரங்களையும் நடுதல் அவசியம். இவ்வகை மரங்கள், உகந்த மகரந்தத்தை அதிக அளவில் கொடுக்கும். ஆப்பிள் பழத்தோட்டங்களில், பொருத்தமான மகரந்தக் கொடை மரவகைகளை மாற்று வரிசைகளிலோ, ஆங்காங்கோ நடுவதுண்டு. சிலர், மகரந்தக் கொடை மரக்கிளைகளைச் சில பழம் தரும் மரங்களில் ஒட்டுப்போடுவதும் உண்டு. மேலும் சில தோட்டங்களில், முக்கியமாக வீட்டுத்தோட்டங்களில், மகரந்தக் கொடை ஆப்பிள் பூங்கொத்துகளையோ, கிளைகளையோ கொண்டு வந்து தற்காலிகமாக வைப்பதும் உண்டு. தரமான ஆப்பிள் கன்று விற்கும் தோட்டங்களில் மகரந்தப்பொருத்தம் உடைய ஆப்பிள் வகைகளின் விவரத்தைப் பெறமுடியும். + +ஆப்பிள் தோட்ட விவசாயிகள், பூக்கும் பருவத்தில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைத் தோட்டத்தில் விடுகின்றனர். தேன்கூடுகள் சாதாரணமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேன்கூடுகளை அவற்றை வாடகைக்கு விடும் தேனீவளர்ப்போரிடம் இருந்து பெறலாம். பழத்தோட்டக் குயவன் ஈக்களும் (Orchard mason bees) பயன்படுத்தப்படுகின்றன. இவை தேனீக்களைப் போலக் கொட்டா. எனவே, வீட்டுத்தோட்டங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில வகை ஈக்களும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. + +சிறிய, வடிவற்ற, குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் விளைந்தால், அது உரிய மகரந்தச்சேர்க்கை நடக்கவில்லை என்பதன் அறிகுறியாகும். நல்ல மகரந்தச் சேர்க்கையால் விளைந்த ஆப்பிள், ஏழு முதல் பத்து விதைகளைக் கொண்டிருக்கும். மூன்றுக்கும் குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் முற்றாமல் உதிர்ந்துவிடும். இதற்கு, மகரந்தக் கொடை மரங்களோ மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகளோ உரிய அளவில் இல்லாததும், பூக்கும் பருவத்தில் உகந்த பருவநிலை இல்லாதிருத்தலும் காரணங்களாகும். பொதுவாகப், பல ஈக்கள் வந்து அமர்வதன் மூலம், ஒரு பூவுக்குத் தேவையான அளவு மகரந்தம் கிடைக்கும். + +பருவநிலையைப் பொருத���தவரை, பூத்தபின் ஏற்படும் உறைபனி பூவைச் சிதைத்து விடும். உறைபனி அதிக அளவில் இல்லையெனில், அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன், நீர் தெளிப்பதன் மூலம் பூக்களை ஒரளவு காப்பாற்றலாம். பூவின் சூல் கருகி இருப்பதே உறைபனி சேதத்தின் அடையாளமாகும். + +பெரிய நீர்நிலைகளின் அருகே தோட்டம் அமைப்பதன் மூலம் வசந்தகால வெப்பம் சிறிது குறைக்கப்படுவதால், பூப்பது சற்றுத் தள்ளிப்போடப்படுகிறது. இது வசந்தகால உறைபனியிலிருந்து பூக்களைக் காப்பாற்ற உதவுகின்றது. அமெரிக்காவில், மிச்சிகன் ஏரியின் கிழக்குக்கரை, ஓண்டோரியோ ஏரியின் தெற்குக்கரை மற்றும் பல சிறிய ஏரிகளைச் சுற்றிலும் அதிக அளவில் ஆப்பிள் வளர்க்கப்பட இதுவே காரணமாகும். வீட்டில் மரம் வளர்ப்போர், வசந்தகால வெயில் படாத இடங்களில் தோட்டம் அமைப்பதன் மூலம், பூப்பதைத் தள்ளிப்போடலாம். பூமியின் வடகோளத்தில் வடக்குப் பார்த்த சரிவுகளிலும், தென்கோளத்தில் தெற்குப்பார்த்த சரிவுகளிலும் ஆப்பிள் நடுவது பூப்பதை தள்ளிப்போட உதவுவதால் உறைபனியிலிருந்து காக்க உதவும். + +ஆப்பிள் மரங்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன. ஒரு விளைச்சலின் போது சரியான அளவு கிளைகளையோ பழங்களையோ கழித்துவிடாவிட்டால், அடுத்த விளைபருவத்தில் பூப்பது குறைந்து விடும். சரியான அளவில் கழித்து விடுதல், ஒவ்வொரு பருவமும், சீரான விளைச்சல் பெற உதவும். + +ஆப்பிள் மரங்கள் பலவிதமான பூஞ்சை அல்லது கோலுரு நுண்ணுயிர்களால் (bacteria) விளையும் நோய்களாலும், அழிக்கும் பூச்சிகளாலும் பாதிக்கப்படுகின்றன. எல்லாப் பழத்தோட்டங்களிலும், பூச்சி மருந்துகள் மூலம் இவை கட்டுப்படுத்தப் படுகின்றன. ஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு, தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்படி, பூச்சிமருந்துகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு, இயற்கையான எதிரிகள் மூலம், அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. + +பூக்கும் பருவத்தில் ஒருபோதும் பூச்சி மருந்துகள் அடிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று விடும். அதுபோல, இவ்வகை ஈக்களை ஈர்க்கும் செடிகளையும் தோட்டத்தில் வளர விடக்கூடாது. இவ்வகைச் செடிகளில் தங்கிவிடும் பூச்சிமருந்து, மகரந்தச்சேர்க்கை ஈக்களைக் கொன்றுவிடும். + +நோய்களில் மிக முக்கியமானது 'தீ வாடல்' எனும் கோலுருக்கிருமி நோயாகும். பூஞ்சை நோய்களில் முக்கியமானவை ஜிம்னோஸ்போராஞ்சியம் துரு (Gymnosporangium rust), காய்ந்த தோல் (Apple Scab) மற்றும் கரும்புள்ளி (Black spot). பூச்சிகளில் அதிகச் சேதம் விளைவிப்பது ப்ளம் குர்குலியொ (plum curculio) ஆகும். மற்ற பூச்சிகளில் முக்கியமானவை: பைமடோபஸ் பெஹ்ரன்ஸி ("Phymatopus behresii"), ஆப்பிள் புழு (Apple maggot), காட்லிங் அந்து (Codling moth), பேரரசு அந்து (Emperor moth), நவம்பர் அந்து (November moth), குளிர்கால அந்து (Winter moth), பச்சை அந்து, ப்ரிம்ஸ்டோன் அந்து (Priumstone moth), போப்லர் கழுகு-அந்து (Poplar hawk-moth), காக்ஸ்கோம்ப் ப்ராமினன்ட் அந்து, மஞ்சள் வால் அந்து (Yellow tail moth), ஷார்ட்-க்லோக்ட் அந்து (Short-cloaked moth). ஆஸ்திரேலியாவில் சில வெளிநாட்டு ஆப்பிள் மரங்களை ஹெபியாலிட் அந்தின் (Hepialid moth) புழுக்கள் தாக்குகின்றன. இவை மரத்தினுள் துளையிடுகின்றன. + +ஆப்பிள் பழங்களை, இயற்கை விவசாய முறையில் விளைவிப்பது மிகக் கடினம். இருப்பினும் சில தோட்டங்களில் நோய்-எதிர்ப்பு ஆற்றல் கொண்ட இரகங்களைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளனர். இயற்கை விவசாய முறையில், அண்மைய எடுத்துக்காட்டு, பீங்கான் போன்ற கயோலின் களியை (kaolin clay) மெல்லிதாய்ப் படரும்படி ஆப்பிள் பழங்களின் மேல் தெளிப்பது. இது, பூச்சித்தாக்குதல்களிலிருந்தும், வெயிலால் உண்டாகும் அழுகலிலிருந்தும் பழங்களைப் பாதுகாக்கிறது. + +முற்றிய மரங்களில் ஆண்டுக்குச் சுமார் 100 – 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறையக் காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50 – 100 கிலோகிராம் காய்க்கும். + +"தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும்" ("An apple a day keeps the doctor away") என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது. + +ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004). + +ஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. + +ஆப்பிள்கள் பல மத வழக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சில கலாச்சாரங்களில் ஆப்பிள் சாகாவரம், காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலெஸ், தனது பன்னிரண்டு வேலைகளில் (Twelve labours) ஒன்றாக ஹெஸ்பெரிடஸின் தங்க ஆப்பிள்களைக் கண்டு பிடிக்கவேண்டியிருந்தது. இன்னொரு கிரேக்கப் பிரபலமான பாரிஸ், "காலிஸ்டி" - அழகானவளுக்கு - என்ற சொற்கள் பொறித்த 'தங்கஆப்பிளை', மிக அழகான பெண் கடவுளுக்குத் தந்ததும், அதனால் மறைமுகமாக ட்ரோஜன் போர் நடந்ததும் வரலாறு. கிரேக்க வரலாற்றுக் கதையில், ஓர் ஓட்டப்பந்தயத்தின் போது அடலாண்டாவின் கவனத்தைத் திசைதிருப்ப ஹிப்போமெனெஸ், மூன்று தங்க ஆப்பிள்களை வீசியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டைக் கிரேக்கக் கலாச்சாரத்தில் ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது, அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும். கிரேக்க வரலாற்றில், ஆப்பிள் பற்றிய மற்றொரு குறிப்பு, ப்லேயீடீஸ் (Pleadis) பற்றியது. + +நோர்ஸ் (ஸ்கான்டிநேவிய) கலாச்சார நம்பிக்கையின்படி 'இடுன்' என்பவர், கடவுள்களை இளமையாகவே வைத்திருந்த 'சாகாவர ஆப்பிள்களை'ப் பாதுகாத்து வந்தார். கிரேக்க வரலாற்றாசிரியர் டாசிடஸ் (Tacitus) நோர்ஸ் பற்றிய தனது ருனிக் டிவினிஷன் (runic division) குறிப்பில் 'பழ மரம்' எனக் குறிப்பிட்டது ஆப்பிள் அல்லது ரோவன் மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. + +கெல்டிய சமயநம்பிக்கையில் 'கொன்லே' என்பவர், ஒரு வருடம் உண்ணக்கூடிய ஆப்பிளைப் பெற்றதாகவும் அது அவரைத் தேவலோகத்தை விழையச் செய்ததாகவும் குறிப்பு உள்ளது. கிறிஸ்துவ நூலான 'படைப்பில்' (Genesis), ஆப்பிள் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் கூடத் 'தடை செய்த பழம்' ('forbidden fruit'), ஆப்பிள் தான் என ஐரோப்பியக் கிறித்துவர்கள் நம்புகின்றனர். ஏவாள், ஆதாமுடன் உண்ட அந்தப்பழம் ஆப்பிள் தான் என்பது, ஈடன் தோட்டம் பற்றிய பண்டைய சித்திரங்களில் காணப்படுகிறது. இத்தொன்மையான ஓவியங்களில் காணப்பட்ட ஆப்பிள் பழக் குறியீடு, தற்போதும் கிறிஸ்துவ சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களின் தொண்டைக்குழி, அந்தத் தடைசெய்த பழம் ஆதாமின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உருவான மனித உறுப்பு என்ற நம்பிக்கையால், ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது. + +ஆப்பிளைக் கிறித்துவ சமயக் குறியீடாக ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம், இலத்தீன் மொழியில் 'ஆப்பிள்' மற்றும் 'சைத்தான்' ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ஒன்றே (அந்தச் சொல் 'மலும்'). இச்சொல் பொதுவாகப் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாமின் கையில் இருக்கும் ஆப்பிள் பாவத்தைக் குறிக்கும். அதே சமயம் இயேசு ஆப்பிளை வைத்திருக்குமாறு சித்தரிக்கப்படும்போது அவர் உயிர் படைக்கும் இரண்டாம் ஆதாமாகக் கருதப்படுகிறார். இவ்வாறாகப் பழைய வேதாகமத்தில், ஆப்பிள் மனிதனின் வீழ்ச்சியையும், புதிய