diff --git "a/train/AA_wiki_06.txt" "b/train/AA_wiki_06.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_06.txt" @@ -0,0 +1,2560 @@ + +செங்குருதியணு + +செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும். + +இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன. எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் பெருவிழுங்கி (Macrophage) இனால், கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன. + +முள்ளந்தண்டுளிகளில் மாத்திரமே செங்குருதியணு காணப்படுகின்றது. இவற்றில் இனத்துக்கினம் செங்குருதியணுவின் வடிவமும், கட்டமைப்பும் மாற்றமடைகின்றது. முலையூட்டிகள் தவிர ஏனைய அனைத்து முள்ளந்தண்டுளிகளின் (மீன்கள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள்) செங்குருதிக் கலங்களிலும் கரு உள்ளது. செங்குருதிக் கலங்களே குருதிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபினின் ஹீம் கூட்டத்தின் இரும்பு அயன்களாலேயே இரத்தம் சிவப்பு நிறமாகின்றது. செங்குருதிக் கலங்கள் நீக்கப்பட்ட குருதி முதலுரு வைக்கோல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். +உலகில் குடும்பம் "Channichthyidae" மீன்களில் மாத்திரமே செங்குருதிக் கலங்களோ ஈமோகுளோபினோ காணப்படுவதில்லை. இவை அந்தார்ட்டிக் சமுத்திரத்தின் குளிர் நீரில் வாழ்வதால் அந்நீரே அவற்றுக்குத��� தேவையான ஆக்சிசனைக் காவுகின்றது. (குளிர் நீரில் ஆக்சிசனின் கரைதிறன் அதிகமாகும்). பொதுவாக செங்குருதிக் கலத்தின் விட்டம் குருதி மயிர்க்குழாயின் விட்டத்தை விட 25% அதிகமாகும். எனினும் செங்குருதிக் கலங்களின் கலமென்சவ்வின் மீள்தன்மை (Elasticity) காரணமாக அக்குறுகிய இடைவெளியூடாகவும் நசிந்து கொண்டு செல்கின்றன. இவ்வாறு இருப்பதால் செ.கு.கலங்கள் மெதுவாக மயிர்த்துளைக் குழாயூடாக செல்கின்றன. இம்மெதுவான அசைவால் அதிகளவு ஆக்சிசன் பரவக் கூடியதாக உள்ளது. +முள்ளந்தண்டுளிகளின் பிரதான சுவாச நிறப்பொருள் ஈமோகுளோபின் ஆகும். ஈமோகுளோபினில் குளோபின் எனும் புரதப்பகுதியும் ஹீம் எனும் அயன் பகுதியும் உண்டு. ஆக்சிசன் இரும்பு அயனோடு இணையும்; CO புரதப்பகுதியோடு இணையும். எனவே ஆக்சிசன் கொண்டு செல்லலுக்கு காபனீரொக்சைட்டு போட்டியாக இருப்பதில்லை. எனினும் புகையிலுள்ள காபனோரொக்சைட்டு (CO) இரும்போடு இணைவதால் ஆக்சிசன் கொண்டு செல்லலுக்குப் போட்டியாக அமைந்து ஆக்சிசன் காவலைக் குறைக்கின்றது. ஒரு ஈமோகுளோபின் புரதத்தில் நான்கு இரும்பு அயன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குருதிக் கலத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் ஈமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன. + +மனிதன் உட்பட முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் ஆக்சிசன் காவல் வினைத்திறனை அதிகரிப்பதற்கென பல இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கருவோ, இழைமணியோ இருப்பதில்லை. எனவே இவற்றின் செங்குருதிக் கலங்களில் டி.என்.ஏ இருப்பதில்லை. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்களுக்குத் தேவையான சக்தி காற்றின்றிய சுவாசம் மூலமே பெறப்படுகின்றது. +இழைணி இன்மையால் கிடைக்கும் நன்மை: +கரு இல்லாததால் கிடைக்கும் நன்மை: +முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்கள் இரட்டைக் குழிவான தட்டுருவானவை. இவ்விரட்டைக் குழிவும் ஆக்சிசன் பரவலடையும் மேற்பரப்பின் பரப்பளவை அதிகரிப்பதாக உள்ளது. + +செங்குழியங்கள் பொதுவாக செவ்வென்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செக்கனிலும் 2-4 மில்லியம் செங்குழியங்கள் உருவாகின்றன. இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 என்பன அவசியமாகும். ஒவ்வொரு செங்குழியமும் முதல் 7 நாட்களை செவ்வென்பு மச்சையினுள் ஆரம்ப நிலையிலும், கிட்டத்தட்ட 120 நாட்களை குருதியிலும் கழிக்கின்றன. செங்குழியங்களின் முன்னோடிக் கலங்கள் வலையுருக்குழியங்கள் ஆகும். வாழ்வுக் காலத்தை முடித்த செங்குழியங்களும், காயமடைந்த அல்லது வித்தியாசமான செங்குழியங்களும் குருதியிலிருந்து நீக்கப்படுகின்றன. பிரதானமாக மண்ணீரலிலும், ஈரலிலும் இவை நீக்கப்படுகின்றன. ஈரலில் அழிக்கப்படும் செங்குழியங்களின் கூறுகளிலிருந்தே பித்த நிறப்பொருட்கள் உருவாகின்றன. +கருப்பையில் உள்ள முதிர்மூலவுரு நிலையில் மாத்திரமே செங்குழியங்கள் பிரதானமாக ஈரலில் உருவாக்கப்படுகின்றன. + + + + + +http://en.wikipedia.org/wiki/Erythrocytes + + + + +சந்திரசேகர் வரையறை + +சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு இறந்துபட்ட விண்மீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார். + + + + +வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி + +வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும். + +வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது +மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது. + + + + + +எரிமம் + +எரிமம் அல்லது எரிபொருள் ("Fuel") என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் "எரி���ொருள்" எனக் குறிப்பிடலாம். இவ்வெரிபொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. + +எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். + +எரிபொருட்கள் பொதுவாக திண்ம, நீர்ம, வளிம எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. + +மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள். + +பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிசாராயம், எரிநெய் போன்றவை நீர்ம எரிபொருள். + +நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள். + +ஓர் அலகு பருமன் உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் "கலோரி மதிப்பீடு" எனப்படுகிறது. + +திண்ம அல்லது நீர்ம எரிபொருட்களின் கலோரி மதிப்பீடு கிலோஜூல்/கிலோகிராம் (kJ/kg) என்ற அலகிலும் வளிம எரிபொருட்களின் மதிப்பீடு கிலோஜூல்/மீட்டர் (kJ/m) என்ற அலகிலும் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + +உலக இயற்பியல் ஆண்டு 2005 + +2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டு ("World year of Physics 2005") என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நான்கு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதன் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. சார்பியல் கொள்கை, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவு, ஒளிக் குவையமாக்கம் ஆகிய நான்கு ஆய்வுகளும் இயற்பியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. + +இயற்பியல் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் உருவாக்கிய பெரும் மாற்றங்கள் குறித்து இவ்வாண்டில் பன்னாட்டு அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும் 21 ஆம் நூற்றாண்டில் இயற்பியல் சந்திக்கவிருக்கும் அறைகூவல்கள் குறித்தும் நடப்பாண்டில் கருத்துப் பரிமாற்றம் பன்னாட்டு அளவில் பரவலாக மேற் கொள்ளப்பட்டன. பல்வேறு அறிவியல் துறைகளில் இயற்பியல் நிகழ்த்திவரும் மாற்றங்கள் பற்றியும் உலகமுழுவதும் அறிவியல் அறிஞர்கள் விவாதித்தார்கள். + +இயற்பியல் இயற்கையையும் புறநிலை உலகையும் முழுமையாகப் புரிந்து கொள்ள உதவு அடிப்படையான அறிவியலாகும். இன்றைய தொழினுட்பத்தின் பெரும்பகுதி இயற்பியலின் பயன்பாடுகளால் உருவாகியதே ஆகும். உலகளா��ிய நிலையில் இயற்பியல் சார்ந்த விழிப்புணர்வை உயர்த்தல், அப்புலத்தின் பெருவளர்ச்சிகளைக் கொண்டாடுதல் எனும் இரு நோக்கங்களுக்காக பன்னாட்டு தூய, பயன்முறை இயற்பியல் ஒன்றியம் 2005ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றியது. பிறகு இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையாலும், ஐக்கிய அமெரிக்கப் பேராயத்தாலும் ஏற்கப் பட்டு வழிமொழியப்பட்டது. + +கடந்த நூறு ஆண்டுகளாக இயற்பியலின் மெய்யியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான 2005 ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைகிறது. இம்மாற்றங்கள் 1905ஆம் ஆண்டில் ஐன்சுட்டீன் வெளியிட்ட பின்வரும் நான்கு ஆய்வுக் கட்டுரைகளுடன் தொடங்கின. இவை பிரவுனிய இயக்கம், சிறப்புச் சார்பியல் கோட்பாடு , ஒளிமின் விளைவு, ஒளியாற்றல் குவையமாக்கம் ஆகிய நான்குக் கருத்துப் படிமங்களை அறிமுகப்படுத்தின. இந்நிகழ்வு குவைய இயக்கவியலை உருவாக்கி வளர்க்கப் பேருந்துதல் தந்தது. "E = mc" என்ற பொருள்-ஆற்றல் சமன்பாட்டைப் பெற்றெடுத்த்து. இவை "Annus Mirabilis கட்டுரைகள்" என வழங்கப்படுபவை. ஏனெனில் இவை 1905ஆம் ஆண்டை இயற்பியலின் விந்தையாண்டாக மாற்றியவையாகும். + +பெரும்பாலான இயற்பியலார் முதல் மூன்றை நோபல் பரிசு பெறுமளவுக்குச் சிறப்பானவையாகக் கருதிட, நான்காவதான ஒளிமின் விளைவே நோபெல் பரிசை வென்றது. இந்தக் கட்டுரைகளின் சிறப்பே என்னவென்றால், கோட்பாட்டு இயற்பியலில் இருந்தே ஏரணமுறைப்படி செய்முறை முடிவுகளைத் தெளிவாக விளக்கியமைதான் எனலாம். இது பிறகு பல பத்தாண்டுகளாக இயற்பியல் அறிஞகளை வியப்பிலாழ்த்தியது. + +முதல் ஆய்வுக் கட்டுரை ஆற்றல் குவையம் எனும் கருத்துப் படிமத்தை முன்மொழிந்தது. அதைப் பயன்படுத்தி ஒளிமின் விளைவு நிகழ்வை எப்படி விளக்கமுடியும் எனக் காட்டியது. ஆற்றல் குவையம் பற்றிய எண்ணக்கரு, மாக்சு பிளாங்கின் கரும்பொருள் கதிர்வீச்சு விதியைக் கொணர, பின்னவர் பயன்படுத்திய ஒளிர்வு ஆற்றல் ”குவையம்” எனும் இடைவிட்டு அமையும் சிறுசிறு அளவுகளிலேயே உறிஞ்சவோ உமிழவோ முடியும் என்ற கற்பிதத்தில் இருந்து பெற்றதாகும். ஐன்சுட்டீன் ஒளியை இடைவிட்டுஅமையும் ஆற்றல் குவைகளாகக் கொள்ளும்போது எப்படி புதிராக இருந்த ஒளிமின் விளைவை எளிதாக விளக்கமுடியும் எனக் காட்டினார். + +ஒளிக்குவைய எண்ணக்கரு ஒளியின் அலைக்கோட���பாட்டுடன் முரண்பட்டது. ஒளிசார்ந்த அலைக்கோட்பாடு, ஜேம்சு மாக்சுவெல்லின் மின்காந்தவியல் சமன்பாடுகள் தரும் நடத்தையை விளக்கும் ஆற்றலின் ஈறிலாத பிரிதிறக் கற்பிதத்தைச் சார்ந்து உருவாகியதாகும். செய்முறைகள் ஐன்சுட்டீனின் ஒளிமின் விளைவுச் சமன்பாடுகள் துல்லியமானவை என நிறுவிய பிறகும் அவருடைய விளக்கம் எல்லோராலும் பொதுவாக ஏற்கப்படவில்லை. என்றாலும், 1921ஆம் ஆண்டளவில் இவருக்கு நோபெல் பரிசளிக்கும் மேற்கோளில் அவரது ஒளிமின் விளைவு ஆய்வுக்காகத் தரப்படுவதாக வெளியிட்ட பிறகே, பெரும்பாலான அறிவியலார் ஒளிக்குவையம் இருக்கமுடியும் என்பதை ஒப்புக் கொண்டனர். குவைய இயக்கவியல் வளர்ந்து முதிர்வுற்ற பிறகே ஒளிமின் விளைவின் முழுக்காட்சியையும் பெறமுடிந்தது. + +அந்த ஆண்டின் அவரது இரண்டாம் ஆய்வுக் கட்டுரை பிரவினிய இயக்கத்தில் துகள்களின் இடப்பெயர்ச்சி நெறியம், (Vector) நிரல் சதுர வேர் மதிப்புக் கோவை உருவாக்கும் நிகழ்தகவுப் படிமத்தைச் சார்ந்துள்ளதை முன்மொழிந்தது. அப்போது எதிர்க்கப்பட்ட பாய்ம இயக்க்க் கோட்பாட்டைப் பயன்படுத்தி, அதுவரை கண்டுபிடிக்கப்பட்டு பல பத்தாண்டுகளாகியும் விளக்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வை நிறைவாக விளக்கி, அணுக்களின் நிலவலுக்கான செய்முறைச் சான்றையும் காட்டினார். இது அப்போது எதிர்ப்பில் இருந்த புள்ளியியல் இயக்கவியலுக்குப் பெரும் மதிப்பூட்டியது. + +இதற்கு முன்பு அணுக்கள் பயன்மிக்க கருத்துப்படிமங்களாகவே கருதப்பட்டன. ஆனால் இயற்பியலாரும் வேதியியலாரும் அணுக்கள் உண்மையாக நிலவும் உருப்படிகளா எனச் சூடான விவாதத்தில் இறங்கி இருந்தனர். ஐன்சுட்டீனின் அணுநடத்தை பற்றிய புள்ளியியல் விளக்கம் செய்முறை வல்லுநர்களுக்கு அவற்றை நுண்ணோக்கியால் எண்ணிட ஒரு வழிமுறையை உருவாக்கித் தந்தது. அணுவெதிர்ப்புச் சிந்தனைப் பள்ளியின் தலைவர்களில் ஒருவரான வில்கெல்ம் ஆசுட்வால்டு, ஆர்னால்டு சோமர்ஃபீல்டு அவர்களிடம் தான் ஐன்சுட்டீனின் பிரவுனிய இயக்க விளக்கத்தால் அணுநம்பும் கூட்டத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினாராம். + +அந்த ஆண்டின் ஐன்சுட்டீனின் மூன்றாம் ஆய்வுக் கட்டுரை ஓர் உயர்திறத் தன்னுள்ளடக்கமான ஆய்வாகும். இதை உருவாக்க வேறு மேற்கோள்கள் என எவற்றையும் அவர் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வில் ��ன்சுட்டீன் காலம், தொலைவு, பொருண்மை, ஆற்றல் ஆகிவற்றின் உறவுசார்ந்த கோட்பாட்டை மின்காந்தவியலோடு பொருந்துமாறு உருவாக்கினார். ஆனால் இதில் இவர் ஈர்ப்புவிசையைக் கருதவில்லை. + +ஐன்சுட்டீனின் விளக்கம் இரு எடுகோள்களில் இருந்து உருவாகிறது: முதல் எடுகோள் கலிலியோவின் ஒருவருக்கொருவர் நிலையான சார்பு விரைவுகளில் செல்லும் அனைத்து நோக்கர்களுக்கும் இயற்பியல் விதிகள் ஒன்றுபோலவே அமையும் என்ற எண்ணக்கருவாகும். இரண்டாம் எடுகோள் எந்தவொரு நோக்கருக்கும் ஒளியின் விரைவு ஒன்றுபோலவே அமையும் என்பதாகும். + +இந்த இரண்டாம் எடுகோள் மைக்கேல்சன்-மோர்லி செய்முறை அறிவியலில் உருவாக்கிய சிக்கலைத் தவிர்த்தது. + +தனித்த காலமும் தனித்த வெளியும் ஒளியின் தனித்த நிலையான விரைவுடன் பொருந்திவராததால் குறிப்பிடத்தக்க பல தொடர்ச்சியான விளைவுகளைக் கொண்டதாகும்.. எனவே இந்தக் கோட்பாடு ஏராளமான முரண்புதிர்களை எழுப்பியது. அதனால் கோட்பாட்டைப் பொருளற்றதாகியது. மேலும் இது ஐன்சுட்டீனையும் கேலிப்பொருளாக்கியது. என்றாலும் அவர் இந்தத் தோற்றநிலை முரண்பாடுகளையெல்லாம் பின்னர் கவனமாகக் கருதிப்பார்த்து அந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்துவைத்தார். + +ஐன்சுட்டீனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு புதுவகை இயற்பியலை முன்வைத்தது. இது ஐசக் நியூட்டனின் நுண்கலனக் கணிதம் உருவாக்கிய செவ்வியல் இயக்கவியலில் இருந்து பேரளவில் வேறுபட்டது. ஒளிமின் விளைவு ஆய்வு குவைய இயக்கவியலைக் கிளர்ந்தெழச் செய்தாலும் உறுதியின்மை நெறிமுறை கருதுப்படிமத்தை இயற்பியல் உலகில் அறிமுகப்படுத்திய குவைய இயக்கவியலை முழுமையற்றதாகக் கருதினார். அவரது தீர்வியல்புக் கண்ணோட்டத்தை " அவர் (கடவுள்) தாயம் ஆடமாட்டார் என நான் நம்புகிறேன்]." என்ற பெயர்பெற்ற மேற்கோளில் இருந்து அறியலாம். அவர் குவைய இயக்கவியலை, குவையப் புலக் கோட்பாடு, பொதுச் சார்பியல் கோட்பாடு, மின்காந்தவியல் ஆகியவற்றை ஒருங்கிணக்க முயலும் ஒன்றிய புலக் கோட்பாட்டிற்கு வைக்கும் வெடியாகக் கருதினார்.என்றாலும், குவைய இயக்கவியல் வெற்றிகரமாக இயற்பியல் நிகழ்வை முன்கணிப்பதை அவர்மறுத்ததில்லை. + +அவரது ஒன்றிய புலக் கோட்பாட்டுக்கான ஆர்வம் இன்றும் மங்காமல் குவைய இயக்கவியல், சரக் கோட்பாடு, மீக்கடத்துமை ஆகிய புலங்���ளில் தொடர்கிறது. இயற்கை மெய்யியலில், ஐன்சுட்டீனின் 1905ஆம் ஆண்டு ஆய்வுகளால், ஏற்பட்டுள்ள தனிநிலைக் கோட்பாட்டில் இருந்து உறுதியின்மை மற்றும் சாபுடைமைக் கோட்பாட்டுக்கான அடிப்படைப் பெயர்ச்சியை அல்லது கோட்பாட்டுச் சட்டக மாற்றத்தை இந்த ஆண்டு குறிக்கிறது. + + + + + + +நெல்லி + +நெல்லி ("Phyllanthus emblica") யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். + +நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். + +மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. + + + +கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது. + +கீழ்கண்ட மருத்துவ குணங்கள் நெல்லியில் இருப்பதாக, சித்த மருத்துவர்களாலும், இயற்கை அறிஞர்களாலும் நம்பப் படுகின்றன. இருப்பினும், இவை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன ஆகும். +தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். + + + + +குருதி உறைதல் + +இரத்த உறைதல் (Coagulation) என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும். + +இரத்ததில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க, இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை நூல் சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகிறது. + + + + + +பிரௌனியன் இயக்கம் + +பிரௌனியன் இயக்கம் ("Brownian motion") என்பது கீழ்காணுபவற்றைக் குறிக்கும்: + + +முதன் முதலில், இராபர்ட் பிரௌன் (Robert Brown) என்ற தாவிரவியலாளரால் முன் வைக்கப்பட்ட இக்கருத்துருவை, லூயி பாசெலியர் (Louis Bachelier) என்பவர் கோட்பாட்டு நிலைக்கு கொண்டு வந்தார். அல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதில் பங்களிப்புச் செய்தார். சான் பத்தீட்டு பெரென் என்பவர் தனது ஆய்வுகள் மூலம் இக்கோட்பாட்டிற்கு வலு சேர்த்தார். + +ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இராபர்ட் பிரௌன் என்பவர் 1827ஆம் ஆண்டில் +தண்ணீரில் மகரந்தத் தூள்களைப் போட்டு அவற்றை ஒரு நுண்ணோக்கியின் மூலம் பார்த்தார். மகரந்த்த் தூள் ஒவ்வொன்றும் அங்குமிங்கும் ஓடியது. ஆனால் தண்ணீரில் எந்தவிதமான அசைவுமிருப்பதாகத் தெரியவில்லை. மகரந்தத் தூள்களுக்கு உயிர் உண்டோ என்ற சந்தேகம் அவருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால் அடுத்து அவர் ஒரு சாயப் பொடியைத் தண்ணீரில் கலந்து நுண்ணோக்கியின் மூலமாகப் பார்த்த போது, உயிரில்லாதவை என்று உறுதியாகத் தெரிந்த சாயத் துகள்களும் அங்குமிங்கும் ஓடியாடியதைக் கண்டார். பிரௌனுக்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. எனினும் அதை அவர் முதலில் அறிவித்ததால் அத்தகைய துகள்களின் இயக்கத்திற்கு பிரௌனியன் இயக்கம் என்று பெயரிடப்பட்டது. + +1860களில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் வாயுக்களில் நுண்ணிய அணு அல்லது மூலக்கூறுகளிருப்பதாகவும், அவை ஓய்ச்சலின்றி அங்குமிங்கும் கண்டபடி ஓடிக்கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து வாயுக்களின் நடத்தைகள் பற்றிய விதிகளை உருவாக்கினார். திரவங்களிலும் கூட மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எண்ணத் தலைப்பட்டனர். அதன் மூலம் பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் விளங்க தொடங்கியது. தண்ணீரிலுள்ள மூலக்கூறுகள் மகரந்த்த் தூள்களையும், சாயத் தூகள்களையும் நாலா திசைகளிலிருந்தும் வந்து தாக்கிப் பந்தாடி கொண்டிருக்கின்றன. ஒரு திசையில் திடீரொன்று மோதல் அதிகமாகிவிட்டால் மகரந்த்த் தூள் அந்தத் திசையில் உந்தப்பட்டு ஓடுகிறது. சிறிது தூரம் ஓடியதும் வேறு துகள்கள் அதனுடன் மோதி தைத் திசை திருப்பி விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள துகள் இவ்வாறு நகர்த்தப்படுகிற தொலைவு நீர் மூலக்கூறின் நிறையைப் பொறுத்தது என்ற கருத்தை 1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டறிந்து அதற்கான ஒரு சமன்பாட்டையும் உருவாக்கினார். சான் பத்தீட்டு பெரென் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் 1908-11 ஆண்டுகாலங்களில் செய்முறை ஆராய்ச்சி மூலம், ஐன்ஸ்டைன் கண்டறிந்த சமன்பாட்டை உறுதி செய்தார். அந்த சமன்பாட்டை பயன்படுத்த�� நீர் மூலக்கூறுகளின் பரிமாணத்தைக் கணக்கிட்டார். + + + + +இத்தாலி + +இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: "Repubblica Italiana" அல்லது "Italia" - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. + +இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது. + +இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. + +கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. + +கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும். + +இத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.. + +இத்தாலி, ஐரோப்பி���ப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது. + +இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும். + +தற்போதுள்ள "இத்தாலியக் குடியரசு நாடு" 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக ("Kingdom of Italy") 1861, மார்ச் 17 முதல் இருந்தது. + +இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;- + + + +இத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். +அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன. +அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும். + + + + + +ஐக்கிய இராச்சியம் + +ஐக்கிய இராச்சியம் ("United Kingdom", பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக "ஐக்கிய இராச்சியம்" என்றோ "UK" அல்லது "பிரித்தானியா" (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது. + +பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன. + +ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது. + +"பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய" ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம். + +பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், "வடக்கு அட்லாந்தியத் தீவுகள்" என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது. + +கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536–1543 வாயிலாக இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து இராச்சியம், ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாகப் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய ��ன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் "பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்" என மாற்றப் பட்டது. +தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் பாராளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது. + +தற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்��ர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெற வேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம். + +அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ. இ உருமாறும் வாய்ப்புள்ளது. + +ஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும். + +பார்க்கவும்: பிரித்தானிய அரச பரம்பரை; பிரித்தானிய வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள் + +ஐக்கிய இராச்சியம் ஒரு அரசியல்சட்ட முடியாட்சியாகும் ("constitutional monarchy"). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British ("House of Commons") கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய இராச்சியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே பாராளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து ("members of the Commons") தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் ("British House of Lords") நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் ச��ய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசியால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் டேவிட் கேமரன் ஆவார். 2010ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார். + +ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன. +தற்போதைய முடிக்குரியவர் இராணி எலிசெபெத் II ("Queen Elizebeth II") ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு அரியணை ஏற்று, 1953ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் ("Walter Bagehot"), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், "தொங்கு பாராளுமன்றம்" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் பாராளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார். + +இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு பாராளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை இராணி ஆன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும். + +முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக "மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு" என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). "மேன்மைமிகு இராணியின் போர்ப்படை " என்றழைக்கப்படும் பிரித்தானியப் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார். + +அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது. + +பிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் பொதுநலவாய நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்திற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில பொதுநலவாய நாடுகளுக்குப் பிரித்தானிய ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது. + +ஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. + +பாராளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் ("nobility"), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அல்லது "Earl Marshal", "Lord Great Chamberlain" போன்ற இராச்சிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. + +ஐக்கிய இராச்சியம் ஒரு நடுவண் ஆட்சி, அல்லது ஒற்றையாட்சி ("unitary") அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றமே ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் பாராளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டியப் பாராளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய இராச்சியத்தின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய இராச்சிய அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்கு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் பாராளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம். + +ஐக்கிய இராச்சியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது: + +ஐக்கிய இராச்சியத்தின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன: + + +ஒன்றியச் சட்டம் 1536 இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது. + +நான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: வடகிழக்கு, வடமேற்கு, யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர், கிழக்கு மிட்லேண்ட்ஸ், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, பாரிய இலண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. + +கொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன. + +அவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும், சட்டப்படி ஐக்கிய இராச்சியத்தின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும். அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும். இத் தவிர ஐக்கிய இராச்சியம் பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. + +ஐக்கிய இராச்சியத்தின் போர்ப்படைகளாவன பிரிட்டிஷ் போர்ப்படைகள் என்றோ மேன்மைமிகு இராணியின் போர்ப்படைகள் என்றோ அல்லது அதிகாரபூர்வமாக மகுடத்தின் போர்ப்படைகள் என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் தலைமைத் தளபதி மேன்மைமிகு இராணி ஆவார். அவை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன. + +பிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய இராச்சியத்தையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, "NATO" மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும். + +2004ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிலப்படை 112.700 வீரர்களையும் (இதில் 7.600 பெண் வீரர்களும் அடக்கம்), இராச விமானப்படை 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40.900 வீரர்களைக் கொண்ட இராசக் கப்பற்படை ஐக்கிய இராச்சியத்தின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக் கொண்டது. இராச கப்பற்படை வீரர்கள் நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் "NATO" நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும். + +பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் (கிரேன்பி நடவடிக்கை, விமானத்தடைப் பிராந்தியங்கள், டெசர்ட் ஃபாக்ஸ் நடவடிக்கை, டெலிக் நடவடிக்கை) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரிட்டிஷ் படை கடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான். + +பிரிட்டிஷ் படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் கலைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது. + +இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் லேக் மாவட்டத்திலுள்ள கம்ப்ரயன் மலைகளும், வடக்கில் பெனைன்ஸ் மலைப்பிரதேசம் மற்றும் பீக் மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக்கல் மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் பர்பெக் தீவிலுள்ள கீழ் சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான காட்ஸ்வோல்ட்ஸ், லின்கன்ஷையர் மற்றும் சாக் சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில்டர்ன்ஸ் ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்ப்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் ("estuaries") இவையே: தேம்ஸ், செவெர்ன், ட்ரெண்ட், ஔஸ் மற்றும் ஹம்பர் ஆகியன. பெருநகரங்களாகியன இலண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், லிவர்பூல், பிரிஸ்டொல், நாட்டிங்ஹம், லீசெஸ்டர் மற்றும் நியூ கேசில். டோவருக்கு அருகிலுள்ள கால்வாய் சுரங்கம் ("Channel tunnel") ஐக்கிய இராச்சியத்தை பிரான்ஸுடன் இணைக்கிறது. + +வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள ஸ்நோடௌன் ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது அங்க்லெசி தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள கார்டிஃப் ஆகும். இன்ன பிற மாநகரங்கள் ஸ்வேன்சீ, நியூ போர்ட் மற்றும் ரெக்ஸ்ஹம் ஆகியன. + +ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய இராச்சியத்தின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் எடின்பரோ, கிளாஸ்கோ, அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை. + +அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டண்டெர்ரி அதன் முக்கிய நகரங்களாகும். + +ஐக்கிய இராச்சியம் மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை செயற்கையாக, கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும். + +ஐக்கிய இராச்சியம் முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, தனியார்மயமாக்கல்களை மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. மக்கள்நல அரசமைப்பையும் (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. + +உழவுத் தொழில், ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு, மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் பெரிய அளவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணை வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இது "United Kingdom" போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும். + +சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை, காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ. இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. + +டோனி ப்ளேர் அரசு, ஐ.ஒ அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில் வெற்றி, அதன் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு, ஆகியன. இவையனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது. + +முதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரிட்டிஷ் சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான கம்ப்ரிக்கின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும். + +அண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் காமன்வெல்த் நாட்டவர்கள், வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) கேன்டனியம், பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி, உருது மற்றும் ஜமேய்க்கக் கிரியோல் ஆகியவை. + +பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் மொழிகள் + +உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் ���சக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மைக்கேல் பரடே, பால் டிரக் மற்றும் ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல் ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: நீராவி இயந்திரம், உந்துபொறி ("locomotive"), 3-பீஸ் சூட், தடுப்பு ஊசி, ஈயப் படிகம், தொலைக்காட்சி வானொலி, தொலைப்பேசி, நீர்மூழ்கி, ஹோவர்கிராஃப்ட், உட் தகன இயந்திரம் ("internal combustion engine") மற்றும் ஜெட் இயந்திரம் ஆகியன. + +பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், கால்பந்து, கோல்ஃப், கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி கால்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் பேஸ்பாலின் முன்னோடியான ரௌண்டர்ஸ் எனும் விளையாட்டு. இங்கிலாந்து உலக கால்பந்துக் கோப்பை 1966 மற்றும் 2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. விம்பிள்டன் கோப்பை எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு இலண்டனிலுள்ள விம்பிள்டனில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும். + +நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் (சார்லோட், எமிலி மற்றும் அன்), ஜேன் ஆஸ்டின், ஜே. கே. ரௌலிங், அகதா கிரிஸ்டி, ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன், ராபர்ட் பர்ன்ஸ், லார்ட் டென்னிசன், தாமஸ் ஹார்டி, வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர். (பார்க்க: பிரிட்டிஷ் இலக்கியம்) + +ஐக்கிய இராச்சியத்தின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் வில்லியம் பைர்ட், ஜான் டவர்னர், தாமஸ் டேலிஸ் மற்றும் ஹென்றி பர்செல் ஆகியோர் 16ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் எட்வர்ட் எல்கர், சர் ஆர்தர் சல்லிவன், ரால்ஃப் வான் வில்லியம்ஸ், பெஞ்சமின் பிரிட்டென் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். + +ராக் அண்ட் ரோல் இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய இராச்சியம் பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: பீ���்டில்ஸ், க்வீன், ரோலிங் ஸ்டோன்ஸ், லெட் ஸெப்பிலின், பிளாக் ஸப்பாத், பிங்க் ஃப்ளாயிட், டீப் பர்பிள் மற்றும் பல. பங்க் ராக் இசையில் 1970களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் செக்ஸ் பிஸ்டல்ஸ் மற்றும் த க்ளேஷ் குழுவினர். ஹெவி மெட்டல் வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் மோட்டர்ஹெட் மற்றும் அயர்ண் மெய்டன் ஆகியோர். அண்மைய வருடங்களில் பிரிட்பாப் வகை பிரபலமடைந்து ஒயாஸிஸ், ப்ளர் மற்றும் சூப்பர்கிராஸ் ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. எலக்டிரானிகா வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் அஃபெக்ஸ் ட்வின், தல்வின் சிங், நிதின் சாஹ்னி, மற்றும் லாம்ப் ஆகியோர் (பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் இசை). +நிலைப்பாட்டு எண்கள் (Rankings): + + + + + + +ரவி சங்கர் + +ரவி சங்கர் ("Ravi Shankar", வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012), உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார் + +=விருதுகள்= + +1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் + + + + + +நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை) + +நிறுத்தக்குறிகள் ("punctuation marks") பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். + +பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன: + +மேலே தரப்பட்ட ஒவ்வொரு நிறுத்தக்குறி பற்றியும் தனிக் கட்டுரைகள் விக்கியில் உள்ளன. + + + + + +ஈரோடு + +ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். + +இது 11 ° 19.5 "மற்றும் 11 ° 81,05" வடக்கு அட்சரேகை மற்றும் 77 இடையேயும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தின் மையத்திலும் அமைந்துள்ளது.11 ° 42.5 "மற்றும் 77 ° 44.5" கிழக்கு தீர்க்க கொண���டது. இதன் இரட்டை நகரம், பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் நாமக்கல் மாவட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது. + +ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது கைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிறது. + +உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது. + +ஈரோடு பழைய நகராட்சி பகுதியில் (கோட்டை மற்றும் பேட்டை) 8.4 சதுர கிமீ பகுதியில் 151,184 மக்கள் என 2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பானது தெரிவிக்கின்றது. + +சுற்றிலும் அமைந்திருந்த மற்ற நகராட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு பின்னர், ஒருங்கிணைந்த மாநகரமாக 109.52 சதுர கி.மீ சுற்றவளவில் 5 லட்சம் பேர் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆனது தெரிவிக்கிறது. + +மக்கள்தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% பேர் வசிக்கின்றனர். தேசிய சராசரியான 59.5% யை விட அதிகமாக 78% சராசரி எழுத்தறிவு வீதத்தினை ஈரோடு பெற்றுள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 83% மற்றும் பெண் எழுத்தறிவு 72% ஆகும். ஈரோடு மக்கள் தொகையில் 6 வயதுக்கும் கீழ் 9% உள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்களிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். + +சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய்ப் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாகத் திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது. + +பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந��து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்ததார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. +வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன. + +ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர். + +ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினை செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார்,சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின் கிழக்கு இந்திய கம்பனியானது ஆட்சி புரிந்தது. + +ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது. + +அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுக��ப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஒரு ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது. + +கேர்ரிசன் 1807 ல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன. + +பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர். + +ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன. + +பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. ஜூன்-ஆகஸ்ட் காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாக��றது.செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது. + +ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. + +இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். + + +பவானி சங்கமேசுவரர் கோயில், கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன. + + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு சுற்றுவட்டாரம் மற்றும் பள்ளிபாளையத்தை உள்ளடக்கிய ஈரோடு மாநகரப்பரப்பானது 363,668 மக்களைக் கொண்டிருந்தது. இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஈரோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈரோடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001ன் படி ஈரோடு மற்றும் பள்ளிபாளையத்தை ஈரோடு மாநகரப்பரப்பு எனவும், பவானி மற்றும் குமாரபாளையத்தை பவானி மாநகரப்பரப்பு எனவும் என இரண்டு மாநகரப்பரப்புகளாக வகைப்படுத்தியிருந்தனர். அதில் ஈரோடு மாநகரப்பரப்பானது 363,668 மக்களையும், பவானி மாநகரப்பரப்பானது 104,646 மக்களையும் கொண்டிருந்தது. எனினும் 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மாவட்ட நிர்வாக வசதிகளுக்காக ஈரோடு மாவட்ட எல்லைக்குள் வரும் ஈரோடு-பவானி சுற்றுவட்டாரம் தனி மாநகரப்பரப்பாகவும், நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் வரும் பள்ளிபாளையம்-குமாரபாளையம் சுற்றுவட்டாரம் தனி மாநகரப்பரப்பாகவும் இரண்டாகப் பிரித்து வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஈரோடு மாநகரப்பரப்பானது 521,891 மக்களையும், குமாரபாளையம் மாநகரப்பரப்பானது 195,071 மக்களையும் கொண்டுள்ளது. + +ஈரோடு மாநகரின் வாகன நெரிச்சலை குறைப்பதற்காக வட்டச் சாலையானது இரண்டு கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் வரை 14.8 கி.மீ தூரத்திற்க்கு சாலை அமைக்கப்படுகிறது. இதன் தற்போதைய அகலம் 7 மீ ஆக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. இது கொக்கராயன்பேட்டை, லக்காபுரம், 46பு-தூர், ஆணைக்கல்பாளையம், பெரியசடையம்பாளையம், ஜீவா நகர் வழியாகப் பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தான்பாளையத்தைச் சென்றடைகிறது.. இரண்டாவது கட்டத்தில் திண்டல்மேட்டிலிருந்து பவானி சாலையையோ அல்லது சித்தோட்டுடனோ இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் நீளம் 9.5 கி.மீ ஆகும். இதற்க்கு நிலம் கையகப்படுத்துவதற்க்கான இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தற்காளிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்பு சாலையை பல்வழித்தடமாக விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. + + + + + + +இழையம் + +இழையம் (Tissue (biology)) (அல்லது திசு ) என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் (Histopathology) என அழைக்கப்படும். + +ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது. + +இழையங்களை பரஃபீன் (Paraffin) எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து (Sectioning), இலகுவாகப் பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி (Staining), பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான இலத்திரன் நுண்நோக்கி (Electron Microscope), நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு (Immunoflorescence), உறைநிலையில் திசுக்களைப் படலமாக வெட்டியெடுத்தல் (frozen tissue sectioning) போன்றன திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எ��ிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, இழையங்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும், முன் கூட்டியே கணிக்கவும் இயலும். + +விலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும். + +உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது. + +இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களிலிருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணுயிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும். + +இணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை அல்லது வேறுபட்ட இழையங்களை இணைப்பவையாக, அவற்றிற்கு ஆதரவளிப்பவையாக அல்லது அவற்றைப் பிரித்து வைப்பவையாக இருக்கும் இழையமாகும். குருதி, எலும்பு, கொழுப்பிழையம் போன்றன இவ்வகை இழையங்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும். + +தசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும். + +நரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும். +தாவர இழையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். + +தாவர இழையங்கள் வேறொரு வகையிலும் பிரிக்கப்படும். +இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை. + +இவ்வகை இழையம் மூன்று பிடிவுகளில் வருகின்றது. + +பிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிரந்தர இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல்முறையே கலவேறுபாடு (cell differentiation) எனப்படுகின்றது. இந்த நிரந்தர இழையம் மேலும் பல வகையாகப் பிரிக்கப்படும். +இது செலுலோசினால் ஆன மிக மெல்லிய கலச்சுவர் கொண்ட கலங்களாலானது. கலங்களுக்கிடையே கல இடைவெளியையும் கொண்டிருக்கும். இவ்விழையத்திலிருக்கும் கலங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவானதாகவும், வடிவத்தில் கோள வடிவ அல்லது முட்டை வடிவ அமைப்பையும் கொண்டிருக்கும். இது தாவரங்களின் பல பகுதிகளிலும் காணப்படும். வேர், தண்டு, இலை, பூ, பழம் ஆகிய எல்லா அங்கங்களிலும் காணப்படும். பொதுவாக மேற்றோல் அல்லது தக்கைப் பகுதியிலும், இலைகளில் இலைநடுவிழையத்திலும் காணப்படும். இவ்விழையத்தின் முக்கிய தொழில், மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருட்களைச் சிதைமாற்றம் எனப்படும் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படுத்தி சேமித்தல் ஆகும். அத்துடன் கழிவுப் பொருட்களான பசை, பிசின், சில கனிமப் பொருட்களையும் சேமிக்கின்றது. + +இவ்விழையத்தின் கலங்கள் பச்சைய நிறமியையுடைய பச்சையவுருமணிகளைக் கொண்ட கலங்களால் ஆனது. இவை பொதுவாகப் பச்சை இலைகளின் மென்மையான இழையத்திலும், செடிகளில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய தண்டின் மேற்பட்டைப் பகுதியிலும் காணப்படும். + +இவை ஒருவகை புடைக்கலவிழையமே ஆகும். நீர்த் தாவரங்களில், இவ்விழையத்திலுள்ள கல இடைவெளிகள் பெரிதாக அமைந்து காற்றுக் குழிகளை உருவாக்குவதால், அந்தத் தாவரங்கள் மிதக்கும் தன்மையுடையவையாக இருக்க முடிகின்றது. + + இவையும் செலுலோசாலான மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பினும், பல கலங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகளான கலத்தின் மூலைப் பகுதிகளில் செலுலோசு, பெக்டின் போன்ற பொருட்களால் கலச்சுவர் தடிப்படைந்து காணப்படும். இங்கே கலங்கள் கல இடைவெளிகளின்றி மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு இருக்கும். இவை பொதுவாகத் தண்டுகள், இலைகளில், தோலுக்குக் கீழான இழையமாகக் காணப்படும். இவை ஒரு வித்திலைத் தாவரத்திலோ, வேர்களிலோ காணப்படுவதில்லை. +இளம் தாவரத் தண்டுகளில் ஒரு ஆதாரம் வழங்கும் இழையமாகத் தொழிற்படும். இவை தாவர உடல்களில் இழுவிசை, மீள்திறன் போன்ற இயல்புகள் உருவாகக் காரணமாகும். இலைகளின் கரைப்பகுதிகளில் அமைந்திருந்து, காற்றில் அவை கிழிந்து போகாமல் பாதுகாக்கும். அத்துடன் எளிய காபோவைதரேட்டு பதார்த்தங்களை உருவாக்குவதிலும், மாப்பொருளைச் சேமிப்பதிலும் இவ்விழையம் பங்கு கொள்ளும். + +இவ்விழையம் தடித்த கலச்சுவரைக் கொண்ட இறந்த கலங்களாலானது. இக்கலங்கள் லிக்னின் என்னும் பதார்த்தத்தால் ஆன தடித்த, இறுக்கமான துணைக் கலச்சுவரைக் கொண்டுள்ளன. இந்த லிக்னின் படிவானது மிகவும் தடிப்பாக இருப்பதனால், இக்கலங்கள் வளையாத, உறுதியான, நீரை உட்புகவிடாத இயல்புகளைக் கொண்டிருக்கும். கல இடைவெளியற்று, மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட கலங்கள் பல்கோண வடிவத்தைக் கொண்���ிருக்கும். +இவ்விழையம் முக்கியமாகக் கீழ்த்தோல், பரிவட்டவுறை, துணைக் காழ், துணை உரியம் போன்ற இடங்களில் காணப்படும். இவ்விழையத்தின் முக்கியமான தொழில் தாவரத்துக்கு உறுதியைக் கொடுப்பதனால், அவற்றிற்கான ஆதாரத்தை வழங்குவதாகும். +இவ்விழையத்தின் கலங்களை இரு வகைப்படுத்தலாம். + +தாவரத்தின் எல்லாப் பகுதிகளையும் மூடியிருக்கும் தனிப் படலத்தால் ஆன கலங்களைக் கொண்டதே இந்த மேற்றோல் ஆகும். இவை பொதுவாகத் தட்டையான கலங்களால் ஆனது. கலங்களின் மேற்சுவரும், பக்கச் சுவர்களும், உட்சுவரை விடத் தடிப்பமானதாக இருக்கும். இங்கே கலங்கள் கல இடைவெளியற்று, ஒரு தொடர்ந்த விரிப்பாக அடுக்கப்பட்டும் தாவரத்தை மூடி இருந்து பாதுகாப்பளிக்கும். + +ஒரே கல உற்பத்தியைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இழையக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்காக ஒன்றாக இணைந்து தொழிற்படுமாயின் அவை சிக்கலான இழையம் எனப்படும். கலனிழையங்களான காழ், உரியம் இவ்வகை இழையங்களாகும். மாறிழையத்தில் உள்ள பெற்றோர்க் கலங்கள் இவ்வகையான காழ் உரிய இழையங்களை உருவாக்கும். இவை நீர், கனிமம். ஊட்டச்சத்துக்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தாவரத்தினுள் கடத்துவதில் பங்கெடுக்கும். + +கலன்றாவரங்களில் நீர், கனிமங்களைக் கடத்தும் முக்கிய இழையமாகக் காழ் இருக்கிறது. தாவரத்தின் தண்டு, வேர்களின் நடு அச்சைச் சுற்றி, குழாய் போன்ற அமைப்புக்களை இந்த இழையம் ஏற்படுத்தி இருக்கும். அக்குழாய்களின் ஊடாக நீர், கனிமம்மேல் நோக்கிக் கடத்தப்படும். + +தாவரத்தால் உற்பத்தியாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கரைந்த நிலையில் தாவரத்தில், தேவைக்கேற்ப மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ, எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் இந்த உரிய இழையம் உதவும். + + + + +புதுக்கோட்டை மாவட்டம் + +புதுக்கோட்டை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். ஜனவரி 14, 1974இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது. + +புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78.25' மற்றும் 79.15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9.50' மற்றும் 10.40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன. புதுகை, ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது. நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதே, பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிரக்கம் கொண்டதாக இருக்கும்.அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை.இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது. பலாப்பழம் உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சி, புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும். + +ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. + +இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. + +இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படு��ிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது. + +"மாயிறும் தாழி கவிப்பத் +தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271) + +"மன்னர் மறைத்த தாழி +வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44) + +"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் +தேவர் உலகம் எய்தினன் ஆதலின் +அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம். + +"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் +தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது. +புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. + +மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன. + +பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமா��் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது. +"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு +சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்" +என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது). + +சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன. + +தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள்,முத்தரையர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர். + +சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட��டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும். +"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி +பன்றியருவா வதன் வடக்கு நன்றாய +சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் +ஏதமிழ் பன்னிரு நாடென்" +என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. + +பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும். + +சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். + +சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. + +இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது. + +இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம். + +இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, "இரகுநாதராயத் தொண்டைமான்" தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார். + +மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து "விஜயரகுநாதத் தொண்டைமான்" (1730-1769). "இராய ரகுநாதத் தொண்டைமான்" (1769-1789), "விஜயரகுநாதத் தொண்டைமான்" (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர். + +கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார். + +பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின. + +பின்னர் மன்னரான "விஜயரகுநாதராயத் தொண்டைமான்" (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு "பிளாக்பர்ன்" என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை "சேஷய்ய சாஸ்திரி" என்ற திவான் கவனித்தார். + +இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து "மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்" புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). +1912ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார். + +4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர். +இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர். + +இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும், 763 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும் +, 499 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. மேலும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளையும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. +2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2] + +மேலும் இங்கு சிறப்பாக செயல்படகூடிய மகளிர் கல்லுரிகளும் அமைந்துள்ளது. +பாரதி மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை. +நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம். + +இம்மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. + + + + + + +மே நாள் + +மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். + +18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் ("chartists"). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. + +1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் "ஜனநாயகம் அல்லது மரணம்" என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. + +ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. + +சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. + +அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். + +இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே "மே தினம்" பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. + +தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ��ள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். + +மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. + +நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. + +அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. + +1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. + +இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது. + +இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். + + fearless girl statue,america அமெரிக்க ஐக்கிய நாடுகள் + + + + + + +மீயொலி நோட்டம் + +புறவொலி அலகீடு அல்லது மீயொலி நோட்டம் "(Ultra Sound Scan)" என்பது formula_1 எர்ட்சு முதல் formula_2 எர்ட்சு அலைவெண்ணுக்கு மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும். + +மருத்துவ புறவொலி வரைவியல் "(Medical ultrasound)" (அல்லது நோய்நாடல் புறவொலி வரைவியல் "(diagnostic sonography)" அல்லது எளிமையாக, புறவொலி வரைவியல்) என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய தசைநாண்கள், தசைகள், மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்பகடுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது. + +புறவொலிகள் அல்லது கேளா ஒலிகள் என்பவை 20,000 அலைவெண்ணுக்கும் மேலான அலைவெண்கள் வாய்ந்த ஒலி அலைகளாகும். ஒலிவரைகள் எனப்படும் புறவொலிப் படிமங்கள் புறவொலித் துடிப்புகளைப் புறவொலி ஆய்கோல்களைப் பயன்படுத்தி இழையங்களுக்குள் அனுப்ப்ப்படுகின்றன. இழையங்கள் தம் தன்மையைச் சார்ந்து இந்த பு��வொலியைப் பல்வேறு அளவுகளில் எதிரொலிக்கின்றன. இந்த எதிரொலிகளை ஆய்கோல்கள் பதிவுசெய்து கணினிக் காட்சித்திரையில் படிமங்களாகக் காட்டுகிறது. + +இந்த ஒலிவரைவுக் கருவிகளால் பலவகைப் படிமங்களை உருவாக்கலாம், இவற்றில் மிகவும் பரவலாக எடுக்கப்படும் படிமம் பி-முறைமைப் படிமம் (B-mode image ) ஆகும். இது இழையத்தின் இருபருமான வெட்டுமுகத்தின் ஒலியியல் மறிப்பைக் (acoustic impedance) காட்டுகிறது. பிறவகைப் படிமம், குருதிப் பாய்வையோ நேரஞ்சார்ந்த இழைய இயக்கத்தையோ குருதிபடிந்த இடத்தையோ குறிப்பிட்ட மூலக்கூறுகள் உள்ளமையையோ இழைய விறைப்பையோ உறுப்பு அல்லது உடற்பகுதியின் முப்பருமான உடற்கூற்றியலையோ காட்டும். + +இம்முறை மற்ற மருத்துவப் படிம முறைகளைவிட பல மேம்படுகளைக் கொண்டுள்ளது. இது நடப்பு நேரப் படிமங்களைத் தருகிறது; இதை எங்கும் கொன்டுசெல்ல்லாம். ஒப்பீட்டளவில் குறைவான செலவுடையது. இது தீங்குதரும் மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்; இதன் காட்சிப்புல வரம்பு குறுகியதாகும்; காற்று, எலும்புக்குப் பின்னுள்ள கட்டமைப்புகளைக் காண முடியாது; இதற்குப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பர்கள் தேவைப்படுகின்றனர். + +ஒலிவரைவியல் (புறவொலி வரைவியல்) மருத்த்வத்தில் பரவலாகப் பயன்படுகிறது. புறவொலியின் வழிகாட்டலைக் கொன்டு நோய்நாடலும் மருத்துவ இடையீட்டுச் செயல்முறைகளையும் உயிர்நுள் பிரிப்பு, தேங்கிய பாய்ம வடிப்பு போன்ற இடையீடு வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். புறவொலி வரவாளர்கள் ம்ருத்துவ வல்லுனர்கள் ஆவர். இவர்கள் அலகீட்டைச் செய்து அலகீட்டுப் படிமங்களைத் தாமே விளக்குகின்றனர். இப்படிமங்களைக் கதிரியலாளர் அல்லது மருத்துவப் படிமவியலில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களோ அல்லது இதயவியலாளரோ (எதிரொலி இதயவரைவுப் படிமங்களை) விளக்குவர்ரொலிவரைவியலாளர்கள் வழக்கமாக ஆற்றல்மாற்றி (transducer) எனப்படும் ஆய்கோலை நோயாளி மீது வைத்து அலகீடு செய்வர். மேலும் கூடுதலாக மருத்துவமனையாளரும் உடல்நலத் தொழில் வல்லுனர்களும் புறவொலி வரைவியல் முறையைதங்கள் மருத்துவகங்களிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகின்றனர். + +உடலின் மென்னிழையங்களுக்கு ஒலிவரைவியல் ஏற்றதாகும். 7 முதல் 16 மெகாஎர்ட்சுகள் வரையிலான உயர் அலைவெண்களில் தசைகள், தசைநாண்கள், விரைகள், மார்பகங்கள், கேடய, இணைகேடயச் சுரப்புகள், புதுக்குழவியின் மூளை ஆகிய மேலீடான உடல் உறுப்புகளை புறவொலியால் அலகிடலாம்; உயர் அலைவெண்களில் செய்யும் அலகீடு உயர்ந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைப் பெற்றுள்ளது. கணையம், சிறுநீரகம் போன்ற ஆழ் உரூப்புகளை 1 முதல் 6மெகாஎர்ட்சு வரையிலான தாழ் அலைவெண்களில் அலகீடு செய்யலாம்; தாழ் அலைவெண்களில் செய்யும் அலகீடு குறைந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைத் தந்தாலும் ஆழமாக ஊடுருகின்றன. + +பெரும்பாலான படிமங்களுக்கு பொதுப்பயன் புறவொலி அலகீட்டுக் கருவியே போதுமானதாகும். சிறப்புப் பயன்பாடுகளுக்குச் சிறப்பு ஆற்றல்மாற்றிகள் (ஆய்கோல்கள்) பய்ன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புறவொலி அலகீடுகள் உடலின் மேற்பரப்பிலே செய்யப்படுகின்றன; ஆனால், ஆய்கோலை உடலின் உள்ளே வைத்து அலகீடு செய்வது கூடுதலான தன்னம்பிக்கையைத் தரும். இதற்காக, பிறப்பு உறுப்பக, மலக்குடலக, உணவுக் குழலகச் சிறப்பு ஆய்கோல்கள் பயன்படுகின்றன இதைவிட மிக நுட்பமான குருதிக்குழல் அலகீட்டிற்கு மிகச் சிறிய வட்ட ஆய்கோல்கள் குழலில் பொறுத்தி குருதிக்குழல்களில் உள்ளே அனுப்பப்படுகின்றன. இவை குருதிக்குழல் சுவர்களையும் நோய் அறிகுறிகளையும் படிமம் எடுக்கின்றன. + +முதன்மைக் கட்டுரை; எதிரொலி இதயவரைவியல் + + + + + + +மீயொலி + +மீயொலி (Ultrasound) (இலங்கை வழக்கு: கழியொலி) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும். + +நாய்கள், ஓங்கில் (டால்பின்), வௌவால் போன்ற சில விலங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.