வேதாகமத்தில் மனிதனின் எழுச்சியையும் குறிக்கிறது. இதுவே, மடோனா (மேரி மாதா) மற்றும் குழந்தை இயேசுவின் சித்திரங்களில் காணப்படுகிறது. + +பண்டைய கஸகஸ்தான் நாட்டில் 'ஆப்பிள்களின் தந்தை' எனப்பொருள்படும் 'அல்மாட்டி' நகரத்தின் பெயர்க் காரணம், அவ்விடத்தில் இயற்கையாகக் காணப்பட்ட ஆப்பிள் காடுகளேயாகும். அமெரிக்காவின், அர்கன்சாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களின் அரசாங்கப் பூ, ஆப்பிள் பூ ஆகும். ரஷ்ய நாட்டின் 'யப்லோகோ' கட்சியின் பெயரின் பொருள், ஆப்பிள் ஆகும். அக்கட்சியின் சின்னம் ஆப்பிளையே குறிக்கிறது. + +சுவிஸ் நாட்டின் பழங்கதைக் கூற்றுப்படி 'வில்லியம் டெல்' என்ற வில்வித்தைக்காரர் தன் மகனின் தலையில் இருந்த ஆப்பிளைத் தன் அம்பால் துளைத்து ஒரு கொடுங்கோலனிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றினான். + +ஐரிஷ் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி, ஆப்பிள் தோலை ஒரு நாடா போல உரித்துப் பெண்ணொருத்தியின் தோளுக்குப் பின்னால் எறிந்தால், அ��ு அவளது வருங்காலக் கணவனின் முதலெழுத்தின் வடிவில் விழும் என நம்பப்படுகிறது. டென்மார்க் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி மனைத்துரோகம் புரிந்தவரின் அருகே வைக்கப்படும் ஆப்பிள் வாடிவிடும். + +அமெரிக்காவின் சில இடங்களில் ஒளித்து வைக்கப்படும் ஆப்பிள்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஹாலோவீன் பண்டிகைக் கொண்டாட்டமாகும். மேலும், ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும், தோலில் தேய்த்தால் மச்சம் அழியும் என்றும் நம்பப்படுகிறது. + +அமெரிக்கா, டென்மார்க், சுவீடன் நாடுகளில் ஆசிரியர்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்படும் பரிசு ஆப்பிளாகும். இப்பழக்கம் தோன்றியதன் பின்னணி, 16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர் அதை ஆப்பிள் கொடுத்து ஈடு செய்தனர். மாணவர்கள் கூடை கூடையாய் ஆப்பிள் கொடுத்து வந்த வழக்கம், ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபின் ஓர் ஆப்பிளாகக் குறைந்து விட்டது. + +2002ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும், சுமார் 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 45 லட்சம் டன் ஆப்பிள்கள் விளைவிக்கப்பட்டன. இதில் பாதியளவு சீனாவில் விளைவிக்கப்பட்டன. அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 15% ஆப்பிள்களையும், 7.5% ஆப்பிள்களையும் உற்பத்தி செய்கின்றன. துருக்கி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் ஆப்பிள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்காவில் விற்பனையாகும் ஆப்பிள்களில் 60% வாஷிங்டன் மாநிலத்தில் விளைகின்றன. நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. + +ஆப்பிள்கள் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகின்றன. மேலும், ஆப்பிள்கள் பதப்படுத்தப்பட்டோ சாறு பிழியப்பட்டோ சிலநேரம் நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தியோ (ferment) ஆப்பிள் பழச்சாறு, சிடர், வினிகர், பெக்டின் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் சிடர் கொதி, வடிக்கப்படும்போது ஆப்பிள்ஜாக், கல்வடோஸ் ஆகிய சாராய பானங்கள் கிடைக்கின்றன. ஆப்பிள் கொண்டு ஒயினும் தயாரிக்கப்படுகிறது. + +ஐக்கிய இராச்சியத்தில் ஆப்பிள்களை இனிப்புப்பாகில் (toffee) நனைத்து 'டாஃபி ஆப்பிள்' (toffee apple) எனப்படும் இனிப்புவகை நெடுங்காலமாகத��� தயார் செய்யப்படுகிறது. அதுபோலவே, அமெரிக்காவிலும் 'மிட்டாய் ஆப்பிள்' (candy apple) எனப்படும், சாக்லேட் பாகில் நனைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனையாகின்றன. யூதர்களின் புத்தாண்டின் போது, இனிய புத்தாண்டைக் குறிக்கும் விதமாக ஆப்பிள்கள், தேனில் நனைத்து உண்ணப்படுகின்றன. + +குறிப்பு: பின்வரும் இணைப்புகள் அனைத்தும் ஆங்கிலப்பக்கங்களாகும். + + + + +மராத்திய மொழி + +மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும். உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15வதாக உள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும். இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. + +மராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது. தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர். + +கீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது. + + + + +கோபி பாலைவனம் + +கோபி பாலைவனம் ("Gobi", சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 000 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும். + + + + +திருக்குர்ஆன் + +குரான் அல்லது திருக்குரான் ("குர்-ஆன்" அரபி: القرآن‎ "அல்-குர்-ஆன்") இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது. + +முகம்மது நபி(சல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித்(ரலி)என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்(ரலி) காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன. + +திருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் "கிதாப்" (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது. + +திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் + +திருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே மு���ம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் நினைவூட்டலுக்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன. + +திருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன. + +திருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் "சூரா" என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன. + +முகம்மது நபி இறைவன் குறித்த உண்மையான அணுகுமுறையை அறிய மெக்காவின் அருகில் இருக்கும் ஹிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீஜாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் முஹம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முஹ���்மது நபி கூறினார். +முஹம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமண் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை ஓதவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை. + +முஹம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார். + +சைத் பின் சாபித், முஹம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின்படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சா அம்மையாரை வந்தடைந்தது. + +அபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது கலீபாவான உதுமான் காலத்தின், இஸ்லாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது. + +இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார் இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன. + +தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன. + +திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன. + +திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு ("ஜுஸ்வு") என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. + +"யுசூவு அட்டவணை " + +முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குரான் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன. + +பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன. + +திருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் "மக்கீ" எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் "மதனீ" எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன. + +திருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை அரபி மொழியில் 'தஜ்வீத்' என்பர். + +அரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானல் தொகுக்கப்பட்ட குரானானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது. + +இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், "மரியம்" அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான "அல்-பாத்திகா" பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. +பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்���ப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் ஆங்கில குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார். + +தமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது. அப்துல் ஹமீத் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன. + +குரான் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குரான் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமாமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது. + +இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குரான் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரியத் சட்டங்களும் குரான் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன. + +இசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குரானின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது. + +அதே போல தோட்டக்கலையிலும், குரானின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமி�� கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குரானில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது. +இவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஒவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது. + + + + + +ரமலான் நோன்பு + +ரமலான் நோன்பு ("Sawm", ) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும். + +1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: +'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்)' +என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். +Book : 30 புகாரி + + + + + + +பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. + + +1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும். + +2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரிய���் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது. + +3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது. + +4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும். + +5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும். + +1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது. + +2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. + +3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும். + +4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது. + +5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை. + +6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது. + +7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும். + +8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். + +9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும். + +1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது ��ோன்பு திறப்பதும் சுன்னத்தாகும். + +2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும். + +3. ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும். + +4. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும். + +5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும். + +6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும். + +7. பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும். + + + + + +நோன்பு + +நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல் என்பதாகும். இது ஒரு சமயச் சடங்கின் பகுதியாகவும் மேற்கொள்ளப்படும். மேலும் இது உண்ணாநிலை மற்றும் பிற புலனடக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். + +இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. + +சமண சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை எனும் உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும். + +ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இவ்வுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. + +வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. + + + + +பா. ராகவன் + +பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர். + +பா. ராகவனின் தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழி வழியாகப் பள்ளிக் கல்வி ஆசிரியர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். தலைமை ஆசிரியராக, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் பல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பில் தீவிர நாட்டம் கொண்டவர். பாபர் நாமாவைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹாவின் 'India after Gandhi' நூலைத் தமிழாக்கம் செய்தவர். இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சத்தையும் தமிழாக்கம் செய்துள்ளார். பணி மாறுதல்களின்போது அவர் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா. ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது. + +பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுத ஆரம்பித்தார் பா. ராகவன். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. 1989ம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் கிட்டிய பின்பே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார். + +1990ம் ஆண்டு கி. கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா. ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய 'மொஹஞ்சதாரோ' என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா. ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார். + +1992ம் ஆண்டு டிசம்பர் முதல் 2000வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணி புரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார். + +2004ம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணி புரியத் தொடங்கினார். 