வௌவால் இரவு நேரங்களில் பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்கும் மீயொலிகள் பிற பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்து கொண்டே தம் திசையை நிர்ணயிக்கின்றன. + +மீயொலிகள் நீர்மப்பொருள் வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ண���ய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை வேதியியலிலும், குறைக்கடத்தி மின் கருவிகள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் அலுமினியம் போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் அணுக்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது. +மீயொலியானது மருத்துவச் சோதனை முறைகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிதலில் மிகவும் பயன்பாடுள்ளதாக அமைகின்றது. + + + + +தொல்லுயிர் எச்சம் + +தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்). + +வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும். + + + + +ஐரோப்பா + +ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. + +ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவ���ல் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. + +16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன. பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "வார்சோ ஒப்பந்த" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது, முன்னைய வார்சோ ஒப்பந்த நாடுகள் பலவற்றையும் இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது. + +"ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப் பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. பழைய காலத்தில் கிரேக்�� வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா, லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார். முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார் யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத் தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது. + +கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8 ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு, கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது. இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறை பிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது. சுவீடியப் புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது. + +தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய ந��ர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன. சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது. + +சில வேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது. + +Historical Maps + + + + +உயிரினம் + +உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (Ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த் தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. எனினும் அவற்றுக்கிடையில் காணப்படும் சில பொதுவான பண்புகளைக் கொண்டு அவற்றை உயிரற்ற பொருட்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்திக் கொள்ள முடியும். உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் அனுசேபமும் இனப்பெரு��்கமுமாகும். இவ்விரு அடிப்படை இயல்புகளைக் காட்டாதவை உயிரினமாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக வைரஸ் என்பதை ஒரு மூலக்கூறாகவே அறிவியலாளர்கள் கருதுவர். வைரஸ்களால் சுயமாக அனுசேபத்திலோ இனப்பெருக்கத்திலோ ஈடுபட முடியாது. + +உயிரினங்கள் ஒருகல உயிரினமாகவோ பல்கல உயிரினமாகவோ காணப்படலாம். பல்கல உயிரியின் ஒவ்வொரு தனிக்கலமும் மற்றைய கலங்களில் தங்கியுள்ளன. ஒவ்வொரு கலத்தாலும் தனித்துச் செயற்பட முடியாது. + +உயிரினங்களை கலத்தில் கருவுள்ள மெய்க்கருவுயிரிகளாகவும் கலத்தில் கருவற்ற நிலைக்கருவிலிகளாகவும் பாகுபடுத்தலாம். ஆர்க்கியா மற்றும் பக்டீரியா ஆகிய பேரிராச்சியங்கள் நிலைக்கருவிலிகளுக்குள் அடங்குவதுடன் மெய்க்கருவுயிரி தனியான பேரிராச்சியமாக உள்ளது. மனிதன் உட்பட விலங்குகள், தாவரங்கள், புரட்டோசோவாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் என்பன மெய்க்கருவுயிரிகளாகும். + +ஒன்றாக தொகுக்கப்பட்ட மூலக்கூறுகள் செயல்பட்டு அதிகமாகவோ அல்லது பகுதியளவோ நிலைப்புத்தன்மையுடைய வாழ்வியல் பண்புகளை வெளிப்படுத்துபவை என உயிரினங்களைக் கருதலாம்.உயிரினங்கள் என்பதற்கு அகராதிகளில் கூறப்படும் வரையறைகள் பரந்து பட்டதாக இருக்கலாம் “தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் போன்ற எந்த எந்தவொரு வாழும் உயிரின அமைப்பும் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை மேற்கொள்கின்றன” .இது போன்ற பல வரையறைகள் தீ நுண்மங்கள் (வைரஸ்கள்) மற்றும் சாத்தியமான மனிதனால் உருவாக்கப்பட்ட கரிம அல்லாத உயிரினங்களைப் பற்றி விளக்குகிறது, ஏனெனில் வைரஸ்கள் என்றழைக்கப்படும் தீ நுண்மங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ள ஒரு ஓம்புயிர் செல்லின் உயிர்வேதியியல் இயங்குமுறையைச் சார்ந்தே உள்ளன.கரையான் உள்ளிட்ட சிறப்புயிரினங்கள் (superorganism) ஒன்றாகச் சேர்ந்து ஒரே பணியைச் செய்யும் ஒவ்வொரு தனிப்பட்ட உயிரினங்களைக் கொண்ட ஒற்றைச் செயல் அலகுகளாகவோ அல்லது சமூக அலகுகளாக செயல்படுகின்றன . +உயிரினம் என்ற சொல்லை வரையறை செய்வதில் சிறப்பான முறை எது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடிக்கின்றன அத்தகைய வரையறை அவசியமா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன . + +தீ நுண்மங்கள் அல்லது வைரசுகள் (Viruses) தன்னியக்க இனப்பெருக்கம், வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் ஆகிய செயல்களைச் செய்ய இயலாமல் இருப்பதால், பொதுவாக அவை உயிரினங்களாக கருதப்படுவதில்லை.இத்தகைய சர்ச்சை சிக்கல் வாய்ந்தது ஏனெனில் சில உயிரணு உயிரினங்கள் (cellular organisms) சுயாதீனமான உயிர்வாழ்வதற்கு இயலாது. (ஆனால் அவை சுயாதீனமான வளர்சிதை மாற்றமும் வளர்ச்சியும் உடையவையாகும்) மற்றும் உயிரணுக்குள்ளே கடமைப்பாடுள்ள ஒட்டுண்ணிகளாக வாழ தகவமைத்துக்கொண்டுள்ளன.வைரசுகள் ஒரு சில நொதிகள் மற்றும் உயிரினங்களின் பண்புக்கூறுகளின் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவை அவற்றின் சொந்த வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. மேலும் வைரசுகளால் அவை உருவாக்கப்பட்டிருக்கும் கரிமச் சேர்மங்களை ஒருங்கிணைக்கவோ தொகுக்கவோ முடியாது.வைரசுகள் ஓம்புயிரி உயிரணுக்களில் மட்டுமெ வலிமையாக செயல்பட்டு இனப்பெருக்கம் போன்ற செயல்களைச் செய்கின்றன. ஆனால் ஓம்புயிரி செல்களுக்கு வெளியே ஒரு உயிரற்ற சடப்பொருளாகவே கருதவேண்டியுள்ளது. வைரஸ்கள் சுயாதீனமான வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்கவில்லை ஆதலால் அவை வழக்கமாக உயிரினங்களாக வகைப்படுத்தப்படவில்லை இருப்பினும் அவற்றில் சொந்த மரபணுக்கள் இருக்கின்றன, அவை உயிரினங்களின் பரிணாம வழிமுறைகள் போன்ற இயங்குமுறைகளால் உருவாகின்றன. +உயிரினங்களாக வைரஸ்கள் ஆதரிக்கும் மிகவும் பொதுவான வாதம், அவை பரிணாமத்திற்கு உட்பட்ட மற்றும் தன்னியக்கமாக பெருக்கமடையும் திறனுடைவதாகும்.சில விஞ்ஞானிகள் வைரசுகள் உருவாகவுமில்லை சுய-இனப்பெருக்கம் செய்யவுமில்லை என்றும் வாதிடுகின்றனர்.உண்மையில், வைரசுகள் தங்கள் ஓம்புயிர் அல்லது புரவலன் செல்கள் (host cells) மூலம் உருவாகின்றன, அதாவது, இதில் வைரஸ்கள் மற்றும் ஓம்யிபுர் செல்களின் இணை-பரிணாமம் இருப்பதாக அறியப்படுகிறது.ஓம்புயிர் செல்கள் இல்லாவிட்டால், வைரசுகளின் பரிணாமம் சாத்தியமற்றதாக இருக்கும்.இனப்பெருக்கம் செய்வதைப் பொறுத்தவரை, வைரசுகள் பெருமளவில் ஓம்புயில் செல்களின் இயங்கு செயல்முறைகளை நம்பியிருக்கின்றன . + + +உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பிப்பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான சேர்வைகளை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன. + +நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் ஐதரசன் பிணைப்பு காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது. + +உயிரினங்களை புரதங்கள், காபோவைதரேட்டுக்கள், இலிப்பிட்டுக்கள் மற்றும் கருவமிலங்கள் ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும (டி.என்.ஏயில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் (ஆர்.என்.ஏயின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன. + +புரதங்கள் உயிரினத்தில் பல்வேறு செயற்பாடுகளைப் புரிகின்றன. + + +இலிப்பிட்டுகள் கலமென்சவ்வுகளை ஆக்கவும் சக்தி வழங்கவும் பயன்படுகின்றன. பொஸ்போலிப்பிட்டுகளே கலமென்சவ்வை ஆக்கும் பிரதான கூறாகும். பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வு சில வகை (கலத்துக்குத் தேவைப்படும்) பொருட்களை மாத்திரமே உள்ளனுப்பும் ஆற்றலுடையது. சில விலங்குகளிலும் தாவரங்களிலும் சக்தி சேமிக்கும் கூறாகவும் இலிப்பிட்டுக்கள் உள்ளன. + +காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும். + +உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் இழையங்களாக, அங்கங்களாக, அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு ப���்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. மனிதரில் தனித்தனியான உடலியக்கங்களைக் கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது. + +கலக்கொள்கை 1839ஆம் ஆண்டு ஸிச்சுவான் மற்றும் ஸ்க்லெய்டன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. 'எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன', 'கலமே உயிரின் அடிப்படையலகு' என்பனவே இக்கொள்கையின் அடிப்படை வசனங்களாகும். கலத்தை விடச் சிறிய கலப் புன்னகங்கள் காணப்பட்டாலும் அவற்றால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே கலம் என்பதே உயிருள்ளவற்றின் பண்புகளைக் காட்டும் மிகச் சிறிய அலகாகும். எல்லாக் கலங்களிலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளன. கலம் இரட்டை பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும். + +ஒரு உயிரினத்தின் அடிப்படை அளவுருக்களில் அதனுடைய ஆயுட்காலமும் ஒன்றாகும். சில உயிரினங்கள் குறுகிய காலம் உயிர் வாழ்வதைப் போன்று சில தாவரங்களும் பூஞ்சைகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழக் கூடியனவாக உள்ளன. + +தற்போதுள்ள மெய்க்கருவுயிரிகளிடையே பாலியல் இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். + +உயிரியல் விநோதம் + +உயிரின அடுக்கு வரைபடம் + + + + +பிபிசி + +பிபிசி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. + +இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின�� 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. + +உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது. + +இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றது. + + + + + +இலட்சம் + +ஒரு இலட்சம் () (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. + +இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம் என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது. + +மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம். + + + + +கோடி + +ஒரு கோடி (Crore) என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும். நூறு கோடிகள் சேர்ந்து ஒரு பில்லியன் ஆகும். இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன் படுத்து���் இடங்களும் மாறுபடுகின்றன. + +அயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும். + + + + +மாத்திரை (தமிழ் இலக்கணம்) + +தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை. + + + + +விக்சனரி + +விக்சனரி ("Wiktionary") என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும். + +விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம். + +இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின. + +விக்சனரி தோற்றம் பெற்றக் காலக்கட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) என்றுள்ளது. + + + + + + +டோனி பிளேர் + +டோனி பிளேர் ("Tony Blair"), (பி. மே 6, 1953) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் ஜூன் 27, 2007 அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். + + +இவர் ஸ்கொட்லான்டில் எடின்பர்க்கில் 6, மார்ச் 1953ல் பிறந்டார். ப்லயர் அவரடு சிறுமை கா + + + +மாத்திரை + + + + + +இராமாயணம் + +இராமாயணம் () வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள "ரீம்கெர்", தாய் மொழியில் உள்ள "ராமகியென்", லாவோ மொழியில் எழுதப்பட்ட "ப்ரா லாக் ப்ரா லாம்", மலாய் மொழியின் "இக்காயத் சேரி ராமா" போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது. + +"இராமாயணம்" என்னும் பெயர் "இராமன்", "அயனம்" என்னும் சொற்களின் கூட்டாகும். "அயனம்" என்னும் சொல் சமசுக்கிருதத்தில் "பயணம்" என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்னும் பொருள் குறிக்கிறது. + +தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாள��்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். + + +இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும். + +வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை: + +இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர். + +அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக���கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். + +சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார். + +விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். + +சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர். + +நடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான். + +இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான். + +சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான். +அனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள ம��ுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். + +ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். + +அக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர். + +கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டம், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. + +கம்பர் தம் இராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. + +அதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக, சீதை தொடர்பான வதந்தியினை குடிமகன் மூலம் கேட்ட இராமன், ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை, இலக்குமணனைக் கொண்டு காட்டில் விட்டுவிடுதல், காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பதும், இராமர் செய்த அசுவமேத யாகக் குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தல், சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணராலும் வெல்ல முடியாத இலவ-குசர்களை, இராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவதும், பின்னர் லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்லுதலும், பூமி பிளந்து சீதை பூமாதேவியுடன் சேர்தல் போன்ற செய்திகளை, தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார். + +இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. + +மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் இராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு எடுத்துரைத்தார். + +தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தினர், இராமாயணத்தைத் திராவிடர்கள் மீது ஆரியர்களின் மேலாதிக்கத்தின் சின்னமாகப் பார்த்தனர். இவர்களது கருத்துப்படி இராம இராவணப் போர் திராவிடர்களுக்கும், அவர்களை அடக்கியாள விழைந்த ஆரியர்களுக்கும் இடையிலான போராட்டமாகும். சிவனை வணங்கியவனான இராவணன் திராவிடன் எனவும், ஆரியர்கள் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் அரக்கர்கள் எனக்கூறி இழிவு படுத்தினர் என்பதும் அவர்கள் கருத்து. வால்மீகியால் அறவழியில் நின்று அண்ணனான இராவணனை எதிர்த்தான் எனக் கூறப்படும் விபீடணனைத் திராவிட இயக்கத்தினர், திராவிடரைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றனர். + +இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவில் ஒடிசாவில் உள்ள லங்கையை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர். + +சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் - + +“தேவபாடையின் இக்கதை செய்தவர் +மூவரானவர் தம்முளும் முந்திய +நாவினார் உரைப்படி நான் தமிழ்ப் +பாவினால் இஃதுணர்த்திய பண்பரோ!“ + +வடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வான் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமாயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது. +உதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது. + +மகாத்மா காந்தி: என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன். + +ஜவகர்லால் நேரு: ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம் + +ஹென்றி ஸ்மித்: ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது + +ரமேசு சந்திரதத்: ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும். + +பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை: ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும் + +சி. ஜே. வர்க்கி: ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல் + +ஷோஷி சந்திரதத்: திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள். + +சி.பி. காவெல்: விட்டுணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனைக் கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாக கூறப்பட்டிருக்கிறது. + +சந்திரசேகர பாவலர்: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனை கொன்றான் + +ராவ்சாகிப் திமேசு: இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது + +ஈ. வெ. இராமசாமி இராமாயண பாத்திரங்கள் போலியானதும் கற்பனைக் கெட்டாததும் என வாதிட்டு நூலொன்றை எழுதினார். + + +"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை..ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கர���த வேண்டும்.. + +எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம்... + +ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.. +திராவிட இயக்க ஆதரவாளர் எம்.ஆர்.ராதாவின் இராமாயண எதிர்ப்பு நூல்கள்: + + + + + +ருக்மிணி தேவி அருண்டேல் + +உருக்மிணி தேவி அருண்டேல் ("Rukmini Devi Arundale") (பெப்ரவரி 29, 1904 – பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். + +உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். + +தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். + +1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர். + +இத்திருமணம் அக்காலக் கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை. + +தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிஷிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார். + +1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். + +அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. + +சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். + +உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். + +1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. + +உருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது. + +அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார். + +தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர���களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். + +வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார். + +உருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார். + +2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது. + + + + + + +இல்லறவியல் (திருக்குறள்) + +திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. + +இல்லறவியலில் இருபது அதிகாரங்கள் அடங்கியுள்ளன. + + + + + +வானொலி + +வானொலி ("Radio") என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை "வானொலி" (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. + +ஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி +அலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம் +பரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி +உருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை ((Morse – Code Signal) மட்டும் +பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி +உருவாக்கப்பட்டது. + +அ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter ) + +ஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter) + +இ. வானொலி தொலைபேசி பரப்பி ((Radio Telephone Transmitter) + +ஊர்தி அலைப்பரப்பிகள் +பழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse +Signals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும் +(dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள் +ரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம் +((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என +பிரிக்கப்படுகின்றன. + +இந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது +கீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது. + +வானொலி அதிர்வெண் அலையாக்கி + +இது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள் +ஆ���ியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது. +அதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும் +உண்டு. +பஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier) + +இது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும். +இது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால் +ஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது. + +இண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர் +இதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை +இணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது. + +ஒலிவாங்கி (Microphone) +இது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக +(Audio Signals)) மாற்றுகிறது. + +முன்பெருக்கி (Pre Amplifier) +முதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது. + +செவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier) +இது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும் +ஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது. + +மாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர் + +இங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation)) +செடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால் +மிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது. + +பரப்பும் ஏரியல் (Transmitting Antenna) +இது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி, +வான்வெளியில் பரப்புகிறது. + +இந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செடீநுது +அவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும் +கொண்டுள்ளது. + +1. ஹகு பெருக்கி (AF amplifier) +2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis) +3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator) +4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage) +5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage) +6. பவர் பெருக்கி + +ஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage) + +இப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட +பகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின் +அலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி – +எம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம் +பாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப் +பண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு +பெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக +நீக்கப்பட்டு விடும். + +மறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator) + +இப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப் +பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு +வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண் +ஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின் +அதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது. + +பவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல் + +பண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் +ஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும் +ஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது. + +கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது . + +முதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன��படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது . + +இன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது . + +நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன . + +இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. + +ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆ��ியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார் "கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது. + + + + + +அகிலன் + +அகிலன் "(Akilan)" என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு சூன் 27 முதல் 1988 ஆம் ஆண்டு சனவரி 31 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு. + +அகிலாண்டத்தின் புனைபெயர் அகிலன் ஆகும். இவர் 1922 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். பெருங்காளூர் என்ற இக்கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்.. + +இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் தோன்ற தொடங்கின. + +அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனா, மலாய் மற்ரும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. + +அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. +உலகின் மற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேங்கையின் மைந்தனாக இருந்த சிறப்புமிக்க இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவை அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார் . இராசேந்திர சோழன் இராசராச சோழனின் மகன் ஆவார். அவரது காலம் கலை, இலக்கியம் மற்றும் நிர்வாகத்தில் தமிழர்களின் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசியா, இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, இந்தியாவின் தெற்கு மற்றுன் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியனவற்றை இவர் வெற்றி கொண்டார். கி.மு 1010 இல் இவர் வாழ்ந்ததாகவும் இவருடைய வம்சம் பல்வேறு வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாவலானது கடாரத்தின் ம���து பெற்ற வெற்றியையும், இந்தியாவின் வடக்குப் பகுதியை வெற்றி கொண்டதற்காக புதிய நகரமான கங்கைகொண்டா சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கியதையும் பிரதிபலிக்கிறது. புதிதாக கட்டப்பட்ட கோயிலும் நகரமும் போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பல கட்டடக்கலை வடிவமைப்புகளை கொண்டிருந்தது. + +நாடுகளை வென்றதுடன் அழகிய பெண்களான அருள்மொழி மற்றும் ரோகினி ஆகியோரின் இதயங்களையும் இளங்கோ வேல் கைப்பற்றினார். அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் அகிலனின் எளிய சக்திவாய்ந்த வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டது. இராசேந்திர சோழனின் மூத்த ஆலோசகராக வந்தியத் தேவன் நாவலில் தோன்றி போர் மற்றும் நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்குகிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவும் வேங்கையின் மைந்தன் நாவல் பார்க்கப்படுகிறது. சோழர் காலத்தின்போது நடந்த வரலாற்று உண்மைகளை விவரிப்பதாலும் சரியான மொழியைப் பயன்படுத்தியிருந்ததாலும் இந்த நாவல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. + +'கயல்விழி" (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிசு பெற்றது. + + + + + + +கொல்கத்தா + +கொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும் . +கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு . +இந்திய விடுதலைப் போராட்டத்தில் கொல்கத்தா நகரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சி ஆகிய பல அரசியல் மற்றும் சமுக மாற்றங்களில் கொல்கத்தா நகர் மற்ற இந்திய நகர்களை விட மாறுபட்டது. + +கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், "காளிகத்தா" என்ற பழமையான பெயரில் இருந்து தோன்றியவையே. இப்பகுதியில், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்த ஒரு சிற்றூரின் பெயர் இதுவாகும். இப்பெயருக்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. காளிகத்தா என்ற பெயர் "காளிசேத்ரா" ( , "காளி அன்னையின்(இந்து பெண் தெய்வம்) இடம்") என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். வங்காள மொழியின் "கில்கிலா" ("தட்டையான நிலம்") என்ற பதத்தில் இருந்தும் இப்பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், கால்வாய் என்ற பொருள் படும் "கால்" என்ற சொல்லும், தோண்டு என்ற பொருள்படும் "கத்தா" இணைந்தே இச்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருத்தப்படுகிறது. கல்கத்தா என்று வழங்கி வந்த இந்நகரின் பெயர், 2001 ஆம் ஆண்டில் வங்காள மொழி உச்சரிப்பான "கொல்கத்தா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +இந்த நகரத்தின் பெயர் வங்காள மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்தனர். இதனால் இதன் அதிகாரபூர்வப் பெயர் கல்கத்தா என்றே வழங்கி வந்தது. 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரபூர்வப் பெயர் ஆக்கினர். + +கொல்கத்தா நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் கிடைத்த அகழ்வாராய்ச்சி சின்னங்கள் மூலம் இப்பகுதியில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே மக்கள் வசித்து வருவது அறியப்படுகிறது. +அக்காலத்தில், இப்பகுதியை வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலா ஆட்சிப் புரிந்தார். ��ப்பகுதியில் பாசக் இன மக்களும், வணிகத்தில் சிறந்த செட் இன மக்களும் வசித்து வந்தனர். 17 ஆம் நூற்றண்டின் இறுதியில், ஆங்கிலேயர் இப்பகுதியில் வேற்று நாட்டு குடியேற்ற சக்திகளான நெதர்லாந்து நாட்டவர், போர்த்துகீசியர், மற்றும் பிரெஞ்சு நாட்டவர் ஆகியோருடம் இருந்து தம் நலனை பாதுகாக்க ஒரு கோட்டையைக் கட்ட விரும்பினர். அதன் படி 1702ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையைக் கட்டினர். + +19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கல்கத்தா நகர் இரண்டாக பிரிக்கப்பட்டது; ஆங்கிலேயர் வாழும் வெள்ளையர் நகர், இந்தியர் வாழும் கறுப்பர் நகர். அந்நூற்றாண்டின் நடுக்காலத்தில் கல்கத்தா நகர் பெரும் பெருளாதார வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக நூற்பு தொழிலிலும், சணல் சார்ந்த தொழில் துறைகளிலும் பெரும் வளர்ச்சி பெற்றது. புதிய இரயில் பாதைகள், தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆங்கிலேய மற்றும் இந்திய பண்பாடு தொடர்பினால் உயர் வருமானம் கொண்ட இந்தியர்கள் உருவாகினர். இவர்களை பாபு என்று மக்கள் அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிகழ்ந்த சமுக-பண்பாட்டு மாற்றத்தினை "வங்காள மறுமலர்ச்சி" என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1883 ஆம் ஆண்டு, சுந்தர்நாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு, இந்தியாவில் தேசிய அளவில் நடைபெற்ற முதல் கருத்தரங்கு ஆகும். படிப்படியாக கல்கத்தா நகர் இந்திய விடுதலை போராட்டத்தின் மையமாக மாறியது. குறிப்பாக வன்முறை வழியே விடுதலை அடைய விரும்புவோரின் மையமாக இருந்தது. 1905 ஆம் ஆண்டு ஆங்கில அரசு மதத்தைக் காரணமாக கொண்டு நடத்திய வங்காள பிரிவினை, மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கம், வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், சுதேசி இயக்கம் ஆகியவை வலிமை பெற்றன. இத்தகைய மக்கள் எதிர்ப்பினாலும், நகரின் அமைவிடத்தினாலும், 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தன தலைநகரை கல்கத்தா நகரில் இருந்து புது தில்லி நகருக்கு மாற்றியது. +இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா நகரும் புறநகர் பகுதிகளும், துறைமுகமும் ஜப்பானிய தரைப்படையால் தாக்கப்பட்டன. 20 டிசம்பர் 1942 முதல் , 24 டிசம்பர் 1944 வரை கல்கத்தா நகர் பலமுறை தாக்கப்பட்டது. இப்போரில் இலட்சக்கணக்கானோர் பஞ்சத்தினால் உயிரிழந்தனர். 1946 ஆம் ஆண்டு, இசுலாமிய நாட்���ை உருவாக்கும் கோரிக்கை வலு பெற்றதன் விளைவாக உருவான மதக்கலவரத்தில் ஏறத்தாழ 4,000 மக்கள் உயிரிழந்தனர். + +இந்திய பிரிவினையின் போது மூண்ட வன்முறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இசுலாமியர் சமமூகம் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு சென்றனர். +1960 ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை மாநிலத்தில் வலிமை பெற்ற பொதுவுடமை கொள்கையால் தொழில் நலிவடைந்தது. எண்ணற்ற கதவடைப்பு போராட்டங்களாலும், தொழிலாளர் பிரச்சனைகளாலும்,நக்சலைட்டுகள் வலு பெற்றதாலும் நகரின் பொது நிருவாகம் பாதிப்படைந்ததோடு , பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. 1971 ஆம் ஆண்டு, இந்தியா, பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான அகதிகள் கொல்கத்தா நகரில் தஞ்சம் புகுந்ததன் விளைவாக நகரின் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது. 1980 களில்,மும்பை நகர் கொல்கத்தா நகரை விட கூடுதல் மக்கள் தொகை கொண்ட நகரானது. இன்றும் கொல்கத்தா நகர் இந்திய பொதுவுடமை கட்சியின் வலிமையான தலைமையிடமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை பொதுவுடமை கட்சி சுமார் 30 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு தற்காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ முனைந்துள்ளது. + +கொல்கத்தா கிழக்கு இந்தியாவில் உள்ள கங்கை முகத்துவாரம் அருகில் அமைந்துள்ளது. ஊக்லி ஆற்றின் கரையில் தெற்கு-வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ள இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாகவும், ஈரநிலமாகவும் இருந்தவை. மக்கள் வளர்ச்சிக்காக அவை பின்னர் மேம்படுத்தப்பட்டவை. மீதம் இருக்கும் இவ்வவகை சதுப்பு நிலம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. +கங்கை சமவெளியின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இப்பகுதியும் மிகுதியான அளவில் வளமான வண்டல் மண்ணையும், களி மண்ணையும் கொண்டது. இந்திய புவியியல் ஆய்வாளர்களின் கூற்றின்படி, இந்நகரின் அமைவிடம் மூன்றாவது நில நடுக்க அழிவுப் பகுதியில் உள்ளமையால் இப்பகுதி நில நடுக்கங்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதி அயனமண்டல புயல்களால் "மிகவும் பாதிப்படைய கூடிய பகுதி" என்று ஐக்கிய நாடுகள் அவை முன்னேற்றத் திட்டத்தின் அறிக்கை கூறுகிறது. + +கொல்கத்தா கடல் மட்டத்தில���ருந்து 1.5 மீட்டரில் (5 அடி) இருந்து 9 மீட்டர் (30 அடி)வரையான உயரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இது ஊக்லி ஆற்றின் கரையோரமாக நீணு வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த நகரம் இருக்கும் இடத்தின் பெரும்பகுதி முன்னர் ஈரநிலமாகக் காணப்பட்டது. காலப்போக்கில், அதிகரித்து வந்த மக்கள் தொகையை அடக்குவதற்காக இந்நிலங்கள் படிப்படியாக இவ்வீரநிலங்கள் நிரப்பப்ட்டன. இவ்வாறு நிரப்பப்படாமல் மீந்திருந்த ஈரநிலம், இப்போதி கிழக்குக் கல்கத்தா ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றது. + +பெரும்பாலான இந்திய கங்கைச் சமவெளிப் போலவே இங்கு முக்கியமாகக் காணப்படும் மண்வகை வண்டல் ஆகும். களிமன், பல அளவுகளிலான மணல், சிறு கற்கள் என்பன நகரத்தின் அடியில் காணப்படுகின்றன. இப்படிவு இரண்டு களிமண் படைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இவற்றுள் மிகக் கீழுள்ள படை நிலமட்டத்தில் இருந்து 250 மீட்டருக்கும், 650 மீட்டருக்கும் இடையில் அமைந்துள்லது. மேலுள்ள படை 10 மீட்டருக்கும், 40 மீட்டருக்கும் இடையிலான தடிப்புக் கொண்டதாக உள்ளது. இந்தியத் தர நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நகரம், புவியதிர்வு வலயம் 3 க்குள் அடங்குகிறது. + +கொல்கத்தா நகர், கொல்கத்தா மாநகராட்சி மன்றத்தின் (kmc), ஆட்சி எல்லைக்குள் சுமார் 185 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. முறையான நகர எல்லை இவ்வளவாக இருப்பினும், நகரின் புறநகர் பகுதி மிகப்பெரியது. புற நகர் பகுதிகளையும் சேர்த்து கணக்கிட்டால் கொல்கத்தா நகர பரப்பளவு குறைந்தது 1750 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பரப்பளவில் 72 நகரங்களும் 527 பேரூர்களும் அடங்கும். +நகர் பொதுவாக வடக்குப் பகுதி, நடுப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்றாக பிரிக்கப்படுகிறது. வடக்கு கொல்கத்தா பகுதி நகரின் பழமையான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில், 19 வது நூற்றாண்டு கட்டிடக்கலை வெளிப்படுவதைக் காணலாம். மேலும் பல தெருக்கள் குறுகிய சந்துகளாக காணப்படுகிறது. தெற்கு கொல்கத்தா இந்தியா விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் வசதி படைத்த செல்வர்களின் பகுதியாக காணப்படுகிறது. +நடு கொல்கத்தா பெரும்பாலும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் , தலைமை அஞ்சல் அலுவலகம் , கல்கத்தா உயர் நீதிமனறம், லால் பசார் காவலர் தலைமையகம் ம��்றும் பல தனியார் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. மெய்டன் திடல் இப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய திறந்த வெளித் திடல் ஆகும். இத்திடலில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. + +கிழக்கு மேற்குத்திசையில், இந்நகரம் மிக ஒடுக்கமானது. இது மேற்கே ஊக்ளி ஆற்றில் இருந்து தொடங்கி கிழக்கே கிழக்கத்திய மெட்ரோபாலிட்டன் பைபாசு வரை சுமார் 5 கிமீ நீளம் உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் கல்கத்தா என மூன்று பிரிவுகளாக உள்ளது. வடக்குக் கல்கத்தாப் பகுதியே நகரின் மிகப் பழைய பகுதியாகும். இங்கே 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஒடுங்கிய தெருக்களையும் காண முடியும். தெற்குக் கொல்கத்தா பெரும்பாலும் விடுதலைக்குப் பிற்பட்ட பகுதிகளைக் கொண்டதாகும். இங்கே பாலிகுங்னே, அலிப்பூர், புதிய அலிப்பூர் போன்ற உயர் மட்டத்தினர் வாழும் பகுதிகள் உள்ளன. நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உப்பு ஏரி நகரம் எனப்படும் பிதான் நகர்ப் பகுதி திட்டமிட்டுக் கட்டப்பட்ட பகுதியாகும். + +கொல்கத்தா மாநகர் அயன மண்டல காலநிலையான, வறண்ட மற்றும் ஈரமான பருவங்களைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பம் 26.8 C ஆகும்; மாத சராசரி வெப்ப நெடுக்கம் சுமார் 19 C முதல் 30 C வரை ஆக உள்ளது கோடைக் காலம் (மே மற்றும் ஜூன் மாதங்கள்) சுமார் 30 இல் இருந்து 40 °C (104 °F) வரை வெப்பமாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் உணரப்படுகிறது . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உணரப்படும் குளிர்காலத்தில், வெப்ப நிலை 9 °C – 11 °C (54 °F – 57 °F) வரை குறையக் கூடும். இந்நகரில் பதியப் பட்டுள்ள உயர் வெப்பம் 43.9 C ஆகும். குறைந்த வெப்பநிலை 5 C ஆகும். +இப்பகுதி தென்மேற்கு பருவக்காற்றினால் பருவமழையைப் பெறுகிறது. ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையின் அளவு சராசரியாக 1582 MM ஆகும். ஆகஸ்டு மாதம் அதிகமான அளவு (306 MM) மழை பெய்கிறது. சுற்றுப்புறத் தூய்மைக் கேடு கொல்கத்தா மாநகரின் முக்கிய பிரச்சனையாகும். மற்ற இந்திய நகரங்களை விட கொல்கத்தா நகர் வளி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வான்மங்கலாலும், பனிப்புகையாலும் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வளியில் உள்ள நச்சுப் பொர���ள்களால் மக்கள் மூச்சு சார்ந்த நோய்களாலும், நுரையீரல் புற்றுநோயாலும், காச நோயாலும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். + +கொல்கத்தா, கிழக்கு இந்தியாவின் வணிக,நிதித் துறைகளின் மையமாக திகழ்கிறது. கல்கத்தா பங்கு சந்தை நாட்டின இரண்டாவது பெரிய பங்கு மாற்றகம் ஆகும் இந்நகரின் துறைமுகங்கள் வணிக நோக்கிலும், இராணுவ நோக்கிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா நகரிலேயே அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் பொருளாதாரம், அறிவியல், கலை என எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்த கொல்கத்தா நகர் இந்திய விடுதலைக்கு பின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணங்களால் பின்னடைவுற்றது. பல தொழிலகங்கள் மூடப்பட்டன. பல தொழில்கள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன. 1990 ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் தொழில்கள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இருப்பினும் நகரின் 40% தொழிலாளர்கள் தாமே தொடங்கிய தொழில்களையே நம்பி உள்ளனர். ஆதலால் பொருளாதார மாற்றங்கள் எளிதில் மக்களை சென்றடைவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, கொல்கத்தா நகரின் தெரு வணிகர்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ 8 ,772 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. +அண்மைய காலத்தில் கொல்கத்தா நகரின் பொருளாதார வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்துறை ஆண்டுக்கு 70% வளர்ச்சி எனற வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் கட்டுமானத் துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி கிட்டியிருக்கிறது. + +இந்தியாவின் பல சிறந்த வணிக நிறுவனங்கள் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டவை. அவற்றுள் பாட்டா காலணி நிறுவனம், பிர்லா குழுமம், நிலக்கரி இந்தியா லிமிடெட், தாமோதர் வாலி குழுமம், யுனைட்டட் வங்கி, யுஸிஓ வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்மைய காலத்தில் இந்திய அரசு பல்வேறு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இப்பகுதியில் நிறைவேற்ற முனைகிறது. + +கொல்கத்தா மாநகராட்சி கழகம் நகரின் குடிநீர் தேவையை ஊக்லி ஆற்றின் மூலம் நிறைவு செய்கிறது. மாநகரின் 2500  டன் கழிவு பொருள்கள் தினமும் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள தாபா என்ற கழிவு ந��லத்தில் கொட்டப்படுகிறது. இககழிவுப் பொருள்களை இயற்கை உரமாக பயன்படுத்த வேளாளர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். நகரின் பல பகுதிகளில் கழிவு நீர் வசதிகள் இன்றியும், நல்ல கழிப்பிடங்கள் இன்றியும் உள்ளன. நகர் பகுதியில், மின்சார உற்பத்தி, பகிர்ந்தளிப்பு தனியார் மயமாக்கப்பட்டு, கல்கத்தா மின்சார பகிர்ந்தளிப்பு குழுமத்தினால் நிருவகிக்கப் படுகிறது. புறநகர் பகுதிகளில் மேற்கு வங்காள மாநில மின்சாரம் வாரியம் மின்சாரத்தை அளிக்கிறது. தொடர்ச்சியான மின்சார தடங்கல் நகரின் பெரும் பிரச்சனையாக முந்தைய காலங்களில் இருந்து வந்தாலும் அண்மைய காலத்தில் நிலைமை சீராகி உள்ளது. நகரில் சுமார் 20 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 7 ,500 தீயணைப்பு, மீட்புப்பணிகளில் இவை பணியாற்றுகின்றன. +அரசு தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான ஹட்ச், ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகியனவும் தொலைப்பேசி, செல்பேசி சேவைகளை மக்களுக்கு அளிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட GSM, CDMA சேவைகளும் இந்நகரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. அகலப்பட்டை இணைய இணைப்பு சேவையை பிஎஸ்என்எல், ஏர்டெல் ,ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. +வங்காள மொழி நாளிதழ்களான "ஆனந்தபசார் பத்திரிக்கா", " ஆஜ்கல்", " பர்தாமன்", " கனசக்தி" ஆகியவை விரும்பி படிக்கப் படுகின்றன. பல வட்டார, தேசிய ஆங்கில நாளிதழ்களும் கொல்கத்தா நகரில் வெளிவருகின்றன. அவற்றுள் " தி டெலிகிராப் " , "தி ஸ்டேட்ஸ்மேன்" , "எசியான் எய்ஜ்", "இந்துஸ்தான் டைம்ஸ் " மற்றும் "தி டைம்ஸ் ஆப் இந்தியா " ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு விற்பனையாகின்றன. அகில இந்திய வானொலி, மேற்கு வங்காள மாநில வானொலி, பல தனியார் வானொலி சேவையாளர்கள் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றனர். இது தவிர பல தனியார் பண்பலைவரிசைகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமும் பல தனியார் கம்பி வட தொலைக்காட்சி நிறுவனங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. + +பொது போக்குவரத்து வசதிகளை கொல்கத்தா புறநகர் இருப்புப்பாதை , கொல்கத்தா சுரங்க இரயில், தண்டுப் பேருந்து (TRAM), பேருந்துகள் ஆகியவை அளிக்கின்றன . புறநகர் போக்குவரத்து���் பிணையம் தொலைதூர புறநகர் வரை நீண்டுள்ளது. கொல்கத்தா சுரங்க இரயில் வலையமைப்பு, இந்திய இரயில்வேயினால் நடத்தப்படும் பழமையான சுரங்க இரயில் ஆகும். இது ஊக்லி ஆற்றுக்கு இணையாக தென்-வடக்காக நகரத்தின் ஊடே 16.45 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. பேருந்துகள் நகரின் விரும்பத்தக்க போக்குவரத்து முறையாக அமைந்துள்ளன. இவை அரசாலும், தனியாராலும் இயக்கப்படுகின்றன. இந்திய நகர்களில் கொல்கத்தா நகரில் மட்டுமே தண்டுப் பேருந்துகள் புழக்கத்தில் உள்ளன. இவை கல்கத்தா தண்டுப் பேருந்து நிறுவனத்தால் பராமரிக்கப்ப் படுகின்றன. மிக மெதுவாக இயங்கும் தண்டுப் பேருந்துகள் நகரில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. மழைக் காலத்தில் தேங்கும் மழைநீரால் கொல்கத்தா நகரின் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கை. + +நகரின் பல பகுதிகளில் மிதி இழுவண்டிகளையும், கையால் இழுக்கப்படும் இழுவண்டிகளையும் காணலாம். மற்ற இந்திய நகர்களை ஒப்பிடும்போது கொல்கத்தா நகரில் சொந்த வண்டிகளை வைத்திருபோர் எண்ணிக்கை மிகக் குறைவு. பல வகையான பொது போக்குவரத்து வசதிகள் அமைந்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்நிலைமை மாறி வருகிறது; 2002 ஆம் ஆண்டு தகவலின்படி கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் வண்டிப் பதிவு 44% உயர்ந்துள்ளது. + +கொல்கத்தா நகர், அவுரா நிலையம் மற்றும் சீல்டா நிலையம் என்ற இரண்டு தொலைதூர இருப்புப்பாதை நிலையங்களை கொண்டுள்ளது. கொல்கத்தா என்று பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது தொலைதூர இரயில் நிலையம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இந்நகர் இந்திய இரயில்வேயின் இரண்டு பிரிவுகளுக்கு தலைமையிடமாக அமைந்துள்ளது . அவையாவன கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு இரயில்வே. + +நகரின் ஒரே ஒரு வானூர்தி நிலையமான, நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள டம் டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் புறப்படுகின்றன. கொல்கத்தா நகர் கிழக்கு இந்தியாவின் பெரிய ஆற்று துறைமுக நகராகும்.கொல்கத்தா துறைமுக பொறுப்பாட்சி கொல்கத்தா கப்பல் துறையையும், ஹால்டியா கப்பல துறையையும் நிருவகிக்கிறது. கொல்கத்தா நகருக்கும் அதன் இரட்டை நகரமான அவுரா நகருக்கும் இடையே பய��ப்படகு சேவைகளும் உள்ளன. + +2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கொல்கத்தாவின் மக்கள்தொகை 4,580,544 ஆக இருந்தது. சூழவுள்ள நகரப்பகுதிகளையும் சேர்த்து இது 13,216,546 ஆகும். 2009 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நகரத்தின் மக்கள்தொகை 5,080,519 ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். பால் விகிதம் 928 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆக உள்ளது. இது நாட்டின் சராசரி விகிதத்திலும் குறைவானதாகும். நாட்டுப்புறங்களில் இருந்து வரும் பல ஆண்கள் தமது குடும்பத்தினரை ஊரிலேயே விட்டுவிட்டு நகரில் தனியாக வாழ்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எழுத்தறிவு வீதம் 81% ஆகும். இது நாட்டின் சராசரியிலும் 1% அதிகமானது. கொல்கத்தா மாநகரக் கார்ப்பரேசன் பகுதியின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 4.1%. இது இந்தியாவிலுள்ள மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களோடு ஒப்பிடும்போது குறைவானது. வங்காளிகள் 55% மக்கள் தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மார்வாரிகளும், பீகாரிகளும் 20% மக்கள்தொகையைக் கொண்டோராக உள்ளனர். கொல்கத்தாவில் வாழும் சிறிய சிறுபான்மையினரில், சீனர், தமிழர், நேபாளிகள், ஒரியர், தெலுங்கர், அசாமியர், குசராத்தியர், ஆங்கிலோ இந்தியர், ஆர்மேனியர், திபேத்தியர், மராட்டியர், பஞ்சாபியர், பார்சிகள் என்போர் அடங்குவர். வங்காளி, இந்தி, உருது, ஆங்கிலம், ஒரியா, போச்பூரி ஆகிய மொழிகள் கொல்கத்தாவில் பேசப்படும் முக்கியமான மொழிகள். மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இங்கு வாழ்வோரில் 80 சதவீதமானோர் இந்துக்கள் ஆவர். 20.27% முசுலிம்களும், 0.88%% கிறித்தவரும், 0.46% சமணரும் இங்கே வாழ்கின்றனர். சீக்கியர், பௌத்தர், யூதர், சோரோவாசுட்டிரியர் என்போரும் குறைந்த அளவில் உள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைனர் 2,011 பதிவுசெய்யப்பட்ட சேரிப் பகுதிகளிலும், 3,500 பதிவு செய்யப்படாத சேரிகளிலும் வாழ்கின்றனர். + +கொல்கத்தா நீண்டகாலமாகவே அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இந்தியாவின் முன்னைய தலைநகரமான இது நவீன இந்திய இலக்கியம், கலைச் சிந்தனைகள் ஆகியவற்றின் தோற்ற இடமாக விளங்குகின்றது. கொல்கத்தாவின் மக்கள், கலைகளையும் இலக்கியத்தையும் ரசிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன��, புதிய திறமைகளை வரவேற்கும் அவர்களது பாரம்பரியம் கொல்கத்தாவை ஆக்கத்திறன் ஆற்றல் கொண்ட ஒரு நகரமாக ஆக்குகிறது. இக் காரணங்களால் கொல்கத்தா இந்தியாவில் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. + +பலமான சமுதாய உணர்வுகொண்ட "பரா" எனப்படும் அயல்கள் கொல்கத்தாவின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆகும். பொதுவாக, இத்தகைய ஒவ்வொரு அயலும், ஒரு சமூகக் கழகத்தையும், அதற்கான ஒரு இடம், சில சமயங்களில் ஒரு விளையாட்டிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். கொல்கத்தா மக்கள் அரட்டைகளில் ஈடுபடுவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இவை அறிவு பூர்வமான உரையாடல்களாக அமைவது உண்டு. இந்நகரத்தில் அரசியல் தொடர்பான சுவர் எழுத்துக்கள் வழமையாகக் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இவை வெளிப்படையான கண்டனங்கள் முதல், கேலிப் படங்கள், பரப்புரைகள் வரை பலவகையாகக் காணபடுகின்றன. + +கொல்கத்தாவில், கோதிக், பரோக், ரோமனிய, கீழைத்தேச, இந்திய-இசுலாமிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட கொண்ட பல கட்டிடங்கள் உள்ளன. புடியேற்றவாதக் காலத்தைச் சேர்ந்த பல கட்டிடங்கள் நல்லநிலையில் பேணப்பட்டு வருவதுடன் இவற்றுட் பல பாரம்பரியச் சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பல பழங்காலக் கட்டிடங்கள் பல்வேறு மட்டங்களில் அழியும் நிலையில் காணப்படுகின்றன. 1814 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்குள்ள இந்திய அருங்காட்சியகம் ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் இயற்கை வரலாறு, கலைகள் என்னும் துறைகளைச் சார்ந்த ஏராளமான காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகிய விக்டோரியா நினைவகம், நகரின் வரலாறு தொடர்பான ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள இந்தியத் தேசிய நூலகமும், நாட்டின் முன்னணிப் பொது நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. கவின் கலைகள் அக்கடமியும், பிற ஓவியக் கூடங்களும், அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை நடத்துகின்றன. + +கொல்கத்தாவில் "சாத்ரா" என அழைக்கப்படும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. வங்காள மொழித் திரைப்படங்களையும், இந்தித் திரைப்படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இங்குள்ள டாலிகஞ்ச் என்னும் இடமே வங்காளத் திரைப்படத்தயாரிப்��ின் மையமாகத் திகழ்கின்றது. இதனால் வங்காளத் திரைப்படத்துறையை "டாலிவூட்" எனவும் அழைப்பதுண்டு. நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்ட இத் திரைப்படத்துறை பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது. இவர்களுள் பழைய தலைமுறையைச் சேர்ந்த சத்யசித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்கா, ரித்விக் காட்டக் போன்றவர்களும், தற்காலத்தைச் சேர்ந்த அபர்ணா சென், ரித்துப்பார்னோ கோஷ் ஆகியோரும் அடங்குவர். + +கொல்கத்தாவின் உணவு வகைகளுள் முக்கியமானவை சோறும், மீன் கறியும் ஆகும். ரசகுல்லா, சந்தேசு, இனிப்புத் தயிர் என்னும் இனிப்பு வகைகளுக்கும் கொல்கத்தா பெயர் பெற்றது. கொல்கத்தாவில் வங்காளிகள் மிகவும் விரும்பும் மீனை அடிப்படையாக் கொண்ட பலவையான உணவு வகைகள் கிடைக்கின்றன. + + + + +புகழ் பெற்ற இலங்கையர்கள் + + + + + + + + +[[பகுப்பு:இலங்கை நபர்கள்|*]] + + + +சைமன் காசிச்செட்டி + +சைமன் காசிச்செட்டி ("Simon Casie Chetty", மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860), 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். + +தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். + +இவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொன்றாவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியக்காரர் பதவியிலும் பணியாற்றினார். + +கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும். + +தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. + +இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் ���ூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார். + +இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். + +மாலத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார். + +கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார். + +"புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார். + +சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். + +சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார். + + + + + + +சா. ஜே. வே. செல்வநாயகம் + +தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ("Samuel James Velupillai Chelvanayagam", மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர். + +செல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார். + +செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். + +பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். + +ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். + + + + + +பொன்னம்பலம் இராமநாதன் + +சேர் பொன்னம்பலம் இராமநாதன் ("Sir Ponnampalam Ramanathan", ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். + +பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராகக் கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிட��ன்சி கல்லூரியில் கல்வி கற்பதற்கக்ச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். + +1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் ("Sir") வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். + +1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கியக் காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது. + +இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரச�� எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். + +பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர். + +இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. + +அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். + +தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். + +1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். + +யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். + +அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. + +இலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை பொன். இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்றார். + +அவரது காலத்தில் இலங்கையில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த இராமநாதன், தாத்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேச வழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார். + + + + + +கூட்டுக் குடும்பம் + +பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகளும் அவர்களது துணைவரும் பிள்ளைகளும், சிலசமயம் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் என இரத்த உறவால் பிணைக்கப்பட்ட, நேர்வழியிலும், கிளை வழியிலும் உறவினரானவர்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் (Joint Family) எனப்படும். இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய முறை பரவலாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பொதுவாக ஆண்வழி உறவினர்களே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். + + + + + +ஈமோஃபீலியா + +ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று. + + +ஒத்த நோயான வான் வில்லர்பிராண்டு நோய் இம்மூவகை இரத்த உறையாமைகளைவிட வலுக்குன்றியதாகும். வான் வில்லர்பிராண்டு வகை மூன்று மட்டும் ஓரளவு வலுவுடையது. இது இ��த்த உறைதலுக்கு காரணமான ஒரு புரதமான வான் வில்லர்பிராண்டு காரணியில் ஏற்படும் மாறுதலால் ஏற்படுகிறது. இரத்த உறைதலில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் பரவலாகக் காணப்படுவது இது. + +ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக X நிறப்புரியில் உள்ள பின்னடைவான மாற்றுருக்கள் (alleles) காணப்படுகின்றன. + +இலிங்க நிறப்புரிகளைப் பொறுத்தவரையில் பெண்கள் இரண்டு X நிறப்புரிகளைக் கொண்டுள்ளனர், ஆண்கள் ஒரு Xஉம் ஒரு Yஉம் கொண்டுள்ளனர். X நிறப்புரியிலேயே குருதி உறைதற்காரணிக்குரிய மரபணு காவப்படுகிறது, Y நிறவுடலில் இவை காவப்படுவதில்லை. மனித உடலில், ஏனைய விலங்குகளைப் போலவே, இருமடிய நிலை பேணப்படுவதனால், அங்கே ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்குரிய இரு மாற்றுருக்கள் காணப்படும். அவையிரண்டும் ஒரே மாதிரியானவையாகவோ (Homozygous), வேறுபட்டவையாகவோ (Heterozygous) இருக்கலாம். + +ஆண்களில் ஒரு X நிறப்புரி மட்டுமே இருப்பதனால், X நிறப்புரியினால் காவப்படும் ஒரு இயல்பிற்குரிய மாற்றுருவில் ஒன்று மட்டுமே ஆண்களில் இருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால் இரு மாற்றுருக்களும் காணப்படும். ஆண்களில் இந்த மாற்றுருக்களில் ஆட்சியுடைய ஒரு அலகு காணப்படுமாயின், நோய் வெளிப்படாது. ஆனால் பின்னடைவான மாற்றுருவாக அது இருப்பின் நோய் வெளிப்படும். + +பெண்களில் X நிறப்புரியில் இரு மாற்றுருக்கள் இரண்டும் ஆட்சியுடையதாகவோ, அல்லது ஏதாவது ஒன்று மட்டும் ஆட்சியுடையதாகவோ இருப்பின், பெண் நோயற்றவராக இருப்பார். ஆனால் ஆட்சியுடைய ஒரு மாற்றுருவையும், பின்னடைவான ஒரு மாற்றுருவையும் கொண்டவர் நோயைக் காவும் தன்மை உடையவராக இருப்பார். பெண்ணுக்கு கிடைக்கும் ஒரு மாற்றுரு ஆணிலிருந்து பெறப்படுவதனால், அது அனேகமாக ஆட்சியுடையதாகவே இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாக இருப்பதனால் பெண்ணுக்கு கிடைக்கும் இரு மாற்றுருக்களும் பின்னடைவானதாக இருப்பதற்கான நிகழ்தகவு மிகமிகக் குறைவாகவே இருக்கும். + +கருத்தரித்துள்ள பெண்ணிடமிருந்து இந்நோய் குழந்தைக்குக் கடத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க சோதனைகள் பொருட்டு மரபியல் சோதனைகள் மருத்துவத் துறையில் உள்ளன. இச்சோதனையில் இரத்த மாதிரி அல்லது திசு மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக இருக்கக்கூடிய மரபுப்பிறழ்விற்கான அறிகுறிகள் ஏதும�� உள்ளனவா என்பது சோதிக்கப்படுகிறது. +தனது குடும்பத்தில் ஈமோஃபீலியா தாக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வரலாற்றைக் கொண்டிருந்தால் ஈமோஃபீலியா மரபணு இருப்பதற்கான வாய்ப்பைக் கண்டறியும் சோதனையை செய்து கொள்ளலாம். இத்தகைய சோதனைகளில், + +ஒரு குழந்தை பிறந்த பின்னர் ஈமோஃபீலியா இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தால், இரத்தப் பரிசோதனை இந்நோயின் இருப்பினை உறுதி செய்ய இயலும். ஈமோஃபீலியா நோய் தாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் குழந்தையின் தொப்புட்கொடியிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரி ஈமோஃபீலியா நோயின் இருப்பினையும், அந்நோய் ஈமோஃபீலியா ஏ அல்லது ஈமோஃபீலியா பி இவற்றில் எவ்வகையைச் சார்ந்தது என்பதையும், நோயின் தீவிரத்தன்மை எந்த நிலையில் உள்ளது என்பதையும் கூடக் கண்டறிய முடியும். + +இதுவரை இந்நோய்க்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், அவசியப்படும் பொழுது (ஈமோஃபீலியா Aக்கு காரணி VIII, ஈமோஃபீலியா Bக்கு காரணி IX) குருதி உறைதற்காரணிகளை ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தலாம். இதனால் தற்காலிகமாக இரத்த ஒழுக்கு சரி​ செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றது.​பொதுவாக இரத்த உ​றைதற்கான காரணிகள் மனிதர்களின் உடலில் இருந்து தானமாகப் ​பெறப்படும் குருதிகளில் இருந்து பிரித்​தெடுக்கப்பட்டு உ​றைநி​லைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் இரத்தத்​தொற்று ​நோய்கள் பரவும்அபாயம் காணப்படுகின்றது. ஆனால் தற்காலத்தில்​ செயற்க்​கையாக உருவாக்கப்பட்ட குருதி உ​றைக்காரணிக​ளையும் தயார் ​செய்கின்றனர். இதில் அபாயங்கள் காணப்படுவதில்​லை. குருதிஉ​றைதற்காரணிக​ளை அதிகமாக பயன்படுத்துவதனால் உடலில் ஒரு எதிர்ப்பு தனிப்பி​ தோன்றிவிடுகிறது. அச்ச​மயங்களில் அதிக வலுவான காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. + +இந்நோயைப் பற்றி குறிப்பிட்ட மருத்துவ வல்லுநர் அபுல்காசிஸ் என்பவர் ஆவார். பத்தாம் நூற்றாண்டில் இவர் சில இலேசான காயங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கின் காரணமாக ஆண்களை இழந்த குடும்பங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நோயைப் பற்றிய பல விளக்கவுரைகள் மற்றும் நடைமுறைக் குறிப்புகள் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றிலும் காணப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில���ம் அறிவியல்ரீதியான பகுப்பாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. + +1803 ஆம் ஆண்டில் ஜான் கான்ராட் ஓட்டோ என்ற பிலெடெல்பியாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "சில குடும்பங்களில் காணப்படும் இரத்த ஒழுக்கு" என்ற நூலில் "இரத்தப்போக்கு நோயாளிகள்" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்நோய் மரபுவழியாக வருகிறதென்றும், குடும்பத்திலுள்ள ஆரோக்கியமான பெண்களின் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும், பெரும்பாலும் இந்நோய் ஆண்களையே தாக்குகிறது என்பதையும் அறிந்திருந்தார். இவருடைய ஆய்வறிக்கை X இல் இணைந்த மரபுப் பிறழ்வுகள் குறித்த இரண்டாவதாகும். (முதல் ஆய்வறிக்கையானது ஜான் டால்டன் என்பவரால் தனுது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட நிறக்குருடு பற்றியதாகும்). 