'நியு ஹொரைசன் மீடியா' நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் 'நலம்', 'வரம்', 'ப்ராடிஜி' உள்ளிட்ட அனைத்துத் தமிழ் பதிப்புகளையும் திறம்படத் துலக்கம் பெறவைத்தார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் பதிப்புத் துறையில் 'கிழக்கு பதிப்பக'த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. + +2011ம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா. ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராக உள்ளார். இதுவரை பத்து நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மன���வி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். + +இரண்டாயிரமாவது ஆண்டு வரை சிறுகதைகளும் நாவல்களும் மட்டும் எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், குமுதம் வார இதழில் பணி சேர்ந்த பின்பு பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினை ஒரு தொடராக எழுதினார். அதன் வெற்றிக்குப் பின்பு டாலர் தேசம் [அமெரிக்க அரசியல் வரலாறு], நிலமெல்லாம் ரத்தம் [இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு], மாயவலை [சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்] உள்ளிட்ட ஏராளமான அபுனை நூல்களை எழுதினார். லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் விவகாரங்களை சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்று பெயர் பெற்றார். பல்லாண்டுக் காலமாக அரசியல் நூல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், 2017ம் ஆண்டு தமது 'பூனைக்கதை' என்ற நாவலின் மூலம் மீண்டும் படைப்பிலக்கியத்துக்குள் திரும்பினார். + +"பூனைக்கதை கலைத்துறை சார்ந்த ஒரு நாவல். ஆனால் வண்ணமோ வாசனையோ சற்றும் இல்லாத அதன் ஒரு பகுதியை மட்டும் இது சித்திரிக்கிறது. கண்ணீரும் இல்லாத, புன்னகையும் இல்லாத ஒரு பேருலகம். இங்கும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். சமயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இருப்பதும் இறப்பதும் இங்கும் நிகழ்கிறது. கலையுலகம்தான். ஆனால் இதன் முகமும் அகமும் வேறு. நீங்கள் இதுவரை இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பார்க்கலாம்." என்று தமது பூனைக்கதை குறித்து பா. ராகவன் குறிப்பிடுகின்றார். நெடுங்காலமாகத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனகர்த்தாவாகப் பங்கேற்று வந்த தமது அனுபவங்களின் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்களின் உலகினை, அதன் இருள் மூலைகளை இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார். + +பூனைக்கதைக்குப் பிறகு யதி என்ற நாவலினை எழுதி வெளியிட்டார். இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகின்ற கதை. தனது கல்லூரிக் காலத்துக்குப் பின்பு சிறிது காலம் தீவிர ஆன்மிக வேட்கை உண்டாகி, பல சாதுக்கள், சன்னியாசிகளுடன் சுற்றித் திரிந்தவர் பா. ராகவன். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவியாக அப்போதிருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் சந்திப்புக்குப் பின் அவரால் அமைதிப்படுத்தப்பட்டு, துறவைக் காட்டில���ம் எழுத்தே மீட்சிக்கு வழியென உணர்ந்து திரும்பியதாகக் கூறுகிறார். + + + + + + +நகைச்சுவை நூல்கள் + + +வாழ்க்கை வரலாறு + + +சிறுவர் நூல்கள் + + +திரைப்படங்கள் + +பா. ராகவன் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். + + +தொலைக்காட்சித் தொடர்கள் + + +2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் தமிழில் வெளிவந்தவற்றுள் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடராகும். 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது. + + + + + + +சிவகாசி + +சிவகாசி (ஆங்கிலம்:Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். + +சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சிவகாசியில் 23.10.2017 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர். இந்த கோயில் தற்போது காசி விஸ்வநாத சாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவ���ாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன. + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.42% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 9.21% கிருஸ்துவர்கள் 5.20%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சிவகாசி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 8.35%, பழங்குடியினர் 0.25% ஆக உள்ளனர். + +சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.இருப்பினும் தற்போது தொழிலானது மிகவும் மோசமாக உள்ளது. + +பத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல், திரு வெங்கடாசலபதி ஆலயம், மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். + + +