1720 ஆம் ஆண்டு நியூ ஆம்சையர், பிளைமவுத் என்ற இடத்தில் வசித்த ஒரு பெண்ணிடம் இந்நோயைக் கண்டறிந்தார். பாதிப்பு ஏற்பட்ட ஆண்களால் அவர்களின் பாதிக்கப்படாத பெண் வாரிசுகளுக்கு இந்நோய் கடத்தப்படக்கூடும் என்ற கருத்தாக்கம் 1813 ஆம் ஆண்டு வரை ஜான் எப் ஹே என்பவரின் ஆய்வறிக்கை தி நியூ இங்கிலாந்து மருத்துவ பருவ இதழில் வெளிவரும் வரை அறியப்படாமல் இருந்தது. + +1924 ஆம் ஆண்டில் பின்லாந்து மருத்துவர் பின்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் ஆலண்ட் தீவுகளில், மரபுவழியாக வந்த, ஈமோபீலியாவினை ஒத்த, சீரற்ற இரத்தப்போக்கு தன்மையைக் கண்டறிந்தார். இந்த சீரற்ற இரத்தப்போக்கு வான் வில்பர்ட் என அழைக்கப்படுகிறது. + + + + + +பச்சையம் + +பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: "chloros" = பச்சை, "phyllon" = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் காபோவைதரேட்டு மற்றும் ஒட்சிசனாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது. + +பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது: + +பச்சையும் வெண்மையும் கொண்ட இலை ஒன்றிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்த இலையை சிறிது நேரம் வெயிலில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம். இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு பச்சையம் இன்றியமையாதது என அறியலாம். + + + + + +டி. என். ஏ. + +டி.என்.ஏ ("DNA") அல்லது தாயனை என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் ("Deoxyribonucleic acid" அல்லது "Deoxyribose nucleic acid" – DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. +புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும். + +இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூகிளியோட்டைடுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல்பகுதியக் கட்டமைப்பாகும். இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் ஜேம்ஸ் டி. வற்சன் (James D. Watson), ஃப்ரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச���சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்ஸ்ரோம் (1.0 நானோ மீற்றர் nm) ஆரையையும், 34 அங்க்ஸ்ரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர். + +உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும். இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine – A), தையமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine – C), குவானின் (Guanine – G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்) + +டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்க���ால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர். + +டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்ட மரபணுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.. + +விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் ஹிஸ்டோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சு��ுளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும். + +ஆனால் பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலைக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழியமுதலுருவில் (cytoplasm) காணப்படும். + +இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும். + +இரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம். ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் ���ிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும். + +பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும். + +பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும். + +டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது த���ர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது "நேர்மறையான மேலான சுருளாக்கம்" (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது "எதிர்மறையான மேலான சுருளாக்கம்" (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும். + தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும் + + + + + +அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் + +பின்வருபவை அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் ஆவன. + + + + +முன்கழுத்துக் கழலை + +முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை ("Goitre") என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.. இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது. அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன. + +தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகியவற்றின் காரணமாக முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதிதைராய்டியம் காரணமாக அட்ரீனல்வினையிய செயல்பாடுகளான: இதயத் துடிப்பு மிகைப்பு, மிகுதியான நெஞ்சுத்துடிப்பு (palpitations), பதற்றம் (nervousness), உடல் நடுக்கம் (tremor), உயர்த்தப்பட்ட குருதி அழுத்தம் மற்றும் சுற்று சூழலால் ஏற்படும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவது (heat intolerance) ஆகியவை உண்டாகும். அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. தைராய்டு சுரப்புக் குறைவால் பசியில்லாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சோம்பல் மற்றும் குளிர் தாங்க இயலாமை (cold intolerance) ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது. + +குறைந்த அயோடின் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன. இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன. + +உலக அளவில், முன் கழுத்துக் கழலை ஏற்பட அயோடின் குறைபாடே காரணமாகும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாத நாடுகளில் இந் நோய் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செலீனியம் குறைவாலும் இந் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தும் நாடுகளில் காசிமோடோவின் தைராய்டழற்சி (Hashimoto's thyroiditis) என்ற நோய் உண்டாகிறது. சயனைடு விசத்தாலும் முன் கழுத்துக் கழலை ஏற்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் சயனைடு அதிகமுள்ள மரவள்ளி கிழங்கை அதிகம் உண்ணும் நாடுகளில், இந் நோய் அதிகம் காணப்படுகிறது. + +குறை தைராய்டு, அயோடின் குறைபாடு, தைராய்டு வீக்க நோய்க் காரணி (Goitrogen), கபச்சுரப்பி நோய் (Pituitary disease), கிரேவின் நோய் (Graves' disease), தைராய்டு புற்று நோய் ஆகியவையும் முன் கழுத்துக் கழலையுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆகும். + +அயோடின் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயோடின் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் (Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது. + +சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன. + +எ.கா: + + + +முன் கழுத்துக் கழலைகள் வளர்ச்சி வீதம் அல்லது வளர்���்சியின் அளவைப் பொறுத்து, அவை வகைப்படுத்தப்படுகின்றன. + + + + +முன் கழுத்துக் கழலை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடுகிறது. தைராய்டு இயக்குநீர் (thyroid hormone) அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவற்றை சுருக்க கதிரியக்க அயோடின் (radioactive iodine) பயன்படுத்தப்படுகிறது. முன் கழுத்துக் கழலை அயோடின் குறைபாட்டால் ஏற்பட்டால் லுகோலின் அயோடின் (Lugol's Iodine) அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசல் ஆகியவை குறைந்த அளவில் மருந்தாக வழங்கப்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவால் முன் கழுத்துக் கழலை ஏற்பட்டால், அவற்றை தூண்டும் உணவுகள் வழங்கப்படும். மிகவும் முடியாத நோயாளிகளின் தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்படும். + + + + + +மியூனிக் + +மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: ), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும். 1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூரில் பழமைவாய்ந்த இடாய்ச்சு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கு தொழில் நுட்பம் சார்ந்த நூற்றாண்டுக்கும்மேலான பொருட்கள பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. + +பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன. + +1158 ஆண்டில் தான், மியூனிக் நகரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என பழங்கால ஆவணக்குறிப்புகளால் கருதப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் துறவிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்திருந்தாலும், கற்காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களிலே, மியூனிக்கில் குடியிருப்புகள் பெருகின. அந்த காலத்தில் தான், பெனதிக்டை துறவிகள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள இசர் ஆற்றின் மீது, குயல்ப் ஹென்ரி, சாக்ஸனி மற்றும் பவேரியா பிரபு ஆகியோர்களால், ஒரு பாலம் கட்டப்பட்டது. வர்த்தகர்கள் தனது பாலத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். மேலும் அவ்வாறு அவர்கள் கடப்பதற்கு, கட்டணம் வசூலிக்கவும் செய்தனர். இதற்கு அருகிலுள்ள பிஷப் அவருக்குச் சொந்தமான பாலத்தையும் ஹென்ரி அழித்தார். இது குறித்து 1158ம் ஆண்டு, ஆக்ஸ்பர்க்கிலுள்ள அப்போதைய பேரரசர் பிரடெரிக் முதலாம் பர்பரோச்சர் முன்பு பிஷப்பும் மற்றும் ஹென்ரியும் கூச்சலிட்டனர். இதை விசாரித்த அரசர், ஹென்ரிக்கு தடையும், மற்றும் பிஷப்புக்கான ஒரு ஆண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மியூனிக் மக்களின் உரிமைகளான வர்த்தகம் மற்றும் நாணயத்தை உறுதி செய்தார். + +1992ம் ஆண்டிற்குப் பிறகு, மியூனிக் நாடானது 25 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. + + +பவேரியின் உயர்ந்த சமவெளியில் அமைந்தருக்கும் மியூனிக் நாடு, கடல் மட்டத்திலிருந்து உயரத்தில், ஆல்ப்ஸ் வடக்கு முனையின் வடக்கே தொலைவில் அமைந்துள்ளது. இசர் மற்றும் வார்ம் ஆறுகள், இந்நாட்டை வளப்படுத்துகின்றன. மியூனிக் தெற்கில் அல்பைன் போர்லாந்து அமைந்துள்ளது. + +இந்நாட்டின் காலநிலையானது, இருபெரும் காலநிலைகளான கோடை மற்றும் குளிர் ஆகியவற்றின் விளிம்பிலுள்ளது. இங்கு ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கோடையும், மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிரும் இருக்கும். + +ஆண்டின் சராசரியாக, இடி மின்னலுடன் கூடிய மழை, வசந்த மற்றும் கோடைக் காலங்களில் இருக்கும். குளிர்காலங்களில், மழை சற்று குறைவாகவே இருக்கும். ஆண்டின் சராசரி குறைந்த மழையளவாக, பிப்ரவரி மாதத்தில் பெய்யும். மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருப்பதால், ஜெர்மனியை விட அதிக மழையும் பனிப்பொழிவும் காணப்படும். மலையடிவாரத்தில் காணப்படும் வெப்ப சலனத்தால், (குளிர் காலத்திலும்) ஒரு சில மணி நேரத்திற்குள் வெப்பநிலை தீவிரமாக உயர வாய்ப்புள்ளது. + +மியூனிக் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 13 ஆகத்து 2003ம் ஆண்டு 37.1 C˚யும், குறைந்தபட்சமாக 21 சனவரி 1942ம் ஆண்டன்று -30.5 C˚வும் பதிவாகியுள்ளது. + +அல்பைன் மலையடிவாரத்தின் சமவெளியில் அமைந்திருக்கும் மியூனிக் நகரமானது, 2.6 மில்லியன் மக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நாட்டின் சிறு நகரங்களான தகாச்சு, ஃபிரியசிங், எர்திங், ஸ்டார்ன்பர்க், லான்துசட் மற்றும் மூஸ்பர்க் ஆகியவை சேர்ந்தவையே, மியூனிக் மாநகராட்சியாகும். இங்கு 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். + +கீழ்க்க���்ட நாடுகளுடன், பன்னாட்டு நல்லுறவு வைத்துள்ளது மியூனிக். + + + + + +பெயர்ச்சொல் + +பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல் + +என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர். + +"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது." + +இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம். + + +பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. "நான், நீ, அவன், அவள்" போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம். + +மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். + +தன்மை : நான், நாங்கள். +முன்னிலை : நீ, நீர், தாங்கள். +படர்க்கை : அவன், அவள், அவர்கள், அது, அவை. + +தன்மை ஒருமை : நான். +தன்மை பன்மை : நாங்கள். + +முன்னிலை ஒருமை : நீ, தம். +முன்னிலை பன்மை : நீர், தாங்கள். + +படர்க்கை ஒருமை : அவன், அவள், அது. +படர்க்கை பன்மை : அவர்கள், அவை. + + + + + +வினைச்சொல் + +வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் அல்லது ஓடுதல் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது அல்லது வீழ்தல் வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். + +முற்று இருவகைப்படும். அவை + +எச்சம் இரண்டு வகைப்படும். அவை + +ஒரு வினையானது (செயலானது)முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் +சான்று: +படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் +படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் +இப் பெயர், வினை எச்சங்கள் +1.தெரிநிலை +2. குறிப்பு +என இரண்டாகப் பகுக்கப்படும் + +செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் + +எ.கா: கயல்விழி மாலை +"தொடுத்தாள்" + +பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். + +எ.கா: அவன் "பொன்னன்". + +பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். + +எ.கா: "படித்த" மாணவன் + +வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். + +எ.கா: "படித்துத்" தேறினான் + + + + + +இடைச்சொல் + +இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு: + +1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு +வேற்றுமை உருபுகள். +2.விகுதிகள்- அன், அள்,உம்,து போன்றன. +3.இடைநிலை- த் ட் ற் ன் போன்றன. +4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன. +5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன. + +சில எடுத்துக்காட்டுக்கள்: + +மேலே குறிப்பிட்டுள்ளவற்றைக் கவனியுங்கள். இவற்றுள் + +இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ +இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து +வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இட��ாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு +வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன. + + + + + +உரிச்சொல் + +உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும். +ஆங்கிலத்தில் இதனை Synonym என்கின்றனர். தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும் குறைசொல்லாகவும் வரும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். + +பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், "உரிச்சொல்" என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் "உரிச்சொல்" இறுதியாக வருகிறது. உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். "உரி" என்னும் அடைமொழியைச் "சொல்" என்பதனோடு சேர்த்து "உரிச்சொல்" என்றனர். + +உரிச்சொல் இருவகைப்படும் + +சான்று: + +"ஒரு பொருள் குறித்த பல சொல்" + + +இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன. + +"பலபொருட்குறித்த ஒருசொல்" + + +இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும் + +உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு: + +உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை, + +நன்னூல், 454-வது பாடல் அஃறிணை பண்புகளை பின்வருமாறு வகைப்படுத்துகின்றது. + + + + + +உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455). + + + + + +டின்டால் விளைவு + +டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாக��ம். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும். + +புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது. + + + + + +ஒளித்தொகுப்பு + +ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு ("Photosynthesis") என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். ஒளிச்சேர்க்கையின் மூலம் இவ்வுயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் காபனீரொக்சைட்டு வளிமத்தைத் தமக்குத் தேவையான மாப்பொருள் என்னும் காபோவைதரேட்டு போன்ற கரிமவேதியல் பொருளாக மாற்றிக் கொள்ளும். + +தாவரங்களிலுள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கைவழியே தாவரங்களும், பாசிகளும், சயனோபாக்டீரியா (cyanobacteria) என்னும் உயிரினமும் கார்பனீரொக்சைட்டு வளிமத்தையும் நீரையும் ஒளியின் ஆற்றலையும் பயன்படுத்திக் கார்போவைதரேட்டுக்களாக மாற்றிக் கொண்டு, உயிர்வளியைக் (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப்பொருளாக வெளிவிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின் விளைவால் ஆக்சிசன் (உயிர்வளி) வெளியாவதால் உலகின் உயிர்வாழ்வுக்கு இவ் ஒளிச்சேர்க்கை மிக அடிப்படையான ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ எல்லா உயிர்களும் ஆக்சிசனை நேரடியான ஆற்றல் வாயிலாகவோ (மூலமாகவோ) அல்லது உணவுக்கு அடிப்படையாகவோ கொள்ளுகின்றன.. ஒளிச்சேர்க்கையின் வழி பற்றப்படும் (பிடிக்கப்படும்) ஆற்றல் மிக மிகப் பெரியதாகும்: ஏறத்தாழ ஆண்டுதோறும் 100 டெரா வாட் ஆகும் (100,000,000,000,000 வாட்) என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். இது ஏறத்தாழ உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் அளவைப்போல் ஏழு மடங்காகும். உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன. + +ஒளித்தற்போசணிகளிலேயே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் அசேதன கார்பன் (காபனீரொக்சைட்டில்) சேதன வடிவுக்கு மாற்றப்படுகின்றது. இரண்டு வகையான ஒளித்தொகுப்பு வகைகள் உள்ளன. தாவரங்களும், அல்காக்களும், சயனோபக்டீரியாக்களும் நிகழ்த்தும் ஒளித்தொகுப்பின் பக்கவிளைபொருளாக ஒக்சிசன் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றது. இம்முறை ஒக்சிசன் வெளியேற்றும் ஒளித்தொகுப்பாகும். எனினும் சில பக்டீரியாக்கள் மற்றவற்றைப் போல காபனீரொக்சைட்டை கார்பன் மூலப்பொருளாக உள்ளெடுத்தாலும், அவை ஒக்சிசனை வெளிவிடுவதில்லை. இது ஒக்சிசன் வெளியேற்றாத ஒளித்தொகுப்பு வகையாகும். இரு வகைகளிலும் சூரிய ஒளியே சக்தி முதலாக உள்ளது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பே பொருளாதார ரீதியில் மனிதனுக்கு முக்கியத்துவமானதால் அம்முறையே இங்கு அதிகம் ஆராயப்படுகின்றது. + +கார்பன் நிலைப்படுத்தல் அல்லது கார்பன் பதித்தல் எனும் உயிரிரசாயனச் செயன்முறை மூலம் காபனீரொக்சைட்டில் உள்ள கார்பன் உயிரிகளுக்குப் பயன்படும் வடிவமான வெல்ல வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. ஒளித்தொகுப்பு ஒரு தொகுப்புக்குரிய தாக்கமாகையால் (எனவே அகவெப்பத்தாக்கம்) இதற்குப் புறத்தேயிருந்து ஒரு சக்தி முதலும், கார்பனை காபோவைதரேட்டாக மாற்ற இலத்திரன்களும் தேவைப்படுகின்றன. இச்சக்தித் தேவைப்பாட்டை சூரிய ஒளி நிறைவு செய்கின்றது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பில் பிரதான இலத்திரன் வழங்கியாக நீர் உள்ளது. + +மேலோட்டமாகப் பார்த்தால் சுவாசத்துக்கு எதிர்மாறான செயன்முறையாக ஒளித்தொகுப்பு விளங்குகின்றது. சுவாசம் சக்தியை பயன்பாட்டுக்கு வெளியேற்றுகின்றது (புறவெப்பத்தாக்கம்); ஒளித்தொகுப்பு ஒளிச்சக்தியை இரசாயன் சக்தியாக சேமிக்கின்றது. எனினும் இரண்டு உயிரிரசாயனச் செயன்முறைகளும் நடைபெறும் விதம் நேர்மாறாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் நடைபெறுகின்றன. + +ஒளித்தொகுப்பின் மேலோட்டமான தாக்கம்:- + +காபனீரொக்சைட்டு + இலத்திரன் வழங்கி + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சியேற்றப்பட்ட இலத்திரன் வழங்கி + +ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பின் தாக்கச்சமன்பாடு: +தாக்கத்தை ச��ருக்குவதற்காக பொதுவாக இருபக்கத்திலுமுள்ள 2n நீர் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு பின்வரும் எளிய சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது: + +சில நுண்ணங்கிகள் இலத்திரன் வழங்கியாக நீருக்குப் பதிலாக ஆர்சனைட்டைப் பயன்படுத்துகின்றன.; இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆர்சனைட்டை ஆர்சனேற்றாக ஒக்சியேற்றுகின்றன: + +பொதுவாகன ஒளித்தொகுப்பு இரு படிநிலைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படிநிலை ஒளிச்சக்தியை உறிஞ்சும் ஒளித்தாக்கம் அல்லது ஒளி தேவைப்படும் தாக்கங்களாகும். இப்படிநிலையில் ஒளிச்சக்தியானது தூண்டப்பட்ட இலத்திரன்களின் வடிவில் பச்சையத்திலிருந்து சக்தி சேமிக்கும் மூலக்கூறுகளான ATP NADPH ஆகியவற்றில் சேமிக்கப்படுகின்றது. பச்சையத்திலிருந்து இழக்கப்பட்ட இலத்திரன்களை நீரிலிருந்து பெற்றுக்கொள்கின்றது. இச்செயற்பாட்டில் நீர் ஒக்சியேற்றமடைந்து ஒக்சிசனாக மாறி வளிமண்டலத்துக்குள் விடுவிக்கப்படுகின்றது. இரண்டாவது படிநிலை இருட்தாக்கம் அல்ல்து ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்களாகும் (இப்படிநிலை இருட்தாக்கம் என அழைக்கப்பட்டாலும் இவை நடைபெற மறைமுகமாக ஒளிச்சக்தி அவசியமாகும்). இப்படிநிலையில் ATP மற்றும் NADPH ஆகியவற்றில் உள்ள சக்தியைக் கொண்டு காபனீரொக்சைட்டு காபோவைதரேட்டாக மாற்றப்படுகின்றது. + +அனேகமான ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் உயிரினங்கள் கட்புலனாகும் ஒளியையே பயன்படுத்துகின்றன. எனினும் சில மாத்திரம் அகவெப்பக்கதிர்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. + +தாவரங்களில் ஒளித்தாக்கங்கள் பசுங்கனிகத்தின் மணியுருவிலுள்ள தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறுகின்றன. தைலக்கொய்ட் மென்சவ்வு வழமையான கல மென்சவ்வை ஒத்த ஒரு பொஸ்போஇலிப்பிட்டு இருபடை மென்சவ்வாகும். இம்மென்சவ்வில் இரண்டு ஒளித்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தாக்க மையம் உள்ளது. தாக்க மையத்தில் தாவரங்களின் முதன்மையான ஒளித்தொகுப்பு நிறப்பொருளான பச்சையம் a (chlorophyll a) உள்ளது. தாவரங்களின் ஒளித்தொகுப்பில் இரண்டு ஒளித்தொகுதிகள் பங்கெடுக்கின்றன. இவை கண்டுபிடிக்கப்பட்டதின் வரிசையில் ஒளித்தொகுதி I மற்றும் II என பெயரிடப்பட்டாலும், ஒளித்தாக்கச் செயற்பாட்டில் ஒளித்தொகுதி இரண்டே முதலில் செயற்படும். ஒளித்தொகுதி இரண்டின் அமைப்பும் செயற்பாடும் ஊதாக் கந்தக பக்டீரியாக்களின் ஒளித்தொகுதியை ஒத்ததாக உள்ளது. ஒளித்தொகுதி II 680 nm அலைநீளம் உள்ள ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது "P680" என அழைக்கப்படுகின்றது. ஒளித்தொகுதி I 700 nm அலைநீளமுடைய ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது "P700" என அழைக்கப்படும். + +ஒளித்தொகுதி II தாக்கங்கள்: +ஒளியினால் இலத்திரன் அருட்டப்படல் ஆரம்பிப்பது ஒளித்தொகுதி IIஇலே ஆகும். ஒளித்தொகுதி IIஇல் உள்ள பச்சையம் b (chlorophyll b), கரோட்டீன் போலிகள் என்பன வேறுபட்ட அலை நீளங்களில் ஒளியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறுக்குக் கடத்துகின்றன. இந்த போட்டோனை உறிஞ்சுவதால் தாக்க மையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறிலுள்ள இலத்திரன் அருட்டப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்விலத்திரன் ஃபியோபைட்டின் எனும் மூலக்கூறுக்குக் கடத்தப்படும். பின்னர் அதிலிருந்து இலத்திரன் பிளாஸ்டோகுயினோன் மூலக்கூறுக்குக் கடத்தப்படுகின்றது. பிளாஸ்டோ குயினைன் இவ்விலத்திரனிலுள்ள சக்தியைப் பயன்படுத்தி பஞ்சணையினுள் உள்ள H அயன்களை மணியுரு உள்ளிடத்தினுள் பம்பும். இதனால் மணியுருவினுள் H அயன் செறிவு அதிகரிக்கும். +இலத்திரன் வெளியேற்றப்படுவதால் பச்சையத்தில் (குளோரோபில் a) இலத்திரன் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இத்தட்டுப்பாடை ஈடுசெய்ய நீர் மூலக்கூற்றில் உள்ள ஐதரசன் அணுக்களின் இலத்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நீர் ஒக்சியேற்றப்படும் போது ஒக்சிசனும், H அயன்களும் பக்கவிளைபொருளாகத் தோன்றுகின்றன. இவ்வாறு நீரை ஒக்சியேற்றுவதற்காக ஒளித்தொகுதி II உடன் இணைந்தவாறு ஒக்சிசன் உருவாக்கும் சிக்கல் (ஒரு நொதியம்) உள்ளது. இவ்வாறு ஒளி முந்நிலையில் பச்சையத்தில் ஏற்படும் இலத்திரன் தட்டுப்பாட்டை நீக்க நீர் பிரிகையடைந்து இலத்திரனை வழங்கல் நீரின் ஒளிப்பகுப்பு எனப்படும். இதனால் H அயன்களின் செறிவு தைலக்கொய்ட் மென்சவ்வின் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கும். நீரின் ஒளிப்பகுப்பு மற்றும் பிளாஸ்டோகுயினைனின் பம்பலால் தோன்றிய H அயன் செறிவுப் படித்திறனைக் கொண்டு தைலக்கொய்ட் மென்சவ்வில் இருக்கும் ATP தொகுப்பி ("ATP synthase") எனும் நொதியம் ATP சக்தி மூலக்கூறுகளைத் தொகுக்கின்றது. + +ஒளித்தொகுதி I தாக்கங்கள்: +ஒளித்தொகுதி I இலும் ஒளியால் தாக்க மையத்திலுள்ள பச்சையத்திலிருந்த�� இலத்திரன் அருட்டப்படும். இதனால் ஏற்படும் நேரேற்றத்தை ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்படும் இலத்திரன் ஈடு செய்கின்றது. ஒளித்தொகுதி I இலிருந்து வெளியேற்றப்பட்ட இலத்திரன் பெரோடொக்சின் ஊடாக NADP தாழ்த்தும் நொதியத்தை அடையும். அங்கு H, இலத்திரன், NADP என்பன இணைந்து NADPH உருவாகும். NADPH பின்னர் இருட்தாக்கத்துக்கு ஐதரசன் மூலமாகவும், தாழ்த்தியாகவும் தொழிற்படும். + +ஒட்டுமொத்த ஒளித்தாக்கச் சமன்பாடு: + +நீரின் ஒளிப்பகுப்பினால் வெளியேற்றப்படும் இலத்திரன் பச்சையவுருமணியூடாக பரிமாற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் கொண்டுள்ள சக்தியை "Z" வரைபடம் காட்டுகின்றது. ஒளித்தொகுதி IIஇல் பெற்ற சக்தி ATPயை உருவாக்க பயன்படுவதுடன் ஒளித்தொகுதி Iஇல் பெற்ற சக்தி ஃபெரோடொக்சின் இலத்திரன் காவியூடாகக் கடத்தப்பட்டு NADPH மூலக்கூறுகளை உருவாக்கப் பயன்படும். ஒளி தங்கியிருக்காத கார்பன் பதித்தல் தாக்கங்களின் போது ATP, NADPH ஆகிய சக்தி மூலக்கூறுகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலே பயன்படுத்தப்பட்டு G3P யும் அதிலிருந்து குளுக்கோசும் தொகுக்கப்படுகின்றன. + +இத்தாக்கங்கள் "இருட்தாக்கங்கள்" எனவும் அழைக்கப்படுகின்றன. ஒளி தேவைப்படும் தாக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை காபோவைதரேட்டாக மாற்றுவதே இதன் பிரதான செயன்முறையாகும். இத்தாக்கங்கள் தைலக்கொய்ட் மென்சவ்வுக்கு வெளியே பசுங்கனிகத்தின் கலச்சாறுக்கு ஒப்பான ஸ்ட்ரோமாவில் நிகழ்கின்றன. இத்தாக்கங்களுக்கு நேரடியாக ஒளிச்சக்தி தேவைப்பலவில்லையென்றாலும் ஒளித்தாக்கங்களின் விளைவுகளான ATP மற்றும் NADPH என்பன தேவைப்படுகின்றன. ஒளி நேரடியாகப் பங்கெடுக்காத தாக்கங்களில் மூன்று படிநிலைகள் உள்ளன. அவையாவன கார்பன் நிலைப்படுத்தல்/ கார்பன் பதித்தல், தாழ்த்தல் தாக்கங்கள், ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டு (RuBP) மீள்தொகுப்பு என்பனவாகும். இப்படிநிலைகள் மொத்தமாக கல்வின் வட்டம் என அழைக்கப்படுகின்றன. இத்தாக்கங்களில் மிக முக்கியமான நொதியமாக RuBisCO விளங்குகின்றது. இது NADPHஇலுள்ள சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை CHO-பொஸ்பேட்டாக நிலைப்படுத்துகின்றது. +இருட்தாக்கம் பிரதானமாக மூன்று படிநிலைகளில் நிகழ்கின்றது. + +மொத்த இருட்தாக்கம்: + +இவ்வாறு உருவாக்கப்பட��ம் CHO பின்னர் குளுக்கோசாக CHO மாற்றப்பட்டு அதன் பின்னர் தேவையான வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. பொதுவாக தாவர இலைகளில் ஒளித்தொகுப்பின் பின்னர் குளுக்கோசு மாப்பொருளாகச் சேமிக்கப்படுகின்றது. + +கல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு இணைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டு (PGA அல்லது GP) உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் PGAஇல் ஆறில் ஐந்து பங்கு மூலக்கூறுகள் RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மீதி ஒரு பங்கு ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. +மேலே கூறப்பட்ட ஒளித்தொகுப்பின் இருட்தாக்கம் C3 தாவரங்களுக்குரியதாகும். இவற்றில் நடைபெறும் நீரிழப்பு, ஒளிச்சுவாசம் ஆகிய செயன்முறைகளால் இப்பொதுவான முறை வெப்பவலய நாடுகளில் வினைத்திறன் குன்றியதாக உள்ளது. இதற்கான இசைவாக்கங்களாக சில தாவரங்கள் C4 கார்பன் பதித்தலையும், சில CAM கார்பன் பதித்தலையும் மேற்கொள்கின்றன. இவ்விரு செயன்முறைகளிலும் கல்வின் வட்டத்துக்கு மேலதிகமாக காபனீரொக்சைட்டைச் சேமித்து விடுவிக்கும் அனுசேபச் செயன்முறைகளும் உள்ளன. + +ஒளித்தொகுப்பு வீதத்தில் பிரதானமாக மூன்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன: +ஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒன்றின் விளைவை மற்றையது கட்டுப்படுத்தும் ஒளித்தொகுப்புக் காரணிகளாக உள்ளன. இத்தோற்றப்பாடு ஃப்ரெடரிக் பிளாக்மான் என்பவரால் அவதானிக்கப்பட்டது. இத்தோற்றப்பாடானது ஒளித்தொகுப்பில் இரு நிலைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. வெப்பநிலை ஒளித்தொகுப்பின் கல்வின் வட்டத்திலும், ஒளிச்செறிவு ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களையும் பாதிக்கின்றன. + +ஒளித்தொகுப்பு வினைத்திறனாக நடைபெற இலைக்குள் காபனீரொக்சைட்டின் குறிப்பிட்டளவு செறிவு தேவைப்படுகின்றது. காபனீரொக்சைட்டின் செறிவு அளவுக்கதிகமாகக் குறைந்தால் (அதிக வெப்பமான நேரத்தில் இது நடைபெறும். அதிக வெப்பமான நேரத்தில் ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக இலைவாய்கள் மூடிக்கொள்ளும். இதனால் ஒளித்தொகுப்புக்கு காபனீரொக்சைட்டு இலைக்குள் செல்ல முடியாது) ஒளித்தொகுப்பின் வினைத்திறனை மோசமாகப் பாதிக்கும் ஒளிச்சுவாசம் எ���ும் செயன்முறை நடைபெறத் தொடங்கும். கல்வின் வட்டத்தில் பயன்படுத்தப்படும் RuBisCO நொதியம் CO மற்றும் O ஆகிய இரண்டுடனும் தாக்கமடையக்கூடியது. காபனீரொக்சைட்டு குறைவான நேரத்தில் ஒக்சிசனுடன் தாக்கமடைந்து உருவாக்கப்பட்ட வெல்லத்தை காபனீரொக்சைட்டாக மாற்றி வீணாக்குகின்றது. என்வே அதிக ஒக்சிசன் செறிவும் குறைந்த காபனீரொக்சைட்டுச் செறிவும் மிக மோசமாக ஒளித்தொகுப்பைப் பாதிக்கின்றது. எனவே சோளம் போன்ற சில வெப்ப வலையத் தாவரங்கள் ஒளிச்சுவாசத்தைக் குறைக்கும் முகமாக C ஒளித்தொகுப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. + + + + +தெரிநிலை வினைமுற்று + +தெரிநிலை வினைமுற்று என்பது செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும். + +எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள் + +இதில் + +ஆகியவற்றை அறியலாம். + +இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தை தெளிவாகக் காட்டும். + + + + + +குறிப்பு வினைமுற்று + +குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது. + +எ.கா:அவன் பொன்னன். + +இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு: + +இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். + + + + + +பவேரியா + +பவேரியா ("Bavaria") ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்பட��யில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். + +பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது. + +பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது. + +பவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். + +பவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது. + +மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில் பேசினர். + +பவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன. + +20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் . + +உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II + + + + + +பெயரெச்சம் + +பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை + +காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும் + +எ.கா: + +இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ள்ன. இவ்வாறு, காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். + +காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். + +எ.கா: + +நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும��� உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும். + + + + + +வினையெச்சம் + +தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை-எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன. + +காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும் + +எ.கா: படித்துத் தேறினான் + +காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும் + +எ.கா: மெல்ல நடந்தான் +பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்-தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். + +எடுத்துக்காட்டு + + + + + +சுரங்களின் அறிவியல் + +தென்இந்திய இசையில் மட்டுமல்லாமல் அனைத்து இசைகளுக்கும் சுரங்கள் இன்றியமையாதவை. இத்தகைய சுரங்களின் அறிவியல் அம்சங்கள் இக் கட்டுரையில் எடுத்தாளப்படுகின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், சுரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றில் இருக்கும், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 'நோட்'-டைக் குறிக்கும். + +மேற்கத்திய சுரங்கள் 'A', 'B', 'C' ... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது சுரங்களை குறிப்பதற்கு +என்று வழங்குகிறார்கள். இவை முறையே, +ஆகிய சுரஸ்தானங்களுக்கு சமானமாகும். + +இந்த சுரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவாரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது! + +அதிர்வலைகளின் நிறமாலையில் (spectrum), ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16 Hz முதல் 16,000 Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும���. அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது. எடுத்துக்காட்டாக அதிர்வெண் 240 Hz ஒலிக்கும், 241 Hz ஒலிக்கும் வேறுபாடு எதுவும் நம் கேள்வியில் தெரியாது. + +ஒலிநிறமாலையை எண்மங்களாகப் (octave) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து எண்மங்களில் ஒலி எழுப்ப முடியும். எண்மங்களின் தொடக்க அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு எண்மத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். +ஒரு எண்மத்தில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும். + +இப்படியே, 240,254,269...என்று, பன்னிரெண்டு வரை செல்லும், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240 Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு எண்மத்தில் 12 அதிர்வெண் ஒலிகள். இதிலிருந்து 12 என்னும் எண்ணுக்கும் சுரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ளலாம். 12 சுரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான். + +மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் ‘கமகம்’ என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமை வேண்டி, அவை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்). + + + + +லீ குவான் யூ + +லீ குவான் யூ ("Lee Kuan Yew", 16 செப்டம்பர் 1923 - 23 மார்ச்சு 2015) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். நவம்பர் 12 ஆம் நா��் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். 1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான "லீ சியன் லூங்", இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். + +சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சோங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். + +லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் நீரிணைக் குடியேற்றத்துக்கு (Strait settlements) 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். + +லீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரித்தானியக் குடிமகனாகப் பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார். + + +லீ குவான் யூ, 05 பெப்ரவரி2015 அன்று நிமோனிய��� காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் சிங்கப்பூர் நேரம் ஞாயிறு (23 மார்ச்சு) அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார். + +லீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும். அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் "மண்டாய் தகனச் சாலை"யில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. மேலும் நரேந்திர மோதி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். + +லீ குவான் யூவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது. மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார். +மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. + + + + +சோழர் + +சோழர் ("Chola dynasty") என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். ���ேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. + +கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். + +கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார���. இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர். + +சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி. + +சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய "எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல்" (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து "தொலெமி" (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன. + +இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. +சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர், கழ���த்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். + +கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. + +கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான். + +கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது. + +இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, +போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிரா���்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. + +கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. + +நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். + +இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். + +தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிக���ை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. + + +களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் கி.பி. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிஷ்ணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர். + +கி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். + + +புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். + +சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது. + +பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன. +கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்து���் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான். + +விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு [[பாண்டியர்|பாண்டியன்]] வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். [[திருப்புறம்பியப் போர்]] சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற [[பாண்டியர்]]கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். [[பல்லவர்]] மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் [[மேலைக் கங்கர்|கங்கர்]] நாட்டிலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலும்]] பரவியிருந்தது. [[சேர நாடு|சேர நாட்டுடனும்]], இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான். + +கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே "காளத்��ி" முதல் தெற்கே [[காவிரி]] வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு [[மதுரை]]யைக் கைப்பற்றிக் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். +இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் [[குடவோலை]] முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. + +பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராஜாதித்யர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது. + +கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். + +சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்��ு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், [[பாண்டியர்]]களையும் வெற்றி கொண்டான். எனினும், பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் [[ஆதித்த கரிகாலன்]] கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. [[ஆதித்த கரிகாலன்|இரண்டாம் ஆதித்தன்]] ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. +அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும். + +[[படிமம்:Uttama coin.png|thumb|right|உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.]] +கி.பி 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த [[தமிழ்]] எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய [[நாணயம்]] இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும். + +பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான [[இராசராச சோழன்]] மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. + +இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. [[சேரர்]], [[பாண்டியர்]], சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து [[உதகை]], விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய [[இலங்கை]] மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான். + +சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் ([[மைசூர்|மைசூரின்]] தென்பகுதியும் [[சேலம்]] மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு [[மேலைக் கங்கர்|கங்கர்கள்]] இந்நாட்டை ஆண்டனர். [[மைசூர்]] நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் [[பல்லவர்]]களின் வம்சத்தவராகிய [[நுளம்பர்]]களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான [[முதலாம் ராஜேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] ஆவான். [[சாளுக்கியர்|சாளுக்கிய]] நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். [[துளு]]வர், [[கொங்கணி|கொங்கணர்]], [[தெலுங்கு|தெலுங்கர்]], இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே [[வங்காள தேசம்|வங்காளம்]] வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. +[[படிமம்:chola map.png|thumb|right|சோழப் பேரரசின் எல்லைகள். கி. பி 1014]] + +இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு [[இலங்கை]]யை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய [[ஈழம்]] 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. + +இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் "ராசராச பெரும்பள்ளி". [[இராஜராஜ சோழன்|ராசராசசோழ]] மன்னனின் பெயரில் இத��� இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் [[தஞ்சைப் பெரிய கோவில்|தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு]] நிவந்தமாக அளித்ததைக் [[கல்வெட்டு]]கள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, [[இந்தியா]]வின் மேற்குக் கரைக்கு அப்பால், [[அரபிக்கடல்|அரபிக்கடலிலுள்ள]] முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் [[இலட்சத்தீவுகள்]] மீதும், கிழக்குப் பகுதியில் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியப்]] பகுதியிலுள்ள [[கடாரம்|கடாரத்தின்]] மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய [[செப்பேடுகள்|செப்பேடு]] ஒன்று தெரிவிக்கிறது. + +இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் [[இராசேந்திர சோழன்]]. இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய [[தமிழ்நாடு]], [[ஆந்திரா|ஆந்திர]], [[கேரளா|கேரள]] மாநிலங்களையும் [[மைசூர்]] நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது. + +சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய [[பாண்டியர்|பாண்டியன்]] இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், [[செங்கோல்|செங்கோலை]]யும் மீட்டு வந்தான். +[[படிமம்:rajendra territories cl.png|thumb|right|இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030]] +வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. [[சாளுக்கியர்]], [[கலிங்கர்]], [[ஒட்ட விசயர்]] ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, [[வங்காளம்|வங்காள]] நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது. +வடநாட்டை வென்று பெற்ற [[கங்கை ஆறு|கங்கை]] நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் "கங்கை கொண்ட சோழீச்சுரம்" என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், [[தஞ்சாவூர்|தஞ்சையிலிருந்து]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுர]]த்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான். + +[[இராசேந்திர சோழன்|இராசேந்திர]] சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான [[ஈழம்]], பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் "கொப்பம்" என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான். + +இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. +இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. + +[[படிமம்:kulothunga territories cl.png|thumb|குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120]] + +[[இராசராச சோழன்|இராசராசசோழனின்]] தமக்கையான [[குந்தவை]]யின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் [[கடாரம்|கடாரத்துக்குச்]] சோழப்படை சென்ற போதும் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்கன்]] அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் [[முதலாம் குலோத்துங்க சோழன்]]. + +முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் [[ஈழம்|ஈழநாட்டில்]], விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. + +குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். [[இராசராச சோழன்]] கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன. + +[[இராசராச சோழன்|முதலாம் இராசராசன்]] மற்றும் [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] காலங்களிலேயே [[சீனா|சீன]] நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்கனும்]] தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான் மேலும் [[கடாரம்]], [[சுமத்திரா]] போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான். + +குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே "சுங்கம் தவிர்த்த சோழன்" என அழைக்கப்பட்டான். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. "நிலமளந்த செயல்" இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் [[செயங்கொண்டார்]]. இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து [[கலிங்கத்துப் பரணி]] இயற்றினார். + +முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே [[பாண்டியர்கள்]] வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன. + +1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்|மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] தலைமையில் பாண்டியர்கள் [[கங்கைகொண்ட சோழபுரம்]] மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற [[பாண்டியர்கள்]] சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக���குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. + +தமிழ் மரபுகளின்படி பண்டைய [[சோழ நாடு]] தற்காலத் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[தஞ்சாவூர்]] மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. [[காவிரி]] ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர். + +[[உறையூர்]] கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் [[காவிரி]]க் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், [[நாகபட்டினம்|நாகபட்டினமும்]] சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த [[தமிழகத்தில் பண்டைய ரோமின் காசுகள்|ரோமானிய நாணயங்கள்]] பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. + +சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் [[தஞ்சாவூர்]] ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. [[விசயாலய சோழன்]] தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு [[காஞ்சிபுரம்|காஞ்சி]]யை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறி���ு காலத்திற்குப் பின் [[தஞ்சாவூர்|தஞ்சை]] அதன் முதன்மை இடத்தை இழந்தது. [[இராசராச சோழன்|இராசராசனின்]] மகன் [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்காபுரி]] என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை [[கங்கைகொண்ட சோழபுரம்]] தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது. + +கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் [[இராசராச சோழன்|இராசராசனின்]] தமக்கை [[குந்தவை]] பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் [[மதுரை]]யில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். [[சாளுக்கிய சோழர்கள்|சாளுக்கிய சோழர்களின்]] காலத்தில், [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[மதுரை]], [[காஞ்சிபுரம்]] ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின. + +முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது. + +சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, [[இலக்கியம்]], [[இசை]], [[சிற்பம்]]. [[நாடகம்]], ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது. + +சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எ���ப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. + +கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. [[இராசராச சோழன்|முதலாம் இராசராசன்]], [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. + +சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் [[சாதி]]யினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். +பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்���ாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள். + +சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர். + +கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. [[இராஜராஜ சோழன்|இராசராச பேரரசனின்]] தாயாரும் [[சுந்தர சோழன்|சுந்தர சோழனின்]] மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. + +சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்த��ல் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம். + +சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை [[குலோத்துங்க சோழன் III|மூன்றாம் குலோத்துங்கன்]] கல்வெட்டு தெரிவிக்கிறது. + +சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார். + +ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் "இந்தியாவின் வரலாறு" ("A History of India") என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். +சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. [[சுமத்ரா]]த் தீவில் கண்டெடுக்கப்பட்ட [[தமிழ்]] சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய [[நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்]] பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது. + +[[படிமம்:Cholacrop.jpg|thumb|250px|பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் [[அர்த்தநாரீசுவரர்]] தோற்றம்.]] +சோழர் காலத்தில் [[கலை]], [[இலக்கியம்]], [[சமயம்]] முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே [[பல்லவர்]] காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் ("classical age") என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் [[சங்க காலம்|சங்க காலமே]] தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. + +பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், [[வெண்கலச் சிலை]]களும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள [[இந்து]]ப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே. + +சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், "உள்ளாலை", "புறம்பாடி" என்ற இரு பிரிவாக இருந்தத��. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், [[இராசராச சோழன்|முதலாம் இராசராசனுக்கு]] முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான [[இராசேந்திர சோழன்]] காலத்திலும், [[தஞ்சைப் பெரிய கோயில்]] மற்றும் [[கங்கை கொண்ட சோழபுரம்]] கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும். +[[படிமம்:Entrance of Airavatesvara Temple.jpg|thumb|[[தாராசுரம்]] [[ஐராவதேஸ்வரர் கோயில்]], கி.பி 1200]] + +சோழர் காலம், கல்லாலும் [[வெண்கலம்|வெண்கலத்தாலும்]] ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, [[சிவன்|சிவனின்]] பல்வேறு தோற்றங்கள், [[விஷ்ணு]], மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் [[சிற்பநூல்கள்]]களிலும், [[ஆகமங்கள்|ஆகமங்களிலும்]] சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான [[நடராசர்|நடராசப்]] பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். + +சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் [[பிராமணர்]]களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்���ி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது. + +சோழர் காலத்தில் [[தமிழ்]] சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், [[வணிகம்]], [[இலக்கியம்]], [[சமயம்]] என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". + +சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. [[இந்து]] சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. [[இராசராச சோழன்]] காலத்தில்[[தேவாரம்]] முதலிய நூல்கள் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களாகத் தொகுக்கப்பட்டன. [[சமணம்|சமண]], [[புத்தம்|பௌத்த]] நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. [[திருத்தக்க தேவர்]] என்பவரால் இயற்றப்பட்ட [[சீவக சிந்தாமணி|சீவகசிந்தாமணியும்]], தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட [[சூளாமணி]]யும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும். + +மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த [[கம்பர்]] தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தை]] எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், [[கம்பர்]] இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். [[செயங்கொண்டார்|செயங்கொண்டாரரின்]] [[கலிங்கத்துப்பரணி]]யும் இன்னொரு சிறந்த இலக்கியம். [[இரண்டாம் குலோத்துங்க சோழன்]] பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்���ுடைத் தலைவனாகக் கொண்டு [[ஒட்டக்கூத்தர்]] என்னும் புலவர் [[குலோத்துங்க சோழ உலா]] என்னும் நூலையும் [[தக்கயாகப் பரணி]], [[மூவருலா]] என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் [[பெரிய புராணம்|பெரிய புராணமும்]] இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் [[திருப்பாவை]], [[திருவெம்பாவை]] போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது. + +சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. [[மெய்கண்டார்]] [[சிவஞானபோதம்]] என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய [[திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)|திருவுந்தியார்]], [[அருள்நந்தி சிவாச்சாரியார்]] எழுதிய [[சிவஞான சித்தியார்]], [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதிசிவாச்சாரியாரின்]] எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது. + +சோழர் [[இந்து]] சமயத்தை, சிறப்பாகச் [[சைவம்|சைவ]] சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். [[சைவம்]], [[வைணவம்]] என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக [[இராமானுசர்]] தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். + + + + +[[பகுப்பு:சோழர்|*]] +[[பகுப்பு:தமிழ்நாட்டு அரச வம்சங்கள்]] +[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]] +[[பகுப்பு:இந்துப் பேரரசுகள்]] +[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]] +[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]] +[[பகுப்பு:தமிழ் அரச வம்சங்கள்]] +[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]] +[[பகுப்பு:சோழப் பேரரசு]] +[[பகுப்பு:தஞ்சாவூர் வரலாறு]] + + + +ஆய்த எழுத்து + +ஆய்த எழுத்து () என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மை��் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. + +இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். + +எடுத்துக்காட்டு + +ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது. + +உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. + +"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. + +காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. + +உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது. + +இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. + +ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. + +வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. + +பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. + +ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். + +கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். + +ஆய்தம் எ��்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. + +போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. + +போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். + +தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. + + +திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது. + +அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) +நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) +அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014) + +அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226) +வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363) +கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414) +இ���னால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர். + +முனைவர் தமிழப்பன் எழுதிய "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்" என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. + +ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார். ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் . எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம். + +எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கிழூம் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது. + +ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்ற் கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்க ல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்" + +"குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் + +ம��்றவை தாமே புள்ளி பெறுமே" + +என்பதும் இங்கு சுட்டத்தக்கது. + +முப்பாற்புள்ளியே ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய மூன்றற்கும் பொது எழுத்தாய் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது என்ற கருத்து குழப்பத்தை விளைவிக்குமாதலின் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. + + + + + + +மதுரைக் காஞ்சி + +சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. +பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார். + +பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார். + +நாடெனும்பேர் காடுஆக +ஆசேந்தவழி மாசேப்ப +ஊர் இருந்தவழி பாழ்ஆக +போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார். + +சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார். + +மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது +கரைபொருது இரங்கும் முந்நீர் போல, +கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது. + +ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார். + +சொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/?p=51185 + + + + +பட்டினப் பாலை + +பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். + +சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை. +துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமி���கத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது. + +பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும். +பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும். + +பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றன் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும் வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயம் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால் + +என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள்கருத்தாகும். இதனை + +என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம். + +காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்கலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம். + +இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்ச��ழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன. + +பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பி தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன. +கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவனிருந்த இல்லத்திற்குத் தீ வைத்தனர். கரிகாலன் அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனது. இதனால் இவனுக்குக் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது. + +இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பொது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது. + +கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். + +பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் புறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, அல்லது தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தை நம் மனக்கண்ணால் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம். + + + +ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் + + + + + +மலைபடுகடாம் + +சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். + +நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. + + + + +இரைபோ கருவமிலம் + +இரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் ��ொண்டும் அழைக்கலாம். + +இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றான கருவமிலங்களில் ஒன்றாகும். இவையும் டி.என்.ஏ யைப் போன்றே நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும். + +ஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. + +புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), இரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA). + +ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): குறு ஆர்.என்.ஏ (micro-RNA), சிறு ஆர். என். ஏ (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA). + +=dhdhj +ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA). + +
+ + +
+ +அல்கா + +அல்காக்கள் (Algae), பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள் ஆகும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் அதிநுண்ணுயிரி மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு கல அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும். + +அல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா. + +பூமியில் உள்ள அனைத்துத��� தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலைக் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman) உறுதிபடுத்தியுள்ளார். + +தமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது. + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +பூஞ்சை + +மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungii) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பூசணம், பங்கசு) ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை. +இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது. + +பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின���றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன. + +பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான "Fungii"க்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. + + +அனேகமான பூஞ்சைகள் பூஞ்சண இழைகளாக (hyphae) வளர்கின்றன. பூஞ்சண இழைகள் 2–10 µm விட்டமும் சில சென்டிமீட்டர்கள் நீளமுடையனவாகவும் வளர்கின்றன. பல பூஞ்சண இழைகள் ஒன்று சேர்ந்து பூஞ்சண வலையை (mycelium) ஆக்குகின்றன. பூஞ்சைகள் பூஞ்சண இழையை நீட்சியடையச் செய்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி இழையுருப்பிரிவு மூலம் நிகழ்கின்றது. கருப்பிரிவு நிகழ்ந்து புதிய கருக்கள் உருவாக்கப்பட்டாலும், அக்கருக்களுக்கிடையிலான பிரிசுவர் (septum) முழுமையாக அவற்றைப் பிரிக்காததால் பூஞ்சைகள் அடிப்படையில் பொதுமைக் குழியக் கட்டமைப்பைக் காட்டுகின்றன. அதாவது (இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர) ஒரு பூஞ்சணத்தில் உடல் முழுவதும் ஒரே தொடர்ச்சியான குழியவுருவால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர வேறு வகையான இழைய வியத்தம் பூஞ்சைகளில் தென்படுவதில்லை. புதிய பூஞ்சண இழைகள் பழைய பூஞ்சண இழைகள் கிளை விடுவதன் மூலம் உருவாகின்றன. அனேகமான பூஞ்சைகள் பல்கல (உணமையில் பல்கரு) அங்கத்தவர்களென்றாலும், மதுவம் என்னும் கூட்டப் பூஞ்சைகள் தனிக்கல பூஞ்சணங்களாக உள்ளன. சில பூஞ்சணங்கள் தமது அகத்துறிஞ்சல் முறைப் போசணையை நிறைவேற்றுவதற்காக பருகிகள் (haustoria) என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பூஞ்சண இழையினுள��� பல சிறு புன்வெற்றிடங்கள் உள்ளன. இப்புன்வெற்றிடங்கள் தாவர புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றன. இதனைத் தவிர சாதாரண மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா) கலத்திலுள்ள அனைத்துப் புன்னங்கங்களும் பூஞ்சண இழைகளில் உள்ளன. இவை பொதுவாக காற்றுவாழிகள் (மதுவம் போன்றவற்றைத் தவிர்த்து) என்பதால் இவற்றில் இழைமணிகள் பல காணப்படும். +பேசிடியோமைக்கோட்டா அங்கத்தவர்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புக்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் காளான் பூஞ்சணத்தை ஆக்குகின்றன. சில கைற்றிட் பூஞ்சைகளைத் தவிர ஏனைய பூஞ்சண இனங்களில் சவுக்குமுளை காணப்படுவதில்லை. + +பூஞ்சணங்களின் உடற்கட்டமைப்பு அவற்றின் போசணை முறைக்கமைய இசைவாக்கமடைந்துள்ளது. இவை இழையுருவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் இவற்றின் மேற்பரப்பு கனவளவு விகிதம் மிகவும் உயர்வாகும்; இதனால் பூஞ்சைகள் மிக அதிகமான அகத்துறிஞ்சல் வினைத்திறனைக் கொண்டுள்ளன. அனேகமானவை அழுகல்வளரிகளாகவும், பிரிகையாக்கிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும், சில ஒன்றிய வாழிகளாகவும் உள்ளன. அனைத்துப் பூஞ்சணங்களும் அவற்றின் உணவின் மீதே வளர்வனவாக உள்ளன. தாம் வளரும் வளர்ச்சியூடகம்/ உணவு மீது நீர்ப்பகுப்பு நொதியங்களைச் சுரக்கின்றன. இந்நொதியங்கள் அவ்வுணவு மீது தொழிற்பட்டு அவ்வுணவு நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசு, அமினோ அமிலம் போன்ற எளிய உறிஞ்சப்படக்கூடிய வடிவத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இவ்வெளிய சேதனப் பதார்த்தங்களை உள்ளெடுத்து பூஞ்சணம் வளர்ச்சியடைகின்றது. பூஞ்சணங்களின் நொதியங்கள் பல்சக்கரைட்டுக்கள், புரதம், இலிப்பிட்டு என அனைத்து வகை உயிரியல் மூலக்கூறுகளிலும் செயற்படக் கூடியது. பாக்டீரியாக்களைத் தாக்கியழிக்கப் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் இவற்றை அழிக்க முடியாது. பூஞ்சணங்கள் உயர் வளர்ச்சி வீதமுடையவை. இதனாலேயே இரவோடிரவாக ஒரே நாளில் காளான் வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். +பூஞ்சணங்கள் தாம் உள்ளெடுக்கும் உணவின் ஒரு பாகத்தைத் தம் வளர்ச்சி, இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தி மீதியை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்ச் சிறுதுளிகளாகச் சேமிக்கின்றன. + +பூஞ்சணங்கள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருகுகின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை. +பதிய வித்திகள் (conidia) மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சணங்களில் நிகழும். அதாவது புற விசைகலால் பூஞ்சண வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சணமாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சணங்களில் அரும்புதல் (budding) மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சணங்கள் டியூட்டெரோமைக்கோட்டா (Deuteromycota) எனும் பூஞ்சணக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன. +அனேகமான பூஞ்சணங்கள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. பூஞ்சணங்களின் வாழ்க்கை வட்டத்தில் பொதுவாக ஒரு மடிய (n), இருகருக்கூட்ட அவத்தை(n+n), இருமடிய நிலைகள்(2n) உள்ளன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. கைற்றிட் பூஞ்சணத்தில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. காளான் இருகருக்கூட்ட அவத்தை உடைய இனப்பெருக்கக் கட்டமைப்பாக உள்ளது. இவை நுகவித்தி (Zygospore), கோணி வித்தி (ascospore), சிற்றடி வித்தி (basidospore), இயங்கு வித்தி (zoospore) என பல்வேறு இலிங்க முறை இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு காளானின் "குடை"யின் அடிப்பாகத்தில் நுணுக்குக்காட்டியினூடாக பல சிற்றடிகளையும், சிற்றடி வித்திகளையும் அவதானிக்கலாம். (இரு கருக்கூட்ட அவத்தை என்பது கருக்கட்டலின் போது உடனடியாக கருக்கட்டலில் ஈடுபடும் புணரிக் கருக்கள் (ஒருமடியம்-n) ஒன்றிணையாமல் ஒரு கலத்தினுள்ளேயே இரண்டும் சேர்ந்திருக்கும் (n+n) நிலை) +இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது முதலில் நேர் மற்றும் எதிர் குல பூஞ்சண இழைகளின் இணைதல் (conjugation) நிகழும். இவற்றின் இணைதலைத் தொடர்ந்து உடனடியாகக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. முதலில் குழிவுருப் புணர்ச்சி இடம்பெற்று இரு கருக்கூட்ட அவத்தை ஆரம்பமாகும். அதன் முடிவிலேயே கருப்புணர்ச்சி இடம்பெறும். + +பூஞ்சணங்கள் அவை ஆக்கும் இலிங்க இனப்பெருக்கக் கட்டமைப்புக்க்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. பின்வருவன பிரதான பூஞ்சண கணங்களாகும்: +உ-ம்: "Allomyces" +உ-ம்:"Saccharomyces, Kluyveromyces, Pichia, Candida" +உ-ம��: "Ustilago maydis, Malassezia, Cryptococcus neoformans" + +பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும். + +பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும். + +தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து வேர்ப் பூஞ்சணம் (மைகொரிஸா-"Mycorrhiza") எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன. + +சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம். + +பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும��� வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன. + +பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன. + +பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "Penicillium griseofulvum" எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன. + +தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. "Saccharomyces" எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. + + + + + +சீனா (பக்கவழி நெறிப்படுத்துதல்) + +சீனா அல்லது சோங்கு ('Zhōngguó") என்பது பினவருவனவற்றைக் குறிக்கும்: + + + + + +கருநாடகம் + +கர்நாடகா (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மகாராஷ்டிராவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது. + +கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர். + +பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், புராதன மற்றும் மத்திய கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் ஆதரிக்கப்பட்ட தத்துவ ஞானிகளும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது. + +கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், பனவாசியை தலைநகராக கொண்டது. அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது. + +கடம்பர் வம்சத்தைச் சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள். சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர். + +1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. + +இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, தளபதியான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ��ங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. + +கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது. +இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் . கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி . +கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.. + +1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 30 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும். + +2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்க���ட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது. + +ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கியம்|சீக்கிய சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது. + +கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. + +கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி சுமார் ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது. இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 7% . 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 5.2% சதவிதமாக இருந்தது +கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது. +2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. +கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. +கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , தேசிய விண்வெளி ஆய்வகங்கள்( National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது. + +கர்நாடக மாநில முக்கிய சுற்றுலா தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், பந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும். + + + + + +மரபியல் + +மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும். நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், பரம்பரையூடாகக் கடத்தப்படக் கூடிய ஏதோ சில அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது. +சந்ததிகளூடாகக் கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில் நியூக்கிளியோட்டைடுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையைத் தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கடத்த உதவும். +ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. + + + + + + +சங்கர் + +சங்கர் அல்லது ஷங்கர் என்பது ஒரு சமசுகிருத சொல்லாகும். சங்கரம் என்றால் நன்மை செய்தல் என்பது பொருளாகும். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்ற பொருளில் இது சிவனைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. + +ஷங்கர் (அல்லது சங்கர்) எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம். + + + + + +உடுமலைப்பேட்டை + +உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +உடுமலைப்பேட்டையில் நிறைய காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,893 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உடுமலைப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடுமலைப்பேட்டை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + +உடுமலைப்பேட்டையில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லுரிகளும் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உள்ளது. நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி மற்றும் மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேசன், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் தனித்தனியாகவும் இயங்கி வருகின்றன. + + + + +கோவை தொழில்நுட்பக் கல்லூரி + +கோவை தொழில்நுட்பக்கல்லூரி ("Coimbatore Institute of Technology") தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 1956 ஆம் ஆண்டு வி. இரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இது அரசு உதவி பெறும் ஒரு கல்லூரியாகும். 1987 முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. + + + + + +டாட்டா எலக்சி + +டாடா எலக்சி (Tata Elxsi) என்பது இலத்திரனியல் மற்றும் கணினி வரைகலை சார்ந்த துறைகளுக்கான வன்பொருள் மாதிரி மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனக் குடும்பமான டாடா குழுமத்தின் ஒரு பிரிவாகும். + +இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. + +கிளைகள்: திருவனந்தபுரம்,சென்னை, மும்பை. + + + + + +புலி + +புலி ("Panthera tigris" ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன. + +புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி அமுர் ஆற்று வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந��து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மர்றும் சுமாத்திரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன. + +உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும். + +புலியானது தசைநிறந்த பெருவுடலும் வலிமையான முன்னங்கால்களும் தன் உடலில் பாதியளவு வாலும் கொண்டுள்ளது. இதன் கடினமான அடர்ந்த உடல் மயிர்கள் பழுப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறங்களில் இருக்கும். மேலும் உடலில் உள்ள செங்குத்தான கருநிறப் பட்டைகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமாக இருக்கும். புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. எனவே அதன் உடல் மயிர்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீங்குவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பக���தியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது. +காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும். மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் ("பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா") "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை, இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை. ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது. கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர். முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது. + +புலி இனத்தில் உள்ள எட்டு கிளையினங்களில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவியிருந்தன. தற்போது அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது வாழும் கிளையினங்கள், அவற்றின் பண்புகள் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன: + + + + + + +1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளில் அழிந்துபோய் இருந்தது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போயிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. + + +புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின. சிங்கப்புலி மற்றும் புுலிச்சிங்கம் எனப்படும் கலப்பினங்களை உருவாக்கச் சிங்கங்களைப் புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. + +லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும். ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (ச���்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். + +அரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும். + +வெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது "சின்சில்லா அல்பினிஸ்டிக்" என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூடப் பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன. அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள் மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள��ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன. + +கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விடப் பெரியதாக இருக்கின்றன. + +"ஊதா" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும். + +புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையா��� இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன. +தனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த "விதிகளும்" அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆண் சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் குட்டிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் உண்ண அனுமதிக்கின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புலிகளும் தங்கள் இரையை பகிர்ந்துகொள்வதும் காணப்பட்டுள்ளது. ஸ்டீபன் மில்ஸின் "புலி" என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வை ரத்தம்பூரில் வால்மிக் தப்பரும் ஃப்த்தே சிங் ரத்தோரும் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வரும் மேற்கோளில் விளக்குகிறார்: +பத்மினி என்று அழைக்கப்படும் ஒரு ஆதிக்கமிக்கப் பெண் புலியானது 250 கி.கி (550-பவுண்ட்) உடைய ஒரு ஆண் நீலான் மானைக் கொன்றது - நீல்கை என்பது மிகப்பெரிய மானினம் ஆ��ும். அவர்கள் விடிந்தபிறகு அந்த மானைக் கொன்ற இடத்தில் அந்தப் பெண் புலியையும் அதன் மூன்று 14 மாதக் குட்டிகளையும் கண்டனர். மேலும் அந்தக் குட்டிகள் எந்தவித இடையூறுமின்றி அவை இருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தில் 2 வயது வந்த பெண்புலிகளும் ஒரு வயது வந்த ஆண் புலியும் சேர்ந்துகொண்டன - அவை பத்மினியின் முந்தைய ஈற்று வாரிசுகளாகும் மேலும் இரண்டு தொடர்பில்லாத புலிகளும் சேர்ந்து கொண்டன. அவற்றில் ஒன்று பெண் புலி மற்றொன்று அடையாளம் காணப்படவில்லை. மூன்று மணியளவில் அந்தக் கொல்லப்பட்ட இரையைச் சுற்றி ஒன்பது புலிகளுக்குக் குறையாமல் இருந்தன. +இளம் பெண் புலிகள் தனது இருப்பிடத்தை முதலில் அமைக்கும்போது அவை தமது தாயின் இருப்பிடப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைக்கின்றன. பெண்புலி மற்றும் அதன் தாய்ப்புலி ஆகியவற்றின் பிரதேசத்தின் பொதுவான பகுதியானது காலப்போக்கில் குறைகிறது. இருப்பினும் ஆண் புலிகள் அவற்றின் உறவான பெண் புலிகளைவிட அதிக இடத்தை அமைத்துக்கொள்கின்றன. மேலும் அவை இளம் வயதிலேயே தனியான இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு வெளியேற்றப்படுகின்றன. ஒரு இளம் ஆண் புலியானது மற்ற ஆண் புலிகளின் எல்லைக்குள் அடங்காத பகுதியைப் பார்த்து ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற ஆணின் பிரதேசத்தில் பிற ஆணிற்கு போட்டியாக மாறத் தேவையான வலிமை மற்றும் வயது வரும்வரை தற்காலிகமாக வாழும். தமது சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறித் தனிப்பட்ட பிரதேசங்களை அமைப்பதற்காக வெளியேறிய இளம் புலிகளில்தான், வயதுவந்த புலிகளின் அதிகபட்ச இறப்பு வீதம் (ஆண்டுக்கு 30-35%) பதிவாகியுள்ளது. + +பிற பகுதியைச் சேர்ந்த பெண் புலிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைப் பெண் புலிகள் சகித்துக்கொள்ளும் அளவுக்கு ஆண் புலிகள் சகித்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான பிரதேச சிக்கல்கள், நேரடியான தாக்குதல் மூலமாக இல்லாமல் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதன் மூலமே வழக்கமாகத் தீர்க்கப்படுகின்றன. பலம் குறைவான புலிகள் புரண்டு விழுந்து முதுகு தரையில் படிய விழுந்து தோற்ற பல காட்சிகள் காணப்பட்டுள்ளன. பலசாலியான புலியானது ஒருமுறை தனது பலத்தை நிலைநாட்டிவிட்டால் அந்த ஆண் புலியானது தோல்வியடைந்த புலியைத் தன் பகுதிக்குள் வசிக்க அனுமதிக்கிறது. ஆனாலும் மிக நெருக்கமாக வராதவரை மட்டுமே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பெண் புலி காமவேட்கையில் இருக்கும்போது மட்டுமே இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் ஆபத்தான சண்டை நிகழும். அதன் விளைவாக ஏதேனும் ஒரு ஆண் புலி இறக்கலாம். இருந்தபோதிலும் இயல்பாக இது போன்ற நிகழ்வு அரிதுதான். + +தனது பிரதேசங்களை அடையாளம் காண ஆண் புலிகள் மரங்களில் சிறுநீர் மற்றும் மலவாய்ச் சுரப்பிகளில் தோன்றும் சுரப்புநீர் ஆகியவற்றை தெளித்து அதனைக் குறியிடுகின்றன. அதேபோல் கழிவுகளைப் பரப்பித் தடம்பதிப்பதன் மூலமும் குறியிடுகின்றன. ஆண்புலிகள், பெண்புலிகளின் இனப்பெருக்கத்திற்கான நிலமையை அவற்றின் சிறுநீர் குறியீடுகளை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக அறிந்து உந்தலுணர்வை முகச்சுளிப்பைக் கொண்டு காட்டுகின்றன, இது ஃப்ளெமென் பதில் என்று அழைக்கப்படும். + +வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது அதற்குப் பதிலாகக் கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றைத் தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது. + +காடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட��டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன. + +வயதுவந்த யானைகளைப் பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது. இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன. + +வயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும். புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காகத் தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. +புலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும். பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இர���க்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது. + +பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டுச் சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன. சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது. புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்குப் போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது. மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன. + +1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் "கெங்ஹிஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது. இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது. + +புலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாகப் பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் ���ாலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றைத் தனியாக வளர்க்கின்றன, அவற்றைத் தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காகச் சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூடப் புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம். புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாகக் குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை. + +பொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம். இந்தக் குட்டியானது பொதுவாகச் சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பதில்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன. + +ஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாகச் சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம். + +புலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைக��் போன்ற பயங்கர மிருகங்களைக் கூடச் சிலநேரங்களில் கொல்லலாம். இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும். சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாகப் புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன. பொதுவாகத் தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது. செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாகப் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன. தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன. சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலைத் தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே. + + +பொதுவாகப் புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போலத் தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்துச் சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு. + +காட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது தோலுக்காக வேட்டையாடுதல் மற்றும் அதன் இருப்பிடத்தை அழித்தல் ஆகிய செயல்களால் மிகவும் குறைந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 100,000 புலிகளாக மதிப்பிடப்பட்டிருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது காடுகளில் அதன் எண்ணிக்கை 2,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. சில மதிப்பீடுகள் இன்னும் குறைவாக, 2,500ஐ விடக் குறைவான முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய புலிகளே உள்ளதாகக் கூறுகின்றன. முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவையின் எண்ணிக்கை 250க்கு அதிகமான புலிகளைக் கொண்டுள்ள துணை எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கூறுகின்றன. சுமார் 20,000 புலிகளைத் தற்சமயம் காப்பகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அழிவு ஆபத்தானது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இவ்வாறு காப்பகப்படுத்தப்பட்டவையின் எண்ணிக்கையில் 4-5,000 புலிகள் சீனாவில் உள்ள ���ியாபார நோக்கம் கொண்ட புலிகள் பண்ணைகளில் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த மரபணு வேறுபாடு கொண்டவை. + +உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. மனித முன்னேற்றம் இல்லாத இடங்களை மீட்டெடுத்து நன்கு கண்காணிக்கப்படும் சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது. இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைகள் சில சந்தேகங்களுக்குள்ளாயின. சமீபத்தில் பிறப்பிக்கபட்ட சிற்றினங்கள் சட்டம், புலிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த சிற்றினங்களை வாழ்வதற்கு அனுமத்தித்தது. இது அத்திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். + +2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் அறிக்கை 12 பிப்ரவரி 2008 அன்று வெளியிடப்பட்டது. அது இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு சட்டவிரோதமாக வேட்டையாடுதலே நேரடியான காரணமாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. + +1940களில் காடுகளில் உள்ள சைபீரியன் புலியானது 40 புலிகள் என்ற அளவில் அழிந்துபோகும் நிலையில் இருந்தது. சோவியத் யூனியன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வேட்டையாடுதலுக்கு எதிரான அமைப்புகள் வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தின. மேலும் பாதுகாப்பு பகுதிகளின் (ஜபோவெட்னிக்குகள்) குழுக்கள் தொடங்கப்பட்டது. அவை புலிகளின் எண்ணிக்கையைச் சில நூறுகளாக அதிகரிக்க வழிவகுத்தது. 1990களில் ரஷ்யாவின் பொருளாதரம் சீர்குலைந்தபோது வேட்டையாடுதல் மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட மிகுந்த வருமானமளித்த சீனச்சந்தையை முற்றுகையிட அணுகினர். அப்பகுதிகளில் மரம்வெட்டுதல் அதிகரித்தது. உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்���ு முயற்சிகளில் பெரிய வளங்களை முதலீடு செய்ய வழிவகுத்தது, பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு முன்னேற்ற விகிதத்தையும் காடுகளை அழிப்பதையும் அதிகரிக்கச் செய்தது. இனங்களைக் காப்பதில் உள்ள முக்கியத் தடையாக இருப்பது தனிப்பட்ட புலிகளுக்குத் தேவைப்படும் பரந்த அளவிலான பிரதேசமே (ஒரு பெண் புலிக்குச் சுமார் 450 கி.மீ. வரை தேவைப்படுகிறது) ஆகும். தற்போதுள்ள பாதுகாப்பு முயற்சிகள் உள்ளூர் அரசாங்கங்களாலும் உலகளாவிய நிதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் போன்ற சர்வேதச அமைப்புகளின் ஆதரவில் உள்ள NGOக்களின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெரிய பூனையினம் குளம்பு விலங்குகளின் எண்ணிக்கையை ஓநாய்களின் எண்ணிக்கையை விடக்குறைப்பதாலும் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாலும், கிழக்குப் பகுதி வேட்டையாடுபவர்களைச் சமரசம் செய்வதற்காக ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் கொண்டு ஓநாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். தற்போது 400-550 விலங்குகள் காடுகளில் உள்ளன. + +திபெத்தில் புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் உடைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள், அவற்றின் தயாரிப்புகள் அல்லது அவற்றின் வழிவந்த பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம் எடுக்குமாறு தலாய்லாமா 2006 ஜனவரியில் அறிவுரை கூறினார். வேட்டையாடப்பட்ட புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்களுக்கு கிராக்கிக்கு இது நீண்டகால வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கப்படுகிறது. + +இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரான பில்லி அர்ஜான் சிங் என்பவரே வனமீட்பு செயலில் முதலில் ஈடுபட்டவர். அவர் தான் வளர்த்துவந்த விலங்குகள் பூங்காவில் பிறந்த தாரா என்ற பெண் புலியை 1978 ஆம் ஆண்டில் தத்வா தேசியப் பூங்காவின் காடுகளில் மீண்டும் விட்டார். ஒரு பெண்புலி பலரைக் கொன்று கொண்டிருந்தது. பின்னர் அது சுட்டுக் கொல்லப்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதையே பின்பற்றினர். அரசு அதிகாரிகள் அந்தப் புலியே தாரா எனவும் சிங் அது தாரா இல்லை எனவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து வாதிட்டுக்கொண்டனர். தாரா பகுதியளவு வங்கப்புலியாக இருந்ததால் அதன் அறிமுகத்தின���ல், அந்தப் பகுதியைச் சேர்ந்த புலிகளின் மரபணுத் தொகுதியில் கலப்படம் ஏற்பட்டது. அது வளர்க்கப்பட்ட இடமான ட்வைக்ராஸ் விலங்கியல் பூங்காவில் சரியாக இல்லாத பதிவுகளின் காரணமாக இந்த உண்மை முதலில் தெரியவில்லை. இதனால் வனமீட்புச் செயல் மதிப்பை இழந்தது. + +சீனப் புலிகளைக் காப்போம் என்ற அமைப்பு சீனாவின் மாநில வனப்பாதுகாப்பு ஆணையம் மற்றும் சீனப் புலிகள் தென்னாப்பிரிக்க அறக்கட்டளையும் இணைந்து சீனப் புலிகளை மீண்டும் காடுகளில் விடுவது தொடர்பான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. பெய்ஜிங்கில் 2002 நவம்பர் 26 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனாவில் தென்சீனப் புலிகள் உள்ளிட்ட புலிகளை மீண்டும் காட்டில் விட்டு அவற்றின் இயல்பான காட்டை உருவாக்கித் தரும் ஒரு பிரதான சரணாலயத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு சீனப் புலிப் பாதுகாப்பு மாதிரியை வழங்கியது. சில காப்பகங்களில் பிறந்த தென்சீனப் புலிகள் அவற்றின் வேட்டையாடும் திறன்களை மீண்டும் பெறும் பயிற்சிக்காக அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் விட்டு மிகவும் அருகிவரும் தென்சீனப் புலிகளை மீண்டும் காட்டில் விடுவதையே சீனப் புலிகளைக் காப்போம் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ஒரு புலிகள் சரணாலயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சரணாலயம் தயாரானதும் அந்தப் புலிகளை மீண்டும் சீனாவின் சரணாலயத்தில் விடப்படும். பயிற்சிக்கு விடப்பட்ட புலிகளின்வழி உருவான குட்டிகள் சீனாவின் பிரதான சரணாலயத்தில் விடப்படும். முதலில் விடப்பட்ட விலங்குகள் தொடர்ந்து இனப்பெருக்கத்தைத் தொடர தெனாப்பிரிக்காவிலேயே இருக்கும். + +இதற்குத் தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அங்கு தென்சீனப் புலிகளுக்குத் தேவையான திறமையும் வளங்களும், நிலமும் விளையாட்டு வாய்ப்பும் கிடைப்பதே காரணமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகள் வெற்றிகரமாகத் தாமே சொந்தமாக வாழவும் வேட்டையாடவும் தேவையான திறமையைப் பெற்றுவிட்டன. இந்தத் திட்டம் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது. இந்தத் திட்டத்தின்போது 5 புலிக்குட்டிகள் பிறந்தன. இந்த 2வது தலைமுறைக் குட்டிகள் தமது தாயிடமிருந்தே வேட்டையாடுதல் மற்றும் வாழ்தலுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும். + +ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் புலி வேட்டை என்பது மிக அதிக அளவில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க மாநிலங்களின் மஹராஜாக்களால் கௌரவமிக்க பாராட்டுக்குரிய விளையாட்டாப் போற்றப்பட்டது. சில வேட்டைக்காரர்கள் புலிகளை நடந்து சென்று வேட்டையாடினர். பிறர் "உயர்பந்தல்களில்" அமர்ந்துகொண்டு ஆடு அல்லது மாட்டை இரையாகப் பயன்படுத்தியும் வேட்டையாடினர். இன்னும் சிலர் யானையின் மீது அமர்ந்தபடியும் வேட்டையாடினர். சில நேரங்களில் கிராமவாசிகள் கொட்டு வாத்தியங்களை முழங்கி மிருகங்களை மரண வளையத்திற்குத் துரத்த உதவினர். புலிகளின் தோலை உரித்தல் குறித்து பல விளக்கமான வழிமுறைகள் உள்ளன. மேலும் புலிகளின் தோலுரித்துப் பதப்படுத்தலில் நிபுணர்களும் இருந்தனர். + +புலிகள் வழக்கமாக மனிதர்களை இரையாக உண்பதில்லை எனினும், பிற பூனையினங்களை விடவும் அதிகமாக மனிதர்களைக் கொன்றுள்ளன. குறிப்பாகப் புலிகளின் வாழிடங்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் தொகையும், மரம் வெட்டுதலும் விவசாயமும் நடைபெறும் பகுதிகளில் இது அதிகமாக நிகழ்கிறது. மனிதர்களை உண்ணும் புலிகள் பெரும்பாலும் பல்லிழந்த,வயது முதிர்ந்த புலிகளே. இவை தமக்குத் தேவையான இரையை வேட்டையாடும் திறன் இல்லாமல் போவதால் மனிதர்களை உண்ண முயற்சிக்கின்றன. மனிதர்களை உண்ணும் புலிகள் என அறியப்பட்ட அனைத்துப் புலிகளுமே மெரும்பாலும் விரைவில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு விட்டன அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டு விட்டன. தொடர்ந்து மனிதர்களைக் கொல்லும் புலிகள் கூட மனித உண்ணிச் சிறுத்தைப் புலிகள்போல மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதில்லை. அவை வழக்கமாகக் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும். இருப்பினும் கிராமங்களிலும் சில நேரங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் குறிப்பாகக் குமாயன், கர்வால் மற்றும் வங்காளத்தின் சுந்தரவன சதுப்புநிலத் தாழ்நிலங்களில் ஆரோக்கியமான புலிகள் மனிதர்களை வேட்டையாடுவது மிகக் குறிப்பிடக்கூடிய ஒரு சிக்கலாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான அவற்றின் தாக்குதல் சுந்தரவனப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. + +சீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. + +விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டபடி அமெரிக்காவில் மட்டும் 12,000 புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. + +அமெரிக்காவின் அதிக புலி எண்ணிக்கைக்கு ஒரு பங்குக் காரணம், சட்டமாக்குவதில் உள்ள அக்கறையின்மையாகும். அமெரிக்காவின் 19 மாநிலங்களில் மட்டுமே தனிப்பட்ட முறையில் புலிகளைச் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்கள் உரிமம் இருந்தால் புலிகளை வளர்க்க அனுமதிக்கிறது. மேலும் 16 மாநிலங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. + +அமெரிக்காவின் விலங்கியல் பூங்காக்களிலும் சர்க்கஸிலும் ���ிலங்குகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக, 1980 மற்றும் 1990களில் விலங்குக் குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியது. இதனால் அதன் விலை மிகவும் குறைந்தது. SPCA அமைப்பு ஹௌஸ்டன் பகுதியில் மட்டும் 500 சிங்கங்களும் புலிகளும் பிற பூனையினங்களும் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. + +1983 ஆம் ஆண்டில் வெளியான "ஸ்கார்ஃபேஸ்" என்ற திரைப்படத்தில் டோனி மாண்டனா ஏற்று நடித்த கதாப்பாத்திரம், அமெரிக்கனின் கனவு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பதில் மிகுந்த வெறி கொண்டவராக நடித்திருப்பார். அதில் அவர் கண்ணோட்டத்தில் வீட்டில் இருக்க வேண்டியவற்றில் ஒரு செல்லப் பிராணியாகப் புலியும் இருக்கும். + +கிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் மிருகங்களின் அரசனாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியே மேலோங்கி இருக்கிறது. அது கௌரவம், அச்சமின்மை மற்றும் கோபத்தையும் குறிப்பதாக உள்ளது. அதன் நெற்றியில் சீன மொழியில் எழுத்தில் "ராஜா" எனப் பொருள் குறிக்கும் ஓர் எழுத்தான 王 என்பதை ஒத்த குறி உள்ளது; இதனால் சீனா மற்றும் கொரியாவில் கார்ட்டூன் வருனனைகளில் புலியை நெற்றியில் அந்த 王 எழுத்தைக் கொண்டே குறிக்கின்றனர். + +சீனாவின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ள புலி, சீன இராசியைக் குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு சீனக் கலை மற்றும் தற்காப்புக் கலைகளில் புலியானது பூமியின் சின்னமாகவும் சீன ட்ராகனுக்கு- இணையானதாகவும் இடம்பெறுகிறது. புலியும் ட்ராகனும் முறையே பொருள் மற்றும் ஆத்மாவைக் குறிக்கின்றன. உண்மையில் தென் சீனத் தற்காப்புக் கலையான ஹுங் கா, புலி மற்றும் கொக்கு ஆகியவற்றின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். பேரரசான சீனாவில் புலி போரின் உருவகமாக விளக்கியது. சில நேரம் உயர் இராணுவத் தளபதி (அல்லது தற்போது உள்ள பாதுகாப்புச் செயலர்) ஆகியோரைக் குறித்தது. அதே நேரம் பேரரசரும் அரசியும் ட்ராகன் மற்றும் ஃபோனிக்ஸ் ஆகியவற்றால் குறிக்கப்பட்டனர். வெள்ளைப் புலியானது () சீன இராசி மண்டலங்களின் நான்கு சின்னங்களில் ஒன்றாகும். அது சில நேரங்களில் மேற்கின் வெள்ளைப் புலி (西方白虎) எனவும் அழைக்கப்படுகிறது. அது மேற்கையும் இலைய���திர்க்காலத்தையும் குறிக்கிறது. + +புத்த மதத்தில் அறிவற்ற மூன்று உயிரினங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. அதில் குரங்கு பேராசையையும், மான் காதல் நோயையும், புலி கோபத்தையும் குறிக்கின்றன. +தங்குஸிக் மக்கள் சைபீரியன் புலியை ஒரு தெய்வமாகவே கருதினர். அதை "தாத்தா" அல்லது "கிழம்" என அழைத்தனர். உடேஜ் மற்றும் நனாய் மக்கள் அதை "அம்பா" என அழைத்தனர். மஞ்சு மக்கள் சைபீரியன் புலியை ஹூ லின் ராஜா எனக் கருதினர். + +பரவலாக வழிபடப்படும் இந்துக் கடவுளும் தேவி-பார்வதியின் ஒரு அம்சமுமானதுர்கா, பத்துக் கரங்களுடன் போர்க்களத்திற்கு பெண்புலி அல்லது (பெண் சிங்கத்தில்) பவனி வரும் போர் வீராங்கனையாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியக் கடவுள் ஐயப்பனும் புலியில் பவனி வருபவராக விளக்கப்படுகிறார். + +ஆசியாவின் உருமாற்றக் கதைகளில் ஓநாயாக மாறக்கூடியவர்களின் பாத்திரங்களுக்குப் பதிலாகப் புலியாக மாறக்கூடியவர்கள் இடம்பெற்றனர்; இந்தியாவில் இவர்கள் தீய மந்திரவாதிகளாகவும் மலேஷியாவில் ஓரளவு நியாயமானவர்களாகவும் விவரிக்கப்பட்டனர். + +புலி இலக்கியத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது; ருட்யார்ட் கிப்ளிங் மற்றும் வில்லியம் ப்ளேக் ஆகிய ஆசிரியர்கள் முறையே "த ஜங்கில் புக்" மற்றும் "த சாங்க்ஸ் ஆப் எஸ்பீரியன்ஸ்" ஆகிய தங்கள் படைப்புகளில் புலியை மிரட்டும் மற்றும் வீரமுள்ள அச்சமூட்டும் மிருகமாகச் சித்தரித்துள்ளனர். "த ஜங்கில் புக்" கதையில் ஷேர் கான் என்ற புலி, மோக்லி என்ற கதாநாயகனின் ஜென்ம விரோதியாகும். இருப்பினும் பிற சித்தரிப்புகள் அவ்வளவு மிக நல்லவை: ஏ.ஏ. மில்னேவின் வின்னீ த பூஹ் கதைகளில் வரும் டிகெர் என்ற புலி மிகவும் அனிய விரும்பக்கூடிய விலங்காகும். மேன் புக்கர் பரிசை வென்ற "லைஃப் ஆப் பீ" என்ற புதினத்தில் கதாநாயகனான பை பட்டேல், பசுபிக் பெருங்கடலில் உடைந்த கப்பலில் சிக்கிக்கொண்ட தனி மனிதனாகச் சித்தரிக்கப்படுகிறான். அவனுக்கு அங்கு ஒரு நட்பு கிடைக்கிறது: அது ஒரு பெரிய வங்கப் புலி ஆகும். "கால்வினும் ஹோப்ஸும்" என்ற பிரபல சித்திரக் கதையில் கால்வின் என்ற பாத்திரத்துடன் அவனது திறமைசாலியான புலியும் இடம்பெறுகிறது அதன் பெயர் ஹோப்ஸ். பிரபலமான உணவான ஃப்ராஸ்டெட் ஃப்ளேக்ஸின் ("ஃப்ராஸ்டிஸ்" என்றும் குறிக்கப்படும்) அட்டைப் ��ெட்டியிலும் "டோனி த டைகர்" என்ற பெயர் கொண்ட புலி ஒன்று இடம் பெற்றிருந்தது. + +புலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா (வங்கப் புலி) மலேஷியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது. + +அனிமல் ப்ளானெட் நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாவையாளர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும், டால்ஃபின்களுக்கு 13% வாக்கும், குதிரைகளுக்கு 10% வாக்கும், சிங்கங்களுக்கு 9% வாக்கும், பாம்புகளுக்கு 8% வாக்கும், அவற்றைத் தொடர்ந்து யானைகள், சிம்பான்ஸிகள், உராங்குட்டான்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆகியவையும் இடம்பிடித்தன. + +அனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் இவற்றைப் பட்டியலிட்டு மேலும் கூறியதாவது: "வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே". + +உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், இந்த முடிவுகள் அவருக்கு நம்பிக்கையளித்திருப்பதாகக் கூறினார். "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார். + + + + + + +திருவாசி + +திருவாசி என்பது கோயிலில் கடவுள் சிலை இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய, உலோகத்தினால் செய்யப்பட்ட அலங்கார அமைப்பு ஆகும். இதனை "திருவாசிகை", "திருவாட்சி", "வாகனப்பிரபை" போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது சிலைக்குப் பின்னணியாக இருக்கும்படி அமைந்திருக்கும். வளைவாக அமைந்து காணப்படினும், இவை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. +சமய அடிப்படையில் இதற்குப் பல தத்���ுவங்கள் கூறப்படுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிவனின் நடராச தத்துவத்தை விளக்கும்போது "ஓங்காரமே திருவாசி" என்று திருவாசியை ஓங்கார வடிவமாகக் காட்டுகிறது. இதுதவிர திருவாசி பிரபஞ்சத்தைக் குறிக்கிறது என்ற கருத்தும் உண்டு. நடராஜர் சிற்பங்களில் திருவாசி ஏறத்தாழ வட்டவடிவில் காணப்படும். இவ்வட்டத்தின் மையம் ஆடல் புரியும் நிலையில் உள்ள சிலையின் தொப்புளுடன் பொருந்தி வரும்படி அமைந்திருக்கும். வளைவின் வெளிப்புறம் வரிசையாகத் தீச்சுவாலைகள் இருக்கும். +சில திருவாசிகளில் இருபுறமும் பீடத்திலிருந்து தூண்போன்ற அமைப்புக்களும் அதன் மேல் வளைவான அமைப்பும் காணப்படும். உச்சியில் யாளியின் முகம் அமைந்திருக்க, இரு பக்கங்களிலும் தூண் அமைப்பின் உச்சியிலிருந்து வளைவு தொடங்கும் இடங்களில் பக்கத்துக்கு ஒன்றாக இரு மகர உருவங்கள் இருப்பது உண்டு. +திருவாசிகள் பித்தளை, செப்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆக்கப்படுவது உண்டு. + + + + +வேங்கடசூரி சுவாமிகள் + +வேங்கடசூரி சுவாமிகள் (1817-1889) ஒரு பன்மொழிப் புலவரவார். + +தஞ்சை, அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள இராமச்சந்திராபுரம் என்ற ஊரில், வைதீக புரோகிதத்தை தொழிலாக கொண்ட நாராயண சர்மா என்பவருக்கும், தாய் அரங்கநாயகி தேவி அம்மையாருக்கும் பிறந்தார். + +வேங்கடசூரி சுவாமியின் இயற்பெயர் சுப்புராமன். தமது 15ம் அகவையில் நரசிம்மமூர்த்தியின் உபாசகராகி கவி பாடும் திறன் பெற்றார். பின் வாலாசாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் சீடராகி கர்நாடக சங்கீதம் மற்றும் ஹடயோகம் பயின்றார். சமசுகிருதம், தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் முதலிய மொழிகளிலும், குலத்தொழிலான வைதீகம் மற்றும் புரோகிதத்திலும் புலமை பெற்றார். + +தமது 21வது அகவையில் இலக்குமிதேவி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தினார். பரமக்குடியில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் தஞ்சையில் 25 ஆண்டுகள் வசித்ததால் இவரை தஞ்சாவூர் அய்யான் என்று புகழ் பெற்றார். + +பிற்காலத்தில் மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தங்கி சௌராஷ்டிர மொழியை மேம்படுத்த பள்ளிக்கூடத்தை நடத்தினார். வேங்கடசூரி சுவாமிகள் இரண்டாம் முறை காசிக்கு புனிதப்��யணம் மேற்கொண்டு திரும்புகையில் யமுனை ஆற்றாங்கரையில் தமது 72ம் அகவையில் வைகுண்டப்பதவியை அடைந்தார். + +தஞ்சை மராத்திய அவையில் சமசுதான பண்டிதராக விளங்கிய வேங்கடாச்சாரியை தர்க்க வாதத்தில் வென்று தமது புலமையை நிலை நாட்டியதால் ‘வேங்கடசூரி’ என்ற பட்டத்தை பெற்று தஞ்சை மன்னரவைப் புலவரானார். ”சூரி” என்றால் மராத்திய மொழியில் ”வென்றவன்” என்றும், சமசுகிருத மொழியில் ”பெரும் புலவர்” என்று பொருள்படும். மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஆராய்ச்சி உறுப்பினர் தகுதி மன்னரால் வழங்கப்பட்டு பெருமை பெற்றார். + + + + + + + +வேங்கடரமண பாகவதர் + +வேங்கடரமண பாகவதர் (18-2-1781 - 18-12-1874) சௌராட்டிர மொழி, சமஸ்கிருத மொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமையும் கருநாடக பக்தி இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்போட்டையில் நன்னுசுவாமி பாகதவருக்குப் பிறந்தவர். + +இவர் தியாகராஜரின் தலைமை மாணவர் ஆவார். தெலுங்கு மற்றும் சௌராட்டிர மொழியில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் தியாகராஜ என்ற முத்திரையிட்டுக் குரு காணிக்கையாக செலுத்தியுள்ளார். + +தியாகராஜர் மறைவுக்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார். + +வேங்கடரமணரின் மறைவிற்குப் பின் அவரிடம் ஏட்டுச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. + +தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செளராட்டிரர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. +வேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையை பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது. + + + + + +அலைபாயுதே + +அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும். + +கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள். + + + + +ஆந்திரப் பிரதேசம் + +ஆந்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் 29 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. + +2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதரபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும். + +குஜராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2வது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா, மேற்கில் கர்நாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. + +விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். + +கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. + +1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் முன்னாள் ஐதராபாத்து இராச்சியத்தையும், சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாகவே இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது. + +இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விஜயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன. + +50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன.விஜயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன. +ஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்கள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும். + +விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது. + +காக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்��ும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது. + +கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, ஸ்ரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது. + +மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் கிராமப்புற மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது. +ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது. +ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார். +ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முஸ்லிம்கள் (7.32%) மற்றும் கிரிஸ்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின்ஸ் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர். + +இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன. + +தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். + +இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. + +விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் ஆகும். + +தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும். + +ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும். + +ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை. + +விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. + +விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதி விமான நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது. + +கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வீரர்கள், விஜயநாகரத்தின் மஹராஜ்குமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எஸ். கே. பிரசாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், திருமலசீட்டி சுமன், அர்ஷத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராஜா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேஸ்வரி, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார். + + + + + +தமிழிசை + +தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது. + +வாய்மொழி இலக்கியங்கள், எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், தமிழிசை ஆய்வுகள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன.. பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைநுணுக்கம், பஞ்ச மரபு போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது. + +சங்கம் மருபிய நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய காரைக்கால் அம்மையார் அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார். + +பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னி௫ ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. பட்டினத்தார், இடைக் காட்டுச்சித்தர் ஆகியோரும் இக் காலத்தவரே. + +பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். இதில் உள்ள இசைத்தாளங்கள் தனித்தன்மை பெற்றவை. குமரகுருபரர், முத்துத் தாண்டவர் ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள். + +"முதன்மைக் கட்டுரை: தமிழிசை வரலாறு" + +தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம். + +சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சமணர் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் தமிழ்ப் பக்தி இயக்கம் வீச்சுக் கொண்டது. சைவமும் வைணவமும் செல்வாக்குப் பெற்றன. நாயன்மார்களின் தேவாரங்கள் ஊடாகவும், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது. + +கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம். இதைத் தொடர்ந்து லுங்கு விசய நகர அரசர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, தமிழிசை இயக்கம் தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது. + +19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917 இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது. + + + + + + +சு. வில்வரத்தினம் + +சு. வில்வரத்தினம் (1950 - டிசம்பர் 9, 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படுபவர். + +யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக "உயிர்த்தெழும் காலத்துக்காக" என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. "மரணத்துள் வாழ்வோம்" தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. "Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka" தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். + +இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. + +வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் அவர்கள் கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார். + +தமிழீழ விடுலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தமிழீழ விடுலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். + + + + + + + +தொல்காப்பியம் + +தொல்காப்பியம் () என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் "தொல்காப்பியர்" என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. + +தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. + +தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். என்பது சமற்கிருத இலக்கணந���ல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார் + +ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர். இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார். விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. + +செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது. + +தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன. + +தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். + +மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்றழைக்கப்படுகிறது. + +தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. + +அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை. + +கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது. + +தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்”h என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. + +இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். + +இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது. + +தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது. + +தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலரும் பிராமணர் என்று சிலரும் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர். + +தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். + +பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எஸ். வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும் , மா. ராசி மாணிக்கனார் தொல் காப்பியர் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார். + +தொல்காப்பியர் காலம் : + +சங்க கால புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க கால புலவர் கபிலர் அரசன் இருங்கோவேள் பற்றி கூறுகையில்,அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாக துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும், அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் கி.மு (280-290).ஒரு தலைமுறைக்கு 27 என கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 கி.மு 16 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்ப்பட்ட விடயங்களை பற்றியும், மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் கி.மு 20ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தாராளமாக கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும், அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் கி.மு 1500 வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாக கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர்(கி.மு 3 ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (கி.மு 5770-கி.மு 2070) பிறந்தவர். ஆக கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் என துள்ளியமாக தெரிகிறது.காரணம் நக்கீரர் தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது என்பதால் தொல்காப்பியர் கி.மு 2100 கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. + +தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது. + +எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. + +முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன. + +இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும், சொல் தொடங்கும் எழுத்துக்கள், சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. + +மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன. + +நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது. + +ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன. + +ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது. + +ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. + +எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. + +ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. + +இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன. + +சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. + +முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது. + +இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது. + +மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும், பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது. + +நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது. + +ஐந்���ாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும், அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது. + +ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும், ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும், எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன. + +ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. + +எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது. + +ஒன்பதாவது எச்சவியலில் +விளக்கப்பட்டுள்ளன. + +மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம். + + +தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. +பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. + +முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன. + +மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள். + +ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது. + +ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது. + +ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது. + +எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது. + +ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன. + +மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம். + +தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். + + +1. தொல்காப்பியம் தமிழர்களின் உயிர் நூல் எனக் கூறுவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். + + + + +